id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
---|---|---|---|
2014 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | தொட்டில் கோலம் | தொட்டில் கோலம், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்குப் பயன்படுத்தும் தொட்டிலை abstract வடிவில் வெளிப்படுத்தும் கோலம் ஆகும்.
கண்ணன் தொட்டில்
குழந்தை கிருஷ்ணரின் தொட்டிலாகக் கருதி இக் கோலத்தை வரைவதுண்டு. எனவே "கண்ணன் தொட்டில்" என்ற பெயரும் உண்டு.
அழகு படுத்த பொருத்தமான கோலம்
வரைவதற்கு இலகுவான சிறிய கோலங்களில் இதுவும் ஒன்று. இக் கோலத்தில் ஓரிரு வேறுபாடுகளும் உள்ளன. இதன் அடிப்படையான வடிவத்தை பயன்படுத்தி பெரிய அளவு கோலங்களையும் வரையலாம். நிறப் பொடிகளை பயன்படுத்தி அழகு படுத்தவும் பொருத்தமானது இந்தக் கோலம்.
இவற்றையும் பார்க்கவும்
கோலம்
கோலங்கள் - சில மாதிரிகள்
மேற்கோள்
கோலங்கள் |
2015 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | துளசி மாடக் கோலம் | துளசி மாடக் கோலம் 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்திவரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறான கூறுகளை ஒன்றுடனொன்று மூலைகளில் தொடுத்துக் கோலத்தை விரிவாக்கம் செய்யலாம்.
எந்த வித எல்லையும் கிடையாது
இணைக்கப்படும் கூறுகளின் எண்ணிக்கைக்கோ அல்லது உருவாக்கும் உருவமைப்புக்கோ எந்த வித எல்லையும் கிடையாது. கிடைக்கும் இடத்தின் அளவுக்கும், நேரத்துக்கும் தக்கபடி கோலத்தை அமைத்துக்கொள்ள முடியும். கோலம் வரைபவரின் கற்பனாசக்திக்கு ஏற்றபடி கோலத்தின் உருவ அமைப்புக்கு பொருத்தமான பெயரையும் இட்டுக்கொள்ளலாம்.
விதமான கூறுகள்
ஒரு கூறு கூட இங்கே காட்டப்பட்டதுபோல்தான் இருக்கவேண்டுமென்ற தேவை இல்லை. 7 x 7 நேர்ப்புள்ளிகளைப் பயன்படுத்தி பல்வேறு விதமான கூறுகளையும் கூட வரையமுடியும். அதுமட்டுமின்றி 7 x 7 நேர்ப்புள்ளிகளுக்குப் பதிலாக புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தோ, கூட்டியோகூட வெவ்வேறு அளவுள்ள கூறுகளை உருவாக்கலாம்.
இவற்றையும் பார்க்கவும்
கோலம்
கோலங்கள் - சில மாதிரிகள்
மேற்கோள்
கோலங்கள் |
2016 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | குத்து விளக்குக் கோலம் | குத்து விளக்குக் கோலம் 38 புள்ளிகளை உயரமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை கட்டாயமல்ல. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி அழகாயிருக்கத்தக்க வகையில் இந்த எண்ணிக்கையை மாற்றிக்கொள்ளலாம்.
பல்வேறு முறைகளில் குத்துவிளக்கு வடிவத்தைக் கோலத்தில் கொண்டுவரமுடியும்.
இந்துப் பண்பாட்டில் குத்து விளக்கு
குத்து விளக்கு, இந்துப் பண்பாட்டில் ஒரு மங்களகரமான பொருளாகக் கருதப்படுகிறது. முக்கியமான பாரம்பரிய நிகழ்ச்சிகளில், விருந்தினர்களை வரவேற்பதற்கும், அந் நிகழ்வுகளைத் தொடங்கி வைப்பதற்கும் குறியீடாகக் குத்துவிளக்கேற்றி வைத்தல் வழக்கம்.
குத்துவிளக்கு வடிவம்
இதனால் மேற்படி மங்களகரமான நிகழ்ச்சிகளில் கோலமிடுவதற்குக் குத்துவிளக்கு வடிவம் பொருத்தமாக அமையும்.
இவற்றையும் பார்க்கவும்
கோலம்
கோலங்கள் - சில மாதிரிகள்
மேற்கோள்
கோலங்கள் |
2017 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | திருக்குளக் கோலம் | திருக்குளக் கோலம் புள்ளிகளன்றி வேறொரு அடையாளம் ('+') மூலம் கோடுகளை வழிப்படுத்தி வரையப்படும் சில கோலங்களில் ஒன்று. வேண்டிய அளவுக்குப் பெரிதாக்கி வரையக் கூடிய மிக இலகுவான கோலமிது. கோலமிடுபவரின் கற்பனை வளத்துக்குத் தக்கபடி பல்வேறு வடிவங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இவற்றையும் பார்க்கவும்
கோலம்
கோலங்கள் - சில மாதிரிகள்
மேற்கோள்
கோலங்கள் |
2018 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | ஆபிரிக்க-ஆசிய மொழிகள் | ஆபிரிக்க-ஆசிய மொழிகள் என்பன, வடக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, சாஹேல், மற்றும் தென்மேற்கு ஆசியா ஆகிய இடங்களில், அண்ணளவாக 28.5 கோடி மக்களால் பேசப்படுகின்ற சுமார் 240 மொழிகளை உள்ளடக்கிய மொழிக்குடும்பம் ஆகும். "ஆப்ரேசியன்", "ஹமிட்டோ-செமாட்டிக்", "லிஸ்ராமிக்" (Hodge 1972), எரித்ரேசியன் (Tucker 1966.) என்ற பெயர்களாலும் இந்த மொழிக்குடும்பம் குறிப்பிடப்படுகின்றது.
துணை மொழிக் குடும்பங்கள்
ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தின் துணை மொழிக் குடும்பங்கள்:
பேர்பர் மொழிகள் (Berber languages)
சாடிக் மொழிகள் (Chadic languages)
எகிப்திய மொழிகள் (Egyptian languages)
செமிடிக் மொழிகள் (Semitic languages)
குஷிட்டிக் மொழிகள் (Cushitic languages)
பேஜா மொழி (Beja language)(சர்ச்சைக்குரியது; பொதுவாகக் குஷிட்டிக்கின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்படுகின்றது.)
ஒமோட்டிக் மொழிகள் (Omotic languages)
ஒங்கோட்டா மொழி ஆப்பிரிக்க-ஆசிய மொழியாகக் கருதப்பட்டாலும், இக்குடும்பத்துள் இதனுடைய வகைப்படுத்தல் சர்ச்சைக்கு உரியதாகவே இருந்துவருகிறது (போதிய தரவுகள் இல்லாமையும் ஒரு காரணம்)
முதல்நிலை-ஆபிரிக்க-ஆசிய மொழி எங்கே பேசப்பட்டது என்பதிலே பொதுவாக ஒத்த கருத்துக் கிடையாது; இக் குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறுபட்ட மொழிகள் பேசப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, பொதுவாக ஆபிரிக்காவாக (உம். டயகோனோப், பெந்தர்), குறிப்பாக எதியோப்பியாவாக, இருக்கலாம் என்ற கருத்து உண்டு. இதே வேளை மேற்குச் செங் கடல் மற்றும் சகாரா பகுதியும் முன்வைக்கப்பட்டுள்ளது (உம். எஹ்ரெட்). அலெக்சாண்டர் மிலிட்டரேவ் இவர்களுடைய தாய் நிலம் லேவண்ட் ஆக இருக்கலாம் எனக் கருதுகிறார்.
செமிட்டிக் மொழிகளே, ஆபிரிக்காவுக்கு வெளியே காணப்படும், ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தின் ஒரே துணை மொழிக் குடும்பமாகும். எனினும் வரலாற்றுக் காலத்திலோ அல்லது வரலாற்றுக்கு மிக அணித்தான காலப்பகுதியிலோ சில செமிட்டிக் பேசும் மக்கள், தெற்கு அரேபியாவிலிருந்து மீண்டும் எதியோப்பியாவுக்கு வந்துள்ளார்கள், இதனால் சில நவீன எதியோப்பிய மொழிகள் (அம்ஹாரிக் போன்றவை) அடிப்படையான குஷிட்டிக் அல்லது ஒமோட்டிக் குழுக்களைச் சேராமல் செமிட்டிக்காக இருக்கின்றன. (முர்த்தொனென் (1967) போன்ற மிகச் சில ஆய்வாளர்கள் மேற்படி கருத்துடன் முரண்படுவதுடன், செமிட்டிக் எதியோப்பியாவில் உருவாகியிருக்கலாமெனக் கருதுகிறார்கள்).
வகைப்படுத்தலின் வரலாறு
ஆபிரிக்க-ஆசிய etymologies க்கான சில முக்கிய மூலங்களில் பின்வருவனவும் உள்ளடங்குகின்றன:
Marcel Cohen, Essai comparatif sur la vocabulaire et la phonétique du chamito-sémitique, Champion, Paris 1947.
Igor M. Diakonoff et al., "Historical-Comparative Vocabulary of Afrasian", St. Petersburg Journal of African Studies Nos. 2-6, 1993-7.
Christopher Ehret. Reconstructing Proto-Afroasiatic (Proto-Afrasian): Vowels, Tone, Consonants, and Vocabulary (University of California Publications in Linguistics 126), California, Berkeley 1996.
Vladimir E. Orel and Olga V. Stolbova, Hamito-Semitic Etymological Dictionary: Materials for a Reconstruction, Brill, Leiden 1995
மேலும் காண்க
ஆபிரிக்க மொழிகள்
மூலங்கள்
Bernd Heine and Derek Nurse, African Languages, Cambridge University Press, 2000 - Chapter 4
Merritt Ruhlen, A Guide to the world's Languages
Lionel Bender et al., Selected Comparative-Historical Afro-Asiatic Studies in Memory of Igor M. Diakonoff, LINCOM 2003.
http://www.ethnologue.com/show_family.asp?subid=2
ஆபிரிக்க-ஆசிய மொழிகள்
மொழிக் குடும்பங்கள் |
2019 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | நைகர்-கொங்கோ மொழிகள் | மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நைகர்-கொங்கோ மொழிகள் உலகின் மிகப்பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக இருப்பதுடன், நிலவியல் பரம்பல், பேசுபவர்களின் எண்ணிக்கை (600 மில்லியன் மக்கள், அதாவது 85% ஆப்பிரிக்க மக்கள் தொகை), பேசப்படும் ஆப்பிரிக்க மொழிகளின் எண்ணிக்கை (1514) போன்றவற்றின் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய மொழிக்குழுவாக நைகர்-கொங்கோ மொழிக்குழு இருக்கின்றது
ஜோசேப் ஹெச். கிறீன்பேர்க் என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் நைகர்-கொர்டோபானியன் என அழைத்தார். ஜோன் பெந்தோர்-சாமுவேல் என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். (கொர்டோபானியன் மொழிகள் ஐப் பார்க்கவும்)
நைகர்-கொங்கோவினுள் அடங்கும் முக்கிய மொழிகள் அல்லது துணைக் குழுக்கள்.
மேற்கு அத்திலாந்திய: செனகலில் பேசப்படும் வோலோஃப் (Wolof), சாஹேலில் பேசப்படும் ஃபுல்ஃபுல்டே (Fulfulde) என்பன இதனுள் அடங்குகின்றன.
மாண்டிங்: மேற்கு ஆபிரிக்காவில் பேசப்படுவது; மாலியில் பேசப்படும் பம்பாராவை உள்ளடக்கும்.
குவா: கானாவில் பேசப்படும் அக்கான் உள்ளடங்கியது. * நைஜீரியாவில் பேசப்படும் யொரூபா மற்றும் இக்போ மொழிகள்.
குர்:Côte d'Ivoire, தோகோ, புர்கினா பாசோ மற்றும் மாலி போன்ற இடங்களில் பேசப்படுவது.
குறூ: பேட்டே, நியாப்வா, மற்றும் திதா என்பவை உள்ளிட்ட, மேற்கு ஆபிரிக்காவில் பேசப்படும் மொழிகள்.
அதமாவா-உபாங்கி: மத்திய ஆபிரிக்கக் குடியரசில் பேசப்படும் சாங்கோ
பண்டு (Bantu): சுவாஹிலியை (கிஸ்வாஹிலி) உள்ளடக்கிய மிகப் பெரிய குழு.
உசாத்துணைகள்
Joseph H. Greenberg, The Languages of Africa. Indiana Univ. Press (1966).
Bernd Heine and Derek Nurse, African Languages - An Introduction. Cambridge Univ. press (2000)
John Bendor-Samuel, The Niger-Congo Languages — A classification and description of Africa's largest language family, University Press of America (1989).
Ethnologue: Niger-Congo Family Tree
மேற்கோள்கள்
நைகர்-கொங்கோ மொழிகள் |
2020 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF | வானளாவி | வழக்கமாக, 152 மீட்டர்களிலும் கூடிய உயரம் கொண்ட உயர்ந்த மனித வாழ்க்கைக்குகந்த கட்டிடங்கள் வானளாவிகள் (skyscraper) எனப்படுகின்றன.
19 ஆம் நூற்றாண்டுவரை ஆறு மாடிக்கு மேற்பட்ட உயரங்கொண்ட கட்டிடங்களைக் காண்பது அரிது. மனிதர்கள் இதற்கு மேற்படப் படிகளில் ஏறி இறங்குவது நடைமுறைக்கு உகந்ததல்ல. அத்துடன், 15 மீட்டர்களுக்கு மேல் நீர் வழங்குவதும் இயலாமல் இருந்தது.
உருக்கு, வலுவூட்டிய காங்கிறீற்று (Concrete) மற்றும் நீரேற்றிகள் என்பவற்றின் உருவாக்கம், மிகவும் உயரமான கட்டிடங்கள் கட்ட இயன்றது. இவற்றுட் சில 300 மீட்டர்களுக்கும் அதிகமான உயரமுள்ளவை. வானளாவிகளை நடைமுறைச் சாத்தியமாக்கிய இன்னொரு வளர்ச்சி உயர்த்திகள் ஆகும்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், நியூயார்க் நகரத்திலும், சிகாகோவிலும் முதலில் வானளாவிகள் தோன்றத் தொடங்கின. வில்லியம் லே பாரோன் ஜென்னி, ஹோம் இன்சூரன்ஸ் கட்டிடம் என அழைக்கப்பட்ட முதலாவது வானளாவியை சிகாகோவில் வடிவமைத்தார். பத்து மாடிகளைக் கொண்ட இந்த அமைப்பு 1884-1885 ல் கட்டப்பட்டுப் பின்னர் "பீல்ட்ஸ்" (Field's) கட்டிடம் கட்டுவதற்காக 1931ல் இடிக்கப்பட்டது.
வானளாவிகளின் பாரம் தாங்கும் கூறுகளும், குறிப்பிடத்தக்க அளவு ஏனைய கட்டிடங்களில் இருந்து வேறுபடுகின்றன. 4 மாடிகள் வரையான கட்டிடங்களின் அவற்றின் சுவர்களே பாரத்தைத் தாங்கும்படி அமைக்க முடியும். வானளாவிகள் மிக உயரமானவை ஆதலால் இவற்றின் பாரம், எலும்புக்கூடுகள் போன்ற உறுதியான சட்டக அமைப்புக்களால் தாங்கப் படுகின்றன. சுவர்கள் இச் சட்டகங்களின் மீது தாங்கப்படுகின்றன. அதிகமான காற்று விசையைத் தாங்குமுகமாக, 40 மாடிகளுக்கும் அதிகமான உயரம் கொண்ட வானளாவிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது.
மிக உயர்ந்த வானளாவிகளின் ஒப்பீடு
(to scale)
இவற்றையும் பார்க்கவும்
கட்டிடக்கலை
கட்டிட அமைப்பு
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 உயரமான கட்டிடங்கள்
வானளாவிகளின் பட்டியல்
உலகின் உயரமான அமைப்புகள்
கோபுரங்களின் பட்டியல்
கட்டிடங்களின் பட்டியல்
வெளியிணைப்புகள்
http://www.skyscrapers.com
http://www.skyscrapercity.com
http://www.skyscraperpage.com
http://www.brazilskyscrapers.hpg.com.br
http://www.bionictower-bvs.com/ (1228m Shanghai tower project)
http://www.skyscraper.org
https://web.archive.org/web/20040522093404/http://www.geocities.com/birmingham_highrise/
http://www.popsci.com/popsci/science/article/0,12543,420169-1,00.html |
2023 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D | மயில்வாகனப் புலவர் | மயில்வாகனப் புலவர் (இயற்பெயர்: சுப்பிரமணியம் மயில்வாகனம்) யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் வாழ்ந்தவர். அக்காலத்தில் இருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாணச் சரித்திர நூலை இவர் இயற்றியதாகத் தெரிகிறது.
வரலாறு
இவர் யாழ்ப்பாணத்திலுள்ள மாதகல் என்னும் ஊரைச் சேந்தவர். இவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணியம் எனவும் தாயார் பெயர் சிதம்பரம் எனவும் கூறுவர்.
வைபவமாலையின் சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும்,
"...மண்ணிலங்கு சீர்த்திவையா மரபில்மயில்
வாகனவேள் வகுத்திட்டானே"
என வரும் அடிகளையும், இவரியற்றிய இன்னொரு நூலான புலியூரந்தாதி சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும்,
"...நல்ல கலைத்தமிழ் நூல்கள் விரிந்துரைத்த
வையாவின் கோத்திரத் தான்மயில் வாகனன்..."
என்னும் அடிகளையும் ஆதாரமாகக் கொண்டு இவர், யாழ்ப்பாண அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் இறுதிக்காலப் பகுதியில் வாழ்ந்து வையாபாடல் எனும் யாழ்ப்பாணச் சரித்திரம் கூறும் நூலொன்றை எழுதிய வையா அல்லது வையாபுரி ஐயர் என்பவரது பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இவர் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலைக் கட்டுவித்த வைத்திலிங்கம் செட்டியாரின் நண்பராயிருந்தார் என்பதை வைத்து, இவரது காலம் 18 ஆம் நூற்றாண்டின் பின்னரையாக இருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது. "வைத்திலிங்கச் செட்டியார் கூழங்கைத் தம்பிரானிடம் பாடங்கேட்டது, மயில்வாகனப்புலவரை நடுவராக வைத்துக்கொண்டேயாம்."
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
யாழ்ப்பாண வைபவ மாலை - நூலகம் திட்டம்
மயில்வாகனப் புலவர்
ஈழத்துப் புலவர்கள் |
2024 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF | அபுதாபி | அபுதாபி (Abu Dhabi) என்னும் பெயர் ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாட்டில் உள்ள ஏழு அமீரகங்களில் மிகப்பெரிய அமீரகத்துக்கும், அந்த அமீரகத்தின் தலை நகரத்துக்கும் வழங்கிவரும் பொதுப் பெயராகும். அபுதாபி நகரமானது குறிப்பிட்ட அபுதாபி அமீரகத்துக்கு மட்டுமன்றி, முழு நாட்டுக்குமே தலைநகரமாகவும் விளங்குகின்றது. இவை பற்றித் தனித்தனியாக அறியப் பின்வரும் பக்கங்களுக்குச் செல்லவும்.
அபுதாபி அமீரகம்
அபுதாபி நகரம் |
2025 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%20%28%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%29 | அபுதாபி (நகரம்) | அபுதாபி (Abu Dhabi, , அபூ ழபீ) ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான அபுதாபி அமீரகத்திலுள்ள இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். இது பாரசீக வளைகுடாவின் மத்திய மேற்குக் கரையில் இருந்து வளைகுடாவுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் "T" வடிவமான தீவொன்றில் அமைந்துள்ளது. 67,340 கிமீ2 (26,000 ச.மை) பரப்பளவு கொண்ட அபுதாபி நகரத்தில் 860,000 (2007) மக்கள் வாழ்கிறார்கள்.
இந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ளன.அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், நகரமயமாக்கமும், இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன.
நாட்டின் தலைநகரம் என்ற வகையில் இது ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல், கைத்தொழில் நடவடிக்கைகளினதும், பண்பாடு மற்றும் வணிக நடவடிக்கைகளினதும் மையமாக விளங்குகிறது. அபுதாபி நகரம் மட்டும் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15% ஐ உருவாக்குகின்றது. நாட்டின் முக்கியமான நிதி அமைபான மத்திய வங்கியும், வணிக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களும் இங்கு அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய பெற்றோலிய உற்பத்தியாளர்களில் ஒன்றான அபுதாபி அண்மைக்காலங்களில் அதன் பொருளாதார அடித்தளத்தை, பல்வேறு நிதிச் சேவைகளிலும், சுற்றுலாத்துறையிலும் முதலீடு செய்வதன் மூலம் விரிவாக்கியுள்ளது.
இப் பகுதியின் மூன்றாவது செலவு கூடிய நகரமான அபுதாபி, உலகின் செலவு கூடிய நகரங்களின் வரிசையில் 26 ஆவது இடத்தில் உள்ளது.
வரலாறு
கிமு மூன்றாவது ஆயிரவாண்டுக் காலப்பகுதியிலேயே அபுதாபியின் சில பகுதிகளில் குடியேற்றங்கள் இருந்திருக்கின்றன. அக்காலத்தில் இப் பகுதிகளுக்கேயுரிய நாடோடி மந்தை வளர்ப்பும், மீன்பிடித்தலும் இருந்ததாகத் தெரிகிறது. தற்கால அபுதாபியின் தோற்றம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பனி யாஸ் என்னும் பழங்குடிக் கூட்டமைப்பு உருவானதோடு தொடங்கியது. இது பின்னர் துபாய் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் துபாயும், அபுதாபியும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அபுதாபியின் பொருளாதாரம், ஒட்டக வளர்ப்பு, அல் எயின், லீவா ஆகிய பாலைவனச் சோலைகளில் உற்பத்தியான பேரீச்சு, மரக்கறி வகைகள், அபுதாபி நகரக் கரையோரத்துக்கு அப்பால் இடம்பெற்ற மீன்பிடித்தல், முத்துக் குளிப்பு என்பவற்றில் தங்கியிருந்தது. அக்காலத்தில் அபுதாபி நகரத்தில் இருந்த வீடுகள் ஈச்சமர ஓலைலளால் அமைக்கப்பட்ட "பராஸ்தி"என்னும் வகையைச் சார்ந்தவையாகும். வசதி படைத்தவர்கள் மண்ணால் கட்டப்பட்ட குடில்களில் வாழ்ந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், உலகில் செயற்கை முத்து உற்பத்தித் தொழில் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அபுதாபியின் முத்துக்குளிப்பு நெருக்கடிக்குள்ளானது. அப்போது முத்துக்களின் ஏற்றுமதியே அபுதாபி மக்களின் பணவருவாய்க்கான முக்கிய மூலமாக இருந்தது. 1939 ஆம் ஆண்டில் அக்கால அபுதாபியின் ஆட்சியாளரான சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான், பெற்றோலிய சலுகையை வழங்கினார். 1958 ஆம் ஆண்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்கத்தில் பெட்ரோலிய வருமானம் அபுதாபியின் வளர்ச்சியில் மிகக் குறைந்த தாக்கத்தையே கொண்டிருந்தது. சில குறைந்த உயரம் கொண்ட காங்கிறீட்டுக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. தளமிடப்பட்ட முதலாவது சாலை 1961 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பெற்றோலிய வருமானம் நீடிக்குமா என்ற ஐயப்பாடு காரணமாக சேக் சக்புத் எச்சரிக்கையாக நடந்து கொள்ள விரும்பினார். வருமானத்தை வளர்ச்சிப் பணிகளில் முதலீடு செய்யாமல் சேமிக்க எண்ணினார். அவரது சகோதரரான சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான், பெற்றோலியத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அபுதாபியை மாற்ற வல்லது என்னும் கருத்தைக் கொண்டிருந்தார். நகியான் குடும்பத்தினர் சேக் சக்புத்துக்குப் பதிலாக சேக் சாயித் ஆட்சியாளராகி வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என விரும்பினர். 1966 ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரித்தானியரின் துணையுடன், சேக் சயத் ஆட்சியாளரானார்.
இவற்றையும் பார்க்கவும்
துபாய்
சார்ஜா அமீரகம்
மேற்கோள்கள்
ஆசியத் தலைநகரங்கள்
அபுதாபி அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம் |
2026 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88 | வண்ணார்பண்ணை | வண்ணார்பண்ணை (Vannarpannai) தற்போதைய யாழ்ப்பாண நகரப்பகுதியில் அடங்கியுள்ள ஒரு புறநகர் ஆகும். இப்பகுதியில் நகர மத்திக்கு மிகவும் அண்மையில் "வண்ணான் குளம்" என அழைக்கப்படும் குளமொன்றும் உண்டு. இது மிக அண்மைக்காலம் வரை, துணி சலவை செய்வதற்கு, சலவைத் தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அமைவிடம்
தற்காலத்தில் வண்ணார்பண்ணை என்று அழைக்கப்படும் பகுதி, நகர மத்திக்கு அண்மையில் தொடங்கி, காங்கேசந்துறை வீதி, கஸ்தூரியார் வீதி என்னும் வீதிகளை அண்டிச் சுமார் ஒரு மைல் தூரம் வரை வியாபித்து உள்ளது.
வரலாறு
யாழ்ப்பாண அரசர் காலத்தில் நல்லூர் தலைநகரமாயிருந்தபோது, வண்ணார்பண்ணை பனங் கூடல்கள் நிரம்பிய சிற்றூராக இருந்ததாகத் தெரிகிறது. பின்னர் போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைத் தங்களது நிர்வாக மையமாக மாற்றிக் கடற்கரையோரமாகக் கோட்டையொன்றையும், அருகில் தங்கள் வாழ்விடங்களையும் அமைத்துக்கொண்ட பின்னர், இப்பகுதி படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது.
கோயில்கள்
வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயம்
வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம் (நாச்சிமார் கோவில்)
வண்ணார்பண்ணை நடேசர் கோவில்
சாந்தையர்மடம் கற்பக விநாயகர் ஆலயம்
வண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்
வண்ணை ஸ்ரீ நொச்சியம்பதி பத்திரகாளி அம்பாள் ஆலயம்
வண்ணை வடமேற்கு அண்ணமார் களனிப்பதி விஸ்வலிங்க மஹாகணபதி மூர்த்தி தேவஸ்தானம் (பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவில்)
காட்டுத்துறை அம்பலவாண விநாயகர் கோயில்
வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்
பாடசாலைகள்
யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம்
வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம்
வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ஒஸ்மானியாக் கல்லூரி
கதீஜாக் கல்லூரி
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்
யாழ்ப்பாண மாவட்டம்
மேற்கோள்கள் |
2028 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D | வட்டம் | யூக்கிளிட்டின் கேத்திர கணிதப்படி, ஒரு வட்டம் (
Circle) என்பது, ஒரு குறிப்பிட்ட புள்ளியொன்றிலிருந்து சம அளவான தூரத்தில், ஒரே தளத்திலுள்ள புள்ளிகளின் கணமாகும். குறிக்கப்பட்ட புள்ளி அவ்வட்டத்தின் "மையம்" எனவும், சம அளவான தூரம் அதன் ஆரை எனவும் அழைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து எப்பொழுதும் சமதூரத்தில் இருக்குமாறு இயங்கும் ஒரு புள்ளியின் இயங்குவரையாகவும் வட்டத்தை வரையறுக்கலாம்.
வட்ட விலகலின் மதிப்பு பூச்சியமாகக் கொண்ட கூம்பு வெட்டாகவும் வட்டத்தைக் கொள்ளலாம். ஒரு நேர் கூம்பை அதன் அச்சுக்குச் செங்குத்தான தளத்தால் வெட்டும்போது கிடைக்கும் வெட்டுமுகம் வட்டமாக இருக்கும்.
வட்டங்கள், அவை அமைந்துள்ள தளத்தை உட்புறம், வெளிப்புறம் என இரண்டாகப் பிரிக்கும் எளிமையான மூடிய வளைவுகளாகும். எல்லா வட்டங்களும் வடிவொத்தவை; அதனால், ஒரு வட்டத்தின் சுற்றளவும், அதன் ஆரையும் விகிதசமனானவை, அதுபோலவே, வட்டத்தின் பரப்பளவும் அதன் ஆரையின் வர்க்கத்துக்கு விகிதசமனானது. இவ் விகிதசமனின் மாறிலிகள் முறையே 2πயும் πயுமாகும்.
வட்டத்தின் சுற்றளவு "பரிதி" எனப்படும். வட்டத்தைக் குறிக்க தமிழர்கள் பரிதி என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர்.
சமன்பாடுகள்
கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமை
கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில், (x0, y0) என்பதால் குறிக்கப்படும் புள்ளியை மையமாகவும், r என்பதை ஆரையாகவும் கொண்ட வட்டமொன்றிலமைந்துள்ள (x, y) ஆல் குறிக்கப்படும் எல்லாப் புள்ளிகளும் பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்:
வட்டத்தின் மையப் புள்ளி (0, 0) ஆக இருப்பின், இச் சமன்பாடு பின்வருமாறு அமையும்:
(0, 0) வை மையமாகக் கொண்ட 1 அலகு ஆரையுடைய வட்டம் அலகு வட்டம் எனப்படும். இதன் சமன்பாடு:
துணையலகு வடிவில்:
முக்கோணவியல் சார்புகள் சைன் மற்றும் கொசைன்களாலான துணையலகுகளைப் பயன்படுத்தி எழுதப்படும் வட்டத்தின் சமன்பாடு:
இங்கு t துணையலகு மாறி; இதன் மதிப்பு 0 - 2π வரை அமையும்; வடிவவியலாக இது (a, b) லிருந்து (x, y) ஐ இணைக்கும் கதிர் x-அச்சுடன் உண்டாக்கும் கோணம்.
துணையலகு வாயிலாக மற்றொரு சமன்பாடு:
இதில் t : r என்பது x-அச்சுக்கு இணையாக வட்டத்தின் மையத்தின் வழியாகச் செல்லும் கோட்டின் மீதான வட்டத்தின் திண்மவரைபட வீழலாகும் (Stereographic projection).
விட்டத்தின் முனைப்புள்ளிகள் மூலமாக:
ஒரு விட்டத்தின் முனைப்புள்ளிகள் (x_1, y_1) , (x_2, y_2) எனில் அவ்வட்டத்தின் சமன்பாடு:
சிறப்பு வகை கூம்புவெட்டாக:
இரு மாறிகளில் அமைந்த இருபடிச்சமன்பாடு,
பொதுவாக ஒரு கூம்பு வெட்டைக் குறிக்கும்.
வட்டத்தின் வட்டவிலகல் பூச்சியமாதலால் மேற்காணும் கூம்புவெட்டின் சமன்பாடு வட்டத்தைக் குறிக்கும்போது,
ஆக இருக்கும். எனவே வட்டத்தின் சமன்பாடு
ஆகும். இதனை மேலும்
என்ற வடிவிற்கு மாற்றலாம்.
என இச்சமன்பாட்டைச் சுருக்க வட்டத்தின் மையம் மற்றும் ஆரம்:
மையம்:
ஆரம்:
போலார் ஆள்கூற்று முறைமை
போலார் ஆள்கூற்று முறைமையில் வட்டத்தின் சமன்பாடு:
இதில் வட்டத்தின் ஆரம் a; வட்டத்தின் மீதமைந்த ஏதேனும் ஒரு பொதுப்புள்ளியின் போலார் ஆயதொலைகள் ; வட்ட மையத்தின் போலார் ஆயதொலைவுகள் ; r0 என்பது ஆதிப்புள்ளிக்கும் வட்ட மையத்துக்கும் இடைப்பட்ட தூரம்; φ என்பது வட்ட மையத்தையும் ஆதிப்புள்ளியையும் இணைக்கும் கோடானது x-அச்சின் நேர்திசையுடன் உண்டாக்கும் கோண அளவு (இக்கோணம் எதிர் கடிகாரதிசையில் அளக்கப்படுகிறது)
இச்சமன்பாட்டிலிருந்து r இன் மதிப்பு:
இதில் வர்க்கமூலத்திற்கு முன் வரக்கூடிய நேர் (+) மற்றும் எதிர்க் குறிகளுக்குக் (-) கிடைக்கும் இதன் வளைவரைகள் ஒன்றாகவே இருக்கும்.
வட்ட மையம் ஆதிப்புள்ளியாக இருந்தால், அதாவது r0 = 0, எனில் இச்சமன்பாடு : ஆக மாறுகிறது.
, அதாவது ஆதிப்புள்ளி வட்டத்தின் மீதமைந்தால் சமன்பாடு:
சிக்கலெண் தளத்தில்
சிக்கலெண் தளத்தில் மையம் c மற்றும் ஆரம் (r) கொண்ட வட்டத்தின் சமன்பாடு:
.
இது துணையலகு வடிவில் கீழுள்ளவாறு அமையும்:
.
(p, q மெய்யெண்கள்; g சிக்கலெண்) எனும் சமன்பாடு சிலசமயங்களில் பொதுமைப்படுத்தப்பட்ட வட்டம் என அழைக்கப்படுகிறது.
வட்டத்தின் சமன்பாட்டைப் பின்வருமாறு விரித்து எழுதி, அது பொதுமைப்படுத்த வட்டத்தின் சமன்பாட்டுடன் ஒத்துள்ளதைக் காண முடியும்:
பொதுமைப்படுத்தப்பட்ட வட்டத்துடன் ஒப்பிட,
,
பொதுமைப்படுத்தப்பட்ட வட்டங்கள் எப்பொழுதுமே வட்டங்களாக இருக்காது. அவை வட்டங்களாகவோ அல்லது கோடுகளாவோ அமைகின்றன.
வட்டத்தின் சுற்றளவு
வட்டத்தின் சுற்றளவிற்கும் விட்டத்திற்குமுள்ள விகிதம் π (pi), ஒரு விகிதமுறா மாறிலி; அதன் மதிப்பு தோராயமாக 3.141592654. வட்டத்தின் சுற்றளவு C; விட்டம் d; ஆரம் r எனில்:
வட்டத்தின் பரப்பளவு
வட்டத்தின் பரப்பளவானது, வட்டத்தின் சுற்றளவை அடிப்பக்கமாகவும் ஆரத்தைக் குத்துயரமாகவும் கொண்ட முக்கோணத்தின் பரப்பளவிற்குச் சமமென ஆர்க்கிமிடீசால் நிறுவப்பட்டுள்ளது. எனவே வட்டத்தின் பரப்பளவு A:
அதாவது d பக்க அளவுள்ள சுற்றுச்சதுரத்தின் பரப்பளவில் 79சதவீதம்.
கணக்குபாடங்களில் நம் நாட்டு மாணவர்கள் மற்ற நாட்டு மாணவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள், எப்படி என்றால், மற்ற நாடுகளில் பள்ளிக்குச் சென்று முறையாகக் கற்றால் தான் கணிதம் பயில முடியும். ஆனால், இந்தியாவில் சில நடைமுறைப் பயிற்சிகளாலேயே பாமரர்கள் கூடக் கணக்கில் புலிகளாக உலா வருவதைக் காண்கிறோம்.
வட்ட வடிவ நிலத்தின் பரப்பளவை காண, "காக்கைப்பாடினியம்" என்ற தொன்மையான நூலில் செய்யுள் வடிவிலேயே விளக்கியுள்ளனர்.
"வட்டத்து அரை கொண்டு விட்டத்து அரை ஆக்க
சட்டெனத் தோன்றுங் குழி" - காக்கைப் பாடினியம் 46:49
விளக்கம்:
இதன்படி,
வட்டத்தரைச் சுற்றளவு,
விட்டத்தரை = அரைவிட்டம் =
இதன்படி,
வட்டத்தின்பரப்பளவு,
குழி என்பது பரப்பைக் குறிக்கும் சொல்.
பண்புகள்
தரப்பட்ட சுற்றளவைக் கொண்டு வரையக்கூடிய வடிவங்களில் மிக அதிக பரப்பளவுடையது வட்டம்.
வட்டம் அதிக சமச்சீருடைய வடிவம்: வட்ட மையத்தின் வழிச் செல்லும் ஒவ்வொரு கோடும் பிரதிபலிப்பின் சமச்சீர் அச்சு; மையத்தைப் பொறுத்து சுழற்றப்படும் அனைத்து கோணஅளவு சுழற்சிகளுக்கும் சுழற்சிச் சமச்சீர் உடையது; இதன் சமச்சீர் குலம், செங்குத்துக் குலம் -O(2,R) ஆகும். சுழற்சிகளின் குலம், வட்டக் குலம் T.
அனைத்து வட்டங்களும் வடிவொத்தவை.
ஒரு வட்டத்தின் சுற்றளவும் ஆரமும் நேர்விகிதத்தில் இருக்கும். அந்நேர்விகித மாறிலி 2π.
ஒரு வட்டத்தின் பரப்பளவும் ஆரத்தின் நேர்விகிதத்தில் இருக்கும். அந்நேர்விகித மாறிலி π.
ஆதிப்புள்ளியை மையமாகக் கொண்டு ஓரலகு ஆரமுடைய வட்டம் அலகு வட்டம் எனப்படும்.
தரப்பட்ட, ஒரே கோட்டிலமையாத மூன்று புள்ளிகளின் வழியாக ஒரேயொரு வட்டமே வரையலாம். கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் அம்மூன்று புள்ளிகளின் ஆயதொலைவுகளின் வாயிலாக வட்டத்தின் மையத்தையும் ஆரத்தையும் காணும் வாய்ப்பாட்டைத் தரமுடியும்.
நாண்கள்
வட்டத்தின் நாண்கள் சம நீளமுள்ளவையாக இருந்தால், இருந்தால் மட்டுமே அவை வட்ட மையத்திலிருந்து சமதூரத்தில் அமையும்.
ஒரு நாணின் நடுக்குத்துக்கோடு வட்ட மையத்தின் வழிச் செல்லும். நடுக்குத்துக்கோட்டின் தனித்தன்மையிலிருந்து பின்வரும் முடிவுகள் எழுகின்றன:
வட்ட மையத்திலிருந்து நாணுக்கு வரையப்படும் செங்குத்துக்கோடு நாணை இருசமக்கூறிடும்.
ஒரு நாணை இருசமக் கூறிடும் கோடு வட்ட மையத்திலிருந்து வரையப்பட்டிருந்தால் அக்கோடு அந்த நாணுக்குச் செங்குத்தாகும்.
வட்டத்தின் ஒரே நாணால் அந்நாணின் ஒரே பக்கத்தில் வட்ட மையக்கோணமும் உட்கோணமும் தாங்கப்பட்டால், வட்ட மையக்கோணமானது உட்கோணத்தைப் போல இரு மடங்காகும்.
வட்டத்தின் ஒரே நாணால் அந்நாணின் ஒரே பக்கத்தில் தாங்கப்படும் இரு உட்கோணங்கள் சமமாகும்.
வட்டத்தின் ஒரே நாணால் அந்நாணின் எதிர்ப்பக்கங்களில் தாங்கப்படும் இரு உட்கோணங்கள் மிகைநிரப்புக் கோணங்களாகும்.
ஒரு வட்ட நாற்கரத்தின் வெளிக்கோணம் அதன் எதிர் உட்கோணத்திற்குச் சமம்.
ஒரு விட்டத்தால் வட்டத்தின் மேலமையும் ஒரு புள்ளியில் தாங்கப்படும் கோணம் செங்கோணம்.
வட்டத்தின் மிகப்பெரிய நாண் விட்டம்.
ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் இரு நாண்களில் ஒன்று a , b நீளமுள்ள துண்டுகளாகவும் மற்றது c , d நீளமுள்ள துண்டுகளாகவும் வெட்டப்படுமானால் .
ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் இரு செங்குத்து நாண்களில் ஒன்று a , b நீளமுள்ள துண்டுகளாகவும் மற்றது c , d நீளமுள்ள துண்டுகளாகவும் வெட்டப்படுமானல் இன் மதிப்பு விட்டத்தின் வர்க்கமாகும்.
தொடுகோடு
ஒரு ஆரத்தின் வட்டத்தின் மேலுள்ள முனைப்புள்ளி வழியால அந்த ஆரத்திற்கு வரையப்படும் செங்குத்துக்கோடு வட்டத்திற்கு அப்புள்ளியில் தொடுகோடாகும்.
தொடுபுள்ளியில் தொடுகோட்டிற்கு வரையப்படும் செங்குத்துக்கோடு வட்ட மையத்தின் வழிச் செல்லும்.
வட்டத்திற்கு வெளியேயுள்ள ஒரு புள்ளியிலிருந்து இரு தொடுகோடுகள் வரைய முடியும். அவ்விரு தொடுகோடுகளும் சம நீளமுள்ளவை.
A மற்றும் B புள்ளிகளில் வரையப்படும் தொடுகோடுகள் இரண்டும் புள்ளி P இல் வெட்டிக்கொண்டால், கோணங்கள் ∠BOA , ∠BPA இரண்டும் மிகைநிரப்புக் கோணங்கள். O, வட்டமையம்.
AD புள்ளி A இல் வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோடு; AQ வட்ட நாண் எனில் .
வடிவவியல் வடிவங்களில் உட்புறமும் வெளிப்புறமும் வரையப்படும் வட்டங்கள்
ஒவ்வொரு முக்கோணத்துக்குள்ளும் அதன் மூன்று பக்கங்களையும் தொட்டவாறு ஒரு தனித்த வட்டம் வரைய முடியும். அவ்வட்டம் முக்கோணத்தின் உள்வட்டம் எனப்படும்.
ஒவ்வொரு முக்கோணத்துக்குள்ளும் அதன் மூன்று உச்சிகளின் வழிச்செல்லும் ஒரு தனித்த வட்டம் வரைய முடியும். அவ்வட்டம் முக்கோணத்தின் சுற்றுவட்டம் எனப்படும்.
தொடு பலகோணம் என்பது அதன் உட்புறமாக அனைத்துப் பக்கங்களையும் தொடுமாறு ஒரு வட்டம் வரையக்கூடியதொரு குவிவுப் பலகோணம் ஆகும். தொடு நாற்கரம் ஒரு தொடு பலகோணமாகும்.
வட்டப் பலகோணம் என்பது அதன் ஒவ்வொரு உச்சிகளின் வழிச்செல்லுமாறு ஒரு வட்டம் வரையக்கூடியதொரு குவிவுப் பலகோணமாகும். வட்ட நாற்கரம் ஒரு வட்டப் பலகோணம்.
மேலும் பார்க்க
வட்டவலையம்
கோளம்
ஓரலகு வட்டம்
அப்பொலோனிய வட்டங்கள்
ஸ்பைக்கர் வட்டம்
சூழ்தொடு வட்டம்
முக்கோணத்தின் உள்வட்டமும் வெளிவட்டங்களும்
ஒன்பது-புள்ளி வட்டம்
சமச்சரிவு இடைக்கோடு
முக்கோணத்தின் உள்வட்டமும் வெளிவட்டங்களும்
இலெசிட்டரின் தேற்றம்
பிரகார்டு வட்டம்
செங்குத்து மூலைவிட்ட நாற்கரம்
தொடுகோட்டு நாற்கரம்
வட்ட நாற்கரம்
சூழ்தொடு வட்டம்
குவியம் (வடிவவியல்)
துணை நூல்கள்
வெளியிணைப்புகள்
Circle (PlanetMath.org website)
Interactive Java applets for the properties of and elementary constructions involving circles.
Interactive Standard Form Equation of Circle Click and drag points to see standard form equation in action
Munching on Circles at cut-the-knot
வட்டங்கள்
வளைவரைகள்
கூம்பு வெட்டுகள்
வடிவவியல் வடிவங்கள் |
2032 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | இலங்கைக் கட்டிடக்கலை | இலங்கைக் கட்டிடக்கலை மிகவும் தொன்மை வாய்ந்தது. 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இது பெரும்பாலும் பௌத்த சமயம் சார்ந்ததாகக் காணப்படுகின்றது. இதனால் இலங்கைக் கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்கள் பெரும்பாலும் பௌத்த வழிபாட்டிடங்கள் தொடர்பானவையாகவே உள்ளன. பௌத்த மதமும் அயல் நாடான இந்தியாவில் தோன்றி அசோகப் பேரரசர் காலத்தில் இலங்கைக்குப் பரவியதாலும், அண்மை அமைவிடம் காரணமாக இலங்கைக்கும், இந்தியாவுக்கும், சிறப்பாகத் தமிழ்நாட்டுக்கும் இடையில், பண்பாட்டுத் தொடர்புகள் இருந்துவந்ததனாலும், தமிழ்நாட்டிலிருந்து காலத்துக்குக் காலம் நிகழ்ந்த படையெடுப்புக்களின் விளைவாகவும் இந்தியக் கட்டிடக்கலையின் தாக்கம் இலங்கைக் கட்டிடக்கலையில் காணப்படுவதை அவதானிக்கலாம். எனினும் பண்டைய இலங்கைக் கட்டிடக்கலை தனித்துவமான பல குணாதிசயங்களைக் கொண்டு விளங்குவதை நாட்டின் பல இடங்களிலும் முழுமையாகவும், சிதைந்தும் காணப்படும் பல வழிபாட்டிடங்கள், அரண்மனைகள், பல வகையான பொதுக்கட்டிடங்கள் என்பவற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடியும். பழங் காலத்தில் கட்டப்பட்ட சைவ சமயக் கோயில்கள் சிலவும் ஆங்காங்கே காணப்படினும் அவை முற்றிலும் திராவிடக் கட்டிடக்கலை வடிவங்களாகவே காணப்படுகின்றன.
ஆரம்பகாலக் கட்டிட வகைகள்
இலங்கையின் வரலாறு கலிங்க இளவரசனான விஜயன் அவனது தோழர்களுடன் இலங்கையில் இறங்கி அரசனாக முடிசூட்டிக்கொண்டதிலிருந்து ஆரம்பமானதாகப் பாளி வரலாற்று நூல்கள் குறிப்பிட்டாலும், நாட்டின் முதலாவது பௌத்த அரசனான தேவாநாம்பியதீசனின் காலத்திலேயே (கி.மு 250 – 210) முக்கியமான கட்டிடக்கலை ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
தாதுகோபுரங்கள்
பௌத்தக் கட்டிடக்கலை தொடர்பில் இலங்கையில் காணப்படும் மிகப் பழைய கட்டிடவகை தாதுகோபுரங்கள் ஆகும். இது பாளி மொழியில் தூபா எனவும் சிங்கள மொழியில் தாகபா எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவை பல வடிவங்களைக் கொண்டவையாக இருப்பினும் ஏறத்தாளக் கவிழ்த்து வைக்கப்பட்ட அரைக் கோள வடிவம் கொண்டவை எனலாம். சிங்கள வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட மிகத் தொன்மையான தாதுகோபுரம், இலங்கையின் பண்டைய தலை நகரமான அனுராதபுரத்தில் முன்னர் குறிப்பிட்ட தேவாநாம்பியதீசன் காலத்தில் கட்டப்பட்ட தூபாராம தாதுகோபுரமாகும். இந்தத் தாது கோபுரம் திருத்தி அமைக்கப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்ட தாது கோபுரங்கள் பல அனுராதபுரத்திலும், பிற்காலத் தலைநகரான பொலநறுவையிலும், ஏனைய இடங்களிலும் காணப்படுகின்றன. பின்னர் கட்டப்பட்ட தாதுகோபுரங்கள் பாரிய அளவு கொண்டவையாக இருந்தன. அனுராதபுரத்திலுள்ள கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ருவன்வலிசாய தாதுகோபுரமும், கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த அபயகிரி தாதுகோபுரமும், கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜேதவன தாதுகோபுரமும் உலகின் மிகப்பெரிய திண்மக் கட்டிட அமைப்புக்களின் பட்டியலில் இடம் பெறக்கூடியன.
போதிகர
போதிகர என்பது வெள்ளரசுவீடு எனப் பொருள்படும். புத்த பகவான் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாகக் கருதப்படும் புனித வெள்ளரசு மரக் கிளையொன்று அசோகப் பேரரசர் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் பௌத்த வழிபாட்டிடங்களில் வெள்ளரசு மரங்கள் நடப்பட்டன. இம் மரத்தின் கீழ், புத்தர் இருந்து ஞானம் பெற்ற இருக்கையைக் குறிக்க ஒரு கற்பலகை அமைக்கப் பட்டிருக்கும். பிற்காலத்தில் அங்கே ஒரு புத்தர் சிலையும் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று. இவை அனைத்துக்கும் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட கட்டிடமே போதிகர
இவற்றையும் பார்க்க
இலங்கையின் கோட்டைகள்
மேற்கோள்கள் |
2033 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | அங்குலம் | அங்குலம் (; inch, குறியீடு: in அல்லது ″) என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.
பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்
இம்பீரியல் அலகுகள்
மெட்ரிக் அலகுகள்
பழைய இந்திய அளவைமுறை
மேற்கோள்கள்
நீள அலகுகள்
பிரித்தானிய அலகுகள்
fy:Tomme (lingtemaat) |
2034 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29 | கோயில் (வழிபாட்டிடம்) | வழிபாட்டிடம் என்பது ஆன்மீக சடங்குகள், பிரார்த்தனை, பலியிடல் போன்ற செயல்களுக்காக ஒதுக்கப்பட்ட கட்டிடமாகும்.
பண்டை எகிப்தியக் கோயில்கள்
பண்டைக்கால எகிப்தின் தொடக்கக் கோயில்கள் ஒரு மூடிய மண்டபம் ஆகும். இவற்றின் கூரைகள் தூண்களினால் தாங்கப்பட்டு இருந்தன. புதிய இராச்சியக் காலத்தில், வாயில் கோபுர அமைப்புக்கள், முற்றம், கோயில் கருவறைக்கு முன் அமைந்த மண்டபம் என்பன அமைக்கப்பட்டன. இப் பாணி கிரேக்க -ரோமர் காலம் வரை நிலைத்து இருந்தது. பண்டை எகிப்தியக் கோயில்கள் கற்களால் கட்டப்பட்டன. சுற்று மதில்களுக்கு செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
எகிப்தியக் கோயில்களின் நடுவில் ஒரு அறையில் கடவுள் உருவம் வைக்கப்படிருக்கும். அரசனின் சார்பில் ஒரு மதகுரு இதற்குப் பொறுப்பாக இருப்பார். இக் கோயில்கள் பொதுவாக மக்கள் வழிபடுவதற்காகத் திறந்து வைக்கப்படுவது இல்லை. கோயில் அதிகாரிகளைத் தவிர வேறு எவரும் செல்ல முடியாதவாறு கோயில் பூட்டப்பட்டிருக்கும். விழா நாட்களில் மட்டும் சிலை மக்கள் வழிபடுவதற்காக கோயிலுக்கு வெளியில் எடுத்துவரப்படும்.
கிரேக்க - உரோமக் கோயில்கள்
பண்டைக் கிரேக்கர்கள் தமது கோயில்களை டெமெனோஸ் என்று அழைத்தனர். இது புனிதப் பகுதி என்னும் பொருள் கொண்டது. பலி கொடுப்பதற்கான பலிபீடம் கட்டிடங்களுக்குப் புறத்தே அமைந்த வெளியிடத்திலேயே இருப்பதால், இக் கோயில்களின் புனிதம் முக்கியமாக இவ் வெளியிடங்களுடனேயே தொடர்புபட்டு உள்ளது. கிரேக்கக் கடவுளர் சிலைகளைத் தாங்கிய கட்டிடங்கள் தொடக்கத்தில் மிகவும் எளிமையான கட்டிடங்களாகவே இருந்தன. கி.மு ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவை விரிவான நுணுக்க வேலைப்பாடுகளுடன் அமைந்தன. கிரேக்கக் கோயில் கட்டிடக்கலை, பண்டைய கட்டிடக்கலை மரபுகளில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டிருந்தது.
கோயில்களின் அமைவிடத்தைத் தீர்மானிப்பதற்கான கிரியைகள், பறவைகளின் பறப்பை அல்லது வேறு இயற்கைத் தோற்றப்பாடுகளை அவதானித்துக் குறி சொல்பவரினால் நடத்தப்பட்டது. ரோமர் கோயில்கள் பொதுவாகக் கிழக்கு நோக்கியபடி அமைந்திருந்தன. எனினும் கோயில்களின் திசை குறித்த நுணுக்க விபரங்கள் சரியாகத் தெரியவரவில்லை. சில கோயில்கள் வேறு திசைகளை நோக்கியும் அமைந்திருக்கின்றன. எடுத்துக் காட்டாக பந்தியன் (Pantheon) வடக்கு நோக்கியபடி உள்ளது.
இந்துக் கோயில்கள்
பல நூறு மொழிகளைப் பேசுவோர் இந்துக்களாக இருக்கிறார்கள். இதனால், இறைவனை வணங்குவதற்கான இடம், மந்திர், மந்திரா, தேவஸ்தானம், தேவாலயம், அம்பலம் போன்ற எண்ணற்ற சொற்களால் குறிப்பிடப்படுவது உண்டு. எனினும் இவற்றின் நோக்கம் ஒன்றே. இந்து சமயத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு கல்லை வைத்து அதை இறைவனாக உருவகித்து வணங்கும்போது அது ஒரு கோயிலாகி விடுகிறது. எனவே வெறும் மர நிழலில் இருந்து, ஒரு நகரத்தையே உள்ளடக்கிய பெரிய கோயில்கள் வரை பல அளவுகளிலும் இந்துக் கோயில்கள் உள்ளன.
இந்துக் கோயில்கள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. இந்து சமயத்தின் தாயகமான இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோயில்கள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இடைக்காலத்தில், படையெடுப்புக்களாலும், பண்பாட்டுத் தொடர்புகளாலும் இந்து சமயம் இந்தியாவைத் தாண்டியும் விரிவடைந்தபோது வேறு பல நாடுகளிலும் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன. உலகின் மிகப்பெரிய இந்துக் கோயில்கள் இந்தியாவுக்கு வெளியே கம்போடியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் அமைக்கப்பட்டன. இன்று, இந்துக்கள் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி வாழுகின்றனர். அதனால், ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலும் கூடப் பல இந்துக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன.
அமைந்திருக்கும் சமுதாயம், இடம், அமைக்கப்பட்ட காலம் ஆகியவற்றைப் பொறுத்து இந்துக் கோயில்கள் பல்வேறு அமைப்புக்களில் காணப்படுகின்றன. எனினும் சில அடிப்படையான அமைப்புக்கள் எல்லா இந்துக் கோயில்களிலும் உள்ளன.
வகைப்பாடு
இந்து சமயக் கோயில்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
தைவிகம் - தேவர்களே மூலவிக்கிரகங்களை நிறுவிச் செய்தது.
ஆசுரம் - அசுரர்கள் ஏற்படுத்திய கோயில்கள் இது.
ஆர்ஷம் - ரிசிகள் கோயிலுக்கான மூலவரை நிறுவுவது.
மாநுஷம் - மன்னரும், மக்களும் நிறுவிக் குடமுழுக்கு செய்யப்பட்டது.
புத்த கோயில்கள்
மரபுவழியான புத்த கோயில்கள், மனிதருக்கு உள் மற்றும் வெளி அமைதியைக் கொடுக்கும் நோக்கில் வடிவமைக்கப் படுகின்றன. பௌத்தம் இறைவனைப் பற்றிப் பேசுவதில்லை ஆயினும், பௌத்த சமயத்தின் சில பிரிவுகள் கௌதம புத்தரைப் புத்த கோயில்களில் வைத்து வழிபடுகின்றனர். தாதுகோபுரம், அரச மரம், படிம வீடு, துறவிகள் மடம் போன்ற கூறுகள் புத்த கோயில்களில் காணப்படுகின்றன. இத் தாதுகோபுரங்களில் கௌதம புத்தரின் பல், எலும்பு போன்ற சின்னங்கள் வைக்கப்படுகின்றன.
புத்த மதம் தோன்றிய இந்தியாவில் இன்று அம் மதம் அருகி விட்டாலும், இந்தியாவுக்கு வெளியே அது ஒரு பாரிய மதமாக உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும், சீனா, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளிலும் புத்த மதம் பெரும்பான்மை மதமாக இருந்து வருகிறது. இதனால் அந் நாடுகளிலும், அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் வேறு பல நாடுகளிலும் புத்த கோயில்கள் உள்ளன.
உலகின் மிகப்பெரிய தாதுகோபுரங்களைக் கொண்ட புத்த கோயில்கள் சில இலங்கையில் உள்ளன. அசோகப் பேரரசனால் அனுப்பி வைக்கப்பட்டதும், புத்தர் ஞானம் பெற்றதுமான வெள்ளரசு மரக் கிளையை நட்டு வளர்க்கப்பட்ட அரச மரம் இன்றும் அநுராதபுரத்தில் உள்ள புத்த கோயில் ஒன்றில் உள்ளது.
சமணக் கோயில்கள்
சமண சமயம் அல்லது ஜைன மதம் என அழைக்கப்படும் மதம் ஒரு காலத்தில் இந்தியாவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. இம் மதம் செல்வாக்கிழந்த போது சமணக் கோயில்கள் பல அழிக்கப்பட்டு விட்டன. இன்று இந்தியாவில் சிறு அளவில் சமணர் வாழ்ந்து வருகின்றனர்.
சமணக் கோயில்களில் தீர்த்தங்கரர்கள் எனப்படும் மதப் பெரியார்களின் உருவங்கள் வைத்து வழிபடப்படுகின்றன. சமணக் கோயில்கள் பெரும்பாலும் சலவைக் கல்லினால் அமைக்கப்படுகின்றன. சில புகழ் பெற்ற சமணக் கோயில்கள் இந்தியாவில், பலித்தானா, சங்கேஸ்வர், சிக்கார்ஜி, வத்தமான், மும்பாய், அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ளன. சமணக் கோயில்களில் பல சலவைக் கல் தூண்கள் அமைக்கப்படுகின்றன. இவை தேவதைகளின் உருவங்களைக் கொண்ட சிற்பவேலைகளினால் அழகூட்டப்படுகின்றன. சமணக் கோயில்களின் முதன்மை அறையில், பர்ஷ்வாநாதர், ரிஷபதேவர், மகாவீரர் ஆகிய மூன்று தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வைக்கப்படுகின்றன. மவுண்ட் அபுவில் உள்ள தில்வாரா கோயில்கள் சமணம் தொடர்பான மிக அழகிய யாத்திரைத் தலம் எனச் சொல்லப்படுகின்றது.
சீக்கியக் கோயில்கள்
சீக்கிய மதக் கோயில்கள் பொதுவாக குருத்துவாரா எனவே அழைக்கப்படுகின்றன. இச் சொல் பஞ்சாபி மொழியில் குருவுக்கான வாயில் என்னும் பொருள் கொண்டது. எனினும் கோயில் என்ற சொல் சீக்கிய மதக் கோயில்களுக்கும் பரவலாக வழங்கப்படுவது உண்டு. சீக்கியக் கோயில்களில் உருவங்கள் வைத்து வணங்கப்படுவது இல்லை. சீக்கிய மதத்தினர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்களுடைய மிகப் புனிதமான கோயிலும் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் (அம்ரித்சார்) என்னும் நகரில் அமைந்துள்ளது. ஹர்மந்திர் சாகிப் என்னும் பெயர் கொண்ட இக் கோயில் பொதுவாகப் பொற்கோயில் என அழைக்கப்படுகிறது.
சீக்கியக் கோயில்களுக்குள் பிற மதத்தினரும் அநுமதிக்கப்படுகின்றனர். எனினும், உட் செல்லும் எவரும் காலணிகளைக் கழற்றிவிட்டு, கைகழுவித் தலையில் துண்டு அல்லது தொப்பி அணிந்தே செல்ல முடியும்.
கிறித்தவக் கோயில்கள்
கிறித்தவர்கள் தங்களின் வழிபாட்டு இடங்களை சர்ச் என அழைப்பர். கிறித்த சர்ச்க்குள் பிற மதத்தினரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆயினும் திருவருட்சாதனங்களில் குறிப்பாக நற்கருணை விருந்தில் பங்கு பெற முடியாது. எல்லா கிறித்தவ ஆலயங்களும் குறிப்பாக கத்தோலிக்க ஆலயங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு புனிதரோ அல்லது இயேசு கிறித்துவின் பெயராலோ தந்தையாம் கடவுளுக்கே அர்பணிக்கப்பட்டதாகும்.
இவற்றையும் பார்க்க
அடுக்குத் தூபி
பள்ளிவாசல்
ஜங்கம்
விளக்கக் குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
online – distinct for the religious and anatomical terms
Comparison between Egyptian and Greek temples
சமய வழிபாட்டிடங்கள்
கோயில்கள் |
2109 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | கணபதி காங்கேசர் பொன்னம்பலம் | ஜி. ஜி. பொன்னம்பலம் எனப்படும் கணபதி காங்கேசர் பொன்னம்பலம்(G. G. Ponnambalam, நவம்பர் 8, 1901 - பெப்ரவரி 9, 1977) இலங்கைத் தமிழர்களின் நலன்கருதித் துவக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஆவார். இலங்கையின் அரசியலில் 1940களிலும் 1950களிலும் மிகவும் அறியப்பட்டிருந்த இவர் ஒரு திறமையான குற்றவியல் வழக்குரைஞர் ஆவார். ஜீ.ஜீ. என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவர்.
வரலாறு
பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள அல்வாய் என்னும் ஊரில் 1901 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் கணபதி காங்கேசர். தபால் அதிபராகப் பணியாற்றினார். தாயார் மானிப்பாய்க்கு அண்மையிலுள்ள நவாலியைச் சேர்ந்தவர். பொன்னம்பலம், யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காகக் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று இயற்கை அறிவியல் துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்தார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்குரைஞராகப் புகழ் பெற்றார். 1948 ஆம் ஆண்டில் அரச வழக்கறிஞர் (King’s Counsel) என்னும் தகுதியைப் பெற்றார்.
இவர் ரோஸ் அழகுமணி கிளவ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். இவரது மகன், குமார் என்று அழைக்கப்பட்ட காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம், இலங்கைத் தமிழர் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். இவர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை
1931 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது அரசாங்கச் சபைக்கான தேர்தலில் மன்னார்-முல்லைத்தீவுத் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டாராயினும் வெற்றிபெற முடியவில்லை. ஆயினும் இது இவரின் அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம், வெற்றி பெற்று அரசாங்கச் சபை உறுப்பினர் ஆனார். 1936 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்ற இவர் 1947 ஆம் ஆண்டுவரை அரசாங்கச் சபை உறுப்பினராகத் தொடர்ந்தார்.
1944, ஆகஸ்ட் 29 இல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். இக் காலகட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் ஐம்பதுக்கு ஐம்பது என்று பரவலாக அறியப்பட்ட இச் சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் 1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. இத் தேர்தலில் நல்ல அரசியல் செல்வாக்குக் கொண்டிருந்த அருணாசலம் மகாதேவாவை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் பெருமளவு வாக்குகளால் வெற்றி பெற்றார்.
1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதும், மலையகத் தமிழரின் குடியுரிமை பற்றிய பிரச்சினைகளில் பொன்னம்பலத்தின் அணுகு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சில தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். இதனால் கட்சி பிளவு பட்டது. எனினும் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். வடக்கில், காங்கேசன்துறையில் நிறுவப்பட்ட காங்கேசன்துறை சிமெண்ட் தொழிற்சாலையும், வன்னிப் பகுதிக்கு அண்மையில் பரந்தன் என்னுமிடத்தில் நிறுவப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அண்மையில் வாழைச்சேனையில் ஏற்படுத்தப்பட்ட காகித ஆலை ஆகியவை இவற்றுள் முக்கியமானவை.
செல்வாக்குச் சரிவு
தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்த செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன் முதலிய தலைவர்கள் தமிழரசுக் கட்சி என அழைக்கப்பட்ட கூட்டாசிக் கட்சியை (Federal Party) உருவாக்கினர். தமிழ்க் காங்கிரசைவிடக் கூடிய தமிழ்த் தேசியவாதக் கட்சியாக அடையாளம் காணப்பட்ட இக் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தபோது, காங்கிரசின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஈ. எம். வி. நாகநாதன், பொன்னம்பலத்தை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டார். இத் தேர்தலில் பொன்னம்பலம் வெற்றி பெற்றார் ஆயினும், வாக்கு வேறுபாடு குறைவடைந்ததுடன், நாடாளுமன்றத்தில் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும் குறைந்தது. 1956 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இத் தேர்தலில் இக் கட்சியின் சார்பில் பொன்னம்பலம் மட்டுமே மிகவும் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
1960 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மீண்டும் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் இரண்டிலும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான அல்பிரட் துரையப்பாவிடம் தோற்றார்.
1965 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத் தேர்தலில் இவருடன் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் இருவர் வெற்றி பெற்றனர்.
1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியிலேயே போட்டியிட்டார். இத்தடவை இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மாவட்ட நீதவான் ஆகிய சி. எக்ஸ். மார்ட்டின் என்பவரிடம் தோல்வியடைந்தார். இத் தேர்தலில் மூன்றாம் இடமே இவருக்குக் கிடைத்தது. இதுவே பொன்னம்பலம் போட்டியிட்ட இறுதித் தேர்தலாகவும் அமைந்தது.
அரசியல் மாற்றங்கள்
1970 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர் அரசியலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 1970 இல் பதவிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு தமிழருக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் தமிழ் இளைஞர் மத்தியில் தீவிரவாதம் முளைவிடத் தொடங்கியது. தமிழர் மிதவாதக் கட்சிகளின் தலைவர்கள் இனியும் பிரிந்து நின்று எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தனர். தமிழரசு, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், மலையகத் தமிழர்களின் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு தமிழர் கூட்டணி என்னும் புதிய அமைப்பை உருவாக்கினர். இதன் தலைவர்களாக,எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜி. ஜி. பொன்னம்பலம், எஸ். தொண்டமான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் அரசியலில் இருந்து ஓரளவுக்கு ஒதுங்கி இருந்த பொன்னம்பலம் மீண்டும் அரசியலுக்கு வந்தார். எனினும் தீவிர அரசியலில் இவர் நேரடியாக இறங்கவில்லை.
தமிழர் கூட்டணியினர் தமிழீழம் என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றினர். அத்தீர்மானத்தை அச்சிட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிய அமிர்தலிங்கம் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு ட்ரையல் அட் பார் எனப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்த ஏற்பாடாகியது. இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு வழக்காக இது விளங்கியதுடன், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது எனலாம். இவ்வழக்கை நடத்துவதற்காகச் செல்வநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் குழுவில் பொன்னம்பலம் பங்கேற்று வாதாடினார். இதில் பொன்னம்பலத்தின் வாதத்திறமையினால் கூட்டணித் தலைவர்கள் விடுதலையாயினர். இவ் வழக்கின் மூலம் தமிழர் மத்தியில் பொன்னம்பலத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது எனலாம்.
இவ் வழக்கில் ஏற்பட்ட புகழ் காரணமாகத் தமிழ்நாட்டில் மு. கருணாநிதி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கொன்றிலும் கருணாநிதிக்காகப் பொன்னம்பலம் வாதாடினார். எனினும் வழக்கு முடியுமுன்னரே மலேசியாவில் காலமானார்.
அவரது உடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுக் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபின்னர் யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான அல்வாயில் மக்கள் திரளின் மத்தியில் எரியூட்டப்பட்டது.
வெளி இணைப்புகள்
வணக்கம் வலைவாசல் செய்தி
மஹாவலி.காம். இணைய செய்தி
மேற்கோள்கள்
1901 பிறப்புகள்
1977 இறப்புகள்
இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
யாழ்ப்பாணத்து நபர்கள்
இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்
இலங்கை அரசாங்க சபை உறுப்பினர்கள்
இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்
இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
இலங்கையின் வட மாகாண நபர்கள் |
2191 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF | காங்கேசன்துறை வீதி | காங்கேசன்துறை வீதி (Kankesanthurai Road அல்லது KKS Road, கே.கே.எஸ் வீதி) என்பது, யாழ்ப்பாண நகரத்திலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான காங்கேசன்துறை நோக்கிச் செல்லும் பாதையைக் குறிக்கும். இது கே.கே.எஸ். (காங்கேசன்துறை என்பதன் ஆங்கிலக் குறுக்கம்) வீதி எனவும் பரவலாக அறியப்படுகின்றது. இதனுடைய நீளம் அண்ணளவாக 10 மைல்களாகும். இவ் வீதி, வண்ணார்பண்ணை, கொக்குவில், கோண்டாவில், தாவடி, இணுவில், உடுவில், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, மாவிட்டபுரம் ஆகிய ஊர்களை ஊடறுத்துச் செல்கின்றது. செப்பமற்ற மண்பாதையாக இருந்த இவ் வீதி 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முறையான வீதியாகக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது.
முக்கிய சந்திகள்
காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாண நகரத்திலிருந்து, குடாநாட்டின் கரையோரங்களை நோக்கி விசிறி அமைப்பில் செல்லும் வீதிகளுள் ஒன்று. இந்த வீதிகளைச் செங்குத்தாக வெட்டிக்கொண்டு கிழக்கு - மேற்காகச் செல்லும் வீதிகள் பல உள்ளன. இத்தகைய வீதிகள் காங்கேசன்துறை வீதியை வெட்டிச் செல்லுவதனால் ஏற்படுகின்ற சந்திகள் அவற்றை அண்டியுள்ள ஊர்களுக்கான மையங்களாகச் செயற்படுகின்றன. இவ்வாறான சந்திகள் சில பின்வருமாறு:
யாழ் நகருக்குள் உள்ளவை
யாழ் ஆஸ்பத்திரி வீதிச் சந்தி (சத்திரத்துச் சந்தி)
ஸ்ரான்லி வீதிச் சந்தி (மிட்டாசுக் கடைச் சந்தி)
சிவன் கோயிலடிச் சந்தி
நாவலர் சந்தி
தட்டாதெருச் சந்தி
யாழ் நகருக்கு வெளியே உள்ளவை
கொக்குவில் சந்தி
குளப்பிட்டி சந்தி
தாவடிச் சந்தி
உப்புமடம்(கோண்டாவில்)சந்தி
இணுவில் சந்தி
மருதனார்மடம் சந்தி
சுன்னாகம் சந்தி
மல்லாகம் சந்தி
தெல்லிப்பழை சந்தி
அண்டியுள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் நகரங்கள்
கோட்டை முனீசுவரர் கோவில்
கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபம்
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர் கொடை உத்தமர் நினைவாலயம்
யாழ்ப்பாணம் தலைமை அஞ்சல் நிலையம்
வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில்
வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை
சிவதொண்டன் நிலையம், இலங்கை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்
கொக்குவில் இந்துக்கல்லூரி
இணுவில் மக்லியொட் மருத்துவமனை
மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் கோவில்
மருதனார்மடம் உழவர் சந்தை
இராமநாதன் மகளிர் கல்லூரி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடம்
சுன்னாகம் நகரம்
சுன்னாகம் உழவர் சந்தை
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில்
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்
யாழ்ப்பாண வீதிகள்
இணுவில் |
2196 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D | கிலோமீட்டர் | மெற்றிக்கு அளவை முறையில், கிலோமீட்டர் (இலங்கை வழக்கு: கிலோ மீற்றர்) என்பது நீளத்தை அளப்பதற்கான ஒரு அலகாகும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 மைல்களுக்குச் சமமானது.
இது 1000 மீட்டர்கள் கொண்டது. பொதுவாக ஒரு பிரதேசத்தில், நாட்டில், அல்லது உலகப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெற்றிக்கு அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
சில முக்கியமான தூரங்கள் கிலோமீட்டரில்
புவிமையக் கோட்டில் பூமியின் சுற்றளவு - 40,075 கி.மீ.
பூமியிலிருந்து சந்திரனின் சராசரித் தூரம் - 238,854 கி.மீ.
பூமியிலிருந்து சூரியனின் மிகக் குறைந்த தூரம் - 147,097,800 கி.மீ.
கடல் மட்டத்திலிருந்து எவரெசுட்டு சிகரத்தின் உயரம் - 8.84 கி.மீ.
நீள அலகுகள் |
2197 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D | தச்சர் | மரவேலை (அல்லது தச்சு வேலை) செய்யும் ஒருவரைத் தமிழில் தச்சர்எனக் குறிப்பிடுவர். துண்டு துண்டாக அறுக்கப்பட்ட மரங்களை மரசாமான்களாக தச்சர் வடிவமைக்கின்றார். கதவு, சன்னல், அலமாரி, நற்காலி உட்பட அனைத்து மரச்சாமான்களை தச்சர் வடிவமைக்கிறார்.
பயன்படுத்தும் சாதனங்கள்
உளி, சுத்தி, வாள், ஆணி, துளைக்கருவி, அரம், இழைப்புளி போன்றவை.
தச்சரின் வகைகள்
மரவேலை செய்யும் தச்சர், நகை வேலை செய்யும் தச்சர்
(இதில் நகை வேலை செய்பவர்களை தட்டார், பத்தர் என்ற பெயர்களிலும் அழைப்பர்), இரும்பு வேலை செய்யும் தச்சர் எனப்படுவர் (இதில் இரும்பு வேலை செய்யும் தச்சரை கருமார் என்ற பெயரில் அழைப்பர்.
பழங்காலத்தில் தச்சர்
பழங்காலத்தில் தச்சரின் பங்கு இன்றிமையாதது. தற்பொழுது பெரும்பாலும் தச்சு வேலைக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத்தில் மரத்தில் வடிவங்கள் தச்சர்கள் வெறும் உளி, சுத்தி பயன்படுத்தி வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைவினைஞர்கள்
மரவேலை
தொழில்கள்
தொழிற்கலைஞர்கள் |
2199 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பட்டியல் | கிருஷ்ணன்-பஞ்சு
டி. ஆர். ராமண்ணா
எஸ்.பாலசந்தர்
பி. ஆர். பந்துலு
ப. நீலகண்டன்
எம். ஏ. திருமுகம்
கே. சங்கர்
ஸ்ரீதர்
ஏ. பி. நாகராசன்
ஏ. சி. திருலோகச்சந்தர்
கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
முக்தா சீனிவாசன்
பி. மாதவன்
கே. விசயன்
வியட்நாம் வீடு சுந்தரம்
எம். ஜி. ஆர்
கே. பாலசந்தர்
பாரதிராஜா
மணிரத்னம்
பி. வாசு
சந்தான பாரதி
ஆர். பி. உதயகுமார்
ராஜ்கபூர்
சங்கர்
கமலஹாசன்
சேரன்
பாலுமகேந்திரா
சிங்கீதம் சீனிவாஸராவ்
செல்வராகவன்
எஸ். பி. முத்துராமன்
மகேந்திரன்
பாலா
பாக்கியராஜ்
தரணி
ஆர்.வி. உதயகுமார்
பாண்டியராஜன்
பாலாஜி சக்திவேல்
கௌதம் மேனன்
ஆர். கே. செல்வமணி
அமீர்
சுசி.கணேசன்
சுந்தர்.சி
கே.எஸ்.ரவிகுமார்
விக்ரமன்
எஸ். ஜே. சூர்யா
லிங்குசாமி
லியாகத் அலிகான்
பார்த்திபன்
தங்கர் பச்சான்
அகத்தியன்
ஞான ராஜசேகரன்
பி.லெனின்
விசு
மிஷ்கின்
அழகம்பெருமாள்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் |
2200 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D | கைலாசம் பாலசந்தர் | கைலாசம் பாலச்சந்தர் (K. Balachander, கே. பாலச்சந்தர், 9 சூலை 1930 - 23 திசம்பர் 2014) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். மேலும் 80-90களின் தமிழ் திரையுலகை தீர்மானித்த முக்கிய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகிய இரு துருவ போட்டி நடிகர்களை அறிமுகம் செய்தவர். அது மட்டுமின்றி தமிழ் திரையுலகில் பின்னாளில் அசாத்திய வில்லன் நடிகர்களான நாசர், பிரகாஷ் ராஜ் மற்றும் தனது நகைச்சுவையால் பலரையும் சிந்திக்க வைத்த நகைச்சுவை நடிகர் விவேக் அனைவரையும் அறிமுகம் செய்ததே பாலசந்தர் அவர்களையே சாரும். மேலும் 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.
வாழ்க்கையும், கல்வியும்
இவரது சொந்த ஊர் கும்பகோணம்–திருவாரூர் இடையேயுள்ள நன்னிலம் அருகிலான நல்லமாங்குடியில் கைலாசம் ஐயர்–காமாட்சி அம்மாள் இணையருக்கு ஒரு நடுத்தர பிராமணர் குடும்பத்தில் பாலசந்தர் மகனாக பிறந்தார்.
இவர் தந்தைக்கு கிராம முனிசிஃப் பணியில் நன்னிலத்தில் இருந்த போது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தனது மேல் படிப்பை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பி.எஸ்சி. பட்டம் முடித்தார்.
பின்பு இராம. அரங்கண்ணல், இவரது பள்ளித் தோழர்.எம். எஸ். உதயமூர்த்தி இவரது கல்லூரித் தோழர்.
பிறகு "கவிதாலயா" என்ற சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார்.
இதன் மூலமாக பிற இயக்குநர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார் அவற்றில் சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அறிமுகப்படுத்திய புதுமுகங்கள்
இயக்குநர் ஸ்ரீதரைப் போல, பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவர் பாலச்சந்தர். அவர்களுள் மிக உச்சத்தை அடைந்தவர் ரஜினிகாந்த். கமலஹாசனை, கதாநாயகனாக்கியது பாலச்சந்தர் அல்லர் எனினும், வரிசையாக அவருக்கு வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தவர் பாலச்சந்தர்.
'அவள் ஒரு தொடர்கதை' போன்ற சில திரைப்படங்களை, முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இது, ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் ஒரு வெற்றிப்படமே.
மேலும், பிற மொழிகளிலிருந்தும், சிலரை, தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோர் அடங்குவர்.
வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் அறிமுகமான திலீப் மற்றும் நிழல் நிஜமாகிறது படத்தில் அறிமுகமான அனுமந்து ஆகியோர் எதிர்பார்த்த அளவில் திரையுலகில் முன்னேறவில்லை. பாலச்சந்தர், அவர்களை அறிமுகம் செய்த படத்தில், மிகுந்த அளவில் நற்பெயரைப் பெற்றிருந்தனர்.
எஸ். வி. சேகர் (வறுமையின் நிறம் சிவப்பு) மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது), ஒய். ஜி. மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்), என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை, திரைக்கு, பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். பாலச்சந்தரின் பல படங்களில் நடித்திருந்த மேஜர் சுந்தரராஜன் (மேஜர் சந்திரகாந்த்) இவ்வாறு அறிமுகமானவரே. அவரது இடுபெயரான 'மேஜர்' என்பது, இப்படத்திலிருந்தே விளைந்தது.
எம். ஆர். ராதாவின் மகன் ராதாரவியை அறிமுகப்படுத்தியவர் இவரே.
சுவையான தகவல்கள்
தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாது, அவரது நண்பருமாக இருந்தவர். நடிகையரில், சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஸ்ரீதரைப் போல, பாலச்சந்தரும், தமது துவக்க மற்றும் இடைக்காலப் படங்களில் ஜெமினி கணேசனை, வெகுவாகப் பயன்படுத்தியிருந்தார். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, வெள்ளி விழா, நூற்றுக்கு நூறு ஆகியவை அவற்றில் அடங்கும்.
இயக்குநர் ஸ்ரீதர் பல விடயங்களிலும் தமது முன்னோடி என அவர் உரைத்தது மட்டும் அன்றி, தமக்குப் பின்னர் வந்த பாரதிராஜா, மணிரத்னம் போன்றோரையும் அவர் பல நேரங்களில் பாராட்டியுள்ளார். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் வெற்றி விழாவில், அவரது பாராட்டுப் பேச்சு, ஒரு படைப்பாளியாக உணர்ச்சி வசப்படும் அவரது தன்மையை வெளிப்படுத்திப் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
சிவாஜி கணேசன் நடிப்பில், பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியுற்றது.
பாலச்சந்தர், வண்ணத்தில் இயக்கிய முதல் படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து, 1971ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தோல்வியடைந்தது. இதற்குப் பின்னர், மீண்டும் கருப்பு வெள்ளைக்கே திரும்பி விட்ட பாலச்சந்தர், இயக்கிய அடுத்த வண்ணப்படம் முற்றிலும் புதுமுகங்களையே கொண்டிருந்த பட்டினப் பிரவேசம் மற்றும் அதை அடுத்து கமலஹாசன் கதாநாயகனாக நடித்த மன்மத லீலை. பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம் நிழல் நிஜமாகிறது.
துவக்க காலத்தில் நாடகபாணித் திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. இவை வெற்றிப்படங்களாக விளங்கிடினும், பிற்காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு (ரஜினிகாந்த் நடித்த இப்படம் இந்தியில் அமோல் பாலேகர் நடித்த கோல்மால் என்னும் படத்தைத் தழுவியது), பொய்க்கால் குதிரை ஆகியவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
நான்கு சுவர்கள் படுதோல்வி அடைந்து, விமர்சன அளவிலும் ஒதுக்கப்பட்ட, அதே கால கட்டத்தில், அவரது நூற்றுக்கு நூறு வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.
அரசியல் களத்தைத் தொட்டுப் பார்த்த பாலச்சந்தரின் படங்கள் தண்ணீர் தண்ணீர் (இது கோமல் சுவாமிநாதனின் அதே பெயரைக் கொண்ட நாடகத்திலிருந்து உருவானது; திரைப்படத்தின் வசனத்திற்கும் கோமல் பங்களித்திருந்தார்), அச்சமில்லை அச்சமில்லை போன்றவை.
பல ஆண்டுகளுக்கு தயாரிப்பு, வசனம், இயக்கம் ஆகிய பலவற்றிலும் பாலச்சந்தரின் வலக்கரமாகச் செயல்பட்டு வந்தவர் அனந்து. கமலஹாசன் முதலிய நடிகர்கள் இவரைத் தமது குரு என்றே குறிப்பிடுவர்.
நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றியிருப்பினும், எம்.ஜி.ஆரை, பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்திற்கு அவர் வசனம் மட்டும் அளித்திருந்தார். தெய்வத்தாய் என்னும் அத்திரைப்படம், ஆர். எம். வீரப்பன் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம். பி. மாதவன், எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் இதுவே, என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலச்சந்தரின் இயக்கத்தில், சிந்து பைரவி படத்தில், தமது பாத்திரத்திற்காக சுஹாசினி, இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஈட்டித் தந்த படம் இது.
சிரஞ்சீவியின் நடிப்பில், தெலுங்கில், பாலச்சந்தர் இயக்கிய ருத்ரவீணா வெற்றி பெறவில்லை எனினும், கமலஹாசன் நடிப்பில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் வெளியான அதன் தமிழாக்கம் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது.
கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும். ஆயினும், இது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.
பாலச்சந்தரின் இயக்கத்தில், ஜெயலலிதா நடித்த ஒரே படம் 'மேஜர் சந்திரகாந்த்'.
ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில், பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை, அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டப்பெற்றினும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன், பிலிம்பேர் விருது பெற்றார்.
சிவகுமார் நடிப்பில், பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள், தற்போதும் பேசப்பட்டு வருகின்றன.
பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு, தற்போது மறுவாக்கத்தில் உள்ளது.
பாலசந்தர் இயக்கிய படங்கள்
நூல் வேலி
நீர்க்குமிழி
நாணல்
மேஜர் சந்திரகாந்த்
இரு கோடுகள்
பூவா தலையா
பாமா விஜயம்
தாமரை நெஞ்சம்
நான் அவனில்லை
புன்னகை
எதிர் நீச்சல்
சிந்து பைரவி
அபூர்வ ராகங்கள்
தண்ணீர் தண்ணீர்
அச்சமில்லை அச்சமில்லை
வறுமையின் நிறம் சிகப்பு
புதுப்புது அர்த்தங்கள்
பார்த்தாலே பரவசம்
நூற்றுக்கு நூறு
டூயட்
சிந்து பைரவி
சொல்லத்தான் நினைக்கிறேன்
ஒரு வீடு இரு வாசல்
ஜாதி மல்லி (திரைப்படம்)
பொய்
அக்னிசாட்சி
கல்கி வானமே எல்லை புன்னகை மன்னன் தில்லு முல்லு கல்யாண அகதிகள் பாலசந்தர் இயக்கிய பிற மொழித் திரைப்படங்கள்
அந்துலெனி கதா (1976) - (தெலுங்கு)
ஆய்ணா (1977) - (இந்தி)
மரோசரித்ரா (1978) - (தெலுங்கு)
குப்பெடு மனசு (1979) - (தெலுங்கு)
இதி கத காடு (1979) - (தெலுங்கு)
ஏக் தூஜே கே லியே - (இந்தி) - (1981)
ஜரா சி ஜிந்தகி (1983) - (இந்தி) வறுமையின் நிறம் சிகப்பு படத்தின் மறு உருவாக்கம்.
ஏக் நயீ பஹேலி (1984) - (இந்தி) அபூர்வ ராகங்கள் படத்தின் மறு உருவாக்கம்.
ருத்ரவீணா''(1998) - (தெலுங்கு)
விருதுகள்
பத்மஸ்ரீ விருது, 1987
தாதாசாகெப் பால்கே விருது, 2010.
மறைவு
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாலசந்தர் 2014 திசம்பர் 23 அன்று காலமானார்..
ஆவணப்படம்
இவரைப் பற்றிய ஆவணப்படத்தை சூலை 9ஆம் நாளான இவரது 90ஆம் பிறந்த நாளில் தயாரித்து வெளியிட, கவிதாலயா நிறுவனம் ரவிசுப்பிரமணியனைத் தெரிவு செய்துள்ளது. தற்போது ரவிசுப்பிரமணியன், ஆவணப்பட உருவாக்க முயற்சியில் உள்ளார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கே பாலச்சந்தர் : படைப்பும், ஆளுமையும்-ஒலி வடிவில்
End of an era: K. Balachander (1930-2014) - ஒளிப்படத் தொகுப்பு
Celebrities pay tributes to K. Balachander - பொதுமக்கள், திரையுலகத்தினரின் அஞ்சலி தொடர்பான ஒளிப்படத் தொகுப்பு
He took Tamil cinema beyond hero-centric creations - சிறப்புக் கட்டுரை 1
A powerful portrayer of middle-class predicament in plays - சிறப்புக் கட்டுரை 2
A ladies’ man - சிறப்புக் கட்டுரை 3
1930 பிறப்புகள்
2014 இறப்புகள்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்
பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்
தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
கலைமாமணி விருது பெற்றவர்கள்
பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
கன்னடத் திரைப்பட இயக்குநர்கள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்
தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
தமிழ்த் தொலைக்காட்சி நாடக இயக்குநர்கள்
அண்ணாமலைப் பல்கலைக்கழ முன்னாள் மாணவர்கள் |
2201 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D | மைல் | பிரித்தானிய அளவை முறையில் நீண்ட தூரங்களை அளக்கப் பயன்படும் நீள அலகு மைல் ஆகும். மெட்ரிக் முறையில் இது அண்ணளவாக 1.6 கிலோமீட்டருக்குச் சமமானது.
பண்டைய அரபிகளும் தூரத்தை அளக்க மைல் என்பதைப் பயன்படுத்தினார்கள். இது பிரித்தானிய அளவை முறைக்கு மிகவும் முற்பட்டதாகும். முகம்மது நபியவர்களின் காலத்திலும் அதற்கு முன்னரும் இது பயன்பாட்டிலிருந்தது. ”அரபு மைல்” என்று தற்கால வரலாற்றாளர்களால் அழைக்கப்படும் இந்த அலகு 1900 முதல் 2000 மீட்டருக்கு சம்மானதாக இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
1 மைல்
= 8 பர்லாங்கு
= 80 சங்கிலி
= 880 பாகம்
= 1760 யார்
= 5280 அடி
= 63360 அங்குலம்
நீள அலகுகள்
பிரித்தானிய அலகுகள் |
2208 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | மொழியியல் தொடர்பான அடிப்படைத் தலைப்புகள் | மொழியியல் தொடர்பான அடிப்படைத் தலைப்புகள் கீழே தரப்பட்டுள்ள அம்சங்களைத் தழுவி அமைகின்றன.
அடிப்படைக் கேள்விகள்
மொழியியலில் கேட்கப் படுகின்ற அடிப்படையான கேள்விகள் எவை?
மொழி என்பது என்ன?
எப்படி இது படிமலர்ச்சி அடைந்தது/அடைந்து வருகிறது?
மொழி எப்படி ஒரு தொடர்பு ஊடகமாகச் செயற்படுகிறது?
எப்படி ஒரு மொழி சிந்தனை ஊடகமாகத் தொழிற்படுகிறது?
எல்லா மொழிக்கும் பொதுவானவை எவை?
மொழிகள் தம்முள் எவ்வாறு வேறுபடுகின்றன?
மொழியையும், கிளைமொழியையும் வேறுபடுத்தி அறிவது எப்படி?
அடிப்படைக் கருத்துருக்கள்
மொழியியலில் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைக் கருத்துருக்கள் அல்லது சொற்கள் எவை?
உருபன் (Morpheme)
ஒலியன் (Phoneme)
இலக்கணம் (Grammar)
சொற்றொடரியல் (Syntax)
சொற்பொருளியல் (Semantics)
சூழ்பொருளியல் (Pragmatics)
அடிப்படைக் கருத்துருக்களின் கண்டுபிடிப்பு - Timeline
அடிப்படைக் கருத்துருக்கள் முதன் முதலில் விளக்கப்பட்டது எப்போது? யாரால்?
பண்டைய சமஸ்கிருத இலக்கண நூலோர்
பண்டைய கிரேக்கர்களின் மொழி ஆய்வுகள்
கிரேக்க ஆய்வுகள் தொடர்பிலான உரோமர்களின் மேலாய்வு
இலத்தீன் மொழியிலான மத்தையகாலத் தத்துவ ஆக்கங்கள்
19 ஆம் நூற்றாண்டில் நவீன மொழியியலின் ஆரம்பம்
Behaviorism and mental tabula rasa hypothesis
சொம்ஸ்கியும் (Chomsky) செயற்பாட்டுவாதமும் (functionalism)
Generative grammar leads to generative phonology and semantics
நிக்கராகுவா சைகை மொழியின் (Sign Language) தோற்றம்
Alternate syntactic systems develop in 80s
80 களில் கணினிசார் மொழியியல்
நரம்பியல்சார் மொழியியலும், அறிதிறன் (cognition) தொடர்பான உயிரியல் அடிப்படையும்
Pirahã எண் கருத்துரு தொடர்பான சர்ச்சை
மொழியியலாளர்
மொழியியல் துறை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்தியவர்கள்
பெஞ்சமின் லீ வார்ப் (Benjamin Lee Whorf)
Claude Levi-Strauss
எட்வார்ட் சாப்பிர் (Edward Sapir)
பேர்டினண்ட் டி சோசுரே (Ferdinand de Saussure)
பிரான்ஸ் போப்(Franz Bopp)
ஆகஸ்ட் ஸ்கிலீஷெர் (August Schleicher)
ஜான் லாங்ஷோ ஆஸ்டின் (John Langshaw Austin)
ஜான் ஆர். சியர்லே (John R. Searle)
லூயிஸ் ஜெம்ஸ்லேவ் (Louis Hjelmslev)
கென்னத் எல். பைக் (Kenneth L. Pike)
எம்.ஏ.கே. ஹாலிடே (M.A.K. Halliday)
நோவாம் சொம்ஸ்கி (Noam Chomsky)
பாணினி
ராஸ்முஸ் ராஸ்க் (Rasmus Rask)
ரோமன் ஜாக்கோப்சன் (Roman Jakobson)
சர். வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones)
துணைத் துறைகள்
அறிதிற மொழியியல் (Cognitive linguistics)
கணினிசார் மொழியியல் (Computational linguistics)
ஒப்பீட்டு மொழியியல் (Comparative linguistics)
கிளைமொழியியல் (Dialectology)
சொற்பிறப்பியல் (Etymology)
வரலாற்று மொழியியல் (Historical linguistics)
இலக்கணம்
Language didactics
சொல்லியல் (Lexicology)
மொழியியற் புள்ளியியல் (Linguistic statistics)
Linguistic Typology
உருபனியல் (Morphology)
ஒலிப்பியல் (Phonetics)
ஒலியியல் (Phonology)
சூழ்பொருளியல் (Pragmatics)
உளவியல்சார் மொழியியல் (Psycholinguistics)
சொற்பொருளியல் (Semantics)
சமூக மொழியியல் (Sociolinguistics)
Schools/இயக்கங்கள்/அணுகுமுறைகள்
Danish School
செயற்பாட்டுவாதம்
Geneva School
Neo-Grammarians
Prague School
Prescription and description
சோவியத் மொழியியல்
Stratificational linguistics
அமைப்புவாதம் (Structuralism)
Systemic linguistics
SIL International
Tagmemics
இதர தலைப்புகள்
தனிநிலை மொழி – isolating
ஒட்டுநிலை மொழி – agglutinative
உட்பிணைப்பு மொழி – inflexional
சமூகம் தலைப்புகள் பட்டியல் |
2211 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF | இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி | இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொதுவுடமைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி. பொதுவுடமைக் கொள்கையின் ஆதரவாளர்களால் இலங்கையில் தொடங்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து ஸ்டாலினிசத்துக்குச் சார்பானவர்கள் பிரிந்து உருவாக்கிய ஐக்கிய சோஷலிசக் கட்சி என்ற பெயரிலான கட்சியின் தொடர்ச்சியாக 1943ல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. வைத்திய கலாநிதியான எஸ். ஏ. விக்கிரமசிங்க தலைமை தாங்கி ஐக்கிய சோஷலிசக் கட்சியையும் பின்னர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியையும் வழிநடத்தினார்.
1952 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரான திருமதி டொரீன் விக்கிரமசிங்க இலங்கைப் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
1960ல் கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மகாஜன எச்சத் பெரமுன என்ற கட்சியும் இணைந்து இடதுசாரிக் கூட்டணியொன்றை உருவாக்கின. ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி என்று அழைக்கப்பட்ட இக் கூட்டணி, 1964ல் அப்போதைய பிரதம அமைச்சரான சிரிமாவோ பண்டாரநாயக்கா கம்யூனிஸ்ட் கட்சிக்கும், லங்கா சமசமாஜக் கட்சிக்கும் அமைச்சர் பதவிகளைக் கொடுக்க முன்வந்தபோது உடைந்தது.
மேற்கோள்கள்
இலங்கை அரசியல் கட்சிகள்
1943இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
இலங்கையில் பொதுவுடைமை |
2214 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | {{Infobox Indian political party
| party_name = இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிCommunist Party of India
| abbreviation = CPI
| party_logo =
|logo_size =
| flag =
| colorcode =
| founder =
|general_secretary = து. ராஜா
|ppchairman = வினாய் விசுவம்
| loksabha_leader = கே. சுப்பராயன்
| rajyasabha_leader = வினாய் விசுவம்
| foundation =
| publication = {{list collapsed|title=பத்திரிகைகள்|நியூ ஏஜ்முக்தி சங்கார்சுஜனயுகம்நவயுகம்கலந்தார்ஜனசக்தி}}
| headquarters = அஜோய் பவன், 15, இந்திரசித் குப்தா மார்க்கம், புது தில்லி, இந்தியா-110002
| eci = தேசியக் கட்சி
| alliance =
| loksabha_seats =
| rajyasabha_seats =
| ideology = பொதுவுடைமைமார்க்சியம்–லெனினிசம்
| position = இடதுசாரி
|students = அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு
| youth = அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு
| women = இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு
| labour =
அனைத்திந்திய தொழிற்சங்கப் பேரவை
பாரதிய கெட் மசுதூர் ஒன்றியம்
| peasants = அகில இந்திய விவசாயிகள் சங்கம்
| website =
| native_name =
| native_name_lang =
| membership =
| colours = சிவப்பு
|state_seats_name = மாநிலப் பேரவைகள்
|state_seats =
| state2_seats_name = மாநில சட்டமன்ற மேலவைகள்
| state2_seats = (பிகார்)
| no_states =
| international = கம்யூனிச, உழைப்பாளர் கட்சிகளின் பன்னாட்டுக் கூட்டு
| tribal wing =
| electoral_symbol =
}}
இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India'') ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. திசம்பர் 26, 1925-ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. து. ராஜா 21 சூலை 2019 அன்று இந்திய பொதுவுடமைக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இரா. முத்தரசன் என்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கிறார்.
கட்சியில் பிளவு
1962-இல் நடைபெற்ற இந்தியச் சீனப் போரின் காரணமாக கட்சித் தலைவர்களுக்கிடையே சீனாவை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற முரண்பாடுகள் ஏற்பட்டது. எஸ். ஏ. டாங்கே தலைமையிலான தலைவர்கள் சோவியத் ஒன்றியம் மற்றும் இந்தியாவை ஆதரித்தனர். சில தலைவர்கள் சீனாவை ஆதரித்தனர். இதன் காரணமாக 1964-இல் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைவர்கள் 1964-இல் புதிய மார்க்சிஸ்டு கட்சியை நிறுவினர்.
ஆயினும் கொள்கை கோட்பாடுகள் ஒன்றே கொண்டிருந்தபோதிலும் ஏன் இடது வலது என பிரிந்த காரணம் ஏனென்று தெரியவில்லை.
ஆரம்ப கால வரலாறு
ரஷ்யப் புரட்சி அக்டோபர் 1917ல் வெற்றி பெற்ற பிறகு மேற்கத்திய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் [மார்க்சியம்||மார்க்சியக்] கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த படித்த அறிவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத் தொடங்கினார்கள். அதே போன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த படித்த எம். என். ராய் போன்ற அறிவாளிகளின் சில குழுக்கள் மார்க்சியத்தின் பொதுவான கோட்பாடுகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப, பழைய சோவியத் ஒன்றியத்தில் இருந்த தாஷ்கண்ட் நகரத்தில், இந்தியப் பொதுவுடமைக் கட்சியைத் தெடங்கினார்கள்.
1925 களின் முதல் பாதியில் இந்தக் குழுக்கள் [கம்யூனிஸ்ட் அகிலம்|கம்யூனிஸ்ட் அகிலத்தின்] (Comintern - சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டமைப்பு) வழிகாட்டலில் ஒன்று சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கின. மக்களை ஒன்று திரட்ட மும்பை, வங்காளம், பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாநிலங்களில் விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சிகள் அமைக்கப்பட்டன. இந்தக் கட்சிகள் மூலமாகவும் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (AITUC) மூலமாகவும் விவசாயிகள், தொழிலாளர்கள் இயக்கங்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்றனர். பம்பாயில் பலம் வாய்ந்த கர்னி-காம்கார் ஒன்றியம் மூலம் நடந்த கூலி உயர்வுக்கான போராட்டங்களுகு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை வகித்தனர்.
ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை
அப்போது இந்தியாவில் ஆங்கிலேய காலனிய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்து கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கினர். ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக சதி வழக்குகள் போட்டு கம்யூனிஸ்டுகளின் அரசியல் நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர்.
1929 மார்ச்சில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கான்பூர், மீரட் போன்ற சதி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் போர் எதிர்ப்பின் காரணமாக பல தலைவர்கள் கைதாகினர். இட்லரை [சோவியத் யூனியன்|சோவியத் யூனியனை] ஆங்கிலேயருக்கு ஆதரவாக தாக்கிய போது ஆங்கிலேயர்கள் இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்கு ஆதரவாக இருக்க ஆரம்பித்தார்கள்.
காங்கிரசுடன் உறவு
கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தட்டிக் கேட்கவில்லை. தேசிய விடுதலை இயக்கத்துக்கு தலைமை ஏற்கவும் முயற்சிக்கவில்லை. காங்கிரசின் உள்ளிருக்கும் முற்போக்கு பிரிவினரை ஈர்த்து காங்கிரசுக் கட்சியை இடது சாரி திசையில் திருப்பலாம் என்று 1921 அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் கம்யூனிஸ்ட்கள் முயற்சித்தனர். முழு விடுதலையை அடைவதை காங்கிரஸ் கட்சியின் திட்டமாக நிறைவேற்றும்படி செய்யப் போராடினார்கள்.
ஆனால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1947 ஆம் ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் கம்னியூஸ்ட் கட்சிகள் ஆயூதம் ஏந்திய போராட்டமுறையில் ஆட்சி அமைப்பதை காரணம் காட்டி அன்றைய காங்கிரஸ் கட்சியை சார்ந்த இந்திய முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தடை செய்யப்பட்டது.
பின்பு இதற்கிடையே ஏற்பட்ட சர்வதேச இடதுசாரி கம்யூனிஸ்ட்களின் தலைமையிடமான (பொலிட்பீரோ) தலையீட்டால் இந்தியாவில் கம்னியூஸ்ட் கட்சி தேர்தல் அரசியலில் ஈடுபடலாம் என்று பிரதமர் நேரு தடையை 1952 நீக்கினார்.
பின்பு 1952 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நேரடியாக தேர்தல் அரசியலில் கம்னியூஸ்ட் கட்சி செயல்பட ஆரம்பித்தது.
இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கொள்கை சித்தாந்தம் உடைய பலமான எதிர்கட்சியாக கம்னியூஸ்ட் கட்சி செயல்பட்டு வந்தது.
பிறகு 1969 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி பிளவுற்ற போது இந்திரா காங்கிரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்தது.
பின்பு காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி ஆதரவு நிலையை கம்யூனிஸ்ட் கட்சி எடுத்ததாலே பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதனால் இந்தியாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து வெற்றி பெற்று இந்தியாவை ஆளும் மத்திய அரசாக ஆட்சி அமைக்க முடியாத நிலையும், அக்கட்சியின் தனித்தன்மையும் இழந்ததாக கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இணையத்தளம்
தமிழக அரசியல் கட்சிகள்
இந்திய அரசியல் கட்சிகள்
1920இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
இந்திய பொதுவுடமைக் கட்சிகள் |
2237 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D | ஆவியில் வேகவைத்தல் | இந்திய உணவு வகைகளில் இட்லி, பிட்டு, இடியப்பம் போன்ற உணவுகள் ஆவியில் வேகவைக்கும் முறையைப் பயன்படுத்தித் தயார் செய்யப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு வகை உணவுக்கும் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் பயன்படுகின்றன. அடிப்படையில் கீழே நீரைக்கொண்டுள்ள ஒரு பாத்திரம் இருக்கும். இது அடுப்பில் வைத்துச் சூடாக்கப்படும் போது வெளிவரும் ஆவி படக்கூடிய வகையில் இதற்கு மேல் வேகவைக்கப்பட வேண்டிய பதார்த்தம் வைக்கப்படும். வெளிவரும் ஆவி தப்பிப் போகாதபடி மூடி வைக்கப்படும்.
வெளி இணைப்புகள்
பல்வேறு அவித்த உணவுகள் செய்முறை-அறுசுவை.காம்
சமையல் முறைகள் |
2239 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D | இடியப்பம் | இடியப்பம் அல்லது இடியாப்பம் () என்பது அரிசி மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். இந்தியாவில் கேரள மாநிலத்திலும், இலங்கையிலும் அதிக அளவில் உண்ணப்படுகிறது. இலங்கைத் தமிழர் மத்தியில் இது ஒரு முக்கிய உணவு வகையாக உள்ளது. இது அரிசி மாவிலேயே பொதுவாக செய்யப்படுகின்றது. கோதுமை மாவும் பயன்படுத்தலாம். இடியப்பம் பிழிவதற்கான சிறு உபகரணம் இடியப்ப உரல் ஆகும்.
இடியப்பம் அவியல் செயன்முறையில் அமைந்த உணவு ஆகும். இலங்கை சிறார்களின் முக்கிய பாடசாலை உணவாக உள்ளது. குடல் செரிமானதுக்கு உகந்த உணவாகையால்
நோயாளிகள் மற்றும் வாயோதிபருக்கு ஏற்ற உணவாகும்.
சம்பல், சொதி
இலங்கை உணவு முறையில் இடியப்பம் சம்பல் என்னும் தேங்காயினால் செய்யப்பட்ட உணவுடனும் சொதி எனப்படும் நீர்ம உணவுடனும் சேர்த்து உண்ணப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Iddiyappam
செய்முறை
இடியப்பம்
கேரள சமையல் |
2240 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF | உயர்த்தி | உயர்த்தி அல்லது தூக்கி (Elevator) என்பது ஆட்களையோ பொருட்களையோ நிலைக்குத்துத் திசையில் தூக்கிச் செல்லும் ஒரு போக்குவரத்துக் கருவியாகும். உயரமாக அமைந்துள்ள பல அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு மனிதர்கள் அல்லது பொருள்களை கொண்டு செல்லப் பயன்படும் ஒரு நவீன சாதனம் ஆகும். பொதுவாக இது மின்சார இயக்கிகள் மூலம் இரும்பு கயிறுகளை இயக்கியோ, விசையியக்கக் குழாய் மூலம் பாய்மத்தின் அளவை உந்து தண்டினுல் உயர செய்தோ இயக்கப்படும்.
வேளான்மை மற்றும் உற்பத்தி துறையில் உயர்த்தி என்பது சேமிப்பு கிடங்கினுள் (களஞ்சியத்தினுள்) பொருட்களை தொடர்ந்து எடுத்து செல்லும் ஒரு கருவியை குறிக்கும்.
வரலாறு
இத்தகைய அமைப்பிலான் ஒரு சாதனத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே ரோமானியர்கள் பயன் படுத்தியதாகத் தெரிகிறது. அவர்கள் இவ்வுயர்த்திகளை ஏற்றவும் இறக்கவும் அடிமைகளைப் பயன்படுத்தினார்கள். அதன் பின் 17 ஆம் நூற்றாண்டில் வேலயர் என்ற பிரெஞ்சு நாட்டவர் பறக்கும் நாற்காலி ஒன்றை அமைத்தார். இதன் மூலம் பயணிகள் உயரமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை இயக்க பணியாட்களையும் அடிமைகளையும் சில சமயம் விலங்குகளையும் பயன்படுத்தினார். அதன் பின், 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நீராற்றலால் இயங்கும் உயர்த்திகள் (Hydraulic Elevators) உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இவை தொழிற்சாலைகளிலும் சுரங்ககளிலும் அதிக அளவு பொருட்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டன.
இவை ஒரு நிமிடத்திற்கு 100 அடி முதல் 200 அடிவரை உயர்த்தப்பட்டது. இன்றைய வடிவிலான மின்-உயர்த்தியை 1880 -இல் வெர்னர் சீமன்ஸ் என்பவர் ஜெர்மனி யில் உருவாக்கினார்.
உயர்த்திகள் எளிமையான கயிற்றினால் அல்லது சங்கிலியால் இழுக்கப்படும் தூக்கிகளாகவே ஆரம்பித்தன. 1853 ல், எலிஷா ஒட்டிஸ் என்பவர் தூக்குகின்ற கயிறுகள் அறுந்தாலும் பயணிகள் இருக்குமிடம் விழுவதைத் தடுக்கக் கூடிய பாதுகாப்பான உயர்த்திகளை அறிமுகப்படுத்தினார். மார்ச் 23, 1857 இல், அவரது முதலாவது உயர்த்தி 488 புரோட்வே, நியூயார்க்கில் அமைக்கப்பட்டது.
அதன் பின் சில திருத்தங்களுடன் வில்லியம் பாக்ஸ்டர் என்பவர் அமெரிக்காவில் உருவாக்கிப் பயன்படுத்தினார். இது மின்சார மோட்டாரால் இயக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு மாற்றுத் திருத்தங்களுக்குப் பிறகு இன்றைய உயர்த்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
உயர்த்திகளின் அமைப்பு
இழுவை வகை
உயர்த்திகள் அமைக்கப்பட்டுள்ள பல மாடிக்கட்டிடத்தில் உச்சிப்பகுதியில் மின்சார மோட்டார் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். மின்சார மோட்டரை இயக்கினால் அதோடு இணைக்கப்பட்டுள்ள சக்கரம் மெதுவாகச் சுழலும். அப்போது அச்சக்கரத்தின் மீது வலுவான இரும்புக்கயிறு சுற்றிக் கொள்ளும். அக்கயிற்றின் மற்றொரு முனையில் மக்கள் ஏறிச் செல்லும் பெட்டி அமைந்திருக்கும். சக்கரத்தில் இரும்புக்கயிறு சுற்றச்சுற்ற ஆட்கள் ஏறிய பெட்டி மெதுவாக மேலே உயரும். பெட்டியின் மறுமுனையில் பெட்டியை விடச் சற்றுக் கனம் குறைந்த இரும்பு எடை ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இது எதிர் எடை என்று அழைக்கப்படும். பெட்டி தரையிலிருந்து மேலே தூக்கப்படும்போது இந்த எடை கீழ் நோக்கி இறங்கும். பெட்டி கீழே இறங்கும்போது இந்த எடை மேலே உயரும். இவ்வாறு இந்த எதிர் எடையைப் பயன்படுத்தும் பொழுது அதிக அளவு சக்தியானது உயர்த்தியை இயக்கத் தேவைப்படாது. குறைந்த அளவு சக்தியே போதும். எதிர் எடைக்கும் உயர்த்திப் பெட்டியின் கனத்திற்கும் சிறு வேறுபாடு இருக்கும். இந்த சிறு வேறுபாட்டிற்கேற்ப மின்சக்தி பயன்படுத்தப்பட்டால் போதும்.
நீரியல் வகை
இவ்வகை உயர்த்திகள் தரைக்கு மேல் அல்லது கீழே உள்ள ஒரு உந்துத் தண்டின் மேல் அழுத்தம் ஏற்படுத்தி பெட்டியை நகர்த்துகின்றன. நீரியல் வகை உயர்த்திகள் பெரும்பாலும் இழுவை வகை உயர்த்திகளை விட மெதுவாக செயல்படும்.
உயர்த்தி கதவுகள்
உயர்த்தி கதவுகள் உயர்த்தியில் பயணம் செய்வோர் தவறி விழுவதை தடுக்க பயன்படுகின்றன. பெரும்பாலும் இடையில் கூடி பிரியும் இரு தகடுகளை கொண்டு இது சாத்தியமாகிறது. சில உயர்த்திகளில் இரு கதவுகளும் ஒன்றன் பின் ஒன்று சரிந்து செல்லும் வகையிலும் அமைக்க பெற்றிருக்கும். ஒரு சில எளிமையான உயர்த்திகளில், வீடுகளில் உள்ளது போல சாதாரண ஒற்றை கதவு பொருத்த பட்டிருக்கும்.
உயர்த்திகளை இயக்குதல்
மக்கள் ஏறிச் செல்லும் உயர்த்திகளில் மின்சார மோட்டாரை இயக்கும் பொத்தன்கள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் மாடிகளின் எண்களைக் குறிக்கும் பொத்தான்களும் இருக்கும். நாம் உயர்த்தியில் நின்றபடி எந்த மாடிக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாடி எண்ணுள்ள பொத்தனை அழுத்தினால் குறிப்பிட்ட அந்த மாடியில் சென்று உயர்த்தி நிற்கும். இதனால் நாம் விரும்பும் மாடிக்கு மேலோ கீழோ சென்றுவர இயலும். ஆட்கள் இல்லாத உயர்த்தியை நாம் எந்த மாடிக்கும் பொத்தானை அழுத்தி வரவழைத்து ஏறிச் செல்ல முடியும். தற்போது ஒற்றைப் படை, இரட்டைப்படை எண்ணுள்ள மாடிகளுக்கெனத் தனித்தனியே உயர்த்திகள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
உயர்த்தி படிமுறை
உயர்த்தி படிமுறை என்பது ஒரு உயர்த்தி மேலே அல்லது கீழே சென்று கொண்டிருக்கும்பொழுது அது எந்தெந்த தளங்களில் நிற்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் படிமுறை ஆகும். அதன் தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:
இங்கு வேண்டுகோள் என்பது பொத்தானை அழுத்தி உயர்த்தியை வரவழைப்பதை குறிக்கும்.
ஒரு திசையில் சென்று கொண்டிருக்கும்பொழுது அத்திசையில் எஞ்சிய வேண்டுகோள் இருந்தால் தொடர்ந்து அத்திசையிலேயே செல்ல வேண்டும்.
அத்திசையில் மேலும் வேண்டுகோள் இல்லையெனில், நின்று அடுத்த வேண்டுகோளுக்கு காத்திருக்க வேண்டும். அல்லது எதிர் திசையில் வேண்டுகோள் இருந்தால் அங்கு செல்ல வேண்டும்.
உயர்த்தி படிமுறை ஆனது கணினி இயக்கு தளத்தில் வன்தட்டு நிலை நினைவக வேண்டுகோள்களை (Hard disk requests) பட்டியலிட பயன்படுகிறது. அண்மைக் கால உயர்த்திகள் பட்டறிவுசார் படிமுறைகளை பயன்படுத்துகின்றன.
சேரிட கட்டுப்பாட்டு முறை
வானளாவி போன்ற உயர்ந்த கட்டிடங்களில், சேரிட கட்டுப்பாட்டு முறையும் பயன்படுத்தபடுகிறது. இம்முறையில், நாம் எந்த தளத்திற்கு செல்ல விரும்புகிறோமோ அதை பதிவு செய்திட வேண்டும். உடனே நாம் எந்த உயர்த்தியில் பயணிக்க வேண்டும் என்பதை கணினி கணக்கிட்டு சொல்லி விடும். அனைத்து உயர்த்திகளும் அனைத்து தளங்களிலும் நின்று செல்ல வேண்டாம் என்பதால் பயண நேரம் குறையும். ஆனால் பயணிகளின் காத்திருப்பு நேரம் உயர வாய்ப்புள்ளது.
உயர்த்திகளின் வகைகள்
பொதுவாக, மூன்று வகை உயர்த்திகள் உண்டு:
இழுவை வகை
நீரியல் வகை
சுற்றுயர்த்திகள்
இவற்றையும் பார்க்கவும்
நகர்படிகள்
சரக்கு உயர்த்திகள்
மேற்கோள்கள்
கருவிகள்
19-ஆம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்புகள் |
2241 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81 | பாரிசு | பாரிசு (Paris, பாரிஸ், , பாரீ) எனப்படுவது பிரான்சு நாட்டின் தலைநகரமும், நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும். இதன் மக்கள்தொகை 2,102,650 (1 சனவரி 2023) ஆகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 105 சதுர கிமீ ஆகும். பாரிசு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஐந்தாவது மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமும், உலகின் 30-ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும் (2022). 17-ஆம் நூற்றாண்டிலிருந்து, பாரிசு நிதி, பண்ணுறவாண்மை, வணிகம், பண்பாடு, அலங்காரம், உணவு மற்றும் பல துறைகளில் உலகின் முக்கிய மையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கலை மற்றும் அறிவியலில் இதன் முக்கிய பங்கிற்காகவும், இதன் ஆரம்பகால மற்றும் விரிவான தெரு விளக்கு அமைப்பிற்காகவும், 19 ஆம் நூற்றாண்டில், இது ஒளி நகரம் என்று அறியப்பட்டது.
வரலாறு
பாரிஸ் என்ற பெயர், ரோமர் இப் பிரதேசத்தை ஆக்கிரமித்த காலத்தில் அங்கே வாழ்ந்துவந்த "கலிக்" இனக் குழுவின் பெயரான பரிசிஸ் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது.
வரலாற்று அடிப்படையில் பாரிஸின் மையக்கரு, பலைஸ் டி ஜஸ்டிஸ் (Palais de Justice) மற்றும் நோட்ரே-டேம் டி பாரிஸ் தேவாலயம் என்பவற்றினால் பெரிதும் இடங் கொள்ளப்பட்டுள்ள, இலே டி லா சிட்டே (Île de la Cité) எனப்படும் ஒரு சிறு தீவாகும். இது பெரும்பாலும் 17ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட அழகிய வீடுகளைக்கொண்ட இன்னொரு தீவான இலே செயிண்ட்-லூயிஸ் என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கி.மு 52ல் ரோமர் வரும் வரை பாரிஸில், கலிக் இனக்குழுவினர் வாழ்ந்து வந்தனர். இவர்களை ரோமர் பாரிஸீ என அழைத்தனர், எனினும் நகரத்தின் பெயரை "சதுப்பு இடம்" எனப் பொருள்படும் லூட்டேசியா எனவே குறிப்பிட்டனர். சுமார் 50 வருடங்களுக்குப் பின்னர், நகரம், தற்போது லத்தீன் பகுதி என வழங்கும், சீன் நதியின் இடது கரைக்கு விரிவடைந்தது, இது பின்னர் "பாரிஸ்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ரோமர் ஆட்சி 508ல் முடிவடைந்தது. பிரான்க் குளோவியஸ், பாரிஸை, பிரான்க்ஸின் மெரோவிங்கியன் வம்சத்தின் தலைநகரமாக ஆக்கினான். 88 களில் இடம்பெற்ற Viking ஆக்கிரமிப்புகள், இலே டி லா சிட்டேயில் கோட்டை ஒன்றைக் கட்டவேண்டிய நிலையைப் பாரிஸியர்களுக்கு ஏற்படுத்தின. மார்ச் 28, 845 ல், ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது, எனினும் பெருந்தொகையைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு அவன் பாரிஸை விட்டு நீங்கினான். பிற்காலக் கரோலிங்கியன் அரசர்களின் வலிமைக் குறைவினால், பாரிஸின் கவுண்ட்கள் படிப்படியாக வலிமை பெற்று வந்தனர். இதன் விளைவாக பாரிஸின் கவுண்ட், ஓடோ நிலப் பிரபுக்களினால் பிரான்சின் அரசனாகத் தெரியப்பட்டான், எனினும் சார்ள்ஸ் IIIயும் அரியணைக்கு உரிமை கோரினான். இறுதியாக 987ல் இறுதிக் கரோலிங்கியனின் மறைவுக்குப் பின், பாரிஸின் கவுண்டான ஹியூ கப்பெட் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான்.
11 ஆம் நூற்றாண்டில் நகரம் ஆற்றின் வலது கரைக்கும் விரிவடைந்தது. பிலிப் II அகஸ்தஸின் காலத்தையும் (1180–1223) உள்ளடக்கிய 12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில் நகரம் மிகவும் வளர்ச்சியடைந்தது. முக்கிய பாதைகளுக்குத் தளமிடப்பட்டது, முதல் லூவர் ஒரு கோட்டையாகக் கட்டப்பட்டது, நோட்ரே டேம் தேவாலயம் அடங்கலாகப் பல தேவாலயங்கள் கட்டப்பட்டன அல்லது ஆரம்பிக்கப்பட்டன. வலது கரையிலிருந்த பல கல்விக்கூடங்கள் Sorbonne ஆக ஒழுங்கமைக்கப்பட்டன. அல்பர்ட்டஸ் மக்னஸ், சென். தோமஸ் அக்குவைனஸ் போன்றவர்கள் இவற்றைச் சேர்ந்த ஆரம்பகால அறிஞர்களாயிருந்தார்கள். 14 ஆம் நூற்றாண்டில் Black Death தாக்கம் காரணமாக ஏற்பட்ட தற்காலிக தடங்கல் தவிர மத்திய காலப் பகுதியில், பாரிஸ் ஒரு வர்த்தக மற்றும் அறிவு சார்ந்த மையமாக விளங்கியது. சூரிய அரசன் (Sun King) என அழைக்கப்பட்ட லூயிஸ் XIV அரசன் காலத்தில் (1643–1715) அரச மாளிகைகள் பாரிஸிலிருந்து, அண்மையிலுள்ள வெர்சாய்க்கு மாற்றப்பட்டது.
புவியியல்
பாரிஸ், சீன் ஆற்றின் வடக்கே திரும்பும் வளைவில் செயிண்ட் லூயி, டி லா சிட்டே என்னும் இரண்டு தீவுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. டி லா சிட்டே பாரிசின் பழைய பகுதியாகும். ஒப்பீட்டளவில் நகரம் மட்டமானது. மிகக்குறைந்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 35 மீட்டர் (115 அடி). பாரிஸ் பல குன்றுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் உயரமானது 130 மீட்டர் (427 அடி) உயரமான மொண்ட்மார்ட்ரே ஆகும். நகரின் புறப்பகுதியில் அமைந்துள்ள பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் பூங்காக்களைத் தவிர்த்து, பாரிசின் பரப்பளவு 86.928 சதுர கிலோ மீட்டர்கள் (34 சதுர மைல்கள்) ஆகும். இறுதியாக 1860 ஆம் ஆண்டில் நகரத்துடன் அதன் புறத்தே அமைந்திருந்த பகுதிகளையும் இணைத்துக்கொண்டது, நகருக்கு இன்றைய வடிவத்தை அளித்தது. 1860ல் நகர எல்லை 78 சதுர கிலோ மீட்டரில் இருந்து, 1920ல் 86.9 சதுர கிலோ மீட்டர் ஆகுவரை சிறிதளவு அதிகரித்துள்ளது. 1929 ஆம் ஆண்டில் பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் காட்டுப் பூங்காக்கள் நகருடன் இணைக்கப்பட்டன. இதனால் பாரிசின் மொத்தப் பரப்பளவு 105.397 சதுர மீட்டர்கள் (41 சதுர மைல்கள்) ஆனது.
காலநிலை
பாரிஸ், பெருங்கடல் காலநிலையைக் கொண்டது. இது வட அத்திலாந்திக் நீரோட்டங்களினால் பாதிக்கப்படுகின்றது. இதனால் நகரத்தில் அதி கூடிய வெப்பநிலையையோ அதி குறைந்த வெப்பநிலையையோ காண்பது அரிது. கோடையில் சராசரி வெப்பநிலைகளாக உயர்ந்த அளவு 25 °ச (77 °ப)ம், குறைந்த அளவு 15 °ச (59 °ப) ஆகவும் இருக்கும். குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருந்தாலும் வெப்பநிலை உறை நிலைக்குக் கீழ் செல்வதில்லை. சராசர் வெப்பநிலைகள் 3 °ச (37 °ப) – 8 °ச (46 °ப) ஆகக் காணப்படும். இளவேனில் மற்றும் இலையுதிர் காலங்களில் பகலில் மிதமான வெப்பநிலையும், இரவில் குளிரும் இருக்கும். ஆண்டின் எந்த நேரத்திலும் இங்கே மழை முகில்கள் காணப்படலாம். பாரிஸ் அதிக மழை கொண்ட நகரம் இல்லாவிட்டாலும், சடுதியான மழைக்கு இந் நகரம் பெயர்பெற்றது. மழை வீழ்ச்சி ஆண்டுக்கு 650 மிமீ (26 அங்) ஆக உள்ளது. ஆனால் ஓரளவு மிதமான மழை வீழ்ச்சி ஆண்டு முழுதும் பரவலாகப் பெய்யும். பெரும்பாலும் பாரிசில் பனி பெய்வதில்லை. சில மாரிகாலங்களில் இலேசாகப் பனி பெய்வது உண்டு. பாரிசில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான வெப்பநிலை 40.4 °ச (105 °ப). இது 1948 ஜூலை 28 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. மிகக் குறைந்த வெப்பநிலை −23.9 °ச (−11 °ப). இது 1879 டிசம்பர் 10 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. நகரின் மையப்பகுதியில் நகர்ப்புற வெப்பத் தாக்கம் காரணமாக இரவுகளிலும் காலையிலும் மிதமான வெப்பநிலை காணப்படுகின்றது. அத்துடன் நகரின் புறப்பகுதிகளைவிடக் குறைவான பனியும் பெய்கிறது.
நகர்த் தோற்றம்
கட்டிடக்கலை
தற்காலப் பாரிஸ், பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இடம் பெற்ற பெருமெடுப்பிலான நகர மீளமைப்புத் திட்டங்களின் விளைவாகும். பல நூற்றாண்டுகளாகப் பாரிஸ் ஒடுங்கிய தெருக்களையும், மரச் சட்ட வீடுகளையும் கொண்ட நகரமாக இருந்தது. ஆனால் 1852 தொடக்கம் ஓஸ்மான் பிரபுவின் நகராக்கத் திட்டங்களினால் பல பழைய கட்டிடங்கள் உடைக்கப்பட்டுச் சாலைகள் அகலமாக்கப்பட்டதுடன், இரண்டு பக்கங்களிலும் கல்லாலான புதிய செந்நெறிப் பாணிக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இன்று வரை நிலைத்துள்ள பழைய கட்டிடங்கள் பெரும்பாலும் இக்காலத்தனவே. அக்காலத்தில் வரையறுக்கப்பட்ட "வரிசையாக்க" (alignement) சட்டவிதிகளைப் பாரிஸ் நகரம் பல புதிய கட்டிட வேலைகளில் இன்றும் பயன்படுத்தி வருவதனால், இந்த இரண்டாம் பேரரசுத் திட்டங்கள் பல இடங்களில் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன எனலாம். கட்டிடங்களின் உயரங்களும் அன்று வரையறுக்கப்பட்ட சாலை அகலங்களின் அடிப்படையிலேயே இன்றும் தீர்மானிக்கப்படுகின்றன. அத்துடன், உயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் நோக்கில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் கட்டிடச் சட்ட விதிகளில் சில திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன.
பாரிசின் எல்லைகள் மாறாமல் இருப்பதும், கட்டிடங்கள் கட்டுவதற்கான கடுமையான சட்டவிதிகளும், புதிய கட்டிடங்களுக்கான நிலங்கள் பற்றாக்குறையும் அருங்காட்சியகமாதல் (museumification'') என்னும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. பாரிசின் வரலாற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளும், நகர எல்லைக்குள் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய பெரிய கட்டிடங்களையும், பிற சேவை வழங்கும் கட்டமைப்புக்களையும் அமைப்பதைக் கடினமாக்கியுள்ளது. பாரிசின் பல நிறுவனங்களும், பொருளாதாரக் கட்டமைப்புகளும் ஏற்கனவே புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ளன அல்லது இடம் பெயர்வதற்குத் திட்டமிடுகின்றன. நிதி வணிகப் பகுதி, முக்கியமான உணவு மொத்த விற்பனைச் சந்தை, முக்கியமான பெயர் பெற்ற பள்ளிகள் பல, உலகப் புகழ் பெற்ற ஆய்வுக் கூடங்கள், மிகப் பெரிய விளையாட்டு ஸ்டேடியம், போக்குவரத்து அமைச்சு போன்ற சில அமைச்சகங்கள், என்பன பாரிஸ் நகருக்கு வெளியே அமைந்துள்ளன. பிரான்சின் தேசிய ஆவணக் காப்பகம் 2010 ஆம் ஆண்டுக்கு முன் வடக்குப் புறநகர்ப் பகுதிக்கு இடம் பெயர உள்ளது. பாரிசை விரிவாக்க வேண்டிய தேவையை பிரான்ஸ் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நவம்பர் 2007ல் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், எந்தப் பகுதிகளைப் பாரிசுடன் இணைப்பது என்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஐரோப்பியத் தலைநகரங்கள்
பிரான்சின் நகரங்கள்
ஐரோப்பியப் பண்பாடுகள்
பிரான்சியப் பண்பாடு |
2253 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 | தமிழ்நாடு | தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கிழக்கு கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு, மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தக்காணப் பீடபூமி, வடக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றை புவியியல் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா, தென்கிழக்கில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை மற்றும் தென் முனையில் இலட்சத்தீவுக் கடல் ஆகிய நீர்நிலைகளால் சூழப்பட்டுள்ளது. இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக, மேற்கில் கேரளம், வடமேற்கில் கருநாடகம் மற்றும் வடக்கில் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் மாநில எல்லைக்குள் அமைந்துள்ளன.
தொல்லியல் சான்றுகள் தமிழ்நாட்டில் மக்கள் ஏறத்தாழ நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதையும், 5,500 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கலாச்சார வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. வரலாற்று ரீதியாக, பண்டைய தமிழகப் பகுதியில் தமிழ் மொழி பேசிய திராவிட மக்கள் வசித்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக சங்க காலம் தொட்டு சேரர், சோழர் மற்றும் பாண்டியரால் ஆளப்பட்டது. பிற்காலத்தில் பல்லவர் (பொ.ஊ. 3-9 ஆம் நூற்றாண்டு) மற்றும் விசயநகர பேரரசின் (பொ.ஊ. 14-17 ஆம் நூற்றாண்டு) கீழ் வந்த இப்பகுதியில், 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் வரத் தொடங்கினர். 1947 இல் இந்திய விடுதலைக்கு முன் இரண்டு நூற்றாண்டுகளுக்கு தென்னிந்தியாவின் பெரும்பகுதி பிரித்தானிய கட்டுப்பாட்டில் சென்னை மாகாணமாக ஆட்சி செய்யப்பட்டது. விடுதலைக்கு பிறகு மதராசு மாநிலம் என மாறிய இப்பகுதி, ௧௯௫௬ ஆம் ஆண்டின் மொழிவாரி மறுசீரமைப்புக்குப் பிறகு தற்போதைய வடிவம் பெற்றது. 1969 இல் "தமிழ் நாடு" என பெயர் மாற்றப்பட்டது.
இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக திகழும் தமிழ்நாடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாக உள்ளது. மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பதினாறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; மூன்று உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. மாநிலத்தின் பரப்பளவில் ஏறத்தாழ 17.4% காடுகளைக் கொண்டுள்ள இங்கு மூன்று உயிர்க்கோள காப்பகங்கள், சதுப்புநில காடுகள், ஐந்து தேசிய பூங்காக்கள், 18 வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் 17 பறவை சரணாலயங்கள் உள்ளன. தமிழ்த் திரையுலகம் மாநிலத்தின் பிரபலமான கலாச்சாரம் மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க பங்கு வகிக்கிறது.
பெயரியல்
தமிழ்நாடு என்ற பெயர் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டது. இது "தமிழர்களின் நிலம்" எனப் பொருள்படும். தமிழ் என்ற சொல்லின் பெயரியல் சரியாக அறியப்படவில்லை.
பண்டைய தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் தற்போதைய தமிழ்நாடு, கேரளம் ஆகிவற்றின் முழு பகுதிகளையும், கருநாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் தென் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதிகளைக் குறிக்க தமிழகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் எல்லைகளைத் தொல்காப்பியப் பாடல் பின்வருமாறு:
தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்:
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்ற பெயர் காணப்படுகிறது.
திருக்கோயிலூர் வீரட்டேசுவரர் கோயிலில் உள்ள சோழர் காலக் கல்வெட்டில் உள்ள மெய்க்கீர்த்தியானது இராசராச சோழனை தண்டமிழ் நாடன் என குறிப்பிடுகிறது. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம்பூரணர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
கம்பர் தன் கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டம் நாட விட்ட படலம்-30 இல் தமிழ்நாட்டை அடையாளப்படுத்தியுள்ளார். அதில் அனுமனுக்கும் மற்ற வானரப் படையினருக்கும் இலங்கைக்குச் செல்லும் வழிகளைச் சொல்கிறான். அப்போது இலங்கைக்கு தமிழ்நாட்டைக் கடந்து செல்ல வேண்டும் என்று கூறுகிறான்.
வரலாறு
வரலாற்றுக்கு முந்தைய காலம் (பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்)
தொல்பொருள் சான்றுகள் 400 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் ஓமினிட்கள் வாழ்ந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ASI) மூலம் ஆதிச்சநல்லூரில் மீட்கப்பட்ட தொல்பொருட்கள் 3,800 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர்ச்சியான வரலாற்றைக் குறிப்பிடுகின்றன. பொ.ஊ.மு.1500 மற்றும் 2000 க்கு இடைப்பட்ட சிந்துவெளி நாகரீகத்தைச் சேர்ந்த கற்சுவடுகள் பண்டைய தமிழ் எழுத்துக்களின் பயன்பாட்டைக் குறிக்கிறது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு பெரிய நகர்ப்புற குடியேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.மேலும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் தமிழ் பிராமி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன, இது பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அடிப்படை எழுத்தாகும். கீழடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகள் சிந்து சமவெளி எழுத்து மற்றும் தமிழ் பிராமி எழுத்துகளுக்கு இடைப்பட்ட ஒரு எழுத்துமுறையைக் குறிக்கின்றன. தொன்கதை பாரம்பரியத்தின் படி, தமிழ் மொழியானது, சிவபெருமானால் அகத்தியருக்குக் கற்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.
சங்க காலம் (பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 3 ஆம் நூற்றாண்டு வரை)
தொல்பொருள் சான்றுகளின் படி சங்க காலம் ஏறத்தாழ பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 3 ஆம் நூற்றாண்டு வரை எட்டு நூற்றாண்டுகள் நீடித்தது. இக்காலத்தில் இயற்றப்பட்ட சங்க இலக்கியங்கள் இக்கால வரலாற்றின் முக்கிய ஆதாரமாக உள்ளன. பண்டைய தமிழகம் முடியாட்சி அரசுகாளாகிய, சேரர், சோழர் மற்றும் பாண்டியர் எனும் மூவேந்தரால் ஆளப்பட்டது. சேரர்கள் தமிழ்கத்தின் மேற்குப் பகுதியையும், பாண்டியர்கள் தெற்கு பகுதியையும், சோழர்கள் காவேரி வடிநிலப் பகுதியையும் ஆண்டனர். இம்மன்னர்கள் வேந்தர் என்று அழைக்கப்பட்டனர். வேள் அல்லது வேளிர் என்று அழைக்கப்பட்ட பழங்குடித் தலைவர்கள் குறுநில மன்னர்களாக ஆண்டுவந்தனர். உள்ளூர் அளவில் கிழார் அல்லது மன்னர் என்று அழைக்கப்படும் குலத்தலைவர்கள் இருந்தனர். சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். இவர்கள், போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.தமிழகதத்தில் தனியரசுகளாக விளங்கின இந்த இராச்சியங்களைத் தவிர்த்து வெளி சக்திகளால் இந்தக் கால கட்டத்தில் கைப்பற்றப்படவில்லை. வடக்கே உள்ள அரசுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்புகள் இருந்தன. இவை அசோகரின் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த இராச்சியங்கள் உரோமானியர் மற்றும் ஆன் சீனர் உட்பட பல இராச்சியங்களுடன் குறிப்பிடத்தக்க வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தன. வணிகத்தின் பெரும்பகுதி முசிறி மற்றும் கொற்கை உள்ளிட்ட துறைமுகங்கள் வழியாக நடத்தப்பட்டது. அழகன்குளம் தொல்லியல் தளத்தில் அண்மைய அகழ்வாய்வுகள் சங்க காலத்தின் முக்கியமான வர்த்தக மையங்கள் அல்லது துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியது தெரியவருகிறது. முத்து, பட்டு, வாசனைப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவை பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டன.
இக்காலத்தில் பல நூல்கள் இயற்றப்பட்டன, அதில் எஞ்சியிருக்கும் பழமையான நூல், தமிழ் இலக்கண குறிப்பான தொல்காப்பியம் ஆகும். பெரும்பாலான சங்க இலக்கியங்கள் காதல் மற்றும் போரை கருப்பொருளாகக் கொண்டுள்ளன. இச்செய்யுள்களின் வழியாக அன்றைய தமிழ்ச் சமூகத்தை அறிய முடிகிறது. நிலம் வளமானதாக இருந்தது, மேலும் மக்கள் எந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு தொழில்களைத் தொடர்ந்தனர். அவர்களின் கடவுள்களில் சேயோன் மற்றும் கொற்றவை போன்றவர்கள் அடங்குவர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் வணங்கப்பட்டனர். ஆட்சியாளர்கள் பௌத்தம் மற்றும் சமண சமயத்தையும் ஆதரித்தனர், மேலும் பொது ஊழிக்குப் பிறகான காலத்தில் தொடங்கி வேத வழக்கங்கள் பற்றிய குறிப்புகள் வளரத் தொடங்கின.
இடைக்காலம் (பொ.ஊ. 3 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை)
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், களப்பிரர்கள் தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்டனர். இவர்கள் வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு காலத்தில் பண்டைய தமிழ் இராச்சியங்களில் நிலப்பிரபுக்களாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. களப்பிரர் ஆட்சி தமிழ் வரலாற்றின் "இருண்ட காலம்" என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக இந்த காலத்தை பற்றிய தகவல்கள் கூறும் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் இல்லாததாலும், இக்காலத்தை பற்றிய குறிப்புகள் பல நூற்றாண்டிற்கு பிறகு வெளிவந்த ஆதாரங்களைப் பின்பற்றியிருப்பதனால், இக்காலத்தை பற்றிய சரியான முடிவுகள் எடுப்பது கடினமாக உள்ளது. இரட்டை தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை இக்காலத்தில் எழுதப்பட்டது. திருவள்ளுவரின் உன்னதமான தமிழ்த் தொகுப்பான திருக்குறள் இக்காலத்திற்கு தேதியிடப்பட்டுள்ளது.
பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில், களப்பிரர்கள் பாண்டியர்கள் மற்றும் சோழர்களால் தோற்கடிக்கபப்ட்டனர். முன்னர் பௌத்தம் மற்றும் சமணத்தை ஆதரித்த அவர்கள் பக்தி இயக்கத்தின் போது சைவம் மற்றும் வைணவத்திற்கு மாறினர். இக்காலம் பல்லவர்களின் எழுச்சியைக் கண்டது. ஆறாம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்மன், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சில பகுதிகளை ஆட்சி செய்தார். பல்லவர்கள் கோயில்களின் நுழைவாயிலில் கட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான கோபுரங்கள் மற்றும் கற்கோயில்களின் கட்டிடக்கலைக்காக அறியப்படுகின்றனர். மகாபலிபுரத்தில் பல கற்கோயில்கள் மற்றும் சிற்பங்களையும், காஞ்சிபுரத்தில் கோயில்களையும் எழுப்பினார்கள். பல்லவர்கள் தங்கள் ஆட்சிகாலம் முழுவதிலும் சோழர்கள் மற்றும் பாண்டியர்களுடன் தொடர்ந்து மோதலில் இருந்து வந்தனர். கிபி 6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடுங்கோனால் பாண்டியர்கள் புத்துயிர் பெற்றனர். உறையூரில் சோழர்கள் மறைந்திருந்த நிலையில், தமிழகம் பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் பிரிக்கப்பட்டது. பல்லவர்கள் இறுதியாக 9 ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டனர்.
சோழர் ஆட்சி மீண்டும் ஒன்பதாம் நூற்றாண்டில் விசயாலய சோழன் கீழ் நிறுவப்பட்டது. தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு பெரும் ஆதிக்கம் செலுத்தும் அரசை நிறுவினார். 11 ஆம் நூற்றாண்டில், முதலாம் இராசராசன் தென்னிந்தியாவையும், இன்றைய இலங்கை, மாலத்தீவுகளின் சில பகுதிகளையும் கைப்பற்றி, இந்தியப் பெருங்கடல் முழுவதும் சோழர்களின் செல்வாக்கை அதிகரித்தார். இந்த காலத்தில் நாட்டை தனி நிர்வாக அலகுகளாக மறுசீரமைப்பது உட்பட பல நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர். இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திர சோழனின் கீழ், சோழப் பேரரசு அதன் உச்சத்தை அடைந்தது. வடக்கே வங்காளம் வரையிலும், இந்தியப் பெருங்கடலிலும் பரவி விரிந்தது. சோழர்கள் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் பல கோயில்களைக் கட்டினார்கள், அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது இராசராசனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெருவுடையார் கோயில் மற்றும் ராசேந்திரனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம்.
13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கீழ் பாண்டியர்கள் மீண்டும் ஆட்சி செய்தனர். இவர்கள் தங்கள் தலைநகரான மதுரையிலிருந்து பிற கடல்சார் பேரரசுகளுடன் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்தினர். மார்கோ போலோ பாண்டியர்களை உலகின் பணக்கார பேரரசு என்று குறிப்பிட்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பட பல கோயில்களையும் பாண்டியர்கள் கட்டியுள்ளனர்.
விசயநகர் மற்றும் நாயக்கர் காலம் (பொ.ஊ. 14 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை)
பொ.ஊ. 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில், சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. வடக்கில் தில்லி சுல்தானகத்திலிருந்து படையெடுத்து வந்தவர்கள் மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தினர். இந்தப் படையெடுப்புகள் இசுலாமிய பாமினி ஆட்சிக்கு வித்திட்டது. இதற்கு பதிலடி தருவதற்காக பல சிற்றரசுகள் சேர்ந்து 1336 இல் விசயநகரப் பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு, அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அம்பியைத் தலைநகராகக் கொண்டிருந்த விசயநகரப் பேரரசு 1565 இல் தலைக்கோட்டைப் போரில் தோற்கடிக்க படும் வரை கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆட்சி செய்தது. பின்னர், விசயநகரப் பேரரசில் ஆளுநர்களாக இருந்த நாயக்கர்கள் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். நாயக்கர் ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு அரசியல் அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன, பாளையங்கள் உருவாக்கப்பட்டு, கிராம சுய ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பட சில பழங்கால கோயில்களைப் புதுப்பிக்கவும் செய்தனர். மேற்கில் சில பகுதிகள் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி, வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி, பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.
ஐரோப்பிய காலனித்துவம் (பொ.ஊ. 17 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை)
18 ஆம் நூற்றாண்டில், முகலாயப் பேரரசு மதுரை நாயக்கர்களை தோற்கடித்த பிறகு, இப்பகுதியை கருநாடக நவாப் மூலம் ஆற்காட்டிலிருந்து ஆண்டது. மராட்டியப் பேரரசு பலமுறை தாக்குதல்கள் நடத்தி, பின்னர் 1752 இல் திருச்சிராப்பள்ளியில் நவாப்பை தோற்கடித்தது. இதன் விளைவாக குறுகிய காலத்திற்கு தஞ்சாவூர் மராட்டிய ஆட்சிக்கு வழிவகுத்தது.
ஐரோப்பியர்கள் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் வர்த்தக மையங்களை நிறுவத் தொடங்கினர். போர்த்துகீசியர்கள் 1522 இல் இன்றைய சென்னை மயிலாப்பூருக்கு அருகில் சாவோ தோம் என்ற துறைமுகத்தைக் கட்டினார்கள்.1609 இல், இடச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் ஒரு குடியேற்றத்தை நிறுவினர். பிறகு தானிசுகள் தரங்கம்பாடியில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினர். 20 ஆகத்து 1639 அன்று, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்த பிரான்சிசு டே விசயகர பேரரசர் வெங்கட ராயரை சந்தித்து அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக கிழக்கு கடற்கரையில் இந்நாளில் சென்னையாக அறியப்படுகின்ற பகுதியில் ஒரு நிலத்தை மானியத்திற்காகப் பெற்றார். ஒரு வருடம் கழித்து, இந்நிறுவனம் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியது, இது இந்தியாவின் முதல் பெரிய பிரித்தானியக் குடியேற்றமாகும். இதைத் தொடர்ந்து இப்பகுதி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் மையமாக மாறியது.
1693 வாக்கில், பிரெஞ்சு பாண்டிச்சேரியில் வர்த்தக நிலையங்களை நிறுவினர். ஏழாண்டுப் போரின் ஒரு பகுதியாக இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் போட்டியிட்டனர். ஆங்கிலேயர்கள் 1749 இல் ஒரு உடன்படிக்கையின் மூலம் இப்பகுதியின் கட்டுப்பாட்டை மீட்டனர். 1759 இல் ஒரு பிரெஞ்சு முற்றுகை முயற்சியை முறியடித்தனர். கருநாடக நவாப்கள் பெரும்பகுதியை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். இதற்கு பதிலாக பிரித்தானியர்களுக்காக வரி வசூல் செய்யும் உரிமைகளைப் பெற்றனர். இது தமிழகத்தை ஆண்ட பாளையக்காரர்களுடன் தொடர்ச்சியான மோதல்களுக்கு வழிவகுத்தது. பூலித்தேவர் ஆரம்பகால எதிர்ப்பாளர்களில் ஒருவராக இருந்தார், பின்னர் சிவகங்கையைச் சேர்ந்த ராணி வேலு நாச்சியார் மற்றும் பாஞ்சாலக்குறிச்சியின் கட்டபொம்மன் ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர்களில் இணைந்தனர். மருது சகோதரர்கள், கட்டபொம்மனின் சகோதரரான ஊமைத்துரை, தீரன் சின்னமலை மற்றும் கேரள வர்மா பழசி ராஜா ஆகியோருடன் சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்கினர். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மைசூர் இராச்சியம் இப்பகுதியின் சில பகுதிகளைக் கைப்பற்றியது மற்றும் ஆங்கிலேயர்களுடன் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டது.
18 ஆம் நூற்றாண்டில், பிரித்தானியர்கள் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி, சென்னையைத் தலைநகராகக் கொண்டு மதராசு மாகாணத்தை நிறுவினர். 1799 ஆம் ஆண்டு போரில் மைசூர் இராச்சியம் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் 1801 ஆம் ஆண்டில் பாளையக்காரர்களுக்கெதிராக வெற்றி பெற்ற பிறகு, பிரித்தானியர்கள் தென்னிந்தியாவின் பெரும்பகுதியை மதராசு மாகாணத்துடன் ஒருங்கிணைத்தனர். 1806 ஆம் ஆண்டு சூலை 10 ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் நடத்திய பெரிய அளவிலான கலகத்தின் முதல் நிகழ்வான வேலூர் கலகம் வேலூர் கோட்டையில் நடந்தது. 1857 இன் இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு, பிரித்தானிய அரசு கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து நிர்வாகக் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டது.
பருவமழையின் தோல்வி மற்றும் ரயோத்வாரி அமைப்பின் நிர்வாகக் குறைபாடுகள் சென்னை மாகாணத்தில் கடுமையான பஞ்சங்களை ஏற்படுத்தியது. 1876-78 மற்றும் 1896-97 ஆண்டுகளில் பஞ்சம் இலட்சக்கணக்கானவர்களைக் கொன்றது. இதன் காரணமாக பல தமிழர்கள் கொத்தடிமைகளாக பிரித்தானியர்கள் ஆட்ச்சி செய்த பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். இந்திய விடுதலை இயக்கம் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசின் உருவாக்கத்துடன் வேகம் பெற்றது. காங்கிரசின் உருவாக்கம் திசம்பர் 1884 இல் சென்னையில் நடைபெற்ற பிரம்மஞான சபையின் மாநாட்டிற்குப் பிறகு அந்த இயக்கத்தின் உறுப்பினர்களிடையே தோன்றிய யோசனையின் அடிப்படையில் அமைந்தது. வ. உ. சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா மற்றும் பாரதியார் உட்பட சுதந்திர இயக்கத்திற்கு பங்களித்த பலரின் தளமாக தமிழ்நாடு இருந்தது. சுபாஷ் சந்திர போசால் நிறுவப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் (INA) உறுப்பினர்களில் கணிசமானனோர் தமிழர்களாக இருந்தனர்.
விடுதலைக்குப் பின் (1947–தற்போது)
இன்றைய தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் மற்றும் கேரளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மதராசு மாகாணம் 1947 இல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மதராசு மாநிலமாக உருப்பெற்றது. இந்த மாநிலத்திலிருந்து 1953 இல் ஆந்திரா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டது. மேலும் 1956 இல் மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட போது மாநிலம் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. 14 சனவரி 1969 அன்று, சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று மறுபெயரிடப்பட்டது. 1965 ஆம் ஆண்டில், இந்தி திணிப்புக்கு எதிராகவும், ஆங்கிலத்தை அதிகாரபூர்வ மொழியாகத் தொடர்வதற்கு ஆதரவாகவும் கிளர்ச்சிகள் எழுந்தன. இது இறுதியில் இந்தியுடன் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தைத் தக்கவைக்க வழிவகுத்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில், தனியார் துறை பங்கேற்பு, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றின் மீது கடுமையான அரசாங்கக் கட்டுப்பாடு இருந்தது. இதன் பிறகு சீர்திருத்தம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, 1970 களில் இருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் தேசிய சராசரி வளர்ச்சி விகிதங்களைத் தாண்டி வேகமாக வளர்ந்தது. 2000களில், தமிழகம் நாட்டின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மாறியது.
சுற்றுற்சூழல்
புவியியல்
ஏறத்தாழ 1.3 இலட்சம் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ள தமிழ்நாடு இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகும். இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கிழக்கு கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு, மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தக்காணப் பீடபூமி, வடக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றை புவியியல் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா, தென்கிழக்கில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை மற்றும் தென் முனையில் இலட்சத்தீவுக் கடல் ஆகிய நீர்நிலைகளால் சூழப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவும், அரபிக்கடலும், இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கின்ற குமரிமுனை தமிழ்நாட்டில் உள்ளது. இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக, மேற்கில் கேரளம், வடமேற்கில் கருநாடகம் மற்றும் வடக்கில் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் மாநில எல்லைக்குள் அமைந்துள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையானது மாநிலத்தின் மேற்கு எல்லையில் வடக்கில் இருந்து தெற்கே செல்கிறது. நீலகிரி மலைகளில் உள்ள தொட்டபெட்டா (2636 மீ) மாநிலத்திலேயே மிக உயரமான சிகரமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகள் கிழக்கு திசையில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி செல்கிறது. இவை காவேரி நதியால் குறுக்கிடப்படுகின்ற ஒரு தொடர்ச்சியற்ற மலைத்தொடராகும். இந்த இரண்டு மலைத் தொடர்களும் தமிழகத்தின் கேரள மற்றும் கருநாடக எல்லை பகுதியில் உள்ள நீலகிரி மலைகளில் சந்திக்கின்றன.
தக்காண பீடபூமி இந்த மலைத்தொடர்களின் இடையே உள்ள ஒரு உயர்ந்த நிலப்பகுதியாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகள் உயரமாக இருக்கின்ற காரணத்தினால், இந்த பீடபூமியானது மேற்கிலிருந்து கிழக்காக சரிகின்றது. இதன் விளைவாக பெரும்பாலான ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்ந்து பின்னர் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. தமிழகத்தின் இயற்கையமைப்பு, பொதுவாக அகன்ற உயர் நிலப்பரப்பாகக் காணப்படுகிறது. இதில் அதிகமாக அரிக்கப்படாத மலைத்தொடர்களின் எஞ்சிய பகுதிகளும், அகன்ற ஆழம் குறைவான பள்ளத்தாக்குகளும் மற்றும் ஆற்றுச் சமவெளிகளும் காணப்படுகின்றன. தமிழ்நாடு ஏறத்தாழ 1,076 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகள் உள்ளன. 2004 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலையில் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகள் நிரந்தரமாக பாதிக்கப்பட்டன.
மேற்கு எல்லைப் பகுதிகளைத் தவிர்த்து தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மிதமான நிலநடுக்க அபாய மண்டலத்தில் அமைந்துள்ள. தக்காண பீடபூமி ஏறத்தாழ ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரிய எரிமலை வெடிப்பின் காரணமாக உருவானது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் செம்மண், செந்நிறக் களிமண், கரிசல் மண், வண்டல் மண் மற்றும் உப்பு கலந்த மண் ஆகியவை காணப்படுகின்றது. அதிக இரும்புச்சத்து கொண்ட செம்மண் அனைத்து உள்மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. கரிசல் மண் மேற்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு கடற்கரை பகுதிகளில் காணப்படுகிறது. வண்டல் மண் வளமான காவேரி ஆற்று பகுதியில் காணப்படுகின்றது. உப்பு கலந்த மண் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரும்பாலாக உள்ளது.
வானிலை
இப்பகுதி பெரும்பாலும் வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது, மழைப்பொழிவுக்காக பருவமழையை சார்ந்துள்ளது. தமிழ்நாடு ஏழு வேளாண் காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: வடகிழக்கு, வடமேற்கு, மேற்கு, தெற்கு, அதிக மழைப்பொழிவு, உயரமான மலைப்பகுதி மற்றும் காவேரி வடிநிலம். தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடங்களில் வெப்பமண்டல ஈரமான வறண்ட காலநிலை காணப்படுகின்றது. மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு கிழக்கே உள்ள மழை மறைவு பிரதேசம் வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. பின் பனிக்காலம் மற்றும் கோடையின் ஆரம்பம் ஆகியவை நீண்ட வறண்ட காலங்களாகும். கோடை காலங்களில் வெயில் மிகுதியாக காணப்படும், சில சமயங்களில் 50°C வரை வெப்ப நிலை இருக்கும்.
பெரும்பாலான பகுதிகளில் மழைக்காலம் தென்மேற்கு பருவக்காற்றின் போது சூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கின்றது. தென்மேற்கு பருவமழையின் போது அரபிக் கடலிலிருந்து எழும் காற்று மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்பட்டு, மாநிலத்தின் மேற்குப் பகுதியில் மழையைப் பொழிகின்றன. நகர்கிறது. உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்த காற்று தக்காண பீடபூமியை அடைவதைத் தடுக்கின்றன; எனவே இந்த மலைகளின் கிழக்குப் பகுதிகள் மிகக் குறைந்த மழையைப் பெறுகிறது. தென்மேற்கு பருவமழையின் போது வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு எழும் காற்றானது வடகிழக்கு இந்தியாவை நோக்கி செல்கிறது, ஆனால் நிலத்தின் வடிவமைப்பின் காரணமாக தென்மேற்கு பருவமழையிலிருந்து தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் அதிக மழைப்பொழிவைப் பெறுவதில்லை. இந்தப் பகுதிகளில் பெரும்பாலான மழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாத வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்கின்றது. வட இந்தியப் பெருங்கடலில் இருந்து வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் காற்று அவ்வப்போது நிகழ்கிறது, இது பேரழிவு தரும் காற்று மற்றும் கனமழையைக் கொண்டுவருகிறது. மாநிலத்தின் மழைப்பொழிவில் 48 சதவீதம் வடகிழக்கு பருவமழை மூலமாகவும், 52 சதவீதம் தென்மேற்கு பருவமழை மூலமாகவும் கிடைக்கிறது. தமிழகம் தேசிய அளவில் 3% நீர் ஆதாரங்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த நீர் ஆதாரங்கள் பெரும்பாலும் மழையை முழுமையாக நம்பியுள்ள. பருவமழை பொய்த்தால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி ஏற்படுகின்றது.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
மாநிலத்தின் புவியியல் பகுதியில் ஏறத்தாழ 22,643 சத்துள்ள கி.மீ. பரப்பளவு கொண்ட காடுகள் உள்ளன. இவை மொத்த நிலப்பரப்பில் 17.4 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ள. தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு காலநிலை மற்றும் புவியியல் அமைப்புகளின் விளைவாக பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கிண்ணங்கள் காணப்படுகின்றன. இலையுதிர் காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன, அதே சமயம் உட்பகுதிகளில் வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் முள் புதர்க்காடுகள் ஆகியவை பொதுவாகக் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்வான பகுதிகளில் மழைக்காடுகள் அமைந்துள்ளன. உலகில் உள்ள முக்கியமான உயிர்க்கோள காப்பகங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், யுனெஸ்கோ உலக பாரம்பரியத் களமாக அறிவிக்கிப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2000 வகையான விலங்கினங்கள், 5640 வகையான பூக்கும் தாவரங்கள் (1,559 மருத்துவத் தாவர இனங்கள், 533 உள்ளூர்த் தாவர இனங்கள், 260 வகையான பயிரிடப்பட்ட தாவர இனங்கள், 230 அச்சுறுத்தப்படும் தாவர இனங்கள்), 64 வகை வித்துமூடியிலிகள் (நான்கு உள்நாட்டு இனங்கள் மற்றும் 60 அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்), 184 வகையான மற்ற செடி வகைகள், பூஞ்சை, பாசி மற்றும் பாக்டீரியா ஆகியன உள்ளன.
தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுச்சூழல் பகுதிகளில் நீலகிரி மலைகள், அகத்தியமலை மற்றும் மன்னார் வளைகுடா பவளப்பாறைகள் ஆகியவை அடங்கும். மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா ஏறத்தாழ 10,500 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்குள்ள பவளப் பாறைகள், உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்பகுதிகளில் ஓங்கில்கள், ஆவுளியாக்கள், திமிங்கலங்கள் மற்றும் கடல் வெள்ளரிகள் உட்பட பல அழிந்துவரும் அறிய வகை நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. வெள்ளோடு, கடலுண்டி, வேடந்தாங்கல், ரங்கன்திட்டு, நெலப்பட்டு, மற்றும் பழவேற்காடு உட்பட 17 பறவைகள் சரணாலயங்கள் ஏராளமான புலம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் பறவைகளின் தாயகமாக உள்ளன.
தமிழகத்தில் ஏறத்தாழ 3,300 சதுர கி.மீ. பாதுகாக்கப்பட்ட பபகுதிகாலக அறிவிக்கப்பட்டுள்ளது.1940 இல் நிறுவப்பட்ட முதுமலை தேசிய பூங்கா தென்னிந்தியாவின் முதல் நவீன வனவிலங்கு சரணாலயம் ஆகும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை மூலம் நிர்வகிக்கப்படுகிறன. பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளில் ஒன்றாகும். இது பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கடல்வாழ் உயிரினங்கள், மீன்கள் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பை ஆதரிக்கிறது. மாநிலத்தில் ஐந்து தேசியப் பூங்காக்கள் மற்றும் 18 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.
தமிழகம் அழியும் அபாயத்தில் உள்ள வங்காளப் புலிகள் மற்றும் இந்திய யானைகளின் அதிக எண்ணிக்கையிலான மக்கள்தொகையை கொண்டுள்ளது. மாநிலத்தில் தலா ஐந்து யானை சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பகங்கள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூரில் ஒரு சிறப்பு பாதுகாப்புக் காப்பகம் உள்ளது. தமிழகத்தில் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட விலங்குக் காட்சிச்சாலைகள் உள்ளன: வண்டலூர் விலங்கியல் பூங்கா மற்றும் சென்னை முதலை பண்ணை. கோயம்புத்தூர் வ. உ. சி. பூங்கா, வேலூர் அமிர்தி விலங்கியல் பூங்கா, ஏற்காடு மான் பூங்கா, சேலம் குரும்பம்பட்டி வனவிலங்கு பூங்கா, திருச்சிராப்பள்ளி முக்கொம்பு மான் பூங்கா மற்றும் நீலகிரி மான் பூங்கா போன்ற உள்ளூர் நிர்வாக அமைப்புகளால் நடத்தப்படும் பிற சிறிய உயிரியல் பூங்காக்கள் மாநிலத்தில் உள்ளன. மாநிலத்தில் ஐந்து முதலைப் பண்ணைகள் உள்ளன.
நிர்வாகம் மற்றும் மேலாண்மை
நிர்வாகம்
மாநிலத்தின் தலைநகரான சென்னை பெரும்பாலான அரசு அலுவலகங்கள், சட்டமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மாநில அரசின் நிர்வாகம் பல்வேறு செயலகத் துறைகள் மூலம் செயல்படுகின்றது. மாநில அரசில் மொத்தம் 43 துறைகள் உள்ளன. மேலும் இந்தத் துறைகள் பல்வேறு பல்வேறு முயற்சிகள் மற்றும் வாரியங்களை நிர்வகிக்கும் துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. நிர்வாக ரீதியாக இம்மாநிலம், 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ஒரு மாவட்ட ஆட்சியர் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. வருவாய் நிர்வாகத்திற்காக, மாவட்டங்கள் மேலும் 87 வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, அவை வருவாய் கோட்ட அலுவலர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த கோட்டங்கள் ஏறத்தாழ 310 தாலுகாக்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இந்தத் தாலுகாக்கள் 17,680 வருவாய் கிராமங்களைக் உள்ளடக்கியிருக்கின்ற 1,349 வருவாய் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் நிர்வாகதிற்காக 25 மாநகராட்சிகள், 117 நகராட்சிகள், 487 பேரூராட்சிகள், 528 நகர பஞ்சாயத்துக்கள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,618 ஊராட்சி மன்றங்கள் ஆகியனவாக பிரிக்கப்பட்டுள்ளன. 1688 இல் நிறுவப்பட்ட சென்னை மாநகராட்சி உலகின் இரண்டாவது பழமையானதாகும். புதிய நிர்வாக அலகாக நகர பஞ்சாயத்துக்களை நிறுவிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
சட்டமன்றம்
இந்திய அரசியலமைப்பின் படி, ஆளுநர் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராகவும், முதலமைச்சர் அரசாங்கத்தின் தலைவராகவும், அமைச்சர்கள் குழுவின் தலைவராகவும் உள்ளார். 1861 ஆம் ஆண்டின் இந்திய பேரவைகள் சட்டம் நான்கு முதல் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட சென்னை மாகாண சட்டமன்றக் ஆலோசனைக் குழுவை நிறுவியது. 1892 ஆம் ஆண்டு 20 உறுப்பினர்களைக் கொண்டதாகவும், 1909 ஆம் ஆண்டில் 50 உறுப்பினர்களைக் கொண்டதாகவும் இருந்தது. 1921 ஆம் ஆண்டில் இந்தப் பேரவை, ஆளுநரால் நியமிக்கப்படும் 34 உறுப்பினர்களுடன் சேர்த்து 132 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இந்திய அரசு சட்டம் 1935 இன் படி, சூலை 1937 இல் 54 முதல் 56 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்ற மேலவை நிறுவப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் படி முதலாவது சட்டமன்றம் 1952 தேர்தல்க்குப் பிறகு 1 மார்ச் 1952 இல் அமைக்கப்பட்டது. 1956 இல் மாநிலங்களின் மறுசீரமைப்பிற்குப் பிறகு சட்டமன்றத்தில் இடங்களின் எண்ணிக்கை 206 ஆக இருந்தது, இது 1962 இல் 234 ஆக அதிகரிக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில், தமிழ்நாடு சட்டமன்றக் குழு சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றம் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படுகின்றது. தமிழகம் மக்களவைக்கு 39 மற்றும் மாநிலங்களவைக்கு 18 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
சட்டம் மற்றும் ஒழுங்கு
சென்னை உயர் நீதிமன்றம் 26 சூன் 1862 இல் நிறுவப்பட்டது. மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இது ஒரு தலைமை நீதிபதி தலைமையில் இயங்குகின்றது. 2004 முதல் மதுரையில் ஒரு உயர் நீதிமன்ற கிளை செயல்படுகின்றது.1859 இல் சென்னை மாநில காவல்துறையாக நிறுவப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்களை தடுக்கும் பணியில் ஈடுபடுகின்றது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 132,000 க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்டு ஒரு தலைமை இயக்குநரின் கீழ் காவல்துறை இயங்குகின்றது. காவல்துறையில் ஏறத்தாழ 17.6% பெண்கள் பணியாற்றுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள 222 சிறப்பு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 47 இரயில்வே மற்றும் 243 போக்குவரத்து காவல் நிலையங்கள் உட்பட 1854 காவல் நிலையங்கள் உள்ளன. மாவட்ட நிர்வாகங்களின் கீழ் உள்ள போக்குவரத்து காவல்துறை அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து மேலாண்மைக்கு பொறுப்பாகும். 2018 ஆம் ஆண்டில் 100,000 க்கு 22 என்ற குற்ற விகிதத்துடன் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கின்றது.
அரசியல்
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆகும். சட்டமன்றம் மாற்றும் மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தேர்தல்கள் 1950 இல் நிறுவப்பட்ட ஒரு சுதந்திர அமைப்பான இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அரசியலில் 1960கள் வரை தேசிய காட்சிகள் ஆதிக்கம் செலுத்தின. அதற்கு பிந்தைய காலம் தொட்டு பிராந்திய கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. முன்னாள் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியும் சுயாட்சிக் கட்சியும் இரண்டு பெரிய கட்சிகளாக இருந்தன. 1920கள் மற்றும் 1930களில், தியாகராய செட்டி மற்றும் பெரியார் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட சுயமரியாதை இயக்கம், சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியை உருவாக்க வழிவகுத்தது. இறுதியில் நீதிக்கட்சி 1937 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசிடம் தோல்வியடைந்தது மற்றும் இராசகோபாலாச்சாரி முதலமைச்சரானார். 1944 இல், பெரியார் நீதிக்கட்சியை ஒரு சமூக அமைப்பாக மாற்றினார், கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றி, தேர்தல் அரசியலில் இருந்து விலகினார். சுதந்திரத்திற்குப் பிறகு, காமராசர் தலைமையில் 1950கள் மற்றும் 1960 களில் இந்திய தேசிய காங்கிரசு தமிழ்நாட்டின் அரசியல் காட்சியில் ஆதிக்கம் செலுத்தியது. பெரியாரைப் பின்பற்றிய அண்ணாதுரை 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) தொடங்கினார்.
தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது. இது 1967 இல் திமுக அரசமைக்க உதவி செய்தது.
1972 இல், திமுகவில் ஏற்பட்ட பிளவின் விளைவாக ம. கோ. இராமச்சந்திரன் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) உருவானது. இன்று வரை தொடர்ந்து திராவிடக் கட்சிகள் தமிழ்நாடு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன, தேசியக் கட்சிகள் பொதுவாக முக்கிய திராவிடக் கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவுடன் இளைய பங்காளிகளாக இணைகின்றன.அண்ணாதுரைக்குப் பிறகு மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், ராமச்சந்திரனுக்குப் பிறகு அதிமுகவின் தலைவராக ஜெயலலிதாவும் பணியாற்றினார்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் 1980 களில் இருந்து 2010 களின் முற்பகுதி வரை மாநில அரசியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர், 32 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர்களாக பணியாற்றினர்.
சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த இராசகோபாலாச்சாரி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன், மற்றும் அப்துல் கலாம் ஆகிய மூன்று இந்தியக் குடியரசுத் தலைவர்களை இந்த மாநிலம் உருவாக்கியுள்ளது.
மக்கள் வகைப்பாடு
தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 72,147,030 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 36,137,975 மற்றும் பெண்கள் 36,009,055 ஆகவும் இருந்தனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,423,832 ஆக இருந்தது. அதில் சிறுவர்கள் 3,820,276 ஆகவும்: சிறுமிகள் 3,603,556 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.6% ஆக இருந்தது. 48.4 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். நாட்டிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் இருந்தனர். இது தேசிய சராசரியான 943 ஐ விட அதிகம். 2015-16 நான்காவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் போது பிறப்பு பாலின விகிதம் 954 ஆக பதிவு செய்யப்பட்டது. இது 2019-21 இல் 878 ஆகக் குறைந்து. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, படிப்பறிவு 80.1% ஆக இருந்தது, இது தேசிய சராசரியான 73% ஐ விட அதிகமாகும். 2017 தேசிய புள்ளியியல் ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு விகிதம் 82.9% என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 1.44 கோடி (20%) பட்டியல் சாதியினர் (SC) மற்றும் 8 இலட்சம் (1.1%) பழங்குடியினர் (ST) இருந்தனர்.
2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு பெண்ணுக்கும் 1.6 குழந்தைகள் இருந்தது. இது இந்தியாவிலேயே மிகக் குறைந்த கருவுறுதல் விகிதமாகும். 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, மனித மேம்பாட்டுச் சுட்டெண் (HDI) 0.686 ஆக இருந்தது, இது இந்திய சராசரியை (0.633) விட அதிகமாக இருந்தது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிறக்கும் போது சராசரி ஆயுட்காலம் 74 ஆண்டுகள் ஆகா இருந்தது. இது பெரும்பாலான இந்திய மாநிலங்களை விட அதிகமாகும். 2023 இல், 2.2% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
சமயம் மற்றும் இனம்
தமிழகமானது பலதரப்பட்ட சமூகங்களின் மக்களைக் கொண்டுள்ளது.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்து சமயத்தை 87.6% மக்கள் பின்பற்றுகின்றனர். மாநிலத்தில் 6.1% மக்கள்தொகையுடன் கிறித்தவ சமயத்தினர் மிகப்பெரிய மத சிறுபான்மையினராக உள்ளனர். இசுலாமியர்கள் மக்கள் தொகையில் 5.9% உள்ளனர்.
தமிழர்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளனர். இது தவிர மற்ற மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் குறிப்பிட தக்க அலையில் உள்ளனர். 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் ஏறத்தாழ 34.9 இலட்சம் வெளி மாநிலத்தவர் இருந்தனர்.
மொழிகள்
தமிழ்நாட்டின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளது. ஆங்கிலம் கூடுதல் அலுவல் மொழியாக செயல்படுகிறது. தமிழ் பழமையான மொழிகளில் ஒன்றாகும் மற்றும் இந்தியாவில் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட முதல் மொழியாகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் மக்கள்தொகையில் 88.4% தமிழை முதல் மொழியாகப் பேசுகின்றனர். அதைத் தொடர்ந்து தெலுங்கு (5.87%), கன்னடம் (1.78%), உருது (1.75%), மலையாளம் (1.01%) மற்றும் பிற மொழிகள் (1.24%) பேசுகின்றனர்.
வட தமிழகத்தில் சென்னைத் தமிழ், மேற்குத் தமிழ்நாட்டில் கொங்குத் தமிழ், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மதுரைத் தமிழ், தென்கிழக்குத் தமிழ்நாட்டில் நெல்லைத் தமிழ் மற்றும் தெற்கில் குமரித் தமிழ் எனப் பல்வேறு இடங்களில் பல வட்டார வழக்குகள் பேசப்படுகின்றன. தற்போது வழக்கில் பேசும் போது, தமிழ் மொழியில் சமசுகிருதம் மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலிருந்து கடன் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். மாநிலத்தில் வெளிநாட்டவர்களால் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.
பெரிய நகரங்கள்
இம்மாநிலத்தின் தலைநகரமான சென்னை, அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இங்கு 80 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கோயம்புத்தூர் ஆகும். அதைத் தொடர்ந்து முறையே மதுரை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்கள் உள்ளன.
பண்பாடு மற்றும் பாரம்பரியம்
உடை
தமிழ் பெண்கள் பாரம்பரியமாக புடவை அணிவார்கள். இது பொதுவாக 4.6 முதல் 8.2 மீ நீளம் கொண்ட ஒரு துணியாகும். இடுப்பைச் சுற்றி, ஒரு முனையை தோளில் போர்த்தி இது அணியப்படுகின்றது. சிலப்பதிகாரம் போன்ற பழங்கால தமிழ் நூல்கள் பெண்கள் நேர்த்தியான புடவை அணிந்ததை விவரிக்கின்றன.
திருமணம் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் பெண்கள் வண்ணமயமான பட்டுப் புடைவைகளை அணிவார்கள். ஆண்கள் 4.5 மீ நீளமுள்ள, வெள்ளை நிற வேட்டி அணிகின்றனர். பெரும்பாலும் பிரகாசமான வண்ணக் கோடுகளுடன் இருக்கும் இவை, பொதுவாக கால்களில் சுற்றி இடுப்பில் முடிச்சு போடப்படுகின்றன.வண்ணமயமான வடிவங்களைக் கொண்ட லுங்கி என்பது கிராமப்புறங்களில் ஆண்களின் மிகவும் பொதுவான உடையாகும். நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் பொதுவாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிகிறார்கள். மேற்கத்திய பாணி உடைகள் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அனைத்து பாலினத்தவராலும் அணியப்படுகின்றன. காஞ்சிப் பட்டு என்பது தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் பகுதியில் தயாரிக்கப்படும் ஒரு வகை பட்டுப் புடவையாகும், இந்த புடவைகள் தென்னிந்தியாவில் பெரும்பாலான பெண்களால் திருமண மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் அணியப்படுகின்றன. கோவை கோரா பருத்தி என்பது கோயம்புத்தூரில் தயாரிக்கப்படும் ஒரு வகை பருத்திச் சேலை ஆகும். இவை இரண்டும் இந்திய அரசால் புவியியல் குறியீடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உணவு
தமிழர் உணவு பெரும்பாலும் அரிசியைச் சார்ந்ததாகும். இப்பகுதியானது பல பாரம்பரிய சைவ மற்றும் அசைவ உணவு வகைகளைக் கொண்டுள்ளது. தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்கள் உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. உணவின் தனித்துவமான நறுமணம் மற்றும் சுவை மசாலாப் பொருட்களின் கலவையால் அடையப்படுகிறது. பாரம்பரிய முறைப்படி, தரையில் அமர்ந்து, வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவை வலது கையினால் உண்ணுவதே வழக்கமாக இருந்தது. மத்திய உணவு சாம்பார், ரசம் மற்றும் பொரியல் ஆகியவற்றுடன் பரிமாறப்படுகின்றது. உண்ட பிறகு எளிதில் மக்கக்கூடிய வாழை இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக மாறும். வாழை இலையில் உண்பது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வழக்கமாகும், இது உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது, மேலும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இட்லி, தோசை, ஊத்தப்பம், பொங்கல், மற்றும் பணியாரம் ஆகியவை தமிழ்நாட்டில் பிரபலமான காலை உணவுகளாகும்.. பழனி பஞ்சாமிர்தம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, ஊட்டி வரிக்கி, சேலம் ஜவ்வரிசி ஆகிவை புவிசார் குறியீடு பெற்ற உணவுகளாகும்.
இலக்கியம்
தமிழகம் சங்க காலத்திலிருந்து 2500 ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. ஆரம்பகால தமிழ் இலக்கியம் மூன்று தொடர்ச்சியான தமிழ்ச் சங்கங்களில் இயற்றப்பட்டது. பழங்கால புராணங்களின் படி, இந்தியாவின் தெற்கே தற்போது மறைந்துவிட்ட கண்டத்தில் இவை இயற்றப்பட்டதாக தெரிகிறது. இதில் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியங்களும் அடங்கும். பாறைகள் மற்றும் கற்களில் காணப்படும் ஆரம்பகால தமிழ் கல்வெட்டுப் பதிவுகள் கிமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளன. சங்க காலத்திலிருந்து கிடைக்கப்பெற்ற இலக்கியங்கள் காலவரிசையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு பதினெண்மேற்கணக்கு நூல்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு என தொகுக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள தமிழ் இலக்கணம் பெரும்பாலும் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்ட 13 ஆம் நூற்றாண்டின் நன்னூல் எனும் இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது. திருவள்ளுவரின் நெறிமுறைகள் பற்றிய திருக்குறள், தமிழ் இலக்கியத்தின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றாகும்.
ஆறாம் நூற்றாண்டில் ஆழ்வார்கள் மற்றும் நாயனார்களால் இயற்றப்பட்ட பாடல்களுடன் தோற்றுவிக்கப்பட்ட பக்தி இயக்கத்தைத் தொடர்ந்து வைணவ மற்றும் சைவ இலக்கியங்கள் முக்கியத்துவம் பெற்றன.. பல்வேறு படையெடுப்புகள் மற்றும் நிலையற்ற தன்மை காரணமாக இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழ் இலக்கியங்கள் பெரிதாக தோன்றவில்லை. மீண்டும் 11ஆம் நூற்றாண்டிற்கு பிறகு கம்பரால் எழுதப்பட்ட ராமாவதாரம் உட்பட குறிப்பிடத்தக்க படைப்புகளுடன் செழித்த வளர்ந்தது.
14 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் அருணகிரிநாதரின் திருப்புகழ் குறிப்பிடத்தக்கது. 1578 இல், போர்த்துகீசியர்கள் தம்பிரான் வணக்கம் என்ற ஒரு தமிழ் புத்தகத்தை வெளியிட்டனர், இதன் மூலம் தமிழ் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட முதல் இந்திய மொழியாக திகழ்ந்தது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சுவாமிநாத ஐயர், இராமலிங்க அடிகள் மற்றும் மறைமலை அடிகள் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கள் மற்றும் கவிதைகள் 19 ஆம் நூற்றாண்டு தமிழ் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்திய விடுதலை இயக்கத்தின் போது, சுப்பிரமணிய பாரதியார், பாரதிதாசன் மற்றும் பல தமிழ் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தேசிய உணர்வு, சமூக சமத்துவம் மற்றும் மதச்சார்பற்ற சிந்தனைகளைத் தூண்ட முயன்றனர்.
கட்டிடக்கலை
திராவிடக் கட்டிடக்கலை என்பது தமிழ்நாட்டின் கட்டிடக்கலையின் தனித்துவமான பாணியாகும். திராவிடக் கட்டிடக்கலையில், கோவில்களின் கருவறையைச் சுற்றி பல தூண் கொண்ட மண்டபங்கள் உள்ளன. கோவிலைச் சுற்றியுள்ள மதில் சுவர்களில் நான்கு திசைகளிலும் பெரிய கோபுரங்களைக் கொண்ட பெரிய வாயில்கள் இருக்கும். இவை தவிர, ஒரு தென்னிந்திய கோவிலில் பொதுவாக கல்யாணி என்று அழைக்கப்படும் ஒரு குளம் இருக்கும். கோயிலின் நுழைவாயிலில் உள்ள கோபுரம் திராவிட பாணியின் இந்துக் கோயில்களின் முக்கிய அம்சமாகும். மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களை கட்டிய பல்லவர்களிடம் இருந்து இந்த கோபுரத்தின் தோற்றம் வந்ததாக அறியப்படுகிறது. பின்னர் சோழர்கள் அதை விரிவுபடுத்தினர் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சியின் போது, இந்த நுழைவாயில்கள் கோயிலின் வெளிப்புற தோற்றத்தின் முக்கிய அம்சமாக மாறியது.
தமிழக மாநிலச் சின்னத்தில் அசோகரின் சிங்க தலைப் பின்னணியில் ஒரு கோபுரத்தின் உருவம் உள்ளது. விமானம் என்பது கர்ப்பக்கிரகம் அல்லது கோயிலின் உள் கருவறையின் மீது கட்டப்பட்ட கோபுரத்தை ஒத்த கட்டமைப்புகள் ஆகும். இவை பொதுவாக கோபுரங்களை விட சிறியதாக இருக்கும்.
இடைக்காலத்தில் முகலாய கட்டிட பாணி மற்றும் பின்னர் ஐரோப்பிய பாணி ஆகியவற்றுடன் இணைந்து பல கலவைகள் தோன்றின. பிரித்தானிய காலத்தில் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் இந்தோ சாரசெனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு, கட்டிடக்கலை நவீனத்துவம் பெற்று சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டுமானத்திலிருந்து கான்கிரீட் பயன்பாட்டுக்கு மாறியது.
கலை
இசை, கலை, நடனம் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு முக்கிய மையமாக உள்ளது. சென்னை தென்னிந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் கலை வடிவங்கள் இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்டன. பரதநாட்டியம் தமிழ்நாட்டில் தோன்றிய ஒரு பாரம்பரிய நடன வடிவமாகும், இது இந்தியாவின் பழமையான நடனங்களில் ஒன்றாகும். பிற பிராந்திய நாட்டுப்புற நடனங்களில் கரகாட்டம், காவடி, ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகியவை அடங்கும். தமிழ்நாட்டின் நடனம், உடை மற்றும் சிற்பங்கள் உடல் மற்றும் தாய்மையின் அழகை எடுத்துக்காட்டுகின்றன. கூத்து என்பது தமிழர்களின் பழங்கால நாட்டுப்புறக் கலையாகும். இதில் கலைஞர்கள் நடனம் மற்றும் இசையுடன் கதைகளைச் சொல்கிறார்கள்.
பண்டைய தமிழ் நாடு சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களால் விவரிக்கப்படும் தமிழ் பண்ணிசை எனப்படும் தனக்கே உரிய இசை அமைப்பைக் கொண்டிருந்தது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கல்வெட்டு, இந்திய இசைக் குறியீடுகளின் பழம்பெரும் உதாரணங்களில் ஒன்றாகும். பாறை, தாரை, யாழ் மற்றும் முரசு போன்ற பல பாரம்பரிய வாத்தியங்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. நாதசுவரம் மற்றும் தவில் கோயில்கள் மற்றும் திருமணங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய இசைக்கருவிகளாகும். தமிழ்நாட்டின் பாரம்பரிய இசை கர்நாடக இசை என அழைக்கப்படுகிறது, இதில் முத்துசுவாமி தீட்சிதர் போன்ற இசையமைப்பாளர்களின் தாள மற்றும் கட்டமைக்கப்பட்ட இசை தொகுப்புகள் அடங்கும். பல்வேறு நாட்டுப்புற இசைகளின் கலவையான கானா வடசென்னையில் பாடப்படுகிறது.
பெரும்பாலான காட்சிக் கலைகள் ஏதோவொரு வடிவத்தில் சமயம் சார்ந்தவையாக இருக்கின்றன. பொதுவாக இந்து சமயத்தை மையமாகக் கொண்டவையாக இருப்பினும், சில நேரங்களில் மனிதநேயம் மற்றும் உலகளாவிய கருப்பொருள்களைக் குறிக்கவும் செய்கின்றன. தமிழர்களின் சிற்பக்களை என்பது கோவில்களில் உள்ள கல் சிற்பங்கள் முதல் விரிவான உலோக மற்றும் வெண்கல சிற்பங்கள் வரை உள்ளடக்கியதாகும். சோழர்களின் வெண்கலச் சிலைகள் தமிழ்க் கலையின் மிகப் பெரிய பங்களிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான மேற்கத்திய கலைகளைப் போலல்லாமல், தமிழர் சிற்பங்களில் கலைஞர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பொருளை வடிமைக்கின்றனர். சித்தனவாசல் குகைகளில் ஏழாம் நூற்றாண்டின் பாண்டியர் மற்றும் பல்லவர் காலத்து ஓவியங்கள் உள்ளன. இவை மெல்லிய ஈரமான மேற்பரப்பில் சுண்ணாம்பு பூச்சு மற்றும் கனிம சாயங்கள் கொண்டு வரையப்பட்டுள்ளன. கோயில் சுவர்களில் இதே போன்ற சுவரோவியங்கள் காணப்படுகின்றன. 16 ஆம் நூற்றாண்டில் உருவான தமிழ் ஓவியத்தின் முக்கிய வடிவங்களில் ஒன்று தஞ்சாவூர் ஓவியம். இது தூதனாகத்தால் பயன்படுத்தி வரையப்பட்டு, பின்னர் வெள்ளி அல்லது தங்க நூல்கள் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் பல அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கலை ஆராய்ச்சியில் ஈடுபடும் பிற நிறுவனங்கள் உள்ளன. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் தேசிய கலைக்கூடம் ஆகியவை நாட்டிலேயே மிகப் பழமையானவை. புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகம் பிரித்தானிய காலத்தின் பல பொருட்களின் தொகுப்பை பராமரிக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்புத் தொழில்களில் ஒன்றான தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகமாக தமிழ்நாடு விளங்குகிறது. தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் 1916 இல் தமிழில் தயாரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 1931 இல் முதல் பேசும்படமான காளிதாஸ் வெளியானது. கோயம்புத்தூரில் தென்னிந்தியாவின் முதல் சினிமாவைக் கட்டிய சாமிக்கண்ணு வின்சென்ட் "கொட்டகை சினிமா"வை அறிமுகப்படுத்தினார். அதில் ஒரு நகரம் அல்லது கிராமத்திற்கு அருகில் உள்ள திறந்தவெளியில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு படங்கள் திரையிடப்பட்டது.
திருவிழாக்கள்
பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய அறுவடை திருவிழா ஆகும். இது தமிழ் நாட்காட்டியின்படி தை மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. சூரியனை வணங்க கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், பாலில் வேகவைத்த அரிசியுடன் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் பாரம்பரிய பொங்கல் உணவு தயாரிக்கப்படுகின்றது. மாட்டுப் பொங்கல் தினத்தன்று கால்நடைகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்குப் பளபளப்பான வண்ணங்கள் பூசப்பட்டு, கழுத்தில் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ஊர்வலமாக கூட்டிச்செல்லப்படுகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் காளைகளை அடக்கும் பாரம்பரிய ஏறுதழுவல் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது.
தமிழ்ப் புத்தாண்டு தமிழ் நாட்காட்டியின் படி ஆண்டின் முதல் நாளன்று கொண்டப்படுகின்றது. கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில் அனுசரிக்கப்படும் தீபங்களின் திருவிழாவாகும். தைப்பூசம் என்பது தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் பௌர்ணமி நாளில் தமிழ்க்கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பண்டிகையாகும். ஆடிப் பெருக்கு என்பது ஆடி மாதத்தின் 18 வது நாளில் கொண்டாடப்படும் ஒரு தமிழ் கலாச்சார விழாவாகும். தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆடி மாதத்தின் போது மாரியம்மன் மற்றும் அய்யனார் வழிபாடு மற்றும் பண்டிகைகள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகின்றன. பங்குனி உத்திரம் பங்குனி மாதத்தின் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகின்றது. மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, நோன்புப் பெருநாள், பக்ரீத், முகரம், வினாயகர் சதுர்த்தி, சரசுவதி பூசை, கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கொண்டாடப்படுகின்றன.
1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளை, தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என்று 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
பொருளாதாரம்
1970களில் சீர்திருத்தம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, மாநிலத்தின் பொருளாதாரம் தேசிய சராசரி வளர்ச்சி விகிதங்களைத் விட அதிகமாக இருந்தது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹ 23.65 டிரில்லியன் (US$300 பில்லியன்) ஆக இருந்தது. இது இந்திய மாநிலங்களிலேயே இரண்டாவது மிக அதிகமானதாகும். இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகும். மாநிலம் வறுமைக் கோட்டின் கீழ் குறைந்த சதவிகிதம் மக்களைக் கொண்டிருந்தாலும், கிராமப்புற வேலையின்மை விகிதம் ஆயிரத்திற்கு 47 என்ற அளவில் தேசிய சராசரியான 28 உடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிகமாக உள்ளது. 26 இலட்சம் பணியாளர்கள் 38,837 தொழிற்சாலைகளில்வேலை செய்கின்றனர்.
வாகன, வன்பொருள் மற்றும் துணி உற்பத்தி, மென்பொருள், சுகாதாரம் மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகள் தமிழகத்தில் சிறந்து விளங்குகின்றன. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, சேவைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55% பங்களித்தன, அதைத் தொடர்ந்து உற்பத்தி 32% மற்றும் விவசாயம் 13% பங்களித்தன. மாநிலத்தில் 42 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) உள்ளன. இந்திய அரசாங்கத்தின் அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் அதிகம் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
சேவைகள்
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, ₹ 576.87 பில்லியன் (US$7.2 பில்லியன்) மதிப்புடன் இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும். 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னையில் உள்ள டைடல் பார்க் ஆசியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் ஒன்றாகும். பல்வேறு சிறப்பு பொருளாதார மண்டலங்களின் அமைப்பு மற்றும் அரசாங்கக் கொள்கைகள் இத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்துள்ளன, இது வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வேலை தேடுபவர்களை ஈர்த்துள்ளது. 2020களில், சென்னை சேவையாக மென்பொருளின் முக்கிய வழங்குநராக மாறியது மற்றும் "இந்தியாவின் சேவையாக மென்பொருள் தலைநகரம்" என்று அழைக்கப்படுகின்றது.
மாநிலத்தில் இரண்டு பங்குச் சந்தைகள் உள்ளன, கோயம்புத்தூர் பங்குச் சந்தை 2013 இல் நிறுவப்பட்டது மற்றும் சென்னை பங்குச் சந்தை 2015 இல் நிறுவப்பட்டது. இந்தியாவில் முதல் ஐரோப்பிய பாணி வங்கி அமைப்பான மெட்ராசு வங்கி, 21 சூன் 1683 இல் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்துசுதான் வங்கி (1770) மற்றும் இந்தியப் பொது வங்கி (1786) போன்ற வங்கிகள் நிறுவப்பட்டன. பேங்க் ஆப் மெட்ராசு மற்ற இரண்டு மாகாண வங்கிகளுடன் இணைந்து 1921 இல் இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியாவை உருவாக்கியது, இது 1955 இல் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியானது.ஆறு வங்கிகள் உட்பட 400 க்கும் மேற்பட்ட நிதித் தொழில் வணிகங்கள் தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் தெற்கு மண்டல அலுவலகம், அதன் மண்டல பயிற்சி மையம் மற்றும் பணியாளர் கல்லூரி ஆகியவை சென்னையில் உள்ளது. மாநிலத்தில் சென்னையில் உலக வங்கியின் நிரந்தர அலுவலகம் உள்ளது.
உற்பத்தி
மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைத் தவிர, பல்வேறு மாநில அரசுக்கு சொந்தமான உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் $5.37 பில்லியன் வெளியீட்டைக் கொண்ட வன்பொருள் உற்பத்தித் துறை, இந்திய மாநிலங்களிலேயே மிகப்பெரியதாகும். ஏராளமான தானுந்து தயாரிப்பு நிறுவனங்கள் மாநிலத்தில் தங்கள் உற்பத்தித் தளங்களைக் கொண்டுள்ளன. மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன உதிரிபாகங்கள் மற்றும் தானுந்து உற்பத்தியில் 35% க்கும் அதிகமாக பங்களிக்கும் சென்னை "இந்தியாவின் டெட்ராய்ட்" என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை இந்திய இரயில்வேக்கான தொடருந்து பெட்டிகள் மற்றும் பாகங்களைத் தயாரிக்கிறது.
மாநிலத்தின் மற்றுமொரு பெரிய தொழில்துறை துணி நெசவு மற்றும் தயாரிப்பாகும். இந்தியாவில் செயல்படும் நூற்பாலைகளில் பாதிக்கும் மேற்பட்ட ஆலைகள் தமிழகத்தில் உள்ளன. பருத்தி உற்பத்தி மற்றும் சவுளித் தொழில் காரணமாக கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று குறிப்பிடப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, திருப்பூர் $480 பில்லியன் மதிப்பிலான பின்னலாடைகளை ஏற்றுமதி செய்தது, இது இந்தியாவிலிருந்து செய்யப்படும் துணி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 54% பங்களிப்பாகும். ஆடை ஏற்றுமதியில் முன்னணி வகிப்பதால், இந்நகரம் பின்னலாடைகளின் தலைநகரமாக அறியப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொழில்களிலும் செய்யப்பட்ட மொத்த முதலீட்டில் 17% இந்த துறையில் செய்யப்பட்டது.
2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, ₹ 92.52 பில்லியன் (US$1.2 பில்லியன்) மதிப்புள்ள தோல் பொருட்கள் மாநிலத்திலிருந்து தயாரிக்கப்பட்டன. இது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற தோல் பொருட்களில் 40% மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சிவகாசி இந்தியாவில் பெரும்பாலான பட்டாசுகளை தயாரிக்கிறது. இந்தியாவின் தேவைகளில் மூன்றில் இரண்டு பங்கு மின்சார இயக்கிகள் மற்றும் பெரும்பாலான ஈரமாவு அரவைப்பொறிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி ஒரு அங்கீகரிக்கப்பட்ட புவியியல் குறியீடாகும்.
அருவங்காடு மற்றும் திருச்சிராப்பள்ளியில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான ஆயுதத் தொழிற்சாலைகள் உள்ளன. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய கவச வாகனங்கள் தயாரிப்பு பிரிவு, இந்தியப் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டிற்காக கவச வாகனங்கள், தானுந்துகள், இயந்திரப் பொறிகள் மற்றும் கவச ஆடைகளை உற்பத்தி செய்கிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மகேந்திரகிரியில் ஒரு ஏவூர்தி உந்துவிசை ஆராய்ச்சி நிலையத்தை இயக்குகிறது.
வேளாண்மை
விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% பங்களிக்கிறது மற்றும் கிராமப்புறங்களில் முக்கிய வேலைவாய்ப்பை உருவாக்கி தருகிறது.. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 63.4 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயிரிடப்பட்டுள்ளது. அரிசி மாநிலத்தின் பிரதான உணவு தானியமாகும். 2021-22 ஆம் ஆண்டில் 79 இலட்சம் டன்கள் உற்பத்தியுடன் தமிழகம் மிகப்பெரிய நெல் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கின்றது. காவேரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் "தமிழ்நாட்டின் அரிசிக் கிண்ணம்" என்று அழைக்கப்படுகிறது. உணவு அல்லாத தானியங்களில், கரும்பு முக்கிய பயிராகும். 2021-22 ஆம் ஆண்டில் 1.61 கோடி டன்கள் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு மசாலாப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள், மரவள்ளிக்கிழங்கு, கிராம்பு மற்றும் பூக்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் பழங்களில் 6.5% மற்றும் காய்கறிகளில் 4.2% தமிழகத்தில் உற்பத்தி செய்ப்படுகின்றன. வாழை மற்றும் மா உற்பத்தியில் மாநிலம் முன்னணியில் உள்ளது.
2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இயற்கை மீள்மம் மற்றும் தேங்காய் உற்பத்தியில் மாநிலம் இரண்டாவது பெரிய மாநிலமாக இருந்தது. மலைப்பகுதிகளில் தேயிலை ஒரு பிரபலமான பயிராகும். ஒரு தனித்துவமான சுவை கொண்ட நீலகிரி தேயிலையின் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது.
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலம் 20.8 பில்லியன் வருடாந்திர உற்பத்தியுடன் கோழி மற்றும் முட்டைகளின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது, இது தேசிய உற்பத்தியில் 16% க்கும் அதிகமாக பங்களிக்கிறது. மாநிலத்தில் 10.5 இலட்சம் மீனவர்கள் வசிக்கின்றனர் மற்றும் மூன்று பெரிய மீன்பிடி துறைமுகங்கள், மூன்று நடுத்தர மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் 363 மீன் இறங்குதுறை மையங்கள் உள்ளன. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, மீன் உற்பத்தி 8 இலட்சம் டன்களாக இருந்தது, இது இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தியில் 5% பங்களிப்பாகும். மீன் வளர்ப்பில் இறால், ஆளி, கிளிஞ்சல்கள் மற்றும் சிப்பி வளர்ப்பு அடங்கும். "இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை" என்று அழைக்கப்படும் மா.சா.சுவாமிநாதன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
உள்கட்டமைப்பு
நீர் வழங்கல்
தமிழகம் இந்தியாவின் மக்கள்தொகையில் 6% கொண்டிருந்தாலும், நாட்டின் நீர் ஆதாரங்களில் 3% மட்டுமே கொண்டிருக்கின்றது. தனிநபர் நீர் இருப்பு தேசிய சராசரியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. நீர் ஆதாரங்களை நிரப்புவதற்கு பருவமழையை நம்பியே உள்ளது. 17 பெரிய ஆற்றுப் படுகைகள் மற்றும் 61 நீர்த்தேக்கங்களைக் கொண்ட மாநிலத்தில், 90% நீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. முக்கிய ஆறுகளில் காவேரி, பவானி, வைகை மற்றும் தாமிரபரணி ஆகியவை அடங்கும். பெரும்பாலான நதிகள் பிற மாநிலங்களில் இருந்து உற்பத்தியாகி வருவதால், தமிழகம் கணிசமான அளவு தண்ணீருக்காக அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்கின்றது. மாநிலத்தில் 116 பெரிய அணைகள் உள்ளன. ஆறுகள் தவிர, மாநிலம் முழுவதிலும் உள்ள 41,000க்கும் மேற்பட்ட தொட்டிகள் மற்றும் 17 இலட்சம் கிணறுகளில் சேமிக்கப்படும் மழைநீரில் இருந்து பெரும்பாலான நீர் உபயோகத்திற்காக பெறப்படுகின்றது.
நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவை அந்தந்த உள்ளூர் நிர்வாக அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள நாட்டின் மிகப்பெரிய உப்பு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் குடிநீருக்கான மாற்று வழிகளை வழங்குகின்றன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 83.4% குடும்பங்களுக்கு மட்டுமே பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறது, இது தேசிய சராசரியான 85.5% ஐ விட குறைவாக உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஆகியவற்றால் நீர் ஆதாரங்கள் அச்சுறுத்தப்படுகின்றன.
சுகாதாரம்
தமிழகம் சுகாதார வசதிகளின் அடிப்படையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும். உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான அனைத்து அளவுருக்களிலும் நாட்டில் உயர்ந்த இடத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் 2015 ஆம் ஆண்டளவில் அடையப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிர்ணயம் செய்யப்பட்ட தாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் குழந்தை இறப்பைக் குறைத்தல் தொடர்பான இலக்குகளை தமிழ்நாடு 2009 ஆம் ஆண்டே அடைந்தது.
மாநிலத்தில் உள்ள சுகாதார உள்கட்டமைப்பு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை உள்ளடக்கியது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி மாநிலத்தில் 94,700 க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட 404 பொது மருத்துவமனைகள், 1,776 பொது மருந்தகங்கள், 11,030 சுகாதார மையங்கள் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் 481 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன. 16 நவம்பர் 1664 இல் நிறுவப்பட்ட சென்னை அரசுப் பொது மருத்துவமனை, இந்தியாவின் முதல் பொது மருத்துவமனையாகும்.
மாநில அரசு தகுதியான வயதினருக்கு இலவச போலியோ தடுப்பூசியை வழங்குகிறது. தமிழ்நாடு மருத்துவ சுற்றுலாவின் முக்கிய மையமாக உள்ளது மற்றும் சென்னை "இந்தியாவின் சுகாதார தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவிற்கு வருகை தரும் மொத்த மருத்துவ சுற்றுலா பயணிகளில் 40% க்கும் அதிகமானோர் தமிழ்நாட்டிற்கு வருகை தருவதால் மருத்துவ சுற்றுலா மாநிலத்தின் பொருளாதாரத்தின் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தொலைத்தொடர்பு
கடலுக்கடியில் ஒளிவட இணைப்புகள் மூலம் இணைக்கப்பட்டுள்ள நான்கு இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நான்கு நிறுவனங்கள் நகர்பேசி சேவைகளை வழங்குகின்றன. தொலைபேசி மற்றும் அகலப்பட்டை சேவைகள் ஐந்து பெரிய நிறுவனங்கள் மற்றும் பிற சிறிய உள்ளூர் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. அதிக இணைய பயன்பாடு மற்றும் பரவல் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. 2018 ஆம் ஆண்டில், அதிவேக இணையத்தை வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் 55,000 கி.மீ. ஒளி வட இணைப்புகள் அமைக்கும் திட்டத்தை மாநில அரசு தொடங்கியது.
சக்தி மற்றும் ஆற்றல்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மாநிலத்தில் மின்சார விநியோகம் செய்யப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு வரை, சராசரி தினசரி நுகர்வு 15,000 மெகாவாட் ஆகா இருந்தது. இதில் 40% மின்சாரம் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது, மீதமுள்ள 60% கொள்முதல் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி மாநிலம் மின்சார பயன்பாட்டில் நாட்டிலேயே நான்காவது இடத்தில் உள்ளது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 38,248 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டுள்ளது. இதில் அனல் மின்சாரம் பெரும் பங்கு வகிக்கின்றது. நாட்டிலேயே இரண்டு அணுமின் நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த அணுசக்தியில் மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி தமிழகம் உற்பத்தி செய்கிறது. தமிழ் நாடு 8,000 மெகாவாட்டிற்கும் அதிகமான உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகளைக் கொண்டுள்ளது.
ஊடகம்
மாநிலத்தில் செய்தித்தாள் வெளியீடு 1785 இல் தி மெட்ராஸ் கூரியர் வார இதழின் தொடக்கத்துடன் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து 1795 ஆம் ஆண்டில் தி மெட்ராஸ் கெஜட் மற்றும் தி கவர்மெண்ட் கெசட் வார இதழ்கள் வெளிவந்தன. 1836 இல் நிறுவப்பட்ட தி ஸ்பெக்டேட்டர் இதழ் ஒரு இந்தியாரால் நிறுவப்பட்ட முதல் ஆங்கில தினசரி செய்தித்தாள் ஆனது. முதல் தமிழ் செய்தித்தாளான சுதேசமித்திரன் 1899 இல் தொடங்கப்பட்டது. மாநிலத்தில் பல செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியிடப்படுகின்றன. தி இந்து, தினத்தந்தி, தினகரன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினமலர் மற்றும் தி டெக்கான் குரோனிக்கல் ஆகியவை ஒரு நாளைக்கு 100,000 க்கும் அதிகமான புழக்கத்தில் உள்ள முக்கிய நாளிதழ்கள் ஆகும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் பரவலாக உள்ள பல பருவ இதழ்கள் மற்றும் உள்ளூர் செய்தித்தாள்களும் பல நகரங்களில் இருந்து பதிப்புகளை வெளியிடுகின்றன.
அரசாங்கத்தால் நடத்தப்படும் தூர்தர்ஷன் 1974 இல் அமைக்கப்பட்ட அதன் சென்னை மையத்திலிருந்து நிலப்பரப்பு மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புகிறது. பொதிகை எனப்படும் தூர்தர்ஷனின் தமிழ் மொழி அலைவரிசை 14 ஏப்ரல் 1993 அன்று தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் உட்பட 30 க்கும் மேற்பட்ட தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் உள்ளன. கேபிள் டிவி சேவை முற்றிலும் மாநில அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் நேரடி வீட்டுத் தொலைக்காட்சி சேவைகள் தனியார் நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது.வானொலி ஒலிபரப்பு 1924 இல் தொடங்கியது. அகில இந்திய வானொலி 1938 இல் நிறுவப்பட்டது. மாநிலத்தில் இயக்கப்படும் பல வானொலி நிலையங்கள் உள்ளன. 2006 இல், தமிழ்நாடு அரசு அனைத்து குடும்பங்களுக்கும் இலவச தொலைக்காட்சிகளை விநியோகித்தது, இது தொலைக்காட்சி சேவைகளில் அதிக ஊடுருவலுக்கு வழிவகுத்தது. 2010 களின் முற்பகுதியில் இருந்து, கேபிள் தொலைக்காட்சி சேவைகளுக்குப் பதிலாக நேரடி வீட்டுத் தொலைக்காட்சி பெருகிய முறையில் பிரபலமானது.
தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள் பொழுதுபோக்கிற்கான முக்கிய பிரதான நேர ஆதாரமாக அமைகின்றன.
மற்ற சேவைகள்
356 தீயணைப்பு நிலையங்களை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை நிறுவனம் இயக்குகின்றது. மாநிலத்தில் 11,800க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களை இயக்கும் இந்திய அஞ்சல் துறை மூலம் அஞ்சல் சேவை கையாளப்படுகிறது. முதல் தபால் அலுவலகம் 1 சூன் 1786 இல் புனித ஜார்ஜ் கோட்டையில் நிறுவப்பட்டது.
போக்குவரத்து
சாலை
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாடு ஏறத்தாழ 2.71 இலட்சம் கி.மீ. தூரத்தை உள்ளடக்கிய விரிவான சாலை அமைப்பை கொண்டுள்ளது. ஏப்ரல் 1946 இல் நிறுவப்பட்ட மாநிலத்தின் நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய மாவட்ட சாலைகள் மற்றும் மாநிலத்தில் உள்ள பிற சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பாகும். நெடுஞ்சாலைத் துறை 11 பிரிவுகள் மற்றும் 120 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 73,187 கி.மீ. (45,476 மைல்) தூர நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கிறது. இந்திய பெருநகரங்களை இணைக்கும் தங்க நாற்கர திட்டத்திற்கான ஒரு முனையமும் இந்த மாநிலமாகும்.
மாநிலத்தில் 6,805 கி.மீ. (4,228 மைல்) நீளமுள்ள 48 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வகுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கின்றது. 6,805 கி.மீ. (4,228 மைல்) நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன, அவை மாநிலத்தில் உள்ள மாவட்டத் தலைமையகம், முக்கிய நகரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கின்றன.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, 20,946 அரசுப் போக்குவரத்துப் பேருந்துகள், 7,596 தனியார் பேருந்துகள் மற்றும் 4,056 சிற்றுந்துகள் என 32,598 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1947 இல் சென்னை மாகாணத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்டபோது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நிறுவப்பட்டது. இது மாநிலத்தில் முதன்மையான பொதுப் போக்குவரத்து பேருந்துகளை இயக்குகின்றது. இது பெரும்பாலும் மாநிலத்திற்குள், மாநிலங்களுக்கு இடையேயான சில வழித்தடங்கள் மற்றும் நகர வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குகிறது. அத்துடன் நீண்ட தூர பேருந்து சேவைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்குகின்றது. இயக்குகிறது. சென்னையில் உள்ள நகரப் பேருந்துகள் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் 3.21 கோடி பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, 2022 ஆம் கணக்கெடுப்பின் படி, இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் 64,105 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
தொடருந்து
தமிழ்நாட்டில் உள்ள இரயில் வலையமைப்பு இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வேயின் ஒரு பகுதியாகும். இது சென்னையில் தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் சேலம் ஆகிய நான்கு கோட்டங்களுடன் செயல்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 3,858 கி.மீ. (2,397 மைல்) தூரத்துக்கு 5,601 கி.மீ. (3,480 மைல்) இருப்பு பாதைகள் இருந்தன. மாநிலத்தில் 532 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் சென்னை மத்திய, சென்னை எழும்பூர், கோயம்புத்தூர் சந்திப்பு மற்றும் மதுரை சந்திப்பு ஆகியவை அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களாக உள்ளன.
இந்திய இரயில்வே சென்னையில் ஒரு இரயில் பேட்டி உற்பத்தி தொழிற்சாலை மற்றும் அரக்கோணம், ஈரோடு மற்றும் ராயபுரத்தில் மின்சார உந்துப் பொறி காப்பகங்கள், ஈரோடு, திருச்சிராப்பள்ளி மற்றும் தண்டையார்பேட்டையில் டீசல் உந்துப் பொறி காப்பகங்கள், குன்னூரில் நீராவி உந்துப் பொறி காப்பகம் மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிமனைகளை நடத்துகின்றது.
1928 இல் நிறுவப்பட்ட 212 கி.மீ. (132 மைல்) தூரத்தை உள்ளடக்கிய தெற்கு இரயில்வேயால் இயக்கப்படும் நன்கு நிறுவப்பட்ட புறநகர் இரயில் வலையமைப்பு சென்னையில் உள்ளது. 1995 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் இந்தியாவின் முதல் பறக்கும் தொடருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மெட்ரோ என்பது சென்னையில் உள்ள ஒரு விரைவு போக்குவரத்து தொடருந்து அமைப்பாகும். 2015 இல் திறக்கப்பட்ட இது தற்போது 54.1 கி.மீ. (33.6 மைல்) இயங்கும் இரண்டு செயல்பாட்டுப் பாதைகளைக் கொண்டுள்ளது.
1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நீலகிரி மலை தொடர்வண்டி இயக்கத்தில் உள்ள ஒரே குறுகிய தொடருந்து பாதையாகும். இது யுனெஸ்கோ பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.1913ஆம் ஆண்டு கட்டப்பட்ட இராமேசுவரத்தையும் மண்டபத்தையும் இணைக்கும் பாம்பன் பாலம் இந்தியாவில் கடல் மேல் கட்டப்பட்ட மிக நீளமான தொடருந்து பாலமாகும். 2.3 கி.மீ. நீளமுள்ள இக்கடல் பாலத்தில் நடுவே பெரிய கப்பல்கள் போக்குவரத்துக்கு ஏற்றவாறு பாலத்தின் நடுவில் திறக்கும் கொடுங்கைப் பாலம் தூக்கு பாலமாக வடிவமைக்கபட்டு செயல்பட்டு வருகிறது.
வான்வழி மற்றும் விண்வெளி
மாநிலத்தின் வானூர்திப் போக்குவரத்து 1910 இல் தொடங்கியது. கியாகோமோ டி ஏஞ்சலிசு ஆசியாவிலேயே முதல் இயங்கும் வானூர்தியை உருவாக்கி அதை சென்னையின் தீவுத்திடலில் சோதனை செய்தார். 1915 ஆம் ஆண்டில், டாடா வானூர்தி அஞ்சல் சேவை கராச்சி மற்றும் சென்னை இடையே தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் பொது வானூர்தி சேவையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 15 அக்டோபர் 1932 இல், ஜெ. ர. தா. டாட்டா கராச்சியில் இருந்து பம்பாயிற்கு அஞ்சல்களை ஏற்றிச் சென்ற புசு மோத் வானூர்தியை செலுத்தினார். இதே வானூர்தி பின்னர் விமானி நெவில் வின்ட்சென்ட் கட்டுப்பாட்டில் சென்னைக்கு தொடர்ந்தது. தமிழ்நாட்டில் மூன்று சர்வதேச, ஒரு வரையறுக்கப்பட்ட சர்வதேச மற்றும் ஆறு உள்நாட்டு அல்லது தனியார் விமான நிலையங்கள் உள்ளன.
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் மாநிலத்தின் முக்கிய நுழைவாயில் மற்றும் இந்தியாவின் முக்கிய சர்வதேச வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். மாநிலத்தில் உள்ள பிற சர்வதேச வானூர்தி நிலையங்களில் கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியவை அடங்கும். அதே சமயம் மதுரை வரையறுக்கப்பட்ட வானூர்தி நிலையமாக உள்ளது. தூத்துக்குடி மற்றும் சேலம் போன்ற சில வானூர்தி நிலையங்களுக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன, அதே நேரத்தில் இந்திய அரசின் உடான் திட்டத்தின் மூலம் மேலும் சில உள்நாட்டு வானூர்தி நிலையங்களுக்கு விமானங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதி இந்திய வான்படையின் தெற்கு வான்படைப் பிரிவின் கீழ் வருகிறது. மாநிலத்தில் சூலூர், தாம்பரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் வான்படை மூன்று வான்படைத் தளங்களை இயக்குகிறது. இந்தியக் கடற்படை அரக்கோணம், உச்சிப்புளி மற்றும் சென்னையில் வானூர்தித் தளங்களை இயக்குகிறது. 2019 இல், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் அருகே புதிய ஏவூர்தி ஏவுதளத்தை அமைப்பதாக அறிவித்தது.
நீர்வழி
இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்கள் உள்ளன. நாகப்பட்டினத்தில் ஒரு இடைநிலை கடல் துறைமுகம் உள்ளது. இது தவிர தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையால் நிர்வகிக்கப்படும் பதினாறு சிறு துறைமுகங்கள் உள்ளன. தமிழ்நாடு இந்திய கடற்படையின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளை பிரிவுகளின் கீழ் வருகின்றது. இந்திய கடற்படை சென்னையில் ஒரு பெரிய கடற்படை தளத்தையும் தூத்துக்குடியில் ஒரு தளவாட ஆதரவு தளத்தையும் கொண்டுள்ளது.
கல்வி
2017 ஆம் ஆண்டின் தேசிய புள்ளியியல் குழுவின் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் கல்வியறிவு விகிதம் 82.9% என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 77.7% ஐ விட அதிகமாகும். பள்ளிச் சேர்க்கையை அதிகரிக்க காமராசரால் பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச மதிய உணவுத் திட்டத்தின் காரணமாக 1960களில் இருந்து மாநிலம் உயர்ந்த எழுத்தறிவு வளர்ச்சியைக் கண்டது. குழந்தைகளின் ஊட்டச் சத்து குறைபாட்டை போக்குவதற்காக 1982 இல் இத்திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, தேசிய சராசரியான 79.6% ஐ விட மிக அதிகமாக, 95.6% குழந்தைகள் உயர்நிலைக் கல்வி பயில்கின்றனர். ஆனால், ஆரம்பப் பள்ளிக் கல்வி பற்றிய பகுப்பாய்வில், சில மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்ததைக் காட்டியது.
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 37,211 அரசுப் பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 12,631 தனியார் பள்ளிகளில் முறையே 54.7 இலட்சம், 28.4 இலட்சம் மற்றும் 56.9 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். 3,12,683 ஆசிரியர்களுடன் சராசரி ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:26.6 ஆக உள்ளது. அரசுப்பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு மாநில வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் தனியார் பள்ளிகள் தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான குழு ஆகிய பாடத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றை பின்தொடர்கின்றன. பள்ளிக் கல்வியானது மூன்று வயதிலிருந்து இரண்டு ஆண்டு மழலையர் பள்ளியுடன் தொடங்குகிறது, பின்னர் இந்திய 10+2 திட்டத்தின் படி, பத்து ஆண்டுகள் துவக்க மற்றும் இடைநிலைப்பள்ளி மற்றும் இரண்டு ஆண்டுகள் உயர்நிலைக் கல்வி ஆகியவற்றைப் உள்ளடக்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 24 பொதுப் பல்கலைக்கழகங்கள், நான்கு தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 28 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட 56 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 1857 இல் நிறுவப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல் நவீன பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். மாநிலத்தில் 34 அரசு கல்லூரிகள் உட்பட 510 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை இந்தியாவின் முதன்மையான தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்றாகும். 1794 இல் துவக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி இந்தியாவின் பழமையான பொறியியல் கல்லூரியாகும். இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி மையத்தின் தலைமையகம் சென்னையில் உள்ளது. மாநிலத்தில் 302 அரசு கல்லூரிகள் உட்பட 935 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மேலும் 92 அரசு நடத்தும் கல்லூரிகள் உட்பட 496 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உள்ளன. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (1837), மாநிலக் கல்லூரி (1840) மற்றும் பச்சையப்பா கல்லூரி (1842) ஆகியவை நாட்டின் மிகப் பழமையான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம்பெறுகின்றன.
மாநிலத்தில் 870 மருத்துவ, செவிலியர் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் நான்கு பாரம்பரிய மருத்துவ கல்லூரிகள் அடங்கும். 1835 இல் நிறுவப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி, இந்தியாவின் பழமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். 2023 ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவரிசைப்படி, 26 பல்கலைக்கழகங்கள், 15 பொறியியல், 35 கலை அறிவியல், 8 மேலாண்மை மற்றும் 8 மருத்துவக் கல்லூரிகள் நாட்டின் முதன்மையான 100 கல்லூரிகளில் இடம் பெற்றுள்ளன. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, கல்வி நிறுவனங்களில் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 69% இடஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது, இது அனைத்து இந்திய மாநிலங்களைக் காட்டிலும் அதிகமானதாகும். மாநிலத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்ட பத்து கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம், கரும்பு வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம், வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம் மற்றும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் விவசாய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இது தவிர மாநிலம் முழுவதும் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 4622 பொது நூலகங்கள் உள்ளன. 1896 இல் நிறுவப்பட்ட கன்னிமாரா பொது நூலகம் மிகப் பழமையான ஒன்றாகும். மேலும் இது இந்தியாவில் வெளியிடப்பட்ட அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களின் நகலைப் பெறும் நான்கு தேசிய வைப்பு மையங்களில் ஒன்றாகும். சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகும். சென்னை புத்தகக் கண்காட்சி என்பது தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் புத்தகக் கண்காட்சியாகும், இது பொதுவாக திசம்பர்-சனவரி மாதங்களில் நடைபெறும்.
சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு
பலதரப்பட்ட பண்பாடு, புவியியல் மற்றும் கலை ஆகியவற்றை கொண்டுள்ள தமிழ்நாடு, பல சுற்றுலாத் தளங்களைக் கொண்டுள்ளது. 1971 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை நிறுவியது. இது மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பொறுப்பாகும். இந்த அமைப்பானது அரசின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தருமம் மாநிலமாக தமிழகம் உள்ளது. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, 14 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தமிழ்நாடு நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. 13 கி.மீ. (8.1 மைல்) நீளமுள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகும். மாநிலம் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டிருப்பதால், இது பல மலை வாழிடங்களின் தாயகமாக உள்ளது. அவற்றில் நீலகிரி மலையில் அமைந்துள்ள உதகமண்டலம் மற்றும் பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் ஆகியவை மிக பிரபலமானவை. பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாறையில் வெட்டப்பட்ட குகைக் கோயில்கள் மற்றும் 34,000க்கும் மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் சில கோயில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை.. பல ஆறுகள் மற்றும் ஓடைகள், குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் உட்பட பல நீர்வீழ்ச்சிகள் மாநிலத்தில் உள்ளன. மாநிலத்தில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நான்கு உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன: மகாபலிபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழு, சோழர் பெரிய கோயில்கள், நீலகிரி மலை தொடருந்து, மற்றும் நீலகிரி உயிர்க்கோள காப்பகம்.
விளையாட்டு
சடுகுடு என்று அழைக்கப்படும் கபாடி, தமிழ்நாட்டில் மாநில விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.பல்லாங்குழி, உறியடி, கில்லி, தாயம் போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் பிராந்தியம் முழுவதும் விளையாடப்படுகின்றன. ஏறுதழுவுதல் மற்றும் ரேக்ளா ஆகியவை காளைகளை உள்ளடக்கிய பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளாகும். பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் சிலம்பம், கட்டா குஸ்தி, மற்றும் அடிமுறை ஆகியவை அடங்கும். சதுரங்கம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் உருவான ஒரு பிரபலமான பலகை விளையாட்டாகும். சென்னையானது "இந்தியாவின் சதுரங்க தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த நகரம் முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் உட்பட பல சதுரங்க கிராண்ட்மாஸ்டர்களின் தாயகமாக உள்ளது. மேலும் 2013 இல் உலக சதுரங்க பட்டப்போட்டிகள் மற்றும் 2022 இல் 44வது சதுரங்க ஒலிம்பியாட் ஆகியவற்றை தமிழகம் நடத்தியது.
மாநிலத்தில் துடுப்பாட்டம் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். 1916 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னையில் உள்ள மு. அ. சிதம்பரம் அரங்கம் இந்தியாவின் பழமையான துடுப்பாட்ட மைதானங்களில் ஒன்றாகும். 1987 இல் நிறுவப்பட்ட எம்ஆர்எஃப் அறக்கட்டளை சென்னையில் உள்ள ஒரு பந்துவீச்சு பயிற்சி மையமாகும். சென்னை மிகவும் வெற்றிகரமான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் தாயகமாகும். கால்பந்து பள்ளிகள் மற்றும் நகரங்களில் பிரபலமாக உள்ளது.
சென்னை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் பல பல்நோக்கு விளையாட்டு வளாகங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகளுக்காக பயன்டுகின்றன. மேலும் கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, டென்னிசு மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகள் பிரபலமாக விளையாடப்படுகின்றன. 1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடந்தது நடத்தியது. தமிழ்நாடு வளைதடிப் பந்தாட்ட சங்கம் மாநிலத்தில் வளைதடிப் பந்தாட்ட போட்டிகளை நிர்வகிகின்றது. சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில் 2005 இல் வகையாளர் கோப்பை மற்றும் 2007 இல் ஆசியக் கோப்பை உட்பட பல சர்வதேச ஹாக்கி போட்டிகள் அரங்கேறியுள்ளன. சென்னை படகுக் குழுமம் (1846 இல் நிறுவப்பட்டது) சென்னையில் படகோட்ட விளையாட்டுகளை ஊக்குவிக்கின்றது.1990 இல் தொடங்கப்பட்ட சென்னை தானுந்து போட்டி மையம் இந்தியாவில் முதல் நிரந்தர தானுந்து பந்தய சுற்று மையமாகும். கோயம்புத்தூர் பெரும்பாலும் "இந்தியாவின் தானுந்து பந்தய மையம்" என்று குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் தானுந்துப் பந்தயங்கள் நடைபெறுகின்றன. மாநிலத்தில் இரண்டு குதிரைப் பந்தய வளாகங்கள் மற்றும் மூன்று 18-துளை குழிப்பந்தாட்ட மைதானங்கள் உள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
தமிழக வரலாறு
தமிழ்நாடு பற்றிய சுருக்கமான தகவல்கள்
தமிழர் வரலாற்றுக் காலக்கோடு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தமிழ்நாடு அரசு - அதிகாரப்பூர்வ இணையத்தளம்
தமிழ்நாடு சுற்றுலாத்துறை - அரசு சுற்றுலாத்துறை இணையத்தளம்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும் |
2254 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D | கேரளம் | கேரளம் () இந்தியாவின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். 1956ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் முறையைப் பின்பற்றி 1 நவம்பர் 1956 அன்று இது உருவாக்கப்பட்டது. கொச்சி, மலபார், தென் கன்னட மாவட்டம் மற்றும் திருவாங்கூரின் அப்போதைய பகுதிகளின் மலையாளம் பேசிய பகுதிகளை இணைத்து இது உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு 38,863 சதுர கிலோமீட்டர் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் 21வது மிகப் பெரிய இந்திய மாநிலமாக கேரளம் உள்ளது. இதற்கு வடக்கு மற்றும் வடகிழக்கே கருநாடகமும், கிழக்கு மற்றும் தெற்கே தமிழ்நாடும், மேற்கே இலட்சத்தீவுக் கடலும் எல்லைகளாக உள்ளன. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தில் 3.3 கோடி மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகையின் அடிப்படையில் 13வது மிகப் பெரிய இந்திய மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது. இது 14 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் திருவனந்தபுரம் ஆகும். கேரளத்தில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாக மலையாளம் உள்ளது. இம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியும் கூட இது தான்.
கேரளத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த முதல் முக்கியமான இராச்சியம் சேரர் ஆவர். தூரத் தெற்கிலிருந்த ஆய் நாடு மற்றும் வடக்கே இருந்த புலி நாடு ஆகியவை பொ. ஊ.யின் தொடக்க ஆண்டுகளில் பிற இராச்சியங்களைக் கொண்டிருந்தன. பொ. ஊ. மு. 3,000ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியானது ஒரு முக்கியமான மசாலாப் பொருள் ஏற்றுமதியாளராக இருந்துள்ளது. பொ. ஊ. 100 வாக்கில் பிளினி மற்றும் பெரிப்ளசு கையேட்டு நூல்களில் வணிகத்தில் இப்பகுதியின் முக்கியத்துவமானது குறிப்பிடப்பட்டுள்ளது. 15ஆம் நூற்றாண்டில் மசாலாப் பொருள் வணிகமானது போத்துக்கீசர்களைக் கேரளத்திற்கு ஈர்த்தது. இந்தியாவின் ஐரோப்பியக் காலனிமயமாக்கத்திற்கு வழி ஏற்படுத்தியது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய விடுதலை இயக்கத்தின் காலத்தில் இரு முக்கியமான மன்னர் அரசுகள் கேரளத்தில் இருந்தன. அவை திருவாங்கூர் மற்றும் கொச்சி ஆகியவையாகும். 1949இல் அவை ஒன்றிணைக்கப்பட்டு திருவாங்கூர் கொச்சி அரசை அமைத்தன. கேரளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மலபார் பகுதியானது பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின் சென்னை மாநிலத்தின் பகுதியாக இது ஆனது. 1956ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்திற்குப் பிறகு சென்னை மாநிலத்தின் மலபார் மாவட்டம் (நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வட்டம், இலட்சத்தீவுகள், ஆனைமலை இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்கா, அனைக்கட்டிக்குக் கிழக்கில் உள்ள அட்டப்பாடி காடு தவிர்த்து), தென் கன்னட மாவட்டத்தில் உள்ள காசர்கோடு வட்டம் (தற்போது காசர்கோடு மாவட்டம்), மற்றும் அப்போதிருந்த அரசான திரு-கொச்சி (கன்னியாகுமரி மாவட்டத்தின் நான்கு தெற்கு வட்டங்கள் மற்றும் செங்கோட்டை வட்டங்களைத் தவிர்த்து) ஆகியவை இணைக்கப்பட்டு நவீன கால கேரளம் மாநிலமானது உருவாக்கப்பட்டது.
3.44%துடன் இந்தியாவிலேயே மிகக் குறைவான மக்கள் தொகை வளர்ச்சி வீதம்; 2018இல் 0.784 (2015இல் 0.712) என்ற மிக அதிகமான மனித மேம்பாட்டுச் சுட்டெண்; 2018இல் இந்தியாவின் தேசியப் புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட கல்வி அறிவு ஆய்வில் 96.2%துடன் மிக அதிக எழுத்தறிவு வீதம்; 77.3 ஆண்டுகளுடன் மிக அதிக சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு; 1,000 ஆண்களுக்கு 1,084 பெண்கள் என்ற மிக அதிக பாலின விகிதம் ஆகியவற்றைக் கேரளம் கொண்டுள்ளது. நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் தகவல் முகப்பு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் இந்தியப் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்களின் கையேடு ஆகியவற்றின் படி இந்தியாவிலேயே வறுமை குறைந்த மாநிலம் கேரளமாகும். 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 47.7% நகர்ப்புற மக்கள் தொகையுடன் நாட்டிலேயே இரண்டாவது மிக அதிக நகரமயமாக்கப்பட்ட முக்கிய மாநிலமாகக் கேரளம் உள்ளது. 2019இல் பதிப்பிக்கப்பட்டது நிதி ஆயோக்கின் வருடாந்திர அறிக்கையின் படி வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை எட் டிய மாநிலங்களில் நாட்டிலேயே கேரளம் முதலிடம் பிடித்தது. இந்தியாவிலேயே மிக அதிக ஊடக வெளிப்பாடு உள்ள மாநிலமாகக் கேரளம் உள்ளது. ஒன்பது மொழிகளில் இங்கு பத்திரிக்கைகள் முதன்மையாக மலையாளத்திலும், சில நேரத்தில் ஆங்கிலத்திலும் பதிப்பிக்கப்படுகின்றன. இம்மாநிலத்தின் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இதைத் தொடர்ந்து இசுலாம் மற்றும் கிறித்தவம் ஆகியவை மிகப் பெரிய சமயங்களாக உள்ளன.
2019-20இல் மொத்த மாநில உள் உற்பத்தியில் ரூபாய்களுடன் இந்தியாவிலேயே 8வது மிகப் பெரியதாக கேரளத்தின் பொருளாதாரம் திகழ்ந்தது. நிகர மாநில உள் உற்பத்தி தனி நபர் வருமானமானது ஆக இருந்தது. 2019-20இல் மொத்த பொருட்கள் மற்றும் சேவை உற்பத்தியின் மதிப்புக்கு மூன்றாம் படி நிலைத் துறையானது சுமார் 65%ஐப் பங்களித்தது. அதே நேரத்தில் முதன்மையான துறையான மூலப் பொருட்கள் சார்ந்த துறையானது 8%ஐ மட்டுமே பங்களித்தது. 1970கள் மற்றும் 1980களின் தொடக்கத்தில் வளைகுடா பெருக்க வள காலத்தின் போது வளைகுடா நாடுகளுக்கு இம்மாநிலத்தின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பணியாளர்கள் இடம் பெயர்ந்தனர். அயல்நாட்டில் வாழும் ஒரு பெரும் மலையாளிகளின் சமூகத்திடமிருந்து அனுப்பப்படும் பணங்களைச் சார்ந்து இதன் பொருளாதாரமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளது. மிளகு மற்றும் இயற்கை மீள்மத்தின் உற்பத்தியானது மொத்த தேசிய உற்பத்திக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பங்களிக்கிறது. வேளாண் துறையில் தென்னை, தேநீர், காப்பி, முந்திரி மற்றும் மசாலாப் பொருட்கள் முக்கியமானவையாக உள்ளன. இம்மாநிலமானது மேற்கே அரபிக் கடல் மற்றும் கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. மாநிலத்தின் கடற்கரையானது 595 கிலோ மீட்டருக்கு நீண்டுள்ளது. மாநிலத்தில் சுமார் 11 இலட்சம் மக்கள் மீன்பிடித் துறையைச் சார்ந்துள்ளனர். இது மாநிலத்தின் வருவாய்க்கு 3% பங்கை அளிக்கிறது. தேசியப் புவியியல் பயணி எனும் பத்திரிகையின் படி உலகின் 10 சொர்க்கங்களில் ஒன்று என்று கேரளம் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பயணிகள் வருகை புரியும் மிக முக்கியமான இடங்களில் கேரளமும் ஒன்றாகும். தென்னை மரங்களையுடைய மணல் கடற்கரைகள், உப்பங்கழிகள், மலை வாழிடங்கள், ஆயுர்வேத சுற்றுலா மற்றும் வெப்ப வலய பச்சைத் தாவரங்கள் ஆகியவை இதன் முக்கியமான ஈர்ப்புகளாக உள்ளன.
பெயர்க் காரணம்
கேரளம் என்ற சொல்லானது மௌரியப் பேரரசர் அசோகர் (பொ.ஊ.மு. 274–237) விட்டுச் சென்றிருந்த, நலத் திட்டம் குறித்த கல்வெட்டுகளில் ஒன்றான பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டுப் பாறைக் கல்வெட்டில் முதன் முதலில் கேரளபுத்தோ (கேரளபுத்திரர், 'சேரர்[களின்] மகன்') என்று பதிவிடப்பட்டுள்ளது. அந்நேரத்தில் செந்தமிழில் இப்பகுதியில் இருந்த மூன்று அரசுகளில் ஒன்று சேரளம் என்று அழைக்கப்பட்டது. சேர மற்றும் கேர ஆகியவை ஒரே சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் ஆகும். கேரள மன்னர்களின் மிகப் பழமையான அறியப்பட்ட அரசமரபைக் குறிக்க சேரள் என்ற சொல் பயன்படுகிறது. 'ஏரி'க்கான பழமையான தமிழ் மொழிச் சொல்லிலிருந்து இது தருவிக்கப்பட்டுள்ளது. கேரளம் என்ற சொல்லானது செந்தமிழ் சொல்லான செரிவே-அளம் 'மலைச்சரிவு' அல்லது சேர அளம் 'சேரர்களின் நிலம்' என்பதிலிருந்து உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஒரு நாட்டுப்புறச் சொற்பிறப்பியலானது கேரளத்தை மலையாளச் சொல்லான கேர 'தென்னை மரம்' மற்றும் அளம் 'நிலம்' ஆகியவற்றில் இருந்து தருவிக்கிறது. இவ்வாறாக 'தென்னை மரங்களின் நிலம்' என்று பொருள் படுகிறது. ஏராளமான தென்னை மரங்கள் இருப்பதன் காரணமாக உள்ளூர் மக்களால் இம்மாநிலத்திற்கு வழங்கப்படும் செல்லப் பெயராக இது உள்ளது.
கேரளத்தை சேரபாதம் என்று குறிப்பிட்ட தொடக்க கால சமசுகிருத நூலானது பிந்தைய வேத கால நூலான ஆரண்யகம் ஆகும். இரு இந்து இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் கூட கேரளம் குறிப்பிடப்பட்டுள்ளது. தச்சுடைய கைமாள்களின் இறைப்பணி சார்ந்த அலுவலகத்தை கந்த புராணமானது குறிப்பிடுகிறது. இவர்கள் மாணிக்கம் கேரளர் என்று குறிப்பிடப்படுகின்றனர். கூடல்மாணிக்கம் கோயிலின் தெய்வத்துடன் இது ஒத்த பொருளுடையதாக உள்ளது. கிரேக்க-உரோமை வணிக வரைபடமான செங்கடல் செலவு கேரளத்தை சேலோபோத்ரா என்று குறிப்பிடுகிறது.
மலபார்
கேரளமானது மற்றொரு பெயரில் அயல் நாட்டு வாணிக வட்டங்களில் மலபார் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின் தென் மேற்குக் கடற்கரையில் கேரளத்துடன் நிலப்பரப்பில் தொடர்ச்சியாக அமைந்துள்ள துளு நாடு மற்றும் கன்னியாகுமரியைக் குறிப்பிடவும் மலபார் என்ற சொல்லானது பயன்படுத்தப்பட்டது. நவீன மாநிலமான கேரளத்தையும் சேர்த்துக் குறிப்பிட இப்பெயர் பயன்படுத்தப்பட்டது. மலபாரின் மக்கள் மலபார்கள் என்று அறியப்பட்டனர். பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் வருகை வரை மலபார் என்ற சொல்லானது கேரளத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பெயராக இருந்தது. பொ. ஊ. 6ஆம் நூற்றாண்டில் கிரேக்க வணிகரான காசுமசு இநதிகோப்லியேஸ்தசுவின் காலம் முதல் அரேபிய மாலுமிகள் கேரளத்தை மலே என்று அழைத்துக் கொண்டிருந்தனர். எனினும், இப்பெயரின் முதல் காரணியானது காசுமசு இநதிகோப்லியேஸ்தசுவால் எழுதப்பட்ட இட அமைப்பியல் என்ற நூலில் ஏற்கனவே ஆதாரமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இது ஒரு மிளகுச் சந்தையான மலே என்று அழைக்கப்பட்ட இடத்தைக் குறிப்பிடுகிறது. இதுவே தெளிவாக மலபார் ('மலேகளின் நாடு') என்ற சொல்லுக்குத் தன் பெயரைக் கொடுத்தது. திராவிடச் சொல்லான மலை என்ற சொல்லிலிருந்து மலே என்ற பெயர் வந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இப்பகுதியை மலபார் என்று அழைத்த முதல் அறியப்பட்ட எழுத்தாளர் அல்-பிருனி (பொ. ஊ. 973–1048) ஆவார். இபின் கோர்தாத்பே மற்றும் அல்-பலதூரி போன்ற எழுத்தாளர்கள் தங்களது நூல்களில் மலபார் துறைமுகங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அரேபிய எழுத்தாளர்கள் இப்பகுதியை மலிபார், மனிபார், முலிபார் மற்றும் முனிபார் என்று அழைத்துள்ளனர். மலபார் என்ற சொல்லானது மலநாடு என்ற சொல்லை நினைவூட்டுகிறது. இதன் பொருள் மலைகளின் நிலம் என்பதாகும். மலபார் மாவட்ட ஆட்சியராக இருந்த வில்லியம் லோகன், மலபார் என்ற சொல்லானது திராவிடச் சொல்லான மலை மற்றும் பாரசீக/அரபு மொழிச் சொல்லான பார் (நாடு/கண்டம்) ஆகியவற்றின் இணைவில் இருந்து தோன்றியது என்று குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு
பாரம்பரிய ஆதாரங்கள்
சங்க இலக்கிய நூலான புறநானூறின் படி கன்னியாகுமரி மற்றும் இமயமலைக்கு இடைப்பட்ட நிலங்களைச் சேர மன்னன் செங்குட்டுவன் வென்றான். சமமான எதிரிகள் கிடைக்காததால் கடலுக்குள் தன்னுடைய ஈட்டியை எறிந்து அதைத் தாக்கினான். 17ஆம் நூற்றாண்டு இந்துத் தொன்மவியல் நூலான கேரளோல்பதியின் படி கடலில் இருந்து கேரளாவின் நிலங்களானவை பரசுராமரால் மீட்கப்பட்டன. விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக, கோடாரியை ஆயுதமாகக் கொண்ட போர் வீரன்-முனிவராகப் பரசுராமர் குறிப்பிடப்படுகிறார். எனவே, இந்துத் தொன்மவியலில் கேரளம் பரசுராம சேத்திரம் ('பரசுராமரின் நிலம்') என்றும் கூட அழைக்கப்படுகிறது. பரசுராமர் தன்னுடைய ஆயுதமான கோடரியைக் கடலுக்குள் தூக்கி எறிந்தார். கோடரி அடைந்த இடம் வரை நீர் உள் வாங்கியது. பழங்கதை மரபின் படி நிலத்தின் இந்தப் புதிய பகுதியானது கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை விரிவடைந்திருந்தது. கடலில் இருந்து எழுந்த நிலமானது உப்பால் நிரப்பப்பட்டிருந்தது; வாழ்வதற்குத் தகாத இடமாக இருந்தது. எனவே, பரசுராமர் பாம்புகளின் மன்னனாகிய வாசுகியை அழைத்தார். தன்னுடைய புனிதமான விஷத்தை அது துப்பியது. மணலானது செழிப்பான பச்சைப் பசேல் நிலமாக மாறியது. பதில் மரியாதைக்காக வாசுகி மற்றும் அனைத்துப் பாம்புகளும் இந்நிலத்தின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டனர். பி. டி. சீனிவாச அய்யங்காரின் கோட்பாட்டின் படி, பரசுராமர் பழங்கதையால் சேரன் செங்குட்டுவன் அகத்தூண்டுதல் பெற்று இருக்கலாம். இக்கதையானது தொடக்க கால ஆரியக் குடியிருப்பாளர்களால் கொண்டு வரப்பட்டதாகும்.
கேரளத்துடன் தொடர்புடைய மற்றுமொரு மிக ஆரம்ப புராணக் கதாபாத்திரம் மகாபலி சக்கரவர்த்தியாவான். ஓர் அசுரன் மற்றும் முன் மாதிரியான எளிமையான மன்னன் இவனாவான். இவன் கேரளத்திலிருந்து உலகை ஆண்டான். தேவர்களுக்கு எதிராகப் போரை வென்று, அவர்களை வெளியேறி வாழும் நிலைக்குத் தள்ளினான். விஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டனர். அவர் தன்னுடைய ஐந்தாவது அவதாரமான வாமனராக வந்தார். தேவர்களின் சினத்தைத் தணிப்பதற்காக மகாபலியை பாதாளத்தில் தள்ளினார். ஓணம் பண்டிகையின் போது ஆண்டுக்கு ஒரு முறை மகாபலி கேரளத்திற்குத் திரும்பி வருகிறார் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. 18 புராணங்களில் மிகப் பழமையானவற்றில் ஒன்றான மச்ச புராணம் மச்சாவதாரத்தின் கதை அமைந்த இடமாக மலாயா மலைகளைப் பயன்படுத்துகின்றது. மச்ச அவதாரம் விஷ்ணுவின் முதல் அவதாரமாகும். மனு முதல் மனிதனும், இப்பகுதியின் மன்னனும் ஆவான்.
பூவார் பகுதியானது அதன் செல்வத்திற்காக அறியப்பட்ட விவிலிய ஓபிர் பகுதியுடன் அடிக்கடி அடையாளப்படுத்தப்படுகிறது.
சேரமான் பெருமாள்கள்
சேரமான் பெருமாள்கள் தொன்மமானது கேரளத்தின் சேரமான் பெருமாள்களுடன் (இலக்கிய ரீதியான பொருள் சேர மன்னர்கள்) தொடர்புடைய நடுக் காலப் பாரம்பரியம் ஆகும். வரலாற்றின் ஓர் ஆதாரமாக இத்தொன்மத்தின் முறைமையானது ஒரு நேரத்தில் தென்னிந்திய வரலாற்றாளர்கள் மத்தியில் அதிகப் படியான விவாதத்தை ஏற்படுத்தியது. கேரளத்தின் தலைவர்களைக் கொண்ட அரசுகளால் தங்களது ஆட்சியை முறைமை உடையதக்க இத்தொன்மமானது பயன்படுத்தப்பட்டது. நடுக் காலக் கேரளத்தின் முதன்மையான தலைவர்களின் குடும்பங்களில் பெரும்பாலானவை தங்களது பூர்வீகத்தைப் பெருமாள் கொடுத்த தொன்மவியல் பங்களிப்பிற்குத் தடயமாகக் கொண்டிருந்தன. தொன்மவியலின் படி, சேரமான் பெருமாளின் மேலாட்சியாளரான ராயர் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குக் கிழக்கே இருந்த ஒரு நாட்டில் வாழ்ந்தார். கடைசிப் பெருமாளின் ஆட்சியின் போது கேரளத்தின் மீது படையெடுத்தார். படையெடுத்து வந்த படைகளைத் திருப்பி அனுப்பப் பெருமாள் தன்னுடைய தலைவர்களின் படைத்துறைசாராப் படையினரை அழைத்தார். உதயவர்மன் கோலத்திரி, மனிச்சான் மற்றும் ஏறநாட்டின் விக்கிரன் போன்றோர் இதில் அடங்குவர். ஏற நாட்டின் தலைவனான ஏறடியர்கள் சேரமான் பெருமாளிடம் ராயரால் நிறுவப்பட்ட கோட்டையைக் கைப்பற்றுவோம் என்று உறுதி அளித்தனர். மூன்று நாட்களுக்கு இந்த யுத்தம் நீடித்தது. ராயர் இறுதியாகத் தன்னுடைய கோட்டையைக் காலி செய்தார். பெருமாளின் துருப்புகளால் கோட்டை கைப்பற்றப்பட்டது. பிறகு கடைசி சேரமான் பெருமாள் கேரளம் அல்லது சேர இராச்சியத்தைத் தன்னுடைய தலைவர்கள் மத்தியில் பிரித்தார். மர்மமாக மறைந்தார். இவரைப் பற்றி எந்த ஒரு தகவலையும் கேரள மக்கள் அதற்குப் பிறகு கேட்கவில்லை. கோழிக்கோட்டின் சமோரின்கள் என்று பிற்காலத்தில் அறியப்பட்ட நெடியிருப்பின் ஏறடியர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது எதுவும் வழங்கப்படவில்லை. இவர்களுக்குச் சேரமான் பெருமாளின் வாளானது ("இறக்க, மற்றும் கொல்ல, மற்றும் கைப்பற்றுவதற்கான அனுமதியுடன்") கொடுக்கப்பட்டது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
மேற்குக் கடற்கரைத் தாழ் நிலங்கள் மற்றும் நடு நிலத்தின் சமவெளிகள் உள்ளிட்ட கேரளத்தின் ஒரு குறிப்பிடத் தகுந்த பகுதியானது பண்டைய காலங்களில் கடலின் அடியில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சங்கனாச்சேரிக்கு அருகிலுள்ள பகுதியில் கடல்வாழ் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக இக்கோட்பாட்டுக்கு ஆதரவாக உள்ளன. இடுக்கி மாவட்டத்தின் மறையூர் பகுதியில் புதிய கற்காலச் சகாப்தத்தைச் சேர்ந்த கல்திட்டைகள் உள்ளிட்ட வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு உயர் நிலத்தில் இடுக்கி மாவட்டமானது அமைந்துள்ளது. இப்பகுதி உள்ளூர் அளவில் "முனியரா" என்று அறியப்பட்டது. முனி (முனிவர்) மற்றும் அரா (பெருங் கற்காலச் சமாதி) ஆகிய சொற்களிலிருந்து இது தருவிக்கப்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள எடக்கல் குகைகளில் உள்ள பாறை செதுக்குருவங்களானவை பொ. ஊ. மு. 6000ஆம் ஆண்டு காலத்தை ஒட்டிய புதிய கற்காலத்திற்கு காலமிடப்படுகின்றன. தொல்லியல் ஆய்வுகளானவை கேரளத்தில் இடைக் கற்காலம், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்காலத் தளங்களை அடையாளப்படுத்தியுள்ளன. இந்த ஆய்வுகள் பண்டைக்கால கேரள சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் பண்பாட்டை பழைய கற்காலத்தில் இருந்து தொடங்கி இடைக் கற்காலம், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்காலம் வரை சுட்டிக் காட்டுகின்றன. இந்தப் பண்பாட்டு உருவாக்கத்திற்கு அயல் நாட்டுப் பண்பாட்டு தொடர்புகள் உதவிகரமாக இருந்துள்ளன; வெண்கலக் காலத்தின் பிற்பகுதி மற்றும் இரும்புக் காலத்தின் தொடக்கப் பகுதியின் போது சிந்துவெளி நாகரிகத்துடன் ஒரு சாத்தியமான வகையிலான உறவு முறையானது இருந்தது என வரலாற்றாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பண்டைக் காலம்
பொ. ஊ. மு. 3,000இலிருந்து கேரளமானது ஒரு முதன்மையான மசாலாப் பொருள் ஏற்றுமதியாளராக இருந்துள்ளது. சுமேரியப் பதிவுகளின் படி மற்றும் இன்றும் கூட கேரளமானது "மசாலாப் பொருட்களின் தோட்டம்" அல்லது "இந்தியாவின் மசாலாத் தோட்டம்" என்று குறிப்பிடப்படுகிறது. கேரளத்தின் மசாலாப் பொருட்களானவை பண்டைக்கால அரேபியர்கள், பாபிலோனியர், அசிரியர்கள் மற்றும் எகிப்தியர்களை மலபார் கடற்கரைக்கு பொ. ஊ. மு. 3ஆம் மற்றும் 2ஆம் ஆயிரமாண்டுகளில் ஈர்த்துள்ளது. இக்காலத்தின் போது போனீசியா கேரளத்துடன் வணிகத்தை நிறுவியது. மசாலாப் பொருட்களை வணிகம் செய்வதற்காக மலபார் கடற்கரைக்குள் நுழைந்த முதல் நபர்கள் அரேபியர்கள் மற்றும் போனீசியர்கள் ஆவர். கேரளம் மற்றும் பிற கிழக்கு நாடுகளுக்கு முதல் நீண்ட பயணத்தை யெமன், ஓமான், மற்றும் பாரசீக வளைகுடாவின் கடற்கரையில் இருந்த அரேபியர்களே மேற்கொண்டிருக்க வேண்டும். மத்திய கிழக்கிற்கு கேரளத்திலிருந்து இலவங்கப்பட்டைகளை இவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும். பொ. ஊ. மு. 5ஆம் நூற்றாண்டு கிரேக்க வரலாற்றாளரான எரோடோட்டசு அவருடைய காலத்தில் எகிப்தியர்கள் மற்றும் போனீசியர்களால் இலவங்கப்பட்டை வணிகத் துறையானது ஏக போக உரிமையுடன் நடத்தப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.
சேர மன்னன் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் பெரும்பாலான நவீன கேரளத்தைத் தன்னுடைய தலைநகரான குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தான் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முசிறித் துறைமுகத்தையும் இவன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். ஆனால், அதன் தென்பகுதி முனையானது பாண்டிய இராச்சியத்தில் இருந்தது. இது ஒரு வணிகத் துறைமுகத்தைக் கொண்டிருந்தது. சில நேரங்களில் பண்டைக்கால மேற்குலக ஆதாரங்களில் கொல்லத்தில் உள்ள நீலகண்ட நகரம் (அல்லது நீசிந்தி) இது அடையாளப்படுத்தப்படுகிறது. திந்திசு சேரர் மற்றும் உரோமைப் பேரரசுக்கு இடையில் ஒரு முதன்மையான வணிக மையமாக இருந்தது. முக்கியத்துவத்தில் முசிறித் துறைமுகத்துக்கு அடுத்த இடத்தில் இருந்தது. குறைவாக அறியப்பட்ட ஆய்சு மற்றும் முசிக இராச்சியங்கள் சேரப் பகுதிகளுக்கு முறையே தெற்கு மற்றும் வடக்கே அமைந்திருந்தன. பொ. ஊ. 1ஆம் நூற்றாண்டில் மூத்த பிளினி திந்திசு துறைமுகமானது கெப்ரோபோதோசின் வடமேற்கு எல்லையில் அமைந்திருந்தது என்று குறிப்பிடுகிறார். திந்திசுவில் துறைமுகத்துக்கு வடக்கே அமைந்திருந்த வடக்கு மலபார் பகுதியானது சங்க காலத்தின் போது எழிமலை இராச்சியத்தால் ஆளப்பட்டது. கிரேக்க-உரோமை நூல்களில் முசிறித் துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த திந்திசு துறைமுகமானது கோழிக்கோட்டைச் சுற்றிய பகுதியில் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் துல்லியமான அமைவிடம் விவாதத்திற்குரியதாக உள்ளது. பொன்னானி, தானூர், பேப்பூர்-சாலியம்-கடலுண்டி-வள்ளிக்குன்னு, மற்றும் கொயிலாண்டி ஆகியவை இதன் அமைவிடமாகப் பரிந்துரைக்கப்படும் இடங்களாகும்.
மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த வணிகர்கள் கேரளத்தில் கடற்கரைக் காவலிடங்கள் மற்றும் குடியிருப்புகளை நிறுவினர். கேரளத்துடனான இசுரேலியத் (யூத) தொடர்பானது பொ. ஊ. மு. 573இல் தொடங்கியது. கேரளத்துடன் வணிகத் தொடர்புகளை அரேபியர்களும் கூடக் கொண்டிருந்தனர். பொ. ஊ. மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னர் இது தொடங்கியது. கேரளத்திலிருந்து அரேபியர்களால் வாங்கி வரப்பட்ட பொருட்கள் ஏடனில் இருந்த இசுரேலியர்களிடம் (ஈப்ரு யூதர்கள்) விற்கப்பட்டன என்று எரோடோட்டசு (484–413 பொ. ஊ. மு.) குறிப்பிட்டுள்ளார். 4ஆம் நூற்றாண்டில் நனயா அல்லது தெற்கு கிறித்தவர்களும் கூட ஈரானில் இருந்து கேரளத்துக்கு இடம் பெயர்ந்தனர். தொடக்க காலத்தில் வந்த சிரிய கிறித்தவ சமூகத்துடன் வாழ்ந்தனர். சிரிய கிறித்தவர்கள் புனித தோமா கிறித்தவர்கள் என்று அறியப்படுகின்றனர். 1ஆம் நூற்றாண்டில் தோமாவின் மதப்பரப்புச் செயல்பாடுகளுக்குத் தங்களது பூர்வீகத்தை இவர்கள் தடயமாகக் கொண்டுள்ளனர்.
நடுக் காலத்தின் தொடக்கம்
மகோதயபுரத்தின் (தற்கால கொடுங்கல்லூர்) குலசேகர அரசமரபு என்றும் அறியப்பட்ட ஓர் இரண்டாவது சேர இராச்சியமானது (அண். 800–1102) குலசேகர வர்மனால் நிறுவப்பட்டது. நவீன கேரளத்தின் முழுப்பகுதி மற்றும் நவீன தமிழ்நாட்டின் ஒரு சிறிய பகுதியை உள்ளடக்கிய ஒரு நிலப்பரப்பை இவர் ஆண்டார். குலசேகர காலத்தின் தொடக்கப் பகுதியின் போது நாகர்கோவிலிலிருந்து திருவல்லா வரையிலான தெற்குப் பகுதியானது ஆய் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. ஆய் மன்னர்கள் 10ஆம் நூற்றாண்டில் தங்களது அதிகாரத்தை இழந்தனர். இது இப்பகுதியை குலசேகரப் பேரரசின் ஒரு பகுதியாக மாற்றியது. குலசேகர ஆட்சியின் கீழ் கலை, இலக்கியம், வணிகம் மற்றும் இந்து சமயத்தின் பக்தி இயக்கம் ஆகியவை வளர்ச்சி அடைந்த ஒரு காலத்தைக் கேரளமானது கண்டது. தமிழர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு கேரள அடையாளமானது இக்காலத்தின் போது ஏழாம் நூற்றாண்டு வாக்கில் மொழியியல் ரீதியாகப் பிரிந்தது. கொல்ல ஆண்டின் தொடக்கமானது பொ. ஊ. 825ஆம் ஆண்டுக்குக் காலமிடப்படுகிறது. உள்ளூர் நிர்வாகத்துக்காக நடுவழிகளின் ஆட்சியின் கீழ் பேரரசானது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாகாணமும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தேசங்களைக் கொண்டிருந்தன. இதைத் தேச வழிகள் என்றழைக்கப்பட்ட தலைவர்கள் ஆண்டனர். பாரதப்புழா ஆற்றின் கரையில் குட்டிப்புரத்திற்கு அருகில் திருநாவாயில் கேரளத்தின் மிகப் பெரிய உள்ளூர் விழாவான மாமாங்கம் திருவிழா நடத்தப்படுகிறது. ஆழ்வஞ்சேரி தம்பிராக்களின் தலைமையகமான ஆதவநாடும் கூட திருநாவாய்க்கு அருகில் அமைந்துள்ளது. ஆழ்வஞ்சேரி தம்பிராக்கள் கேரளத்தின் நம்பூதிரி பிராமணர்களின் உச்சபட்ச சமயத் தலைவர்களாகக் கருதப்படுகின்றனர்.
தாணு இரவி வர்மாவின் (பொ. ஊ. 9ஆம் நூற்றாண்டு) ஆட்சியின் போது கேரளத்துக்கு வருகை புரிந்த ஒரு பாரசீக வணிகரான சுலைமான் அல்-தசீர் அந்நேரத்தில் கேரளம் மற்றும் சீனாவுக்கு இடையில் விரிவான வணிகமானது இருந்தது என்று பதிவிட்டுள்ளார். இது கொல்லத்தில் இருந்த துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது. கடற்கரைப் பட்டணங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முசுலிம் மக்களின் இருப்பு குறித்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அயல்நாட்டு நூல்கள் குறிப்பிடுகின்றன. பகுதாதுவின் அல்-மசூதி (பொ. ஊ. 896-956), முகம்மது அல்-இத்ரிசி (பொ. ஊ. 1100-1165), அபுல்பெதா (பொ. ஊ. 1273-1331), மற்றும் அல்-திமஷ்கி போன்ற அரேபிய எழுத்தாளர்கள் கேரளத்தில் இருந்த முசுலிம் சமூகங்கள் குறித்து எழுதியுள்ளனர். தெற்காசியாவில் முதல் பூர்வீகக் குடியமர்ந்த முசுலிம் சமூகமாக மாப்பிளமார்களைக் கருதலாம் என சில வரலாற்றாளர்கள் எண்ணுகின்றனர். கேரளத்தின் முசுலிம்கள் குறித்த அறியப்பட்ட தொடக்க காலக் குறிப்பானது குயிலோன் சிரிய தாமிரத் தகடுகளில் உள்ளது.
11ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு தொடர்ச்சியான சேர-சோழப் போர்களால் ஏற்பட்ட தயக்க உணர்வானது கேரளத் துறைமுகங்களில் அயல் நாட்டு வணிகத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. மேலும், 15ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசப் படையெடுப்புகளானவை பௌத்தம் மற்றும் சைனம் ஆகிய இரு முதன்மையான சமயங்கள் இந்நிலத்தில் இருந்து மறைவதற்குக் காரணமாயின. கேரளத்தின் மலபார் பகுதியில் இருந்த மேனன்கள் உண்மையில் சைன சமயத்தின் வலிமையான நம்பிக்கையாளர்களாக இருந்தனர் என்பது அறியப்பட்ட ஒன்றாகும். சாதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பிரிவுகள் சமூக அமைப்பில் விரிசலை உருவாக்கின. இறுதியாக, 1102இல் பிற்காலப் பாண்டியர் மற்றும் இடைக்காலச் சோழர்களின் ஒன்றிணைந்த தாக்குதலால் குலசேகர அரசமரபானது அடிபணிய வைக்கப்பட்டது. எனினும், 14ஆம் நூற்றாண்டில் தெற்கு வேணாடு இராச்சியத்தின் ரவி வர்ம குலசேகரனால் (1299-1314) தென்னிந்தியா மீது ஒரு குறுகிய காலமே நீடித்திருந்த உச்ச நிலையை நிறுவ முடிந்தது.
கோழிக்கோட்டின் வளர்ச்சி
ரவி வர்ம குலசேகரனின் இறப்பிற்குப் பிறகு ஒரு வலிமையான மைய சக்தி இல்லாதிருந்த நிலையில் அரசானது அப்போது சிறிய, தங்களுடன் போரிட்டுக் கொண்ட வேள் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வடக்கே கோழிக்கோட்டின் சமோரின் இராச்சியம், தூரத் தெற்கே கொல்லம், தெற்கே கொச்சி மற்றும் தூர வடக்கே கண்ணூர் ஆகியவையே இவற்றில் மிக வலிமையானவையாக இருந்தன. கோழிக்கோட்டில் இருந்த துறமுகமானது கேரளத்தில் ஒரு உச்சபட்ச பொருளாதார மற்றும் அரசியல் நிலையைக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் கொல்லம் (குயிலோன்), கொச்சி மற்றும் கண்ணூர் (கன்னனூர்) ஆகியவை வணிக ரீதியாக இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. கோழிக்கோட்டின் சமோரின் உண்மையில் ஏறநாட்டின் ஆட்சியாளர் ஆவார். ஏறநாடானது தற்போதைய மலப்புறம் மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளில் அமைந்திருந்த ஒரு சிறிய வேள் பகுதியாகும். சமோரின்கள் அரேபிய மற்றும் சீன வணிகர்களுடன் கூட்டணி வைத்தனர். கோழிக்கோட்டில் இருந்து பெற்ற பெரும்பாலான செல்வத்தைத் தங்களது இராணுவ சக்தியை மேம்படுத்தப் பயன்படுத்தினர். நடுக் காலத்தின் போது மலையாளம் பேசிய பகுதியில் மிக சக்தி வாய்ந்த இராச்சியமாகக் கோழிக்கோடு உருவானது.
தங்களது ஆட்சியின் உச்ச நிலையின் போது கோழிக்கோட்டின் சமோரின்கள் தெற்கே கொல்லம் (கொல்லம்) முதல் வடக்கே பந்தலயினி கொல்லம் (கொயிலாண்டி) வரையிலான ஒரு நிலப்பகுதி மீது ஆட்சி செய்தனர். கோழிக்கோடு நகரத்திற்கு ஆறு முறை வருகை புரிந்த இப்னு பதூதா (1342–1347) நகரில் வாழ்வின் தொடக்க கால கண நேரக் காட்சிகளைக் கொடுக்கிறார். செங் கேவுக்குக் கீழான ஏகாதிபத்திய சீனக் கப்பல் குழுவின சீன மாலுமிகள் பிரிவைச் சேர்ந்த மா குவான் (பொ. ஊ. 1403) இந்நகரத்தை ஒரு பெரும் வணிகச் சந்தை என்றும், உலகம் முழுவதிலும் இருந்த வணிகர்கள் இங்கு அடிக்கடி வந்து சென்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்துர் ரசாக் (1442–43), நிக்கோலோ டா கொன்ட்டி (1445), அபனசி நிகிதின் (1468-74), லுதோவிகோ டி வர்தேமா (1503-1508), மற்றும் துவார்த்தே பர்போசா ஆகியோர் இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்மையான வணிக மையங்களில் ஒன்றாக இந்நகரத்தைக் கண்டனர். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வணிகர்களை இங்கு காணலாம் என்று குறிப்பிட்டனர்.
விசயநகரக் கைப்பற்றல்கள்
விசயநகரப் பேரரசின் மன்னன் இரண்டாம் தேவ ராயன் (1424-1446) 15ஆம் நூற்றாண்டில் தற்போதைய கேரள மாநிலத்தின் முழுப் பகுதியையும் வென்றான். கோழிக்கோட்டின் சமோரினை இவன் தோற்கடித்தான். 1443 வாக்கில் கொல்லத்தின் ஆட்சியாளரையும் தோற்கடித்தான். விசயநகரப் பேரரசின் மன்னனுக்கு சமோரின் திறை செலுத்த வேண்டி இருந்தது என்று பெர்னாவோ நுனிஸ் கூறுகிறார். தங்களது விசயநகர மேலாட்சியாளர்களுக்கு எதிராகப் பின்னர் கோழிக்கோடு மற்றும் வேணாடு கிளர்ச்சியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஆனால், இரண்டாம் தேவ ராயன் கிளர்ச்சியை ஒழித்துக் கட்டினார். அடுத்த 50 ஆண்டுகளில் விசயநகரத்தின் சக்தியானது குறையத் தொடங்கிய போது கோழிக்கோட்டின் சமோரின்கள் கேரளத்தில் மீண்டும் முக்கியத்துவம் பெற்ற நிலைக்கு உயர்ந்தனர். 1498இல் பொன்னானியில் ஒரு கோட்டையை இவன் கட்டினான்.
நவீன காலத்தின் தொடக்கம்
நடு மற்றும் பிந்தைய நடுக் காலங்களின் போது அரபிக் கடலில் மசாலாப் பொருட்களின் கடல் வாணிகத்தின் ஏகபோகத் தனியுரிமையானது அரேபியர்களுடனேயே இருந்தது. எனினும், ஐரோப்பியக் கண்டுபிடிப்புக் காலத்தில் மத்திய கிழக்கு வணிகர்களின் ஆதிக்கமானது சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. 1498இல் கோழிக்கோட்டின் காப்பாட்டில் வாஸ்கோ ட காமாவின் வருகைக்குப் பிறகு கிழக்குக் கடல் பயணங்கள் மீது போத்துக்கீசர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். குறிப்பாக, மசாலாப் பொருள் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். 1498இல் ஐரோப்பாவிலிருந்து மலபாருக்குக் கடல் வழியைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து போத்துக்கீசர் தங்களது நிலப்பரப்புகளை விரிவாக்கத் தொடங்கினர். ஓர்முசு மற்றும் மலபார் கடற்கரை மற்றும் தெற்கே சிலோனுக்கு இடைப்பட்ட கடல்களை ஆட்சி செய்தனர். 1502ஆம் ஆண்டின் போது கொல்லத்தின் தங்கசேரியில் ஒரு வணிக மையத்தை, அங்கிருந்து மசாலாப் பொருள் வணிகத்தைத் தொடங்க வேண்டும் என கொல்லத்தின் அப்போதைய அரசி விடுத்த அழைப்பின் பேரில் நிறுவினர்.
கோழிக்கோட்டின் சமோரின்களுக்கு அடி பணிந்திருந்த தானூர் இராச்சியத்தின் ஆட்சியாளர் போத்துக்கீசருடன் இணைந்து கோழிக்கோட்டிலிருந்த தங்களது மேலாட்சியாளருக்கு எதிராகச் செயல்பட்டார். இதன் விளைவாக இந்தியாவில் தொடக்க கால போத்துக்கீசக் காலனிகளில் ஒன்றாக தானூர் இராச்சியம் (வேட்டத்துநாடு) உருவானது. எனினும், கொச்சி யுத்தத்தில் (1504) கோழிக்கோட்டின் சமோரின்களுக்காக தானூர் படைகள் தங்களது மன்னனுக்குக் கீழ் போரிட்டன. எனினும், கோழிக்கோட்டின் சமோரின்களுக்குக் கீழான தானூர் பகுதியின் மாப்பிளமார் வணிகர்கள் சமோரின்களுடனான தங்களது கூட்டணியை இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தனர். சமோரின் மற்றும் கொச்சி மன்னனுக்கு இடையில் இருந்த பகைமையைத் தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொண்ட போத்துக்கீசர் கொச்சியுடன் இணைந்தனர். 1505இல் போத்துக்கீச இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக பிரான்சிஸ் கோ டீ அல்மெய்டா நியமிக்கப்பட்ட போது அவரது தலைமையகமானது கோழிக்கோட்டில் இல்லாமல் கொச்சிக் கோட்டையில் (இமானுவேல் கோட்டை) நிறுவப்பட்டது. இவரது ஆட்சிக் காலத்தின் போது கொச்சியுடனான உறவு முறைகள் மீது போத்துக்கீசரால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. அவர் கடற்கரையில் சில கோட்டைகளை நிறுவினார். எனினும், தெற்கு மலபாரில் சமோரின் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களால் போத்துக்கீசர் தடங்கல்களைச் சந்தித்தனர். குஞ்ஞாலி மரைக்காயர்கள் என்று அறியப்பட்ட கோழிக்கோட்டுக் கடற்படைத் தளபதிகளின் தலைமைத்துவத்தின் கீழ் நடந்த கடற்படைத் தாக்குதலால் குறிப்பாகத் தடங்கல்களைச் சந்தித்தனர். ஓர் ஒப்பந்தத்தை வேண்டும் நிலைக்குப் போத்துக்கீசரை இது தள்ளியது. இந்தியக் கடற்கரையில் முதல் கடற்படைத் தற்காப்பை ஒருங்கிணைத்தவர்களாக குஞ்ஞாலி மரைக்காயர்கள் குறிப்பிடப்படுகின்றனர். நவீன மலையாள இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படும் துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் போத்துக்கீசர் காலத்தின் போது திரூரில் (வேட்டத்துநாடு) பிறந்தார்.
1571இல் சலியம் கோட்டை யுத்தத்தில் சமோரின் படைகளால் போத்துக்கீசர் தோற்கடிக்கப்பட்டனர். கொல்லம் துறைமுகத்தில் அரேபியர் மற்றும் போத்துக்கீசருக்கு இடையிலான ஒரு கலகமானது கொல்லத்தில் போத்துக்கீசர் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. கோலாத்திரிக்கு அடி பணிந்திருந்த, கண்ணூருக்கு அருகில் இருந்த அரக்கால் இராச்சியத்தின் அலி இராசாக்களின் முசுலிம் வழித் தோன்றல்கள் இலட்சத் தீவுகளை ஆண்டனர். காசர்கோட்டுக்கு அருகே உள்ள பேக்கால் கோட்டையானது கேரளத்தில் உள்ள கோட்டைகளிலேயே மிகவும் பெரியதாகும். இது கேளடியின் சிவப்பா நாயக்கரால் 1650இல் கட்டப்பட்டது. இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தால் போத்துக்கீசர்கள் வெளியேற்றப்பட்டனர். கோழிக்கோடு மற்றும் கொச்சிக்கு இடையிலான சண்டைகளின் போது டச்சுக்காரர்கள் வணிகத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றனர். மலபார் கடற்கரையில் பிரித்தானியரின் வருகையானது 1615ஆம் ஆண்டுக்குக் குறிப்பிடப்படுகிறது. அப்போது கேப்டன் வில்லியம் கீலிங் தலைமையிலான ஒரு குழுவானது கோழிக்கோட்டிற்கு மூன்று கப்பல்களைப் பயன்படுத்தி வந்திறங்கியது. பிரித்தானியத் தூதுவராக சர் தாமசு ரோ இத்தகைய ஒரு கப்பல்களில் தான் வந்தார். நான்காவது முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரைச் சந்திக்கச் சென்றார். 1664இல் கொச்சிக் கோட்டையின் நகராட்சியானது டச்சு மலபார் பகுதியால் நிறுவப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் முதல் நகராட்சியாக இது இருக்கிறது. 18ஆம் நூற்றாண்டில் டச்சு அதிகாரம் பலவீனமடைந்த போது இது கலைக்கப்பட்டது.
திருவாங்கூர் மற்றும் கொச்சி இராச்சியங்களும், பிரித்தானியச் செல்வாக்குகளும்
திருவாங்கூர் அரச குடும்பத்தின் மார்த்தாண்ட வர்மனுடனான இடைவிடாத யுத்தங்களால் பதிலுக்கு டச்சுக்காரர்கள் பலவீனம் அடைந்தனர். 1741இல் டச்சுக்காரர்கள் குளச்சல் போரில் தோற்கடிக்கப்பட்டனர். "மாவேலிக்கரா ஒப்பந்தம்" என்று அறியப்பட்ட ஒப்பந்தமானது 1753இல் டச்சுக்காரர்கள் மற்றும் திருவாங்கூர் இடையே கையொப்பம் இடப்பட்டது. இப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல் ஈடுபாடுகளிலிருந்தும் விலகிக் கொள்ள டச்சுக்காரர்கள் இந்த ஒப்பந்தத்தால் கட்டாயப்படுத்தப்பட்டனர். 18ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் மன்னன் சிறீ மார்த்தாண்ட வர்மன் கொச்சி வரை உள்ள அனைத்து இராச்சியங்களையும் இராணுவப் படையெடுப்புகள் மூலம் இணைத்தார். கேரளத்தில் திருவாங்கூரின் வளர்ச்சியானது முதல் நிலைக்குச் செல்வதற்கு இது வழி வகுத்தது. அனிசம் திருநாளுடன் கொச்சி ஆட்சியாளர் அமைதிக்காக வேண்டினார். கொச்சிக் கோட்டை பகுதி, தங்கசேரி, தெற்கு கேரளத்தில் உள்ள அஞ்சுதெங்கு ஆகியவற்றுடன் கேரளத்தின் வடக்கு மற்றும் வடக்கு-நடுப் பகுதிகள் (மலபார் மாவட்டம்) இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரித்தானிய ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. 1755இல் புரக்கத் யுத்தத்தில் கோழிக்கோட்டின் சக்தி வாய்ந்த சமோரினைத் தோற்கடித்ததன் மூலம் திருவாங்கூர் கேரளத்தில் ஆதிக்கம் மிகுந்த அரசாக உருவானது.
1761இல் பிரித்தானியர் மாகேவைக் கைப்பற்றினர். குடியிருப்பானது கடத நாட்டு ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1763ஆம் ஆண்டின் பாரிசு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பிரித்தானியர் மாகேவைப் பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைத்தனர். 1779இல் ஆங்கிலேய-பிரெஞ்சுப் போர் ஏற்பட்டது. மாகேவைப் பிரெஞ்சுக்காரர்கள் இழப்பதற்கு இது காரணமானது. 1783இல் இந்தியாவிலிருந்த பிரெஞ்சுக் குடியிருப்புகளை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப் பிரித்தானியர் ஒப்புக் கொண்டனர். 1785இல் பிரெஞ்சுக்காரர்களிடம் மாகே ஒப்படைக்கப்பட்டது. 1757இல் கோழிக்கோட்டின் சமோரினின் படையெடுப்பை எதிர்ப்பதற்காக மைசூரின் ஐதர் அலியின் உதவியைப் பாலக்காட்டு இராஜா வேண்டினார். 1766இல் ஹைதர் அலி அந்நேரத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த கோழிக்கோட்டின் சமோரினைத் தோற்கடித்தார். கோழிக்கோட்டைத் தன்னுடைய அரசுக்குள் உள்வாங்கிக் கொண்டார். கொளத்துநாடு, கோட்டயம், கடதநாடு, கோழிக்கோடு, தானூர், வள்ளுவநாடு மற்றும் பாலக்காடு உள்ளிட்ட கேரளத்தின் வடக்கு மற்றும் வடக்கு-நடுப் பகுதிகளில் (மலபார் பகுதி) இருந்த சிறிய வேள் பகுதி அரசுகள் மைசூர் ஆட்சியாளர்களின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன. பெரிய மைசூர் அரசின் ஒரு பகுதியாக உருவாயின. ஐதர் அலியின் மகனும், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவருமான திப்பு சுல்தான் விரிவடைந்து கொண்டிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் படையெடுப்புகளைத் தொடங்கினார். நான்கு ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில் இரண்டு போர்கள் ஏற்பட இது வழி வகுத்தது. மூன்றாவது ஆங்கிலேய-மைசூர்ப் போர் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட சிறீரங்கபட்டின உடன்படிக்கையின் விளைவாக 1790களில் கிழக்கிந்திய நிறுவனத்திடம் மலபார் மாவட்டம் மற்றும் தென் கன்னட மாவட்டம் ஆகியவற்றை விட்டுக் கொடுக்க திப்பு ஒப்புக் கொண்டார். முறையே 1792 மற்றும் 1799 ஆகிய ஆண்டுகளில் இரண்டுமே பிரித்தானியப் இந்தியாவின் பம்பாய் மாகாணத்துடன் (இது இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் இருந்த பிற பகுதிகளையும் கூட உள்ளடக்கி இருந்தது) இணைக்கப்பட்டன.
18ஆம் நூற்றாண்டின் முடிவில் ஒட்டு மொத்த கேரளமும் பிரித்தானியக் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியான நிர்வாகம் அல்லது மேலாட்சி முறையில் விழுந்தது. தலச்சேரி-வயநாடு மாவட்டப் பகுதியில் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த கேரள வர்மா பழசி இராசாவின் தலைமைத்துவத்தின் கீழ் தங்களது ஆட்சிக்கு எதிராக பிரித்தானியர் தொடக்கத்தில் உள்ளூர் எதிர்ப்பைச் சந்தித்தனர்.
இந்தியக் குடியரசின் ஒரு மாநிலமாக
1947இல் இந்தியா மற்றும் பாக்கித்தான் என இந்தியா பிரிக்கப்பட்டதற்குப் பிறகு இந்திய ஒன்றியத்தின் பகுதிகளாக இருந்த திருவாங்கூர் மற்றும் கொச்சி ஆகியவை 1 சூலை 1949 அன்று ஒன்றிணைக்கப்பட்டு திருவாங்கூர் கொச்சியை அமைத்தன. 1 நவம்பர் 1956இல் மதராசின் தெற்கு கன்னட மாவட்டத்தில் இருந்த காசர்கோடு வட்டம், மதராசின் மலபார் மாவட்டம் (இலட்சத்தீவுகள் தவிர்த்து) மற்றும் திருவாங்கூர்-கொச்சி ஆகியவை, நான்கு தெற்கு வட்டங்கள் மற்றும் செங்கோட்டை வட்டம் (இவை தமிழ்நாட்டுடன் இணைந்தன) ஆகியவற்றைத் தவிர்த்து இணைக்கப்பட்டு 1956ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் கேரள மாநிலத்தை உருவாக்கின. ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடுவின் தலைமையின் கீழான ஒரு பொதுவுடைமை அரசாங்கமானது 1957ஆம் ஆண்டில் புதிய கேரள சட்டசபையின் முதல் தேர்தலிலிருந்து ஆட்சிக்கு வந்தது. எங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க காலப் பொதுவுடமைவாத அரசாங்கங்களில் இதுவும் ஒன்றாகும். இவரது அரசாங்கமானது நிலம் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை ஏற்படுத்தியது. பதிலுக்கு மாநிலத்தில் தனி நபர் வருமானத்தில் சமமற்ற நிலையை இச்சீர்திருத்தங்கள் குறைத்தன.
புவிவியல்
இம்மாநிலமானது இலட்சத்தீவுக் கடல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு இடையில் பொருந்தி அமைந்துள்ளது. வடக்கு அட்சரேகை 8°18' மற்றும் 12°48' மற்றும் கிழக்குத் தீர்க்கரேகை 74°52' மற்றும் 77°22'க்கு இடையில் இம்மாநிலம் அமைந்துள்ளது. கேரளமானது ஈரப்பதம் உள்ள வெப்ப மண்டல மழைக்காட்டுக் கால நிலையைக் கொண்டுள்ளது. சில சூறாவளிகளும் ஏற்படுகின்றன. இம்மாநிலத்தின் மொத்த கடற்கரையின் நீளம் 590 கிலோமீட்டர் ஆகும். மாநிலத்தின் அகலமானது 11 மற்றும் 121 கிலோ மீட்டருக்கு இடையில் வேறுபட்டு அமைந்துள்ளது. புவியியல் ரீதியாகக் கேரளமானது மூன்று தனித்துவமான சூழ்நிலைப் பகுதிகளாகப் பிரிக்கப்படலாம்: கிழக்கு உயர் நிலங்கள், கரடு முரடான மற்றும் குளிர்ந்த மலைப்பாங்கான நிலப்பரப்பு, மைய நடு-நிலங்கள்; சுருட்டப்பட்ட குன்றுகள், மற்றும் மேற்குத் தாழ்நிலங்கள்; கடற்கரைச் சமவெளிகள். கேம்பிரிய காலத்திற்கு முந்தைய மற்றும் பிலிசுடோசின் புவியியல் அமைப்புகளானவை கேரளாவின் நிலப்பரப்பில் பெரும்பாலானவற்றை உருவாக்கியுள்ளன. பொ. ஊ. 1341இல் கேரளத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் அழிவை ஏற்படுத்திய வெள்ளமானது இதன் நிலப்பரப்பைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றியுள்ளது. இதன் வரலாற்றின் மீதும் இறுதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மசாலாப் போக்குவரத்துக்கான ஓர் இயற்கையான துறைமுகத்தையும் கூட இது உருவாக்கியுள்ளது. கேரளத்தின் கிழக்குப் பகுதியானது உயரமான மலைகள், ஒடுக்கமான பள்ளத் தாக்குகள் மற்றும் ஆழமாக-வெட்டப்பட்ட பள்ளத்தாக்குகள் ஆகியவற்றை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மழை மறைவுப் பிரதேசத்தில் உடனடியாக அருகிலே கொண்டுள்ளது. கேரளத்தில் மேற்கு நோக்கி ஓடும் 41 ஆறுகள் மற்றும் கிழக்கு நோக்கி ஓடும் 3 ஆறுகள் இப்பகுதியில் தான் உற்பத்தியாகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மலைகளின் ஒரு சுவற்றை உருவாக்கியுள்ளன. இவை பாலக்காட்டுக்கு அருகில் மட்டுமே தடை பட்டுள்ளன. இங்கு தான் பாலக்காட்டுக் கணவாய் பிரிகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் கடல் மட்டத்திற்கு மேல் சராசரியாக உயரத்துக்கு எழுந்துள்ளன. அதே நேரத்தில், மிக உயரமான சிகரங்கள் உயரத்தை எட்டியுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனை முடியானது தென்னிந்தியாவில் உள்ள மிக உயரமான சிகரமாகும். இது உயரத்தில் அமைந்துள்ளது. உயிரினப் பல்வகைமை வகையில் உலகின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக மேற்குத் தொடர்ச்சி மலையானது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளானவை இமய மலைகளைக் காட்டிலும் அதிக வயதுடையவையாகக் கருதப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பின்புறத்தில் அமைந்துள்ளன அதிரப்பள்ளி அருவியானது இந்தியாவின் நயாகரா என்றும் கூட அறியப்படுகிறது. இது சாலக்குடி ஆற்றில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் மிகப் பெரிய அருவி இதுவாகும். கேரளத்தில் உள்ள ஒரே ஒரு பீடபூமி வயநாடு ஆகும். வயநாடு, மலப்புறம் (நிலம்பூரில் உள்ள சாளியாறு பள்ளத்தாக்கு), மற்றும் பாலக்காடு (அட்டப்பாடி பள்ளத்தாக்கு) ஆகிய மாவட்டங்களில் கிழக்குப் பகுதிகளானவை ஒன்றாக இணைந்து நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை உருவாக்கியுள்ளன. இவை மைசூர் பீடபூமியின் ஒரு தொடர்ச்சியாகும். கருநாடகத்தின் அருகிலுள்ள மாவட்டங்களுடன் சேர்த்து இவை இயற்கையான தங்க வயல்களுக்காக அறியப்படுகின்றன. இல்மனைட்டு, மோனசைட், தோரியம், மற்றும் தைட்டானியம் உள்ளிட்ட கனிமங்கள் கேரளத்தின் கடற்கரைப் பட்டையில் காணப்படுகின்றன. கேரளத்தின் கருநாகப்பள்ளி கடற்கரைப் பட்டையானது தோரியத்தைக் கொண்டுள்ள மோனசைட் மணலில் இருந்து வரும் அதிகப்படியான பின்புலக் கதிர்வீச்சுக்காக அறியப்படுகிறது. சில கடற்கரைப் பஞ்சாயத்துகளில் சராசரி வெளிப்புறக் கதிர்வீச்சானது ஆண்டுக்கு 4 மில்லி கிரேவுக்கும் அதிகமாக உள்ளது. கடற்கரையில் உள்ள சில பகுதிகளில் இவை 70 மில்லி கிரேவுக்கும் என்ற அளவில் உயர்ந்து காணப்படுகின்றன.
கேரளத்தின் மேற்குக் கடற்கரைப் பட்டையானது கிழக்குப் பகுதியுடன் ஒப்பிடும் போது பெரிதும் தட்டையாக உள்ளது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட உவர் நீர்க் கால்வாய்கள், ஏரிகள், கயவாய் மற்றும் கேரள உப்பங்கழிகள் என்று அறியப்படுகிற ஆறுகள் ஆகியவற்றின் ஓர் இணையத்தை குறுக்கு வெட்டுக் கோடுகளாகக் கொண்டு இது அமைந்துள்ளது. கேரளத்தின் அரிசிக் கிண்ணம் என்றும் அறியப்படும் குட்டநாடு இந்தியாவிலேயே கடல்மட்டத்திலிருந்து மிகக் குறைந்த உயரத்தைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்துக்குக் கீழ் அறுவடை நடைபெறும் உலகின் மிகச் சில பகுதிகளில் இதுவும் கூட ஒன்றாகும். நாட்டின் மிக நீளமான ஏரியான வேம்பநாட்டு ஏரி உப்பங்கழிகள் மீது ஆதிக்கம் கொண்டுள்ளது. இந்த ஏரியானது ஆலப்புழா மற்றும் கொச்சிக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 200 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்தியாவின் நீர் வழிகளில் சுமார் 8% கேரளத்தில் காணப்படுகின்றன. கேரளம் 44 ஆறுகளைக் கொண்டுள்ளது. 244 கிலோ மீட்டர் நீள பெரியாறு, 209 கிலோ மீட்டர் நீள பாரதப்புழா, 176 கிலோமீட்டர் நீள பம்பை ஆறு, 169 கிலோ மீட்டர் நீள சாளியாறு, 130 கிலோ மீட்டர் நீல கடலுண்டிப்புழா, 130 கிலோ மீட்டர் நீள சாலக்குடிப்புழா, 129 கிலோ மீட்டர் நீள வளபட்டணம் ஆறு மற்றும் 128 கிலோ மீட்டர் நீள அச்சன்கோவில் ஆறு ஆகியவை இதில் அடங்கும். கேரளத்தில் உள்ள ஆறுகளின் சராசரி நீளமானது 64 கிலோமீட்டர் ஆகும். இவற்றில் பெரும்பாலானவை சிறியவை ஆகும். இவை முழுவதுமாகத் தங்களது நீர் ஆதாரத்திற்குப் பருவ மழையைச் சார்ந்துள்ளன. கேரள ஆறுகள் சிறியதாகவும், ஆற்றுக் கழிமுகம் அற்றும் காணப்படுவதால் சுற்றுப்புறச் சூழல் விளைவுகளால் இவை எளிதில் பாதிக்கப்படுகின்றன. மணல் திருட்டு மற்றும் மாசுபாடு போன்ற பிரச்சனைகளை இந்த ஆறுகள் எதிர் கொள்கின்றன. நிலச்சரிவுகள், வெள்ளங்கள் மற்றும் வறட்சி போன்ற பல இயற்கைப் பிரச்சனைகளை இம்மாநிலமானது எதிர் கொண்டு வருகிறது. 2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியாலும் கூட இம்மாநிலம் பாதிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு கேரளமானது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் மோசமான வெள்ளத்தைச் சந்தித்தது. 2024இல் கேரளம் வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவுகளைச் சந்தித்தது.
காலநிலை
ஆண்டுக்கு சுமார் 120-140 மழைப் பொழிவு நாட்களுடன் கேரளமானது ஓர் ஈரப்பத மற்றும் கடல் சார்ந்த வெப்ப மண்டல சூழ்நிலையைக் கொண்டுள்ளது. தென் மேற்கு கோடை காலப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குக் குளிர்காலப் பருவக் காற்று ஆகியவற்றின் கடுமையான பருவமழையால் இது தாக்கம் கொண்டுள்ளது. தென்மேற்குப் பருவக் காற்றானது சூன் முதல் ஆகத்து வரை சுமார் 65% மழைப் பொழிவையும், எஞ்சிய 35%ஆனது வடகிழக்குப் பருவமழையால் செப்தெம்பர் முதல் திசம்பர் வரை பொழிகிறது. தென்மேற்குப் பருவக் காற்றின் ஈரப்பதமுள்ள காற்றானது இந்தியத் துணைக் கண்டத்தின் தெற்குக் கோடி முனையை அடையும் போது அதன் இட அமைவு காரணமாக இரு பிரிவுகளாகப் பிரிகிறது. அவை "அரபிக்கடல் பிரிவு" மற்றும் "வங்காள விரிகுடாப் பிரிவு" ஆகியவையாகும். தென்மேற்குப் பருவக் காற்றின் "அரபிக்கடல் பிரிவானது" முதலில் மேற்குத் தொடர்ச்சி மலைகளை அடைகிறது. தென்மேற்குப் பருவக் காற்றால் மழையைப் பெறும் இந்தியாவின் முதல் மாநிலமாகக் கேரளத்தை ஆக்குகிறது. அழுத்தம் நிகழும் முறைகளின் பரவலானது வடகிழக்குப் பருவக் காற்றில் அப்படியே மாறுகிறது. இப்பருவத்தின் போது வட இந்தியாவில் இருந்து வரும் குளிர்ந்த காற்றுக்கள் வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தைப் பெறுகின்றன. தீபகற்ப இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் மழையை விரைவு படுத்துகின்றன. கேரளத்தில் வடகிழக்குப் பருவக் காற்றின் தாக்கமானது தெற்கு மாவட்டங்களில் மட்டுமே காணப்படுகிறது. கேரளமானது ஆண்டு தோறும் 2,923 மில்லி மீட்டர் சராசரி மழைப்பொழிவைப் பெறுகிறது. கேரளத்தின் வறண்ட தாழ்நிலப் பகுதிகளில் சில 1,250 மில்லி மீட்டார் சராசரி மழைப் பொழிவை மட்டுமே பெறுகின்றன. மலையமைப்பு சார்ந்த மழைப் பொழிவு காரணமாக கிழக்கு இடுக்கி மாவட்டத்தில் மலைகள் 5,000 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவைப் பெறுகின்றன. இதுவே இம்மாநிலத்தில் மிக அதிக மழைப்பொழிவு பெறும் பகுதியாகும். கிழக்குக் கேரளத்தில் ஓர் உலர்ந்த வெப்ப மண்டல ஈர மற்றும் உலர்ந்த காலநிலை காணப்படுகிறது. கோடை காலத்தின் போது இம்மாநிலமானது சூறாவளி விசையுடைய காற்றுகள், புயல் இயக்கம், சூறாவளி-சார்ந்த கடுமையான மழைப் பொழிவு, அவ்வப்போது ஏற்படும் வறட்சி, மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு போன்றவற்றை எதிர் கொள்கிறது. கேரளத்தின் சராசரிப் பகல் வெப்ப நிலையானது 19.8°C முதல் 36.7°C வரை உள்ளது. கடற்கரைத் தாழ் நிலப்பகுதிகளில் சராசரி ஆண்டு வெப்ப நிலையானது 25.0 முதல் 27.5°C வரையும், கிழக்கு உயர் நிலப்பகுதிகளில் 20.0 முதல் 22.5°C ஆக உள்ளது.
தாவரங்களும், உயிரினங்களும்
பெரும்பாலான உயிரியற் பல்வகைமையானது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் செறிந்து, பாதுகாக்கப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டு வரை கேரளத்தின் நிலப்பரப்பில் முக்கால் பங்கானது அடர்த்தியான காடுகளாக இருந்தது. 2004ஆம் ஆண்டில் நிலவரப் படி, இந்தியாவின் 15,000 தாவர வகைகளில் 25%க்கும் மேற்பட்டவை கேரளத்தில் உள்ளன. 4,000 பூக்கும் தாவர வகைகளில் 1,272 கேரளத்தின் அகணியத் தாவரங்களாகவும், 900 மூலிகைகளாகவும், 159 அச்சுறுத்தும் நிலைக்கு உள்ளாகியவை ஆகவும் உள்ளன. கேரளத்தின் 9,400 சதுர கிலோ மீட்டர் காடுகளானவை வெப்ப மண்டல ஈர பசுமை மாறாக் காடுகள் மற்றும் பகுதியளவு பசுமை மாறாக் காடுகளையும் (கடல் மட்டத்திலிருந்து கீழ் மற்றும் நடு உயரங்கள் - 3,470 சதுர கிலோ மீட்டர்), வெப்ப மண்டல ஈர மற்றும் உலர்ந்த இலையுதிர்க் காடுகள் (நடு-உயரங்கள் - முறையே 4,100 சதுர கிலோ மீட்டர் மற்றும் 100 சதுர கிலோ மீட்டர்), மற்றும் மலைப்பாங்கான துணை வெப்ப மண்டல மற்றும் மிதவெப்பமண்டலக் (சோலை) காடுகள் (கடல் மட்டத்திலிருந்து மிக அதிக உயரமானவை - 100 சதுர கிலோமீட்டர்) உள்ளன. மொத்தமாகக் கேரளத்தின் 24% நிலப்பரப்பானது காடுகளாக உள்ளது. உலகின் ராம்சர் சாசனத்தில் பட்டியலிடப்பட்ட நீர்த் தடங்களில் நான்கு கேரளத்தில் உள்ளன. அவை சாஸ்தாம்கோட்டை ஏரி, அஷ்டமுடி ஏரி, திருச்சூர்-பொன்னானி கோல் சதுப்பு நிலங்கள் மற்றும் வேம்பநாடு கோல் சதுப்பு நிலங்கள் ஆகியவை, மேலும் பரந்த நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் 1,455.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மற்றும் அகத்தியமலை உயிரிக்கோளத்தின் 1,828 சதுர கிலோமீட்டர் ஆகியவை கேரளத்தில் அமைந்துள்ளன. 20ஆம் நூற்றாண்டில் விவசாய நிலங்களுக்காக நடந்த விரிவான அப்புறப்படுத்தலுக்கு உள்ளாகிய காடுகளில் எஞ்சியவற்றில் பெரும்பாலானவை தற்போது ஒட்டு மொத்தமாக மரங்களை அழிக்கும் முறையிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. கிழக்குக் கேரளத்தின் காற்றை எதிர் நோக்கிய மலைகளாகியவை வெப்ப மண்டல ஈரப் பதக் காடுகள் மற்றும் வெப்ப மண்டல உலர்ந்த காடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பொதுவானவையாகும். உலகின் மிகப் பழமையான தேக்குத் தோப்பான 'கானல்லியின் நிலமானது' நிலம்பூரில் உள்ளது.
கேரளத்தின் உயிரினங்களானவை அவற்றின் பல்வகைமை மற்றும் அதிக அகணிய வீதம் ஆகியவற்றுக்காக அறியப்படுகின்றன. இதில் 118 பாலூட்டிகள் (இதில் 1 அகணிய உயிரி), 500 பறவை வகைகள், 189 நன்னீர் மீன்கள், 173 ஊர்வன (இதில் 10 அகணிய உயிரிகள்), மற்றும் 151 நீர்நில வாழ்வன (இதில் 36 அகணிய உயிரிகள்) ஆகியவை உள்ளடங்கியுள்ளன. மணல் அரிப்பு, நிலச்சரிவுகள், மண் உப்பாதல் மற்றும் வளம் எடுக்கப்படுதல் உள்ளிட்ட விரிவான வாழ்விட அழிவுகளால் இந்த உயிரினங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. காடுகளில் சோனோகெலிங், தல்பேர்கியா லதிபோலியா, அஞ்சிலி, முல்லிமுரிக்கு, எரித்ரினா, மற்றும் காசியா போன்ற 1,000க்கும் மேற்பட்ட மர வகைகள் கேரளத்தில் உள்ளன. மூங்கில், காட்டு கருப்பு மிளகு, காட்டு ஏலம், கலமுசு ராட்டன் பனை மற்றும் வாசமுடைய வெட்டிவேர் புல் உள்ளிட்ட பிற தாவரங்கள் காணப்படுகின்றன. இந்திய யானை, வங்காளப் புலி, இந்தியச் சிறுத்தை, நீலகிரி வரையாடு, ஆசிய மரநாய் மற்றும் பழுப்பு மலை அணில்கள் ஆகியவையும் கூட காடுகளில் காணப்படுகின்றன. இராச நாகம், விரியன், மலைப்பாம்பு, மற்றும் சதுப்புநில முதலை உள்ளிட்ட ஊர்வன இங்கு காணப்படுகின்றன. கேரளத்தின் பறவைகளில் தீக்காக்கை, மலை இருவாட்சி, சாம்பல் மார்புச் சிரிப்பான், பாம்புத் தாரா மற்றும் மலை நாகணவாய் ஆகியவை அடங்கியுள்ளன. ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் நீர் வழிகளில் கடு கெளுத்தி மீன், சிவப்பு கோடு தர்பாடோ பார்ப், மற்றும் சூட்டச்சி ஆரஞ்சு குரோமைடு மீன் போன்றவை இங்கு காணப்படுகின்றன. சமீபத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தர்திக்ரேத் (நீர்க் கரடிகள்) கேரளத்தின் வடக்குக் கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இசுதிகார்க்டசு கேரலென்சிசு என கேரள மாநிலத்தின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரிவுகள், மாவட்டங்கள் மற்றும் நகரங்கள்
இம்மாநிலத்தின் 14 மாவட்டங்களானவை ஆறு பகுதிகளில் பகிரப்பட்டுள்ளன: வடக்கு மலபார் (தூர-வடக்குக் கேரளம்), தெற்கு மலபார் (வடக்கு-நடுக் கேரளம்), கொச்சி (நடுக் கேரளம்), வடக்குத் திருவாங்கூர் (தெற்கு-நடுக் கேரளம்), நடுத் திருவாங்கூர் (தெற்குக் கேரளம்) மற்றும் தெற்குத் திருவாங்கூர் (தூர-தெற்குக் கேரளம்). வரி விதிக்கும் பணிகளுக்காக நிர்வாகப் பகுதிகளாகச் சேவையாற்றும் மாவட்டங்களானவை மேலும் 27 வருவாய்த் துணைப் பிரிவுகள் மற்றும் 77 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தங்களது எல்லைக்கு உட்பட்ட குடியிருப்புகள் மீது நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களை இவை கொண்டுள்ளன. இதில் உள்ளூர் நிலப் பதிவேடுகளை பேணுதலும் அடங்கும். கேரளத்தின் மாவட்டங்களானவை மேலும் 1,674 வருவாய்க் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியல் அமைப்பின் 73ஆவது மற்றும் 74ஆவது இணைப்புகள் சேர்க்கப்பட்டதிலிருந்து உள்ளூர் அரசாங்க அமைப்புகளானவை மூன்றாவது அடுக்கு அரசாங்கமாகச் செயல்படுகின்றன. இதில் 14 மாவட்ட ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 941 கிராமப் பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள், ஆறு மாநகராட்சிகள் மற்றும் ஒரு நகரியம் ஆகியவை அடங்கும். இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் ஒரு பகுதியான மாகே புதுச்சேரியில் இருந்து 647 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தாலும், ஒரு கடற்கரையில் அமைந்துள்ள புதுச்சேரியுடன் இணையாத பகுதி இதுவாகும். இது கேரளத்தால் சுற்றிலும் வளைக்கப்பட்டுள்ளது. மாகேவுக்குச் செல்லும் அனைத்து நில வழிகளும் கேரளத்தின் வழியாகத் தான் செல்கின்றன. கண்ணூர் மாவட்டமானது மாகேயை மூன்று பக்கங்களில் சூழ்ந்துள்ளது. கோழிக்கோடு மாவட்டமானது நான்காவது பக்கத்தில் உள்ளது.
1664இல் கொச்சிக் கோட்டை நகராட்சியானது டச்சு மலபார் பகுதியால் நிறுவப்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் நகராட்சியாக இது இதை ஆக்குகிறது. 18ஆம் நூற்றாண்டில் டச்சு அதிகாரமானது பலவீனமடைந்த போது இந்நகராட்சி கலைக்கப்பட்டது. கோழிக்கோடு, பாலக்காடு, கொச்சிக் கோட்டை பகுதி, கண்ணூர், மற்றும் தலச்சேரி ஆகிய நகராட்சிகள் 1 நவம்பர் 1866 அன்று பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டன. கேரளம் மாநிலத்தில் முதல் நவீன நகராட்சிகளாக இது இவற்றை ஆக்குகிறது. 1920இல் திருவனந்தபுரம் நகராட்சியானது உருவாக்கப்பட்டது. இரு தசாப்தங்களுக்குப் பிறகு சித்திரைத் திருநாள் பலராம வர்மனின் ஆட்சியின் போது திருவனந்தபுரம் நகராட்சியானது கழகமாக 30 அக்டோபர் 1940 அன்று மாற்றப்பட்டது. கேரளாவிலுள்ள மிகப் பழமையான நகராட்சிக் கழகமாக இது இதை ஆக்குகிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு உருவாக்கப்பட்ட முதல் நகராட்சிக் கழகம் மற்றும் இம்மாநிலத்தில் உள்ள இரண்டாவது மிகப் பழமையான நகராட்சிக் கழகமானது கோழிக்கோட்டில் 1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், திருச்சூர் மற்றும் கண்ணூரை நிர்வகிக்க ஆறு நகராட்சிக் கழகங்கள் உள்ளன. கேரளத்தில் உள்ள மிகப் பெரிய கழகம் திருவனந்தபுரம் மாநகராட்சியாகும். அதே நேரத்தில் கொச்சி நகரக் குழுமம் என்ற பெயருடைய கொச்சி மெட்ரோ பகுதியானது கேரளத்தின் மிகப் பெரிய நகர்ப்புறக் குழுமமாக உள்ளது. 2007ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வு நிறுவனமான இந்திகசு அனாலிடிக்சின் ஓர் ஆய்வின் படி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், திருச்சூர் ஆகியவை "இந்தியாவிலுள்ள வாழச் சிறந்த நகரங்களில்" ஒன்றாக உள்ளன. இந்த ஆய்வு நகரங்களைத் தரப்படுத்த சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, பொது வசதிகள், மற்றும் பொழுது போக்கு போன்ற காரணிகளைப் பயன்படுத்தியது.
அரசாங்கமும், நிர்வாகமும்
இம்மாநிலமானது சார்பாண்மை மக்களாட்சியின் ஒரு நாடாளுமன்ற முறையால் நிர்வகிக்கப்படுகிறது. கேரளமானது ஓர் ஓரவை முறைச் சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது. நியாமசபா என்றும் கூட அறியப்படும் கேரள சட்டமன்றமானது ஐந்தாண்டு காலத்திற்காகக் தேர்ந்தெடுக்கப்படும் 140 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு இம்மாநிலம் 20 உறுப்பினர்களையும், மேலவையான மாநிலங்களவைக்கு 9 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது.
கேரள அரசானது சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அமைப்பாக இந்தியாவில் உள்ளது. இதன் அரசியல் அமைப்புத் தலைவராக ஆளுநர் உள்ளார். ஆளுநரை இந்தியக் குடியரசுத் தலைவர் ஓர் ஐந்தாண்டு காலத்திற்கு நியமிக்கிறார். சட்ட மன்றத்தில் பெரும்பான்மை உடைய கட்சி அல்லது கூட்டணியின் தலைவரானவர் முதலமைச்சராக ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். அமைச்சரவையானது முதல் அமைச்சரின் அறிவுறுத்தலின் படி ஆளுநரால் நியமிக்கப்படுகிறது. அரசின் பெயரளவிலான தலைவராக ஆளுநர் தொடர்கிறார். அதே நேரத்தில், முதலமைச்சரும், அவரது அவையும் அன்றாட அரசாங்கச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பாக உள்ளனர். அமைச்சரவையானது கேபினட் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களை உள்ளடக்கியுள்ளது. தலைமைச் செயலாளரால் தலைமை தாங்கப்படும் தலைமைச் செயலகமானது அமைச்சரவைக்கு உதவியாக உள்ளது. தலைமைச் செயலரானவர் அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவராகவும் கூட உள்ளார். ஒவ்வொரு அரசாங்கத் துறையும் ஓர் அமைச்சரால் தலைமை தாங்கப்பட்டுள்ளது. இவருக்கு மேற்கொண்ட தலைமைச் செயலர் அல்லது முதன்மை தலைமைச் செயலர் உதவி புரிகின்றனர். இவர் பொதுவாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக உள்ளார். மேற்கொண்ட தலைமைச் செயலர் அல்லது முதன்மைச் செயலர் அவருக்கு ஒதுக்கப்பட்ட துறையின் நிர்வாகத் தலைவராகச் சேவையாற்றுகிறார். செயலர், சிறப்புச் செயலர், இணைச் செயலர் ஆகியோரின் தர நிலையை உடைய அதிகாரிகளையும் கூட ஒவ்வொரு துறையும் கொண்டுள்ளது. இவர்கள் அமைச்சர் மற்றும் மேற்கொண்ட தலைமைச் செயலர்/முதன்மைச் செயலருக்கு உதவியாக உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டமும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஒரு மாவட்ட நிர்வாகியைக் கொண்டுள்ளது. இவர் செயல் முறை நிர்வாகத்திற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். பஞ்சாயத்துகள் என அறியப்படும் துணை அதிகார மையங்கள் உள்ளூர் விவகாரங்களை நிர்வகிக்கின்றன. பஞ்சாயத்துக்கான உள்ளாட்சித் தேர்தல்களானவை வாடிக்கையாக நடத்தப்படுகின்றன. நீதித் துறையானது கேரள உயர் நீதிமன்றம் மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்களின் ஓர் அமைப்பைக் கொண்டுள்ளது. உயர் நீதிமன்றமானது கொச்சியில் அமைந்துள்ளது. 35 நிரந்தர மற்றும் 12 மேற்கொண்ட தற்காலிக நீதிபதிகளுடன் ஒரு தலைமை நீதிபதியையும் இது 2021ஆம் ஆண்டின் நிலவரப் படி கொண்டுள்ளது. இலட்சத்தீவுகள் ஒன்றியப் பகுதியில் இருந்து வரும் வழக்குகளையும் கூட இந்த உயர் நீதிமன்றமானது விசாரிக்கிறது.
கேரளத்தில் பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் போன்ற உள்ளூர் அரசாங்க அமைப்புகள் 1959ஆம் ஆண்டிலிருந்து இருந்துள்ளன. 1993இல் ஒரு குறிப்பிடத்தக்க மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை மாற்றும் முயற்சியானது தொடங்கியது. மத்திய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களுடன் இது ஒத்துப் போனது. கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் கேரள நகராட்சிச் சட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. உள்ளூர் நிர்வாகத்திற்கு ஒரு 3 அடுக்கு அமைப்பை நிறுவின. இந்த அமைப்பானது கிராமப் பஞ்சாயத்து, வட்டாரப் பஞ்சாயத்து மற்றும் மாவட்டப் பஞ்சாயத்தை உள்ளடக்கியுள்ளது. இந்தச் சட்டங்கள் இத்தகைய அமைப்புகளுக்கு தெளிவான அதிகாரங்களை வரையறுக்கின்றன. நகர்ப்புறப் பகுதிகளுக்கு கேரள நகராட்சிச் சட்டமானது ஓர் ஒற்றை அடுக்கு அமைப்பைப் பின்பற்றுகிறது. இது கிராமப் பஞ்சாயத்துக்குச் சமமானதாகும். இந்த அமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிர்வாக, சட்ட மற்றும் நிதி அதிகாரங்களை திறமையான மையப்படுத்தப்படாத நிர்வாகத்தை உறுதி செய்வதற்காகக் கொண்டுள்ளன. தற்போது மாநில அரசின் திட்ட வடிவங்களில் சுமார் 40%ஐ உள்ளூர் அரசாங்கங்களுக்கு மாநில அரசானது ஒதுக்குகிறது. 2016ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் டிஜிட்டல் அரசாக கேரளமானது அறிவிக்கப்பட்டது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் அமைப்பின் 2019ஆம் ஆண்டு இந்திய லஞ்ச ஊழல் ஆய்வின் படி இந்தியாவிலுள்ள மிகக் குறைவான லஞ்ச ஊழலைக் கொண்ட மாநிலமாகக் கேரளம் கருதப்படுகிறது. பொது விவகாரப் பட்டியல்-2020 ஆனது இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலமாகக் கேரளத்தைத் தேர்ந்தெடுத்தது.
கேரளம் இரு முக்கியமான அரசியல் கூட்டணிகளைக் கொண்டுள்ளது. அவை இந்திய தேசியக் காங்கிரசால் தலைமை தாங்கப்பட்ட ஐக்கிய சனநாயக முன்னணி மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியால் (மார்க்சிஸ்ட்) தலைமை தாங்கப்பட்ட இடது சனநாயக முன்னணி ஆகியவையாகும். 2021ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலின் படி இடது சனநாயக முன்னணியானது ஆட்சி செய்யும் கூட்டணியாக உள்ளது. இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பிணறாயி விஜயன் முதலமைச்சராக உள்ளார். அதே நேரத்தில், இந்திய தேசியக் காங்கிரசின் வ. தா. சதீசன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இந்திய அரசியலமைப்பின் படி கேரளமானது சார்பாண்மை மக்களாட்சியின் ஒரு நாடாளுமன்ற முறையைக் கொண்டுள்ளது. குடியிருப்புவாசிகளுக்கு பொது வாக்குரிமையானது அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம்
சுதந்திரத்திற்குப் பிறகு இம்மாநிலமானது ஒரு சமூக சனநாயக நலத்திட்டப் பொருளாதாரமாக பேணப்பட்டது. மிக அதிக மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் "கேரள நிகழ்வு" அல்லது "கேரள மாதிரி வளர்ச்சி" மற்றும் ஒப்பீட்டளவில் குறைவான பொருளாதார வளர்ச்சியானது ஒரு வலிமையான சேவைத் துறையின் விளைவாக ஏற்பட்டுள்ளது. 2019-20இல் இம்மாநிலத்தின் மொத்தப் பொருட்கள் மற்றும் சேவை உற்பத்தியின் மதிப்புக்கு மூன்றாம் படி நிலைத் துறையானது சுமார் 63%யும், இரண்டாம் நிலைத் துறையானது 28%யும், மற்றும் முதன்மையான துறையான மூலப் பொருட்கள் சார்ந்த துறையானது 8%யும் பங்களித்தன. 1960 மற்றும் 2020க்கு இடையிலான காலகட்டத்தில் கேரளத்தின் பொருளாதாரமானது வேளாண்மைப் பொருளாதாரத்தில் இருந்து ஒரு சேவையை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகப் படிப்படியாக மாறியது.
இம்மாநிலத்தின் சேவைத் துறையானது இதன் வருவாயில் சுமார் 63%க்குப் பங்களிக்கிறது. இது விருந்தோம்பல் துறை, சுற்றுலா, ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ சேவைகள், புனிதப் பயணம், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்துத் துறை, நிதித்துறை மற்றும் கல்வி ஆகியவற்றை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டுள்ளது. கொச்சி கப்பல் கட்டும் தளம், கப்பல் கட்டுதல், எண்ணெய்ச் சுத்திகரிப்பு, மென்பொருள் தொழில் துறை, கடற்கரைக் கனிமத் தொழில் துறைகள், உணவுப் பதப்படுத்துதல், கடல் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் தொய்வையை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள் ஆகியவை தொழில் துறைக்குக் கீழான முதன்மையான பிரிவுகளாக உள்ளன. இம்மாநிலத்தின் முதன்மைத் துறையானது முக்கியமாகப் பணப் பயிர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தென்னை, தேநீர், காப்பி, மிளகு, இயற்கை மீள்மம், ஏலம், மற்றும் முந்திரி போன்ற பயிர்களின் தேசிய உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க அளவைக் கேரளமானது உற்பத்தி செய்கிறது. 1950களிலிருந்து உணவுப் பயிர்களின் அறுவடையானது கேரளத்தில் குறையத் தொடங்கியது.
கேரளத்தின் பொருளாதாரமானது அயல் நாடுகளில், முதன்மையாக வளைகுடா நாடுகளில், பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பெருமளவுக்குச் சார்ந்துள்ளது. அவர்கள் ஆண்டு தோறும் அனுப்பும் பணமானது இம்மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்குக்கும் மேல் பங்களிக்கிறது. 1970கள் மற்றும் தொடக்க கால 1980களின் போது வளைகுடா பெருக்க வள காலத்தில் இம்மாநிலமானது குறிப்பிடத்தக்க அளவுக்கான புலம் பெயர்வைக் கண்டது. 2012இல் அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் கேரளமானது தொடர்ந்து மிக அதிக புலம் பெயர் தொழிலாளர்களின் பணங்களைப் பெற்றது. அதன் மதிப்பு ஆகும். நாட்டிற்கு அனுப்பப்பட்ட யில் கிட்டத்தட்ட 16% இதுவாகும். 2015இல் கேரளத்தில் உள்ள வெளி நாடு வாழ் இந்தியர்களின் வைப்புத் தொகைகள் க்கும் மேல் உயர்ந்தது. வெளி நாடு வாழ் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்ட மொத்த பணமான யில் ஆறில் ஒரு பங்கு இதுவாகும். மாநிலத்தில் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது அதிக சதவீத அளவில் புலம் பெயர் தொழிலாளர்களின் வீடுகளை மலப்புறம் மாவட்டமானது கொண்டுள்ளது. கேரள அரசு திட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வானது மாநிலமானது அதன் செலவீனங்களுக்கு நிதியளிக்க புலம் பெயர் தொழிலாளர்களின் பணங்களைச் சார்ந்திருப்பதற்கு மாறாக பிற நம்பகமான வருமான ஆதாரங்களைக் காண வேண்டும் என்று பரிந்துரைத்தது.
2002 மார்ச் நிலவரப் படி, கேரளத்தின் வங்கித் துறையானது 3,341 உள்ளூர்க் கிளைகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கிளையும் 10,000 மக்களுக்குச் சேவையாற்றியது. தேசிய சராசரியான 16,000 பேர் என்பதை விட இது குறைவானதாகும்; இந்திய மாநிலங்களில் மூன்றாவது மிக அதிக வங்கிச் சேவை உட்புகலை இம்மாநிலம் கொண்டுள்ளது. 1 அக்டோபர் 2011 அன்று ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு வங்கி சேவையைக் கொண்டுள்ள முதல் மாநிலமாக நாட்டிலேயே கேரளம் உருவானது. 2007ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பின்மையானது 9.4%மாக மதிப்பிடப்பட்டது; பணியாளர்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்தாதது, இளைஞர்கள் குறைவான அளவுக்கே பணி புரியத் தகுதியானவர்களாக இருப்பது மற்றும் ஒரு குறைவான பெண் பணியாளர் பங்களிப்பு வீதமான வெறும் 13.5% போன்றவை நீடித்த பிரச்சினைகளாக உள்ளன. இதே போல் நோக்கு கூலிப் பழக்க வழக்கம் போன்றவை நீடித்த பிரச்சினைகளாக உள்ளன. 1999-2000 வாக்கில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழ்மை வீதங்களானவை முறையே 10.0% மற்றும் 9.6%மாகக் குறைந்தன.
2020-2021இல் அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கையானது ஆகும். மாநில அரசாங்கத்தின் வரி வருவாயானது (நடுவண் அரசின் வரிப் பகிர்வு நீங்கலாக) யாக 2020-21இல் இருந்தது. 2019-20இல் இருந்த யை விட இது அதிகமாகும். கேரள அரசாங்கத்தின் வரி சாராத வருவாய்களானவை (நடுவண் அரசின் வரிப் பகிர்வு நீங்கலாக) 2020-2021இல் யை அடைந்தன. எனினும், மொத்த மாநில உற்பத்தியுடன் ஒப்பிடும் போது கேரளத்தின் மிக அதிக வரி வீதமானது நீடித்த வரவு செலவு பற்றாக்குறைகள் மற்றும் அரசாங்கக் கடனின் நீடித்திருக்க இயலாத நிலைகளைக் குறைக்கவில்லை. சமூக சேவைகள் மீதும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2006இல் ஒரு அதிகபட்ச அளவாக மொத்தம் 223 ஹர்த்தால்களை (வேலை நிறுத்தம்/கடையடைப்பு) இம்மாநிலத்தினர் நடத்தினர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. க்கும் மேலான வருவாய் இழப்புக்கு இது வழி வகுத்தது. தேசிய உள்நாட்டு உற்பத்தி 3% வளர்ச்சியை விடக் கேரளத்தின் உள்நாட்டு உற்பத்தியின் 10% சதவீத வளர்ச்சியானது அதிகமானதாகும். 2013இல் தேசிய சராசரியான 5% வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது கேரளத்தின் மூலதன செலவீனத்தின் 30% வளர்ச்சியானது அதிகமாகும். தேசிய அளவான 15%துடன் ஒப்பிடும் போது இருசக்கர வாகனங்களை வைத்திருப்போரின் எண்ணிக்கையானது கேரளத்தில் 35% அதிகரித்தது. ஆசிரியர்-மாணவர் வீதமானது 50% அதிகரித்து 2:100லிருந்து 4:100ஆக வளர்ச்சி கண்டது.
கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் நிதி அமைப்பு ஆகும். அரசின் வருவாய் தவிர்த்து உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி திரட்டுவதற்கு இது நடத்தப்படுகிறது. இம்மாநிலத்தின் ஒட்டு மொத்த உட்கட்டமைப்பு மேம்பாட்டை இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. பெரும் கேரள விற்பனை விழாவானது 2007இல் தொடங்கப்பட்டது. கேரளத்தில் உள்ள ஒன்பது நகரங்களில் 3,000க்கும் மேற்பட்ட கடைகளை இது கொண்டுள்ளது. பெரும் வரிச் சலுகைகள், மதிப்புக் கூட்டு வரிப் பணம் திருப்பித் தரப்படுதல் மற்றும் பெரும் அளவிலான பரிசுகளுடன் இது நடத்தப்படுகிறது. திருவனந்தபுரத்திலுள்ள லூலு பன்னாட்டு வணிக வளாகமானது இந்தியாவிலுள்ள மிகப் பெரிய வணிக வளாகமாகும்.
பல சாதனைகள் படைக்கப்பட்ட போதிலும் கேரளமானது தகவுப் பொருத்தமின்றி படித்த பெண்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அதிக அளவிலான வேலை வாய்ப்பின்மை, ஓர் அதிக அளவிலான உலகளாவிய அனுபவம் பெறுவதற்கான வாய்ப்பு மற்றும் அதிக அளவில் பாதிக்கப்படும் சுற்றுச்சூழல் போன்ற பல சவால்களை எதிர் கொண்டு வருகிறது.
தொழில் துறைகள்
பாரம்பரியத் தொழில் துறைகளின் உற்பத்திப் பொருட்களான தும்பு, தறிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் சுமார் 10 இலட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்றன. உலகளாவிய மொத்த வெள்ளைத் தேங்காய் நார் உற்பத்தியில் 60ஐக் கேரளமானது வழங்குகிறது. இந்தியாவின் முதல் தேங்காய் நார் தொழிற்சாலையானது ஆலப்புழாவில் 1859-60இல் அமைக்கப்பட்டது. 1959இல் இங்கு மத்திய தேங்காய் நார் ஆய்வு மையமானது நிறுவப்பட்டது. இந்தியாவின் சிறு தொழில் துறை மேம்பாட்டுக்கான வங்கியால் நடத்தப்பட்ட 2006-2007 கணக்கெடுப்பின் படி கேரளத்தில் 14,68,104 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 30,31,272 மக்களை பணியில் அமர்த்தியுள்ளன. கேரள மாநிலத் தொழில் துறை மேம்பாட்டு நிறுவனமானது 650க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் பெரிய உற்பத்தி நிறுவனங்களைக் கேரளத்தில் ஊக்குவித்துள்ளது. 72,500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. மாநில மொத்த உற்பத்திக்கு 0.3% பங்களிக்கும் சுரங்கத் துறையானது இல்மனைட்டு, வெண்களிமண், பாக்சைட்டு, சிலிக்கா, குவார்ட்சு, ருடில், சிர்கோன், மற்றும் சில்லிமனைட் ஆகியவற்றை எடுப்பதை உள்ளடக்கியதாக உள்ளது. சுற்றுலாத் துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, வங்கித் துறை, கப்பல் கட்டுமானம், எண்ணெய் சுத்திகரிப்பு, உட்கட்டமைப்பு, உற்பத்தித் துறை, வீட்டுத் தோட்டங்கள், விலங்கு வளர்ப்பு மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம் ஆகியவை பிற முக்கியமான துறைகளாக உள்ளன.
வேளாண்மை
கேரளத்தில் வேளாண்மையில் முக்கியமான மாற்றமானது 1970களில், இந்தியா முழுவதும் அரிசிக்கான தேவை அதிகரிப்பு மற்றும் தேவைப்பட்ட பணியாளர்கள் குறைவாகக் கிடைத்தது ஆகியவற்றின் காரணமாக அரிசி உற்பத்தியானது வீழ்ச்சி அடைந்த போது ஏற்பட்டது. இதன் பின் விளைவாக அரிசி உற்பத்தியில் முதலீடானது குறைந்தது. நிலத்தின் ஒரு பெரும் பகுதிகளானவை நிலையான மரப் பயிர்கள் மற்றும் பருவ காலப் பயிர்களின் அறுவடைக்கு மாற்றப்பட்டது. பண்ணைத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, நிலத்தின் அதிகப்படியான விலை மற்றும் நிலங்களின் குத்தகை விலையானது பொருளாதார ரீதியாக கட்டுபடியாகததாக இருந்தது ஆகியவற்றின் காரணமாக பயிர்கள் மூலம் கிடைக்கும் இலாபமானது வீழ்ச்சி அடைந்தது. கேரளத்தில் உள்ள குடும்பங்களில் வெறும் 27.3% மட்டுமே தங்களது வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையைச் சார்ந்துள்ளன. இந்தியாவில் உள்ள மிகக் குறைந்த வீதத்தில் இதுவும் ஒன்றாகும்.
மொத்த தேசிய உற்பத்தியில் கருப்பு மிளகின் 97%யும், இயற்கை மீள்மத்தில் 85%யும் கேரளமானது உற்பத்தி செய்கிறது. ஏலக்காய், வெனிலா, இலவங்கப்பட்டை, மற்றும் சாதிக்காய் உள்ளிட்ட மசாலாப் பொருட்கள், தென்னை, தேநீர், காப்பி, மற்றும் முந்திரி ஆகியவை முதன்மையான வேளாண்மைப் பொருட்களாக உள்ளன. இந்தியாவின் ஏற்றுமதித் தரம் வாய்ந்த சுமார் 80% முந்திரிப் பருப்புகள் கொல்லத்தில் தயார் செய்யப்படுகின்றன. முக்கியமான பணப் பயிராக தென்னை உள்ளது. இந்தியாவில் தேங்காய் அறுவடையின் பரப்பளவில் கேரளமானது முதலிடத்தைப் பெறுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த ஏலக்காய்களில் சுமார் 90% கேரளத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த காப்பியில் சுமார் 20% கேரளத்தில் இருந்து பெறப்படுகின்றன. முக்கியமான வேளாண்மை முதன்மை உணவாக அரிசி உள்ளது. விரிவான விவசாய நிலங்களில் பல்வேறு வகையான அரிசிகள் வளர்க்கப்படுகின்றன. வேளாண்மைத் துறையின் குறிப்பிடத்தக்க பகுதியை வீட்டுத் தோட்டங்கள் கொண்டுள்ளன.
மீன் பிடித் தொழில்
590 கிலோ மீட்டர் நீளக் கடற்கரைப் பட்டை, 4 இலட்சம் எக்டேர் பரப்பளவு உள்ள உள்நாட்டு நீர் வளங்கள் மற்றும் தோராயமாக 2,20,000 செயல்பாட்டில் உள்ள மீனவர்கள் ஆகியோருடன் இந்தியாவில் மீன் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகக் கேரளம் திகழ்கிறது. 2003-04 அறிக்கைகளின் படி சுமார் 11 இலட்சம் மக்கள் மீன் பிடித்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து தங்களது வாழ்வாதாரத்தைப் பெறுகின்றனர். தொடர்பான நடவடிக்கைகளில் உலர்த்துதல், பதனம் செய்தல், பொருட்களைப் பெட்டிகளுக்குள் வைத்தல், ஏற்றுமதி செய்தல் மற்றும் மீன்களை இடம் மாற்றுதல் ஆகியவை அடங்கும். 2003-04இல் மீன் பிடித் துறையின் வருடாந்திரப் பலனானது 6,08,000 டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்தப் பொருளாதாரத்துக்கு சுமார் 3% பங்கை இது அளிக்கிறது. 2006இல் மொத்த இந்தியக் கடல் மீன் பிடிப்பில் சுமார் 22%மானது கேரளத்திலிருந்து பெறப்பட்டது. தென் மேற்குப் பருவக் காற்றின் போது கடற்கரையை ஒட்டி ஒரு கை விடப்பட்ட மணல் திட்டானது உருவாகிறது. இது அமைதியான பெருங்கடல் நீருக்குக் காரணமாகிறது. மீன் பிடித் துறையின் உற்பத்தியை அதிகமாக்குகிறது. இந்நிகழ்வானது உள்ளூர் அளவில் சக்கரா என்று அழைக்கப்படுகிறது. இந்நீர்களானவை ஒரு பெரும் வேறுபட்ட வகையிலான மீன்களைக் கொடுக்கின்றன: வெட்ட வெளிக் கடல் மீன்கள் 59%, கடற்கரையோர மீன்கள் 23%, மற்றும் ஓடுடைய கணுக்காலிகள், மெல்லுடலிகள் மற்றும் பிற 18%மாக உள்ளன. 1999-2000ஆம் ஆண்டின் ஒரு மதிப்பீட்டின் படி சுமார் 10 இலட்சம் மீனவர்கள் ஆண்டு தோறும் 6,68,000 டன்களைப் பிடிக்கின்றனர். 590 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையை ஒட்டி 222 மீனவக் கிராமங்கள் உள்ளன. மேலும், 113 மீனவக் கிராமங்கள் கடற்கரையில் இருந்து உள் நிலத்தில் அமைந்துள்ளன.
போக்குவரத்து
சாலைகள்
கேரளமானது 3,31,904 கிலோ மீட்டர்கள் நீளச் சாலைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மொத்த சாலைகளில் இது 5.6%ஆக உள்ளது. 1,000 மக்களுக்கு சுமார் 9.94 கிலோ மீட்டர் நீளச் சாலை என இது உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது நாட்டின் சராசரியானது 4.87 கிலோ மீட்டர்கள் ஆகும். கேரளத்தின் சாலைகளில் 1,812 கிலோ மீட்டர் நீளத் தேசிய நெடுஞ்சாலை; நாட்டின் மொத்த தேசிய நெடுஞ்சாலைகளில் இது 1.6%, 4,342 கிலோமீட்டர் நீள மாநில நெடுஞ்சாலை; நாட்டின் மொத்த மாநில நெடுஞ்சாலைகளில் இது 2.5%, 27,470 கிலோ மீட்டர் நீள மாவட்டச் சாலைகள்; நாட்டின் மொத்த மாவட்டச் சாலைகளில் இது 4.7%, 33,201 கிலோ மீட்டர் நீள நகர்ப் புறச் சாலைகள்; நாட்டின் மொத்த நகர்ப் புறச் சாலைகளில் இது 6.3%, மற்றும் 1,58,775 கிலோ மீட்டர் நீள கிராமப் புறச் சாலைகள்; நாட்டின் மொத்த கிராமப் புறச் சாலைகளில் இது 3.8% ஆகும். கேரளத்தின் மாவட்டங்களில் மொத்தத்தில் அதிக நீளமுடைய சாலைகளைக் கோட்டயமானது கொண்டுள்ளது. அதே நேரத்தில், வயநாடானது மொத்தத்தில் மிகக் குறைவான நீளமுடைய சாலைகளைக் கொண்டுள்ளது. கேரளத்தின் பெரும்பாலான மேற்குக் கடற்கரையானது தேசிய நெடுஞ்சாலை 66 (இது முன்னர் தேசிய நெடுஞ்சாலை 17 மற்றும் 47 என்றிருந்தது) மூலமாக அடையக் கூடியதாக உள்ளது. கேரளத்தின் கிழக்குப் பகுதியானது மாநில நெடுஞ்சாலைகள் மூலம் அடையக் கூடியதாக உள்ளது. கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதிக் குழுவின் கீழ் மலை மற்றும் கடற்கரை நெடுஞ்சாலைகளுக்கான புதிய திட்டங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை 66 ஆனது 1,622 கிலோமீட்டர்களுடன் மிக நீளமான சாலையாக உள்ளது. இது கன்னியாகுமரியை மும்பையுடன் இணைக்கிறது. காசர்கோட்டில் தலப்பாடி வழியாக கேரளத்துக்குள் நுழைகிறது. கண்ணூர், கோழிக்கோடு, மலப்புறம், குருவாயூர், கொச்சி, ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகியவற்றின் வழியாகச் சென்று, பிறகு தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. பாலக்காடு மாவட்டமானது பொதுவாகக் கேரளத்தின் நுழைவாயில் என்று குறிப்பிடப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பாலக்காட்டுக் கணவாயின் அமைவிடம் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதன் வழியாகவே கேரளத்தின் வடக்கு (மலபார்) மற்றும் தெற்கு (திருவாங்கூர்) பகுதிகளானவை எஞ்சிய இந்தியாவுடன் சாலை மற்றும் இருப்புப் பாதை வழியாக இணைக்கப்பட்டுள்ளன. இம்மாநிலத்தின் மிகப் பெரிய சோதனைச் சாவடியானது தேசிய நெடுஞ்சாலை 544இல் கேரளம் மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையில் எல்லைப் பட்டணமான வாளையாரில் அமைந்துள்ளது. கேரளத்தின் வடக்கு மற்றும் நடு மாவட்டங்களைப் பெருமளவிலான பொது மற்றும் வணிகப் போக்குவரத்தானது இதன் வழியாக அடைகிறது.
பொதுப் பணித் துறையானது மாநில நெடுஞ்சாலைகளின் அமைப்பு மற்றும் முக்கியமான மாவட்டச் சாலைகளை பேணுவதற்கும், விரிவாக்குவதற்கும் பொறுப்பாக உள்ளது. கேரள மாநிலப் போக்குவரத்துத் திட்டமானது கேரளத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளைப் பேணுவதற்கும், விரிவாக்குவதற்கும் பொறுப்பாக உள்ளது. இதில் புவியியல் தகவல் முறைமையை அடிப்படையாகக் கொண்ட சாலைத் தகவல் மற்றும் மேலாண்மைத் திட்டமும் அடங்கும். இது ஒரு சில முக்கியமான மாவட்டச் சாலைகளையும் கூட மேற்பார்வையிடுகிறது. கேரளத்தில் போக்குவரத்து நெரிசலானது ஒவ்வொரு ஆண்டும் 10 - 11% என்ற வீதத்தில் அதிகரித்து வருகிறது. அதிகப் படியான நெரிசல் மற்றும் சாலைகள் மீதான அழுத்ததிற்கு இது காரணமாகியுள்ளது. போக்குவரத்து நெரிசல் அடர்த்தியானது தேசியச் சராசரியைப் போல் கிட்டத்தட்ட நான்கு மடங்காக உள்ளது. மாநிலத்தின் அதிகப் படியான மக்கள் தொகையை இது பிரதிபலிக்கிறது. கேரளத்தின் வருடாந்திர மொத்த சாலை விபத்துகளானவை நாட்டிலேயே மிக அதிகமானவற்றில் ஒன்றாக உள்ளது. குறுகலான சாலைகள் மற்றும் பொறுப்பற்ற முறையில் வண்டிகளை இயக்குதல் ஆகியவை விபத்துகளுக்கான முதன்மையான காரணங்களாக உள்ளன. கேரளத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் நாட்டிலேயே மிகக் குறுகலானவற்றில் ஒன்றாகும். எதிர் காலத்திற்கும் இது தொடரும் என்று எண்ணப்படுகிறது. ஏனெனில், குறுகலான தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அனுமதி அளிக்கும் ஒரு விலக்கை மாநில அரசாங்கமானது பெற்றுள்ளது. கேரளத்தில் நெடுஞ்சாலைகள் 45 மீட்டர் அகலத்துடன் உள்ளன. மற்ற மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் 60 மீட்டர் அகலத்துடன், குறைந்தது நான்கு வழிச் சாலைகளாக, ஆறு அல்லது எட்டு வழிச் சாலைகளாக உள்ளன. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை அமைப்பானது கேரளத்தில் மேம்பட்ட நெடுஞ்சாலைகளுக்கான அரசியல் பொறுப்பேற்பு என்பது இல்லாத காரணத்தால் நெடுஞ்சாலை மேம்பாட்டில் பிற மாநிலங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்று கேரள மாநில அரசாங்கத்தை அச்சுறுத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டின் நிலவரப் படி, கேரளமானது நாட்டிலேயே மிக அதிக சாலை விபத்து வீதங்களைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைகளிலேயே உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விபத்துகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன.
கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம்
கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகமானது அரசால் நடத்தப்படும் சாலைப் போக்குவரத்துக் கழகம் ஆகும். நாட்டின் மிகப் பழமையான மாநில அரசால் இயக்கப்படும் பொதுப் பேருந்து போக்குவரத்துச் சேவைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் தொடக்கமானது திருவாங்கூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறைக்கு தடயமிடப்படுகிறது. சித்திர திருநாளால் தலைமை தாங்கப்பட்ட திருவாங்கூர் அரசாங்கமானது 1937இல் ஒரு பொது சாலைப் போக்குவரத்து அமைப்பை நிறுவ முடிவு செய்த போது இது உருவாக்கப்பட்டது.
கழகமானது திருவனந்தபுரத்தில் (கேரளத்தின் தலைநகரம்) தலைமையகத்துடன் மூன்று பிரிவுகளாகப் (வடக்கு, நடு மற்றும் தெற்கு) பிரிக்கப்பட்டுள்ளது. அட்டவணையிடப்பட்ட தினசரிச் சேவைகளானவை 6,241 பேருந்துகளைக் கொண்டு 6,389 வழித்தடங்களில் 12 இலட்சம் கிலோமீட்டர்களில் இருந்து 14,22,546 கிலோமீட்டர்களுக்கு இயக்கப்படுகின்றன. தற்போது கழகமானது 5,373 பேருந்துகளை 4,795 காலமிடப்பட்ட அட்டவணை வழிகளில் இயக்குகிறது.
கேரள நகர்ப்புறச் சாலைப் போக்குவரத்துக் கழகமானது 2015ஆம் ஆண்டு கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் நகர்ப்புறப் போக்குவரத்துடன் தொடர்புடைய விவகாரங்களை மேலாண்மை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. 12 ஏப்பிரல் 2015 அன்று கொச்சியின் தேவரா என்ற இடத்தில் இது தொடங்கப்பட்டது.
இருப்பூர்தி நிறுவன அமைப்பு
இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலமானது மாநிலத்தின் அனைத்து இருப்புப் பாதை வழித் தடங்களையும் இயக்குகிறது. உயர் நில மாவட்டங்களான இடுக்கி மற்றும் வயநாட்டைத் தவிர்த்து பெரும்பாலான முக்கியமான பட்டணங்கள் மற்றும் நகரங்களை இணைக்கிறது. தென்னக இரயில்வேயின் ஆறு பிரிவுகளில் இரு பிரிவுகளால் இம்மாநிலத்திலுள்ள இருப்புப் பாதை அமைப்பானது கட்டுப்படுத்தப்படுகிறது. அவை திருவனந்தபுரத்தைத் தலைமையகமாகக் கொண்ட திருவனந்தபுரம் தொடருந்து கோட்டம் மற்றும் பாலக்காட்டை தலைமையகமாகக் கொண்ட பாலக்காடு தொடருந்து கோட்டம் ஆகியவையாகும். இம்மாநிலத்தின் மிகப் பரபரப்பான தொடருந்து நிலையமாக திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையம் திகழ்கிறது. கேரளத்தின் முக்கியமான தொடருந்து நிலையங்கள் பின்வருமாறு:
மாநிலத்தில் முதல் இருப்புப் பாதையானது திரூர் முதல் சாலியம் (கோழிக்கோடு) வரை போடப்பட்டது. மாநிலத்தின் மிகப் பழமையான தொடருந்து நிலையமானது திரூரில் உள்ளது. இது தானூர், பரப்பனங்காடி, வள்ளிக்குன்னு ஊராட்சி, மற்றும் கடலுண்டி வழியாகச் செல்கிறது. அதே ஆண்டு இருப்புப் பாதையானது திரூரில் இருந்து குட்டிப்புரம் வரை திருநாவாய் வழியாக விரிவாக்கப்பட்டது. 1862இல் பட்டம்பி வழியாக குட்டிப்புரம் முதல் ஷொர்ணூர் வரை மீண்டும் விரிவாக்கப்பட்டது. இது ஷொறணூர் சந்திப்பின் நிறுவுதலுக்குக் காரணமானது. ஷொறணூர் சந்திப்பு மாநிலத்தின் மிகப் பெரிய தொடருந்து சந்திப்பாகவும் உள்ளது. 12 மார்ச்சு 1861 அன்று சாலியம்–திரூர், 1862இல் திரூர்-ஷொர்ணூர், 1902இல் ஷொர்ணூர்-கொச்சி துறைமுகப் பிரிவு, 1 சூலை 1904இல் கொல்லம்-செங்கோட்டை, 4 சனவரி 1918 அன்று கொல்லம்-திருவனந்தபுரம், 1927இல் நிலம்பூர்-ஷொர்ணூர், 1956இல் எர்ணாகுளம்-கோட்டயம், 1958இல் கோட்டயம்-கொல்லம், 1979இல் திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, 1994இல் திருச்சூர்-குருவாயூர் பிரிவு ஆகியவற்றுக்கு இடையிலான முக்கியமான இருப்புப் பாதைப் போக்குவரத்தானது நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள மிகக் குறுகலான அகல இருப்புப் பாதைகளில் நிலம்பூர்-ஷொர்ணூர் இருப்புப் பாதையும் ஒன்றாகும். நிலம்பூர் தேக்குகள் மற்றும் அங்காடிபுரம் லட்டேரைட்டுகளை கோழிக்கோட்டில் உள்ள துறைமுகம் வழியாக ஐக்கிய இராச்சியத்திற்குக் கொண்டு செல்வதற்காகப் பிரித்தானிய சகாப்தத்தின் போது போக்குவரத்துக்காக இது நிறுவப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பாலக்காட்டுக் கணவாயின் அமைவிடமானது ஷொறணூர் சந்திப்பை முக்கியமான ஒன்றாக ஆக்குகிறது. ஏனெனில், இந்தியாவின் தென் மேற்குக் கடற்கரையை (மங்களூர்) தென் கிழக்குக் கடற்கரையுடன் (சென்னை) இது இணைக்கிறது.
கொச்சி மெட்ரோ
கொச்சி மெட்ரோவானது கேரளத்தில் உள்ள ஒரே மெட்ரோ தொடருந்து அமைப்பாகும். இதன் கட்டுமானம் 2012இல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத் திட்டத்திற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டது. கொச்சி மெட்ரோவானது பிரான்சின் அல்ஸ்டோம் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட 65 மீட்டர் நீள தொடருந்தைப் பயன்படுத்துகிறது. சமிக்ஞை அனுப்புதல் மற்றும் தொலைத் தொடர்புக்கு ஒரு தொடர்பை அடிப்படையாகக் கொண்ட தொடருந்து கட்டுப்பாட்டைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மெட்ரோ அமைப்பு இதுவாகும். அக்டோபர் 2017இல் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்தியாவில் "சிறந்த நகர்ப்புறப் போக்குவரத்துத் திட்டம்" என கொச்சி மெட்ரோவானது ஒவ்வொரு ஆண்டும் அமைச்சகத்தால் நடத்தப்படும் நகர்ப்புறப் போக்குவரத்து இந்தியா எனும் பன்னாட்டு மாநாட்டின் ஒரு பகுதியாக இது பெயரிடப்பட்டது.
வானூர்தி நிலையங்கள்
கேரளமானது நான்கு பன்னாட்டு வானூர்தி நிலையங்களைக் கொண்டுள்ளது:
மதராஸ் மாகாணத்தின் கீழ் நிறுவப்பட்ட கொல்லம் வானூர்தி நிலையமானது கேரளத்தின் முதல் வானூர்தி நிலையம் ஆகும். ஆனால் இது தற்போது மூடப்பட்டு விட்டது. கண்ணூரானது வணிக விமானங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஓடு பாதையை 1935ஆம் ஆண்டிலேயே கொண்டிருந்தது. அப்போது டாடா ஏர்லைன்ஸானது வாராந்திர விமானங்களை மும்பை மற்றும் திருவனந்தபுரத்துக்கு இடையே இயக்கியது. இவ்விமானங்கள் கோவா மற்றும் கண்ணூரில் நின்று வந்தன. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தால் மேலாண்மை செய்யப்படும் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையமானது தென்னிந்தியாவிலுள்ள மிகப் பழமையான, தற்போது பயன்பாட்டில் இருக்கும் வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். 1988ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையமானது கேரளத்தில் உள்ள இரண்டாவது மிகப் பழமையான, தற்போது பயன்பாட்டில் உள்ள வானூர்தி நிலையம் ஆகும். மலபார் பகுதியில் இதுவே மிகப் பழமையானதாகும். மாநிலத்தின் மிகவும் பரபரப்பான வானூர்தி நிலையம் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்தியாவின் ஏழாவது பரபரப்பான வானூர்தி நிலையம் இதுவாகும். முழுவதும் சூரிய ஆற்றலால் மின் சக்தி பெறும் உலகின் முதல் வானூர்தி நிலையமும் இதுவாகும். சாம்பியன் ஆப் தி எர்த் என்ற மதிப்பு மிக்க விருதை இது வென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையால் வழங்கப்படும் மிக உயரிய சுற்றுச் சூழல் மரியாதை இதுவாகும். தனது பங்குகளை பொதுச் சந்தையில் விற்பனை செய்யும் நிறுவனமாக அமைக்கப்பட்ட முதல் இந்திய வானூர்தி நிலையம் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். 30 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10,000 வெளிநாடு வாழ் இந்தியர்களால் இது நிதி பெற்றுள்ளது. குடிசார் வானூர்தி நிலையங்கள் தவிர கொச்சியானது ஐஎன்எஸ் கருடா எனும் பெயருடைய ஒரு கடற்படை வானூர்தி நிலையத்தையும் கொண்டுள்ளது. இந்திய வான் படையின் தெற்கு வானூர்தித் தலைமையகத்துடன் குடிசார் வசதிகளைத் திருவனந்தபுரம் வானூர்தி நிலையமானது பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த வசதிகள் கேரளத்துக்கு வருகை புரியும் மத்திய அரசாங்க முக்கிய நபர்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
நீர்வழிப் போக்குவரத்து
கேரளமானது இரண்டு முக்கியத் துறைமுகங்கள், நான்கு இடை நிலைத் துறைமுகங்கள் மற்றும் 13 சிறிய துறைமுகங்களைக் கொண்டுள்ளது. இதில் நான்கு குடியேற்ற சோதனை வசதிகளைக் கொண்டவை ஆகும். மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் கொச்சி ஆகும். இதன் பரப்பளவு 8.27 சதுர கிலோமீட்டர் ஆகும். தற்போது முக்கியமான துறைமுகம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள விழிஞ்ஞம் பன்னாட்டுத் துறைமுகத்தின் முதல் கட்டம் மட்டும் முடிக்கப்பட்டுள்ளது. பிற கட்டங்கள் கட்டுமானத்தின் கீழ் உள்ளன. பேப்பூர், கொல்லம், மற்றும் அழீக்கோடு உள்ளிட்டவை பிற இடை நிலைத் துறைமுகங்கள் ஆகும். மஞ்சேஸ்வரம், காசர்கோடு, நீலேஸ்வரம், கண்ணூர், தலச்சேரி, வடகரை, பொன்னானி, முனம்பம், மனக்கோடம், ஆலப்புழா, காயம்குளம், நீண்டகரை, மற்றும் வலியத்துரா உள்ளிட்டவை சிறிய துறைமுகங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள எஞ்சியவை ஆகும். கேரள கடல் சார் அமைப்பானது நீண்டகரையில் அமைக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்ட துணை மையத்தைக் கொடுங்கல்லூரிலும் கூட கொண்டுள்ளது. மாநிலமானது ஏராளமான உப்பங்கழிகளைக் கொண்டுள்ளது. வணிக ரீதியான உள்நாட்டுப் பயணத்திற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. போக்குவரத்துச் சேவைகளானவை முதன்மையாக நாட்டுப்புறப் படகுகள் மற்றும் பயணிக் கப்பல்களால் கொடுக்கப்படுகின்றன. மாநிலத்தில் 67 பயணம் மேற்கொள்ள கூடிய ஆறுகள் உள்ளன. உள்நாட்டு நீர்வழிகளின் மொத்த நீளமானது 1,687 கிலோ மீட்டர்கள் ஆகும். உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை விரிவாக்குவதற்கு முதன்மையான தடங்கல்களாக உள்ளவை சேற்றுப் படிவால் உருவாகும் ஆழமின்மை, பயண அமைப்புகள் முறையாகப் பேணப்படாதது மற்றும் கரைப் பாதுகாப்பு, நீர் பதுமராகச் செடிகளின் அதிகப் படியான வளர்ச்சி, நவீன உள்நாட்டுப் படகு முனையங்கள் இல்லாதது, மற்றும் சரக்குகளைக் கையாளும் அமைப்பு இல்லாதது ஆகியவை ஆகும்.
616 கிலோமீட்டர்கள் நீள மேற்குக் கடற்கரைக் கால்வாயானது மாநிலத்தின் மிக நீளமான நீர்வழியாக உள்ளது. இது காசர்கோட்டை பூவாருடன் இணைக்கிறது. இது ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 41 கிலோமீட்டர்கள் நீளமுடைய காசர்கோடு-நீலேஸ்வரம் பிரிவு, 188 கிலோமீட்டர்கள் நீளமுடைய நீலேஸ்வரம்-கோழிக்கோடு பிரிவு, 160 கிலோ மீட்டர்கள் நீளமுடைய கோழிக்கோடு-கோட்டபுரம் பிரிவு, 168 கிலோமீட்டர்கள் நீளமுடைய தேசிய நீர்வழி 3 (கோட்டப்புரம்-கொல்லம் பிரிவு) மற்றும் 74 கிலோமீட்டர்கள் நீளமுடைய கொல்லம்-விழிஞ்ஞம் பிரிவு. கானல்லி கால்வாயானது மேற்குக் கடற்கரைக் கால்வாயின் ஒரு பகுதியாகும். இது கோழிக்கோட்டைக் கொச்சியுடன் பொன்னானி வழியாக இணைக்கிறது. வடகரையில் தொடங்கி மலப்புறம் மற்றும் திருச்சூர் மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. அப்போது மலபாரின் மாவட்ட ஆட்சித் தலைவரான எச். வி. கானல்லியின் ஆணையின் கீழ் 1848ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கல்லாயி துறைமுகத்திலிருந்து மலபாரின் உள் நிலப்பகுதிகளுக்குக் குற்றியாடி மற்றும் கோரபுழா ஆற்று அமைப்புகள் வழியாகப் பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்காக தொடக்கத்தில் இது தொடங்கப்பட்டது. கோழிக்கோடு மற்றும் கொச்சிக்கு இடையில் பொன்னானி வழியாக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சரக்குப் போக்குவரத்துக்கான முதன்மையான நீர் வழியாக இது திகழ்ந்தது. ஆலப்புழா-சங்கனாச்சேரி கால்வாய், ஆலப்புழா-கோட்டயம்-அதிரம்புழா கால்வாய், மற்றும் கோட்டயம்-வைக்கம் கால்வாய் உள்ளிட்டவை கேரளத்தில் உள்ள பிற முக்கியமான நீர் வழிகள் ஆகும்.
கொச்சி கடல்வழி மெற்றோ
கொச்சி கடல் வழி மெட்ரோவானது ஓர் இணைத்து அமைக்கப்பட்ட நீர்வழிப் போக்குவரத்து அமைப்பாகும். இது இந்தியாவின் கேரளத்தின் பெரிய கொச்சி பகுதிக்குச் சேவையாற்றுகிறது. இந்தியாவில் முதல் நீர்வழி மெட்ரோ அமைப்பு இதுவாகும். ஆசியாவிலேயே இந்த அளவுடைய இணைத்து அமைக்கப்பட்ட முதல் நீர் வழிப் போக்குவரத்து அமைப்பாக இது உள்ளது. கொச்சியின் 10 தீவுச் சமுகங்களை முதன்மை நிலப்பரப்புடன் 78 மின்கலங்களால் இயக்கப்படும் மின் படகுகளின் ஒரு குழு மூலம் இது இணைக்கிறது. 38 முனையங்கள் மற்றும் 16 வழிகளுடன் 76 கிலோமீட்டர் நீளத்திற்கு இவை சேவையாற்றுகின்றன. இது கொச்சி மெட்ரோவுடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வாய்ப்பானது வரம்புக்குட்பட்டதாக இருக்கும் ஆறுகளில் புறநகர்ப் பகுதிகளுக்கு ஒரு சேவையாக இது உள்ளது.
மக்கள் தொகை ஆய்வு
இந்தியாவின் மக்கள் தொகையில் 2.8% பேருக்குக் கேரளமானது வீடாக உள்ளது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தியானது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 859 பேர் என்று உள்ளது. தேசிய மக்கள் அடர்த்தி சராசரியான ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 370 பேர் என்று உள்ளதை விட இம்மாநிலத்தின் நிலமானது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 2011ஆம் ஆண்டு நிலவரப் படி கேரளத்தில் உள்ள மிக அதிக மக்கள் தொகையுடைய நகரமாகத் திருவனந்தபுரம் திகழ்கிறது. இம்மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி வீதமானது இந்தியாவிலேயே மிகக் குறைவானதாக உள்ளது. 2011இல் தசாப்த வளர்ச்சி வீதமாக 4.9% இருந்தது. இது ஒட்டு மொத்த இந்திய சராசரியான 17.6%இல் மூன்றில் ஒரு பங்கையும் விட குறைவாகும். 1951 மற்றும் 1991க்கு இடையில் கேரளத்தின் மக்கள் தொகையானது இரு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்தது. 1.56 கோடி மக்களைச் சேர்த்தது. 1991இல் 2.91 கோடி மக்கள் தொகையை அடைந்தது. 2011 வாக்கில் மக்கள் தொகையானது 3.33 கோடியாக இருந்தது. கேரளத்தின் கடற்கரைப் பகுதிகளானவை மிக அடர்த்தியான மக்கள் தொகையை ஒரு சதுர கிலோமீட்டருக்கு 2022 பேர் என்று கொண்டுள்ளன. மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்கள் அடர்த்தியைப் போல் இது 2.5 மடங்கு ஆகும். கிழக்குக் குன்றுகள் மற்றும் மலைகளை ஒப்பீட்டளவில் அடர்த்தியற்ற மக்கள் தொகை உடையதாக இது உருவாக்குகிறது. இந்தியாவில் இரண்டாவது மிக அதிக நகரமயமாக்கப்பட்ட முக்கிய மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தில் 47.7% பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். சுமார் 3.18 கோடி கேரளத்தவர்கள் முதன்மையாக மலையாளிகளாக உள்ளனர். இம்மாநிலத்தின் பூர்வகுடி பழங்குடியின ஆதிவாசிகள் 3,21,000 பேராக மாநிலத்தின் மக்கள் தொகையில் 1.1%ஆக உள்ளனர். இவர்கள் கிழக்குப் பகுதியில் செறிந்துள்ளனர்.
பாலினம்
கேரளத்தில் தாய் வழி மரபுரிமைப் பாரம்பரியம் உள்ளது. இங்கு தாய் தான் குடும்பத்தின் தலைவராக உள்ளார். இதன் விளைவாகக் கேரளப் பெண்கள் சமூகத்தில் மிக அதிக உயர் நிலையையும், செல்வாக்கையும் கொண்டுள்ளனர். சில செல்வாக்கு மிக்க சாதிகளில் இது பொதுவானதாகும். மகள்கள் மீது வைக்கப்படும் மதிப்புக்கு இதுவும் ஒரு காரணியாகும். கிறித்தவ மதப் பரப்புரைக் குழுக்களும் மலையாளிப் பெண்கள் மீது தாக்கம் கொண்டுள்ளனர். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அவர்கள் பள்ளிகளைத் தொடங்கியுள்ளனர். கல்வி மற்றும் வருமானம் உள்ள வேலைவாய்ப்புகள் போன்ற பெண்களுக்கான வாய்ப்புகளானவை பொதுவாகக் குறைவான குழந்தைப் பிறப்பு வீதமாக வடிவம் பெறுகின்றன. பதிலுக்கு இவை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. பெண்களுக்கு அதிகப் பலனைக் கொடுக்கின்றன. அச்சமூகத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய இருவருக்குமே ஒரு மேல் நோக்கிய சுருள் வட்டம் போன்ற ஏற்றத்தை இது கொடுக்கிறது. எதிர் காலத் தலைமுறைகளுக்கும் இது கடத்தப்படுகிறது. 1996ஆம் ஆண்டின் மனித மேம்பாட்டு அறிக்கையின் படி கேரளத்தின் பாலின மேம்பாட்டுச் சுட்டெண்ணானது 597 ஆகும். இந்தியாவிலுள்ள எந்த ஒரு மாநிலத்தையும் விட இது அதிகமானதாகும். பெண்களுக்கான கல்வி அறிவு, கல்வி, பணிப் பங்கெடுப்பு மற்றும் ஆயுள் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அதிகப் படியான வீதங்கள், பயனுடைய பாலின வீதம் போன்ற காரணிகள் இதற்குப் பங்களித்துள்ளன.
கேரளத்தின் பாலின வீதமானது 1.084 (பெண்கள்/ஆண்கள்) ஆகும். இது எஞ்சிய இந்தியாவை விட மிக அதிகமாகும். ஆண்களை விட பெண்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட ஒரே ஒரு மாநிலம் இது தான். அரசியல் பங்கெடுப்பு, அன்றாட நிகழ்வுகளை அறிந்திருத்தல், சமய நூல்களை வாசிப்பது போன்ற கல்வி கொடுக்கும் வாய்ப்புகளை இவர்கள் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இவை இன்னும் பெண்களுக்கான முழுமையான, சம உரிமையாகக் கேரளத்தில் மாற்றம் அடையவில்லை. அவர்களது சொந்த நன்மைக்காக பெண்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற பொதுவான மனப்பான்மையானது உள்ளது. சமூகம் முன்னேற்றம் அடைந்திருந்த போதிலும் மாநிலத்தில் பாலினமானது இன்னும் சமூக நிலை மீது தாக்கம் கொண்டுள்ளது.
ந. ந. ஈ. தி. உரிமைகள்
கேரளமானது இந்தியாவில் ந. ந. ஈ. தி. விவகாரங்களில் முன்னணியில் உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் சமூகத்திற்கு ஒரு நலத்திட்டக் கொள்கையை உருவாக்கிய இந்தியாவின் முதல் மாநிலங்களில் கேரளமும் ஒன்றாகும். 2016இல் இலவச பாலின மாற்று அறுவை சிகிச்சையை அரசாங்க மருத்துவமனைகள் மூலம் கேரள அரசாங்கமானது அறிமுகப்படுத்தியது. கேரளத்தில் உள்ள முதன்மையான ந. ந. ஈ. தி. அமைப்புகளில் குயீரளா ஒன்றாகும். ந. ந. ஈ. தி. மக்கள் குறித்த அதிகரிக்கப்பட்ட விழிப்புணர்வு, மருத்துவத்துறை சேவைகள் குறித்த தகவல்கள், பணியிடக் கொள்கைகள் மற்றும் கல்விப் பாடத்திட்டங்கள் ஆகியவற்றுக்காக இது செயல்படுகிறது. 2010இலிருந்து கேரள குயீர் பேரணியானது கேரளத்தில் பல்வேறு நகரங்களில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
சூன் 2019இல் மூன்றாம் பாலினத்தவர் சமூகத்தின் உறுப்பினரானவர்கள் "மூன்றாம் பால்" அல்லது "பிற பாலினத்தவர்" என அரசாங்கத் தகவல் தொடர்புகளில் குறிப்பிடப்படக் கூடாது என ஒரு புதிய ஆணையைக் கேரள அரசாங்கமானது வெளியிட்டது. மாறாக, "டிரான்ஸ்ஜென்டர்" என்ற ஆங்கில வார்த்தையானது குறிப்பிடப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது. முன்னர் அரசாங்கப் படிவங்களில் ஆண், பெண் மற்றும் பிற/மூன்றாம் பாலினத்தவர் என்று முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.
2021இல் மாத்ருபூமி இளைஞர் கொள்கை விளக்க அறிக்கைக்காக 15 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலானோர் (74.3%) தன் பாலினத் திருமணங்களைச் சட்டப் படி முறைமையாக்க ஆதரவளித்தனர். அதே நேரத்தில், 25.7% இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மனித மேம்பாட்டுச் சுட்டெண்
ஒரு சனநாயக பொதுவுடைமைவாத உள்ளூர் அரசாங்கத்தின் கீழ் கேரளமானது இந்திய சராசரியை விட சமூக மேம்பாட்டில்ல் மிக அதிக முன்னேற்றத்தை ஒரு சாதனை அளவாக எட்டியுள்ளது. 2015ஆம் ஆண்டு நிலவரப் படி கேரளத்தின் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணானது 0.770 ஆகும். இது இம்மாநிலத்தை "உயர்" நிலையில் வைக்கிறது. நாட்டிலேயே முதலாம் இடத்தைக் கொடுக்கிறது. 2007-08இல் இது 0.790 ஆக இருந்தது. நுகர்வை அடிப்படையாகக் கொண்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் மாநிலமானது 0.920ஐப் பெற்றுள்ளது. பல முன்னேறிய நாடுகளை விட இது சிறந்த அளவாகும். 19ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடக்கக் கல்வி, நலம் பேணுதல் மற்றும் வறுமை ஒழிப்புக்காக ஒப்பீட்டளவில் அதிகப்படியான செலவீனங்கள் ஆகியவை இம்மாநிலம் மிகச் சிறந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணைப் பேணுவதற்கு உதவியுள்ளது. மத்திய அரசின் பயன் முறை சார்ந்த பணியாள் வளத்தின் ஆராய்ச்சிக்கான அமைப்பால் இந்த அறிக்கையானது தயார் செய்யப்பட்டிருந்தது. எனினும், மேம்பாட்டு ஆய்வுக்கான மையத்தால் தயாரிக்கப்பட்ட 2005 மனித மேம்பாட்டு அறிக்கையானது இம்மாநிலத்திற்கு உள்ளடக்கிய மேம்பாட்டின் ஒரு நெறிக்குட்பட்ட கட்டத்தைக் கணித்துள்ளது. ஏனெனில், மனித மேம்பாட்டில் முன்னேற்றமானது ஏற்கனவே மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவத் தொடங்கி விட்டது. இந்தியாவில் மிகவும் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான மாநிலமாகவும் கேரளமானது பரவலாகக் கருதப்படுகிறது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்திய மாநிலங்களிலேயே கேரளமானது மிக அதிக எழுத்தறிவைக் (94%) கொண்டுள்ளது. 2018இல் எழுத்தறிவு வீதமானது 96%ஆகக் கணக்கிடப்பட்டது. கோட்டயம் மாவட்டத்தில் எழுத்தறிவு வீதமான 97% ஆகும். கேரளத்தில் ஆயுள் எதிர்பார்ப்பு 74 ஆண்டுகள் ஆகும். 2011ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே மிக அதிகமான வீதங்களில் இதுவும் ஒன்றாகும். கேரளத்தின் கிராமப்புற ஏழ்மை வீதமானது 59%இலிருந்து (1973-1974) 12% ஆக (1999-2010) விழுந்தது. ஒட்டு மொத்த (நகர்ப்புற மற்றும் கிராமப்புற) வீதமானது 1970கள் மற்றும் 2000ங்களுக்கு இடையில் 47% விழுந்தது. இந்தியாவில் ஒட்டு மொத்த வறுமை வீதத்தின் வீழ்ச்சியானது இதே காலகட்டத்தில் 29%ஆக இருந்தது. 1999-2000 வாக்கில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழ்மை வீதங்களானவை முறையே 10.0% மற்றும் 9.6%ஆக வீழ்ச்சி அடைந்தன. 2013இல் தெண்டுல்கர் குழுவின் வறுமை மீதான அறிக்கையானது கேரளத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் தொகையின் சதவீதங்கள் முறையே 9.1% மற்றும் 5.0% என்று மதிப்பிட்டது. சமூக நலத்தை ஊக்குவிப்பதற்காக கொச்சி மற்றும் திருவாங்கூர் இராச்சியங்களால் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கிய முயற்சியின் மூலமே இத்தகைய மாற்றங்கள் பெருமளவுக்குத் தொடங்கின. இதே கவனக் குவியமானது கேரளத்தின் சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசாங்கத்தாலும் பேணப்பட்டது.
கனடா, சப்பான் மற்றும் நோர்வே போன்ற வளர்ந்த நாடுகளில் ஏற்படும் இயற்பண்பான ஒரு "மக்கள் தொகை நிலை மாற்றத்தைக்" கேரளமானது கண்டுள்ளது. 2005இல் 11.2% மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தனர். 2023இல் பிபிசி செய்தி நிறுவனமானது கும்பநாட்டு கிராமத்தைக் கவனக் குவியமாகக் கொண்டு கேரளத்திலிருந்து வெளியேறி பணி தேடியதால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் அனுகூலங்கள் குறித்து செய்தி வெளியிட்டது.
2004இல் குழந்தைப் பிறப்பு வீதமானது 1,000 பேருக்கு 18 என்று மிகவும் குறைவாக இருந்தது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி கேரளமானது ஒட்டு மொத்த குழந்தைப் பிறப்பு வீதமாக 1.6 குழந்தைகளைக் கொண்டுள்ளது. மலப்புறம் மாவட்டம் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பெண்ணுக்கு இரண்டுக்கும் குறைவான குழந்தைகளே சராசரியாகப் பிறக்கின்றன. குழந்தைப் பிறப்பு வீதமானது மலப்புறம் மாவட்டத்தில் மிக அதிகமாகவும் (2.2), பத்தினம்திட்டா மாவட்டத்தில் மிகவும் குறைவாகவும் (1.3) உள்ளன. 2001இல் குழந்தைப் பிறப்பு வீதமாக முசுலிம்கள் 2.6யும், இந்துக்கள் 1.5யும் மற்றும் கிறித்தவர்கள் 1.7யும் கொண்டிருந்தனர். சிஎம்எஸ் இந்திய லஞ்ச ஊழல் ஆய்வு, வெளிப்படைத் தன்மைக்கான பன்னாட்டு அமைப்பு (2005) மற்றும் இந்தியா டுடே (1997) ஆகியோரால் எடுக்கப்பட்ட ஆய்வின் படி இம்மாநிலமானது "இந்தியாவில் மிகக் குறைவான ஊழல் உள்ள மாநிலமாகக்" கருதப்படுகிறது. இந்திய மாநிலங்களிலேயே கேரளமானது மிகக் குறைவான கொலை வீதங்களைக் கொண்டுள்ளது. 2011ஆம் ஆண்டில் 1 இலட்சம் பேருக்கு 1.1 பேர் கொல்லப்பட்டனர். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதைப் பொறுத்த வரையில் அதிகப் படியான தற்கொலை வீதம், பெறப்படும் வருமானத்தில் குறைவான பகிர்ந்தளிப்பு, குழந்தைத் திருமணம், பாலியல் துன்புறுத்தல் புகார்கள் மற்றும் வரம்புக்குட்பட்ட சுதந்திரம் போன்ற சில எதிர் மறையான காரணிகளும் குறிப்பிடப்படுகின்றன. கேரளத்தில் குழந்தைத் திருமணமானது மிகவும் குறைவாக உள்ளது. மலைப்புறம் மாவட்டமானது மிக அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் இடமாக உள்ளது. மலப்புறத்தில் இத்தகைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2019இல் இந்தியாவிலேயே மிக அதிக குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் புகார்களானவை கேரளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
2015இல் கேரளமானது எந்த ஒரு மாநிலத்தைக் காட்டிலும் மிக அதிகமான குற்றம் நிரூபிக்கப்படும் 77%க்கும் அதிகமான வீதத்தைக் கொண்டிருந்தது. கிராமப்புற இந்தியாவில் தகவுப் பொறுத்த அமைப்பில் மிகக் குறைவான வீடில்லா மக்களைக் கேரளமானது கொண்டுள்ளது. இங்கு <0.1க்கும் குறைவான மக்களே வீடில்லாமல் உள்ளனர். "வீடில்லாதவர்கள் இல்லாத முதல் மாநிலமாக" உருவாக்கும் இலக்கை அடைய இம்மாநிலம் முயற்சி மேற்கொண்டுள்ளது. "நிலமற்ற மக்கள் இல்லை" என்ற மதிப்பு மிக்க இதன் திட்டத்தோடு இந்த இலக்கையும் கொண்டுள்ளது. தனியார் அமைப்புகள் மற்றும் வெளி நாடு வாழ் மலையாளி சமூகமானது வீடில்லா மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தரும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கின்றன. முதல் இடத்தில் உள்ள பஞ்சாப்புக்கு அடுத்த இடத்தில் இம்மாநிலமானது மிகக் குறைவான வறுமை வீதத்தைக் கொண்டுள்ளது. 2015இல் மின்னணு நிர்வாக நடவடிக்கைகளை அமல்படுத்தியதன் மூலம் முதல் முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலமாகக் கேரளமானது உருவானது.
மருத்துவ சேவை
எல்லோருக்குமான மருத்துவ சேவைத் திட்டத்தை அமல்படுத்தியதில் கேரளமானது ஒரு முன்னோடி மாநிலமாகும். இறப்பவர்களின் வீதத்தைச் சரி செய்யும் குழந்தை பிறப்பு வீதம் மற்றும் குழந்தை இறப்பு வீதம் ஆகியவை பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது இங்கு மிகக் குறைவாகும். 1,000 குழந்தைப் பிறப்புக்கு 12 முதல் 14 பேர் இங்கு இறக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டின் தேசிய குடும்ப நல ஆய்வின் படி இது 6ஆகக் குறைந்துள்ளது. சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட உதவி வழங்கும் அமைப்பான லியேன் அமைப்பால் அமைக்கப்பட்ட குழுவின் ஓர் ஆய்வுப் படி இந்தியாவில் இறப்பதற்கு மிகச் சிறந்த இடமாகக் கேரளமானது கருதப்படுகிறது. கடுமையான உடல்நலக் குறைவைக் கொண்ட நோயாளிகளுக்கு உடல் நலக் குறைவைக் குறைக்கும் இம்மாநிலத்தின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு குறிப்பிடப்பட்டது. எனினும், கேரளத்தில் நோயாளிகளின் வீதமானது மற்ற எந்த ஒரு இந்திய மாநிலத்தையும் விட மிக அதிகமாகும். 1,000 மக்களுக்கு கிராமப்புறத்தில் 118 பேரும், மற்றும் நகர்ப்புறத்தில் 88 பேரும் நோய்வாய்ப்படுகின்றனர். ஒட்டு மொத்த இந்தியாவுக்கான இதையொத்த மதிப்பீடுகளானவை 2005ஆம் ஆண்டு நிலவரப் படி 1,000 பேருக்கு முறையே 55 மற்றும் 54 ஆகும். பிறப்பின் போது குறைவான எடை கொண்ட வழக்கமானது கேரளத்தில் 13.3% ஆக உள்ளது. பல முதல் உலக நாடுகளை விடவும் இது அதிகமாகும். வயிற்றுப்போக்கு, இரத்தக்கழிசல், கல்லீரல் அழற்சி, மற்றும் குடற்காய்ச்சல் போன்ற நீரால் பரவும் வியாதிகள் 30 இலட்சம் கிணறுகளைச் சார்ந்துள்ள 50%க்கும் மேற்பட்ட மக்களிடையே சாக்கடை அமைப்புகள் இல்லாததால் கடுமையாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு நிலவரப் படி இந்தியாவிலேயே மிக அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்டதாக இம்மாநிலம் திகழ்கிறது. இந்நோய் பரவலாக உள்ள வீதமும் இங்கு மிக அதிகமாக உள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை பால் துகள்களுக்குப் பதிலாக தாய்ப்பாலைச் செயல் முனைப்புடன் ஊக்குவிக்கும் அதன் முயற்சிக்காகக் கேரளத்தை உலகின் முதல் "குழந்தைகளுக்கு நட்பான மாநிலம்" என்று குறிப்பிட்டுள்ளது. 95%க்கும் மேற்பட்ட கேரளக் குழந்தைப் பிறப்புகளானவை மருத்துவமனைகளில் பிரசவிக்கப்படுகின்றன. நாட்டில் மிகக் குறைவான குழந்தை இறப்பு வீதத்தையும் இம்மாநிலம் கொண்டுள்ளது. மூன்றாவது தேசிய குடும்ப நல ஆய்வானது "அமைப்பு ரீதியிலான பிரிவுகளில்" கேரளத்தை முதல் இடத்திற்குத் தரப்படுகிறது. மருத்துவ வசதிகள் உடைய இடங்களில் 100% குழந்தைப் பிறப்புகள் நடைபெறுகின்றன. ஆயுர்வேதம், சித்தா மற்றும் அழியும் நிலையில் உள்ள மற்றும் இம்மாநிலத்தில் மட்டுமே காணப்படும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் களரி, மர்ம சிகிச்சை மற்றும் விட வைத்தியம் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. கணியர் போன்ற சில சமூகங்கள் இயற்கை மருத்துவத்திற்காக அறியப்படுகின்றன. ஆரிய வைத்திய சாலையானது 1902ஆம் ஆண்டு மலப்புறத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் கோட்டக்கல்லில் வைத்தியரத்னம் பி. எஸ். வாரியரால் நிறுவப்பட்டது. மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய ஆயுர்வேத மருத்துவ இணையம் மற்றும் மருத்துவ மையம் இதுவாகும். உலகின் மிகப்பெரிய ஆயுர்வேத மருத்துவப் பெயர்களில் இதுவும் ஒன்றாகும்.
2014இல் கேரளமானது ஏழை மக்களுக்கு இலவசப் புற்றுநோய் மருத்துவத்தை வழங்கும் முதல் மாநிலமாக உருவானது. சுக்ருதம் என்ற திட்டத்தின் கீழ் இது வழங்கப்பட்டது. புற்றுநோய்கள், நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் அதிகப்படியாகக் கேரள மக்களிடம் காணப்படுகின்றன. ஏப்பிரல் 2016இல் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையானது புற்றுநோய்க்காக 2,50,000 பேர் சிகிச்சை எடுத்துக் கொண்டதைக் குறிப்பிட்டு இருந்தது. இப்பகுதியின் மருத்துவமனைகளில் ஆண்டு தோறும் சுமார் 150 - 200 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆண்டு தோறும் சுமார் 42,000 புற்றுநோய் பாதிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இது குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஏனெனில், தனியார் மருத்துவமனைகள் தங்களது எண்ணிக்கைகளைக் குறிப்பிடுவதில்லை. சிறுநீரகக் கொடைகளுக்கான நீண்ட காத்திருப்புப் பட்டியல்களானவை மனிதச் சிறுநீரகங்களின் சட்டத்திற்குப் புறம்பான வணிகத்தை ஊக்குவித்துள்ளன. இந்தியாவின் சிறுநீரகக் கூட்டமைப்பு நிறுவப்படுவதற்கு இது காரணமாகியுள்ளது. பொருளாதார ரீதியாக அனுகூலமற்ற நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஆதரிப்பதை இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 2017-18இல் மருத்துவ சேவைகள் துறையின் கீழ் 6,691 நவீன மருத்துவ அமைப்புகள் உள்லன. இதன் மொத்த படுக்கை எண்ணிக்கை 37,843 ஆகும். இதில் 15,780 படுக்கைகள் கிராமப்புறப் பகுதிகளிலும், 22,063 படுக்கைகள் நகர்ப்புறப் பகுதிகளிலும் உள்ளனர்.
மொழி
கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழி மலையாளமாகும். இந்தியாவின் ஆறு செம்மொழிகளில் இதுவும் ஒன்றாகும். கேரளா முழுவதும் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். முதன்மையாக இவர்கள் இடுக்கி மாவட்டம் மற்றும் பாலக்காடு மாவட்டத்தில் இந்த இரு மாவட்டங்களின் மக்கள் தொகையில் முறையே 17.48% மற்றும் 4.8% ஆக உள்ளனர். காசர்கோடு மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளில் துளு மற்றும் கன்னடம் ஆகியவையும் முதன்மையாகப் பேசப்படுகின்றன. இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் முறையே 8.77% மற்றும் 4.23% சதவீதமாக இவர்கள் உள்ளனர்.
சமயம்
மாநிலம் முழுவதும் இந்து, முசுலிம் மற்றும் கிறித்தவர்களின் ஒரு குறிப்பிடத்தக்க மக்கள் தொகையுடன் கேரளமானது பல சமயங்களைக் கொண்டுள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவிலும் மிக வேறுபட்ட சமயங்களை உடைய மாநிலங்களில் ஒன்றாகக் கேரளாமானது பொதுவாகக் கருதப்படுகிறது. கேரளத்தில் மிகப் பரவலாகப் பின்பற்றப்படும் நம்பிக்கையாக இந்து சமயம் உள்ளது. குறிப்பிடத்தக்க அளவுக்கு முசுலிம் மற்றும் கிறித்தவ சிறுபான்மையினரும் இங்கு உள்ளனர். எஞ்சிய இந்தியாவுடன் ஒப்பிடும் போது கேரளமானது ஒப்பீட்டளவில் மிகக் குறைவான சமயச் சண்டைகளையே கண்டுள்ளது. 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி கேரள மக்களில் 54.7% பேர் இந்துக்கள், 26.6% பேர் முசுலிம்கள், 18.4% கிறித்தவர்கள் மற்றும் எஞ்சிய 0.3% பேர் பிற சமயத்தைப் பின்பற்றுகின்றனர் அல்லது எந்த சமயத்தையும் பின்பற்றாதவர்களாக உள்ளனர். மலப்புறம் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இந்துக்கள் மிகப் பெரிய சமயக் குழுவாக உள்ளனர். மலப்புறத்தில் முசுலிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்தியாவில் மிக அதிக அளவிலான கிறித்தவ மக்கள் தொகையைக் கேரளமானது கொண்டுள்ளது. 2016ஆம் ஆண்டு கணக்கின் படி இந்துக்கள், முசுலிம்கள், கிறித்தவர்கள் மற்றும் பிறர் மாநிலத்தின் மொத்த குழந்தைப் பிறப்புகளில் முறையே 41.9%, 42.6%, 15.4% மற்றும் 0.2% ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்.
இசுலாமானது கேரளத்திற்கு பெரிய இந்தியப் பெருங்கடல் விளிம்பின் ஒரு பகுதியாக வந்தது. மத்திய கிழக்கைச் சேர்ந்த மசாலா மற்றும் பட்டு வணிகர்களின் மூலம் பரவியது. பொ. ஊ. ஏழாம் நூற்றாண்டிலேயே கூட கேரளாவுக்கு இசுலாமானது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சாத்தியத்தை வரலாற்றாளர்கள் மறுக்கவில்லை. சேரமான் பெருமாள் தாஜுதீன் என்ற ஒரு மன்னன் இருந்ததும் குறிப்பிடப்படுகிறது. தொன்மவியல் இந்து மன்னனான இவன் அறபுத் தீபகற்பத்திற்குச் சென்று முகம்மது நபியைச் சந்தித்து இசுலாமுக்கு மதம் மாறினார் என்று குறிப்பிடப்படுகிறது. கேரள முசுலிம்கள் பொதுவாக மாப்பிளமார்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். கேரளத்தின் முசுலிம் மக்கள் தொகையை அமைக்கும் பல சமூகங்களில் மாப்பிளமார்களும் ஒருவராவார். சேரமான் பெருமாள் தொன்மக் கதைகளின் படி முதல் இந்திய மசூதியானது கொடுங்கல்லூரில் சேரர்களின் கடைசி ஆட்சியாளரின் (சேரமான் பெருமாள்) ஆணையுடன் பொ. ஊ. 624இல் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் முகம்மது நபியின் (–632) வாழ்நாளிலேயே இசுலாமிற்கு மதம் மாறினார்.
பண்டைய கிறித்தவப் பாரம்பரியமானது இயேசு கிறித்துவின் திருத்தூதர்களில் ஒருவரான தோமாவின் வருகையுடன் பொ. ஊ. 52இல் கேரளத்தின் கடற்கரைகளை கிறித்தவமானது அடைந்தது என்று குறிப்பிடுகிறது. சிரோ-மலபார் கத்தோலிக்கர், சிரோ-மலங்கரா கத்தோலிக்கர், சாகோபிய சிரிய கிறித்தவ திருச்சபை, மர் தோமா சிரிய திருச்சபை, மலங்கரா மரபுவழி சிரிய திருச்சபை மற்றும் தென்னிந்தியத் திருச்சபையின் சிரிய ஆங்கிலிகர்கள், மற்றும் பெந்தக்கோசுதல் புனித தோமா கிறித்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக புனித தோமா கிறித்தவர்கள் உள்ளனர். 16ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசிய பத்ரோதோவின் மத பரப்புரை அருமுயற்சிகளின் விளைவாக கேரளத்தில் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் தொடக்கம் ஆரம்பித்தது. காலனியக் குடியிருப்பாளர்களுடன் நூற்றாண்டுகளாகக் கலந்ததன் விளைவாக கேரளத்தில் ஐரோப்பிய மற்றும் இந்தியப் பெற்றோர் அல்லது மூதாதையர்களைக் கொண்ட ஆங்கிலோ இந்தியர்களின் சமூகமானது உள்ளது. இவர்கள் போத்துக்கீசர், டச்சு, பிரெஞ்சு, பிரித்தானிய மற்றும் பிற ஐரோப்பியர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மிக அதிக மக்கள் தொகையுடைய கிறித்தவர்களைக் கேரளமானது கொண்டுள்ளது.
மன்னன் சாலமோனின் காலத்தின் போது பொ. ஊ. மு. 10ஆம் நூற்றாண்டில் யூதமானது கேரளத்தை அடைந்தது. இவர்கள் கொச்சி யூதர்கள் அல்லது மலபார் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்தியாவில் உள்ள யூதர்களின் மிகப் பழமையான குழு இவர்கள் ஆவர். 20ஆம் நூற்றாண்டு வரை கேரளத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு யூத சமூகமானது வாழ்ந்து வந்தது. அவர்களில் பெரும்பாலானோர் இசுரேலுக்கு இடம் பெயர்ந்தனர். கொச்சியிலுள்ள பரதேசி யூத தொழுகைக் கூடமானது பொது நலவாய நாடுகளில் உள்ளதிலேயே மிகப் பழமையான யூத தொழுகைக் கூடம் ஆகும். சைன சமயமானது வயநாடு மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
பௌத்தமானது அசோகரின் காலத்தின் போது பிரபலமானதாக இருந்தது. ஆனால், பொ. ஊ. 12ஆம் நூற்றாண்டு வாக்கில் மறைந்து போனது.
கல்வி
கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியானது 14ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் செழித்து இருந்தது. வானியல் வினாக்களுக்குத் தீர்வு காணும் முயற்சியில் கேரளமானது தனித்து இயங்கி முக்கோணவியல் செயல்பாடுகளின் தொடர் விரிவு உள்ளிட்ட ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முக்கியமான கணிதவியல் கோட்பாடுகளை உருவாக்கியது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்க கால தசாப்தங்களில் பொது மக்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக திருச்சபை மதப் பரப்புரை சமூகத்தின் முயற்சிகளால் கேரளத்தின் நவீன கல்வி மாற்றமானது தூண்டப்பட்டது. 1854இன் உட்ஸ் அறிக்கையின் பரிந்துரைகளைத் தொடர்ந்து திருவாங்கூர் மற்றும் கொச்சி வேள் பகுதி அரசுகள் முதன்மையாக சாதிகள் மற்றும் சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட பொதுக் கல்வியைத் தொடங்கின. மேலும், தனியார் நபர்களை ஈர்ப்பதற்காக நிதியுதவி அளிக்கும் ஓர் அமைப்பை அறிமுகப்படுத்தின. மாநிலத்தில் சமூக ரீதியாக பாரபட்சமாய் நடத்தப்படும் சாதிகளுக்கு உதவும் வைகுண்ட சுவாமி, நாராயணகுரு, அய்யன்காளி மற்றும் குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா போன்ற தலைவர்களின் முயற்சிகளானவை கேரளத்தில் பொதுக் கல்வியின் மேற்கொண்ட மேம்பாட்டுக்கு வழி வகுத்தது. இதற்கு நாயர் சேவை சமூகம், சிறீ நாராயண அமைப்பு, முசுலிம் கல்வி சமூகம், முசுலிம் மகாசன சபா, (நம்பூதிரிகளின்) யோக சேம சபா மற்றும் கிறித்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பு போன்ற சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளின் உதவியும் பயன்படுத்தப்பட்டது.
அந்நேரத்தில் நடைமுறைப் பயன்பாட்டுக்குத் தகுந்த எழுத்தறி வீதமானது வெறும் 90%ஆகத் தான் இருந்த போதிலும் 1991இல் கேரளமானது முழுவதுமாக எழுத்தறிவு பெற்றதாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மாநிலமாக உருவானது. 2006-2007இல் இந்தியாவின் 21 முக்கியமான மாநிலங்களின் கல்வி மேம்பாட்டுச் சுட்டெண்ணில் இம்மாநிலமானது முதலிடத்தைப் பிடித்தது. 2007ஆம் ஆண்டில் தொடக்கக் கல்வியில் மாணவர்களின் சேர்க்கையானது கிட்டத்தட்ட 100%ஆக இருந்தது. இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல் இல்லாமல் கல்வி வாய்ப்பானது பாலினங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் பகுதிகள் ஆகியவற்றுக்கு இடையே கிட்டத்தட்ட சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி கேரளமானது 93.9% எழுத்தறிவு பெற்றுள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது தேசிய எழுத்தறிவு வீதமானது 74.0% ஆகும். சனவரி 2016இல் இதன் அதுல்யம் கல்வித் திட்டத்தின் வழியாக 100% தொடக்கக் கல்வியை சாதித்த முதல் இந்திய மாநிலமாகக் கேரளம் உருவானது.
மாநிலத்தின் பள்ளிகளில் உள்ள கல்வி அமைப்பானது தொடக்கத்தில் உள்ள பத்தாண்டு காலக் கல்வியைக் குறிப்பிட்டுள்ளது. இது மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: கீழ் தொடக்கம், மேல் தொடக்கம் மற்றும் உயர் நிலைப் பள்ளி. இது 4+3+3 என்று அறியப்படுகிறது. ஒவ்வொரு நிலையின் ஆண்டுகளின் எண்ணிக்கையை இது குறிப்பிடுகிறது. பள்ளியின் முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் பொதுவாக மேல்நிலை பள்ளியில் மூன்று முதன்மையான பாடத் திட்டங்களான தாராளக் கலை, வாணிபம் அல்லது அறிவியல் ஆகிய ஒன்றில் சேர்கின்றனர். பெரும்பான்மையான பொதுப் பள்ளிகள் பொதுத் தேர்வுக்கான கேரள வாரியத்துடன் இணைந்தவையாகும். மேல் நிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ், நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் ஆகியவை பிற கல்வி வாரியங்கள் ஆகும்.
கோட்டயத்தில் உள்ள சிஎம்எஸ் கல்லூரியானது 1817இல் நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல் மேற்குலக பாணியிலான கல்லூரி மற்றும் மிகப் பழமையான கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். தலசேரியில் உள்ள அரசு பிரென்னன் கல்லூரியானது 1862இல் கொடைப் பண்புள்ள செல்வந்தர் எட்வர்டு பிரென்னனால் நிறுவப்பட்டது. 1866இல் பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி நிறுவப்பட்டது. இந்தியாவிலுள்ள மிகப் பழமையான கல்வி நிறுவனங்களில் இவை குறிப்பிடத்தக்கவை ஆகும். கேரள அரசின் கல்வித் துறையின் கீழ், அரசால் உடைமையாகக் கொள்ளப்பட்ட சிறப்பு நோக்கமுடைய நிறுவனம் கைட் கேரளா ஆகும். மாநிலத்தில் பள்ளிகளுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களையுடைய கல்விக்கு ஆதரவளிப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. ஆகத்து 2017இல் அதன் செயல்பாடுகளின் அளவை விரிவாக்குவதற்காக அப்போது ஐடி@பள்ளி திட்டமானது கைட் என்று மாற்றப்பட்டது. அனைத்து பொதுப் பள்ளிகளிலும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களையுடைய கல்வியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப வகுப்பறைகளைக் கொண்ட முதல் இந்திய மாநிலம் கேரளமாகும். 2019இல் நிதி ஆயோக்கால் பதிப்பிக்கப்பட்ட பள்ளிக் கல்வித் தரச் சுட்டெண்ணில் கேரள மாநிலம் முதலிடத்தைப் பிடித்தது. எழிமலையில் அமைந்துள்ள இந்தியக் கடற்படைக் கல்விக் கழகமானது ஆசியாவிலேயே மிகப் பெரிய மற்றும் உலகின் மூன்றாவது மிகப் பெரிய கடற்படைக் கல்விப் பயிற்சி நிறுவனமாக உள்ளது.
பண்பாடு
கேரளப் பண்பாடானது இயற்கையாக வேறுபட்ட கூறுகளைக் கொண்ட மற்றும் உலக நாடுகளின் பண்பாட்டுத் தாக்கம் கொண்டதாக உள்ளது. இந்தியப் பண்பாட்டின் ஓர் இன்றியமையாத பகுதி இதுவாகும். ஆரிய, திராவிட, அரேபிய மற்றும் ஐரோப்பியப் பண்பாடுகளின் ஒரு கலவை இதுவாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் இந்தியாவைத் தாண்டியுள்ள பகுதிகளிலிருந்து வந்த தாக்கங்களின் கீழ் இது வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் பழமை மற்றும் மலையாளிகளால் நீடிக்க வைக்கப்பட்டுள்ள உயிரோட்டமுள்ள தொடர்ச்சி ஆகியவற்றால் இது வரையறுக்கப்படுகிறது. அண்டை மற்றும் அயல்நாட்டுப் பண்பாடுகளுடன் நூற்றாண்டுகளான தொடர்பின் வழியாக இது கவனத்துடன் உருவாக்கப்பட்டதாக மாறியுள்ளது. எனினும், எஞ்சிய நாட்டில் இருந்து புவியியல் ரீதியாகக் கேரளமானது தனித்துள்ளதானது வாழ்க்கை முறை, கலை, கட்டடக்கலை, மொழி, இலக்கியம் மற்றும் சமூக அமைப்புகளின் ஒரு தனித்துவமான முன்னேற்றத்துக்கு வழி வகுத்துள்ளது. இம்மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10,000க்கும் மேற்பட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கொல்ல ஆண்டானது வேளாண்மைத் திட்டமிடல் மற்றும் சமயச் செயல்பாடுகளில் பொதுவான பயன்பாட்டைக் கொண்டுள்ளது. கேரளத்தில் பொ. ஊ. 825இல் தொடங்கப்பட்ட ஒரு சூரிய விண்மீன் நாட்காட்டி இதுவாகும். இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான மலையாளம் கேரளத்தின் ஆட்சி மொழியாகும். 12க்கும் மேற்பட்ட பிற அட்டவணைப்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணைப்படுத்தப்படாத மொழிகளும் இங்கு பேசப்படுகின்றன. இந்தியாவில் மது நுகர்வு மிக அதிகமாகக் கேரளத்தில் தான் உள்ளது.
விழாக்கள்
ஆண்டில் குறிப்பிட்ட நாட்களில் கேரளத்திலுள்ள கோயில்களில் பெரும்பாலானவை விழாக்களை நடத்துகின்றன. இத்தகைய விழாக்களின் ஒரு பொதுவான பண்பானது கடவுள் சிலையைக் கடலில் முங்கி எடுத்ததற்குப் பிறகு விழாவின் கடைசி நாளில் கீழே இறக்கப்படும் ஒரு புனிதக் கொடியை ஏற்றுவதாகும். சில விழாக்கள் பூரங்களை உள்ளடக்கியுள்ளன. இதில் மிகவும் நன்றாக அறியப்பட்ட ஒன்றானது திருச்சூர் பூரம் ஆகும். திருச்சூர் பூரத்தின் முதன்மையான ஈர்ப்புகளாக "யானைகள், வாண வேடிக்கைகள் மற்றும் பெரும் மக்கள் கூட்டங்கள்" உள்ளன. மகரவிளக்கு, சினக்கத்தூர் பூரம், ஆட்டுக்கல் பொங்கலா மற்றும் நென்மாரா வல்லங்கி வேலா ஆகியவை பிற அறியப்பட்ட விழாக்கள் ஆகும். இவை தவிர உத்சவங்கள் என்று உள்ளூர் அளவில் அறியப்படும் விழாக்கள் பெரும்பாலும் ஆண்டு தோறும் பல கோயில்களால் நடத்தப்படுகின்றன. யானைகளைப் பயன்படுத்த இயன்ற கோயில்கள் குறைந்தது ஒரு நன்றாக அலங்கரிக்கப்பட்ட யானையை விழாக்களின் ஒரு பகுதியாகப் பொதுவாகப் பயன்படுத்துவர். இந்த யானையின் முதுகில் கோயிலிலுள்ள சிலையானது எடுக்கப்பட்டு ஊர்வலமாக நாட்டுப்புறத்தைச் சுற்றிக் கொண்டு வரப்படும். இந்த ஊர்வலமானது கோயிலைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு வருகை புரியும் போது மக்கள் பொதுவாக அரிசி, தேங்காய்கள் மற்றும் பிற காணிக்கைகளைப் பொதுவாக அளிப்பார். பஞ்சரி மேளம் அல்லது பஞ்ச வாத்தியம் போன்ற பாரம்பரிய இசைகளை ஊர்வலங்கள் பொதுவாகக் கொண்டுள்ளன. இம்மாநிலத்தின் முசுலிம் சமூகத்தால் ஈகைத் திருநாள் மற்றும் தியாகத் திருநாள் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. அதே நேரத்தில், நத்தார் மற்றும் உயிர்ப்பு ஞாயிறு போன்ற பண்டிகைகள் கிறித்தவர்களால் கொண்டாடப்படுகின்றன. கேரள மக்களால் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா ஓணம் ஆகும். மாநிலத்தின் வேளாண்மை வரலாற்றை இது நினைவுபடுத்துகிறது. இது கேரளத்தின் உள்ளூர் விழாவாகும். உத்தரதம் எனும் ஓணத் தொடக்கத்திலிருந்து நான்காவது ஓணம் நாள் வரை நான்கு நாட்கள் பொது விடுமுறை இதற்கு அளிக்கப்படுகிறது. ஓணமானது மலையாள மாதமான சிங்கமில் (ஆகத்து-செப்தெம்பர்) வருகிறது. மன்னன் மகாபலி சக்கரவர்த்தி திரும்பி வருவதை நினைவுபடுத்த இது கொண்டாடப்படுகிறது. ஓணத்தின் மொத்த காலம் 10 நாட்கள் ஆகும். கேரளா முழுவதும் இது கொண்டாடப்படுகிறது. வள்ளங்களி, புலிக்களி, பூக்களம், தும்பி துள்ளல் மற்றும் ஓணவில்லு போன்ற பண்பாட்டுக் கூறுகளுடன் கொண்டாடப்படும் விழாக்களில் இதுவும் ஒன்றாகும்.
இசையும், நடனமும்
கேரளமானது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பொதுக் காட்சி நிகழ்ச்சிக் கலைகளுக்குத் தாயகமாகும். ஐந்து பாரம்பரிய நடன வடிவங்களான கதகளி, மோகினியாட்டம், கூடியாட்டம், துள்ளல் மற்றும் கிருஷ்ணனாட்டம் ஆகியவை இதில் அடங்கும். அரச குடும்பங்களின் புரவலத் தன்மைக்குக் கீழ் பாரம்பரிய காலத்தின் போது கோயில் அரங்குகளில் இவை தொடங்கி வளர்ச்சி அடைந்துள்ளன. கேரள நடனம், திரையாட்டம், கலியாட்டம், தெய்யம், கூத்து மற்றும் படயணி ஆகியவை இப்பகுதியின் கோயில் பண்பாட்டுடன் தொடர்புடைய பிற நடன வடிவங்களாகும். ஒப்பன மற்றும் துபுமுத்து ஆகியவை மாநிலத்தின் முசுலிம்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சில பாரம்பரிய நடன வடிவங்கள் ஆகும். சிரிய கிறித்தவர்கள் மத்தியில் மார்க்கங்களி மற்றும் பரிச்சமுட்டுக்கள் ஆகியவை பிரபலமாக உள்ளன. இலத்தீன் கிறித்தவர்கள் மத்தியில் சாவிட்டு நாடகமானது பிரபலமானதாக உள்ளது. கேரளத்தின் கோயில் பண்பாட்டுடன் தொடர்புடைய பாரம்பரிய பொதுக் காட்சி நிகழ்ச்சிக் கலைகளிலிருந்து அது பெற்ற பங்களிப்புகளானவை கேரளத்தில் பாரம்பரிய இசையின் வளர்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. சோபன சங்கீதம் எனப்படும் உள்ளூர்ப் பாரம்பரிய இசை வடிவத்தின் வளர்ச்சியானது கேரளத்தின் கலைகளுக்குக் கோயில் பண்பாடானது வழங்கிய செழிப்பான பங்களிப்பை விளக்குகிறது. கேரள பாரம்பரிய இசை மீது கருநாடக இசையானது ஆதிக்கம் கொண்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டில் இவ்வகை இசையை சுவாதித் திருநாள் ராம வர்மா பிரபலப்படுத்தியதன் விளைவு இதுவாகும். சொப்பனம் என்று அறியப்படும் இராகத்தை அடிப்படையாகக் கொண்ட இசையானது கதக்களி நடனத்துடன் இசைக்கப்படுகிறது. பாண்டி மற்றும் பஞ்சரி வகைகளை உள்ளடக்கிய மேளமானது இசையின் ஒரு அதிகப் படியான தாள பாணி வடிவமாகும். செண்டையைப் பயன்படுத்தி சேத்திரத்தை மையமாகக் கொண்ட விழாக்களில் இது நடத்தப்படுகிறது. பஞ்சவாத்தியம் என்பது ஒரு தாள இசைக் குழுவாகும். இதில் கலைஞர்கள் ஐந்து வகையான தாள இசைக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். கேரளத்தின் காட்சிக் கலைகளானவை பாரம்பரிய சுவரோவியங்கள் முதல் ரவி வர்மாவின் வேலைப்பாடுகள் வரை விரிவடைந்துள்ளன. மாநிலத்தில் மிகப் புகழ் பெற்ற ஓவியர் ரவி வர்மா ஆவார். பல்வேறு வகைப்பட்ட கருத்துருக்களுடன் தொடர்புடைய நாட்டுப்புறப் பாடல்களின் செழிப்பான தொகுப்புகளைக் கேரளத்தின் பெரும்பாலான சாதிகளும், சமூகங்களும் கொண்டுள்ளன. வடக்கன் பாட்டு, தெக்கன் பாட்டு, வஞ்சிப் பாட்டுக்கள் (படகுப் பாடல்கள்), மாப்பிளா பாடல்கள் (முசுலிம் பாடல்கள்) மற்றும் பள்ளிப் பாட்டுக்கள் (கிறித்தவ தேவாலயப் பாட்டுகள்) ஆகியவை இவற்றில் ஒரு சிலவாகும்.
திரைத்துறை
சமூகக் கருத்துக்களை முன் வைத்ததன் மூலம் இந்திய திரைத்துறையில் மலையாளத் திரைப்படங்களானவை தங்களுக்கென ஒரு தனி இடத்தைச் செதுக்கியுள்ளன. அடூர் கோபாலகிருஷ்ணன், மங்கடா இரவி வர்மா, அரவிந்தன், பரதன், பி. பத்மராசன், எம். டி. வாசுதேவன் நாயர், கே. ஜி. ஜார்ஜ், பிரியதர்சன், ஜான் ஆபிரகாம், இராமு கரியத், கே. எஸ். சேதுமாதவன், அ. வின்சென்ட் மற்றும் ஷாஜி என். கருண் போன்ற கேரளத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் இந்திய இணை திரைப்படங்கள் எனும் இந்தி சினிமாவுக்கு மாற்றான திரைப்படங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளனர். மோகன்லால், மம்மூட்டி, சத்யன், பிரேம் நசீர், மது, ஷீலா, சாரதா, மிஸ் குமாரி, செயன், அடூர் பாசி, சீமா, பரத் கோபி, திலகன், விசயராகவன், கலாபவன் மணி, இந்திரன்ஸ், சோபனா, நிவின் பாலி, சிறீனிவாசன், ஊர்வசி, மஞ்சு வாரியர், சுரேஷ் கோபி, ஜெயராம், முரளி, சங்கராடி, காவ்யா மாதவன், பாவனா, பிரித்விராஜ், பார்வதி, ஜெயசூர்யா, துல்கர் சல்மான், ஒடுவில் உன்னிக்கிருட்டிணன், ஜெகதே சிறீகுமார், நெடுமுடி வேணு, கே. பி. ஏ. சி. இலலிதா, இன்னொசென்ட் மற்றும் பகத் பாசில் போன்ற பல நடிகர்களைக் கேரளமானது கொடுத்துள்ளது. 720 திரைப்படங்களுக்கும் மேல் முதன்மைப் பாத்திரத்தில் நடித்ததற்காகக் காலம் சென்ற மலையாள நடிகர் பிரேம் நசீர் உலக சாதனையை வைத்துள்ளார். 1980களில் இருந்து மோகன்லால் மற்றும் மம்மூட்டி மலையாளத் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மோகன்லால் ஐந்து தேசிய விருதுகளையும் (நான்கு நடிப்புக்காக), மம்மூட்டி மூன்று தேசிய விருதுகளையும் நடிப்புக்காக வென்றுள்ளனர். கே. ஜே. யேசுதாஸ், சித்ரா, எம். ஜி. ஸ்ரீகுமார், வயலார் இராமவர்மா, வி. மதுசூதனன் நாயர், எம். டி. வாசுதேவன் நாயர் மற்றும் ஓ. என். வி. குறுப்பு போன்ற மேலும் சில குறிப்பிடத்தக்க நபர்களை மலையாள திரைத்துறையானது கொடுத்துள்ளது. கடைசியாகக் குறிப்பிடப்பட்ட இருவர் இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதை வென்றவர்கள் ஆவர். கேரளத்தைச் சேர்ந்தவரான ரெசுல் பூக்குட்டி இசைக் கலவைக்கான அகாதமி விருதை வென்ற இரண்டாவது இந்தியரானார். சிலம்டாக் மில்லியனயர் படத்துக்காக இவர் இதை வென்றார். 2018ஆம் ஆண்டின் நிலவரப் படி, மலையாளத் திரைத்துறையானது சிறந்த நடிகருக்காக 14 விருதுகள், சிறந்த நடிகைக்காக 6 விருதுகள், சிறந்த திரைப்படங்களுக்காக 11 விருதுகள் மற்றும் சிறந்த இயக்குனருக்காக 13 விருதுகளை இந்தியாவின் தேசிய திரைப்பட விழாக்களில் வென்றுள்ளது.
இலக்கியம்
சங்க இலக்கியமானது மலையாளத்தின் பண்டைக்கால மூதாதையராகக் கருதப்படலாம். மலையாள இலக்கியமானது பழைய மலையாள காலத்திலிருந்து (பொ. ஊ. 9ஆம்-13ஆம் நூற்றாண்டு) தொடங்குகிறது. இக்காலமானது 14ஆம் நூற்றாண்டு நிரனம் கவிஞர்கள் (மாதவப் பனிக்கர், சங்கரப் பனிக்கர் மற்றும் இராம பனிக்கர்) மற்றும் 16ஆம் நூற்றாண்டுக் கவிஞரான துஞ்சத்து எழுத்தச்சன் போன்ற குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களை உள்ளடக்கியதாகும். இவரின் வேலைப்பாடுகளானவை நவீன மலையாள மொழி மற்றும் அதன் கவிதை ஆகிய இரண்டின் தொடக்கத்தையும் குறிக்கின்றன. மலையாள நாட்காட்டியின் முதல் 600 ஆண்டுகளுக்கு இலக்கியமானது முதன்மையாக வாய் வழிப் பாட்டுக்களான வடக்கு மலபாரின் வடக்கன் பாட்டு மற்றும் தெற்கு திருவாங்கூரின் தெக்கன் பாட்டு போன்றவற்றையே முதன்மையாகக் கொண்டிருந்தது. 2013இல் "இந்தியாவின் செம்மொழிகளில்" ஒன்றாக அறிவிக்கப்பட்ட மலையாளமானது அதன் தற்போதைய வடிவத்தை பொ. ஊ. 15ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் செருசேரி நம்பூதிரி, துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன், மற்றும் பூந்தானம் நம்பூதிரி, போன்ற கவிஞர்களின் தாக்கத்தாலேயே முதன்மையாக வளர்ச்சி அடைந்தது. பொ. ஊ. 17ஆம்/18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் உன்னயி வாரியர் எனும் கவிஞர் மற்றும் பொ. ஊ. 18ஆஅம் நூற்றாண்டுக் கவிஞரான குஞ்சன் நம்பியார் ஆகியோரும் அதன் முதிர்ச்சி அடைந்ததற்கு முந்தைய வடிவமுடைய நவீன மலையாள இலக்கியத்தின் வளர்ச்சியில் ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். பொன்னானி ஆறு என்றும் அறியப்படும் பாரதப்புழா ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளானவை நவீன மலையாள இலக்கியத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியுள்ளன.
பரேமக்கல் தோம கதனார் மற்றும் கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான் ஆகியோர் மலையாள வசனத்திற்கு அவர்களின் பங்களிப்புக்காகக் குறிப்பிடப்படுகின்றனர். "முக்கவிஞர்களான" (கவித்ரயம்) குமரன் ஆசான், வள்ளத்தோள் நாராயண மேனன் மற்றும் உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர் ஆகியோர் தொல்வழக்கான பொய்த் தருக்கம் மற்றும் மீஇயற்பியல் ஆகியவற்றிலிருந்து கேரளக் கவிதையை ஒரு அதிகப்படியான தன்னுணர்ச்சிப் பாடல் வரிக்கு நகர்த்தியதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். மொயின்குட்டி வைத்தியர் மற்றும் புலிக்கோட்டில் ஐதர் போன்ற கவிஞர்கள் மாப்பிளா பாடல்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்துள்ளனர். அரபி மலையாள இலக்கியத்தின் ஒரு வகைப் பாடல்கள் இதுவாகும். எந்த ஓர் இந்திய மொழியிலும் எழுதப்பட்ட முதல் பயண நூல் மலையாள நூலானது வர்த்தமானபுஸ்தகம் ஆகும். இதை 1785இல் பரேமக்கல் கதனார் எழுதினார். வசன இலக்கியம், மலையாள பத்திரிகைத் துறை மற்றும் விமர்சனம் ஆகியவை 18ஆம் நூற்றாண்டின் பிந்தைய பாதிக்குப் பிறகு தொடங்கின. சம கால மலையாள இலக்கியமானது சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கைச் சூழலை அணுகுகிறது. நவீன இலக்கியத்தின் நடத்தைப் பாங்கானது பெரும்பாலும் அரசியல் புரட்சிக் கருத்துகளை நோக்கியதாக உள்ளது. மலையாள இலக்கியமானது 6 ஞானபீட விருதுகளைப் பெற்றுள்ளது. எந்த ஒரு திராவிட மொழியிலும் இரண்டாவது மிக அதிக, எந்த ஓர் இந்திய மொழியிலும் மூன்றாவது மிக அதிகம் இதுவாகும். 20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஞானபீட விருது வென்ற கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களான ஜி. சங்கரா குறுப்பு, எஸ். கே. பொற்றேக்காட்டு, தகழி சிவசங்கரப் பிள்ளை, எம். டி. வாசுதேவன் நாயர், ஓ. என். வி. குறுப்பு, மற்றும் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி ஆகியோர் நவீன மலையாள இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளனர். பிந்தைய காலத்தில் ஒ. வே. விஜயன், கமலா தாஸ், எம். முகுந்தன், அருந்ததி ராய், முகம்மது பஷீர் போன்ற எழுத்தாளர்கள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.
சமையல் பாணி
கேரள சமையல் பாணியானது ஒரு பரவலான வேறுபட்ட சைவ மற்றும் அசைவ உணவுகளை உள்ளடக்கியுள்ளது. இவை மீன், கோழி மற்றும் மாமிசங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன. சமையல் தொடர்பான மசாலாப் பொருட்கள் கேரளத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறுவடை செய்யப்படுகின்றன. கேரளத்தின் சமையல் பாணியின் இயற் பண்பாக இவை உள்ளன. ஓர் ஆதிக்கம் மிக்க அடிப்படை உணவாக சோறு உள்ளது. நாளின் அனைத்து நேரங்களிலும் இது உண்ணப்படுகிறது. கேரளத்தில் பெரும்பான்மையான காலை உணவுகளானவை அரிசியால் செய்யப்பட்டு ஒரு வடிவம் அல்லது மற்றொரு வடிவத்திலும் (இட்லி, தோசை, பிட்டு, பத்திரி, அப்பம் அல்லது இடியப்பம்), மரவள்ளிக் கிழங்கு உணவுகள் அல்லது பருப்புகளை அடிப்படையாகக் கொண்ட வடையாகத் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுடன் சட்னி, கடலை, பாயாசம், பாசிப் பயறு அப்பளம், அப்பம், கோழிக் குழம்பு, மாட்டுக்கறி வறுவல், முட்டை மசாலா மற்றும் மீன் குழம்பு ஆகியவை சேர்த்து உண்ணப்படலாம். கேரளத்தில் உணவகங்களில் பரோட்டா மற்றும் பிரியாணியும் பொதுவாகக் காணப்படுகின்றன. ஓர் இன அடையாளமாகத் தலசேரி பிரியாணி பிரபலமானதாக உள்ளது. மதிய உணவுகளில் சோறும், குழம்பும், இரசம், புலிசேரி மற்றும் சாம்பாருடன் இணைத்து உண்ணப்படுகிறது. சத்யா என்பது ஒரு சைவ உணவாகும். இது ஒரு வாழை இலையில் பரிமாறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஒரு கோப்பைப் பாயாசம் உண்ணப்படுகிறது. வாழைச் சீவல்கள், கருணைக் கிழங்கு சீவல்கள், மரவள்ளிக் கிழங்கு சீவல்கள், அச்சு முறுக்கு, உண்ணியப்பம் மற்றும் குழலப்பம் உள்ளிட்டவை பிரபலமான சிற்றுண்டிகளாக உள்ளன. முத்துப்புள்ளி மீன், இறால்கள், கூனிறால் மற்றும் பிற ஓடுடைய உயிரினங்களின் உணவுகள் உள்ளிட்டவை கடல் உணவுகளில் சிறப்பானவையாக உள்ளன. தலசேரி சமையல் பாணியானது வேறுபட்டதாக, பல தாக்கங்களின் ஒரு கூட்டிணைவாக உள்ளது.
யானைகள்
யானைகள் மாநிலத்தின் பண்பாட்டில் ஓர் இன்றியமையாத பகுதியாக இருந்து வந்துள்ளன. கேரளத்தில் கிட்டத்தட்ட அனைத்து உள்ளூர் விழாக்களும் குறைந்தது ஒரு நன்றாக அலங்கரிக்கப்பட்ட யானையை உள்ளடக்கியிருக்கும். இந்தியாவில் மிக அதிக கொல்லைப்படுத்தப்பட்ட யானைகளின் எண்ணிக்கைக்கு (சுமார் 700 இந்திய யானைகள்) தாயகமாகக் கேரளம் உள்ளது. இவை கோயில்கள் மற்றும் தனிநபர்களாலும் உடைமையாகக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த யானைகள் முதன்மையாக ஊர்வலங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் விழாக்களுடன் காட்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டு தோறும் மாநிலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாக்களின் போது கொல்லைப்படுத்தப்பட்ட யானைகளின் வேலைப்பழு குறித்து சில விலங்கு நல ஆர்வலர்கள் சில நேரங்களில் கவலை தெரிவித்துள்ளனர். மலையாள இலக்கியத்தில் "சகியாவின் (மேற்கு தொடர்ச்சி மலை) மகன்கள்" என்று யானைகள் குறிப்பிடப்படுகின்றன. கேரளத்தின் மாநில விலங்கு யானையாகும். கேரள அரசின் சின்னத்தில் இது சிறப்பம்சமாக உள்ளது.
ஊடகம்
ஊடகம், தொலைத்தொடர்புகள், ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளானவை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (டிராய்) ஒழுங்குபடுத்தப்படுகின்றன. 2015-16இல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வு - 4 ஆனது கேரளமானது ஒரு மாநிலமாக இந்தியாவில் மிக அதிக ஊடக வெளிப்பாட்டை உடையதாகத் தரப்படுத்தியுள்ளது. கேரளத்தில் டசன் கணக்கான செய்தித்தாள்கள் ஒன்பது முக்கியமான மொழிகளில் வெளி வருகின்றன. ஆனால், இவை முதன்மையாக மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் வெளி வருகின்றன. மிகப் பரவலாக வாசிக்கப்படும் மலையாள மொழி செய்தித் தாள்கள் மலையாள மனோரமா, மாத்ருபூமி, தேசாபிமானி, மாத்யமம், கேரளகௌமுதி, மங்களம், சந்திரிகா, தீபிகா, ஜனயுகம், ஜன்மபூமி, சிறாஜ் மற்றும் சுப்ரபாதம் ஆகியவையாகும். முக்கியமான மலையாளப் பருவ இதழ்களில் மாத்ருபூமி அழ்ச்சப்பதிப்பு, வனிதா, இந்தியா டுடே மலையாளம், மாத்யமம் வீக்லி, கிரிகலக்சுமி, தனம், சித்ரபூமி மற்றும் பாசபோசினி ஆகியவை உள்ளடங்கியுள்ளன. மாநிலத்தில் மிக அதிகமாக வாசிக்கப்படும் ஆங்கில மொழிச் செய்தித்தாளாக தி இந்து உள்ளது. இதைத் தொடர்ந்து தி நியூ இந்தியன் எக்சுபிரசு அதிகமாக வாசிக்கப்படுகிறது. தி டெக்கன் குரோனிக்கள், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிஎன்ஏ, தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆகியவை பிற அன்றாட செய்தித்தாள்கள் ஆகும்.
தூர்தர்ஷன் மலையாளமானது அரசால் நடத்தப்படும் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும். பல அமைப்பு சேவை வழங்குநர்கள் மலையாளம், ஆங்கிலம், பிற இந்திய மொழி மற்றும் பன்னாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரு கலவையாகக் கொடுக்கின்றனர். ஏசியாநெட், ஏசியாநெட் நியூஸ், ஏசியாநெட் பிளஸ், ஏசியாநெட் மூவீஸ், சூர்யா தொலைக்காட்சி, சூர்யா மூவீஸ், மழவில் மனோரமா, மனோரமா நியூஸ், கைரளி தொலைக்காட்சி, கைரளி நியூஸ், பிளவர்ஸ், மீடியா ஒன் டிவி, மாத்ருபூமி நியூஸ், கப்பா டிவி, அம்ருதா தொலைக்காட்சி, ரிப்போர்ட்டர் டிவி, ஜெய் ஹிந்த், சனம் டிவி, ஜீவன் டிவி, கேரளகௌமுதி மற்றும் சலோம் டிவி ஆகியவை சில பிரபலமான மலையாளத் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஆகும். இந்தியாவில் கேரளமானது இரண்டாவது மிக அதிக இணைய ஊடுருவல் வீதத்தைக் கொண்டுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி சேவைகள் உள்ளிட்ட எண்ணிம ஊடகங்கள் மாநிலத்தில் தகவல் மற்றும் பொழுது போக்கின் ஒரு முதன்மையான ஆதாரமாக உள்ளன. செப்தெம்பர் 2008இல் கூகிள் செய்திகளின் மலையாளப் மதிப்பானது தொடங்கப்பட்டது. மக்களின் அறிவியல் இயக்கமானது ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு மாநிலத்தில் வேரூன்றியுள்ளது. எழுத்தாளர்களின் ஒத்துழைப்புகள் போன்ற செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையாகப் பொதுவானவையாக மாறியுள்ளன. பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் ஐடியா லிமிடெட், ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை முக்கியமான கைபேசி சேவை வழங்குநர்களாக உள்ளன. மாநிலம் முழுவதும் அகண்ட அலைவரிசை இணையச் சேவைகள் பரவலாகக் கிடைக்கப் பெறுகின்றன. பிஎஸ்என்எல், ஏசியாநெட் சேட்டிலைட் கம்யூனிகேசன்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேசன், ஏர்டெல், வோடபோன் ஐடியா லிமிடெட், எம்டிஎஸ், ரெயில்வயர் மற்றும் விஎஸ்என்எல் ஆகியவை சில முக்கியமான இணையச் சேவை வழங்குநர்கள் ஆகும். டிராய் அறிக்கையின் படி சூன் 2018இல் கேரளத்தில் கம்பியில்லா தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கையானது சுமார் 4.31 கோடியாகும். கம்பியுடைய தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையானது 19 இலட்சம் ஆகும். இது 124.15 அளவுடைய தொலைபேசி அடர்த்திக்குக் காரணமாகிறது. பல பிற மாநிலங்களைப் போல் தொலைபேசி ஊடுருவலைப் பொறுத்த வரையில் கேரளத்தில் நகர்ப்புற-கிராமப்புற வேறுபாடானது காணப்படுவதில்லை.
விளையாட்டுக்கள்
21ஆம் நூற்றாண்டு வாக்கில் கேரளத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட அனைத்து உள்ளூர் விளையாட்டுகளும் அழிந்துவிட்டன அல்லது உள்ளூர் விழாக்களின் போது நடத்தப்படும் வெறும் ஒரு கலை வடிவமாக மாறிவிட்டன. இதில் பூரக்களி, படயணி, தளப்பந்துகலி, ஓணத்தல்லு, பரிச்சமுட்டுக்கலி, வெலக்கலி மற்றும் கிளித்தட்டுக்கலி ஆகியவை அடங்கும். எனினும், "உலகின் அனைத்து சண்டைக் கலைகளின் தாயாகக்" கருதப்படும் களரிப்பயிற்றானது இதில் விதி விலக்காகும். ஒரு பூர்வீகச் சண்டை விளையாட்டாக இன்றும் இது நடத்தப்படுகிறது. கேரளத்தின் மற்றுமொரு பாரம்பரிய விளையாட்டு படகுப் போட்டியாகும். பாம்புப் படகுகளின் போட்டியை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டம் மாநிலத்தில் பிரபலமானவையாக உருவாகியுள்ளன. 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்துவக் காலத்தின் போது இரு விளையாட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. தீனு யோஃகானன், அபை குருவில்லா, சௌன்டகபோயில் ரிசுவான், சிறிசாந்த், சஞ்சு சாம்சன் மற்றும் பசில் தம்பி போன்ற துடுப்பாட்டக்காரர்கள் தேசியத் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்று இருந்துள்ளனர். கொச்சி இட்டசுக்கேர்சு எனும் கேரளத்தைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட அணியானது இந்தியன் பிரீமியர் லீக்கின் நான்காவது பருவத்தில் விளையாண்டது. அதன் அணிகளுக்கு மத்தியில் ஒவ்வாத தன்மை காரணமாக அப்பருவத்திற்குப் பிறகு இந்த அணியானது கலைக்கப்பட்டது. 207-18இல் ரஞ்சிக் கோப்பைத் துடுப்பாட்ட போட்டியில் சமீபத்தில் கேரளமானது நன்றாக விளையாடி இருந்தது. வரலாற்றில் முதல் முறையாக காலிறுதியை அடைந்தது. மிகப் பரவலாக விளையாடப்படும் மற்றும் பார்க்கப்படும் விளையாட்டுக்களில் ஒன்றாக கால்பந்து உள்ளது. கிளப் மற்றும் மாவட்ட நிலைப் போட்டிகளுக்கு மாநிலத்தில் பெரும் ஆதரவு காணப்படுகிறது. இந்தியன் சூப்பர் லீக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து அணியைக் கொச்சி நகரமானது கொண்டுள்ளது. நாட்டில் மிகப் பரவலாக ஆதரவு அளிக்கப்படும் அணிகளில் ஒன்றாக பிளாஸ்டர்ஸ் அணி உள்ளது. சமூக வலை தளங்களில் ஆசியாவைச் சேர்ந்த ஐந்தாவது மிக அதிகமாகப் பின்பற்றப்படும் கால்பந்து அணியாக உள்ளது. ஐ-லீக் மற்றும் சைத் நக்சி கால்பந்துப் போட்டி ஆகியவற்றில் கோகுலம் கேரளா கால்பந்து அணியைக் கோழிக்கோடு நகரமானது கொண்டுள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் கோவாவுடன் சேர்த்து இந்தியாவில் கால்பந்துக்கு ஆதரவு காணப்படும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகக் கேரளம் திகழ்கிறது. ஐ. எம். விசயன், சி. வி. பச்சப்பன், வி. பி. சத்யன், உ. சரப் அலி, ஜோ பால் அஞ்சேரி, ஆசிக் குருனியன், முகம்மது ரபி, ஜிஜு ஜேக்கப், மசூர் செரீப், பப்பச்சென் பிரதீப், சி. கே. வினீத், அனாசு எடத்தோடிகா, சகல் அப்துல் சமத், மற்றும் ரினோ அன்டோ போன்ற தேசியக் கால்பந்து வீரர்களைக் கேரளமானது கொடுத்துள்ளது. கேரள மாநிலக் கால்பந்து அணியானது சந்தோஷ் கோப்பையை ஏழு முறை 1973, 1992, 1993, 2001, 2004, 2018, மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது. மேலும், எட்டு முறை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
மாநிலத்திலிருந்து உருவாகிய முக்கியமான தடகள வீரர்களில் பி. டி. உசா, ஷைனி வில்சன் மற்றும் மனதூர் தேவசியா வால்சம்மா ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூன்று பேருமே பத்மசிறீ மற்றும் அருச்சுனா விருது ஆகியவற்றைப் பெற்றவர்கள் ஆவர். க. மா. பீனாமோல் மற்றும் அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் கேல் ரத்னா விருது மற்றும் அருச்சுனா விருதை வென்றவர்கள் ஆவர். டி. சி. யோகனன், சுரேஷ் பாபு, சினிமோ; பாலோஸ், ஏஞ்சல் மேரி ஜோசப், மெர்சி குட்டன், கே. சாரம்மா, கே. சி. ரோசாகுட்டி, பத்மினி செல்வன் மற்றும் டின்டு லுகா ஆகியோர் கேரளத்தைச் சேர்ந்த அருச்சுனா விருதை வென்றவ பிறர் ஆவர். கைப்பந்து மற்றொரு பிரபலமான விளையாட்டு ஆகும். கடற்கரையின் ஓரத்தில் மணல் பரப்பில் உருவாக்கப்பட்ட தற்காலிகமான இடங்களில் இவை பொதுவாக விளையாடப்படுகின்றன. ஜிம்மி ஜார்ஜ் ஒரு குறிப்பிடத்தக்க இந்தியக் கைப்பந்து விளையாட்டு வீரர் ஆவார். தன்னுடைய சிறந்த நிலையில் தர வரிசையில் உலகின் 10 சிறந்த வீரர்களில் ஒருவராகத் தரப்படுத்தப்பட்டிருந்தார். இறகுப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் மற்றும் சடுகுடு உள்ளிட்டவை பிரபலமான பிற விளையாட்டுக்கள் ஆகும். இந்திய ஆக்கி அணியின் தலைவரும், சிறந்த இலக்குக் காவலருமான ப. அர. சிறிஜேசு கேரளத்தைச் சேர்ந்தவர் ஆவார். இர்பான் கொலோதம் தோடி இம்மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச நடை போட்டியாளர்களில் ஒருவர் ஆவார்.
இந்தியாவில் 2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக்காக கொச்சியின் சவகலால் நேரு மைதானமானது இந்தியாவில் விளையாட்டு நடத்தப்படும் ஆறு இடங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. திருவனந்தபுரம் நகரத்தில் கரியவட்டோமில் அமைந்துள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானமானது இந்தியாவின் முதல் டிபிஓடி (வடிவம், கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் மாற்றப்படக்கூடிய) மாதிரி வெளிப்புற மைதானமாகும். இது சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளையும், 2015 தெற்காசியக் கால்பந்துக் கோப்பை உள்ளிட்ட சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளும் இங்கு விளையாடப்பட்டுள்ளன.
சுற்றுலா
கேரளத்தின் பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் இதன் பல்வேறுபட்ட மக்களுடன் இணைந்து இம்மாநிலத்தை இந்தியாவில் மிகப் பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக உருவாக்கியுள்லன. 2012இல் தேசியப் புவியியலின் டிராவலர் பருவ இதழானது கேரளத்தை "உலகின் 10 சொர்க்கங்களில் ஒன்று" எனப் பெயரிட்டது மற்றும் ஒருவர் "வாழ்நாளில் கட்டாயம் பார்க்க வேண்டிய 50 இடங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டது. டிராவல் மற்றும் லெசர் இதழும் கேரளத்தை "21ஆம் நூற்றாண்டுக்கான 100 மிகச் சிறந்த பயணங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளது. 2012இல் இந்தியாவின் கூகுள் தேடு பொறி மனப்பாங்குகளில் தாஜ் மகாலைப் பின்னுக்குத் தள்ளி பயணச் சுற்றுலா இடத்துக்கான முதல் இடத்தைக் கேரளமானது பிடித்தது. சிஎன்என் டிராவலானது கேரளத்தை '2019இல் செல்ல வேண்டிய மிகச் சிறந்த 19 இடங்களில் ஒன்றாகக்" குறிப்பிட்டது. 2022இல் டைம் பருவ இதழால் கேரளமானது உலகின் மிகச் சிறந்த இடங்களின் பட்டியலில் 50 அசாதாரணமான காண வேண்டிய இடங்களில் ஒன்றாகப் பெயரிட்டது.
கேரளத்தின் கடற்கரைகள், உப்பங்கழிகள், ஏரிகள், மலைத் தொடர்கள், அருவிகள், பண்டைக் காலத் துறைமுகங்கள், அரண்மனைகள், சமய அமைப்புகள் மற்றும் காட்டுயிர்ச் சரணாலயங்கள் ஆகியவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகிய இருவருக்குமே முக்கியமான ஈர்ப்புகளாக உள்ளன. கேரளத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் கொச்சி நகரமானது முதலிடத்தைப் பெறுகிறது. 1980களின் தொடக்கம் வரை நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது கேரளமானது ஒப்பீட்டளவில் அறியப்படாத இடமாக இருந்தது. 1986இல் கேரள அரசாங்கமானது சுற்றுலாவை ஒரு முக்கியமான தொழில் துறையாக அறிவித்தது. இந்தியாவில் இவ்வாறு அறிவித்த முதல் மாநிலம் இதுவாகும். கேரளா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் தொடங்கப்பட்ட சந்தப்படுத்தல் விளம்பரங்கள் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு வழி வகுத்தன. கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகமானது மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை மேற்பார்வையிடும் ஓர் அரசாங்க முகமை ஆகும். பல விளம்பரங்கள் கேரளத்தை "கேரளம், கடவுளின் சொந்த நாடு" என்ற பெயருடன் விளம்பரப்படுத்தின. கேரள சுற்றுலாவானது உலகளாவிய பெயரைப் பெற்றுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அதிகமாகத் திரும்பி வரும் இடங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 2006இல் கேரளமானது 85 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 23.7% வளர்ச்சியாகும். உலகின் மிக வேகமாக வளரும் பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக இம்மாநிலத்தை இது உருவாக்கியது. 2011இல் கேரளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது 1 கோடி என்ற அளவைத் தாண்டியது.
1990களில் இருந்து ஆயுர்வேதச் சுற்றுலாவானது மிகவும் பிரபலமானதாக உருவாகியுள்ளது. தனியார் முகமைகள் சுற்றுலாத் துறையினரின் செயல்பாடுகளுடன் இணைந்து ஒரு குறிப்பிடத்தக்க பங்கை இதில் ஆற்றியுள்ளன. கேரளமானது அதன் சூழலியல் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அறியப்படுகிறது. மலையேற்றம், மலை நடைப்பயணம் மற்றும் பறவைக் கவனிப்புத் திட்டங்கள் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைகளில் நடைபெறும் முக்கியமான செயல்பாடுகளை இது உள்ளடக்கியுள்ளது. மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாளராக மாநிலத்தின் சுற்றுலாத்துறை உள்ளது. ஆண்டுக்கு 13.3% என்ற வீதத்தில் இது வளர்ந்து வருகிறது. சுற்றுலாவிலிருந்து கிடைக்கும் வருவாயானது 2001 மற்றும் 2011க்கு இடையில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 2018இல் 19,000 கோடி ரூபாய் என்ற அளவைக் கடந்தது. எக்கானாமிக் டைம்ஸ் செய்தித்தாளின் படி 2018இல் சுற்றுலாத் துறை மூலம் கேரளமானது ஒரு சாதனை அளவான நிகர வருவாயாக 36,528 கோடியைப் பெற்றது. முந்தைய ஆண்டை விட இது 2,874 கோடி அதிகமாகும். 2018இல் கேரளத்துக்கு 1.67 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். முந்தைய ஆண்டின் 1.576 கோடியை விட இது அதிகமாகும். 5.9% அதிகரிப்பு இதுவாகும். சுற்றுலாத் துறையானது தோராயமாக 12 இலட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது.
மாநிலத்தின் ஒரு வாகனம் இயக்கப்படக் கூடிய கடற்கரையாக கண்ணூரில் உள்ள முழப்பிலங்காடு விளங்குகிறது. பிபிசி செய்தி நிறுவனம் 2016இல் உலகின் முதல் ஆறு வாகனம் இயக்கப்படக் கூடிய கடற்கரைகளில் ஒன்றாக இதைத் தேர்ந்தெடுத்தது. இது ஐந்து கிலோமீட்டர் நீளத்திற்கு மணல் பரப்பாக விரிவடைந்துள்ளது. உலகின் இரண்டாவது வளைவு அணை மற்றும் ஆசியாவின் முதல் வளைவு அணையான இடுக்கி அணையானது இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோவளம், வர்க்கலை, கோழிக்கோடு, கொச்சி, சேரை, ஆலப்புழா, பொன்னானி, கடலுண்டி, தானூர், சாலியம், கண்ணூர் கடற்கரை, காப்பத், முழப்பிலங்காடு மற்றும் பேக்கல் ஆகியவை முக்கியமான கடற்கரைகள் ஆகும். பொன்முடி, வயநாடு, வாகமண், மூணார், பீர்மேடு, ராமக்கல் மேடு, அரிம்ப்ரா, கண்ணூர் மாவட்டத்தின் பைதல்மலா, கொடிகுத்தி மலை, மற்றும் நெல்லியம்பதி ஆகியவை பிரபலமான மலை வாழிடங்கள் ஆகும். முண்ணாரானது கடல் மட்டத்துக்கு மேலே 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தேயிலைத் தோட்டங்களுக்காக அறியப்படுகிறது. பல்வேறு வகைப்பட்ட தாவரங்களையும், விலங்குகளையும் கொண்டுள்ளது. கேரளத்தின் சூழலியல் சுற்றுலா இடங்களானது 12 காட்டுயிர்ச் சரணாலயங்கள் மற்றும் இரண்டு தேசியப் பூங்காக்களை உள்ளடக்கியுள்ளது. பெரியாற்றுத் தேசியப் பூங்கா, பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், சின்னார் கானுயிர்க் காப்பகம், தட்டெக்காடு பறவைகள் சரணாலயம், வயநாடு வனவிலங்கு காப்பகம், கடலுண்டி பறவைகள் சரணாலயம், கரிம்புழா வனவிலங்கு சரணாலயம், வயநாடு வனவிலங்கு காப்பகம், ஆரளம் வனவிலங்கு சரணாலயம், எரவிகுளம் தேசிய பூங்கா, மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காஆகியவை இவற்றில் மிகப் பிரபலமானவையாகும். இணைக்கப்பட்ட ஆறுகள் (41 மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள்), ஏரிகள் மற்றும் ஆலப்புழாவை மையமாகச் சுற்றியுள்ள கால்வாய்கள், குமரகம், பொன்னானி, நீலேஸ்வரம், மற்றும் வேம்பநாட்டு ஏரி (இங்கு தான் ஆகத்து மாதத்தில் வருடாந்திர நேரு கோப்பைப் படகுப் போட்டியானது நடத்தப்படுகிறது), முஹம்மாவில் உள்ள ஒரு சிறு தீவான பதிராமணல் ஆகியவற்றின் ஒரு விரிவான இணையம் கேரளாவின் உப்பங்கழிகளாகும். பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் கொச்சியின் மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம் ஆகியவை இரண்டு அருகில் உள்ள பாரம்பரியத் தளங்கள் ஆகும்.
மேலும் காண்க
தென்னிந்தியா
திராவிடர்
மேற்கோள்கள்
குறிப்புகள்
ஆதாரங்கள்
மேலும் படிக்க
Bose, Satheese Chandra and Varughese, Shiju Sam (eds.) 2015. Kerala Modernity: Ideas, Spaces and Practices in Transition. Hyderabad: Orient Blackswan.
வெளியிணைப்புகள்
The Official website of the Government of Kerala
The Official website of Kerala Tourism
.
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும் |
2263 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D | அருணாசலப் பிரதேசம் | அருணாசலப் பிரதேசம் (Arunachal Pradesh) இந்தியாவின் ஒரு மாநிலமாகும். அருணாச்சலப் பிரதேசம் 1987ல் மாநிலமாக அறிவிக்கப்படும் வரை, வட கிழக்கு எல்லைப்புற முகமை என்ற பெயரில் இயங்கியது.
இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் இரண்டு முக்கிய பிரதேசங்களில் இதுவும் ஒன்று. மற்றது அக்சாய் சின்.
இம்மாநிலம் 12 நகரங்களையும்; 3649 கிராமங்களையும் கொண்டுள்ளது. 83,743 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 17 மக்கள் வீதம் வாழ்கின்றனர்.
இம்மாநிலத்தில் 20 முக்கிய இனக்குழுக்களும், பல துணை இனக்குழுக்களும் வாழுகின்றன. ஒரு பொதுக் குழுவிலிருந்து உருவானதால், இச் சமுதாயங்களிற் பெரும்பாலானவை இனரீதியில் ஒத்தவை, எனினும் புவியியல் ரீதியில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த காரணத்தால், மொழி, உடை மற்றும் பழக்க வழக்கங்களில் சில வேறுபட்ட சிறப்பியல்புகள் அவர்களிடையே இருப்பதைக் காணலாம்.
அவர்களுடைய சமூக-சமய ஒற்றுமையின் அடிப்படையில் இவர்களை மூன்று பண்பாட்டுக் குழுக்களாகப் பிரிக்கலாம். தவாங் மற்றும் மேற்கு கமெங் மாவட்டங்களைச் சேர்ந்த, மொன்பாஸ் மற்றும் ஷெர்டுக்பென்ஸ், லாமாயிச மரபில் வந்த மகாயான பௌத்தத்தைப் பின்பற்றுகிறார்கள். இதனால் இவர்கள் வாழும் கிராமங்களில் அதிக அளவில் அழகுபடுத்தப்பட்ட "கொம்பாஸ்" எனும் பௌத்த கோயில்களைக் காண முடியும். பெரும்பாலானவர்கள், படியமைப்புப் பயிர்ச் செய்கையைக் கைக்கொள்ளும் விவசாயிகளாக இருந்த போதிலும், இவர்களிற் பலர் கவரிமா மற்றும் மலையாட்டு மந்தை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை ஒத்த பண்பாட்டைக் கொண்டவர்களே, வடக்கு எல்லையோரமுள்ள உயர்ந்த மலைகளில் வாழும் மெம்பாக்கள், கம்பாக்கள் போன்றவர்களாவர். மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் கெம்ப்டி மற்றும் சிங்போ இனத்தவர்கள் தேரவாத பௌத்தர்கள். இவர்கள் தாய்லாந்து, மியன்மார் (பர்மா) ஆகிய நாடுகளிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் இடம் பெயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் தாயகத்தில் வழக்கிலிருந்த பண்டைய எழுத்துக்களிலிருந்து உருவான எழுத்துக்களையே இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இரண்டாவது குழுவினர், தொன்யி-போலோ, அபோ தானி என அழைக்கப்படும் சூரிய, சந்திரக் கடவுளர்களை வணங்கும், "அதி"கள், "அகா"க்கள், அப்தானிகள், பங்னிகள், நிஷிகள், மிஷ்மிகள், மிஜிகள், தொங்சாக்கள் போன்றவர்களாவர். இவர்களுடைய சமயக் கிரியைகள், பெரிதும் விவசாய வட்டங்களின் கட்டங்களுடன் பொருந்துகின்றன. அவர்கள் இயற்கைத் தேவதைகளுக்கு விலங்குகளைப் பலியிடுகிறார்கள். இவர்கள் பாரம்பரியமாக ஜும்மிங் அல்லது shifting பயிர்ச் செய்கையைக் கைக்கொள்ளுகிறார்கள். அதிகளும், அப்தானிகளும் ஈர நெற் செய்கையில் பெருமளவில் ஈடுபட்டு, குறிப்பிடத்தக்க விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். அப்தானிகள் அவர்களுடைய, நெல்லுடன்கூடிய மீன்வளர்ப்புக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள், ஒவ்வொரு நெற்பயிற் செய்கையிலும், இரண்டு முறை மீன் விளைவைப் பெறுவதில் நூற்றாண்டுகளாக அநுபவம் பெற்றவர்கள்.
மூன்றாவது குழுவினர், நாகலாந்தை அண்டியுள்ள திரப் மாவட்டத்தைச் சேர்ந்த நொக்டேக்கள், மற்றும் வஞ்சோக்கள் ஆவர். பாரம்பரிய கிராமத் தலைவர்கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கும் இக் குழுவினர் இறுக்கமான சமூகக் கட்டமைப்பைக் கொண்ட கிராம சமுதாயத்துக்காக, அறியப்பட்டவர்கள். நொக்டேக்கள் ஆரம்பநிலை வைஷ்ணவத்தையும் பின்பற்றி வருகிறார்கள்.
வரலாறு
வரலாற்றுக்கு முந்தைய காலம்
அருணாசலப் பிரதேசத்தில் கிடைத்த புதிய கற்காலக் கருவிகளைக் கொண்டு பார்கும்போது இமயமலைப்பகுதி உள்ளிட்ட இப்பகுதியில் மக்கள் குறைந்தது பதினொரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து வாழ்ந்து வருகின்றனர் என்று உறுதியாகிறது. இப்பிராந்தியத்தில் பழங்கால மக்கள் குடியேற்றமானது பூட்டான் மற்றும் அதன் பக்கத்தில் இமயமலைப் பகுதிகளான தெற்காசியப் பகுதிகள், சிந்து சமவெளி பகுதியிலிருந்தும் மக்கள் குடியேறியுள்ளனர், இக்குடியேற்ற வரலாறு தெற்காசியாவின் வெண்கலக் காலமான பொ.ஊ.மு. 3300 க்கு முற்பட்ட காலத்தில் துவங்குகிறது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திபெத் மற்றும் தென்சீனப் பகுதிகளிலிருந்து மற்ற இன குழுக்கள் வந்து குடியேறினர்.
துவக்கக்கால வரலாறு
அருணாசலப் பிரதேசத்தின் துவக்கக்கால வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. வாய்மொழி வரலாற்றுத் தகவல்களின்படி இப்பகுதி பழங்குடி மக்கள் திபெத்திய-பர்மிய பகுதியில் இருந்து குடியேறியதாக தெரிகிறது, என்றாலும் இதை உறுதிப்படுத்துவது சிரமமாக உள்ளது. பொருள் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் அருணாச்சலப் பிரதேச பழங்குடிக் குழுக்கள் பர்மிய பகுதியின் மலைவாழ் பழங்குடியினர் உடன் நெருக்கமானவர்கள் என்று தெளிவாக தெரிகிறது. இப்பகுதியானது வடக்கு பர்மிய கலாச்சாரத்தின் மேற்கு நோக்கிய பரவலின் நீட்சியாக இருக்க முடியும் என்பது ஒரு உண்மை ஆகும்.
அருணாசலப் பிரதேச அரசாங்கத்தின் கூற்றின்படி, இந்து மத புராண நூல்களான காளிகா புராணம், மகாபாரதம் ஆகியவற்றில் இப்பிராந்தியத்தின் பிரபு மலைகள் குறிப்பிடப்படுகின்றன, மேலும் இங்குதான் பரசுராமர் தன் பாவங்களைக் கழுவியதாகவும், வியாசர் தியானித்ததாகவும், மன்னர் பீஷ்மக்கா தன் அரசை நிறுவியதாகவும், கிருட்டிணன் தன் துணைவியான ருக்மணியை மணந்ததாகவும் கூறப்படுகிறது.
இப்பிராந்தியத்தின் பதிவுபெற்ற அதிகாரப்பூர்ர வரலாறு அஹோம் மற்றும் சுதியா ஆகிய வெளியார் கண்ணோட்டத்தின் மூலமாக மட்டுமே கிடைக்க பெற்றுள்ளது. இந்த பகுதியின் வடமேற்கு பாகங்கள் பொ.ஊ.மு. 500 மற்றும் பொ.ஊ. 600 ஆண்டுகளுக்கு இடையே மோன்யூலின் போன்பா பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் இப் பகுதியின், திபெத் மற்றும் பூட்டான் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. மாநிலத்தின் பிற பகுதிகள் குறிப்பாக மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதிகள், சுதியா மன்னர்களின் கட்டுப்பாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் அஹோம்-சுதியா போர்வரை இருந்தது. ஆங்கிலேயர்களால் இந்தியா கைப்பற்றும் காலம்வரை அஹோம் மரபினரின் கட்டுப்பாட்டின்கீழ் இப்பகுதி 1858 வரை இருந்தது. என்றாலும், பெரும்பாலான அருணாச்சலப் பழங்குடியின மக்கள் 1947 இல் இந்தியா விடுதலைப் பெற்று இப்பகுதியின் உள்நாட்டு நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரை இம்மக்களின் தன்னாட்சி நடைமுறையில் இருந்தது.
அண்மைய அகழ்வாய்வில் மேற்கு சியாங் மாவட்டப் பகுதியின் சியாங் மலைகளின் அடிவாரத்தில் 14 ஆம் நூற்றாண்டின் சுதியா அரசு காலத்திய இந்து சமய கோயில்களின் இடிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மெக்மோகன் கோடு வரைதல்
1913-1914 இல், சீனா, திபெத், பிரித்தானிய இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் எல்லைக் கோட்டை முடிவு செய்வது தெடர்பாக சிம்லாவில் சந்தித்தனர். இருப்பினும், சீனப் பிரதிநிதிகள் அங்கு உடன்படிக்கைக்கு மறுத்துவிட்டனர். இந்த உடன்படிக்கையின் நோக்கம் உள் மற்றும் வெளி திபெத் மற்றும் பிரித்தானிய இந்தியா இடையே எல்லைகளை வரையறுப்பதாக இருந்தது. பிரித்தானிய நிர்வாகி சர் ஹென்றி மெக்மகன் என்பவர் சிம்லா மாநாட்டில் 550 மைல்கள் (890 கி.மீ.) நீளமுடைய பிரித்தானிய இந்தியா மற்றும் வெளி திபெத் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லையாக மக்மகன் கோட்டை வரைந்தார். மாநாட்டின் முடிவுகளை திபெத் மற்றும் பிரித்தானியப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டு, அதன்முடிவாக பிரித்தானியப் பேரரசு கேட்டதினால் தவாங் மற்றும் திபெத்தின் சில பகுதிகளை திபெத் விட்டுக்கொடுத்து. ஆனால் சீனப் பிரதிநிதி ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, வெளியேறினார். இதுவே விடுதலைக்குப் பிறகு இந்திய சீனப்போருக்கு வழிவகுத்தது.
இந்திய சீனப் போர்
சுதந்திர இந்தியாவால் இப்போதைய அருணாச்சலப் பிரதேசம் வடகிழக்கு முன்னணி முகமை என்ற பெயரில் 1954 இல் உருவாக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட ஒரு தசாப்தம், சீன-இந்திய உறவுகள் சுமூகமாகவும் அமைதியாகவும் இருந்தது, ஆனால் அதன்பிறகு பிரச்சினை மறு எழுச்சிபெற்று 1962 இல் இந்திய சீனப் போருக்கு எல்லை ஒரு முக்கிய காரணமாக ஆனது.
மாவட்டங்கள்
இந்த மாநிலத்தில் மொத்தம் 25 மாவட்டங்கள் உள்ளன. அவை பின்வருமாறு;
அன்ஜாவ் மாவட்டம்
சங்லங் மாவட்டம்
கிழக்கு காமெங் மாவட்டம்
மேற்கு காமெங் மாவட்டம்
கிழக்கு சியாங் மாவட்டம்
மேல் சியாங் மாவட்டம்
மேற்கு சியாங் மாவட்டம்
லோஹித் மாவட்டம்
கீழ் சுபன்சிரி மாவட்டம்
மேல் சுபன்சிரி மாவட்டம்
பபும் பரே மாவட்டம்
தவாங் மாவட்டம்
திரப் மாவட்டம்
கீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்
மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்
குருங் குமே மாவட்டம்
லோங்டிங் மாவட்டம்
ஷி யோமி மாவட்டம்
பக்கே-கேசாங் மாவட்டம்
லேபா ராதா மாவட்டம்
சியாங் மாவட்டம்
காம்லே மாவட்டம்
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,383,727 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 77.06% மக்களும், நகரப்புறங்களில் 22.94% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 26.03% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 713,912 ஆண்களும் மற்றும் 669,815 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 938 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. 83,743 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 17 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 65.38 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 72.55 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.70 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 212,188 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 401,876 (29.04 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 27,045 (1.95 %) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 3,287 (0.24 %) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 418,732 (30.26 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 771 (0.06 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 162,815 (11.77 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 362,55 (26.20 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 6,648 (0.48 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கிலத்துடன் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
இவற்றையும் பார்க்க
வடகிழக்கு எல்லைப்புற முகமை
அருணாசலப் பிரதேச சட்டமன்றம்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Tourism in Arunachal Pradesh (Official)
Arunachal Pradesh Territorial Dispute between India and China , Inventory of Conflict and Environment
reviewNE – all things North East India
STD Codes of Arunachal Pradesh
Languages of Arunachal Pradesh (Roger Blench)
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
வடகிழக்கு இந்தியா |
2265 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D | மணிப்பூர் | மணிப்பூர் (Manipur), வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் முன்னர் பிரித்தானிய இந்தியாவில் 1947 வரை முடியாட்சியுடன் கூடிய மணிப்பூர் இராச்சியமாக விளங்கியது. 1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக இருந்தது. 1972-இல் தனி மாநிலத் தகுதி கிடைத்தது.
இதன் தலை நகரம் இம்பால். மணிப்பூர், இந்திய மாநிலங்களான நாகலாந்து, மிஸோரம், அஸ்ஸாம் என்பவற்றை முறையே, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளிலும், கிழக்கில் மியன்மாருடன் அனைத்துலக எல்லையொன்றையும் கொண்டுள்ளது.
இந்த மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மைத்தி (Meitei) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியப் படைகளுக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற கடும்போரின் பல சண்டைகளுக்கு இப்பிரதேசம் களமாக விளங்கிற்று. ஜப்பானிய படைகள் கிழக்காசியாவில் வெற்றி கண்டு மணிப்பூர் வரை தாக்கினர். ஆனால் இம்பால் நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயலும்போது அவர்கள் தோல்வியடைந்தனர். போரின் தொடர்ச்சியில் இந்நிகழ்வு ஒரு திருப்புமுனையாய் விளங்கியது. அப்போரில் காலமான இந்திய போர்வீரர்களுக்கும் கூட்டுப்படை போர்வீரர்களுக்கும் British War Graves Commission தற்போது அங்கு இரு சுடுகாடுகளை பராமரித்து வருகின்றது.
மணிப்பூர் ஒரு பதட்டமான எல்லையோர மாநிலமாகக் கருதப்படுகிறது. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் இம்மாநிலத்தினுள் செல்ல தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வட்டார அயல்நாட்டினர் பதிவு அலுவலகத்தில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிக்கான நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்த சட்டம் மணிப்பூரில் பிறந்து பிற நாடுகளில் குடியேறிய மைத்தி மக்களுக்குங்கூட பொருந்தும். இந்த சிறப்பு அனுமதியைப் பெற்றவர்கள் பத்து நாட்களுக்கு மணிப்பூரில் தங்கலாம். அக்காலகட்டத்தில் அவர்கள் குறைந்தது மூன்று சக பயணிகளுடன் சேர்ந்து அரசாங்க உத்தரவு பெற்ற பயண அதிகாரி ஏற்பாடு செய்த பயண திட்டத்தைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். அத்துடன், வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தின் மூலமாய் மட்டுமே இம்பாலினுள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் இம்பால் நகரத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல அனுமதிக்கப் பட மாட்டார்கள்.
ஆட்சிப் பிரிவுகள்
மணிப்பூரில் 8 டிசம்பர் 2016-க்கு முன்னர் 9 மாவட்டங்கள் மட்டும் இருந்தது. பின்னர் 8 டிசம்பர் 2016-இல் 7 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டதால் தற்போது 16 மாவட்டங்கள் உள்ளது.
கலை மற்றும் பண்பாடு
கிருஷ்ணன், ராதை மற்றும் கொபியர்களுடன் ஆடும் ராசலீலையை விளக்கும், மணிப்புரி நடனம் மணிப்பூர் மாநிலத்தில் பிறந்த நடனக் கலையாகும். மணிப்புரி நடனத்தை பெண்களுடன் ஆண்களும் ஆடுகின்றனர்.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மணிப்பூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,855,794 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 70.79% மக்களும், நகரப்புறங்களில் 29.21% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 24.50% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,438,586 ஆண்களும் மற்றும் 1,417,208 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 985 பெண்கள் வீதம் உள்ளனர். 22,327 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 128 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 76.94 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.58 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.26 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 375,357 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,181,876 (41.39 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 239,836 (8.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,179,043 (41.29 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,692 (0.06 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 7,084 (0.25 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,527 (0.05 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 233,767(8.19 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 10,969 (0.38 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மணிப்புரியம் மொழியுடன், வங்காளம், இந்தி மற்றும் இருபத்து ஒன்பது பழங்குடி இன மொழிகளும் பேசப்படுகிறது.
பழங்குடிகள்
மீதெய் பழங்குடி மக்கள் மணிப்பூர் மாநிலத்தின் பெரும்பான்மையின பழங்குடிகள் ஆவர். அதற்கு அடுத்து தடௌஸ் மற்றும் நாகா பழங்குடி மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
குக்கி மற்றும் நாகா பழங்குடியின மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது.
வரலாறு
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
மணிப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்
அரசாங்கம்
Official Tourism Site of Manipur
பொது தகவல்கள்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
வடகிழக்கு இந்தியா |
2268 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF | கண்ணகி | கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாகக் காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அவரது மனைவியான கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் பண்டைய இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்துக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.
பெயராய்வு
கள் போல் மயக்கும் சிரிப்பை உடையவள் என்னும் பொருள் விளங்கும்படி, 'கண்ணகி' என்றனர். கண்+நகி என்று பிரித்து சிரிக்கின்ற - மலர்ந்த கண்ணைக் கொண்டவள் என்றும் பொருள்காண்பர்.
திருமாவுண்ணி
கண்ணகி போல் இருக்கவேண்டிய தலைவி தன்னிடம் சினம் கொள்கிறாளே என்று பரத்தை ஒருத்தி அங்கலாய்த்துக் கொள்கிறாள். அவள் கண்ணகி முலையை அறுத்து மதுரையை எரித்த செய்தியை நினைவுகூர்கிறாள்.
கண்ணகியை அவள் திருமாவுண்ணி என்று குறிப்பிடுகிறாள். அழகால் திருமகளைத் தின்றவள் என்பது இத்தொடருக்குப் பொருள்.
பரவலர் பண்பாட்டில்
1942 இல் ஆர். எஸ் மணி இயக்கிய கண்ணகி என்ற தமிழ்க் காவியத் திரைப்படம் வெளியானது. இதுவே சிலப்பதிகாரக் காவியத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். 1964 இல் இதே போன்ற இரண்டாவது படம் பூம்புகார் என்ற பெயரில் வெளியானது. சென்னை, மெரினா கடற்கரையில், சிலப்பதிகாரத்தின் காட்சியை சித்தரிக்கும் கண்ணகியின் உருவச் சிலை நிறுவப்பட்டது. இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி 2001 திசம்பரில் அகற்றப்பட்டது. 2006 சூனில் சிலை மீண்டும் நிறுவப்பட்டது.
பத்தினி என்ற சிங்களத் திரைப்படம் 5 மே 2016 அன்று இலங்கையில் வெளியானது. பத்தினி அல்லது கண்ணகியின் பாத்திரத்தில் பூஜா உமாசங்கர் நடித்தார்.
1990 களின் முற்பகுதியில் தூர்தர்சனில் உபாசனா என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பப்பட்டது. அது சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டது.
இதையும் பார்க்க
இலங்கையில் கண்ணகி வழிபாடு
மங்கலதேவி கண்ணகி கோவில்
ஆற்றுக்கால் பகவதி கோவில்
பத்தினி
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
கண்ணகி கூத்து - நோர்வே , கனடா
சிலப்பதிகாரக் கதைமாந்தர்கள்
இந்து பெண் தெய்வங்கள்
ஆவியர்
கண்ணகி |
2269 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | ஐம்பெருங் காப்பியங்கள் | முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.
அணிகலப் பெயர்கள்
இந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன.
சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு
மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு.
குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாற்றை கூறும் நூல்.
வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல்.
சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகன் மற்றும், அவனது மனைவியாகிய கண்ணகி ஆகியோரது கதையைக் கூறுவதே இக்காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடன மாதான மாதவி, இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்
என்கிற பதிக வரிகளில், முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மணிமேகலை
மணிமேகலை, ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால், மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்குப் பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள்.
தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும், உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி, புத்த சமய மடம் ஒன்றில், அவளைச் சேர்த்து வளர்த்தாள்.
அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன், மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு, பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.
இக் காப்பியத்தில் இருந்து சில வரிகள்:
அறமெனப் படுவது யாதெனக்கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்ட தில்லை.
குண்டலகேசி
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல், ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
தன்னைக் கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டு, பௌத்த துறவியாகி, அச்சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே, இக்காப்பியத்தின் கருப்பொருளாகும்.ஆசிரியர் நாத குத்தனார்
வளையாபதி
தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது, சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் புதிப்பிக்கப் பட்டுள்ளன. இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது.
கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை, கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.
சீவக சிந்தாமணி
திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காப்பியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்பனின், 'சத்திர சூடாமணி'யைப் பின்பற்றியது; அந்த மூல நூலோ, கி.பி. 898 இல் குணபத்திரன் எழுதிய 'உத்தரபுராண'த்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே, சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர், சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை சனரஞ்சகமாகவும், இனக்கவர்ச்சியுடனும், கற்பனையுடனும் தமிழில் எழுத, திருத்தக்க தேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை.
நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுட்கள் ஒவ்வொன்றும், நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையன. ஆசிரியர், 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில், சில, அவருடைய குருவாலும், வேறு சில, வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, 'இவை குருவால் எழுதப்பட்டவை' என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை. பெரிய புராணம் எழுதப்பட, சீவக சிந்தாமணி நேரடியாகக் காரணமாக இல்லை; ஆனாலும், சீவக சிந்தாமணி, அதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
தமிழ்நாட்டு பண்பாட்டு வரலாறு |
2270 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88 | சென்னை | சென்னை () தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996-ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம், மதராசு பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை கோலிவுட் (Kollywood) என அறியப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம் ஆகும். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரி பாகங்கள் உற்பத்தியில் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அமெரிக்க ஆட்டோமொபைல் துறையின் தலைநகரான டெட்ராய்ட் போல இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் முன்னோடி நகரமாக விளங்கும் சென்னை "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது. சென்னை ஆண்டுக்கு 1.4 மில்லியன் அதாவது 14 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்கு ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 3 கார்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014-இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் சென்னை 26-வது இடத்தைப் பெற்றுள்ளது.
வரலாறு
சென்னை நகருக்கு அப்பெயரைப் பெரும் முன்பே நீண்ட வரலாறு உள்ளது. பொ.ஊ. 1-ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ மற்றும் விஜயநகரப் பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.
1639-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22-ஆம் தேதி தான், தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம், கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவருடன் இப்போது புனித ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து தான், சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும், பின்னர் நகரத்தோடு இணைந்த ஊர்களான திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இயேசுவின் தோழர்களுள் ஒருவரான புனித தாமஸ் பொ.ஊ. 52 முதல் 70 வரை இங்கு வந்து போதித்ததாகக் கருதுபவர்கள் உண்டு. 16-ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர் 1522-ஆம் ஆண்டு சாந்தோம் (சான் தோம – "புனித தோமஸ்") என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612-ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.
1639-ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாகத் தேர்வு செய்யப்பட்டது.
ஓராண்டிற்குப் பின், புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522-ஆம் ஆண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி, போர்த்துக்கீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612-ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688-ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது.
1746-ஆம் ஆண்டில் புனித ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749-ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் இரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947-ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக 'மதராஸ்' ஆனது. சென்னை மாகாணம் 1967-ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நகரின் பெயரான மதராஸ் என்பது, 1996-ஆம் ஆண்டு 'சென்னை' எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956-ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகி, மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1996-இல் சென்னை என மாற்றம் செய்தது. வெங்கடபதி சகோதரர்களிடமிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை பிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை 'சென்னப்ப நாயக்கர்' பெயரால் 'சென்னப்பட்டணம்' என இந்நகரம் அழைக்கப்பட வேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும், அதனைச் சுற்றிய பகுதிகளும் 'சென்னை' என அழைக்கப்படுகிறது.
டிசம்பர் 2004 ஆழிப்பேரலை தாக்குதலில் பெரும் பாதிப்புக்குள்ளான இடங்களில், சென்னையும் ஒன்றாகும். 2014-ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 22-ஆம் நாள் சென்னை நகரம் உருவாகி 375 ஆண்டுகள் நிறைவுற்ற தினமாகக் கொண்டாடப்பட்டது.
புவியியல்
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது.
சென்னை நகரத்தின் பரப்பளவு 426 சதுர கி.மீ. ஆகும். சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாகக் கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன.
சென்னையில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. சென்னையில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 44.1˚ செல்சியஸ், குறைந்த வெப்பநிலை 15.8˚ செல்சியஸ். தென்கிழக்குப் பருவமழையும், முக்கியமாக வடகிழக்குப் பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சென்னையில் வருடத்திற்கு சுமார் 1300 மி.மீ. மழை பெய்கிறது.
பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சென்னையின் கடற்கரை, நகரின் மிக உட்புறத்தே அங்கப்ப நாயக்கன் தெரு உள்ள தொலைவில், இருந்தது. பிற்பட்ட காலப்பகுதியில், கடல் நன்றாக உள்வாங்கித் தற்போதைய இடத்தில் நிலைக்கொண்டுவிட்டது.
கோட்டைக்குள் இருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் வண்ண வரைபடங்கள் சிலவற்றில், கடலின் அலைகள் கோட்டையின் சுவர்களுக்கு மிக மிக அருகில் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.
கூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாகப் பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும். 13 கி.மீ. நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும்,
அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும்,
அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.
சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.
நிர்வாகம்
சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. மாநகராட்சியின் மேயர் (மாநகரத் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர 200 வட்டங்களிலிருந்து 200 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயர் பிரியா ராஜன் 2022-ஆம் ஆண்டு மார்சு 4 முதல் இப்பதவியை வகித்து வருகிறார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி 1688-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது.
தமிழகத் தலைமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. பின் 13 மார்ச் 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டடத்தில் மாற்றப்பட்டது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். ஓராண்டிற்கு பிறகு தமிழகத் தலைமைச்செயலகம் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் 18 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. வட சென்னையில் திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும்,தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன.
இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகியவையாகும்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.
தமிழகக் காவல் துறையின் பிரிவான சென்னை பெருநகரக் காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன.
பொருளாதாரம்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.
1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். சோழிங்கநல்லூர் எல்காட் தொழில்நுட்ப பூங்கா, சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை மென்பொருள் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறந்து விளங்குகிறது. மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. பெரம்பூரில் இயங்கிவரும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) இந்திய இரயில்வேயின் முதன்மையான இரயில் உற்பத்தித் தொழிற்சாலையாகும். அம்பத்தூரில் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் இருக்கின்றன; மற்றும் பாடி, ஆவடி, எண்ணூர், திருப்பெரும்புதூர், மறைமலைநகர் பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ். குழுமத் தொழிற்சாலைகள், அசோக் லேலண்ட், ஹுண்டாய், போர்ட், மிட்சுபிசி, டி.ஐ. சைக்கிள்கள், எம். ஆர். எஃப்., பி.எம்.டபிள்யூ. (BMW), ரெனோ நிசான் போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னை மற்றும் அதன் அருகாமையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடியில் கன ஊர்தி தொழிற்சாலை உள்ளது. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு தயாரிக்கப்படுகிறது.
2021-இல் சென்னை உலக வர்த்தக மையம் கட்டிமுடிக்கப்பட்டு செயல்படத் துவங்கியது.
மக்கள் தொகை
சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், இந்தி, போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது.
அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர்.
இங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள் போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. இந்த "மொழி" அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத மொழியாகக் கருதப்படுகிறது.
கலாச்சாரம்
சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாகச் சென்னையின் கலாச்சாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.
சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர்.
தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் வருடந்தோறும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள கல்லூரிகளில் வருடந்தோறும் கலைத்திருவிழாக்கள் மாணவர்களால் நடத்தப்படுகின்றன.
சென்னையில் உள்ள கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. தமிழ்த் திரைப்படப் பாடல்கள் சென்னை மக்களால் மிகவும் இரசிக்கப்படுகின்றன. தனியார் தொலைக்காட்சிகளிலும் வானொலி அலைவரிசைகளிலும் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகம் ஒலிபரப்பப்படுவதைக் காணலாம்.
அரிசி இங்கு பிரதான உணவாக இருக்கின்றது. பிரபலமான தெற்காசிய உணவான பிரியாணியும், இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும் சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.
புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.
சமயங்கள்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மற்ற தமிழ் நகரங்களைப்போல, சென்னை மாநகரிலும் இந்து மக்களின் எண்ணிக்கை அதிக அளவிலுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக, இசுலாமியம் மற்றும் கிறித்துவம் மேலோங்கிக் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர, சைனம், பௌத்தம் மற்றும் சீக்கிய சமயங்களும் உள்ளன.
சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்காலக் கோயில்கள் உள்ளன. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் என நான்கு தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் சென்னை மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன.
தொன்மையான சாந்தோம் தேவாலயம், தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த தேவாலயமாகும். சாந்தோம் என்பவர், இயேசுவின் 12 சீடர்களில் ஒருவராவர். சிலவும் இங்கு உள்ளன. இதை போர்சுக்கல் நாட்டை சார்ந்தவர்கள் எழுப்பியதாகக் கருதப்படுகிறது.
போக்குவரத்து
சென்னையில் ஆகாய மார்க்கமாகவும், கடல் வழியாகவும், ரயில் மற்றும் சாலை வழியிலும் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். இந்திய நாட்டின் ரயில் அமைப்பு, சென்னையில் தான் தொடங்கியது எனக் கூறலாம்.
1832-ஆம் ஆண்டில் சென்னையில் முதல் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
1837-இல் சரக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு சிறிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. 16 வருடங்களுக்குப் பின்னர், முதல் நுகர்வோர் ரயில் பாதை தானேவில் அமைக்கப்பட்டது.
1931-ஆம் ஆண்டில், சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையே, புறநகர் ரயில் பாதை அமைக்கப்பட்டது. சென்னையில் சுமார் 65 ஆண்டுகள், டிராம்ஸ் போக்குவரத்து அமைப்பு இயங்கியது. பின்னர் 1950-இல், ராஜகோபாலச்சாரி முதலமைச்சாராய் பணியாற்றிய போது, டிராம்ஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
2012-இன் போது சுமார் 37,60,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பின்னர், 2016-இல் சுமார் 47,57,000 வாகனங்கள் இயங்கி வருகின்றன.
ஆகாய வழிப் போக்குவரத்து
சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் நல்ல விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.
கடல் வழிப் போக்குவரத்து
சென்னைத் துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.
இரயில் வழிப் போக்குவரத்து
சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகியவை சென்னையின் இரு முக்கிய இரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்குச் சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. இப்போது சென்னையில் உள்ள தாம்பரம் இரயில் நிலையமும் சென்னையின் மூன்றாவது முனையாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் இருப்புவழி நான்கு மார்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம்,
சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி,
சென்னைக் கடற்கரை – செங்கல்பட்டு,
சென்னைக் கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான 22 கி.மீ. தூரத்திற்கும், பின்னர் இரண்டாம் கட்டமாக வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் இடையேயான 23.1 கி.மீ. தூரத்திற்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பகுதி-1 வழித்தடங்களில் விரிவாக்கப் பணிகள் வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரை 5.624 கி.மீ. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாலை வழிப் போக்குவரத்து
சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்குச் சென்று வர, நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையை திருச்சி, திருவனந்தபுரம், பாண்டிச்சேரி, ஹைதராபாத், பெங்களூர், மும்பை,விஜயவாடா, கொல்கத்தா ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன.
சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து வசதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 2773 பேருந்துகள், 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நூற்றுக்கணக்கான சிற்றுந்துகளும் நகர் முழுவதும் இயக்கப்படுகின்றன. இவை தவிர, பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்களும், கால் டாக்ஸிக்களும் நகரத்தில் ஓடுகின்றன.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களுக்கு செல்ல சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும், வடக்கு,மேற்கு மாவடங்கள் மற்றும் பெங்களூரு, மைசூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல சென்னை திருமழிசை பேருந்து நிலையத்தில் இருந்தும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு செல்ல சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்காணா மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும், அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தகவல் தொடர்பு
தென்கிழக்காசிய கண்ணாடி நூலிழை மையங்களுள் ஒன்றான சென்னை, இந்தியாவில் தகவல் தொடர்பில் முதலிடம் வகிக்கிறது. இங்கு பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஜியோ ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு மற்றும் அகலப்பட்டைஇணைய இணைப்புகள் அளிக்கின்றன. ஆக்ட் பிராட்பேண்ட், ஹாத்வே, யூ பிராட்பேண்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அல்லாத அகலப்பட்டை இணைய இணைப்புகள் மட்டும் அளிக்கின்றன. பெரும்பாலான அகலப்பட்டை இணைய இணைப்புகள் குறைந்தது 100mbps வேகத்தில் அளிக்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்புகள் அளிக்கின்றன. ஏர்டெல், ஜியோ, வோடபோன் நகர்பேசி நிறுவனங்கள் 2G, 3G, 4G அலைக்கற்றை சேவைகளையும், பி. எஸ். என். எல். 2G, 3G அலைக்கற்றை சேவைகளையும் அளிக்கின்றன.
அனைத்து தேசிய, அனைத்துலக தொலைக்காட்சிகளும் சென்னையில் தெரிகின்றன. சன் டிவி மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான சன் மியூசிக், சன் நியூஸ், கே. டிவி, ஆதித்யா, மக்கள் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான கலைஞர் செய்திகள், இசையருவி, சித்திரம், சிரிப்பொலி, ராஜ் தொலைக்காட்சி மற்றும் அதன் அலைவரிசைகள் ராஜ் நியூஸ், ராஜ் டிஜிட்டல் ப்ளஸ், ஸ்டார் விஜய், ஜெயா தொலைக்காட்சி மற்றும் அதன் அலைவரிசைகள் ஜெயா மாக்சு, ஜெயா பிளசு, தூர்தர்சன் பொதிகை, டிஸ்கவரி தமிழ் ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் அவற்றில் பரவலான சிலவாகும். நான்கு ஏ. எம். மற்றும் பதினொன்று பண்பலை அலைவரிசைகளில் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. சூரியன் பண்பலை, ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ, ரேடியோ ஒன், ஆஹா, பிக், ரெயின்போ பண்பலை, எப். எம். கோல்டு ஆகியன அவற்றில் சிலவாகும்.
தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தின மலர், தினமணி, மாலை மலர், தி இந்து ஆகிய தமிழ் செய்தித் தாள்களும், தி இந்து, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, டெக்கான் கிரானிக்கிள், தி டைம்சு ஆஃப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் சென்னையில் அச்சிடப்படுகின்றன. ஆனந்த விகடன், குமுதம், கல்கி, குங்குமம், நக்கீரன், புதிய தலைமுறை ஆகியவை இங்கு அச்சிடப்படும் முக்கிய வார இதழ்கள்.
மருத்துவம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, நூற்றாண்டுக்கு மேல் பழமை வாய்ந்த ராயபுரம் அரசு ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் (ஆர். எஸ். ஆர். எம்) லையிங் மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவை புகழ்பெற்ற அரசு மருத்துவமனைகளாகும். இவை தவிர அப்போல்லோ மருத்துவமனை, மலர் மருத்துவமனை, MIOT மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, விஜயா மருத்துவமனை போன்ற தனியார் மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன.
காலநிலை
சென்னையில் கோடைக்காலத்தில் அதிக பட்ச வெப்பம் சுட்டெரிக்கும் நாட்கள் மே முதல் சூன் வரையான காலமாகும். அப்போது சில நாட்களைக் கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்றும் அழைக்கின்றனர். அக்காலங்களில் அதிக பட்ச வெப்பமாக இருக்கும். சனவரியில் குளிர் அதிகம் இருக்கும். அப்போது குறைந்த பட்ச வெப்பநிலை . மிகக் குறைந்த வெப்பநிலையாகப் பதிவாகியுள்ளது. மேலும் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது. சராசரி மழைப்பொழிவு இந்நகரம் வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்திருக்கிறது. அக்டோபர் மாதத்திலிருந்து திசம்பர் மாதங்களில் மழைக்காலமாகும். சில சமயங்களில் புயல் காற்று வங்காளவிரிகுடா பக்கங்களிலிருந்து வருகிறது. 2005-ஆம் ஆண்டு அதிக பட்ச மழைப்பொழிவாகப் பதிவாகியுள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தென்மேற்கு பருவக்காற்று காலமாகும். மற்ற எல்லா மாதங்களிலும் வடகிழக்கு காற்று அடிக்கிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழையின் காரணமாக 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ஆம் திகதி காலையில் மட்டும் 16 சென்டிமீட்டர் மழைபெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கல்வி
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யும், அண்ணா பல்கலைக்கழகமும், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், மருத்துவக் கல்லூரிகளும், சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல கலை, அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளன. அவற்றுள் சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, இலயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, வைஷ்ணவ் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, S.I.E.T கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை தவிர என்.ஐ.எஃப்.டி. (National Institute of Fashion Technology – தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி), ஏ.சி.ஜெ. (Asian College of Journalism), சென்னை சமூகப்பணிப் பள்ளி (Madras School of Social Work) போன்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன.
நூலகங்கள்
சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் (National Depository Libraries) ஒன்று. இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதராஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்குச் சூட்டப்பட்டது.
செப்டம்பர் 15, 2010 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகம் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி யால் திறந்து வைக்கப்பட்டது; இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ 180 கோடி செலவில் கட்டப்பட்டது.
விளையாட்டுகள்
மற்ற இந்திய நகரங்களைப் போலச் சென்னையிலும் கிரிக்கெட் பிரபலமான விளையாட்டாகும். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி. வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் சனவரி மாதம் சர்வதேச ஏ. டி. பி. பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. விஜய் அமிர்தராஜ், இராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே.
எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995-ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பைப் பந்தயத்தொடர் நடந்தது. 2005 டிசம்பரிலும் இப்போட்டிகள் இங்கு நடைபெறும்.
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996-ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றன.
மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது.
சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் – 2022' போட்டிகள், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தொடக்க விழா கண்டு, மகாபலிபுரம் உள்விளையாட்டு அரங்குகளில் சிறப்பாக விளையாடப் பெற்று, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நிறைவு விழாவும் காணப் பெற்று, உலகரங்கில் பதக்கங்களுடன், சென்னை சாதனை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உயிரியல் பூங்காக்கள்
கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுநர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி. வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில், சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன், ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.
பொழுதுபோக்கு
உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரை, எழில்மிகு பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகியவை புகழ்பெற்ற இடங்களாகும். வள்ளுவர் கோட்டம், அரசு அருங்காட்சியகம், முட்டுக்காடு படகுக் குழாம், பிர்லா கோளரங்கம் மற்றும் தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் கிஷ்கிந்தா, குயின்ஸ் லேன்ட், விஜிபி கோல்டன் பீச், மாயாஜால், எம்.ஜி.எம். டிட்ஜி வர்ல்டு உள்ளிட்டவைகள் சுற்றுலாத் தலங்களாகும்.
பிரச்சனைகள்
மாசு மிகுந்த குடிநீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை
அதிக மக்கள் தொகை அடர்த்தி
25% மக்கள் குடிசைப்பகுதிகளில் வாழ்வது
மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல்
வாகன நெரிசல்
மாசு மிகுந்த சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிக்கப்படாமை
சென்னை சார்ந்த மென்பொருள் நிறுவன வளர்ச்சி விளைவுகள்
சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தேவைகளுக்குமாக நிலத்தடி தண்ணீர் லாரிகளால் உறிஞ்சப்படுவதால் பாதிக்கப்படும் சோழவரம், திருமழிசை போன்ற பகுதி மக்கள், 2013-ஆம் ஆண்டு தண்ணீர் லாரிகளை, அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுத்ததால், அப்பகுதியின் தனியார் தண்ணீர் லாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருந்த மென்பொருள் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன; சில நிறுவனங்கள் தண்ணீர்த் தட்டுப்பாடால் விடுமுறை விட எத்தனித்தன. அரசால் விவசாயிகள் சமாதானப்படுத்தப்பட்டு, மீண்டும் தண்ணீர் உறிஞ்சப்பட அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்நிறுவனங்களின் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கிற்று.
நிலத்தடிநீர் இவ்வாறு உறிஞ்சப்படுவதால், வேறுவழியின்றி, விவசாயிகள் நிலத்தை விற்றுவிட்டு, பிழைப்பு தேடி, சென்னை நகருக்குள் வரவேண்டிய தேவை ஏற்படுத்தப்படுகின்றது.
சென்னைப் பெரு வெள்ளம்
2015 டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை கொட்டியது. செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரப்படாததால் உடையும் அபாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக பெருவெள்ளமொன்று நகரம் முழுவதையும் மூழ்கடித்தது.
சகோதர நகரங்கள்
உலகில் உள்ள சில நகரங்கள் சென்னை அரசு நிர்வாகத்துடன் அதிகாரப்பூர்வ தொடர்புகளைக் கொண்டுள்ளன. கலை, கலாச்சாரத்தை அந்த நகரங்கள் சென்னையுடன் பகிர்ந்து கொள்கின்றன. சென்னையுடன் தொடர்புடைய சகோதர நகரங்கள் கீழே.
இதனையும் காண்க
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
சென்னை மாநகராட்சி
சென்னை தினம்
வலைவாசல்:சென்னை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Official website of Chennai district
Official website of the Corporation of Chennai
Chennai Encyclopædia Britannica entry
தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள்
சென்னை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் |
2272 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE.%20%E0%AE%A8.%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88 | கா. ந. அண்ணாதுரை | காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
பிறப்பு
அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் செங்குந்தக் கைக்கோள முதலியார் மரபில் கைத்தறி நெசவாளர் நடராசன் முதலியார் - பங்காரு அம்மாள் என்பவருக்கு மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) பிறந்தார். நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார்.
இளமைப் பருவம்
அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் காஞ்சீவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராச முதலியார் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்; அண்ணாவின் அன்னை பங்காரு அம்மா, அண்ணா சிறு வயதாக இருக்கும்போது இறந்துவிட்டதால், அண்ணாவின் தந்தை நடராசன், இராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டர். எனவே இவரை இராசமணி அம்மாள் வளர்த்துவந்தார். இவர் மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட இவரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.
கல்வி
1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்) , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார் . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா
அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது, அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.
பேச்சாற்றலும் படைப்பாற்றலும்
தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. இவர் பத்திரிகையாளராகவும், பத்திரிகையாசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தினார்.
மொழிப்புலமை
ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,
{{cquote| "No sentence can end with because because, because is a conjunction.
எந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல் 'ஏனென்றால்'. ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச்சொல் }}
என்று உடனே பதிலளித்தார்.
பெரியார் உடனான தொடர்புகள்
அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.
தத்துவம்
அண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர் என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார்.பக்கம். 41 இந்தியாவில் மனித இயக்கம் -கணபதி பழனித்துரை, ஆர். தாண்டவன். என்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் ".....நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்......" என்றார்.
அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை.
கடமை கண்ணியம் கட்டுபாடு
அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. கட்டுப்பாடு, கடமை ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் - அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும்.
அரசியலில் நுழைவு
அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக 1917
இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது.
பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். பி.டி. தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயர் தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 இல் இந்திய தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.
அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது) தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.
பெரியாருடன் கருத்து வேறுபாடு
பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகத்து 15, 1947 அந்த நாளை கருப்பு தினமாக எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று. இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது. அது வெறும் ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல என்பதை இவர் வலியுறுத்தினார்.
திராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் இவர் முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்.
பெரியார் தேர்தலில் பங்குபெறுவதால் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) பெரியார் விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்.
இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
திராவிட நாடு
திராவிடர் கழகத்தில் அண்ணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திராவிடநாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார். திமுக வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும் இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார்.
ஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார்
தமிழ் திரைக்கலைஞர்களை முன் நிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டது. இது ஈ. வெ. கி. சம்பத்திற்கு அக்கட்சியில் அதிருப்தியை உருவாக்கியது. அதன் காரணமாக திமுக விலிருந்து விலகி தமிழ் தேசியக் கட்சி என்ற தனிக்கட்சியை 1961 -ல் துவங்கினார். 1962-ல் அண்ணா மாநிலங்களைவையில் திராவிடர்கள் தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்ள விரும்புகின்றனர்.. நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற தனிநாடு என்று உரையாற்றினார்.
இந்தியா மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து (மெட்ராஸ் இராஜதானி) அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார்.
இந்திய சீனப் போர் இந்திய அரசியலமைப்பில் சில மாறுதல்களை உருவாக்கியது. இந்தியாவின் 16 வது திருத்தச் சட்டமாக (பெரும்பாலும் அனைவராலும்அறியப்படும் சட்டம் -பிரிவினைவாத தடைச்சட்டம்) பிரிவினைவாதத்தை முற்றிலும் தடைசெய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்படும்பொழுது அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இச்சட்டத்தை அண்ணாதுரைப் பலமாக ஆட்சேபித்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை. அதன் விளைவாக திமுக கட்சியினர் அக்கோரிக்கையை வலியுறுத்துவதிலிருந்து தங்களை விலக்கி கொண்டனர். திமுகவின் தனித்தமிழ்நாடு நாடு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. அதுமுதல் அண்ணாதுரை நடுவண் அரசின் இணக்கமான ஆதரவை தென்னிந்திய மாநிலங்கள் பெறும் விதமாக தன்னுடைய மாநில சுயாட்சி கொள்கையினை வலியுறுத்த ஆரம்பித்தார். தமிழகத்தின் மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தினார்.
மாநில சுயாட்சி கொள்கையில் அவர் கட்சியின் நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தினார்.
1953 இல் கண்டனத் தீர்மானங்கள்
1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி திமுக மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது:
இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது.
மதராஸ் மாநில முதல்வர் சி.ராஜகோபாலச்சாரி (இராஜாஜி), அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டம் , எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது.
கல்லக்குடியை டால்மியாபுரம் என்ற பெயர் மாற்றியதை எதிர்த்து, மீண்டும் கல்லக்குடி என்று மாற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து கண்டனத்தை தெரிவித்தது.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
இந்தி முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக ஜவகர்லால் நேரு தலைமையிலான குழு இந்திய அரசாங்கத்திற்கு (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரைச் செய்தது. அது முதல் தமிழ் நாட்டில் பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர்.
1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
1938 இல் மதராசு இராசதானியில் காங்கிரசு அரசு சி. ராசகோபாலாச்சாரி தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. தமிழகத்தில் இந்தி பயன்பாட்டை இராசாசி முன்மொழிந்து, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிவித்தார். தமிழ் ஆன்றோர்கள், தலைவர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் வெகுண்டு எழுந்தனர். முதலாம் இந்தி எதிர்ப்பு போராட்டமும் வெடித்தது.
இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கானோரை இராசாசி அரசு கைது செய்தது; தடியடியில் ஈடுபட்டது. அவ்வாறு தமிழ் காக்க புறப்பட்டு சிறை சென்றோரில் ஒருத்தர் நடராசன். இளைஞர்; தாழ்த்தப்பட்டச் சமூகத்தவர். எதிர்ப்பைக் கைவிடாது 1939 ஆம் ஆண்டு, சனவரி 15 ஆம் நாள் தன் உயிரை நீத்தார். தமிழுக்காக உயிரை ஈகம் செய்தார்.
நடராசனின் இறப்பு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தத் தொடங்கினர். காஞ்சிபுரத்தில் 27 பெப்ரவரி, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார். மாநாட்டை கலைக்க காவல் துறை கொடுத்த தடியடியில் பலர் காயமுற்றனர். இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பெப்ரவரி 13 இல் நடந்த போராட்டத்தில் கைதான தாளமுத்து என்ற இன்னொரு தமிழர், மார்ச் 11 இல் காலமானார்.
நடராசன் - தாளமுத்து ஆகிய இருவரின் ஈகங்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டியது. காங்கிரசு அரசை அவ்வாண்டு இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர், பெப்ரவரி 1940 இல், மதராசு மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.
1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை:
திமுக கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து 1960 இல் ஆகஸ்டில் சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அண்ணாதுரை தலைமையில் நடத்தப்பட்டது. இந்தி திணிப்பிற்கெதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் வருகையின் பொழுது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் கிளர்ச்சியையும் இந்தி எதிர்ப்பு உணர்வாளர்களின் எழுச்சியையும் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியலமைப்பில் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். இதனால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்படாவிட்டால் இந்தியாவின் 15 வது குடியரசு தின்த்தை 26 ஜனவரி, 1965 துக்கதினமாக அறிவிக்கப்போவதாக அண்ணாதுரை அறிவித்தார். இந்த அறிவிப்பை அன்றைய மதராஸ் மாநில முதலமைச்சரான பக்தவச்சலம் அண்ணாதுரைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக கருப்புதின அறிவிப்பை 24 ஜனவரி அன்று மாற்றியமைத்தார். இதற்கான அறைகூவலாக அண்ணாதுரை முழங்கியவை இந்தியை ஒழித்து, இந்தியக் குடியரசு நீண்ட ஆயுளுடன் வாழ்க சட்டமன்றத்தில் அண்ணா
சட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், ஆளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்பட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைகுனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.
1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றச்சாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார்.
என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு பெயர் மாற்றம்
1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1969 ஜனவரி 14ல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அண்ணாதுரையை யேல் பல்கலைக்கழகம், சப் பெல்லோசிப் (Chubb Fellowship) என்ற கவுரவ விரிவுரையாளராக 1967–1968 இல் அழைத்தது. இந்தியர் ஒருவரை கவுரவ விரிவுரையாளராக அழைத்ததும் இதுவே முதல் முறை.https://chubbfellowship.yale.edu/past-fellows
இறுதிக்காலம்
மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர்,03 பிப்ரவரி 1969 இல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.
ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய இவரின் இதயக்கனி எம்.ஜி.ராமச்சந்திரன் இவரின் பெயரைக்கொண்டு உருவாக்கிய அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினால் வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார்.
இலக்கிய பங்களிப்புகள்
அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றலும் பெற்றவர்.
பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர். அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி (1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இது ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இவரின் வேலைக்காரி (1949), ஒர் இரவு'' ஆகிய நாடகங்களும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் ஆகிய கதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன.
வேலைக்காரியில் அண்ணாதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தியுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது.
இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பிராமண எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரங்களாக விளங்கின. இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள், டி.வி. நாராயணசாமி, கே. ஆர். ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்.
அண்ணாவின் சில நூல்கள் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியவை. அவற்றில் ஆரிய மாயை (ஆரியர்களின் போலித்தோற்றம்) பிராமணர்களை கடுமையாகச் சாடியதாக விமர்சிக்கப்பட்டது. ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதபட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நூலுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதமும் (தண்டம்), சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டது. காதல் ஜோதி, சந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்), கம்பரசம், தீ பரவட்டும்! பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலான நூல்கள் இன்றும் அச்சில் கிடைக்கின்றன .
ஆக்கங்கள்
வகித்த பொறுப்புகள்
மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர்.நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்குகொண்டது.
1957 ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத்தொகுதிகளையும் வென்றது. அண்ணாதுரையும் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டமன்றத்திற்குள் நுழைந்தது.
1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரசை அடுத்து உருவெடுத்திருந்தது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியுற்றார். அதே வருடத்தில் மீண்டும் திமுக பொதுச்செயலாளர் ஆனார்.பின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபெற்று அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் (மேலவை மூலம்) மதராஸ் மாநிலத்தின் முதலமைச்சரானார்.
இதழியல்பணி
அண்ணாதுரைக்கு ஈ.வெ.ரா.பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டவுடன் குடியரசு இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் விடுதலை இதழின் ஆசிரியாரக இருந்தார். 1942ஆம் ஆண்டில் திராவிடநாடு தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்தார். பெரியாரோடு பிணக்கு ஏற்பட்ட பொழுது தமது தரப்பு வாதங்களைக்கூறுவதற்காக டி. எம். பார்த்தசாரதி தொடங்கிய மாலைமணி இதழில் ஆசிரியராக இருந்தார். 1956 சூன் 15இல் தி.மு.க.விற்கென நம்நாடு என்னும் நாளிதழைத் தொடங்கியபொழுது அதன் ஆசிரியராக இருந்தார். 1963ஆம் ஆண்டில் காஞ்சி என்னும் வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். Home Land என்ற ஆங்கில வார இதழை 2-6-1957ஆம் நாள் தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார்.
மறைவு
அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி, 1969 அன்று மரணமடைந்தார். அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில். இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரீனா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்றும், தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன. வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. 2009ம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.அண்ணாதுரையின் நினைவாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அண்ணாதுரையின் சிலை.
அண்ணாதுரை பிறந்த நாள்
ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடுகிறது. மேலும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படைகள் அரசின் விதிகளுக்குட்பட்டு, சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.
அண்ணாவைப்பற்றிய நூல்கள்
அண்ணாதுரை (தொகுப்பு நூல்), 1952, கலைமன்றம், சென்னை
அண்ணாதுரை, பி.வி.ராமசாமி, 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை-2
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் - சென்னைநூலகம்.காம்
பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள்
அறிஞர் அண்ணாவைப் பற்றிய அனைத்துச் செய்திகளும்
காலச்சுவடு இதழில் திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை
பெரியாரை சங்கடத்திற்குள்ளாக்கிய அண்ணா; அறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு - விகடன்
தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்
தமிழறிஞர்கள்
திராவிட இயக்க எழுத்தாளர்கள்
1909 பிறப்புகள்
1969 இறப்புகள்
தமிழ்நாட்டு இறைமறுப்பாளர்கள்
கலைமாமணி விருது பெற்றவர்கள்
நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள்
தமிழ் சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள்
நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்
தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்
காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள்
4வது மக்களவை உறுப்பினர்கள்
இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
தமிழக எழுத்தாளர்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் |
2274 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE.%20%E0%AE%95%E0%AF%8B.%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D | ம. கோ. இராமச்சந்திரன் | எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், 17 சனவரி 1917 – 24 திசம்பர் 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, இவரின் நண்பர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் பாெதுச்செயலாளாராகி, சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
இவர் உயரிய இந்திய நாட்டின் உயரிய விருதுகள் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.
தனிப்பட்ட வாழ்க்கை
இளமைப் பருவம்
இராமச்சந்திரன் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன் - சத்யபாமா பெற்றோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார்.
அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார், அதன் பிறகு அந்தமான்தீவிலுள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமார் 20 சிறை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தார். பின்பு மனைவி சத்யபாமா, இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையை இராஜினாமா செய்து விட்டார். அந்த இராஜினாமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலேயர்கள் பயங்கர சூழ்ச்சியில் சிக்க வைக்க கோபாலன் மேனனை ஆட்படுத்தினர். அதன் காரணமாக ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான ஆயுதக் கப்பலுக்கு டைனமெட் வெடி வைத்ததாகக் கூறி பொய்யான புகாரில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனர். பிறகு அவர் குடும்பத்துடன் இலங்கையில் உள்ள கண்டிக்கு அருகே நாவலப்பிட்டியில் குடியேறினார். பின்பு காவல் துறையில் பணியாற்றிவந்த அவரது நண்பர் வேலுபிள்ளை என் பவரின் உதவியுடன் அங்குள்ள ஒரு சிங்கள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
எம். ஜி. ஆர்க்கு ராமச்சந்திரன் என்று பெயர் ஏற்படக் காரணம், அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் "சந்திரன்" என்றும் தாயார் சத்யபாமாவின், தந்தை பெயர் சீதாராமன் நாயர் என்பதில் "ராம" என்பதை சேர்த்து ராமச்சந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.
பின்பு எம். ஜி. ஆர் தனது தந்தையின் மறைவு, அவரது ஒரு அண்ணனும், ஒரு அக்காவும் இலங்கையில் தொடர்ந்து இறந்துவிட மனவெறுப்புடன் அன்னை சத்யபாமா இலங்கையில் இருந்து வெளியேறினார். பின்பு சிறிது காலம் கேரளாவிற்கு அவரது தாயார் சரசுவதியுடன், சத்யபாமா சென்று தனது கணவரின் பெற்றோர்களிடம் அவரின் பங்கை கேட்டு அதைத் தர மறுத்ததால் சத்யபாமா தனது தாயார் உடன் கேரளாவில் சில நாட்கள் வசித்துவந்தார். அவரது மகள் காமாட்சியும், சத்யபாமாவின் தாயார். சரஸ்வதியும் இறந்துவிட தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
இல்லறம்
முதல் திருமணம்
எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார்.
இரண்டாவது திருமணம்
அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார்.
மூன்றாவது திருமணம்
ம. கோ. இரா. இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் ம. கோ. இரா.வின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ம. கோ. இரா.விற்கு ஈர்ப்பு ஏற்பட்டது.
அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக ம. கோ. இரா.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். இத்திருமணத்தை ம. கோ. இரா.வின் அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உடல்நலமில்லாமல் இருந்ததால் அவரை இவர்கள் இருவரும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டனர்.12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.
வளர்ப்பு குழந்தைகள்
மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை. எனவே ஜானகி- கணபதிபட் ஆகிய இருவருக்கும் பிறந்த அப்பு என்ற சுரேந்திரனையும் ஜானகியின் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா (ராஜேந்திரன்), கீதா (மதுமோகன்), சுதா (கோபாலகிருஷ்ணன்). ஜானகி (சிவராமன்), தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.
கல்வி உதவி
எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன் மற்றும் சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25இல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.
செல்லப் பிராணிகள்
எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார்.
சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.
சிறுகுட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்துவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாகத் துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.
திரைப்பட வாழ்க்கை
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ்த் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த காவல்காரன் திரைப்படமானது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது.
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
அரசியல் வாழ்க்கை
ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.
1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவரின் தொண்டர் அனகாபுத்தூர் இராமலிங்கம் ஆரம்பித்தார். அந்த கட்சியின் உறுப்பினராக சேர்ந்து அதன் தலைவராகவும்,பாெதுச்செயலாளாராகவும் பொறுப்பு ஏற்றார்.பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.
திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் மகோஇரா.1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் 2016 வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இவரது அரசியல் வாரிசு ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.
திட்டங்கள்
சத்துணவுத் திட்டம்
விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி
மகளிருக்கு சேவை நிலையங்கள்
பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்
தாய் சேய் நல இல்லங்கள்
இலவச சீருடை வழங்குதல் திட்டம்
இலவச காலணி வழங்குதல் திட்டம்
இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்
இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்
வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.
தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல்
1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த ம. கோ. இரா. முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 சூன், 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.
1981 ஆகத்து 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமையினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.
தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு
இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார்.
பழ நெடுமாறன் கருத்து
1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன்
விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலகட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம்
1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.
நாம் தமிழர் சீமான் நம்பிக்கை
"முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.
இவர் எழுதிய புத்தகங்கள்
நாடோடி மன்னன் புத்தகம்
எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.
சுயசரிதைத் தொடர்
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
ம.கோ.இரா. என்கிற ம.கோ.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
விருதுகள்
பாரத் விருது - இந்திய அரசு
அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
பாரத ரத்னா விருது - இந்திய அரசு
பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
சிறப்பு முனைவர் பட்டம் - அரிசோனா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
இதயக்கனி - பேரறிஞர் அண்ணா
புரட்சி நடிகர் - உடந்தை உலகப்பன்
நடிக மன்னன் -சி.சுப்பிரமணியம்
மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
அரசியல் சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
கொடுத்துச் சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் - தமிழ்வாணன்
வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித்தலைவர் - கே. ஏ. கிருஷ்ணசாமி
இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
செயல்பாடுகள்
1. சனவரி 1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார் எம்.ஜி.ஆர். 7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் ஆலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார்.
எம்.ஜி.ஆர் நினைவிடங்கள்
எம்.ஜி.ஆர் சமாதி
தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அருகில் இவரது அரசியல் வாரிசான ஜெ. ஜெயலலிதா நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார்.
டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்
சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்
திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன என்று 30, மே 2011ல் வெளிவந்த நக்கீரன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படத்தொகுப்பு
இவற்றையும் பார்க்கவும்
கா. ந. அண்ணாதுரை
மு. கருணாநிதி
ஜெ. ஜெயலலிதா
தமிழகத் திரைப்படத்துறை
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை
எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை
திருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம்
எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்
எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967
எம். ஜி. ஆர். திரை வரலாறு
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
அ.தி.மு.க இணையத்தளம்
எம்.ஜி.ஆர் பற்றிய இணையதளம்
தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்
1917 பிறப்புகள்
1987 இறப்புகள்
எம். ஜி. ஆர்
இந்திய நடிகர்-அரசியல்வாதிகள்
கலைமாமணி விருது பெற்றவர்கள்
இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்
தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
சென்னை நடிகர்கள்
சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள்
பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் |
2278 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D | இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | இந்தியாவில் 28 மாநிலங்களும், தில்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, சம்மு காசுமீர், தில்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், மாவட்டங்கள் என்ற சிறிய நிருவாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுமை பகுதிகள்
மாநிலங்களும் அவற்றின் தலைநகரங்களும்
இந்திய மாநிலங்களின் உருவாக்கம்
தற்போதைய இந்தியா, பாகித்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைசிராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. சம்மு காசுமீர் இராச்சியம், ஐதராபாத் இராச்சியம் போன்ற 526 சமசுதானங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன.
பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அச்சுமேர்-மேர்வாரா, அசாம், பலூசித்தான், வங்காள மாகாணம், பிகார் மாநிலம், பம்பாய், மத்திய மாகாணம், கூர்க், தில்லி, மதராசு, வடமேற்கு எல்லை, ஒரிசா, பஞ்சாப், சிந்து, மற்றும் ஐக்கிய மாகாணங்கள். பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன.
இவற்றுள், ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஐதராபாத் தொடக்கம், மிகச் சிறிய சமசுதானங்கள் வரை அடங்கி இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில நிலப்பகுதிகளை ஆண்டு வந்தன. போத்துக்கீச இந்தியா, கோவா, தமனும் தியுவும், தட்ராவும் நாகர் அவேலியும் ஆகிய கரையோரப் நிலப்பகுதிகளையும், பிரெஞ்சு இந்தியா, சண்டர்நகர், ஏனாம், பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய ஐந்து நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன.
1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமசுதானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. சம்மு காசுமீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்களாக இருந்தார்கள். இந்துவாக இருந்த சம்மு காசுமீரின் ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார்.
1950ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
முன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவு செய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாவன: அசாம், மேற்கு வங்காளம், பிகார், பம்பாய் மாகாணம், மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும், பெராரும்), மதராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்).
சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
அதே ஆண்டில் பாசல் அலி என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின் படி 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் 14 மாநிலங்கள் நிறுவப்பட்டது.
இதே அடிப்படையில் மகாராட்டிராவில் இருந்து குசராத்து (1960) பிரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆவது ஆண்டில் சத்தீசுகர், உத்தராகண்டம் மற்றும் சார்க்கண்டு என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும்.
5 ஆகத்து 2019 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில் சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டது. அதன்படி சம்மு காசுமீர் மாநிலத்தைப் பிரித்து சம்மு காசுமீர் மற்றும் லடாக் என இரு ஒன்றியப் பகுதிகளை 31 அக்டோபர் 2019 முதல் நிறுவப்பட்டது. எனவே தற்போது மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது.ஒன்றியங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
இவற்றையும் பார்க்கவும்
இந்தியாவின் ஒன்றியப் பகுதிகள்
மாவட்டம்
சனத்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்
வெளியிணைப்புகள்
இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேங்சகளும் - காணொலி - பகுதி 1
இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேங்சகளும் - காணொலி - பகுதி 2
இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேங்சகளும் - காணொலி - பகுதி 3
வேல்டு-கெஸெடர்.கொம் இணையதளத்தில் இந்திய வரைபடம்
மேப்ஸ் ஆஃப் இந்தியா. கொம் இணையதளத்தில் இந்திய வரைபடம்
இந்திய ஆட்சிப் பிரிவுகள்
இந்தியப் பட்டியல்கள்
இந்திய நிர்வாக அலகுகள்
இந்திய அரசு |
2279 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE | திரிபுரா | திரிபுரா () இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலாவாகும். பேசப்படும் முக்கிய மொழிகள், வங்காள மொழியும் காக்பரோக்குமாகும். நாட்டின் மூன்றாவது மிகச்சிறிய மாநிலமான இது 10,491 கிமீ (4,051 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 3,671,032 மக்கள் தொகை இருந்தனர். இது நாட்டின் மக்கள் தொகையில் 0.3% ஆகும். மேலும் வடகிழக்கு இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாம் மாநிலம் இதுவாாகும்.
வரலாறு
சுதந்திரத்துக்கு முன் திரிபுரா முடியாட்சி நாடாக இருந்தது. இம் முடியாட்சிக்கு எதிராக எழுந்த கணமுக்தி பரிஷத் இயக்கம், முடியாட்சியை வீழ்த்தி, நாட்டை இந்தியாவுடன் இணைத்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவு வங்காள இந்து மக்கள் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து திரிபுரா மாநிலத்தில் குடியேறினர்.
அரசியல்
திரிபுரா மாநிலம் 60 சட்டமன்ற தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளையும், ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவைத் தொகுதியும் கொண்டது.
திரிபுரா மாநில அரசு மூன்று பிரிவுகளை உடையது. செயலாக்கப் பிரிவு, நீதிப் பிரிவு, சட்டமியற்றும் பிரிவு ஆகியவையே அவை. செயலாக்கப் பிரிவில் அமைச்சர்களும், அவர்களின் தலைவராக முதலமைச்சரும் இருப்பர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். மாநிலத்தை 60 தொகுதிகளாகப் பிரித்து, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்றவர் அந்த தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் ஆவார். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் சபாநாயகராகவும், மற்றொருவர் துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். சபாநாயகரின் தலைமையில் சட்டமன்றக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சபாநாயகர் இல்லாத சமயத்தில் துணை சபாநாயகர் சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். திரிபுரா நீதித்துறையின் உயர் அமைப்பாக திரிபுரா உயர் நீதிமன்றம் செயல்படும். இதன் கீழ் பல நீதிமன்றங்கள் இயங்குகின்றன ஆளுநரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட . கட்சியோ, அதன் கூட்டணியோ ஆட்சி அமைக்க அழைக்கப்படுவர். இந்த மாநிலத்தில் இருந்து இரு உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஊர்கள் ஊராட்சித் தலைவரின் கீழும், பழங்குடியின மக்கள் வாழும் இடங்கள் அவர்களின் தன்னாட்சிக் குழுவின் ஆட்சியின் கீழும் செயல்படுகின்றன. இந்தக் குழு 527 பழங்குடியின கிராமங்களின் உள்ளாட்சிக்கு துணை புரிகிறது.
மாவட்டங்கள்
திரிபுரா மாநிலம் எட்டு வருவாய் மாவட்டங்களை கொண்டது. அவைகள்;
தெற்கு திரிப்புரா மாவட்டம்
மேற்கு திரிப்புரா மாவட்டம்
வடக்கு திரிப்புரா மாவட்டம்
தலாய் மாவட்டம்
உனகோடி மாவட்டம்
கோமதி மாவட்டம்
கோவாய் மாவட்டம்
சிபாகிஜாலா மாவட்டம்
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி திரிபுரா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை ஆக 3,673,917 உள்ளது. நகர்புறங்களில் 26.17% மக்களும், கிராமப்புறங்களில் 75.83% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.84% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,874,376 ஆண்களும் மற்றும் 1,799,541 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 960 வீதம் உள்ளனர். 10,486 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 350 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 87.22% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.53% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 82.73% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 458,014 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 3,063,903 (83.40%) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 316,042 (8.60%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 159,882 (4.35%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,070 (0.03%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 860 (0.02%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 125,385 (3.41%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 1,514 (0.04%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 5,261 (0.14%) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான வங்காளத்துடன் இந்தி மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
போக்குவரத்து
விமானம்
அகர்தலாவிலுருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்கர்பில் எனுமிடத்தில் உள்ள விமான நிலையம் உள்ளது. நாட்டின் குவாஹாத்தி, கொல்கத்தா, புதுதில்லி, சென்னை, அகமதாபாத், பெங்களூரு, மும்பை போன்ற முக்கிய நகரங்களுடன் வானூர்திகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. குவாஹாத்திக்குப் பிறகு வடகிழக்கு இந்தியாவில் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் ஆகும்.
தொடருந்து
வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தில் உள்ள அகர்தலா தொடருந்து நிலையம், அசாம் மாநிலத்தின் லாம்டிங் நகரத்தின் லாம்டிங் சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாக புதுதில்லியுடன் இணைக்கிறது.
பேருந்துகள்
மாநில நெடுஞ்சாலைகள் வழியாக கௌஹாத்தி, சில்லாங் மற்றும் சில்சர் நகரங்களுடன் அகர்தலா இணைக்கப்பட்டுள்ளது. மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன. மேலும் அகர்தலாவிலிருந்து வங்காள தேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு செல்வதற்கு பேரூந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகள் கொல்கத்தா வரை இயக்க இந்திய - வங்காள தேச அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தட்பவெப்ப நிலை
இதனையும் காண்க
திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
திரிபுரா அரசின் உத்தியோகபூர்வ இணையதளம்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
வடகிழக்கு இந்தியா |
2281 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | இலட்சத்தீவுகள் | இலட்சத்தீவுகள் (Lakshadweep) இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில் அரபிக் கடலில் இது உள்ளது. லட்சத்தீவுகள் கேரள உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும்.
வரலாறு
இலட்சத்தீவுகளைப் பற்றிய பழைமையான குறிப்பு தமிழ் நூலான புறநானூற்றில் காணக்கிடைக்கிறது. மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. கேரளத்தின் கடைசி சேர மன்னரான சேரமான் பெருமாள் காலத்தில் இந்த தீவுகளில் முதல் குடியேற்றங்கள் நிகழ்ந்ததாகப் புராணக்கதைகள் குறிப்பிடுகின்றன. தீவுக் கூட்டத்தில் குடியேற்றங்கள் நிகழ்ந்த பழமையான குடியேற்றங்கள் அமைந்த தீவுகள் அமீனி, கால்பினி ஆண்ட்ரோட், கவரத்தி மற்றும் அகட்டி போன்றவை ஆகும். பொ.ஊ. ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் புத்தமதம் இந்த பிராந்தியத்தில் நிலவியதாக தொல்பொருள் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டுவாக்கில் இசுலாமிய மதத்தைத் தழுவியதாகவும் நம்பப்படுகிறது. பிரபலமான நம்பிக்கையின்படி, பொ.ஊ. 661 இல் உப்பிதாலா என்ற அரேபியரால் இஸ்லாம் இலட்சத்தீவுக்கு கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது. அவரது கல்லறை ஆண்ட்ரோட் தீவில் அமைந்துள்ளது. பொ.ஊ. 11 ஆம் நூற்றாண்டின் போது, தீவுகள் சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்தன. அதன் பின்னர் கேனானோர் இராச்சியத்துக்கு உட்பட்ட பகுதியாக ஆனது.
1787 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானின் ஆட்சியின் கீழ் அமினிதிவி தீவுகள் (ஆண்ட்ரோத், அமிணி, கத்மத், கில்தான், சேத்லாத் மற்றும் பிட்ரா) வந்தன. மூன்றாம் ஆங்கில-மைசூர் போருக்குப் பின்னர் அவை பிரித்தானியக் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அவை தென் கான்ரா நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டன. இந்த தீவுகள் பின்னர் பிரித்தானிய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்துணன் இணைக்கப்பட்டன.
விடுதலைக்குப் பின்பு
1956 நவம்பர் 1 அன்று, இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, லட்சத்தீவுகள் சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து, நிர்வாக நோக்கங்களுக்காக ஒரு தனியான யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது. 1973 நவம்பர் 1 அன்று, லட்சத்தீவுகள், மினிகோய் மற்றும் அமிண்டிவி தீவுகள் ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இலட்சத்தீவுகள் என அழைக்கப்பட்டது.
மத்திய கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு வரும் முக்கிய கப்பல் பாதைகளைப் பாதுகாக்க, ஒரு இந்திய கடற்படை தளமான, ஐஎன்எஸ் டிவீரகாஷாக், கவரட்டி தீவில் அமைக்கப்பட்டது.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இலட்சத்தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 21.93% மக்களும், நகரப்புறங்களில் 78.07% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 6.30% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 33,123 ஆண்களும் மற்றும் 31,350 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 946 வீதம் உள்ளனர். 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இலட்சத்தீவுகளில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,149 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 91.85 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 95.56 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 87.95 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,255 ஆக உள்ளது.
சமயம்
இலட்சத் தீவுகளில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,788 (2.77 %) ஆகவும் இசுலாமிய மலையாளிகள் மக்கள் தொகை 62,268 (96.58 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 317 (0.49 %) ஆகவும், பிற சமயத்தினர் நூற்றுக்கும் குறைவாகவே உள்ளனர்.
மொழிகள்
இலட்சத் தீவின் ஆட்சி மொழியான மலையாள மொழியுடன், ஆங்கிலம் மற்றும் திவேகி, ஜெசெரி ஆகிய வட்டார மொழிகள் பேசப்படுகின்றன.
பொருளாதரம்
மீன் பிடித்தல், மீன் பதப்படுத்தம் தொழில்கள் மற்றும் மீன் ஏற்றுமதி செய்தல், இத்தீவில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. சுற்றுலா மூலம் அதிக வருவாய் ஈட்டுகிறது.
போக்குவரத்து மற்றும் சுற்றுலா
அகத்தி வானூர்தித் தளம் கொச்சி மற்றும் பெங்களூரு நகரங்களை வான் வழியாக இணைக்கிறது. மேலும் ஆறு பயணி கப்பல்கள் கொச்சி துறைமுகத்துடன் கடல் வழியாக இணைக்கிறது.
இந்தியச் சுற்றுலா பயணிகளும் இலட்சத் தீவுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலட்சத்தீவின் சில பகுதிகளுக்கு சுற்றுலா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பங்கராம் தீவு தவிர மற்ற பகுதிகளில் மதுபானம் அருந்த தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
இந்தியத் தீவுகள் |
2282 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 | நாகாலாந்து | நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலைநகரம் கோகிமா ஆகும். நாகாலாந்து பதினோறு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக் குழுக்கள் ஆவார். நாகாலாந்து திசம்பர் 1, 1961இல் ல் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது.
பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினத்தவராக உள்ள இம்மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) -0.58% ஆக குறைந்துள்ளது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும்.
வரலாறு
பழமைத்தன்மை
நாகா மக்களின் பண்டைய வரலாறு தெளிவாக இல்லை. வெவ்வேறு காலகட்டங்களில் குடியேறிய பழங்குடிகள், தற்போது வடகிழக்கு இந்தியாவாக உள்ள பகுதிகளில் குடியேறி, தங்களின் இறையாண்மை உடைய மலை நாடுகளையும் கிராமங்களையும் நிறுவியுள்ளனர். இவர்கள் வடக்கு மங்கோலியப் பகுதி, தென்கிழக்கு ஆசியா அல்லது தென்மேற்கு சீனாவிலிருந்து வந்தவர்களா என்பதற்கான எந்த பதிவும் இல்லை. தவிர, அவர்களின் தோற்றமானது இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்தும், பொ.ஊ. 1228ஆம் ஆண்டில் அகோமின் வருகைக்கு முன்பாக இன்றைய நாகா மக்கள் குடியேறியதாக வரலாற்று பதிவுகளும் காட்டுகின்றன.
'நாகா' என்ற சொல்லின் தோற்றம் கூட தெளிவாக இல்லை. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆனால் சர்ச்சைக்குரிய கருத்தாக, இந்தப் பெயர் பர்மிய சொல்லான 'நாக' அல்லது 'நாகா' என்பதிலிருந்து உருவானது, அதாவது காதணிகளைக் கொண்ட மக்கள் என்பது இதன் பொருள். வேறு சிலர் அதை குத்தப்பட்ட மூக்கு என்று பொருள் கூறுகின்றனர். நாக்கா (naka) மற்றும் நாகா (naga) இரண்டும் பர்மாவில் ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகிறது. நாகாலாந்தின் பழங்கால பெயர் 'நாகனச்சி' அல்லது 'நாகன்சி', இது நாகா மொழியிலிருந்து வந்தது.
தெற்காசியாவில் ஐரோப்பிய காலனித்துவத்தின் வருகைக்கு முன்னர், நாகா பழங்குடியினர், மீட்டி மக்கள் போன்ற இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளின் மீது பர்மியர்களால் பல போர்கள், துன்புறுத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. படையெடுப்பாளர்கள் "தலையை வெட்டி வேட்டையாடவும்", இந்த பழங்குடி இனத்தவரின் செல்வங்களையும் தேடி வந்தனர். வடக்கு இமயமலையில் வாழும் மக்களைப் பற்றி பர்மிய வழிகாட்டிகளை பிரித்தானியர் கேட்டபோது, அவர்கள் 'நாகா' எனக் கூறினர். இது 'நாக' எனப் பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு பயன்படுத்தப்பட்டது.
பிரித்தானிய இந்தியா
நாகா மக்கள் எந்த முடியாட்சிக்குக்கீழும் இல்லாமல் இறையாண்மையொடு பல தலைமுறைகளாக இருந்து வந்தனர். ஆனால் முதல் முறையாக பிரித்தானியர் 1832இல் அசாமிற்கும் மணிப்பூருக்கும் இடையே நேர்வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தபோது நாகாலாந்திற்குள் நுழைந்தனர். அவர்களை அப்போது அனைத்து நாகா கிராமங்களும் எதிர்த்தன.
பிரித்தானியர் நாகாலாந்தை தங்கள் ஆளுமைக்குக்கீழ் கொண்டுவர எண்ணிச் செயல்பட்டனர். அவர்களால் அவ்வளவு எளிதில் அதைச் செய்யமுடியவில்லை. 1879இல் தற்போது நாகாலாந்தின் தலைநகரமாக இருக்கும் கோகிமாவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்த போரில் பிரித்தானியர் நாகா மக்களை முறியடித்தனர். பின்னர் 1880 இல் அமைதிப் பேச்சுவார்த்தை வழியாக நாகாலாந்து பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் காரணமாக, அதற்கு முன் தனித்தனி கிராமங்களாக இருந்த நாகா மக்களெல்லாம் நாகா என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இது நாகா மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த காரணமாயிற்று.
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்துவந்த கிருத்துவ மறைபணியாளர்களால் பிரித்தானிய இந்தியாவின், நாகாலாந்தின் நாகா பழங்குடியினர் மற்றும் அண்டை மாநில மக்களை அவர்களின் ஆன்ம வாத சமயத்திலிருந்து கிறித்துவத்துக்கு மாற்றினர்.
20ஆம் நூற்றாண்டு
1944 ஆம் ஆண்டில், நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய இராணுவம் சப்பானிய இராணுவத்தின் உதவியுடன் இந்தியாவின் மீது பர்மா வழியாக படையெடுத்து. அது கோகிமா வழியாக இந்தியாவை விடுவிக்க முயன்றது. மக்கள் வெளியேற்றப்பட்டனர். பிரித்தானிய இந்திய வீரர்களால் கோகிமாவின் பகுதி 1944 சூன் மாதம் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவம் பாதி வீரர்களை இழந்து, பட்டினியால் பலரை இழந்ததுடன், பர்மா வழியாக வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர்.
நாகா இயக்கம்
1929 ஆம் ஆண்டில், சைமன் குழுவிடம் நாகா கிளப் (பின்னர் இது நாகா தேசிய அமைப்பானது) நாகா மக்களின் கோரிக்கை சமர்பித்தது. அதில் பிரித்தானிய இந்தியாவில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் புதிய வரிகளில் இருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது, பிரித்தானிய இந்தியா தங்களுக்கு விடுதலை அளிக்கவேண்டுமென்று எண்ணினால் தயவுகூர்ந்து தங்களை யாரின் கீழும் விட்டுவிடாமல் நாகாலாந்து பழைய காலங்களில் எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். என கோரினர்.
1929 முதல் 1935 வரையான காலப்பகுதியில், நாகா மக்களின் இறையாண்மைப் புரிதல் என்பது பாரம்பரிய பிராந்திய வரையறை அடிப்படையில் 'சுய-ஆட்சி' ஆகும். 1935 முதல் 1945 வரையான காலப்பகுதியில், நாகர்கள் அசாமில் மட்டுமே தன்னாட்சி உரிமையைக் கோரியிருந்தனர்.
1946 ஆகத்து முதல் நாள் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான நேரு, நாகா மக்கள் இந்திய ஒன்றியத்தில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உள்ளூர் தன்னாட்சி உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை நிர்வாகத்தின் பரந்த பகுதியினருக்கு வழங்கப்படும் என்றார். 1946க்குப் பிறகு நாகர்கள் தங்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு தனி நாடாகவும் சுயாதீனமாக வாழ தங்களுக்குள்ள முழு உரிமைக்காகவும் வலியுறுத்தினர்.
1947 சூலை 19, இல் இந்திய விடுதலைக்கு முன்னர் நாகா தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் தில்லியில் காந்தியைச் சந்தித்தனர். அவர்களுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்திய காந்தி, “இந்திய ஒன்றியத்துடன் இணைய விரும்பவில்லை என்றால், சுதந்திரமாக இருப்பதற்கு நாகாலாந்திற்கு அனைத்து உரிமையும் உண்டு” என்று உறுதியளித்தார். அதன்படி நாகாலாந்து 1947 ஆகத்து 14இல் தன் சுதந்திரத்தை அறிவித்தது. இதை இந்திய ஒன்றிய அரசு எதிர்த்தது. நாகா மக்களின் ஒருமித்த கருத்தை இந்தியாவிற்குத் தெரிவிக்க பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய குடியரசுத்தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது. அது பொருட்படுத்தப்படாததால் 1951 மே 16இல் பொது வாக்கெடுப்பு நடத்தி அந்த வாக்குச்சீட்டுகளை ஒன்றிணைத்து, 80 பவுண்ட் கொண்ட ஒரு புத்தகமாக இந்தியக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார்கள். 1952ல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது நாகாலாந்து மக்கள் அதனை முழுமையாகப் புறக்கணித்தனர்.
1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாலாந்து அசாம் மாகாணத்தின் பகுதியாக ஆக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்களின் ஒரு பிரிவினரிடையே தேசியவாத நடவடிக்கைகள் உருவாயின. இந்த இயக்கமானது தொடர்ந்த வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்தது, அது அரசாங்க மற்றும் சிவில் உள்கட்டமைப்பு சேதப்படுத்தியது, அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களைத் தாக்கியது. இதைத் தொடர்ந்து இந்திய ஒன்றிய அரசு 1955 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தை அனுப்பியது. 1957ஆம் ஆண்டில் நாகா தலைவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது அதன்படி நாகா மலைகளைக் கொண்டு ஒரு தனி பகுதியை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. இதில் திருப்தி அடையாத பழங்குடியினர், மாநிலத்துக்கள் மீண்டும் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பழங்குடியினர் இராணுவம் மற்றும் அரசாங்க நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றின்மீது தாக்குதல்கள்களை அதிகரித்தனர். 1958இல் நாகாலாந்தில் இந்திய அரசானது ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் இயற்றியது. மூன்று பேருக்கு ஒரு இரானுவ வீரர் என்ற விகிதத்தில் இராணுவம் அங்கு குவிக்கப்பட்டது. பின்னர் துணை இராணுவப் படையினால் பலர் கொல்லப்பட்டனர். 1960 சூலை மாதம் பிரதமர் நேரு மற்றும் நாகா மக்கள் மாநாட்டு தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர், 16- அம்ச ஒப்பந்தம் உருவானது. இதன்படி, நாகாலாந்தை இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட முழுமையான மாநிலமாக இந்திய அரசு அங்கீகரித்தது. இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சத்தின்படி நாகாலாந்து இந்திய வெளியுறவுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. வருமான வரிவிலக்கு போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். இந்த 16 அம்ச ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு ‘Article371A’’ உருவாக்கப்பட்டது.
அதன்படி, 1961ஆம் ஆண்டின் நாகாலாந்து இடைக்கால விதிமுறை விதிகளின் கீழ், அந்த பிரதேசமானது, பழங்குடியினர், பழக்கவழக்கங்கள் மற்றும் அந்தந்த பழங்குடியினரின் பயன்பாடு ஆகியவற்றின்படி பழங்குடியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இடைக்கால அமைப்புக்குகீழ் விடப்பட்டது. இதன் விளைவாக, நாகாலாந்து மாநிலமானது 1962ஆம் ஆண்டு நாகலாந்து மாநில சட்டம் உருவானது. 1963ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இடைக்காலக் கால அமைப்பு கலைக்கப்பட்டு நாகலாந்து மாநிலமானது முறையாக உருவாக்கப்பட்டது 1963 திசம்பர் 1 அன்று கோகிமாவானது மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு சனவரி மாதம் நடந்த தேர்தல்களுக்குப் பிறகு, 1964 சனவரி 11, அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாகாலாந்து சட்டமன்றம் அமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்தும் கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தன. பேச்சுவார்த்தைகள் அறிவிக்கப்பட்டன, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. ஆனால் இதனால் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லை. 1973ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் தன்னிச்சையாக வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குக் கீழ் இருந்த நாகாலாந்தை உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வந்தது. நாகாலாந்து சட்டமன்றத்தில், மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வரவேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1975ஆம் ஆண்டு மார்ச் மாதம், பிரதமர் இந்திராகாந்தியால் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. 1975 நவம்பரில், மிகப்பெரும் கிளர்ச்சி குழுக்களின் தலைவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு, இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார்கள். ஆனாலும் ஒரு சிறிய குழு இதை ஏற்றுக்கொள்ளவில்லை மேலும் அவர்களது கிளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன.
மாவட்டங்கள்
இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக 16 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்;
திமாப்பூர்
கிபைர்
கோகிமா
லோங்லெங்
மோகோக்சுங்
மோன்
பெரேன்
பேக்
துவென்சங்
வோக்கா
சுனெபோட்டோ
நோக்லாக் மாவட்டம்
செமினியு
சமத்தோர்
நியுலாந்து
சூமௌகெடிமா
அரசியல்
நாகாலாந்து சட்டமன்றத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஏனைய மாநிலங்களைப் போலவே, முதல்வரே அரசின் தலைவராக இருப்பார். இந்த மாநிலம் முழுவதும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது..
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 16,579 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாகாலாந்து மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,978,502 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 71.14% மக்களும், நகரப்புறங்களில் 28.86% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் -0.58% ஆக குறைந்துள்ளது. மக்கள் தொகையில் 1,024,649 ஆண்களும் மற்றும் 953,853 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 931 வீதம் உள்ளனர். 16,579 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 119 வீதம் மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 79.55 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 82.75 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 76.11 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 291,071 ஆக உள்ளது.
நாகா இன மக்கள் இம்மாநிலத்தில் பெரும்பான்மை மக்கள் ஆவார்.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 173,054 (8.75 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 48,963 (2.47 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,739,651 (87.93 %) ஆகவும்,, பௌத்த சமய மக்கள் தொகை 6,759 (0.34 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,890 (0.10 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 3,214 (0.16 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,316 (0.12 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் பழங்குடி இன மொழியுமான நாகா மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
போக்குவரத்து
இம்மாநிலத்தில் தொடருந்து மிகக் மிகக் குறைந்த அளவில் நீளத்தில் இருப்புப்பாதை கொண்டுள்ளது.
நாகாலாந்து மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன. இம்மாநிலத்தில் தேசிய மற்றும் மாநில சாலைகள் 15,000 கி மீ நீளத்தில் உள்ளது.
ஹார்ன்பில் விழா
நாகாலாந்தின் பழங்குடிமக்களின் விழாவான ஹார்ன்பில் விழா உலகப்புகழ் பெற்றது.
திட்டங்கள்
இயற்கை வளம் செறிந்த பகுதியாக இருப்பினும் போக்குவரத்தில் முழுமையாக இணைக்கப்படாததால், இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் கூட இப்பகுதியைச் சுற்றுலாவிற்குத் தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை தராத சூழ்நிலை உள்ளது. எதிர்காலத்தில் வடகிழக்கு இந்திய மாணவர்களுக்கு என்று இஷான் உதய் எனும் கல்வி உதவிக்கட்டணத் திட்டமும், இந்திய நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற கல்வி நிலையங்களைச் சென்று பார்க்க வருடந்தோறும் அனுமதியும் ஏற்பாடும் செய்யும் இஷான் விகாஸ் எனும் திட்டமும் செயற்படுத்தப்படும் என்றும், தகவல் தொழில்நுட்பப் பணி, அவுட்சவுர்சிங் வேலைவாய்ப்புகளை ஈர்க்கும் ஏற்பாடும் செய்யப்பட உள்ளன என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இதனையும் காண்க
நாகா மக்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகா கிளர்ச்சிக் குழுவுடன் இந்திய அரசு அமைதி உடன்பாடு
நாகாலாந்து
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
வடகிழக்கு இந்தியா |
2285 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE | மேகாலயா | மேகாலயா (Meghalaya) வடகிழக்கு இந்தியாவின் அமைந்துள்ள ஏழு மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழியும் பேசப்படுகிறது.
அமைவிடம்
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்துக்கும், வங்காள தேசத்துக்கும் இடையில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஒரு ஒடுங்கிய பட்டைபோன்று, 300 கிமீ நீளமும், 100 கிமீ அகலமும் உடையதாக உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 22,429 ச. கிமீ ஆகும். இதன் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளன. இதன் தலை நகரம் ஷில்லாங் ஆகும்.
வரலாறு
மேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் அம்மாநிலத்தின் இரு மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து; ஐக்கிய காசி மலைகள், ஜெயின்டியா மலைகள், காரோ மலைகள் ஆகியபகுதிகளைக் கொண்டு 21 ஜனவரி 1972 ல் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. மேகாலயா முழு மாநிலத் தகுதியை அடைவதற்கு முன், 1970 இல் அரை தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது.
மேகாலயா பகுதியை பொ.ஊ. 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் காலத்திற்கு முன்பு வரை காஸி, காரோ, ஜெயின்டியா ஆகிய பழங்குடியினர் தங்கள் சொந்த அரசுகளைக் கொண்டு இருந்தன. பின்னர், பிரித்தானியர் 1835 இல் மேகாலயாவை அசாமுடன் இணைத்தனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மேகாலயப் பகுதி அரை சுயாட்சி உரிமையைக் கொண்டதாக இருந்தது. கர்சன் பிரபு காலத்தில் 16 அக்டோபர் 1905 இல் மேற்கொண்ட வங்கப் பிரிவினையின்போது, மேகாலயாவானது புதிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. எனினும், வங்கப்பிரிவினை திரும்பப்பெறப்பட்ட 1912 இன் போது, மேகாலயா அசாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது.
1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இன்றைய மேகாலயா அசாமின் இரண்டு மாவட்டங்களாக அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சுயாட்சியை அனுபவித்து. 1960 இல் தனி மலை மாநில இயக்கம் தொடங்கப்பட்டது. அசாம் மறு சீரமைப்புச் (மேகாலயா) சட்டம் 1969 இன்படி மேகாலயா பகுதி சுயாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஆனது. இச்சட்டம் 1970 ஏப்ரல் 2 இல் அமலுக்கு வந்து, இதன்பிறகு அசாமிலிருந்து மேகாலயா என்னும் தன்னாட்சி மாநிலம் பிறந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணைக்கு ஏற்ப மேகாலயா தன்னாட்சிப் பகுதியில் 37 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றம் உருவாக்கப்பட்டது.
1971-ல் இந்திய நாடாளுமன்றத்தில் வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம் 1971 நிறைவேற்றப்பட்டது, இதன்பிறகு மேகாலயா சுயாட்சிப் பகுதிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. மேகாலயா மாநிலம் தனக்கான சொந்த சட்டமன்றத்தோடு, 1972 சனவரி 21 அன்று மாநிலமாக ஆனது.
புவியியல்
மேகாலயாவின் காலநிலை மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன் கொண்டது. ஆண்டுக்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை காணப்படுவதால், இந்தியாவின் அதிக ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள மௌசின்ரம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் 1/3 பகுதி காடாகும். மேற்கிலுள்ள காரோ குன்றுகளும், கிழக்கிலமைந்துள்ள காசி மலைகள், சைந்தியா குன்றுகள் போன்றனவும், உயரமானவை அல்ல. இங்கே ஷில்லாங் சிகரம், 1965 மீ உயரத்துடன் அதியுயர்ந்ததாக உள்ளது. தனித்துவமான சுண்ணாம்புக்கள் அமைப்புக்களோடு கூடிய பல குகைகள் இங்கே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
பண்பாடு
பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், "காசி"கள், "சைந்தியா"க்கள், "காரோ"க்கள் என்னும் இனத்தவர்களாவர்.
தீவிரவாத பிரச்சனைகள்
மாநில அரசு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டினாலும், தீவிரவாத இயக்கங்கள் காரோ குன்றுகளைத் தங்களது நடவடிக்கைகளுக்கான தளமாகப் பயன்படுத்துவதால் இம் முயற்சி அதிக வெற்றியடையவில்லை.
நிர்வாகம்
மாவட்டங்கள்
மேகாலயாவில் 12 மாவட்டங்கள் அமைந்துள்ளன. அவை
கிழக்கு காரோ மலை மாவட்டம்
மேற்கு காரோ மலை மாவட்டம்
வடக்கு காரோ மலை மாவட்டம்
தெற்கு காரோ மலை மாவட்டம்
தென்மேற்கு காரோ மலை மாவட்டம்
கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம்
மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்
கிழக்கு காசி மலை மாவட்டம்
மேற்கு காசி மலை மாவட்டம்
தென்மேற்கு காசி மலை மாவட்டம்
ரி-போய் மாவட்டம்
கிழக்கின் மேற்கு காசி மலை மாவட்டம்
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மேகாலயா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,966,889 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 79.93% மக்களும், நகரப்புறங்களில் 20.07% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.95% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,491,832 ஆண்களும் மற்றும் 1,475,057 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். 22,429 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 132 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 74.43 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 75.95 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 72.89 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 568,536 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 342,078 (11.53 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 130,399 (4.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,213,027 (74.59 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 3,045 (0.10 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 627 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 9,864 (0.33 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 258,271 (8.71 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 9,578 (0.32 %) ஆகவும் உள்ளது.
இனக் குழுக்கள்
இம்மாநிலத்தில் பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களில் காசி பழங்குடிகள் 45% ஆகவும், கோச் பழங்குடிகள் 2.8% ஆகவும், ஜெயந்தியா பழங்குடி மக்கள் 2.5% ஆகவும், ஹஜோங் பழங்குடிகள் 1.8% ஆகவும், வங்காளிகள் 18% ஆகவும், நேபாளிகள் 8.26% ஆகவும், பிற இன மக்கள் 4.7% ஆக உள்ளனர்.
மொழிகள்
இம்மாநிலத்தில் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் நேபாள மொழி, வங்காள மொழி, அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் முதன்மை பழங்குடி மக்களின் மொழியான காசி மொழி மற்றும் கரோ மொழி கள் அதிகம் பேசப்படுகிறது. அத்துடன் பிற வட்டார பழங்குடி மக்களின் மொழிகளும் பேசப்படுகிறது.
போக்குவரத்து
சாலைகள்
மேகாலயா மாநிலத்தில் 7,633 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் உள்ளது. மேகலயாவின் தலைநகரம் சில்லாங், அசாம் மாநிலத்தின் சில்சார் நகரையும், திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகரத்தையும் சாலைகள் இணைக்கிறது. மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன. மேலும் மாநில பேருந்து மூலம் குவஹாத்தி, சில்சார், துரா போன்ற நகரங்கள் பேருந்து சேவை உள்ளன.
தொடருந்து
ஷில்லாங் நகரத்தின் மெண்டிபதர் தொடருந்து நிலையம், 103 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரத்துடன் இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது. மெண்டிபதார் ரயில் நிலையம் மேகாலயா மாநிலத்தில் உள்ளது
விமான நிலையம்
ஷில்லாங் விமான நிலையம் மூலம் வானூர்திகள் கொல்கத்தா நகரத்துடன் வான் வழியாக இணைக்கிறது.
பொருளாதாரம்
மலைகளாலும் காடுகளாலும் சூழ்ந்த இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளான்மைத் தொழிலையே நம்பியுள்ளது. இங்கு பழத்தோட்டங்கள், மூங்கில் மரங்கள் அதிகம் உள்ளது. பிரம்பு மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் அதிகம் விற்பனையாகிறது.
குறிப்பிடத்தக்க பிரமுகர்கள்
அடோல்ப் லு ஹிட்லர் மராக்
டாக்டர். டி. டி. லபாங்
இதனையும் காண்க
சேராப்புஞ்சி
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
மேகாலயா மாநில அதிகாரப்பூர்வ இணையத்தளம்
வடகிழக்கு இந்தியா
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும் |
2292 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%29 | வர்க்கம் (கணிதம்) | வர்க்க எண் அல்லது சதுர எண் (square number) என்பது ஒரு முழு எண்ணின் வர்க்கமாகும். ஒரு முழு எண்ணின் வர்க்கம் என்பது அம்முழு எண்ணை அவ்வெண்ணாலேயே பெருக்கக் ல
எடுத்துக்காட்டாக 9 ஒரு வர்க்க எண். ஏனென்றால் எண் ஒன்பதை 3 × 3 என எழுதலாம். அதாவது 3 -ன் வர்க்கம் 9.
ஒரு முழு எண்ணின் வர்க்கமும் ஓர் முழு எண்ணாகவே அமையும். ஒரு வர்க்க எண்ணானது, செவ்விய வர்க்கம் (perfect square) எனவும் அழைக்கப்படுகிறது.
வர்க்க எண்கள் நேர்ம எண்களாகவே இருக்கும். ஒரு நேர்ம எண் வர்க்க எண்ணாக இருக்க வேண்டுமானால் அதன் வர்க்கமூலம் ஒரு முழு எண்ணாக இருக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக √9 = 3, என்பதால் 9 ஒரு வர்க்க எண்.
எண் 1, முதல் முழு வர்க்கமாகக் கருதப்படுகிறது. எண் 0 -ஐ (0 × 0 = 0) என்று எழுத முடியும் என்பதால் எண் 0 மும் வர்க்க எண் தான் என வாதிடுவோரும் உண்டு.
வர்க்கத்தை வழக்கமாக பெருக்கல் வடிவில் எழுதுவதில்லை. மாறாக n என்ற எண்ணின் வர்க்கம் n2 என எழுதப்படுகிறது. இதனை "n ஸ்கொயர்ட்" என வாசிக்க வேண்டும். n அளவு பக்கமுடைய ஒரு சதுரத்தின் பரப்பு n × n . அதாவது n2. எனவேதான் முழு வர்க்க எண்கள், சதுர எண்கள் என அழைக்கப்பட்டு வடிவ எண்களில் ஒரு வகையாகின்றன.
வர்க்கம் என்ற கருத்துருவைப் பிற எண் கணங்களுக்கும் நீட்டிக்கலாம். விகிதமுறு எண்களை எடுத்துக்கொண்டால், ஒரு விகிதமுறு வர்க்க எண் என்பது இரு வர்க்க எண்களின் விகிதமாகும். மறுதலையாக, இரு வர்க்க எண்களின் விகிதம் ஒரு விகிதமுறு வர்க்க எண்ணாகும்.
எடுத்துக்காட்டு: 4/9 = (2/3)2).
எடுத்துக்காட்டுகள்
602 -க்கும் கீழுள்ள வர்க்க எண்கள் :
02 = 0
12 = 1
22 = 4
32 = 9
42 = 16
52 = 25
62 = 36
72 = 49
82 = 64
92 = 81
102 = 100
112 = 121
122 = 144
132 = 169
142 = 196
152 = 225
162 = 256
172 = 289
182 = 324
192 = 361
202 = 400
212 = 441
222 = 484
232 = 529
242 = 576
252 = 625
262 = 676
272 = 729
282 = 784
292 = 841
302 = 900
312 = 961
322 = 1024
332 = 1089
342 = 1156
352 = 1225
362 = 1296
372 = 1369
382 = 1444
392 = 1521
402 = 1600
412 = 1681
422 = 1764
432 = 1849
442 = 1936
452 = 2025
462 = 2116
472 = 2209
482 = 2304
492 = 2401
502 = 2500
512 = 2601
522 = 2704
532 = 2809
542 = 2916
552 = 3025
562 = 3136
572 = 3249
582 = 3364
592 = 3481
பண்புகள்
m புள்ளிகளை ஒரு சதுரமாக அடுக்க முடிந்தால், முடிந்தால் மட்டுமே எண் m ஒரு வர்க்க எண்ணாகும்:
இங்கு n -ஆம் வர்க்க எண் n2. இது முதல் n ஒற்றை எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமம். இக்கூற்றைப் படத்தில் காணலாம். படத்தில் ஒவ்வொரு சதுரமும் அதற்கு முந்தைய சதுரத்துடன் ஒற்றை எண்ணிக்கைப் புள்ளிகளைச் சேர்ப்பதால் உண்டாவதையும் காணலாம்.
எடுத்துக்காட்டு:
52 = 25 = 1 + 3 + 5 + 7 + 9.
ஒரு வர்க்க எண்ணிற்கும் அதற்கு முந்தைய வர்க்க எண்ணிற்குமுள்ள தொடர்பு:
.
அல்லது:
.
மற்றொரு வாய்ப்பாடு:
.
எடுத்துக்காட்டு:
2 × 52 − 42 + 2 = 2 × 25 − 16 + 2 = 50 − 16 + 2 = 36 = 62.
ஒரு வர்க்க எண் அடுத்தடுத்த இரு முக்கோண எண்களின் கூடுதலுக்குச் சமம்.
அடுத்தடுத்த இரு வர்க்க எண்களின் கூடுதல் ஒரு மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்.
ஒவ்வொரு ஒற்றை வர்க்க எண்ணும் ஒரு மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்ணாகவும் இருக்கும்
ஒரு வர்க்க எண்ணின் வகுத்திகளின் எண்ணிக்கை ஒற்றை யெண்ணாக இருக்கும். பிற எண்களின் வகுத்திகளின் எண்ணிக்கை இரட்டை யெண்ணாக இருக்கும்.
பத்தடிமானத்தில், ஒரு வர்க்க எண் 0,1,4,6,9, அல்லது 25 ஆகிய இலக்கங்களைக் கொண்டு பின்வருமாறு முடிவடையும்:
0 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், இரட்டை எண்ணிக்கை கொண்ட 0 -க்களைக் கொண்டு முடிவடையும். மேலும் கடைசியில் உள்ள 0-க்களுக்கு முந்தைய இலக்கங்கள் ஒரு முழு வர்க்க எண்ணைத் தரும்.
102 = 100; 202 = 400;....
1 அல்லது 9 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 1-ஐக் கொண்டு முடிவடையும். மேலும் கடைசியில் உள்ள 1-க்கு முந்தைய இலக்கங்கள் குறிக்கும் எண் நான்கால் வகுபடும்.
112 = 121; 212= 441;......
92=81; 292 = 841;.....
2 அல்லது 8 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 4 -ஐக் கொண்டு முடியும். மேலும் கடைசியில் உள்ள 4-க்கு முந்தைய இலக்கம் இரட்டை எண்ணாக இருக்கும்.
122 = 14; 222 = 484;....
82=64; 182=324;....
3 அல்லது 7 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 9 -ஐக் கொண்டு முடியும். மேலும் கடைசியில் உள்ள 9-க்கு முந்தைய இலக்கங்கள் குறிக்கும் எண் நான்கால் வகுபடும்.
32=9; 132=169;....
72=49; 172=289;....
4 அல்லது 6 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 6 -ஐக் கொண்டு முடியும்.மேலும் கடைசியில் உள்ள 6-க்கு முந்தைய இலக்கம் ஒற்றை எண்ணாக இருக்கும்.
42=16; 142=196; 242=576;....
62=36; 162=256; 262=676....
5 -ஐக் கொண்டு முடியும் எண்ணின் வர்க்கம், 25 -ஐக் கொண்டு முடியும்.மேலும் கடைசியில் உள்ள 25-க்கு முந்தைய இலக்கங்கம் 0, 2, 6, 25 -ஆக இருக்கும்.
52=25; 252=625; 352=1225;.....
பொதுவாக ஒரு பகா எண் p , வர்க்க எண் m -ஐ வகுக்குமானால் p2 -ம் m -ஐ வகுக்கும்.
வர்க்க எண் ஒரு செவ்விய எண் அல்ல.
வர்க்க எண்களின் கூடுதல் காணும் வாய்ப்பாடு:
-தொடரின் உறுப்புகள் (வர்க்கப் பிரமிடு எண்கள்):
0, 1, 5, 14, 30, 55, 91, 140, 204, 285, 385, 506, 650, 819, 1015, 1240, 1496, 1785, 2109, 2470, 2870, 3311, 3795, 4324, 4900, 5525, 6201... .
சிறப்பு வகைகள்
m5 வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் n25 இதில் n = m × (m + 1)
652 = 4225
m = 6; n = 6 × (6 + 1) = 42
m0 வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் n00 இதில் n = m2.
702 = 4900. m = 7; n = 72 = 49
ஈரிலக்க 5m (m -ஒன்றினிடம்) வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் AABB இதில் AA = 25 + m மற்றும் BB = m2.
572=3249.
AA = 25+7 =32 மற்றும் 72=49,
ஒற்றை மற்றும் இரட்டை எண்கள்
இரட்டை எண்களின் வர்க்கங்கள் இரட்டை எண்களாகும். அவை நான்கால் வகுபடும் எண்களாகவும் இருக்கும்.
ஒற்றையெண்களின் வர்க்கங்கள் ஒற்றையெண்கள்.
இதிலிருந்து இரட்டை எண்களின் வர்க்க மூலங்கள் இரட்டை எண்களாகவும் ஒற்றை எண்களின் வர்க்க மூலங்கள் ஒற்றை எண்களாகவும் இருக்கும் என்பதை அறியலாம்.
பயன்பாடு
இரு நேர்ம மெய்யெண்களின் பெருக்குத்தொகை ஒரு நேர்ம மெய்யெண்ணாகவும் இரு எதிர்ம மெய்யெண்களின் பெருக்குத்தொகையும் ஒரு நேர்ம மெய்யெண்ணாகவும் இருக்கும் என்பதால் எந்தவொரு வர்க்க எண்ணும் எதிர்ம எண்ணாக இருக்க முடியாது. எனவே மெய்யெண்களின் கணத்தில் ஒரு எதிர்ம மெய்யெண்ணின் வர்க்க மூலத்தைக் காணமுடியாது. இதனால் மெய்யெண்கள் கணத்தில் ஒரு பற்றாக்குறை ஏற்பட்டு கணிதவியலாளர்கள் கற்பனை மூலம் i -ஐ −1 -ன் வர்க்க மூலங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்டு கலப்பெண்களை உருவாக்கினர்.
புள்ளியியலில் ஒரு தரவின் திட்ட விலக்கம் காண்பதற்கு வர்க்கம் (வர்க்க மூலம்) பயன்படுகிறது
குறிப்பு
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Conway, J. H. and Guy, R. K. The Book of Numbers. New York: Springer-Verlag, pp. 30–32, 1996.
வெளி இணைப்புகள்
Learn Square Numbers . Practice square numbers up to 144 with this children's multiplication game
Dario Alpern, Sum of squares. A Java applet to decompose a natural number into a sum of up to four squares.
Fibonacci and Square Numbersat
The first 1,000,000 perfect squares Includes a program for generating perfect squares up to 10^15.
எந்த ஒரு Positive integerஐயும் நான்கு அல்லது அதற்கு குறைந்த வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக மாற்ற உதவும் நிரல்
அடிப்படை எண்கணிதம்
முழுஎண் தொடர்வரிசைகள்
முழு எண்கள்
எண் கோட்பாடு
வடிவ எண்கள்
நாற்கரங்கள் |
2294 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D | விழுப்புரம் | விழுப்புரம் (Viluppuram, ) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும், ஒரு ' சிறப்பு நிலை நகராட்சி ' ஆகும். இதுவே விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. 1993 ஆம் ஆண்டில், முந்தைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என உருவாக்கப்பட்டு, பின்னர் 'விழுப்புரம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நகரம், திருச்சி – சென்னை சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 45-இன் மற்றும் வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் - தூத்துக்குடி சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 38-இன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது; மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் (பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.
விழுப்புரத்தின் முக்கிய வருமானம் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை சுமார் 96,253 ஆகும். 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை ஆய்வின்படி, எழுத்தறிவு சதவீதம் 90.16% ஆகும்.
மாவட்டத் தலைநகர் எனும் தகுதி, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை அடங்கிய பெருந்திட்ட வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்கள், பிரம்மாண்ட பேருந்து நிலையம், விரிவுபடுத்தப்பட்ட இரயில் சந்திப்பு, புறவழிச்சாலை, அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என முன்னேற்றமடைந்து வருகிறது.
பெயர்க்காரணம்
"சோழர்கள் காலம் வரையில், பிரம்மதேயமாயிருந்த நடுநாட்டுச் சதுர்வேதிமங்கலத்தில், அப்புறம் காடவராயர் ஆட்சி ஏற்பட்டு, அதற்கும் அப்புறம் பாண்டியன் பிடித்தபோது, விழுப் அங்கே நிர்வாகத்தில் முக்கியமான ஸ்தானம் வகிக்கிற சமூகமாக ஆகி, அதனால் தான் ஊருக்கே, 'விழுப்புரம்' என்று பேர் மாறியிருப்பதாகத் தோன்றுகிறது" - என விழுப்பாதராயர் எனப்படுவோர் குறித்தும் விழுப்புரம் குறித்தும் நினைவில் வாழும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திரர் அளித்துள்ள விளக்கம் (நூல்: காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம்) இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் வழிவந்த, வீரராசேந்திரக்காரனை, 'விழுப்ராயன் எனும் படைத்தலைவன்' என்று அபிராமேசுவரர் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
'ஜெயன்கொண்ட சோழ விழுப்பராய நாடாழ்வான்' என்கிறது திருநாவலூர்க் கல்வெட்டு. முதலாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாக விளங்கியவன் "ஆதிநாதன் விழுப்பரையன்". அவனை வாழ்த்தி "கரணை விழுப்பராயன் மடல்" (அ) "ஆதிநாதன் வளமடல்" பாடினார் ஜெயங்கொண்டார்.
விழுப்பராயன் என்பவனின் ஆளுகைக்கு உட்பட்டப் பகுதியாக விழுப்புரம் இருந்துள்ளது என்பதற்கு மேற்கண்டவை சான்றாதாரமாக உள்ளன. வணிகர்கள் பெருமளவில் வாழ்ந்த ஊர்கள், 'புரம்' என்று பின்னொட்டால் அழைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வகையில், முன்னொரு காலத்தில், 'விழுப்புரம்' வணிக நகரமாக இருந்திருத்தல் வேண்டும்.
‘எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும் ஊர்; அறியாமையில் இருந்து விழிப்பைத் தரக்கூடிய ஊர் - விழுப்புரம்‘ என்கிறார் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திரர்.
‘விழுப்புரம் என்றால் விழுமியபுரம்‘ என்று பொருள் தருவார் கிருபானந்த வாரியார்.
‘இராமன் வில்லைப் பிடித்துப் பொன்மனை நோக்கி அம்பு எய்த இடம் என்பதால், இந்த இடம் வில்லுப்புரமாயிற்று‘ என்பார் திருக்குறளார் வீ.முனுசாமி.
இந்தப் பெருமைகள் ஒருபுறமிருந்தாலும், விழுப்புரத்திறக்கு வரலாற்று ரீதியிலானப் பெயர்க்காரணங்களும் இருக்கின்றன;
'பல்லவப் பேரரசன் நிருபதுங்க வர்மன்', இப்பகுதிக்கு, 'விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம்' எனத் தனது பெயரை இட்டு, நான்கு வேதமும் ஓதும் அந்தணர்களுக்கு, தானமாக வழங்கியிருக்கிறான்.
'ஜனநாதச் சதுர்வேதி மங்கலம்' என தனது பெயரை இந்தப் பகுதிக்குச் சூட்டிய முதலாம் இராசராசன், அந்தணர்களுக்கு மானியமாகவும் வழங்கியிருக்கிறான்.
விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம், ஜனநாதச் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலம் (1265) முதல் விழுப்பராயபுரம்-விழுப்புரம் என அழைக்கப்பட்டு வருகிறது.
‘விழுப்பாதராயர் (விழுப்பரையர்)‘ என்பவர்களைப் பற்றிக் குறிப்பிடும் அபிதான சிந்தாமணி, "ஆவணித் திருவிழாவிற் சுந்தரபாண்டியரின் பட்டாபிஷேக தினமாகிய (7)ஆம் திருநாளில், அவரிடமிருந்து பொன்னெழுத்தாணியைப் பெற்று, நாடோறும் கணக்கு வாசிக்கும் உரிமையுடையவர்கள்" என்றும், "பாண்டி பதினாலுக்கும் வேண்டிய விழுப்பாதராயர்" என இவர்கள் சம்பந்தமாக ஒரு பழமொழியும் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது. "யார் இந்த விழுப்பராயர்?"பிறந்த குடிக்கே சிறப்பு உண்டாக்கியவர்கள் விழுப்பராயர். வைதீக பிராமணர்களுக்கு அடுத்தபடியாக ராஜ சபையில் உத்தியோகத்திற்குப் பேர் போனவர்கள். தஞ்சாவூர் நாயக்க ராஜாக்கள் காலம் வரைகூட அந்தச் சமூகத்துக்கு ராஜாங்கத்தில் இருந்த முக்கியத்துவம் தெரிகிறது. இந்த விழுப்பராயர்களை 'விழுப்பிரமர்' என்றும் சொல்வதுண்டு. பிரமர் என்பது, பூர்வத்தில் அவர்களுக்கு இருந்த வைதீகப் பிராமண மூலத்தைக் காட்டுவது. 'அரையர்' என்பது பிறப்பாடு ஏற்பட்ட ஷத்ரிய ஸ்தானத்தைக் காட்டுவது, 'விழுப்பாடராயர் (விழுப்பாதராயர்) என்று இன்னொரு பேரும் அவர்களுக்கு இருந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் விழுப்புர வாசிகளால், பரந்த நிலப்பரப்பை சுட்டுமாறு, பெரிய விழியுடைய "விழிமா நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது.
வரலாறு
சோழர்களின் ஆட்சிக்குட்பட்ட விழுப்புரம், சிம்மவிஷ்ணு பல்லவ மன்னனால் கைப்பற்றப்பட்டு, பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் வந்த விஜயாலய சோழன், இப்பகுதியை மீட்டு மீண்டும் சோழப்பேரரசுடன் இணைத்தான். பின்னாளில் ஆண்ட சோழர்களிடமிருந்து வென்று, கிழக்கத்திய சாளுக்கியர்கள் ஆண்டனர். அதன் பின்னர் வந்த சோழர்கள் மீட்டு ஆண்ட போதும், முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன், பொ.ஊ. 1251ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். இதனால் சோழப்பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சுமார் 50 ஆண்டுகள் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்த இப்பகுதி, முகலாயர்களின் படையெடுப்பால் பொ.ஊ. 1334-1378 ஆண்டுகள் வரையிலும் முகலாயர்களின் வசம் இருந்தது. முகாலாயர்களிடமிருந்து விஜயநகரப் பேரரசர்களும், நாயக்க மன்னர்களும் ஆண்டனர்.
பொ.ஊ. 1677ஆம் ஆண்டு கோல்கொண்டா படையினரால் சிவாஜி மன்னர் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் முகலாயப் பேரரசுல் கைப்பற்றப்பட்டது. முகாலாய ஆட்சியின் போதே, ஆங்கில, பிரெஞ்சுப் படைகளிடம் ஒப்பந்தப்படுத்தப்பட்டு, தென்னாற்காடு மாவட்டமாக, மதராசு மாகாணாத்தின் கீழ் வந்தது. கர்நாடகப் போரின் போது போர்க்களமாக இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியால் ஆக்கிரமிக்கப்பட்டு, 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரையிலும், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தது. விழுப்புரம் நகரம் தொண்டை மண்டலத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
தென்னாற்காடு மாவட்டமாகவும், கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்த விழுப்புரம், 30 செப்டம்பர் 1993ஆம் ஆண்டு அன்று, தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. விழுப்புரம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் ஆகும். தக்காண இந்தியாவின் தென் கிழக்குப்பகுதியிலும் அமைந்துள்ளது. பாண்டிச்சேரி, இதன் வங்கக் கடற்சார்ந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கிருந்து சென்னை சுமார் 160 கி.மீ. தொலைவிலும், திருச்சி 160 கி.மீ. தொலைவிலும், சேலம் 144 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரி சுமார் 40 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலை 63 கி.மீ. தொலைவிலும், கடலூர் 47 கி.மீ. தொலைவிலும், வேலூர் 130 கி.மீ. மற்றும் ஆரணி 92 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 22,832 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 96,253 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 90.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,019 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,217 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 990 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 12,057 மற்றும் 276 ஆகவுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, விழுப்புரத்தில் இந்துக்கள்
78.35%, முஸ்லிம்கள் 14.88%, கிறிஸ்தவர்கள் 6.15%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.38%, 0.01% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.20% பேர்களும் உள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
விழுப்புரம் நகராட்சியானது, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை, திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த ஆர். லட்சுமணன் வென்றார்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை, (திமுக கூட்டணி ) விடுதலை சிறுத்தைகள் கட்சி -ஐச் சேர்ந்த து. இரவிக்குமார் வென்றார்.
போக்குவரத்து
• விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம் இயங்கி வருகிறது. இதன் மூலம் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
• விழுப்புரம் நகராட்சியானது சாலை போக்குவரத்து மற்றும் தொடர்வண்டி போக்குவரத்து மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து
விழுப்புரம் நகரைப் பொறுத்த வரையில், சாலை வசதிகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலை 45 சென்னை- தேனி (வழி: விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல்)
தேசிய நெடுஞ்சாலை 45 எ விழுப்புரம் -நாகப்பட்டினம் (வழி: புதுச்சேரி, கடலூர்)
தேசிய நெடுஞ்சாலை 38 வேலூர் - தூத்துக்குடி (வழி: திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர்,கோவில்பட்டி)
மாநில நெடுஞ்சாலை 4 விழுப்புரம் - ஆற்காடு (வழி: செஞ்சி - சேத்துப்பட்டு - ஆரணி - திமிரி)
தேசிய நெடுஞ்சாலை 45சி விக்கிரவாண்டி - தஞ்சாவூர் (வழி: பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், கும்பகோணம்) இச்சாலையானது விழுப்புரம் நகரில் செல்லவில்லை என்றாலும், தேசிய நெடுஞ்சாலை 45 எ புதுச்சேரி செல்லும் சாலையில் கோலியனூர் என்னும் ஊரில் இச்சாலை செல்வதால், இதன் வழியாகச் செல்ல முடியும். விழுப்புரத்திலிருந்து கோலியனூர் 05 கி.மீ. தொலைவில் உள்ளது.
விழுப்புரம் நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் ஆகும். புதிய பேருந்து நிலையமானது, தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். சென்னையிலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் தென்தமிழகமான திருச்சி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் விழுப்புரத்தின் வழியாகச் செல்கின்றன.
இங்கிருந்து சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, காஞ்சிபுரம், புதுச்சேரி, பெங்களூரு, சேலம், திருத்தணி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம், கடலூர், அரியலூர், நெய்வேலி, பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய முக்கிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
தொடர்வண்டி போக்குவரத்து
விழுப்புரம் தொடருந்து நிலையமானது மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையமாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிகமுக்கியமான இணைப்பு நிலையமாகத் திகழ்கிறது. இது தென்னக இரயில்வேயின் ஐந்து முக்கியமான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும். விழுப்புரத்தில் இருந்து ஐந்து கிளைகளாக இரயில் பாதைகள் பிரிகின்றன:
விழுப்புரம் - சென்னைக் கடற்கரை, (வழி: செங்கல்பட்டு, தாம்பரம்) முழுமையாக மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகலப் பாதை.
விழுப்புரம் - திருச்சி, (வழி: விருதாச்சலம், அரியலூர்) முழுமையாக மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகலப் பாதை. இது கார்டு லைன் என்றும் அழைக்கப்படுகிறது.
விழுப்புரம் - திருச்சி, (வழி: கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மின்மயமாக்கப்படாத அகலப் பாதை. இது மெயின் லைன் என்றும் அழைக்கப்படுகிறது.
விழுப்புரம் - காட்பாடி (வழி: திருக்கோவிலூர், திருவண்ணாமலை ,ஆரணி, வேலூர்) முழுமையாக மின்மயமாக்கப்பட்ட அகலப் பாதை.
விழுப்புரம் - புதுச்சேரி மின்மயமாக்கப்பட்ட அகலப் பாதை.
வானூர்தி நிலையம்
இங்கிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள புதுச்சேரி வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையமாகும்.
திருவிழா
கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் திருவிழா வருடந்தோறும் சித்திரைத் திங்கள் பௌர்ணமி நாளன்று நடைபெறுகிறது.
தென்பெண்ணை ஆறு திருவிழா
மேல்மலையனூர் அங்காள பரமேசுவரி மயானக் கொள்ளை
கல்லூரிகள்
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, முண்டியம்பாக்கம்.
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம்.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, விழுப்புரம்.
அரசு சட்டக் கல்லூரி, விழுப்புரம்.
மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.
திரு. ஆ. கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி, திண்டிவனம்.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திண்டிவனம்.
அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி, சு. கொல்லூர், அரகண்டநல்லூர்.
அரசு கலைக்கல்லூரி, செஞ்சி.
அரசு கலைக்கல்லூரி, வானூர்.
அரசு கலைக்கல்லூரி, திருவெண்ணைநல்லூர்
சுற்றுலாத்தலங்கள்
செஞ்சிக் கோட்டை
மொக்கை ஓடை அருவி
துருவன் கோட்டை
ஆரோவில்
வானிலை மற்றும் காலநிலை
மேற்கோள்கள்
தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்
விழுப்புரம் மாவட்டம் |
2295 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல் | தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
மதுரகவி பாஸ்கர தாஸ்
அவினாசி மணி
அறிவுமதி
அண்ணாதாசன்
கவிஞர் அண்ணாமலை
அகத்தியன்
அ. மருதகாசி
எம். கே. ஆத்மநாதன்
ஆலங்குடி சோமு
ஆபாவாணன்
ஆற்றலரசு
ஆண்டாள் பிரியதர்சினி
இரா. பழனிச்சாமி
இலக்குமணதாஸ்
இளையராஜா
ஈழத்து இரத்தினம்
உடுமலை நாராயணகவி
கங்கை அமரன்
கண்ணதாசன்
கண்மணி சுப்பு
கபிலன்
கபிலன் வைரமுத்து
கம்பதாசன்
கலைக்குமார்
காமகோடியன்
காளிதாசன்
கா. மு. ஷெரீப்
கு. சா. கிருஷ்ணமூர்த்தி
கு. மா. பாலசுப்பிரமணியம்
குயிலன்
மகேந்திரன் குலராஜ்
கே. சி. எஸ். அருணாசலம்
கே. டி. சந்தானம்
கே. பி. காமாட்சிசுந்தரம்
சுத்தானந்த பாரதியார்
சிதம்பரநாதன்
சினேகன்
சி. எஸ். அமுதன்
சுரதா
தஞ்சை ராமையாதாஸ்
தமிழ்அமுதன் (எ) ஆரல் தமிழ்அமுதன்
கவிதாயினி தாமரை
நா. காமராசன்
நா. முத்துக்குமார்
கவிஞர்.வெ.மதன்குமார்
பஞ்சு அருணாசலம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பழனி பாரதி
பாபநாசம் சிவன்
பா. விஜய்
பிறைசூடன்
புலமைப்பித்தன்
புரட்சிதாசன்
பூவை செங்குட்டுவன்
பேரரசு
பொத்துவில் அஸ்மின்
பொன்னடியான்
பொன்னரசன்
மதன் கார்க்கி
ஏக்நாத்
மருதகாசி
மாயவநாதன்
முத்துக்கூத்தன்
முகவை ராஜமாணிக்கம்
முத்துலிங்கம்
மு. கருணாநிதி
மு. மேத்தா
யுகபாரதி
ரோஷிணாரா பேகம்
வாலி
வாசன்
வித்வான் இலட்சுமணன்
விவேகா
வைரமுத்து
விந்தை பாரதி- கவிஞர்,பாடகர்
உமாதேவி
நடிகர்கள், இயக்குநர்களில் பாடலாசிரியர்கள்
டி. இராஜேந்தர்
ஆர். வி. உதயகுமார்
பேரரசு
தனுஷ்
மாரி செல்வராஜ்
சிவகார்த்திகேயன்
மேற்கோள்கள்
தமிழகப் பாடலாசிரியர்கள் |
2296 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D | செண்டிமீட்டர் | செண்டிமீட்டர் அல்லது சென்டிமீட்டர் (centimetre அல்லது centimeter) அல்லது சதமமீட்டர் (இலங்கை வழக்கு) (குறியீடு செமீ (cm) என்பது மெட்ரிக் முறையில் நீளத்தின் ஓர் அலகு ஆகும். இது மீட்டரின் நூறில் ஒரு பங்கிற்குச் சமமாகும். "செண்டி" (centi) என்பது பின்னத்தின் அனைத்துலக முறை அலகு முன்னொட்டாகும். இப்போது வழக்கொழிந்த சென்டிமீட்டர்-கிராம்-செகண்ட் (சிஜிஎஸ்) அலகுகளில் நீளத்தின் அடிப்படை அலகு செண்டிமீட்டர் ஆகும்.
இன்று பல அளவீடுகளுக்கு, 103 காரணிகளுக்கான SI முன்னொட்டுகள் (மில்லி-, கிலோ- போன்றவை) பெரும்பாலும் தொழில்நுட்பவியலாளரகளால் விரும்பப்படுகின்றன. இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் அங்குலம் என்பது 2.54 செண்டிமீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது.
நீளத்தின் ஏனைய அலகுகளும் செண்டிமீட்டரும்
{|
|-
|rowspan=4 valign=top|1 செண்டிமீட்டர்
|= 10 மில்லிமீட்டர்கள்
|-
|= 0.01 மீட்டர்கள்
|-
|= 0.393700787401574803149606299212598425196850 அங்குலங்கள்
|-
| (ஓர் அங்குலத்தில் சரியாக 2.54 செண்டிமீட்டர்கள் உள்ளன.)
|}
அனைத்துலக முறை அலகுகளில் ஒரு மில்லிலீட்டர் என்பது ஒரு கன சென்டிமீட்டருக்கு சமமாகும்.
ஏனைய பயன்பாடுகள்
நீள அளவீட்டைத் தவிர, செண்டிமீட்டர் பின்வரும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றது:
மழை அளவீடு மூலம் அளவிடப்படும் மழையின் அளவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
செமீ.கி/செக் (CGS) வழக்கில், செண்டிமீட்டர் கொண்மத்தை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது,1 செமீ கொண்மம் = பாரடுகள்
வரைபடங்களில், செண்டிமீட்டர்கள் வரைபட அளவிலிருந்து உண்மையான உலக அளவில் (கிலோமீட்டர்கள்) மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
செமீ.கி/செக் (CGS) வழக்கில் ஓர் அலகான கெய்சரின் தலைகீழ், இதனால் அலை எண்ணின் SI-அல்லாத மெட்ரிக்கு அலகு: 1 கெய்சர் = 1 அலை/சென்டிமீட்டர்; அல்லது, பொதுவாக, (கெய்சர்களில் அலை எண்) = 1/(சென்டிமீட்டரில் அலைநீளம்). அலைஎண்ணின் SI அலகு தலைகீழ் மீட்டர், m−1 ஆகும்.
இவற்றையும் பார்க்க
அலகு மாற்றம்
மேற்கோள்கள்
மீட்டர்
நீள அலகுகள்
SI அலகுகள் |
2297 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D | திருமால் | திருமால் அல்லது பெருமாள் வைணவ சமயத்தை பின்பற்றுபவா்கள் வணங்கும் கடவுள். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது.
தமிழ் இலக்கியங்களில் திருமால்
தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோனை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
பெருமாள் கோவில்கள்
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பாடப்பெற்ற 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
வழிபாடு
வடகலை மரபினர் வேதங்கள் மற்றும் பஞ்சராத்திர ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களைப் பின்பற்றியும் தென்கலை மரபினர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் பெருமாள் கோவில்களில் வழிபடுகின்றனர்.
காண்க
விஷ்ணு
வைணவ சமயம்
மேற்கோள்கள்
வைணவ சமயம்
இந்துக் கடவுள்கள் |
2298 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D | திருக்கேதீச்சரம் | திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
வரலாற்றுச் சுருக்கம்
கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது. சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது.
இத்தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத்தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம்.
இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும்.
கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும். அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருக்கிறது.
இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் சிற்பம் கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலை என்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் துறைமுகமாகவும வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும் இன்றும் அழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் காணலாம். அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன
ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் மாதோட்டத்தின் கண்ணிறங்கி அன்று இரவினை அங்கேயே கழித்ததாகவும் வரலாறுண்டு.
பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் கோயில் சோழமன்னர்களால் இராசராசேச்சர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.
வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.
நகுலேச்சரம்
திருக்கோணேச்சரம்
திருக்கேதீச்சரம்
தொண்டேச்சரம்
மேற்கோள்கள்
தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்
மன்னார் மாவட்டத்தில் உள்ள கோயில்கள்
இலங்கையில் உள்ள சிவன் கோயில்கள்
பஞ்ச ஈஸ்வரங்கள்
இலங்கையின் தொல்லியற்களங்கள் |
2299 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D | அஜ்மான் | அஜ்மான் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் மிகச் சிறியதாகும். இதன் தலைநகரமும் அஜ்மான் ஆகும். இந்த அமீரகத்தின் பரப்பளவு 260 சதுர கிலோமீற்றர் மட்டுமே. இது பாரசீகக் குடாவையொட்டி அமைந்துள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
பாம் தீவுகள்
பூர்ஜ் அல் அராப்
துபை மெட்ரோ
புர்ஜ் கலீஃபா
கல்ப் நியூஸ்
மேற்கோள்கள்
ஐக்கிய அரபு அமீரகம் |
2301 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88 | நற்றிணை | நற்றிணை (Natrinai) என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும் ஒரு நூலாகும். இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்கள் இவையெனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். எட்டுத்தொகை நூல்களில் "நல்" என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இதுவேயாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் தூதின் வழிகாட்டி என்றும் (வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை - பாடல் எண்.54) கூறுவர். இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. அவைகளில் பெரும்பான்மையானவை 9 அடி முதல் 12 அடிகள் கொண்ட பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை என்றாலும் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். நற்றிணைப் பாடல்கள் அனைத்தும் அகப்பொருள் அமையப் பெற்ற பாடல்களாம். நற்றிணையில் 7 அடிகள் கொண்ட பாடலும் 13 அடிகள் கொண்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
7 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
8 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
9 அடிகளில் அமைந்த பாடல்கள் - 106
10 அடிகளில் அமைந்த பாடல்கள் - 96
11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110
12 அடிகளில் அமைந்த பாடல்கள் - 77
13 அடிகளில் அமைந்த பாடல்கள் - 8
234-ஆவது பாடல் கிடைக்கவில்லை.
பாடியோர்
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடலில் இடம்பெற்றுள்ள தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் -
வண்ணப்புறக் கந்தத்தனார்
மலையனார்
தனிமகனார்,
விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
தும்பிசேர்க்கீரனார்
தேய்புரிப் பழங்கயிற்றினார்
மடல் பாடிய மாதங்கீரனார்
என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இந்நூலில் உள்ள நானூறு பாடல்களில் 234 ஆம் பாடலும் 385 ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கப்பெறவில்லை. இந்நூலினைத் திணை அடிப்படையில் ஆராயும்போது,
குறிஞ்சித் திணைப் பாடல்கள்-132
பாலைத் திணைப் பாடல்கள்-104
நெய்தல் திணைப் பாடல்கள்-102
மருதத் திணைப் பாடல்கள்-32
முல்லைத் திணைப் பாடல்கள்-30 அமைந்துள்ளன.
நற்றிணை காட்டும் வாழ்க்கை
நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி, தன்தலைவனின் வரவைச் சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கமும் காதலன் வரவைப் பல்லி கத்தும் ஓசையை வைத்துச் சகுனம் பார்க்கும் வழக்கமும் அக்காலமக்களிடம் இருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
நற்றிணைக் கடவுள் வாழ்த்து
திணை
பாடாண்
துறை
கடவுள் வாழ்த்து
துறைவிளக்கம்
இந்நூல் என்றும் நின்று நிலவ வேண்டிக் கடவுளை வாழ்த்துவான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், மாயோனே வேதமுதல்வனென ஆன்றோர் கூறுவராதலின், யாமும் அவனையே வணங்குவோமென்று வாழ்த்துக் கூறாநிற்பது. (இலக்கண விளக்கம்)
“பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே” (தொல்.பாடாண். நூ.80)
எனப் பெறப்பட்ட கடவுள் வாழ்த்து வகை முதலிய எட்டு வகையினுள் இது கடவுள் வாழ்த்து என்னும் வகையினுள் அடங்கும்.
“வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே” என்னும் விதிபற்றி ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூற்கு ஆசிரியப்பாவாற் கடவுள் வாழ்த்துக் கூறுவாராயினர் என்க. இஃது உலகிற்குப் பயன்பட இறைவனைப் படர்க்கையில் வைத்து வாழ்த்தியபடியாம்.
பாடல்
மாநிலஞ் சேவடி யாக தூநீர்
வளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாக திசைகை யாக
பசுங்கதிர் மதியோடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே.
புலவர் :
பாரதம் பாடிய பெருந்தேவனார்.
எடுத்துக்காட்டுப் பாடல் 1
திணை
குறிஞ்சி
கூற்று
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது. குறை நயப்பு ஆகும்.
என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியும்
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே
நற்றிணை - பா.28 (பாலை) - முதுகூற்றனார்
பாடல் 2
திணை
நெய்தல்
கூற்று
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. குறிபெயர்த்தீடும் ஆகும்.
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த கான்முளை ஆகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம!!நாணுதும் நும்மொடு நகையே!
— நற்றிணை - பா.172.(நெய்தல்)
பதிப்பு வரலாறு
எட்டுத்தொகை நூல்களில் பழைய உரை இல்லாத ஒரே நூலான நற்றிணை என்னும் இந்நூல் முற்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் என்னும் தமிழறிஞர் இந்நூலின் பல சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து ஒப்பிட்டு ஆய்வுசெய்து முதன்முதலில் புத்துரையுடன் 1915-ம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர் வேறு பல தமிழ்ச் சான்றோரும் உரையுடன் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர்."
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
மதுரைத் திட்டம், மூலம் மட்டும்
நற்றிணை - எட்டுத்தொகை
எட்டுத்தொகை |
2302 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88 | திருமுருகாற்றுப்படை | பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. இந்நூல் மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இது கடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழிச் செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. 'ஆற்றுப்படுத்தல்' என்னும் சொல் 'வழிப்படுத்தல்' என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. தொடக்கக் காலத்தில் வெறியாட்டு அயரும் வேலன்,கட்டுவிச்சி ஆகியோர் தம் மீது முருகன் வந்து மேவுமாறு வேண்டுதலே முருகாற்றுப்படுத்துதல் என்று-"முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்" (அகம்:22) பாடல்வழி அறியமுடிகிறது.இந்நூலின் வேறுபெயர் புலவராற்றுப்படை என்பதாகும். இதன் சிறப்புக் கருதி இந்நூலினை சைவத் திருமுறைகளுள் 11-ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர்.பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது.
முருகாற்றுப்படை என்னும் மரபில் மாற்றம் செய்த நக்கீரர், ஆற்றுப்படை நூலினுக்குப் பெயரிடும் மரபிலும் புதுமையினைப் புகுத்தியுள்ளார். பொருநன், சிறுபாணான், பெரும்பாணான், கூத்தர் ஆகிய ஆற்றுப்படுத்தப்படும் இரவலர் பெயரில் ஏனைய நூல்கள் அமையப்பெற்றிருக்க, திருமுருகாற்றுப்படை நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான் பெயரில் அமைந்துள்ளது.
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.
பதிப்பு வரலாறு
இந்நூலை முதன்முதலில் 1834-இல் சரவணப்பெருமாளையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார். 1851-இல் ஆறுமுக நாவலரும் பதிப்பாகக் கொண்டு வந்தார். ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லை. உ. வே. சாமிநாதையர் அவர்களின் 1889-ஆம் ஆண்டு பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது. இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.
உரை விவரம்:
நச்சினார்க்கினியர் உரை
பரிமேலழகர் உரை
உரையாசிரியர் உரை
கவிப்பெருமாள் உரை
பரிதிக் குறிப்புரை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரை
இவற்றையும் பார்க்கவும்
ஆற்றுப்படை என்னும் பெயரில் 5 நூல்கள் உள்ளன.
திருமுருகாற்றுப்படை - நெடுநல்வாடை (ஒப்புநோக்கம்)
திருமுருகாற்றுப்படை
1. ஞாயிறு தோன்றுவதைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது.
2. அருளைப் பெற ஆற்றுப்படுத்துகிறது. பிற ஆற்றுப்படைகள் பொருளைப் பெற ஆற்றுப்படுத்துகின்றன. பொருளைப் பெற ஆற்றுப்படுத்தும் பிற ஆற்றுப்படைகள்; பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம் என்பனவாகும்.
3. தொல்காப்பிய மரபு - 1037 | பாடாண் திணையின் துறைகளில் ஒன்று ஆற்றுப்படை. "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும், ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ, சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்" திருமுருகாற்றுப்படை முதுவாய் இரவலனை ஆற்றுப்படுத்துகிறது. "அளியன் தானே முதுவாய் இரவலன்"- (முருகு. 284) இவனுக்கு அருள்புரிய வேண்டும் என்று கூளியர் முருகனுக்குப் பரிந்துரைப்பர் என்று குறிப்பிடப்படுவதால் இதனைப் 'புலவர் ஆற்றுப்படை' என்றும் கூறுவர். இது மலைபடுகடாம் நூலைக் 'கூத்தர் ஆற்றுப்படை' என்று கூறுவது போன்றது.
நெடுநல்வாடை
1. குளிர் நடுக்கத்தைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது.
2. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியதாக அதன் கொளுக்குறிப்பு கூறுகிறது. பாடலில் அவன் பெயர் இல்லை. "வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகம்" ஒன்றை வைத்துக்கொண்டு அவனது மெயக்காப்பாளன் அவனுடன் வந்தான் என்று கூறப்படுவது ஒன்றே பாண்டியன் என்று கொள்வதற்கான அடிப்படை. அரண்மனையில் அரசி பிரிவால் வாடுகிறாள். இது பாலை. பாசறையில் பாண்டியன் போரில் காயம் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு காயம் பட்ட குதிரைகளையும் யானைகளையும் தேற்றிக்கொண்டிருக்கிறான். வாடைக்காற்று இருவரையும் வருத்துகிறது.
3. தொல்காப்பிய மரபு | "வாகை தானே பாலையது புறனே" - தொல்காப்பியம் நூ.1019. "கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபு" மேல் வாகைத்திணைப் பாடல் வரும் - தொல்காப்பியம் நூ.1022. இந்த நெறியில் அமைந்துள்ளது நெடுநல் வாடை
திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும் நெடுநல்வாடை பாடிய நக்கீரரும் ஒருவரா வெவ்வேறு புலவர்களா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
சங்க இலக்கியம்
ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
மதுரைக் காஞ்சி
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப் பாலை
மலைபடுகடாம்
குறிப்புகள்
பத்துப்பாட்டு
ஆற்றுப்படைகள்
சைவ சமய நூல்கள்
வெளியிணைப்புகள்
திருமுருகாற்றுப்படை நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள் |
2303 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88 | பொருநராற்றுப்படை | பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்தஆசிரியப்பாவாலானது.இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும்.
பொருநராற்றுப்படை அமைப்பு
பொருநன் போகும் வழி (1 முதல் 13 வரை), பாடினி மகிழப் பாடும் பாணன் (16 முதல் 30 வரை), நாயின் நாக்கு போன்ற காலடி (31 முதல் 45 வரை), கல்லில் நடக்காதே கால் புண்ணாகும் (46 முதல் 59 வரை), அடியா வாயில் அடைக நீயும் (60 முதல் 75 வரை), என் வருத்தம் தீர வாரி வழங்கினான்(76 முதல் 90 வரை), இரவு பகல் தெரியாது இருந்தேன் நான் (95 முதல் 105 வரை), ஏர் உழுவது போல சோறுழுத எங்கள் பற்கள் (106 முதல் 120 வரை), பரிசு மழையில் நனைந்தோம் (121 முதல் 135 வரை), வெண்ணிப் பறந்தலை வென்றவன் (136 முதல் 150 வரை), தாயினும் மிகுந்த அன்போடு (151 முதல் 165 வரை), தேர் ஏற்றி அனுப்ப தெருவரைக்கும் வருவான் (166 முதல் 177 வரை), மயிலாடும் மருத நிலம் (178 முதல் 194 வரை), வண்டு பாட மயிலாடும் (195 முதல் 213 வரை), செங்கோல் வழுவாச் செல்வன் கரிகாலன் (214 முதல் 231 வரை), பூவிரிக்கும் காவிரி வளம் (232 முதல் 248 வரை) என்று 248 வரிகளில் இந்நூலின் கருத்து கட்டமைக்கப்படுகிறது.
பொருநராற்றுப்படை சிறப்புகள்
தமிழரின் பண்பாடான விருந்தினரை ஏழடி நடந்து சென்று வரவேற்றலும் வழியனுப்புதலும் குறித்து காலில் ஏழடிப் பின்சென்று(பொரு.166)என்னும் பாடல் வரியால் அறிய ,முடிகிறது.
காலி னேழடிப் பின்சென்று கோலின்
தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
பாடினியின் கேசாதி பாத வருணனை பொருநருடன் இருக்கும் பாடினி அழகு மிக்கோளாக இருந்தாள் என்று புகழ்ந்து அவளது தலை முதல் கால் வரை 19 உறுப்புகள் இதில் வருணிக்கப்பட்டுள்ளன.(பொருந:25-47). அவையாவன: கூந்தல், திருநுதல், புருவங்கள், கண்கள், வாய், பற்கள், காதுகள், கழுத்து, தோள்கள், முன்கைகள், மெல்விரல், நகங்கள், மார்பகங்கள், கொப்பூழ், நுண்ணிடை, அல்குல், தொடைகள், கணைக்கால், பாதங்கள் என்பன.
பொருநராற்றுப்படையில் உவமைகள்
நாயின் நாக்கு போன்ற காலடி
பொருநனுடன் செல்லும் பாடினியின் அழகை வருணிக்கிறார் நூலாசிரியர். பாடினியின் கழுத்தோ நாணத்தால் நாணிக்கோணும். மென்முடி இருக்கும் நீண்ட முன்கையோ தோளில் அசைந்தாடும். மலை உச்சியில் பூத்த காந்தள் மலர் போலிருக்கும் அவளுடைய மெல்லிய விரல்கள், கிளியின் வாயி போலும் கூர்மையானவை அவளுடைய விரல் நகங்கள். பல மணிவடங்கள் கோத்த மேகலை அணிந்த இடையும் உடையவள் அவள். பெரிய பெண் யானையின் பெருமை உடைய துதிக்கை போல நெருங்கித் திரண்ட இரு தொடைகளையும் உடையவள். தொடையோடு பொருந்திய மயிரொழுங்குடன் கூடிய அழகிய கணைக் காலுக்கு இணையான அழகுடையது, “நாய் நாவின் பெருந்தகு சீறடி” என்ற வரியின் மூலம் ஓடி இளைத்த நாயினுடைய நாக்கைப் போன்றது அவளுடைய பாதங்கள் என்று முடத்தாமக்கண்ணியார் வருணிக்கிறார்.
பொருநனின் பசித்துன்பம்
பொருநன் கடும் பசியில் உள்ளான் அதனைப் போக்குவதற்குக் கரிகார்பெருவளத்தான் உள்ளான் என்பதை அடையா வாயில் அடைக நீயும் என்கிறார்.
“ஆடுபசி உழந்த நின் இரும்பேர் ஒக்கலொடு
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று
எழுமதி வாழி ஏழின் கிழவா!” (பொருநராற்றுப்படை 61-63)
என்ற வரிகளின் மூலம் பொருநனின் பசித்துயரம் என்பது கொல்லுகின்ற பசித்துயரால் வருந்தும் பொருநன் உன் சுற்றத்தருடன் நீண்ட நாள் பசியைப் போக்க இன்றே புறப்படு ஏழிசை யாழ் நரம்புக்கும் உரிமை உடையவனே உடனே செல்க. ஏனெனில் உன் பசி போக வேண்டுமானால் கரிகால் பெருவளத்தானைப் பார். பசித்துன்பத்தைப் பற்றிக் கூறும் ஆசிரியர், பழத்த பழமரங்களை விரும்பித்தேடிச் செல்லும் பறவைப் போலக் கரிகால் பெருவளத்தானுடைய கோட்டை அடையா வாயிலாகக் காத்துத் திறந்திருக்கும். பொருநன் கூறுகிறான், அடையா நெடுங்கதவுடைய ஆசார வாசலை அடைந்தேன். வாயிற்காவலைனைக் கேட்காமாலே உள்ளே நுழைதேன். வயிற்றுப் பசிதீர என்னுடைய வறுமை நீங்க உண்டேன். இளைத்த என்னுடல் பருத்தது. இரையுண்ட பாம்பின் உடல் போலானது. களைப்பு நீங்கிய நான், என் கையில் இருந்த கண்ணகன்ற உடுக்கையத் தட்டி இரட்டை சீர் உடைய தடாரிப் பண்ணை தாளத்திற்கு ஏற்ப இசைத்தேன். வெள்ளி முளைக்கும் வைகறைப் பொழுதில் நான் பாடத் தொடங்கு முன்பே நட்பு கொண்ட உறவினரைப் போல் கரிகால் பெருவளத்தான் என்னை வரவேற்று உபசரித்தான்.
முரவை போகிய முரியா அரிசி
கரிகாற்பெருவளாத்தானைக் கண்டு பரிசில் பெற சென்ற இடத்த பொருநனுக்குக் கிடைத்த உபசரிப்பு பற்றிக் கூறும் போது எங்கள் பற்கள் ஏர் உழுவது போல் சோறு உழுதன என்று ஞா. மாணிக்கவாசகன் குறிப்பிடுகிறார். இரும்புக் கோலில் கோர்த்து வேக வைத்த சூடான இறைச்சியை வாயின் இடதுபுறமும் வலது புறமும் மாற்றி வைத்து உண்ண ஓயாது உபசரித்தான். இதை மேலும் உண்ணுவதை வெறுத்து வேண்டாம் என்ற போது, முல்லை மொக்கு போன்ற தவிடு நீங்கிய முனை முறியாத விரல் நுனி போன்ற அரிசி சோற்றைப் போட்டுப் பொறிக்கறியோடு உண்ணவைத்தான். இதைத்தான் முரவை போகிய முரியா அரிசி என்று நூலாசிரயர் குறிப்பிடுகிறார். கூர்மைப் படுத்தப்பட்ட அரிசி சோறு போட்டதைப் பெருமைப் பட பொருநன் குறிப்பிடுகிறான்.
உரை எழுதியோர்
வா.மகாதேவ முதலியார் உரை(1907)
கா.ஶ்ரீ.கோபாலாச்சாரியார் உரை
மொ.அ.துரையரங்கனார் திறனாய்வு உரை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரை(2004).
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன் (2021)
இவற்றையும் பார்க்கவும்
சங்க இலக்கியம்
ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
மதுரைக் காஞ்சி
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப் பாலை
மலைபடுகடாம்
உசாத்துணைகள்
ஞா.மாணிக்கவாசகன், பத்துபாட்டு மூலமும் விளக்கமும், மார்ச் 2016 மூன்றாம் பதிப்பு, உமா பதிப்பகம், சென்னை- 600001
https://ilakkiyam.com/iyal/52-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/pathupattu/3784-porunaraatrupadai
http://www.tamilsurangam.in/literatures/patthu_paddu/porunaratrupadai.html
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0599.html
பத்துப்பாட்டு
ஆற்றுப்படைகள்
வெளியிணைப்புகள்
பொருநராற்றுப்படை நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள் |
2304 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88 | சிறுபாணாற்றுப்படை | நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது.ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சிறுபாணாற்றுப்படை அமைப்பு
சிறுப்பாணனின் வழியழகு (1 முதல் 12 அடிகள்), விறலியர் அழகு (13 முதல் 30 அடிகள்), பசி துரத்த வந்த பாணன் (31 முதல் 50 அடிகள்), சங்கம் வளர்த்த தமிழ் மதுரை (51 முதல் 67 அடிகள்), உறையூரும் வறிதானது (65 முதல் 83 அடிகள்), வள்ளலில் பெரிய வள்ளல் (84 முதல் 99 அடிகள்), வாரி வழங்கும் மாரி (100 முதல் 115 அடிகள்), பாடும் பணியே பணியாக (116 முதல் 129 அடிகள்), மானும் பேனும் பாணனின் மனைவி (130 முதல் 145 அடிகள்), நீலமணி பூக்கும் நெய்தல் (146 முதல் 163 அடிகள்), வேலூர் விருந்து (164 முதல் 177 அடிகள்), அறிவுடையார் வாழும் ஊர் ஆமூர் (178 முதல் 195 அடிகள்), நல்லவூர் நல்லியக் கோடன் ஊர் (196 முதல் 212 அடிகள்), தகுதியறிந்து தருவான் கொடை (213 முதல் 230 அடிகள்), ஈரம் கசியும் இதயம் உடையவன் (231 முதல் 245 அடிகள்), வரையாது கொடுக்கும் வான்மழை போன்றவன் (246 முதல் 261 அடிகள்), விரும்பும் பரிசு வேண்டும் மட்டும் (262 முதல் 269 அடிகள்) ஆகிய பொருண்மைகள் உள்ளடக்கியது சிறுபாணாற்றுப்படையாகும்.
புலவர் புலமை
ஓய்மானாட்டு நல்லியக்கோடன் புகழ் பாடிப் பரிசில் பெற்ற பாணன் ஒருவன், தன் எதிர்ப்பட்ட இன்னொரு பாணனிடம் நல்லியக்கோடனின் நல் இயல்புகளையும் அவன் நாட்டின் வளத்தையும் செல்வச் செழிப்பையும் எடுத்துக் கூறுவதாக இந்நூல் அமையப் பெறுகிறது. குறிஞ்சி நாட்டுத் தலைவன் நல்லியக்கோடனைக் காண, நெய்தல் நில எயிற்பட்டினம், முல்லை நிலம், மருத நிலம் ஆகிய ஊர்களைக் கடந்து செல்லவேண்டும். இச்செய்தியைக் கூற வந்த புலவர் இந்நான்கு நிலச் சிறப்புகளை மட்டும் கூறாது மூவேந்தர்களின் தலை நகரான வஞ்சியும் உறையூரும் மதுரையும் முன்போல் செழிப்பாக இல்லை. வந்தவருக்கு வாரி வழங்கும் வன்மை அந்த அரசுக்கும் இல்லை. மேலும் கொடை கொடுப்பதில் கடையெழு வள்ளல்கள் பாரி, பேகன், காரி, ஓரி போன்றோர் கொடை வழங்குவதில் வள்ளன்மை படைத்தவர்கள் என்பதை (84-111) ஆகிய 28 வரிகளில் இலக்கியச் சிறப்பை எடுத்துக் கூறுகிறார் புலவர். இவர்களையும் விட மாஇலங்கை ஆண்ட ஓவிய மன்னர் குலத்து வந்த நல்லியக்கோடனை நாடிச் சென்றால் இவர்களைவிட அதிகமாகக் கொடை தரும் வள்ளல் குணம் உடையவன் என்று தம் இலக்கியப் புலமையைக் காணலாம்.
சிறுபாணாற்றுப்படை உவமை
சிறுபாணாற்றுப்படையில் உவமை என்பது இலக்கியச் சிறப்பை உணர்த்துவதாகும். இவ்வகையில் இந்நூல் உவமையிலே தொடங்குகிறது,
“மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல”
என அழகிய உவமையை வைத்து நத்தத்தனார் இந்நூலைத் தொடங்கியுள்ளார். நிலமடந்தையின் கொங்கை மீது அசைகின்ற முத்துமாலையைப் போல, மலையின் மீதிருந்து இழியும் காட்டாற்று வெள்ளம் காட்சியளித்தது என்பதை இந்த அடிகளின் பொருளாகும். அதனைத் தொடர்ந்து, மலையினின்றும் இறங்கிய நீர், பின்னர்க் காட்டாறாகப் பெருக்கெடுத்தது. அதன் கரையோரம் கருமணல் படிந்திருந்தது. அந்தக்காட்சி, பெண்ணின் கூந்தல் விரிந்திருப்பதைப் போலக் காட்சியளிப்பதாகவும் அந்தக் கருமணல் பரப்பின் மீது, அருகில் இருந்த சோலையில் பூத்திருந்த புதிய பூக்கள் அணில்கள் குடைந்ததால் விழுந்ததாகவும், அப்படி விழுந்த புதிய மலர் வாடல்கள் மகளிர் கூந்தலில் சூடியுள்ள பூவைப்போலக் காட்சியளிப்பதாகவும் உவமை அமைத்து நல்லாதனார் நூலை அழகு படுத்தியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட உவமைகளை இந்நூலின் ஆசிரியர் கையாண்டுள்ளதனால் இந்நூலினைச் " சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை" எனத் தக்கயாகப்பரணி உரையாசிரியர் குறிப்பிடுகிறார்
பாணன் நடந்து செல்லும் பாதை
சிறுபாணாற்றுப்படையில் 31-50 வரிகளில் பாணன் நடந்து செல்லும் பாதை குறிப்பிடப்படிகிறது.
“மடமான் நோக்கில் வாள்நுதல் விறலியர்
நடை மெலிந் தசைஇ நல் மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவர
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ”
என்ற வரிகளின் மூலம் பாணனின் கூட வரும் கற்பில் சிறந்த விறலியர் மான் போலும் மருளும் கண்களை உடையவர்கள், ஒளி பொருந்திய அழகிய நெற்றியை உடையவர்கள் இவர்கள் காட்டு வழியே நடந்து வந்ததால் வருந்தி மெலிந்த பாதங்களைப் பிடித்துவிடும் இளைஞர்கள். முறுக்கேரிய இன்னிசை எழுப்பும் சிறிய யாழை தம் இடப்பக்கம் அணைத்துக் கொண்டு நட்ட பாடை என்னும் பண் இசைத்துக் கொண்டு செல்கிறான். நிலையில்லாத இவ்வுலகத்தில் பாடிப் பரிசில் பெற வருவோர்க்கு உதவி செய்து, நிலைத்தப் புகழைப் பெற்று வாழ விரும்பும் வள்ளன்மை உடையவர்களைத் தேடி நடந்து செல்கின்றனர். வருத்தும் பசித்துன்பமாகிய பகையைப் போக்கிக் கொள்ள, வறுமைத் துயர் துரத்த, வழி நடத்தும் துன்பம் தீர வந்து இங்கு இளைப்பாறும் அறிவில் சிறந்த இரவலனே! என்று புலவர் கூறுகிறார். நடந்து வரும் பாதை இவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் தன் வாழ்வாதாரத்திற்காக ஓர் இனக்குழு வாழ்ந்துள்ளது. புலமையும் வறுமையும் பிரியாதது என்பதைப் போல் பாணர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது.
பாணனின் வறுமை
சிறுபாணன் நடந்து செல்லும் பாதை கொடியது என்றாலும் தன் பசியைப் போக்கிக்கொள்ள பரிசில் தருவோரை நோக்கி செல்வது வாழ்வியல் நிலையாக உள்ளது. இத்தகைய பாண்னின் வறுமை என்பது,
“இந்நாள்
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சேர் முதுசுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி”
என்ற பாடல் வரிகளில், பாணனின் சமையல் கூடம் எவ்வறு உள்ளது என்பதை விவரிக்கிறது. கண்விழிக்காத வளைந்த நாய்க்குட்டி தாய்மடியில் வாய் வைத்துப் பால் குடிக்கிறது. தாயிடம் பால் இல்லாததால் வலி பொறுத்துகொள்ள முடியாத அப்போதுதான் குட்டி ஈன்ற தாய் நாய். இத்தகையான ஏழ்மையான வீடு பாணன் வீடு. பாணன் வீட்டு அடுப்படியில் நாய் குட்டி ஈன்று இருக்கிறது. இதுபாணனின் வறுமை நிலை. இங்கே நீண்ட நாள் அடுப்பு பயன்படுத்தப் படாததால் நாய் குட்டி போட்டுள்ளது என்று வறுமையைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். வீட்டின் அமைப்பு மேல்கூறை இடிந்து விழுவது போல் உள்ளது. கரையான் பிடித்த சுவர். வீடெல்லாம் புழுதி. புழுதியிலே பூத்த காளான். இப்படிப்பட்ட வீட்டில் பசியில் வருந்தி ஒடுங்கிய வயிறும் வளை அணிந்த கையும் உடைய பாணனின் மனைவி. தன் கைவிரல் நகத்தால் குப்பையிலே முளைத்திருக்கிற வேளைக் கீரையை எடுத்து உப்பு கூட போட வழியில்லாமல் சமைத்த உணவு. இப்படிப்பட்ட உணவை உண்பதை மற்ற பெண்கள் பார்த்தால் நகைப்பு ஆகிவிடும் என்று கருதி வீதிக்கதவை அடைத்து வைத்துவிட்டு உப்பில்லாத குப்பைக் கீரையை சமைத்து சாப்பிட்டனர். இப்படிப்பட்ட பாணனின் வறுமை ஒரு சமூக நோயாக இருந்துள்ளது. இதைப் போக்குவதற்கு நல்லியக்கோடன் போன்ற நல்லியல்பு வள்ளல்களும் இருந்துள்ளனர்.
இவற்றையும் பார்க்கவும்
சங்க இலக்கியம்
ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
மதுரைக் காஞ்சி
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப் பாலை
மலைபடுகடாம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சிறுபாணாற்றுப்படை நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள்
பத்துப்பாட்டு
ஆற்றுப்படைகள் |
2305 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88 | பெரும்பாணாற்றுப்படை | 500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை. பேரியாழ் (21 நரம்புகள்) வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனை வெல் வேல் கிள்ளி என்ற சோழ அரசனுக்கும் நாக கன்னிகை பீலிவளை என்பவளுக்கும் பிறந்த தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர். இந்நூலினைச் சமுதாய பாட்டு எனத் தமிழண்ணல் அவர்கள் குறிப்பிடுவார்கள்.
இவற்றையும் பார்க்கவும்
சங்க இலக்கியம்
ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
மதுரைக் காஞ்சி
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப் பாலை
மலைபடுகடாம்
மேற்கோள்கள்
பத்துப்பாட்டு
ஆற்றுப்படைகள்
தொண்டையர்
வெளியிணைப்புகள்
பெரும்பாணாற்றுப்படை நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள் |
2308 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D | பரிபாடல் | பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
பரிபாடல் இலக்கணம்
தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப்பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.
நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.
வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.
வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.
கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும்.
சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு.
25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.
பரி(குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நுால் 'பாிபாட்டு' எனவும் வழங்கப்படும்.
பரிபாடல் நூல் தொகுப்பு
பரிபாடலில் அமைந்த பாடல்களின் தொகுப்பை,
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.
மேற்கண்ட வெண்பாவின் துணைகொண்டு அறியலாகும்.
வெண்பாவின் விளக்கம்:
பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்கள், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல்கள், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல்கள், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)
ஆனால் இன்று, திருமாலுக்கு 6 பாடல்கள், முருகனுக்கு 8 பாடல்கள், வையைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்களே உள்ளன.
பதிப்பு வரலாறு
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்."
வெளியிணைப்புகள்
மதுரைத் திட்டத்தில் பரிபாடல்
பரிபாடல், முனைவர் பாண்டியன் செய்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்பு
அடிக்குறிப்பு
எட்டுத்தொகை
சங்க இலக்கிய தமிழிசை ஆதாரங்கள் |
2309 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | முல்லைப்பாட்டு | சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.
பொருள்
முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாளாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.
இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு. இது நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படுகிறது. இந் நூல் குறித்து மறைமலைஅடிகள், முல்லைப்பாட்டு ஆராய்ச்சி என்ற ஓர் ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார்.
பாட்டு
மழைக்காலம் வருவதை உணர்த்தும் முல்லைப்பாட்டின் முதற்பாடல்:
நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
இவற்றையும் பார்க்கவும்
சங்க இலக்கியம்
ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
நெடுநல்வாடை
மதுரைக் காஞ்சி
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப் பாலை
மலைபடுகடாம்
வெளியிணைப்புகள்
முல்லைப்பாட்டு நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள்
முல்லைப்பாட்டு மூலம், செய்தி தமிழிலும் ஆங்கிலத்திலும்
முல்லைப்பாட்டு பாடலும் செய்தியும் இணை-கண்ணோட்டம்
பத்துப்பாட்டு |
2310 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88 | நெடுநல்வாடை | தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன 188 அடிகளைக் கொண்டது. நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற கூதிர்ப்பாசறையின்கண் இருக்கும் தலைவனுக்கு இஃது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
நூற்பொருள்
இஃது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாகத் தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன், தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவேதான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.
இவற்றையும் பார்க்கவும்
சங்க இலக்கியம்
ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்,
திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை
குறிஞ்சிப் பாட்டு
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
பட்டினப் பாலை
மலைபடுகடாம்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
நெடுநல்வாடை நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள்
பத்துப்பாட்டு |
2311 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | பண்பாட்டு மானிடவியல் | சமூக பண்பாட்டு மானிடவியல் எனவும் அழைக்கப்படும் பண்பாட்டு மானிடவியல் (Cultural anthropology), பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட நான்கு மானிடவியல் துறைகளுள் ஒன்றாகும். ஓரளவுக்கு இது, "பண்பாடு" "இயற்கை" என்னும் இரண்டுக்குமிடையிலான எதிர்த் தன்மையை அடிப்படையாகக் கொண்டு முன்னர் எழுந்த மேலை நாட்டு எழுத்தாக்கங்களுக்கு எதிரான விளைவு எனலாம். மேற்சொன்ன அடிப்படையில் சில மனிதர்கள் "இயற்கை நிலையில்" வாழ்வதாகக் கொள்ளப்பட்டது. மானிடவியலாளர்களோ பண்பாடு என்பது "மனித இயற்கை" என வாதிடுகின்றனர். அத்துடன், எல்லா மக்களும் தங்கள் அனுபவங்களை வகைப்படுத்தவும், அவ் வகைப்பாடுகளைக் குறியீட்டு அடிப்படையில் ஆக்கிக்கொள்ளவும், அத்தகைய குறியீட்டு வடிவங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் தகுதி உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்கின்றனர் அவர்கள். பண்பாடு என்பது கற்றுக்கொள்ளப்படுவதால் வெவ்வேறு இடங்களில் வாழ்பவர்கள் வெவ்வேறு பண்பாடுகளை உடையவர்களாக இருக்கிறார்கள். பண்பாட்டினூடாகப் பரம்பரையியல் முறைகளுக்குப் புறம்பாக மக்கள் தாங்கள் வாழுமிடங்களுக்கு ஏற்புடையவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள் என்றும் அதனால் வெவ்வேறு சூழல்களில் வாழுகின்ற மக்கள் மாறுபட்ட பண்பாடுகளை உடையவர்களாக உள்ளார்கள் என்றும் மனிதவியலாளர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். பெரும்பாலான மனிதவியற் கோட்பாடுகள் "இடஞ்சார்ந்த" மற்றும் "உலகம் தழுவிய" நிலைப்பாடுகளுக்கிடையேயான இழுநிலைபற்றிய மதிப்பீடு மற்றும் ஆர்வம் காரணமாகத் தூண்டப்பட்டவையே.
சுருக்க வரலாறு
நவீன சமூக-பண்பாட்டு மனிதவியல் 19 ஆம் நூற்றாண்டின் "இன ஒப்பாய்விய"லிலிருந்து தோற்றம் பெற்றதே. இன ஒப்பாய்வியல் (Ethnology) மனித சமூகங்களின் ஒழுங்கமைந்த ஒப்பீட்டில் ஈடுபாடு கொண்டுள்ளது. ஈ. பி. டெய்லர், ஜே. ஜி. பிரேசர் போன்ற அறிஞர்கள், சமயப் பரப்புக் குழுவினர், பயணிகள் அல்லது குடியேற்ற நாட்டு அலுவலர்கள் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலேயே தங்கள் ஆய்வுகளை நடத்தினர். உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழுகின்ற மக்கள் சில சமயம் ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருப்பது ஏன் என்று அறிவதில் இன ஒப்பாய்வியலாளர் விசேட ஆர்வம் காட்டினர். 19 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பாய்வியலாளர் கருத்து அடிப்படையில் இரு பிரிவினராகப் பிரிந்து இருந்தனர். கிராப்டன் எலியட் சிமித் (Grafton Elliot Smith) போன்றவர்கள், வெவ்வேறு குழுக்கள் மறைமுகமாகவேனும் ஏதோவொரு வகையில் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொண்டுள்ளனர், அதாவது பண்பாட்டுக் கூறுகள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் பரவுகின்றன என்று வாதிட்டனர். வெவ்வேறு குழுவினருக்கு ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் சுதந்திரமாக உருவாக்கிக்கொள்ளக்கூடிய தகுதி உண்டு என்று மற்றவர்கள் கூறினர். மேற்படி "சுதந்திரமான புத்தாக்கம்" என்பதற்கு ஆதரவான லூயிஸ் ஹென்றி மோர்கன் போன்ற சிலர் இன்னும் மேலே சென்று பண்பாட்டுப் படிமலர்ச்சியில் (cultural evolution) வெவ்வேறு குழுக்கள் ஒரே கட்டங்களினூடு செல்வதாலேயே இம்மாதிரியான ஒரே மாதிரித் தன்மை காணப்படுகின்றது என்றனர்.
20 ஆம் நூற்றாண்டு மனிதவியலாளர், எல்லா மனித சமூகங்களும் ஒரே கட்டங்களினூடாக அதே ஒழுங்கில் வளர்ச்சியடைகின்றன என்னும் கருத்தைப் பெரும்பாலும் நிராகரிக்கின்றனர். ஜூலியன் ஸ்டெவார்ட் (Julian Steward) போன்ற சில 20 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பாய்வியலாளர், ஒரே மாதிரியான சூழலில் ஒரேமாதிரியாகப் பழக்கப்படுவதாலேயே இவ்வாறான ஒருமைத் தன்மை உண்டாகின்றது என்கின்றனர். குளோட் லெவி-ஸ்ட்ராவுஸ் (Claude Lévi-Strauss) போன்ற வேறு சிலர், மேற்படி ஒரே மாதிரித் தன்மை மனித சிந்தனை அமைப்பின் அடிப்படை ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக வாதிட்டனர்(structuralismபார்க்கவும்).
20 ஆம் நூற்றாண்டளவில் பெரும்பாலான சமூக-பண்பாட்டு மானிடவியலாளர்கள் இனவரைவியல் (ethnography) ஆய்வில் ஈடுபடலாயினர். இதில் மானிடவியலாளர் இன்னொரு சமூகத்தவர் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவு காலம் வாழ்ந்து அக்குழுவின் சமூக பண்பாட்டு வாழ்வில் பங்குபற்றி அவதானித்தனர். இந்த முறை துரோபிரியண்ட் தீவுகளில் கள ஆய்வு நடத்தியவரும், இங்கிலாந்தில் கற்பித்தவருமான புரோனிஸ்லா மனிலோவ்ஸ்கி (Bronislaw Malinowski) என்பவரால் உருவாக்கப்பட்டு, பாபின் தீவுகளில் (Baffin Island) கள் ஆய்வுகளையும் ஐக்கிய அமெரிக்காவில் கற்பித்தல் தொழிலையும் செய்துவந்த பிரான்ஸ் போவாஸ் (Baffin Island) என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பியலாய்வாளர்கள் "பரவுகை" மற்றும் "சுதந்திரப் புத்தாக்கம்" என்பவற்றை பரஸ்பர தவிர்ப்புத் தன்மையையும், எதிர்ப்புத் தன்மையும் கொண்ட கோட்பாடுகளாகப் பார்த்த போதிலும், பெரும்பாலான இனவரைவியலாளர், இரண்டு நடைமுறைகளுமே நடைபெறுகின்றனவென்றும், இரண்டுமே பண்பாட்டிடை ஒற்றுமைத் தன்மைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்களே என்றும் ஒருமித்த கருத்தை எட்டினர். ஆனாலும், இத்தகைய ஒற்றுமைத் தன்மைகள் பெரும்பாலும் மேலோட்டமானவையே என்றும், சுவறுதல் (diffusion) மூலம் பரவும் கூறுகள் விடயத்தில் கூட, ஒரு சமூகத்திலிருந்து இன்னொரு சமூகத்துக்குச் செல்லும்போது அவற்றின் பொருளும் செயற்பாடுகளும் மாறிவிடுகின்றன என்றும் சுட்டிக் காட்டினர். இந்த அடிப்படையில் இம் மானிடவியலாளர் பண்பாடுகளை ஒப்பிடுவதிலும், மனித இயல்புகளைப் பொதுமைப் படுத்துவதிலும், பண்பாடு வளர்ச்சியின் உலகளாவிய விதிகளைக் கண்டுபிடிப்பதிலும் குறைந்த அக்கறை செலுத்தியதுடன், குறிப்பிட்ட பண்பாடுகளை விளங்கிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தினர். அவர்களும், அவர்களது மாணவர்களும் "பண்பாடுச் சார்புத்தன்மை" (cultural relativism) என்னும் கருத்தைப் பிரபலப் படுத்தினர். இக் கருத்தின்படி, ஒருவரின் நம்பிக்கைகளும், நடத்தைகளும் அவர் வாழும் பண்பாட்டுச் சூழலிலேயே விளங்கிக் கொள்ளப்பட முடியும்.
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமூக-பண்பாட்டு மானிடவியல், ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும், இரு வேறு வடிவில் வளர்ந்தன. ஐரோப்பிய "சமூக மானிடவியலாளர்" அவதானிக்கப்பட்ட சமூக நடத்தைகளிலும், சமூக அமைப்புகளிலும், அதாவது, சமூக வகிபாகங்கள் மத்தியிலான தொடர்புகள் (உ.ம்: கணவன் மனைவி அல்லது பெற்றோர் பிள்ளை) மற்றும் சமூக நிறுவனங்கள் (உ.ம்: சமயம், பொருளாதாரம் மற்றும் அரசியல்) போன்றவற்றில் கவனம் செலுத்தினர். அமெரிக்க "பண்பாட்டு மானிடவியலாளர்", மக்கள் தங்களைப் பற்றியும், தங்கள் உலகத்தைப் பற்றியுமான அவர்களுடைய பார்வையை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதுபற்றி, விசேடமாக குறியீட்டு முறையில் (உ.ம்: கலை மற்றும் பழங்கதைகள்) எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றிக் கவனம் செலுத்தினர். இவ்விரு அணுகுமுறைகளும் பல சந்தர்ப்பங்களில் ஓரிடத்தில் குவிவடைந்தன (உ.ம்: உறவுமுறை ஒரு குறியீட்டு முறைமையும், சமூக நிறுவனமும் ஆகும்.) என்பதுடன் பொதுவாக ஒன்றுக்கொன்று --- ஆக அமைந்தன. இன்று பெரும்பாலும் எல்லா சமூக-பண்பாட்டு மானிடதவியலாளரும் இருபகுதி முன்னோடிகளின் ஆய்வுகளையுமே ஏற்றுக்கொள்வதுடன், மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலும், என்ன சொல்கிறார்கள் என்பதிலும் சம அளவு ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர்.
இன்று சமூக-பண்பாட்டு மானிடவியலில் இனவரைவியலே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. இருந்தும், பல தற்கால சமுக-பண்பாட்டு மானிடவியலாளர், இடஞ்சார் பண்பாடுகளை கட்டுப்பட்டவையாகவும், தனித்தவையாகவும் கொள்ளும், இனவரைவியலின் முன்னைய மாதிரிகளை நிராகரிக்கிறார்கள். இந்த மானிடவியலாளர்கள், எவ்வாறான வழிகளில் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை உணர்கிறார்கள் அல்லது விளங்கிக் கொள்கிறார்கள் என்பதையே இன்னும் கவனத்தில் எடுத்துக்கொண்டாலும், இவ்வாறான வழிகள்பற்றி, இடஞ்சார் சூழல் அடிப்படையில் மட்டும் விளங்கிக்கொள்ள முடியாது என்றும், ஒருவர் இதுபற்றி பிரதேச சூழலில் மட்டுமல்லாமல் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழல் அடிப்படையிலும் ஆராயவேண்டுமென்றும் வாதிடுகிறார்கள். Notable proponents of this approach are அர்ஜுன் அப்பாதுரை, ஜேம்ஸ் கிளிபர்ட், ஜேன் கொமாரோப், ஜோன் கொமாரோப், ஜேம்ஸ் பர்குசன், அகில் குப்தா, ஜோர்ஜ், சிட்னி மிண்ட்ஸ், மைக்கேல் தௌசிக், ஜேன் விண்செண்ட், மற்றும் எரிக் வூல்ப்.
தொடர்புள்ள தலைப்புக்கள்
கலை மானிடவியல்
ஊடக மானிடவியல்
மத மானிடவியல்
பயன்பாட்டு மானிடவியல்
பண்பாட்டிடை ஆய்வுகள்
பொருளியல்சார் மானிடவியல்
இரட்டை மரபுரிமைக் கோட்பாடு
சூழல்சார் மானிடவியல்
இனத்தாவரவியல்
இனவரைவியல்
இனஇசையியல்
இனவிலங்கியல்
படிமலர்ச்சி மானிடவியல்
பெண்ணிய மானிடவியல்
மனித நடத்தைச் சூழலியல்
மருத்துவ மானிடவியல்
உளவியல்சார் மானிடவியல்
அரசியல்சார் மானிடவியல்
சமுதாய மானிடவியல்
குறியீட்டு மானிடவியல்
நகர்ப்புற மானிடவியல்
இவற்றையும் பார்க்கவும்
எஸ்கிமோ
அய்னு
தாயக அமெரிக்கர்
வேடுவர் - சேகரிப்போர்
நாடோடிகள்
அமெரிக்கர்
மானிடவியல் |
2312 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | முழுதளாவியம் | முழுதளாவியம் (Holism) மற்றும் முழுதளாவிய ஆகிய சொற்கள் 1920களின் ஆரம்பத்தில் ஜான் ஸ்முட்ஸ் என்பவரால் முதலில் பயன்படுத்தப்பட்டன.
ஒக்ஸ்போட் ஆங்கில அகராதியில் கண்டுள்ளபடி ஸ்முட்ஸின் முழுதளாவியத்துக்கான வரைவிலக்கணம் பின்வருமாறு உள்ளது:
"படைப்புசார் படிமலர்ச்சி (creative evolution) ஊடாக, பகுதிகளின் கூட்டுத்தொகையிலும் பெரிதான முழுமையை உருவாக்க முயலும் இயற்கையிலுள்ள போக்கு"
குறிப்பு:
ஒன்றுலும் "பெரிதான" என்னும் சொல் பொருள் கொண்டதாக அமைய வேண்டின் ஒரு அளவீடு தேவைப்படும் என்பது வெளிப்படை. எனவே மேற்கண்டது வரைவிலக்கணம் என்பதிலும் பார்க்க ஒரு கருத்து (suggestion) என்றே கொள்ளவேண்டும். இப் பொருளற்ற பகுதியை நீக்கிவிட்டால், முழுதளாவியம் என்பது, "படைப்புசார் படிமலர்ச்சியூடாக முழுமையை உருவாக்கமுயலும் இயற்கையிலுள்ள போக்கு" எனப் பெறப்படுகின்றது. முழுதளாவியம் என்பது படைப்புவாதம் (creationism), படிமலர்ச்சிவாதம் (evolutionism) என்பவற்றின் ஒருங்கிணைப்பு என்று அவதானிக்கலாம்.
தற்போது விளங்கிக் கொண்டுள்ளபடி, முழுதளாவியம் என்பது ஒரு முறைமையின் இயல்புகளை அவற்றின் கூறுகளின் இயல்புகளின் கூட்டுத்தொகை மூலம் மட்டும் தீர்மானிக்கவோ விளங்கிக் கொள்ளவோ முடியாது என்ற கருத்தாகும். அறிவியல் reductionism ஐ முன்னெடுத்துச் செல்பவர்கள் இது பேராசை reductionism கொள்கைக்கே எதிரானது என்று கூறுகின்றனர். இது பெரும்பாலும் reductionism என்பதற்கு எதிரானதாகக் கொள்ளப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
முழுமை
முழுதளாவிய நலம்
ஊட்டம்
மேற்கோள்கள்
படிவளர்ச்சி |
2313 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | இந்தியக் கட்டிடக்கலை | இந்தியக் கட்டிடக்கலையின் பற்றியான மிக முந்திய ஆதாரங்கள், சிந்துவெளிப் பண்பாட்டுக் காலத்திலேயே காணப்பட்டது. சிந்துவெளிப் பண்பாட்டுக் காலமென்பது ஏறத்தாழ கி.மு 3500-இலிருந்து கி.மு 2000 வரையிலான காலப்பகுதியாகும். இக்காலகட்டத்தில் இருந்த மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் அழிபாடுகளிலிருந்து, அக்காலத்தின் கட்டிடக்கலையில் இந்தியர்கள் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், கி.மு 1500 அளவில் சிந்துவெளிப் பண்பாடு அழிந்த பின்னர், ஏறத்தாழ கி.மு. 500 வரைக்கும் நிலைத்திருக்கும் வகையில் எவ்வித கட்டிடங்களும், கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
வேதகாலக் கட்டிடக்கலை
கி.மு 15 ஆம் நூற்றாண்டளவில் வடமேற்கு எல்லையூடாக இந்தியாவுக்குள் பெருமளவில் நுழைந்த ஆரிய இனத்தவர் நகர வாழ்வுக்குப் பழக்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. இதனால் போர் வலிமையில் உயர் நிலையில் இருந்தது போலக் கட்டிடக்கலை மற்றும் நகர அமைப்புத் துறைகளில் சிந்துவெளிப் பண்பாட்டு மக்களைப்போல் சிறப்படைந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இக்காலத்தில் மரம், மூங்கில் என்பவற்றைக் கொண்டே கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கவேண்டும். வேத காலம் என்று பொதுவாக அழைக்கப்படும் இக்காலத்தில் மரத்தினாலான பாதுகாப்பு அரண்களைக் கொண்ட ஊர்கள் அமைக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பிற்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய பொருட்களால் கட்டிடங்கள் அமைக்கப்பட்டபோதும், மரம், மூங்கில் முதலியவற்றால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் மாதிரிகளையும், அமைப்பு வேலைப்பாடுகளையும் அப்படியே படியெடுத்து அமைத்தார்கள். இதனால் இப்போது நிலைத்திருக்கும் பிற்காலக் கற்கட்டிடங்களை ஆராய்வதின் மூலம் வேத காலத்துக் கட்டிட அமைப்பு முறைகளை ஓரளவுக்கு உய்த்து அறியக்கூடியதாக உள்ளது.
பௌத்த கட்டிடக்கலை
கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் கங்கைக் கரையோரமாக மக்கள் குடியேற்றங்களும் பல சிறிய அரசுகளும் உருவாகியிருந்தன. வேதகாலப் பிராமணீயத்துக்கு மாற்றாகப் பௌத்தம், சமணம் என்னும் மதங்கள் தோன்றிச் செல்வாக்குப் பெற்றுவந்தன. அக்காலத்தில் பரந்த பலம் பொருந்திய மௌரியப் பேரரசன் அசோகச் சக்கரவர்த்தியின் ஆட்சியில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு மத்தியில் பௌத்தம் அரச சமயமாகி இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும், இந்தியாவுக்கு வெளியிலும்கூடப் பரவியபோது, அதன் வலு, செல்வாக்கு என்பன காரணமாக அச்சமயம் சார்பான பல கட்டிடங்களை நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாக அமைக்க முடிந்தது. இக்காலத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை பொதுவாகப் பௌத்தக் கட்டிடக்கலை என அழைக்கப்படுகின்றது. இக்காலம் கி.மு 250 தொடக்கம் கி.பி 600 களின் முடிவு வரையாகும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இக் காலத்தில் உருவான கட்டிடக்கலையே இந்தியப் பாரம்பரியக் கட்டிடக்கலையின் அடிப்படை எனலாம்.
இந்துக் கட்டிடக்கலை
இந்து சமயம், பௌத்தம் தோன்றுவதற்கு முன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது எனினும், கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டிருக்கக் கூடிய இந்துக் கட்டிடங்கள் எதுவும் அறியப் படவில்லை. பௌத்த சமயம் இந்தியாவில் வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னரே இந்துக் கட்டிடக்கலையின் வேகமான வளர்ச்சி ஆரம்பித்தது எனலாம். இந்துக் கட்டிடக்கலையின் கூறுகள் பலவும் பௌத்த கட்டிடக்கலையில் காணப்பட்டவையே. நிலைத்து நிற்கக்கூடியதாகக் கட்டப்பட்ட இந்துக் கட்டிடக்கலையின் ஆரம்பகாலச் சான்றாதாரங்கள் கி. பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கத் தொடங்குகின்றன. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் குப்தப் பேரரசின் கீழும், ஏறத்தாழ இதே காலத்தில் தக்காணத்தில் சாளுக்கிய அரசின் கீழும் ஏற்பட்ட இந்துமத மறுமலர்ச்சி இதற்கு வித்திட்டது எனலாம். தொடக்க கால அமைப்புக்கள் மலைப் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை கோயில்களாகவே இருந்தன. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இந்துக் கட்டிடக்கலை இரண்டு பிரிவுகளாக வளரத்தொடங்கியது. வடபகுதிப் பாணிக்கு வடஇந்தியக் கட்டிடக்கலைப் பாணி அல்லது நாகர கட்டிடக்கலைப் பாணி என்றும், தென்னிந்தியப் பகுதிகளில் வளர்ந்த பாணிக்கு திராவிடக் கட்டிடக்கலைப் பாணி என்றும் இன்றைய ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதை விடத் தக்காணத்தில் வளர்ந்த ஒரு கலப்புப் பாணி வேசர கட்டிடக்கலைப் பாணி என்று அழைக்கப்படுகின்றது. இந்துக் கட்டிடக்கலையின் முக்கியமான முதலிரு பிரிவுகளும் 13 ஆம் நூற்றாண்டு வரை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டன.
வடஇந்தியக் கட்டிடக்கலை வட்டார அடிப்படையில் வேறுபாடுகளுடன் வளர்ச்சியடைந்தது. இவை முக்கியமாக ஒரிசா, மத்திய இந்தியா, ராஜபுதனம், குஜராத், தக்காணம் முதலிய வட்டாரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில், சிறப்பாகத் தமிழ் நாட்டில் வளர்ந்த திராவிடக் கட்டிடக்கலையும் அரச குலங்களின் ஆட்சிக்கால அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இவை முத்தரையர் காலம் (கி.பி 600 - 900), சோழர் காலம் (கி.பி 900 - 1150), பாண்டியர் காலம், (கி.பி 1100 - 1350) விஜயநகரக் காலம் (கி.பி 1350 - 1565), நாயக்கர் காலம் (கி.பி 1600 - ) என அழைக்கப்படுகின்றன.
சோழர் கட்டிடக்கலை
சோழர் ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாய் ஏறத்தாழ நான்கு நூற்றாண்டு காலம் நடைபெற்றது(கி.பி 850-1250). இந்த நீண்ட காலத்தில் தமிழ்நாடு முழுவது சிறியதும் பெரியதுமாகக் கற்கோயில்கள் கட்டப்பெற்று, குமிழ்கள் போல அவை தமிழ்நாட்டின் நிலப்பரப்பை அலங்கரித்தன. அடித்தளம் முதல் உச்சியிலுள்ள கவர்ச்சியான பகுதி வரை(உபாநாதி - ஸ்தூபி பரியந்தம்) கோயில் முழுவதும் கல்லாலேயே கட்டப்படுமாயின், அதற்கு 'கற்றளி' என்பது பெயர். கற்றளிகளைக் கட்டுவதே பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. சோழர்களுடைய கட்டடக்கலைப் பாணியைப் பின்பற்றித் தமிழ்நாட்டிற்கு அப்பாலும் பல கோயில்கள் கட்டப்பட்டன. இலங்கையிலும் மைசூரிலும் ஆந்திர மாநிலத்தில் திராக்ஷாராம முதலிய இடங்களிலும் உள்ள கோயில்களைச் சான்றாகச் சொல்லலாம்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது இராஜராஜேஸ்சுவரம் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.
கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசரால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது.
இஸ்லாமியக் கட்டிடக்கலை
14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் இஸ்லாமியரின் படையெடுப்பும் அதைத் தொடர்ந்து உருவான இஸ்லாமிய அரசுகளும், வளர்ந்து வந்த அவற்றின் வலிமையும் இஸ்லாமியப் பண்பாட்டை இந்தியாவுக்குள் கொண்டுவந்தன.
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
Agarwala, Satish Chandra., Architecture and Town Planning, Dhanpat Rai & Co., Delhi.
Brown, Percy., Indian Architecture (Budhist and Hindu Period), D. B. Taraporevala Sonsa and Co., Bombay, 1971.
Fletcher, Banister., Cruikshank, Dan. (editor), A History of Architecture, CBS Publishers and Distributors, New Delhi, 1999.
இந்தியக் கட்டிடக்கலை
நாடு வாரியாகக் கட்டிடக்கலை |
2316 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | இந்தியக் குடைவரைக் கோயில்கள் | பெரிய மலை(வரை)களைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் "குடைவரைக் கோயில்கள்" என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் பொ.ஊ.மு. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல் வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. பொ.ஊ.மு. 2-3 ஆம் நூற்றாண்டு முதல் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில், நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்கு, பெரிய மலைப் பாறைகள் இருக்குமிடங்களில், அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள்.
தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில்
தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டிக் குடைவரையும் மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும் மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர். பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர்.
பல்லவர்காலம்
பாண்டியர் குடைவரைகள்
முத்தரையர் குடைவரைகள்
மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்
விஜயசோழிஸ்வரம் நார்தாமலை
கர்நாடகா
பாதாமி குடைவரைக் கோவில்கள் - இந்து
அய்கொளெ - இந்து
மகாராட்டிரம்
மத்தியப் பிரதேசம்
பாக் குகைகள்
உதயகிரி குகைகள்
தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில்
தம்நார் குகைகள்
ஒடிசா
குஜராத்
சியோத் குகைகள்
காம்பாலித குகைகள்
ஜுனாகத் குடைவரைகள்
ஆந்திரப் பிரதேசம்
அமராவதி
பெலும் குகை
போஜ்ஜன்ன கொண்டா
உண்டவல்லி
குண்டுபள்ளி
கோட்டூரு தனதிப்பலு
சந்திராவரம்
சாலிகுண்டம்
தொட்டலகொண்டா
நாகார்ஜுனகொண்டா
பவிகொண்டா
புத்தம்
பெத்தபுரம்
ராமதீர்த்தம்
கண்டசாலா
அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில்
பைரவகோனா
பிகார்
பராபர் குகைகள்
ஜம்மு காஷ்மீர்
அமர்நாத்
வைஷ்ணவ தேவி
சிவகோரி
ஆதாரம்
வெளியிணைப்புகள்
http://asi.nic.in/asi_monu_tktd_karnataka_rockbadami.asp
இந்துக் கோயில் கட்டிடக்கலை
இந்தியக் கட்டிடக்கலை
இந்தியப் பட்டியல்கள் |
2317 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF | துருக்கிய மொழி | துருக்கிய மொழி () துருக்கியர்களின் தாய்மொழியாகும். இது இச்தான்புல் துருக்கி என்றும் அழைக்கப்படுகிறது. இது தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, காகஸஸ், மத்திய ஆசியா, ஐரோப்பாவின் பிற பகுதிகள், ஐரோப்பா ஐக்கிய நாடுகள், மசிடோனா, கிரீசு, துருக்கி, வடக்கு சைப்ரஸ், பல்கேரியா, கிரீஸ் முதலிய நாடுகளிலும், துருக்கி அங்கத்தினராக இல்லாத ஈ.யூ. மொழி பேசப்படும் நாடுகளிலும், சுமார் நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழியாகும். ஒட்டோமான் பேரரசில் அடங்கியிருந்த நாடுகளிலேயே இம்மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர். துருக்கி, சைப்பிரஸ் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகும்.
வகைப்பாடு
துருக்கிய மொழிகள் அல்தாயிக் மொழித் தொகுப்பைச் சேர்ந்தவை. துருக்கிய மொழி பேசுபவர்களில் சுமார் 40% பேர்கள் உள்ளூர் துருக்கிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
துருக்கிய மொழி ஒஹுஸ் (Oghuz) மொழிக் குழுவில் ஓர் உறுப்பாகும், துருக்கிக் மொழிக் குழுவில், ஒஹுஸ் (Oghuz) மொழித் தொகுப்பாகும், துருக்கிய மற்றும் அசர்பைஜானி, டர்க்மென் (Turkmen), கஷ்காய் (Qashqai), ககாசு (Gagauz) மற்றும் பால்கன் ககாஸ் துருக்கி (Balkan Gagauz Turkish) உள்ளிட்ட பிற ஓகூஸ் துர்க்கி மொழிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒற்றுமை உள்ளது.
வரலாறு
முன் மத்திய காலங்களில் (6 முதல் 11 ஆம் நூற்றாண்டுகள் வரை), துருக்கிய மொழி விரிவாக்கம் அடைந்தது. துருக்கிய மொழிகளில் பேசும் மக்கள், சைபீரியா, ஐரோப்பா, மத்தியதரைக்கடல் நாடுகள், மத்திய ஆசியா எனப் புவியியல் பகுதி முழுவதும் பரவியிருந்தனர். துருக்கியின் செல்ஜக் (Seljuqs) இனத்தினர், தங்கள் ஒஹுஸ் மொழியைப் பரப்பினர். ஒஹுஸ் மொழி, இன்றைய துருக்கிய மொழியின் மூல மொழி ஆகும். இது 11 ஆம் நூற்றாண்டின் அனத்தோலியா மொழியின் பகுதி ஆகும்.
ஒட்டோமான் துர்கிஷ்
ஒட்டோமான் பேரரசரின் காலத்தில் (1299-1922) பயன்பாட்டிலிருந்த, கலை, இலக்கியம் ஆகியவற்றை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ மொழி ஒட்டோமான் துருக்கிஷ் எனப்படுகிறது. இது துருக்கியம், பாரசீகம், மற்றும் அரபி ஆகிய மொழிகளின் கலவை. எனினும் தினசரி பயன்பாட்டிலுள்ள துருக்கிய மொழி இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டிருந்தது. அன்றாட பயன்பாட்டிலுள்ள துருக்கிய மொழி, "சுமாரான துருக்கியம்" என்று பொருள்படும் கபா டூர்க்ஸ் (kaba Türkçe) அல்லது அழைக்கப்பட்டது. இது குறைவான கல்வி பெற்ற மற்றும் கிராமப்புற சமூகத்தினர்களால் பேசப்படுகிறது. இது நவீன துருக்கிய மொழிக்கு அடிப்படையாக விளங்கியது. நவீன துருக்கிய மொழி சொற் குவியலுக்கு இதிலிருந்து அதிக சதவீத வார்த்தைகள் பெறப்பட்டன.
மொழி சீர்திருத்தமும் நவீன துருக்கிய மொழியும்
நவீன துருக்கி நிர்மாணிக்கப்பட்ட பின்னர், 1932 ல், முஸ்தஃபா கமால் அடாடர்க் (Mustafa Kemal Atatürk) காப்புமையில், துருக்கிய மொழி சீர்திருத்தம் மேற்கொள்ள துருக்கிய மொழி சங்கம் (TDK) நிறுவப்பட்டது. துருக்கிய மொழியில் ஆராய்ச்சி நடத்துவது இதன் நோக்கம் ஆகும்.
அரபு மற்றும் பாரசீக மொழிகளை பிறப்பிடமாகக் கொண்ட வார்த்தைகளையும், பிற மொழிக் கடன் வார்த்தைகளையும், சமமான துருக்கிய மொழி வார்த்தைகளைக் கொண்டு பதிலீடு செய்வதும், மொழி சீர்திருத்தம் செய்வதும் இச்சங்கத்தின் பணிகளில் ஒன்றாகும்.
பத்திரிகைகளில் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. இதன் மூலம், துருக்கிய மொழியிலிருந்து பல நூறு வெளிநாட்டு சொற்களை நீக்கி இச்சங்கம் வெற்றி கண்டது. டி.டி.கே மூலம் மொழிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான வார்த்தைகள் புதிதாக துர்கிக் மொழி ஆதாரங்களை பெற்றிருந்தன, பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படாத பழைய துருக்கிய வார்த்தைகள் தெரிவு செய்யப்பட்டு புதுப்பிப்பட்டன.
1927 ல் அட்டாடர்க், தன் புதிய பாராளுமன்றத்திற்கான நீண்ட உரையில், ஒட்டோமான் பாணியைப் பயன்படுத்தினார். அந்த உரை கேட்பவர் அனைவருக்கும் மிகவும் அன்னியமாக இருந்தது. அவ்வுரை, 1963, 1986, 1995 ஆகிய மூன்று ஆண்டுகள் மூன்று முறை நவீன துருக்கியில் மொழிபெயர்க்கப்பட்டது.
பழைய துருக்கியிலிருந்து புதுப்பிப்பட்ட சில வார்த்தைகள் சிறப்பு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக "புத்தகம்" எனும் பொருளுடைய பெடிக் (betik) எனும் சொல் தற்பொழுது கணினி அறிவியலில் "எழுத்து" என்ற பொருளில் பயன்பட்டு வருகிறது.
நவீன துருக்கிய சொற்களும் பழைய கடன் சொற்களும்
நவீன துருக்கிய சொற்கள் மற்றும் பழைய கடன் சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை சில உதாரணங்களுடன் காட்டும் அட்டவணை:
புவியியல் அடிப்படையில் பரவல்
ஜேர்மனியில், துருக்கிய மொழி பேசும் இரண்டு மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அமெரிக்கா, பிரான்சு, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் துருக்கிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். தங்க இடம் அளிக்கும் நாடுகளில் துருக்கியைச் சேர்ந்த குடியேற்றக்காரர்களும், அனைத்து இன துருக்கிய புலம்பெயர்ந்தோர்களும், கலாச்சார ஒருங்கமைவு மற்றும் பிற மொழி தாக்கத்தின் காரணமாக, சொந்த மொழியான துருக்கிய மொழியைச் சரளமாகப் பேசுவதில்லை.
2005 ஆம் ஆண்டு, துருக்கியில் 93% மக்கள் துருக்கிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் எஞ்சியிருந்த 67 மில்லியன் மக்கள் குர்திஸ் மொழிகளைப் பயன்படுத்தினர்.
அதிகாரப்பூர்வ நிலை
துருக்கிய மொழியியல் சங்கம், மொழி புனிதத்துவத்தின் சித்தாந்தங்களால் உந்தப்பட்டது. அதன் முக்கிய பணிகளில் சில, கடன் சொற்களை நீக்குதல், அவற்றுக்குச் சமமான துருக்கிய மொழிச் சொற்களைக் கொண்டு கடன் சொற்களை மாற்றுதல், மற்றும் துருக்கிய மொழி தோற்றத்திற்கு சமமான வெளிநாட்டு இலக்கண கட்டுமானங்களை உருவாக்கல்.
1951 இல் துருக்கிய மொழியியல் சங்கம், ஒரு சுதந்திரமான அமைப்பாக மாறியது. அது கல்வி அமைச்சரால் தலைமை தாங்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலை ஆகஸ்ட் 1983 வரை தொடர்ந்தது. 1980 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக் வீழ்ந்ததைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் துருக்கிய மொழியியல் சங்கம், மீண்டும் ஒரு அரசியலமைப்பாக மாற்றப்பட்டது..
வட்டாரப் பேச்சுமொழிகள்
நவீன தரநிலை துருக்கிய மொழியானது இஸ்தான்புல்லின் வட்டாரப் பேச்சுமொழியை அடிப்படையாகக் கொண்டது. 1930 களில் இருந்து ஊடகங்கள் மற்றும் துருக்கிய கல்வி முறைகள் மூலம் மொழித் தரநிலைகளின் அளவினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்ட போதிலும், வட்டாரப் பேச்சுமொழிகளில் மாறுபாடு தொடர்கிறது.
பல்கலைக்கழகங்களாலும், துருக்கிய மொழி சங்கத்தின் அர்ப்பணிப்பு பணிக் குழுக்களாலும், துருக்கிய பேச்சுவழக்குகளை கண்டறியச் செய்யும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. துருக்கிய மொழி ஆராய்ச்சியின் ஒரு விரிவான தொகுப்பு மற்றும் வெளியீட்டிற்கான அறிக்கை தயாரிப்புப் பணி தொடர்கிறது. இதனுடன் வட்டாரப் பேச்சுமொழிகளில் உலக வரைபட நூல் தயாரிப்புப் பணியும் தற்போது நடைபெருகிறது.
மேலும் காண்க
இடாய்ச்சு
எசுபாஞம்
இடச்சு
இடானியம்
இத்தாலியம்
பஞ்சாபி
மேற்கோள்கள்
துருக்கிய மொழிகள்
துருக்கி |
2318 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் | பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்கா; Encyclopædia Britannica) உலகிலேயே மிகப் பழையதும், பெரு மதிப்புடையதுமான ஆங்கில மொழிப் பொதுக் கலைக்களஞ்சியம் ஆகும். இதனுடைய கட்டுரைகள், பொதுவாகச் சரியானவையும், நம்பிக்கைக்குரியவையும், நன்றாக எழுதப்பட்டவையுமாகும் எனக் கருதப்படுகின்றன. இது சுகாட்லாந்து அறிவொளியின் (Scottish enlightenment) விளைவாக உருவாக்கப்பட்டது.
வரலாறு
இது முதலில் எடின்பரோவில் அடம் மற்றும் சார்லசு பிளாக் என்பவர்களினால் 18ம் நூற்றாண்டு தொடக்கம் பதிப்பிக்கப்பட்டது. பிரெஞ்சு Encyclopédie போலன்றி, பிரித்தானிக்கா பழமைவாதப் பதிப்பாகும். பிந்திய பதிப்புக்கள் வழமையாக ஆட்சியிலிருந்த சக்கரவர்த்திகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டன. 1870 களில், இதன் 19ம், 20ம் பதிப்புக்களின் போது இவ் வெளியீடு சுகாட்லாந்திலிருந்து இலண்டனுக்கு மாற்றப்பட்டு த டைம்சு என்னும் செய்திப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டது. 11 ஆவது பதிப்புக்காக, இவ்வெளியீடு, இங்கிலாந்திலேயே, கேம்பிறிச்சு பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. 11ம் பதிப்புக்குப் பின்னர், இதனுடைய வியாபாரச் சின்னமும், பதிப்புரிமையும் சியர்சு உரோபக் (Sears Roebuck) நிறுவனத்திற்கு விற்கப்பட்டதுடன், சிகாகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டு அங்கேயே நிலைகொள்ளலாயிற்று. தற்போதைய பதிப்பாளர்கள் "என்சைக்கிளோபீடியா பிரித்தானிக்கா நிறுவனம்" (Encyclopædia Britannica Inc.) ஆகும். இந்நிறுவனம் தற்போது "Britannica" (பிரித்தானிக்கா) என்னும் சொல்லுக்கு வியாபாரச்சின்ன உரிமை பெற்றுள்ளது.
2004 நிலையின் படி, மிக முழுமையான நிலையிலுள்ள, "பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய" பதிப்பு, 4.4 கோடி சொற்களைக் கொண்ட 120,000 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. இது புத்தக வடிவிலும் (32 பாகங்கள், குறிக்கப்பட்டுள்ள விலை 1400 அமெரிக்க டாலர்கள், 65,000 கட்டுரைகள்), இணையத்திலும் (120,000 கட்டுரைகள், கட்டுரைகளின் சுரக்கத்தை இலவசமாகப் பார்க்க முடியும், முழுமையான கட்டுரைகளைப் பார்க்கத் தனிப்பட்டவர்களுக்கு, மாதமொன்றுக்கு 10 அமெ.டாலர்கள் அல்லது ஆண்டுக்கு 60 அமெ.டாலர்கள் செலுத்தவேண்டும்.), குறுவட்டு மற்றும் இறுவட்டிலும் (100,000க்கு மேற்பட்ட கட்டுரைகள், 50 அமெ. டாலர்கள்), பதிப்பித்து வெளியிடப்படுகின்றன.
பிரித்தானிக்காவின் தற்போதைய பதிப்பு 4000 க்கு மேற்பட்டவர்களால் எழுதப்பட்டுள்ளது. இவர்களுள் பிரபல அறிஞர்களான மில்ட்டன் ஃப்ரீட்மன், கார்ல் சேகன் மற்றும் மைக்கேல் டிபேக்கே (Michael DeBakey) என்பவர்களும் அடங்குவர். 35 வீதமான கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்கள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் திருத்தி எழுதப்பட்டுள்ளன.
பதிப்பு வரலாறு
பாக. = பாகங்கள், இணை. = இணைப்பு, பதி. = பதிப்பு
(1) 9வது பதிப்பு, அக்காலத்தில் பிரபலமான சேம்சு கிளாக் மக்சுவெல் என்பவரால் எழுதப்பட்ட மின்னியல் மற்றும் காந்தவியல் தொடர்பான கட்டுரைகளையும், வில்லியம் தொம்சன் என்பவரால் எழுதப்பட்ட வெப்பவியல் தொடர்பான கட்டுரைகளையும் கொண்டிருந்தது.
(2) 10வது பதிப்பில் ஒரு தேசப்படப் பாகமும், சொல்லகராதி (index) கொண்ட பாகமும் சேர்க்கப்பட்டிருந்தன.
(3) 11வது பதிப்பு, பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் classic பதிப்பாகக் கருதப்பட்டது. இப்பதிப்பு பொதுக்கள ஆவணமாகக் கிடைக்கும் (பார்க்கவும் 1911 Encyclopædia Britannica)
முதலாவது இறுவட்டுப் பதிப்பு 1994ல் வெளியிடப்பட்டது.
தமிழ்ப் பதிப்பு
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் என்ற பெயரில் 'பிரிட்டானிக்கா கன்சைசு என்சைக்கிளோபீடியா' வின் தமிழ் மொழிபெயர்ப்பு மூன்று தொகுதிகளாக 3120 பக்கங்களுடன் 28,000 கட்டுரைகளுடனும் 2400 புகைப்படங்கள், ஓவியங்கள், அட்டவணைகள், வரைபடங்களுடனும் விகடன் நிறுவனம் சென்னையில் வெளியிட்டுள்ளது.
குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளியிணைப்புகள்
பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் — உத்தியோகபூர்வ இணையத்தளம்.
பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் புதுப்பொலிவு (Dusting off the Britannica) — பிஸ்னஸ் வீக் (Business Week)-லிருந்து ஒரு கட்டுரை (1997).
பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் பொய்யும், புரட்டும் - எப்படி வெட்கமில்லா சக்திமிக்க ஆதிக்கவாதிகள் ஒரு புகழ்பெற்ற கலைக்களஞ்சிய நூலை அழித்தார்கள் 1947-ல் வெளியான ஜோஸ்ஃப் மெக்காபே-யின் கட்டுரை அக்காலத்திய பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் எப்படி மதச்சார்போடு விளங்கியதென்பதை எடுத்துரைக்கிறது.
விக்கிபீடியாவில் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் தவறுகளின் திருத்தம் - மீட்டாவிக்கியிலிருந்து, ''பிரித்தானிக்காவில் இருந்ததாகக் கருதப்படும் பிழைகளின் பட்டியலும் விக்கிபீடியாவில் அவை எவ்வாறு திருத்தப்பட்டன என்பதுவும்.
ஆங்கில மொழி கலைக்களஞ்சியங்கள்
பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் |
2320 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29 | ஒலியியல் (மொழியியல்) | மொழியியலில் ஒலியியல் (Phonetics) என்பது, மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஓர் அறிவியல் துறை ஆகும். இது மொழியியலின் ஒரு துணைப்பிரிவு ஆகும். இத்துறை, பேச்சு ஒலிகளின் இயற்பியல் இயல்புகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது. இத்துறையின் ஆய்வுகள், ஒலிகளின் உடலியங்கியல் சார்ந்த உற்பத்தி, அவற்றின் ஒலியியல் தன்மைகள், அவற்றைக் கேட்டுணர்தல், அவற்றின் நரம்புசார் உடலியங்கியல் சார்பான விடயங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன.
ஒலியியல் ஆய்வின் கருப்பொருட்களான ஒலிகள் (Phones), மனிதர்களினால் உச்சரிக்கப்படும் உண்மையான பேச்சொலிகளாகும். எழுத்து மொழிகளும் எழுத்துக்களும் பேச்சின் ஒலிகளோடு நெருங்கிய தொடர்புடையன எனினும், உண்மையில் ஒலியியலாளர்கள் பேச்சொலிகளையே கவனத்தில் எடுக்கிறார்களேயன்றி அவைகளைக் குறிக்கும் குறியீடுகளை அல்ல. எனினும் முன் கூறிய நெருங்கிய தொடர்பு காரணமாக பல அகராதிகள் குறியீடுகள் பற்றிய ஆய்வை (சரியானது குறியியல்) ஒலியியலாய்வின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன.
பிரிவுகள்
பேச்சொலியை ஆராயும் ஒலியியல் முறை முக்கியமான மூன்று கிளைகளைக் கொண்டது:
ஒலிப் பிறப்பியல் (articulatory phonetics), பேச்சொலியை உருவாக்குவதில் உதடுகள், நாக்கு, மற்றும் ஏனைய பேச்சு உறுப்புகளின் அசைவுகள், நிலைகள் என்பன பற்றி ஆய்வு செய்வது;
அலை ஒலியியல் (acoustic phonetics), ஒலி அலைகளின் இயல்புகள் பற்றி ஆராய்வதால் இதை பெளதிக ஒலியியல் என்றும் அழைப்பர்.இங்கு ஒலிகளை ஆராய அறிவியல் கருவிகள், கணிதம், இயற்பியல் ஆகியன பயன்படுகின்றன; மற்றும்
கேட்பொலியியல் (auditory phonetics), பேச்சைக் கேட்டுணர்தலை அடிப்படையாகக் கொண்டு மொழியை ஆய்வு செய்வது.
மொழிகளில் பேச்சொலிகள்
பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) அனைத்துலக ஒலியியல் கழகம் (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய அனைத்துலக ஒலியியல் எழுத்து (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.
மனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தும் ஒலிகளின் எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. இரண்டு உயிரொலிகளை மட்டுமே கொண்ட அப்காசு மொழி தொடக்கம் 55 உயிரொலிகளைக் கொண்ட செடாங் மொழி வரையான மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே கொண்ட ரொடோகாசு மொழி தொடக்கம் 117 மெய்யொலிகளைக் கொண்ட க்சூ மொழி வரையான மொழிகளும் உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கைகளாக பிராகா மொழியில் 10 ஒலியன்களும், பப்புவா நியூ கினியாவில் பேசப்படும் ரோடோகாசு மொழியில் 11 ஒலியன்களும், அவாயன் மொழியில் 12 ஒலியன்களும், சேர்பிய மொழியில் 30 ஒலியன்களும் காணப்படும் அதேவேளையில் தெற்கு ஆபிரிக்காவின் கலகாரி பாலைவனத்தில் பேசப்படும் !க்சூ மொழியில் 141 ஒலியன்கள் உள்ளன. இவற்றுள் பழக்கமான ஒலிகளான /t/, /s/, /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை அடங்கியுள்ளன. (பார்க்கவும்: கிளிக் ஒலி, குரல்வளைச் செயல் (phonation), காற்றோட்டப் பொறிமுறை (airstream mechanism)).
ஆங்கில மொழி 12 உயிர் ஒலியன்களையும், 8 ஈருயிர்களையும் 24 மெய் ஒலியன்களையும் கொண்டது. சில கிளை மொழிகள் பல மாற்றொலிகளைக் (allophone) கொண்டுள்ளன. இது இலத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு).
ஒலிப்பியல் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே இந்தியாவில் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.
இவற்றையும் பார்க்கவும்
ஒலியியல்
மேற்கோள்கள் |
2323 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | சொற்பொருளியல் | பொதுவாக சொற்பொருளியல் என்பது பொருள் (meaning) பற்றிய ஆய்வாகும். சொற்பொருளியல் பெரும்பாலும் சொற்றொடரியலுக்கு எதிர்மறையானது, ஏனெனில், சொற்பொருளியல் ஏதாவதொன்று என்ன பொருள் குறிக்கின்றது என்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை சொற்றொடரியல், ஏதாவதொரு கருத்தை வெளிப்படுத்துகின்றதன் (உ.ம் எழுத்து அல்லது பேச்சு) முறையான அமைப்பு / வடிவம் சம்பந்தப்பட்டது.
இச் சொல்லுக்கான மேலும் பல பொருள்கள் உண்டு:
மொழியியலில்
சொற்பொருளியல், சொற்கள் (அல்லது அதன் பகுதிகள்), சொற்றொடர்கள், வசனங்கள் மற்றும் உரைகளின் பொருள் பற்றிய ஆய்வாகும் என்று வரைவிலக்கணம் கூறப்படும் மொழியியலின் ஒரு துணைத் துறையாகும். சொற்பொருளியல், கோட்பாட்டு (theoretical) முறையிலும், செயலறிவு (empirical) முறையிலும் (உ.ம் உளவியல்சார் மொழியியல்) அணுகப்படக்கூடியது. சொற்பொருள்களைப் பிரித்து ஆராயும் முறைப்படி, சொற்பொருளின் அடிப்படைக் கூறுகளை வரையறுப்பதன் மூலம் அச் சொற்பொருள்களைப் பகுத்தாய்வு செய்யமுடியும். இதன் ஒரு ஆய்வுப் பரப்பு கூட்டுச் சொற்களின் (compound) பொருள் பற்றியது; இன்னொன்று ஒலி வேற்றுமையின்றிப் பொருள் வேறுபடுதல் (homonymy), ஒலி வேற்றுமை இருப்பினும் ஒரே பொருள் தருதல் (synonymy), எதிர்ப் பொருள் தருதல் (antonymy), ஒரு சொல் பல பொருள் தருதல் (polysemy), பொது வகைப் பொருள் தருதல் (hypernymy), துணை வகைப் பொருள் தருதல் (hyponymy), முழுமைப் பொருள் குறிக்கும் சொல்லுக்கான பகுதிப் பொருட் சொல் (meronymy), பகுதிப் பொருள் குறிக்கும் சொல்லுக்கான முழுமைப் பொருட் சொல் (holonymy), கூட்டுச் சொல் கூறுகளுக்கு இல்லாத இலக்கணப் பண்புகளை உடையதாதல் (exocentric), கூட்டுச் சொல் கூறுகளில் ஒன்றின் இலக்கணப் பண்புகளையாவது உடையதாதல் (endocentric) போன்ற வெவ்வேறு மொழியியல் வெளிப்பாடுகளுக்கிடையேயான தொடர்புகள் பற்றிய ஆய்வாகும். சூழ்பொருளியல் பெரும்பாலும் சொற்பொருளியலின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
சொற்பொருள் இயல்பு (semantic property)
சொற்பொருள் வகுப்பு (semantic class),
சொற்பொருள் அம்சம் (semantic feature)
சொற்பொருள் விருத்தி (semantic progression)
இலக்கணம்
சொற்பொருளியல்
சமூகத் தத்துவங்கள் |
2325 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D | பேர்சி பிறவுன் | பேர்சி பிறவுன் (Percy Brown, 1872-1955) என்பவர் ஒரு புகழ்பெற்ற பிரித்தானிய அறிஞரும், கலை விமர்சகரும், வரலாற்றாசிரியரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் இந்திய கட்டிடக்கலை, கிரேக்க பாக்திரிய கலை ஆகியவை பற்றி செய்த ஆய்வுகளுக்காக நன்கு அறியப்படுகிறார்.
வாழ்க்கை மற்றும் தொழில்
பிறவுன் 1872 இல் பர்மிங்காமில் பிறந்தார் இவர் உள்ளூர் கலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார், பின்பு றோயல் கலைக் கல்லூரியில் படித்து 1898 இல் பட்டம் பெற்றார். அவர் 1899 முதல் 1927 வரை அதாவது 28 ஆண்டுகள் இந்தியக் கல்விச் சேவையில் பணி செய்தார். இவர் இலாகூரில் உள்ள மேயோ கலைப் பள்ளியின் (இன்று தேசிய கலைக் கல்லூரி) முதல்வராகவும், இலாகூர் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராகவும் ஆனார். 1909 இல், பிறவுன் மேயோ கலைப் பள்ளி முதல்வர் பதவிக்காலம் முடிந்தவுடன் இலாகூரை விட்டு வெளியேறினார், இவருக்குப் பின்பு இப்பதவியை இராம் சிங் என்பவர் 1913 வரை வகித்தார். அதே ஆண்டு, கொல்கத்தாவில் உள்ள அரசு கலைப் பள்ளியின் முதல்வரானார். 1927 இல் ஓய்வு பெற்றார் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் செயலாளராகவும் பொறுப்பாளராகவும் 1947 வரை பணியாற்றினார், மீதி வாழ்க்கையை சிறீநகரில் கழித்தார்.
குறிப்பிடத்தக்க படைப்புகள்
பிரவுன் இந்திய கட்டிடக்கலை, பௌத்த கட்டிடக்கலை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்திய முதல் எழுத்தாளர்களில் ஒருவர். 1940 இல் இரண்டு தொகுதிகள் கொண்ட ஆர்கிடெக்சர் (தொகுதி 1: புத்திசுட் அண்ட் இந்து பீரியட்சு), (தொகுதி 2 இசுலாமிக் பீரியட்) என்ற கட்டிடக்கலை சம்பந்தப்பட்ட நூலை 1940 இல் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார், இது ஒரு முக்கியமான கட்டிடக்கலை நூலாகும். மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகள் ஏ டிசுக்ரிப்டிவ் கைடு டு தி டிபார்ட்மெண்ட் ஆப் ஆர்க்கியாலசி அண்ட் ஆன்டிகியூட்டிஸ் (1908), பிக்சர்சுக் நேபால் (1912), இந்தியன் பெயிண்டிங் (1918), டூர்சு இன் சீக்கிம் அண்ட் தி டார்ஜிலிங் டிசுட்ரிக்ட் (1922)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பிரித்தானிய இந்தியவியலாளர்கள்
1955 இறப்புகள்
1872 பிறப்புகள்
பிரித்தானியக் கட்டிடக் கலைஞர்கள் |
2326 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | சிந்துவெளிக் கட்டிடக்கலை | சிந்துவெளிப் பண்பாடு என்பது சுமார் கி.மு 3500 அளவில் தொடங்கி கி.மு 1500 வரை இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் சிந்து நதிப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் செழித்தோங்கியிருந்த பண்பாட்டைக் குறிக்கும். இது உலகின் பண்டைக்கால நகரப் பண்பாடுகளுள் ஒன்று. இதன் செல்வாக்குப் பிரதேசங்களில் மேற் குறிப்பிட்ட காலப்பகுதியில் வளர்ந்த கட்டிடக்கலையே சிந்துவெளிக் கட்டிடக்கலை என்று குறிப்பிடப்படுகின்றது. மொஹெஞ்சதாரோ, ஹரப்பா என்பன இப் பண்பாட்டின் முக்கிய நகரங்களாகும். இந்த அழிந்துபோன நகரப் பகுதிகளிலும், அவற்றை அண்டிய பிரதேசங்களிலும் நடைபெற்ற அகழ்வாராச்சிகள் இப் பண்பாட்டின் நகர அமைப்பு முறைகள் மற்றும் கட்டிடக்கலை சம்பந்தமான தகவல்களைத் தருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
இந்தியக் கட்டிடக்கலை
சிந்துவெளிப் பண்பாடு
வெளியிணைப்புகள்
ஹரப்பா.கொம் - சிந்துவெளி பற்றிய விரிவான தகவல்கள் (ஆங்கிலம்)
இந்தியக் கட்டிடக்கலை - சிந்துவெளிப் பண்பாடு (ஆங்கிலம்)
கட்டிடக்கலை
சிந்துவெளி நாகரிகம் |
2327 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை | எகிப்திய நாகரிகம் உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்று. இன்று காணக் கிடைக்கும் மிகப் பழைய கட்டிடங்கள் பல இப்பண்பாட்டைச் சேர்ந்தவையாகும். இக் கட்டிடங்களின் மூலம் எகிப்திய நாகரிகம் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறியக் கூடியதாக உள்ளது.
நைல் நதி பள்ளத்தாக்கு ஒரு பழமையான செல்வாக்கு பெற்ற நாகரிகத்தால் உருவாக்கப்பட்ட பண்டைய எகிப்திய கட்மைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இங்குள்ள பழமையான கீசாவின் பெரிய பிரமிடு மற்றும் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் ஆகியவை புகழ் பெற்ற கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களாகும்.
பண்டைய எகிப்து கட்டிடங்களில், மரம் பற்றாக்குறை காரணமாக, சூரிய வெப்பத்தில்-சுட்ட மண்செங்கல் மற்றும் கல் (முக்கியமாக சுண்ணாம்பு, மணற்பாறை மற்றும் கருங்கல் ஆகிய இரண்டு முக்கிய கட்டுமான பொருட்களை கணிசமான அளவு பயன்படுத்தினர்.
பழைய எகிப்து இராச்சிய மன்னர்கள் முதன்முதலாக கல்லறைகள் மற்றும் கோயில்கள் கட்டுவதற்கு கற்களைப் பயன்படுத்தினர். அரச அரண்மனைகள், கோட்டைகள், கோவில்கள், நகரங்களின் சுவர்கள் மற்றும் கோவில் வளாகங்களில் உள்ள துணை கட்டிடங்கள் கட்ட செங்கற்கற்களைப் பயன்படுத்தினர்.
கீசா பிரமிடுகளின் தொகுதி
எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எல்லைப் பகுதியில் கீசாவின் மேட்டு நிலப் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இத்தொகுதி நைல் நதிக்கரையில் அமைந்துள்ள பழைய கிசா நகரத்திலிருந்து 8 கிமீ (5 மைல்) தொலைவில் உட்புறமாகப் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. இது, கெய்ரோ நகர மத்தியில் இருந்து தென்மேற்காக சுமார் 25 கிமீ (15மைல்) தொலைவில் உள்ளது. இத்தொகுதியிலுள்ள ஒரு நினைவுச் சின்னமான கிசாவின் பெரிய பிரமிடே பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் ஒரே அதிசயமாகும்.
இதனையும் காண்க
ஜோசெர் பிரமிடு
நெபெரிர்கரே பிரமிடு
சகுரா பிரமிடு
காப்ராவின் பிரமிடு
செம்பிரமிடு
வளைந்த பிரமிடு
கருப்பு பிரமிடு
கிளியோபாட்ராவின் ஊசி
படக்காட்சிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Ancient Egyptian Architecture in a Nutshell – Video
The History of Ancient Egypt's Architecture – Video
Egyptian Civilisation- Architecture, Religion, Government and Contributions- Video
பண்டைய எகிப்து
எகிப்திய நாகரிகம்
எகிப்தியக் கட்டிடக்கலை |
2328 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | அசிரியக் கட்டிடக்கலை | அசிரியப் பண்பாடு என்பது இன்றைய ஈராக் நாட்டிலுள்ள யூபிரட்டீஸ், தைகிரிஸ் ஆகிய நதிக்கரையில் வளர்ந்து செழித்திருந்த பண்பாட்டைக் குறிக்கும். இப் பண்பாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலையே அசிரியக் கட்டிடக்கலை ஆகும்.
கட்டிடக்கலை |
2333 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | தாளங்களின் பட்டியல் | இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்குப் பயன்படுவது தாளம் ஆகும். கர்நாடக இசையில் தற்போது ஏழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். "சப்தம்" என்பது வடமொழியில் எழு என்று பொருள்படும்.
ஏழு தாளங்கள்
துருவ தாளம்
மட்டிய தாளம்
ரூபக தாளம்
ஜம்பை தாளம்
திரிபுடை தாளம்
அட தாளம்
ஏக தாளம்
தாள உறுப்புக்கள்
தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன:
1. லகு
2. அனுதிருதம்
3. திருதம்
4. குரு
5. புளுதம்
6. காகபாதம்
35 தாளங்கள்
ஏழு வகைத்தாளங்களின் மூலமாகவும், ஐந்து வகையான லகுவின் வகைகள் மூலமாகவும் மொத்தமாக 35 தாளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டிற்கு லகுவின் ஓர் ஜாதியான திஸ்ரத்தை எடுத்துக்கொண்டால்
திஸ்ர ஜாதி துருவ தாளம்
திஸ்ர ஜாதி மட்டிய தாளம்
திஸ்ர ஜாதி ரூபக தாளம்
திஸ்ர ஜாதி ஜம்பை தாளம்
திஸ்ர ஜாதி திரிபுடை தாளம்
திஸ்ர ஜாதி அட தாளம்
திஸ்ர ஜாதி ஏக தாளம்
ஆகிய ஏழு பேதங்களை ஒரு லகுவின் ஜாதி தருவதுப்பொல் ஐந்து ஜாதிகளும், ஏழு தாளவகைகளும் சேர்ந்து மொத்தமாக 35 தாளவகைகளும் உருவாகின்றன.
தாளங்கள் |
2334 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%29 | தாளம் (இசை) | தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்.
"பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவிகளினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை, அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும் போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்."
ஏழு தாளங்கள்
துருவ தாளம்
மட்டிய தாளம்
ரூபக தாளம்
ஜம்பை தாளம்
திரிபுடை தாளம்
அட தாளம்
ஏக தாளம்
நாடிகள்
தாளங்களின் அமைப்பு நாடிகள் அல்லது பிராணன் என்று சொல்லப்படும் 10 கூறுகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த பத்து நாடிகள் பின்வருமாறு:
நேரம்
வழி
செய்கை
உறுப்பு
எடுப்பு
இனம்
மாத்திரை
இடைவெளி
அமைப்பு
விரிவு
தாள உறுப்புக்கள்
தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன:
லகு (|)
அனுதிருதம் (U)
திருதம் (O)
குரு (8)
புளுதம் (1/8)
காகபாதம் (+)
தாள உறுப்புகளின் விவரங்கள்
லகு என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்து வரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும். உள்ளங்கை கீழே பார்த்திருக்க வலது கையால் தொடையில் அல்லது மற்றக் கையில் ஒரு தட்டுத் தட்டி அதே கையின் சுட்டு விரலிலிருந்து தொடங்கி எண்ணப்படும். இந்த எண்ணிக்கை மாறுபடலாம். இங்கே ஒரு தட்டும், ஒவ்வொரு விரலெண்ணிக்கையும் சம கால அளவுகளைக் கொண்டன. இக் கால அளவு ஒரு அட்சரம் எனப்படும்.
வெவ்வேறான விரலெண்ணிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வகையான "லகு"க்கள் உள்ளன.
இவை,
திச்ர லகு - ஒரு தட்டும், இரண்டு விரலெண்ணிக்கைகளும் - 3 அட்சரங்கள்
சதுச்ர லகு - ஒரு தட்டும், மூன்று விரலெண்ணிக்கைகளும் - 4 அட்சரங்கள்
கண்ட லகு - ஒரு தட்டும், நான்கு விரலெண்ணிக்கைகளும் - 5 அட்சரங்கள்
மிச்ர லகு - ஒரு தட்டும், ஆறு விரலெண்ணிக்கைகளும் - 7 அட்சரங்கள்
சங்கீர்ண லகு - ஒரு தட்டும், எட்டு விரலெண்ணிக்கைகளும் - 9 அட்சரங்கள்
அனுத்திருதம் ஒரு தட்டை மட்டும் கொண்டது. லகுவில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும்.
திருதம், இரண்டு அட்சர காலம் கொண்ட தாள உறுப்பு. ஒரு தட்டும், ஒரு வீச்சும் கொண்டது. வீச்சு என்பது தட்டிய பின் கையைத் தட்டிய இடத்திலிருந்து தூக்கி உள்ளங்கை மேல் நோக்கும் படி வீசுவதாகும். கையைத் திருப்பிப் புறங்கையால் தொடையில் அல்லது மற்றொருக் கைகையில் தட்டுவதும் உண்டு.
இவற்றையும் பார்க்கவும்
கர்நாடக சங்கீத தாளங்களின் பட்டியல்
இந்திய இசை
கர்நாடக இசை
இராகம்
மக்கள் ஆடல்கள்
ஆதாரங்கள்
தாளங்கள்
ஆய கலைகள் அறுபத்து நான்கு |
2335 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | நாகரிகம் | நாகரிகம் (civilization) என்பது, சிறிய கிராமக் குடியிருப்புகளில் வாழ்ந்துகொண்டு அல்லது நாடோடிகளாகத் திரிந்துகொண்டு உயிர் வாழ்வதற்காக வேட்டையாடலையோ அல்லது சிறிய நிலங்களில் விவசாயத்தையோ மேற்கொண்ட குலக்குழுக்கள் அல்லது பழங்குடிகள் போலன்றி, பலர் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையிலுள்ள சிக்கலான சமூகங்களைக் குறிக்கும். இதற்கீடான ஆங்கிலச் சொல்லின் மூலமான civis என்னும் லத்தீன் மொழிச் சொல் "பிரஜை" அல்லது "நகரவாசி" என்னும் பொருள்கொண்டது. நவீன தொழிற் சமூகம் ஒரு நாகரிக சமூகத்தின் ஒரு வடிவமாகும்.
நாகரிக வளர்ச்சியின் அளவை, வேளாண்மை முன்னேற்றம், தொலைதூர வணிகம், தொழிற் சிறப்பாக்கம், சிறப்பு ஆளும் வகுப்பினர், நகரியம் என்பவற்றின் வளர்ச்சியைக் கொண்டே அளவிடப்படுகின்றது. இந்த அடிப்படையான கூறுகள் தவிர, நாகரிக வளர்ச்சியைப் பல்வேறு துணைக் கூறுகளின் சேர்மானங்களும் குறிக்கின்றன. இவற்றுள் வளர்ச்சியுற்ற போக்குவரத்து முறைமை, எழுத்து, நியம்படுத்திய அளவை முறை, நாணய முறை, சட்ட முறைமை, சிறப்பியல்பான கலை, கட்டிடக்கலை, கணிதம், மேம்பட்ட அறிவியல் விளக்கம், உலோகவியல், அரசியல் கட்டமைப்பு, ஒழுங்கமைக்கப்பட சமயம் போன்றவை அடங்கும்.
நாகரிகத் தோற்றம் குறித்த கருத்துகள்
நாகரிகம் என்பது என்ன என்பதற்குத் தெளிவான அளவுகோல்கள் தேவை என்பது வரலாற்று அறிஞர்களின் வாதமாகும்.வெறும் தத்துவார்த்த விளக்கங்கள் மட்டும் போதாது என்றுகூறி அத்தகையோர் வேறு சில திட்டவட்டமான அளவுகோல்களை முன்வைக்க முனைந்தனர்.
வேட்டையாடுதல்
மனிதகுலம் வேட்டையாடத் தொடங்கியபிறகே, மனிதன் கல், வெண்கலம், இரும்பு என வகை வகையான ஆயுதங்களைக் கண்டுபிடித்தான். இவற்றின் துணையோடு விவசாய வாழ்க்கையை மேற்கொண்டான். அதன் உபரி உற்பத்தி காரணமாக, மனிதன் பிறரோடு இணைந்து வாழும் சமுதாய வாழ்க்கைக்கு முன்னேற்றம் கண்டான். இதனால், ஆட்சி முறை, சட்டத் திட்டங்கள், சமுதாய நெறிகள் ஆகியவை மனித நாகரிகத்தில் தோன்றின.
சமுதாய வாழ்க்கை
இதன் ஆதரவாளர்கள், வேட்டையாடத் தொடங்கிய காலம்வரை பின்னோக்கிப் போகும் இந்த அணுகுமுறை சரியன்று என்று நம்பினர். இது கற்காலத்துக்கே கூட்டிகொண்டு போய்விடும் என்றனர்.மனித குலம் தோற்றுவித்த கூட்டு சமுதாய வாழ்க்கையே நாகரிகத்தின் தோற்றுவாயிலாகும். அச்சமுதாய வாழ்க்கையில், மனிதர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவன் வழி நடக்க முற்பட்டனர். இதனால், தொழில் அடிப்படையிலான சமுதாயப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் தொழிலில் கவனத்தைச் செலுத்தினர். விவசாயம், வீடு கட்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், வணிகம் எனப் பல துறைகளில் மனிதகுலம் வளர்ச்சியும், முன்னேற்றமும் கண்டது.
நகர வாழ்க்கை
நகரங்கள் வந்தபிறகுதான் நாகரிகம் வந்தது என்பது இவர்கள் வாதமாகும்.லத்தீன் வார்த்தையான Civilis -ன் அடிப்படையிலானது.
எழுத்துவடிவ மொழி
சுமேரியாவில் கி.மு. 4000ல் க்யூனிபார்ம் என்னும் சித்திர எழுத்து முறை தோன்றியது. அதன்பின், கி.மு. 3500ல் எகிப்திலும், கி.மு. 1600ல் இஸ்ரேல், லெபனான் பகுதிகளிலும் அகரவரிசை எழுத்து மொழியும் நடைமுறைக்கு வந்தன. மனிதன் தன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வழி வகுத்தது எழுத்து வடிவ மொழிதான். எனவே, எழுத்துவடிவ மொழிதான் நாகரிகத் தொடக்கம் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது.
இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்த கோர்டன் சைல்ட் (Gordon Childe) என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் பத்து அளவுகோல்களை முடிவு செய்தார். இவற்றின் அடிப்படையில்தான் நாகரிகங்களை அளக்கவும், ஒப்பிடவும் வேண்டும் என்று கூறினார். அவர் குறிப்பிடும் அம்சங்கள் இவைதாம்:
1) நகரக் குடியிருப்புகள்
2) தேர்ந்தெடுத்த சில தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல்
3) தேவைக்கு அதிகமான உற்பத்தி
4) வரையறுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகள்
5) அரசாங்க அமைப்பு
6) பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பெரிய கட்டடங்கள்
7) தொலைதூர வாணிபம்
8) கலைப் பொருட்கள்
9) எழுத்துக்கள், இலக்கியம்
10) கணிதம், வடிவியல் (Geometry) வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி.
நதிக்கரை நாகரிகங்கள்
உலகில் கூடுதலான நாகரிகங்கள் நதிக்கரையிலே ஆரம்பிக்கப்பட்டன. ஏனென்றால், விவசாயத்திற்குத் தேவையான வண்டல் மண்ணும், தேவையான அளவு நீர் கிடைத்ததாலும், காலநிலை சரியாக இருந்தததாலும் மற்றும் போக்குவரத்திற்கு இலகுவாக இருந்ததாலும் அவர்கள் நதிக் கரையோரங்களில் குடியேறினர்.
சில நதிக்கரை நாகரிகங்கள்
யூப்பிரதீஸ் தைக்ரீஸ்
இது கி.மு. 3500 தொடக்கம் கி.மு. 1500 வரை இருந்த நதிக்கரை நாகரிகமாகும்.இது மொசப்பதேமிய நாகரிகம் என்றும் சுமேரிய நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாகரிகம் ஈராக் நாட்டிற்குச் சொந்தமானது.
நைல் நதி நாகரிகம்
இது கி.மு.3100 தொடக்கம் 1070 வரை இருந்த நதிக்கரை நாகரிகமாகும். இது மிஸிர் நாகரிகம் என்றும் எகிப்திய நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாகரிகம் எகிப்து நாட்டிற்குச் சொந்தமானது.
நாகரிகத்தின் பண்புகள்
பொதுவாக நாகரிகங்கள் பின்வரும் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன:
விலங்கு வலு, சுழற்சிப் பயிர்ச் செய்கை மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விவசாயத் தொழில் நுட்பங்களின் உயர்நிலைப் பயன்பாடு. இது விவசாயிகளின் உயிர்வாழ்வுத் தேவைக்கு அதிகமாக மேலதிக உற்பத்திக்கு வழிசமைத்தது.
தங்களுடைய உணவைத் தாங்களே உற்பத்தி செய்வதற்காக பெருமளவு நேரத்தைச் செலவு செய்யத் தேவையின்றியிருந்த குறிப்பிடத் தக்க அளவு மக்கட் பிரிவினர். இவர்கள் வேறு தொழில்களிலும், வணிகத்திலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது. இது "specialization of labor" எனக் குறிப்பிடப்படுகிறது.
நிலையான குடியிருப்புகளில் இவ்வாறான உணவல்லாதன உற்பத்திசெய்வோரின் சேர்க்கை நகரங்கள் எனப்பட்டன.
ஒரு சமூகப் படிநிலையமைப்பு. இது ஒரு பிரபுத்துவ குடும்பத்தின் அல்லது ஓர் இனக்குழுவின் தலைவன் (chieftain) மக்களை ஆளும் தலைமைமுறை அரசாகவோ (Chiefdom) அல்லது ஆளும் வர்க்கம் அரசாங்கத்தின் அல்லது அதிகார வர்க்க (bureaucracy) த்தின் ஆதரவுடன் நடத்தும் ஓர் அரச சமூகமாகவோ இருக்கலாம். அரச அதிகாரம் நகரங்களிலே குவிந்திருக்கும்.
சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கைக்கு நேரடியான ஆதாரமாக அமையாத பல்வேறு சிறப்புத் தொழில் துறை (specialized professions ) களின் உருவாக்கம்.
குறைந்தளவு மரபார்ந்த பாரம்பரியங்களைக் கொண்ட சமூகங்களைப் போலன்றி, ஒழுங்கமைந்த சமயம் மற்றும் கல்வி போன்ற சிக்கலான, மரபுசார் சமூக நிறுவனங்களின் உருவாக்கம்.
சிக்கலான பொருளாதாரப் பரிமாற்ற வடிவங்களின் வளர்ச்சி. இது பணம் மற்றும் சந்தைகளின் உருவாக்கத்துக்கு வழிவிடக்கூடிய வணிகத்தின் விரிவாக்கத்தை உள்ளடக்கும்.
எளிய சமூகங்களில் இருப்பதிலும் கூடிய பொருள்சார் உடைமைகளின் திரள்வு.
உயிர் வாழ்வுக்காக விவசாயம் செய்யவேண்டிய தேவையில்லாதவர்கள் உருவாக்கும் கலைகளின் உயர் வளர்ச்சி. இது எழுத்துத் துறையையும் உள்ளடக்கும்.
இந்த வரைவிலக்கணத்தின்படி, சீனா போன்ற சில சமூகங்கள் நாகரிக சமூகங்கள் என்பது தெளிவு, அதுபோல புஷ்மென் போன்ற வேறு சமுதாயங்கள் அவ்வாறில்லை என்பதும் வெளிப்படையாகும். எனினும் இந்த வித்தியாசம் எப்பொழுதும் தெளிவாக இருப்பதில்லை. எடுத்துக் காட்டாக, பசிபிக் வடமேற்கில் பெருவளவு மீன்கள் கிடைப்பது, விவசாயம் இன்றியே மேலதிக உணவு வழங்கலை உறுதிசெய்தது. இங்கு வாழும் மக்கள் நிலையான குடியிருப்புக்களையும், சமூகப் படிமுறையையும், பொருட் செல்வத்தையும், உயர் நிலையிலான கலைகளையும் (அதிக புகழுடையதாக குலக்குறிக் கம்பங்கள்) தீவிர விவசாய வளர்ச்சி இல்லாமலேயே உருவாக்கினார்கள். அதே சமயம் தென்மேற்கு வட அமெரிக்காவின் புவேப்லோ (Pueblo) பண்பாட்டினர் உயர்நிலை விவசாயம், நீப்பாசனம், மற்றும் தாவோஸ் போன்ற நிலையான சமுதாயக் குடியிருப்புகளை உருவாக்கியிருந்தும், நாகரிகத்தோடு சம்பந்தப்பட்ட சிக்கலான நிறுவனங்கள் எதையும் உருவாக்கவில்லை. இன்று பல இனக்குழுச் சமூகங்கள் அரசுகளுக்குக் கீழ் அவ்வரசுகளின் சட்டங்களின் அடிப்படையில் வாழுகிறார்கள். நாகரிகத்தின் அரசியல் அமைப்பு அவர்களுடைய வாழ்க்கை முறையின் மேல் திணிக்கப்பட்டுள்ளது, எனவே அவர்களும் நாகரிக மற்றும் இனக்குழுச் சமூக அமைப்புகளுக்கு மத்தியிலான இடைநிலையினராகத்தான் இருக்கிறார்கள்.
எனவே மேலும் அச்சொட்டான, வரையறுக்கப்பட்ட வரைவிலக்கணம் தேவையாகலாம். நாகரிகத்தின் விளைவுகளை நாகரிகம் என்ற கருத்துருவுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. நாகரிகம் என்பது, சட்டம் மற்றும் சொத்துரிமைகளின் அடிப்படையிலமைந்த மக்களிடையேயான அமைதிவழி ஊடாடல் (interaction) ஆகும்.
முதலில் உருவான நாகரிகம் சுமேரியர்களுடையதாகும். இவர்கள் கி.மு 3500 அளவில் நகரச் சமூகமாக உருவானார்கள்.
மனிதவரலாற்றின் சில நாகரீகங்கள்
ஆரம்ப கால நாகரிகங்கள்
கற்கால நாகரிகம்
தென்மேற்கு ஆசியாவின் லேவண்ட் பகுதியில் கி.மு.12000 உருவானதாக கருதப்படுகிறது.கி.மு. 8,000 முதல் 5,000 வரையிலான காலகட்டதில் நடந்த விவசாய புரட்சி காரணமாக தென்மேற்கு,தெற்கு ஆசியா, வடக்கு,மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா பகுதிகளில் நாகரிகங்கள் வளர்சியடைந்தது.
வெண்கல கால நாகரிகம்
வெண்கல காலத்தில் பின்வரும் பகுதிகளில் நாகரிகங்கள் உருவாகின.அவை
மெசொப்பொத்தேமிய நாகரிகம்
லேவண்ட்/மேற்கு செமிட்டிக் நாகரிகம்
ஹிட்டைட் நாகரிகம்
இந்திய நாகரிகம்: இரு வேறு சமூகங்களை கொண்டிருந்தது.
சிந்துவெளி நாகரீகம்
வேதகால நாகரிகம்
மினோவன்
சீன நாகரிகம்
இரும்பு கால நாகரிகம்
இக்காலத்தில் பொதுவாக இரும்பு அதிகமாக பயன்படுபட்டன இக்காலத்தில் வேறுபட்ட விவசாய நடைமுறைகள், மத நம்பிக்கைகள் மற்றும் கலை பாணிகளை உட்பட பல சமுதாய மாற்றங்கள் உருவானது.
ஜெர்மன் வரலாற்று தத்துவவாதியான கார்ல் ஜாஸ்பெர்ஸ் பண்டைய நாகரிகங்கள் கி.மு. 800 முதல் கி.மு.200 வரை சீனா, இந்தியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்த மத குருமார்கள், தீர்க்கதரிசிகள், மத சீர்திருத்தவாதிகள் மூலம் திசை மாறியது என குறிப்பிடார்.இவை பரவிய பகுதிகளாவன
மத்தியதரை கடல் நாகரிகங்கள்
கிரேக்க-உரோம நாகரிகம்
மேற்கத்திய நாகரிகம்:
பைசன்டைன் நாகரிகம்
ஹெலினிஸ்டிக் நாகரிகம்
மத்திய கிழக்கு நாகரிகங்கள்
பாரசீக நாகரிகம்
இரண்டாவது யூதம் கோயில் நாகரிகம்
பண்டைய இந்திய நாகரிகம்
பண்டைய சீனா (குயின் வம்சம், ஹான் வம்சம்)
பண்டைய நாடோடிகள் (க்சியாங்னு, ஹன் இனத்தவர், கோக் துர்க் பேரரசு
இடைக்கால நாகரிகங்கள்
கிறித்தவ மக்கள் மற்றும் கிறித்தவ நாடுகள்
மேற்கத்திய கிறித்துவம்
கிழக்கு கிறித்துவம்
இஸ்லாமிய நாகரிகம்
இஸ்லாமிய பொற்காலம்
கலிபா
சோமாலியா
அடல் சுல்தான்களின் பேரரசு
அஜுரான் பேரரசு
வாரசங்லி பேரரசு
மங்கோலிய - துருக்கிய (தைமுரிட் பேரரசு)
முகலாய இந்தியா
ஒட்டோமான் பேரரசு
ஆசியா
சோழ பேரரசு, தமிழ்நாடு , இந்தியா
பாண்டிய பேரரசு, தமிழ்நாடு , இந்தியா
சேர பேரரசு, தமிழ்நாடு , இந்தியா
பல்லவ அரசு, தமிழ்நாடு , இந்தியா
சுய்,சீனா
டாங்,சீனா
சாங்,சீனா
கொரியா
மங்கோலிய பேரரசு(யுவான்)
மிங்,சீனா
நிலப்பிரபுத்துவ ஜப்பான்
கன்ஃபூசிய வியட்நாம்
தென்கிழக்காசிய நாகரிகம்
சம்பா,அங்கூர் கம்போடியா
அயுத்தயா இராச்சியம் , இடைகால தாய்லாந்து
பேகன்,பர்மா
மெசோஅமெரிக்க நாகரிகம்:
டோல்டெக்
ஆஸ்டெக் நாகரிகம்
மாயா நாகரிகம்
அண்டியன் நாகரிகம்
சிமொர்
கஸ்கோ/இன்கா பேரரசின் இராச்சியம்
அய்மாரா
ஆப்பிரிக்க நாகரிகங்கள்
மாலி பேரரசின்
சோங்காய் பேரரசு
ஆஷாந்தி பேரரசு
அபிசினியா பேரரசு
பெனின் பேரரசு
தற்கால நாகரிகங்கள்
மேற்கத்திய உலகம்
மேற்கு ஐரோப்பா
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து
மத்திய உலகம்
கிழக்கு ஐரோப்பா
ஸ்லாவிக்
கிரீஸ்
மத்திய கிழக்கு
அரபு உலகம்
ஈரானிய உலகம்
இஸ்ரேல்
துருக்கிய உலகம்
கிழக்கத்திய உலகம்
கிழக்கு ஆசியா
ஜப்பானிய நாகரிகம்
கொரியா
தெற்கு ஆசியா
தென்கிழக்கு ஆசியா
மலாய் உலக
சகாரா துணை நாகரிகம்,ஆப்பிரிக்கா
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
நாகரிகத்துக்கு எதிரான கூட்டமைப்பு (Coalition Against Civilization)
மானிடவியல்
பண்பாடு |
2339 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81 | குலக்குழு | குலக்குழு (band society) என்பது மிகவும் எளிமையான மனித சமூக வடிவமாகும். ஒரு குலக்குழு பொதுவாக, கூட்டுக் குடும்பம் அல்லது குலம் என்பதிலும் பெரிதாயிராத ஒரு சிறிய உறவுமுறைக் குழுவை உள்ளடக்கியிருக்கும். குலக் குழுக்கள் ஒழுங்குமுறை சாராத தலைமைத்துவம் கொண்டவை. குலக்குழுவின் முதிர்ந்த உறுப்பினர்களின் வழிகாட்டல்களும், ஆலோசனைகளும் எதிபாக்கப்படுகின்றன ஆனால் சிக்கலான சமூகங்களில் காணப்படும் சட்டங்களோ பணியாதவர்களைப் பணியவைப்பதற்கான முறைகளோ கிடையாது. குலக்குழுக்களின் வழமைகள் எப்பொழுதும் வாய்வழியாகவே கையளிக்கப்படுகின்றன. ஒழுங்கமைவான நிறுவனங்கள் எதுவும் எரா அல்லது மிகக் குறைவாக இருக்கக்கூடும். சமயம் பொதுவாகக் குடும்ப மரபு, தனிப்பட்ட அனுபவம், அல்லது shaman இடமிருந்தான ஆலோசனையை அடியொற்றி இருக்கும். குலக்குழுச் சமூகங்கள் வழக்கமாக உணவுக்காக வேட்டை மற்றும் சேகரித்தலை மேற்கொள்வர்.
குலக்குழுக்கள் அளவின் அடிப்படையில் பழங்குடிகளிலிருந்து வேறுபடுகிறார்கள். பழங்குடிகள் பொதுவாகப் பல குடும்பங்களைக் கொண்ட பெரிய கூட்டத்தினராவர். பழங்குடிகள் குடித்தலைவன் (chieftain) அல்லது முதியோர்கள் போன்ற கூடுதலான சமூக நிறுவனங்களைக் கொண்டவர்கள். பழங்குடிகள் குலக் குழுக்களிலும் நிலையானவை; ஒரு சிறிய குழுவினர் விலகிவிடுவதன் மூலம் ஒரு குலக்குழு இல்லாது போய்விடலாம். உண்மையில் பல பழங்குடிகள், குலக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள்.
நவீன தேசிய அரசுகள் உலகின் எல்லா மூலைகளுக்கும் பரவுவதன் காரணமாக இன்று உண்மையான குலக்குழுக்கள் மிகக் குறைவாகவே எஞ்சியுள்ளன. வட அமெரிக்காவின் வடபகுதியில் வாழும் இனுயிட்கள், Great Basinஇன் சோஷோன்கள், தெற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த புஷ்மென்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் என்பவர்கள் முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும்.
சமூகவியல் |
2340 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29 | குலம் (மக்கள்) | குலம் (clan) என்பது, உறவு முறைகளால்வம்சாவளி இணைக்கப்பட்டுள்ள ஒரு வம்சாவளி பாரம்பரியக் குழு "குலம்' ஆகும். பொதுவாகக் குலம் ஓரளவு பெரியது. குல வம்சாவளிகள் , பல தலைமுறைகளுக்கு முற்பட்ட ஒரு முன்னோனைக் கொண்டிருப்பார்கள் (உ.ம்: ஒரு பூட்டனையோ, கொள்ளுப் பாட்டனையோ அல்லது இன்னும் முற்பட்ட ஒரு முன்னோனையோ பொதுவாகக் கொண்டிருக்கலாம்). பாட்டன் பாட்டியை மட்டும் பொதுவாகக் கொண்ட உறவுமுறைக் குழுக்கள் கூட்டுக் குடும்பம் என்று அழைக்கப்படுமேயன்றி குலம் என்று அழைக்கப்படுவதில்லை. சில குலங்கள் மிகவும் பெரிதாகவும், பழமையானவையாகவும் இருப்பதால் அவைகள் "விதிக்கப்பட்ட" பொது முன்னோரைக் கொண்டிருப்பர்; அதாவது பொது முன்னோர் பற்றிய சான்றுகள் எதையும் கொண்டிராமல், கற்பனையான, குலத்தின் ஒருமைப்பாட்டுக்கான ஒரு குறியீடாகவே இருக்கும். சில சமூகங்களில் இந்த முன்னோர் மனிதராகக் கூட இருப்பதில்லை; ஒரு குலக்குறியாக மட்டும் இருக்கும்.
சில குலங்கள் தந்தைக்கால்வழிப்பட்டவை, அதாவது இதன் உறுப்பினர் ஆண் வழியால் உறவு கொண்டவர்கள். வேறு சில தாய்க்கால்வழிப்பட்டவை; இதன் உறுப்பினர் பெண் வழி உறவுமுறை உள்ளவர்கள். இன்னும் சில ஒரு பொது முன்னோரின், ஆண், பெண் இருவழியையும் சேர்ந்த சகலரையும் கொண்ட "இருவழி"யானவை. ஸ்கொட்லாந்திலுள்ள குலங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். ஒரு குலம், தந்தைக்கால்வழியோ, தாய்க்கால்வழியோ அல்லது இருவழிப்பட்டதோ என்பது குறிப்பிட்ட குலம் வாழும் பண்பாட்டின் உறவுமுறை விதிகளில் தங்கியுள்ளது.
வெவ்வேறு பண்பாடுகளிலும், சந்தர்ப்பங்களிலும், ஒரு குலம் என்பது உறவுமுறையை அடிப்படையாகக் கொண்ட குழுக்களான குலக்குழுக்கள், பழங்குடிகள் தரும் அதே பொருளையே தரக்கூடும். எனினும் வழக்கமாக, குலம் என்பதை வேறுபடுத்தும் காரணி, அது பழங்குடி, குறுநிலம், அல்லது அரசு போன்ற பெரிய குழுக்களின் ஒரு பகுதியாகச் சிறிதாக இருப்பதேயாகும். இசுக்கொட்டிய, சீன, சப்பானியக் குலங்கள், முறையே அவ்வவற்றின் சமூகங்களில் உறவுமுறைக் குழுக்களாக இருப்பது இதற்கு எடுத்துக்காட்டாகும். பழங்குடிகள் குலக்குழுக்கள் என்பனகூட பெரிய சமூகங்களின் பகுதிகளாக இருக்கக்கூடும்; அராபியப் பழங்குடிகள் அராபிய சமூகத்தினுள் ஒரு பகுதியாகவும், ஒஜிப்வா குலக்குழுக்கள் ஒஜிப்வா பழங்குடியின் ஒரு பகுதியாகவும் உள்ளன.
பெரும்பாலான குலங்கள் புறமண முறைமையைக் கொண்டவை, அதாவது, இக் குலங்களின் உறுப்பினர் தங்களுக்குள் மணம் செய்ய முடியாது. சில குலங்கள் தலைவன், தாய்த் தலைமை அல்லது தந்தைத் தலைமை போன்ற ஒரு தலைமைத்துவத்தையும் கொண்டிருக்கக்கூடும்.
தெற்காசியக் குலங்கள் சில
அகிர்
பணியா
பந்த்
கோத்திரம்
சாட்
கத்ரி
சத்திரியர்
ரெட்டி
மீனா மக்கள்
முக்குலத்தோர்
நாயர்
பட்டிதர்
பறையர்
இராசபுத்திரர்
செங்குந்தர்
வேளாளர்
யாதவர்
மேற்கோள்கள்
குடும்பம்
மானிடவியல்
சமூகவியல் |
2343 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D | குலக்குறிக் கம்பம் | குலக்குறிக் கம்பங்கள் (Totem poles), வட அமெரிக்க பசிபிக் கரையை அண்டி, பெரும்பாலும் மேற்கத்திய செஞ்செடார் (Western Redcedar) போன்ற, பெரிய மரங்களிலிருந்து செதுக்கப்படுபவையாகும்.
இதனையும் காண்க
குலக்குறிச் சின்னம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Native online.com
Royal BC Museum, Thunderbird Park–A Place of Cultural Sharing, online interpretive tour
Totem: The Return of the Gpsgolox Pole, a feature-length film by Gil Cardinal, National Film Board of Canada
Article related to conservation of Pacific Northwest totem poles
Totem Poles: Heraldic Columns of the Northwest Coast Essay by Robin K. Wright - University of Washington Digital Collection
கலைகள்
வழிபாடு
பண்பாட்டு மானிடவியல் |
2356 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 | கொழும்பு | கொழும்பு (Colombo, ) என்பது இலங்கையின் நிருவாக, நீதித்துறைத் தலைநகரமும், மக்கள்தொகை அடிப்படையில் இலங்கையின் மிகப் பெரிய நகரமும் ஆகும். கொழும்பு மாநகரத்தின் மக்கள்தொகை 5.6 மில்லியன். நகராட்சியில் மக்கள்தொகை 752,993 ஆகும். கொழும்பு இலங்கைத் தீவின் நிதி மையமும், சுற்றுலா மையமும் ஆகும். கொழும்பு நகரம் தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது, அத்துடன் இலங்கையின் அரசமைப்புத் தலைநகரான சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, தெகிவளை-கல்கிசை ஆகியவற்றை உள்ளடக்கிய பாரிய கொழும்புப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிறீ ஜெயவர்தனபுர கோட்டை கொழும்பின் புறநகராதலால், கொழும்பு பொதுவாக இலங்கையின் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. இது மேல் மாகாணத்தின் நிருவாகத் தலைநகரமும், கொழும்பு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.
1815 இல் இலங்கை பிரித்தானியப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, கொழும்பு தீவின் தலைநகராக மாற்றப்பட்டது, 1948 இல் நாடு விடுதலை பெற்றபோது கொழும்பு இதன் தலைநகரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1978-இல், அன்றைய அரசுத்தலைவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் நிர்வாகப் பணிகள் சிறீ ஜெயவர்தனபுர கோட்டைக்கு மாற்றப்பட்டபோது, கொழும்பு இலங்கையின் வணிகத் தலைநகராக நியமிக்கப்பட்டது.
சொற்பிறப்பு
கொழும்பு என்ற பெயர் 1505ல் போர்த்துகீசியர்களால் முதலில் இந்நகரத்துக்கு வைக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது. இது பழைய சிங்களமான கொலன் தொட என்பதில் இருத்து எடுக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. கொலன் தொட என்றால் கெலனி(களனி) ஆற்றின் துறைமுகம் என்று பொருள். கொழும்பு என்ற பெயர் சிங்கள பெயரான கொள-அம்ப-தொட்ட என்பதிலிலுருந்தும் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் பொருள் மாந்தோப்புள்ள துறைமுகம் என்பதாகும் கிறித்தோபர் கொலம்பசு நினைவாகக் கொழும்பு என்று பெயரிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது . இத்தாலிய கடலோடியான கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானிய மன்னனின் சார்பாக அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் பல ஆண்டுகள் போர்ச்சுகலில் தங்கியிருந்தார். அவரின் போர்த்துகீசிய பெயர் கிறிஸ்டாவோ கொழும்பு. இவர் மேற்கு நோக்கிப் பயணித்து இந்தியாவை அடைய திட்டமிட்டார். அச்சமயத்தில் கிழக்கு நோக்கிப் பயணித்த போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோ ட காமா இந்தியாவின் கிழக்குகரையில் உள்ள கோழிக்கோடு நகரை 1498 மே 20ல் அடைந்தார். அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே கொலம்பசு 1492 அக்டோபர் 12ல் அமெரிக்காவை கண்டுபிடித்தார். அச்சமயத்தில் போர்த்துகிசீயரான லொரன்சோ டி அல்மெய்டா காலி துறைமுகத்தை 1505ல் அடைந்தார். 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய சிங்கள இலக்கண நூலான சிடசங்கரவ கொழம்ப என்பதற்கு துறைமுகம் அல்லது கோட்டை என்று பொருள் கூறுகிறது. அதனால் கொழம்ப என்பதே கொழும்புவுக்கான மூலமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
வரலாறு
கொழும்பு இயற்கையான ஓர் துறைமுகத்தைப் பெற்றிருப்பதால், 2000 வருடங்களுக்கு மேலாக இது கிரேக்கர், பாரசீகர், அராபியர் மற்றும் சீன வணிகர்களால் அறியப்பட்டிருந்தது. 14ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு பணயம் செய்த இப்னு பதூதா இதனை "கலன்பு" எனக்குறிப்பிட்டார். வர்த்தகத்தை முதன்மை ஆதாரமாகக் கொண்ட பல்லின இசுலாமியர்கள், 8ம் நூற்றாண்டுகளில் கொழும்பில் தங்கி வாழத் தொடங்கினர். அவர்களின் வியாபாரத்திற்கும், சிங்கள இராசதானிகளுக்கும் வெளியுலகுக்கும் இடையிலான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும் துறைமுகம் உதவியது. அவர்களின் சந்ததியர் தற்போது உள்ளூர் இலங்கைச் சோனகருடன் ஒன்றாகிவிட்டனர்.
போத்துக்கேயர் காலம்
லொரன்சோ டி அல்மெய்டா தலைமையிலான போத்துக்கேய நாடுகாண் பயணிகள் 1505இல் முதலாவதாக இலங்கையை வந்தடைந்தனர். அவர்கள் கோட்டை அரசன் எட்டாம் பராக்கிரமபாகுவுடன் (1484–1508) கறுவாய் வர்த்தகத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டமையால், கொழும்பு உட்பட்ட தீவின் கரையோரப் பகுதியில் வர்த்தகம் செய்ய அவர்களுக்கு வழியேற்பட்டது.
ஒல்லாந்தர் காலம்
1638இல் ஒல்லாந்து கண்டியில் அரசாண்ட இரண்டாம் இராசசிங்க மன்னனுடன் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி, போர்த்துக்கேயருக்கு எதிரான போரில் அரசனுக்கு உதவியும், இலங்கைத் தீவில் பாரிய வர்த்தக பொருட்களின் ஏகபோக உரிமையும் பரிமாறப்பட்டன. போர்த்துக்கேயர் ஒல்லாந்தரையும், கண்டியினரையும் எதிர்த்தபோதும், அவர்களின் பலமிக்க இடங்கள் மெதுவாக 1639 ஆரம்பத்தில் தேற்கடிக்கப்பட்டன.
ஆங்கிலேயர் காலம்
1796இல் பிரித்தானியர் கொழும்பைக் கைப்பற்றினர். இது பிரித்தானிய படைகளின் புறக்காவலாகக் கண்டி இராட்சியம் கைப்பற்றும் 1815 இல் வரை காணப்பட்டது. ஆங்கிலேயர் கொழும்பை தங்கள் புதிதாக உருவாக்கிய பிரித்தானிய இலங்கையின் முடிக்குரிய மண்டல தலைநகராக்கினர். போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் கொழும்பை முக்கிய படை அரணாகப் பாவித்ததுபோல் அல்லாமல், ஆங்கிலேயர் வீடுகளையும் மக்கள் கட்டுமானங்களையும் கோட்டையினைச் சுற்றிக் கட்டி, தற்போதைய கொழும்பு நகரை உருவாக்கினர்.
புவியியல் மற்றும் காலநிலை
கொழும்பின் புவியியல் நிலமும் நீரும் கலந்த ஒன்றாகும். நகரத்தில் பல கால்வாய்கள் காணப்படுகின்றன. நகரத்தின் இதயப்பகுதியில் 160 ஏக்கர் பரப்பில் உள்ள பெய்ரா ஏரி காணப்படுகின்றது. இவ்வேரி கொழும்பு நகரை பாதுகாக்க குடியேற்றவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. நகரின் வடக்கு வடகிழக்கு எல்லையானது களனி ஆற்றினால் வரையறுக்கபடுகிnறது. கொழும்பு கோப்பென் வகைப்பாட்டு முறையில் வெப்பமண்டலத்துக்குரிய காலநிலையை பெற்றுள்ளது. ஆண்டு முழுதும் அதிக வெப்பமில்லா சீரான காலநிலையை பெற்றுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகமாக இதன் வெப்பநிலை 31 டிகிரி செல்சியசு அளவுக்கு இருக்கும் . பருவக்காலமான மே-ஆகத்து வரையும் அக்டோபர்-சனவரி வரையும் அதிக மழைப்பொழிவை பெறும். ஆண்டு சராசரி மழையளவு 2,400 மிமீ ஆகும் .
மக்கள் தொகையியல்
கொழும்பு பல்லின, பல கலாசார நகரம். கொழும்பின் சனத்தொகை சிங்களவர், தமிழர், இலங்கைச் சோனகர் போன்றோரைக் கொண்டு காணப்படுகின்றது. அத்துடன் சீனர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்துக்காரர், மலாயர், இந்திய வம்சாவழியினர் மற்றும் குறிப்பிட்டளவு வெளிநாட்டவர்களான ஐரோப்பியர்களும் எனப் பல்வேறுபட்ட இனக் குழுக்களையும் கொண்டு காணப்படுகின்றது. இது ஒரு சனத்தொகை கூடிய 642,163 மக்கள் வாழும் நகரமாகும். 1866 இல் கிட்டத்தட்ட 80,000 பேர் காணப்பட்டனர். 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது.
அரசு
மாநகராட்சி
கொழும்பு தனக்கெனத் தனி அரசியலமைப்புக் கொண்ட மாநகராட்சியாகும். மேயரும் மாநகர மன்ற உறுப்பினர்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநகராட்சித் தேர்தல்கள்மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக வலது சாரி ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஆட்சியிலிருந்து வருகிறது. 2006ஆம் ஆண்டில் இக்கட்சியின் வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு இக்கட்சியின் சார்பு பெற்ற சுயேட்சைக் குழுவினர் தேர்தல்களில் வென்றனர். உவைசு மொகமது இமிதியசு கொழும்பின் மேயராக நியமிக்கப்பட்டார்.
மாநகராட்சி கழிவுநீரகற்றல், சாலை பராமரிப்பு, கழிவு மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. குடிநீர், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகளுக்குத் தொடர்புடைய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் பல்வேறு தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
தேசியத் தலைநகரம்
போர்த்துக்கேய, டச்சு, பிரித்தானியக் குடியேற்றப்பகுதிகளாக இருந்த கடலோரப் பகுதிகளின் தலைநகரமாக 1700 களிலிருந்து இருந்து வந்துள்ளது. 1815இல் பிரித்தானியர்கள் கண்டி உடன்பாட்டின்படி முழுமையானத் தீவிற்கும் தலைநகரமாக விளங்கியது. 1980 களில் நிருவாகத் தலைநகரை ஸ்ரீ ஜெயவர்தனபுரம் கோட்டைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டது. இதன்படி இலங்கைப் பாராளுமன்றமும் பல அமைச்சகங்களும் துறை அலுவலகங்களும் இப்பகுதியில் கட்டப்பட்ட புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டன. இருப்பினும் இன்றளவிலும் பல அரசு அலுவலகங்கள் கொழும்பிலேயே உள்ளன.
வலயங்கள்
கொழும்பு 15 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
பொருளாதாரம்
பெரிய கூட்டுத்தாபனங்களின் தலைமையகங்கள் கொழும்பில் காணப்படுகின்றன. சில வேதியியல், ஆடைகள், கண்ணாடி, சீமெந்து, தோல் பொருட்கள், தளபாடம் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றின் தொழிற்கூடங்கள் இங்கு காணப்படுகின்றன. தெற்காசியாவின் இரண்டாவது உயரமான கட்டடமான உலக வர்த்தக மையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 40 மாடி இரட்டைக் கோபுரக் கட்டடம் நகரத்தின் நரம்பு போன்ற கோட்டை பகுதியில் அமைந்துள்ளது.
உட்கட்டமைப்பு
கொழும்பு ஒரு நவீன நகரத்தின் பெரும்பாலான வசதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, கொழும்பின் உட்கட்டமைப்பு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. மின்சாரம், தண்ணீர் மற்றும் போக்குவரத்து என்பன ஓரளவு நல்ல தரத்தில் உள்ளது. இலங்கையின் முக்கிய வணிக வளாகங்களில் பெரும்பாலானவை இங்கு உள்ளன. பல ஆடம்பரமான விடுதிகள், கூடலகங்கள் மற்றும் உணவகங்களும் இங்கு அமைந்துள்ளன. சமீப காலங்களில் நிலத்தின் விலை அதிகளவில் உயர்ந்ததன் காரணமாக அடுக்குமாடி வீடுகள் பல்கிப் பெருகி விட்டது.
கொழும்பு துறைமுகம்
இலங்கையின் பெரிய துறைமுகம் இந்நகரிலேயே அமைந்துள்ளது. குடியேற்ற காலத்தில் கொழும்பு துறைமுக நகரமாகவே அமைக்கப்பட்டது. இலங்கை கடற்படையின் கடற்படைத்தளம் இத்துறைமுகத்தில் உள்ளது. 2008ல் இத்துறைமுகம் 3.75 மில்லியன் எண்ணிக்கையுள்ள 20 அடி நீளமுள்ள கொள்கலன்களை கையாண்டது. இது 2007ல் கையாண்ட அளவை விட 10.6% அதிகமாகும். 3.75 மில்லியன் கொள்கலன்களில் 817,000 இலங்கையுடையதாகும், மற்றவை இங்கு வைத்துக் கப்பல்களுக்கு இடையே மாற்றப்பட்டதாகும். கொள்கலன்களை கையாளும் திறனைத் துறைமுகம் முழுஅளவில் நெருங்கிவிட்டாதல் இடப்பற்றாக்குறையை சமாளிக்க துறைமுகத்தின் தெற்குப்பகுதியில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது.
போக்குவரத்து
கொழும்பில் பொது போக்குவரத்து நல்ல முறையில் உள்ளது. பேருந்துகளை அரசும் தனியாரும் நடத்துகின்றனர். மூன்று முதன்மையான பேருந்து முனையங்கள் பேட்டை பகுதியில் உள்ளன. பாசுடின் மாவத்த தொலைதூர பேருந்துகளுக்கானது. மத்திய, குணசிங்கபுரா முனையங்கள் உள்ளூர் பேருந்துக்களுக்கானது. மத்திய பேருந்து நிறுத்தம் பேருந்துகளுக்கான மையமாகத் திகழ்கிறது.
கொழும்பு தொடருந்து மூலம் நாட்டின் பல இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கோட்டை தொடருந்து நிலையம் தொடருந்துகளுக்கான மையமாகத் திகழ்கிறது. 1970 வரை நகரில் டிராம் போக்குவரத்து இருந்தது. வாடகை மகிழுந்து, தானியங்கி மூவுருளி உந்து (மூன்று சக்கர வண்டி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது) போன்றவையும் நகர போக்குவரத்துக்கு உதவுகின்றன. தானியங்கி மூவுருளி உந்து தனிப்பட்டவர்களால் நடத்தப்படுகின்றன, வாடகை மகிழுந்து தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.
இரத்மலானை விமான நிலையம் அனைத்து உள்ளூர் விமான சேவைகளையும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் நகரிற்கு வழங்குகிறது.
சாலைகள்
ஏ-1 நெடுஞ்சாலை கொழும்பினை கண்டியுடன் இணைக்கிறது.
ஏ-2 நெடுஞ்சாலை கொழும்பினை காலியுடன் இணைக்கிறது.
ஏ-4 நெடுஞ்சாலை கொழும்பினை இரத்தினபுரியுடன் இணைக்கிறது.
பேருந்து
தொடருந்து
பிரதான பாதை - கொழும்பிலிருந்து பதுளை வரை.
தெற்குப் பாதை - கொழும்பிலிருந்து மாத்தறை வரை.
வடக்குப் பாதை - கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையானது, இது பொல்காவல சந்தியில் பிரதான பாதை இருந்து விலகிச்செல்கிறது. தற்போது கொழும்பு - வவுனியா வரை மட்டுமே செயற்படுகிறது.
புத்தளம் பாதை - கொழும்பிலிருந்து புத்தளம் வரை.
களனிப் பள்ளத்தாக்குப் பாதை - கொழும்பிலிருந்து எட்டியாந்தோட்டை வரையானது, தற்போது அவிசாவெலை வரை மட்டுமே செயற்படுகிறது.
மன்னார் பாதை (முன்னதாக இலங்கை-இந்தியப்பாதை) - கொழும்பிலிருந்து தலைமன்னார் வரையானது, மதவாச்சிய சந்தியிலில் வடக்குப் பாதையிலிருந்து பிரிந்து செல்கிறது - செயற்பாட்டில் இல்லை.
படகுச் சேவைகள்
ஓர் ஆடம்பரப் படகான ஸ்கோஷியா பிரின்ஸ், இந்தியாவின் தூத்துக்குடிக்கு ஒரு படகு சேவையை நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான படகுச் சேவைகள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி
கொழும்பு கல்வி நிறுவனங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. கொழும்பில் பல பொதுப் பாடசாலைகளில் சில அரசாங்கத்திற்கும் சில தனியாருக்கும் சொந்தமானவை. இவற்றில் பல பிரித்தானிய ஆட்சிக்காலமான 1800களைச் சேர்ந்தவை.
கட்டடக்கலை
கொழும்பு நூற்றாண்டு கால மற்றும் பலதரப்பட்ட வடிவங்களையும் கொண்டு பல கட்டடக்கலைக் கொண்டு காணப்படுகின்றது. பல குடியேற்ற கால போத்துக்கேய, ஒல்லாந்து, பிரித்தானிய கட்டடங்களுடன் உள்நாட்டு பெளத்த, இந்து, இசுலாமிய, இந்திய மற்றும் தற்கால கட்டடக்கலைகள் கொண்ட கட்டடங்கள் காணப்படுகின்றன. நகரத்தின் மையப்பகுதியான "கோட்டை" பகுதியில் பலதரப்பட்ட கட்டடங்களைக் காணலாம். இங்கு புதிய வானளாவி மற்றும் 1700களில் கட்டப்பட்ட வரலாற்றுக் கட்டடங்களையும் காணலாம்.
பண்பாடு
வருடாந்த கலாசார நிகழ்வுகள்
கொழும்பின் மிக முக்கிய பிரதான கொண்டாட்டம் புத்தரின் பிறப்பு, ஞானமடைதல் மற்றும் இறப்பு ஆகிய எல்லாம் ஒரேநாளில் நிகழும் சம்பவ தினமாகும். சிங்களத்தில் இது வெசாக் என அழைக்கப்படுகிறது.
கிறித்தவம்
கொழும்பு நகரில் உள்ள கிறித்தவ சபைகளுள் கத்தோலிக்க சபை ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. அங்குதான் இலங்கையின் ஒரே உயர்மறைமாவட்டமான கொழும்பு உயர்மறைமாவட்டம் அமைந்துள்ளது. அதன் கீழ் தனித்தனி ஆயர்களின் கண்காணிப்பில் உள்ள பிற மறைமாவட்டங்கள் பின்வருமாறு:
அனுராதபுரம்
பதுளை
யாழ்ப்பாணம்
மட்டக்களப்பு
மன்னார்
திருகோணமலை
இரத்தினபுரி
கண்டி
காலி
சிலாபம்
குருணாகல்
முதலில் இலங்கை முழுவதும் இந்தியாவின் கொச்சி மறைமாவட்டத்தின் பகுதியாக இருந்தது. 1834, திசம்பர் 3ஆம் நாளில் இலங்கையில் கொழும்பை மையமாகக் கொண்டு ஒரு தனி மறைமாவட்டத்தைத் திருத்தந்தை 16ஆம் கிரகோரி நிறுவினார். அம்மறைமாவட்டம் "சிலோன் மறைமாவட்டம்" என்னும் பெயரைப் பெற்றது.
ஒரு சில ஆண்டுகளுக்குப் பின், 1845, பெப்ருவரி 17ஆம் நாள் சிலோன் மறைமாவட்டம் "கொழும்பு மறைமாவட்டம்" என்னும் பெயரைப் பெற்றது.
1886, செப்டம்பர் முதல் நாள் கொழும்பு மறைமாவட்டம் "உயர்மறைமாவட்டம்" (Archdiocese) என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டு, பிரதேச முதன்மை மறைமாவட்டம் ஆயிற்று. அது திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது.
பின்னர், திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் கொழும்பு உயர்மறைமாவட்டம் என்னும் பெயரை 1944, திசம்பர் 6ஆம் நாள் "சிலோனின் கொழும்பு உயர்மறைமாவட்டம்" (Archdiocese of Colombo in Ceylon) என்று மாற்றினார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை ஆறாம் பவுல் மீண்டும் பெயரை "கொழும்பு உயர்மறைமாவட்டம்" என்று மாற்றினார். அப்பெயரே இன்றுவரை நிலைத்துள்ளது.
கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் (Albert Malcolm Ranjith Patabendige Don) ஆவார். இவர் 2009இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டால் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். 2010, நவம்பர் 20ஆம் நாள் மால்கம் ரஞ்சித் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பரப்பளவு 3836 ச.கி.மீ (1482 ச.மைல்) ஆகும். அந்நிலப்பரப்பில் வாழ்கின்ற 5,760,148 மக்களுள் 652,200 பேர் கத்தோலிக்கர் (11.3%) என்று வத்திக்கானிலிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ ஆண்டேடு (Annuario Pontificio) (2009) கூறுகிறது.
கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் முதன்மைக் கோவில் புனித லூசியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதனுள் "இலங்கை அன்னை மரியா" (Basilica of Our Lady of Lanka) தேவத்தா பகுதியிலும் புனித அந்தோனியார் தேசிய திருத்தலம் கொச்சிக்கடையிலும் உள்ளன.
சகோதரி நகரங்கள்
இவற்றையும் பார்க்கவும்
கொழும்பு பல்கலைகழகம்
கொழும்பு பங்கு சந்தை
இலங்கை வானொலி
வேத்தியர் கல்லூரி
சாஹிரா கல்லூரி
மேற்கோள்கள்
மேலதிக வாசிப்பு
பின்வரும் ஆங்கில நூல்கள் கொழும்பு பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ளன.
Changing Face of Colombo (1501–1972): Covering the Portuguese, Dutch and British Periods, By R.L. Brohier, 1984 (Lake House, Colombo)
The Port of Colombo 1860–1939, K. Dharmasena, 1980 (Lake House, Colombo)
Decolonizing Ceylon: Colonialism, Nationalism, and the Politics of Space in Sri Lanka, By Nihal Perera, 1999 (ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்)
வெளியிணைப்புக்கள்
Colombo Municipal Council, History of the City
Colombo guide for travellers
Aboutcolombo.lk, Everything about Colombo city
City Hospitality of the Hotels in Colombo
Colombo
ஆசியத் தலைநகரங்கள்
முன்னாள் தேசிய தலைநகரங்கள்
இலங்கை மாவட்டத் தலைநகரங்கள் |
2357 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81 | தீவு | தீவு அல்லது கடலிடைக் குறை என்பது நான்கு புறமும் கடல், ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதியைக் குறிக்கும். உலகில் உள்ள தீவுகளுள் கிரீன்லாந்து மிகப் பெரியதாகும். இலங்கை, அந்தமான் நிக்கோபர் போன்றவையும் தீவுகளாகும். பிற நிலப்பகுதிகளுடன் பாலங்கள் போன்ற செயற்கையான நிலத்தொடர்புகளை உருவாக்கினாலும், குறித்த நிலப்பகுதி தொடர்ந்தும் தீவு என்றே கருதப்படும். சிங்கப்பூர், புங்குடுதீவு போன்றவை இத்தகைய தீவுகள் ஆகும். உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டும் 45,000 தீவுகள் உள்ளன. தீவுகள் பொதுவாக கண்டத்தீவு, கடல் தீவு என இரு வகைப்படும். செயற்கையான தீவுகளும் உள்ளன.
வகைகள்
கண்டத் தீவுகள்
ஏதேனும் ஒரு கண்டத்தை அடுத்துள்ள தீவுகளுக்குக் கண்டத்தீவுகள் என்று பெயர். இத்தீவுகள் ஒரு காலத்தில் கண்டத்துடன் இணைந்திருந்தவையாகும். இலங்கை, பிரிட்டன், சப்பானியத் தீவுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.
கடல் தீவுகள்
கண்டத்துக்கு மிகத் தொலைவில் கடலில் காணப்படுபவை கடல் தீவுகள் ஆகும். கடலின் அடியிலுள்ள எரிமலையிலிருந்து வெளிப்படும் பாறைக் குழம்பு, மேலும் மேலும் படிவதன் காரணமாக வளர்ந்து, கடலுக்கு மேலே எழும்பி உருவானவை இத்தகைய தீவுகளாகும். ஹவாய்த் தீவு, டகீட்டித் தீவு, சமோவா தீவு ஆகியவை இத்தகைய தீவுகளாகும்.
பவளத் தீவு
கடலில் இறந்த பவளப் பூச்சிகளின் கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து சிறிது சிறிதாக வளர்ந்து உண்டாவது பவளத் தீவு ஆகும். தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள 'வேக் தீவு' ஒரு பவளத் தீவு ஆகும்.
மண் தீவு
ஆற்றின் நடுவிலோ கழிமுகத்திலோ வண்டல் மண் படிந்து கொண்டே வந்து ஒரு தீவாக மாறுவதும் உண்டு.
அளவியல்
கிரீன்லாந்து 21 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவாகும். உலகின் சிறிய கண்டமான ஆத்திரேலியா 76 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட கண்டமாகும். இது நான்கு புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் இதைத் தீவென்று அழைக்காமல் கண்டமென்றே அழைக்கின்றனர். எது தீவு, எது கண்டம் என்பதற்கு அளவியல் வரைமுறை இல்லை.
உலகில் பரவலாக அறியப்படும் சில தீவுகள்
இவற்றையும் பார்க்கவும்
பேக்கர் தீவு
தீவு நாடு
உலகின் தீவு நாடுகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
உலகின் முக்கிய பெரிய தீவுகள். அமைந்துள்ள இடங்கள் - நிலா முற்றம் கட்டுரை
நில அமைப்புகள் |
2360 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | யாழ்நகரப் பாடசாலைகள் | பின்வருவன யாழ்ப்பாண நகரப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளாகும்.
ஆண்கள் பாடசாலைகள்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி
யாழ் பரி யோவான் கல்லூரி
பெண்கள் பாடசாலைகள்
வேம்படி மகளிர் கல்லூரி
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
யாழ் திருக்குடும்பக் கன்னியர் மடம்
கலவன் பாடசாலைகள்
கொக்குவில் இந்துக் கல்லூரி
யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் (வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி)
வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம்
யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகள் |
2361 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் | யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் அல்லது வைத்தீஸ்வராக் கல்லூரி எனப்படும் இப் பாடசாலை 1913 ஆம் ஆண்டில் நாகமுத்து என்னும் சமூகப் பற்றாளர் ஒருவரால் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இது இராமகிருஷ்ண மிஷனின் முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அக்காலத்தில், விபுலானந்த அடிகள் போன்றவர்களின் மேலாண்மையின் கீழ் இயங்கிய பெருமை இப் பாடசாலைக்கு உண்டு. பிரித்தானியர் ஆட்சியின் கீழ், பாடசாலைகளைத் துவங்கி நடத்திவந்த கிறிஸ்தவ மிஷன்கள், தங்கள் மதத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவந்த ஒரு காலகட்டத்தில், யாழ்ப்பாணத்தவரின் சொந்தப் பண்பாடுகளைத் தழுவிய கல்வித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பாடசாலைகளில் இதுவும் ஒன்று. இது ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி புகட்டுகின்ற ஒரு கலவன் பாடசாலை ஆகும். இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் இலங்கை கல்வித் திணைக்களத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
அமைவிடம்
யாழ்ப்பாண நகரத்திலுள்ள வண்ணார்பண்ணைப் பகுதியில் இருக்கும் சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள சிவன் கோயில் வடக்கு வீதியில் இது அமைந்துள்ளது. யாழ் மாவட்டத்தின் முக்கிய சாலையான காங்கேசந்துறை வீதிக்கு மிகவும் அண்மையில் உள்ளதால் இவ்விடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்திலிருந்து இங்கு வந்து செல்வதற்கு வசதியாக உள்ளது. இதனால், அயலிலுள்ளவர்கள் மட்டுமன்றி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கே கல்வி கற்கின்றனர். இப் பாடசாலை பெருமளவில் இந்துக்கள் வாழும் பகுதியில் அமைந்திருந்த போதும், சோனக தெரு என அழைக்கப்படுகின்ற, முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிக்கும் அண்மையில் இருப்பதால். இராமகிருஷ்ண மடத்தின் மேலாண்மையின் கீழ் இருந்த காலத்திலேயே இப் பாடசாலையில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மாணவர்களும் கல்வி பயின்றனர். ஆறுமுக நாவலரால் தொடங்கப்பட்ட நாவலர் மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பனவும் இப் பாடசாலைக்கு அண்மையிலேயே அமைந்திருக்கின்றன.
கல்லூரிப் பாடல்
இராமகிருஷ்ண மடத்தின் கீழ் இயங்கிய காலத்தில் இப்பாடசாலையின் கல்லூரிப் பாடல் இயற்றப்பட்டது. இதனால் இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கொள்கைகளை முன்னெடுக்கும் இதன் நோக்கம் இப் பாடலில் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். அத்துடன் இப் பாடசாலையைத் தொடக்கிய நாகமுத்து, இதன் வளர்ச்சிக் கட்டங்களில் முக்கிய பணியாற்றிய சுவாமி சர்வானந்தர், சுவாமி விபுலானந்தர் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அண்மையில் உள்ள சிவன் கோயிலின் இறைவனான வைத்தீஸ்வரப் பெருமானின் அருள் வேண்டி இப்பாடல் நிறைவெய்துகிறது.
பாடல் வரிகள்
வீறுகொண்ட விவேகானந்த வேதஞான களஞ்சியத்தைப்
பேறுகொண்ட ராமகிருஷ்ண பேரருட்செல் வத்துடனே
சாறுகொண்டு பார்முழுதும் தானஞ்செய்து வேறுளகைம்
மாறுகொள்ளா வைத்தீஸ்வராக் கல்லூரி வாழியவே.
சாதிமத பேதமற்ற சமரசசன் மார்க்கநெறி
மேதினியில் கால்கொளவே மெச்சுகாவி பச்சைநீலம்
நீதிவளர் மூவர்ண நீள்கொடியும் குண்டெலியென்
றாதியுள இலாஞ்சனையும் அடிகளாரும் வாழியவே.
நன்னெறியோர் ஏத்துகின்ற நாகமுத்து செய்தவமும்
தன்னடிசேர் சர்வானந்தர் விபுலானந்தர் இதயபூர்வப்
பொன்னருளும் கல்லூரி பொலிவெய்த முதல்வருடன்
இன்றருளும் வைத்தீஸ்வரன் இருங்கருணை வாழியவே.
இவற்றையும் பார்க்கவும்
யாழ்நகரப் பாடசாலைகள்
யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகள் |
2363 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D | வைத்திலிங்கம் செட்டியார் | வைத்திலிங்கம் செட்டியார் சோழ நாட்டிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தவரும், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தரிடம் மொழி பெயர்ப்பாளராயிருந்த கொச்சிக் கணேசையர் என்பவரிடம் உத்தியோகம் பார்த்துவந்தவருமான கோபாலச் செட்டியார் என்பவருடைய மகனாவார். ஒரு பொழுது கொச்சிக் கணேசையருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து கோபாலச் செட்டியார் அவர்கள் அவரை விட்டு விலகிச் சொந்தமாக வியாபாரம் செய்து வந்தார். இவ் வியாபாரம் மூலம் செட்டியாருக்கு ஒல்லாந்த தேசாதிபதியின் தொடர்பு கிடைத்தது. செட்டியாரின் நற்பண்புகள் காரணமாகத் தேசாதிபதியின் மனைவியும் செட்டியாரிடம் நல்ல நம்பிக்கை வைத்திருந்தாராம். ஒருமுறை தேசாதிபதியின் மனைவி சிறுவனாயிருந்த வைத்திலிங்கனைக் கோபாலச் செட்டியாரின் கடையிற் காண நேர்ந்த போது அவனைத் தன்னுடன் மாளிகைக்கு அழைத்துச் சென்றாராம். அன்றிலிருந்து வைத்திலிங்கனின் பெரும்பகுதி நேரம் மாளிகையிலேயே கழிந்தது. அங்கே அவர் ஒல்லாந்த மொழியையும் கற்றுக்கொண்டார்.
இளைஞனாக வளர்ந்த வைத்திலிங்கனுக்கு முத்துச் சலாபம் குத்தகை எடுக்க எண்ணம் ஏற்பட்டது. தேசாதிபதியின் மனைவியுடைய உதவியின் பேரில் முத்துச் சலாபக் குத்தகை வைத்திலிங்கனுக்குக் கிடைத்தது, அதன் மூலம் பெருமளவு வருமானமும் ஈட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. தொடர்ந்து மூன்று தடவை குத்தகை எடுத்துப் பெரும் இலாபமீட்டிய இவர் சிறந்த சிவ பக்தியுடையவராக விளங்கினார். உரிய வயதில் சோழ நாட்டைச் சேர்ந்த சங்கந்தி என்னும் ஊரிலே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து இனிது வாழ்ந்து வந்தார்.
அக்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தவரும், கோபாலச் செட்டியாருக்கு நண்பரும், வைத்திலிங்கம் செட்டியாருக்குக் குருவுமான கூழங்கைத் தம்பிரான் என்பவருடைய ஆலோசனையின் பேரில், வண்ணார்பண்ணையில் ஒரு நிலத்தை வாங்கி வைத்தீஸ்வரப் பெருமானுக்குக் கோயில் எழுப்புவதற்காக 1787ஆம் ஆண்டில் அத்திவாரம் இட்டார். இக்கோயில் எவ்வித தடையுமின்றி 1790ல் நிறைவு பெற்றது. இதன் பின்னர் சுமார் பதினைந்து ஆண்டுகள் வரை கோயிலை அவரே பரிபாலனம் செய்து வந்தார். பின்னர் தனது இறுதிக் காலத்தில் சிவத் தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்பிக் கோயில் பரிபாலனத்தைத் தனது இரு மகன்களிடமும் கையளித்துவிட்டுப் புறப்பட்டார். பல தலங்களையும் தரிசித்தபின் இறுதிக்காலத்தைக் காசியில் கழிக்க விரும்பி அங்கேயே தங்கியிருந்து சிறிது காலத்தில் காலமானார்.
துணை நூல்கள்
வெளி இணைப்புகள்
யாழ்ப்பாணத்து நபர்கள் |
2364 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D | தலைநகரம் | ஒரு நாட்டின் தலைநகரம் என்பது, பொதுவாக அந்நாட்டின் நிர்வாகம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும். மிகப் பெரும்பாலான நாடுகளில் வணிக முக்கியத்துவம் கொண்ட நகரமாகவும் இதே நகரமே விளங்கும். சில நாடுகளில் நிர்வாகம், வர்த்தகம் இரண்டுக்கும் வேறுவேறான இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன.
மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள்
ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள் கீழே பட்டியலிடப் பட்டுள்ளன.
ஆப்பிரிக்கா - கெய்ரோ
ஆசியா - டோக்கியோ
ஐரோப்பா - மாஸ்கோ
வட அமெரிக்கா - மெக்ஸிகோ நகரம்
ஓசியானியா - வெலிங்டன்
தென் அமெரிக்கா - பியூனஸ் அயர்ஸ்
இவற்றையும் பார்க்கவும்
பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தலைநகரங்கள் |
2366 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D | ஏர்னோ ரூபிக் | ஏர்னோ ரூபிக் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பேராசிரியர் ஆவார். ரூபிக்ஸ் கியூப் என அறியப்படும் விளையாட்டுப் பொருளைக் உருவாக்கியதன் மூலம் உலகப் புகழ் பெற்றதுடன், பெருமளவு வருவாயையும் பெற்றுக்கொண்டார்.
கட்டிடக்கலை
1944 பிறப்புகள்
வாழும் நபர்கள்
மேற்கோள்கள் |
2367 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D | இலண்டன் | இலண்டன் (London), ஐக்கிய இராச்சியத்தினதும், இங்கிலாந்தினதும் தலைநகரமாகும். ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட குடித்தொகையைக் கொண்ட பெருநகர் இலண்டன், மாஸ்கோவுக்கு அடுத்ததாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குடித்தொகை கொண்ட நகர்ப்புறம் ஆகும். உரோம மாகாணமான பிரித்தானியாவின் தலைநகரமான லண்டனியம் ஆக இருந்து, பிரித்தானியப் பேரரசின் மையமாகத் திகழ்ந்த இலண்டன், இன்று ஐக்கிய இராச்சியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 17% ஐப் பங்களிக்கின்றது. இது உலகின் நான்காவது பெரியதாகும். பல நூற்றாண்டுகளாக, இலண்டன், உலகின் முக்கியமான வணிக மற்றும் அரசியல் மையமாகத் திகழ்கின்றது.
இலண்டன் ஒரு முக்கியமான உலக நகரமாக இருப்பதுடன், ஐரோப்பாவில் ஆகக்கூடுதலான நகரத்துக்குரிய மொத்த உள்ளுர் உற்பத்தியுடன் உலகின் மிகப் பெரிய நிதி மையமும் திகழ்கின்றது. மைய இலண்டன் ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய 100 நிறுவனங்களில் பெரும்பாலானவற்றின் தலைமையகங்களைக் கொண்டிருப்பதுடன், ஐரோப்பாவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 100 நிறுவனங்களின் தலைமையகங்களின் தலைமையகங்களையும் கொண்டுள்ளது. அரசியல், நிதி, கல்வி, பொழுதுபோக்கு, ஊடகம், கலைகள், பண்பாடு போன்ற துறைகளில் இலண்டனின் செல்வாக்கு அதனை உலகில் முக்கியமான ஒரு நிலையில் வைத்துள்ளது. இந்நகரம், உள்நாட்டினரதும், வெளிநாட்டினரதும் சுற்றுலாப் பயணத்துக்குரிய இடமாகவும் விளங்குகின்றது. 1948 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிய விளையாட்டுக்கள் இலண்டனில் நிகழ்ந்தன. மீண்டு இது 2012 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெறவுள்ளது. இலண்டனில் நான்கு உலகப் பாரம்பரியக் களங்கள் அமைந்துள்ளன. இவை, இலண்டன் கோபுரம்; பழங்கால கிரீனிச் குடியிருப்புக்கள்; தாவரவியல் பூங்கா; வெசுட்மின்சுட்டர் அரண்மனை, வெசுட்மின்சுட்டர் மடாலயம், புனித மார்கிரட் தேவாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி என்பனவாகும்.
இலண்டனில் பல வகையான மக்களுடன், பல பண்பாடுகளும், சமயங்களும் நிலவுகின்றன. இந்நகரத்தின் எல்லைக்குள் 300க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. யூலை 2007 ஆம் ஆண்டில் பெரிய இலண்டனின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 7,556,900 மக்கள் வாழ்ந்தனர். இதலால் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகக் கூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரப் பகுதியாக விளங்குகிறது. பெரிய இலண்டன் நகர்ப்புறப் பகுதி 8,278,251 என்னும் மக்கள் தொகையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது பெரிய நகர்ப்புறப் பகுதியாக உள்ளது. அதே நேரம் இலண்டன் நகர்ப்பெருமப் பகுதி 12 மில்லியனுக்கும் 14 மில்லியனுக்கும் இடைப்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும்.
அமைவிடம்
"லண்டன்" என்னும் சொல் பல நூறு ஆண்டுகளாகவே வரலாற்றுப் புகழ் பெற்ற மிடில்செக்ஸ், இங்கிலாந்து கவுண்டியிலிருந்த சிறிய நகரமான இலண்டனை மையமாகக் கொண்டிருந்த இணைந்திருந்த தனிநகர்களை (conurbation) ஐக் குறிக்கப் பயன்பட்டு வந்தது. இன்று பொதுவாக இது பெரிய இலண்டன் (Greater London) என் அறியப்படுகின்ற நிர்வாகப் பிரதேசத்தையே குறித்தாலும், சிலவேளைகளில் இலண்டன் தபால் மாவட்டம், 020 என்னும் தொலைபேசிக் குறியீட்டு எண்ணால் குறிக்கப்படும் பகுதிகள், இலண்டனுக்கான முழு-வலயப் போக்குவரத்து அட்டைகள் பயன்படும் பகுதி, எம்25 மோட்டார்வாகனச் சாலைக்குள் அடங்கும் பகுதி போன்றவற்றையும் குறிக்கப் பயன்படுவதுண்டு.
இலண்டனின் மையத்தின் அமைவிடம், ((ட்)ரபல்கர் சதுக்கத்துக்கு அண்மையிலுள்ள செயாரிங் சந்தி (Charing Cross)எனக்கூறப்படுகின்றது) அண்ணளவாக 51°30' N, 0°8' W ஆகும்.
வரலாறு
தலைமைக் கட்டுரை: இலண்டனின் வரலாறு
சொற்பிறப்பு
இலண்டன் என்னும் சொல் எப்படி உருவானது என்பது குறித்துத் தெளிவு இல்லை. இது மிகவும் பழைய பெயர். இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே இப்பெயர் வழங்கி வந்ததைச் சில மூலங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. பொ.ஊ. 121 ஆம் ஆண்டில் இது இலண்டனியம் என அழைக்கப்பட்டது. இச்சொல் உரோம-பிரித்தானிய மூலத்தைக் காட்டுகிறது. மான்மவுத் என்னும் இடத்தைச் சேர்ந்த செஃப்ரி (Geoffrey of Monmouth) என்பவர் தனது இசுட்டோரியா ரீகம் பிரிட்டனி (Historia Regum Britanniae) என்னும் நூலில் இச் சொல்லுக்கு விளக்கம் கொடுக்க முயன்றார். இச் சொல்லின் தோற்றம் பற்றிய மிகவும் பழைய விளக்கங்களுள் ஒன்றான இதைத் தற்கால அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இப்பகுதியை லுட் என்னும் அரசர் கைப்பற்றி ஆண்டதாகவும், அவரது பெயரைத் தழுவியே இந்நகரத்துக்குப் பெயர் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார் 1899 ஆம் ஆண்டிலிருந்து லாண்டினசு என்பவருக்குச் சொந்தமான இடம் என்னும் பொருள் கொண்ட செல்ட்டிய மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதாகக் கருதப்பட்டது. இந்த விளக்கமும் பின்னர் கைவிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் ரிச்சார்டு கோட்சு (Richard Coates) என்பவர், செல்டியத்துக்கு முந்திய பழைய ஐரோப்பிய மொழிச் சொல்லான "லோவொண்டியா" ((p)lowonida) என்பதிலிருந்தே இலண்டன் என்னும் சொல் தோன்றியதாக விளக்கினார். "லோவொண்டியா" என்னும் சொல் கடக்க முடியாதபடி அகலமான ஆறு என்னும் பொருள் தரும் ஒரு சொல். இச்சொல் தொடக்கத்தில் இலண்டனூடாகச் செல்லும் தேம்சு ஆற்றின் பகுதியைக் குறித்ததாகவும், இதிலிருந்தே இப் பகுதியில் இருந்த குடியேற்றத்துக்கு செல்ட்டிய மொழி வடிவமான லோவொனிடன்யன் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் "கோட்சு" விளக்கினார்.
வரலாற்றுக்கு முந்திய காலமும் பழமையும்
மிகப் பழைய காலத்திலேயே இப்பகுதியில் குடியேற்றங்கள் இடையிடையே இருந்ததற்கான சான்றுகள் இருப்பினும், முதல் குறிப்பிடத்தக்க குடியேற்றம் உரோமர்களால் பொ.ஊ. 43 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது. இது 17 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தது. பொ.ஊ. 61ல், போடிக்கா என்னும் அரசியின் தலைமையிலான ஐசெனி என்னும் பழங்குடியினர் இக் குடியேற்றத்தைத் தாக்கி எரித்து அழித்துவிட்டனர். பின்னர், பொ.ஊ. 100 ஆம் ஆண்டளவில் பெரிய அளவில் திட்டமிடப்பட்ட குடியேற்றம் இப்பகுதியில் நிறுவப்பட்டதுடன், அதுவரை உரோமப் பேரரசின் பிரித்தானிக்கா மாகாணத்தின் தலைநகரமாக இருந்த கால்செசுட்டருக்குப் பதிலாக இது தலைநகரமும் ஆனது. இரண்டாம் நூற்றாண்டில் இதன் உச்ச நிலையில் இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 60,000 வரை இருந்திருக்கக் கூடும் என மதிப்பிட்டுள்ளனர்.
உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்த நகரம் கைவிடப்பட்டு, லுண்டென்விக் என்னும் சக்சன் (Saxon) நகரமொன்று மேற்குத் திசையில், ஓரிரு மைல்களுக்கு அப்பால் அல்ட்விச் (Aldwych) பகுதியில் 7 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இப் பகுதியில் பிளீட் ஆற்றின் கழிமுகப் பகுதியில் மீன் பிடிப்பதற்கும், வணிகத்துக்குமான ஒரு சிறு துறைமுகம் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. நகரத்தை வைக்கிங்குகள் கைப்பற்றும்வரை இவ் வணிக நடவடிக்கைகள் வளர்ந்து வந்தன. ஆனால் வைக்கிங்குகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந் நடவடிக்கைகள் மீண்டும் முன்னர் "லண்டனியம்" இருந்த இடத்துக்கு மாற்றப்பட வேண்டியதாயிற்று. வைக்கிங்குகளின் தாக்குதல்கள் பொ.ஊ. 886 ஆம் ஆண்டுவரை தொடர்ந்ததாயினும், அவ்வாண்டில் பேரரசர் அல்பிரட் இலண்டனைக் கைப்பற்றியதுடன் டேனியத் தலைவர் குத்ரம் என்பவருடன் அமைதி ஒழுங்கும் செய்துகொண்டார். தொடக்ககால "லுண்டன்விக்" நகரத்தின் பெயர் "பழைய நகரம்" என்னும் பொருள்படும் "ஈல்விக்" ஆனது. இதுவே தற்கால நகரமான வெஸ்ட்மின்ஸ்ட்டரில் உள்ள "அல்ட்விக் (Aldwych) ஆகும்.
நடுக் காலம்
1016 ஆம் ஆண்டில் "கனூட்" இங்கிலாந்தின் அரசராகி, 1035 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இலண்டன் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இவரது இறப்புக்குப் பின்னர் இவரது மனைவிக்கு முந்திய கணவர் மூலம் பிறந்த மகனான எட்வார்ட் தலைமையில் நாடு மீண்டும் சக்சன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எட்வார்ட் வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தை மீண்டும் கட்டியதுடன், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையையும் கட்டினார். இக் காலத்தில் இங்கிலாந்து அரசின் தலைமையிடமாக வின்செசுட்டர் இருந்தபோதும், இலண்டன் இங்கிலாந்தின் மிகப் பெரியதும், வளம் மிக்கதுமான நகரமானது. நோர்மண்டியின் டியூக் ஆக இருந்த வில்லியம் என்பவர் ஆஸ்டிங்ஸ் போரில் வெற்றி பெற்று இங்கிலாந்தின் அரசரானார். புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்த வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தில் 1066 ஆம் ஆண்டு நத்தார் நாளன்று அவர் முடிசூட்டிக்கொண்டார். அவர், இலண்டன் நகர மக்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கியதுடன், நகரத்தின் தென்கிழக்கு மூலையில் இலண்டன் கோபுரம் எனப்படும் கட்டிடத்தையும் கட்டினார்.
1097 ஆம் ஆண்டில், இரண்டாம் வில்லியம் வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்துக்கு அருகில், வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தைக் கட்டினார். இம் மண்டபமே நடுக்காலம் முழுதும் அரசர்களின் வதிவிடமாக அமைந்த புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிப்படையாக அமைந்தது. வெஸ்ட்மின்ஸ்டர் அரச அவையினதும், அரசினதும் இடமாக அமைந்தபோதும் அதன் அண்மையில் அமைந்திருந்த இலண்டன் நகரம், வணிக நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்ந்தது. இது இலண்டன் கார்ப்பரேசன் எனப்படும் தனியான நிருவாகத்தின் கீழ் இருந்தது. 1100 ஆம் ஆண்டில் 18,000 ஆக இருந்த இதன் மக்கள்தொகை 1300 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 100,000 ஆகியது. இக் காலத்தில் யூதர்களின் மக்கள்தொகை கூடியிருந்தது, முதலாம் எட்வார்டு அரசர் 1260 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு ஆணையின் மூலம் அவர்களை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றினார். "கறுப்புச் சாவு" எனப்பட்ட ஒரு தொற்றுநோய் ஏற்பட்டு 14 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், இலண்டனின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்து போனார்கள். 1381 ஆம் ஆண்டில் "குடியானவர்களின் புரட்சி"யின்போது இடம்பெற்ற ஆக்கிரமிப்பு ஒன்றைத் தவிர, அக்காலங்களில் இடம்பெற்ற உள்நாட்டுக் குழப்பங்களால் இலண்டன் அதிகம் பாதிப்பு அடையவில்லை.
புதுக் காலத் தொடக்கம்
டியூடர் காலத்தில் சீர்திருத்த இயக்கத்தினால் நகர மக்கள் படிப்படியாகப் புரொட்டஸ்தாந்தத்தின் பக்கம் சென்றனர். இலண்டன் நகரம் திருச்சபையிலிருந்து தனியார் சொத்துடைமை முறைக்கு மாறியது. வணிகவியம் வளர்ச்சியடைந்ததுடன், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போன்ற தனியுரிமைக் கம்பனிகள் உருவானதுடன், வணிகம் புது உலகப் பக்கமும் விரிவடைந்தது. இங்கிலாந்திலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குடியேறிகள் இலண்டனுக்கு வந்தனர். இலண்டன் வட கடல் பகுதியின் முதன்மைத் துறைமுகம் ஆனது. 1530 ஆம் ஆண்டில் 50,000 ஆக இருந்த மக்கள்தொகை 1605 ஆம் ஆண்டில் 225,000 ஆக வளர்ச்சியடைந்தது. 16 ஆம் நூற்றாண்டில் அரங்கக் கலைக்கு எதிர்ப்பு இருந்த காலத்தில் வில்லியம் சேக்சுப்பியரும், அவர் போன்ற பிறரும் இலண்டனில் வாழ்ந்தனர். 1603 ஆம் ஆண்டில் டியூடர் கால முடிவில், இலண்டன் நகரம் இறுக்கமாகச் சிறிய அளவாகவே இருந்தது. 1605 ஆம் ஆண்டி நவம்பர் 5 ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டரில், முதலாம் சேம்சைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலண்டன் நகரம் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டது. 1665–1666 காலப்பகுதியில் இது தீவிரமாகியது. இதனால் 100,000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது மொத்த மக்கள் தொகையின் ஐந்தில் ஒரு பகுதியாகும். 1666 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் தேதி இடம்பெற்ற இலண்டனின் பெரும் தீ விபத்தில் ஏராளமான மரக் கட்டிடங்கள் எரிந்து சாம்பராயின. இதனைத் தொடர்ந்த மீள் கட்டுமானப் பணிகள் முடிவதற்குப் 10 ஆண்டுகள் பிடித்தன. இப் பணிகள் ராபர்ட் ஊக் (Robert Hooke) என்பவரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன.
போக்குவரத்து
இலண்டன் மிகவும் வளர்ச்சியடைந்த பொதுப் போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. நகரின் பெரும்பாலான தரைவழி போக்குவரத்து லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் [Transport for London – TfL] பொறுப்பாகும். அனேகரது அன்றாடப் பயணங்கள் பாதாளத் தொடர்வண்டி,புகையிரதம், பேருந்து, டீராம் வண்டி போன்ற பொதுப் போக்குவரத்திலேயே நடைபெறுகின்றன. இப் பயணங்களுக்கு ஒய்ஸ்டர் அட்டை எனப்படும் மின்னணுப் பணம் செலுத்தும் அட்டை முறையை, எல்லாப் பாதாள தொடர்வண்டிகள், பேருந்துகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தமுடியும்
பாதாளத் தொடர்வண்டி சேவை
இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும். 270 தரிப்பிடங்களை இலண்டன் முழுவதும் கொண்டுள்ள இவ் பாதாளத் தொடர்வண்டி சேவையை தினமும் 3 மில்லியன் இலண்டன் வாசிகள் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது.
பேருந்து சேவை
இலண்டனின் பேருந்து சேவை வலையமைப்பானது உலகில் மிகப்பெரிய பேருந்து சேவை வலையமைப்பாகும். 8000க்கும் மேற்பட்ட 24மணி நேர சேவையை வழங்கக்கூடிய பேருந்துகளையும் 700க்கும் மேற்பட்ட தரிப்பிடங்களையும் கொண்டுள்ள இவ்வலையமைப்பை தினமும் 6 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
காலநிலை
இலண்டனின் சுற்றுலா மையங்கள்
இங்கிலாந்து வங்கி
பக்கிங்ஹாம் மாளிகை
பிரித்தானிய அருங்காட்சியகம்
சைனாடவுன்
கிளியோபாட்ராவின் ஊசி (Cleopatra's Needle)
கொவெண்ட் தோட்டம்
டவுனிங் சாலை
ஹாம்ப்டன் கோட் மாளிகை
குதிரை காவலர் (Horse Guards)
இம்பீரியல் போர் அருங்காட்சியகம்
கென்சிங்டன் கூரைத் தோட்டங்கள்
லீசெஸ்டர் சதுக்கம்
இலண்டன் அருங்காட்சியகம்
தேசிய காட்சிக்கூடம் (National Gallery)
இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
பழைய சத்திர சிகிச்சைக்கூட அருங்காட்சியகம்
லண்டனின் கண்
இலண்டன் முருகன் கோயில்
இலண்டன் மகாலட்சுமி கோயில்
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (நாடாளுமன்ற அவைகள் மற்றும் பிக்பென் மணிக்கூண்டு)
குறிப்புகள்
வெளியிணைப்புகள் - ஆங்கிலத்தில்
The Open Guide to London - லண்டன் குறித்த அனைத்து தகவல்களையும் விக்கியில் தொகுப்பதற்கான முனைவு
London Guide London Guide on Englandguide.co.uk
First chapter of the book "London: The Biography" by Peter Ackroyd
Mayor of London, the London Assembly and the Greater London Authority official web site for the Mayor of London and the London Assembly. www.london.gov.uk
London at தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)'s Earth Observatory
"லண்டன்" பெயரின் விரிவுரை - ஆங்கிலத்தில் (PostScript file)
லண்டன் உணவகங்களின் விமரிசனங்கள்.
London from Evening Standard
லண்டன் உணவகங்களின் வழிகாட்டி.
London Bars and Pubs Guide.
London Directory
more London Directories
Transport for London Site
London Underground The Tube
லண்டனின் தங்கும் விடுதிகள்
லண்டனின் தங்கும் விடுதிகள் 2PL Network
விக்கிடிராவல் லண்டன் பயண வழிகாட்டி
The Londinium directory of London
ஐரோப்பியத் தலைநகரங்கள்
இங்கிலாந்தின் நகரங்கள் |
2375 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF | வி. என். ஜானகி | வைக்கம் நாராயணி ஜானகி (நவம்பர் 30, 1923 – மே 19, 1996) (V. N. Janaki) அல்லது ஜானகி இராமச்சந்திரன் என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகையும், அரசியல்வாதியும் ஆவார். இவரது கணவர் ம. கோ. இராமச்சந்திரன் இறந்தபிறகு 23 நாட்கள் தமிழ்நாடு முதல்வராக இருந்தார். பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய ம. கோ. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார். தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற முதல் பெண்மணி. இந்திய வரலாற்றில் முதல்வராக பதவியேற்ற முதல் நடிகையும் இவர்தான்.
பிறப்பு
வைக்கம் நாராயணி ஜானகி அன்றைய திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் பிறந்தார். அவரது தாயார், நாராயணி அம்மா திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த மலையாளி நாயர் ஆவார். ஜானகி 1924 செப்டம்பர் 23ஆம் நாள் வைக்கத்தில் பிறந்தார். வி. என். ஜானகிக்கு மணி, நாராயணன் என்னும் இரண்டு தம்பிகள் உள்ளனர்.
கும்பகோணம் வாழ்க்கை
முன்னோர்களின் சூதாட்டம் கேளிக்கைகளால் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். ஜானகி தனது 12ஆவது வயதில், 1936 ஆம் ஆண்டில், தன் தாயாருடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார்.
அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் பாபநாசம் சிவனின் தம்பியான இராசகோபால ஐயர் ஆவார். சிறிது காலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபால ஐயருக்கு துணைவி ஆனார். 1936ஆம் ஆண்டில் வெளிவந்த மெட்ராஸ் மெயில் திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபால ஐயருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறினார். அதனால் ஜானகியும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
திரை வாழ்க்கை
ஜானகி சென்னைக்கு வந்த பின்னர் திரைப்படங்களில் நடிக்க விரும்பினார். ஆனால் நாராயணி அம்மாளுக்கு அதில் விருப்பம் இல்லை. இருப்பினும் இராசகோபாலய்யரின் ஊக்குவிப்பால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த படங்கள் பின்வருமாறு:
நடனப் பள்ளியில்
அனந்த சயனம் திரைப்படத்தை இயக்கிய கே. சுப்பிரமணியம் நடன கலா சேவா என்னும் நாட்டியக் குழுவை அமைத்திருந்தார். ஜானகி இக்குழுவில் 1942-ஆம் ஆண்டில் இணைந்தார். இக்குழுவில் கே. சுப்பிரமணியத்தின் மனைவியும் நடிகையுமான எஸ். டி. சுப்புலட்சுமிக்கு அடுத்த நிலையில் இருந்தார். அவரோடு இணைந்து இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர்கள் நாட்டிய நாடகங்களை நடத்தினர். வள்ளி திருமணம் நாடகத்தில் ஜான்கி முருகனாகவும் சுப்புலெட்சுமி வள்ளியாகவும் நடித்தனர்.
மணவாழ்க்கை
முதல் திருமணம்
ஜானகி திரையுலகில் நுழைந்த சில காலத்திற்குள் நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதிபட் என்னும் கன்னடமொழிக்காரருக்கு அறிமுகம் ஆனார். அவ்வறிமுகம் காதலாக மாறி, திருமணமாக முடிந்தது இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என்னும் ஆண்குழந்தை பிறந்தது.
இரண்டாவது திருமணம்
ஜானகி இராஜ முக்தி படத்தில் கதைத் தலைவியாக நடித்தபொழுது, இரண்டாவது கதைத் தலைவனாக ம. கே. ரா. என்னும் ம. கோ. இராமசந்திரன் நடித்தார். ம. கோ. இரா.வுக்கு முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின் ஜானகி இருந்ததால், ம. கோ. இரா.வுக்கு இவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950-ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் ஜானகியும் ம. கோ. இரா.வும் காதலிக்கத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகிக்கு முதற்கணவரான கண்பதிபட்டின் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரை தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம.கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். இத்திருமணத்தை ம. கோ. இரா.வுக்கு அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும் குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உடல்நலமில்லாமல் இருந்ததால் அவரை இவர்கள் இருவரும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டனர். 12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் 1962 சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து கிளம்பி இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.
குழந்தைகள்
ஜானகிக்கு அப்பு என்கிற சுரேந்திரனைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. எனவே தன் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா, கீதா, சுதா. ஜானு, தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.
அரசியல் வாழ்க்கை
முதலமைச்சர்
ஜானகி தன் கணவர் ம. கோ. இரா. மும்முரமாக அரசியலில் ஈடுபட்டிருந்த காலங்களில் அதன் நிழல்கூட தன்மீது படாத அளவிற்கு விலகி இருந்தார். ம. கோ. இரா. 1984 ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட பின்னர் அவருக்குத் துணையாக அவரோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். ம. கோ. இரா. 1987 திசம்பர் 24 ஆம் நாள் மரணமடைந்த பின்னர் 1988 சனவரி 7 தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராகவும் ஆனார். ஆனால் சட்டமன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 சனவரி 30 ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார்.
தேர்தலில் போட்டி
ம. கோ. இரா.வின் மறைவிற்குப் பின்னர் அவரைப்
பொதுச்செயலாளராக கொண்டு இயங்கிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது.ஜானகி செயலலிதா இருவரும் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்டிபட்டித் தொகுதியில் ஜானகி போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அ. இ. அ. தி. மு. க. இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டதால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பை இழந்தது. எனவே அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெருமுயற்சி செய்து ஜானகி,ஜெயலலிதா தலைமையிலான அணிகளை இணைத்தனர். ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார்.ஜானகி அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகினார்.
மறைவு
ஜானகி அரசியலில் இருந்து விலகி ம.கோ.இரா.வின் இராமாவரம் தோட்டத்தில் தன் மகனோடும் வளர்ப்புப் பிள்ளைகளோடும் வாழ்ந்தார். ம.கோ.இரா உருவாக்கிய காதுகேளாதோர் பள்ளியின் நிர்வாகத்தினைக் கவனித்தபடி, தனது இறுதிக் காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், 1996 ஆம் ஆண்டு, மே மாதம் 19-ஆம் தேதி, தனது 73-வது வயதில் காலமானார்.
மேற்கோள்கள்
தமிழ்த் திரைப்பட நடிகைகள்
தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்
தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்
1924 பிறப்புகள்
1996 இறப்புகள்
இந்தியப் பெண் முதலமைச்சர்கள்
20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் |
2378 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF | நீராவி | நீரைச் சூடாக்கும் போது அது நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுகின்றது. இந்த வளிம நிலையில் உள்ள நீரே நீராவி எனப்படும். இவ்வாறு நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுதல் ஆவியாக்கம் என்று குறிக்கப்படும். நீர் எல்லா வெப்பநிலையிலும் ஆவியாகலாம். அறை வெப்பநிலை மற்றும் சூழல் வெப்பநிலையில் வளிமண்டலம் நீராவியைக் கொண்டிருப்பது இதற்குச் சான்றாகும். ஆயினும் அதன் கொதிநிலையான 100 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் கொதிநீராவி பெறப்படும்.
தெவிட்டிய நீராவி
தெவிட்டிய நீராவி என்பது நீர்ம நிலையில் இருக்கும் நீரினோடு சமன்பட்ட நிலையில் இருக்கும் நீராவி ஆகும். ஈரம் கொண்ட நீராவிக்கும் மிகைவெப்ப நீராவிக்கும் இடைப்பட்ட எல்லையைக் குறிப்பதாகவும் தெவிட்டிய நீராவி அமைகிறது.
மிகைவெப்ப நீராவி
நிலவும் அழுத்தத்தில், கொதிநிலைக்கும் அதிகமான வெப்பநிலையைக் கொண்டிருக்கும் நீராவி மிகைவெப்ப நீராவி எனப்படும். மிகைவெப்ப நீராவி உருவாவதற்கு எல்லா நீரும் ஆவியாகியிருக்க வேண்டும். நீர் இருப்பின் மிகைவெப்ப நீராவி உருவாகாது.
மேற்கோள்கள்
நீராவி ஆற்றல்
நீரின் வடிவங்கள்
வளிமங்கள் |
2382 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF | வால்மீகி | வால்மீகி அல்லது வால்மீகி முனிவர் என்பவர் இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் இராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
வால்மீகி ஆசிரமம்
உத்திரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரத்தின் அருகில் கங்கை ஆறு பாயும் பித்தூரில் வால்மீகி ஆசிரமம் அமைந்துள்ளது. இங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் தான் சீதைக்கு இலவன், குசன் எனும் இரட்டையர்கள் பிறந்தனர்.
வரலாறு
வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர்.
ஒருமுறை நாரதரைக் கொள்ளையிட முயன்றபோது, நாரதரின் வேண்டுகோள்படி நாரதரைக் கட்டிவைத்து விட்டு, வீடு சென்று, யாருக்காக தாம் கொள்ளைத் தொழிலை மேற்கொண்டாரோ அந்த உறவினரிடமெல்லாம், தனது தொழிலால் தனக்கு சேரும் பாவங்களிலும் அவர்கள் பங்கு கொள்வரா என வினவ, அவர்களது மறுப்புரையைக் கேட்டு, "இதுதான் உலகம், யாருக்காகக் கொள்ளை அடித்தேனோ அந்த நெருங்கிய உறவினர்கள் கூட என் விதியில் பங்கேற்கப்போவதில்லை" என்று உணர்ந்து முனிவரிடம் சரண் புகுந்து, அவரது வார்த்தைப் படி இறைவழிபாட்டில் ஈடுபட்டார்.
எல்லாவற்றையும் துறந்து தியானம் செய்த இளைஞன் நாளடைவில் தன்னைச் சுற்றிலும் கறையான் புற்று கட்டியதும் அறியாமல் பல ஆண்டுகள் தன்னை மறந்த தியானத்தில் ஆழ்ந்தான். கடைசியில் "ஓ முனிவனே எழுந்திரு!" என்ற குரல் அவனை எழுப்பியது. அவனோ, "நான் முனிவனல்ல, கொள்ளைக்காரன்!” என்று திகைத்து பதில் கூற, "இனி நீ கொள்ளைக்காரனும் அல்ல, உனது பழைய பெயரும் மறைந்து விட்டது. வால்மீகி - கறையான் புற்றிலிருந்து தோன்றியவர் என்று வழங்கப்படுவாய்" என்று அக்குரல் கூறியது.
திருவான்மியூர்
சென்னையின் முக்கியப் பகுதியான திருவான்மியூர், இவரது பெயரில் வழங்கப்படுவதே. திருவான்மீகியூர் என்று இருந்து பின் மருவி திருவான்மியூர் என்று வழங்கப்படலானது. மேலும் இங்கு வான்மீகி முனிவருக்குத் தனிக்கோயிலும் அமைந்துள்ளது.
விமர்சனம்
இவர் இயற்றிய இராமாயணம் கதையும், அதன் பாத்திரங்களை உண்மையென மக்கள் நம்பும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அதேவேளை இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள், விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள், அரசுகள் போன்றவற்றை ஆய்வுநோக்கில் பார்க்கும் போது, வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என வாதிடுவோரும் உள்ளனர். இது பொ.ஊ.மு. 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளதால், அந்தகாலத் தன்மைகளுக்கு அமைவாக, மந்திரம், மாயை உடன் இதிகாசச் சாயலுடன் எழுதப்பட்ட ஒரு வரலாறாகவும் இருக்கலாம் என கருதுவோரும் உளர்.
மேற்கோள்கள்
புலவர்கள்
சித்தர்கள்
இராமாயணக் கதைமாந்தர்கள்
முனிவர்கள் |
2384 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | இளங்கோவடிகள் | இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள், தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்பர்.இவர் சேர மரபைச் சார்ந்தவரென சிலப்பதிகார பதிகம் கூறுகிறது.
இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும்,
சைவக் கொற்றவையையும்
போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன. கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்
பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக்
கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்
பந்துங் கழங்குந் தந்தனர் பரசி
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர
ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும்
கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக்
கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி
இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் இத்தகைய இரத்தபலி பூசை ஏற்கும் கொற்றவை எங்கனம் சைவ சமய தெய்வமாகும்
மேற்கோள்கள்
சமணத் துறை அறிஞர்கள்
தமிழ்ப் புலவர்கள்
தமிழ் மெய்யியலாளர்கள் |
2385 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D | திருநாவுக்கரசு நாயனார் | அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர். இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.
இவரைத் திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால், இவரைத் தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர்.
பெயர்கள்
நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மதம் மாறியமையால் பெற்றமை, செயல்களாலும், கவியாலும் பெற்றவை எனப் பல பெயர்கள் இவருக்கு உள்ளன.
மருணீக்கியார் - இயற்பெயர்
தருமசேனர் - சமண சமயத்தைத் தழுவிய போது கொண்ட பெயர்
நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களைப் பாடியமையால் பெற்ற பெயர்
அப்பர் - திருஞானசம்பந்தர் அன்போடு அழைத்தமையால் வந்த பெயர்
உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியைச் செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்
தாண்டகவேந்தர் - தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் பெற்ற பட்டப்பெயர்
இளமைக் காலம்
திருநாவுக்கரசர் சோழநாட்டின் திருமுனைப்பாடி பகுதியிலிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் வேளாளர் குடியில் புகழனாருக்கும் மாதினியாருக்கும் பிறந்தார். இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும். இளமையில் சைவ சமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மதத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.
தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்குக் கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார்.
பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களைத் தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி செய்து முன்னோடியாக இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
சமண சமயத்தைச் சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களைத் திருநாவுக்கரசர் இறைவன் அருளால் வென்றார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டும், இறைவன் அருளால் மீண்டதைக் "கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே" எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தைத் தழுவினான்.
தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் இறைவனடி கலந்தார்.
கரக்கோயில்
அவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் மேலக்கடம்பூர், அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இங்கு அவர் என் கடன் பணி செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் எனப் போற்றப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும்.
அற்புதங்கள்
சமணர்களாலே, 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும், வேகாது உயிர் பிழைத்தார்.
சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும், சாகாது உயிர் பிழைத்தார்.
சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது.
சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும், அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.
வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
விடத்தினால் இறந்த மூத்த திருநாவுக்கரசை உயிர்ப்பித்தது.
காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே (மானசரோவர்) மூழ்கி, திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கயிலை காட்சி பெற்றது.
திருவங்க மாலை திருப்பதிகம்
திருநாவுக்கரசர், 49,000 தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். இவற்றில் சில பதிகங்கள், தாள அமைப்பினைச் சேர்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள்.
அப்பரின் பாடல்கள் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை. உதாரணத்திற்கு,
"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே"
("Mācil vīṇaiyum mālai matiyamum
vīcu těņṛalum vīŋkiḷa vēņilum
mūcu vaṇţaṛai pǒykaiyum pōņṛatē
īcaņ ěntai iṇaiyaţi nīļalē")
''ஈசனுடைய அடிகளில் சரணடைந்தால், மர நிழல் தரும் குளுமை போன்று இருக்கும்" என்று கூறிய அப்பர் அடிகள், "அந்த நிழலானது குற்றமற்ற வீணை இசை போன்றது; இளம் மாலையில் தோன்றிய நிலவின் குளுமையை ஒத்தது; வீசுகின்ற தென்றல் போன்றது; இளவேனிற் காலத்தின் உயிர்ப்பைக் கொண்டது; தாமரை மலர்களைச் சுற்றும் வண்டுகளைக் கொண்ட குளம் போன்றது" என்கிறார். அவர் உதாரணமாகக் கூறிய "அனைத்தும் மனதுக்கு இனிமை சேர்ப்பவை. அனைத்து இனிமைகளையும் ஒரு சேர அளிப்பது இறைவனது பாத நிழலே" என்கிறார் அப்பர்!
திருவதிகை வீரட்டானம் முதற்பதிகப்பாடல்:
கூற்றாயின வாறு விலக்ககலீர்
கொடுமை பலசெய்தனநான் அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டா னத்துறை யம்பானே.
இசை ஞானம்
திருநாவுக்கரசர், இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது. இவருடைய பாடல்களில், கீழ்க்காணும் பத்து பண்கள் காணப்படுகின்றன.
கொல்லி
காந்தாரம்
பியந்தைக்காந்தாரம்
சாதாரி
காந்தார பஞ்சமம்
பழந்தக்கராகம்
பழம் பஞ்சுரம்
இந்தளம்
சீகாமரம்
குறிஞ்சி
குரு பூசை
திருநாவுக்கரசரின் குருபூசையானது, சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. திருநாவுக்கரசர் நாயனாரின் குருபூஜை ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டாரத்தில் உள்ள கரகத்திக்கோட்டை கிராமத்தில் பால்குடம் காவடி எடுப்பது மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
உழவாரப் பணி
அறுபத்து மூன்று நாயன்மார்கள்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
சுந்தரமூர்த்தி நாயனார்
மாணிக்கவாசக நாயனார்
தேவாரம்
திருவாசகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தரம் 10 சைவநெறி ஆசிரியர் கையேடு இலங்கை
திருநாவுக்கரசர் வரலாறு
பன்னிரு திருமுறை அருளாளர்கள்
நாயன்மார்கள் |
2386 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D | சுந்தரமூர்த்தி நாயனார் | சுந்தரமூர்த்தி நாயனார் அல்லது சுந்தரர் (Sundarar) என்பவர் சைவ சமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார் எனப்படுகிறது. பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் எனச் சைவர்கள் கூறுகிறார்கள். இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினைச் 'சுந்தரர் தேவாரம்' என்றும் அழைப்பர். திருமணத்தினைத் தடுத்து, சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே, பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் திருமணம் செய்துவைத்தார்.
இவர் வாழ்ந்தது பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள், 7-ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே, சேக்கிழார், பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார்.
இவரை திருமுனைப்பாடி நாட்டை ஆண்டநரசிங்கமுனையர் என்ற மன்னனால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர். இவர் 38000 பதிகங்கள்பாடியதாககூறப்படிகிறது. ஆனால் கிடைத்தவை100 மட்டுமே. “வித்தகம் பேச வேண்டா விரைந்து பணி செய்ய வேண்டும்” என்று இறைவன் இவரிடம் கூறினார்.
சுந்தரர் தேவாரம்
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களைச் 'சுந்தரர் தேவாரம்' என்று அழைக்கின்றனர். இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களைப் பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.
இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38,000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால், பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரங்களில், 'செந்துருத்திப் பண்' கொண்டு பாடல் பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.
சுந்தரர் அருளிய திருப்பதிகங்களைத் ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.
சுந்தரர் வரலாறு
சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்ததாகக் கூறப்பட்டதால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.
சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.
தடுத்தாட்கொள்ளல்
மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று வந்த முதியவர் ஒருவர், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதாக சுந்தரர் கருதினார், "பித்தா பிறை சூடி..." என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனைத் தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்..." எனத் தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான்பெற்ற நெல்லைத் தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
திருமணங்கள்
திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, 'ஞாயிறு' என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான 'சங்கிலியார்' எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். உன்னை விட்டுப் பிரியமாட்டேன் திருவெற்றியூரிலேயே உன்னுடன் வாழ்வேன் என்று சுந்தரர் சங்லியாருக்கு சிவபெருமான் அறிய வாக்களித்து அவரை மணக்கிறார். சில காலத்துக்குப் பிறகு திருவாரூரில் பரவையாரின் நினைவு வந்து வாட்ட அவரைக் காணவேண்டி தான் கொடுத்த வாக்கை மறந்து திருவொற்றியூரிலிருந்து புறப்படுகிறார். அப்போது சுந்தரருக்கு இரு கண்களிலும் பார்வை அற்றுப் போகிறது. கொடுத்த வாக்கை மீறியதால் தனக்கு இவ்வாறு நேர்ந்ததாக சுந்தரர் உணந்தார். பின்னர் ஆரூர் இறைவனைப் பாடி பார்வையைப் பெறுவேன் என்று பாடி தன் பயணத்தைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தை அடைந்தபோது இவருக்கு இடது கண் பார்வை வந்தது. தன் பயணத்தில் வழியெல்லாம் பாடியபடி திருவாரூர் அடைந்த பிறகு சுந்தரருக்கு இன்னொரு கண் பார்வை கிடைத்தது. இது இறையருளாளே நடந்ததாக நம்பப்படுகிறது. இந்த தற்காலிகப் பார்வை இழப்புக்குக் காரணம் அமோரோசிஸ் பியுகாஸ் என்ற மருத்துவ சிக்கலே ஆகும், அதாவது விழித்திரையின் குருதி ஓட்டத்தில் திடீரென்று ஏற்படும் குறைவினால் ஏற்படும் தற்காலிக பாதிப்பாக இருக்கலாம் என்கிறார் வரலாற்று ஆய்வாளரும் கண் மருத்துவருமான இரா. கலைக்கோவன்.
சிவபெருமான் செயல்
அரசரான சேரமான் பெருமாள், இவருக்கு நண்பராயிருந்தார்.
இறைவனும், இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை எனப்படுகிறது. சேரமான் பெருமானை இவர் சந்தித்துத் திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார் எனப்படுகிறது. சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத் தொடங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றதாக நம்பப்படுகிறது. திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான், சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை, இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
முக்தி
சுந்தரர் தனது 18-ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார் என்று நம்பப் படகிறது.
அற்புதங்கள்
செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது
சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.
வெள்ளை யானையில் ஏறி, திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.
குருபூஜை
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருநாவுக்கரசு நாயனார்
மாணிக்கவாசகர்
அறுபத்து மூன்று நாயன்மார்கள்
தேவாரம்
பாடல் பெற்ற தலங்கள்
சுந்தரமூர்த்தி நாயனார் (1937 திரைப்படம்)
சுந்தரமூர்த்தி நாயனார் (1967 திரைப்படம்)
உசாத்துணைகள்
தரம் 10 சைவநெறி ஆசிரியர் கையேடு இலங்கை National Institute of Education
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Shaiva Saint Sundarar, Norton Simon Museum
Saint Sundarar with wife Paravai, Smithsonian
பன்னிரு திருமுறை அருளாளர்கள்
ஆதிசைவர்கள்
நாயன்மார்கள் |
2387 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D | மாணிக்கவாசகர் | மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும் திருக்கோவையாருமாகும். இவர் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார்.
மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (பொ.ஊ. 863–911) காலத்தில் வாழ்ந்தவர்.
இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. "சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" (பா.392) என்பதாலும், "இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும் வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் எனக் கருதப்படுகிறது.
ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).
இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், மணிமொழியார், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.
வரலாறு
தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது:
"திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரமராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார்.
உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.
நரியைப் பரியாக்கியது
ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் இருந்து நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான்.
மாணிக்கவாசகர், பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே, இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.(இது மெய்கண்டார் எழுதிய "சிவஞான போதம் அன்று)
'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்குப் போதித்துத் திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.
தன் மந்திரி கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.
பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகர் அழைத்துவரக் கட்டளையிட்டான்.
'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்துக் 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.
சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர்.
ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெயிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனைத் தஞ்சம் அடைந்தார்.
உடனே சிவபெருமானின் சிவகணங்களைக் குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே, இறைவனுக்குப் பரிமேலழகர் எனும் கரணியப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.
குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கிக் குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.
அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.
வைகை வெள்ளமும் வந்தியும்
சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது.
உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருத்தி மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா ? என்று கேட்கிறார். "செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்" என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது 'வேலையைத்' தொடங்குகிறார்.
அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.
கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.
அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய்க் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார்.
இறைவன் எழுதியவை
சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.
'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.
'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.
அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டுத் திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.
திருவாசகம்
திருவாசகம், திருக்கோவையார் ஆகியவை மாணிக்கவாசகரின் படைப்புகள் ஆகும்.
வாழ்ந்த காலகட்டம்
மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு என்றும் பொ.ஊ. 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.
சுந்தரருக்குப் பிற்பட்ட காலத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலரால் கருதப்படுகிறது.
அற்புதங்கள்
சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.
பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.
தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.
எல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.
ஜி. யு. போப் கருத்து
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார்.
இவற்றையும் பார்க்கவும்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருநாவுக்கரசு நாயனார்
சுந்தரமூர்த்தி நாயனார்
அறுபத்து மூன்று நாயன்மார்கள்
தேவாரம்
திருவாசகம்
பாடல் பெற்ற தலங்கள்
திருவெம்பாவை எளிய விளக்கம்
திருப்பள்ளியெழுச்சி எளிய விளக்கம்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தரம் 10 சைவநெறி ஆசிரியர் கையேடு இலங்கை National Institute of Education
பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்
தகவல் உதவி-அபிதான சிந்தாமணி
பன்னிரு திருமுறை அருளாளர்கள்
நாயன்மார்கள்
சைவ சித்தாந்தம்
இந்து சமயப் பெரியார்கள்
சிவத்தொண்டர்கள்
9வது நூற்றாண்டு இந்திய மக்கள்
கருநாடக இசை
பக்தி இயக்கம் |
2395 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D | முதலாம் இராஜராஜ சோழன் | அருண்மொழிவர்மன் அல்லது அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழப் பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவராவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 985 முதல் பொ.ஊ. 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னரே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
இவர் பொ.ஊ. 957 முதல் பொ.ஊ. 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராசகேசரி அருண்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988). தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் செத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சத்திரிய சிகாமணி) என்று புனைபெயர் கொண்டு வாழ்ந்தார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
புகழ் பெற்ற இளவரசன்
முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராசராச சோழன் அரியணை ஏறியதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன.
இரண்டாம் ஆதித்தன் கொலை
இராசகேசரி இரண்டாம் ஆண்டு கல்வெட்டு மூலம், இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம், இப்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் தற்போது மேலக்கடம்பூர் என்று அழைக்கப்படும் ஊரில் கொலை செய்யப்பட்டான் என்பது தெரியவருகிறது. இக்கல்வெட்டு 'பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து, விற்கும் பணியினை மன்னனின் கட்டளைப்படி சதுர் வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகத் தெரிவிக்கிறது. இந்த இராசகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராசராச சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5 ஆம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராசராச சோழனுடையது என்பது தெளிவாகிறது. உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தர சோழன் தன் இறுதி நாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். மகனை இழந்த சுந்தர சோழன், தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.
உத்தம சோழனுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லையென்று சொல்வதற்கில்லை; உத்தமச் சோழனுக்கு அரியணை ஏறவேண்டும் என்ற ஆசையிருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை. அரச குடும்பத்தின் மூத்த கிளையினன் என்ற காரணத்தால் அரியணை தனக்கே என்று அவன் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு சம்மதித்தான் என்றும் திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்குடிக் கல்வெட்டிலும் உள்ள குறிப்புகளை இணைத்துப் பார்க்கும் பொழுது புலனாகிறது.
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்). கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் செத்திரிய தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி, அரசப்பதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரசப் பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி வர்மன் அரசப்பதவியை மறுத்துவிட்டான்.
இதை, அருண்மொழி வர்மனின் அடக்கத்தால், உத்தம சோழனின் பேராசை வெற்றிகண்டது. அருண்மொழியை, கோழை, அரசியல் திறமை இல்லாதவன், சட்டப்படி உரிமை இல்லாதவன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, அவன் உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக் கொடுத்து, அவன் காலத்திற்குப் பிறகு, தான் பட்டத்திற்கு வருவதற்காக பொறுமையுடன் இசைந்தான் என்று கொள்ளலாம். மேலும், அருண்மொழியின் உடலில் காணப்பட்ட சில அடையாளங்களைப் பார்த்த பொழுது, மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூஉலகுக்கு வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை ஆளும் பொறுப்பைத் தானே மேற்கொண்டான் என்றும் தெரிவிக்கின்றன.
சோழர்களின் மெய்க்கீர்த்திகள்
பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவ்வறச் செயல்களை, தரும சாத்திரங்களைத் தழுவி செப்பேடுகளில் பொறித்து உரியவர்க்கு அளித்து வந்தனர். இச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்தனர். தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவன் இராசராச சோழனே.
இவருக்குப் பிறகு இவர் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். இவர் மகன் முதலாம் இராசேந்திரனின் ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவிளான மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன.
இராசராசனின் மெய்க்கீர்த்திகள்
சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். முதலாம் இராசராசன் மூன்று வித மெய்க்கீர்த்திகளைக் கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவரது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.
கீழ்வருவது இராசராச சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.
"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."
இரண்டாம் வகையான மெய்க்கீர்த்தியிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவரது 20ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராசராசன் மதுரையை அழித்தார் என்றும். கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டார் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவருடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றும் கூறுகிறது.
மேலும் இவன் காலத்திலேயே வட்டெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றியமைக்கப்பட்டன.
போர்கள்
கேரளப் போர்
இராசராசன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது; இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராசராசனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும், பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.
இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமர புயங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, 'சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய, கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராசராசன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாசுகர ரவிவர்மன் திருவடி (பொ.ஊ. 978–1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
மலைநாடு
பொ.ஊ. 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு என்பது இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை என்பது குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.
இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராசராசனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால், அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும், மேலும் இது, இராசராச சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார்.
உதகை கோட்டை எனப்படுவது இப்போது தென்குமரி நாட்டில் உள்ள உதயகிரி கோட்டை ஆகும். இங்கே சோழர் தளபதியாக இருந்த இராசேந்திரசோழன், இரணியசிங்கநல்லூரைத் தலைமையாக்கி வேணாட்டை ஆண்ட பாசுகர ரவிவர்மனால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தான். இதனால் கோபம்கொண்ட இராசராசசோழன் பெரும்படையுடன் வந்து வேணாட்டை வென்றான். உதயகிரியை அழித்தான். சேரநாட்டு அதர்வ வேதபாடசாலைகளை அழித்தான். இதையே காந்தளூர்ச்சாலை கலமறுத்தல் என்று தன் மெய்கீர்த்திகளிலில் குறிப்பிடுகிறான். இத்தகவல்களை கே. கே. பிள்ளை அவர்கள் அவரது தென்னிந்திய வரலாறு நூலில் சொல்கிறார். கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை, காந்தளூர்ச்சாலை பற்றி எழுதிய விரிவான ஆய்வுக்கட்டுரையும் இதைப்பற்றி பேசுகிறது.
ஈழப் போர்
ஈழம்
இராசராசனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் பொ.ஊ. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பற்றியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது'. 'தஞ்சையில் இராசராச சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.
இப்படையெடுப்பின் பொழுது, ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், பொ.ஊ. 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராசேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராசராசனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு (பொ.ஊ. 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரர்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராசராசன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
ஈழப் படையெடுப்பின் விளைவுகள்
சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது. ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளங்கிய பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராசராச சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் அரசர்களில் தாட்டியன் என்னும் பாண்டிய வேந்தன் தவிர மற்றவர்கள் அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராசராச சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான். ஆனால் இவனின் மகனான இராசேந்திரச் சோழன் காலத்திலேயே ஈழத்தின் தென்பகுதி தாட்டியனுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தமிழர்களின் கீழ் வந்தது. பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விசயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.
ஈழத்தில் சோழக் கோயில்கள்
இராசராசனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராசராசன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது பொ.ஊ. 10 முதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே (தஞ்சைப் பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.
பிற வெற்றிகள்
கங்கர்களின் கங்கபாடியும், நுளம்பர்களின் நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராசராச சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராசராசனின் காந்தளூர்ச் சாலை வெற்றியைத் தொடர்ந்து, கீழைச் சாளுக்கியரை எதிர்த்து வேங்கி நாட்டிற்குள் படையெடுப்பதற்கு முன்னர் மைசூர் நாடு கைப்பற்றப்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்தியில் இருந்து அறிய முடிகிறது. பின்னர் கொங்கு நாட்டிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து தடிகைபாடியையும் தலைக்காட்டையும் முதலில் தாக்கிய பொழுது சோழருக்கு பெரும் வெற்றி கிட்டியது. மேலும் அடுத்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கங்க நாட்டின் மீதான ஆதிக்கமும் சோழருக்குக் கிடைத்தது.
மேலைச் சாளுக்கியர்
மேலைச் சாளுக்கியர், இராசராசன் தலைமையில் ஏற்பட்ட சோழப்படையெடுப்பை உதாசீனம் செய்யவில்லை. பொ.ஊ. 922ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் இரண்டாம் தைலப்பன் சோழ மன்னனுக்கு எதிராக ஒரு வெற்றி பெற்றதாகவும் அவனிடமிருந்து 150 யானைகளைக் கைப்பற்றியதாகவும் கூறுகிறான். (சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி பொ.ஊ. 922ல் இந்தப் போர் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதை உண்மையென்று நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை. இராசராச சோழனின் கல்வெட்டுக்களின் படி சாளுக்கியர் மீதான படையெடுப்புக்கள் எதுவும் பொ.ஊ. 994 ஆண்டிற்கு முன் எதுவும் நடக்கவில்லை என்று தெரியவருகிறது).
சத்தியாசிரயனுடன் போர்
922ம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளில் இரண்டாம் தைலப்பன் இறந்தான். அதன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராசராசன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய பொ.ஊ. 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராசராச சோழனின் கல்வெட்டுகள் இச்சோழமன்னன் 'இரட்டப்பாடி' ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன. ஆனால் இக்கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். சத்தியாசிரயன் இராசராசனது கடல் போன்ற பெரும்படையைக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்வது நம்பக்கூடியதாயுள்ளது.
இராசேந்திரன் தலைமை
தார்வார் மாவட்டம் ஒட்டூரில் பொ.ஊ. 1007ம் ஆண்டைச் சேர்ந்த(929) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராசராச நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராசேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது நூறாயிரம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீச்சப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் பொருள் வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது. பகைவனின் கல்வெட்டுகளில் காணப்படும் நாச வேலைகளையும் கற்பழிப்புக்களையும் சோழ இளவரசன் செய்திருக்கக்கூடுமா என்ற வினா எழுந்தாலும் இராசேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது.
சாளுக்கியப் போரின் விளைவுகள்
சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. இராசராசனின் கல்வெட்டோ அல்லது இக்காலச் சாளுக்கிய மன்னரது கல்வெட்டுக்களோ பெல்லாரியில் இதுவரை அகப்படவில்லை. ஆனால் பொதுவாக, சோழ நாட்டின் தூரப் பகுதிகளில் அவர்களுடைய கல்வெட்டுகள் பெரிதும் காணப்படுவதில்லை. கங்கை, வேங்கி மண்டலங்களுக்கென்றே ஒரு மாதண்ட நாயகனை இராசராசன் தன் ஆட்சியின் இறுதியில் அமர்த்தியிருந்தான் என்பதே இவ்விரு மண்டலங்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்ததோடு சோழநாட்டுடன் சேர்ந்திருந்தன என்பதற்கும் போதுமான சான்றாகும்.
வேங்கி
இராசராச சோழன் ஆட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியலின் தொடர்ச்சியாக, அவன் வேங்கி விவகாரங்களில் தலையிட வேண்டியதாயிற்று, கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் இத்தலையீடு இருந்தது. சோழ ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே இராசராசனும் அவனுடைய சந்ததியினரும் தங்கள் வலிமையைத் துங்கபத்திரை ஆற்றின் கிழக்குக் கரையோரத்தில் பரவச் செய்ய முடிந்ததே தவிர, அவ்வாற்றின் மறுபக்கத்தில் தம் வலிமையைப் பரவ செய்ய முடியவில்லை. கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியருக்கிடையேயான வேறுபட்ட நிலைகளே இதற்குக் காரணமாகும்.
வேங்கியை ஆட்சி செய்த காலத்தில், கீழைச் சாளுக்கியர்கள் மேலைத் தக்காண இராட்டிரகூடர்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போரிட்டதன் விளைவாக வலியிழந்து, சோர்வுற்றதோடு உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பலியாயினர். சோழரின் வரவினால் கீழைச் சாளுக்கிய மன்னர் குடும்பம் உற்சாகம் பெற்று அடுத்து நூறு ஆண்டுகள் சோழரது அதிகாரத்திற்குற்பட்ட நண்பர்களாய்த் திகழ்ந்து, அதன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனது சந்ததியினரான சோழ சாளுக்கியர் என்றழைக்கப்பட்டவரின் காலத்திலும் சோழநாடும் மேம்படும் வகையில் உதவிபுரிந்து தங்கள் நன்றிக் கடனைத் தீர்த்தனர்.
மேலைச் சாளுக்கியரோ பல நூற்றாண்டுகளாக இராட்டிரகூடர்களின் அடிமைகளாக இருந்து அப்போது தான் இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாக உருவெடுத்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சத்தியாசிரயனின் செப்ரோலு கல்வெட்டு கூறுவது போல, கீழைச் சாளுக்கியரின் வலிமையையும் தம்முடன் இணையச் செய்யும் முயற்சியையும் இவர்கள் மேற்கொண்டனர். ஆனால் வடக்கில் பாராமாரர்களும் தெற்கே சோழர்களும் இவர்களை ஒரே வேளையில் தாக்கியதால் தம் முன்னோரது ஆட்சியில் இருந்த இரட்டப்பாடி ஏழரை இலட்சம் பகுதியை இழக்காமல் பாதுகாப்பதைத் தவிர வேறு முயற்சிகளில் இவர்களால் ஈடுபடமுடியவில்லை. வேறு நாடுகளைத் தம் கீழ்க் கொண்டுவரும் முயற்சிக்கு இவர்களுக்கு நேரம் கிடைக்காததோடு, உற்சாகமும் இல்லாமல் போயிற்று. இந்நிலைக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறமுடியாது என்றாலும் பொதுவாக எந்த அரச வமிசத்திலும் முதல் மன்னர்களே சிறந்த ஆட்சியாளர்களாய் விளங்கினாலும் இத்தகைய அரச வமிசங்கள் தொடர்ந்து சில தலைமுறைகள் சிறந்து விளங்குகின்றன.
வடக்கில் சோழர் ஆட்சி பரவுதல்
முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே நெல்லூர் வரையில் பரவியிருந்தது. இராட்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. இவர்கள் காலத்தில் சென்னைக்கு அருகேயுள்ள திருவொற்றியூர் உட்பட்டிருந்த வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராசராசன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.
வேங்கிப் போர்
கீழைச் சாளுக்கியரின் இன்னல்கள் பொ.ஊ. 945–970 காலத்தில் ஆட்சி செய்த இரண்டாம் அம்மன் காலத்தில் தொடங்கின இவ்வின்னல்களுக்குப் பேராசை கொண்ட இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணனுக்கும் கீழைச் சாளுக்கியரின் இளைய குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களே காரணம்.
பொ.ஊ. 945ம் ஆண்டில் தன் ஒன்றுவிட்ட அண்ணனைப் புறக்கணித்துவிட்டு, இரண்டாம் அம்மன் அரியணையைப் பெற்றான். இளையவன் வழிவந்தவர்களான பாடபனும் இரண்டாம் தாழனும் ஆட்சியைக் கைப்பற்ற தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். முதலாம் பராந்தகச் சோழனை வென்ற இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணன், வேங்கி நாட்டின் மீதும் தன் கவனத்தைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய இளவரசர்களுக்கிடையே உண்டான உட்பகைகள் இம்மன்னனுக்குச் சாதகம் ஆயின. இரண்டாம் அம்மன் பேடகல்லு மன்னனான செடாசோட வீமனின் சகோதரியை மணந்தான். இக்காலத்தில் புகழ்பெற்று நிலவிய வீமன் தன் மைத்துனனுக்குப் பெரிதும் உதவிபுரிந்தான்.
இரண்டாம் அம்மனின் ஆட்சி இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 970 வரை நிலவினாலும், இது நிலையற்றதாகவே இருந்தது. இம்மன்னன் அரியணை ஏறிய பொழுது இரண்டாம் யுத்தமல்லன் என்பவனோடு போரிட்டு வெற்றியடைந்தான். ஆனால் யுத்தமல்லனின் தோல்வி, அவனது புதல்வர்களான பாடபனாலும் இரண்டாம் தாழனாலும் பழிவாங்கப்பட்டது. வேங்கி நாட்டிலிருந்த சிலர், மற்றும் இராட்டிரகூட மன்னன் கிருட்டிணன் உதவியுடன் இரண்டாம் அம்மனை நாட்டை விட்டே விரட்டி, அவனது அரியணையையும் கைப்பற்றினர்.
பாடபன், தாழன் ஆகியோரது செப்புப் பட்டயங்களில் கூறப்பட்டுள்ள கிருட்டிணனின் உதவி, இவர்களுக்கு இச்சமயங்களில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்திற்கு ஓடிவிட்ட அம்மன், கொலனு நாட்டுத் தலைவனான நிருபகாமாவின் உதவியுடன் நாடு திரும்பி 955க்கு முன்னர் தாழனது ஆட்சியை முடித்தான். கொலனுத் தலைவனின் மகளை மணந்த அம்மன், தாழனுடன் செய்த போரில் தாழனைக் கொன்றான். இது அம்மன் தன் தாயாதியான ஒரு மன்னனை விண்ணுலகத்திற்கு அனுப்பினான் என்று சக்திவர்மனுடைய படிப்பற்று பட்டயம் கூறுவதிலிருந்து புலனாகிறது.
ஆனால் விரைவிலேயே மூன்றாம் கிருட்டிணன் வேங்கி நாட்டின் மீது மீண்டும் படையெடுக்க, அம்மன் இரண்டாம் முறையாக கலிங்கத்திற்குத் தப்பி ஓடவேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சி அம்மனுடைய பதினோராம் ஆண்டிற்குப் பிறகே நடைபெற்றது என்று மாங்கல்லுப் பட்டயங்கள் கூறுகின்றன. வேங்கி நாட்டில் அம்மனுக்கு விரோதமான ஒரு கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற தானார்ண்ணவனிடம் ஆட்சிப் பொறுப்பை கிருட்டிணன் அளித்தான். ஆனால் இராட்டிரகூடர் வேங்கியை விட்டு அகன்றவுடன், மீண்டும் அம்மன் தன் நாட்டை அடைந்து தானார்ணவனுடன் சமாதானம் செய்துகொண்டு, சிலகாலம் அந்நாட்டை ஆட்சி செய்தான். முடிவில் தானார்ணவன் மீண்டும் அம்மனுக்கு எதிராகக் கிளம்பி அம்மன்னனைப் போரில் கொன்று தானே அரியணையைப் பற்றினான்.
வீமன், மூன்றாம் கிருட்டிணனின் அதிகாரத்திற்குட்பட்டவனாயிருந்து, இம்மன்னன் வேங்கி நாட்டைக் கைப்பற்ற உதவியிருக்கக்கூடும். ஆனால், கிருட்டிணனின் மரணத்திற்குப் பிறகு தனியுரிமையைப் பெற்று, அம்மன் மீது வெற்றிகொண்ட தானார்ணவனை எதிர்த்து, பொட்டாடி என்ற பகுதியைத் தாக்கி கைப்பற்றினான். இச்சண்டையில் வீமன், தானார்ணவனைக் கொன்று, அவனது குழந்தைகளை விரட்டியதோடு, வேங்கி நாட்டை முழுவதையும் கைப்பற்றினான். தானார்ணவனின் மரணத்திற்கும், இவன் மகன் முதலாம் சக்திவர்மனின் ஆட்சி தொடங்கியதற்கும் இடையேயான 25 ஆண்டுகள்(973 – 999) ஓரு இடையீட்டுக் காலம் என்றும் ஊழ்வினையால் ஏற்பட்ட தீயுழிக்காலம் என்றும் கீழைச் சாளுக்கியர் தம் சாசனங்களில் குறிப்பிடுகின்றனர்.
இராசராச சோழன் அரியணையேறிய பொழுது, இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் எழுச்சியுற்றனர். தானர்ணவனின் மக்கள் சோழநாட்டில் தங்கியிருந்ததே மேலைச் சாளுக்கியருக்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய கொள்கையை உருவாக்க இராசராசனுக்கு பெரிதும் உதவியது. இவர்களையே கருவியாகக் கொண்டு, வேங்கிநாட்டின் விவகாரங்களில் தலையிட இராசராச சோழன் துணிந்தான். அதே வேளையில் செடாசோட வீமனும் மேலைச் சாளுக்கியரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராசராசன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்க்க வீமன் அனுப்பிய ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராசராசன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்றும் முடிவாக செடாசோடன் என்னும் பேரும் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் அதாவது வீமனையும் தோல்வியுறச் செய்தான் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.
1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் பொ.ஊ. 999ல் அரியணையில் அமர்ந்தான் என்றும் அதே ஆண்டில் 'இடையீட்டுக் காலம்' முடிவுற்றது என்பதும் தெளிவாகிறது.
வீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராசராசனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்கு சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.
மாலத் தீவுகளைக் கைப்பற்றல்
இராசராசனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் இராசேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராசராசன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
இராசராச சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராசராசேச்சரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தென்னிந்திய கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராசராசனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது. இராசராசன் காலத்தில் இராசராசேச்சரம் என்று அழைக்கப்பட்ட இக்கோவிலின் பெயரானது பெருவுடையார் கோவில் என்ற தமிழ்ப் பெயரின் வடமொழி வடிவமாகும்.
இராசேந்திரன் இளவரசுப் பட்டம் பெறுதல்
இராசராச சோழன் தன் ஆட்சி முடிவில் தன் மகன் இராசேந்திரனை அரசாங்க அலுவல்களில் தன்னுடன் கலந்து கொள்ளச் செய்தான். இராசராசனின் நான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் இராசேந்திரனை இளம் அரசகுமாரன் என்று குறிப்பிடுவதால், இளவரசுப் பட்டம் பெற்ற பொழுது இவன் குறைந்தது இருபத்தைந்து வயதினனாக இருந்திருக்க வேண்டும். இராசராச சோழனின் 29-ம் ஆண்டுக் கல்வெட்டுகள் தஞ்சையில் ஏராளமாகக் கிடைப்பதால், இம்மன்னனின் சிறந்த ஆட்சி பொ.ஊ. 1014ல் முடிவுற்றது என்று தெரியவருகிறது.
நிர்வாகம்
நிலவரியை நிர்ணயிக்க வேண்டி நாடெங்கும் நிலங்களை அளந்து, நிலத்திற்கேற்ப வரி விதித்து, இப்போதைய நிர்வாகத்தில் உள்ளது போல் செயலாளர்களைக் கொண்ட மத்திய அரசை இராசராச சோழன் நன்கு அமைத்தான். மேலும் நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆங்காங்கு மேற்பார்வைக்காக அமர்த்தி, கிராம சபைகளையும் மற்றப் பொதுக்குழுக்களையும் பொதுக் குழுக்களையும் தணிக்கையின் மூலம் கட்டுப் படுத்தினான். அதனால் நிறைந்த நிலைப்படையை உருவாக்கி, இராசேந்திரனின் கீழ் மேலும் பல வெற்றிகளை அடைந்த பெரும் கப்பற்படையை நிறுவி, தென் இந்தியாவின் வரலாற்றிலேயே இராச்சியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவனாகத் திகழந்தான்.
சமயக் கொள்கை
ஆழ்ந்த சிவபக்தனான இராசராசன் இந்தியாவின் பெரும் இராசதந்திரிகளைப் போன்று, எல்லா சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை ஆதரித்து வந்தான். தஞ்சைப் பெருங் கோயிற் சுவர்களில் காணப்படும் அழகிய சிற்பங்களிலிருந்து இம்மன்னன் கல்வெட்டுகளில் இவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் விட்டுணு ஆலயங்களிலிருந்தும் இராசராசன் தனது சமயக் கொள்கைகளில் தாராள மனப்பான்மை உடையவனாகவே இருந்தான் என்று தெரியவருகிறது. நாகப்பட்டினத்தில் சிரீவிசயம், கடாரம் ஆகியவற்றின் அரசன் சைலேந்திர மன்னன் திருமாற விசயோதுங்க வர்மனால் சூடாமணி விகாரம் கட்டப்பட்டபொழுது அம்மன்னனை பெருதும் ஊக்குவித்தான் என்று புகழ் வாய்ந்த லெய்டன் பட்டயங்கள் கூறுகின்றன.
பட்டங்கள்
இராசராசனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன.
அழகிய சோழன்
மும்முடிச்சோழன்
காந்தளூர் கொண்டான்.
சோழநாராயணன்.
அபயகுலசேகரன்
அரித்துர்க்கலங்கன்.
அருள்மொழி
இரணமுக பீமன்
ரவி வம்ச சிகாமணி
ராச பாண்டியன்.
ராச சர்வக்ஞன்.
இராசராசன்
இராச கேசரிவர்மன்
சோழேந்திர சிம்மன்.
இராச மார்த்தாண்டன்.
இராசேந்திர சிம்மன்.
இராச விநோதன்.
உத்தம சோழன்.
உத்துக துங்கன்.
உய்யக் கொண்டான்.
உலகளந்தான்.
கேரளாந்தகன்.
சண்ட பராக்கிரமன்
சத்ருபுசங்கன்.
சிங்கனாந்தகன்
சிவபாத சேகரன்.
சோழகுல சுந்தரன்.
சோழ மார்த்தாண்டன்.
திருமுறை கண்ட சோழன்.
தெலிங்க குலகாலன்.
நித்ய விநோதன்.
பண்டித சோழன்.
பாண்டிய குலாசனி
பெரிய பெருமாள்.
மூர்த்தி விக்கிரமா பரணன்
சென நாதன்.
செயங்கொண்ட சோழன்.
சத்திரிய சிகாமணி.
கீர்த்தி பராக்கிரமன்.
தைல குலகாலன்.
மேற்கண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் இராசராச சோழன் அழைக்கப்பட்டுள்ளார்.
குடும்பம்
இராசராசன் பல பெண்களை திருமணம் செய்திருக்கிறார். அவருடைய பட்டத்து அரசியாக உலகமகாதேவியார் என்பவர் இருந்துள்ளார். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராசராசன் திருவாயிலிலுள்ள ஒரு கல்வெட்டில் இராசராசனின் பட்டத்து அரசியான உலகமகாதேவியாரும், சோழமகாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, இலாடமாதேவி ஆகிய மனைவிமார்களும் கோயிலுக்கு கொடைகள் அளித்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராசராசனுக்கு மனைவிமார் பலராவர். கல்வெட்டுகளில் மட்டும் 15 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர் உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் முதலியோர் ஆவர். இவர்களை இராசராசன் ‘நம் பெண்டுகள்’ என்று கல்வெட்டில் குறித்தனன். இவருள் உலகமாதேவியார் பெயரே கல்வெட்டுகளில் முதலில் குறிக்கப்பட்டுள்ளது. திருவிசலூரில் இராச ராசன் துலாபாரம் புக்கபோது பட்டத்தரசியான தந்திசக்தி விடங்கியார் இரணியகருப்பம் புக்கனர்; திருவிச நல்லூர்ப் பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்ய 45 பொற் காசுகள் தானமளித்தார். இந்த அம்மையாரே திருவையாற்றில் கற்றளி ஒன்று எடுத்து அதற்கு ‘உலகமாதேவீச்சரம்’ எனத் தம் பெயரிட்டார். இதனைக் குறிக்கும் கல்வெட்டில், உடையார் இராசராச தேவர் நம்பிராட்டியார் தந்திசக்தி விடங்கியாரான பூர் உலக மகா தேவியார்... என்பது காணப்படலால், இரணியகருப்பம் புக்கவர் உலக மகாதேவியாரே என்பது வெளிப்படை தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசன் பிரதிமமும் உலகமகாதேவியார் பிரதிமமுமே எழுந்தருளப் பெற்றன. இவற்றால், இவரே இராசராசன் முதற் பெருந்தேவியார் என்பது விளங்கும்.
இராசராசன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தான். பல கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவனது மனைவிமார்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பதினைந்து, ஆயினும் உலக மகாதேவி என்று அழைக்கப்பட்ட தந்திசக்தி விடங்கி என்பவளே பட்டத்தரசியாக விளங்கியவள். இராசராச சோழனின் ஆட்சியின் 29ம் ஆண்டில் திருவிசலூரில் இம்மன்னனுடன் இருந்தாள், திருவிசலூர்க் கோயிலில் இம்மன்னன் துலாபாராம் புகுந்த பொழுது தந்திசக்தியும் இரணிய கருப்பம் புகுந்தாள்.
இராசராசனின் ஒரே மகனான இராசேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராசராசனின் மகள் குந்தவை, சாளுக்கிய விமலாதித்தனை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராசராசன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சைப் பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.
இராசராசன் மூன்று புதல்விகளைப் பெற்றிருத்தல் வேண்டும், ஏனெனில் திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டு சாளுக்கிய விமலாதித்தனை மணந்த இளைய குந்தவையைத் தவிர, மாதேவடிகள் என்பாளை நடு மகளாகக் குறிப்பிட்டுள்ளது.
இராசராசனின் படைப்பிரிவுகள்
இராசராசனின் படையில் பல்வேறு படைப்பிரிவுகள் இருந்துள்ளன என்பது தஞ்சை கோயில் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. அந்தப் படைப்பிரிவுகளின் பெயர்கள்;
பெருந்த நாட்டு ஆனையாட்கள்
பண்டித சோழ தெரிந்த வில்லிகள்
உத்தம சோழ தெரிந்த வில்லிகள்
நிகரிலி சோழ தெரிந்த உடநிலை குதிரைச் சேவகர்
மும்மடி சோழ தெரிந்த ஆணைப்பாகர்
வீர சோழ அனுக்கர்
பராந்தக கொங்காவலர்
மும்மடி சோழ தெரிந்த பரிவாரத்தார்
கேரளாந்தக தெரிந்த பரிவாரத்தார்
செனநாத தெரிந்த பரிவாரத்தார்
சிங்களாந்தக தெரிந்த பரிவாரத்தார்
சிறுதநாட்டு வடுக காவலர்
வலங்கை வேலைக்காரர்
பெருந்தநாட்டு வலங்கை வேலைக்காரப் படைகள்
அழகிய சோழ தெரிந்த வலங்கை வேளைக்காரர்
அரிதுகலங்கன் தெரிந்த வலங்கை வேளைக்காரர்
சண்டபராகிரம தெரிந்த வலங்கை வேளைக்காரர்
திரய சிகாமணி தெரிந்த வலங்கை வேளைக்காரர்
மூர்த்த விக்கிரமபரண தெரிந்த வலங்கை வேளைக்காரர்
நித்த வினோத தெரிந்த வலங்கை வேளைக்காரர்
இராச கந்திரவ தெரிந்த வலங்கை வேளைக்காரர்
இராசராசன் தெரிந்த வலங்கை வேளைக்காரர்
இரானாமுக பீம தெரிந்த வலங்கை வேளைக்காரர்
விக்கிரமபரண தெரிந்த வலங்கை வேளைக்காரர்
கேரளாந்தக வாசல் திருமெய்க்காப்பாளர்
அனுக்க வாசல் திருமெய்க்காப்பாளர்
பரிவார மெய்க்காப்பாளர்கள்
பலவகை புறம்படிகாவலர்
அதிகாரிகளும் திறை செலுத்திய குறுநில மன்னர்களும்
இராசராசன் சோழனுடைய அதிகாரம் கங்க, வேங்கி மண்டலங்களிலும் கங்க நாட்டு மன்னனுக்குத் திறை செலுத்திய குறுநில மன்னர்கள் மீதும் பரவியிருந்தது. மும்முடிச் சோழன் என்றழைக்கப்பட்ட பரமன் மழபாடியார் என்னும் படைத்தலைவன் சீத்புலி, பாகி ஆகிய நாடுகளை வென்றவன். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், பழுவூரைச் சுற்றியுள்ள சிறுபகுதி ஒன்றின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தவர் பழுவேட்டரையர் என்பவர்களாவார். இவர்கள் சோழ குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையரின் இளவரசியை மணந்திருந்தான். இராசராசனுக்குத் திறை செலுத்திய பழுவூர்க் குறுநில மன்னனான அடிகள் பழுவேட்டரையன் கண்டன்மறவன் என்பவன் குறுநில மன்னர்களுக்கு உரிய சிறப்புக்களையும் பெற்று ஆட்சி செய்து வந்தான்.
மதுராந்தகன் கண்டராதித்தன் உத்தம சோழனின் மகன் ஆவான், இராசராசன் ஆட்சியில் இவன் கோயில்களைக் கண்காணித்து, அவற்றில் தவறிழைத்தவர்களை விசாரித்து, தண்டித்து, எதிர்காலத்தில் தவறிழைக்காதபடி நல்ல நிலையில் பாதுக்காகும் ஏற்பாடுகளைச் செய்தான்.
வைதும்பர்களைப் போன்று, முதலாம் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்களும், சோழர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களது நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளாகப் பங்கேற்றனர். மாறவன் நரசிம்மவர்மன் என்ற வாண மன்னன் தென் ஆற்காடு மாவட்டத்தில் செம்பையை அடுத்த பகுதிகளை இராசராசனது இறுதிக் காலத்தில் ஆட்சி செய்தான்.
இராசராசன் பற்றிய புனைவு ஆக்கங்கள்
இராஜராஜ சோழன் - கலைமாமணி ஆர்.ராமநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடக பிரதி. இந்த மேடை நாடகபிரதியே பின்னர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்நாடகப்பிரதி நூல்வடிவாக பிரேமா பிரசுரம் சென்னை-24 ஆல் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய பல்கழைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட Study Material ஆகவும் இந்நூல் காணப்படுகின்றது.
பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட வரலாற்று நாவல் இதில் அருண்மொழிதேவன் எனும் இயற்பெயருடன் இராச இராசனின் இளமைப்பருவம் பற்றிய தகவல்களுடன் நாவல் எழுதப்பட்டுள்ளது.
உடையார் – பாலகுமாரனால் எழுதப்பட்டது. இராச இராசன் பேரரசனான பின்னர் நடந்த நிகழ்வுகளைப்பற்றி குறிப்பிடுகின்றது.
காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவால் எழுதப்பட்டது. இராசராசன் காலத்தில் காந்தளூர் சாலையில் இடம்பெற்ற போர் பற்றிய நிகழ்வுகளை குறிக்கின்றது.
சேரர் கோட்டை (புதினம்) - கோகுல் சேஷாத்ரியால் எழுதப்பட்ட இந்த வரலாற்று நாவல், இராசராசனின் முதற் போரான சேரநாட்டுக் காந்தளூர்ச் சாலை படையெடுப்பை விரிவாகச் சித்தரிக்கின்றது
ராஜா ராஜா சோழன் - ச .ந .கண்ணன் எழுதிய புத்தகம் , கிழக்கு பதிப்பகம் வெளியீடு
காவிரி மைந்தன் (அனுஷா வெங்கடேஷ்)
இராஜகேசரி - கோகுல் சேஷாத்ரியால் எழுதப்பட்ட இந்த வரலாற்று நாவல், இராசராசர் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது
வேங்கையின் மைந்தன் (அகிலன்)
இராச இராசன் சமாதி
முதலாம் இராச இராச சோழனின் நினைவிடம் (பள்ளிப்படை) தஞ்சாவூர் மாவட்டம், பட்டீச்சரம் அருகே உள்ள உடையாளூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சவன்மாதேவீச்சரம்
முதலாம் இராசராச சோழனின் தேவியும், பழுவேட்டரையரின் திருமகளுமாகிய பஞ்சவன்மாதேவியார் சிவனடி சேர்ந்தபின்பு அவ்அம்மையாரை பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே பஞ்சவன்மாதேவீச்சரமாகும். இராசேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.
மரபுரிமை பேறுகள்
கவிஞர் மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன் இராஜராஜ சோழனின் வரலாற்றை உடையார் எனும் புதினமாக படைத்துள்ளார்.
1995ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல் துறை இராஜராஜ சோழனின் அஞ்சல் தலை வெளியிட்டது.
2014இல் இராஜராஜ சோழன் முடிசூட்டிக் கொண்ட 1000வது ஆண்டை நினவு கூற இந்தியக் கடற்படை விழா கொண்டாடியது.
இராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
உத்தம சோழன்
இராசேந்திர சோழன்
சோழ நாடு
சோழர்
பஞ்சவன்மாதேவீச்சரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இடைக்காலச் சோழ அரசர்கள்
சோழர்
1014 இறப்புகள்
947 பிறப்புகள்
இந்தியப் பேரரசர்கள் |
2397 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D | உத்தம சோழன் | உத்தம சோழன், பொ.ஊ. முதல் பொ.ஊ. வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவார். கண்டராதித்தர் இறந்தபின், இவருக்குப் பதிலாகக் கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சய சோழனின் மகன், இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு வந்தார். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவர் ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தார். இவர் மதுராந்தகன் என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் இராசராச சோழன் அரியணை ஏறினார்.
இவர் அரசுக்கட்டில் ஏறுவதற்கு முன்பே காஞ்சி வரையுள்ள தொண்டைமண்டலம் சோழர் ஆட்சிக்குட்பட்டு விட்டது. ஆதித்த கரிகாலனுடைய கல்வெட்டுகள் உத்திரமேரூர், காஞ்சிபுரம், தக்கோலம், ஆரணி, திருவண்ணாமலை முதலிய இடங்களில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் நிலவிற்பனை, அறச்செயல், திருப்பணி, அரசியல் தொடர்பானவையாகக் காணக்கிடத்தலின், ஆதித்தன் காலத்திலேயே தொண்டை நாட்டில் அமைதி உண்டாகி விட்டதென்பதை அறியலாம். உத்தம சோழன் காலத்திய கல்வெட்டுகள் பலவும் செப்பேடு ஒரு தொகுதியும் கிடைத்துள்ளன. இவர் பரகேசரி என்னும் பட்டம் பெற்றவர். பெயரின்றிப் ‘பரகேசரி’ என்பது மட்டுமே கொண்டுள்ள கல்வெட்டுகள் எல்லாம் இவர் காலத்தனவே என்று சில சான்றுகள் கொண்டு ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். சோழர் நாணயங்களில் இவர் காலத்தவைவே பழைமையானவையாகும். இவர் காலத்து பொற்காசு ஒன்று கிடைத்தது. அதன் இருபுறங்களும் ஒருபடித்தாகவே இருக்கின்றன, நடுவில் ஒரு புலி உட்கார்ந்து கொண்டு வலப்புறமுள்ள மீனை நோக்குகிறது. நாணயத்தைச் சுற்றிலும் உத்தம சோழன் பெயர் கிரந்த எழுத்துகளிற் குறிக்கப்பட்டுள்ளது. அப்பொற்காசு 40 முதல் 60 குன்றிமணி நிறையுள்ளது என்று நாணய ஆராய்ச்சியாளரான எலியட் கூறியுள்ளார்.
கொங்குமண்டலத்தில் படைத்தலைவன்
கொங்கு நாட்டில் இவருக்குப் படைத்தலைவனாக விளங்கிய ஒருவருக்கு இந்த வேந்தன் தன் பெயரை விருதுப் பெயராக அணிந்துகொள்ள ஒப்புதல் வழங்கினார். மேலும் பட்டவர்த்தனன் என்னும் பட்டப்பெயரையும் வழங்கினார்.
இதனால் இப் படைத்தலைவன் பெயர் பட்டவர்த்தனன் உத்தமச்சோழன் என வழங்கப்படலாயிற்று.
இறப்பு
உத்தம சோழன் பொ.ஊ. 985-ஆம் ஆண்டில் இறந்தார். அவருக்கு குறைந்தபட்சம் ஒரு மகனாவது (மதுராந்தகன் கண்டராதித்தன்) இருந்தார். இருந்தாலும் ஆட்சி உரிமை இரண்டாம் பராந்தக சோழன் குடும்பத்திற்கு சென்று விட்டது. உத்தம சோழனுக்குப் பின்னர் இராசராச சோழன் அரசன் ஆனார். மதுராந்தக கண்டராதித்தர் இராசராச சோழன் அவையில் அதிகாரியாக பணி செய்தார்.
கதைகள்
இவரது கதாபாத்திரத்தைக் கொண்ட கதைகளில் புகழ் பெற்றவை பொன்னியின் செல்வன்.
மேற்கோள்
இடைக்காலச் சோழ அரசர்கள்
985 இறப்புகள்
இந்திய அரசர்கள் |
2399 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | திருவாசகம் | திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.
அமைப்பு
திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.
சிவபுராணம்,
கீர்த்தித் திருவகவல்,
திருவண்டப்பகுதி,
போற்றித் திருவகவல்
என்னும் நான்கு பெரும் பகுதிகள் இதில் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து திருச்சதகம் 100 பாடல்களும், நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களையும், திருவெம்பாவை 20 பாடல்களையும், திருவம்மானை 20 பாடல்களையும் கொண்டது.
திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரையுள்ள ஆறு பகுதிகள் 20 பாடல்களைக் கொண்டுள்ளன. மற்றவை பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களாக உள்ளன.
சிறப்பு
மாணிக்கவாசகரின் இந்நூலினைப் பல சமயத்தவரும் புகழ்ந்துள்ளனர்.
மாணிக்கவாசகர் எழுதி தில்லையில் இறைவனிடம் வைக்க அவரே கையெழுத்தினை இட்டதாகக் கூறுவர்.
தமிழில் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் எனும் பழமொழி உள்ளது.
மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; தெய்வம் (கண்ணன்) மனிதனுக்கு (அர்ச்சுனன்) கூறியது கீதை; மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள் என்றொரு மூதுரையும் தமிழில் உள்ளது.
"பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் சிறப்புடையது. (10-ஆவது திருமுறை). ஆனால், அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே' - திருமுருக கிருபானந்த வாரியார்.
இசை வடிவில்
இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறை பக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது. திருவாசகத்திற்குத், தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார் இளையராஜா.
இவற்றையும் காண்க
சிவபுராணம்
மேற்கோள்கள்
Thiruvasagam (Tamil) by Manikkavasaga Swamigal (Author)
வெளி இணைப்புகள்
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள திருவாசகத் தொகுப்பு-1தொகுப்பு-2
திருவாசக உரை
திருவாசக உரை - விக்கி நூல்கள்
திருவாசகம் ஆன்டிராய்டு இயங்குதளத்தில்
சைவத் திருமுறைகள்
பக்தி இயக்கம் |
2401 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF | ஐக்கிய தேசியக் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க, United National Party, ) இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் டி. எஸ். சேனாநாயக்க ஆவார்.
கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இவரின் தலைமையின் கீழேயே கட்சி 2002 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.
மேற்கோள்கள்
இலங்கை அரசியல் கட்சிகள் |
2403 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D | மகாவம்சம் | மகாவம்சம் (Mahawamsa அல்லது Mahawansa) (பாளி மொழி: மஹாவம்ச அல்லது மஹாவங்ச) சுருக்கமாக. Mhv. அல்லது Mhvs. என்பது இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கி, அதேவேளை பௌத்த மதத்தை முதன்மைப் படுத்தி பௌத்த பிக்குகளினால் பாளி மொழியில் ஏட்டுச்சுவடிகளில் செய்யுள் வடிவில் காலவரிசையாக குறித்து வைப்பட்டவற்றை மூலமாகக்கொண்டு, தொகுக்கப்பட்ட இலங்கையின் பழமையான தொகுப்பு நூலாகும். இது இதற்கு முந்திய தொகுப்பு நூலான தீபவம்சம் எனும் நூலை தழுவி தொகுக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த நூல் பொ.ஊ. 6ம் நூற்றாண்டளவில், பாளி மொழியில், மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்குவினால் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதனடிப்படையில் மகாவம்சம் நூலின் உரிமையாளர் மகாநாம தேரர் ஆகும். இதனை இலங்கையின் வரலாற்று ஆவணமாக சிங்கள பௌத்த பெரும்பாண்மை மக்கள் கூறிவந்தாலும், முழுமையான ஒரு வரலாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனும் கருத்து வரலாற்றாசிரியர்களிடையே உள்ளன. அதேவேளை இலங்கையில் வரலாற்று குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றிருப்பதனால், மகாவம்சம் நூலைத் தவிர்த்துவிட்டு இலங்கையில் வரலாற்றை ஆய்வுசெய்ய முடியாது எனும் கருத்தும் வரலாற்றாசிரியர்களிடையே உள்ளன.
இந்த நூல் மகத நாட்டில் உருவெல எனும் இடத்தில் அரச மரத்தடியில் கௌதம புத்தர் அமர்ந்திருந்த வேலை; "பௌத்தம் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்றும், இலங்கையின் பூர்வக் குடிமக்களான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவித்து புனிதப்படுத்த வேண்டும் என்றும் எண்ணம் புத்தருக்கு புலனாகுகிறது" எனும் பௌத்த கற்பனைக் கருத்துருவாக்கத்தில் இருந்து தொடங்குகிறது. இப்படியான கற்பனை கருத்துருவாக்கங்கள் மகாவம்சத்தில் நிறையவே உள்ளன. இவ்வாறான கருத்துருவாக்கங்களே இலங்கை தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் எண்ணக்கரு சிங்கள மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து போயுள்ளமைக்கான காரணமாகவும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான ஆணிவேராகவும் பார்க்கப்படுகின்றது. அத்துடன் பொ.ஊ.மு. 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், பொ.ஊ. 361ம் ஆண்டு மகாசேனனின் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளையும் காலவரிசையாக மகாவம்சம் விவரிக்கின்றது.
மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலினை மூலமாகக் கொண்டு, ஆங்கில மொழியில் 1837ம் ஆண்டு முதல் அச்சுப் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த அச்சுப்பதிப்பு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தகாலத்தில் இருந்த, சிலோன் சமூக பணியகம் எனும் பணியகத்தில் பணிப்புரிந்த பணியாளரும் வரலாற்றாசிரியரும் ஆன ஜோர்ஜ் டேனர் என்பவர் வெளியிடப்பட்டார். அதன்பின்னர் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவர், மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பு ஒன்றை செய்தார். அதேவேளை வில்ஹெய்ம் கெய்கர் அதற்கு முன்னதாகவே பாளி மூலத்தில் இருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறு
பொ.ஊ.மு. 247–207 வரை இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தான். அவனது ஆட்சி காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் அறிமுகமானது. அவனால் பௌத்த பிக்குகளுக்காக ஒரு மகாவிகாரை நிறுவப்பட்டது. அந்த மகாவிகாரையில் இருந்த பௌத்த பிக்குகளும் ஏனைய விகாரைகளில் இருந்த பிக்குகளும்; பௌத்தத்தின் தோற்றம், இலங்கையில் பௌத்தத்தின் வளர்ச்சி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்கள், மற்றும் அவர்கள் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகள் போன்ற தகவல்களை காலவரிசையாக செய்யுள் வடிவில் ஏட்டுச்சுவடிகளில் குறித்தும், அவற்றை வாய்மொழியாக பேணியும் வந்துள்ளனர். அவற்றையே அட்டகத்தா என்றழைக்கப்பட்டது. பின்னர் இவ்வாறு பல்வேறு விகாரைகளில் இருந்த ஏட்டுச்சுவடிகளை (அட்டகத்தாக்களை) மகாவிகாரையில் இருந்த பௌத்தப்பிக்குகள் ஒருங்கிணைத்து அதனை அட்டகத்தா மகாவம்சம் என அழைக்கலாயினர். இந்த அட்டகத்தா மகாவம்சத்தை மூலமாகக் கொண்டே பொ.ஊ. 4ம் நூற்றாண்டளவில் தீபவம்சமும், பொ.ஊ. 6ம் நூற்றாண்டளவில் மகாவம்சமும் தொகுக்கப்பட்டுள்ளன.
தீபவம்சம்
மகாவம்சம் அட்டகத்தாக்களை மூலமாகக்கொண்டு ஒருங்கிணைத்தே தீபவம்சம் 4ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதன் காலம் குறித்து அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் தீபவம்சம், அது 4ம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த தீபவம்சம் யாரால் தொகுக்கப்பட்டது எனும் தகவல்கள் இல்லை. அதனால் அதன் ஆசிரியர் யார் என்றும் கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் இந்த தீபவம்சத்தை மூலமாகக் கொண்டே மகாவம்சம் உருவாகியுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தீபவம்சத்தில் 37 பகுதிகள் இருப்பது போன்றே, மகாவம்சமும் 37 பகுதிகளைக் கொண்டுள்ளன. அதேவேளை மகாவம்சத்தில் காணப்படும் "விஜயனின் வருகையுடன் தொடர்புடைய குவேனி பாத்திரம்" தீபவம்சத்தில் இல்லை என்பதை கலாநிதி க. குணராசா தனது மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மகாநாம தேரரின் மகாவம்சம்
இந்த தீபவம்சத்தை தழுவியே மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்குவினால் மகாவம்சம் தொகுக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை மகாவம்சம் நூல் தீபவம்சம் நூலையும் விட எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் காலவரிசைப்படி செய்யுள்களாக தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மகாவம்சம் 6ம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.
ஆங்கில மொழிப்பெயர்ப்பு
இதனையே வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிப்பெயக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டதாகும்.
பௌத்தம் போற்றல்
மகாவம்சம் நூலை வரலாற்று நூலாக ஏற்க முடியாமைக்கான காரணங்களை பல மேற்கத்தைய, சிங்கள, தமிழ் வரலாற்றாசிரியர்கள் முன்வைத்துள்ளனர். அத்துடன் மகாவம்சம் நூலை தொகுத்தவரான மகாநாம தேரர் எந்தவொரு இடத்திலும் தன்னை வரலாற்று ஒரு ஆசிரியராகக் குறிப்பிடவில்லை என்றும் அவர் ஒரு பௌத்தப் பிக்குவாக பௌத்த மதத்தை ஆதரிக்கும் நோக்குடனேயே தொகுத்துள்ளாகவும் கூறப்படுகின்றது.
விஜயனின் வருகை
விஜயன் எனும் ஒருவரின் வருகைத் தொடர்பான சான்றுகளோ, அப்படி ஒருவன் இலங்கையை ஆட்சி செய்தமைக்கான எவ்வித ஆதாரங்களோ எங்கும் இல்லை. அதேவேளை இலங்கையின் முதல் அரசனாக சித்தரிக்கும் அதே மகாவம்ச தொகுப்பு நூலில், விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் அரசமைத்து இயக்கர் நாக இனத்தவர்கள் (அரவர்கள்~தமிழர்கள்) வாழ்ந்ததான குறிப்புகள், இலங்கையின் முதல் அரசன் விஜயன் எனும் கூற்றை நம்பகமற்றதாக செய்கின்றது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
மகாவிகாரைச் சார்ந்த பௌத்தபிக்குகள் பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் நிகழும் வரலாற்றுச் சம்பவங்களை தினக்குறிப்பேடு போன்று எழுதி பராமரித்து வந்தனர்.இவ் ஏடே பொ.ஊ. 5ம் நூற்றாண்டில் 'மகானாம' எனும் பௌத்தபிக்குவால் ஒன்றுபடுத்தி தொகுத்து மகாவம்சம் எனும் நூலாக வெளிப்பெற்றது. இவர் இலங்கை அரசன் தாதுசேனனின் சகோதரராவார். இவருடைய காலத்துக்கு ஐந்து நூற்றாண்டுகள் முந்திய வரலாற்று நூலான தீபவம்சத்தை சார்ந்தே நூலை தொகுத்துள்ளார். இந் நூல் முழுமையாக பௌத்தமத கண்ணோட்டத்திலே இலங்கையின் வரலாற்றை கூறிச்செல்கின்றது.
மகாவம்சத்தின் தொடர்ச்சியாக பல பௌத்தபிக்குகளால் எழுதப்பட்ட சூள வம்சம் எனும் நூல் பொ.ஊ. 4ம் நூற்றாண்டு முதல் பிரித்தானியர் முழு இலங்கையை கைப்பற்றிய ஆண்டான 1815 வரை நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை விபரிக்கின்றது.
மகாவம்சம் ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
இலங்கையின் வரலாறு
இலங்கை வரலாற்று நூல்கள்
தீபவம்சம்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
மகாவம்சம் சுருக்க மொழிபெயர்ப்பு - தமிழில்
மகாவம்சம், நூலகத் திட்டத்தில், தமிழில்: எஸ். சங்கரன், 1962, சென்னை
மகாவம்சம் - தமிழ் நூல்
மகாவம்சம்
தமிழர் பற்றி உள்ள அயல்நாட்டார் ஆவணங்கள்
இலங்கையில் பௌத்தம்
பௌத்த இலக்கியங்கள் |
2404 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D | ஏர் | ஏர் அல்லது கலப்பை () (plough) அல்லது plow இரண்டுமே ) என ஒலிக்கும். ஏர் என்பது ஒரு கருவி அல்லது உழவுக்கருவியாகும். இது உழவுத்தொழிலில் தொடக்கநிலையில் வயலின் மண்ணை உழுது அல்லது பதப்படுத்தி (பண்படுத்தி) விதைப்பின் முன்பும் நடவின் முன்பும் மண்ணைத் தளர்வாக்கி கீழ்மேலாகக் கிளறப் பயன்படுகிறது. மரபாக ஏர் மாடுகளை அல்லது குதிரைகளைப் பூட்டி உழப்பட்டன. ஆனால் அண்மையில் இழுபொறிகளால் இயக்கப்படுகின்றன. ஏர் மரத்தாலோ இரும்பாலோ அல்லது எஃகுச் சட்டத்தாலோ செய்து, அதில் கூரிய அலகைப் பூட்டி மண்ணை கிண்ட பயன்படுத்தப்படுகிறது. இது பல எழுத்தறிந்த வரலாறுகளில் அடைப்படைக் கருவியாக இருந்தும், ஆங்கிலத்தில் இது கி.பி1100 க்குப் பின்னரே வழங்கிவருகிறது. அதற்குப் பிறகு இது அடிக்கடி வழக்கில் புழங்கியுள்ளது. ஏர் மாந்தரின் வரலாற்றைப் புரட்சிகரமாக மாற்றிய வேளாண்கருவி ஆகும்.
ஏர்கள் வேளாண்மைக்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எண்ணெய்வளங்கள் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன.
ஏர்கொண்டு உழுதலின் நோக்கமே மேல்மண்ணை புரட்டி வளமான சத்துமிக்க அடிமண்ணை மேற்பரப்புக்குக் கொண்டுவருவதேயாகும். அதேநேரத்தில் உழுதல் களையையும் முன்பயிரிட்ட எச்சங்களை அடியில் புதைத்து அவற்றைச் சிதையச் செய்கிறது. ஏரால் உழும்போது ஏற்படும் உழவு சால்களில் வளமண் பொதிந்தமையும். உழுத வயல் உலரவிடப்படும். பின்னர் நடவுக்கு முன் பரம்படிக்கப்படும். உழுது பண்படுத்தல் மண்ணை ஒருசீராக்கி மேலே அமைந்த 12 முதல் 25 செ.மீ ஆழ உழுத அடுக்கு மண்ணை நடவுக்கு முன் உருவாக்கும். பலவகை மண்களில் பயிரின் வேர்கள் உழுத அடுக்கு மேல்மண்னிலேயே அமையும்.
முதலில் மாந்தரே ஏரை இழுத்து உழுதாலும் பின்னர் விலகுகளைப் பூட்டி உழவு செய்யப்பட்டதும் ஏருழவு திறம்பட நடந்த்து. முதலில் எருதுகளைப் பூட்டி எரால் உழவு செய்துள்ளனர். பின்னர் குதிரைகள், கோவேறு கழுதைகளைப் பூட்டியும் உழவு நடந்துள்ளது. பிறகு இதற்கு பலவகை விலங்குகளை இடத்திற்கு ஏற்ப பூட்டி உழவு செய்யப்பட்டுள்ளது. தொழில்மயமாகிய நாடுகளில், முதல் எந்திரவகை ஏர் நீராவிப் பொறிகளைப் பூட்டிய இழுபொறிகளால் உழப்பட்டுள்ளது. ஆனால் இவை மெல்ல மெல்ல உள்ளெரி பொறிகள் பூட்டிய இழுபொறிகளால் பதிலீடு செய்யப்பட்டன.
அயர்லாந்தில் உழவுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் தரப்படுகின்றன. மண்சரிவும் அரிப்பும் ஏற்படும் பகுதிகளிலும் மேல்மண் உழவு நுட்பங்கள் பயன்படும் பகுதிகளிலும் வர வர ஏர் உழவு குறைந்துகொண்டே வருகிறது.
மரத்தினால் செய்யப்பட்ட இக்கருவி நுகம், கருவுத்தடி, மேழி, முட்டி, கலப்பைக்கயிறு, கன்னிக்கயிறு (கழுத்துக்கயிறு) எனும் பகுதிகளால் ஆனது. இரண்டு எருதுகளால் (மாடுகளால்) இழுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது கலப்பை. பல நூற்றாண்டுகளாக உழவர்களால் கலப்பை பயன்படுத்தப்படுகிறது. கலப்பையால் ஓர் அடி ஆழம் வரை உழ முடியும்.
கலப்பைகள் மூன்று வகைப்படும்: மரத்தினாலான கலப்பை (நாட்டுக் கலப்பை), இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை (வளைப்பலகைக் கலப்பை, சட்டிக் கலப்பை, ஒரு வழிக் கலப்பை) மற்றும் சிறப்பு கலப்பைகள் (ஆழக்கலப்பை, உளிக்கலப்பை, சால் கலப்பை, சுழல் கலப்பை, குழிப்படுக்கை அமைக்கும் கருவி). தொழிற்புரட்சி ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
சொற்பிறப்பியல்
பழைய ஆங்கிலத்திலும், பிற ஜெர்மானிய மொழிகளிலும் மரபாக ஏருக்குப் பல பெயர்கள் வழங்குகின்றன. எடுத்துகாட்டாக, பழைய ஆங்கிலத்தில் சுல்கு ( sulh) எனவும் பழைய உயர்ஜெமானியத்தில் மெடெலா ( medela) கீசா ( geiza) குவோகிலின் ( huohilī(n)) ஆகிய பெயர்களாலும் பழைய நோர்சு மொழியில் ஆர்திர் ( arðr) எனவும் சுவீடிய மொழியில் ஆர்தெர் ( årder) எனவும் கோதிக மொழியில் கோகா ( hōha0 எனவும் ஏர் (ard )(plough) வழங்கப்படுகிறது. இன்று வழக்கில் உள்ள plough அல்லது plow எனும் சொற்கள் 1700 வரை ஏர் எனும் சொல்லுக்கு வழங்கவில்லை.
ஏருக்கான plough எனும் ஆங்கிலச் சொல் தமிழில் " பள்ளு" என்ற தமிழ் சொல்லில் இருந்தே பிறந்தது.பள்ளு என்றால் "உழவு".
உழவன் இப்பூமியில் ஏறி உழுவதால்,பள்ளம் தோண்டுவதால் அது "ஏர்" எனப்பட்டது.
ஆனால் ஐரோப்பியர்
பழைய நோர்சு சொல்லாகிய plógr என்பதில் இருந்து வந்ததாகவும் இது ஒரு ஜெர்மானியச் சொல்லாகும் கருதுவர். இது அவர்களுக்கு மிகவும் பின்னால் வழக்குக்கு வந்த சொல்லாகும்.
கோதிக மொழியில் இது இல்லாமையால் இது வட இத்தாலிய மொழிகளில் இருந்து பெற்ற கடன்சொல்லாகக் கருதப்படுகிறது. இதன் வேர்ச்சொல் plaumorati , "wheeled heavy plough" என்ற பொருளைக் குறித்துள்ளது (பிளினிPliny இயற்கை வரலாறு 18, 172). இது இலத்தீன மொழியில் plaustrum "farm cart", plōstrum, plōstellum "cart", and plōxenum, plōximum "cart box" என்ற பொருளில் வழங்கியுள்ளது.இச்சொல் முதலில் வடமேற்கு ஐரோப்பாவில் உரோமானியரிடம் ஐந்தாம் நூற்றாண்டில் பெருவழக்கில் இருந்த wheeled heavy plough ஐக் குறித்திருக்கவேண்டும் .
ஓரெல் (2003) என்பார் plough எனும் சொல் முந்து இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லாகிய *blōkó- என்பதோடு தொடர்புபடுத்துகிறார். இது ஆர்மேனிய மொழியில் peɫem "தோண்டு" எனவும் வேல்சு மொழியில் bwlch "உடை" எனவும் மாறியுள்ளது என்கிறார். உண்மையில் இந்தோ-ஐரோப்பிய சொல்.
ஏரின் உறுப்புகள்
விளக்கப்படம் (வலது) ஏரின் அடிப்படை உறுப்புகளைக் காட்டுகிறது:
நுகம் அல்லது கிடை விட்டம்
ஏர்க்கால்
குத்துநிலைக் கட்டுபடுத்தி அல்லது சீராக்கி
துளறு (கத்தித் துளறு காட்டப்பட்டுள்ளது, ஆனால் வட்டுத் துளறே பெரு வழக்கில் உள்ளது)
உளி (முன்கொழு)
கலப்பை அல்லது கொழு (முதன்மைக்கொழு)
பரம்பு அல்லது வார்பலகை
குறிப்பிடப்படாத ஏரின் உறுப்புகளாக சட்டம் பின்வாரி, மண்வாரி, shin, களைப்பலகை, கைப்பிடிகள் ஆகியனவும் உள்ளடங்கும்.
அண்மை ஏர்களிலும் சில பழைய ஏர்களிலும் கொழுவும் பின்வாரியும் வார்பலகையில் இருந்து பிரித்து வைக்கப்படுகின்றன. எனவே முன்னவற்ரை வார்பலகையை மாற்றாமலே பதிலீடு செய்து மாற்றலாம். சிராய்ப்பு நாட்பட நாட்பட மண்ணோடு தொடர்புள்ள அனைத்து ஏரின் உறுப்புகளும் சிதைகின்றன.
வரலாறு
கொழுவால் கிளறல்
வேளாண்மை முதலில் உருவாகும்போது தோண்டுகழிகளும் கொழுக்களும் (கொளுறுகளும்) பயன்படுத்தி உயர் வள மேல்மண்ணைத் தோண்டிக் கிளறினர். நைல்நதி ஒவ்வோராண்டும் வெள்ளம் வடியும்போதும் மண்னை வளமாக்கியது. இது சால் உழவு வேளாண்மையை வளர்த்தது. இவை ஓரிட்த்தில் மட்டும் தோன்றவில்லை. வேளாண்மை நடந்த அனைத்துப் பகுதிகளிலும் இவை ஒருங்கே உருவாக்கப்பட்டு வழக்கில் இருந்துள்ளன. கொழுவால் உழுத வேளாண்மை வெப்ப, மிதவெப்ப மண்டலங்களில் மரபாக நடைபெற்றுள்ளது. இங்கு கற்பரல் மண்ணிலும் (மணலிலும்) செஞ்சரிவு சாரல்களிலும் கிழங்குப் பயிர்களும் பருமணி கூலங்களும் சற்ரு இடைவெளி விட்டு நட்டுப் பயிரிடப்பட்டன. இப்பகுதிகளுக்கே (குறிஞ்சிப் பகுதிக்கே) மிகப்பொருத்தமானது என்றாலும் இது அனைத்துப் பகுதிகளும் கூட பரவலாகப் பின்பற்றப்பட்டது. கொழுவுக்கௌ மாற்ரக பன்றிகளை விட்டு மேல்மண்ணைக் கிளறிப்போட்டும் சில பண்பாடுகளில் தொடக்கநிலை வேளாண்மை நடந்தேறியது. தமிழகத்தில் இந்த இருவகை வேளாண்மைக்கான செவ்வியல் காலப் பாடல் சான்றுகள் உள்ளன.
கீறல்வகை ஏர்
மிகப்பழைய வில்வகைக் கீறியில் ஓர் இழுகழி (அல்லது விட்டம்/நுகம்) pierced by a thinner vertical pointed stick called the தலை (அல்லது உடல்) எனும் மெல்லிய குத்துநிலைக் கழி குத்திட்டு அமைய இதன் ஒருமுனையில் பிடி (கைப்பிடி)யும் மறுமுனையில் ஒரு கொழு (அல்லது வெட்டலகு)ம் அமைந்திருக்கும். இந்த வெட்டலகு தினைகளுக்கு ஏற்ற மேல்சாலோட்ட மேல்மண்னில் இழுத்துச் செல்லப்படும். கீறிவகை ஏர் புதுமண்னை நன்கு உழ ஏற்றதல்ல. எனவே கொழு அல்லது துளறு புற்பூண்டுகளை அகற்றும்ப்டி, கொழுவுக்கு முன் ஆழ்சாலோட்ட கையால் கொத்தும் துளறு பயன்படுத்தப்படும்.கீறி சால்களுக்கிடையே கிளறாத மண்னை விட்டுச் செல்வதால், இவ்வகை வயல்கள் நெடுக்குவாட்டிலும் குறுக்கவாட்டிலும் குறுக்கு மறுக்காக உழப்படும். இது கெல்டிக் வகை அல்லது சதுரவகை உழவு எனப்படும். கீறல்வகை உழவு வெள்ளத்தால் ஒவ்வோராண்டும் வெள்லத்தால் வளமாக்கப்படும் மணற்பாங்கான அல்லது களிமட்பாங்கான வயல்களுக்கு ஏற்றதாகும். இவ்வகை உழவு நைல்நதிப் படுகையிலும் செம்பிறை வளமண்ணிலும் ஓரளவு தினைகள் பயிரிட ஏற்ற மெல்லிய மேல்மண் பகுதிகளிலும் கீரல்வகை ஏர் உழவு நடைமுறையில் உள்ளது. பிந்தைய இரும்புக் காலத்தில் கீறல் ஏரோடு துளறுகள் பொருத்தப்பட்டன.
வார்பலகை ஏர்
ஏர் (நிலப் பரப்பளவை)
நில அளவையில்ஏர் என்ற சொல் பயன்படுகிறது. பதின்ம முறையில் நிலப் பரப்பளவின் அலகு ஏர் (are) ஆகும்.
1 ஏர் - 2.47 செண்ட்
1 ஏர் - 100 சதுர மீட்டர் (sq.m.)
தற்போது ஏர் என்ற அலகு அதிகப் பயன்பாட்டில் இல்லாமல், எக்டேர் என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.
காட்சி மேடை
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Brunt, Liam. "Mechanical Innovation in the Industrial Revolution: The Case of Plough Design". Economic History Review (2003) 56#3, pp. 444–477. .
Hill, P. and Kucharski, K. "Early Medieval Ploughing at Whithorn and the Chronology of Plough Pebbles", Transactions of the Dumfriesshire and Galloway Natural History and Antiquarian Society, Vol. LXV, 1990, pp 73–83.
Nair, V. Sankaran. Nanchinadu: Harbinger of Rice and Plough Culture in the Ancient World.
Steven Stoll, Larding the Lean Earth: Soil and Society in Nineteenth-Century America (New York: Hill and Wang, 2002)
வெளி இணைப்புகள்
The Rotherham Plough — the first commercially successful iron plough
History of the steel plough — as developed by John Deere in the United States
Breast Ploughs and other antique hand farm tools
"Tractor Guide Saves Labor for the Farmer", Popular Mechanics, December 1934.
வேளாண் எந்திரங்கள்
பண்ணைக் கருவிகள்
வேளாண்மை வரலாறு
நிகழ்படக் கட்டுரைகள்
வேளாண் கருவிகள்
தோட்டக் கருவிகள்
கையாற்றல் கருவிகள் |
2405 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81 | கன அளவு | கன அளவு () அல்லது கனவளவு அல்லது கொள்ளளவு (volume) என்பது ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணிய அளவாகும். அனைத்துலக முறை அலகுகளில் கனவளவின் அலகு கன மீட்டர் ஆகும்.
திண்மப் பொருளொன்றின் கனஅளவு முப்பரிமாணத்தில் எவ்வளவு இடம் எடுத்துள்ளது என்பதை விளக்கும் ஒரு எண் அடிப்படையிலான ஒரு பெறுமானமாகும். கோடுகள் போன்ற ஒரு-பரிமாணப் பொருட்களும், சதுரம் போன்ற இரு-பரிமாணப் பொருட்களும், முப்பரிமாணத்தில் கனஅளவு அற்றவை.
கனஅளவுக்கான சூத்திரங்கள்
யாதேனுமொரு உருவம்(தொகையீடு அவசியம்): (இங்கு h என்பது எடுத்துக்கொண்ட உருவத்தின் ஏதேனும் ஒரு அளவு; A(h) என்பது அவ்வுருவின் h -க்குச் செங்குத்தாக அமையும் குறுக்குவெட்டு; இது h -ன் சார்பாக அமைந்துள்ளது.).
கனஅளவின் அலகுகள் -மெட்ரிக் அலகுகள்
கொள்ளளவிற்கான பொதுவில் பயன்படும் சர்வதேச அலகு லீட்டர் ஆகும். ஆயிரம் லீட்டர் என்பது ஒரு கன மீட்டரின் கொள்ளளவாகும். இது முன்னர் ஸ்டீயர் என அறியப்பட்டது. ஒரு கன சென்டிமீட்டரின் கொள்ளளவு ஒரு மில்லிலீட்டர் ஆகும்.
கனஅளவின் அலகுகள் -ஐக்கிய அமெரிக்கா
கன அளவிற்கு ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் வழமையான அலகுகள்:
US பாய்ம அவுன்சு: 29.6 மில்லிலிட்டர் கனவளவுடைய நீரின் திணிவு = ஒரு அவுன்சு (ounce)
US பிண்ட்டு: 16 அவுன்சுகள் அல்லது கிட்டத்தட்ட 473 மிலி கனவளவுடைய நீரின் திணிவு = ஒரு பிண்ட்டு (pint)
US குவார்ட்டு: 32 அவுன்சுகள் அல்லது இரண்டு பிண்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 946 மிலி கனவளவுடைய நீரின் திணிவு = ஒரு குவார்ட்டு (quart)
US கேலன்: 128 அவுன்சுகள் அல்லது நான்கு குவார்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 3.785 லி
ஏக்கர் அடி (acre foot) எனப்படுவது பெரும்பாலும் ஒரு நீர்ப்படுகையிலுள்ள நீரின் கனவளவை அளக்கப் பயன்படும். இது ஒரு ஏக்கர் பரப்பும் ஒரு அடி ஆழமும் உடைய கனவளவைக் கொண்ட நீருக்குச் சமனானது. இது அண்ணளவாக 43,560 கன அடிகளுக்குச் சமனானது..
கனஅளவு அலகுகள் -ஐக்கிய இராச்சியம்
கனவளவுக்கான இம்பீரியல் அலகுகள்:
UK பாய்ம அவுன்சு = கிட்டத்தட்ட 28.4 மிலி (இந்தக் கனவளவையுடைய நீரின் திணிவு 28.3 கி, அல்லது அண்ணளவாக, 28.4 கி)
UK பிண்ட்டு = 20 பாய்ம அவுன்சுகள் அல்லது கிட்டத்தட்ட568 மிலி
UK குவார்ர்ட்டு = 40 அவுன்சுகள் அல்லது 2 UK பிண்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 1.136 லி
UK கேலன் = 160 அவுன்சுகள் அல்லது 4 UK குவார்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 4.546 லி
கனஅளவு அளவுகள் -சமையல்
சமையலின் போது பயன்படும் கொள்ளளவு அலகுகள்:
1 தேக் கரண்டி = 1/6 அவுன்ஸ்
1 மேசைக் கரண்டி = 1/2 அவுன்ஸ் அல்லது 3 தேக்கரண்டி
1 கப் = 8 அவுன்ஸ் அல்லது 1/2 பைன்ட்
அடர்த்தியுடனான தொடர்பு
ஒரு பொருளின் திணிவை அதன் சராசரி அடர்த்தியால் வகுக்கும் போது பெறப்படுவது அப்பொருளின் கொள்ளளவு ஆகும். மேற்கூறியது, ஒரு அலகு கொள்ளளவில் உள்ள திணிவு, ஒரு பொருளின் அடர்த்தியைச் சுட்டும் எனும் சமன்பாட்டின் மாறுபட்ட வடிவம் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
திணிவு
அடர்த்தி
மேற்கோள்கள்
அளவியல் |
2412 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%20%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%29 | சுஜாதா (எழுத்தாளர்) | சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953-ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்
வாழ்க்கைக் குறிப்பு
சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி தூய வளனார் கல்லூரியில் பி.எஸ்சி. (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. (மின்னணுவியல்) கற்றார். திருச்சி தூய வளனார் கல்லூரியில், அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார். டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டுகள், அரசுப் பணியில் இருந்த சுஜாதா, பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும், மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை, ஊடகம் மூலமாக, மக்களிடம் கொண்டு சென்றதற்காக, அவரைப் பாராட்டி, 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' அவருக்கு 1993-ஆம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
புனைபெயர்
இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962-ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். எனும் பெயரிலும் எழுதி வந்தார்.
ஆக்கங்கள்
சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.
புதினங்கள்
அகரவரிசையில் . . .
அப்ஸரா
அனிதா இளம் மனைவி, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
அனிதாவின் காதல்கள்
அனுமதி
ஆ..!
ஆதலினால் காதல் செய்வீர்
ஆயிரத்தில் இருவர்
இருள்வரும் நேரம்; 1988; கல்கியில் வெளிவந்த தொடர்
உன்னைக் கண்ட நேரமெல்லாம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
எதையும் ஒருமுறை
எப்போதும் பெண்
என்றாவது ஒரு நாள்
ஏறக்குறைய சொர்க்கம்
என் இனிய இயந்திரா
ஒருத்தி நினைக்கையிலே
ஒரு நடுப்பகல் மரணம்
ஓடாதே!
கணேஷ் x வஸந்த்
கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001
கம்ப்யூட்டர் கிராமம்
கரையெல்லாம் செண்பகப்பூ
கனவுத்தொழிற்சாலை
காசளவில் ஓர் உலகம், வாசகர் வட்டம், சென்னை.
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
காயத்ரி, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
கொலையுதிர்காலம்
கொலை அரங்கம்
சில வித்தியாசங்கள், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
சில்வியா
செப்டம்பர் பலி
சொர்க்கத்தீவு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
திசைகண்டேன் வான்கண்டேன்
தேவன் வருகை, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
நிலா நிழல்
நிர்வாண நகரம்
நில் கவனி தாக்கு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
நில்லுங்கள் ராஜாவே
நைலான் கயிறு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
பதவிக்காக
பதினாலு நாட்கள், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
பாதிராஜ்யம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
பிரிவோம் சந்திப்போம் (நூல்)
ப்ரியா, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
மறுபடியும் கணேஷ், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
பெண் இயந்திரம்
பேசும் பொம்மைகள்
மாயா, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
மீண்டும் ஜீனோ
மூன்றுநாள் சொர்க்கம்
மூன்று நிமிஷம் கணேஷ்
மேகத்தைத் துரத்தினவன், மாலைமதி, நவம்பர் 1979
மேற்கே ஒரு குற்றம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
யவனிகா
ரத்தம் ஒரே நிறம்
வசந்தகாலக் குற்றங்கள்
வண்ணத்துப்பூச்சி வேட்டை
வஸந்த்!வஸந்த்!
வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
விடிவதற்குள் வா
விபரீதக் கோட்பாடு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
வைரம் (புதினம்)
ஹாஸ்டல் தினங்கள்
ஜன்னல் மலர்
ஜே.கே., குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
24 ரூபாய் தீவு
6961, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
குறும்புதினங்கள்
தீண்டும் இன்பம்
குரு பிரசாத்தின் கடைசி தினம்
ஆகாயம்
காகித சங்கிலிகள்
மண்மகன்
மெரினா
மோதாமல் ஒரு நாளும் இரக்க வேண்டாம்
டி.என்.ஏ; 1995, குமுதம் தொடர்
சிறுவர் இலக்கியம்
"பூக்குட்டி"
சிறுகதைத் தொகுப்புகள்
அப்பாவின் ஆஸ்டின்
இரயில் புன்னகை
ஓலைப்பட்டாசு
சில சிறுகதைகள்
சில வித்தியாசங்கள்
தூண்டில் கதைகள்
நகரம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001
நிஜத்தைத் தேடி
மத்திமர்
மீண்டும் தூண்டில் கதைகள்
வானமென்னும் வீதியிலே, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
சிறுகதை மற்றும் குறும்புதினத் தொகுப்புகள்
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
கவிதைத் தொகுப்பு
நைலான் ரதங்கள்
நாடகங்கள்
நீள்நாடகங்கள்
அடிமைகள்
அன்புள்ள அப்பா
ஊஞ்சல்
கடவுள் வந்திருந்தார்
சிங்கமைய்யங்கார் பேரன்
டாக்டர். நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
பாரதி இருந்த வீடு
குறுநாடகங்கள்
ஆகாயம்
இடையன் மகள்
கதைகேளு பெண்ணே, கதைகேளு
கிருஷ்ணா! கிருஷ்ணா!
சரளா
சேகர்
பிரயாணம்
பெட்டி
மந்திரவாதி
மறுமணம்
மாறுதல்
முதல் நாடகம் (ஒரு கொலை)
முயல்
வந்தவன்
வாசல்
கட்டுரைத் தொகுப்புகள்
இன்னும் சில சிந்தனைகள்
உயிரின் ரகசியம்
எழுத்தும் வாழ்க்கையும்
கணையாழியின் கடைசி பக்கங்கள்
கற்றதும் பெற்றதும் [பாகம் 1,2,3,4]
கடவுள்; 2008
கடவுள் இருக்கிறாரா?
கடவுள்களின் பள்ளத்தாக்கு
சுஜாதா'ட்ஸ்
செய்தி சொல்லும் செயற்கைக்கோள்கள்
தமிழ் அன்றும் இன்றும்; உயிர்மை பதிப்பகம், சென்னை
தலைமை செயலகம்
திரைக்கதை எழுதுவது எப்படி?
நானோ டெக்னாலஜி
மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்
ஜீனோம்
சிலிகான் சில்லு புரட்சி
வினா விடை
ஏன் ? எதற்கு ? எப்படி ?'' [பாகம் 1,2]
சுஜாதா பதில்கள் (பாகம் 1, 2, 3)
திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு - திரைப்படம்)
காயத்ரி
கரையெல்லாம் செண்பகப்பூ
ப்ரியா
விக்ரம்
வானம் வசப்படும்
ஆனந்த தாண்டவம்
சைத்தான்(திரைப்படம்)
பணியாற்றிய திரைப்படங்கள்
ரோஜா
இந்தியன்
ஆய்த எழுத்து
அந்நியன்
பாய்ஸ்
முதல்வன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஜீன்ஸ்
உயிரே
விசில்
கன்னத்தில் முத்தமிட்டால்
சிவாஜி த பாஸ்
எந்திரன்
வரலாறு
செல்லமே
மறைவு
உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29. பெப்ரவரி 2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.,
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அம்பலம் (சுஜாதா நிர்வகித்த இணைய இதழ்)
சுஜாதாவின் வாழ்க்கைக் குறிப்பு
தமிழ் நண்பர்களில் சுஜாதா
சுஜாதா - சிறுகதைகள்
தமிழக எழுத்தாளர்கள்
அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள்
1935 பிறப்புகள்
2008 இறப்புகள்
கலைமாமணி விருது பெற்றவர்கள்
திருச்சி மக்கள்
சென்னை எழுத்தாளர்கள்
திருச்சிராப்பள்ளி எழுத்தாளர்கள் |
2419 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE | வெண்பா | வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். வெண்பாவினை வன்பா என்றும், ஆசிரியப்பாவினை மென்பா என்றும், கலிப்பாவினை முறற்கை என்றும் வழங்குவர். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரை கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.
இலக்கணம்
வெண்பாவின் பொது இலக்கணம்:
ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் வரும் .
இயற்சீர் ( மாச்சீர், விளச்சீர்), வெண்சீர் (காய்ச்சீர்) வரும். பிற சீர்கள் வாரா.
இயற்சீர் வெண்டளையும் (மாமுன் நிரை, விளமுன் நேர்) வெண்சீர் வெண்டளையும் (காய்முன் நேர்) வரும். பிற தளைகள் வாரா.
ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றுகொண்டு முடியும்.
செப்பலோசை பெற்று வரும்
இரண்டடி முதல் 12 அடி வரை வரும்
குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்
தமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.
திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை.
நாலடியார் அல்லது நாலடி நானூறு என்பது நானூறு வெண்பாக்களால் ஆனதும், திருக்குறளை ஒத்ததுமான நீதிநூல் வகையைச் சேர்ந்தது.
முத்தொள்ளாயிரம் என்பது வெண்பாக்களால் ஆன, காலத்தால் மிகவும் முற்பட்ட தொகை நூல். கிடைத்திருக்கும் 109 வெண்பாக்களில் மிகப் பெரும்பான்மையும் (ஏறத்தாழ முழுமையும்) நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை.
நள வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
நீதி வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து 'ஏலோர் எம்பாவாய்' என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், 'பாரோர் புகழப் படிந்து' போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த பஃறொடை வெண்பா யாப்புக்கு முற்றிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம்.
மூதுரை என்ற நூலில் முப்பது வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு வெண்பாக்களும் தனித்தனிக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இதில் நேரிசை வெண்பாக்களும், இன்னிசை வெண்பாக்களும் உள்ளன.
நல்வழி என்பது 40 நேரிசை வெண்பாக்களில் அறக்கருத்துக்களைக் கொண்ட நூலாகும்.
இவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய/புதிய தமிழ் நூல்கள் ஏராளமானவை.
வகைகள்
குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
கலிவெண்பா
வேறு வகைப் பிரிவு
இந்த வேறு வகை வெண்பாக்களைக் குறிப்பிடும் இலக்கணப் பாடல்கள் இரண்டு தரப்பட்டுள்ளன.
செப்பல் வெண்பா
வெண்கூ வெண்பா
அகவல் வெண்பா
வெண்பா (தழுவல்)
தமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள்
உயிர் எழுத்துகளும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்துக் குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல, சொல்லின் பகுதிகளாகவும் இருக்கலாம்.
நேரசை மற்றும் நிரையசை என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும். எடுத்துக்காட்டாக நேர், என், நீ, தேன் முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். நிரை, படம், புறா முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன.
வசதிக்காக அசைகள் பின்வருமாறு பெயரிடப்படுகிறது.
{| class="wikitable"
|-
|நேர்நேர்
|தேமா
|-
|நிரைநேர்
|புளிமா
|-
|நேர்நிரை
|கூவிளம்
|-
|நிரைநிரை
|கருவிளம்
|-
|நேர்நேர்நேர்
|தேமாங்காய்
|-
|நேர்நேர்நிரை
|தேமாங்கனி
|-
|நேர்நிரைநேர்
|கூவிளங்காய்
|-
|நேர்நிரைநிரை
|கூவிளங்கனி
|-
|நிரைநேர்நேர்
|புளிமாங்காய்
|-
|நிரைநேர்நிரை
|புளிமாங்கனி
|-
|நிரைநிரைநேர்
|கருவிளங்காய்
|-
|நிரைநிரைநிரை
|கருவிளங்கனி
|-
|}
அசைகளின் தொடர் சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.
மேற்கோள் விளக்கம்
வெண்பாவுக்கான யாப்பிலக்கணம்
யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஓர் இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது. அந்நெறிமுறைகள் பின்வருவன:
சீர்களுக்கான நெறிகள்
வெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும்.
மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது.
நிலைமொழியீற்றசையைப் பொருத்து வருமொழி முதலசை அமைய வேண்டுமென வலியுறுத்தும் தளை நெறிகள்
வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.
இயற்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் மாச்சீர் வர வருமொழி முதலில் நிரையசையே வர வேண்டும்; நிலைமொழி ஈற்றில் விளச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
வெண்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் காய்ச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
வெண்பா செப்பலோசை பெற்று வரும்.
வெண்பாவுக்கான மேலே தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:
{| class = “wikitable”
|-
|align="right"|<வெண்பா>
|→
|<அடி>{1,11}<ஈற்றடி>
|-
|align="right"|<அடி>
|→
|<சீர்> <சீர்> <சீர்> <சீர்>
|-
|align="right"|<ஈற்றடி>
|→
|<சீர்> <சீர்> <ஈற்றுச்சீர்>
|-
|align="right"|<சீர்>
|→
||<ஈரசை> | <மூவசை>
|-
|align="right"|<ஈற்றுச்சீர்>
|→
||<நாள்> | <மலர்> | <காசு> | <பிறப்பு>
|-
|align="right"|<ஈரசை>
|→
||<தேமா> | <புளிமா> | <கருவிளம்> | <கூவிளம்>
|-
|align="right"|<மூவசை>
|→
||<தேமாங்காய்> | <புளிமாங்காய்> | <கூவிளங்காய்> | <கருவிளங்காய்>
|-
|align="right"|<தேமா>
|→
|<நேர்> <நேர்>
|-
|align="right"|<புளிமா>
|→
|<நிரை> <நேர்>
|-
|align="right"|<கருவிளம்>
|→
|<நிரை> <நிரை>
|-
|align="right"|<கூவிளம்>
|→
|<நேர்> <நிரை>
|-
|align="right"|<தேமாங்காய்>
|→
|<தேமா> <நேர்>
|-
|align="right"|<புளிமாங்காய்>
|→
|<புளிமா> <நேர்>
|-
|align="right"|<கருவிளங்காய்>
|→
|<கருவிளம்> <நேர்>
|-
|align="right"|<கூவிளங்காய்>
|→
|<கூவிளம்> <நேர்>
|-
|align="right"|<நாள்>
|→
|<நேர்>
|-
|align="right"|<மலர்>
|→
|<நிரை>
|-
|align="right"|<காசு>
|→
|<நேர்> <நேர்>
|-
|align="right"|<பிறப்பு>
|→
|<நிரை> <நேர்>
|-
|align="right"|<நேர்>
|→
||<குறில்> | <நெடில்> | <நேர்> <ஒற்று>
|-
|align="right"|<நிரை>
|→
||<குறில்> <குறில்> | <குறில்> <நெடில்> | <நிரை> <ஒற்று>
|-
|align="right"|<குறில்>
|→
|{குறுகிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
|-
|align="right"|<நெடில்>
|→
|{நெடிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
|-
|align="right"|<ஒற்று>
|→
|{மெய்யெழுத்து}
|-
|}
தளைகளுக்கான இலக்கண நெறிகள்:
இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விள முன் நேர்)
<வெண்பா> → <X> | <Y>
<X> → <தேமா> <Y>
<X> → <கூவிளம்> <X>
<Y> → <புளிமா> <Y>
<Y> → <கருவிளம்> <X>
<X> → <நாள்> | <காசு>
<Y> → <மலர்> | <பிறப்பு>
வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)
<X> → <தேமாங்காய்> <X>
<X> → <கூவிளங்காய்> <X>
<Y> → <புளிமாங்காய்> <X>
<Y> → <கருவிளங்காய்> <X>
எடுத்துக்காட்டு
ஒரு திருக்குறள்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு:
"As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.
(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose
garment is loosened (before an assembly)."''
குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
தமிழ்க் கணிமை நிரல் எடுத்துக்காட்டுக்கள் உள்ள கட்டுரைகள் |
Subsets and Splits