id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
686255
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பட்டான் தொடருந்து நிலையம்
பட்டான் தொடருந்து நிலையம் (Pattan Railway Station) (நிலையக் குறியீடு:PTTN) , இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்த பட்டான் நகரத்தில் உள்ளது. இரண்டு நடைமேடைகள் கொண்ட பட்டான் தொடருந்து நிலையம், பிர் பாஞ்சல் மலைத்தொடரில் : 1580 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. இந்நிலையம் பாரமுல்லா தொடருந்து நிலையத்திற்கு தென்கிழக்கே 23.7 கிலோ மீட்டர் தொலைவிலும்; சிறிநகர் தொடருந்து நிலையத்திற்கு வடமேற்கே 39.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தொடருந்து சேவைகள் பட்டான் தொடருந்து நிலையத்திலிருந்து கீழ்கண்ட தொடருந்து நிலையங்களுக்கு பயணியர் சேவைகள் உள்ளது. பாரமுல்லா தொடருந்து நிலையம் சோப்பூர் தொடருந்து நிலையம் பட்காம் தொடருந்து நிலையம் சிறிநகர் தொடருந்து நிலையம் பனிஹால் தொடருந்து நிலையம் இத னையும் காண்க ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை ஜம்மு-பூஞ்ச் இருப்புப் பாதை மேற்கோள்கள் பாரமுல்லா மாவட்டம் ஜம்மு காஷ்மீரில் போக்குவரத்து
686257
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சில்லோட் சட்டமன்றத் தொகுதி
சில்லோட் சட்டமன்றத் தொகுதி (Sillod Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜால்னா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 வெளி இணைப்புகள் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் மகாராட்டிர அரசியல்
686258
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
இந்தோனேசிய அரசாங்கம்
இந்தோனேசிய அரசாங்கம் (ஆங்கிலம்: Government of Indonesia; (GOI) இந்தோனேசியம்: Pemerintah Indonesia) என்பது இந்தோனேசியாவின் அதிகாரப்பூர்வமான அரசாங்கம் ஆகும். சில வேளைகளில் இந்தோனேசியாவின் மத்திய அரசு (ஆங்கிலம்: Central Government; இந்தோனேசியம்: Pemerintah Pusat) என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தோனேசிய அரசாங்கத்தின் மூன்று பாரம்பரியத் துறைகளான நிர்வாகத் துறை, சட்டமன்றத் துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின கூட்டமைப்பு என்றும் குறிப்பிடலாம். அரசாங்கம் என்பது நாட்டின் அன்றாட நிர்வாகத்திற்கும், நாட்டில் சட்டம் இயற்றுவதற்கும் பொறுப்பான அரசாங்க அமைப்பு ஆகும். அந்த வகையில், அரசாங்கம் என்பது நிர்வாகம் (Executive); மற்றும் சட்டமன்றம் (Legislature) ஆகிய இரு முதன்மை அமைப்புகளை ஒன்றாகக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்தோனேசியக் குடியரசுத் தலைவர், இந்தோனேசிய குடியரசு துணைத் தலைவர், இந்தோனேசிய அமைச்சரவை வடிவத்தில், இந்தோனேசியாவின் நிர்வாகத் துறையைக் குறிக்க இந்தோனேசிய அரசாங்கம் எனும் சொல் தொடர் பயன்படுத்தப்படுகிறது. தாராளவாத மக்களாட்சி இந்தோனேசியாவில் தாராளவாத மக்களாட்சி காலக்கட்டம் (இந்தோனேசியம்: Demokrasi Liberal) ஆகத்து 17, 1950-இல் தொடங்கியது. இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள் (United States of Indonesia) எனும் முந்தைய நிர்வாக அமைப்பு கலைக்கப் பட்டதைத் தொடர்ந்து தாராளவாத மக்களாட்சியின் காலக்கட்டம் தொடங்கியது . இருப்பினும், 1951-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவில் இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும், தாராளவாத மக்களாட்சி முறைமையும் ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், அதிபர் சுகார்னோ சூலை 5, 1959-இல் வழிகாட்டப்பட்ட மக்களாட்சி அரசு முறைமையை (Guided Democracy) அறிமுகப்படுத்தினார். இந்தப் புதிய அரசாட்சி முறைமை; 1955 பாண்டுங் மாநாடு (Bandung Conference) உட்பட பல முக்கிய நிகழ்வுகளைக் காண நேர்ந்தது. அந்தக் காலக்கட்டத்தில், அதாவது 1950-ஆம் ஆண்டுகளில், இந்தோனேசியாவின் முதல் அரசியலமைப்பு சட்டமன்றத் தேர்தல்கள் (Constitutional Assembly of Indonesia) நடைபெற்றன; மற்றும் இந்தோனேசியாவில் உறுதியற்ற ஒரு நீண்ட கால அரசியல் தன்மையும் நிலவியது; அதே வேளையில் எந்த ஓர் அமைச்சரவையும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காமல் போனதும் குறிப்பிடத்தக்கது; போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். வழிகாட்டப்படும் மக்களாட்சி வழிகாட்டப்படும் மக்களாட்சி (ஆங்கிலம்: Guided Democracy; இந்தோனேசியம்: Demokrasi Terpimpin) என்பது இந்தோனேசியாவில் 1959-ஆம் ஆண்டு தொடங்கி 1966-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த ஓர் அரசியல் முறைமையாகும். இது அதிபர் சுகார்னோவின் சிந்தனையில் உருவானது. அந்த வழிகாட்டப்படும் மக்களாட்சி முறைமை, இந்தோனேசியாவில் ஓர் அரசியல் உறுதிநிலைப்பாட்டைக் கொண்டுவரும் முயற்சியாக இருந்தது. மேற்கத்திய பாணியிலான மக்களாட்சி, இந்தோனேசியாவின் நிலைமைக்குப் பொருத்தமற்றது என்று சுகார்னோ நம்பினார். மாறாக, கிராமப் பெரியவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாரம்பரியக் கிராம முறை கருத்துப் பரிமாற்றம்; மற்றும் ஒருமித்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மக்களாட்சி அமைப்பிற்கு சுகார்னோ வழிவகுத்தார். அதுவே வழிகாட்டப்படும் மக்களாட்சி எனும் பெயரையும் பெற்றது. புதிய ஒழுங்குமுறை ஆட்சி 1960-களின் இடைப்பகுதியில் இந்தோனேசியா புதிய ஒழுங்குமுறை எனும் புதிய கட்டளை (ஆங்கிலம்: New Order; இந்தோனேசியம்: Orde Baru) எனும் ஒரு புதிய ஆட்சிக்கு மாற்றமானது; நாட்டின் முதல் அதிபரான சுகார்னோவை வெளியேற்றியது. சுகார்னோ 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவரின் ஆட்சி இந்தோனேசியாவின் நவீன வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டங்களில் ஒன்றாகும். அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிபர் சுகார்த்தோ 31 ஆண்டுகாலம் இந்தோனேசியாவின் அதிபராகப் பதவி வகித்தார். இவருக்கு முன்னர் பதவி வகித்த சுகார்னோ ஒரு பொம்மை மனிதர் (Puppet Master; Dhalang) என்றும் விவரிக்கப்பட்டார். இராணுவம் மற்றும் இந்தோனேசிய பொதுவுடைமை கட்சியின் (Communist Party of Indonesia; Partai Komunis Indonesia) மூலமாக, அவருக்கு எதிரான விரோதச் சக்திகளைச் சமநிலைப்படுத்துவதன் மூலம் சுகார்னோ தம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இந்தோனேசிய பொதுவுடைமை கட்சி 1965-ஆம் ஆண்டு வாக்கில், இந்தோனேசிய பொதுவுடைமை கட்சி (Indonesian Communist Party; Partai Komunis Indonesia (PKI) அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவலாக ஊடுருவியது; அது மட்டுமின்றி இராணுவத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்திய நிலையில், தன் செல்வாக்கையும் அழுத்தமாக நிலைப்படுத்திக் கொண்டது. செப்டம்பர் 30, 1965 அன்று, செப்டம்பர் 30 இயக்கம் (30 September Movement) நடத்திய நடவடிக்கையில் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஆறு பேர் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 30 இயக்கம் என்பது இந்தோனேசிய ஆயுதப் படைக்குள் இருந்து உருவான எதிர்வினைக் குழு ஆகும். அடுத்த சில மணிநேரங்களில், மேஜர் ஜெனரல் சுகார்த்தோ தன் கட்டளையின் கீழ் படைகளைத் திரட்டி ஜகார்த்தா மாநகரத்தைக் கைப்பற்றினார். பொதுவுடைமைக்கு எதிரானவர்கள் என அறியப்படும் அந்த இயக்கத்தினர், தொடக்கத்தில் அப்போதைய இராணுவத் தலைவரைப் பின்பற்றி, வன்முறைகளைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் பொதுவுடைமைவாதிகளைத் துடைத்து ஒழித்தனர். பொதுவுடைமைக்கு எதிரானவர்கள், சுமார் அரை மில்லியன் மக்களைக் கொன்று, இந்தோனேசிய பொதுவுடைமை கட்சியையும் அழித்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. சுகார்த்தோ அரசியல் ரீதியாக பலவீனமடைந்த சுகார்னோ, தன் அரசியல் நிர்வாகத்தையும்; மற்றும் இராணுவ அதிகாரங்களையும் இராணுவத் தளபதி சுகார்த்தோவிடம் மாற்றிக் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. அதற்குள் சுகார்த்தோ, இந்தோனேசிய ஆயுதப் படைகளின் தலைவரானார். மார்ச் 1967-இல், இந்தோனேசிய நாடாளுமன்றம் (MPRS) இராணுவத் தளபதி சுகார்த்தோவை நாட்டின் செயல்பாட்டுத் தலைவராக நியமித்தது. ஓர் ஆண்டு கழித்து சுகார்த்தோ முறையாக அதிபராக நியமிக்கப்பட்டார். சுகார்னோ 1970-ஆம் ஆண்டு இறக்கும் வரையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இடதுசாரி சார்பு கொண்ட சுகார்னோவின் கீழ், இந்தோனேசியாவில் ஒரு குழப்பமான தேசியவாதம் நிலவியது; மற்றும் பொருளாதாரத் தோல்வியும் ஏற்பட்டது. சுகார்த்தோவின் மேற்கத்திய சார்பு புதிய ஒழுங்குமுறை எனும் புதிய கட்டளை கொள்கை (New Order), நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியது. ஆனாலும் பழைய பஞ்சசீலக் கொள்கை தொடர்ந்து நீடித்தது. நிர்வாகத் துறை இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஐந்தாண்டு காலத்திற்கு குடிமக்களின் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். 2004-க்கு முன், மக்கள் ஆலோசனைக் குழுவால் (People's Consultative Assembly) தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆகக் கடைசியாக, கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் அதிகபட்சமாக ஐந்து ஆன்டு காலத்திற்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார் இரண்டு தவணைகள் பதவி வகிக்கலாம். மேலும் அவர் ஒரு நாட்டுத் தலைவர்; ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி; மற்றும் உள்நாட்டு நிர்வாகம்; கொள்கை உருவாக்கம்; வெளியுறவு விவகாரங்களுக்குப் பொறுப்பானவர். குடியரசுத் தலைவர் ஓர் அமைச்சரவையை நியமிக்கிறார். அதன் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. இந்தோனேசிய நாடாளுமன்றம் இந்தோனேசிய நாடாளுமன்றம் என்பது இந்தோனேசிய மக்கள் ஆலோசனை மன்றம் (People's Consultative Assembly; Majelis Permusyawaratan Rakyat Republik Indonesia) (MPR) என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, இந்தோனேசியாவின் அரசியல் அமைப்பின் நாடாளுமன்றம் என்று அழைக்கலாம். இந்தோனேசிய நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டது: இந்தோனேசிய மக்களவை (House of Representatives (Indonesia); Dewan Perwakilan Rakyat Republik Indonesia; (DPR) பொதுவாக இந்தோனேசியா குடியரசின் பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படுகிறது. இந்தோனேசிய மேலவை (Regional Representative Counci; Dewan Perwakilan Daerah; DPD) பிராந்திய பிரதிநிதி மன்றம் என்று அழைக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் 34 மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் 4 மேலவை உறுப்பினர்கள்; (Dewan Perwakilan Daerah) (DPD) (செனட்டர்கள்) தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தோனேசிய மக்களவை இந்தோனேசிய மக்களவை எனும் இந்தோனேசியா குடியரசின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள், பொதுத் தேர்தல் மூலமாகத் தேர்வு செய்யப டுகிறார்கள். சட்டங்களை இயற்றும் முழு அதிகாரமும் இந்தோனேசிய மக்களவைக்கு (DPR) இருப்பதால், சட்டம் இயற்றும் அதிகாரத்தின் பெரும்பகுதியை இந்தோனேசிய மக்களவை (DPR) கொண்டுள்ளது. இந்தோனேசிய மேலவை இந்தோனேசிய மேலவை (DPD) என்பது இந்தோனேசிய மக்களவைக்கு (DPR) ஒரு துணை அமைப்பாகச் செயல்படுகிறது. இந்தோனேசிய மேலவை, சட்ட முன்வரைவுகளை (மசோதா) முன்மொழியலாம்; அதன் கருத்துகளை வழங்கலாம்; மற்றும் விவாதங்களில் பங்கேற்கலாம். ஆனால் அதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. இந்தோனேசிய நாடாளுமன்றம் இந்தோனேசிய நாடாளுமன்றம், இந்தோனேசியாவின் அரசியலமைப்பைத் திருத்தலாம்; குடியரசுத் தலைவரை (அதிபர்) பதவியேற்கச் செய்யலாம்; மற்றும் குடியரசுத் தலைவரின் பதவி நீக்க நடைமுறைகளைச் செயல்படுத்தலாம். இந்தச் செயல்பாடுகளில், ​​இந்தோனேசிய நாடாளுமன்றம், அதன் இரண்டு அவைகளின் உறுப்பினர்களை இணைப்பதன் மூலம் செயல்படுகிறது. மேலும் காண்க இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள் இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம் இந்தோனேசிய அமைச்சரவை இந்தோனேசிய அமைச்சரவைகளின் பட்டியல் இந்தோனேசியா குடியரசின் பிரதிநிதிகள் சபை மேற்கோள்கள் மேலும் படிக்க Denny Indrayana (2008) Indonesian Constitutional Reform 1999-2002: An Evaluation of Constitution-Making in Transition, Kompas Book Publishing, Jakarta O'Rourke, Kevin. 2002. Reformasi: the struggle for power in post-Soeharto Indonesia. Crows Nest, NSW: Allen & Unwin. Schwarz, Adam. 2000. A nation in waiting: Indonesia's search for stability. Boulder, CO: Westview Press. வெளி இணைப்புகள் Republic of Indonesia - National portal இந்தோனேசிய அரசு
686262
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கன்னட் சட்டமன்றத் தொகுதி
கன்னட் சட்டமன்றத் தொகுதி (Kannad Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியானது அவுரங்காபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய தேர்தல் ஆணையம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
686269
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
வால்கூர்நீட்சி
வால்கூர்நீட்சி (Telson)(பண்டைய கிரேக்க τέλσον 'மட்டுநிலம், எல்லை') என்பது கணுக்காலிகளின் உடலின் கடைசிப் பிரிவாகும். வரையறையைப் பொறுத்து, வால்கூர்நீட்சி கணுக்காலிகளின் உடலின் இறுதிப் பகுதியாகக் கருதப்படுகிறது. பிற கண்டங்களைப் போலல்லாமல் கருச்செல்லிலிருந்து இப்பிரிவு தோன்றாததால் உண்மையான உடல் பிரிவாகக் கருதப்படாமல் கூடுதல் பிரிவாகக் கருதப்படுகிறது. பிற கண்டங்களில் காணப்படும் இணை உறுப்புகள் இதில் எதுவும் இல்லை. ஆனால் பிளவுபட்ட வால் போன்று "வால் பர்கா" காணப்படும். வடிவமும் அமைப்பும் சிற்றினத்திற்குச் சிற்றினம் வேறுபடுகின்றன. ஓட்டுடலிகள் நண்டு, இறால், ஏனைய பிற பத்துக்காலிகளில், வால்கூர்நீட்சி, வாற்பாதங்களுடன் சேர்ந்து விசிறி போன்ற அமைப்பினை உருவாக்குகிறது. இது காரிடாய்டு தப்பிக்கும் எதிர்வினையில் ஒரு துடுப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அபாயத்தில் உள்ள விலங்கு விரைவாகத் தன் வாலை வளைத்து, பின்னோக்கிச் செல்ல இயலும். இந்த முறையில் கிரில் வினாடிக்கு 60 செமீ வேகத்தை அடைய முடியும். குறைந்த வெப்பநிலை இருந்தபோதிலும், ஒளியியல் தூண்டுதலுக்கான தூண்டுதல் நேரம் 55 மில்லி விநாடிகள் மட்டுமே. ஐசோபோடாவிலும் டானைடேசியாவிலும் (பெரும் வரிசை பெராகரிடா) கடைசி வயிற்று உடல் பிரிவு வால்கூர்நீட்சியுடன் இணைக்கப்பட்டு, ஒரு "பிளோடெல்சன்" என்ற அமைப்பினை உருவாக்குகிறது. கெலிசரேட்டு சில கெலிசரேட்டுகளின் வலடி முள்ளினைக் குறிக்க வாலடிநீட்சி என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கெலிசரேட்டுகளில் பல புதைபடிவச் சிற்றினங்களிலும் (யூரிப்டெரிட்கள்), தற்போதுள்ள விலங்குகளிலும் (குதிரைலாட நண்டு "வால்"; தேள் கொடுக்கு போன்றவை) வால்கூர்நீட்சித் தெளிவாகக் காணப்படுகிறது. இந்தச் சூழலில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று சில வகைப்பாட்டியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். எண்ணற்ற காலிகள் (மிரியோபோடா) ஆயிரங்காலிகளில், வால்கூர்நீட்சி கால் இல்லாத முன்-குத உடல் பிரிவைக் கொண்டுள்ளது. இது ஓர் எப்பிக்கிராப்ட் என்று அழைக்கப்படும் பின்புற நீட்டிப்பைக் கொண்டிருக்கலாம். ஓர் இணை குத அடைப்பிதழ் (பாராபுரோக்ட்சு) அல்லது ஆசன வாயினை மூடக்கூடிய தட்டினையும் கொண்டுள்ளன. மேலும் ஆசனவாயுக்குக் கீழே காணப்படும் ஒரு தட்டு (ஹைபோபுரோக்டட்) குதவடிச் செதில் என்று அழைக்கப்படுகிறது. நூறுகாலிகள், இரண்டு குத அடைப்பிதழ்களைக் கொண்ட, பிறப்புறுப்பு திறப்புகளுக்குப் பின்புறமாக, உடலின் பின்பக்கமாக வால்கூர்நீட்சியினைக் கொண்டுள்ளது. அறுகாலிகள் சிறிய அளவில் மண்ணில் வாழும் விலங்குகளின் வரிசையான புரோட்டூரன்கள் மட்டுமே வால்கூர்நீட்சியினைக் கொண்ட அறுகாலிகள் ஆகும். மேலும் காண்க ஓபிஸ்டோசோமா பைகிடியம் மேற்கோள்கள் கணுக்காலிகள் உடற்கூற்றியல்
686270
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20114%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 114 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 114 (National Highway 114 (India))(தே. நெ. 114) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மல்லர்பூர், சைந்தியா, அகமத்பூர், போல்பூர், பேடியா, குசுகாரா, தலித், வர்த்தமான் ஆகியவற்றை இணைக்கிறது. மல்லர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 14 உடன் துவங்கும் இதன் சந்திப்பிலிருந்து இந்த நெடுஞ்சாலை மயூரேசுவர், பிராந்திக், போல்பூர், பேடியா, குசுகாரா, தலித் வழியாக வர்த்தமான் அருகே தேசிய நெடுஞ்சாலை 19-ல் முடிவடைகிறது. மேலும் பார்க்க தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
686271
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20114%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 114அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 114அ (National Highway 114A (India)) பொதுவாக தே. நெ. 114அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 14-ன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 114அ இந்தியாவின் மேற்கு வங்காளம், சார்க்கண்டு மாநிலங்களில் செல்கிறது. சன்ரிச்சுவாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 14-ல் இராம்பூர்காட்டில் தொடங்கும் இந்த நெடுஞ்சாலை மேற்கு வங்க மாநிலம் சிகாரிபாரா, தும்கா, இலக்ரபகாரி ஆகிய நகரங்களை இணைக்கிறது. ஜமா, ஜர்முண்டி, சௌபா மோர், தியோகர், சரத், மதுபூர், கிரிதி, சார்க்கண்டு மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை 19-ல் தும்ரியில் முடிவடைகிறது. வழித்தடம் இராம்பூர்காட், சன்றிச்சுவா, சிகாரிபாரா, தும்கா, இலக்ராபகாரி, ஜமா, ஜர்முண்டி, சௌபா மோர், தேவ்கர், சரத், மதுபூர், கிரீடிக், தும்ரி. சந்திப்புகள் இராம்பூர்காட் அருகே முனையம் சௌபா மோர் அருகே தியோகர் அருகே கிரிதிக், தும்ரி அருகே முனையம் மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் வெளி இணைப்புகள் தே. நெ. 114அ on OpenStreetMap
686272
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B.%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D
கோ. சுந்தர்ராஜன்
கோ. சுந்தர்ராஜன் () என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராவார். இவர் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இளமைக் காலம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்த இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1980களில் பூவுலகின் நண்பர்கள் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார். நீதிமன்ற வழக்குகள் 2012 இல் கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இவர் தொடுத்த வழக்கில் அணுக்கழிவுகளைக் கையாளுவது தொடர்பாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் அறிவித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிபுணத்துவமற்ற உறுப்பினரை நியமிப்பதை எதிர்த்து வழக்கு தொடுத்தார். சென்னை சேலம் பசுமை விரைவுச் சாலை திட்டத்தின் போது நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டத்தை மீறியதாக வழக்குத் தொடுத்தார் ஆனால் நிதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. 2018 இல் தேனி நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி தவறு என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். எழுதிய நூல்கள் சசாகியின் காகிதக் கொக்கு (2015) அணுவுலை தேசம் (2017) மேற்கோள்கள் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தென்காசி மாவட்ட நபர்கள்
686273
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20314%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 314 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 314 (National Highway 314 (India))(தே. நெ. 314) மேற்கு வங்காள மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தின் தல்தங்காவில் தொடங்கி புருலியா முடிவடையும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை 82.9 கிமீ (51.5 மைல்) நீளமானது. இச்சாலை முழுவதும் மேற்கு வங்காள மாநிலத்தில் மட்டுமே செல்கிறது. இந்த நெடுஞ்சாலை முன்பு தேசிய நெடுஞ்சாலை 60அ என்று அழைக்கப்பட்டது. வழித்தடம் இலாதுர்கா மதுபன் இலால்பூர் கூரா பிசுபுரியா பகபன்பூர் மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் வரைபடம் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
686279
https://ta.wikipedia.org/wiki/2025-%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
2025-ல் இந்தியாவில் பொதுவுரிமையில் வரும் படைப்புகளின் பட்டியல்
2025-ல் இந்தியாவில் பொதுவுரிமையில் வரும் படைப்புகளின் பட்டியல் (2025 in the public domain in India) என்பது 2025ஆம் ஆண்டு பொதுவுரிமைக்கு வரும் படைப்புகளின் பட்டியல் ஆகும். ஒரு படைப்பின் பதிப்புரிமை காலாவதியாகும் போது, அது பொதுப் பயன்பாட்டில் நுழைகிறது. 2025ஆம் ஆண்டில் பொதுக் களத்தில் பயன்பாட்டிற்கு வரும் படைப்பாளர்களின் பட்டியல் பின்வருமாறு. உலகளவில் சட்டங்கள் வேறுபடுவதால், சில படைப்புகளின் பதிப்புரிமை நிலை ஒரே மாதிரியாக இல்லை. இந்தியாவில் பொதுவுரிமையில் வரும் படைப்புகளின் பட்டியல் படைப்பாளி இறந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுவுரிமைக்கு வரும் படைப்புகள் இந்த படைப்புகள் ஆசிரியர் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுவுரிமையில் வருகின்றன (அல்லது, பல ஆசிரியர் படைப்பின் விசயத்தில், கடைசி எஞ்சியிருக்கும் ஆசிரியரின் மரணம் அடுத்த நாட்காட்டி ஆண்டின் தொடக்கத்திலிருந்து கணக்கிடப்படுகிறது. வெளியீட்டிலிருந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு பொது களத்திற்கு வரும் படைப்புகள் இந்தப் படைப்புகள் வெளியீட்டுத் தேதியிலிருந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப் பயன்பாட்டில் வருகின்றன. இது அடுத்த நாட்காட்டி ஆண்டின் தொடக்கத்திலிருந்து கணக்கிடப்படுகிறது: அநாமதேயப் படைப்புகள் புகைப்படங்கள் ஒளிப்பதிவுப் படைப்புகள் (திரைப்படங்கள்/திரைப்படங்கள்) ஒலிப்பதிவுகள் அரசுப் பணிகள் பெருநிறுவனப் படைப்புகள் அல்லது பன்னாட்டு அமைப்புகளின் படைப்புகள் திரைப்படங்கள் மேற்கோள்கள் மேலும் காண்க பொது களம் பொதுவுடைமை நூல்கள்
686288
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
நாயக்கன்கொட்டாய்
நாயக்கன்கொட்டாய் (Naickankottai ) என்பது இந்தியாவான், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது ஆண்டிஅள்ளி ஊராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. அமைவிடம் இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 278 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நக்சலிசம் இந்த ஊரும் இதைச் சுற்றியுள்ள கிராமங்களும் ஒரு காலத்தில் நக்சல்பாரி இயக்கத்தினரின் தாக்கம் பெற்றவையாக இருந்தன. இங்கு நக்சலைட்டுகளான பாலன், அப்பு ஆகியோருக்கு அமைக்கப்பட்ட நினைவிடம் உள்ளது. மேற்கோள் தர்மபுரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
686291
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
திருமலை கிருஷ்ணர் சிலை
திருமலை கிருஷ்ணர் சிலை (Tirumala Krishna Idol) என்பது இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் உள்ள சிலைகளில் ஒன்றாகும். இந்தக் கோயில் விஷ்ணுவினை வெங்கடாசலபதி என்று வழிபட அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், விஷ்ணுவின் பிற அவதாரங்களான கிருஷ்ணர், இராமரின் சிலைகளும் இக்கோவிலில் உள்ளன. கிருஷ்ணரின் மனைவி ருக்மிணி சிலையும் இந்தக் கோவிலில் உள்ளது. விளக்கம் கிருஷ்ணரின் சிலை ஒரு குழந்தையின் சுறுசுறுப்பான நடன (நவநீதா நிருத்ய) நிலையில் காணப்படுகிறது. இறைவன் நடனமாடும் நிலையில் காணப்படுகிறார். கிருஷ்ணரின் இடது கையை நடனமாடும் தோற்றத்தில் நீட்டித்தும், இடது கால் பீடத்திலும் உள்ளது. வலது கால் முழங்காலில் வளைந்து பீடத்தில் ஓய்வெடுக்காது காணப்படும். வலது கையில் வெண்ணெய் உள்ளது . ருக்மிணி சிலை ருக்மிணி தேவியின் இடது கையில் தாமரையுடன், வலது கை ஆசீர்வாதம் வழங்கும் நிலையில் உள்ளது. சிலை தாமரைப் பீடத்தில் உள்ளது. சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட சரியான தேதி, சிலையின் வரலாறு, கிருஷ்ணர் சிலையுடன் வைக்கப்பட்டதா என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. சிலை வரலாறு சிலை எந்தத் தேதியில் பிரதிட்டை செய்யப்பட்டது என்பது குறித்த சரியான பதிவுகள் எதுவும் இல்லை. ஆனால் கி. பி. 1100-இல் கிருஷ்ண ஜெயந்தியின் போது நைவேத்யம் (உணவு பிரசாதம்) வழங்கப்பட்டதாக ஆரம்பக்காலப் பதிவுகள் தெரிவிக்கின்றன. சேவை கோவிலின் தினசரி பிரார்த்தனைகளில் சிறீ கிருஷ்ணரின் சிலை முக்கிய கவனத்தைப் பெறவில்லை. சிலைக்குத் தினசரி நைவேத்யம் கூட முக்கிய தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. கோவிலில் உள்ள இராமர் சிலைக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. வருடாந்திரக் கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தின் போது (கோயிலைப் புனிதப்படுத்தும் போது) சிலைகள் கர்பக் கிரகத்திலிருந்து (புனிதக் கருவறை) அகற்றப்பட்டு, அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு புனிதப் பொருட்களால் பிரதிட்டை செய்யப்பட்ட பிறகு சிலைகள் மீண்டும் வைக்கப்படுகின்றன. போகா சிறீனிவாச சிலைக்குப் பதிலாகக் கிருஷ்ணர் சிலைக்கு ஏகாந்த சேவா செய்யப்படும்போது தனுர்மாசத்தின் போது சிலை கவனத்தை ஈர்க்கிறது. கிருஷ்ணர் சிலை பல்வேறு சந்தர்ப்பங்களில் கர்பா கிரகத்திற்கு வெளியே நேரடி பிரார்த்தனையில் இடம்பெறுகிறது. தெப்போத்ச்சவம்: வருடாந்திர தெப்போத்ச்சவத்தின் போது (தெப்பத் திருவிழா) இரண்டாவது நாள் கிருஷ்ணர், ருக்மிணி சிலைகள் பயன்படுத்தப்படுகிறது. சிலைகள் சுவாமி புஷ்கரிணிக்கு (கோயிலின் வடக்கே உள்ள புனித ஏரி) கொண்டு வரப்பட்டு, பிரார்த்தனைகளுக்காக ஏரியின் நடுவில் உள்ள மண்டபத்திற்குத் தெப்பத்தில் எடுத்துச்செல்லப்படும். வசந்தோற்சவம்: வருடாந்திரத் திருவிழாவின் போது, கிருஷ்ணர், ருக்மிணி சிலைகள் மூன்றாவது நாளில் மலையப்பா சுவாமி, தாயார், ராமர் சிலைகளுடன் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு இரத வீதிகளில் ஊர்வலமாக வசந்த மண்டபத்திற்கு எடுத்துவரப்படும். கிருஷ்ண ஜெயந்தி: சிறப்புப் பிரார்த்தனைகளுக்குப் பிறகு, கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் வகையில் கோயிலைச் சுற்றி ஊர்வலமாகக் கிருஷ்ணர், ருக்மிணி சிலைகள் எடுத்துவரப்படும். மேற்கோள்கள்
686297
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
ஈரயோடின் ஆறாக்சைடு
ஈரயோடின் ஆறாக்சைடு (Diiodine hexaoxide) என்பது I2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டை அயோடின் எக்சா ஆக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. அயோடினும் ஆக்சிசனும் சேர்ந்து ஈரயோடின் ஆறாக்சைடு உருவாகிறது. அயோடின் ஆக்சைடுகளின் வகுப்பைச் சேர்ந்த இச்சேர்மம், அயோடின்(V) மற்றும் அயோடின்(VII) ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்ட ஒரு கலப்பு ஆக்சைடு ஆகும். தயாரிப்பு கந்தக அமிலத்திலுள்ள அயோடிக் அமிலத்துடன் பெர் அயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஈரயோடின் ஆறாக்சைடு உருவாகும். HIO3 + H5IO6 -> I2O6 + 3H2O வெற்றிடத்தில் உள்ள மெட்டா-பெர் அயோடிக் அமிலத்தின் வெப்பச் சிதைவும் ஈரயோடின் ஆறாக்சைடு உருவாவதற்கு வழிவகுக்கிறது. வேதிப் பண்புகள் 100 பாகை செல்சியசு வெப்பநிலைக்குக் கீழே, ஈரப்பதம் இல்லாத நிலையில், ஈரயோடின் ஆறாக்சைடு சேர்மத்தை நிலையாகச் சேமிக்க முடியும். தண்ணீரில் கரைக்கும்போது, ​​அயோடின் மற்றும் பெர் அயோடிக் அமிலத்தை உருவாக்குவதற்கு ஒரு வெப்ப உமிழ்வினை நிகழ்கிறது. 150 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கும்போது, ​​இது ஈரயோடின் ஐந்தாக்சைடாக சிதைவதைக் காணலாம்: 2 I2O6 -> 2 I2O5 + O2 அயோடின் அணுக்களின் வெவ்வேறு ஆக்சிசனேற்ற எண்களுக்குக் காரணமாகக் கூறப்படும் இச்சேர்மம் டயாகாந்தப்பண்பு கொண்டதாகும். கட்டமைப்பு ரீதியாக, இச்சேர்மம் அயோடைல் பெர் அயோடேட்டு ஆகும். அயோடின்(V,VII) ஆக்சைடின் தோராயமாக IO2+IO4−. எனக் கருதப்படுகிறது. ஒரு திடப்பொருளாக, P1 (இடக்குழு எண். 2) என்ற இடக்குழுவில் அணிக்கோவை மாறிலிகள் a = 500.6 பைக்கோமீட்டர், b = 674.1 பைக்கோமீட்டர், c = 679.5 பைக்கோமீட்டர், α = 97.1°, β = 96.43°, γ =105.36° என்ற அளவுருக்களுடன் ஓர் அலகு செல்லுக்கு ஒரு வாய்ப்பாட்டு அலகுடன் இச்சேர்மம் படிகமாகிறது. மேலும் காண்க ஈரயோடின் நான்காக்சைடு அயோடின் ஐந்தாக்சைடு அயோடின் ஆக்சைடு மேற்கோள்கள் David R. Lide (Hrsg.): CRC Handbook of Chemistry and Physics 96. Auflage. CRC Press / Taylor and Francis, Boca Raton FL, Properties of the Elements and Inorganic Compounds, S. 4-67. அயோடின் சேர்மங்கள்
686298
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
புரூசு நெறிமுறை
புரூசு நெறிமுறை (Bruce's Code) என்பது கிபி 1821-இல் கிழக்கிந்திய நிறுவனத்தினால் இயற்றப்பட்ட திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவில்களின் நிர்வாகம், நிர்வாகப் பணியாளர்களுக்கான விதிகளின் தொகுப்பாகும். அன்றாட விவகாரங்களில் தலையிடாமல், பழக்கவழக்கங்கள், முந்தைய பயன்பாடுகளின் அடிப்படையில் திருமலை திருப்பதி கோவில்களின் நிர்வாகப் பணிகளை எளிதாக்க 42 விதிகளைக் கொண்ட ஒரு நெறிமுறையாக நன்கு வரையறுக்கப்பட்ட விதிகளாக இவை உள்ளன. நோக்கம் திருப்பதி கோவில்களைக் கைப்பற்றுவதில் ஆங்கிலேயர்களின் நோக்கம், முறையான நிர்வாகத்தின் மூலம் கோவில் நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதையும் தவறாக நிர்வகிப்பதையும் தடுப்பதற்கும், பிரித்தானியக் கருவூலங்களுக்கு நிதியை மாற்றுவதை நியாயப்படுத்துவதற்கும் கோவிலின் வருமானத்தை ஒழுங்கமைப்பதன் மூலம் அரசுக்கு நிலையான வருவாயை உருவாக்குவதாகும். வரலாறு கிபி 18ஆம் நூற்றாண்டில் இந்து பேரரசுகள் வீழ்ச்சியடைந்த பிறகு, கிபி 18ஆம் நூற்றாண்டில் திருமலை திருப்பதி கோவில்கள் முசுலீம் ஆட்சியாளர்களின் கீழ் வந்தன. ஆங்கிலேயர்களின் வருகையுடன், கோயில்களின் நிர்வாகம் கிபி 1801-இல் ஆற்காடு நவாபுகளிடமிருந்து கிழக்கிந்திய நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. ஆற்காடு நவாபுகளின் ஆட்சியின் போது, கோவிலில் நிரந்தரச் சேவையை உறுதி செய்வதற்காக, இந்து அல்லாத ஆட்சியாளர்களிடமிருந்து கோவில் நிலங்களை சுயமாகத் திரட்டுவதன் மூலமோ அல்லது சில பரம்பரை ஊழியர்களை அந்நியப்படுத்துவதன் மூலமோ கோயிலின் நிகர வருமானம் மதச்சார்பற்ற அதிகாரிகளால் பாராட்டப்பட்டது. அப்போதைய ஆற்காடு நவாப் சந்தா சாகிப் இறந்ததைத் தொடர்ந்து, ஆங்கிலேயர்கள் முகமது அலி கான் வாலாஜாவினை ஆற்காட்டின் நவாபாக நியமித்தனர். இவர் ஆங்கிலேயர்களின் அடிமைத்தனமாகப் பணியாற்றினார். இதன் விளைவாக, முகமது அலி கான் வாலாஜாவுன் வாரிசுகளும் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் கடன்களை ஏற்படுத்தினர். திருப்பதி பராகனாவுடன் கோவில் பெயரளவில் ஆற்காடு நவாபுகளின் சொத்தாக இருந்தபோதிலும், அந்தக் கடனாகச் செய்யப்பட்ட செலவை ஈடுசெய்யும் வகையில், கோவில்களின் வருவாயைக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு ஆற்காடு நவாபுகள் ஒதுக்கினர். 1789இல் கோட்டையில் வருவாய் வாரியம் நிறுவப்பட்ட பிறகு, கிழக்கிந்திய நிறுவனம் ஆண்டுக்கு நிலையான வருவாயை உருவாக்குவதற்காக ஆற்காடு நவாபுகளிடமிருந்து கோவிலின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது. கிபி 1801 வாக்கில், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் ஆற்காடு நவாப்புகளை வெளியேற்றி, ஆற்காட்டைத் தங்கள் களத்துடன் இணைத்து, கோவிலின் வருமானத்திற்காக திருப்பதி கோயில்களின் நேரடி நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது. 1803ஆம் ஆண்டில், திருப்பதி மாவட்டம் அமைந்துள்ள சித்தூர் மாவட்ட ஆட்சியர், திருப்பதி பகோடா குறித்த "இசுடேட்டன்சு அறிக்கை" என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் முழுக் கணக்கையும், அட்டவணைகள், பூசைகள், செலவுகள், நிலங்களின் அளவு போன்றவற்றைக் காட்டும் ஓர் அறிக்கையை வருவாய் வாரியத்திற்கு அனுப்பியிருந்தார். இந்த அறிக்கைகள் சிறியதாக இருந்தாலும், "குரோம்" மற்றும் "கேரட்" ஆகியோரால் ஜெகநாதர் கோவில் குறித்து பிரித்தானிய அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப அறிக்கை போன்றே இருந்தது. கி. பி. 1821இல் "புரூசு நெறிமுறை" என்று அழைக்கப்படும் கோவில், கோவில் ஊழியர்களின் நிர்வாகத்திற்கான விதிகள் உருவாக்கப்படும் வரை பிரித்தானிய ஆட்சியாளர்கள் "இசுடேட்டனின் அறிக்கையை" பயன்படுத்தி நிறுவனத்தைக் கட்டுப்படுத்தி நிர்வகித்தனர். இதற்கிடையில், திருமலை திருப்பதி கோவில் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது, தவறாகக் கோவிலை நிர்வகித்தது பற்றிய பல நிகழ்வுகளும் புகார்களும் வாரியத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதால், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் 1817ஆம் ஆண்டின் ஒழுங்குமுறை VIIஐ நிறைவேற்றியது. இந்த ஒழுங்குமுறையின் மூலம், வாரியத்தின் கடமை "பொது மேற்பார்வை, விரிவான மேலாண்மை அல்ல". இருப்பினும், திருமலை, திருப்பதி கோவிலின் நிர்வாகத்தின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களிலும் வாரியம் தலையிட்டது. சித்தூர் மாவட்டத்தின் அப்போதைய ஆணையரான புரூசு, திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்காக "புரூசு நெறிமுறை" என்று அழைக்கப்படும் 42 விதிகளைக் கொண்ட ஒரு நெறிமுறையினை உருவாக்கினார். மத நிறுவனங்களை நிர்வகிப்பதன் காரணமாக இந்துக் கோவில்களில் நடத்தப்படும் விக்கிரகாராதனையில் நிறுவனத்தின் அதிகாரிகள், ஆட்கள் பங்கேற்பதை இங்கிலாந்தில் உள்ள "இயக்குநர்கள் நீதிமன்றம்" கடுமையாக எதிர்த்தது. மத அறக்கட்டளைகளின் நிர்வாகத்தைக் கைவிட உத்தரவிட்டது. இது விக்டோரியா மகாராணி ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் கிபி 1842-43-இல் நடைமுறைக்கு வந்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஒரு ஒப்பீட்டு ஆய்வு-பகவான் ஜகந்நாதர் கோயில் மற்றும் டி. டி. தேவஸ்தானம் ஆங்கிலேயர்களின் வருகையுடன் கூடிய திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இடைக்கால வரலாற்றைப் பொறுத்தவரை, வெங்கடேஸ்வரர் கோயிலின் நிர்வாகம் 1801இல் கிழக்கிந்திய கம்பெனியின் கைகளில் சென்றது. திருப்பதி வெங்கடாசலபதி கோயில்
686300
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81
மாகேசு
மாகேசு (Mahesh, Serampore) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தின் சேராம்பூரில் உள்ள ஒரு சுற்றுப்புறமாகும். இது கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (கே. எம். டி. ஏ) ஒரு பகுதியாகும். இது 14ஆம் நூற்றாண்டின் புரி, ஜெகநாதர் கோவிலின் தளமாகும். மேலும் 1397ஆம் ஆண்டில் முதன்முதலில் மகேசில் இரதயாத்திரை நடைபெற்றது. இது இந்தியாவின் இரண்டாவது பழமையான கோவிலாகும். மேலும் காண்க சிறீராம்பூர் நகரம் மேற்கோள்கள் ஹூக்லி மாவட்டம்
686302
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20116%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 116 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 116 (தே. நெ. 116)(National Highway 116 (India)) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கோலாகாட்டினை ஹல்டியாவுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 116-ன் மொத்த நீளம் 51 கிமீ (32 மைல்) ஆகும். தேசிய நெடுஞ்சாலை 116 என்பது தேசிய நெடுஞ்சாலை 16-இன் ஒரு துணைச்சாலையாகும். இந்தத் தேசிய நெடுஞ்சாலையின் முதன்மை நோக்கம் ஹல்டியா துறைமுகத்திற்கு இணைப்பை வழங்குவதாகும். இதன் பழைய எண் தேசிய நெடுஞ்சாலை 41 என்பதாகும். வழித்தடம் தேசிய நெடுஞ்சாலை 116 கோலாகாட், மெச்சேடா, நந்தகுமார், ஹல்டியா துறைமுகங்களை இணைக்கிறது. சந்திப்புகள் கோலாகாட் அருகே முனையம் நந்தகுமார் அருகே என். எச். 116ஆ சுங்கச்சாவடி சோனாபேட்டியாவில் இந்த நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி ஒன்று உள்ளது. மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 116 தேசிய நெடுஞ்சாலை 41 இன் பாதை வரைபடம் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
686304
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20116%E0%AE%86%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 116ஆ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 116ஆ (National Highway 116B (India))(தே. நெ. 116ஆ) என்பது மேற்கு வங்காளம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் நந்தகுமாரில் தொடங்கி (தே. நெ. 116 சந்திப்பு) ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் சந்தனேசுவரில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலை கிமீ (57 மைல்) நீளம் கொண்டது. இந்த சாலை கான்டாய், திகா வழியாக செல்கிறது. மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் வரைபடம் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
686310
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88
இந்தோனேசிய அமைச்சரவை
இந்தோனேசிய அமைச்சரவை (ஆங்கிலம்: Cabinet of Indonesia; இந்தோனேசியம்: Kabinet Republik Indonesia) என்பது இந்தோனேசிய அரசாங்கத்தின்; நிர்வாகப் பிரிவின் ஒரு பகுதியாகும். இந்த அமைச்சரவை அரசாங்கத்தின் நிர்வாக அமைப்பில் நியமிக்கப்பட்ட மிக மூத்த அதிகாரிகளைக் கொண்டது. அமைச்சரவையின் உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள், குடியரசுத் தலைவரின் கீழ் பணியாற்றுகின்றனர். குடியரசின் துணைத் தலைவரைத் தவிர, மற்ற அமைச்சர்கள் குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்கு இணங்கப் பணியாற்றுகின்றனர். எந்தக் காரணமும் இல்லாமல் குடியரசுத் தலைவர், அவர் விருப்பப்படி அமைச்சரவையின் உறுப்பினர்களைப் பணிநீக்கம் செய்யலாம். இதற்கு இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. பொது 1945-ஆம் ஆண்டில், இந்தோனேசியா விடுதலை பெற்றதில் இருந்து பல அமைச்சரவைகளைக் கண்டுள்ளது. புதிய கட்டளை (ஆங்கிலம்: New Order; இந்தோனேசியம்: Orde Baru) நடைமுறையில் இருந்த காலக்கட்டத்தில், பெரும்பாலான அமைச்சரவைகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றம் அடையாமல் இருந்துள்ளன. பெரும்பாலான அமைச்சரவைகள், அவை உருவாக்கும் போது கொடுக்கப்பட்ட பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. தற்போதைய குடியரசுத் தலைவரின் அமைச்சரவை பிரபோவோ சுபியாந்தோவின் சிவப்பு வெள்ளை அமைச்சரவை என அழைக்கப்படுகிறது. வரலாறு இந்தோனேசிய அமைச்சரவையின் அமைப்பு விதிமுறைகள், 1945-ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசமைப்புச் சட்டத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே 14 நவம்பர் 1945 முதல், இந்தோனேசியாவின் அமைச்சரவைகள் என்பது நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என அறியப்படுகிறது. இந்தோனேசிய வரலாற்றில் இரு வகையான அமைச்சரவைகள் செயல்பாட்டில் இருந்துள்ளன. குடியரசுத் தலைவர் அமைச்சரவை (Presidential Cabinet); நாடாளுமன்ற அமைச்சரவை (Parliamentary Cabinet) குடியரசுத் தலைவர் அமைச்சரவைகளில், குடியரசுத் தலைவர் மட்டுமே அரசாங்கக் கொள்கைகளுக்கு, அரசாங்கத் தலைவராகப் பொறுப்பு வகிப்பார்.அதே வேளையில் நாடாளுமன்ற அமைச்சரவைகளில், ஒட்டுமொத்த அமைச்சரவையுமே அரசாங்கக் கொள்கைக்கு பொறுப்பு வகிக்கும். இந்தோனேசிய தேசியப் புரட்சி 1945 முதல் 1949 வரை இந்தோனேசிய விடுதலை போரின் போது, ​​அமைச்சரவையானது குடியரசுத் தலைவர் அமைச்சரவையில் இருந்து நாடாளுமன்ற அமைச்சரவை அமைப்பாக மாறியது. இவ்வாறான மாற்றுக் கொள்கை, இந்தோனேசிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கம் அல்ல; எவ்வாறாயினும், பல முக்கியமான காலக்கட்டங்களில், நாடாளுமன்ற அமைச்சரவை முறையை குடியரசுத் தலைவர் அமைச்சரவை முறைக்கு மாற்ற வேண்டியிருந்தது. அந்த காலக்கட்டத்தில், அந்த அமைச்சரவை 12-15 அமைச்சுகளுடன் 16 முதல் 37 அமைச்சர்களைக் கொண்டிருந்தது. 1949-ஆம் ஆண்டு இந்தோனேசிய கூட்டரசு அரசியலமைப்பு 27 டிசம்பர் 1949 அன்று, நெதர்லாந்து, இந்தோனேசியாவின் இறையாண்மையை அங்கீகரித்தது. 1949-ஆம் ஆண்டு இந்தோனேசிய கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் (Federal Constitution of 1949), அரசாங்கக் கொள்கைகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பு என்பதால், இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள் (United States of Indonesia) நாடாளுமன்ற அமைச்சரவையைக் கொண்டிருந்தன. ஆகத்து 1950-ஆம் ஆண்டு, இந்தோனேசிய அரசு ஒற்றையாட்சிக்கு திரும்பியவுடன், 1950-இன் தற்காலிக அரசியலமைப்பின் 83-ஆவது பிரிவின்படி (Article 83 of the Provisional Constitution of 1950), அரசாங்கக் கொள்கைகளில், நாடாளுமன்ற அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு முழுப் பொறுப்பு உள்ளது என்று கூறியது. அடுத்த ஒன்பது ஆண்டுகளில் 18 முதல் 25 உறுப்பினர்களைக் கொண்ட ஏழு அமைச்சரவைகள் செயல்பாட்டில் இருந்துள்ளன. சுகார்னோவின் அமைச்சரவை 5 சூலை 1959-இல், அதிபர் சுகார்னோ 1950-ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசியலமைப்பை நீக்கம் செய்து, 1945-ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசியலமைப்பிற்குத் திரும்புவதற்கான ஆணையை (President Sukarno's 1959 Decree) வெளியிட்டார். அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய அதிபர் அமைச்சரவை உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தப் புதிய அமைச்சரவை 1945-ஆம் ஆண்டு அரசியலமைப்பைப் பின்பற்றவில்லை. அதிபர் சுகார்னோவின் இறுதி ஆண்டுகளில், சுகார்னோவின் அமைச்சரவைகள் 111 அமைச்சர்களுடன், மிகப் பெரிய அமைச்சரவைகளாக இருந்தன. சுகார்த்தோவின் அமைச்சரவை 1968-ஆம் ஆண்டு, அதிபர் சுகார்த்தோவின் புதிய கட்டளை (New Order) ஆட்சியின் போது, ​​அமைச்சரவைகள் சிறியதாக இருந்தன. அதிபர் சுகார்த்தோ, 1968 முதல் 1998 வரை, ஐந்தாண்டு அதிபர் பதவிக் காலத்தில், ஆறு தடவைகள் இந்தோனேசியாவை ஆட்சி செய்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில், 1945-ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம்|இந்தோனேசிய அரசமைப்புச் சட்டத்தின்]] கீழ் அனுமதிக்கப்படாத அமைச்சுகள் அகற்றப்பட்டன. சுகார்த்தோவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் அமைச்சரவை (Presidential Cabinet) முறைமை தக்க வைக்கப்பட்டது. தற்போதைய நிலை 2010-ஆம் ஆண்டு வரை, இந்தோனேசிய அமைச்சரவையின் அமைச்சுகள் என்பது 'துறைகள்' (இந்தோனேசியம்: Departemen) என்று அழைக்கப்பட்டன. அது ஐக்கிய அமெரிக்காவின் மாதிரியாக இருந்தது. 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அனைத்துத் துறைகளும் 'அமைச்சுகள்' (இந்தோனேசியம்: Kementerian) என மறுபெயரிடப்பட்டன. அந்த வகையில், அவை நெதர்லாந்து மாதிரிக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டன. மேலும் காண்க சுகார்னோ சுகார்த்தோ இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள் இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம் மேற்கோள்கள் Daniel Dhaidae & H. Witdarmono (Eds) (2000)Wajah Dewan Perwakilan Rakyat Republic Indonesia Pemilihan Umum 1999 (Faces of the Republic of Indonesia People's Representative Council 1999 General Election) Harian Kompas, Jakarta, Feith, Herbert (2007) The Decline of Constitutional Democracy in Indonesia Equinox Publishing (Asia) Pte Ltd, Yayasan API (2001),Panduan Parlemen Indonesia (Indonesian Parliamentary Guide), வெளி இணைப்புகள் Republic of Indonesia - National portal Indonesian Cabinet 1945 – 2001, Indonesian Embassy in the United Kingdom இந்தோனேசிய அரசு
686311
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20116%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 116அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 116அ, (National Highway 116A (India)) பொதுவாக தே. நெ. 116அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 16-ன் இரண்டாம் நிலை பாதையாகும். தேசிய நெடுஞ்சாலை 116அ இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் செல்கிறது. வழித்தடம் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பன்ஸ்குரா (மெக்கோகிராம்), தசுபூர், பண்டார், கௌர்காட்டி, அரம்பாக், உசலான், செஹாரா பஜார், பர்தமான், கர்ஜானா, ராம்பூர், மங்கள்கோட், கர்கிராம், நகர், ஷெர்பூர் பஞ்ச்கிராம், மோரேக்ராம் ஆகிய பகுதிகளைத் தேசிய நெடுஞ்சாலை 116அ இணைக்கிறது. சந்திப்புகள் காரக்பூர் அருகே முனையம் பர்தமான் அருகே மோரேகிராம் அருகே முனையம் மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 116ஏ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
686313
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20216%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 216அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 216அ (National Highway 216A (India)) என்பது தே. நெ. 216அ என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது ராஜமன்றியில் தொடங்கி, ராவுலபாலம், தணுக்கு, தடேப்பள்ளிகுடேம் வழியாகச் சென்று ஏலூரில் முடிவடைகிறது. ராஜமன்றி நகரில் திவாஞ்செருவு, லாலச்செருவு, மொரம்புடி, வேமகிரி, கடியாபுலங்கா, ஜொன்னடா சந்திப்புகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேம்பாலங்களைக் கட்டி வருகிறது. தணுக்கு நகரில் உள்ள உந்திரஜாவரம் சந்திப்பில் உள்ள மேம்பாலமும் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.''' தே. நெ. 216அ என்பது தேசிய நெடுஞ்சாலை 16-இன் ஒரு உந்துவண்டி சாலையாகும். பாதையின் நீளம் இந்த நெடுஞ்சாலையின் மொத்த பாதை நீளம் 120.7 கிலோமீட்டர்கள் (75 மைல்) ஆகும். சந்திப்புகள் எலூருக்கு அருகிலுள்ள கோண்டுகோலானுவில் (பீமடோலெ) தே. நெ. 16 உடன் முனையம். ராஜமஹேந்திரவரத்தில் தே. நெ. 16 உடன் முனையம். மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 216A இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
686314
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20216%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 216 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 216 (தே. நெ. 216) (முன்பு தே. நெ. 214, தே. நெ. 215) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். பழைய தேசிய நெடுஞ்சாலைகள் 214-ம் 214அவும் இணைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை 216 என மறுபெயரிடப்பட்டன. இது கத்திப்பூடியில் தேசிய நெடுஞ்சாலை 16-ன் சந்திப்பிலிருந்து தொடங்கி காக்கிநாடா, அமலாபுரம், திகமர்ரு (பாலகோல்லு) நரசாபுரம், மச்சிலிப்பட்டணம், ரேப்பல்லே, செருகுப்பள்ளி, பாபட்லா, சிராலா வழியாகச் சென்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை 16ஐ ஒங்கோலில் இணைக்கிறது. விசாகப்பட்டினம்-காக்கிநாடா பெட்ரோ ரசாயன வழித்தடம், நெடுஞ்சாலையில் முன்மொழியப்பட்ட திட்டமாகும். வழித்தடம் இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 391.3 கிலோமீட்டர்கள் ஆகும்./ இது ஆந்திராவின் காக்கிநாடா, கோணசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி. கிருஷ்ணா, பாபட்லா, பிரகாசம் மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை 216, தேசிய நெடுஞ்சாலை 16-லிருந்து கத்திப்பூடி கிராமத்தில் தொடங்கி, கொல்லப்பிரோலு, பிதாபுரம், காக்கிநாடா, யானம், மம்மிதிவாரம், அமலாபுரம், ராஜோல், திகமர்ரு (பாலகோல்லு) , நரசாபுரம், பெடானா, மச்சிலிப்பட்ணம், ரேப்பல்லே, செருகுப்பள்ளி, பாபட்லா, சிராலா போன்ற நகரங்கள் வழியாகச் சென்று, ஓங்கோலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை16-உடன் இணைக்கிறது. மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
686316
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20316%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 316 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 316 (National Highway 316 (India))(தே. நெ. 316) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது ஒடிசாவில் புவனேசுவரத்தினை புரி-சத்பதாவுடன் இணைக்கிறது. இதனுடைய பழைய எண் 203ம் 203அ-வும் ஆகும். இந்தத் தேசிய நெடுஞ்சாலையின் வழித்தடம் 152.77 கி.மீ. நீளம் கொண்டதாகும். மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
686318
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20316%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 316அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 316அ (National Highway 316A (India)), பொதுவாக தே. நெ. 316அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 16-இன் துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 316அ இந்தியாவின் ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. வழித்தடம் ஒடிசா கொனார்க், இரத்தன்பூர், சதபயா, தம்ரா, பாசுதேவ்பூர், தலபாடா, சண்டிபூர், சந்தனேசுவர்-மேற்கு வங்காள எல்லை. தேசிய நெடுஞ்சாலை 16 (பத்ராக்கிலிருந்து சந்தபாலி வரை) புதிய இணைப்பு மேற்கு வங்காளம் ஒடிசா எல்லை-திகா சந்திப்புகள் கொனார்க் அருகே முனையம் திகா அருகே முனையம் மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
686332
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
விவேகானந்தபுரம்
விவேகானந்தபுரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகத்தீஸ்வரம் வட்டத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாகும். நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பகுதியானது, கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பராமரித்து வரும் விவேகானந்த கேந்திரத்தின் தலைமையிடம் அமைந்துள்ள இடமாகும். அமைவிடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 44.13 மீ. உயரத்தில், () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு விவேகானந்தபுரம் அமையப் பெற்றுள்ளது. சமயம் கோயில்கள் இங்குள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் சுமார் ரூ.25 கோடி செலவில் பாரத மாதா கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாரத மாதா கோயிலில் நிறுவப்பட்டுள்ள சிவன் சிலை சுமார் 12 அடி உயரம் கொண்டும், அச்சிலை அமைந்துள்ள பீடம் சுமார் 20 அடி உயரத்திலும் காணப்படுகின்றன. மேலும், சக்கர தீர்த்த காசிவிசுவநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்றும் விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ளது. மேற்கோள்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்