id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
685538
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%2C%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பிரமா தேநீர், காப்பி அருங்காட்சியகம்
பிரமா தேநீர், காப்பி அருங்காட்சியகம் (Bramah Tea and Coffee Museum) என்பது தென்கிழக்கு இலண்டனில் உள்ள ஓர்அருங்காட்சியகம். தேநீர் மற்றும் காப்பியின் வரலாற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் அருங்காட்சியகம் இதுவாகும். ஆப்பிரிக்கா மற்றும் தொலை கிழக்கிலிருந்து ஐரோப்பாவிற்கு 400 வருடங்களுக்கு முன்னர் தேநீர், காப்பி ஆகிய இரண்டு பொருட்களின் வருகை, வணிக மற்றும் சமூக வரலாற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகம் இதுவாகும். இந்த அருங்காட்சியகம் எட்வர்ட் பிராமாவால் 1992ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது முன்பு பட்லர்ஸ் வார்ப் என்ற இடத்திலிருந்தது. பின்னர் இது இலண்டன் பிரிட்ஜ் நிலையம் மற்றும் பரோ சந்தைக்கு மிக அருகில் உள்ள எஸ். இ. 1-ல் உள்ள 40 சவுத்வார்க் தெருவிற்கு மாற்றப்பட்டது. இந்த இடத்தில் அருங்காட்சியகமும் தினமும் காபி மற்றும் தேநீர் பரிமாறப்படும் தேரீர் அறை ஒன்றும் செயல்படுகிறது. எட்வர்ட் பிரமா தனது 76 வயதில் கிறிஸ்ட்சர்ச், டோர்செட் 15 சனவரி 2008 அன்று இறந்தார். இவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், பிரிட்டனின் தேயிலை பாரம்பரியம் என்று அழைக்கப்படும் ஒரு புத்தகத்தினை எழுதியதில் பிரமா முக்கிய பங்குவகித்தார். 2008-ல் அருங்காட்சியகம் மூடப்பட்டது. மறுசீரமைப்பு அல்லது இடமாற்றம் செய்வதற்கான திட்டங்கள் இருந்தபோதிலும், அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்படவில்லை. மேலும் காண்க துபாய் காப்பி அருங்காட்சியகம் மேற்கோள்கள் காப்பி தேயிலை அருங்காட்சியக வகைகள்
685540
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
திரைப்பட வரலாற்று அருங்காட்சியகம்
திரைப்பட வரலாற்று அருங்காட்சியகம் (History of Cinema Museum) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் திரைப்படத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை மையமாகக் கொண்ட ஒரு நிரந்தரக் கண்காட்சி உள்ளது. இது துபாய் கலாச்சாரம் மற்றும் கலை ஆணையத்தின் தலைவரான ஷேக் மஜித் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் என்பவரால் சனவரி 14, 2014 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் அக்ரம் மிக்னாசின் சேகரிப்புகள் பியரி படாவுவுடன் இணைந்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆரம்பக்கால இயங்குபடச் சாதனங்கள் (ப்ராக்ஸினோஸ்கோப், ஜோட்ரோப், மியூடோஸ்கோப் போன்றவை) போன்ற 300க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் தொகுப்பாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொழுதுபோக்கு அம்சமான திரைப்படத் துறையின் வரலாறு, வளர்ச்சி, பரிணாமம் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திரைப்பட அருங்காட்சியகங்கள் அருங்காட்சியக வகைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள்
685548
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%282021-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%29
மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)
மியான்மர் உள்நாட்டுப் போர் (Myanmar Civil War), மியான்மர் நாட்டை 2021 மியான்மர் இராணுவப் புரட்சி மூலம் ஆளும் சர்வாதிகார இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிராக மியான்மர் மக்களின் பல ஆயுதக் குழுக்கள் மே 2021 முதல் நடத்துகின்ற போர் ஆகும். 5 டிசம்பர் 2024 முடிய உள்நாட்டுப் போரில் 73,069+ பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 மே 2024 முடிய 4,961 பொதுமக்கள் மற்றும் 26,601 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27,17,500 முதல் 3,0,00,000 வரை வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ளனர். மேலும் 1,13,700 மக்கள் உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ளனர். பின்னணி 2020 மியான்மர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி மிகப்பெரும்பான்மையான (83%) தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாய முன்னணி கட்சி வெற்றி பெற்றது செல்லாது என மியான்மர் இராணுவம் குற்றம் சாட்டியதுடன், 1 பிப்ரவரி 2021 அன்று இராணுவப் புரட்சி மூலம்நாட்டில் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தியும், நாடாளுமன்றத்தை முடக்கியும், ஆங் சான் சூச்சியை வீட்டுக் காவலில் வைத்தனர். இதனால் நாடு முழுவதும் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களும், வன்முறைகளும் எழுச்சி பெற்றது. இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களால் மார்ச் 2023 முடிய எல்லைப்புற மாநிலங்களில் வாழும் 17.5 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்றும், 1.6 மில்லியன் பொதுமக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும்; 55,000 குடியிருப்புகள் குண்டு வீச்சுகளால் அழிந்துள்ளது என ஐ. நா. மதிப்பீடு செய்துள்ளது. மியான்மரிலிருந்து 40,000 பேர் அண்டை நாடுகளான வங்காளதேசம், இந்தியா, தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளில் மக்கள் அடைக்கலம் அடைந்துள்ளனர். அக்டோபர் 2023 முடிய மியான்மரின் 40% நிலம் அரசு தரைப்படை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மூன்றில் இரண்டு பங்கு உள்ளாட்சிகள் (330 உள்ளாட்சிகள்) அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிரான போராளிகளின் படைகள் அரக்கான் இராணுவம் காசின் விடுதலை இராணுவம் மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள் மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம் தாங் தேசிய விடுதலை இராணுவம் சான் மாநிலப் படைகள் (வடக்கு) சான் விடுதலைப் படைகள் (தெற்கு) மூன்று சகோதரத்துவ கூட்டணி அரக்கான் இராணுவம் மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம் தாங் தேசிய விடுதலை இராணுவம் 4கே கூட்டணி காரென் தேசிய விடுதலைப் படைகள் காரென் தேசியப் படைகள் கரென்னி படைகள் கரென்னி தேசிய மக்கள் விடுதலைப் படைகள் சின் சகோதரத்துவக் கூட்டணி சின் தேசியப் படைகள் சின்லாந்து தேசிய இராணுவம் சோமி புரட்சிகரப் படைகள் பாமர் மக்கள் விடுதலைப் படைகள் பா-ஒ தேசிய விடுதலைப் படைகள், (2023 முதல்) மொன் தேசிய விடுதலைப் படைகள் காயா மாநில இடைக்கால நிர்வாகக் குழு சின்லாந்து இதனையும் காண்க 2021 மியான்மர் இராணுவப் புரட்சி மியான்மர் அரசு நிர்வாகக் குழு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் International Institute for Strategic Studies – Myanmar Conflict Map மியான்மார்
685550
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
நாய்காவ் சட்டமன்றத் தொகுதி
நாய்காவ் சட்டமன்றத் தொகுதி (Naigaon Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நான்டெட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தொகுதி எல்லை நிர்ணயம் 2008 இல் நடந்தது. நாந்தேடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் மகாராட்டிர அரசியல்
685552
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
தேக்லூர் சட்டமன்றத் தொகுதி
தேக்லூர் சட்டமன்றத் தொகுதி (Deglur Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நாந்தேட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2008 இல் தொகுதி எல்லை நிர்ணயம் நடந்தது. இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேக்லூர், நாந்தேடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 வெளியிணைப்புகள் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் மகாராட்டிர அரசியல்
685553
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
இராஜேசு சம்பாஜி பவார்
இராஜேசு சம்பாஜி பவார் (Rajesh Sambhaji Pawar) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாந்தேட் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும் ஆவார். இவர் 2019 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் நைகான் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வசந்த்ராவ் பல்வந்த்ராவ் சவானை தோற்கடித்தார். பவார் மீண்டும் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1972 பிறப்புகள் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
685559
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
சரிபா ரோட்சியா பாரக்பா
துன் சரிபா ரோட்சியா பாரக்பா (ஆங்கிலம்: Tun Sharifah Rodziah Barakbah; சாவி: شريفة راضية بنت سيد علوي برقبة;) பிறப்பு: 1920 – இறப்பு: 12 மார்ச் 2000) என்பவர் மலேசியாவின் 1-ஆவது பிரதமரும்; மலேசியத் தந்தையுமான துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman Putra Al-Haj) அவர்களின் மூன்றாவது மனைவி ஆவார். இவர் 31 ஆகத்து 1957 தொடங்கி, 22 செப்டம்பர் 1970 வரையிலும்; ஏறக்குறைய 13 ஆண்டுகள் மலேசியப் பிரதமரின் மனைவியாக வாழ்ந்துள்ளார். இவர் மலேசியப் பிரதமரின் மனைவியாக வாழ்ந்தவர்களில் மிக மூத்தவராகவும் அறியப்படுகிறார். தொடக்க கால வாழ்க்கை 1920-இல் பிறந்த சரிபா ரோட்சியா பாரக்பா; யெமன் நாட்டின் அத்ராமி-மலாய் (Hadhrami-Malay) வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் அரேபிய மூதாதையர்கள் யெமன் இத்ரமாத் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து பல தலைமுறைகளாக கெடாவில் வாழ்ந்தனர் பராக்பா குலத்தைச் சேர்ந்த இவர், பினாங்கின் முன்னாள் யாங் டி பெர்துவா நெகிரி (ஆளுநர்) சையது சா அசன் பராக்பாவுடன் (Syed Sheh Hassan Barakbah) வம்சாவளி தொடர்புடையவர். இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த துங்கு அப்துல் ரகுமான், இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் தொடங்கப் போகிறது என்ற செய்தியைக் கேட்டு இங்கிலாந்திலிருந்து கெடாவுக்குத் திரும்பினார். திருமணம் பின்னர் 1939-இல் துங்கு அப்துல் ரகுமான், சரிபா ரோட்சியாவைத் திருமணம் செய்து கொண்டார். துங்குவின் இரண்டாவது மனைவியான மரியம் சோங்கின் (Meriam Chong) மரணத்திற்குப் பிறகு சரிபா ரோட்சியா துங்குவின் மூன்றாவது மனைவியானார். அதற்கு முன்னர் துங்கு, தம்முடைய இரண்டாவது மனைவியான வயலட் கோல்சன் (Violet Coulson) என்பவரை விவாகரத்து செய்தார். வயலட் கோல்சன் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். துங்கு இங்கிலாந்தில் படிக்கும் போது இருவருக்கும் இடையே நட்பு உருவானது. பின்னர், மரியம் சோங் மரணம் அடைந்து செய்தியை அறிந்து, வயலட் கோல்சன் சிங்கப்பூருக்கு வந்தார். அதன் பின்னர் இருவரின் திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இருவருக்கும் பிள்ளைகள் எதுவும் இல்லை. பொது துங்குவிற்கும் சரிபா ரோட்சியாவுக்கும் பிள்ளைகள் இல்லை. அதனால் மரியம் சோங்கின் பிள்ளைகளைத் தம் பிள்ளைகளாக வளர்த்தார். பின்னர் அவர்கள் சுலைமான், மரியம், பரிதா எனும் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். மலேசியாவின் கொந்தளிப்பான காலக் கட்டங்களில் தம் கணவருக்கு அரசியல் ஆதரவைத் திரட்டுவதில் சரிபா ரோட்சியா முக்கிய பங்கு வகித்தார். இறப்பு சரிபா ரோட்சியா, நிமோனியா காரணமாக பினாங்கில் 12 மார்ச் 2000 அன்று தம் 80 வயதில் காலமானார்; மற்றும் கெடா, லங்கார் நகரத்தில் உள்ள கெடா அரச கல்லறையில் அவருடைய கணவரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். விருதுகள் மலேசிய விருதுகள் : - உயரிய நம்பிக்கை மகுட விருது (SMN) – Tun (1970) : - திராங்கானு முடியாட்சி விருது (SPMT) – Dato' (1964) மேலும் காண்க மலேசிய பிரதமரின் மனைவி துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் அரசியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Asiaweek.com, 24 March 2000. Putera Negara; 1987, Firma Publishing, Aziz Zarina Ahmad. 1920 பிறப்புகள் 2000 இறப்புகள் மலேசிய முசுலிம்கள் மலேசியப் பெண்கள் ‎ மலேசியப் பிரதமர்களின் மனைவிகள்
685563
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
முகேட் சட்டமன்றத் தொகுதி
முகேட் சட்டமன்றத் தொகுதி (Mukhed Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாந்தேட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2008 இல் தொகுதியின் எல்லைகள் மாற்றப்பட்டன முகேட், நாந்தேடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 வெளியிணைப்புகள் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் மகாராட்டிர அரசியல்
685570
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE
ரகா நோவா
துன் ரகா நோவா (ஆங்கிலம்: Tun Rahah binti Mohamed Noah; சாவி: راحة محمد نوح‎ ) பிறப்பு: 11 சூன் 1933 – இறப்பு: 18 திசம்பர் 2020) என்பவர் மலேசியாவின் 2-ஆவது பிரதமர் துன் ரசாக் (Tun Abdul Razak Hussein) (1922–1976) அவர்களின் மனைவியும்; மலேசியாவின் 6-ஆவது பிரதமர் நஜீப் ரசாக்கின் தாயாரும் ஆவார். இவர் மலேசிய மக்களவையின் முதல் தலைவராகவும், மலேசிய மேலவையின் மூன்றாவது தலைவராகவும் பதவி வகித்த முகமது நோவா ஒமார் என்பவரின் (1898-1991) மகள் ஆவார். இவர் 22 செப்டம்பர் 1970 தொடங்கி, 14 சனவரி 1976 வரையிலும்; ஏறக்குறைய 7 ஆண்டுகள் மலேசியப் பிரதமரின் மனைவியாக வாழ்ந்துள்ளார். தொடக்க கால வாழ்க்கை ரகா நோவா 1933-ஆம் ஆண்டு சூன் 11-ஆம் தேதி ஜொகூர், மூவாரில் பிறந்தார். பத்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் இவர் மிக இளையவர். ஜொகூர் பாருவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, ​​ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் (UMNO) தீவிர உறுப்பினராக இருந்த அப்துல் ரசாக் உசேன் அவர்களுக்கு ரகா நோவா அறிமுகமானார். இலண்டனில் படிக்கும் போது துன் அப்துல் ரசாக்கின் நண்பரான தைப் ஆண்டகா (Taib Andaka) என்பவரால் அம்னோ அமைப்பு நிறுவப்பட்டது. அப்துல் ரசாக் உசேன் அவர்களும்; ரகா நோவா அவர்களும்; 4 செப்டம்பர் 1952-இல் திருமணம் செய்து கொண்டனர். பொது அப்துல் ரசாக் உசேன் 1970-இல் மலேசியாவின் இரண்டாவது பிரதமரானார். பிரதமரின் மனைவியாக, ரகா நோவா மலேசியாவின் பெண் சாரணர் சங்கத்தின் தலைவராகவும் (Girl Guides Association of Malaysia), முசுலீம் பெண்கள் செயல் அமைப்பின் (Muslim Women's Action Organisation) (Pertiwi) புரவலராகவும் பணியாற்றினார். 1976-இல், துன் ரசாக் பதவியில் இருந்தபோது காலமானார். அப்போது ரகா நோவாவின் வயது 43. மிக இளம் வயதிலேயே விதவையானார். துன் ரகா நோவா தற்போது, துன் ரசாக்கின் நினைவாக நிறுவப்பட்ட பல்கலைகழகமான துன் அப்துல் ரசாக் பல்கலைக்கழகத்தின் (Universiti Tun Abdul Razak) வேந்தராக பொறுப்பில் உள்ளார்.[1] இறப்பு துன் ரகா, 18 திசம்பர் 2020 அன்று கோலாலம்பூரில் உள்ள பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தில் தனது 87-ஆவது வயதில் காலமானார். கோலாலம்பூரின் தேசியப் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள மாவீரர்களின் கல்லறையில் அவரின் சகோதரி துன் சுகைலா முகமது நோவாவின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். துன் சுகைலா, மலேசியாவின் மூன்றாவது பிரதமர் உசேன் ஓன் அவர்களின் மனைவி ஆவார். விருதுகள் மலேசிய விருதுகள் : - உயரிய நம்பிக்கை மகுட விருது (SSM) – Tun (1976) : - மலேசிய விருதுகள்#மதிப்புறு விருதுகள்; பதக்கங்கள் (PNBS) – Dato Sri (2002) : - மலேசிய விருதுகள்#மதிப்புறு விருதுகள்; பதக்கங்கள் (SIMP) – formerly Dato', now Dato' Indera (1973) : - மலேசிய விருதுகள்#மதிப்புறு விருதுகள்; பதக்கங்கள் (SPDK) – Datuk Seri Panglima (1974) மேலும் காண்க மலேசிய பிரதமரின் மனைவி அப்துல் ரசாக் உசேன் நஜீப் ரசாக் மலேசியாவின் அரசியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Asiaweek.com, 24 March 2000. Putera Negara; 1987, Firma Publishing, Aziz Zarina Ahmad. 1933 பிறப்புகள் 2000 இறப்புகள் மலேசிய முசுலிம்கள் மலேசியப் பெண்கள் ‎ மலேசியப் பிரதமர்களின் மனைவிகள்
685571
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பசமத் சட்டமன்றத் தொகுதி
பசமத் சட்டமன்றத் தொகுதி (Basmath Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 வெளியிணைப்புகள் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் மகாராட்டிர அரசியல்
685573
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%29
வா மாநிலம் (மியான்மர்)
வா மாநிலம் (Wa State) மியான்மர் நாட்டின் கிழக்கில் அமைந்த ஒரு தன்னாட்சி நிர்வாகப் பிரிவாகும். தன்னாட்சி பெற்ற வா மாநிலத்திற்கு தனி அரசியலமைப்பு, நாணயம், இராணுவம், அதிபர் மற்றும் நிர்வாகப் பிரிவுகள் கொண்டது. துவக்கத்தில் வா மாநிலம் மியான்மர் நாட்டின் ஒரு மாநிலமாக இருந்தது. 1989ஆம் ஆண்டு முதல் வா மாநில ஆயுதக் குழுவினர் தன்னாட்சிக் கோரி மியான்மர் இராணுவத்துடன் போரிட்டு வென்று 17 ஏப்ரல் 1989 அன்று வா மாநிலம் தன்னாட்சி பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது. வா மாநிலம் வடக்கு, தெற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தெற்கு பகுதி தாய்லாந்து எல்லைப்புறத்திலும், வடக்குப் பகுதி சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும்.வா மாநிலம் மூன்று கவுண்டிகளாகவும், இரண்டு சிறப்பு மாவட்டங்களாகவும் மற்றும் ஒரு பொருளாதார சிறப்பு மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகர் பாங்காம் ஆகும். ஆசுத்ரோ-ஆசிய மொழி பேசும் வா மக்கள் இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. இது ஏறத்தாழ சீனாவின் அரசியல் முறையைப் பின்பற்றுகிறது. புவியியல் & பொருளாதாரம் வா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைப்பள்ளதாக்குகள் நிறைந்தது. இதன் குறைந்தபட்ச உயரம் 600 மீட்டர் ஆகும். துவக்கத்தில் அபினி செடி அதிகமாக பயிரிட்ட இம்மாநில மக்கள் பின் சீனா உதவியுடன் இரப்பர் மரங்கள் மற்றும் தேயிலை பயிரிட்டனர். வா மாநிலத்தில் 220,000 ஏக்கர் பரப்பில் இரப்பர் தோட்டங்கள் உள்ளது. மேலும் நெல், மக்காச்சோளம், காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இம்மாநிலத்தில் தகரம் மற்றும் துத்தநாகம் சுரங்கங்கள் மற்றும் குறைந்த அளவில் தங்க கனிமங்கள் உள்ளது.கூடுதலாக தலைநகர் பாங்காம் நகரத்தில் சூதாட்டம், பாலியல் தொழில் சுற்றுலா செயல்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஐக்கிய வா மாநில அரசுப் படைகள் போதை மருந்து கடத்தல் அமைப்புகளில் ஒன்றாகும். இதனையும் காண்க சின்லாந்து 2021 மியான்மர் இராணுவப் புரட்சி மேற்கோள்கள் உசாத்துணை Andrew Marshall, The Trouser People: a Story of Burma in the Shadow of the Empire. London: Penguin; Washington: Counterpoint, 2002. . Ba Nyan, Who are the Wa? Enchen Lan, Promoting all Wa Townships in Shan State to Participate in Future Myanmar General Elections , Munich: GRIN Verlag, 2020. . Forbes, Andrew; Henley, David (2011). Traders of the Golden Triangle. Chiang Mai: Cognoscenti Books. ASIN: B006GMID5. Hideyuki Takano, The Shore Beyond Good and Evil: A Report from Inside Burma's Opium Kingdom (2002, Kotan, ) Midnight in Burma. Ein Roman über die Tochter eines Generals im Wa-Staat, nicht gerade historisch mit vielen historischen Fehlern, aber sehr spannend geschrieben, Alex O'Brien. Asia Books (2001). The Wa State, Burma The National Strategy Forum Review வெளி இணைப்புகள் Television news broadcast from Wa State மியான்மார்
685586
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-II
கொடுவாயூர்-II
கொடுவாயூர்-II (Koduvayur-II) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது கொடுவாயூர் கிராம ஊராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. மக்கள்வகைப்பாடு 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொடுவாயூர்-II இன் மொத்த மக்கள் தொகை 7,965 ஆகும். அதில் ஆண்களின் எண்ணிக்கை 3,858 என்றும், பெண்களின் எண்ணிக்கை 4,107 என்றும் உள்ளது. மேற்கோள்கள் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
685587
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%2C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
கொல்லங்கோடு, பாலக்காடு
கொல்லங்கோடு என்பது இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். கொல்லங்கோடு ஊரானது கொல்லங்கோடு கிராம ஊராட்சி, கொல்லங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையகமாகும். [ மேற்கோள் தேவை ] இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொல்லங்கோடின் மொத்த மக்கள் தொகை 18,583 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 9,068 என்றும், பெண்களின் எண்ணிக்கை 9,515 என்றும் உள்ளது. கொல்லங்கோடு தொடருந்து நிலையம் ஊத்தராவில் அமைந்துள்ளது. மாநில நெடுஞ்சாலை -58 கொல்லங்கோடு வழியாக செல்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் வானுர்திநிலையம் கொல்ங்கோட்டில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆறு பாரதப்புழாவின் கிளை ஆறான காயத்திரிபுழா ஆறு ஊருக்கு அருகில் பாய்கிறது. கொல்லங்கோடு ஊராட்சி ஒன்றியம் கொல்லங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள் கொல்லங்கோடு கொடுவாயூர் புதுநகரம் வடவண்ணூர் முதலமட காட்சியகம் மேற்கோள்கள் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் பாலக்காடு மாவட்ட ஊராட்சிகள் Coordinates on Wikidata
685589
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28III%29%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
காலியம்(III) குளோரைடு
காலியம்(III) குளோரைடு (Gallium(III) chloride) என்பது GaCl3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். GaCl3·H2O என்ற ஒற்றைநீரேற்றாக உருவாகிறது. திண்ம காலியம்(III) குளோரைடு நீருறிஞ்சும் ஒரு வெள்ளை திடப்பொருளாகும். Ga2Cl6 என்ற வாய்ப்பாட்டுடன் இது இருமராக உள்ளது. காலியம்(III) குளோரைடு நிறமற்றதாகும். கிட்டத்தட்ட அனைத்து கரைப்பான்களிலும் கரையும். உலோக ஆலைடுகளில் இப்பண்பு அசாதாரணமானதாகும். காலியத்தின் பெரும்பாலான வழிப்பெறுதிகளுக்கு முக்கிய முன்னோடிச் சேர்மமாகவும் கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு வினையாக்கியாகவும் இச்சேர்மம் செயல்படுகிறது. இலூயிசு அமிலமாக, GaCl3 அலுமினியம் குளோரைடை விட வலிமை குறைந்த அமிலமாகும். அலுமினியம் குளோரைடை விடவும் குறைப்பதற்கும் எளிதானதாகும். Ga(III) மற்றும் Fe(III) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு வேதியியல் ஒத்ததாக உள்ளது. எனவே காலியம்(III) குளோரைடு பெரிக் குளோரைடின் காந்த ஒப்புமையாகப் பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்பு 200 °செல்சியசு வெப்பநிலையில் குளோரின் ஓட்டத்தில் காலியம் உலோகத்தை சூடாக்கி மூலத் தனிமங்களிலிருந்து காலியம்(III) குளோரைடு சேர்மத்தைத் தயாரிக்கலம். வெற்றிடத்தின் கீழ் பதங்கமாதல் முறையில் காலியம்(III) குளோரைடை சுத்திகரிக்கலாம். 2 Ga + 3 Cl2 → 2 GaCl3 காலியம் ஆக்சைடுடன் தயோனைல் குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்தியும் காலியம்(III) குளோரைடைத் தயாரிக்கலாம். Ga2O3 + 3 SOCl2 → 2 GaCl3 + 3 SO2 காலியம் உலோகம் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் மெதுவாக வினைபுரிந்து ஐதரசன் வாயுவை உருவாக்குகிறது. இந்தக் கரைசலை ஆவியாக்கினால் காலியம் முக்குளோரைடின் ஒற்றைநீரேற்று உருவாகும். கட்டமைப்பு ஒரு திடப்பொருளாக, காலியம்(III) குளோரைடு இரண்டு பாலம் அமைக்கும் குளோரைடுகளுடன் ஒரு இருநான்முகி கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இதன் அமைப்பு அலுமினியம் முப்புரோமைடை ஒத்திருக்கிறது. மாறாக AlCl3 மற்றும் InCl3 சேர்மங்களின் கட்டமைப்பில் 6 உலோக மையங்கள் உள்ளன. இதன் மூலக்கூறு தன்மை மற்றும் இதனுடன் தொடர்புடைய குறைந்த அணிக்கோவை ஆற்றலின் விளைவாக, காலியம்(III) குளோரைடு அலுமினியம் மற்றும் இண்டியம் முக்குளோரைடுகளுக்கு கு எதிராக குறைந்த உருகுநிலையைக் கொண்டுள்ளது. Ga2Cl6 இன் வாய்ப்பாடு ம் பெரும்பாலும் Ga2(μ-Cl)2Cl4 என எழுதப்படுகிறது. வாயு-கட்டத்தில், இருபடி (Ga2Cl6) மற்றும் முக்கோணத் தள ஒருபடி (GaCl3) ஆகியவை வெப்பநிலை சார்ந்த சமநிலையில் உள்ளன. அதிக வெப்பநிலை ஒருபடி வடிவத்திற்கு சாதகமாக இருக்கும். 870 கெல்வின் வெப்பநிலையில் அனைத்து வாயு-நிலை மூலக்கூறுகளும் திறம்பட ஒருபடி வடிவத்தில் உள்ளன. ஒற்றைநீரேற்றில் காலியம் மூன்று குளோரின் மூலக்கூறுகள் மற்றும் ஒரு நீர் மூலக்கூறுடன் நான்முகி வடிவில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பண்புகள் இயற்பியல் பண்புகள் காலியம்(III) குளோரைடு 77.9 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். 201 பாகை செல்சியசு வெப்பநிலையில் தனிமங்கள் சிதைவடையாமல் கொதிக்கும். இந்த குறைந்த உருகுநிலையானது திட நிலையில் தனித்தனி Ga2Cl6 மூலக்கூறுகள் உருவாவதால் ஏற்படுகிறது. காலியம்(III) குளோரைடு வெப்ப வெளியீட்டால் தண்ணீரில் கரைந்து நிறமற்ற கரைசலை உருவாக்குகிறது. இக்கரைசல் ஆவியாகும்போது நிறமற்ற ஒற்றைநீரேற்றை உருவாக்குகிறது, இது 44.4 °செல்சியசு வெப்பநிலையில் உருகும். வேதியியல் பண்புகள் குழு 13 இல் காலியம் ஒரு டி கூடு முழுவதும் நிரம்பிய இலகுவான உறுப்பினர் ஆகும். காலியத்தின் மின்னணு கட்டமைப்பு [Ar] 3d10 4s2 4p1 என்பதாக உள்ளது. இணைதிறம் எலக்ட்ரான்களுக்குக் கீழே இச்சேர்மம் ஈந்தணைவிகளுடன் d-π பிணைப்பில் பங்கேற்கிறது. Ga(III)Cl3 சேர்மத்தில் உள்ள காலியத்தின் குறைந்த ஆக்சிசனேற்ற நிலை, குறைந்த மின்னெதிர்த்தன்மை மற்றும் உயர் முனைப்புத் தன்மை ஆகியவற்றுடன், GaCl3 ஆனது கடினமான மற்றும் மென்மையான (இலூயிசு) அமிலங்கள் மற்றும் காரங்கள் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு மென்மையான அமிலமாகச் செயல்பட அனுமதிக்கிறது. காலியம் ஆலைடுகள் மற்றும் ஈந்தணைவிகளுக்கு இடையிலான பிணைப்புகளின் வலிமை விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வெளிப்படுவது என்னவென்றால்: N மற்றும் O நன்கொடையாளர்களுடன் GaCl3 என்பது AlCl3 சேர்மத்தை விட பலவீனமானதாகும். எ.கா: பிரிடீன் தயோ ஈதர்களுடன் GaCl3 என்பது AlCl3 சேர்மத்தை விட வலுவான இலூயிசு அமிலம் ஆகும். எ.கா: டைமெத்தில் சல்பைடு, Me2S ஒரு குளோரைடு அயனியை ஈந்தணைவியாகக் கொண்டு நான்முகி GaCl4− அயனி உற்பத்தி செய்யப்படுகிறது. 6 ஒருங்கிணைப்பு GaCl63- அயனியை உருவாக்க முடியாது. KGa2Cl7 போன்ற சேர்மங்கள் குளோரைடு பாலம் அமைக்கும் அயனியைக் கொண்டிருக்கின்றன. KCl மற்றும் GaCl3 ஆகியவற்றின் உருகிய கலவையில், பின்வரும் சமநிலை உள்ளது: 2 GaCl4− Ga2Cl7− + Cl− நீரில் கரைக்கப்படும் போது, அறுநீரியகாலியம்(III) அயனி நீராற்பகுப்பு காரணமாக, எண்முக காலியம்(III) குளோரைடு [Ga(H2O)6]3+ மற்றும் Cl- அயனிகளாகப் பிரிந்து அமிலக் கரைசலை உருவாக்குகிறது. [Ga(H2O)6]3+ → [Ga(H2O)5OH]2+ + H+ (pKa = 3.0) காரக் கரைசலில், இது காலியம்(III) ஐதராக்சைடாக நீராற்பகுப்பு செய்யப்படுகிறது. அதிக ஐதராக்சைடைச் சேர்ப்பதன் மூலம் மீண்டும் கரைகிறது. இதனால் Ga(OH)4- அயனியை உருவாக்கும். பயன்கள் கரிமத் தொகுப்பு வினைகள் காலியம்(III) குளோரைடு பிரீடல்-கிராஃப்ட்சு வினை போன்ற ஓர் இலூயிசு அமில வினையூக்கியாகும். பெரிக் குளோரைடு போன்ற பொதுவான இலூயிசு அமிலங்களை மாற்றும் திறன் கொண்டதாக உள்ளது. π-நன்கொடையாளர்களுடன் வலுவாக காலியம் அணைவுகள், குறிப்பாக சிலில் ஈத்தைன்கள் வலுவான எலக்ட்ரான் நாட்ட அணைவை உருவாக்குகின்றன. இந்த அணைவுகள் அரோமாட்டிக் ஐதரோகார்பன்களுக்கு ஆல்கைலேற்ற முகவர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கார்பன்-கார்பன் முப்பிணைப்பு கொண்ட சேர்மங்களின் கார்போகாலேற்ற வினைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பல கரிம வினைகளில் வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. கரிம காலியம் சேர்மங்கள் கரிமகாலியம் வினைகளுக்கு காலியம்(III) குளோரைடு ஒரு முன்னோடியாகும். எடுத்துக்காட்டாக, மும்மெத்தில் காலியம் பல்வேறு காலியம் கொண்ட குறைக்கடத்திகளை உற்பத்தி செய்ய ஆவி-கட்டப் புறவளர்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது. காலியம்(III) குளோரைடுடன் இருமெத்தில்துத்தநாகம், மும்மெத்தில் அலுமினியம் அல்லது மெத்தில்மெக்னீசியம் அயோடைடு போன்ற பல்வேறு ஆல்கைலேற்றும் முகவர்கள் வினைபுரிவதால் மும்மெத்தில் காலியம் தயாரிக்கப்படுகிறது. காலியம் தூய்மையாக்கல் காலியம்(III) குளோரைடு பல்வேறு காலியம் சுத்திகரிப்பு செயல்முறைகளில் ஓர் இடைநிலை ஆகும், இதில் காலியம்(III) குளோரைடு பகுதியளவில் காய்ச்சி அல்லது அமிலக் கரைசல்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. சோலார் நியூட்ரினோக்களைக் கண்டறிதல் 110 டன் காலியம்(III) குளோரைடு நீரிய கரைசல் நியூட்ரினோவை அறியும் கதிரியக்க வேதியியல் காலியம் சோதனைகளில் பயன்படுத்தப்படுகிறது. இப்பரிசோதனைகள் இத்தாலி நாட்டின் ஆய்வகங்களிலும் காலியம் நியூட்ரினோ ஆய்வகத்திலும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சோதனைகளில், காலியம்-71 உடன் நியூட்ரினோ தொடர்புகளால் செருமேனியம்-71 ஐசோடோப்பு தயாரிக்கப்பட்டது (இது இயற்கையில் மிகுதியாக 40% உள்ளது). மேலும் செருமேனியம்-71 இன் அடுத்தடுத்த பீட்டா சிதைவுகள் அளவிடப்பட்டன. மேற்கோள்கள் மேலும் வாசிக்க வெளி இணைப்புகள் காலியம் சேர்மங்கள் குளோரைடுகள் உலோக ஆலைடுகள் கனிம வேதியியல் சேர்மங்கள்
685590
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
மச்சிகுயெங்கா
மச்சியெங்கா (Machiguenga) ) என்பது அந்தீசு மலைத்தொடரின் கிழக்கு சரிவுகள் மற்றும் தென்கிழக்கு பெருவின் அமேசான் படுகையில் உள்ள அடர் வனங்களில் அல்லது மொன்டானா பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் ஆவர். 2020 இல் இவர்களின் மக்கள் தொகை சுமார் 18,000 என இருந்தது. முன்பு இவர்கள் வேட்டையாடுபவர்களாக இருந்தனர். ஆனால் இன்று பெரும்பான்மையானவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். மரவள்ளி சோளம் மற்றும் வாழை ஆகியவை முக்கிய பயிர்களாக இருந்தன. ஆனால் இன்று வணிகப் பயிர்களான காப்பி மற்றும் கொக்கோ ஆகியவை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பன்றி மற்றும் குரங்குளை உண்டு வந்தனர். ஆனால் இன்று மீன்களும் மிகவும் முக்கியமானதாகிவிட்டன. இவர்கள் அத்தியாவசிய பயிர்களை பயிரிட்டு தன்னிறைவு பெற விரும்புகின்றன. தனிநபர்களுக்கு இருக்கும் தாராளமாக நிலப் பங்கீடு மற்றும் தங்கள் பகுதியில் மோதல்கள் இல்லாததால் இது சாத்தியமாகிறது. கலாச்சாரம் பெரும்பாலான மச்சிகுயெங்காவுக்கு தனிப்பட்ட பெயர்கள் இல்லை. ஒரு குழுவின் உறுப்பினர்கள் உறவினர் சொற்களால் அடையாளம் காணப்படுகிறார்கள். அதே நேரத்தில் வேறு குழு அல்லது பழங்குடியின உறுப்பினர்கள் தங்கள் எசுப்பானிய பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கல் இன்று கிறிஸ்துவர்கள் (முக்கியமாக கத்தோலிக்கர்கள்) ஆனால் பொதுவாக இவர்கள் இன்னும் ஆன்மீக கருத்துக்களைக் கொண்டுள்ளனர். ஆவிகளும் பேய்களும் இவர்களது அன்றாட வாழ்க்கையை பாதிக்கின்றன. இச்சமூகம், தாவரங்கள் மற்றும் மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்துவதில் மிகவும் திறமையானவர்கள் என்றாலும், வெளி உலகத்தினரல் பரவும் புதிய தொற்று நோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பெண்கள் கையால் நெய்த மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பருத்தியிலான தூனிக் எனப்படும் உடைகளை அணிகின்றனர். இந்த ஆடை உள்ளூர்எசுப்பானிய மொழியில் குஷ்மாக்கள் என்று அழைக்கப்படுகிறது. இது ஆண்களுக்கு வி கழுத்தும், பெண்களுக்கு நேரான கழுத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பனை மரங்களை ஒரு சட்டகமாகப் பயன்படுத்தி குடிசைகளை வடிவமைக்கிறார்கள். பனை ஓலைகளை கூரைகளாக பயன்படுத்துகின்றனர். இவர்களது எழுத்தறிவு விகிதம் 30 முதல் 60 சதவீதம் வரை இருக்கும். ஒவ்வொரு விரிவாக்கப்பட்ட குடும்பக் குழுவும் சுயமாக நியமிக்கப்பட்ட "தலைவரால்" நிர்வகிக்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கை முன்பு பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொண்டனர். இன்று அவர்கள் பொதுவாக சில ஆண்டுகளுக்குப் பிறகு குடும்ப உறவுகளில் நுழைகிறார்கள். பெண்கள் சராசரியாக எட்டு முதல் பத்து கருத்தரிப்புகளைக் கொண்டுள்ளனர். பல பழங்குடி பழங்குடியினதில் காணப்படுவது போலவே, குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. திருமணத்தின் முதல் ஆண்டில் உறவு பெரும்பாலும் நிலையற்றதாகவும், பிரிவினை பொதுவானதாகவும் இருக்கிறது. இவர்கள் சமூகத்தில் ஒரு கணவன் தனது மனைவியின் வீட்டுக்குச் சென்று அவளுடைய பெற்றோருடன் வசிக்கிறான். அங்கிருநுது தங்களுக்கான வேளாண்மை நிலங்களை உருவாக்கிக்கொண்டு தங்கள் சொந்த வீட்டைக் கட்டுகிறார்கள். முன்பு பல ஆண்களுக்கு பல மனைவிகள் இருந்தனர். மொழி மச்சிகுயெங்கா மொழி, பெருவில் சுமார் 12,000 மக்களால் பேசப்படும் மச்சிகுரன் மைபுரியன் (அரவாக்கன் மொழிக் குடும்பம்) மொழியின் கேம்பா குழுவிற்கு சொந்தமானது. இவர்களுக்குள் பல பேச்சுவழக்குகள் உள்ளன. குறிப்புகள் மேற்கோள்கள் Rosegren, D. 2004. 'Los Matsigenka', in Guía Etnográfica de la Alta Amazonía, in Guía Etnográfica de la Alta Amazonía pp. 1–157, ed. by Santos-Granero, F. and F. Barclay. Balboa: Smithsonian Tropical Research Institute, and Lima: Instituto Frances de Estudios Andinos. Rosengren, D. 2017. 'Marriage Matsigenka Style: Some Critical Reflections of Marriage Practices', pp. 15–35, in Valentine, P., S. Beckerman, and C. Alès "The Anthropology of Marriage in Lowland South America. [University Press of Florida] வெளி இணைப்புகள் Machiguenga at Native Planet Machiguenga at Shinai Matsigenka Allen Johnson: Matsigenka Research Matsigenka Texts collected by Lev Michael and Christine Beier at the Archive of the Indigenous Languages of Latin America. தென் அமெரிக்க வரலாறு பழங்குடிகள்
685591
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE
சுகைலா நோவா
துன் சுகைலா நோவா (ஆங்கிலம்: Tun Suhailah binti Mohamed Noah; சாவி: سهيلة محمد نوح‎ ) பிறப்பு: 26 அக்டோபர் 1931 – இறப்பு: 4 அக்டோபர் 2014) என்பவர் மலேசியாவின் 3-ஆவது பிரதமர் உசேன் ஓன் (Hussein Onn) (1922–1990) அவர்களின் மனைவியும்; முன்னாள் மலேசிய தற்காப்பு அமைச்சர் இசாமுடின் உசேன் (Hishammuddin Hussein) அவர்களின் தாயாரும் ஆவார். இவர் மலேசிய மக்களவையின் முதல் தலைவராகவும், மலேசிய மேலவையின் மூன்றாவது தலைவராகவும் பதவி வகித்த முகமது நோவா ஒமார் என்பவரின் (1898-1991) மகள் ஆவார். இவர் 15 சனவரி 1976 தொடங்கி, 16 சூலை1981 வரையிலும்; ஏறக்குறைய 5 ஆண்டுகள் மலேசியப் பிரதமரின் மனைவியாக வாழ்ந்துள்ளார். வாழ்க்கை துன் சுகைலா நோவா 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி ஜொகூர், மூவாரில் பிறந்தார். இவர் குடும்பத்தில் மொத்தம் பத்து பிள்ளைகள். இவரின் இளைய சகோதரி ரகா நோவா. மலேசியாவின் 2-ஆவது பிரதமர் துன் ரசாக் அவர்களைத் திருமணம் செய்து கொண்டவர் ஆவார். இவர் மலேசிய மக்களவையின் முதல் தலைவராகவும், மலேசிய மேலவையின் மூன்றாவது தலைவராகவும் பதவி வகித்த முகமது நோவா ஒமார் என்பவரின் (1898-1991) மகள் ஆவார். மலாக்காவில் துன் சுகைலா 1939-இல், துன் சுகைலா, ரகா நோவா மற்றும் அவரின் பெற்றோருடன் மெர்சிங்கிற்கு குடிபெயர்ந்தார். அங்கு அவரின் தந்தை துணை மாவட்ட அதிகாரியாகவும்; முதல் வகுப்பு நீதியாளராகவும் பணியாற்றினார். துன் ரகா நோவாவைப் போலவே, துன் சுகைலாவும் தன் முதல் ஆங்கிலக் கல்வியை மூவார் சுல்தான் அபு பக்கார் பெண்கள் பள்ளியிலும்; பத்து பகாட் நகரம் தெமெங்காங் இப்ராகிம் பெண்கள் பள்ளியிலும் பெற்றார். தன் தந்தையார் டான்ஸ்ரீ முகமது நோவா 1947-இல் சிகாமட்டில் மாவட்ட அதிகாரியாக இருந்தபோது, ​​துன் சுகைலா மலாக்கா கான்வென்ட் பள்ளிக்குச் சென்றார். இறப்பு சுகைலா நோவா 4 அக்டோபர் 2014 அன்று மதியம் 12:30 மணியளவில் சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா டாமன்சாரா உத்தாமாவில் உள்ள டாமன்சாரா சிறப்பு மருத்துவமனையில் தனது 82 வயதில் காலமானார். அவர் தம் கணவர் இறந்த பிறகு மேலும் 24 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரின் இறுதிச்சடங்கு மற்றும் அடக்கம் கோலாலம்பூரின் தேசியப் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள மாவீரர்களின் கல்லறையில் நடைபெற்றது. அவர் தன் கணவர் உசேன் ஓன் கல்லறை; மற்றும் அவரின் தந்தை முகமது நோவா ஓமார் கல்லறை; ஆகியவற்றுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் இறப்பதற்கு முன், கோலாலம்பூர், சிகாம்புட், புக்கிட் துங்குவில் தம் முதுமை காலத்தைக் கழித்தார். இந்த இடம் பெரும் கோலாலம்பூர் பகுதியில் அவரின் குடும்பத்தார் வசிப்பிடமாக இருந்தது. விருதுகள் மலேசிய விருதுகள் : - உயரிய நம்பிக்கை மகுட விருது (SSM) – Tun (1990) : - மலேசிய விருதுகள்#தேசிய விருதுகள் (SPMT) – Dato' (1977) மேலும் காண்க மலேசிய பிரதமரின் மனைவி உசேன் ஓன் இசாமுடின் உசேன் ரகா நோவா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Asiaweek.com, 24 March 2000. Putera Negara; 1987, Firma Publishing, Aziz Zarina Ahmad. 1931 பிறப்புகள் 2014 இறப்புகள் மலேசிய முசுலிம்கள் மலேசியப் பெண்கள் ‎ மலேசியப் பிரதமர்களின் மனைவிகள்
685592
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கலம்னுரி சட்டமன்றத் தொகுதி
கலம்னூரி சட்டமன்றத் தொகுதி (Kalamnuri Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராஷட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹிங்கோலி மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 வெளியிணைப்புகள் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கோள்கள் ஹிங்கோலி மாவட்டம் மகாராட்டிர அரசியல் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
685609
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF
அரசு பிரென்னன் கல்லூரி
பிரென்னன் கல்லூரி (Brennen College) என்பது கேரளாவிலுள்ள உள்ள ஓர் கல்வி நிறுவனமாகும். இது கண்ணூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கேரள மாநிலத்தின் தலச்சேரியிலுள்ள தர்மடம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. தலச்சேரி துறைமுகத்தின் முதன்மை உதவியாளரான ஆங்கிலேய பரோபகாரர் எட்வர்ட் பிரென்னன் நிறுவிய பள்ளியிலிருந்து இந்த கல்லூரி உருவானது. அவர் தலசேரியை தனது வீடாக மாற்றிக் கொண்டார். 125 ஆண்டுகளுக்கும் மேலான கல்லூரியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 2016 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவால் இந்த கல்லூரிக்கு சிறப்பு பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது. தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் அகில இந்திய தரவரிசையில் இந்த கல்லூரி 97 வது இடத்தைப் பிடித்துள்ளது. வரலாறு அரசு பிரென்னன் கல்லூரி, 1862 ஆம் ஆண்டில் தலச்சேரி துறைமுகத்தின் முதன்மை உதவியாளரான எட்வர்ட் பிரென்னனால் நிறுவப்பட்ட இலவச பள்ளியிலிருந்து உருவாக்கப்பட்டது. இது 1890 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இரண்டாம் நிலை கல்லூரியாக உயர்த்தப்பட்டது. இந்த நிறுவனம் 1947 இல் முதல் தரக் கல்லூரியாக மாறியது. மேலும் இது 1958 இல் தர்மடத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. வளாகம் பிரென்னன் கல்லூரி வளாகம் தலச்சேரி நகருக்கு வடக்கே 5 கி. மீ. தொலைவிலும், கண்ணூர்-தலச்சேரி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 1 கி. மீ தொலைவிலும் தர்மடம் பேரூராட்சியில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 34.5 ஏக்கர் (140,000 சதுர மீட்டர்) நிலப்பரப்பில் கல்வித் துறைகள், நிர்வாக அலுவலகம், மத்திய நூலகம், மாணவர் விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன. பிரென்னன் நூலகம் பிரென்னன் கல்லூரியில் சுமார் 21600 புத்தகங்களைக் கொண்ட ஒரு மத்திய நூலகம் உள்ளது. இதில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முக்கியமாக மங்களூரிலுள்ள பாசெல் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட பல அரிய மற்றும் கிடைக்காத மலையாள நூல்கள் உள்ளன. இந்த நூலகம் 2004 ஆம் ஆண்டில் இந்த மலையாள வெளியீட்டின் மின்னணு பட்டியலைத் தயாரித்துள்ளது. உள்ளூர் எழுத்துக்களில் தேடல் பொறிமுறையைக் கொண்ட முதல் மின்னணு பட்டியல் இதுவாகும். பிராந்திய ஆய்வுகளுக்கான குறிப்புக்கான தனித்துவமான ஆதாரமாக இந்த நூலகம் உள்ளது. குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் ஏ. கே. கோபாலன், பொதுவுடைமை தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிணறாயி விஜயன், அரசியல்வாதி மற்றும் கேரளாவின் தற்போதைய முதலமைச்சர் கே. கே. ராமச்சந்திரன் மாஸ்டர், கேரள அரசின் முன்னாள் அமைச்சர். கு. சுதாகரன், தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி. சதிதேவி , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. முரளிதரன், அரசியல்வாதி மற்றும் தற்போதைய மத்திய அமைச்சர் அக்பர் கக்கட்டில், எழுத்தாளர் ஏ. கே. பாலன், கேரள முன்னாள் சட்ட அமைச்சர் ஏ. கே. பிரேமாஜம், அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வி. உன்னிகிருஷ்ணன் நாயர், கவிஞர் ஏ. என். ஷம்சீர், மாண்புமிகு சபாநாயகர், கேரள சட்டப்பேரவை .ஈ. அகமது, முன்னாள் மத்திய அமைச்சரும், கேரளாவில் மிக நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும் ஆவார். ஜேம்ஸ் மேத்யூ, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அரசியல்வாதி தயாத் சங்கரன், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி கே. தயாத், எழுத்தாளர் என். பிரபாகரன், எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா, எழுத்தாளர் இராஜன் குருக்கள், வரலாற்றாசிரியர் ஷிஹாபுதீன் போய்தும்கடவு, எழுத்தாளர் வாழக்குளங்கரயில் காலித், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் காஷ்மீரின் பொறுப்பு ஆளுநர் வி. ஆர். சுதீசு, எழுத்தாளர் ச. ஆ. பவானி தேவி, வாள்வீச்சு வீராங்கனை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கேரள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
685640
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
ஆர். பி. விஸ்வம்
ஆர். பி. விஸ்வம் என அழைக்கப்படும் இராமநாதபுரம் (கோவை) பொன்னுசாமி தேவர் விஸ்வநாதன் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், திரைக்கதை, வசன எழுத்தாளரும் ஆவார். இவர் 60-70களில் முன்னணித் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் தூரத்து உறவினர் என்பதால் அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு 80களில் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜின் திரைப்படங்களிலும் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். திரையுல வாழ்க்கை இவர் ஆரம்ப காலத்தில் தனது தந்தை பொன்னுசாமி தேவர் அவர்கள் கோவை இராமநாதபுரத்தில் நடத்தி வந்த பெரிய ஜவுளி கடையில் தான் அப்போது சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் தனது திரைப்படம் சார்ந்த அனைத்து உடைகள் வாங்கும் வாடிக்கையாளராக இருந்த போது தான் விஸ்வம் அவர்களுக்கு திரையுலகில் அன்றைய தேவரின் ஆதர்ச நடிகரான புரட்சி தலைவர் எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பும் அவரை போலவே திரையுலகில் நடை, உடை, பாவனை, பாணியில் எம். ஜி. ஆர் முன் நடித்து காட்டி பாராட்டினை பெற்றார். அதன் பிறகு தனது உறவினர் மாமா முறையான சின்னப்பா தேவர் அவர்கள் அறிவுரையால் திரையுலக ஆசை வேண்டாம் என்று அவரது தந்தை பொன்னுசாமி இடம் கூற அந்த கண்டிப்பையும் மீறி திரையுலக ஆர்வத்தின் மேல் விஸ்வம் அவர்கள் தேவர் உடன் உதவி இயக்குனராக தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனையன், குடும்பத்தலைவன், நீதிக்கு பின் பாசம், வேட்டைகாரன், தொழிலாளி, தெய்வ திருமகள், தாயும் மகளும், கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்கு தலைமகன், காதல் வாகனம், தெய்வச்செயல், நல்ல நேரம் அதன் பிறகு வெளியான தேவரின் பல திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் படத்தின் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளின் உதவியாளராக செயல்பட்டுவந்தார். அதனால் அப்போது ஆர். பி. விஸ்வம் அவர்களுக்கு எம். ஜி. ஆர், சரோஜாதேவி, கே. ஆர். விஜயா, ஜெயலலிதா, எம். ஆர். ராதா, எம். என். நம்பியார், ஆர். எஸ். மனோகர், எஸ். ஏ. அசோகன், நாகேஷ், மனோரமா போன்ற முன்னணி நடிகர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய திரைப்படமான 1962 ஆம் ஆண்டு தேவரின் குடும்பத்தலைவன் படத்தில் முதல் பாடல் காட்சியான அன்றோரு நாள் அவனுடைய பெயரை கேட்டேன் என்ற பாடல் படபிடிப்பு கோவை மருதமலை முருகன் கோயில் காட்சி படுத்த சாண்டோ சின்னப்பா தேவர் திட்டமிட்டு இருந்த போது மருதமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த பாடல் படப்பிடிப்பு நடக்கும் போது நடிகை சரோஜாதேவி அவர்கள் ஒரு பள்ளத்தில் தவறி விழுந்து விட அவருக்கு அப்போது இடுப்பில் பயங்கரமான சுளுக்கு வலி ஏற்பட்டுவிட்டதால் தொடர்ந்து பாடல் காட்சியில் நடிக்க முடியாது என்று கூற உடனே சின்னப்பா தேவர் மன வருத்ததுடன் முருகா என்ன செய்வது என்று தெறியாமல் நின்ற போது உடனே சிறுவன் ஆர். பி. விஸ்வம் அவர்கள் சரோஜா தேவியை ஒரு பலகையில் படுக்க வைத்து உலக்கையால் அவர் இடுப்பில் மேலும் கீழும் உருட்டியவுடன் அவர் சுளுக்கு இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அந்த இடத்தில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து நீவிவிட்டு அதன் மேல் உலக்கையை வைத்தவுடன் உலக்கை நேர் நிலையாக நின்ற போது அனைவரும் சரோஜாதேவியை கண்டு மனதார சிரித்தனர் அதன் பிறகு சரோஜாதேவி இடுப்பில் இருந்த உலக்கை விழுந்தவுடன் அலறியபடியே சுளுக்கு வலி நீங்கியவுடன் சிறுவன் விஸ்வம் அவர்களுக்கு சரோஜாதேவி அவர்கள் முத்தம் கொடுத்து அவரிடம் இருந்த பல வெளிநாட்டு சாக்லேட்களை வழங்கி நன்றி தெறிவித்த பிறகு தொடர்ந்து அந்த பாடல் காட்சியில் முழுவதுமாக சரோஜாதேவி நடித்த கொடுத்தார். அதே போல் தனிப்பிறவி படத்தில் ஒரு பாடல் காட்சியில் சாண்டோ சின்னப்பா தேவர் எம்ஜிஆரை முருகன் வேடத்தில் படமாக்க நினைத்தார் ஆனால் அப்போது எம். ஜி. ஆர் அவர்கள் தான் சார்ந்திருந்த திமுக கடவுள் மறுப்பு கொள்கையேற்று செயல்பட்டு வருவதால் அதில் நடிக்க மறுத்ததால். சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் ஆர். பி. விஸ்வத்தை எம்ஜிஆரின் முகத்தோற்றத்தில் மிகவும் தத்ரூபமாக ஜெயலலிதாவுடன் நடிக்க வைத்தார். அதன் பிறகு 1980களில் சிறிய சிறிய நாடகங்கள் மற்றும் எம். ஜி. ஆர் மீதான பல அரசியல் விமர்சனங்களை நீக்கும் விதமாக பல நல்ல நாடகங்களை விஸ்வம் நடத்தி வந்தார். அதன் பிறகு தனது நண்பரும் நடிகருமான பாக்கியராஜ் உடன் இணைந்து அவர் இயக்கி நடிக்கும் படங்களில் ஆர். பி. விஸ்வம் பங்கு அதிகாமானது. அதன் பிறகு விஸ்வம் தானாகவே திரைக்கதை, வசனம், நடிப்பு என்ற பரிமாற்றத்தில் தன்னை திரையுலகில் முன்னிலை படத்தில் கொண்டார். திரைப்படப் பங்களிப்புகள் பாமா ருக்மணி - உதவி இயக்குநர் ஒரு கை ஓசை - பாடலாசிரியர் முந்தானை முடிச்சு - கதை குழுவினர் அறுவடை நாள் (1986) - ரத்னவேல் (நடிகர்) செண்பகமே செண்பகமே (1988) - சிவனாண்டி (நடிகர்) எங்க ஊரு மாப்பிள்ளை - கதை, வசனம் (1989) பிக்பாக்கெட் - நீதிபதி (நடிகர்) (1989) புது வசந்தம் - விஸ்வம் (நடிகர்) (1990) மருது பாண்டி - கதை, வசனம் (1990) நிலா பெண்ணே - கதை வசனம் (1990) உருவம் - ஜோல்னாசாமி (நடிகர்) (1991) இரும்பு பூக்கள் - கதை வசனம் (1991) பிரம்மா - வக்கில் வேங்கடசாமி (நடிகர்) (1991) தாலாட்டு கேக்குதம்மா - விஸ்வம் (நடிகர்) (1991) சின்ன பசங்க நாங்க - அம்பலம் (நடிகர்) (1992) தெற்கு தெரு மச்சான் - மிராசு (நடிகர்) (1992) தமிழ் பொண்ணு - சுடலைகண்ணு (நடிகர்) (1992) டேவிட் ஆங்கிள் - தெய்வநாயகம் (நடிகர்) (1992) மாப்பிள்ளை வந்தாச்சு - ராஜமாணிக்கம் (நடிகர்) (1992) மறவன் - ராஜதுரை (நடிகர்) (1993) முற்றுகை - மாசிலாமணி (நடிகர்) (1993) சின்ன ஜமீன் - ரத்னவேல் (நடிகர்) (1993) சீவலப்பேரி பாண்டி - நாயனார் (நடிகர்) (1994) முதல் உதயம் - நைனா (நடிகர்) (1995) சின்ன மணி - புலிகேசி தேவர் (நடிகர்) (1995) ராஜ பாண்டி - கதை வசனம் (1995) நம்ம ஊரு ராசா - பூதலிங்கம் (நடிகர்) (1996) ஞானப்பழம் - ரத்னம் (இயக்கம்/நடிகர்) (1996) சின்னதுரை - கதை, வசனம் (1999) மேற்கோள்கள் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
685641
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29
இயக்கம் (விலங்கியல்)
இயக்கம் (motility ) என்பது வளர்சிதை மாற்ற ஆற்றலைப் பயன்படுத்தி ஓர் உயிரினம் தன்னிச்சையாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நகரும் திறனாகும். இந்த உயிரியல் கருத்து முழு உயிரினங்களிலிருந்து செல்கள் மற்றும் துணைச் செல் கூறுகள் வரை பல்வேறு நிலைகளில் உள்ள இனங்களின் இயக்கத்தை உள்ளடக்கியது. விலங்குகள், நுண்ணுயிரிகள் மற்றும் சில தாவரக் கட்டமைப்புகளிலும் கூட இயக்கம் காணப்படுகிறது, இது உணவு,இனப்பெருக்கம் மற்றும் செல்லுலார் செயல்பாடுகளின் இயக்கம் போன்ற செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மரபணு ரீதியாகவும் தீர்மானிக்கப்படுகிறது, ஆனாலும் சுற்றுச்சூழல் (ஒளி, வெப்பம், காற்று, காலம், சூழல்) போன்ற காரணிகளால் இவ்வியக்கம் பாதிக்கப்படலாம். பல்லுயிர் திசு கொண்ட உயிரினங்களில், நரம்பு மற்றும் தசைக்கூட்டு அமைப்புகள் போன்ற அமைப்புகளால் இயக்கம் எளிதாக்கப்படுகிறது, அதே நேரத்தில் செல்லுலார் மட்டத்தில், இது அமீபாய்டு இயக்கம் மற்றும் ஃபிளாஜெல்லர் உந்துவிசை போன்ற வழிமுறைகளையும் உள்ளடக்கியது. இந்த செல்லுலார் இயக்கங்கள் வெளிப்புற தூண்டுதல்களாலும் இயக்கப்படலாம், இது டாக்சிகள் எனப்படும் ஒரு நிகழ்வாகும். எடுத்துக்காட்டாக வேதியியல்நகர்வு (இரசாயனக் கூறுகளின் இயக்கம்) மற்றும் ஒளிமின்னழுத்தம் (ஒளிக்கு பதிலளிக்கும் இயக்கம்) ஆகியவை அடங்கும். இரைப்பை குடலியக்கங்கள் மற்றும் பெரிஸ்டால்சிஸ் போன்ற உடலியல் செயல்முறைகளும் இயக்கத்தில் அடங்கும். உயிரியல், மருத்துவம் மற்றும் சூழலியல் ஆகியவற்றில் உயிரின இயக்கத்தைப் பற்றி புரிந்துகொள்வது அவசியம், ஏனெனில் இது நுண்ணுயிரிகளான பாக்டீரியாவின் நகர்வு முதல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் இயக்கவியல் வரையிலான செயல்முறைகளை பாதிக்கிறது. வரையறைகள் இயக்கம், வளர்சிதை மாற்ற ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு உயிரினத்தின் சுயாதீனமாக நகரும் திறன், சுய-உந்துவிசை வழிமுறைகளைக் கொண்டிராத மற்றும் பொதுவாக அசையாத உயிரினங்களின் நிலை, தளர்வுடன் வேறுபடுகிறது. இயக்கம் என்பது ஒரு பொருளை நகர்த்தும் திறனில் இருந்து வேறுபடுகிறது. யோனி என்ற சொல் நகர்த்தக்கூடிய ஒரு வாழ்க்கை வடிவத்தைக் குறிக்கிறது, ஆனால் தாவரங்கள் மற்றும் பூஞ்சைகள் உள்ளிட்ட செயலற்ற உயிரினங்கள் மட்டுமே பெரும்பாலும் பழங்கள், விதைகள் அல்லது வித்திகள் போன்ற யோனி பகுதிகளைக் கொண்டுள்ளன, அவை காற்று, நீர் அல்லது பிற உயிரினங்களால் சிதறடிக்கப்படலாம். இயக்கம் மரபணு ரீதியாக தீர்மானிக்கப்படுகிறது, ஆனால் நச்சுகள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளால் பாதிக்கப்படலாம். நரம்பு மண்டலம் மற்றும் தசைக்கூட்டு மண்டலம் பாலூட்டிகளின் இயக்கத்தின் பெரும்பகுதியை வழங்குகின்றன விலங்குகளின் நகர்வுக்கு கூடுதலாக, பெரும்பாலான விலங்குகள் நகரும், சில யோனி என்றாலும், செயலற்ற நகர்வைக் கொண்டுள்ளன. பல பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகள், சில வைரஸ்கள் உட்பட, மற்றும் பல்லுயிர் உயிரினங்கள் இயக்கப்படுகின்றன, பல்லுயிர் உறுப்புகள் மற்றும் திசுக்களில் திரவ ஓட்டத்தின் சில வழிமுறைகளும் இரைப்பை குடல் இயக்கம் போன்ற இயக்கத்தின் நிகழ்வுகளாகக் கருதப்படுகின்றன. நகரும் கடல் விலங்குகள் பொதுவாக சுதந்திரமாக நீந்துதல் என்று அழைக்கப்படுகின்றன, மற்றும் நகரும் அல்லாத ஒட்டுண்ணி உயிரினங்கள் சுதந்திரமாக வாழும் என்று அழைக்கப்படுகின்றன. இயக்கம் என்பது ஒரு உயிரினத்தின் செரிமானப் பாதை வழியாக உணவை நகர்த்தும் திறனை உள்ளடக்கியது. குடல் இயக்கத்தில் இரு வகைகள் உள்ளன, முதலாவது சுற்றிழுப்பசைவு (பெரிஸ்டால்சிஸ்) மற்றும் பிரிப்பசைவு. இரைப்பைக் குழாயில் மென்மையான தசைகளின் சுருக்கத்தால் இந்த இயக்கம் கொண்டு வரப்படுகிறது, இது பல்வேறு சுரப்புகளுடன் ஒளிரும் உள்ளடக்கங்களை கலக்கிறது (பிரித்தல் மற்றும் செரிமானப் பாதை வழியாக உள்ளடக்கங்களை வாயிலிருந்து ஆசனவாய்க்கு நகர்த்துகிறது (பெரிஸ்டால்சிஸ்). செல்லுலார் நிலை உயிரணுக்களின், இயக்கத்தின் வெவ்வேறு முறைகளாவன: அமீபாய்டு இயக்கம், ஊர்ந்து செல்வது போன்ற இயக்கம், இது நீச்சல் முறை நகர்வாகும். ஃபிலோபோடியா, அச்சு வளர்ச்சி கூம்பின் இயக்கமாக செயல்படுகிறது ஃபிளாஜெல்லர் இயக்கம், சாட்டை போன்ற பின்னூட்ட உந்துதல் இயக்கம் மூலம் இயங்குதல் (எடுத்துக்காட்டாக விந்தணுக்களின் இயக்கம்), அவற்றின் ஃபிளாஜெல்லத்தின் வழக்கமான துடிப்பால் இயக்கப்படுகிறது, அல்லது ஈ. கோலி பாக்டீரியம், இது ஒரு சுழல் புரோக்கரியோடிக் ஃபிளாஜெல்லத்தை சுழற்றுவதன் மூலம் நீந்துகிறது) மிதக்கும் இயக்கம் ஊசலாடும் இயக்கம் இழுப்பு இயக்கம், வகை IV பிலி எனப்படும் பிடிப்பு கொக்கி போன்ற இழைகளைப் பயன்படுத்தி மேற்பரப்புகளில் ஊர்ந்து செல்ல பாக்டீரியாக்களால் பயன்படுத்தப்படும் இயக்கத்தின் ஒரு வடிவம். பல செல்கள் இயங்காது, எடுத்துக்காட்டாக க்ளெப்சியெல்லா நிமோனியா மற்றும் ஷிகெல்லா, அல்லது 37 டிகிரி செல்சியஸில் யெர்சினியா பெஸ்டிஸ் போன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இயங்காது. இயக்கங்கள் இயக்கங்களாகக் கருதப்படும் நிகழ்வுகளாவன: உணவை சூழ்தல் செல் பிரிவு நகர்வு நீட்சி நீந்துதல் உந்தல் மேற்கோள்கள் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் உடலியங்கியல்
685643
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81
மியான்மர் அரசு நிர்வாகக் குழு
மியான்மர் அரசு நிர்வாகக் குழு, (State Administration Council சுருக்கமாக:SAC), மியான்மர் நாட்டை 2 பிப்ரவரி 2021 முதல் ஆளும் இராணுவத் தலைவர்களின் குழுவாகும்.2021 மியான்மர் இராணுவப் புரட்சி மூலம் அரசு நிர்வாகத்தைக் கைப்பற்றிய இராணுவத் தலைவர்களின் நிர்வாகக் குழு தற்போது மியான்மர் நாட்டை ஆள்கிறது. மியான்மர் நாட்டின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தலைவர் மின் ஆங் ஹைங் இக்குழுவின் தலைவர் ஆவார். மியான்மரின் அரசியலமைப்பின்படி, இக்குழுவிடம் சட்டமியற்றும் அதிகாரம், நிர்வாகம் மற்றும் நீதி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.இக்குழு மியான்மர் அரசை நடத்துவதற்கு தற்காலிக அரசை அமைத்துள்ளது. இந்த அரசின் பிரதம அமைச்சர் மின் ஆங் லாயிங் ஆவார்.நாடு கடந்த மியான்மர் அரசின் குழுவானதுமியான்மரை ஆளும் இராணுவக் குழுவை தீவிரவாத அமைப்பு என அறிவித்துள்ளது.மேலும் இராணுவ ஆட்சிக் குழுக்கு எதிராக மியான்மர் தேசிய ஒற்றுமை அரசு என்ற அமைப்பை மியான்மரில் நிறுவியுள்ளது. மியான்மர் அரசு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 25 செப்டம்பர் 2023 முடிய அரசு நிர்வாகக் குழுவின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 25 ஆகும்.விவரம் பின்வருமாறு: சர்வதேச அங்கீகாரம் 2021 மியான்மர் இராணுவப் புரட்சி மூலம் மக்களாட்சியை கலைத்து இராணுவ ஆட்சியை நிறுவிய இக்குழுவின் தற்காலிக அரசை பல நாடுகள் அங்கீகாராம் வழங்காததுடன், இராஜதந்திர உறவுகளை கட்டுப்படுத்தியுள்ள்து. நியூசிலாந்து, ஜப்பான், இந்தோனேசியா நாடுகள் மியான்மரின் இராணுவ அரசுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. ஆசியான் உச்சிமாநாட்டில் இருந்து மியான்மரை விலக்க உள்ளது. நவம்பர் 2022 இல், ஐரோப்பிய ஒன்றியம் மியான்மர் இராணுவ நிர்வாகக் குழுவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. 2021ல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, மியான்மரின் இராணுவத் தலைவர்களைக் கண்டித்தும், நாட்டிற்கான ஆயுத விற்பனையை நிறுத்துவதற்கும் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஜனநாயக தேர்தல் முடிவுகளுக்கு மதிப்பளிக்கவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும் மியான்மரின் இராணுவத்தை இந்த தீர்மானம் கோருகிறது. அத்துடன் இராணுவ ஆட்சியை அங்கீகரிக்கக் கூடாது என வலியுறுத்துகிறது. இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிரான ஆயுதக் குழுக்கள் மியான்மர் இராணுவ ஆட்சிக் குழுவினரை எதிர்த்து மியான்மரில் 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டின் எல்லைப்புற மாநிலங்களில் ஆயுதக் குழுக்கள் கிளர்ச்சிகள் செய்து, ஏறத்தாழ 60% நிலப்பரப்புகளை கைப்பற்றி தன்னாட்சியுடன் நிர்வகித்து வருகின்றனர். அரக்கான் இராணுவம் காசின் விடுதலை இராணுவம் சின் சகோதரத்துவக் கூட்டணி சின்லாந்து தேசிய இராணுவம் தாங் தேசிய விடுதலை இராணுவம் மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம் மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள் இதனையும் காண்க 2021 மியான்மர் இராணுவப் புரட்சி மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை) சின்லாந்து வா மாநிலம் காயா மாநில இடைக்கால மன்றம் மேற்கோள்கள் மியான்மார்
685645
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20320%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 320 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 320 (இந்தியா)(National Highway 320 (India))(தே. நெ. 320) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முற்றிலும் சார்க்கண்டு மாநிலத்தில் செல்கிறது. இராம்கர் அருகே இச்சாலை தே. நெ. 20 உடன் அதன் சந்திப்பிலிருந்து தொடங்கி கோலா நகரை இணைக்கிறது. இச்சாலை சாசு அருகே தேசிய நெடுஞ்சாலை 18-ல் முடிவடைகிறது. தேசிய நெடுஞ்சாலை 320-ன் மொத்த நீளம் 80.30 கி.மீ. ஆகும். மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
685652
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
ஹிங்கோலி சட்டமன்றத் தொகுதி
ஹிங்கோலி சட்டமன்றத் தொகுதி (Hingoli Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இச்சட்டமன்றத் தொகுதியானது ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ளது. இதன் தொகுதி எல்லை நிர்ணயம் 2008 இல் நடந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 வெளியிணைப்புகள் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் ஹிங்கோலி மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
685653
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF
சுனில் ரத்தினசிறி
சுனில் ரத்தினசிறி ஓர் இலங்கை அரசியல்வாதியும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓர் ஆசிரியரான இவர் தேசிய மக்கள் சக்தியின் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழும் நபர்கள்
685660
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF
இராஜீவ் காந்தி கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரி
இராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Rajiv Gandhi College of Veterinary and Animal Sciences) என்பது புதுச்சேரியிலுள்ள ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகும். இந்திய கால்நடை மருத்துவ மன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்தியாவில் கால்நடை மருத்துவ கல்வியின் தரங்களுக்கு ஏற்ப 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த கல்லூரி புதுவைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை நிபுணத்துவங்களை வழங்குவதற்கான கல்வி நிறுவனமாக இது உள்ளது. அத்துடன் இப்பகுதியில் கால்நடை சுகாதாரச் சேவையை வழங்கும் கால்நடை மருத்துவமனையையும் இது கொண்டுள்ளது. வரலாறு புதுச்சேரி, குரும்பாபேட்டை, பொன்லைட்டில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் 1994 அக்டோபர் 14 அன்று விஜயதசமி அன்று பாண்டிச்சேரி கால்நடை கல்லூரி என்று பெயட்டு கல்லூரி திறக்கப்பட்டது. கல்லூரியின் முதல் தொகுதி சேர்க்கை 30 ஆக இருந்தது. பொன்லைட் வளாகத்தில் வகுப்பறைகள் மற்றும் கிரிஷி விக்னான் கேந்திரா வளாகத்தில் ஆய்வக வசதிகள் என இரண்டு இடங்களில் இந்த வளாகம் பரவியுள்ளது. சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற மாநில விழாவில், இக் கல்லூரிக்கு இராஜீவ் காந்தியின் நினைவாக ராஜீவ் காந்தி கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரி எனப் பெயரிடப்பட்டது. அதே நேரத்தில், புதுச்சேரி குரும்பாபேட்டையில் உள்ள கிரிஷி விக்னான் கேந்திரா வளாகத்தை ஒட்டிய 59 ஏக்கர் (,000 சதுர மீட்டர்) வளாகமும் நிறுவப்பட்டது. 2013 ஆம் ஆண்டில்,இராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது. புதுச்சேரி மாநில அரசின் கால்நடை வளர்ப்புத் துறையால் நடத்தப்படும் கால்நடை மருத்துவமனையை கல்லூரி கையகப்படுத்திய பின்னர், மாணவர்களுக்கு கால்நடை மருத்துவப் பயிற்சியை வழங்குவதற்காக ஒரு முழு அளவிலான கற்பித்தல் மருத்துவமனையை நிறுவியது. இந்தக் கல்லூரி, இந்திய கால்நடை மன்றத்தால் 25 நவம்பர் 1999 அன்று அங்கீகரிக்கப்பட்டது. மேலும் முதல் தொகுதி மாணவர்கள் 25 பேர் கால்நடை மருத்துவப் பட்டதாரிகளாகத் தேர்ச்சி பெற்றனர். வளாகம் அமைந்துள்ள இடம் இந்த வளாகம் மூன்று இடங்களில் பரவியுள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையம் மற்றும் தொடருந்து நிலையத்திலிருந்து 6 கி. மீ. தொலைவில் உள்ள குரும்பாபேட்டையிலுள்ள திருக்கனூர் சாலையில் உள்ள கிரிஷி விக்னான் கேந்திரா வளாகத்தை ஒட்டி பிரதான வளாகம் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து திருக்கனூருக்கு பேருந்துகள் மூலம் வளாகத்தை அடையலாம். இதனையும் காண்க சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் RAGACOVAS Official website Partnerships in Higher education: Collaboration project that addresses issues that concern livelihood security of livestock dependent women self-help groups Laporteragacovas Alumni website புதுச்சேரியில் உள்ள கல்லூரிகள் Coordinates on Wikidata
685671
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%28%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
குர்து மக்களின் பாதுகாப்புப் படைகள் (சிரியா)
சிரிய குர்து மக்களின் பாதுகாப்புப் படைகள் (People's Defense Units (சுருக்கமாக:YPG), சிரியா நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் 2011ஆம் ஆண்டு முதல் செயல்படும் ஒரு சோசலிச இராணுவக் குழுவாகும்.இப்படைகள் வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதியில் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படுகிறது. இது துருக்கி மற்றும் சிரியா ஜனநாயகப் படைகளுடன் இணைந்து துருக்கி ஆதரவுடன் செயல்படும் சிரியா தேசியப் படைகள் மற்றும் இசுலாமிய அரசுப் படைகளுக்கு எதிராக போரிட்டது. மேலும் சிரிய உள்நாட்டுப் போரின் போது இப்படைகள் சிரியாவின் குர்திஸ்தான் பகுதியில் வேகமாக வளர்ச்சி அடைந்தது. 2015ஆம் ஆண்டில் சிரியாவில் இசுலாமிய அரசுப் படைகளை வென்று பெரும் வெற்றி கண்டது. . துருக்கி இப்படையை தீவிரவாத அமைப்பு என அறிவித்தது.இருப்பினும் அமெரிக்காவுடன் சேர்ந்த் சுவீடன் நாடும் இப்படைகளுக்கு நிதி மற்றும் இராணுவ தளவாட உதவிகள் செய்கிறது. இப்படைகள் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியுடன் நல்லுறவில் உள்ளது. அமைப்பு படைப் பிரிவுகள் 2017ஆம் ஆண்டு முதல் இராணுவம் போன்று இதன் படை அமைப்பு செயல்படுகிறது. இதனையும் காண்க சிரியாவின் குர்திஸ்தான் வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகம் சிரியா ஜனநாயகப் படைகள் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி மேற்கோள்கள் உசாத்துணை குர்திஸ்தான் சிரியாவின் ஆயுதக் குழுக்கள்
685677
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D
எண்டோன் மாமூட்
துன் எண்டோன் மாமூட் (ஆங்கிலம்: Tun Endon binti Mahmood Ambak; சாவி: هند محمود أعماق‎) பிறப்பு: 24 திசம்பர் 1940 – இறப்பு: 20 அக்டோபர் 2005) என்பவர் மலேசியாவின் 5-ஆவது பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவி (Tun Abdullah Ahmad Badawi) அவர்களின் முதல் மனைவி ஆவார். எண்டோன் மாமூட்; பத்திக் மற்றும் சொங்கேட் போன்ற பாரம்பரிய துணிக் கலையில் அவரின் பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்பட்டவர் ஆவார். வாழ்க்கை எண்டோன் மாமூட் என்பவர் டத்தோ மகமூத் அம்பாக் எனும் மலாய்க்காரருக்கும்; டத்தின் மரியம் அப்துல்லா எனும் ஜப்பானியப் பெண்ணுக்கும் பிறந்தவர் ஆவார். எண்டோனுக்கு உடன்பிறப்புகள் 10 பேர். எண்டோன் மாமூட்1940-ஆம் ஆண்டு திசம்பர் 24-ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள கிள்ளானில் பிறந்தார். எண்டோனின் தந்தை கிள்ளான் சுரங்கத் துறையில் சுரங்க உதவியாளராகப் பணிபுரிந்தார். பின்னர் கம்பார் மாவட்டத்தில் ஏறக்குறைய 60 சுரங்கங்களை மேற்பார்வையிடுவதற்காக பேராக் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். எண்டோன் தன் குழந்தைப் பருவ நாட்களின் பெரும்பகுதியை கம்பாரில் கழித்தார்; மற்றும் கம்பார் ஆங்கிலோ-சீனப் பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். அந்தப் பள்ளி தற்போது மெதடிஸ்ட் தேசிய தொடக்கப் பள்ளி என அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் கோலாலம்பூரில் உள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். குடும்பம் 1960-களில் மலேசிய பொதுச் சேவைத் துறையில் பணிபுரியும் போது எண்டோன் மாமூட்டை, அப்துல்லா அகமது படாவி சந்தித்தார். இவர்கள் 1965-இல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் 1976-இல் மலேசிய பொதுச் சேவைத் துறையில் இருந்து எண்டோன் மாமூட் ஓய்வு பெற்றார். அப்துல்லா அகமது படாவிக்கும் எண்டோனுக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகன் டத்தோ கமாலுடின்; ஒரு தொழில் அதிபர். மகள் நோரி அப்துல்லா; மலேசியாவின் பிரபல அரசியல்வாதி கைரி ஜமாலுடீனைத் திருமணம் செய்துள்ளார். அப்துல்லா அகமது படாவிக்கும் எண்டோனுக்கும் நான்கு பேரக் குழந்தைகள் உள்ளனர். இறப்பு எண்டோன் மாமூட் 18 ஏப்ரல் 2002 அன்று தீவிர மார்பக அழற்சியின் (Radical Mastectomy) காரணமாக கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் செயின்ட் ஜான்ஸ் மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை பெற்றார். அதைத் தொடர்ந்து 33 கதிர்வீச்சு சிகிச்சைகள்; மற்றும் தொடர்ச்சியான உடலியல் மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டன. 2003-இல் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2 அக்டோபர் 2005-ஆம் தேதி, புத்ராஜெயா மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் சிகிச்சை பெற்றார். மார்பக புற்றுநோயுடன் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர், 20 அக்டோபர் 2005 அன்று தம் 64-ஆவது வயதில் எண்டோன் மாமூட் காலமானார். விருதுகள் மலேசிய விருதுகள் : - உயர் மகுட விருது (SSM) – Tun மறைவுக்குப் பின் (2009) : - மலேசிய விருதுகள்#தேசிய விருதுகள் (SPMK) – Dato' (2004) : - மலேசிய விருதுகள்#தேசிய விருதுகள் (SPTJ) – Dato' Seri (2005) : - மலேசிய விருதுகள்#தேசிய விருதுகள் (SSAP) – Dato' Sri (2002) : - மலேசிய விருதுகள்#தேசிய விருதுகள் (SPMS) – Datin Paduka Seri (2002) மேலும் காண்க மலேசிய பிரதமரின் மனைவி அப்துல்லா அகமது படாவி ஜீன் அப்துல்லா கைரி ஜமாலுடீன் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 1,849 conferred royal awards on King's birthday The Star (Malaysia), 6 June 2009 1940 பிறப்புகள் 2005 இறப்புகள் மலேசிய முசுலிம்கள் மலேசியப் பெண்கள் ‎ மலேசியப் பிரதமர்களின் மனைவிகள்
685678
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
காரென் தேசிய விடுதலைப் படைகள்
காரென் தேசிய விடுதலைப் படைகள் (Karen National Liberation Army (சுருக்கமாக: KNLA), மியான்மர் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கில் செயல்படும் காரென் தேசிய ஒன்றியத்தின் (Karen National Union) (KNU),ஆயுதக் குழுவாகும்.மியான்மர் நாட்டின் தாய்லாந்து எல்லையை ஒட்டிய காயா மாநிலம், காயின் மாநிலம், தாநின்தாரி பிரதேசம், பகோ மாநிலம் மற்றும் மொன் மாநிலங்களில் வாழும் காரென் மக்களுக்கான மாநில தன்னாட்சி உரிமைக்கு போராடுவதே இதன் நோக்கமாகும். இப்படைகள் 1949ஆம் ஆண்டிலிருந்தே மியான்மர் அரசுக்கு எதிராக போராடி வருகிறது. 2021ஆம் ஆண்டில் இப்படையில் 15,000 வீரர்கள் உள்ளனர் 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட மியான்மர் உள்நாட்டுப் போரில் இப்படையானது தனது கூட்டாளிகளான காரென்னி படைகள், காரென்னி தேசிய மக்கள் விடுதலை முன்னணி மற்றும் காரென்னி தேசியவாதிகள் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து மியான்மர் இராணுவத்திற்கு எதிராக போரிட்டு, மியான்மர் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைப்புறப் பகுதிகளை கைப்பற்றி தன்னாட்சி நிர்வாகம் நடத்துகிறது. இதனையும் காண்க 2021 மியான்மர் இராணுவப் புரட்சி மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Karen National Union home page Victory over KNU, new order on Thai-Burma border This Month in History – May Karen rebels go on offensive in Myanmar Karen National Liberation Army (KNLA) on Schema-root BLOG: BURMA CONFLICT SITUATION REPORT PHOTO ESSAYS OF ACTIVIST CAUSES AND DEMOS Six month battle report for the Karen National Liberation Army The flag of the Karen National Liberation Army மியான்மார்
685679
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
காரென் தேசியப் படைகள்
காரென் தேசியப் படைகள் (Karen National Army, சுருக்கமாக: KNA) மியான்மர் நாட்டின் கிழக்கில், தாய்லாந்து எல்லைப்புற மாநிலமான காயின் மாநிலத்தில் பௌத்த சமயத்தை பின்பற்றி வாழும் காரென் மக்களின் ஆயுதக் குழுவாகும். . 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட 2021 உள்நாட்டுப் போரின் காரணமாக இப்படை 11 சனவரி 2024 அன்று நிறுவப்பட்டது.அதற்கு முன்னர் இந்த அமைப்பு காரென் எல்லைக் காவல் படை என்ற பெயரில் இயங்கியது. காரென் தேசியப் படைகளின் கட்டுப்பாட்டில் மியான்மரின் காயின் மாநிலம் உள்ளது. இதனையும் காண்க காரென் தேசிய விடுதலைப் படைகள் மேற்கோள்கள் மியான்மார்
685680
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81
காயா மாநில இடைக்கால நிர்வாகக் குழு
காயா மாநில இடைக்கால நிர்வாகக் குழு (Karenni State Interim Executive Council) (சுருக்கமாக: Karenni IEC) 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மியான்மரின் காயா மாநிலத்தில் 12 சூன் 2023 அன்று தற்காலிகமாக நிறுவப்பட்ட அரசாகும். இந்த இடைக்கால அரசை காயா மாநிலத்தின் பூர்வகுடிகளாக கரென்னி மக்களால்நிறுவப்பட்டது.29 அக்டோபர் 2024 அன்று இந்த இடைக்கால அரசின் ஆயுதக் குழுவான காயன் தேசியப் படைகள் நிறுவப்பட்டது. இதனையும் காண்க காயா மாநிலம் மேற்கோள்கள் மியான்மார்
685681
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D
பத்திக்
பத்திக் (மலாய்; ஆங்கிலம்: Batik) என்பது மெழுகைப் பயன்படுத்தி சாயமிடும் நுட்பத்தைக் குறிப்பிடுவதாகும். அந்த நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட துணிமணிகளை விவரிக்கவும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. சாயம் ஒரு நீர்மக் கரைசலாகப் பயன்படுத்தப்படும் போது சாயக் கலவைகள் துணிக்குள் உறிஞ்சப் படுவது இயற்கையானது. அதைத் தடுக்க, அந்தத் துணிகளில் முதலில் மெழுகு பூசப்படுகிறது அல்லது மெழுகு முத்திரையிடப் படுகிறது. அதன் மூலம் வண்ணக் கலவைகள் துணிக்குள் உறிஞ்சப் படுவது தடுக்கப்படுகிறது. இவ்வாறுதான் பத்திக் தயாரிக்கப் படுகிறது. பொது பழங்காலத்திலிருந்தே மெழுகு சாயமிடுதல் நடைமுறையில் உள்ளது. எகிப்து, தெற்கு சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற பல உலகப் பண்பாடுகளில் இந்த நடைமுறை பயன்பாட்டில் உள்ளது. இந்தோனேசியாவில் (குறிப்பாக ஜாவாவில்) உருவாக்கப்பட்ட இந்தச் சாயமிடும் நுட்பம் மிகவும் அதிநவீனமானது. 20- ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜாவானிய பத்திக் தயாரிப்பு பல மாற்றங்களுக்கு உள்ளானது. உற்பத்தித் திறனை அதிகரிக்க மெழுகின் மூலமாக முத்திரை பதிக்கும் முறைமை செயல்பாட்டிற்கு வந்தது. இன்றைய நிலையில் இந்தோனேசியாவில் பல பட்டறைகள் மற்றும் கைவினைஞர்கள் பத்திக் துணி தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். பரந்த அளவிலான பத்திக் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காண்க சாயம் இயற்கைச் சாயம் சாயமேற்றல் (உயிரியல்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இயற்கை சாயங்களைப் பயன்படுத்துவதும், வளர்ப்பதும் சாயங்களைப் பற்றி
685683
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A
சிசெல் பெலிக்கொ
சிசெல் பெலிக்கொ (Gisèle Pelicot, (; ; பிறப்பு:திசம்பர் 7, 1952) என்பவர் ஒரு பிரஞ்சுப் பெண்மணி. இவர் "மாசான் பாலியல் வன்புணர்வு வழக்கின்" பாதிப்பாளியாவார். இவரது கணவரான டொமினிக் பெலிக்கொ, 2011 முதல் 2020 வரை சிசெல் பெலிக்கொவிற்கு மயக்கமருந்தளித்து, சுயநினைவற்ற நிலையில் இவரை வன்புணர்ந்தார். தான் மட்டுமல்லாது, ஒரு பிரஞ்சு வலைத்தளத்தின் மூலமாகத் தொடர்பு கொண்டு வரவழைக்கப்பட்ட 83 நபர்களும் (குறைந்தபட்சம்) சிசெல் பெலிக்கொவைத் தன்னினைவற்ற நிலையில் வன்புணரச் செய்தார். 2020 வரை, சிசெல் பெலிக்கொ இது குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. 2020 இல் வணிகவளாகமொன்றில், ஒரு பெண்மணியின் உள்ளாடைக்குள் காணொலி பதிவு செய்த குற்றத்திற்காகக் காவற்துறையினரால் டொமினிக் கைது செய்யப்பட்டப்போது, அவரது கணினியில் செசெல் பெலிக்கொ வன்புணரப்பட்ட காணொலிப் பதிவுகள் சிக்கின. இதன் பின்னரே சிசெல் பெலிக்கொவிற்கு இவ்விவரம் தெரியவந்தது. வன்புணர்வு, வன்புணர்வு முயற்சி, பாலியல் தாக்குதல் ஆகிய குற்றங்களுக்காக டொமினிக், மேலும் 50 பேர்கள் மீது 2024 இல் விசாரணை நடந்தது. வெளியாருக்குத் தெரியாமல், தனிப்பட்டமுறையில், பாதிப்பாளியை அடையாளப்படுத்தாமல், விசாரணை நடத்தப் பாதிப்பாளிக்கு அளிக்கப்பட்ட உரிமையை, சிசெல் பெலிக்கொ மறுத்து விட்டார். வழக்கு வெளிப்படையாக நடக்க வேண்டுமென்று விரும்பினார். இவ்வழக்கின் விசாரணை, ஒட்டுமொத்த உலக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது. பாலியல் தாக்குதலுக்கு ஆளான அனைத்துப் பாதிப்பாளிகளின் சார்பாக முன்னின்ற சிசெல் பெலிக்கொவிற்கு, உலகம் முழுவதிலிருந்தும் ஆதரவு பெருகியது. பிபிசி, 2024 ஆம் ஆண்டின் சிறந்த 100 பெண்கள் பட்டியலிலும், பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த 25 பெண்களின் பட்டியலிலும் இடம்பெற்றார். திசம்பர் 2024 இல், விசாரிக்கப்பட்ட 51 பேரில் டொமினிக் உள்ளிட்ட 50 பேருக்கு, சிசெல் பெலிக்கொவை வன்புணர்ந்தது, வன்புணர முயற்சித்தது, பாலியலாக தாக்கியது ஆகிய குற்றங்களுக்காகத் தண்டனையளிக்கப்பட்டது. சிசெல் பெலிக்கொவை வன்புணர்ந்த குற்றத்துக்குள்ளாகாத 51 ஆவது நபருக்கு, அவரது சொந்த மனைவியை வன்புணந்த குற்றத்திற்குத் தண்டனை கிடைத்தது. அதிகபட்சமாக டொமினிக்கிற்கு 20 ஆண்டுகளும் மற்றவர்களுக்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. பின்னணி சிசெல் பெலிக்கொ, மேற்கு செருமனியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வில்லிங்கென் என்ற ஊரில் திசம்பர் 7, 1952 இல் பிறந்தார். இவரது தந்தை ஒரு இராணுவ வீரர். இவரது ஐந்தாவது வயதில் பிரான்சுக்கு குடியேறினர்; இவரது தாய் புற்றுநோயால் இறந்தார். 1971 இல் தனது வருங்காலக் கணவரான டொமினிக் பெலிக்கொவைச் சந்தித்தார். ஏப்ரல் 1973 இல் இருவரும் திருமணம் செய்துகொண்டு பாரிசின் சுற்றுவட்டாரப்பகுதியில் வசித்து வந்தனர்.திருமணமான துவக்க காலத்தில் இவர்களுக்கு டேவிட் என்ற மகனும் கரொலின் என்ற மகளும் பிறந்தனர்; பின்னர் 1986 இல் மற்றொரு குழந்தை (பிளோரியன்) பிறந்தது. சிசெல் பெலிக்கொ, பிரான்சு நாட்டின் மாநில மின்சார நிறுவனத்தின் நிர்வாகத்துறையில் பணியாற்றினார். டொமினிக் மின்பணியாளராக, மனைவணிக முகவராகப் பணியாற்றிதோடு, பல தொழில்களில் ஈடுபட்டுத் தோல்வியைச் சந்திந்தார். சிசெல் பெலிக்கொ தன் உடன்பணியாளருடன் மூன்றாண்டுகள் தொடர்பு கொண்டிருந்தார். டொமினிக்கிற்கு இதுகுறித்து தெரியவந்ததும், செசெல் பொலிக்கொவை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்தார். சில மாதங்களுக்குப் பின்னர் இருவரும் சமாதானம் ஆகி மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினர். 2001 இல் பணச்சிக்கல் காரணமாக விவாகரத்து பெற்றனர்.எனினும், இருவரும் ஒன்றாக வசித்து, பின்னர் 2007 இல் மறுமணம் செய்து கொண்டனர். 2013 இல் பணி ஓய்வுக்குப்பின், தென்கிழக்கு பிரான்சிலுள்ள மாசான் நகருக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு சிசெல் பெலிக்கொ ஒரு பாடகர் குழுவில் சேர்ந்தார். கோடை விடுமுறையில் அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களுடன் இணைந்தனர். பாலியல் முறைகேடும் கண்டுபிடிப்பும் இருவரும் பாரிசுக்கருகில் வாழ்ந்து வந்தபோது, சிசெல் பொலிக்கொவிற்கு, பென்சொடயசெபின் மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதை உட்கொண்டபின் அவருக்கு ஏற்பட்ட ஆழ்தூக்க நிலையை டொமினிக் சாதகமாக்கிக் கொண்டு, அந்த ஆழ்தூக்க நிலையிலேயே சிசெல் பெலிக்கொவை வன்புணரலானார். டொமினிக், தனது மருத்துவரிடமிருந்து பெற்றுவந்த தூக்க மாத்திரைகளையும் சிசெல் பெலிக்கொவின் உணவிலும் குடிபானங்களிலும் கலந்து கொடுத்து அவரை தன்நினைவிழக்க வைக்கத் தொடங்கினார். இருவரும் மாசானுக்குக் குடிபெயர்ந்த பின்னர், சுயநினைவற்ற நிலையிலுள்ள சிசெலை வன்புணர்வதற்காக, டொமினிக் இணைய வழியில் வேறுவேறு நபர்களையும் வரவழைக்கத் தொடங்கினார். இந்த மருந்துகளின் தாக்கத்தால் சிசெலுக்கு நினைவிழப்புகள் ஏற்படத் துவங்கியது. தனக்கு ஆல்சைமர் நோய் அல்லது மூளையில் புற்றுநோய் வந்திருக்கக் கூடுமோ என்று ஐயுற்ற சிசெல், அவற்றுக்கான மருத்துவச் சோதனைகளை செய்துகொண்டார். ஆனால் அச்சோதனைகளின் முடிவுகள் அவருக்கு அத்தகைய நோய்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்தன. இதனால் சிசெலுக்கு சந்தேகம் தோன்ற, டொமினிக்கிடம் தனக்கு அவர் ஏதாவது மருந்துகளைக் கலந்து தந்துவிட்டாரா என்றும் கேட்டுவிட்டார். அவரது சந்தேகத்தை மறுத்த டொமினிக்கை நம்பியும்விட்டார். இதனால் மருந்தின் உதவியால் தன்னை சுயநினைவு இழக்கச்செய்து சொந்தக் கணவனாலும் பிற ஆண்களாலும் தான் வன்புணர்வு செய்யப்படும் கொடுமையை அறிந்துகொள்ளாமலேயே இருந்தார். 2020 இல் வணிகவளாகமொன்றில் ஒரு பெண்ணின் உள்ளாடைக்குள் திருட்டுத்தனமாக காணொலிப் பதிவுசெய்த குற்றத்துக்காக டொமினிக் பெலிக்கொ காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கணினியில் தன்னினைவற்ற சிசெலை அவரது கணவரும் 83 பிற ஆண்களும் வன்புணரும் காட்சிப்பதிவுகள் சிக்கின. நவம்பர் 2, 2020 அன்று காவல்நிலையத்துக்கு அழைக்கப்பட்ட சிசெலிடம் இப்பதிவுகள் காட்டப்பட்டன. "50 ஆண்டுகளாகத் தான் கட்டமைத்த அனைத்தும் இடிந்துவிட்டது" என சிசெல் பெலிக்கொ கூறினார். டொமினிக் பொலிக்கொ கைதுசெய்யப்பட்டார். சிசெல் பெலிக்கொ தங்களது குடும்ப வீட்டைவிட்டு வெளியேறி டொமினிக்கிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்குப் பதிவுசெய்தார்; அதன் பின்னர் செப்டம்பர் 2024 இல் வழக்கு வன்புணர்வு விசாரணைக்கு வரும்வரை அவர் தனது முன்னாள் கணவரைச் சந்திக்கவேயில்லை. முறைகேடு வழக்கு விசாரணைக்கு வருமுன்னர், விவாகரத்து கிடைத்தது வழக்கு விசாரணை டொமினிக் மீதும், கணினிப் பதிவுகளினால் அடையாளங்காணப்பட்ட 50 பேர் மீதும் செப்டம்பர் 2024 இல் வழக்கு விசாரணை தொடங்கியது. பாலியல் வன்புணர்வு பாதிப்பாளிகளுக்குத் தனிப்பட, வெளியாட்கள் அறியாவண்ணம், அடையாளம் தெரியப்படாத வகையில் விசாரணையை நடத்தவேண்டும் என்று கேட்கும் உரிமை உள்ளது. ஆனால் சிசெல் அதனை மறுத்து விட்டார். வழக்கின் விசாரணை அனைவரும் அறியும்வகையில்தான் நடத்தப்பட வேண்டுமென்றும், தன்னைப் போன்ற பாதிப்பாளிகள் வெளிவருவதற்கு இது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துமென்றும் கூறினார். வண்புணர்வு படப்பதிவுகள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டபோது பொதுமக்கள் இருக்கவேண்டாம் என்று நீதிபது கூறியதையும் சிசெல் மறுத்துவிட்டார். அவரை வன்புணர்ந்தவர்களச் சுட்டிக்காட்டி "அவமானம் அவர்களுக்கே" என்றார் காணொலிப் பதிவுகளைக் குறித்து, "அதிர்ஷ்டவசமாக எனக்கு ஆதாரங்கள் உள்ளன; சான்றுகள் கிடப்பது அரிதானது; எனவே அனைத்து பாலியல் பாதிப்பாளிகளின் சார்பாக நான் இதனை நேர்கொள்ளத்தான் வேண்டும்" என்று கூறினார். சிசெலைத் தைரியசாலி என்றபோது அவர் சொன்னது: "இது தைரியமல்ல; சமுதாயத்தை மாற்றுவதற்கான மன உறுதியும் திடசிந்தையுமே ஆகும்." திசம்பர் 19, 2024 அன்று, டொமினிக்கிற்கு உச்சபட்ச சிறைத்தண்டனையான 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற 50 பேரில் 49 பேருக்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரை சிறத்தண்டனை வழங்கப்பட்டது. ஒருவருக்கு மட்டும் சிசெலை வன்புணர்ந்த ஆதாரம் கிடைக்கவில்லை; எனினும் அவர் தன் சொந்த மனைவியை டொமினிக்கின் உதவியுடன் மயக்கநிலைக்கு உள்ளாக்கி, வன்புணர்ந்த குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனையளிக்கப்பட்டது. தகவேற்பும் தாக்கமும் தனது அடையாளத்தை மறைக்க மறுத்து, வழக்கு விசாரணையை வெளிப்படையாக நடத்த வற்புறுத்திய சிசெலின் தீர்மானமும் மன உறுதியும், அவர் காட்டிய கண்ணியமும், அவருக்குப் பெருமளவில் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுத்தந்தன. நாள்தோறும் நீதிமன்றத்திலிருந்து வெளிவரும்போது மக்கள் வெளியில் காத்திருந்து அவரைப் பாராட்டினர்; அவரது உருவப்படம் தெரு ஓவியங்களில் இடம்பெற்றது; நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள சுவர்களில், அவருக்கு ஆதரவான வாசகங்கள் காணப்பட்டன. முதுபெண்களின் பாலியல் தாக்குதலுக்கு எதிராகப் போராடும் ஆஸ்திரேலிய அமைப்பான, "ஆஸ்திரேலிய முதுபெண்கள் வலையமைப்பானது", பழங்குடிப் பெண்களால் செய்யப்பட்ட கழுத்துக்குட்டையொன்றை சிசெலுக்கு அனுப்பி வைத்தது; சிசெல் அதனை நீதிமன்றத்திற்கு வரும்போது அடிக்கடி அணிந்திருந்தார். அப்பரிசு தன்னை நெகிழவைக்கிறது என்றும், தங்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் உலகப் பெண்களை அது ஒருங்கிணைக்கிறது என்றும் தன் வழக்கறிஞர் மூலம் தெரிவித்தார். சிசெலுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதோடு, அவர் பெண்ணியத்தின் சின்னமாகவும் ஆனார். பிபிசி, 2024 ஆம் ஆண்டின் சிறந்த 100 பெண்கள் பட்டியலிலும், பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த 25 பெண்களின் பட்டியலிலும் சிசெல் பொலிக்கொ இடம்பெற்றார். தீர்ப்பு வெளியானதும் சிசெலின் ஆதரவாளவர்கள் அவரது மன உறுதியையும் தைரியத்தையும் பாரட்டினர்; அவரது கணவருக்கு வழங்கப்பட்டத் தண்டனையைக் கொண்டாடினர். பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இம்மானுவேல் மாக்ரோன், சிசெலின் "கண்ணியத்துக்கும் தைரியத்துக்கும்" நன்றி தெரிவித்தார்; எசுப்பானிய பிரதம மந்திரி, செருமானிய சான்சுலர் ஒலாஃப் சோல்த்சு ஆகிய வெளிநாட்டுத் தலைவர்களால் பாரட்டப்பெற்றார்; பன்னாட்டு செய்தி ஊடகங்கள், சிசெலுக்குத் தகவேற்புச் செய்தன. எசுப்பானிய சமத்துவத்துக்கான அமைச்சகம், ஆதூரியா பகுதியில் பாலியல் அடிப்படையில் பெண்களுக்கெதிரான வன்முறைப் பாதிப்பாளர்களுக்காக, ஒரு வரவேற்பு மையம் திறக்கப்படுமென்றும், அதற்கு சிசெல் பெலிக்கொவின் பெயரிடப்படுமென்றும் அறிவித்தது. மேற்கோள்கள் 1952 பிறப்புகள் வாழும் நபர்கள் பாலியல் வல்லுறவு பிரெஞ்சுப் பெண்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை
685688
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சிந்தூர் சட்டமன்றத் தொகுதி
சிந்தூர் சட்டமன்றத் தொகுதி (Jintur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பர்பணி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பர்பணி மாவட்டத்தில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 வெளியிணைப்புகள் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் பர்பணி மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
685689
https://ta.wikipedia.org/wiki/17%20%28%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%29
17 (எண்)
17 (பதினேழு) (seventeen) என்பதுஇயல் எண் ஆகும். இது 16 இன் தொடரி மற்றும் 18 இன் முன்னி ஆகும். பதினேழு என்பது ஏழாவது பகா எண் ஆகும். பதினேழு என்பது முதல் நான்கு பகா எண்களின் கூடுதல் ஆகும். பதினேழு என்பது தமிழ் எண்களில் ௰௭ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும். கணிதத்தில் பதினேழு ஏழாவது பகா எண் ஆகும். இது நான்காவது சூப்பர்-பகாஎண் ஆகும். அதாவதுஏழு என்பது பதினேழுக்குள் உள்ளது. பகா எண்களின் பண்புகள் பதினேழு என்பது முதல் நான்கு அடுத்தடுத்த பகா எண்களின் கூடுதல் ஆகும். அவை (2, 3, 5, மற்றும் 7) ஆகும். மற்ற எந்த பகா எண்களின் அடுத்தடுத்த நான்கு கூடுதலானது இரட்டை எண்னை உருவாக்கும். மேலும் இரண்டால் வகுபடும். 17 ஆனது இரட்டைப் பகாத்தனியை 19 உடன் உருவாக்கும். 17 ஆனது இரணை பங்காளிப் பகாத்தனியை (Cousin prime) 13 உடன் உருவாக்கும். இங்கு இரணை பங்காளிப் பகாத்தனிகள் என்பது இரண்டு பகா எண்களுக்கு இடையே நான்கு வித்தியாசம் உருவாகும். 17 ஆனது ஆறகல் பகாத்தனியை (sexy primes) இரண்டு எண்களுடன்11 மற்றும் 23 உருவாக்கும். இங்கு ஆறகல் பகாத்தனிகள் என்பது இரண்டு பகா எண்களுக்கு இடையே ஆறு வித்தியாசம் உருவாகும். மேலும், இது ஆறாவது மெர்சென் பகா எண்கள் , (ஒரு நேர்ம முழுவெண்) என்ற வடிவில் எழுதக்கூடிய பகாஎண்களாகும். அதாவது அந்த எண்ணின் வடிவம் , எனில் 131071 என்ற பகா எண் கிடைக்கும். 17 என்பது ஆய்லரின் அதிர்ஷ்ட எண்கள் (2, 3, 5, 11, 17, 41) ஆறில் ஒன்றாகும், அதன் மிகை முழுகளில் n என்பதாகும். அதன் அனைத்து முழுக்களின் kஉடன் , அந்த பல்லுறுப்புக் கோவை பகா எண்களை உருவாக்கும். 17 என்பதை மற்றும் ஆகிய வடிவில் எழுதலாம்; , இதனை லேலண்டு பகா எண் என்பதாகும். உதாரணமாக : மேலும் லேலண்டு பகா எண்கள் 92+29 = 593 152+215 = 32993 ஃபெர்மா எண் பதினேழு என்பது மூன்றாவது ஃபெர்மா எண் ஆகும். இதன் வடிவமானது இங்கு . இருபடி முழுவெண் அணி ஒரு மிகை இருபடி வடிவம் முழுவெண் அணி பகா எண்களை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் முழு எண்கள்
685696
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF
போராளி
போராளி (Militant) என்பவர் பொதுவாக "சீர்திருத்தத்தை" ஏற்படுத்தும் நோக்கத்துக்காக தீவிரமான செயற்பாட்டாளராக, சண்டையிடுபவராக இருப்பவரைக் குறிப்பதாகும். இதற்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் மில்டண்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பெயரடையும், பெயர்ச்சொலுமாகும். மில்டண்ட் என்ற சொல்லானது 15 ஆம் நூற்றாண்டின் இலத்தீன் சொல்லான " மிலிட்டேர் " என்பதிலிருந்து வந்தது, அதாவது "சிப்பாயாக பணியாற்றபவர்" என்பது அதன் பொருளாகும். படையெடுப்பாளர்களுக்கு எதிரான ஒரு தற்காப்பு அமைப்பாக குடிப்படை தொடர்பான நவீன கருத்து ஆங்கிலோ-சாக்சன் குடிப்படைகளில் இருந்து வளர்ந்தது. நெருக்கடியான சமயங்களில், குடிப்படையினர் தங்களது குடிமைக் கடமைகளை விட்டுவிட்டு, அவசரகாலம் முடியும் வரை சிப்பாயாக இருப்பர். நொருக்கடி நீங்கிய பிறகு குடிபடையினர் தங்கள் வழமையான பணிக்குத் திரும்புவர். போராளி என்பதன் தற்போதைய பொருள் பொதுவாக அரசபடையின் சிப்பாயைக் குறிப்பதில்லை: ஒரு குறிக்கோளை அடைய, பொதுவாக அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்படும் குழுவைச் சேர்ந்தவரைக் குறிப்பதாக உள்ளது. "போராளி [அரசியல்] ஆர்வலர்" என்பவர் போராளி என்று விவரிக்கப்படாத எந்த ஒரு செயல்பாட்டாளரைக் காட்டிலும் அதிக மோதல்களில் ஈடுபடுபராகவும், ஆக்ரோசமானவராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவார். போராளித்தனம் என்பது உடல்ரீதியான வன்முறை, ஆயுதமேந்திய போர், பயங்கரவாதம் மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ட்ரொட்ஸ்கிச போராளிக் குழு ஒரு செய்தித்தாளை வெளியிட்டது. அது தொழிலாளர் தகராறுகளில் தீவிரமாக இருந்தது. அரசியல் கூட்டங்களில் தீர்மானங்களை எடுத்தது. ஆனால் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. கிறித்துவ தேவாலய போராளிகளின் நோக்கம் பாவம், பிசாசு மற்றும் ". . . இந்த உலகின் இருளின் ஆட்சியாளர்கள், உயர்ந்த இடங்களில் ஆன்மீக துன்மார்க்கத்திற்கு எதிராக" (எபேசியர் 6:12) போராடுவது, ஆனால் அது ஒரு வன்முறை இயக்கம் அல்ல. பெயர்ச்சொல்லாக போராளி, ஒரு பெயர்ச்சொல்லாக, ஒரு குறிக்கோளை அடைய போர்க்குணமிக்க முறைகளைக் கடைபிடிப்பவர்; இந்தச் சொல் இராணுவத்துடன் தொடர்புடையது அல்ல. போராளி என்பது ஆக்ரோஷமான நடத்தை அல்லது அணுகுமுறைகளை வெளிப்படுத்தும் ஒரு நபரைக் குறிக்கலாம். போராளி என்பது சில சமயங்களில் பயங்கரவாதி அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சியாளருக்கான இடக்கரடக்கலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் செயற்பாட்டியம்
685697
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20319%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 319 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 319 (தே. நெ. 319)(National Highway 319 (India)) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை ஆராவில் (போஜ்பூர் மாவட்டம்) தே. நெ. 922-ஐ பீகார் மாநிலத்தில் உள்ள மோகனியா (கைமூர் மாவட்டம்) நகரத்தின் தே. நெ. 19 உடன் இணைக்கிறது. வழித்தடம் தேசிய நெடுஞ்சாலை 319 ஆரா-மோகனியா சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பின்வரும் வழித்தடத்தில் செல்கிறது. கீதா, அர்ரா. அர்ரா சந்திப்பு ஜீரோ மைல், ஆரா சகதீசுபூர் மால்யபாக் தினாரா கோச்சாசு மோகனியா சந்திப்புகள் கிதா, அர்ரா. மா. ந 12, ஜீரோ மைல், அர்ரா சகதீசுபூர் மல்யாபாக்கில் தினாராவில் கோச்சாசு மோகனியா மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
685702
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D
சொங்கேட்
சொங்கேட் (மலாய்; ஆங்கிலம்: Songket அல்லது Sungkit) என்பது புரூணை, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் மக்கள் பயன்படுத்தும் துணிமணிகளைச் சார்ந்த ஒரு தெனுன் (Tenun) பின்னல் வகை ஆடை ஆகும். இது பட்டு அல்லது பருத்தியில் நெய்யப்பட்டது. துணியில் இணைக்கப்படும் மெல்லிய உலோகத்திலான நூல்கள், துணியின் பின்னணியில் மினுமினுப்பான விளைவை உருவாக்குகின்றன. முன்பு காலத்தில் இந்தப் பின்னல் கலைத்துணிகள் கைகளால் மட்டுமே நெய்யப்பட்டன. எனினும், அண்மைய காலங்களில், உலகளாவிய நவீனமயத்திற்கு ஏற்ப இயந்திரங்களும் பயன்படுத்தப் படுகின்றன. இந்தச் சொங்கேட் பின்னலின் தாயகம் இந்தோனேசியா என்றும்; 7-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவை ஆட்சி செய்த சிறீவிஜயப் பேரரசு (Srivijaya Empire) அறிமுகம் செய்தது எனவும்; முதன்முதலில் பலெம்பாங்கில் தோற்றம் கண்டது எனவும் அறியப்படுகிறது. அங்கிருந்து புரூணை, மலேசியா போன்ற நாடுகளுக்கு இந்தக் கலைப் பின்னல் பரவியது. வரலாறு சுமத்திராவிற்கு வெளியே, பாலி, லொம்போக், சம்பாஸ், சும்பா, மக்காசார், சுலாவெசி மற்றும் இந்தோனேசியாவின் பிற பகுதிகளிலும் சொங்கேட்கள் தயாரிக்கப் படுகின்றன. சிறீவிஜயப் பேரரசின் வரலாற்றுக் காரணிகள், வணிகம் மற்றும் கலப்புத் திருமணங்கள் காரணமாக, கடல்சார் தென்கிழக்காசியா பிராந்தியத்திலும், குறிப்பாக புரூணை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற இந்தோனேசியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் சொங்கேட் பிரபலமாகிவிட்டது. பூமியாயு கோயில் 1902-ஆம் ஆண்டில். தெற்கு சுமத்திராவின் பூமியாயு கோயிலில் (Bumiayu Temple) உள்ள சிலைகளின் மீது ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகளின் அடிப்படையில், கிபி 8-ஆம் நூற்றாண்டில் இருந்து தெற்கு சுமத்திரா மக்களால் சொங்கேட் அணியும் வழக்கம் இருந்திருப்பதையும் அறிய முடிகிறது. 2021-இல், யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) சொங்கேட் பின்னல் கலையை மனுக்குல அருவப் பாரம்பரியத்தின் (Masterpiece of the Oral and Intangible Heritage of Humanity) தலைசிறந்த படைப்பாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. காட்சியகம் சொங்கேட் காட்சிப் படங்கள் மேலும் காண்க பலெம்பாங் சிறீவிஜயம் மினாங்கபாவு பெருநிலம் மினாங்கபாவு மக்கள் கடல்சார் தென்கிழக்காசியா மேலும் படிக்க மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இயற்கை சாயங்களைப் பயன்படுத்துவதும், வளர்ப்பதும் சாயங்களைப் பற்றி மலேசியாவில் பண்பாடு புரூணையின் பண்பாடு சிங்கப்பூர் பண்பாடு இந்தோனேசியப் பண்பாடு இந்தோனேசியாவின் யுனெசுகோ உலக பாரம்பரியக் களங்கள்
685704
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
இசுட்ரோன்சியம் குளோரைடு
இசுட்ரோன்சியம் குளோரைடு (Strontium chloride) என்பது SrCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியம் நேர்மின் அயனியும் குளோரைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. நடுநிலையான நீரிய கரைசல்களை உருவாக்குவது இவ்வுப்பின் குறிப்பிடத்தக்க பண்பாகும். இசுட்ரோன்சியத்தின் அனைத்து சேர்மங்களைப் போலவே, இந்த உப்பும் சுடரில் ஒரு பிரகாசமான சிவப்பு நிறத்தை வெளியிடுகிறது. இந்த விளைவு பொதுவாக பட்டாசுத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது. இசுட்ரோன்சியம் குளோரைடின் பண்புகள் அதிக நச்சுத்தன்மை கொண்ட பேரியம் குளோரைடுக்கும் குறைந்த நச்சுத்தன்மை கொண்ட கால்சியம் குளோரைடுக்கும் இடையே இடைநிலையாக உள்ளன. தயாரிப்பு ஐதரோகுளோரிக் அமிலத்துடன் நீரிய இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு அல்லது இசுட்ரோன்சியம் கார்பனேட்டைச் சேர்த்து சூடுபடுத்தினால் இசுட்ரோன்சியம் குளோரைடைத் தயாரிக்கலாம்: Sr(OH)2 + 2 HCl → SrCl2 + 2 H2O குளிர்ந்த நீரிய கரைசலில் இருந்து படிகமாக்கல் அறுநீரேற்றை (SrCl2·6H2O கொடுக்கிறது. இந்த உப்பின் நீரிழப்பு படிப்படியாக ஏற்படுகிறது. 61 °செல்சியசு வெப்பநிலையில் (142 °பாரங்கீட்டு) நீரிழப்பு ஏற்படத் தொடங்குகிறது. 320 °செல்சியசு வெப்பநிலையில் (608 °பாரங்கீட்டு) முழு நீரிழப்பு ஏற்படுகிறது. கட்டமைப்பு திட நிலையில், இசுட்ரோன்சியம் குளோரைடு புளோரைட்டு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. வாயு நிலையில் SrCl2 மூலக்கூறு நேரியல் அல்லாத Cl-Sr-Cl தோராயமாக 130° பிணைப்புக் கோணத்தில் உள்ளது. இணைதிறன் கூடு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கைக்கு இதி விதிவிலக்காகும். இக்கோட்பாடு நேரியல் கட்டமைப்பைக் கணிக்கிறது. இணைதிறன் கூட்டுக்கு கீழே உள்ள கூட்டில் உள்ள டி ஆர்பிட்டால்களின் பங்களிப்புகள் பொறுப்பு என்று முன்மொழிவதற்கு தொடக்கத்திலிருந்தே கணக்கீடுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. மற்றொரு முன்மொழிவு என்னவென்றால், இசுட்ரோன்சியம் அணுவின் எலக்ட்ரான் மையத்தின் முனைப்பு Sr-Cl பிணைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் மைய எலக்ட்ரான் அடர்த்தியின் சிதைவை ஏற்படுத்துகிறது என்பதாகும். பயன்கள் மஞ்சள் நிற இசுட்ரோன்சியம் குரோமேட்டு, இசுட்ரோன்சியம் கார்பனேட்டு மற்றும் இசுட்ரோன்சியம் சல்பேட்டு போன்ற இசுட்ரோன்சியத்தின் மற்ற சேர்மங்கள் தயாரிப்பதற்கு இசுட்ரோன்சியம் குளோரைடு ஒரு முன்னோடிச் சேர்மமாகும். இசுட்ரோன்சியம் குளோரைடின் நீரிய கரைசல்களை விரும்பும் அயனியின் சோடியம் உப்புடன் வெளிப்படுத்துவது பெரும்பாலும் திடமான வீழ்படிவு உருவாவதற்கு வழிவகுக்கிறது.: SrCl2 + Na2CrO4 → SrCrO4 + 2 NaCl SrCl2 + Na2CO3 → SrCO3 + 2 NaCl SrCl2 + Na2SO4 → SrSO4 + 2 NaCl இசுட்ரோன்சியம் குளோரைடு பெரும்பாலும் பட்டாசுத் தொழிலில் சிவப்பு நிறமூட்டும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு நிறமளிக்கும் பெரும்பாலான மற்ற சேர்மங்களை விட தீப்பிழம்புகளுக்கு மிகவும் தீவிரமான சிவப்பு நிறத்தை இச்சேர்மம் அளிக்கிறது. கண்ணாடித் தயாரிப்பிலும் உலோகவியலிலும் சிறிய அளவில் இசுட்ரோன்சியம் குளோரைடு பயன்படுத்தப்படுகிறது. எலும்புப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்பான இசுட்ரோன்சியம்-89, பொதுவாக இசுட்ரோன்சியம் குளோரைடு வடிவில் நிர்வகிக்கப்படுகிறது. கடல் நீர் மீன்வளத்திற்கு சிறிய அளவு இசுட்ரோன்சியம் குளோரைடு தேவைப்படுகிறது. சில மிதவைவாழிகள் வளர்ச்சியின் போது உட்கொள்ளப்படுகிறது. பல் பராமரிப்பு ஈறு மந்தநிலையால் வெளிப்படும் நரம்பு நுனிகளைக் கொண்ட தந்தினியில் உள்ள நுண்ணிய குழாய்களின் மீது ஒரு தடையை உருவாக்குவதன் மூலம் பல் உணர்திறனைக் குறைப்பதில் இசுட்ரோன்சியம் குளோரைடு பயனுள்ளதாக இருக்கும். அமெரிக்காவில் எலிக்கோல் மற்றும் சென்சோடைன் என அறியப்படும், இத்தகைய தயாரிப்புகள் இசுட்ரோன்சியம் குளோரைடு பற்பசைகள் என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலானவர்கள் இப்போது சால்ட்பீட்டர் (KNO3) எனப்படும் உப்பை பயன்படுத்துகின்றனர். இது ஒரு தடையாக இல்லாமல் வலி நிவாரணியாக செயல்படுகிறது. உயிரியல் ஆராய்ச்சி இசுட்ரோன்சியம் குளோரைடு வெளிப்பாடு முட்டைவளர் உயிரணுக்களின் தன் கருவுறுதல் செயல்பாட்டைத் தூண்டுகிறது. வளர்ச்சி உயிரியல் ஆராய்ச்சியில் இத்தூண்டல் பயன்படுத்தப்படுகிறது. அம்மோனியா சேமிப்பு ஒரு வணிக நிறுவனம், முக்கியமாக டீசல் வாகனங்களில் NOx உமிழ்வைக் குறைப்பதற்காக குறைந்த அழுத்தத்தில் அம்மோனியாவைச் சேமிப்பதற்கான வழிமுறையாக அத்தமீன் எனப்படும் இசுட்ரோன்சியம் குளோரைடு அடிப்படையிலான செயற்கையான திடப்பொருளைப் பயன்படுத்துகிறது. காப்புரிமை பெற்ற இப்பொருள் வேறு சில உப்புகளிலிருந்தும் தயாரிக்கப்படலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் பெருமளவு உற்பத்திக்காக இசுட்ரோன்சியம் குளோரைடைத் தேர்ந்தெடுத்துள்ளனர். முன்னதாக நிறுவனத்தின் ஆராய்ச்சி, ஐதரம்மீன் மற்றும் ஐதரசன் டேப்ளட்டு என்ற வர்த்தக முத்திரையின் கீழ் செயற்கை அம்மோனியா எரிபொருளைச் சேமிப்பதற்கான ஒரு வழிமுறையாக சேமிக்கப்பட்ட அம்மோனியாவைப் பயன்படுத்துவதாகக் கருதியது. இருப்பினும், இந்த வழிமுறை வணிகமயமாக்கப்படவில்லை. இந்நிறுவனத்தின் செயல்முறைகள் மற்றும் பொருட்கள் காப்புரிமை பெற்றவை. இவர்களின் ஆரம்பகால சோதனைகளில் மெக்னீசியம் குளோரைடு பயன்படுத்தப்பட்டது. கட்டுரையிலும் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. மண் பாதுகாப்பு மண் பரிசோதனையில் சிட்ரிக் அமிலத்துடன் இசுட்ரோன்சியம் குளோரைடு தாவர ஊட்டச்சத்துக்களின் உலகளாவிய பிரித்தெடுக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் இசுட்ரோன்சியம் சேர்மங்கள் குளோரைடுகள் புளோரைட்டு படிகக் கட்டமைப்பு கார மண் உலோக ஆலைடுகள்
685708
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
விருதம்பட்டு
விருதம்பட்டு (Viruthampattu) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும். அமைவிடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 235.84 மீ. உயரத்தில் () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு விருதம்பட்டு அமையப் பெற்றுள்ளது. சமயம் இந்துக் கோயில்கள் தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் பிள்ளையார் கோயில், காளியம்மன் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் ஆகியவை விருதம்பட்டு பகுதியில் அமைந்துள்ளன. மேற்கோள்கள் வேலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
685712
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF
அர்மின் நவாபி
அர்மின் நவாபி (Armin Navabi), (பிறப்பு:25 டிசம்பர் 1983) born 25 December 1983) ஈரான் நாட்டில் பிறந்த முன்னாள் முஸ்லீம், இறைமறுப்புபாளர், சமயச் சார்பின்மையாளர், அரசியல் ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், வலையொலியாளர், மற்றும் மனித உரிமை ஆர்வலரும் கனடா நாட்டு குடிமகனும் ஆவார். இவர் தற்போது கனடா நாட்டின் வான்கூவர் நகரத்தில் வசித்து வருகிறார். 2012ஆம் ஆண்டில் இவர் கனடாவில் இணையதளம் மூலம் கட்டற்ற சிந்தனை சமூகத்திற்கான நாத்திக குடியரசு எனும் இலாப-நோக்கமற்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் தூதரகங்கள் மலேசியா, இந்தோனேசியா]] மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற 100 நாடுகளில் செயல்படுகிறது.இந்த தூதரகங்கள் மூலம் இறை நம்பிக்கையற்றவர்கள், இறை நிந்தனை & இறை விசுவாமற்றவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்ப்படு ஒடுக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு ஆதரவு அளிக்கிறது. வரலாறு அர்மின் நவாபி சியா இசுலாம் குடும்பத்தில் ஈரான் நாட்டின் தெகுரான் நகரத்தில் 1983ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் 1985 மற்றும் 1986களில் ஜெர்மனி மற்றும் இலண்டனுக்குச் பயணித்தார். 1988ல் மீண்டும் தெகுரான் நகரத்திற்கு திரும்பினார். அவரது குடும்பம் தாராளவாதமாக இருந்தது, குறிப்பாக இறை நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. அர்மின் நவாபி தெகுரான் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் படிப்பை படித்தார். படிக்கும் போது இறைமறுப்பு கொள்கைகளை இணையத்தில் தேடினார்..பின்னர் ஈரானை விட்டு, கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிதியியல் துறையில் படிப்பைத் துவங்கினார்.10 அக்டோபர் 2004 அன்று வான்கூவர் நிர்ந்தரமாக தங்கி கனடா நாட்டின் குடியுரிமைப் பெற்றார். அங்கு அவர் 2012ஆம் ஆண்டில் உலகளாவிய நாத்திக சமூகத்தை உருவாக்கவும் மற்றும் செயல்பாட்டிற்கான நாத்திக குடியரசு எனும் அறக்கட்டளையை நிறுவினார். இது இணையத்தில் சக நாத்திகர்களைத் தேடுவதற்கு அவரைத் தூண்டியது. படைப்புகள் ஏன் கடவுள் இல்லை: கடவுளின் இருப்புக்கான 20 பொதுவான வாதங்களுக்கு எளிய பதில்கள் (2014) மத்திய கிழக்கிலிருந்து மதச்சார்பற்ற ஜிஹாதிகள் (2017) (அலை ரிஷ்வி, யாஷ்மின் முகமது மற்றும் பைசல் சகீத் முக்தாருடன் இணைந்து) In January 2018, the show was renamed Secular Jihadists for a Muslim Enlightenment, with Rizvi and Navabi as co-hosts. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வாழும் நபர்கள் இறை மறுப்பாளர்கள் முன்னாள் முஸ்லீம்கள் 1983 பிறப்புகள் ஈரானிய மக்கள் சமயமின்மை
685714
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
நளினி பாக்சி
நளினிகாந்த பாக்சி(Nalinikanta Bagchi) இந்திய நாட்டின் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்ற ஒரு புரட்சியாளர் ஆவார். 1896 ஆம் ஆண்டு பிறந்தார். பாக்சியின் பூர்வீக வீடு நதியா மாவட்டத்தில் உள்ள சிகர்பூரில் உள்ளது. ஆரம்பகால வாழ்க்கை பாக்சி இந்திய நாட்டின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள காஞ்சனதலாவில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் புவன்மோகன் பாக்சி ஆகும். பகிராம்பூரில் உள்ள கிருட்டிணநாத் கல்லூரியில் படித்தார். பின்னர், பாங்கிபூர் கல்லூரி மற்றும் பாட்னாவில் உள்ள பாகல்பூர் கல்லூரியிலும் படித்தார். பெர்கம்பூரில் உள்ள கிருட்டிணநாத் கல்லூரியில் படிக்கும்போது, சூகந்தரின் புரட்சிகரக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக பாட்னாவில் உள்ள பாங்கிபூர் கல்லூரி மற்றும் பாகல்பூர் கல்லூரிக்குச் சென்றார். தனாபூர் சிப்பாய்களிடையே சுந்திரப் போராட்டத்தின் கருத்துக்களைத் தூண்ட முயன்றார். கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் அசாம் மாநிலத்தில் குவகாத்தி மாவட்டத்தில் உள்ள அத்கானில் தஞ்சம் புகுந்தார். பிறகு 1918 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதியன்று, காவல்துறையினருடன் ஆயுதப் போருக்குப் பிறகு, இவரும் சதீசு சந்திர பக்ரசியும் போலீசு வளையத்தைக் கடந்து காட்டிற்குச் சென்றனர். நவகிரக மலையின் மீது மற்றொரு தாக்குதலையும் இவர் முறியடித்தார். ஏழு நாட்கள் பட்டினி மற்றும் தூக்கமின்மைக்கு பிறகு, ஒரு இசுலாமியன் என்ற போர்வையில், நடந்து லும்டிங் நிலையத்தை அடைந்தார். பின்னர் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு கல்கத்தா வந்தார். இவரது தோழர்களில் ஒருவர், இவர் தரையில் கிடப்பதைக் கண்டு கவனித்துக் கொண்டார். சந்திப்பும் மரணமும் பின்னர் டாக்கா சென்றார். ஆனால் 1917 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று டாக்காவின் கல்டாபசார் என்னும் இடத்தில் மீண்டும் காவல்துறையினரால் சூழப்பட்டார். நளினிக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஆயுதப் போர் தொடங்கியது. துப்பாக்கிச் சண்டையில் பலத்த காயமடைந்தார். பின்னர் கைது செய்யப்பட்டார். இவருடன் இருந்த இவரது தோழர் தரிணிப்பிரசன்னா மசூம்தார் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நாளில் டாக்காவின் மிட்ஃபோர்ட் மருத்துவமனையில் 1918 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதியன்று இறந்தார். இறப்பதற்கு முன்பு காவல்துறை சித்திரவதை செய்யப்பட்ட போதிலும், தனது பெயரை கூட இவர் குறிப்பிடவில்லை. இந்த சண்டையில் ஒரு காவல்துறையினர் கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்தனர். இவரது புரவலர் சைதன்யா டே (அசுவின் குமார் டே) பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். முர்சிதாபாத்தில் உள்ள பெர்ஹாம்பூர் நகரில் ஒரு சாலையும், பெர்காம்போர்-சலங்கி மாநில சாலையின் மீது ஒரு பாலமும் இவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளன. மேற்கோள்கள் 1918 இறப்புகள் 1890கள் பிறப்புகள் இந்திய விடுதலைப் போராட்டம் வங்காள மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
685715
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
சில்பா சிங்
சில்பா சிங் (Shilpa Singh) இந்திய நாட்டினைச் சார்ந்த பாடகர், நடனக் கலைஞர், வடிவழகி மற்றும் அழகு போட்டித் தலைப்பு வைத்திருப்பவர் ஆவார். 2012 ஆம் ஆண்டு நடந்த நான் அவள் 2012 - மிசு உலகம் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 2012 ஆம் ஆண்டு அமெரிக்கா நாட்டின் லாசு வேகசில் நடந்த மிசு உலகம் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் நேர்காணல் பூர்வாங்க போட்டியில் 10 மதிப்பெண்ணுக்கு 9.6 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்த பின்னர் அரையிறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக ஆனார். தொழில் வாழ்க்கை சில்பா சிங் 2019 ஆம் ஆண்டில் இந்தியன் வர்த்தக பள்ளிக்கூடம் படிப்பில் பட்டம் பெற்றார். தற்போது கூகுள் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் இதற்கு முன்பு தனது பி.டெக். படிப்பை முடித்திருந்தார். பின்னர் மும்பையில் உள்ள எசு. வி. கே. எம். நிறுவனத்தில் என். எம். ஐ. எம். எசு கணினி அறிவியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். தற்போது கியூப் 26 என்னும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், நான் அவள் 2012 போட்டியின் வெற்றியாளரான ஊர்வசி ரவுத்தேலா என்பவருக்கு பதிலாக சில்பா சிங் மாற்றப்பட்டார். மேற்கோள்கள் 1988 பிறப்புகள் வாழும் நபர்கள் பீகார் நபர்கள் இந்தியப் பெண்கள் இந்தியப் பெண் உருமாதிரிக் கலைஞர்கள்
685719
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
சாலிவகான் சிங் தோமர்
சாலிவகான் சிங் தன்வார் (Shalivahan Singh Tanwar) குவாலியர் நாட்டின் இராசபுத்திர ஆட்சியாளரான தோமர் வம்சத்தினைச் சார்ந்த ராம்சா தன்வார் என்பவரின் மகனாவார். இவர்களுக்கும் முகாலய வம்ச மன்னர்களுக்கும் இருந்த பகையின் காரணமாக முகாலய மன்னர் அக்பரால் நாட்டினை விட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் இவர்களது குடும்பத்தினர் மேவார் நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இவரது குடும்பத்தினர் மேவார் நாட்டினைத் தேர்ந்தெடுக்க காரணம் முகாலய மன்னர் அக்பரை மாநிலத் தலைவராக ஏற்க மறுத்த ஒரே மாநிலம் மேவாராகும். இவரது தந்தை ராம்சா தோமர் ஆவர். மேலும் இவரது சகோதரர்கள் உட்பட 300 பேர் கால்டிகட்டி என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் உயிரிழந்தனர். இவரது மகன்கள் உயிர் பிழைத்து லகான்சார் என அழைக்கப்படும் பிகானேர் பகுதி, கேதாசர் பகுதி, கெலாவா என்றழைக்கப்படும் சோத்பூர் பகுதி மற்றும் தல்னியா என அழைக்கப்படும் செய்ப்பூர் பகுதியின் ஆட்சியாளர்களாக மாறினர். வம்சாவளி 12 ஆம் நூற்றாண்டில் தில்லியில் தோமரின் சந்ததியினர் ஆன சோகன் சிங் என்பவரின் மகன் இரண்டாம் அனங்கபாலன் ஆட்சியாளர் ஆனார். விர்சிங் (கி.பி. 1375) உத்தாரன் தேவ் (கி.பி.1400) விக்ரம் தேவ் கணபதி தேவ் (கி.பி.1419) துர்காரேந்திர சிங் கல்யாணமல்லா மான் சிங் தோமர் (கி.பி.1486) விக்ரமாதித்யா தோமர், (முகாலய மன்னர் பாபருக்கு எதிராகப் போராடினார்) இராம்சா தோமர் சாலிவகான் சிங் தோமர் (மேவாரைச் சேர்ந்த இரண்டாம் உதய் சிங் மகளை மணந்தார்.) பரம்பரை குவாலியர் நாட்டில் தோமர் வம்சத்தின் வாரிசான சியாம்சா தோமர், கிபி 1597 ஆம் ஆண்டில் மகாராணா பிரதாப் இறந்த பிறகு அக்பரின் கீழ் பணியாற்றினார். மித்ராசென் தோமர் இராவ் தர்மகத்து மேற்கோள்கள் இந்தியர்கள்
685720
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%80%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பர்பணீ சட்டமன்றத் தொகுதி
பர்பாணீ சட்டமன்றத் தொகுதி (Parbhani Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பர்பணீ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகும். இது பர்பணீ மாவட்டத்தில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 வெளியிணைப்புகள் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் மகாராட்டிர அரசியல்
685732
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B.%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE
கோ. கிருட்டிணையா
கோ. கிருட்டிணையா (G. Krishnaiah) இந்திய நாட்டின் பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாநிலத்தினைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். சில அரசியல்வாதிகள் தலைமையிலான கும்பலால் கொல்லப்பட்ட 1985 ஆம் ஆண்டு பிரிவின் இந்திய நிர்வாக சேவை (இ.ஆ.ப) அதிகாரி ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 08 ஆம் தேதியன்று பிறந்தார். 1994 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 05 ஆம் தேதியன்று இறக்கும்போது வயது 37 ஆகும். அப்போதைய பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத் யாதவின் சொந்த மாவட்டமான கோபால்கஞ்ச் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதி (டி.எம்.) ஆக பணியாற்றினார். இவரது சேவையின் நினைவாக, பாக்கெட்டில் பேனாவுடன் இவரது சிலை கோபால்கஞ்ச் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மரணம் 2007 ஆம் ஆண்டில் பாட்னா மாவட்ட நீதிமன்றம் ஆறு அரசியல்வாதிகளை இவரது கொலைக்கு குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளில் ஆனந்த் மோகன் சிங் மற்றும் அவரது மனைவி லவ்லி ஆனந்த் (இருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்), விஜய் குமார் சுக்லா ("முன்னா சுக்லா" என்று அழைக்கப்படுகிறார்) , சட்டமன்ற உறுப்பினர் அக்லாக் அகமது மற்றும் அருண் குமார், அரேந்திர குமார் (மூத்த சேடியூ தலைவர்) மற்றும் எசு.எசு. தாக்கூர் ஆவர். கிருட்டிணையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஆனந்த் மோகன் பீகார் அரசின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டார். மேற்கோள்கள் 1957 பிறப்புகள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் 1994 இறப்புகள் பீகார் அரசியல்வாதிகள்
685746
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கங்காகேட் சட்டமன்றத் தொகுதி
கங்காகேட் சட்டமன்றத் தொகுதி (Gangakhed Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பர்பணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பர்பணி மாவட்டத்தில் உள்ளது சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 வெளியிணைப்புகள் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் மகாராட்டிர அரசியல்
685747
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கூத்தாய் இராச்சியம்
கூத்தாய் அல்லது கூத்தாய் இராச்சியம் (Kutai; Kutai Kingdom) என்பது போர்னியோ தீவில் இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தான் மாநிலத்தில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதி; மற்றும் கூத்தாய் இராச்சியம் எனவும் அறியப்படுகிறது. இந்த இராச்சியம் ஏறக்குறைய 1680 ஆண்டுகளுக்கு முன்னர், போர்னியோ தீவின் கலிமந்தான் காடுகளின் கிழக்குக் கரையில் கி.பி. 350-ஆம் ஆண்டுகளில் மையம் கொண்ட ஓர் இராச்சியம் ஆகும். கூத்தாய் இராச்சியம் அதன் பெயரை அங்கு வாழும் ஓராங் கூத்தாய் (Urang Kutai) எனும் கூத்தாய் இனக் குழுவுடன் பகிர்ந்து கொள்கிறது. கூத்தாய் மக்கள்தொகை சுமார் 300,00 பேர்; அவர்கள் கூத்தானிய மொழி (Kutainese language) என்று அழைக்கப்படும் கூத்தாய் மொழியைப் பயன்படுத்துகின்றனர். இந்தோனேசிய வரலாற்றில் பண்டைய இராச்சியங்களில் கூத்தாய் இராச்சியமும் ஒன்றாகும்; அதாவது இந்தோனேசியாவில் உருவான இரண்டாவது இந்திய மய இராச்சியம் என வரலாற்று அடிப்படையில் உறுதிப்படுத்தப் படுகின்றது. கூத்தாய் மார்த்திபுரா இராச்சியம் இந்தோனேசியாவில் உருவான முதலாவது அரசு சாலகநகரப் பேரரசு (Salakanagara Kingdom). மேற்கு ஜாவாவில் கி.பி. 130-ஆம் ஆண்டில் தோன்றிய அரசு. அடுத்ததாகத் தோன்றியது கூத்தாய் இராச்சியம். இதைக் கூத்தாய் மார்த்திபுரா (Kutai Martadipura) இராச்சியம் என்றும் அழைக்கிறார்கள். 1918-ஆம் ஆண்டு இந்தோனேசியா, கூத்தாய் மாநிலத்தில், மகாகம் நதி (Mahakam River) முகத்துவாரத்தில் ஒரு கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ஏழு கல் தூண்கள் அல்லது யாபா (Yupa) என்று பெயர். அவை பல்லவ எழுத்துகளில், சமசுகிருத மொழியில் எழுதப்பட்டு இருந்தன. கூத்தாய் இராச்சியத்தை ஆட்சி செய்த மூலவர்மன் (Mulavarman) செய்த தியாகங்களை அந்தக் கல் தூண் நினைவு கூர்கின்றது. இந்து சமயம் தொல் எழுத்து முறை அடிப்படையில், அவை 4-ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டவை. இந்து சமயம் 2-ஆம் மற்றும் 4-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இந்தியாவில் இருந்து வந்த வணிகர்கள் சுமத்திரா, ஜாவா மற்றும் சுலாவெசி தீவுகளுக்கு இந்து சமயத்தைக் கொண்டு வந்து இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. கூத்தாய் அரசின் முதல் ஆளுநர் குடுங்கன் (Kudungga). இவரின் இன்னொரு பெயர் நரேந்திரன் (Narendra). இவருடைய மகனின் பெயர் அசுவவர்மன் (Aswawarman); கூத்தாய் அரசின் இரண்டாவது அரசர். மூன்றாவதாக ஆட்சி செய்தவர் மூலவர்மன் (Mulavarman) எனும் இராஜேந்திரன். இவர் அசுவவர்மனின் மகனும் ஆவார். மூலவர்மன் உள்ளூர் டாயாக் வம்சாவளியினருக்குத் (Dayak people) தலைவராக இருந்து உள்ளார். இவருடைய மகன் அசுவ வர்மன் தான் இந்து மத நம்பிக்கையை ஏற்றுக் கொண்டார் என்று கருதப் படுகிறது. யாபா கல்வெட்டுகள் யாபா அல்லது யூபா (Yupa) கல்வெட்டுகளை உருவாக்கியவர் மூலவர்மன். அவரின் இரண்டு முன்னோடிகளான நரேந்திரன்; அசுவவர்மன் படையெடுப்புகள் பற்றி எதுவும் தெரியவில்லை. என்றாலும், "ராஜா" முல்லைவர்மன் தன் அண்டை நாடுகளைப் போரில் வென்றதாக யாபா கல்வெட்டில் கூறப் படுகிறது. முன்பு காலத்தில் "அசுவமேதா" (Ashvamedha) என்கிற ஓர் உள்ளூர் நிகழ்வு இருந்தது. அந்தச் சடங்கின் மூலமாக கூத்தாய் அரசின் நிலப்பரப்பை அதிகரித்ததாகவும் கூறப் படுகிறது. அசுவமேதா என்பது ஒரு சடங்கு. ஒரு குதிரையை ஓட விட்டு, அதன் விருப்பத்தில் சுற்றித் திரியும் போது ஏற்படும் அடிச்சுவடுகள் எங்கு எல்லாம் தெரிகிறதோ அந்த நிலம் எல்லாம் கூத்தாய் அரசுக்கு சொந்தமாகிறது என்று பொருள். இந்தச் சடங்கின் மூலமாகத் தான் கூத்தாய் அரசின் நிலப்பரப்பை விரிவுபடுத்தி உள்ளார்கள். கூத்தாய் கர்த்தனகர அரசு அதன் பின்னர் இந்தக் கூத்தாய் பேரரசு என்ன ஆனது என்று தெரியவில்லை. அதைப் பற்றிய கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் பேரரசின் வழித்தோன்றலில் மற்றொரு அரசு உருவாகி இருக்கிறது. அதன் பெயர் கூத்தாய் கர்த்தனகர அரசு (Kutai Kartanegara Regency). கூத்தாய் கர்த்தனகரப் அரசு 13-ஆம் நூற்றாண்டில் உருவாகி உள்ளது. இந்த அரசு கலிமந்தான் காடுகளில் தெப்பியான் பத்து (Tepian Batu) அல்லது கூத்தாய் லாமா எனும் பகுதியில் நிறுவப் பட்டது. கி.பி. 1300 முதல் கி.பி. 1325 வரை ஆட்சி நடைபெற்று உள்ளது. அதன் முதல் ஆட்சியாளர் அஜி பதாரா அகோங் தேவ சக்தி (Aji Batara Agung Dewa Sakti). அதன் பின்னர் 1635-1650 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அஜி பாங்கேரன் சினும் பாஞ்சி மெண்டபா ( Aji Pangeran Sinum Panji Mendapa), கூத்தாய் மார்ததிபுர இராச்சியத்தை கைப்பற்றி, இரண்டு பகுதிகளையும் ஒன்றிணைத்து "கூத்தாய் கர்தநகரா இங் மர்ததிபுரா" (Kutai Kartanegara Ing Martadipura) என பெயர் மாற்றம் செய்தார். பூகிஸ் கோவா அரசு 1667-ஆம் ஆண்டில் சுலாவெசி தீவை ஆட்சி செய்த பூகிஸ்காரர்களின் கோவா அரசை (Bugis Kingdom of Gowa) டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். பூகிஸ் கோவா அரசு வீழ்ச்சி அடைந்தது. அங்கு இருந்த பூகிஸ் மக்களில் சிலர் அண்டை நாடான போர்னியோ கலிமந்தான் கூத்தாய் நாட்டில் குடியேறினார்கள். அந்த இடம் அப்போது கம்போங் செலிலி (Kampung Selili) என்று அழைக்கப் பட்டது. இப்போது சமரிந்தா (Samarinda) எனும் நவீன நகரமாக வளர்ச்சி அடைந்து உள்ளது. இசுலாமியம் 17-ஆம் நூற்றாண்டில் இசுலாமியம் இந்தப் பகுதியில் பரவியது. பின்னர், கூத்தாய் அரசு, டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்குள் வந்தது. 1942-ஆம் ஆண்டில் ஜப்பானியர்களின் படையெடுப்பு. கூத்தாய் அரசிற்கு ’கூட்டி அரசு’ (Kooti Kingdom) என்று பெயர் வைத்தார்கள். 1945-ஆம் ஆண்டில் கூத்தாய் அரசு கிழக்கு கலிமந்தான் கூட்டமைப்பில் சேர்ந்தது. 1949-ஆம் ஆண்டில் இந்தோனேசியா குடியரசின் ஒரு பகுதியாக மாறியது. தற்போதைய நிலை கூத்தாய் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்களின் வாரிசுகள் இன்றும் போர்னியோ தீவில் உள்ளார்கள். தலைமுறை தலைமுறைகளாகத் தங்களை மன்னர் மூலவர்மனின் வாரிசுகள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அண்மையில் ஒரு முடிசூட்டு விழா நடைபெற்றது. 2020 சூன் மாதம் 6-ஆம் தேதி அந்த முடிசூட்டு விழா நடைபெற்றது. கூத்தாய் மூலவர்மன் அரசாங்கம் (Kerajaan Mulawarman) என்று ஒரு புதிய அரசாங்கத்தையும் தோற்றுவித்தார்கள். மன்னர் மூலவர்மனின் வாரிசுகள் முடிசூட்டிக் கொண்டவரின் பெயர் இயான்சா ரெக்‌சா (Iansyahrechza). தன்னை இராஜா லாபோக்; இராஜா கூத்தாய் மூலவர்மன் என்றும் அறிவிப்பு செய்து கொண்டார். கூத்தாய் இராச்சியத்தின் பாரம்பரிய கலாசார பழக்க வழக்கங்களைப் பாதுகாப்பதே முக்கிய நோக்கம் என்று இயான்சா ரெக்‌சா சொல்கிறார். (Iansyahrechza atau disapa Raja Labok, Raja Kutai Mulawarman, di Muara Kaman, Kabupaten Kutai Kertanegara, Kalimantan Timur) இந்த நிகழ்ச்சி சற்று மாறுபாடான; சற்று முரண்பாடான நிகழ்ச்சியாகச் சில தரப்பினர் கருதுகிறார்கள். இந்தோனேசிய அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பற்றியும்; இந்தக் குழுவினர் இருக்கும் இடத்தைப் பற்றியும் விசாரித்து வருவதாக இந்தோனேசியக் காவல்துறை கூறி உள்ளது. மேலும் காண்க கூத்தாய் தேசிய பூங்கா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Kutai Martadipura Vogel, J.Ph. 1918 The yūpa inscriptions of King Mūlavarman from Koetei (East Borneo). Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 74:216–218. Chhabra, B.Ch. 1965 Expansion of Indo-Aryan culture during Pallava rule (as evidenced by inscriptions). Delhi: Munshi Ram Manohar Lal. 50–52, 85–92; Casparis, J.G. de 1975 Indonesian palaeography: a history of writing in Indonesia from the beginning to c. A.D. 1500. Leiden: E.J. Brill. 14–18 முன்னாள் பேரரசுகள் முன்னாள் முடியாட்சிகள் இந்துப் பேரரசுகள் இந்தோனேசியா இந்தோனேசிய வரலாறு மலேசிய வரலாறு சாவக வரலாறு
685749
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%2C%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
ஜெட்பூர், ராஜ்கோட் சட்டமன்றத் தொகுதி
ஜெட்பூர், ராஜ்கோட் சட்டமன்றத் தொகுதி (Jetpur, Rajkot Assembly constituency) (தொகுதி வரிசை எண்:74) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ராஜ்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஜெயேஷ் ரடாடியா ஆவார். சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள் இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன. ஜம்கண்டோர்னா தாலுகா ஜெட்பூர் தாலுகா அம்ரேலி மாவட்ட வாடியா தாலுகா கிராமத்தின் (பகுதி) - தேவல்கி சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் குஜராத் சட்டமன்றத் தொகுதிகள்
685750
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
தோராஜி சட்டமன்றத் தொகுதி
{{Infobox Indian constituency | name = தோராஜி | mla = டாக்டர் மகேந்திரபாய் படலியா' | party = பாரதிய ஜனதா கட்சி | latest_election_year =2022 | state = குஜராத் | district = ராஜ்கோட் மாவட்டம் | reservation = இல்லை | electors = | type= SLA }} தோராஜி சட்டமன்றத் தொகுதி (Dhoraji Assembly constituency) (தொகுதி வரிசை எண்:75) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ராஜ்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த டாக்டர் மகேந்திரபாய் படலியா '' ஆவார். சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள் இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன. உப்லேத்தா தாலுகா தோராஜி தாலுகா சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் குஜராத் சட்டமன்றத் தொகுதிகள்
685751
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கலவாத் சட்டமன்றத் தொகுதி
கலவாத் சட்டமன்றத் தொகுதி (Kalavad Assembly constituency) (தொகுதி வரிசை எண்:76) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ஜாம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாவ்தா மேஜிபாய் அமராபாய் ஆவார். சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள் இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன. கலவாத் தாலுகா ஜோடியா தாலுகா (பகுதி) கிராமங்கள் - ரஞ்சித்பர், உன்ட்பெட்-சாம்பர், சின்சுடா, ராஜ்பர்,பட்சர், பேலா, ராம்பார் (படபேகாட்), கோத்தாரியா, அம்ரன், கராச்சியா, கேரளா, பட்சர், சீவாபர், பதன்பர் (அம்ரான்), துட்கோட், மவ்னுகம், துதாய் , பீம்கடா, ஜாம்சார், சாம்பார், அம்பாலா, கொய்லி, படனா, சிரகத், தரனா, மாதபர், பலம்பா, கேசியா, மன்பர், மொரானா, மேக்பர், சசபர், போட்கா, பிதாத், கஜ்டி, ரஸ்னால், திம்ப்டி. துரோல் தாலுகா - கிராமங்களைத் தவிர முழு தாலுகாவும் - சல்லா, கோலிடா. பதாரி தாலுகா (பகுதி) ராஜ்கோட் மாவட்ட கிராமங்கள் - கோக்ரி, ஜிவாபர் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் குஜராத் சட்டமன்றத் தொகுதிகள்
685752
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
ஜம்ஜோத்பூர் சட்டமன்றத் தொகுதி
ஜம்ஜோத்பூர் சட்டமன்றத் தொகுதி (Jamjodhpur Assembly constituency) (தொகுதி வரிசை எண்:80) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ஜாம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அஹிர் ஹேமந்த்பாய் ஹர்தாஸ்பாய் ஆவார். சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள் இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன. ஜம்ஜோத்பூர் தாலுகா லால்பூர் தாலுகா பன்வாட் தாலுகா (பகுதி) கிராமங்கள் - மன்பர், ஜோக்ரா, சோகண்டா, பாங்கோல், போரியா, கபர்கா, ஷேதகாய், போட்கி, ஃபோட்டி, தரகர், க்ருஷ்ணகாத், வனவாட், கட்கோலா சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் குஜராத் சட்டமன்றத் தொகுதிகள்
685753
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கம்பாலியா சட்டமன்றத் தொகுதி
கம்பாலியா சட்டமன்றத் தொகுதி (Khambhalia Assembly constituency) (தொகுதி வரிசை எண்:81) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அயர் முலுபாய் ஹர்தாஸ்பாய் பெரா ஆவார். சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள் இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன. கம்பாலியா தாலுகா பன்வாட் தாலுகா (பகுதி) மன்பர், ஜோக்ரா, சோகண்டா, பாங்கோல், போரியா, கபர்கா, ஷேதகாய், போட்கி, போத்தி, தரகர், க்ருஷ்ணகாத், வனவாட், கட்கோலா தவிர அனைத்து கிராமங்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் குஜராத் சட்டமன்றத் தொகுதிகள்
685754
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%2C%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
துவாரகா, குசராத்து சட்டமன்றத் தொகுதி
துவாரகா, குசராத்து சட்டமன்றத் தொகுதி (Dwarka, Gujarat Assembly constituency) (தொகுதி வரிசை எண்:82) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பபுபா மானெக் ஆவார். சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள் இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன. கல்யாண்பூர் தாலுகா ஒக்கமண்டல் தாலுகா சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் குஜராத் சட்டமன்றத் தொகுதிகள்
685755
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
குட்டியானா சட்டமன்றத் தொகுதி
குட்டியானா சட்டமன்றத் தொகுதி (Kutiyana Assembly constituency) (தொகுதி வரிசை எண்:84) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி போர்பந்தர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த காந்தல் ஜடேஜா ஆவார். சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள் இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன. குட்டியான தாலுகா ரணவவு தாலுகா போர்பந்தர் தாலுகா (பகுதி) கிராமங்கள் - ரத்தன்பர், ஒட்டர், துக்டா கோசா, கேஷோத் (லுஷாலா), எராடா, டெலோடர், மித்ராலா, ராஜ்பர், கோசா, சிகாசா, பாத், கரேஜ், நவி பந்தர், ரதியா, உண்டடா, பலேஜ், கடச், மோச்சா, கோர்சர், மாந்தர், சிங்காரியா, பாடா, மாதவபூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் குஜராத் சட்டமன்றத் தொகுதிகள்
685756
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
மானவடார் சட்டமன்றத் தொகுதி
மானவடார் சட்டமன்றத் தொகுதி (Manavadar Assembly constituency) (தொகுதி வரிசை எண்:85) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ஜூனாகத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரவிந்த்பாய் லதானி ஆவார். சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள் இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன. மானவாடர் தாலுகா வந்தாளி தாலுகா மெண்டர்டா தாலுகா - முழு தாலுகா - லகாட்வேரி நெஸ் கிராமத்தைத் தவிர சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் குஜராத் சட்டமன்றத் தொகுதிகள்
685760
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கேசோத் சட்டமன்றத் தொகுதி
கேசோத் சட்டமன்றத் தொகுதி (Keshod Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் 182 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இது ஜுனாகத் மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகும். இத்தொகுதியில் அமைந்துள்ள பகுதிகள் இந்த சட்டமன்ற தொகுதி பின்வரும் பிரிவுகளை உள்ளடங்கி உள்ளது கேசோத் தாலுகா மங்கரோல் தாலுகா (பகுதி கிராமங்கள்-மிட்டி, ஹன்தர்பூர், ஃபுல்ராமா, லங்கட், ஓசா கேட், பத்ரோட், பாகஸ்ரா-கேட், கோடாதர், ஷர்மா, சமர்டா, சாந்தா, சர்சாலி, தாலி, மேகாடி, விரோல், கங்கனா, திவ்ரானா, காலேஜ், சாங்க்வா, வட்லா, அஜக், அந்த்ரோலி, திவாசா, பாமன்வாடா, நாகிச்சனா, தர்சாலி, சிங்காரியா, ஃபரங்டா, ஜரியாவடா, சங்கவாடா, ஷில், தலோத்ரா, நந்தர்கி, சந்த்வானா, கராம்டி, கோரேஜ், மேனஞ்ச், கங்கசா, லோஹேஜ், ரஹிஜ், ரூதல்பூர், சுல்தான்பூர், பட்காம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மேலும் காண்க குஜராத் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல் குஜராத் சட்டப்பேரவை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் குஜராத்தில் அரசியல் ஜூனாகத் மாவட்டம் குஜராத் சட்டமன்றத் தொகுதிகள்
685761
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
விசாவதர் சட்டமன்றத் தொகுதி
விசாவதர் சட்டமன்றத் தொகுதி (Visavadar Assembly constituency) (தொகுதி வரிசை எண்:87) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ஜூனாகத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரவிந்த்பாய் ஜினாபாய் லதானி ஆவார். சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள் இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன. விசாவதர் தாலுகா பீசன் தாலுகா ஜூனாகத் தாலுகா (பகுதி) கிராமங்கள் - கேரளா, பியால், சோக்கி, கத்ரோட்டா, இசாபூர், பலியவாட், சோக்லி, வடல், சுக்பூர், பமாங்கம், டெர்வன், ஹஸ்னாபூர், ஜம்புடி, இந்திரேஷ்வர், சூரஜ்குண்ட், கிர்னார் ஹில்ஸ், துங்கர் தானா, மன்ப்டி, மன்ப்டி, மன்ப்டி, நவா பிபாலியா, பந்தலா, பல்கம், மந்தன்பரா, ராம்நாத், துங்கர்பூர், விஜாப்பூர், சோத்வதர், இந்தலா, படாபூர், சலதா, காதியா, தோரணியா, நவாகம், பில்கா, உம்ராலா, அவதாதியா மோட்டா, சோர்வாடி, ஆனந்த்பூர், மேவாசா காடியா, பக்து, பிரபாத்பூர், ரமேஷ்வர், கம்ரிபைனா, பேலா, பாதல்பூர், ஜம்கா, செம்ராலா, சங்க்தாவதர், தும்பலா. அம்ரேலி மாவட்ட பாகசரா தாலுகாவின் (பகுதி) - கடயா கிராமம் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் குஜராத் சட்டமன்றத் தொகுதிகள்
685763
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
கூத்தாய் தேசிய பூங்கா
கூத்தாய் தேசிய பூங்கா ஆங்கிலம்: Kutai National Parkt; என்பது இந்தோனேசியா, கிழக்கு கலிமந்தான், போர்னியோ தீவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தாழ்நிலத் தேசிய பூங்கா ஆகும். இது பூமத்திய ரேகைக்கு வடக்கே சுமார் 10 முதல் 50 கிமீ தொலைவில் உள்ளது. புவியியல் இந்தப் பூங்கா மகாகம் ஆற்றின் (Mahakam River) வடக்கே அமைந்துள்ளது; மற்றும் தனாவ் மாவ் ஏரி, சாந்தன் ஏரி, பெசார் ஏரி, சிராபன் ஏரி போன்ற பல ஏரிகளை உள்ளடக்கியது. இந்தப் பூங்கா, பொண்டாங் (Bontang) மற்றும் சங்கத்தா (Sangatta) நகரங்களை ஒட்டியும்; மாநிலத் தலைநகர் சமாரிண்டாவிற்கு (Samarinda) வடக்கே 120 கிமீ தொலைவிலும் உள்ளது. தேசிய பூங்காவிற்குள் பல பாரம்பரிய பூகிஸ் குடியிருப்புகள் உள்ளன. சூழலியல் கூத்தாய் தேசிய பூங்கா 2,000 கிமீ2 பரப்பளவில் பரவியுள்ளது. இது 1970-களில் இருந்து பாதுகாக்கப்பட்ட முன்னாள் கூத்தாய் வேட்டை விலங்குப் புகலிடப் பகுதியாகும் (Kutai Game Reserve). இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில், வணிக நோக்கத்திற்காகக் காடுகள் வெட்டப் படுவதையும், சுரங்க நிறுவனங்களின் ஊடுருவல்களையும் தடுக்க இயலவில்லை. இதன் காரணமாக, காடுகள் அழிப்பதைத் தடுக்கும் முயற்சியாக கூத்தாய் தேசிய பூங்கா 1982-இல் நிறுவப்பட்டது. பெரும் போர்னியோ காட்டுத் தீ மேலும், 1982/83 ஆம் ஆண்டு பெரும் போர்னியோ காட்டுத் தீயினால், கூத்தாய் காடுகளின் பெரும் பகுதிகள் அழிந்து விட்டன. மேலும் பூங்காவின் கிழக்கு எல்லையில், பொது மக்களின் தொடர் அத்துமீறல்களினால், உண்மையான வனப்பூங்கா பகுதி குறைந்து வருகிறது. வளர்ச்சி பெற்ற காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 30% மட்டுமே எஞ்சி உள்ளது. சமரிண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Samarinda International Airport) மட்டுமே கூத்தாய் தேசிய பூங்காவிற்கு ஒரே பெரிய நுழைவாயிலாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பூங்காவை அணுகுவதற்கு இரண்டு முக்கிய இடங்கள் உள்ளன. சங்கத்தாவிற்கும் போண்டாங்கிற்கும் இடையிலான சாலையில் சங்கிமா பூங்கா உள்ளது. எனவே சிறு வாகனங்கள் அல்லது பேருந்துகள் மூலம் அணுகலாம். இப்பகுதியில் பல பழைய அமைப்பைக் கொண்ட தேசிய பூங்கா கட்டிடங்கள் உள்ளன. ஓராங் ஊத்தான் மனிதக் குரங்குகள் 2004-இல், ஓராங் ஊத்தான்களின் எண்ணிக்கை 600 என பதிவு செய்யப்பட்டது. 2009-இல் 60 என வியத்தகு அளவில் குறைந்து விட்டது.[5] இருப்பினும், தொடர் பாதுகாப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டன. அதன் பின்னர் 2010-இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 2,000 ஓராங் ஊத்தான்கள் வசிப்பதாகக் கண்டறியப்பட்டது. மேலும் காண்க ஓராங் ஊத்தான் போகோர் தாவரவியல் பூங்கா சிபோடாஸ் தாவரவியல் தோட்டம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official site இந்தோனேசியாவில் உள்ள தாவரவியல் பூங்காக்கள்
685764
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
சுவால்பார்டு துருவ மான்
சுவால்பார்டு துருவ மான் (Svalbard reindeer) துருவ மான் இனங்களில் மிகச்சிறிய இனமாகும். இவ்வகை துருவ மான்கள் நார்வே நாட்டின் சுவால்பார்டு தீவுக்கூட்டங்களில் மட்டும் காணப்படுகிறது. ஆண் சுவால்பார்டு துருவ மானின் சராசரி எடை 65 முதல் 90 கிலோ கிராம் வரையும் மற்றும் பெண் சுவால்பார்டு துருவ மானின் சராசரி எடை 53 முதல் 70 கிலோ கிராம் வரையும் இருக்கும்.பிற வகை துருவ மான்களில் ஆண் மான்களின் சராசரி எடை 159 முதல் 182 கிலோ கிராம் வரையும், பெண் மான்கள் 80 முதல் 120 கிலோ கிராம் வரை எடைகொண்டிருக்கும்.மற்ற துருவ மான்களுடன் ஒப்பிடும்போது, இவ்வகை துருவ மான்கள் குட்டை கால்கள் மற்றும் சிறிய, வட்டமான தலை கொண்டுளளது. குளிர்காலத்தில் இவற்றின் முடிகள் இலகுவான நிறமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். இவைகள் குளிர்காலத்தில் பட்டினியாக இருக்கும் போதும் கூட கொழுப்பாக தோன்றும். ஏப்ரல் முதல் சூலை வரையிலான காலகட்டத்தில் ஆண்களுக்கு பெரிய கொம்புகள் உருவாகின்றது. ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் முடிகளை உதிர்கின்றது. குளிர்காலத்தின் தொடக்கத்தில் ஆண் மான்கள் தங்கள் கொம்புகளை உதிர்க்கிறது.. பெண் மான்களுக்கு சூலை மாதத்திலிருந்து கொம்புகள் உருவாகின்றது. சுவால்பார்டு தீவுக்கூட்டங்களில் இவ்வகை குட்டை துருவ மான்கள் ஏறத்தாழ 5,000 ஆண்டுகளாக பலவித தட்ப வெப்ப நிலைகளை கடந்து வாழ்கிறது.19 & 20ஆம் நூற்றாண்டுகளில் அதிகம் வேட்டையாடப்பட்டதால், சுவால்பார்டு தீவுக்கூட்டங்களில் இவ்வகை குட்டையான துருவ மான்கள் கிட்டதட்ட அழியும் நிலைக்கு சென்றுள்ளது. 2019ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது. இது ஐரோப்பாவின் உயர் துருவப் பகுதியில் வாழும் ஒரே பெரிய மேய்ச்சல் பாலூட்டியாகும். குறுகிய ஆர்க்டிக் கோடையில், சுவால்பார்டு துருவ மான்கள், தாழ்நில சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் உள்ள புற்கள், மூலிகைச் செடிகள் மற்றும் இலையுதிர் புதர்களை உண்டு, குளிர்காலத்திற்கு தேவையான கொழுப்பை உடலில் சேர்த்து கொள்ளும். . மேற்கோள்கள் மான்கள் ஆர்க்டிக் விலங்குகள்
685774
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-I
கோங்காடு-I
கோங்காடு-I (Kongad-I) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரும் கோங்காடு-II என்ற ஊருடன், சேர்த்து கோங்காடு கிராம ஊராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. மக்கள்வகைப்பாடு 2001 ஆண்டைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, கோங்காடு-I கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 13,387 ஆகும். இதில் 6,408 பேர் ஆண்களும், 6,979 பேர் பெண்களும் ஆவர். மேற்கோள்கள் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
685775
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-II
கோங்காடு-II
கோங்காடு-II (Kongad-II) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரும் கோங்காடு-I ஊரும், கோங்காடு கிராம ஊராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. மக்கள்வகைப்பாடு 2001 ஆண்டைய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கோங்காடு-II கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 14,406 ஆகும். இதில் 6,880 பேர் ஆண்களாவர். 7,526 பேர் பெண்களாவர். மேற்கோள்கள் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
685776
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
தெனாலி மக்களவைத் தொகுதி
தெனாலி மக்களவைத் தொகுதி (Tenali Lok Sabha constituency) என்பது 2008ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேசத்தின் மக்களவை தொகுதியாக இருந்து பின்னர் நீக்கப்பட்ட இந்திய நாட்டாளுமன்றத் தொகுதியாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2004 மேலும் காண்க தெனாலி மக்களவை தொகுதிகளின் பட்டியல் மேற்கோள்கள் நீக்கப்பட்ட இந்திய மக்களவைத் தொகுதிகள்
685777
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
ஆஃபினியம் டெட்ராகுளோரைடு
ஆஃபினியம் டெட்ராகுளோரைடு (Hafnium tetrachloride) என்பது HfCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த நிறமற்ற திடப்பொருளானது பெரும்பாலான ஆஃபினியம் கரிமவுலோகச் சேர்மங்கள் தயாரிப்பதற்குப் பயன்படும் ஓரு முன்னோடிச் சேர்மமாகும். இச்சேர்மம் பல்வேறு சிறப்பு வாய்ந்த பயன்பாடுகளைக் கொண்டுள்ளது, முக்கியமாக பொருள் அறிவியலிலும் ஒரு வினையூக்கியாகவும் அதிகமாகப் பயன்படுகிறது. தயாரிப்பு ஆஃபினியம் டெட்ராகுளோரைடு தொடர்புடைய பல வேதிச் செயல்முறைகளால் தயாரிக்கப்படுகிறது: கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் ஆஃபினியம்(IV) ஆக்சைடு ஆகிய சேர்மங்கள் 450°செல்சியசு வெப்பநிலைக்குமேல் வினைபுரிவதால் ஆஃபினியம் டெட்ராகுளோரைடு உருவாகிறது. HfO2 + 2 CCl4 → HfCl4 + 2 COCl2 குளோரின் வாயு அல்லது இருகந்தக இருகுளோரைடு முன்னிலையில் HfO2 மற்றும் கல்கரி சேர்ந்த கலவையை 600° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் குளோரினேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம்: HfO2 + 2 Cl2 + C → HfCl4 + CO2 ஆஃபினியம் கார்பைடை 250° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் குளோரினேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம். ஆஃபினியம் மற்றும் சிர்க்கோனியம் பிரித்தெடுத்தல் ஆஃபினியம் மற்றும் சிர்க்கோனியம் ஆகியவை சிர்கோன், சிர்டோலைட்டு மற்றும் பேத்தலைட்டு போன்ற தாதுக்களில் ஒன்றாகக் காணப்படுகின்றன. சிர்கோனில் 0.05% முதல் 2.0% வரை ஆஃபினியம் டை ஆக்சைடு (HfO2) கலந்துள்ளது. 5.5% முதல் 17% HfO2 வரை சிர்டோலைட்டு கனிமத்திலும் பேத்தலைட்டில் 1.0 முதல் 1.8 சதவீதம் வரையிலும் HfO2 உள்ளது. ஆஃபினியம் மற்றும் சிர்க்கோனியம் சேர்மங்கள் இரண்டும் தாதுக்களிலிருந்து ஒன்றாக பிரித்தெடுக்கப்பட்டு டெட்ராகுளோரைடுகளின் கலவையாக மாற்றப்படுகின்றன. HfCl4 மற்றும் ZrCl4 சேர்மங்களைப் பிரிப்பது கடினம், ஏனெனில் Hf மற்றும் Zr சேர்மங்கள் மிகவும் ஒத்த இரசாயன மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்டுள்ளன. இவற்றின் அணு ஆரங்கள் ஒரே மாதிரியானவை: ஆஃபினியத்தின் அணு ஆரம் 156.4 பைக்கோமீட்டர், சிர்க்கோனியத்தின் அணு ஆரம் 160 பைக்கோமீட்டர் ஆகும். இந்த இரண்டு உலோகங்களும் ஒரே மாதிரியான வேதி வினைகளுக்கு உட்பட்டு ஒரே மாதிரியான ஒருங்கிணைப்புச் சேர்மங்களை உருவாக்குகின்றன. ZrCl4 சேர்மத்திலிருந்து HfCl4 சேர்மத்தை பிரித்து சுத்திகரிக்க பல செயல்முறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. பகுதியளவு வடிகட்டுதல், பகுதியளவு வீழ்படிவாக்கம் , பகுதியளவு படிகமயமாக்கல் மற்றும் அயனி பரிமாற்றம் ஆகிய செயல்முறைகள் இதில் அடங்கும். திண்ம ஆஃபினியம் குளோரைடின் (476 முதல் 681 கெல்வின் வரை) நீராவி அழுத்தத்தின் பதிவு (மடக்கை 10) சமன்பாட்டின் மூலம் வழங்கப்படுகிறது: மடக்கை10 P = -5197/வெப்பம் + 11.712. இங்கு அழுத்தம் டார்சிலும் வெப்பநிலை கெல்வின்களிலும் அளவிடப்படுகிறது. (உருகுநிலையில் அழுத்தம் 23,000 டார்சு ஆகும்.) இரண்டு டெட்ரா ஆலைடுகளுக்கு இடையே உள்ள குறைப்புத்தன்மையின் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது ஒரு முறையாகும். சிர்க்கோனியம் சேர்மத்தை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைந்த ஆலைடுகளாக அல்லது சிர்க்கோனியமாகக் குறைப்பதன் மூலம் டெட்ரா ஆலைடுகளைப் பிரிக்கலாம். ஆஃபினியம் டெட்ராகுளோரைடு குறைப்பின் போது கணிசமாக மாறாமல் இருக்கும். சிர்க்கோனியம் துணை ஆலைடுகளிலிருந்து உடனடியாக இதை மீட்டெடுக்கலாம். ஆஃபினியம் டெட்ராகுளோரைடு ஆவியாகும் தன்மை உடையது, எனவே ஆவியாகாத சிர்க்கோனியம் டிரை ஆலைடிலிருந்து எளிதாகப் பிரிக்கலாம். கட்டமைப்பும் பிணைப்பும் இந்த குழு 4 ஆலைடில் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் ஆஃபினியம் உள்ளது. திண்ம HfCl4 எண்முக Hf மையங்களைக் கொண்ட ஒரு பலபடி ஆகும். ஒவ்வொரு Hf மையத்தைச் சுற்றியுள்ள ஆறு குளோரைடு ஈந்தணைவிகளில் இரண்டு குளோரைடு ஈந்தணைவிகள் முனையமாகவும், நான்கு மற்றொரு Hf மையத்திற்கு பாலமாகவும் இருக்கும். வாயு கட்டத்தில், ZrCl4 மற்றும் HfCl4 இரண்டும் TiCl4 சேர்மத்திற்கு காணப்படும் மோனோமெரிக் நான்முகி கட்டமைப்பை ஏற்றுக்கொள்கின்றன. வாயு கட்டத்தில் HfCl4 சேர்மத்தின் மின்னணு தோற்றுருக் குழாய் ஆய்வுகள் Hf-Cl அணுக்கருக்களிடை தூரம் 2.33 Å என்றும், Cl...Cl அணுக்கருக்களிடை தூரம் 3.80 Å என்றும் காட்டியது. அணுக்கரு தூரங்களின் விகிதம் r(Me-Cl)/r(Cl...Cl) 1.630 மற்றும் இந்த மதிப்பு வழக்கமான நான்முகி மாதிரியின் (1.633) மதிப்புடன் நன்றாக ஒத்துப்போகிறது. வினைத்திறம் ஆஃபினியம் டெட்ராகுளோரைடு நீராற்பகுப்பிற்கு உட்பட்டு ஐதரசன் குளோரைடை வெளிவிடுகிறது: HfCl4 + H2O → HfOCl2 + 2 HCl நாட்பட்ட மாதிரிகள் பெரும்பாலும் ஆக்சிகுளோரைடுகளால் மாசுபடுத்தப்படுகின்றன, இவை நிறமற்றவை. டெட்ரா ஐதரோ பியூரான் ஓர் ஓருறுப்பு 2:1 அணைவுச் சேர்மமாக உருவாகிறது. HfCl4 + 2 OC4H8 → HfCl4(OC4H8)2 ஏனெனில் இந்த அணைவுச் சேர்மம் கரிம கரைப்பான்களில் கரையக்கூடியது என்பதால், ஆஃபினியத்தின் மற்ற அணைவுச் சேர்மங்களைத் தயாரிப்பதற்கு இது ஒரு பயனுள்ள வினையாக்கியாகும். HfCl4 கிரிக்கனார்டு வினையாக்கியுடன் உப்பு இடப்பெயர்ச்சி வினைக்கு உட்படுகிறது. இந்த வழிமுறையில் டெட்ராபென்சைல் ஆஃபினியத்தை தயாரிக்கலாம். 4 C6H5CH2MgCl + HfCl4 → (C6H5CH2)4Hf + 4 MgCl2 இதேபோல், சோடியம் வளையபெண்டாடையீனைடுடன் உப்பு இடம்பெயரல் வினை ஆஃபினோசீன் டைகுளோரைடை அளிக்கிறது: 2 NaC5H5 + HfCl4 → (C5H5)2HfCl2 + 2 NaCl ஆல்ககால்களுடன் வினை புரிந்து ஆல்காக்சைடுகள் உருவாகின்றன. HfCl4 + 4 ROH → Hf(OR)4 + 4 HCl இந்த சேர்மங்கள் சிக்கலான கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்கின்றன. ஒடுக்கம் HfCl4 சேர்மத்தை ஒடுக்குவது மிகவும் கடினம். பாசுபீன் ஈந்தணைவிகளின் முன்னிலையில், பொட்டாசியம்-சோடியம் கலப்புலோகத்துடன் ஒடுக்கம் செய்ய இயலும்.: 2 HfCl4 + 2 K + 4 P(C2H5)3 → Hf2Cl6[P(C2H5)3]4 + 2 KCl ஆழ்ந்த பச்சை நிற ஈராஃபினியம் தயாரிப்பு எதிர்காந்தவியல்பு கொண்டதாகும். அணைவுச் சேர்மம் Zr ஒப்புமை போன்ற ஒரு விளிம்பு-பகிர்வு ஈரெண்முகக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது என்பதை X-கதிர் படிகவியல் காட்டுகிறது. பயன்கள் ஆஃபினியம் டெட்ரா குளோரைடு என்பது ஆல்க்கீன்களின், குறிப்பாக புரோப்பிலீனின் சீக்லர்-நாட்டா பலபடியாக்கல் வினைக்கான மிகவும் செயலில் உள்ள வினையூக்கிகளுக்கு முன்னோடியாகும். வழக்கமான வினையூக்கிகள் டெட்ராபென்சைல் ஆஃபினியத்திலிருந்து பெறப்படுகின்றன. HfCl4 கரிமத் தொகுப்பு வினைகளில் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயனுள்ள இலூயிசு அமிலமாகும். எடுத்துக்காட்டாக, அலுமினியம் முக்குளோரைடுடன் ஒப்பிடும்போது ஆஃபினியம் குளோரைடைப் பயன்படுத்தி பெரோசீன் அல்லைல் டைமெத்தில் குளோரோசிலேனுடன் அல்கைலேற்றம் செய்யப்படுகிறது. Hf தனிமத்தின் பெரிய அளவு, பெரோசீனுக்கு சிக்கலான HfCl4 இன் போக்கைக் குறைக்கும். HfCl4 1,3-இருமுனை வளையக்கூட்டு வினைகளின் வீதத்தையும் கட்டுப்பாட்டையும் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட எக்சோ-மாற்றியம் உருவாக்கத்தை அனுமதிக்கும் அரைல் மற்றும் அலிபாட்டிக் அல்டாக்சைம்களுடன் பயன்படுத்தும்போது மற்ற இலூயிசு அமிலங்களை விட இது சிறந்த முடிவுகளைத் தருவதாகக் கண்டறியப்பட்டது. நுண்மின்னணுவியல் பயன்பாடுகள் இரசாயன நீராவிப் படிவு மற்றும் ஆஃபினியம் டை ஆக்சைடு, ஆஃபினியம் சிலிக்கேட்டு ஆகியவற்றின் அணு அடுக்கு படிவுக்கான முன்னோடியாகக் கருதப்பட்டது. நவீன உயர்-அடர்த்தி ஒருங்கிணைந்த சுற்றுகளை தயாரிப்பதில் உயர்-கே மின் காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், ஒப்பீட்டளவில் குறைந்த ஆவியாகும் பண்பு மற்றும் அரிக்கும் துணை விளைபொருள்கள் (அதாவது, HCl), காரணமாக HfCl4 சேர்மமானது டெட்ராகிசு எத்தில்மெதிலமினோ ஆஃபினியம் (TEMAH) போன்ற உலோக-கரிம முன்னோடிகளால் படிப்படியாக வெளியேற்றப்பட்டது. மேற்கோள்கள் ஆஃபினியம் சேர்மங்கள் குளோரைடுகள் உலோக ஆலைடுகள்
685778
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81.%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
எசு. இராமச்சந்திர ரெட்டி
எசு. இராமச்சந்திர ரெட்டி (S. Ramachandra Reddy)(செப்டம்பர் 6) என்பர் ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தின் பெனுகொண்டா சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் குருபா சாதியைச் சேர்ந்தவர். அரசியல் வாழ்க்கை 1983ஆம் ஆண்டில், இவர் பெனுகோண்டா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு கங்குலா நாராயண ரெட்டியினைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பின்னர் 1985-இல் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு காங்கிரசு கட்சியின் ஜி. வீரண்ணாவினைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த முறை இவர் என். டி. ராமராவின் அரசாங்கத்தில் அமைச்சரானார். இவர் தொழில்துறை மற்றும் துறைமுகங்களுக்கான அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். ஆனால் 1989 தேர்தலில் எசு. சென்னா ரெட்டி தோல்வியடைந்தார். 1996ஆம் ஆண்டில் இவர் இந்துபூர் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கங்காதரை 172,422 வாக்குகள் பெரும்பான்மையுடன் தோற்கடித்து வெற்றி பெற்றார். 1998ஆம் ஆண்டில் இவர் எசு. கங்காதரால் தோற்கடிக்கப்பட்டார். மேற்கோள்கள் 2005 இறப்புகள் 1944 பிறப்புகள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் அனந்தபூர் மாவட்ட நபர்கள் 11வது மக்களவை உறுப்பினர்கள்
685779
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
மங்ரோல், ஜுனாகத் சட்டமன்றத் தொகுதி
மங்கரோல், ஜூனாகத் (Mangrol, Junagadh Assembly constituency) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரைவத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஜுனாகத் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்தொகுதியில் உள்ள பிரிவுகளின் பட்டியல் இந்த சட்டமன்ற இருக்கை பின்வரும் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மாலியா-ஹாதினா தாலுகா மங்கரோல் தாலுகா (பகுதி கிராமங்கள்-அரங்கம், தேலானா, ஹுசெனாபாத், ஜாம்வாலி, ஜுடால், கோடாடா, கோட்டா ஜூனா, கோட்டா நவா, லம்போரா, லத்தோத்ரா, மக்துபூர், மங்கரோல் (மங்கரால், மன்கேத்ரா, சாக்ரானா, ஷேக்பூர், ஷாபூர், ஷெபா, ஷெரியாகான், ஷெரியாஜ், வீர்பூர், கங்கசா) சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் குஜராத்தில் அரசியல் ஜூனாகத் மாவட்டம் குஜராத் சட்டமன்றத் தொகுதிகள்
685784
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
தருமநகரா இராச்சியம்
தருமநகரா இராச்சியம் (Tarumanagara; Taruma Kingdom) என்பது இந்தோனேசியா, மேற்கு ஜாவாவில் ஏறக்குறைய 1650 ஆண்டுகளுக்கு முன்பு, 400 - 500-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு சுந்தானிய-இந்திய இராச்சியமாகும். இந்தோனேசியாவின் மூதாதைய இராச்சியங்களில் மூன்றாவது இராச்சியம் என அறியப்படும் தருமநகரா இராச்சியம், ஜகார்த்தா நகரை மையமாகக் கொண்டு 4-ஆம் நூற்றாண்டில் உருவான அரசு ஆகும். இதனைத் தருமநகரம் அரசு; தருமநகரா அரசு (Tarumanagara Kingdom); அல்லது தருமா அரசு (Taruma Kingdom); அல்லது தருமா (Taruma) என்றும் அழைப்பது உண்டு. இந்த அரசு மேற்கு ஜாவாவை 320 ஆண்டுகள் ஆட்சி செய்து உள்ளது. பொது தர்மநகரா அரசு தோன்றுவதற்கு முன்பாக வேறு இரண்டு அரசுகள், இந்தோனேசியா ஜாவாவில் தோன்றி உள்ளன. முதன்முதலாகத் தோன்றிய அரசு சாலகநகரா இராச்சியம் (Salakanagara Kingdom) (கி.பி. 130 - கி.பி. 362). சாலகநகரா இராச்சியம்தான் இந்தோனேசியாவில் தோன்றிய முதலாவது இந்தியமய அரசு ஆகும். மேற்கு ஜாவாவில் ஆட்சி புரிந்த இந்த இராச்சியம், ஒரு புராண இந்திய இராச்சியம் எனவும் வகைப்படுத்தப் படுகிறது. அடுத்து இரண்டாவதாகத் தோன்றியது போர்னியோ, கிழக்கு கலிமந்தான் காடுகளில் தோன்றிய கூத்தாய் இராச்சியம் (Kutai Kingdom) ஆகும். இந்த இராச்சியம், 399-ஆம் ஆண்டு தொடங்கி 1635-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தது. 1300-ஆம் ஆண்டு வாக்கில் கூத்தாய் இராச்சியம், இசுலாமிய அரசாக மாற்றம் கண்டது. ஜெயசிங்கவர்மன் தர்மநகரா பேரரசை தோற்றுவித்தவர் மகரிஷி ராஜாதி ராஜகுரு ஜெயசிங்கவர்மன் (Maharshi Rajadirajaguru Jayasingawarman). இந்தோனேசிய வரலாற்றுக் காலச் சுவடு நுசாந்தாராவில் (Nusantara) சொல்லப்படுகிறது. இந்த நூலின் மற்றொரு பெயர் புசுதாகா இராச்சிய பூமி நுசாந்தரா (Pustaka Rajyarajya i Bhumi Nusantara). 17-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். மகரிஷி ராஜாதி ராஜகுரு ஜெயசிங்கவர்மனின் வரலாறு, இந்தியாவின் குப்த பேரரசு (Gupta Empire) காலத்தில் தொடங்குகிறது. இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்த மாபெரும் பேரரசுகளில் குப்த பேரரசும் ஒன்றாகும். குப்த பேரரசின் ஆட்சிக் காலம்: 320 – 551. தோற்றம் குப்த பேரரசர்கள் குப்த பேரரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள் முதலாம் சந்திரகுப்தர்; சமுத்திரகுப்தர்; இரண்டாம் சந்திரகுப்தர்; முதலாம் குமாரகுப்தன்; மற்றும் இசுகந்தகுப்தர் ஆவார்கள். இவர்களில் சமுத்திரகுப்தர் என்பவர் குப்த பேரரசை 335 முதல் 375 வரையில் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். குப்த பேரரசைப் பெரிய அளவில் விரிவு படுத்தியவர். சமுத்திர குப்தர் 350-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஆந்திர பிரதேசப் பகுதியில் இருந்த சலங்கயானா (Salankayana) அரசின் மீது படை எடுத்தார். சலங்கயானா அரசு கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் பகுதிகளில் இருந்த அரசு. அதன் தலைநகரம் வேங்கி. இப்போது மேற்கு கோதாவரியில் உள்ள ஏலூரு . சலங்கயானா அரசு இந்தச் சலங்கயானா அரசு, அப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்த பல்லவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்தப் படை எடுப்பில் சலங்கயானா அரசு சரிந்தது. சலங்கயானா அரசின் மீது படையெடுப்பு நடந்த போது அசுதிவர்மன் என்பவர் (Hastivarman of Vengi) அரசராக இருந்தார். அந்தச் சலங்கையனா அரசில் இருந்து ஜாவா தீவிற்கு வந்தவர்தான் ஜெயசிங்கவர்மன். சலங்கயானா படையெடுப்பிற்குப் பின்னர் ஜெயசிங்கவர்மன், மேற்கு ஜாவாவில் குடியேறினார். அதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்காளத்திலும் இலங்கையிலும் தங்கி இருந்தார். தர்மலோகபால தேவவர்மன் ஜெயசிங்கவர்மன், ஜாவா தீவிற்கு வந்த போது, அங்கு சாலகநகரா இராச்சியம் எனும் ஓர் அரசு ஆட்சி செய்தது. சாலகநகரா இராச்சியம் அரசு ஒரு சுந்தானிய அரசாகும். சாலகநகர அரசுதான் இந்தோனேசியாவில் தோன்றிய முதலாவது இந்தியமய அரசு. இதன் தலைநகரத்தின் பெயர் ராஜாதாபுரம் (Rajatapura). ஜாவாவிற்குச் சென்ற முதல் பல்லவ வணிகத் தூதர் பிரபு தர்மலோகபால தேவவர்மன் கங்கா ரக்சக கோபுரா சாகரன் (Prabu Dharmalokapala Dewawarman Gangga Raksagapura Sagara). அவர் தான் இந்தோனேசியாவில் முதல் பல்லவ அரசான சாலகநகரா இராச்சியத்தை உருவாக்கியவர். இவரின் அசல் பெயர் தேவவர்மன் (Dewawarman). சாலகநகரா இராச்சியம் 130-ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது. எட்டாம் தேவவர்மன் அந்தக் கட்டத்தில் சாலகநகரா அரசை எட்டாம் தேவவர்மன் (King Dewawarman VIII of Salakanagara) என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தார். அவர் அந்த நாட்டின் இளவரசி. அந்த இளவரசியைத் தான் ஜெயசிங்கவர்மன் திருமணம் செய்து கொண்டார்; எட்டாம் தேவவர்மனின் மருமகன் ஆனார். எட்டாம் தேவவர்மனின் மருமகன் ஜெயசிங்கவர்மனுக்காக ஒரு புதிய அரசு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பெயர் தர்மநகரா அரசு. அப்போதைய கட்டத்தில் தர்மநகரா அரசு ஒரு சிறிய அரசு. ஜெயசிங்கவர்மன் ஆட்சியின் போது, சாலகநகரா இராச்சியத்தின் ஆட்சி மையம் சாலகநகரத்தில் இருந்து தர்மநகரா அரசிற்கு சிறிது சிறிதாக மாற்றப் பட்டது. சாலகநகரா அரசாங்கத்தின் மையம் தருமநகராவிற்கு மாறிய பிறகு, சாலகநகரா அரசு ஒரு மாநில அரசாக மாறியது. ஜாவா எனும் யுவதீபம் கிளாடியஸ் டோலமி (Claudius Ptolemy) எனும் கிரேக்க வரலாற்று ஆசிரியர் எழுதிய ஜியோகிராபிகா அய்பெஜெசிஸ் (Geographike Hyphegesis) எனும் நூலில் தர்மநகரா அரசைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார். ஜாவா எனும் யுவதீபத்தில் (Yawadwipa), ஆர்கைர் (Argyre) எனும் பெயரில் ஒரு பெரிய நகரம் இருக்கிறது. சாலகநகரா இராச்சியத்தின் தலைநகரமாக விளங்குகிறது என்று எழுதி இருக்கிறார். சாலகநகரா இராச்சியத்தின் ஆட்சிக்காலம்: 0130 - 0362 டோலமி எழுதிய நூலின் காலம்: 0160 சமுத்திர குப்தர் ஆட்சிக் காலம்: 0335 - 0375 தர்மநகாரா அரசு உருவான காலம்: 0358 கல்வெட்டுகள் 5-ஆம் நூற்றாண்டின் தர்மநகரா அரசின் ஆட்சியாளர் பூர்ணவர்மன். தர்மநகரா அரசை ஆட்சி செய்தவர்களில் மிகவும் பிரபலமானவர். இவர் ஜாவாவின் தொடக்கக் கால கல்வெட்டுகளை உருவாக்கியவர் ஆவார். அந்தக் கல்வெட்டுகள் கிபி 358-ஆம் ஆண்டு கல்வெட்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளதுன. இவர்தான் தர்மநகரா எனும் ஒரு சின்ன அரசை ஒரு பெரிய இராச்சியமாக மாற்றியவர் ஆவார். ஏழு கல்வெட்டுகள் தர்மநகரா இராச்சியத்துடன் தொடர்புடைய ஏழு கல்வெட்டுகள் மேற்கு ஜாவா, போகோர் (Bogor) மற்றும் ஜகார்த்தாவிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் போகோர் நகரத்திற்கு அருகில் ஐந்து கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன. இதுவரையிலும் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் அனைத்தும் அந்த நாட்டின் அரும்பொருட்கள் என இந்தோனேசிய அரசாங்கம் அவற்றைப் பாதுகாத்து வருகிறது. காக்கி கிரி நியோரேங் கல்வெட்டு தர்மநகரா இராச்சியத்தின் மன்னன் பூர்ணவர்மன் காலத்திய ஒரு கல்வெட்டு 1900-ஆம் ஆண்டுகளில் கிடைத்தது. அதன் பெயர் பத்து தாபாக் காக்கி கிரி நியோரேங் கல்வெட்டு (Batu Tapak Kaki Kiri Nyoreang inscription). அந்தக் கல்வெட்டு, சுந்தானிய மொழியில் பல்லவ எழுத்து முறையில் எழுதப்பட்டு உள்ளது. தர்மநகரா இராச்சியத்தின் கல்வெட்டுகள், மலாய் தீவுக்கூட்டத்தின் மேற்குப் பகுதியில் இந்து மதம் தோன்றியதற்கான தொடக்கப் பதிவுகளாகும் பூர்ணவர்மன் தர்மநகரா இராச்சியம், இப்போதைய சுந்தா எனும் நிலைப் பகுதியைச் சேர்ந்தது. அந்த தர்மநகரா அரசைத் தோற்றுவித்தவர் ஜெயசிங்கவர்மன். இவர் 382-ஆம் ஆண்டில் காலமானார். அவருடைய உடல் மேற்கு ஜாவாவில் உள்ள காளி கோமதி ஆற்றின் கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடம் இப்போது பெக்காசி (Bekasi) என்று அழைக்கப் படுகிறது. அதன் பின்னர் அவருடைய மகன் தர்மயவர்மன் (Dharmayawarman) 382-ஆம் ஆண்டு தொடங்கி 395-ஆம் ஆண்டு வரை தர்மநகரா இராச்சியத்தை ஆட்சி செய்தார். இவர் 13 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். இவருடைய அஸ்தி சந்திரபாகா (Chandrabaga) ஆற்றின் கரையில் கரைக்கப்பட்டது. பூர்வலிங்க நகரம் தர்மநகர இராச்சியத்தின் மன்னர்களில் மூன்றாவது மன்னர் பூர்ணவர்மன். பூர்ணவர்மன் ஆட்சியின் கீழ், தருமநகர அரசு, 48 சிறிய அரசுகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சாலகநகரா எனும் இராசதபுராவில் (Rajatapura) இருந்து, பூர்வலிங்கம் (Purbalingga) வரை பூர்ணவர்மனின் ஆளுமை நீண்டு இருந்தது. பூர்வலிங்கா நகரம் (Purbalingga) என்பது தற்போதைய மத்திய ஜாவாவில் உள்ள ஒரு நகரமாகும். இன்றும் அதே பெயரில்தான் உள்ளது. தருமநகர அரசர்கள் ஜெயசிங்கவர்மன் - (Jayasingawarman) - 358 – 382 தர்மயவர்மன் - (Dharmayawarman) - 382 – 395 பூர்ணவர்மன் - (Purnawarman) - 395 – 434 விசுணுவர்மன் - (Wisnuwarman) - 434 – 455 இந்திரவர்மன் - (Indrawarman) - 455 – 515 கந்தரவர்மன் - (Candrawarman) - 515 – 535 சூர்யவர்மன் - (Suryawarman) - 535 - 561. மீண்டும் ஒரு புதிய தலைநகரம் நிறுவப்பட்டது. பழைய தலைநகரான சுந்தரபுரத்தை விட்டு வெளியேறினார். தற்போதைய கருட் (Garut) அருகே கெந்தானில் ஒரு புதிய குடியேற்றம் நிறுவப்பட்டது. கீர்த்தவர்மன் - (Kertawarman) - 561 - 628. தர்மநகராவின் ஒரு காலனி அரசாக காலு இராச்சியம் 612-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. லிங்கவர்மன் - (Linggawarman) - 628 - 650. லிங்கவர்மனின் இரண்டாவது மகள் இளவரசி சோப காஞ்சனாவுக்கும் (Princess Sobakancana); ஸ்ரீ விஜய பேரரசின் அரசர் செரி ஜெயனாசாவுக்கும் திருமணம். தருசுபாவா - (Tarusbawa) - 670 - 690. இவர் காலத்தில் தர்மநகரா இராச்சியம் இரண்டாகப் பிரிக்கப் பட்டது; சுந்தா இராச்சியம் (Sunda Kingdom); மற்றும் காலு இராச்சியம் (Galuh Kingdom); தர்மநகரா இராச்சியத்தின் மீது ஸ்ரீ விஜய பேரரசின் படையெடுப்பு நடந்தது. தருமநகரா பல்கலைக்கழகம் காட்சியகம் தருமநகரா இராச்சிய காட்சிப் படங்கள் மேலும் காண்க புனி பண்பாடு பத்துஜெயா கோயில் வளாகம் இந்தோனேசியாவின் வரலாறு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் முன்னாள் பேரரசுகள் முன்னாள் முடியாட்சிகள் இந்துப் பேரரசுகள் இந்தோனேசியா இந்தோனேசிய வரலாறு மலேசிய வரலாறு சாவக வரலாறு
685787
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
சிறிராம் கிருஷ்ணன்
சிறிராம் கிருஷ்ணன் (Sriram Krishnan), இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்த ஒரு இந்திய அமெரிக்கரான இணையதள தொழில்முனைவோர், முதலீட்டாளர், வலையொலியாளர், கிளப்ஹவுஸ் செயலி உருவாக்குனர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டில் காட்டாங்குளத்தூர் எஸ் ஆர் எம் கல்லூரியில் இளநிலை தொழிநுட்பப் படிப்பை முடித்தார்.முன்னர் இவர் மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, முகநூல் மற்றும் ஸ்னாப்சாட் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். சனவரி 2025ல் ஐக்கிய அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டோனால்ட் டிரம்ப் சிறிராம் கிருஷ்னணை 22 டிசம்பர் 2024 அன்று செயற்கை நுண்ணறிவு உளவு அமைப்பின் ஆலோசகராக நியமித்துள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் The Aarthi and Sriram Show (formerly The Good Time Show) (YouTube) Official website of The Aarthi and Sriram Show வாழும் நபர்கள் 1980 பிறப்புகள் சென்னை நபர்கள் அமெரிக்க இந்தியர்கள்
685788
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
கொத்தட்டை
கொத்தட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். அமைவிடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 22.1 மீ. உயரத்தில், () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கொத்தட்டை அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை பரம்பல் 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், கொத்தட்டை கிராமத்தின் மக்கள்தொகை 1,468 ஆகும். இதில் 741 பேர் ஆண்கள் மற்றும் 727 பேர் பெண்கள் ஆவர். சுங்கச் சாவடி கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில், இவ்வூரில் 23 திசம்பர் 2024 அன்று திறக்கப்பட்ட சுங்கச் சாவடியில், சுங்கக் கட்டணங்களைக் குறைக்க வலியுறுத்தி, தனியார் பேருந்து உரிமையாளர்களால் போராட்டம் நடத்தப்பட்டது. மேற்கோள்கள் கடலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
685790
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%20%28%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%29
சான் ஜுவான் ஆறு (நிக்கராகுவா)
சான் ஜுவான் ஆறு (San Juan River), நடு அமெரிக்கா நாடான நிக்கராகுவாவின் மேற்கில் உள்ள நிக்கராகுவா ஏரியில் உற்பத்தியாகி, நிக்கராகுவா-கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் எல்லை வழியாக பாய்ந்து, தென் கிழக்கில் கரிபியக் கடலில் கலக்கிறது இந்த ஆற்றின் நீளம் 192 கிலோ மீட்டர் (110 (மைல்)ஆகும். இந்த ஆறு நிக்கராகுவா மற்றும் கோஸ்ட்டா ரிக்கா நாடுகளின் எல்லையாக அமைந்துள்ளது. ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜுவான் ஆற்றின் நீரை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை கோஸ்ட்டா ரிக்கா நாட்டிற்கு உள்ளது. ஆனால் ஆறு நிக்கராகுவா நாட்டிற்கு சொந்தம். நிக்கராகுவா கால்வாய்த் திட்டம் 19ஆம் நூற்றாண்டில் ஜுவான் ஆறு மற்றும் நிக்கராகுவா ஏரிகளை இணைக்கும் கால்வாய்களை வெட்டி, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் நிக்கராகுவாவின் ஆறுகள் வட அமெரிக்க ஆறுகள்
685792
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF
நிக்கராகுவா ஏரி
நிக்கராகுவா ஏரி (Lake Nicaragua or Cocibolca or Granada) நடு அமெரிக்கா நாடானா நிக்கராகுவாவிற்கு தென்மேற்கில் அமைந்த பிளவு பட்ட பெரிய நன்னீர் ஏரியாகும். இது பரப்பளவில் உலகின் 19வது பெரிய நன்னீர் ஏரியாகும். கடல் மீன்களான சுறா, வாள் மீன் மற்றும் டெர்பீன் மீன்கள் இந்த ஏரியில் காணப்படுகிறது. இந்த ஏரி 8,264 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், கடல் மட்டத்திலிருந்து 32.7 மீட்டர் உயரமும், 26 மீட்டர் ஆழமும், 161 கிலோ மீட்டர் நீளமும், 71 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஏரியில் 40க்கும் மேற்பட்ட ஆறுகள் கலக்கிறது. இந்த ஏரியிலிருந்து சான் ஜுவான் ஆறு உற்பத்தி ஆகி, கரிபியக் கடலில் கலப்பதுடன், நிக்கராகுவா-கோஸ்ட்டா ரிக்கா நாடுகளின் எல்லைகளாக அமைகிறது. இவ்வேரியில் கிரனடா, அல்தாகிராசியா, மொயோகல்பா, சான் கார்லஸ், சான் சோர்ஜ் போன்ற பெரிய தீவு நகரங்கள் உள்ளது. இதன் வடக்கில் மனாகுவா ஏரி உள்ளது. நிக்கராகுவா கால்வாய்த் திட்டம் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டோ ஆறு மற்றும் நிக்கராகுவா ஏரிகளை இணைத்து கால்வாய்களை வெட்டி, பசிபிக் பெருங்கடல் மற்றும் கரிபியக் கடலை இணைக்கும் கால்வாய்த் திட்டம் செயல்படுத்த இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இதனையும் காண்க மனாகுவா ஏரி மனாகுவா சான் ஜுவான் ஆறு (நிக்கராகுவா) மேற்கோள்க்ள் வெளி இணைப்புகள் JPL NASA: Perspective View with Landsat Overlay, Lakes Managua and Nicaragua நிக்கராகுவாவின் ஏரிகள்
685794
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF
மனாகுவா ஏரி
மனாகுவா ஏரி (Lake Managua), நிக்கராகுவா நாட்டில் உள்ள நிக்கராகுவா ஏரிக்கு வடக்கில் அமைந்த ஒரு நன்னீர் ஏரி ஆகும்.. இதன் கரையில் நாட்டின் தலைநகரான மனாகுவா நகரம் உள்ளது. மனாகுவா எரி 1,042 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 65 கிலோ மீட்டர் நீளமும்; 25 கிலோ மீட்டர் அகலமும்; 5 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது. மனாகுவா ஏரியிலிருந்து திபிதாபா ஆறு கிழக்கு நோக்கி பாய்ந்து கரிபியக் கடலில் கலக்கிறது. மனாகுவா ஏரிப் பகுதிகளில் பூர்வகுடிகளாக நிக்கராவ் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இந்த ஏரியில் மக்கள் வாழாத இரண்டு தீவுகள் உள்ளது. அவற்றில் ஒன்று எரிமலைத் தீவு ஆகும். மாசு மனாகுவா ஏரியைச் சுற்றி அமைந்த மனாகுவா நகரத்தில் 16,80,100 மக்கள் வாழ்வதாலும், 1927ஆம் ஆண்டிலிருந்து மனாகுவா நகரத்தின் கழிவுகள் மனாகுவா ஏரியில் கொட்டப்படுவதாலும் மனாகுவா ஏரி நீர் மிகவும் மாசடைந்துள்ளது. 2009ஆம் ஆண்டில் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் ஆலை நிறுவப்பட்டதால், மனாகுவா நகரத்தின் 40% கழிவு நீர் சுத்திகரித்து ஏரியில் விடப்படப்படுகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் JPL NASA: PIA03365: Perspective View with Landsat Overlay, Lakes Managua (foreground) and Nicaragua (background) நிக்கராகுவாவின் ஏரிகள்
685795
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
மனுவேல் ஞான முத்து
மனுவேல் ஞான முத்து (Manuel Gnana Muthu)(1935 – 23 மே 2018) என்பவர் எம். ஜி. முத்து என சுருக்கமாக அறியப்படும் இவர் எம். ஜி. எம் குழும நிறுவனங்களின் நிறுவனரும் மற்றும் முதன்மைத் தலைவருமாவார். வாழ்க்கைச் சுருக்கம் தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை என்னும் சிற்றூரில் 1935ஆம் ஆண்டு கிருத்துவ நாடார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பின்னர் குடும்ப ஏழ்மையின் காரணமாக 1952ஆம் ஆண்டு தனது சிற்றூரான திசையன்விளையிலிருந்து சென்னைக்கு வந்தார். மேலும் சென்னை துறைமுகத்தில் கூலியாகப் பணிபுரிந்த இவர், ஓரிடத்திலிருந்து சரக்குகளைப் பாதுகாத்து, சேமித்து அவற்றைச் சேரவேண்டிய இடத்தில் பத்திரமாகச் சேர்க்கும் தொழிலான இடப்பெயர்வு (Logistics) என்னும் தொழிலைச் செய்து வந்தார். பின்னர் எம். ஜி. எம். தங்கும் விடுதி, உணவகங்கள், சென்னையில் மிகவும் பிரபலமாக அறியப்படும் எம்.ஜி.எம். டிஸ்னி வேல்ட், கேளிக்கைப் பூங்கா ஆகிய பொழுதுபோக்கு பூங்காக்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடங்கிய மனுவேல் ஞான முத்து எம். ஜி. எம். குழும நிறுவனத்தை நிறுவினார். மேலும் இவரது வாழ்க்கை வரலாற்றை கந்தலில் இருந்து செல்வங்கள் வரை (Rags To Riches) என்கின்ற தன் சுயசரிதையில் என்னென்ன சிக்கல்களை, இன்னல்களையெல்லாம் எதிர் கொண்டார், எப்படி எம்ஜிஎம் என்கின்ற எம்ஜிஎம் குழும நிறுவனத்தை உருவாக்கினார் என்பதையெல்லாம் விரிவாகப் பதிவு செய்துள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் MGM Group of Companies website MGM Hotels and Resorts | Official Website திருநெல்வேலி மாவட்ட நபர்கள் தமிழகத் தொழிலதிபர்கள் 1935 பிறப்புகள் 2018 இறப்புகள்
685797
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பார்வதிபுரம் மக்களவைத் தொகுதி
பார்வதிபுரம் மக்களவைத் தொகுதி (Parvathipuram Lok Sabha constituency) என்பது 2008 வரை வடகிழக்கு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதியாக இருந்தது. இந்த தொகுதி பட்டியலில் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2004 மேலும் காண்க பார்வதிபுரம், ஆந்திரப் பிரதேசம் மக்களவை தொகுதிகளின் பட்டியல் மேற்கோள்கள் < விஜயநகரம் மாவட்டம் நீக்கப்பட்ட இந்திய மக்களவைத் தொகுதிகள்
685800
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
புனி பண்பாடு
புனி பண்பாடு (ஆங்கிலம்: Buni Culture இந்தோனேசிய மொழி: Kebudayaan Buni) என்பது வரலாற்றுக்கு முந்தைய ஒரு களிமண் மட்பாண்ட பண்பாடாகும். இந்தப் பண்பாடு, வடக்கு மேற்கு ஜாவா கடற்கரையோரங்கள், ஜகார்த்தா மற்றும் பான்டென் ஆகியவற்றில் கிமு 400 முதல் கிபி 100 வரை வளர்ச்சிப் பெற்று இருந்தது. கிபி 500 வரை நீடித்திருக்கலாம் என அறியப்படுகிறது. ஜகார்த்தாவின் கிழக்கே பெகாசி, பாபெலான், புனி கிராமத்தின் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் தளத்தின் பெயரால் இந்தப் பண்பாட்டிற்கும் பெயரிடப்பட்டது. பொது புனி கலாச்சாரம், வெட்டப்பட்ட வடிவியல் அலங்காரங்களுடன், வினோதமான மட்பாண்டங்களுக்குப் பெயர் பெற்றது. தென்கிழக்கு ஆசியாவில், இந்தியாவின் தொல்லியல் சிறுசில்லி (Roulettes) பொருட்கள் இங்குதான் முதன்முதலில் கிடைத்தன. அதுவே ஒரு வரலாற்றுப் புள்ளியாகவும் பதிவாகி உள்ளது. பிற்காலத்தில் களிமண் மட்பாண்டங்கள், மேற்கு ஜாவாவின் அன்யர் கிராமம் (Anyer); மற்றும் சிரபொன் (Cirebon) நகரத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. 400 முதல் கி.பி. 100 வரையிலான உணவு மற்றும் பானக் கலன்கள் சார்ந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் அடக்கம் செய்யப் பட்டவர்களுக்கான பரிசுப் பொருட்களாக இருந்தன. சிறப்பியல்புகள் புனி பண்பாட்டை புரோட்டோ-படாவி பண்பாடு (Proto-Batawi Culture) என்று வல்லுநர்கள் சிலர் விவரிக்கின்றனர். படாவி பண்பாடு என்பது ஜகார்த்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் படாவி மக்களுடன் தொடர்புடையது. புனி பண்பாடு வரலாற்றுக்கு முந்தைய ஒரு சமூகமாகத் தொடங்கியது என்றும் கூறப்படுகிறது. ஆனால் கி.பி நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில், அந்தப் பண்பாடு இந்து சமயத்துடன் ஒருங்கிணைந்ததால் மற்றொரு பண்பாடாக வளர்ச்சி கண்டது. இந்த இரண்டு பண்பாடுகளும் 100 முதல் 200 ஆண்டுகள் வரை இடைப்பட்டுள்ளன. இந்தப் பண்பாடுகள் ஜகார்த்தா, பத்துஜெயாவில் (Batujaya Archaeological Site) கட்டப்பட்ட கோயில் வளாகத்திலும்; பின்னர், வேறு இடங்களில் கட்டப்பட்ட இந்து கோயில் வளாகங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. காட்சியகம் புனி பண்பாட்டுக் காட்சிப் படங்கள் (400 கிமு–100 கிபி) மேலும் காண்க இந்தோனேசியாவின் வரலாறு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Uncovering Southeast Asia's past Pierre-Yves Manguin and Agustijanto Indrajaya, "The Archaeology of Batujaya (West Java, Indonesia):an Interim Report", in Uncovering Southeast Asia's past: selected papers from the 10th International Conference of the European Association of Southeast Asian Archaeologists (Elisabeth A. Bacus, Ian Glover, Vincent C. Pigott eds.), 2006, NUS Press, Miksic, John N., The Buni Culture, In: Southeast Asia, from prehistory tons history (Ian Glover dan Peter Bellwood eds.), London 2004, இந்தோனேசியப் பண்பாடு இந்தோனேசியாவின் தொல்லியல் சுமாத்திரா வரலாறு போர்னியோவின் வரலாறு
685804
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பத்துஜெயா கோயில் வளாகம்
பத்துஜெயா கோயில் வளாகம் (ஆங்கிலம்: Batujaya Temple Complex இந்தோனேசிய மொழி: Percandian Batujaya) என்பது இந்தோனேசியா, மேற்கு ஜாவா, காரவாங், பத்துஜெயா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் தளமாகும். பத்துஜெயா கோயில்கள் ஜாவாவில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான கோயில் கட்டமைப்புகளாக இருக்கலாம் என்றும்; தருமநகரா இராச்சியத்தின் போது, கிபி. 5 – கிபி. 6-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பொது ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்தத் தளம்; ஏறக்குறைய 30 கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டமைப்புகள், சுந்தானிய மொழியில் உன்யூர் (Hunyur) அல்லது ஊனூர் (Unur) என்று அழைக்கப்படுகின்றன. 1984-இல் இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்களால் இந்தத் தளம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் இருந்து 17 கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் மூன்று கட்டமைப்புகள் குளங்களின் வடிவில் உள்ளன. கட்டமைப்பு பத்து ஜெயா ஆலயக் கட்டமைப்புகள் களிமண் மற்றும் அரிசி உமிகளின் கலவை கொண்ட செங்கற்களால் ஆனது. அந்தக் கட்டமைப்புகள் எரிமலை பாறைகளால் உருவாக்கப்படவில்லை. மீட்கப்பட்ட இரண்டு கட்டமைப்புகள் கோயில் வடிவில் உள்ளன. அவற்றில் ஜீவா கோயில் (Jiwa Temple) என அழைக்கப்படும் கோயில் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. பாண்டுங் தொல்லியல் அமைப்பின் (Bandung Archeology Agency) தலைவரான டாக்டர் டோனி திஜுபியன்டோனோ (Dr. Tony Djubiantono) என்பவரின் கூற்றுப்படி, ஜீவா கோயில் 2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். வரலாறு இந்தோனேசியாவின் மிகப் பழமையான இந்து-பௌத்த இராச்சியமான தருமநகராவின் இருப்பிடத்திற்குள் பத்து ஜெயா ஆலயங்கள் இருப்பதால் இந்த தொல்பொருள் தளத்தின் கண்டுபிடிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பத்து ஜெயா கட்டமைப்புகள் கண்டுபிடிப்புக்கு முன், மேற்கு ஜாவாவில் பழங்கால கோயில் எச்சங்கள் எதுவும் இல்லை. இதற்கு முன்னர், மேற்கு ஜாவாவில் நான்கு கோயில் தளங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. இந்தோனேசிய பண்பாட்டுப் புதையல் செல்வம் 5-ஆம் மற்றும் 6-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜீவா கோயில் கட்டப்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான சிறிய களிமண் பலகைகள் மற்றும் பிரார்த்தனையில் பயன்படுத்தப்படும் புத்தரின் படங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் காணப்படும் கல்வெட்டு அமைப்புகளின் அடிப்படையில் ஐந்தாம்; ஆறாம் நூற்றாண்டு கால உறுதிப்பாடு செய்யப்பட்டது. ஏப்ரல் 2019-இல், பத்துஜெயா கோயில் வளாகம் இந்தோனேசிய தேசிய பண்பாட்டுப் புதையல் செல்வம் (Indonesian National Cultural Treasure) என அறிவிக்கப்பட்டது. காட்சியகம் பத்துஜெயா வளாகக் கண்டுபிடிப்புகள் (கிபி. 5 – கிபி. 6-ஆம் நூற்றாண்டுகள்) மேலும் காண்க இந்தோனேசியாவின் வரலாறு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Uncovering Southeast Asia's past இந்தோனேசியப் பண்பாடு இந்தோனேசியாவின் தொல்லியல் சுமாத்திரா வரலாறு போர்னியோவின் வரலாறு
685805
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
திபிதாபா ஆறு
திபிதாபா ஆறு (Tipitapa River Or Río Tipitapa) நடு அமெரிக்கா நாடான நிக்கராகுவா நாட்டின் நன்னீர் ஏரிகளான மனாகுவா ஏரியிலிருந்து நிக்கராகுவா ஏரி வரை பாயும் குறைந்த நீளம் கொண்ட ஆறு ஆகும். இந்த ஆற்றில் மழைக்காலங்களில் மட்டும் நீர் பாய்கிறது மழைக்காலங்களில் ஆற்று நீர் வெள்ளத்தால் திபிதாபா நகரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த ஆறு பெரிய சதுப்பு நிலங்கள் மற்றும் குளங்கள் மற்றும் பசுமையான தாவரங்களால் மூடப்பட்டுள்ளது. மேற்கோள்கள் நிக்கராகுவாவின் ஆறுகள்
685808
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
நிக்கராகுவா கால்வாய் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்
நிக்கராகுவா கால்வாய் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (Nicaraguan Canal and Development Project), பனமா கால்வாய் போன்று நிக்கராகுவா நாட்டில் வணிகக் கப்பல் போக்குவரத்திற்காக, கரிபியக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் கால்வாய்கள் வெட்டி இணைக்கும் பெருந் திட்டமாகும். இத்திட்டத்தினை சீனாவின் ஆங்காங்கு நிக்கராகுவா கால்வாய் மேம்பாட்டு முதலீட்டு நிறுவனம் நிதியுதவி செய்ய உள்ளது.இக்கால்வாய் வெட்டும் திட்டத்திற்கு பிரிட்டோ ஆறு மற்றும் நிக்கராகுவா ஏரிகள் பயன்படுத்தப்பட உள்ளது.திட்டமிடப்பட்டுள்ள கால்வாயின் நீளம் 270 கிலோ மீட்டர் (170 மைல்கள்) ஆகும். இக்கால்வாய் திட்டம் பசிபிக் பெருங்கடலில் கலக்கும் பிரிட்டோ ஆற்றிலிருந்து, நிக்கராகுவா ஏரி வரையும், பின்னர் நிக்கராகுவா ஏரியிலிருந்து கரிபியக் கடல் வரையும் செயல்படுத்தப்பட உள்ளது. எதிர்ப்புகள் இத்திட்டத்தால் நடு அமெரிக்காவின் முதன்மை நீர் நிலையான நிக்கராகுவா ஏரிக்கு சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் என அறிவியல் அறிஞர்கள் எடுத்துரைத்தனர். மேலும் கப்பல் போக்குவரத்து நிபுணர்கள் மற்றும் பொறியாளர்களால் திட்டத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. திட்டம் கைவிடல் மே 2024ல் நிக்கராகுவா சட்டமன்றம் இக்கால்வாய் திட்டத்திற்கு முதலீடு செய்யும் ஆங்காங்கு நிக்கராகுவா கால்வாய் மேம்பாட்டு முதலீட்டு நிறுவனத்திற்கு சலுகைகள் வழங்க மறுத்து விட்டது.இதனால் நிக்கராகுவா கால்வாய் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேற்கோள்கள் நிக்கராகுவா
685810
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
பிரிட்டோ ஆறு
பிரிட்டோ ஆறு (Rio Brito), நடு அமெரிக்க நாடான நிக்கராகுவாவின் தென்மேற்கில் பாய்ந்து பசிபிக் பெருங்கடலில் கலக்கிறது. நிக்கராகுவா கால்வாய் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆறும் நிக்கராகுவா ஏரியும் பயன்படுத்தப்பட உள்ளது. மேற்கோள்கள் நிக்கராகுவாவின் ஆறுகள்
685828
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
மக்னீசியம் ஐதரைடு
மக்னீசியம் ஐதரைடு (Magnesium hydride) என்பது MgH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் எடையில் 7.66% ஐதரசனைக் கொண்டுள்ளது. ஐதரசன் சேமிப்பு ஊடகமாகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பு 1951 ஆம் ஆண்டில் மக்னீசியம், ஐதரசன் ஆகிய தனிமங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது. MgI2 வினையூக்கியின் முன்னிலையில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையில் (200 வளிமண்டல அழுத்தம், 500 °செல்சியசு) மக்னீசியம் உலோகத்துடன் நேரடியாக ஐதரசனைச் சேர்த்து ஐதரசனேற்றம் செய்து மக்னீசியம் ஐதரைடு தயாரிக்கப்பட்டது: Mg + H2 → MgH2 கோளகை அரைவை எந்திரத்தில் உற்பத்தி செய்யப்படும் நுண்படிக மக்னீசியத்தைப் பயன்படுத்தி Mg மற்றும் H2 தனிமங்களிலிருந்து குறைந்த வெப்பநிலையில் மக்னீசியம் ஐதரைடு உற்பத்தி ஆய்வு செய்யப்பட்டது. பிற தயாரிப்பு முறைகளில் பின்வருவன அடங்கும்: மக்னீசியம் ஆந்த்ரசீனின் ஐதரசனேற்ற வினையில் மக்னீசியம் ஐதரைடு உருவாகும்.: Mg(ஆந்த்ரசீன்) + H2 → MgH2 இலித்தியம் அலுமினியம் ஐதரைடுடன் ஈரெத்தில்மக்னீசியம் வினைபுரிந்தாலும் மக்னீசியம் ஐதரைடு உருவாகும். பீனைல்சிலேனுடன் ஈதர் அல்லது ஐதரோகார்பன் கரைப்பான்களில் கரைக்கப்பட்ட டைபியூட்டைல் மக்னீசியம் சேர்மத்துடன் டெட்ரா ஐதரோ பியூரான் அல்லது டெட்ராமெத்திலெத்திலீன்டையமீன் ஈந்தணைவி முன்னிலையில் சிக்கலான MgH2 இன் தயாரிப்பான MgH2.THF தயாரிக்கப்படுகிறது. கட்டமைப் அறை வெப்பநிலையில் α-MgH2 வடிவம் ஓர் உரூட்டைல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. மக்னீசியம் ஐதரைடுக்கு குறைந்தபட்சம் நான்கு உயர் அழுத்த வடிவங்கள் உள்ளன: α-PbO2 கட்டமைப்பைக் கொண்ட γ-MgH2, Pa-3 என்ற இடக்குழுவுடன் கூடிய கனசதுர β-MgH2 , Pbc21 என்ற இடக்குழுவுடன் கூடிய செஞ்சாய்சதுர எச்பி1 மற்றும் Pnma என்ற இடக்குழுவுடன் கூடிய செஞ்சாய்சதுர எச்பி2 ஆகியவை மக்னீசியம் ஐதரைடு வடிவங்களாகும். கூடுதலாக ஒரு விகிதவியலுக்கு ஒவ்வாத MgH(2-δ) வடிவமும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது மிகச் சிறிய துகள்களுக்கு மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது. (பேரளவு MgH2 சேர்மத்திற்கு விகிதவியல் அவசியமாகும். ஏனெனில், இது H காலியிடங்களின் மிகக் குறைந்த செறிவுகளுக்கு மட்டுமே இடமளிக்கும்) ). பிணைப்பு உரூட்டைல் வடிவத்தில் காணப்படும் பிணைப்பு சில சமயங்களில் முற்றிலும் அயனிப்பிணைப்பாக இல்லாமல் இயற்கையில் ஓரளவு சகப்பிணைப்பு என்று விவரிக்கப்படுகிறது. மின் விசையை அதிகப்படுத்தும் சாதன எக்சுகதிர் விளிம்பு விளைவு சோதனை மூலம் மேற்கொள்ளப்பட்ட மின்னூட்ட அடர்த்தி நிர்ணயம், மக்னீசியம் அணு முழுமையாக அயனியாக்கம் அடைந்து கோள வடிவில் உள்ளது என்றும் ஐதரைடு அயனி நீளமானது என்பதையும் குறிக்கிறது. MgH, MgH2, Mg2H, Mg2H2, Mg2H3 மற்றும் Mg2H4 ஆகிய மக்னீசியம் ஐதரைடின் மூலக்கூறுகள் அதிர்வு நிறமாலை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இம்மூலக்கூறு வடிவங்கள் 10 கெல்வினுக்கும் குறைவான அணிக்கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இவை ஐதரசனின் சீரொளி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து உருவாகின்றன. Mg2H4 மூலக்கூறு இருபடி அலுமினியம் ஐதரைடு (Al2H6) போன்ற ஒரு பாலம் அமைப்பைக் கொண்டுள்ளது. வினைகள் மக்னீசியம் ஐதரைடு தண்ணீருடன் நன்றாக வினைபுரிகிறது. ஐதரசன் வாயு வெளியிடப்படுகிறது. MgH2 + 2 H2O → 2 H2 + Mg(OH)2 287 °செல்சியசு வெப்பநிலையில் 1 பார் அழுத்தத்தில் சிதைந்து ஐதரசனை உருவாக்குகிறது.[16] மீளக்கூடிய ஐதரசன் சேமிப்பு ஊடகமாக MgH2 சேர்மத்தைப் பயன்படுத்துவதில் அதிக வெப்பநிலை ஒரு வரம்பாகக் கருதப்படுகிறது: MgH2 → Mg + H2 மேற்கோள்கள் மக்னீசியம் சேர்மங்கள் ஐதரைடுகள்
685829
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%20%28%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
கிறித்துமசு தீவு (தசுமேனியா)
கிறித்துமசு தீவு (Christmas Island (Tasmania)) என்பது புத்தாண்டு குழுவின் ஒரு பகுதியாகும். இது ஆத்திரேலியாவின் தசுமேனியா வடமேற்கு கடற்கரையில் பெரும் ஆத்திரேலிய விரிகுடாவில் அமைந்துள்ள ஒரு கருங்கல் தீவு ஆகும். இதன் பரப்பளவு 63.49 ஹெக்டேர் ஆகும். புத்தாண்டு குழு புத்தாண்டு குழுவில் நான்கு தீவுகள் உள்ளன. கிங் தீவு புத்தாண்டு தீவு மற்றும் கவுன்சிலர் தீவு கிறித்துமசு தீவு நான்கு தீவுகளில் கிங் தீவு மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டிருந்தாலும், கிங் தீவை விடச் சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தக் குழுவிற்குப் புத்தாண்டு தீவு என்று பெயரிடப்பட்டுள்ளது. விலங்கினங்கள் இனப்பெருக்கம் செய்யும் கடற்பறவை மற்றும் கரையோரப் பறவை சிற்றினங்களில் சிறிய பென்குவின், குறுகிய வால் ஷியர்வாட்டர், பசிபிக் கடற்பறவை, வெள்ளி கடற்பறவை, கருப்பு வெள்ளை சிப்பி பிடிப்பான், மற்றும் கருமுக நீர்க்காகம் ஆகியவை அடங்கும். ஊர்வனவற்றில் புலி பாம்புகள் மற்றும் பல்லிகள் அடங்கும். ஒரு வகைச் சுண்டெலியும் கிறித்துமசு தீவில் காணப்படுகிறது. கடற்பறவைகள் மற்றும் கரையோரப் பறவைகளின் இனப்பெருக்கத்தில் இத்தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். புவியியல் பன்னாட்டு நீர்ப்பரப்பு அமைப்பின் கூற்றுப்படி, பாசு குடாவினைப் பெரும் ஆத்திரேலிய பெருங்குடாவிலிருந்து பிரிக்கும் பிரிவு கிங் தீவு வழியாகச் செல்கிறது. எனவே கிறித்துமசு தீவு பெரும் ஆத்திரேலியன் பெருங்குடாவில் அமைந்துள்ளது. கிறித்துமசு தீவை தாசுமேனியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள சிறிய கிறித்துமசு தீவுடனோ அல்லது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆத்திரேலிய வெளிப்புறக் கிறித்துமசு தீவுடன் குழப்பக்கூடாது. மேலும் காண்க தசுமேனியா தீவுகளின் பட்டியல் மேற்கோள்கள் Coordinates on Wikidata தாசுமேனியாவின் புவியியல் ஆத்திரேலியப் பறவைகள் பொதுவகப்பகுப்பு விக்கித்தரவு தடப்பகுப்புகள் ஆத்திரேலியப் புவியியல் மறைக்கப்பட்ட பகுப்புகள் தீவுகள் தாஸ்மானியா தடப்பகுப்புகள்
685831
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D
இந்திய உள்துறை செயலாளர்
இந்திய உள்துறை செயலாளர் (Home Secretary (India)) என்பவர் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத் தலைவராக உள்ளார். இந்தப் பதவியை இந்திய அரசின் செயலாளர் பதவியில் உள்ள மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவர் வகிக்கிறார். தற்போதைய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் உள்ளார். மத்திய சேமக் காவல் படை, மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய காவல்துறை அமைப்புகள் உட்பட அனைத்து மத்தியப் படைகளும் மத்திய உள்துறை செயலாளரின் கீழ் உள்ளன. இந்திய அரசின் செயலாளராக, உள்துறை செயலாளர் இந்திய முன்னுரிமையில் 23வது இடத்தில் உள்ளார். அதிகாரங்கள், பொறுப்புகள் மற்றும் பதவிகள் உள்துறை செயலாளர் உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத் தலைவராகவும், உள்துறை அமைச்சகத்திற்குள் கொள்கை மற்றும் நிர்வாகத்தின் அனைத்து விடயங்களிலும் உள்துறை அமைச்சரின் முதன்மை ஆலோசகராகவும் உள்ளார். உள்துறை செயலாளரின் பணி பின்வருமாறு: உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத் தலைவராகச் செயல்படுதல். இது தொடர்பான பொறுப்பு முழுமையானது மற்றும் பங்கிடப்படாதது. கொள்கை மற்றும் நிர்வாக விவகாரங்களின் அனைத்து அம்சங்களிலும் உள்துறை அமைச்சரின் தலைமை ஆலோசகராகச் செயல்படுதல். இந்திய நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு முன் உள்துறை அமைச்சகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துதல். உள்துறை அமைச்சகத்தின் சமச் செயலாளர்களில் முதல் நபராகச் செயல்படுதல். ஊதியம், தங்குமிடம் மற்றும் சலுகைகள் உள்துறை செயலாளர் இராஜதந்திர கடவுச் சீட்டு பெறத் தகுதியானவர். மத்திய உள்துறை செயலாளரின் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட இல்லம் 3, நியூ மோதி பாக், புது தில்லி, ஒரு வகை-VIII ஓரடுக்கு மனை ஆகும். உள்துறை செயலாளர் இந்திய அரசின் செயலாளர் பதவியில் இருப்பதால், இவரது சம்பளம் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும், படைத்தளபதி மற்றும் அதற்குச் சமமான பதவிகளில் உள்ள இராணுவத் தளபதி/தளபதிகளுக்கும் சமமானதாகும். உள்துறை செயலாளர்களின் பட்டியல் மேலும் காண்க இந்திய அமைச்சரவைச் செயலாளர் மேற்கோள்கள் நூலியல்   இந்திய உள்துறை அமைச்சகம் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் இந்திய அரசு அதிகாரிகள்
685832
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
கூட்டநாடு
கூட்டநாடு (Koottanad) என்பது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் பட்டாம்பி வட்டத்தில் உள்ள நாகலாசேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிறு நகரம் ஆகும். இது திருச்சூர், பாலக்காடு, மலப்புறம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இது திருச்சூரில் இருந்து 32 கிமீ தொலைவிலும், பாலக்காட்டில் இருந்து 65 கிமீ தொலைவிலும், குருவாயூர் மற்றும் பாலக்காடு இடையே உள்ள சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊர் கேரளத்தின் பிற பகுதிகளுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் 9 கி.மீ தொலைவில் உள்ள பட்டாம்பி 9 ஆகும். பாரதப்புழா நிலா ஆறு 5 கி. மீ தொலைவில் உள்ள திரித்தாலா வழியாக பாய்கிறது. பட்டாம்பி-குருவாயூர் சாலையில் உள்ள காட்டில் மடம் கோயில், பழமையான ஒரு சிறிய சமணக் கோயிலாகும். இது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கி.பி 9/10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு கோட்டையின் இடிபாடுகள் ( திப்பு சுல்தான் கோட்டை) ஜும்ஆ மஸ்ஜித் பின்புறம், கூட்டநாடு மற்றும் சாலிசேரி சாலைக்கு இடையில் காணப்படுகிறது. அமைவிடம் கூட்டநாடு பாலக்காடு - குருவாயூர் மற்றும் பாலக்காடு - பொன்னானி மாநில நெடுஞ்சாலை ஆகிய இரண்டு முக்கிய சாலைகளின் சந்திப்பாகும். கூட்டநாடு பாலக்காடு நகரிலிருந்து 65 கிமீ தொலைவிலும், குருவாயூரில் இருந்து 25 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. குன்னம்குளம்/குருவாயூர் சாலை, பட்டாம்பி/பாலக்காடு சாலை, எடப்பல்/போனனி சாலை, பெரிங்கோடு சாலை, திரிதாலா/குட்டிபுரம் சாலை ஆகியவை கூட்டநாட்டிலிருந்து வரும் முக்கிய சாலைகள் ஆகும். சமயம் மக்கள் தொகையில் முக்கியமாக இந்துக்களும், முஸ்லிம்களும் உள்ளனர். திருவிழாக்கள் கூட்டநாடு நேர்ச்சை இலவத்துக்கல் பூரம் அமக்காவு பூரம் அரசியல் கூட்டநாடு திரித்தாலா ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வருகிறது. மேலும் இது பொன்னானி சட்டமன்றத் தொகுதி மற்றும் பொன்னானி மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது. முன்னபு இது ஒற்றப்பாலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாக இருந்தது. புவியியலும் காலநிலையும் கூட்டநாட்டின் வெப்ப நிலை பொதுவாக கேரள மாநிலத்தின் பிற பகுதிகளில் நிலவும் வெப்ப நிலையை ஒத்தே உள்ளது: திசம்பர் முதல் பிப்ரவரி வரை வறண்ட காலம், மார்ச் முதல் மே வரை வெப்பமான காலம்; ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழைக் காலம், அக்டோபர் முதல் நவம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம். தென்மேற்கு பருவமழை பொதுவாக மிகவும் கனமானதாக இருக்கும். இது ஆண்டு மழையில் கிட்டத்தட்ட 75% ஆகும். வறண்ட காலம் பொதுவாக வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும், வெப்பநிலை 22 °C முதல் 35 °C வரை மாறுபடும். ஆண்டு சராசரி மழையளவு 2800  மிமீ ஆகும். மூலிகைகள், பழங்கள், பள்ளத்தாக்குகள், ஏரிகள், ஓடைகள் கொண்ட மலைப்பகுதி இதுவாகும். போக்குவரத்து வானூர்தி நிலையங்கள் : கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் , கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகியவை கூட்டநாட்டிலிருந்து ஏறக்குறைய ஒரே தொலைவில் உள்ளன (சுமார் இரண்டு மணி நேரப் பயணம்). தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சுமார் தொலைவில் உள்ளது. தொடருந்து நிலையங்கள் : அருகிலுள்ள தொடருந்து நிலையங்களாக பட்டாம்பி (8 கிமீ), குட்டிப்புரம் (15 கிமீ) மற்றும் ஷொறணூர் சந்திப்பு (20 கிமீ) உள்ளன. சாலைகள் : கூட்டநாடு உண்மையில் இரண்டு பெரிய மாநில நெடுஞ்சாலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. மாநில நெடுஞ்சாலை (SH 39) குருவாயூர் - பாலக்காடு மற்றும் பொன்னானி-பாலக்காடு நெடுஞ்சாலையை இணைக்கும் திருதாலா பிரதான சாலை ஆகியவை உள்ளன. புதிய பாலம் (வெள்ளியங்கல்லு பாலம்) திருச்சூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் தூரத்தை ஆக குறைக்கிறது. பேருந்துகள் : நீண்ட தொலைவுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கூட்டநாடு சந்திப்பில் நிற்கின்றன. உள்ளூர் போக்குவரத்து : கூட்டநாடில் தானி, வாடகை மகிழுந்து போன்றவை சாலைகளில் வாடகைக்குக் கிடைக்கும். மேலும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் அவற்றின் நிறுத்தகங்கள் உள்ளன. இங்கு குறுகிய சாலைகள் இருப்பதால், உள் இடங்களுக்கு சிற்றுந்துகள் சீரான இடைவெளியில் இயக்கப்படுகின்றன. கல்வி அரசு தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளி- வட்டேநாடு அரசு மேல்நிலைப் பள்ளி- மேழத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி- சாலிசேரி அரசு மேல்நிலைப் பள்ளி- சாத்தனூர் மேல்நிலைப் பள்ளி - பெரிங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி - நாகலாச்சேரி (வாவனூர்) சிமாட் பொறியியல் கல்லூரி - வாவனூர் ராயல் பொறியியல் கல்லூரி - அக்கிக்காவு அல் அமீன் பொறியியல் கல்லூரி - குளப்புள்ளி ராயல் பல் மருத்துவக் கல்லூரி - சாலிசேரி அஷ்டம்கம் ஆயுர்வேதம் சிகிச்சாலயம் வித்யாபீடம் - வாவனூர் குறிப்பிடத்தக்க மக்கள் வி. டி. பட்டத்திரிபாட், நாடக கலைஞர் மற்றும் ஒரு முக்கிய விடுதலைப் போராட்ட வீரர் எம். டி. வாசுதேவன் நாயர், மலையாள எழுத்தாளர் குட்டிமாலு அம்மா ( அம்மு சுவாமிநாதன் ), துணிச்சலான விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் ஒரு முக்கிய தலைவர் மேஜர் ரவி, மலையாள திரைப்பட இயக்குநர் கேப்டன் இலட்சுமி சாகல், இந்திய விடுதலை இயக்கத்தின் செயல்பாட்டாளர் மகாகவி அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி இ.ஸ்ரீதரன் - டிஎம்ஆர்சியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சுதேவன் - மலையாள திரைப்பட இயக்குநர், திரைப்படம் சிஆர் எண்: 89 மேற்கோள்கள் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் Coordinates on Wikidata
685834
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
சாலகநகரா இராச்சியம்
சாலகநகரா இராச்சியம் (ஆங்கிலம்: Salakanagara; Salakanagara Kingdom; மலாய்: Kerajaan Salakanagara; இந்தோனேசிய மொழி: Kerajaan Salakanagara; Kerajaan Rajatapura) என்பது கிபி 130–362-ஆம் ஆண்டுகளில் இந்தோனேசியா, மேற்கு ஜாவாவில் ஆட்சி புரிந்த ஓர் இந்திய மய இராச்சியமாகும். இதுவே இந்தோனேசியாவில் இந்திய மயமாக்கப்பட்ட முதல் அரசும் ஆகும். சாலகநகர அரசு ஏறக்குறைய 1890 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய அரசு. இந்த இராச்சியத்தை சலகநகரப் பேரரசு அல்லது சாலகநகர அரசு என்றும் அழைப்பது உண்டு. சாலகநகரம் என்றால் வெள்ளி இராச்சியம் என்று பொருள். பொது சாலகம் என்றால் சிறுகுறிஞ்சா எனும் மூலிகைச் செடி. இந்தோனேசியா ஜாவா தீவில் அதிகமாய்க் காணப்படும் ஒரு வகையான மூலிகைத் தாவரம். சிறுகுறிஞ்சா எனும் மூலிகைச் செடியைச் சாலகம் என்றும் அழைப்பார்கள். இதன் இலைகள்; வேர்கள் மருத்துவக் குணம் நிறைந்தவை. வாத நோய், உதிரச் சிக்கல் போன்றவற்றுக்கு மூலிகையாகப் பயன்படுகிறது. இருப்பினும், இந்த மூலிகையைப் பற்றி போதியளவு அறிவியல் சான்றுகள் கிடைக்கவில்லை. முன்பு காலத்துப் பெண்கள் நெற்றியில் அணியும் ஓர் ஆபரணத்திற்குப் பெயரும் சாலகம் தான். இப்போது அந்த ஆபரணம் பயன்பாட்டில் உள்ளதா என்று தெரியவில்லை. சாலகம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் போர்னியோ, பிலிப்பீன்சு, மலாயா, இந்தோனேசியா போன்ற இடங்களுக்குப் பயணித்து உள்ளார்கள். பயணம் சென்ற இடங்களில் நிலபுலன்களை வாங்கி, நிலப் பிரபுக்களாக மாறி உள்ளார்கள்; சிற்றரசுகளை உருவாக்கி சிற்றரசர்களாகவும் மாற்றி உள்ளார்கள். வரலாறு கி.பி. 120-ஆம் ஆண்டுகளில் தேவ வர்மன் (Dewawarman) என்பவர் வணிக உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காக தென்னிந்தியாவில் இருந்து இந்தோனேசியாவிற்குச் சென்றுள்ளார். வணிகம் செய்வதே முதன்மை நோக்கமாக இருந்துள்ளது என இந்தோனேசிய வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரான எடி எஸ். ஏகஜதி (Edi S. Ekajati) என்பவரின் கூற்று. சாலகநகர வரலாற்றுக்கு புசுதக்கா பூமி நுசாந்தாரா (Pustaka Rajya-rajya Bhumi Nusantara) எனும் 17-ஆம் நூற்றாண்டுக் கையெழுத்துப் பிரதி மட்டுமே தற்போது முக்கியச் சான்றாக விளங்குகிறது. அதன் காரணமாக சாலகநகரா அரசு ஒரு புராணக்கால அரசு என்றும் வகைப்படுத்தப்படுகிறது. புசுதக்கா பூமி நுசாந்தாரா சிரபொன் இளவரசர் வாங்சகெர்டா (Prince Wangsakerta) என்பவரின் கட்டளையின் பேரில் புசுதக்கா பூமி நுசாந்தாரா கையெழுத்துப் பிரதி தயாரிக்கப்பட்டது. இதைத்தவிர சில சீன நாட்டுச் சான்றுகளும் கிடைத்துள்ளன. அந்தக் கையெழுத்துப் பிரதியின் கூற்றுப்படி, இன்றைய இந்தோனேசியா, மேற்கு ஜாவா, பான்டென் மாநிலத்தின் (Province of Banten) கடற்கரையில் சாலகநகரம் அமைந்து இருந்தது. தேவி பாவாச்சி லாரசதி சாலகநகரப் பேரரசு தோற்றுவிக்கப் பட்டதும் தேவ வர்மன், தன் பெயரைப் பிரபு தர்மலோகபாலா தேவ வர்மன் ரக்சபுர சாகரன் (Prabu Dharmalokapala Dewawarman Raksagapura Sagara) என்று மாற்றிக் கொண்டார். இவர் 38 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவருடைய மனைவியின் பெயர் தேவி பாவாச்சி லாரசதி (Dewi Pwahaci Larasati). உள்ளூர் நிலப் பிரபு ஒருவரின் மகளைத் தேவ வர்மன் திருமணம் செய்து கொண்டதால் தேவ வர்மன் இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லவில்லை. சாலகநகரத்தை ஆட்சி செய்த அரசர்கள் அனைவரும் தேவர்மன் (Dewawarman) வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆகும். இவர்களின் ஆட்சிக் காலத்தில் இரு சிறிய அரசுகளையும் நிறுவி இருக்கிறார்கள். சிற்றரசுகள் உஜோங் குலோன் அரசு உஜோங் குலோன் அரசு (Ujung Kulon Kingdom), தற்போது இந்தோனேசியாவின் உஜோங் குலோன் வட்டாரத்தில் அமைந்து உள்ளது. இந்த அரசு சேனாபதி பகதூரா அரிகானா செயசக்தி (Senapati Bahadura Harigana Jayasakti) என்பவரால் நிறுவப்பட்டது. இந்தச் சேனாதிபதி பகதூரா அரிகானா என்பவர் சாலகநகரப் பேரரசைத் தோற்றுவித்த தேவவர்மனின் தம்பியாகும். உஜோங் குலோன் அரசைத் தர்ம சத்யநகரா (Darma Satyanagara) என்பவர் ஆட்சி செய்த போது, மூன்றாம் தேவவர்மனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தர்ம சத்யநகரா, சாலகநகரப் பேரரசின் 4-வது மன்னர் ஆனார். தருமநகரா இராச்சியம் இந்தக் கட்டத்தில் சாலகநகரப் பேரரசிற்கு இணையாக மற்றோர் அரசு போட்டியாக உருவாகிக் கொண்டு இருந்தது. அதன் பெயர் தருமநகரா இராச்சியம் (Tarumanagara). இந்தத் தருமநகரா இராச்சியம் நன்றாக வளர்ச்சி அடைந்ததும், உஜோங் குலோன் சிற்றரசின் மீது படை எடுத்தது. தருமநகரா இராச்சியத்தின் மூன்றாவது அரசராக இருந்த பூர்ணவர்மன் என்பவர் தான் அந்தப் படையெடுப்பைச் செய்து உஜோங் குலோன் சிற்றரசைக் கைப்பற்றினார். கடைசியில் உஜோங் குலோன் சிற்றரசு, தருமநகரா இராச்சியத்தின் துணைச் சிற்றரசாக மாறியது. தஞ்சோங் கிடுல் அரசு தஞ்சோங் கிடுல் அரசு (Kingdom of Tanjung Kidul), தற்போதைய இந்தோனேசியா சியான்ஜூர் (Cianjur) மாநிலத்தில் அமைந்து இருந்தது. அதன் தலைநகரம் அக்ரபிந்தபுரா (Aghrabintapura). இந்தச் சிற்றரசை சுவேதா லிமான் சக்தி (Sweta Liman Sakti) எனும் அரசியார் ஆட்சி செய்து வந்தார். இந்த அரசியார் சாலகநகரப் பேரரசை உருவாக்கிய தேவவர்மன் அரசரின் இரண்டாவது சகோதரி ஆவார். சாலகநகர அமைவிடங்கள் சாலகநகர இராச்சியம் மையமாகக் கொண்ட மூன்று இடங்களை இந்தோனேசிய அரசாங்கம் அடையாளம் கண்டு உள்ளது. அந்த இடங்களின் விவரங்கள்: தெலுக் லாடா, பாண்டென் - (Teluk Lada, Pandeglang, Banten) கொன்டெட், ஜகார்த்தா - (Condet, Jakarta) சாலாக் மலை, போகோர் - (Mount Salak, Bogor) தெலுக் லாடா இந்தோனேசியா, பாண்டென் மாநிலத்தில் பாண்டெகிலாங் (Pandeglang, Banten) எனும் இடத்தில் லாடா விரிகுடா (Lada Bay) உள்ளது. அந்த இடத்தில் சாலகநகரப் பேரரசின் தலைநகரம் ராஜதபுரா (Kerajaan Rajatapura) அமைந்து இருக்கலாம் என்று வாங்சா கெர்டா கையெழுத்துப் பிரதியில் (Wangsakerta Manuscript) எழுதப்பட்டு உள்ளது. சாலகநகரப் பேரரசின் எட்டாவது மன்னராக ஆட்சி செய்த தேவர்மன் (Dewawarman VIII), இந்த இடத்தில் இருந்து ஜாவா முழுவதும் தன் வணிகத்தை விரிவுபடுத்தி உள்ளா. இது முதலாவதாக அடையாளம் காணப்படும் இடமாக அமைகிறது. கொன்டெட் இந்தோனேசியா, கிழக்கு ஜகார்த்தா பகுதியில் கொன்டெட் (Condet, Jakarta) எனும் ஓர் இடம் உள்ளது. அதாவது இப்போதைய சுந்தா கெலாப்பா (Sunda Kelapa) எனும் துறைமுகத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கொன்டெட் சிறுநகரம் உள்ளது. அங்கே சாலகநகரா மையம் கொண்டு இருந்து இருக்கலாம். இது இரண்டாவதாக அடையாளம் காணப்பட்டு உள்ள இடம். இந்தப் பகுதியில் சுங்கை திராம் (Sungai Tiram) எனும் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் சிப்பிகள் அதிகம். சாலகநகரப் பேரரசை உருவாக்கிய தேவவர்மனின் மாமியாரின் பெயர் அகி திராம் (Aki Tirem). சுங்கை திராம் நதிக்கு மாமியார் அகி திராம் பெயரில் இருந்து வந்து இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருத்து கூறுகிறார்கள். திராம் எனும் சொல், பல்லவர் அப்போது பயன்படுத்திய சொல். அந்தச் சொல் தற்போது மலாய் மொழியிலும் பயன்படுத்தப் படுகிறது. போகோர் சாலாக் மலை இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் போகோர் (Bogor) எனும் மாநகரம் உள்ளது. அங்கே சாலாக் எனும் பெயரில் ஒரு மலை உள்ளது. இந்த சாலாக் மலைக்கு சாலகநகரப் பேரரசின் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. சுந்தா மொழியில் சாலகநகரம் என்றால் வெள்ளி இராச்சியம் என்று பொருள். சாலகநகர அரசர்கள தேவவர்மன் I (130-168); (தர்மலோகபாலா) தேவவர்மன் II (168-195); (தேவவர்மன் I-இன் மூத்த மகன் - பிரபு திக்விஜயகாசன் - (Prabu Digwijayakasa) தேவவர்மன் III (195-238); (பிரபு சிங்கசாகரா பீமயாசவீரயா (Prabu Singasagara Bimayasawirya) தேவவர்மன் IV (238-252); (உஜோங் கூலோன் ராஜா (Raja Ujung Kulon) தேவவர்மன் V (252-276); தேவவர்மன் VI (276-289); (மகிஷா சுரமர்தினி வர்மாதேவி (Mahisa Suramardini Warmandewi) தேவவர்மன் VII (289-308); (மோதேன் சமுத்திரா (Mokteng Samudera) தேவவர்மன் VIII (308-340); (பிரபு பீமா திக்விஜயா சத்யா கணபதி (Prabu Bima Digwijaya Satyaganapati) செரி கர்ணாவா வர்மன்தேவி (340-348); (Srikarnawa Warmandewi) தேவ வர்மன் பிரபு தர்ம வீரையா (348-362); (Dewawarman VIII Prabu Darmawirya) மேலும் காண்க புனி பண்பாடு கூத்தாய் இராச்சியம் தருமநகரா இராச்சியம் கலிங்க இராச்சியம் இந்திரகிரி அரசு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் முன்னாள் பேரரசுகள் முன்னாள் முடியாட்சிகள் இந்துப் பேரரசுகள் இந்தோனேசியா இந்தோனேசிய வரலாறு மலேசிய வரலாறு சாவக வரலாறு
685838
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D
கோவிந்த் மோகன்
கோவிந்த் மோகன் (Govind Mohan)(பிறப்பு செப்டம்பர் 21,1965) என்பவர் இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 1989-ஆம் ஆண்டு தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் 23 ஆகத்து 2024 முதல் இந்தியாவின் உள்துறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இளமை மோகன் 1965 செப்டம்பர் 21 அன்று உத்தரப் பிரதேசத்தில் பிறந்தார். இவரது தந்தை பொதுப்பணித் துறையில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். கல்வி மோகன் தனது ஆரம்பக் கல்வியை உத்தராகண்டு தூய ஜோசப் கல்லூரி, புனித பிரான்சிசு கல்லூரியிலும் முடித்து, மார்ச் 1982-ல் பட்டம் பெற்றார். மோகன் சூலை 1982 முதல் மார்ச் 1986 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் படித்த பிறகு தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் மோகன் சூலை 1986 முதல் மார்ச் 1988 வரை அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மேலாண்மையில் முதுநிலை பட்டயப்படிப்பினை முடித்து பட்டம் பெற்றார். தொழில் மோகன் இதற்கு முன்பு இந்திய அரசில் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர்/கூடுதல் செயலாளராகவும், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் இணைச் செயலாளராகவும் இருந்தார். ஒன்றியப் பிரதேசங்களின் கோட்டத் தலைவராகப் பணியாற்றிய இவர், சிக்கிம் அரசின் முதன்மை குடியிருப்பு ஆணையராகவும் இருந்துள்ளார். மேற்கோள்கள் உத்தரப் பிரதேச நபர்கள் 1965 பிறப்புகள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் வாழும் நபர்கள்
685849
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
செவ்வாற்று கட்டுவிரியன்
செவ்வாற்று கட்டுவிரியன் (Red River krait) எனப் பொதுவாக அழைக்கப்படும் பங்காரசு சுலோவின்சுகி, எலாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நச்சுப் பாம்பு ஆகும். இந்தச் சிற்றினம் தென்கிழக்கு ஆசிய பெருநிலத்திலும் நோர்வேயிலும் காணப்படுகின்றது. வகைப்பாட்டியல் 2005ஆம் ஆண்டு, உல்ரிச் குச்சும் அவருடன் பணியாற்றுபவர்களும் இந்தச் சிற்றினத்தை வகைப்படுத்தினர். இச்சிற்றினத்திற்கு, 38 வயதில் விரியன் பாம்புக் கடியால் இறந்த அமெரிக்க ஊர்வனவியலாளர் ஜோசப் புருனோ சுலோவின்சுகியின் நினைவாக, சுலோவின்சுகி என்று பெயரிடப்பட்டது. விளக்கம் ப. சுலோவின்சுகியின் உடலிலும் வால் பகுதியிலும் மாறி மாறிப் பரந்த கருப்பு வளையங்களையும் குறுகிய வெள்ளை வளையங்களையும் காணலாம். முதுகெலும்புச் செதில்கள் நடுப்பகுதியில் 15 வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. முதுகெலும்பு வரிசையில் உள்ள முதுகெலும்புச் செதில்கள் விரிவடைந்து அறுகோணமாக உள்ளன. வாலடிச் செதில்கள் பிரிக்கப்பட்டுள்ளன. பரவலும் வாழிடமும் ப. சுலோவின்சுகி தற்போது வியட்நாம், வடகிழக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. ப. சுலோவின்சுகி காடுகளில் விரும்பி வாழ்கிறது. இது 400-700 மீ (ID2) உயரப் பகுதிகளில் காணப்படுகிறது. இனப்பெருக்கம் ப. சுலோவின்சுகி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது. மேற்கோள்கள் மேலும் வாசிக்க Kharin, Vladimir E.; Orlov, Nikolai L.; Ananjeva, Natalia B. (2011). "New Records and Redescription of Rare and Little-Known Elapid Snake Bungarus slowinskii (Serpentes: Elapidae: Bungarinae)". Russian Journal of Herpetology 18 (4): 284–294. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம் பாம்புகள்
685852
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கங்காபூர் சட்டமன்றத் தொகுதி
கங்காபூர் சட்டமன்றத் தொகுதி (Gangapur, Maharashtra Assembly constituency) என்பது மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளன. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 2019 மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
685854
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பாத்ரி சட்டமன்றத் தொகுதி
பாத்ரி சட்டமன்றத் தொகுதி (Pathri Assembly constituency) என்பது என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது, பர்பணி மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு தொகுதிகளில் ஒன்றாகும். பாத்ரி, பர்பணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய தேர்தல் ஆணையம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
685855
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D
ஈமு போர்
ஈமு போர் அல்லது பெரிய ஈமு போர் என்றும் அழைக்கப்படுகிறது.1932ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் பண்ணை நிலங்களில் அழிவை ஏற்படுத்திய ஈமு கோழிகளை ஒழிக்க அனைத்து முறைகளும் தோல்வியடைந்ததால், ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களை ஈடுபடுத்த அரசாங்கம் முடிவு செய்தது. அப்போது பத்திரிகைகள் வைத்த பெயர் ஈமு போர் என்பதாகும்.. 2 நவம்பர் முதல் 10 டிசம்பர் 1932 வரை இரண்டு பகுதிகளாக நடந்த ஈழு கோழிகள் ஒழிப்புப் போராட்டத்தில் 986 ஈமு கோழிகள் மட்டுமே கொல்லப்பட்டது. இறுதி வெற்றி ஈமு பறவைகளுக்கே கிடைத்தது. பின்னணி ஆஸ்திரேலிய அரசாங்கம் முதலாம் உலகப் போரிலிருந்து திரும்பிய வீரர்களுக்கு மீள்குடியேற்றத்திற்காக மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலம் வழங்கியதுடன் கோதுமை விவசாயத்தை ஊக்குவித்தது. ஆனால் அப்படி விவசாயம் செய்யத் தொடங்கியவர்களுக்கு உலகப் பெரும் மந்தநிலை பெரும் அடியாக வந்தது. அரசாங்கம் பயிர் உற்பத்தியை அதிகரிக்க அழைப்பு விடுத்தது மற்றும் மானியங்களை வழங்கியது. ஆனால் பயிர்களின் விலை தொடர்ந்து சரிந்தது. இந்த நெருக்கடியான நேரத்தில் கோதுமை வேளாண்மையை சீரழிக்க 20,000 ஈமு பறவைகள் படையெடுத்தது. புதிதாக உருவாக்கப்பட்ட வயல்வெளிகள், கால்நடைகள் மற்றும் குதிரைகளுக்கு ஒதுக்கப்பட்ட தீவனங்கள் அனைத்தும் ஈமுக்களின் உணவாக மாறியது. விளைநிலங்களில் கூட்டமாக அத்துமீறி நுழைந்து பயிர்களை தின்று நாசம் செய்தது. முதலாம் உலகப் போரில் பணியாற்றிய முன்னாள் இராணுவ வீரர்கள் அடங்கிய விவசாயிகள் பிரதிநிதிகள் குழு, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சர் ஜார்ஜ் பியர்ஸை சந்தித்த விவசாயிகள், ஈமு கோழி ஒழிப்புக்கு இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்த கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு இயந்திரத் துப்பாக்கிகளையும், ராணுவத்தினரையும் பயன்படுத்தி, ஈமுக் கோழிகளால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசே அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதித்தது. ஈமு போர் மேஜர் ஜி.பி.டபிள்யூ. மெரிடித் ஈமு கோழிகளின் ஒழிப்புப் பணிக்குழுவின் பொறுப்பில் இருந்தார். ஈமு அழிப்புப் படையில் 10,000 தோட்டாக்கள், இரண்டு லூயிஸ் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் இரண்டு வீரர்கள் இருந்தனர். 1932 அக்டோபரில் தொடங்க வேண்டிய பணி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நவம்பர் 2 ஆம் நாள் தொடங்கியது. ஈமு வேட்டைக்காரர்கள், ஆஸ்திரேலிய குதிரைப்படைக்கு தொப்பிகளை உருவாக்க 100 ஈமு கோழிகளின் தோல்களை ஒழுங்கமைக்க வேண்டும் என்ற விதிக்கு கட்டுப்பட்டதாக கூறப்படுகிறது. போர் மேற்கு ஆஸ்திரேலியாவின் கேம்பியன் மாவட்டம் ஈமு கோழிகளின் தொந்தரவின் மையமாக இருந்தது. 50 பறவைகள் கொண்ட குழுவை வேட்டைக் குழுவினர் கண்டனர். ஆனால் ஈமுக்கள் சிறு குழுக்களாக உடைந்து வெவ்வேறு திசைகளில் ஓடின. முதல் நாள் முடிவில், "ஒரு டசனுக்கும் அதிகமான ஈழு கோழிகளை மட்டுமே" கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கை கூறியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு அணைக்கு அருகில் சுமார் ஆயிரம் ஈமுக்கள் காணப்பட்டது. ராணுவ வேட்டையாளர்கள் ஈமு கோழிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில். 12 ஈழு பறவைகள் இறந்தது. மீதிப் பறவைகள் அனைத்தும் சிதறின. மோட்டார் வண்டியில் இயந்திரத் துப்பாக்கியை இணைத்து, ஈழு கோழிகளை பின்தொடர்ந்து செல்வதற்கான முயற்சிகளும் தோல்வியடைந்தது.. சமதள மோட்டார் வண்டி சவாரியின் போது ஒரு குண்டைக் கூட சுட ஈமு கோழி மீது சுட முடியவில்லை. பறவைகளின் வேகத்தில், கரடுமுரடான சாலையில் மோட்டார் வாகனங்கள் செல்ல முடியவில்லை. எட்டு நாட்கள் பணியில் சுமார் 2,500 ஈழு வேட்டைக்காரர்கள் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 50 ஈமுக்கள் மட்டுமே இறந்ததாக பல அறிக்கைகள் கூறுகின்றன. 200-500 பறவைகள் கொல்லப்பட்டதாக வேறு சில தகவல்கள் கூறுகின்றன. படைக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று மெரிடித் தெரிவித்தார்.. அப்போதைய பறவை கண்காணிப்பாளரான டொமினிக் செர்வென்டி இந்த பயணத்தில் ஈமு வேட்டைக்காரர்களுடன் பயணம் செய்தார். அவரின் கூற்றுப்படி, “ஈமு மந்தைக்குள் விரைந்து சென்று அவற்றை எளிதாகக் கொன்றுவிடலாம் என்று இயந்திர துப்பாக்கி ஏந்தியவர்களின் கணக்கு அனைத்து வீண் ஆனது“.. ஈமு கோழிகளை அடக்க கொரில்லா உத்திகளைப் பயன்படுத்த இராணுவம் முடிவு செய்தது. ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு போர்முனையில் இருந்து பின்வாங்கியது. ஈமு கோழி கொல்லும் பணி நவம்பர் 2, 1932 இல் தொடங்கியது.நவம்பர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நிலைமையை ஆய்வு செய்தது. ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கடுமையான விமர்சனத்தின் காரணமாக 10 டிசம்பர் 1932 அன்று ஈமு கோழி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Plants & Animals: Emu மேற்கு ஆஸ்திரேலியா
685857
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பர்தூர் சட்டமன்றத் தொகுதி
பர்தூர் சட்டமன்றத் தொகுதி (Partur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது, பர்பணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். பர்தூர் தொகுதியானது, ஜால்னா மாவட்டத்தில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 ஐதராபாத் சட்டமன்றம் பம்பாய் மாநில சட்டமன்றம் வெளி இணைப்புகள் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் மகாராட்டிர அரசியல்
685864
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
இந்தியப் பெருங்கடல் புவிவடிவத் தாழ்வு
இந்தியப் பெருங்கடல் புவிவடிவத் தாழ்வு (Indian Ocean Geoid Low, IOGL) என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஈர்ப்பு விசை ஒழுங்கின்மை அல்லது ஈர்ப்புத் துளை ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்கே அமைந்துள்ள புவியின் புவிவடிவத்தில் உள்ள ஒரு வட்டப் பகுதி, பூமியின் மிகப்பெரிய ஈர்ப்பு ஒழுங்கின்மை ஆகும். இது கடல் மட்டத்தில் சுமார் 3 மில்லியன் கிமீ2 (1.2 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டிருக்கும், கிட்டத்தட்ட இந்தியாவின் அளவு கொண்ட ஒரு தாழ்வு மண்டலமாக உருவாகிறது. இது 1948 ஆம் ஆண்டில் டச்சு புவி இயற்பியலாளர் பெலிக்சு ஆண்ட்ரீசு வெனிங் மெய்னெசு என்பவரால் கப்பலின் ஈர்ப்பு விசையின் ஆய்வு மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும், இது மே 2023 வரை ஒரு மர்மமாகவே இருந்தது. வலுக்குறைந்த உள்ளூர் ஈர்ப்பு விசை கணினி உருவகப்படுத்துதல்களாலும் நில அதிர்வுத் தரவுகளைப் பயன்படுத்தியும் அனுபவபூர்வமாக விளக்கப்பட்டது. அமைவிடம், பண்புகள், உருவாக்கம் இந்தப் புவியீர்ப்பு ஒழுங்கின்மை, அல்லது ஈர்ப்புத் துளை, இலங்கை, மற்றும் இந்தியாவின் பெருநிலப்பரப்பின் தென்முனையில் உள்ள கன்னியாகுமரியின் தென்மேற்கிலும், ஆப்பிரிக்காவின் கொம்புக்குக் கிழக்கேயும் மையமாகக் கொண்டுள்ளது. வலுக்குறைந்த உள்ளூர் ஈர்ப்பு விசையின் காரணமாக, இந்தியப் பெருங்கடலில் அலைகள், நீரோட்டங்கள் போன்ற சிறிய விளைவுகள் இல்லாவிட்டால், இந்த ஈர்ப்புத் துளையில் உள்ள கடல் மட்டமானது உலகளாவிய சராசரி கடல் மட்டத்தை விட (நோக்கீட்டு நீள்கோளம்) 106 மீட்டர் (348 அடி) வரை குறைவாக இருக்கும். மில்லியன் கணக்கான ஆண்டுகளாகச் செயல்படும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் அடிப்படையில், "ஈர்ப்புத் துளை" என்பது இந்தியாவிற்கும் நடு ஆசியாவிற்கும் இடையிலான குறுகலான இடைவெளியில் மிகவும் பழமையான தேத்திசுப் பெருங்கடலின் மூழ்கிய தளத்தின் துண்டுகளால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது, ஏனெனில் மூழ்கும் துண்டுகள் பூமியின் உட்புறத்தில் இருந்து குறைந்த அடர்த்தி கொண்ட சூடான கற்குழம்பின் மூடக புளூம்களால் ஈடுசெய்யப்பட்டன. இந்த குறைந்த அடர்த்தியின் காரணமாக, ஈர்ப்புத் துளைப் பகுதியில் உள்ள ஈர்ப்பு விசை இயல்பை விட சுமார் 50 mgal (0.005%) வலுக்குறைவாக உள்ளது, இது பூமியின் மிகப்பெரிய புவியீர்ப்பு ஒழுங்கின்மை ஆகும். ஈர்ப்புத் துளையானது ஏறத்தாழ 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. மேற்கோள்கள் மேலும் படிக்க Ghosh, A., Thyagarajulu, G., Steinberger, B. (2017). "The importance of upper mantle heterogeneity in generating the Indian Ocean geoid low". Geophysical Research Letters, 44, doi:10.1002/2017GL075392. Singh, S., Agrawal, S., Ghosh, A. (2017). "Understanding deep earth dynamics: A numerical modelling approach". Current Science (Invited Review), 112, 1463–1473. Ghosh, A., Holt, W. E. (2012). "Plate Motions and Stresses from Global Dynamic Models". Science, 335, 839–843. இந்தியப் பெருங்கடலின் நிலவியல் கடல் மட்டம்
685866
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D
பிரசாந்த் பாம்ப்
பிரசாந்த் பன்சிலால் பாம்ப் (Prashant Bamb) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினை சார்ந்தவர். இவர் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கங்காபூர், சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். வகித்த பதவி சட்டமன்ற உறுப்பினர்-மகாராட்டிர சட்டப்பேரவை அலுவலல் 2009-மகாராட்டிர சட்டப்பேரவை உறுப்பினர் - சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1வது முறை) 2014-மகாராட்டிர சட்டப்பேரவைக்கு உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (பாஜக) 2019-மகாராட்டிர சட்டப்பேரவைக்கு 3வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் 2024-மகாராட்டிர சட்டப்பேரவைக்கு நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேற்கோள்கள் 1972 பிறப்புகள் வாழும் நபர்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
685877
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%2034
பிராட்மேன் பகுதி 34
பிராட்மேன் பகுதி 34 (Brodmann area 34) என்பது மனித மூளையின் ஒரு பகுதியாகும். இது என்டோர்கினல் பகுதியில் ஓரிடமாகவும், மூளைப் படுகையின் மேற்பகுதியாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. மூளை ஏற்றமேடு மற்றும் பெருமூளை புறணிப் பகுதிகளுக்கு இடையேயான முக்கிய இடைமுகமாக என்டோர்கினல் பகுதி உள்ளது. மேலும் இது நினைவகம், வழிசெலுத்தல் மற்றும் நேரத்தின் புலனுணர்வு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. பிராட்மேன் பகுதி 34-இன் அழிவு பக்க முகர்வுணர்வு இழப்பினை ஏற்படுத்துகிறது. மேலும் காண்க பிராட்மேன் பகுதி மேற்கோள்கள் மூளை
685882
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கந்தோலி இராச்சியம்
கந்தோலி இராச்சியம் (ஆங்கிலம்: Kantoli; Kantoli Kingdom; மலாய்: Kantoli; இந்தோனேசிய மொழி: Kerajaan Kandali) என்பது கிபி 5-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா, தெற்கு சுமாத்திராவில் ஜம்பிக்கும் பாலெம்பாங்கிற்கும் இடையில் அமைந்து இருந்ததாகக் கருதப்படும் ஒரு பண்டைய இந்திய மய இராச்சியமாகும். இந்த அரசமைப்புக்கு சமசுகிருத மொழியில் குந்தாலா (Kuntala) என்று பெயர். சீன வரலாற்றுப் பதிவுகள், சன்போட்சி (Sanfotsi) எனும் அரசு முன்பு கந்தோலி (Kantoli) என அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன. மேலும் கந்தோலி இராச்சியத்தின் அமைவிடமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதுவே வரலாற்று ஆசிரியர்களுக்கு, கந்தோலியை சிறீ விஜய பேரரசின் முன்னோடியாகக் கருத வழிவகுத்தது. சீன வரலாற்றுப் பதிவுகள், சிறீ விஜய பேரரசை சன்போட்சி என்று குறிப்பிடுகின்றன. பொது தென் சீனாவில் லியூ சோங் வம்சாவளி ஆட்சியின் போது, ​​கந்தோலி இராச்சியம் தன்னுடைய தூதர்கள் பலரைச் சீனாவிற்கு அனுப்பியது. இரு இராச்சியங்களுக்கும் இடையே வணிகத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவை கந்தோலிக்கு பெரும் செல்வத்தை வழங்கின. அந்த வகையில் கந்தோலி இராச்சியம், சீனாவைப் பெரிதும் நம்பி இருந்தது. தென் சீனாவை சுயி அரச மரபினர் கைப்பற்றியதன் மூலம், புதிய ஆட்சியாளரின் சிக்கன நடவடிக்கையால் கந்தோலி இராச்சியத்தின் வணிகம் பெரிதளவு குறைந்தது. கந்தோலி அரசர் வாரணரேந்திரா 454-ஆம் ஆண்டு; மற்றும் 464-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கந்தோலி இராச்சியத்தின் அரசர் செரி வாரணரேந்திரா (Sri Varanarendra), இந்து ருத்ரா (Hindu Rudra) எனும் அன்பளிப்பை சீனாவிற்கு தம் தூதர்கள் மூலமாக அனுப்பினார். பின்னர் அவருடைய மகன் விஜயவர்மன் (Vijayavarman) என்பவரும் 519-இல் அன்பளிப்புகளைச் செய்துள்ளார். முடிவு 7-ஆம் நூற்றாண்டில் இந்த இராச்சியம் வரலாற்றில் இருந்து மறைந்து போனது. ஒருவேளை, சுமாத்திராவின் கிழக்கு கடற்கரையில் ஜம்பி சுல்தானகம் மற்றும் சிறீவிஜயம் (பலெம்பாங்) ஆகிய இரண்டு பேரரசுகள் தோன்றியதன் காரணமாக இருக்கலாம். மேலும் காண்க பத்துஜெயா கோயில் வளாகம் இலமூரி சுல்தானகம் தெர்னாத்தே சுல்தானகம் ஜம்பி சுல்தானகம் சியாக் சுல்தானகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் முன்னாள் பேரரசுகள் முன்னாள் முடியாட்சிகள் இந்துப் பேரரசுகள் இந்தோனேசியா இந்தோனேசிய வரலாறு சாவக வரலாறு
685884
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95
விஜேசிறி பஸ்நாயக்க
பி. எம். விஜேசிறி பஸ்நாயக்க ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வயம்பா பல்கலைக்கழகத்தில் வணிகக் கல்வியும் நிதியியலும் பீடத்தின் மூத்த விரிவுரையாளர் ஆவார். தேசிய மக்கள் சக்தியில் குருணாகல் மாவட்டத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழும் நபர்கள்
685896
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
சுப்ரதீகம்
சுப்ரதீகம் (Supratika), மகாபாரத காவியத்தில் கூறப்படும் பிராக்ஜோதிச நாட்டின் முதிய மன்னர் பகதத்தனின் போர் யானை ஆகும். குருச்சேத்திரப் போரில் பகதத்தனும், அவனது பலம் மிக்க சுப்ரதீகம் என்ற யானையும் கௌரவர் சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர். இந்த போர் யானை மிகவும் பலம் கொண்டதுடன், எதிரிகளை கண்டறிந்து கொல்லும் ஆற்றலும் கொண்டது. போரில் பீமனை அலைக்கழித்த சுப்ரதீகம் யானை, இறுதியில் அருச்சுனனின் கணைகளால் வீழ்த்தப்பட்டதுடன், பகதத்தனும் மாண்டார். இதனையும் காண்க இந்து தொன்மவியல் உயிரினங்களின் பட்டியல் மேற்கோள்கள் இந்து புராணகால உயிரினங்கள் மகாபாரதக் கதை மாந்தர்கள்
685904
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
கொப்பம்
கொப்பம் (Koppam) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி வட்டத்தில் வளர்ந்து வரும் நகரமும், கிராம ஊராட்சியும் ஆகும். மக்கள்வகைப்பாடு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொப்பத்தில் 6,103 குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்த மக்கள் தொகை 30,169 ஆகும். இதில் ஆண்கள் 14,498 பேரும், பெண்கள் 15,671 பேரும் உள்ளனர். கொப்பம் கிராமத்தின் மொத்த பரப்பளவு 25.85 சதுர கி.மீ ஆகும். மக்கள் தொகையில் 12.7% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். கொப்பம் கிராமத்தின் சராசரி எழுத்தறிவு 92.95% என்று உள்ளது. இது தேசிய சராசரியான 74.04% ஐ விட அதிகமாகவும், மாநில சராசரியான 94.00% ஐ விட குறைவாகவும் ஆகும். மேற்கோள்கள் பாலக்காடு மாவட்ட ஊராட்சிகள் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் Coordinates on Wikidata
685905
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தைட்டானியம் சேர்மங்கள்
தைட்டானியம் சேர்மங்கள் (Titanium compounds) தைட்டானியம் வேதியியலில் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள சேர்மங்களும் ஏராளமாகும். பொதுவாக, தைட்டானியம் இதன் ஒருங்கிணைவுச் சேர்மங்களில் ஓர் எண்முக ஒருங்கிணைப்பு வடிவவியலை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் நான்முகி வடிவ TiCl4 ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்காகும். இதன் உயர் ஆக்சிசனேற்ற நிலை காரணமாக, தைட்டானியம்(IV) சேர்மங்கள் அதிக அளவு சகப் பிணைப்பை வெளிப்படுத்துகின்றன. ஆக்சைடுகள் தைட்டானியத்தின் மிக முக்கியமான ஆக்சைடு தைட்டானியம் ஈராக்சைடு (TiO2) ஆகும். இச்சேர்மம் அணடேசு, புரூகைட்டு மற்றும் உரூட்டைல் என்ற மூன்று முக்கியமான பல்லுருவங்களாக உள்ளது. இவை மூன்றும் வெண்மையான டயாகாந்தப் பண்பு கொண்ட திடப்பொருள்களாகும். இருப்பினும் கனிம மாதிரிகள் கருப்பாகத் தோன்றும். இவை பல்லுறுப்பி கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்கின்றன. இக்கட்டமைப்பில் தைட்டானியம் ஆறு ஆக்சைடு ஈந்தணைவிகளால் சூழப்பட்டுள்ளது. இவை மற்ற தைட்டானியம் மையங்களுடன் இணைக்கப்படுகின்றன. தைட்டானியம்(II) ஆக்சைடு, தைட்டானியம்(III) ஆக்சைடு ஆகிய ஆக்சைடுகளும் அறியப்படுகின்றன. தைட்டனேட்டுகள் என்ற சொல் பொதுவாக தைட்டானியம்(IV) சேர்மங்களைக் குறிக்கிறது. பேரியம் தைட்டனேட்டில் உள்ள (BaTiO3) தைட்டனேட்டு போல இவை குறிப்பிடப்படுகின்றன. ஒரு பெரோவ்சிகைட்டு கட்டமைப்புடன் இந்த பொருள் அழுத்தமின் விளைவுப் பண்புகளை வெளிப்படுத்துகிறது. ஒலி மற்றும் மின்சாரத்தின் இடைமாற்றத்தில் ஒரு மின்மாற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. பல தாதுக்கள் இல்மனைட்டு (FeTiO3) போன்ற தைட்டனேட்டுகள் ஆகும். இளநீலநிறமும் அடர் சிவப்பு நிறமும் தைட்டானியம் ஈராக்சைடு அசுத்தங்கள் இருப்பதால் நட்சத்திரத்தை உருவாக்கும் பிரகாசம் பெறுகின்றன. தைட்டானியத்தின் பல்வேறு குறைக்கப்பட்ட ஆக்சைடுகள் (கீழாக்சைடுகள்) அறியப்படுகின்றன. முக்கியமாக வளிமண்டல பிளாசுமா தெளிப்பு மூலம் பெறப்பட்ட தைட்டானியம் ஈராக்சைடின் விகிதவியல் அளவுகள் குறைக்கப்படுகின்றன. Ti3O5, Ti(IV)-Ti(III) இனமாக விவரிக்கப்படுகிறது. இது உயர் வெப்பநிலையில் ஐதரசனுடன் TiO2 சேர்மத்தைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஊதா நிற குறைக்கடத்தியாகும். தைட்டானியம் ஈராக்சைடுடன் மேற்பரப்புகள் நீராவி-பூசப்பட வேண்டியிருக்கும் சமயங்களில் தொழில்துறை ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது: தூய TiO ஆக ஆவியாகிறது, அதேசமயம் TiO2 ஆக்சைடுகளின் கலவையாக ஆவியாகி, வேறுபடும் ஒளிவிலகல் குறியீட்டுடன் பூச்சுகளாகப் பட்கிறது. விகிதவியலுக்கு ஒவ்வாமல் இருந்தாலும் குருந்தம் அமைப்புடன் Ti2O3 சேர்மமும் பாறை உப்பு அமைப்பில் TiO சேர்மமும் அறியப்படுகின்றன. ஆல்காக்சைடுகள் தைட்டானியம்(IV) இன் ஆல்காக்சைடுகள், TiCl4 சேர்மத்தை ஆல்ககால்களுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இவை நிறமற்ற சேர்மங்கள் ஆகும். தண்ணீருடன் வினையில் ஈடுபடும் போது டை ஆக்சைடாக மாறும். திண்ம-கூழ்ம செயல்முறை மூலம் திண்ம தைட்டானியம் ஈராக்சைடை படிய வைப்பதற்கு இது தொழில்துறை ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். கூர்மையற்ற எப்பாக்சினேற்றம் வழியாக நாற்தொகுதி மைய கரிம சேர்மங்களின் தயாரிப்பில் தைட்டானியம் ஐசோபுரோப்பாக்சைடு பயன்படுத்தப்படுகிறது. சல்பைடுகள் தைட்டானியம் பல்வேறு சல்பைடு உப்புகளை உருவாக்குகிறது. ஆனால் TiS2 மட்டுமே குறிப்பிடத்தக்க ஆர்வத்தை ஈர்த்துள்ளது. இது ஓர் அடுக்கு அமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இலித்தியம் மின்கலன்கள் வளர்ச்சியில் ஓர் எதிர்மின் வாயாகப் பயன்படுத்தப்பட்டது. Ti(IV) ஒரு வலிமையான நேர்மின் அயனி என்பதால், தைட்டானியத்தின் சல்பைடுகள் நிலையற்றவையாகும். இவை ஐதரசன் சல்பைடின் வெளியீட்டில் ஆக்சைடாக மாறுவதற்கு நீராற்பகுப்பு செய்ய முனைகின்றன. தைட்டானியம் நைட்ரைடு மற்றும் கார்பைடு தைட்டானியம் நைட்ரைடு (TiN) அதிகக் கடினத்தன்மை, வெப்ப/மின் கடத்துத்திறன், அதிக உருகுநிலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு வெப்பந்தாங்கும் திடப்பொருளாகும். TiN ஆனது நீலமணிக்கல், கார்போரண்டம் ஆகியனவற்றிற்குச் சமமான கடினத்தன்மையைக் கொண்டுள்ளது. மோவின் கடினத்தன்மை அளவு கோலில் இதன் மதிப்பு 9.0 ஆகும். பெரும்பாலும் இது துளையிடும் கருவிகள் போன்ற வெட்டுக் கருவிகளை பூசுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.. தங்க நிற அலங்கார பூச்சு மற்றும் குறைக்கடத்தி செமிகண்டக்டர் கட்டமைத்தலில் ஒரு தடுப்பு அடுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தைட்டானியம் கார்பைடு (TiC), மிகவும் கடினமானது, வெட்டுக் கருவிகள் மற்றும் பூச்சுகளில் காணப்படுகிறது. ஆலைடுகள் தைட்டானியம் டெட்ராகுளோரைடு (TiCl4) நிறமற்ற ஆவியாகும் திரவமாகும். வணிக மாதிரிகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது கிரோல் செயல்முறையில் காற்றில் நீராற்பகுப்படைந்து கண்கவர் வெள்ளை நிற மேகங்களை உமிழ்கிறது. தைட்டானியம் தாதுக்களிலிருந்து தைட்டானியம் உலோகமாகப் பிரித்தெடுக்க தைட்டானியம் டெட்ராகுளோரைடு பயன்படுகிறது. வெண்மை சாயத்தில் பயன்படுத்துவதற்கான தைட்டானியம் ஈராக்சைடைத் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. முகையாமா ஆல்டால் ஒடுக்கம் போன்ற கரிம வேதியியல் வினைகளில் இலூயிசு அமிலமாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வான் ஆர்கெல்-டி போயர் செயல்முறையில் தைட்டானியம் டெட்ரா அயோடைடு (TiI4) உயர் தூய்மையான தைட்டானியம் உலோகத்தின் உற்பத்தியில் உருவாக்கப்படுகிறது. தைட்டானியம்(III) மற்றும் தைட்டானியம்(II) ஆகியவையும் நிலையான குளோரைடுகளை உருவாக்குகின்றன. தைட்டானியம்(III) குளோரைடு (TiCl3) ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் ஆகும். பாலி ஒலிபீன்கள் உற்பத்திக்கான ஊக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது (சீக்லர்-நட்டா வினையூக்கி). கரிம வேதியியலில் குறைக்கும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. கரிமத் தைட்டானியம் அணைவுகள் பலபடியாக்கல் வினையூக்கியாக தைட்டானியம் சேர்மங்களின் முக்கிய பங்கு காரணமாக, Ti-C பிணைப்புகள் கொண்ட சேர்மங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தைட்டானோசீன் டைகுளோரைடு (C5H5)2Ti(CO)2. மிகவும் பொதுவான ஒரு கரிமத் தைட்டானியம் அணைவு ஆகும். தொடர்புடைய சேர்மங்களில் தெப் வினையாக்கியும் பெட்டாசிசு வினையாக்கியும் பிற தொடர்புடைய சேர்மங்களாகும். (C5H5)2Ti(CO)2. போன்ற கார்பனைல் அணைவுகளையும் தைட்டானியம் உருவாக்குகிறது. புற்றுநோய் எதிர்ப்பு பிளாட்டினம் அடிப்படையிலான புற்றுநோய் வேதிச் சிகிச்சையின் வெற்றியைத் தொடர்ந்து, தைட்டானியம்(IV) அணைவுச் சேர்மம் புற்றுநோய் சிகிச்சைக்காக பரிசோதிக்கப்பட்ட முதல் பிளாட்டினம் அல்லாத சேர்மங்களில் ஒன்றாகும். தைட்டானியம் சேர்மங்களின் நன்மை அவற்றின் உயர் செயல்திறன் மற்றும் குறைந்த நச்சுத்தன்மை ஆகியவை காரணமாகும். உயிரியல் சூழல்களில், நீராற்பகுப்பு பாதுகாப்பான மற்றும் மந்தமான தைட்டானியம் ஈராக்சைடிற்கு வழிவகுக்கிறது. இந்த நன்மைகள் இருந்தபோதிலும், நச்சுத்தன்மை விகிதங்கள் மற்றும் முறைப்படுத்தும் சிக்கல்களுக்கு போதுமான செயல்திறன் இல்லாததால் இச்சேர்மம் மருத்துவப் பரிசோதனைகளில் தோல்வியடைந்தது. மேலும் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களின் விளைவாக திறன்மிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நிலையான தைட்டானியம் சார்ந்த மருந்துகள் உருவாக்கப்பட்டன. மேலும் காண்க நெடுங்குழு 4 தனிமங்கள் மேற்கோள்கள் உசாத்துணை தைட்டானியம் தைட்டானியம் சேர்மங்கள் தனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்
685906
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம்
குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம் (Guru Gobind Singh Indraprastha University) முன்னர் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைநகரான தில்லியில், துவாரகா நகரில் அமைந்துள்ளது. இது தில்லியின் மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். சட்டம், மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி, தொழில்முனைவோர், அறிவியல், வணிகம் உள்ளிட்ட துறைகளில் பதினான்கு பல்கலைக்கழக பள்ளிகளும் மூன்று ஆய்வு மையங்களையும் கொண்டு செயல்படுகிறது. வரலாறு குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம் இந்திரபிரசுதா பல்கலைக்கழகமாக 28 மார்ச் 1998 அன்று தில்லி அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழக சட்டம், 1998-இன் விதிகளின் கீழ் 1999ஆம் ஆண்டில் திருத்தத்துடன் தேசிய தலைநகர் தில்லி அரசாங்கம் இதனை ஒரு மாநில பல்கலைக்கழகமாக அங்கீகரித்தது. பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்தின் பிரிவு 12பி இன் கீழ் இப்பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மகாபாரத காவியத்தில் முக்கியமாக இடம்பெற்றுள்ள பண்டைய நகரமான இந்திரபிரசுதத்தின் பெயரால் இந்தப் பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டது. 2001ஆம் ஆண்டில், பத்தாவது சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் நினைவாக பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது. அமைப்பும் நிர்வாகமும் பல்கலைக்கழகத்தில் 14 பல்கலைக்கழக பள்ளிகள் உள்ளன (பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள்). இவற்றில் 12 துவாரகா வளாகத்தில் உள்ளன. பல்கலைக்கழகத்திற்குள் பேரிடர் மேலாண்மை ஆய்வு, மருந்து அறிவியல், மனித மதிப்புகள், நெறிமுறைகள், தொழில்நுடப் பெருக்கம், வணிகமயமாக்கல் உள்ளிட்ட ஆராய்ச்சிக்காக 4 மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் மூன்று துவாரகா வளாகத்தில் உள்ளன. ஒன்று கிழக்கு தில்லி வளாகத்தில் உள்ளது. பல்கலைக்கழகப் பள்ளிகள் குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகத்தில் 14 பல்கலைக்கழக பள்ளிகள் உள்ளன (இவற்றில் 12 கல்லூரிகள் துவாரகா பிரதான வளாகத்தில் உள்ளன. இவை: கட்டிடக்கலை, திட்டமிடல் பள்ளி தானியக்கம், ரோபாட்டிக்சு பள்ளி அடிப்படை, பயன்பாட்டு அறிவியல் பள்ளி உயிரித் தொழில்நுட்பப் பள்ளி வேதியியல் தொழில்நுட்பப் பள்ளி வடிவமைப்பு, கண்டுபிடிப்பு பள்ளி சுற்றுச்சூழல் மேலாண்மை பள்ளி மனிதநேயம், சமூக அறிவியல் பள்ளி தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பப் பள்ளி சட்டம், சட்ட ஆய்வுகள் பள்ளி மேலாண்மை ஆய்வுகள் பள்ளி மக்கள் தகவல்தொடர்பு பள்ளி மருத்தும், துணை மருத்துவ சுகாதார அறிவியல் பள்ளி இணைவுக் கல்லூரிகள்  பல்கலைக்கழகத்தின் விதிகள், ஒழுங்குமுறைகளின்படி 120க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. கல்வி உலக தரவரிசை க்யு எசு தரவரிசையில் 2025-இல் இப்பல்கலைக்கழகம் 1001-1200 தரவரிசையில் உள்ளது. தரவரிசை 2024ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பால் இந்திய பல்கலைக்கழகங்களில் இந்த பல்கலைக்கழகம் 74ஆவது இடத்திலும், ஒட்டுமொத்த பிரிவில் 101-150 தரப் பிரிவிலும் இருந்தது. மேலும் பொறியியல் தரவரிசையில் பல்கலைக்கழக பொறியியல், தொழில்நுட்ப பள்ளி 89ஆவது இடத்திலும், மேலாண்மை தரவரிசைகளில் பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வுகள் பள்ளி 65ஆவது இடத்திலும் இருந்தது. குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் கவுரவ் சர்மா கவுரவ் கோகோய் முகமது இர்பான் அலி குனீத் மோங்கா டாப்சி பன்னு மனீஷ் சிங் தேவிகா வைத் மேலும் காண்க பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம் குரு கோவிந்த் சிங் நினைவகங்கள் Coordinates on Wikidata
685908
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%208243
அசர்பைசான் ஏர்லைன்சு பறப்பு 8243
அசர்பைசான் ஏர்லைன்சு பறப்பு 8243 (Azerbaijan Airlines Flight 8243) என்பது அசர்பைசானின் பாகுவிலிருந்து உருசியாவின் குரோசுனிக்கு திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் வானூர்தியாகும். இது அசர்பைசான் வான்சேவை நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. 25 டிசம்பர் 2024 அன்று, இந்த வானூர்தி சேவையை இயக்கும் எம்ப்ரேயர் E190, உள்ளூர் ஆதாரங்களின்படி 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் கசக்கஸ்தானின் அக்தாவ் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. வானூர்தியானது பாகுவிலிருந்து உருசிய குடியரசின் செச்சினியாவில் உள்ள குரோசுனிக்கு பறந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் குரோசுனியில் மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்டதாகவும் உருசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. வானூர்தி அதன் டிரான்ஸ்பாண்டரில் 7700 ஐ ஸ்குவாக் செய்ததாகக் கூறப்படுகிறது, காஸ்பியன் கடலின் மீது பறக்கும் போது அவசரநிலை எச்சரிக்கையை விடுத்தது, உருசியாவின் வானூர்திப் போக்குவரத்து அதிகாரப்பூர்வ நிறுவனத்தின் முதற்கட்ட அறிக்கைகள் இந்த சம்பவம் பறவை தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன, உயிர் பிழைத்தவர்கள் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாகவும் சிதறிய துண்டுகள் வானூர்தியைத் தாக்கியதாகவும் தெரிவித்தனர். இந்த விபத்தில் வானூர்தி ஓட்டிகள் உட்பட மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர். 29 பேர் உயிர் தப்பினர். பின்னணி வானூர்தி 2013 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த வானூர்தி, 4K-AZ65 என பதிவுசெய்யப்பட்ட ஒரு எம்ப்ரேயர் E190AR ஆகும், இதன் வரிசை எண் 19000630 உடன் குசார் என்று பெயரிடப்பட்டது. இது இரண்டு ஜெனரல் எலக்ட்ரிக் CF 34-10 E6 பொறிகளால் இயக்கப்படுகிறது, இந்த வானூர்தி தனது கடைசி பராமரிப்புக்கு அக்டோபர் 18,2024 அன்று சென்றுள்ளது. 24 சூலை 2013 அன்று தனது முதல் வானூர்திச் சேவையைத் தொடங்கியது மற்றும் அசர்பைசான் வான்சேவை நிறுவனத்திற்கு சொந்தமானது. சூலை 2013 முதல் தொடங்கிய இதன் சேவையில், இந்த விமானம் 2017 முதல் 2023 வரை வானூர்தியின் குறைந்த கட்டண மெய்நிகர் வானூர்தி துணை நிறுவனமான பூட்டா ஏர்வேஸின் கீழ் பறந்ததைத் தவிர, அசர்பைசான் வான்சேவை வானூர்தி நிறுவனத்தால் இயக்கப்பட்டது. விபத்தின் போது இந்த வானூர்தி 11.6 ஆண்டுகள் பழமையானது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் இந்த வானூர்தியில் 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்தனர். முப்பத்தேழு பேர் அசர்பைசான் குடிமக்கள், 16 பேர் உருசிய குடிமக்கள். 6 பேர் கசகஸ்தானிய குடிமக்கள் மற்றும் 3 பேர் கிர்கிஸ் குடிமக்கள் ஆவர். மீதமுள்ள ஐந்து பேர் வானூர்தி சேவை உறுப்பினர்கள், அவர்கள் அனைவரும் அசர்பைசானியர்கள். நான்கு சிறுவர்கள் வானூர்தியில் இருந்தனர். வானூர்தியில் இருந்த 67 பேரில், 29 பேர் உயிர் தப்பினர், 38 பேர் இறந்தனர். ஐந்து பணியாளர்களில் மூன்று பேர் உயிர் தப்பினர், அதே நேரத்தில் இரண்டு வானூர்தி ஓட்டிகளும் விபத்தில் இறந்தனர். விபத்தைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பதினொரு பேர் ஆபத்தான நிலையில் இருந்தனர். கேப்டன் இகோர் இக்சன்யாகின் வானூர்தி ஓட்டியாக இருந்தார். இந்த வானூர்தி பாகு சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து அசர்பைசான் நேரப்படி (யுடிசி +04.00) குரோஸ்னி வானூர்தி நிலையத்திற்குப் புறப்பட்டது. வானூர்தி கண்காணிப்பு சேவை ரேடார் 24 இன் கூற்றுப்படி, குரோஸ்னி அருகே பறக்கும் போது வானூர்தி "வலுவான புவியிடங்காட்டி நெரிசல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கு ஆளாகியது". புவியிடங்காட்டி நெரிசல் என்பது நீண்ட தூர வானூர்திகளில் அறியப்பட்ட பிரச்சினையாக இருந்து வருகிறது. மேலும், உருசிய வான்வெளியில் நுழையும் போது இது எதிர்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய நெரிசல்களைக் கையாள பல சரிபார்ப்பு பட்டியல்கள் செய்யப்பட்டுள்ளன . குரோஸ்னியில் மோசமான வானிலை காரணமாக வானூர்தி உருசியாவின் தாகெஸ்தானில் உள்ள மகக்கலாவின் உயாஷ் வானூர்தி நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இருப்பினும், மகக்கலாவில் வானிலை மோசமாக இருந்தது, அங்கும் வானூர்தி தரையிறங்க முடியவில்லை, கசகஸ்தானின் அக்தாவுக்கு திருப்பி விடப்பட்டது. வானூர்தி சுமார் 30,000 அடி (9,144 மீ) உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரமான 08:40 மணியளவில் ரேடார் கண்காணிப்பிலிருந்து காணாமல் போனது, பின்னர் உள்ளூர் நேரமான 10:07 மணியளவில் மீண்டும் கஜகஸ்தான் கடற்கரையில் தோன்றியது. உள்ளூர் நேரப்படி 09.35 மணியளவில் 7700 ஐ அதன் டிரான்ஸ்பாண்டரில் ஸ்குவாக் செய்வதன் மூலம் குழுவினர் ஒரு துயர சமிக்ஞையை வழங்கியதோடு கட்டுப்பாட்டு அமைப்பு தோல்வியடைந்ததாகத் தெரிவித்தனர். பின்னர் 09:49 மணியளவில், வானூர்தி ஓட்டிகள் கஜகஸ்தானின் அக்தாவில் உள்ள அக்தாவ் பன்னாட்டு விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கக் கோரினர், மேலும், அதை நேரடி பயன்முறையில் செய்ய முயன்றனர். வானூர்தி பின்னர் ரேடாரில் மீண்டும் தோன்றியது, காஸ்பியன் கடலின் மீது அக்தாவை நோக்கிப் பறந்து, அதன் வழக்கமான வானூர்திப் பாதையில் இருந்து கணிசமாக விலகிச் சென்றது. 10:28 மணிக்கு, வானூர்தி தரையில் மோதியது, அதன் வலது விங் முதலில் தாக்குதலுக்குள்ளானது. பின்னர் அது இடிந்து விழுந்து, வெடித்து, இரண்டு பெரிய துண்டுகளாக உடைந்தது. இந்த வெடிப்பும் வானூர்தி விபத்துக்குள்ளான பிறகு ஏற்பட்ட தீ விபத்தும் சேர்ந்து வானூர்தியின் முன் பகுதியை அழித்தன. வானூர்தியின் வால் பகுதி பிரதான இடிபாடுகளிலிருந்து தலைகீழாக கீழே வந்து பெரும்பாலும் அப்படியே இருந்தது. இந்த விபத்து காணொலியாகப் பதிவு செய்யப்பட்டது, இது விமானம் தரையில் மோதியபோது தரையிறங்கும் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டதைக் காட்டியது. ரோஸாவியாட்சியாவின் முதற்கட்ட தகவல்கள் அவசர தரையிறக்கத்திற்கான கோரிக்கை பறவைகளின் மந்தையுடன் மோதியதே காரணம் என்று பரிந்துரைத்தன. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் வால் மேற்பரப்பில் குறிப்பிடத்தக்க துளைகளைக் காட்டியது, மேலும் விபத்தில் இருந்து தப்பியவர்கள் ஒரு வெடிப்பைக் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வானூர்தி மற்றும் சில பயணிகளை சிதறுண்ட துண்டுகள் தாக்கியதாகவும் தெரிவித்தனர். வானூர்திக் குழுவினர் முதலில் பறவைகள் மோதியதாக கருதப்பட்ட ஒன்றினால் விமானத்தின் உடல் பகுதியில் வலுவான தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் கஜகஸ்தானின் அவசர சேவைகள், வானூர்தியில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று தெரிவித்தன. பின் விளைவு விபத்தினைத் தொடர்ந்து வானூர்தி விழுந்து நொறுங்கிய துப்காரகன் மாவட்டத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. வானூர்தி விபத்து நடந்த இடத்தில் மொத்தம் 482 அவசரகால இடர்மீட்புப் பணியாளர்கள், 97 சிறப்பு உபகரணங்கள், 10 வெடிபொள்கள் ஆய்வு படைப்பிரிவினர் மற்றும் இரண்டு வானூர்திகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காயமுற்றோருக்கு சிகிச்சையளிக்க அஸ்தானாவிலிருந்து கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். மங்கிஸ்தாவ் மண்டல இரத்த மையம் பொதுமக்களை அணுகி, நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள நபர்கள் இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அவ்வறிவிப்பிற்குப் பிறகு விரைவில், அக்தாவ் நகர மக்கள் இரத்த தானம் செய்வதற்காக மையத்திற்கு வந்தனர். ஏறத்தாழ 300 நபர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். அஸ்தானா வாழ் குடிமக்கள் நகரின் இரத்தம் வழங்கல் மையத்தில் வரிசையில் நின்று இரத்த தானம் செய்னதர். உருசிய அவசர நிலைகள் அமைச்சகம் விபத்துக்கு உதவும் வகையில் உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கஜகஸ்தானுக்கு வானூர்தி மூலம் அனுப்பியது. சம்பவத்தில் காயமடைந்த உருசிய நாட்டவர்களை மாஸ்கோவிற்கு வானூர்தி மூலம் கொண்டு செல்வதாக அமைச்சகம் பின்னர் தெரிவித்தது. உருசிய தூதரகத்தின் ஓரல் அலுவலகத்தில் அவசரகால மையம் நிறுவப்பட்டது, மேலும் தூதரக ஊழியர்களும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர். அக்தாவில் உள்ள அசர்பைஜான் தூதரக பிரதிநிதிகளும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர். தேவையான மருத்துவ உபகரணங்களுடன் ஒரு சிறப்பு மருத்துவக் குழுவினரும் அசர்பைசானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காண்க 2014 சூலை 17 அன்று சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியா எயர்லைன்சு விமானம் 17, 2020 சனவரி மாதம் 17 அன்று சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் பன்னாட்டு ஏர்லைன்சு பறப்பு 752 மேற்கோள்கள் 2024 இல் வானூர்தி விபத்துகளும் நிகழ்வுகளும் அசர்பைஜானில் போக்குவரத்து
685909
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%28%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%29
சான் மாநிலப் படைகள் (வடக்கு)
சான் மாநிலப் படைகள் (வடக்கு) (Shan State Army) மியான்மர் நாட்டின் வடக்கில் உள்ள சான் மாநிலத்தின் வடக்கில் செயல்படும் சான் தேசியவாதம் பேசும் ஒரு ஆயுதக் குழுவாகும். இதன் தாய் அமைப்பு சான் மாநில முன்னேற்றக் கட்சி ஆகும். வரலாறு சான் மாநிலப் படைகள் 24 ஏப்ரல் 1964 அன்றும், இதன் தாய் அமைப்பான சான் மாநில முன்னேற்றக் கட்சி 1971ம் ஆண்டிலும் நிறுவப்பட்டது. மியான்மர் உள்நாட்டு மோதல்களை நிறுத்தம் ஒப்பந்தத்தில் சான் மாநிலச் சிறப்பு மண்டலம் எண் 3 என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மியான்மர் இராணுவம் சான் மாநிலப் படைகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தியது. மியான்மர் உள்நாட்டு போர் ( 2021 முதல்) 2021 முதல் நடைபெறும் மியான்மர் உள்நாட்டுப் போரின் போது சான் மாநில படைகள் (வடக்கு) 30 நவம்பர் 2023 அன்று மியான்மர் அரசு நிர்வாகக் குழுவை எதிர்த்து போரிடும் வகையில், சான் மாநிலப் படைகள் (தெற்கு) உடன் மோதல் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. இதனையும் காண்க ஷான் மாநிலம் 2021 மியான்மர் இராணுவப் புரட்சி மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை) மியான்மர் அரசு நிர்வாகக் குழு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 2011.05.21 Shan State Army North & South join forces against Burma Army SSA – North loses Mongsu camp to Burma Army Shanland மியான்மார்