id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
2422
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
திருவள்ளுவர்
திருவள்ளுவர் () (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச்சங்ககால புலவரான இவர் பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டு அரசு இவர் பிறந்த ஆண்டாக பொ.ஊ.மு 31ஐ அறிவித்து அதன் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிடுகிறது. திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. சங்ககால புலவரான ஔவையார், அதியமான் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்ககால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரைப் பற்றிய செய்தியைத் தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டு செய்தியைக் கூறுவதால், திருவள்ளுவர் பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனாலும் மாமூலனார் பாடல் இடம்பெற்றுள்ள திருவள்ளுவமாலை தொகுக்கப்பட்ட காலம் (பொ.ஊ. 11ஆம் நூற்றாண்டு) மிகவும் பிந்தையது என்பதால், சங்க கால மாமூலனாரும் திருவள்ளுவமாலையில் இடம் பெறும் மாமூலனாரும் ஒருவர் அல்லர் என்னும் கருத்து நிலவுகிறது. திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். வாழ்க்கை திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்கில ஆண்டுடன் முப்பத்தொன்றைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும். காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது. மா. இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் பல்வேறு சான்றுகள் மூலம் மணிமேகலை எழுதப்பட்ட காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்கிறார். சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை தக்க சான்றுகளுடன் மறுத்தும் கூறியுள்ளார். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டது என்று பல்வேறு சான்றுகளை தமிழ் ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர். சிறப்புப் பெயர்கள் திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவை: தேவர் நாயனார் தெய்வப்புலவர் செந்நாப்போதர் பெருநாவலர் பொய்யில் புலவர் பொய்யாமொழிப் புலவர் மாதானுபங்கி முதற்பாவலர் புலவர்களின் பாராட்டுகள் பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம். இவரை, "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என பாரதியாரும், "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர். நூல்கள் திருக்குறள் இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை: ஞான வெட்டியான் பஞ்ச ரத்னம் இதற்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்: "அகமகிழுமம்பிகைப் பெண்ணருளினாலே யவனிதனில் ஞானவெட்டியருள யானும் நிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத நிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே" இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை. இவை போக இன்னமும் சில அற்புதமான நூல்களின் ஆசிரியர் பெயர் வள்ளுவர் எனத் தெரிய வருகிறது. அந்த நூல்களில் முக்கியமானவை: சுந்தர சேகரம் இந்த சுந்தர சேகரம் ஒரு முக்கியமான சோதிட (ஜியோதிஷ) நூல் ஆகும். இதில், பாரதத்தின் பண்டைய சோதிட நூல்களும், அதன் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் இல்லாத பல அரிய சூத்திரங்களும் உள்ளன. திருவள்ளுவரும் சமயமும் திருவள்ளுவரும் சமணமும் திருவள்ளுவர், திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள், சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால், திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். திருவள்ளுவரும் சைவமும் திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர். இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், 'திருவள்ளுவர் சித்தாந்த சைவர்' எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார். அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன. திருவள்ளுவர் கோயில் திருவள்ளுவர் மயிலாப்பூரில், பிறந்த இடத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் என்பது கட்டப்பட்டுள்ளது. இக்கோயில், புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. வள்ளுவரின் உருவம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கிவிட்டன. பலர் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டனர். 1950களின் பிற்பகுதியில், தற்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியைத் துவங்கியவர் கவிஞர் பாரதிதாசன் ஆவார். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இராமச்செல்வன் என்பவருடன் சேர்ந்துவந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை இராமச்செல்வன் ஏற்றுகொண்டார். பின்னர் வேணுகோபால் சர்மா தான் வரைந்த படத்தை முடித்த பிறகு, நாகேசுவரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்தப் படத்தை வைத்தார். அப்போது காமராஜர், கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர். பிறகு இந்தப் படம், 1960இல் கா. ந. அண்ணாதுரையால், காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது. பின்பு 1964 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், வேணுகோபால் சர்மா வரைந்த, திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வரான அண்ணாதுரை இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். பிறகு இதே படம், இந்திய அரசால் அஞ்சல் தலையாகவும் வெளியிடப்பட்டது. 1995 இல் தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை ஒட்டி இந்திய அரசால் இதே படத்தை அடிப்படையாக கொண்ட இந்திய இரண்டு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. நினைவுச் சின்னங்கள் இந்தியாவின் தென் கோடியில் மு.கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர் சிற்பி கணபதி ஸ்தபதி என்பவர். சென்னையில் வள்ளுவர் நினைவாக வள்ளுவர் கோட்டம் என்ற நினைவிடம் ஒன்று தமிழ்நாடு அரசால் 1973-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு திருவாரூர் கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவுச் சின்னமும் உள்ளது. 1960இல் இந்திய அரசு திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது. இவற்றையும் பார்க்கவும் வள்ளுவர் கோட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் ஆண்டு திருவள்ளுவர் நாள் திருவள்ளுவர் கோவில் குறிப்புகள் a. வள்ளுவரின் காலம் பொ.ஊ.மு. நான்காம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டு என்று பாரம்பரியமாகவும் மொழியியல் பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு பகுப்பாய்வு முறைகளின் அடிப்படையிலும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவரது காலம் பொ.ஊ.மு. 31 என்று தமிழக அரசால் 1921-ல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் வள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. மேற்கோள்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திருக்குறள் விக்கிபுத்தகம். Tamilnation.orgல் திருவள்ளுவர் பற்றிய அறிமுகக் கட்டுரை தமிழ்ப் புலவர்கள் திருவள்ளுவர் தமிழ் மெய்யியலாளர்கள்
2423
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம். பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது. பெயர்க் காரணம் "சிலப்பதிகாரம்" என்ற சொல் சிலம்பு, அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. கதை சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள். நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது. மலையாள மொழி பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது. புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. 276 ஊர்களிலிருந்த சிவன்கோயில்களைக் குறிப்பிடும் தேவாரம் இதனைக் குறிப்பிடவில்லை. எனவே புகார் நகரைக் கடல் கொண்டது தேவாரம் தோன்றிய 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது. புகார் நகரத்தில் பலராமனுக்கும், கண்ணனுக்கும் தனித் தனிக் கோயில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. 108 திருப்பதிகளைக் காட்டும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இந்தக் கோயில் பற்றிய செய்தியே இல்லை. இதனாலும் சிலப்பதிகாரம் 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பது உறுதியாகிறது. கண்ணகி விழாவுக்குச் சென்றிருந்த இலங்கை மன்னன் கயவாகு தன் நாட்டு இலங்கையில் எழுப்பப்போகும் கோயிலிலும் எழுந்தருளும்படி, கண்ணகி தெய்வத்தை வேண்டிக்கொள்கிறான். இந்தக் கயவாகு காலம் பொ.ஊ. 114-136 தேவாரம், திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி முதலான நூல்கள் விருத்தப்பா என்னும் பா வகையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் வழக்கில் இருந்த ஆசிரியப்பா நடையில் அமைந்துள்ள சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அந்த நூல்களுக்கு முந்தியவை. எனவே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு. சான்றுடன் மணிமேகலை காலம் : 1. நாகார்ச்சுனரால் உண்டாக்கப்பட்ட மகாயான பௌத்த மதக் கொள்கைகள் மணிமேகலையில் கிடையாது. ஆனால் ஈனயான பௌத்த மதக்கொள்கைகள் நிரம்பி இருப்பதனால் மணிமேகலை காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு என்கின்றனர். 2. கிருதகோடி ஆசிரியர் பற்றி குறிப்பிடுவதால் மணிமேகலை பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்றனர் ஆய்வாளர்கள். பல்வேறு சான்றுகளை ஒப்பீடு செய்து கால ஆராய்ச்சி என்னும் தன் நூலில் சி. இராசமாணிக்கனார் மணிமேகலை காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு என்றார். 3. சங்கப் புலவர் மாமூலனார் பிறந்த காலம் பொ.ஊ.மு. நான்காம் நூற்றாண்டின் மத்திய பகுதி என கல்வெட்டு மற்றும் ஓலைச் சுவடி பாடல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாமூலனார் காலத்தின் மூலம் கணக்கிட்டதில் மணிமேகலை காலம் பொ.ஊ. முதல் நூற்றாண்டின் ஆரம்ப காலம் என சந்தேகம் இல்லாமல் நிரூபிக்கபட்டுள்ளது தற்காலத்தில். இளங்கோவடிகள் இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர். சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவர் ஆவார். நூலமைப்பு காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல் இதுவேயாகும். சிலப்பதிகாரம், நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. காண்டங்கள் புகார்க் காண்டம் மதுரைக் காண்டம் வஞ்சிக் காண்டம் காலமும் சமயமும் காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாயகனின் மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்ற அழகும், அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு, இன்புற்று வாழ்ந்தனர். கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில் கானல் வரிப் பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்தான், பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான். வணிகம் செய்தற்பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியும் சென்றார். அவர், மதுரை நகர்ப்புறத்தில் மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார். கோவலன் சிலம்பு விற்று வர மதுரை நகரக் கடை வீதிக்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றை கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான். பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை , சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்த கண்ணகி; பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர் " என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம்" கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது" என்றாள். அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பினைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள். புகார்க்காண்டம் இது 10 காதைகளைக் கொண்டது.அவை, மங்கல வாழ்த்துப் பாடல் மனையறம் படுத்த காதை. அரங்கேற்று காதை. அந்தி மாலைச் சிறப்பு செய் காதை. இந்திர விழவு ஊர் எடுத்த காதை. கடல் ஆடு காதை. கானல் வரி வேனிற்காதை கனாத் திறம் உரைத்த காதை. நாடு காண் காதை மங்கல வாழ்த்துப் பாடல் புகார் நகரிலே, கோவலனின் தந்தையான மாசாத்துவானும், கண்ணகியின் தந்தையான மாநாய்கனும், தம் மக்கள் இருவருக்கும் மணஞ்செய்வித்த சிறப்பும், மணமகளை மாதர்கள் பலர் சூழ்ந்து நின்று மங்கல வாழ்த்து உரைத்தலும், இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. திருமணத்தின் போது கண்ணகிக்கு வயது பன்னிரண்டாண்டு ஆகும். கோவலன் திருமணத்தின் போது பதினாறு ஆண்டு பருவத்தை உடையவன். வானத்து அருந்ததியைப் போலும் தகைமையுடைய கண்ணகியைக் கோவலன், மிகவும் வயது முதிர்ந்த பார்ப்பான் மறைவழிகளைக் காட்டி ஒன்று சேர்க்க மணந்து, அவளுடன் தீயினையும் வலம் வந்த காட்சியைக் கண்டவர் கண்கள் தவம் செய்தவை ஆகும். மங்கல மகளிர் மணமக்களையும் தம் மன்னன் செம்பியனையும் வாழ்த்தினர். மனையறம் படுத்த காதை திருமணத்தால் ஒன்றுபட்ட கோவலனும் கண்ணகியும் தம்முட்கூடி இல்லறம் நிகழ்த்திய செய்திகள் பலவும் இதன்கண் கூறப்படுகின்றன. சில ஆண்டுகளாக அவர்களின் இல்வாழ்வும் இன்பமுடனேயே கழிந்தது என்பதனையும், அவர்களைத் தனி மனைக்கண் பெற்றோர் இருத்தியதையும், அவர்கள் தனிக் குடும்பமாக வாழத்தொடங்கியதையும் இக் காதை கூறுகிறது. அரங்கேற்று காதை மாதவி என்னும் ஆடல்மகள் சேர மன்னர்த் தன் நாட்டியத் திறம் எல்லாம் தோன்ற ஆடிக் காட்டினாள். அவள் தலையரங்கேறித் தலைக்கோலம் பெற்றாள். அவள் ஆடலைக் கண்டு மகிழ்ந்த காவல் மன்னன், அந்நாட்டு நடைமுறையான இயல்பிலிருந்து வழுவாமல், அரசனின் பச்சை மாலையையும், 'தலைக்கோலி' என்ற பெயரையும் மாதவி பெற்றனள். தலையரங்கிலே ஏறி ஆடிக்காட்டி, 'நாடக கணிகையர்க்குத் தலைவரிசை' என நூல்கள் விதித்த முறைமையின்படி, ஆயிரத்து எட்டுக் கழஞ்சுப்பொன்னை ஒருநாள் முறையாகப் பெறுபவள், என்ற பெருமையையும் பெற்றனள். நகரத்து இளைஞர்கள் பலரும் திரிந்து கொண்டிருக்கிற பெருந்தெருவிலே, கூனி, மாதவியின் மாலையை விலை கூறுவாள்.கோவலன் அதற்குரிய ஆயிரம் பொன்னையும் தந்து வாங்கினான். கூனியுடனே, தானும் மாதவியின் மணமனைக்குச் சென்றான். குற்றமற்ற சிறப்பினையுடைய தன் மனைவியின் நினைவையே தன் உள்ளத்திற் சிறிதும் கொள்ளாதவனாகி, தன் வீட்டை, கண்ணகியை, அறவே மறந்து மாதவி வீட்டினிலேயே மாலைத் தங்குவானுமாயினன் என்பதைக் கூறும் பகுதியே அரங்கேற்றுக் காதை. அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை மாலை நேரத்திலே, தம்முள் கூடினார் இன்பத்திலே திளைத்து மயங்குவதும், பிரிந்தவர் அளவுகடந்த வேதனையால், நைந்து அயர்வதும் இயல்பு ஆகும். கோவலனோடு கூடியிருந்த மாதவியும், அவனால் கைவிடப்பட்ட கண்ணகியும், ஒருநாள் மாலை வேளையிலே இருந்த இருவேறு மயக்கநிலைகளையும் விளக்கிக்காட்டி, மாலைக்காலத்தின் தகைமையை இப்பகுதியில் கூறுகின்றனர். தம்மோடு கலந்து உறவாடுபவர்களுக்கு நிழலாகியும், தம்முடன் கூடாது பிரிந்து வாழ்பவர்களுக்கு வெய்யதாகவும், காவலனின் வெண்கொற்றக் குடைபோல, முழுநிலவும் வானிலே விளங்கிற்று. வானத்திலே ஊர்ந்து செல்லும் நிலவு தான் கதிர்விரிந்து அல்லிப்பூக்களை மலர்விக்கும் இரவுப் பொழுதிலே, மாதவிக்கும் கண்ணகிக்கும் அவ்வாறு நிழலாகவும் வெய்யதாகவும் விளங்கி, அவர்களை முறையே இன்பத்திலும் துன்பத்திலும் ஆழ்த்திற்று என்பது இக்காதை கூறும் செய்தியாகும். இந்திரவிழவு ஊர் எடுத்த காதை புகார் நகரின் அமைப்பும், அங்கு வாழ்ந்த பல்வேறு வகையினரான குடியினர்களும், அவ்வூரார் இந்திர விழாக் கொண்டாடிய சிறப்பும் பற்றிச் சொல்லும் சிறந்த பகுதி இது. புகார் நகரின் மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் ஆகிய இடங்களின் சிறப்பையும், ஐவகை மன்றங்களாகிய தெய்வமன்றம், இலஞ்சிமன்றம், ஒளிக்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம் ஆகியவிற்றில் அரிய பல்வேறு பலிகளையும் இட்டு மக்கள் பலரும் வழிபட்டுப் போற்றிய நிகழ்ச்சியையும் எடுத்துரைக்கின்றது. வழிபாடுகளும் விழாக்களும் எங்கனும் நிகழ்கின்றன. விழாக்களிப்பிலே மனம் தளர்ந்த தம் கணவரோடு மனைவியர் சினந்து ஊடுகின்றனர். உட்புறத்திலே நறுந்தாது நிறைந்து இருத்தலால், மேலேயிருக்கும் கட்டு அவித்து, தேன் சொரிய நடுங்கும் கழுநீர் மலரினைப்போலக், கண்ணகியின் கருங்கண்ணும் மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை மறைத்துத் தத்தம் எண்ணத்தை அகத்தே ஒளிக்க முனைந்து, விண்ணவர் கோமானின் விழவு நாட்களிலே நீர் உகுத்தன. அவ்வேளையில் கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடிக்கின்றன. பிரிவுத்துயரால் கண்ணகிக்கும், ஆனந்த மிகுதியால் மாதவிக்கும் கண்கள் நீரைச் சொரிந்தன. கடல் ஆடு காதை விஞ்சையர் வேரன் ஒருவன், தன் காதலியுடன் புகாருக்கு இந்திர விழாக் காணவந்தான். மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் தன் காதலிக்குக் காட்டி மகிழ்ந்தான். விழா முடிந்ததும் கோவலன் மாதவியோடு ஊடினான். மாதவி அவன் ஊடல் தீர்த்துக் கூடினாள். பின்னர்க் கடலாட விரும்பினாள். இருவரும் கடற்கரைச் சென்றனர். களித்திருக்கும் பிற மக்களோடு தாமும் கலந்தவராக அவர்கள் மகிழ்ந்திருந்தனர் என்பதை எடுத்துரைக்கும் பகுதி இது. கானல் வரி கோவலனும் மாதவியும் யாழிசையுடன் சேர்ந்து கானல்வரிப் பாடல்களைப் பாடுகின்றனர். இறுதியிலே, கோவலனின் மனம் மாறுகின்றது அவனுடைய ஊழ்வினை சினந்துவந்து அவன் பாற் சேரத் தொடங்கிற்று. முழுநிலவினைப் போன்ற முகத்தினளான மாதவியை, அவளோடு கைகோர்த்து இணைந்து வாழ்ந்த தன் கைப்பிணைப்பை, அந்நிலையே நெகிழவிட்டவனும் ஆயினான். மாதவியுடன் செல்லாது, தன் ஏவலாளர் தன்னைச் சூழ்ந்துவர, கோவலன், மாதவியைவிட்டுப் பிரிந்து, தான் தனியாகவே சென்று விட்டான். செயலற்ற நெஞ்சினளானாள் மாதவி. தன் வண்டியினுள்ளே சென்றும் அமர்ந்தாள். காதலன் தன்னுடன் வருதல் இல்லாமலேயே, தனியாகவே, தன்மனைச் சென்று புகுந்தாள். கானல் விழாவின் முடிவில் மன்னனை வாழ்த்தும் மரபும் பேணப்பட்டது. ஊழ்வினை வந்து உருத்தது என்பதனைக் காட்டும் உருக்கமான பகுதி இது. வேனிற்காதை இளவேனிற் பருவமும் வந்தது. கோவலனின் பிரிவாலே துயரடைந்த மாதவி, தன் தோழி வசந்தமாலையைத் தூது அனுப்பினாள். தன்பால் வந்த தூதினைக் கோவலன் மறுத்தான். வசந்தமாலையிடம், ஆயிழையே! அவளோர் ஆடல் மகள்! ஆதலினாலே, என்பாற் காதல் மிகுந்தவளேபோலே நடித்த நாடகமெல்லாம், அவளுடைய அந்தத் தகுதிக்கு மிகவும் பொருத்தம் உடையனவே! தன்மேல் அவளுக்கு உண்மையான காதல் எதுவும் இல்லை எனக் கூறி மாதவியை நாடி வர மறுத்தான். அதனால் மாதவி மனம் துடித்தாள். இளவேனிற்கு முந்திய பருவத்தே பிரிந்தவன், இளவேனிற் காலத்திலாவது வருவானென மயங்கியிருந்த அவள் மனம், இளவேனிற்காலம் வரவும் அவன் வாராமை கண்டு, நிலை கொள்ளாது தவிக்கின்றது என்பதையும் காணலாம். இளவேனில் பற்றிய ஏக்கமே, கோவலனிடம் கண்ணகி நினைவையும் தூண்டிற்று என்பதும் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. கனாத்திறம் உரைத்த கதை கண்ணகி, தேவந்தியிடம் "யான், இனி என் கணவனுடன் கூடுதலைப் பெறவே மாட்டேன். என் நெஞ்சம் ஏனோ வருந்துகின்றது! கனவிலே நேற்றிரவு கோவலன் வந்தான். என் கைப்பற்றி'வருக! என அழைத்தான். இருவரும் வீட்டைவிட்டுப் போய், ஒரு பெரிய நகரினுள் சென்றோம். சேர்ந்த நகரிலே என் மீது தேளினைப் பிடித்து இட்டவரைப்போலக், 'கோவலனுக்கு ஒரு தீங்கு விளைந்தது' என்று எங்கட்கு ஏலாத்தோர் வார்த்தையினைச் சொல்லினர். அது கேட்டுக் காவலன் முன்னர்ச் சென்று யானும் உண்மையைக் கூறி வழக்கு உரைத்தேன். காவலனோடு, அவ்வூருக்கும் நேரிட்ட தீங்கு ஒன்றும் உண்டாயிற்று. அந்நிலையே யான் பேச்சற்றேன்" என்று தான் கண்ட கனவை எடுத்துரைத்தாள். கோவலன் கண்ணகியிடம் மீண்டும் வந்தான். தன் மனைவியின் வாடிய மேனியும் வருத்தமும் கண்டான். தம் குலத்தவர் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவைகள் எல்லாமே தொலைந்து போயின; அதனால் வந்த இல்லாமை நிலை தனக்கு வெட்கத்தைத் தருவதாகவும் கூறினான். கண்ணகியோ தன் திருமுகத்திலே முறுவலினைக் காட்டி "சிலம்புகள் உள்ளன; எடுத்துக் கொள்ளும்" என்றாள். காதலியான கண்ணகியானவள் கண்ட தீய கனவு, கரிய நெடுங் கண்களையுடைய மாதவியின் பேச்சினையும் பயனற்றுப் போகச் செய்தது. பழவினை வந்து கோவலனின் நெஞ்சினைத் தன் போக்கிலே ஒருப்படுத்தப், பொழுது விடியுமுன் இருவரும் தம் வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறி, மதுரை நோக்கிப் பயணமாயினர். இப்பகுதியில் கண்ணகியின் கனவு விளக்கப்பட்டுள்ளது. நாடுகாண் காதை வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறிய கோவலனும் கண்ணகியும், கவிந்தியடிகளுடன் மதுரையை நோக்கி நடந்ததனர். திருவரங்கத்தைக் கடந்து, அம்மூவரும் சோணாட்டு உறையூர் வரையும் சென்றது பற்றிக் கூறுவது இப்பகுதியாகும். இத்துடன் புகார்க் காண்டம் முடிவுற்றது. மதுரைக் காண்டம் இது 13 காதைகளைக் கொண்டது. அவை, காடு காண் காதை, வேட்டுவ வரி, புறஞ்சேரி இறுத்த காதை, ஊர் காண் காதை, அடைக்கலக் காதை, கொலைக்களக் காதை, ஆய்ச்சியர் குரவை, துன்ப மாலை, ஊர் சூழ் வரி, வழக்குரை காதை, வஞ்சின மாலை, அழற்படுகாதை, கட்டுரை காதை என்பவை ஆகும். காடுகாண் காதை கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் என்னும் மூவரும், தென்திசை நோக்கி நடையைத் தொடர்ந்தனர். இடைவழியிலே மாங்காட்டு மறையோனைச் சந்தித்து, வழியின் இயல்புகளை அவன் மூலம் கேட்டு அறிந்தனர். கானுறை தெய்வம் வசந்த மாலையின் வடிவிலேத் தோன்றிக் கோவலனின் மதுரைப் போக்கைத் தடுக்க முயல்கிறது. 'வசந்தமாலையின் வடிவிலே தோன்றினால், மாதவியின் பேரிலுள்ள காதலினால் இவன் நமக்கு இசைவான்' என்று கருதிய அத்தெய்வம் கோவலனின் பாதங்களின் முன் வீழ்ந்து கண்ணீரும் உகுத்தது. வசந்தமாலை, ஏதோ பிழைபட்ட சொற்களைக் கோவலனிடம் சொன்னதால்தான் கோவலன், தன்னைக் காண வராமல் கொடுமை செய்து விட்டான் என்று மாதவி கூறி மயங்கியும் வீழ்ந்தாள் என்றும் மாதவி, கணிகையர் வாழ்வு, என்றும் கடைப்பட்ட வாழ்வே போலும்! என்று சொல்லி வருந்திக் கண்ணீர் உகுத்ததாகவும் வசந்தமாலையின் வடிவில் தோன்றிய கானல் தெய்வம் கூறியது. மயக்கும் தெய்வம் இக்காட்டிலே உண்டு என்று வியக்கத்தக்க மறையவன் முன்னரே கோவலனிடம் சொல்லியிருந்தனன். கோவலன் கூறிய மந்திரத்தால் வசந்தமாலை வடிவில் தோன்றியக் கானுறை தெய்வம் "யான் வனசாரிணி; நினக்குமயக்கம் விளைவித்தேன்; புனத்து மயிலின் சாயலினையுடைய நின்மனைவிக்கு, புண்ணிய முதல்வியான கவுந்தியடிகளுக்கும் என் செயலைக் கூறாது போய் வருக' என்று சொல்லி, அத்தெய்வம், அவ்விடத்து நின்றும் மறைந்து போய்விட்டது. அதன்பின்னர் மூவரும் ஐயையின் திருக்கோயிலைச் சென்றடைகின்றனர். வேட்டுவ வரி ஐயைக் கோட்டத்திலே ஒரு பக்கமாகச் சென்றிருந்து கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகிய மூவரும் இளைப்பாறுகின்றனர். அங்கே 'சாலினி' தெய்வமேற்று, கண்ணகி வாழ்வின் பின்நிகழ்வுகளைக் கூறுகின்றாள். பின், வேட்டுவர் வரிப்பாட்டுப் பாடி கூத்து ஆடுகின்றனர். புறஞ்சேரி இறுத்த காதை பகல் நேர வெய்யிலோ கடுமையாயிருந்தது. அதனால் பகலிற் செல்லாது, இரவில் நிலவு வெளிச்சத்திலேயே அவர்கள் வழிநடந்தனர். இடையே, ஓரிடத்திலே, கௌசிகன் மாதவியின் ஓலையுடன் வருகின்றான். தன் பெற்றோர் அருமணி இழந்த நாகம் போலும் இன்னுயிர் இழந்த யாக்கை போன்றும் துயருற்ற சம்பவத்தையும், உற்றோரும் துயர்க் கடல் வீழ்ந்ததையும், மாதவியின் துயரத்தையும் கௌசிகன் கொண்டுவந்த, மாதவியின் கடிதத்தின் மூலம் அறிந்தான். மாதவியும் குற்றமற்றவளே என்பதை உணர்ந்து, அக்கடிதத்தையே தன் பெற்றோரிடம் கொண்டுபோய் கொடுக்கும்படியாக கோவலன், கௌசிகனை வேண்டினான். கௌசிகனை மீண்டும் புகாருக்கு அனுப்பிவிட்டுக் கோவலன், அவ்வழியிடையே வந்து தங்கிய பாணருடன் கூடி யாழிசைக்கின்றான். அவர்பால் மதுரையின் தூரத்தினைக் கேட்டறிந்து, வைகையாற்றை மரத்தெப்பத்தாற் கடந்து செல்லும் போது வைகையாறு கண்ணகிக்கு ஏற்படப்போகும் துன்பத்தைத் தான் முன்னரே அறிந்தவளைப்போலப், புண்ணிய நறுமலர் ஆடைகளால் தன் மேனி முழுவதும் போர்த்துத், தன்கண் நிறைந்த மிகுந்த கண்ணீர் வெள்ளத்தையும் உள்ளடக்கிக்கொண்டு, அவள் அமைதியாகவும் விளங்கினாள். பின்னர் இனிய மலர்செறிந்த நறும்பொழிலின் தென்கரையினைச்சென்று அவர்கள் சேர்ந்தனர். பகைவரைப் போரிலே வென்று வெற்றிக் கொடியானது, 'நீவிர், இவ்வூருக்குள்ளே வாராதீர்' என்பது போல, மறித்துக் கைகாட்டியபடியே பறந்து கொண்டிருந்தது. அறம்புரியும் மாந்தர் அன்றிப் பிறர் யாரும் சென்று தங்காத, புறஞ்சிறை மூதூரினை நோக்கி அவர்கள் மூவரும் விரும்பிச் சென்றனர். ஊர்காண் காதை புறஞ்சிறை மூதூரிலே, கவுந்தியும் கண்ணகியையும் தங்கியிருக்க வைத்துவிட்டுக் கோவலன் மதுரை நகருக்குள் சென்று அங்குள்ள செல்வர், அரசர் வீதி, எண்ணெண் கலையோர் வீதி, அங்காடி வீதி, இரத்தினக் கடைத் தெரு, பொன்கடை வீதி, அறுவை வீதி, கூல வீதி ஆகிய பல்வேறு வீதிகள் வழியாகச் சென்று அவற்றின் சிறப்புகளையும் கண்டு, மீண்டும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் செய்தியைக் கூறும் பகுதி இது. அடைக்கலக் காதை புறஞ்சேரிக்குத் திரும்பிய கோவலன், மதுரையிலே கண்டவெல்லாம், கவுந்தியிடம் வியப்போடு எடுத்துக் கூறினான். 'தென்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை உணர்த்தி' என்று சொல்லி மதுரை சென்றவன், அதுபற்றி ஏதுங் கூறவில்லை. கவுந்தியம்மை கவலையடைகின்றார். அவ்வேளை, 'மாடலன்' அங்கே வருகின்றான். கோவலனின் சிறப்புகளைக் கூறுகின்றான். துறந்தோருக்குரிய அவ்விடத்தை விட்டுப் பொழுது மறைவதற்குள் மதுரை நகருட் செல்லுமாறு மாடலனும் கவுந்தியும் கோவலனைத் தூண்டுகின்றனர். அவன் செயலற்று இருக்கவே, அவ்வழியாக வந்த மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக அளிக்கின்றார் கவுந்தியடிகள். அவளும், கண்ணகியுடன் கோவலனும் பின்வரத் தன்வீட்டிற்கு அவளை அன்போடு அழைத்து போகின்றாள். கொலைக்களக் காதை கோவலன் கண்ணகியருக்கு ஒரு புது மனையிலே இடந்தந்து, பல்வகைப் பொருளும் தருகின்றாள் மாதரி. தன் மகளையும் கண்ணகிக்குத் துணையாக அமைக்கின்றாள். கண்ணகி சோறாக்கித் தன் கணவனை உண்பிக்க, அவனும் அவளைப் பாராட்டி, தன் நிலைக்கு வருந்துகின்றான். கண்ணகியின் காற்சிலம்புகளுள் ஒன்றைக் கையிலே எடுத்துக்கொண்டு மதுரை நகருக்குப் போய் விலை மாறி வருவதாகக் கூறிச் சென்றான். கடைவீதி வழியே செல்லும்போது பொற்கொல்லன் ஒருவன் தன் பின்னே நூற்றுக்கணக்கான பொற்கொல்லர் தொடர்ந்துவர முன்னால் நடந்து வந்தான். அவனை அரண்மனைப் பொற்கொல்லன் என்று கருதி கோவலன் தான் கொண்டுவந்த காற்சிலம்பை அவனிடம் கொடுத்து விற்றுத் தருமாறு வேண்டுகின்றான். தன் குடிலில் கோவலனை இருத்திவிட்டு அக்காற்சிலம்பை மன்னருக்கு அறிவித்து வருவதாகச் சொல்லிச் சென்றான். பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கோவலன் கொல்லப்பட்டு இறந்தான். ஆய்ச்சியர் குரவை ஆயர் சேரியிலே பல தீய நிமித்தங்கள் தோன்றின. குடத்திலிட்டு வைத்த பாலோ உறையவில்லை. ஏற்றின் அழகிய கண்களிலிருந்து நீர் சொரிகின்றன. வெண்ணெயோ உருக்கவும் உருகாது போயிற்று. ஆநிரைகளின் கழுத்து மணிகள் நிலத்திலே அறுந்து வீழ்கின்றன. ஆட்டுக்குட்டிகள் துள்ளியாடாவாய் முடங்கிக் கிடக்கின்றன. அதனால் தீமை நேரும் என்று அஞ்சிய ஆயமகளிர்கள், தம் குலதெய்வமான கண்ணனை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர். துன்ப மாலை கண்ணகியின் துன்பத்தை உணர்த்துவதால் துன்ப மாலை என அழைக்கப்படுகிறது. குரவையின் முடிவிலே, மாதரி வைகையிலே நீராடிவிட்டுவரப் போயினாள். கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்டுக் கண்ணகி புலம்பினாள். இப்பகுதியில் கண்ணகியின் அவல மிகுதியைக் காண்கின்றோம். அவள் காய்கதிர்ச் செல்வனை விளித்துக் கேட்டாள். "நின் கணவன் கள்வனல்லன்; இவ்வூரினைப் பெருந்தீ உண்ணப்போகின்றது" என்ற குரல் ஒன்று எழுந்தது. ஊர்சூழ் வரி எழுந்து ஒலித்த அக்குரலை அனைவருமே கேட்டனர். கண்ணகியும், தன்பாலிருந்த மற்றொரு சிலம்பினைத் தன் கையிலே எடுத்துக் கொண்டவளாகத், தன் கணவனின் உடலினை காணப் புறப்பட்டாள். அவன் கிடந்த நிலையைக் கண்டு அரற்றினாள். அவன் வாய் திறந்து பேசவும் கேட்டாள். குலமகளாகப் பொறுமையின் வடிவமாகத் துயரங்களைத் தாங்கி அமைதியோடிருந்தவள், கொதித்துப் பலரும் அஞ்சி ஒதுங்க, வம்பப் பெருந்தெய்வம்போல ஆவேசித்து, மன்னன் அரண்மனை நோக்கி அறம் கேட்கப் போகும் நிலையையும் காண்கின்றோம். இந்த நிலைமாற்றம் பெண்மையின் தெய்வீகப் பேரியல்பு என்றும் உணர்கின்றோம். வழக்குரை காதை கண்ணகி அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசாத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர்" என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம் "கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது"என்றாள். அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே!எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள். வஞ்சின மாலை பாண்டியன் உயிர்விட்ட அக்காட்சி கண்ணகியைத் திகைப்படையச் செய்தது. கோப்பெருந்தேவியது கற்பின் செவ்வி அவளைப் பெரிதும் வியப்படையவும் செய்தது. எனவே, தானும் கற்புடை மகளிர் பலர் பிறந்த நகரிலே பிறந்தவள் என்றும், பத்தினியே என்றும், அரசோடு மட்டும் அமையாது மதுரை நகரினையும் அழிப்பேனென்றும் வஞ்சினம் கூறிச் சென்று, தீக்கடவுளையும் மதுரை மீது ஏவுகின்றாள். அழற்படு காதை தீத் தெய்வத்தைக் கண்ணகி மதுரை மீது ஏவினாள். அதன் பயனாக மதுரை மூதூரினை எரிபற்றி உண்ணத் தொடங்கியது. நால்வகை வருணபூதங்களும் பிறவும் நகரைவிட்டு விலகிப்போயின. கணவனை இழந்துவிட்ட பிரிவுத் துயரோடு உள்ளம் கொதித்து, உலைக்களத்துத் துருத்திமுனைச் செந்தீயைப் போலச் சுடுமூச்செறிந்தனள் கண்ணகி. அங்ஙனம் சுடுமூச்செறிந்தவளாகத் தெருக்களிலெ கால்போன இடமெல்லாம் அவள் சுழன்று திரிந்தாள். குறுந்தெருக்களிலே கவலையுடன் நிற்பாள். போய்க்கொண்டும் இருப்பாள். மயங்கிச் செயலழிந்தும் நிற்பாள். இவ்வாறு பெருந்துன்பம் அடைந்த வீரபத்தினியின் முன்னர், மலர்ந்த அழலின் வெம்மைமிக்க நெருப்பினைப் பொறாதவளான 'மதுரபதி' என்னும் மதுரைமாதெய்வம் வந்து தோன்றினாள். கட்டுரைக் காதை மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன்னால் தோன்றுகிறது. அவளது பண்டைய வரலாறும், கோவலன் செய்த பழைய பழியும் கூறுகின்றது. கண்ணகியும் மதுரையை விட்டு வெளியேறித் திருச்செங்குன்றினைச் சேர்ந்து, மதுராபதி கூறியபடியே, தன் கணவனுடன் ஒன்றுபடுகிறாள். இத்துடன் மதுரைக் காண்டம் முற்றுப்பெற்றது. வஞ்சிக் காண்டம் குன்றக் குரவை காட்சிக் காதை கால்கோள் காதை நீர்ப்படைக் காதை நடுகற் காதை வாழ்த்துக் காதை வரம் தரு காதை ஆகிய ஏழு காதைகளைக் கொண்டது. குன்றக் குரவை திருச்செங்குன்றினைச் சேர்ந்த கண்ணகியாள், மலர் நிறைந்த ஒரு வேங்கை மரத்தின் அடியிலே சென்று நின்றனள், மதுரைமா தெய்வம் கூறியதைப் போலவே, கோவலன் இறந்ததன்பின் பதினான்கு நாட்கள் கழிந்திருந்தன. வானுலகத்திலிருந்து தேவருடன் அவர் வர, அவனுடன் அவளும் விமானம் ஏறி வானகம் நோக்கிச் சென்றனள். அக் காட்சியைக் குறவர் குடியினர் கண்டனர். அவர்கள் அடந்த வியப்போ பெரிது!அதனால், அவளைத் தம் குலதெய்வமாகவே கொண்டு வழி பட்டுப் பணிந்து போற்றலாயினர். காட்சிக் காதை சேர வேந்தனான செங்குட்டுவன் மலைவளம் காணச் சென்றான். கண்ணகி வேங்கை மரத்தடியில் நின்றதும், தாம் கண்ட அதிசயமும் குன்றக் குறவர் அவனுக்குக் கூறினர். அப்போது அங்கே அவ்விடத்தே இருந்த சாத்தனார், கண்ணகி வழக்கு உரைத்ததும், மதுரை தீயுண்டதும் பற்றி அவர்கட்குக் கூறினார். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் நட்டு வழிபட எண்ணினான். வடநாட்டு வேந்தர் சிலரின் வீராப்பான பேச்சு இமயத்திற்கே செல்ல அவனைத் தூண்டியது பற்றிய அரசாணையும் எழுந்தது என்பது இது. கால்கோட் காதை செங்குட்டுவன் படைப்பெருக்கோடு வடநாடு நோக்கிச் சென்றான். எதிர்த்த ஆரிய மன்னர்கள் பலரையும் வென்றான். இமயத்திலே பத்தினிக்குக் கல்லும் தோண்டிக் கொண்டான். நீர்படைக் காதை கண்ணகிப் படிவத்திற்கான கல்லினைத் தோண்டிக் கொணர்ந்து, நீர்ப்படை செய்தது முதல், மீண்டும் செங்குட்டுவன் வஞ்சிமா நகரம் திரும்பியது வரை கூறுவது. நடுகற் காதை பத்தினியாளான கண்ணகிக்கு இமயத்திலேயிருந்து கொணர்ந்த கல்லிலே படிவம் சமைத்து, அதனை முறைப்படி, விழாக்கோலத்துடன் தெய்வமாக போற்றிக் கொண்டாடிய செய்திகளைக் கூறுவது இப்பகுதி. வாழ்த்துக் காதை கண்ணகிப் படிமத்தின் கடவுள் மங்கலம் நடைபெற்றது. செங்குட்டுவன் வந்திருந்தான். பல சிற்றரசர்களும் வந்து திறை செலுத்தினர். தேவந்தி முதலியோர் கண்ணகி கோயிலுக்கு வந்து அரற்றினர். கண்ணகி தேவ வடிவிலே தோன்றுகின்றாள்; செங்குட்டுவனையும் வாழ்த்துகின்றாள். வரந்தரு காதை மணிமேகலை துறவைப்பற்றி தேவந்தி சொன்னாள். அவள் மேல் சாத்தன் ஆவேசித்துப் பேசுகிறான். கண்ணகியின் தாய், கோவலனின் தாய், மாதரி என்பவர், தம் அடுத்த பிறப்பிற் சிறுகுழந்தைகளாக அங்கு வந்து, தாம் மீண்டும் பிறந்ததன் காரணம் பற்றிக் கூறுகின்றனர். பத்தினிக்குப் பூசை செய்யத் தேவந்தி அனுமதி பெறுகிறாள். பல நாட்டு மன்னரும் வணங்கி விடைபெறுகின்றனர். வேள்விச் சாலைக்குச் செங்குட்டுவன் செல்லுகின்றான். நூலாசிரியருக்குக் கண்ணகி அவர்தம் முன்வரலாறு உரைக்கின்றாள். முடிவில் உலகோர்க்கான அறிவுரைகளுடன் சிலப்பதிகாரம் முடிவடைகிறது. கதை மாந்தர்கள் கண்ணகி - பாட்டுடைத் தலைவி. கோவலனது மனைவி. களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் கற்புநெறியின் அளவுகோலாகவும் படைக்கப்பட்டவள். தெய்வம் தொழாள் கொழுனன் தொழுவாள் என வள்ளுவர் உரைத்த மங்கை. கணவன் போற்றா ஒழுக்கம் புரிந்தபோதும் அதை மாற்றா உள்ள வாழ்கையே ஆனவள். கணவனுக்காக மதுரை மாநகரையே எரித்தவள். கோவலன் - பெரும் செல்வந்தர் மாசாத்துவானின் மகன். பிற ஒழுக்கங்கள் அனைத்தும் நிறைந்திருந்தாலும் மோகத்தால் அழிந்தவன். ஊழ்வினை காரணமாக உயிரிழந்தவன். மாதவி - பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய். சிலம்பு செல்வர் ம. பொ. சிவஞானம் சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம. பொ. சியைச் சாரும்.இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூட்டினார்.ரா. பி. சேதுப்பிள்ளை மூலம் 'சிலம்பு செல்வர்' என்னும் பட்டம் பெற்றார். சிலப்பதிகாரம் பற்றி ம. பொ. சி எழுதிய நூல்கள் சிலப்பதிகாரமும் தமிழரும் [1947] கண்ணகி வழிபாடு [1950] இளங்கோவின் சிலம்பு [1953] வீரக்கண்ணகி [1958] நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) [1961] மாதவியின் மாண்பு [1968] கோவலன் குற்றவாளியா? [1971] சிலப்பதிகாரத் திறனாய்வு [1973] சிலப்பதிகார யாத்திரை [1977] சிலப்பதிகார ஆய்வுரை [1979] சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு [1980] சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் [1990] சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994] இவற்றையும் பார்க்கவும் தமிழிசை ஆதாரங்கள் பட்டியல் பழமையான இசைநூல்களும் காலங்களும் சிலப்பதிகாரம், பாவமைதி சிலப்பதிகாரத்தில் சமூகவியல் செய்திகள் சிலப்பதிகாரத்தில் அரசு முறை செய்திகள் சிலப்பதிகாரத்தில் சமயக் கோட்பாடுகள் உசாத்துணைகள் ஆர். கே. சண்முகம் செட்டியார். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட உரை. புதுமலர் நிலையம் -வெளியீடு- 1946 வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட மதிப்புரை. புதுமலர் நிலையம் வெளியீடு -:1946 எஸ். வையாபுரிப்பிள்ளை. தமிழ் ஆராய்ச்சித்துறைத்தலைவர். சென்னைப் பல்கலைக்கழகம்- சிலப்பதிகாரப் : புகார்க்காண்டம் முன்னுரை. புதுமலர் நிலையம் வெளியீடு- 1946 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சிலப்பதிகாரம் - முழுமையும் - சென்னைநூலகம்.காம் சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம்.pdf சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம்.pdf சிலப்பதிகாரம் - வஞ்சிக்காண்டம்.pdf Tamil Nadu's Silapathikaram Epic of the Ankle Bracelet: Ancient Story and Modern Identity by Eric Miller Tamil Culture, Kannagi and the Ankle Bracelet சிலப்பதிகாரம் வலைத்தளம் பரதநாட்டிய நூல்கள் ஐம்பெருங் காப்பியங்கள் பௌத்த தமிழ் இலக்கியங்கள்
2425
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli அல்லது Trichinopoly), இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இது தமிழ்நாட்டின் பெருநகரங்களுள் ஒன்றாகும். இந்நகரம் தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். இந்த நகரம் தென்னிந்தியாவின் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரமாகவும் உள்ளது. இதைப் பொதுவாகத் திருச்சி (Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேல் பகுதியில் இந்தியாவில் எவ்விடத்திலும் இல்லாத இந்து சமயத்தின் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு உச்சிப் பிள்ளையார் என்ற பெயரில் தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்றாகும். முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் (1980–1984) ஆட்சி காலத்தில் அரசியல் தலைமையிடமாக திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலைநகரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு அத்திட்டம் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் இன்றளவும் திருச்சியைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக்க தகுதி உடைய நகரமாக மாற்ற கோரிக்கை மக்கள் மத்தியில் ஓர் ஏக்கமாகவே காணமுடிகிறது. மற்றும் திருச்சிராப்பள்ளி பெறுநகர மாநகராட்சி என்று தரம் உயர்த்தி கூடிய விரைவில் அறிவிக்கபட இருக்கிறது. பெயர்க்காரணம் திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. "சிரா" துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: "புனித-பாறை-ஊர்") எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. வேறு சில அறிஞர்கள் "திரு-சின்ன-பள்ளி" (புனித-சிறிய-ஊர்) என்பதிலிருந்தும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர். வரலாறு முதன்மைக் கட்டுரை: திருச்சிராப்பள்ளியின் வரலாறு திருச்சிராப்பள்ளி, தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு பொ.ஊ.மு. இரண்டாயிரம் ஆண்டு காலத்துக்கு முந்தையது. முற்கால சோழர்களின் தலைநகராக, பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர் தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை உறையூரில் (உறையூருக்கு கோழியூர் என்ற பெயரும் உண்டு) இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6-ஆம் நூற்றாண்டில் தென்இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரைக் கோவில்களைக் கட்டினார். பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பிற்கால சோழர்கள் இந்நகரை 13-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள். சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின், இந்நகரம் பாண்டியர்களின் ஆளுகைக்கு கீழ் வந்தது. 1216 முதல் 1311 வரை அவர்கள் ஆண்டார்கள். 1311ல் மாலிக் காபூர் பாண்டியர்களைத் தோற்கடித்து இந்நகரைக் கைப்பற்றினார். மாலிக் காபூரின் டில்லி சுல்தானின் படை பல விலைமதிக்க முடியாத பொருட்களைக் கைப்பற்றினார்கள். இவர்கள் அரங்கநாதன் கோவிலைக் களங்கப்படுத்தினதால், அக்கோயில் 60 ஆண்டுகளுக்கு மூடப்பட்டு இருந்தது. வீதி உலாவிற்கு எடுத்துச்செல்லப்படும் அரங்கன் திருவுருவம் மாலிக்காபூரின் படையெடுப்பின் காரணமாகத் திருமலையில் பாதுகாக்கப்பட்டது. முசுலிம்களின் ஆட்சிக்குப்பிறகு இந்நகரம் விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. பின்பு அவரின் இப்பகுதியின் ஆளுநர் மதுரை நாயக்கர்களின் கீழ் 1736 வரை இருந்தது.. திருச்சிராப்பள்ளியிலுள்ள அரண்மனை மதுரை நாயக்கர்களின் வழியில் வந்த இராணி மங்கம்மாள் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் கட்டிய அரண்மனை அரசு அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகின்றது. மக்கள் வகைப்பாடு இந்திய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்நகரின் மக்கள்தொகை 8,47,387 ஆகும். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 91.38% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85% , பெண்களின் கல்வியறிவு 88.01% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதாகும். திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தமிழ்நாட்டில் நான்காவது மிகப்பெரும் மாநகரப்பகுதியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி, இந்தியளவில் 51வது இடத்தில் உள்ளது. 2011இல் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 8,47,387 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 10,22,518 ஆகவும் உள்ளது. திருச்சிராப்பள்ளியில் 1,62,000 மக்கள் 286 குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும் முசுலிம்களும் வாழ்கின்றனர். குறைந்த எண்ணிக்கையில் சீக்கியர்களும் சமணர்களும் இங்குள்ளனர். மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாகத் தமிழ் விளங்கினாலும் கணிசமான மக்கள் தெலுங்கு, சௌராட்டிர மொழி மற்றும் கன்னட மொழி பேசுகின்றனர். சௌராட்டிர மொழியை 16வது நூற்றாண்டில் குசராத்திலிருந்து குடிபெயர்ந்து வாழும் பட்டு நூல்காரர்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மேலும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் நகரத்தின் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் முகாம்களில் வாழ்கின்றனர். இங்குள்ள தென்னக இரயில்வேயின் மண்டல தலைமையகத்தையொட்டி கணிசமான ஆங்கிலோ இந்தியர்கள் வாழ்கின்றனர். புவியியலும் வானிலையும் திருச்சிராப்பள்ளி என்ற புவியியல் ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. நகரத்தின் சராசரி உயரம் ஆகும். இது தமிழ்நாட்டின் புவியியல் மையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இதன் தரைப்பகுதி பெரும்பாலும் தட்டையாகச் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குன்றுகளுடன் காணப்படுகிறது; இந்தக் குன்றுகளிலேயே உயரமான குன்றாக மலைக்கோட்டை விளங்குகிறது. வடக்கில் சேர்வராயன் மலைக்கும் தெற்கு-தென்மேற்கில் பழனி மலைக்கும் இடைப்பட்ட பரப்பளவில் இந்த நகரம் அமைந்துள்ளது. திருச்சியின் மேற்கே தொலைவில் காவிரியின் கழிமுகம் தொடங்குகிறது. இப்பகுதியில் காவேரி ஆறு இரண்டாகப் பிரிந்து திருவரங்கத் தீவு உண்டாகி உள்ளது. காவேரி ஆற்றையொட்டிய பகுதிகளில் அமைந்துள்ள வயல்பகுதிகளில் காவேரி ஆறும் அதன் கிளையாறான கொள்ளிடம் ஆறும் செழிப்பான வண்டல் மண்ணைக் கொண்டு சேர்த்துள்ளன. தெற்கில், செழிப்பு குறைந்த கருமண் நிலமாக உள்ளன. வண்டல் வளமிகு நன்செய் நிலங்களில் ராகியும் சோளமும் பயிரிடப்படுகின்றன. வட-கிழக்கில் திருச்சிராப்பள்ளி வகை என்றழைக்கப்படும் கிரீத்தேசிய பாறைகள் காணப்படுகின்றன. தென்-கிழக்குப் பகுதியில் மெல்லிய லாடரைட்டு பாறைகளின் கீழாகக் கிரானைட்டுக் கற்கள் கிடைக்கின்றன. நகரத்தின் வட பகுதியில் தொழிற்பேட்டைகளும் வசிப்பிடங்களும் நெருக்கமாக அமைந்துள்ளன. நகரத்தின் தென்பகுதியிலும் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்துள்ளன. நகரைச் சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்துள்ளன. கோட்டைக்குள் அடங்கியுள்ள பழைய நகரம் திட்டமிடப்படாததாகவும் நெரிசல்மிக்கதாகவும் விளங்குகிறது. புதிய நகர்ப்புறப்பகுதிகள் திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பல வீடுகள் தொன்மையான இந்து சமய கோவில் வடிவமைப்புக்களுக்கான சிற்ப சாத்திரங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகர மற்றும் ஊரகத் திட்டச்சட்டம் 1974 இக்கு இணங்க ஏப்ரல் 5, 1974 இல் திருச்சிராப்பள்ளி நகர திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது. காவேரி ஆற்றிலிருந்து நகரத்திற்கு 1,470 நிலத்தடி நீரேற்றிகள், 60 வழங்கல் நீர்த்தொட்டிகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆண்டின் எட்டு மாதங்களுக்காவது திருச்சி வெப்பமிகுந்து ஈரப்பதம் குறைந்து காணப்படுகின்றது. மார்ச்சு முதல் சூலை வரை மிகவும் வெப்பமான வானநிலை நிலவுகிறது. ஆகத்து முதல் அக்டோபர் வரை பெருங்காற்றுடன் கூடிய இடிமழையுடன் மிதமான வானிலை நிலவுகிறது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர்காலமாக விளங்குகிறது. பனிமூட்டமும் பனித்துளிகளும் அரிதானவை; அவை குளிர் மாதங்களில் ஏற்படலாம். தலைநகராக்க முயற்சி எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது அதன் தலைநகரமாகத் திருச்சியை மாற்றும் திட்டத்தினை வழிவகுத்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினாலும் அரசியல் சூழ்நிலையாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்குத் தெற்குபகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வரத் தமிழகத்தின் நடுமையத்தில் இருக்கக்கூடிய திருச்சியைத் தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். இதற்காக 1983 இல் திருச்சியைத் தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார். மாநகராட்சி நிர்வாகம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 100 வார்டுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் பகுதிகள் வீதம் பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், துவாக்குடி, திருவெறும்பூர் என ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு மாநகராட்சித் தலைவர் (மேயர்) தலைமையிலான மாநகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகள் (மாநகராட்சிப் பணிகள்) மாநகராட்சி ஆணையரின் வழியாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது. பொருளாதாரம் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்குப் புகழ் பெற்றிருந்தது. உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆண்டுக்கு12 மில்லியன் சுருட்டுகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாயின. பதனிடப்பட்ட தோல்கள் இங்கிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி ஆயின. திருச்சி நகரில் ஏராளமான சில்லறை மற்றும் மொத்த வணிகக் கூடங்கள் அமைந்துள்ளன; இவற்றில் மகாத்மா காந்தி சந்தை எனப்படும் காய்கறி சந்தை மிகவும் அறியப்பட்டதாகும் திருவரங்கத்தில் உள்ள பூக்கடைத் தெருவும் மாம்பழச்சாலையின் மாம்பழச் சந்தையும் குறிப்பிடத்தக்கன. சுற்றுப்புற நகரான மண்ணச்சநல்லூரில் அரிசி ஆலைகளில் மெருகேற்றப்பட்ட பொன்னி அரிசி தயாராகிறது. இங்குள்ள நடுவண் அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் இந்திய படைத்துறைக்காக எறி குண்டுகள் உந்துகருவிகள், பல குண்டுகள் உந்து கருவிகள், துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இதே வளாகத்தில் கனத்த கலவைமாழை ஊடுருவு திட்ட (HAPP) வசதியும் நடுவண் அரசின் துப்பாக்கி தொழிற்சாலைகள் வாரியத்தால் நடத்தப்படுகிறது. 1980 ஆண்டுகளில் நிறுவப்பட்ட இந்த வசதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக நெகிழ்வுறு தயாரிப்பு அமைப்பு (FMS), பயன்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி தமிழ்நாட்டின் பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் முனையமாக விளங்குகிறது. 1928 ஆம் ஆண்டில் தொடர்வண்டி பணிப்பட்டறை நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிராப்பள்ளியின் கோல்டன் ராக் (பொன்மலை) கிற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் மூன்று பட்டறைகளில் இஃது ஒன்றாகத் திகழ்கிறது. இந்தப் பட்டறையிலிருந்து 2007-08 ஆண்டில் 650 வழமையான மற்றும் குறைந்த மட்ட சரக்கு வண்டிகள் தயாரிக்கப்பட்டன. இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமாக மே 1965 இல் உயரழுத்த கொதிகலன்கள் தயாரிக்கும் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL), நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து 58 கோடி (US$13 மில்லியன்) செலவில் ஒட்டற்ற எஃகு ஆலையும் கொதிகலன் துணைஉதிரிகள் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன. இவை மூன்றும் இணைந்து பரப்பளவில் பிஎச்ஈஎல் தொழிற்சாலை வளாகமாக அறியப்படுகிறது. இங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி 6.2 MW மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் 1961இல் திருச்சி எஃகு உருட்டல் ஆலைகள் (Trichy Steel Rolling Mills) துவங்கப்பட்டது. மற்ற முகனையான தொழிற்சாலைகளில் ஒன்றாகத் திருச்சி வடிமனை மற்றும் வேதிப்பொருள் வரையறுக்கப்பட்டது (TDCL) 1966ஆம் ஆண்டில் செந்தண்ணீர்புரத்தில் நிறுவப்பட்டது. இங்கு தெளிந்த சாராவி, அசிடால்டெஹைடு, அசிட்டிக் காடி, அசிடிக் அன்ஹைடிரைடு மற்றும் இதைல் அசிடேட்டு தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரும் தனியார்துறை வடிமனைகளில் மிகப் பெரியதான ஒன்றாக விளங்குகிறது; திசம்பர் 2005இலிருந்து நவம்பர் 2006க்கு இடையில் 13.5 மில்லியன் லிட்டர்கள் சாராயம் தயாரிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி இந்தியாவின் "ஆற்றல் திறன் மற்றும் கட்டுருவாக்கத் தொழில் தலைநகரம்" (Energy Equipment & Fabrication Capital of India) என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்திலிருந்து ஏற்றுமதியாகும் மென்பொருட்களின் ஆண்டு வருமானம் 26.21 கோடிகளாக (US$5.8 மில்லியன்) உள்ளது. திசம்பர் 9, 2010இல் 60 கோடிகள் (US$13.5 மில்லியன்) செலவில் எல்காட் தகவல்தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது. தமிழ்நாடு மின்னணுக்கழகம் வரையறையால் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குகிறது. இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், திருச்சிராப்பள்ளியில் தனது செயற்பாட்டைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது. திருச்சி மண்டல ஜி.எஸ்.டி. ஆணையர் ஜே.எம்.கென்னடி. திருச்சி மாநகர் பகுதிகள் உறையூர் தில்லைநகர் தென்னுர் புத்தூர் ஸ்ரீனிவாசன் நகர் உய்யகொண்டான் திருமலை நாச்சிக்குறிச்சி ராஜகாலனி கருமண்டபம் பிராட்டியூர் எடமலைப்பட்டிபுதூர் பஞ்சப்பூர் கேகே. நகர் மன்னார்புரம் சுப்பிரமணியப்புரம் கல்லுக்குழி பொன்மலைப்பட்டி பொன்மலை கோல்டன் ராக் டிவிஎஸ் டோல்கேட் l கீழ் கல்கண்டார்கோட்டை மேல் கல்கண்டார்கோட்டை காட்டுர் திருவெறும்பூர் துவாக்குடி குவளைக்குடி அரியாமங்கலம் பால்ண்ணை வராகனேரி சங்கிலியாண்டப்புரம் காந்தி மார்க்கெட் பாலக்கரை அண்ணாநகர் மேலப்புதூர் ஒத்தக்கடை பீமநகர் ஆழ்வார் தோப்பு மரக்கடை கோட்டை பெரியக்கடைவீதி சின்னக்கடைவீதி NSBசாலை தேவதானம் கோஹினுர் கீழசிந்தமணி மேலசிந்தமணி முத்தரசாநல்லூர் கம்பரசம்ம்பேட்டை ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் திருவளர்ச்சோலை மாம்பழச்சாலை அம்மாமண்டபம் No 1 டோல்கேட் பிச்சைண்டவர்கோவில் உத்தமர்கோவில் தாளக்குடி கூத்தூர் திருச்சி புறநகர் பகுதிகள் துவாக்குடி மாத்தூர் சோமரசம்பேட்டை அல்லித்துறை குமார வயலூர் இனாம்குளத்தூர் நவலூர் குட்டப்பட்டு சமயபுரம் மாடக்குடி மண்ணச்சநல்லூர் நொச்சியம் தாளக்குடி வாளாடி சர்கார்பாளையம் கல்லணை குழுமணி ஜீயபுரம் திருப்பராய்த்துறை பெருகமணி சிறுகமணி பெட்டவாய்த்தலை காவல்கரன்பட்டி பெட்டவாய்த்தலை சிறுகனூர் புள்ளம்பாடி சாலை மற்றும் பேருந்து போக்குவரத்து திருச்சிராப்பள்ளி சாலை, தொடருந்து, வான்வழியாக, இந்தியாவின் பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலைகள் தேநெ 45, தேநெ 45பி, தேநெ 67, தேநெ 210, தேநெ 227, ஆகியவை இதன் வழியாகச் செல்கின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் தலைமையிடமாக கொண்ட திருச்சி மண்டலம் சார்ந்த பேருந்துகள் என தமிழ்நாட்டின் மையபகுதியான திருச்சியிலிருந்து "மத்திய பேருந்து நிலையம்" மற்றும் "சத்திரம் பேருந்து நிலையம்" ஆகிய இரண்டு பெரிய பேருந்து நிலையங்களில் இருந்து பல ஊர்களுக்கு பல அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து போக்குவரத்து நடைபெறுகின்றது. திருச்சி - திருவண்ணாமலை வழியாக திருப்பதி செல்லலாம் திருச்சி - தஞ்சாவூர் மார்க்கமாக : திருவெறும்பூர், துவாக்குடி, செங்கிப்பட்டி, வல்லம், தஞ்சாவூர், பாபநாசம், சுவாமிமலை, கும்பகோணம், ஆடுதுறை, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி, கொள்ளிடம், சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, பூம்புகார், திருக்கடையூர், பேரளம், திருநள்ளார், காரைக்கால், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மனோரா, நீடாமங்கலம், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, எட்டுக்குடி, நாகப்பட்டினம், திருக்குவளை, சிக்கல், நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் வரை திருச்சி - கரூர்–கோவை மார்க்கமாக : பெட்டவாய்த்தலை, குளித்தலை, மாயனூர், புலியூர், கரூர், காங்கேயம், ஈரோடு, தாராபுரம், திருப்பூர், பல்லடம், கோயம்புத்தூர், கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பாலக்காடு வரை (கேரளா - கருநாடகா மாநிலங்கள்) வரை திருச்சி - பெரம்பலூர்–சென்னை மார்க்கமாக : சமயபுரம், பாடாலூர், சிறுவாச்சூர், பெரம்பலூர், இலப்பைகுடிக்காடு, திட்டக்குடி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்ப்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர், செஞ்சி, ஆரணி, வேலூர், காட்பாடி, சித்தூர், திருப்பதி மற்றும் ஆந்திர பிரதேசம், வட மாநிலங்கள் வரை திருச்சி - மதுரை மார்க்கமாக : இலுப்பூர்,அன்னவாசல், புதுக்கோட்டை,பொன்னமராவதி,விராலிமலை, துவரங்குறிச்சி, நத்தம், மேலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், குற்றாலம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோயில், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் வரை திருச்சி - மணப்பாறை–திண்டுக்கல் மார்க்கமாக : மணப்பாறை, சிங்கம்புனரி, வையம்பட்டி, அய்யலூர், திண்டுக்கல், வத்தலகுண்டு, கொடைக்கானல், பெரியகுளம், தேனி, போடி, கம்பம், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கொச்சின் துறைமுகம் கேரளா மாநிலங்கள் வரை திருச்சி - அரியலூர்–பாண்டிச்சேரி மார்க்கமாக : லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, கீழப்பழுர், அரியலூர், செந்துறை, பெண்ணாடம், விருத்தாசலம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம், கங்கைகொண்ட சோழபுரம், காட்டு மன்னார் கோவில், சிதம்பரம், பிச்சாவரம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, கடலூர், புதுச்சேரி வரை திருச்சி - புதுக்கோட்டை–இராமேஸ்வரம் மார்க்கமாக : இலுப்பூர்,கீரனூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, திருவாடானை, தொண்டி, தேவிபட்டினம், இராமநாதபுரம், ஏர்வாடி, இராமேஸ்வரம் வரை திருச்சி - முசிறி–சேலம் மார்க்கமாக : குணசீலம், முசிறி, தொட்டியம், காட்டுபுத்தூர், தாத்தையங்கார்ப்பேட்டை, மேட்டுப்பாளையம், புளியஞ்சோலை, நாமக்கல், கொல்லி மலை, திருச்செங்கோடு, ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், இராசிபுரம், எடப்பாடி, சங்ககிரி, சேலம், ஏற்காடு, மேட்டூர், தருமபுரி, ஒகேனக்கல், கிருஷ்ணகிரி, ஒசூர் மற்றும் பெங்களூரு கர்நாடகா மாநிலம், வட மாநிலங்கள் வரை திருச்சி - துறையூர் மார்க்கமாக : மண்ணச்சநல்லூர், புலிவலம், துறையூர், தம்மம்பட்டி, பச்சைமலை, ஆத்தூர், வாழப்பாடி, சேலம் வரை திருச்சி - தோகைமலை மார்க்கமாக : உய்யகொண்டான் திருமலை, சோமரசம்பேட்டை, வயலூர், நங்கவரம், அல்லிதுறை, நெய்தலூர் காலணி, ராச்சாண்டார் திருமலை, காவக்காரன்பட்டி, தோகைமலை, வீரப்பூர், படுகளம், பாலவிடுதி, கடவூர், அய்யர்மலை, பாளையம், தரகம்பட்டி, குவாரிசைட், குஜிலியம்பாறை, அரவக்குறிச்சி வரை திருச்சி - திருவையாறு மார்க்கமாக : திருவானைக்கோவில், கல்லணை, பூண்டி மாதாகோயில், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, திங்களுர், கும்பகோணம், ,கதிராமங்கலம்,அஞ்சாறுவார்த்தலை,மயிலாடுதுறை,மனக்குடி,கருவிபூம்புகார் வரை திருச்சியில் இருந்து தினசரியாக இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயங்குகின்றன. பேருந்து நிலையங்கள் திருச்சியைப் பொறுத்தவரை நான்கு முக்கிய நிலையைங்களாகவும் நகரில் பகுதி பேருந்து நிலையங்களாக மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன. பஞ்சாப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்:இது நகரின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது தமிழகத்தில் மிகப்பெரிய பேருந்து முனையம் ஆகும். மத்திய பேருந்து நிலையம்: இது நகரின் தென்மேற்கு பகுதியில் இருக்கிறது. வெளியூர் பேருந்துகளுக்கு மட்டும் வந்து புறப்படும் இடமாக உள்ளது. இங்கிருந்து தொடருந்து நிலையமும், விமான நிலையமும் அருகாமையில் இருக்கிறது. சத்திரம் பேருந்து நிலையம்: இது நகரின் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறது. மலைக்கோட்டைக்கு அருகிலுள்ளது. இது நகரப்பேருந்துகள் மற்றும் திருச்சியின் அண்மையில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயங்கும் நிலையமாக உள்ளது. புதிய பேருந்து நிலையம் ஸ்ரீரங்கம்:இது வடக்கு பகுதியில் ஸ்ரீரங்கம் தீவில் இருக்கிறது ஸ்ரீரங்கம்அருகில் உள்ளது No. 1 Tollgate பேருந்து நிலையம் :இது கொள்ளிடம் ஆறு வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. திருவெறும்பூர் பேருந்து நிலையம்:இது மாநகர் கிழக்கு பகுதியில் அரியமங்கலம் கோட்டம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. K.K நகர் பேருந்து நிலையம்: இது நகரின் தெற்கு பகுதியின் kk நகரில் அமைந்துள்ளது. சமயபுரம் பேருந்து நிலையம் : நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. துவாக்குடி பேருந்து நிலையம்:இது நகரின் கிழக்கு பகுதியில் துவாக்குடி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பேருந்து போக்குவரத்து மாற்றம் திருச்சி தமிழகத்தின் நடுவில் இருப்பதாலும், மக்கள் தொகை நெருக்கத்தாலும், நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, நகரின் தெற்கிலும், மேற்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், பெரும்பாலும் மத்திய பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். அதேபோல, வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், சத்திரம் பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏறத்தாழ 7 கி.மீ. இடைவெளியுள்ளது. இதனால் மாநகரில், வெளியூர் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறைகிறது. பயணிகளும், தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்துச் செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது. வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப்படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இப்புறவழிச்சாலையை சுமையுந்துகளும் (lorry), மகிழுந்துகளும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன. இரயில் போக்குவரத்து திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தென்னக இரயில்வேயின் ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். 1868ம் ஆண்டு திருச்சிராப்பள்ளிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே தொடருந்து சேவை தொடங்கியது. சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, விழுப்புரம், ஸ்ரீ கங்காநகர், ஜோத்பூர், ஜெய்ப்பூர், புனே, வதோதரா, நாக்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், சிதம்பரம், ஈரோடு, ஹைதராபாத், கொல்லம், இராமேசுவரம், தென்காசி, திருப்பதி, பெங்களூரு, மைசூரு, மங்களூர், கொல்கத்தா, குவஹாத்தி, கொச்சி ஆகிய இடங்களுக்குத் தொடருந்து வசதி உண்டு. தினசரி 37+ தொடருந்துகள் திருச்சியில் இருந்து மாநில தலைநகர் சென்னைக்குச் செல்கின்றன. இதில் சோழன், மலைக்கோட்டை விரைவு வண்டி திருச்சியில் இருந்து புறப்படுகிறது, மற்ற தொடருந்துகளான வைகை, பல்லவன், அனந்தபுரி மற்றும் இதர இரயில்கள் தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாகச் சென்னை செல்லுகின்றன. மேலும் திருச்சியில் வழிதட இரயில் நிலையங்களான திருச்சிராப்பள்ளி டவுன் ஸ்டேசன் திருச்சி–சென்னை வழிதடத்தில் மலைக்கோட்டை திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த இரயில் நிலையத்தில் திருச்சி மாநகர பகுதியில் உள்ளவர்கள் சென்னை, விழுப்புரம், கடலூர், (திருப்பதி/ஆந்திர மாநிலம்), தெலுங்கானா மாநிலம்) மற்றும் வடமாநில மார்க்கமாக செல்லும் இரயில்களில் பயணிகள் செல்வதற்கு வசதியாக இந்த டவுன் ஸ்டேசன் இரயில் நிலையம் உதவியாக உள்ளது. திருச்சியின் மைய நகர பகுதியில் திருச்சி–ஈரோடு வழித்தடத்தில் திருச்சிராப்பள்ளி கோட்டை ஸ்டேசன் ஈரோடு, கோவை, சேலம் மற்றும் கேரள மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் பிற வடமாநில மார்க்கமாக செல்லும் இரயில்களில் பயணிகள் செல்வதற்கு இந்த கோட்டை ஸ்டேசன் உதவியாக. உள்ளது. சந்திப்பு மற்றும் தொடர்ந்து நிலையங்கள் திருச்சிராப்பள்ளி சந்திப்பு. திருவரங்கம் தொடருந்து நிலையம், கோட்டை தொடருந்து நிலையம், திருவெறும்பூர் தொடருந்து நிலையம், பொன்மலை தொடருந்து நிலையம், டவுன் தொடருந்து நிலையம், பாலக்கரை தொடருந்து நிலையம் மஞ்சுத்திடல் தொடருந்து நிலையம் முத்தாரசாநல்லூர் தொடருந்து நிலையம் பூங்குடி தொடருந்து நிலையம் பிச்சாண்டவர் கோவில் தொடருந்து நிலையம் உத்தமர் கோவில் தொடருந்து நிலையம் வாளடி தொடருந்து நிலையம் குமாரமங்கலம் தொடருந்து நிலையம் தினசரி திருச்சிராப்பள்ளி வழியாகச் செல்லும் தொடருந்துகள் . மைசூர் விரைவு வண்டி சேலம், ஓசூர், பெங்களூரு வழியாக மைசூரை அடைகிறது. விமான போக்குவரத்து திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் தேசிய நெடுஞ்சாலை 210ல் அமைந்துள்ளது. இவ்வானூர்தி நிலையம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரியவிமான நிலையமாகும். 1938ல் டாடா ஏர்லைன்சின் கராச்சி-கொழும்பு தடத்தில் செல்லும் வானூர்திகள் இங்கு நின்று சென்றன. இங்கிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு வானூர்திகள் செல்லுகின்றன. சிங்கப்பூர், கொழும்பு, துபாய், அபுதாபி, கோலாலம்பூர், தோஹா, மஸ்கட் மற்றும் குவைத் ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் வானூர்திகள் செல்லுகின்றன. திருத்தலங்கள் அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர் அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்காவல் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர் அருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில், மாந்துறை அருள்மிகு உத்தமர் கோயில் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம் அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி அருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோயில், பொன்மலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பொன்மலை அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், பொன்மலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், அன்பில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில், அன்பில் சீரடி சாய் பாபா கோவில் (மேக்குடி) மகா மாரியம்மன் திருக்கோவில், (கோப்பு). அருள்மிகு உஜ்ஜிவநாத சுவாமி திருக்கோவில், (உ.கொ.திருமலை). ஸ்ரீ வள்ளலாள கண்ட அய்யனார் திருக்கோவில், (குண்டூர்). அருள்மிகு ஸ்ரீ மத்தியஜுனேஸ்வரர் திருக்கோவில், (தேவஸ்தானம்), பெட்டவாய்த்தலை. அருள்மிகு ஸ்ரீ சோமகாளியம்மன் திருக்கோவில், (தேவஸ்தானம்), பெட்டவாய்த்தலை. அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்பட்டுர். சுற்றுலாத் தலங்கள் திருச்சி மலைக் கோட்டை (Rock fort, Trichy) ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் முக்கொம்பு கல்லணை வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம் (திருச்சிராப்பள்ளி) வண்ணத்துப்பூச்சி பூங்கா சமயபுரம் மாரியம்மன் கோயில் கோளரங்கம் மான் பூங்கா இரயில்வே அருங்காட்சியகம் இப்ராகிம் பார்க் பூங்கா ஆடிப்பெருக்கு விழா ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாகத் திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர். கல்வி கல்லூரிகள் திருச்சியிலும் அதன் புறநகர் பகுதியிலுமாக 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாவேந்தர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி தேசியக் கல்லூரி, திருச்சி அரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி* பாரதிதாசன் பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாத்தூர் ஜமால் முகம்மது கல்லூரி பிஷப் ஹீபர் கல்லூரி புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி பெரியார் ஈ. வெ. ரா. அரசினர் கலைக்கல்லூரி ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி உருமு தனலட்சுமி கல்லூரி குறிஞ்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏ. ஏ. அரசு கலைக்கல்லூரி கலைக் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி காவேரி மகளிர் கல்லூரி கிருத்துராஜ் கல்லூரி சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி செட்டிநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தூய சிலுவைக் கல்லூரி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி M.I.E.T. கலை மற்றும் அறிவியல் கல்லூரி சட்டப் பல்கலைக்கழகம்/ கல்லூரிகள் தமிழ் நாடு தேசிய சட்டப்பள்ளி பல்கலைக்கழகம், திண்டுக்கல் நெடுஞ்சாலை, நவலூர் குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி. அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. பொறியியல் கல்லூரிகள் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (முன்பு மண்டலப் பொறியியற் கல்லூரி) அங்காளம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சிறுகனூர், ஜெயராம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி சாரநாதன் பொறியியல் கல்லூரி ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி திருச்சி பொறியியல் கல்லூரி MAM பொறியியல் கல்லூரி K. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி ( சமயபுரம்)and technology சிவானி பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி M.I.E.T பொறியியல் கல்லூரி. SRM-TRP பொறியியல் கல்லூரி. வேளாண்மைக் கல்லூரிகள் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர், திருச்சி. கல்வியியல் கல்லூரிகள் மருத்துவக் கல்லூரிகள் கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி கண்மருத்துவ நிறுவனம் (ஜோசப் கண் மருத்துவமனை) எசு. ஆர். எம். மருத்துவ கல்லூரி]] பள்ளிகள் திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஈ.ஆர். மேனிலைப் பள்ளி பிசப் ஈபர் மேனிலைப்பள்ளி ஈ.வே.ரா. மேனிலைப்பள்ளி புனித சிலுவைப் பெண்கள் மேனிலைப்பள்ளி புனித வளனார் மேனிலைப்பள்ளி தேசிய மேனிலைப்பள்ளி கேம்பியன் மேனிலைப்பள்ளி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி காஜா மியான் மேனிலைப்பள்ளி திரு இருதய மேல்நிலைப்பள்ளி பொன்னையா மேல்நிலைப்பள்ளி இரயில்வே இருபாலர் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, காட்டூர் பாப்பாகுறிச்சி படைக்கல தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளி கேந்திரிய வித்யாலயா(CBSE) (K.V-NO:1) O.F.T கேந்திரிய வித்யாலயா(CBSE) (K.V-NO:2) H.A.P.P விக்கிக்காட்சியகம் குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திருச்சி மலைக் கோட்டை(Rock fort,Trichy) ஒரு பார்வை திருச்சி நகரின் சிறப்பு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில் திருச்சி மாநகராட்சியின் வலைப்பக்கம் திருச்சி மாவட்டம் பற்றிய அரசின் வலைப்பக்கம் திருச்சி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம் தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
2427
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE
ஒராதேயா
ஒராதேயா (அங்கேரியம் Nagyvárad, இடாய்ச்சு Großwardein) என்பது உருமேனியா நாட்டில் திரான்சில்வேனியாவிலுள்ள பிஹோர் கவுண்டியைச் சேர்ந்த ஒரு நகரமாகும். 2002 ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நகரத்தில் 206,527 பேர் உள்ளனர். இது மாநகரசபைக்கு வெளியேயுள்ள பகுதிகளை உள்ளடக்கவில்லை. இப் பகுதிகளையும் சேர்த்தால் மொத்த நகர் சார்ந்த மக்கள் தொகை அண்ணளவாக 220,000 ஆகும். ஒரேடெயா ருமேனியாவின் மிகவும் வளம் பொருந்திய நகரங்களில் ஒன்றாகும். புவியியல் இந்த் நகரம் ஹங்கேரிய எல்லையை அண்டி கிரிசுல் ரெபேடே(Crişul Repede) நதிக்கரையில் அமைந்துள்ளது. வரலாறு வராடியம் என்னும் லத்தீன் மொழிப் பெயரில், 1113 இல் முதல் முதலாக ஒராடெயா குறிப்பிடப்படுகின்றது. இன்றும் அழிந்த நிலையில் காணப்படும் ஒராடெயா Citadel 1241ல் முதல் தடவையாகக் குறிப்பிடப்படுகின்றது, எனினும் 16 ஆம் நூற்றாண்டின் பின்னரே இப்பகுதி ஒரு நகராக வளரத்தொடங்கியது. 1700 ல் வியன்னாவைச் சேர்ந்த பொறியியலாளரான பிரான்ஸ் அன்டன் ஹில்லெபிராண்ட் (Franz Anton Hillebrandt) பரோக் பாணியில் நகரத்தை வடிவமைத்தார். 1752லிருந்து ரோமன் கத்தோலிக்க தேவாலயம், பேராயர் மாளிகை, கிரிஸ்(Criş) மண்ணின் அரும்பொருட் காட்சியகம் (Muzeul Ţării Crişurilor) போன்ற முக்கிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. பொருளாதாரம் ஹங்கேரிய எல்லையில் மேற்கு ஐரோப்பாவுக்கான நுழைவாயிலில் அமைந்திருந்ததால் ஒராடெயா நீண்ட காலமாகவே ருமேனியாவின் வளமிக்க ஒரு நகரமாக விளங்கி வந்தது. 1989 இன் பின்னர் ஒராடெயா, தொழில் வளர்ச்சி அடிப்படையிலன்றிச் சேவைத்துறை வளர்ச்சிமூலம் ஓரளவு பொருளாதாரப் புத்துயிர் பெற்றது. ஒராடெயாவின் வேலையின்மை விகிதமான 6%, ருமேனியாவின் சராசரியைவிடக் குறைவாக இருப்பினும், பிஹோர் கவுண்டியின் 2% வேலையின்மை விகிதத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாகும். பிஹோர் கவுண்டியின் 34.5% குடித்தொகையைக் கொண்ட ஒராடெயா, அக் கவுண்டியின் 63% தொழில்துறை உற்பத்திக்குக் காரணமாக உள்ளது. இதன் முக்கியமான உற்பத்திகள், தளபாடங்கள், புடவை, ஆடை உற்பத்தி, காலணிகள் மற்றும் உணவு வகைகளாகும். 2003 ல் நகரின் முதலாவது பெரிய கொள்வனவு மையமான லோட்டஸ் சந்தை வர்த்தக மையம் ஒராடெயாவில் திறந்து வைக்கப்பட்டது. இனங்கள் வரலாறு 1910: 69.000 (ரோமானியர்கள்: 5.6%, ஹங்கேரியர்கள்: 91.10%) 1920: 72.000 (R: 5%, H: 92%) 1930: 90.000 (R: 25%, H: 67%) 1966: 122.634 (R: 46%, H: 52%) 1977: 170.531 (R: 53%, H: 45%) 1992: 222.741 (R: 64%, H: 34%) Present 2002 ஆன் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த மக்கட் தொகையின் இனவாரியான விபரம் பின்வருமாறு அமைந்துள்ளது: ருமேனியர்: 145,295 (70.4%) மக்யர்கள்: 56,830 (27.5%) ரோமா: 2,466 (1.2%) ஜெர்மானியர்: 566 (0.3%) ஸ்லோவாக்கியர்: 477 (0.2%) யூதர்: 172 உக்ரேனியர்: 76 பல்கேரியர்: 25 ரஷ்யர்: 25 செர்பியர்: 17 செக் மக்கள்: 9 துருக்கியர்: 9 பகுதிகள் இந்த நகரம் "குவாட்டர்ஸ்" என அழைக்கப்படும் பின்வரும் வட்டாரங்களாகப் (districts) பிரிக்கப்பட்டுள்ளது: மத்திய ஒராடெயா வியை (Vie) தவிரோசா/தவிரோசம் (Nufărul) உரொசோரியம் (Rogerius) வாலேன்சா (Velenţa) கண்டெமிர் (Cantemir) அயோசியா (Ioşia) வெளியிணைப்புகள் ஒராடெயா சுற்றுலா ஒராடெயா ஆன்லைன் ஒராடெயா அதிகாரப்பூர்வ இணையதளம் Oradea Jurnal Bihorean Site Oradea Realitatea Bihoreana Site See beautiful pictures from Oradea at The Real Transylvania ரோமானிய நகரங்கள்
2655
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
தமிழில் இடைக்கால இலக்கியம்
தமிழில் இடைக்கால இலக்கியம் என்பது தமிழ் நாட்டில் பல்லவர் குலத் தொடக்கம் முதலாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை உள்ள இலக்கியம் எனக் கொள்ளலாம். இந்நூல்களில் பெரும்பாலானவை பக்தி இலக்கியங்களும் அரசர்களையும் போர்களையும் பற்றிப் பாடும் சிற்றிலக்கியங்களும் ஆகும். இக்கால கட்டத்தில் பல மருத்துவ, தொழில் மற்றும் அறிவியல் சார்ந்த நூல்களும் இயற்றப்பட்டன. எனினும் அவற்றை இலக்கியம் எனக் கொள்தல் தகாது. இடைக்கால இலக்கியங்களுள் சில: கம்ப இராமாயணம் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கலிங்கத்துப்பரணி குற்றாலக் குறவஞ்சி தமிழ் இலக்கியம்
2656
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பின்னம்
பின்னம் (fraction) என்பது முழுப்பொருள் ஒன்றின் பகுதி அல்லது பகுதிகளைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை நான்கு சமப் பங்குகளாகப் பிரித்தால், அதில் 3 பங்குகள் (அதாவது நான்கில் மூன்று பங்கு) 3/4 எனக் குறிக்கப்படும். பின்ன அமைப்பில், கிடைக்கோட்டிற்குக் கீழுள்ள எண் பகுதி எனவும், மேலுள்ள எண் தொகுதி எனவும் அழைக்கப்படும். எடுத்துக்கொள்ளப்படும் சம பங்குகளின் எண்ணிக்கையைத் தொகுதியும், எத்தனை சம பங்குகள் சேர்ந்து முழுப்பொருளாகும் என்பதைப் பகுதியும் குறிக்கின்றன. ஒரு பின்னத்தின் பகுதி பூச்சியமாக இருக்க முடியாது. எடுத்துக்காட்டு: ஒரு முழுப்பொருளானது நான்கு சம பங்குகளாகப் பிரிக்கப்பட்டால், அதிலுள்ள மூன்று சம பங்குகள் 3/4 எனக் குறிக்கப்படும். இப்பின்னத்தின் தொகுதி - 3, பகுதி - 4. பின்னமானது பிள்வம் அல்லது பிள்ளம் என்றும் அழைக்கப்படும். தமிழில் இதற்குக் கீழ்வாய் எண்கள் என்பது பெயர். பின்ன எண்களைத் தொகுதி-பகுதி வடிவில் மட்டுமல்லாது, தசம பின்னங்களாக, சதவீதங்களாக, எதிர்ம அடுக்கேற்ற எண்களாகவும் எழுதலாம். எடுத்துக்காட்டு, 1/100 என்ற பின்ன எண்ணின் மாற்று வடிவங்கள்: 0.01, 1%, 10−2 எந்தவொரு முழுஎண்ணையும், பகுதி 1 ஆகக் கொண்ட பின்னமாகக் கொள்ளலாம்: 7 = 7/1. விகிதங்களையும், வகுத்தலையும் குறிப்பதற்கும் பின்னங்கள் பயன்படுகிறது. 3/4 என்பது 3:4 என்ற விகிதத்தையும், 3 ÷ 4 என்ற வகுத்தலையும் குறிக்கும். a, b முழு எண்கள் எனில், a/b என்ற வடிவில் எழுதப்படக்கூடிய எண்களின் கணம் விகிதமுறு எண்களின் கணம் எனப்படும். விகிதமுறு எண்கள் கணத்தின் குறியீடு Q. ஒரு எண்ணைப் பின்ன வடிவில் எழுத முடியுமா இல்லையா என்பதைக் கொண்டு அவ்வெண் விகிதமுறு எண்ணா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம். விகிதமுறு எண்களைத் தவிர வேறுசில கணிதக் கோவைகளுக்கும் பின்னங்கள் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டுகள்: இயற்கணித பின்னங்கள்: , விகிதமுறா எண்கள் கொண்ட கோவைகள்: √2/2 , π/4 பின்ன வகைகள்: பின்னங்களைத் தகு பின்னம், தகாபின்னம், கலப்பு பின்னம் என மூன்று வகையாகக் கூறலாம். தகு பின்னம் : தொகுதி பகுதியை விடச்சிறியதாக இருந்தால், அது தகு பின்னம்(முறைமை பின்னங்கள்). தகாபின்னம் : தொகுதி பகுதியை விடப் பெரியதாக இருந்தால் தகாபின்னம்.(முறையில்லா பின்னங்கள்) கலப்பு பின்னம் : இயல் எண்ணும் தகு பின்னமும் சேர்ந்து வருவது கலப்பு பின்னம். இதனை தகாபின்னமாக மாற்றி திட்ட வடிவில் எழுதலாம். பின்னங்களின் வடிவங்கள் எளிய பின்னங்கள் a/b அல்லது , (a , b இரண்டும் முழு எண்கள்) என்ற வடிவில் எழுதப்படும் விகிதமுறு எண்களெல்லாம் எளிய பின்னங்கள் எனப்படுகின்றன. ஏனைய பின்னங்களைப் போன்றே இவற்றிலும் பகுதியின் (b) மதிப்பு பூச்சியமாக இருக்க முடியாது எடுத்துக்காட்டுகள்: , , , , 3/17. எளிய பின்னங்கள் நேர்மமாகவோ, எதிர்மமாகவோ, தகு அல்லது தகா பின்னங்களாகவோ அமையலாம். கூட்டு பின்னங்கள், கலப்பு எண்கள், தசமங்கள் ஆகியவற்றை எளிய பின்னமாக மாற்ற முடியுமென்றாலும் அவை எளிய பின்னங்கள் ஆகா. முறைமை பின்னங்களும் முறையில்லா பின்னங்களும் எளிய பின்னங்களை தகு அல்லது தகா பின்னங்களாக வகைப்படுத்தலாம். பகுதியும் தொகுதியும் நேர்ம எண்களாகக் கொண்ட ஒரு பின்னத்தின் தொகுதியானது, அதன் பகுதியை விடச் சிறியதாயின் அப்பின்னம் தகு பின்னம் எனப்படும். மாறாக, அதன் தொகுதியானது, பகுதியை விடப் பெரியதாயின் அப்பின்னம் தகா பின்னம் எனப்படும். பொதுவாக, ஒரு பின்னத்தின் தனி மதிப்பு 1 ஐ விடச் சிறியதாக இருந்தால் (-1 ஐ விடப் பெரியது, 1 ஐ விட சிறியது) அது ஒரு தகு பின்னமாகும். ஒரு பின்னத்தின் தனி மதிப்பு 1 க்குச் சமமாகவோ அல்லது பெரியதாக இருந்தால் அது ஒரு தகா பின்னமாகும் எடுத்துக்காட்டுகள்: தகு பின்னங்கள்: 2/3, -3/4, 4/9 தகா பின்னங்கள்: 9/4, -4/3, 3/3.முறைமை கலப்பு பின்னங்கள் கலப்பு பின்னம் அல்லது கலப்பு எண் என்பது, ஒரு பூச்சியமற்ற முழுஎண் மற்றும் தகுபின்னம் இரண்டின் கூடுதலாக அமையும். முழுஎண்ணுக்கும் தகுபின்னத்துக்கும் இடையே "+" குறியீடு எழுதப்படுவதில்லை. எடுத்துக்காட்டு: . இயற்கணிதத்தில் இரு கோவைகளின் பெருக்கலை எழுதும்போது அவற்றுக்கிடையே பெருக்கல் குறியானது இல்லாமலே எழுதுவது வழக்கில் உள்ளது. எடுத்துக்காட்டாக, இயற்கணிதத்தில் என்பது ஒரு கலப்பு பின்னம் அல்ல, அது a, b/c ஆகிய இரு கோவைகளின் பெருக்கலாகும்: . இக்குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, பெருக்கல் குறி வெளிப்படையாகக் குறிக்கப்படுகிறது: , , . கலப்பு பின்னத்தைத் தகா பின்னமாகவும் தகா பின்னத்தைக் கலப்பு பின்னமாகவும் மாற்றலாம்: கலப்பு பின்னம்: . இதிலுள்ள முழுஎண் 2 ஐ, தகுபின்னத்தின் பகுதியான நான்கைப் பகுதியாகக் கொண்ட சமான தகா பின்னமாக மாற்றிக் கொள்ளவேண்டும்: . பின் அவ்விரு பின்னங்களையும் கூட்ட, . இதேபோல ஒரு தகா பின்னத்தை கலப்பு பின்னமாக மாற்றலாம்: தகாபின்னம்: தொகுதியைப் பகுதியால் வகுத்து ஈவு, மீதி இரண்டையும் கணக்கிட வேண்டும். 11 ÷ 4 : ஈவு =2 , மீதி = 3. இந்த ஈவு தேவையன கலப்பு பின்னத்தின் முழுஎண் பகுதியாகக் கொள்ளப்படுகிறது. மீதியைத் தொகுதியாகவும், எடுத்துக்கொள்ளப்பட்ட தகாபின்னத்தின் பகுதியைப் பகுதியாகவும் கொண்ட தகுபின்னமானது பின்னப்பகுதியாகவும் கொண்டு கலப்பு பின்னம் காணப்படுகிறது. . கலப்பு பின்னங்கள் எதிர்ம எண்களாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டு: விகிதங்கள் ஒரு விகிதம் என்பது, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட எண்களுக்கு இடையேயுள்ள தொடர்பைக் குறிக்கும். எடுத்துக்கொள்ளப்பட்ட பொருட்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் இருக்கும் பொருட்களின் எண்ணிக்கையின் வாயிலாக, அவை எண்ணளவில் ஒப்பீடு செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஓரிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 12 தானுந்துகளில் அவற்றின் நிற வகைப்பாடு பின்வருமாறு உள்ளது: 2 வெள்ளை 6 சிவப்பு 4 மஞ்சள் வெள்ளை, சிவப்பு, மஞ்சள் தானுந்துகளின் விகிதம்: 2:6:4 = 1:3:2 வெள்ளை, சிவப்பு தானுந்துகளின் விகிதம்: 2:6 = 1:3 வெள்ளை, மஞ்சள் தானுந்துகளின் விகிதம்: 2:4 = 1:2 சிவப்பு, மஞ்சள் தானுந்துகளின் விகிதம்: 6:4 = 3:2 குறிப்பிட்ட பாகத்திற்கும் முழுவதற்குமான விகிதங்களைப் பின்ன வடிவில் எழுதலாம். மொத்த தானுந்துகளில் வெள்ளை தானுந்துகளின் விகிதம்: 2:12 = 1:6. இதன் பின்ன வடிவம் = 1/6. அதாவது மொத்த தானுந்துகளில் ஆறில் ஒரு பங்கு வெள்ளை தானுந்துகள் உள்ளன. மொத்த தானுந்துகளில் சிவப்பு தானுந்துகளின் விகிதம்: 6:12 = 1:2 இதன் பின்ன வடிவம் 1/2. அதாவது மொத்த தானுந்துகளில் இரண்டில் ஒரு பங்கு சிவப்பு தானுந்துகள் உள்ளன. மொத்த தானுந்துகளில் மஞ்சள் தானுந்துகளின் விகிதம்: 4:12 = 1:3. இதன் பின்ன வடிவம் = 1/3. அதாவது மொத்த தானுந்துகளில் மூன்றில் ஒரு பங்கு மஞ்சள் தானுந்துகள் உள்ளன. எனவே அந்தத் தானுந்து நிறுத்தத்திலிருந்து, ஒருவர் சமவாய்ப்பு முறையில் ஒரு தானுந்தைத் தேர்ந்தெடுக்கும்போது அது வெள்ளையாக இருப்பதற்கான வாய்ப்பு (நிகழ்தகவு) 1/6; சிவப்பாக இருப்பதற்கான வாய்ப்பு 1/2; மஞ்சளாக இருப்பதற்கான வாய்ப்பு 1/3. தலைகீழிகள் ஒரு பின்னத்தின் தலைகீழி மற்றொரு பின்னமாகும். மூலப் பின்னத்தின் தொகுதி, பகுதிகளைப் பரிமாற்றி அதன் தலைகீழியைப் பெறலாம். இன் தலைகீழி . ஒரு பின்னத்தையும் அதன் தலைகீழியையும் பெருக்கக் கிடைக்கும் விடை 1 ஆகும். எனவே ஒரு பின்னத்தின் தலைகீழியானது அப்பின்னத்தின் பெருக்கல் நேர்மாறு ஆகும். ஒரு தகு பின்னத்தின் தலைகீழி தகாபின்னமாக இருக்கும்: இன் தலைகீழி எண் 1 க்குச் சமமில்லாத தகாபின்னத்தின் (பகுதியும் தொகுதியும் சமமாக இல்லாதவை) தலைகீழி தகுபின்னமாக இருக்கும். இன் தலைகீழி எந்தவொரு முழு எண்ணையும் எண் 1 ஐ பகுதியாகக் கொண்ட பின்னமாக எழுதலாம். எடுத்துக்காட்டாக, 5 ஐ என எழுதலாம். இங்கு எண் 1 ஆனது "கண்ணுக்குத்தெரியாத பகுதி" (invisible denominator) எனப்படும். எனவே பூச்சியம் தவிர்த்த அனைத்து முழுஎண்களுக்கும் தலைகீழி உண்டு. 5 இன் தலைகீழி . சிக்கல் பின்னங்கள் சிக்கலெண்களாலான பின்னங்களோடு இவற்றை குழப்பிக்கொள்ளக் கூடாது ஒரு சிக்கல் பின்னத்தின் (complex fraction) தொகுதி, பகுதி இரண்டுமே ஒரு பின்னமாக அல்லது கலப்பு பின்னமாக இருக்கும். அதாவது, ஒரு சிக்கல் பின்னமானது, இரு பின்னங்களின் வகுத்தலாக அமையும். எடுத்துக்காட்டுகள்: , இரண்டும் சிக்கல் பின்னங்களாகும். ஒரு சிக்கல் பின்னத்தைச் சுருக்குவதற்கு, அதன் தொகுதிக்கும் பகுதிக்கும் இடைப்பட்ட அதிநீள பின்னக் கோட்டை வகுத்தல் குறியாக எடுத்துக்கொள்ள வேண்டும். . ஒரு சிக்கல் பின்னத்தில் எந்த பின்னக்கோடு முதன்மையானது எனத் தெளிவாகத் தரப்பட்டிருக்காவிட்டால், அப்பின்னம் சரியான முறையில் அமைக்கப்படாத ஒன்றாகும். எடுத்துக்காட்டாக 5/10/20/40 என்பது சரியான முறையில் அமைக்கப்படாத கணிதக்கோவையாகும். மேலும் இதன் மதிப்பும் பலவிதங்களில் கணிக்கிடக்கூடியதாக அமையும். கூட்டு பின்னங்கள் ஒரு கூட்டு பின்னம் (compound fraction) என்பது ஒரு பின்னத்தின் பின்னமாக இருக்கும். பெருக்கலின் மூலம், ஒரு கூட்டு பின்னத்தை எளிய பின்னமாகச் சுருக்கலாம். எடுத்துகாட்டு: இன் பங்கு என்பது கூட்டு பின்னம் ஆகும். இதனைச் சுருக்கி, என எழுதலாம். சிக்கல் பின்னமும் கூட்டு பின்னமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையன. தசம பின்னங்களும் விழுக்காடுகளும் ஒரு தசம பின்னத்தில் (decimal fraction) அதன் பகுதியானது பத்தின் முழுஎண் அடுக்குகளாக இருக்கும். எனினும் தசம பின்னத்தின் பகுதி வெளிப்படையாக எழுதப்படுவதில்லை. தசம பின்னங்கள் தசமக் குறியீட்டில் எழுதப்படுகின்றன. அக்குறியீட்டில் தசம புள்ளிக்கு வலப்புறமுள்ள இலக்கங்களின் எண்ணிக்கையே வெளிப்படையாக அமையாத பகுதியின் பத்தின் முழுஎண் அடுக்கைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, 0.75 இல் தசமப் புள்ளிக்கு வலப்புறம் இரண்டு இலக்கங்கள் உள்ளதால் அதன் பகுதி 10 இன் அடுக்கு இரண்டாக, அதாவது 100 ஆக இருக்கும். 1 விடப் பெரிய தசம பின்னங்களை தகா பின்னங்களாக அல்லது கலப்பு பின்னங்களாக எழுதலாம். அறிவியல் குறியீட்டைப் பயன்படுத்தி தசமபின்னங்களை எதிர்ம அடுக்குகளைக் கொண்டு எழுதலாம். 0.0000006023 = . ஆனது பகுதி ஐத் தருகிறது. ஆல் வகுக்கும்போது தசமபுள்ளியானது இடப்புறமாக ஏழு இடங்கள் நகர்கிறது. தசமபுள்ளிக்கு வலப்புறம் முடிவிலா எண்ணிக்கையிலான இலக்கங்களைக் கொண்ட தசமபின்னமானது ஒரு தொடரைக் குறிக்கும். எடுத்துக்காட்டு: 1/3 = 0.333... = 3/10 + 3/100 + 3/1000 + ... . பகுதிகளை வெளிப்படையாகக் கொண்டிராத மற்றொரு வகைப் பின்னங்கள் விழுக்காடுகள் ஆகும். இவற்றின் பகுதிகள் எப்போதும் 100 ஆகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, 51% = 51/100 100 ஐ விட அதிகமான அல்லது பூச்சியத்தை விடக் குறைவான விழுக்காடுகளும் உண்டு. அவையும் பகுதிகளை 100 ஆகவே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக 311% = 311/100 −27% = −27/100. சாதாரண பின்ன அல்லது தசமபின்ன வடிவங்கள் இரண்டில் எதனைப் பயன்படுத்தலாம் என்பது சூழலின் தேவையைப் பொறுத்தும் கணக்கிடும் நபரின் விருப்பத்தையும் பொறுத்தது. பின்னத்தின் பகுதி சிறிய எண்ணாக இருக்கும்போது சாதாரண பின்ன வடிவம் தேர்ந்தெடுக்கப்படலாம். மனதிலேயே கணக்கிட அது உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக: 16 ஆல் 3/16 ஐப் பெருக்க வேண்டுமானால், 3/16 ஐ தசமபின்ன வடிவில் எடுத்துக்கொள்வதைவிட, சாதாரண பின்ன வடிவத்தில் எளிதாகக் கணக்கிட முடியும். 1/3 ஐ 15 ஆல் பெருக்கும் போது சாதாரண பின்னமாகக் கொண்டு பெருக்கினால் விடை 5 என முழு எண்ணாகக் கிடைக்கும். ஆனால் 1/3 ஐ தசம வடிவிற்கு (1/3=0.3333...) என மாற்றி இப்பெருக்கலுக்கு விடை காண்போமானால் விடை முழு எண்ணாகக் கிடைக்காது. பணமதிப்புகள் பொதுவாக தசமபின்ன வடிவில், இரண்டு தசமத்தானங்கள் கொண்டவையாக எழுதப்படுகின்றன. இந்தியாவில் ரூ 85.50 எனவும் அமெரிக்காவில் $3.75 எனவும் எழுதப்படுகின்றன. தசமபின்னங்கள் பழக்கத்திற்கு வருமுன்னர் பிரித்தானியப் பணம் 3 ஷில்லிங் மற்றும் 6 பென்சு என்பது, 3/6 ("மூன்று மட்டும் ஆறு" என வாசிக்கவும்) என எழுதப்பட்டது. இதற்கும் சாதாரண பின்னம் 3/6 க்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. . பின்னங்களின் கணிதம் முழுஎண்களைப் போல பின்னங்களும் பரிமாற்றுத்தன்மை, சேர்ப்புப் பண்பு, பங்கீட்டு விதிகள், பூச்சியத்தால் வகுத்தல் விதி ஆகியவற்றை நிறைவு செய்கின்றன. சமவலு பின்னங்கள் ஒரு பூச்சியமற்ற எண் எனில், ஆகும். எனவே ஆல் பெருக்குவது என்பது 1 ஆல் பெருக்குவதற்குச் சமம். 1 ஆல் பெருக்கப்படுவதால் எந்தவொரு எண்ணும் அதன் மதிப்பில் மாறுவதில்லை. எனவே ஆல் பெருக்குவதாலும் எந்த எண் அல்லது பின்னத்தின் மதிப்பு மாறாது. அதாவது, ஒரு பின்னத்தின் தொகுதியையும் பகுதியையும் ஒரே எண்ணால் பெருக்குவதால் அப்பின்னத்தின் மதிப்பு மாறாது. அவ்வாறு ஒரு பின்னத்தின் தொகுதி, பகுதியை ஒரே எண்ணால் பெருக்கக் கிடைக்கும் பின்னமானது மூல பின்னத்தின் சமவலு பின்னம் (equivalent fraction) என அழைக்கப்படும். ஒரு பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதிகளை பூச்சியமற்ற ஒரே எண்ணால் பெருக்கி அதன் சமான பின்னத்தைக் காணலாம். எடுத்துக்காட்டு: பின்னத்தின் தொகுதி, பகுதிகளை 2 ஆல் பெருக்கக் கிடைக்கும் பின்னம் . ஒரு பொருளை இரண்டாகப் பிரித்து அதில் ஒரு பங்கு எடுப்பதும், அதே பொருளை நான்காகப் பிரித்து அதில் இரண்டு பங்குகளை எடுப்பதும் ஒரே அளவாக இருக்கும். எனவே இவ்விரு பின்னங்களும் ஒரே மதிப்பைக் குறிக்கும் (முழுப்பொருளில் பாதி). இன் ஒரு சமவலு பின்னம் ஒரு பின்னத்தின் தொகுதி, பகுதியை பூச்சியமற்ற ஒரே எண்ணால் வகுத்தும் அப்பின்னத்தின் சமவலு பின்னத்தைப் பெறலாம். இது பின்னச் சுருக்கம் எனப்படும். பின்னங்களை ஒப்பிடல் ஒரே பகுதிகளைக் கொண்ட பின்னங்களை அவற்றின் தொகுதிகளை ஒப்பிடுவதன் மூலம் ஒப்பிடலாம். பகுதிகள் ஒன்றாக இருக்கும்போது பெரிய தொகுதியுடைய பின்னமே சிறிய தொகுதி கொண்ட பின்னத்தை விடப் பெரியதாகும். இரு பின்னங்கள் ஒரே தொகுதி கொண்டிருந்தால், சிறிய பகுதி கொண்ட பின்னமே பெரிய பகுதி கொண்ட பின்னத்தைவிடப் பெரியதாகும். இரு பின்னங்களை ஒப்பிடுவதற்கு, அவற்றின் பகுதிகளைச் சமமானவைகளாக மாற்றுவது ஒரு வழிமுறையாகும். , இரண்டையும் ஒப்பிடுவதற்கு அவை பின்வருமாறு சமான மாற்றப்படுகின்றன: இரண்டின் பகுதிகளும் ஒன்றாக உள்ளன. எனவே தொகுதிகளான ad , bc இரண்டையும் ஒப்பிடுவதன் மூலம் இவ்விரு பின்னங்களில் எது பெரியது, எது சிறியது எனத் தீர்மானிக்கலாம். எடுத்துக்காட்டு: , சம பகுதிகளைக் கொண்டச் சமான பின்னங்களைக் காண: ; இரண்டு பின்னங்களையும் ஒன்றின் தொகுதி, பகுதிகளை மற்றதன் பகுதியால் பெருக்கி, இரு பின்னங்களின் பகுதிகளை ஒரே எண்ணாகக் கொண்ட சமான பின்னங்களாக மாற்றலாம்: ; ஒரு பின்னத்தின் தொகுதி, பகுதிகளை இன்னொன்றின் பகுதியால் பெருக்க: ? 5×17 (= 85) > 4×18 (= 72), . எதிர்ம பின்னங்கள் உட்பட ஒவ்வொரு எதிர்ம எண்ணும் பூச்சியத்தை விடச் சிறியவை; நேர்ம பின்னங்கள் உட்பட ஒவ்வொரு நேர்ம எண்ணும் பூச்சியத்தை விடப் பெரியவை. எனவே ஒவ்வொரு எதிர்ம பின்னமும் ஒரு எந்தவொரு நேர்ம பின்னத்தை விடவும் சிறியதாகும். கூட்டல் இரு பின்னங்களைக் கூட்டுவதற்கு முக்கிய தேவையாக அவற்றின் பகுதிகள் சமமானவையாக இருக்க வேண்டும். . கூட்ட வேண்டிய பின்னங்களின் பகுதிகள் ஒரே எண்ணாக இல்லையெனில், முதலில் அவற்றை ஒரே பகுதிகளைக் கொண்ட சமான பின்னங்களாக மாற்றிக் கொண்டு, பின் கூட்ட வேண்டும். எடுத்துக்காட்டுகள்: . . பின்னங்களின் கூட்டலின் இயற்கணித விளக்கம்: மூன்று பின்னங்களின் கூட்டல்: கூட்ட வேண்டிய பின்னங்களை ஒரே பகுதி கொண்டவையாக மாற்றுவதற்கு மேலுள்ள எடுத்துக்காட்டுகளில் தரப்பட்டுள்ளது போல ஒன்றின் பகுதியால் மற்றொன்றின் தொகுதி, பகுதிகளைப் பெருக்குவதற்குப் பதிலாக, இரு பின்னங்களின் பகுதிகளை அவற்றின் மீச்சிறு பொது மடங்காக மாற்றுவதற்குத் தேவையான எண்களைக் கொண்டு முறையே அந்த இரு பின்னங்களின் தொகுதி, பகுதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டுகள்: , இவ்விரு பின்னங்களின் பகுதிகள் முறையே 4, 12. இவற்றின் மீசிம=12. எனவே முதல் பின்னத்தின் தொகுதி, பகுதிகளை மட்டும் எண் 3 ஆல் பெருக்கிக் கொண்டால் போதும். , இவ்விரு பின்னங்களின் பகுதிகள் முறையே 9, 15. இவற்றின் மீசிம=45. எனவே முதல் பின்னத்தின் தொகுதி, பகுதிகளை மட்டும் எண் 5 ஆலும், இரண்டாவது பின்னத்தின் தொகுதி, பகுதிகளை 3 ஆலும் பெருக்க வேண்டும். கழித்தல் கூட்டலைப் போன்றதே பின்னங்களின் கழித்தலும். இரு பின்னங்களைக் கழிப்பதற்கு அவற்றின் பகுதிகள் ஒன்றாக இருக்க வேண்டும். கழிக்க வேண்டிய இரு பின்னங்களின் பகுதிகள் ஒரே எண்ணாக இல்லையெனில், அவற்றை ஒரே பகுதி கொண்ட பின்னங்களாக மாற்றிக் கொண்ட பின் கழிக்கலாம். எடுத்துக்காட்டு: பெருக்கல் ஒரு பின்னத்தை மற்றொரு பின்னத்தால் பெருக்குதல் இரு பின்னங்களைப் பெருக்குவதற்கு அவற்றின் தொகுதியைத் தொகுதியாலும், பகுதியைப் பகுதியாலும் பெருக்க வேண்டும்: விளக்கம்: முழுமையான ஒரு பொருளின் காற்பங்கை (நான்கில் ஒரு பங்கு-1/4) எடுத்துக்கொண்டு அதனை மூன்று சம பங்குகளாகப் பிரிக்க, அந்த மூன்று சிறு சம பங்குகளில் ஒரு துண்டைப் போன்ற 12 பங்குகள் சேர்ந்து முழுப்பொருளுக்குச் சமமாக அமையும். அதாவது காற்பங்கின் மூன்றில் ஒரு பங்கு என்பது பனிரெண்டில் ஒரு பங்காகும் (1/12) (1/4 இன் 1/3 பங்கு = 1/12). காற்பங்கில் மூன்றிலொரு பங்கு என்பது பனிரெண்டிலொரு பங்கு (1/12) என்பதால், காற்பங்கில் மூன்றிலிரு பங்கு என்பது பனிரெண்டிலிரு பங்கு (2/12). 3/4 என்பது காற்பங்கின் மூன்று மடங்கு என்பதால் 3/4 இன் மூன்றிலிரு பங்கின் மதிப்பு 2/12 இன் மூன்று மடங்காக (6/12) இருக்கும். அதாவது 2/3 x 3/4 = 6/12. பின்னத்தை முழுஎண்ணால் பெருக்குதல் எந்தவொரு முழுஎண்ணையும் பகுதி 1 கொண்ட பின்னமாகக் கருதலாம் என்பதால் இரு பின்னங்களைப் பெருக்குவதைப் போன்றதே முழுஎண்ணால் பின்னத்தைப் பெருக்குவதும். எடுத்துக்காட்டு: கலப்பு பின்னங்களைப் பெருக்குதல் கலப்பு பின்னம் (பின்னங்களை) தகா பின்னங்களாக மாற்றிக்கொண்டு இரு பின்னங்களைப் பெருக்குவதைப் போல இவற்றையும் பெருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: வகுத்தல் ஒரு பின்னத்தை ஒரு முழு எண்ணால் வகுப்பதற்கு, பின்னத்தின் தொகுதியை அந்த முழுஎண்ணால் வகுக்கலாம் அல்லது பகுதியை அந்த முழுஎண்ணால் பெருக்கலாம். எடுத்துக்காட்டு: . ஒரு முழுஎண்ணை (அல்லது பின்னம்) ஒரு பின்னத்தால் வகுப்பதற்கு அந்த எண்ணை பின்னத்தின் தலைகீழியால் பெருக்கலாம். எடுத்துக்காட்டு: பின்னத்தை தசம பின்னமாக மாற்றுதல் ஒரு பின்னத்தை தசமபின்னமாக மாற்றுவதற்கு, அப்பின்னத்தின் தொகுதியை பகுதியால் வகுக்க வேண்டும். சரியாக வகுபடாவிட்டால் தேவையான இலக்கங்களுக்குத் தோராயப்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டுகள்: 1/4 =0.25 0.25 4)1.00 8 20 20 0 1/3 = 0.333... 0.333... 3)1.00 9 10 10 1 தசமபின்னத்தை சாதாரண பின்னமாக்கல் ஒரு தசமபின்னத்தை சாதாரண பின்னமாக்க, தசமபுள்ளிக்கு வலப்புறம் எத்தனை இலக்கங்கள் உள்ளனவோ அத்தனை பத்தின் நேர்ம அடுக்கால் அத்தசமபின்னத்தைப் பெருக்கி வகுக்க வேண்டும். எடுத்துக்காட்டு: மீளும் தசமபின்னத்தை சாதாரண பின்னமாக்கல் கணக்கிடுதலுக்கு சாதாரண பின்னங்களைவிட மீளும் தசமங்கள் எளிதானவை என்றாலும், சில சூழல்களில் சாதாரண பின்னங்கள் போன்று இவை துல்லியமான விடைகளைத் தருவதில்லை. அவ்வாறான நிலைகளில் மீளும் தசமங்களை சாதாரண பின்னங்களாக மாற்றிக்கொள்ள வேண்டியதாகிறது. பொதுவாக மீளும் தசமங்கள், அவற்றின் சுழலும் தசமங்களின் மேல் ஒரு கோடிடப்பட்டு குறிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 0. = 0.789789789… தசமபுள்ளிக்கு அடுத்தபடியாகவே மீள்கை தொடங்கும் மீள் தசமங்களில், அவற்றின் சாதாரண பின்னவடிவின் தொகுதி அந்த மீள் இலக்கங்களாகவும், பகுதியானது எத்தனை இலக்கங்கள் மீள்கின்றனவோ அதனை 9 -கள் கொண்ட எண்ணாகவும் அமையும். 0. = 5/9 0. = 62/99 0. = 264/999 0. = 6291/9999 தசமபுள்ளிக்கும் மீள்தசம இலக்கங்களின் தொடக்கநிலைக்கும் இடையே பூச்சியங்கள் இருக்குமானால் அப்பூச்சியங்களின் எண்ணிக்கைக்குச் சமமான பூச்சியங்கள், மேற்காணும் முறையில் பகுதியில் எழுதப்படும் 9 களுக்கு அடுத்து எழுதப்படும் 0.0 = 5/90 0.000 = 392/999000 0.00 = 12/9900 மீள் தசமபின்னங்களின் தசமப்பகுதியில் மீளாத இலக்கங்களும் இருக்குமானால் பின்வரும் முறையில் அவற்றின் சாதாபின்னவடிவம் அமையும். 0.1523) 0.1523 + 0.0000 1523/10000 + 987/9990000 = 1522464/9990000 இயற்கணிதமுறை Let x = மீள்தசமம் x = 0.1523 மீளா இலக்கங்களின் எண்ணிக்கைக்குச் சமமான 10 இன் அடுக்கால இருபுறமும் பெருக்கினால் தசமபுள்ளியை அடுத்து மீள்தசம இலக்கங்கள் மட்டுமே இருக்கும் வடிவம் கிடைக்கும். (இக்கணக்கிற்கு 104) 10,000x = 1,523.--------(1) மீளும் தசம இலக்கங்களின் எண்ணிக்கைக்குச் சமமான 10 இன் அடுக்கால் இருபுறமும் பெருக்க வேண்டும். (இதில் 103) 10,000,000x = 1,523,987.--------(2) (2) - (1) 10,000,000x − 10,000x = 1,523,987. − 1,523. மீள்தசமங்கள் நீங்கும்வரை கழித்தலைத் தொடர வேண்டும் 9,990,000x = 1,523,987 − 1,523 9,990,000x = 1,522,464 x = 1522464/9990000 0.1523 = 1522464/9990000 நுண்புலக் கணிதத்தில் பின்னம் நடைமுறை வாழ்க்கையில் பின்னங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோடு, கணிதவியலாளர்களாலும் சீர்பார்க்கப்பட்டு மேல்தரப்பட்ட விதிகள் சரியானவையே என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் கணிதவியலாளர்கள் பின்னத்தை கீழுள்ளவாறு இரு முழுவெண்களின் வரிசைப்படுத்தப்பட்ட ஒரு இரட்டையாக வரையறுக்கின்றனர். இரண்டும் முழு எண்கள்; மற்றும் பின்னத்தைன் இவ்வகை வரையறைக்கான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் செயல்களின் வரையறைகள்: கணிதச் செயல்களின் இந்த வரையறைகள் கட்டுடையின் மேற்பகுதியில் தரப்பட்ட வரையறைகளோடு எல்லாவிதத்திலும் ஒத்திருக்கின்றன; குறியீட்டளவில் மட்டுமே வேறுபடுகிறது. கழித்தலையும் வகுத்தலையும் செயலிகளாக வரையறுப்பதற்குப் பதிலாக கூட்டல் மற்றும் பெருக்கலின் நேர்மாறு பின்னங்களாக கீழ்வருமாறு வரையறுக்கலாம்: மேலும், என்ற உறவு, பின்னங்களின் சமான உறவாக உள்ளது. இயற்கணித பின்னங்கள் இரு இயற்கணிதக் கோவைகளின் வகுத்தலாக அமைவது ஒரு இயற்கணித பின்னமாகும். எடுத்துக்காட்டுகள்: . இயற்கணித பின்னங்களும் சாதரண எண்கணித பின்னங்களின் விதிமுறைகளுக்குட்பட்டவையாகும். தொகுதியும் பகுதியும் பல்லுறுப்புக்கோவைகளாகக் கொண்ட இயற்கணிதப் பின்னமானது விகிதமுறு கோவை அல்லது விகிதமுறு பின்னம் எனப்படும். எகா: தொகுதி அல்லது பகுதியிலுள்ள இயற்கணிதக் கோவையானது பின்ன அடுக்குகொண்ட மாறியில் அமைந்திருந்தால் அந்த இயற்கணித பின்னமானது விகிதமுறா பின்னம் எனப்படும்.. எகா: சாதாரண பின்னங்களைப் போன்றே இயற்கணித பின்னத்தின் தொகுதி, பகுதி கோவைகளுக்கு பொதுக் காரணிகள் இல்லாத இயற்கணிதப் பின்னங்கள் எளிய வடிவில் அமைந்துள்ளதாகக் கருதப்படும். தொகுதி அல்லது பகுதியில் அல்லது இரண்டிலும் பின்னக் கோவைகளைக் கொண்டவை சிக்கல் பின்னம் எனப்படும். எகா: ஒரு இயற்கணித பின்னத்தை விகிதமுறு கோவைகளின் கூட்டலாக எழுதும் போது அந்த விகிதமுறு கோவைகள் பகுதி பின்னங்கள் என அழைக்கப்படுகின்றன. தரப்பட்டு இயற்கணித பின்னத்தின் பகுதியாகவுள்ள கோவையின் படியை விடக் குறைந்த படியுள்ள கோவையைப் பகுதியாகக் கொண்ட விகிதமுறு கோவைகளின் கூடுதலாக மூல பின்னம் எழுதப்படுகிறது. எடுத்துக்காட்டு: + தமிழில் கீழ்வாய் எண்கள் 15/16 = 0.9375 = முக்காலே மூன்று வீசம் 3/4 = 0.75 = முக்கால் 1/2 = 0.5 = அரை 1/4 = 0.25 = கால் 1/5 = 0.2 = நால்மா/நான்மா 3/16 = 0.1875 = மூன்று வீசம் 3/20 = 0.15 = மூன்றுமா 1/8 = 0.125 = அரைக்கால் 1/10 = 0.1 = இருமா 1/16 = 0.0625 = வீசம் 1/20 = 0.05 = மா 3/64 = 0.046875 = முக்கால் வீசம் 3/80 = 0.0375 = முக்காணி 1/32 = 0.03125 = அரை வீசம் 1/40 = 0.025 = அரை மா 1/64 = 0.015625 = கால் வீசம் 1/80 = 0.0125 = காணி 3/320 = 0.009375 = அரைக்காணி முந்திரி 1/160 = 0.00625 = அரைக் காணி 1/320 = 0.003125 = முந்திரி 3/1280 = 0.00234375 = கீழ் முக்கால் 1/640 = 0.0015625 = கீழ் அரை 1/1280 = 0.00078125 = கீழ்க் கால் 1/1600 = 0.000625 = கீழ் நால்மா 3/5020 = 0.000597609 = கீழ் மூன்று வீசம் 1/2560 =0.000390625 = கீழ் அரைக்கால் 1/3200 = 0.0003125 = கீழ் இருமா 1/5120 = 0.000195312= கீழ் மாகாணி 1/6400 = 0.00015625 = கீழ் மா 3/25600 = 0.000117187 = கீழ் முக்காணி 1/12800 = 0.000078125 = கீழ் அரைமா 1/25600 = 0.000039062 = கீழ்க்காணி 1/51200 = 0.000019531 = கீழ் அரைக்காணி 1/102400 = 0.000009765 = கீழ் முந்திரி} 1/2,150,400= இம்மி 1/23,654,400= மும்மி 1/165,580,800= அணு 1/1,490,227,200= குணம் 1/7,451,136,000= பந்தம் 1/44,706,816,000= பாகம் 1/312,947,712,000= விந்தம் 1/5,320,111,104,000= நாகவிந்தம் 1/74,481,555,456,000= சிந்தை 1/1,489,631,109,120,000= கதிர்முனை 1/59,585,244,364,800,000= குரல்வளைப்பிடி 1/3,575,114,661,888,000,000= வெள்ளம் 1/357,511,466,188,800,000,000= நுண்மணி 1/2,323,824,530,227,200,000,000= தேர்த்துகள் மேற்கோள்கள் மேலும் விவரங்களுக்கு mathsisfun-Fractions ! தமிழ் மின் நூலகம் பின்னங்கள் தமிழ்க் கணிதம் வகுத்தல் (கணிதம்)
2657
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
தகவல் தொழில்நுட்பம்
தகவல் தொழினுட்பம் (Information technology) என்பது தகவல் அல்லது தரவுகளைக் கணினியைப் பயன்படுத்தித் தேக்குதல், ஆய்தல், மீட்டல், செலுத்தல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும். இங்குத் தகவல் என்பது வழக்கமாகத் தொழில்வணிகம் அல்லது பிற நிறுவனம் சார்ந்ததாக அமையும். தகவல் தொழினுட்பம் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் ஓர் உட்பிரிவாகும். சுப்போ என்பார் 2012 இல் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் படிநிலைகளை வரையறுத்தார். இந்தப் படிநிலைகளின் ஒவ்வொரு மட்டமும் ஓரளவு சில பொதுமைகளைக் கொண்டமைந்துள்ளன. இப்பொதுமைகள் "தகவல் பரிமாற்றத்தையும் மின்னணுவியலானத் தொடர்பாடல்களையும் உள்ளடக்கிய தொழிநுட்பங்களைச் சார்ந்திருந்தன." இச்சொல் ஓரளவு கணினிகளையும் கணினி வலையமைப்பையும் குறித்தாலும், இதில் தகவலைப் பரப்பும் தொழில்நுட்பங்களாகிய தொலைக்காட்சியும் தொலைபேசிகளும் உள்ளடங்குவனவாகும். தகவல் தொழில்நுட்பத்தில் பல கணினித் தொழிலகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இத்தொழிலகங்களில் கணினி வன்பொருள், மென்பொருள், மின்னணுவியல், குறைகடத்திகள், இணையம், தொலைத்தொடர்புக் கருவிகள் (:en:telecommunications equipment), மின்வணிகம் ஆகியன உள்ளடங்கும். தகவல் தொழில்நுட்பத்தின் வரலாறு கி.மு. 3000 இல் கூம்பு வடிவ எழுத்துமுறையை உருவாக்கிய மெசபடோமியாவின் சுமேரியர்கள் காலத்தில் இருந்தே தகவல் தேக்குதலும் மீட்டலும் கையாளலும் பரிமாறலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. என்றாலும், தகவல் தொழினுட்பம் எனும் சொல் புத்தியல் காலப் பொருளில் 1958 இல் ஆர்வார்டு வணிக மீள்பார்வை எனும் கட்டுரையில் முதலில் தோன்றியது எனலாம். இந்தக் கட்டுறையின் ஆசிரியர்களாகிய அரோல்டு ஜே. இலெவிட், தாமசு எல். விசிலர் எனும் இருவரும் "இந்தப் புதிய தொழில்நுட்பத்துக்கு ஒரே பெயர் இன்னும் உருவாகவில்லை. நாம் இதைத் தகவல் தொழினுட்பம் என அழைப்போம். " என்று கருத்துரைத்துள்ளனர். இவர்களின் வரையறையில் மூன்று பகுதிகள் அமைகின்றன. அவை செயலாக்க நுட்பங்கள், முடிவு எடுப்பதில் கணித, புள்ளியியல் முறைகளின் பயன்பாடு, கணினி நிரல் வழியாகௌயர்சிந்தனையை ஒப்புருவாக்கம் செய்தல் என்பனவாகும். நாம் தகவல் தேக்குதல் சார்ந்தும் தகவல் செயலாக்க நுட்பங்கள் சார்ந்தும் தகவல் தொழில்நுட்ப வரலாற்றினைப் பின்வருமாறு பிரிக்கலாம்: எந்திரமயமாக்கத்திற்கு முன்கட்டம் (Premechanical) 3000 B.C. - 1450 A.D. எந்திரமயமாக்கக் கட்டம் (Mechanical) 1450 - 1840 மின் எந்திரவியல் இயக்கக் கட்டம் (ElectroMechanical) 1840 - 1940. மின்னணுவியல் இயக்கக் கட்டம் (Electronic) 1940 இக்கட்டுரை 1940 இல் தோன்றிய மின்னணுவியல் கட்டத்தை மட்டுமே கருதுகிறது. கணினித் தொழில்நுட்ப வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளாகவே கணிப்புக்கு உதவ சரிபார்ப்புக் குச்சிகள் பயன்பாட்டில் உள்ளன. கி.பி முதல் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட எதிர்கைத்தெரா இயங்கமைப்புதான் முதல் எந்திர வகை ஒப்புமைக் கணினி ஆகக் கருதப்படுகிறது. இது தான் மிகத் தொடக்கநிலைப் பல்லிணை பூட்டிய எந்திரவியல் இயங்கமைப்பும் ஆகும். இதோடு ஒப்பிடத்தக்க ஒப்புமைக் கணினிகள் ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை மேலும் 1645 வரை நான்கு கணித வினைகளையும் ஆற்றக்கூடிய முதல் எந்திரவகை கணிப்புக் கருவியேதும் உருவாக்கப்படவில்லை உணர்த்திகளையோ அல்லது கவாடங்களையோ பயன்கொள்ளும் மின்னணுவியல் கணினிகள் 1940 களில் தோன்றின. மின் எந்திரக் கணினி சூசு Z3 1941 இல் செய்து முடிக்கப்பட்டது. இதுதான் உலகின் முதல் நிரலாக்கக் கணினியாகும். புத்தியல் காலச் செந்தரப்படி, இதுவே முழுமை வாய்ந்த கணிப்பு எந்திரம் ஆகும். இரண்டாம் உலகப்போரின்போது நாசி செருமானியத் தகவல் குறிமுறைகளை உடைக்க உருவாக்கப்பட்ட கொலோசசு கணினி (:en:Colossus computer) முதல் எண்ணியல்/இலக்கவியல் கணினியாகும். இதில் நிரலாக்கம் செய்ய முடியுமென்றாலும் பொதுப் பயன்பாட்டுக்கு உரியதல்ல. இது நிரலை ஒரு நினைவகத்தில் தேக்கிவைக்க வல்லதல்ல. அதோடு இது ஒரே ஒரு பணியை மட்டுமே செய்யவல்லதாக அமைந்தது; இதில் நிரலாக்கம் செய்ய, உள்ளிணைப்பை மாற்றும் முளைகளையும் நிலைமாற்றிகளையும் பயன்படுத்தியது. முதல் மின்னணுவியலான நிரல்தேக்க எண்ணியல் கணினி மான்செசுட்டர் சிற்றளவு செய்முறை எந்திரம் (SSEM) ஆகும். இது தன் நிரலாக்கப் பணியை 1948 ஜூன் 21 இல் இயக்கியது. பிந்தைய 1940 களில் பெல் ஆய்வகங்கள் திரிதடையங்களை உருவாக்கியதும் மின்திறன் நுகர்வு குறைந்த புதிய தலைமுறைக் கணினிகள் வடிவமைக்கப்பட்டன. முதல் வணிகவியலான நிரல்தேக்கக் கணினியாகிய பெராண்டி மார்க் 4050 கவாடங்களை 25 கி.வா மின் நுகர்வுடன் பயன்படுத்தியது. தன் இறுதி வடிவமைப்பில் திரிதடையங்களைப் பயன்படுத்தி மான்செசுட்டர் பல்கலைக்கழகம் உருவாக்கி 1953 நவம்பரில் இயங்கத் தொடங்கிய கணினியில் 150 வா மின் நுகர்வே தேவைப்பட்டது. மின்னணுவியல் தரவுகள் செயலாக்கம் தரவுகள் தேக்கல் கொலோசசு கணினி போன்ற தொடக்கநிலைக் கணினிகள் துளைத்த நாடாக்களைப் பயன்படுத்தின. இந்த நீண்ட தாள்வகை நாடாக்களில் தொடர்ந்த துளைகளால் தரவுகள் குறிக்கப்பட்டன. இத்தொழில்நுட்பாம் இப்போது காலாவதியாகி விட்டது. மின்னணுவியலான தரவுகளின் தேக்கல் இரண்டாம் உலகப்போரின்போது தோன்றியது. இதற்கு தாழ்த்தத் தொடராலான நினைவகம் உருவாக்கப்பட்டது. இந்நினைவகம் இராடார் குறிகைகளின் அடிப்போசையை அகற்றியது. இதற்கு முதலில் இதள் (பாதரசத்) தாழ்த்தத் தொடர் பயன்பட்டது. முதல் தற்போக்கு அணுகல் நினைவகம் அல்லது தற்போக்கு எண்ணியல் தேக்கல் அமைப்பு வில்லியம் குழல் ஆகும். இது செந்தர எதிர்முணைக்கதிர்க் கழலால் ஆனதாகும். தாழ்த்த்த் தொடரிலும் இதிலும் தேக்கும் தகவல் வியைவாக அழிந்துவிடும். எனவே இவற்ரை அடிக்கடி புத்துயிர்ப்பிக்கவேண்டும். இது மின் தடங்கலின்போது முழுமையாக அகன்றுவிடும். அழியாத முதல் கணினி நினைவகம் காந்த உருள்கல நினைவகமாகும். இது 1932 இல் புதிதாகப் புனையப்பட்டது இது பெராண்டி மார்க்1 எனும் முதல்வணிகவியலான பொதுநோக்கு மின்னணுவியல் கணினியில் பயன்படுத்தப்பட்டது. ஐ பி எம் 1956 இல் முதல் வன்வட்டு இயக்கியை 305 ராமாக் கணினியில் அறிமுகப்படுத்தியது. பெரும்பாலான எண்ணியல் தரவுகள் காந்த முறையில் வன்வட்டில் தேக்கப்படுகிறது அல்லது ஒளியியலாக CD-ROM களில் தேக்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு வரை ஒப்புமைக் கருவிகளில் பெரும்பாலான தகவல் தேக்கப்பட்டது ஆனால் அந்த ஆண்டில் ஒப்புமைக் கருவிகளை விட எண்ணியல் தேக்க்க் கொள்ள்ளவு கூடிவிட்டது. ஆனால் 2007 ஆம் ஆண்டளவில் 94% அளவு உலகளாவிய தரவுகள் எண்ணியலாகத் தேக்கப்பட்டன: இதில் 52% அளவு வன்வட்டிலும் 1% அளவு காந்தமுரையிலும் தேக்கப்பட்டன. உலகளாவிய மின்னணுக் கருவியில் தேக்கும் அளவு 1986 இல் 3 எக்சாபைட்டுகளில் இருந்து 2007 இல் 295 எக்சாபைட்டுகள் வரை வளர்ந்து பெருகியுள்ளது. அதாவது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இருமடங்காகப் பெருகியுள்ளது. தரவுத்தளங்கள் பேரளவு தரவுகளை விரைந்து துல்லியமாகத் தேக்கவும் மீட்கவும் தரவுத்தள மேலாண்மை அமைப்புகள் 1960 களில் தோன்றின இத்தகைய மிகத் தொடக்க கால அமைப்பு ஐ பி எம் உருவாக்கிய தகவல் மேலாண்மை அமைப்பு ஆகும். 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் இது பரவலாகப் பயனில் இருந்தது. இது தரவுகளைப் படிநிலை அமைப்பில் தேக்குகிறது. ஆனால் 1970 களில் டெடு கோடு என்பார் மாற்று முறையான உறவுசார் தேக்கப் படிமத்தைக் கணக்கோட்பாடு, பயனிலை அளவைமுறை (தருக்க முறை) ஆகியவற்றின் அடிப்படையில் முன்மொழிந்தார். இதில் பழக்கமான அட்டவணைகளும் நிரல்களும் நிரைகளும் பயன்கொள்ளப்பட்டன. ஒராக்கிள் குழுமம் முதல் வணிகவியலான உறவுசார் தரவுத்தள மேலாண்மை அமைப்பை 1980 இல் உருவாக்கியது. அனைத்து தரவுத்தள மேலாண்மை அமைப்புகளிலும் பல உறுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து தேக்கிய தரவுகளைப் பல பயனர்களால் அணுகிப் பெறும்வகையிலும் அதேவேளையில் அதன் ஒருமைக் குலையாதபடியும் தரவுகளைஅனைவருக்கும் தருகின்றன. அனைத்துத் தரவுத்தளங்களின் பான்மை, அவற்றில் உள்ளத் தரவுகளின் கட்டமைப்பைத் தனியாக வரையறுத்து, தரவுகள் தேக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து பிரித்து, வேறு பகுதியில் தேக்கி வைத்தலாகும் இவை தரவுத்தள வரிசைகள் எனப்படுகின்றன. தரவுகள் மீட்டல் உறவுசார் இயற்கணிதவியலைப் பயன்படுத்தி, உறவுசார் தரவுத்தளப் படிமம்கட்டமைப்பு வினா மொழி சாராத நிரலாக்க மொழியை அறிமுகப்படுத்தியது. தரவு என்பதும் தகவல் என்பதும் ஒத்தபொருள் வாய்ந்த சொற்கள் அல்ல. தேக்குமனைத்தும் தரவுகளே. இது தகவல் ஆக, பொருள்மைந்த ஒருங்கமைப்போடு தரப்படவேண்டும். உலகின் பெரும்பாலான எண்ணியல் தரவுகள் கட்டமைப்பற்ரவை. இவை பல்வேறு புறநிலைப் படிவங்களில் தேக்கப்படுகின்றன. ஒரே நிறுவனத்திலும் இந்நிலை அமைகிறது.தனித்தனியாக உள்ள தரவுகளை ஒருங்கிணைக்க 1980 களில் தகவல் கிடங்குகள் தோன்றின. இவற்றில் பல வாயில்களில் இருந்து திரட்டிய தரவுகள் தேக்கப்பட்டுள்ளன. இவ்வாயிகளில் வெளி வாயில்களும் இணையமும் கூட உள்ளன. இவற்ரில் உள்ள தகவல்கள் முடிவு எடுக்கும் அமைப்புகளுக்கு பயன்படும் வகையில் ஒருங்கமைக்கப்பட்டு உள்ளன. தரவுகள் பரிமாற்றம் தகவல் பரிமாற்றத்தில் மூன்று கூறுகள் உள்ளன. அவை செலுத்தல், பரப்புதல், பெறுதல் என்பனவாகும். இதைப் பொதுவாக ஒலி/ஒளி பரப்பல் எனலாம். இதில் தகவல் ஒரேதிசையில் செலுத்தும் அலைவரிசையிலோ அல்லது தொலைத்தொடர்பைப் போல இருதிசையிலும் செலுத்தும் அலைவரிசையிலும் பெறும் அலைவரிசையிலுமோ பரப்பப்படுகின்றன. இத்துறையிலுள்ள பிரிவுகள் கணினி அறிவியல் கணினி வலையமைப்பு (Computer Networking) தகவல் அறிவியல் தகவல் பாதுகாப்பு இணையம் (website) மின் நூலகம் அங்கீகார முறை (Pattern recognition) தரவு மேலாண்மை தரவு செயலாக்கம் (Data processing) தரவு அகழ்தல் மேனிலைத் தரவு (Metadata) தரவு சேமிப்பு தரவு தளம் தரவு வலையம் (Data networking) தொழில்நுட்ப மதிப்பீடு (Technology assessment ) இரகசிய எழுத்து (Cryptography) தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நூலகம் மின் அரசு Telematics மேற்கோள்கள் மேலும் படிக்க Gleick, James (2011).The Information: A History, a Theory, a Flood. New York: Pantheon Books. Shelly, Gary, Cashman, Thomas, Vermaat, Misty, and Walker, Tim. (1999). Discovering Computers 2000: Concepts for a Connected World. Cambridge, Massachusetts: Course Technology. Webster, Frank, and Robins, Kevin. (1986). Information Technology – A Luddite Analysis. Norwood, NJ: Ablex. வெளி இணைப்புகள் யுனிகோடு கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல் தகவல் தொழினுட்பம் ஊடகத் தொழினுட்பம்
2675
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
தஞ்சாவூர்
தஞ்சாவூர் (Thanjavur அல்லது Tanjore) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தமிழ் பாரம்பரிய மிக்க தொன்மையான நகரமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும். இது தஞ்சை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் நகராட்சி 10 ஏப்ரல் 2014 அன்று தமிழ்நாட்டின் 12-வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 250 ஆண்டுகள் இடைக்கால சோழ பேரரசின் தலைநகரான விளங்கியது. புகழ் பெற்ற தமிழ் சோழ மன்னர்களான விசயாலய சோழன் முதல் முதலாம் இராசராச சோழன் வரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த நகரமாகும். சோழ பேரரசின் பின் தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் மராத்திய அரசுகளின் தலைநகரமாக தஞ்சாவூர் விளங்கியது. தஞ்சை என்பது குளிர்ந்த அழகிய வயல்கள் மற்றும் அழகிய பனை மரங்கள் நிறைந்த பகுதி என பொருள். தஞ்சை மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம் என்பதால் நெல் பயிர் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தஞ்சையில் தான் அதிக அளவில் நெல் பயிர் விளைகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாகவும், உலக புகழ் பெற்றதாகவும் தஞ்சைப் பெரிய கோவில் விளங்குகிறது. பெயர்க் காரணம் தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள். தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையர் பெயரையே, இந்நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைபெற்றது என்றும் கூறப்படுகிறது. மற்றொரு கூற்றின்படி புராணக்கதை மூலம் பெயர் வந்ததாக கருதப்படுகிறது. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிட்டுணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது. வரலாறு தஞ்சாவூரை பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். பொ.ஊ. 250 – பொ.ஊ. 600 வரை தஞ்சாவூரை களப்பிரர்கள் ஆட்சி செய்தனர். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. இவர்கள் காலத்தில் சைன சமயம், பௌத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பின்னர் பொ.ஊ. 600 முதல் பொ.ஊ. 849 வரை முத்தரையர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி செய்தனர். பின்னர் இடைக்கால சோழ மன்னரான, விசயாலய சோழன் பொ.ஊ. 848 முதல் பொ.ஊ. 878 வரை ஆட்சி செய்தார். முத்தரைய மன்னரான இளங்கோ முத்தரையரிடமிருந்து, தஞ்சாவூரை கைப்பற்றிய விசயாலய சோழன் நிசும்பசுதானி கோவிலைக் கட்டினார். இவரது மகன் ஆதித்த சோழன் (பொ.ஊ. 871-901) நகரத்தின் மீதமுள்ள பகுதியை பலப்படுத்தினார். பிற்காலச் சோழர்களின் தலைநகராகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் (பொ.ஊ. 985-1014) தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் எய்தியது. 1025இல் கங்கைகொண்ட சோழபுரம் தோன்றும் வரை தஞ்சாவூர் சோழ பேரரசின் மிக முக்கியமான நகரமாக இருந்தது. பதினொன்றாம் நூற்றாண்டின், சோழ மன்னனான முதலாம் இராசராச சோழன் (985-1014) தஞ்சாவூரில், பெருவுடையார் கோவிலைக் கட்டினார். இந்த கோயில் தமிழ் கட்டிடக்கலைக்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இராசராச சோழனின் மகனரான இராசேந்திர சோழன் சுமார் பொ.ஊ. 1025இல் தனது தலைநகரைத் தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் பாண்டிய மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விசயநகர அரசின் ஆட்சிக்குட்பட்டது. பொ.ஊ. 1532-இல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கிற்று. திருச்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் பொ.ஊ. 1673-இல் தஞ்சாவூர் மீது படையெடுத்தார். இப்போரில் விசயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். தஞ்சை அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது. பொ.ஊ. 1676இல் மராட்டிய சிவாசியின் சகோதரர் வெங்காசி தஞ்சையில் தஞ்சாவூர் மராத்தியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோசி (1798–1832) ஆங்கில கவர்னர் செனரல் வெல்வெசுலி பிரபுவுடன் பொ.ஊ. 1799-இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிர மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன. இரண்டாம் சிவாசி (1832–1855) மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால், ஆங்கிலேயர்கள் வசம் பொ.ஊ. 1856-இல் தஞ்சைக் கோட்டையும் வந்தது. தஞ்சாவூர் 1866-ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வந்த தஞ்சை 2014-ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மக்கள்தொகை இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 222,943 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 109,199 ஆண்கள், 113,744 பெண்கள் ஆவார்கள்.தஞ்சாவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 91.27% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.80%, பெண்களின் கல்வியறிவு 87.92% ஆகும். தஞ்சாவூர் மக்கள் தொகையில் 18,584 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, தஞ்சாவூரில் இந்துக்கள் 82.87%, முஸ்லிம்கள் 8.34%, கிறிஸ்தவர்கள் 8.58%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.06%, 0.11% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர். பொருளாதாரம் இங்குள்ளவர்கள் பாரம்பரியமாக விவசாயத்தை தொழிலாக செய்து வருகின்றனர். தஞ்சாவூர் ஆனது "தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு நெல் பயிர் மற்றும் உளுந்து, வாழை, தேங்காய், இஞ்சி, கேழ்வரகு, துவரை, பாசிப் பயறு, கரும்பு மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களும் பயிரிடப்படுகிறது. தஞ்சாவூரில் விவசாயத்திற்கு மூன்று பருவங்கள் உள்ளன - குறுவை (சூன் முதல் செப்டம்பர் வரை), சம்பா (ஆகத்து முதல் சனவரி வரை) மற்றும் தலாடி (செப்டம்பர், அக்டோபர் முதல் பிப்ரவரி, மார்ச் வரை) ஆகியவை ஆகும். இங்கு பாயும் காவிரி ஆறு நீர் பாசனத்திற்காகவும், மக்களின் அன்றாடத்தேவைகளுக்காகவும் முதன்மையாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் பட்டு நெசவு செய்யும் முக்கியமான நகரம் தஞ்சாவூர் ஆகும். 1991 ஆம் ஆண்டில் நகரத்தில் 200 பட்டு நெசவு அலகுகள் இருந்தன, அவற்றில் 80,000 பேர் பணிபுரிந்தனர். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் தயாரிக்கப்படும் புடவைகள் தஞ்சாவூர் மற்றும் அண்டை நகரங்களில் விற்கப்படுகின்றன. ஆனால் உற்பத்தி செலவுகள் மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் போட்டி ஆகியவையால், உற்பத்தியில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கையானது குறைந்துள்ளது. இந்நகரில் வீணை, தம்புரா, வயலின், மிருதங்கம், தவில், மற்றும் கஞ்சிரா போன்ற இசைக்கருவிகள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் தஞ்சாவூர் மாநகராட்சியானது தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த எஸ். எஸ். பழனிமாணிக்கம் வென்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த டி. கே. ஜி. நீலமேகம் வென்றார். போக்குவரத்து பேருந்து போக்குவரத்து இங்கிருந்து நாகப்பட்டினம், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருப்பூர், வேலூர், ஆரணி, பெரம்பலூர், அரியலூர், மைசூர், சேலம், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, கும்பகோணம், மயிலாடுதுறை, மானாமதுரை, திருநெல்வேலி, பெங்களூரு, எர்ணாகுளம், நாகர்கோயில், திருப்பதி, திருவனந்தபுரம் மற்றும் ஊட்டி ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இங்கு புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் உள்ளன. புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளும் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க 1997 ஆம் ஆண்டில் மன்னர் சரபோசி கல்லூரி அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தொடருந்து போக்குவரத்து தஞ்சாவூரில் இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இது திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையத்தையும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் உடன் தஞ்சாவூர் வழியாக இணைக்கும் முக்கிய இரயில் பாதையாகும். இது தென் இந்திய ரயில்வே கம்பெனியில் 1879 இல் நிறுவப்பட்ட பாதையாகும். இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களுடன் தஞ்சாவூர் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை, மைசூர், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கரூர், மதுரை, திருநெல்வேலி, இராமேசுவரம், திருச்செந்தூர், கடலூர், தருமபுரி, விழுப்புரம் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய நகரங்களுக்கு தினமும் மற்றும் பாண்டிச்சேரி, நாகர்கோயில், கன்னியாகுமரி, திருப்பதி, நெல்லூர், இட்டார்சி, விசாகப்பட்டினம், ஊப்பிளி, வாசுகோட காமா, கோவா, வாரணாசி, விசயவாடா, சந்திரபூர், நாக்பூர், மற்றும் புவனேசுவர் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் இரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த இரயில் நிலையத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் நாகூர் போன்ற நகரங்களுக்கு அடிக்கடி பயணிகள் இரயில்கள் இயக்கப்படுகிறது. வானூர்தி போக்குவரத்து 1990களில் தஞ்சாவூர் சென்னையுடன் வாயுதூத் சேவைகளால் இணைக்கப்பட்டிருந்தது; போதுமான ஆதரவில்லாமையால் இச்சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது விமானப்படை நிலையம் செயல்பட்டு வருகிறது. வான்படை நிலையம் 2012க்குள் ஒரு முக்கிய விமான தளமாக மாறியது. இது போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்டது. இருப்பினும், விமான தளத்தை நிறுவுவதும், செயல்படுத்துவதும் மார்ச் 2013 வரை தாமதமானது. தென்னிந்தியாவில் முதல் முறையாக முற்றிலும் போர் விமானங்களைக்கொண்ட புதிய விமானப்படைத் தளம் தமிழகத்தில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் 55 கி.மீ தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் ஆகும். சிறப்புகள் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது. உலக புகழ் பெற்ற பாரம்பரிய சின்னமான பெரிய கோவில் உள்ளது. உலகப் புகழ் பெற்ற தஞ்சை சரசுவதிமகால் நூலகத்தை தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உள்ளது. புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் ஓவியங்களும், கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை. புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உலக புகழ் பெற்றது. புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் வீணை உலக புகழ் பெற்றது. அதிகளவில் கோயில்கள் உள்ள மாவட்டமாக உள்ளது. கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், மற்றும் கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும். மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீடு பெற்றதாகும். சுற்றுலாத் தலங்கள் உலக பாரம்பரிய சின்னமான தஞ்சைப் பெரிய கோயில் தஞ்சை சரசுவதிமகால் நூலகம்(ஆசியாவின் பழமையான நூலகம்) கல்லணை (உலகின் பழமையான அணை) தர்பார் மண்டபம் தஞ்சை அரண்மனை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆறு படை வீடுகளில் ஒன்றான நான்காம் படை வீடு சுவாமிமலை முருகன் கோயில் தஞ்சாவூர் அருகே திட்டை என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலின் கற்பகத்தின் மேல் ஒரு கல் உள்ளது. அந்த கல்லீலிருந்து 24 நிமிடத்திர்கு ஒரு துளி என சிவலிங்கத்தின் மேல் தண்ணீர் விழும், இந்த கல் உலகில் அரிய வகையான எங்கும் கிடைக்காத கல்லாகும். தென்னக பண்பாடு மையம் திருநாகேஸ்வரம் கோவில். பூண்டி மாதா கோவில் (தமிழகத்தின் முக்கியமான கிறிஸ்தவ கோயில்) சிவகங்கை பூங்கா. உலக பாரம்பரிய சின்னமான தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் (சிற்பிகளின் கனவு). தஞ்சபுரீஸ்வரர் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணி நீலமோக பெருமாள் கோவில். பட்டுகோட்டை நாடியம்மன் கோவில் பிரபலமான கோவிலாகும். பருத்தியப்பர் கோயில் உள்ளது. திருமங்கலகுடி சூரியனார் கோயில் இந்தியாவிலே இந்த கோவிலில் மட்டுமே சூரிய பகவான் சிவனின் எதிரில் இருப்பார். மல்லிப்பட்டிணம் மனோரா கோட்டை உள்ளது.ஆங்கிலேயர்கள் நெப்போலியனை வீழ்த்தியததன் நினைவாக கட்டியதாகும். மல்லிப்பட்டிணம் மீன் பிடி துறைமுகம். கும்பகோணம் மகாமகம் குளம். அதிராம்பட்டிணம் கடல் அலை ஆத்தி காடு. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில். திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்(பிரம்மகத்தி தோஷம் நிவர்த்தி). திருவையாறு ஐயாரப்பர் கோயில். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில். திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில். நவகிரக கோயில் - குரியனார் கோயில் சிவசூரியர் கோயில் (சூரிய பகவான் தலம்) நவகிரக கோயில் - திங்களூர் கைலாசநாதர் கோயில்(சந்திர பகவான் தலம்) நவகிரக கோயில் - திருகஞ்சனூர் அக்னிஸ்வரர் கோயில்(சுக்கிர பகவான் தலம்) நவகிரக கோயில் - திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில்(இராகு பகவான் தலம்) திருச்சோறை சாரபரமேஸ்வரர் கோயில் (கடன் நிவர்த்தி தலம்) திருச்சோறை சாரநாதபெருமாள் கோயில் (108 திவ்ய தேசம்). திருகருகாவூர் முல்லைவனநாதர் கோயில் (குழந்தை வரம்) புன்னைநல்லுர் முத்து மாரியம்மன் கோயில்(தோல் நோய் நிவர்த்தி). கும்பகோணம் சாரங்கபாணி கோயில்(108 திவ்ய தேசம்). கும்பகோணம் சக்கரபாணி கோயில். கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில். கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில். திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோயில். முள்ளி வாய்க்கால். திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில்(தென் திருப்பதி 108 திவ்ய தேசம்). திருப்பனந்தாள் அருணஜடஸ்வரர் கோயில். அனைக்கரை கீழணை. திருகண்டியூர் பிரம்மசிரகண்டிசுவரர் கோயில்(பிரம்மன் கோயில்). திருகண்டியூர் சாப விமோசன பெருமாள் கோயில்(108 திவ்ய தேசம்). திருச்சோறை சாரநாதபெருமாள் கோயில். கோவிலடி அப்பகுடத்தான் அப்பல ரெங்கநாதர் கோயில்(பஞ்சரங்க தலம் 108 திவ்ய தேசம்) பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர் கோயில் (துர்க்கை அம்மன் சன்னதி). திருநரையூர் நாச்சியார் கோயில் கல்கருடன் சேவை(108 திவ்ய தேசம்). அய்யவாடி பிரத்தியங்கிரி தேவி கோயில்(பில்லி சுனியம் நிங்குதல்). கதிராமங்கலம் வனதுர்கை கோயில்(இராகு கால பூஜை). கல்லூரிகள் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி திருவையாறு அரசர் கல்லூரி அருள்மிகு வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி பூண்டி கரந்தைத் தமிழ்க் கல்லூரி அடைக்கலமாதா   கல்லூரி  பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகர் சங்க மனலி இராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரி அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொன்னையா இராமஜெயம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (PRIST) விழாக்கள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா மே 23 இராஜராஜ சோழன் சதய விழா புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆடி பூச்செரிதல் ஆவணி பெருந்திருவிழா புரட்டாசி தெப்பத்திருவிழா திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா ஏகௌரியம்மன் கோயில் ஆடி தீமிதி திருவிழா பருதியப்பர் கோவில் பங்குனி உத்திரம் பெருவுடையார் கோவில் சித்திரை தேர் திருவிழா கோடியம்மன் கோவில் காளியாட்ட திருவிழா வைகாசியில் வெள்ளை விநாயகர் கோவில் மற்றும் 15 மேற்பட்ட கோவில்களின் முத்துப்பல்லாக்கு விழா தஞ்சை ராஜவீதிகளில் 24 கருடசேவை ஆடிப்பெருக்கு விழா ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர் அருகில் உள்ள கோவில்கள் தாராசுரம் ஐராதீஸ்வரர்கோவில் திருவையாறு ஐயாறப்பர் கோயில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் சுந்தரபெருமாள் கோவில்‎ சுவாமிமலை முருகன் கோவில் பருதியப்பர் கோவில் திட்டை குரு ஸ்தலம் திங்களூர் சந்திரன் கோவில் திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலம் ஆடுதுறை சூரியனார் கோவில் தஞ்சை மாமணி கோவில் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் உப்பிலியப்பன் கோயில் பட்டீசுவரம் துர்கையம்மன் கோயில் திருக்கருகாவூர் கர்ப்பரச்சாம்பிகை கோவில் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில் திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில் நாச்சியார் கோவில் கல்கருட ஸ்தலம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பட்டுக்கோட்டை அருகில் கரம்பயம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் இதனையும் காண்க தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூர் மராத்தியர்கள் தஞ்சாவூர் மாநகராட்சி மேற்கோள்கள் உசாத்துணை குடவாயில் பாலசுப்ரமணியன், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, 362+18 பக்கங்கள் வெளி இணைப்புகள் 360டிகிரி கோணத்தில் பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தஞ்சாவூர் ஓவியங்கள் பற்றிய கட்டுரை தஞ்சை மாவட்டம் பற்றிய வலைப்பக்கம் தஞ்சை சமையல் தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள் பண்டைய இந்திய நகரங்கள்
2687
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%2C%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இன, மொழி, மத, பால் வேறுபாடின்றி, உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும். கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டின் மூலமாக உலக அளவில் உயர்த்திட ஒத்துழைப்பை நல்கி உலக அமைதிமற்றும் மனித உரிமைகளைக் காக்க உரிய பங்களிப்பைச் செய்வது இதன் நோக்கம் ஆகும். ஐக்கிய நாடுகளின் அதிகார பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி இதன் செயல்பாடு அமைந்துள்ளது. இது அனைத்துலக அறிவார்ந்த கூட்டமைப்பு மற்றும் ஆணைக் குழுவின் வழித் தோன்றல் ஆகும். இது 193 உறுப்பு நாடுகளையும் 7 கலந்துகொள்ளும் உறுப்பினர்களையும் கொண்டது. இது களப்பணி அலுவலகங்கள் மூலமாகவும், 3 அல்லது அதற்கு மேலான நாடுகளின் கூட்டு அலுவலகங்கள் மூலமாகவும் செயல்படுகிறது. கல்வி, இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், பண்பாடு, செய்தி தொடர்பு போன்ற 5 முக்கிய நிரல்கள் மூலமாக இதன் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகிறது. எழுத்து அறிவித்தல் அனைத்துலக அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊடகங்கள், அச்சமைப்புகள் ஆகியவற்றின் சுகந்திரத்தைப் பாதுகாத்தல், அந்தந்தப் பகுதியின் பண்பாடு மற்றும் வரலாற்றுத் திட்டங்களை உயர்த்துதல் உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை இவற்றை பாதுகாக்க உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை இதன் திட்டங்கள் ஆகும். இது உலக நாடுகளின் முன்னேற்ற குழுவின் ஒரு அங்கம் ஆகும். நோக்கம் மற்றும் முன்னுரிமை சமாதானத்தை ஏற்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், தொடர் முன்னேற்றத்தை மேம்படுத்துதல்.கல்வி, அறிவியல், பண்பாடு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக உள் கலாச்சார உரையடல்களை மேம்படுத்துதல். ஆகியவை இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும். செலுத்தக்கூடிய முன்னுரிமைகள் முக்கியக் கவனம் செலுத்தக்கூடிய முன்னுரிமைகள் – ஆப்ரிக்காவும் பாலின சமத்துவமும் ஆகும். வரலாறு உலக நாடுகளின் சங்கம் 21.9 1921 அன்று அனைத்துலக அறிவுசார் ஒத்துழைப்புக்காக ஆணைக்குழு ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுத்தது. அதன் விளைவே யுனெஸ்கோவின் தோற்றமும் அதன் அதிகாரமும் ஆகும். 4.1.1922 அன்றுஅறிவுசார் ஒத்துழைப்புக்காக அனைத்துலக குழு (சிஐசிஐ) ஒன்று தோற்றுவிக்கப்பட்டது9.8.1925 அன்று பாரிஸில் அறிவார்ந்த ஒத்துழைப்புக்கானஅனைத்துலக நிறுவனம் (ஐஐசிஐ) விளைவே நிறுவப்பட்டது இது சிஐசிஐன் செயலாக்க நிறுவனமாக செயல்பட நிறுவப்பட்டது.18.12.1925 அனைத்துலக கல்வி அலுவலகம் ஒரு அரசு சார நிறுவனமாக, அனைத்துலக முன்னேற்றத்திற்காக தன் பணியைத் தொடங்கியது. இந்த முன்னோடி நிறுவனங்களின் செயல்பாடுகள் இரண்டாம் உலகப்போரின் விளைவால் மிகவும் தடைபட்டது. அட்லாண்டிக் அதிகாரப்பத்திரத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகளின் அறிவிப்பிற்குப் பின்னர் ஒப்பந்தத்தின் மூலம் ஓன்றிணைந்த கல்வி அமைச்சர்களின் மாநாடு தனது கூட்டங்களை 16.11.1942 அன்று லன்டனில் ஆரம்பித்தது அது 5.12.1945வரை தொடர்ந்தது. மாஸ்கோ அறிவிப்பில் அனைத்துலக அமைப்பு அமைய வேண்டியதின் அவசியத்தை சைன,ஐக்கிய அமெரிக்க நாடு, ஐக்கிய அரசாங்கம், ஸோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளின் அனுமதியோடு தெரிவிக்கப்பட்டது. சிஏஎம் இ ன் உத்தேச திட்டத்தினாலும், அனைத்துலக அமைப்புக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு பரிந்துரைக்கு இணங்கவும் சான் பிரான்ஸிஸ்கோவில் ஏப்ரல் – ஜூன் 1945ல் நடந்த மாநாடு கல்வி, ப்ண்பாட்டு அமைப்பு (இசிஓ) அமைக்க 1-16 நவம்பர்1945 லண்டனில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதில் 44 நாடுகள் கலந்து கொண்டன. இசிஓ மாநாட்டில்,37 நாடுகள் கையெழுத்திட்டு,யுனெஸ்கோவின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கான ஆயத்த ஆணைக் குழுவும் நிறுவப்பட்டது. 16-11-1945 முதல் 04-11-1946 வரை ஆயத்த ஆணைக்குழு பணியாற்றியது.04-11-1946 அன்று யுனெஸ்கோவின் அரசியலமைப்பு,உறுப்பு நாட்டின் இருபதாவது ஓப்புதலோடும் நிதியோடும் நடமுறைக்கு வந்தது. 19 நவம்பர் – 10 டிசம்பர் 1946 வரை நடந்த முதல் பொது மாநாட்டில் டாக்டர் ஜூலியன் ஹக்ஸ்லி (Dr. Julian Huxley) பொது இயக்குனராகத் தேர்ந்து எடுக்கப்பட்டர்நிர்வாகக் குழுவில் தனி நபர் தகுதியில் எவரும் உறுப்பினராக முடியாது என்றும்,உறுப்பு நாடுகளின் அரசியல் பிரநிதிகள் தாம் கலந்து கொள்ள முடியுமென,யுனெஸ்கோவின் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. பனிப் போர்,குடியேற்ற நாடுகளின் விடுதலை,மற்றும் சோவியத் ஒன்றியம் கலக்கப்பட்ட போதும் உறுப்பு நாடுகள் ஒன்றாக இணைந்து பணிபுரிந்து ,யுனெஸ்கோவின் ஆணை அறிக்கையை நிறைவேற்றப் பாடுபட்டனர்1950 முதல் 19788 வரை இன வெறிக்கு எதிராக யுனெஸ்கோ பாடுபட்டது.1956ல்தென் ஆப்ரிக்க குடியரசு,தங்களது நாட்டின் இனப் பிரச்சினையில் யுனெஸ்கோ தலையிடுகிறது என்று கூறி அதிலிருந்து விலகிக் கொண்டது. 1994ல். நெல்சன் மண்டேலா தலைமையில் தென் ஆப்ரிக்கா மீண்டும் யுனெஸ்கோவுடன் இணைந்தது.2015க்குள் அனைத்து உறுப்பு நாடுகளும் அடிப்படைக் கல்வியை தங்களது நாட்டில் உள்ள அனைவருக்கும் வழங்கியிருக்க வேண்டும் என்று டகார் (செனகல்) ல் நடைபெற்ற அனைத்துலகக் கல்வி மாமன்றம் கேட்டுக் கொண்டது. 1968ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் விளைவால்"மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டம் உருவானது. 1989ல் உலகளாவிய வலைத்தளம் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் செய்தி மற்றும் தகவல் திட்டத் தேவை உணரப்பட்டு அதற்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நடவடிக்கைகள் யுனெஸ்கோ தனது நடவடிக்கைகளை அதன் ஐந்து திட்டப் பரப்பாகிய கல்வி,இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், கலாச்சாரம், தொடர்பாடல் மற்றும் தகவல் மூலம் நடைமுறைப்படுத்துகிறது. கல்வி: யுனெஸ்கோ அனைத்து கல்வி வாய்ப்புகளை கற்றல் சங்கங்கள் உருவாக்குவதில் அனைத்துலக தலைமை வழங்குகிறது; இந்த அமைப்பு தேசிய கல்வி தலைமை மற்றும் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க நாடுகளின் திறனை வலுப்படுத்த ஒப்பீட்டு கல்வியில் ஆராய்ச்சியை ஆதரித்தல், நிபுணத்துவம் வழங்குதல் மற்றும் கூட்டணியை வலுப்படுத்துதல்ஆகியவற்றை செய்கிறது. இது கீழ்கண்டவற்றை உள்ளடக்குகிறது. மாறுபட்ட துறை தலைப்புகளில் எட்டு சிறப்பு நிறுவனங்கள். யுனெஸ்கோ நாற்காலிகள், 644 யுனெஸ்கோ நாற்காலிகளைக் கொண்ட ஒரு அனைத்துலக வலையமைப்பு. இது 126 நாடுகளில் 770 நிறுவனங்கள் மீது ஈடுபடுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு. வயது வந்தோர் கல்வி குறித்த அனைத்துலக மாநாடு (CONFINTEA) ஒன்றை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்கிறது. அனைத்து உலக கண்காணிப்பு அறிக்கை கல்வி வெளியீடு. யுனெஸ்கோ ASPNet (தொடர்புடைய பள்ளிகளின் திட்ட வலையமைப்பு), 170 நாடுகளில் 8,000 பள்ளிகளின் அனைத்துலக வலையமைப்பு. யுனெஸ்கோ உயர் கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பது இல்லை. யுனெஸ்கோ பொது "அறிக்கைகள்" வெளியிடுவதன் மூலம் பொதுமக்களுக்கு கற்றுத்தருகிறது. செவில்லி வன்முறை அறிக்கை:மனிதர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையில் உயிரியல்ரீதியாக ஏதுவான நிலையில் உள்ளனர் என்பதை மறுக்க 1989 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அறிக்கை. திட்டங்களையும் கலாச்சார மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் யுனெஸ்கோ அறிவிக்கிறது. உதாரணம்: புவிப்பூங்காக்களின் அனைத்துலக வலையமைப்பு. உயிர்க்கோள இருப்புக்கள் (மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (MAB) திட்டத்தின் மூலம்). இலக்கிய நகரம்; 2007 ல், இந்த தலைப்பு கொடுக்கப்பட்ட முதல் நகரம் எடின்பரோ, ஸ்காட்லாந்தின் முதல் சுற்றும் நூலகம் இங்கு இருந்தது. 2008 இல், அயோவா நகர், அயோவா இலக்கிய நகரம் ஆனது. அழியும் மொழிகள் மற்றும் மொழி வேறுபாடு திட்டங்கள். மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் புலனாகா பாரம்பரியத்தை சேர்ந்த தலைசிறந்த படைப்புகள். உலகின் நினைவு என்ற அனைத்துலக பதிவேடு. அனைத்துலக ஹைட்ராலஜிகல் திட்டம் (IHP) மூலம் நீர் வள மேலாண்மை. உலக பாரம்பரிய தளங்கள். படங்கள் மற்றும் வார்த்தைகளால் கருத்துக்களின் சுதந்திரமான ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம்: கருத்து சுதந்திரதை ஊக்குவித்தல்,அனைத்துலக தொடர்பாடல் மேம்பாட்டு திட்டம் மற்றும் தொடர்பாடல் மற்றும் தகவல் திட்டம் மூலமாக பத்திரிகை சுதந்திரம் மற்றும் தகவல்களை அணுகல். அனைவருக்கும் தகவல் திட்டம் (IFAP) மூலமாக ICTs க்கு உலகளாவிய அணுகலை ஊக்குவித்தல். ஊடகங்களில் பல்பதவியாண்மையையும் கலாச்சார பன்முகத்தன்மையையும் ஊக்குவித்தல். கீழ்வருவனவற்றைப் போன்ற நிகழ்வுகளை ஊகுவித்தல்: உலக குழந்தைகளுக்கான அமைதி மற்றும் அகிம்சை கலாச்சாரம வளர்ச்சிக்கான அனைத்துலக பத்தாண்டு: 2001–2010, 1998 இல் ஐ. நா. மூலம் அறிவித்து. ஒவ்வொரு ஆண்டும், கருத்து சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் ஒரு அடிப்படை மனித உரிமை என்றும் எந்த ஆரோக்கியமான, ஜனநாயக மற்றும் இலவச சமூகத்தின் முக்கிய கூறுகள் என்றும் ஊக்குவிக்க 3 மே உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டது, அனைத்துலக எழுத்தறிவு தினம். அமைதி கலாச்சார அனைத்துலக ஆண்டு. திட்டங்களை நிறுவுதலும் நிதி உதவிகளும்: புலம்பெயர்வு அருங்காட்சியகங்கள் முனைப்பு: குடியேறிய மக்கள்தொகை கொண்ட கலாச்சார உரையாடல்களை அருங்காட்சியகங்கள் அமைத்து ஊக்குவித்தல். யுனெஸ்கோ – CEPES, உயர்கல்வி ஐரோப்பிய மையம்: ஐரோப்பா அத்துடன் கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் உயர்கல்விக்கான அனைத்துலக ஒத்துழைப்பை ஊக்குவிக்க ஒரு பரவலாக்கப்பட்ட அலுவலகமாக, புக்கரெஸ்ட், ருமேனியா 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் உயர்கல்வி அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஆகும். இலவச மென்பொருள் பட்டியல்: 1998 முதல் யுனெஸ்கோ மற்றும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் கூட்டாக இந்த திட்டத்திற்கு நிதியளித்த நிலையில் இலவச மென்பொருலட்கள் பட்டியலிடப்படுகின்றன. சிறந்த பள்ளி சுகாதாரம் மீது வளங்களால் கவனம் செலுத்துதல் (FRESH). OANA, ஆசியா பசிபிக் செய்தி நிறுவனங்களின் அமைப்பு. அறிவியல் அனைத்துலக குழு. யுனெஸ்கோ நல்லெண்ண தூதர்கள். மூலிகை தாவரங்கள் மற்றும் மசாலா பொருள்கள் மீது ஆசிய ஆய்வரங்கு, ஆசியாவில் நடைபெற்ற அறிவியல் ரீதியான மாநாடுகளின் தொடர். அதிகாரபூர்வமான யுனெஸ்கோவின் அரசு சாரா நிறுவனங்கள் யுனெஸ்கோ 322 அனைத்துலக அரசு சாரா நிறுவனங்களுடன் உத்தியோகபூர்வ உறவுகளை அனுபவிக்கிறது. அனைவருக்கும் தரம் வாய்ந்த கல்வி, வாழ்நாள் முழுவதும் கல்வி, செய்தித் தொடர்பு மூலமாக அறிவார்ந்த சமூகத்தை ஏற்படுத்துதல் ஆகியவை யுனெஸ்கோவின் ஏனைய முன்னுரிமைகளாகும் அனைத்துலக இளங்கலை (IB) அனைத்துலக தன்னார்வ தொண்டு சேவை ஒருங்கிணைப்பு குழு (CCIVS) கல்வி அனைத்துலகம் (ஈஐ) பல்கலைக்கழகங்கள் அனைத்துலக சங்கம் (IAU) திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் Audiovisual தொடர்பாடல் அனைத்துலக கவுன்சில் (IFTC) டயோஜெனெஸ் வெளியிடுகிறது இது தத்துவம் மற்றும் மனித நேய ஆய்வுகள் அனைத்துலக கவுன்சில் (ICPHS) அறிவியல் அனைத்துலக கவுன்சில் (ICSU) நூதனசாலைகள் அனைத்துலக கவுன்சில் (ICOM) விளையாட்டு அறிவியல் மற்றும் உடற்கல்வி அனைத்துலக கவுன்சில் (ICSSPE) சென்னை அனைத்துலக கவுன்சில் (ICA) நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் அனைத்துலக கவுன்சில் (ICOMOS) ஊடகவியலாளர்களின் அனைத்துலக கூட்டமைப்பு (IFJ) நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலக கூட்டமைப்பு (IFLA) கவிதைகள் சங்கங்கள் அனைத்துலக கூட்டமைப்பு (IFPA) அனைத்துலக இசை கவுன்சில் (ஐஎம்சி) தீவு அபிவிருத்தி அனைத்துலக அறிவியல் கவுன்சில் (தீவம்) அனைத்துலக சமூக அறிவியல் கவுன்சில் (ISSC) அனைத்துலக திரையரங்கு நிறுவனம் (ITI) இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் (ஐயுசிஎன்) தொழினுட்ப சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலக ஒன்றியம் அனைத்துலக சங்கம் (UIA) செய்திதாள்களின் உலகக் கூட்டமைப்பு (WAN) பொறியியல் நிறுவனங்களின் உலகக் கூட்டமைப்பு (WFEO) யுனெஸ்கோ கிளப், மையங்கள் மற்றும் சங்கங்கள் உலகக் கூட்டமைப்பு (WFUCA) யுனெஸ்கோவின் நிறுவனங்கள் மற்றும் மையங்கள் கூட்டு மற்றும் தேசிய அலுவலகங்களுக்கு முக்கியமான ஆதரவளித்து, யுனெஸ்கோவின் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாக இயங்கும் துறைகளே, யுனெஸ்கோ அமைப்பின் நிறுவனங்கள் ஆகும். பிரித்தானிய வெர்ஜின் தீவுகளில் யுனெஸ்கோ மையம். யுனெஸ்கோ அனைத்துலக கல்வி பணியகம் (IBE); ஜெனீவா (சுவிற்சர்லாந்து). இது கல்விசார் கருத்துகள், முறைகள் மற்றும் கட்டமைப்புகளில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது. கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த (ஐபிஈ) தனது நிபுணத்துவத்தை பங்களிப்பு செய்கிறது. பாடத்திட்டங்கள் வடிவமைப்பு, மற்றும் செயற்படுத்துதல் ஆகியவற்றில் புதுமையான அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துவதும், செயல்முறைத் திறன்களை மேம்படுத்துவதும், கல்வி கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் மீதான பன்னாட்டுப் பேச்சுவாரத்தைகளுக்கு உதவுவதும் இதன் நோக்கம் ஆகும். வாழ்நாள் கல்விக்கான யுனெஸ்கோவின் நிறுவனம்-ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கியவர்களுக்கு கல்வி கற்க மாற்று வாய்ப்புகளை ஏற்படுத்துதல், எழுத்தறிவித்தல், முறைசாரா கல்வி ஆகியவற்றின் மீது சிறப்புக் கவனமும், வயது வந்தோர் கல்வி பெற வழிவகுத்து, வாழ்நாள் முழுவதும் கல்வி கற்பதற்கான கொள்கைகள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துவது இதன் நோக்கம் ஆகும். கல்வித் திட்டத்திற்கான யுனெஸ்கோவின் பன்னாட்டு நிறுவனம் பாரிசிலும் பியுனோஸ் அயர்சிலும் கல்வி முறைகளை திட்டமிடுவதிலும், நிர்வகிப்பதிலும் நாடுகளின் திறனை வலுப்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக இந்நிறுவனம் செயல்படுகிறது. யுனெஸ்கோவின் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்திற்கான நிறுவனம் (ஐஐடிஈ) மாஸ்கோ (ரசியக் கூட்டமைப்பு) இது கல்வியில் தகவல் பயன்பாடு குறித்த தொழில் நுட்ப உதவியையும்,நிபுணத்துவத்தையும் வழங்கும் சிறப்பு நிறுவனம் ஆகும். ஆப்பிரிக்காவின் திறன் – வளர்ப்பிற்கான யுனெஸ்கோவின் அனைத்துலக நிறுவனம் – இந்நிறுவனம், தனி நபர் மற்றும் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, மின்னணு ஊடகங்களை, வலையமைப்பு மற்றும் கல்விசார் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடையும் வாய்ப்பினை வழங்கி, ஆப்பிரிக்காவின் பிராந்திய, தேசிய மற்றும் உள்ளூர் அளவிலான கல்விசார் நிறுவனங்களின் திறனை மேம்படுத்த உழைக்கிறது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் உயர் கல்விக்கான யுனெஸ்கோ அனைத்துலக நிறுவனம் (IESALC) கேராகஸ் (வெனிசுலா). இது ஒரு வலுவான செயல் திட்டத்தின் மூலம் மூன்றாம் நிலை கல்வியின் மேம்பாட்டிற்காகவும்,மாற்றத்திற்காகவும் பங்களிப்பு செய்கிறது. இப் பகுதியில் உயர்கல்வி (மூன்றாம் நிலைக் கல்வி) யில் மாற்ற மேலாண்மை,மற்றும் மாற்றத்திற்கு ஆதரவு அளித்து, உலகமயமாக்கல் என்ற இந்த காலகட்டத்தில், நீதி, நேர்மை, சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயகம், மனித உரிமைகளை மதித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனின் நிலையான வளர்ச்சியை சாத்தியமாக்கிட முயல்கிறது. தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சிக்கான யுனெஸ்கோ அனைத்துலக மையம் (UNEVOC); பான் (ஜெர்மனி) நாடுகளில் தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி (TVET) அமைப்புகளை வலுப்படுத்தி மேம்படுத்த உழைக்கிறது. உயர் கல்விக்கான யுனெஸ்கோ ஐரோப்பிய மையம் (CEPES); புகரெச்ட் (ருமேனியா) இந்நிறுவனம், மத்திய, கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகளில் உயர் கல்வி துறையில் தொழில் நுட்ப உதவியை வழங்குவதோடு, அவற்றிற்கிடையே ஒத்துழைப்பையும் மேம்படுத்துகிறது. நீர் கல்விக்கான யுனெஸ்கோ-IHE நிறுவனம் (யுனெஸ்கோ – IHE); டெல்ஃப்ட் (நெதர்லாந்து) ஐ. நா. அமைப்பிற்கு உட்பட்ட இந்த ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே நீர் கல்வி வசதி உடையதும் அங்கீகரிக்கப்பட்ட முதுநிலை பட்டம் வழங்கும் அதிகாரம் படைத்ததும் ஆகும். கருத்தியல் இயற்பியல் அனைத்துலக மையம் (ICTP); ட்ரிஸ்டியிலிருந்து (இத்தாலி) இயற்பியல் மற்றும் கணித அறிவியலில் மேம்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை வளர்ச்சியடையச் செய்வது இதன் நோக்கம் ஆகும். குறிப்பாக வளரும் நாடுகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன் உயர்மட்ட திட்டங்களை மேம்படுத்துகிறது. யுனெஸ்கோ புள்ளியியல் நிறுவனம் (யுஐஎஸ்); மாண்ட்ரீல் (கனடா) கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் தொடர்பு ஆகிய துறைகளில் இன்றைய தேதி வரையிலான புள்ளிவிவரங்களை குறிப்பிடத் தக்க வகையில் தொகுத்து வழங்குகிறது. யுனெஸ்கோ பரிசுகள் அதிகரப் பட்டியல் யுனெஸ்கோ தற்போது கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் அமைதிக்காக 22 பரிசுகள் வழங்குகிறது ஃபெளிக்ஸ் – ஹிப்ஹோப் – பாய்க்னி அமைதி விருது அறிவியலில் பெண்களுக்கு எல்'ஒரியல் யுனெஸ்கோ விருது யுனெஸ்கோ – செஜாங் மன்னர் எழுத்தறிவுவிருது யுனெஸ்கோ – கன்ஃப்யூசியஸ் எழுத்தறிவு விருது யுனெஸ்கோ எமிர் ஜாபர் அல் அஹமது அல் ஜபர் அல் ஜாபார் விருது பரிசு – அறிவுசர் குறைபாடு உள்ளவர்களுக்கு தரமிகுந்த கல்வியை வழங்க யுனெஸ்கோ – அரசர் ஹமது பின் இஸால் அல்-ஹலிஃபா விருது – செய்தி மற்றும் தகவல் தொழில் நுட்பத்தைக் கல்வியில் பயன்படுத்துதலுக்காக. யுனெஸ்கோ – ஹம்தான் பின் ரஷித் அல் மக்தூம் விருது – ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்த அளிக்கும் பயிற்சிக்காக யுனெஸ்கோ கலிங்கா விருது – அறிவியலைப் பிரபலமாக்க யுனெஸ்கோ இன்ஸ்டிடூட் பாஸ்டர் பதக்கம் – மனித நலத்திற்கு பலனளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியல் அறிவு வள்ர்ச்சிக்கு யுனெஸ்கோ – சுல்தன் கபூஸ் விருது – சுற்றுச்சூழல் பாதுகாத்தலுக்கு உலகளாவிய நீர் பரிசு மனிதனல் உருவாக்கப்பட்ட ஆறுகள் – வறண்ட பகுதிகளில் நீராதார்த்தைப் பெறுக்க யுனெஸ்கோவால் வழங்கப்படுகிறது (இப்பரிசின் பெயர் பரிசீலனையில் உள்ளது) மைக்கேல் பாடிஸ் விருது – உயிர்க்கோளப் பாதுகாப்பு மேலாண்மைக்காக யுனெஸ்கோ விருது – சமதானக் கல்விக்காக யுனெஸ்கோ மதன் ஜீட் சிங் விருது – சகிப்புத்தன்மை மற்றும் அஹிம்சையை மேம்படுத்துதலுக்காக. யுனெஸ்கோ பில்போவ் விருது – பண்பாடு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலுக்காக யுனெஸ்கோ – உலகளாவிய ஜொஸெ மாற்டி விருது யுனெஸ்கோ அவிசென்ன விருது – அறிவியல் நெறிமுறைகளுக்காக யுனெஸ்கோ ஜுஅன் பொஸ்ச் விருது – சமூக அறிவியல் ஆராய்ச்சியை லத்தீன், அமெரிக்க மற்றும் கரீபியன்: பகுதிகளில் ஊக்குவிக்க ஷார்ஜாஹ் விருது – அரபு கலச்சாரத்திற்காக ஐபிடிசி-யுனெஸ்கோ விருது – கிராமப்புற தகவல் தொடர்புக்கு யுனெஸ்கோ குல்லெர்மொ கனொ உலக பத்திரிகைத்துறை விருது யுனெஸ்கோ – ஜிக்ஜி உலக நினைவு விருது யுனெஸ்கோ உறுப்பு நாடுகள் 193 உறுப்பு நாடுகளையும் 1955ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சலக நிர்வாகம், யுனெஸ்கோவைப் பெருமைப்படுத்தும்விதமாக இந்த பரிசு அஞ்சல் தலைகளை வெளியிட்டது ஏழு இணை உறுப்பினர்களையும், இரண்டு பார்வையாளர்களையும் கொண்டது. சில உறுப்பு நாடுகள் சுவாதீனமற்றவை. தங்களைச் சார்ந்துள்ள பகுதிகளில் இருந்து கூடுதல் தேசிய அமைப்பு குழுக்களைக் கொண்ட உறுப்பினர்களும் உள்ளனர். அஞ்சல் தலைகள் யுனெஸ்கோ அஞ்சல் தலைகளைப் பல நாடுகள் வெளியிட்டுள்ளன. யுனெஸ்கோ அமைப்பின் முத்திரையும், இதன் தலைமை அலுவல அமைப்பும் ஒரே கருவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. 1955ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சலக நிர்வகம், யுனெஸ்கோவைப் பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலைகளை வெளியிட்டது யுனெஸ்கோ தனியாக அஞ்சல் தலைகள் எதுவும் அஞ்சலக பயன்பாட்டிற்கு வெளியிடவில்லை. தனது செயல்பாட்டிற்காக 1955–1966 வரை தொடர்ச்சியான 41 பரிசு அஞ்சல் தலைகளை வெளியிட்டுப் பணம் திரட்டியது. இவை பல்வேறு நாடுகளின் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு நியூ யார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள யுஎன்பிஎ முகப்பு மேஜையில் வைத்து விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஐக்கிய நாடுகள் வசம் இவை இருப்பு இல்லை எனினும், சிறப்பு அஞ்சல் தலை விற்பனையாளர்களிடம் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. பொது நிர்வாக இயக்குநர்கள் ஜூலியன் ஹக்ஸ்லி (Julian Huxley) (1946–1948) ஜைம் டோரஸ் போடெட் (Jaime Torres Bodet) (1948–1952) ஜான் வில்கின்சன் டெய்லர் (John Wilkinson Taylor) (நடிப்பு 1952–1953) லூதர் எவன்ஸ் (Luther Evans) (1953–1958) விட்டொரினொ வெரொனெஸ் (Vittorino Veronese) (1958–1961) ரெனே மஹே (René Maheu) (1961–1974; நடிப்பு 1961) ஆமடொவ்-மஹ்டர்ம்'பொவ் (Amadou-Mahtar M'Bow) (1974–1987) பெட்ரிகோ மேயர் சகோஸா (Federico Mayor Zaragoza) (1987–1999) கொசிரொ மட்ஸூரா (Koïchiro Matsuura) (1999–2009) இரினா பொகொவா (Irina Bokova) (2009–) யுனெஸ்கோ அலுவலகங்கள் யுனெஸ்கோ உலகின் பல பகுதிகளிலும் தன் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.இதன் தலைமையகம் ஃப்ரான்ஸில் உள்ள பாரிஸில் உள்ளது. தேசிய அதிகாரிகள், மற்றும் பிற கூட்டாளிகள் ஆலோசனையுடன் யுனெஸ்கோ தன் களப்பணி அலுவலகங்கள் மூலமாக பல உத்திகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது. யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்கள், செயல்பாடு, மற்றும் புவியியல் பரப்பு, அடிப்படையில் நான்கு முதன்மை அலுவலக பிரிவுகளாக வகைப்படுத்தபட்டுள்ளன. அவை கூட்டு அலுவலகங்கள், தேசிய அலுவலகங்கள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் தொடர்பு அலுவலகங்கள் ஆகும். யுனெஸ்கோவின் களப்பணியில் மைய அங்கமாக, பல நாடுகளை உள்ளடக்கிய கூட்டு அலுவலகங்கள் திகழ்கின்றன. இதை சுற்றிலும் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய அலுவலகங்களும், பிராந்திய அலுவலகங்களும் இயங்குகின்றன. யுனெஸ்கோ செயலகத்தை வழி நடத்தும் முக்கிய பிரதிநிதியாக 148 நாடுகளை உள்ளடக்கிய, 27 கூட்டு அலுவலகங்கள் இயங்குகின்றன. இவை தவிர, ஒரு உறுப்பு நாட்டிற்கு சேவை செய்ய ஒரு தேசிய அலுவலகம் என்ற ரீதியில் 21 தேசிய அலுவலகங்கள் உள்ளன. 9 அதிக மக்கள் தொகை நாடுகளில் சச்சரவுக்குப் பிந்திய சூழ்நிலைகளில் அல்லது மாறுதல் நிலையில் உள்ள நாடுகளுக்கு கூட்டு அலுவலகத்திலிருந்து விதிவிலக்கு உண்டு வட்டாரவாரியான யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்கள் கீழ்க்கண்ட புவியமைப்பு அடிப்படையில் உறுப்பு நாடுகள் மற்றும் இணை உறுப்பினர்களுக்கு சேவை செய்வதற்காக இயங்கும் யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்களின் பட்டியல்- ஆப்ரிக்கா அபுஜா – நைஜீரியாவிற்கான தேசிய அலுவலகம். அக்ரா – பெனின், கோட் டிவார், கானா, லைபீரியா, நைஜீரியா, சியேரா லியோனி மற்றும் டோகொ போன்ற நாடுகளுக்கான கூட்டு அலுவலகம். அடிஸ் அபாபா – சிபூட்டி மற்றும் எதியோப்பியா நாடுகளுக்கு ஒருகூட்டு அலுவலகம். பமாக்கோ – புர்க்கினா பாசோ, கினி, மாலி மற்றும் நைஜர் இந்த கூட்டுஅலுவலகம். பிரசாவில் – கொங்கோ குடியரசுக்காக தேசிய அலுவலகம். புசும்புரா – புருண்டிக்காக தேசிய அலுவலகம். டக்கார் – கல்விக்காக – பிராந்திய அலுவலகங்கள் ஆப்பிரிக்காவுக்கும் கேப் வேர்ட், காம்பியா, கினி-பிசாவு, மற்றும் செனிகல் நாடுகளுக்கு கூட்டுஅலுவலகமும் தாருஸ்ஸலாம் – கொமொரோசு, மடகாஸ்கர், மொரிசியசு, சீசெல்சு மற்றும் டான்சானியா ஆகிய நாடுகளுக்கான கூட்டு அலுவலகம். ஹராரே – போட்சுவானா, மலாவி, மொசாம்பிக், சாம்பியா மற்றும் சிம்பாப்வே போன்ற நாடுகளுக்கான கூட்டு அலுவலகம். கின்ஷாசா – காங்கோ ஜனநாயக குடியரசுக்காக தேசிய அலுவலகம். லிப்ரேவில்லே – காங்கோ, எக்குவடோரியல் கினி, காபோன் மற்றும் சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி ஆகியவற்றிற்காக கூட்டு அலுவலகம். மபுடோ – மொசாம்பிக்கிற்கான தேசிய அலுவலகம். நைரோபி – புருண்டி, எரித்திரியா, கென்யா, ருவாண்டா, சொமாலியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளுக்குகான கூட்டு அலுவலகம்,ஆப்பிரிக்காவில் உள்ள அறிவியல் பிராந்திய செயலகம். வைண்ட்ஹோக் – அங்கோலா, லெசோத்தோ, நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளுக்குகான கூட்டு அலுவலகம் யாவுண்டே – கேமரூன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கான கூட்டு அலுவலகம். அரபு நாடுகள் ஈராக் தலைமையகம் யுனெஸ்கோ அலுவலகம் ஈராக் – ஈராக் தேசிய அலுவலகம். அம்மான் – ஜோர்தான் தேசிய அலுவலகம். பெய்ரூத் – அரபு நாடுகள் கல்விக்கான பிராந்திய செயலகம் மற்றும் லெபனான், சிரியா, ஜோர்தான், ஈராக் மற்றும் பாலஸ்தீன பகுதிகள் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். கெய்ரோ – அரபு நாடுகள் அறிவியல் பிராந்திய செயலகம் மற்றும் எகிப்து, லிபிய அரபு ஜமாஹிரியா மற்றும் சூடான் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். தோகா – பக்ரைன், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் யெமன் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். கர்த்தூம் – சூடான் தேசிய அலுவலகம். ரபாத் – அல்ஜீரியா, மவுரித்தேனியா(Mauritania),மொரோக்கோ மற்றும் துனீசியா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். ரமல்லாஹ் – பாலஸ்தீன அதிகார தேசிய அலுவலகம். ஆசியா மற்றும் பசிபிக் அல்மேட்டி – கசக்ஸ்தான், கிர்கிசுத்தான், தஜிகிஸ்தான் மற்றும் உசுபெக்கிசுத்தான் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். அபியா – ஆஸ்திரேலியா, குக் தீவுகள், பிஜி, கிரிபட்டி,மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், நவூரு, நியூசிலாந்து, நியுவே, பலாவு, பப்புவா நியூ கினி, சமோவா, சாலமன் தீவுகள், தொங்கா, துவாலு, வனுவாட்டு மற்றும் டோக்கெலாவ் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். பேங்காக் – ஆசியா மற்றும் பசிபிக் கல்விக்கான பிராந்திய செயலகம் மற்றும் தாய்லாந்து, மியான்மர், லாவோஸ், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். பெய்ஜிங் – வடகொரியா, ஜப்பான், மங்கோலியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென் கொரியா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். டாக்கா – வங்காளம் தேசிய அலுவலகம். ஹனோய் – வியட்நாம் தேசிய அலுவலகம். இஸ்லாமாபாத் – பாக்கிஸ்தான் தேசிய அலுவலகம். ஜகார்த்தா – ஆசியா மற்றும் பசிபிக் அறிவியல் பிராந்திய செயலகம் மற்றும் புரூணை, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, மற்றும் கிழக்குத் திமோர் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். காபூல் – ஆப்கானித்தான் தேசிய அலுவலகம். காட்மாண்டூ – நேபாளம் தேசிய அலுவலகம். புது தில்லி – வங்காளம், பூட்டான், இந்தியா, மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். புனோம் பென் – கம்போடியா தேசிய அலுவலகம். தாஷ்கந்து – உசுபெக்கிசுத்தான் தேசிய அலுவலகம். தெஹ்ரான் – ஆப்கானித்தான், ஈரான், பாக்கித்தான் மற்றும் துருக்மெனிஸ்தான் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரசெல்சு – பிரசல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் துணை அமைப்புகள் ஆகியவற்றிற்கான தொடர்பு அலுவலகம். ஜெனீவா – ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் தொடர்பு அலுவலகம். நியூயார்க் நகரம் – நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகளின் தொடர்பு அலுவலகம். மாஸ்கோ – ஆர்மீனியா, அசர்பைஜான், பெலருஸ், மொல்டோவா மற்றும் உருசியா ஆகியவற்றிற்கான க்ளஸ்டர் அலுவலகம். வெனிசு – ஐரோப்பாவில் அறிவியல் மற்றும் கலாச்சார மண்டல பீரோ. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரித்தானிய வெர்ஜின் தீவுகளில் யுனெஸ்கோ மையம். பிரசிலியாவில் – பிரேசில் தேசிய அலுவலகம். குவாதமாலா சிட்டி – குவாத்தமாலா தேசிய அலுவலகம். அவானா – இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் கலாச்சார மண்டல அலுவலகம் மற்றும் கியூபா, டொமினிக்கன் குடியரசு, எயிட்டி மற்றும் அருபா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். கிங்ஸ்டன் – ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம், பகாமாசு, பார்படோசு, பெலீசு, டொமினிக்கா, கிரெனடா, கயானா, ஜமைக்கா, செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்செண்ட் கிரெனேடின்ஸ், சுரிநாம் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ அத்துடன் இணை உறுப்பு நாடுகள் பிரித்தானிய கன்னித் தீவுகள், நெதர்லாந்து அண்டிலிசு மற்றும் கேமன் தீவுகள். லிமா – பெரு தேசிய அலுவலகம். மெக்சிகோ நகரம் – மெக்சிகோ தேசிய அலுவலகம். மொண்டிவிடியோ – இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் அறிவியல் பிராந்திய செயலகம் மற்றும் அர்ச்சென்டினா, பிரேசில், சிலி, பாரகுவே மற்றும் உருகுவே ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். போர்ட்-ஓ-பிரின்ஸ் (Port-au-Prince) – ஹெய்டியில் தேசிய அலுவலகம். கியூடோ – பொலிவியா, கொலொம்பியா, எக்குவடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். சான் ஜோஸ் – கோஸ்ட்டா ரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், மெக்சிகோ, நிக்கராகுவா மற்றும் பனாமா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். சாண்டியாகோ டி சிலி – லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் கல்விக்கான பிராந்திய செயலகம் மற்றும் சிலி தேசிய அலுவலகம். தேர்தல் 7.9.2009 முதல் 23.9.2009 வரை பொது இயக்குநர் பதவியைப் புதுப்பிக்க பாரிசில் தேர்தல் நடந்தது.8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 58 நாடுகள் ஓட்டளித்தன. நிர்வக சபை 7.9.2009 முதல் 23.9.2009 வரை தொடர்ந்தது 17ம் தேதி ஓட்டளிப்பது ஆரம்பமானது. ஈரினா பொகொவா யுனெஸ்கோவின் புதிய பொது இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சை மற்றும் சீர்திருத்தம் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளுக்கும் யுனெஸ்கோவுக்குமான உறவில் யுனெஸ்கோ சர்ச்சையின் மையமாக இருந்தது. 1970 மற்றும் 1980ல் புதிய உலகத் தகவல் தொடர்பு ஆணை ஊடகங்களை சனநாயகத் தன்மைக்கு உட்படுத்தி தகவல்களைப் பெறுதல், சமத்துவ உரிமை ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்பதால் மாக் பிரைட் அறிக்கையின் அழைப்பிற்கு மேற்கூறிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன உள் சீர்திருத்தம் கடந்த 10 ஆண்டுகளில் யுனெஸ்கோவில் நடமுறைப்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள்,அதன் நிலைப்பாட்டில் மாறுதலைக் கொண்டுவந்தது. உலக அளவில் 2000 ஊழியர்கள் இருந்தனர். இயக்குநர்கள் 200லிருந்து 100 ஆகக் குறைக்கப்பட்டனர். யுனெஸ்கோவின் களப் பிரிவுகளும் பாதியாகக் குறைக்கப்பட்டன. 1998ல் உச்சகட்டமாக 1287 களப்பணி அலுவலகங்கள் இருந்தன. இன்று 93 அலுவலங்கள் மட்டுமே உள்ளன. இணை மேலாண்மை அமைப்பு, அமைச்சரவை அந்தஸ்துள்ள முக்கிய ஆலோசனை நிலைகள் ஒழிக்கப்பட்டன. 1998–2009க்கு இடையில் 245 ஒப்பந்த ஊழியர்கள் வெளியேறியதால் சுமார் 12 மில்லியன் டாலர் ஊழியர் செலவுப் பற்றாக்குறை நீங்கியது. உயர் பதவிகள் பாதியாக்கப்பட்டன. பல பதவிகளை அதற்குக் கீழ் நிலைக்கு கொண்டு வந்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மிக அதிகமான ஊழியர் செலவு குறைக்கப்பட்டது. பயிற்சி அளித்தல்,களப்பணியில் திறந்த வெளி போட்டித் தேர்வின் மூலம் ஊழியரைத் தேர்ந்து எடுத்தல்,ஊழியர்களின் சாதனை பற்றிய மதிப்பீடு, மேலாளர்களுக்கு சுழற்சி,ஆகியவற்றை அமுலுக்குக் கொண்டு வந்து,ஊழியர் தரம் மேம்படுத்தப்பட்டது. வரவு செலவு மற்றும் திட்டமிடுவதில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டது. திட்ட மதிப்பீட்டிலிருந்து கற்றுக் கொண்ட படிப்பினை மூலம் ஓட்டு மொத்த சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. யுனெஸ்கொ அமைப்பின் செயல் திறனை மேம்படுத்த உட்புற மேற்பார்வை சேவை (ஐஓஎஸ்) 2001ல் நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் அலுவலகங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு,நிர்வாகம் சீரிய முறையில் நடை பெறுகிறதா என்பதை (ஐஓஎஸ்) தொடர்ந்து தணிக்கை செய்யும். (ஐஓஎஸ்), யுனெஸ்கோவின் செயல்பாடுகள், மற்றும் திட்டங்களின் பயன் பற்றி மதிப்பீடு செய்யாது.மேற்கு நாடுகளைத் தாக்க பொது உடமைவாதிகள் மற்றும் மூன்றாம் உலக சர்வாதிகாரிகளின் தளமாக யுனெஸ்கோ செயல்படுகிறது என்று உணரப்பட்டது. இசுரேல் 1949ல் யுனெஸ்கோவில் இசுரேல் இணைந்தது. ஜெருசலேமில் உள்ள டெம்பில் மவுண்ட்டில் ஏற்படுத்தப்பட்ட அகழ்வாரய்ச்சியில் விளைந்த சேதத்தைக் காரணம் காட்டி இஸ்ரேலை, யுனெஸ்கோ விலக்கியது. யுனெஸ்கொ தனது 1974 மற்றும் 1975 ஆகிய ஆண்டுகளின் அறிக்கைகள் மூலம், தான் இசுரேலை விலக்கியது சரியே என்றது. இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஐக்கிய நாடுகள் 40 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி விடுவதாக பயமுறுத்தியதால், 1977ல் இஸ்ரேலின் உறுப்பினர் தகுதி புதுப்பிக்கப்பட்டது. யுனெஸ்கோவின் நிர்வாக வாரியம் அக்டோபர் 2010ல் மேற்குக் கரையில் உள்ள பெத்லகேம் நகரில் அமைந்துள்ள ரேச்சல் கல்லறையை பிலால் பின் ரபாஹ் மசூதியாக அங்கீகரித்து வாக்களித்தது. முக்ரபி கேட் பாலத்தை இடித்து புதியதாகக் கட்ட இசுரேல் முடிவெடுத்தது. இதனை 28/06/2011ல் கூடிய யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு கண்டித்தது. "பண்பாட்டுப் பன்முகத்தன்மை" என்ற கருத்தை பல நடுநிலை அமைப்புகளாலும், யுனெஸ்கோவுக்கு உள்ளேயும் எதிரொலித்தாலும், ஐக்கிய நாடுகளும், ஆஸ்திரேலியாவும், இஸ்ரேலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அடிக்குறிப்புகள் யுனெஸ்கோ நில மேலாண்மை
2688
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
பல்லவர்
பல்லவர் () என்போர் தென்னிந்தியாவில் பொ.ஊ. 275 முதல் பொ.ஊ. 897 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் எனும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.வின்சென்ட் ஸ்மித் என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர். போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தின் வட பகுதியை ஆளத் தொடங்கினர். பல்லவரின் தோற்றம்பற்றிய கூற்றுகள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தமிழ் நாட்டில் பொ.ஊ. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய வரலாறு பற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தமிழர்களேயென ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றி பாரசீகம், ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக்குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள். பல்லவர்களின் மிகப் பண்டைய கல்வெட்டுக்கள் பெல்லாரி, குண்டூர் மற்றும் நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. தென்னிந்தியர் இந்திய வரலாற்று நூலாசிரியரான 'வின்சென்ட் சுமித்' என்பவர், தமது 'பண்டைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற்பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஹலவர் என்னும் பாரசீக மரபினர்' என்றும், இரண்டாம் பதிப்பில் 'பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர்' என்றும் குறிப்பிடுகிறார். இவர்கள் கோதாவரிக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம்' என்றும், மூன்றாம் பதிப்பில், பஹலவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து பாரசீகரெனக் கூறல் தவறு. 'பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர்' என்றும் முடிவு கூறியுள்ளார். ஆயினும், ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், 'பகலவர்கள் மரபினரே பல்லவர்' என்று முடிவு செய்தார். பேராசிரியர் துப்ராய் என்பவர், 'பொ.ஊ. 150 இல் 'ருத்ர தாமன்' என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான கவிராகன் என்பவன் பஹலவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியை தமதாக்கி ஆண்டவராவர். கிடைத்துள்ள பட்டயங்களில் காணப்படுபவர் முதற் பல்லவ அரசர் அல்லர். ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற்பல்லவன். அவனே பல்லவர் பட்டயங்களில் கூறப்படுபவன்' என்று வரைந்துள்ளார். இங்ஙனம் பல்லவர் என்பர் பஹலவர் மரபினரே என்று முடிவு கொண்டவர் பலர். புதுக்கோட்டை மன்னர் தன்னைப் பல்லவராயர் எனக் கூறிக்கொள்கிறார். இம்மன்னர் இந்நாட்டுக் குடியாகிய கள்ளர் குலத்தலைவர். மற்றும் வெள்ளாள மரபினருள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பல்லவராய கோத்திரத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே புகழோடு விளங்கிய இராசசேகரன் என்பவர் தமது ‘புவன கோசம்' (Bhuvanakosa) என்ற நூலிலே சிந்து வெளிப் பல்லவர், தென்னாட்டுப் பல்லவர் என பல்லவர்களை இரு பிரிவாக்குகிறார். மேற் கூறியவற்றிலிருந்து பல்லவர் இந்நாட்டவரே என்று வாதிக்கப்படுகிறது. இலங்கையர் இலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர். 'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவளை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் 'திரையன்' என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப்படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவான்' என விளக்கியுள்ளார். யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து - sprout) போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும், 'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தலால் மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கிள்ளிவளவன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன், தொண்டை மண்டலம் ஆண்டான் என்பதும் ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், பல்லவர், இன்ன இடத்திலிருந்து வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறப்படவில்லை. 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர்களே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். பல்லவர் தமிழர் அல்லர் வின்செண்ட் சுமித் தமது மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருத்தமுடையதாகத் தெரிகின்றது. பிராகிருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவப் பட்டயங்களோ, அல்லது வடமொழியில் எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ 'பல்லவர் பஹலவர் மரபினர்' என்றோ, வேற்று நாட்டவர் என்றோ, 'திரையர் மரபினர்' என்றோ, 'மணிபல்லவத் தீவினர்' என்றோ குறிக்கவில்லை. சங்ககாலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி, இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ்கந்தவர்மன், 'புத்தவர்மன்' வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது. மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலானவை வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது எனலாம். பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர்கள் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர், தம்மைப் 'பரத்வாச கோத்திரத்தார்' என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; இன்ன பிற காரணங்களால், பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம். பல்லவர் - பஹலவர் மரபினர் பகலவர்கள் முன்பு பார்த்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தொண்டை மண்டலமாக இன்று அறியப்படும் ஆந்திர கடல் கரை பிரதேசம், காஞ்சி பிரதேசத்தில் தங்கி அங்கிருந்து தங்களது பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவினர். பஹலவ மன்னர்கள் தங்கள் சின்னமாக நெருப்பைக் கொண்டிருந்தார்கள். ஒரு பாத்திரத்தில் நெருப்பு எரிவதை தங்களது சின்னமாகவும் தங்களது சிற்பங்களிலும் வடித்து வைத்திருந்தனர். அதுவே பல்லவர்களும் செய்தது. பல்லவர்களது சின்னமாக இருந்ததும் நெருப்பு சட்டியே. பல்லவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கூற்றும் நிலவுகிறது. தொண்டை நாடும் சங்க நூல்களும் வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு பொ.ஊ.மு. 184 முதல் பொ.ஊ. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவாவடதலைநாடென இரண்டு பிரிவுகளாக இருந்தது - முன்னதில் காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும். காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி' (மாகாணம்) எனப்படுகிறது. வடக்கே இருந்த அருவாவடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் 'பாவித்திரி' என்பது. அஃது இப்பொழுதைய கூடூர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம் என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்திநாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின் மறுபெயர் ஆகும். இங்ஙனம் தொண்டை மண்டலம் கரிகால் சோழன் காலத்தில் சோழர் ஆட்சிக்கு வந்ததெனப் பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன். தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான். இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் பல்லவர் ஆட்சிக்கு முன்னிருந்த தொண்டை நாடுபற்றி அறிய முடிகிறது. மூன்று பிரிவுப் பல்லவர்கள் பல்லவர்களில் முற்காலப் பல்லவர்கள் இடைக்காலப் பல்லவர்கள் பிற்காலப் பல்லவர்கள் என்ற மூன்று பிரிவினர் உண்டு. முற்காலப் பல்லவர்கள் முற்காலப் பல்லவர்களில் பப்பதேவன், சிவகந்தவர்மன், விசய கந்தவர்மன், இளவரசன் புத்தவர்மன், புத்யங்குரன் ஆகிய ஐவரது பெயர்கள் மயித ஹோலு, ஹீரஹதகல்லி, குணபதேய என்ற மூன்று இடங்களில் கிடைத்த படயங்களின் மூலம் வெளிப்பட்டன. இவர்கள் காலத்தில் ஆந்திரப் பகுதியும் தொண்டை நாட்டின் வடபகுதியும் பல்லவ நாடாக விளங்கின. இடைக்காலப் பல்லவர்கள் இடைக்காலப் பல்லவர்களின் காலம் பொ.ஊ. 340 முதல் பொ.ஊ. 615 வரை நீண்டது. முதலாம் குமாரவிட்ணு முதலாம் கந்தவர்மன் வீரகூர்ச்சவர்மன் கந்தசிஷ்யன் எனப்பட்டஇரண்டாம் கந்தவர்மன் இளவரசன் விட்ணுகோபன் புத்தவர்மனாகிய இரண்டாம் குமாரவிட்ணு இரண்டாம் சிம்மவர்மன் மூன்றாம் கந்தவர்மன் மூன்றாம் குமாரவிட்ணு எனப் பதின்மூன்று பேர்களின் விவரங்கள் கிடைக்கின்றன. பிற்காலப் பல்லவர்கள் மரபு பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில் வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் என ஒரு மரபு நீள்கிறது. பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன. எல்லைப்போர்கள் பல்லவர் ஆட்சிக் காலம் தொடக்கத்திலிருந்தே ஓயாதபோர்கள் நிகழ்ந்தன. வடக்கில் குப்தர்கள், கதம்பர்கள், வாகாடகர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள் மற்றும் இராட்டிரகூடர்களின் இடைவிடாத தாக்குதல்களை பல்லவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. இவை தவிர காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டை ஆண்ட கங்கர்கள், கீழைச் சாளுக்கியர், பாண்டியர் போன்றோரும் பல்லவர்களுக்குத் தலைவலியாக இருந்து வந்தனர். தொண்டை நாட்டைச் சேர்ந்த சீமாறன் சீவல்லபனும் தனது பெரும் எதிர்ப்பைப் பிற்காலத்தில் காட்டினார். ஆட்சியைத் துவக்கும்போதே பல்லவர்கள் களப்பிரர்களை வேரறுத்துத் தான் துவக்கினர். அவ்வாறே பல்லவ மரபு முடியும்போதும், பாண்டியர்களின் போர் அவர்களுக்கு முற்றுப் புள்ளியாய் அமைந்தது. பல்லவர் காலமும் சமுதாய மாற்றமும் பல்லவர்கள் காலத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் பற்பல. அவற்றுள் முதன்மையானது சங்க கால மன்னர்களுக்குப் பின் மக்களின் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதில் பல்லவர்கள் காட்டிய அக்கறையாகும். பல பேரேரிகளையும் குளங்களையும், கிணறுகளையும் ஆற்று வாய்க்கால்களையும் வெட்டியவர்கள் பல்லவர்கள். பல்லவர்கள் காலத்தில் வரிச்சுமை அதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் கூடுதலாகவே அமைந்தது. வேளாண்மை வரி, தொழில்வரி என்று தனித்தனியே பிரித்து வரி வசூலித்தனர். அவர்கள் காலத்தில் வடமொழிக் கல்வியே ஊக்குவிக்கப்பெற்றது. இக்காலத்தில் சமண, பௌத்த, வைணவ சமயங்கள் நிலவிய போதும் சைவமே தழைத்தோங்கி செல்வாக்கு பெற்றது. பல்லவர் ஆட்சி முறை பல்லவ நாடு பல இராட்டிரங்களாகப் (மண்டலங்களாக) பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாகப் (கோட்டங்களாக) பிரிக்கப்பட்டிருந்தது. முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் (வெங்கிராட்டிரம்), துண்டகராட்டிரம் (தொண்டை மண்டலம்) எனபன பல்லவர் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லவர் கோட்டம், நாடு, ஊர் போன்ற ஆட்சிப்பிரிவுகளை அமைத்தனர். நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாளர்கள் நாட்டார் என்றும் ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். மன்னர் நாடாளும் பொறுப்பு முழுவதும் மன்னன் கைகளில் இருந்தது. அரசனாகும் உரிமை பரம்பரை வழி உரிமையாக வந்தது. சில சமயங்களில் மக்களே மன்னனைத் தேர்ந்தெடுத்தனர் என்பதை இரண்டாம் பரமேசுவரன் மகன் சித்திரமாயன் அரசனாக ஆவதற்குத் தகுதியற்றவனெனக் கருதப்பட்டு, பல்லவ மன்னன் இரண்டாம் நந்தி வர்மன் என்ற பட்டப் பெயருடன் மன்னனாக ஆனதைக் குறிப்பிடலாம். பல்லவ மன்னர்கள் கல்வி, அறிவு, கலையறிவு, பண்பாடு, ஆட்சித்திறன், வீரம் ஆகியவற்றில் சிறப்புற்று விளங்கினர். சமயத்திலும் இறைவழிபாட்டிலும் பல்லவ மன்னர் அளவிலாத ஈடுபாடு கொண்டனர். அரசு அலுவலர்கள் பல்லவ மன்னர்களுக்கு ஆமாத்தியர்கள் என்ற அமைச்சர்கள் இருந்தனர் என்பதற்கும், அமைச்சர் குழு இருந்தது என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன், மூன்றாம் நந்திவர்மனது அமைச்சன் நண்பன் இறையூர் உடையன், தமிழ்ப்பேரரையன் என்ற அமைச்சர் பெயர்களால் தகுதியுடைய பிராமிணர்களும் வேறு பெருமக்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர் என்று அறிகிறோம்.பல்லவ வேந்தர்களிடம் உள்படு கருமத்தலைவர், வாயில் கேட்பார், கீழ்வாயில் கேட்பார் போன்ற அதிகாரிகள் ஆட்சி நடத்த உதவி புரிந்தனர். பொற்கொல்லர், பட்டய எழுத்தாளர், காரணீகர் போன்றோர் அரண்மனை அலுவலராக விளங்கினர். சின்னம் பல்லவ வேந்தர் நந்தி இலச்சினை கொண்டனர். சில பட்டயங்களில் சிங்கச் சின்னம் காணப்படுகின்றது. இச்சிங்கச்சின்னம் பட்டயங்கள் பல்லவ மன்னர்களால் போர்க்களங்களிலிருந்து விடப்பட்டவையாகும். பல்லவர் நாணயங்களிலும் நந்திச் சின்னம் பொறித்தனர். நீதி காஞ்சி போன்ற பெருநகரங்களில் நடைபெற்ற நீதிமன்றங்களுக்கு அதிகரணம் என்று பெயர் வழங்கப்பட்டது. அந்நீதிமன்றத் தலைவர்கள் 'அதிகரண போசகர்' என்று அழைக்கப்பட்டார். சிற்றூரில் உள்ள நீதிமன்றங்கள் 'கரணங்கள்' எனவும் அதன் தலைவர் 'கரண அதிகாரிகள்' என்றும் அழைக்கப்பட்டனர். இவ்வதிகரணங்கள், குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எனவும் 'தருமாசனம்' எனப்படும் உயர்நீதிமன்றம் அரசனது நேரான மேற்பார்வையில் பிற வழக்குகளை விசாரிக்கும் எனவும் ஒருவாறு உணரலாம். சிற்றூர்களில் இருந்த அரங்கூர் அவையத்தார் வழக்குகளை ஆட்சி(அநுபோக பாத்தியர்), ஆவணம்(எழுத்து மூலமான சான்றுகள்), அயலார் காட்சி, கண்டார் கூறு ஆகிய சான்றுகளின் அடிப்படையில் விசாரித்து முடிவு கூறினர். பல்லவர் படை வலிமை பல்லவர் பண்பட்டதும், திறனுடையதுமான படை வைத்திருந்தனர் என்பது அவர்கள் கதம்பர், சாளுக்கியர், கங்கர், இராஷ்டிரகூடர் போன்ற வடபுலத்து மன்னர்களோடும், பாண்டிய சோழ, களப்பிரரோடும் போரிட்டதிலிருந்து அறியலாம். சிம்மவர்மன், நரசிம்மன் காலத்தில் பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்), இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வில்வலம் என்னும் ஊருக்கும் வேகவதியாற்றுக்கும் தலைவனான பூசான்மரபினைச் சேர்ந்த உதயசந்திரன், மூன்றாம் நந்திவர்மன் காலத்தின் பூதிவிக்கிரமகேசர் என்னும் கொடும்பாளுர் சிற்றரசன் ஆகியோர் சிறந்த படைத்தலைவர்களாக விளங்கிப் பல்லவ நாட்டைக் காத்தனர். பல்லவர் மிக வலிமையுடைய கடற்படை வைத்திருந்தனர் என்ற செய்தியை மாமல்லனாகிய நரசிம்மவர்மன் இலங்கை நாட்டு மானவன்மனுக்கு அரசுரிமை கிடைக்க ஈழத்தின்மீது படையெடுத்ததிலிருந்தும், நிருதுபங்கவர்மன் காலத்தில் சீமாறன் சீவல்லபன் என்ற பாண்டியன், பல்லவனின் கடற்படை கொண்டு ஈழத்தின் மீது படையெடுத்ததிலிருந்தும் அறியலாம். மேலும் சீனம், சயாம் போன்ற கடல் கடந்த நாடுகளுடன் கடல் வாணிகம் செய்த செய்திகளையும் அறிகிறோம். கப்பலை நாணயத்தில் பொறித்து வெளிட்ட தமிழக மன்னர்களில் முதல்வர் பல்லவர்களே. போர்கள் மணிமங்கலம் போர் புள்ளலூர்ப் போர் வாதாபிப் போர் ஊராட்சி முறை ஊரின் ஆட்சி ஊரவைப் பெருமக்களால் நடைபெற்றது. ஊரவைகள், ஏரிவாரியம், தோட்டவாரியம் போன்ற பல வாரியங்கள் வாயிலாக மக்களாட்சி நடத்தியது. ஆளுங்கணத்தார் என்போர் சிற்றூர்களை நேரே பொறுப்பாக அரசியலுக்குட்பட்டு ஆண்டவர்களாவர். கோயில் தொடர்புற்ற பல்வகை செயல்களையும் கவனித்துக் கோயில்களைப் பாதுகாத்தவர் 'அதுர்கணத்தார்' எனப்பட்டனர். இவர்கள் கோயில் தொடர்பான செய்திகளில் ஊரவைக்குப் பொறுப்பானவர்களாவர். சிற்றூர்களின் எல்லைகள் அளக்கப்பட்டுக் குறிக்கப்பட்டன. கிணறுகள், குளங்கள், கோயில்கள், ஓடைகள் முதலியன ஊருக்குப் பொதுவாக விளங்கின. நெல் அடிக்கும் களத்துகு வரியாக, நிலத்துச் சொந்தக்காரர் குறிப்பிட்ட அளவு நெல்லைச் சிற்றூர்க் களஞ்சியத்துக்குச் செலுத்தினர். பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றூர்கள் பிரமதேயச் சிற்றூர்கள் எனப்பட்டன. இவை எவ்வித வரியும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை. சில உரிமைகள் வழங்கப்பட்டதோடு நிலங்கள் தானமாக அளிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் மேலிருந்த தனிப்பட்ட குடிமக்களின் உரிமை அடையாளங்கள் மாற்றப்பட்டன. தானம் அளிக்க விரும்பும் ஒருவன் தானமாக வழங்கப்பட இருக்கும் நிலத்தின் உரிமையாளரிடமிருந்து விலைக்கு வாங்கி தன் சொந்தமாக்கிக் கொண்டபிறகே தானமாக வழங்குவான். பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட பிரமதேயம், கோயில்களுக்கு வழங்கப்படும் தேவபோகம் தேவதானமாகப் பௌத்த, சமண சமய மடங்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிச்சந்தம் ஆகியவை இம்முறையைப் பின்பற்றியே தானமாக வழங்கப்பட்டன. இக்கிராமங்களின் நிர்வாகத்தினை நாடுகாப்பாணும்,அதன்பணியை தானம் பெற்றவர்களும் அவர்கள் மரபு வழியினரும் கவனித்து வர வேண்டும் என்பது தானத்தில் நிபந்தனையாகும். வரிகள் வேளாண்மை வரிகள் தென்னை, பனை, பாக்கு ஆகிய மரங்களைப் பயிரிடும் உரிமை பெற அரசாங்க வரி விதிக்கப்பட்டது. கள் இறக்கவும், சாறு இறக்கவும், பனம்பாகு காய்ச்சவும், கடைகளில் பாக்கு விற்கவும் வரி விதிக்கப்பட்டது, கல்லால மரம் பயிரிட, சித்திரமூலம் என்னும் செங்கொடி பயிரிட, கரிசலாங்கண்ணி என்னும் மூலிகை பயிரிட உரிமை பெறக் கல்லாலக்காணம், செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் ஆகிய தொகைகள் அரசாங்க உரிமை பெறச் செலுத்தப்பட்டன. மருக்கிழுந்து பயிரிட மருக்கொழுந்துக் காணம், நீலோற்பலம், குவளை ஆகியவை நடுவதற்கு உரிமை பெற குவளை நடுவரி, விற்பனை செய்யக் குவளைக் காணம் ஆகியன அரசாங்கத்தால் பெறப்பட்டன. பிரம்மதேயம், தேவதானச் சிற்றூர்கள் இவ்வரிகளிலிருந்து விலக்குப் பெற்றன. தொழில் வரிகள் ஆடு, மாடு ஆகிய காலநடைகளால் பிழைப்பவர், புரோகிதர், வேட்கோவர்(குயவர்), பலவகைக் கொல்லர், வண்ணார், ஆடைநெய்வோர், நூல் நூற்போர், வலைஞர், பனஞ்சாறு எடுப்போர், மணவீட்டார், ஆகிய தொழிலாளரும், பிறரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர். பண்டாரம் ஊர்மன்றங்களில் வழக்காளிக்கு விதிக்கப்பட்ட தண்டம் "மன்றுபாடு" எனப்பட்டது.பல்லவர் அரசாங்கப் பண்டாரத்தைத் தகுதியுடைய பெருமக்களே காத்துவந்தனர். இவர்கள் பேரரசுக்குரிய பண்டாரத்தலைவர் எனப்பட்டனர். இவர்களுக்குக் கீழ் மாணிக்கம் பண்டாரம் காப்போர், பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும்படி ஆணையிடும் அலுவலர்கள் ஆகிய கொடுக்கப் பிள்ளைகள் எனபோரும் இருந்தனர். அளவைகளும் நாணயங்களும் நில அளவை பல்லவர் காலத்தைல் விளங்கிய நில அளவைகள் குழி, வேலி என்பன. மேலும் கலப்பை, நிவர்த்தனர், பட்டிகாபாடகம் என்பனவும் நில அளவைகளாக வழங்கின. முகத்தலளவை முகத்தல் அளவைகளாகக் கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையாநாழி, நாராய(ண)நாழி என்பனவும் உழக்கு (விடேல் விடுகு உழக்கு), சிறிய அளவையான பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் என்பனவும் பயன்பட்டன. நிறுத்தலளவை கழஞ்சு மஞ்சாடி என்பன பொன் நிறுக்கும் அளவைகள் நாணயங்கள் பல்லவர் காசுகள் செம்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டவை. அவை நந்தி, பாய்மரக் கப்பல், சுவஸ்திக், கேள்விக்குரிய சங்கு, சக்கரம், வில், மீன், குடை, கோயில், குதிரை, சிங்கம் ஆகிய உருவங்களைப் பொறித்தும் வழங்கப்பட்டன. நீர்ப்பாசன வசதிகள் காடுகளை அழித்து உழுவயல்களாகப் பல்லவர்கள் மாற்றியதால், அவர்களுக்குக் காடுவெட்டிகள் என்ற பெயரும் உண்டு. காடு வெட்டிகளான பல்லவர்கள் நாடு திருத்த நீர்ப்பாசன வசதிகள் நிரம்பச் செய்தனர். பல்லவ அரசர்களும், சிற்றரசர்களும், பொதுமக்களும் ஏரிகள், கூவல்கள்(கிணறுகள்), வாய்க்கால்கள், மதகுகள் அமைத்து நீர்ப்பாசன வசதிகளைச் செய்து வளம் பெருக்கினர். ஏரிகள் இராச தடாகம், திரளய தடாகம்(தென்னேரி), மகேந்திர தடாகம்(மகேந்திரவாடி ஏரி),சித்திரமேக தடாகம்(மாமண்டூர் ஏரி), பரமேசுவர தடாகம்(வரம் ஏரி), வைரமேகன் தடாகம்(உத்திரமேரூர் ஏரி), வாலிவடுகன் ஏரி, மாரிப்பிடுகன் ஏரி(திருச்சி ஆலம்பாக்கம்), வெள்ளேரி, தும்பான் ஏரி, மூன்றாம் நந்திவர்மன் காலத்தி அவனி நாராயண சதுர்வேதி மங்கலத்து ஏரி(காவேரிப்பாக்கத்து ஏரி, மருதநாடு ஏரி வந்த வாசிக் கூற்றம்), கனகவல்லி தடாகம்(வேலூர்க்கூற்றம்) ஆகியன பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும். கிணறுகளும், கால்வாய்களும் பல்லவர்கள் காலத்தில் ஏராளமான கிணறுகளும் கால்வாய்களும் வெட்டப்பட்டன. திருச்சிராப்பள்ளி திருவெள்ளறையில் தோண்டப்பட்ட கூவல் என்னும் மார்ப்பிடுகு பெருங்கிணறு முப்பத்தேழு சதுர அடிகொண்ட சுவஸ்திக் வடிவத்தில் விளங்குவது. அது இக்காலத்திய கிணறுகளுக்குச் சான்றாகும். மேலும் பாலாறு, காவிரி முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்கள், ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப்பெயர் பெற்றன. வைரமேகம் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால், கணபதிவாய்க்கால், ஸ்ரீதரவாய்க்கால் என்பன அவற்றுள் சில. பஞ்சங்கள் பல்லவர் காலத்தில் இடைவிடாத பல போர்கள் காரணமாகப் பஞ்சங்களும் தோன்றின. இராசசிம்மன் காலத்துப் பஞ்சம் பற்றி அவைக்களத்துப் புலவர் தண்டி விளக்கமாக எடுத்துரைக்கிறார். மூன்றாம் நந்திவர்மன்காலத்துத் தெள்ளாற்றுப் போர் போன்ற போர்களின் காரணமாக உண்டான பஞ்சம் பற்றிப் பெரிய புராணம் கூறுகிறது. நடுகல் பல்லவர் காலத்தில் ஒருவர் செய்த சிறப்பு மிக்க செயலுக்காகப் பாராட்டி அவர் பெயரால் கோவிலுக்குப் பொன் கொடுத்து விளக்கேற்றச் சொல்லுதலோ, வேறு நற்செயலோ நடைபெறச் செய்தல் வழக்கமாகும். சிறந்த செயல் செய்தோ, போரிலோ ஒருவர் இறந்துவிட்டால் அவர் நினைவாக வீரகற்கள் நடுவதும் சில இடங்களில் பள்ளிப்படைக் கோயில்கள் கட்டுவதும் அக்காலத்து வழக்கமாகும். பல்லவர் காலத்துக் கல்வியும் சமுதாய நிலையும் பல்லவர் காலக் கல்விநிலை என்பது சமயம் சார்ந்ததாக இருந்தது. சமயக் கல்விதான் கல்வியோ என்று ஐயுற வேண்டிய வகையில் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் கல்வி கற்பிக்கப்பட்டது. கல்வி மக்கள் வடமொழியும், தமிழ்மொழியும், பல்வேறு கலையறிவும் பெற உதவியாகக் கல்வியமைப்பு இருந்தது. காஞ்சி மாநகரில் வடமொழியில் வேதங்கள் போன்ற உயர் ஆராய்ச்சிக்கல்வி அளிக்கும் கடிகைகள் இருந்தன. மேலும் கடிகாசலம் எனப்படும் சோழசிங்கபுரம் கடிகை, தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் வடமொழிக்கல்லூரி, தேவாரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகிய நூல்கள் படைக்கும் ஆற்றலளிக்கும் தமிழ்க்கல்வி இருந்தது. அவை அக்காலக் கல்வி மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். சமயநிலை துவக்கத்தில் சமணர்களாக இருந்த பல்லவர்கள், சைவ சமயத்தில் ஈடுபாடு காட்டினர். சைவ சமய உட்பிரிவுகளான பாசுபதம், காபாலிகம், காளாமுகம், ஆகியவை இவர்கள் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்தன.சைவர்களே ஆனாலும் பல்லவர்கள் வைணவம் தழைக்கவும் வழி செய்தனர்.இவர்கள் காலத்தில் தேவாரப் பதிகங்களும் திவ்வியப் பிரபந்தமும் பாராயணம் செய்யப்பட்டன. கலை இலக்கிய வளர்ச்சி பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம்,இசை, ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் இலக்கியமும் அவர்கள் காலத்தில் உச்ச நிலையடைந்தன. கலை ஆர்வலர்களான பல்லவர்கள் எல்லாக் கலைகளிலும் ஒருமித்த ஆர்வம் காட்டினார்கள். தாமே பண்களைத் தொகுத்தும் பாடியும் மகிழ்ந்தனர். நாயன்மார்களும், ஆழ்வார்களும், பாடிய பாடல்கள் பலவற்றிற்கு அவர்கள் காலத்தில் பண்கள் அமைக்கப்பட்டிருந்ததன. அவை கடவுள் உலாக்களின் போது பாடப்பட்டன. இசைக்கருவிகளிலும் புதிய மாற்றங்களைப் பல்லவர்கள் செய்து அறிமுகப்படுத்தினர். ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் முலம் நன்கு வெளிப்படுகிறது. பல்லவர்கள் காலம் கட்டடக்கலைக்கு உலகப் புகழ் தேடித்தந்த காலமாகும். அவர்களது குடைக் கோயில்களும் மாமல்லபுரத்துச் சிற்பங்களும் குடைவரைக் கோயில்களும் இன்றளவும் உலக மக்களின் போற்றுதலுக்கு உரியனவாகும். இலக்கியம் தமிழிலக்கியங்கள் பல்லவர் காலத்துப் பக்தி இயக்கம் தமிழுக்குப் புதிய வகை இலக்கியத்தினை அளித்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச்செய்த பக்திப் பாடல்கள் அக்கால சமுதாய நிலை சமய, மொழி நிலையையும், கலைச் சிறப்பையும் உணர்த்துவன. பழைய அகப்பாடல் மரபுகள் இப்பாடல்களில் புது உருவம் பெறினும், வட சொல்லாட்ட்சி மிகுந்து காணப்படுகின்றன. மேலும் நந்திக் கலம்பகம், பெருந்தேவனார் பாடிய பாரதம், பெருங்கதை, இறையனார் களவியலுறை திருமந்திரம், சங்க யாப்பு, பாட்டியல் நூல், மகாபுராணம், முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியாண கதை, அணியியல், அமிர்தபதி, அவிநந்த மாலை, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப் பாட்டு முதலிய நூல்களும் பல்லவர் காலத்தில் தோன்றியனவே. காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் ஆகியோரும் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்களே. வடமொழி இலக்கியங்கள் பல்லவர்களில் பலர் சிறந்த வடமொழியறிஞர்களாக விளங்கினர். லோக விபாகம், அவந்தி சுந்தரி கதை, காவியதர்சம் முதலான நூல்கள் தோன்றின. முதலாம் மகேந்திர வர்மன் மத்தவிலாசப் பிரகசனம் எனும் நகைச்சுவை நாடகத்தை வடமொழியில் எழுதினான். மேலும் பாரவி, தண்டி போன்ற புலவர்களும் இருந்தனர். அவந்தி சுந்தரி, கதா போன்ற வடமொழிப்பாடல்கள் தோன்றின. வடமொழிப் பட்டயங்கள் அழகிய இலக்கிய நடையில் எழுதப்பட்டன. காஞ்சியிலும் கடிகாசலத்திலும், பர்கூரிலும் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. கடிகாசலத்தில் மயூரசன்மன் மாணவனாக இருந்தான். தர்மபாலர் என்னும் பெரியார் இங்கிருந்து நாளந்தாப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். இசைக்கலை பல்லவர்காலத்தில் தமிழகத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசைக்கருவிகளுடன், அடியார்கள் புடை சூழ தேவர் மூலருக்கும் பாடல்கள் பாடிக்கொண்டு ஆலயங்கள் தோறும் சென்று சைவத்தையும் வைணவத்தையும் வளர்த்தனர். தாளத்தோடு கூடிய இன்னிசையைப் பரப்பினர். நாயன்மார்களது பதிகங்களில் சாதாரி, குறிஞ்சி, நட்டபாடை, இந்தளம், வியாழக் குறிஞ்சி, சீகாமரம், பியந்தைக் காந்தாரம், செவ்வழி, கொல்லி, பாலை போன்ற பண்கள் பயன்படுத்தப்பட்டன தோற்கருவி, துளைக்கருவி நரம்புக்கருவி, கஞ்சக்கருவி போன்ற வகையினைச் சார்ந்த யாழ், குழல், வீணை, தமருகம், சக்கரி, கொக்கரி, கரடிகை, மொந்ந்தை, முழவம், தக்கை, துந்துபி, குடமுழா, உடுக்கை, தடி, தாளம் முதலிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன, திருநீலகண்ட யாழ்ப்பாணர், ஆனாயானார் போன்ற இசைப் பேரறிஞர்கள் கருவியிசை மூலமாகச் சமயம் வளர்த்தனர். சதுரஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம், சங்கீரணம் எனும் தாள வகைகள் கடைசியான சங்கீரணம் என்பதனைப் புதியதாகக் கண்டு அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் அமைந்த காரணத்தால் மகேந்திரவர்ம பல்லவன் சங்கீரண சாதியென அழைக்கப்பட்டான். இசை நுட்பம் உணர்ந்த மகேந்திரவர்மன் காலத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியா மலையில் இசை மாணவர் நன்மைக்காகப் பண்களை வகுத்துத் தந்தவர் உருத்திராச்சாரியார் என்பவர் ஆவார். மாணவனான அரசன் கட்டளைப்படி இங்கு இசைக்கல்வெட்டு அமைக்கப்பட்டது. எட்டு நரம்புகளைக் கொண்ட வீணைக்கும் பயன்படுமாறு கண்டறிந்த பண்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. பரிவாதினி எனும் வீணையில் வல்லவனாக இம்மன்னன் திகழ்ந்தான். ஆடற்கலை மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்கள் காலத்தில் நடனக் கலை பெற்றிருந்த ஏற்றத்தினை விளக்குகின்றன. பரமேசுவர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோவிலில் ஆடவரும் பெண்டிரும் அணி செய்து கொண்டு ஆடி நடிக்கும் காட்சி சிற்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்துக் கோயில்களுள் இசையும், கூத்தும் வளர்க்க அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் என்னும் பெண்மக்கள் இருந்தனர். இது தேவாரம் போன்றா சிற்றிலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் தெரிய வருகிறது. காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடிய நாதாந்த தூக்கிய திருவடி(குஞ்சித பாதம்) நடனம் சிற்பவடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளது. கட்டடக்கலை மகேந்திரவர்மனால் தமிழகத்தில் கட்டப்பட்ட குகைக்கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. சிம்மவிஷ்ணுவால் கட்டப்பட்டன என்று கருதப்படும் ஆதிவராகர் கோயில் குகைக்கோயிலாகும். மகேந்திரவர்மன் கட்டிய குகைக் கோயில்கள் அனைத்தும் மலைச் சரிவுகளில் குடைந்து அமைத்தவையாகும். இத்தகைய குகைக்கோயில்கள் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் சிவன் கோயில்களாக அமைந்தன. மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்காவரம், நாமக்கல் ஆகிய இடங்களில் பெருமாள் கோயில்களாக அமைந்தன. மண்டகப்பட்டில் குடைந்துள்ள குகைக்கோயிலில் பிரமன், சிவன், திருமால் ஆகிய மூவருக்கும் ஒவ்வொரு அறை வீதம் மூன்று அறைகளோடு அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள தருமராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டவை. இங்கு நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்ட பஞ்சபாண்டவர் தேர்கள் என்றழைக்கப்படுபவை ஒரே கல்லைக் கோயிலாக அமைத்துக் கொண்ட கட்டடக்கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். திரௌபதியம்மன் தேர் என்றழைக்கப்படும் கோயில் தூங்காணை மாடம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட கட்டடக் கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். இது பண்டைக் காலத்து பௌத்த சைத்தியத்தை ஒத்தது. பரமேசுவரவர்மன், கூரம் என்னும் சிற்றூரில் அமைத்த சிவன் கோயில் தமிழகத்து முதற் கற்கோயில் ஆகும் சிற்பக்கலை மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகிய பல்லவ மன்னர்கள் தாம் அமைத்த குகைக் கோயில்களில் வாயிற்காவலர் (துவாரபாலகர்), விஷ்ணு, சிவன், லிங்கம், இசைவாணர்(கந்தர்வர்), முயலகன், ஆதிவராகர், மகிஷாசுரமர்த்தினி, வராக அவதாரம், வாமன அவதாரம், கங்கைக் காட்சி, அர்ச்சுனன் தவம் அல்லது பகீரதன் தவம், கோவர்த்தன கிரியைக் கண்ணன் குடையாகப் பிடித்தது போன்ற காட்சிகளைச் சிற்பங்களாக அமைத்துள்ளனர். பல்லவர் அமைத்த கோயில்களின் தூண்களும், சுவர்களும், போதிகைகளும், விமானங்களும் கண்கவரும் சிற்பங்களைக் கொண்டு திகழ்கின்றன. மகாபலிபுரம் பல்லவரின் சிற்பக்கலைக் கூடமாகவே திகழ்கின்றது. ஓவியக்கலை ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் மூலம் நன்கு வெளிப்படும். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட அந்த ஓவியங்கள் வண்ணக்கலவை மாறாது அவற்றின் தனிச்சிறப்பை உணர்த்துவன. இவ்வோவியங்கள் சமண சமயத்தைச் சார்ந்தவை. மேலும் காணலாம் பல்லவ அரசர் கால நிரல் மேற்கோள்கள் உசாத்துணை வெளியிணைப்புகள் பல்லவர் வரலாறு - இராசமாணிக்கனார் பல்லவர் தமிழ்நாட்டு அரச வம்சங்கள் இந்தியப் பேரரசுகள் இந்துப் பேரரசுகள் இந்திய அரச மரபுகள் ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள் ஆந்திரப் பிரதேச வரலாறு தமிழ்நாட்டு வரலாறு தமிழ் அரச வம்சங்கள்
2689
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D
ஈழம்
தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின. பெயர்த் தோற்றம் தமிழ்ச்சொல் ஈழம் என்னும் சொல் கீழம் என்பதன் மற்றொரு வடிவம் இதனை மரூஉ என்றும் கொள்ளலாம். “கீழ் என் கிளவி உறழத் தோன்றும்” என்பது தொல்காப்பியம். கீழ் என்னும் சொல் இரண்டு பொருளில் வரும். ஒன்று தாழ்வைக் குறிக்கும். மற்றொன்று கிழக்குத் திசையைக் குறிக்கும். தமிழ்நாடு பொதுவாகப் பார்த்தால் கிழக்கில் தாழ்ந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. தாழ்வை இழிவு என்கிறோம். இது மனப்பாங்குப் பார்வை. நிலச்சரிவுப் பார்வையில் இலங்கை தமிழ்நாட்டின் சரிவாக உள்ளது. நீரிழிவு என்னும்போது இழிவு என்னும் சொல் இறங்குதலைக் குறிக்கிறது. இழிவு < > ஈழ் < ஈழம். இது தமிழர் வழங்கிய தமிழ்சொல். பிறசொல் ஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை. 'தமிழு'ம் 'ஈழ'மும் ஈழம் என்ற சொல்லுக்குப் பாலி அல்லது சிங்கள மூலம் காட்டுகின்ற அதேவேளை சில ஆய்வாளர் 'தமிழ்' என்ற சொல்லும் ஈழம் என்ற சொல்வழியாக, 'சிஹலம்' என்பதிலிருந்தே உருவானதாகக் காட்ட முயல்கின்றனர். தற்காலத்தில் 'ஈழம்' இலங்கையில் இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் ஈழகேசரி, ஈழநாடு போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன. அரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன் படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள். காலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது. இலக்கியத்தில் ஈழம் தமிழின் சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி, வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின் நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் ஏமாப்ப இனிது துஞ்சி. என்ற பாடலில் ஈழத்து உணவு என்ற சொல்லாடல் மூலம் ஈழம் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிக்குறிப்பு வெளி இணைப்புகள் A Short History of the Words Ilam and Ilavar, Prof. Peter Schalk தமிழீழம் இலங்கை
2692
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88
குறுந்தொகை
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. இந்நூல் எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்துச் சுட்டும் பழம்பாடலில் "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுகிறது. இந்நூல் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக அதாவது 235 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புகளை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ எனினும் தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சங்க இலக்கிய பாடல் நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தா ரேத்துங் கலியோடு அகம் புறம் என் றித்திறத்த எட்டுத் தொகை முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி- மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து பாடியோர் இத்தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலில் அமைந்துள்ள 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அதில் அமைந்த சிறப்புத் தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். அவர்களில் 'அணிலாடு முன்றிலார்' (குறுந்.பா.41), 'செம்புலப்பெயல் நீரார்' (குறுந். பா.40), 'குப்பைக் கோழியார்'(குறுந்.பா.305), 'காக்கைப் பாடினியார்'(குறுந்.பா.210), 'விட்ட குதிரையார்'(குறுந்.பா.74) 'மீனெறி துாண்டிலார்'(குறுந்.பா.54) ' ஓரேருழவனார்' (குறுந்.பா.131.), 'காலெறி கடிகையார்' (குறுந்.பா.267),கல்பொரு சிறுநுரையார்' (குறுந்.பா.290), முதலானோர் உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். நூலமைப்பு குறுந்தொகை நான்கு முதல் எட்டு வரையான (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூல் அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுகின்ற போதும் முதற்பொருள் மற்றும் கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தந்துள்ளது. இதில் வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளைச் சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும். குறுந்தொகை பழைய உரைகள் இந்த நூலின் முதல் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை எழுதாத அடுத்த 20 பாடல்களுக்கு ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார். நச்சினார்க்கினியர் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் (அகத்திணையியல் நூற்பா 46) பேராசிரியரின் குறுந்தொகை உரையை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை. குறுந்தொகை காட்டும் செய்திகள் குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்குப் "பொற்கிழி" வழங்கச் செய்தது சிறந்த வரலாற்றுச் சான்றாகும். நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே. (குறுந்.பா.3.) என்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது."வினையே ஆடவர்க்கு உயிரே"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது. பதிப்பு வரலாறு சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன், தான் இயற்றிய புத்துரையுடன் 1915-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்." இவற்றையும் பார்க்க குறுந்தொகை பாடிய புலவர் வரிசை குறுந்தொகை உரை வெளி இணைப்புகள் குறுந்தொகை நூல் உரை - எட்டுத்தொகை நூல்கள் குறுந்தொகைப் பாடல்கள் - பாடல் மூலம், பாடல்களின் செய்தி, தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன் குறுந்தொகை - இலக்கியம் குறுந்தொகை PDF குறுந்தொகை - அறிமுகம் - காயத்திரி குறுந்தொகை மூலமும் எளிய உரையும் அடிக்குறிப்புகள் தொகை நூல் எட்டுத்தொகை
2693
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88
குறுந்தொகை பாடிய புலவர் வரிசை
பாரதம் பாடிய பெருந்தேவனார் - கடவுள் வாழ்த்து திப்புத்தோளார் 1 இறையனார் 2 தேவகுலத்தார் 3 காமஞ்சேர்குளத்தார் 4 நரிவெரூஉத்தலையார் 5 பதுமனார் 6 பெரும்பதுமனார் 7 ஆலங்குடி வங்கனார் 8, 45 கயமனார் 9 ஓரம்போகியார் 10, 70 மாமூலனார் 11 ஓதலாந்தையார் 12, 21 கபிலர் 13, 18, 25, 38, 42, 87 தொல்கபிலர் 14 ஔவையார் 15, 23, 28, 29, 39, 43, 80 பாலை பாடிய பெருங்கடுங்கோ 16, 37 பேரெயின் முறுவலார் 17 பரணர் 19, 24, 36, 60, 73, 89 கோப்பெருஞ் சோழன் 20, 53 சேரமான் எந்தை 22 கொல்லன் அழிசி 26 வெள்ளிவீதியார் 27, 44, 58 கச்சிப்பேட்டு நன்னாகையார் 30 ஆதிமந்தி 31 அள்ளூர் நன்முல்லையார் 32, 67, 68 படுமரத்து மோசிகீரன் 33, 75 கொல்லிக் கண்ணன் 34 கழார்க் கீரன் எயிற்றி 35 செம்புலப் பெயனீரார் 40 அணிலாடு முன்றிலார் 41 மாமிலாடன் 46 நெடுவெண்ணிலவினார் 47 பூங்கணுத்திரையார் 48 அம்மூவனார் 49 குன்றியனார் 50, 51 பனம்பாரனார் 52 மீனெறி தூண்டிலார் 54 நெய்தற் கார்க்கியர் 55 சிறைக்குடி ஆந்தையார் 56, 57, 62 மோசிகீரனார் 59, 84 தும்பிசேர் கீரன் 61 உகாய்க்குடி கிழார் 63 கருவூர்க் கதப்பிள்ளை 64 கோவூர் கிழார் 65 கோவர்த்தனார் 66 கடுந்தோட் கரவீரன் 69 கருவூர் ஒதஞானி 71 மள்ளனார் 72 விட்ட குதிரையார் 74 கிள்ளிமங்கலங் கிழார் 76 மதுரை மருதன் இளநாகனார் 77 நக்கீரனார் 78 குடவாயிற் கீரனக்கன் 79 வடம வண்ணக்கன் பேரிசாத்தன் 81 கடுவன் மள்ளன் 82 வெண்பூதன் 83 வடம வண்ணக்கன் தாமோதரன் 85 வெண்கொற்றன் 86 மதுரைக் கதக்கண்ணன் 88 மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் 90 பூதந்தேவனார் இன்னும் உண்டு சங்கப் புலவர்கள்
2696
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
கலை வரலாறு
கலை என்பது பொதுவாக காட்சிக் (visual) கலைகளின் வரலாற்றையே குறிக்கின்றது. எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறருக்கு விளக்கும் நோக்குடனோ; அழகியல் நோக்கங்களுக்காகவோ; காட்சிக்குரிய வடிவத்தில் மனிதர்களால் உருவாக்கப்படும் ஒரு செய்பொருளே காட்சிக்கலை எனலாம். நீண்ட காலமாகவே கலையைப் பல்வேறு விதமாக வகைப்படுத்தி வந்துள்ளனர். மத்திய காலத்தில் தாராண்மக் கலை (liberal arts), இயந்திரம்சார் கலை (mechanical arts) என்ற வகைப்பாடு இருந்தது. எனினும் அக்காலத்தில் கலை என்பதில், இன்று அறிவியல், வேளாண்மை, பொறியியல் போன்ற துறைகளைச் சார்ந்த விடயங்களும் அடங்கியிருந்தன. தற்காலத்தில் நுண் கலைகள், பயன்படு கலைகள் என்ற வகைப்பாடு உள்ளது. தற்காலத்தில் மனித ஆக்கத்திறனின் வெளிப்பாடே கலை என்று வரைவிலக்கணம் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் கலைகளை ஒன்பதாக வகுத்தனர். கட்டிடக்கலை, நடனம், சிற்பம், இசை, ஓவியம், கவிதை, திரைப்படம், ஒளிப்படவியல், வரைகதை என்பன இவை. பெரும்பாலோர், சிறப்பாக மேலை நாட்டினர், கலை வரலாறு, ஐரோப்பியக் கலை வரலாற்றையே குறிப்பதாகக் கருதி வந்தனர். எனினும் கலை வரலாறு என்பது கற்கால மனிதர்களின் கலைகள் தொடக்கம், உலகின் பல நாகரீகங்களின் கலை வரலாற்றையும் உள்ளடக்குகின்றது. கலை வரலாற்றின் துணைப் பிரிவுகள் வரலாற்றுக்கு முந்திய காலக் கலை வரலாற்றுக்கு முந்திய கால ஐரோப்பியக் கலை வரலாற்றுக்கு முந்திய கால ஆசியக் கலை ஆபிரிக்கச் சுதேசக் கலைகள் அமெரிக்கச் சுதேசக் கலைகள் ஓசானியச் சுதேசக் கலைகள் பண்டைய உலகின் கலைகள் பண்டைய மெசொபொத்தேமியக் கலைகள் சுமேரியக் கலைகள் பபிலோனியக் கலைகள் அசிரியக் கலைகள் பண்டைய எகிப்தியக் கலைகள் பண்டைய எஜியன் கலைகள் மினோவன் நாகரீகம் மைசனியன் நாகரீகம் கிரேக்கக் கலைகள் கிரேக்கோ-பௌத்தக் கலைகள் ரோமப் பண்பாடு ஆரம்பகாலக் கிறிஸ்தவக் கலை ஐரோப்பியக் கலை வரலாறு கிறிஸ்தவக் கலை மத்தியகாலக் கலை மறுமலர்ச்சிக் காலம், தொடக்க மறுமலர்ச்சி ஓவியங்கள், மற்றும் மறுமலர்ச்சிச் செவ்வியம் Mannerism, பரோக், மற்றும் ரோகோகோ புதுச்செவ்வியம், Romanticism, Academic art, Realism நவீன கலை இந்தியத் துணைக் கண்டம் இந்தியக் கலை தமிழர் கலை மொகலாயக் கலை இலங்கைக் கலை சிங்களக் கலை இலங்கைத் தமிழர் கலை இஸ்லாமியக் கலை தூரகிழக்கு நாடுகளின் கலைகள் பௌத்த கலை சீனக் கலை ஜப்பானியக் கலை திபேத்தியக் கலை தாய் கலை லாவோஸ் கலை அமெரிக்க நாடுகளின் கலைகள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கலைகள் மெக்சிக்கோவின் கலை மத்திய அமெரிக்கக் கலைகள் தென் அமெரிக்கக் கலைகள் தற்காலக் கலை ஊடகக் கலை பின் வருவனவற்றையும் பார்க்கவும் கலை கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள் அழகியற் கலைகள் பண்பாட்டு இயக்கங்கள் ஓவியத்தின் வரலாறு கலைப் பொருட்களின் பட்டியல் ஓவியர்களின் பட்டியல் பழைய கற்காலம் கற்காலத்தில் ( 15,000-8000 கி.மு. ± ) கலை தொடங்கப்பட்டதாற்கான ஆதாரங்கள் கிடைததால் அதுவே கலையின் தொடக்ககாலமாக விளங்குகிறது. 25,000 கி.மு.வே கலையின் முதல் வெளிப்பாடாக இருந்தது . மனிதனால் பொருட்கள் செய்யப்பட்டதற்கான முதல் தடயங்கள் தெற்கு ஆப்பிரிக்கா, மேற்கு மத்திய தரைக்கடல் , மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ( அட்ரியாடி கடல் ) , சைபீரியா ( பைக்கால் ஏரி ) , இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் தடயங்கள் பொதுவாக கல் (பிளின்ட், obsidian ) , மரம் அல்லது எலும்பு கருவிகளில் செய்யப்பட்ட வேலைகளாகும்.ஓவியங்களில் சிவப்பு வண்ணம் பெற இரும்பு ஆக்சைடும், கருப்பு நிறங்களைப் பெற மாங்கனீசு ஆக்சைடும் களிமண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் இருந்து கலை வாழ்ந்துகொண்டிருக்கிறது.மனிதர்கள் தனிமையான இடங்களில் உயிர்வாழ கல் அல்லது எலும்பு மற்றும் குகை ஆகியவற்றில் ஓவியம் மற்றும் சிற்பங்கள் செய்துவந்துள்ளனர். பிரான்ஸ் பகுதியில் இருந்து சிறிய சிற்பங்கள் கண்டுபிடித்துள்ளனர் . பழையகற்காலத்தில் வறையப்பட்ட லாஸ்காக்ஸ் குகைகள் படங்கள் தமது இயற்கை உணர்வுகளை வெளிப்படும்படியாக வரைந்ந்துள்ளனர். குறிப்பாக அங்கு மந்திர மத தன்மை கொண்ட படங்கள் மற்றும் விலங்குகள் சித்தரிக்கபட்டுள்ளன. வீனஸ் கடவுளின் சிலகளும் , பெண்களின் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.வீனஸ் கடவுளின் சிலை வளத்தைக்குறிப்பதற்காக வரையப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர் . . கற்கால கலை கி.மு 8000 வாக்கில் மனிதர்கள் ஆடுமாடுகள் பழக்கப்படுத்துதலிலும், விவசாயம் மேற்கொள்வதிலும்,மதங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.லிபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களில் சிறு சிறு மனித உருவங்கள் வறையப்பட்டுள்ளன.இவ்வோவியம் ஜிம்பாவே, ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களுடன் ஒத்ததாக உள்ளதாக அறிஞர்கள் கண்டுபிடித்தனர். பின்டுராஸ் நதி படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களும் இதுபோல் வரலாற்று சிறப்புகளைக் கூறுவதேயாகும். மேற்கோள்கள் மேலும் படிக்க Adams, Laurie. Art across Time. 3rd ed. Boston: McGraw-Hill, 2007. Gardner, Helen, and Fred S. Kleiner. Gardner's Art through the Ages: A Global History. 13th ed. Australia: Thomson/Wadsworth, 2009. Gombrich, E. H. The Story of Art. 15th ed. Englewood Cliffs, N.J.: Prentice-Hall, 1990. Honour, Hugh, and John Fleming. The Visual Arts: A History. 5th ed. New York: Henry N. Abrams, 1999. Honour, Hugh, and John Fleming. A World History of Art. 7th ed. Laurence King Publishing, 2005, , Janson, H. W., and Penelope J. E. Davies. Janson's History of Art: The Western Tradition. 7th ed. Upper Saddle River, NJ: Pearson Prentice Hall, 2007. Oliver Grau (Ed.): MediaArtHistories, Cambridge/Mass.: MIT-Press, 2007. La Plante, John D. Asian Art. 3rd ed. Dubuque, IA: Wm. C. Brown, 1992. Miller, Mary Ellen. The Art of Mesoamerica: From Olmec to Aztec. 4th ed, World of Art. London: Thames & Hudson, 2006. Pierce, James Smith, and H. W. Janson. From Abacus to Zeus: A Handbook of Art History. 7th ed. Upper Saddle River, NJ: Pearson Prentice Hall, 2004. Pohl, Frances K. Framing America: A Social History of American Art. New York, NY: Thames & Hudson, 2002. Stokstad, Marilyn. Art History. 3rd ed. Upper Saddle River, NJ: Pearson Education, 2008. Thomas, Nicholas. Oceanic Art, World of Art. New York, N.Y.: Thames and Hudson, 1995. Wilkins, David G., Bernard Schultz, and Katheryn M. Linduff. Art Past, Art Present. 6th ed. Upper Saddle River, NJ: Pearson Education, 2008. வெளியிணைப்புகள் நியூ யார்க் பெருநகர அருங்காட்சியகத்தின் கால வரிசைப்படியான கலை வரலாறு தமிழ் ஆயகலைகள் தொகுப்பு: கலை வரலாறு (பகுதி): Ars Summum Project கலை வரலாறு
2697
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்
கலை இயக்கம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியுள், ஒரு குறிப்பிட்ட கலைஞர் குழுவால் பின்பற்றப்படுகின்ற, ஒரு குறிப்பிட்ட பொதுத் தத்துவத்தை அல்லது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, கலையின் ஒரு போக்கு அல்லது பாணியாகும். கலை இயக்கங்கள் சிறப்பாக நவீன கலைகள் (Modern Art) தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கே தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு இயக்கமும், ஒரு புதிய முழு வளர்ச்சி பெற்ற குழுவாகக் கருதப்பட்டது. individualism மற்றும் பன்முகத் தன்மை நிலை பெற்றிருக்கும் தற்காலக் கலையில் இயக்கங்கள் ஏறத்தாழ முற்றாகவே மறைந்துவிட்டன எனலாம். கலை இயக்கங்கள் மேலைத்தேசக் கலைகளுக்கேயுரிய தோற்றப்பாடாகவே பெரிதும் காணப்படுகின்றன. இச் சொல், காண்போர் கலை, கட்டிடக்கலை சிலசமயம் இலக்கியம் ஆகியவற்றின் போக்குகள் தொடர்பிலேயே பயன்படுத்தப் படுகின்றது. கலை இயக்கங்களின் பட்டியல் பண்பியல் ஓவியம் (Abstract art) பண்பியல் வெளிப்பாட்டுவாதம் (Abstract expressionism) Action painting எதிர்-யதார்த்தவியம் (Anti-realism) அராபெஸ்க் (Arabesque) ஆர்ட் டெக்கோ ஆர்ட் நூவோ (Art Nouveau) ஆர்ட்டே பொவேரா (Arte Povera) கலை மற்றும் கைப்பணி இயக்கம் (Arts and Crafts Movement) குப்பைத்தொட்டி சிந்தனைக்குழு (Ashcan School) பார்பிசோன் சிந்தனைக்குழு (Barbizon school) பரோக் (Baroque) பௌஹவுஸ் (Bauhaus) நிறப்புலம் (Colour Field) கருத்துரு ஓவியம் (Conceptual art) கட்டமைப்புவாதம் (Constructivism) கியூபிசம் (Cubism) டாடாயியம் (Dadaism) டி ஸ்டெயில் (De Stijl) (also know as Neo Plasticism) கட்டவிழ்ப்பியம் (Deconstructivism) வெளிப்பாட்டியம் (Expressionism) விசித்திர யதார்த்தவியம் (Fantastic realism) போவியம் (Fauvism) உருவோவியம் (Figurative) பிளக்சஸ் (Fluxus) எதிர்காலவியம் ஆர்லெம் மறுமலர்ச்சி (Harlem Renaissance) உணர்வுப்பதிவுவாதம் (Impressionism) பன்னாட்டு கோதிக் (International Gothic) லெஸ் நாபீ மனரியம் (Mannerism) Massurrealism மீவியற்பிய ஓவியம் (Metaphysical painting) சிறுமவியம் (Minimalism) நவீனவியம் (Modernism) புதுச்செந்நெறியியம் (Neoclassicism) புதுவெளிப்பாட்டியம் (Neo-expressionism) புதுத்தொல்பாணியியம் (Neoprimitivism) கண்மாய ஓவியம் (Op Art) ஆர்பியம் (Orphism) நிழற்பட இயல்பியம் (Photorealism) புள்ளிப்படிமவியம் (Pointillism) மக்கள் ஓவியம் (Pop art) பின்-உணர்வுப்பதிவியம் (Post-impressionism) பின் நவீனத்துவம் (Postmodernism) தொல்பாணியியம் (Primitivism) இயல்பியம் (Realism) மறுமலர்ச்சி (Renaissance) மறுமலர்ச்சிச் செந்நெறியியம் (Renaissance Classicism) ரோக்கோகோ (Rococo) ரோமனெஸ்க் (Romanesque) புனைவியம் (Romanticism) சமூகவாத இயல்பியம் (Socialist Realism) உருவகவியம் (Stuckism) கலையுணர்வியம் (Suprematism) அடிமனவெளிப்பாட்டியம் Surrealism குறியீட்டியம் (கலை) (Symbolism (arts)) பின் வருவனவற்றையும் பார்க்கவும் ஓவியத்தின் வரலாறு கலை வரலாறு பண்பாட்டு இயக்கங்கள் இலக்கிய இயக்கங்கள் இசை இயக்கங்கள் மேற்கோள்கள் கலை இயக்கங்கள் கலை வரலாறு காட்சிக் கலைகள்
2698
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%28%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%29
மறுமலர்ச்சி (ஐரோப்பா)
நவீன ஐரோப்பிய வரலாற்றின் தொடக்கத்தில் மறுமலர்ச்சி (Renaissance) என்பது அறிவியற் புரட்சியையும், கலைசார் மாற்றங்களையும் கொண்டுவந்த ஒரு பெரும் பண்பாட்டு இயக்கமாகும். இது மத்தியகாலத்தின் முடிவுக்கும், நவீன காலத்தின் தொடக்கத்துக்கும் இடையிலான மாறுநிலைக் காலத்தைக் குறித்து நிற்கின்றது. அறிவாற்றல் ரீதியாகப் புதியதொரு மீட்சி இலக்கியத்திலும் கலைத்துறையிலும் இக்காலகட்டத்தில் உருவெடுத்தது. இச்சமயத்தின்போது அறிவியல் கண்டுபிடிப்புகள் பல நிகழ்ந்தன. அரசியல் ரீதியாக நிலமானிய முறை ஒழிந்து தேசிய அரசுகள் தோன்றின. தனிமனித உணர்வும் சமூகப்பண்பும் தழைத்தோங்கின. அக்காலத்தில் தோன்றிய சமயச்சீர்திருத்த இயக்கமும் மறுமலர்ச்சியின் வெளிப்பாடே ஆகும். மறுமலர்ச்சிக் காலம் பொதுவாக, இத்தாலியில் 14 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டிலும் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது. மறுமலர்ச்சி தோன்றக் காரணம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது பண்டைய இலக்கியங்களும் கலைகளும் அங்கு புறக்கணிக்கப்பட்ட அதே நேரத்தில் கான்ஸ்டாண்டினொபிளைத் தலைநகராகக் கொண்ட கிழக்கு ரோமானியப் பேரரசில் அவை பாதுகாக்கப்பட்டு வந்தன. 1453 ம் ஆண்டு ஆட்டோமன் துருக்கியர்கள் கான்ஸ்டாண்டினொபிளைக் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த பைசாண்டிய கிரேக்க அறிஞர்கள் ரோமாபுரிக்குத் தப்பியோடினர். அவர்கள் தங்களுடன் கிரேக்க-ரோமானியப் பாரம்பரியச் சிறப்புகளையும் கொண்டு சென்றனர். மீண்டும் பண்டைய இலக்கியங்கள் இத்தாலியில் புத்துயிர் பெற்றமையால் கேள்வி கேட்டு விடை பெறும் மனப்பாங்கு மக்களிடம் பெருகியது. இவ்வுணர்வின் விளைவால் அறிவியல் , புவியியல், சமயம், இலக்கியம், கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் போன்றவற்றில் ஒரு எழுச்சி உண்டானது. வரலாற்று வரைவியல் ரெனைசான்ஸ் (Renaissance) என்ற சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டது. இதனை பிரெஞ்சு வரலாற்றாளரான ஜூல்ஸ் மிச்செலெட் (Jules Michelet) என்பவர் முதலின் பயன்படுத்தினார். இது 19 ஆம் நூற்றாண்டில் சுவிஸ் வரலாற்றாளரான ஜக்கோப் புர்க்கார்ட் (Jacob Burckhardt) என்பவரால் விரிவாக்கம் பெற்றது. இதன் நேரடிப் பொருள் மறுபிறப்பு என்பதாகும். மறுபிறப்பு என்பது இரண்டு வகையில் விளக்கம் பெறுகின்றது. ஒன்று பழைய classical நூல்களினதும், படிப்பினைகளினதும், மீள் கண்டுபிடிப்பும், கலை அறிவியல் முதலிய துறைகளில் அவற்றின் பயன்பாடும் என்ற பொருளைத் தருகிறது. மற்றது இத்தகைய அறிவுசார் நடவடிக்கைகளின் விளைவுகள், ஐரோப்பியப் பண்பாடு தொடர்பில் ஒரு பொதுவான புத்தூக்கத்தை ஏற்படுத்தியது எனப் பொருள் படுகின்றது. எனவே மறுமலர்ச்சி என்பதை இரண்டு வித்தியாசமான ஆனால் பொருள் பொதிந்த வழிகளில் பேசமுடியும்: பண்டைய நூல்களின் மீள் கண்டுபிடிப்பினூடாக செந்நெறிக்காலப் (classic) படிப்பினைகளினதும், அறிவினதும் மறுபிறவி என்பதும், ஐரோப்பியப் பண்பாட்டின் பொதுவான மறுபிறவி என்பதுமாகும். பல் மறுமலர்ச்சிகள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில், பல அறிஞர்கள், மறுமலர்ச்சி என்பது, பல அவ்வகையான இயக்கங்களில் ஒரு வகை மட்டுமே என்ற நோக்கைக் கொண்டிருந்தனர். இது பெருமளவுக்கு, "12 ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி" என்பது தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை முன்வைத்த சார்ள்ஸ் ஹெச் ஹஸ்கின்ஸ் (Charles H. Haskins) என்பவரின் ஆய்வுகளாலும், "கரோலிங்கியன் மறுமலர்ச்சி" (Carolingian renaissance) தொடர்பான வாதங்களை முன்வைத்த வரலாற்றாளர்களினாலும் ஏற்பட்டது. இவ்விரு கருத்துக்களுமே தற்போதைய அறிஞர் சமூகத்தினால் பரவலாக ஏற்கப்பட்டிருப்பதன் காரணமாக, மறுமலர்ச்சி எனப்படுவதை குறிப்பான சொற்களின் மூலம், உதாரணமாக இத்தாலிய மறுமலர்ச்சி, ஆங்கில மறுமலர்ச்சி முதலியன மூலம், குறிப்பிடுவது தற்கால வரலாற்றாளரிடையே ஒரு போக்காக இருந்து வருகிறது. மருத்துவத் துறையில் பாரிய புரட்சி வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கால கட்டம் வரை மதமும், மருத்துவமும் பின்னிப்பிணைந்திருந்தது என்பது மறுக்க இயலாத உண்மையாகும். ஆனால் இது ஒரு காலகட்டம் வரை மட்டும்தான். அறிவியல் வளர வளர மதத்திற்கும் மருத்துவத்திற்கும் இடையே இருந்த தொடர்பு மெதுவாக அறுபட ஆரம்பித்தது. எனவே இன்று வரை அறிவியல் அடிப்படையில் இயங்கி வருவது நவீன மருத்துவம், அலோபதி மருத்துவம் என்ற பெயரில் எல்லாம் வழங்கப்படும் ஆங்கில மருத்துவ முறையே ஆகும். மருத்துவம் (ணிலீனீiணீinலீ) என்ற ஆங்கிலச் சொல் இலத்தீன் மொழியில் உள்ள ஆர்ஸ் மெடிசினா (திrs ணிலீனீiணீina) என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் ‘குணப்படுத்தும் கலை’ என்பதாகும். கிரேக்க மருத்துவ அறிஞரான ஹிப்போ கிரடீஸ் என்பவரின் மருத்துவக் குறிப்புகளே சிறந்ததாகவும் ஓரளவிற்கு அறிவியல் தன்மை வாய்ந்ததாகவும் காணக் கிடைக்கின்றன. எனவே இவரே ‘மருத்துவத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். இவர் மருத்துவத்தை ஓரளவிற்கு மதத்திலிருந்து பிரித்து அதை ஒரு தனிக்கலையாக வளர்த்தார். ‘அதற்கு ஒரு தனியான நடைமுறை அறிவுடன் கூடிய நடைமுறையை ஏற்படுத்தியவர் இவரே. நோயாளிகளை பரிசோதிப்பதன் மூலமாகவும் அவர்களுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பதன் மூலமாகவும் நோய்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம் என்பதை முதன் முதலில் கூறியவர் இவர். நோய்க்கான காரணத்தை அவனுடைய உடலில் இருந்து அல்லது அவனுடைய சூழ்நிலையில் இருந்து அறிந்து கொள்ள இயலும் என்பதை முதன் முதலில் தெளிவுபடுத்தியவரும் இவரேயாவார். மேலும் மருத்துவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், நோயாளிகளுக்கு எவ்விதம் சிகிச்சை அளித்தல் வேண்டும் என்பது குறித்தெல்லாம் தெளிவாகவும் ஒரு திட்டவட்டமான வரையறுப்புடனும் எழுதிய முதல் மருத்துவரும் இவரே. இவருடைய புகழ்வாய்ந்த ‘ஹிப்போகிரடீஸ் உறுதிமொழி’ மருத்துவ உலகின் தொன்மையான செம்மையான ஆவணங்களுள் ஒன்று. ஒவ்வொரு மருத்துவரும் தம்முடைய மருத்துவப் படிப்பை முடித்தவுடன் இந்த உறுதிமொழியின் பெயரிலேயே தன்னுடைய தொழிலைத் தொடங்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இன்றும் இருந்து வருகிறது. இவருக்குப் பிறகு கேலன் என்ற கிரேக்க அறிஞர் மருத்துவத் துறைக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார். மனிதனுடைய உள் உடம்பின் அமைப்பை அறிவதற்கு இறந்து போனவர்களின் உடலை அறுத்து அதில் இருந்து கற்றுக்கொள்ளும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் இவரே. இதை அவர் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையேயும் தொடர்ந்து செய்துள்ளார். இன்றைக்கு உள்ள மனித உடலமைப்பு பற்றிய புரிதலுக்கு வித்திட்டு வைத்தவர் கேலன் ஆவார். ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலம் (14, 15 நூற்றாண்டு) மதம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பாவில் புதிய புதிய சிந்தனையாளர்களும், அறிவியல் ஆய்வாளர்களும், மருத்துவ அறிஞர்களும் தோன்றினர். மருத்துவத்தைப் பற்றிய கருத்துக்களில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அந்த கட்டத்தில் கொடுமையான நோய்களான பிளேக் போன்றவை ஐரோப்பா கண்டத்தை ஆட்டிப் படைத்தன. கறுப்பு மரணம் என்று அழைக்கப்படும் பிளேக் நோயினால் இரண்டு நூற்றாண்டுகள் ஐரோப்பிய நாடுகள் சொல்லொணா துயர் அனுபவித்து வந்தன. ஆனால் அரேபிய நாடுகள் இந்த நோய்களில் இருந்து விடுபட்டே காணப்பட்டன. இந்த உண்மை மேலை நாட்டு அறிஞர்களிடத்தில் புது வகை எண்ணங்களைத் தோற்றுவித்தது. தாங்கள் இதுவரை கொண்டிருந்த கருத்துகளைக் குறித்து மறு ஆய்வு செய்யத் தொடங்கினர். இதனால் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் தொடங்கியது. கிரேக்க ரோமானிய கருத்துகளின் அடிப்படையில் அதுவரை ஆட்சிபுரிந்து வந்த மருத்துவக் கருத்துகள் புறந் தள்ளப்பட்டன. இபேன் அல் நபிஷ், வேஸேலியஷ் போன்ற அரேபிய இஸ்லாமிய, மருத்துவ அறிஞர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது பழைமை வாதத்தில் இருந்த மருத்துவவியல் அறிவியலை நோக்கி எடுத்து வைத்த இரண்டாவது அடியாகும். மருத்துவத் துறையில் பல சோதனைகள் செய்யப்பட்டன. கிரேக்க அறிஞர்களின் ‘திரவக் கோட்பாடு’ மறுக்கப்பட்டது. வில்லியம் ஹார்வி என்பவர் இரத்தம் ஒரே இடத்தில் தங்கி இருக்கிறது என்ற கருத்தினை மறுத்து அது உடல் முழுதும் சுற்றி வருகிறது என்ற கருத்தினை முன் வைத்தார். முன் வைத்தது மட்டுமல்லாமல் அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் செய்தார். விலங்குகளின் மீது அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலமாக இரத்தம் உடலில் பல பாகங்களிலும் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை நிரூபித்தார். 1880 இல் ராபர்ட் கோக் குறிப்பிட்ட சில வகை நோய்கள் பக்டீரியா என்ற நுண்ணுயிர்களால் ஏற்படுகின்றன என்பதை அறிவியல் முறையில் நிரூபித்தார். அவை ‘காக்ஸ் கோட்பாடுகள்’ என்று அழைக்கப்பட்டு இன்றும் மருத்துவத் துறையில் போற்றப்பட்டு வருகின்றன. 18 ஆம் நூற்றாண்டிற்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது மேலை நாடுகளை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே நடந்து வருகிறது. ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மருத்துவத் துறையைச் செழுமைப்படுத்தும் விதமாக பல மருத்துவக் கண்டுபிடிப்புகளையும் கோட்பாடுகளையும் நிறுவினர். ஜோசப் லிஸ்டர் என்பவர் நமது கைகளில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் வழியாக நோயாளிகளுக்கு தொற்று ஏற்படக் கூடும் என்று முதன் முதலில் கூறினார். எனவே மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்த பிறகு தூய நீரினால் அல்லது சவர்க்காரத்தினால் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் மற்ற நோயாளிகளை பரிசோதிக்க வேண்டும் என்ற முறையை ஏற்படுத்தினார். இது குறிப்பாக பிரசவம் பார்க்கும் மருத்துவ அறிஞர்களுக்கு பொருந்தும் என்பது அவருடைய வாதம். மறுமலர்ச்சி பரவல்  15ஆம் நூற்றாண்டில், மறுமலர்ச்சி இத்தாலியின் பிளோரசன்சில் இருந்து ஐரோப்பாவின் மற்ற இடங்களுக்கு வேகமாக பரவியது. அச்சடிக்கும் இயந்திரத்தின் கண்டுபிடிப்பு புதிய புதிய யோசனைகள் வேகமாக பரவ வழிவகுத்தது. 20 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் மறுமலர்ச்சியை தேசிய மற்றும் மத இயக்கங்களாக பிரித்தனர். வடக்கு ஐரோப்பா  வடக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி வடக்கு மறுமலர்ச்சி என்று வழங்கப்பட்டது. இத்தாலியில் இருந்து மறுமலர்ச்சி யோசனைகள் வடக்கு நோக்கி நகர்ந்த பொழுது இசையில் பெரிய அளவில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஓவியங்களை பொறுத்தவரை இத்தாலிய ஓவியங்கள் மதச்சார்பற்று உருவாக்கப்பட்டன ஆனால் வடக்கு ஐரோப்பாவில் முதலில் மதம் சார்ந்த ஓவியங்களே வரையப்பட்டன. பின்னாட்களில் பீட்டர் பிருகள் போன்றவர்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளை ஓவியங்களாக தீட்டினர். வடக்கு மறுமலர்ச்சியின் பொழுதே பல ஆண்டுகள் நீடித்திருக்கும் எண்ணெய் ஓவியங்கள் முழுமைபெற்றன. இங்கிலாந்து 16ஆம் நூற்றாண்டில் ஆங்கில மறுமலர்ச்சி தொடங்கிற்று. ஷேக்ஸ்பியர், சர் தாமஸ் மோர், பிரான்சிஸ் பேகன் போன்ற எழுத்தாளர்கள், இண்டிகோ ஜோன்ஸ் போன்ற கட்டட வடிவமைப்பாளர்கள் தாமஸ் டாலிஸ் போன்ற இசை மேதைகள் ஆங்கில மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர். பிரான்ஸ் மறுமலர்ச்சியை குறிப்பிடும் வார்த்தையான "Renaissance" ஒரு பிரெஞ்சு சொல்லாகும். இதன் பொருள் மறுபிறப்பு என்பதாகும். 18 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தபட்ட இந்த சொல் பின்னாளில் பிரான்ஸின் வரலாறு என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமடைந்தது. ஜெர்மனி  15ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் மறுமலர்ச்சி ஜெர்மனிக்கு பரவத்துடங்கியது. இவற்றில் அச்சகங்களின் பங்கு அலாதியானது. நெதர்லாந்து 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலியின் மறுமலர்ச்சி நெதர்லாந்தையும் சென்றடைந்தது. இதற்கு பெல்ஜியதில் இருந்த டச்சு மொழி பேசும் பிளாண்டர்கள் ப்ருகஸ் நகர் வழியாக மேற்கொண்ட வணிகம் பெரிய அளவில் உதவியது. பிளாண்டர்கள் ஐரோப்பா முழுவதும் அறியப்பட்ட பெரிய கலைஞர்களை நெதர்லாந்துக்கு அழைத்துவந்தனர். அறிவியலில் உடற்கூற்றியல் துறை நிபுணர் ஆண்ட்ரீயஸ் போன்றவர்கள் மறுமலர்ச்சியை முன்னெடுத்து சென்றனர். போர்ச்சுக்கல் இத்தாலிய மறுமலர்ச்சியின் தாக்கம் போர்ச்சுகளை குறைவாக தாக்கியதாகவே கருதப்படுகிறது. போர்ச்சுக்கல் மறுமலர்ச்சி செல்வந்த இத்தாலி மற்றும் பிளண்டர்களின் முதலீடுகளால் சாத்தியப்பட்டது. போர்ச்சுக்கலின் தலைநகரான லிஸ்பன் 15 ஆம் நூற்றாண்டில் தழைத்தோங்கியது. காரணம் கண்டுபிடிப்புக்காலம் என்று போற்றப்படும்  பூகோளத்தின் வரைபடத்தை உருவாக்கிய பல கடல் பயணங்கள் போர்ச்சுக்கல் மூலமே செயல்படுத்தப்பட்டது. ஹங்கேரி இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அடுத்து பரவிய இரண்டாம் நாடு ஹங்கேரி எனலாம். இதற்கு இத்தாலி மற்றும் ஹங்கேரி இடையே ஏற்கனவே நிலவிய பல கட்டங்களிலான ஒத்துழைப்பும் ஒரு காரணம். ரஷ்யா இத்தாலிய மறுமலர்ச்சியின் தாக்கம் ரஸ்சியாவிலும் எதிரொலித்தது ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய அதே வேகத்தில் அல்ல. காரணம் ஐரோப்பா மற்றும் ரஷ்யா இடையேயான தூரம் அதிகம். ஈவான் III என்ற இளவரசர் இத்தாலியின் பின்வருவனவற்றையும் காண்க மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை அறிவியற் புரட்சி வெளி இணைப்புகள் A NEW LIGHT ON THE RENAISSANCE , by Harold Bayley, 1909 ஐரோப்பிய வரலாறு வரலாற்றுக் காலப்பகுதிகள்
2700
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D
இராசேந்திர சோழன்
இராசேந்திர சோழன் (Rajendra Chola) சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராசராச சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். விசயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராசேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராசேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராசேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். இவர் ஆட்சி செய்த பகுதிகள் தென் இந்தியா பகுதிகள் ஆன தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கருநாடகா, கேரளம், தெலுங்கானா, சத்தீசுகர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும், தென் கிழக்கு ஆசியா நாடுகள் அனைத்தும் இவர் ஆட்சி காலத்தில் இருந்தது. இராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், சிரீவிசயம், மலேயா (சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே சிவபெருமானுக்காக இராசேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது. இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளகத்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. சோழப் படைத்தலைவன் இராசேந்திரன் இராசேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்குத் தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன். தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மாதண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 'பஞ்சவன் மாராயன்' என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராசேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும், இராட்டிரரையும் வென்றான். இணை அரசனாக நிர்வகித்தல் இராசராச சோழரின் ஆட்சிக் காலத்திலேயே (பொ.ஊ. 1012), இராசேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டான். இராசராசரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராசேந்திர சோழன், இராசராச சோழனின் படைகளுக்குப் பொறுப்பேற்று வெற்றியைத் தேடித் தந்தான். முடி சூடுதலும் தொடக்ககால ஆட்சியும் இராசராச சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராசேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராசாதிராச சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராசாதிராச சோழன் பொ.ஊ. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர். நாட்டின் பரப்பும் அமைப்பும் தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும் ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இராசராசன், இராசேந்திரனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன், பெரு நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற் குழுக்கள் ஆகியோரது உரிமைகளைப் பாதுகாக்கவும், அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமும் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புகளை அழிக்கவும், வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவிபுரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றியபின் அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறும் செய்ய இராசேந்திரன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான். இக்கடற்படையின் உதவியுடன் கிழக்கிந்தியத் தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி தான் ஆட்சி செய்த முப்பத்து மூன்று ஆண்டுகளில் இராசேந்திரன் தன் நாட்டை தமிழ் அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும், மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக் கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப் பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான். ஆட்சியின் முற்பகுதிகளில், இராசேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்களைப் பற்றியும், கைப்பற்றிய நாடுகளைப் பற்றியும் தன் தந்தை போன்றே இராசேந்திரனும் எண்ணற்ற கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளதால் அறிய முடிகிறது. இராசேந்திரனுடைய இராணுவச் சாதனைகள், வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றித் திருவாலங்காடு, கரந்தை(தஞ்சை)ச் செப்பேடுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. படையெடுப்பு தொடக்க காலம் சோழ தேசத்துக்கான இராசேந்திர சோழனின் பங்களிப்பு, இராசராச சோழனின் படையில் பட்டத்து இளவரசனாகக் பொ.ஊ. 1012-இல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராட்டிரகூடர்களுக்கு எதிரான இராசராசனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும் ஆகும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராசேந்திரன் துங்கபத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான். ஈழத்தின் மீதான படையெடுப்பு முதலாம் இராசராச சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது பொ.ஊ. 1018-இல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராசேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டுவந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மகிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மகா வம்சமும்" கூறுகிறது. பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராசேந்திரன் பொ.ஊ. 1018-இல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களைக் கவர்ந்தான் என்றும், தொடர்ச்சியாகக் கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராசராச சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராசேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களைப் படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம். இராசேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை சடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்தச் சோழ-பாண்டியன் இராசேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட இல்லை. சாளுக்கியர் படையெடுப்பு இராஜேந்திரன் பொ.ஊ. 1021-இல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்குக் பொ.ஊ. 1015-இல் ஐந்தாம் விக்ரமாதித்தனுக்கு பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய இரண்டாம் ஜெயசிம்மன் பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் காலத்தில் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும் பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜெயசிம்மன் இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான். இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும், தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் ஏழாம் விஜயாதித்தனை (VII) ஆதரித்துக் குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதிச் சண்டையில் இராஜேந்திரன், இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான். இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன், இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரை ஆற்றின் கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு பொ.ஊ. 1022-இல் மணம்முடித்துச் சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் இரண்டாம் ஜெயசிம்மன் பொ.ஊ. 1031-இல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனைக் கீழைச் சாளுக்கிய மன்னனாக்கினான் இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்துக் பொ.ஊ. 1035-இல் விஜயாதித்தனையும், அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரேந்திரனை வேங்கி மன்னனாக அறிவித்தான். கங்கையை நோக்கிய படையெடுப்பு மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனைக் கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. பொ.ஊ. 1019-இல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரிக் கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்துப் புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும், அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும், தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது. இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளைச் சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம். கடல்கடந்த படையெடுப்புக்கள் கடாரம் படையெடுப்பு இராஜராஜனின் ஆட்சியின் 14-ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது. "அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினான்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் "போர் வாயில்" அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். நகைகள் பதித்த சிறுவாயிலை உடைய ஸ்ரீவிஜயன், பெரிய நகைகள் கொண்ட வாயிலையும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது. பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையாகவும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் அழகாகச் சூழப்பட்டு பாதுகாப்படுகிறது. எத்தகையபோரிலும் அஞ்சா நெஞ்சனாக விளங்கிய இலங்காசோகன் (லங்காசோக), மாபப்பாளம், ஆழமான தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டிருந்தது. மே விளிம்பங்கம், அழகிய சுவர்களை பாதுகாப்பு அரணாகக் கொண்டிருந்தது. " வலைப்பந்தூரு" என்பதுதான் வளைப்பந்தூரு போலும்; தலைத்தக்கோலம், அறிவியல் புலமை உடையோரால் செய்யுள்களில் புகழப்பட்டிருக்கிறது. பெரிய போர்களிலும், அதுவும் கடுமையான போர்களில் தன் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரால் தன் வலிமையான ஆற்றல் மேலும் உயர்ந்த பெருமையுடைய இலாமுரித்தேசம்; தேன்கூடுகள் நிறைந்த மானக்கவாரம்; மற்றும் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்" பொ.ஊ. 1025-இல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயோத்துங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயோத்துங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்காலச் சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும், இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன்தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக் கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது. நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும், சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புகள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தைத் தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தைச் சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்தப் படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாகச் சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்ட கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் நியமிக்கப்பட்டான் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது. பண்ணை இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது. இலாமுரி தேசம் இலாமுரி தேசம் என்பது, சுமத்திராவின் வடபகுதியிலுள்ள நாடாகும். இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவாரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது. இராஜேந்திரன் ஆட்சியின் இறுதி ஆண்டுகள் கடாரம் படையெடுப்பிற்குப் பின் இராஜேந்திரன் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். போர் முதலியன நடவாத அமைதிக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் இக்காலப் பகுதியை சிறப்பித்துள்ளனர். ஆனால் இராஜேந்திரனின் மக்களின் கல்வெட்டுகள் இதனை மறுக்கின்றன. இவற்றின் மூலம் நாட்டில் பல பகுதிகளில் இவர்கள் போரிட வேண்டியிருந்தது எனத் தெரியவருகிறது. தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே திக் விஜயம் செய்த இராஜேந்திரன், இதன் பின்னர் ஏற்பட்ட போர்களில் தானே கலந்து கொள்ளாமல், தன் மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததான். இதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றுப் புகழடையச் செய்தான். எனினும் இராஜாதிராஜனின் கல்வெட்டுகள் அனைத்தும் இராஜேந்திரனின் ஆட்சிக் காலத்திற்குட்பட்டனவாக உள்ளதால், இவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களும் முக்கியமாகின்றன. தெற்கில் குழப்பம் பாண்டிய, கேரள நாடுகளில் குழப்பங்கள் ஏற்பட்டதை ஒடுக்க வேண்டியிருந்தது. எனவே இராஜாதிராஜன் ஒரு நீண்ட படையெடுப்பை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி உண்டாயிற்று. ஆனால் பாண்டிய, கேரள நாடுகளின் மீதான படையெடுப்பு எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை. இக்காலத்திய பாண்டியர் கல்வெட்டுக்கள் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வெற்றிகொண்ட சோழர்களின் கல்வெட்டுகள் மூலமே இதனை நாம் அறிகிறோம். நடுநிலைச் சான்றுகள் கிடைக்கவில்லை, எண்ணற்ற சோழ பாண்டிய கல்வெட்டுகளும் இதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சுந்தரபாண்டியனே இக்கலகத்தை நடத்திய இயக்கத்தின் தலைவனாயிருக்கவேண்டும். 'திங்களேர்' என்று தொடங்கும் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியின் ஒரு கூற்று, மூன்று பாண்டியர்களுடன் இம்மன்னன் செய்த போரை விவரிக்கும் பொழுது, தன் தந்தையை எதிர்த்த ('தாதை முன்வந்த') விக்கிரம நாராயணனுடன் போரிட்டு அவனை வென்றதாகக் கூறுகிறது. பத்துநாள் நடைபெற்ற போரின் முடிவில் இராஜாதிராஜன் பூபேந்திரச் சோழன் என்ற பட்டத்தைச் சூடிக் கொண்டான். விக்கிரம நாராயணன் ஒரு தென்னாட்டு மன்னனாகவே இருத்தல் வேண்டும். ஆனால், இந்த மெய்க்கீர்த்தியிலேயே பின்பகுதியில் கூறப்படும் சாளுக்கியருடனான இரண்டாம் போரில், இவனே சக்கரவர்த்தி விக்கிரம நாராயணன் என்று குறிப்பிடப்படுவதால், இவன், சாளுக்கிய படைத்தலைவனாகயிருக்க வேண்டும். பாண்டிய நாட்டுப் படையெடுப்பைத் தொடர்ந்து இராஜாதிராஜன் காந்தளூருக்குச் செல்லும் வழியில் வேணாடு மன்னனை 'விண்ணுலகத்திற்கு அனுப்பினான்'. பின்னர் தென் திருவாங்கூரைச் சேர்ந்த கூபகர்களின் தலைவனைப் பலம் இழக்கச் செய்தான் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சோழப்பேரரசின் கருணை சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது. இராஜேந்திரனின் கடைசி ஆண்டுகள் இராஜேந்திரன் ஆட்சியின் கடைசி ஆண்டுகள், விஜயாலய சோழ வமிசத்தின் வரலாற்றின் பொற்காலமாக அமைந்தன. சோழநாடு மிகப் பரந்து விரிந்தது; சோழருடைய பெரும் படையின் வல்லமையும் கடற்போரின் விளைவால் உண்டான மதிப்பும் வானோங்கி நின்றன. புதிதாய்ச் சேர்க்கப்பட்ட நாடுகளில் ஆங்காங்கு ஏற்பட்ட குழப்பங்களை அடக்க வேண்டியிருந்தது. திறமை படைத்த புதல்வர்கள் அப்பணியைச் செவ்வனே செய்தனர். சுந்தர பாண்டியனையும், அவனுடைய நண்பர்களையும் பாண்டியரோடு நடைபெற்ற போரில் தோற்கடித்தும் ஆகவமல்லனுக்கு எதிராக சாளுக்கியப் போரில் ஈடுபட்டும் சோழர்கள் தொடர்ச்சியாக அப்பகுதிகளைக் கைவசப்படுத்தியிருந்தார்கள். இவ்விரு போர்களிலும் பட்டத்து இளவரசனான இராஜாதிராஜன் தலைமை ஏற்றான். மைசூரிலும் நம்பிஹல்லி என்ற பகுதியிலும் சோரியருடன் ஏற்பட்ட சிறு பூசல்களைச் சமாளிக்கக் குறுநில மன்னர்கள் பலர் சோழருக்கு உதவினர். இராஜேந்திர சோழனின் மரணம் ராஜேந்திர சோழன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள நாட்டேரி என்ற ஊரின் அருகில் பிரம்மதேசம் கிராமத்தில் இறந்தார். இதற்குச் சான்றாக பிரம்ம தேசத்திலுள்ள சந்திர மெளலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட பல்லவர் கால கோவிலில் அமைந்துள்ளது. விருதுகள் இராஜராஜ சோழனைப் போன்றே இராஜேந்திரனும் சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றான். இவற்றில் குறிப்பிடத்தக்கவை, முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என்பன. இவன் ஒருமுறை வீர ராஜேந்திரன் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவற்றையெல்லாம் விட, இம்மன்னனே விரும்பிச் சிறந்த விருதாகக் கருதி ஏற்றது, 'கங்கை கொண்ட சோழன்' என்பதாகும். இவ்விருது இம்மன்னன் புதிதாக நிறுவிய தலைநகரின் பெயரைக் கொண்டது. பட்டத்தரசிகள் திருபுவன அல்லது வானவன் மாதேவியார், முக்கோலான், வீரமாதேவி என்போர் இராஜேந்திரனின் மனைவியர் ஆவர். வீரமாதேவி என்பாள், இம்மன்னனுடன் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தாள். இவன் புதல்வர்களில் மூவர் இராஜாதிராஜன், இராஜேந்திரன், வீர இராஜேந்திரன் ஆகியோர் இவனுக்கு அடுத்தடுத்துச் சோழ அரியணையில் அமர்ந்தனர். இம்மூவரில் யார் சோழபாண்டிய பிரதிநிதியான ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்று கூற இயலாது. இம்மூவரைத் தவிர வேறு புதல்வர்களும் இருந்தனர். இராஜேந்திரனின் மகள் அருண்மொழி நங்கையார் என்ற பிரானார், தன் சகோதரன் இராஜாதிராஜனின் ஆட்சியின் தொடக்கத்தில் திருமழவாடிக் கோயிலுக்கு விலையுயர்ந்த முத்துக்குடை அன்பளிப்பாக அளித்தாள். இம்மன்னனின் மற்றொரு மகள், புகழ் மிக்க அம்மங்காதேவி ஆவாள். இவள் கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராஜராஜனின் மனைவியும், முதலாம் சாளுக்கிய மன்னர்களில், குலோத்துங்கனின் தாயும் ஆவாள். இராஜேந்திரனின் கல்வெட்டுகளில் காணப்படும் இவனுடைய ஆட்சி ஆண்டுகளில் 33-ஆம் ஆண்டே கடைசியானது. இராஜாதிராஜனின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, இராஜேந்திரன் இறந்ததைக் கூறுகிறது. ஆகையால் இராஜேந்திரன் பொ.ஊ. 1044-இல் காலமாயிருக்க வேண்டும். மெய்க்கீர்த்தி இராசேந்திரசோழனது மெய்க்கீர்த்தி "திருமன்னி வளர இருநில மடந்தையும்/ போர்ச்செயப் பாவையும் சீ்ர்த்தனிச் செல்வியும்/ தன்பெருந் தேவிய ராகி இன்புற" எனத் தொடங்குகின்றது. இம்மெய்க்கீர்த்தி இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்தான் முதன்முதலில் காணப்படுகின்றது என்று தி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறியுள்ளார். முழு மெய்க்கீர்த்தி திருவன்னி வளர விருநில மடந்தையும் போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந் தன்பெருந் தேவிய ராகி யின்புற நெடிதிய லூழியு ளிடைதுறை நாடும் தொடர்வன வேலிப் படர்வன வாசியும் சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும் நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகட லீழத் தரசர்த முடியும் ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும் முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த (10) சுந்தர முடியு மிந்திர னாரமும் தொண்டிரை யீழ மண்டல முழுவதும் எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும் குலதன மாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத் தொல்பெருங் காவற் பல்பழந் தீவும் செருவிற் சினவி யிருபத் தொருகால் அரசுகளை கட்ட பரசு ராமன் மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் (20) பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட் டொளித்த சயசிங்க னளப்பரும் புகழொடு பீடிய லிரட்ட பாடி யேழரை யிலக்கமு நவநிதிக் குலப்பெரு மலைகளும் விக்கிரம விரர் சக்கரக் கோட்டமு முதிர்பட வல்லை மதுரை மண்டலமும் காமிடை வளைஇய நாமணைக் கோணமும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் பாசடைப் பழன மாசுணி தேசமும் அயர்வில்லண் கீர்த்தி யாதிநக ராகவையிற் (30) சந்திரன் றொல்குலத் திந்திர ரதனை விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத் தொடுநிறை குலதனக் குவையும் கிட்டரஞ் செறிமிளை யொட்ட விஷயமும் பூசுரர் சேருநற் கோசல நாடும் தன்ம பாலனை வெம்முனை யழித்து வண்டுறை சோலைத் தண்ட புத்தியும் இரண சூரனை முரணறத் தாக்கித் திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும் கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் (40) தங்காத சாரல் வங்காள தேசமும் தொடுகழற் சங்குகொ டடல்மகி பாலனை வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி ஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும் நித்தில நெடுங்கட லுத்தர லாடமும் வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசையோத் துங்க வர்ம னாகிய கடாரத் தரசனை வாகையும் பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் (50) துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும் ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர் புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும் நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் (60) விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும் கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும் தீதமர் பல்வினை மாதமா லிங்கமும் கலாமுதிர் கடந்திற லிலாமுரி தேசமும் தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் (65) தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு..." கற்றளி மாமன்னன் இராஜராஜசோழனின் தேவியும், பழுவேட்டரையரின் திருமகளுமாகிய பஞ்சவன்மாதேவியார் சிவனடி சேர்ந்தபின்பு அவ்வம்மையாரை பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே பஞ்சவன்மாதேவீச்சரமாகும். இராசேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இவற்றையும் பார்க்கவும் வானவன் மாதேவி ஈச்வரம் பஞ்சவன்மாதேவீச்சரம் மேற்கோள்கள் உசாத்துணைகள் Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984). Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002). South Indian Inscriptions வெளி இணைப்புகள் ராஜேந்திர சோழனின் 25 பெயர்கள் (25 Names of Rajendra chola) இடைக்காலச் சோழ அரசர்கள் இந்தியப் பேரரசர்கள் சோழ தளபதிகள்
2701
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
சிங்கைநகர்
சிங்கைநகர் என்பது ஒருகாலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்தது எனக் கருதப்படும் ஒரு நகரைக் குறிக்கும். யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதல் அரசனின் பெயர் "சிங்கையாரியன்" எனவும் அவனைத் தொடர்ந்து கிபி 1478 வரை அரசாண்ட கனகசூரிய சிங்கையாரியன் ஈறாக எல்லா அரசர்களும் சிங்கையாரியன் என்னும் பட்டத்தைக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் வந்த இரண்டு அரசர்கள் இப்பட்டத்தைச் சுருக்கிச் சிங்கைப் பரராசசேகரன், சிங்கைச் செகராசசேகரன் என்னும் பெயர்களுடன் ஆட்சி புரிந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இப்பட்டப் பெயரே சிங்கைநகர் என்னும் ஒரு நகர் இருந்தது என்ற கருத்து உருவானதற்கான அடிப்படை ஆகும். மேலும் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைப்ஒபகுதியை ஒட்டி அமைந்துள்ள கொங்கு நாட்டின் இருபத்தி நான்கு நாடுகளில் ஒன்று காங்கேயம். இதன் பழைய பெயரும் "சிங்கைநகர்" என்பதே. இந்நாட்டின் முதன்மை ஆட்சியாளர்களாக கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமுதாயத்து "பெருங்குடி குலத்தார்" இருந்தனர். பிற்காலத்தில் சோழர் ஆட்சி வீழ்ந்தபின் சோழ தேசத்து வளநாடுகளில் ஒன்றான இராஜகம்பீரவளநாட்டை ஆண்ட அரசகுடியினரான செங்கண்ணக் குலத்தார் இவ்வூரில் மணவினைப்பூண்டு சிங்கையை சீதனமாக கொண்டு இப்பகுதியிலேயே குடியேறி காங்கேய நாட்டு சபையில் முன்னுரிமையும் பெற்ற இவர்கள் "பல்லவராயன்" பட்டம் தாங்கியவர்கள். பின்னர் இப்பகுதியில் பதினெண் வேளிரில் இருவரான தூரம்பாடி தூரன் மற்றும் திருஆவிநன்குடி பதுமன் குலத்தாரும், வணிகர் பெருந்தகையோரும் வெள்ளோடு காணியாளருமான உலகுடைய சாத்தந்தை குலத்தாரும், பதரி, வேந்தன், வாணி ஆகிய குலத்தாரும் இவ்வூரில் குடியமர்த்தப்பெற்றனர். பல்வேறு கருத்துக்கள் சிங்கைநகர் என்னும் நகரம் எது என்பது குறித்து யாழ்ப்பாண வரலாறு தொடர்பாக ஆராய்ந்த அறிஞரிடையே ஒருமித்த கருத்து இல்லை. இருக்கக்கூடிய மிகக் குறைவான வரலாற்று மூலங்களைச் சான்றாகக் கொண்டு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு. சிங்கைநகர் என்பது நல்லூரே. சிங்கைநகர் இன்றைய வல்லிபுரப் பகுதியில் இருந்தது. இது நல்லூருக்கு முன்னர் தலைநகராக இருந்தது. சிங்கைநகர் யாழ் குடாநாட்டுக்குத் தெற்கே தலைநிலத்தில் இருந்தது. சிங்கைநகர் என்பது கொங்கு நாட்டு காங்கேயமே. சிங்கைநகர் என்பது நல்லூரே சிங்கைநகர் என்பது நல்லூரே என்பது இன்னொரு சாரார் கருத்து. கலாநிதி கா. இந்திரபாலா போன்றோர் இக்கருத்தை வலியுறுத்தி வந்தனர். யாழ்ப்பாண வைபவமாலை போன்ற யாழ்ப்பாண வரலாற்று நூல்களும் நல்லூர் தவிர்ந்த இன்னொரு நகரம் தலைநகரமாயிருந்தது பற்றிப் பேசவில்லை. சிங்கைநகர் என்பது வல்லிபுரமே சிங்கைநகர் என்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ள இடமான வல்லிபுரம் என்ற இடமே என்பது சில வரலாற்றாளர்களின் கருத்து. செ. இராசநாயகம் போன்றோர் இக்கருத்துடையவர்கள். இவ்விடத்தில் பழங்காலத்தில் கட்டிடங்கள் இருந்ததற்கான தொல்பொருள் சான்றுகளை வைத்தும், தென்னிலங்கையிலுள்ள கோட்டகம என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்றில், .... பொங்கொலி நீர்ச் சிங்கைநக ராரியனைச் சேராவனுரேசர்..., என்று வரும் தொடரில் பொங்கொலி நீர்ச் சிங்கைநகர் எனச் சிங்கைநகருக்கு அடைமொழி தரப்பட்டிருப்பதால், இந்நகரம், பொங்கி ஒலிக்கின்ற அலைகளோடு கூடிய கடற்கரையில் அமைந்திருந்திருக்க வேண்டுமென்ற அடிப்படையிலும் இக் கருத்து முன்வைக்கப் படுகின்றது. சிங்கைநகர் குடாநாட்டுக்குத் தெற்கே மிக அண்மைக்காலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் சிங்கை நகரத்தைக் குடாநாட்டுக்கு வெளியே அடையாளம் காணவும் முயன்றுவருகின்றனர். தமிழ்நாட்டுச் சிங்கைநகர் சிங்கைநகர் என்னும் ஒரு நகரம் கொங்கு நாட்டில் இருந்தது. இது காங்கேயம் என "கொங்கு நாட்டு காணி பாடல்கள்" மூலம் அறியலாம். மேலும் பெருங்குடி போன்ற குலத்தார்களின் காணி பாடல்கள் யாவும் காங்கேயத்தை சிங்கைநகர் என்றே குறிக்கின்றன. குறிப்புகள் உசாத்துணைகள் மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாண வைபவமாலை குல. சபாநாதன் பதிப்பு, இந்துசமய அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1995. வெளி இணைப்புகள் சிங்கை நகர் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும் யாழ்ப்பாண வரலாறு
2708
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B
அல்வார் ஆல்ட்டோ
அல்வார் ஆல்ட்டோ, எனப் பரவலாக அறியப்பட்ட, "ஹியூகோ அல்வார் ஹென்றிக் ஆல்ட்டோ" (பெப்ரவரி 3, 1898 - மே 11, 1976) இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். இவர்பின்லாந்து நாட்டிலுள்ள குவொர்தானே (Kuortane) என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு நில அளவையாளர். இவர் 1921 ல், ஹெல்சிங்கி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலைத் துறையில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் இவர் சொந்தத் தொழிலில் ஈடுபட்டார். 1924 ஆம் ஆண்டு, தன்னிலும் நான்கு வயது மூத்த கட்டிடக்கலைஞரான ஐனோ மார்சியோ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1949ல் ஐனோ இறந்த பின்னர் 1952 ஆம் ஆண்டு தன்னிலும் 25 வயது இளையவரான இன்னொரு கட்டிடக்கலைஞர் எல்சா கைசா மக்கினியேமி என்பவரை மணந்தார். 1946 தொடக்கம் 1948 வரையில் MIT இல் கட்டிடக்கலைத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், 1963 தொடக்கம் 1968 வரை பின்லாந்து அக்கடமியின் தலைவராகவும் பதவி வகித்தார். இவர் ஹெல்சிங்கி நகரில் தனது 78 ஆவது வயதில் காலமானார். அல்வார் ஆல்ட்டோவின் கட்டிடங்களின் வடிவமைப்பு, ஒரு பொருளின் வடிவம் (form) அப் பொருளின் செயற்பாட்டின் (Function) அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகின்றது என்ற கொள்கையை அடியொற்றி அமைந்தது. மனிதன், இயற்கை, கட்டிடம் ஆகிய மூன்றையும் சிறப்பாகக் கையாண்டு அவற்றுக்கிடையிலான தொடர்புகளை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் வகையில் அவருடைய கட்டிடங்கள் அமைந்திருந்தன. குறிப்புகள் 1898 பிறப்புகள் 1976 இறப்புகள் பின்லாந்து கட்டிடக் கலைஞர்கள்
2712
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நவரத்தினங்கள்
நவரத்தினங்கள் எனப்படுபவை ஒன்பது வகையான இரத்தினக் கற்களாகும். இவை ஆபரணத் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் மற்றும் பிற மதங்களில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. வெளி இணைப்புகள் Graha-anukul-ratna-vishesajna-parishad: Non-profit academic organization on Navaratna-based 'Planetary Gemology' மேற்கோள்கள் நவரத்தினங்கள்
2714
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
விருதுநகர்
விருதுநகர் (Virudhunagar), தமிழ்நாட்டிலுள்ள, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம் மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். விருதுநகரின் பழைய பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து தொடர்வண்டி மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் சூலக்கரை பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்நகரில் தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான காமராசர் பிறந்தார். விருதுநகர் கெளசிக நதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. சொற்பிறப்பு இங்குள்ளவர்கள் சொல்லும் கூற்றின்படி, பல இராஜ்ஜியங்களில் மற்போர் செய்து பல விருதுகளை பெற்ற ஒரு மல்யுத்த வீரன் இந்த பகுதிக்கு வந்து குடியிருப்பாளர்களுக்கு சவால் விடுத்தான். அந்நாளில் இந்த பகுதி மூலிப்பட்டி பாளையத்தில் கீழ் இருந்துள்ளது. இந்த பகுதி சேர்ந்த ஆண்டித்தேவர் என்ற முரட்டு ஆண்டித் தேவர் அவன் சவாலை ஏற்றுக்கொண்டு, அவ்வீரனோடு போரிட்டு, அவனை வென்று, அவன் பெற்ற விருதுகளை வெட்டி சாய்துள்ளார். இந்த மல்யுத்தம் நடந்த இடம் இன்றைய பொட்டல் என்று அழைக்கப்படும் தேசபந்து மைதானம்.. இவ்வாறு அவன் பெற்ற விருதுகள் யாவும் வெட்டி எரிந்த இடம் “விருதுகள் வெட்டி” என்று பெயர்பெற்றது . பின்னர் 1875 இல் விருதுப்பட்டி என மாறியது. வரலாறு 16 ஆம் நூற்றாண்டில் விருதுநகர், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பிற்கால பாண்டியர்களின் ஆட்சிப் பகுதியாகவே பலகாலம் இருந்துள்ளது. இவர்களின் வீழ்ச்சிக்குப் பின் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளான நாயக்கர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. விஜய நகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது, நாயக்கர்கள் சுதந்திரமாக ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அதனால் மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது. 1736 இல் இவர்களின் அதிகாரமும் முடிவுக்கு வந்தது. 18 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சந்தா சாகிப் (1740 – 1754), ஆற்காடு நவாப் மற்றும் முகம்மது யூசுப்கான் (1725 – 1764), ஆகியோர் பலமுறை தாக்குதல் நடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள். 1801இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் வசம் இப்பிரதேசம் வந்தபின் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானது. அவர்களின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தபின், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அனைத்து சாதிகளும், குறிப்பாக மறவர்களுக்கும், நாடார்களுக்கும் இடையிலான பரஸ்பர மோதலாகவே இருந்தது. ஐரோப்பிய மிசனரிகளின் செல்வாக்கின் கீழ் இந்து மதத்திலிருந்து, கிறிஸ்தவத்திற்கு மத மாற்றங்களில், நாடார்கள் பெரும்பான்மையாக இருந்தனர். இந்து மதத்தில் இருந்த சில நாடார்கள், மறவர்களால் நிர்வகிக்கப்படும் கோயில்களுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் நாடார்கள் சாதி அடிப்படையில், தாழ்ந்தவர்களாக கருதப்பட்டதால் கோயில்களுக்குள் நுழைய மறுக்கப்பட்டனர். இரு சமூகங்களுக்கிடையேயான பரஸ்பர மோதல் 1899 ஆம் ஆண்டில், இப்பகுதியில் உச்சத்தை எட்டியது, இது சிவகாசி கலவரத்திற்கு வழிவகுத்தது. இந்த கலவரத்தில் மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டனர், 800 வீடுகள் மற்றும் நகரத்தின் மையத்தில் உள்ள பெரிய தேர் (பண்டிகைகளின் போது கோயிலால் பயன்படுத்தப்பட்டது) கலவரத்தின் போது எரிக்கப்பட்டன. பின்னர் 1899 சூலை நடுப்பகுதியில் இராணுவ தலையீட்டிற்கு பின்னர், கலகங்கள் முடிவுக்கு வந்தன. இந்நகரத்தின் பெயர் 1875 இல் விருதுப்பட்டி என மாற்றப்பட்டது, 1923 ஏப்ரல் 6 ஆம் தேதி நகர சபை இதற்கு விருதுநகர் என்று பெயர் மாற்றியது. பிரித்தானிய ஆட்சியின் போது இது ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது, மேலும் குலசேகரபட்டினம், தூத்துக்குடி, வைப்பார் மற்றும் தேவிபட்டினம் துறைமுகங்கள் வழியாக விருதுநகரில் இருந்து பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தந்தி அலுவலகம் - 1960களில் ஆரம்பிக்கப் பட்டு சின்னப் பள்ளிவாசல் தெருவில் இயங்கியது. 1990களில் மதுரா கோட்ஸ் இடத்தில் ஒரு பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கி , அலுவலகம் கட்டி இயங்கத் துவங்கியது. 2013ல் தந்தி சேவையை அரசு நிறுத்தும் வரை அங்கேயே இயங்கியது. புவியியல் இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 102 மீட்டர் (335 அடி) உயரத்தில் இருக்கின்றது. விருதுநகர் நகராட்சி 6.39 கிமீ 2 (2.47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது மாநில தலைநகரான சென்னையிலிருந்து 519 கி.மீ (322 மைல்) தென்மேற்கிலும், மதுரைக்கு 58 கிமீ (36 மைல்) தெற்கிலும் அமைந்துள்ளது. இந்நகரம் கெளசிக ஆற்றின் கிழக்கிலும், மதுரை - திருநெல்வேலி இரயில் பாதையின் மேற்கிலும் அமைந்துள்ளது. மக்கள் வகைப்பாடு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 72,296 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,889 ஆண்கள், 36,407 பெண்கள் ஆவார்கள். விருதுநகர் மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். விருதுநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 92.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.76%, பெண்களின் கல்வியறிவு 89.38% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. விருதுநகர் மக்கள் தொகையில் 6,454 (8.93%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். விருதுநகரில் 19,841 வீடுகள் உள்ளன. 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, விருதுநகரில் இந்துக்கள் 85.02%, முஸ்லிம்கள் 7.73%, கிறிஸ்தவர்கள் 7.09%, சீக்கியர்கள் 0.02% மற்றும் 0.14% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர். தொழில் இம்மாவட்டத்தில் 37 சதவீத நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு கரிசல் மண்ணே அதிகம் காணப்படுவதால் பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தினை போன்ற தானியங்கள் விளைகின்றன. கிணற்று பாசனம் இருக்கும் இடங்களில் நெல், கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் சிமென்ட் தொழிற்சாலைகள், நூற்பாலை மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தீப்பெட்டி உற்பத்தி, பட்டாசு தாயாரித்தல், அச்சுத் தொழில், ஆகியவற்றில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள சிவகாசி நகரம் பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. சிவகாசி நகரம் தேசிய அளவில் பட்டாசு உற்பத்திக்கான ஒரு முக்கிய நகரமாக திகழ்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் விருதுநகர் நகராட்சியானது விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் (இதேகா) சேர்ந்த மாணிக்கம் தாகூர் வென்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த ஏ. ஆர். ஆர். சீனிவாசன் வென்றார். போக்குவரத்து சாலைப் போக்குவரத்து இந்நகரின் வழியே தேசிய நெடுஞ்சாலை 7 ஆனது செல்கிறது. இந்நகரமானது சிவகாசி, மதுரை, இராஜபாளையம், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது. விருதுநகரின் மேற்கே ஒரு புறவழிச் சாலை உள்ளது. இது நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கிறது. விருதுநகரில் எம். எஸ். பி நாடார் நகராட்சி பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) மற்றும் கர்மவீரர் காமராஜர் பேருந்து நிலையம் (புதிய பேருந்து நிலையம்) என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. இதில் பழைய பேருந்து நிலையத்திலிருந்தே பெரும்பாலான நகரங்களுக்கு, அரசு பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. ஆனால் புதிய பேருந்து நிலையம், இந்நகரின் வெளிபுறத்தில் அமைந்துள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் செல்வதில்லை. பழைய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து மூலம் பல்வேறு நகரங்களுக்கு தினசரி பேருந்து சேவைகளை இயக்குகிறது. மதுரையிலிருந்து, கன்னியாகுமரி வரை செல்லும் அனைத்து பேருந்துகளும், இந்நகரின் வழியே செல்கிறது. ஆனால் சில பேருந்துகள் மட்டுமே, இந்நகரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறது. பெரும்பாலான பேருந்துகள் புறவழிச் சாலை வழியாகவே செல்கிறது. தொடருந்துப் போக்குவரத்து விருதுநகர் இரயில் நிலையம் ஆனது மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான முக்கிய இரயில் பாதையில் அமைந்துள்ளது. தென்னக இரயில்வே ஆனது தினசரி சென்னையிலிருந்து, விருதுநகர் வழியாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, குருவாயூர், மும்பை, திருவனந்தபுரம், மைசூர், ஹவுரா, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், மங்களூர் போன்ற இடங்களுக்கு விரைவு ரயில்களை இயக்குகிறது. இங்கிருந்து மதுரை, சிவகாசி, திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம் தென்காசி, அருப்புக்கோட்டை, கொல்லம், திருநெல்வேலி, கும்பகோணம், மயிலாடுதுறை, ஈரோடு, நாகர்கோயில் மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் உள்ளன. வானூர்தி போக்குவரத்து இந்நகருக்கு வடகிழக்கில் 45 கி.மீ (28 மைல்) தொலைவில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும். கல்வி பள்ளிகள் சௌடாம்பிகை மேல்நிலைப் பள்ளி சத்திரியா பெண்கள் நடுநிலைப் பள்ளி சத்திரியா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஷத்ரிய வித்யாசாலா (கே.வி.எஸ்.) நடுநிலைப் பள்ளி ஷத்ரிய வித்யாசாலா (கே.வி.எஸ்.) உயர்நிலைப் பள்ளி ஷத்ரிய வித்யாசாலா (கே.வி.எஸ்.) நூற்றாண்டு விழா ஆரம்பப் பள்ளி ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி செவன்த்டே ஆங்கில உயர்நிலைப் பள்ளி எஸ்.வி.ஏ. அண்ணாமலையம்மாள் நடுநிலைப் பள்ளி கே.வி.எஸ். ஆங்கிலப் பள்ளி கோ.சா.கு அரசு மேல்நிலைப்பள்ளி ஹாஜி பி செய்யது முஹம்மது மேல்நிலைப் பள்ளி கல்லூரிகள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சூலக்கரை விருதுநகர் விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வி. வி. வி . பெண்கள் அறிவியல் கலைக் கல்லூரி ஸ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி வி. எச். என். எஸ். என் அறிவியல் கலைக் கல்லூரி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கோயில்கள் பராசக்தி மாரியம்மன் கோவில் முருகன் கோவில் வெயிலுகந்தம்மன் கோவில் ராமர் கோவில் அனுமார் கோவில் பராசக்தி மாரியம்மன் கோவில் இங்கு அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அக்னி சட்டி திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். இந்த விழாவானது 21 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதத் தொடக்கத்தில் பொங்கல் சாட்டப் படும் பிறகு ஊரில் உள்ள அனைவரும் விரதம் இருந்து அம்மனை வழிபடுவர். தினமும் அதிகாலை பெண்கள் கோவில் கொடி மரத்திற்குக் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவர். வானிலை மற்றும் காலநிலை சிறப்புகள் முன்னாள் முதல்வரான காமராஜர் பிறந்த ஊர். "வியாபார நகரம்" என்று சொல்லப்படும் இந்த ஊரிலிருந்து நல்லெண்ணெய், பருப்பு, மல்லி போன்ற பொருட்களும் ஏற்றுமதி ஆகின்றன. பலசரக்கு வணிகத்திற்கு விலை நிர்ணயிக்கும் ஊராக இருக்கிறது. புரோட்டா எனும் உணவுக்கு இந்த ஊர் சிறப்பு பெற்றது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் விருதுநகரை கூகிள் மேப்பில் பார்க்க.. விருதுநகரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள... நாடறியா ஊர் விருதுநகர் விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்
2719
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE
பாரதிராஜா
பாரதிராஜா (Bharathiraja, பிறப்பு: சூலை 17, 1941), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். திரை வாழ்க்கை கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் புட்டண்ணா கனகலின் உதவியாளராக பாரதிராஜா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், பி. புல்லையா, எம். கிருஷ்ணன் நாயர், அவினாசி மணி மற்றும் ஏ. ஜெகந்நாதன் ஆகியோருக்கு உதவி இயக்குநராக பங்காற்றினார். இவரது முதற்படமான 16 வயதினிலே திரைப்படத்தில் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். கிராமத்து திரைப்படம் என்ற புதிய வகையை உருவாக்க அப்போதைய நடைமுறையில் இருந்த காட்சிகளை உடைத்தார். பதினாறு வயதினிலே இப்போதும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. திரைப்படம் பற்றி, பாரதிராஜா கூறியது: "இந்த படம் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை கலைப் படமாக இருக்க வேண்டியது", ஆனால் வணிக ரீதியாக வெற்றிகரமான வண்ணப் திரைப்படமாகவும், பல முக்கியமானவர்களின் வாழ்க்கைக்கான தொடக்க புள்ளியாகவும் மாறியது. இவர் இயக்கிய அடுத்த திரைப்படம் கிழக்கே போகும் ரயில் முதற் திரைப்படம் போன்றே வெற்றியைத் தந்தது. இறுதியில் பாரதிராஜா கிராமப் பார்வையாளர்களுக்கு மட்டுமே திரைப்படம் எடுக்கும் திறன் கொண்டவர் என்ற விமர்சனங்களைக் கொண்டுவந்தார். இதனால் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தை உருவாக்க வழிவகுத்தது. ஒரு மனநோயாளியான பெண் வெறுப்பாளரைப் பற்றிய இத்திரைப்படம் கருத்தாக்கம் மற்றும் உற்பத்தி என முற்றிலுமாக மேற்கத்திய பாணியில் உருவாக்கப்பட்டது. பாரதிராஜா தனது பல்துறை திறனையும், ஒரு குறிப்பிட்ட கிராமத்துத் திரைப்பட வகையுடன் பிணைக்க மறுத்ததையும் நிழல்கள் (1980) மற்றும் அதிரடியான பரபரப்பூட்டும் டிக் டிக் டிக் (1981) திரைப்படத்தில் உறுதிப்படுத்தினார். ஆனால் 1980 களில் சந்தேகத்திற்கு இடமின்றி, கிராமப்புற கருப்பொருள்கள் இவரது மிகப்பெரிய வெற்றியாக இவரது வலுவான வழக்கு என்று நிரூபிக்கப்பட்டன; அலைகள் ஓய்வதில்லை (1981), மண் வாசனை (1983) மற்றும் முதல் மரியாதை (1985) ஒரு கிராமத்தின் பின்னணியில் வலுவான காதல் கதைகளாக இருந்தது. முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடுத்தர வயது கிராமத் தலைவரான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ராதா ஒரு ஏழை இளம் பெண், தனது கிராமத்திற்கு ஒரு வாழ்க்கைக்காக நகர்கிறார். இந்த இரண்டு மனிதர்களையும் வயது மட்டுமல்ல, சாதி மற்றும் வர்க்கத்தினாலும் பிரிக்கும் அன்பு, பாரதிராஜாவால் கவிதைத் தொடுதல்களால் கூறப்படுகிறது. வேதம் புதிது திரைப்படத்தில் சாதி பிரச்சினையை வலுவான முறையில் கையாண்டார். படத்தின் தடையற்ற கதையில் சத்தியராஜ் பாலு தேவராக நடித்தார். இதில் பாரதிராஜாவின் சில வர்த்தக முத்திரை தொடுதல்களும், சமுதாயத்தில் உள்ள பல உண்மைக் காட்சிகளும் உள்ளன. இருப்பினும், இது தமிழ் படங்களில் பொதுவான பிராமண-விரோத போக்கைப் பின்பற்றுகிறது - இந்த வகையில் இது இவரது முந்தைய வெற்றியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்திலிருந்து விலகிச் சென்றது. அங்கு சாதி மற்றும் மதக் காரணிக்கு மிகவும் சீரான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பாரதிராஜா 1990 களில் தனது திரைப்பட தயாரிக்கும் நுட்பங்களை வெற்றிகரமாக நவீனப்படுத்த முடிந்தது. வர்த்தக வெற்றிக்குப் கிழக்குச் சீமையிலே மற்றும் விருதுகளில் வெற்றி பெற்ற கருத்தம்மா ஆகியனவாகும். இளைய தலைமுறையினரையும் சிலிர்ப்பிக்கும் இவரது திறனுக்கு சான்றாக நிலைப்பாட்டைப் பெற்றது. 1996 ஆம் ஆண்டில் அந்திமந்தாமரை படத்திற்காக மற்றொரு தேசிய விருதைப் பெற்ற பாரதிராஜா அதே புகழின் உச்சியில் இருந்தார் . தாமதமாக 1996 ஆம் ஆண்டில், பாரதிராஜா, இரண்டு படங்களில் இயக்குவதற்கு கையொப்பமிட்டார். சரத்குமார் கதாநாயகனாக வாக்கப்பட்ட பூமி அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதத்தில், நெப்போலியன் , ஹீரா ராஜ்கோபால் மற்றும் பிரகாஷ் ராஜ் முன்னணி வேடங்களில் சிறகுகள் முறிவதில்லை என்ற தலைப்பைக் கொண்டு திரைப்படப் பணி தொடங்கியது. இரண்டு படங்களும் பின்னர் நிறுத்தப்பட்டன. 2004 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சேரனுடன் வாக்கப்பட்ட பூமி திரைப்படத்தை மீண்டும் இயக்க திட்டமிட்டார். ஆனால் இக்கூட்டணியும் நிறைவேறவில்லை. 2001 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கடல் பூக்கள் சிறந்த திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. அப்போது நன்கு அறியப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் இவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் ஆவார். 2008 ஆம் ஆண்டில், பாரதிராஜா தனது தொலைக்காட்சி அறிமுகத்தைக் குறிக்கும் தெக்கத்தி பொண்ணு என்ற தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இவர் நேரடியாக அப்பனும் ஆத்தாளும், முதல் மரியாதை என்ற இரண்டு தொடர்களையும் அதே தொலைக்காட்சிக்கு கொண்டு சென்றார். 2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பாரதிராஜா இயக்குநர் பாலாவுடன் குற்றப்பரம்பரை என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் சட்ட மோதலில் சிக்கினார். ஆனால் எந்த திரைப்படத் தயாரிப்பாளரும் இறுதியில் அந்தந்த படங்களை தயாரிக்கவில்லை. பின்னர் பாரதிராஜா இயக்குநர் வசந்தின் மகன் ரித்விக் வருண் மற்றும் விக்ரமின் மருமகன் நடித்த ஒரு திரைப்படத்தைத் திட்டமிடத் தொடங்கினார். ஆனால் இந்த முயற்சியும் படப்பிடிப்பைத் தொடங்கவில்லை. 2018 இல் பாரதிராஜா விதார்த்தை கதாநாயகனாக வைத்து இந்திய பண மதிப்பிழப்பை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தார். தனிப்பட்ட வாழ்க்கை பாரதிராஜா தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பெரியமாயத்தேவர், கருத்தம்மாள் இணையருக்கு பிறந்தார். இவரின் இயற்பெயர் சின்னச்சாமி ஆகும். சந்திரலீலாவை மணந்த இவருக்கு மனோஜ் மற்றும் ஜனனி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மனோஜ் தாஜ்மஹால் திரைப்படத்தில் அறிமுகமான ஒரு நடிகராவார். அவர் நடிகை நந்தனாவை மணந்தார். ஜனனி மலேசிய ராஜ்குமார் தம்பிராஜாவை மணந்தார். பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் மண்ணுக்குள் வைரம், வண்டிச்சோலை சின்ராசு , வானவில் மற்றும் குரு பார்வை ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் கத்துக்குட்டி என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். பாரதிராஜாவின் உதவியாளர்கள் பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை ஆகியோர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றினர். விருதுகள் விருதுகளும் கௌரவிப்பும் 2004 - பத்மஸ்ரீ இந்திய அரசிடமிருந்து தேசிய திரைப்பட விருதுகள் 1982 - சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது- சீதாகொகா சிலுகா (இயக்குநர்) 1986 - தேசிய திரைப்பட சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது- முதல் மரியாதை (தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்) 1988 - பிற சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது- வேதம் புதிது (இயக்குநர்) 1995 - கருத்தம்மாவுக்கு (இயக்குநர்) குடும்ப நலன் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது 1996 - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது- அந்திமந்தாமரை (இயக்குநர்) 2001 - தேசிய சிறந்த திரைக்கதைக்கான திரைப்பட விருது- கடல் பூக்கள் (இயக்குநர் & எழுத்து) பிலிம்பேர் விருதுகள் தெற்கு 1978 - சிறந்த தமிழ் இயக்குநர்- சிகப்பு ரோஜாக்கள் 1987 - சிறந்த தமிழ்த் திரைப்படம்- வேதம் புதிது 1987 - சிறந்த தமிழ் இயக்குநர்- வேதம் புதிது 1994 - சிறந்த தமிழ்த் திரைப்படம்- கருத்தம்மா தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் 1977 - சிறந்த இயக்குநர் விருது- 16 வயதினிலே 1979- சிறந்த படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது - இரண்டாம் பரிசு - புதிய வார்ப்புகள் 1981 - சிறந்த இயக்குநர் விருது- அலைகள் ஓய்வதில்லை 1994 - நல்ல வெளிச்சத்தில் பெண்ணை சித்தரிக்கும் சிறந்த படம்- கருத்தம்மா 2001 - தமிழ்நாடு மாநில திரைப்பட கௌரவ விருது - 2001 இல் அறிஞர் அண்ணா விருது 2003 - முதல் இடத்தில் சிறந்த படம்- ஈர நிலம் நந்தி விருதுகள் 1981 - சிறந்த இயக்குநர் நந்தி விருது- சீதாகொகா சிலுகா விஜய் விருதுகள் 2012 - தமிழ் சினிமாவுக்கு பங்களிப்பு 2013 - சிறந்த துணை நடிகருக்கான பாண்டிய நாடு பிற விருதுகள் 1980 - தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப வல்லுநர்கள்: கல்லுக்குள் ஈரமுக்கு சிறந்த தொழில்நுட்ப விருது 2005 - சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் ( டி.லிட் ) திரைப்படப்பட்டியல் திரைப்படங்கள் {| class="wikitable sortable" |- ! rowspan=2 | ஆண்டு ! rowspan=2 | தலைப்பு ! rowspan=2 | மொழி ! colspan=3 | பங்களிப்பு ! rowspan=2 | கதாபாத்திரம் ! rowspan=2 | குறிப்புகள் |- ! width=65 | இயக்குநர் ! width=65 | எழுத்து ! width=65 | நடிகர் |- | 1977 || 16 வயதினிலே || தமிழ் || style="text-align:center;"| || style="text-align:center;"| || || || தெலுங்கில் படகரெல்ல வயசு எனவும்இந்தியில் சொல்வ சுவன் எனவும் மறுபெயரிடப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் விருது |- | 1978 || கிழக்கே போகும் ரயில் || தமிழ் || style="text-align:center;"| || || || ||தெலுங்கில் தோர்பு வெல்லே ரெயிலு என மறுபெயரிடப்பட்டது|- | 1978 || சிகப்பு ரோஜாக்கள் || தமிழ் || style="text-align:center;"| || style="text-align:center;"| || || || இந்தியில் ரெட் ரோஸ் சிறந்த தமிழ் இயக்குனருக்கான பிலிம்பேர் விருது- சிகப்பு ரோஜாக்கள் |- | 1979 || சொல்வ சவான் || இந்தி || style="text-align:center;"| || style="text-align:center;"| || || || |- | 1979 || புதிய வார்ப்புகள் || தமிழ் || style="text-align:center;"| || || || ||தெலுங்கில் கொத்த ஜீவித்தலு என மறுபெயரிடப்பட்டது |- | 1979 || நிறம் மாறாத பூக்கள் || தமிழ் || style="text-align:center;"| || || || || விஜயனுக்கு பின்னணிக்குரல் கொடுத்தார். |- | 1980 || கல்லுக்குள் ஈரம் || தமிழ் || || style="text-align:center;"| || style="text-align:center;"| ||இயக்குநர் பாரதிராஜாவாக|| முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகம் |- | 1980 || கொத்த ஜீவித்தலு || தெலுங்கு || style="text-align:center;"| || style="text-align:center;"| || || || |- | 1980 || ரெட் ரோஸ் || இந்தி || style="text-align:center;"| || style="text-align:center;"| || || || |- | 1980 || நிழல்கள் | தமிழ் || style="text-align:center;"| || || style="text-align:center;"| || | |- | 1981 || அலைகள் ஓய்வதில்லை ||தமிழ் || style="text-align:center;"| || || || ||தெலுங்கில் சீதாகொகா சிலுகா எனவும் இந்தியில் லவர்ஸ் எனவும் மறுபெயரிடப்பட்டது சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் விருது |- | 1981 || டிக் டிக் டிக் || தமிழ் ||style="text-align:center;"| || style="text-align:center;"| || || || இந்தியில் கரிஸ்மா என மறுபெயரிடப்பட்டது. |- | 1981 || சீதாகொகா சிலுகா || தெலுங்கு || style="text-align:center;"| || || || ||சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது- சீதாகொகா சிலுகா |- | 1982 || காதல் ஓவியம் || தமிழ் || style="text-align:center;"| || || || || |- | 1982 || வாலிபமே வா வா || தமிழ் || style="text-align:center;"| || || || || |- | 1983 || மண்வாசனை ||தமிழ் || style="text-align:center;"| || || || ||தெலுங்கில் மங்கம்மாகாரி மனவாடு என மறுபெயரிடப்பட்டது |- | 1983 || லவர்ஸ் || இந்தி || style="text-align:center;"| || || || || |- | 1983 || தாவணிக் கனவுகள் || தமிழ் || || || style="text-align:center;"| || விருந்தினர் தோற்றம்|| |- | 1984 || புதுமைப் பெண் || தமிழ் || style="text-align:center;"| || || || || |- | 1985 || ஒரு கைதியின் டைரி || தமிழ் || style="text-align:center;"| || || || ||இந்தியில் ஆகீரி ராஸ்தா என மறுபெயரிடப்பட்டது |- | 1985 || யுவதரம் புலிச்சின்டி || தெலுங்கு || style="text-align:center;"| || || || || |- | 1985 || முதல் மரியாதை || தமிழ் || style="text-align:center;"| || || || ||தேசிய திரைப்பட சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது- முதல் மரியாதை |- | 1985 || ஈ தரம் இல்லலு || தெலுங்கு || style="text-align:center;"| || || || || |- | 1986 || சாவேரே வலி காடி || இந்தி || style="text-align:center;"| || || || || |- | 1986 || கடலோரக் கவிதைகள் || தமிழ் || style="text-align:center;"| || || || ||பாரதிராஜாவின் 25 வது திரைப்படம் தெலுங்கில் ஆராதனா என மறுபெயரிடப்பட்டது |- | 1988 || ஜமடகனி || தெலுங்கு || style="text-align:center;"| || || || || தமிழில் நாற்காலி கனவுகள் என மாற்றப்பட்டது. |- | 1987 || வேதம் புதிது || தமிழ் || style="text-align:center;"| || || || || நிழல்கள் ரவிக்கு பின்னணிக்குரல் கொடுத்தார், 1988 - பிற சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது |- | 1987 || ஆராதனா || தெலுங்கு || style="text-align:center;"| || || || || |- | 1988 || கொடி பறக்குது || தமிழ் || style="text-align:center;"| || || || || நடிகர் மணிவண்ணனுக்கு பின்னணிக்குரல் கொடுத்தார். |- | 1990 || என் உயிர்த் தோழன் || தமிழ் || style="text-align:center;"| || style="text-align:center;"| || || || |- | 1991 || புது நெல்லு புது நாத்து ||தமிழ் || style="text-align:center;"| || || || || |- | 1991 || இதயம் || தமிழ் || || || style="text-align:center;"| || விருந்தினர் தோற்றம்|| |- | 1991 || தந்துவிட்டேன் என்னை || தமிழ் || || || style="text-align:center;"| || விருந்தினர் தோற்றம்|| |- | 1992 || நாடோடித் தென்றல் || தமிழ் || style="text-align:center;"| || || || || |- | 1993 || கேப்டன் மகள் || தமிழ் || style="text-align:center;"| || || || || |- | 1993 || கிழக்குச்சீமையிலே || தமிழ் || style="text-align:center;"| || || || ||தெலுங்கில் பல்நதி பவுருசம் என மறுபெயரிடப்பட்டது |- | 1994 || கருத்தம்மா || தமிழ் || style="text-align:center;"| || || || || நல்ல வெளிச்சத்தில் பெண்ணை சித்தரிக்கும் சிறந்த படம்- கருத்தம்மா |- | 1995 || பசும்பொன் || தமிழ் || style="text-align:center;"| || || || || |- | 1996 || தமிழ் செல்வன் ||தமிழ் || style="text-align:center;"| || || || || |- | 1996 || அந்திமந்தாமரை || தமிழ் || style="text-align:center;"| || || || || சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது- அந்திமந்தாமரை |- | 1999 || தாஜ்மகால் || || style="text-align:center;"| || || || || |- | 2001 || கடல் பூக்கள் ||தமிழ் || style="text-align:center;"| || style="text-align:center;"| || || || தேசிய சிறந்த திரைக்கதைக்கான திரைப்பட விருது- கடல் பூக்கள் (எழுத்து) |- | 2002 || காதல் வைரஸ் || தமிழ் || || || style="text-align:center;"| ||விருந்தினர் தோற்றம் || |- | 2003 || ஈரநிலம் || தமிழ் || style="text-align:center;"| || || || || |- | 2004 || கண்களால் கைது செய் || தமிழ் || style="text-align:center;"| || || || || |- | 2004 || ஆயுத எழுத்து || தமிழ் || || || style="text-align:center;"| || செல்வநாயகம் || |- | 2008 || பொம்மலாட்டம் || தமிழ் || style="text-align:center;"| || style="text-align:center;"| || || || |- | 2010 || ரெட்டச்சுழி || தமிழ் || || || style="text-align:center;"| || சிங்காரவேலன் || |- | 2013 || அன்னக்கொடி || தமிழ் || style="text-align:center;"| || style="text-align:center;"| || || || |- | 2013 || பாண்டிய நாடு || தமிழ் || || || style="text-align:center;"| || கல்யாண சுந்தரம் || சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருது |- | 2014 || நினைத்தது யாரோ || தமிழ் || || || style="text-align:center;"| ||விருந்தினர் தோற்றம் || |- | 2017 || குரங்கு பொம்மை || தமிழ் || || || style="text-align:center;"| || சுந்தரம் || |- | 2017 || படைவீரன் ||தமிழ் || || || style="text-align:center;"| || கிருஷ்ணன் || |- | 2018 || சீதக்காதி ||தமிழ் || || || Style="text-align:center; "| || பாரதிராஜாவாக சிறப்புத் தோற்றம் || |- | 2019 || கென்னடி கிளப் || தமிழ் || || || Style="text-align:center; "| || சவரிமுத்து || |- | 2019 || நம்ம வீட்டுப் பிள்ளை || தமிழ் || || || Style="text-align:center; "| || அருண்மொழிவர்மன் || |- | 2020 || மீண்டும் ஒரு மரியாதை || தமிழ் ||style="text-align:center;"| || style="text-align:center;"| || Style="text-align:center; "| ||ஓம் | |- |2021 ||ஈஸ்வரன் || தமிழ் || || || Style="text-align:center; "| ||பெரியசாமி || |- |2021 ||ராக்கி || தமிழ் || || || Style="text-align:center; "| || || |- |2021 ||மாநாடு || தமிழ் || || || Style="text-align:center; "| || || |- | 2022 ||திருச்சிற்றம்பலம் || தமிழ் || || || style="text-align:center;"| || || |- |} இயக்கிய திரைப்படங்கள் எர்ர குலாபி (1979) எழுத்தாக்கம் கண்களால் கைது செய்- (2004) கருத்தம்மா- (1995) நாடோடித் தென்றல்- (1992) (திரைக்கதை) ஏக் கி மக்சாத் (1988) (கதை) ஆராதனா- (1987) (கதை) முதல் மரியாதை- (1985) சீதாகொகா சிலகா- (1981) (கதை) டிக் டிக் டிக்- (1981) ரெட் ரோஸ்- (1980) (திரைக்கதை) (கதை) படகரெல்லா வயசு- (1978) (கதை) தயாரித்த திரைப்படங்கள் அல்லி அர்ஜூனா (2002) தாஜ்மகால் (1999) கருத்தம்மா''(1995) மேற்கோள்கள் 1941 பிறப்புகள் வாழும் நபர்கள் இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள் தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள் பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் தமிழ்த் தொலைக்காட்சி நாடக இயக்குநர்கள்
2720
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE
பாலு மகேந்திரா
பாலு மகேந்திரா (Balu Mahendra, 20 மே 1939 - 13 பெப்ரவரி 2014) இந்தியத் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர். பிறப்பு 1939 மே 20 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர். தனது ஆரம்ப கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 இல் தங்கப்பதக்கம் பெற்றார். முதல் தாக்கம் தான் பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார். பின்னர் ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்(Bridge of river kwai) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும் போது பாலகன் பாலு மகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகியது. திரைப்பட நுழைவு அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972இல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977இல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977இல் வெளியாயிற்று. 1978இல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சின்னத்திரையில் பாலு மகேந்திரா கதை நேரம் எனும் தொலைக்காட்சி தொடரினை சன் தொலைக்காட்சிக்காக பாலு மகேந்திரா இயக்கினார். இத்தொடர்கள் 52 கதைகளை கொண்டிருந்தன அவற்றில் 10 கதைகள் எழுத்தாளர் சுஜாதாவினுடையதாகும். நுண்ணுணர்வும் படைப்பாற்றலும் பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக் கொண்டிருக்கும். ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது.". விருதுகளும் பாராட்டுகளும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவராவார். தேசிய திரைப்பட விருதுகள் மாநில அரசு விருதுகள் பிலிம்பேர் விருதுகள் நந்தி விருதுகள் பாராட்டாக கிடைத்த காட்சிக் காணி பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளருமாக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது காட்சிக் காணியை பரிசாக வழங்கியுள்ளார். இயக்குனரான உதவியாளர்கள் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா", "பிதாமகன்" போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.சீனுராமசாமி, ராம், வெற்றி மாறன், சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. பாலு மகேந்திரா இயக்கிய 'கதைநேரம்' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது. உந்தப்பட்டவர்கள் சந்தோஷ் சிவன், ரவி கே.சந்திரன் ஆகியோர் இவரால் உந்தப்பட்ட சில பிரபல ஒளிப்பதிவாளர்கள் ஆவர். பணியாற்றிய திரைப்படங்கள் இயக்குநராக கோகிலா (1977; கன்னடம்) அழியாத கோலங்கள் (1979) மூடுபனி (1980) மூன்றாம் பிறை (1982) இயக்குநராகவும் தொகுப்பாளராகவும் ஓலங்கள் (1982; மலையாளம்) நிரீக்சனா (1986; தெலுங்கு) ஊமக்குயில் (1983; மலையாளம்) சாத்மா (1983; இந்தி) நீங்கள் கேட்டவை (1984) உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985) யாத்ரா (1985; மலையாளம்) ரெட்டை வால் குருவி (1987) வீடு (1988) சந்தியா ராகம் (1989) வண்ண வண்ண பூக்கள் (1992) சக்கரவியூகம் (1992) மறுபடியும் (1993) சதிலீலாவதி (1995) ஓர் எக் பிரேம் ககனி (1996; இந்தி) ராமன் அப்துல்லா (1997) என் இனிய பொன்னிலாவே (2001) ஜூலி கணபதி (2003) அது ஒரு கனாக்காலம் (2005) தலைமுறைகள் (2013; நடித்தும் உள்ளார்) ஒளிப்பதிவாளராக பனிமுடக்கு (1972; மலையாளம்) மாயா (1972; மலையாளம்) நிர்த்தசாலா (1972; மலையாளம்; ஒரு பாடல்) சாத்திரம் ஜெயிச்சு மனுசன் தோத்து (1973; மலையாளம்) அபிமனவந்துலு (1973; தெலுங்கு) கலியுகம் (1973; மலையாளம்) சுக்கு (1973; மலையாளம்) நெல்லு (1974; மலையாளம்) ராஜகம்சம் (1974; மலையாளம்) சட்டக்காரி (1974; மலையாளம்) ஜீவிகன் மரன்னு போயா ஸ்திரீ (1974; மலையாளம்) மக்கள் (1974; மலையாளம்) ராகம் (1975; மலையாளம்) பிரயாணம் (1975; மலையாளம்) டூரிஸ்ட் பங்களா (1975; மலையாளம்) சுவன்ன சந்தியாக்கல் (1975; மலையாளம்) அனுராகாலு (1975; தெலுங்கு) சீனவாலா (1975; மலையாளம்) மிசி (1976; மலையாளம்) பொன்னி (1976; மலையாளம்) சென்னாயா வளர்த்திய குட்டி (1976; மலையாளம்) அமெரிக்க அம்மாயி (1976; தெலுங்கு) தாரம் மரிண்டி (1977; தெலுங்கு) பந்துலம்மா (1977; தெலுங்கு) லம்பதொல்ல ராமதாசு (1978; தெலுங்கு) முள்ளும் மலரும் (1978) மனவூரி பண்டவுலு (1978; தெலுங்கு) இரு நிலவுகள் (1979; தெலுங்கு) உள்கத்தல் (1979; மலையாளம்) சங்கராபரணம் (1980; தெலுங்கு) கலியுக ராவணசுருது (1980; தெலுங்கு) எச்சில் இரவுகள் (1982) பல்லவி அனுபல்லவி (1983; கன்னடம்) உறங்காத நினைவுகள் (1983) தொலைக்காட்சி கதை நேரம் (2000) மறைவு பாலு மகேந்திரா 2014 பெப்ரவரி 13 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.. துணுக்குகள் பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர். இவர் புனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான "செங்கோட்டை" யை கொழும்பு "சவோய்" திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார். சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பாலு மகேந்திரா - சர்வதேச திரைப்பட தரவுத்தளம் "கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகேந்திரா" பிபிசி தமிழோசை தமிழ் சினிமாவை புதிய பரிணாமத்திற்கு அழைத்து சென்ற பாலுமகேந்திரா காலமானார் - கமல், பாரதிராஜா கண்ணீர் அஞ்சலி!! தினமலர் பாலுமகேந்திரா மறைவு: கவிஞர் வைரமுத்து இரங்கல் தினமணி ‘Cinematography has changed, so also the way films are made’ In a first, Balu Mahendra faces the camera ஒளிப்படங்களின் தொகுப்பு Naturalism was his signature - ஒரு அஞ்சலிக் கட்டுரை 1939 பிறப்புகள் 2014 இறப்புகள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மலையாளத் திரைப்பட இயக்குநர்கள் இந்தித் திரைப்பட இயக்குநர்கள் கன்னடத் திரைப்பட இயக்குநர்கள் மட்டக்களப்பு மாவட்ட நபர்கள் இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள் இலங்கை இந்துக்கள் தேசிய திரைப்பட விருது வென்றவர்கள் தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழ்நாட்டுத் திரைப்படத் தொகுப்பாளர்கள்
2721
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
மணிரத்னம்
மணிரத்னம் (Manirathnam, பிறப்பு:2 சூன் 1956) இயற்பெயர் கோபால ரத்னம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002 இல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மாறுபட்ட தத்ரூபமான இயக்குநர் தமிழ் திரையுலகில் 1980களில் பெரும் இயக்குநர்களான கே. பாலச்சந்தர், பாலு மகேந்திரா வரிசையில் மணிரத்னம் தனது தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், நடுத்தர வர்க்க மக்களின் நிலைப்பாடு, இராமாயண போன்ற பழம்பெரும் புராண கதைகள் ஆகியவற்றை நகர்ப்புற வாழ் மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய திரைப்படம் இயக்கும் பாணியாகும். இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை. மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், நேரடியாக தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன. ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார். மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். இளமை மணிரத்னம், 2 சூன் 1956 இல் பிறந்தார். இவர் தந்தை கோபால ரத்தினம், வீனஸ் பிக்சர்ஸில் விநியோகஸ்தராக பணியாற்றியவர். இவர் மாமா, 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன், ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும்  தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி ஜி.சீனிவாசன்; இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணி ரத்னம் சென்னையிலே வளர்ந்தார். திரைக்குடும்பமாக இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது.  திரைப்படம் பார்ப்பது,  அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. 'அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன்' என, அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும், வளர்ந்த  சிறுவனாக, திரைப்படம் பார்க்கத் துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும், நாகேஷும் இவருக்குப் பிடித்த நடிகர்கள். இயக்குநர் பாலச்சந்தர் படங்களைப் பார்த்து, அவரது ரசிகரானார். பள்ளிப் படிப்பு முடிந்து, ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில், வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு, மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். முதுகலைப் பட்டம் முடித்து, 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றினார். மணவாழ்க்கை திரைப்பட நடிகை சுஹாசினியை 1988 இல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன். மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார். இயக்கிய திரைப்படங்கள் இவரது வெற்றித் திரைப்படங்களில் சில: 1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்) 1984 - உணரு (மலையாளம்) 1985 - இதய கோவில் 1985 - பகல் நிலவு 1986 - மௌன ராகம் 1987 - நாயகன் 1988 - அக்னி நட்சத்திரம் 1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)- தமிழில் இதயத்தை திருடாதே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது. 1990 - அஞ்சலி 1991 - தளபதி (மகாபாரதத்தின் கர்ணன், துரியோதனன் கதாபாத்திரங்களின் தழுவலாகக் கருதப்பட்டது). 1992 - ரோஜா (இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்களின் கண்டனங்களுக்கு உள்ளானது). 1993 - திருடா திருடா 1995 - பம்பாய் 1997 - இருவர் 1998 - தில் சே (இந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது. 2000 - அலைபாயுதே 2002 - கன்னத்தில் முத்தமிட்டால் 2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும், வெவ்வேறு நடிகர்களை வைத்து, ஒரே நேரத்தில், தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன. 2007 - குரு (இந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது. 2010 - ராவணன் திரைக்கதை, இராமாயணத்தின் இராவணன் கதாபாத்திரத்தின் தழுவல். ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது. 2013- கடல் 2015 - ஓ காதல் கண்மணி 2017 - காற்று வெளியிடை 2018 - செக்கச்சிவந்த வானம் 2022- “பொன்னியின் செல்வன் 1” மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மணிரத்னம் - சர்வதேச திரைப்பட தரவுதளம் அனிதா நாயரின் நேர்க்காணல் மணிரத்னம் விசிறிகள் குழுமம் 1955 பிறப்புகள் வாழும் நபர்கள் மதுரை மக்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் கலைமாமணி விருது பெற்றவர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் இந்திய இறைமறுப்பாளர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் சென்னைத் திரைப்பட இயக்குநர்கள் சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள் 1956 பிறப்புகள் பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
2722
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%29
ஆதவன் (எழுத்தாளர்)
ஆதவன் (Aadhavan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவரது இயற்பெயர் கே.எசு.சுந்தரம் ஆகும். 1942 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் இவர் பிறந்தார். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். முதலில் இரவு வரும் என்ற சிறுகதை நூலுக்கு 1987 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது ஆதவனுக்கு வழங்கப்பட்டது. வாழ்க்கைச் சுருக்கம் ஆதவன் 21 மார்ச்சு 1942 அன்று திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், பிள்ளைகள் சாருமதி, நீரஜா. இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தில்லியில் உள்ள தேசிய புத்தக அறக்கட்டளையின் தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987, சூலை 19ஆம் தேதி சிருங்கேரி நகரில், துங்கபத்திரை ஆற்றின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கபட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு" என்கிற கதை ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமானது. படைப்புகள் குறும்புதினம் இரவுக்கு முன்பு வருவது மாலை (1974) சிறகுககள் மீட்சியைத் தேடி கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன் நதியும் மலையும் பெண், தோழி, தலைவி (1982) சிறுகதை கனவுக்குமிழிகள் (1975) கால் வலி (1975) ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் (1980) புதுமைப்பித்தனின் துரோகம் (1981) முதலில் இரவு வரும் (1985) நிழல்கள் புதினம் காகித மலர்கள் (1977) என் பெயர் ராமசேஷன் (1980), வித்தாலி பூர்ணிகாவினால் உருசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாயின. நாடகம் புழுதியில் வீணை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் A critical commentary on Adhavan's writings in Thisaigal magazine - Part 1, Part 2 and Part 3 தமிழக எழுத்தாளர்கள் 1987 இறப்புகள் 1942 பிறப்புகள் திருநெல்வேலி மாவட்ட நபர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
2725
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF.%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D
தி. ஜானகிராமன்
தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982 . திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடி) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா. என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர். தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துத் தேவங்குடியில் 1921-ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர்; பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில், ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார். இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர். கல்வி இவர் தஞ்சாவூர் புனித பீட்டர் பள்ளியிலும், சென்ட்ரல் பிரைமரிப் பள்ளியிலும் தொடக்கக் கல்வியையும், 1929 - 1936 வரை கல்யாண சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றவர். 1936 - 194 வரை கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், பி.ஏ.வும் பயின்றவர். ஆசிரியப்பணிகள் இவர் 1943 - 1944 வரை கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், 1944 - 1945 வரை சென்னை எழும்பூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், 1945 - 1954 வரை 9 ஆண்டுகள் தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டையிலும், குத்தாலம் பள்ளியிலும் ஆசிரியராகவும் பணியாற்றியவர். வானொலி இவர் 1945 - 1960 வரை சென்னை வானொலி நிலையத்தில் 14 ஆண்டுகள் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றியவர். 1968 - 1974 வரை தில்லி வானொலி நிலையத்தில் உதவித் தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணிபுரிந்தவர். பின்பதவி உயர்வு பெற்று 1974 - 1981 வரை தலைமைக் கல்வி அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வானொலி நிலையங்களில் பணியாற்றியபோது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா முதலிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். படைப்புகள் தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967-,இல் நூலாக வெளியிடப்பெற்றது. ரோமானிய செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974-இல் வெளியிட்டார். மொழியாக்கம் அன்னை (மூலம்: கிரேசியா டெலடா - நோபல் பரிசு பெற்றது) நாவல்கள் அமிர்தம் (1945), மலர்மஞ்சம் (1961) அன்பே ஆரமுதே (1963) மோகமுள் (1964) அம்மா வந்தாள் (1966) உயிர்த்தேன் (1967) செம்பருத்தி (1968) மரப்பசு (1975) அடி (1979) நளபாகம் (1983) குறுநாவல்கள் கமலம் (1963) தோடு'''' (1963), அவலும் உமியும் (1963), சிவஞானம் (1964), நாலாவது சார் (1964), வீடுபயண நூல்கள் "உதயசூரியன்" (1967) "கருங்கடலும் கலைக்கடலும் (1974) சிறுகதைத் தொகுதிகள் கொட்டுமேளம் (1954) சிவப்பு ரிக்ஷா (1956) அக்பர் சாஸ்திரி (1963) யாதும் ஊரே (1967) பிடிகருணை (1974) சக்தி வைத்தியம் (1978) மனிதாபிமானம் (1981) எருமைப் பொங்கல் (1990) கச்சேரி (2019) (தொகுப்பில் இல்லாத புதிய கதைகள்) கட்டுரைஉதயசூரியன் (ஜப்பான் பயண நூல்)அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை)கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை) நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாக பயணம்) நாடகம் "நாலுவேலி நிலம்" (1958) "வடிவேல் வாத்தியார் (1963), "டாக்டர் மருந்து" மேற்கோள்கள் தமிழக எழுத்தாளர்கள் 1983 இறப்புகள் 1921 பிறப்புகள் 1982 இறப்புகள் திருவாரூர் மாவட்ட நபர்கள் சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் இந்தியத் தமிழர்
2729
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
பொருளியல்
பொருளியல் (economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும்.உற்பத்தி, பகிர்வு என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த ஆடம் இசுமித் என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (The Wealth of Nations, நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் அரசியல் பொருளியலின் தந்தை என அறியப்படுகிறார். பொருளியல் என்ற சொல் மிகவும் பழமையான ஆய்க்கனோமிக்ஸ் என்னும் கிரேக்க மொழி சொல்லில் இருந்து பெறப்பட்டது. பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியன சிற்றினப்பொருளியல் (microeconomics), பேரினப்பொருளியல் (macroeconomics). என்பனவாகும். இவைதவிர நிறுவனங்களின் பொருளியல் (Institutional economics), கார்ல் மார்க்ஸிய பொருளியல் (Marxian economics), சூழல்நலம் போற்றும் பொருளியல் (Green economics). எனப் பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது. பொருளியல் பகுப்பாய்வை சமுதாயத்தின் அனைத்துத் தரப்புகளுக்கும் பயன்படுத்தலாம்; வழமையான வணிகம், நிதியம், உடல்நல கவனிப்பு, மற்றும் அரசுத்துறை மட்டுமன்றி குற்றங்கள், <ref>Friedman, David D. (2002). "Crime," The Concise Encyclopedia of Economics.'.' Retrieved October 21, 2007.</ref> கல்வி, குடும்பம், சட்டம், அரசியல், சமயம், சமூக நிறுவனங்கள், போர், அறிவியலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 21வது நூற்றாண்டில், சமூக அறிவியலில் பொருளியலின் தாக்கத்தை ஒட்டி இது பொருளியல் பேராதிக்கமாகக்கருதப்படுகிறது. பொருளியலுக்கான வரைவிலக்கணங்கள் பொருளியலுக்கான வரைவிலக்கணம் பலராலும் பலவிதமாக முன்வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டும் பின்னர் மறுக்கப்பட்டும் வந்துள்ளது. ஆதம் இசுமித், இலயனல் இராபின்சு, பவுல் சாமுவேல்சன் என்பாரின் வரைவிலக்கணங்கள் முதன்மையானவை. செல்வம் பற்றி ஆராயும் இயல் துவக்க காலத்தில் தொழிற்புரட்சியால் நாட்டில் பண முதலீடுகளாலும் இயந்திரப் பயன்பாட்டினாலும் செல்வம் பெருகியதால் ஆதம் இசுமித் வரையறுத்த பொருளியலில் செல்வம் முதன்மை பெற்றது. இங்கு செல்வம் எனப்படுவது மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களையும் குறிக்கும். இருப்பினும் காற்று, நீர் போன்ற அளவிலா அளிப்பு உள்ள பண்டங்கள் செல்வமாக கருதப்படுவதில்லை. செல்வ உற்பத்தி மற்றும் செல்வப் பகிர்வு சார்ந்த செயல்முறை அறிவியல் என்று வரையறுக்கப்பட்டது. பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல் 1890ஆம் ஆண்டில் ஆல்பிரடு மார்ஷல் பொருளாதாரக் கோட்பாடுகள் என்ற நூலை வெளியிட்டார். அதில் மனித இனத்தின் செயல்பாடுகளை பொருளியல் ஆராய்வதாக புதிய கருத்தை வெளியிட்டார். செல்வத்தை ஆராய்வதுடன் கூடுதலாக மனிதன் பல்வேறு பொருளியல் காரணிகளாக (வாங்குபவர்-விற்பவர், உற்பத்தியாளர் – நுகர்வோர், சேமிப்பாளர் – முதலீட்டாளர், முதலாளி – தொழிலாளி) ஆற்றும் வினைகளை ஆய்வதே பொருளியல் கற்கை என இவர் வரையறுத்தார். சுருக்கமாக பொருள்சார் நலனை எவ்வாறு உயர்த்துவது என்பதைப்பற்றிய கல்வியாக பொருளியலைக் கருதினார். இவரது வரைவிலக்கணம் நலப் பொருளாதாரம் எனப்பட்டது. இது ஆதம் இசுமித்தின் வரைவிலக்கணத்தை விட மேம்பட்டதாக இருப்பினும் இதுவும் பருப்பொருட்களை மட்டுமே கருத்தில் கொள்வதாக விமரிசிக்கப்பட்டது. கிடைப்பருமை பற்றிய இயல் பேராசிரியர் லயனல் ராபின்ஸ் அவர்களினால் பொருளியலின் இயல்பும் உட்கருத்துக்களும் பற்றிய கட்டுரைகள் (1932) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட பின்வரும் வரைவிலக்கணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது: "பொருளியல் என்பது மாற்றுபயன்பாடு உள்ள, கிடைத்தற்கு அருமையான வளங்களைக் கொண்டு, மாந்தர்கள் தமது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் நடப்புகளை ஆராயும் அறிவியலாகும்". இங்கு கிடைத்தற்கு அருமை (கிடைப்பருமை) எனப்படுவது கிடைக்கின்ற வளங்கள் யாவும் எல்லாத் தேவைகளையும் பற்றாக்குறையினையும் தீர்க்க முடியாமல் போவதை குறிக்கும். கிடைப்பருமை இல்லாதபோதும், வளங்களுக்கு மாற்றுப்பயன்பாடு இல்லாத போதும் அங்கு பொருளியல் கேள்விகள் எழாது. இந்த வரைவிலக்கணம் கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் எனப்படுகிறது. புதுக்கெய்னீசிய பொருளியல் தற்போதைய காலகட்டத்தில் புதுக்கெய்னீசிய பொருளியலாக சாமுவேல்சனின் பொருளியல் வரைவிலக்கணம் அமைந்துள்ளது. இதன்படி மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களை மாந்தர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் பண்டங்களையும் பணிகளையும் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக எவ்வாறு உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் குறித்த ஆய்வாக பொருளியலை வரையறுக்கிறார். இது இராபின்சனை ஒத்ததாக இருப்பினும் நிகழ்காலத் தேவைகளுக்காக மட்டுமின்றி எதிர்காலத் தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொள்கிறது. தவிர சேவைப்பணிகள் எனப்படும் பருப்பொருள் உற்பத்தி செய்யாத துறைகளையும் பொருளியல் நடவடிக்கைகளாகக் கொள்கிறது. சில முக்கிய கருதுகோள்கள் சில பொதுவான எடுகோள்கள்: அனைத்து மாந்தரும் தங்கள் விருப்பத்தேர்வுகளை முடிவு செய்ய வேண்டும். ஒரு பண்டத்தின் விலை அதற்கு ஒருவர் கொடுக்கத்தயாராக உள்ள பணமாகும். ஒரு பண்டத்தைப் பெற ஒருவர் பணம் அல்லது மாற்றுப் பண்டத்தை தர முனையும்போது அவற்றால் அவர் பெறக்கூடிய மாற்றுத் தேவைகளை இழக்கிறார். எனவே ஒரு பண்டத்தின் உண்மையான விலை அதைப் பெற ஒருவர் இழக்கும் பண்டத்தின் மதிப்பாகும். இது சந்தர்ப்பச்செலவு எனப்படும். ஊக்கத்தொகைகளுக்கு மாந்தர் எதிர்வினை யாற்றுகின்றனர். ஒரு கவர்ச்சிகரமானத் திட்டம் கூடுதல் மக்களை வாங்கச் செய்யும். பொருளியல் வாழ்விற்கான சரியான அமைப்பாக சந்தைகள் விளங்குகின்றன. அனைவரும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற முயன்றால் ஆடம் சிமித் கொள்கைப்படி, சந்தையின் “புலனாகா கை” அனைவரும் நலனுடன் இருக்குமாறு வைத்திருக்கும். சிலநேரங்களில் விலைகள் குமுகத்திற்கு ஏற்படுத்தும் நன்மை / தீமைகளை காட்டுவதில்லை. காட்டாக, காற்று மாசடைதல் குமுகத்திற்கு தீமையும் கல்வி குமுகத்திற்கு நன்மையும் விளைவிக்கின்றன. குமுகத்திற்கு தீமை விளைவிக்கும் பண்டங்கள்/சேவைகளுக்கு அரசு கூடுதல் வரி விதித்து விற்பனையைக் கட்டுப்படுத்தலாம்.அதேபோல நன்மை பயக்கும் விற்பனையை ஆதரிக்கலாம். ஒரு நாட்டின் வாழும் தரம் அந்நாட்டு மக்கள் உற்பத்தி செய்யும் அல்லது சேவைகளை வழங்கும் திறன்களைப் பொறுத்து உள்ளது. உற்பத்தி திறன் என்பது மொத்தம் உற்பத்தியான பண்டங்களை அதை உற்பத்தி செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தால் வகுத்து கிடைப்பதாகும். மொத்த பண நிரம்பல் கூடுதலாகும்போது அல்லது உற்பத்திச் செலவு கூடும்போது விலைகள் ஏறுகின்றன. இது பணவீக்கம் எனப்படுகிறது. மதிப்பு மதிப்பு என்பதை ஒரு மனிதத்தேவையை நிறைவு செய்ய ஒருவர் கொடுப்பதற்கு தயாராக உள்ள செலவு ஆகும். ஒரு பண்டத்தின் மதிப்பு சார்புத் தன்மை உடையது. இது காலம், இடம், மற்றும் பொருள்களுக்கிடையேயான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது. மதிப்பு, பயன்பாட்டு மதிப்பு, மாற்று மதிப்பு என இருவகையாக பகுக்கப்படுகிறது. அளவில்லா அளிப்புள்ள காற்று, நீர், சூரிய ஒளி இவற்றிற்கு பயன்பாட்டு மதிப்பு உண்டு. ஆனால் கிடைப்பரிய பண்டங்களுக்கு மற்ற பண்டங்களை மாற்றாக தர முனையும் மாற்று மதிப்பே பொருளியலில் ஆயப்படுகிறது. மாற்று மதிப்பைப் பெற அப்பண்டம் பயன்பாடு உள்ளதாகவும் பற்றாக்குறையானதாகவும் பரிமாற்றம் செய்யக்கூடியனவாகவும் இருக்க வேண்டும். மதிப்பை பணம் என்ற அலகால் அளவிடும்போது அது விலை எனப்படுகிறது. கேள்வியும் நிரம்பலும் சந்தையில் ஒரு பண்டத்தின் விலையை தீர்மானிக்கப் பயன்படும் பொருளியியல் மாதிரிகளில் ஒன்றாக கேள்வியும் நிரம்பலும் (அல்லது தேவையும் அளிப்பும்) காணப்படுகிறது. ஒரு பண்டத்தை வாங்குவதற்கான விருப்பத்தையும், வாங்கும் சக்தியையும்,வாங்கிவிட வேண்டும் என்ற முடிவையும் கேள்வி (தேவை) குறிக்கிறது. ஒன்றை வாங்கவியலா நபரின் தேவை விருப்பமாகவே அமையும்; அது பொருளியலில் தேவையாகக் கொள்ளப்படாது. பண்டங்களின் விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை தேவைக்கோடு தீர்மானிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட விலையில் விற்கப்படும் பண்டங்களின் அளவு நிரம்பல் அல்லது அளிப்பு எனப்படுகிறது. பல விலைகளில் உற்பத்தியாளர்கள் வழங்க தயாராக உள்ள அளிப்பின் அளவை அளிப்புக்கோடு வெளிப்படுத்துகிறது. தேவைக்கோடும் அளிப்புக்கோடும் எதிர் எதிரானவை. இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட விலையில் வெட்டிக்கொள்ளும். இந்தக் குறிப்பிட்ட விலையில் வாங்குபவர்களின் விருப்பமும் விற்பவர்களின் விருப்பமும் சமமாகும். இது சமநிலை விலை எனப்படுகிறது. கிடைப்பருமை எண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்யும் அளவிற்கு போதியளவு வளங்கள் இல்லாமையே பொருளியலில் கிடைப்பருமை (Scarcity) எனப்படும். ஒரு குமுகத்தின் இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைப்பருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. "அருமையானதும் மாற்று பயன்பாடு உடையதுமான வளங்களை பயன்படுத்தி எண்ணற்ற மனித தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் என ஆய்வு செய்கின்ற ஒரு சமூக அறிவியல் பொருளியல்" ஆகும் என லயனல் ராபின்ஸ் கூறியுள்ளார். சில புகழ்பெற்ற பொருளியல் அறிஞர்கள் ஆடம் சிமித் (பொருளியலின் தந்தை எனக் கருதப்படுபவர்; திறந்த சந்தைகளை ஆதரித்தவர்). தாமஸ் மால்துஸ் (கூடுதல் மக்கள்தொகை எவ்வாறு பொருளாதாரத்தை பாதிக்கிறது எனக் காட்டியவர்). காரல் மார்க்சு ( பொதுவுடைமை அறிக்கையை இயற்றியவர்; பொதுவுடைமையை ஆதரித்தவர்). ஜான் மேனார்ட் கெயின்ஸ் (கெயின்சியப் பொருளியல் என்ற பரவலானக் கொள்கையை உருவாக்கியவர்). மில்ட்டன் ஃப்ரீட்மன் (பண வழங்கலைக் குறித்தும் நாணயக் கொள்கைகள் குறித்தும் விரிவாக எழுதியவர்]]. அமர்த்தியா சென் (இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்). மேற்கோள்கள் மேலும் அறிய McCann, Charles Robert, Jr., 2003. The Elgar Dictionary of Economic Quotations, Edward Elgar. முன்தோற்றம். வெளி இணைப்புகள் பொதுவான தகவல் Economic journals on the web Economics at பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்'' Intute: Economics: Internet directory of UK universities Research Papers in Economics (RePEc) Resources For Economists: American Economic Association-sponsored guide to 2,000+ Internet resources from "Data" to "Neat Stuff", updated quarterly. நிறுவனங்களும் அமைப்புகளும் Economics Departments, Institutes and Research Centers in the World Organization For Co-operation and Economic Development (OECD) Statistics United Nations Statistics Division World Bank Data கல்வி வளங்கள் A guide to several online economics textbooks Economics at About.com Economics textbooks on Wikibooks Introduction to Economics: Short படைப்பாக்கப் பொதுமங்கள்-licensed introduction to basic economics MERLOT Learning Materials: Economics: US-based database of learning materials MIT OpenCourseWare: Economics : Archive of study materials from மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் courses Online Learning and Teaching Materials UK Economics Network's database of text, slides, glossaries and other resources Schools of Thought : Compare various economic schools of thought on particular issues The Library of Economics and Liberty (Econlib): Economics Books, Articles, Blog (EconLog), Podcasts (EconTalk) பொருளாதாரக் கோட்பாடுகள்
2735
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D
திருக்குறள்
திருக்குறள் (), சுருக்கமாகக் குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று பாரம்பரியமாக அறியப்படுகிறார். இந்நூலின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகிறது. பாரம்பரியமாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப்பாய்வுகள் இந்நூல் பொ.ஊ. 450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன. இந்திய அறிவாய்வியல், மீவியற்பியல் ஆகியவற்றின் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் திருக்குறள், "உலகப் பொதுமறை", "பொய்யாமொழி", "வாயுறை வாழ்த்து", "முப்பால்", "உத்தரவேதம்", "தெய்வநூல்" எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அகிம்சையை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல், தனிநபர் அடிப்படை நல்லொழுக்கங்களாக இன்னா செய்யாமை மற்றும் புலால் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இவற்றொடு வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை நலம், பரத்தையரோடு கூடாமை, கள்ளாமை, மது உள்ளிட்ட போதைப்பொருட்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், கூடாஒழுக்கங்களை விலக்குதல் முதலிய அனைத்துத் தனிநபர் ஒழுக்கங்களையும் போதித்துக் கூடுதலாக ஆட்சியாளர் மற்றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல் மற்றும் சமூகத் தலைப்புகளை உள்ளடக்கியது. மேலும் நட்பு, காதல், தாம்பத்தியம் மற்றும் அகவாழ்க்கை பற்றிய அதிகாரங்களும் இதில் அடங்கும். சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குற்றங்களையும் குறைகளையும் மறுத்துரைத்து அவர்தம் பண்பாட்டு முரண்களைத் திருத்தியும் பிழைப்பட்ட வாழ்வியலை மாற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறது. இயற்றப்பட்ட காலத்திலிருந்து குறள் அற, சமூக, அரசியல், பொருளாதார, மத, தத்துவ மற்றும் ஆன்மீகத் துறைகளைச் சார்ந்த அறிஞர்களாலும் தலைவர்களாலும் பரவலாகப் போற்றப்பட்டு வந்துள்ளது. இவர்களில் இளங்கோவடிகள், கம்பர், லியோ டால்ஸ்டாய், மகாத்மா காந்தி, ஆல்பர்ட் சுவைட்சர், இராமலிங்க அடிகள், வ. உ. சிதம்பரம்பிள்ளை, காரல் கிரவுல், ஜி. யு. போப், அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி மற்றும் யூ ஹ்சி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். தமிழ் இலக்கியங்களில் மிகவும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் அதிகம் சுட்டப்பட்ட நூலாகவும் அதிகம் சுட்டப்படக்கூடிய நூலாகவும் திருக்குறள் திகழ்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் உலகின் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய படைப்புகளில் ஒன்றாகும். 1812-ம் ஆண்டு முதன்முறையாக அச்சுக்கு வந்ததிலிருந்து இடையறாது அச்சில் உள்ள நூலாகக் குறள் திகழ்கிறது. திருக்குறள் ஒரு தலைசிறந்த படைப்பாகவும் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. அனைத்து நூல்களிலும் காணப்படும் சிறந்த அறங்களைத் தேர்ந்தெடுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொதுப்படையாக வழங்கும் தனது இயல்புக்காக குறளின் ஆசிரியர் அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். காலவெள்ளத்தில் தொன்றுதொட்டுத் தமிழக மக்களாலும் அரசாலும் போற்றிப் பாதுகாத்து வரப்படும் நூலாகக் குறள் திகழ்கிறது. பெயர்க்காரணம் திருக்குறள் என்ற சொல் "திரு" மற்றும் "குறள்" என்ற இரண்டு தனிப்பட்ட சொற்களாலான ஒரு கூட்டுச் சொல் ஆகும். "திரு" என்பது தமிழில் மரியாதையையும் மேன்மையையுங் குறிக்கும் ஒரு சொல். இஃது இந்திய அளவில் பொதுவான "புனித, புனிதமான, சிறந்த, கௌரவமான, அழகான" என்று பலவாறு பொருள்படும் வடமொழிச் சொல்லான "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு ஒத்த தமிழ்ச் சொல்லாகும். "திரு" என்ற சொல்லுக்கு 19 வெவ்வேறு பொருள்கள் உண்டு. குறள் என்றால் "குறுகிய, சுருக்கமான, சுருக்கப்பட்ட" என்று பொருள். தொல்காப்பியம் கூறும் இரு பாவகைகளான குறுவெண்பாட்டு மற்றும் நெடுவெண்பாட்டு ஆகியவற்றில் குறுவெண்பாட்டுதான் சுருங்கிக் "குறள் பாட்டு" என்றாகிப் பின்னர்க் "குறள்" என்றானது. அஃதாவது "குறுகிய செய்யுள்" என்பதே "குறள்". இப்பாடல்கள் அனைத்துமே, குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய தமிழின் முதல் நூலும், ஒரே பழைய நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால், "குறள்" என்றும் அதன் உயர்வு கருதித் "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெறுகிறது. மிரான் வின்சுலோவின் கூற்றுப்படி, ஓர் இலக்கியச் சொல்லாகக் "குறள்" என்பது ஈரடி கொண்ட, முதலடியில் நான்கு சீர்களும் இரண்டாமடியில் மூன்று சீர்களுமுடைய ஒரு பாவகையைக் குறிக்கிறது. சுருங்கக் கூறின், திருக்குறள் என்பது "தெய்வீக ஈரடிப்பாக்கள்" என்று பொருட்படும். எவ்விதத்திலும், ”குறள்” என்ற தமிழ்ச் சொல்லின் பொருள்கள் எவை என்பதை இன்றுவரை தமிழ் வித்தகர்கள் அறியவில்லை. இதற்குக் காரணம், முன்னைய, இன்றைய தமிழ் வித்தகர்கள் தொல்காப்பியர் உரியியலில் குறிப்பிட்ட ”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” எனக் கூறிய சூத்திரத்தையும், அதற்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர் எழுதியிருந்த உரைகளையும் சரியாக விளக்கி, ஒரு தமிழ்ச் சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பதைச் சரியாக விளக்கிக்கொள்ளவில்லை என்பதேயாகும். பிற பெயர்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் மிகவும் மதிக்கப்படும் ஒரு நூல் திருக்குறள். இவ்வுண்மை இந்நூலின் பன்னிரு பாரம்பரியப் பெயர்களான "திருக்குறள்" (புனிதமான குறள்), "உத்தரவேதம்" (இறுதி வேதம்), "திருவள்ளுவம்" (ஆசிரியரின் பெயர்), "பொய்யாமொழி" (பொய்க்காத சொற்கள்), "வாயுறை வாழ்த்து" (சத்தியமான பாராட்டு), "தெய்வநூல்" (தெய்வீகப் புத்தகம்), "வள்ளுவமாலை" (ஆசிரியர் கோர்த்த மாலை), "முப்பால்" (மூன்று பிரிவு/பகுப்பு), "தமிழ்மறை" (தமிழ் வேதம்), "தமிழ்மனு நூல்" (தமிழ் நீதிநூல்), "திருவள்ளுவப் பயன்" (ஆசிரியரால் விளைந்த பயன்), மற்றும் "பொதுமறை" (பொதுவான வேதம்) ஆகியவற்றால் பிரதிபலிக்கப்படுகிறது. குறளானது, ஈரடிகளில் உலகத் தத்துவங்களைச் சொன்னதால், இஃது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது. இஃது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இது வான்மறை என்றும் உலகப் பொதுமறை என்றும் அழைக்கப்படுகிறது. இலக்கிய மரபில் திருக்குறள் சங்க நூல்கள் வரிசையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது. காலம் திருக்குறளின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 450 வரை என்று பலவாறு கருதப்படுகிறது. தமிழ் மரபின் வாயிலாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசி நூலாக அறியப்படுகிறது. சோமசுந்தர பாரதியார், மா. இராஜமாணிக்கனார் முதலானோர் இக்கருத்தை நிறுவிக் குறளின் காலம் பொ.ஊ.மு. 300 என்று உரைக்கின்றனர். வரலாற்று அறிஞர் கே.கே.பிள்ளை குறளின் காலம் பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார். செக் நாட்டுத் தமிழ் ஆய்வாளர் கமில் சுவெலபில் இவற்றை ஏற்க மறுக்கிறார். அவரது கணிப்பின்படி வள்ளுவரது காலம் சங்கப் புலவர்களுக்குப் பின்னரும் பக்திப் புலவர்களுக்கு முன்னருமான பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும். நூலின் நடை, இலக்கணம், சொல்லமைப்பு போன்றவை பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இல்லாதிருப்பதும், வள்ளுவரது சொல்லாடலில் காணப்படும் வடமொழிச் சொற்களின் பயன்பாடும், தம் காலத்திற்கு முந்தைய நூல்களிலிருந்து வள்ளுவர் எடுத்தாண்டமையுமே சுவெலபில் தனது கணிப்பிற்குச் சுட்டும் காரணங்களாகும். 1959-ம் ஆண்டு எஸ். வையாபுரிப்பிள்ளை தனது ஆய்வின் முடிவாகத் திருக்குறள் பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தோ அதற்குப் பிற்பட்டதோ ஆகும் என்று குறிப்பிட்டார். குறளில் வடமொழிச் சொற்கள் விரவியிருப்பதையும், நூலில் வள்ளுவர் சுட்டும் வடமொழி நூல்கள் பொ.ஊ. முதல் ஐந்து நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட நூல்களாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும், அதற்கு முன்புவரை இல்லாத இலக்கணங்களைக் குறளில் வள்ளுவர் பயன்படுத்தியிருப்பதையும் வையாபுரிப்பிள்ளை தனதிந்தக் கருத்துக்குக் ஆதாரமாகக் காட்டுகிறார். இதன் ஒரு பகுதியாகக் குறளில் காணப்படும் 137 வடமொழிச் சொற்களின் பட்டியலொன்றையும் அவர் பதிப்பித்தார். பின்னர் வந்த தாமஸ் பரோ, முர்ரே பார்ன்ஸன் எமீனோ உள்ளிட்ட அறிஞர்கள் இப்பட்டியலிலுள்ள சொற்களில் 35 வடமொழிச் சொற்களல்ல என்று கருதினர். இவற்றில் மேலும் சில சொற்களின் தோற்ற வரலாறு சரியாகத் தெரியவில்லை என்றும் வரவிருக்கும் ஆய்வுமுடிவுகள் இவற்றில் சில தமிழ்ச் சொற்கள் என்றே நிறுவ வாய்ப்புள்ளது என்றும் சுவெலபில் கருதுகிறார். ஆயினும் மீதமுள்ள 102 வடமொழிச் சொற்களை ஒதுக்கிவிட முடியாதென்றும் வள்ளுவர் கூறும் கருத்துகளில் சில ஐயப்பாடின்றி அர்த்தசாஸ்திரம், மனுதர்ம சாஸ்திரம் முதலிய வடமொழி இலக்கியங்களிலிருந்து வந்தவையே என்றும் சுவெலபில் கூறுகிறார். குறள் சங்ககாலத்தைச் சேர்ந்த நூல் அன்று என்றும் அதன் காலம் பொ.ஊ. 450 முதல் பொ.ஊ. 500 வரை இருக்கலாம் என்றும் 1974-இல் வெளிவந்த தமிழ் இலக்கிய வரலாற்றைப் பற்றிய தனது ஆய்வில் சுவெலபில் நிறுவுகிறார். நூலில் மொழியமைப்பையும், அதில் வரும் முந்தைய நூல்களைப் பற்றிய குறிப்புகளையும், வடமொழி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட சில கருத்துகளையும் தனது கூற்றுக்குச் சான்றாக அவர் காட்டுகிறார். குறளில் வள்ளுவர் சங்கநூல்களில் காணப்படாத பல புதிய இலக்கண நடைகளைக் படைத்துள்ளார் என்று குறிப்பிடும் சுவெலபில், குறள் இதர பண்டைய தமிழ் நூல்களைவிட அதிகமாக வடமொழிச் சொற்பயன்பாட்டைக் கையாள்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார். குறளின் தத்துவங்கள் பண்டைய இந்தியாவில் பரவலாகக் காணப்பட்ட மெய்யியலின் ஒரு பகுதி என்பதைச் சுட்டும் சுவெலபில், வள்ளுவர் தமிழ் இலக்கிய மரபுடன் மட்டும் தொடர்புடையவர் அல்லர் என்றும் அவர் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் வியாபித்திருந்த ஒருங்கிணைந்த பண்டைய இந்திய அறநெறி மரபையும் சார்ந்தவர் என்றும் நிறுவுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் வந்த ஐரோப்பிய அறிஞர்களும் கிறித்தவ மதபோதகர்களும் குறளின் காலத்தைக் பொ.ஊ. 400-இல் தொடங்கிக் பொ.ஊ. 1000 வரை பலவாறு வரையறை செய்தனர். தற்காலத்தைய அறிஞர்கள் குறளின் காலம் என்று ஒருமித்தமாக ஏற்பது சுமார் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டு என்றே பிளாக்பர்ன் கருதுகிறார். இந்த வாதங்களுக்கிடையில் 1921-ம் ஆண்டு தமிழக அரசு மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியினை ஏற்று பொ.ஊ.மு. 31-ம் ஆண்டினை வள்ளுவர் பிறந்த ஆண்டாக அறிவித்தது. இதன் விளைவாக அன்று தொடங்கி தமிழகத்தில் ஆண்டுகளைக் குறிக்கத் திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது. தமிழக நாட்காட்டிகளில் ஜனவரி 18, 1935 அன்று முதல் வள்ளுவர் ஆண்டு சேர்க்கப்பட்டது. நூலாசிரியர் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரைப் பொய்யில் புலவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நாயனார், தேவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற வேறு பெயர்களாலும் அழைப்பர். இவரைப் பற்றிய நம்பகப்பூர்வமான தகவல்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கப்பெறுகின்றன. அவரது இயற்பெயரையோ அவர் இயற்றிய நூலான திருக்குறளின் உண்மைப் பெயரையோ இன்றுவரை யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. திருக்குறள் கூட அதன் ஆசிரியரின் பெயரையோ அவரைப் பற்றிய விவரங்களையோ எங்கும் குறிப்பிடுவதில்லை. குறளுக்கு அடுத்து சில நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய சைவமத நூலான திருவள்ளுவமாலையில் தான் முதன்முறையாகத் திருவள்ளுவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் இந்நூலில் கூட வள்ளுவரின் பிறப்பு, குடும்பம், பின்புலம் போன்ற எந்தத் தகவலும் கிடைப்பதற்கில்லை. வள்ளுவரின் வாழ்வைப் பற்றிக் கூறப்படும் செய்திகள் யாவையும் நிரூபிக்கும்படியான பண்டைய நூல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்பதே உண்மை. 19-ம் நூற்றாண்டில் அச்சகங்கள் தோன்றிய பின்னர் வள்ளுவரைப் பற்றிய பல செவிவழிச் செய்திகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கதைகளாக அச்சிடப்பட்டன. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் தோன்றிய நூல்களில் வள்ளுவரைப் பற்றிப் பழங்கால ஏடுகளிலிருந்தும் மரபுவழியும் கிடைக்கப்பெற்றதும் வள்ளுவரது நூலிலிருந்தே அறியப்பட்டதுமான பலதரப்பட்ட தகவல்கள் காணப்படுகின்றன. வள்ளுவர் குறித்து மரபுவழி வந்த தகவல்கள் அவர் பறையர் குலத்து நெசவாளர் என்றும், அவர் உழவினைப் போற்றியதால் விவசாயத் தொழில் புரிந்த வேளாளர் குலத்தவர் என்றும், அவர் ஒரு பறையர்குலத் தாய்க்கும் அந்தணர்க்குலத் தந்தைக்கும் பிறந்தவர் என்றும் பலவாறு உரைக்கின்றன. மு. இராகவ ஐயங்காரது கருத்துப்படி "வள்ளுவர்" என்ற அவரது பெயர் "வல்லபா" என்ற ஓர் அரச அலுவலரது பதவியைக் குறிக்கும் சொல்லின் திரிபாகும். எஸ். வையாபுரிப்பிள்ளை தனது கருத்தாக "வள்ளுவன்" என்பது அரசவையில் பறை முழங்குவோரைக் குறிக்கும் சொல் என்றும் அதனால் அவர் அரசனின் படையில் முரசு கொட்டுபவராகப் பணிபுரிந்தவர் என்றும் உரைக்கிறார். மரபுவழி வந்த தகவல்கள் இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணாகவும் சில நம்பகத் தன்மையற்றவையாகவும் விளங்குகின்றன. வள்ளுவரது பிறப்பு பற்றிய பலதரப்பட்ட செய்திகளில் சில வள்ளுவர் ஒரு மலைக்குப் பயணமாகச் சென்று அகத்தியரையும் இன்னபிற முனிவர்களையும் சந்தித்ததாகவும் கூறுகின்றன. அவர்களைச் சந்தித்துத் திரும்பி வரும் வழியில் வள்ளுவர் ஒரு மரத்தடியில் அமர அவரது நிழலானது அவர் மீது ஒரு நாள் முழுவதும் அசையாமல் நிலைகொண்டது என்றும் அங்கு அவர் ஓர் அரக்கனைக் கொன்றார் என்றும் பலதரப்பட்ட புராணத் தகவல்களும் காணப்படுகின்றன. அறிஞர்கள் இவற்றிற்கு வரலாற்றுப் பதிவுகள் கிடையாது என்றும் இவையாவும் இந்திய மற்றும் உலகப் புராண இலக்கியங்களில் காணப்படுவதைப் போன்ற புனையப்பட்ட கதைகளாகும் என்றும் உரைக்கின்றனர். வள்ளுவரைப் பற்றிய குல வரலாறுகளும் நம்பகத்தன்மையற்றவை என்றே அவர்களால் கருதப்படுகிறது. வள்ளுவருக்கு வாசுகி என்ற மனைவியும் ஏலேலசிங்கன் என்ற பெயரில் ஒருவர் உற்ற நண்பனாகவும் சீடனாகவும் இருந்தார் என்றும் கருதப்படுகிறது. வள்ளுவரைப் பற்றிய பலதரப்பட்ட செய்திகளைப் போல் அவரது சமயத்தைப் பற்றியும் பலதரப்பட்ட செய்திகள் வரலாற்றுச் சான்றுகளின்றி விரவிக்கிடக்கின்றன. வள்ளுவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்பதை நிர்ணயிக்க அவர் எந்த சமயத் தத்துவத்தை கண்டிக்காது போற்றுகிறார் என்பதை அலச வேண்டும் என்ற ஒரு யுக்தியை மு. சி. பூரணலிங்கம் பிள்ளை முன்வைக்கிறார். இதன் வாயிலாக "வள்ளுவர் சைவ சித்தாந்தக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட உரைப்பதில்லை" என்பது தெரியவருவதாக பூரணலிங்கம் பிள்ளை மேலும் சுட்டுகிறார். வள்ளுவர் தனது நூலினைப் பொதுப்படையாகவும் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடாமலும் இயற்றியுள்ளதால் அதனைப் பல விதங்களில் பொருட்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. இதன் விளைவாகக் குறளானது பண்டைய இந்திய சமயங்களால் தங்கள் வழிநூலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆங்கிலேயப் படையெடுப்புக்குப் பின்னர்க் கிறித்தவ சமயமும் குறளைத் தனது வழித் தோன்றலாகக் கருத முயன்றதைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தவ போதகரான ஜி. யு. போப் தனது நூலில் வள்ளுவர் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த கிறித்தவ போதகரான பான்டேனசுடன் தொடர்பிலிருந்தவர் என்றும் அதன் மூலம் அலெக்சாந்திரிய கிறித்தவ அறிஞர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு இயேசுநாதரின் மலைச் சொற்பொழிவின் சாரமாய்த் தனது "அழகிய திருக்குறளை" யாத்தாரென்றும் கூறினார். போப்பின் இக்கூற்றுகள் யாவும் தவறானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் அறிஞர்களால் விலக்கப்பட்டுவிட்டன. வள்ளுவர் கூறும் அறங்கள் யாவும் கிறித்தவ அறநெறிகளல்ல என்று சுவெலபில் நிறுவுகிறார். "கால மதிப்பீட்டில் குறளானது ஏனைய இந்திய இலக்கியங்களைப் போலவே சரியாக வரையறுக்கப்பட முடியாததாகவே உள்ளது" என்றும், குறிப்பாகச் "சிறந்த கருத்துகளைக் கொண்ட இலக்கியங்கள் யாவும் கிறித்தவ போதகர்களால் அவற்றின் காலமதிப்பீட்டினைக் கிறித்துவின் பிறப்பிற்குப் பிந்தையதாக்கும் நோக்குடன் பலவாறு சிதைக்கப்பட்டுள்ளது" என்றும் சுவைட்சர் தனது நூலில் குறிப்பிடுகிறார். வள்ளுவர் சமண சமயத்தையோ இந்து சமயத்தையோ சார்ந்தவராக இருந்திருப்பார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்விரு சமயங்களின் பிரதான தர்மமான அகிம்சை அல்லது இன்னா செய்யாமை என்ற அறத்தை வள்ளுவர் தனது நூலின் மைய அறமாகக் கொண்டு மற்ற அறங்களைக் கையாண்டிருப்பதிலிருந்து இது புலனாகிறது. வள்ளுவர் இந்துவா சமணரா என்ற கேள்வி தமிழ்ச் சமூகத்தால் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது என்று தனது 1819-ம் ஆண்டு குறள் மொழிபெயர்ப்பு நூலில் எல்லீசன் (பிரான்சிசு வயிட் எல்லீசு) குறிப்பிடுகிறார். வள்ளுவரது தார்மீக சைவம் மற்றும் கொல்லாமை ஆகிய அறங்களைப் பற்றிய அதிகாரங்கள் சமண மதச் சிந்தனைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன என்று கூறும் சுவெலபில், கடவுளுக்கு வள்ளுவர் தரும் அடைமொழிகளும் அருள்சார்ந்த அறங்களுக்கு அவர் தரும் முக்கியத்துவமும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றன என்று விளக்குகிறார். வள்ளுவர் தமக்கு முந்தைய தமிழ், வடமொழி ஆகிய இரு இலக்கிய அறிவினையும் சாலப்பெற்றவராகவும் "சிறந்தவற்றை மட்டும் தேரும் சிந்தையுள்ள ஒரு கற்றறிந்த சமண அறிஞராகவும்" இருந்திருக்கக்கூடும் என்பது சுவெலபில்லின் கருத்து. ஜைன மரபானது திருக்குறளைத் தமிழ் நிலத்தில் ஏலாச்சாரியார் என்றும் அழைக்கப்படும் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பொ.ஊ. முதல் நூற்றாண்டின் முந்தைய பாதியிலும் வாழ்ந்த தென் பாடலிப்புத்திர திராவிட சங்கத்தின் தலைவரும் ஜைன ஆச்சாரியருமான குந்தகுந்த ஆச்சாரியருடன் தொடர்புபடுத்துகிறது என்று ஏ. சக்ரவர்த்தி நைனார் கூறுகிறார். எனினும் பண்டைய திகம்பர சமண நூல்களிலோ சுவேதம்பர சமண நூல்களிலோ வள்ளுவரைப் பற்றியோ குறளைப் பற்றியோ எந்த ஒரு குறிப்பினையும் காணமுடிவதில்லை. இந்து சமய பக்தி இலக்கியங்களில் சுமார் 8-ம் நூற்றாண்டு வாக்கில் வள்ளுவரும் குறளும் குறிப்பிடப்படுகையில் சமண நூல்களில் வள்ளுவர் முதன்முதலாகக் குறிப்பிடப்படுவது 16-ம் நூற்றாண்டில்தான். வள்ளுவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பார் என்ற கருத்தும் அறிஞர்களிடையே சம அளவில் இருந்து வருகிறது. குறளில் காணப்படும் போதனைகள் பலவும் இந்து தர்ம நூல்களில் காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டுகின்றனர். அறம், பொருள், இன்பம் என்ற வீடுபேறினை நோக்கிய குறளின் பகுப்புமுறைகள் முறையே இந்து தர்ம புருஷார்த்த பகுப்பு முறையின் முதல் மூன்றின் அடிப்படையில் அமைந்திருப்பதும், அகிம்சையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட குறளானது பொருட்பாலில் இந்து தர்ம நூல்களில் ஒன்றான அர்த்தசாஸ்த்திரத்தினை ஒத்ததாய் அரசியல் மற்றும் போர்முறைகளைக் கூறியிருப்பதும் அவர்கள் காட்டும் சான்றுகளில் சில. தனிமனிதனாகத் தன் அன்றாட வாழ்வில் கொல்லாமையைக் கடைப்பிடித்த பின்னரே ஒருவனுக்குப் படைவீரனாகப் போரில் கொல்லும் விதிவிலக்கு அளிக்கப்படுவதும் மன்னனாக ஒருவன் அரியணையில் அமர்ந்த பின்னரே குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிக்கும் உரிமை அவனுக்கு வழங்கப்படுவதும் இந்து தர்ம முறையினை வலியுறுத்துகிறது. வள்ளுவர் குறட்பாக்கள் 610 மற்றும் 1103-களில் திருமாலைக் குறிப்பிடுவதும் குறட்பாக்கள் 167, 408, 519, 565, 568, 616, மற்றும் 617-களில் இலக்குமியைக் குறிப்பிடுவதும் வைணவ தத்துவங்களைக் குறிக்கின்றன. இந்து சமயத்திலிருந்து தோன்றிய சுமார் 24 வெவ்வேறு தொடர்களை குறள் முழுவதும் குறைந்தபட்சம் 29 இடங்களில் வள்ளுவர் எடுத்தாண்டிருப்பதை பி. ரா. நடராசன் பட்டியலிடுகிறார். தருக்க ரீதியான முறையில் குறளை அலசினால் வள்ளுவர் இந்து என்பதும் அவர் சமணரல்லர் என்பதும் புலப்படும் என்று பிராமணீய மறுப்பு அறிஞரான பூர்ணலிங்கம் பிள்ளை கூறுகிறார். வள்ளுவர் தென்னிந்திய சைவ மரபினைச் சேர்ந்தவர் என்று மாத்தேயு ரிக்கா கருதுகிறார். குறளானது அத்வைத்த வேதாந்த மெய்யியலை ஒத்து இருப்பதாக தென்னக மக்கள் போற்றுவதாகவும் அது அத்வைத்த வாழ்வு முறையினை போதிப்பதாகவும் தென்னிந்தாவில் வசித்த இறையியல் அறிஞரான தாமஸ் மன்னினேசாத் கருதுகிறார். அறிஞர்களுக்கிடையில் இவ்வளவு கருத்து வேறுபாடு இருப்பினும், வள்ளுவர் தனது சார்பற்ற தன்மையினாலும் அனைவருக்குமான பொது அறங்களைக் கூறுவதனாலும் அனைத்து சாராராலும் பெரிதும் போற்றப்படுகிறார். அனைத்து நூல்களிலும் காணப்படும் அனைத்து சிறந்த அறங்களையும் தேர்ந்தெடுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொதுப்படையாக வழங்கும் தனது இயல்புக்காக பரிமேலழகர் உள்ளிட்ட அறிஞர்களால் வள்ளுவர் பெரிதும் பாராட்டப்படுகிறார். அவரது நூலான குறள் "உலகப் பொதுமறை" என்று வழங்கப்படுகிறது. உள்ளடக்கம் திருக்குறள் 133 அதிகாரங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்திற்குப் பத்து குறட்பாக்கள் வீதம் மொத்தம் 1,330 குறட்பாக்களைக் கொண்டது. அனைத்துப் பாக்களும் குறள் வெண்பா வகையில் அமைக்கப்பட்டதாகும். மேலும் ஒவ்வொரு அதிகாரத்தின் பத்துப் பாக்களும் அவ்வதிகாரத்தின் கருப்பொருளாக விளங்கும் அறநெறியினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. இந்நூல் மூன்று பகுதிகளாக அல்லது "பால்களாகப்" பகுக்கப்பட்டுள்ளது: முதற் பால்—அறம்: ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றியும் யோக தத்துவத்தைப் பற்றியும் கூறுவது (அதிகாரங்கள் 1–38) இரண்டாம் பால்—பொருள்: ஒருவர் தன் சமூக வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களை, அதாவது சமூகம், பொருளாதாரம், அரசியல், மற்றும் நிருவாகம் ஆகிய விழுமியங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 39–108) மூன்றாம் பால்—காமம்/இன்பம்: ஒருவர் தன் அகவாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 109–133) அறத்துப்பாலில் 380 பாக்களும், பொருட்பாலில் 700 பாக்களும், காமம் அல்லது இன்பத்துப்பாலில் 250 பாக்களும் உள்ளன. ஒவ்வொரு பா அல்லது குறளும் சரியாக ஏழு சொற்களைக் கொண்டது. இச்சொற்கள் சீர்கள் என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறளும் முதல் வரியில் நான்கு சீர்களும் இரண்டாவது வரியில் மூன்று சீர்களும் பெற்றிருக்கும். ஒரு சீர் என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களின் கூட்டுச்சொல். எடுத்துக்காட்டாக, "திருக்குறள்" என்ற சொல் "திரு" மற்றும் "குறள்" என்ற இரண்டு சொற்களை இணைப்பதன் மூலம் உருவாகும் ஒரு சீராகும். திருக்குறளை மொத்தம் 9,310 சீர்கள் அல்லது 14,000 சொற்களைக் கொண்டு வள்ளுவர் பாடியுள்ளார். இவற்றில் ஏறத்தாழ 50 சொற்கள் வடமொழிச் சொற்களாகவும் மீதமுள்ள அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களுமாகும். திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மிகச் சிறிய குறட்பாக்கள் (குறள் 833 மற்றும் 1304) 23 எழுத்துக்களைக் கொண்டதாகவும், மிக நீளமான குறட்பாக்கள் (குறள் 957 மற்றும் 1246) 39 எழுத்துக்களைக் கொண்டதாகவும் உள்ளன. மொத்தமுள்ள 133 அதிகாரங்களில் 339 எழுத்துக்களைக் கொண்டு ஐந்தாவது அதிகாரம் மிக நீளமான அதிகாரமாகவும் 280 எழுத்துக்களுடன் 124-வது அதிகாரம் மிகச் சிறிய அதிகாரமாகவும் விளங்குகின்றன. இந்நூலிலுள்ள 1,330 குறள்களில் முதல் 40 குறள்கள் கடவுள், மழை, சான்றோரது பெருமை மற்றும் அறத்தின் பெருமை ஆகியவற்றையும், அடுத்த 340 குறள்கள் அன்றாட தனிமனித அடிப்படை நல்லொழுக்க அறங்களைப் பற்றியும், அடுத்த 250 குறள்கள் ஆட்சியாளரின் ஒழுக்கங்கள் குறித்த அறங்களைப் பற்றியும்; அடுத்த 100 குறள்கள் அமைச்சர்களின் அறங்களைப் பற்றியும், அடுத்த 220 குறள்கள் நிர்வாக அறங்களைப் பற்றியும், அடுத்த 130 குறள்கள் நேர்மறை மற்றும் எதிர்மறையான சமூக ஒழுக்கங்கள் குறித்த அறங்களைப் பற்றியும், கடைசி 250 குறள்கள் இன்ப வாழ்வு குறித்த அறங்களைப் பற்றியும் பேசுகின்றன. பகவத் கீதை உள்ளிட்ட இந்திய அறிவாய்வியல் மற்றும் மீவியற்பியல் ஆகியவற்றின் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகத் திருக்குறள் கருதப்படுகிறது. குறளின் பகுப்பு முறை தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நான்கு வாழ்வியல் நோக்கங்களை உள்ளடக்கிய பண்டைய இந்திய தத்துவமான "புருஷார்த்தத் தத்துவத்தின்" முதல் மூன்றினை முறையே அறம், பொருள், இன்பம் எனப் பிரதிபலிப்பதாக உள்ளது. நான்காவது நோக்கமான மோட்சம் அல்லது வீடுபேறு குறளில் வெளிப்படையாகக் கூறப்படாமல் அறத்துப்பாலின் கடைசி ஐந்து அதிகாரங்களில் உள்ளார்ந்து வைக்கப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் கூறுகள் தமிழ் இலக்கிய மரபின் அகம், புறம் என இருவகைகளின் பாற்படும் என்பது தொல்காப்பியத்தின் கூற்று. தர்மம் அல்லது அறம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகளையும், அர்த்தம் அல்லது பொருள் என்பது அறத்தால் வழிநடத்தப்பட்ட முறையில் பெறப்படும் செல்வத்தையும், காமம் அல்லது இன்பம் என்பது அறத்தின் வழிநடத்தலால் நிறைவேற்றப்படும் ஆசைகளையும் குறிக்கின்றன என்று சர்மா கூறுகிறார். பொருளும் இன்பமும் நாடப்பட வேண்டியவைதான் என்றாலும் இவை இரண்டும் அறத்தின் வாயிலாக மட்டுமே நாடப்படுபவையாக இருத்தல் வேண்டும் என்கிறார் அருணாதேவி. இவ்வாறே, குறளானது தர்மமும் அர்த்தமும் பிரிக்கப்படக் கூடாதவை என்று கூறுகிறது என்று அமலாதாஸ் கூறுகிறார். இந்தியத் தத்துவ மரபின்படி, செல்வமும் உடமைகளும் முற்றிலுமாகத் துறக்கப்படவோ அல்லது பற்றற்ற விழிப்புணர்வோடு நாடப்படவோ வேண்டும். அப்படி நாடப்படும் பட்சத்தில் ஒருவர் அவற்றோடு பிணைப்பின்றி இருக்க வேண்டும். இன்பமானது உணர்வுப்பூர்வமாகவும் யாருக்கும் தீங்கு விளைவிக்காத வண்ணமும் நாடப்படுதல் வேண்டும். பொருளிற்கும் இன்பத்திற்கும் இடையில் இயல்பாகவே ஒரு உள்ளார்ந்த பதற்றம் இருப்பதாக இந்திய தத்துவங்கள் கூறுகின்றன. ஆகவே, இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு பொருளும் இன்பமும் "பற்றற்ற மனதுடன்" (நிஷ்காம கர்மா) அவற்றிற்கு ஏங்காது அடையப்படுதல் வேண்டும் என்று இந்திய மரபு கூறுகிறது. அறத்துப்பாலின் கடைசி ஐந்து அதிகாரங்கள் இவற்றை வலியுறுத்துவதாக உள்ளன. அறத்துப்பால் (1-38) 1. கடவுள் வாழ்த்து 2. வான் சிறப்பு 3. நீத்தார் பெருமை 4. அறன் வலியுறுத்தல் 5. இல்வாழ்க்கை 6. வாழ்க்கைத் துணைநலம் 7. மக்கட்பேறு 8. அன்புடைமை 9. விருந்தோம்பல் 10. இனியவை கூறல் 11. செய்ந்நன்றி அறிதல் 12. நடுவுநிலைமை 13. அடக்கம் உடைமை 14. ஒழுக்கம் உடைமை 15. பிறன் இல் விழையாமை 16. பொறை உடைமை 17. அழுக்காறாமை 18. வெஃகாமை 19. புறங்கூறாமை 20. பயனில சொல்லாமை 21. தீவினை அச்சம் 22. ஒப்புரவு அறிதல் 23. ஈகை 24. புகழ் 25. அருள் உடைமை 26. புலால் மறுத்தல் 27. தவம் 28. கூடா ஒழுக்கம் 29. கள்ளாமை 30. வாய்மை 31. வெகுளாமை 32. இன்னா செய்யாமை 33. கொல்லாமை 34. நிலையாமை 35. துறவு 36. மெய் உணர்தல் 37. அவா அறுத்தல் 38. ஊழ் பொருட்பால் (39-108) 39. இறைமாட்சி 40. கல்வி 41. கல்லாமை 42. கேள்வி 43. அறிவுடைமை 44. குற்றம் கடிதல் 45. பெரியாரைத் துணைக்கோடல் 46. சிற்றினம் சேராமை 47. தெரிந்து செயல்வகை 48. வலி அறிதல் 49. காலம் அறிதல் 50. இடன் அறிதல் 51. தெரிந்து தெளிதல் 52. தெரிந்து வினையாடல் 53. சுற்றம் தழால் 54. பொச்சாவாமை 55. செங்கோன்மை 56. கொடுங்கோன்மை 57. வெருவந்த செய்யாமை 58. கண்ணோட்டம் 59. ஒற்றாடல் 60. ஊக்கம் உடைமை 61. மடி இன்மை 62. ஆள்வினை உடைமை 63. இடுக்கண் அழியாமை 64. அமைச்சு 65. சொல்வன்மை 66. வினைத்தூய்மை 67. வினைத்திட்பம் 68. வினை செயல்வகை 69. தூது 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் 71. குறிப்பு அறிதல் 72. அவை அறிதல் 73. அவை அஞ்சாமை 74. நாடு 75. அரண் 76. பொருள் செயல்வகை 77. படைமாட்சி 78. படைச்செருக்கு 79. நட்பு 80. நட்பு ஆராய்தல் 81. பழைமை 82. தீ நட்பு 83. கூடா நட்பு 84. பேதைமை 85. புல்லறிவாண்மை 86. இகல் 87. பகை மாட்சி 88. பகைத்திறம் தெரிதல் 89. உட்பகை 90. பெரியாரைப் பிழையாமை 91. பெண்வழிச் சேறல் 92. வரைவில் மகளிர் 93. கள் உண்ணாமை 94. சூது 95. மருந்து 96. குடிமை 97. மானம் 98. பெருமை 99. சான்றாண்மை 100. பண்புடைமை 101. நன்றியில் செல்வம் 102. நாண் உடைமை 103. குடி செயல்வகை 104. உழவு 105. நல்குரவு 106. இரவு 107. இரவச்சம் 108. கயமை இன்பத்துப்பால் (109-133) 109. தகையணங்குறுத்தல் 110. குறிப்பறிதல் 111. புணர்ச்சி மகிழ்தல் 112. நலம் புனைந்து உரைத்தல் 113. காதற் சிறப்பு உரைத்தல் 114. நாணுத் துறவு உரைத்தல் 115. அலர் அறிவுறுத்தல் 116. பிரிவாற்றாமை 117. படர் மெலிந்து இரங்கல் 118. கண் விதுப்பு அழிதல் 119. பசப்பு உறு பருவரல் 120. தனிப்படர் மிகுதி 121. நினைந்தவர் புலம்பல் 122. கனவு நிலை உரைத்தல் 123. பொழுது கண்டு இரங்கல் 124. உறுப்பு நலன் அழிதல் 125. நெஞ்சொடு கிளத்தல் 126. நிறை அழிதல் 127. அவர் வயின் விதும்பல் 128. குறிப்பு அறிவுறுத்தல் 129. புணர்ச்சி விதும்பல் 130. நெஞ்சொடு புலத்தல் 131. புலவி 132. புலவி நுணுக்கம் 133. ஊடல் உவகை நூலின் கட்டமைப்பு திருக்குறள் ஒரு தனி ஆசிரியரின் படைப்பாகும். இக்கூற்றை நிரூபிக்கும் வகையில் இந்நூலானது “ஒரு நிலையான மொழியமைப்பையும் முறையான கட்டமைப்பையும் சீரான பொருளமைப்பையும் கொண்டுள்ளது” என்று சுவெலபில் கூறுகிறார். குறள் பலரால் இயற்றப்பட்ட ஒரு தொகுப்பு நூல் அன்று என்றும் அதன் உள்ளடக்கத்தில் எந்த ஒரு பிற்சேர்க்கைகளும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். இந்நூலினை மூன்று பால்களாகப் பகுத்தது இதன் ஆசிரியரே ஆகும். ஆனால் குறளின் உரைகளில் காணப்படும் துணைப்பிரிவுகளான "இயல்" பாகுபாடுகள் பின்னர் வந்த உரையாசிரியர்களால் செய்யப்பட்டவை. குறளுரைகளில் இயல் பாகுபாடுகள் உரைக்கு உரை வேறுபட்டிருப்பதும் அதிகாரங்கள் இயல் விட்டு இயல் மாறி அமைந்துள்ளதுமே இதற்குச் சான்றுகளாகும். எடுத்துக்காட்டாக, பரிமேலழகரின் உரையில் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ள இயல் பிரிவுகள் மணக்குடவரின் உரையிலிருந்து பெரிதும் மாறுபடுகின்றன: அதிகாரங்கள் 1–4: பாயிரம் அதிகாரங்கள் 5–24: இல்லறவியல் அதிகாரங்கள் 25–38: துறவறவியல் அதிகாரங்கள் 39–63: அரசியல் அதிகாரங்கள் 64–95: அங்கவியல் அதிகாரங்கள் 96–108: ஒழிபியல் அதிகாரங்கள் 109–115: களவியல் அதிகாரங்கள் 116–133: கற்பியல் இவ்வாறு இயல் பாகுபாடுகள் பிற்காலச் சேர்க்கைகளாகவே அறியப்பட்டாலும், குறட்பாக்கள் அனைத்தும் பலதரப்பட்ட உரைகளுக்கிடையிலும் பிற்சேர்க்கைகள் ஏதுமின்றி அவற்றின் உண்மை வடிவம் மாறாது பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அறத்துப்பாலிலுள்ள அதிகாரங்கள் இல்லறம், துறவறம் என இரு இயல்களாக இடைக்கால உரையாசிரியர்களால் பகுக்கப்பட்டாலும், இவை நூலாசிரியரது பகுப்பன்று என்பதால் அவற்றில் இருக்கும் அனைத்துமே நூலாசிரியரால் இல்லறத்தானுக்கு அல்லது சாமானியனுக்குச் சொல்லப்பட்டவை தான் என்பது புலப்படுகிறது. "ஒரு மனிதன் பல நிலைகளில் மகனாக, தந்தையாக, கணவனாக, நண்பனாக, குடிமகனாக ஆற்ற வேண்டிய கடமைகளை திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்" என்று தாய்வானிய அறிஞர் யூசி கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. குறளில் உள்ள "துறவறம்" என்பது இல்லற வாழ்க்கையைக் கைவிட்டுத் துறவறம் மேற்கொள்வதைக் குறிப்பதோ துறவிகளுக்காகக் கூறப்பட்டவையோ அல்ல. மாறாக, தனிநபர் ஒவ்வொருவரும் தனது அளவற்ற ஆசைகளைக் கைவிடுவதையும் அறநெறி பிறழாது சுயக்கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதையுமே "துறவற" அதிகாரங்கள் கூறுகின்றன என்று ஏ. கோபாலகிருட்டிணன் நிறுவுகிறார். சிரக்கியூஸ் பல்கலைக்கழக சமயவியல் பேராசிரியரான ஜோஅன் பன்ஸோ வாக்ஹார்ன் குறளை "ஒரு இல்லறத்தானுக்குக் கூறப்பட்ட அறவழி வாழ்வுக்கான பிரசங்கம்" என்று கூறுகிறார். முப்பால் எனும் பகுப்பைப் போல் குறள்களை அதிகாரங்களாகத் தொகுத்ததும் நூலாசிரியர் தான். இயல் பகுப்புகளையும் அதிகார வைப்புமுறையினையும் மட்டுமே உரையாசிரியர்கள் மாற்றியுள்ளனர். ஒவ்வொரு அறத்தையும் பத்துக் குறட்பாக்களாகப் பாடி அவற்றின் தொகுப்பினை அதிகாரம் என்று பெயரிட்டாளும் மரபு வள்ளுவரிடம் காணப்படுவதாகவும் ஒவ்வோரதிகாரத்திற்கும் தலைப்பினை அவரே வழங்கியுள்ளார் என்றும் சோ. ந. கந்தசாமி கூறுகிறார். மேலும் அந்தந்த அதிகாரத்தில் பொதிந்துள்ள குறட்பாக்களில் பயின்றுவரும் தொடரினையே பெரிதும் பேணி அதிகாரத் தலைப்பாக வள்ளுவர் அமைத்துள்ளதாகவும் அவர் உரைக்கிறார். இதற்கு விதிவிலக்காக ஒவ்வொரு பால்களிலும் ஓர் அதிகாரம் உண்டு: அறத்துப்பாலில் வரும் "கடவுள் வாழ்த்து" அதிகாரமும் (முதல் அதிகாரம்), பொருட்பாலில் வரும் "படைச் செருக்கு" அதிகாரமும் (78-ம் அதிகாரம்), காமத்துப்பாலில் வரும் "படர்மெலிந்திரங்கல்" அதிகாரமும் (117-வது அதிகாரம்) அவற்றில் வரும் குறள்களில் பயின்றுவராத சொல்லை அதிகாரத் தலைப்பாகக் கொண்டுள்ளன. இவ்வாறு முரணாக இருப்பினும் இவையனைத்துமே வள்ளுவரால் சூட்டப்பட்ட பெயர்களேயாம். குறளின் முதலதிகாரத்தின் தலைப்பு தொல்காப்பிய மரபின் வழியே சூட்டப்பட்டதென்றே கந்தசாமி துணிகிறார். சுவெலபிலின் கூற்றுப்படி குறளானது ஐயத்திற்கிடமின்றிச் சீரான அமைப்போடும் கவனத்தோடும் இயற்றப்பட்ட ஒரு நூலாகும். கருத்துகளில் இடைவெளியோ வெற்றிடமோ இன்றிக் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் தத்தம் அதிகாரத்தினின்று பிரித்தெடுக்க இயலா வண்ணம் கோர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். ஒவ்வொரு குறட்பாவும் அமைவுப் பொருள், மூதுரைப் பொருள் என இரு வகையான பொருட்களைத் தரவல்லது. குறட்பாக்களை அவை பயின்றுவரும் அதிகாரத்திலிருந்து தனியே நீக்கிப் பார்த்தால் அவை தங்களது அமைவுப் பொருளை இழந்து, தங்களுக்கே உரிய மூதுரைப் பொருளை மட்டும் தந்து ஒரு தனிப் பழமொழி போல் ஒலிக்கவல்லவை. தனித்து நிற்கையில் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் குறுகிய வெண்பாக்களுக்கே உரிய அனைத்து இலக்கணங்களையும் வெவ்வேறு வகைகளில் கொண்ட நன்னெறிப் பாக்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன. அதிகாரங்களுக்குள் பயின்று வருகையில் குறட்பாக்கள் தங்களது இயல்பான மூதுரைப் பொருளோடு தாங்களிருக்கும் அதிகார அமைப்பின் வழி வரும் அமைவுப் பொருளையும் சேர்த்து உரைத்து நூலாசிரியரின் உள்ளப்பாங்கினை வெளிப்படுத்துவதாய் அமைகின்றன. இவ்வகையில் குறள்கள் வெறும் நீதிக்கருத்துகளைக் கூறும் தனிப்பாக்களாக மட்டும் இருந்துவிடாமல் நூல்முழுதும் இழைந்தோடும் அடிப்படை அறத்தின் ஆழ்பொருளை முழுமையாக அகழ்ந்தெடுத்துத் தரும் பாக்களாக உருமாறுகின்றன. இவ்வகையில் நூலின் நடையானது ஒரு முழுமையற்ற மனிதனை அறங்கள் கொண்டு செதுக்கி அவனை உணர்வு, சிந்தனை, சொல், செயல் என அனைத்து அளவிலும் அகவாழ்விலும் தினசரி வாழ்விலும் அறம் பிறழாத நல்ல இல்லறத்தானாகவும் புற வாழ்வில் சிறந்த குடிமகனாகவும் மாற்றுகிறது என்கிறார் சுவெலபில். இலக்கிய அளவில், திருக்குறள் நடைமுறை அறநெறிக் கருத்துகளைச் செய்யுள் வடிவில் சுருக்கமாகவும், நேர்த்தியாகவும், தெளிவாகவும், வலுவுடனும் அனைவரும் ஏற்குமாறும் தரும் ஒரு நூலாகும். இந்நூல் முழுவதும் வள்ளுவர் செய்யுளின் அழகு, ஓசைநயம், கூறல் முறை போன்றவற்றில் கவனம் செலுத்தாது கூறவந்த அறத்திற்கே முழுமையாக முக்கியத்துவம் தந்திருப்பது நோக்கத்தக்கது. இயல் பாகுபாடுகள் வள்ளுவர் முப்பாலாக மட்டுமே இயற்றிய நூலினை உரையாசிரியர்கள் இயல்களாகப் பல்வேறு வகையில் பகுத்துள்ளனர். இதன் விளைவாகக் குறளின் அதிகாரங்களின் வாிசை உரையாசிரியர்களால் பலவாறு மாற்றப்பட்டுள்ளன. அறத்துப்பாலினைச் சிறுமேதாவியார் "பாயிரம்," "அறம்", "ஊழ்" என்று மூன்று இயல்களாகவும், பரிமேலழகர் முதலானோர் "பாயிரம்," "இல்லறம்," "துறவறம்" என மூன்று இயல்களாகவும் ஏனையோர் "பாயிரம்," "இல்லறம்," "துறவறம்," "ஊழ்" என நான்கு இயல்களாகவும் பிரித்துள்ளனர். பொருட்பாலினை உரையாசிரியர்கள் மூன்று முதல் ஆறு இயல்களாகப் பிரித்துள்ளனர். பரிமேலழகர் "அரசியல்," "அங்கவியல்," "ஒழிபியல்" என மூன்றாகப் பகுக்கையில் ஏனையோர் ஆறு இயல்கள் வரைப் பகுத்துள்ளனர். காமத்துப்பாலினை உரையாசிரியர்கள் இரண்டு முதல் ஐந்து இயல்களாகப் பகுத்துள்ளனர். பரிமேலழகர் "களவியல்," "கற்பியல்" என இரண்டாகவும், காலிங்கர், பரிப்பெருமாள், மோசிகீரனார் முதலானோர் "ஆண்பால் கூற்று," "பெண்பால் கூற்று," "இருபாலர் கூற்று" என மூன்றாகவும், மணக்குடவர் "குறிஞ்சி," "முல்லை," "மருதம்," "நெய்தல்," "பாலை" என ஐந்தாகவும் பகுத்துள்ளனர். இப்பகுப்புகள் யாவும் நூலாசிரியரதன்று என்பதால் இவை உரைக்கு உரை பெரிதும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கின்றன. இன்றைய அறிஞர்களும் பதிப்பகத்தார்களும் பெரும்பாலும் பரிமேலழகரின் பகுப்பு முறையினைத் தழுவியே உரைகளை வெளியிடுவதால் அதிகார அமைப்பும், இயல் பாகுபாடும், குறள் வரிசைகளும் பரிமேலழகரைத் தழுவியே பெரிதும் பின்பற்றப்படுகின்றன. நூலின் சாரம் குறள் ஒரு நடைமுறை அறவழி வாழ்வுக்கான படைப்பாகும். அஃது ஒரு மனிதனுக்கு இந்த உலகோடும் அதில் வாழும் பல்லுயிரோடும் உள்ள அறவழித் தொடர்பினைக் கூறும் நோக்குடன் எழுதப்பட்ட ஒரு நூல். ஆகச்சிறந்த ஒரு அறநூலாக இருந்தாலும், கவிநயம் மிக்க ஒரு படைப்பாக இது இயற்றப்படவில்லை. ஒரு சிறந்த செய்யுள் நூலாகவோ படைப்பிலக்கியமாகவோ திகழும் நோக்கோடு இந்நூல் எழுதப்படவில்லை என்றும் இந்நூலில் கவிரசம் ததும்பும் இடங்கள் ஏதேனும் உண்டென்றால் அவற்றைக் காமத்துப்பாலில் மட்டுமே பார்க்கமுடியும் என்றும் சுவெலபில் கூறுகிறார். இவ்வாறு நூலின் அழகையோ பாநயத்தையோ விடுத்து அறங்களை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டும் வழக்கிலிருந்தே வள்ளுவரின் நோக்கம் ஒரு சிறந்த அறநூலினைப் படைப்பது தானேயன்றிச் சிறந்த இலக்கியப் படைப்பினை நல்குவதன்று என்பது புலப்படுகிறது. தமிழ் மரபிற்கிணங்க கடவுள் வாழ்த்தைக் கொண்டு நூலினைத் தொடங்கும் வள்ளுவர், அதன் பின்னர் அனைத்துயிருக்கும் அமிழ்தமாய்த் திகழும் மழையின் பெருமையையும் சான்றாண்மையும் அறமும் பிறழாத சான்றோரது பெருமையையும் கூறிவிட்டு அதன் பின் நூலின் மையக் கருத்தான அறத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பின்னரே தனிமனித அறங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் போதிக்கத் தொடங்குகிறார். அறமானது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வலியுறுத்தப்பட்டு அதோடு ஊழ்வினை என்பதும் விளக்கப்படுகிறது. மானிட சமூகத்தின் மிக அடிப்படைத் தொழிலாக உழவினைப் பொருட்பாலில் வலியுறுத்தும் வள்ளுவர், இதன் காரணமாகவே உழவிற்கு அச்சாணியாகத் திகழும் மழையினைக் கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்துத் தொழுவது இங்கு நோக்கத்தக்க ஒன்றாகும். முழுவதும் அறத்தை மையமாக வைத்தே இயற்றப்பட்டதால் திருக்குறள் "அறம்" என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. தனது காலத்தில் காணப்பட்ட மற்ற நூல்கள் இன்னவர்க்கு இன்ன அறம் என்று அறத்தைப் பிரித்துக் கூற முற்படுகையில், வள்ளுவர் மட்டும் "அறம் அனைவருக்கும் பொது" என்று மாறுபாடின்றிக் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை பல்லக்கினைச் சுமப்பவனாயினும் அதில் அமர்ந்து பயணிப்பவனாயினும் இருவருக்கும் அறம் ஒன்றே என்கிறார் விஷ்வேஷ்வரன். பலனுக்காக அன்றி அறம் செய்யும் நோக்குடன் மட்டுமே அறம் செய்தல் வேண்டும் என்று தனது நூல் முழுவதும் வள்ளுவர் வலியுறுத்துவதாகச் சுவைட்சர் கூறுகிறார். வள்ளுவர் அறத்தைப் பற்றிப் பேசும்போது அவற்றை சாதி அடிப்படையிலான கடமைகளாக அன்றி பொது நன்மைகளாகவும் அரசியலைப் பற்றிப் பேசும்போது அதை அரசனுக்குக் கூறாமல் ஒரு தனிமனிதனுக்குக் கூறுவதாகவும் ஜப்பானிய இந்தியவியலாளரான தகனோபு தகாஹஷி தனது 1999 ஆம் ஆண்டைய படைப்பில் குறிப்பிடுகிறார். இந்த நோக்குடனேயே குறளானது அடிப்படை அறங்களை முதற்பாலிலும், சமூக அரசியல் அறங்களை இரண்டாம் பாலிலும், அக உணர்வுகளைக் கவிதைகளாக மூன்றாம் பாலிலும் கொண்டு திகழ்கிறது. அளவில் முதற்பாலைவிட இரு மடங்காகவும், மூன்றாமதை விட மும்மடங்காகவும் இயற்றப்பட்டுள்ள இந்நூலின் இரண்டாம் பாலானது இராஜதந்திரங்களை உரைக்கும் இடங்களில் கூட சற்றும் அறம் பிறழாது அவற்றை உரைப்பது அறத்திற்கு இந்நூலாசிரியர் தரும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது. வள்ளுவரது காலத்திற்கு முன்பு வரை இயற்றப்பட்ட சங்க இலக்கியங்கள் யாவும் புலால் உண்ணுதல், கள் அருந்துதல், பலதார மணம், மற்றும் பரத்தையரோடு கூடுதல் என்னும் நான்கு ஒழுக்கக்கேடுகளையும் குற்றங்களாகக் கருதாது அவற்றை ஏற்றும் போற்றியும் பாடி வந்தன. தமிழரிடையே காணப்பட்ட இக்குற்றங்களை வள்ளுவர் தனது நூலின் வாயிலாக முற்றிலுமாக எதிர்த்து மக்களுக்கு நல்வழி புகட்டினார். இவற்றோடு சூதாட்டத்தையும் குறள் எதிர்க்கத் தவறவில்லை. அதுமட்டுமல்ல, தமிழக வரலாற்றில் பண்பாட்டுக்கு முரண்பட்ட இம்மறச் செயல்களை முதன்முறையாக மறுத்த நூல் திருக்குறள் என்பது குறிப்பிடத்தக்கது. குறளானது அகிம்சை என்னும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். "குறள் கொல்லாமையையும் இன்னா செய்யாமையையும் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறது" என்று சுவைட்சர் தனது நூலில் குறிப்பிடுகிறார். அதன்படியே வள்ளுவர் இல்லறத்தானை அருட்குணத்தோடு திகழவேண்டும் என்று வலியுறுத்தி ஒவ்வொரு தனிமனிதனையும் புலால் மறுக்கச் சொல்லிக் கட்டளையிடுகிறார். குறள் கூறும் தனிநபர் அடிப்படை அறங்களில் மிக முக்கியமானவையாக கொல்லாமையும் வாய்மையும் திகழ்கின்றன. விவிலியமும் மற்ற ஆபிரகாமிய நூல்களும் மனித உயிரைப் பறிப்பதை மட்டுமே கண்டிக்கையில், குறள் மனிதன், விலங்கு என்று வேறுபாடின்றி "எவ்வுயிரையும் கொல்லாமை வேண்டும்" என்று வலியுறுத்துகிறது. வள்ளுவர் வன்மையாக எதிர்க்கும் ஒழுக்கக்கேடுகளில் செய்ந்நன்றி மறத்தலும் புலால் உண்ணுதலும் முதன்மையானவை ஆகும். பி. எஸ். சுந்தரம் தனது நூலின் அறிமுகப் பகுதியில் "மற்ற மறங்களிலிருந்து தப்பித்தாலும் 'நன்றி மறத்தல்' என்ற மறத்திலிருந்து யாரும் தப்பிவிட முடியாது" என்றும், "'பிற விலங்கின் ஊனை உண்டு தனது ஊனை வளர்க்க ஒரு மனிதனுக்கு எப்படி மனம் வரும்?' என்பதே வள்ளுவரது வினா" என்றும் விளக்குகிறார். தலைவன்–தலைவிக்கு இடையே காணப்படும் அகப்பொருளைக் கூறும் காமத்துப்பாலில் கூட வள்ளுவரது அறம் இழைந்தோடுவது மிகவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்றும் இதுபோன்ற தன்மையே குறளை மற்ற அறநூல்களிலிருந்து வேறுபடுத்துகிறது என்றும் நல்லசாமி பிள்ளை கருதுகிறார். அறத்துப்பாலில் "பிறன்மனை நோக்காமை" என்ற அறத்தையுரைத்த வள்ளுவர் காமத்துப்பாலில் ஆசை நாயகிகள் எவரையும் நாடாது "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற மரபின் வழி நின்று தலைவியை மட்டும் நாடும் ஒரு தலைவனைச் சித்திரிப்பதன் வாயிலாகக் "காமத்துப்பாலைப் போன்ற கவிச்சுதந்திரம் மிக்க இடங்களில் கூட வள்ளுவரது அறம் சற்றும் தொய்வடையாமல் ஒலிப்பதே அவரது அறச்சிந்தனைக்கு ஒரு சான்று" என்று கோபாலகிருஷ்ண காந்தி நிறுவுகிறார். புறவாழ்வின் ஒழுக்கங்களைக் கூறும் பொருட்பாலில் போர்க்களத்து வெற்றியையும் வீரத்தின் பெருமையையும் போற்றும் நூலாசிரியர் அறத்தையும் நீதியையும் நிலைநாட்டும் பொருட்டு மட்டுமே மரணதண்டனையை விதிக்கும் உரிமையினை ஆட்சியாளனுக்கு வழங்குகிறார். குறள் வெறும் இரகசியம் மிகுந்த தத்துவங்களைப் போதிக்கும் நூலன்று என்றும் அஃது உலகியல் சார்ந்த நடைமுறைக் கோட்பாடுகளை நிறுவும் மெய்யியல் நூல் என்றும் கெளசிக் இராய் உரைக்கிறார். வள்ளுவர் தனது அரசியல் கோட்பாட்டினைப் படை, குடிமக்கள் (குடி), கையிருப்புப் பொருளாதாரம் (கூழ்), அமைச்சர்கள், நட்புவட்டம், அரண் ஆகிய ஆறு கருக்களைக் கொண்டு நிறுவுகிறார். பாதுகாப்பு அரண்களின் முக்கியத்துவத்தில் தொடங்கி எதிரியின் அரணைப் பற்றத் தேவையான முன்னேற்பாடுகள் வரை வள்ளுவரது பரிந்துரைகள் நீள்கின்றன. நாடாளும் ஒருவன் தனது படைகளோடு எப்பொழுதும் போருக்கு ஆயத்த நிலையில் இருக்கவேண்டுமென்பதையும் இடம், காலம், சூழல் ஆகியற்றை ஆராய்ந்து அறம் தாழ்ந்த எதிரி நாட்டை வீழ்த்தவேண்டுமென்பதையும் உரைக்கும் குறள், அறம் தவறாத நாடாயின் அஃது அரண் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டியது என்பதையும் வலியுறுத்துகிறது. படையின் சிறப்பினைக் கூறும் அதிகாரங்கள் அச்சம் தவிர்த்து அறத்தைக் காக்கும் பொருட்டு உயிர்த்துறக்கவும் முற்படும் படைவீரர்களைக் கொண்ட ஒழுங்குடன் நிறுவப்பட்ட படையே சிறந்த படை என்ற இந்துதர்மப் போராயத்த முறையினைப் பிரதிபலிப்பதாக உள்ளன. தனிமனிதருக்கு ஒழுக்கங்களைப் போதிக்கும் குறளானது மக்களாட்சியை வலியுறுத்தவில்லை. மாறாக ஆட்சியாளர் ஒருவர் தம் அமைச்சர்களோடு கலந்தாய்ந்து அறவழியில் நீதியினை நிலைநிறுத்தும் வகையில் நாடாள்வதன் மூலக்கூறுகளைக் குறள் உரைக்கிறது. நாடாள்பவர் ஒருவருக்குச் சட்டங்களை இயற்றல், செல்வங்களை ஈட்டல், மக்களையும் வளங்களையும் காத்தல், பொருளாதாரத்தை முறையாகப் பங்கீடு செய்தல் ஆகியவையே பிரதானத் தொழில்கள் எனக் குறள் கூறுகிறது. நீதி தவறாத ஆட்சி, நடுநிலை தவறாத நிலைப்பாடு, குடிகளைக் காக்கும் திறன், நீதியும் தண்டனையையும் தவறாது வழங்கும் மாண்பு முதலியன நாடாள்வோரின் கடமைகளாகும் என்கிறது வள்ளுவம். இதன் காரணமாகவே அறத்துப்பாலில் ஒவ்வொரு தனிமனிதனும் இடையறாது கடைபிடிக்க வேண்டிய அடிப்படை அறமாகக் கொல்லாமையை முதலில் வலியுறுத்திய பின்னரே பொருட்பாலில் மரணதண்டனை வழங்கும் அதிகாரத்தை நீதியினை நிலைநாட்டும் பொருட்டு மட்டும் அரசனுக்கு அளிக்கிறார் என்பது சிந்திக்கத்தக்கது. கூடவே கொடுங்கோண்மை, வெருவந்த செய்தல், அற்றாரைத் தேறுதல் போன்ற தீய செயல்களை நாடாள்வோர் தவிர்க்காவிடில் அவை அனைவருக்கும் துன்பத்தைத் தந்து செல்வத்தைக் கரைத்து அரசையே கலைத்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார். வணிகத்தைப் பற்றிக் கூறுகையில் குறள் மனசாட்சியுடனும் ஆத்மார்த்தமான சிந்தனையுடனுமான செயற்பாடுகளோடு கூடிய அற வழியில் நடத்தப்படும் வணிக முறையை மட்டுமே ஆதரிக்கிறது என்று ஆய்வுகள் துணிகின்றன. நூல் முழுவதும் அறங்களைக் குறிப்பாகக் கூறாது பொதுப்படையாகவே கூறுவதை வள்ளுவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒவ்வொரு மனிதனுக்கும் அறங்களின் அடிப்படையினை அறியவைப்பதன் வாயிலாகக் குறிப்பிட்ட சூழ்நிலை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட தீர்வை நல்காது அனைத்து சூழ்நிலைகளையும் அந்நபரால் கையாள இயலுமாறு பொதுப்படையாகவே போதிக்கிறார். வள்ளுவரது இந்த நிலைப்பாட்டினைக் குறள் முழுவதிலும் காணலாம். எடுத்துக்காட்டாகக் கடவுளை வழிபடுமாறு கூறும் வள்ளுவர், வழிபாட்டு முறையைப் பற்றிக் கூறுவதில்லை; கடவுளை "வாலறிவன்", "அந்தணன்", "ஆதிபகவன்", "எண்குணத்தான்", "தனக்குவமை இல்லாதான்", "பொறிவாயில் ஐந்தவித்தான்", "வேண்டுதல் வேண்டாமை இலான்", "மலர்மிசை ஏகினான்" என்றெல்லாம் அழைக்கும் ஆசிரியர், கடவுளின் பெயரை எங்கும் குறிப்பிடுவதில்லை; அறநூல்களையும் மறைநூல்களையும் குறிப்பிடும் வள்ளுவர், அவற்றை அவற்றின் பெயர் கொண்டு அழைப்பதில்லை; ஈகை வேண்டும் என்று வலியுறுத்தும் அவர், எவற்றையெல்லாம் தானமாகக் கொடுக்கவேண்டும் என்று உரைப்பதில்லை; கற்றல் வேண்டும் என்று கூறும் அவர், எவற்றைக் கற்க வேண்டும் என்று பட்டியலிடுவதில்லை; வரிகளைப் பரிந்துரைக்கும் அவர், மன்னன் மக்களிடமிருந்து எவ்வளவு தொகையை வரிப்பணமாகப் பெறவேண்டும் என்று குறிப்பிடுவதில்லை; அரசன், நிலம், நாடு எனக் குறிக்கும் அவர், எந்த ஒரு அரசனின் பெயரையோ நாட்டின் பெயரையோ குறிப்பதி்ல்லை. குறள் "உலகப் பொதுமறை" என்றும் வள்ளுவர் "பொதுப்புலவர்" என்றும் அழைக்கப்படுவதற்கு இவையே காரணங்களாக அமைகின்றன. உவமைகள், உருவகங்கள், முரண் தோற்றங்கள் உவமைகளுக்கும் உருவகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது அறங்களை வலியுறுத்தும் நோக்குடன் மட்டுமே வள்ளுவர் அவைகளைப் பயன்படுத்தியிருப்பதைக் குறள் முழுவதிலும் காணமுடிகிறது. ஓர் அதிகாரத்தில் நேர்மறையாகவோ புகழ்ந்தோ பயன்படுத்திய அதே உவமைகளையும் உருவகங்களையும் மற்றொரு அதிகாரத்தில் எதிர்மறையாகவோ இகழ்ந்தோ பயன்படுத்த அவர் தயங்குவதில்லை. இவ்வகையில் அறங்களை விளக்க முரண்போல் தோன்றும் கருத்துகளையும் வேண்டுமென்றே அவர் பல இடங்களில் பயன்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக, "கள்ளுண்ணாமை" அதிகாரத்தில் கள்ளின் தீமையை உரைக்கும் வள்ளுவர், "தகையணங்கு உறுத்தல்" அதிகாரத்தில் உள்ளன்பானது கள்ளைக் காட்டிலும் மகிழ்ச்சியைத் தரவல்லது (குறள் 1090) என்று உள்ளன்பின் மேன்மையை உரைக்கக் கள்ளை உவமையாகப் பயன்படுத்துகிறார். "செல்வத்துள் செல்வம் எது?" என்ற கேள்விக்கு "அருளுடைமை" அதிகாரத்தில் அருள் (குறள் 241) என்றும் "கேள்வி" அதிகாரத்தில் கேட்டல் (குறள் 411) என்றும் வள்ளுவர் பதிலுரைக்கிறார். பிற அறங்களைக் கைவிட நேர்ந்தாலும் எந்நிலையிலும் கைவிட முடியாத அறங்கள் என்று பிறன்மனை நோக்காமை (குறள் 150), புறங்கூறாமை (குறள் 181) வாய்மை (குறள் 297), என்று பலவற்றைச் சுட்டும் வள்ளுவர் முடிவாக வாய்மையைக் கூட இரண்டாம் நிலைக்குத் தள்ளி கொல்லாமைக்கு முடிசூட்டுகிறார் (குறள் 323). "ஊழ்" அதிகாரத்தில் தமக்குரிய ஒன்றை ஒருவர் நீக்க முயன்றாலும் நீங்காது (குறள் 376) என்றுரைக்கும் வள்ளுவர், "மடியின்மை" அதிகாரத்தில் தம் குடியோடு வந்த குற்றமும் மடி (சோம்பல்) நீங்கின் நீங்கும் (குறள் 609) என்கிறார். "மக்கட்செல்வம்" அதிகாரத்தில் ஒரு மனிதன் பெறக்கூடிய பெரும் பேறாகச் சான்றாண்மை மிக்க நன்மக்கட் செல்வங்களைக் கூறும் வள்ளுவர், "அடக்கமுடைமை" அதிகாரத்தில் அது தன்னடக்கத்தால் பெறப்படும் ஒன்று என்கிறார். முரண்போல் தோன்றும் இவ்விடங்களுக்கிடையிலுள்ள அறத்தொடர்பினை உரையாசிரியர்கள் பதின்மரில் தொடங்கி அதன் பின் வந்த பலரும் தங்களது உரைகளில் தெளிவுபடுத்தியுள்ளனர். குறட்பாக்கள் 380 மற்றும் 620, 481 மற்றும் 1028, 373 மற்றும் 396, 383 மற்றும் 672 ஆகியவற்றிற்கு இடையிலுள்ள அறத்தொடர்பினை பரிமேலழகர் தனது உரையில் தெளிவுபடுத்தியிருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். உரைகளும் மொழிபெயர்ப்புகளும் உரைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிகமாக அலசப்பட்ட நூலான திருக்குறள், கிட்டத்தட்டத் தமிழின் அனைத்து தலைசிறந்த அறிஞர்களாலும் கையாளப்பட்டு இவர்களுள் பலரால் ஏதோ ஒரு வகையில் உரையெழுதப்பட்ட நூல் என்ற பெருமையும் உடையது. குறட்பாக்களைத் தங்கள் பாக்களில் எடுத்தாண்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட பண்டைய தமிழிலக்கியங்கள் யாவும் குறளுக்குச் செய்யுள் வடிவில் எழுந்த முதல் உரைகள் என்று அறிஞர்களால் கருதப்படுகின்றன. உரைநடையில் குறளுக்கான பிரத்தியேக உரைகள் எழத் தொடங்கியது சுமார் 10-ம் நூற்றாண்டு வாக்கில்தான். 10-ம் நூற்றாண்டு தொடங்கி 13-ம் நூற்றாண்டு வரை இருந்த காலகட்டத்தில் குறைந்தபட்சம் பத்து அறிஞர்கள் குறளுக்கு முதன்முறையாக உரைநடை பாணியில் உரை வரைந்தனர். பதின்மர் என்றழைக்கப்படும் இவர்கள் மணக்குடவர், தருமர், தாமத்தர், நச்சர், பரிதியார், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர், மற்றும் பரிமேலழகர் முதலானோர் ஆவர். இவர்களில் மணக்குடவர், பரிதியார், காலிங்கர், பரிபெருமாள், பரிமேலழகர் ஆகியோரது உரைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. தருமர், தாமத்தர், நச்சர் ஆகியோரது உரைகளின் ஒரு சில பகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. திருமலையரது உரையும் மல்லரது உரையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பதின்மரது உரைகளின் வாயிலாகவே திருக்குறள் இன்று நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. பதின்மர் உரைகளில் சிறப்பாகக் கருதப்படுவது பரிமேலழகர், மணக்குடவர், மற்றும் காலிங்கர் ஆகியோரது உரைகள்தான். பதின்மருரைகளில் 900 குறட்பாக்களில் அறிஞர்கள் பாடபேதங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றுள் 217 இடங்கள் அறத்துப்பாலிலும், 487 இடங்கள் பொருட்பாலிலும், 196 இடங்கள் காமத்துப்பாலிலும் இடம்பெற்றிருக்கின்றன. குறளுரைகளில் வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்ததும் அறிஞர்களால் போற்றப்படுவதும் பரிமேலழகர் விருத்தியுரை ஆகும். இது பொ.ஊ. 1272-ம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வைணவ குலத்தைச் சேர்ந்த அறிஞரும் உரையாசிரியர்கள் பதின்மரில் கடையாக வாழ்ந்தவருமான பரிமேலழகரால் இயற்றப்பட்டது. குறளின் மூலத்திற்கு இணையாகப் பரவலாகப் பதிப்பிக்கப்பட்டு பயிலப்படும் இவ்வுரை தமிழிலக்கிய வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவ்வுரை பல நூற்றாண்டுகளாக அறிஞர் முதல் பாமரர் வரை அனைத்து நிலைகளிலும் ஆக்கம் பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அறிஞர்களுக்கான இதன் ஆராய்ச்சித் தொகுப்பு ஒன்று 1965-ம் ஆண்டு வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. பரிமேலழகர் தனது வைணவ இந்து சமய நெறிகளின் பார்வையின் அடிப்படையில் உரையினைக் கொண்டு சென்றுள்ளார் என்று நார்மன் கட்லர் கூறுகிறார். தாம் வாழ்ந்த 13-ம் மற்றும் 14-ம் நூற்றாண்டின் தமிழகத்து இலக்கிய, சமய, கலாச்சாரக் கட்டமைப்புகளைத் தழுவியவாறு குறள் கூறும் அறங்களை வழுவாது தனது உரையில் பரிமேலழகர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பல்வேறு கோணங்களில் ஆராயவும் விளங்கிக்கொள்ளவும் ஏதுவான ஓர் உரையாக அவரது உரை உள்ளது என்றும் கட்லர் கருதுகிறார். பதின்மர்களின் உரைகளைத் தவிர மேலும் மூன்று உரைகளேனும் இடைக்காலத்தில் இயற்றப்பட்டுள்ளன. ஆயின் இவற்றின் ஆசிரியர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இவற்றில் ஒன்று "பழைய உரை" என்ற பெயரிலும் மற்றொன்று பரிதியாரின் உரையைத் தழுவியும் இயற்றப்பட்டுள்ளன. மூன்றாவது "ஜைன உரை" என்ற பெயரில் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தால் 1991-ம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்றது. இவ்வுரைகளைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளின் காலகட்டத்தில் சோமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முதுநெறி வெண்பா, சிவசிவ வெண்பா, இரங்கேச வெண்பா, வடமாலை வெண்பா, தினகர வெண்பா, ஜினேந்திர வெண்பா உள்ளிட்ட சுமார் 21 வெண்பா உரைகள் இயற்றப்பட்டன. இவையாவும் குறளுக்கான செய்யுள் வடிவ உரைகளாகும். திருமேனி இரத்தினக் கவிராயர் (16-ஆம் நூற்றாண்டு), இராமானுஜ கவிராயர் (19-ஆம் நூற்றாண்டு), திருத்தணிகை சரவணபெருமாள் ஐயர் (19-ஆம் நூற்றாண்டு), ஆகியோரது உரைகள் இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சிறந்த உரைகளில் அடக்கம். பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பல புதிய உரைகள் குறளுக்கு இயற்றப்பட்டன. இவற்றுள் கவிராச பண்டிதர், உ. வே. சுவாமிநாத ஐயர் ஆகியோரது உரைகள் அறிஞர்களால் நவீனகால சிறப்புறு உரைகளாகக் கருதப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூற்றுக்கணக்கான உரைகளில் கோ. வடிவேலு செட்டியார், கிருஷ்ணாம்பேட்டை கி. குப்புசாமி முதலியார், அயோத்தி தாசர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, திரு. வி. கா., பாரதிதாசன், மு. வரதராசன், நாமக்கல் கவிஞர், திருக்குறளார் வே. முனுசாமி, தேவநேயப் பாவாணர், மு. கருணாநிதி, சாலமன் பாப்பையா ஆகியோரது உரைகள் குறிப்பிடத்தக்கவையாகும். மு. வரதராசனின் 1949-ம் ஆண்டு முதன்முதலில் அச்சிடப்பட்ட "திருக்குறள் தெளிவுரை" என்ற உரை ஒரே பதிப்பகத்தாரால் 200-க்கும் அதிகமான பதிப்புகளில் வெளிவந்து மிக அதிகமாக அச்சிடப்பெற்ற நவீன உரையாகத் திகழ்கிறது. பத்தாம் நூற்றாண்டில் மணக்குடவர் உரையில் தொடங்கி 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 382 அறிஞர்களால் இயற்றப்பட்ட சுமார் 497 குறளுரைகள் தமிழில் வெளிவந்துள்ளன என்றும் இவற்றில் 277 அறிஞர்களேனும் குறளுக்கு முழுமையாக உரையெழுதியுள்ளனர் என்றும் கு. மோகனராசு கணக்கிடுகிறார். மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கியங்களில் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் உலகின் மிக அதிக மொழிபெயர்ப்புகளைக் கண்ட நூல்களில் ஒன்றாகவும் திருக்குறள் திகழ்கிறது. 1975-ம் ஆண்டின் முடிவில் குறள் 20 மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டிருந்ததாக சுவெலபில் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார். வடமொழி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழிகளிலும், பர்மீயம், மலாய், சீனம், ஃபிஜியன், இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மானியம், ரஷ்யன், போலிஷ், ஸ்வீடிஷ், தாய், ஆங்கிலம் ஆகிய அயல் மொழிகளிலும் அதுவரை குறளானது மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இடைக்காலங்களில் குறளுக்கு உரைகள் எழுந்த காலகட்டத்தில் திருக்குறள் சக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆயினும் இக்கூற்றினை நிரூபிக்கும் விதமான மொழிபெயர்ப்பு ஓலைச்சுவடிகள் இதுவரை மிக அரிதாகவே கிடைக்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழக நூலகராக இருந்த எஸ். ஆர். ரங்கநாதன் என்பவர் குறளின் மலையாள மொழிபெயர்ப்பு ஓலைச்சுவடி ஒன்றைக் கண்டெடுத்தார். மலையாள நாட்காட்டி ஆண்டு 777 என்று குறிக்கப்பட்டிருந்த அந்த ஓலைச்சுவடியின் இயற்றப்பட்ட ஆண்டினை சுவெலபில் 1595 என்று அறுதியிடுகிறார். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் குறள் பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. குறிப்பாகக் கிறித்தவ மதபோதகர்கள் தங்களது மதப் பிரசார செயல்களின் ஒரு பகுதியாக குறள் உள்ளிட்ட இந்திய இலக்கியங்களை மொழிமாற்றம் செய்யத் துவங்கினர். இதன் விளைவாக குறளின் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு எண்ணிக்கை மேலும் கூடியது. குறளின் முதல் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு 1730-ல் 'வீரமாமுனிவர்' என்றழைக்கப்படும் கான்ஸ்டான்ஷியஸ் ஜோசஃப் பெச்கி என்பவரால் இலத்தீன் மொழியில் செய்யப்பட்டது. ஆனால் அவர் குறளின் முதல் இரண்டு பால்களை மட்டுமே மொழிபெயர்த்தார். காமத்துப்பாலை படிப்பதென்பதும் மொழிபெயர்ப்பதென்பதும் ஒரு கிறித்தவ மதபோதகருக்கு உகந்ததல்ல என்று அவர் கருதியதால் அதை மொழிமாற்றம் செய்யாமல் விட்டுவிட்டார். குறளின் முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1767-ம் ஆண்டு பெயர் தெரியாத ஒரு அறிஞரால் செய்யப்பட்டது. எனினும் இது விரைவில் வழக்கின்றி உலகறிது போய்விட்டது. வழக்கிலுள்ள முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1848-ம் ஆண்டு இ. எஸ். ஏரியல் என்பவரால் செய்யப்பட்டது. அவரும் குறளை முழுவதுமாக மொழிமாற்றம் செய்யாது சில பகுதிகளை மட்டுமே மொழிபெயர்த்தார். குறளின் முதல் ஜெர்மன் மொழிபெயர்ப்பு கார்ல் கிரவுல் என்பவரால் செய்யப்பட்டு 1856-ம் ஆண்டு இலண்டன், லைப்சிக் ஆகிய இரு நகரங்களிலும் பதிப்பிக்கப்பட்டது. கூடுதலாக 1856-ம் ஆண்டு கிரவுல் குறளை இலத்தினிலும் மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில் குறள் முதன்முறையாக 1794-ம் ஆண்டு ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவன அதிகாரியான என். இ. கின்டர்ஸ்லி என்பவராலும் 1812-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு அதிகாரியான எல்லீசன் என்பவராலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவை இரண்டுமே பகுதி மொழிபெயர்ப்புகள் மட்டுமே. கின்டர்ஸ்லி குறளின் ஒரு பகுதியை மட்டும் மொழிபெயர்க்கையில் எல்லீசன் 69 குறட்பாக்களை செய்யுள் நடையிலும் 51 குறட்பாக்களை உரைநடையிலும் என மொத்தம் 120 குறட்பாக்களை மொழிபெயர்த்தார். எட்வார்டு ஜெவிட் ராபின்சன் என்ற மதபோதகர் 1873-ம் ஆண்டில் பதிப்பித்த தி டமில் விஸ்டம் என்ற நூலிலும் அதன் பின்னர் 1885-ம் ஆண்டில் விரிவாக்கிப் பதிப்பித்த தி டேல்ஸ் அன்ட் போயம்ஸ் ஆஃப் செளத் இன்டியா என்ற நூலிலும் குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டும் மொழிபெயர்த்திருந்தார். மற்றுமொரு மதபோதகரான வில்லியம் ஹென்றி ட்ரூ 1840-ல் அறத்துப்பாலையும் 1852-ல் பொருட்பாலின் ஒரு பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். நூலில் தனது உரைநடை மொழிபெயர்ப்புடன் சேர்த்து குறளின் மூலத்தையும் பரிமேலழகரின் உரையையும் இராமானுஜ கவிராயரின் விளக்கவுரையையும் பதிப்பித்தார். ஆனால் பொருட்பாலில் காணப்படும் குறளின் 63-வது அதிகாரம் வரை மட்டுமே ட்ரூ மொழிபெயர்த்திருந்தார். பெச்கியைப் போலவே ட்ரூவும் இன்பத்துப்பாலை மொழிபெயர்க்காது இருந்துவிட்டார். இவற்றை 1885-ம் ஆண்டு ஜான் லாசரஸ் என்ற மதபோதகர் மெருகேற்றி கூடவே ட்ரூ மொழிபெயர்க்காது விட்டிருந்த பொருட்பாலின் மீதமிருந்த அதிகாரங்களையும் இன்பத்துப்பால் முழுவதையும் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதுவே குறள் முழுவதற்குமான முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாக உருவானது. 1886-ம் ஆண்டு ஜார்ஜ் யுக்ளோ போப் என்ற மதபோதகர் செய்த செய்யுள் நடை மொழிபெயர்ப்பு குறள் முழுவதற்கும் ஒரே நபரால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாக மாறியது. இதுவே குறளை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய நூலாகவும் அமைந்தது. இருபதாம் நூற்றாண்டில் குறள் பல தெற்காசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் சில அதுவரை வெளிவந்த குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தழுவியே செய்யப்பட்டவை ஆகும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் குறளுக்குச் சுமார் 24 ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தன. இவற்றில் சில ஆங்கிலேய அறிஞர்களாலும் மற்றவை இந்திய அறிஞர்களாலும் செய்யப்பட்டவையாகும். குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்திய அறிஞர்களில் வ. வே. சு. ஐயர், கே. எம். பாலசுப்பிரமணியம், சுத்தானந்த பாரதியார், ஆ. சக்கிரவர்த்தி, மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, சி. இராஜகோபாலசாரி, பி. எஸ். சுந்தரம், வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், ஜி. வான்மீகநாதன், கஸ்தூரி சீனிவாசன், எஸ். என். ஸ்ரீராமதேசிகன், கே. ஆர். சீனிவாச ஐயங்கார் ஆகியோர் முக்கியமானவர்களாவர். கிட்டு சிரோமனி என்பவரால் குறள் நரிக்குறவர்களின் மொழியான வாக்ரி போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திருக்குறளை 102 மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கிவிட்டதாக அறிவித்தது. மிகச் சமீபமாக பப்புவா நியூ கினியின் தோக் பிசின் மொழியில் குறள் மொழிபெயர்கப்பட்டு 22 மே 2023 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதியாலும் பப்புவா நியூ கினியின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவாலும் இணைந்து வெளியிடப்பட்டது. 2024-ம் ஆண்டு நிலவரப்படி குறளானது 57 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மொத்தம் 350 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. இவற்றில் 143 மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகும். மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் திரிபுகளும் ஏழு சீர்களுக்குள் கூறவந்த அனைத்தையும் அடக்கிவிடும் ஆற்றல் கொண்டதும் தன்னியல்பிலேயே மிகவும் நுட்பம் வாய்ந்ததுமான குறள்வெண்பா பா வகைகளில் மிகவும் பொருளடர்த்தி கொண்ட தனது அரிய தன்மையினால் அறநெறிக் கருத்துக்களை உரைக்க மிகவும் ஏதுவான பாவகையாக விளங்குகிறது. சுவெலபில் போன்ற அறிஞர்களால் "சுருக்கத்தின் உச்சமாகக் குறுகிய அதிசயம்" என்று வர்ணிக்கப்படும் குறள்வெண்பா, தமிழ் மொழியின் அமைப்பிலக்கணத்தை ஒத்தே பரிணமித்த பாவகையாகும். இதன் காரணமாகவே இப்பாவகையிலான செய்யுட்களை மொழிபெயர்க்கும் முயற்சிகள் இன்றுவரை மிகவும் சிக்கல் வாய்ந்ததாகவே அறிஞர்களால் கருதப்படுகிறது. குறளை மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்வதைக் குறித்துக் கூறுகையில், "நடையழகிலோ சொல்வன்மையிலோ எந்த ஒரு மொழிபெயர்ப்பும் திருக்குறளின் தமிழ் மூலத்திற்கு இணையாக இருக்க இயலாது" என்று ஹெர்பர்ட் ஆர்தர் பாப்லி உரைக்கிறார். குறளின் ஒரு பகுதியை மொழிபொயர்த்து முடித்தவுடன் கார்ல் கிரவுல் "குறளின் வசீகரத் தன்மையினை எந்த ஒரு மொழிபெயர்ப்பாலும் நல்க இயலாது. குறள் வெள்ளி இழைகளுக்கிடையில் பதிக்கப்பட்ட தங்கக் கனி" என்று கூறினார். திருக்குறள் கூறும் உண்மையான பொருளை எந்த ஒரு மொழிபெயர்ப்பைக் கொண்டும் அறிய முடியாது என்றும் குறளின் தமிழ் மூலத்தைப் படிப்பதன் வாயிலாக மட்டுமே வள்ளுவர் கூறிய ஆழ்பொருளை அறிய முடியும் என்றும் சுவெலபில் கூறுகிறார். குறளின் மொழிபெயர்புக்கே உரிய இதுபோன்ற சிக்கல்களுக்கிடையில் சில அறிஞர்கள் வள்ளுவத்துக்கு ஒவ்வாத தங்களது சொந்தக் கருத்துக்களை குறளின் சிந்தனைகளில் ஏற்றியும் வலிந்து பொருள்கொண்டும் மொழிபெயர்த்து விடுகின்றனர். இதனால் குறள் கூறும் சிந்தனைகள் பலவாறு திரிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் பொருள் காணப்படுகின்றன. காலனித்துவ காலத்திலிருந்து கிறித்தவ மதபோதகர்களின் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் கிறித்தவக் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு இணங்க உரையைத் திரித்து எழுதியதற்காக விமர்சிக்கப்படுகின்றன. குறிப்பாக வீரமாமுனிவர் எனப்படும் பெச்கி முதலான கிறித்தவ மதபோதகர்களது மொழிபெயர்ப்புகளில் இதுபோன்ற திரிபுகளைப் பல இடங்களில் காணமுடிகின்றது. வி. இராமசாமி தனது ஆய்வுநூலில் கூறுகையில், "பிற மொழிபெயர்ப்பாளர்கள் 'பிறவிப்பெருங்கடல்' என்பதை 'பல பிறவிகளாகிய கடல்' என்று மொழிபெயர்க்கையில் பெச்கி அச்சொல்லை 'இப்பிறப்பின் கடல்' என்றும் 'பிறவாழி' என்ற சொல்லை 'துயரமான வாழ்க்கைக் கடல்' என்றும் மொழிபெயர்ப்பதன் மூலம் குறள் கூறும் சிந்தனையை பெச்கி வேண்டுமென்றே திரிக்க முயல்கிறார்". மேலும் "இதன் மூலம் பெச்கி கூற வரும் பொருள் 'துன்பப் பெருங்கடலை நீந்துவோர்' என்றாகும்" என்றும் "கிறித்தவத் தத்துவத்தில் மறுபிறவி மற்றும் ஒரே ஆத்மாவுக்குப் பல பிறவிகள் போன்ற சிந்தனைகள் கிடையாது என்பதே இதற்குக் காரணம்" என்றும் இராமசாமி துணிகிறார். ஆகஸ்ட் 2022-ல் ஆங்கிலிக கிறித்தவ மதபோதகரான ஜி. யு. போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பினை குறளின் "ஆன்மீகமற்ற உரை" என்று விவரித்த தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, போப்பின் மொழிபெயர்ப்பு "இந்தியாவின் ஆன்மீக ஞானத்தை 'அற்பமயமாக்கும்' காலனித்துவ நோக்கத்துடன்" செய்யப்பட்டதாக விமர்சித்தார். "அன்றிலிருந்து இன்றுவரை குறளுக்கு உரை எழுதும்போதும் குறளை மொழிமாற்றம் செய்யும் போதும் பல அறிஞர்கள் குறள் கூறும் சிந்தனைகளோடு தங்களது கலாச்சார சிந்தனைகளையும் சேர்த்து நூல்களைச் செய்து விடுகின்றனர்" என்று நார்மன் கட்லர் கூறுகிறார். பதின்மூன்றாம் நூற்றாண்டில் பரிமேலழகர் குறளின் சிந்தனைகளை அன்றைய பிராமணீய சிந்தனைகளோடு இணைத்துப் பொருள்கண்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறித்தவ மதபோதகர்கள் குறளின் சிந்தனைகளை கிறித்தவக் கொள்கைகளுக்கேற்றார் போல் திரித்துப் பொருள்தர முயன்றனர். இன்று திராவிடக் கழகங்கள் தங்களது சொந்த சமூக மற்றும் அரசியல் சிந்தனைகளுக்கு ஏற்றார் போல் தங்களது தனிப்பட்ட குறிக்கோள்களை முன்னெடுக்க வேண்டி குறளின் பொருளைப் பலவாறு திரித்து உரை தருகின்றன. இவையாவும் குறளின் மூலப் பொருளை ஆண்டாண்டு காலமாகப் பலவாறு திரித்துள்ளன என்று அறிஞர்கள் பலரும் கருதுகின்றனர். அச்சிடப்படுதல் நூல்கள் யாவும் பெரும்பாலும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கும் ஆசானிடமிருந்து மாணாக்கர்களுக்கும் வழிவழியாகக் கற்பிக்கப்பட்டு வாயால் விளக்கிச் சொல்லியும் செவியால் கேட்டு உணர்ந்தும் கற்கும் வழக்கம் பண்டைய இந்திய மரபாகும். குறளும் இவ்வாறே கற்பிக்கப்பட்டு தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களால் பரம்பரை பரம்பரையாகக் கற்கப்பட்டு வந்திருக்கிறது. இவ்வகையில் குறள் இயற்றப்பட்டு பல நூற்றாண்டுகளாக இந்திய மண்ணுக்கு வெளியே அறியப்படாமலேயே இருந்திருக்க வேண்டும். குறளின் முதல் மொழிபெயர்ப்பு 1595 மலையாளத்தில் செய்யப்பட்டது என்று சுவெலபில், சஞ்சீவி ஆகியோர் கூறுகின்றனர். எனினும் இம்மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்படாமலும் 1933–34-ம் ஆண்டு கொச்சி அகழ்வாராய்ச்சித் துரை தனது ஆண்டு அறிக்கையில் இதைப்பற்றிய விவரத்தினை வெளியிடும்வரை வெளியுலகுக்குத் தெரியாமலும் இருந்திருக்கிறது. திருக்குறள் முதன்முதலில் தாளில் அச்சிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டது 1812-ம் ஆண்டில் ஆகும். தஞ்சை ஞானப்பிரகாசர் என்பவர் மரத்தால் செய்யப்பட்ட அச்சுக்களைக் கொண்டு குறள் மற்றும் நாலடியாரின் ஓலைகளிலிருந்து எடுக்கப்பட்ட மூலப் பிரதிகளை அச்சிட்டார். 1835-ம் ஆண்டில்தான் ஆங்கிலேய அரசு இந்தியர்களுக்கு அச்சிட அனுமதி வழங்கியது என்பதால் குறள் தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூலாகவும் நாலடியார் இரண்டாவது நூலாகவும் ஆயின. ஆங்கிலேய அரசு அதிகாரியும் தமிழ் மற்றும் வடமொழி ஆர்வலருமான எல்லீசன் 1825-ம் ஆண்டு சென்னையில் தமிழ் சங்கமொன்றை நிறுவி மக்களைப் பழைய தமிழ் ஓலைச்சுவடிகளை அச்சிட தன்னிடம் எடுத்து வருமாறு அழைப்பு விடுத்தார். மதுரையில் ஐரோப்பிய அரசு அதிகாரியான ஜார்ஜ் ஹார்ங்டன்னிடம் சமையல் பணிபுரிந்த கந்தப்பன் என்பவர் 1825 மற்றும் 1831 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திருக்குறள், திருவள்ளுவமாலை, நாலடியார் ஆகியவற்றின் ஏடுகளைச் சமையலுக்கு எரிக்கப்படவிருந்த விறகுகளுக்கு மத்தியில் கண்டெடுத்து எல்லீசனிடம் கொடுக்க 1831-ம் ஆண்டு இவையாவும் எல்லீசனின் மேலாளர் முத்துசாமி பிள்ளை மற்றும் தமிழறிஞர் தாண்டவராய முதலியார் ஆகியோரது உதவியுடன் பதிப்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1833, 1838, 1840, மற்றும் 1842 ஆகிய ஆண்டுகளில் திருக்குறள் அடுத்தடுத்து அச்சிடப்பட்டது. மகாலிங்க ஐயர் குறளின் 24 அதிகாரங்களுக்கு மட்டும் உரையினைப் பதிப்பிக்க, அதன் பின்னர்ப் பல குறளுரைகள் அச்சுக்கு வரத் தொடங்கின. அது முதல் குறள் தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்துள்ளது. 1925-ம் ஆண்டு காலகட்டம் வரை குறள் சுமார் 65 பதிப்புக்கு மேல் வெளிவந்துள்ளது. 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது. குறளின் முதல் ஆராய்ச்சியுரை இந்து சமய மடங்களில் கண்டெடுக்கப்பட்ட சுவடிகளிலிருந்தும் தனியே கிடைக்கப்பெற்ற சுவடிகளிலிருந்தும் 1861-ம் ஆண்டு ஆறுமுக நாவலரால் பதிப்பிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறள் மற்றும் இதர தமிழிலக்கிய நூல்களைப் பலதரப்பட்ட ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து அவற்றிலிருந்து சந்திப்பிரித்த வெண்பாக்களை முறைப்படுத்தி அச்சிடுவதில் ஆறுமுக நாவலர் அனைவருக்கும் முன்னோடி என்று சுவெலபில் பாராட்டுகிறார். குறளுக்கான பரிமேலழகருரை முதன் முதலில் 1840-ம் ஆண்டு அச்சிடப்பட்டது. 1850-ம் ஆண்டு வேதகிரி முதலியாரின் உரையோடு திருக்குறள் அச்சிடப்பட்டது. இதன் மறுபதிப்பு 1853-இல் வெளிவந்தது. இப்பதிப்பே திருக்குறள் முழுவதும் முதன்முறையாக உரையோடு வெளிவந்த பதிப்பாகும். 1917-ம் ஆண்டு முதன்முறையாக மணக்குடவருரை வ. உ. சிதம்பரம் பிள்ளையால் தொகுத்து வெளியிடப்பட்டது. ஆயின் அவர் அறத்துப்பாலை மட்டுமே பதிப்பித்தார். மணக்குடவருரை முழுவதும் முதன்முதலாக கே. பொன்னுசாமி நாடாரால் 1925-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு முடிய பரிமேலழகருரை 30-இக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களால் 200-இக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளது. முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்ட அன்று முதல் இதுவரை அதிகமாக அச்சிடப்பட்ட குறளுரையாகப் பரிமேலழகருரை திகழ்கிறது. திருக்குறள் 1970-களில் தொடங்கி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கிட்டு சிரோமணி என்பவரால் தமிழ்ப் பிராமி எழுத்துகள், பல்லவர் காலத்து எழுத்துகள், வட்டெழுத்துகள் உள்ளிட்ட பல்வேறு பண்டைய தமிழெழுத்துகளில் உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பண்டைய இலக்கியங்களுடனான ஒப்பீடு குறள் பண்டைய தமிழ் இலக்கிய மரபினைச் சேர்ந்த நூல் மட்டுமன்று; அது "பண்டைய இந்திய ஒருங்கிணைந்த அறநெறி மரபினைச் சேர்ந்த" ஓர் அற இலக்கியப் படைப்பு ஆகும். குறளில் காணப்படும் சிந்தனைகளும் மேற்கோள்களும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம், நீதிசாரம், காமசூத்திரம் போன்ற பண்டைய இலக்கியங்கள் பலவற்றையும் பல இடங்களில் ஒத்து இருக்கிறது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். குறளின் போதனைகளில் சில அன்றைய காலகட்ட வடமொழி நீதி இலக்கியங்களான அர்த்தசாஸ்திரம், மனுஸ்மிருதி ஆகிய நூல்களில் காணப்படும் சிந்தனைகளைத் தழுவியிருக்கிறது என்பதை ஐயமின்றித் துணியலாம் என்று சுவெலபில் நிறுவுகிறார். குறள் தனக்கு முந்தைய தமிழிலக்கிய நூல்களிலிருந்து பெரிய அளவில் சிந்தனைகளையும் செய்யுள் வரிகளையும் பெற்றுள்ளது என்று சுவெலபில் கருதுகிறார். எடுத்துக்காட்டாகக் குறளின் காலத்துக்கு முந்தைய குறுந்தொகையிலிருந்து பல சொல்லமைப்புகளையும், திருமாலைத் துதித்துத் தொடங்கும் நற்றிணையிலிருந்து பல வரிகளையும் திருக்குறளில் காணலாம். அதுபோலவே குறளுக்குப் பிந்தைய நூல்கள் பலவும் குறளின் சொல்லாட்சியினைப் பெரிதும் பின்பற்றுவதையும் காணமுடிகிறது. 10-ம் நூற்றாண்டுக்கு முன் குறளைப் போற்றிப் பல புலவர்களால் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலையும் ஏனைய பிரபந்தங்களும் குறள் வரிகளைத் தங்களுக்குள் பதித்துக்கொண்டுள்ளன. 9-ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட காதல் இலக்கியமான பெருங்கதை பல இடங்களில் குறளின் வரிகளையும் சிந்தனைகளையும் சுட்டுகிறது. 6-ம் நூற்றாண்டு வாக்கில் படைக்கப்பட்ட பெளத்த இலக்கியமான மணிமேகலை தனது 22.59–61 பாடல்களில் குறளைக் மேற்கோள் காட்டுகிறது. சமணத்தைச் சாடும் இந்நூலானது குறளின் சிந்தனைகளைத் தன்னில் ஏற்பது நோக்கத்தக்கது. திருக்குறளின் இரண்டாம் பாலிலுள்ள கருத்துக்கள் பலவும் அர்த்தசாஸ்திரத்தை ஒத்து இருந்தாலும் சில முக்கிய அம்சங்களில் குறள் அர்த்தசாஸ்திரத்திலிருந்து வேறுபடுகிறது. கெளட்டிலியர் கூறுவதைப் போலல்லாது வள்ளுவர் தனது நூலில் ஒரு நாட்டின் முக்கிய அம்சமாக அதன் படையினைக் கருதுகிறார். எப்பொழுதும் போரினை எதிர்கொள்ளும் ஆயத்த நிலையில் சீராகவும் சிறப்பாகவும் பயின்று வைக்கப்பட்டு திறன்பட ஒழுகுவோரது தலைமையில் நடத்தப்படும் ஒரு படையானது ஒரு நாட்டின் இன்றியமையா அங்கமாகும் என்று வள்ளுவர் கூறுகிறார். குறளின் பொருட்பால் என்பது தார்மீக சிந்தனையின் அடிப்படையில் நன்னெறிகளை உள்ளடக்கிய நூல் என்று ஹஜேலா கூறுகிறார். நாடாளும் அமைச்சர்களில் துவங்கி அரசு அலவலர்களும் வரை மக்கள் அனைவரும் அறம்சார்ந்த வாழ்வினில் மட்டுமே பயணப்பட வேண்டும் என்று குறள் கூறுகிறது. மனுஸ்ருமிருதியைப் போலன்றி குறள் எவ்விதமான பாகுபாட்டு முறைகளுக்கோ ஒரு குறிப்பிட்ட நாட்டை ஆள்பவர்க்கோ முக்கியத்துவம் தருவதில்லை. அருளும் அறமும் கொண்ட எவரும் அந்தணரே என்று குறள் உரைக்கிறது. தனது காலத்தைய மற்ற நூல்களைப் போலல்லாது குறள் பெண்களைத் தாழ்த்தியோ பிறரைச் சார்ந்த நிலையிலிருத்தியோ செய்யாமல் அவர்களின் தனிதன்மைகளைப் போற்றுகிறது என்று சுவைட்சர் குறிக்கிறார். உலக இலக்கியங்கள் குறளின் சிந்தனைகள் பண்டைய உலக இலக்கியங்கள் பலவற்றோடும் பல இடங்களில் ஒத்து இருப்பதை அறிஞர்கள் கவனிக்கத் தவறுவதில்லை. ஹிதோபதேசம், பஞ்சதந்திரக் கதைகள், மனுஸ்மிருதி, திருமந்திரம், கன்பியூசியஸின் லுன் யூ, ஆதிகிரந்தம், விவிலியத்தின் நீதிமொழிகள், புத்தரின் தம்மபதம், பாரசிக நூல்களான குலிஸ்தான் மற்றும் புஸ்தான் உள்ளிட்ட பல புனித நூல்களோடும் குறளை அறிஞர்கள் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர். குறளும் கன்பியூசியஸின் தத்துவங்களான லுன் யூ என்றழைக்கப்படும் கன்பியூசிய அனலெக்டுகளும் பல ஒத்த கருத்துக்களைப் பகிர்வது கவனிக்கத்தக்கது. வள்ளுவர், கன்பியூசியஸ் இருவருமே தனிநபரின் அறங்களுக்கும் நன்னடத்தைகளுக்கும் முதலிடம் தருபவர்கள். வள்ளுவரைப் போலவே கன்பியூசியஸும் தனிமனித அறநெறிகள், கண்ணோட்டம், பெரியோரைப் பேணுதல் ஆகியவற்றைப் போதித்து நீதியைத் தழுவிய சட்டதிட்டங்களைப் போற்றியும் அருள், அறம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றை வாழ்வின் அடிப்படைகளாகக் கொண்டும் தனது போதனைகளைத் தந்துள்ளார். அகிம்சையையும் அன்பையும் அடித்தளமாகக் கொண்டு வள்ளுவம் இயற்றப்பட்டுள்ளதைப் போல் ஜென் என்னும் அடித்தளத்தைக் கொண்டு இயற்றப்பட்டவை கன்பியூசியத் தத்துவங்களாகும். இவற்றிக்கு அப்பால் கன்பியூசியஸிலிருந்து வள்ளுவர் இரு வகைகளில் வேறுபடுகிறார். முதலாவதாக, கன்பியூசியஸ் போல் ஒரு தத்துவ மேதை மட்டுமின்றி வள்ளுவர் ஒரு புலவருமாவார். இரண்டாவதாக, கன்பியூசியஸ் இன்பம் குறித்து ஏதும் கூறாதிருக்கையில் வள்ளுவர் இன்பத்திற்கு ஒரு பாலையே ஒதுக்கியுள்ளார். கன்பியூசியஸ் தத்துவத்தில் குழந்தை வளர்ப்பு என்பது வாழ்வின் நீட்சிக்கும் சமூகத்தின் நலனுக்கும் ஒரு முக்கியமான அங்கமாகும். "ஒரு மனிதன் தனக்கு மேலுள்ள பெரியோர்களான பெற்றவர்களையும் தனக்குக் கீழுள்ள மனைவி மற்றும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாப்பதற்குத் தேவையானவற்றை ஒரு அறிவிற் சிறந்த அரசன் தனது ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்க வேண்டியது அவசியம்" என்கிறது லுன் யூ. வள்ளுவத்தின் "மக்கட் செல்வம்", "இறைமாட்சி" ஆகிய அதிகாரங்கள் இக்கருத்துக்களை நினைவுறுத்துவதாக அமைகின்றன. சமூகத்தின் வரவேற்பு இயற்றப்பட்ட காலம் முதலாக குறள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளது. சங்கம் மருவிய காலத்துப் புலவர்களும் இடைக்காலப் புலவர்களும் பலவாறு குறளையும் வள்ளுவரையும் புகழ்ந்துப் பாடியுள்ளனர். "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்று ஒளவையார் குறளின் நுண்மையைப் போற்றுகிறார். "திருவள்ளுவமாலை" என்ற பெயரில் தனிப் புலவர்கள் பலரால் போற்றி எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்ட பாக்களால் படப்பெற்ற ஒரே தமிழ் இலக்கியமும் திருக்குறளே ஆகும். சைவம், வைணவம், சமணம், பௌத்தம் உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டத்து மதங்களனைத்தும் குறளை வெகுவாகப் பாராட்டியும் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமுறை, பெரிய புராணம், கம்ப இராமாயணம் உள்ளிட்ட தங்களது இலக்கியங்களில் குறளை வைத்துப் பாடியும் பேணிவந்துள்ளன. எச்சமயத்தையும் சாராது அறங்களைப் பொதுப்படக் கூறுவதால் இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் என இருநிலையிலும் திருக்குறள் பரவலாகப் போற்றப்படுகிறது. ரஷ்ய அறிஞர் அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி குறளை "இந்திய மற்றும் அகில உலக இலக்கியங்களின் தலையான படைப்பு" என்று பாராட்டுகிறார். இதற்குக் காரணம் குறளில் காணப்படும் இலக்கியச் சுவை மட்டுமல்ல என்றும் உலகிலுள்ள அனைவருக்கும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் அறச் சிந்தனைகளை வள்ளுவம் தன்னுள் கொண்டுள்ளதுமே ஆகும் என்று அவர் மேலும் உரைக்கிறார். உலகப் பொது அறங்களை உரைப்பதால் வள்ளுவரை "பிரபஞ்சப் புலவர்" என்று போற்றுகிறார் ஜி. யு. போப். "குறளைப் போல் தலைச்சிறந்த அறங்களை மூதுரைகளாக உரைத்த நூலொன்றை உலகில் வேறெங்கும் காண்பதரிது" என்று ஆல்பர்ட் சுவைட்சர் கருதுகிறார். குறளை "இந்துக் குறள்" என்று போற்றிய லியோ டால்ஸ்டாய் அதனை மகாத்மா காந்திக்குப் பரிந்துரைத்தார். காந்தி குறளை "அறவாழ்வுக்கு தலையாய வழிகாட்டும் இன்றியமையா நூல்" என்றும் "வள்ளுவரின் வரிகள் என் உயிர்வரை சென்று ஊடுருவியுள்ளன. அவரைப் போல் அறப் பொக்கிஷத்தை நல்கியவர் எவருமில்லை" என்றும் கூறியுள்ளார். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த கிறித்தவ மதபோதகர்கள் குறளின் சிந்தனைகளைப் படித்து அவற்றை கிறித்தவ போதனைகளுடன் ஒப்பீடு செய்யத் துவங்கினர். அதன் விளைவாக அவர்களுள் பலர் குறளை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய முற்பட்டனர். சீர்திருத்தத் திருச்சபை போதகரான எட்வார்டு ஜெவிட் ராபின்சன் "குறளில் அனைத்தும் உள்ளன; அதில் இல்லாதது எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார். ஆங்கிலிக்க மதபோதகர் ஜான் லாசரஸ் "வேறெந்தத் தமிழ் நூல்களாலும் குறளின் தூய்மையை நெருங்க இயலாது" என்றும் "குறள் தமிழ் மொழிக்கு ஒரு ஓங்கி நிற்கும் புகழாரம்" என்றும் கூறுகிறார். அமெரிக்க கிறித்தவ மதபோதகர் இம்மான்ஸ் இ. வயிட் "உலகின் அனைத்து தலைச் சிறந்த அறச் சிந்தனைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பே திருக்குறள்" என்று போற்றுகிறார். வரலாறு முழுவதிலும் அரசியல், ஆன்மீகம், சமூகவியல் என அனைத்துத் தரப்பினராலும் போற்றப்பட்ட நூலாகத் திருக்குறள் இருந்து வந்திருக்கிறது. "குறள் அன்பின் நெறியாகவும் ஆத்மார்த்த வாழ்வின் வரையறையாகவும் திகழ்கிறது" என்றும் "அனைத்து காலத்திற்கும் பொருந்தும் அழிவற்ற இந்நூலானது மனிதகுலத்தின் அனைத்துச் சிந்தனைகளையும் தன்னுள் நீக்கமறக் கொண்டுள்ளது" என்றும் இராஜாஜி கருதுகிறார். "வாழ்வியலை போதிக்கும் அறநூல்களில் குறள் நிகறற்றது" என்று கே. எம். முன்ஷி கூறுகிறார். "குறு வெண்பாக்களைக் கொண்ட திருக்குறள் திட்டமிட்ட சிந்தனைகளிலும் அவற்றை சிறப்பாக வெளிப்படுத்தும் விதத்திலும் இதுவரை வந்த நூல்களனைத்திலும் சிறந்தது" என்று தேசியவாதியும் யோகியுமான அரவிந்தர் கருதுகிறார். "தமிழின் தலையாய நூலான திருக்குறள் மனித சிந்தனைகளின் தூய்மையான வெளிப்பாட்டின் உச்சம்" என்று குறளை 1848-ல் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த இ. எஸ். ஏரியல் வர்ணிக்கிறார். "உலகின் ஒட்டுமொத்த சிந்தனைகளின் உரைவிடமாகவும் அறங்களின் வழிகாட்டியாகவும் ஆன்மீக அறிவின் புதைவிடமாகவும் திகழும் நூல் திருக்குறள்" என்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் கூறுகிறார். வரலாற்று ஆவணங்கள் குறளைப் பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள், மேலோலைகள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களைத் தமிழகத்தில் பரவலாகக் காணலாம். இடைக்காலத் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் பிரதான ஆட்சி நூலாகத் திருக்குறள் திகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் அருகிலுள்ள பொன்சொரிமலையில் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கல்வெட்டு ஒன்றில் "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா னெங்ஙன மாளு மருள்" என்ற புலால் மறுத்தல் அதிகாரத்துக் குறட்பா காணப்படுகிறது. இது அக்காலத்து கொங்கு நாட்டு மக்கள் அகிம்சையையும் கொல்லாமையையும் தங்கள் வாழ்வியல் நெறிகளாகக் கடைபிடித்து வந்ததைக் காட்டுவதாக உள்ளது. 1617-ம் ஆண்டின் கொங்கு நாட்டு பூந்துறை நாட்டார் மேலோலை, 1798-ம் ஆண்டின் கொங்கு நாட்டுப் நாரணபுரத்து பல்லடம் அங்காள பரமேசுவரி கொடைச் செப்பேடு, நாமக்கல் மாவட்டம் கபிலக்குறிச்சிப் பகுதியில் காணப்படும் 18-ம் நூற்றாண்டின் கபிலமலைச் செப்பேடு, பழனி வீரமுடியாளர் மடத்துச் செப்பேடு, கொங்கு நாட்டு காரையூர் செப்பேடு, பழையகோட்டை ஏடு, மற்றும் சென்னை இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் காணப்படும் 1818-ம் ஆண்டின் எல்லீசன் கல்வெட்டுகள் போன்றவை திருக்குறளைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட மேலும் சில வரலாற்று ஆவணங்களாகும். சமூகத் தாக்கம் திருவள்ளுவரின் உருவப்படங்கள் நெடுங்காலமாக சைவர்களாலும் சமணர்களாலும் வரையப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. கொண்டை வைத்த உருவம் துவங்கி தலைமுடி மழித்த உருவம் வரை பல்வேறு வகையில் இப்படங்கள் காணப்பபடுகின்றன. 1960-ம் ஆண்டு கே. ஆர். வேணுகோபால சர்மா என்ற ஓவியர் வரைந்த கொண்டை முடியும் தாடியுடனுமான உருவப்படம் ஒன்று தமிழக மற்றும் இந்திய அரசாங்கங்களால் ஏற்கப்பட்டு பயன்படுத்தப்படத் துவங்கியது. 1960-களுக்குப் பின்னர் இதுவே அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 1964-ம் ஆண்டு இப்படத்தினை இந்தியப் பாராளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் திறந்து வைத்தார். 1967-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வள்ளுவரது உருவப்படம் ஒன்று இருக்க வேண்டும் எ்னறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இருபதாம் நூற்றாண்டில் குறளுக்குப் பலர் இசையமைத்துப் அதைப் பாடி அரங்கேற்றியுள்ளனர். இவர்களுள் மயூரம் விஸ்வநாத சாஸ்திரி மற்றும் ரமணி பரத்வாஜ் ஆகியோர் அடங்குவர். குறளை முழுமையாகப் பாடி குறள் கச்சேரி நடத்தியவர்களுள் எம். எம். தண்டபாணி தேசிகர் மற்றும் சிதம்பரம் சி. எஸ். ஜெயராமன் ஆகியோர் முதன்மை வாய்ந்தவர்களாவர். மதுரை சோமசுந்தரம் மற்றும் சஞ்ஜய் சுப்பிரமணியன் ஆகியோரும் குறளை இசையாகப் பாடியுள்ளனர். மயூரம் விஸ்வநாத சாஸ்திரி திருக்குறள் முழுவதற்கும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இசையமைத்தார். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் சித்திரவீணா என். ரவிகிரண் குறள் முழுவதற்கும் 16 மணி நேரத்திற்குள் இசையமைத்து சாதனை படைத்தார். 1818-ம் ஆண்டு அப்போதைய சென்னை நகர ஆட்சியராக இருந்த எல்லீசன் வள்ளுவரின் உருவம் பதித்த தங்க நாணயங்களை வெளியிட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வள்ளலார் இராமலிங்க அடிகளார் குறளறங்களைப் பரப்பும் பொருட்டு பொதுமக்களுக்கான தினசரி திருக்குறள் வகுப்புகளை நடத்தத் துவங்கினார். 1968-ம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் அனைவரும் பார்க்கும்படியாகக் குறட்பாவை ஏந்திய பலகை ஒன்றை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. குறளின் நினைவாகக் கன்னியாகுமரியிலிருந்து புதுதில்லி வரை 2,921 கிலோமீட்டர் தூரம் இயக்கப்படும் தொடர்வண்டிக்கு இந்திய இரயில்வே "திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து" என்று பெயரிட்டுள்ளது. திருக்குறள் தமிழ் மக்களின் தினசரி வாழ்வோடு ஒன்றிய ஒரு இலக்கியமாகும். குறளின் பாக்கள் எல்லாத் தருணங்களிலும் அனைத்துத் தரப்பு மக்களாலும் கையாளப்படுகின்றன. இயக்குநர் கே. பாலச்சந்தரின் படத் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா தனது படங்களின் துவக்கத்தில் திருக்குறளின் முதற்பாவினைப் பாடித் துவங்குவதை வழக்கமாகக் கொண்டது. தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பலவற்றிலும் குறளின் வரிகளும் சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. இருபதாம் நூற்றாண்டிலிருந்து திருக்குறள் சார்ந்த மாநாடுகள் நடத்தும் வழக்கம் துவங்கியது. முதன்முதலாகத் திருக்குறள் மாநாடு ஒன்று 1941-ம் ஆண்டு திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களாலும் பின்னர் 1949-ம் ஆண்டு மேலும் ஒரு குறள் மாநாடு பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்களாலும் நடத்தப்பட்டன. இம்மாநாடுகளில் பல அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். அதுமுதல் பல திருக்குறள் மாநாடுகள் தெடர்ந்து நடந்தேறியுள்ளன. ஓவியக்கலை, இசை, நடனம், தெருக்கூத்து மற்றும் தெரு நிகழ்ச்சிகள், ஒப்புவித்தல் மற்றும் முற்றோதல், செயற்கூட்ட நிகழ்ச்சிகள், விடுகதைகள் மற்றும் புதிர்ப்போட்டிகள் எனப் பலவற்றிலும் குறளின் பாக்களும் சிந்தனைகளும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் தாங்கள் ஆற்றும் மேடை உரைகளனைத்திலும் குறட்பாக்களை மேற்கோள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் குறளைப் பரவலாக எடுத்தாள்கின்றனர். இதுபோல் பேசிய தலைவர்களில் ராம் நாத் கோவிந்த், ப. சிதம்பரம், நிர்மலா சீதாராமன், ஆகியோர் அடங்குவர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டினை ஆதரித்துப் போராடியவர்கள் "காளைகளை தாங்கள் நேசிப்பதே அவ்விளையாட்டை தாங்கள் ஆதரிப்பதற்குக் காரணம்" என்று கூறியபோது அப்போதைய இந்திய அமைச்சர் மனேகா காந்தி "திருக்குறள் விலங்கு வன்கொடுமையை என்றும் ஆதரிப்பதில்லை" என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் கூற்றை குறளை மேற்கோள் காட்டி மறுத்துரைத்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2020-ல் இந்தியப் படைகளிடம் தாமாற்றிய உரை உட்படப் பல நிகழ்வுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார். இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய அரசின் அறிக்கையான "2020 இந்தியப் பொருளாதார மதிப்பாய்வு" தனது அறிக்கையில் குறளையும் அர்த்த சாஸ்திரத்தையும் அதிகமாகச் சுட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோயில்களும் நினைவிடங்களும் குறளும் அதன் ஆசிரியரும் வழிவழியாக மக்களால் போற்றப்பட்டு வருகின்றனர். பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சைவ சமூகத்தினர் மயிலாப்பூரில் உள்ள ஏகாம்பரேசுவரர்–காமாட்சி ஆலய வளாகத்தில் திருவள்ளுவருக்குக் கோயில் ஒன்றை நிறுவினர். இங்குள்ள ஒரு இலுப்பை மரத்தடியில் தான் வள்ளுவர் பிறந்தார் எனவும் அதே இடத்தில் தான் வள்ளுவரது சீடரான ஏலேலசிங்கன் முதன்முதலில் அவருக்கு ஒரு வழிபாட்டுத் தலத்தை கட்டியதாகவும் நம்பப்படுகிறது. இம்மரத்திற்கடியில் குறளின் ஓலைச்சுவடியினை கையில் ஏந்திவாறு யோக நிலையில் வீற்றிருக்கும் வள்ளுவரது சிலை உள்ளது. அவ்விலுப்பை மரத்தையே ஸ்தல விருட்சமாகக் கொண்ட இக்கோயிலின் சன்னிதியில் வள்ளுவரின் சிலையோடு இந்துக் கடவுளான காமாட்சியம்மனின் உருவோடு ஒத்த வடிவில் அமைக்கப்பட்ட அவரது மனைவி வாசுகியின் சிலையும் உள்ளது. பண்டைய புராண நிகழ்வுகளோடு அக்கால வாழ்க்கை முறைகளையும் சித்தரிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள கோயிலின் கோபுரத்தில் வள்ளுவர் வாசுகிக்கு திருக்குறளை ஓதும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 1970-களில் பெரிய அளவில் புனரமைக்கப்பட்டது. வள்ளுவருக்கு மேலும் பல கோயில்கள் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரிய கலையம்புத்தூர், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வில்வாரணி ஆகிய ஊர்களும் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கஞ்சூர் தட்டன்பாடி, இடுக்கி மாவட்டத்திலுள்ள சேனாபதி ஆகிய ஊர்களும் ஆகும். இவற்றில் மயிலாப்பூர், திருச்சுழி உள்ளிட்ட இடங்களில் வள்ளுவர் சைவ மதத்தினரால் 64-வது நாயன்மாராகப் போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1976-ம் ஆண்டு சென்னையில் குறளையும் அதன் ஆசிரியரையும் நினைவு கூறும் விதமாக வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது. இந்நினைவிடத்தின் முக்கிய அம்சமாக திருவாரூர் தேரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 39 மீட்டர் (128 அடி) உயரத் தேர் விளங்குகிறது. இதனுள் ஆளுயர வள்ளுவர் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இத்தேரைச் சுற்றிலும் பளிங்குக் கற்களில் குறட்பாக்கள் பதிப்பிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. இந்நினைவிடத்தின் பிரதான வளாகத்தில் 1,330 குறட்பாக்களும் கல்வெட்டுகளாகச் செதுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வள்ளுவரின் சிலைகள் உலக அளவில் பரவலாகக் காணப்படுகிறது. இவற்றில் முக்கியமானவை கன்னியாகுமரி, சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, விசாகப்பட்டினம், ஹரித்வார், புத்தளம், சிங்கப்பூர், இலண்டன், தாய்வான் ஆகிய இடங்களிலுள்ள சிலைகளாகும். இவற்றுள் மிக உயரமான சிலை கன்னியாக்குமரியில் வங்கக் கடல், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றும் சங்கமிக்கும் இடமான இந்திய தீபகற்பத்தின் தென்முனையில் 2000-ம் ஆண்டு நிறுவப்பட்ட 41 மீட்டர் (133 அடி) உயரக் கற்சிலையாகும். இச்சிலை தற்போது இந்தியாவின் 25-வது பெரிய சிலையாகும். 1968-ம் ஆண்டு ஜனவரி 2 அன்று தமிழக அரசு சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நிறுவிய பல ஆளுயரச் சிலைகளில் வள்ளுவரின் முழு உருவச் சிலையும் ஒன்றாகும். மரபுத் தாக்கம் குறள் தொன்றுதொட்டு சான்றோர்களால் போற்றிவரப்பட்ட ஒரு தமிழ் நூலாகும். சங்ககாலத்துப் பிழைப்பட்ட சிந்தனைகளைத் திருத்தி தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூல் இது என்பது அனைத்து அறிஞர்களாலும் ஒருமனதாக ஏற்கப்படும் கருத்து. இந்தியத் துணைக்கண்ட இலக்கியங்கள் பலவற்றோடும் ஒப்பீடு செய்து அனைத்துத் தரப்பினராலும் பயிலப்படும் நூல் திருக்குறள். பதினெட்டாம் நூற்றாண்டில் துவங்கி பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூல் உலக அரங்கில் பேசப்படும் இலக்கியமாகத் திகழ்கிறது. குறளால் உந்தப்பட்ட ஆசிரியர்களில் இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், சேக்கிழார், கம்பர், லியோ டால்ஸ்டாய், மகாத்மா காந்தி, ஆல்பர்ட் சுவைட்சர், இராமலிங்க அடிகளார், இ. எஸ். ஏரியல், வீரமாமுனிவர், காரல் கிரவுல், ஆகஸ்டு ஃப்ரெட்ரிச் கேமரர், நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி, எல்லீசன், சார்லஸ் எட்வர்ட் கோவர், ஜி. யு. போப், வினோபா பாவே, அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி, அப்துல் கலாம், மற்றும் யூ ஹ்சி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்களுள் பலர் குறளை தங்களது தாய்மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். தமிழ் மொழியில் அதிகம் சுட்டப்படும் இலக்கியமாகத் திருக்குறள் விளங்குகிறது. பண்டைய நூல்களான புறநானூறு, மணிமேகலை, சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம், திருவள்ளுவமாலை போன்ற அனைத்தும் வள்ளுவராலேயே பெயரிட்டு அழைக்கப்படாத குறளைப் பல்வேறு சிறப்புப் பெயர்களிட்டு தங்களது பாடல்களில் சுட்டுகின்றன. குறளின் வரிகளும் சிந்தனைகளும் புறநானூரில் 32 இடங்களிலும், புறப்பொருள் வெண்பாமாலையில் 35 இடங்களிலும், பதிற்றுப்பத்தில் ஓரிடத்திலும், பத்துப்பாட்டில் ஓரிடத்திலும், சிலப்பதிகாரத்தில் 13 இடங்களிலும், மணிமேகலையில் 91 இடங்களிலும், சீவக சிந்தாமணியில் 20 இடங்களிலும், வில்லிபாரதத்தில் 12 இடங்களிலும், திருவிளையாடற் புராணத்தில் 7 இடங்களிலும், கந்தபுராணத்தில் 4 இடங்களிலும் சுட்டப்படுகின்றன. கம்பராமாயணத்தில் கம்பர் சுமார் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் குறளைச் சுட்டுகிறார். இந்தியாவிலும் உலக அளவிலும் சைவ, நனிசைவ, மற்றும் தாவர உணவுகள் பற்றிய மாநாடுகளில் பரவலாகச் சுட்டப்படும் நூலாகவும் திருக்குறள் விளங்குகிறது. மேலும் விலங்குரிமை, கொல்லாமை, புலான் மறுத்தல் உள்ளிட்ட தலைப்புகளில் எழும் சமூக ஊடக மற்றும் இணைய விவாதங்களில் குறட்பாக்கள் பெரிதும் சுட்டப்படுகின்றன. ஆங்கிலேய ஆட்சியின் போது திருக்குறள் முதன்முதலாகப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆயின் தேர்ந்தெடுக்கப்பட்ட வெறும் 275 குறட்பாக்கள் மட்டுமே மூன்றாம் வகுப்பு தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிச் சிறார்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னரும் பல ஆண்டுகளாக குறளைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் இருந்து வந்தன. 2016-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் "அறம் பிறழாத குடிமக்களைக் கொண்டதாக இந்நாட்டினை ஆக்கவேண்டும்" என்று பணித்து 2017–2018 கல்வியாண்டு முதல் குறளின் முதல் இரண்டு பால்களிலுள்ள 108 அதிகாரங்களில் காணப்படும் 1,080 குறட்பாக்களையும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்பட வேண்டுமென்ற உத்தரவினைப் பிறப்பித்தது. மேலும் "வாழ்வியலுக்குத் தேவையான அறங்களையும் அறிவினையும் குறளுக்கு நிகராக நல்கக்கூடிய வேறு ஒரு சமய நூலோ மெய்யியல் நூலோ எங்குமில்லை" என்று கூறி உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பினை நல்கியது. மகாத்மா காந்தி உட்பட வரலாற்றில் பலரை அகிம்சையின் வழியில் திருக்குறள் பயணிக்க வைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. குறளின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பு ஒன்றைப் படிக்க நேர்ந்ததன் விளைவாக லியோ டால்ஸ்டாய்க்கு வள்ளுவரின் இன்னா செய்யாமை அதிகாரம் பற்றித் தெரிய வந்ததும் அது வன்முறையை எதிர்க்கும் டால்ஸ்டாயின் சிந்தனைகளுக்கு வலுசேர்த்தது. தனது பொதுவாழ்வின் துவக்கத்தில் மகாத்மா காந்தி டால்ஸ்டாயிடம் அறிவுரை கேட்க, தனது "ஒரு இந்துவுக்கு வரைந்த மடல்" (A Letter to a Hindu) என்று தலைப்பிட்ட ஒரு கடிதம் வாயிலாக டால்ஸ்டாய் வள்ளுவரது இச்சிந்தனைகளை காந்திக்கு அறிமுகம் செய்துவைத்து அவரை அகிம்சை வழியில் நின்று சுதந்திரப் போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவ்வறிவுரையின் படி காந்தி தனது சிறைவாழ்வின் போது திருக்குறளைப் படிக்கத் துவங்கி அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போர் புரிவதென்று முடிவெடுத்தார். தனது இளவயது முதலே குறளின்பால் ஈர்க்கப்பட்ட 'வள்ளலார்' இராமலிங்க அடிகளார், கொல்லாமையையும் புலால் மறுப்பினையும் மக்களுக்கு வலியுறுத்தி அகிம்சையையும் ஜீவகாருண்யத்தையும் மக்களிடையே பரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இவற்றையும் பார்க்க தமிழ் நீதி நூல்கள் அய்யன் திருவள்ளுவர் சிலை வள்ளுவர் கோட்டம் திருக்குறள் அரபு மொழிபெயர்ப்பு குறிப்புகள் a. குறள் "தார்மீக சைவ" அல்லது "சாத்வீக சைவ" வாழ்க்கை முறையினை, அதாவது மனிதர்கள் இறைச்சி உண்ணாமலும் வலியுணர் உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்காமலும் வாழ தார்மீக ரீதியாகக் கடமைப்பட்டுள்ளனர் என்ற கோட்பாட்டை, ஆழமாக வலியுறுத்துகிறது. சைவ மற்றும் நனிசைவ வாழ்க்கை முறைகளின் தார்மீக அடித்தளமாக இருக்கும் அகிம்சை என்ற கருத்து, குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்தில் (அதிகாரம் 32) விவரிக்கப்பட்டுள்ளது. இக்கோட்பாட்டைப் பற்றிய இன்றைய அறிஞர்களின் சிந்தனைகளைப் பற்றி மேலும் அறிய எங்கலின் “The Immorality of Eating Meat" ["இறைச்சியை உண்ணும் ஒழுக்கக்கேடு"] (2000) என்ற கட்டுரையைப் பார்க்கவும். b. குறளில் வடமொழிச் சொற்களின் எடுத்துக்காட்டுகளுக்கு சுவெலபிலின் The Smile of Murugan ["முருகனின் சிரிப்பு"] நூலினைப் பார்க்கவும். c. தற்போதைய கிரிகோரியன் ஆண்டில் 31 ஆண்டுகளைச் சேர்ப்பதன் மூலம் வள்ளுவர் ஆண்டு பெறப்படுகிறது. d. குறளின் அருட்சார் அறங்களை (அஃதாவது இன்னா செய்யாமை, கொல்லாமை, அன்புடைமை, புலான் மறுத்தல், கண்ணோட்டம், அருளுடைமை ஆகியன) சுவெலபில் ஆபிரகாமிய நூல்களான விவிலியத்தின் இணைச் சட்ட நூலின் அதிகாரத்தோடும் (14:3–14:29) குர்ஆனிலுள்ள அதிகாரத்தோடும் (5:1–5) ஒப்பிடுகிறார். e. ஜி. யு. போப்பின் கூற்று ஒரு "தவறான இலக்கியக் காலவரையறை" என்று நல்லசாமி பிள்ளை நிறுவுகிறார். "இதுபோல் நிறுவ முயலும் போப்பின் முயற்சிக்கு குறளின் முதலிரு பால்கள் பெரும் தடையாகவே விளங்குகின்றன" என்றும் "கிறித்தவ நெறிகளில் காணப்படும் நுணுக்கமான பிழைகளை அசாதாரணமாகப் புறந்தள்ளும் ஆற்றல்மிக்க சிந்தனைகளைக் குறளின் முதலிரு பால்களில் காணலாம்" என்றும் நல்லசாமி பிள்ளை மேலும் கூறுகிறார். விவிலியம் கூறும் கொல்லாமை வெறும் மனிதக் கொலைகளை மட்டுமே தடுக்க முயலுகையில் குறள் கூறும் கொல்லாமையோ மனிதன் உட்பட அனைத்து விலங்குகளையும் உள்ளடக்கியது என்று லாசரஸ் சுட்டுகிறார். இதுவே இன்று அறிஞர்களின் ஒருமித்தக் கருத்தாக உள்ளது. f. அனந்தநாதன் கூறுவதாவது: "." (குறள் 550). g. 1,330 குறள்களும் பொதுவாக மூன்று பால்களிலும் ஒரே தொடர்ச்சியாக நேரியல் பாணியில் எண்ணப்படுகின்றன. குறள்களை அவற்றின் அதிகார எண் மற்றும் அதிகாரத்திற்குள் அவற்றின் பாவரிசை எண் ஆகியவற்றைக் கொண்டும் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக, 104 ஆம் அதிகாரத்தில் (உழவு) மூன்றாவது குறளை “குறள் 1033” என்றோ “குறள் 104:3” என்றோ குறிப்பிடலாம். இடைக்கால உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளை பலவாறு இயல்களாகப் பிரித்து அவற்றுள் அதிகார வைப்புமுறையையும் அதிகாரங்களுக்குள் குறள்களின் வைப்புமுறையையும் பலவாறு மாற்றியுள்ளதால், அதிகார வரிசை எண்களும் குறட்பாக்களின் வரிசை எண்களும் உரைக்கு உரை பலவாறு மாற்றமடைந்துள்ளன. இதன் விளைவாக அதிகாரங்களும் குறட்பாக்களும் வள்ளுவரது உண்மையான வரிசைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகார மற்றும் குறட்பாக்களின் வரிசைமுறை பரிமேலழகரின் பகுப்புமுறையின் அடிப்படையில் பின்பற்றப்படுகின்றன. h. சோ. ந. கந்தசாமி கூறுவதாவது: "பிற்காலத்து ஒளவையாரின் ஞானக்குறளும் உமாபதிசிவத்தின் திருவருட்பயனும் வீட்டுப் பாலாகக் கொள்ளப்பெற்றன. உயிரின் தேவை வீட்டின்பமாக அமைகிறது. பிறவிச் சுழற்சியினின்றும் விடுபட்டு உயிர் பேரின்பப் பேற்றினை எய்துதற்குரிய நெறிகளைத் திருவள்ளுவர் அறத்துப் பாலின் இறுதி அதிகாரங்களில் வரையறுத்துக் கூறியுள்ளமையால், வீட்டுப்பாலினைத் தனியே கூறவெண்டிய தேவை அவர்க்கு ஏற்படவில்லை." i. இந்து மதத்தின் "நிஷ்காம கர்மா" கோட்பாடு இங்கு நினைவுகூறத்தக்கது. தார்மீக சிந்தனையுடன் அறம் பிறழாது வாழும் ஒரு சாமானியன் "உள்ளத்துறவு", அஃதாவது பற்றற்று கடமையாற்றுதல், மூலமாக ஒரு துறவு மூலம் முனிவர் அடைவதை எளிதில் அடையமுடியும் என்று கூறுகிறது நிஷ்காம கர்மா. குறள் 629ஐ ஒப்பீட்டுடன் நோக்குக: "இன்பம் விளையும் போது அவ்வின்பத்தில் திளைக்காதவன் துன்பம் விளையும் போது அத்துன்பத்தால் வாடுவதில்லை". j. துறவறவியல் விளக்கம்: "அவாக்களை அடக்கிக் கட்டுப்படுத்தி, ஒழுக்க நெறி பிறழாது வாழ்வதே துறவறமாகும். அஃதாவது, ஐம்புலன்கள் வழி ஏற்படக் கூடிய நெறி பிறழும் செயல்களை எந்நிலையிலும் துறந்து வாழ்தலே துறவறமாகும் (துறவு நெறியாகும்). இத்துறவறம் இல்லறத்திற்கு மாறுபட்டதோ, இல்லறத்தையே துறப்பதோ இல்லை." k. ஒரு செய்யுளின் பொருளைத் தற்கால மொழிநடையில் விளக்கிக் கூறுவதே உரை எனப்படும். இது இந்திய மரபில் "பாஷ்யம்" என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆழமாக அலசி ஆராய்ந்ததன் விளைவாக அச்செய்யுளின் ஆழ்பொருளைக் கண்டுணர்ந்த அறிஞர்களால் எழுதப்படுவதாகும். l. இந்த மொழிபெயர்ப்பு இராம வர்மா ஆராய்ச்சி மையத்தின் பதிப்பிதழில் பாகம் VI, பகுதி II; பாகம் VIII, பகுதி; பாகம் IX, பகுதி I ஆகியவற்றில் முறையே 1938, 1940, மற்றும் 1941 ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டது. m. 1967-ம் ஆண்டு தேதியிட்ட தமிழ்நாடு அரசு, அரசு ஆணை எண் 1193. n. சென்னை இராயப்பேட்டையிலுள்ள பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ள கிணற்றின் சுவரில் காணப்படும் கல்வெட்டு எல்லீசனின் வள்ளுவரின் மீதான பற்றைப் பறைசாற்றுவதாக உள்ளது. இக்கிணறானது அப்போது சென்னையில் நிலவிய குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க வேண்டி எல்லீசனின் உத்தரவின் படி 1818-ம் ஆண்டு வெட்டப்பட்ட 27 கிணறுகளில் ஒன்றாகும். இந்நீண்ட கல்வெட்டில் எல்லீசன் வள்ளுவரைப் புகழ்ந்துரைத்து தனது குடிநீர் பஞ்சத்தைக் களையும் செயற்பாட்டினை ஒரு குறட்பாவினைக் கொண்டு விளக்குகிறார். எல்லீசன் சென்னை நாணயகத்தின் தலைவராக இருந்தபோது வள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்டார். எல்லீசனின் கல்லறையில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டில் அவரது குறள் உரையைப் பற்றிய குறிப்பையும் காணமுடிகிறது. o. கல்வெட்டில் காணப்படும் ஆசிரியப்பாவில் இயற்றப்பட்ட செய்யுள் பின்வருமாறு (எல்லீசன் எடுத்தாளும் குறட்பா சாய்வெழுத்துக்களில் உள்ளன): சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும் | ஆழியில் இழைத்த வழகுறு மாமணி | குணகடன் முதலாக குட கடலளவு | நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப் | பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே | பண்டாரகாரிய பாரம் சுமக்கையில் | புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான் | தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் | திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றிய் | இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும் | வல்லரணும் நாட்டிற் குறுப்பு | என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து | ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்த வரு | ..றாச் செல்லா நின்ற | இங்கிலிசு வரு 1818ம் ஆண்டில் | பிரபவாதி வருக்கு மேற் செல்லா நின்ற | பஹுதான்ய வரு த்தில் வார திதி | நக்ஷத்திர யோக கரணம் பார்த்து | சுப திநத்தி லிதனோ டிருபத்தேழு | துரவு கண்டு புண்ணியாஹவாசநம் | பண்ணுவித்தேன். மேற்கோள்கள் மேற்கோள் தரவுகள் See original text in Project Madurai. ஆலத்தூர் கிழார், கழுவாய் இல்லை!, புறநானூறு (பாடல் 34), See original text in Tamil Virtual University. மேலும் படிக்க Stuart Blackburn, "The Legend of Valluvar and Tamil Literary History," Modern Asian Studies 34, 2 (May, 2000): 459. Chandramouliswar, R. (1950). Theory of Government in the Kural. Indian Journal of Political Science, 11(3), pp. 1–18. The Indian Political Science Association. ISSN: 0019-5510. https://www.jstor.org/stable/42743290 Diaz, S. M. (2000). Tirukkural with English Translation and Explanation. (Mahalingam, N., General Editor; 2 volumes), Coimbatore, India: Ramanandha Adigalar Foundation. Gnanasambandan, A. S. (1994). Kural Kanda Vaazhvu. Chennai: Gangai Puthaga Nilayam. Udaiyar Koil Guna. (n.d.). திருக்குறள் ஒரு தேசிய நூல் [Tirukkural: A National Book] (Pub. No. 772). Chennai: International Institute of Tamil Studies. Karunanidhi, M. (1996). Kuraloviam. Chennai: Thirumagal Nilayam. Klimkeit, Hans-Joachim. (1971). Anti-religious Movement in Modern South India (in German). Bonn, Germany: Ludwig Roehrscheid Publication, pp. 128–133. Kuppusamy, R. (n.d.). Tirukkural: Thatthuva, Yoga, Gnyana Urai [Hardbound]. Salem: Leela Padhippagam. 1067 pp. https://vallalars.blogspot.in/2017/05/thirukkural-thathuva-yoga-gnayna-urai.html Nagaswamy, R. Tirukkural: An Abridgement of Sastras. Mumbai: Giri, . Nehring, Andreas. (2003). Orientalism and Mission (in German). Wiesbaden, Germany: Harrasowitz Publication. M. S. Purnalingam Pillai. (n.d.). Critical Studies in Kural. Chennai: International Institute of Tamil Studies. Smith, Jason W. "The Implied Imperative: Poetry as Ethics in the Proverbs of the Tirukkuṟaḷ". Journal of Religious Ethics 50, no. 1 (2022): 123-145. Subramaniyam, Ka Naa. (1987). Tiruvalluvar and his Tirukkural. New Delhi: Bharatiya Jnanpith. Thirukkural with English Couplets L'Auberson, Switzerland: Editions ASSA, . Thirunavukkarasu, K. D. (1973). Tributes to Tirukkural: A compilation. In: First All India Tirukkural Seminar Papers. Madras: University of Madras Press. pp. 124. Varadharasan, Mu. (1974). Thirukkual Alladhu Vaazhkkai Vilakkam. Chennai: Pari Nilayam. Varadharasan, Mu. (1996). Tamil Ilakkiya Varalaru. New Delhi: Sakitya Academy. Viswanathan, R. (2011). Thirukkural: Universal Tamil Scripture (Along with the Commentary of Parimelazhagar in English) (Including Text in Tamil and Roman). New Delhi: Bharatiya Vidya Bhavan. 278 pp. Yogi Shuddhananda Bharati (Trans.). (15 May 1995). Thirukkural with English Couplets. Chennai: Tamil Chandror Peravai. Zvelebil, K. (1962). Foreword. In: Tirukkural by Tiruvalluvar (Translated by K. M. Balasubramaniam). Madras: Manali Lakshmana Mudaliar Specific Endowments. 327 pages. வெளி இணைப்புகள் திருக்குறள் நூல் உரை - பதினெண் கீழ்க்கணக்கு திருக்குறள்: திருவள்ளுவரின் படைப்பு பிரிட்டானியா கலைக்களஞ்சியத்திலிருந்து திருக்குறள் ஆண்ட்ராய்டு செயலி குறள்திறன் இணையதளம் திருக்குறள்.net; பன்மொழி மொழிப்பெயர்ப்பு திருக்குறள்.com மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள திருக்குறள் தொகுப்பு சென்னை IIT வழங்கும் (தமிழில் குறள்களுடன்)ஜி. யு. போப்பின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பும் உரையும் திருக்குறள் - இலக்கியம் ஜி. யு. போப்பின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு திருக்குறளில் பயின்றுவரும் சொற்களின் அணி வகுப்பை அறிவதற்கான இணையதளம் தமிழ் மெய்யியல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழ் அற நூல்கள்
2738
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE
இளையராஜா
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: 2 சூன் 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு, இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 2018 சனவரி 25 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றில் புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர். 2022 சூலை 6 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் இவரை நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்தார். வாழ்க்கைச் சுருக்கம் இளையராஜாவின் இயற்பெயர் "ஞானதேசிகன்" என்பதாகும். இவர் ஆரம்ப காலத்தில் பல மேடை கச்சேரிகளில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து இசையமைத்த போது பொதுவான கிராமிய பெயராக இராசய்யா என்று மாற்று பெயரை வைத்து கொண்டார். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் இராமசாமி–சின்னத்தாய் இணையாருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன், தாவீது டேனியல் பாஸ்கர் (ஆர். டி. பாஸ்கர்), கங்கை அமரன் என்ற அமர் சிங் ஆகிய மூவரும் இவரது உடன்பிறந்தவர்கள் ஆவார். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா இவர்களுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன், அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா), யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் திரைப்பட இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொண்டார். பின்பு 1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கித்தார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார். பிறகு 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில், இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில், பத்ரகாளி திரைப்படத்தில் "கண்ணன் ஒரு கைக்குழந்தை", மற்றும் ரீதி கௌளை ராகத்தில் கவிக்குயில் திரைப்படத்தில் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" போன்றன இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார். இராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ்த் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார். இளையராஜா புதிதாக 'இசை ஓடிடி' என்ற பிரத்தியேக இணையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இசைப்பயணம் இளையராஜா ஒரு கிராமப்புறத்தில் வளர்ந்தார், பலவிதமான தமிழ் நாட்டுப்புற இசையை வெளிப்படுத்தினார். தனது 14 வயதில், தனது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான "பாவலர் பிரதர்ஸ்" என்ற பயண இசைக் குழுவில் சேர்ந்தார், அடுத்த தசாப்தத்தை தென்னிந்தியா முழுவதும் நிகழ்த்தினார். குழுவுடன் பணியாற்றிக் கொண்டிருக்கையில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு மறைவினால் தமிழ் கவிஞரான கண்ணதாசன் எழுதிய இரங்கற்பாவிற்கு இவர் தனது முதல் இசைத்தொகுப்பு ஒரு இசை தழுவல் எழுதினார். 1968 ஆம் ஆண்டில், இளையராஜா மெட்ராஸில் (இப்போது சென்னை) பேராசிரியர் தன்ராஜுடன் ஒரு இசைப் பாடத்தைத் தொடங்கினார் ,இதில் மேற்கத்திய பாரம்பரிய இசையின் கண்ணோட்டம், எதிர்நிலை போன்ற நுட்பங்களில் தொகுத்தல் பயிற்சி மற்றும் கருவி செயல்திறன் பற்றிய ஆய்வு ஆகியவை அடங்கும். இளையராஜா லண்டனின் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் தொலைதூர கற்றல் சேனல் மூலம் பாடநெறியை முடித்த பின்னர் பாரம்பரிய கிதாரில் தங்கப்பதக்கம் வென்றவர். டி.வி.கோபாலகிருஷ்ணனிடமிருந்து கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார் . அமர்வு இசைக்கலைஞர் மற்றும் திரைப்பட இசைக்குழு 1970 களில் சென்னையில், இளையராஜா ஒரு இசைக்குழுவில் கிட்டார் வாசித்தார், மேலும் ஒரு அமர்வு கிதார் கலைஞர் , கீபோர்டிஸ்ட் மற்றும் திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சலில் சௌதுரி போன்ற இயக்குநர்களுக்கான அமைப்பாளராக பணியாற்றினார். இளையராஜா இந்தியாவில் சிறந்த இசையமைப்பாளராகப் போகிறார் என்று சவுத்ரி ஒருமுறை கூறினார். கன்னடத் திரைப்பட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் இசை உதவியாளராக பணியமர்த்தப்பட்ட பின்னர், பெரும்பாலும் கன்னட சினிமாவில் 200 திரைப்படத் திட்டங்களில் பணியாற்றினார். ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக, இளையராஜா ஆர்கெஸ்ட்ரேட் செய்வார். இது வெங்கடேஷ் உருவாக்கிய மெல்லிசைக் கோடுகளை ஜி.கே.வெங்கடேஷின் வழிகாட்டுதலின் கீழ் இசையமைப்பதைப் பற்றி இளையராஜா அதிகம் கற்றுக்கொண்ட நேரமாகும். இந்த காலகட்டத்தில், இளையராஜாவும் தனது சொந்த இசைக்குறிப்புகளை எழுதத் தொடங்கினார். இவரது இசையமைப்புகளைக் கேட்க, வெங்கடேஷின் அமர்வு இசைக்கலைஞர்களை அவர்களின் ஓய்வு நேரங்களில் இவரது இசைக்குறிப்புகளிலிருந்து சில பகுதிகளை இசைக்க வழியுறுத்தினார். திரைப்பட இசையமைப்பாளர் 1975 ஆம் ஆண்டில், திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி என்ற தமிழ் மொழி திரைப்படத்திற்கான பாடல்களையும் திரைப்பட பின்னணி இசை இசையமைக்க இவரை நியமித்தார். ஒலிப்பதிவுக்காக, இளையராஜா நவீன பிரபலமான திரைப்பட இசை இசைக்குழுவின் நுட்பங்களை தமிழ் நாட்டுப்புற கவிதை மற்றும் நாட்டுப்புற பாடல் மெல்லிசைகளுக்குப் பயன்படுத்தினார், இது மேற்கத்திய மற்றும் தமிழ் மொழிகளின் இணைவை உருவாக்கியது. இளையராஜா தனது திரைப்பட பின்னணி இசையில் தமிழ் இசையைப் பயன்படுத்தியது இந்திய திரைப்பட பின்னணி இசை சூழலில் புதிய செல்வாக்கை செலுத்தியது. 1980 களின் நடுப்பகுதியில், இளையராஜா தென்னிந்திய திரையுலகில் ஒரு திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இசை இயக்குனராக வளர்ந்து வருகிறார். இவர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, ஓ. என். வி. குறுப்பு, சிறீகுமாரன் தம்பி, வெட்டூரி சுந்தரராம மூர்த்தி, ஆச்சார்யா ஆட்டாரியா, சிறிவெண்ணிலா சீதாராம சாஸ்த்ரி, சி. உதய சங்கர் மற்றும் குல்சார் போன்ற இந்தியக் கவிஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களுடன் பணியாற்றியுள்ளார். பாரதிராஜா, எஸ். பி. முத்துராமன், மகேந்திரன், பாலு மகேந்திரா, கே. பாலச்சந்தர், மணிரத்னம், சத்யன் அந்திக்காடு, பிரியதர்சன், ஃபாசில், வம்சி, கே. விஸ்வநாத், சிங்கீதம் சீனிவாசராவ், பாலா, சங்கர் நாக், மற்றும் ஆர். பால்கி போன்ற இயக்குநர்களின் நன்றான காட்சிகளில் இவரின் இசை நன்கு அறியப்படுகிறது. இசை நடை மற்றும் தாக்கம் இந்திய திரைப்படங்களில், மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில், இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் இளையராஜாவுக்கு, இசைஞானி என்ற பட்டம் சூட்டப்பட்டது. இவர் பெரும்பாலும் "மேஸ்ட்ரோ" என்று குறிப்பிடப்படுகிறார், இது லண்டனின் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவால் வழங்கப்பட்ட மதிப்புமிக்க தலைப்பு. இந்திய திரைப்பட இசையில் மேற்கத்திய பாரம்பரிய இசை இசைக்கருவிகள் மற்றும் சரம் ஏற்பாடுகளைப் பயன்படுத்திய ஆரம்பகால இந்திய திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர். இது படங்களுக்கான ஒலிகளின் சிறந்த ஒலியை உருவாக்க இவரை அனுமதித்தது, மேலும் இவரது கருப்பொருள்கள் மற்றும் பின்னணி இசை இந்திய திரைப்பட பார்வையாளர்களிடையே கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. இந்திய திரைப்பட இசையில் வெளிப்படையான சாத்தியக்கூறுகளின் வரம்பு இளையராஜாவின் ஒழுங்குமுறை, பதிவு நுட்பம் மற்றும் இசை பாணிகளின் பன்முகத்தன்மையிலிருந்து இவரது கருத்துக்களை வரைவதற்கான முறையான அணுகுமுறையால் விரிவாக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில், விக்ரம் தமிழ்த் திரைப்படத்தில் கணினி மூலம் திரைப்படப் பாடல்களைப் பதிவு செய்த முதல் இந்திய இசையமைப்பாளர் ஆவார் . இவர் 7,000 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர், 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைப்பட பின்னணி இசையை வழங்கியவர் மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் நிகழ்த்திய உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் ஆவார். இளையராஜா இசையமைத்தது, சிம்பொனியில் (2006) ஆகும். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திருவாசகம் முதல் இந்திய சொற்பொழிவு ஆகும் . இசையமைப்பாளர் பி. கிரீனின் கூற்றுப்படி, இளையராஜாவின் "பலவிதமான இசை பாணிகளைப் பற்றிய ஆழமான புரிதல், ஒருங்கிணைந்த, ஒத்திசைவான இசை அறிக்கைகளில் மிகவும் மாறுபட்ட இசை முரண்களை இணைத்து ஒத்திசைவான இசையை உருவாக்க அவரை அனுமதித்தது". இளையராஜா இந்தியத் திரைப்பட பாடல்களைப் என்று வருகிறது ஆப்பிரிக்க-பழங்குடி, அதனால் வகைப்பட்ட ஒருங்கிணைப்பில் கூறுகள் போஸ்ஸா நோவா , நடன இசை (எ.கா., டிஸ்கோ ), டூ-கட்டுடல் , ஃபிளெமெங்கோ , ஒலி கிட்டார் -propelled மேற்கத்திய நாட்டுப்புற , பங்க் , இந்திய கிளாசிக்கல் , இந்திய நாட்டுப்புற / பாரம்பரிய , ஜாஸ் , அணிவகுப்பு ,பாத்தோஸ் , பாப், சைகெடெலியா மற்றும் ராக் அண்ட் ரோல் . இந்த வகையின் காரணமாகவும், மேற்கத்திய, இந்திய நாட்டுப்புற மற்றும் கர்நாடகக் கூறுகளை ஒன்றிணைப்பதன் மூலமும், இளையராஜாவின் இசையமைப்புகள் இந்திய கிராமப்புறவாசிகளுக்கு அதன் தாள நாட்டுப்புற குணங்களுக்காகவும், கர்நாடக ராகங்களின் வேலைவாய்ப்புக்காக இந்திய கிளாசிக்கல் இசை ஆர்வலர்களிடமும் , நகர்ப்புறவாசிகளுக்கு அதன் நவீன, மேற்கத்திய-இசை ஒலி. இசையமைப்பதற்கான காட்சிப்படுத்தல் உணர்வை இளையராஜா எப்போதும் இயங்கும் திரைப்படத்தின் கதைக் கோடுடன் பொருத்துவதோடு, அவ்வாறு செய்வதன் மூலமும், பார்வையாளர்களுக்கு தனது இசை மதிப்பெண் மூலம் சுவையான உணர்ச்சிகளை உணர சிறந்த அனுபவத்தை உருவாக்குகிறார். இசையுடன் கலக்கும் இந்த கலையை அவர் தேர்ச்சி பெற்றார், மிகச் சிலரே நீண்ட காலத்திற்கு தங்களைத் தழுவிக்கொள்ள முடிந்தது. இளையராஜா சிக்கலான தொகுப்பு நுட்பங்களைப் பயன்படுத்துகிறார் என்றாலும், அவர் பெரும்பாலும் தன்னிச்சையான முறையில் படங்களுக்கான அடிப்படை மெல்லிசைக் கருத்துக்களை வரைகிறார். இந்தியன் பெர்ஃபாமிங் ரைட் சொசைட்டியின் குழு உறுப்பினர் அச்சில்லே ஃபோலர் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளில் இளையராஜா உருவாக்கிய நட்சத்திர அமைப்பு, அவரை உலகின் சிறந்த 10 பணக்கார இசையமைப்பாளர்களில் ஒருவராக வைத்திருக்க வேண்டும், எங்காவது ஆண்ட்ரூ லாயிட் வெபருக்கு இடையில் (1.2 பில்லியன் டாலர்) ) மற்றும் மிக் ஜாகர் (million 300 மில்லியனுக்கும் அதிகமானவை). இசை பண்புகள் இளையராஜாவின் இசை மேற்கத்திய, இந்திய கருவிகளின் தொகுப்பான ஒரு ஆர்கெஸ்ட்ரேஷன் நுட்பத்தால் வகைப்படுத்தப்படுகிறது. இவர் மின்னணு இசை தொழில்நுட்பம் பயன்படுத்தும் கூட்டிணைப்பு, மின்சார கிட்டார், விசைப்பலகைகள், டிரம் இயந்திரங்கள், ரிதம் பெட்டிகள் மற்றும் மிடி போன்ற பாரம்பரிய கருவிகள் கொண்டிருக்கும் பெரிய ஆர்கெஸ்ட்ராவில் வீணை, வேணு, நாதஸ்வரம், டோலக்கின், மிருதங்கம் மற்றும் தபலா அத்துடன் மேற்கத்திய முன்னணி கருவிகள் சாக்ஸபோன்கள் மற்றும் புல்லாங்குழல் ஆகியவைகளால் ஒருங்கிணைக்கிறது. இவரது பாடல்களில் உள்ள பாஸ்லைன்கள் மெல்லிசை மாறும், உயரும் மற்றும் வியத்தகு முறையில் விழும். பாலிரிதம் கூட தெளிவாகத் தெரிகிறது, குறிப்பாக இந்திய நாட்டுப்புற அல்லது கர்நாடக தாக்கங்களைக் கொண்ட பாடல்களில். இந்தியாவின் மரியாதைக்குரிய பாடகர்கள் மற்றும் பின்னணிப் பாடகர்களை தனது பாடல்களின் இனிமைக்காகவும் அமைப்பு கணிசமான குரல் கற்பு கோருவது போன்றவைகளுக்காக, பல்வேறு மொழிகளில் பாடும் பாடகர்களில் சிலரை பயன்படுத்தியுள்ளார் அதில், டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி, பி. சுசீலா, கே. ஜே. யேசுதாஸ், கே.எஸ் சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், மனோ, எம். ஜி. ஸ்ரீகுமார், ராஜ்குமார், ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர்,ஜெயச்சந்திரன், உமா ரமணன், எஸ். பி. சைலஜா, ஜென்சி, ஸ்வர்ணலதா, மின்மினி, சுஜாதா மோகன், கவிதா கிருஷ்ணமூர்த்தி, ஹரிஹரன், உதித் நாராயண், சாதனா சர்கம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோராவர். இளையராஜா தனது சொந்த 400 இசையமைப்புகளை படங்களுக்காக பாடியுள்ளார், மேலும் இவரது முழுமையான, ஆழமான குரலால் அடையாளம் காணப்படுகிறார். இவர் தமிழில் தனது சில திரைப்படங்களுக்காக ஒருசில பாடல்களை தானே இயற்றியுள்ளார். தமிழில் இளையராஜா இயற்றிய முழு முதற்பாடல் மணிரத்னம் இயக்கிய இதய கோவிலில் இதயம் ஒரு கோயில் எனும் பாடலாகும். ஏறும் குறிப்புகளில் மட்டுமே ஒரு பாடலை இயற்றிய ஒரே இசையமைப்பாளர் இவர்தான் என்று பரவலாக நம்பப்படுகிறது. சினிமா அல்லாத வெளியீடு இளையராஜாவின் முதல் இரண்டு திரைப்படம் அல்லாத ஆல்பங்கள் இந்திய மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசையின் இணைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். முதல், அதை எப்படி பெயரிடுவது? (1986), கர்நாடக மாஸ்டர் தியாகராஜர் மற்றும் யோகான் செபாஸ்தியன் பாக் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . இது கர்நாடக வடிவத்தின் இணைவு மற்றும் பாக் பார்ட்டிடாஸ் , ஃபியூக்ஸ் மற்றும் பரோக் இசை அமைப்புகளுடன் ராகங்களை கொண்டுள்ளது . இரண்டாவது, நத்திங் பட் விண்ட் (1988), ஃப்ளூடிஸ்ட் ஹரிபிரசாத் சௌரசியா மற்றும் 50-துண்டு இசைக்குழு ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது மற்றும் தலைப்பில் பரிந்துரைக்கப்பட்ட கருத்தியல் அணுகுமுறையை எடுக்கிறது music இசை என்பது "பல்வேறு வகையான காற்று நீரோட்டங்களுக்கு ஒத்த இயற்கையான நிகழ்வு" . இளையராஜாவின் கிளாசிகல்ஸ் ஆன் தி மாண்டோலின் (1994) ஆல்பத்திற்காக மின்சார மண்டலவியலாளர் உ. ஸ்ரீநிவாஸ் பதிவுசெய்த கர்நாடக கிருதிகளின் தொகுப்பை அவர் இயற்றியுள்ளார் . இளையராஜா மத / பக்தி பாடல்களின் ஆல்பங்களையும் இயற்றியுள்ளார் . அவரது குரு ரமணா geetam (2004) இந்து மதம் மறைபொருள் ஈர்க்கப்பட்டு பிரார்த்தனை பாடல்களை ஒரு சுழற்சி உள்ளது ரமணா மகரிஷி , தன் Thiruvasakam : ஒரு குறுக்கு (2005) ஒரு உள்ளது oratorio பண்டைய தமிழ் கவிதைகள் அமெரிக்கன் பாடலாசிரியர் ஆங்கில சிறிதளவிலான படியெடுக்கப்படுவதோடு இசுடீபன் சுவார்ட்சு மற்றும் நிகழ்த்த புடாபெஸ்ட் சிம்பொனி இசைக்குழு .இளையராஜாவின் மிக சமீபத்திய வெளியீடு தி மியூசிக் மெசியா (2006) என்ற உலக இசை சார்ந்த ஆல்பமாகும் . அவர் தனது 'இசை ஓடிடி' விண்ணப்பம் விரைவில் தொடங்கப்படும் என்று தனது பிறந்தநாளில் அறிவித்துள்ளார், மேலும் அவரது பாடல்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு கருத்தரிக்கப்பட்டன, தயாரிக்கப்பட்டன, வழங்கப்பட்டன மற்றும் பிற இசைக்கலைஞர்களுடன் ஒத்துழைப்பு. குறிப்பிடத்தக்க படைப்புகள் இளையராஜா, ஒரு நிறுவனத்திற்கான தனது முதல் இசையமைப்பில், 2019 இல் இந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள் (எச்.சி.சி.பி) க்காக ஒரு கீதத்தை இயற்றினார். இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற 1996 உலக அழகி அழகுப் போட்டி போன்ற நிகழ்வுகளுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார் . 1996 இல் இந்தியா 24 ஹவர்ஸ் என்ற ஆவணப்படத்திற்கு இசையமைத்தார் . இளையராஜா 'பஞ்சமுகி' என்று பிரபலமாக அறியப்படும் ஒரு புதிய கர்நாடக ராகத்தை கண்டுபிடித்தார், இது இசைத்துறையில் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி திரைப்படமான 1984 ஆம் ஆண்டு மலையாள மொழி மொழி மை டியர் குட்டிச்சாத்தானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இவரால் இசைக்கப்பட்டது. நாயகன் (1987) திரைப்படத்திற்கான பாடல்களை உருவாக்கினார், இது இந்திய திரைப்படமான டைம் பத்திரிகையால் எல்லா நேரத்திலும் 100 சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகும், அவர் இந்தியாவின் அதிகாரபூர்வ பட்டியல்களில் ஆஸ்காருக்கு தகுதியான சுவாதி முத்யம் (1986), நாயகன் (1987), தேவர் மகன் (1992), அஞ்சலி (1990 திரைப்படம்), குரு (1997) மற்றும் ஹே ராம் (2000) போன்ற பல திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார், மற்றும் இந்திய கலைத் திரைப்படத்துக்கான அடூர் கோபாலகிருஷ்ணனின் FIPRESCI பரிசு வென்ற நிழல்குத்து ( "நிழல் கொலை") (2002) இத்திரைப்படத்திற்கும் இசையமைத்தார். கோவிட்-19 பெருந்தொற்றுகளுக்கு மத்தியில் கணிசமாக பணியாற்றி வரும் காவலர்கள், ராணுவம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவலாளிகள் போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 2020 மே மாதம் அவர் பாரத் பூமி என்ற தலைப்பில் ஒரு பாடலை இயற்றினார். இந்த பாடலை பிரபல பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடச் செய்தார், மேலும் காணொளிப் பாடலை இளையராஜா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் கணக்கு மூலம் 2020 மே 30 அன்று தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். விருதுகள் மற்றும் கௌரவிப்பு இளையராஜாவுக்கு ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன - சிறந்த இசை இயக்கத்திற்கான மூன்று மற்றும் சிறந்த பின்னணி இசைக்காக இரண்டு. 2010 இல், இவருக்கு பத்ம பூசண் விருது, இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருது வழங்கப்பட்டது மற்றும் 2018 ஆம் ஆண்டு, இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில், இசைத்துறையில் அவரது படைப்பு மற்றும் சோதனை படைப்புகளுக்காக, பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த இந்திய அங்கீகாரமான சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக், லண்டன், தொலைதூர கற்றல் முறையில் கிளாசிக்கல் கிதாரில் தங்கப் பதக்கம் வென்றவர். தரவரிசை 2013 ஆம் ஆண்டில் 100 ஆண்டு இந்திய சினிமாவைக் கொண்டாடும் சிஎன்என்-ஐபிஎன் நடத்திய கருத்துக் கணிப்பில், இளையராஜா இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்பட-இசை இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க உலக சினிமா போர்டல் "டேஸ்ட் ஆஃப் சினிமா" சினிமா வரலாற்றில் 25 சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களின் பட்டியலில் 9 வது இடத்தைப் பிடித்தது, இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்தியராவார். 2003 ஆம் ஆண்டில், நடத்திய ஒரு சர்வதேச இந்தக் கணக்கெடுப்பில் பிபிசி 165 நாடுகளில் இருந்து அரை மில்லியன் மக்கள் பங்கெடுத்த நிகழ்வில் இவரது இசையமைப்பான 1991 தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற "அடி ராக்கம்மா கையத்தட்டு" பாடல் எல்லா காலத்துப் பாடல்களிலும் முதல் பத்து இடத்தில் மிகவும் பிரபலமான நான்காவது பாடலாக தேர்வானது. ட்ரிவியா ஒரு இசை நிகழ்ச்சியின் போது தனது ஸ்டுடியோவில் அல்லது மேடையில் ஒரு பாடலை இசையமைக்கும்போது, இளையராஜா தனது பழைய ஹார்மோனியத்தை இன்னும் பயன்படுத்துகிறார். ​​இவர் தனது வாழ்க்கையில் 7000 க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியுள்ளார். 1986 ஆம் ஆண்டில், விக்ரம் படத்திற்காக கணினி மூலம் இந்திய திரைப்பட பாடல்களை பதிவு செய்த முதல் இந்திய இசையமைப்பாளர் இளையராஜா ஆவார். அகாடமி விருது பெற்ற இசைக்கலைஞர் ஏ. ஆர். ரகுமான் இளையராஜாவின் குழுவில் ஒரு பியானோ கலைஞராக பணியாற்றினார், மேலும் அவரது குழுவில் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு பணிபுரிந்தார். இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி ஒருமுறை, "இளையராஜா இந்தியாவில் சிறந்த இசையமைப்பாளராக மாறப்போகிறார் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தனது செம்பருத்தி (1992) படத்திற்காக இளையராஜா வெறும் 45 நிமிடங்களில் ஒன்பது பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், இது ஒரு பதிவு என்று கூறுகிறார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இளையராஜா திரைப்படத்தின் முழு இசைத்தடத்திற்காக உருவாக்கும் நிறைவு செய்துவிட்டதாகவும் கூற்றுக்கள் தளபதி "அரை நாள்" குறைவான. ஆர்.டி.பர்மனின் இசைக்குழுவுடன் மும்பையில் தளபதி திரைப்படத்தின் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாடலுக்கான பதிவின் போது, ​​இளையராஜா அவர்களுக்கு குறிப்புகளைக் கொடுத்தபோது, ​​அவை மிகவும் நகர்த்தப்பட்டு இசையமைப்பால் எடுக்கப்பட்டன, இதனால் அனைத்து இசைக்கலைஞர்களும் பிரமிப்புடன் கைகளை தட்டினர். இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக எழுந்துநின்று பேசினர். மரபு பிளாக் ஐட் பட்டாணி ஸ்ரீ ராகவேந்திராவின் (1985) இளையராஜா இசையமைப்பான "உனக்கும் எனக்கும்" மாதிரியை , எலிஃபங்க் (2003) இல் " தி எலிஃபங்க் தீம் " பாடலுக்காக மாதிரி செய்தது . பிரபல அமெரிக்க ராப்பர் மீக் மில் இந்தியன் பவுன்ஸ் படத்திற்காக இளையராஜாவின் ஹிட் பாடல்களில் ஒன்றை மாதிரி செய்தார் . இருந்து பெறப்பட்ட அவரது பாடல் "மெல்ல மெல்ல Ennaithottu" வாழ்க்கை பாடல் முயல் மேக் மூலம் மாதிரியாக இருந்தது Sempoi . மாற்று கலைஞர் மியா படத்திலிருந்து பெறப்பட்ட "Kaatukuyilu" மாதிரிகளாக தளபதி தன் பாடலான "மூங்கில் பங்கா" ஆல்பத்திற்காக க்கான (1991) கலா (2007). ஆல்பாரண்ட் தனது இந்திய கனவு பாடலுக்காக இளையராஜாவின் இசையை மாதிரி செய்தார் . கோட்ஜாசுபி, சத்மா திரைப்படத்திலிருந்து இளையராஜாவின் "யே ஹவா யே பிசா" மாதிரி எடுத்தார் . 1981 ஆம் ஆண்டு வெளியான 'ராம் லக்ஷ்மன்' திரைப்படத்தின் இளையராஜாவின் 'நாந்தன் உங்கப்பாண்டா' பாடல் 2012 கோடைகால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கான பிளேலிஸ்ட்டில் ஒரு பகுதியாக இருந்தது . இசைக்குப் தளபதி உள்ளடக்கப்பட்டிருந்தது கார்டியன் ' ங்கள் நீங்கள் மரணிப்பதற்கு முன் கேளுங்கள் 100 ஆல்பங்கள் . 2003 ஆம் ஆண்டில், நடத்திய ஒரு சர்வதேச இந்தக் கணக்கெடுப்பில் பிபிசி , அரை மில்லியன் 165 நாடுகளில் இருந்து மக்கள் அவரது கலவை வாக்களித்தனர் அடி ராக்கம்மா கையத்தட்டு 1991 படத்தில் இருந்து தளபதி எல்லா காலத்திலும் உலகின் முதல் 10 மிகவும் பிரபலமான பாடல்களில் நான்காவது போன்ற. நள்ளிரவில் (2020) இளையராஜாவின் "ஒரு கிளி" ஒலிப்பதிவு திரைப்பட அமைக்கப்படாத ஒரு பிரிவு திகழ்கிறது ஆனந்த கும்மி அதன் அதிகாரப்பூர்வ டிரெய்லரில் பின்னணி இசையாக (1983). நேரடி நிகழ்ச்சிகள் இளையராஜா தனது இசையை நேரலையில் நிகழ்த்துவதில்லை. அறிமுகமானதிலிருந்து அவரது முதல் பெரிய நேரடி நிகழ்ச்சி 2005 அக்டோபர் 16 அன்று இந்தியாவின் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உட்புற ஸ்டேடியத்தில் நடைபெற்ற நான்கு மணி நேர இசை நிகழ்ச்சி. அவர் 2004 இல் இத்தாலியில் டீட்ரோ கொமுனலே டி மொடெனாவில் நிகழ்த்தினார். எல்'ஆல்ட்ரோ சுயோ விழாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஃபெஸ்டிவல் இன்டர்நேஷனலே டி மியூசிகாவின் ஏஞ்சலிகாவின் 14 வது பதிப்பிற்காக வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சி. அக்டோபர் 23, 2005 அன்று, மெலிண்டா மற்றும் பில் கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகளால் நிதியுதவி செய்யப்பட்ட "எ டைம் ஃபார் ஹீரோஸ்", ஹாலிவுட் நட்சத்திரம் ரிச்சர்ட் கெர், தமிழ் மற்றும் தெலுங்கு நட்சத்திரங்கள் "இன்ஃபோடெயின்மென்ட்" ஒரு மாலை நேரத்தில் நகரத்தில் கூடிவருவதைக் கண்டார்கள் - அவர்கள் ஒன்றில் பேசினர் எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த குரல். அக்டோபர் 22, 2005 சனிக்கிழமையன்று ஹைதராபாத்தில் உள்ள கச்சிப ow லி உட்புற ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, பாடகர் உஷா உதூப் வழங்கிய மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையமைப்போடு தொடங்கியது. இது இளையராஜா ("இது இளையராஜா") என்ற தலைப்பில் ஒரு தொலைக்காட்சி பின்னோக்கி தயாரிக்கப்பட்டது, இது அவரது வாழ்க்கையை விவரிக்கிறது. அவர் கடந்த படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் நேரலை நிகழ்ச்சி டோனி மற்றும் அதற்கு முன், என்ற தலைப்பைக் நடத்திய மற்றும் ஜெயா டிவி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று ஒரு திட்டத்தை செய்யப்படுகிறது என்றென்றும் ராஜா டிசம்பர் 2011 28 ம் தேதி ( "நித்திய ராஜா") ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் , சென்னை. 23 செப்டம்பர் 2012 அன்று, அவர் பெங்களூரில் தேசிய உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நேரலை நிகழ்ச்சியை நடத்தினார் . 16 பிப்ரவரி 2013 அன்று, இளையராஜா கனடாவின் டொராண்டோவில் உள்ள ரோஜர்ஸ் மையத்தில் வட அமெரிக்காவில் தனது முதல் தோற்றத்தை வெளிப்படுத்தினார். டொராண்டோ கச்சேரி இந்தியாவில் விஜய் டிவியின் டிரினிட்டி நிகழ்வுகளால் விளம்பரப்படுத்தப்பட்டது மற்றும் பிஏ + உடன் சாண்டி ஆடியோ விஷுவல் எஸ்ஏவி புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. டொராண்டோ தனது நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இளையராஜா மேலும் பாடினார் ப்ருடென்ஷியம் மையத்தைத் நெவார்க், 23 பிப்ரவரி 2013 நியூ ஜெர்சி மற்றும் மணிக்கு சான் ஜோஸ் ஹெச்பி பெவிலியன் 1 மார்ச் 2013 சுற்றுப்பயணம் இவர் வெளியிட்ட நேரடி நிகழ்ச்சியை நடத்தினார் அவரது வட அமெரிக்கா பிறகு O2 அரங்கம் லண்டனில் 24 ஆகஸ்ட் 2013 அன்று, கமல்ஹாசன் மற்றும் அவரது மகன்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோருடன் . இளையராஜாவும் அவரது குழுவும் 2016 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவில் நேரலை நிகழ்ச்சியை நடத்தினர். அக்டோபர் 2017 இல், முதன்முறையாக ஹைதராபாத்திலும், நவம்பரில் மலேசியாவின் கோலாலம்பூரிலும் நேரடி நிகழ்ச்சியை நடத்தினார். மார்ச் 2018 இல், ஹூஸ்டன், டல்லாஸ், சிகாகோ, சான் ஜோஸ், கனெக்டிகட், வாஷிங்டன் டி.சி மற்றும் டொராண்டோவில் மீண்டும் நேரடி நிகழ்ச்சியை நடத்தினார். தனது வாழ்க்கையில் முதல்முறையாக, இளையராஜா 11 ஆகஸ்ட் 2018 அன்று ஹில்சாங் கன்வென்ஷன் சென்டரில் தனது இசைக்குழுவுடன் சிட்னியில் நிகழ்த்தியுள்ளார். மேலும், தனது 75 வது பிறந்த நாளை கொண்டாடும் அதே மாதத்தில், சிங்கப்பூர் ஸ்டார் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் தியேட்டரில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற்றது 18 ஆகஸ்ட். இளையராஜா தனது 76 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2019 ஜூன் 2 ஆம் தேதி சென்னையில் இசையை கொண்டாடுகிறார் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். வழக்கமாக மேஸ்ட்ரோவின் குழுவில் நாற்பது முதல் ஐம்பது இசைக்கலைஞர்கள் உள்ளனர், ஆனால் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட நிலை. நான்கு மணி நேர நேரடி இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மீண்டும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ராயல்டி பிரச்சினைகளை வீழ்த்திய பின்னர் மீண்டும் இணைந்தார் . இந்த நிகழ்வு சினி இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கான நிதி திரட்டும் முயற்சியாகும். முதன்முறையாக, இசைஞானி இளையராஜா 9 ஜூன் 2019 அன்று கோயம்புத்தூரில் ஒரு நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தினார். ராஜாதி ராஜா என்ற தலைப்பில், இந்த நிகழ்வு கோடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இளையராஜாவுடன், பாடகர்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோ, உஷா உதூப், ஹரிசரண், மது பாலகிருஷ்ணன், மற்றும் பவதாரினி ஆகியோரும் ஹங்கேரியிலிருந்து ஒரு இசைக்குழுவின் ஆதரவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோரும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்தனர். கச்சேரியிலிருந்து கிடைத்த வருமானம் அமைதிக்கான குழந்தைகளுக்கான நன்கொடை , முன்னாள் இயங்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். சட்ட சிக்கல்கள் 2017 ஆம் ஆண்டில், இளையராஜா தனது பாடல்களின் பதிப்புரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அவர் எஸ்.பி.க்கு சட்ட அறிவிப்புகளை அனுப்பினார். பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா, அவரது பாடல்களைப் பாடத் தடை விதித்தனர். தனது பதிவுகளை தயாரித்த பல்வேறு இசை நிறுவனங்களுக்கு 2015 ஆம் ஆண்டில் சட்ட அறிவிப்புகளை தாக்கல் செய்ததாக அவர் கூறுகிறார். திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள் இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார். "How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார். "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரிபிரசாத் சௌரசியாவுடன் இணைந்து வெளியிட்டார். "India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக, இசை அமைந்திருந்தது சிறப்பாகும். 1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார். "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது. "இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார். ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். "மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார். சாதனைகள் இளையராஜா, இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசை கோர்த்துள்ளார். லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில், சிம்பொனிக்கு இசையமைத்து, ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார். (அந்தச் சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா, இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). "இராஜலஹரி" என்னும் புதிய இராகத்தை உருவாக்கியுள்ளார். விருதுகளும் பட்டங்களும் தமிழக அரசின் கலைமாமணி விருது-1981 1988 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது 1995 ஆம் ஆண்டு கேரள அரசின் விருது இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் 2022ஆம் ஆண்டு திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகமும் முனைவர் பட்டம் வழங்கின. (டாக்டர் - Degree of Doctor of Letter) பத்ம பூஷண் விருது - 2010 பத்ம விபூஷண் விருது- 2018 இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் : 1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு) 1987இல் - சிந்து பைரவி (தமிழ்) 1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு) 2009இல் - பழஸிராஜா (மலையாளம்) 2016இல் - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்) இயேசுவின் உயிர்த்தெழுதல் விமர்சனம் இளையராஜா, 'இயேசுவின் உயிர்த்தெழுதல் இடம்பெறவில்லை' என்றும், உயிர்த்ததெழுந்த ஒரே ஒரு நபர் ரமண மகரிஷி ஒருவரே எனவும், தன் கருத்தினை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேச்சுப் பொருளாக இருந்ததுடன், கிறிஸ்தவ குழு ஒன்றினால் தங்களின் அடிப்படை விசுவாசத்திற்கு எதிரான பேச்சு என்பதால், காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. பங்குபெறும் பிற துறைகள் இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய புத்தகங்கள் : சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்) வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு) வழித்துணை துளி கடல் ஞான கங்கா பால் நிலாப்பாதை உண்மைக்குத் திரை ஏது? யாருக்கு யார் எழுதுவது? என் நரம்பு வீணை நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு) பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள் இளையராஜாவின் சிந்தனைகள் பயன்படுத்திய ராகங்கள் சில கீரவாணி - என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் (வள்ளி), காற்றில், எந்தன் கீதம் (ஜானி) கல்யாணி - ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை) பந்துவராளி - ஓம் சிவோஹம் (நான் கடவுள்) ரசிகரஞ்சனி - அமுதே, தமிழே, அழகிய மொழியே, (கோயில் புறா) இவற்றையும் பார்க்க இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இளையராஜா - சர்வதேச திரைப்படத் தரவுத்தளம் 1943 பிறப்புகள் வாழும் நபர்கள் தேனி மாவட்ட நபர்கள் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் தமிழ் பாடலாசிரியர்கள் தமிழகப் பாடலாசிரியர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பத்ம பூசண் விருது பெற்றவர்கள் கலைமாமணி விருது பெற்றவர்கள் பத்ம விபூசண் விருது பெற்ற தமிழர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள்
2741
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
சதுரம்
சதுரம், கேத்திரகணித அடிப்படை வடிவங்களில் ஒன்று. இது, நான்கு உச்சிகளையும், சம அளவிலான நான்கு கோட்டுத்துண்டுகளை பக்கங்களாகவும் கொண்ட, ஒரு இரு பரிமாண உருவமாகும். சதுரம் ஓர் ஒழுங்கு நாற்கரம் ஆகும். அடிப்படை உண்மைகள் சதுரம் நான்கு சமபக்கங்களுடைய ஒரு பல்கோணமாகும். ABCD சதுரத்தில் நான்கு கோணங்களின் அளவுகள் சமமாகவும் ஒவ்வொன்றும் 90 பாகை அளவாகவும் இருக்கும். பாகைகள். சதுரத்தின் இரு மூலைவிட்டங்களும் (கோணல் கோடுகள்) சமநீளமுள்ளவை. ஒரு சதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் a எனில், அதன் சுற்றளவு a யின் நான்கு மடங்கு ஆகும். மூலைவிட்டத்தின் நீளம்: விளக்கம்: சதுரத்தின் ஒவ்வொரு கோணமும் செங்கோணம் என்பதால் இரு அடுத்துள்ள பக்கங்களும் ஒரு மூலைவிட்டமும் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கின்றன. சதுரத்தின் பக்க அளவு a, மூலைவிட்டத்தின் நீளம் d எனில், பித்தகோரசு தேற்றத்தின்படி: சதுரத்தின் பரப்பு ஒரு சதுரத்தின் பரப்பளவு அதன் ஒரு பக்க அளவின் வர்க்கத் தொகையால் தரப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு சதுரத்தின் பக்க அளவு 5 மீட்டர் என்றால், அதன் பரப்பளவு 5 x 5 = 25 சதுர மீட்டர் ஆகும். 5 மீட்டர் பக்க நீளமுள்ள சதுரத்தை 1 மீட்டர் பக்க நீளமுள்ள சிறுசிறு சதுரங்களாகப் பிரித்தால் மொத்தம் 25 சிறு சதுரங்கள் கிடைக்கின்றன. பொதுவாகச் சதுரத்தின் பரப்பு a எனில்: மூலைவிட்டத்தின் மூலமாகவும் சதுரத்தின் பரப்பளவைக் காணலாம். சதுரத்தின் மூலைவிட்டத்தின் நீளம் d எனில் அச்சதுரத்தின் பரப்பளவு: சதுரத்தின் சுற்றுவட்ட ஆரம் R எனில், எனவே சதுரத்தின் பரப்பளவு: சதுரத்தின் உள்வட்ட ஆரம் r எனில், எனவே சதுரத்தின் பரப்பளவு: அடுக்கு இரண்டு என்பது சதுரத்தின் பரப்பளவாக எடுத்துக் கொள்ளப்பட்டதால்தான் அடுக்கு இரண்டானது ஆங்கிலத்தில் ஸ்கொயர் என அழைக்கப்பட்டது. சமன்பாடுகள் கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் ஆதிப்புள்ளியை மையமாகவும் 2 அலகுகள் பக்கநீளமும் கொண்ட சதுரத்தின் உச்சிகளின் ஆயதொலைவுகள்: (±1, ±1). சதுரத்தின் உட்புறம் அமையுமொரு புள்ளிகளின் ஆயதொலைவுகள் (xi, yi) , , ஆகும். இச் சதுரத்தின் சமன்பாடு: , அதாவது "x2 அல்லது y2, இரண்டில் எது பெரியதோ அதன் மதிப்பு 1 ஆக இருக்கும்." இச்சதுரத்தின் சுற்றுவட்டத்தின் ஆரம் மூலைவிட்டத்தின் நீளத்தில் பாதியாக இருக்கும். அதாவது சுற்றுவட்டத்தின் ஆரம்: . சுற்றுவட்டத்தின் சமன்பாடு: சதுரத்தின் மற்றொரு சமன்பாடு: சதுரத்தின் மையம்: (a, b) மற்றும் கிடைமட்ட அல்லது குத்து ஆரம் r எனில் அச்சதுரத்தின் சமன்பாடு: பண்புகள் சதுரம் என்பது சாய்சதுரம், பட்டம், இணைகரம், நாற்கரம் மற்றும் செவ்வகம் ஆகியவற்றின் சிறப்பு வகையாகும். எனவே இவ்வடிவவியல் வடிவங்களின் பண்புகள் சதுரத்திற்கும் உண்டு: சதுரத்தின் எதிரெதிர் பக்கங்கள் இணையாகவும் சமமாகவும் இருக்கும். சதுரத்தின் நான்கு கோணங்களும் சமம். (ஒவ்வொன்றும் 360°/4 = 90° க்குச் சமம்.) சதுரத்தின் நான்கு பக்கங்களும் சமம். இரு மூலைவிட்டங்களும் சம நீளமுள்ளவை. சதுரத்தின் இரு மூலைவிட்டங்களும் ஒன்றையொன்று இருசமக் கூறிடும். மேலும் செங்குத்தாக வெட்டிக்கொள்ளும். சதுரத்தின் கோணங்களை அதன் மூலைவிட்டங்கள் இருசமக்கூறிடும். பிற விவரங்கள் ஒரு சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒவ்வொன்றின் நீளமும் அச்சதுரத்தின் பக்கநீளத்தைப்போல் (கிட்டத்தட்ட 1.414) மடங்காகும். விகிதமுறா எண் என நிறுவப்பட்ட முதல் எண் கோணங்களை இருசமக்கூறிடும் சம நீளமுள்ள மூலைவிட்டங்கள் கொண்ட இணைகரமாகச் சதுரத்தை வரையறுக்கலாம். செவ்வகமாகவும் சாய்சதுரமாகவும் அமையக்கூடிய வடிவவியல் வடிவமாகச் சதுரத்தைக் கருதலாம். சதுரத்தைச் சுற்றி அதன் நான்கு உச்சிகளின் வழியாகச் செல்லும் வட்டத்தின் (சுற்று வட்டம்) பரப்பளவு சதுரத்தின் பரப்பைப்போல் (கிட்டத்தட்ட 1.571) மடங்காகும். சதுரத்துக்குள் அதன் பக்கங்களைத் தொட்டவாறு வரையப்பட்ட வட்டத்தின் (உள்வட்டம்) பரப்பளவு சதுரத்தின் பரப்பளவைப்போல் (கிட்டத்தட்ட 0.7854) மடங்காகும். ஒரு சதுரத்துடன் சம சுற்றளவுடைய எந்தவொரு நாற்கரத்தின் பரப்பளவையும் விட சதுரத்தின் பரப்பளவு பெரியது. சதுரம் அதிக சமச்சீருள்ள ஒரு வடிவம். ஒரு சதுரத்திற்கு நான்கு பிரதிபலிப்பு சமச்சீர் அச்சுகளும் நான்கு கிரம சுழற்சி சமச்சீரும் (through 90°, 180° , 270° கோண சுழற்சிகள்) உள்ளது. சதுரத்தின் சமச்சீர் குலம், ஒரு இருமுகக் குலம் ( D4). ABCD சதுரத்தின் பக்கங்கள் AB, BC , CD, DA ஆகியவற்றை உள்வட்டம் தொடும் புள்ளிகள் முறையே E , F , G , H மற்றும் உள்வட்டத்தின் மேலுள்ள ஒரு புள்ளி P எனில்: தமிழ்ப் பெயர் நாலாரம்  ( நாலு + ஆரம் ) நாலியாரம் ( நாலி+ ஆரம் ) நால்வாரி ( வரி -> வாரி ) நால்வாரிகை  ( வரி -> வாரி ) வரைதல் கவராயமும் நேர்விளிம்பும் மட்டும் கொண்டு சதுரம் வரையும் விதம் இங்குள்ள அசைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. வரைமுறை நேர்விளிம்பு கொண்டு ஒரு நேர்கோடு வரைக. கவராயம் கொண்டு இக்கோட்டின் மீதமைந்த ஏதேனுமொரு புள்ளியை மையமாகவும் ஒரு குறிப்பிட்ட ஆரமும் கொண்ட வட்டம் வரைக. இவ்வட்ட மையத்துக்கும் வட்டமையம் கோட்டை வெட்டும் புள்ளிக்கும் இடைப்பட்ட தூரத்தை ஆரமாகவும், வட்டம் கோட்டை வெட்டும் புள்ளியை மையமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைக. இந்த இரண்டாவது வட்டம் முதல் வட்டத்தை வெட்டும் இரு புள்ளிகளை இணைத்து ஒரு கோட்டுத்துண்டு வரைக. இந்த கோட்டுத்துண்டு முதலில் வரைந்த கோட்டை சந்திக்கும் புள்ளியை மையமாகவும், இப்புள்ளிக்கும் முதல் வட்டத்தின் மையத்துக்கும் இடைப்பட்ட தூரத்தை ஆரமாகவும் கொண்டு மூன்றாவது வட்டமொன்று வரைக. இந்த வட்டம் கோட்டுத்துண்டை இரு புள்ளிகளில் சந்திக்கும். இந்த இரு புள்ளிகள் ஒவ்வொன்றையும் முதலில் வரைந்த வட்ட மையத்துடன் இணைத்து வரையப்படும் கோட்டை இருபுறங்களிலும் நீட்டித்தால், அக்கோடுகள் இரண்டும் முதல் வட்டத்தைச் சந்திக்கும் நான்கு புள்ளிகளும் ஒரு சதுரத்தை உருவாக்கும். மேற்கோள்கள் நாற்கரங்களின் வகைகள்
2746
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88
அம்பை
அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லட்சுமி (C. S. Lakshmi, பிறப்பு:1944) தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாக படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் ​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன. இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ். லட்சுமி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார். இவர் எழுதிய "சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை" என்ற சிறுகதை நூலுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது. வாழ்க்கை வரலாறு 1944 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் இவர் பிறந்தார். 1976இல் விஷ்ணு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது இவரது கருத்தாக இருந்தது. வரலாற்றில் முதுகலை பட்டமும் அமெரிக்கக் கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கே’ என்ற சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார். வெளிவந்த நூல்கள் அந்தி மாலை (புதினம்) ஒரு கறுப்புச் சிலந்தியுடன் (1988) அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு (2014) சிறகுகள் முறியும் (1976) - (முதலாவது தொகுதி - ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள்) வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988) காட்டில் ஒரு மான் (2000) சக்கர நாற்காலி ஸஞ்சாரி தண்ணியடிக்க வற்றும் ஏரியின் மீன்கள் (2007) பயணப்படாத பாதைகள் (ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத்துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு) சொல்லாத கதைகள் (சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித்எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு) ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea (1992), In a Forest A Deer (2006) The Face Behind the Mask of Women in Tamil literature and Society and Women Writers (1984) - (ஆராய்ச்சி நூல்) Fragrance of Peace (இரோம் சர்மிளா)- தமிழில் "அமைதியின் நறுமணம்" (2010) சாகித்திய அகாதமி விருது 1960-ஆண்டிலிருந்து எழுதி வரும் அம்பையின் “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்ற சிறுகதை நூலுக்கு 2021-ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.2019 ஆண்டு வெளிவந்த இந்நூல் 244 பக்கங்களையும் 13 சிறுகதைகளையும் கொண்டுள்ளது.சாகித்திய அகாதமி விருதுடன் ரூபாய் 1 இலட்சம் மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அம்பை-காலச்சுவடு நேர்காணல் சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல் அம்பையின் படைப்புகள் தமிழக எழுத்தாளர்கள் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் 1944 பிறப்புகள் இயல் விருது பெற்றவர்கள் வாழும் நபர்கள் சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
2748
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
அசோகமித்திரன்
அசோகமித்திரன் (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னைக்குக் குடியேறினார் . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது . தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர். 1996-இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஐதராபாத்தைக் கதைக்களமாகக் கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துகளை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.இவர் 2017 மார்ச்சு 23 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில் 86 ஆம் அகவையில் இறந்தார். ஆக்கங்கள் அசோகமித்திரன் 1957-ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். இவர் எழுதிய நாடகத்தின் முடிவு என்னும் சிறுகதை முதன்முறையாக கலைமகள் இதழில் 1957 ஆம் ஆண்டில் அச்சேறியது. 9 நாவல்கள் 16 சிறுகதைத் தொகுப்புகள் 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்கள் 1 ஆங்கில நூல் சிறுகதைத் தொகுப்புகள் அப்பாவின் சிநேகிதர்; நர்மதா பதிப்பகம், சென்னை. உண்மை வேட்கை, நர்மதா, சென்னை; (உண்மை வேட்கை, பாதுகாப்பு, போட்டியாளர்கள், உயிர், சுந்தர், வண்டிப்பாதை, மெளனம், தெளிவு, மழை, புண் உமிழ் குருதி, புதுப்பழக்கம், மாறுதல், தொப்பி, சார்! சார்!, நானும் ஜே. ராமகிருஷ்ணராஜூவும் சேர்ந்து எடுத்த சினிமாப்படம், மகாமகம், ஒரு நாள் அதிகாலைப்போதில்) காலமும் ஐந்து குழந்தைகளும் தந்தைக்காக நாடகத்தின் முடிவு பிப்லப் சௌதுரியின் கடன் முறைப்பெண் வாழ்விலே ஒருமுறை; நர்மதா பதிப்பகம், சென்னை. விமோசனம், 1982, நர்மதா பதிப்பகம், சென்னை. அசோமித்திரன் கதைகள் : மூன்று தொகுதிகள்; கலைஞன் பதிப்பகம், சென்னை அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2 காலவரிசைப்படி சிறுகதைகள் அசோகமித்திரன் சிறுகதைகள் (1956 முதல் 1966 வரை எழுதிய 25 சிறுகதைகள்); நந்மதா பதிப்பகம், சென்னை. விரிந்த வயல்வெளிக்கப்பால் (1966 முதல் 1971 வரை எழுதிய 12 சிறுகதைகள்); நர்மதா பதிப்பகம், சென்னை. காந்தியும் புலிக்கலைஞனும் (1972 முதல் 1977 வரை எழுதிய 17 சிறுகதைகள்); கவிதா பப்ளிகேஷன், சென்னை. புண் உமிழ் குருதி (1978 முதல் 1981 வரை எழுதிய 27 கதைகள்); 2000 சூலை; கவிதா பப்ளிகேஷன், சென்னை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் Colours of Evil A Most Truthful Picture நாவல்கள் ஆகாசத்தாமரை; 1980; கலைஞன் பதிப்பகம், சென்னை; பக்.188 இன்று; செப்டம்பர் 1984; நர்மதா பதிப்பகம், சென்னை. ஒற்றன் கரைந்த நிழல்கள் (* திரைப்பட நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது.) 1969 (தீபம் மாத இதழில் வெளிவந்த தொடர்); இ.பதி. 1977; மூ.பதி. 1985, அன்னம், சிவகங்கை, பக்.156. தண்ணீர்; சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம்; 1973 18-வது அட்சக்கோடு; 1975; கலைஞன் பதிப்பகம், சென்னை. பக்.268 (கணையாழியில் வெளிவந்த தொடர்) (செகந்தராபாத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல், தேசப் பிரிவினை சமயத்தில் அங்கு இந்து - முஸ்லீம் இடையே நடந்த கலவரங்களை மையமாகக் கொண்டது.) மானசரோவர் யுத்தங்களுக்கிடையில்...; 2010 பிப்ரவரி, பக்.160, நர்மதா பதிப்பகம், சென்னை. குறுநாவல்கள் இருவர் இரு ஒற்றர்கள் (மணியன் இதழில் வெளிவந்தது) விடுதலை; நர்மதா பதிப்பகம், சென்னை. தீபம் விழா மாலைப் போதில் அசோகமித்திரன் குறுநாவல்கள்: இரு தொகுதிகள்; கலைஞன் பதிப்பகம், சென்னை. கட்டுரைத் தொகுதிகள் அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2; கிழக்குப் பதிப்பகம், சென்னை. இருட்டிலிருந்து வெளிச்சம் எவை இழப்புகள்?; நர்மதா பதிப்பகம், சென்னை. காலக்கண்ணாடி காலப்பதிவு சில இந்திய மொழிகளில் முதல் நாவல்கள்: தோற்றமும் வளர்ச்சியும்; 2001, பக்.176, ராஜராஜன் பதிப்பகம், சென்னை. நினைவோடை:27 கட்டுரைகள்; 2009 செப்டம்பர், நர்மதா பதிப்பகம், சென்னை. படைப்பாளிகளின் உலகம் பார்வைகள் பிரதிபலிப்பு தகைமைகளும் விருதுகளும் இவருக்குப் பல தகைமைகளும் விருதுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சில:- இவருக்குத் தமிழ்நாடு அரசு பரிசுகள் மும்முறையும் இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977 இலும் 1984 இலும் இருமுறையும் கிடைத்தன. இவருக்கு இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை கிடைத்தது. மேலும் 1973–74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது. லில்லி நினைவுப் பரிசு, 1992 இவருக்கு 1993 இல் இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது டால்மியா அறக்கட்டளையால் தரப்பட்டது. அக்ட்சரா விருது, 1996. இவரது அப்பாவின் சிநேகிதர் எனும் சிறுகதை தொகுப்புக்கு 1996-இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. 2007 ஜனவரியில் எம்.ஜி.ஆர் விருது இவர் 2012 மே மாதத்தில் ''என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருதை என்.டி.ஆர். அறிவியல் அறக்கட்டளையில் இருந்து பெற்றார். 2013 பிப்ரவரி 10 இல் சென்னையில் நடந்த விழாவொன்றில் தொடக்கநிலை க.நா.சு. விருது 2013 மார்ச்சு 30 இல் கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருது மேலும் காண்க ஜெயகாந்தன் சுந்தர ராமசாமி க. நா. சுப்ரமண்யம் ஜெயமோகன் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Ashokamitran page in Tamil Friends Ashokamitran Special edition by Solvanam B. Meenakshi, Sundaram Portraying Realities of Contemporary Life தமிழக எழுத்தாளர்கள் 1931 பிறப்புகள் 2017 இறப்புகள்
2750
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
இட்லி
இட்லி (இட்டலி) () என்பது அரிசியினால் செய்யப்படும் ஓர் உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவான இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வரலாறு இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார். பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி குறித்து, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றப்படுவதாக, உணவு நிபுணர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். பரிமாறும் முறை பொதுவாக இட்லியை தனியாக உண்ணமாட்டார்கள், ஏனெனில் சற்றே வெற்று சுவை கொண்டது. ஆதலால், உணவில் சுவையினைக் கூட்டுவதற்காக சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெறும்பாலான உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி. சில நேரங்களில் குழம்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளப்படும். செய்முறை இதனையும் பார்க்க : விக்கிநூல்களில் இட்லி தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி - 400 கிராம் உளுத்தம் பருப்பு - 100 கிராம் உப்பு - தேவையான அளவு ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம். அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது. அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும். பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும். இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர். புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும். வகைகள் இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில: செட்டிநாடு இட்லி மங்களூர் இட்லி காஞ்சிபுரம் இட்லி (செய்முறை ) ரவா இட்லி சவ்வரிசி இட்லி சேமியா இட்லி (செய்முறை ) சாம்பார் இட்லி - இட்லி சாம்பார் நிரப்பப்பட்ட கிண்ணத்தில் பரிமாறப்படும். குஷ்பு இட்லி - கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் இது முக்கியத்துவமுடையது. குட்டி இட்லி (மினி இட்லி)(fourteen idly/Mini Idly) - சின்ன சின்னதாக 14 இட்லிகள், ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும். சாம்பார் இட்லி - ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும். பொடி இட்லி - இட்லி மீது மிளகாய்பொடி தூவப்பட்டு பரிமாறப்படும். இட்லிச் சட்டி இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை ஆகும். வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி, அதற்கான மூடி ஆகியவைகளைக் கொண்டது இட்லி சட்டி. இட்லி குறித்த சர்ச்சை டிவிட் பிரிட்டனை சேர்ந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன், இந்திய உணவான இட்லியை சலிப்பு மிக்கது என்றும் மக்கள் இதை ஏன் மிகவும் விரும்புகிறார்கள் என்றும் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று தனது டவிட்டரில் குறிப்பிட்ட நிகழ்வு, இட்லிப் பிரியர்கள் நடுவில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது. இட்லி பிரியர்கள் பலர் தங்களுக்கு விருப்பமான உணவை தவறாக விமர்சிக்கப்படுவதை கண்டு விரக்தியடைந்து, ட்விட்டரில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர். மேலும் பார்க்க தமிழர் சமையல் தோசை அப்பம் பொங்கல் இடியப்பம் வெளி இணைப்புகள் தமிழ்குடும்பம்.காம் அறுசுவை.காம் கீற்று இதழில் இட்லியில் உள்ள சத்துக்கள் பற்றிய கட்டுரை ஆதாரங்கள் தமிழர் சமையல் சிற்றுண்டி உணவுகள் ஆந்திர சமையல் கேரள சமையல்
2752
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
நீர்ப்பாசனம்
நீர்ப்பாசனம் (Irrigation) என்பது வேளாண்மையில், ஒழுங்கான இடைவெளிகளில் பயிர் களுக்குக் கட்டுபடுத்திய அளவு நீரை வழங்கும் முறையாகும். நீர்ப்பாசனம் வேளாண்பயிர் வளர்க்கவும் நிலக்கட்டமைப்பைப் பேணவும் மழை பொய்த்த காலத்தில் உலர்பகுதிகளின் மண்வளம் பேணவும், மீள்பசுமையூட்டவும் பயன்படுகிறது. மேலும் பயிரிடும்போது பயிர்களைப் பனிப்படர்வில் இருந்து காக்கவும் இது பயனாகிறது. மேலும் களைகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தவும், மண் கடினமாதலைத் தடுத்தல் போன்ற செயல்களுக்கும் உதவுகிறது. நீர்ப்பாசன அமைப்புகள் தூசை அடக்கவும், கழிவு வெளியேற்றவும், சுரங்கத்தில் கனிமக் கரைந்தூற வைக்கவும் பயன்படுகின்றன. மாறாக, நேரடி மழையை நம்பி விளையும் பயிர் மானாவாரிப் பயிரிடல் அல்லது மானாவாரி வேளாண்மை அல்லது கொல்லை வேளாண்மை எனப்படுகிறது. நீர்ப்பாசனம் வடிகாலுடன் இணைந்தே ஆய்வு செய்யப்படுகிறது. இந்த வடிகால் குறிப்பிட்ட பரப்பில் இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ, அதேவேளை மேற்பரப்புநீரை வடிப்பதாகவோ அல்லது கீழ்நீரை வடிப்பதாகவோ அமையலாம். நீர்ப்பாசனம் 5000 ஆண்டுகளாக வேளாண்மையில் அடிப்படை ஏந்தாக நிலவி வருகிறது. இது பல பண்டைய பண்பாடுகளின் விளைவாகும். வரலாற்றியலாக, நம்புவியின் பொருளியலுக்கும், சமூகங்களுக்கும் ஆசியா முதல் வட அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதி வரை வாழ்க்கை வளமாகியது. வரலாறு மழை சார்ந்த வேளாண்மையில் போதுமான நீர் கிடைக்காதபோது நீர்ப்பாசனப் பயன்பாடு நிலவியமை தொல்லியல் அகழாய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. தொடர் நீர்ப்பாசனம் மெசபடோமியச் சமவெளியில் பயிர்களின் வளர்பருவத்தில் ஒழுங்காக வயல்களில் கட்டப்பட்ட பாத்திகளூடாக நடைமுறையில் இருந்துள்ளது. பண்டைய எகிப்திய மக்கள் நைல் ஆற்றின் வெள்ளநீரைப் பயன்படுத்தி வடிநில நீர்ப்பாசன முறையால் வயல்களுக்கு நீரைப் பாய்ச்சியுள்ளனர். இந்த வயல்களைச் சுற்றிலும் தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தன. வெள்ளநீர் வயல்களில் செழிப்பான வண்டல் படியும் வரை நிறுத்திப், பின்னர் ஆற்றுக்கு வடிய விடப்பட்டுள்ளது. பண்டைய எகிப்திய பன்னிரண்டாம் பேரரசின் பரோவா ஆகிய மூன்றாம் அமனமெது (கி.மு 1800 ) பையூம் பாலைவனச்சோலையில் இருந்த இயற்கை ஏரியைப் பயன்படுத்தி மிகநீர்வரத்தைத் தேக்கி வறண்ட காலங்களில் வேளாண்மைக்குப் பயன்படுத்தியுள்ளமைக்கன சான்றுகள் உள்ளன. வெள்ளக் காலங்களில் இந்தத் தேக்கம் நைல்நதியின் நீர்ப்பெருக்கால் கரைபுரண்டுள்ளது. பண்டைய நியோபியர்கள் சாகியா நீராழியைப் பயன்படுத்தி கி.மு மூன்றாம், இரண்டாம் ஆயிரங்களில் நீர்ப்பாசனத்தை மேற்கொண்டுள்ளனர். இப்போது சூடானில் உள்ள ஆறுகளோடு நைல்நதியின் வெள்ளப் பெருக்கைப் பெரும்பாலும் இந்தவகை நீர்ப்பாசனம் பயன்கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சகாரா உட்பகுதியில் நைகர் ஆற்றங்கரைப் பண்பாடுகளில் கி.மு இரண்டாம், முதலாம் ஆயிரங்களில் பருவமுறை வெள்ளத்தைப் பயன்படுத்தி நீர்ப்பாசனம் நடைபெற்றுள்ளது. மேட்டு அடுக்குநிலைப் பாசனம் முன்பு கொலம்பியா, அமெரிக்காவிலும், இந்தியாவிலும் சீனாவிலும் நடப்பில் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பெருவில் அமைந்த ஆந்தெசு மலைத் தொடர்களில் உள்ள சானா பள்ளத்தாக்கில், தொல்லியலாளர்கள் மூன்று நீர்ப்பாசனக் கால்வாய்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பின்படி, கி.மு நான்காம், கி.மு மூன்றாம், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டகளைச் சார்ந்தவையாகும். புத்துலகப் பகுதியில் கிடைத்த மிகப்பழைய பாசனக் கால்வாய்களாகும். மேலும் கி.மு நான்காம் நூற்றாண்டுக் கால்வாய்க்கடியில் கி.மு ஐந்தாம் நூற்றாண்டுக் கால்வாய்க்கான சுவடுகளும் கிடைத்துள்ளன. இப்போதைய பாக்கித்தானிலும் வட இந்தியாவிலும் அமைந்திருந்த சிந்துவெளி நாகரிகம் நுட்பம் வாய்ந்த நீர்த்தேக்க அமைப்புகளையும் பாசன முறைகளையும் வளர்த்தெடுத்துள்ளது. இதில் கி.மு 3000 அளவில் கிர்னாரில் அமைதிருந்த அணைகளும், கி.மு 2600 இல் உருவாக்கபட்ட பாசனக் கால்வாய் அமைப்புகளும் உள்ளடங்கும். இங்கு பேரளவு வேளான்மைக்கான பாசனக் கால்வாய் வலையமைப்புகள் வழியாக நீர்ப்பாசனம் நடைபெற்றுள்ளது. பண்டைய பாரசீகத்தில் (இன்றைய ஈரானில்) கி.மு 6000 ஆண்டுகளிலேயே பார்லி அரிசி இயற்கையான மழையளவு குறைவாக இருந்தபோதும் பயிரிடப்பட்டுள்ளது. பண்டைய பாரசீகத்தில் கி.மு 800 இல் உருவாக்கப்பட்ட குவானாத் பாசனமுறைகள் மிகப்பழைய பாசனமுறைகளாக அமைதலோடு இன்றளவும் அவை நடைமுறையில் நிலவி வருகின்றன. இம்முறைகள் இன்றும் ஆசியாவிலும் நடுவண் கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் பயன்பாட்டில் உள்ளன. இந்த அமைப்பில் செங்குத்தான மலைகளில் செங்குத்தான சுவர்களும் அவற்றில் இருந்து மலைச் சாரலின் முகப்புவரை சாய்வாக இறங்கும் கால்வாய்கள் அமைந்த சுருங்கைகளும் நிலத்தடி நீரை மடுத்து பயன்படுத்திப் பாசனத்தை மேற்கொண்டன. இதே கால அளவில் வட ஆப்பிரிக்காவில் குடியேறிய உரோமானியர்களால் உருவாக்கப்பட்ட விளிம்பில் களிமட்பானைகள் பூட்டப்பட்ட நோரியா எனும் நீராழி ஆற்று நீரில் நீரோட்டத் திறனாலும் தேங்கிய நீரில் விலங்குகளின் ஆற்றலாலும் இயங்கியுள்ளது. கி.மு 150 அளவில், இந்தப் பானைகள், நீரில் வேகமாக இறங்கும்போது, நீரை மெதுவாக முகக்க, அவற்றில் கவாடங்கள் பூட்டப்பட்டுள்ளன. பண்டைய இலங்கையில் கிமு 300 அளவில் பாண்டுகப்பாயா ஆட்சியில் வளர்த்தெடுக்கப்பட்ட பாசனப் பணிகள் அமைவு, பண்டைய உலகின் மிகச்சிக்கலான பாசனமுறைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இவர்கள் நிலத்தடிக் கால்வாய்களை உருவாக்கிக் கட்டியமைத்ததோடு பெருமளவு நீரைத் தேக்கிடவல்ல அணைகளையும் கட்டியெழுப்பினர். இந்த அவர்களது திறமைக்காக அவர்கள் பாசன வல்லுனர்கள் எனவும் போற்றப்பட்டனர்.<!—இந்த மேற்கோள் சிறிலங்காவின் சிங்கள ஆசிரியரால் எழுதப்பட்டது– இது சிங்களத் தேசியப் பரப்புரை போல அமைகிறதே தவிர வரலாறாகத் தோன்றவில்லை --> பெரும்பாலான இந்தப் பாசன அமைப்புகள் அனுராதபுரத்திலும் பொலனருவையிலும் அவற்றின் முன்னேறிய பொறியியல் வல்லமையாலும் துல்லியமான நடைமுறையாலும் இன்றும் அழிவின்றி நிலவுகின்றன. இந்தப் பாசன அமைப்புபராக்கிரம பாகு எனும் அரசர் காலத்தில் (கி,பி 1153–1186 ) மீட்டு மேலும் விரிவாக்கப்பட்டன. இன்றைய நீர்ப்பாசனப் பரவலும் அளவும் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பெருகிய டீசல்-எக்கி அணிகளும் மின்னோடி-எக்கி அணிகளும் நிலத்தடி நீரை வேகமாகப் பாசனத்துக்காக இறைப்பதால், மிகப்பெரிய நீரகங்களும் அவை மழைவடிகால்களால் நிறையும் வேகத்தை விட வேகமாக வற்றிவருகின்றன. இதனால் நீரகத் தேக்களவு நிலையாக குறைக்கவும் நீரின் தரத்தைக் குறைக்கவும் நிலப்பரப்பு குலையவும் வேறுபிறச் சிக்கல்கள் உருவாகவும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிகழ்வால் வடசீனச் சமவெளி, பஞ்சாப் சமவெளி, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் பெருஞ்சமவெளிகளின் உணவு விளைச்சல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 2000 ஆம் ஆண்டளவில், புவிக்கோள முழுவதிலும், 2,788,000 km² (689 மில்லியன் ஏக்கர்கள்) அளவுக்குச் செழிப்பான நிலப் பரப்பு பாசன அமைப்புகளைப் பெற்றுள்ளன. இதில் 68% பரப்பு ஆசியாவிலும், 17% பரப்பு அமெரிக்காவிலும் 9% பரப்பு ஐரோப்பாவிலும் 5% பரப்பு ஆப்பிரிக்காவிலும் 1% பரப்பு ஓசியானாவிலும் அமைந்துள்லது. உலகின் உயர்பாசனச் செறிவுள்ல பகுதிகள் கீழ்வருமாறு: கங்கை, சிந்து ஆற்ருச் சமவெளிகளில் அமைந்த பாக்கித்தான் வட இந்தியப் பகுதிகள் சினாவின் கை கே, குவாங் கே, யாங்ட்சே வடிநிலங்கள் (படுகைகள்) எகிபது, சூடானில் உள்ள நைல் ஆற்றங்கரைச் சமவெளி மிசிசிப்பி-மிசிசோரி ஆற்ருச் சமவெளி, கலிபோர்னியாவின் சில பகுதிகள் சிறுசிறு பாசனப் பகுதிகள் மக்கள் வாழும் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளன. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு. 2008 இல் பாசன நிலப் பரப்பளவு 3,245,566 km² அளவுக்கு உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (802 million acres)இது இந்தியாவின் பரப்பளவுக்குச் சமமாகும். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு. 2008 இல் பாசன நிலப் பரப்பளவு 3,245,566 km² அளவுக்கு உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (802 million acres)இது இந்தியாவின் பரப்பளவுக்குச் சமமாகும். நீர்ப்பாசன வகைகள் நீர் உரிய வாயில்களில் இருந்து வயலுக்கு எவ்வாறு பரவச்செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து பல்வேறு நீர்ப்பாசனம் நுட்பங்கள் வேறுபடுகின்றன. பொதுவாக, பாசனத்தின் இலக்கு வயலுக்கு சீராக நீரைப் பாய்ச்சுவதாகும். நீரளவு போதுமானதாக கூடவோ குறையவோ அமையாமல் இருத்தல் வேண்டும். மேற்கோள்கள் மேலும் படிக்க Elvin, Mark. The retreat of the elephants: an environmental history of China (Yale University Press, 2004) Hallows, Peter J., and Donald G. Thompson. History of irrigation in Australia ANCID, 1995. Howell, Terry. "Drops of life in the history of irrigation." Irrigation journal 3 (2000): 26-33. the history of sprinker systems online Hassan, John. A history of water in modern England and Wales (Manchester University Press, 1998) Vaidyanathan, A. Water resource management: institutions and irrigation development in India (Oxford University Press, 1999) வெளி இணைப்புகள் Royal Engineers Museum : 19th century Irrigation in India International Commission on Irrigation and Drainage (ICID) When2Water.com Tutorial and online calculators related to agricultural irrigation Irrigation at the Water Quality Information Center, U.S. Department of Agriculture AQUASTAT: FAO's global information system on water and agriculture Irrigation Supplies: Principles of Water Irrigation Systems Irrigation & Gardening: Future Of Irrigation Needs "Lamp Wick Solves Problem of Citrus Irrigation" Popular Mechanics, November 1930 World Bank report on Agricultural water management Irrigation is discussed in chps. 1&4.
2753
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D
தேன்
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர விடுவது இல்லை. பதப்படுத்தப்படாத தேனில் 14%-18% ஈரத்தன்மை உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர இயலாது. தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிலிருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும். தேன், கலோரி ஆற்றல் மிகுந்த ஒர் உணவாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய சர்க்கரை நீரின் எடையைவிட இருமடங்கு அதிக எடையாகும். உலகில் தேன் வழி நிகழும் பொருளியல் ஈட்டம் பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.(1985 ஆம் ஆண்டுக் கணக்கு), கனடாவில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. அறுகோன இருக்கும் தேன் அறைகள் ஒரு இயற்கை அற்புதம். இயற்கை வழி கட்டும் அறிவை தெரிந்து கொண்டுள்ள தேனீக்கள் இந்த வடிவத்தில் பரப்பளவை துல்லியமாகப் பயன்படுத்துகின்றன. பயன்கள் தேன் ஒரு உணவு சமையல், ரொட்டி தயாரிப்பு மற்றும் ரொட்டியின் மீது தடவப்படும் பரவல்,தேநீர் போன்ற பல்வேறு வகையான பானங்களுடன் கலக்கப்படும் கூடுதல் பானம், வணிக பானங்களில் சேர்க்கப்படும் ஒரு இனிப்பு என பல்வகைகளில் தேன் உபயோகமாகிறது. தேசிய தேன் வாரியத்தின் வரையறையின்படி ”தேன் என்பது ஒரு தூய்மையான பொருள். தூய தேனில் தண்ணீரோ வேறு இனிப்பூட்டும் திரவங்களோ கலக்கக் கூடாது.பொதுவாக தேன் விருந்து,தேன் கடுகு போன்ற துணை இனிப்புச் சாறுகள் வணிக உலகில் பிரபலமாக உள்ளன. தேன்மது அல்லது தேன் பீர் போன்ற தேன் – நீர் கலவையான மதுவகையின் முக்கிய உட்பொருளாக தேன் உள்ளது. இயற்கையாகத் தேனிலிருந்து கிடைக்கும் புளிப்பூட்டும் நொதிதான் வரலாற்று ரீதியாகத் தேன்மதுவை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பர். இம்மது வகைகளை தயாரிக்க தேனும் நீரும் சேர்ந்த கலவையுடன் சிறிதளவு புளிப்பு நொதி ஈச்டு சேர்த்து ஊறவைக்கவேண்டும். நாற்பது நாட்களில் முதலாவது நொதித்தல் நிகழ்ந்த பிறகு ஊறலை இரண்டாவது நொதித்தல் கலத்திற்கு மாற்றி மீண்டும் 35 முதல் 40 நாட்களுக்கு நொதிக்க விடவேண்டும். இவை சரியாக நிகழும் நேர்வுகளில் நொதித்தல் முழுமையடைகிறது. தேவைப்படின் சர்க்கரை சேர்த்தி மீண்டும் சில நாட்களுக்கு நொதித்தலுக்கு விடப்படுகிறது. தேன் ஒரு ஊட்டச்சத்து சக்கரை மற்றும் இதர சில கூட்டுப்பொருள்களின் கலவையாக தேன் உள்ளது. மாவுச்சத்துகள் என்ற அடிப்படையில் தேனை பகுக்கும்போது தேனில் பிரதானமாக பிரக்டோச் 38.5 சதவீதமும் குளுக்கோச் 31.0 சதவீதமும் கலந்துள்ளதாக அறியப்படுகிறது. செயற்கையான ஒரு சர்க்கரை திரவமாக தயாரிக்கும்போது அதில் தோராயமாக 48% பிரக்டோச், 47% குளுக்கோச் மற்றும் 5% சுக்ரோச் கலக்கப்படுகிறது. எஞ்சியுள்ள தேனில் மாவுச்சத்துகளான மால்டோச், சுக்ரோச் மற்றும் இதர சிக்கலான மாவுச்சத்துகள் அடங்கியுள்ளன. பிற சத்துள்ள இனிப்புச் சாறுகளைப் போலவே தேனும் அதிக அளவிளான சர்க்கரையும் சிறிய அளவில் உயிர்சத்துக்கள் அல்லது கனிமங்களைக் கொண்டுள்ளது.மேலும் தேனில் சிறிதளவு கலந்துள்ள பல்வேறு கூட்டுப்பொருள்கள் ஆக்சிச்னேற்ற எதிர்ப்பிகளாக செயலாற்றுகின்றன. தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனின் கூட்டுப்பொருள்கள் தேனீக்களுக்கு கிடைக்கும் பூக்களின் தன்மையை பொறுத்தே அமைகிறது. தேன் – ஆய்வும் பகுதிப்பொருட்களும்: பிரக்டோச்: 38.2% குளுக்கோச்: 31.3% மால்டோச்: 7.1% சுக்ரோச்: 1.3% நீர்: 17.2% சர்க்கரை: 1.5% சாம்பல்: 0.2% மற்றவை : 3.2% ஆப்பிரிக்கா நாட்டில், அறுவை சிகிச்சை முடித்து தையல்கள் போட்டபின் காயம் ஆறுவதற்காக சுத்தமான தேனைத் தடவுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. காயங்களின் மீது தேனைத் தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தேன் பாதுகாப்பு தேனின் தனிப்பட்ட அமைப்பு மற்றும் அதன் இரசாயன பண்புகள், தேனை நீண்ட காலம் சேமிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீண்ட கால சேமிப்பிற்குப் பிறகும் தேன் எளிதில் உட்கிரகிக்கப்பட்டு செரிக்கச் செய்கிறது. தேன், மற்றும் தேனின் உள்ளடக்கப் பொருட்கள், பத்தாண்டுகள் ஏன் நூற்றாண்டுகளாகக் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வரம்பிற்குட்பட்ட ஈரப்பதமே தேனைப் பாதுகாப்பதிலுள்ள முக்கிய நுணுக்கமாகும். தூயநிலையில் தேன் போதிய உயர் சர்க்கரை உள்ளடக்கம் கொண்டு நொதித்தலை தடுக்கும் தன்மையை கொண்டுள்ளது. ஈரமான காற்று தேனின் மீது படும்பொழுது , அதன் நீர்கவர் பண்புகள் ஈரப்பதத்தை இழுத்து தேனை நீர்த்துப் போகச் செய்து இறுதியில் நொதித்தல் தொடங்கி விடக்கூடும். தேனைப் படிகமாக்கி காலப்போக்கில் அதனை சூடாக்கி கரைத்தும் பயன்படுத்தலாம். தேன் தரப்படுத்துதல் அமெரிக்க விவசாயத் துறை நிர்ணயித்துள்ள தரஅளவுகோலின் அடிப்படையில் தேன் தரப்படுத்துதல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படுகிறது (யுஎஸ்டிஏ "இணையதள வழியாகவோ அல்லது நிறைய ஆய்வு மேற்கொண்டோ ஒரு கட்டணச் சேவை அடிப்படையில் தரம் பிரிக்கிறது). நீர் உள்ளடக்கம், சுவை மற்றும் மணம், குறைபாடுகள் இல்லாமை மற்றும் தெளிவாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தேன் தரப்படுத்தப்படுகிறது. தர அள்வுகோலில் நிறம் ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றாலும் நிறத்தின் அடிப்படையிலும் தேன் வகைபடுத்தப்படுவது உண்டு. தேன் தர அளவுகோல்:- மற்ற நாடுகளில் தேன் தரம் பிரித்தலுக்கு வெவ்வேறு வகையான அளவீடுகளை கடைபிடிக்கின்றன. உதாரணாமாக இந்தியா போன்ற நாடுகளில் இதர அனுபவ அளவீடுகள் மற்றும் சில சோதனை முடிவுகளின் அடிப்படையில் தேன் தரம் பிரிக்கப்படுகிறது. கிளாஸ்டிரீயம் நச்சேற்றம் தேனில் இயற்கையாகவே உள்ள சிறிதளவு காரச்சுவை ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளைப் பாதிக்கும். அதனால் அக்குழந்தைகளுக்கு தேன் உணவைக் கொடுப்பதில்லை. வளர்ச்சியடைந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் முதிர்ந்த செரிமான அமைப்பு பொதுவாக நுண்ணுயிரிகளின் ஸ்போர்களை அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும். கைகுழந்தைகளுக்கு தேனில் உள்ள இந்த ஸ்போர்கள் பாதிப்பை உண்டாக்குகின்றன. காமா கதிர் வீச்சுக்குட்படுத்தப்பட்ட மருத்துவ தரமுள்ள தேனில் கிளாஸ்டிரிய நச்சேற்றத்திற்கான ஸ்போர்கள் மிகக் குறைந்த அளவே காணப்படுவதால் பாதிப்பு குறைவாகவே இருக்கும். காமா கதிவீச்சு தேனின் பாக்டிரியா எதிர்ப்பு தன்மையை சிறிதும் பாதிக்காது. குழந்தை கிளாஸ்டிரீயம் நச்சேற்றம் புவியின் நிலப்பரப்பில் பல்வேறு மாறுபாடுக்ளைக் காட்டுகிறது. பிரிட்டனில், 1976 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஆறே ஆறு குழந்தை கிளாஸ்டிரீய நச்சேற்றப் பாதிப்புகள் இருந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது, அமெரிக்காவில் இப்பாதிப்பு ஒரு இலட்சம் குழந்தைகளுக்கு 1.9 என்ற அளவில் உள்ளது. இந்த அளவிலும் 47.2% கலிபோர்னியா குழந்தைகளிடம் காணப்படுகிறது. தேனின் இந்த ஆபத்து விகிதம் சிறியதாக உள்ளது என்றாலும் கைக்குழந்தைகளுக்கு . சுகாதார நோக்கில் தேன் பரிந்துரைக்கப்படுவதில்லை. நச்சு தேன் அரளிப்பூ, பசுமைமாறச் செடிவகையைச் சேர்ந்த பெரிடிய மலர்கள், புன்னை மலர்கள், புதராக வளரும் சில செடி இனப்பூக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேன் நச்சு ஏற்படுகிறது. தலை சுற்றல், பலவீனம், அதிக வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இத்தேனை உண்பதால் ஏற்படலாம். அரிதான நிகழ்வுகளில் குறைந்த இரத்த அழுத்தம், நிலைகுலைவு, இதய துடிப்பில் ஏற்றத்தாழ்வுகள் படை நோய் மற்றும் வலிப்பு நோய் முதலியவற்றால் இறப்பும் ஏற்படலாம். பாரம்பரிய முறைகளில் உற்பத்தி செய்யப்படும் தேன் மற்றும் விவசாயிகளால் குறைவான தேன் கூட்டுப்பெட்டிகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தேன் முதலியன பதப்படுத்தப்படாத நிலையில் நச்சு தேன் உண்டாகிறது. தேன்-உற்பத்தி மற்றும் உபயோகிக்கும் நாடுகள் 2012 ஆம் ஆண்டில், சீனா, துருக்கி, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களில் இருந்தன. பிராந்திய அளவிளான தேன் உற்பத்தியில் அமெரிக்கா (உலகளவில் நான்காவது இடம்) மற்றும் உருசியா (உலகளவில் ஐந்தாவது இடம்) வகிக்கின்றன. மெக்சிகோ உலகளவில் உற்பத்தி செய்யப்படும் தேனில் 4 சதவீதம் அளவிற்கு அளிக்கும் மற்றொரு முக்கியமான நாடாகும். மெக்சிகோவின் தேன் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு யுகாட்டின் தீபகற்பம் ல் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மெக்சிகோவினரின் தேன் உற்பத்தி பாரம்பரிய முறைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. தேன் வகைகள் தேனில் பலவகைகள் உள்ளது. துளசித் தேன், இஞ்சித் தேன், நெல்லித் தேன், முருங்கைத் தேன், நாவல் தேன் என தேனில் பலவகைகள் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த ஒரு குறிப்பிட்ட மரங்கள் மற்றும் அதன் பூக்கள் அதிகமாக உள்ளதோ அதற்கேற்ப தேனின் நிறம், சுவை மற்றும் ஊட்டச் சத்துக்களும் மாறுபடும். பலவகை பூக்கள் நிறைந்த இடங்களில் இருந்து கிடைக்கும் தேனும் ஒருவகை பூக்களில் இருந்து கிடைக்கும் தேனும் மருத்துவகுணத்திலும் கூட வேறுபாடும். குறிப்புகள் உணவுப் பொருட்கள் தேன் விலங்குப் பொருட்கள்
2756
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
உரம்
உரம் (fertilizer) என்பது தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாத, சுண்ணாம்பு தவிர, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தாவர ஊட்டங்களை நிலத்துக்கு தாவர இழையங்களுக்குத் தரும் இயற்கை அல்லது செயற்கைத் தொகுப்புவழிப் பொருட்களைக் குறிப்பிடும். பல இயற்கை அல்லது தொழிலக உரங்கள் நடப்பில் உள்ளன. உரம் () (fertiliser) என்பது விளை நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெருக்கும் பொருட்டு இடப்படுவதாகும். மண்ணில் குறைந்து வரும் இயற்கையான சத்துப் பொருட்களை ஈடு செய்யும் பொருட்டு செயற்கையான சத்துப் பொருளை மண்ணுக்கு ஊட்டுவது 'உரம் இடுதல்' ஆகும். சாதாரணமாக மண்ணில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு முதலிய வேதியல் பொருட்கள் கலந்துள்ளன. இவையே தாவரங்களுக்குத் தேவையான வேதியியல் சத்துப் பொருட்கள் ஆகும். காற்றிலிருந்தும் கூட சத்துப் பொருட்களைத் தாவரங்கள் சேமித்து வளர்கின்றன. மண்ணில் உள்ள இவ்வியற்கைச் சத்துப் பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நிலையிலும் உறுதுணை புரிகின்றன. தாவரத்தின் தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற நைட்ரஜன் பொருட்கள் பெருந்துணை புரிகிறது. தாவரங்களுக்கு நோய் ஏதும் வராமல் காக்கும் கேடயமும் இதுவேயாகும். பூக்கள் பூத்துக் குலுங்கவும் காய்கள் நன்கு திரட்சியடையவும் விதைகள் முதிர்ச்சி பெறவும் பாஸ்பேட்டுகள் அவசியம். அதே போன்று வேரும் பழமும் வித்தும் திரட்சி பெற பொட்டாஸ் என்னும் சாம்பல் சத்து இன்றியமையாத தேவையாகும். மண்ணிற்கு மேலும் வளமூட்ட பொதுவாக மாட்டுச் சாணம், இலை, தழை, எரு, ஆட்டுப் புழுக்கை போன்று இயற்கைக் கழிவுப் பொருட்கள் நிலத்திற்கு உரமாக இடப்படுகின்றன. இவையும் இயற்கை உரங்களே ஆகும். அன்றாடம் கூட்டிப் பெருக்கும் குப்பைக் கூளங்களை குழியிட்டு கழிவு நீரைப் பாய்ச்சி உரமாக்குவதும் உண்டு. இது கலப்பு உரம் அல்லது தொழு உரம் (கம்போஸ்ட்) என அழைக்கப்படுகிறது. சத்திழக்கும் மண்ணுக்கு மேலும் வளமூட்ட இயற்கை உரங்களின் தன்மைகளைக் கொண்ட செயற்கை உரங்களை வேதியியல் அடிப்படையில் தொழிற்சாலைகளில் தயாரிக்கிறார்கள். இவற்றை செயற்கை உரங்கள் என்கிறோம். இவ்வகை உரங்கள் நைட்ரசன் (தொழிற்சாலையிலும்), பாஸ்பரஸ், பொட்டாசியம் (சுரங்கத்திலுருந்து வெட்டியெடுக்கப்பட்டவைகளிருந்து) போன்ற வேதியியல் பொருளினின்றும் தயாரிக்கப்படுகிறது. இயற்கை உரம், கலப்பு உரம் இவற்றோடு வேதியியல் உரங்களும் மண்ணிற்குச் சத்தூட்டி தாவரப் பயிர்கள் செழித்து வளர வழி கோலுகின்றன. அறிவியலின் வளர்ச்சி காரணமாக உற்பத்தியைப் பெருக்க, நல்ல தரமான விளைபொருட்கள் கிடைக்க, செயற்கை உரங்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. உரம் தழை (நைட்ரசன்) மணி (பாஸ்பரஸ்), சாம்பல் (பொட்டாசியம்), ஆகிய முக்கிய முதல் நிலை பேரூட்டக் கனிம சத்துகளையும் கால்சியம், மக்னீசியம், கந்தகம் ஆகிய இரண்டாம் நிலை ஊட்டச் சத்துக்களையும் இரும்பு, துத்தநாகம், போரான், மாலிப்டினம், தாமிரம், மாங்கனீசு போன்ற தாதுப்பொருட்களையும் நிலத்திற்குத் தருகிறது. நிலத்தின் தன்மை விளைவிக்கப்படும் பயிரின் இயல்பு, தட்பவெப்ப சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் சத்தை எவ்வகை உரத்தின் மூலம் பெறுவது என்பதைத் தீர்மானித்து அவ்வகை உரத்தை நிலத்திற்கு இடவேண்டும். அப்போதுதான் விரும்பிய பலன் கிட்டும். உரமிடுவதற்கென தனி எந்திரங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. அளவுக்கு மீறிய உரமிடுவதால், நிலம், பயிர் மற்றும் உணவு ஆகியவை நச்சுத் தன்மையடைவதுடன் அதிகப்படியான உரங்கள் அல்லது உரங்களிலுள்ள தேவையற்ற பொருட்கள் பாசன நீரால் கழுவிச்செல்லப்பட்டு ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் தேங்குகிறது. அவற்றிலுள்ள வேதியியற் கனிமங்களினால் நீர் நிலைகளும் நச்சுத் தன்மை அடைகின்றன. மேலும், கழிவிலுள்ள நைட்ரேட் நைதரசன் மற்றும் அதிகப்படியான ஊட்டச் சத்துக்கள் நீர் நிலைகளில் பாசிப் பெருக்கதிற்கும் (algal bloom) அதனால் ஏற்படும் ஆக்சிஜன் குறைவிற்கும் (eutrophication) காரணமாகின்றது. உரங்களில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களை நீர்நிலைகளில் சேர்ப்பதற்கு முன், உயிரியல் முறையில் நைட்ரேட்டுகளாக மாற்றியோ அல்லது நைதரசனை அகற்றியோ சூழல் மாசடையாது ஓரளவு காக்கமுடியும். வரலாறு மண்வள மேலாண்மை உழவர்களால் பல்லாயிரம் ஆண்டுகளகவே மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எகுபதியர்களும் உரோம்ர்களும் பாபில்லோனியர்களும் மிகமுந்திய கிரேக்கர்களும் பண்ணைகளுக்கு அவற்றின் விளைச்சல்திறனைக் கூட்ட, கனிமங்க அல்லது உரங்களைப் பயன்படுத்தியதாகப் பதிவுகள் செய்துள்ளனர். தாவர் ஊட்டம் சார்ந்த் அறிவியல் 19 ஆம் நூற்றாண்டில் செருமானிய வேதியியலாளர் யசுட்டசு வான் இலய்பிகு என்பவராலும் பிறராலும் தோன்றியது. பிரித்தானியத் தொழில்முனைவோராகிய ஜான் பென்னட் இலாவேசு 1837 இல் பானைகளில் வளர்த்த தாவரங்களுக்கு பலவகை உரங்களை இட்டு தரங்களின்பால் அவற்றின் விளைவுகளை அறியும் செய்முறைகளை மேற்கொண்டார், ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் செய்முறையை வயலில் உள்ள பயிர்களிலும் மேற்கொண்டார். இதன் விளைவாக, 1842 இல் ஓர் உரத்துக்குப் பதிவுரிமம் பெற்றார். இந்த உரம் பாசுவேற்றுகளைக் கந்தக அமிலத்துடன் வேதிவினை புரியச் செய்து உருவக்கப்பட்டது. இதுவே முதலில் உருவாகிய செயற்கை உரமாகும். அடுத்த ஆண்டே தான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக உரோதசுட்டெடு வறள்பயிர்கள் அராய்ச்சி நிறுவனத்ஹ்தில் உடனிருந்து பணிபுரிந்த யோசாப்பு என்றி கில்பர்ட்டு பணிகளைப் பட்டியலிட்டு வெளியிட்டார். தழைச்சத்துவகை (காலகவகை) உரமாக்கத்தின் தொடக்கத்தில் பர்க்கிலாந்து-அய்தே வேதிவினைமுறை வல்லமை வாய்ந்த தொழிலகச் செயல்முறையாக விளங்கியது.இந்தச் செயல்முறை வளிமண்டலக் காலக(N2) வளிமத்தை நைட்ரிக் அமிலத்துடன்) (HNO3) வினைபுரியவைத்தார். இம்முறை காலக நிலைப்படுத்தலுக்கான பல வேதிவினைகளில் ஒன்றாகும்மிதன் விளைபொருள் நைட்டிரேற்றுnitrate (NO3−) ஆக்க வாயிலாக அமைந்தது. நார்வேயில் இயியுகானிலும் நோட்டோடென்னிலும் இந்தச் செயல்முறையை வைத்து ஒரு தொழிலகம் நைட்டிரேற்று உரமாக்க்கத்துக்க்காக உருவாக்கப்பட்டது. இது அங்கு கட்டியமைக்கப்பட்ட பெரிய புனல்மின்நிலையத்துடன் கூட்டாக அமைக்கப்பட்டது. 1910 களிலும் 1920 களிலும் ஏபர் வேதிவினை முறையும் ஆசுட்டுவால்டு வேதிவினை முறையும் உருவாகின. ஏபர்முறை அம்மோனியாவை (NH3) மீத்தேன் (CH4) வளிமத்தில் இருந்தும் மூலக்கூற்று காலகத்தில் (N2) இருந்தும் தொகுத்தது. ஏபர்முறையில் இருந்து உருவாகிய அம்மோனியா பிறகு நைட்டிரிக் அமிலமாக(HNO3)றஆசுட்டுவால்டு முறைமூலம் மாற்றப்படுகிறது. தொகுப்புர வளர்ச்சி உலக மக்கள்தொகையைப் பேரளவில் வளர்த்தது; பெரும்பாலும் புவியின் அரைமடங்கு மக்கள் தொகுப்புக் காலக உரத்தால் ஊட்டப்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. யூரியாவையும் பார்மால்டிகைடையும் இணைத்து உருவாக்கும் பலபடி உரம்வழி கட்டுபட்ட முறையில் காலகத்தை வெளியிடும் தொழில்நுட்பங்கள் முதலில் 1936 இல் அறிமுகமாகி, 1955 இல் வணிகமுறை படுத்தப்பட்டன. முதலில் வெளியிட்ட உரத்தில் 100% தண்ணீரில் கரைந்த காலகத்தில் 60% அளவை வெளியிடவல்லதாகவும் 15% க்கும் குறைந்த அளவில் வினைபுரியாத பகுதியாகவும் எஞ்சியது. மெத்திலீன் யூரியா 1960 களிலும் 1970 களிலும் வணிகமுறைப் பயனுக்கு வந்தது. இதில் 25% முதல் 60% காலகம் தண்ணீரில் கரையாததாகவும் 15% முதல் 30% அளவுக்கு வினைபுரியாத யூரியா காலகமும் அமைந்தது. இயங்குமுறை உரங்கள் தாவர வளர்ச்சியைக் கூட்டுகிறது. இந்த இலக்கு இருவழிகளில் அடையப்படுகிறது. ஒன்று மரபான முறையில் கூடுதல் ஊட்டங்களை அளிப்பது; மற்றொன்று உரங்கொண்டு மண்வளத்தைக் கூட்டுவதும் நீர்தங்கி நிற்றலையும் காற்றூட்டத்தையும் மிகுப்பதுமாகும். உரங்கள் பல்வேறு விகிதங்களில் பின்வரும் ஊட்டங்களைத் தருகின்றன: மூன்று முதன்மைப் பேரூட்டங்கள்: காலகம் (நைட்டிரசன்) (N): இலை வளர்ச்சி அவிர்வம் ( [[பாசுவரசு])] (P): வேர்,பூ,விதை, பழ வளர்ச்சி; எரியம் (பொட்டாசியம்) (K): வலிவான தண்டு வளர்ச்சி, தாவர நீரியக்கம், பூத்தலையும் பழுத்தலையும் மேம்படுத்தல்; மூன்று துணைப் பேரூட்டங்கள்: கால்சியம் (Ca), மகனீசியம் (Mg), கந்தகம் (S); நுண்ணூட்டங்கள்: செம்பு (Cu), இரும்பு (Fe), மாங்கனீசு (Mn), மாலிபிடெனம் (Mo), நாகம் (Zn), போரான் (B). சில அரிய சிறப்பினவாக சிலிக்கான் (Si), கோபால்ட்டு (Co), and [[வனடியம்] (V) ஆகியன அமைகின்றன. மேலும் காண்க இயற்கை உரம் பசுந்தாள் உரம் செயற்கை உரம் மண்புழு உரம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Nitrogen for Feeding Our Food, Its Earthly Origin, Haber Process International Fertilizer Industry Association (IFA) Agriculture Guide, Complete Guide to Fertilizers and Fertilization டெக்சாஸ் காய்கறி உற்பத்தியாளர்களின் கைநூல் - உரங்கள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் - தோட்டக்கலை காலநிலை மாற்றம் வேளாண்மை
2760
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%29
சிதம்பரம் (நகரம்)
சிதம்பரம் (Chidambaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராசர் கோயில் உலகப்புகழ் பெற்றது. மக்கள் வகைப்பாடு 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15,166 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 62,153 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,032 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5869 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,232 மற்றும் 56 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.73%, இசுலாமியர்கள் 8.22%, கிறித்தவர்கள் 1.18%, தமிழ்ச் சமணர்கள் 0.43%, மற்றும் பிறர் 0.44% ஆகவுள்ளனர். வரலாறு தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். சிதம்பரம், ஆலயநகர் என்றும் நாட்டிய நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகரம் சிதம்பரம் ஆகும். சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை பண்ணியதால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம். காலப்போக்கில் அந்த ஊர் பேர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக மாறிவிட்டது. திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் உலகப்புகழ் பெற்றது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. சிதம்பரம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. ஆலயங்கள் சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கியக் கடவுளான சிவபெருமானின் நடராசர் ஆலயமும், வைணவர்களின் முக்கியக் கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராசன் ஆலயமும் இந்த நகருக்கு பெருமை சேர்க்கிறது. மேலும் இங்கு தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால் இந்நகரம் ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் பார்க்க சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராசன் கோயில் சிதம்பரம் நடராசர் கோயில் ஆதாரம் தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள் கடலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் இந்து புனித நகரங்கள் பண்டைய இந்திய நகரங்கள்
2764
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் (Cuddalore district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கடலூர் ஆகும். இந்த மாவட்டம் 3,703 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. சோழர் கால வரலாற்றுப் புதினத்தின் (பொன்னியின்செல்வன்) படி அக்காலத்தில் இவ்வூரின் பெயர் கடம்பூர் என்று அழைக்கப்பட்டது. அந்த பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. இம்மாவட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயரும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பெயரை உச்சரிக்க அவர்களுக்கு கடினமாக இருந்ததால் இவ்வூருக்கு 'கடலூர்' என பெயரிட்டனர். வரலாறு முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் தென்னாற்காடு மாவட்டம் என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. இந்நிலையில் 1993 செப்டம்பர் 30 அன்று தென் ஆற்காடு மாவட்டமானது, தென் ஆற்காடு வள்ளளார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என இரு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறையால், சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது. சுமத்ரா அருகே 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை, இந்தியாவின் கிழக்கு கடற்கரையை 2004, டிசம்பர் 26 அன்று தாக்கியது, இதன் விளைவாக 572 பேர் உயிரிழந்தனர். பல மீன்பிடி குக்கிராமங்கள் காணாமல் போயின, அதே நேரத்தில் வெள்ளி கடற்கரை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடலூர் துறைமுகம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. செயின்ட் டேவிட் கோட்டை சேதமின்றி உயிர் தப்பியது. 2012-ஆம் ஆண்டில் ஏற்பட்ட தானே புயல் பயிர்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியது. மாநகராட்சி நிர்வாகம் கடலூர் மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும், 10 வருவாய் வட்டங்களையும், 905 வருவாய் கிராமங்களையும் கொண்டது. கடலூர் வருவாய் வட்டங்கள் கடலூர் பண்ருட்டி விருத்தாச்சலம் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் திட்டக்குடி குறிஞ்சிப்பாடி வேப்பூர் புவனகிரி ஸ்ரீமுஷ்ணம் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம் கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்பில் 8 நகராட்சிகளும், 14 பேரூராட்சிகளும் கொண்டது. இம்மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பில் 13 ஊராட்சி ஒன்றியங்களையும், 683 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. மாநகராட்சிகள் கடலூர் நகராட்சிகள் சிதம்பரம் விருத்தாச்சலம் பண்ருட்டி நெல்லிக்குப்பம் வடலூர் திட்டக்குடி பேரூராட்சிகள் அண்ணாமலை நகர் புவனகிரி குறிஞ்சிப்பாடி கங்கைகொண்டான் கிள்ளை லால்பேட்டை காட்டுமன்னார்கோயில் மங்களம்பேட்டை மேல்பட்டாம்பாக்கம் பரங்கிப்பேட்டை பெண்ணாடம் சேத்தியாத்தோப்பு ஸ்ரீமுஷ்ணம் தொரப்பாடி ஊராட்சி ஒன்றியங்கள் கடலூர் மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கடலூர் ஊராட்சி ஒன்றியம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் பண்ருட்டி குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி ஒன்றியம் மங்களூர் ஊராட்சி ஒன்றியம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குமராட்சி காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் பெரிய நகரங்கள் கடலூர் பண்ருட்டி நெய்வேலி குறிஞ்சிப்பாடி சிதம்பரம் விருத்தாச்சலம் நெல்லிக்குப்பம் வடலூர் காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் மக்கள்தொகை பரம்பல் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 2,605,914 ஆகும். அதில் ஆண்கள் 1,311,697 ஆகவும்; பெண்கள் 1,294,217 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 14.02% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 704 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 79.04% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 279,950 ஆகவுள்ளனர். இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 91.78% ஆகவும், கிறித்தவர்கள் 3.20 % ஆகவும், இசுலாமியர்கள் 4.75% ஆகவும், மற்றவர்கள் 0.29% ஆகவும் உள்ளனர். அரசியல் இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளையும், இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. சட்டமன்றத் தொகுதிகள் திட்டக்குடி (தனி) விருத்தாச்சலம் நெய்வேலி பண்ருட்டி கடலூர் குறிஞ்சிப்பாடி புவனகிரி சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் (தனி) நாடாளுமன்றத் தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதி சிதம்பரம் மக்களவைத் தொகுதி தொழில்வளம் மேலும் நெய்வேலி நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது. மாவட்டத்திற்கு தேவையான உணவு பொருட்கள் பெரும்பாலும் விவசாயத்தின் மூலம் இங்கேயே, உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு, நெல் இங்கு முக்கிய பயிராக நடவு செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தின் நெல்லிக்குப்பம், பெண்ணாடம் ,நல்லூர் மற்றும் சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களில் 3 தனியார் சர்க்கரை ஆலைகளும், ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் உள்ளது. பெண்ணாடத்தில் ராம்கோ சிமெண்ட் ஆலை உள்ளது. பண்ருட்டி மற்றும் நெய்வேலி பகுதியில் முந்திரி, பலா அதிகளவில் விளைகிறது மற்றும் கொய்யா, சப்போட்டா பழ வகைகளும் பயிர் செய்யப்படுகிறது. எல்லைகள் மேற்கே கள்ளக்குறிச்சி மாவட்டமும், தெற்கே மயிலாடுதுறை மாவட்டமும், தென்மேற்கே தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும், வடமேற்கே விழுப்புரம் மாவட்டமும், வடக்கே புதுச்சேரி மாநிலமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. புவியியல் ஆறுகள் பெண்ணையாறு,கெடிலம் ஆறு,பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு,வெள்ளாறு (வடக்கு) ஆகிய ஆறுகள் பாய்கின்றன. அணைக்கட்டுகள் சொர்ணாவூர்அணை,திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை சேத்தியாதோப்பு அணை பெலாந்துறை ஆகிய அணை கள் அமைந்துள்ளன. அலையாத்திக் காடுகள் பிச்சாவரம், கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகள் (Mangrove) உள்ளன. சிதம்பரம் நடராசர் கோயில் நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் முதன்மை தலமாகும். இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும். இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. போக்குவரத்து கடலூர் மாவட்டம் தொடருந்து மற்றும் சாலைகள் மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து புதுச்சேரி, சிதம்பரம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் மற்றும் விழுப்புரம் போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற முக்கிய நகரங்கள் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன. சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சாலைகள்: மாநில நெடுஞ்சாலை 9 - கடலூர் முதல் சித்தூர் வரை செல்லும் சாலை (கடலூர் - நெல்லிக்குப்பம் - மேல்பட்டாம்பாக்கம் - பண்ருட்டி - திருக்கோவிலூர் - திருவண்ணாமலை - போளூர் - கண்ணமங்கலம் - வேலூர் - காட்பாடி - சித்தூர்) மாநில நெடுஞ்சாலை 10 - கடலூர் முதல் சேலம் வரை செல்லும் சாலை (கடலூர் - வடலூர் - நெய்வேலி - விருத்தாசலம்- வேப்பூர் - சேலம்) எஸ்.எச்.68 - :கடலூர் - பாலூர் - பண்ருட்டி - அரசூர் - திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை. கிழக்குக் கடற்கரைச் சாலை - சென்னை முதல் கடலூர் வழியாக தூத்துக்குடி வரை செல்லும் சாலை. தொடருந்துப் போக்குவரத்து கடலூரில் இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன. தென்னக இரயில்வேயின் மெயின் லைன் எனப்படும் சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி தொடருந்து பாதையில் கடலூர் உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு ஒரு தொடருந்து பாதை உள்ளது. சுற்றுலாத் தலங்கள் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் (கி.பி.1110ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது), பிச்சாவரம், கெடிலம் ஆற்றின் கழிமுகம், கடலூர் தீவு, வெள்ளி கடற்கரை, புனித டேவிட் கோட்டை, கடலூர் துறைமுகம், சிதம்பரம் நடராசர் கோயில், வடலூரில் வள்ளலார் அமைத்த சத்ய ஞான சபை, விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில், திருமுட்டம் ஆதிவராக சுவாமி கோயில், மேல்பட்டாம்பாக்கம் 400 வருட சிவன் கோவில் சரபேசுவரர், திருக்கண்டேஸ்வரம் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் நடனபாதேஸ்வரர் மற்றும் தமிழ்நாட்டில் ஆறு கரம் கொண்ட பைரவர் திருக்கோயில், பள்ளிவாசல் மசூதி போன்றவை கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகும். மேலும் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள மேலக்கடம்பூர் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற தலம், கரக்கோயில் எனப்படும் தேர் வடிவ கோயில் இங்கு மட்டுமே உள்ளது. மா. ஆதணூர் கிராமத்தில் திருநாளை பாேவார் திருத்தலம் உள்ளது, திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். காவல் துறை கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் பழமை வாய்ந்த சோழ, பல்லவ மன்னவர்களால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலும், நெய்வேலியில் மத்திய அரசின் பழுப்பு நிலக்கரி சுரங்கமும் அமையப்பெற்றுள்ளது. கடலுார் காவல் மாவட்டத்தில் 7 காவல் உட்கோட்டங்கள், 46 காவல் நிலையங்கள், 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 4 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 4 மதுவிலக்கு அமல் பிரிவுகள் உள்ளடங்கிய 3,678 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. கடலுார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் அதிகம் வசிப்பதால் இவ்விரு சமூகத்தினரிடயே ஏற்படும் பிரச்சனைகள் அதிமுக்கியம் வாய்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகும். இப்பிரச்சனைகளை காவல் துறையும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பிரச்சனைகளை பேசி தீர்த்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்ததின் பேரில் சட்டம் ஒழுங்குப்பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் அவ்வப்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைகள் எழும்போதும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 48 முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2017-ம் வருடத்தில் பதியப்பட்ட குற்றவழக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததின்பேரில் 78 சதவிகித வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் 65 சதவிகித வழக்கு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 2017-ம் வருடத்தில் நடந்த 46 கொலை வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டும், 29 பாரி குற்றவழக்குகளில் 62 சதவிகித வழக்குகள் அதாவது 18 குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.50,26,500/- மதிப்புள்ள வழக்குச்சொத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடலுார் மாவட்டத்தில் இடதுசாரி மற்றும் மதம் சார்ந்த தீவிரவாதம் இல்லை. நான்கு இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. மேற்படி முகாம்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் ஏற்படும் சாலைவிபத்துகளை குறைப்பதற்காக காவல் துறை சார்பில் கடந்த ஆண்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களை கொண்டு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சாலை விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு 6 முக்கிய மோட்டார் வாகனப்பிரிவுகளின் கீழ் 22,670 வாகன அற்ப வழக்குகளும், 82,280 வழக்குகளில் தலைகவசம் மற்றும் இருக்கை வார் அணியாமல் சென்றவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. சாலை போக்குவரத்து விதிகளை மீறிய 10,149 ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, அதில் 3,333 உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதன் மூலமாக 2016-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 567-லிருந்து, 2017-ம் ஆண்டு 527-ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தின் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தப்படும் அயல் நாட்டு மதுபான வகைகள், எரிசாராயம் மற்றும் புதுச்சேரி சாராயம் ஆகியவைகளை மாவட்டத்தில் 9 இடங்களில் அமைக்கப்பட்ட முக்கிய எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு கடத்தல் நடவாமல் தடுக்கப்படுகிறது. இது குறித்து கடலுhர் மாவட்ட மற்றும் புதுச்சேரியை சேர்ந்த காவல் துறையினர் இணைந்து மாதம்தோறும் எல்லைப்பகுதி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மதுவிலக்கு சம்மந்தப்பட்ட குற்றங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 2017-ம் ஆண்டு 3,247 வழக்குகள் பதியப்பட்டும், அதில் 37,297 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றங்களில் சம்மந்தப்பட்ட 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஏல நடவடிக்கையின் மூலமாக ரூ.19,743/- வசூலிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மதுவிலக்கு குற்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்ட 18 கள்ளச்சாராய வியாபாரிகள் மீது பிரிவு 14-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து விசாரணை செய்ய குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்படுவதன் முலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தபட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகள் பாரபட்சமின்றி புலன்விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் அனைவரும் தங்களது பணியினை செவ்வனே செய்து மாவட்டத்தில் குற்றங்கள், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமலும், அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொள்ள உறுதி பூணுகிறோம். மத்திய சிறைச்சாலை கடலூரில், 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மத்திய சிறைச்சாலை உள்ளது. செப்டம்பர் 1918 முதல் திசம்பர் 14, 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான சுப்பிரமணிய பாரதி இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கடலூர் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம் தமிழ்நாடு மாவட்டங்கள்
2765
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE.%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF
நா. பார்த்தசாரதி
நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார். பிறப்பு தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் சிற்றூரில் 1932 திசம்பர் 18 ஆம் நாள் பிறந்தார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படித்து பண்டிதர் பட்டம் பெற்றார். 1977 - 1979 ஆம் ஆண்டுகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் முனைவர் தி. முத்துகண்ணப்பரை வழிகாட்டியாகக்கொண்டு பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார். 1987ஆம் ஆண்டில் ஆய்வேட்டை சமர்பித்தார். ஆனால் அப்பட்டத்தை வாங்காமலேயே மறைந்துவிட்டார். பணி பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். . 1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார். 1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கும் கலைக்கதிர் இதழுக்கும் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். வெளிநாட்டுப் பயணம் நா.பா. ரஷ்யா, இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று வந்தார். விருதுகள் சமுதாய வீதி என்னும் நெடுங்கதைக்காக சாகித்ய அகாதமி பரிசு துளசி மாடம் என்னும் நெடுங்கதைக்காக ராஜா சர் அண்ணாமலை பரிசு தமிழ்நாடு பரிசு கம்பராமாயணத் தத்துவக் கடல் அரசியல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த காமராஜருக்கும் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது இதனால் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. பழம் தலைவர்கள் காமராஜர் தலைமையில் சிண்டிகேட் என்னும் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் இயங்கினர். நா. பார்த்தசாரதி அக்கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். அக்கட்சியை ஆதரித்து பொதுக்கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார். அப்பொழுது, தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் என்னும் சிற்றூரில் காவல்துறை சார்பு ஆய்வாளரால் தாக்கப்பட்டார். அந்நிகழ்வு அக்கால சட்டமன்றத்தில் விவாதப் பொருளாக மாறியது. மறைவு இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நா.பா. 1987 திசம்பர் 13ஆம் நாள் மரணமடைந்தார். நா.பார்த்தசாரதியின் படைப்புகள் நெடுங்கதைகள் குறிஞ்சி மலர் பொன் விலங்கு நிசப்த சங்கீதம் கபாடபுரம் சாயங்கால மேகங்கள் மணிபல்லவம் பருவம் : 1 2 3 4 5 ஆத்மாவின் ராகங்கள் ராணி மங்கம்மாள் சமுதாய வீதி துளசி மாடம் பாண்டிமாதேவி நித்திலவல்லி வஞ்சிமாநகரம் சத்தியவெள்ளம் வெற்றி முழக்கம் சுந்தரக்கனவுகள் நெஞ்சக்கனல் பிறந்த மண் நெற்றிக் கண் வெற்றி முழக்கம் (உதயணன் கதை) நிசப்த சங்கீதம் அநுக்கிரகா சுலபா முள்வேலிகள் புதுமுகம் மூலக்கனல் மலைச் சிகரம் பொய் முகங்கள் பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது கற்சுவர்கள் நினைவின் நிழல்கள் மூவரை வென்றான் நீல நயனங்கள் மனக் கண் கோபுர தீபம் அனிச்ச மலர் பட்டுப் பூச்சி மகாத்மாவைத் தேடி சிறுகதைகள் நா.பா.வின் சிறுகதைகள் தமிழ் இலக்கியக் கதைகள் கவிதைகள் மணிவண்ணன் கவிதைகள் கட்டுரைகள் மொழியின் வழியே தலையங்கங்கள் மணிவண்ணன் தலையங்கங்கள் (தொகுத்தவர்: கமலம் சங்கர்) கேள்வி பதில்கள் மணிவண்ணன் பதில்கள் (தொகுத்தவர்: கமலம் சங்கர்) பயணக்கட்டுரைகள் புதுஉலகம் கண்டேன் ஏழுநாடுகளில் எட்டு வாரங்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-1  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-2  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-3  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-4  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-5  ஆத்மாவின் ராகங்கள்  Aatmana Aalap-(GUJARATHI)  JINDAGINA RANGA ANEKA-(GUJARATHI)  குறிஞ்சி மலர்  மகாபாரதம் அறத்தின் குரல்  மூலக்கனல்  முள்வேலிகள் (சிறுநாவல்)  நா.பார்த்தசாரதி-சிறுகதைகள்-1  நா.பார்த்தசாரதி-சிறுகதைகள்-2  நெஞ்சக்கனல்  நெற்றிக்கண்  நிசப்த சங்கீதம்  நித்திலவல்லி  பாண்டிமாதேவி (சரித்திர நாவல்)  பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்  பொன்விலங்கு  சத்திய வெள்ளம்  வஞ்சிமா நகரம் (சரித்திர நாவல்)  மூவரை வென்றான்  மொழியின் வழியே  பிறந்த மண்  பொய்முகங்கள்  புதிய பார்வை  புறநானூற்றுச் சிறுகதைகள்  இராணி மங்கம்மாள் (சரித்திர நாவல்)  சமுதாய வீதி  சாயங்கால மேகங்கள்  சிந்தனை மேடை  சுலபா  SWAPN-SURAKHI - GUJARATI (KURIJJIMALAR)  தமிழ் இலக்கியக் கதைகள்  திறனாய்வுச் செல்வம்  THITHALI  துளசிமாடம்  TULSI CHAURA  வெற்றி முழக்கம்  YEH GALI BIKAU NAHIN  அனிச்ச மலர்  அநுக்கிரகா  பூமியின் புன்னகை  புத்த ஞாயிறு  சிந்தனைவளம்  தீபம்  கலித்தொகை பரிபாடல் காட்சிகள்  கபாடபுரம்  கற்சுவர்கள் சான்றடைவு வெளி இணைப்புகள் தமிழக எழுத்தாளர்கள் தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள் நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் 1932 பிறப்புகள் 1987 இறப்புகள் விருதுநகர் மாவட்ட நபர்கள்
2772
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
எட்டயபுரம்
எட்டயபுரம் (Ettayapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர். மேலும் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்து மறைந்துள்ளார். அமைவிடம் தூத்துக்குடிக்கும் - கோவில்பட்டிக்கும் இடையே அமைந்த எட்டயபுரம், தூத்துக்குடியிலிருந்து 43 கிமீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. பேரூராட்சி அமைப்பு 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,646 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 12,772 ஆகும் 17.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 88 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. வரலாறு எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர். எட்டயபுரம் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. மக்கள் தொழில் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் வேளாண்மையும் செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர். நெசவுத் தொழில் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனத்தார் இவர்களுக்கு ஜக்கார்டு தறிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் துளையிடப்பட்ட அட்டைகளின் (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். தீப்பெட்டித் தொழில் நெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். தானியங்கி தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சூரிய காந்தி போன்ற பயிர்கள் விளையும் கருப்பு மண் வகை நிலம் இங்கு அதிகம். பாரதியின் பிறப்பிடம் மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள "இராசா மேல்நிலைப் பள்ளி"யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார். எட்டப்பன் எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் எட்டப்பன் என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் வழிவந்தவர்கள் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர், பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு. சுற்றுலா வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூருக்கு தொடர்வண்டி மூலமாகச் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் கோவில்பட்டி வரை வந்து பிற்பாடு சாலை வழியாக (15 கி.மீ. தொலைவு) வரலாம். மதுரை (82 கி.மீ. தொலைவு) , தூத்துக்குடி (50 கி.மீ. தொலைவு) மற்றும் திருநெல்வேலி (கோவில்பட்டி வழியாக) நகரங்களுடன் சாலை இணைப்பும் உள்ளது. இவ்வூரில் காணத்தக்க இடங்கள் பாரதி நினைவு மணி மண்டபம் பாரதி பிறந்த வீடு முத்துசாமி தீட்சிதர் நினைவிடம் உமறுப் புலவர் தர்கா எட்டப்பன் அரண்மனை மாவீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனை அருகாமையிலுள்ள பார்க்கக் கூடிய இடங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி. எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் - எப்போதும் வென்றான். கட்டபொம்மன் நினைவிடம் - கயத்தாறு. அருள்மிகு சோலைசாமி திருக்கோவில் - எப்போதும் வென்றான் எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள் எட்டயபுரம் பாரதி ஆய்வாளர் - பத்திரிகை ஆசிரியர் தி. முத்து கிருஷ்ணன் 'பாரதியார் வாழ்க்கைச் சரித்திரம்', பாரதியின் இசைஞானம் குறித்து 'நல்லதோர் வீணை' நூல்களும், தினமலர் பத்திரிகை நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் 'கடல் தாமரை' என்ற நூலும் எழுதியுள்ளார். ஒரு மேடைப் பேச்சாளர். கே. கே. ராஜன், சிறுகதை எழுத்தாளர். வார இதழ், மாத இதழ்களில் எல்லாவற்றிலும் நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியுள்ளார். இவர் சகோதரர் கே. கருணாகரப் பாண்டியன் எட்டயபுரம் வரலாறு (History of Ettayapuram) என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றார் "எட்டயபுரம் வரலாறு" என்ற நூலை முதுபெரும் எழுத்தாளர் வே. சதாசிவன், மா. இராஜாமணி, இளசை மணியன் ஆகியோர் 400 ஆண்டுக் காலப் பழைமையைத் தொகுத்து மக்களுக்கு அளித்துள்ளனர். எட்டயபுரத்தில் பிறந்த பெண்பாற்புலவர் சுப்பம்மாள் 'குமாரகீதம்' என்ற நூலை இயற்றியுள்ளார். 'இந்தியா' பத்திரிகையின் மூலப் பிரதிகளை ஆய்வு செய்து, 'பாரதி தரிசனம்' என்ற நூலை இளசை மணியன் எழுதியுள்ளார். ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் 'மண்வெறி' என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றவர் வே. சதாசிவன். அதே விகடனில் 'ஆசைப்பந்தல்' என்ற கதைக்கு முத்திரை பெற்றவர் சீதாலட்சுமி. இவரின் சுமார் 63 சிறுகதைகள் பல பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. மேலும் இவர் 'கலைஞர் பாமலர் நூறு' என்ற ஒரு வரலாற்று நூலை மரபுக் கவிதைகளாக எழுதி, மேழிச் செல்வி என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். எட்டயபுரத்தைச் சேர்ந்த குருகுகதாஸ்பிள்ளை, 'திருநெல்வேலி சீமைச் சரித்திரம்' என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். இவர் மகன் கு.பக்தவத்சலம், கவிஞர். எட்டயபுரத்தில் தோன்றிய எச்.ஏ. அய்யர், இந்திய தேசிய இராணுவத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். இவர் நேதாஜி பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இராஜாமணி, 'வீரன் அழகுமுத்து யாதவ்' என்ற நூலை எழுதியுள்ளார். இளசை அருணா என்பவர் எழுதிய 'கரிசல் மண்' என்ற புத்தகத்தில் மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை எழுதியுள்ளார். எட்டயபுரம் கோபி கிருஷ்ணன், சோதிடத்தில் நிறைய புத்தககள் எழுதியவர். பல வார இதழ்களில் சோதிடக் குறிப்புகள் எழுதியவர். எட்டயபுரம் ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க ஜோதி ஸ்ரீ சுப்பையா சுவாமிகள் இளசை சுந்தரம், இளசை ஜமால், இளசை கணேஷ், மரிய செல்வம், புலவர் பார்வதி மாரியப்பன், ஜீவா திலகம், சோலைச் சாமி ஆகிய எழுத்தாளர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவர். எட்டயபுரம் என்ற நூலைக் கவிஞர் கலாப்பிரியா எழுதியுள்ளார். பொறியாளர் மு. மலர்மன்னன், மா. முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவர். வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊரைச் சேர்ந்தவராவார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழ்நாடு அரசு இணைய தளம் சுற்றுலா தொடர்பான தகவல் தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் பாளையங்கள்
2774
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF
சுப்பிரமணிய பாரதி
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் "மகாகவி" ("மகத்தான கவிஞர்") என்ற புனைபெயரைக் கொண்டு அறியப்படுகிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தேசபக்தியைத் தூண்டும் பாடல்கள் இவரது படைப்புகளில் அடங்கும். பெண் விடுதலைக்காகவும், சாதி மறுப்பு மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராகவும் போராடினார். 1882 இல் திருநெல்வேலி மாவட்டம் (இன்றைய தூத்துக்குடி) எட்டயபுரத்தில் பிறந்த பாரதி, தனது ஆரம்பக் கல்வியை திருநெல்வேலி மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் பயின்றார். இவர் சுதேசமித்திரன், தி இந்து, பால பாரதா, விஜயா, சக்ரவர்த்தினி, மற்றும் இந்தியா உள்ளிட்ட பல இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் எழுதி வந்தார். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பதஞ்சலி யோகசூத்திரம் (தமிழ் மொழிபெயர்ப்பு), பகவத் கீதை (தமிழ் மொழிபெயர்ப்பு), சின்னஞ்சிறு கிளியே, விநாயகர் நான்மணிமாலை, விடுதலை பாடல்கள் மற்றும் புதிய ஆத்திசூடி உள்ளிட்ட பல நூல்கள் மற்றும் பாடல்களை இயற்றியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். 1908 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் பாரதியைக் கைது செய்ய ஆணை பிறப்பித்ததால், இவர் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரியில் 1918 வரை ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் தினமும் உணவளிக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையானயால் தாக்கப்பட்ட பிறகு உடல் நலம் குன்றிய இவர், சில மாதங்களுக்குப் பிறகு 1921 செப்டம்பர் 11 அன்று அதிகாலை இறந்தார். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.பல மொழிகளில் புலமை பெற்ற பாரதி தமிழ் மொழியின் மீது தீர பற்றுக் கொண்டிருந்தார். இவரது படைப்புகள் அரசியல், சமூக மற்றும் ஆன்மீகக் கருப்பொருள்களை உள்ளடக்கியதாக விளங்கின. பாரதி இயற்றிய பாடல்கள் மற்றும் கவிதைகள் தமிழின் இலக்கியம், இசை மற்றும் அன்றாட வாழ்க்கையில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்ப வாழ்க்கை சுப்பிரமணியன் 1882 திசம்பர் 11 இல், சென்னை மாகாணத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு) உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சின்னசாமி ஐயர் மற்றும் இலக்குமி அம்மாள் ஆவர். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887-ஆம் ஆண்டு, சுப்பிரமணிக்கு ஐந்து வயதாகும் போது, இவரது தாயார் இலக்குமி அம்மாள் மறைந்தார். இதனால், இவரின் தந்தை மற்றும் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார். இவரது தந்தை, ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்று இவர் ஒரு பொறியியலாளராக வர வேண்டும் என விரும்பினார். தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும் பொழுதே கவிப் புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இவரின் திறமையால் இவர் "பாரதி" (கல்விக் கடவுள் சரசுவதியின் அனுகிரகம் பெற்றவர்) என்று அழைக்கப்பட்டார். 1897-ஆம் ஆண்டு, தனது பதினைந்தாம் வயதில் செல்லம்மாளை மணந்தார். 1898-ஆம் ஆண்டு இவரின் தந்தையின் மறைவுக்கு பின் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்துப் பொருளுதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து எட்டையபுரத்தில் சிறிது காலம் பணி செய்த பாரதி பின்னர் அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் காசியில் ஒரு மடத்தில் தங்கி இருந்தார். அங்கு தங்கியிருந்தக் காலத்தில், பாரதி இந்து ஆன்மீகம் மற்றும் தேசியவாதத்தைப் பற்றி அறிந்து கொண்டார். சமசுகிருதம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்றுக்கொண்டார். சிகை வளர்த்து தலைப்பாகை அணிவதை தொடங்கினர். இலக்கிய வாழ்க்கையும் விடுதலைப் போராட்டமும் 1901 ஆம் ஆண்டு திரும்பிய பாரதி, எட்டயபுரம் அரண்மனையில் கவிஞராகப் பணியாற்றினார். அதே ஆண்டு இவர் எழுதிய பாடல்கள் விவேகபானு இதழில் வெளியானது. பிறகு சுதேசமித்திரன் இதழில் இணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1905 திசம்பரில் காசியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய போது சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக வாரிசான சகோதரி நிவேதிதையைச் சந்தித்தார். பெண்களின் சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான உரிமைகளுக்காகப் போராட அவர் பாரதிக்கு ஊக்கமளித்தார். பெண்களின் விடுதலை பாரதியின் மனதை வெகுவாக பாதித்தது. நிவேதிதையை சக்தியின் வெளிப்பாடாகக் கருதிய பாரதி, அவரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார். இவர் பின்னர் தாதாபாய் நௌரோஜியின் கீழ் கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் கலந்து கொண்டார், அது இந்திய விடுதலைக்காக போராட மற்றும் பிரித்தானியப் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரியது. ஏப்ரல் 1907 வாக்கில், இவர் தமிழ் வார இதழான இந்தியா மற்றும் ஆங்கில செய்தித்தாளான பால பாரதம் ஆகியவற்றில் பங்களிக்கத் தொடங்கினார். இந்தக் காலக்கட்டத்தில் பாரதியின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் சாதனமாக இந்தப் பத்திரிகைகள் இருந்தன. இதன் பதிப்புகளில் பாரதி தனது கவிதைகளைத் தொடர்ந்து வெளியிடத் தொடங்கினார். இவரது பாடல்கள் தேசியவாதம் முதல் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவைப் பற்றிய சிந்தனைகள் வரை பல கருத்துக்களை உள்ளடக்கியதாக இருந்தன. இவர் உருசியப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் எழுதினார். 1907 ஆம் ஆண்டில் சூரத் நகரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் வ. உ. சிதம்பரம்பிள்ளை மற்றும் மண்டயம் சீனிவாச்சாரியார் ஆகியோருடன் பாரதி பங்கேற்றார். காங்கிரசில் ஒரு பிரிவினர் ஆயுதமேந்திய எதிர்ப்பை விரும்பினர். பால கங்காதர திலகர் தலைமையில் அணிவகுத்த இந்த பிரிவினருக்கு ஆதரவாக சிதம்பரனார், வரதாச்சாரியார் மற்றும் பாரதியார் இருந்தனர். 1908 இல், பிரித்தானியர்கள் சிதம்பரனாரைக் கைது செய்தனர். பின்னர் பாரதி எழுதி வந்த "இந்தியா" நாளிதழின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். தானும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதை அறிந்த பாரதி, பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிச்சேரிக்குத் தப்பிச் சென்றார். பாண்டிச்சேரியில் வாழ்ந்த காலத்தில், அங்கிருந்து இந்தியா மற்றும் விஜயா என்ற தமிழ் நாளிதழ்கள், பால பாரதம் என்ற ஆங்கில மாத இதழ் மற்றும் உள்ளூர் வார இதழான சூர்யோதயம் ஆகியவற்றைத் தொகுத்து வெளியிட்டார். பிரித்தானியர்கள் இந்த இதழ்களின் வெளியீட்டை தடுக்க முயன்றனர். இந்தியா மற்றும் விஜயா இரண்டும் 1909 இல் பிரித்தானிய இந்தியாவில் தடை செய்யப்பட்டன. பாண்டிச்சேரியில் சுதந்திர இயக்கத்தின் புரட்சிகரப் பிரிவின் அரவிந்தர், லாலா லஜபதி ராய் போன்ற பல தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பாரதிக்குக் கிடைத்தது. பாரதி ஆர்யா மற்றும் கர்ம யோகி போன்ற இதழ்களின் வெளியீட்டிற்கு அரவிந்தருக்கு உதவினார். இவர் வேத இலக்கியங்களைக் கற்கத் தொடங்கிய காலமும் இதுவே. 1912 ஆம் ஆண்டு இவரது பிரபலமான படைப்புகளான குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் மற்றும் கண்ணன் பாட்டு ஆகியவை இயற்றப்பட்டன. இவர் பதஞ்சலியின் யோக சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்தார். நவம்பர் 1918 இல் கடலூர் அருகே பிரித்தானிய இந்தியாவுக்குள் நுழைந்த உடன் பாரதி கைது செய்யப்பட்டார். நவம்பர் 20 முதல் திசம்பர் 14 வரை மூன்று வாரங்கள் கடலூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அன்னி பெசன்ட் மற்றும் ராமசாமி ஐயர் ஆகியோரது முயற்சியால் விடுவிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் வறுமையால் வாடிய இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 1919 ஆம் ஆண்டு பாரதி முதன் முறையாக மகாத்மா காந்தியைச் சந்தித்தார். 1920 ஆம் ஆண்டு முதல் சுதேசிமித்திரன் இதழின் பதிப்பை மீண்டும் தொடங்கினார். இறுதிக் காலம் சிறைவாசதிற்கு பிறகு மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு 1920 வாக்கில் ஒரு பொது மன்னிப்பு ஆணை வழங்கப்பட்டது. இறுதியாக இவர் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியபோது, ​​பாரதி உடல்நலக்குறைவு மற்றும் ஏழ்மையுடன் போராடிக்கொண்டிருந்தார். இவர் வழக்கமாக உணவளிக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் லாவண்யா என்ற யானை, ஒரு நாள் இவர் தேங்காய் வழங்கியபோது, இவரைத் தாக்கியது. இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த போதிலும், இதன் விளைவாக சில மாதங்களில் இவரது உடல்நிலை மோசமடைந்தது. இவர் தனது கடைசி உரையை ஈரோடு கருங்கல்பாளையம் நூலகத்தில் மனிதன் அழியாதவன் என்ற தலைப்பில் நிகழ்த்தினார். 1921 செப்டம்பர் 11 அன்று அதிகாலை 1 மணியளவில், பாரதியார் இயற்கை எய்தினார். மக்கள் கவிஞராகவும், தேசியவாதியாகவும் இருந்த பாரதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 14 பேர் மட்டுமே இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதியாரின் இறப்புக்கு பின்னரும் இவரின் பாடல்கள் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இருந்த இந்தியாவில் தடைசெய்யப்பட்டு, புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற விரிவான விவாதம் 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது. இலக்கியப் படைப்புகள் பாரதி நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் "மகாகவி" ("மகத்தான கவிஞர்") என்ற புனைபெயரைக் கொண்டு அறியப்படுகிறார். முந்தைய நூற்றாண்டுப் படைப்புகளைப் போலல்லாமல் பாரதி பெரும்பாலும் எளிமையான சொற்களைப் பயன்படுத்தினார். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக்கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக்கவிதையைத் தமிழுக்குத் தந்தார். இவர் தனது கவிதைகளில் புதுமையான யோசனைகளையும் நுட்பங்களையும் வெளிப்படுத்தினார். இவர் தனது பெரும்பாலான படைப்புகளில், முன்பு கோபாலகிருசுண பாரதியார் பயன்படுத்திய நொண்டி சிந்து என்ற நடையைப் பயன்படுத்தினார். பாரதியின் கவிதை முற்போக்கான, சீர்திருத்தவாத இலட்சியத்தை வெளிப்படுத்தியது. இந்திய தேசியம், காதல், குழந்தைப் பருவம், இயற்கை, தமிழ் மொழியின் மகிமை போன்ற பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான படலைகளி எழுதினார். பாரதியின் பல இந்து தெய்வப் பாடல்களை பாடினார். அரவிந்தர், பால கங்காதர திலகர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற இந்திய தேசிய சீர்திருத்தத் தலைவர்களின் உரைகளையும் மொழிபெயர்த்தார். தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்ட இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி "தேசியக் கவி" எனப் போற்றப்படுகிறார். பெண் விடுதலைக்காகவும், சாதி மறுப்பு மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிராகவும் போராடினார். இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரத மாதாவாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். வியாசரின் மகாபாரதத்தைத் தழுவி எழுதப் பெற்ற இந்நூலானது ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது. இவரது பிரபலமான படைப்புகளில் குயில் பாட்டு, பாப்பா‌ பாட்டு, சின்னஞ்சிறு கிளியே, புதிய ஆத்திசூடி, விநாயகர் நான்மணிமாலை மற்றும் கண்ணன் பாட்டு ஆகியவை அடங்கும். இவர் பதஞ்சலியின் யோக சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்தார். இதை தவிர இவர் பல தேசிய கீதங்கள், விடுதலைப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், ஞானப் பாடல்கள் மற்றும் கதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று கல்வியின் மகிமையைக் கூறினார். "வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும்" என நதிநீர் இணைப்பிற்கு முன்பே கனவுகண்டவர். புகழ் மற்றும் நினைவு சின்னங்கள் பாரதி தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு வீட்டில் கழித்தார். 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் வாங்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட இந்த வீடு "பாரதி இல்லம்" (பாரதியின் இல்லம்) எனப் பெயரிடப்பட்டது. எட்டயபுரத்தில் இவர் பிறந்த இல்லம் மற்றும் புதுச்சேரியில் இவர் வாழ்ந்த இல்லம் ஆகியவை நினைவு இல்லங்களாகப் பேணப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை, மணிமண்டபம் மற்றும் இவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு எழுத்தாளர்களுக்கான உயர்ந்த தேசிய விருதான சுப்ரமணிய பாரதி விருது நிறுவப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் இலக்கியத்தில் சிறந்த படைப்புகளை எழுதுபவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகின்றது. பாரதியார் பல்கலைக்கழகம் 1982 இல் கோயம்புத்தூரில் நிறுவப்பட்டது. தில்லி இந்திய நாடாளுமன்றம், சென்னை மெரினா கடற்கரை உட்பட பல இடங்களில் இவரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கோயம்புத்தூரில் உள்ள "பாரதியார் சாலை" மற்றும் புது தில்லியிலுள்ள "சுப்பிரமணியம் பாரதி மார்க்" உட்பட பல சாலைகளுக்கு இவர் பெயரிடப்பட்டுள்ளது. இவரது பெயரில் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. பிரபலமான கலாச்சாரத்தில் பாரதி என்ற தலைப்பில் 2000 ஆம் ஆண்டில் கவிஞரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தமிழ்த் திரைப்படம் உருவாக்கப்பட்டது. வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் பாரதியின் வரலாறு காண்பிக்கப்படுகின்றது. பாரதி எழுதிய பல கவிதைகள் பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களாகப் பயன்படுத்தப்பட்டன. பல திரைப்படத் தலைப்புகள் இவரது கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றையும் காண்க பாரதி (திரைப்படம்) மகாகவி பாரதி நினைவு நூலகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பாரதியாரும் கோவில் யானையும் மதுரைத் திட்டத்தில் பாரதியார் பாடல்கள் முழுமையான நூல் - நூலகம் திட்டம் மகாகவி பாரதி வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் - எஸ். திருச்செல்வம் பாரதி பற்றிய அறிமுகம் 1882 பிறப்புகள் 1921 இறப்புகள் சுப்பிரமணிய பாரதியார் தமிழ் சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள் தமிழ் கலைச்சொல் அறிஞர் தமிழ் எழுத்தாளர்கள் தமிழகப் பத்திரிகையாளர்கள் நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் தூத்துக்குடி மாவட்ட நபர்கள் தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்கள்
2776
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88
மெரீனா கடற்கரை
மெரீனா அல்லது மெரீனா கடற்கரை (Marina Beach) இந்தியாவின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறக் கடற்கரை ஆகும். இதன் நீளம் 13 கி.மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல், மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால், இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. வரலாறு சென்னைத் துறைமுகம் கட்டப்படும் முன்பு, மெரீனா கடற்கரை வெறும் களிமண் தொகுப்பை உடையதாக இருந்தது. மெரீனாவைக் காப்பாற்ற சுவாமி விவேகானந்தரின் சென்னை இல்லறச் சீடர்களில் ஒருவர் கிருஷ்ண சுவாமி அய்யர். இவர் 1890களில் தென்னக ரயில்வே, மயிலாப்பூரையும், கிண்டியையும் மெரினா வழியாக இணைத்து ஒரு இரயில் தடம் செல்ல தீர்மானம் நிறைவேற்றி, 1903இல் வேலை தொடங்கும் சமயம் அதனை எதிர்த்து மாபெரும் கூட்டம் கூட்டினார். "இந்தக் கடற்கரைதான் சென்னை நகரத்தின் நுரையீரல்; இதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்தியினர் மன்னிக்க மாட்டார்கள்" என்று கூறினார். மெரீனாவைக் காப்பாற்றுவதற்காகக் கூடிய மக்கள் கூட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அரசும் அஞ்சியது. இதனை அடுத்து அரசாங்கமும் அத்திட்டத்தினைக் கைவிட்டது. நிகழ்வுகள் சென்னையின் முக்கிய பகுதியான இக்கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. இந்தியாவின் பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தானும் இங்கு நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பர். பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழும் இடமும் இதுவே. சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசுத் துறைகளின் அணிவரிசை நடைபெறும். போக்குவரத்து மெரீனா கடற்கரையை ஒட்டிய காமராசர் சாலை ஆறுவழிப் பாதையாகும். கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் ஆகிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. சுற்றுலா பேருந்துகள் இங்கு நின்றே செல்லும். எழில்மிகு காட்சிகள் சென்னைக் கடற்கரைகள் சென்னைச் சுற்றுலா மையங்கள் தமிழ்நாட்டுக் கடற்கரைகள் சென்னையின் புவியியல் மேற்கோள்கள்
2777
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
தமிழ் இலக்கணம்
தமிழ் மொழி 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்,' என மூன்று பிரிவுகளை உடையது. இவையே 'முத்தமிழ்' என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை, எழுத்து சொல் பொருள் யாப்பு அணி அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று வகை இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர். எழுத்து முதலெழுத்து 'அ' முதல் 'ஔ' வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும் உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன் உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும். மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும். சார்பெழுத்துகள் சார்பு எழுத்து மூன்று என்பது மரபு என்கிறார் தொல்காப்பியர் அவை குற்றியலிகரம் குற்றியலுகரம் மற்றும் ஆய்தம் ஆனால் பிற்காலத்தில் நன்னூலார் அதை விரிபு படுத்தி : உயிர்மெய் எழுத்து ஆய்த எழுத்து உயிரளபெடை ஒற்றளபெடை குற்றியலுகரம் குற்றியலிகரம் ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம் மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கம் எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216), ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும். தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும் ஆகும். அதில் ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள். அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளைப் பற்றியும் கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள். எழுத்து குறித்த இலக்கணச் செய்தி எழுத்தெண்ணிச் சீரும் அடியும் வரையறுக்கும் நிலையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. வஞ்சியுரிச்சீர், குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழி நெடிலடி போன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும் அடிகளுமாகும். வஞ்சியுரிச்சீர் நேர் இறுதி ஐந்து எழுத்து நிரை இறுதி ஆறு எழுத்து சிறுமை மூன்று எழுத்து பெருமை ஆறு எழுத்து 4 முதல் 6 எழுத்து வரை - குறளடி 7 முதல் 9 எழுத்து வரை - சிந்தடி 10 முதல் 14 எழுத்து வரை - அளவடி 15 முதல் 17 எழுத்து வரை - நெடிலடி 18 முதல் 20 எழுத்து வரை - கழி நெடிலடி மெய்யெழுத்து உயிரில் எழுத்து என்று குறிக்கப் பெறுகிறது. ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7 முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20 எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார். சொல் ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். எ.கா: வீடு, கண், போ, சொல்லின் வகைகள் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் பொருள் பொருள் இரண்டு வகைப்படும். அவை, அகப்பொருள் புறப்பொருள் தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும். ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள். அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள். யாப்பு யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். யாப்பின் உறுப்புகள் யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை எழுத்து அசை சீர் தளை அடி தொடை உயிர் எழுத்துகளும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும். தளை என்னும் சொல்லுக்குக் கட்டுவது, பொருந்துவது என்பது பொருளாகும். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றியும், ஒன்றாமலும் வருவது தளையாகும். இவ்வாறாக சீர்கள் இணைந்த தளைகள் பொருந்தி நின்று அடுத்து நடப்பது அடி எனப்படும். அடிகளும் அவ்வடிகளில் உள்ள சீர்களும் பொருத்தமுற தொடுக்கப்படுவது தொடையாகும். தொடை என்பது காரணப்பெயராகும். யாப்பின் அடிப்படையில் பா வகைகள் வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா அணி அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில, தன்மையணி உவமையணி உருவக அணி பின்வருநிலையணி தற்குறிப்பேற்ற அணி வஞ்சப் புகழ்ச்சியணி வேற்றுமை அணி இல்பொருள் உவமையணி எடுத்துக்காட்டு உவமையணி இரட்டுறமொழிதலணி மேலும் காண்க தமிழ் இலக்கண விரிவு ஆங்கில இலக்கியம் ஆங்கில இலக்கணம் பிரெஞ்சு இலக்கணம் பிரெஞ்சு இலக்கணம் எசுபெரந்தோ வேற்றுமையுருபு மேற்கோள்கள் வெளியிணைப்புகள் நூலகம் இணையத்தில் தமிழிலக்கணத்திற்கான வலைவாசல். இலக்கணப் பாடபுத்தகம் - தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தின் பள்ளிகளுக்கான இலக்கணப் புத்தகம்.
2778
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
உருசியா
உருசியா () அல்லது உருசியக் கூட்டமைப்பு (Russian Federation) என்பது கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசியாவில் பரவியிருக்கும் ஒரு நாடு ஆகும். பரப்பளவில் உலகின் மிகப் பெரிய நாடு இது தான். இது 11 நேர வலயங்களுக்கு விரிவடைந்தும், 14 நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொண்டும் உள்ளது. உலகின் ஒன்பதாவது மிக அதிக மக்கள் தொகையுடைய நாடும், ஐரோப்பாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடும் இதுவாகும். உருசியா அதிக அளவு நகரமயமாக்கப்பட்ட ஒரு நாடாகும். 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட 16 மக்கள் தொகை மையங்களை இது உள்ளடக்கியுள்ளது. மாஸ்கோ இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். சென் பீட்டர்சுபெர்கு உருசியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமும், இதன் பண்பாட்டுத் தலைநகரமும் ஆகும். கிழக்கு இசுலாவியர்கள் ஐரோப்பாவில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட குழுவாக பொ. ஊ. 3ஆம் மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வளர்ச்சி அடைந்தனர். முதல் கிழக்கு இசுலாவிய அரசான கீவ ருஸ் 9ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்தது. 988இல் பைசாந்தியப் பேரரசிடமிருந்து கிழக்கு மரபு வழிக் கிறித்தவத்தை இது பின்பற்றத் தொடங்கியது. கீவ ருஸ்ஸானது இறுதியாகக் கலைக்கப்பட்டது. உருசிய நிலங்களின் ஒன்றிணைப்புக்கு மாஸ்கோவின் மாட்சி மிக்க வேள் பகுதி தலைமை தாங்கியது. 1547இல் உருசியாவின் சாராட்சி அறிவிக்கப்பட்டதற்கு வழி வகுத்தது. உருசியாவானது படையெடுப்பு, இணைப்பு மற்றும் உருசிய நாடு காண் பயணிகளின் முயற்சிகள் வழியாகப் பரந்து விரிந்தது. உருசியப் பேரரசாக வளர்ச்சியடைந்தது. வரலாற்றின் மூன்றாவது மிகப் பெரிய பேரரசாக இன்றும் தொடருகிறது. எனினும், 1917 உருசியப் புரட்சியுடன் உருசிய முடியாட்சியானது ஒழிக்கப்பட்டது. உருசிய சோவியத்து கூட்டாட்சிப் பொதுவுடமைக் குடியரசால் இறுதியாக இடம் மாற்றப்பட்டது. உலகின் முதல் அரசியலமைப்பு ரீதியிலான சோசலிசக் குடியரசு இது தான். உருசிய உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து உருசிய சோவியத் கூட்டாட்சிப் பொதுவுடமைக் குடியரசானது சோவியத் ஒன்றியத்தை மூன்று பிற சோவியத்துக் குடியரசுகளுடன் சேர்த்து நிறுவியது. இதில் சோவியத் ஒன்றியம் மிகப் பெரியதாகவும், முதன்மையான உறுப்பினராகவும் இருந்தது. பல தசம இலட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்பில் சோவியத் ஒன்றியமானது 1930களில் வேகமாகத் தொழில் புரட்சிக்கு உள்ளாகியது. கிழக்குப் போர் முனையில் பெருமளவிலான முயற்சிகளுக்குத் தலைமை தாங்கியதன் மூலம் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளுக்காக பிந்தைய காலத்தில் இது ஒரு தீர்க்கமான பங்கை ஆற்றியது. பனிப் போர் தொடங்கியதுடன் பண்பாட்டுப் பேரரசுவாதம் மற்றும் பன்னாட்டு செல்வாக்கிற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இது போட்டியிட்டது. மனிதன் உருவாக்கிய முதல் செயற்கைக் கோள் மற்றும் விண்வெளிக்கு முதல் மனிதன் பயணித்தது உள்ளிட்ட மிக முக்கியமான உருசியத் தொழில்நுட்பச் சாதனைகளில் சிலவற்றை 20ஆம் நூற்றாண்டின் சோவியத் சகாப்தமானது கண்டது. 1991இல் உருசிய சோவியத் கூட்டாட்சிப் பொதுவுடமைக் குடியரசானது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து உருசியக் கூட்டமைப்பாக உருவாகியது. ஒரு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது. அது ஒரு கூட்டாட்சி பகுதியளவு-அதிபர் அமைப்பை நிறுவியது. இந்நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து உருசியாவின் அரசியலமைப்பானது விளாதிமிர் பூட்டினின் கீழ் உள்ளது. முந்தைய சோவியத் அரசுகள் மற்றும் பிற நாடுகளின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சண்டைகளில் உருசியாவானது இராணுவ ரீதியாகப் பங்கெடுத்துள்ளது. 2008இல் ஜார்ஜியாவுடனான இதன் போர் மற்றும் 2014இலிருந்து உக்குரைனுடனான இதன் போர் ஆகியவை இதில் உள்ளடங்கும். உருசியாவானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் ஒரு நிரந்தர உறுப்பினராகும். ஜி-20, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ், ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு, ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு மற்றும் உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் ஓர் உறுப்பினர் ஆகும். விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம், கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு, மற்றும் ஐரோவாசியப் பொருளாதார ஒன்றியம் போன்ற சோவியத் காலத்துக்குப் பிந்தைய அமைப்புகளின் ஒரு முன்னணி உறுப்பினர் அரசாக உள்ளது. அணு ஆயுதங்களின் மிகப் பெரிய கையிருப்பையும், உலகின் மூன்றாவது மிக அதிக இராணுவச் செலவீனத்தையும் இது கொண்டுள்ளது. உருசியா பொதுவாக ஓர் உலக வல்லமையாகவும், ஒரு பிராந்திய சக்தியாகவும் கருதப்படுகிறது. மக்களாட்சி, மனித உரிமைகள் மற்றும் ஊடகச் சுதந்திரம் ஆகிய அளவீடுகளில் உருசியா பன்னாட்டு அளவில் மிகக் குறைவான தரநிலையைக் கொண்டுள்ளது. அதிக அளவிலான ஊழலையும் இந்த நாடு கொண்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் நிலவரப்படி உருசியா ஓர் உயர்-வருமானப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகில் 11வது இடத்திலும், கொள்வனவு ஆற்றல் சமநிலையின் படி 4வது இடத்திலும் உள்ளது. இதற்கு இது தன் பரந்த கனிம மற்றும் எரி பொருள் வளங்களைச் சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு உருசியாவாகும். உருசியா 32 யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களுக்குத் தாயகமாக உள்ளது. பெயர்க் காரணம் ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியின் படி உருசியா என்ற ஆங்கிலப் பெயரானது முதன் முதலில் 14ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 11ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட நடுக்கால இலத்தீன் பெயரான உருசியாவில் இருந்து இது கடன் பெறப்பட்டது. 12ஆம் நூற்றாண்டுப் பிரித்தானிய ஆதாரங்களில் இது அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உருசியர்களைக் குறிக்கும் உருசி மற்றும் -இயா என்ற பின்னொட்டு ஆகியவற்றிலிருந்து இது தருவிக்கப்பட்டுள்ளது. நவீன வரலாற்றியலில் இந்த அரசானது பொதுவாக இதன் தலை நகரத்தின் பெயரை ஒத்தவாறு கீவ ருஸ் என்று குறிப்பிடப்படுகிறது. ருஸ்ஸுக்கான மற்றொரு நடுக் காலப் பெயரானது உருதேனியா ஆகும். உருசிய மொழியில் நாட்டின் தற்போதைய பெயர் ரோஸ்ஸியா (, ) ஆகும். பைசாந்தியக் கிரேக்கப் பெயரான ருஸ்ஸிலிருந்து (, ) இது வருகிறது. ருஸ் (, ) பெயரின் ஒரு புதிய வடிவமான ரோசியாவானது கிரேக்கச் சொல்லிலிருந்து கடன் பெறப்பட்டது. 1387இல் இது முதன் முதலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரோஸ்ஸீயா என்ற பெயர் 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருசிய ஆதாரங்களில் தோன்றுகிறது. ஆனால், 17ஆம் நூற்றாண்டின் முடிவு வரை நாடானது இதன் குடிமக்களால் பொதுவாக ருஸ் (உருசிய நிலம், ) அல்லது மஸ்கோவிய அரசு () போன்ற பிற வேறுபட்ட பெயர்களால் குறிப்பிடப்பட்டது. 1721இல் பேரரசர் பேதுரு அரசின் பெயரை உருசியாவின் சாராட்சி (Русское царство, ருஸ்கோயே திசார்ஸ்த்வோ) அல்லது மஸ்கோவியின் சாராட்சியில் (Московское царство, மாஸ்கோவ்ஸ்கோயே திசார்ஸ்த்வோ) இருந்து உருசியப் பேரரசு () என்று மாற்றினார். ஆங்கிலத்தில் "உருசியர்கள்" என்று மொழி பெயர்க்கப்படக் கூடிய ஏராளமான சொற்கள் உருசிய மொழியில் உள்ளன. ருஸ்கிய் (русский) என்ற பெயர் மற்றும் பெயரடையானது உருசிய இனத்தவர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ரோஸீஸ்கிய் (российский) என்ற பெயரடையானது இனத்தைப் பொருட்படுத்தாமல் உருசியக் குடிமக்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ரோசீயானின் (россиянин) என்ற மிக சமீபத்தில் பயன்படுத்தப்படும் பெயர்ச் சொல்லானது இதே முறையில் பயன்படுத்தப்படுகிறது. "உருசியர்" என உருசியக் அரசின் குடிமக்களைக் குறிப்பிடும் நோக்கில் இது பயன்படுத்தப்படுகிறது. முதன்மைத் தொடர் வரலாறு எனும் உருசிய நூலின் படி ருஸ் என்ற சொல்லானது ருஸ் மக்களிடமிருந்து பெறப்பட்டதாகும். இவர்கள் ஒரு சுவீடியப் பழங்குடியினத்தவர் ஆவர். உருரிகிய அரசமரபின் மூன்று உண்மையான உறுப்பினர்கள் இங்கிருந்து தான் வந்தனர். சுவீடியர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பின்னியச் சொல்லான ருவோத்சியும் இதே பூர்வீகத்தைக் கொண்டுள்ளது. பிந்தைய தொல்லியல் ஆய்வுகள் பெரும்பாலும் இந்தக் கோட்பாட்டை உறுதிப்படுத்துகின்றன. வரலாறு தொடக்க கால வரலாறு உருசியாவில் முதல் மனிதக் குடியிருப்பானது முன் கற்காலத்தின் பிந்தைய பகுதியின் தொடக்கத்தைச் சேர்ந்த ஒல்தோவன் காலத்திற்குக் காலமிடப்படுகிறது. சுமார் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஓமோ இரெக்டசுவின் பிரதிநிதிகள் தெற்கு உருசியாவின் தமன் தீபகற்பத்திற்கு இடம் பெயர்ந்தனர். சுமார் 15 இலட்சம் ஆண்டுகள் பழமையான தீக்கல் கருவிகள் வடக்குக் காக்கேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அல்த்தாய் மலைத்தொடர்களில் உள்ள தெனிசோவா குகையிலிருந்து எடுக்கப்பட்ட கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு உடல்கள் மிகப் பழமையான தெனிசோவா மனிதன் 195-1,22,700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தான் என மதிப்பிடுகின்றன. பாதி நியாண்டர்தால் மனிதன் மற்றும் பாதி தெனிசோவா மனிதனின் ஒரு தொல் வழக்கான மனிதக் கலப்பினத்தைச் சேர்ந்த தென்னி எனும் புதைப் படிவங்கள் சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர். பிந்தைய குகையில் இவர்களும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சுமார் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடைசியாக எஞ்சிப் பிழைத்த நியாண்டர்தால்களில் சிலருக்குத் தாயகமாக உருசியா இருந்துள்ளது. மெசுமைசுகயா குகையில் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். உருசியாவில் தொடக்க கால நவீன மனிதனின் முதல் தடயமானது 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு சைபீரியாவில் கிடைக்கிறது. உடல் அமைப்பில் நவீன மனிதர்களின் உயர் செறிவுடைய பண்பாட்டு எச்சங்களின் கண்டுபிடிப்பானது கோசுதியோங்கி-போர்ஸ்சியோவோ என்ற இடத்தில் குறைந்தது 40,000 ஆண்டுகளுக்கு முன்னரும், சுங்கிர் என்ற இடத்தில் 34,600 ஆண்டுகளுக்கு முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு இடங்களும் மேற்கு உருசியாவில் உள்ளன. மனிதர்கள் ஆர்க்டிக் உருசியாவை குறைந்தது 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் மமோந்தோவயா குர்யாவில் அடைந்தனர். சைபீரியாவைச் சேர்ந்த பண்டைக் கால வடக்கு ஐரோவாசிய மக்கள் மரபணு ரீதியாக மால்டா-புரேட் பண்பாட்டை ஒத்தவர்கள் ஆவர். பண்டைக் கால பூர்வகுடி அமெரிக்கர்கள் மற்றும் கிழக்கத்திய வேட்டையாடி-சேகரித்து உண்பவர்களுக்கு முக்கியமான மரபணுப் பங்களிப்பாளராக சைபீரியாவின் தொல்லியல் களங்களின் அபோந்தோவா கோரா வளாகத்தைச் சேர்ந்தோர் விளங்கினர். குர்கன் கோட்பாடானது தெற்கு உருசியா மற்றும் உக்குரைனின் வோல்கா-தினேப்பர் பகுதியை ஆதி இந்தோ ஐரோப்பிய மக்களின் தாயகமாகக் குறிப்பிடுகிறது. உக்குரைன் மற்றும் உருசியாவின் பான்டிக்-காசுப்பியப் புல்வெளியிலிருந்து தொடக்க கால இந்தோ-ஐரோப்பியப் புலப் பெயர்வுகளானவை யம்னயா மூதாதையர் மற்றும் இந்திய-ஐரோப்பிய மொழிகளை ஐரோவாசியாவின் பெரும் பகுதி முழுவதும் பரப்பியது. செப்புக் காலத்தில் பான்டிக்-காசுப்பியப் புல்வெளியில் நாடோடி மேய்ப்பாளர் முறையானது வளர்ச்சியடையத் தொடங்கியது. இபதோவோ, சிந்தசுதா, அர்கைம், மற்றும் பசிரிக் போன்ற இடங்களில் இத்தகைய புல்வெளி நாகரிகங்களின் எச்சக் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போர்க் களத்தில் குதிரைகளின் பயன்பாட்டின் தொடக்க காலத்தில் அறியப்பட்ட தடயங்களை இவை கொண்டுள்ளன. வடக்கு ஐரோப்பாவில் யூரலிய மொழிக் குடும்பத்தைப் பேசியவர்களின் மரபணுப் பங்களிப்பானது குறைந்தது 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் சைபீரியாவிலிருந்து தொடங்கிய புலப்பெயர்வால் வடிவம் பெற்றது. பொ. ஊ. 3 முதல் 4 வரையிலான நூற்றாண்டுகளில் தெற்கு உருசியாவில் ஒய்யம் எனும் கோத்திய இராச்சியமானது அமைந்திருந்தது. இது பிறகு ஊணர்களால் தாக்குதல் ஓட்டத்திற்கு உள்ளானது. பொ. ஊ. 3ஆம் மற்றும் 6ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிரேக்கக் காலனிகளின் பின் வந்த ஓர் எலனிய அரசியல் அமைப்பான போசுபோரன் இராச்சியம் ஊணர்கள் மற்றும் ஐரோவாசிய ஆவர்கள் போன்ற போர்க் குணம் கொண்ட பழங்குடியினங்களால் தலைமை தாங்கப்பட்ட நாடோடிப் படையெடுப்புகளால் வீழ்ச்சியடைந்தது. துருக்கியப் பூர்வீகத்தைக் கொண்ட கசர்கள் தெற்கே காக்கேசியாவில் இருந்து, கிழக்கே வோல்கா ஆற்று வடி நிலத்தைத் தாண்டியும், மற்றும் மேற்கே தினேப்பர் ஆற்றில் இருந்த கீவ் வரையிலிருந்த இடைப்பட்ட புல்வெளிகளை 10ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். இதற்குப் பிறகு பெச்சேனெக்குகள் என்பவர்கள் ஒரு பெரிய கூட்டமைப்பை உருவாக்கினர். இது இறுதியாக குமன்கள் மற்றும் கிப்சாக்குகளால் வெல்லப்பட்டது. ஆதி இந்தோ-ஐரோப்பியர்களிடமிருந்து பிரிந்த இசுலாவியப் பழங்குடியினங்களில் உருசியர்களின் மூதாதையர்களும் ஒருவராவர். ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவின் வடகிழக்குப் பகுதியில் இவர்கள் தோன்றினர். கிழக்கு இசுலாவியர்கள் படிப்படியாக மேற்கு உருசியாவில் (தோராயமாக நவீன மாஸ்கோ மற்றும் சென் பீட்டர்சுபெர்குக்கு இடைப்பட்ட பகுதி) இரு அலைகளாகக் குடியமர்ந்தனர். ஓர் அலையானது கீவிலிருந்து தற்கால சுசுதால் மற்றும் முரோம் பகுதிகளை நோக்கியும், மற்றொரு அலையானது போலோத்ஸ்கிலிருந்து வெலிக்கி நோவ்கோரோத் நகரம் மற்றும் ரோசுதோவ் நகரங்களை நோக்கியும் வந்தனர். இசுலாவியப் புலப் பெயர்வுக்கு முன்னர் அந்நிலப்பரப்பானது பின்னோ-உக்ரிய மக்களால் குடியமரப்பட்டிருந்தது. 7ஆம் நூற்றாண்டு முதல் புதிதாக வந்த கிழக்கு இசுலாவியர்கள் மெதுவாகப் பூர்வீக பின்னோ-உக்ரியகளைத் தங்களுக்குள் இணைத்துக் கொண்டனர். கீவ ருஸ் 9ஆம் நூற்றாண்டில் முதல் கிழக்கு இசுலாவிய அரசுகளின் நிறுவலானது வாராஞ்சியர்கள் எனப்படும் வைக்கிங்குகளின் வருகையோடு ஒத்துப் போகிறது. கிழக்கு பால்டிக் கடலில் இருந்து கருங்கடல் மற்றும் காசுப்பியன் கடல்களுக்கு நீண்டிருந்த நீர் வழிகளின் வழியாக துணிகர முயற்சியுடன் அவர்கள் வந்திருந்தனர். முதன்மை தொடர் வரலாற்றின் படி ருஸ் மக்களைச் சேர்ந்த ஒருவரான உருரிக் என்ற பெயருடையவர் 862இல் வெலிக்கி நோவ்கோரோத் நகரத்தின் ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 882இல் இவருக்குப் பின் வந்த ஒலேக் தெற்கு நோக்கித் துணிகர முயற்சியாகச் சென்று கீவைக் கைப்பற்றினார். கீவானது முன்னர் கசர்களுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்தது. உருரிக்கின் மகனான இகோர் மற்றும் இகோரின் மகனான இசுவியாதோசுலாவ் இறுதியாக அனைத்து உள்ளூர் கிழக்கு இசுலாவியப் பழங்குடியினங்களையும் கீவ ஆட்சிக்கு அடி பணிய வைத்தார். கசர் ககானரசை அழித்தார். பைசாந்தியம் மற்றும் பாரசீகத்திற்குள் ஏராளமான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கினார். 10 முதல் 11ஆம் நூற்றாண்டுகளில் கீவ ருஸ் ஐரோப்பாவில் மிகப் பெரிய மற்றும் மிகச் செழிப்பான அரசுகளில் ஒன்றாக உருவானது. மகா விளாதிமிர் (980–1015) மற்றும் அவரது மகன் புத்திசாலி யரோசுலாவ் (1019–1054) ஆகியோரின் ஆட்சிக் காலங்களானவை கீவின் பொற்காலத்தை உள்ளடக்கியிருந்தன. பைசாந்தியத்தில் இருந்து கிழக்கு மரபுவழிக் கிறித்தவத்தை இவர்கள் ஏற்றுக் கொண்டது மற்றும் உருஸ்கயா பிராவ்டா எனும் முதல் கிழக்கு இசுலாவிய எழுதப்பட்ட சட்டங்களின் உருவாக்கம் ஆகியவற்றை இக்கால கட்டமானது கண்டது. நில மானிய முறைமை மற்றும் மையப்படுத்தப்படாத அரசின் காலமானது வந்தது. கீவ ருஸ்ஸை ஒன்றிணைந்து ஆட்சி செய்து கொண்டிருந்த உருரிக் அரசமரபின் உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்ச்சியான சண்டைகளை இது குறித்தது. கீவின் ஆதிக்கமானது குன்றியது. வட கிழக்கே விளாதிமிர்-சுசுதால், வடக்கே நோவ்கோரோத் குடியரசு மற்றும் தென் மேற்கே கலீசியா-வோலினியா ஆகியவற்றுக்கு இது அனுகூலமாக அமைந்தது. 12ஆம் நூற்றாண்டு வாக்கில் கீவானது அதன் முதன்மை நிலையை இழந்தது. கீவ ருஸ்ஸானது வெவ்வேறு வேள் பகுதிகளாகத் துண்டானது. 1169இல் இளவரசர் ஆந்த்ரேய் போகோலியூப்ஸ்கி கீவைச் சூறையாடினார். விளாதிமிரைத் தனது மையப் பகுதியாக உருவாக்கினார். வட கிழக்குப் பகுதிக்கு அரசியல் சக்தி மாறுவதற்கு இது வழி வகுத்தது. இளவரசர் அலெக்சாந்தர் நெவ்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட நோவ்கோரோதியர்கள் 1240இல் நெவா யுத்தத்தில் படையெடுத்து வந்த சுவீடுகளை முறியடித்தனர். மேலும், 1242இல் பனிக் கட்டி யுத்தத்தில் செருமானிய சிலுவைப் போர் வீரர்களையும் தோற்கடித்தனர். கீவ ருஸ்ஸானது இறுதியாக 1237-1240ஆம் ஆண்டின் மங்கோலியப் படையெடுப்பில் வீழ்ந்தது. கீவ் மற்றும் பிற நகரங்கள் சூறையாடப்படுவதில் இது முடிவடைந்தது. மேலும், மக்களில் ஒரு பெரும் பங்கினரின் இறப்பிற்கும் காரணமானது. பிற்காலத்தில் தாதர்கள் என்று அறியப்பட்ட படையெடுப்பாளர்கள் தங்க நாடோடிக் கூட்டம் எனும் அரசை அமைத்தனர். அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு உருசியாவை இவர்களே ஆண்டனர். மங்கோலியர்களுக்குத் திறை செலுத்த ஒப்புக் கொண்டதற்குப் பிறகு நோவ்கோரோத் குடியரசு மட்டும் அயல்நாட்டு ஆக்கிரமிப்பில் இருந்து தப்பித்தது. கலீசியா-வோலினியாவானது லித்துவேனியா மற்றும் போலந்தால் பிற்காலத்தில் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், நோவ்கோரோத் குடியரசானது வடக்கே தொடர்ந்து செழித்திருந்தது. வட கிழக்கே கீவ ருஸ்ஸின் பைசாந்திய-இசுலாவியப் பாரம்பரியங்களானவை பின்பற்றப்பட்டு உருசிய அரசானது உருவாக்கப்பட்டது. மாஸ்கோவின் மாட்சி மிக்க வேள் பகுதி கீவ ருஸ்ஸின் அழிவானது இறுதியாக மாஸ்கோவின் மாட்சி மிக்க வேள் பகுதியின் வளர்ச்சியைக் கண்டது. இந்த வேள் பகுதி விளாதிமிர்-சுசுதாலின் ஒரு பகுதியாகத் தொடக்கத்தில் இருந்தது. மங்கோலிய-தாதர்களின் நிலப்பகுதிக்குள் இன்னும் தொடர்ந்து இருந்தாலும் தங்களது மறைமுக நடவடிக்கைகள் மூலம் 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் மாஸ்கோவானது அதன் செல்வாக்கை நிலை நிறுத்தத் தொடங்கியது. "உருசிய நிலங்களை ஒன்றிணைப்பதில்" முன்னணி விசையாக படிப்படியாக உருவானது. 1325இல் மாஸ்கோவுக்கு உருசிய மரபுவழித் திருச்சபைத் தலைவரின் இருக்கையானது மாற்றப்பட்ட போது மாஸ்கோவின் செல்வாக்கு அதிகரித்தது. மாஸ்கோவின் கடைசி எதிரியான நோவ்கோரோத் குடியரசானது முதன்மையான உரோம வர்த்தக மையம் மற்றும் அன்சியாதியக் குழுமத்தின் தூரக் கிழக்குத் துறைமுகமாகச் செழித்திருந்தது. மாஸ்கோவின் இளவரசர் திமித்ரி தோன்ஸ்கோயால் தலைமை தாங்கப்பட்ட உருசிய வேள் பகுதிகளின் ஒன்றிணைந்த இராணுவமானது 1380இல் குலிகோவோ யுத்தத்தில் மங்கோலிய-தாதர்களுக்கு ஒரு மைல் கல் தோல்வியைக் கொடுத்தது. மாஸ்கோவானது படிப்படியாக அதன் தலைமை வேள் பகுதி மற்றும் சுற்றியிருந்த வேள் பகுதிகளை உள்ளிழுத்துக் கொண்டது. திவேர் மற்றும் நோவ்கோரோத் போன்ற முந்தைய வலிமையான எதிரிகளும் இதில் அடங்கும். மூன்றாம் இவான் ("மகா இவான்") தங்க நாடோடிக் கூட்டத்தின் கட்டுப்பாட்டைத் தூக்கி எறிந்தார். மாஸ்கோவின் நிலப்பரப்பின் கீழ் ஒட்டு மொத்த வடக்கு ருஸ்ஸையும் ஒன்றிணைத்தார். "அனைத்து ருஸ்ஸின் மாட்சி மிக்க கோமகன்" என்ற பட்டத்தைக் கொண்ட முதல் உருசிய ஆட்சியாளர் இவராவார். 1453இல் கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மாஸ்கோவானது பைசாந்தியப் பேரரசின் மரபின் வழித் தோன்றல் என உரிமை கோரியது. கடைசி பைசாந்தியப் பேரரசர் 11ஆம் கான்ஸ்டன்டைனின் உடன் பிறப்பின் மகளான சோபியா பலையோலோகினாவை மூன்றாம் இவான் மணந்து கொண்டார். பைசாந்தியச் சின்னமான இரட்டைத் தலைக் கழுகைத் தன்னுடைய சொந்த சின்னமாக்கினார். இறுதியாக உருசியாவின் சின்னமாக்கினார். 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடைசி சில சுதந்திர உருசிய அரசுகளை இணைத்ததன் மூலம் ஒட்டு மொத்த உருசியாவையும் மூன்றாம் வாசிலி ஒன்றிணைத்தார். உருசியாவின் சாராட்சி மூன்றாவது உரோம் என்ற யோசனைகளின் வளர்ச்சியில் மாட்சி மிக்க கோமகனான நான்காம் இவான் ("பயங்கர இவான்") அதிகாரப்பூர்வமாக 1547இல் உருசியாவின் முதல் ஜாராக (பொருள்: சீசர்) மகுடம் சூட்டிக் கொண்டார். ஜார் மன்னர் சட்டங்களின் ஒரு புதிய வடிவத்தை (1550இன் சுதேப்னிக்) அறிவித்தார். முதல் உருசிய நிலமானிய முறையின் பிரதிநிதித்துவ அமைப்பை (செம்ஸ்கி சோபோர்) நிறுவினார். இராணுவத்தைப் புதுப்பித்தார். மத குருமார்களின் செல்வாக்கைக் குறைத்தார். உள்ளூர் அரசாங்கத்தை மறு ஒருங்கிணைப்புச் செய்தார். இவரது நீண்ட ஆட்சிக் காலத்தின் போது வோல்கா ஆற்றுப் பக்கவாட்டில் இருந்த கசன் மற்றும் அசுதிரகான் மற்றும் தென் மேற்கு சைபீரியாவில் இருந்த சைபீர் கானரசு ஆகிய மூன்று தாதர் கானரசுகளை இணைத்ததன் மூலம் ஏற்கனவே பெரியதாக இருந்த உருசிய நிலப்பரப்பைக் கிட்டத்தட்ட இரு மடங்காக இவான் ஆக்கினார். இறுதியாக, 16ஆம் நூற்றாண்டின் முடிவில் உருசியாவானது உரால் மலைகளுக்குக் கிழக்கே விரிவடையத் தொடங்கியது. எனினும், பால்டிக் கடற்கரை மற்றும் கடல் வாணிபத்திற்கான வாய்ப்புக்காக போலந்து இராச்சியம், லித்துவேனியாவின் மாட்சி மிக்க வேள் பகுதி (பிறகு இவை போலந்து-லித்துவேனியப் பொது நலவாயமாக இணைக்கப்பட்டன), சுவீடன் இராச்சியம் மற்றும் டென்மார்க்-நார்வே ஆகியவற்றின் கூட்டணிக்கு எதிராக நீண்ட மற்றும் தோல்வியடைந்த லிவோனியப் போரால் ஜார் ஆட்சியானது பலவீனமடைந்தது. 1572இல் முக்கியமான மோலோதி யுத்தத்தில் படையெடுத்து வந்த கிரிமிய தாதர்களின் இராணுவமானது முழுவதுமாகத் தோற்கடிக்கப்பட்டது. இவானின் மகன்களின் இறப்பானது 1598இல் பண்டைக் கால உருரிக் அரசமரபின் முடிவைக் குறித்தது. 1601-1603ஆம் ஆண்டின் அழிவை ஏற்படுத்திய பஞ்சம், உரிமை கோரியவர்களின் ஆட்சி மற்றும் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரச்சனைகளின் காலத்தின் போது அயல் நாட்டவரின் தலையீடு ஆகியவை உள்நாட்டுப் போருக்கு வழி வகுத்தன. இச்சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போலந்து-லித்துவேனியா பொதுநலவாயமானது உருசியாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. தலைநகரம் மாஸ்கோ வரை விரிவடைந்தது. 1612இல் வணிகர் குசமா மினின் மற்றும் இளவரசர் திமித்ரி போசார்ஸ்கி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட உருசியத் தன்னார்வலப் படையால் போலந்துக் காரர்கள் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். செம்ஸ்கி சோபோரின் முடிவின் படி, 1613இல் ரோமனோவ் அரசமரபானது அரியணைக்கு வந்தது. பிரச்சனையில் இருந்து நாடானது அதன் படிப்படியான மீள்வைத் தொடங்கியது. உருசியாவானது அதன் நிலப்பரப்பு விரிவாக்கத்தை 17ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. இது கோசாக் மக்களின் காலமாக இருந்தது. 1654இல் உக்குரைனியத் தலைவரான போக்தான் கிமேல்னித்ஸ்கி உருசிய ஜார் அலெக்சிசின் பாதுகாப்பின் கீழ் உக்குரைனை அளிக்க முன் வந்தார். இந்த வாய்ப்பை அலெக்சிசு ஏற்றுக் கொண்டது மற்றொரு உருசிய-போலந்துப் போருக்கு வழி வகுத்தது. இறுதியாக தினேப்பர் ஆற்றை எல்லையாகக் கொண்டு உக்குரைனானது பிரிக்கப்பட்டது. கிழக்குப் பகுதி (இடது கரை உக்குரைன் மற்றும் கீவ்) உருசிய ஆட்சிக்குக் கீழ் விடப்பட்டது. கிழக்கே பரந்த சைபீரியாவின் வேகமான உருசிய பயண ஆய்வு மற்றும் காலனித்துவமானது தொடர்ந்தது. மதிப்பு மிக்க விலங்கு உரோமங்கள் மற்றும் தந்தங்களுக்காக வேட்டை தொடர்ந்தது. உருசிய நாடு காண் பயணிகள் முதன்மையாகக் கிழக்கே சைபீரிய ஆற்று வழிகளின் வழியாக முதன்மையாக் உந்திச் சென்றனர். 17ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வாக்கில் கிழக்கு சைபீரியாவில் சுகோத்கா மூவலந்தீவில், அமுர் ஆற்றின் பக்கவாட்டுப் பகுதி மற்றும் அமைதிப் பெருங்கடலின் கடற்கரை ஆகிய பகுதிகளில் உருசியக் குடியிருப்புகள் இருந்தன. 1648இல் செம்யோன் தெசுனியோவ் பெரிங் நீரிணையைக் கடந்த முதல் ஐரோப்பியரானார். உருசியப் பேரரசு முதலாம் பேதுருவின் கீழ் 1721இல் உருசியாவானது ஒரு பேரரசாக அறிவிக்கப்பட்டது. ஐரோப்பாவின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றாகத் தன்னைத் தானே நிறுவிக் கொண்டது. 1682 முதல் 1725 வரை ஆட்சியில் இருந்த பேதுரு பெரும் வடக்குப் போரில் (1700-1721) சுவீடனைத் தோற்கடித்தார். கடல் மற்றும் கடல் வணிகத்துக்கு உருசியாவின் வாய்ப்பை உறுதி செய்தார். 1703இல் பால்டிக் கடலில் உருசியாவின் புதிய தலைநகரமாக சென் பீட்டர்சுபெர்கை நிறுவினார்.தன் ஆட்சிக் காலம் முழுவதும் பெரும் சீர்திருத்தங்களைப் பேதுரு கொண்டு வந்தார். உருசியாவுக்குக் குறிப்பிடத்தக்க மேற்கு ஐரோப்பியப் பண்பாட்டுத் தாக்கங்களை இது கொண்டு வந்தது. இவருக்குப் பின் முதலாம் கேத்தரீன் (1725-1727), இரண்டாம் பேதுரு (1727-1730), மற்றும் அன்னா ஆகியோர் ஆட்சிக்கு வந்தனர். முதலாம் பேதுருவின் மகளான எலிசபெத்தின் 1741-1762ஆம் ஆண்டு ஆட்சிக் காலமானது உருசியா ஏழாண்டுப் போரில் (1756-1763) பங்கெடுத்ததைக் கண்டது. இச்சண்டையின் போது உருசியத் துருப்புகள் கிழக்கு புருசியா மீது தாக்குதல் ஓட்டம் நடத்தின. பெர்லினை அடைந்தன. எனினும், எலிசபெத்தின் இறப்பின் போது இந்த அனைத்துப் படையெடுப்பு வெற்றிப் பகுதிகளும் புருசியாவுக்கு ஆதரவான மூன்றாம் பேதுருவால் புருசிய இராச்சியத்திடம் திருப்பி அளிக்கப்பட்டன. இரண்டாம் கேத்தரீன் ("மகா கேத்தரீன்") 1762-1796இல் ஆட்சி புரிந்தார். உருசியாவின் அறிவொளிக் காலத்திற்குத் தலைமை வகித்தார். போலந்து-லித்துவேனியப் பொது நலவாயத்தின் மீதான உருசிய அரசியல் கட்டுப்பாட்டை இவர் விரிவாக்கினார். பொது நலவாயத்தின் பெரும்பாலான நிலப்பரப்புகளை உருசியாவுக்குள் இணைத்தார். உருசியாவை ஐரோப்பாவிலேயே மிக அதிக மக்கள் தொகையுடைய நாடாக ஆக்கினார். தெற்கே உதுமானியப் பேரரசுக்கு எதிரான வெற்றிகரமான உருசிய-துருக்கியப் போர்களுக்குப் பிறகு கேத்தரீன் உருசியாவின் எல்லையைக் கருங்கடலுக்கு நீட்டித்தார். இதைக் கிரிமியக் கானரசைக் கலைத்தது மற்றும் கிரிமியாவை இணைத்ததன் மூலம் செய்தார். உருசிய-பாரசீகப் போர்களில் வழியாக கஜர் ஈரான் மீதான வெற்றிகளின் விளைவாக 19ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வாக்கில் உருசியாவானது காக்கேசியாவையும் கூட வென்றது. கேத்தரீனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவரும், அவரது மகனுமான பவுல் நிலையற்றவராக இருந்தார். உள்நாட்டு விஷயங்களிலேயே முதன்மையாகக் கவனத்தைக் கொண்டிருந்தார். அவரது குறுகிய ஆட்சிக் காலத்தைத் தொடர்ந்து கேத்தரீனின் உத்தியானது முதலாம் அலெக்சாந்தராலும் (1801-1825) தொடரப்பட்டது. 1809இல் பலவீனமடைந்து இருந்த சுவீடனிடமிருந்து பின்லாந்தைப் பறித்தார். 1812இல் உதுமானியர்களிடம் இருந்து பெச்சராபியாவைக் கைப்பற்றினார். வட அமெரிக்காவில் அலாஸ்காவை முதலில் அடைந்து காலனிமயமாக்கிய முதல் ஐரோப்பியர்களாக உருசியர்கள் உருவாயினர். 1803-1806இல் உலகைச் சுற்றிய முதல் உருசியப் பயணமானது நடத்தப்பட்டது. 1820இல் அந்தாட்டிக்கா கண்டத்தை ஓர் உருசியப் பயணக் குழுவானது கண்டுபிடித்தது. பெரும் சக்தியாதல் மற்றும் சமூகம், அறிவியல் மற்றும் கலைகளின் வளர்ச்சி நெப்போலியப் போர்களின் போது பல்வேறு ஐரோப்பிய சக்திகளுடன் உருசியா கூட்டணிகளில் இணைந்தது. பிரான்சுக்கு எதிராகப் போரிட்டது. நெப்போலியன் தனது சக்தியின் உச்சத்தில் 1812இல் நடத்திய உருசியா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பானது மாஸ்கோவை அடைந்தது. மிகக் கடுமையான உருசியக் குளிருடன், இந்தப் பிடிவாதமான எதிர்ப்பானது இணைந்து இந்தப் படையெடுப்பு இறுதியாகத் தோல்வியில் முடியக் காரணமானது. படையெடுத்து வந்தவர்களுக்கு ஓர் அழிவுகரமான தோல்விக்கு வழி வகுத்தது. இதில் அனைத்து ஐரோப்பிய நாட்டவரையும் கொண்டிருந்த நெப்போலியனின் பெரும் இராணுவமானது ஒட்டு மொத்த அழிவைச் சந்தித்தது. மிக்கைல் குதுசோவ் மற்றும் மைக்கேல் ஆந்த்ரியாசு பர்க்லேய் டி டாலி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட ஏகாதிபத்திய உருசிய இராணுவமானது நெப்போலியனை வெளியேற்றியது. ஆறாம் கூட்டணியின் போரில் ஐரோப்பா முழுவதும் நெப்போலியனைத் துரத்தியது. இறுதியாகப் பாரிசுக்குள் நுழைந்தது. வியன்னா மாநாட்டில் உருசியக் குழுவின் கட்டுப்பாட்டை முதலாம் அலெக்சாந்தர் கொண்டிருந்தார். நெப்போலியனின் காலத்துக்குப் பிந்தைய ஐரோப்பாவின் வரைபடத்தைத் தீர்மானித்தது இந்த வியன்னா மாநாடு ஆகும். மேற்கு ஐரோப்பாவுக்குள் நெப்போலியனைத் துரத்திச் சென்ற அதிகாரிகள் தாராளமய யோசனைகளை பதிலுக்கு உருசியாவுக்கள் கொண்டு வந்தனர். 1825ஆம் ஆண்டு வெற்றியடையாத திசம்பர் புரட்சியின் போது ஜார் மன்னரின் சக்திகளைக் குறைக்க முயற்சித்தனர். முதலாம் நிக்கோலசின் (1825-1855) மாற்றத்தை விரும்பாத ஆட்சியின் முடிவில் கிரிமியாப் போரில் தோல்வியின் காரணமாக இது தடைப்பட்டது. முதலாம் நிக்கோலசின் ஆட்சியானது ஐரோப்பாவில் உருசியாவின் சக்தி மற்றும் செல்வாக்கின் உச்சநிலையாகக் கருதப்படுகிறது. பெரும் தாராளமயச் சீர்திருத்தங்களும், முதலாளித்துவமும் நிக்கோலசுக்குப் பின் வந்த இரண்டாம் அலெக்சாந்தர் (1855-1881) குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாடு முழுவதும் சட்டங்கள் மூலம் கொண்டு வந்தார். இதில் 1861ஆம் ஆண்டின் சம உரிமை அளிக்கும் சீர்திருத்தமும் அடங்கும். தொழில்மயமாக்கத்தை இத்தகைய சீர்திருத்தங்கள் ஊக்குவித்தன. ஏகாதிபத்திய உருசிய இராணுவத்தை நவீனமயமாக்கின. இந்த இராணுவமானது 1877-1878ஆம் ஆண்டின் உருசிய-துருக்கியப் போருக்குப் பிறகு உதுமானிய ஆட்சியிலிருந்து பெரும்பாலான பால்கன் குடாவை விடுதலை செய்தது. 19ஆம் மற்றும் தொடக்க 20ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலத்தின் போது நடு மற்றும் தெற்கு ஆசியாவில் ஆப்கானித்தான் மற்றும் அதன் அண்டை நிலப்பரப்புகள் மீது உருசியாவும், பிரிட்டனும் ஒருவர் மற்றொருவரை வெற்றி கொள்வதற்காகச் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டன. இரண்டு முதன்மையான ஐரோப்பிய பேரரசுகளுக்கு இடையிலான இப்பகைமையானது பெரும் விளையாட்டு என்று பிற்காலத்தில் அறியப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியானது உருசியாவில் வேறுபட்ட சமூக இயக்கங்களின் வளர்ச்சியைக் கண்டது. இரண்டாம் அலெக்சாந்தர் 1881ஆம் ஆண்டு புரட்சியாளர்களால் அரசியல் கொலை செய்யப்பட்டார். அவரது மகன் மூன்றாம் அலெக்சாந்தரின் (1881-1894) ஆட்சியில் தாராளமயமானது குறைவாக இருந்தாலும் அமைதி அதிகமாக இருந்தது. அரசியலமைப்பு முடியாட்சியும், உலகப் போரும் கடைசி உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசுக்குக் (1894-1917) கீழ் 1905ஆம் ஆண்டின் உருசியப் புரட்சியானது உருசிய-சப்பானியப் போரின் அவமானகரமான தோல்வியால் தூண்டப்பட்டது. இந்த எழுச்சியானது ஒடுக்கப்பட்டது. கருத்து வெளிப்பாடு மற்றும் கூடல் சுதந்திரத்தை வழங்குதல், அரசியல் கட்சிகளை சட்டப்படி முறைமையாக்குதல், அரசு துமா எனப்படும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைப்பின் உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய சீர்திருத்தங்களை (1906ஆம் ஆண்டின் உருசிய அரசியலமைப்பு) விட்டுக் கொடுக்க அரசாங்கமானது கட்டாயப்படுத்தப்பட்டது. புரட்சியும், உள்நாட்டுப் போரும் 1914இல் உருசியாவின் கூட்டாளி செர்பியா மீது ஆத்திரியா-அங்கேரி போர் அறிவிப்புச் செய்ததன் விளைவாக முதலாம் உலகப் போருக்குள் உருசியா நுழைந்தது. இதன் முந்நேச நாட்டுக் கூட்டாளிகளிடமிருந்து தனித்து விடப்பட்டு இருந்தாலும் பல்வேறு போர் முனைகளில் சண்டையிட்டது. 1916இல் ஏகாதிபத்திய உருசிய இராணுவத்தின் புருசிலோவ் தாக்குதலானது ஆத்திரிய-அங்கேரிய இராணுவத்தைக் கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்தது. முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சியாளர்கள் மீது ஏற்கனவே இருந்த பொது மக்களின் நம்பிக்கையின்மையானது போரின் செலவீனங்கள் அதிகரித்தது, அதிகப்படியான வீரர் இழப்புகள், மற்றும் ஊழல் மற்றும் துரோகம் குறித்த வதந்திகளால் ஆழமானது. 1917ஆம் ஆண்டின் உருசியப் புரட்சிக்கு இந்த அனைத்துக் காரணங்களும் சூழ்நிலையை உருவாக்கின. இரு முதன்மையான செயல்பாடுகளின் மூலம் இப்புரட்சியானது நடத்தப்பட்டது. 1917ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டாம் நிக்கலாசு பதவி விலகக் கட்டாயப்படுத்தப்பட்டார். இவரும், இவரது குடும்பமும் சிறைப்படுத்தப்பட்டனர். உருசிய உள்நாட்டுப் போரின் போது பிறகு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். தங்களைத் தாமே தற்காலிக அரசு என்று அறிவித்துக் கொண்ட அரசியல் கட்சிகளின் ஓர் உறுதியற்ற கூட்டணியால் முடியாட்சியானது இடம் மாற்றப்பட்டது. இக்கூட்டணியானது உருசியக் குடியரசை அறிவித்தது. 1918இல் உருசிய அரசியலமைப்பு அவையானது உருசியாவை ஒரு சனநாயகக் கூட்டாட்சிக் குடியரசாக அறிவித்தது. இவ்வாறாகத் தற்காலிக அரசாங்கத்தின் முடிவை உறுதி செய்தது. அடுத்த நாளே அனைத்து உருசிய மைய செயலாட்சிக் குழுவால் அரசியலமைப்பு அவையானது கலைக்கப்பட்டது. பெட்ரோகிராட் சோவியத் எனும் ஒரு மாற்றுப் பொதுவுடமைவாத அமைப்பானது இருந்தது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றங்களின் வழியாக இது அதிகாரத்தைச் செயல்படுத்தியது இவர்கள் சோவியத்துக்கள் என்று அழைக்கப்பட்டனர். புதிய அதிகார மையங்களின் ஆட்சியானது பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக நாட்டில் அவற்றை அதிகரிக்க மட்டுமே செய்தது. இறுதியாக போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனினால் தலைமை தாங்கப்பட்ட அக்டோபர் புரட்சியானது தற்காலிக அரசாங்கத்தைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தது. முழு நிர்வாக சக்தியை சோவியத்துக்களுக்குக் கொடுத்தது. உலகின் முதல் சோசலிசக் குடியரசின் உருவாக்கத்திற்கு வழி வகுத்தது. பொதுவுடமைவாதத்திற்கு எதிரான வெள்ளை இயக்கம் மற்றும் செஞ்சேனையைக் கொண்டிருந்த போல்செவிக்குகள் ஆகியோருக்கு இடையில் உருசிய உள்நாட்டுப் போரானது வெடித்தது. முதலாம் உலகப் போரின் மைய சக்திகளுடனான சண்டைகளை முடித்து வைத்த பிரெசுது-லிதோவ்சுக் ஓப்பந்தம் கையொப்பமிடப்பட்டதற்குப் பிறகு போல்செவிக் உருசியாவானது அதன் பெரும்பாலான மேற்கு நிலப்பரப்புகளைச் சரணடைய வைத்தது. இப்பகுதியானது அதன் மக்கள் தொகையில் 34%, அதன் தொழிற்சாலைகளில் 54%, அதன் வேளாண்மை நிலத்தில் 32% மற்றும் அதன் நிலக்கரிச் சுரங்கங்களில் சுமார் 90%ஐக் கொண்டிருந்தது. பொதுவுடமைவாதத்துக்கு எதிரான படைகளுக்கு ஆதரவாக ஒரு தோல்வியடைந்த இராணுவத் தலையீட்டை நேச நாடுகள் தொடங்கின. இதே நேரத்தில் போல்செவிக்குகளும், வெள்ளை இயக்கத்தவரும் ஒருவர் மற்றொருவருக்கு எதிராக நாடு கடத்துதல் மற்றும் மரண தண்டனைகள் கொடுத்தல் உள்ளிட்டவற்றைச் செய்தனர். இவை முறையே சிவப்புப் பயங்கரவாதம் மற்றும் வெள்ளைப் பயங்கரவாதம் என்று அறியப்படுகின்றன. வன்முறை நிறைந்த உள்நாட்டுப் போரின் முடிவில் உருசியாவின் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்பானது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. போரின் போது 1 கோடி வரையிலான மக்கள் அழிந்திருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் குடிமக்கள் ஆவர். வெள்ளை இயக்கத்தவரில் தசம இலட்சக் கணக்கானவர்கள் சோவியத் ஒன்றியத்துக்கு ஆதரவு அளிக்காத, அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறியவர் ஆயினர். 1921-1922ஆம் ஆண்டின் உருசியப் பஞ்சமானது 50 இலட்சம் பேர் வரை கொன்றது. சோவியத் ஒன்றியம் அரசால் நெறிப்படுத்தப்பட்ட பொருளாதாரமும், சோவியத் சமூகமும் 30 திசம்பர் 1922 அன்று லெனினும், அவரது உதவியாளர்களும் பைலோ உருசியா, திரான்சு காக்கேசியா மற்றும் உக்குரைனியக் குடியரசுகளுடன் உருசிய சோவியத் கூட்டாட்சி பொதுவுடைமைவாதக் குடியரசை ஓர் ஒற்றை அரசாக இணைத்ததன் மூலம் சோவியத் ஒன்றியத்தை அமைத்தனர். இரண்டாம் உலகப் போரின் போது இறுதியாக ஏற்பட்ட உள் எல்லை மாற்றங்கள் மற்றும் இணைப்புகளானவை 15 குடியரசுகளின் ஓர் ஒன்றியத்தை உருவாக்கின. இதில் அளவு மற்றும் மக்கள் தொகையில் மிகப் பெரியதாக உருசிய உருசிய சோவியத் கூட்டாட்சி பொதுவுடைமைவாதக் குடியரசு விளங்கியது. இந்த ஒன்றியத்தில் அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் மிக்கதாக இருந்தது. 1924இல் லெனினின் இறப்பைத் தொடர்ந்து ஒரு மூவர் குழுவானது அதிகாரத்தைக் கொண்டிருக்க நியமிக்கப்பட்டது. இறுதியாக பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலினால் அனைத்து எதிர்ப்புப் பிரிவுகளையும் ஒடுக்க முடிந்தது. தனது கையில் அதிகாரத்தைப் பெற்று அவர் 1930களில் நாட்டின் தலைவரானார். உலகப் புரட்சியின் முதன்மையான முன்மொழிஞரான லியோன் திரொட்ஸ்கி 1929இல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார். ஒரு நாட்டில் பொதுவுடைமைவாதம் என்ற ஸ்டாலினின் யோசனையானது அதிகாரப்பூர்வ வரியானது. போல்செவிக் கட்சியில் தொடர்ந்த உள் போராட்டங்கள் பெரும் துப்புரவாக்கத்தில் இறுதி முடிவை எட்டின. இசுடாலினியமும், நவீனமயமாக்கலும் இசுடாலின் தலைமையிலான அரசாங்கமானது ஒரு திட்டமிட்ட பொருளாதாரம், பெரும்பாலும் கிராமப்புற நாடாக இருந்ததன் தொழில்மயமாக்கம் மற்றும் அதன் வேளாண்மையைக் கூட்டுப் பண்ணை ஆக்கியது ஆகியவற்றைத் தொடங்கியது. வேகமான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களைக் கொண்ட இக்கால கட்டத்தின் போது மக்கள் தண்டனைப் பணி செய்யும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இசுடாலின் ஆட்சிக்கு எதிரானவர்கள் என அவர்கள் சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது எதிராக நடந்திருந்தாலோ பல அரசியல் குற்றம் சாட்டப்பட்டவர்களும் இவ்வாறாக அனுப்பப்பட்டவர்களில் அடங்குவர். சோவியத் ஒன்றியத்தின் தொலை தூரப் பகுதிகளுக்கு இவர்கள் இடம் மாற்றப்பட்டு, நாடு கடத்தப்பட்டனர். நாட்டின் வேளாண்மையின் வடிவம் மாறிய, திட்டமிடப்படாத நிலையானது கடுமையான அரசின் கொள்கைகள் மற்றும் ஒரு வறட்சியுடன் இணைந்து 1932-1933ஆம் ஆண்டில் சோவியத் பஞ்சத்திற்கு வழி வகுத்தது. இப்பஞ்சமானது 57 முதல் 87 இலட்சம் வரையிலான மக்களைக் கொன்றது. இதில் 33 இலட்சம் பேர் உருசிய சோவியத் கூட்டாட்சிப் பொதுவுடமைவாதக் குடியரசில் இருந்தனர். இறுதியாக, சோவியத் ஒன்றியமானது பெரும்பாலும் வேளாண்மைப் பொருளாதாரத்திலிருந்து ஒரு முதன்மையான தொழில் துறை சக்தியாக குறுகிய காலத்திலேயே இழப்பை ஏற்படுத்திய மாற்றத்தை அடைந்தது. இரண்டாம் உலகப் போரும், ஐக்கிய நாடுகள் அவையும் சோவியத் ஒன்றியமானது இரண்டாம் உலகப் போருக்குள் 17 செப்தெம்பர் 1939 அன்று நாசி செருமனியுடனான மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தின் ஓர் இரகசியப் பிரிவின் படி அதன் போலந்துப் படையெடுப்புடன் நுழைந்தது. சோவியத் ஒன்றியமானது பின்னர் பின்லாந்து மீது படையெடுத்தது. பால்டிக் அரசுகளை ஆக்கிரமித்து இணைத்துக் கொண்டது. மேலும், உருமேனியாவின் பகுதிகளையும் இணைத்துக் கொண்டது. 22 சூன் 1941 அன்று செருமனி சோவியத் ஒன்றியம் மீது படையெடுத்தது. கிழக்குப் போர் முனையைத் திறந்தது. இரண்டாம் உலகப் போரின் மிகப் பெரிய போர் அரங்கு இது தான். இறுதியாக சுமார் 5 இலட்சம் செஞ்சேனைத் துருப்புக்களானவை நாசிக்களால் பிடிக்கப்பட்டன. நாசிக்கள் வேண்டுமென்றே 33 இலட்சம் சோவியத் போர்க் கைதிகளைப் பட்டினி போட்டு இறக்க வைத்தனர் அல்லது கொன்றனர். நடு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் வாழ்ந்த இசுலாவிய மக்களை அடிமைப்படுத்தி இனப்படுகொலை செய்யும் நாசிக்களின் இனவெறித் திட்டமான செனரல்பிலான் ஒசுதுவை நிறைவேற்ற வேண்டி "பட்டினித் திட்டத்தின்" படி ஒரு பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களும் கொல்லப்பட்டனர். வேர்மாக்டானது தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற போதிலும் மாஸ்கோ சண்டையில் அவர்கள் தாக்குதலானது தடுத்து நிறுத்தப்பட்டது. 1942-1943ஆம் ஆண்டின் குளிர் காலத்தில் சுடாலின்கிராட் சண்டையில் முதலிலும், பிறகு 1943ஆம் ஆண்டின் கோடை காலத்தில் குர்ஸ்க் யுத்தத்திலும் இறுதியாக செருமானியர்கள் முக்கியமான தோல்விகளைச் சந்தித்தனர். மற்றுமொரு செருமானிய தோல்வியானது லெனின்கிராட் முற்றுகையாகும். இந்த முற்றுகையில் நகரமானது நிலப்பகுதியில் 1941 மற்றும் 1944க்கு இடையில் செருமானிய மற்றும் பின்லாந்துப் படைகளால் முழுவதுமாகச் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. பட்டினியைச் சந்தித்தது. 10 இலட்சத்துக்கும் மேலானோர் இறந்தனர். ஆனால், இந்நகரம் என்றுமே சரணடையவில்லை. 1944-1945இல் கிழக்கு மற்றும் நடு ஐரோப்பா வழியாக சோவியத் படைகளானவை எளிதாக வென்றன. மே 1945இல் பெர்லினைக் கைப்பற்றின. ஆகத்து 1945இல் சிவப்பு இராணுவமானது மஞ்சூரியா மீது படையெடுத்தது. வடகிழக்கு ஆசியாவிலிருந்து சப்பானியர்களை வெளியேற்றியது. சப்பான் மீதான நேச நாடுகளின் வெற்றிக்குப் பங்களித்தது. இரண்டாம் உலகப் போரின் 1941-1945ஆம் ஆண்டு கால கட்டமானது உருசியாவில் பெரும் தேசப்பற்றுப் போர் என்று அறியப்படுகிறது. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் சீனாவுடன் சேர்த்து சோவியத் ஒன்றியமானது இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளின் பெரும் நால்வர் என்று கருதப்பட்டது. இவை பிறகு நான்கு காவலர்களாக உருவாயின. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் அடித்தளம் இது தான். போரின் போது சோவியத் குடிமக்கள் மற்றும் இராணுவ இறப்புகளானவை 2.6 முதல் 2.7 கோடி வரையில் இருந்தன. இரண்டாம் உலகப் போரின் அனைத்து இறப்புகளிலும் சுமார் பாதி பேர் இந்த எண்ணிக்கையினர் ஆவர். சோவியத் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பானது பெரும் அழிவைச் சந்தித்தது. 1946-1947ஆம் ஆண்டின் சோவியத் பஞ்சத்துக்குக் காரணமானது. எனினும், ஒரு பெரும் தியாகத்தைச் செய்ததன் காரணமாகச் சோவியத் ஒன்றியமானது ஓர் உலக வல்லரசாக எழுச்சியடைந்தது. வல்லரசும், பனிப்போரும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போதுசுதாம் சந்திப்பின் படி செஞ்சேனையானது கிழக்கு மற்றும் நடு ஐரோப்பாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு மற்றும் ஆஸ்திரியாவின் கிழக்குப் பகுதிகள் இதில் அடங்கியிருந்தன. பிறரைச் சார்ந்து இருந்த பொதுவுடைமைவாத அரசாங்கங்கள் கிழக்குக் கூட்டமைப்பின் சார்பு நாடுகளில் நிறுவப்பட்டன. உலகின் இரண்டாவது அணு ஆயுத சக்தியாக உருவான பிறகு சோவியத் ஒன்றியமானது வார்சா உடன்பாட்டுக் கூட்டணியை நிறுவியது. பனிப்போர் என்று அறியப்படும் உலகளாவிய ஆதிக்கத்திற்கான ஒரு போராட்டத்துக்குள் நுழைந்தது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பை எதிர்த்துப் போராடியது. குருசேவ் வெதுவெதுப்புச் சீர்திருத்தங்களும், பொருளாதார முன்னேற்றமும் 1953இல் சுடாலினின் இறப்பு மற்றும் ஒரு குறுகிய கால இணைந்த ஆட்சிக்குப் பிறகு புதிய தலைவரான நிக்கித்தா குருசேவ் இசுடாலினைக் கண்டித்தார். இசுடாலின் மயமாக்கத்தை மாற்றும் கொள்கையைத் தொடங்கினார். குலாக் எனும் தண்டனைப் பணி முகாம்களில் இருந்து பல அரசியல் கைதிகளை விடுதலை செய்தார். ஒடுக்கு முறைக் கொள்கைகளின் பொதுவான எளிமையாக்கப்படலானது பின்னர் குருசேவ் வெதுவெதுப்பு என்று அறியப்பட்டது. இதே நேரத்தில் துருக்கியில் ஐக்கிய அமெரிக்காவின் சூபிடர் ஏவுகணைகள் மற்றும் கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை நிறுவுவது தொடர்பாக இரு எதிரிகள் மோதிக் கொண்ட போது பனிப்போர் பிரச்சனைகளானவை அதன் உச்சத்தை அடைந்தன. 1957இல் சோவியத் ஒன்றியமானது உலகின் முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோளான இசுப்புட்னிக் 1ஐ ஏவியது. இவ்வாறாக விண்வெளிக் காலத்தைத் தொடங்கி வைத்தது. உருசியாவின் விண்ணோடியான யூரி ககாரின் பூமியைச் சுற்று வட்டப்பாதையில் சுற்றிய முதல் மனிதனாக உருவாகினார். 12 ஏப்பிரல் 1961 அன்று வஸ்தோக் 1 என்ற குழுவை உடைய விண்கலத்தில் சுற்றி வந்தார். வளர்ச்சியடைந்த பொதுவுடமைவாத காலம் அல்லது மந்தநிலை சகாப்தம் 1964இல் குருசேவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இணைந்த ஆட்சியின் மற்றொரு காலகட்டமானது தொடங்கியது. இது லியோனீது பிரெசுனேவ் தலைவராகும் வரை தொடர்ந்தது. 1970களின் சகாப்தம் மற்றும் 1980களின் தொடக்கமானது பிற்காலத்தில் மந்தநிலை சகாப்தம் என்று குறிப்பிடப்பட்டது. 1965ஆம் ஆண்டின் கோசிகின் சீர்திருத்தமானது சோவியத் பொருளாதாரத்தைப் பகுதியளவுக்குப் பரவலாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. 1979இல் ஆப்கானித்தானின் பொதுவுடமைவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட ஒரு புரட்சிக்குப் பிறகு சோவியத் படைகள் அதன் மீது படையெடுத்தன. சோவியத்-ஆப்கான் போரை இறுதியாகத் தொடங்கின. மே 1988இல் ஆப்கானித்தானில் இருந்து சோவியத்துக்கள் பின்வாங்கத் தொடங்கினார். பன்னாட்டு எதிர்ப்பு, சோவியத்துக்களுக்கு எதிரான தொடர்ச்சியான கரந்தடிப் போர் முறை மற்றும் சோவியத் குடிமக்களுக்கான ஆதரவு இல்லாதது ஆகியவற்றின் காரணமாகப் பின் வாங்கினர். பெரஸ்ட்ரோயிகா, சனநாயகமயமாக்கல் மற்றும் உருசிய இறையாண்மை 1985 முதல் சோவியத் அமைப்பில் தாராளமயச் சீர்திருத்தங்களைக் கொண்டு வர விரும்பிய கடைசி சோவியத் தலைவரான மிக்கைல் கொர்பச்சோவ் பொருளாதார மந்த நிலைக் காலத்தை முடித்து வைக்க மற்றும் அரசாங்கத்தை சனநாயகமயமாக்கும் ஒரு முயற்சியாக கிளாஸ்நோஸ்ட் (வெளிப்படைத் தன்மை) மற்றும் பெரஸ்ட்ரோயிகா (மறு கட்டமைப்பு) கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். எனினும், இது நாடு முழுவதும் வலிமையான தேசியவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்களின் வளர்ச்சிக்குக் காரணமானது. 1991க்கு முன்னர் சோவியத் பொருளாதாரமானது உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இருந்தது. ஆனால், அதன் இறுதி ஆண்டுகளின் போது இது ஒரு பிரச்சனையைச் சந்தித்தது. 1991 வாக்கில் பால்டிக் நாடுகள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிவதைத் தேர்ந்தெடுத்ததன் காரணமாக பொருளாதார மற்றும் அரசியல் அமளியானது கொதிக்கத் தொடங்கியது. 17 மார்ச்சு அன்று ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பங்கெடுத்த குடிமக்களில் பெரும் அளவினர் சோவியத் ஒன்றியத்தை ஒரு புதுப்பிக்கப்பட்ட கூட்டாட்சியாக மாற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். சூன் 1991இல் உருசிய சோவியத்து கூட்டாட்சிப் பொதுவுடமைக் குடியரசின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது உருசிய வரலாற்றில் முதல் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக போரிஸ் யெல்ட்சின் உருவானார். ஆகத்து 1991இல் கொர்பச்சோவின் அரசாங்கத்தின் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியானது கொர்பச்சோவுக்கு எதிராகவும், சோவியத் ஒன்றியத்தைத் தக்க வைக்கும் குறிக்கோளுடனும் நடத்தப்பட்டது. மாறாக, சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் முடிவுக்கு இது காரணமானது. 25 திசம்பர் 1991 அன்று சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து சம கால உருசியாவுடன் 14 பிற சோவியத் காலத்துக்குப் பிந்தைய அரசுகள் உருவாயின. சுதந்திர உருசியக் கூட்டரசு ஒரு சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறுதலும், அரசியல் பிரச்சினைகளும் சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியானது உருசியா ஓர் ஆழமான மற்றும் நீடித்த பொருளாதார மந்த நிலைக்குள் செல்வதற்குக் காரணமானது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் அதற்குப் பிறகு தனியார்மயமாக்கல் மற்றும், சந்தை மற்றும் வணிகத் தாராளமயமாக்கல் உள்ளிட்ட பரவலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. "அதிர்ச்சி வைத்தியம்" போன்றவற்றை ஒத்த தீவிரமான மாற்றங்களும் இதில் அடங்கியிருந்தன. தனியார் மயமாக்கலானது பெருமளவுக்கு நிறுவனங்களின் கட்டுப்பாட்டை அரசு அமைப்புகளிடம் இருந்து அரசாங்கத்துடன் தொடர்புகளை உடைய நபர்களுக்கு மாற்றியது. இது உருசிய சிலவராட்சி உறுப்பினர்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. புதிதாக செல்வந்தரானவர்களில் பலர் ஒரு பெரும் மூலதன வெளியேற்றத்தில் 100 கோடிக் கணக்கான பணம் மற்றும் உடைமைகளை நாட்டுக்கு வெளியே கொண்டு சேர்த்தனர். பொருளாதார மந்த நிலையானது சமூக சேவைகளின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. பிறப்பு வீதம் குறைந்தது. அதே நேரத்தில், இறப்பு வீதம் அதிகரித்தது. தசம் இலட்சக் கணக்கானவர்கள் வறுமையில் வீழ்ந்தனர். கடுமையான லஞ்ச ஊழல், மேலும் குற்றவாளிக் குழுக்கள் மற்றும் அமைப்பு ரீதியிலான குற்றங்களானவை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன. 1993ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யெல்ட்சின் மற்றும் உருசிய நாடாளுமன்றத்துக்கு இடையிலான பிரச்சினைகளானவை ஓர் அரசியலமைப்புப் பிரச்சினையாக முடிந்தன. இராணுவப் படையின் மூலமாக வன்முறையாக முடிந்தன. பிரச்சினையின் போது யெல்ட்சினுக்கு மேற்குலக அரசாங்கங்கள் ஆதரவளித்தன. 100க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். நவீன தாராளமய அரசியலமைப்பு, பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை திசம்பரில் ஒரு பொது வாக்கெடுப்பானது நடத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. அதிபருக்குப் பெருமளவு அதிகாரங்களை வழங்கியது. 1990களானவை உள்ளூர் இனச் சண்டைகள் மற்றும் பிரிவினைவாத இசுலாமியக் குழுக்கள் ஆகிய இரு பிரிவினராலும் வடக்கு காக்கேசியாவில் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய சண்டைகளால் கடக்கப்பட்டது. 1990களின் தொடக்கத்தில் செச்சன் பிரிவினைவாதிகள் சுதந்திரத்தை அறிவித்த நேரத்தில் இருந்து எதிர்ப்புக் குழுக்கள் மற்றும் உருசியப் படைகளுக்கு இடையே ஓர் இடைவிடாத கரந்தடிப் போரானது நடைபெற்றது. செச்சன் பிரிவினைவாதிகளால் குடிமக்களுக்கு எதிராகத் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவை ஆயிரக்கணக்கான உருசியக் குடிமக்களின் வாழ்வைப் பறித்தன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிறகு அதன் வெளிநாட்டுக் கடன்களை அடைக்கும் பொறுப்பை உருசியா ஏற்றுக் கொண்டது. 1992இல் பெரும்பாலான நுகர்வோர் விலை வாசிக் கட்டுப்பாடுகளானவை நீக்கப்பட்டன. இது கடுமையான விலைவாசி உயர்வுக்குக் காரணமானது. உருசியாவின் நாணயமான ரூபிளும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அரசால் மதிப்பு குறைக்கப்பட்டது. அதிகப்படியான முதலீட்டு வெளியேற்றம் மற்றும் கடன்களை அடைக்க இயலாத நிலையுடன் சேர்ந்து அதிகப்படியான வரவு செலவுப் பற்றாக்குறைகளானவை 1998ஆம் ஆண்டின் உருசிய நிதி நெருக்கடிக்குக் காரணமானது. இது ஒரு மேற்கொண்ட மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறைவுக்கு வழி வகுத்தது. ஒரு நவீன மயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கிய நகர்வு, அரசியல் மையப்படுத்தல் மற்றும் சனநாயகப் பின்னிறக்கம் 31 திசம்பர் 1999 அன்று அதிபர் யெல்ட்சின் எதிர்பாராத விதமாக பதவி விலகினார். சமீபத்தில் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்ட மற்றும் தன்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த ஆட்சியாளரான விளாதிமிர் பூட்டினிடம் பதவியை ஒப்படைத்தார். 2000ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பூட்டின் வெற்றி பெற்றார். இரண்டாவது செச்சனியாப் போரில் செச்சனிய எதிர்ப்பைத் தோற்கடித்தார். 2004இல் பூட்டின் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் வென்றார். உயர்ந்த கச்சா எண்ணெய் விலை மற்றும் அயல் நாட்டு முதலீட்டில் ஓர் அதிகரிப்பு ஆகியவை உருசியப் பொருளாதாரமும், வாழ்க்கைத் தரங்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்ததைக் கண்டன. பூட்டினின் ஆட்சியானது நிலைத் தன்மையை அதிகரித்தது. 2008இல் பூட்டின் பிரதம மந்திரிப் பதவியை ஏற்றுக் கொண்டார். ஒரு முறைக்கு திமீத்ரி மெத்வேதெவ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்படி பதவிக் காலத்திற்கு வரம்புகள் இருந்த போதிலும் அதிகாரப் பகிர்வு இவ்வாறாக ஏற்பட்டது. இக்காலமானது இருவரின் இணைந்த ஆட்சியைக் கண்டது. ஒருவர் பின் ஒருவராக ஒரு மிதி வண்டியில் இருவர் அமர்ந்திருப்பதைப் போல் இக்காலத்தின் சனநாயக முறை இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. அண்டை நாடான ஜார்ஜியாவுடனான ஒரு தூதரகப் பிரச்சினையைத் தொடர்ந்து 1 - 12 ஆகத்து 2008இல் உருசிய-ஜார்ஜியப் போரானது நடைபெற்றது. ஜார்ஜியாவில் உருசியா ஆக்கிரமித்த நிலப்பரப்புகளில் இரு பிரிவினைவாத அரசுகளை உருசியா அங்கீகரிப்பதில் இது முடிவடைந்தது. 21ஆம் நூற்றாண்டின் முதல் ஐரோப்பியப் போர் இதுவாகும். உக்குரைன் படையெடுப்பு 2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அண்டை நாடான உக்குரைனில் மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான ஒரு புரட்சியைத் தொடர்ந்து உருசியாவானது உக்குரைனின் கிரிமியாப் பகுதியை ஆக்கிரமித்து, கிரிமியாவின் நிலை குறித்த விவாதத்துக்குள்ளான ஒரு பொது வாக்கெடுப்பை உருசிய ஆக்கிரமிப்பின் கீழ் நடத்தியதற்குப் பிறகு இணைத்துக் கொண்டது. இந்த இணைவானது உக்குரைனின் தொன்பாஸ் பகுதியில் எதிர்ப்பை உருவாக்கியது. உக்குரைனுக்கு எதிரான அறிவிக்கப்படாத போரின் ஒரு பகுதியாக உருசிய இராணுவத் தலையீட்டால் இதற்கு ஆதரவு அளிக்கப்பட்டது. உருசிய கூலிப் படைகள் மற்றும் இராணுவப் படைகளானவை உள்ளூர் பிரிவினைவாத எதிர்ப்பாளர்களின் ஆதரவுடன் புதிய உக்குரைனிய அரசாங்கத்திற்கு எதிராகக் கிழக்கு உக்குரைனில் ஒரு போரை நடத்தினர். இப்பகுதியில் அரசாங்கத்திற்கு எதிரான மற்றும் உருசியாவுக்கு ஆதரவான போராட்டங்களுக்கு உருசிய அரசாங்கம் ஆதரவளித்ததற்குப் பிறகு இவ்வாறு நடத்தியது. எனினும், பெரும்பாலான குடிமக்கள் உக்குரைனிலிருந்து பிரிவதை எதிர்த்தனர். இச்சண்டையை அதிகமாகத் தீவிரப்படுத்தும் விதமாக 24 பெப்பிரவரி 2022 அன்று உருசியாவானது உக்குரைன் மீது ஒரு முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரிலிருந்து ஐரோப்பாவில் மிகப் பெரிய மரபு வழிப் போரை இப்போரானது குறித்தது. இது பன்னாட்டு கண்டனத்திற்கு உள்ளானது. உருசியாவுக்கு எதிராக விரிவடைந்த பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டன. இதன் விளைவாக மார்ச்சில் ஐரோப்பிய மன்றத்தில் இருந்து உருசியா வெளியேற்றப்பட்டது. ஏப்பிரலில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது. செப்தெம்பரில் வெற்றிகரமான உக்குரைனியப் பதில் தாக்குதல்களைத் தொடர்ந்து பூட்டின் "பகுதியளவு இராணுவ ஒருங்கிணைப்பை" அறிவித்தார். பார்பரோசா நடவடிக்கை காலத்திலிருந்து உருசியாவின் முதல் இராணுவ ஒருங்கிணைப்பு இதுவாகும். செப்தெம்பர் மாத முடிவு வாக்கில் பூட்டின் நான்கு உக்குரைனியப் பகுதிகளின் இணைப்பை அறிவித்தார். இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்து ஐரோப்பாவில் நடத்தப்பட்ட மிகப் பெரிய நிலப்பரப்பு இணைவு இதுவாகும். பூட்டினும், உருசியாவால் பதவியில் அமர்த்தப்பட்ட தலைவர்களும் இணைப்பு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர். பன்னாட்டு அளவில் இது அங்கீகரிக்கப்படாததாகவும், பரவலாக சட்டத்திற்குப் புறம்பானது என கண்டனத்துக்குள்ளானதாகவும் அமைந்தது. இந்த நான்கு பகுதிகளில் எந்த ஒரு பகுதியையும் முழுமையாக ஆக்கிரமிக்க உருசியப் படைகளால் இயலவில்லை என்ற உண்மை இருந்த போதிலும் இவ்வாறு அறிவிக்கப்பட்டது. ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நாடுகளுக்கு இடைப்பட்ட அமைப்புகள் மற்றும் தேசிய நாடாளுமன்றங்களானவை உருசியாவைப் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஓர் அரசு என்று அறிவித்த தீர்மானங்களை நிறைவேற்றின. மேலும், உருசியாவானது லாத்வியா, லித்துவேனியா மற்றும் எசுதோனியா ஆகிய நாடுகளால் ஒரு தீவிரவாத அரசு என்று அறிவிக்கப்பட்டது. இப்படையெடுப்பின் விளைவாக இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படையெடுப்பின் போது ஏராளமான போர்க் குற்றங்களைப் புரிந்ததாக உருசியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உருசியாவின் மக்கள் தொகைப் பிரச்சினையை உக்குரைன் போரானது மேலும் அதிகரித்தது. சூன் 2023இல் உக்குரைனில் உருசியாவுக்காகச் சண்டையிடும் ஒரு தனியார் இராணுவ ஒப்பந்ததாரரான வாக்னர் குழுவானது உருசிய இராணுவ அமைச்சகத்துக்கு எதிராக வெளிப்படையான கிளர்ச்சியை அறிவித்தது. தொன்-மீது-ரசுத்தோவ் நகரத்தைக் கைப்பற்றியது. மாஸ்கோவை நோக்கிய ஓர் அணி வகுப்பைத் தொடங்கியது. எனினும், வாக்னர் மற்றும் பெலாரசு அரசாங்கத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இக்கிளர்ச்சியானது கைவிடப்பட்டது. கிளர்ச்சியின் தலைவரான எவ்கேனி பிரிகோசின் பிறகு ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டார். புவியியல் ஐரோப்பாவின் தூரக் கிழக்குப் பகுதி மற்றும் ஆசியாவின் தூர வடக்குப் பகுதி ஆகியவற்றின் மீது உருசியாவின் பரந்த நிலப்பரப்பானது விரிவடைந்துள்ளது. இது ஐரோவாசியாவின் தூர வடக்கு விளிம்பு வரை விரிவடைந்துள்ளது. 37,653 கிலோமீட்டருக்கும் அதிகமான உலகின் நான்காவது மிக நீண்ட கடற்கரையை இது கொண்டுள்ளது. உருசியாவானது 41° மற்றும் 82° வடக்கு அட்சரேகைகள், மற்றும் 19°கிழக்கு மற்றும் 169°மேற்கு தீர்க்கரேகைகள் ஆகியவற்றுக்குள் அமைந்துள்ளது. கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 9,000 கிலோமீட்டர் நீளத்திலும், வடக்கிலிருந்து தெற்காக 2,500 முதல் 4,000 கிலோமீட்டர் நீளத்திலும் இது விரிவடைந்துள்ளது. நிலப்பரப்பின் அடிப்படையில் உருசியா உலகின் மூன்று கண்டங்களை விடவும் மிகப் பெரியதாகும். புளூட்டோ கிரகத்தை ஒத்த அதே அளவு பரப்பளவை இது கொண்டுள்ளது. உருசியா ஒன்பது முக்கியமான மலைத் தொடர்களைக் கொண்டுள்ளது. இவை தூரக் கிழக்குப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன. இப்பகுதியானது காக்கேசிய மலைகளின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி (உருசியா மற்றும் ஐரோப்பாவில் மிக உயர்ந்த சிகரமான 5,642 மீட்டர் உயரமுடைய எல்பிரஸ் மலையை இது கொண்டுள்ளது); சைபீரியாவின் அல்த்தாய் மற்றும் சயான் மலைகள்; மற்றும் கிழக்கு சைபீரிய மலைகள் மற்றும் உருசியத் தூரக் கிழக்கில் கம்சாத்கா தீபகற்பம் (ஐரோவாசியாவின் மிக உயரமான, செயல்பாட்டில் உள்ள எரிமலையான 4,750 மீட்டர் உயரமுடைய கிளியுச்சேவ்ஸ்கயா சோப்காவை இது கொண்டுள்ளது). நாட்டின் மேற்குப் பகுதியில் வடக்கிலிருந்து தெற்காக அமைந்துள்ள உரால் மலைகளானவை கனிம வளங்களைச் செழிப்பாகக் கொண்டுள்ளன. ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கும் இடையிலான பாரம்பரிய எல்லையை அமைக்கின்றன. உருசியா மற்றும் ஐரோப்பாவில் ஆழமான புள்ளியான காசுப்பியன் கடலின் தலைப் பகுதியில் அமைந்துள்ள காசுப்பியன் தாழ்வுப் பகுதியானது கடல் மட்டத்திற்குக் கீழே சுமார் 29 மீட்டர்களை அடைகிறது. மூன்று பெருங்கடல்களையும் எல்லையில் கொண்டுள்ள உலகின் வெறும் மூன்று நாடுகளில் உருசியாவும் ஒன்றாகும். பெரும் எண்ணிக்கையிலான கடல்களுடன் இது தொடர்பைக் கொண்டுள்ளது. நோவாயா செம்லியா, பிரான்சு யோசோப்பு நிலம், செவர்னயா செம்ல்யா, புதிய சைபீரியத் தீவுகள், விராஞ்செல் தீவு, கூரில் தீவுகள் (இதில் நான்கு சப்பானுடன் பிரச்சினையில் உள்ளன) மற்றும் சக்கலின் உள்ளிட்டவை தன் முக்கியமான தீவுகள் மற்றும் தீவுக் கூட்டங்கள் ஆகும். உருசியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவால் நிர்வகிக்கப்படும் டையோமெதி தீவுகளானவை வெறும் 3.8 கிலோ மீட்டர் இடைவெளியில் தான் உள்ளன. கூரில் தீவுகளின் குணஷீர் தீவானது சப்பானின் ஹொக்கைடோவில் இருந்து வெறும் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது. உருசியா 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆறுகளுக்குத் தாயகமாக உள்ளது. உருசியா உலகின் மிகப் பெரிய மேற்பரப்பு நீர் வளங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது. இதன் ஏரிகள் தோராயமாக உலகின் நீர்ம நிலை நன்னீரில் கால் பங்கைக் கொண்டுள்ளன. உருசியாவின் நன்னீர் அமைப்புகளில் மிகப் பெரியதும், மிக முக்கியமானதுமான பைக்கால் ஏரியானது உலகின் மிக ஆழமான, மிகத் தூய்மையான, மிகப் பழமையான மற்றும் மிக அதிக கொள்ளளவு உடைய நன்னீர் ஏரியாகும். உலகின் தூய்மையான மேற்பரப்பு நீரில் ஐந்தில் ஒரு பங்குக்கும் மேலானதை இது கொண்டுள்ளது. வடமேற்கு உருசியாவில் உள்ள லதோகா மற்றும் ஒனேகா ஆகியவை ஐரோப்பாவின் மிகப் பெரிய இரு ஏரிகள் ஆகும். ஒட்டு மொத்த புதுப்பிக்கக் கூடிய நீர் வளங்களில் உருசியா பிரேசிலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. மேற்கு உருசியாவில் உள்ள வோல்கா ஆறானது பொதுவாக உருசியாவின் தேசிய ஆறாகக் கருதப்படுகிறது. ஐரோப்பாவின் மிக நீண்ட ஆறு இது தான். இது வோல்கா வண்டல் சமவெளியை அமைக்கிறது. ஐரோப்பாவின் மிகப் பெரிய ஆற்றுக் கழிமுகம் இது தான். சைபீரிய ஆறுகளான ஓப், ஏநிசை, லேனா மற்றும் அமுர் ஆகியவை உலகின் மிக நீண்ட ஆறுகளில் சிலவாகும். காலநிலை உருசியாவின் பெரிய அளவு மற்றும் கடலில் இருந்து இதன் பகுதிகளில் பல தொலைதூரத்தில் உள்ளது ஆகியவை நாட்டின் பெரும் பகுதி முழுவதும் ஈரப்பதமுள்ள கண்டப் பகுதி காலநிலையின் ஆதிக்கத்திற்குக் காரணமாகியுள்ளன. இதில் விதி விலக்கு தூந்திரப் பகுதி மற்றும் தொலை தூரத் தென்மேற்கு ஆகியவை மட்டுமே ஆகும். தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள மலைத் தொடர்களானவை இந்திய மற்றும் அமைதிப் பெருங்கடலில் இருந்து வெதுவெதுப்பான காற்று வீசுவதைத் தடுக்கின்றன. அதே நேரத்தில், இதன் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் விரிவடைந்துள்ள ஐரோப்பியச் சமவெளியானது அத்திலாந்திக்கு மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களில் இருந்து தாக்கத்தைப் பெற இதைத் திறந்து விட்டுள்ளது. பெரும்பாலான வடமேற்கு உருசியா மற்றும் சைபீரியா ஆகியவை துணை ஆர்க்டிக் கால நிலையைக் கொண்டுள்ளன. வடகிழக்கு சைபீரியாவின் உள் பகுதிகளில் மட்டு மீறிய கடுமையான குளிர்காலமும் (இது பெரும்பாலும் சகா பகுதியில் ஏற்படுகிறது. அங்கு குளிரின் வடதுருவமானது அமைந்துள்ளது. மிகக் குறைந்த பதிவிடப்பட்ட வெப்பநிலையாக -71.2°C இங்கு பதிவிடப்பட்டுள்ளது), அதிக மிதமான குளிர் காலமானது மீதி அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுகிறது. ஆர்க்டிக் பெருங்கடலை ஒட்டியுள்ள உருசியாவின் பரந்த கடற்கரை மற்றும் உருசியாவின் ஆர்க்டிக் தீவுகளானவை துருவத் தட்பவெப்பத்தைக் கொண்டுள்ளன. கருங்கடலின் கிராஸ்னதார் பிரதேசத்தின் கடற்கரைப் பகுதி, மிகக் குறிப்பாக சோச்சி, மற்றும் வடக்கு காக்கேசியாவின் சில கடற்கரை மற்றும் உள் பகுதிகள் மிதமான மற்றும் ஈரமான குளிர் காலங்களுடன் ஓர் ஈரப்பதமான துணை வெப்ப மண்டலக் கால நிலையைக் கொண்டுள்ளன. கிழக்கு சைபீரியா மற்றும் உருசிய தூரக் கிழக்கில் பல பகுதிகளில் கோடை காலத்துடன் ஒப்பிடும் போது குளிர் காலமானது உலர்ந்ததாக உள்ளது; அதே நேரத்தில், நாட்டின் பிற பகுதிகள் அனைத்து பருவ காலங்களிலும் மேற்கொண்ட அதிக மழைப் பொழிவைப் பெறுகின்றன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் கால மழைப் பொழிவானது பொதுவாகப் பனியாக விழுகிறது. காலினின்கிராத் ஒப்லாஸ்தின் தூர மேற்குப் பகுதிகள் மற்றும், கிராஸ்னதார் கிராய் மற்றும் வடக்கு காக்கேசியாவின் தெற்கில் உள்ள சில பகுதிகள் பெருங்கடல் காலநிலையைக் கொண்டுள்ளன. கீழ் வோல்கா மற்றும் காசுப்பியன் கடற்கரைப் பகுதியுடன், மேலும் சைபீரியாவின் சில தூரத் தெற்குப் பகுதிகள் ஒரு பகுதியளவு-வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளன. பெரும்பாலான நிலப்பரப்பு முழுவதும் வெறும் இரண்டு தனித்துவமான பருவங்கள் காணப்படுகின்றன. அவை குளிர்காலம் மற்றும் கோடை காலமாகும். ஏனெனில், இளவேனிற் காலமும், இலையுதிர் காலமும் பொதுவாகக் குறுகியவையாக உள்ளன. மிகக் குளிரான மாதம் சனவரி (கடற்கரையில் பெப்பிரவரி); மிக வெப்பமான மாதம் பொதுவாக சூலை. வெப்பநிலையின் அதிகப்படியான வேறுபாடுகளானவை பொதுவானவையாக உள்ளன. குளிர்காலத்தில் வெப்பநிலைகளானவை தெற்கிலிருந்து வடக்கே மற்றும் மேற்கிலிருந்து கிழக்கே குளிர் ஆகின்றன. கோடைக்காலங்கள் மிக வெப்பமாக, சைபீரியாவில் கூட வெப்பமாக இருக்கும். உருசியாவில் காலநிலை மாற்றமானது மிக அதிகப் படியான காட்டுத் தீக்களுக்குக் காரணமாகிறது. நாட்டின் மிகப் பரந்த நிலத்தடி உறைபனியை உருக வைக்கின்றன. உயிரினப் பல்வகைமை இதன் மிகப் பெரிய அளவின் காரணமாக உருசியாவானது வேறுபட்ட சூழ்நிலை அமைப்புகளைக் கொண்டுள்ளது. இதில் துருவப் பாலைவனங்கள், தூந்திரம், காட்டுத் தூந்திரம், தைகா, கலவையான மற்றும் அகண்ட இலைக் காடுகள், வன புல்வெளிகள், ஸ்டெப்பி புல்வெளிகள், பகுதியளவு-பாலைவனம் மற்றும் அயன அயல் மண்டலம் ஆகியவை அடங்கும். உருசியாவின் நிலப்பரப்பில் சுமார் பாதியானது காடுகளாக உள்ளது. உலகின் மிகப் பெரிய காடுகளின் பரப்பளவை உருசியா கொண்டுள்ளது. உலகின் மிக அதிக கார்பனீராக்சைடு அளவுகளில் சிலவற்றை இவை தனியாகப் பிரித்து வைக்கின்றன. உருசியாவின் உயிரின வகையானது 12,500 கலன்றாவர இனங்கள், 2,200 பிரயோபைற்று இனங்கள், சுமார் 3,000 இலைக்கன் இனங்கள், 7,000 - 9,000 அல்கா இனங்கள், மற்றும் 20,000 - 25,000 பூஞ்சை இனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. உருசிய விலங்குகளானவை 320 பாலூட்டி இனங்கள், 732க்கும் மேற்பட்ட பறவையினங்கள், 75 ஊர்வன இனங்கள், சுமார் 30 நீர்நில வாழ்வன இனங்கள், 343 நன்னீர் மீன் இனங்கள் (இதில் அதிகப்படியானவை அகணிய உயிரிகளாக உள்ளன), தோராயமாக 1,500 உப்புநீர் மீன் இனங்கள், 9 தாடையற்ற மீன் இனங்கள், மற்றும் தோராயமாக 100 - 1,50,000 முதுகெலும்பிலி இனங்கள் (இதில் அதிகப்படியானவை அகணிய உயிரிகளாக உள்ளன) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உருசிய சிவப்புத் தகவல் நூலில் தோராயமாக 1,100 அரிய மற்றும் அழிவு நிலையில் உள்ள தாவர மற்றும் விலங்கு இனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உருசியாவின் ஒட்டு மொத்த இயற்கைச் சூழ்நிலை அமைப்புகளும் கிட்டத்தட்ட 15,000 பல்வேறு நிலைகளையுடைய சிறப்பு நிலை பாதுகாக்கப்பட்ட இயற்கை நிலப்பரப்புகளில் பாதுகாக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒட்டு மொத்த நிலப்பரப்பில் 10%க்கும் மேற்பட்ட இடத்தை இவை ஆக்கிரமித்துள்ளன. இவை 45 உயிர்க் கோளக் காப்பிடங்கள், 64 தேசியப் பூங்காக்கள் மற்றும் 101 இயற்கைக் காப்பிடங்களை உள்ளடக்கியுள்ளன. குறைந்து கொண்டிருந்தாலும் நாடானது இன்னும் செயல்பாட்டிலுள்ள காடுகள் என கருதப்படும் பல சூழ்நிலை அமைப்புகளைக் கொண்டுள்ளது. இவை முதன்மையாக வடக்கு தைகாப் பகுதிகள் மற்றும் சைபீரியாவின் துணை ஆர்க்டிக் தூந்திரம் ஆகியவற்றில் உள்ளன. உருசியாவானது காட்டு இயற்கைக் காட்சிப் பரப்பு நிலைச் சுட்டெண்ணின் சராசரி மதிப்பாக 9.02ஐ 2019இல் பெற்றது. 172 நாடுகளில் 10வது தர நிலையைப் பெற்றது. உலகளாவிய முக்கியமான நாடுகளில் முதல் தர நிலையைப் பெற்றது. அரசாங்கமும், அரசியலும் அரசியலமைப்பின் படி உருசியாவானது ஒரு செவ்வொழுங்கான கூட்டாட்சிக் குடியரசாகும். இது ஒரு பகுதியளவு-அதிபர் அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிபர் நாட்டுத் தலைவராக உள்ளார். பிரதமர் அரசுத் தலைவராக உள்ளார். ஒரு பல கட்சி சார்பாண்மை மக்களாட்சியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி அரசாங்கமானது மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது: சட்டவாக்க அவை: ஈரவை முறைமையுடைய உருசியாவின் கூட்டாட்சி அவையானது 450 நிரந்தர உறுப்பினர்களையுடைய அரசு துமா மற்றும் 170 உறுப்பினர்களையுடைய கூட்டாட்சி மன்றம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூட்டாட்சிச் சட்டம் இயற்றுதல், போர்ப் பிரகடனம், ஒப்பந்தங்களை அங்கீகரித்தல், நிதி வழங்குதல் மற்றும் அதிபர் மீது குற்ற விசாரணை நடத்துதல் போன்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளது. செயலாட்சி: ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக இருப்பது, உருசிய அரசாங்கம் (அமைச்சரவை) மற்றும் பிற அதிகாரிகளை நியமித்தல் ஆகியவற்றை அதிபர் செய்கிறார். இவர்கள் நிர்வகித்து, கூட்டாட்சி சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமல்படுத்துகின்றனர். அரசியலமைப்பு அல்லது கூட்டாட்சிச் சட்டங்களை மீறியதாக இல்லாதவரை அதிபர் வரம்பற்ற அளவுகளையுடைய ஆணைகளை வெளியிடலாம். நீதித்துறை: அரசியலமைப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் கீழ் கூட்டாட்சி நீதிமன்றங்கள் சட்டங்களை விளக்குகின்றன. அரசியலமைப்புக்கு உட்படாதது என கருதப்படும் சட்டங்களை செல்லாததாக்குகின்றன. இந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளானவர்கள் அதிபரின் பரிந்துரையின் பேரில் கூட்டாட்சி மன்றத்தால் நியமிக்கப்படுகின்றனர். அதிபர் பொது வாக்கெடுப்பின் மூலம் ஓர் ஆறு ஆண்டு காலப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரண்டுக்கும் மேற்பட்ட முறைகளுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்படலாம். அரசாங்கத்தின் அமைச்சகங்களானவை பிரதமர் மற்றும் அவரது துணை ஆட்கள், அமைச்சர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற நபர்களை உள்ளடக்கியுள்ளது. பிரதமரின் பரிந்துரையின் பேரில் இவர்கள் அனைவரும் அதிபரால் நியமிக்கப்படுகின்றனர் (அதே நேரத்தில், பிரதமரின் நியமிப்பானது அரசு துமாவின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது). உருசியாவில் ஆதிக்கமிக்க அரசியல் கட்சியாக ஐக்கிய உருசியா கட்சி உள்ளது. "பெரிய முகாம்" மற்றும் "சக்தியுள்ள கட்சி" என்று இது குறிப்பிடப்படுகிறது. பூட்டினின் கொள்கைகளானவைப் பொதுவாக பூட்டினியம் என்று குறிப்பிடப்படுகின்றன. அரசியல் பிரிவுகள் 1993ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் படி உருசியாவானது ஒரு செவ்வொழுங்கான கூட்டாட்சி (செவ்வொழுங்கற்ற சீரமைவையும் இது சாத்தியமாகக் கொண்டுள்ளது) ஆகும். உருசிய சோவியத் கூட்டாட்சிப் பொதுவுடமைவாதக் குடியரசின் சோவியத் செவ்வொழுங்கற்ற மாதிரியைப் போல் இல்லாமல் தற்போதைய அரசியலமைப்பானது பிற பகுதிகளின் நிலையைக் குடியரசுகள் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது. "கூட்டாட்சி அமைப்புகள்" என்ற தலைப்புடன் அனைத்துப் பகுதிகளையும் சமமாக ஆக்கியுள்ளது. சோவியத் காலத்தில் குடியரசுகள் மட்டுமே கூட்டாட்சியின் அமைப்புகளாக இருந்தன. உருசியாவின் பகுதிகளானவை அவைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட போட்டியிடங்களைக் கொண்டுள்ளன. ஆனால் எந்த ஒரு பகுதியும் இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை, இறையாண்மையுடைய அரசின் நிலையை அவை கொண்டிருக்கவில்லை, அவற்றின் அரசியல் அமைப்புகளில் எந்தவொரு இறையாண்மையையும் வெளிக்காட்ட அவைகளுக்கு உரிமை இல்லை மற்றும் நாட்டிலிருந்து பிரிந்து செல்ல அவற்றுக்கு உரிமை இல்லை. அமைப்புகளின் சட்டங்களானவை கூட்டாட்சிச் சட்டங்களுக்கு முரண்பட்டதாக இருக்க முடியாது. கூட்டாட்சி அமைப்புகளானவை சமமான பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன. கூட்டாட்சி அவையின் மேலவையான கூட்டாட்சி மன்றத்தில் இரு பிரதிநிதிகளை ஒவ்வொரு அமைப்பும் கொண்டுள்ளன. எனினும், அவை கொண்டுள்ள சுயாட்சியின் அளவில் வேறுபடுகின்றன. கூட்டாட்சிப் பிரிவுகள் மீதான மைய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை எளிதாக்குவதற்காக 2000ஆம் ஆண்டு பூட்டினால் உருசியாவின் நடுவண் மாவட்டங்கள் நிறுவப்பட்டன. உண்மையில் 7ஆக இருந்த இவை தற்போது 8 கூட்டாட்சி நடுவண் மாவட்டங்களாக உள்ளன. அதிபரால் நியமிக்கப்படும் ஒரு தூதுவரால் இந்த ஒவ்வொரு மாவட்டமும் நிர்வகிக்கப்படுகிறது. அயல் நாட்டு உறவுகள் 2019இல் உருசியா உலகின் ஐந்தாவது மிகப் பெரிய தூதரக அமைப்பைக் கொண்டுள்ளது. 190 ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினர் நாடுகள், நான்கு பகுதியளவு-அங்கீகரிக்கப்பட்ட அரசுகள், மற்றும் மூன்று ஐக்கிய நாடுகள் பார்வையாளர் அரசுகள் ஆகியவற்றுடன் இது தூதரக உறவுகளைப் பேணி வருகிறது. 144 தூதரகங்களைக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் உருசியாவும் ஒன்றாகும். இந்நாடு பொதுவாக ஓர் உலக வல்லமையாகக் கருதப்படுகிறது. எனினும், ஒரு நவீன உலக வல்லமையாக இதன் நிலையானது 2022இல் தொடங்கிய உக்குரைன் படையெடுப்பில் இது அடைந்த போராட்டங்களைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. உருசியா ஒரு முன்னாள் வல்லரசு ஆகும். முந்தைய சோவியத் ஒன்றியத்தின் முன்னணிப் பகுதியாகும். ஜி-20, ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, மற்றும் ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஓர் உறுப்பினராக உருசியா உள்ளது. விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம், ஐரோவாசியப் பொருளாதார ஒன்றியம், கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் போன்ற அமைப்புகளில் ஒரு முன்னணிப் பங்கை உருசியா ஆற்றி வருகிறது. அண்டை நாடான பெலாரசுவுடன் உருசியா நெருக்கமான உறவு முறைகளைப் பேணி வருகிறது. இரு நாடுகளின் ஓர் இணைக் கூட்டமைப்பான ஒன்றிய நாட்டின் ஒரு பகுதி பெலாரசுவாகும். வரலாற்று ரீதியாக உருசியாவின் நெருக்கமான கூட்டாளியாகச் செர்பியா இருந்து வந்துள்ளது. ஏனெனில், இரு நாடுகளுமே ஒரு வலிமையான பரற்பர பண்பாட்டு, இன மற்றும் சமய ஒற்றுமையைப் பகிர்ந்து கொண்டுள்ளன. உருசியாவின் இராணுவத் தளவாடங்களுக்கு மிகப் பெரிய நுகர்வோராக இந்தியா உள்ளது. சோவியத் சகாப்தத்திலிருந்தே இரு நாடுகளும் ஒரு வலிமையான உத்தி ரீதியிலான மற்றும் தூதரக உறவு முறைகளைப் பகிர்ந்து கொண்டு வந்துள்ளன. புவிசார் அரசியல் ரீதியாக முக்கியமான தென்காக்கேசியா மற்றும் நடு ஆசியாவில் உருசியா செல்வாக்குச் செலுத்தி வருகிறது; இந்த இரு பகுதிகளும் உருசியாவின் "கொல்லைப்புறம்" என்று குறிப்பிடப்படுகின்றன. 21ஆம் நூற்றாண்டில் பிராந்திய ஆதிக்கம் மற்றும் பன்னாட்டுச் செல்வாக்கைப் பாதுகாப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட ஓர் ஆக்ரோஷமான அயல்நாட்டுக் கொள்கையை உருசியா பின்பற்றி வருகிறது. அரசாங்கத்துக்கு உள்நாட்டு ஆதரவை அதிகரிப்பதையும் இது குறிக்கோளாகக் கொண்டிருந்தது. 2008இல் ஜார்ஜியாவுடனான ஒரு போர் மற்றும் 2014இல் தொடங்கிய உக்குரைன் போர் உள்ளிட்ட சோவியத் காலத்துக்குப் பிந்தைய அரசுகளில் இராணுவத் தலையீட்டையும் செய்தது. மத்திய கிழக்கில் தன் செல்வாக்கை அதிகரிக்க உருசியா விரும்புகிறது. மிக முக்கியமாக சிரிய உள்நாட்டுப் போரில் ஓர் இராணுவத் தலையீட்டின் வழியாக இவ்வாறு விரும்புகிறது. இணையப் போர் முறை மற்றும் வான் வெளி விதிமீறல்கள் ஆகியவற்றுடன் தேர்தலில் தலையிடுவது ஆகியவை உருசிய சக்தி குறித்த பார்வையை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அண்டை நாடான உக்குரைன் மற்றும் மேற்குலகம் - குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அவை மற்றும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு ஆகியவற்றுடனான உருசியாவின் உறவு முறைகளானவை வீழ்ச்சி அடைந்துவிட்டன; குறிப்பாக 2014இல் கிரிமியா இணைக்கப்பட்டது மற்றும் 2022இல் தொடங்கப்பட்ட ஒரு முழு அளவிலான படையெடுப்பு ஆகியவற்றிலிருந்து வீழ்ச்சி அடைந்துவிட்டன. பகிர்ந்து கொள்ளப்பட்ட அரசியல் குறிக்கோள்கள் காரணமாக உருசியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவு முறைகளானவை குறிப்பிடத்தக்க அளவுக்கு இரு தரப்பு மற்றும் பொருளாதார ரீதியில் வலுவடைந்துள்ளன. ஒரு சிக்கலான உத்தி ரீதியிலான, எரிபொருள் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு உறவு முறைகளைத் துருக்கியும், உருசியாவும் பகிர்ந்து கொண்டுள்ளன. உருசியா ஈரானுடன் இனிமையான மற்றும் நட்புடணர்வுடைய உறவு முறைகளைப் பேணி வருகிறது. உருசியாவின் ஓர் உத்தி ரீதியிலான மற்றும் பொருளாதாரக் கூட்டாளியாக ஈரான் திகழ்கிறது. தன் செல்வாக்கை ஆர்க்டிக், ஆசியா-பசிபிக், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் விரிவடையச் செய்ய அதிகரித்து வரும் நிலையாக உருசியா முயற்சி செய்து வருகிறது. பொருளாதார உளவியல் பிரிவின் கூற்றுப் படி, சீனா அல்லது இந்தியா போன்ற நாடுகளில் வாழும் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கினர் உருசியாவை நோக்கிச் சமநிலையுடைய அல்லது ஆதரவான பார்வையைக் கொண்டுள்ளனர். இராணுவம் உருசிய ஆயுதப் படைகளானவை தரைப்படை, கடற்படை மற்றூம் விமானபப்டை எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இரு சுதந்திரமான ஆயுதமேந்திய படைகளும் உள்ளன. அவை உத்தி ரீதியிலான ஏவுகணைத் துருப்புக்கள் மற்றும் விமானத்திலிருந்து இறக்கப்படும் துருப்புகள் ஆகும். 2021ஆம் ஆண்டின் நிலவரப் படி இராணுவமானது சுமார் 10 இலட்சம் பணியில் உள்ள வீரர்களைக் கொண்டுள்ளது. உலகின் ஐந்தாவது மிகப் பெரிய இராணுவம் இதுவாகும். சுமார் 20 இலட்சம் முதல் 2 கோடி வரையிலான கையிருப்பு வீரர்களையும் கொண்டுள்ளது. 18 - 27 வயதுடைய அனைத்து ஆண் குடிமகன்களும் ஆயுதமேந்திய படைகளில் ஓர் ஆண்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது கட்டாயமாகும். ஐந்து அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுதங்களை உடைய நாடுகளில் உருசியாவும் ஒன்றாகும். உலகின் மிக அதிக அணு ஆயுதங்களின் கையிருப்பை இந்நாடு கொண்டுள்ளது. உலகின் அணு ஆயுதங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை உருசியா கொண்டுள்ளது. தொலைதூர ஏவுகணை நீர்மூழ்கிகளின் இரண்டாவது மிகப் பெரிய குழுவை உருசியா கொண்டுள்ளது. தந்திரோபாய குண்டுவீச்சு வானூர்திகளைப் பயன்படுத்தும் வெறும் மூன்று நாடுகளில் உருசியாவும் ஒன்றாகும். உலகிலேயே மூன்றாவது அதிக இராணுவச் செலவீனத்தை உருசியா கொண்டுள்ளது. 2023இல் யைச் செலவழித்தது. இது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5.9% ஆகும். 2021இல் உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஆயுத ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இது திகழ்ந்தது. ஒரு பெரிய மற்றும் முழுவதுமாக உள்நாட்டை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்புத் தொழில்துறையை இது கொண்டுள்ளது. இதன் சொந்த இராணுவத் தளவாடங்களில் பெரும்பாலானவற்றை இந்நாடே உற்பத்தி செய்கிறது. மனித உரிமைகள் முன்னணி சனநாயக மற்றும் மனித உரிமைக் குழுக்களால் உருசியாவின் மனித உரிமை மீறல்களானவை தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பன்னாட்டு மன்னிப்பு அவை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவை உருசியா சனநாயக நாடு அல்ல என்றும், இதன் குடிமக்களுக்கு சில அரசியல் உரிமைகள் மற்றும் குடிசார் சுதந்திரங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கிறது என்றும் குற்றம் சாட்டுகின்றன. 2004லிருந்து பிரீடம் ஔசு அமைப்பானது தன் உலகில் சுதந்திரம் ஆய்வில் "சுதந்திரமற்ற" என உருசியாவைத் தரப்படுகிறது. 2011லிருந்து பொருளாதார உளவியல் பிரிவானது தன் சனநாயகச் சுட்டெண்ணில் உருசியாவை "முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகார அரசாங்கம்" எனத் தரப்படுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டில் 167 நாடுகளில் 144ஆவது இடத்தை உருசியாவுக்கு இது வழங்கியது. ஊடக சுதந்திரத்தைப் பொறுத்த வரையில் 2022இன் எல்லைகளற்ற செய்தியாளர்களின் ஊடகச் சுதந்திரச் சுட்டெண்ணில் 180 நாடுகளில் 155ஆவது இடத்தை உருசியாவுக்குக் கொடுத்தது. முறையற்ற தேர்தல்கள், எதிர் அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டங்கள் மீதான தடுப்பு நடவடிக்கை, அரசு சாராத அமைப்புகளை இடர்ப்படுத்துதல், சுதந்திர பத்திரிக்கையாளர்களை வன்முறை கொண்டு அடக்குவதை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கொல்லுதல், மற்றும் பொது ஊடகம் மற்றும் இணையத்தின் தணிக்கை ஆகியவற்றுக்காக அரசியல் விமர்சகர்கள் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களால் உருசிய அரசாங்கமானது பரவலாக விமர்சிக்கப்படுகிறது. முசுலிம்கள் குறிப்பாக சலாபிகள் உருசியாவில் இடர்ப்பாடுகளை எதிர் கொண்டு உள்ளனர். வடக்கு காக்கேசியாவில் எதிர்ப்பாளர்களை அடக்குவதற்காக உருசிய அதிகாரக் குழுக்களானவை பாகுத்தறிவற்ற கொலைகள், கைதுகள், கட்டாயத்தின் பேரில் காணாமல் போதல் மற்றும் குடி மக்களைச் சித்திரவதை செய்தல் ஆகிய குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளன. தாகெஸ்தானில் தங்களது தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் தொல்லைகளை சில சலாபிகள் எதிர் கொள்வதுடன், எதிர்ப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தங்களது வீடுகளும் வெடி வைத்துத் தகர்க்கப்படுவதற்கு ஆளாகின்றனர். உருசியச் சிறைகளில் உள்ள செச்சன்கள் மற்றும் இங்குஷ் ஆகியோர் பிற இனக் குழுக்களைக் காட்டிலும் அதிக முறைகேடாக நடத்தப்படுவதற்கு ஆளாவதாகக் குறிப்பிடப்படுகிறது. 2022ஆம் ஆண்டின் உக்குரைன் படையெடுப்பின் போது உருசியா வடிகட்டு முகாம்களை அமைத்தது. இங்கு பல உக்குரைனியர்கள் முறைகேடாக நடத்தப்பட்டு உருசியாவுக்குக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். செச்சன் போர்களில் பயன்படுத்தப்பட்டவற்றுடன் இந்த முகாம்கள் ஒப்பிடப்படுகின்றன. படையெடுப்பின் தொடக்கத்தைத் தொடர்ந்து அரசியல் ஒடுக்கு முறையும் கூட அதிகரித்துள்ளது. ஆயுதப் படைகளுக்கு "அவப் பெயர் உண்டாக்குவோருக்கு" தண்டனைகளைக் கொடுக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உருசியா ந. ந. ஈ. தி. உரிமைகளுக்கு ஏராளாமன கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தன் பாலினத் திருமணங்கள் மீதான 2020ஆம் ஆண்டுத் தடை மற்றும் உருசிய ந. ந. ஈ. தி. இணையம் போன்ற ந. ந. ஈ. தி.+ அமைப்புகளை "அயல்நாட்டு முகவர்கள்" என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடுதல் போன்றவை இதில் அடங்கும்.. இலஞ்ச ஊழல் தங்களது அதிகாரத்தைத் தங்களது நாட்டின் வளங்களைத் திருடப் பயன்படுத்தும் ஓர் அரசு, ஒரு சிலவர் ஆட்சி மற்றும் ஒரு செல்வக்குழு ஆட்சி எனப் பலவாறாக உருசிய அரசியலமைப்பானது குறிப்பிடப்படுகிறது. திரான்சுபரன்சி இன்டர்நேசனல் அமைப்பின் 2023ஆம் ஆண்டுக்கான ஊழல் மலிவுச் சுட்டெண்ணில் மிகக் குறைவான தரத்தைக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடு இதுவாகும். 180 நாடுகளில் 141ஆவது இடத்தை இது பெற்றது. உருசிய ஒரு நீண்ட ஊழல் வரலாற்றைக் கொண்டுள்ளது. ஊழல் ஒரு முக்கியமான பிரச்சினையாகக் கருதப்படுகிறது. இது பொருளாதாரம், வணிகம், பொது நிர்வாகம், சட்ட அமல்படுத்தல், சுகாதாரச் சேவை, கல்வி மற்றும் இராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பாதிக்கிறது. சட்டமும், குற்றமும் உருசியாவில் சட்டங்களின் முதன்மையான மற்றும் அடிப்படை அறிக்கையானது உருசியக் கூட்டரசின் அரசியலமைப்பாகும். உருசிய சிவில் சட்டம் மற்றும் உருசியக் குற்றவியல் சட்டம் போன்ற சட்டங்களானவை உருசியச் சட்டத்தின் முதன்மையான சட்ட ஆதாரங்களாக உள்ளன. உருசியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய சட்டத்திற்குப் புறம்பான ஆயுத வணிகச் சந்தையை ஐக்கிய அமெரிக்காவுக்குப் பிறகு கொண்டுள்ளது. உலகளாவிய அமைப்பு ரீதியிலான குற்றச் சுட்டெண்ணில் ஐரோப்பாவில் முதல் இடத்திலும், உலகில் 32ஆவது இடத்திலும் இது உள்ளது. சிறைகளில் மிக அதிக எண்ணிக்கையில் மக்களையுடைய நாடுகளில் உருசியாவும் ஒன்றாகும். பொருளாதாரம் உருசியா ஒரு கலவையான சந்தைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. 1990களின் போது சோவியத் திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து ஒரு குழப்பமான வடிவ மாற்றத்தைத் தொடர்ந்து இவ்வாறாகக் கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பாலானவை இதன் ஏராளமான மற்றும் வேறுபட்ட இயற்கை வளங்கள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன. உலக வங்கியால் உருசியாவானது ஓர் உயர்-வருமானப் பொருளாதாரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகில் ஒன்பதாவது மிகப் பெரிய பொருளாதாரத்தையும், கொள்வனவு ஆற்றல் சமநிலையில் ஆறாவது மிகப் பெரிய பொருளாதாரத்தையும் இந்நாடு கொண்டுள்ளது. சில அளவீடுகளின் படி இதன் பொருளாதாரமானது கொள்வனவு ஆற்றல் சமநிலையில் உலகில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தைப் பெறுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறை சுமார் 54%, தொழில் துறை 33%, மற்றும் வேளாண்மைத் துறையானது 4%க்கும் குறைவாக, இருப்பதிலேயே மிகச் சிறியதாக உள்ளது. உருசியாவானது பணியாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 7 கோடிப் பேரைக் கொண்டுள்ளது. உலகின் எட்டாவது மிகப் பெரிய பணியாளர் எண்ணிக்கை இதுவாகும். ஒரு மிகக் குறைந்த அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பின்மை வீதமாக 4.1%ஐ இது கொண்டுள்ளது. உருசியா உலகின் 13ஆவது மிகப் பெரிய ஏற்றுமதியாளராகவும், 21ஆவது மிகப் பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சம்பந்தப்பட்ட வரிகள் மற்றும் ஏற்றுமதி சுங்க வரிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை இது அதிகமாகச் சார்ந்துள்ளது. சனவரி 2022இல் உருசியாவின் கூட்டாட்சி வரவு செலவுத் திட்ட அறிக்கையில் வருமானத்தில் 45%ஆக இந்த வரிகள் இருந்தன. 2019இல் இதன் ஏற்றுமதியில் 60% வரை இவையே இருந்தன. பெரிய பொருளாதாரங்களில் வெளிநாட்டுக் கடனின் மிகக் குறைவான நிலைகளில் ஒன்றை உருசியா கொண்டுள்ளது. இதன் உலகின் ஐந்தாவது மிகப் பெரிய அந்நியச் செலாவணிக் பணக் கையிருப்புகளானவை க்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளன. எனினும், இவற்றில் பாதி வெளிநாடுகளில் தடைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு குறிப்பிடத்தக்க பணமானது உக்குரைனியப் போரில் செலவிடப்பட்டதாக நம்பப்படுகிறது. வளர்ந்த நாடுகளிலேயே வீட்டு வருமானம் மற்றும் செல்வத்தில் சமமற்ற நிலையானது மிக அதிகமாக உருசியாவில் காணப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் இங்கு காணப்படுகின்றன. சோவியத் காலத்துக்குப் பிந்தைய ஒரு தசாப்த வேகமான பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு உயர் கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் முதலீட்டில் ஓர் ஏற்றம் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டிருந்த உருசியப் பொருளாதாரமானது உருசிய-உக்குரைனியப் போர் மற்றும் கிரிமியா இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து 2014இல் பன்னாட்டு பொருளாதாரத் தடைகளின் ஓர் அலையால் சேதமடைந்தது. 2022இல் உக்குரைன் மீதான உருசியாவின் படையெடுப்புக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் மற்றும் நிறுவனங்களின் புறக்கணிப்புகளையும் இந்நாடு எதிர் கொண்டது. உலகில் மிக அதிகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடாக உருசியா உருவானது. மேற்குலக நிதி அமைப்பில் இருந்து உருசியப் பொருளாதாரத்தைத் தனிமைப்படுத்தும் "ஓர் ஒட்டு மொத்த பொருளாதார மற்றும் நிதிப் போர்" என்று இச்செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டன. இதன் விளைவான எதிர்மறைத் தாக்கத்தின் காரணமாக உருசிய அரசாங்கமானது ஏப்பிரல் 2022இல் இருந்து பொருளாதாரத் தரவுகளில் பெருமளவைப் பதிப்பிப்பதை நிறுத்தியது. உருசியா ஒப்பீட்டளவில் பொருளாதார நிலைத் தன்மை மற்றும் வளர்ச்சியைப் பேணிய போதும் (உயர் இராணுவச் செலவீனம், வீட்டு நுகர்வு, மற்றும் மூலதன முதலீடு ஆகியவற்றால் இது சாத்தியமானது) பொருளாதார நிபுணர்கள் பொருளாதாரத் தடைகளானவை உருசியப் பொருளாதாரம் மீது ஒரு நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பரிந்துரைக்கின்றனர். போக்குவரத்தும், ஆற்றலும் உருசியாவில் தொடருந்துப் போக்குவரத்தானது பெரும்பாலும் அரசால் இயக்கப்படும் உருசியத் தொடருந்து அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் இருப்புப் பாதையின் மொத்த நீளமானது உலகின் மூன்றாவது மிக நீண்டதாக, 87,000 கிலோ மீட்டர்களையும் விட அதிகமாக உள்ளது. 2019ஆம் ஆண்டிடு நிலவரப் படி, உருசியாவானது உலகின் ஐந்தாவது மிகப் பெரிய சாலை அமைப்பைக் கொண்டுள்ளது. 15 இலட்சம் கிலோமீட்டருக்கும் மேற்கொண்ட நீளமுடைய சாலைகள் இங்கு உள்ளன. எனினும், இதன் சாலை அடர்த்தியானது உலகிலேயே மிகக் குறைவானவற்றில் ஒன்றாக உள்ளது. இதன் பரந்த நிலப்பரப்பும் இதற்கு ஒரு பங்குக் காரணமாகும். உருசியாவின் உள்நாட்டு நீர்வழிகளானவை உலகிலேயே மிக நீண்டதாகும். இவற்றின் ஒட்டு மொத்த நீளம் 1,02,000 கிலோமீட்டர் ஆகும். உருசியா 900க்கும் மேற்பட்ட விமான நிலையங்களைக் கொண்டுள்ளது. உலகில் ஏழாவது இடத்தில் இது தரப்படுத்தப்படுகிறது. இதில் மிகவும் பரபரப்பானது மாஸ்கோவிலுள்ள செரேமேதியேவோ பன்னாட்டு விமான நிலையமாகும். உருசியாவின் மிகப் பெரிய துறைமுகமானது கருங்கடலில் கிராஸ்னதார் பிரதேசத்திலுள்ள நோவோரோசிய்ஸ்க் துறைமுகமாகும். உருசியா பரவலாக ஓர் ஆற்றல் வல்லரசாகக் குறிப்பிடப்படுகிறது. உலகின் மிகப் பெரிய நிரூபிக்கப்பட்ட இயற்கை எரிவாயு வளங்கள், இரண்டாவது மிகப் பெரிய நிலக்கரி வளங்கள், எட்டாவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் வளங்கள் மற்றும் ஐரோப்பாவில் மிகப் பெரிய களிமண் பாறை எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது. உருசியா உலகின் முன்னணி இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராகவும், இரண்டாவது மிகப் பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தியாளராகவும், மற்றும் இரண்டாவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராகவும் உள்ளது. உருசியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியானது ஐரோப்பிய ஒன்றியம், சீனா, மற்றும் முன்னாள் சோவியத் மற்றும் கிழக்குக் குழும நாடுகளுடன் ஆழமான பொருளாதார உறவு முறைகளுக்கு வழி வகுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, கடைசித் தசாப்தத்தில் ஐரோப்பாவுக்கான (ஐக்கிய இராச்சியம் உட்பட) ஒட்டு மொத்த எரிவாயுத் தேவையில் உருசியாவின் பங்கானது 2009இல் 25%இலிருந்து பெப்பிரவரி 2022இல் உக்குரைன் மீதான உருசியாவின் படையெடுப்புக்கு சில வாரங்களுக்கு முன்னர் 32%ஆக அதிகரித்தது. 2000களின் நடுப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் பங்களிப்பானது சுமார் 20%ஆக இருந்தது. இது 20 - 21%ஆக இருந்தது. உருசியாவின் ஏற்றுமதிகளில் எண்ணெய் மற்றும் வாயுவின் பங்களிப்பு (சுமார் 50%) மற்றும் கூட்டரசு வரவு செலவுத் திட்ட அறிக்கையின் வருவாயில் (சுமார் 50%) பங்களிப்பு அதிகமாகும். உருசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஏற்றத்தாழ்வுகள் எண்ணெய் மற்றும் வாயு விலைகளை அதிகமாகச் சார்ந்துள்ளன. ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்கானது 50%யும் விடக் குறைவானதாகும். உருசியப் புள்ளியல் முகமையான ரோஸ்டாட் 2021இல் பதிப்பித்த இத்தகைய அகல் விரிவான ஆய்வின் படி உருசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்ணெய் மற்றும் வாயுத் துறையின் அதிகபட்ச மொத்தப் பங்களிப்பானது 2019இல் 19.2%ஆகவும், 2020இல் 15.2%ஆகவும் இருந்தது. இதில் பிரித்தெடுத்தல், சுத்திகரித்தல், போக்குவரத்து, எண்ணெய் மற்றும் வாயு விற்பனை, அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துதல், மற்றும் அனைத்துத் துணைச் செயல்பாடுகளும் அடங்கும். நோர்வே மற்றும் கசகஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பை இது ஒத்ததாக உள்ளது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்களிப்பை விட மிகக் குறைவானதாக உள்ளது. உருசியா உலகின் நான்காவது மிகப் பெரிய மின்சார உற்பத்தியாளராக உள்ளது. ஆற்றலின் மிகப் பெரிய ஆதாரமாக இயற்கை எரிவாயுவானது உள்ளது. அனைத்து முதன்மை ஆற்றலில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்கும், 42% மின்சார நுகர்வுக்கும் இது காரணமாக உள்ளது. பொது மக்கள் பயன்பாட்டுக்காக அணு சக்தியைப் பயன்படுத்திய முதல் நாடு உருசியா ஆகும். 1954இல் உலகின் முதல் அணு மின்சக்தி நிலையத்தை உருசியா கட்டமைத்தது. அணு மின்சக்தித் தொழில்நுட்பத்தில் இது தொடர்ந்து முன்னோடியாக உள்ளது. வேகமான நியூட்ரான் அணுக்கரு உலைகளில் ஓர் உலகத் தலைவராக உருசியா கருதப்படுகிறது. உலகின் நான்காவது மிகப் பெரிய அணு சக்தி ஆற்றல் உற்பத்தியாளராக உருசியா திகழ்கிறது. மொத்த மின்சார உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை அணுசக்தியிலிருந்து இந்நாடு உற்பத்தி செய்கிறது. அணுசக்தி ஆற்றலின் பங்கை விரிவாக்குவது மற்றும் புதிய அணுக்கரு உலைத் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவது ஆகியவற்றைக் குறிக்கோள்களாக உருசியாவின் ஆற்றல் கொள்கையானது கொண்டுள்ளது. உருசியா 2019இல் பாரிசு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது. இந்நாட்டின் பைங்குடில் வாயுக்களின் வெளியீடுகளானவை உலகின் நான்காவது மிகப் பெரியதாகும். நிலக்கரியானது இன்னும் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்குக்குக் (17.64%) காரணமாக உள்ளது. 2022ஆம் நிலவரப்படி உருசியா ஐந்தாவது மிகப் பெரிய நீர்மின்சார உற்பத்தியாளராக உள்ளது. மொத்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்குக்கு (17.54%) நீர் மின்சாரமானது பங்களிக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களின் பயன்பாடு மற்றும் மேம்பாடானது தொடர்ந்து புறக்கணிக்கத்தக்கதாக உள்ளது. இத்தகைய ஆற்றல் ஆதாரங்களை விரிவாக்க வலிமையான அரசாங்க அல்லது பொது மக்களின் ஆதரவு இல்லாத சில நாடுகளில் உருசியாவும் ஒன்றாக இருப்பதால் இந்நிலை காணப்படுகிறது. வேளாண்மையும், மீன் வளர்ப்பும் வேளாண்மைத் துறையானது மொத்தப் பணியாளர் எண்ணிக்கையில் சுமார் எட்டில் ஒரு பங்குப் பேருக்குப் பணி அளித்தாலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சுமார் 5%ஐ மட்டுமே பங்களிக்கிறது. உலகின் மூன்றாவது மிகப் பெரிய அறுவடைப் பகுதியை இது கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 12,65,267 சதுர கிலோ மீட்டர்களாகும். எனினும், இதன் சூழ்நிலையின் கடுமைத்தன்மை காரணமாக இதன் நிலத்தில் சுமார் 13.1% மட்டுமே வேளாண்மை நிலமாகவும், மேற்கொண்ட 7.4% பயிரிடுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் வேளாண்மை நிலமானது ஐரோப்பாவின் "ரொட்டிக் கூடையின்" பகுதியாகக் கருதப்படுகிறது. விதைக்கப்படும் பகுதியில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலானது தீவனப்பயிர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. எஞ்சிய விளை நிலங்களானவை தொழிற்பயிர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. உருசிய வேளாண்மையின் முதன்மையான உற்பத்திப் பொருளானது எப்போதுமே தானியமாக இருந்துள்ளது. பயிரிடும் நிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை இது ஆக்கிரமித்துள்ளது. உலகின் மிகப் பெரிய கோதுமை ஏற்றுமதியாளர், வாற்கோதுமை மற்றும் நெளி கோதுமையின் மிகப் பெரிய உற்பத்தியாளர், மக்காச் சோளம் மற்றும் சூரியகாந்தி எண்ணெயின் மிகப் பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்று, மற்றும் உரத்தின் முன்னணித் தயாரிப்பாளராக உருசியா உள்ளது. காலநிலை மாற்றத்திற்கான தகவமைப்பு குறித்த பல்வேறு ஆய்வாளர்கள் 21ஆம் நூற்றாண்டின் எஞ்சிய பகுதியின் போது உருசிய வேளாண்மைக்குப் பெரிய வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கின்றனர். ஏனெனில், சைபீரியப் பகுதியில் வேளாண்மைக்குத் தகுந்த சூழலானது அதிகரிக்கும். இது இப்பகுதிக்குள் இப்பகுதியிலிருந்தும், வெளியிலிருந்தும் புலப்பெயர்வுக்கு வழி வகுக்கும். மூன்று பெருங்கடல்கள் மற்றும் 12 சிறிய கடல்களை ஒட்டியுள்ள இதன் மிகப் பெரிய கடற்கரை காரணமாக உருசியா உலகின் ஆறாவது மிகப் பெரிய மீன் பிடித் தொழிற்துறையைக் கொண்டுள்ளது; 2018இல் கிட்டத்தட்ட 50 இலட்சம் டன்கள் மீனை இந்நாடு பிடித்தது. உலகின் மிகச் சிறந்த மீன் முட்டையான பெலுகா மீன் முட்டைகளுக்குத் தாயகமாக உருசியா உள்ளது. மெல்லிய உலோகக் கொள்கலன்களில் அடைத்து வைக்கப்படும் மீன்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கை உருசியா உற்பத்தி செய்கிறது. உலகின் மொத்த நல்ல நிலையில் உள்ள மற்றும் உறைய வைக்கப்பட்ட மீன்களில் சுமார் நான்கில் ஒரு பங்கை இது உற்பத்தி செய்கிறது. அறிவியலும், தொழில்நுட்பமும் 2019இல் ஆய்வும் விருத்தியும் மீது இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1%ஐ உருசியா செலவழித்தது. உலகின் பத்தாவது மிகப் பெரிய செலவீனத்தை உருசியா கொண்டுள்ளது. 2020இல் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கையில் உலக அளவில் இது பத்தாவது இடத்தைப் பிடித்தது. தோராயமாக 13 இலட்சம் ஆய்வுக் கட்டுரைகளைப் பதிப்பித்தது. 1904 முதல் நோபல் பரிசானது 26 சோவியத் மற்றும் உருசியர்களுக்கு இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்காக வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய புத்துருவாக்கச் சுட்டெண்ணில் 2024ஆம் ஆண்டு உருசியா 60ஆம் இடம் பெற்றது. 2021இல் இது பெற்ற 45ஆவது இடத்தை விட இது குறைவானதாகும். யூக்ளியமல்லாத வடிவியற் கணிதத்தில் முன்னோடியாக இருந்த நிக்கோலாய் லோபசேவ்ஸ்கி மற்றும் ஒரு புகழ் பெற்ற ஆசிரியரான பப்னுட்டி செபிசேவ் ஆகியோரின் காலங்களிலிருந்து உருசியக் கணிதவியலாளர்கள் உலகின் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவராக உருவாயினர். நவீன வேதியியலின் முதன்மையான ஆதாரக் கட்டமைப்பான தனிம அட்டவணையை திமீத்ரி மெண்டெலீவ் உருவாக்கினார். பீல்ட்ஸ் பதக்கத்தை ஒன்பது சோவியத் மற்றும் உருசியக் கணிதவியலாளர்கள் பெற்றுள்ளனர். 2002இல் பயின்கேர் அனுமானத் தேற்றத்திற்கான தன் இறுதி நிரூபிப்பிற்காக முதன் முதலில் கிளேய் மில்லினியம் பிரைஸ் பிராப்ளம்ஸ் விருது, மேலும் 2006இல் பீல்ட்ஸ் பதக்கம் ஆகியவற்றைக் கிரிகோரி பெரல்மான் பெற்றுள்ளார். வானொலியைத் தயாரித்தவர்களில் அலெக்சாந்தர் பப்போவும் ஒருவராவார். அதே நேரத்தில் நிக்கோலாய் பாசோவ் மற்றும் அலெக்சாந்தர் புரோகோரோவ் ஆகியோர் சீரொளி மற்றும் மேசரின் இணைக் கண்டுபிடிப்பாளர்களாக இருந்தனர். குறைகடத்திச் சந்திப்புகளின் பிரிவுக்கு முக்கியமான பங்களிப்புகளையும், ஒளி உமிழ் இருமுனையங்களையும் கண்டுபிடித்தல் ஆகியவற்றுக்கு ஒலேக் லோசேவ் பங்களித்துள்ளார். புவிவேதியியல், உயிரிப் புவிவேதியியல் மற்றும் கதிரியக்கக் காலமதிப்பீடு ஆகியவற்றின் நிறுவனர்களில் ஒருவராக விளாதிமிர் வெர்னாத்ஸ்கி கருதப்படுகிறார். நோயெதிர்ப்பியலில் தன்னுடைய முன்னோடி ஆய்வுக்காக இலியா மெச்னிகோவ் அறியப்படுகிறார். செவ்வியல் பழக்கமுறுத்தலில் தனது வேலைப்பாடுக்காக இவான் பாவ்லோவ் முதன்மையாக அறியப்படுகிறார். கோட்பாட்டு இயற்பியலின் பல பகுதிகளுக்கு அடிப்படையான பங்களிப்புகளை லேவ் லந்தாவு கொடுத்துள்ளார். தோட்டத் தாவரங்களின் பூர்வீக மையங்களை அடையாளப்படுத்தியதற்காக நிகோலாய் வவிலோவ் மிக முக்கியமாக அறியப்படுகிறார். துரோபிம் லைசென்கோ முதன்மையாக லைசென்கோயியத்திற்காக அறியப்படுகிறார். பல பிரபலமான உருசிய அறிவியலாளர்களும், கண்டுபிடிப்பாளர்களும் வெளிநாடு வாழ் உருசியர்களாக இருந்தனர். இகோர் சிகோர்ஸ்கி ஒரு விமானத் தயாரிப்பு முன்னோடியாவார். விளாதிமிர் சிவோரிகின் ஐகனோஸ்கோப் மற்றும் கைனெஸ்கோப் தொலைக்காட்சி அமைப்புகளின் கண்டுபிடிப்பாளர் ஆவார். பரிணாம உயிரியல் துறையில் நவீன கூட்டிணைப்பை வடிவமைத்த தனது வேலைப்பாட்டுக்காக தியோடோசியசு தோப்சன்ஸ்கி மைய நபராக உள்ளார். பெரு வெடிப்புக் கோட்பாட்டின் முதன்மையான பரிந்துரையாளர்களில் ஒருவராக ஜார்ஜ் காமாவ் திகழ்கிறார். விண்வெளி ஆய்வு உருசிய நடுவண் விண்வெளி நிறுவனமானது உருசியாவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகும். விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிப் பயணத் துறையில் இந்நாட்டின் சாதனைகளானவை கோட்பாட்டு விண்வெளிப் பயணவியலின் தந்தையான கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகிக்குத் தடயமிடப்படலாம். இவரது வேலைப்பாடுகளானவை செர்கேய் கோரோல்யோவ், வேலன்டின் குளுஷ்கோ மற்றும் பல பிறர் போன்ற முன்னாள் சோவியத் விண்வெளிப் பயண ஊர்திப் பொறியாளர்களுக்கு அகத்தூண்டுதலாக விளங்கின. இவர்கள் விண்வெளிப் போட்டியின் தொடக்க நிலைகள் மற்றும் அதைத் தாண்டிய காலத்தில் சோவியத் விண்வெளித் திட்டங்களின் வெற்றிக்குப் பங்களித்தனர். 1957இல் முதன் முதலில் பூமியைச் சுற்றி வந்த செயற்கைக் கோளான இசுப்புட்னிக் 1 ஆனது ஏவப்பட்டது. 1961இல் விண்வெளிக்குள்ளான முதல் மனிதப் பயணமானது வெற்றிகரமாக யூரி ககாரினால் மேற்கொள்ளப்பட்டது. பல பிற சோவியத் மற்றும் உருசிய விண்வெளிச் சாதனைகள் தொடர்ந்தன. 1963இல் வலந்தீனா தெரெசுக்கோவா வஸ்தோக் 6 என்ற விண்கலத்தில் தனிநபராகப் பறந்து சென்று விண்வெளிக்குச் சென்ற முதல் மற்றும் இளமையான பெண்ணானார். 1965இல் வோஷ்கோத் 2 பயணத்தின் போது விண்பெட்டகத்திலிருந்து வெளியேறி நடந்து விண்வெளியில் நடைபோட்ட முதல் மனிதனாக அலெக்சேய் லியோனவ் உருவானார். 1957இல் ஒரு சோவியத் விண்வெளி நாயான லைக்கா இசுப்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியைச் சுற்றி வந்த முதல் விலங்கானது. 1966இல் உலூனா 9 விண்கலமானது ஒரு வானியல்சார் பொருள் (நிலா) மீது இறங்குதலை நடத்திய பிறகு செயல்பட்ட முதல் விண்கலமானது. 1968இல் சோந்த் 5 விண்கலமானது பூமியின் உயிரினங்களுடன் (இரு ஆமைகள் மற்றும் பிற உயிரினங்களுடன்) நிலாவைச் சுற்றி வந்த முதல் விண்கலமானது. 1970இல் வெனேரா 7 விண்கலமானது மற்றொரு கிரகமான வெள்ளி மீது இறங்கிய முதல் விண்கலமானது. 1971இல் மார்ஸ் 3 விண்கலமானது செவ்வாய் மீது இறங்கிய முதல் விண்கலமானது. இதே காலகட்டத்தின் போது, லுனோகோத் 1 விண்கலமானது முதல் கோள் தரையியக்க ஊர்தியானது. அதே நேரத்தில், சல்யூட் 1 ஆனது உலகின் முதல் விண்வெளி நிலையமானது. ஏப்பிரல் 2022 நிலவரப்படி உருசியா விண்வெளியில் 172 செயல்பாட்டில் உள்ள செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது. இது உலகின் மூன்றாவது மிக அதிக எண்ணிக்கையாகும். 2011இல் விண்ணோடம் திட்டத்தின் கடைசி ஏவுதல் மற்றும் 2020இல் எசுபேசுஎக்சுவின் முதல் மனிதர்களுடைய பயணம் ஆகியவற்றுக்கு இடையில் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்ல ஏற்ற ஒரே ஏவுகலங்களாக சோயூசு ஏவுகலங்கள் திகழ்ந்தன. ஆகத்து 2023இல் உலூனா 25 விண்கலமானது ஏவப்பட்டது. லூனா-குளோப் நிலவு ஆய்வுத் திட்டத்தின் முதல் விண்கலம் இதுவாகும். சுற்றுலா உலக சுற்றுலா அமைப்பின் குறிப்பின் படி, 2018ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் 16ஆவது மிக அதிகமாகப் பயணிகள் வருகை புரியும் நாடு உருசியாவாகும். ஐரோப்பாவில் பத்தாவது மிக அதிகப் பயணிகள் வருகை புரியும் நாடு உருசியாவாகும். இவ்வாண்டில் 24.6 கோடிக்கும் மேற்பட்ட வருகைகள் புரியப்பட்டன. சுற்றுலாவுக்கான கூட்டாட்சி முகமையின் கூற்றுப் படி, உருசியாவுக்கு வந்த அயல் நாட்டுக் குடிமக்களின் பயணங்களின் எண்ணிக்கையானது 2019இல் 2.44 கோடியாக இருந்தது. உருசியர்கள் பன்னாட்டுச் சுற்றுலாவுக்காக 2018இல் களைச் செலவிட்டனர். 2019இல் பயணமும், சுற்றுலாவும் இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4.8%க்குப் பங்களித்தன. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் சுற்றுலாவானது 2020இல் வீழ்ச்சியடைந்தது. அந்த ஆண்டில் அயல் நாட்டுப் பயணிகளில் 63 இலட்சத்துக்கும் சற்றே அதிகமானோர் மட்டுமே வருகை புரிந்தனர். பண்டைக் கால உருசிய நகரங்களைக் கருத்துருவாகக் கொண்ட ஒரு வழியான உருசியாவின் தங்க வளையத்தைச் சுற்றிய ஒரு பயணம்; வோல்கா போன்ற பெரிய ஆறுகளின் மீதான படகுப் பயணம்; காக்கேசிய மலைத் தொடர் போன்ற தொடர்களின் மீதான மலையேற்றம் மற்றும் பிரபலமான திரான்சு-சைபீரியத் தொடருந்துப் பயணங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக உருசியாவின் முதன்மையான சுற்றுலா வழிகள் உள்ளன. செஞ்சதுக்கம், பெட்டர்கோப் அரண்மனை, கசன் கிரெம்லின், புனித செர்கியசின் லவ்ரா மற்றும் பைக்கால் ஏரி உள்ளிட்டவை உருசியாவின் மிக அதிகப் பயணிகள் வருகை புரியும் மற்றும் பிரபலமான இடங்களாக உள்ளன. நாட்டின் உலகெங்கிலும் இருந்து வந்த மக்களைக் கொண்டிருக்கிற தலைநகரம் மற்றும் வரலாற்று மையமான மாஸ்கோவானது ஒரு சுறுசுறுப்பான நவீன பெரு நகரம் ஆகும். உயர் கலை, உலகத் தர பேலட் நடனம் மற்றும் நவீன வானுயர் கட்டடங்களைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் பாரம்பரிய மற்றும் சோவியத் சகாப்தக் கட்டடங்களையும் இது தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஏகாதிபத்தியத் தலை நகரான சென் பீட்டர்சுபெர்கு பாரம்பரியக் கட்டடங்கள், மாவட்டத் தலைமைக் கிறித்தவத் தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள், வெள்ளை இரவுகள், குறுக்கு வெட்டுக் கோடுகள் போன்ற ஆறுகள் மற்றும் ஏராளமான கால்வாய்களுக்காகப் பிரபலமானதாக உள்ளது. உருசிய அரசு அருங்காட்சியகம், ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் மற்றும் திரேதியகோவ் கலைக் காட்சிக் கூடம் போன்ற அதன் செழிப்பான அருங்காட்சியகங்களுக்காக உருசியா உலகப் புகழ் பெற்றதாக உள்ளது. போல்சோய் மற்றும் மரின்ஸ்கி போன்ற திரையரங்குகளுக்காகவும் புகழ் பெற்றுள்ளது. கிரெம்லின் மற்றும் புனித பசில் பேராலயம் ஆகியவை உருசியாவின் முக்கியமான பண்பாட்டு இடங்களில் சிலவாக உள்ளன. மக்கள் தொகை 2021இல் உருசியா (கிரிமியா மற்றும் செவஸ்தோபோல் தவிர்த்து) 14.47 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. 2010ஆம் ஆண்டின் 14.28 கோடி மக்கள் தொகையில் இருந்து இது ஓர் அதிகரிப்பாகும். ஐரோப்பாவின் மிக அதிக மக்கள் தொகையுடைய மற்றும் உலகின் ஒன்பதாவது மிக அதிக மக்கள் தொகையுடைய நாடு இதுவாகும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 8 பேர் என்ற மக்கள் தொகை அடர்த்தியுடன் உருசியாவானது உலகின் மக்கள் அடர்த்தி மிகவும் குறைவான நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதன் மக்களில் பெரும் அளவினர் இதன் மேற்குப் பகுதிக்குள் செறிந்துள்ளனர். இந்நாடானது அதிகளவு நகரமயமாக்கப்பட்டுள்ளது. இதன் மக்களில் மூன்றில் இரு பங்கினர் பட்டணங்கள் மற்றும் நகரங்களில் வாழ்கின்றனர். உருசியாவின் மக்கள் தொகையானது 14.80 கோடிக்கும் அதிகமாக 1993ஆம் ஆண்டு உச்ச நிலையை அடைந்தது. இதன் பிறப்பு வீதத்தையும் விட அதிகமான இதன் இறப்பு வீதம் காரணமாக இறுதியாக வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இதை சில ஆய்வாளர்கள் மக்கள் தொகை பிரச்சினை என்று அழைக்கின்றனர். 2009இல் 15 ஆண்டுகளில் முதல் முறையாக இது ஆண்டு மக்கள் அதிகரிப்பைப் பதிவு செய்தது. குறைவான இறப்பு வீதம் மற்றும் அதிகரித்து வந்த பிறப்பு வீதம் மற்றும் அதிகரித்த மக்கள் குடியேற்றம் காரணமாக இறுதியாக ஆண்டு மக்கள் தொகை அதிகரிப்பை இது கண்டது. எனினும், 2020ஆம் ஆண்டு முதல் இந்த மக்கள் தொகை அதிகரிப்புகளானவை எதிர் மறையாகி விட்டன. கோவிட்-19 பெருந்தொற்றின் மூலமான அதிகப்படியான இறப்புகளானவை இதன் வரலாற்றில் மிகப் பெரிய அமைதி கால மக்கள் தொகை வீழ்ச்சிக்குக் காரணமாகியுள்ளன. 2022ஆம் ஆண்டின் உக்குரைன் மீதான உருசியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மக்கள் தொகைப் பிரச்சினையானது ஆழமாகி விட்டது. குறிப்பிடப்படும் அதிகப் படியான இராணுவ இறப்புகள் மற்றும் மேற்குலக நாடுகளின் பெரும் அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் புறக்கணிப்புகளால் ஏற்பட்ட மீண்டும் தொடங்கிய மக்கள் வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக இது நடைபெறுவதாகக் குறிப்பிடப்படுகிறது. 2022இல் உருசியா முழுவதும் கருவள வீதமானது ஒரு பொண்ணுக்கு 1.42 குழந்தைகள் என்று மதிப்பிடப்பட்டது. 2.1 என்ற தேவையான கருவள வீதத்தை விட இது குறைவானதாகும். உருசியாவின் கருவள வீதமானது உலகின் மிகக் குறைவான கருவள வீதங்களில் ஒன்றாகும். இதைத் தொடர்ந்து இந்நாடானது உலகின் மிக அதிக வயதுடைய மக்கள் தொகைகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. இந்த நாட்டின் மக்களின் சராசரி வயது 40.3 ஆண்டுகளாகும். பல்வேறு சிறுபான்மையினருடன் தொடர்புடைய பல துணை தேச அமைப்புகளுடன் கூடிய ஒரு பல தேச நாடு உருசியாவாகும். நாடு முழுவதும் 193க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் உள்ளன. 2010ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் தொகையில் தோராயமாக 81% பேர் உருசியர்களாக இருந்தனர். மக்கள் தொகையில் எஞ்சிய 19% பேர் சிறுபான்மை இனத்தவராக இருந்தனர்; உருசியாவின் மக்கள் தொகையில் ஐந்தில் நான்கு பங்குக்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய வழித்தோன்றல்களாகவும் -இதில் பெருமளவினர் சிலாவிய மக்களாவர், ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மையினத்தவர் பின்னோ-உக்ரிய மற்றும் செருமானிய மக்களாக உள்ளனர். ஐரோப்பிய வழித் தோன்றல்களில் பெருமளவினர் சிலாவிய மக்களாக உள்ளனர். ஐக்கிய நாடுகள் அவையின் கூற்றுப் படி உருசியாவின் புலம் பெயர்ந்து வந்த மக்கள் தொகையானது உலகின் மூன்றாவது மிகப் பெரியதாகும். 1.16 கோடிக்கும் மேற்பட்டோர் இவ்வாறாகப் புலம் பெயர்ந்து உள்ளனர்; இதில் பெரும்பாலானவர்கள் சோவியத் காலத்துக்குப் பிந்தைய நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். முதன்மையாக இவர்கள் நடு ஆசியாவிலிருந்து வந்துள்ளனர். மொழி உருசியாவின் அதிகாரப்பூர்வ மற்றும் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி உருசியம் ஆகும். ஐரோப்பாவின் மிக அதிகமாகப் பேசப்படும் தாய் மொழி இதுவாகும். ஐரோவாசியாவின் புவியியல் ரீதியாக மிகப் பரவலாக உள்ள மொழி இதுவாகும். மேலும், உலகின் மிகப் பரவலாகப் பேசப்படும் இசுலாவிய மொழி இதுவாகும். அனைத்துலக விண்வெளி நிலையத்தின் இரு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று உருசியம் ஆகும். மேலும், ஐக்கிய நாடுகள் அவையின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளில் இது ஒன்றாகும். உருசியா பல மொழிகளை உடைய நாடாகும். தோராயமாக 100 - 150 சிறுபான்மையின மொழிகள் நாடு முழுவதும் பேசப்படுகின்றன. 2010ஆம் ஆண்டின் உருசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி நாடு முழுவதும் 13.75 கோடிப் பேர் உருசிய மொழியையும், 43 இலட்சம் பேர் தாதர் மொழியையும், மற்றும் 11 இலட்சம் பேர் உக்குரைனிய மொழியையும் பேசுகின்றனர். உருசியத்தோடு மேற்கொண்டதாக தங்களது சொந்த மொழிகளை நிறுவும் உரிமையை நாட்டின் தனிக் குடியரசுகளுக்கு அரசியலமைப்பானது உரிமையாகக் கொடுத்துள்ளது. மேலும், தங்களது தாய் மொழியைத் தக்க வைக்கும் உரிமையை இதன் குடிமக்களுக்கு உறுதி அளிக்கிறது. தாய் மொழியின் கல்வி மற்றும் வளர்ச்சிக்குத் தகுந்த சூழ்நிலையை உருவாக்கவும் வழி வகை செய்கிறது. எனினும், பல மொழிகள் அழியும் நிலைக்குச் செல்வதன் காரணமாக உருசியாவின் மொழியியல் பல்வகைமையானது வேகமாகக் குறைந்து வருவதாகப் பல்வேறு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். சமயம் அரசியலமைப்பு ரீதியாக உருசியா ஒரு மதச் சார்பற்ற நாடு ஆகும். அதிகாரப் பூர்வமாக சமயச் சுதந்திரமானது இதன் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய சமயம் கிழக்கு மரபு வழிக் கிறித்தவமாகும். உருசிய மரபுவழித் திருச்சபையால் இது முதன்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. நாட்டின் "வரலாறு மற்றும் இதன் ஆன்மீகம் மற்றும் பண்பாட்டின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில்" இதன் "தனிச் சிறப்பான பங்குக்காக" சட்டபூர்வமாக இத்திருச்சபையானது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் "வரலாற்றுப் பாரம்பரியத்தை" உள்ளடக்கிய நாட்டின் "பாரம்பரிய" சமயங்களாக உருசியச் சட்டத்தால் கிறித்தவம், இசுலாம், யூதம் மற்றும் பௌத்தம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உருசியாவில் இரண்டாவது மிகப் பெரிய சமயமாக இசுலாம் உள்ளது. வடக்கு காக்கேசியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மற்றும் வோல்கா-உரால் பகுதியில் உள்ள சில துருக்கிய மக்கள் இடையே பாரம்பரிய சமயமாக இது உள்ளது. கால்மீக்கியா, புரியாத்தியா, சபைக்கால்சுக்கி ஆகிய பகுதிகளில் பௌத்த சமயத்தினர் பெருமளவில் காணப்படுகின்றனர். துவா பகுதியிலுள்ள மக்கள் தொகையில் பெருமளவினர் பௌத்த சமயத்தவர் ஆவர். ரோத்னோவெரி (இசுலாவிய புது பாகன் சமயம்), ஆசியனியம் (சிதிய புதுப் பாகன் சமயம்), பிற இன பாகன் சமயங்கள், மற்றும் ஒலிக்கும் செதார்களின் அனஸ்தாசியானியம் போன்ற உள்-பாகன் இயக்கங்கள், இந்து சமயத்தின் பல்வேறு இயக்கங்கள், சைபீரிய சாமன் மதம் மற்றும் தெங்கிரி மதம், ரோரிசியம் போன்ற பல்வேறு புது தியோசாபிய இயக்கங்கள், மற்றும் பிற நம்பிக்கைகள் உள்ளிட்ட பிற சமயங்களையும் பல உருசியர்கள் பின்பற்றுகின்றனர். சில சமயச் சிறுபான்மையினர் ஒடுக்கு முறையை எதிர் கொண்டுள்ளனர். சிலர் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளனர்; குறிப்பாக 2017இல் உருசியாவில் யெகோவாவின் சாட்சிகள் சட்டத்திற்குப் புறம்பானவர்களாக ஆக்கப்பட்டனர். அன்றிலிருந்து இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். "தீவிரவாத" மற்றும் "பாரம்பரியமற்ற" நம்பிக்கையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. 2012இல் ஆராய்ச்சி அமைப்பான சிரேதா நீதி அமைச்சகத்துடன் ஒத்துழைப்பில் அரேனா அட்லசைப் பதிப்பித்தது. 2010ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் துணைத் தகவல் இதுவாகும். நாடு முழுவதுக்குமான ஒரு பெரிய எடுத்துக்காட்டு சுற்றாய்வை அடிப்படையாகக் கொண்ட உருசியாவின் சமய மக்கள் தொகை மற்றும் தேசியங்களை விளக்கமாக வரிசைப்படுத்தி இது கூறியது. இதன் முடிவுகளானவை 47.3% உருசியர்கள் தங்களைக் கிறித்தவர்கள் என்று அறிவித்ததைக் குறிப்பிட்டது. இது 41% உருசிய மரபுவழித் திருச்சபையினர், 1.5% வெறுமனே மரபுவழித் திருச்சபையினர் அல்லது உருசியம் சாராத மரபுவழித் திருச்சபைகளின் உறுப்பினர்கள், 4.1% திருச்சபை தொடர்புற்ற கிறித்தவர்கள் மற்றும் 1%க்கும் குறைவானவர்கள் பழைய நம்பிக்கையாளர்கள், கத்தோலிக்கர்கள் அல்லது சீர்திருத்தத் திருச்சபையினர் ஆகியோரை உள்ளடக்கியிருந்தது. 25% எந்தவொரு குறிப்பிட்ட சமயத்துடனும் தொடர்பில்லாத நம்பிக்கையாளர்களாகவும், 13% இறை மறுப்பாளர்களாகவும், 6.5% முசுலிம்களாகவும், 1.2% "கடவுள்கள் மற்றும் மூதாதையர்களுக்கு மதிப்பளிக்கும் பாரம்பரிய சமயங்களைப் பின்பற்றுவோராகவும்" (ரோட்னோவெரி, பிற பாகன் சமயங்கள், சைபீரிய சாமன் மதம் மற்றும் தெங்கிரி மதம்), 0.5% புத்த சமயத்தவர், 0.1% யூத சமயத்தவர்களாகவும் மற்றும் 0.1% இந்துக்களாகவும் இருந்தனர். கல்வி உருசியா வயது வந்தோருக்கான எழுத்தறிவு வீதமாக 100%ஐக் கொண்டுள்ளது. 11 ஆண்டு கால கட்டாயக் கல்வியைக் கொண்டுள்ளது. இது 7 முதல் 17-18 வயதுடைய குழந்தைகளுக்கு என்று உள்ளதாகும். அரசியலமைப்பின் படி இதன் குடிமக்களுக்கு இது கட்டணமில்லாக் கல்வியை வழங்குகிறது. உருசியாவின் கல்வி அமைச்சகமானது தொடக்க மற்றும் மேல்நிலைக் கல்விக்கும், மேலும் தொழிற்கல்விக்கும் பொறுப்பானதாகும். அதே நேரத்தில் உருசியாவின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகமானது அறிவியல் மற்றும் உயர்கல்விக்குப் பொறுப்பானதாகும். பிராந்திய அதிகார மையங்கள் தங்களது அதிகார வரம்புகளுக்குள் கூட்டாட்சிச் சட்டங்களின் நடப்பிலுள்ள ஆதாரக் கட்டமைப்புகளுக்குள் கல்வியை ஒழுங்குபடுத்துகின்றன. உலகின் மிக அதிகக் கல்வியறிவு பெற்ற நாடுகளில் உருசியாவும் ஒன்றாகும். மூன்றாம் நிலைக் கல்வி கற்ற பட்டதாரிகளை உலகின் ஆறாவது மிக அதிக தகவுப் பொருத்த அளவாக மக்கள் தொகையின் சதவீதத்தில் 62.1%ஆக இது கொண்டுள்ளது. 2018இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4.7%ஐக் கல்விக்காகச் செலவழித்தது. உருசியாவின் பள்ளிக்கு முந்தைய கல்வி அமைப்பானது மிகவும் மேம்பட்டதாகவும், விருப்பத் தேர்ந்தெடுப்புக்கு உரியதாகவும் உள்ளது. 3 - 6 வயதுடைய குழந்தைகளில் சுமார் ஐந்தில் நான்கு பங்கினர் நாள் குழந்தையர் பேணகங்கள் அல்லது பாலர் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். தொடக்கப் பள்ளியானது 11 ஆண்டுகளுக்குக் கட்டாயமாகும். 6 - 7 வயதில் இருந்து இது தொடங்குகிறது. ஓர் அடிப்படைப் பொதுக் கல்விச் சான்றிதழ்களுக்கு இது வழி வகுக்கிறது. மேல்நிலைத் தரச் சான்றிதழுக்கு மேற்கொண்டு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பள்ளிக் கல்வியானது தேவைப்படுகிறது. உருசியர்களில் சுமார் எட்டில் ஏழு பங்கினர் தங்களது கல்வியை இந்த நிலையைத் தாண்டித் தொடர்கின்றனர். உயர் கல்விக்கான கல்வி நிலையங்களுக்கான அனுமதியானது தேர்வுக்குரியதாகவும், மிகவும் போட்டியிட வேண்டியதாகவும் உள்ளது; முதல் பட்டதாரிப் படிப்புகளானவை பொதுவாக ஐந்து ஆண்டுகள் பிடிக்கின்றன. மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் மற்றும் சென் பீட்டர்சுபெர்கு அரசுப் பல்கலைக்கழகம் ஆகியவை உருசியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய பல்கலைக்கழகங்கள் ஆகும். நாடு முழுவதும் 10 மிக அதிக மதிப்புடைய கூட்டாட்சிப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. 2019இல் அயல்நாட்டு மாணவர்களுக்கான உலகின் ஐந்தாவது முன்னணி கல்வி கற்கும் இடமாக உருசியா திகழ்ந்தது. சுமார் மூன்று இலட்சம் அயல்நாட்டு மாணவர்கள் இங்கு கல்வி கற்று வந்தனர். சுகாதாரம் அரசியலமைப்பின் படி உருசியா இலவச, அனைவருக்குமான சுகாதாரச் சேவையை அனைத்து உருசியக் குடிமக்களுக்கும் உறுதி செய்கிறது. இதை ஒரு கட்டாய அரசு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக உறுதி செய்கிறது. உருசியக் கூட்டரசின் சுகாதார அமைச்சகமானது உருசியப் பொது சுகாதாரச் சேவை அமைப்பை மேற்பார்வையிடுகிறது. இத்துறையானது 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பணியாளர்களாகக் கொண்டுள்ளது. உள்ளூர் நிர்வாகத்தை மேற்பார்வையிட தங்களது சொந்த சுகாதாரத் துறைகளை கூட்டாட்சி அமைப்புகளும் கொண்டுள்ளன. உருசியாவில் தனியார் சுகாதாரச் சேவைகளைப் பெற ஒரு தனியான தனியார் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமானது தேவைப்படுகிறது. 2019இல் உருசியா இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.65%ஐ சுகாதாரச் சேவைக்காகச் செலவிட்டது. பிற வளர்ந்த நாடுகளை விட இதன் சுகாதாரச் சேவை செலவீனமானது குறிப்பிடத்தக்க அளவுக் குறைவாக உள்ளது. உலகின் மிக அதிக பெண்களுக்கு சார்பான பாலின வீதங்களில் ஒன்றை உருசியா கொண்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணுக்கம் 0.859 ஆண்களே இங்கு உள்ளனர். இது அதிகப்படியான ஆண்கள் இறப்பு வீதத்தால் ஏற்பட்டுள்ளது. 2021இல் உருசியாவில் பிறப்பின் போது ஒட்டு மொத்த ஆயுட்கால எதிர்பார்ப்பானது 70.06 ஆண்டுகளாக (ஆண்களுக்கு 65.51 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 74.51 ஆண்டுகள்) இருந்தது. இது ஒரு மிகக் குறைவான குழந்தை இறப்பு வீதத்தையும் (1,000 குழந்தைப் பிறப்புகளுக்கு 5 குழந்தைகள் இறப்பு வீதம்) கொண்டுள்ளது. உருசியாவில் இறப்பிற்கான முதன்மையான காரணமாக இதயம் சம்பந்தமான நோய்கள் உள்ளன. உருசியாவில் பரவலான உடல் நலப் பிரச்சினையாக உடற் பருமன் உள்ளது. பெரும்பாலான வயது வந்தோர் அதிகப்படியான எடையுடையவர்களாக உள்ளனர். எனினும், நாட்டில் மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையானது உருசியாவின் வரலாற்று ரீதியான அதிக மதுபான நுகர்வு வீதமாகும். உலகின் மிக அதிக மதுபான நுகர்வுகளில் ஒன்றாக இது தொடர்கிறது. கடைசி தசாப்தத்தில் ஒரு குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்ட போதிலும் இந்நிலை தொடர்கிறது. நாட்டில் மற்றுமொரு சுகாதாரப் பிரச்சினையானது புகைப் பழக்கமாகும். தற்போது குறைந்து வந்தாலும் நாட்டின் அதிகப்படியான தற்கொலை வீதமானது ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாகத் தொடர்கிறது. பண்பாடு உருசிய எழுத்தாளர்களும், தத்துவவாதிகளும் ஐரோப்பிய இலக்கியம் மற்றும் சிந்தனைகளின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியுள்ளனர். பாரம்பரிய இசை, பாலட் நடனம், விளையாட்டு, ஓவியம் மற்றும் திரைத்துறை ஆகியவற்றின் மீது பெரும் தாக்கத்தை உருசியர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் விண்வெளிப் பயணத்திற்கு முன்னோடிப் பங்களிப்புகளையும் கூட இந்நாடு கொடுத்துள்ளது. உருசியா 32 யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களுக்குத் தாயகமாக உள்ளது. இதில் 21 களங்கள் பண்பாட்டுடன் தொடர்புடையதாகும். அதே நேரத்தில் 31 மேற்கொண்ட களங்கள் பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ள பட்டியலில் உள்ளன. உலகம் முழுவதும் உருசியப் பண்பாட்டைப் பரப்பியதில் ஒரு முதன்மையான பங்கை பெரிய உலகளாவிய வெளிநாடு வாழ் உருசியர்கள் ஆற்றியுள்ளனர். உருசியாவின் தேசியச் சின்னமான இரட்டைத் தலைக் கழுகானது ஜார் மன்னர்களின் காலத்தில் இருந்தே உள்ளது. இதன் மரபுக் குறியீடு மற்றும் வரலாற்று ஆய்வில் இது முக்கிய அம்சமாக உள்ளது. நாட்டின் தேசிய நபராக்கங்களாக உருசியக் கரடியும், உருசியத் தாயும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றனர். மத்ரியோஷ்கா பொம்மையானது உருசியாவின் ஒரு பண்பாட்டுச் சின்னமாகக் கருதப்படுகிறது. விடுமுறைகள் பொது, தேசப்பற்று மற்றும் சமயம் சார்ந்த எட்டு அதிகாரப்பூர்வ விடுமுறைகளை உருசியா கொண்டுள்ளது. ஆண்டானது 1 சனவரி அன்று புது வருட நாளில் தொடங்குகிறது. இதற்குப் பிறகு உடனடியாக 7 சனவரி அன்று உருசிய மரபுவழிக் கிறித்துமசு கொண்டாடப்படுகிறது. இவை இரண்டுமே நாட்டின் மிகப் பிரபலமான விடுமுறைகள் ஆகும். தந்தை நாட் டின் தற்காப்பாளர் நாளானது ஆண்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்டு 23 பெப்பிரவரி அன்று கொண்டாடப்படுகிறது. 8 மார்ச்சு அன்று கொண்டாடப்படும் அனைத்துலக பெண்கள் நாளானது சோவியத் சகாப்தத்தின் போது உருசியாவில் பிரபலமானது. பிற விடுமுறை நாட்களை விட "15 மடங்கு" அதிக இலாபத்தை மாஸ்கோவின் பூ விற்பனையாளர்கள் பொதுவாகப் பெறுகின்றனர் என்ற அளவுக்கு பெண்கள் குறித்த ஆண்டுக் கொண்டாட்டமானது மிகவும் பிரபலமாகியுள்ளது. குறிப்பாக, உருசிய ஆண்களிடையே இது பிரபலமாகியுள்ளது. இளவேனில் மற்றும் தொழிலாளர் நாள் 1 மே அன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் தொழிலாளர்களுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சோவியத் சகாப்த விடுமுறை நாள் இதுவாகும். நாசி செருமனி மீதான சோவியத் வெற்றி மற்றும் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவை நினைவுபடுத்தும் வெற்றி நாளானது 9 மே அன்று மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் வருடாந்திர ஒரு பெரும் அணிவகுப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிரபலமான இறப்பற்ற இராணுவப் பிரிவின் குடிசார் நிகழ்ச்சியையும் இது குறிக்கிறது. வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்திலிருந்து இறையாண்மையை உருசியா அறிவித்ததை நினைவுபடுத்த 12 சூன் அன்று கொண்டாடப்படும் உருசிய நாள் மற்றும் மாஸ்கோவைப் போலந்துக்காரர்கள் ஆக்கிரமித்து இருந்ததன் முடிவைக் குறிக்கும் 1612ஆம் ஆண்டு எழுச்சியை நினைவுபடுத்த 4 நவம்பர் அன்று கொண்டாடப்படும் ஒற்றுமை நாள் உள்ளிட்டவை பிற தேசப்பற்று விடுமுறைகள் ஆகும். பல பிரபலமான பொதுவற்ற விடுமுறைகள் உள்ளன. பழைய வருடப் பிறப்பானது 14 சனவரி அன்று கொண்டாடப்படுகிறது. மாசுலேனிட்சா என்பது பண்டைக் கால மற்றும் பிரபலமான ஒரு கிழக்கு இசுலாவிய நாட்டுப்புற விடுமுறை ஆகும். விண்வெளிக்குள் சென்ற முதல் மனிதப் பயணத்திற்குப் புகழ் அளிக்கும் விதமாக 12 ஏப்பிரல் அன்று விண்வெளி வீரர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. புனித வெள்ளி மற்றும் திரித்துவ ஞாயிறு ஆகியவை இரு முதன்மையான கிறித்தவ விடுமுறைகள் ஆகும். கலையும், கட்டடக் கலையும் தொடக்க கால உருசிய ஓவியங்களானவை சின்னங்கள் மற்றும் ஒளிரும் சுதை ஓவியங்களில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன. 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபல சின்ன ஓவியரான ஆந்த்ரே உருப்லேவ் உருசியாவின் பொக்கிசம் எனக் கருதப்படும் மிகச் சிறந்த சமயக் கலைகளில் சிலவற்றை உருவாக்கினார். 1757இல் நிறுவப்பட்ட கலைக்கான உருசியக் கல்வி நிலையமானது உருசியக் கலைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. சமயம் சாராத ஓவியங்கள் குறித்த மேற்குலகத் தொழில்நுட்பங்களை உருசியாவுக்குள் கொண்டு வந்தது. 18ஆம் நூற்றாண்டில் கல்விப் பணியாளர்களான இவான் அர்குனோவ், திமித்ரி லெவித்ஸ்கி, விளாதிமிர் போரோவிகோவ்ஸ்கி ஆகியோர் தாக்கம் ஏற்படுத்திய ஓவியர்களாக உருவாயினர். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கமானது கார்ல் பிரியுல்லோவ் மற்றும் அலெக்சாந்தர் இவானோவ் ஆகியோரால் வரையப்பட்ட பல முக்கியமான ஓவியங்களைக் கண்டது. இவர்கள் இருவருமே புனைவிய வரலாற்று சித்திரப்படாம்களுக்காக அறியப்படுகின்றனர். மற்றொரு புனைவிய ஓவியரான இவான் ஐவசோவ்ஸ்கி கடல் சார்ந்தவற்றைச் சித்தரிக்கும் ஓவியக் கலையின் மிகச் சிறந்த ஓவியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1860களில் இவான் கிராம்ஸ்கோய், இலியா ரெபின் மற்றும் வாசிலி பெரோவ் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட விமர்சனம் செய்த மெய்மையியலாளர்களின் (பெரெத்விசினிகி) ஒரு குழுவானது கல்வி நிலையத்தில் இருந்து பிரிந்தது. சமூக வாழ்வின் பல தரப்பட்ட அம்சங்களை ஓவியங்களில் சித்தரித்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கமானது குறியீட்டியலின் வளர்ச்சியைக் கண்டது. மிக்கைல் விருபேல் மற்றும் நிக்கோலசு ரோரிச் ஆகியோரால் இது பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. உருசிய அவந்த்-கார்டே கலையானது தோராயமாக 1890 முதல் 1930 வரை செழித்திருந்தது. எல் லிசிட்ஸ்கி, காசிமிர் மலேவிச், நடாலியா கோஞ்சரோவா, வசீலி கண்டீன்ஸ்கி, மற்றும் மார்க் சகால் ஆகியோர் இந்த சகாப்தத்தைச் சேர்ந்த உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்கள் ஆவர். உருசியக் கட்டடக் கலையின் வரலாறானது பண்டைக் கால இசுலாவியர்களின் தொடக்க கால மரக் கட்டடங்கள் மற்றும் கீவ ருஸ்ஸின் தேவாலயக் கட்டடக் கலையிலிருந்து தொடங்குகிறது. கீவ ருஸ் கிறித்தவ மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு பைசாந்தியக் கட்டடக் கலையால் இது முதன்மையாகத் தாக்கம் பெற்றிருந்தது. அரிசுடாட்டில் பியோரவந்தி மற்றும் பிற இத்தாலியக் கட்டடக் கலைஞர்கள் உருசியாவுக்கள் மறுமலர்ச்சி பாணிகளைக் கொண்டு வந்தனர். 16ஆம் நூற்றாண்டானது தனித்துவமான கூடாரம் போன்ற தேவாலயங்கள் மற்றும் வெங்காய வடிவக் குவிமாடம் போன்றவற்றின் வளர்ச்சியைக் கண்டது. வெங்காய வடிவக் குவிமாடமானது உருசியக் கட்டடக் கலையின் ஒரு தனித்துவமான அம்சமாகும். 17ஆம் நூற்றாண்டில் மாஸ்கோ மற்றும் யாரோசுலாவில் தீ போன்று காணப்படும் பாணியிலான அலங்காரமானது செழித்திருந்தது. 1680களின் நரிஷ்கின் பரோக் கட்டடக் கலைக்கு படிப்படியாக இது வழி விட்டது. பேரரசர் பேதுருவின் சீர்திருத்தங்களுக்குப் பிறகு உருசியக் கட்டடக் கலையானது மேற்கு ஐரோப்பியப் பாணிகளால் தாக்கம் பெற்றது. ரோகோகோ கட்டடக் கலைக்கான 18ஆம் நூற்றாண்டு ஆர்வமானது பார்த்தாலோமியோ ரசுதிரேல்லி மற்றும் அவரது பின்பற்றாளர்களின் வேலைப்பாடுகளுக்கு இட்டுச் சென்றது. வாசிலி பசேனோவ், மத்வேய் கசகோவ் மற்றும் இவான் இசுதரோவ் போன்ற மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய உருசியக் கட்டடக் கலைஞர்கள் மாஸ்கோ மற்றும் சென் பீட்டர்சுபெர்கில் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும் நினைவுச் சின்னங்களை உருவாக்கினர். இதைத் தொடர்ந்து வந்த பல உருசியக் கலை வடிவங்களுக்கு ஓர் அடித்தளத்தை நிறுவிக் கொடுத்தனர். பேரரசி கேத்தரீனின் ஆட்சிக் காலத்தின் போது சென் பீட்டர்சுபெர்கானது புதுப் பாரம்பரியக் கட்டடக் கலையின் ஒரு வெளிப்புற அருங்காட்சியகமாக மாற்றம் பெற்றது. முதலாம் அலெக்சாந்தருக்குக் கீழ் பேரரசு பாணியானது நடைமுறை ரீதியிலான கட்டடக்கலைப் பாணியாக உருவானது. 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியானது புது பைசாந்திய மற்றும் உருசிய புத்தெழுச்சிப் பாணிகளால் ஆதிக்கம் பெற்றிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருசியப் புதுப் பாரம்பரிய புத்தெழுச்சியானது ஒரு புதுப் பாணியானது. புதுக் கலை, கட்டமைப்புவாதம் மற்றும் பொதுவுடமைவாதப் பாரம்பரியம் போன்றவை 20ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியின் மிகப் பரவலான பாணிகள் ஆகும். இசை 18ஆம் நூற்றாண்டு வரை உருசியாவில் இசையானது முதன்மையாக தேவாலய இசை மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனங்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டில் பாரம்பரிய இசையமைப்பாளர் மிக்கைல் கிளிங்காவுடன் சேர்த்து ஐந்து பேரைக் கொண்ட த மைட்டி ஹேன்ட்புல் குழுவின் (இதற்குப் பிறகு பெலியயேவ் குழு வந்தது) பிற உறுப்பினர்கள், மற்றும் இசையமைப்பாளர்கள் ஆண்டன் மற்றும் நிக்கோலாய் உரூபின்ஸ்டெயினால் தலைமை தாங்கப்பட்ட உருசிய இசைக் குழுவுக்கு இடையிலான பிரச்சினைகளால் வரையறுக்கப்பட்டது. புனைவிய சகாப்தத்தின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கியின் பிந்தைய பாரம்பரியமானது 20ஆம் நூற்றாண்டுக்குள் செர்கேய் ரச்மனினோபால் தொடரப்பட்டது. அலெக்சாந்தர் சிரியாபின், அலெக்சாந்தர் கிலசுனோவ், இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, செர்கேய் புரோகோபியேவ் மற்றும் திமித்ரி சோஸ்தகோவிச், மற்றும் பின்னர் எடிசன் தெனிசோவ், சோபியா குபைதுலினா, ஜார்ஜி சிவிரிதோவ், மற்றும் ஆல்பிரெட் இசுனிட்கே ஆகியோர் 20ஆம் நூற்றாண்டின் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் ஆவர். சோவியத் சகாப்தத்தின் போது பாப் இசையும் கூட ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான புகழ்பெற்ற நபர்களை உருவாக்கியது. இதில் இரு பாலட் நடனக் கலைஞர்களான விளாதிமிர் விசொட்சுக்கி மற்றும் புலட் ஒகுட்சவா, மற்றும் மேடைக் கலைஞரான அல்லா புகசேவா ஆகியோர் அடங்குவர். சோவியத் அதிகாரக் குழுக்களிடமிருந்து தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதும் ஜாஸ் இசையானது செழித்து வளர்ந்தது. நாட்டின் மிகப் பிரபலமான இசை வடிவங்களில் ஒன்றாகப் பரிணாமம் அடைந்தது. 1980கள் வாக்கில் ராக் இசை உருசியா முழுவதும் பிரபலமானது. அரியா, அக்குவேரியம், டிடிடி மற்றும் கினோ போன்ற இசைக் குழுக்களை உருவாக்கியது. கினோ இசைக் குழுவின் தலைவரான விக்டர் திசோய் குறிப்பாக ஒரு மிகப் பெரிய நபராக உருவானார். 1960களிலிருந்தே உருசியாவில் பாப் இசையானது தொடர்ந்து செழித்து வளர்ந்தது. டி. எ. டி. யு. போன்ற உலகளவில் பிரபலமான இசைக் குழுக்களையும் கொண்டிருந்தது. இலக்கியமும், தத்துவமும் உலகின் மிக அதிகத் தாக்கம் கொண்ட மற்றும் வளர்ச்சி அடைந்த இலக்கியங்களில் ஒன்றாக உருசிய இலக்கியம் கருதப்படுகிறது. இது நடுக் காலத்தில் இருந்து தொடங்கியது. அப்போது பழைய கிழக்கு இசுலாவிய மொழியில் இதிகாசங்களும், காலவரிசை நூல்களும் எழுதப்பட்டன. அறிவொளிக் காலத்தின் போது மிகைல் இலமனோசொவ், தெனிசு போன்விசின், கவ்ரிலா தெர்சவின் மற்றும் நிகோலாய் கரம்சின் ஆகியோரின் நூல்களுடன் இலக்கியமானது முக்கியத்துவத்தில் வளர்ச்சி அடைந்தது. 1830களின் தொடக்கத்தில் இருந்து உருசியக் கவிதையின் பொற்காலத்தின் போது கவிதை, வசனம் மற்றும் நாடகம் ஆகியவற்றில் பெரிதும் ஆச்சரியப்பட வைத்த பொற்காலத்தின் கீழ் இலக்கியமானது சென்றது. கவிதைத் திறமையுள்ளவர்கள் மலர்வதற்குப் புனைவியமானது அனுமதியளித்தது. வாசிலி சுகோவ்ஸ்கி, பிறகு இவரது சீடரான அலெக்சாந்தர் பூஷ்கின் வெளிச்சத்துக்கு வந்தனர். பூஷ்கினின் காலடியைத் தொடர்ந்து ஒரு புதிய தலைமுறைக் கவிஞர்கள் பிறந்தனர். இதில் மிக்கைல் லெர்மோந்தோவ், நிகோலாய் நெக்ரசோவ், அலெக்செய் கான்ஸ்டன்டினோவிச் டால்ஸ்டாய், பியோதர் தியுத்சேவ் மற்றும் அபனசி பெத் ஆகியோர் அடங்குவர். முதல் மிகச் சிறந்த உருசியப் புதின எழுத்தாளர் நிகோலாய் கோகோல் ஆவார். இவருக்குப் பிறகு இவான் துர்கெனோவ் வந்தார். சிறு கதைகள் மற்றும் புதினங்கள் ஆகிய இரண்டிலுமே சிறந்தவராக துர்கெனோவ் திகழ்ந்தார். பியோதர் தஸ்தயெவ்ஸ்கி மற்றும் லியோ டால்ஸ்டாய் ஆகியோர் சீக்கிரமே சர்வதேச அளவில் புகழ் பெற்றவர்களாக உருவாயினர். மிக்கைல் சல்திகோவ்-செத்ரின் நையாண்டி வசனங்களை எழுதினார். அதே நேரத்தில் நிகோலாய் லெஸ்கோவ் அவரது சிறு புனைவுகளுக்காக முக்கியமாக நினைவுபடுத்தப்படுகிறார். இந்நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ஆன்டன் செக்கோவ் சிறுகதை எழுதுவதில் சிறந்து விளங்கினார். ஒரு முன்னணி நாடக ஆசிரியராக உருவானார். நீதிக் கதை எழுத்தாளரான இவான் கிரிலோவ், விமர்சகரான விசாரியோன் பெலின்ஸ்கி போன்ற புனைவு சாராத எழுத்தாளர்கள், மற்றும் அலெக்சாந்தர் கிரிபோயேதோவ் மற்றும் அலெக்சாந்தர் ஓஸ்த்ரோவ்ஸ்கி போன்ற நாடக ஆசிரியர்கள் உள்ளிட்டோர் 19ஆம் நூற்றாண்டின் பிற முக்கியமான எழுத்தாளர்கள் ஆவர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கமானது உருசியக் கவிதையின் வெள்ளிக் காலமாகக் குறிப்பிடப்படுகிறது. அலெக்சாந்தர் புளோக், அன்னா அக்மதோவா, போரிஸ் பாஸ்ரர்நாக், மற்றும் கான்ஸ்டன்டைன் பல்மோன்ட் போன்ற கவிஞர்களை இந்தச் சகாப்தமானது கொண்டிருந்தது. அலெக்சாண்டர் குப்ரின், நோபல் பரிசு பெற்ற இவான் புனின், லியோனித் ஆந்த்ரேயேவ், எவ்செனி சம்யதின், திமித்ரி மெரேஸ்கோவ்ஸ்கி மற்றும் ஆந்த்ரே பெளி போன்ற சில முதல் தர புதின எழுத்தாளர்கள் மற்றும் சிறுகதை எழுத்தாளர்களில் சிலர் இக்காலமானது உருவாக்கியது. 1917ஆம் ஆண்டின் உருசியப் புரட்சிக்குப் பிறகு உருசிய இலக்கியமானது சோவியத் மற்றும் வெளி நாடுகளில் வாழும் வெள்ள இயக்கத்தவர் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. 1930களில் பொதுவுடமைவாத மெய்யியலானது உருசியாவில் முதன்மையான புதிய பாணியாக உருவானது. இதன் முன்னணி நபர் மாக்சிம் கார்க்கி ஆவார். இந்த பாணிக்கான அடித்தளங்களை இவர் அமைத்தார். மிக்கைல் புல்ககோவ் சோவியத் சகாப்தத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராவார். நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின் புதினமான வீரம் விளைந்தது உருசிய இலக்கியத்தின் மிக வெற்றிகரமான வேலைப்பாடுகளில் ஒன்றாகும். வெளிநாடு வாழ் வெள்ளை இயக்க எழுத்தாளர்களில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் விளாதிமிர் நபோக்கோவ், மற்றும் ஐசாக் அசிமோவ் அடங்குவர். ஐசாக் அசிமோவ் "பெரும் மூன்று" அறிவியல் புனைவு எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சில எழுத்தாளர்கள் சோவியத் சித்தாந்தத்தை எதிர்க்கத் துணிந்திருந்தனர். நோபல் பரிசு பெற்ற புதின எழுத்தாளரான அலெக்சாண்டர் சோல்செனிட்சின் இதில் ஒருவராவார். இவர் குலாக் எனும் தண்டனைப் பணி முகாம்களில் இருந்த வாழ்வு குறித்து எழுதினார். உருசியத் தத்துவமானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக உள்ளது. அலெக்சாந்தர் கெர்சன் வேளாண்மை மக்கள் ஈர்ப்பியத்தின் தந்தைகளில் ஒருவராக அறியப்படுகிறார். மிகைல் பக்கூனின் அரசின்மையின் தந்தையாகக் குறிப்பிடப்படுகிறார். அரசின்மை-பொதுவுடமைவாதத்தின் மிக முக்கியமான கோட்பாட்டாளராக பேதுரு குரோபோத்கின் திகழ்கிறார். மிக்கைல் பக்தினின் எழுத்துக்களானவை அறிஞர்களுக்கு முக்கியமான அகத்தூண்டுதலாக இருந்துள்ளன. பிரம்மஞானத்தின் முன்னணிக் கோட்பாட்டாளராகவும், பிரம்மஞான சபையின் இணை நிறுவனராகவும் எலனா பிளவாத்ஸ்கி பன்னாட்டு அளவில் பின்பற்றாளர்களைப் பெற்றுள்ளார். ஒரு முக்கியப் புரட்சியாளரான விளாதிமிர் லெனின் பொதுவுடமைவாதத்தின் ஒரு திரிபு வடிவமான லெனினிசத்தை உருவாக்கினார். மற்றொரு புறம் லியோன் திரொட்ஸ்கி திரொட்ஸ்கியியத்தை உருவாக்கினார். 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ஒரு முக்கியமான தத்துவவாதியாக அலெக்சாந்தர் சினோவியேவ் திகழ்ந்தார். தன்னுடைய பாசிசப் பார்வைகளுக்காக அறியப்படும் அலெக்சாந்தர் துகின் "புவிசார் அரசியலின் குரு" என்று கருதப்படுகிறார். சமையல் பாணி கால நிலை, பண்பாடு, சமயப் பாரம்பரியங்கள் மற்றும் நாட்டின் பரந்த புவிவியலால் உருசிய சமையல் பாணியானது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அண்டை நாடுகளின் சமையல் பாணிகளுடன் இது ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. புல்லரிசி, கோதுமை, வாற்கோதுமை மற்றும் சிறுதானியப் பயிர்களானவை பல்வேறு ரொட்டிகள், மெலிதான கேக் வகைகள் மற்றும் கூலங்கள், மேலும் பல பானங்களுக்கான மூலப் பொருட்களைக் கொடுக்கின்றன. ரொட்டியின் பல வேறுபட்ட வகைகளானவை உருசியா முழுவதும் மிகப் பிரபலமானவையாக உள்ளன. ஸ்ச்சி, போர்ஸ்ச், உகா, சோல்யங்கா, மற்றும் ஓக்ரோஷ்கா உள்ளிட்ட சுவை மிகுந்த சூப்புகளும், குழம்புகளும் காணப்படுகின்றன. இசுமேதனா (ஒரு கடுமையான புளிப்புப் பாலேடு) மற்றும் மயோனெய்சு ஆகியவை அடிக்கடி சூப்புகள் மற்றும் சாலட்களுடன் சேர்க்கப்படுகின்றன. பிரோஸ்கி, பிலினி மற்றும் சிர்னிகி ஆகியவை மெலிதான கேக் வகைகளின் உள்நாட்டு வகைகளாகும். பீஃப் இசுதுரோகனோப், சிக்கன் கீவ், பெல்மெனி மற்றும் சஷ்லிக் ஆகியவை பிரபலமான மாமிச உணவுகள் ஆகும். முட்டைக் கோசு சுருள்களுக்குள் திணிக்கப்பட்ட (கோலுப்த்சி) உணவுகளானவை பொதுவாக மாமிசங்கள் கொண்டு திணிக்கப்படுகின்றன. இவை பிற மாமிச உணவுகளில் ஒன்றாகும். ஓலிவியர் சாலட், வினேக்ரெட் மற்றும் உடையுடைய ஹெர்ரிங் உள்ளிட்டவை பிற சாலட்கள் ஆகும். உருசியாவின் மதுவற்ற தேசிய பானம் குவாசு ஆகும். தேசிய மதுபானம் வோட்கா ஆகும். உருசியா மற்றும் பிற பகுதிகளில் வோட்காவின் தயாரிப்பானது 14ஆம் நூற்றாண்டிலிருந்து நடைபெறுகிறது. உலகின் மிக அதிக வோட்கா நுகர்வை இந்நாடு கொண்டுள்ளது. அதே நேரத்தில், பீரானது மிகப் பிரபலமான மதுபானமாக உள்ளது. 21ஆம் நூற்றாண்டில் ஒயின் உருசியாவில் அதிகரித்து வந்த பிரபலத் தன்மையைக் கொண்டுள்ளது. நூற்றாண்டுகளாக உருசியாவில் தேநீரானது பிரபலமானதாக உள்ளது. பொது ஊடகமும், திரைத்துறையும் உருசியாவில் 400 செய்தி முகமைகள் உள்ளன. டாஸ், ஆர்ஐஏ நோவாஸ்தி, இசுப்புட்னிக் மற்றும் இன்டர்பேக்ஸ் ஆகியவை பன்னாட்டு அளவில் செயல்படும் மிகப் பெரிய ஊடகங்கள் ஆகும். உருசியாவில் மிகப் பிரபலமான ஊடகமாகத் தொலைக்காட்சி உள்ளது. நாடு முழுவதும் உரிமம் வழங்கப்பட்ட வானொலி நிலையங்களில் குறிப்பிடத்தக்கவையாக ரேடியோ ரோசீ, வெஸ்டி எஃப்எம், எக்கோ ஆஃப் மாஸ்கோ, ரேடியோ மயக் மற்றும் ருஸ்கோயே ரேடியோ ஆகியவை உள்ளன. 16,000 பதியப்பட்ட செய்தித் தாள்களில் ஆர்குமென்டி இ ஃபக்தி, கோம்சோமோல்ஸ்கயா பிராவ்டா, ரோசிய்ஸ்கயா கசெட்டா, இஸ்வெஸ்டியா, மற்றும் மாஸ்கோவ்ஸ்கிஜ் கோம்சோமோலெட்ஸ் ஆகியவை பிரபலமாக உள்ளன. அரசால் நடத்தப்படும் சேனல் 1 மற்றும் உருசியா-1 ஆகியவை முன்னணி செய்தி அலைவரிசைகள் ஆகும். அதே நேரத்தில் உருசியாவின் பன்னாட்டு ஊடகச் செயல்பாடுகளின் முகமாக ஆர்டி அலைவரிசையானது உள்ளது. ஐரோப்பாவில் மிகப் பெரிய காணொளி விளையாட்டுச் சந்தையை உருசியா கொண்டுள்ளது. நாடு முழுவதும் 6.50 கோடிக்கும் அதிகமான காணொளி விளையாட்டாளர்கள் உள்ளனர். உருசியா மற்றும் பின்னர் சோவியத் திரைத் துறையானது புதுமைக்கான ஒரு மைதானமாகத் திகழ்ந்தது. போர்க்கப்பல் பத்தியோம்கின் போன்ற உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களை இது கொடுத்தது. 1958இல் புருசெல்ஸ் உலகின் கண்காட்சியில் எக்காலத்திலும் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த திரைப்படமாக இது பெயரிடப்பட்டது. சோவியத் சகாப்த இயக்குநர்கள், மிகக் குறிப்பாக செர்கீ ஐசென்ஸ்டைன் மற்றும் ஆந்த்ரே தர்கோவ்ஸ்கி ஆகியோர் உலகின் மிகப் புதுமையான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்களில் சிலராக உருவாயினர். ஐசென்ஸ்டைன் லெவ் குலேசோவின் ஒரு மாணவர் ஆவார். குலேசோவ் உலகின் முதல் திரைப்படப் பள்ளியான ஒளிப்பதிவுக்கான அனைத்து-ஒன்றிய அமைப்பில் முன்னோடித் திரைப்பட எடிட்டிங்கான சோவியத் அசைவிலாப் படக் கோட்பாட்டை உருவாக்கியவர் ஆவார். திசிகா வெர்தோவின் "திரை-கண்" கோட்பாடானது ஆவணப் பட உருவாக்கம் மற்றும் திரைப்பட மெய்மையியலின் வளர்ச்சியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சப்பேவ், த கிரேன்ஸ் ஆர் பிளையிங், மற்றும் பேலட் ஆஃப் எ சோல்ஜர் உள்ளிட்ட பல சோவியத் பொதுவுடைமை மெய்மையியல் திரைப்படங்களானவை கலை ரீதியாக வெற்றிகரமானவையாகத் திகழ்ந்தன. 1960கள் மற்றும் 1970களானவை சோவியத் திரைத் துறையில் ஒரு மிகப் பெரும் அளவில் வேறுபட்ட கலைப் பாணிகளைக் கண்டன. எல்தர் ரியாசனோவ் மற்றும் லியோனிட் கைதை ஆகியோரின் அந்நேர நகைச்சுவையானவை மிகவும் பிரபலமானவையாக இருந்தன. அவர்களின் வசனங்களில் பல இன்றும் கூட பொது வழக்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. 1961-68இல் செர்கே போந்தர்சுக் லியோ டால்ஸ்டாயின் இதிகாசமான போரும் அமைதியும் நூலை இயக்கினார். இது அகாதமி விருதைப் பெற்றது. சோவியத் ஒன்றியத்தில் தயாரிக்கப்பட்ட மிக அதிக செலவுடைய திரைப்படமாக இது இருந்தது. 1969இல் விளாதிமிர் மோதிலின் வைட் சன் ஆப் த டெசர்ட் சர்வதேசத் திரைப்படமானது வெளியிடப்பட்டது. ஓசுடெர்ன் (சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட மேற்கத்தியத் திரைப்பட பாணி) வகையில் ஒரு மிகப் பிரபலமான திரைப்படமாகத் திகழ்ந்தது. விண்வெளிக்குள்ளான எந்தவொரு பயணத்துக்கு முன்னரும் விண்ணோடிகளால் பாரம்பரியமாகப் பார்க்கப்படும் திரைப்படமாக இது உள்ளது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிறகு உருசியத் திரைத் துறையானது பெரும் இழப்புகளைச் சந்தித்தது. எனினும், 2000களின் பிற்பகுதியில் இருந்து இது மீண்டும் ஒரு முறை வளர்ச்சியைக் கண்டுள்ளது. திரைத் துறையானது தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. விளையாட்டு உருசியாவின் மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து ஆகும். 1960இல் யூரோ கோப்பையை வென்றதன் மூலம் சோவியத் ஒன்றிய தேசியக் காற்பந்து அணியானது முதல் ஐரோப்பிய வெற்றியாளராக உருவாகியது. 1988இல் யூரோ கோப்பையின் இறுதியை அடைந்தது. உருசியக் கால்பந்து கிளப்களான சிஎஸ்கேஏ மாஸ்கோ மற்றும் செனித் சென் பீட்டர்சுபெர்கு ஆகியவை 2005 மற்றும் 2008இல் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவை வென்றன. 2008இல் யூரோ கோப்பைக்கான அரையிறுதியை உருசிய தேசியக் காற்பந்து அணியானது அடைந்தது. 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி மற்றும் 2018 உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளை நடத்தும் நாடாக உருசியா திகழ்ந்தது. எனினும், ஃபிஃபா மற்றும் யூஈஎஃப்ஏ போட்டிகளிலிருந்து உருசிய அணிகளானவை தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஐஸ் ஆக்கியானது உருசியாவில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. அதன் காலம் முழுவதும் சோவியத் தேசிய ஐஸ் ஆக்கி அணியானது இந்த விளையாட்டில் பன்னாட்டு அளவில் ஆதிக்கம் செலுத்தியது. பண்டி என்பது உருசியாவின் தேசிய விளையாட்டாகும். இவ்விளையாட்டில் வரலாற்று ரீதியாக மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்த நாடாக உருசியா திகழ்கிறது. உருசிய தேசிய கூடைப்பந்து அணியானது 2007 யூரோ கூடைப்பந்துப் போட்டியை வென்றது. இதுவும் உருசிய கூடைப்பந்து கிளப்பான பிபிசி சிஎஸ்கேஏ மாஸ்கோவும் மிக வெற்றிகரமான ஐரோப்பியக் கூடைப்பந்து அணிகளில் சிலவாகத் திகழ்கின்றன. சோச்சி ஒலிம்பிக் பூங்காவில் சோச்சி ஆட்டோட்ரோமில் வருடாந்திர பார்முலா ஒன் உருசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியானது நடத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டின் உக்குரைன் மீதான உருசியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து இப்போட்டி நிறுத்தப்பட்டது. வரலாற்று ரீதியாக ஒலிம்பிக் விளையாட்டுகளில் மிக வெற்றிகரமான போட்டியாளர்களில் ஒரு பிரிவினராக உருசிய தடகள வீரர்கள் திகழ்ந்துள்ளனர். சீரிசை சீருடற்பயிற்சியில் முன்னணி நாடாக உருசிய திகழ்கிறது. உருசியாவின் ஒருங்கிசைந்த நீச்சலானது உலகின் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பனிச் சறுக்கு நடனமானது உருசியாவில் மற்றுமொரு பிரபலமான விளையாட்டு ஆகும். குறிப்பாக இணைப் பனிச்சறுக்கு மற்றும் பனிச்சறுக்கு நடனம் ஆகியவை பிரபலமானவையாக உள்ளன. உருசியா ஏராளமான முக்கிய டென்னிஸ் விளையாட்டாளர்களை உருவாக்கியுள்ளது. நாட்டில் ஒரு பரவலான பிரபல பொழுது போக்காகச் சதுரங்கம் திகழ்கிறது. உருசியர்களில் பலர் உலகின் முன்னணி செஸ் விளையாட்டாளர்களாகத் தசாப்தங்களுக்குத் திகழ்ந்துள்ளனர். 1980இன் கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மாஸ்கோவிலும், 2014இன் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2014இன் குளிர்கால மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் சோச்சியுலும் நடத்தப்பட்டன. எனினும், ஊக்க மருந்து விதிமீறலுக்காக உருசியாவின் தடகள வீரர்கள் 43 ஒலிம்பிக் பதக்கங்கள் பறிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். பிற எந்தவொரு நாட்டை விடவும் இந்த எண்ணிக்கை மிக அதிகமானதாகும். உலகளாவிய மொத்தத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இதுவாகும். குறிப்புகள் மேற்கோள்கள் ஆதாரங்கள் மேலும் படிக்க Bartlett, Roger P. A history of Russia (2005) online Breslauer, George W. and Colton, Timothy J. 2017. Russia Beyond Putin (Daedalus) online Brown, Archie, ed. The Cambridge encyclopedia of Russia and the Soviet Union (1982) online Florinsky, Michael T. ed. McGraw-Hill Encyclopedia of Russia and the Soviet Union (1961). Frye, Timothy. Weak Strongman: The Limits of Power in Putin's Russia (2021) excerpt Greene, by Samuel A. and Graeme B. Robertson. Putin v. the People: the Perilous Politics of a Divided Russia (Yale UP, 2019) excerpt Hosking, Geoffrey A. Russia and the Russians: a history (2011) online Kort, Michael. A Brief History of Russia (2008) online Lowe, Norman. Mastering Twentieth Century Russian History (2002) excerpt Millar, James R. ed. Encyclopedia of Russian History (4 vol 2003). online Riasanovsky, Nicholas V., and Mark D. Steinberg. A History of Russia (9th ed. 2018) 9th edition 1993 online Rosefielde, Steven. Putin's Russia: Economy, Defence and Foreign Policy (2020) excerpt Service, Robert. A History of Modern Russia: From Tsarism to the Twenty-First Century (Harvard UP, 3rd ed., 2009) excerpt Smorodinskaya, Tatiana, and Karen Evans-Romaine, eds. Encyclopedia of Contemporary Russian Culture (2014) excerpt; 800 pp covering art, literature, music, film, media, crime, politics, business, and economics. Walker, Shauin. The Long Hangover: Putin's New Russia and the Ghosts Of the Past (2018, Oxford UP) excerpt வெளி இணைப்புகள் அரசாங்கம் Official Russian governmental portal Chief of State and Cabinet Members (archived 4 October 2013) பொதுத் தகவல் Russia. த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. Russia at UCB Libraries GovPubs (archived 22 October 2008) Russia from BBC News Russia at பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் Key Development Forecasts for Russia from International Futures பிற Post-Soviet Problems from the Dean Peter Krogh Foreign Affairs Digital Archives (archived 15 December 2012) ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகள் வடகிழக்கு ஆசிய நாடுகள் ஜி-20 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
2780
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF
கட்டிடக்கலைப் பாணி
கட்டிடக்கலைப் பாணி என்பது பெரும்பாலும் அமைப்பு அடிப்படையில், வடிவம், தொழினுட்பம், கட்டிடப் பொருட்கள் போன்றவற்றின் அடிப்படையில், கட்டிடக்கலையை வகைப்படுத்தும் முறையைக் குறிக்கின்றது. எனினும் இது கட்டிடக்கலையை முழுமையாக விளங்கிக்கொள்வதற்கு ஏற்ற ஒரு வழியல்ல. பொதுவாகப் பாணி பற்றிய எண்ணக்கரு கட்டிடக்கலையின் படிமுறை வளர்ச்சி, அதன் வரலாறு என்பனபற்றிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதென்பதுடன், சில அம்சங்களில் பாணியென்பது வரலாற்றுடன் ஒத்த இயல்புடையதாகவும் அமைகின்றது. எனினும் அவை கட்டிடக்கலை தொடர்பான சிறிது வேறுபட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதிக் கட்டிடக்கலையை (Gothic Architecture) வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, அது அந்தக் கட்டிடக்கலையின் உருவாக்கத்துக்கு காரணமான எல்லாப் பண்பாட்டுச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்கிறது. அதே சமயம் "கோதிக்" கட்டிடக்கலைப் பாணியெனும்போது அது அக்கட்டிடக்கலையின் சில சிறப்பியல்புகளை மட்டுமே கருத்தில் கொள்கிறது. கட்டிடக்கலைப் பாணிகள் சிலவற்றின் பட்டியலைக் கீழே காணலாம். இவற்றையும் பார்க்கவும் கட்டிடக்கலை வரலாறு மேற்கோள்கள் கட்டிடக்கலை கட்டிடக்கலைப் பாணிகள்
2785
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D
ஆலிசு இன் வொண்டர்லாண்ட்
ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் (Alice in Wonderland, அற்புத உலகில் ஆலிஸ்) 1865 இல் லூயிஸ் கரோலினால் எழுதப்பட்ட ஒரு புதினம். முயல் குழிக்குள் விழுந்து அங்கொரு அற்புத உலகத்தைக் காணும் ஆல்ஸ் என்ற சிறுமியின் கதையை இப்புதினம் சொல்கிறது. ”அற்புத உலகில் ஆலிசின் சாகசங்கள்” (Alice's Adventures in Wonderland) என்ற முழுப்பெயர் கொண்ட இது, வெளியாகி சுமார் 150 ஆண்டுகள் ஆன பின்னரும் பெரியவர்கள் குழந்தைகள் என அனைத்து அகவையினரின் குறையா வரவேற்பைப் பெற்றுள்ளது. இலக்கியப் பிதற்றல் பாணியின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. விந்தையான மாந்தவுருவக விலங்குகள் நிறைந்த ஆலிசின் அற்புத உலகம், புதினத்தின் கதை வடிவம், கதை கூறும் தன்மை ஆகியவை கனவுருப்புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தான் பணிபுரிந்த கல்லூரி முதல்வரின் இளைய மகளுக்கு 1862 சூலை 4-இல் இவர் சொல்லத்துவங்கிய கதையே ஆலிசின் விந்தை உலகமாக விரிவு கொண்டது. ஆலிஸ் என்ற பெண் தோட்டத்தில் கடிகாரத்தைப் பார்த்து கொண்டே ஓடுகின்ற ஒரு முயலைக் காண்கிறாள். அது நுழைந்து ஓடிய ஒரு மரத்தடி பொந்தைத் தேடிப் பார்க்கையில் அவளறியாமல் உள்ளே விழுந்து விட்டாள். அவள் நேராக எங்கே விழுந்தாள் என்ன செய்தாள் என்பதே மீதி கதை. . இதில் ஊடும் மெல்லிய நகைச்சுவையும், வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாட்டை அறியத்துடிக்கும் கேள்விகளை பூடகமாக வெளிப்படுத்துவதாலும், இது ஒரு செவ்விலக்கியமாகக் கருதப்பட்டு, அனைத்து வயதினராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது. மேற்கோள்கள் சுட்டிகள் குட்டன்பெர்க் திட்டத்தில் ஆலிஸின் அற்புத உலகம் செவ்விலக்கிய நூல்கள்
2786
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D
லூயிஸ் கரோல்
லூயிஸ் கரோல் (Lewis Carroll, ஜனவரி 27, 1832 - ஜனவரி 14, 1898) என்ற புனைபெயர் கொண்டவர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் (Charles Ludwidge Dogston). இவர் பிரித்தனில் வசித்த ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்படக் கலைஞர். இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. படைப்புகள் ஆலிஸின் அற்புத உலகம் (Alice's Adventure in the wonderland) என் கண்ணாடியின் ஊடே (Through my Looking-Glass) The Hunting of the Snark Euclid and his Modern Rivals The Alphabet Cipher மேற்கோள்கள் பிரித்தானிய புகைப்படக் கலைஞர்கள் 1832 பிறப்புகள் 1898 இறப்புகள் ஆங்கிலேயக் கணிதவியலாளர்கள் ஆங்கிலேய எழுத்தாளர்கள்
2787
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
சார்லி சாப்ளின்
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. இளமைப் பருவம் சாப்ளின், இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 1896-ஆம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் அநாதை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஹான்வெல் பள்ளி என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பன்னிரண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் (Cane Hill Asylum) என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்பு இவரும் 1928-ஆம் ஆண்டில் இறந்தார். சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894-ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி இலண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். 1903-ஆம் ஆண்டில் "ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்" (Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது - செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey's Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், ஃப்ரெட் கர்னோவின் Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அமெரிக்காவின் குடிபெயர்வுப் பதிவுகளின்படி கார்னோ குழுவுடன் அக்டோபர் 2, 1912 - அன்று அமெரிக்கா வந்தடைந்தார். கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார் - இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார். இருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர். திரையுலக வாழ்க்கை தயாரிப்பாளர் மாக் செனட் சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார். முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையுமாகும். இவரது வளர்ச்சியையும், இவரது நிருவாகியாக பணிபுரிந்த சிட்னியின் ஆற்றலையும் சாப்ளினின் சம்பளப் பட்டியல் எடுத்துக்காட்டியது. இவர் 1919-ஆம் ஆண்டில் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ், கிரிபித்துடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவைத் துவங்கினார். 1927-ஆம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930-ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கை தேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952-ஆம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928-ஆம் ஆண்டுத் திரைப்படம் "தி சர்க்கஸ்" படத்தின் தலைப்பு இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல். தி கிரேட் டிக்டேடர் இவரது முதல் டாக்கீஸ் 1940-ஆம் ஆண்டில் வெளியான "தி கிரேட் டிக்டேடர்" (The Great Dictator). இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இதில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார் - ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறை பார்த்தார். போர் முடிந்த பிறகு, ஹோலோகாஸ்ட்டின் கொடுமை உலகிற்கு தெரியவந்த பிறகு சாப்ளின் இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருந்தால் ஹிட்லரையும், நாசியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என்றார் இவரது கடைசி திரைப்படங்கள் "தி கிங் இன் நியூ யார்க்" (1957), "தி சாப்லின் ரெவ்யூ" (1959) மற்றும் சோஃபியா லாரென், மார்லன் ப்ராண்டோ நடித்த "அ கௌண்டஸ் ஃப்ரம் ஹாங்காங்". கம்யூனிச சிந்தனைகளும் குற்றச்சாட்டுகளும் சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் இடது சார்புடையதாகக் கருதப்படுகிறது. இதனையே இவரது திரைப்படங்களில், முக்கியமாக "மாடர்ன் டைம்ஸ்" (Modern Times) பிரதிபலித்தன. இப்படம் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை சித்தரித்தது. "மெக்கார்த்திச காலங்களில்" இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கம்யூனிஸ்ட்-எனவும் சந்தேகிக்கப்பட்டார்; ஜே.எட்கார் ஹூவர் எஃப்.பி.ஐ-யிடம் இவரை கண்காணிக்குமாறு உத்தரவிட்டு, அமெரிக்காவில் சாப்ளின் வாழும் உரிமையை நீக்க முயற்சித்தார். சாப்ளினின் வெற்றிகள் அனைத்துமே அமெரிக்காவில் அமைந்தாலும், அவர் பிரித்தானிய குடியுரிமையினையே நீட்டித்தார். 1952-ஆம் ஆண்டில் சாப்ளின் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதனை தெரிந்துகொண்ட ஹூவர் ஐ.என்.எஸ் (Immigration and Naturalization Service)-உடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாப்ளின் அமெரிக்கா திரும்பும் அனுமதிச் சீட்டை ரத்து செய்தார். ஆதலால் அவர் ஐரோப்பாவிலேயே தங்கும்படி நேர்ந்தது - பெரும்பாலும் வெவே, சுவிஸர்லாந்தில் வாழ்ந்தார். இவர் 1972-ஆம் ஆண்டில் சிறிது காலம், தனக்கு அளிக்கப்பட்ட கௌரவ ஆஸ்கார் விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா திரும்பினார். திருமணங்கள் இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ், பலமுறை தன் தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அக்டோபர் 23 1918-இல் இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை 1920-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. முப்பத்தி ஐந்து வயதில் "தி கோல்ட் ரஷ்" திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது, பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26 1924-இல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் $825,000 ஒப்பந்தத்துடன் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது. மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இதனால் இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன. சாப்ளினின் நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-இல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது. இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது; ஆனால், பேரி சாப்ளினை துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943-ஆம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார். இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை; குழந்தை 21 வயது வரும் வரை வாரம் $75 வழங்குமாறு உத்தரவிடப்பட்டார். சில நாட்கள் கழித்து, ஐகன் ஓ'நீலின் மகள், ஓனா ஓ'நீலை சந்தித்தார். இவரை ஜூன் 16, 1943 அன்று மணந்தார். சாப்ளினின் வயது அப்பொழுது 54, ஓ'நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர். சாப்ளினின் மரணம் சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட் (Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். மார்ச்சு 1, 1978-ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர். விருதுகளும் பெருமைகளும் சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார். சாப்ளின் Monsieur Verdoux திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான விருதுக்காகவும், தி கிரேட் டிக்டேடர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டாலும், விருதுகள் பெறவில்லை. 1972-ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்புக்கான விருதை கிளயர் புளூம் நடித்திருந்த லைம்லைட் (1952) திரைப்படத்திற்காக பெற்றார். 1952-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டாலும் மெக்கார்த்திசத்தினால் சாப்ளினுக்கேற்பட்ட பிரச்சனைகளால் லாஸ் ஏஞல்சில் வெளிவரவில்லை. 1972-ஆம் ஆண்டிலேதான் விருதுக்குத் தேர்வாவதற்கான கட்டுப்பாடுகளை நிறைவு செய்தது. "லைம்லைட்" திரைப்படத்தில் பஸ்டர் கீட்டனும் நடித்திருந்தனர். இதுவே இவ்விரு நகைச்சுவை மேதைகளும் முதலும் கடைசியுமாக சேர்ந்து தோன்றிய திரைப்படம். மார்ச் 4, 1975 அன்று பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் அரசி சாப்ளினுக்கு "சர்" பட்டம் அளித்தார். இவருக்கு இந்தப் பெருமையை வழங்கக் கோரி 1956ஆம் ஆண்டே பரிந்துரைத்திருந்தாலும், இதனை பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக எதிர்த்தது. சாப்ளின் ஒரு பொதுவுடைமையாளர் என்றும், அவரைச் சிறப்பிப்பதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஏற்கனவே விரிசல் விட்டிருந்த உறவு பாதிக்கப்படும் என்றும் கருதினார்கள். அக்காலத்தில்தான் பனிப் போர் அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது; மேலும் சூயஸ் கால்வாயினை கைப்பற்றும் முயற்சியும் இரகசியமாக திட்டமிடப்பட்டு வந்தது. சாப்ளின் "ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில்" இடம் பெற்றார். 1985-ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு, இவரது உருவத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு பெருமை சேர்த்தது. 1994-ஆம் ஆண்டு அல் ஹிர்ஸ்ஃபெல்ட் வடிவமைத்த அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார். 1992-ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை "சாப்ளின்" என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இதனை இயக்கியவர் ஆஸ்கார் விருது பெற்ற சர். ரிச்சர்ட் அட்டன்பரோ. இதில் நடித்தவர்கள் ராபர்ட் டௌனி ஜூனியர், டான் ஐக்ராய்ட், ஜெரால்டின் சாப்ளின் (சாப்ளினின் மகள் சாப்ளினின் தாயாக நடித்திருந்தார்), சர் அந்தோனி ஹாப்கின்ஸ், மில்லா ஜோவோவிச், மொய்ரா கெல்லி, கெவின் கிலைன், டயானா லேன், பெனிலோப் ஆன் மில்லர், பால் ரைஸ், மரீசா டோமை, நான்சி டிராவிஸ் மற்றும் ஜேம்ஸ் வுட்ஸ். 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற "நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர்" கருத்துக் கணிப்பில் உலகத்தின் தலை சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சாப்ளினைத் தேர்ந்தெடுத்தார்கள். சாப்ளினைப் பற்றிய சுவையான செய்திகள் சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும்பொழுது பெரிதும் வியப்புற்றனர். சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக்காரர் சாமி ரிஷவெஸ்கியிடம் பயின்றார். சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒரு முறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் இரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது! திரையாக்கங்கள் நடிகராக நடித்த குறும்படங்கள் 1914 பிட்வின் ஷவர்ஸ் எ பிஸி டே காட் இன் எ கேபரே காட் இன் தி ரெய்ன் க்ரூயல், க்ரூயல் லவ் டோ அண்ட் டைநமைட் தி பேஸ் ஆன் தி பார்ரூம் ஃப்ளோர் தி ஃபேடல் மால்லட் எ பிலிம் ஜானி ஜென்டில்மேன் ஆஃப் நெர்வ் கெட்டிங் அக்வின்டட் ஹர் ஃப்ரிண்டி தி பாண்டிட் ஹிஸ் ஃபேவரைட் பாஸ்டைம் ஹிஸ் மியூசிகல் கேரீர் ஹிஸ் நியூ புரொஃபெஷன் ஹிஸ் ப்ரீஹிஸ்டோரிக் பாஸ்ட் ஹிஸ் ட்ரைஸ்டிங் பிளேஸ் கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ் தி நாக்ஓவர் லாஃபிங் கியாஸ் மேபெல் அடி தி வீல் மேபெல்ஸ் பிஸி டே மேபெல்ஸ் மேரிட் லைஃப் மேபெல்ஸ் ஸ்ட்ரேஞ்ச் பிரிடிகமெண்ட் மேக் எ லிவிங் தி மாஸ்குரேடர் தி நியூ ஜேனிடர் தி பிராபர்டி மேன் ரிக்ரியேஷன் தி ரௌண்டர்ஸ் தி ஸ்டார் போர்டர் டாங்கோ டாங்கில்ஸ் தோஸ் லவ் பேங்க்ஸ் டிவெண்டி மினிட்ஸ் ஆஃப் லவ் 1915 தி பாங்க் சார்லி சாப்ளின்ஸ் பர்லெஸ்கியூ ஆன் கேமென் பை தி சீ தி சாம்பியன் ஹிஸ் நியூ ஜாப் ஹிஸ் ரீஜெனரேஷன் இன் தி பார்க் எ ஜிட்னி எலோப்மெண்ட் மிக்சட் அப் எ நைட் அவுட் எ நைட் இன் தி ஷோ ஷாங்கேய்ட் தி டிராம்ப் எ வுமன் வர்க் 1916 பிஹைண்ட் தி ஸ்கிரீன் தி கௌண்ட் தி ஃபையர்மேன் தி ஃப்ளோர்வாக்கர் ஒன் ஏ.எம். தி பான்ஷாப் போலீஸ்! தி ரிங்க் தி வாகபாண்ட் 1917 தி அட்வென்சுரர் தி கியூர் ஈஸி ஸ்ட்ரீட் தி இமிகிரண்ட் 1918 தி பாண்ட் சேஸ் மீ சார்லீ எ டாக்ஸ் லைஃப் டிரிப்பிள் டிரபள் 1919 எ டேஸ் பிளஷர் சன்னிசைட் 1921 தி ஐடில் கிளாஸ் 1922 பே டே 1923 தி பில்கிரிம் திரைப்படங்கள் டில்லிஸ் பங்க்சர்ட் ரோமான்ஸ் (1914) (நடிகராக மட்டும்) ஷோல்டர் ஆர்ம்ஸ் (1918) தி கிட் (1921) தி நட் (1921) (கௌரவ வேடம்) சோல்ஸ் ஃபார் சேல் (1923) (கௌரவ வேடம்) எ வுமன் ஆஃப் பாரிஸ் (1923) (கௌரவ வேடம், இயக்குநர்) தி கோல்ட் ரஷ் (1925) எ வுமன் ஆஃப் தி ஸீ (1926) (தயாரிப்பாளர்) தி சர்கஸ் (1928) ஷோ பீப்பிள் (1928) (கௌரவ வேடம்) சிட்டி லைட்ஸ் (1931) மாடர்ன் டைம்ஸ் (1936) தி கிரேட் டிக்டேட்டர் (1940) மோன்சியர் வெர்டாக்ஸ் (1947) லைம்லைட் (1952) எ கிங் இன் நியூயார்க் (1957) எ கௌண்டஸ் ஃப்ரம் ஹாங் காங்'' (1967) (கௌரவ வேடம் மற்றும் இயக்குநர்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப் பூர்வமான சாப்ளின் இணையத் தளம் சார்லி சாப்ளின் மன்றம் - அவரது இரசிகர்கள் கலந்துரையாட ஒரு இணைய தளம் சாப்ளினைப் போற்றும் பக்கங்கள் ஐ. எம். டி .பி-இல் சாப்ளின் பக்கம் சாப்ளினைப் பற்றி ஏரான் ஹேல் எழுதிய கட்டுரை கிளௌன் மினிஸ்ட்ரி எழுதிய சாப்ளினின் வரலாறு சாப்ளின் அருங்காட்சியகம் ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள் 1889 பிறப்புகள் 1977 இறப்புகள் சிறப்பு அகாதமி விருதை பெற்றவர்கள்
2798
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%29
வேடுவர் (இலங்கை)
வேடுவர் (Veddas, Veddahs, , வெத்தா), எனப்படுவோர் இலங்கைக் காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர். இவர்கள் இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே, இலங்கையின் வரலாற்றுக் காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மைக்கொண்டவர்கள் என்றும் வில்ஹெய்ம் கெய்கர் தெரிவித்துள்ளார். இலங்கைக் காடுகளில் வசிக்கும் இவர்கள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக, காடுகளில் வேட்டையாடி வாழப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் வேடுவர் என அழைக்கப்பட்டாலும், அண்மையக் காலங்களாக சாதாரண மனித வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் தற்போதும் காட்டு வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்களாக வேடுவராக வாழ்வோரும் உள்ளனர் எனும் செய்திகள் உள்ளன. பேசும் மொழி தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாக இவர்கள் கருதப்படுகிறார்கள். சிங்களவர்கள் இவர்களை வேடுவர் என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர் ஆகியோரிடமிருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிப் பிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்குக் கரையோரப் பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். இவர்கள் பேசும் மொழி ஆரிய மொழிகள் அல்ல என்று கருத்து தெரிவிக்கும் வில்ஹெய்ம் கெய்கர், அதேவேளை ஆரிய மொழிகளின் சாயல் இவர்களது பேச்சில் இருக்கின்றன எனவும், அவை அண்மைக்காலங்களில் இவர்களது பேச்சில் கலந்தவைகள் என்றும் தெரிவித்துள்ளார். வரலாறு இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபினர் என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மகாவம்சத்தை மேற்கோள் காட்டி பௌத்தப் பிக்குகளும், இலங்கையின் பௌத்த மகாவம்சக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும், இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர். தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இலங்கையின் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருடனும், கிழக்கு மாகாணத்தில் தமிழருடனும் கலந்துவிட்டனர். ஆரம்பக் காலங்களில் மட்டுமன்றி தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது. அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி நீர்தாங்கு பகுதிக்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி மாதுறு ஓயா தேசியப் பூங்கா என்ற பெயரில் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த வன்னியலா எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு வன்னியலா எத்தோ முதியவர் பேசியபோது, "எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு மண்வெட்டிகளைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள" என்று குறிப்பிட்டாராம். பிரேமதாசா ஆட்சி இலங்கையின் முன்னாள் சனாதிபதிகளில் ஒருவரான ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியின் போது பெருமளவான வேடுவர்களைச் சாதாரண குடிமக்களாக மாற்றி அவர்களுக்கு குடியுரிமைத் தகுதிகளையும் வழங்கினார். பண்பாடு மற்ற இனத்தவர்களால் இவர்கள் பிற்பட்டவர்களாகவும், முன்னேற்றமடையாத காட்டு வாசிகளாகவும் கருதப்பட்டாலும், இவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாகவும், நல்ல மனிதப் பண்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என இவர்களுடைய பண்பாட்டை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் எந்தப் பொருட்களையும் எண்ணுவதற்கு விரல்களுக்குப் பதில் காடுகளில் கிடைக்கும் சிறிய குச்சுகளைச் சேகரித்து அதன் மூலம் கணக்கிடுகிறார்கள். இவற்றையும் பார்க்கவும் இலங்கை பழங்குடி மக்கள் கரையோர வேடர்கள் வேடர்கள் மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் A great deal of information on them can be found at Vedda.org Survival International profile on the Wanniyala-Aetto Sri Lankan history Vedda lore East coast Veddas Veddas - now only a household name இலங்கையின் பழங்குடிகள் இலங்கை இனக்குழுக்கள்
2800
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்கள்
பண்டைய மற்றும் தற்கால ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களை மூலங்களாகக் கொண்ட சொற்கள் பல காணப்படுகின்றன. மேற்படி மொழிகளுக்கான அகராதிகள் அவ்வாறான சில சொற்களுக்கான மூலங்களாகத் தமிழ் மொழியைக் குறிப்பிடுகின்றன. அவ்வாறான மேலும் பல சொற்கள் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இவ்வாறு ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களின் கலப்பு பல்வேறு காலகட்டங்களிலும், பல காரணங்களால் நிகழ்ந்துள்ளன. கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னரே தமிழகத்துக்கும், ஐரோப்பிய நாகரீகங்களுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகள் காரணமாக சில வணிகப் பொருட்களின் பெயர்கள் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுள் புகுந்துள்ளன. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இவ்வாறான தமிழ்ச் சொற்கள் சில எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆங்கில மொழியிலும் அதனையொத்த ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் உள்ள ரைஸ் (Rice) என்னும் சொல் அரிசி என்னும் தமிழ்ச் சொல்லை மூலமாகக் கொண்டதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது இலத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளின் வழியாக நவீன மொழிகளுக்கு வந்து சேர்ந்தது என்பது அவர்கள் கருத்து. அண்மைக் காலங்களிலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பியர் ஆட்சி நடைபெற்ற போது சில தமிழ்ச் சொற்கள் ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்றுள்ளன. ஆங்கில மொழி அகராதிகளில் காணப்படும், mammoty (மமொட்டி - தமிழ் மண்வெட்டி இலிருந்து), cooly (கூலி - தமிழ் கூலி இலிருந்து) போன்ற சொற்கள் இத்தகையவை. தமிழ்ச் சொல்லான கட்டுமரம் ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் கடமரன் (Katamaran) என வழங்கப்படுவதும் இன்னொரு எடுத்துக்காட்டு. பிற மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்களின் பட்டியல் {|border="1" !தமிழ்ச் சொல்!!பிறமொழிச் சொல்!!மொழி!!வழி |- |கட்டுமரம்||katamaran||ஆங்கிலம்||தமிழ் --> ஆங்கிலம் |- |கஞ்சி||Congee||ஆங்கிலம்||தமிழ் --> ஆங்கிலம் |- |மண்வெட்டி||Mamotty||ஆங்கிலம்||தமிழ் --> ஆங்கிலம் |- |மாங்காய் ||mango ||ஆங்கிலம்||தமிழ் --> ஆங்கிலம் |- |அரிசி||rice||ஆங்கிலம்||தமிழ் --> ஆங்கிலம்} ஆங்கிலம் தமிழ்ச் சொற்கள் பிற மொழிகள்
2802
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
இயக்கர்
இயக்கர்கள் (Yaksha), ( உருவமற்ற, மனிதரல்லாதவர்கள் என்று கருதப்பட்டனர். இயற்கை வணக்கத்தைக் கொண்டவர்கள் இயக்கர்கள். பண்டைய சமஸ்கிருத நூல்கள், இவர்களை ஆரியரின் எதிரிகளாகக் குறிப்பிடுகின்றன. ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்னர் இயக்கர்கள் இந்தியாவில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கை வரலாற்று நூல்களும் இவர்களை அத்தீவின் பழங்குடிகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன. இலங்கையின் முதல் வரலாற்று நூலான மகாவம்சம், இயக்கர்கள் இலங்கையின் பல இடங்களில் நகரங்கள் அமைத்து அரசாண்டு வந்ததாக குறிப்பிடுகின்றது. இந்த நூலின்படி சிங்கள இனத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் எனப்படும் கலிங்க இளவரசன் இலங்கையில் இறங்கி இயக்க இளவரசியான குவேனியை மணம் செய்து கொண்டான். அவனுடன் வந்த 700 நண்பர்களும் இயக்கப் பெண்களையே மணந்து கொண்டனர். முற்காலத்தில் இலங்கைக்கு வந்த நாடு காண் பயணிகள் பலரும் இயக்கர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்போது இலங்கையில் சிறு தொகையினராகக் காணப்படும் வேடுவர் (வேடர்) இவர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றார்கள். படக்காட்சியகம் மேற்கோள்கள் உசாத்துணை க. தங்கேஸ்வரி,(ப 7) ஈழ மன்னர் குளக்கோட்டனின் சமய,சமுதாயப் பணிகள் Dictionary of Hindu Lore and Legend () by Anna Dhallapiccola இயக்கர் EBC: இயக்கர் இந்து தொன்மவியல் இலங்கையின் பழங்குடிகள் இயக்கர்
2805
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D
ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது. வாழ்க்கைக் குறிப்பு ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை,மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் . இவரது இயற்பெயர் முருகேசன். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துகளுக்கும் அறிமுகப்படுத்தினார். அரசியல் வாழ்க்கை ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்குப் பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ-யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறித் தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இலக்கியவாழ்க்கை அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது. வேலை ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர்,உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்! படைப்புகள் தன் வரலாறு ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 ) ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (செப்டம்பர் 1980 ) ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் (டிசம்பர் 2009) ஓர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள் வாழ்க்கை வரலாறுவாழ்விக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு) நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)கைவிலங்கு (ஜனவரி 1961)யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)பிரம்ம உபதேசம் (மே 1963)பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)எங்கெங்கு காணினும்... (மே 1979)ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)கரிக்கோடுகள் (ஜூலை 1979)மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)மூங்கில் காட்டு நிலா (கல்பனா இதழ்)ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)ஒவ்வொரு கூரைக்கும் கீழே... (ஜனவரி 1980)பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)இந்த நேரத்தில் இவள்... (1980)காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)காரு (ஏப்ரல் 1981)ஆயுத பூசை (மார்ச் 1982)சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)காற்று வெளியினிலே... (ஏப்ரல் 1984)கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)உன்னைப் போல் ஒருவன்ஹர ஹர சங்கர (2005)கண்ணன் (2011) சிறுகதைகள் தொகுப்புஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)தேவன் வருவாரா (1961)மாலை மயக்கம் (ஜனவரி 1962)யுகசந்தி (அக்டோபர் 1963)உண்மை சுடும் (செப்டம்பர் 1964)புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)சுயதரிசனம் (ஏப்ரல் 1967)இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)குருபீடம் (அக்டோபர் 1971)சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)புகை நடுவினிலே... (டிசம்பர் 1990) சுமைதாங்கிபொம்மை கட்டுரைத்தொகுதிகள் நானும் எனது நண்பர்களும் (1994) ஜெயகாந்தனின் சிறுகதைப்பட்டியல் (கால முறைப்படி) கட்டுரை பாரதி பாடம் இமயத்துக்கு அப்பால் தொகுப்பு ஜெயகாந்தன் பேட்டிகள் (கபிலன் பதிப்பகம்) திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கதைகள் சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்) ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்) உன்னைப் போல் ஒருவன் யாருக்காக அழுதான் புதுச்செருப்பு கடிக்கும் ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படம் உன்னைப் போல் ஒருவன் யாருக்காக அழுதான் புதுச்செருப்பு கடிக்கும் இதழ்கள் ஜெயகாந்தன் இதழ்கள் சிலவற்றிற்கு ஆசிரியராக இருந்தார். அவை: கல்பனா - மாதநாவல் - 1979 மே முதல் ஜெயபேரிகை சிந்தனைச் சிதறல்கள் "முதலில் எழுதுகிறவன் என்ற முறையில், எதை எழுதுவது என்று தீர்மானிப்பவன் நானே" "ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினைப் புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்" "மகாபாரதம் என்பது ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் எனக்குச் சொல்லவில்லை. மேலும் அது மகாபாரதம் என்ற கலாசாரப் பொக்கிஷத்தில் ஒரு விஷயமாகவோ, சிபாரிசாகவோ எனக்குப் படவேயில்லை. அந்த விஷயத்தைப் புரிந்துகொள்கிற பக்குவம், திரௌபதி அம்மன் கோவிலின் முன்னால் சாமியாடுகிற ஒரு பாமரனுக்கு இருக்கிற அளவுக்குக் கூட நமது பகுத்தறிவுச் சிங்கங்களுக்கு இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டமே" "அரசாங்க அலுவலகங்களில் மகான்களின் மரணத்துக்காக கொடிகள் தாழப்பறக்கட்டும். அவர்கள் நினைவாகப் பிரார்த்தனைகள் நடக்கட்டும். ஆனால், எது குறித்தும் எல்லாரும் கும்பல் கூடி அழவேண்டா. ரேடியோக்காரர்கள் தங்களது பொய்த்துயரத்தை காற்றில் கலப்படம் செய்யாதிருக்கட்டும்" "நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்... மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்... " விருதுகள் 1972 சாகித்திய அகாதமி விருது சில நேரங்களில் சில மனிதர்கள் புதினம் 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது ரஷ்ய விருது - இமயத்துக்கு அப்பால் மற்ற எழுத்தாளர்களின் கருத்துகள் "ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்குச் சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்" - அசோகமித்திரன் "மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ‘ஜெயகாந்தன்’ என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர் ‘தத்ரூபம்’ என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான சமாச்சாரம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப் புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். " - வண்ணநிலவன் "பாரதியார் வாழ்ந்த காலங்களில் கௌரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் நோபல் பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கௌரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்படுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கௌரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்." - எஸ். ராமகிருஷ்ணன் " ஜெயகாந்தன் ஒரு நீராவி என்ஜின் போல ஆற்றலும் வேகமும் கொண்ட படைப்பாளி என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் நீராவி என்ஜின்கள் கடந்த காலத்தின் அடையாளம். " - மாலன் விமர்சனம் எழுத்தாளர் ஜெயமோகன் தனது முன்னோடிகள் விமர்சன வரிசையில், மண்ணும் மரபும் எனும் நூலில் ஜெயகாந்தனின் படைப்புலகை குறித்து விவாதித்துள்ளார். மேலும் சில கட்டுரைகளை அவரது தளத்தில் எழுதியுள்ளார். விமர்சகர் எம். வேதசகாயகுமார் தனது முனைவர் பட்ட ஆய்வை புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பாய்வு எனும் நூலாக்கியுள்ளார். 2009ல் முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஜெயகாந்தனின் குறுநாவல்களில் ஆய்வு செய்துள்ளார். ஜெயகாந்தன் இலக்கியத்தடம், ஜெயகாந்தன் ஒரு பார்வை ஆகிய நூல்களை முறையே ப.கிருஷ்ணசாமி, கே.எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் எழுதியுள்ளனர். ரவிசுப்பிரமணியன் எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன்'' என்ற பேரில் ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். ஜெயகாந்தனின் மறைவிற்கு பிறகு அவர் பற்றி எழுத்தாளர்கள் ஆற்றிய உரைகளும் தொகுக்கப்பட்ட நூல்களும் முக்கியமானவை. மறைவு ஜெயகாந்தன் 08.04.2015 அன்று இரவு 9.00 மணிக்கு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஜெயகாந்தன் - Life and Works - 1934 பிறப்புகள் 2015 இறப்புகள் தமிழக எழுத்தாளர்கள் இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் ஞானபீட விருது பெற்றோர் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்‎ கடலூர் மாவட்ட நபர்கள் பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள் தமிழ்ச் சமூகப் போராளிகள் தமிழ் எழுத்தாளர்கள் தேசிய திரைப்பட விருது வென்றவர்கள் தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
2814
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது. வாழ்க்கைக் குறிப்பு புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். 1932 சூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார். இவரது முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். இந்தக் காலகட்டத்தில் அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார். இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ஜெமினி நிறுவனத்தின் அவ்வை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார். எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி சூன் 30, 1948-இல் காலமானார். படைப்புகளும் சிந்தனைகளும் புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார். தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்: தனது சமகால எழுத்தாளர்களின் எதிர்விமர்சனங்களைப் புறந்தள்ளி பின்வருமாறு கூறுகிறார்: சிறுகதைகள் புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். கு. ப. ராஜகோபாலன், பி. எஸ்.ராமையா, வ. ராமசாமி ஆகியோர் மணிக்கொடி இயக்கத்தின் மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர். மொழிபெயர்ப்புகள் புதுமைப்பித்தன் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிபெயர்த்த எழுத்தாளர்களில் சிலர்: மொலியர், கே பாயில், மேக்சிம் கார்க்கி, சின்கிளெயயர் லூயிஸ், எர்னஸ்ட் டோலர், வில்லியம் ஷேக்ஸ்பியர், இ. எம். டேலாஃப்ல்டு, வில்லியம் சரோயன், இ. வி. லூகாஸ், மோஷே ஸ்மிலான்ஸ்கி, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ஸன், பிரட் கார்ட், ஜான் கால்ஸ்வொர்த்தி, அலெக்ஸாண்டர் குப்ரின், ஆன்டன் செக்கோவ், பிராண்ஸ் காஃப்கா, இல்யா எக்ரன்பர்க், கை டி மாப்பாசான், வலெரி பிர்யுசொவ், அனாடோல் பிரான்ஸ், லியோனிட் ஆண்டிரியேவ், ஹென்ரிக் இப்சன், நாத்தேனியல் ஹாத்தோர்ன், எட்கர் ஆலன் போ, ராபர்ட் முரே கில்கிரிஸ்ட், பிரான்ஸிஸ் பெல்லர்பி, லியோனார்ட் ஸ்ட்ராங், ஜேக் லண்டன், பீட்டர் எக்கி, மிக்கெயில் அலெக்ஸாண்ட்ரோவிச் ஷோலோகோவ், தாமஸ் வுல்ஃப் மற்றும் ஜேம்ஸ் ஹேன்லி ஆவர். அவருக்கு மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் குறித்து தெளிவான கருத்து இருந்தது. தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்றும் பிறமொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர மொழிபெயர்ப்பே சிறந்த வழியெனவும் கருதினார். 1937ல் மொழிபெயர்ப்பா, தழுவலா என்ற பிரச்சனையில் அவருக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே காட்டமான இலக்கியச் சண்டையொன்று நிகழ்ந்தது. கவிதைகள் புதுமைப்பித்தன் 15 கவிதைகள் எழுதியுள்ளார். அவரது முதல் கவிதையான திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம், 1934ல் வெளிவந்தது. அவரது கவிதைகள் பெரும்பாலும் அவரது நண்பர் தொ. மு. சிதம்பர ரகுநாதனுக்கு வெண்பா வடிவில் எழுதப்பட்ட கடிதங்களாக அமைந்திருந்தன. அவரது 15 கவிதைகளும் அவர் இறந்த பின்பு தான் பிரசுரமாயின. அவரது சிறுகதைகளைப்போலவே அவரது கவிதைகளும் நையாண்டியும், நக்கலுமாக இருந்ததன. மூனாவருணாசலமே மூடா, அவரது கவிதைகளுள் புகழ் பெற்றது. அது மணிக்கொடி இயக்கத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்ட ஒரு தமிழ் புத்தகத்தினைச் (மு. அருணாசலத்தின் இன்றைய தமிழ் வசன நடை) சாடும் விமரிசனமாக எழுதப்பட்டிருந்தது. அரசியல் புத்தகங்கள் புதுமைப்பித்தன் அடிப்படையில் சோஷியலிச கருத்துகளைக் கொண்டவர். அவரது அரசியல் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை நான்கு. அவை ஃபாசிஸ்ட் ஜடாமுனி, (முசோலினியின் வாழ்க்கை வரலாறு) கப்சிப் தர்பார், (ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு) ஸ்டாலினுக்குத் தெரியும் மற்றும் அதிகாரம் யாருக்கு (இரண்டும் கம்னியூசத்தையும் ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை). நான்கு புத்தகங்களுமே ஃபாசிசத்தை எதிர்த்தும் ஸ்டாலினிய கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எழுதப்பட்டன. எழுத்துநடை சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். பெரும்பாலும் இவரது கதாபாத்திரங்கள் நெல்லைத் தமிழில் பேசினர். அவரது கதைகள் அவர் வாழ்ந்த இடங்களான சென்னை மற்றும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டிருந்தன. அவரது நடையில் பேச்சுத்தமிழ் மற்றும் செந்தமிழ் இரண்டும் கலந்திருந்தன. சிக்கலான விஷயங்களைக் கையாளும்போது கூட அவரது எழுத்துக்களில் நையாண்டி இழைந்தோடுவது அவரது சிறப்பு. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற இலக்கிய எதிராளிகளுடன் விவாதம் செய்தபோது கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நூல் விமரிசனங்களில் வசைபாடல்களையும் எழுதியுள்ளார். பிரபலமான எடுத்துக்காட்டுகள் புதுமைப்பித்தனின் தனித்துவ நடைக்கு அவரது கதைலிருந்து சில எடுத்துக்காட்டுகள்:{{Quotation|சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போக வஸ்து.|நம்பிக்கை}} புனைபெயர்கள் புதுமைப்பித்தனின் பிற புனைபெயர்கள்: சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு. புதுமைப்பித்தன் என்ற பெயரே அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. அவரது கதைகளின் கவர்ச்சிக்கு அப்பெயர் தான் ஓரளவு காரணம் என்று அவர் கருதினார். தனது கவிதைகளை வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற புனைப்பெயரில் எழுதினார். அவரது படைப்புகளில் தழுவல்கள் உள்ளன என எழுந்த குற்றச்சாட்டால் அவரது புனைபெயர்கள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தொ. மு. சிதம்பர ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறான புதுமைப்பித்தன் கதைகள்: சில விமரிசனங்களும் சில விஷமங்களும் என்ற புத்தகத்தில் நந்தன் என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டவை யாவும் தழுவல் படைப்புகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்ச்சைகள் தழுவல் கதைகள் மாப்பாசான் என்ற பிரெஞ்சு கதாசிரியரின் படைப்புகளின் தழுவல்களாகப் புதுமைப்பித்தனின் சில கதைகள் அமைந்துள்ளன என்று அவரது சம காலத்து எழுத்தாளர்களான பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) மற்றும் சோ. சிவபாதசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கிய ஆய்வாளர் காரை கிருஷ்ணமூர்த்தியும் பின்னர் இதே கருத்தினைக் கூறினார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தொ. மு. சிதம்பர ரகுநாதன் சமாதி, நொண்டி, பயம், கொலைகாரன் கதை, நல்ல வேலைக்காரன், அந்த முட்டாள் வேணு ஆகிய கதைகள் மாப்பாசான் கதைகளின் தழுவல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். பித்துக்குள்ளி என்ற கதை ராபர்ட் பிரௌனிங் கவிதையொன்றின் தழுவல் எனவும் கூறியுள்ளார். டாக்டர் சம்பத், நானே கொன்றேன், யார் குற்றவாளி, தேக்கங்கன்றுகள் போன்ற கதைகளும் தழுவல்களாக இருக்கலாம் எனக் கருத்துகள் உள்ளன. தமிழ் படித்த பொண்டாட்டி என்ற கதையைப் புதுமைப்பித்தன் தானே வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் அது மாப்பாசான் கதையின் தழுவல் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தழுவல்கள் எனக் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிற கதைகள் அவர் இறந்தபின் பிறரால் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆதரவாளர்கள், அவர் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாகத் தழுவல் என்பதைக் குறிப்பிட்டிருப்பார் எனக் கூறுகின்றனர். மேலும் அவர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் மாப்பாசானின் கதைகள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருக்கோ பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே அக்கதைகள் எவ்வாறு தழுவல்களாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். அவரது தழுவல் கதைகள் அனைத்தும் 1937க்கு முன்னதாக எழுதப்பட்டவை. அவ்வாண்டுதான் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் பிறமொழி படைப்புகளிலிருந்து தழுவி எழுதுவது குறித்து கடுமையான இலக்கியச் சண்டை நடத்தினார். தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.A.R. Venkatachalapathy, Foreword to Annai itta thee (in Tamil) பிற விமர்சனங்கள் புதுமைப்பித்தன் சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார், ஆனால் அவற்றுக்கான தீர்வைப் பற்றிக் கூற முயற்சிக்கவே இல்லை என விமர்சிக்கப் படுகிறார். அவரது படைப்புகளில் பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன; தீர்வுகளை வாசகர்களின் வசம் விட்டுவிடுகிறார். சில சமயங்களில் அவர் கதை நடைபெறும் களத்தையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் விவரிக்கும் அளவு மையக்கருத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார். சமீபத்தில் தமிழ் விமர்சகர் அ. மார்க்ஸ் தலித்துகள், மறவர்கள், கிருத்துவர்கள் மற்றும் புலால் உண்பவர்களை புதுமைப்பித்தன் இழிவு படுத்தியுள்ளார் என விமரிசனம் செய்துள்ளார். 2014ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, பொன்னகரம்'' ஆகிய இரு சிறுகதைகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக ஆட்சிக்குழு இக்கதைகள் தலித்துகளை இழிவுபடுத்துகின்றன என்று கருதியதால் அவற்றை நீக்கியது. கவிதைகள் திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம் மூனாவருணாசலமே மூடா இணையற்ற இந்தியா செல்லும் வழி இருட்டு அரசியல் நூல்கள் ஃபாசிஸ்ட் ஜடாமுனி கப்சிப் தர்பார் ஸ்டாலினுக்குத் தெரியும் அதிகாரம் யாருக்கு சிறுகதைகள் சாபவிமோசனம் செல்லம்மாள் கோபாலய்யங்காரின் மனைவி இது மிஷின் யுகம் கடவுளின் பிரதிநிதி கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் படபடப்பு ஒரு நாள் கழிந்தது தெரு விளக்கு காலனும் கிழவியும் பொன்னகரம் இரண்டு உலகங்கள் மனித யந்திரம் ஆண்மை ஆற்றங்கரைப் பிள்ளையார் அபிநவ ஸ்நாப் அன்று இரவு அந்த முட்டாள் வேணு அவதாரம் பிரம்ம ராக்ஷஸ் பயம் டாக்டர் சம்பத் எப்போதும் முடிவிலே இன்பம் ஞானக் குகை கோபாலபுரம் இலக்கிய மம்ம நாயனார் புராணம் 'இந்தப் பாவி' காளி கோவில் கபாடபுரம் கடிதம் கலியாணி கனவுப் பெண் காஞ்சனை கண்ணன் குழல் கருச்சிதைவு கட்டிலை விட்டிறங்காக் கதை கட்டில் பேசுகிறது கவந்தனும் காமனும் கயிற்றரவு கேள்விக்குறி கொடுக்காப்புளி மரம் கொலைகாரன் கை கொன்ற சிரிப்பு குப்பனின் கனவு குற்றவாளி யார்? மாயவலை மகாமசானம் மனக்குகை ஓவியங்கள் மன நிழல் மோட்சம் 'நானே கொன்றேன்!' நல்ல வேலைக்காரன் நம்பிக்கை நன்மை பயக்குமெனின் நாசகாரக் கும்பல் நிகும்பலை நினைவுப் பாதை நிர்விகற்ப சமாதி நிசமும் நினைப்பும் நியாயம் நியாயந்தான் நொண்டி ஒப்பந்தம் ஒரு கொலை அனுபவம் பால்வண்ணம் பிள்ளை பறிமுதல் பாட்டியின் தீபாவளி பித்துக்குளி பொய்க் குதிரை 'பூசனிக்காய்' அம்பி புரட்சி மனப்பான்மை புதிய கூண்டு புதிய கந்த புராணம் புதிய நந்தன் புதிய ஒளி ராமனாதனின் கடிதம் சாப விமோசனம் சாளரம் சாமாவின் தவறு சாயங்கால மயக்கம் சமாதி சாமியாரும் குழந்தையும் சீடையும் சணப்பன் கோழி சங்குத் தேவனின் தர்மம் செல்வம் செவ்வாய் தோஷம் சிற்பியின் நரகம் சித்தம் போக்கு சித்தி சிவசிதம்பர சேவுகம் சொன்ன சொல் சுப்பையா பிள்ளையின் காதல்கள் தனி ஒருவனுக்கு தேக்கங் கன்றுகள் திறந்த ஜன்னல் திருக்குறள் குமரேச பிள்ளை திருக்குறள் செய்த திருக்கூத்து தியாகமூர்த்தி துன்பக் கேணி உணர்ச்சியின் அடிமைகள் உபதேசம் வாடாமல்லிகை வாழ்க்கை வழி வெளிப்பூச்சு வேதாளம் சொன்ன கதை விபரீத ஆசை விநாயக சதுர்த்தி மொழிபெயர்ப்பு சிறுகதைகள் ஆஷாட பூதி ஆட்டுக் குட்டிதான் அம்மா அந்தப் பையன் அஷ்டமாசித்தி ஆசிரியர் ஆராய்ச்சி அதிகாலை பலி சித்திரவதை டைமன் கண்ட உண்மை இனி இந்தப் பல் விவகாரம் இஷ்ட சித்தி காதல் கதை கலப்பு மணம் கனவு காரையில் கண்ட முகம் கிழவி லதீபா மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள் மணிமந்திரத் தீவு மணியோசை மார்க்ஹீம் மிளிஸ் முதலும் முடிவும் நாடகக்காரி நட்சத்திர இளவரசி ஓம் சாந்தி! சாந்தி! ஒரு கட்டுக்கதை ஒருவனும் ஒருத்தியும் பைத்தியக்காரி பளிங்குச் சிலை பால்தஸார் பொய் பூச்சாண்டியின் மகள் ராஜ்ய உபாதை ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு சாராயப் பீப்பாய் சகோதரர்கள் சமத்துவம் ஷெஹர்ஜாதி - கதை சொல்லி சிரித்த முகக்காரன் சூனியக்காரி சுவரில் வழி தாயில்லாக் குழந்தைகள் தையல் மிஷின் தந்தை மகற்காற்றும் உதவி தெய்வம் கொடுத்த வரம் தேசிய கீதம் துன்பத்திற்கு மாற்று துறவி உயிர் ஆசை வீடு திரும்பல் ஏ படகுக்காரா! யாத்திரை எமனை ஏமாற்ற யுத்த தேவதையின் திருமுக மண்டலம் மேற்கோள்கள் தமிழக எழுத்தாளர்கள் 1906 பிறப்புகள் 1948 இறப்புகள் கடலூர் மாவட்ட நபர்கள் நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
2817
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
விட்டம்
ஒரு வட்டத்தின் விட்டம் (diameter) என்பது வட்டத்தின் மேல், எதிரெதிரே உள்ள எந்த இரு புள்ளிகளையும் வட்டத்தின் மையப் புள்ளி வழியாக இணைக்கும் கோட்டுத்துண்டு ஆகும். விட்டம் என்பதை வட்டத்தின் மிக நீளமான நாண் எனவும் வரைவிலக்கணம் கூறலாம். ஒரு கோளத்தின் விட்டத்துக்கும் இதே வரைவிலக்கணம் பொருந்தும். விட்டம் என்ற சொல் மேலே வரையறுக்கப்பட்ட நேர்கோட்டின் நீளத்தையும் குறிக்கும். ஒரு வட்டத்தின் அனைத்து விட்டங்களும் ஒரே அளவுடையதாக இருக்கும். விட்டத்தின் அளவு வட்டத்தின் ஆரத்தின் இரு மடங்கு அளவாக இருக்கும். மேற்காட்டிய சமன்பாடுகளில் "d" விட்டத்தையும், "r" ஆரத்தையும் குறிக்கும். குவி வடிவங்களின் விட்டமானது அவ்வடிவங்களின் எல்லைக் கோட்டில் எதிரெதிராக அமைந்த இரு புள்ளிகளுக்குத் தொடலியாக உள்ள இணைகோடுகளிடையே அமையக்கூடிய அதிகூடிய தூரம் ஆகும். இவ்வாறு அமையக்கூடிய மிகக் குறைந்த தூரம் அவ்வடிவத்தின் அகலம் ஆகும். இவ்விரண்டையும் ’சுழல் காலிப்பர்ஸ்’ கொண்டு அளக்க முடியும் மாறா அகலங்கொண்ட வளைவரைகளின் அகலமும் விட்டமும் சமமாக இருக்கும். பொதுமைப்படுத்தல் மேலே தரப்பட்ட விட்டத்தின் வரையறைகள் வட்டம், கோளம் மற்றும் குவி வடிவங்களுக்கு மட்டுமே பொருந்தும். எனினும் அதிகனசதுரம் அல்லது பரவலாக அமைந்த புள்ளிகளின் கணம் போன்ற n-பரிமாண குவி மற்றும் குவிவற்ற வடிவங்களுக்கான விட்டத்தின் வரையறையின் சிறப்பு வகையாக அவ்வரையறைகளைக் கருதலாம். ஒரு மெட்ரிக் வெளியின் (metric space) உட்கணத்தின் விட்டம் என்பது அந்த உட்கணத்திலுள்ள எந்த இரு புள்ளிகளுக்கும் இடையேயுள்ள தூரங்களின் மேன்மம் (supremum) ஆகும். உட்கணம் A இன் விட்டம்: sup{ d(x, y) | x, y ∈ A } . தொலைவுச் சார்பு d இன் இணையாட்களம் R (அனைத்து மெய்யெண்களின் கணம்) எனக் கொண்டால் வெற்றுக் கணத்தின் () விட்டம் −∞ ஆகும். சில நூலாசிரியர்கள் வெற்றுக் கணத்தினை சிறப்பு வகையாக எடுத்துக்கொண்டு அதன் விட்டத்தைப் பூச்சியம் எனக் கொள்கின்றனர், இதில் தொலைவுச் சார்பின் இணையாட்களம் எதிரிலா மெய்யெண் கணமாக அமையும். n-பரிமாண யூக்ளிடிய தளத்தில் எந்தவொரு திடப்பொருள் அல்லது புள்ளிகளின் கணத்தின் விட்டமானது அப்பொருள் அல்லது புள்ளிகளின் கணத்தின் குவி மேற்தளத்தின் (convex hull) விட்டமாகும். தள வடிவவியலில் ஒரு கூம்பு வெட்டின் விட்டமானது அக் கூம்பு வெட்டின் மையத்தின் வழிச் செல்லும் நாணாக வரையறுக்கப்படுகிறது. வட்ட விலகல் e = 0 கொண்ட வட்டத்தின் விட்டங்கள் சம நீளமுடையவை; ஏனைய கூம்பு வெட்டுகளின் விட்டங்கள் வெவ்வேறு நீளங்களுடையவையாக அமைகின்றன. மேற்கோள்கள் வட்டங்கள்
2818
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
ஆரம், வடிவியல்
வடிவவியலில், ஆரம் () அல்லது ஆரை (radius) என்பது வட்டம் அல்லது கோளம் ஒன்றின் சுற்றளவில் உள்ள எந்த ஒரு புள்ளியிலிருந்தும் அதன் மையப் புள்ளிக்கு வரையப்படும் நேர்கோட்டுத் துண்டின் நீளத்தைக் குறிக்கும். ஒரு வட்டத்தில் எண்ணற்ற ஆரங்களை வரையறுக்க இயலும். அவை ஒத்த அளவுடையதாக இருக்கும். மாட்டு வண்டியில் இருக்கும் மரத்தால் செய்யப்பட்ட சக்கரத்தில் அதன் மையப்பகுதியாகிய குடத்திலிருந்து சக்கர விளிம்பிலுள்ள வட்டையை தாங்கி நிற்கும்படி நிறுத்தப்பட்டுள்ள கால்-மரத்தை ஆரை என்பர். ஆரை பொதுவாக r என்ற எழுத்தால் குறிக்கப்படும். இது விட்டத்தின் (d) அளவில் பாதியாக இருக்கும்.: சுற்றளவில் இருந்து ஆரை வட்டம் ஒன்றின் சுற்றளவு C எனின், அதன் ஆரை பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்: பரப்பளவில் இருந்து ஆரை வட்டம் ஒன்றின் பரப்பளவு A எனின், அதன் ஆரை: . மூன்று புள்ளிகளில் இருந்து ஆரை P1, P2, P3 எனும் மூன்று புள்ளிகளூடாகச் செல்லும் வட்டம் ஒன்றின் ஆரை பின்வருமாறு தரப்படும்: இங்கு θ என்பது கோணம் ஆகும். இச்சமன்பாடு சைன் விதியைப் பயன்படுத்துகிறது. மூன்று புள்ளிகளும் , , ஆகிய ஆள்கூறுகளால் தரப்படின், பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்தலாம்: சீரான பல்கோணங்களுக்கான சமன்பாடுகள் பின்வரும் சமன்பாடுகள் n பக்கங்களைக் கொண்ட சீரான பல்கோணங்களுக்கானது. s பக்கத்தைக் கொண்ட பல்கோணம் ஒன்றின் ஆரை:     இங்கு மேற்கோள்களும் குறிப்புகளும் வட்டங்கள் வடிவவியல்
2821
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D
மீட்டர்
மீட்டர் (metre அல்லது meter, இலங்கை வழக்கு: மீற்றர்) என்பது அனைத்துலக முறை அலகுகளில் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும். மீட்டரின் ஆங்கிலக் குறியீடு m ஆகும். தமிழ்க் குறியீடு மீ என்பதாகும். இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 அங்குலங்களுக்குச் சமமாகும் (தோராயமாக 39.37 அங்குலங்கள்) துவக்கத்தில் புவியின் நிலநடுக் கோட்டிலிருந்து வட துருவம் (கடல் மட்டத்தில்) வரையிலான தொலைவில் ஒன்றில் ஒரு கோடி பங்காக வரையறுக்கப்பட்டது. அளவியல் குறித்த அறிவு மேம்பட்டதை அடுத்து இது படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டு வந்தது. 1983 ஆம் ஆண்டு முதல் மீட்டர் என்னும் நீளத்தைத் கீழ்க்காணுமாறு துல்லியமாக வரையறுக்கிறார்கள்: வெற்றிடத்தில் ஒளியானது நொடியில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர். வரலாறு மீட்டர் என்னும் பெயர் நீளத்தை அளக்க பத்தின் அடிப்படையிலான பதின்ம முறை (decimal system) ஒன்று உலகம் தழுவிய முறையாக இருக்கவேண்டும் என்று முதல் முதல் 1668 ஆம் ஆண்டு சான் வில்க்கின்சு (John Wilkins) என்னும் ஆங்கிலேய மெய்யியலாளர் தன் முன்மொழிவைப் பதிவு செய்தார். 1675 ஆம் ஆண்டு டிட்டோ லிவியோ புராட்டினி (Tito Livio Burattini) என்னும் இத்தாலிய அறிவியலாளர், தன்னுடைய மிசுரா யுனிவெர்சாலே (Misura Universale "பொது அளவீடு") என்னும் உரையில் மீட்ரோ கட்டோலிக்கோ (metro cattolico) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்; இச்சொல் கிரேக்க மொழிச்சொல்லாகிய மெட்ரோன் கத்தோலிக்கோன் (καθολικόν}} (métron katholikón) என்னும் சொல்லில் இருந்து பெற்றது. இதனைப் பிரான்சிய மொழியில் மெட்ரே (mètre) என்று அழைக்கின்றார்கள். பிரான்சிய மொழியில் இருந்து 1797 ஆண்டு முதல் ஆங்கிலத்திலும் இது எடுத்தாளப்பட்டு வருகின்றது. பிரித்தானிய ஆங்கிலேயர்கள் metre என்றும், அமெரிக்கர்கள் meter என்றும் எழுத்துக்கூட்டல்கள் கொண்டு பயன்படுத்துகின்றனர். இலங்கையில் மீற்றர் என்று பயன்படுத்துகின்றனர். நெடுவரை அடிப்படையில் அமைந்த வரையறை பிரெஞ்சுப் புரட்சியின்போது பிரெஞ்சு அறிவியல் அகாதமியால் அனைத்து அலகுகளுக்கும் ஒரே ஒப்பளவை தீர்மானிக்க ஒருங்கிணைக்கப்பட்ட குழு, பதின்ம அமைப்பில் அமைய வேண்டும் என்ற பரந்துரையை அக்டோபர் 27, 1790இலும் நீளத்திற்கான அடிப்படை அலகாக வட துருவத்திற்கும் நிலநடுக் கோட்டிற்கும் இடையேயான தொலைவில் கோடியில் ஒரு பங்காகவும் அது 'அலகு' (பிரெஞ்சு மொழியில் mètre)என் பெயரிட்டு மார்ச் 19, 1791இலும் பரிந்துரைத்தது. இதனை 1793இல் கூடிய தேசிய மாநாடு ஏற்றுக் கொண்டது. மீட்டர் துண்டு முன்மாதிரி 1870களில் ஏற்பட்ட துல்லிய தொழில்நுட்பங்களின் பின்னணியில் புதிய மீட்டர் சீர்தரத்தை நிலைநிறுத்த பல பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. 1875இல் நடந்த மீட்டர் மாநாட்டில் (Convention du Mètre) பாரிசின் தென்மேற்குப் புறநகர்ப் பகுதியான செவ்ரெயில் நிரந்தரமாக பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் (BIPM: Bureau International des Poids et Mesures) அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீட்டர் மற்றும் கிலோகிராமிற்கான சீர்தரங்களின் முன்மாதிரிகள் கட்டமைக்கப்படும்போது அவற்றை பாதுகாப்பதுடன் தேசிய அளவிலான சீர்தர முன்மாதிரிகளை வழங்கவும் அவற்றிற்கும் மெட்ரிக் அல்லாத அளவை சீர்தரங்களுக்கிடையான ஒப்பளவுகளை பராமரிக்கவும் இந்த புதிய அமைப்பு நிறுவப்பட்டது. இதன்படி 1889இல் எடைகள் மற்றும் அளவைகளுக்கான முதல் பொது மாநாட்டில் இந்த அமைப்பு புதிய முன்மாதிரி மீட்டர் துண்டை வெளிப்படுத்தியது. தொன்னூறு விழுக்காடு பிளாட்டினமும் பத்து விழுக்காடு இரிடியமும் கொண்ட கலப்புலோக சீர்தர துண்டின் இரு கோடுகளுக்கு இடையே பனிக்கட்டியின் உருகுநிலையில் அளக்கப்பட்ட தொலைவு பன்னாட்டு முன்மாதிரி மீட்டர் எனப்பட்டது. 1889ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நிலையிலேயே இன்றும் பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட முன்மாதிரித் துண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. சீர்தர மீட்டர் துண்டு அளவைகள் குறித்தும் இதனைக் கொண்டு அளப்பதால் ஏற்படும் பிழைகள் குறித்தும் தேசிய சீர்தரங்கள் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் (NIST) ஆவணங்களில் காணலாம். கிருப்டான்-86 உமிழ்வின் சீர்தர அலைநீளம் 1893இல், முதன்முதலாக ஓர் சீர்தர மீட்டர் அளவை ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன் ஓர் குறுக்கீட்டுமானி மூலம் அளந்தார். இந்தக் கருவியை உருவாக்கிய மைக்கல்சன் ஒளியின் ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தை நீளத்தின் சீர்தரமாகக் கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தவராவார். 1925 வாக்கில் பிஐபிஎம்மில் குறுக்கீட்டுமானம் மூலம் அளப்பது வழமையாயிற்று. இருப்பினும் பன்னாட்டு முன்மாதிரி மீட்டர் 1960 வரை சீர்தரமாக இருந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற பதினோராவது மாநாடு புதிய அனைத்துலக முறை அலகுகள் (SI) முறையில் வெற்றிடத்தில் கிருப்டான்-86 அணுவின் மின்காந்த நிழற்பட்டையில் ஆரஞ்சு-சிவப்பு உமிழ்கோட்டின் 1,650,763.73 அலைநீளங்களை ஒரு மீட்டராக வரையறுத்தது. ஒளியின் வேகம் உறுதியின்மையை குறைக்கும் நோக்குடன் 1983இல் கூடிய அளவைகள் மாநாடு மீட்டரின் வரையறையை மாற்றி ஒளியின் வேகத்தையும் நொடியையும் கொண்டு தற்போதுள்ள வரையறை அறிமுகப்படுத்தியது : மீட்டர் என்பது வெற்றிடத்தில் ஒளியால் நொடி இடைவெளியில் செல்லும் பாதையின் நீளமாகும். இந்த வரையறை வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தை சரியாக நொடிக்கு 299,792,458 மீட்டர்களாக நிலைநிறுத்தி உள்ளது. இந்த வரையறுப்பின் மற்றொரு துணைப்பகுதியாக அறிவியல் அறிஞர்கள் தங்கள் சீரொளிகளை துல்லியமாக அலையதிர்வுகள் மூலம், அலைநீளங்களின் நேரடி ஒப்பிடுதல்களை விட ஐந்தில் ஒருபங்கு குறைவான உறுதியின்மையுடன், ஒப்பிட முடிகிறது. ஆய்வகங்களிடையே ஒரே முடிவுகளைப் பெறுவதை உறுதி செய்யும் வண்ணம் இந்த மாநாட்டில் ஐயோடினால்-நிலைநிறுத்தப்பட்ட ஈலியம்–நியான் சீரோளி மீட்டரை உருவாக்க "பரிந்துரைக்கப்பட்ட கதிர்வீச்சாக" அறிவிக்கப்பட்டது. மீட்டரை வரையறுக்க பிஐபிஎம் தற்போது ஈலிநியான் சீரொளி அலைநீளத்தை பின்வருமாறு கணக்கிடுகிறது: மதிப்பிடப்பட்ட சார்பு சீர்தர உறுதியின்மை (U) of உடன் . இந்த உறுதியின்மை ஆய்வகங்களில் மீட்டரை நிலைநிறுத்துவதில் ஓர் தடையாக உள்ளது. அணுக் கடிகாரத்திலிருந்து பெறப்படும் நொடி அளவில் இருக்கும் உறுதியின்மையை விட பலமடங்கு கூடுதலான உறுதியின்மையுடன் உள்ளது. இதனால், ஆய்வகங்களில் மீட்டர் ஈலிநியான் சீரொளியின் அலைநீளங்களாக ஏற்றுக் கொள்ளபடுகிறது (வரையறுக்கப்படுவதில்லை). இதில் அலை அதிர்வைக் கண்டறிவதில் உள்ள பிழையே உள்ளது. SI அளவுகளில் மீட்டரின் கீழ்வாய், மேல்வாய் அலகுகள் மீட்டரின் ஒன்றுக்கும் கீழான பதின்ம முறை அளவுகளும் (பதின்ம கீழ்வாய் அலகுகள்), ஒன்றைவிட மேலான பதின்ம முறை அலகுகளும் (பதின்ம மேல்வாய் அலகுகள்) சீரான SI முன்னொட்டுச் சொற்கள் கொண்டு குறிக்கப்பெறுகின்றன. அவற்றைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம். மற்ற அலகுகளின் சமநிலை இந்த அட்டவணையில் , "அங்" மற்றும் "யார்" முறையே "பன்னாட்டு அங்குலத்தையும்" "பன்னாட்டு யாரையும்" குறிக்கின்றன "≈" எனில் "ஏறத்தாழ சமமான"; "≡" எனில் "வரையறைப்படி சமன்" அல்லது "மிகச்சரியாக சமன்." ஒரு மீட்டர் மிகச்சரியாக அங்குலத்திற்கும் யார்டுகளுக்கும் சமன். ஒன்றிலிருந்து மற்றது பெற மூன்று "3" கொண்டு எளிய நினைவி ஒன்றுள்ளது. 1 மீட்டர் ஏறத்தாழ 3அடி–அங்குலங்களுக்கு சமனானது. இதிலுள்ள பிழை 0.125மிமி கூடுதலாகும். சான்றுகோள்கள் மேலும் படிக்க Alder, Ken. (2002). The Measure of All Things : The Seven-Year Odyssey and Hidden Error That Transformed the World. Free Press, New York SI அடிப்படை அலகுகள் நீள அலகுகள்
2831
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
கோணம்
ஒரே புள்ளியில் இருந்து கிளம்பும் இரண்டு கதிர்கள் உருவாக்கும் வடிவம் கோணம் (Angle) எனப்படுகிறது. வெட்டிக்கொள்ளும் இரண்டு கோடுகளின் சாய்வுகளின் வித்தியாசம் காண கோணம் உதவுகிறது. கோணங்களை அளக்கும் அலகுகளுள் பாகை ஒரு வகையாகும். இதன் குறியீடு °. ஒரு தளத்திலமைந்த இரு கதிர்களால் கோணம் உருவாகிறது. இத்தளம் யூக்ளிடிய தளமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. யூக்ளிடிய வெளியிலும், பிற வெளிகளிலும் இரு தளங்கள் வெட்டிக் கொள்வதால் கோணங்கள் உருவாகின்றன. இக்கோணங்கள் இருமுகக் கோணங்கள் (dihedral angles) எனப்படுகின்றன. தளத்திலமைந்த இரு வளைகோடுகளுக்கு இடையே உருவாகும் கோணம், அவை வெட்டிக்கொள்ளும் புள்ளிகளில் அவ்வளைகோடுகளுக்கு வரையப்படும் தொடுகோடுகளுக்கு இடைப்பட்ட கோணமாகும். இதேபோல, ஒரு கோளத்தின் இரு பெரு வட்டங்களுக்கு இடையே உருவாகும் கோளக் கோணமானது அவ்விரு பெருவட்டங்களால் தீர்மானமாகும் தளங்களுக்கு இடைப்பட்ட இருமுகக் கோணம் ஆகும். கோணங்களின் குறியீடுகள் பொதுவாக கோணங்களின் அளவைக் குறிக்கும் மாறிகளைக் குறிப்பதற்கு கிரேக்க எழுத்துக்கள் (α, β, γ, θ, φ, ...) பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கில எழுத்துக்களாலும் கோணங்கள் குறிக்கப்படுகின்றன. வடிவவியல் வடிவங்களில் கோணங்களை வரையறுக்கும் மூன்று புள்ளிகளோடு இணைக்கப்படும் குறியீடுகளாலும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, AB , AC கதிர்களால் உருவாகும் கோணத்தின் குறியீடு: ∠BAC அல்லது சில சமயங்களில், கோணத்தின் முனையை மட்டும் குறிப்பிடும் ஒற்றை எழுத்தால் மட்டும் (∠A) குறிக்கப்படுகிறது. கோண வகைகள் தனிப்பட்ட கோணங்கள் செங்கோணம், குறுங்கோணம், விரிகோணம், நேர்கோணம், சாய்வுக் கோணம், பின்வளைகோணம் ஆகியன சில கோணவகைகளாகும். பூஜ்ஜிய கோணம் ஒரே புள்ளியில் ஆரம்பிக்கும் இரு கதிர்களுக்கு இடைப்பட்ட தூரம் 0 பாகை எனில் அக்கோணம் பூஜ்ஜிய கோணம் எனப்படும். செங்கோணம் 90 பாகை அளவுள்ள கோணம், செங்கோணம் எனக் குறிப்பிடப்படுகின்றது. இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் சரியாக 90 பாகையாக இருந்தால் அது செங்கோணம் எனப்படும். குறுங்கோணம் இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது 90 பாகைக்கும் குறைவாக இருந்தால் அது குறுங்கோணம் ஆகும். எடுத்துக்காட்டு : 15°, 30°,60°,75° கோணங்கள் விரிகோணம் இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது 90 பாகைக்கு அதிகமாகவும் 180 பாகைக்கும் குறைவாக இருந்தால் அது விரிகோணம் ஆகும். x° = விரிகோணம் எனில்: 90° <x° < 180° ஆக அமையும். நேர் கோணம் இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது சரியாக 180 பாகையாக இருந்தால் அது நேர் கோணம். ஒரு கோணத்தின் கதிர்கள் , எதிர்க்கதிர்களாக உருவாகும்போது நேர்கோடு உருவாகிறது . பின்வளை கோணம் 180° க்கும் 360° க்கும் இடைப்பட்ட அளவுகளைக் கொண்ட கோணம் பின்வளை கோணம் (reflex angles) அல்லது மடக்கு கோணம் ஆகும். முழுக் கோணம் 360° அல்லது 2π ரேடியன் அளவுள்ள கோணம் முழுக் கோணம். சாய்வுக் கோணம் 90° ஆகவும் 90° இன் மடங்காகவும் இல்லாத கோணங்கள் சாய்வுக் கோணங்கள். நிரப்புக்கோணங்கள் இரண்டுகோணங்களின் கூடுதல் 90 என்றால் அந்த இரண்டு கோணங்களும் நிரப்புக்கோணங்கள் ஆகும் . ஒவ்வொரு கோணமும் மற்றோரு கோணத்தின் நிரப்பு கோணம் ஆகும் . 30° இன் நிரப்புக்கோணம் 60° ஆகும் . மற்றும் 60° இன் நிரப்புக்கோணம் 30° மிகை நிரப்புக்கோணம் இரண்டுகோணங்களின் கூடுதல் 180 என்றால் அந்த இரண்டு கோணங்களும் நிரப்புக்கோணங்களும் மிகை நிரப்புக்கோணம் ஆகும் . ஒவ்வொரு கோணமும் மற்றோரு கோணத்தின் மிகை நிரப்பு கோணம் ஆகும் . 120° இன் மிகை நிரப்பு கோணம் 60°, 60° இன் மிகை நிரப்பு கோணம் 120 அட்டவணை கோணங்களின் பெயர்கள், இடைவெளிகள், அலகுகள் கீழே அட்டவணப்படுத்தப் பட்டுள்ளன: சமான கோணச் சோடிகள் சமவளவுள்ள கோணங்கள், சம கோணங்கள் அல்லது சர்வசமக் கோணங்கள். சுற்றின் முழுஎண் மடங்கான சுற்றுகளில் அளவில் வேறுபாடு கொண்டவையாகவும், ஒரே கதிரை தங்களது முடிவுப் பக்கங்களாகவும் கொண்ட இரு கோணங்கள் ஒருமுடிவுக் கோணங்கள் (coterminal angles). ஒரு கோணத்தின் குறுங்கோண வடிவம் அதன் குறிப்பீட்டுக் கோணம். எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு கோணத்தின் அளவிலிருந்து தேவைக்கேற்பத் தொடர்ந்து நேர்கோண மதிப்பைக் (1/2 சுற்று, 180°, π ரேடியன்) கூட்டுவது அல்லது கழிப்பதன் மூலம் பெறப்படும் குறுங்கோண வடிவமானது (0 - 1/4 சுற்று, 90°, அல்லது π/2 ரேடியன்), அதன் குறிப்பீட்டுக் கோணம். எடுத்துக்காட்டாக, 30° இன் குறிப்பீட்டுக் கோணம் 30° 150° இன் குறிப்பீட்டுக் கோணம் 30° (180°-150° = 30°) 750° இன் குறிப்பீட்டுக் கோணம் 30° (750 - 4x180°) = 30°) 45° இன் குறிப்பீட்டுக் கோணம் 45° 225° இன் குறிப்பீட்டுக் கோணம் 45° (225°-180°=45°) 405° இன் குறிப்பீட்டுக் கோணம் 45° (405°-2x180=45°) எதிர் கோணங்களும் அடுத்துள்ள கோணங்களும் இரு கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது நான்கு கோணங்கள் உருவாகின்றன. இவை ஒன்றுக்கொன்று அமைந்திருக்கும் விதத்தைக் கொண்டு எதிர் கோணங்கள், அடுத்துள்ள கோணங்கள் எனச் சோடிகளாகப் பிரிக்கப்பட்டு அழைக்கப்படுகின்றன. எதிர் கோணங்கள் ஒன்றுக்கொன்று எதிராக அமையும் ("X"-வடிவிலமையும்) கோணச் சோடிகள், குத்துநிலை கோணங்கள், எதிர் கோணங்கள், குத்தெதிர் கோணங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரு சோடி எதிர் கோணங்கள் சமமானவை. இக்கூற்று குத்துக்கோணத் தேற்றம் ஆகும். இத்தேற்றம் தேலேசால் நிறுவப்பட்டது.William G. Shute, William W. Shirk, George F. Porter, Plane and Solid Geometry, American Book Company (1960) pp. 25-27 இருசோடி எதிர் கோணங்களும் அடுத்துள்ள கோணங்களுக்கு மிகைநிரப்பிகளாக அமைவதால் எதிர் கோணங்கள் சமவளவானவை எனக் காட்டப்பட்டுள்ளது. ஒரு வரலாற்றுக் குறிப்பின்படி, தேலேசு எகிப்திற்குச் சென்றபோது, இரு வெட்டிக்கொள்ளும் கோடுகளை வரைந்தபோதெல்லாம் அவற்றின் எதிர் கோணங்களை அளந்து அவை சமமாய் இருப்பதை எகிப்தியர்கள் உறுதி செய்துகொண்டதைக் கண்டார். அதனால், நேர்க்கோணங்கள் எல்லாம் சமமானவை என்பதாலும், சமமானவற்றோடு சமமானவற்றைக் கூட்டுவதலோ கழிப்பதலோ கிடைக்கக்கூடியவையும் சமமானவையாகவே இருக்கும் என்ற பொதுக் கருத்தின்படியும், அனைத்து எதிர் கோணங்களும் சமம் எனத் தேலேசு நிறுவினார் என அறியப்படுகிறது. மேலுள்ள படத்தில் கோணம் A = x எனக் கொள்ளலாம். இரு அடுத்துள்ள கோணங்கள் ஒரு நேர்கோட்டை அமைப்பதால் அவை மிகைநிரப்பு கோணங்கள். கோணங்கள் A , C இரண்டும் அடுத்துள்ள கோணங்களாக இருப்பதால், C = 180 − A = 180 − x. இதேபோல A , D இரண்டும் அடுத்துள்ள கோணங்கள் என்பதால்.D = 180 − A = 180 − x. எனவே எதிர் கோணங்கள் C , D இரண்டும் சர்வசமம். இதேமுறையில் எதிர் கோணங்கள் A , B இரண்டும் சர்வசமம் என நிறுவலாம் அடுத்துள்ள கோணங்கள் ஒரே உச்சியையும் ஒரு பொதுப் பக்கத்தையும் கொண்ட கோணங்கள் அடுத்துள்ள கோணங்கள் ஆகும். அடுத்துள்ள கோணங்களுக்கு வேறு உட்புள்ளிகள் எதுவும் பொதுவாக இருக்காது. அதாவது அடுத்துள்ள கோணங்கள் அடுத்தடுத்து ஒரு பொதுக்கரத்துடன் இருக்கும். இரு அடுத்துள்ள கோணங்களின் கூடுதல் 90° எனில் அவை நிரப்பு கோணங்கள்; இரு அடுத்துள்ள கோணங்களின் கூடுதல் 180° எனில் அவை மிகைநிரப்புக் கோணங்கள் இரு கோடுகளை (பொதுவாக இணை கோடுகள் ஒரு குறுக்கு வெட்டி வெட்டும்போது, உருவாகும் கோணங்கள் உட்கோணங்கள், வெளிக்கோணங்கள், ஒத்த கோணங்கள், ஒன்றுவிட்ட உட்கோணங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. கோணங்களை அளத்தல் பொதுவாக ஒரு கோணத்தின் அளவு, அக்கோணத்தின் ஒரு கரத்தை மற்றொன்றுடன் பொருந்தச் செய்யத் தேவையான சுழற்சியின் அளவாகக் கொள்ளப்படுகிறது. சமவளவு கொண்ட கோணங்கள் சமகோணங்கள், சர்வசம கோணங்கள் அல்லது சமவளவுள்ள கோணங்கள் என அழைக்கப்படுகின்றன. கோணங்களின் முக்கிய அலகுகள் பாகைகள், ரேடியன்கள், சுற்று இன்னும் சில ஆகும். கோணத்தின் அலகுகள் 1. பாகை பாகை என்பது கோணத்தை அளப்பதற்குரிய ஒரு அலகு ஆகும். இது 60 கலைக்குச் சமனானது ஆகும். இது ° என்னும் குறியீட்டினால் குறிக்கப்படுவது வழக்கம். 60° என எழுதும்போது அது 60 பாகை என்பதைக் குறிக்கும். ஒரு தளத்தில் அதிலுள்ள ஒரு புள்ளியை முழுவதுமாகக் சுற்றி அமையும் கோணம் 360 பாகை (360°) ஆகும். பொதுவான தேவைகளுக்கு ஒரு பாகை என்பது போதுமான அளவு சிறிய அலகு ஆகும். ஆனால் வானியல் போன்ற தொலை தூர நிகழ்வுகளைக் கையாளும் துறைகளில் ஒரு பாகை என்பது ஒப்பீட்டளவில் சிறியது அல்ல. 2.ரேடியன் ஆரையம் என்பது ஒரு கோண அளவு. இதனை ரேடியன் என்றும் கூறுவர். ஒரு வட்டத்தின் வளைவு வெட்டின் (வில்லின்) நீளம் அவ் வட்டத்தின் ஆரத்திற்கு (ஆரைக்கு) சமம் என்றால் அவ் வளைவு வெட்டானது (வில்லானது) வட்டத்தின் நடுவே வடிக்கும் கோணம் ஓர் ஆரையம் ஆகும். வட்டத்தின் ஒரு சுற்றின் மொத்தக் கோணத்தின் அளவு இந்த 2π ஆரையம் (ரேடியன்) (கிட்டத்தட்ட 6.28318531 ஆரையம்). ஆரையத்தின் ஆங்கிலச் சொல்லாகிய ரேடியன் என்னும் அலகை rad எனக் குறிப்பர். தமிழில் ஆரையம் அல்லது ரேடி எனக் குறிக்கப்படும். பாகைக் கணக்கில் ஓர் ஆரையம் என்பது அல்லது 57.2958 பாகை ஆகும கோணத்தை அளக்கும் கருவிகள் 1.கோணமானி (Angle Dekker) 'கோணமானியானது தானிணை ஒளிமானியின் அடிப்படையில் செய்யப்பட்டது ஆகும். இதில், இணை ஆடியின் குவிமையத்தில், ஒரு குறுக்குக் கம்பிக்கு பதிலாக, ஒரு அளவுகோல் பதியப்பட்டிருக்கும். இது ஒளிக் கதிரோடு சென்று எதிரொளிக்கும் பரப்பின் மேல் பட்டு, விழியாடியின் பார்வை தளத்தில் வைக்கப்பட்டுள்ள இன்னொரு அளவு கோலின் மேல் செங்குத்தாக விழும். இந்த இரண்டு அளவு கோல்களும் எவ்வாறு இணைகின்றன என்பதைப் பொறுத்து, கோணத்தை அளக்கபயன்படுகிறது'. 2. சரிவு கோண அளவிகள் (Bevel Protractors) கோணத்தை வரைவதற்கும், அளப்பதற்கும் அரைவட்ட அல்லது முழுவட்ட கோண அளவிகளைப் பயன்படுத்துவோம் . ஒரு முழு வட்ட கோண அளவியின் மையத்தில் சுற்றும் வகையில் ஒரு வட்டத் தட்டைப் பொருத்தி, அதில் ஒரு வெர்னியர் அளவுகோலை அமைத்துவிட்டால், இந்த வட்டத்தட்டு, எவ்வளவு கோணத்துக்கு சுற்றுகிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுவிடலாம்.சரிவு கோணஅளவியின் அடிப்பாகத்தில் ஒரு சட்டத்தை நிலையாகப் பொருத்திவிட்டு, சுற்றும் வட்டத் தட்டில் ஒரு நீண்ட சட்டத்தை பொருத்திவிட்டால், இச்சட்டம் சுற்றும் போது அதற்கும் அடிச்சட்டத்துக்கும் இடையில் உள்ள கோணத்தை எளிதாக அளந்து விடலாம். இதன் அடிப்படையில் அமைக்கப்பட்டதே சரிவு கோண அளவிகள் ஆகும். 3. சாய்வுமானி (Clino meter) சாய்வாக இருக்கும் கோணத்தை துல்லியமாக அளக்க கோணஅளவியோ, சாராய மட்டமோ பயன்படாது. ஏனென்றால் கோணஅளவிக்கு கோணத்தை அளக்கும் இரண்டு பரப்புகள் தேவை. சாராய மட்டமோ குறைவான கோணத்தையே அளக்கவல்லது. இக்குறையை போக்க கோணமானியையும், சாராய மட்டத்தையும் இணைத்து ஒரு புதிய கருவி உருவாக்கப்பட்டது. இதற்கு பெயர் தான் சாய்வுமானி ஆகும். 4. கோண கடிகைகள் (Angle gauges) கோண அளவுக்கு ஏற்ப நிலையாக இருப்பது தான் கோண கடிகைகள் ஆகும்.இவை செவ்வக வடிவத்தில், பல கோண அளவுகளில் செய்யப்பட்ட கலப்பு எஃகினால் ஆனது ஆகும். இதன் அளக்கும் பரப்பு வழவழப்பாக, ஒன்றன் மேல் ஒன்றை வைத்து நகர்த்தினால், பற்றிக் கொள்ளும் வகையில் இருக்கும். நேர்கோணமும், எதிர்கோணமும் கோணத்தின் வரையறையில் எதிர்கோணக் கருத்துரு இல்லையென்றாலும், திசைப்போக்கு, எதிர் திசை சுழற்சியைக் குறிப்பதற்கு நேர், எதிர் கோண கருத்துரு உதவியாய் அமையும். இருபரிமாண கார்ட்டீசிய ஆள்கூற்று முறைமையில், ஆதிப்புள்ளியை உச்சியாகவும், நேர் x-அச்சைத் தொடக்கப் பக்கமாவும் கொண்டு கோணம் வரையறுக்கப்படுகிறது. தொடக்கப் பக்கத்திலிருந்து பாகை, ரேடியன் அல்லது சுற்றில் அளக்கப்படும் கோண அளவைக் கொண்டு முடிவுப்பக்கம் அமைகிறது. நேர் x-அச்சிலிருந்து நேர் y-அச்சை நோக்கி நிகழும் சுழற்சி நேர் கோணங்கள்; நேர் x-அச்சிலிருந்து எதிர் y-அச்சை நோக்கி நிகழும் சுழற்சி எதிர் கோணங்கள்; கார்டிசியன் ஆள்கூறுகளின் திட்ட வடிவில் (x-அச்சு வலப்புறமும் y-அச்சு மேற்புறமாகவும் அமைதல்) நேர் சுழற்சியானது எதிர்க் கடிகாரத்திசையாகவும், எதிர் சுழற்சியானது கடிகாரத்திசையாகவும் இருக்கும். பல இடங்களில் −θ கோணம் என்பது, ஒரு முழுச் சுற்றுக் கோணத்திலிருந்து θ'' கோணவளவைக் கழித்தபின் கிடைக்கும் கோணத்திற்குச் சமானமானது. எடுத்துக்காட்டாக,  −45° என்பது or 315° க்குச் (360° − 45°) சமானம். எனினும்  −45° சுழற்சியும் 315° சுழற்சியும் ஒன்றாகாது. முப்பரிமாணத்தில் கடிகாரத் திசை, எதிர் கடிகாரத் திசை என்பதற்குப் பொருளில்லை. எனவே நேர் கோணம், எதிர் கோணங்களின் திசையை வரையறுப்பதற்கு, கோணத்தின் உச்சிவழியாக, கோணத்தின் பக்கங்கள் அமையும் தளத்திற்குச் செங்குத்தான திசையன் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேற்கோள்கள் சுட்டிகள் கோணம் மற்றும் பிற அலகுகள் மாற்றப் பொறி முக்கோணவியல் கோணங்கள்
2832
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
புள்ளி
புள்ளி (Point) என்பது கனஅளவு, பரப்பளவு மற்றும் நீளமற்று, இருப்பிடம் (Location) மட்டுமே கொண்டு ஒரு வெளியில் வரையறுக்கப்பட்ட வடிவவியல் கோட்பாடு ஆகும். இக்கோட்பாடு இயற்பியல், திசையன் வரைகலை (Vector graphics) ஆகியவற்றில் பயன்படுகிறது. கணிதத்தில் எந்த ஒரு வடிவமோ, வெளியோ புள்ளிகளால் ஆனதாகக் கருதப்படுகிறது. நவீன கணிதத்தில் வெளி என்ற கணத்தின் ஒரு உறுப்பாகப் புள்ளி கருதப்படுகிறது. குறிப்பாக யூக்ளிடிய வடிவவியலில் புள்ளியை அடிப்படைக் கருத்துருவாகக் கொண்டு பிற வடிவவியல் கோட்பாடுகள் எழுப்பப்பட்டுள்ளன. அடிப்படைக் கருத்துருவானதால் புள்ளியை ஏற்கனவே வரையறுக்கப்பட்டவற்றைக் கொண்டு வரையறுக்க முடியாது. எனவே, அதன் பண்புகளை அடிக்கோள்களாக வரையறுப்பதன் மூலம் புள்ளியானது வரையறுக்கப்படுகிறது. யூக்ளிடிய வடிவவியலில் யூக்ளிடிய வடிவவியலில் மிக முக்கியமான அடிப்படை வடிவவியல் பொருட்களில் ஒன்றாக புள்ளி கருதப்படுகிறது. யூக்ளிடின் புள்ளிக்கான வரையறையானது அதனை "எதுவும் இல்லாத ஒன்று" ("that which has no part") என்கிறது. இருபரிமாண யூக்ளிடிய வெளியில் ஒரு புள்ளி, இரு எண்களைக் கொண்ட வரிசைச் சோடியால் (x, y) குறிக்கப்படுகிறது. முதல் எண் x கிடைமட்டத்தையும், இரண்டாவது எண் y செங்குத்துமட்டத்தையும் குறிக்கின்றன. முப்பரிமாண யூக்ளிடிய வெளியில் இதே கருத்து பொதுமைப்படுத்தப்படுகிறது. முப்பரிமாண வெளியிலமைந்த புள்ளி, மூன்று எண்களைக் கொண்ட வரிசைப்படுத்தப்பட்ட மும்மையால் (x, y, z) குறிக்கப்படுகிறது. n பரிமாண வெளியில் அமையும் புள்ளி, n வரிசைப்படுத்தப்பட்ட உறுப்புகளைக் கொண்ட (a1, a2, … , an) எனக் குறிக்கப்படுகிறது. மேற்கோள்கள் Clarke, Bowman, 1985, "Individuals and Points," Notre Dame Journal of Formal Logic 26: 61–75. De Laguna, T., 1922, "Point, line and surface as sets of solids," The Journal of Philosophy 19: 449–61. Gerla, G., 1995, "Pointless Geometries " in Buekenhout, F., Kantor, W. eds., Handbook of incidence geometry: buildings and foundations. North-Holland: 1015–31. Whitehead A. N., 1919. An Enquiry Concerning the Principles of Natural Knowledge. Cambridge Univ. Press. 2nd ed., 1925. --------, 1920. The Concept of Nature. Cambridge Univ. Press. 2004 paperback, Prometheus Books. Being the 1919 Tarner Lectures delivered at Trinity College. --------, 1979 (1929). Process and Reality. Free Press. வெளி இணைப்புகள் Definition of Point with interactive applet Points definition pages, with interactive animations that are also useful in a classroom setting. Math Open Reference வடிவவியல்
2835
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81
பரப்பளவு
கணிதத்தில் பரப்பளவு அல்லது பரப்பு (Area) என்பது இருபரிமாண மேற்பரப்புகள் அல்லது வடிவங்கள் ஒரு தளத்தில் எவ்வளவு பரவி உள்ளது என்பதைத் தருகின்ற ஓர் அளவை. ஒரு வடிவத்தின் மாதிரியைக் குறிப்பிட்ட அளவில் அமைப்பதற்குத் தேவைப்படும் மூலப்பொருளின் அளவாக அவ்வடிவத்தின் பரப்பைக் கருதலாம். ஒரு-பரிமாணத்தில் ஒரு வளைகோட்டின் நீளம் மற்றும் முப்பரிமாணத்தில் ஒரு திண்மப்பொருளின் கனஅளவு ஆகிய கருத்துருக்களுக்கு ஒத்த கருத்துருவாக இருபரிமாணத்தில் பரப்பளவைக் கொள்ளலாம். ஒரு வடிவத்தின் பரப்பளவை நிலைத்த பரப்பளவு கொண்ட சதுரங்களின் பரப்பளவுகளுடன் ஒப்பிடுவதன் மூலம் காணலாம். அனைத்துலக முறை அலகுகளில் பரப்பளவின் திட்ட அலகு (SI) சதுர மீட்டர் (மீ2) ஆகும். ஒரு சதுர மீட்டர் என்பது ஒரு மீட்டர் பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பினைக் குறிக்கிறது. மூன்று சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதொரு வடிவத்தின் பரப்பளவு, ஒரு மீட்டர் பக்க நீளம் கொண்ட மூன்று சதுரங்களின் பரப்பளவுகளுக்குச் சமம். கணிதத்தில்ஓரலகு சதுரம் என்பது ஓரலகு பரப்பளவு கொண்ட சதுரமாக வரையறுக்கப்படுகிறது. எந்தவொரு வடிவத்தின் பரப்பளவும் ஒரு மெய்யெண்ணாகும். முக்கோணங்கள், செவ்வகங்கள் மற்றும் வட்டங்கள் போன்ற எளிய வடிவங்களின் பரப்பளவு காணும் வாய்ப்பாடுகள் பல உள்ளன. பலகோணத்தை முக்கோணங்களாகப் பிரித்து, முக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாட்டினைப் பயன்படுத்தி பலகோணத்தின் பரப்பினைக் காண முடியும். நுண்கணிதம் மூலம், வளைந்த வரம்பு கொண்ட வடிவங்களின் பரப்பு காணலாம். தள வடிவங்களின் பரப்பு காணும் நோக்கம் நுண்கணிதம் வளர வழி வகுத்துள்ளது. கோளம், கூம்பு, அல்லது உருளை போன்ற திண்மப் பொருள்களின் வரம்பாக அமையும் மேற்தளங்களின் பரப்பளவு அவற்றின் மேற்பரப்பளவென அழைக்கப்படும். பண்டைய கிரேக்க கணிதவியலாளர்கள் எளிய வடிவங்களின் மேற்பரப்பு காணும் வாய்ப்பாடுகளைக் கண்டறிந்துள்ளனர். எனினும் சிக்கலான வடிவங்களின் மேற்பரப்பு காண பலமாறி நுண்கணிதம் தேவைப்படுகிறது. தற்கால கணிதத்தில் பரப்பளவு முக்கிய பங்கு வகிக்கிறது. வடிவவியல் மற்றும் நுண்கணிதம் இரண்டிலும் பரப்பளவின் முக்கியத்துவமுடையதாய் உள்ளது. நேரியல் இயற்கணிதத்தில் அணிக்கோவையின் வரையறை பரப்பளவுவின் தொடர்புடையதாய் அமைகிறது. வகையீட்டு வடிவவியலில் பரப்பளவு ஒரு அடிப்படைப் பண்பாக உள்ளது. பொதுவாக உயர்கணிதத்தில், இருபரிமாணப்பகுதிகளின் கனஅளவின் சிறப்புவகையாகப் பரப்பளவு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அலகுகள் நீளத்தின் ஒவ்வொரு அலகிற்கும் ஒரு பரப்பளவு அலகு உள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்ட நீளத்தைப் பக்க அளவாகக் கொண்ட சதுரத்தின் பரப்பாக அந்தப் பரப்பளவு அலகு அமையும். எனவே பரப்பளவின் அலகுகள் சதுர மீட்டர் (மீ2), சதுர செண்டிமீட்டர் (செமீ2), சதுர மில்லிமீட்டர் (மிமீ2), சதுர கிலோமீட்டர் (கிமீ2), சதுர அடி (அடி2), சதுர கெஜம் (கெஜம்2), சதுர மைல் (மைல்2), என்றவாறு அமைகின்றன. நீள அலகுகளின் வர்க்கங்களாகப் பரப்பளவின் அலகுகள் உள்ளன. பரப்பளவின் திட்ட அலகு (SI unit) சதுர மீட்டராகும். அலகு மாற்றம் பரப்பளவின் இரு அலகுகளுக்கிடையேயான மாற்றம் அவற்றின் ஒத்த நீள அலகுகளின் மாற்றத்தின் வர்க்கமாகும். எடுத்துக்காட்டுகள்: 1 சதுர அடி = 144 (122) சதுர அங்குலம் (1 அடி = 12 அங்குலம்) 1 சதுர கிமீ = 1,000,000 சதுர மீட்டர் 1 சதுர மீ = 10,000 சதுர செண்டிமீட்டர் = 1,000,000 சதுர மில்லிமீட்டர் 1 சதுர செமீ = 100 சதுர மில்லிமீட்டர் 1 சதுர கெஜம் = 9 சதுர அடி 1 சதுர மைல் = 3,097,600 சதுர கெஜம் = 27,878,400 சதுர அடி மேலும் 1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர் 1 சதுர அடி = சதுர மீட்டர் 1 சதுர கெஜம் = சதுர மீட்டர் 1 சதுர மைல் = சதுர கிலோமீட்டர் 1 ஏக்கர் = 100 செண்ட் 1 ஏர் = 2.47 செண்ட் 1 குறுக்கம் = 90 செண்ட் பிற அலகுகள் மெட்ரிக் முறையில் பரப்பளவின் மூல அலகு ஏர் (are) ஆகும். 1 ஏர் = 100 சதுர மீட்டர் 1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர் தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது. நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும். 1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர் 1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர் ஒரு ஏக்கர் என்பது தோராயமாக ஒரு ஹெக்டேரில் 40% அடிப்படைப் பரப்பளவு வாய்ப்பாடுகள் செவ்வகம் பரப்பளவு வாய்ப்பாடுகளிலேயே அடிப்படையானது ஒரு செவ்வகத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாடாகும். ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் , எனில் அச்செவ்வகத்தின் பரப்பளவு வாய்ப்பாடு:  (செவ்வகம்). இதன் சிறப்பு வகையாகச் சதுரத்தின் பரப்பளவு வாய்ப்பாட்டைக் கொள்ளலாம். செவ்வகம் போல அல்லாது சதுரத்தில் நீளம் மற்றும் அகலம் இரண்டுமே சமமாக அமைவதால் ஒரு சதுரத்தின் பக்க நீளம் எனில் அதன் பரப்பளவு காணும் வாய்ப்பாடு:  (சதுரம்). வெட்டு வாய்ப்பாடு பெரும்பாலான பிற பரப்பு வாய்ப்பாடுகள் வெட்டு முறையில் காணப்படுகிறது. இம்முறையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வடிவம் சிறு சிறு துண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. இச்சிறுதுண்டுகளின் பரப்புகளின் கூடுதல் மூல வடிவின் பரப்பளவிற்குக் கூடுதலாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: படத்தில் உள்ளது போல ஓர் இணைகரத்தை ஒரு சரிவகம் மற்றும் முக்கோணமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பிரிக்கப்பட்ட முக்கோணத்தைச் சரிவகத்தின் மற்றொரு பக்கத்தில் பொருத்தினால் ஒரு செவ்வகம் கிடைக்கிறது. இதிலிருந்து மூல இணைகரத்தின் பரப்பளவும் இப்புது செவ்வகத்தின் பரப்பளவும் சமமாக இருப்பதைக் காணலாம். எனவே எடுத்துக்கொள்ளப்பட்ட இணைகரத்தின் பரப்பு:  (இணைகரம்). இதே இணைகரத்தை மூலைவிட்டத்தின் வழியாக இரு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றின் பரப்பளவும் இணைகரத்தின் பரப்பளவில் சரி பாதியாக இருக்கும். எனவே முக்கோணத்தின் பரப்பு:  (முக்கோணம்). இந்த வெட்டு முறையில் சரிவகம், சாய்சதுரம் மற்றும் பல பலகோணங்களின் பரப்பளவைக் காண முடியும். வட்டங்கள் படத்தில் உள்ளதுபோல எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு வட்டத்தைச் சிறிய வட்டக்கோணத்துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வட்டக்கோணத்துண்டும் தோராயமாக ஒரு முக்கோணம்போல அமையும். இத்துண்டுகளை வரிசையாக அடுத்தடுத்து ஒட்டினாற்போலக் கிடைமட்டமாக அடுக்கினால் தோராயமாக ஒரு இணைகரம் உருவாகிறது. இந்த இணைகரத்தின் உயரம் வட்டத்தின் ஆரமாகவும் () மற்றும் இணைகரத்தின் அகலம் வட்டத்தின் சுற்றளவில் பாதியாகவும் () இருக்கும். எனவே இணைகரத்தின் பரப்பளவு:  (இணைகரம்). இங்கு இணைகரம் மற்றும் வட்டம் இரண்டின் பரப்பளவும் சமம் என்பதால் வட்டத்தின் பரப்பளவு:  (வட்டம்). இம்முறையில் வெட்டப்படும் வட்டக்கோணப்பகுதிகளின் எண்ணிக்கையை மேலும் மேலும் அதிகரித்து வட்டத்தின் பரப்பளவில் ஏற்படக்கூடிய தோராயப்பிழையைக் குறைத்து விடலாம். வட்டத்தின் பரப்பை வரையறுத்தத் தொகையீடாகவும் காணலாம்:  (வட்டம்). மேற்பரப்பளவு ஒரு வடிவத்தின் மேற்பரப்பினை வெட்டி அதனைத் தட்டையாக்குவதன் மூலம் அவ்வடிவத்தின் மேற்பரப்பளவைக் கணக்கிடலாம். எடுத்துக்காட்டு: ஓர் உருளையின் வளைந்த மேற்தளத்தை நீளவாக்கில் வெட்டித் தட்டையாக்கினால் ஒரு செவ்வகம் கிடைக்கும். இச்செவ்வகத்தின் நீளம் உருளையின் அடிப்பகுதியாக அமைந்த வட்டத்தின் சுற்றளவாகவும் செவ்வகத்தின் அகலம் உருளையின் உயரமாகவும் இருக்கும். எனவே இச்செவ்வகத்தின் பரப்பளவு:  (உருளை). ஒரு கூம்பின் வளைந்த மேற்தளத்தை ஒரு பக்கவாட்டில் வெட்டித் தட்டையாக்கினால் ஒரு வட்டக்கோணப்பகுதி கிடைக்கும். இந்த வட்டக்கோணப்பகுதியின் ஆரம் கூம்பின் சாய்வு உயரத்திற்குச் சமமாகவும் வட்டக்கோணப்பகுதியின் வில்லின் நீளம் கூம்பின் அடிப்பகுதியாக அமைந்த வட்டத்தின் சுற்றளவாகவும் அமையும். கூம்பின் அடி ஆரம் r மற்றும் சாய்வு உயரம் h எனில்: வட்டக்கோணப்பகுதியின் பரப்பளவுக்குச் சமமாக அமையும் கூம்பின் மேற்பரப்பளவு:  (கூம்பு). ஆனால் ஒரு கோளத்தைத் தட்டையாக்குவது எளிதில் முடியாதது. ஒரு கோளத்தின் மேற்பரப்பளவின் வாய்ப்பாடு முதல்முறையாக ஆர்க்கிமிடீசால் கண்டுபிடிக்கப்பட்டது. கோளம் மற்றும் உருளைபற்றி (On the Sphere and Cylinder) என்ற அவரது படைப்பில் கோளத்தின் மேற்பரப்பளவிற்கான வாய்ப்பாடு காணப்படுகிறது. வாய்ப்பாடு:  (கோளம்). இங்கு , கோளத்தின் ஆரம். பரப்பளவு வாய்ப்பாடுகளின் பட்டியல் ஒழுங்கற்ற பலகோணங்களின் பரப்பளவை "நில ஆய்வாளரின் வாய்ப்பாட்டின்" மூலம் காணலாம். நுண்கணிதத்தில் பரப்பளவு ஒரு வளைவரையின் நேர் -மதிப்புப் பகுதி, x-அச்சு, நிலக்குத்துக்கோடுகள் x = a மற்றும் x = b (b>a) ஆகிய நான்கு வரம்புகளுக்கும் இடைப்பட்டப் பரப்பளவு: . f(x) மற்றும் g(x) ஆகிய இரு சார்புகளின் வளைவரைகளுக்கு இடைப்பட்ட பகுதி, x-அச்சு, நிலக்குத்துக்கோடுகள் x = a மற்றும் x = b (b>a) ஆகிய நான்கு வரம்புகளுக்கும் இடைப்பட்டப் பரப்பளவு: . போலார் ஆயதொலைவுகளில் வளைவரையின் சார்பு r = r(θ) எனில் பரப்பளவு: . சுட்டிகள் அலகு மாற்றப் பொறி மேற்கோள்கள் அளவியல் வடிவவியல் வடிவங்கள்
2843
https://ta.wikipedia.org/wiki/2003
2003
2003 ஆம் ஆண்டு (MMIII) கிரிகோரியன் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கிபி 2003ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்பட்டது. இது மூன்றாம் ஆயிரவாண்டின் 3ஆம் ஆண்டும், 21ஆம் நூற்றாண்டின் 3ஆம் ஆண்டும், 2000களின் 4ம் ஆண்டும் ஆகும். இவ்வாண்டு அனைத்துலக நன்னீர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. நிகழ்வுகள் ஜனவரி 8 - யூஎஸ் ஏர்வேய்சு விமானம் 5481 சார்லட் டக்லசு விமான நிலையத்தில் வீழ்ந்ததில் அனைத்து 21 பேரும் கொல்லப்பட்டனர். ஜனவரி 16 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. ஜனவரி 18 - கான்பரா நகரில் காட்டுதீ பரவியதில் 4 பே கொல்லப்பட்டனர். ஜனவரி 23 - நாசாவின் பயனியர் 10 விண்கலத்தில் இருந்து கடைசிக் குறிப்பு 7.5 பில்லியன் மைல் தூரத்தில் இருந்து பெறப்பட்டது. பெப்ரவரி 1 - கொலம்பியா விண்ணோடம் பூமிக்குத் திரும்ப் வரும் வழியில் டெக்சசுக்கு மேல் வெடித்ததில் அனைத்து 7 விண்ணோடிகளும் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 9 - தார்ஃபூர் போர் ஆரம்பமானது. பெப்ரவரி 18 - தென் கொரியாவில் தொடருந்து ஒன்றில் தீ பரவியதில் 190 பேர் கொல்லப்பட்டனர். மார்ச் 19 - ஈராக் போர் ஆரம்பமானது. ஏப்ரல் 14 - மனித மரபணுத்தொகைத் திட்டம் முடிவடைந்தது. சூலை 22 - சதாம் உசைனின் இரு மகன்கள் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டனர். அக்டோபர் 15 - சீனா தனது முதலாவது மனித விண்வெளிப்பறப்பை ஆரம்பித்தது. அக்டோபர் 24 - கான்கோர்டு விமானம் தனது கடைசிப் பறப்பை மேற்கொண்டது. டிசம்பர் 5 - உருசியாவின் தெற்கே இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். டிசம்பர் 13 - சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 26 - ஈரானின் தென்கிழக்கே இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பிறப்புகள் இறப்புகள் பெப்ரவரி 1 - கல்பனா சாவ்லா, அமெரிக்க விண்வெளி வீராங்கனை (இ. 1961) சூலை 30 - கே. பி. சிவானந்தம், வீணை வாத்திய கலைஞர் (பி. 1917) ஆகஸ்டு 16 - இடி அமீன், உகாண்டா முன்னாள் அரசுத்தலைவர் (பி. 1924) செப்டம்பர் 9 - எட்வர்ட் டெல்லர், அங்கேரிய இயற்பியலாளர் (பி. 1908) அக்டோபர் 8 - வீரமணி ஐயர், ஈழத்துக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1931) அக்டோபர் 9 - ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (பி. 1928) நோபல் பரிசுகள் இயற்பியல்: அலெக்சி ஆப்ரிகோசொவ், உருசியா, ஐக்கிய அமெரிக்கா வித்தாலி கீன்ஸ்புர்க், உருசியா அந்தோனி லெகெட், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா இரசாயனவியல்: பீட்டர் ஏக்ரே, ஐக்கிய அமெரிக்கா ரொடெரிக் மெக்கினன், ஐக்கிய அமெரிக்கா மருத்துவம்: பவுல் லாட்டர்புர், ஐக்கிஅய் அமெரிக்கா சர் பீட்டர் மான்ஸ்ஃபீல்ட், ஐக்கிய இராச்சியம் இலக்கியம்: ஜே. எம். கோட்ஸி, தென்னாபிரிக்கா அமைதி: சீரீன் இபாதி, ஈரான் பொருளியல் ராபர்ட் எங்கில், ஐக்கிய அமெரிக்கா கிளைவ் கிராஙர், ஐக்கிய இராச்சியம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 2003ஆம் ஆண்டு ஒரு பார்வை கூகுல் தளத்தின் 2003 ஆம் ஆண்டு பதிவுகள்
2844
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram, 13 ஏப்ரல் 1930 – 8 அக்டோபர் 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு வளர்ப்பு குடும்பம் தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு, தாமரங்கோட்டை என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும் வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவம்மாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார். எழுத்தாற்றல் பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். பொதுவுடைமை ஆர்வம் இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர். இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ. ஏ. கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகியும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார். கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள் விவசாயி மாடுமேய்ப்பவர் மாட்டு வியாபாரி மாம்பழ வியாபாரி இட்லி வியாபாரி முறுக்கு வியாபாரி தேங்காய் வியாபாரி கீற்று வியாபாரி மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி உப்பளத் தொழிலாளி மிஷின் டிரைவர் தண்ணீர் வண்டிக்காரர் அரசியல்வாதி பாடகர் நடிகர் நடனக்காரர் கவிஞர் மறைவு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடிந்த ஐந்து வருடங்களில் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார். இவர் இறக்கும் போது இவருக்கு 5 மாத குழந்தை இருந்தது. இவரது மறைவுக்கு கலைஞர் மு. கருணாநிதி இவரது அஞ்சலியில் "கண்களை மூடுகிறேன்; கல்யாணம் தெரிகிறார் -- ஒளி தெரிகிறது! கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை - கலையுலகு இருட்டாயிருக்கிறது" எனத் தெரிவித்தார். மணி மண்டபம் தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும் புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதிஎழுதி வச்சாங்க எல்லாந்தான் படிச்சீங்க என்னபண்ணிக் கிழிச்சீங்க? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் : கருப்பொருள்:இயற்கை பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு 1.ஆடுமயிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 2.ஓ மல்லியக்கா ( மக்களைப் பெற்ற மகராசி 1957 ) 3.வம்புமொழி ( பாண்டித்தேவன்1959 ) 4.வா வா வெண்ணிலவே ( செளபாக்கியவதி 1957 ) 5.கனியிருக்கு ( எதையும் தாங்கும் இதயம் 1962 ) 6.கொக்கரக் கொக்கரக்கோ சேவலே ( பதிபக்தி 1958 ) 7.சலசல ராகத்திலே -கங்கையக்கா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 8.துணிந்தால் துன்பமில்லை ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 9.காக்காய்க்கும் ( பிள்ளைக் கனியமுது ) 10.வா வா சூரியனே ( பாண்டித்தேவன் 1959 ) 11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 ) கருப்பொருள்:சிறுவர் 12.குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 13.அன்புத் திருமணியே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 14.அமுதமே என் அருமைக்கனியே ( உலகம் சிரிக்கிறது 1959 ) 15.செங்கோல் நிலைக்கவே - மகுடம் காக்க ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 16.சின்னஞ்சிறு கண்மலர் ( பதிபக்தி 1958 ) 17.அழாதே பாப்பா ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958) 18.ஆனா ஆவன்னா ( அன்பு எங்கே 1958 ) 19.இந்த மாநிலத்தை பாராய் மகனே ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959) 20.சின்னப்பயலே...சின்னப்பயலே ( அரசிளங்குமரி 1958) 21.தூங்காதே தம்பி தூங்காதே ( நாடோடி மன்னன் 1958 ) 22.திருடாதே பாப்பா திருடாதே ( திருடாதே 1961 ) 23.ஏட்டில் படித்ததோடு இருந்துவிடுதே ( குமாரராஜா 1961 ) 24.உன்னைக் கண்டு நானாட ( கல்யாண பரிசு ) கருப்பொருள்: காதல், மகிழ்ச்சி, சோகம் 25. பக்கத்திலே இருப்பே (தேடிவந்த செல்வம் 1958) 26. வாடாத சோலை (படித்த பெண் 1956) 27. புது அழகை - ஆணும் பெண்ணும் (அவள் யார் 1959) 28. படிக்க படிக்க நெஞ்சிருக்கும் (இரத்தினபுரி இளவரசி 1959) 29. காலம் எனுமொரு ஆழக்கடலில் (அமுதவல்லி 1959) 30. உள்ளங்கள் ஒன்றாகி (புனர்ஜென்மம் 1961) 31. இன்று நமதுள்ளமே (தங்கப்பதுமை 1958) 32. கழனி எங்கும் கதிராடும் (திருமணம் 1958) 33. ஆசை வைக்கிற இடந்தெரியணும் (கலையரசி 1963) 34. என்னைப் பார்த்த கண்ணு (குமாரராஜா 1961) 35. அன்புமனம் கனிந்தபின்னே (ஆளுக்கொரு வீடு 1960) 36. நீயாடினால் ஊராடிடும் (பாண்டித் தேவன் 1959) 37. வாடிக்கை மறந்ததும் ஏனோ (கல்யாணப் பரிசு 1959) 38. நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு (இரும்புத் திரை 1960) 39. வருஷத்திலே ஒருநாளு தீபாவளி (கல்யாணிக்குக் கல்யாணம் 1959) 40. ஆசையினாலே மனம் (கல்யாணப் பரிசு 1959) 41. துள்ளி துள்ளி அலைகளெல்லாம் (தலை கொடுத்தான் தம்பி) 42. பெண்ணில்லே நீ (ஆளுக்கொரு வீடு 1960) 43. ஆண்கள் மனமே அப்படித்தான் (நான் வளர்த்த தங்கை) 44. மஞ்சப்பூசி பூ முடிச்சு (செளபாக்கியவதி 1957) 45. கன்னியூர் சாலையிலே (பொன் விளையும் பூமி 1959) 46. போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் -தாலி (வீரக்கனல் 1960) 47. அடக்கிடுவேன் (அவள் யார் 1959) 48. எழுந்தென்னுடன் வாராய் (தங்கப்பதுமை 1958) 49. ஆடைகட்டி வந்த நிலவோ (அமுதவல்லி 1959) 50. மானைத் தேடி மச்சான் வர (நாடோடி மன்னன் 1958) கருப்பொருள்: காதல் 51. துள்ளாத மனமும் துள்ளும் (கல்யாணப் பரிசு 1959) 52.அழகு நிலாவின் பவனியிலே ( மஹேஸ்வரி 1955 ) 53.உனக்காக எல்லாம் உனக்காக ( புதையல் 1957 ) 54.கண்ணுக்கு நேரிலே ( அலாவுதினும் அற்புத விளக்கும் 1957 ) 55.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப்பதுமை 1959 ) 56.கற்பின் இலக்கணமே ( நான் வளர்த்த தங்கை 1958 ) 57.எதுக்கோ இருவிழி ( செளபாக்கியவதி 1957 ) 58.உன்னை நினைக்கையிலே ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 ) 59.உன்னைக் கண்டு நானாட ( கல்யாணபரிசு 1959 ) 60.ஆசை கொண்ட நெஞ்சிரண்டு ( இரும்புத் திரை 1960 ) 61.மொகத்தைப் பார்த்து முறைக்காதிங்க ( விக்கிரமாதித்தன் 1962 ) 62.இல்லாத அதிசயமா ( கற்புக்கரசி 1957 ) 63.துடிக்கும் வாலிபமே ( மர்மவீரன் 1958 ) 64.கன்னித் தீவின் ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 65.வேல் வெல்லுமா ( மஹாலட்சுமி 1960 ) 66.ஐயா நானாடும் நாடகம் ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 67.மாந்தோப்பு வீட்டுக்காரி ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 68.பார் முழுவதுமே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 69.கண்கள் ரெண்டும் வண்டு ( அமுதவல்லி 1959 ) 70.ஊரடங்கும் வேளையிலே ( ரங்கோன் ராதா 1956 ) 71.சின்னக் குட்டி நாத்துனா ( அமுதவல்லி 1959 ) 72.இன்ப முகம் ஒன்று ( நான் வளர்த்த தங்கை 1958 ) 73.அன்பு அரும்பாகி ( தலை கொடுத்தான் தம்பி 1959 ) 74.ஒன்றுபட்ட கணவனுக்கு ( தங்கப்பதுமை 1959 ) 75.பறித்த கண்ணைப் பார்த்துவிட்டேன் ( தங்கப்பதுமை 1959 ) 76.ஓ...சின்ன மாமா ( செளபாக்கியவதி 1957 ) 77.ஓ...கோ கோ மச்சான் ( செளபாக்கியவதி 1957 ) 78.சிங்கார பூங்காவில் ஆடுவோமே ( செளபாக்கியவதி 1957 ) 79.என்றும் இல்லாமல் ( கலைஅரசி 1963 ) 80.நினைக்கும்போது நெஞ்சம் ( கலைஅரசி 1963 ) 81.கண்ணாடிப் பாத்திரத்தில் ( புனர் ஜென்மம் 1961 ) 82.உருண்டோடும் நாளில் ( புனர் ஜென்மம் 1961 ) 83.மருந்து விக்கிற ( தங்கப்பதுமை 1959 ) 84.மச்சான் உன்னைப் பாத்து ( பாசவலை 1956 ) 85.சிங்கார வேலவனே ( செளபாக்கியவதி 1957 ) 86.காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் ( கல்யாணபரிசு 1959 ) 87.காதலிலே தோல்வியுற்றான் கன்னியொருத்தி ( கல்யாணபரிசு 1959 ) 88.மங்கையரின்றி தனியாக ( குமார ராஜா 1960 ) 89.கண்ணோடு கண்ணு ( நாடோடி மன்னன் 1958 ) 90.மணமகளாக வரும் ( குமார ராஜா 1960 ) 91.நான் வந்து சேர்ந்த இடம் ( குமார ராஜா 1960 ) 92.ஆனந்தம் இன்று ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 ) 93.சின்னப் பொண்ணாண ( ஆரவல்லி 1957 ) கருப்பொருள்:நகைச்சுவை 94.நந்தவனத்திலோர் ஆண்டி ( அரசிளங்குமரி 1958) 95.மாமா மாமா பன்னாடெ ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 ) 96.காப்பி ஒண்ணு எட்டணா ( படித்த பெண் 1956 ) 97.கோபமா என்மேல் ( குல தெய்வம் 1956 ) 98.கையாலே கண்ணைக் கசக்கிக்கிட்டு ( குல தெய்வம் 1956 ) 99.கோழியெல்லாம் கூவையிலே ( குல தெய்வம் 1956 ) 100.காயமே இது மெய்யடா ( கற்புக்கரசி 1957 ) 101.ராக் ராக் ராக் ராக் இண்ட்ரோல் ( பதிபக்தி 1958 ) 102.சீவி முடிச்சிக்கிட்டு ( பிள்ளைக்கனியமுது 1958 ) 103.இந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 ) கருப்பொருள்: கதைப்பாடல் 104.நாட்டுக்கு ஒரு வீரன் ( ரங்கோன் ராதா 1956 ) 105.அடியார்கள் உள்ளத்தில் ( குலதெய்வம் 1956 ) கருப்பொருள்: நாடு 106.எங்கே உண்மை என் நாடே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 107. துள்ளி வரப் போறேன் ( திருமணம் 1958 ) 108.ஒற்றுமையில் ஓங்கிநின்ற ( மர்ம வீரன் 1958 ) 109.தஞ்சமென்று வந்தவரைத் ( கலையரசி 1965 ) 110.மூளை நெறஞ்சவங்க ( உத்தம புத்திரன் 1958 ) கருப்பொருள்: சமூகம் 111.வீடு நோக்கி ஓடுகின்ற ( பதிபக்தி 1958 ) 112.வீடு நோக்கி ஓடிவந்த ( பதிபக்தி 1958 ) 113.ஒரு குறையும் செய்யாம - இருக்கும் ( கண் திறந்தது 1959 ) 114.உருளுது பொரளுது ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 ) 115.ஆம்பிளைக் கூட்டம் ( புதுமைப் பெண் 1959 ) 116.பாடுபட்டு காத்த நாடு ( விக்கிரமாதித்யன் 1962 ) 117.தாயில்லை தந்தையில்ல ( ஆளுக்கொருவீடு 1960 ) 118.சூதாடி மாந்தர்களின் ( உலகம் சிரிக்கிறது 1959 ) 119.அண்ணாச்சி வந்தாச்சி ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 120.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)ஸ்ரீ கருப்பொருள்: அரசியல் 121.மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 ) 122.எல்லோரும் இந்நாட்டு மன்னரே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 123.படிப்பு தேவை அதோடு உழைப்பும் ( சங்கிலித் தேவன் 1960 ) 124.சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் ( பாண்டித் தேவன் 1959 ) 125.மனுசனைப் பாத்துட்டு ( கண் திறந்தது 1959 ) 126.விஷயம் ஒன்று சொல்ல ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 ) 127.தேனாறு பாயுது செங்கதிரும் ( படித்த பெண் 1954 ) கருப்பொருள்: தத்துவம் 128.ஔவிதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959 ) 129.ஏனென்று கேட்கவே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 130.கல்லால் இதயம் ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 131.இரை போடும் மனிதருக்கே இரையாகும் ( பதிபக்தி 1958 ) 132.நீ கேட்டது இன்பம் ( ஆளுக்கொருவீடு 1960 ) 133.ஈடற்ற பத்தினியின் - ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ( தங்கப்பதுமை 1959 ) 134.தர்மமென்பார் - இந்த திண்ணைப் பேச்சு ( பதிபக்தி 1958 ) 135.உனக்கெது சொந்தம் ( பாசவலை 1956 ) 136.சூழ்ச்சியிலே - குறுக்கு வழியில் ( மகாதேவி 1957 ) 137.எல்லோரும் - அது இருந்தால் ( நல்ல தீர்ப்பு 1959 ) 138.உறங்கையிலே - பொறக்கும் போது ( சக்கரவர்த்தி திருமகள் 1957 ) 139.இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ( பாசவலை 1956 ) 140.கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957 ) கருப்பொருள்: பாட்டாளிகளின் குரல் 139.செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960 ) 140.பள்ளம் மேடுள்ள பாதையிலே ( கன்னியின் சபதம் 1958 ) 141.கொடுமை - சோகச் சுழலிலே ( பாண்டித் தேவன் 1959 ) 142.சின்னச் சின்ன இழை ( புதையல் 1957 ) 143.டீ டீ டீ ( கல்யாண பரிசு 1959 ) 144.எதிரிக்கு எதிரி ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 ) 145.என் வீட்டு நாய் ( உலகம் சிரிக்கிறது 1959 ) 146.நாட்டுக்குப் பொருத்தம் - விவசாயம் ( எங்கள் வீட்டு மகாலெட்சுமி ) 147.வெங்கிமலை உச்சியிலே ( வாழவைத்த தெய்வம் 1959 ) 148.என்றும் துன்பமில்லை ( புனர் ஜன்மம் 1961) 149.பொங்காத பெருங்கடல் நீதி ( புதுமைப் பெண் 1959 ) 150.உண்மை ஒரு நாள் ( பாதை தெரியுது பார் 1960 ) 151.ஏற்றமுன்னா ஏற்றம் ( அரசிளங்குமரி 1958) 152.நன்றிகெட்ட மனிதருக்கு ( இரும்புத் திரை 1960 ) 153.உலகத்தில் இந்த மரணத்தில் - கலங்காதே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 154.உண்மையை -இன்ப உலகில் ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 155.கரம்சாயா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 156.குட்டுகளைச் சொல்லணுமா ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 ) 157.தை பொறந்தா வழி பொறக்கும் ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 ) 158.சட்டையிலே தேச்சிக்கலாம் -சரக்கு ( சங்கிலித் தேவன் 1960 ) 159.சும்மா கெடந்த ( நாடோடி மன்னன் 1958 ) கருப்பொருள்: இறைமை 160.பார்த்தாயா மானிடனின் லீலையை ( நான் வளர்த்த தங்கை 1958 ) 161.ஓங்கார ரூபிநீ -அம்பிகையே ( பதிபக்தி 1958 ) 162.தேவி மனம் போலே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 163.அறம் காத்த தேவியே ( மஹேஸ்வரி 1955 ) 164.ஊருக்கெல்லாம் ஒரே சாமி ( ஆளுக்கொரு வீடு 1960 ) 165.ஓ மாதா பவானி ( செளபாக்கியவதி 1957 ) 166.ஆனைமுகனே -புள்ளையாரு கோயிலுக்கு ( பாகப்பிரிவினை 1959 ) 167.கண்டி கதிர்காமம் -எட்டுஜான் குச்சிக்குள்ளே ( அரசிளங்குமரி 1958) 168.அம்மா துளசி ( நான் வளர்த்த தங்கை 1958 ) 169.கங்கை -தில்லையம்பல நடராஜா ( செளபாக்கியவதி 1957 ) கருப்பொருள்: பொது 170.தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957 ) 171.வரும் பகைவர் படைகண்டு ( அம்பிகாபதி 1957 ) 172.பாசத்தால் எனையீன்ற ( அமுதவல்லி 1959 ) 173.ஜிலு ஜிலுக்கும் - சிட்டுக் குருவியிவ ( அமுதவல்லி 1959 ) 174.அள்ளி வீசுங்க காசை ( மஹேஸ்வரி 1955 ) 175.சவால் சவாலென்று ( கலைவாணன் 1959 ) 176.அடியார்க்கு - அன்பும் அறிவும் ( ஆளுக்கொரு வீடு 1960 ) 177.மங்கையருக்கு -அக்காளுக்கு வளைகாப்பு ( கல்யாணப் பரிசு 1959 ) 178.ஆட்டம் ( பாகப்பிரிவினை 1959 ) 179.கையில வாங்கினேன் ( இரும்புத் திரை 1960 ) 180.பிஞ்சு மனதில் - கோடி கோடி ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 ) 181.ஓரொண்ணு ஒண்ணு ( மகனே கேள் 1965 ) 182.ஆறறிவில் ஓரறிவு ( மகனே கேள் 1965 ) 183.கலைமங்கை உருவம் ( மகனே கேள் 1965 ) 184.ஆட்டம் பொறந்தது ( மகனே கேள் 1965 ) 185.மட்டமான பேச்சு ( மகனே கேள் 1965 ) 186.லால லால - பருவம் வாடுது ( மகனே கேள் 1965 ) 187.மணவரையில் - சூதாட்டம் ( மகனே கேள் 1965 ) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய பிரத்தியேக இணையத்தளம் Tamilnation.orgல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய கட்டுரை https://web.archive.org/web/20091019230034/http://geocities.com/Athens/5180/pkalyan.html பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Poet Pattukottai Kalyanasundaram, 80th birthday remembrance (சச்சி சிறீ காந்தா) - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்த பாட்டுக்கோட்டை பாடல்கள் 1930 பிறப்புகள் 1959 இறப்புகள் கவிஞர்கள் பாடலாசிரியர்கள் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் தமிழ்க் கவிஞர்கள் தமிழகக் கவிஞர்கள் தமிழகப் பாடலாசிரியர்கள் ஊர் பெயரால் அறியப்படும் மக்கள்
2846
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
வைரமுத்து
வைரமுத்து (Vairamuthu, பிறப்பு:13 சூலை 1953) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 2009 சனவரி மாதம் வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு இவர் தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980இல் "நிழல்கள்" திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர். படைப்புகள் கவிதைத் தொகுப்புகள் வைகறை மேகங்கள் திருத்தி எழுதிய தீர்ப்புகள் இன்னொரு தேசியகீதம் எனது பழைய பனையோலைகள் கவிராஜன் கதை இரத்த தானம் இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல தமிழுக்கு நிறமுண்டு பெய்யெனப் பெய்யும் ம‌ழை "எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்" கொடி மரத்தின் வேர்கள் தன்வரலாறு இதுவரை நான் கட்டுரைகள் கல்வெட்டுக்கள் என் ஜன்னலின் வழியே நேற்று போட்ட கோலம் ஒரு மெளனத்தின் சப்தங்கள் சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் வடுகபட்டி முதல் வால்கா வரை இதனால் சகலமானவர்களுக்கும் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் கொஞ்சம் தேனீர் நிறைய வானம் தமிழாற்றுப்படை புதினம் வானம் தொட்டுவிடும் தூரம்தான் மீண்டும் என் தொட்டிலுக்கு வில்லோடு வா நிலவே (வரலாற்று நாவல்) சிகரங்களை நோக்கி ஒரு போர்களமும் இரண்டு பூக்களும் காவி நிறத்தில் ஒரு காதல் தண்ணீர் தேசம் கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது) கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது) மூன்றாம் உலகப்போர் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது) ஒலி நாடாக்கள் கவிதை கேளுங்கள் தேன் வந்து பாயுது விருதுகள் கலைமாமணி விருது - 1990. சாகித்ய அகாதமி விருது -2003. (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்) பத்ம பூசன் விருது (2014) சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை). விருது பெற்ற பாடல்கள் அனைத்துப் பாடல்களுக்கும் (திரைப்படம்: முதல் மரியாதை) - 1985. சின்னச்சின்ன ஆசை (திரைப்படம்: ரோஜா) - 1992. போறாளே பொன்னுத்தாயி (திரைப்படம்: கருத்தம்மா), உயிரும் நீயே (திரைப்படம்: பவித்ரா) - 1994 முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் (திரைப்படம்: சங்கமம்) - 1999. நெஞ்சில் ஜில் ஜில் ஜில் (திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) - 2002. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே (திரைப்படம்: தென்மேற்கு பருவக்காற்று'') - 2010. எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று (திரைப்படம்: தர்மதுரை) - 2016 சிறப்புகள் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும். திரைப்படப் பட்டியல் வைரமுத்து திரை வரலாறு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வைரமுத்து பற்றி தெற்காசிய இலக்கியக் காட்சியகத்தில் உள்ள கட்டுரை வைரமுத்து எழுதிய தண்ணீர்தேசம் பாகம் 1 வைரமுத்து எழுதிய தண்ணீர்தேசம் பாகம் 2 தமிழ்நேஷன்.காம் தளத்தில் வைரமுத்து பற்றிய கட்டுரை 1953 பிறப்புகள் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் தமிழக எழுத்தாளர்கள் வாழும் நபர்கள் தேனி மாவட்ட எழுத்தாளர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் தேனி மாவட்ட நபர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழ்க் கவிஞர்கள்‎ தமிழகக் கவிஞர்கள்
2848
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
கண்ணதாசன்
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர். வாழ்க்கைக் குறிப்பு கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார். (மறைவு 4-2-1955 ). இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன் குடும்பம் கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி ஆச்சி (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்,. கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அரசியல் ஈடுபாடு அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்தது. காங்கிரஸ் பிளவு பட்ட போது இந்திராகாந்தி பக்கம் நின்றார். அது தான் இன்றைய காங்கிரஸ் கட்சி . தான் இருந்த கட்சிகளின் தலைவர்களை , அவர்களது உண்மை சொரூபம் தெரிய வந்ததும் அந்தக் கட்சியில் இருந்து விலகிவிடுவார். " " உதவாத பல பாடல் உணராதோர் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும் மனமே " என்று தன் தவறுகளை ஒப்புக் கொண்டவர். அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை 1978இல் எம்.ஜி.ஆர் நியமித்தார். மறைவு உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது. மணிமண்டபம் தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. விருதுகள் சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக) திரைத்துறைக்கான பங்களிப்புகள் திரையிசைப் பாடல்கள் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஐந்துதொகுதிகள் வசனம் எழுதிய திரைப்படங்கள் நாடோடி மன்னன் (1958) கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள் மதுரை வீரன் 1956 நானே ராஜா 1956 ராஜா தேசிங்கு மகாதேவி|(1957) மாலையிட்ட மங்கை(1958) கறுப்புப் பணம்(1964) தெனாலி ராமன்(1957) தெய்வத் திருமணங்கள் மன்னாதி மன்னன்(1960) திருடாதே ``(1961) ராணி சம்யுக்தா ``(1962) இல்லற ஜோதி(1954) லட்சுமி கல்யாணம் (1970) தயாரித்த படங்கள் கவிஞர் ஆறு திரைப்படங்களைத் தயாரித்தார். அவை: சிவகங்கை சீமை கவலை இல்லாத மனிதன் கறுப்புபணம் (1964) வானம்பாடி மாலையிட்ட மங்கை (1958) ரத்தத்திலகம் பாடலாசிரியர் பணி மூன்றாம் பிறை திரைப்படத்தில் கண்ணே கலைமானே இவரது கடைசிப்பாடலாகும் இலக்கியப் படைப்புகள் கவிதை நூல்கள் காப்பியங்கள் ஆட்டனத்தி ஆதிமந்தி இயேசு காவியம் ஐங்குறுங்காப்பியம் கல்லக்குடி மகா காவியம் கிழவன் சேதுபதி பாண்டிமாதேவி பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14. மலர்கள் மாங்கனி முற்றுப்பெறாத காவியங்கள் தொகுப்புகள் கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968 கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968 கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள் கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை. கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை. கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை. கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை. கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை. பாடிக்கொடுத்த மங்களங்கள் சிற்றிலக்கியங்கள் அம்பிகை அழகுதரிசனம் கிருஷ்ண அந்தாதி கிருஷ்ண கானம் கிருஷ்ண மணிமாலை கோபியர் கொஞ்சும் ரமணன், 1978 சனவரி முதல், கண்ணதாசன் இதழ் ஸ்ரீகிருஷ்ண கவசம் ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம் தைப்பாவை கவிதை நாடகம் கவிதாஞ்சலி மொழிபெயர்ப்பு பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்) பஜகோவிந்தம் புதினங்கள் அதைவிட ரகசியம் அரங்கமும் அந்தரங்கமும் அவளுக்காக ஒரு பாடல் அவள் ஒரு இந்துப் பெண் ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை) ஆயிரங்கால் மண்டபம் ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை. ஊமையன்கோட்டை என்னோட ராவுகள், 1978 நவம்பர், கண்ணதாசன் இதழ் ஒரு கவிஞனின் கதை கடல் கொண்ட தென்னாடு காமினி காஞ்சனா சரசுவின் செளந்தர்ய லஹரி சிவப்புக்கல் மூக்குத்தி, காமதேனு பிரசுரம், சென்னை 17 சிங்காரி பார்த்த சென்னை சுருதி சேராத ராகங்கள், காமதேனு பிரசுரம், சென்னை 17 சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது) தெய்வத் திருமணங்கள் நடந்த கதை பாரிமலைக்கொடி பிருந்தாவனம் மிசா முப்பது நாளும் பவுர்ணமி ரத்த புஷ்பங்கள், காமதேனு பிரசுரம், சென்னை 17 விளக்கு மட்டுமா சிவப்பு? வேலங்குடித் திருவிழா ஸ்வர்ண சரஸ்வதி சிறுகதைகள் ஈழத்துராணி (1954), அருணோதயம், சென்னை. ஒரு நதியின் கதை கண்ணதாசன் கதைகள் காதல் பலவிதம் - காதலிகள் பலரகம் குட்டிக்கதைகள் பேனா நாட்டியம் மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை) செண்பகத்தம்மன் கதை செய்திக்கதைகள் தர்மரின் வனவாசம் தன்வரலாறு எனது வசந்த காலங்கள் வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை) எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்) மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை) கட்டுரைகள் அந்தி, சந்தி, அர்த்தஜாமம் இலக்கியத்தில் காதல், 1956, அருணோதயம், சென்னை. இலக்கிய யுத்தங்கள் எண்ணங்கள் 1000 கடைசிப்பக்கம் கண்ணதாசன் கட்டுரைகள் (1960) காவியக்கழகம், சென்னை கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள் காதல் பலவிதம் காதலிகள் பல ரகம், 1978 ஏப்ரல், கண்ணதாசன் இதழ் கூட்டுக்குரல்; அருணோதயம், சென்னை. குடும்பசுகம் சந்தித்தேன் சிந்தித்தேன் சுகமான சிந்தனைகள் செப்புமொழிகள் ஞானமாலிகா ஞானரஸமும் காமரஸமும், 1978 பிப்ரவரி, கண்ணதாசன் இதழ் தமிழர் திருமணமும் தாலியும், 1956, அருணோதயம், சென்னை. தென்றல் கட்டுரைகள் தெய்வதரிசனம் தேவதாசிமுறை மீண்டும் வேண்டும், 1978 சூலை, கண்ணதாசன் இதழ் தோட்டத்து மலர்கள் நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை) நான் இறைவனைச் சந்திக்கிறேன் நான் பார்த்த அரசியல் - முன்பாதி நான் பார்த்த அரசியல் (பின்பாதி) நான் ரசித்த வர்ணனைகள், 1978 மார்ச், கண்ணதாசன் இதழ் பயணங்கள் புஷ்பமாலிகா போய் வருகிறேன், (1960) காவியக்கழகம், சென்னை மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை) ராகமாலிகா வாழ்க்கை என்னும் சோலையிலே சமயம் அர்த்தமுள்ள இந்து மதம் 1 : அர்த்தமுள்ள இந்து மதம் 2 : அர்த்தமுள்ள இந்து மதம் 3 : அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள் அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம் அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய் நாடகங்கள் அனார்கலி சிவகங்கைச்சீமை ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை. உரை நூல்கள் கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்: அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம் ஆண்டாள் திருப்பாவை எதையும் நான் கேலி செய்வேன்: காளமேகம் பாடல்கள், 1978, கண்ணதாசன் இதழ் கண்ணே கதவைத்திற!: கலிங்கத்துப்பரணி - கடைதிறப்புக் காட்சி, 1977 செப்டம்பர், கண்ணதாசன் இதழ் சங்கர பொக்கிஷம் சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல் தாசிவீடு சென்ற ஒருவனின் அனுபவங்கள்: சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது, 1977 நவம்பர், கண்ணதாசன் இதழ் திருக்குறள் காமத்துப்பால் பகவத் கீதை மதுவும் மங்கையரும்: கம்பராமாயணம் உண்டாட்டுப் படலம், 1977, கண்ணாதசன் இதழ் பேட்டிகள் கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4) சந்தித்தேன் சிந்தித்தேன் வினா-விடை ஐயம் அகற்று கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Tamilnation.org கண்ணதாசன் பற்றிய கட்டுரை 1927 பிறப்புகள் 1981 இறப்புகள் சிவகங்கை மாவட்ட நபர்கள் கவிஞர்கள் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் தமிழக எழுத்தாளர்கள் தமிழகக் கவிஞர்கள் தமிழ் பாடலாசிரியர்கள் தமிழகப் பாடலாசிரியர்கள் தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
2850
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஆய்தக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும். ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம். ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும் - நன்னூல்.97 எ.கா.: முள் + தீது = முஃடீது மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின் கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதைக் காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும். இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் மேற்கோள்கள் சார்பெழுத்துகள்
2852
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%20%28%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%29
பாலா (இயக்குநர்)
பாலா பழனிசாமி (Bala, பிறப்பு:சூலை 11, 1966) என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார். இயக்குநராக 'இருட்டிண்ட ஆத்மா’னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் 'சேது’. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் 'நந்தா’. ஜெயகாந்தனோட  'நந்தவனத்தில் ஒரு ஆண்டி’தான் 'பிதா மகன்’. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்’, ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து 'நான் கடவுள்’, ரெட் டீ’ நாவலைத்தான் 'பரதேசி' என்று ஒரு படத்துக்கான கதையை முடிவு செய்ததாக பாலா கூறுகிறார். தயாரிப்பாளராக பாலாவின் இயக்கத்தில் இல்லாத தயாரித்த திரைப்படங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தகங்கள் இவன் தான் பாலா (2004) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பாலாவின் இணையதளம் இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் 1966 பிறப்புகள் வாழும் நபர்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள் தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள் தேனி மாவட்ட நபர்கள்
2853
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%29
சேரன் (திரைப்பட இயக்குநர்)
சேரன் (Cheran, பிறப்பு: திசம்பர் 12, 1965) என்பவர் தமிழ்நாட்டை திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு (2000), ஆட்டோகிராப் (2004) மற்றும் தவமாய் தவமிருந்து (2005) போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சொல்ல மறந்த கதை (2000), தவமாய் தவமிருந்து (2005), பொக்கிசம் (2009), முரண் (2011) போன்ற பல திரைப்பட ங்களிலும் கதாநாகனாக நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். பிறப்பும் ,இளமை பருவமும் சேரன் மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் உள்ள திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார். தாயார் கமலா தன் கிராமத்திலே தொடக்க பள்ளி ஆசிரியை ஆக வேலை பார்த்தார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சிறிய வயதில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், சூன் 19, 2011 அன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தேர்வுச் செய்யப்பட்ட இரு துணைத்தலைவர்களில் சேரனும் ஒருவர் ஆவார். சினிமாவில் வேலையும் ,ஆர்வமும் திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னை வந்தார். ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இயக்குநர் உதவி இயக்குனராக இருந்த அவர் பார்த்திபன் மற்றும் மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கினாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து அதை தொடர்ந்து பொற்காலம் (1999), வெற்றிக் கொடி கட்டு (2000), பாண்டவர் பூமி (2001) போன்ற சமூக அவலங்களை சித்தரித்தே திரைப்படம் இயக்கினார். இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதை தொடர்ந்து அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006), ஆடும் கூத்து (2007), முரண் (2011) போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். நடிகர் 2002 ஆம் ஆண்டு இயக்குநர் தங்கர் பச்சான் என்பவர் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்புத்திறன் பரவலாக பேசப்பட்டு பாராட்டும் பெற்றார். பின்னர் பொக்கிசம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. நடிகர் விக்ரம் நடிக்க ஆட்டோகிராப் படம் தயாரானது. அழைப்புக் கடிதம் பிரச்சனையால் அதுவும் கைவிடப்பட்டு, பின்னர் அதில் இவரே கதாநாயகனாக நடித்து மற்றும் இயக்கவும் செய்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2004 இல் ஆரம்பித்த பொக்கிசம் இவர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதை தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் (2008), ராமன் தேடிய சீதை (2008), யுத்தம் செய் (2011), திருமணம் (2019) போன்ற பல திரைப்படங்களில் நடிகராக நடித்தார். விமர்சனம் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சேரன் "இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே, நாங்கள் எல்லாம், திரையுலகமே குரல் கொடுத்துள்ளோம். .. எங்களுடைய எல்லாவற்றையும் இழந்துவிட்டுப் போராடியுள்ளோம்... ஏன் இதையெல்லாம் பண்ணினோம் என்று அருவருப்பாகவுள்ளது..." என்று முறையற்ற டிவிடி மற்றும் இணையப் பதிவேற்றம் செய்பவர்களாக இலங்கைத் தமிழர்களைக் குறிப்பிட்டது சர்ச்சையை உருவாக்கியது. பின்னர், தான் குறிப்பிட்டது குறிப்பிட்ட சிலரைத்தான் ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களையும் அல்ல என சேரனால் மறுப்பு வெளியிடப்பட்டது. ஆயினும், இலங்கைத் தமிழர்கள் சார்பில் சேரன் போராட்டத்தையும் முறையற்ற டிவிடி விடயத்தையும் தொடர்புபடுத்தியிருக்கக் கூடாது என்றும், வியாபாரத்தையும் போராட்டத்தையும் சேர்க்க வேண்டாம் என்றும், அல்லது இலங்கைத் தமிழர்களுக்காக என்பதில் சில அல்லது குறிப்பிட்ட இலங்கைத் தமிழர்களுக்காக என தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் பதிலளிக்கப்பட்டது. திரைப்படங்கள் தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 1970 பிறப்புகள் வாழும் நபர்கள் மதுரைத் திரைப்பட நடிகர்கள் தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள் தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் கலைமாமணி விருது பெற்றவர்கள் தமிழ்த் திரைப்பட நடிகர்கள்
2854
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D
பாக்யராஜ்
கே.பாக்யராஜ் (Bhagyaraj, பிறப்பு: சனவரி 7, 1953) ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளன்கோயில் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் கிருஷ்ணசாமி-அமராவதி. மூன்றாவது மகனாகப் பிறந்தார். செல்வராஜ், தன்ராஜ் என இரு அண்ணன்கள் உண்டு. தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர், இயக்குநர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர். திரையுலக வாழ்க்கை 1977-ஆம் ஆண்டில் இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலேவில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதோடு, கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் எழுதியிருந்தார். தனது அடுத்த படமான புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாக அறிமுகம் செய்தார். ஒரு இயக்குனராக தமது முதல் படமாக பாக்யராஜ் உருவாக்கியது சுவர் இல்லாத சித்திரங்கள் (1979). (இடைக்காலத்தில் அவர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமான கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லன் வேடம் ஏற்று தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார்). முதல் படத்தில் சுதாகர் கதாநாயகனாகவும் சுமதி நாயகியாகவும் நடிக்க, ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தை பாக்யராஜ் ஏற்றிருந்தார். நகைச்சுவையும், சோகமும் சரிபாதியாக அதில் அமைந்திருந்தது. அடுத்து, சொந்தத் தயாரிப்பான ஒரு கை ஓசை திரைப்படம் துவங்கி தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார். அஸ்வினி இணைந்து நடித்த இப்படத்தில் அவர் வாய் பேச இயலாத ஊமைக் கதாநாயகனாக மேற்கொண்ட பாத்திரம் இரசிகர்களின் மனம் கவர்ந்தது. அடுத்து வெளியான மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா ஆகியவை பாக்யராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு வெற்றிப் படங்களாயின. அடுத்து மர்மங்கள் மற்றும் அதிரடி கொண்ட அதேசமயம் தனது முத்திரையுடனும் கூடிய ஒரு படமாக விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தைப் பாக்யராஜ் இயக்கி நடித்தார். பாக்யராஜ் தனது முத்திரையை முழுமையாகப் பதிந்து வெற்றி ஈட்டிய திரைப்படங்களாக அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்றவை கருதப்படுகின்றன. டார்லிங், டார்லிங், டார்லிங் வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின், 1982 ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது. இதில் பாக்யராஜ் கையாண்ட சில விஷயங்கள் (முருங்கைக்காய் போன்றவை) இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல் சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு போன்ற படங்களுக்கு பெரிய வசூலையும், விருதுகளையும் பெற்றுத்தந்தன. சொந்த வாழ்க்கை தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த "பிரவீணா" என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்யராஜின் "இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மணி" ஆகிய சில படங்களிலும் நடித்தவர். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருக்கிறார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு தன் முதல் படமான சக்கரக்கட்டி என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார். அரசியல் ஈடுபாடு துவக்கம் முதலே தன்னை எம். ஜி. ஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ், ருத்ரா திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அ.தி.மு.க. கட்சியில் இணைந்திருந்தார். இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சியாக எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் துவக்கினார். பின்னர், நாளடைவில் அது கலையவே, தி.மு.க. கட்சியில் சேர்ந்தார். எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாட்டில் 11 பிப்ரவரி 1989 இல் பாக்யராஜ் தொடங்கிய ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி 1991 கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதில் ஒரு வேட்பாளர் 87 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த கட்சி ஆரம்பக் கட்டத்திலேயே படுதோல்வி அடைந்தது. பாக்யராஜ் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். ஏப்ரல் 5, 2006 அன்று, கட்சித் தலைவர் கருணாநிதி முன்னிலையில் பாக்யராஜ் திமுகவில் இணைந்தார், அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதாவை விமர்சித்தார். திமுகவில் இருந்து விலகி அரசியலில் பார்வையாளராக இருந்து வந்தார். பின்னர் திமுகவில் இருந்து விலகி அரசியலில் பார்வையாளராக இருந்து வருகிறார்.. இலக்கிய ஈடுபாடு இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர் பாக்யராஜ். முற்றிலும் நகைச்சுவைப் படமான 'இன்று போய் நாளை வா' என்னும் திரைப்படத்தில் கூட ஜெயகாந்தன் எழுதிய 'சமூகம் என்பது நாலு பேர்' என்னும் சிறுகதையைப் பற்றிய ஒரு குறிப்பு வருமாறு அமைத்திருந்தார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் பாக்யா எனும் வார இதழ் ஒன்றினையும் நடத்தி வந்தார். பாக்யராஜ் உருவாக்கிய இயக்குநர்கள் தமது குருவான பாரதிராஜாவைப் போலவே, பாக்யராஜும், பல திறமையான இயக்குநர்களை உருவாக்கினார். இவர்களில், பாண்டியராஜன், ரா.பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன், ஜி. எம். குமார் ஆகியோர் வெற்றிகரமான இயக்குநர்களாகத் திகழ்ந்தனர். சிறப்புக் கூறுகள்: நடிகராக பாக்யராஜ் ஒரு நடிகராகத் தமது எல்லைகளை உணர்ந்தவராக விளங்கினார். அவர் தனக்கென உருவாக்கிக் கொண்ட பாத்திரத்தை அப்பாவித்தனமும் சாமர்த்தியமும் சம அளவில் கலந்தோடிய ஒரு பண்புக்கூறாக வடித்திருந்தார். இப்பண்புக்கூறு மிகப் பெரும் அளவில் அவருக்கு வெற்றியைத் தந்தது. தன்னைத் தானே விமர்சித்து கேலி செய்து கொள்ளும் ஒரு அரிய பண்பு அவரது குணச்சித்திரமாக படங்களில் வெளிப்பட்டு, ஒரு தனிப்பாணியை உருவாக்கின. ஒரு சராசரித் திரை நாயகனுக்கான இலக்கணங்களிலிருந்து விடுபட்டு, யதார்த்த உலகின் அன்றாட வாழ்க்கையில் பலங்களும் பலவீனங்களும் நிறைந்த மனிதனைச் சித்தரிப்பதாக அவரது பாத்திரங்கள் அமைந்தன. திரைக்கதை அமைப்பாளராக இந்தியாவின் சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என 1980-ம் ஆண்டுகளில் பாக்யராஜ் போற்றப்பட்டார். திரைக்கதை அமைப்பில் அவர் கொண்டிருந்த ஆளுமைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான 'அவசர போலீஸ் 100'. 1977-ம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், “அண்ணா நீ என் தெய்வம்”. இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்து, தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து பாக்யராஜ் உருவாக்கிய 'அவசர போலீஸ் 100' வெற்றிப்படமாக விளைந்தது. கமலஹாசன் நடித்த “ஒரு கைதியின் டைரி” திரைப்படத்திற்கு பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் அமைத்திருந்தார். இப்படத்தைப் பின்னர் இந்தியில் அமிதாப் பச்சன் இரட்டை வேடத்தில் நடிக்க 'ஆக்ரி ராஸ்தா' என்னும் பெயரில் பாக்யராஜ் இயக்கினார். இது மாபெரும் வெற்றி அடைந்தது. இயக்குனராக பாக்யராஜ் பாசாங்குகளற்ற, யதார்த்தமான ஒரு இயக்குநர். இவரது படங்களில் நகைச்சுவை உணர்வு இறுதிவரை இழையோடும் தமது படங்களின் வழியாகத் தம்மை ஒரு அறிவுஜீவி என நிலை நிறுத்திக் கொள்ள அவர் முயன்றதில்லை. பெரிய தொழில் நுட்பங்களையும் அவர் சார்ந்திருக்கவில்லை. அநேகமாக அவர் படங்களில் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளோ, வெளி நாட்டுப் படப்பிடிப்புகளோ இருந்ததில்லை. அவர் முழுக்க முழுக்க, தாம் தமக்கென அமைத்துக் கொண்ட பாணி, தமது திறமைகள், திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பித் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இசையமைப்பாளராக “இது நம்ம ஆளு” திரைப்படத்திற்குப் பாக்யராஜே இசை அமைத்து, ஒரு பாடலையும் பாடியிருந்தார். மேலும் ஐந்து படங்கள் வரை இசையையும் தொடர்ந்தார். விமர்சனங்கள் பாக்யராஜ் தமது படங்களில் பாலியலை முன்னிறுத்துவதாக ஒரு விமர்சனம் எழுவதுண்டு. இதற்கு உதாரணமாக, மாபெரும் வெற்றி பெற்ற 'முந்தானை முடிச்சில்' முருங்கைக்காய், ‘சின்ன வீடு’ படத்தின் சில காட்சிகள், ‘இது நம்ம ஆளு’ போன்றவற்றைக் குறிப்பிடுவதுண்டு. ஆயினும், பாக்யராஜ், பாலியல் நெருக்கம் ஆபாசமாகத் தோன்றாதவாறு இவை அனைத்தையும் கணவன்-மனைவிக்கு இடையிலான நெருக்கத்தை மக்கள் விரும்பி ரசிக்கும் வகையில் வெளிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. உடன் நடித்த நாயகியர் பாக்யராஜின் திரைப்படங்கள் அனைத்தும் அவரது பாத்திரத்தை முன்னிறுத்தியவையாகவே அமைந்தமையால், நாயகியருக்குப் பொதுவாக, பெருமளவில், அவற்றில் பணி இருந்ததில்லை. இருப்பினும், அந்த ஏழு நாட்கள் படத்தில் அம்பிகா மற்றும் மௌன கீதங்கள் திரைப்படத்தில் சரிதா ஆகியோர் தமது பாத்திரங்களில் திறம்பட நடித்து நற்பெயர் பெற்றனர். பிரவீணா, பூர்ணிமா பாக்கியராஜ் (இவர்கள் இருவரும் பாக்யராஜுடன் வாழ்விலும் இணைந்தவர்கள்), ரதி அக்னிஹோத்ரி (பாக்யராஜின் முதல் நாயகி), ராதிகா, ஊர்வசி (பாக்யராஜின் அறிமுகமான இவர் நகைச்சுவை மிளிரும் நடிப்பிற்குப் பெயர் பெற்றவர்), பானுப்ரியா, குஷ்பூ, மீனாக்‌ஷி சேஷாத்ரி ஆகியோர் பாக்யராஜின் திரை நாயகியரில் குறிப்பிடத் தகுந்தவர்கள். பிற மொழிகளில் பாக்யராஜின் திரைப்படங்கள் இந்தியில் பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் ஆக்ரி ராஸ்தா. ஆயினும், அவரது பல படங்கள் தமிழில் வெற்றிக்கொடி நாட்டியமையால் ஏறக்குறைய அவரின் அனைத்துப் படங்களும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அந்தந்த மொழி முன்னணி நடிகர்களால் நடிக்கப்பெற்று பெருவெற்றி பெற்றன. இவற்றில் பலவற்றில் இந்தி நடிகர் அனில் கபூர் நடித்திருந்தார். சிலவற்றில் கோவிந்தாவும், முந்தானை முடிச்சின் மறுவாக்கத்தில் ராஜேஷ் கன்னாவும் நடித்திருந்தனர். இவற்றில் இந்தியில் ஓ சாத் தின் என்ற பெயரில் வெளியான அந்த ஏழு நாட்கள் மற்றும் பேட்டா என்ற பெயரில் வெளியான 'எங்க சின்ன ராசா' ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. பாக்யராஜ் திரைப்படங்கள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பாக்கியராஜின் அரசியல் பற்றிய ஒரு வலைத்தளப் பதிவு பாக்யராஜின் திரைப்படப் பட்டியல் அளிக்கும் ஒரு ஐஎம்டிபி பதிவு இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் ஈரோடு மாவட்ட நபர்கள் 1953 பிறப்புகள் வாழும் நபர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
2863
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
மகரக்குறுக்கம்
"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும். மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம் தனிமொழியில் மெய்யெழுத்துகளில் ன், ண் ஆகிய 2 இரண்டு மெய்யெழுத்துகளையும் அடுத்து வரும் மகர ஒற்றும் (ம்), புணர் மொழியில் மகர மெய்யை அடுத்துவரும் வகர ஒற்றும் (வ்) வரும் இடங்களிலும், மகர ஒற்று தன் மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும். இதுவே மகரக் குறுக்கம் எனப்படுகிறது. இதற்கான பண்டைய உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு தனிமொழி போன்ம் காண்ம் புணர்மொழி வரும்வண்ணக்கன் மகரக் குறுக்கத்திற்கு உடன்படும் ம் என்ற ஒலிக்குரிய மாத்திரை அளவு கால். மகரப் பிரகரணம் இதனைக் கூறும் தனியொரு நூலாக விளங்கிற்று எனத் தெரிகிறது. இலக்கண நூல் விளக்கம் ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும் என்னும் நன்னூல் 97-ஆம் நூற்பாவுக்கு உரையாசிரியர்கள் வரும் வண்டி தரும் வளவன் என்னும் எடுத்துக்காட்டுகின்றனர். மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும். இஃது ஒரு வகை மகரக்குறுக்கம். செய்யுள் இறுதிப் போலி மொழிவயின் னகார மகாரம் ஈர் ஒற்றாகும் என்பது தொல்காப்பியம். இதன்படி பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையிலும் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும். எடுத்துக்காட்டு உசாத்துணை இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் அடிக்குறிப்பு ஒலிப்பியல் சார்பெழுத்துகள்
2865
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%94%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஔகாரக் குறுக்கம்
ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும். இலக்கணம் தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம் நையும் ஔ உம் முதல் அற்று ஆகும் - நன்னூல்.95 எடுத்துக்காட்டு ஔவை ஔவியம் ஔசிதம் மௌவல் வௌவால் மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்துள்ள 'ஔ' தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதைக் காணலாம். குறிப்பு ஔகாரம் உயிர் எழுத்தின் வரிசையில் கடைசியாக நின்றாலும் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வரா. உசாத்துணை இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் சார்பெழுத்துகள்
2890
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE
பாப்லோ நெருடா
பாப்லோ நெருடா, (Pablo Neruda, ஜூலை 12, 1904 – செப்டம்பர் 23, 1973) என்ற புனைபெயர் கொண்ட ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ ( Ricardo Eliecer Neftalí Reyes Basualto), சிலி நாட்டில் பிறந்தவர். இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர். இவர் கவிஞராக மட்டுமல்லாது, சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், மார்க்சிய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர். 1920 ஆம் ஆண்டு கவிதை எழுதுவதற்காக, செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெருடாவின் பெயரால் உந்தப்பட்டு, தன் பெயரையும் பாப்லோ நெருடா என்ற புனைப்பெயரினை ஏற்றுக்கொண்டார். பாப்லோ என்பது ஸ்பானிஷ் மொழியில் பால் (Paul) என்பதன் வடிவமாகும். வாழ்க்கை 1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெருடா பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே இவரை ஈன்ற தாய் மறைந்தார். இவர் தந்தை, டோனா ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை, மறுமணம்‌ செய்து கொண்டார். சிற்றன்னையென்றாலும் நெருடாவின் மேல் அளவற்ற பாசம் கொண்டு வளர்த்தார். நெருடா, கார்டியா மார்வாடி பற்றி கூறும் போதெல்லாம் இவரைப் பெருந்தாய் என்று பெருமிதம் கொள்வார். முதல் முயற்சியாக இவர் தனது எட்டாம் அகவையில் எழுதிய கவிதை, இவருடைய பெருந்தாயைப் பற்றிய‌தே. பாப்லோ நெருடா என்ற புனைப்பெயருடன் எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு, இவருடைய 19ஆம் வயதில் " வைகறைக் கதிர்கள் (Books of Twilights) " என்ற பெயரில் 1923 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஸ்பானிய மொழியில் பெரும் கிளர்ச்சியும், பரபரப்பும் ஊட்டியது நெருடாவின் "இருபது காதல் கவிதைகளும் ஒரு விரக்தி பாடலும்" என்ற கவிதை தொகுப்பு. இத்தொகுப்பு வெளியிடும் போது நெருடாவின் வயது இருபது. காதல் கவிதைகளில் அதிர்ச்சியும் நேரடித்தன்மையும் கொண்ட அத்தொகுப்பு ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் நெருடாவினை பிரபலமாக்கியது. 1927ஆம் ஆண்டு சிலியின் தூதராக அவர் ரங்கூன் (பர்மா) சென்றார். ஆறு ஆண்டுகள் இலங்கையிலும், சிங்கப்பூரிலும், ரங்கூனிலும் அவர் தூதராகப் பணியாற்றினார். இந்த ஆண்டுகளில் மாபெரும் இலக்கியவாதிகளான, ப்ராஸ்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், வால்ட் விட்மன் போன்றவர்களுடைய எழுத்தின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. பெருமை தமிழில், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடிய கணியன் பூங்குன்றனார் போலவே நெருடாவும் "பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றேதான் (The skin of the earth is same everywhere) " என்று பாடியுள்ளார். 1964ஆம் ஆண்டு ப்ரெஞ்சு தத்துவவாதியான ழான் பால் சார்த்தர் நோபல் பரிசு வேண்டாம் என்று சொல்லி மறுத்ததற்கு ஒரு காரணம், அந்த ஆண்டு பாப்லோ நெருடாவிற்கு பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்பது. 1971 ஆம் ஆண்டு பாப்லோ நெருடாவுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. "இருபதாம் நூற்றாண்டில் உலக மொழிகள் எல்லாம் கண்ட மாபெரும் கவிஞர் இவரே" என்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், நெருடாவினைப் புகழ்கின்றார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Profile at the Poetry Foundation Profile at Poets.org with poems and articles Nobel Biography NPR Morning Edition on Neruda's Centennial 12 July 2004 (audio 4 mins) "Pablo Neruda's 'Poems of the Sea'" 5 April 2004 (Audio, 8 mins) "The ecstasist: Pablo Neruda and his passions." The New Yorker. 8 September 2003 Documentary-in-progress on Neruda, funded by Latino Public Broadcasting site features interviews from Isabel Allende and others, bilingual poems Poems of Pablo Neruda பாப்லோ நெருடா, 1971ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக நோபெல் பரிசு பெற்றவர் நெருடா அமைப்பு பாப்லோ நெருடாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள் பாப்லோ நெருடாவின் வாழ்க்கை வரலாறு கவிஞர்கள் சிலேய எழுத்தாளர்கள் நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள் 1904 பிறப்புகள் 1973 இறப்புகள்
2897
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%29
அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)
அகத்தியன் (Agathiyan) () என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார். 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். வாழ்க்கை வரலாறு இவரது இயற்பெயர் கருணாநிதி ஆகும். இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி ஆகும். இவர் இராதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜயலட்சுமி, நிரஞ்சனா, கார்த்திகா என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் விஜயலட்சுமி 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்கிய திரைப்படங்கள் மாங்கல்யம் தந்துனானே வான்மதி காதல் கோட்டை கோகுலத்தில் சீதை விடுகதை காதல் கவிதை (1997) ராமகிருஷ்னா (2004) சிர்ஃப் தும் (இந்தி) செல்வம் (2005) நெஞ்சத்தைக் கிள்ளாதே '(2008) திரைக்கதை எழுதிய திரைப்படங்கள் சந்தோஷம் மேற்கோள்கள் புற இணைப்புகள் தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் வாழும் நபர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
2899
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%28%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%29
ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)
ஷங்கர் (ஆங்கிலம்: Shankar) (பிறப்பு: ஆகத்து 17, 1963) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பணியாற்றிய படங்கள் இயக்குநராக தயாரிப்பாளராக மேற்கோள்கள் வெளியிணைப்பு இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஷங்கர் இயக்குநர் இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் 1963 பிறப்புகள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் வாழும் நபர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள் தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
2902
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
லெனின்
லெனின் (Lenin) என்ற பெயர் கீழ்காணுபவர்களில் எவரையேனும் குறிக்கலாம். விளாதிமிர் லெனின் - உருசியப் புரட்சியாளர், சோவியத் ஒன்றியத்தின் முதல் ஆட்சித் தலைவர் பி. லெனின் - தமிழ்த் திரைப்பட இயக்குநர் ம. லெனின் - தமிழ் எழுத்தாளர்
2904
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
மகேந்திரன்
மகேந்திரன் (சூலை 25, 1939 — ஏப்ரல் 2, 2019) புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை. மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற குறும்புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ்த் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாக வைத்துப் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தைத் திரைப்படமாக்கத் திரைக்கதை, உரையாடல் போன்றவற்றை எழுதி வைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனைத் திரைப்படமாக்க முடியாமல் போனது. கிட்டத்தட்ட 26 படங்களுக்கு திரைக்கதை எழுதி, திரைக்கதை எழுத்தாளராக மகேந்திரன் திரைத்துறையில் நுழைந்தார். அவர் தனது முதல் திசை முயற்சியான முள்ளும் மலரும் (1978) மூலம் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தினார் . மகேந்திரன் அடுத்த திரைப்படமான உதிரிப்பூக்கள் புதுமைப்பித்தன் எழுதிய ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது, உறுதியாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான திரைப்பட தயாரிப்பாளர் அவரை ஸ்தாபித்தது. அவரது நெஞ்சத்தை கிள்ளாதே சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான விருது உட்பட மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றார் . காமராஜ் (2004), தெறி (2016), நிமிர் (2018) மற்றும் பேட்ட (2019) உள்ளிட்ட திரைப்படத்தின் பிற்பகுதியிலும் அவர் படங்களில் நடித்துள்ளார். அவர் இறப்பதற்கு முன், சென்னையில் உள்ள போஃப்டா திரைப்பட நிறுவனத்தின் திசைத் துறையின் தலைவராக இருந்தார். சுயசரிதை மகேந்திரன் ஜூலை 25, 1939 இல் ஜோசப் செல்லியா என்ற ஆசிரியருக்கும் மனோன்மணியத்திற்கும் பிறந்தார். மகேந்திரன் தனது பள்ளிப்படிப்பை இளையான்குடியில் முடித்தார் மற்றும் அவரது இடைநிலைப் நிறைவு அமெரிக்க கல்லூரி, மதுரை. பின்னர் அவர் அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பொருளியல் படிக்கச் சேர்ந்தார். கல்லூரி நாட்களில், மேடை நாடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். அது அந்த நேரம் போது எம்ஜி ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) கல்லூரி நாள் போது மகேந்திரன் நேரடியாக சினிமாவில் இருந்த வணிக கூறுகள் விமர்சித்தார் என்று ஒரு பேச்சு கொடுத்தார் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார். அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் மகேந்திரனைப் புகழ்ந்து, அவர் ஒரு நல்ல விமர்சகராக முடியும் என்று கூறினார். பட்டம் முடித்த பின்னர், சட்டம் படிக்க மெட்ராஸ் சென்றார். பாடநெறியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குப் பிறகு அவர் நிதிக் கவலைகள் காரணமாக நிறுத்த வேண்டியிருந்தது. பின்னர் அவர் மீண்டும் இளையான்குடி செல்ல முடிவு செய்தார், இருப்பினும், காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பனின் வற்புறுத்தலின் பேரில் அவர் ஒரு பத்திரிகையாளராக குறிப்பிட்ட கால இடைவெளியில் இனாமுஷாக்கத்தில் சேர்ந்தார். இந்த சமயத்தில்தான் அவர் மீண்டும் எம்.ஜி.ஆரைச் சந்தித்தார் , மேலும் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க முன்னாள் முடிவு செய்த பின்னர் பொன்னியன் செல்வனின் திரைக்கதையை எழுதும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார் . திரைக்கதையை ஒரு படமாக வளர்க்கும் யோசனை தாமதமானது, எம்.ஜி.ஆர் மகேந்திரனிடம் தனது நாடக குழுவுக்கு ஒரு கதை எழுதச் சொன்னார். மகேந்திரன் அனாதைகள் என்ற பெயரில் ஒரு ஸ்கிரிப்டை எழுதினார் . எம்.ஜி.ஆர் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தார். படத்திற்கு வாழ்வே வா என்று பெயரிட்ட அவர் சாவித்ரியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் . மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்தபின் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. விரைவில் எம்.ஜி.ஆர் காஞ்சித்தலைவன் என்ற படத்தில் நடித்தார், மகேந்திரனை இயக்குனரிடம் அவருக்கு உதவியாளராக்க பரிந்துரைத்தார். மகேந்திரன் 1966 ஆம் ஆண்டில் நாம் மூவர் படத்திற்கு திரைக்கதை எழுத்தாளராக முன்னேறினார். படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதே பேனரிலிருந்து அதிக சலுகைகளைப் பெற்றார் , அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான சபாஷ் தம்பி மற்றும் பணக்காரப் பிள்ளை போன்ற படங்களில் பணியாற்றினார். சிவாஜி கணேசன் நடித்த நிறைகுடம் படத்திற்கான ஸ்கிரிப்டையும் எழுதினார். 2014 ஆம் ஆண்டில் புதுமுகங்கள் நடித்த ஒரு புதிய படத்தில் பணிபுரிவதாக அறிவித்தார், இதற்காக இளையராஜா இசையமைத்தார். காமராஜ் (2004), தெறி (2016), மற்றும் நிமிர் (2018) ஆகிய படங்களிலும் அவர் ஒரு நடிகராக பணியாற்றினார். அவர் சென்னையில் உள்ள ப்ளூ ஓஷன் ஃபில்ம் அண்ட் டெலிவிஷன் அகாடமியின் (போஃப்டா) ஒரு பகுதியாக இருந்தார், அங்கு அவர் திரைப்படத் தயாரிப்பு மற்றும் திசைப் பாடத்திற்கு தலைமை தாங்கினார். மகேந்திரன் ஏப்ரல் 2, 2019 அன்று தனது 79 வயதில் இறந்தார். விருதுகள் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது - தமிழ் - முள்ளும் மலரும் (1978) சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் - உதிரிப்பூக்கள் (1979) தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது - நெஞ்சத்தை கிள்ளாதே (1980) எதிர்மறை வேடத்தில் நடித்ததற்காக ஐஐஎஃப்ஏ உத்சவம் சிறந்த நடிகர் - தெறி (2016) திரைப்பட பட்டியல் சுவையான தகவல்கள் திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்குக் கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார். இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். மகேந்திரன் சினிமாவும் நானும் என்னும் நூலினை எழுதியுள்ளார். இது 2004ஆம் ஆண்டு வெளியானது. திரையுலகில் ஒரு இடம் பெற முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். தமக்கு மாதச் சம்பளம் அளித்துக் கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்குத் திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதைத் தாம் பூர்த்தி செய்யவில்லை எனினும், எம்.ஜி.ஆர். அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். எனினும், எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திற்கும் இவர் உரையாடலோ திரைக்கதையோ எழுதியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகியோரின் வெற்றிப் படங்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார். ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் அவரே. மகேந்திரனின் முதல் படம் துவங்கி, அவரது பல படங்களில் சரத்பாபு இடம் பெற்றார். கன்னட நடிகை அஸ்வினியைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மகேந்திரன். படம்: உதிரிப் பூக்கள். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே. கமலஹாசனின் தமையன் சாருஹாசனைத் திரையுலகுக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒரு கன்னடப் படத்திற்காக மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார். விஜயனை அறிமுகம் செய்தது இயக்குநர் பாரதிராஜா எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார். மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் சுஹாசினி. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் நடிப்பாற்றலுக்காக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விருதை சுஹாசினி இழந்தார். (பின்னர் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிந்து பைரவி திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.) முள்ளும் மலரும் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திரா பணி புரிய மிகவும் உதவியவர் கமலஹாசன் என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை. இவர் தெறி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். திரைப் படைப்புகள் 1978: முள்ளும் மலரும் 1979: உதிரிப்பூக்கள் 1980: பூட்டாத பூட்டுகள் 1980: ஜானி 1980: நெஞ்சத்தை கிள்ளாதே 1981: நண்டு 1982: மெட்டி 1982: அழகிய கண்ணே 1984: கை கொடுக்கும் கை 1986: கண்ணுக்கு மை எழுது 1992: ஊர் பஞ்சாயத்து 2006: சாசனம் இதர படைப்புகள் அர்த்தம் (தொலைக்காட்சி நாடகம்) காட்டுப்பூக்கள் (தொலைக்காட்சி நாடகம் கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள் தங்கப்பதக்கம் - கதைவசனம் நாம் மூவர் - கதை சபாஷ் தம்பி - கதை பணக்காரப் பிள்ளை - கதை நிறைகுடம் - கதை திருடி - கதை மோகம் முப்பது வருஷம் - திரைக்கதை வசனம் ஆடு புலி ஆட்டம் - கதை வசனம் வாழ்ந்து காட்டுகிறேன் - கதை வசனம் வாழ்வு என் பக்கம் - கதை வசனம் ரிஷிமூலம் - கதை வசனம் தையல்காரன் - கதை வசனம் காளி - கதை வசனம் பருவமழை -வசனம் பகலில் ஒரு இரவு -வசனம் அவளுக்கு ஆயிரம் கண்கள் - கதை வசனம் கள்ளழகர் -வசனம் சக்கரவர்த்தி - கதை வசனம் கங்கா - கதை ஹிட்லர் உமாநாத் - கதை நாங்கள் - திரைக்கதை வசனம் challenge ramudu (தெலுங்கு) - கதை தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) -கதை சொந்தமடி நீ எனக்கு -கதை வசனம் அழகிய பூவே - திரைக்கதை வசனம் நம்பிக்கை நட்சத்திரம் -கதை வசனம் மேற்கோள்கள் 1939 பிறப்புகள் 2019 இறப்புகள் தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள் இந்தியத் தமிழர் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் சிவகங்கை மாவட்ட நபர்கள் தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள் தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
2905
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
துரைசாமி நெப்போலியன்
நெப்போலியன் என அழைக்கப்படும் குமரேசன் துரைசாமி (Kumaresan Duraisamy or Napoleon), (பிறப்பு: டிசம்பர் 2, 1963) தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பெற்றோர் பெயர் துரை சாமி ரெட்டியார் தாயார் பெயர் சரஸ்வதி அம்மாள் . இவர் 7 பிள்ளைகள் .இவர் 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார். தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடித்துள்ள திரைப்படங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் நெப்போலியன் அலுவலக இணையத்தளம் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் வாழும் நபர்கள் 1963 பிறப்புகள் திருச்சி மாவட்ட நபர்கள் நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள் 15வது மக்களவை உறுப்பினர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் திருச்சிராப்பள்ளித் திரைப்பட நடிகர்கள் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள்
2911
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%29
கல்கி (எழுத்தாளர்)
கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. வாழ்க்கைக் குறிப்பு கல்கி 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி பழைய சென்னை மாகாணத்தில் உள்ள அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த தற்போதைய மயிலாடுதுறை அருகிலான பட்டமங்களம் எனும் ஊரில் ராமசாமி ஐயங்கார்–தையல்நாயகி இணையாருக்கு ஒரு பிராமணர் குடும்பத்தில் மகனாக பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-இல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1922-இல் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-இல் அவர் நவசக்தி என்னும் பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-இல் வெளியானது. ‘கல்கி’யின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டமையால், அவருடைய பல படைப்புகள் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கின்றன. தமிழிசை வளர்ச்சிக்குப் பங்கு சமசுகிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலகட்டத்தில் தமிழிசைக்காகக் கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகளைத் "தரம் குறையுமா" எனும் புத்தக வடிவில் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. படைப்புகள் புதினங்கள் கள்வனின் காதலி (1937) தியாகபூமி (1938-1939) மகுடபதி (1942) அபலையின் கண்ணீர் (1947) சோலைமலை இளவரசி (1947) அலை ஓசை (1948) தேவகியின் கணவன் (1950) மோகினித்தீவு (1950) பொய்மான் கரடு (1951) புன்னைவனத்துப் புலி (1952) அமரதாரா (1954) வரலாற்று புதினங்கள் சிவகாமியின் சபதம் (1944 – 1946) பார்த்திபன் கனவு (1941 - 1943) பொன்னியின் செல்வன் (1951 – 1954) சிறுகதைகள் சுபத்திரையின் சகோதரன் ஒற்றை ரோஜா தீப்பிடித்த குடிசைகள் புது ஓவர்சியர் வஸ்தாது வேணு அமர வாழ்வு சுண்டுவின் சந்நியாசம் திருடன் மகன் திருடன் இமயமலை எங்கள் மலை பொங்குமாங்கடல் மாஸ்டர் மெதுவடை புஷ்பப் பல்லக்கு பிரபல நட்சத்திரம் பித்தளை ஒட்டியாணம் அருணாசலத்தின் அலுவல் பரிசல் துறை ஸுசீலா எம். ஏ. கமலாவின் கல்யாணம் தற்கொலை எஸ். எஸ். மேனகா சாரதையின் தந்திரம் கவர்னர் விஜயம் நம்பர் ஒன்பது குழி நிலம் புன்னைவனத்துப் புலி திருவழுந்தூர் சிவக்கொழுந்து ஜமீன்தார் மகன் மயிலைக் காளை ரங்கதுர்க்கம் ராஜா இடிந்த கோட்டை மயில்விழி மான் நாடகக்காரி "தப்பிலி கப்" கணையாழியின் கனவு கேதாரியின் தாயார் காந்திமதியின் காதலன் சிரஞ்சீவிக் கதை ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம் பாழடைந்த பங்களா சந்திரமதி போலீஸ் விருந்து கைதியின் பிரார்த்தனை காரிருளில் ஒரு மின்னல் தந்தையும் மகனும் பவானி, பி. ஏ, பி. எல் கடிதமும் கண்ணீரும் வைர மோதிரம் வீணை பவானி தூக்குத் தண்டனை என் தெய்வம் எஜமான விசுவாசம் இது என்ன சொர்க்கம் கைலாசமய்யர் காபரா லஞ்சம் வாங்காதவன் ஸினிமாக் கதை எங்கள் ஊர் சங்கீதப் போட்டி ரங்கூன் மாப்பிள்ளை தேவகியின் கணவன் பால ஜோசியர் மாடத்தேவன் சுனை காதறாக் கள்ளன் மாலதியின் தந்தை வீடு தேடும் படலம் நீண்ட முகவுரை பாங்கர் விநாயகராவ் தெய்வயானை கோவிந்தனும் வீரப்பனும் சின்னத்தம்பியும் திருடர்களும் விதூஷகன் சின்னுமுதலி அரசூர் பஞ்சாயத்து கவர்னர் வண்டி தண்டனை யாருக்கு? சுயநலம் புலி ராஜா விஷ மந்திரம் விருதுகள் சாகித்திய அகாதமி விருது, 1956 - அலை ஓசை சங்கீத கலாசிகாமணி விருது, 1953, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (ஆளுனர் ஸ்ரீ பிரகாசா தலைமை) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கல்கி கிருஷ்ணமூர்த்தி: பொன்னியின் செல்வன் எழுத்தாளரின் பன்முகத் தன்மை Tamilnation.org தளத்தில் உள்ள கல்கி பற்றிய கட்டுரை 1899 பிறப்புகள் 1954 இறப்புகள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் தமிழக எழுத்தாளர்கள் இதழாசிரியர்கள் தமிழ்வழிக் கல்வி செயற்பாட்டாளர்கள் தமிழிசை இயக்க செயற்பாட்டாளர்கள் நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள் தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
2912
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D
வெங்கட் சாமிநாதன்
வெங்கட் சாமிநாதன் (Venkat Swaminathan, 1933 - 21 அக்டோபர் 2015) என்ற பெயரில் எழுதிய சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950களிலேயே வலியுறுத்தியவர். இவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை என்ற திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.. கனடாவில் உள்ள டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல் விருது சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது புத்தகங்கள் தொடரும் பயணம் - இலக்கிய வெளியில் நினைவுகளின் சுவட்டில் - (சுய சரிதம்) விமர்சனம் பாலையும் வாழையும் பான் ஸாய் மனிதன் இச்சூழலில் (கலாச்சார விமர்சனம்) கலை வெளிப்பயணங்கள் (கலை விமர்சனம்) திரை உலகில் (திரைப்பட விமர்சனம்) என் பார்வையில் சில கவிதைகள் என் பார்வையில் சில கதைகள், நாவல்கள் ஓர் எதிர்ப்புக்குரல் : காலத்தின் அங்கீகாரத்தை எதிர்நோக்கி கட்டுரைகள் அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை (நாடகக் கட்டுரைகள்) பாவைக்கூத்து சில இலக்கிய ஆளுமைகள் இன்றைய நாடக முயற்சிகள் கலை, அனுபவம், வெளிப்பாடு விவாதங்கள் சர்ச்சைகள் கலை உலகில் ஒரு சஞ்சாரம் தொகுப்பு தேர்ந்தெடுத்த ந.பிச்சமூர்த்தி கதைகள் (தொகுப்பாசிரியர் : வெங்கட் சாமிநாதன்) பிச்சமூர்த்தி நினைவாக (பிச்சமூர்த்தி நினைவஞ்சலிக் கட்டுரைத் தொகுப்பு , தொகுப்பாசிரியர் : வெங்கட் சாமிநாதன்) மொழிமாற்றம் A Movement for Literature (தமிழில் எழுதியவர் : க.நா.சுப்பிரமணியம்) Mother has committed a murder (தமிழில் எழுதியவர் : அம்பை) தமஸ் (இருட்டு) (இந்தி நாவல் . எழுதியவர்: பீஷ்ம ஸாஹ்னி ) ஆச்சரியம் என்னும் கிரகம் (குழந்தைகள் கதைகள், சுற்று சூழல் பற்றியவை, ஜப்பானிய மூலம்) நேர்காணல் உரையாடல்கள் (நேர்காணல்கள் தொகுப்பு) திரைப்பிரதிகள் அக்ரஹாரத்தில் கழுதை ஏழாவது முத்திரை (இங்கமார் பெர்க்மன் இயக்கிய Seventh Seal என்ற திரைப்படம் பற்றிய நூல்) பிற எழுத்தாளர்களின் கருத்துக்கள் என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு, நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன். - க.நா.சு சாமிநாதனது பேனா வரிகள் "புலிக்கு தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது" என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் - சி. சு. செல்லப்பா தமிழ் கலைத் துறைகள் மீது வெ.சா கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு, வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட முடியும். பாரதியோ ஒரு உணர்ச்சிக் கவிஞன். தேசியக் கவிஞன்; புரட்சிவாதி. அவனது இயற்கையான முகங்கள் அனைத்தும் நம்மவர்கள் இயற்கையாகவே புரிந்துகொள்ளாமல் போற்ற வசதியானவை. வெ.சாவின் உலகமோ, புரிந்து கொள்ளும் ஆற்றலை தீவிரமாகக் கேட்டு நிற்கிறது. சுய அபிமான உணர்வுகளை நீக்கி சத்தியத்தைப் பார்க்க முடிந்தவர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. ஆகவே அங்கீகாரத்திற்கு, காலத்தை இவர் எதிர்பார்த்து நிற்பது சரிதான் - சுந்தர ராமசாமி எந்த மேல் நாட்டு விமரிசன பாணியையும் கைக் கொள்ளாமல் தன் சுவைக்கு உட்பட்டதை, படைப்பின் கலாச்சாரப் பின்ணணியோடு பார்க்கும் தனி ரகம், இவரது விமரிசனம் - கோமல் சுவாமிநாதன் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சொல்வனம் மின்னிதழில் வெங்கட் சாமிநாதனின் படைப்புகள் திண்ணை மின்னிதழில் வெங்கட் சாமிநாதனின் படைப்புகள் தமிழ்ஹிந்து இணையதளத்தில் வெங்கட் சாமிநாதனின் படைப்புகள் வல்லமை மின்னிதழில் வெங்கட் சாமிநாதனின் படைப்புகள் பேராசிரியர் எம்.வேதசகாயகுமார், வெங்கட் சாமிநாதனைப் பற்றி எழுதிய கட்டுரை ஸ்வராஜ்யா மின்னிதழில் அரவிந்தன் நீலகண்டன் வெங்கட் சாமிநாதனைப் பற்றி எழுதிய கட்டுரை தி ஹிந்து (தமிழ்) நாளிதழில் வெங்கட் சாமிநாதனின் மறைவு குறித்த அஞ்சலி தில்லி தமிழ் சங்கத்தின் தில்லிகை இலக்கிய அமைப்பில் வெங்கட் சாமிநாதன் குறித்து நிகழ்ந்த உரை 1933 பிறப்புகள் 2015 இறப்புகள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் தமிழக எழுத்தாளர்கள் தமிழ் விமர்சகர்கள் இயல் விருது பெற்றவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
2913
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 – 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது. இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 293க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது. கதாபாத்திரங்கள் வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன் பொன்னியின் செல்வன் என்கிற அருண்மொழி வர்மன் ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன் குந்தவை பிராட்டியார் (சுந்தரசோழரின் மகள்) பெரிய பழுவேட்டரையர் நந்தினி சின்ன பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலர் வானமா தேவி சுந்தர சோழர் செம்பியன் மாதேவி கண்டராதித்தர் கடம்பூர் சம்புவரையர் சேந்தன் அமுதன் பூங்குழலி வீர பாண்டியன் குடந்தை சோதிடர் வானதி மந்திரவாதி இரவிதாசன் (பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்) கந்தமாறன் (சம்புவரையர் மகன்) கொடும்பாளூர் வேளார் மணிமேகலை (சம்புவரையர் மகள்) அநிருத்த பிரம்மராயர் மதுராந்தக சோழர் தியாக விடங்கர்: பூங்குழலியின் தந்தை மற்றும் கோடிக்கரையிலுள்ள கலங்கரை விளக்கத்தின் காவலர். மந்தாகினி தேவி மற்றும் வாணி அம்மாளின் தமையனும் ஆவார். கதையின் வரலாற்றுப் பின்னணி பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், பொன்னியின் செல்வன் கதையில் பல விதமான கதை மாந்தர்கள் இருந்தனர். விசயாலய சோழன் (கி.பி 847 – 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விசயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 – 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களின் புகழ்பெற்றவர்கள் இராசராச சோழனுக்கு, இராசேந்திர சோழனுக்கும், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சோழ சாம்ராச்சியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது. முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராச்சியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருட்டிணன் தலைமையிலான இராட்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராசாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும் இராட்டிரகூடர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி அளவிலேயே நின்றது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகான சோழ மன்னர்கள் ஐந்து பேரின் பெயர்கள் தெளிவாகக் கிடைக்கின்றன ஆனால் அவர்களது ஆட்சிக்காலம் அவர்களைப் பற்றிய குறிப்புகள் தெளிவாக இல்லை. கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் ஆகிய ஐவரே அந்த சோழ அரசர்கள். இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கிறது. இதில் ஆதித்த கரிகாலன் இராட்டிரகூடர்கள் முதலாம் பராந்தகனின் கடைசிக் காலத்தில் கைப்பற்றிய தொண்டை மண்டலத்தை மீண்டும் போரிட்டு கைப்பற்றினான் என்று தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் இறப்பிற்குப் பின்னோ அல்லது ஆதித்த கரிகாலனின் இறப்பிற்குப் பின்னோ சோழ நாட்டில் அடுத்த பட்டத்திற்கான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்திருக்கிறது. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் கொல்லப்பட்ட இடம் தற்போது மேலக்கடம்பூர் என அழைக்கப்படுகிறது. (காட்டுமன்னார்கோயில் அருகில்) திருவாலங்காட்டுச் செப்பேடுகள், "விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் சத்திரிய தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன. இந்தக் காலகட்டத்தைத்தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். பொன்னியின் செல்வன் என்பது இராசராச சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராசகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனைக் கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராசராச சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் கே.ஏ. நீலகண்ட சாத்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், தி.வி. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார். பகுதி 1: புது வெள்ளம் ஆடித்திருநாள் அத்தியாயம் தொடங்கி மாய மோகினி வரை 57 அத்தியாயங்களை உள்ளடக்கியது. முதல் பகுதியான புதுவெள்ளம் வரலாற்றுப் புகழ் பெற்ற வீர நாராயண (வீராணம்) ஏரியில் துவங்குகிறது. இந்த ஏரி சுந்தர சோழரின் பெரியப்பா இராசாதித்தரால் எழுப்பப்பட்டது. இந்த ஏரி 74 கணவாய்களை உடையது. வடதிசை மாதண்ட நாயகராக திகழும் ஆதித்த கரிகாலர் தனது அன்பு தங்கைக்கும், தந்தைக்கும் ஓலை கொடுத்து வர வந்தியத்தேவனை அனுப்புகிறார். வடதிசையில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் வீரநாராயண ஏரியில் வந்திய தேவன் சென்றுகொண்டிருக்கும் போது ஆடி திருநாள் கொண்டாட்டத்தை இரசித்தவாறு செல்வதாக முதல் பகுதி துவங்கி, பிறகு செல்லும் வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கும் போது சோழப் பேரரசின் மணி மகுடத்திற்கு பெரும் சூழ்ச்சி நடப்பதை காண்கிறான். பிறகு பல தடங்கல்களையும் மீறி சுந்தர சோழரை சந்தித்து ஓலை தந்தவுடன் ஆதித்த கரிகாலரின் தமக்கை இளையபிராட்டி குந்தவை தேவியைக் காண பழையாறை செல்கிறான். அங்கேயே இளைய பிராட்டியை (குந்தவை) சந்தித்து அவர் தனது இளைய தம்பியான அருண்மொழி வர்மருக்கு ஓலை கொடுத்து அனுப்ப அதற்காக கடல் பிரயாணம் செய்ய துவங்கும் வரை இப்பகுதி நீள்கிறது. பகுதி 2: சுழற்காற்று அத்தியாயம் பூங்குழலியில் தொடங்கி அபய கீதம் வரை 53 அத்தியாயங்களை உள்ளடக்கியது இரண்டாம் பகுதியான சுழற்காற்று. கோடிக்கரையில் வந்தியத்தேவன் பூங்குழலியை சந்தித்து, ஈழத்திற்கு பூங்குழலியின் படகில் செல்கிறான். ஈழத்திலிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மனை சந்தித்து குந்தவை பழையாறைக்கு அவரை அழைத்துக் கொண்டு வர கட்டளையிட்டதை கூறுகிறான். பார்த்திபேந்திரன் காஞ்சிக்கு இளவரசரை ஆதித்த கரிகாலன் அழைத்திருப்பதாகக் கூறுகிறான். வந்தியத்தேவனை இளவரசரிடம் அழைத்துவந்த ஆழ்வார்க்கடியான் ஈழத்தில் தங்குவதே சிறந்தது என்று முதல் மந்திரி அநிருத்தர் கூறியதை சொல்கிறான். இதற்கிடையே இளவரசரை சிறைசெய்து அழைத்து செல்ல பழுவேட்டரையர் வீரர்கள் இரண்டு கப்பல்களில் வருகின்றார்கள். அதிலொன்றில் ரவிதாசன், தேவராளனும் தஞ்சைக்கு திரும்புகிறார்கள். இளவரசர் அதில் செல்கிறார் என்று நினைத்து வந்தியத்தேவன் அக்கப்பலில் எதிரிகளிடம் மாட்டிக் கொள்கிறான். அருள்மொழிவர்மன் வந்தியத்தேவனை காப்பாற்ற பார்த்திபேந்தரன் கப்பலில் பின்தொடர்கிறார். இரு கப்பல்களும் பெரும் புயல்காற்றில் மாட்டிக் கொள்கின்றன. கடலில் மிதந்து கொண்டிருக்கும் இளவரசரையும், வந்தியத்தேவனையும் பூங்குழலி காப்பாற்றி கோடிக்கரையின் சதுப்பு நிலக் காட்டில் சேர்க்கின்றாள். பகுதி 4: மணிமகுடம் அத்தியாயம் கெடிலக் கரையில் தொடங்கி படகு நகர்ந்தது! வரை 46 அத்தியாயங்களை உள்ளடக்கியது நான்காம் பகுதியான மணிமகுடம். வந்தியத்தேவன், ஆதித்தர் கடம்பூர் மாளிகைக்கு செல்லவிடாமல் தடுக்கப் பார்க்கிறான். இருந்தும் இளவரசர் ஆதித்த கரிகாலர், பார்த்திபேந்திர பல்லவன், வந்தியதேவன், கந்தமாறன் ஆகியோர் கடம்பூர் சம்பூவரையன் மாளிகைக்கு வருகிறார்கள். திருக்கோவிலூர் மலையமான் பாதி தூரம் வரை வந்து வழியனுப்புகிறார். இதே நேரத்தில் தஞ்சாவூரில் முதன்மந்திரி அநிருத்தர், வைத்தியர் மகன் பினாகபாணியின் மூலம் கோடிக்கரையிலிருந்து மந்தாகினி அம்மையாரை பழுவூர் இளையராணியின் பல்லக்கில் கடத்தி வர செய்கிறார். வரும் வழியில் புயலின் காரணமாக பினாகபாணியின் மேல் மரம் ஒன்று முறிந்து விழுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பூங்குழலி மந்தாகினி அம்மையாருக்கு பதிலாக பல்லக்கில் ஏறிக்கொள்கிறாள். பாண்டிய ஆபத்துதவிகளை பின்தொடர்ந்து மந்தாகினி அம்மையார் பெரிய பழுவேட்டரையரின் நிலவறைக்கு வருகிறாள். மந்தாகினி சக்கரவர்த்தியைப் பார்க்கிறார். அதே நேரத்தில் ஆதித்த கரிகாலர் நந்தினியை பார்க்கிறார். பகுதி 5: தியாகச் சிகரம் அத்தியாயம் மூன்று குரல்களில் தொடங்கி மலர் உதிர்ந்தது வரை 91 அத்தியாயங்களை உள்ளடக்கியது ஐந்தாம் பகுதியான தியாக சிகரம். இராசராச சோழன் அருள்மொழிவர்மன் மக்களின் ஆதரவு தனக்கு இருந்தும் சிம்மாசனத்தை தன் சிற்றப்பனுக்கு வழங்கினான். அருள்மொழிவர்மனின் சரித்திரத்தில் இந்த நிகழ்ச்சி பெரிதும் போற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து இந்த பாகத்தை எழுதியதால் இதற்கு தியாக சிகரம் என பெயர் வைத்ததாய் நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பெரிய பழுவேட்டரையருக்கு பாண்டிய ஆபத்துதவிகளின் சதித்திட்டம் தெரிய வருகிறது. அவர்கள் ஒரே நாளில் இளவரசர் அருள்மொழிவர்மன், சக்கரவத்தி சுந்தர சோழர் மற்றும் இளவரசர் ஆதித்த கரிகாலர் மூவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இளவரசர் அருள்மொழிவர்மனும், சக்கரவத்தி சுந்தர சோழரும் காப்பாற்றப்படுகின்றனர். சக்கரவத்தி சுந்தர சோழரை காப்பாற்றும் முயற்சியில் மந்தாகினி தேவி உயிரிழக்கிறார். பெரிய பழுவேட்டரையர் வருவதற்குள் இளவரசர் ஆதித்தர் இறந்துவிடுகிறார். பழி வந்தியதேவன் மேல் விழுகிறது. நாட்டு மக்கள், போர் வீரர்கள் அனைவரும் அருள்மொழிவர்மனுக்கு ஆதரவாய் இருக்கின்றனர். அருள்மொழிவர்மனுக்கு பட்டாபிசேகம் நடைபெறுகிறது. வந்தியதேவன் எப்படி காப்பாற்றப்படுகிறான். அருள்மொழிவர்மர் அரியணை எறுகிறாரா? இவ்வாறு ஐந்தாம் பாகம் செல்கிறது. முக்கிய பாத்திரங்கள் வரலாற்றில் முக்கிய இடம்பெறுவோர் வந்தியத் தேவன் குந்தவை அருண்மொழிவர்மன் சுந்தர சோழர் ஏனைய சில பாத்திரங்கள் நந்தினி - ஆதித்த கரிகாலனை காதலித்தவள், பின் வீரபாண்டியன் தனது தந்தை என அறிகிறாள். ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்ற பின்பு, பெரிய பழுவேட்டரையரின் மனைவியாகி பழுவூர் இளைய அரசியாகிறாள். சோழ பேரரசின் பெரும் அரசியாக ஆவதற்காக ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர், அருள்மொழி வர்மன் ஆகிய மூவரையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டுகிறாள். பார்த்தவுடன் மோகம் கொள்ள வைக்கும் அழகுடையவளாக வலம் வருகிறாள். ஆழ்வார்க்கடியான் நம்பி - கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பயணிப்பவர். ஆயினும் ஆரம்பத்தில் இக்கதாபாத்திரம் ஒரு சோழ அரசின் ஒற்றன் என்பதை கூறாமல் கதையை நகர்த்தியமை கதைக்கு சுவை ஊட்டுகின்றது. அநிருத்தப் பிரம்மராயர் - சுந்தர சோழரின் முதன் மந்திரியாக இவர் கதையில் இடம் பெறுகிறார். வானதி - கொடும்பாளுர் இளவரசி வானதி, இளவரசர் அருள்மொழிவர்மரை நேசிக்கும் பெண்ணாக இதில் காட்டப்பட்டிருப்பாள். வானதி அருள்மொழி வர்மரை திருமணம் முடித்த பின் ஒரிரு வருடங்களுக்குள் காலமாகி விட்டார். பெரிய பழுவேட்டரையர் - இவர் மிகவும் வலிமைமிக்க கதாபாத்திரமாகக் காட்டப்பட்டுள்ளார். இறுதியில் மரணம் அடைவதுமாக மிக்க துக்கம் தருவதாக அமைகிறது. சின்னப் பழுவேட்டரையர் - தஞ்சை நகரத்தின் காவல் அதிகாரியாகவும், சோழர்களின் நல விரும்பியாகவும் இருக்கிறார். பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியின் சோழப் பேரரசுக்கு எதிரான சதியை தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்ப்பவராகவும், பெரிய பழுவேட்டரையரின் மீதான அதீத அன்பினால் அவரை அவ்வப்போது எச்சரிக்கை செய்வதுமாக இருக்கிறார். செம்பியன் மாதேவி - இவர் மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தனின் மனைவியாவர். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்த பிறகு மகன்களை வளர்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மேலும் கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர். ஆதித்த கரிகாலன் – சுந்தர சோழரின் மகனாகவும், அருள்மொழிவர்மன் மற்றும் குந்தவை தேவியின் மூத்த சகோதரராகவும், பட்டத்து இளவரசராகவும் ஆதித்த கரிகாலன் வருகிறார். சிறுவயதிலேயே போர்புரியும் குணம் கொண்டவராகவும், எதிரிகளைத் தன்னந்தனியே எதிர்த்து நிற்கின்ற வீரராகவும், முன்கோபம் கொண்டவராகவும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மதுராந்தக தேவர் வீரபாண்டியன் பார்த்திபேந்திர பல்லவன் மந்தாகினி வாணி அம்மை தமிழ்ப் புதின வரலாற்றில் இதன் பங்கு இந்த நூல் தமிழில் வரலாற்று புதினங்களுக்கு ஒரு முன்னோடியாகவே அமைந்தது. இக்கதையின் முடிவுரையில், கல்கி குறிப்பிட்டு இருப்பது போல், விக்ரமன், சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றை புதினங்களாக்கிக் கொடுக்க முயன்று இருக்கிறார்கள். டாக்டர் எல். கைலாசம் பொன்னியின் செல்வனுக்கு முன் நடந்த நிகழ்வுகளை தனது புதினமான மலர்ச்சோலை மங்கையில் கொடுத்துள்ளார். எனினும் பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு புதினமும் சிறப்பாக வரவில்லை என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது. "உயர்நிலைப்பள்ளியில் மாணவனாக பொன்னியின் செல்வனைப் படித்தாலும், கல்கி ஆசிரியர் மறைந்த பின்னர் மீண்டும் அது இருமுறை தொடர்கதையாகவே அற்புத ஓவியங்களோடு வெளிவந்த காலத்தில் மீண்டும் வாரவாரம் எண்ணற்ற முறையில் படித்து இருக்கிறேன். சோழ நாட்டுக்கு உள்ளே உலவுவதைப்போன்ற அந்த உணர்வை, எந்த எழுத்தாளனாலும் படைக்க முடியாது என்பது என் கருத்து" என்று வைகோ பொன்னியின் செல்வன் திறனாய்வில் குறிப்பிடுகிறார். திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் 2022 இல் பொன்னியின் செல்வன் 1 திரைப்படமும், 2023 இல் பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் வெளிவந்துள்ளன. இவ்விரு திரைப்படங்களும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தினை மையமாக வைத்து சில மாற்றங்களுடன் வெளிவந்தன. மொழிபெயர்ப்புகள் பொன்னியின் செல்வன் இதுவரை மூன்று முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (மொழிபெயர்ப்பாளர்கள்: இந்திரா நீலமேகம் சிவி கார்த்திக் நாராயணன், பவித்ரா ஸ்ரீநிவாசன்.) சமசுகிருதத்தில் 'பொன்னியின் செல்வன்' என்ற தலைப்பில் திருமதி ராஜலட்சுமி ஸ்ரீநிவாசன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம் பதிப்பில் ஐந்து பகுதிகளாக 2015ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பொன்னியின் செல்வன் நாவல் முழுவதும் பொன்னியின் செல்வன் இணையம் பொன்னியின் செல்வன் சென்னை கதா பாத்திரங்கள் மற்றும் உறவு முறைகள் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் சோழர் பற்றிய தமிழ்ப் புதினங்கள் வரலாற்றுத் தமிழ்ப் புதினங்கள் வரலாற்றுப் புதினங்கள் தமிழ்ப் புதினங்கள்
2916
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஐகாரக் குறுக்கம்
ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிக்கும் நிலையை அடைதல். ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம். ஐகாரம் தன்னைச் சுட்டித் தனித்து எழுத்தாகக் கூறும்பொழுதோ பிறவற்றைச் சுட்டி ஓரெழுத்து ஒரு மொழியாகத் தனித்து நிற்கும் பொழுதோ இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். அந்த ஐகாரம் ஒரு சொல்லில் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையாகவும் இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும் தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம் நையும் ஔ உம் முதல் அற்று ஆகும் -- நன்னூல்.95 எ.கா: மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதைக் காண்க. இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் சார்பெழுத்துகள்
2917
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
சேரன்
சேரன் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன. சேரன் (திரைப்பட இயக்குநர்) - தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர். சேரன் (கவிஞர்) - ஈழத்தில் பிறந்த கவிஞர். சேரர் - பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர மன்னர்கள்.
2936
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF.%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
கி. ராஜநாராயணன்
{{Infobox writer | name = கி. ராஜநாராயணன் | image = Kirajanarayanan.jpg | imagesize = 209 × 253 | caption = கி. ராஜநாராயணன் | pseudonym = கி. ரா | birthname = ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயண பெருமாள்<ref>[https://tamil.oneindia.com/news/puducherry/famous-tamil-writer-ki-rajanarayanan-passed-away-at-92-421187.html கரிசல் இயக்கத்தின் தந்தை' என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா. காலமானார்]</ref> | birthdate = 16 செப்டம்பர் 1923 | birthplace = இடைசெவல், பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) | deathdate = | deathplace = லாஸ்பேட்டை, புதுச்சேரி, இந்தியா | nationality = | period = 1958– 2021 | genre = சிறுகதை, புதினம் | subject = நாட்டுப்புறவியல், கிராமிய வாழ்க்கை | movement = | notableworks = கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்| spouse = | children = | relatives = | influences = | influenced = | awards = சாகித்திய அகாதமி விருது (1991) | signature = | website = https://www.kirajanarayanan.com/ | portaldisp = | box_width = 26em | citizenship = இந்தியர் }} கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், மாயமான், நாட்டுப்புற கதை களஞ்சியம் ஆகியவை இவரது பிரபலமான படைப்புகளில் சில. இவர் 1991 இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். டைம்ஸ் ஆஃப் இந்தியா இவரை "தமிழ் வாய்மொழி பாரம்பரியத்தின் காவலர்" என்று அழைத்தது. துவக்ககால வாழ்க்கை ராஜநாராயணன் அவர்கள் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் சிற்றூரில் பிறந்தார். இவர் ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளையாவார் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், சிறுவயதிலேயே காசநோயால் பாதிக்கப்பட்டார். ஏழாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திக்கொண்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (சிபிஐ) உறுப்பினரானார். 1947 மற்றும் 1951 க்கு இடையில் சிபிஐ-யால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் கிளர்ச்சிகளில் கலந்து கொண்டு, ஆதரவளித்த காரணங்களுக்காக இரண்டு முறை சிறைக்குச் சென்றார். 1952 ஆம் ஆண்டு நெல்லை சதி வழக்கிலும் இவர் பெயர் சேக்க்கப்பட்டது இருப்பினும் குற்றச்சாட்டுகள் பின்னர் கைவிடப்பட்டன. தொழில் ராஜநாராயணன் 30 வயதில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதையான "மாயமான்" 1959 இல் சரஸ்வதி இதழில் வெளியானது. அது வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இன்னும் பல சிறுகதைகள் வெளிவந்தன. கி. ரா.வின் கதைகள் வழக்கமாக அவரது சொந்தப் பகுதியான கோவில்பட்டியைச் சுற்றியுள்ள கரிசல் காட்டைச் சர்ந்தவை. கதைகள் பொதுவாக கரிசல் நாட்டு மக்கள், அவர்களின் வாழ்க்கை, நம்பிக்கைகள், போராட்டங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை, ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளை மையமாக கொண்டவை.கி. ராஜநாராயணன் கோபல்ல கிராமம் மற்றும் அதன் தொடர்ச்சியான கோபல்லபுரத்து மக்கள் ஆகியவை இவரது மிகவும் பாராட்டப்பட்ட புதினங்களில் ஒன்றாகும், பிந்தைய புதினம் இவருக்கு 1991 இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு தென்னிந்தியாவில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த பலரின் கதைகளை இந்த புதினம் கையாள்கிறது. தமிழ்நாட்டின் வடக்கே இருந்த கொடூரமான இராச்யங்களிலிருந்து தப்பித்து தெலுங்கு மக்கள் தெற்கே தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து குடியேறுவதை விவரிக்கிறது. இந்த புத்தகங்களுக்கு அடுத்த பகுதியாக அந்தமான் நாயக்கர் புதினம் வந்தது. ஒரு நாட்டுப்புறவியலாளராக, கி. ரா. பல தசாப்தங்கள் கரிசல் வட்டாரத்தில் இருந்து நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து பிரபல பத்திரிகைகளில் வெளியிட்டார். 2007 ஆம் ஆண்டில், தஞ்சாவூரைச் சேர்ந்த அன்னம் என்ற பதிப்பகம் இந்த நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து நாட்டுப்புற கதைக் களஞ்சியம் என்ற பெயரில் 944 பக்க புத்தகமாக வெளியிட்டது. 2009 வரை, இவர் சுமார் 30 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகங்களில் சிலவற்றை ஆங்கிலத்தில் பிரித்தம் கே. சக்ரவர்த்தி மொழிபெயர்த்து 2009 இல் Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu'' என்ற பெயரில் வெளியிட்டார். கி. ரா. நாட்டுப்புறங்களில் நிலவும் பாலியல் கதைகளை நேர்மையாக சேகரித்து எழுதுவதற்கும், அவரது கதைகளில் இலக்கிய மொழிவழக்கைக் காட்டிலும் தமிழ் வட்டார வழக்கைப் பயன்படுத்துவதற்கும் நன்கு அறியப்பட்டவர். அவர் பேச்சுவழக்கை மொழியின் 'சரியான' வடிவமாகக் கருதினார். வட்டார வழக்குகளில் கதைகளை எழுதுவதோடு மட்டுமல்லாமல், கரிசல் வட்டார அகராதி என்று அழைக்கப்படும் என்று மக்கள் தமிழுக்கு அகராதியின் ஆசிரியராகவும் இருந்தார். இந்தப் பணி தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வட்டாரவழக்குகளுக்கும் இதே போன்ற அகராதிகள் உருவாக முன்னோடியாக இருந்தது. கி. ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., நல்ல இசை ஞானம் கொண்டவர் ,கவியரசு நா.காமராசன் அவர்கள் நடத்திய இலக்கிய பத்திரிகையான" சோதனை"யின் ஆலோசகர் ஆக இருந்துள்ளார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் பல்கலைக்கழகத்தின் ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு மையத்தில் நாட்டுப்புறக் கதைகளின் இயக்குநர் பதவியை வகித்தார். 1998 மற்றும் 2002 க்கு இடையில் இவர் சாகித்திய அகாதமியின் பொதுக்குழுவிலும் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றினார். தனிப்பட்ட வாழ்க்கை 16, செப்டம்பர், 1954 இல், ராஜநாராயணன் கணவதி அம்மாளை (கி.ரா தங்கை எத்திராஜத்தின் வகுப்புத் தோழி; முறைப் பெண்ணும் கூட) மணந்தார். இணையருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.[5] கணவதி 25 செப்டம்பர் 2019 அன்று 87 வயதில் இறந்தார். 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 98ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். இவரது உடல் இவரது சொந்த ஊரான இடைசெவலில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள் 2003 ஆம் ஆண்டில், இவரது கிடை என்ற கதை ஒருத்தி என்ற பெயரில் தமிழ்த் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 1992 இல், இவரது கரண்ட் என்ற சிறுகதை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நிதி உதவியுடன் கரண்ட் (கரண்டு என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு கே. அரிகரன் இயக்கிய இந்தித் திரைப்படம்). விருதுகள் 1971 – தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற விருது 1979 – இலக்கிய சிந்தனை விருது 1990 – சாந்தோம் இபன்னாட்டு கிறித்தவ சங்கத்தின் சிறந்த எழுத்தாளர் விருது 1991 – கோபல்லபுரத்து மக்கள் புதினத்துக்காக சாகித்ய அகாதமி விருது 2008 – எம்.ஏ. சிதம்பரம் விருது 2016 – கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது. 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது. படைப்புகள் அகராதிகள் கரிசல் வட்டார வழக்கு அகராதி சிறுகதைகள் கன்னிமை மின்னல் கோமதி நிலை நிறுத்தல் கதவு(1965) பேதை ஜீவன் நெருப்பு விளைவு பாரதமாதா கண்ணீர் வேட்டி கரிசல்கதைகள் கி.ரா-பக்கங்கள் கிராமிய விளையாட்டுகள் கிராமியக்கதைகள் குழந்தைப்பருவக்கதைகள் கொத்தைபருத்தி புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள் பெண்கதைகள் பெண்மணம் வயது வந்தவர்களுக்கு மட்டும் கதை சொல்லி(2017) மாயமான் குறுநாவல் கிடை பிஞ்சுகள் நாவல் கோபல்ல கிராமம் கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது - 1991) அந்தமான் நாயக்கர் கட்டுரை ருஷ்ய மண்ணின் நிறம் என்ன? புதுமைப்பித்தன் மாமலை ஜீவா இசை மகா சமுத்திரம் அழிந்து போன நந்தவனங்கள் கரிசல் காட்டுக் கடுதாசி மாந்தருள் ஒரு அன்னப்பறவை தொகுதி நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பவர் கி. ராஜநாராயணன் – கலந்துரையாடல் நிகழ்வு ஜெயமோகன் கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி கி.ரா: கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்! கடிதம், கமல், வண்ணதாசன், சிறுவர் இலக்கியம்... - கிரா நேர்காணல்! -விகடன் கி.ராஜாநாராயணன் - சிறுகதை எழுத்துக்களின் பிதாமகர் மண்… மனிதர்கள்… வாழ்க்கை! கி.ராஜாநாராயணன் - சிறுகதைகள் 1922 பிறப்புகள் 2021 இறப்புகள் தூத்துக்குடி மாவட்ட நபர்கள் தமிழக எழுத்தாளர்கள் தமிழ் அகராதி தொகுப்பாளர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
2937
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%20%28%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%29
வாலி (கவிஞர்)
கவிஞர் வாலி (Vaali) (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன்; 29 அக்டோபர் 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி, திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களுள், சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும், வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பிறப்பும் வளர்ப்பும் ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட 'வாலி' திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்து, திருவரங்கத்தில் வளர்ந்தார். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, 'வாலி' என்ற பெயரைச் சூட்டினான். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி' என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால், வானொலிக்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு, வாலிக்குக் கிடைத்தது. திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில், பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா. வாலி பெயர்க்காரணம் தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு, ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம், அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார். எழுதிய நூல்கள் சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: 'அம்மா', 'பொய்க்கால் குதிரைகள்', 'நிஜ கோவிந்தம்', 'பாண்டவர் பூமி', 'கிருஷ்ண விஜயம்' மற்றும் 'அவதார புருஷன்'. வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சூர்யா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இவற்றையும் பார்க்கவும் 1967இல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய "நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்.."என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள். சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில், கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறைகளில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள். 'தளபதி' என்ற பெயருக்கும், வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் 'வெற்றி' என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!. விருதுகள் பத்மஸ்ரீ விருது-2007 1973-ல் 'இந்திய நாடு என் வீடு'.. என்ற 'பாரத விலாஸ்' திரைப்படத்தின் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார். வாலி ஐந்துமுறை (கீழே காணப்படும் திரைப்படங்களின்) சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். 1970 – எங்கள் தங்கம் 1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள் 1989 – வருஷம் 16 , அபூர்வ சகோதரர்கள் 1990 – கேளடி கண்மணி 2008 – தசாவதாரம் தமிழக அரசின் பிற விருதுகள் 2000 - மகாகவி பாரதியார் விருது மறைவு வாலி மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, 2013 சூன் 7 அன்று, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, அவர் 2013 சூலை 18 அன்று மாலை 5 மணியளவில் காலமானார். குறிப்பிடத்தக்க பாடல்களில் சில எழுதிய திரைப்பாடல்கள் கீழே காண்பது வாலி எழுதிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இது முழுமையான பட்டியல் அல்ல. திரைப்படப் பட்டியல் 1950களில் 1958- அழகர்மலை கள்வன் (முதல் திரைப்படம்) 1960-1969 1961- "சந்திரகாந்த்" 1961- "நல்லவன் வாழ்வான்" 1963- "இதயத்தில் நீ" 1963- "கற்பகம்" 1963- "எதையும் தாங்கும் இதயம்" 1964- "தாயின் மடியில்" 1964- "தெய்வத்தாய்" 1964- "படகோட்டி" 1965- "பஞ்சவர்ணக்கிளி" 1965- "வெண்ணிற ஆடை" 1965- "பணம் படைத்தவன்" 1965- "தாழம்பூ" 1965- "அன்புக்கரங்கள்" 1965- "கலங்கரை விளக்கம்" 1965- "ஆயிரத்தில் ஒருவன்" 1965- "ஆசை முகம்" 1965- "நீ" 1965- "எங்க வீட்டுப் பிள்ளை" 1965- "காக்கும் கரங்கள்" 1965- "குழந்தையும் தெய்வமும்" 1966- "சின்னஞ்சிறு உலகம்" 1966- "மோட்டார் சுந்தரம் பிள்ளை" 1966- "நாடோடி" 1966- "அன்பே வா" 1966- "சந்திரோதயம்" 1966- "மேஜர் சந்திரகாந்த்" 1966- "தாலி பாக்கியம்" 1966- "நான் ஆணையிட்டால்" 1966- "பெற்றால்தான் பிள்ளையா" 1967- "பேசும் தெய்வம்" 1967- "அவள்" 1967- "செல்வமகள்" 1967- "அதே கண்கள்" 1967- "அரச கட்டளை" 1967- "காவல்காரன்" 1967- "நெஞ்சிருக்கும் வரை" 1967- "இரு மலர்கள்" 1968- "உயர்ந்த மனிதன்" 1968- "ஒளி விளக்கு" 1968- "எதிர்நீச்சல்" 1968- "ஜீவனாம்சம்" 1968- "கல்லும் கனியாகும்" 1968- "கண்ணன் என் காதலன்" 1968- "கலாட்டா கல்யாணம்" 1968- "குடியிருந்த கோயில்" 1969- "நம் நாடு (1969 திரைப்படம்)" 1969- "மன்னிப்பு" 1969- "நில் கவனி காதலி" 1969- "சுபதினம்" 1969- "இரு கோடுகள்" 1969- "அடிமைப்பெண்" 1969- "கன்னிப் பெண்" 1969- "பூவா தலையா" 1970-1974 1970- "மாணவன்" 1970- "தலைவன்" 1970- "என் அண்ணன்" 1970- "தேடிவந்த மாப்பிள்ளை" 1970- "மாட்டுக்கார வேலன்" 1970- "எங்கள் தங்கம்" 1971- "நூற்றுக்கு நூறு" 1971- "தேனும் பாலும்" 1971- "குமரிக்கோட்டம்" 1971- "ஒரு தாய் மக்கள்" 1971- "ரிக்சாக்காரன்" 1971- "நீரும் நெருப்பும்" 1971- "முகமது பின் துக்ளக்" 1971- "பாபு" 1972- "ராமன் தேடிய சீதை" 1972- "வெள்ளிவிழா" 1972- "இதய வீணை" 1972- "நான் ஏன் பிறந்தேன்" 1972- "அன்னமிட்ட கை" 1972- "பிள்ளையோ பிள்ளை" 1973- "சொல்லத்தான் நினைக்கிறேன்" 1973- "சூரியகாந்தி" 1973- "உலகம் சுற்றும் வாலிபன்" 1973- "அரங்கேற்றம்" 1973- "பாரத விலாஸ்" 1974- "தீர்க்க சுமங்கலி" 1974- "சிரித்து வாழ வேண்டும்" 1974- "உரிமைக்குரல்" 1974- "நேற்று இன்று நாளை" 1974- "சிவகாமியின் செல்வன்" 1974- "அத்தையா மாமியா" 1974- கலியுகக் கண்ணன் 1975-1979 1975- "புதுவெள்ளம்" 1975- "அவளும் பெண்தானே" 1975- "பட்டிக்காட்டு ராஜா" 1975- "அன்பே ஆருயிரே" 1975- "அபூர்வ ராகங்கள்" 1975- "இதயக்கனி" 1975- "டாக்டர் சிவா" 1975- "நினைத்ததை முடிப்பவன்" 1975- "தேன்சிந்துதே வானம்" 1976- "ஒரு கொடியில் இரு மலர்கள்" 1976- "ஊருக்கு உழைப்பவன்" 1976- "நீதிக்கு தலைவணங்கு" 1976- "நாளை நமதே" 1976- "பத்ரகாளி" 1977- "பெண் ஜென்மம் 1977- "இன்றுபோல் என்றும் வாழ்க" 1977- "நவரத்தினம்" 1977- "மீனவ நண்பன்" 1977- "ஆறு புஷ்பங்கள்" 1978- "மாங்குடி மைனர்" 1978- "வணக்கத்திற்குரிய காதலியே" 1978- "பைலட் பிரேம்நாத்" 1978- "சிகப்பு ரோஜாக்கள்" 1978- "அச்சாணி" 1978- "அவள் ஒரு அதிசயம்" 1978- "ஜஸ்டிஸ் கோபிநாத்" 1978- "சதுரங்கம்" 1978- "இளமை ஊஞ்சலாடுகிறது" 1978- "உறவுகள் என்றும் வாழ்க" 1978- "சிட்டுக்குருவி" 1978- மச்சானை பாத்தீங்களா 1978- "வண்டிக்காரன் மகன்" 1978- "அன்னபூரணி" 1979- "லட்சுமி 1979- "அன்னை ஓர் ஆலயம்" 1979- "நான் வாழவைப்பேன்" 1979- "அன்பே சங்கீதா" 1979- "தர்மயுத்தம்" 1979- "கடவுள் அமைத்த மேடை" 1979- "அலாவுதீனும் அற்புத விளக்கும்" 1979- "நீயா" 1979- "பட்டாகத்தி பைரவன்" 1979- "இவர்கள் வித்தியாசமானவர்கள்" 1979- "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" 1980-1984 1980- "கண்ணில் தெரியும் கதைகள்" 1980- "நிழல்கள்" 1980- "ஒத்தையடி பாதையிலே" 1980- "நட்சத்திரம்" 1981- "மௌன கீதங்கள்" 1981- "குடும்பம் ஒரு கதம்பம்" 1981- "ஆணிவேர்" 1981- "அக்னி சாட்சி" 1981- "மணல்கயிறு" 1982- "சிம்லா ஸ்பெஷல்" 1982- "மூன்று முகம்" 1982- "தூறல் நின்னு போச்சு" 1982- "தனிக்காட்டு ராஜா" 1982- "வாழ்வே மாயம்" 1982- "பட்டணத்து ராஜாக்கள்" 1982- "வா கண்ணா வா" 1982- "தாய் மூகாம்பிகை" 1982- "சகலகலா வல்லவன்" 1982- "துணை" 1982- "கண்ணே ராதா" 1982- "பரிட்சைக்கு நேரமாச்சு" 1982- "நெஞ்சங்கள்" 1982- "எங்கேயோ கேட்ட குரல்" 1982- "கோபுரங்கள் சாய்வதில்லை" 1982- "ரங்கா" 1982- "தீர்ப்பு" 1982- "வடமாலை" 1983- "அந்த சில நாட்கள்" 1983- "வெள்ளை ரோஜா" 1983- "அடுத்த வாரிசு" 1983- "சிவப்பு சூரியன்" 1983- "தங்கமகன்" 1983- "சந்திப்பு" 1983- "சூரக்கோட்டை சிங்கக்குட்டி" 1983- "நீதிபதி" 1983- "சரணாலயம்" 1983- "சாட்டை இல்லாத பம்பரம்" 1983- "கோழி கூவுது" 1983- "பாயும் புலி" 1983- "தாய்வீடு" 1983- "சுமங்கலி" 1983- "தூங்காதே தம்பி தூங்காதே" 1983- "மிருதங்க சக்கரவர்த்தி" 1983- "சட்டம்" 1984- "அன்பே ஓடிவா" 1984- "வம்ச விளக்கு" 1984- "மதுரை சூரன்" 1984- "தாவணிக் கனவுகள்" 1984- "தீர்ப்பு என் கையில்" 1984- "கை கொடுக்கும் கை" 1984- "வெள்ளை புறா ஒன்று" 1984- "வீட்டுக்கு ஒரு கண்ணகி" 1984- "சத்தியம் நீயே" 1984- "வைதேகி காத்திருந்தாள்" 1984- "ஓசை" 1984- "இருமேதைகள்" 1984- "விதி" 1984- "சிம்ம சொப்பனம்" 1984- "மெட்ராஸ் வாத்தியார்" 1984- "அன்புள்ள ரஜினிகாந்த்" 1984- "குழந்தை யேசு" 1984- "நல்லவனுக்கு நல்லவன்" 1984- "நல்ல நாள்" 1984- "நாளை உனது நாள்" 1984- "இது எங்க பூமி" 1984- "குடும்பம்" 1985-1989 1985- "ஆண்பாவம்" 1985- "தென்றலே என்னைத் தொடு" 1985- "ஸ்ரீ ராகவேந்திரா" 1985- "ஒரு நல்லவன் ஒரு வல்லவன்" 1985- "குங்குமச்சிமிழ்" 1985- "கீதாஞ்சலி" 1985- "மங்கம்மா சபதம்" 1985- "ஜப்பானில் கல்யாண ராமன்" 1985- "படிக்காதவன்" 1985- "பாடும் வானம்பாடி" 1985- "பொருத்தம்" 1985- "கன்னிராசி" 1985- "நீதியின் நிழல்" 1985- "ராஜரிஷி" 1985- "கெட்டிமேளம்" 1985- "நான் சிகப்பு மனிதன்" 1985- "பந்தம்" 1985- "வேஷம்" 1985- "படிக்காத பண்ணையார்" 1985- "நல்ல தம்பி" 1985- "உயர்ந்த உள்ளம்" 1985- "உதயகீதம்" 1985- "இதய கோவில்" 1985- "நாம் இருவர்" 1985- "காக்கிசட்டை" 1985- "கருப்பு சட்டைக்காரன் 1985- "ஆஷா 1985- "கரையை தொடாத அலைகள்" 1985- "சாவி" 1985- "சுகமான ராகங்கள்" 1986- "மீண்டும் பல்லவி" 1986- "கண்மணியே பேசு" 1986- "கரிமேடு கருவாயன்" 1986- "நான் அடிமை இல்லை" 1986- "எனக்கு நானே நீதிபதி" 1986- "விடுதலை" 1986- "அன்னை என் தெய்வம்" 1986- "ஒரு இனிய உதயம்" 1986- "சாதனை" 1986- "மௌன ராகம்" 1986- "மௌனம் கலைகிறது" 1986- "ஆனந்தக்கண்ணீர்" 1986- "நம்பினார் கெடுவதில்லை" 1986- "வசந்த ராகம்" 1986- "தர்ம தேவதை" 1986- "தர்மபத்தினி" 1986- "லட்சுமி வந்தாச்சு" 1986- "உயிரே உனக்காக" 1986- "சம்சாரம் அது மின்சாரம்" 1986- "மருமகள்" 1986- "மெல்லத் திறந்தது கதவு" 1986- "நானும் ஒரு தொழிலாளி" 1986- "டிசம்பர் பூக்கள்" 1986- "மனக்கணக்கு 1987- "முப்பெரும் தேவியர்" 1987- "எங்க சின்ன ராசா" 1987- "பாடு நிலாவே" 1987- "பூமழை பொழியுது" 1987- "குடும்பம் ஒரு கோவில்" 1987- "ஊர்க்காவலன்" 1987-'' நல்ல பாம்பு 1987- "காவலன் அவன் கோவலன்" 1987- "சிறைப்பறவை" 1987- "அஞ்சாத சிங்கம்" 1987- "வீர பாண்டியன்" 1987- "இனிய உறவு பூத்தது" 1988- "பூவுக்குள் பூகம்பம்" 1988- "பெண்மணி அவள் கண்மணி" 1988- "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" 1988- "அண்ணாநகர் முதல் தெரு" 1988- "குரு சிஷ்யன்" 1988- "பொறுத்தது போதும்" 1988- "இது நம்ம ஆளு" 1988- "சத்யா" 1988- "கலியுகம்" 1988- "சொல்ல துடிக்குது மனசு" 1988- "தர்மத்தின் தலைவன்" 1988- "என் தமிழ் என் மக்கள்" 1988- "தம்பி தங்கக் கம்பி" 1988- "மணமகளே வா" 1988- "சகாதேவன் மகாதேவன்" 1988- "அக்னி நட்சத்திரம்" 1988- "தாய்ப்பாசம்" 1989- "புதுப்புது அர்த்தங்கள்" 1989- "ஆராரோ ஆரிரரோ" 1989- "ராஜநடை" 1989- "ராஜாதி ராஜா" 1989- "என்ன பெத்த ராசா" 1989- "தர்மம் வெல்லும்" 1989- "வருஷம் 16" 1989- "அபூர்வ சகோதரர்கள்" 1989- "சிவா" 1989- "வெற்றி விழா" 1989- "பொன்மன செல்வன்" 1989- "சோலை குயில்" 1989- "ஒரே ஒரு கிராமத்திலே" 1989- "வாத்தியார் வீட்டுப் பிள்ளை" 1989- "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்" 1990-1994 1990- "கேளடி கண்மணி" 1990- "புது வசந்தம்" 1990- "துர்கா" 1990- "ஆரத்தி எடுங்கடி" 1990- "தாலாட்டுப் பாடவா" 1990- "அதிசயப் பிறவி" 1990- "மைக்கேல் மதன காமராஜன்" 1990- "புரியாத புதிர்" 1990- "வாழ்க்கைச் சக்கரம்" 1990- "புதுப்பாட்டு" 1990- "நடிகன்" 1990- "வேலை கிடைச்சுடுச்சு" 1990- "உன்னைச் சொல்லி குற்றமில்லை" 1990- "சிறையில் பூத்த சின்ன மலர்" 1990- "மை டியர் மார்த்தாண்டன்" 1990-" மனைவி ஒரு மாணிக்கம் 1990- "எதிர்காற்று" 1990- "அஞ்சலி" 1990- "ராஜா கைய வெச்சா" 1990- "சந்தன காற்று" 1990- "கிழக்கு வாசல்" 1990- "சத்ரியன்" 1990- "அரங்கேற்ற வேளை" 1990- "தைமாசம் பூவாசம்" 1991- "வாசலில் ஒரு வெண்ணிலா" 1991- "ஞான பறவை" 1991- "தைப்பூசம்" 1991- "ருத்ரா" 1991- "பிரம்மா" 1991- "ஈரமான ரோஜாவே" 1991- "இதயம்" 1991- "ஆயுள் கைதி" 1991- "சின்ன தம்பி" 1991- "கோபுர வாசலிலே" 1991- "நீ பாதி நான் பாதி" 1991- "தாலாட்டு கேக்குதம்மா" 1991- "கிழக்குக்கரை" 1991- "மரிக்கொழுந்து" 1991- "மாநகரக்காவல்" 1991- "தையல்காரன்" 1991- "தளபதி" 1991- "குணா" 1991- "வசந்தகால பறவை" 1992- "திருமதி பழனிச்சாமி" 1992- "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்" 1992- "அம்மா வந்தாச்சு" 1992- "வில்லுப்பாட்டுக்காரன்" 1992- "செம்பருத்தி" 1992- "பாண்டியன்" 1992- "தேவர் வீட்டுப் பொண்ணு" 1992- "மீரா" 1992- "மன்னன்" 1992- "உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்" 1992- "செந்தமிழ் பாட்டு" 1992- "தெய்வ வாக்கு" 1992- "சின்னமருமகள்" 1992- "நாடோடிப் பாட்டுக்காரன்" 1992- "ஊர்பஞ்சாயத்து" 1992- "சிங்கார வேலன்" 1992- "சூரியன்" 1992- "நாங்கள்" 1992- "தேவர் மகன்" 1992- "தாலிகட்டிய ராசா" 1992- "வண்ண வண்ண பூக்கள்" 1993- "ஐ லவ் இந்தியா" 1993- "சின்ன ஜமீன்" 1993- "வள்ளி" 1993- "வால்டர் வெற்றிவேல்" 1993- "உள்ளே வெளியே" 1993- "மணிசித்திரத்தழு" (மலையாளம்) 1993- "தர்மசீலன்" 1993- "சின்னக்கண்ணம்மா" 1993- "உழைப்பாளி" 1993- "உழவன்" 1993- "எஜமான்" 1993- "சின்ன மாப்ளே" 1993- "மகராசன்" 1993- "கலைஞன்" 1993- "காத்திருக்க நேரமில்லை" 1993- "கற்பகம் வந்தாச்சு" 1993- "ஜென்டுல்மேன்" 1993- "செந்தூரப் பாண்டி" 1994- "சீமான்" 1994- "இந்து" 1994- "என் ஆசை மச்சான்" 1994- "வீட்ல விசேஷங்க" 1994- "வாட்ச்மேன் வடிவேலு" 1994- "ரசிகன்" 1994- "மோகமுள்" 1994- "காதலன்" 1994- "செந்தமிழ் செல்வன்" 1994- "ராசாமகன்" 1994- "கண்மணி" 1994- "மகாநதி" 1994- "வீரா" 1994- "நம்ம அண்ணாச்சி" 1994- "பிரியங்கா" 1994- "மிஸ்டர் ரோமியோ" 1994- "அமைதிப்படை 1994- "உங்கள் அன்பு தங்கச்சி" 1995-1999 1995- "ராசய்யா" 1995- "நான் பெத்த மகனே 1995- "கட்டுமரக்காரன்" 1995- "சின்ன வாத்தியார்" 1995- "தொட்டாசிணுங்கி" 1995- "தேவா" 1995- "பாட்டு பாடவா" 1995- "பெரிய குடும்பம்" 1995- "முத்துக்காளை" 1995- "ஆணழகன்" 1995- "ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி" 1995- "ஆசை" 1995- "மிஸ்டர். மெட்ராஸ்" 1995- "ராஜாவின் பார்வையிலே" 1995- "ரகசிய போலீஸ் (1995)" 1995- "திருமூர்த்தி" 1995- "ஆயுத பூஜை" 1996- "இந்தியன்" 1996- "அவதார புருஷன்" 1996- "அவ்வை சண்முகி 1996- "வான்மதி" 1996- "நேதாஜி" 1996- "காதல் தேசம்" 1996- "பூவே உனக்காக" 1996- "பூவரசன்" 1996- "இரட்டை ரோஜா" 1996- "கல்லூரி வாசல்" 1996- "டாடா பிர்லா" 1996- "கோயமுத்தூர் மாப்ளே" 1997- "தம்பிதுரை" 1997- "வாய்மையே வெல்லும்" 1997- "பாரதி கண்ணம்மா" 1997- "பெரிய மனுஷன்" 1997- "பொங்கலோ பொங்கல்" 1997- "பாசமுள்ள பாண்டியரே" 1997- "மன்னவா" 1997-"ரட்சகன் 1998- "கலர் கனவுகள் 1998- "காதலா காதலா" 1998- "மறுமலர்ச்சி" 1998- "நினைத்தேன் வந்தாய்" 1999- "காதலர் தினம்" 1999- "மன்னவரு சின்னவரு" 1999- "மனம் விரும்புதே உன்னை" 1999- "விரலுக்கேத்த வீக்கம்" 1999- "பூ வாசம்" 2000-2004 2000- "வண்ணத் தமிழ்ப்பாட்டு" 2000- "ஹேராம்" 2000- "கண்ணுக்கு கண்ணாக" 2000- "பாளையத்து அம்மன்" 2000- "பிரியமானவளே" 2000- "சிம்மாசனம்" 2000- "நாகலிங்கம்" 2000- "பெண்ணின் மனதை தொட்டு" 2001- "டும் டும் டும்" 2001- "மிடில் கிளாஸ் மாதவன்" 2001- "மின்னலே" 2001- "பார்த்தாலே பரவசம்" 2001- "தீனா" 2001- "லூட்டி" 2001- "சாக்லேட்" 2001- "தோஸ்த்" 2001- "நரசிம்மா" 2002- "யூத்" 2002- "பகவதி" 2002- "தென்காசிப்பட்டிணம்" 2002- "புன்னகை தேசம்" 2002- "ஸ்ரீ" 2002- "காதல் வைரஸ்" 2002- "மௌனம் பேசியதே" 2002- "இவன்" 2002- "பாபா" 2003- "புதிய கீதை" 2003- "லேசா லேசா" 2003- "சிம்ஹகிரி" (தெலுங்கு) 2003- "பாய்ஸ்" 2004- "மன்மதன்" 2004- "குத்து" 2004- "நியூ" 2005-2009 2005- "மண்ணின் மைந்தன்" 2005- "கஜினி" 2005- "சந்திரமுகி" 2005- "மும்பை எக்ஸ்பிரஸ்" 2005- "ஒரு நாள் ஒரு கனவு" 2005- "அன்பே ஆருயிரே" 2005- "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" 2006- "கள்வனின் காதலி" 2006- "சில்லுனு ஒரு காதல்" 2006- "தலைமகன்" 2006- "வல்லவன்" 2007- "இனிமே நாங்கதான்" 2007- "சிவாஜி" 2007- "சென்னை 600028" 2007- "ஆழ்வார்" 2007- "என் உயிரினும் மேலான" 2007- "பில்லா" 2007- "தொட்டால் பூ மலரும்" 2007- "உன்னாலே உன்னாலே" 2007- "அழகிய தமிழ் மகன்" 2008- "சரோஜா" 2008- "ஜெயம் கொண்டான்" 2008- "பீமா" 2008- "தசாவதாரம்" 2008- "சரோஜா" (தெலுங்கு) 2008- "சக்கரக்கட்டி" 2008- "தனம்" 2008- "குசேலன்" 2008- "பொம்மலாட்டம்" 2008- "சிங்ககுட்டி" 2008- "சிலம்பாட்டம்" 2008- "உளியின் ஓசை" 2009- "பஞ்சாமிர்தம்" 2009- "அருந்ததி" 2009- "மலை மலை" 2009- "நாடோடிகள்" 2009- "மத்திய சென்னை" 2009- "நான் கடவுள்" 2009- "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்" 2009- "ஆதவன்" 2009- "வால்மீகி" 2009- "ஜகன் மோகினி" 2009- பழசிராஜா 2010-2014 2010- "ஜிக்கு புக்கு" 2010- "பெண் சிங்கம்" 2010- "மாஞ்சா வேலு" 2010- "நந்தா நந்திதா" 2010- "காதலுக்கு மரணமில்லை" 2010- "விருதகிரி" 2010- "குரு சிஷ்யன்" 2010- "கோவா" 2010- "தொட்டுப்பார்" 2010- "வாலிபன் சுற்றும் உலகம்" 2010- "தில்லாலங்கடி" 2010- "லீலை" 2010- "தீராத விளையாட்டு பிள்ளை" 2010- "அகராதி" 2010- "சுறா" 2010- "நினைவில் நின்றவள்" 2010- "பாணா காத்தாடி" 2011- "பொன்னர் சங்கர்" 2011- "எங்கேயும் காதல்" 2011- "கண்டேன்" 2011- "மாவீரன்" 2011- "உயர்திரு 420" 2011- "ஒஸ்தி" 2011- "வெடி" 2011- "மங்காத்தா" 2011- "சட்டப்படி குற்றம்" 2011- "ஆடுபுலி" 2011- "அய்யன்" 2012- "ஆதலால் காதல் செய்வீர்" 2012- "தடையறத் தாக்க" 2012- "மிரட்டல்" 2012- "போடா போடி" 2013- "தில்லு முல்லு" 2013- "எதிர்நீச்சல்" 2013- "என்றென்றும் புன்னகை" 2013- "அலெக்ஸ் பாண்டியன்" 2013- "பிரியாணி" 2013- "கண்ணா லட்டு தின்ன ஆசையா" 2013- "உதயம் என்.எச்4" 2013- "மரியான்" 2014- "யான்" 2014- "திருடன் போலீஸ்" 2014- "கோச்சடையான்" 2014- "ராமானுஜன்" 2014- "பண்ணையாரும் பத்மினியும்" 2014- "நான் தான் பாலா" 2014- "காவியத்தலைவன்" (கடைசித் திரைப்படம்) திரைக்கதை வசனம் 1974- கலியுகக் கண்ணன் 1975- காரோட்டிக்கண்ணன் 1976- ஒரு கொடியில் இரு மலர்கள் 1978- சிட்டுக்குருவி 1979- கடவுள் அமைத்த மேடை 1983- "சாட்டை இல்லாத பம்பரம்" (வசனம்) 1989- ஒரே ஒரு கிராமத்திலே மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 1931 பிறப்புகள் 2013 இறப்புகள் திருச்சி மாவட்ட நபர்கள் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் கவிஞர்கள் பாடலாசிரியர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் கலைமாமணி விருது பெற்றவர்கள் பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்‎ திருச்சிராப்பள்ளித் திரைப்பட நடிகர்கள் திருச்சிராப்பள்ளி எழுத்தாளர்கள் தமிழகக் கவிஞர்கள் தமிழ் பாடலாசிரியர்கள் தமிழகப் பாடலாசிரியர்கள்
2942
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95.%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
க. கைலாசபதி
க.கைலாசபதி (K. Kailasapathy, ஏப்ரல் 5, 1933 - டிசம்பர் 6, 1982) இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர், தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பத்திரிகை ஆசிரியர் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு கைலாசபதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணி புரிந்தவர். தாய் தில்லைநாயகி நாகமுத்து. தொடக்கக் கல்வியை கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற கால கட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார். பள்ளிப் படிப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியிலும் தொடர்ந்தார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்து இளங்கலை (சிறப்பு) பட்டத்தை 1957 இல் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல்கள் இவருக்குக் கிடைத்தன. தொழில் பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது. பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித் துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வு செய்து பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார். ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார். இலக்கியப் பணி ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது ஆக்கங்கள் இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். "அடியும் முடியும்", "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்", "தமிழ் நாவல் இலக்கியம்", "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில. மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர், 49வது வயதில் 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி காலமானார். இவரது நூல்கள் பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966 தமிழ் நாவல் இலக்கியம்,1968 Tamil Heroic Poetry,Oxford,1968 ஒப்பியல் இலக்கியம்,1969 அடியும் முடியும்,1970 ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)1971 இலக்கியமும் திறனாய்வும்,1976 கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976 சமூகவியலும் இலக்கியமும்,1979 மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979 The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980 திறனாய்வுப் பிரச்சினைகள்,1980 பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980(இ.ப) இலக்கியச் சிந்தனைகள்,1983 பாரதி ஆய்வுகள்,1984 The Relation of Tamil and Western Literatures ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986 On Art and Literature,1986 இரு மகாகவிகள்,1987(ஆ.ப) On Bharathi,1987 சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982) Tamil (mimeo)(co-author A,Shanmugadas) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி - நா. சுப்பிரமணியன் - நூலகம் திட்டம் இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) - முனைவர் மு. இளங்கோவன் தமிழ் விமர்சகர்கள் ஈழத்து எழுத்தாளர்கள் 1933 பிறப்புகள் 1982 இறப்புகள் இலங்கைத் திறனாய்வாளர்கள் யாழ்ப்பாணத்து நபர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் இலங்கைப் பத்திரிகையாளர் இலங்கையின் கல்விமான்கள் இலங்கைத் தமிழர் இலங்கை ஊடகவியலாளர்கள்
2943
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF
கார்த்திகேசு சிவத்தம்பி
கார்த்திகேசு சிவத்தம்பி (மே 10, 1932 - சூலை 6, 2011) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார். கல்வியும் கல்விப்பணியும் யாழ்ப்பாணம் கரவெட்டி மேற்கில் பிறந்த சிவத்தம்பி ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு சாகிரா கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் 1956 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், 1961 முதல் 1965 வரை இலங்கை நாடாளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். இலங்கையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழகப் பணி 1965 முதல் 1970 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1970 முதல் 1975 வரை விரிவுரையாளராகவும், 1976 முதல் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். கலைப் பங்களிப்பு பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ஆக்கங்கள் ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். மறைவு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது வயதில் 2011, சூலை 6 புதன்கிழமை இரவு 8 .15 மணிக்கு கொழும்பு, தெகிவளையில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் காலமானார். இவர் பற்றிய படைப்புகள் தமிழக அரசின் திரு.வி.க. விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களைப் பதிவு செய்யும் வகையில், 'கரவையூற்று' எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'கரவையூற்று' நூலின் தொகுப்பு ஆசிரியர் வீ.ஏ.திருஞானசுந்தரம். இவருடைய நூல்கள் இலக்கணமும் சமூக உறவுகளும் இலக்கியத்தில் முற்போக்குவாதம்; 1977 இலக்கியமும் கருத்துநிலையும்; 1982 இலங்கைத் தமிழர் - யார், எவர்? ஈழத்தில் தமிழ் இலக்கியம்; 1978 சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி... ;மக்கள் வெளியீடு மதமும் கவிதையும் தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்; 1967 தமிழில் இலக்கிய வரலாறு தமிழ் கற்பித்தலில் உன்னதம் தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்; 1981 திசம்பர்; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை. தமிழ்ப் பண்பாட்டில் சினிமா; மக்கள் வெளியீடு தனித்தமிழிலக்கியத்தின் அரசியற் பின்னணி; 1979 திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு நாவலும் வாழ்க்கையும்; 1978. யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு Drama in Ancient Tamil Society; 1981 The Tamil Film as a Medium of Political Communication 1980 பதிப்பித்த நூல்கள் இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல்; 1980 மார்க்கண்டன் வாளவிமான் நாடகம்; 1966 உசாத்துணைகள் அகவை 75 இல் பேராசிரியர் சிவத்தம்பி - வீரகேசரி 13 மே 2007 பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலமானார் - இனியொரு... வெளி இணைப்புகள் சங்கம் குறித்த சிவத்தம்பி ஆய்வு பிழையானது - முனைவர் இரா.சக்குபாய் மேற்கோள்கள் தமிழ் விமர்சகர்கள் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழறிஞர்கள் இலங்கைத் தமிழ் இறைமறுப்பாளர்கள் 1932 பிறப்புகள் 2011 இறப்புகள் தமிழ் நாடக ஆய்வாளர்கள் இலங்கைத் திறனாய்வாளர்கள் தமிழ் கலைச்சொல் அறிஞர் தமிழ் அகராதி தொகுப்பாளர்கள் பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் தமிழ் மொழிபெயர்ப்பியல் ஆய்வாளர்கள் இலங்கைப் பேராசிரியர்கள் கலா கீர்த்தி
2944
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A.%20%E0%AE%AE%E0%AF%81.%20%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D
தொ. மு. சி. ரகுநாதன்
தொ. மு. சிதம்பர ரகுநாதன், (T. M. Chidambara Ragunathan, அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமர்சனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது. குடும்பம் தொ. மு. சி. ரகுநாதனின் பாட்டனார் சிதம்பர தொண்டைமான் என்பவராவார். இவர் சிறீரங்கநாதர் அம்மானை, நெல்லைப் பள்ளு போன்ற இலக்கியங்களை படைத்தவர். இவரது தந்தை தொண்டைமான் முத்தையன் பிரமமுத்தன் என்ற புனைபெயரில் 33 தியானச் சிந்தனைகள் என்ற நூலையும், மூன்று தனிப் பாசுரங்களையும், ஆங்கிலத்தில் கவிதைகளையும் இயற்றியவர். இவரது அண்ணன் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் கோயில்கள் குறித்த கட்டுரைகள் வேங்கடம் முதல் குமரிவரை என்ற தலைப்பில் ஐந்து பெருந்தொகுதிகளாக எழுதியவர். வாழ்க்கைக் குறிப்பு ரகுநாதன் திருநெல்வேலியில் அக்டோபர் 21, 1923ல் பிறந்தார். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய இவரது அண்ணன் பாஸ்கர தொண்டைமான் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இவரது ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் இவருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார். இவரது முதல் சிறுகதை 1941ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார். 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிகையிலும் பணியாற்றினார். இவரது முதல் புதினமான புயல் 1945ல் வெளியானது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம். அதைத் தொடர்ந்து 1951ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50,000 பிரதிகள் விற்பனையானது. அதே ஆண்டு தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 1954–56 வரை சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாத இதழை நடத்தினார். அந்த இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைப்புசாரா எழுத்தாளராகப் பணிபுரிந்தார். 1960ல் சோவியத் நாடு பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய ரஷியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை: மாக்சிம் கார்க்கியின் தாய் மற்றும் விளாடிமிர் மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா விளாடிமிர் இலிச் லெனின். அவரது இலக்கிய விமர்சன நூலான பாரதி - காலமும் கருத்தும் 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1985ல் இளங்கோ அடிகள் யார் என்ற சமூக வரலாற்று ஆய்வினை வெளியிட்டார். 1988ல் சோவியத் நாடு இதழிலிருந்து ஓய்வு பெற்றார். 2001ல் பாளையங்கோட்டையில் காலமானார். தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் இவரது நண்பர். 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951ல் தன் நண்பரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். 1999ல் புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும் என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் 1951ல் வெளியான வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியாகவும் புதுமைப்பித்தனின் படைப்புகளில் பிறமொழித் தழுவல் மிகுந்துள்ளதாக அவரது சமகால எழுத்தாளர்கள் (பெ. கோ. சுந்தரராஜன் போன்றோர்) முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாகவும் அமைந்திருந்தது. 1942 முதல் 1962 வரை இவரது எழுத்துலக வாழ்க்கை முழு வேகத்தில் இருந்தது. இவர் ஒரு சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் படும்பாட்டைத் தனது பஞ்சும் பசியும் நூலில் தெளிவாகக் காட்டியுள்ளார். அவரது கொள்கைகளை அந்நூல் பிரதிபலிக்கிறது. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ரகுநாதன் மொத்தம் 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 புதினங்கள், 2 நாடகங்கள் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். சிறப்பம்சங்கள் சோசலிச எதார்த்தவாத நாவல் இலக்கியப் போக்கைத் தன் “பஞ்சும் பசியும்” நாவல் மூலம் தொடங்கி வைத்தார். தமிழ் இலக்கிய ஆய்வை இலக்கண ஆய்வு நிலையிலிருந்தும், ரசனை ஆய்வு நிலையிலிருந்தும் சமூகநிலை ஆய்வு என்னும் ஆழமான தளத்துக்குக் கொண்டு சென்று, ஆய்வின் எல்லையை விசாலப்படுத்தினார். “பாரதியும் ஷெல்லியும்”, “கங்கையும் காவிரியும்” ஆகிய நூல்களின் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தைத் தமிழில் விரிவுபடுத்தியவர். “இளங்கோவடிகள் யார்?” என்னும் நூலின் வழி, தமிழகத்தில் சமய உருவாக்கங்களைப் போல நடந்த புதுப்புதுச் சாதி உருவாக்கங்களைத் துலக்கி, சாதி இறுக்கங்களின் பொய்மையைப் பளிச்சென வெளிப்படுத்தியவர். விருதுகள் சாகித்திய அகாதமி விருது – 1983 சோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக) தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு பாரதி விருது - 2001 எழுதிய நூல்கள் சிறுகதை சேற்றில் மலர்ந்த செந்தாமரை க்ஷணப்பித்தம் சுதர்மம் ரகுநாதன் கதைகள் கவிதை ரகுநாதன் கவிதைகள் கவியரங்கக் கவிதைகள் காவியப் பரிசு நாவல் புயல் முதலிரவு (தமிழ்நாட்டரசால் தடைசெய்யப்பட்டது) கன்னிகா பஞ்சும் பசியும் (நெசவாளரின் துயர் சொல்லும் புதினம்/நாவல்) நாடகம் சிலை பேசிற்று மருது பாண்டியன் விமரிசனம் இலக்கிய விமரிசனம் சமுதாய விமரிசனம் கங்கையும் காவிரியும் (தாகூருடன் பாரதியை ஒப்பிடும் ஆய்வு நூல்) பாரதியும் ஷெல்லியும் பாரதி காலமும் கருத்தும் புதுமைப்பித்தன் கதைகள் - சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் (1999) வரலாறு புதுமைப்பித்தன் வரலாறு ஆய்வு இளங்கோவடிகள் யார்? (1984) மொழிபெயர்ப்பு தாய் (கார்க்கியின் - தி மதர்). லெனினின் கவிதாஞ்சலி (மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா - விளடிமிர் இலிச் லெனின்). மூன்று தலைமுறைகள் (கார்க்கியின் - தி ஆர்டமோனோவ் பிசினஸ்); ஸ்டார்பிரசுரம், சென்னை; பக்கங்கள் 685 தந்தையின் காதலி (கார்க்கியின் கதையான மால்வா) சந்திப்பு (கார்க்கியின் சிறுகதைகள்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் aaraamthinai.com தமிழகம்.வலை தளத்தில்,தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய நூல்கள் 1923 பிறப்புகள் தமிழ் விமர்சகர்கள் தமிழக எழுத்தாளர்கள் 2001 இறப்புகள் நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் உருசியம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் திருநெல்வேலி மாவட்ட நபர்கள்
2973
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B
பவுலோ கோய்லோ
பவுலோ கோய்லோ (Paulo coelho) (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1947) உலகப் புகழ்பெற்ற சமகால பிரேசில் நாட்டு எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகளிலேயே தி ஆல்கெமிஸ்ட் ( தமிழில் ரசவாதி) புதினம் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நினைவாக்கப் பாடுபட வேண்டும் என்பது இவரது புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகளில் காணப்படும் அடிப்படை கருத்தாகும். ஆனாலும் இலெவன் மினிட்ஸ் (Eleven Minutes) என்ற அவரது புதினத்தில், யதார்த்த நிலைமைக்கு நேருக்கு நேர் முகம் கொடுப்பதுபற்றி சொல்லியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். இவரது தி ஆல்கெமிஸ்ட் புதினம் தமிழில் !ரசவாதி என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சாதனைகளும் விருதுகளும் விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை பாவுலோ கோய்லோ எழுதியுள்ளார். இவருடைய நூல்கள் 82 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. 170க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 23 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. 'பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்' அமைப்பின் உறுப்பினரான இவர் 'செவாலியே' விருது பெற்றவர். 2007ல் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக நியமிக்கப்பட்டார். படைப்புகள் பவுலோ கோய்லோ ஏராளமான நூல்களை படைத்துள்ளார். அவற்றுள் முக்கியமானவை:- பிரிடா, த வேல்கிரீஸ், மக்தூப், பை த ரிவர் ஐ சேட் டவுன் அன்ட் வெப்ட், த ஃபிஃப்த் மவுன்டன் போன்றவையாகும் . ரசவாதி கதைச்சுருக்கம் சந்தியாகு என்ற சிறுவனைப் பற்றிய மாயாஜால நூல் இது. அந்தலூசியாவில் ஆடுகள் மேய்க்கும் அவனுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. ஒரு குழந்தை இவனை பிரமிடுகளுக்கு அழைத்துப் போவதாக கனவு காண்கிறான். அது குறித்து கனவுகளுக்கு பலன் சொல்லும் சூனியக்காரியிடம் கேட்கிறான். அவள் அறிவுறுத்த அதன்படி செல்லும் அவன் மெல்ஜிசெடக் எனும் பெரியவரை இடையில் சந்திக்கிறான். சேலம் ராஜாவான அவர் 'கனவுகளையும் குறியீட்டுச் சகுனங்களையும் நம்பு. பிரபஞ்சத்தின் மொழியை அறிந்து கொள். உன் இலக்கை நீ அடைவாய்' என்கிறார். அதனை ஏற்று பொக்கிஷத்தைத் தேடிச் செல்கிறான் சந்தியாகு. ஸ்பெயினில் இருந்து கிளம்பும் அவன் தனது ஆடுகளை விற்று பணம் பெற்று தன் இலக்கை நோக்கி விரைகிறான். டான்ஜியர்ஸ் சந்தைகளிலும் எகிப்துப் பாலைவனங்களுலும் அலைந்து திரியும் அவனை விதி ஒரு ரஸவாதியைச் சந்திக்க வைக்கிறது. அவரது வழிகாட்டுதலின்படி பிரமிடுகளை அடைகிறான். அங்கே அவன் தேடி வந்த பொக்கிஷம் கிடைத்ததா? இலக்கை அடைந்தானா என்பதே கதையின் முடிவாகும் செய்தி இதயம் கூறுவதை நாம் கவனமாகக் கேட்க வேண்டும். வாழ்க்கைப் பாதையில் விதி சுட்டிக்காட்டும் சகுனங்களையும் கவனிக்க வேண்டும், அனைத்துக்கும் மேலாக நம் கனவுகளை நாம் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தும் சில நூல்களில் இதுவும் ஒன்று. படைப்புகள் புதினங்கள் வெளி இணைப்புகள் பவுலோ கோய்லோ அதிகாரப்பூர்வ இணையத்தளம் Warrior of the Light Online பவுலோ கோய்லோ ரசிகர் மன்றம் மேற்கோள்கள் போர்த்துக்கேய எழுத்தாளர்கள் 1947 பிறப்புகள் பிரேசிலின் எழுத்தாளர்கள் வாழும் நபர்கள்
2982
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81
சுனாமிப் புகைப்படத்துக்கு உலக விருது
டிசம்பர் 26, 2004 இல், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாக்கிப் பேரழிவை விளைவித்த ஆழிப்பேரலை சோகத்தைச் சித்தரிக்கும் நோக்கில் தமிழகத்தின் கடலூர் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துக்கு உலகச் செய்திப் புகைப்பட விருது கிட்டியிருக்கிறது. இது ராய்ட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்தைச் சார்ந்த ஆர்கோ தத்தா என்ற புகைப்பட நிபுணர் 2004 டிசம்பர் 28-ஆம் தேதி எடுத்த படம் ஆகும். சுமார் 70,000 புகைப்படங்கள் இந்தப்போட்டியில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமியின் போது தப்பிபிழைத்த பெண்மணி ஒருவர், கடற்கரையில், தம் உறவினர் ஒருவரின் உடல் அருகே கதறுவதைக் காட்டும் இந்தப் புகைப்படம், சுனாமி அழிவின் கோரத்தையும், சோகத்தையும் துல்லியமாகச் சித்தரிப்பதாக ஆம்ஸ்டர்டாம் நகரில் இப்போட்டியை நடத்தியவர்கள் கூறுகிறார்கள். மேற்கோள்கள் வெளி இணைப்பு பரிசு பெற்ற படம் செய்திகள்
2983
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
மனுஷ்ய புத்திரன்
அப்துல் ஹமீது (பிறப்பு: 15 மார்ச் 1968) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். தொடக்க வாழ்க்கை திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் 15 மார்ச் 1968 அன்று பிறந்தார். இலக்கியப் பணி எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார். படைப்புகள் விருதுகள் 2002 - இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது. 2003 - அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருதையும், 2004 - இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருதையும் பெற்றிருக்கிறார். 2011 - அதீதத்தின் ருசி கவிதைத் தொகுப்புக்கு, கனடா நாட்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது. 2016 - ஆனந்த விகடன் டாப் 10 மனிதர்கள் விருது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் உயிர்மை - இணைய தளம் உயிர்மை - வலைப்பதிவு உயிர்மை - புத்தகப் பதிவு 1968 பிறப்புகள் வாழும் நபர்கள் திருச்சி மாவட்ட நபர்கள் தமிழக எழுத்தாளர்கள் நவீன தமிழ்க் கவிஞர்கள் தமிழகக் கவிஞர்கள் திராவிட இயக்க எழுத்தாளர்கள்
2986
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
வண்ணதாசன்
வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். 2016 விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது..சூன் 10, 2018 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது. தஞ்சைத் தமிழ்ப் பல்கைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது. சிறுகதைத் தொகுப்புகள் கலைக்க முடியாத ஒப்பனைகள் தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் சமவெளி பெயர் தெரியாமல் ஒரு பறவை மனுஷா மனுஷா கனிவு நடுகை உயரப் பறத்தல் கிருஷ்ணன் வைத்த வீடு ஒளியிலே தெரிவது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது) சில இறகுகள் சில பறவைகள் ஒரு சிறு இசை புதினங்கள் சின்னு முதல் சின்னு வரை கவிதைத் தொகுப்புகள் புலரி முன்பின் ஆதி அந்நியமற்ற நதி மணல் உள்ள ஆறு கட்டுரைகள் அகம் புறம் கடிதங்கள் வண்ணதாசன் கடிதங்கள் விருதுகள் கலைமாமணி சாகித்திய அகாதமி விருது விஷ்ணுபுரம் விருது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சிறுகதைகள் அகம் புறம் கவிஞர்கள் தமிழக எழுத்தாளர்கள் கலைமாமணி விருது பெற்றவர்கள் சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் 1946 பிறப்புகள் வாழும் நபர்கள் இயல் விருது பெற்றவர்கள் திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்
2987
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF
பூமணி
கொம்மை (புதினம்) பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது வாழ்க்கைக் குறிப்புகள் இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இலக்கியப் பணி கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார். ஆக்கங்கள் சிறுகதைத் தொகுப்பு வயிறுகள். ரீதி. நொறுங்கல்கள். நல்லநாள். புதினங்கள் வெக்கை. நைவேத்தியம். வரப்புகள். வாய்க்கால். பிறகு. அஞ்ஞாடி திரைப்படம் கருவேலம்பூக்கள் அசுரன் (கதை) சிறப்புகள் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது. வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. விருதுகள் இலக்கியச் சிந்தனை பரிசு அக்னி விருது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான விஷ்ணுபுரம் விருது அஞ்ஞாடி புதினத்திற்கு 2014இல் சாகித்திய அகாதமி விருது விளக்கு விருது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சித்திரமாய்த் தீட்டப்பட்ட கதை விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி பூமணியின் கதைகளை வாசிக்க: அழியாச்சுடர்கள் கருவேலம்பூக்கள் திரைப்பட விமர்சனம் . பூமணியின் கட்டுரைத் தொகுப்பில் கூறப்பட்டுள்ள தன் தாய் தேனம்மாவினை பற்றி அம்பையின் http://www.hinduonnet.com/thehindu/lr/2003/01/05/stories/2003010500280400.htm கருத்துக்கள். Clashing by Night, Caravan magazine இந்த ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பூமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது அஞ்ஞாடி நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது 'அஞ்ஞாடி' நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது தமிழக எழுத்தாளர்கள் இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் 1947 பிறப்புகள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் வாழும் நபர்கள் தூத்துக்குடி மாவட்ட நபர்கள் தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
2988
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8.%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF
ந. முத்துசாமி
Na.Muthusamy (மே 25, 1936 - அக்டோபர் 24, 2018) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்த இவர் 2000 ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர். இவரது "கூத்துப்பட்டறை" என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. "கசடதபற", "நடை" போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "ந. முத்துசாமி கட்டுரைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது. ஆக்கங்கள் சிறுகதைத் தொகுப்பு நீர்மை நாடகங்கள் காலம் காலமாக அப்பாவும் பிள்ளையும் நாற்காலிக்காரர் சுவரொட்டிகள் படுகளம் உந்திச்சுழி கட்டியக்காரன் நற்றுணையப்பன் கட்டுரைத் தொகுப்பு அன்று பூட்டியவண்டி ( தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரைகள்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கூத்துப்பட்டறை தமிழக எழுத்தாளர்கள் நாடக இயக்குநர்கள் பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள் 1936 பிறப்புகள் 2018 இறப்புகள் தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் சென்னை எழுத்தாளர்கள் பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
2993
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
கோபிகிருஷ்ணன்
கோபிகிருஷ்ணன் (Gopikrishnan) மதுரையில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுபவர் கோபிகிருஷ்ணன். நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர். உளவியல் துறையிலும் மற்றும் சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆத்மன் ஆலோசனை மையம் என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். வறுமையான குடும்பச் சூழல் காரணமாகவும், தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன். இதற்காக உள நல மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் உருவான பலவீனம் காரணமாக, அதிக நோய்மையுற்று அதிலிருந்து மீள முடியாமலே 2003ஆம் ஆண்டு காலமானார். ஆக்கங்கள் ஒவ்வாத உணர்வுகள் தூயோன் மானிட வாழ்வு தரும் ஆனந்தம் டேபிள் டென்னிஸ் உள்ளிருந்து சில குரல்கள் முடியாத சமன் கோபிகிருஷ்ணன் அவர்களின் சில படைப்புகள் "அழியாச்சுடர்" தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவைகளுக்கான சுட்டி: http://azhiyasudargal.blogspot.com/search/label/கோபிகிருஷ்ணன் தமிழக எழுத்தாளர்கள் 2003 இறப்புகள் மதுரை மக்கள்
2995
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar , பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாகக் கருதப்படுகிறார்.. இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989 இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே மேலும் பன்னாட்டுச் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார். சச்சின் டெண்டுல்கருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப் பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார். இவர் 2019ஆம் ஆண்டு ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம் பெற்றார். இது வரை துடுப்பாட்டம் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் தேர்வுப் போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது. இவர் ஆறு முறை துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். அதில் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் இடம் பிடித்திருந்தார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தில் தொடர் நாயகன் விருது வென்றார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு தனது 150 ஆண்டு விழாவின் போது அனைத்து காலத்திற்குமான சிறந்த பதினொரு நபர்கள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்ட அணியை அறிவித்தது. அதில் இடம் பெற்ற ஒரே இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் சச்சின் மட்டுமே. விளையாட்டுத் துறையில் இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக 1994 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதும், 1997 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். மேலும் 1999 இல் இந்தியாவின் குடிமை விருதுகளில் நான்காவதாக கருதப்படும் பத்மசிறீ விருதையும், 2008 இல் இரண்டாவதாக கருதப்படும் பத்ம விபூசண் விருதினைப் பெற்றார். மேலும் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் நவம்பர் 16, 2013 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற சில மணித்தியாலத்தில் இந்தியப் பிரதமரின் அலுவலகத்திலிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதில் இந்தியாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் இருந்தது. மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப் பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார். 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு அந்த ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பை விருது வழங்கியது. ஆரம்பகால வாழ்க்கை டெண்டுல்கர் ஏப்ரல் 24,1973இல் தாதர், மும்பையில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் மகாராட்டிர மற்றும் ராஜபூர் சரஸ்வத் பிராமண குடும்ப மரபைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் பரவலாக அறியப்படும் மராத்திய புதின எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவரின் தாய் ரஞ்னி காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். ரமேஷ் தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரான சச்சின் தேவ் பர்மன் என்பாரின் பெயரையே தனது மகனுக்கு பெயரிட்டார். சச்சினுக்கு நிதின், ஐத் எனும் இரு மூத்த சகோதரர்களும் சவிதா எனும் மூத்த சகோதரியும் உள்ளனர். இவர்கள் மூவரும் இவரின் தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள் ஆவர். சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்துச் சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும் அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது. சச்சின் 1989ஆம் ஆண்டு தம் 16ஆவது வயதில் முதன்முறையாக இந்தியாவின் சார்பாகத் தேர்வுப் போட்டிகளில் விளையாடினார். பாக்கித்தான் அணிக்கு எதிரான இந்தத் தேர்வுத் தொடரில் ஓர் அரைச்சதம் எடுத்தார். 1990இல் இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தனது முதல் நூறு ஓட்டங்கள் எடுத்தார். இவர், தேர்வுப் போட்டிகளில் 15,000 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 18,000 ஓட்டங்களுக்கு மேலும் எடுத்துள்ளார். சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும் அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர். உள்ளூர்ப் போட்டிகள் 1987-88 ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பைத் தொடருக்கான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் மும்பை அணி சார்பாக விளையாடுவதற்காக நவம்பர் 14, 1987இல் தேர்வானார். ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் அவ்வப்போது மாற்று களத்தடுப்பு வீரராக விளையாடினார். டிசம்பர் 11, 1988 இல் இவருக்கு 15 ஆண்டுகள் 232 நாட்களாக இருந்தபோது மும்பை அணிக்காக முதல் முறையாக முதல்தரப் போட்டிகளில் விளையாடினார். குசராத் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் மிக இளம்வயதில் முதல்தரப் போட்டிகளில் அறிமுகப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார். வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வலைப்பயிர்சியின் போது அந்த காலத்தின் சிறந்த வேகப் பந்து வீச்சாளராக இருந்த கபில்தேவின் பந்து வீச்சினை மிக எளிதாக சச்சின் கையாண்ட விதத்தினைக் கண்ட மும்பை மாநில அணித் தலைவரான திலீப் வெங்சர்க்கார் இவரை நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்தார். அதன் பின் தியோதர் மற்றும் துலீப் கோப்பைகளில் இவர் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். 1988-89 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இவரில் சிரப்பான திறனை வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் மொத்தமாக இவர் 583 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த மும்பை வீரர்களில் முதலிடமும் ஒட்டுமொத்தமாக எட்டாவது இடத்திலும் இருந்தார். அவரது மட்டையாட்ட சராசரி 67.77 ஆக இருந்தது. 1989-90 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இராணி கோப்பையில் இவர் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி சார்பாக விளையாடினார். தில்லி மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப்பதிவு செய்தார். 1990-91 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் அரியான மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் 75 பந்துகளில் 96 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். 1998 ஆம் ஆண்டில் பார்பரேனில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் இரு நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். அந்தப் போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 204* ஓட்டங்களைப் பதிவு செய்தார். இவர் தான் அறிமுகமான ரஞ்சிக் கோப்பை, இராணிக் கோப்பை, துலீப் கோப்பை ஆகிய மூன்று உள்ளூர்ப் போட்டித் தொடர்களிலும் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 233* ஓட்டங்களைப் பதிவுசெய்தார். தனது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இதனைக் கருதுகிறார். யார்க்சயர் 1992 ஆம் ஆண்டில் இவர் யார்க்சயர் அணிக்காக விளையாடத் தேர்வானார். அப்போது இவருக்கு வயது 19 ஆகும். ஆனால் அப்போது இங்கிலாந்து மாகாணத்தில் இருந்து கூட அந்த அணியில் விளையாடத் தேர்வாகவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. ஆத்திரேலிய வேகப் பந்துவீச்சாளரான கிரெய்க் மெக்டெர்மோத் காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதிலாக தேர்வான சச்சின் 16 முதல்தரத் துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடி 070 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவரின் பந்துவீச்சு சராசரி 46.52 ஆகும். சர்வதேசப் போட்டிகள் 1989 ஆம் ஆண்டின் இறுதியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் ராஜ் சிங் தங்கர்புர் தலைமையிலான தேர்வுக்குழு சச்சினை தேர்வு செய்தது. அப்போது சச்சின் ஒரு முதல் தரத்துடுப்பாட்டப் போட்டித் தொடரில் மட்டுமே விளையாடியிருந்தார். இதற்கு முன்பாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சச்சினைத் தேர்வு செய்ய இருந்தனர். ஆனால் எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர்களைக் கருத்தில்கொண்டு இவரைத் தேர்வு செய்யசில்லை. 1989இல் பாக்கித்தான் அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அப்போது இவருக்கு வயது 16 ஆண்டுகள் 205 நாட்கள் ஆகும். வக்கார் யூனிசுக்கும் அதுவே முதல் போட்டியாகும். அந்தப் போட்டியில் பெரும்பாலான பந்துவீச்சுகளை இவரின் உடல்பகுதியில் பட்டது. சியல்கோட்டில் நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதிப் போட்டியில் யூனுஸ் கான் வீசிய பந்தில் இவரின் மூக்கில் பட்டு காயமடைந்தார். ரத்தம்வழிந்த போதிலும் சிகிச்சை மேற்கொள்ளாமல் தொடர்ந்து விளையாடினார். பெஷாவரில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் 18 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்தார். இதில் அப்துல் காதிர் வீசிய ஒரு ஓவரில் 27 ஓட்டங்கள் (6, 4, 0, 6, 6, 6) எடுத்தார் 1994 ஆம் ஆண்டில் ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 49பந்துகளில் 82 ஓட்டங்களை எடுத்தார். 1994 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.செப்டம்பர் 9, கொலும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார். தனது முதல் ஒருநாள் நூறு ஓட்டங்களை எடுப்பதற்கு இவர் 78 போட்டிகளை எடுத்துக் கொண்டார். 1996 ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத் துடுப்பாட்டத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். அதில் இரண்டு நூறு ஓட்டங்களைப்பதிவு செய்தார். மேலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பிடித்தார். தனது வாழ்நாளின் மிகச்சிறந்த போட்டி இதுவாகும்-கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்தியத் துடுப்பாட்ட அணியில் மிகக் குறைவான வயதில் 16 ஆண்டுகள் 238 நாட்களில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அணித் தலைவராக அசாருதீனுக்கு அடுத்தபடியாக சச்சின் தலைவராகத் தேர்வானார். ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடரை 0-3 எனும் விகிதத்தில் தோல்வியடைந்தது. இருந்தபோதிலும் தொடர் நாயகன் மற்றும் ஒரு போட்டியில் ஆட்ட நாயகன் விருதினையும் சச்சின் வென்றார். பின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை 0-2 என தோற்ற பின்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சௌரவ் கங்குலி 2000 ஆம் ஆண்டில் தலைவராக பொறுப்பேற்றார். சர்வதேச போட்டிகளில் அடித்த நூறுகள் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்துள்ளார். இவர் அதிக நூறு அடித்தவர்கள் வரிசையில் வரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 51 நூறுகளும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 49 நூறுகளும் அடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில் வங்காளதேசத் தூடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச போட்டிகளில் 100 நூறுகள் அடித்தவர் எனும் சாதனை படைத்தார். சச்சினின் சாதனைகள் எதிரணி நாடுகளுக்கு எதிராக சச்சின் அடித்த நூறுகளின் விவரம்: தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி (15,921) மற்றும் ஒருநாள் போட்டிகளில் (18,426) அதிக ஓட்டங்கள் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். மூன்று வடிவ துடுப்பாட்டப் போட்டிகளிலும் (தேர்வு, ஒ.ப.து, ப இ20) 30,000 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்த ஒரே வீரர் இவர் ஆவார். உள்ளூர் மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் (முதல் தரத் துடுப்பாட்டம்,பட்டியல் அ துடுப்பாட்டம், இருபது20) 50,000 ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் 16 ஆவது வீரர் எனும் சாதனை படைத்தார். இந்தச் சாதனையை அக்டோபர் 5, 2013இல் நடைபெற்ற சாம்பியன்சு இலீகு இருபது20 தொடரில் திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் விளையாடிய போது படைத்தார். ஆட்டநாயகன் விருதுகள் விருதுகள் 1994- அருச்சுனா விருது 1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. 1999 பத்மசிறீ 2001 – மகாராட்டிட பூஷன் விருது 2008- பத்ம விபூசண் 2014 பாரத ரத்னா விருது. 2020 - லாரஸ் உலக விளையாட்டு விருது பாரத ரத்னா விருது விமர்சனம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ஹாக்கியின் மறைந்த வீரர் தியான் சந்த்திற்கு வழங்க வேண்டியிருந்த விருதை மாற்றி சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கியதாக இவ்விருதின் தேர்வு முறை குறித்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. புகழுரைகள் உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர் டான் பிராட்மன் சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார்; பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் இரட்டைச்சதம் 2010 பிப்ரவரி 24, குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காது 200 (147) ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் 40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார். ஓய்வு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நவம்பர் 14 முதல் 18 வரை நடைபெற்ற உள்ள 200 ஆவது டெஸ்ட் போட்டியுடன் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். 2013 நவம்பர், 15 அன்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது இறுதி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் இன்னிங்சில் 74 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 16,000 ஓட்டங்களை எட்ட 79 ஓட்டங்கள் இருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரது ஓய்வின்போது இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுக்க முடிவு செய்து பின்னர் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்டது.. இப்பரிசு பெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின் ஆவார். மேலும், மிக இளவயதில் பாரத ரத்னா விருதைப்பெற்ற முதல் இந்தியர் என்கிற சிறப்புக்கும் உரியவர் ஆவார். மாநிலங்களவை உறுப்பினர் சச்சின் டெண்டுல்கர் , ஏப்ரல் 27 , 2012 அன்று மாநிலங்களவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் . மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து , ஆகத்து 2014 வரை , 3 முறை மட்டுமே அவைக்கு வந்திருந்தார் . சுயசரிதை 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி மும்பையில் என் வழி தனி வழி (நூல்) (Playing It My Way) என்ற தலைப்பிலான தனது சுயசரிதையை வெளியிட்டார். வாழ்க்கை வரலாறு நூல்கள் டெண்டுல்கரின் வாழ்க்கையை மையப்படுப்படுத்தி வெளியான நூல்கள் சச்சின்: தெ ஸ்டோரி ஆஃப் தெ வேர்ல்ட்'ஸ் கிரேட்டஸ்ட் பேட்ஸ்மன் (குலு இசக்கியேல்) சச்சின்டெண்டுலகர் ஒபஸ் தெ ஏ டூ இசட் :சச்சின் டெண்டுல்கர் (குலு இசக்கியேல்) சச்சின் டெண்டுல்கர் - எ டெஃபினிடிவெ பயோகிராபி (வைபவ் புரந்தர்) சச்சின் டெண்டுல்கர் -மாஸ்டர்ஃபுல் (பீட்டர் முர்ரே) இஃப் கிரிக்கெட் இஸ் எ ரிலீஜியன் சச்சின் இஸ் எ காட் ( விஜய் சந்தானம், சியாம் பாலசுப்பிரமணியன்) என் வழி தனி வழி (நூல்) சுயசரிதை திரைப்படம் சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ் எனும் இந்தியத் திரைப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் சச்சினின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு இயக்கினார். இதில் சச்சின் கதாப்பத்திரத்தில் சச்சின் டெண்டுல்கரே நடித்தார். திரைப்பட வரலாறு காட்சியகம் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் கிரிகின்ஃபோ.காம் 1973 பிறப்புகள் மராத்தியர்கள் யார்க்சையர் துடுப்பாட்டக்காரர்கள் அருச்சுனா விருது பெற்றவர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள் வாழும் நபர்கள் விசுடென் துடுப்பாட்டக்காரர்கள் இந்தியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள்
3008
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE
சுஜாதா
சுஜாதா என்ற தலைப்பில் அமைந்த கட்டுரைகள் பின்வருமாறு: சுஜாதா என்ற புனைபெயர் கொண்ட தமிழக எழுத்தாளர். சுஜாதா - தென்னிந்திய நடிகை சுஜாதா (திரைப்படம்)
3012
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF
வாலி
வாலி என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன. வாலி (கவிஞர்) - தென்னிந்தியப் பாடலாசிரியர். வாலி (இராமாயணம்) - இராமாயணக் கதாபாத்திரம். வாலி (திரைப்படம்) - தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படம். பக்கவழி நெறிப்படுத்தல்
3016
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
குற்றியலிகரம்
நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும். எடுத்துக்காட்டு நாடு + யாது -> நாடியாது கொக்கு + யாது -> கொக்கியாது மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம் கேள் + மியா -> கேண்மியா வால்+ மியா = வான்மியா கண்டேன் + யான் -> கண்டேனியான் இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் குற்றியலுகரம் அடிக்குறிப்பு சார்பெழுத்துகள்
3018
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார். இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. இலக்கியச் செல்வாக்குகள் இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார். மேலும் மலையாள இலக்கியச் சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட சாந்தி இதழில் அவரது இலக்கியத் தொடர்பு உருவானது. மேலும் அவர் சரஸ்வதி இதழில் ஆசிரியக் குழு உறுப்பினராகியதும் எழுத்தாளராக வளர உதவியது. படைப்புகள் நாவல் ஒரு புளியமரத்தின் கதை (1966) ஜே.ஜே. சில குறிப்புகள் (1981) குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998) சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006) விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991) ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004) காற்றில் கரைந்த பேரோசை விரிவும் ஆழமும் தேடி தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000) இறந்த காலம் பெற்ற உயிர் இதம் தந்த வரிகள் (2002) இவை என் உரைகள் (2003) வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004) வாழ்க சந்தேகங்கள் (2004) புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006) புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005) மூன்று நாடகங்கள் (2006) வாழும் கணங்கள் (2005) கவிதை சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005) மொழிபெயர்ப்பு செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962) தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000) தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004) நினைவோடைகள் க.நா.சுப்ரமண்யம் (2003) சி.சு. செல்லப்பா (2003) கிருஷ்ணன் நம்பி (2003) ஜீவா (2003) பிரமிள் (2005) ஜி.நாகராஜன் (2006) தி.ஜானகிராமன் (2006) கு.அழகிரிசாமி. சிறுகதைகள் பட்டியல் சுந்தர ராமசாமி பெற்ற விருதுகள் இவர் கீழ்வரும் விருதுகளைப் பெற்றார். குமரன் ஆசான் நினைவு விருது இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001இல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார். கதா சூடாமணி விருது (2004) சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள் தமிழ்க் கணிமைக்கான விருது தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார். இளம் படைப்பாளர் விருது சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்து வரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பது அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கும். மேற்கோள் வெளி இணைப்புகள் போதை ஏற்றாத கதை சு.ரா. இணையதளம் பசுவய்யாவின் சில கவிதைகள் Tamilnation.org - சுந்தர ராமசாமி:வாழ்க்கையும் படைப்புகளும் சுந்தர ராமசாமியைப் பற்றி கௌரி ராம்நாராயண் எழுதிய கட்டுரை தமிழ் சி·பி இணையத்தளத்தில் சுந்தர ராமசாமியின் கட்டுரைகள் சு.ரா பற்றிய எதிர்ப்பு நோக்கு சுந்தர ராமசாமி படைப்புகள் சில - அழியாச்சுடர்களில் கவிஞர்கள் நவீன தமிழ்க் கவிஞர்கள் தமிழக எழுத்தாளர்கள் 1931 பிறப்புகள் 2005 இறப்புகள் மலையாளம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் கன்னியாகுமரி மாவட்ட நபர்கள் இயல் விருது பெற்றவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
3031
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D
பல்சாக்
ஹோனர் தெ பல்சாக் (Honoré de Balzac) (மே 20, 1799 - ஆகஸ்ட் 18, 1850) ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். தொண்ணூற்றிரண்டு நாவல்கள், அவற்றுள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாத்திரங்களென பிரெஞ்சு இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளி, பல்சாக். மனிதத்தையும் அதை சார்ந்த உலகினையும் மிக நுணுக்கமாக அவதானித்த படைப்பாளி இவர். மேற்கத்திய உலகில், 'பல்சாசியன் நடை' என்பது விமர்சகர்களால் பெரிதும் போற்றப்படும் தகுதியாக இன்றைக்கு இலக்கியங்களில் முன்வைக்கப்படுகிறது. 'எழுத்தென்பது தவம்' எனப்புரிந்து செயல்பட்டவர். நல்ல படைப்புக்களுக்காக கடுந்தவம் புரிந்திருக்கிறார். ஆவி மணக்கும் காப்பியைச் சுவைத்தபடி இரவு முழுக்க எழுதுவதென்பது அவரது அன்றாடப்பணி. நாளொன்றுக்கு சராசரியாக பதினெட்டுமணிநேரங்கள் எழுத்துக்குச் செலவிட்டிருக்கிறார் பல்ஸாக். பாரிஸ் மாநகர வீதிகளாகட்டும் அல்லது ஒதுங்கிய நாட்டுப்புற நிலங்களாகட்டும், ஆடைகளாகட்டும் அல்லது வீட்டுத் தளவாடங்களாகட்டும், அனைத்துமே, அவரெழுத்தால் துல்லியமாக அறிமுகம் பெறமுடியும். "ஏதோவொருவகையில் நான் வகித்தப் பல்வேறுபணிகள் இப்படியானதொரு அவதானிப்புக் குணத்தினை எனக்குக் கொடுத்தன" என்பது, நாம் வியக்கும் அவதானிப்பு குணம்பற்றிய அவரது சொந்த வாக்குமூலம். பதிப்பகத் தொழிலில் இவருக்கேற்பட்டத் தோல்விகளும் நிதி நெருக்கடிகளும், அவருக்கான படைப்புக் களங்களை அடையாளம் காணவும், படைப்பு மாந்தர்களை இயற்கை தன்மைகளுக்கு சற்று மேலான தளத்தில் உலவச் செய்யவும் உதவின. சில நேரங்களில் கதைமாந்தர்களுக்கும் அவர்தம் வாழ்வியல் உடமைகளுக்கும் இவர்செய்யும் நகாசு வேலைகள், படைப்புக்களை பெருமைபடுத்துகின்றன. உலகின் பெரும்பாலான தேர்ந்த இலக்கியவாதிகளைப்போலவே, அனுபவங்களென்கிற ரசவாதக் குப்பியில், மேலான சிந்தனைமுலாம் என்கின்ற குழம்பில் தனது படைப்புமாந்தர்களை முங்கியெடுக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு இவரது பெற்றோர்கள் முதலாம் நெப்போலியன் காலத்தில் உயர்பதவியிலிருந்த பிரபுக்கள் வம்சத்தவர். தந்தை, 'பெர்னார் பிரான்சுவா' (Bernard Francois), தாய் 'ஆன்ன் சலாம்பியெ' (Anne Sallambier). பல்சாக் பெற்றோர்களுக்கு இரண்டாவது குழந்தை. பிறந்தவுடனேயே காப்பகத்தில் இடப்பட்டதால், பெற்றோர்களிடம் ஏற்பட்ட வெறுப்பு இறுதிவரைத் தொடர்கிறது. காப்பகத்தில் இவருடனேயே வளர்ந்த சகோதரி 'லோர்'(Laure) ரிடம் ஏற்பட்ட பாசப்பிணைப்பு பலவருடங்கள் நீடிக்கிறது. 1815 ஆம் ஆண்டு Ganser பள்ளியில் நடைபெற்ற மேடைப்பேச்சுகள் மூலமாக தனது தாய்மொழியான பிரெஞ்சு மொழியின் மீது பற்றுக்கொள்ள ஆரம்பித்தது. 1816ல், அக்காலத்தில் வாழ்ந்த மேல்தட்டுவர்க்க வழக்கப்படி சட்டம் பயின்றபோதும், இவரது கவனமனைத்தும் மொழியிலும் எழுத்திலுமிருந்தது. 1819 - 1820 ஆண்டுகளை பல்ஸாக்கின் இலக்கியப்பிரவேச காலங்களெனலாம். ரெனே தெகார்த்தெ , மால்ப்ரான்ச் (Nicholas Malebranche) ஆகியோரது தத்துவார்த்த எழுத்துக்களை விரும்பி வாசித்தார். மற்றமொழி படைப்புக்களையும் விட்டுவைக்கவில்லை. மொழிபெயர்ப்புகளிலும் அதிக நாட்டம். பைரன்(Byron) கவிதைகள், க்ராம்வெல் ( Oliver Cromwell) அவற்றுள் முக்கியமானவை. புகழ்பெற்ற பிரெஞ்சு மொழியின் நாடகவியலாளர்களான ராசின் (Jean Racine), கொர்னெய் (Pierre Corneille) ஆகியோர் அடியொற்றிப் படைப்புக்களை அளித்தார். ழான்-ழாக் ரூஸ்ஸோவினைப்போன்று (Jean-Jacques Rousseau) உருக்கமான புதினமும் எழுதப்பட்டது. இலக்கியங்களின் அனைத்துக்கூறுகளையும் அவர் நாடிபிடித்துப் பார்த்தக் காலமது. இக்காலங்களில்தான் தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தையும் அதன் கட்டமைப்பையும் அறிவதற்காக வெகுசனப் புலங்களில் தன்னை ஒளித்துக்கொண்டார். பேட்டைவாசியாகவும், தொழிலாளியாகவும் அவரெடுத்த அவதாரங்களுள், "மனித புத்திகளின் யோக்கியதைகளை அறிவதற்கான தேடல்போதை இருந்திருக்கின்றது" ("Prenant Plaisir A L'identifier. Dans Une Sorte D' Ivresse Des Facultes Morales), என்பது ஒரு விமர்சகரின் கருத்து. ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது Buffonனுடைய Histoire Naturelle வாசித்துவிட்டு, "ப்யுஃபோனால், விலங்கியலை அடிப்படையாகக்கொண்டு சிறப்பானதொரு நூலை எழுதமுடியுமென்றால், அவ்வாறான நூலொன்றினை ஏன் நமது சமூகத்திற்காகவும் படைக்கக்கூடாது? என்ற எண்ணம் 1842ல் எழுதபபட்ட 'La Comedie Humaine' க்குக் காரணமாகிறது. மூத்த சகோதரி 'Laure' ன் திருமணம் முடிந்த சிலநாட்களில் எழுதப்பட்டது 'Falthurne' என்ற சரித்திர நாவல். 1822 ல் மதாம் தெ பெர்னி (Madame de Berny)யிடம் இவருக்கு காதல் ஏற்பட்டது. இளைஞன் பல்சாக்கிற்கு வயது இருபத்துமூன்று, சீமாட்டிக்கு வயது நாற்பத்தைந்து. திருமணமானவள், உபரியாக ஒன்பது பிள்ளைகள், இருந்தும் மோகித்தார். அவளுக்கும் இவரது எழுத்திலும், திறனிலும் நம்பிக்கை இருந்தது. 'Clotilde de Lusignan அல்லது le Beau Juif' என்கின்ற நாவல் இச்சீமாட்டியின் நினைவாகவே எழுதப்பட்டது. அடுத்து வெளிவந்தது 'சதசஞ்சீவி' (Centenaire). தனக்குப் பலியானவர்களால் உயிர்வாழ்ந்து யுகங்களிற் பயணிக்கும் கிழட்டு வேதாளத்தைப் பற்றியது. பிறகு 'அர்தென்ன் ராஜகுரு'( Vicaire des Ardennes ). உடன்பிறந்தவளை காதலிக்கும் பாவத்திலிருந்து தப்ப நினைக்கும் இளைஞன், அடுத்து (உண்மை அறியாமல்) மையல்கொள்கின்றபெண் அவனதுச் சொந்தத்தாய். இப்படைப்பு அக்காலத்திய சமூக அமைப்பையும் மத நம்பிக்கையும் கேலி செய்ததற்காகத் தடைசெய்யப்பட்டது. சூதாட்டக் கணவனால் துன்புற்று வாழ்ந்த தன் இளைய சகோதரியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட 'குடிகேடன்'(Chouhan) படைப்பிற்கு 600 பிரெஞ்சு பிராங்கினை ஒரு பதிப்பாளர் கொடுக்க முன்வந்தபோது, "எழுதும் தொழில் செய்து அவமானப்படுவதைக் காட்டிலும், விரல்களால் நிலத்தைக் கிண்டி பிழைப்பேன்" என்று சத்தமிட்டுவிட்டு, படைப்பைப் பிரசுரிக்க விரும்பாமல் மேசையில் வைத்துப் பூட்டிக்கொண்டார். "எஞ்சிய தேவதை (La Derniere Fee, ou La Nouvelle Lampe) அல்லது புதிய விளக்கு" மற்றொரு வித்தியாசமான புதினம். இந்தமுறை அவரது 'ராஜகுரு - கட்டுபாடற்ற காதலின் மன்னிப்புக் கோரல் என்கிற தலைப்பில் பழைய மொந்தையில் புதியகள்ளாக வெளிவருகிறது. உலக ஒழுக்கிலிருந்து விலக்கியச் சூழலில் வளர்க்கப்பட்ட இளைஞனுக்கு, உலகின் பிரதான இயக்கக்காரணிகளான சமூகம், அரசியல், பந்தம்..போன்றவற்றைத் தெரியப்படுத்த, ஒரு சீமாட்டி முன்வருகிறாள். பின்னர் 'அர்தென்ன் ராஜகுரு' வின் தொடர்ச்சியாக 'அன்னெத்தும் கயவனும் - Annette et le criminel)' எழுதப்படுகிறது. . 1824ம் ஆண்டுவாக்கில் பல்சாக்கிற்குக் கிடத்த 'ஹொராஸ் ரேஸ்ஸொன் (Horace Raisson) நட்பு, 'இலக்கியத் தொடர்' -(Feuilleton littéraire) இதழியலைத் தொடங்க உதவுகிறது. இவ்விதழ் ஆரம்ப காலத்தில் எல்லாவற்றையும் எழுத ஆரம்பித்து, நாளடைவில் இலக்கியம், அரசியம், விஞ்ஞானமென தனது எல்லைகளை சுருக்கித் தகுதியை வளர்த்துக்கொண்டது. உடன்பிறந்த சகோதரியின் கணவனால் ஏற்பட்ட கடன் தொல்லைகளிலிருந்து மீள்வதற்காக 1828ம் ஆண்டு நண்பர்களின் உதவியுடன் அச்சகம் மற்றும் பதிப்பகத் தொழிலை மேற்கொள்கிறார். Molierன் அனைத்து படைப்புகளும் முறையாக இவரால் பதிப்பிக்கபடுகின்றன. இவரது எண்னத்திற்கு மாறாக இத்தொழில் மேலும் கடனாளியாக மாற்றியது. மீண்டும் எழுத்துலகிற்குத் திரும்புகிறார். படைப்புகள் 1829க்குப் பிறகு அவரால் எழுதபட்ட படைப்புகள் அனைத்துமே மகோன்னதனமானவை. முதன்முதலாக அவரது சொந்தப் பெயரில் (HONORE DE BALZAC) படைப்புகள் அச்சுக்கு வந்தன என்பதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். 1829 - 'எஞ்சியுள்ள குடிகேடன்' -LE DERNIER CHOUHAN., 'திருமணத்தின் உடற்கூறு (LA PHYSIOLOGIE DU MARRIAGE)', 'கீர்த்தியும் கேடும்' ( GLOIRE ET MALHEUR), 1830ல் - கட்டுரைகள், சிறுகதைகள் குறிப்பாக 'அந்தரங்க வாழ்க்கையின் காட்சிகள் (SCENES DE LA VIE PRIVEE),. 1831 'துயர் குறைக்கும் தோலாடை'(LA PEAU DE CHAGRIN) மற்றொரு உன்னதப் படைப்பு. கையிலிருந்த கடைசி நானயத்தையும் சூதாட்டத்தில் தொலைத்துவிட்டு, ஆற்றில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் கதை நாயகன் ஒரு புராதனப்பொருள் அங்காடியில் நுழைய நேரிடுகிறது. இவனது நிலையை அறிந்து இரக்கப்பட்ட அங்காடி உரிமையாளன் ஓர் அதிசயத் தோலாடையைக் காண்பித்து "உன் வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய ஆடை, ஆனால் ஒவ்வொரு வேண்டுதலின் போதும், தோலாடைச் சுருங்கத் தொடங்கும் அதற்கு ஈடாக உன்னுடைய ஆயுளும் குறைந்து கொண்டுவரும்" என எச்சரிக்கிறான். ஆடையைப்பெற்றுத் திரும்பும் இளைஞனுக்கு, கேட்டது கிடைக்கின்றது, வளங்கள் பெருகுகின்றன. வேண்டுதல் நிறைவேற்றப்படும்போதெல்லாம் தோலாடைச் சுருங்குவதுடன் கூடவே அவனது ஆயுளும் குறையத் தொடங்குகின்றது. ஒரு கட்டத்தில் தோலாடையை விரும்பித் தொலைத்தபோதும் அவனை அது விடுவதாகயில்லை. இறுதியில் அவனுயிரைக் குடித்து அதுவும் முடிந்து போகிறது. எதுவுமற்ற வாழ்க்கை என்கின்றபோது 'முடிவைத்' தேடி 'அவன்' சென்றான். எல்லாவற்றயும் தனதாக்கிக்கொள்ள முனைந்தபோது, 'முடிவு' அவனைத் தேடிவந்தது நெருங்கினாலும், விலகினாலும் 'இறப்பினை' கடந்தேசெல்லவேண்டும். என்கின்ற விதியினை மனதிற் பதியவைக்கும் அற்புதப் படைப்பு. 1832 - நாட்டுப்புற வைத்தியன் (Le Medecin de Campagne) 1834 - லான்ழே சீமாட்டி (La Duchesse de Langeais,) முழுமையின் தேடல் (La recherche de l'absolu). இக்காலத்தில் எழுதப்பட்ட 'பாதிரியார் கொரிஓ' (LE PERE GORIOT)வும் அவசியம் நாம் படித்தாகவேண்டிய நூல். வாழ்க்கையின் மிக உன்னத நிலையிலிருந்த மனிதனொருவன் தனது இரு பெண்களால் எல்லாவற்றையும் இழந்து நாயினும் கேவலாமாக மரணிப்பதை விவரிக்கும் புதினம். 1838 COMEDIE HUMAINE: மனிதத்தைப்பற்றி பேசுகின்ற ஒரு நூல். இயற்கை வரலாற்றில் விலங்குகள் வகைபடுத்தப்படுவதைப்போன்று, பல்ஸாக் தன் பங்கிற்கு மனித உயிர்களைப் பட்டியலிடுகிறார். அப்பட்டியலில் அன்றாடங் காய்ச்சிகளிலிருந்து, அறுசுவை உணவினைக் கொள்வோர்வரை எல்லோரும் இடம்பெற்றிருந்தனர். பணிகளென்றால் மருத்துவர், வணிகர், வங்கியாளர்,மதகுருமார், அதிகாரி,, அந்தஸ்தில் உள்ளவர், ஊழியர்கள், நிறுவன அதிபர்களென நீண்டவொரு பட்டியல். புலங்களெனில், பெருநகரமா, நகரமா, கிராமமா? ஆகச் சமூகத்தின் காரணிகளின் அடிப்படையில் மனிதர்களை வாசித்தார். அவரது தூரிகையில் மனிதர்களைப் பற்றிய முழுமையானச் சித்திரம் கிடைக்கிறது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோன்று அவரது அவதானிப்பின் முழுவீச்சையும் இங்கே உணருகிறோம். மிக நுணுக்கமாகத் தீட்டப்படும் அவரது எழுத்தோவியத்தில் ஒரு முழுமையான மனிதனைக் காண்கிறோம். நகரமா, வீதியா, இருப்பிடமா, ஆடைகளா, மேசைகளா, நாற்காலிகளா, இன்ன பிற பொருட்களா, அவனுக்கான, அவன் சார்ந்த ஒழுக்கங்களா, உறவுகளா, அசைவுகளா, மொழிகளா அனைத்தையும், பட்டைத்தீட்டிய மனிதவைரமாக நம்மிடம் நீட்டும்போது அதனொளி நம்முள்ளத்தில் செய்யும் விந்தைகளை, விவரிப்பது கடினம். எல்லாவற்றிற்கு மேலாக உண்மைகளின் அடிப்படையில், பொய் வேதாந்தங்களை ஒதுக்கி மனிதத்தினை கண்டறிந்த அறிவிலக்கிய முயற்சி 'LA COMEDIE HUMAINE'. பிரெஞ்சு எழுத்தாளர்கள் 1799 பிறப்புகள் 1850 இறப்புகள்
3033
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D%20%28%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%29
மஞ்சள் (மூலிகை)
மஞ்சள், அரிணம் அல்லது பீதம் (Curcuma longa) உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை தமிழர் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. வளர்வதற்கேற் சூழல் மஞ்சளுக்கு 20 °C and 30 °C (68 °F and 86 °F) இடைப்பட்ட வெப்பநிலை தேவைப்படுகிறது. மேலும் கணிசமான அளவு நீர்ப்பாசனமும் தேவைப்படுகிறது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டமானது மஞ்சள் வேளாண்மைக்கும், சந்தைக்கும் பெயர்பெற்றுள்ளது. வரலாறு மஞ்சள் தமிழ் நாட்டிலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது. இது முதலில் நிறமூட்டவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இது மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. மஞ்சளின் வகைகள் மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது. முட்டா மஞ்சள் கஸ்தூரி மஞ்சள் விரலி மஞ்சள் கரிமஞ்சள் நாக மஞ்சள் காஞ்சிரத்தின மஞ்சள் குரங்கு மஞ்சள் குடமஞ்சள் காட்டு மஞ்சள் பலா மஞ்சள் மர மஞ்சள் ஆலப்புழை மஞ்சள் மஞ்சளின் இயல்புகள் முட்டா மஞ்சள் இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள். கஸ்தூரி மஞ்சள் இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது. விரலி மஞ்சள் இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள். மஞ்சளின் பயன்பாடுகள் . பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது. சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது. வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது. நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கலுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். மேலதிக தகவல்கள் மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன. மஞ்சள்தூளைத் திரவ வடிவத்தில் பயன்படுத்தி வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதரண இயல்பு நிலையில் திரவ மஞ்சள் ஒரு மெல்லிய படலமாக இடப்பட்டால் ஒளியை உறிஞ்சி மிளிரும் தன்மை கொண்டது, மஞ்சளில் உள்ள வேதிப்பொருளானது டி.என்.டி (TNT) போன்ற வெடிபொருட்களின் மூலக்கூறுகளை வளியில் இருந்து அகத்துறிஞ்சுவதனால் மஞ்சளின் ஒளிவெளிவிடும் தன்மை மாற்றம் அடைகின்றது; மிளிரும் தன்மை குறைகின்றது. தமிழர் வாழ்வியல் தமிழர் வாழ்வியலில் மஞ்சளைப் மருத்துவ பொருளாகக் கருதுகின்றனர். புதிதாக ஒரு வீட்டில் குடிபுகுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை கடவுள் படத்தின் முன் வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுகின்றனர். புத்தாடை அணிவதற்கு முன்பு மஞ்சளை நீரில் தேய்த்து அதை ஆடையில் வைத்துக் கொள்கின்றனர். மாரியம்மன் கோயிலுக்கு தீச்சட்டி எடுப்பவர்கள் மீது முதலில் மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்படுகிறது. பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவர். மஞ்சள் தூளை நீரில் கலந்து பிள்ளையார் பிடித்து அறுகம்புல் வைத்து பிள்ளையாராக வழிபடுவர்.. திருவிழாக் காலங்களில் உறவினர்கள் மீது மஞ்சள் நீரை தெளிப்பர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மஞ்சள் குறித்த சீன வானொலியின் கட்டுரை மூலிகைகள் சுவைப்பொருட்கள் இஞ்சிக் குடும்பம் கிழங்குகள் இந்தியத் தாவரங்கள் உணவுச் சேர்பொருட்கள்
3039
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF
செல்லிடத் தொலைபேசி
நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் நகர்பேசி என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லாத் தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு அருகிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் செல்பேசி (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச).8754830145 நகர்பேசியை சாத்தியமாக்கும் தொழில் நுட்பங்கள் குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறை வானொலியை சுருதிகூட்டும் போது சில சமயம் ஒரே அலையெண்ணில் இரண்டு நிலையங்களின் ஒலிபரப்பை ஒரே நேரத்தில் கேட்க முடியும். இதற்குக் காரணம் நிலையங்களிலிருந்து வரும் வானொலிக் குறிகைகள் ஒரே அலையெண்ணில் இருப்பதால் அவை ஒன்றுக்கொன்று குறுக்கிடுகின்றன. குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் இந்த குறுக்கிடுதல் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறது. குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு ஒரு பரவல் குறியீடு மூலம் அலையெண் கற்றையகலம் முழுவதும் பரப்பப்படுகிறது. ஒவ்வொரு அழைப்பிற்கும் (அல்லது இரு நகர்பேசிகளுக்கிடையான தொடர்புக்கும்) ஒரு தனிப்பட்ட பரவல் குறியீடு வழங்கப்படுகிறது. இக்குறியீடு மூலம் அலையெண்ணில் பல அழைப்புகளை ஒன்றுக்கு மேல் ஒன்று உடன்வைக்கலாம். குறியீடு பிரிப்பு பன்னணுகல் வலையத்தில் அழைப்பவர் மற்றும் அழைக்கப்படுபவர் கருவிகளில் மட்டும்தான் ஒரே பரவல் குறியீடு ஒதுக்கப்படுகின்றன. ஆகையால் இவ்விருவர்களுக்கிடையே தொடர்பு தெளிவாக இருக்கும். வலையத்தில் உள்ள மற்ற கருவிகளில் யாதேனும் வேறு வேறு அழைப்புகளில் இணைந்திருந்தால் அவைகளுக்கு வெவ்வேறு பரவல் குறுயீடுகள் ஒதுக்கப்படுகின்றன. எந்த ஒரு தொடர்பையும் அலையெண் கற்றையகலத்தைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற தொடர்புகள் தடங்கல் செய்யாது. இதனால் பல்லாயிரம் அழைப்புகளை கற்றையகலத்தில் பரப்பி ஒன்றுக்கொன்று மேல் அடுக்கலாம். இது பரவல் நிறமாலை தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறை உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறையில், காலப்பிரிப்பு பன்னணுகல் முறையில் அழைப்புகள் (அல்லது தொடர்புகள்) வலையத்தைப் பகிர்கின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு மூலம் குரல் தரவுகள் குறுக்கப்பட்டு அதிக அழைப்புகளை வலையத்தில் ஏற்க இயல்பாகிறது. கம்பியில்லா முறையின் அங்கங்கள் கம்பியில்லா தொலைதொடர்பு அமைப்பு முறையில் பல அங்கங்கள் உள்ளன. அவற்றைக் கீழே காண்போம். நகர் நிலையம் முதலில் இருப்பது நகர் நிலையம். இதுதான் ஒரு சந்தாதாரரின் நகர்பேசி. இது வானலைச் செலுத்துப்பெறுவி, காட்சித் திரை, இலக்கக்குறிகைச் செயலிகள், சூட்டிகையட்டை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சூட்டிகையட்டை, சந்தாதாரர் அடையாளக்கூறு எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு நகர்பேசி சாதனத்தின் தனித்தன்மையான அடையாளத்திற்கு பன்னாட்டு நகர்சாதன அடையாளம் எனப் பெயர். சூட்டிகையட்டையில் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - பதிந்துள்ளது. பன்னாட்டு நகர்சாதன அடையாளம் மற்றும் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் ஒன்றுக்கொன்று தனியானவை, அவைகளில் சேர்மானமும் தனித்தன்மையானது. தள நிலையம் கம்பியில்லா அமைப்பின் அடுத்ததான உறுப்பு தள நிலையம். ஒரு தள நிலையம் என்பது தள செலுத்துப்பெறு நிலையம் மற்றும் தள நிலைய இயக்ககம் என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு தள செலுத்துப்பெறு நிலையத் துணையமைப்பு பல வானலை செலுத்துப்பெறுவிகளைக் கொண்டது. நகரும் நிலையத்தின் தொடர்பிற்கான வானிணைப்புகளை நிர்வகிக்கிறது. மாநகரப் பகுதிகளில் தள செலுத்துப்பெறு நிலையங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஒரு தள நிலைய இயக்ககம் பல தள செலுத்துப்பெறு நிலையங்களை நிர்வகிக்கும். ஒரு தள நிலைய இயக்ககம் வானலைவரிவை துவக்கம், அலைவெண் துள்ளல், கைமாற்றங்கள் ஆகிய செயல்கூறுகளை பூர்த்திசெய்கிறது. தள நிலைய இயக்ககம் எனப்படுவது நகர் நிலைமாற்றகத்திற்கும் நகர்கருவிக்கும் இடைமுகமாக அமைந்துள்ளது. நகர் நிலைமாற்றகம் பிணையத் துணையமைப்பின் மையத்தில் நகர் நிலைமாற்றகம் சேர்ந்துள்ளது. அது ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு ஒரு சாதாரண கணுவாக விளங்குகிறது. இது தவிர, நகர்கருவியுடன் பதிவுசெய்தல், உறுதிபடுத்துதல், இருப்பிடம் புதுப்பித்தல், கைமாற்றம், அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு ஆகிய பொறுப்புக்களை தாங்கும். நகர் நிலைமாற்றகம் துணைமுறைமை SS7 என்ற குறிகைமுறை மூலம் ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு இணைகின்றது. இல் இருப்பிடம் பதிவகம் மற்றும் விஜய இருப்பிடம் பதிவகம் இரண்டும் நகர் நிலைமாற்றகத்துடன் ஓர் உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறை அழைப்பின் திசைவு மற்றும் அலையல் திறமைகளை பூர்த்திசெய்கின்றன. ஒரு சந்தாதாரரின் எல்லா நிர்வாக விவரங்களும் இல் இருப்பிடம் பதிவகம் மூலம் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரரின் தற்போதய இருப்பிடம் நகர்நிலைய அலையல் எண் என்ற வடவத்தில் அறியப்படுகிறது. இந்த நகர்நிலைய அலையல் எண் மூலம்தான் ஓர் அழைப்பு சந்தாதாரர் கருவிக்கு திசைவுசெய்யப்படுகிறது. ஒரு உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு பிணையத்தில் தருக்கம்படி ஓர் இல் இருப்பிடம் பதிவகம் இருக்கும், ஆனால் அதை ஒரு பரவல் தரவித்தளமாகக்கூட செயல்படுத்தப்படலாம். விஜய இருப்பிடம் பதிவகம் அதன் கட்டுப்பாடு பகுதியிலுள்ள நகர்கருவிகளின் ஒருசில நிர்வாக விவரங்கள் மட்டும் இல் இருப்பிடம் பதிவகத்திலிருந்து எடுத்து சேகரிக்கும். நகர் நிலைமாற்றகத்திலேயே நகர்நிலையங்களின் விவரங்கள் சேமிக்கப்படாது. நகர் நிலைமாற்றகமும் விஜய இருப்பிடம் பதிவகமும் கம்பியில்லா நிலைமாற்றுக் கருவிகளில் ஒன்றாக செயல்படுத்தப்படுகிறது. ஆகையால் அவைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளும் ஒன்றானவையே. நகர்கருவி அடையாளப் பதிவகம் மூலம் ஓர் உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு பிணையித்திலுள்ள எல்லா நகர்கருவிகளின் பன்னாட்டு நகர்சாதன அடையாள எண்கள் ஒரு தரவுத்தளத்தில் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரின் நகர்கருவி தொலைந்தால் அதன் பன்னாட்டு நகர்சாதன அடையாள எண் தரவுத்தளத்தில் குறிக்கப்படுகிறது. உறுதிப்படுத்தகம் சந்தாதர்களின் சூட்டிகையட்டையின் ரகசியக் குறியீட்டை சேகரித்து நகர்கருவிகளை ஒரு பிணையத்திலுள் உறுதிபடுத்தும். கைமாற்றம் என்பது ஒரு நிகழும் அழைப்பை ஒரு கலத்திலிருந்து இன்னொன்றுக்கு நிலைமாற்றுவது. ஒரு கம்பியில்லா பிணையத்தில் நான்கு விதமான கைமாற்றங்கள் உண்டு. ஒரு தள நிலைய இயக்ககத்துக்குள்ளேயே தடம் கைமாற்றம் (Channel Handover), மற்றும் கலம் கைமாற்றம் (Cell Handover) இரு தள நிலைய இயக்ககங்களுக்கிடையே ஆனால் ஒரே நகர் நிலை மாற்றகத்திற்குள்ளே இரு நகர் நிலை மாற்றகங்களுக்கிடையே முதல் இரு கைமாற்றங்கள் அக கைமாற்றம் எனறழைக்கப்படுகின்றன. இறுதி இரண்டும் புற கைமாற்றம் என்றழைக்கப்படுகின்றன. கைமாற்றங்கள் நகர்கருவி மூலம் துவக்கப்படுகின்றன அல்லது பிணையத்தின் உபயோகச் சுமையை சீர்ப்படுத்த நகர் நிலைமாற்றகம் மூலமும் துவக்கப்படுகின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பின் பயனில்லா காலகட்டங்கள், மற்றும் குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் குறிப்பிட்ட அலைவெண்களில் நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடத்தை வருடி அருகாமையிலுள்ள கலங்களில் 6 உன்னத கலங்களை அவைகளிருந்து பெறும் வானலை திறத்தின்படி சேகரிக்கும். இத் தகவலை தள நிலைய இயக்ககத்திற்கும் நகர் நிலை மாற்றகத்திற்கும் தெரிவிக்கும். கைமாற்றத்தின் செயல்படுத்தம் கம்பியில்லா பிணையத்தை பொறுத்தவரை உள்ளது. குறைவான ஏற்பு படிமுறைப்படி (Minimum Acceptance Algorithm) ஒரு நகர்கருவியின் பெறும் குறிகைத்திறன் (Received Signal Power) ஒரு அளவிற்கு மீது குறைந்தால் அதன் இயங்கும் திறன் (Operating Power) அதிகரிக்கப்படுகிறது. அது மீறி பெறும் குறிகைத்திறன் முன்னேற்றம் இல்லையினில் நகர்கருவி வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கும். திறன் சேமிப்பு படிமுறைப்படி (Power Budget Algorithm) இயங்கும் கலத்திலிருந்து குறிகைத்திறன் குறைந்தால் வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கப்படும். கம்பியில்லாவில் ஒரு நகர்கருவியின் இருப்பிடம் HLR மற்றும் VLR பதிவகங்கள் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. ஒரு நகர்கருவி ஒரு பிணையத்திலிருந்து மற்றொன்றிற்கு பயணம் செய்யும்போது அதற்கு பெறும் ஒளிபரப்பில் மாற்றம் தெரியும். அப்பொழுது நகர்கருவி தன் IMSI மற்றும் பழைய தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் எண்களை புது பிணையத்தின் VLR பதிவகத்திற்கு ஒரு புதுப்பிப்புக் கட்டளையாக (Update Request) அனுப்புகிறது. நகர்கருவிக்கு ஒரு புது MSRN எண் ஒதுக்கப்பட்டு புது பிணையத்தின் VLR மூலம் புது HLR பதிவகத்திற்கு அனுப்பபடுகிறது. புது HLR பழைய பிணையத்தின் VLRக்கு முந்திய MSRN எண்ணை ரத்து செய்யுமாறு தெரிவிக்கிறது; அந்த எண்ணை மறு உபயோகம் செய்ய இயல்கிறது. புது TMSI எண் ஒதுக்கப்படுகிறது. MSC அமைப்பு பொதுத் தொலைபேசி பிணையத்திற்கும் கம்பியில்லாப் பிணையத்திற்கும் இடைமுகமாகும். ஒரு PSTN பிணையத்திலிருந்து தோன்றும் அழைப்பு ஒரு நுழைவாயில் நகர்பேசி சந்தாதாரர் எண் (Mobile Station ISDN-MSISDN) மூலம் MSC நுழைவாயிலுக்கு திசைவு செய்யப்படுகிறது. இந்த நுழைவாயில் நகர்பேசி MSISDN எண்ணுடன் HSRஐ வினாவித்து MSRN எண்ணை பெறுகிறது. இந்த MSRN எண்ணுடன் அழைப்பு MSCக்கு திசைவு செய்யப்படுகிறது. MSCயின் VLR பதிவகம் MSRNஐ எடுத்து மாற்றி நகர்கருவிக்கு TMSI எண் ஒன்றை அளிக்கிறது. ஒரு அழைப்பு BSCயின் கட்டுப்பாடு மூலம் நகர்கருவிக்கு திசைவு செய்யப்படுகிறது. கம்பியில்லா அணுகு நெறிமுறை கம்பியில்லா தொலைதொரபில் ஒரு முக்கியமான இடம் வைத்திருப்பது கம்பியில்லா அணுகு நெறிமுறை. கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையத்திற்கும் ஒரு நகர்கருவிக்கும் இடையே தொடர்பு இயல்பாகிறது. கம்பியில்லா அணுகு நெறிமுறை என்பது ஒரு தூது நெறிமுறை (Messaging Protocol). கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையம் மூலம் நகர்கருவிகளுக்கு மின்னஞ்சல், குரல்தகவல், நாட்குறிப்பு ஆகிய சேவைகளை நிறைவேற்ற இயல்கிறது. ஒரு கம்பியில்லா அணுகு நெறிமுறை அமைப்பில் 3 பாகங்கள் உண்டு: அவை: கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில், இணைய வழங்கன், மற்றும் கம்பியில்லா அணுகு நெறிமுறை தெரிந்த நகர்கருவி. கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில் (Access Point) WML தகவல்களை கம்பியில்லா அணுகு நெறிமுறையை ஏற்கும் நகர்கருவியுடன் பரிமாற்றுகிறது மற்றும் HTML தகவல்களை இணைய வழங்கன் மூலம் பரிமாற்றுகிறது. இணைய வழங்கன் தரவுத்தளங்களுடன் ASP, ColdFusion, CGI அல்லது PHP ஆகிய மென்பொருள் கருவிகள் மூலம் தொடர்புகொண்டு HTML பக்கங்களை வழங்குகிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் நகர்பேசித் தொழில் நுட்பம் இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக நகரும் தொலைபேசிகள் நகர்புறங்கள் முதல் நாட்டுப்புறங்கள் வரை பரவியுள்ளன. நகர்பேசிகளின் பயன்பாட்டுத் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் நகர்பேசி ஒரு அந்தஸ்துக் குறியாக இருந்த போதிலும் இன்று அது நாடெங்கும் இயல்பாக அனைவரும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகிவிட்டது. பல்வேறு கருவிகள் பல்வேறு திட்டங்கள் பல்வேறு சேவை நிறுவனங்கள்... இந்தியாவில் சி.டி.எம்.ஏ சேவையை வழங்கும் நிறுவனங்கள் டாடா இண்டிகாம் ரிலையன்ஸ் CDMA MTS Virgin CDMA ஜி.எஸ்.எம் சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஏர்செல் ஏர்டெல் வோடபோன் ஐடியா ஸ்பைஸ் டெலிகாம் யூனிநார் வீடியோகான் மொபைல் ரிலையன்ஸ் ஜி.யெஸ்.எம் ஐடியா செல்லுலார் விர்ஜின் பிஎஸ்என்எல் ஜியோ இலங்கையில் 2005 ஆம் ஆண்டு மே மாதத்தில் CDMA தொழில் நுட்பம் சண்டெல் மற்றும் லங்காபெல் நிறுவனங்களினால் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொலைத்தொடர்பிற்கு மாத்திரமன்றி இணைய இணைப்பிலும் சண்டெல் மற்றும் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் விநாடிக்கு 115.2 கிலொபிட்ஸ் இணைப்பிலும் மற்றும் லங்காபெல் விநாடிக்கு 153கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் சண்டெல் விநாடிக்கு 230.4/115.2 கிலோபிட்ஸ் இணைப்பிலும், டயலொக் விநாடிக்கு 460.8/230.4. கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் உதவுகின்றது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கிளிநொச்சி முல்லைத்தீவு தவிர இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இச்சேவை அறிமுகபப்டுத்தப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்புநிலையத்தின் இச்சேவையை 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இப்போதுள்ள நிலையில் இலங்கைத் தொலைத்தொடர்பு நிலையமும் டயலொக் மற்றும் அதைத் தொடர்ந்து சண்டெல் மற்றும் லங்காபெல் வலையமைப்புக்களும் விளங்குகின்றன. இலங்கையில் CDMA சேவையை வழங்கும் நிறுவனஙகள் : இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் இலங்கைத் தொலைத் தொடர்பு சண்டெல் சண்ரெல் லங்காபெல் லங்காபெல் டயலொக் புறோட்பாண்ட் இலங்கையில் GSM (TDMA) சேவையை வழங்கும் நிறுவனங்கள் மோபிட்டல் (Mobitel ) டயலொக் புறோட்பாண்ட் செல்டெல் ஹட்ச் (Hutch) தொழில் நுட்பக் குறிப்புகள் உங்கள் சர்வதேச நகர்பேசியை அடையாளம் காணும் இலக்கத்தை அறிய கொள்ள நகர்பேசியின் *#06# என்று அழுத்தவும். இதில் AAAAAA-BB-CCCCCC-D இதில் AAAAAA - மாதிரியின் அனுமதிக் குறியீடு இதில் BB - இறுதியாகக் கூட்டிணைக்கும் குறியீடு இதில் CCCCCC - நகர்பேசியின் தொடரிலக்கம் இதில் D - மிகையான இலக்கம் இந்த இலக்கத்தைக் குறித்து வைத்துக்கொள்ளவும் இது நகர்பேசியானது தொலைந்தால் நகர்பேசியை செயலிழக்கச் செய்ய உதவுவதோடு களவெடுத்தவரைக் கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கவும் உதவும். நோக்கியா நகர்பேசி நோக்கியா (Nokia) நகர்பேசிகளின் தயாரித்த திகதியைக் கண்டறிய நகர்பேசியில் *#0000# விசைகளை அழுத்தவும். நோக்கியா நகர்பேசிகளில வேகமான அழைப்புக்களை ஏற்படுத்த xx# என்றவாறு அழுத்தவும் எடுத்துக்காட்டாக 24 ஆவதுசேமிக்கப்பட்ட இலக்கத்தை அழைக்கவேண்டும் எனில் 24# என்றவாறு விரைவாக டயல் செய்யலாம். நோக்கியா நகர்பேசியின் வரண்டி (Warranty) ஐப்பார்க்க *#92702689# அதாவது (*#WAR0ANTY#) வருமாறு அழுத்திப் பெற்றுக் கொள்ளலாம். வெளி இணைப்புகள் கம்பியில்லாத் தொலைத்தொடர்பு குறித்த விளக்கப்பக்கம் மேற்கோள்கள் பதிகணினியியல் புதிய ஊடகம்