id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
---|---|---|---|
1570 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B | புளூட்டோ | புளூட்டோ (Pluto, வழமையான குறியீடு: 134340 புளூட்டோ; சின்னங்கள்: மற்றும் ) அல்லது சேணாகம் என்பது கதிரவ அமைப்பில் (ஏரிசுவை அடுத்து) இரண்டாவது பெரிய குறுங்கோளும் கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் ஒன்பதாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் கதிரவனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது. நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது. புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன.
கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான பிறழ்மையச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49 வானியல் அலகு (4.4–7.4 பில்லியன் கிமீ)) உடையது. இதனால் புளூட்டோ நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 வாஅ தூரத்தில் இருந்தது
வகைப்பாடு
கோள் என்பதற்கான அனைத்துலக வானியல் கழகத்தின் வரையறை:
கதிரவ அமைப்பில் உள்ள விண்பொருள் ஒன்று கோள் என்றழைக்கப்பட வேண்டும் எனில்:
அப்பொருள்
கதிரவனை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவர வேண்டும்.
நிலைநீர் சமநிலையை (கிட்டத்தட்ட கோள வடிவம்) எட்டுவதற்குத் தகுந்த நிறையைப் பெற்றிருக்க வேண்டும்.
தன் சுற்றுப்பாதைச் சூழலில் ‘அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும்’.
புளூட்டோவும் அதையொத்த குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது.
புளூட்டோவின் துணைக்கோள்கள்
கீழ்வருவன புளூட்டோ மற்றும் அதன் துணைக்கோள்களின் அளவைகள் ஆகும்.
இவை தவிர்த்து புளுட்டோவின் அரைகுறை துணைக்கோளாக (15810) 1994 ஜே.ஆர்.1 உள்ளது. இது ஏற்கனவே புளூட்டோவின் ஒரு துணைக்கோளாக 10 இலட்சம் ஆண்டுகள் இருந்துள்ளது. இன்னும் இருபது இலட்சத்திலிருந்து இருபத்தியைந்து இலட்சம் ஆண்டுகள் இது புளூட்டோவின் துணைக்கோளாக இருக்கும்.
மூல நூல்
வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், .
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
புளூட்டோவை நெருங்கியது நியூ ஹொரைசான் விண்கலம்: காணொளி காட்சி
புளூட்டோவைக் கடந்து சென்று நெருக்கத்தில் படம்பிடித்தது ஆய்வுக் கலன்: காணொளி காட்சி
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் |
1574 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D | ஸ்டீவன் ஹாக்கிங் | ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.
ஆக்கிங்கு ஐக்கிய அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றார். 2002 ஆம் ஆண்டில், பிபிசி நடத்திய பிரித்தானியாவின் 100 பெரும் புள்ளிகள் கணிப்பில் 25வதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979 முதல் 2009 வரை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் தான் உருவாக்கிய கோட்பாடுகளைப் பற்றியும், அண்டவியல் தொடர்பிலும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார். இவரது காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற புகழ்பெற்ற கட்டுரைத் தொடர் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சண்டே டைம்சு இதழில் 237 வாரங்களாக வெளிவந்து சாதனை புரிந்தது. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இவரது அறிவியல் நூல்கள் பலரையும் கவர்ந்தன.
21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் எனவும் அழைக்கப்படும் இயக்கு நரம்பணு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, படிப்படியாகக் கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில், கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார். இவர் 2018 மார்ச் 14 இல் தனது 76-வது அகவையில் காலமானார்.
அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இந்தச் சிறந்த படைப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
ஆரம்ப வாழ்வும் கல்வியும்
ஆரம்ப வாழ்வு
இங்கிலாந்தில் மருத்துவமனை ஒன்றில் 1963 ஆம் ஆண்டு 21 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவத்திற்குப் பின் அவர் இன்னும் ஒரு சில தினங்களை உயிர் வாழ்வார் என்றும் விரைவில் இறந்து விடுவார் எனவும் மருத்துவர்கள் அறிக்கை தந்தனர். பக்கவாதம் (ameotropic lateral sclerosis) என்னும் நரம்பு நோய் பாதிப்புடன் அவர் மருத்துவ உலகே மிரண்டு போகும் அளவுக்கு 53 ஆண்டுகள் வாழ்ந்து காட்டினார். 1985இல் மூச்சு குழாய் தடங்கலால் பேசும் திறனை இழந்தார் .இறுதியாக எஞ்சியது கன்னத்தின் தசையசைவும் கண் சிமிட்டலும் மட்டுமே. உடலில் மீதியுள்ள அத்தனை உறுப்புகளும் செயலிழந்து விட்டன. தசையளவு மூலம் தன் கருத்தை கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார். அவரின் ஆய்வுகளுக்கு துணையாக செயற்கை நுண்ணறிவு கணினி செயல்பட்டது.
.
ஆரம்பக் கல்வி
1950 இல், அவரது தகப்பனார், தேசிய மருத்துவ ஆய்வு நிலையத்தில், ஒட்டுண்ணியியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் செயிண்ட் அல்பான்சு என்ற இடத்திற்குச் சென்று வாழ்ந்தனர். அவரது குடும்பத்தினர் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். அவரது தகப்பனார், ஆக்கிங்கை பிரபலமான Westminster School இல் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டார். ஆனால் புலமைப் பரிசிலுக்கான பரீட்சைக்குப் போக முடியாமல் ஆக்கிங் நோயுற்றிருந்தமையாலும், அந்தப் பாடசாலைக்கான செலவை உதவித்தொகையின்றி குடும்பத்தினரால் சமாளிக்க முடியாதென்பதனாலும், ஆக்கிங் செயிண்ட் அல்பான்சு பள்ளியிலேயே தனது கல்வியைத் தொடர்ந்தார். ஆனாலும் அவருக்கு அதில் நேர்மறையான விளைவும் கிடைத்தது. அவருடன் சேர்ந்து அவருக்குப் பிடித்தமான விளையாட்டுகளில் பங்கெடுக்கக் கூடிய, வான்வெடிகள் / விமான மற்றும் படகு ஒப்புருக்கள் உற்பத்தியில் சேர்ந்து பங்களிக்கக் கூடிய, கிறிஸ்தவம் மற்றும் புலன் புறத்தெரிவு போன்றவை பற்றி நீண்ட உரையாடல்களை நிகழ்த்தக்கூடிய நெருங்கிய நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள். 1958 இல், அவர்களது கணித ஆசிரியரின் உதவியுடன், கடிகாரத்தின் பகுதிகள், பழைய தொலைபேசி ஒன்றின் மின்தொடர்பு இணைப்புப் பலகை, மற்றும் மீளுருவாக்கப் பாகங்களைக் கொண்டு ஒரு கணினியை உருவாக்கினார்கள்.
பட்டப்படிப்பு
பாடசாலையில் அவர் ஐன்ஸ்டைன் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், ஆரம்பத்தில் அவர் வெற்றி பெற்றவராக இருக்கவில்லை. ஆனால் பின்னர் நாட் செல்லச் செல்ல, அறிவியல் பாடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்து, அவரது கணித ஆசிரியரால் உந்தப்பட்டு, பல்கலைக்கழகத்தில் கணிதத்தைத் தெரிவு செய்தார். அவரது தந்தையார், கணித்துறையில் மிகக் குறைந்தளவே வாய்ப்புக்கள் இருப்பதனால், ஆக்கிங் மருத்துவத் துறையைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் கற்க வேண்டும் என்றும் விரும்பினார். அந்த நேரத்தில் கணிதவியல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இல்லாதபடியால், அவர் இயற்பியலையும், வேதியியலையும் தெரிவு செய்தார். மார்ச் 1959 இல், புலமைப் பரிசிலில் சித்தியடைந்து, தனது 17 ஆவது வயதில், அக்டோபர் 1959 இல், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை ஆரம்பித்தார்.
முதல் 18 மாதங்கள் அவருக்குப் படிப்பு மிகவும் இலகுவானதாக இருந்தமையால், அது சலிப்பூட்டுவதாகவும், தனிமைப்படுத்துவதாகவும் அமைந்தது. அவரது இயற்பியல் ஆசிரியரின் கூற்றுப்படி, இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில், அவர் ஏனையோருடன் இணைந்து கொண்டார். பழம்பெரும் இசை, அறிவியல் புனைவு போன்றவற்றில் ஈடுபாட்டைக் காட்டி, கல்லூரியின் உற்சாகமூட்டும், பிரபலமான ஒரு உறுப்பினராக மாறினார். அவரது ஒரு மகுதி மாற்றத்துக்குக் காரணமாக அவர் கல்லூரியின் படகுக் குழு, படகு வலித்தல் குழுமம் போன்றவற்றில் தன்னை இணைத்துக் கொண்டமை அமைந்தது.
அவர் ஆக்சுபோர்டு பல்கலைகழகத்தில் படித்த 3 ஆண்டுகளில், தான் 1000 மணித்தியாலங்கள் படித்திருப்பதாகக் கணித்ததுடன், இதனால் தனக்கு இறுதிப் பரீட்சை, சவாலானதாக அமையும் என்றும் கணித்து, தான் நிகழ்வுசார் அறிவைவிட, கோட்பாட்டு இயற்பியல் பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் விரும்பியவாறு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில், அண்டவியல் துறையில் பட்டப் படிப்பைத் தொடர வேண்டுமெனின், அதற்கு முதலாம் பிரிவில் நன்மதிப்பு பெற்றிருக்க வேண்டும். அந்தக் கவலையினால், அவரால் முதல்நாள் இரவு சரியாகத் தூங்க முடியாமல், அவரது இறுதிப் பரீட்சை முடிவு முதலாம், இரண்டாம் நிலைகளுக்கு இடையில் வந்திருந்ததனால், அவர் ஒரு நேர்முகப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியிருந்தது. நேர்முகப் பரீட்சையில், அவரது திட்டத்தைக் கூறும்படி கேட்கப்பட்டபோது, 'முதலாம் பிரிவு கிடைத்தால் தான் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் போக எண்ணியிருப்பதாகவும், இரண்டாவது நிலையானால், ஆக்சுபோர்ட்டிலேயே தொடர்ந்து படிப்பதாகவும், அதனால் நீங்கள் முதலாவது பிரிவை அளிப்பீர்கள் என நினைக்கிறேன்' என்றும் பதிலளித்தார். நேர்முகப் பரீட்சையில் இருந்தவர்களுக்கு ஆக்கிங் மிகுந்த அறிவாளி என்பதனை உணர முடிந்ததனால், அவருக்கு முதலாம் பிரிவு நன்மதிப்பை அளித்தார்கள். இயற்கை அறிவியலில் தனது முதல்நிலை பட்டப்படிப்பை முடித்த அவர், தனது ஒரு நண்பருடன் ஈரானுக்குப் போய்விட்டு வந்து, ஒக்டோபர் 1962 இல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்தார்.
அங்கு அவருக்கு முதலாவது ஆண்டு சிறிது கடுமையாக அமைந்தது. அவருக்கான மேற்பார்வையாளராக, பரவலாக அனைவராலும் அறியப்பட்ட வானியல் வல்லுநர் பிரெட் ஆயில் என்பவர் அல்லாமல், நவீன அண்டவியல் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான Dennis William Sciama என்பவர் கிடைத்ததில், ஆக்கிங் ஏமாற்றமடைந்தார். அத்துடன், பொதுச் சார்புக் கோட்பாடு மற்றும் அண்டவியல் தொடர்பான வேலைகளுக்குத் தனக்கு அங்கு கிடைக்கும் கணிதவியல் பயிற்சி போதாது என்று நினைத்தார். அவருக்கு இயக்க நரம்பணு நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டபோது, மருத்துவர்கள் அவர் தொடர்ந்து படிக்கலாம் என்று கூறினால், இனிப் படிப்பதில் என்ன பயன் என்றெண்ணி மனத் தளர்ச்சிக்கு உள்ளானார். மருத்துவர்கள் எதிர்வு கூறியதைவிட மிக மெதுவாகவே அவரது நோய் கூடிக்கொண்டு சென்றது. அவருக்கு உதவியின்றி நடப்பதில் சிரமம், மற்றும் சரியாகப் பேசுவதில் சிரமம் என்பன இருந்தாலும், அவர் இன்னும் இரு ஆண்டுகளுக்கே உயிர் வாழ்வார் என்ற கூற்று சரியானதாக இருக்கவில்லை. 1964 ஜூனில் ஒரு விரிவுரையின்போது, பிரெட் ஆயில் மற்றும் அவரது ஒரு மாணவர் இருவரினதும் வேலை தொடர்பில் ஆக்கிங் பகிரங்கமாக சவால் விட்டபோது, அவரது அறிவு தொடர்பான நன்மதிப்பு கூடிக்கொண்டு போனது.
ஆக்கிங் தனது பட்டப்படிப்பில் இருந்த சூழ்நிலையில், இயக்கவியல் சமூகத்தில், அண்டத் தோற்றப்பாட்டில் அப்போதிருந்த பெரு வெடிப்புக் கோட்பாடு, போன்ற கோட்பாடுகள் தொடர்பில் பெரிய விவாதங்கள் நிகழ்ந்தன. உரோசர் பென்ரோசு என்பவரின் கருந்துளை]]யின் மையத்திலுள்ள, [[வெளிநேர சிறப்பொருமை (singularity) தொடர்பான கோட்பாட்டால் உந்தப்பட்டு, அதே கோட்பாட்டை முழு அண்டத்திற்கும் பயன்படுத்தி அது தொடர்பான தனது ஆய்வுக்கட்டுரையை 1965 இல் எழுதினார். அந்தக் கட்டுரை 1966 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் Gonville and Caius College, Cambridge இல் ஒரு சக ஆய்வாளராக இணைந்தார். பின்னர், மார்ச் 1966 இல், செயல்முறைக் கணிதவியல், இயக்கவியல் கோட்பாடுகளில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதில் பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவியலை முக்கிய பிரிவாகக் கொண்டிருந்தார்.
தொழில் வாழ்க்கை
1966–1975
1975–1990
1990–2000
2000–2018
ஆக்கிங் பொது மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், இலகு நடையில், பரவலாக அதிகமானோருக்குக் கிடைப்பதற்காக முதலே வெளியிடப்பட்டிருந்த காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற நூலின் மேம்படுத்திய பதிப்பு என்னும் நூல்களை முறையே 2001, 2005, 2016 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார். ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கும் Thomas Hertog, மற்றும் Jim Hartle உடன் இணைந்து, 'மேலிருந்து-கீழான அண்டவியல்' கொள்கை ஒன்றை 2006 ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கி வந்தார். அந்தக் கொள்கையானது பேரண்டமானது ஒரு தனித்துவமான ஆரம்ப நிலையை மட்டுமே கொண்டதாக இராமல், பல்வேறு நிலைகளைக் கொண்டிருப்பதனால், தற்போதைய பேரண்டத்தின் வடிவமைப்பை, ஒரு தனியான ஆரம்ப நிலையை வைத்து எதிர்வுகூறல் பொருத்தமானதல்ல என்கின்றது. மேலும் இக்கொள்கை கடந்தகாலத்தின் பல மேல்நிலையிலுள்ள வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய அமைப்பைத் தெரிவு செய்வதனால், துல்லிய ஒத்தியைவு பேரண்டம் என்ற சாத்தியமான நுணுக்கத்தை அறிவுறுத்துகிறது.
ஆக்கிங் தனது தொழில்சார் தேவைகளுக்காகவும், விருதுகளைப் பெறிவதற்காகவும் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தார்.
அவரது உடலியக்கப் பாதிப்புக் காரணமாக அவரது பயணங்கள் தனிப்பட்ட தாரை வானூர்தி மூலமாகவே நிகழ்ந்தன. 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அது மட்டுமே அவரது வெளிநாடுகளுக்கான பயண முறையாக அமைந்தது.
2003 ஆம் ஆண்டளவில், கருந்துளைத் தகவல் இழப்புத் தொடர்பாக ஆக்கிங்கின் கருத்துக்கள் ஏற்கத்தக்கவையல்ல என்ற கருத்து பல இயற்பியலாளர்களிடையே அதிகரித்து வந்தது. 2004 இல் டப்லின் செய்த விரிவுரை ஒன்றில் இதனை ஆக்கிங் ஏற்றுக்கொண்டார். தான் 1997 இல் செய்திருந்த பந்தயத்திலிருந்த முரண்பாட்டையும் ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தகவல் இழப்பு தொடர்பான பிரச்சனைக்கு, கருந்துளைகள் ஒன்றுக்கு மேற்பட்ட இடவியலைக் கொண்டிருப்பதற்கான சாத்தியமுண்டு என்பதனை உட்படுத்தித், தனது சொந்தத் தீர்வொன்றையே முன்வைத்தார்.
2005 இல் ஆக்கிங் வெளியிட்ட இந்த விடயம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையொன்றில், பேரண்டம் தொடர்பான மாற்று வரலாறுகள் அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்தியதன் மூலம் தகவல் முரண்பாடு விளக்கப்பட்டுள்ளதாக விவாதித்துள்ளார். 2014 இல் தன்னுடைய கருந்துளையில் தகவல் இழப்புத் தொடர்பான தனது கருத்து தவறென ஒத்துக்கொண்டார்.
இன்னுமொரு நீண்ட காலமாக நடந்து வந்த அறிவியல் சர்ச்சையின் பகுதியாக, ஆக்கிங் ஹிக்ஸ் போசான் என்ற ஒரு துகள் எப்போதும் கண்டுபிடிக்கப்படப் போவதில்லை என்று அழுத்தமாக விவாதித்தும், பந்தயம் செய்தும் வந்துள்ளார். 1964 இல், பீட்டர் ஹிக்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட கொள்கையின்படி, இவ்வாறான ஒரு துகள் இருக்கலாம் என்று முன்மொழியப்பட்டது. இது தொடர்பில் 2002 இலும், மீண்டும் 2008 இலும் இது தொடர்பாக ஆக்கிங், ஹிக்ஸ் ஆகிய இருவருக்குமிடையில் மிகவும் சூடான விவாதம் நிகழ்ந்தது. அப்போது பெரும்புகழ் கொண்டவராக ஆக்கிங் இருப்பதனால், ஏனையோருக்குக் கிடைக்காத நம்பகத்தன்மை, அவரது கருத்துக்களுக்கு உடனடியாகக் கிடைப்பதாகக் குற்றஞ்சாட்டினார். 2012 இல், ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பெரிய ஆட்ரான் மோதுவி அமைக்கப்பட்ட பின்னர், இந்தத் துகள் கண்டறியப்பட்டது. தான் தனது பந்தயத்தில் தோற்றுவிட்டதாக ஆக்கிங் விரைவாகவே ஒத்துக்கொண்டதுடன் ஹிக்ஸ்சிற்கு இயற்பியலாளருக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் எனக் கூறினார்.
2013 இல் ஜிக்ஸ்சிற்கு இந்த நோபல் பரிசு கிடைத்தது.
2007 இல் ஆக்கிங்கும், அவரது மகள் லூசியும் இணைந்து சிறுவர் நூலை வெளியிட்டார்கள். அதில் ஆக்கிங் குடும்பத்தினரை ஒத்த கதாபாத்திரங்கள் கொண்ட தோற்றங்களை அமைத்து, அணுகக்கூடிய வகையில் இயற்பியல் கொள்கைகளை விளக்கி, அந்த நூலை வடிவமைத்தார்கள். 2009, 2011, 2014, 2016 ஆண்டுகளில் இதன் தொடர் நூல்கள் வெளியிடப்பட்டன.
2002 இல் ஐக்கிய இராச்சிய மட்டத்தில் நிகழ்ந்த வாக்கெடுப்பின் அடிப்படையில், ஆக்கிங், 100 சிறந்த பிரித்தானியர்கள் பட்டியலில் இடம்பெற்றார். 2006 இல் அரச கழகத்திடமிருந்து கொப்லே பதக்கத்தையும் (கோப்ளி பதக்கம்), 2009 இல் அமெரிக்காவின் மிகவும் மதிப்புள்ள என்ற விருதையும்
, 2013 இல் உருசியாவின் விருதையும் பெற்றார்.
சான் சல்வடோரில் உள்ள ஸ்டீவன் ஹாக்கிங் அறிவியல் அருங்காட்சியகம், கேம்பிரிட்ச்சில் உள்ள ஸ்டீவன் ஹாக்கிங் கட்டடம், கனடாவிலுள்ள ஸ்டீவன் ஹாக்கிங் நிலையம், ஆகிய கட்டடங்கள் உட்பட ஆக்கிங்கின் பெயரில் பல கட்டடங்கள் அமைந்துள்ளன. நேரம் தொடர்பில் ஆக்கிங் கொண்டுள்ள கருத்துக்கள் காரணமாக, கேம்பிரிட்ச்சில் திறந்து வைத்தார்.
விண்வெளிப் பயண அறிவிப்பு
2006 இல், பி.பி.சி க்கு அளித்த பேட்டியொன்றில், விண்வெளிக்குச் செல்வது தனது நிறைவேறாத ஆசைகளில் ஒன்று என்று கூறினார். இதைக் கேட்ட ரிச்சர்டு பிரான்சன், இலவசமாக விண்வெளிப்பயணம் ஒன்றை ஒழுங்கு செய்ய முடியும் என்று கூறியபோது ஆக்கிங் அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டார். தன்னுடைய தனிப்பட்ட ஆசையுடன், விண்வெளிப் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், உடற்குறை உள்ளவர்களுடைய ஆற்றலை எடுத்துக்காட்டவும் விரும்பினார். 26 ஏப்ரல் 2007-இல், இவருக்கென்று வடிவமைக்கப்பட்ட Boeing 727–200 தாரை வானூர்தியில், புளோரிடாவின் கரையோரப் பகுதியில் எடையற்ற நிலையை அனுபவத்தில் கண்டார். ஜனவரி 8, 2007-இல் இவருடைய 65-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அன்று, தான் விண்வெளிப் பயணம் செய்யப் போவதாக அறிவித்தார். பெருஞ்செல்வர் ரிச்சர்டு பிரான்சன் அவர்களுடைய செலவில் வர்ஜின் காலாக்டிக் விண்வெளிப் போக்குவரத்துச் சேவையின் துணையால், 2009-ஆம் ஆண்டு ஈர்ப்பற்ற வெளியில்(அதாவது, புவி ஈர்ப்பு இல்லாத இடத்தில்) நிலவுருண்டையைச் சுற்றி வர இருப்பதாகக் கூறினார். இறக்கும் வரையிலும் என்றாவது ஒருநாள் விண்வெளிக்குப் பயணம் செய்துவிடும் நம்பிக்கையோடுதான் இருந்தார்.
மறைவு
ஸ்டீபன் ஹோக்கிங் 14 மார்ச்சு 2018 அன்று தனது 76 ஆவது வயதில் காலமானார். அதிகாலையில் கேம்பிரிட்ஜில் உள்ள அவரது வீட்டில் மரணம் நிகழ்ந்தது. அவரது குடும்பத்தினர் அவர் அமைதியாக உயிர் துறந்ததாக அறிவித்துள்ளனர்.
மேற்கோள்கள்
மூலங்கள்
வெளியிணைப்புகள்
ஸ்டீபன் ஹாக்கிங் இணையதளம்
அறிவியல் எழுத்தாளர்கள்
1942 பிறப்புகள்
2018 இறப்புகள்
பிரித்தானிய எழுத்தாளர்கள்
பிரித்தானிய இயற்பியலாளர்கள்
மாற்றுத்திறனாளிகள்
ஆங்கிலேயக் கணிதவியலாளர்கள்
அண்டவியலாளர்கள்
ஆங்கிலேய வானியலாளர்கள்
ஆங்கிலேய இயற்பியலாளர்கள்
இருபதாம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்
இருபத்தொராம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள் |
1578 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81 | சாக்கிரட்டீசு | சாக்கிரட்டீசு (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) பண்டைக் கிரேக்கத்தின், ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீசு போற்றப்படுகிறார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீசு என்பது இவருடைய சிறப்பாகும்.
சாக்ரடீசு நன்னெறித் துறையில் அவரது பங்களிப்புக்கு புகழ்பெற்றவராக விளங்குகிறார் என்பது பிளாட்டோவின் உரையாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. சாக்ரடீசு முரண்நகை மற்றும் சாக்ரடீசு வழிமுறை ஆகிய தத்துவக் கருத்துகளுக்காக தத்துவ அறிஞர் சாக்ரடீசு அறியப்படுகிறார். பிந்தைய கருத்து பொதுவாக பரவலான விவாதங்களில் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகையான கற்பித்தலும் ஆகும், இம்முறையில் தொடர்ச்சியான கேள்விகளுக்கு தனிப்பட்ட பதில்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அடிப்படை நுண்ணறிவை ஊக்குவிப்பதற்காகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒளிர்வுக் கோட்பாடு தொடர்பான முக்கியமானதும் நிலையானதுமான கோட்பாடுகளுக்கு பிளாட்டோவின் சாக்ரடீசு பங்களித்திருக்கிறார். மேலும் இவருடைய கருத்தியலும் அணுகுமுறையும் தொடர்ந்து வந்த மேற்கத்திய தத்துவத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளன.
சாக்ரடீசு புதிர்
சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும், இந்த ஆதாரங்களின் உள்ளடக்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒப்பீடு சில முரண்பாடுகளை அம்பலப்படுத்துகிறது, இதனால் உண்மையான சாக்ரடீசைப் பற்றிய ஆழமான உண்மைகளை அறிந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் உருவாகின்றன. இந்த ஐயமே சாக்ரடீசு புதிர் அல்லது சாக்ரடீசு வினா எனப்படுகிறது.
சாக்ரடீசு மற்றும் அவரது சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவர், முதலில் பிளாட்டோவின் படைப்புகளைப் படித்துத் தெளிய வேண்டும். இவையே சாக்ரடீசின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களுக்கு முக்கியமான மூலங்களாக உள்ளன. செனொபானின் படைப்புகளும் இத்தகையதே ஆகும். இந்தப் படைப்புகள் சாக்ரடிகோய் லோகோ அல்லது சாக்ரடிக் உரையாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் சாக்ரடீசு சம்பந்தமான வெளிப்படையான உரையாடல்களின் அறிக்கைகள் உள்ளன.
சாக்ரடீசின் வாழ்க்கை தொடர்பான உண்மைகளை கண்டுபிடிப்பதற்கு கிடைக்கும் பண்டைய ஆதாரங்களில் செனொபான் தவிர பெரும்பாலும் தத்துவ மற்றும் வியத்தகு நூல்களாகவே இருக்கின்றன. சாக்ரடீசின் சமகாலத்திய எந்தவொரு நேரடியான வரலாறும் இல்லை. கிடைக்கபெற்ற ஆதாரங்களின் வேறுபாடுகள் விளைவித்த அனைத்து கருத்துகளுக்கும் இடையில் இரண்டு காரணிகள் சாக்ரடீசு தொடர்பான அனைத்து மூலங்களிலிருந்தும் வெளிப்படுகின்றன. அவர் அசிங்கமானவராக இருந்திருக்கலாம் என்றும், சாக்ரடீசு ஒரு புத்திசாலித்தனமான அறிவைக் கொண்டவராக இருந்தார் என்றும் தெரிகிறது .
சாக்ரடீசின் பிறப்பு மற்றும் ஆரம்ப காலம்
சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ். இவர் கிரேக்க நகரமான ´ஏதென்சில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிற்பி. இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலகட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகின்றார்.
கேள்விகேட்கும் திறன்
சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீசின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சக்ரடீசிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீசிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். சாக்ரடீசின் எழுத்துக்களும், சொற் பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது
சாக்ரடீசின் மாணவர்
சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. அவரின் கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக் கொள்கைகளையெல்லாம் சாக்ரடீசை சிந்திக்க வைத்த தல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது.இதுபோல் சாக்ரடீசின் கொள்ககளால் ஈர்க்கப்பட்டு பிளேட்டோவும் சாக்ரடீசுடன் சேர்ந்தார். பின் நாளில் இவரும் உலக புகழ் பெற்ற தத்துவஞானி ஆனார்.
சாக்ரடீசின் மீது பழி
இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்தது ஏதென்ஸ் அரசுக்கு தெரியவந்தது. சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது. சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களி டம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.
மரண தண்டனை
எண்ணற்ற குற்றச்சாட்டுகளையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலகட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர். இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் .
இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ், 'என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை. என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான். நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்து விடுவார்களோ என்று பயப்படுவது அதை விட நாத்திகம்' என்றார். இதன் பின்னர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501பேர் வாக்குப்பதிவு செய்யத் தொடங்குகின்றனர்.
220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளி தான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர். தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ். ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார். சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இறப்பு
சில காரணங்களினால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும், அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார். அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும. குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன். கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.
“பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர் கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார். சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின.
சாக்கிரட்டீசின் முறை
சாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினது தந்தையுமாக, ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Greek Philosophy: Socrates
Original Fresque of Socrates in Archaeological Museum of Ephesus
Socrates Narrates Plato's The Republic
Project Gutenberg e-texts on Socrates, amongst others:
The Dialogues of Plato (see also Wikipedia articles on Dialogues by Plato)
The writings of Xenophon, such as the Memorablia and Hellenica.
The satirical plays by Aristophanes
Aristotle's writings
Voltaire's Socrates
A free audiobook of the Socratic dialogue Euthyphro at LibriVox
கிமு 399 இறப்புகள்
கிமு 470 பிறப்புகள்
கிரேக்க மெய்யியலாளர்கள்
குடியியற் சட்டமறுப்பு
பண்டைய கிரேக்க நபர்கள் |
1579 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B | பிளேட்டோ | பிளேட்டோ (Plato, (/ˈpleɪtoʊ/; Greek: Πλάτων Plátōn, பழமையான உச்சரிப்பு [plá.tɔːn] கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் வல்லுனர். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவத் தர்க்கங்களை எழுதியுள்ளார். இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் கல்விக்கூடம் நிறுவினார். இவர் தனது ஆதரவாளர் சாக்கிரட்டீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டில் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இவரைப்பற்றி ஆய்வாளரான ஏ. என். ஒயிட்ஹெட் பின்வருமாறு கூறியுள்ளார்:
ஐரோப்பிய தத்துவப் பாரம்பரியத்தின் பாதுகாப்பான பொதுவான குணாதிசயம் என்னவென்றால் அது பிளேட்டோவின் அடிக்குறிப்பு வரிசையைக் கொண்டிருப்பதுதான். அவர் எழுதியவற்றின் சாராம்சங்களை அறிஞர்கள் சந்தேகத்துடன் எடுத்துக் கொண்ட சிந்தனையின் முறையான திட்டம் என்ற பொருளில் நான் சொல்லவில்லை. நான் அவற்றில் பரவியுள்ள பொதுவான கருத்துக்களின் செறிவைத்தான் சொல்கிறேன்.
பிளேட்டோவின் இளமைக் காலம்
பிளேட்டோவின் இளமைக் காலம் குறித்து விரிவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் அவரின் இளமைக் காலம் குறித்த தகவல்கள் சிறிய அளவில் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, பிளேட்டோ மிகவும் செல்வ செழிப்புமிக்க அரசியல் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்திருக்கிறார். மேலும், கல்வியில் மிகச் சிறந்து விளங்கியுள்ளார். பிளேட்டோ கல்வி கற்பதற்கு அவரின் தந்தை மிகவும் உதவியிருக்கிறார். பிளேட்டோவிற்கு அவரின் தந்தை பல புகழ் பெற்ற கல்வியியலாளர்களைக் கொண்டு இசை, இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்திருக்கிறார்.
பிறப்பு மற்றும் குடும்பம்
பிளேட்டோவின் பிறந்த சரியான நேரத்தையும் இடத்தையும் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. ஆனால் அவர் ஓர் உயர்குடியில் பிறந்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. பண்டையக் கால ஆதாரங்களின் அடிப்படையில், பெரும்பாலான நவீன அறிஞர்கள் அவர் ஏதென்ஸில் அல்லது ஏஜினாவில் கி மு 429 மற்றும் 423 க்கு இடையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. பிளாட்டோவின் தாய் பெக்கிக்சே ஆவார், இவர் சார்மிசின் சகோதரி ஆவார்.
பிளேட்டோவின் பிற்கால வாழ்க்கை
தன் வாழ்நாளில் பிளேட்டோ இத்தாலி, சிசிலி, எகிப்து, சைரின் போன்ற நாடுகளுக்குச் சென்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. தனது நாற்பதாவது வயதில் ஏதென்ஸ் நகருக்கு வந்த போது கெக்காடமஸ் என்ற பெயரில் மேற்கத்திய பள்ளி ஒன்றை நிறுவினார். இது மேற்கத்திய நாடுகளில் தோற்றுவிக்ககப்பட்ட முதல் பள்ளியாகக் கருதப்படுகிறது.
அரசியல் கோட்பாடுகள்
பிளேட்டோ சாக்கிரட்டீசின் மாணவர். இவருடைய அரசியல் கருத்துகள் மக்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்தது. இவர் பல்வேறு துறைகளில் வல்லுநராக இருந்தார். கி.மு 387 ஆம் ஆண்டில் அத்தீனியன் என்ற பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இதன் மூலம் சிறந்த தத்துவவாதிகளை உருவாக்க வேண்டும் என விரும்பினார். இவருடைய அரசியல் கருத்துகள் செரக்யூஸை ஆண்டு வந்த டைனீஸஸ் போன்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவருடைய அரசியல் கருத்துக்களைக் குடியரசு (நூல்) மற்றும் சட்டங்கள் (Laws) என்ற நூலில் எழுதியுள்ளார்.
பிளேட்டோவின் அரசியல் பாகுபாடு
பிளேட்டோவின் அரசியல் பாகுபாட்டின் விளக்கங்கள் மிகவும் கற்பனை நிறைந்தது. இவருடைய கற்பனையான விளக்கத்தைத் தன்னுடைய நூலான குடியரசுவில் தெளிவாகக் கூறியுள்ளார். இவருடைய அரசியல் பாகுபாட்டினை அரிஸ்டாட்டில் மற்றும் கால்வின் போன்றவர்களுடன் ஒப்பிடலாம். பிளேட்டோவின் கருத்தின்படி ஒரு நாட்டின் தலைவன் என்பவன் மெய்யியல் தெரிந்த மன்னனேயாகும். (Republic 475c) இவருடைய கோட்பாடுகளின் படி மன்னன் சட்டத்திற்கும் , தன்னலத்திற்கும் அப்பாற்பட்டவன். அவ்வாறு இருப்பவனே ஒரு தலை சிறந்த தலைவனாக இருக்க முடியும் எனக் கருதினார். இவருடைய கருத்தின்படி மன்னன் என்பவன் முழு அதிகாரம் பெற்றவனாகவும், அவனை எதிர்த்து எவரும் வினா எழுப்ப இயலாது எனவும் கூறுகிறார்.
ஒரு நாட்டின் அமைதிக்கும் , நல்லாட்சிக்கும் நீதியே முக்கியமானதாக இருக்கவேண்டும் எனக் கூறுகிறார்.
இவரது கற்பனையின் படி மன்னன் வரம்பிற்கு மீறிய அதிகாரங்களுடன் இருந்தாலும் இயற்கைக்கு எதிராகச் செயல்பட இயலாது. பிளேட்டோ சமூக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஏழை - பணக்காரர் என்ற பிரிவு, நாட்டின் அளவு, நீதியின் தன்மை, கல்வி இவற்றையெல்லாம் விளக்கி உள்ளார்.
இவரது குடியரசு எனும் நூலில் பலவகையான அரசாங்கங்களைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் அவை மாற்றங்களுக்கு உட்பட்டது எனவும் கூறியுள்ளார். இவர் ஐந்து வகையான அரசாங்கங்கள் உள்ளன எனக் கூறியுள்ளார். அவையாவன,
அரச ஆட்சி (Aristocracy)
செல்வர் ஆட்சி (Timocracy)
சிலவர் ஆட்சி (Oligarchic)
மக்களாட்சி(Democratic
கொடுங்கோலாட்சி (Tyrannic)
இவற்றில் முதலாவதாக இருப்பதும் மற்றும் கடைசியாக இருப்பதும் ஒருவரிடம் இருக்கும் அதிகாரத்தைக் குறிக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருசிலரிடம் இருக்கும் ஆட்சியையும் , நான்காவதாக இருப்பது பலபேரிடம் இருக்கும் ஆட்சியையும் குறிக்கிறது. இவற்றில் முதலாவதாக இருப்பது நல்ல ஒரு மனிதரிடம் இருப்பது . அவரே பிளோட்டோவின் தத்துவ மன்னர் ஆவார். இந்த அரசன் நீதியின் அடிப்படையிலேயே ஆட்சி செய்வான். ஆனால் காலப்போக்கில் அவன் தன்னுடைய பெருமைக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் ஆட்சி செய்வான். அவன் நீதியின் வழியில் செல்வதையும் மறந்து விடுவான். இவாறு ஆட்சி செலுத்தும் தனி மனிதனைப் பதவியில் இருந்து நீக்கி சொத்து (தத்துவம்) உள்ளவர்கள் மட்டும் அரசாங்கம் நடத்துவது செல்வர் ஆட்சி (Timocracy) என்று பிளேட்டோ கூறுகிறார்.
பிளேட்டோ - எழுத்தாளர்
பிளேட்டோ ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது அவர் எழுதியுள்ள சாக்ரடீஸின் கேள்வி பதிலில் இருந்து தெரிகிறது. இதில் முப்பத்தாறு உரையாடல், பதிமூன்று கடிதங்களை இவர் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிளேட்டோவின் எழுத்துக்கள் பல வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பிளேட்டோ எழுதியவற்றுக்குப் பெயரிடுதல் மற்றும் குறிப்பிடுதலை பற்றி விவாதிக்கும் பல்வேறு கூட்டங்கள் நடைபெற வழிவகுத்தது.
பிளேட்டோவின் உரையாடல்கள் தத்துவம், தர்க்கம், நெறிமுறைகள், சொல்வளம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளைக் கற்பிக்கப் பயன்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Works available online:
– Greek & English hyperlinked text
Internet Encyclopedia of Philosophy
Stanford Encyclopedia of Philosophy
Other resources:
கிரேக்க மெய்யியலாளர்கள்
பிளாட்டோனியக் கல்விக்கழக மெய்யியலாளர்கள்
கிமு 4 ஆம் நூற்றாண்டு மெய்யியலாளர்கள்
பண்டைய கிரேக்க நபர்கள் |
1580 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D | அரிசுட்டாட்டில் | அரிசுட்டாட்டில் (ஆங்கிலம்: Aristotle) (கி. மு. 384 - கி. மு. 322) ஒரு கிரேக்க மெய்யியலாளரும் பல் துறைப் புலமையாளரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, அளவையியல்(தருக்கம்), சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பலதுறை அறிவு பொதிந்திருக்கும். பிளேட்டோவும், இவரும் மேற்கத்திய சிந்தனையில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிசுட்டாட்டில் மேற்கத்திய மெய்யியலின் மிக முதன்மையான நிறுவுனர் ஆவார். அரிசுட்டாட்டிலின் படைப்புகள் மேற்கத்திய மெய்யியல், அறவியல், அழகியல், அளவையியல், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின. அரிசுட்டாட்டிலின் இயற்பியல் கருத்துகள், ஆழ்ந்த அறிவைத் தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் கோட்பாடுகள் அரிசுட்டாட்டில் கோட்பாட்டின் ஒரு நீட்சியே ஆகும். அரிசுட்டாட்டிலின் நோக்கீடுகள்(அவதானிப்புகள்) விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிசுட்டாட்டிலின் கோட்பாடுகள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன.
பிளாட்டோவும் அரிசுட்டாட்டிலும், சாக்கிரட்டீசும் முப்பெரும் கிரேக்க மெய்யியலாளர்களாவர். பிளேட்டோ, அரிசுட்டாட்டிலின் குரு. சாக்கிரட்டீசின்(கி. மு. 470-399) சிந்தனைகள் மற்ற இருவரின் மீதும் ஆழமான தாக்கம் கொண்டிருந்தன. அலெக்சாண்டர் இவருடைய ரிசுட்டாட்டிலின் சீடர் ஆவார்.
அரிசுட்டாட்டிலின் சிந்தனைகள் இடைக்காலத்திய இசுலாமிய, யூத மரபுகளில் தத்துவ, இறையியல் சிந்தனையில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவும் குறிப்பாகக் கிறித்தவர்களின் இறையியலில் அவரின் தாக்கம் அதிகமாக இருந்தது. அரிசுட்டாட்டிலை இடைக்கால முசுலீம் அறிவாளிகள் "முதல் ஆசிரியர்" ( 'المعلم الأول') எனப் போற்றினர். அரிசுட்டாட்டில் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 170 என்று ஒரு பண்டையப் பட்டியல் கூறுகிறது. அரிசுட்டாட்டிலின் சிந்தனைகள் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிரியாக், அரபு, இத்தாலியம், பிரான்சியம், எபிரேயம், செருமானியம் போன்ற பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
வாழ்க்கை
அரிசுட்டாட்டில் என்றால் "சிறந்த நோக்கம்," என்று பொருளாகும்.இவர் பண்டைய சுத்தாகிரா நகரத்தில் செல்சிதிசிலில் கி.மு. 384 இல் பிறந்தார் தற்கால தெசாலோனிகியில் இருந்து 55 கி.மீ. (34 மைல்) கிழக்கே. அவரது தந்தை நிக்கோமாக்கசு, மாசிதோனியாவின் மன்னர் அமயிந்தாசின் தனிப்பட்ட மருத்துவர் ஆவார். அரிசுட்டாட்டிலின் குழந்தை பருவத்தைப் பற்றி அதிக தகவல்கள் இல்லை என்றாலும், ஒருவேளை அவர் மாசிதோனிய மாளிகையில் சிறிது காலம் கழித்திருப்பார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பதினெட்டு வயது நிரம்பிய அரிசுட்டாட்டில் பிளேட்டோவின் கல்விக்கழ்கத்தில் சேர்ந்து கல்வி பயில ஏதென்சுக்குச் சென்றார்.
அரிசுட்டாட்டில் கி.மு. 348/47 இல் ஏதென்சை விட்டுச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் அங்கு கல்வி கற்றார். பிளேட்டோ இறந்தவுடன் பள்ளி பிளேட்டோவின் மருமகனிடம் சென்றது. அதைத் தொடர்ந்து அரிசுட்டாட்டில் அப்பள்ளியை விட்டு நீங்கினார்.பின் அவர் தன் நண்பனுடன் ஆசியா மைனருக்கு பயணத்தை மேற்கொண்டார். பயணத்தின்போது இலெசுபோசு என்னும் தீவின் விலங்கியல், தாவரவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். அரிசுட்டாட்டில் எர்மியாசின் வளர்ப்பு மகள் பிதியாசைத் திருமணம் செய்துக்கொண்டார். அரிசுட்டாட்டில் கி.மு. 343 அன்று மாசிதோனிய மன்னன் இரண்டாம் பிலிப் அழைக்க, அவரது மகன் அலெக்சாந்தருக்கு பாடம் கற்பிக்கச் சென்றார்.அரிசுட்டாட்டில் மாசிதோனியா அரசு கல்விக்கழக்த்தின் தலைவராக அமர்த்தப்பட்டார்.கி.மு. 335 அவர் ஏதென்சுக்குத் திரும்பினார், அங்கு இலைசியம் எனப்பட்ட தனது சொந்த பள்ளியை நிறுவினார். அரிசுட்டாட்டில் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு அப்பள்ளியை நடத்திக்கொண்டிருந்தார். தம் மாணவர்க்கு மெய்யியல் கொள்கைகளைக் கற்பிப்பதற்காக ஏதென்சு நகரத்திலிருந்த ஒரு தோட்டத்தில் இதை அவர் நிறுவினார். இதற்கு உலாப் பள்ளி என்ற பெயரும் உண்டு. அரிசுட்டாட்டில் இங்கு உலாவிக் கொண்டே பாடம் சொல்வது வழக்கமாக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். ஏதென்சில் அரிசுட்டாட்டில் இருந்த போது, அவரது மனைவி பிதியாசு இறந்தார்.அரிசுட்டாட்டிலின் பல படைப்புகள் இயற்றப்பட்டது அவர் ஏதென்சில் இருந்த கி.மு. 335 முதல் 323 வரையான காலகட்டத்தில் என்று நம்பப்படுகிறது.அலெக்சாந்தர் இறந்த அதே ஆண்டில் இயற்கை காரணங்களால் இயுபோஇயாவில் அரிசுட்டாட்டிலும் இறந்தார். அரிசுட்டாட்டிலிற்கு அடுத்து அவரது மாணவர் ஆன்டிபாத்தரர் அவரின் இடத்திற்கு வர வேண்டும் என்றும் தன்னைத் தன் மனைவிக்கு அடுத்து புதைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு உயில் விட்டு சென்றாரம் அரிசுட்டாட்டில்.
அலெக்சாந்தர் தன் ஆசிரியரின் ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்ட நிதி உதவிகள் அனைத்தையும் தாராளமாக வழங்கினார். ஓர் அறிவியலளர் தம் ஆராய்ச்சிக்காக அரசிடமிருந்து பெருமளவில் நிதியுதவி பெற்றது உலக வரலாற்றில் இதுவே முதல் தடவை ஆகும்.
ஆனால்,அலெக்சாந்தருடன் அரிசுட்டாட்டில் கொண்டிருந்த தொடர்புகள் சில ஆபத்துகளையும் தோற்றுவித்தன. அலெக்சாந்தரின் சர்வாதிகார முறை ஆட்சியை அரிசுட்டாட்டில் கொள்கையளவில் எதிர்த்தார். அரசத் துரோகக் குற்றம் செய்ததாக ஐயத்தின் பேரில் அரிசுட்டாட்டிலின் மருமகனை அலெக்சாந்தர் தூக்கிலிட்டார். அரிசுட்டாட்டிலின் மக்களாட்சி ஆதரவுக் கொள்கையை அலெக்சாந்தர் விரும்பவில்லை. அதே சமயத்தில் அவர் அலெக்சாந்தருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தமையால் ஏதென்சு மக்களும் அவரை நம்ப மறுத்தனர்.அதன் பின் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.
அலெக்சாந்தர் இறந்த பின்பு மாசிதோனிய அரசியல் நிலைமை மாறியது. மாசிதோனியாவை எதிர்க்கும் குழுவினர் ஏதென்சில் ஆட்சிக்கட்டிலில் ஏறினர் . ஆட்சியாளர்கள், சமயத்தை அவமதித்ததாக ஏதென்சில் 76 ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரட்டீசுக்கு நஞ்சு கொடுத்ததை நினைவு கூர்ந்த அரிசுட்டாட்டில், உடனே 'தத்துவத்திற்கு எதிரான இரண்டாவது பாவத்தைச் செய்ய ஏதென்சுக்கு நான் இடமளிக்கப் போவதில்லை' என்று கூறி அந்த நகரிலிருந்து தப்பி ஓடினார்.
நம்முடைய நற்பண்புகளுக்கும் , நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்
-அரிசுட்டாட்டில்
அரிசுட்டாட்டில், பிளேட்டோ,சாக்கிரட்டீசு ஆகிய மூவரும் ஆசிரியர் , மாணவர் உறவு பூண்டவர்கள். ஆனால் இவர்கள் மூவரும் ஒன்றாக இருப்பது போல் ஒரு ஓவியம் வாட்டிகன் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது.
காட்சிசார் மெய்யியல்
அளவையியல் (தருக்கம்)
அளவைநெறித் தொகை
இயற்பியல்
உயிரியல்
மகளிர் பற்றிய பார்வைகள்
அரிசுட்டாட்டில் மாந்தரின இனப்பெருக்கம் செயலற்ற, முடக்கநிலை பெண்பால் கூறுடன் உயிர்ப்புமிக்க ஆண்பால் கூறு இணைந்து நிகழ்வதாகக் கூறுகிறார். இந்த அடிப்படையில், பெண்ணிய மெய்யியலாளர்கள் அரிசுட்டாட்டிலைப் பாலியல் சம்னின்மைக்காக குறைகூறுகின்றனர். என்றாலும், அரிசுட்டாட்டில் தன் பேச்சுக்கலை நூலில் மகளிர் ம கிழ்ச்சிக்கும் ஆடவர் மகிழ்ச்சிக்கும் சமநிலை ஆதரவைத் தெரிவிக்கிறார்.
தகைமை
உருவகிப்புகள்
பல நூற்றாண்டுகளாக பல பெயர்பெற்ற கலைஞர்கள் அரிசுட்டாட்டிலின் ஓவியங்களைத் தீட்டியுள்ளனர்; சிலைகளைச் செய்துள்ளனர். அவைகளில் உலூக்காசு கிரனச் முதுவல், யசுட்டசு வான் கெண்ட், இராபயேல், பாவொலோ வெரோனீசு, யூசெப்பே தெ இரேபேரா, இரெம்பிராந்தித்,, பிரான்சிசுக்கோ ஆயேசு]] ஆகியோர் அடங்குவர் . இவற்றில் மிகச் சிறந்த கலைச் செம்மை வாட்டிகன் அரண்மனையில் அமைந்த இராபயேல் சுதையில் தீட்டிய ஏதென்சு பள்ளி (The School of Athens) படிமத்தைச் சொல்ல்லாம். இதில் பிளாட்டோவும் அரிசுட்டாட்டிலும் படிமத்தின் நடுவில் உள்ளனர். இது அவர்களின் சிறப்பு த்கைமையைச் சுட்டுகிறது இரெம்பிராந்தித் செதுக்கிய ஓம்ர் சிலியுடன் உள்ள அரிசுட்டாட்டிலின் கலப்படைப்பும் பெரிதும் போற்றுதலுக்கு உரியதாகும்; இது பார்வையற்ற ஓமரின் சிலையுடன் மெய்யீயலாளர் அரிசுட்டாட்டில் காட்டப்பட்டுள்ளார்: க்லித் திறனய்வளரும் இதழியலாளரும் ஆகிய சொனாதன் சோன்சு பின்வருமாறு எழுதுகிறார். " இந்த வண்ண ஓவியம் உலகிலேயே மாபெரும் மருமப் படைப்பாக என்றென்றும் நிலவும்; இது எக்காலத்துக்கும் சுடரும் கருவண்ண அறிவுலகப் படைப்பாக உறுதியாக விளங்கும்."
வண்ண ஓவியங்கள்
சிலைகள்
தகைமைப் பெயர்கள்
அண்டார்க்டிகாவின் மலைகளில் ஒன்று அரிசுட்டாட்டில் மலைகள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவர் முதன்முதலில் தனது வானிலையியல் நூலில் தென் உயர் அகலாங்குகளில் அமைந்த நிலப்பகுதியைக் கண்டறிந்து அதற்கு அண்டார்க்டிகா என்ப் பெய்ரிட்டார். நிலாவின் ஒரு குழிப்பள்ளத்துக்கு அரிசுட்டாட்டிலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
குறிப்புகள்
சான்றுகள்
மேலும் படிக்க
J. L. Ackrill (1997). Essays on Plato and Aristotle, Oxford University Press, USA.
A popular exposition for the general reader.
}} These translations are available in several places online; see External links.
Bakalis Nikolaos. (2005). Handbook of Greek Philosophy: From Thales to the Stoics Analysis and Fragments, Trafford Publishing
Barnes J. (1995). The Cambridge Companion to Aristotle, Cambridge University Press.
Bolotin, David (1998). An Approach to Aristotle's Physics: With Particular Attention to the Role of His Manner of Writing. Albany: SUNY Press. A contribution to our understanding of how to read Aristotle's scientific works.
Myles Burnyeat|Burnyeat, M. F. et al. (1979). Notes on Book Zeta of Aristotle's Metaphysics. Oxford: Sub-faculty of Philosophy.
Chappell, V. (1973). Aristotle's Conception of Matter, Journal of Philosophy 70: 679–696.
Code, Alan. (1995). Potentiality in Aristotle's Science and Metaphysics, Pacific Philosophical Quarterly 76.
Frede, Michael. (1987). Essays in Ancient Philosophy. Minneapolis: University of Minnesota Press.
Eugene Gendlin (2012). Line by Line Commentary on Aristotle's De Anima, Volume 1: Books I & II; Volume 2: Book III. Spring Valley, New York: The Focusing Institute. Available online in PDF.
Gill, Mary Louise. (1989). Aristotle on Substance: The Paradox of Unity. Princeton: Princeton University Press.
Halper, Edward C. (2007). One and Many in Aristotle's Metaphysics, Volume 1: Books Alpha — Delta, Parmenides Publishing, .
Halper, Edward C. (2005). One and Many in Aristotle's Metaphysics, Volume 2: The Central Books, Parmenides Publishing, .
Terence Irwin (1988). Aristotle's First Principles. Oxford: Clarendon Press, .
Alberto Jori. (2003). Aristotele, Milano: Bruno Mondadori Editore (Prize 2003 of the "International Academy of the History of Science") .
Knight, Kelvin. (2007). Aristotelian Philosophy: Ethics and Politics from Aristotle to MacIntyre, Polity Press.
Lewis, Frank A. (1991). Substance and Predication in Aristotle. Cambridge: Cambridge University Press.
G. E. R. Lloyd (1968). Aristotle: The Growth and Structure of his Thought. Cambridge: Cambridge Univ. Pr., .
Lord, Carnes. (1984). Introduction to The Politics, by Aristotle. Chicago: Chicago University Press.
Loux, Michael J. (1991). Primary Ousia: An Essay on Aristotle's Metaphysics Ζ and Η. Ithaca, NY: Cornell University Press.
[Reprinted in J. Barnes, M. Schofield, and R. R. K. Sorabji, eds.(1975). Articles on Aristotle Vol 1. Science. London: Duckworth 14–34.]
Pangle, Lorraine Smith (2003). Aristotle and the Philosophy of Friendship. Cambridge: Cambridge University Press. Aristotle's conception of the deepest human relationship viewed in the light of the history of philosophic thought on friendship.
Reeve, C. D. C. (2000). Substantial Knowledge: Aristotle's Metaphysics. Indianapolis: Hackett.
A classic overview by one of Aristotle's most prominent English translators, in print since 1923.
Scaltsas, T. (1994). Substances and Universals in Aristotle's Metaphysics. Ithaca: Cornell University Press.
Strauss, Leo (1964). "On Aristotle's Politics", in The City and Man, Chicago; Rand McNally.
For the general reader.
வெளி இணைப்புகள்
At the Internet Encyclopedia of Philosophy:
At the Internet Classics Archive
From the Stanford Encyclopedia of Philosophy:
Collections of works
At Massachusetts Institute of Technology
Perseus Project at Tufts University
At the University of Adelaide
P. Remacle
The 11-volume 1837 Bekker edition of Aristotle's Works in Greek (PDFDJVU)
கிமு 384 பிறப்புகள்
கிமு 322 இறப்புகள்
கிரேக்க மெய்யியலாளர்கள்
கிரேக்க இயற்பியலாளர்கள்
அண்டவியலாளர்கள்
கிரேக்க கணிதவியலாளர்கள்
கிரேக்க உயிரியலாளர்கள்
விலங்கியலாளர்கள்
கிமு 4 ஆம் நூற்றாண்டு மெய்யியலாளர்கள்
பிளாட்டோனியக் கல்விக்கழக மெய்யியலாளர்கள் |
1581 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D | நெப்போலியன் | நெப்போலியன் என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன:
முதலாம் நெப்போலியன் - நெப்போலியன் பொனபார்ட், பிரான்ஸ் நாட்டையாண்ட மன்னன்
இரண்டாம் நெப்போலியன் - நெப்போலியன் பொனபார்ட்டின் மகன், ரோம் மன்னன்
மூன்றாம் நெப்போலியன் - பிரான்ஸ் நாட்டின் தலைவன் (1849-1852), பிரான்ஸ் மன்னன் (1852-1870)
நெப்போலியன் - தமிழ்த் திரைப்பட நடிகர். |
1582 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%20%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF | லியொனார்டோ டா வின்சி | லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோன லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல், குடிசார் பொறியியல்
ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார்
உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்களில் ஒருவராகவும், பண்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார்.
லியனார்தோ டா வின்சி அடிப்படையில் ஒரு ஒவியராக அறியப்படுபவர். இவருடைய "மோனா லிசா" (Mona Lisa) ஒவியம் உலகில் மிகவும் புகழ் பெற்ற ஒவியமாக கருதப்படுகிறது.
இலியனார்தோ தா வின்சி தொழில் நுட்பவியல் சார்ந்த அறிவாற்றலுக்காக பெரிதும் மதிக்கப்படுபவர். நிலவியல் உட்பட பல துறைகளில் தன்னுடைய அறிவார்ந்த எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இவர் தன்னுடைய காலத்தில் நினைத்து பார்க்க முடியாத பல புதுமைப் புனைவுகளைச் செய்துள்ளார்.
இவர் உடற்கூறியல், கட்டிடக்கலை, ஒளியியல், நீர்ம இயக்கவியல் ஆகிய துறைகளில் புதுமைப் புனைவு களை நிகழ்த்தியுள்ளார். எனினும், அவற்றைத் தன் சம காலத்தில் வெளியிடாததால், இந்ந துறைகளில் இவருடைய நேரடி தாக்கம் இல்லை.
வாழ்க்கை
இளமை
இவருடைய வாழ்க்கை ஜார்ஜியோ வாசரியின், விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இலியனார்தோ, இத்தாலியிலுள்ள, வின்சி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் செர் பியரோ தா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர் அல்லது கைப்பணியாளர்; தாய் கத்தரீனா ஒரு உழவர் குடும்பப் பெண். கத்தரீனா, பியரோவுக்குச் சொந்தமாயிருந்த, மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு அடிமை என்ற கருத்தும் நிலவினாலும் இதற்கான வலுவான சான்றுகள் இல்லை. இவர் தனது தந்தையாருடன் புளோரன்சில் வளர்ந்தார். இவர் வாழ்க்கை முழுதும் ஒரு சைவ உணவுக்காரராகவே இருந்தார். இவர் புளோரன்சில் ஒரு ஒவியரின் கீழ் பயிற்சியாளராக இருந்து, பின்னர் தற்சார்பான ஒவியர் ஆனார்.
இவரது காலம் ஐரோப்பாவில் நவீன பெயரிடு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகும். இதனால் இவரது முழுப்பெயர், "இலியனார்தோ தி செர் பியெரோ தா வின்சி" என்பதாகும். இது, "வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன் இலியனார்தோ" என்ற பொருளுடையது. இவர் தன்னுடைய ஆக்கங்களில், "இலியனார்தோ" என்றோ அல்லது "நான் இலியனார்தோ" (Io, Leonardo) என்றோதான் கையெழுத்திட்டார். இதனால் இவரது ஆக்கங்கள் பொதுவாக "தா வின்சிகள்" என்றில்லாமல், "இலியொனார்தோக்கள்" என்றே குறிப்பிடப்படுகின்றன. இவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதால், தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
லியொனார்டோவின் தொடக்க காலம் பெரும்பாலும் வரலாற்று ஊகங்களே. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், மறுமலர்ச்சிக் கால ஓவியர்களைப் பற்றிய வரலாறுகளை எழுதியவருமான வாசரி என்பவர், லியொனார்டோ குறித்த ஒரு குறிப்பை எழுதியுள்ளார். ஒரு உள்ளூர் குடியானவன், லியனார்டோவின் தந்தையிடம் வந்து, திறமையான அவரது மகனைக் கொண்டு ஒரு வட்டமான பலகையில் படமொன்று வரைந்து தருமாறு கோரினானாம். இதற்கிணங்க லியொனார்டோ அப்பலகையில் பாம்புகள் தீயை உமிழ்வது போன்ற படமொன்றை வரைந்து கொடுத்தாராம். பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்த அந்த ஓவியத்தை, லியொனார்டோவின் தந்தை புளோரன்சின் கலைப்பொருள் விற்பனையாளரிடம் விற்றுவிட்டார். அவ்விற்பனையாளர் அதனை மிலானின் டியூக்கிடம் விற்றார். இதன் மூலம் நல்ல இலாபம் பெற்ற லியொனார்டோவின் தந்தை இதயத்தை அம்பு துளைப்பது போன்ற இன்னொரு படத்தை விலைக்கு வாங்கிவந்து குடியானவனுக்குக் கொடுத்ததாக அக் குறிப்புச் சொல்கிறது.
வெரோச்சியோவின் பணிக்கூடம், 1466-1476
1466 இல், 14ஆம் அகவையிலேயே, அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆந்திரே தி சீயோன் என்பவரிடம் இலியொனார்தோ தொழில் பழகுவதற்காகச் சேர்ந்தார். வெரோக்கியோவின் பணிக்கூடம் புளோரன்சின் அறிவுசார் பகுதியில் இருந்ததால், இலியொனார்தோவுக்கு கலைத்துறை தொடர்பான அறிவு கிடைத்தது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ, பொட்டிச்செல்லி, லொரென்சோ டி கிரெடி போன்ற புகழ்பெற்ற ஓவியர்களும் இதே பணிக்கூடத்தில் தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். இலியொனார்தோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்ததோடு, வரைவியல், வேதியியல், உலோகவியல், உலோகவேலை, சாந்து வார்ப்பு, தோல் வேலை, பொறிமுறை, தச்சுவேலை போன்றவற்றோடு வரைதல், ஓவியம், சிற்பம் முதலிய பல திறமைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
வெரோக்கியோவின் பணிக்கூடத்தில் உருவானவற்றுள் பல அவரிடம் வேலை செய்தவர்களால் செய்யப்பட்டவை. வாசரியின் கூற்றுப்படி, கிறிஸ்துவின் ஞானஸ்நானம் என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், இலியொனார்தோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை இலியொனார்தோ வரைந்த விதம், அவரது குருவையும் விஞ்சியதாக இருந்ததால், வெரோக்கியோ தனது தூரிகையைக் கீழே வைத்துவிட்டு அதன் பின்னர் வரைவதையே நிறுத்திவிட்டார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம். நெருக்கமாக ஆராயும்போது, இவ்வோவியம் இலியொனார்தோவின் கைவண்ணமாகவே தோன்றுகிறது.
1472 ஆம் ஆண்டளவில், இலியொனார்தோ 20 ஆம் அகவையில், மருத்துவர்களினதும், கலைஞர்களினதும் குழுவான சென். லூக் குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். ஆனால், இலியொனார்தோவின் தந்தையார் இவருக்குத் தனியான பணிக்கூடம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தும், வெரோக்கியோவுடன் இருந்த நெருக்கம் காரணமாகத் தொடர்ந்து அவருடன் இணைந்து வேலை செய்தார். இலியொனர்தோ வரைந்ததாக அறியப்படும் மிகப் பழைய ஓவியம், பேனாவாலும், மையினாலும் வரையப்பட்ட ஆர்னோப் பள்ளத்தாக்கு ஓவியம் ஆகும். இது 1473 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்டு வரையப்பட்டுள்ளது.
தொழில் புரிந்த காலம்
நீதிமன்றப் பதிவுகளின்படி, 1476 ஆம் ஆண்டில் சில குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 1476 முதல் 1481 ஆம் ஆண்டுவரை இவர் புளோரன்சில் தனது சொந்த பணிக்கூடத்தை நடத்திவந்ததாகக் கொள்ளப்படினும், 1476 முதல் 1478 ஆம் ஆண்டுவரை இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. 1478ல், புனித பர்னாட் சிற்றாலயத்தில் The Adoration of the Magi என்ற ஓவியத்தை வரையும் பணி இவருக்குக் கிட்டியது.
1482 இலிருந்து, 1499 வரை மிலானின் "டியூக்"கான லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன் கூடிய பணிக்கூடம் ஒன்றையும் நடத்திவந்தார். 1495 இல், சார்ள்ஸ் VIII இன் கீழான பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலிலிருந்து மிலானைக் காப்பதற்காக, இலியனார்தோவின், "கிரான் கவால்லோ" என்னும் குதிரைச் சிலைக்காக ஒதுக்கப்பட்ட எழுபது தொன் வெண்கலம், ஆயுதங்கள் வார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.
1498ல் பிரான்சியர், லூயிஸ் XIII இன் கீழ் திரும்பி வந்தபோது, மிலான் எதிர்ப்பெதுவுமின்றி வீழ்ச்சியடைந்தது. ஸ்போர்ஸா பதவியிழந்தார். ஒரு நாள், தனது "கிரான் காவல்லோ"வுக்கான முழு அளவு களிமண் மாதிரியை, பிரான்சிய வில்வீரர்கள், குறிப்பயிற்சிக்குப் பயன்படுத்தியதைக் காணும்வரை, இலியனார்தோ மிலானிலேயே தங்கியிருந்தார். பின்னர் அவர் சாலையுடனும், அவரது நண்பரான லூக்கா பக்கியோலியுடனும் மந்துவாவுக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பின் வெனிஸ் சென்றடைந்தார். 1500 ஏப்ப்ரலில் மீண்டும் புளோரன்சுக்கு வந்தார்.
புளோரன்சில் செஸாரே போர்கியா (போப் அலெக்சாண்டர் VI இன் மகன், "டூக்கா வலெண்டீனோ" என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், சுவிஸ் கூலிப்படைகளினால் பிரான்சியர் துரத்தப்பட்ட பின், மக்சிமிலியன் ஸ்போர்ஸா வின் வசம் வந்துவிட்ட, மிலானுக்குத் திரும்பினார். அங்கே அவர், இறக்கும்வரை அவரது தோழனாகவும், பின்னர் வாரிசாகவும் அமைந்த பிரான்சிஸ்கோ மெல்ழியைச் சந்தித்தார்.
பிற்காலம்
1513 இலிருந்து 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார். அக்காலத்திலேயே, அங்கே ரபாயேலோ சண்டி மற்றும் மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஓவியர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் இவருக்கு அவர்களுடன் அதிகத் தொடர்பு இருக்கவில்லை.
1515ல் பிரான்சின் பிரான்சிஸ் I மிலானைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டான். பிரான்சின் அரசருக்கும், போப் லியோ Xக்கும் பொலொக்னாவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியொனார்டோ அமர்த்தப்படார். அப்பொழுதுதான் அரசரை லியொனார்டோ முதன் முதலில் சந்தித்திருக்கவேண்டும். 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் குளொஸ் லுகே என்னும் மனோர் வீடு அவரது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதுடன், தாராளமன ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.
1519 ல், பிரான்சிலுள்ள, குளோக்ஸ் என்னுமிடத்தில், லியொனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையிலுள்ள, சென்-ஹியூபெர்ட் சப்பலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.
தொடர்புகளும் செல்வாக்குகளும்
புளோரன்ஸ் - லியொனார்டோவின் கலை மற்றும் சமூகப் பின்னணி
லியொனார்டோ வெரோக்கியோவிடம் தொழில் பழகுவதற்குச் சேர்ந்த 1466 இலேயே வெரோக்கியோவின் ஆசிரியரான டொனெடெல்லோ (Donatello) இறந்தார். நிலத்தோற்ற ஓவியங்களின் வளர்ச்சிக்கு உதவிய ஓவியங்களை வரைந்த உக்கெல்லோ (Uccello) மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். ஓவியர்களான பியெரோ டெல்லா பிரான்சிஸ்கா (Piero della Francesca), பிரா பிலிப்போ லிப்பி (Fra Filippo Lippi), லூக்கா டெல்லா ரோபியா (Luca della Robbia) என்போரும் கட்டிடக்கலைஞரும் எழுத்தாளருமான ஆல்பர்ட்டியும் அறுபது வயதைத் தாண்டியவர்களாகவும் இருந்தனர். அடுத்த தலைமுறையின் வெற்றிகரமான ஓவியர்களாக, லியொனார்டோவின் குரு வெரோக்கியோ, ஆன்டோனியோ பொலையுவோலோ (Antonio Pollaiuolo), சிற்பியான மினோ டா பியெசோலே (Mino da Fiesole) ஆகியோர் இருந்தனர்.
லியொனார்டோவின் இளமைக்காலம் மேற்படி ஓவியர்களால் அலங்கரிக்கபட்ட புளோரன்சிலேயே கழிந்தது. பொட்டிச்செல்லி, கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் லியொனார்டோவுக்குச் சமகாலத்தவர்கள். இவர்களை லியொனார்டோ வெரோக்கியோவின் வேலைத்தலத்திலும், மெடிசி அக்கடமியிலும் சந்தித்திருக்கக்கூடும். பொட்டிச்செல்லி மெடிசி குடும்பத்தால் விரும்பப்பட்டவராக இருந்ததால், ஒரு ஓவியராக அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் வசதி மிக்கவர்கள் பெரிய வேலைத்தலங்களை நடத்திவந்தனர். இவர்கள் இருவரும் மிகத் திறமையுடன் பணிசெய்து தமக்கு வேலை கொடுப்போரைத் திருப்திப்படுத்தினர். லியொனார்டோவுக்குக் கிடைத்த முதல் வேலை Adoration of the Magi என்னும் ஓவியமாகும். ஆனால் இது நிறைவடையவில்லை.
கலை
லியோனார்டோ டா வின்சி, 1498ல் வரையப்பட்ட கடைசி விருந்து, மற்றும் 1503-1506ல் வரையப்பட்ட மோனா லிசா போன்ற ஒவியங்களுக்காகப் பெயர் பெற்றவர். இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும் அறியப்படவில்லை. அயர்லாந்தின் லிமெரிக்கிலுள்ள ஹண்ட் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள, வீடொன்றின் சிறிய சிற்பமொன்று இவர் செய்ததாகக் கருதப்படுகிறது. தப்பியுள்ள ஒவியங்களில் ஒன்று வட அமெரிக்காவில் உள்ளது.
லியொனார்டோ, பெரும்பாலும் பெரும் ஓவியங்களாகவே திட்டமிட்டார். அதனால் இத்திட்டங்கள் முற்றுப்பெறாமல் இடையிலேயே நிற்கவேண்டியேற்பட்டது.
மிலானில் நிறுவுவதற்கு, 7 மீட்டர் (24 அடி) உயரமுள்ள வெண்கலத்திலான குதிரைச் சிற்பமொன்றைச் செய்வதற்காக, மாதிரிகளும், திட்டங்களும் வகுப்பதில் பல வருடங்கள் செலவு செய்யப்பட்டன. எனினும் பிரான்சுடனான போர் காரணமாகத் திட்டம் முற்றுப்பெறவில்லை. தனிப்பட்ட முயற்சி காரணமாக, டாவின்சியின் திட்டங்கள் சிலவற்றின் அடிப்படையில் இதைப்போன்ற சிலையொன்று 1999ல் நியூயோர்க்கில் செய்யப்பட்டு, மிலானுக்கு வழங்கப்பட்டு அங்கே நிறுவப்பட்டது.
புளோரன்சில், அங்கியாரிப் போர் என்ற தலைப்பில் பொது சுவரோவியம் ஒன்றைச் செய்வதற்காக இவர் அமர்த்தப்பட்டார். இதற்கு நேரெதிர்ச் சுவரில், இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோ ஒவியம் வரைவதாக இருந்தது. பலவிதமான, சிறப்பான ஆரம்ப ஆய்வுப்படங்களை வரைந்த பின்னர் அவர் நகரிலிருந்து வெளியேறிவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் சுவரோவியம் பூர்த்திசெய்யப்படவில்லை.
அறிவியலும், பொறியியலும்
இவருடைய கலைப்பணிகளிலும் பார்க்க, அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல், பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி உருவ எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.
அறிவியல் தொடர்பான இவரது அணுகுமுறை நோக்கிடுகள் சார்ந்தது. விவரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, புறத்தோற்றப்பாடுகளை அவர் விளங்கிக்கொள்ள முயன்றார். செய்முறைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும் அவர் முதன்மை கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும், எல்லாவற்றுக்குமான விரிவான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு இலத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாமையால், இவர் அக்கால அறிவியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்.
உடற்கூற்றியலும் உடலியக்கவியலும்
இவர் ஆந்திரியா வெரோச்சியின் கீழான பயிற்சி வழி மாந்த உடலின் உடற்கூற்றியல் ஆய்வைத் தொடங்கினார். வெரோச்சி தம் மாணவர்கள் இந்தக் கருப்பொருளில் ஆழ்ந்த அறிவு பெறுவதில் கண்ன்ங் கருத்துமாய் இருந்துள்ளார். ஓவியராக விரைவில் தா வின்சி தசைகள், தசைநாண்கள், கட்படும் உடற்கூற்றியல் கூறுபாடுகளை வரைந்து உடலுருவவியலில் தேர்ந்தார்.
ஓவியராக வெற்றிகண்ட தாவின்சி புளோரன்சில் உள்ள சாந்தா மரியா நுவோவா மருத்துவ மனையில் மாந்த உடல்களை வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டார். பின்னர் இவர் உரோம் நகரம், மிலான் மருத்துவமனைகளிலும் இதற்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இவர் 1510 முதல் 1511 வரை மருத்துவர் மார்க்கந்தோனியோ தெல்லா தோரேவுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டார். இலியனார்தோ 240 விரிவான வரைபடங்களை வரைந்து 13,000 சொற்கள் அடங்கிய உடற்கூற்றியல் பாடநூலை இயற்றியுள்ளார். இவற்றை தன் உறவினராகிய பிரான்சிசுகோ மெல்ழியிடம் வெளியிட கொடுத்துள்ளார். இப்பணி தா வின்சியின் தனித்த பாணி நடையாலும் அதன் புலமை விரிவாலும் மிக அரிய பணியாக விளங்கியுள்லது. இத்திட்டம், மெல்ழி 50 ஆண்டுகள் கழித்து இறக்கந் தறுவாயிலும் முடிவுறவில்லை; இவரது ஓவியப் பெருநூலில் உடற்கூற்றியலின் சிறிதளவு பகுதியே 1632 இல் வெளியிடப்பட்ட்து. மெல்ழி பாடப்பொருளை இயல்களாக ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது இவை பல உடற்கூற்றியலாளர்களாலும் வசாரி, செல்லினி, ஆல்பிரெக்ட் தூரர் உட்பட, பல ஓவியர்களாலும் பார்வையிடப்பட்டு, அவற்றில் இருந்து பல வரைபடங்கள் வரைந்துகொள்ளப்பட்டுள்ளன.
பொறியியலும் புதுமைப் புனைவுகளும்
புகழும் வெற்றியும்
இவரது புகழ் இவரது வாழ்நாளிலேயே பிரான்சு அரசர் இவரை வெற்றிக்கோப்பையைப் போல அவரது கையால் தூக்கிச் செல்ல வைத்துள்ளது, மேலும், அரசர் இவரை முதுமைக்கால முழுவதும் பேணிப் பாதுகாத்துள்ளார். இறந்த பிறகும் அரசர் இவரைக் கையால் ஏந்திக் கொண்டிருந்துள்ளார்.
இவரது பணிகள் பேரிலான ஆர்வம் குன்றவே இல்லை. இவரது நன்கறிந்த கலைப்பணிகளைப் பார்க்க இன்றும் மக்கள் குழுமுகின்றனர்; T-சட்டைகள் இன்றும் இவரது ஓவியங்கள் சுடர்விடுகின்றன; எழுத்தாளர்கள் தொடர்ந்து இவரது அறிவுத்திறனைப் பாராட்டித் தனிவாழ்க்கையைப் படம்பிடிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.
[[ஜியார்ஜியோ வசாரி, அவருடைய விரிவாக்கிய கலைஞர்களின் வாழ்க்கைகள், 1568 எனும் நூலில், இலியனார்தோ தா வின்சியைப் பின்வரும் சொற்களால் அறிமுகப்படுத்துகிறார்:
பல்வகைத் தகவல்கள்
தாவின்சைட் எனும் அன்மையில் புதிதாக விவரிக்கப்பட்டகனிமத்துக்கு 2011இல் பன்னாட்டுக் கனிமவியல் கழகம் இவரது நினைவாகப் பெயரிட்டுள்ளது.
கலைச் சந்தை
சால்வதார் முண்டி எனும் இலியனார்தோ ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு விற்று , நியூயார்க் கிறித்தி ஏலத்தில் 2017 நவம்பர் 15 இல் உலகிலேயே உயர்ந்த விலைக்கு விற்ற கலைப்பொருளாக பதிவாகியுள்ளது. முன்பு மிக உயர்ந்த விலைக்கு பாப்ளோவின் இலெசு பெம்மெசு தா அல்கர் (Les Femmes d'Alger) எனும் ஓவியம் 2015 மேவில் அதே நியூயார்க், கிறித்தி ஏலத்தில் 179.4 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளது. 300 மில்லியன் டாலருக்கு வில்லியம் தெ கூனிங்கின் இடைமாற்றம் எனும் ஓவியம் தனியாருக்கு 2015 செப்டம்பரில் டேவிட் கெஃபன் அறக்கட்டளை விற்றுள்ளது. இதுவே முன்னர் விற்ற கலைப்பொருளில் மிக உயர்ந்த விலை பெற்றதாகும்.
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
நூல்தொகை
volume 2: . A reprint of the original 1883 edition.
[The chapter "The Graphic Works" is by Frank Zollner & Johannes Nathan].
வெளி இணைப்புகள்
Complete text & images of Richter's translation of the Notebooks
The Notebooks of Leonardo da Vinci
Leonardo da Vinci at BBC Science
Leonardo da Vinci: Anatomist The Queen's Gallery, Buckingham Palace, Friday, 4 May 2012 to Sunday, 7 October 2012. High-resolution anatomical drawings.
Leonardo da Vinci, Master Draftsman, Catalog of an exhibition held at the Metropolitan Museum of Art, New York, 22 Jan. – 30 March 2003.
நிலாச்சாரல்.காம்-ல் லியொனார்டோ டா வின்சி
நிலாமுற்றம் கட்டுரை
மறுமலர்ச்சி அறிவியலாளர்கள்
1452 பிறப்புகள்
1519 இறப்புகள்
இத்தாலிய உடற்கூற்றியலாளர்கள்
இத்தாலியக் கட்டிடப் பொறியாளர்கள்
இத்தாலிய உடலியக்கவியலாளர்கள்
இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர்கள்
இத்தாலிய மறுமலர்ச்சி சிற்பிகள்
கணிதவியல் கலைஞர்கள்
மறுமலர்ச்சி கட்டிடக் கலைஞர்கள்
மறுமலர்ச்சி ஓவியர்கள்
பாய்ம இயங்கியலாளர்கள்
ந.ந.ஈ.தி நபர்கள் |
1589 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%20%28%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%29 | ஞாயிறு (விண்மீன்) | ஞாயிறு, கதிரவன் அல்லது சூரியன் (Sun) என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள விண்மீன் ஆகும். இது கிட்டத்தட்ட கோள வடிவில் இருக்கும் சூடான பிளாசுமா ஆகும். இதன் உட்புற வெப்பச்சலன இயக்கமானது இயக்கவியல் செய்முறை மூலம் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றல் மூலமாகக் கதிரவன் விளங்கி வருகிறது. புவியை விட 109 மடங்கு பெரியதாக உள்ள கதிரவனின் விட்டம் சுமார் 1.39 மில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும். இதன் நிறை புவியை விட 330,000 மடங்கு அதிகமானதாகும். இது கதிரவ அமைப்பின் மொத்த நிறையில் தோராயமாக 99.86 விழுக்காட்டினைக் கொண்டுள்ளது. கதிரவ நிறையில் மூன்றில் ஒரு பங்கு ஐட்ரசனும் (~73%) மீதமுள்ள பங்கில் பெருமளவு ஈலியமும் (~25%) உள்ளன. அவற்றுடன் சிறிய அளவில் ஆக்சிஜன், கரிமம், இரும்பு மற்றும் நியான் உள்ளிட்ட கனமான தனிமங்களும் உள்ளன.
நிறமாலை வகைப்பாட்டின் அடிப்படையில் ஞாயிறு என்பது ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீன் (G2V) ஆகும். எனவே இது மஞ்சள் குறுமீன் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் ஒளி மஞ்சளை விட வெள்ளை நிறத்திற்கே நெருக்கமானதாகும். சுமார் 4.568 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய மூலக்கூறு மேகத்தின் ஒரு பகுதியின் உள்ளே இருந்த பருப்பொருளின் ஈர்ப்புவிசைச் சுருக்கத்தில் இருந்து ஒரு பருப்பொருள் உருவானது. அதன் பெரும்பகுதி, மையப் பகுதியில் ஒன்றுசேர்ந்து கதிரவனாக உருவெடுத்தது. மீதமிருந்த பகுதிகள் சுற்றுப்பாதை வட்டுக்களாகத் தட்டையடைந்து கதிரவ அமைப்பாக உருமாறின. கதிரவனின் மையப்பகுதி மிகுந்த வெப்பமும் அடர்த்தியும் கொண்டதாக மாறி, அதன் உள்ளகத்தில் அணுக்கரு இணைவைத் தொடக்கியது. பெரும்பாலும் அனைத்து விண்மீன்களும் மேற்கண்ட நிகழ்வின் மூலமே உருவானதாகக் கருதப்படுகிறது.
தற்போது கதிரவன் கிட்டத்தட்ட தனது நடுத்தர வயதில் இருக்கிறது; நான்கு பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் கழிந்த பிறகும் வியத்தகு முறையில் மாற்றமடையாது இருப்பதுடன், இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மிகவும் நிலைத்தன்மையுடன் இருக்கும். தற்போது வினாடிக்கு சுமார் 600 மில்லியன் டன்கள் ஐட்ரசனை இணைத்து ஈலியமாக மாற்றி வருவதன் மூலம் வினாடிக்கு 4 மில்லியன் டன்கள் கொண்ட பருப்பொருளை ஆற்றலாக மாற்றிக் கொண்டிருக்கிறது. கதிரவனின் ஒளி மற்றும் வெப்பத்திற்கு மூலமாக உள்ள இந்த ஆற்றல், கதிரவ உள்ளகத்தில் இருந்து விடுபட 10,000 முதல் 170,000 ஆண்டுகள் வரை எடுக்கும். தோராயமாக 5 பில்லியன் ஆண்டுகளுக்குள் கதிரவ உள்ளகத்தில் நிகழும் ஐட்ரசன் இணைவு குறைந்து, நீர்நிலைச் சமநிலையற்ற நிலைக்கு கதிரவன் வந்துவிடும். இதனால் கதிரவ மையத்தின் அளவும் வெப்பமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். அதேநேரம் அதன் வெளிப்புற அடுக்குகள் விரிவடைந்து இறுதியில் ஒரு செம்பெருமீனாக மாற்றமடையும். அதன் அளவு தற்போது உள்ள புதன் மற்றும் வெள்ளியின் சுற்றுப்பாதையை விழுங்கிவிடுகின்ற அளவிற்கு பெரியதாக இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. எனவே அப்போது புவி வாழத்தகாத இடமாக மாறிவிடும். அதன்பிறகு கதிரவன் தனது வெளி அடுக்குகளை இழந்து வெண் குறுமீன் எனப்படும் அடர்த்தியான குளிரும் விண்மீனாக மாற்றமடையும்; இனி கதிரவனால் இணைப்பின் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்ய இயலாது. எனினும் அது ஒளிர்வுடனும் முந்தைய இணைப்புகளில் இருந்து கிடைத்த வெப்பத்தை வெளியிட்டுக் கொண்டும் இருக்கும்.
பெயர்க்காரணம்
கதிரவன் என்றால் ஒளிக்கதிர்களை உடையவன் என்று பொருள். ஞாயிறு என்பது நாயிறு என்ற சொல்லின் மரூஉ ஆகும். இதற்கு கோள்களின் தலைவன் என்று பொருள். இதுதவிர பகலவன், அனலி, வெய்யோன், ஆதவன், பரிதி, இரவி போன்ற பல தமிழ்ப்பெயர்கள் கதிரவனுக்கு உண்டு. சூரியன் என்பது கதிரவனின் வடமொழிப் பெயராகும்.
பண்புகள்
கதிரவன் என்பது ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீன் ஆகும். இது கதிரவனின் அமைப்பின் நிறையில் 99.86 விழுக்காட்டினைக் கொண்டுள்ளது. +4.83 என்ற தனி ஒளி அளவைக் கொண்டுள்ள கதிரவன், பால் வழியில் உள்ள ஏறக்குறைய 85% விண்மீன்களை விட ஒளிர்வுமிக்கதாகும். அந்த விண்மீன்களில் பெரும்பாலனாவை செங்குறுமீன்கள் ஆகும். கதிரவன் ஒரு உலோகசெறிவு மிக்க விண்மீன் வகையை சார்ந்தது. கதிரவன் உருவாக அதன் அருகில் இருந்த மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் (supernova) அதிர்ச்சி அலைகளே காரணமாய் இருக்கக் கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய விளைவுகள் வேதியியல் தனிமங்கள் மிகுந்த கதிரவன் போன்ற விண்மீன்களை எளிதாக உருவாக வைக்கிறது.
புவியின் வானில் தெரியும் வானியல் பொருட்களில் கதிரவனே ஒளிமிக்கதாகும். வானில் 2வது ஒளிர்வுமிக்க விண்மீனான சீரியசை விட இது 13 பில்லியன் மடங்கு ஒளிர்வுமிக்கதாகும். புவியின் மையத்தில் இருந்து கதிரவ மையத்தின் சராசரி தூரம் 1 வானியல் அலகு ஆகும். எனினும் இந்தத் தொலைவின் அளவு, சனவரி மாதத்தில் கதிரவ அண்மைநிலையிலும் சூலை மாதத்தில் கதிரவச் சேய்மைநிலையிலும் புவி இருக்கும்போது வேறுபடும். இந்த சராசரி தொலைவில் கதிரவ கிடைமட்டத்தில் இருந்து புவியின் கிடைமட்டத்திற்கு ஒளி 8 நிமிடங்கள் 19 நொடிகளில் வந்தடைகிறது. அதேநேரம் கதிரவன் மற்றும் புவியின் அண்மைப்பகுதியில் இருந்து ஒளி சென்றடைய இரு நொடிகளுக்கும் குறைவாகவே எடுத்துக்கொள்கிறது. இந்தக் கதிரவ ஒளியின் ஆற்றல் பெரும்பாலும் புவியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முதன்மைத் தேவையாக உள்ள ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. மேலும் இது புவியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவற்றையும் இயக்குகிறது.
கதிரவன் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கொண்டிருக்கவில்லை. எனினும் ஒளிக்கோளத்தின் மேல் உள்ள உயரம் அதிகரிப்பதால் அதன் அடர்த்தி மிக வேகமாகக் குறைந்து வருகிறது. கதிரவன் அதன் முனைகளை விட நடுக்கோட்டில் வேகமாகச் சுழல்கிறது. இந்த வேறுபட்ட சுழற்சிக்கு வெப்பப் பரிமாற்றத்தால் ஏற்படும் வெப்பச்சலன இயக்கம் மற்றும் கதிரவ சுழற்சியால் ஏற்படும் கோரியாலிஸ் விளைவு ஆகிய இரண்டும் காரணம் ஆகும். கதிரவனைச் சுற்றிவரும் புவியில் இருந்து காணும்போது நடுக்கோட்டில் கதிரவனின் முழு சுழற்சிக்காலம் 28 நாட்களாகும்.
வகைப்பாடு
விண்மீன் வகைப்பாட்டில் கதிரவன் G2V வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது. G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5,500 °செ ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். புவிக்கு வந்தடையும் கதிரவ ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறத்தினைக் கொண்டிருப்பதாக சர் சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு விளக்குகிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. கதிரவன் புவியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் கதிரவனை செம்மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் காட்டுகிறது
G2V என்ற குறியிட்டில் V என்ற எழுத்து மற்ற பல விண்மீன்களை போன்று கதிரவனும் தனது ஆற்றலை அணுக்கரு இணைவின் மூலம் பெறுவதை குறிக்கிறது. கதிரவனில் ஐட்ரசன் கருவும் ஈலியம் கருவும் சேர்வதால் ஆற்றல் உருவாகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் சுமார் 100 மில்லியன் G2 வகை விண்மீன்கள் உள்ளன. அவற்றில் கதிரவனும் ஒன்று. கதிரவன் பால் வழியில் (நமது விண்மீன் மண்டலம்) உள்ள பல சிவப்பு குறுமீன்களை விட 85% வெளிச்சமானது. இது தோராயமாக 24,000 to 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பால்வெளி மையத்தை 225–250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இக்காலம் ஒரு பால்வெளி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. கதிரவனின் சுழற்சி வேகம் (orbital speed) சுமார் 251 கிமீ/வினாடி. இந்த அளவீடுகள் இப்போதைய அறிவின்படி, நவீன கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது. இவை வருங்காலத்தில் மாற வாய்ப்புள்ளது. மேலும் கதிரவன் சுற்றி வரும் நமது பால்வழியும் அண்ட மையத்தை கொண்டு வினாடிக்கு 550 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவது வியப்பூட்டும் தகவலாகும்.
புவியின் மீது கதிரவனின் ஆற்றல்
கதிரவ ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். கதிரவ மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் கதிரவ ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். கதிரவ மாறிலி, கதிரவனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட்/சதுர மீட்டர் ஆகும். கதிரவ ஒளி புவியின் மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன்பு வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. இதனால் குறைந்த அளவிலான வெப்பமே தரைக்கு வந்தடைகிறது. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கதிரவ ஒளி ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றுகின்றன. கதிரவ மின்கலனில், கதிரவ ஒளியாற்றல்/வெப்பம் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலும் கதிரவ ஒளியில் இருந்து மறைமுகமாக (மக்கிய தாவரங்களில்) இருந்து கிடைக்கும் ஆற்றலே ஆகும்.
கதிரவனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்கள் நுண்ணுயிர் கொல்லியாகும். மேலும் இக்கதிர்கள் மாந்தர்களிடம் வேனிற்கட்டி போன்ற தீய விளைவுகளையும், மற்றும் உயிர்ச்சத்து D (விட்டமின் D) உற்பத்தி ஆகிய நன்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. புறஊதாக் கதிர்கள் புவியை சூழ்ந்துள்ள ஓசோன் படலம் மூலம் மட்டுப்படுத்தப்படுகிறது. இக்கதிர்களே மனிதரின் வேறுபட்ட தோல் நிறத்துக்கும் காரணமாக அறியப்படுகிறது.
கட்டமைப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தி
கதிரவனின் உள்கட்டமைப்பு பின்வரும் அடுக்குகளைக் கொண்டது.
உள்ளகம் (core) கதிரவ ஆரத்தின் 20-25% உட்புற பகுதியில் உள்ள வெப்பம் (ஆற்றல்) மற்றும் அழுத்தம், ஐட்ரசன் மற்றும் ஈலியம் இடையே அணுக்கரு இணைவு நிகழப் போதுமானதாக இருக்கும். இதன்மூலம் கதிரவ ஆற்றல் வெளிப்படும். ஈலியம் படிப்படியாக உள்ளகத்தின் உள்ளே படிந்து ஈலியத்தின் உள்ளகத்தை உருவாக்குகிறது.
கதிர்வீச்சுப் பகுதி (radiative zone) கதிரவனின் மேற்பரப்பு மிகவும் நெருக்கமாக இருக்கும் வரையில் வெப்பசலனம் ஏற்படாது. எனவே 20-25% ஆரம் மற்றும் 70% ஆரம் ஆகியவற்றிற்கு இடையே, ஒரு கதிர்வீச்சுப் பகுதி உள்ளது. அங்கு கதிர்வீச்சு (ஃபோட்டான்கள்) மூலம் ஆற்றல் பறிமாற்றம் நிகழ்கிறது.
வேகச்சரிவு (tachocline) – கதிர்வீச்சு மற்றும் வெப்பசலனம் ஆகிய இரு பகுதிகளுக்கு இடையே உள்ள எல்லைப்பகுதி.
வெப்பச்சலனப் பகுதி (convective zone) கதிரவனின் வெளி அடுக்குகளில் (தோராயமாக 70% கதிரவ ஆரம்), கதிரவ பிளாஸ்மாவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்படுவதால், இப்பகுதியில் கதிர்வீச்சு வழியே வெப்பம் கடத்தப்படுவது இயலாததாகிறது. அதனால் வெப்பச்சலனம் மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது. .
ஒளிக்கோளம் (photosphere) – கதிரவனின் ஆழமான பகுதி. கதிரவ வெளிச்சத்தைக் கொண்டு இதை நேரடியாகக் காண இயலும். கதிரவன் ஒரு வாயுப்பொருள் என்பதால் தெளிவாக வரையறுக்கப்பட்ட மேற்பரப்பு இல்லை. அதன் காணக்கூடிய பகுதிகள் பொதுவாக 'ஒளிக்கோளம்' மற்றும் 'வளிக்கோளம்' என்று இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.
வளிக்கோளம் (atmosphere) – கதிரவனைச் சுற்றியுள்ள ஒரு வாயு "ஒளி", நிறக்கோளம், கதிரவ நிலைமாற்றப் பகுதி, கொரோனா மற்றும் கதிரவக்கோளம் ஆகியவற்றை உள்ளடக்கியது. கதிரவனின் முக்கியப் பகுதி மறைக்கப்படும் போது இவற்றைக் காண இயலும்.
உள்ளகம்
கதிரவ உள்ளகம், என்பது மையத்திலிருந்து 20-25% கதிரவ ஆரம் வரை பரவியுள்ளது. இது சுமார் 150g/cm3 வரையிலான அடர்த்தியும் (நீரின் அடர்த்தியில் சுமார் 150 மடங்கு) 15.7 மில்லியன் கெல்வின் அளவிலான வெப்பமும் கொண்டுள்ளது. இதற்கு மாறாக, கதிரவனின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 5,800 கெல்வின் அளவில் இருக்கிறது. SOHO திட்டத் தரவுகளின் அண்மைய பகுப்பாய்வுகள் மூலம் கதிரவனின் மேல் உள்ள கதிர்வீச்சுப் பகுதியை விட அதன் மையத்தில் சுழற்சி விகிதம் வேகமாக இருப்பது தெரியவந்தது. கதிரவன் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியில் புரோட்டான்-புரோட்டான் சங்கிலி என்றழைக்கப்படும் தொடர்ச்சியான வழிமுறைகளால் மையப் பகுதியில் அணுக்கரு இணைப்பின் மூலம் ஆற்றல் உற்பத்தி செய்கிறது; இந்த செயல்முறை ஐட்ரசன் அணுக்களை ஈலியமாக மாற்றுகிறது. கதிரவனில் உருவாக்கப்பட்ட ஆற்றலில் 0.8% மட்டுமே CNO சுழற்சியில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்த விகிதம் கதிரவனின் வயதைப் பொறுத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கதிரவனில் உள்ளகப் பகுதி மட்டுமே அணுக்கரு இணைவு மூலம் கணிசமான வெப்ப ஆற்றலை உருவாக்குகிறது. கதிரவ உள்ளகத்தில் மட்டுமே நடைபெறும் அணுக்கரு இணைவின் விளைவாக உருவாகும் ஆற்றல் கதிரவனின் மற்ற அடுக்குகளில் படிப்படியாகப் பரவுகிறது.
ஒவ்வொரு வினாடியிலும் தோராயமாக 3.4 புரோட்டான்கள் (ஐட்ரசன் அணுக்கரு) ஈலியம் அணுக்கருவாக மாற்றப்படுகின்றன. கதிரவனில் சுமார் 8.9 புரோட்டான்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கதிரவன் ஒரு வினாடிக்கு சுமார் 383 யோட்டா வாட் அளவு ஆற்றலை வெளியிடுகிறது. இது 9.15 மெகா டன் TNT அளவுள்ள வெடிபொருளை வெடிப்பதற்கு சமமாகும்.
உயர் ஆற்றல் கொண்ட ஒளித்துகள் (ஃபோட்டான்)கள் (காமாக் கதிர்கள்) அணுக்கருப் புணர்ச்சி விளைவால் கதிரவ உள்ளகத்தில் உருவாகப்படுகின்றன. மிகக் குறைந்த அளவில் கதிரவ பிளாஸ்மாவால் உட்கிரகிக்கப் படும் ஒளித்துகள்கள் மீண்டும் குறைந்த ஆற்றலில் பல திசைகளிலும் எதிரொளிக்கப் படிகின்றன. இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் ஒளித்துகள்கள் கதிரவனின் மேல்பகுதியை கதிரியக்கம் விளைவாக அடைய சுமார் 10 ,000 முதல் 170 ,000 வருடங்கள் ஆகிறது. வெப்பச்சலனப் பகுதியை கடந்து ஒளி மண்டலத்தை அடையும் ஒளித்துகள்கள் காண்புறு ஒளியாக கதிரவ அமைப்பில் பயணிக்கிறது. கதிரவ உள்ளகத்தில் உருவாகும் ஒவ்வொரு காமாக் கதிரும் பல மில்லியன் ஒளித்துகள்களாக மாற்றப்படுகிறது. காமா கதிர்களைப் போன்று நியூட்ரினோ துகள்களும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாக்கப்படுகின்றன. ஒளித்துகள்களை போலன்றி இவை பிளாசுமாவினால் பாதிக்கப்படாததால் இவை கதிரவனை உடனடியாக வெளியேறுகின்றன.
கதிர்வீச்சுப் பகுதி
உள்ளகத்தில் இருந்து சுமார் 0.7 கதிரவ ஆரங்கள் வரை, ஆற்றல் பரிமாற்றத்தின் முதன்மையான வழிமுறையாக வெப்பக் கதிர்வீச்சு இருக்கிறது. மையத் தொலைவு அதிகரிக்கும் போது சுமார் 7 மில்லியன் முதல் 2 மில்லியன் கெல்வின் வரை வெப்பநிலை குறைகிறது. இந்த வெப்பநிலைச் சரிவு மாறாவெப்பக் குறைவு விகிதத்தை விட குறைவாக இருப்பதால் வெப்பசலனத்தை இயக்க முடியாது. எனவே இப்பகுதி வழியாக நடைபெறும் வெப்பப் பறிமாற்றம் வெப்பசலனம் மூலம் இல்லாமல் கதிர்வீச்சு மூலம் நடைபெறுகிறது.
வேகச்சரிவு
கதிர்வீச்சு பகுதியும் வெப்பச்சலனப் பகுதியும் வேகச்சரிவு என்ற நிலைமாற்ற அடுக்கு ஒன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. இது கதிர்வீச்சுப் பகுதியின் நிலையான சுழற்சி மற்றும் வெப்பசலனப் பகுதியின் மாறுபட்ட சுழற்சி ஆகிய இரண்டிற்கும் இடையே திடீர் மாற்றம் ஏற்படும் பகுதி ஆகும். இதன் விளைவாக சறுக்குப் பெயர்ச்சி எனப்படும் தொடர்ச்சியான கிடைமட்ட அடுக்குகள் ஒன்றையொன்று கடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. தற்போது இந்த அடுக்கினுள் உள்ள காந்த இயக்கயவியல் கதிரவனின் காந்தப்புலத்தை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது.
வெப்பச்சலனப் பகுதி
கதிரவனின் வெளி அடுக்குகளில் (தோராயமாக 70% கதிரவ ஆரம்), கதிரவ பிளாஸ்மாவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்படுவதால், இப்பகுதியில் கதிர்வீச்சு வழியே வெப்பம் கடத்தப்படுவது இயலாததாகிறது. அதனால் வெப்பச்சலனம் மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது. வெப்பச்சலனம் என்பது வளி அல்லது நீர்மம் அல்லது பிளாஸ்மா ஆகியவற்றின் அழுத்த வேறுபாடு மூலமாக வெப்பம் கடத்தப்படுதலை குறிக்கும். கதிரவனில் வெப்பப் படுத்தப்பட்ட பிளாஸ்மா குறைந்த அடர்த்தியை கொண்டிருப்பதால் அது சூரியனின் வெளிபுறம் நோக்கி நகர்வதாலும், அவ்விடத்தை நிறைக்க குறைந்த வெப்பத்தை கொண்ட பிளாஸ்மா உள்நோக்கி நகர்வதாலும் நடக்கும் சுழற்சியின் வழியாக வெப்பம் கடத்தப்படுகிறது. இத்தகைய சுழற்சி மூலம் வெப்பம் கதிர்வீச்சுப் பகுதியில் இருந்து ஒளி மண்டலத்திற்கு கடத்தப்படுகிறது.
வெப்பச்சலன விளைவினால் அடுக்கடுக்காக வெளி நோக்கி தள்ளப்படும் பிளாஸ்மா தனித்தனி பரல்களாக சூரியனின் மேல்பரப்பில் தோன்றுகிறது. இதனை கதிரவ பரலாக்கம் என்பர்.
ஒளிக்கோளம்
கதிரவனின் பார்க்கக்கூடிய மேற்பரப்பு ஒளி மண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதில் இருந்து வெளியேறும் ஒளி ஆற்றல் எந்த வித தடங்கலும் இன்றி விண்ணில் பயணிக்க இயலும்.
ஒளி மண்டலம் பல நூறு கிலோமீட்டர் தடிமனானது. ஒளி மண்டலத்தின் வெளிப்பகுதி உள்பகுதியை விட சற்றே குளிர்ச்சியானது. ஒளி மண்டலத்தின் துகள் அடர்த்தி தோராயமாக 1023 m−3 (அதாவது புவியின் கடல் மட்டத்தில் காணப்படும் வளி மண்டத்தின் அடர்த்தியில் 1% அடர்த்தி) .
பெரும் அறிவியல் முன்னேற்றம் கண்டிராத காலத்தில் கதிரவனின் ஒளி மண்டலத்தின் ஒளி அலைமாலையை ஆய்ந்த அறிவியலாளர்கள் கதிரவனில் புவியில் இல்லாத ஒரு வேதியியல் தனிமம் இருப்பதாக உணர்ந்தனர். 1868 ஆம் ஆண்டு, ஆய்வாளர் நோர்மன் லோக்கர் இத்தனிமத்திற்கு கிரேக்க கதிரவக் கடவுளான ஈலியோசு நினைவாக ஈலியம் என்று பெயர் சூட்டினார். இதன் பிறகு 25 வருடங்கள் கடந்தபின் ஈலியம் புவியில் ஆய்வாளர்களால் பிரித்து எடுக்கப்பட்டது.
வளிக்கோளம்
முழுமையான கதிரவ மறைப்பின் போது நிலவு கதிரவனை முழுமையாக மறைக்கிறது. அப்போது கதிரவனைச் சுற்றியுள்ள வளிக்கோளத்தின் பகுதிகளைக் காண இயலும். இது நிறக்கோளம், நிலைமாற்றப் பகுதி, கொரோனா மற்றும் கதிரவக்கோளம் என்று நான்கு தனித்தனி பகுதிகளைக் கொண்டது.
இப்பகுதியை மின்காந்த அலைமாலையைக் காண உதவும் தொலைநோக்கி வழியாகவோ, காண்புறு ஒளியில் இருந்து காமாக் கதிர்கள் வரை அடங்கியுள்ள ரேடியோ கதிர்களை ஆய்வதன் மூலமோ காணலாம்.
கதிரவனின் குறைந்த வெப்பப் பகுதி ஒளிக்கோளத்தில் இருந்து சுமார் 500 கிமீ மேலே அமைந்துள்ளது. இப்பகுதியின் வெப்பம் சுமார் 4,000 கெல்வின் ஆகும். இப்பகுதியின் வெப்பக்குறைவு காரணமாக இப்பகுதியில் தனிமங்கள் மட்டுமல்லாது கார்பன் மோனாக்சைடு, நீர் ஆகிய சில மூலக்கூறுகளும் காணப்படுகின்றன.
குறைந்த வெப்ப பகுதிக்கு மேலே சுமார் 2 ,500 கிமீ தடிமனில் உள்ள மெல்லிய அடுக்கு நிறக்கோளம் என்று அறியப்படுகிறது. இப்பகுதியின் நிறமாலை உமிழ்வு காரணமாக இப்பெயர் பெற்றது.
காந்தப் புலமும் செயல்பாடுகளும்
கதிரவன், அதன் மேற்பரப்பு முழுவதும் மாறுபடும் ஒரு காந்த புலத்தை கொண்டுள்ளது. ஆண்டு தோறும் மாற்றமடைகின்றதும் ஒவ்வொரு 11 ஆண்டும் திசை மாற்றம் அடைவதுமான வலுவான காந்தப் புலம் கதிரவனுக்கு உண்டு. கதிரவனின் காந்தப்புலம், ஒருங்கே கதிரவ செயல்பாடுகள் என்று அழைக்கப்படும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றுள் கதிரவ மேற்பரப்பில் இருக்கும் கதிரவ புள்ளிகள், கதிரவ தீக்கொழுந்து, கதிரவ அமைப்பின் வழியாக பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்லும் கதிரவ காற்று ஆகியவை அடங்கும். இடை முதல் உயர் குறுக்குக்கோடு வரையிலான பகுதிகளிலான துருவ ஒளி, வானொலித் தொடர்புகளிலும், மின்சாரத்திலும் ஏற்படும் இடையீடுகள் என்பன கதிரவ செயல்பாடுகள் புவியில் ஏற்படும் தாக்கங்கள் ஆகும். கதிரவ அமைப்பின் உருவாக்கத்திலும் படிவளர்ச்சியிலும் கதிரவ செயல்பாட்டிற்குப் பெரும் பங்கு உண்டு என்று கருதப்படுகிறது. இது புவியின் வெளி வளிமண்டலத்தில் அமைப்பையும் மாற்றுகிறது.
உயர்ந்த வெப்பநிலையினால் கதிரவனில் உள்ள எல்லாப் பொருட்களும் வளிமம், அல்லது பிளாசுமா வடிவிலேயே உள்ளன. இதனால், கதிரவனின் நடுக்கோட்டுப் பகுதியின் வேகம் உயர் குறுக்குக் கோட்டுப் பகுதியின் வேகத்திலும் கூடிய வேகத்தில் சுழல்கிறது. நடுக்கோட்டுப் பகுதியில் சுழற்சி 25 நாட்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதிகளில் 35 நாட்களுக்கு ஒரு முறையாகவும் காணப்படுகிறது.
கதிரவ காந்தப்புலம் கதிரவனுக்கு வெளியிலும் பரந்துள்ளது. காந்தமாக்கப்பட்ட கதிரவக் காற்றுப் பிளாசுமா கதிரவக் காந்தப் புலத்தை வான்வெளிக்குள் கொண்டு சென்று கோளிடைக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. பிளாசுமா காந்தப் புலக் கோடுகள் வழியே மட்டுமே செல்ல முடியும் என்பதால், தொடக்கத்தில், கோளிடைக் காந்தப்புலம் கதிரவனில் இருந்து ஆரைப்போக்கில் வெளிப்புறமாக விரிந்து செல்கிறது.
வாழ்க்கைச் சுழற்சி
தற்போது கதிரவன் கிட்டத்தட்ட தன் வாழ்வின் மிக நிலையான பகுதியில் பாதியளவைக் கடந்துவிட்டது; இது நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக வியத்தகு முறையில் மாற்றம் அடையாமல் இருப்பதுடன், இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மிகவும் நிலைத்தன்மையுடன் இருக்கும். இருப்பினும், அதன் மையத்தில் நடைபெறும் ஐட்ரசன் இணைவு நின்றுவிடும் போது, கதிரவனின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும்.
விண்மீன்களும் வாழ்க்கைச் சுழற்சிக்கு உட்பட்டவையே. உலோகச்செறிவு மிக்க விண்மீன்கள் வகையைச் சார்ந்த கதிரவன் தோராயமாக 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் ஐட்ரசன் மூலக்கூறு மேகங்களின் மோதலால் பால் வழியில் தோன்றியது. தோராயமாக வட்டவடிவில் இருக்கும் கதிரவனின் கோளப் பாதை பால் வழி விண்மீன் மண்டல மையத்திலிருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
கதிரவ உருவாக்கத்தைக் கணிக்க இரு வகையான கணக்கீடுகள் பயன் படுத்தப்படுகின்றன. முதல் முறையில் கதிரவனின் பரிணாம வளர்ச்சியில் தற்போதய நிலை, கணிப்பொறி உருவகப்படுத்துதல் முறையில் கணிக்கப்படுகிறது. இம்முறையில் கதிரவனின் நிறை, வெப்ப ஆற்றல், ஒளியின் மூலம் அறியப்படுகின்ற தனிமங்களின் அளவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இம்முறை மூலம் கதிரவனின் வயது 4.57 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. மற்றொரு முறையான கதிரியக்க அளவியல் முறையில் கதிரவ அமைப்பின் மிகமுந்தைய துகள்களை ஆய்வதன் மூலம் கதிரவனின் வயதை கண்டறிவதாகும். இம்முறையில் கதிரவனின் வயது 4.567 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.
ஆயிரக்கணக்கான விண்மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியை ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் கதிரவன் தனது நடுவயதை அடைந்து விட்டதைக் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் கதிரவனில் உள்ள ஐட்ரசன் அணுக்கள் அணுக்கரு புணர்வு விளைவினால் ஈலியம் அணுக்களாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் சுமார் 4 மில்லியன் டன் எரிபொருள் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இவ்வாற்றலையே நாம் கதிரவ ஒளியாகவும், வெப்பமாகவும் பெறுகிறோம். கதிரவன் தோன்றியதில் இருந்து இதுவரை சுமார் 100 புவியின் எடையுள்ள பருப்பொருள் ஆற்றலாக மாற்றப்பட்டுள்ளது.
அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. இந்நிகழ்வை மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்று கூறலாம்.
கதிரவனின் நிறை மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) ஏற்படப் போதுமானது அன்று. எனவே 5 பில்லியன் வருடங்களுக்கு பின், கதிரவன் ஒரு செம்பெருமீனாக (red giant) மாறும். அதன் வெளி அடுக்குகள் விரிவடைந்து உள்பகுதியில் உள்ள ஐட்ரசன் எரிபொருள் அணுக்கரு இணைவு விளைவுக்கு உட்பட்டு ஈலியமாக மாறும். வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100 மில்லியன் கெல்வின் என்ற நிலையில் ஈலியம் இணைவு விளைவு தொடக்கப்படும். இவ்விளைவின் விளைவுப் பொருள் கார்பன் ஆகும். .
இந்நிலையில் புவியின் உள்ளகத்தின் நிலை ஐயத்துக்குரியது. ஏனெனில், செம்பெருமீனாக கதிரவனின் மாற்றம் பெறும்போது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் புவியின் சுற்றுவட்ட பாதையை முழுவதுமாக கதிரவனுக்குள் இழுத்து விடும். ஆனால் கதிரவனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி கதிரவன் புவியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. சில இயற்பியல் விதிமுறைகளின் படி புவி கதிரவனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் புவியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்றுப்பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் கதிரவனின் வெப்பம் 10% அதிகமாகிறது.
செம்பெருமீன் நிலையினைத் தொடர்ந்து கதிரவனின் வெளி அடுக்குகள் வீசி எறியப்படும். அவை கோள் விண்மீன் படலத்தை (planetary nebula) உருவாக்க கூடும். மீதம் இருக்கும் கோள் மெதுவாகக் குளிர்ந்து வெண் குறுமீனாக (white dwarf) மாறும். இதே விண்மீன் பரிமாணமே சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறையுள்ள விண்மீன்களிடம் காணப்படுகின்றது.
இயக்கம் மற்றும் அமைவிடம்
நமது விண்மீன் பேரடையான பால்வீதியின் உள்வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் சுருள்கையில் கதிரவன் அமைந்துள்ளது. கதிரவன் அமைந்துள்ள இடத்தில் இருந்து பால்வெளி மையம் சுமார் 24 ,800 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கலாம் எனறு கணிக்கப்படுகிறது. கதிரவன் அமைந்துள்ள ஓரியன் சுருள்கைக்கும், அருகில் உள்ள பெர்சியசு சுருள்கைக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6 ,500 ஒளியாண்டுகள் ஆகும்.
கதிரவ உச்சி (solar apex) என்ற பதம் கதிரவன் பால் வழியில் பயணிக்கும் திசையை கூற பயன்படுத்தப்படுகிறது. தற்பொழுது கதிரவன், வேகா என்ற விண்மீனை நோக்கி பயணம் செய்கிறது. வேகா விண்மீன் எர்குலசு விண்மீன் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கதிரவனின் சுழற்சி நீள்வட்ட பாதையில் அமைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கதிரவ அமைப்பு ஒருமுறை பால் வீதியைச் சுற்றி வர சுமார் 225–250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக்காலம் ஒரு பால்வெளி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது
இதன் மூலம், கதிரவன் தன் தோன்றியதில் இருந்து தோராயமாக 20–25 முறை பால்வீதியைச் சுற்றி வந்துள்ளது என்பதை அறியலாம். பால்வெளி மையத்தில் இருந்து நோக்கினால் கதிரவனின் சுழற்சி வேகம் தோராயமாக 251 km/s ஆகும். இந்த வேகத்தில் கதிரவ அமைப்பு 1 ஒளியாண்டு தொலைவு வரை பயணிக்க 1,190 ஆண்டுகள் ஆகும்.
கதிரவ விண்வெளி திட்டங்கள்
1959 முதல் 1968 வரையிலான காலகட்டத்தில் ஏவப்பட்ட நாசாவின் பயனியர் 5, 6, 7, 8 மற்றும் 9 ஆகியவை கதிரவனைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள்கள்கள் ஆகும். இந்த ஆய்வுக்கலங்கள் புவியைப் போல கதிரவனை ஒரு குறிப்பிட தொலைவில் சுற்றி வந்து முதன்முறையாகக் கதிரவக் காற்று மற்றும் கதிரவ காந்தப் புலம் ஆகியவற்றை விரிவாக அளவீடுகள் செய்தன.
இதுவரையிலான கதிரவ திட்டங்களில் கதிரவ மற்றும் கதிரவக்கோள ஆய்வுக்கலம் (SOHO) மிக முக்கியமான திட்டமாகும். ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் நாசா ஆகியவை இணைந்து உருவாக்கிய இந்த விண்கலம் 2 டிசம்பர் 1995 அன்று ஏவப்பட்டது. இது புவி மற்றும் கதிரவன் இடையேயான லெக்ராஞ்சிய புள்ளியில் இருந்துகொண்டு கதிரவனின் நிலையான காட்சியை பல அலைநீளங்களில் வழங்கியுள்ளது. இதுதவிர, பெரிய அளவிலான வால்வெள்ளிகளையும் கண்டறிய உதவியது. அவற்றில் பெரும்பாலும் கதிரவனுக்கு அருகில் செல்வதால் எரியும் வகையைச் சேர்ந்த சிறிய வால்வெள்ளிகள் ஆகும்.
கதிரவ காற்றின் ஒரு மாதிரியை எடுத்து வர நாசாவால் அனுப்பப்பட்ட ஜெனிசீஸ் என்ற விண்கலம், கதிரவ மூலப்பொருட்களின் கலவையை நேரடியாக அளவீடு செய்ய வானியலாளர்களுக்கு உதவியது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 1475 கிலோ எடை கொண்ட ஆதித்தியா எல் 1 என்ற விண்கலத்தை PSLV C57 ஏவூர்தியால் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 2 அன்று இசீநே 11:50 அளவில் விண்ணில் ஏவியுள்ளது. வின்கலம் இசிநே 12:54 அளவில் ஏவூர்தியால் புவித் தாழ் வட்டணையில் செலுத்தியுள்ளது. இது கதிரவ கொரோனாவின் இயக்கவியல் குறித்து ஆய்வு செய்யவுள்ளது.
வெயில்
புவியில் படும் கதிரவனின் ஒளிக்கதிர்கள் வெயில் என்று அழைக்கப்படுகிறது. முப்பட்டக ஆடியின் மூலம் இந்த வெயிலைப் பகுத்து அதன் 7 நிறங்களைக் காணமுடியும். குவியாடி மூலம் குவித்து வெயிலின் வெப்பத்தை அதிகமாக்க முடியும்.
கோள் அமைப்பு
கதிரவன் எட்டு அறியப்பட்ட கோள்களைக் கொண்டுள்ளது. இதில் நான்கு புவியொத்த கோள்கள் (புதன், வெள்ளி, புவி, மற்றும் செவ்வாய்), இரண்டு வாயு அரக்கர்கள் (வியாழன் மற்றும் சனி) மற்றும் இரண்டு பனி அரக்கர்கள் (யுரேனசு மற்றும் நெப்டியூன்) ஆகியவை அடங்கும். மேலும் கதிரவ அமைப்பில் குறைந்தது ஐந்து குறுங்கோள்கள், ஒரு சிறுகோள் பட்டை, எண்ணற்ற வால்வெள்ளிகள், மற்றும் நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் இருக்கும் பெரிய அளவிலான பனிப் பொருட்கள் ஆகியவை உள்ளன.
இவற்றையும் பார்க்க
வானியல் தலைப்புகள் பட்டியல்
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Astronomy Cast: The Sun
Satellite observations of solar luminosity
Animation – The Future of the Sun
"Thermonuclear Art – The Sun In Ultra-HD" | Goddard Space Flight Center
"A Decade of Sun" | Goddard Space Flight Center
Earth's Sun: Facts About the Sun's Age, Size and History |
1597 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D | விண்வீழ்கல் | விண்வீழ்கல் அல்லது உற்கை (meteorite) என்பது ஒப்பீட்டளவில் சிறிய, பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற் கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் (எரி வெள்ளி) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதனையும் பாருங்கள்
விண்கல் மழை
வால்மழை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பல கோடி ஆண்டுகளுக்கு முன் புவியைத் தாக்கிய இராட்சத விண்கல்
விண்வெளி அறிவியல்
புவி இயற்பியல் |
1598 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF | வால்வெள்ளி | [[படிமம்:Lspn comet halley.jpg|right|250px|கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பொலிவான வளிம், தூசிச் சீறல்கள் தெரிகின்றன.]]
வால்வெள்ளி (comet) பனிக்கட்டியாலான சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். இது சூரியனுக்கு நெருக்கமாக கடக்கும்போது சூடாகி வளிமங்களை வெளியிடும். இந்நிகழ்வு வளிமவீசல் அல்லது தாரை எனப்படுகிறது. இது கண்ணுக்குப் புலப்படும் வளிமண்டலம் அல்லது கருப்புறணியை உருவாக்குகிறது. சிலவேளைகளில், இது வால்வெள்ளியின் "வால்" எனப்படுகிறது. இந்நிகழ்வுகள் சூரியக் கதிர்வீச்சும் சூரியக் காற்றும் வால்வெள்ளியின் உட்கரு மீது செலுத்தும் விளைவுகளால் ஏற்படுகின்றன. வால்வெள்ளி உட்கரு சில நூறு மீட்டர்களில் இருந்து பல பத்து கிமீ குறுக்களவில் அமைகிறது. இதில் பனிக்கட்டி, தூசு, சிறிய பாறைத் துகள்கள் ஆகியவை தளர்வாகக் கலந்திருக்கும். வால்வெள்ளியின் கருப்புறணி, புவியின் விட்டத்தைப் போல 15 மடங்காக அமைய, வால் ஒரு வானியல் அலகு அளவுக்குக் கூட நீண்டிருக்கும். போதுமான பொலிவுள்ள வால்வெள்ளியைப் புவியில் இருந்து தொலைநோக்கி இல்லாமலே பார்க்கலாம். வானில் அது 30° வட்டவில்லை (60 நிலாக்கள்) வெட்டும். பல நாகரிகங்களில் தொல்பழங்கால முதலே வால்வெள்ளிகள் நோக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் வட்டணை அல்லது சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வட்ட வட்டணையைக் கொண்டுள்ளன. "தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs)" என்று பெரும்பாலும் விளிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டும், மீத்தேனும் நீரும் தூசியும் கனிமத்திரளைகளும் கலந்து உருவானவை.
வால்வெள்ளிகள் மிகவும் மையம்பிறழ்ந்த நீள்வட்ட வட்டணைகளைக் கொண்டுள்ளன. இவற்றின் வட்டணை அலைவுநேரம் அகன்ற நெடுக்கம் கொண்டதாகும். இந்நெடுக்கம் பல ஆண்டுகளில் இருந்து பல மில்லியன் ஆண்டுகள் வரை அமையும். சிற்றலைவுநேர வால்வெள்ளிகள் நெப்டியூன் வட்டணைக்கு அப்பால் உள்ள கைப்பர்பட்டையில் இருந்து அல்லது அதைச் சார்ந்த சிதறிய வட்டிலில் இருந்து தோன்றுகின்றன. நெட்டலைவுநேர வால்வெள்ளிகள் கைப்பர்பட்டையின் வெளிப்புறத்தில் இருந்து அடுத்த விண்மீனின் பாதி தொலைவு வரை விரிந்தமையும் ஊர்த் முகிலில் இருந்து தோன்றுவதாகக் கருதப்படுகின்றன. இவை ஈர்ப்பு குற்றலைவுகளால் ஊர்த் முகிலில் இருந்து சூரியனை நோக்கி இயக்குவிக்கப்படுகின்றன, இந்த குற்றலைவுகள் அருகாமையில் உள்ள கடந்தகால, எதிர்கால, அல்லது கடந்துசெல்லும் விண்மீன்களால் உருவாக்கப்படுகின்றன. மீவலைய வால்வெள்ளிகள் உடுக்கன இடைவெளிக்குள் பரந்துபோகும் முன் உட்புறச் சூரியக் குடும்பத்தின் ஊடாகக் கடக்கலாம். அலைவுநேர வால்வெள்ளியின் தோற்றம் வால்வெள்ளியின் மீட்சி எனப்படுகிறது.
சூரிய ஒண்முகில்கள் ஒடுங்கும்போது எஞ்சிய கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய ஒண்முகில்களின் வெளி விளிம்புகள், நீர்ம, வளிம நிலையிலன்றித் திண்ம நிலையில் இருக்கக்கூடியதாகவும் போதிய அளவு குளிர்ந்த நிலையில் இருப்பதாகவும் வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என வரையறுப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனைச் சுற்றுகின்றன. இதற்கு ஒரு எடுத்துகாட்டு ஆல்லே வால்வெள்ளி ஆகும். இதனை புவியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை நோக்கலாம்/அவதானிக்கலாம்.
விண்வெளியில் மிதக்கிற எரிகல் தூசிகளும், மீத்தேன், சயனோஜன், கரியமில வளிமம், அம்மோனியா, நீராவி ஆகியவை அந்தக் கல்துண்டுகளைச் சுற்றி ஒட்டிக் கொண்டு உறைந்து விடுகின்றன. வால்வெள்ளி சூரியனை அணுகும்போது வால்வெள்ளியிலுள்ள பொருள்கள் ஆவியாகின்றன. சூரியனிலிருந்து வீசுகிற சூரியக் காற்று அந்த ஆவிகளைச் சூரியனுக்கு எதிர்ப்புறமாகத் தள்ளுகிறது. அந்த ஆவிதான் வாலாகத் தோற்றமளிக்கிறது. பல முறை சூரியனைச் சுற்றி வந்தபின் வால்வெள்ளிகளின் மேற்பரப்பு படலங்களெல்லாம் ஆவியாகிப்போய் வெறும் பாறைத்துண்டு மட்டும் மிஞ்சும். அந்தப் பாறைத்துண்டும் உடைந்து பூமியிலும் மற்ற கோளிலும் எரிகற்களாகப் போய்விழும்.. குறுங்கோள்கள் வால்வெள்ளிகளைப் போல வெளிப்புறச் சூரியக் குடும்பத்துக்குள் தோன்றாமல், வியாழனின் வட்டணைக்கும் உள்ளே அமைந்த பகுதியில் தோன்றுகின்றன. முதன்மைப்பட்டை வால்வெள்ளிகளின் கண்டுபிடிப்பும் முனைப்பான செண்டார் வகை சிறுகோள்களின் கண்டுபிடிப்பும் குறுங்கோளுக்கும் வால்வெள்ளிகளுக்கும் இடையில் அமைந்த வேறுபாட்டை மழுங்கடித்து விட்டன.
2014 நவம்பர் மாதம் வரை 5,253 வால்வெள்ளிகள் அறியப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வருகிறது. வாய்ப்புள்ள மொத்த வால்வெள்ளிகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய திரளேயாகும். வெளிப்புறச் சூரியக் குடும்பத்தில் (ஊர்த் முகிலில்) வால்வெள்ளிபோன்ற வான்பொருள்கள் டிரில்லியன் அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன. ஓராண்டில் ஒரு வால்வெள்ளி கண்ணுக்குப் புலப்படுகிறது. பல மங்கிய வால்வெள்ளிகள் நமக்குப் புலப்படுவதில்லை. இவற்றில் பொலிவுமிக்கவை "பெருவால்வெள்ளிகள்" எனப்படுகின்றன. வால்வெள்ளிகளைப் பல ஆளில்லாத விண்கலங்கள் சென்று ஆய்ந்துவருகின்றன. எடுத்துகாட்டாக, ஐரோப்பிய முகமையின் உரோசெட்டா திட்டத்தைக் குறிப்பிடலாம். இத்திட்டம் தான் முதன்முதலில் மனிந்திர விண்கலத்தை ஒரு வால்வெள்ளிக்கு அனுப்பியது. நாசாவின் ஆழ்மொத்தல் விண்கலம் தெம்பெல் 1 வால்வெள்ளியில் உள்ள குழிப்பள்ளத்தை உட்புறக் கூறுபாட்டு ஆராய்ச்சிக்காக தகர்த்தது.
சொற்பிறப்பியல் comet எனும் சொல் பழைய ஆங்கிலச் சொல்லாகிய cometa என்பதில் இருந்து வந்தது. இது இலத்தீனச் சொல்லான comēta அல்லது comētēs என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இதுவும் பண்டைய கிரேக்கச் சொல்லான κομήτης ("wearing long hair") என்பதன் இலத்தீன் வடிவம் ஆகும். ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி'' (ἀστὴρ) κομήτης எனும் ஏற்கெனவே கிரேக்க மொழியில் "நீளமுடி விண்மீன், வால்வெள்ளி" என்ற பொருள்வாய்ந்த சொல்லினைச் சுட்டுகிறது. Κομήτης என்பது κομᾶν ("நீள முடியணிதல்") என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இது κόμη ("தலைமுடி") என்பதில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் "வால்வெள்ளியின் வால்" என்பதாகும்.
வால்வெள்ளிகளுக்கான வானியல் குறியீடு ☄ ஆகும். இது மூன்று மயிரிழை நீட்சிகள் கொண்ட சிறிய வட்டு ஆகும்.
புறநிலைப் பான்மைகள்
உட்கரு
வால்வெள்ளியின் திண்ம அகடு உட்கரு எனப்படுகிறது. உட்கருவில் பாறையும் தூசும் பனிக்கட்டியும் கரிம ஈருயிரகி, கரிம ஓருயிரகி, மீத்தேன், அம்மோனியா போன்ற உறைவளிமங்களும் அமைகின்றன. இவை பிரெடு [விப்புள்] படிமம் உருவாகிய பிறகு தூசிப் பனிப்பந்துகள் எனப்படுகின்றன. உயர்தூசு உள்ளடங்கியவை "பனித் தூசுப் பந்துகள்" எனப்படுகின்றன. 2014 இல் நடத்திய ஆய்வுகள் வழியாக வறுத்த பனிக்கட்டிபோல வால்வெள்ளிகள் அமைதல் அறியப்பட்டது. அதாவது இவற்றின் மேற்பரப்பு கரிமச் சேர்மங்களோடு அடர்பனிப் படிகங்களாலும் உள்பனிப்பகுதி மிகவும் குளிர்ச்சியாகவும் குறைந்த அடர்த்தியுடனும் அமைகின்றன என கூறுகின்றன.
உட்கருவின் மேற்பரப்பு பொதுவாக உலர்ந்த தூசு அல்லது பாறையால் ஆகியிருக்கும். எனவே பனிக்கட்டிகள் பல மீட்டர் தடிப்பான மேலோட்டுக்கு அடியில் பொதிந்திருக்கும். இவை ஏற்கெனவே குறிப்பிட்ட வளிமங்களோடு, பலவகை கரிமச் சேர்மங்களையும் கொண்டுள்ளன. இவற்றில் மெத்தனால், நீரகச் சயனைடு, பார்மால்டிகைடு, எத்தனால், ஈத்தேன் போன்றனவும் மேலும் சிக்கலான நெடுந்தொடர் மூலக்கூறுகள் அமைந்த நீரகக் கரிமங்களும் அமினோ அமிலங்களும் அடங்கும். 2009 இல் நாசாவின் விண்மீன் தூசு விண்கலம் கொணர்ந்த வால்வெள்ளித் தூசில் கிளைசைன் எனும் அமினோ அமிலம் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. புவியில் கண்டறிந்த விண்கற்களைப் பற்றிய நாசாவின் ஆய்வுகளில் இருந்து 2011 ஆகத்து மாதம் வெளியாகிய அறிக்கையில், மரபன் (டி. என். ஏ) முன்மரபன் (ஆர். என். ஏ) ஆகிவற்றின் உட்கூறுகளான அடினைனும் குவானைனும் சார்ந்த பிற கரிமச் சேர்மங்களும் குறுங்கோள்களிலும் விண்கற்களிலும் உருவாகியுள்ளன என முன்மொழியப்பட்டுள்ளது.
வால்வெள்ளி உட்கருவின் வெளிப்பரப்புகள் மிகத் தாழ்ந்த தெறிப்புக் கெழுவை அல்லது எதிர்பலிப்புக் கெழுவைப் பெற்றுள்ளன. சூரியக் குடும்பத்திலேயே இவைதாம் மிகவும் குறைந்த தெறிப்புக் கெழு அமைந்த வான்பொருள்களாகும். கியோட்டோ விண்வெளி ஆய்கலம் ஆலே வால்வெள்ளி உட்கரு தன் மீது விழுந்த ஒளியில் 4% மட்டுமே தெறித்து அனுப்புவதாகவும் ஆழ்விண்வெளி 1 விண்வெளி ஆய்கலம் போரெலி வால்வெள்ளியின் மேற்பரப்பு தன் மீது விழும் ஒளியை 3% அளவுக்குத் தெறித்து அனுப்புவதாகவும் கண்டுபிடித்துள்ளன; நிலக்கீல் தன்மீது விழும் ஒளியை 7% அளவுக்குத் தெறித்து அனுப்புகிறது என்பதோடு இம்மதிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். எனவே, வால்வெள்ளி உட்கருக்களின் கருநிற மேற்பரப்பு சிக்கலான கரிமச் சேர்மங்களைக் கொண்டு அமையலாம். அவற்ரின் மேற்பரப்பில் இருந்து சூரியச் சூடேற்றம் எடைகுறைவான ஆவியாகும் வேதிச் சேர்மங்களை வெளியேற்றி விடுவதால் பெரியக் கரிமச் சேர்மங்கள் மட்டும் எஞ்சுகின்றன. இவை நிலக்கீல் அல்லது பெட்ரோல் அல்லது கரட்டு எண்ணெய் போல அடர்கருப்பாக காணப்படுகின்றன. வால்வெள்ளி மேற்பரப்பின் தாழ் தெறிப்புக் கெழு, அவற்றைச் சூரிய வெப்பத்தை உறிஞ்சவைத்து தாரை உமிழ்வு நிகழ்வை உருவாக்குகிறது.
30 கிமீ ஆரமுள்ள வால்வெள்ளி உட்கருக்களும் நோக்கப்பட்டுள்ளன என்றாலும் அவற்றின் சரியான அளவைக் கண்டுபிடிப்பது அரிதாகும். 322பி/சோகோ வால்வெள்ளீயின் உட்கரு 100 முதல் 200 மீ விட்டத்துடன் அமைகிறது. 100 மீ விட்டத்தை விட சிறிய வால்வெள்ளிகள் நிலவவில்லை எனக் கூருணர்திறக் கருவிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Known comets have been estimated to have an average density of . வால்வெள்ளிகளின் பொருண்மை மிகக் குறைவாக அமைவதால், தம்முள் ஈர்ப்பால் கோளமாக ஒடுங்காமல் பல வடிவங்களில் அமைகின்றன.
புவியண்மைச் சிறுகோள்களில் 6% சிறுகோள்கள் வளிம உமிழ்வு நின்றுவிட்ட காலாவதியான வால்வெள்ளிகளே எனக் கருதப்படுகின்றன, இவற்றில் 14827 கிப்னோசு, 3552 தான் குவிக்சோட் ஆகிய சிறுகோள்களும் அடங்கும்.
உரோசெட்டா, பிளையே விண்கலங்களின் ஆய்வு முடிவுகள், 67பி/சூர்யமோவ்- கெராசிமென்கோ வால்வெள்ளியில் காந்தப்புலம் ஏதும் இல்லையென உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, இந்த வான்பொருள்களின் தொடக்கநிலை உருவாக்கத்தில் காந்தவிசைகள் பங்கேதும் ஆற்றவில்லை என்பது தெளிவாகிறது.
கருப்புறணி
வால்கள்
தாரைகள்
வட்டணைப் பான்மைகள்
சிற்றலைவுநேர வால்வெள்ளி
நெட்டலைவுநேர வால்வெள்ளி
காட்சிக்களம்
காணொலிப்படங்கள்
மேலும் காண்க
ஆல்லே வால்வெள்ளி
ஏல்-பாப் வால்வெள்ளி
மேற்கோள்கள்
நூல்தொகை
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
நிலா முற்ற கட்டுரை
Comets Page at NASA's Solar System Exploration
International Comet Quarterly
How to Make a Model of a Comet audio slideshow – National High Magnetic Field Laboratory
Catalogue of the Solar System Small Bodies Orbital Evolution
Information about comets and asteroids |
1599 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D | சிறுகோள் | சிறுகோள் அல்லது (Asteroid ) என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள் வட்டமையாத கோள்களினும் மிகச் சிறியனவாகிய. வால்வெள்ளியின் பான்மையேதும் இல்லாத, சூரியக் குடும்ப உருவாக்கத்தின்போது கோள்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படாத முற்கோளாக்க வட்டின்(protoplanetary disc) எச்சங்களாய வான்பொருள்கள் ஆகும். இவற்றில் பெரியனவும் கோளினும் சிறியனவும் ஆக அமையும் வான்பொருள்கள் கோள் போன்றவை எனப்பொருள்படும் கோள்போலிகள் (போலிக்கோள்கள்) (Planetoid) எனப்படுகின்றன. மிகப் பெரும்பான்மையான சிறுகோள்கள், சிறுகோள் பட்டைப் (asteroid belt) பகுதியிலேயே காணப்படுகின்றன. இவை செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில், நீள்வட்ட வட்டணையிலேயே உள்ளன. சில சிறுகோள்களுக்கு, சிறுகோள் நிலாக்களும் அமைவதுண்டு. சூரியக் குடும்பத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ள சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மேற்பரப்புகள் வால்வெள்ளிகளைப் போல ஆவியாகும் தன்மையோடு அமைந்திருந்த்தால், இவை சிறுகோள்பட்டையில் உள்ள சிறுகோள்களில் இருந்து பிரித்துணரப்படுகின்றன. இந்தக் கட்டுரை சூரியக் குடும்ப உட்புறச் சிறுகோள்களையும் வியாழனைச் சுற்றிவரும் சிறுகோள்களை மட்டுமே கருதுகிறது.
சிறுகோளுக்கான சரியான வரைவிலக்கணம் தெளிவாக இல்லை. வியாழனின் அரைப் பேரச்சுகளுக்கு(semi-major axes) அப்பாலுள்ள, பனிக்கட்டியினாலான சிறிய கோள்கள், வால்வெள்ளிகள், செண்டார்கள் (Centaur), அல்லது நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பொருள்கள். விண்கற்கள், கோளிடை வெளியிலுள்ள திண்மப் பொருட்கள் ஆகியவை சிறுகோள்களிலும் குறிப்பிடத்தக்க அளவு சிறியவை (1 கிமீ இலும் மிகச் சிறிய விட்டம் உள்ளவை). விண்கற்கள் பொதுவாக பாறைஅளவு அல்லது அதனினும் சிறியவை.
1801 ஆம் ஆண்டுக்குப் பிறகு வானில் பல நுண்ணிய பொருள்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் நடுவிலுள்ள வட்டணைகளில் சூரியனைச் சுற்றி வருவதாகக் கண்டுபிடிக்கபட்டது. அவை சூரியனைச் சுற்றுவதால் அவற்றைக் கோளாகத்தான் மதிக்க வேண்டும். ஆனால் அவை மிகமிகச் சிறியவை. இந்தப் பொருள்கள் புள்ளியாகளாகத் தெரிகின்றன. அவை விண்மீன்களைப் போலவே புள்ளி புள்ளியாகத் தெரிகின்றன. அதனால் அவற்றுக்கு விண்மீண்களைப் போல வடிவமுள்ளவை என்று பொருள்படும் அஸ்டிராய்டு (asteroid) என்ற பெயர் இடப்பட்டது. ஆனால் சில அறிவியலாளர்கள் கோள்களை ஒத்தவை என்ற பொருள்படுகிற பிளானடாய்டு (planetoid) என்ற பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.
இவை சில வேளைகளில் புவியின் வளிமண்டலத்தில் புகுந்து விடுவதுண்டு. அவை காற்றுடன் உராய்ந்து சூடாகி எரிந்து விடும். அவற்றை விண்கொள்ளிகள் (meteors) என்கிறார்கள். சில விண்கொள்ளிகள் முழுவதுமாக எரிந்து விடாமல் அவற்றின் ஒரு பகுதி தரையில் வந்து விழுவதுண்டு. அவற்றை விண்தாது (meteorite) என்பார்கள். அது புவியின் வளிமண்டலத்தில் நுழையாமல் விண்வெளியிலேயே இருந்தால் அதை விண்கல் (meteroid) எனக் குறிப்பிடுகிறார்கள்.
பெரும்பாலான சிறுகோள்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் அமைந்த வட்டணைகளிலும் வியாழனைச் சுற்றி வியாழத் திரோயன்களாகவும் அமைகின்றன. புவியண்மை வாட்டணைச் சிறுகோள்கள் உட்பட, வேறு வட்டணைக் குடும்பச் சிறுகோள்களும் கணிசமான எண்ணிக்கையில் நிலவுகின்றன. இவை அவற்றின் உமிழ்வுக் கதிர்நிரல் பான்மையை வைத்துப் பின்வரும் மூன்று முதன்மைக் குழுக்களாகப் பகுக்கப்படுகின்றன: C வகை, M வகை, S வகை. சி வகை கரிமம் செறிந்ததாகும். எம் வகை பொன்மம் (உலோகம்) செறிந்ததாகும். எஸ் வகை சிலிகேட் கல் செறிந்ததாகும். இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடுகின்றன. இவற்றில் 1000 கிமீ அளவு குறுக்களவு அமைந்தவையும் உண்டு.
இவை விண்வீழ்கற்களில் இருந்தும் வால்வெள்ளிகளில் இருந்தும் வேறுபட்டவை. வால்வெள்ளிகளின் இயைபுக் கூறுகள் பனிக்கட்டியும் தூசும் ஆகும். ஆனால் சிறுகோள்களின் உட்கூறுகள் கனிமங்களாலும் பாறையாலும் ஆனவை. மேலும் சிறுகோள்கள் சூரியனுக்கு அருகாமையில் உருவாகியவை. எனவே இவற்றில் வால்வெள்ளிகளில் உள்ளதைப்போல பனிக்கட்டி அமைவதில்லை. சிறுகோள்களும் விண்வீழ்கற்களும் அளவில் மட்டுமே வேறுபடுகின்றன. விண்வீழ்கற்கள் ஒரு மீட்டரினும் சிறியன. ஆனால் சிறுகோள்கள் ஒரு மீட்டரினும் பெரியவையாகும். கடைசியாக, விண்கற்கள் சிறுகோள் பொருள்களையோ வால்வெள்ளிப் பொருள்களையோ பெற்றிருக்கலாம்.
4 வெசுட்டா எனும் சிறுகோள் மட்டுமே ஒளித்தெறிப்புப் பரப்பைக் கொண்டுள்ளது. எனவே இதைச் சரியான இருப்பில் உள்ளபோது, வெற்றுக்கண்ணாலேயே மிக இருண்ட வானில் பார்க்கலாம். அரிதாக புவியருகே வரும் சிறுகோள்கள் குறுகிய நேரத்துக்கு வெற்றுக்கண்ணுக்குப் புலப்படுவதுண்டு. 2016 மார்ச்சு வரை சிறுகோள் மையம் 1.3 மில்லியன் வான்பொருள்களை உள்புற, வெளிப்புற சூரியக் குடும்பத்தில் பதிவு செய்துள்ளது. இவற்றில் 750,000 பொருள்களுக்குப் போதுமான தகவல்கள் கிடைத்து எண்ணிட்டு பெயரிடப்பட்டுள்ளன.
பொதுமக்களிடம் சிறுகோள்களைப் பற்றிப் பரப்புரை செய்ய ஜூன் 30 ஆம் நாளைச் பன்னாட்டுச் சிறுகோள் நாளாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நாள் உருசியக் குடியர்சில் உள்ள சைபீரியாவைத் துங்குசுக்கா சிறுகோள் 1908 ஜூன் 30 இல் மோதிய நாளை வைத்து ஒவ்வோராண்டும் கொண்டாடப்படுகிறது.
கண்டுபிடிப்பு
கியூசெப்பே பியாசி எனும் வானியலாளரே 1801 ஆம் ஆண்டில், முதன் முதலில் சிறுகோளைக் கண்டறிந்தார். அதன் பெயர் சீரெசு (குறுங்கோள்) ஆகும். இதுவே சிறுகோள்களில் மிகவும் பெரியது. இது முதலில் கோளாகவே கருதப்பட்டது.
ஆனால், இப்போது இது கோள்குறளியாகக் (குறுங்கோளாகக்)(dwarf planet) கருதப்படுகிறது.
வால்வெள்ளிகள், செண்டார்கள், சிறிய நெப்டியுனியக் கடப்புப் பொருள்கள் அடங்க, அனைத்து பிற சிறுகோள்களும் இப்போது சிறிய சூரியக் குடும்பப் பொருள்களாக வகைபடுத்தப்படுகின்றன. இதற்குப் பின்னர் விண்மீன் போன்ற ஒளிப்புள்ளிகளாகத் தோன்றும் பிற சிறுகோள்வட்டு அமையாத வான்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அவற்றின் தோற்ற இயக்கங்களால் விண்மீன்களில் இருந்து வேறுபடுத்தப்பட்டன இதைவைத்து வானியலாளர் வில்லியம் எர்செல் விண்மீன்போலி அல்லது விண்மீன்போன்ற எனும் பொருள்வாய்ந்த "asteroid" எனும் ஆங்கிலச் சொல்லை அறிமுகப்படுத்தினார். இது கிரேக்கச் சொல்லான ἀστεροειδής, அல்லது ஆங்கிலத்தில் asteroeidēs என ஒலிக்கப்படும் 'விண்மீன்போன்ற, விண்மீன்வடிவ' எனும்பொருள் அமைந்த சொல் கொணரப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் astēr என்றால் 'விண்மீன், கோள்' எனப் பொருள்படும். இவற்றுக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைத் தொடக்க காலத்தில், சிறு எனும் முன்னடையில்லாமலே "asteroid" "planet" எனும் இருசொற்களுமே மாற்றிமாற்றி அறிவியல் நடைமுறையில் வழங்கப்பட்டு வந்தன.
வரலாற்று முறைகள்
கடந்த இருநூற்றாண்டுகளில் சிறுகோள் கண்டுபிடிப்பு முறைகள் பேரளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சர் வில்லியம் எர்செல் 1781 இல் வருணனைத் (யுரேனசைத்) திசியசு போடின் விதியால் கண்டுபிடித்ததால், பதினெட்டாம் நூற்றண்டின் கடைசி ஆண்டுகளில் பாரன் பிரான்சு சேவர் வான் சாக் என்பார் 24 வானியலாளர்களை அழைத்துச் சூரியனில் இருந்து 2.8 வானியல் அலகு தொலைவுக்குள் அமைய வாய்ப்புள்ள, கண்டுபிடிக்கத் தவறிய, கோள்களைத் தேடிக் கண்டுபிடிக்கச் சொன்னார். இதற்கு அந்தக் குறிப்பிட்ட ஓரைப் பட்டைக்குள் அமைந்த அனைத்து விண்மீன்களையுமே ஏற்கப்பட்ட மிக அருகிய மங்கலான பொலிவு வரை அட்டவணைப்படுத்திய வான்வரைபடம் தேவையாகும். இதை வரைந்த்தும், பிறகு, பின்வரும் இரவுகளில் இப்பட்டைக்குள் அமையும் இயங்கும் பொருள்களைத் தேடல் வேண்டும். கண்டுபிடிக்கத் தவறிய கோளின் இயக்கம் ஒரு மணி நேரத்தில் 30 நொடி வட்டவில்லாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை நோக்கீட்டாளர்கள் எளிதாக கண்டறியலாம்.
முதல் வான்பொருள், சீரெசு, இந்தக் குழு உறுப்பினர் எவராலும் கண்டறியப்படவில்லை. ஆனால் அது தற்செயலாக, சிசிலியில் உள்ள பலெர்மோ வான்காணக இயக்குநராகிய கியூசெப்பே பியாசியால் 1801 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தாரசு விண்மீன்குழுவில் விண்மீன்போன்ற புதிய வான்பொருளைக் கண்டார். பின் அதன் இடப்பெயர்ச்சியைப் பல இரவுகளாகக் கண்காணித்தார். அதே ஆண்டில் பிறகு, கார்ல் பிரீடுரிக் காசு இந்த நோக்கிடுகளைப் பயன்படுத்தி, இந்த அறியப்படாத பொருளின் வட்டணையைக் கணக்கிட்டார். இது செவ்வாயின் வட்டணைக்கும் வியாழனின் வட்டணைக்கும் இடையில் அமைவதைக் கண்டுபிடித்தார். கியூசெப்பே பியாசி இதற்கு உரோம வேளாண்கடவுளான சீரெசுவின் பெயரை இட்டார்.
பிற மூன்று குறுங்கோள்களான (2 பல்லசுவும் 3 யூனோவும் 4 வெசுட்டாவும்) அடுத்த சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் வெசுட்டா 1807 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த எட்டு ஆண்டுகள் தேட்ட்த்தில் புதிய குறுங்கோள் ஏதும் கிடைக்காமல் போகவே, அனைவரும் மேலும் தொடர்ந்து தேடுவதை நிறுத்திக்கொண்டனர்.
என்றாலும், கார்ல் உலூத்விக் என்கே 1830 இல் தொடங்கி, தொடர்ந்தும் குறுங்கோள் வேட்டையில் ஈடுபட்டார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் கடந்த 38 ஆண்டுகளில் முதன்முதலாக, 5 அசுட்டிரேயியாவைக் கண்டுபிடித்தார். அடுத்த இரண்டாண்டுகட்குள், இவர் 6 கெபேவைக் கண்டுபிடித்தார். இதற்குப் பிறகு, பல வானியலாளர்கள் இத்தேடலில் கலந்துகொண்டனர். எனவே 1945 ஐத் தவிர, ஒவ்வோராண்டும் குறைந்தது ஒரு குறுங்கோளாவது கண்டுபிடிக்கப்பட்டது.. இக்காலக் குறுங்கோள் வேட்டையாளர்களாக ஜான் இரசல் இந்த், அன்னிபேல் தெ கசுபாரிசு, கார்ல் தியோடோர் இராபர்ட் உலூதர், எர்மன் மேயர் சாலமன் கோல்டுசுமித், ழீன் சாகோர்னாக், ஜேம்சு பெர்கூசன், நார்மன் இராபர்ட் போகுசன், எர்னெசுட்டு வில்கெல்ம் இலெபெரச்ட் டெம்பெல், ஜேம்சு கிரைகு வாட்சன், கிறித்தியான் என்றிச் பிரீடுரிக் பீட்டர்சு, அல்போன்சு உலூயிசு நிகோலசு போரெலி, யோகான் பாலிசா, பவுல் என்றி, பிராசுபர் என்றி எனும் என்றி உடன்பிறப்புகள், ஆகத்தே சார்லோயிசு ஆகியோரைக் குறிப்பிடலாம்.
மேக்சு வுல்ஃப் என்பார் 1891இல் முன்னோடியாக குறுங்கோள்களைக் கண்டுபிடிக்கும் வானொளிப்படவியலை அறிமுகப்படுத்தினார். இம்முறைய்ல் ஒளிப்பட்த்தட்டில் குறுங்கோள்களின் இயக்கம் வெண்கீறைகளாக அமையும். பழைய கட்புல நோக்கீட்டு முறையை விட இது குறுங்கோள்களின் கண்டுபிடிப்பு வீதத்தை வியப்புறும் வகையில் கூட்டியது: வுல்ஃப் மட்டுமே 323 புரூசியாவில் தொடங்கி 248 குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். மேலும் அதுவரையில் ஏறத்தாழ, 300 குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மேலும் பல இருக்க வாய்ப்பிருந்தாலுக் அவை வானப் புழுக்கள் எனக்கொண்டு வானியலாளர்கள் அவற்றின் கண்டுபிடிப்பில் ஆர்வம் கொள்லவில்லை. இச்சொற்றொடரைக் கூறியவர் எடுவார்டு சூயசு ஆவார் எனக் கருதப்படுகிறது. மேலும் ஒரு நூற்றாண்டு கழிந்தபிறகும், சில ஆயிரம் குறுங்கோள்களே கண்டுபிடிக்கப்பட்டு எண்ணும் பெயரும் இடப்பட்டுள்ளன.
1900 களின் முறைகளும் புத்தியல் கால அறிக்கைகளும்
குறுங்கோள்களின் கண்டுபிடிப்பு 1998 வரை நான்கு படிநிலை நிகழ்வால் கண்ட்றியப்பட்டன: முதலில் வானின் ஒருபகுதி அகல்புலத் தொலைநோக்கியால் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இவை வான்வரைபடங்கள் எனவும் அழைக்கப்பட்டன. இவை ஒருமணி நேர இடைவெளிகளில் எடுக்கப்பட்டன. பல நாட்கள் தொடர்ந்து இதுபோல ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இரண்டாம் படிநிலையாக, ஒரே வான்பகுதி சார்ந்த இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் ஒரு பருநோக்கியால் நோக்கப்பட்டன. சூரியனை வட்டணையில் சுற்றிவரும் எந்த வொரு வான்பொருளும் தொடர்ந்த இரு ஒளிப்படங்களில் சற்றே நகர்ந்திருக்கம். பருநோக்கியில் அந்த வான்பொருளின் தோற்றம் விண்மீன்களின் பின்னணியில் மெல்ல மிதப்பதுபோல அமையும். மூன்றாம் படிநிலையாக, அப்படி நகரும் வான்பொருள் இனங்காணப்படும். பின்னர் அர்ஹன் இருப்பு துல்லியமாக, இலக்கவியல் நுண்ணோக்கியால் அளக்கப்படும். இந்த வான்பொருளின் இருப்பு விண்மீன் இருப்புகள் சார்ந்து அளக்கப்படும்.
முதல் மூன்று படிநிலைகள் மட்டுமே குறுங்கோள் கண்டுபிடிப்பை முழுமையாக்கி உறுதிபடுத்தாது: நோக்கீட்டாளர் ஒப்ர் ஒதுக்கீட்டைட்த்தை மட்டுமே கண்டுள்ளார். இதற்கு தற்காலிகமாக, கண்டுபிடித்த ஆண்டையும் அரைமாத கண்டுபிப்பு கடிதத்தையும் இறுதியாக கண்டுபிடிப்பின் வரிசைமுறை எண்ணையும் வைத்து ஒரு பெயரீடு தரப்படும் (எ. கா.: 1998 FJ|74).
கடைசிப் படிநிலையாக, இதன் இருப்புகளும் நோக்கீட்டு நேரமும் சிறுகோள் மையத்துக்கு அனுப்ப்ப்படும். அங்கு ஒற்றை வட்டணையில் தரப்பட்ட முந்தiyய ஒதுக்கீட்டிடங்களுடன் ஒப்பிட்டு கணினி நிரல்கள் அவற்ரில் எந்த இருப்பில் இந்த புது இருப்பை வைப்பது என்பதைத் தீர்மானிக்கும்.அப்போது இதற்கு ஓர் அட்டவணை எண் தரப்படும். பின்னர் இந்த வான்பொருளின் வட்டணையைக் கணக்கிட்டு, இந்த வான்பொருளுக்குப் பெயரிடும் உரிமை பன்னாட்டு வானியல் ஒன்றிய ஒப்புதலுடன் கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்படும்.
கணினிவழி முறைகள்
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பல்வேறு சிறுகோள்களின் நிகழ்படத் தொகுப்பு
முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுலவி புலர்ச்சி, சி. ஜெயபாரதன் |
1600 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D | விண்மீன் | விண்மீன், உடு, நாள்மீன், அல்லது நட்சத்திரம் (star) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு வளிகளாலும் அயனியங்களினாலும் ஆக்கப்பட்டுள்ளன. பூமிக்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் ஞாயிறு ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும். பூமிக்கு அருகிலுள்ள நட்சத்திரம் கதிரவன் ஆகும். எனினும் ஞாயிறு பூமிக்கு மிக அண்மையில் உள்ளதால் மற்றைய விண்மீன்களைப் போலல்லாது வட்டமான தட்டுப்போல் தெரிகிறதோடு மட்டுமன்றி பகலில் வெளிச்சமும் தருகிறது. அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது விண்மீன்களில் இருந்து எராளமான ஆற்றல் வெளிவிடப்படுன்றது; பொதுவாக அனைத்து விண்மீன்களும் ஒளி, வெப்பம், புற ஊதாக் கதிர்கள், ஊடு (எக்சு ரே) - கதிர்கள் மற்றும் வேறு பல கதிர் வீச்சுக்களை உற்பத்தி செய்கின்றன. உடுக்களில் அதிகமாக ஐதரசனும், ஈலியமுமே காணப்படுகின்றது. அங்கு ஐதரசன் அணுக்கரு இணைவு மூலம் ஈலியமாக மாறும் செயற்பாடு இடம்பெறும்.
அண்டத்தில் பல பில்லியன் கணக்கான விண்மீன் பேரடைகள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு விண்மீன் பேரடையிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன.
சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புரொக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் ஆகும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,00,00,00,00,00,00,00,00,00,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியமான உடுக்கள் அனைத்தும் உடுத்தொகுதிகளாகவும், கதிர்வங்களாகவும் (asterisms) குழுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மிகத் தெளிவான இரவு வானில் ஒரு மனிதனுடைய வெற்றுக்கண்ணுக்கு 600 - 3,000 தென்படும்.
விண்மீன்கள் தம் வாழ்க்கையின் இறுதி நிலையை அடையும் போது ஈலியத்தை காபன், ஒட்சிசன் போன்ற வேறு சில பாரிய இரசாயன மூலகங்களாக மாற்ற முற்படும். இதன்போது அணுக்கரு இணைவு வினை அளவுக்கு அதிகமான ஆற்றலை உற்பத்தியாக்கும். இந்த ஆற்றல் விண்மீனை மிகவும் வெப்பமாக்கச் செய்யும். விண்மீன்களால் உற்பத்தி செய்யப்பட்ட சக்தி கதிர்வீச்சாக மாறிச்செல்லும். இவ்வாரு மாறிச்செல்லும் சக்தி அல்லது ஆற்றல் மின்காந்தக் கதிவீச்சு என அழைக்கப்படும்.
விண்மீனின் வாழ்க்கை
.
விண்மீன்கள் தம் வாழ்க்கையில் முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன. அவை,
ஒண்முகிலிலிருந்து முகிழ்மீன் உருவாதல்
நிலையான விண்மீனாக மாறுதல்
தளர்தல்
நெபுலாவிலிருந்து முகிழ் மீன் உருவாதல்
விண்மீன் உருவாதல்
விண்மீன்களின் பிறப்பு விண்மீன் பேரடைகளினால் அண்டத்தில் சிதற விடப்படும் பாரிய மூலக்கூற்று முகில்களில் இருந்து ஆரம்பமாகின்றது. இப்பாரிய மூலக்கூற்று முகில்கள் நெபுலா (nebulae) என அழைக்கப்படும். இந்த நெபுலாக்கள் ஈர்ப்புவிசையினால் தாமாகவே நீண்டு ஒடுங்குகின்றன. அவை சிறியதாய் வந்தபின் வேகமாக சுழல்வதோடு மட்டுமின்றி வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றன. இதற்கு கோண உந்த அழிவின்மை (Conservation of angular momentum) என்பதே காரணம் ஆகும். இவ்வாறே ஒரு புதிய விண்மீன் உருவாகின்றது. ஒரு புதிய விண்மீனில் அழுத்தம் (Pressure) உருவாதலே விண்மீனுடைய வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. இப்பருவம் முகிழ்மீன் (Protostar) என அழைக்கப்படுகின்றது.
நெபுலாக்கள்
நெபுலாக்கள் பிரதானமாக ஐதரசன்,ஈலியம் முதலான வாயுக்களைக் கொண்டதாகவும், பல ஒளியாண்டுகள் நீள அகலம் கொண்டதாயுமிருக்கும்.
நிலையான விண்மீனாதல்
ஒரு முகிழ்மீன் ஒன்று அன்னச்சூழவுள்ள பாரிய மூலக்கூற்று முகில்களின் மிகுதிகளை வைத்துத் தன் பருமனை அதிகரிக்க முயற்சிக்கும் இப்பருவமே நிலையான விண்மீன் எனப்படும். முகிழ்மீன் ஒரு நிலையான விண்மீனாவதற்கு அதன் இரு முக்கிய விசைகளும் சமன்பட வேண்டும். முகிழ்மீன் தன் சுய ஈர்ப்பு விசையால் சுருங்கத் தொடங்கும். முகிழ்மீனில் உள்ள ஐதரசன் அணுக்கள் இணைந்து ஈலியம் அணுக்களாக மாறும் போது பெருமளவு ஆற்றல் உண்டாகி முகிழ்மீன் விரிவடையவும் முயற்சிக்கும். சில கோடி ஆண்டுகளில் இரண்டு விசைகளும் சமமானவுடன் அளவில் பெருமளவு மாற்றம் ஏற்படாது. அவ் விண்மீன் பில்லியன் வருடங்களாக ஐதரசனை ஈலியமாக மாற்றும் செயற்பாட்டை மேற்கொண்டு ஒளியை வெளிவிட்டுக்கொண்டே இருக்கும். விண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் ஐதரசன் அணுக்கள் தீரும் வரை இதே அளவு நீடிக்கும். விசை சமன்பட்டதில் இருந்து இந்நிலையை அடையும் வரையே நிலையான விண்மீனாக இருக்க முடியும். சூரியன் ஒரு நிலையான விண்மீன் ஆகும்.
தளர்ச்சியும் அழிவும்
விண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு விழுக்காடு ஐதரசன் அணுக்கள் தீர்ந்த பிறகு விண்மீனின் வீங்கும் ஆற்றல் குறைவதால் சுய ஈர்ப்பு விசையின் மூலம் சுருங்கும் ஆற்றல் அதிகரிக்கும். இவ்வாறு இது சுருங்கும் போது அந்த விண்மீனின் மொத்த எடையை பொருத்து அது பல்வேறு நிலைகளை அடைகிறது. அவை,
சூரியன் அளவுக்கு எடையுள்ள விண்மீன்கள் சில கோடி வருடங்கள் சிவப்பு அரக்கனாக இருந்து விட்டு பின்பு வெண் குறுமீனாக மாறிவிடும்.
அதுவே சூரியன் அளவுக்கு எடையுள்ள விண்மீன் இரட்டை விண்மீன்களில் ஒன்றாக இருந்தால் அதில் குறுமீன் வெடிப்பு ஏற்பட்டு பிற்பாடு வெண் குறுமீனாக மாறிவிடும்.
சூரியனை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு எடையுள்ள விண்மீன்கள் கருங்குழியாக மாறிவிடும்.
சூரியனை விட ஐந்தில் இருந்து எட்டு மடங்கு எடையுள்ள விண்மீன்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பை நிகழ்த்திவிட்டு நொதுமி விண்மீனாக மாறிவிடும்.
சூரியனை விட பத்தில் இருந்து நாற்பது மடங்கு எடையுள்ள விண்மீன்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பை நிகழ்த்திவிட்டு கருங்குழியாக மாறிவிடும்.
எனினும் பொதுவாக சூரியன் போன்ற விண்மீன்களின் தளர்ச்சியை எடுத்துக்கொண்டால்; ஐதரசன் தீர்ந்து கொண்டு செல்ல ஈலியம் அதிகரித்துச் செல்லும். இறுதியில் ஈலியம் விண்மீனின் உள் அகணிவரை (Core) நீடிக்கும். இதன் போது விண்மீனினுடை வெப்பநிலை மேலும் பலமடங்காக அதிகரிக்க அதனுடைய பருமனும் பலமடங்காக (250 மடங்கு) அதிகரிக்கும். உதாரணமாக நம் சூரியன் செவ்வாய்க் கோள் இருக்கும் இடம் வரை அதிகரிக்கும். இந்நிலை சிவப்பு அரக்கன் (Red giant) அல்லது செவ்வசுரன் என அழைக்கப்படும். சில காலத்தின் பின் சிவப்பு அரக்கன் வெடித்துச் சிதறி அகிலத்தில் விடப்படும். இவ்வாறு வெடித்துச் சிதறிய செவ்வசுரனின் வெளிப்பகுதி கோள் நெபுலா (planetary nebula) என அழைக்கப்படும். இக்கோள் நெபுலா உதிர்ந்து போய் ஒரு சிறிய விண்மீனாக தோற்றம் பெறுகின்றது. அச்சிறு உடுவின் மத்திய பகுதி வெண் குறுமீன் (White dwarf) அல்லது வெண்ணிறக் குள்ளன் என அழைக்கப்படும். இவை பல ஆண்டுகளுக்குப் பின் மிகவும் குளிர்மையாக இருக்கும். இறுதியில் அவை கறுப்பு நிறமாக வந்து எவ்விதமான ஆற்றலையும் வெளிவிடாது. இதற்கு கருப்பு விண்மீன் (Black dwarf) அல்லது கருங்குள்ளன் என அழைக்கப்படும். இவ்வாறு இல்லாமல் சூரியனை விட பருமனில் அதிகமாய் உள்ள விண்மீன்கள் மேலே குறிப்பிட்டது போன்று, சூரியன் போன்ற விண்மீன்களின் பரிணாமப் பாதையில் அன்றி வெவ்வேறு பரிணாமப் பாதைகளைக் கொண்டுள்ளன.
கருப்பு விண்மீன்கள்
கருங்குழியாக மாறிய விண்மீன்கள் அண்டத்தில் குறிப்பிட்ட அளவில் அறியப்பட்டுள்ளன. காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் தற்போதைய கருப்பு விண்மீன்கள் இருபத்து மூன்று விழுக்காடு உள்ளன. இதுவே இன்னும் 1,300 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் அறுபத்து மூன்று விழுக்காடாக மாறிவிடும்.
தோற்றம்
பிரகாசம்
கி.மு 150 ஆம் ஆண்டில் கிரேக்க வானியலாளரான இப்பார்க்கசு உடுக்களின் பிரகாசத்தை வைத்து அவற்றை ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இதற்கு மேக்னியூட் அளவு முறை என்று பெயர்.
மேற்கோள்கள்
மூல நூல்
வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், .
வெளி இணைப்பு
கணேஷ் அரவிந்த் எழுதிய நட்சத்திரமே...! நட்சத்திரமே...!! கட்டுரை
தமிழ் மொழி விண்வெளி தகவல்
விண்மீன்கள்
வானியல் |
1613 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | விளையாட்டுப் பொருட்கள் பட்டியல் | லெகோ (LEGO)
பார்பி பொம்மை (Barbie Doll)
டெடி கரடிக்குட்டி (Teddy Bear)
ரூபிக்ஸ் கியூப் (Rubik's Cube)
போளை (Marbles)
தொலைக் கட்டுப்பாட்டு விளையாட்டுப் பொருட்கள்
விளையாட்டு ஆயுதங்கள்
விளையாட்டு இசைக் கருவிகள்
பம்பரம்
மாதிரித் தொடர்வண்டி
பந்து
பொம்மை
பொம்மை வீடு
ஆடு குதிரை
விளையாட்டுப் பொருட்கள் |
1614 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B | லெகோ | லெகோ என்பது, டென்மார்க்கைச் சேர்ந்த விளையாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். பிளாஸ்டிக்கினாலான ஒன்றுடனொன்று பொருத்தக்கூடிய குற்றிகளைத் தயாரிப்பதன் மூலம் பெரிதும் அறியப்பட்ட நிறுவனம் இது.
"லெகோ" எதிர் "லெகோஸ்"
லெகொ நிறுவனத்தின் பிரபல விளையாட்டுப்பொருளான பொருத்தும் பிளஸ்டிக்குற்றிகளைக் குறிப்பதற்கும் பலர் "லெகோ" அல்லது "லெகோக்கள்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமன்றி, வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இது போன்ற குற்றிகளையும் இச் சொற்களாலேயே குறித்து வருகிறார்கள். ஆனால் லெகோ நிறுவனம், தங்களுடைய வணிகப் பெயர் பொதுப்பெயாராகி வருவதை விரும்பவில்லை.
1970 மற்றும் 1980 களில், இந்நிறுவனத்தின் உற்பத்திப் பட்டியல்களில், தங்கள் உற்பத்தியை "லெகோ குற்றிகள்" அல்லது "லெகொ விளையாட்டுப் பொருட்கள்" என அழைக்கும்படியும், "லெகோக்கள்" என அழைக்கவேண்டாமெனவும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
லெகோவின் வரலாறு
"லெகோ" இன்றிருப்பதைப்போல், எக்காலத்திலும் உயர்தரமான பொருத்தும் குற்றிகளாக இருந்ததென்று சொல்லிவிடமுடியாது. டென்மார்க்கிலுள்ள, பில்லண்ட் என்னுமிடத்தில், ஓலே கிர்க் கிறிஸ்டியன்சென் என்னும் ஏழைத் தச்சன் ஒருவரின் பட்டடையில் மிக எளிமையாக இது ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் புதுமையான குடும்பத் தொழில் இன்று வளர்ந்து, உலகின் மிகவும் மதிக்கப்படுகின்ற விளையாட்டுப் பொருள் நிறுவனங்களில் ஒன்றாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர் 1934ல் கிறிஸ்டியன்சென்னால் உருவாக்கப்பட்டது. "நன்றாக விளையாடு" என்னும் பொருளையுடைய, டேனிஷ் மொழித் தொடரான leg godt என்பதிலிருந்து பெறப்பட்டதே "LEGO" என்னும் வணிகப் பெயர்.
விளையாட்டுப் பொருட்கள்
பொம்மை வகைக்குறிகள்
da:LEGO |
1615 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF | டெடி கரடிக்குட்டி | டெடி கரடிக்குட்டி (Teddy bear) என்பது குழந்தைகளுக்கான பஞ்சாலான ஒரு விளையாட்டுப் பொருளாகும். இது குழந்தைகளை மகிழ்விக்கப் பயன்படுகிறது. உலகின் முதல் டெடி கரடி அருங்காட்சியகமானது இங்கிலாந்தில் 1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டெடி என்ற பெயர் அமெரிக்க குடியரசுத் தலைவரான தியோடோர் ரூஸ்வெல்ட் அவர்களின் நினைவாகப் பெயரிடப்பட்டது. அவரது செல்லப்பெயர் டெடி என்பதாகும்.
குழந்தை விளையாட்டுப் பொருட்கள் |
1618 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D | ரூபிக்கின் கனசதுரம் | ரூபிக்கின் கனசதுரம் (ரூபிக்ஸ் கியூப், Rubik's Cube) அங்கேரிய சிற்பியும், கட்டிடக்கலைப் பேராசிரியருமான ஏர்னோ ரூபிக் என்பவரால் 1974ல் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பொறிமுறைப் புதிர் ஆகும். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்பது சிறு சதுரங்கள், ஆறு வித்தியாசமான வண்ணங்களால் இது உருவாக்கப்பட்டது. பொதுவாக இதில் வெள்ளை வண்ணத்தின் எதிர்ப்பக்கம் மஞ்சள் வன்ணமும், நீல வண்ணத்தின் எதிர்ப்பக்கம் பச்சை வண்ணமும், சிகப்பு வண்ணத்தின் எதிர்ப்பக்கம் ஆரஞ்சு வண்ணமும் அமைந்திருக்கும்.
தொடக்கத்தில் இது மேஜிக் கியூப் என்றே அழைக்கப்பட்டது. பிறகு 1980-ம் ஆண்டில் ‘ரூபிக்ஸ் கியூப்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஜனவரி 2009 வரை 35 கோடிக்கு மேற்பட்ட ரூபிக் கியூப்புகள் உலகம் முழுதும் விற்பனையாகியிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டும் பொம்மைப் பொருளுமாகும்.
ஹங்கேரியில் 1982 ஆம் ஆண்டு முதன்முதலாக ரூபிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மின்ஹதாய் என்பவர் 22.95 நொடிகளில் ரூபிக் கியூபுக்குத் தீர்வு கண்டு சாதனை படைத்தார்.
2003 ஆம் ஆண்டிலிருந்து ஹங்கேரியில் தொடர்ச்சியாக உலக ரூபிக் வாகையர் போட்டிகளை ரூபிக் நிறுவனம் நடத்தி வருகிறது. 2007-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திபாட் ஜாக்னாட் என்பவர் ரூபி புதிரைச் சரி செய்து புதிய உலகச் சாதனை செய்தார். 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் (9.86 நொடிகள்) இந்தச் சாதனையைப் படைத்தார்.
1980-களில் ரூபிக் கியூப் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது. இதன் வெளியீட்டுக்குச் சற்றுப் பின்னர், Rubik's Revenge, ஒரு 4 x 4 x 4 பதிப்பு உட்பட இதையொத்த புதிர்கள் பல ரூபிக்கினாலும் பிறராலும் வெளியிடப்பட்டன. 2 x 2 x 2 மற்றும் 5 x 5 x 5 அளவுக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. அவை முறையே சட்டைப்பைக் குற்றி, பேராசிரியருடைய குற்றி என அறியப்பட்டன. பிரமிட் வடிவ பிரமிங்க்ஸ் ™, போன்ற பல்வேறுவடிவங்களிலும் கூட இவை வெளிவந்தன.
"Rubik's Cube" செவன் டவுன்சு லிட். இன் வணிகக்குறியாகும். ஏர்னோ ரூபிக், இதன் இயங்கு முறைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
உலகப் புகழ் "ரூபிக்"
விளையாட்டுப் பொருட்கள்
புதிர்கள் |
1626 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D | மொழிகளும், மொழிக் குடும்பங்களும் | பெரும்பாலான மொழிகள், ஏதாவதொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எல்லாம் ஒரு பொதுமொழியிலிருந்தே தோன்றின. இத்தகைய பொதுமொழிகள் பல இன்று வழக்கிழந்து போய்விட்டன. அவற்றிலிருந்து தோன்றித் தற்போது வழக்கிலுள்ள மொழிகள் மூலமாகவே மேற்படி குடும்பப் பொது மொழிகளின் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது.
மொழிக்குடும்பங்கள், மேலும் பல துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளன. அவை "கிளைகள்" எனப்படுகின்றன. மொழிக்குடும்ப வரலாறு பொதுவாக ஒரு "மர"மாகச் சித்தரிக்கப்படுவதாலேயே மூலத்திலிருந்து பிரிந்தவை கிளைகள் எனப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு கிளையின் பொது மூல மொழி, அவற்றின் "முதல்நிலை மொழி" என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாகத் திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமொழி முதல்நிலைத் திராவிட மொழி எனவும், இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழி முதல்நிலை இந்தோ-ஐரோப்பிய மொழி எனவும் குறிப்பிடப் படுகின்றன.
இயற்கை மொழிகள்
முக்கிய மொழிக் குடும்பங்கள் (குடும்பங்களிடையேயான தொடர்புகளைக் கருதாது, புவியியல் ரீதியில் வகைப்படுத்தப்பட்டவை
இங்கே "புல்லட்" குறிகளுடன் தரப்பட்டுள்ளவை அறியப்பட்ட மொழிக்குடும்பங்களின் பெயர்களாகும். அவற்றின் மேலே தரப்பட்டுள்ள புவியியல் ரீதியான தலைப்புக்கள் புரிந்துகொள்வதற்கு எளிதாக சிறு பகுதிகளாகப் பிரிக்கும் வசதிக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மேற்படி மொழிகளடங்கிய பெருங் குடும்பங்களாகக் கொள்ளப்படக்கூடாது.
ஆபிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் மொழிக்குடும்பங்கள்
ஆபிரிக்க-ஆசிய மொழிகள்
நைகர்-கொங்கோ மொழிகள்
ஐரோப்பா, வட ஆசியா,மேற்காசியா மற்றும் தென்னாசியாவைச் சேர்ந்த மொழிகள்
இந்தோ-ஐரோப்பிய மொழிகள்
காக்கேசிய மொழிகள் (பொதுவாக இது வட காக்கேசிய மொழிகள், தென் காக்கேசிய மொழிகள் என இரு வேறு மொழிக்குடும்பங்களாகவும் கருதப்படுவதுண்டு).
அல்ட்டாயிக் மொழிகள்
உராலிக் மொழிகள்
யுக்காகிர் மொழிகள் (சிலர் இதனை யுராலிக் குடும்பத்தில் சேர்ப்பர்.)
சுக்கோத்கோ-கம்சத்கான் மொழிகள்
யெனிசேய்-ஒஸ்த்யக் மொழிகள்
திராவிட மொழிகள் (சிலர் இதனை பெரிய எலாமோ-திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ளடக்குவார்கள்.)
அந்தமான் மொழிகள்
கிழக்காசியா, தென்கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த மொழிக்குடும்பங்கள்
ஆத்திரோஆசிய மொழிகள்
ஆத்திரோனீசியன் (மலாயோ-பாலினீசியன்) மொழிகள்
சீன-திபெத்திய மொழிகள் (சிலர் தாய்-கடை மற்றும் இமொங்-மியென் மொழிகளையும் இக் குடும்பத்துள் சேர்த்துக்கொள்வர்)
தாய் மொழிகள்
இமொங்-மியென் மொழிகள்
ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மொழிகள் (பல் குடும்பங்கள்)
பப்புவன் மொழிகள்
அமெரிக்காக்களைச் சேர்ந்த மொழிகள்
சுதேசி அமெரிக்க மொழிகள் (பல் குடும்பங்கள்)
துபி மொழிகள்
எசுகிமோ-அலெயுத் மொழிகள்
முன்மொழியப்பட்டுள்ள மொழிப் பெருங்குடும்பங்கள்
யூரல்-அல்ட்டாயிக் மொழிகள்
முதல்நிலை பொண்டிக் மொழிகள்
ஐபீரிய-காக்கேசிய மொழிகள்
இந்தோ-ஐரோப்பிய மொழிகளை உள்ளடக்கக்கூடிய பெருங்குடும்பங்கள்
இயூரேசியாட்டிக்
நொசுற்றேசியன்
நொஸ்ட்ராட்டிக் மொழிகள்
முதல்நிலை-உலக மொழிகள்
கிரயோல் மொழிகள், பிட்கின்கள் மற்றும் வணிக மொழிகள்
பிசுலாமா
சினூக்
அவாய் கிரயோல்
எயிட்டிய கிரயோல்
கிரி மோட்டு
பிசின் (மொழி)
சங்கோ
தோக் பிசின்
தனித்த மொழிகள்
சைகை மொழிகள்
அமெரிக்க சைகை மொழி
ஒசுலான், அவுத்திரேலியாவில் பயன்படுத்தப்படுவது.
பிரித்தானியச் சைகை மொழி (BSL)
ஒல்லாந்தச் சைகை மொழி (NGT)
கியூபெக் சைகை மொழி (LSQ)
பிரான்சிய சைகை மொழி (LSF)
செருமானியச் சைகை மொழி (DGS)
செருமானிய-சுவிசு சைகை மொழி (DSGS)
ஐரிசு சைகை மொழி (ISL)
நிக்கராகுவா சைகை மொழி (LSN)
தாய்வானியச் சைகை மொழி (TSL)
விசேட ஆர்வம் சார்ந்த ஏனைய இயற்கை மொழிகள்
அழிவை எதிர்நோக்கும் மொழிகள்
இல்லாதொழிந்த மொழிகள்
இயற்கை மொழிகளல்லாத மொழிகள்
உருவாக்கப்பட்ட மொழிகள்
மொழிகள் மற்றும் மொழிக் குடும்பங்கள் பற்றிய மேலதிக தகவல்கள்
http://www.ethnologue.com/web.asp
மொழிக் குடும்பங்கள்
வகைப்படுத்தல் |
1627 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | இந்திய-ஐரோப்பிய மொழிகள் | இந்திய-ஐரோப்பிய மொழிகள் (Indo-European languages) சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக்குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக்குடும்பத்தில் பிரபல மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிய மொழி, பிரெஞ்சு மொழி, போர்த்துக்கீசம், ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி, ரஷ்ய மொழி, பார்சி, ஹிந்தி, உருது என்பனவும் அடங்குவன.
மேற்படி தொடர்பு பற்றிய எடுகோள், வில்லியம் ஜோன்ஸ் என்னும் மொழியியலறிஞரால் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது. இவர் அக்காலத்தில் மிகத்தொன்மையான மொழிகளாகக் கருதப்பட்ட, இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழி என்பவற்றுக்கிடையில் ஒற்றுமைகள் இருப்பதைக் கவனித்தார். பிரான்ஸ் பொப் என்பவரின் மேற்சொன்ன நான்கு மொழிகள் மற்றும் பல பழைய மொழிகள் தொடர்பான முறையான ஒப்பீட்டு ஆய்வுகள், மேற்படி கோட்பாட்டுக்குச் சான்றாக அமைந்தன. 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இக் குழுவை "இந்தோ-ஜெர்மானிய மொழிகள்" அல்லது "ஆரியம்" என அழைத்துவந்தனர். பின்னர் மேற்படி தொடர்பு ஐரோப்பாவின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும், இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக சமஸ்கிருதத்துக்கும், லித்துவேனிய மொழிகளுக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கூறலாம்.
இவற்றுக்குப் பொதுவான முதல் மொழி முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழி (PIE) என அழைக்கப்படுகிறது. இது தோற்றம் பெற்ற புவியியல் அமைவிடம் ("Urheimat" என அழைக்கப்படுகின்றது), தொடர்பாகக் கருத்துவேறுபாடு நிலவுகிறது. ஆர்மீனியாவை உள்ளடக்கிய கருங்கடலின் வடக்கு அல்லது மேற்குப் பகுதிகள் அத்தகைய அமைவிடத்துக்காக முன்மொழியப்படும் முக்கிய இடமாகும்.
இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் துணைக் குழுக்களுள் பின்வருவன அடங்கும்.
இந்திய-ஈரானிய மொழிகள்
இத்தாலிய மொழிகள் (லத்தீன் மொழி, அதன் வழிவந்தவை, ரோமன்ஸ் மொழிகள் என்பன இதில் அடங்கும்)
ஜெர்மானிய மொழிகள் (ஆங்கிலம் அடங்கலாக)
செல்ட்டிய மொழிகள்
பால்ட்டிய மொழிகள்
சிலாவிய மொழிகள்
அல்பானிய மொழி, இது பெரும்பாலும், இல்லீரிய மொழிகள் துணைக்குழுவைச் சேர்ந்த பல வழக்கொழிந்த மொழிகளுள் வைக்கப்படுகிறது.
தராசிய மொழி (வழக்கொழிந்தது)
டாசிய மொழி (வழக்கொழிந்தது)
பிரிஜிய மொழி (பண்டைய பிரிஜியாவின் வழக்கொழிந்த மொழி)
அனத்தோலிய மொழிகள் (வழக்கொழிந்தது, ஹிட்டைடின் மொழி இவற்றுள் குறிப்பிடத்தக்கது.)
தொச்சாரிய மொழிகள் (தொச்சாரியர்களின் வழக்கொழிந்த மொழி)
கிரேக்க மொழிகள்
அருமானிய மொழி
மேலும் காண்க
மொழிகளும், மொழிக் குடும்பங்களும்
ஓகஸ்ட் ஷ்லீச்செர், (A Compendium of the Comparative Grammar of the Indo-European Languages) (1861/62)
இந்தோ-ஐரோப்பிய வேர்களின் பட்டியல்
வெளியிணைப்புகள்
Indo-European Roots, from the American Heritage Dictionary.
Indo-European Documentation Centre at the University of Texas
Say something in Proto-Indo-European (by Geoffrey Sampson)
மொழிக் குடும்பங்கள்
இந்திய-ஐரோப்பிய மொழிகள் |
1628 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | இந்திய-ஈரானிய மொழிகள் | இந்தோ-ஈரானிய மொழிகள் வழக்கிலிருக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுள், கிழக்கு எல்லையில் உள்ளவையாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் சார்ந்த மிகப் பழைய பதிவுகளில் இம் மொழிகளுக்கு நல்ல இடம் உண்டு. யூரல்களின் தென்பகுதியைச் சூழவுள்ள பகுதிகளில் இவை தோற்றம் பெற்றன. இவர்கள் கஸ்பியன் கடலின் கிழக்கிலும், தெற்கிலும் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இடங்களில் குடியேறியபோது மொழி பிரிவடைந்தது. இவர்களுடைய பரவல் தேரின் கண்டுபிடிப்புடன் தொடர்புபட்டிருப்பதுபோல் தெரிகிறது.
முக்கிய இந்தோ-ஆரிய மொழிகள்:
சமஸ்கிருதம்
அஸ்ஸாமிய மொழி
வங்காள மொழி
குஜராத்தி மொழி
ஹிந்தி மொழி
மைதிலி மொழி
மராட்டி மொழி
நேபாளி மொழி
ஒரியா மொழி
பாளி
பஞ்சாபி மொழி
உரோமானி மொழி - ஜிப்சிகளின் மொழி
சிந்தி மொழி
திவெயி மொழி
சிங்கள மொழி
உருது
முக்கிய தார்டிக் மொழிகள்:
தாமேலி மொழி
தொமாக்கி மொழி
கவார்-பாட்டி மொழி
கலாசா மொழி
காஷ்மீரி மொழி
கோவார் மொழி
கோஹிஸ்தானி மொழி
நிங்கலாமி மொழி
பஷாயி மொழி
பலூரா மொழி
ஷினா மொழி
ஷுமாஸ்தி மொழி
முக்கிய நூரிஸ்தானி மொழிகள்:
அஷ்குன் மொழி
கம்விரி மொழி
கதி மொழி (பஷ்காலி)
பிரசுனி மொழி (வசி-வெரி)
ட்ரெகாமி மொழி
வைகாலி மொழி (கலஷா-ஆலா)
முக்கிய ஈரானிய மொழிகள்:
பாரசீக மொழி
அவெஸ்தான் மொழி (வழக்கொழிந்தது)
பஹ்லவி மொழி - "மத்திய பாரசீகம்"
பாஷ்தூ மொழி
டாரி மொழி
தாஜிக் மொழி
ஒஸ்ஸிட்டிக் மொழி
குர்தி மொழி
பலூச்சி மொழி
தாலிஷ் மொழி
தாத் மொழி
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
மொழிகளும், மொழிக் குடும்பங்களும்
மேற்கோள்கள்
மொழிக் குடும்பங்கள்
இந்திய-ஈரானிய மொழிகள் |
1629 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF | பாளி | பாளி (Pali) எனப்படுவது ஒரு மத்திய இந்தோ-ஆரிய அல்லது பிராகிருத மொழியாகும். பௌத்த சமயத்தின் பழம்பெரும் நூல்களைக் கொண்ட மொழி என்ற சிறப்பையும் பெருமையையும் கொண்டது. தேரவாத பௌத்தத்தின் சமய நூல்கள் இம்மொழியில் எழுதப்பட்டிருப்பதன் காரணமாக இம் மொழி மிகவும் பிரபலமானது.
பாளி பல்வேறு வரிவடிவங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. தேவநாகரியிலிருந்து லாவோ வரையும், பல்வேறு இந்திய எழுத்து வடிவங்களிலும், பாளி நூற் சபையைச் (Pali Text Society) சேர்ந்த தொமஸ் வில்லியம் றீஸ் டேவிட் என்பவரால் உருவாக்கப்பட்ட ரோமனாக்கம் செய்யப்பட்ட எழுத்து முறையிலும் பாளி எழுதப்படுகிறது.
சில தேரவாத பௌத்தர்கள் புத்தர் பேசிய மொழி பாளியே என்று கருதுகிறார்கள். எனினும் பாளி மொழி பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. சமஸ்கிருதம் உயர் குடியினரதும், படித்தவர்களதும் மொழியாயிருந்தபோது, பாளியே சாதாரண மக்களது மொழியாயிருந்ததெனக் கூறுவோர் ஒருபுறமிருக்க, பாளி எக்காலத்திலும் பேசப்பட்டதில்லை எனக் கருதுவோரும் உள்ளனர்.
பௌத்த நூல்களைக் கற்பதற்கும் ஓதுவதற்குமாகவே பாளி தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள பாளி நூற் சபை, 1881ல் அது நிறுவப்பட்டதிலிருந்து, மேல் நாட்டறிஞர்களின் பாளி மொழி ஆய்வை ஊக்குவிப்பதில் முக்கிய உந்து சக்தியாக உள்ளது.
செம்மொழி தகுதி
6 அக்டோபர் 2024 அன்று இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தால் பாளி மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
சமஸ்கிருதம்
பிராகிருதம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
The Pali Text Society's Pali-English Dictionary
Pali Text Society
Pali Canon
தமிழில் பாளிமொழிச் சொற்கள்
பாளி
இந்திய-ஆரிய மொழிகள்
இந்திய மொழிகள்
இந்தியச் செம்மொழிகள் |
1630 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D | சிங்களம் | சிங்களம் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான மக்களான சிங்களவர்களால் பேசப்படும் மொழியாகும். இது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. தென்னிந்தியாவிலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் திராவிட மொழியான தமிழிலிருந்தும் பல சொற்களைச் சிங்களம் பெற்றுக்கொண்டுள்ளது.
சிங்கள எழுத்துக்கள், கிமு 2ம் - கிமு 3ம் நூற்றாண்டளவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட, சிங்கள பிராகிருதம் வரிவடிவங்களிலிருந்து வளர்ச்சியடைந்ததாகும்.
சிங்களம் மாறுபட்ட பேச்சு வழக்குகளை கொண்டிருந்தாலும், ரொடி குலத்தவராலும், இலங்கையின் வேடுவராலும் பேசப்படும் சிங்களம் மிகவும் வேறுபட்டதாகும். இலங்கை வேடுவரின் மொழியிலுள்ள பல சொற்கள் சிங்களம் தவிர்ந்த மூலத்தை கொண்டுள்ளது. சிங்களமானது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன், இலங்கையின் யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும்.
வரலாறு
கி.மு ஐந்தாம் நூற்றாண்டளவில் வட மேல் இந்தியாவில் இருந்து இலங்கையில் இளவரன் விஜயன் உட்பட்டவர்கள் குடியேறுகின்றனர். இவர்களுடன் இந்தோ ஆரிய மொழிகளும் இலங்கைக்கு வந்து சேர்கின்றது. அடுத்த சில நூற்றாண்டுகளில் வட கிழக்கு இந்தியாவில் இருந்து கணிசமான அளவில் குடியேற்றவாசிகள் வந்து குடியேறுகின்றனர்(கலிங்கம், மகந்த). இதன் விழைவாக கிழக்கு பிரகிரிட்ஸ்சின் ஆதிக்கத்தையும் சிங்கள மொழிமேல் கொண்டுவருகின்றது.
காலத்துடன் சிங்கள மொழியின் விருத்தி
சிங்கள பிரகிரித் (கி.பி 3ம் நூற்றாண்டு வரை)
பிரதோ-சிங்களம் (கி.பி 3 – 7ம் நூற்றாண்டு வரை)
மத்திய சிங்களம் (கி.பி 7 – 12ம்் நூற்றாண்டு வரை)
புதிய சிங்களம் (12ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை)
பேச்சு வழக்கு
சிங்களத்தில் பொதுவாக இரண்டு வகையான பேச்சு வழக்கு உள்ளது. தென் பகுதியில் உள்ள சிங்களவர் ஒருமாதிரியும், ஏனைய பகுதியில் உள்ள சிங்களவர் வேறுமாதிரியும் பேசுகின்றனர்.
இலங்கையில் உள்ள வேடர் இனமும் வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசுகின்றது. இந்த மொழியில் சிங்களத்தின் ஆதிக்கம் இருந்தாலும், வேறெந்த மொழியிலும் இல்லாத பல சொற்கள் இவர்கள் மொழியில் உள்ளன.
பேச்சுச் சிங்களம்
எண்கள்
1 එක - எக்க (க் சேர்ந்து ஒலிக்கும் எழுதுவதில்லை) அல்லது எக்காய் - ஒன்று
2 දෙක - தெக்க (க் சேர்ந்து ஒலிக்கும் எழுதுவதில்லை) அல்லது தெக்காய் - இரண்டு
3 තුන - துண அல்லது துணாய் - மூன்று
4 හතර - ஹத்தற (த் எனபது சிங்களத்தில் எழுப்படவில்லையெனினும் அச்சத்ததுடனேயே ஒலிக்கவேண்டும்) அல்லது ஹத்தறாய் - நான்கு
5 පහ - பஹ அல்லது பஹாய் - ஐந்து
6 හය - ஹய அல்லது ஹயாய் - ஆறு
7 හත - ஹத்த அல்லது ஹத்தாய் - ஏழு
8 අට - அட்ட அல்லது அட்டாய் - எட்டு
9 නමය - நமய அல்லது நமயாய் - ஒன்பது
10 දහය - தஹய அல்லது தஹயாய் - பத்து
11 එකොළහාය් - எக்கொளஹாய் - பதினொன்று
12 තොළහ - தொலஹ -தொளஹாய் - பன்னிரண்டு
13 දහතුන - தஹாத்துணாய் - பதின்மூன்று
14 දාහතර - தாஹத்தறாய் - பதினான்கு
15 පහළව - பஹளவ - பதினைந்து
16 දහසය - தாசயாய் - பதினாறு
17 දාහත - தாஹத்தாய் - பதினேழு
18 තහාඅට - தாஅட்டாய் - பதினெட்டு
19 තහනමය - தாநமயாய் - பத்தொன்பது
20 විස්ස - விஸ்ஸாய் - இருபது
21 විසි එක - விசி எக்க - இருபத்து ஒன்று
22 විසි දෙක - விசி தெக - இருபத்தி இரண்டு
23 විසි තුන - விசி துண - இருபத்தி மூன்று
24 විසි හතර - விசி ஹத்த - இருப்பத்தி நான்கு
25 විසි පහ - விசி பஹ - இருபத்தி ஐந்து
26 විසි හය - விசி ஹய - இருபத்தி ஆறு
27 විසි හත - விசி ஹத்த - இருபத்தி ஏழு
28 විසි අට - விசி அட்ட - இருபத்தி எட்டு
29 විසි නමය - விசி நமய - இருபத்தி ஒன்பது
30 තිහ - திஹாய் - முப்பது
40 හතළිය - ஹத்தலியாய் - நாற்பது
50 පනහ - பணஹாய் - ஐம்பது
60 ஹட்டாய் - அறுபது
70 ஹத்தாவாய் - எழுபது
80 அசுவாய் - எண்பது
90 அணுவாய் - தொண்ணூறு
100 சீயாய் - நூறு
200 தெசிய்ய - இருநூறு
300 துன்சிய்ய - முந்நூறு
400 ஹாரசிய்ய - நானூறு
500 பன்சிய்ய - ஐந்நூறு
600 ஹயசிய்ய - அறுநூறு
700 ஹத்சிய்ய - எழுநூறு
800 அட்டசிய்ய - எண்ணூறு
900 நமசிய்ய - தொள்ளாயிரம்
1000 தாஹய் - ஆயிரம்
2000 தெதாஹய் - இரண்டாயிரம்
3000 துன்தாஹய் - மூவாயிரம்
4000 ஹத்தர தாஹய் - நாலாயிரம்
5000 பன் தாஹய் - ஐயாயிரம்
6000 ஹய தாஹய் - ஆறாயிரம்
7000 ஹத் தாஹய் - எழாயிரம்
10 000 தஹதாஹய் - பத்தாயிரம்
100 000 லக்சயய் - இலட்சம்
10 000 000 கோட்டிய - கோடி
சொற்கள், சொற்றொடர்கள்
ஆயுபோவன் - வணக்கம்
நமுத் - ஆனால்(but)
மார்க - வழி
பார - பாதை
மில - விலை
ஒபட்ட சிங்கள தன்னவத? - உங்களுக்கு சிங்களம் தெரியுமா?
ஒயாட தெமழ தேரெனவாத? - உங்களுக்குத் தமிழ் தெரியுமா? (ஒயா - உங்களுக்கு, தெமழ - தமிழ், தேரனவாத அல்லது தன்னவாத - தெரியுமா?)
ஒயாட்ட டிரைவிங் லைசன்ஸ் தியனவாத? - உங்களிடம் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளதா?
ஒயாட்ட வாகன பலபத்ர தியனவாத? - உங்களிடம் வாகனத்திற்கான அனுமதிப்பத்திரம் உள்ளதா?
ஒவ் - ஆம்
தண்ணவா - தெரியும்.
டிக்க டிக்க - கொஞ்சம் கொஞ்சம்
ஒச்சர தமய் புளுவன்- அவ்வளவுதான் தான் முடியும் (ஒச்சரதமய் - அவ்வளவுதான், புளுவண் - முடியும்)
கொஹேத யன்னே? - எங்கே போறீங்க?
கெவல் கொஹேத - வீடு எங்கே? (கெவல் - வீடு, கொஹேத - எங்கே)?
வெள்ளவத்த - வெள்ளவத்தை (குறிப்பு: சிங்களத்திலும் தமிழிலும் இடப்பெயர்கள் உச்சரிப்பில் மட்டுமே சிறிதளவு மாறுபடும்)
ஒயா கொஹேத வெட கரண்ணே - நீங்கள் எங்கே வேலை செய்கின்றீர்கள்.
மங் திருக்குணாமலே வெட கரண்ணே - நான் திருகோணமலையில் வேலை செய்கின்றேன்.
கொஹொமத செப சனீப்ப? - நீங்கள் எப்படி சுகமாயிருக்கின்றீர்களா?
கொழும்பட்ட கொஹொமத யன்னே? - கொழுப்புக்கு எப்படி போறது?
கமக் நே - பரவாயில்லை
வரதக் நே- பிரச்சினையில்லை
பொஹொம ஹொந்தய் - மிகவும் நன்று. (பொஹொம - மிகவும், ஹொந்தாய் - நல்லது)
ஸ்தூதி - நன்றி
கேவத? - சாப்பிட்டிங்களா?
மங் கேவா - நான் சாப்பிட்டேன் (மங் - நான், கேவா - சாப்பிட்டேன்)
தே பொனவத - தேநீர் குடிப்பீர்களா?
ஆண்டுவ - அரசாங்கம்
பட்டங்கத்தத? - ஆரம்பித்துவிட்டீர்களா?
கீயத - எவ்வளவு?
இத்துறு சல்லி தென்ன - மீதிப் பணத்தைத் தாருங்கள்.(இத்துறு - மிச்சம், சல்லி - காசு, தென்ன - தாங்க)
மே பாறென் அம்பேபுஸ்ஸ யன்ன புளுவண்த - இந்தப் பாதையால் அம்பேபுஸ்ஸ போக இயலுமா? (மே - இந்த, பாற - பாதை, யன்ன- போக, புளுவண்த - இயலுமா?)
மம ஓயாட்ட ஆதரே - நான் உங்களுக்கு அன்புசெலுத்துகின்றேன்
மம ஓயாட்ட கமதி - நான் உங்களை விரும்புகின்றேன்.
விநாடியக் இன்ன- ஒரு நிமிடம் நில்லுங்கள்
உறவுச் சொற்கள்
தாத்தா, தாத்தி, அப்பாச்சி - அப்பா
அம்மே (அல்லது அம்மா) - அம்மா
ஆச்சி - அம்மம்மா அல்லது அப்பம்மா
சீயா - அப்பப்பா அல்லது அம்மப்பா
ஐயா - அண்ணா
அக்கா - அக்கா
மல்லி - தம்பி
நங்கி - தங்கை
சகோதரயா - சகோதரன்
புத்தா - மகன்
துவ - மகள்
பேனா - மருமகன்
மல்லி கே புத்தா - தம்பியின் மகன்
அக்கா கே துவ - அக்காவின் மகள்
மச்சாங் - இது தற்போதைய சிங்களப் பாவனையில் நெருக்கமான நண்பர்களைக் குறிக்கப் பயன்படுகின்றது.
லொக்கு அம்மா - பெரியம்மா
லொக்கு தாத்தா - பெரியப்பா
மாமா - மாமா
மசினா - மச்சான்
நேனா - மச்சாள்
பிரிந்த,பவுல - மனைவி
மித்துரா - நண்பன்
மித்துரி - நண்பி
கொல்லா - இளைஞன்/பையன்
பிரிமி - ஆண்
கெஹெனு - பெண்
கெல்ல - இளம் பெண்
லமயா - பிள்ளை
யாளுவோ - நண்பர்கள்
காலங்கள்
உதே - காலை
தவல் - பகல்
ஹவச - பிற்பகல், சாயுங்காலம், பின்னேரம்
ராத்ரிய - இரவு
அத - இன்று
ஈயே - நேற்று
ஹெட்ட - நாளை
அவ்ருது - ஆண்டு
கிழமைகள்
இரிதா - ஞாயிறு
சந்துதா - திங்கள்
அங்கஹருவாதா - செவ்வாய்
பதாதா - புதன்
பிரஹஸ்பதிந்தா - வியாழன்
சிக்குராதா - வெள்ளி
செனசுராதா - சனி
நோய்கள்
உண - காய்ச்சல்
கஸ - இருமல்
ஹெம்பிரிஸ்ஸாவ - தடிமன்
ஹிபுகும் - தடிமல்
ஒலுவ அமாறு - தலை வலி
படே அமாறு - வயிற்று வலி
செம - சளி
பப்புவே அமாறு - நெஞ்சு வலி
அதும - வீஸிங்
ருத்ர பீடனய - இரத்த அழுத்தம்
அஸ் அமாறுவ - கண் வருத்தம்
இடங்களின் பெயர்கள்
றோகல - வைத்தியசாலை
நகர சபாவ - நகர சபை
விஸ்வவித்யாலய - பல்கலைக்கழகம்
பாசல - பாடசாலை
கோவில - கோவில்
கம - கிராமம்
நகரைய - நகரம்
பலாத - மாகாணம்
டிசாவ - மாவட்டம்
பன்சல - விகாரை
பல்லிய - பள்ளிவாசல்
பஸ் நேவதும்போல - பஸ் தரிப்பிடம்
வேளந்தசெல - கடை (விற்பனை நிலையம்)
போல - சந்தை
வேவ - குளம்
கங்காவ - ஆறு
பலாத் சபாவ - பிரதேச சபை
மரங்களின் பெயர்
கும்புக் (කුඹුක්) - மருது
அம்ப (අඹ) - மா
கொஹொம்ப (කොහොඹ) - வேம்பு
நுக (නුග) - ஆல்
கொஸ் (කොස්) - பலா
கெஸெல் (කෙසෙල්) - வாழை
பெபொல் (පැපොල්) - பப்பாசி
சியம்பலா (සියඹලා) - புளி
மிருகங்கள்
කපුටා - கப்புடா - காகம்
කුරුල්ලා - குறுல்லா - குருவி
මොණරා - மொனறா - மயில்
නරියා - நரியா - நரி
අලියා - அலியா - யானை
ලෙනා - லேனா - அணில்
එළුවා - எலுவா - ஆடு
இலக்கணம்
தமிழ் மொழியைப் போன்று சிங்கள மொழியில் உயர் திணை அஃறிணை வேறுபாடுகள் கிடையாது. எடுத்துக்காட்டாக சிங்களத்தில் அவர் வந்தார். பூனை வந்தார். தமிழ் மொழி பொன்றல்லாமல் உயிர் எழுத்துக்கள் வாக்கியத்தின் இடையில் வரலாம்.
நிகழ்காலம்
நிகழ்காலம் நவா சத்ததுடன் முடிவடையும். வாக்கியத்தின் இடையில் நவா என்ற சத்தம் வராது. ஆண்பால் பெண்பால் வேறுபாடு நிகழ்காலத்தில் கிடையாது. நவா என்பதை நீக்கிவருவது சொல்லின் அடியாகும். எடுத்துக்காட்டாக கடனவா என்பதன் அடி கட ஆகும். கணவா இன் அடி க ஆகும். மம என்று வந்தால் மியும் *அப்பி வந்தால் மு உம் *நும்ப/ஒப வந்தால் ஹி யும் *நும்பலா/ஒபலா வந்தால் ஹூ உம் சேர்க்கவேண்டும். ஒபலா/நும்பலா ஒருமையில் வந்தால் யி உம் பன்மையில் வந்தால் தி உம் சேர்க்கவேண்டும். உயிரற்ற பன்மைச் சொல் எழுவாய் ஆகவரும்போது பயனிலை ஒருமையில் முடிக்கவேண்டும். ஓ சத்தம் பன்மையைக் குறிக்கும்.
பியா - பியானோ
புத்தா - புத்தணுவோ
சித்தா - சீத்தாவோ
பியதாச - பியதாசவோ
லிபிகுணு ராசிய - உயிரற்றது எனவே ஒருமையில் முடித்தல் வேண்டும் எனவே லிபிகுணு ராசிய என மாற்றம் இன்றி வரும்.
பெண்பால் ஒருமையில் வந்தால் ய சேர்க்க வேண்டும்.
கியா+ய = கியாய
ஆவா+ய =ஆவாய
குறுத்துமி ஆவாய
இறந்தகாலம்
இறந்தகாலம் ஆ சத்ததுடன் முடிவடையும். இதன் அடியைக் காண்பதற்கு படர்க்கை ஒருமையைக் காணவேண்டும். அதிலிருந்துதான் அடி பெறப்பட வேண்டும். இதற்கு ஒருமைக்கு ஏய என்ற சத்தத்தையும் பன்மைக்கு ஓய என்ற சத்ததையும் சேர்க்கவேண்டும்.
கியா+ஏய = கியேய
ஆவா+ஏய = ஆவேய
இதன் அடியைக் காண்பதற்கு கடைசி எழுத்தை நீக்கி அதற்கு முன்னுள்ள குற்றை நீக்குதல் வேண்டும்.
கியேய = கியெ
அவேய = ஆவெ
கடுவேய = கடுவெ
மம கியே+மி = மம கியமி (மம எனவருவதால் மி ஐச் சேர்ந்தல் வேண்டும்.
சிங்கள மொழியில் எது பயனில்லைக்கு அண்மையில் உள்ளதோ அதுதான் எழுவாய் ஆகக் கணிக்கப்படும்.
எடுத்துக்காட்டாக அவன் அல்லது அவள் வந்தான்/ள் என்ற சொல் சிங்களத்தில் ஆவாய என்றே வரும் (அவள் பயனில்லைக்கு அண்மையில் இருப்பதால்)
உயிருடைய சொல்லுடன் ஏதாவது ஒரு சொல் அச்சொல்லிற்குப் பிறகு வந்தால் அச்சொல் பன்மைச் சொல். செயற்பாட்டு வினை வாக்கியத்தின் விசின் வரும். இதன் கருத்து ஆல். அவன் மரத்தை வெட்டுகிறான் - செய்வினை. அவனால் மரம் வெட்டப்பட்டது - செயற்பாட்டு வினை.
எழுவாய் செயப்படுபொருள்
தன்மையில் எழுவாய் செயப்படுபொருள் கீழுழ்ழவாறு அமையும்
முன்னிலையில் எழுவாய் செயப்படுபொருள் கீழுழ்ழவாறு அமையும்
படர்க்கையில் எழுவாய் செயப்படுபொருள் கீழுழ்ழவாறு அமையும்
உயிரற்ற ஒருமை பன்மைச் சொல் எழுவாய் ஆகவும் செயற்படுபொருளாகவும் மாற்றம் இன்றி வரும். உயிரற்ற ஒருமை பன்மைச் சொல் எழுவாய் ஆக வரும்போது செயப்படுபொருள் ஒருமையில் முடித்தல் வேண்டும்.
உயிருடைய ஒருமைச் சொல் எழுவாய் ஆக வரும்போது பயனிலை ஒருமையிலும்,
எழுவாய் ஆக பன்மைச் சொல் வரும்போது பயனிலை பன்மையிலும் முடித்தல் வேண்டும். உயிருடைய பன்மைச் சொல் செயப்படுபொருளாக்கும் போது மாற்றங்கள் ஏற்படுகின்றது.
முதலாம் விதி
று சத்துடன் முடிவடையும் சொற்களுக்கு ன் சேர்க்கவேண்டும்
இரண்டாம் விதி
வோ சத்தத்துடன் வரும் சொற்களுக்குன் வன் என்றவாறு வரும்
மூன்றாம் விதி
ன், த் கடைசியில் இருந்து இரண்டாவதாக வரும் சொற்களுக்கு சத்தத்துடன் வரும் சொற்களுக்குன் ன், த் ஐநீக்கி ன் ஐச் சேர்க்கவேண்டும்.
நான்காம் விதி
ய் கடைசியில் வரும் சொற்களுக்கு ன் சேர்க்கவேண்டும்
பெண்பால் விதி
பெண்பாலுக்கு க சேர்க்கவேண்டும்.
செயப்படுபொருள் எழுவாய்
இது எழுவாய் இலிருந்து செயற்படுபொருளாக மாற்றுவதன் மறுதலையாகும்.
அறிவுறுத்தல்,செய்தி, ஆலோசனை, கட்டளை, பிராத்தனை
அவவாதய - அறிவுறுத்தல்
இது ஏற்கனவே வழங்கப்பட்ட ஒன்று. இதில் எப்பா நொக்கறனு போன்ற சொற்கள் வரும்.
உபதேசய - அறிவுரை
இதில் பழமொழிகள் வரும். ஒருவருக்கு சொல்லும் உபதேசங்கள் இதில் வரும்.
பிராத்தனய - வாழ்த்துக்கள்
இதில் வாழ்த்துக்கள் வரும் ஜயவேவா, உபந்தினவேவா. இதில் பொதுவாக வேவா என்ற சொல் இறுதியில் வரும்.
வினய - ஒழுங்கு அல்லது கட்டளை
இது உடனுக்குடன் வழங்கப்படுவது. இதில் வினைச்சொல்லுடன் இன்ன சேர்ந்துவருவதை அவதானிக்கலாம்.
அகராதிகள்
ஆங்கிலச் சிங்கள அகராதி அணுகப்பட்டது நவம்பர் 29, 2006
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Charles Henry Carter. A Sinhalese-English dictionary. Colombo: The "Ceylon Observer" Printing Works; London: Probsthain & Co., 1924.
Simhala Sabdakosa Karyamsaya. Sanksipta Simhala Sabdakosaya. Kolamba : Samskrtika Katayutu Pilibanda Departamentuva, 2007–2009.
Madura Online English-Sinhala Dictionary and Language Translator
Kapruka Sinhala dictionary
Sinhala dictionary resources online
Sinhala Dictionary
Sinhala Script
Sinhala dictionary (Beta)
Sinhala for iOS
Sinhala Dictionary for Android
இந்திய-ஆரிய மொழிகள்
சிங்களம்
இலங்கையின் மொழிகள் |
1631 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81 | உருது | <table border="1" cellpadding="2" cellspacing="0" align="right" width="300">
Urdu (اردو)
பேசப்படுவது:பாகிஸ்தான், இந்தியா மற்றும் 19 வேறு நாடுகள்
பேசுபவர்கள் தாய்மொழி: 10.4 கோடி
மொத்தம்: 48 கோடி
பொதுபகுப்பு:இந்திய-ஐரோப்பியம்
இந்திய-ஈரானியம்
இந்திய-ஆரியம்
மத்திய வலயம்
உருது
உத்தியோகபூர்வ நிலை
அரசகரும மொழி:பாகிஸ்தான், இந்தியா
ஒழுங்குபடுத்தப் படுவது: ஒழுங்குபடுத்தப் படுவதில்லை</td></tr>
மொழிக்கான குறியீடு
ISO 639-1:ur
ISO 639-2:urd
SIL:URD
</table>
உருது (Urdu'') 13-ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். உருது, இந்தியுடன் சேர்த்து இந்துசுத்தானி என அழைக்கப்படுகின்றது. மண்டரின், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது கூடிய அளவு மக்களால் புரிந்து கொள்ளப்படக்கூடியது இந்துஸ்தானியேயாகும். தாய் மொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உருது உலகின் 20-ஆவது பெரிய மொழியாகும். 6 கோடி மக்கள் இதனைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். இரண்டாவது மொழியாகக் கொண்டுள்ளவர்கள் உட்பட 11 கோடிப் பேர் இதனைப் பேசுகிறார்கள். உருது பாகிஸ்தானின் அரசகரும மொழியாகவும், இந்தியாவின் அரசகரும மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. முகலாய அரசர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த காலகட்டத்தில் அவர்களின் படையிலிருந்த பார்சி, அரபி, துருக்கி மொழிகளைப் பேசிய படை சிப்பாய்களுக்கும், அப்படையில் இணைந்த கடிபோலி (ஹிந்தியின் ஒரு கிளை மொழி) பேசிய ஹிந்து சிப்பாய்களுக்குமிடையே
ராணுவக் கூடாரங்களில் ஏற்பட்ட மொழி பரிவர்த்தனையில் தோன்றிய மொழி. ராணுவக் கூடாரங்களில் தோன்றி, பரவி செழிப்படைந்ததால் 'உருது' என்று பெயர் பெற்றது. துருக்கி மொழியில் ராணுவம் தற்காலிகமாக தங்கும் இடங்களை (army camps) ஒர்து என்று அழைப்பர்.
உருது மொழி பேசப்படும் நாடுகள்
ஆப்கானிஸ்தான்
பாகாரேயின்
வங்காளதேசம் - 3,00,000 (2008)
பொட்ஸ்வானா
பிஜி
ஜெர்மனி
கயானா
இந்தியா - 5,07,72,631 (2011)
பாகிஸ்தான் - 1,47,06,159 முதல் 3,00,00,000 வரை (2017 & 2013)
மலாவி
மொரீசியஸ் - 64,000
நேபாளம் - 4,13,785 (2021)
நோர்வே
ஓமான்
கட்டார்
சவூதி அரேபியா,
தென்னாபிரிக்கா - 1,70,000
தாய்லாந்து
ஐக்கிய அரபு அமீரகம்,
ஐக்கிய இராச்சியம் - 2,70,000 (2016)
ஐக்கிய அமெரிக்கா - 3,97,502 (2013)
சாம்பியா
ஆஸ்திரேலியா - 69,131 (2016)
கனடா - 2,10,815 (2016)
மேற்கோள்
வெளி இணைப்புகள்
இந்திய-ஆரிய மொழிகள்
பாக்கித்தானின் மொழிகள்
இந்திய மொழிகள்
உருது மொழி |
1632 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 | பண்பாடு | பண்பாடு (கலாச்சாரம் அல்லது கலாசாரம்) என்பது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.
பண்பாடு ஒரு பலக்கியக் கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.
பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். இது, பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கிறது எனலாம். 1952-இல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய 'பண்பாடு: எண்ணக் கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.
வரலாற்று நோக்கில் வரைவிலக்கணங்கள்
18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளின் மேலைத்தேச அறிஞர்களும், இன்றைய அறிஞர்கள் சிலரும் பண்பாடு என்பதை நாகரிகம் (civilization) என்பதோடு அடையாளம் கண்டு அதை இயற்கைக்கு எதிரான ஒன்றாகக் கருதினார்கள். "உயர் பண்பாட்டை"க் குறைவாகக் கொண்டுள்ளவர்கள் கூடுதல் இயல்பானவர்களாகக் கருதப்பட்டனர். அத்துடன் உயர் பண்பாட்டின் சில அம்சங்கள் மனித இயல்புகளை அழுத்தி வைப்பதாகவும் சிலரால் விமர்சிக்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மானிடவியலாளர்கள், பல்வேறு சமூகங்களுக்கும் பயன்படத் தக்க வகையிலான, பண்பாடு என்பதன் பரந்த வரைவிலக்கணம் ஒன்றின் தேவையை உணர்ந்தார்கள். படிமலர்ச்சிக் கோட்பாட்டைக் கவனத்துக்கு எடுத்துக்கொண்ட பிராண்ஸ் போவாஸ் முதலிய மானிடவியலாளர்கள், மனிதர் எல்லோரும் சமமாகவே படிமலர்ச்சி அடைந்துள்ளனர் என்றும், எல்லா மனிதரும் பண்பாட்டைக் கொண்டிருப்பதனால் அது மனிதனின் படிமலர்ச்சியின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதினர். பண்பாடு என்பது மனித இயல்பு எனவும், அது அநுபவங்களைப் பகுத்துக் குறீயீடாக்கிக் குறியீட்டு முறையில் வெளிப்படுத்துவதற்கான மனிதனுடைய தகுதியை மூலவேராகக் கொண்டது எனவும் அவர்கள் வாதித்தார்கள்.
இதன் விளைவாக, ஒன்றிலிருந்து ஒன்று விலகி வாழுகின்ற மக்கள் குழுக்கள், தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளுகின்றன. எனினும் வெவ்வேறு பண்பாடுகளின் அம்சங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு இலகுவாகப் பரவ முடியும்.
எனவே வழிமுறை நோக்கிலும், கோட்பாட்டுக் கோணத்திலும் பயனுள்ள வரைவிலக்கணங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை மனிதவியலாளருக்கு ஏற்பட்டது. அவர்கள் பொருள்சார் பண்பாடு என்பதற்கும் குறியீடுசார் பண்பாடு என்பதற்குமிடையே வேறுபாடு கண்டார்கள். இவையிரண்டும் வெவ்வேறு வகையான மனிதச் செயற்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, இரண்டும் வெவ்வேறு வகையான வழிமுறைகள் தேவைப்படும் வெவ்வேறுவகைத் தரவுகளையும் உள்ளடக்கியுள்ள காரணத்தால் இந்தப் பகுப்பு தேவையாக இருந்தது.
பண்பாடு என்பதை விளங்கிக் கொள்ளும் இன்னொரு பொதுவான முறை மூன்று மூலகங்களை உள்ளடக்கியுள்ளது: அவை, 'பெறுமானம் (எண்ணங்கள்)', 'நெறிமுறைகள் (நடத்தை)', மற்றும் 'பொருட்கள் (அல்லது பொருள்சார் பண்பாடு)' என்பவை ஆகும்.
வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்களே 'பெறுமானம்' ஆகும். அவை பண்பாட்டின் ஏனைய அம்சங்களை வழிநடத்துகின்றன. 'நெறிமுறைகள்' என்பன, வெவ்வேறு நேரங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகும். ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இந்தப் பொது வழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. சமூகம் நடைமுறைப்படுத்தும் இந்த நெறிமுறைகள் சட்டங்கள்' எனப் பொதுவாக வழங்கப்படுகின்றன. மூன்றாவது அம்சமான 'பொருள்கள்', பண்பாட்டின் 'பெறுமானங்கள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது.
பண்பாட்டுக் கருத்துருக்கள்
பண்பாடும் மானிடவியலும்
பண்பாடானது இசை, இலக்கியம், வாழ்க்கைமுறை, உணவு, ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் போன்ற மனிதருடைய கலைப் பொருள்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றது. சில அறிஞர்கள் பண்பாட்டை நுகர்வு, நுகர் பொருட்கள் என்பவற்றின் அடிப்படையில் அடையாளம் காண்கின்றனர். ஆனால், மானிடவியலாளர், பண்பாடு என்பது நுகர் பொருள்களை மட்டுமல்லாது அவற்றை உருவாக்குவனவும், அவற்றுக்குப் பொருள் கொடுப்பனவுமான வழிமுறைகளையும்; அப்பொருள்களும், வழிமுறைகளும் பொதிந்துள்ள சமூகத் தொடர்புகள், செயல்முறைகள் என்பவற்றையும் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பண்பாடு என்பது கலை, அறிவியல், நெறிமுறைகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது.
பண்பாடும் உலகப்பார்வையும்
புனைவியக் காலத்தில் செருமனியைச் சேர்ந்த அறிஞர்கள், சிறப்பாகத் தேசியவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள், பண்பாடு என்பது உலகப்பார்வை என்னும் எண்ணக்கருத்து ஒன்றை உருவாக்கினர். இவர்களுள் பல்வேறு சிற்றரசுகளைச் சேர்த்து "செருமனி" ஒன்றை உருவாக்குவதற்காகப் போராடியோரும், ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசுக்கு எதிராகப் போராடிய தேசியவாத சிறுபான்மை இனக்குழுக்களைச் சார்ந்தோரும் அடங்குவர். இத்தகைய சிந்தனைப் போக்கு, ஒவ்வொரு இனக்குழுவையும் தனித்துவமான உலகப்பார்வை வேறுபடுத்துகின்றது என்னும் கருத்தை முன்வைத்தது. எனினும், பண்பாடு குறித்த இந்த நோக்கும் 'நாகரிகமடைந்தோர்', 'நாகரிகமற்றோர்' அல்லது 'பழங்குடியினர்' முதலிய வேறுபாடுகளுக்கு இடமளித்தது.
சமுதாயமொன்றினுள் காணப்படும் பண்பாடுகள்
பெரிய சமுதாயங்கள் பெரும்பாலும் துணைப் பண்பாடுகளை அல்லது அவர்கள் சார்ந்த பெரிய பண்பாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய தனித்துவமான நடத்தைகளையும், நம்பிக்கைகளையும் உடைய குழுக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இத் துணைப் பண்பாடுகள், அவற்றின் உறுப்பினரின் வயது, இனம், வகுப்பு, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடலாம். அழகியல், சமயம், தொழில், அரசியல் போன்ற பண்புகளும் துணைப் பண்பாடுகளில் தனித்துவத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். இவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை இணைந்தோ துணைப் பண்பாடுகளை உருவாக்கலாம்.
வருகுடியேற்றக் குழுக்களையும், அவர்கள் பண்பாடுகளையும் கையாள்வதில் பல அணுகுமுறைகள் காணப்படுகின்றன.
அடிப்படைப் பண்பாடு (core culture): இது செருமனியில் பஸ்ஸாம் திபி என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி ஆகும். இதன்படி சிறுபான்மையினர் தமக்கான அடையாளங்களை வைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் முழுச் சமுதாயத்தினதும் அடிப்படையான பண்பாட்டின் கருத்துருக்களை ஆதரிப்பவர்களாக இருக்கவேண்டும்.
கலப்புப் பண்பாடு (Melting Pot): ஐக்கிய அமெரிக்காவில் மரபுவழியாக இத்தகைய நோக்கு இருந்து வருகிறது. இதன்படி எல்லா வருகுடியேற்றப் பண்பாடுகளும் அரசின் தலையீடு இல்லாமலேயே கலந்து ஒன்றாகின்றன எனக் கருதப்படுகிறது.
ஒற்றைப்பண்பாட்டியம் (Monoculturalism): சில ஐரோப்பிய நாடுகளில், பண்பாடு என்பது தேசியவாதத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இதனால், வருகுடியேற்றப் பண்பாடுகளைப் பெரும்பான்மைப் பண்பாட்டுடன் தன்வயமாக்குவது அவ்வரசுகளின் கொள்கையாக இருக்கிறது. எனினும், சில நாடுகள் பல்பண்பாட்டிய வடிவங்கள் தொடர்பாகவும் சோதனை செய்து வருகிறார்கள்.
பல்பண்பாட்டியம் (Multiculturalism): வருகுடியேற்றப் பண்பாட்டினர் தமது பண்பாடுகளைப் பேணிக்கொள்ள வேண்டும் என்றும், பல்வேறு பண்பாடுகள் ஒரு நாட்டுக்குள் அமைதிவழியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதும் இதன் கருத்து ஆகும்.
நாட்டின அரசுகள் வருகுடியேற்றப் பண்பாடுகளை நடத்தும் விதம் மேற்சொன்ன ஏதாவதொரு அணுகுமுறையுடன் சரியாகப் பொருந்தும் என்பதற்கில்லை. ஏற்கும் பண்பாட்டுக்கும் (host culture) வருகுடியேற்றப் பண்பாட்டுக்கும் இடையிலான வேறுபாட்டின் அளவு, குடியேறுவோரின் எண்ணிக்கை, ஏற்கனவே இருக்கும் மக்களின் மனப்பாங்கு, அரசின் கொள்கைகள், அக்கொள்கைகளின் செயற்படுதிறன் என்பன விளைவுகளைப் பொதுமைப்படுத்துவதைக் கடினமாக்குகின்றன. இதுபோலவே, சமுதாயத்தில் அடங்கியுள்ள துணைப் பண்பாடுகள், பெரும்பான்மை மக்களின் மனப்பாங்கு, பல்வேறுபட்ட பண்பாட்டுக் குழுக்களிடையேயான தொடர்புகள் என்பன விளைவுகளைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு சமுதாயத்துள் அடங்கியுள்ள பண்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்வது சிக்கலானது. ஆய்வுகள் பலவகையான மாறிகளைக் கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
நிலப்பகுதி அடிப்படையில் பண்பாடு
உலகின் நிலப்பகுதிக்குரிய பண்பாடுகள் நாட்டினங்களாலும், இனக்குழுக்களாலும் உருவாகின்றன. பண்பாடுகளுக்கு இடையேயான ஒத்ததன்மை பெரும்பாலும் புவியியல் அடிப்படையில் அருகருகே வாழும் மக்கள் நடுவே காணப்படுகின்றது. பல நிலப்பகுதிக்குரிய பண்பாடுகள் பிற பண்பாடுகளின் தொடர்பினால் ஏற்படக்கூடிய செல்வாக்கின் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இத்தகைய தொடர்புகள், குடியேற்றம், வணிகம், புலப்பெயர்வு, மக்கள் ஊடகம், சமயம் போன்றவற்றினால் ஏற்படுகின்றன. பண்பாடு இயக்கத்தன்மை கொண்டதாக இருப்பதுடன், காலப்போக்கில் மாறுபாடும் அடைகின்றது. இவ்வாறு மாறும்போது, பண்பாடுகள் வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு; மாறுகின்ற சூழலுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் ஏற்றவகையில் தன்னை இசைவாக்கிக் கொள்கிறது. இதனால், பண்பாடு தொடர்புகளில் தங்கியுள்ளது எனலாம். பண்பாடுகளிடையே மக்களினதும், எண்ணக்கருக்களினதும் கூடிய நகர்வுகளுக்கு இடமளிக்கும் புதிய தொடர்புத் தொழில் நுட்பங்களும், போக்குவரத்துத் தொழில்நுட்பங்களும் உள்ளூர்ப் பண்பாடுகளில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
நம்பிக்கை முறைமைகள்
சமயமும், பிற நம்பிக்கை முறைமைகளும் பண்பாட்டுடன் ஒன்றிணைந்தவையாக உள்ளன. மனித வரலாறு முழுவதுமே சமயம் பண்பாட்டின் ஓர் அம்சமாக விளங்கிவருகிறது. கிறிஸ்தவத்தின் பத்துக் கட்டளைகள், புத்தசமயத்தின் ஐந்து நோக்குகள் போன்றவற்றினூடாகச் சமயம் நடத்தைகளை முறைப்படுத்துகின்றது. சில சமயங்களில் இது அரசுகளுடனும் தொடர்புள்ளதாக இருக்கின்றது. இது கலைகளின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றது.
மேனாட்டுப் பண்பாடு ஐரோப்பாவிலிருந்து மிகவும் வலுவாக ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. இப்பண்பாடு, பண்டைக் கிரேக்கம், பண்டைய ரோம், கிறிஸ்தவம் முதலியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டது. மேனாட்டுப் பண்பாடு, பிற பண்பாடுகளைக் காட்டிலும் கூடிய அளவில் தனிமனிதனுக்கு முதன்மை கொடுப்பதாக உள்ளது. அத்துடன் இது, மனிதன், இறைவன், இயற்கை அல்லது அண்டம் ஆகியவற்றைக் கூடுதலாக வேறுபடுத்திப் பார்க்கிறது. இது, பொருட்செல்வம், கல்வியறிவு, தொழில் நுட்ப முன்னேற்றம் என்பவற்றினால் குறிக்கப்படுகின்றது. எனினும் இவை மேனாட்டுப் பண்பாட்டுக்கு மட்டும் உரித்தான இயல்புகள் அல்ல.
ஆபிரகாமிய சமயங்கள்
'யூதாயிசம்' அறியப்பட்ட ஓரிறைக் கொள்கை உடைய முதற் சமயங்களுள் ஒன்றும், இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்ற சமயங்களுள் மிகப் பழையனவற்றுள் ஒன்றுமாகும். யூதர்களின் விழுமியங்களும், வரலாறும் கிறிஸ்தவம், இஸ்லாம், பஹாய் போன்ற பிற ஆபிரகாமிய சமயங்களின் அடிப்படைகளின் பெரும் பங்காக உள்ளன. இவை, ஆபிரகாமின் மரபுவழியைப் பொதுவாகக் கொண்டிருந்தபோதும், ஒவ்வொன்றும் அவற்றுக்கே தனித்துவமான கலைகளையும் கொண்டுள்ளன. உண்மையில் இவற்றுட் சில அச்சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலப்பகுதிகளின் செல்வாக்கினால் உண்டானதாக இருந்தாலும், சமயங்களால் வலியுறுத்தப்படும் பண்பாட்டு வெளிப்பாடுகளும் இருக்கின்றன.
ஐரோப்பா, புதிய உலகம் ஆகியவற்றின் பண்பாடுகளைப் பொறுத்தவரை கடந்த 500 முதல் 1500 ஆண்டுகளாகக் கிறிஸ்தவம் முக்கியமான பங்கை வகித்துவருகிறது. தற்கால மெய்யியல் சிந்தனைகளில், சென். தாமஸ் அக்குவைனஸ், எராஸ்மஸ் போன்ற கிறிஸ்தவச் சிந்தனையாளர்களின் செல்வாக்குப் பெருமளவு உள்ளது. தவிர, கிறிஸ்தவப் பேராலயங்களான நோட்ரே டேம் டி பாரிஸ், வெல்ஸ் பேராலயம், மெக்சிக்கோ நகர மெட்ரோபோலிட்டன் பேராலயம் போன்றவை கட்டிடக்கலை முக்கியத்துவம் கொண்டவை.
இஸ்லாம் வட ஆப்பிரிக்கா, மையக்கிழக்கு, தூரகிழக்கு ஆகிய பகுதிகளில் 1,500 ஆண்டுகளாகச் செல்வாக்குடன் விளங்குகிறது.
நாடுகளின் பண்பாடுகள்
அல்பேனியா
அவுஸ்திரேலியா
பெல்ஜியம்
பிரேசில்
கனடா
சிலி
சீனா
டென்மார்க்
எகிப்து
பிரான்ஸ்
இந்தியா
ஜப்பான்
கொரியா
மெக்ஸிக்கோ
நெதர்லாந்து
நியூசிலாந்து
பெரு
போர்த்துக்கல்
ஐக்கிய இராச்சியம்
வேல்ஸ்
ஐக்கிய அமெரிக்கா
தமிழர் பண்பாடு
இவற்றையும் பார்க்கவும்
பண்பாட்டு மாற்றம்
பண்பாட்டு அதிர்ச்சி
மேற்கோள்கள்
தமிழர் பண்பாடு
பண்பாடு
diq:Portal:Zagon |
1633 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | விளையாட்டுகளின் பட்டியல் | பின்வருவது வகைப்படுத்தப்பட்ட விளையாட்டுகளின் பட்டியல் ஆகும். இது விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இன்னும் பல விளையாட்டுகளை இதிலே சேர்த்துக்கொள்ள முடியும். இதிலுள்ள சில விளையாட்டுகள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளுள் அடங்கக்கூடியனவெனினும் ஒரு பிரிவில் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழர் விளையாட்டுகள்
முதன்மைக் கட்டுரை: தமிழர் விளையாட்டுக்கள்
அனைத்துலக அளவிலான விளையாட்டுகள்
தட கள விளையாட்டுகள்
சீருடற்பயிற்சிகள்
சண்டை விளையாட்டுகள்
விலங்குகள் தொடர்புள்ள விளையாட்டுகள்
ஒட்டகச் சவாரி
புறா விளையாட்டு
குதிரை விளையாட்டுக்கள்
நாய் விளையாட்டுகள்
மஞ்சு விரட்டு
மாட்டுவண்டிச் சவாரி
துவிச்சக்கர வண்டி மிதிப்பு
துவிச்சக்கர வண்டிகளை அல்லது ஒரு சில் வண்டிகளைப் பயன்படுத்தும் விளையாட்டுகள்.
BMX
Cycloball
Cyclocross
Mountain bicycling
Mountain unicycling
சாலைத் துவிச்சக்கர வண்டியோட்டம்
தடகளத் துவிச்சக்கர வண்டியோட்டம்
Unicycle trials
Extreme விளையாட்டுகள்
BASE jumping
Bodyboarding
பங்கீ ஜம்பிங்
உடல் நலத்தகுதி
மோட்டர் கிராசு
தாண்டோட்டம் (பர்க்கூர்)
பாறை ஏற்றம்
Skateboarding
Snowboarding
Wakeboarding
மோட்டாரியக்க வாகன விளையாட்டுகள்
மோட்டார் வாகன விளையாட்டு
மோட்டார் படகு ஒட்டம்
மோட்டார் சைக்கிள் ஓட்டம்
வேறு
மேற்படி எதிலும் இல்லாதவை
அமெரிக்கக் கைப்பந்தாட்டம்
சிறுவர் கள விளையாட்டு
ரோபோ சண்டை
நடன விளையாட்டு
ஊனமுற்றோர் விளையாட்டுக்கள்
வெளிக்கள விளையாட்டுகள்
Sports not based on a specific field.
Aerobatics
Aeromodelling
Ballooning
Casting
Canyoning
Flying disc
Gliding
Hang gliding
மலையேற்றம்
Orienteering
Parachuting
Paragliding
Scuba diving
Skydiving
Sled-dog sports
விளையாட்டு மீன்பிடித்தல்
Zorbing
வலு விளையாட்டுகள்
உடல் வலுவை சார்ந்த விளையாட்டுகள்.
உடற்கட்டாக்கம்
Powerlifting
கயிறிழுத்தல்
பாரந்தூக்குதல்
மட்டை விளையாட்டு
பந்து அல்லது வேறு பொருட்களை அடித்து விளையாடுதல்.
பட்மிண்டன்
Racquetball
Real tennis
மென் டென்னிசு
ஸ்குவாஷ்
டேபிள் டென்னிஸ்
டென்னிஸ்
skating
Sports in which skates are used.
Figure skating
Roller hockey
Roller skating, Inline skating
Short-track speed skating
பனிச்சறுக்கு விரைவோட்டம்
Synchronized skating
Skiing / Snowsports
Sports in which skis or snowboards are used.
மலைச்சரிவு பனிச்சறுக்கு (also known as Downhill skiing)
Backcountry skiing (also known as Off Piste skiing)
Biathlon
Cross country skiing (together with ski jumping and nordic combined also known as Nordic skiing)
Firngleiten
Freestyle skiing
Grass skiing
Nordic combined
Roller skiing
Skibob
Skijoring
Ski jumping
Ski touring
Speed skiing
Telemark skiing
Snowboarding
Freestyle snowboarding
Extreme snowboarding
Sleighing
Sports that use sleighs.
Bobsleigh
Land luge
லூஜ்
Skeleton
இலக்கு விளையாட்டுகள்
Sports where the main objective is to hit a certain target.
அம்பெய்தல்
Kyudo
Atlatl
கோல்மேசை(பில்லியாட்ஸ்)
Bar billiards
Bocce
பௌலிங்
Croquet
சுருள்வு (விளையாட்டு)
Darts
குழிப்பந்தாட்டம் (கோல்ப்)
Disc golf
Horseshoe throwing
Laser Tag
Lawn bowls
Petanque
அமெரிக்க கோல்மேசை(Pool)
துப்பாக்கி சுடுதல்
Skittles
இந்திய கோல்மேசை(ஸ்னூக்கர்)
குழு விளையாட்டுக்கள்
Airsoft
அமெரிக்கக் கால்பந்தாட்டம்
அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம்
Bandy
பேஸ்பால்
கூடைப்பந்தாட்டம்
Basque pelota
Camogie
கனேடியக் கால்பந்தாட்டம்
Canoe Polo
துடுப்பாட்டம்
சுருள்வு (விளையாட்டு)
Eton Wall Game
Faustball
Floorball
கால்பந்தாட்டம்
Gaelic football
கைப்பந்தாட்டம்
ஹொக்கி
Hornusser
Hurling
பனி ஹொக்கி
சடுகுடு
Korfball
Lacrosse
வலைப் பந்தாட்டம்
Paintball
Petanque
போலோ
Roller Hockey
Royal Shrovetide Football
Rugby
செபாக் டக்ரோ
Shinty
Skittles
மென்பந்து
வாலிபோல்
Ultimate (Frisbee)
மூளை விளையாட்டு
பிரிட்ஜ்
சதுரங்கம் (Chess)
Checkers (draughts)
போக்கர்
Go
சொல்லாக்க ஆட்டம்
Shogi
நீர் விளையாட்டுகள்
மேற்கோள்கள்
விளையாட்டுகள் தொடர்பான பட்டியல்கள் |
1639 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 | வட மாகாணம், இலங்கை | வட மாகாணம் (Northern Province) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வட கோடியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் மேற்கிலுள்ள தீவுகள் மற்றும் தலை நிலத்தின் ஒரு பகுதியான வன்னி என அழைக்கப்படும் பகுதியும் சேர்ந்து இம்மாகாணத்தை உருவாக்குகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்கள் இந்த மாகாணத்துள் அடங்கியுள்ளன. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம் ஆகும்.
இலங்கை மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நடைமுறையில் உள்ளன. ஆனாலும், 1987 ஆம் ஆண்டில் இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் நிறுவப்பட்டதை அடுத்து மாகாணங்கள் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றன. ஈழப் போர் இம்மாகாணத்திலேயே ஆரம்பித்தது. இது இலங்கையின் தமிழ் நாடு எனவும் அழைக்கப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணி
யாழ்ப்பாண அரசு காலத்தில் தற்போதைய வடமாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் அவ்வரசின் மேலாதிக்கத்தின் கீழேயே இருந்துவந்தது. எனினும் வன்னிப்பகுதி பல வன்னியச் சிற்றரசுகளாகவே செயற்பட்டுவந்தது. யாழ்ப்பாண அரசு ஆரியச் சக்கரவர்த்திகளிடமிருந்து ஐரோப்பியரான போர்த்துக்கீசரிடமும் பின்னர் ஒல்லாந்தரிடமும் கைமாறியபோதும் கூட வன்னிப்பகுதியில் இவ் வன்னியர்கள் ஓரளவு அதிகாரத்துடனேயே இருந்து வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலேயே வன்னிப்பகுதி முற்றிலுமாக மத்திய அரசின் நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
புவியியல்
வட மாகாணம் இலங்கையின் வடக்கே இந்தியாவில் இருந்து 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியத் துணைக்கண்டத்துடன் தொன்மை வாய்ந்த ஆதாம் பாலம் (சேது பாலம், அல்லது இராமர் பாலம்) ஊடாக இணைக்கப்பட்டுள்ளது. இம்மாகாணத்தின் பரப்பளவு 8884 கிமீ2 ஆகும். இம்மாகாணம் மேற்கே மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றாலும், வடமேற்கே பாக்கு நீரிணையாலும், வடக்கு மறூம் கிழக்கே வங்காள விரிகுடாவினாலும், தெற்கே கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகானங்களினாலும் சூழப்பட்டுள்ளது.
வட மாகாணம் யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னி ஆகிய இரண்டு வெவ்வேறு நிலப்பரப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீர்ப்பாசனம் கிணறுகளின் உதவியுடன் நிலத்தடி நீர்ப்படுகையில் இருந்து பெறப்படுகிறது. வன்னிப் பகுதியில், குளங்கள், மற்றும் வற்றா ஆறுகள் உள்ளன. உங்குள்ள் முக்கிய ஆறுகள்: அக்கராயன் ஆறு, அருவி ஆறு, கனகராயன் ஆறு ஆகியனவாகும்.
இம்மாகாணத்தில் கடற் காயல்கள் பல உள்ளன. இவற்றில் கச்சாய் கடல் நீரேரி, நந்திக் கடல் போன்றவை முக்கியமானவை ஆகும்.
இலங்கையின் பெரும்பாலான தீவுகள் இம்மாகாணத்தின் மேற்கே அமைந்துள்ளன. இவற்றில் பெரியவை: ஊர்காவற்துறை, நெடுந்தீவு, காரைதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு ஆகியனவாகும்.
முக்கிய நகரங்கள்
வடமாகாணத்தின் மிக முக்கியமானதும், பெரியதுமான நகரம் யாழ்ப்பாணமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதைவிட வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களும் மாவட்டத் தலைநகரங்களாகும். பின்வரும் நகரங்களும் வடமாகாணத்திலுள்ள முக்கிய சேவை மையங்களாகத் திகழ்கின்றன.
காங்கேசன்துறை
பருத்தித்துறை
சாவகச்சேரி
சுன்னாகம்
பண்டத்தரிப்பு
குடித்தொகை பரம்பல்
வட மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் 55% ஆனோர் 11% நிலப்பரப்பைக்கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே செறிந்து வாழ்ந்து வந்தார்கள். 1995 இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக பெருமளவில் மக்கள், குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிப் பகுதியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சென்று குடியேறிவிட்டதனால் இந்த விகிதாசாரம் இன்று பெருமளவு மாற்றமடைந்துள்ளது.
வடமாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களாவர். இவர்களைவிட முஸ்லிம்களும், சிங்களவர்களும் சிறுபான்மையாக உள்ளனர். வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள். யாழ்ப்பாண நகரப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் அவர்கள் வாழ்கிறார்கள். இம் மாகாணத்தின் தெற்கு எல்லைப் பகுதிகளிலேயே சிங்களவர்கள் வாழ்கின்றனர். வவுனியாவிலும், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவர்கள் குடியேற்றங்கள்
உண்டு.
மேற்கோள்கள்
வட மாகாணம், இலங்கை |
1640 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 | கிழக்கு மாகாணம், இலங்கை | இலங்கையின் கிழக்கு மாகாணம் (Eastern province) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் தலைநகர் திருகோணமலை ஆகும். மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் பெரிய நகர் ஆகும். தமிழீழத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இம் மாகாணமானது இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. வடக்கே, வட மாகாண எல்லையிலிருந்து, தெற்கே, தென் மாகாண எல்லைவரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது.
இலங்கை பிரித்தானியரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்ட அரசுசார்புக் குடியேற்றத்திட்டங்கள், தமிழ்ப் பெரும்பான்மை மாகாணமாக இருந்துவந்த கீழ் மாகாணத்தின் இனப்பரம்பலில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் சார்பான நிலையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறித் தமிழ் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது. 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் கிழக்கு மாகாணத்தை, வட மாகாணத்துடன் தற்காலிகமாக இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரே மாகாணசபை நிவாகத்தின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இணைந்த மாகாணங்களின் நிர்வாக மையமும், கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையிலேயே அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக இணைப்பு 2006 அக்டோபர் 16 ஆம் நாள் இலங்கை உச்சநீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன.
இந்த மாகாணம் தொடர்பில் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கிய பகுதியாகவும் கிழக்கு மாகாணமே விளங்குவதாலும், மாகாணத்தின் சனத்தொகையில் அண்ணளவாக 30% முஸ்லிம்களாக இருப்பதாலும் தீர்வு விடயத்தில் சிக்கல்கள் அதிகமாக உள்ளது.
புவியியல்
கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட 9.996 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இது வடக்கே வட மாகாணம், கிழக்கே வங்காள விரிகுடா, தெற்கே தென் மாகாணம், மற்றும் மேற்கே ஊவா மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
இம்மாகாணத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் கடற் காயல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் மட்டக்களப்பு வாவி, கொக்கிளாய் வாவி, உப்பாறு, உல்லைக்கழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
நிருவாக அலகுகள்
கிழக்கு மாகாணம் 3 மாவட்டங்களாகவும், 45 பிரதேச செயலாளர் பிரிவுகளாகவும், 1,085 கிராமசேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்கள்
மேற்கோள்கள் |
1641 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 | தொலைத்தொடர்பு | தொலைத்தொடர்பு (Telecommunication) என்பது ஒரு தகவலை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் (இருவழித் தொடர்பு உட்பட) கடத்துகின்ற ஒரு நுட்பமாகும். தொலைத்தொடர்பு என்ற சொல், வானொலி, தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, தரவுத் தொடர்பு, கணினி வலையமைப்பு போன்ற எல்லாத் தொலைதூரத் தொடர்புகளையும் உள்ளடக்குகின்றது.
தொலைத்தொடர்பு முறைமையொன்றின் மூலகங்களாவன, பரப்பி, ஓர் ஊடகம் (கம்பி), ஓர் அலைவரிசை, ஒரு வாங்கி என்பனவாகும். பரப்பியென்பது ஒரு தகவலை, சைகை எனப்படும் பௌதிகத் தோற்றப்பாடாக உருமாற்றுகின்ற அல்லது குறியீடாக்குகின்ற கருவியாகும். பரப்புகின்ற ஊடகம், அதன் பௌதிக இயல்பு காரணமாக, பரப்பியிலிருந்து வாங்கிக்குக் கடத்தப்படும் சைகைகளில் மாற்றத்தையோ தரக்குறைவையோ ஏற்படுத்துகின்றது. இந்தத் தரக்குறைபாட்டு எல்லைகளுக்கு உட்பட்டு, சைகைகளை மீண்டும் உரிய வடிவத்தில் தகவல்களாக மாற்றும் வல்லமைகொண்ட பொறிமுறை பரப்பிகளில் உண்டு. சில சந்தர்ப்பங்களில் இறுதி "வாங்கி"யானது மனிதர்களுடைய கண்ணாகவோ காதாகவோ இருக்கக்கூடும். வேறு சில சந்தர்ப்பங்களில் கண், காது தவிர்ந்த ஏனைய புலன்கள் கூட இப்பணியைச் செய்கின்றன. இவ்வேளைகளில் தகவல்களை மீள்வித்தல் மூளையிலேயே நடைபெறுகின்றது.
தொலைத்தொடர்பு, ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு, ஓரிடத்திலிருந்து பல இடங்களுக்கு அல்லது கடைசியாகக் குறிப்பிடப்பட்டதன் ஒரு வேறுபாடான, பரப்பியிலிருந்து வாங்கிக்கு ஒரு வழியாக மட்டும் செல்லும் ஒலிபரப்பாகக் கூட இருக்கக்கூடும்.
தொலைத்தொடர்புப் பொறியாளர் ஒருவருடைய திறமை, பரப்பும் ஊடகத்தினுடைய பௌதிக இயல்புகளையும் தகவல்களின் புள்ளி விபர இயல்புகளையும் பகுத்தாய்ந்து பொருத்தமான குறியீடாக்கும் (encoding), குறியீடவிழ்க்கும் (decoding) பொறிமுறைகளை வடிவமைப்பதிலேயே தங்கியுள்ளது.
மனிதப் புலன்களினூடான (பெரும்பாலும் பார்வை, கேள்விப் புலன்கள்) தொடர்புகளுக்கான முறைமைகளின் வடிவமைப்பின்போது, மனித உணர்தன்மை தொடர்பான உடலியல், உளவியல் அமிசங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இது பொருளியல் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுவதால், பொறியாளர்கள், மக்களுடைய பார்க்கும், கேட்கும் அனுபவங்களில் கூடிய பாதிப்பை உண்டாக்காமல் எந்த அளவுக்குச் சைகைக் குறைபாடுகளைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று ஆராய்கிறார்கள்.
மனிதத் (தொலைத்)தொடர்பு - உதாரணம்
எளிமையான உதாரணமாக, உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இடையிலான உரையாடலொன்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மூளையில் உருவாகும், நீங்கள் உங்கள் நண்பருக்குச் சொல்லவிரும்பும் வசனமே, தகவலாகும். மூலையிலுள்ள மொழி தொடர்பான பகுதிகள், motor cortex, குரல் நாண்கள், larynx மற்றும் பேச்சு எனப்படும் ஒலிகளை எழுப்பும் உங்கள் வாய் என்பனவே பரப்பி (transmitter) ஆகும். பேச்சு எனப்படும் ஒலியலைகளே சமிக்ஞைகள். இவ்வாறான ஒலியலைகளையும், எதிரொலி, பகைப்புலச் சத்தங்கள் (ambient noise), தெறிப்பலைகள் (reverberation) என்பவற்றைக் காவிச்செல்லும் காற்றே சனல் ஆகும். உங்களுக்கும், வாங்கியாகிய உங்கள் நண்பருக்குமிடையில், சமிக்ஞைகளில் திரிபுகளை ஏற்படுத்தக்கூடிய அல்லது ஏற்படுத்தாத வேறு தொழில்நுட்பக் கருவிகளும் (உம்: தொலைபேசி, அமெச்சூர் வானொலி முதலியன) இருக்கக்கூடும். உங்கள் நண்பருடைய காது, கேள்வி நரம்பு, உங்கள் குரலுக்கும் அருகேசெல்லும் வாகனத்தின் சத்தத்துக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு உங்கள் பேச்சை நீங்கள் சொல்லவிரும்பிய அதே வசனமாக மாற்றக்கூடிய அவருடைய மூளையின் மொழிப்பகுதிகள் என்பனவே இறுதியான வாங்கியாகச் செயல்படுகின்றன.
அருகே செல்லும் வாகனத்தின் சத்தம், சனலின் முக்கிய இயல்புகளிலொன்றான noise என்பதற்கு உதாரணமாகும். சனலின் இன்னொரு முக்கியமான அம்சம் bandwidth என்பதாகும்.
ஏனைய பின்னணிகள்
பெல் சோதனைச் சாலையைச் சேர்ந்த விஞ்ஞானி குளோட் ஈ ஷனோன் என்பவர், 1948ல், தொடர்பின் கணிதவியற் கோட்பாடு (A Mathematical Theory of Communication) என்பதி வெளியிட்டார். இந்த முக்கியத்துவம்வாய்ந்த வெளியீடு, தகவற் கோட்பாடு என வழங்கப்படும் தொடர்பு முறைமைகளை விபரிப்பதற்குப் பயன்படும் கணித மாதிரியுருக்களை உருவாக்க விழைந்தது.
வரலாறு
மத்தியகாலத்தில் இருந்து அமைப்புகள்
1792 ஆம் ஆண்டு பிரான்சியப் பொறியியலாளரான கிளவுடே சப்பே என்பவர் முதலாவது நிலைத்த காட்சியுடன் கூடிய தந்தி முறையை லீலிற்கும் பாரிசிற்கும் இடையில் வடிவமைத்தார். திறமை மிக்க இயக்குபவர்கள் தேவைப்பட்டதாலும் 10-30 கிலோமீற்றர்கள் (6–20 மைல்கள்) இடைவெளியில் விலை உயர்ந்த கோபுரங்களை அமைக்க வேண்டியிருந்ததாலும் இந்த அமைப்பு முறை பாதிக்கப்பட்டது. மின்சாரத் தந்தியின் கண்டுபிடிப்பால் ஏற்பட்ட போட்டியின் விளைவாக சுவீடனிலிருந்த ஐரோப்பாவின் இறுதி வர்த்த்க சேமாஃபோர் வரிசை 1880 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.
தந்தி மற்றும் தொலைபேசி
மின்சாரத்துடன் கூடிய தொலைத்தொடர்பு முறை மீதான பரிசோதனைகள் 1726 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தோல்வியடைந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்டன. அறிவியலாளர்களான பியர் சிமோன் இலப்லாசு, அம்பியர், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் ஆகியோர் இப்பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.
நவீன தொலைத்தொடர்பு
உலகளாவிய உபகரணங்கள் விற்பனை
காட்னர் மற்றும் ஆர்ஸ் டெக்னிகாவால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் நுகர்வோரின் முக்கிய தொலைத்தொடர்பு உபகரணங்களின் விற்பனை மில்லியன் அலகுகளில்;
குறிப்பு: கி/இ என்பது கிடைக்கப்பெறவில்லை என்பதைக் குறிக்கின்றது.
தொலைபேசி
அனலாக் தொலைபேசி வலையமைப்பில் அழைப்பவர் அழைப்பினை மேற்கொள்ள வேண்டிய நபரை தொலைபேசி பரிமாற்றங்களின் ஊடாக அடைகின்றார். இக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் கண்டுபிடித்தார். இக்கருவி ஒலி அலைகளால் அதிரும் ஒரு தகட்டிலிருந்து அவ்வதிர்வுகளை மின் குறிப்பலைகளாக மாற்றிப் பின்னர் இம்மின்னலைகளை மின் கம்பியின் வழியே செலுத்தி மறு முனையில் மீண்டும் ஒலியலைகளாக மாற்றப்படுவதன் மூலம் இயங்குகின்றது. இன்று இக்கருவி கம்பியில்லாமலே மின் குறிப்பலைகளை கடத்தும் வகையில் தொழில் நுட்ப வளரச்சி அடைந்துள்ளது.
எடுத்துக்காட்டுகள்
டிஜிட்டல் சனல் coding முறைமைகளுக்கான எடுத்துக்காட்டுகள்:
Hamming coding,
Gray coding,
இருமக் coding,
Turbo coding.
தொலைத்தொடர்பு முறைமைகளுக்கான எடுத்துக்காட்டுகள்:
Semaphore
தந்தி
Radioteletype
உலகத் தொலைபேசி வலையகம் (பொது Switched தொலைபேசி வலையகம் அல்லது PSTN எனவும் அழைக்கப்படுவதுண்டு)
வானொலி
தொலைக்காட்சி
தொலைத்தொடர்புச் செய்மதிகள்
ஈதர்நெட்
இணையம்
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
Ericsson's Understanding Telecommunications
International telephone directories and zip codes
தொலைத்தொடர்பு |
1642 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | சதுரங்கம் | அரசர்களின் விளையாட்டு என கருதப்படும் சதுரங்கம் அல்லது செங்களம் அல்லது வல்லாட்டம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டுக்குத் தமிழில் ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு. ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். செங்களம் அதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அன்று. மதியூகமும், தந்திரமும் இவ்விளையாட்டுக்கு முக்கியமானவையாகும். தற்காலங்களில் இவ்விளையாட்டானது பாடசாலைப் பாடவிதானத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் பூராகவுமுள்ள பல மில்லியக்கணக்கான மக்களால் வீடுகளில், பூங்காக்களில், கழகங்களில், இணையத்தளத்தில், கணினியிலும் போட்டித்தொடர்களாகவும் விளையாடப்பட்டு வருகிறது.
செங்களம் மனித இனத்தின் பிரபல விளையாட்டுகளில் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. இது சில சமயம் ஒரு போர் விளையாட்டாகவும், "மூளை சார்ந்த போர்க்கலை"யாகவும் பார்க்கப்படுவதுண்டு. பல விதமான சதுரங்க விளையாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய சில விளையாட்டுகளும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன. சீனாவின் சியாங்கி, சப்பானின் சோகி, நேபாளத்தின் புத்தி சல் என்பன இவற்றுள் புகழ் வாய்ந்தவை.
ஒருவருடைய பகுதியில் (வெள்ளை/ கறுப்பு) ஓர் அரசன், ஓர் அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு யானைகள் மற்றும் எட்டு சிப்பாய்கள் காணப்படும். ஒவ்வொரு வகையான காயும் விதம் விதமாக நகரக்கூடியவை.
விளையாடும் வழிமுறை
செங்களம் இருவரால் விளையாடப்படும் ஆட்டமாகும். தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம். எதிரி அரசனை, எதிரி தனது அரசனை பிடித்துவிடுவதற்கு முன்பு பிடித்துவிட்டால் வெற்றி கிடைத்துவிடும். விளையாட்டும் முடிவடைந்து விடும்.
செங்களம் ஒரு சதுரப்பலகையில் விளையாடப்படும். இந்தச் சதுரப்பலகை படத்தில் காட்டப்பட்டுள்ளது போல வெள்ளை கறுப்பு என மாறி மாறி 8x8=64 சதுரங்களை கொண்டிருக்கின்றது. அதாவது 8 நிரைகளையும் 1, 2, 3, 4, 5, 6. 7, 8 (கீழிருந்து மேலாக), 8 நிரல்களையும் a, b, c, d, e, f, g, h (இடத்திலிருந்து வலமாக) கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சதுரத்தையும் இயற்கணித குறியீட்டுக்கமைய தனித்துவமாக குறிக்கலாம். முதலாவது சதுரம் (a, 1), இரண்டாவது சதுரம் (a, 2) என்று 64வது சதுரம் (h, 8) என்று அமையும்.
இந்த விளையாட்டில் இரு அணிகள் அல்லது படைகள் உண்டு. அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும்.
ஆரம்ப நிலை
படத்தில் காட்டப்பட்டவாறு ஆரம்ப அடுக்கல் அமையவேண்டும். முதல் நிரலில் அல்லது வரிசையில் வெள்ளைப் படையின் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு வெள்ளை அரசி (d, 1) வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் (e, 1) கறுப்புச் சதுரத்திலும் நிற்கவேண்டும். இரண்டாவது நிரலில் எட்டு வெள்ளைப் படைவீரர்களும் நிற்கும்.
இதைப் போலவே எதிர் திசையில் அதாவது எட்டாவது நிரலில் கறுப்புப் படையின் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு கறுப்பு அரசி (d, 8) கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் (e, 8) வெள்ளைச் சதுரத்திலும் நிற்க வேண்டும். ஏழாவது நிரலில் எட்டு கறுப்புப் படைவீரர்களும் நிற்கும்.
காய்கள் நகர்வு முறைகள்
அரசன்
அரசன் அல்லது ராஜா தான் இருக்கும் இடத்திலிருந்து எத்திசையிலும் ஒரு சதுரத்துக்கு மட்டுமே நகரமுடியும்.
e4 கட்டத்தில் உள்ள வெள்ளை ராஜா ஒரே ஒரு கட்டம் மட்டும் நகர்ந்து e3,e5.d3,d4,d5,f3,f4,f5 ஆகிய எட்டு கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்திற்கு செல்ல முடியும்.
ஆனால் ஒரு சிறப்பு வகை நகர்த்தலில் மட்டும் ராஜாவை இரண்டு சதுரங்கள் நகர்த்தலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நகர்விற்கு கோட்டை கட்டுதல் (castling) என்று பெயர். இப்படி ராஜா இரு கட்டங்கள் நகரும்பொழுது, கோட்டை அரசரைத்தாண்டி அடுத்தக் கட்டத்தில் இடப்புறமோ வலப்புறமோ நிற்கும். இப்படி ஒரு ஆட்டத்தில் அரசரும் யானையும் ஒரே நேரத்தில் நகருவதை கோட்டை கட்டுதல் என்பர். இவ்வாறு கோட்டை கட்டுவதற்கு முன்பாக ராஜா, கோட்டை என்ற இரண்டு காய்களில் ஒன்றைக் கூட நகர்த்தி இருக்கக்கூடாது. அப்படி நகர்த்தி இருந்தால் கோட்டை கட்டும் நகர்வை செய்ய முடியாது. மேலும் ராஜாவுக்கு ஆபத்து (check) இருக்கும் போதும், கோட்டை கட்டலின் விளைவாக ராஜா நிற்கும் இடத்தில் ஆபத்து (check) இருந்தாலும் கோட்டை கட்டும் நகர்வை செய்ய முடியாது.
ராணி இருக்கும் பக்கமாக கோட்டை கட்டிக்கொள்வதை நீண்ட கோட்டை கட்டுதல் என்பர்.
ராஜா தன் பக்கத்தில் கோட்டை அமைத்துக் கொள்வதை குறுகிய கோட்டை கட்டுதல் என்பர்.
ராணி
அரசியால் தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ மூலைவிட்டமாகவோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படத்தில் படத்தில் காட்டப்படும் ராணியை நாம் தேவைக்கேற்ப காட்டப்பட்ட ஏதாவது ஒரு கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ள இயலும்.
மந்திரி
மந்திரி அல்லது தேர்' 'நகர்வு முறை:
மந்திரி அல்லது தேர் மூலைவிட்டமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.
படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் மந்திரியை நாம் தேவைக்கேற்ப f5,g6,h7,d5,c6,b7,a8,f3,g2,h1,d3,c2,b1 ஆகிய 13 கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ள இயலும்
குதிரை குதிரை: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ’ட’ வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்). குதிரை மட்டும் காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது.
படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் குதிரையை நாம் தேவைக்கேற்ப f6,d6,g5,g3,f2,d2,c3,c5 ஆகிய எட்டு கட்டங்களில் ஏதாவது ஒன்றில் நகர்த்திக் கொள்ள இயலும்.குதிரை கருப்புக் கட்டத்தில் இருக்குமேயானால் வெள்ளைக் கட்டத்திற்கும் வெள்ளைக் கட்டத்தில் நிற்குமேயானால் கருப்புக் கட்டத்திற்கும் நகர்ந்து செல்லும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
யானை
யானை: தான் இருக்கும் இடத்தில் இருந்து நேராக எத்திசையிலும் முன்னே பின்னே அல்லது இட வலமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் கோட்டையால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.
படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் கோட்டையை நாம் தேவைக்கேற்ப e5,e6,e7,e8,e3,e2,e1,f4,g4,h4,d4,c4,b4,a4 ஆகிய 14 கட்டங்களில் ஏதாவது ஒன்றில் நகர்த்திக் கொள்ள இயலும்.
சிப்பாய் படைவீரர்: தான் இருக்கும் இடத்தில் இருந்து நேரே முன்நோக்கி மட்டும் ஒரு சதுரம் நகர முடியும். ஆனால் ஆரம்பநிலையில் மட்டும் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி இருசதுரங்கள் விளையாடும் வீரர் விரும்பினால் நகர்த்த்திக் கொள்ளலாம். படைவீரர் தன் தாக்குதலை முன்நோக்கிய மூலைவிட்டமாக மட்டுமே மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது. வெள்ளைப் படைவீரர் 5ம் வரியில் இருக்கும் போது கறுப்பு படைவீரர் வெள்ளைப் படைவீரருக்கு பக்கத்தில் நகர்த்தினால் கறுப்பு படைவீரரை வெள்ளைப் படைவீரர் தாக்கலாம். இதனை எம்பஸ் (Enpassant) என்று கூறுவார்கள். படைவீரரை படிப்படியாக நகர்த்திக் கொண்டு கடைசிப் பெட்டியை அடைந்தால் அப்படைவீரனை பதவி உயர்வு கொடுத்து ராணி, மந்திரி, குதிரை மற்றும் கோட்டை ஆகியவற்றில் ஒன்றாக மாறிக்கொள்ளலாம்.
படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் படைவீரன் e5 கட்டத்திற்கு மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும். ஆனால் இவ்வீரனால் f5, d5 கட்டங்களில் உள்ள எதிரியின் காயைத் தாக்கி வெட்ட முடியும. ஒரு வேளை எதிரியினால் வெட்டுப்படாமல் படிப்படியாக முன்னேறி e8 கட்டத்தை இவ்வீரன் அடைந்தால் அவன் பதவி உயர்வு அடைவான்..
ஆட்டம்
வெள்ளைப் படையணியே முதலில் நகரவேண்டும். யார் வெள்ளைப் படையணி என்பதை ஆடுபவர்கள் தீர்மானிக்கவேண்டும். முதலில் யார் நகர்த்துகின்றார்களோ அவர்களுக்கு ஆட்டத்தில் ஒருவித இலாபம் இருக்கும் என்று கருதுகிறார்கள். கருப்புப் படையணியைக் கொண்டிருப்பவன் இந்த ஆரம்ப முன்னிலையை சமன் செய்ய கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். .
வரலாறு
செங்களத்தின் தோற்றம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், ஏழாம் நூற்றாண்டு அளவில் இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே இது வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இங்கிருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையும் பல வேறுபாடுகளுடன் பரவியது. இது மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்குப் பரவியது. அங்கே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய இவ்விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது. முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சோ X-இன் ஆதரவில், சதுரங்கம், பாக்கம்மொன், டைஸ் என்னும் விளையாட்டுக்கள் தொடர்பான நூலொன்று எழுதப்பட்டுள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் செங்களம் இங்கிலாந்தை எட்டியது. அங்கே அது கூரியர் முதலிய வேறுபட்ட வடிவங்களாக உருவெடுத்தது.
15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சதுரங்கக் காய்களின் நகர்த்தல்களுக்கான வரைமுறைகள் இத்தாலியில் பயன்பாட்டுக்கு வந்தன. "போன்"கள் (வீரர்) முதல் நகர்த்தலின்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்பட்டது, "பிஷப்" திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதியும் புழக்கத்துக்கு வந்தது. முன்னர் இவை மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே நகர அனுமதிக்கப்பட்டது. ஆனால் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. மூலை விட்டம் வழியாக ஒருகட்டம் மட்டுமே நகரலாம் என "இராணி"க்கிருந்த சக்தி கூட்டப்பட்டு திறந்த கட்டங்களினூடாக எத்திசையிலும், எவ்வளவு தூரமும் நகரலாம் என அனுமதிக்கப்பட்டு "இராணி" ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது.
மேற்படி மாற்றங்கள் சதுரங்கத்தை கூடுதலாகப் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகுத்ததின் மூலம், பல ஈடுபாடுள்ள சதுரங்க ஆர்வலர்களை உருவாக்கியது. அக்காலம் தொட்டு ஐரோப்பாவில் செங்களம் அதிகம் மாற்றமில்லாது இன்று விளையாடப்படுவது போலவே இருந்துவருகிறது. சமநிலைக்கான நிபந்தனைகள் தவிர்ந்த ஏனைய, தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன.
"ஸ்டவுண்டன்" தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல் குக் என்பவரால் 1849 இல் வடிவமைக்கப்பட்டு, அக்காலத்தில் முன்னணிச் செங்களம் விளையாட்டு வீரரான ஹோவார்ட் ஸ்டவுண்டன் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், 1924 இல் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு ஆல் உத்தியோக பூர்வமாகப் புழங்க விடப்பட்டது.
ஒரு காலத்தில் சதுரங்க விளையாட்டுக்கள் விபரிப்பு செங்களம் குறியீடுகள் (descriptive chess notation) மூலம் பதிவு செய்யப்பட்டன. இது இன்னும் சில விளையாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரினும், புதிய, சுருக்கமான அட்சரகணித சதுரங்கக் குறியீடுகளால் இவை படிப்படியாக மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன. காவத்தக்க விளையாட்டுக் குறியீடு (Portable Game Notation – PGN) முறையே கணிணிப் பயன்பாட்டு வடிவில் அமைந்த மிகப் பொதுவான குறியீட்டு ஒழுங்கு ஆகும்.
மனித மூளைக்கு மட்டுமே உரித்துடையதாகக் கருதப்பட்ட சதுரங்க விளையாட்டை இப்பொழுது, மனிதர்கள் மட்டுமன்றி இயந்திரங்களும் விளையாடத் தொடங்கிவிட்டன. ஆரம்பகாலங்களில் வெறும் ஆர்வம் காரணமாகப் பயன்பட்டுவந்த ஒன்றாக இருந்த போதிலும், கணினி செங்களம் விளையாடும் கணினிகள் வளர்ந்து திறமையான மனிதர்களுக்கே சவால்விடக்கூடிய, சிலசமயம் தோற்கடிக்கக்கூடிய அளவுக்குச் சக்தி மிக்கவையாகிவிட்டன.
அக்காலத்தில் சதுரங்க விளையாட்டில் உலகில் முதல் நிலையிலிருந்த காரி காஸ்பரோவ், 1996ல், 6 விளையாட்டுகள் கொண்ட சதுரங்க ஆட்டத்தை ஐபிஎம் சதுரங்கக் கணினியான டீப் புளூ (ஆழ் நீலம்) வுக்கு எதிராக விளையாடினார். முதல் விளையாட்டில் (டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1) காஸ்பரோவை வென்றது லம் கணினி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் 3 விளையாட்டுக்களை வென்றது மூலமும், ஏனைய இரண்டிலும் சமநிலையை அடைந்தது மூலமும் காஸ்பரோவ் வெற்றிபெற்றார்.
1997 இல் மறுபடியும் நடைபெற்ற 6 விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் கணினி வெற்றிபெற்றது. அக்டோபர் 2002ல் விளாமிடிர் கிராம்னிக் எட்டு விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் டீப் பிரிட்ஸ் என்னும் கணினி நிரல் உடன் சமநிலை பெற்றார். 2003 பெப்ரவரியில், டீப் ஜூனியர் எனும் கணினி நிரல் உடன் விளையாடிய 6 விளையாட்டு ஆட்டத்திலும், பின்னர் நவம்பரில் X3D பிரிட்ஸ் உடன் விளையாடிய 4 விளையாட்டு ஆட்டத்திலும் காஸ்பரோவ் சமநிலையையே பெற்றார்.
தவறு நடந்து விட்டது
இங்கே வியூகம் என்பது ஒரு விளையாட்டிற்கான ஒரு நீண்ட நேர இலக்குக்கான வழிமுறையையும், உத்தி என்பது உடனடியான நகர்த்தலுக்கான தந்திரங்களையும் குறிக்கிறது. சதுரங்க விளையாட்டில் நீண்ட நேர வழிமுறைகளையும், உடனடி உத்திகளையும் வேறுபடுத்தமுடியாது. ஏனெனில் வியூகம் சார்ந்த இலக்குகளை உத்திகள் மூலமே அடையமுடியும். அதே வேளை முன்னைய வியூகங்களே பின்னைய நகர்த்தல்களின் போது உத்திகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றன. வேறுபட்ட வியூகம் மற்றும் உத்தி வழிமுறைகள் காரணமாக ஒரு சதுரங்க விளையாட்டை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது "தொடக்க ஆட்டம்", வழக்கமாக இப்பிரிவு ஆட்டம் 10 முதல் 25 நகர்த்தல்களைக் கொண்டிருக்கும். இக் கட்டத்தில் விளையாடுபவர்கள் தங்கள் படைகளை வரப்போகும் போருக்குத் தயார் படுத்துவர். அடுத்தது "நடு ஆட்டம்" இது விளையாட்டின் முதிர்நிலை. இறுதியாக "முடிவு ஆட்டம்", இக் கட்டத்தில் பொதுவாகப் பெரும்பாலான காய்கள் வெளியேறியிருக்கும். அதனால், அரசனுக்கு விளையாட்டில் முக்கிய பங்கு இருக்கும்.
தொடக்க ஆட்டம்
சதுரங்க விளையாட்டின் தொடக்க ஆட்டம், ஆரம்ப நடவடிக்கைகளான சில திறப்பு நகர்வுகளை அடிப்படையாக கொண்டு ஆரம்பமாகிறது. இத்திறப்பு நகர்வுகள் அனுபவங்களின் அடிப்படையில் திட்டமிடப்பட்டு சிறு சிறு தொகுப்புகளாக பெயரிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ரூயி லோப்பஸ் திறப்பு, சிசிலியன் தடுப்பாட்டம் என்பன சில உதாரணங்களாகும். இவ்வாறு பெயரிடப்பட்ட பல்வேறு திறப்பு நகர்வுகள் குறிப்புதவி நூலான திறப்பு நகர்வுகளின் கலைக் களஞ்சியம் திரட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் அமைதியான முற்றுகை உத்தி முதல் தீவிர தாக்குதல் உத்தி வரையிலான ஏராளமான திறப்பு நகர்வு வரிசைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வரிசைகள் இரு தரப்பினருக்குமான முப்பது நகர்வுகள் வரை நீண்டுள்ளவையாக தொகுக்கப்பட்டுள்ளன. தொழில் முறை சதுரங்க வீரர்கள் இத்திறப்பு கோட்பாடுகளை படித்து ஆராய பல ஆண்டுகள் வரை செலவழித்து தெளிவடைய முயல்கிறார்கள்.
பெரும்பாலான திறப்பு நகர்வுகளின் அடிப்படை நோக்கம் ஒரேமாதிரியாகவே காணப்படுகிறது.
முன்னேற்றம்: எதிரியின் காய்களை நம்முடைய பிரதேசத்தில் ஊடுறுவாமல் தடுக்கவும் அதே நேரத்தில் நம் காய்கள் முன்னேறி எதிரியின் பகுதியில் நுழையவும் திட்டமிடும் நுட்பம் முதலாவது நோக்கமாகும். இந்நுட்பமானது நம்முடைய காய்களை, குறிப்பாக குதிரை மற்றும் மந்திரியை உபயோகமான இடத்தில் நிறுத்தி ஆட்டத்தின் போக்கை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதை கற்பிக்கிறது.
மத்திய சதுரங்கள் கட்டுப்பாடு: சதுரங்க பலகையின் மத்திய சதுரங்கள் நம் காய்களின் கட்டுப்பாட்டில் இருந்தால், நம் காய்களை இலகுவாக எந்த பகுதிக்கும் நகர்த்தமுடியும் என்பது மற்றொரு நோக்கமாகும். மத்திய சதுரங்களை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது எதிரியின் காய்களை முன்னேற விடாமல் தடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசனின் பாதுகாப்பு: அபாயகரமான தாக்குதல்களில் இருந்து அரசனை பாதுகாப்பது மூன்றாவது நோக்கமாகும். உரிய நேரத்தில் கோட்டை கட்டிக் கொள்ளுதல் அரசனின் பாதுகாப்பிற்கு சற்று உதவும் என்பது இந்நோக்கத்தின் அடிப்படையாகும்.
சிப்பாய்கள் அணிவகுப்பு: ஆதரவாக தோள் கொடுக்கும் வீரர்கள் துணையிருந்தால் ஒரு சிப்பாய் வீரனால் எளிமையாக முன்னேறிச் செல்லமுடியும் என்ற அடிப்படை நான்காவது நோக்கமாகும். தனிமைப்படுத்தப்பட்ட சிப்பாய், ஒரு சிப்பாயின் முதுகின் பின்னால் மறைந்து நிற்கும் சிப்பாய் போன்ற பலவீனங்களை உருவாக்குவதை தவிர்ப்பதும், இப்பலவீனங்களை எதிரியின் சிப்பாய்களுக்கிடையில் ஏற்படுத்த கட்டாயப்படுத்துவதும் இந்நோக்கத்திலுள்ள நுட்பங்களாகும்.
நடு ஆட்டம்
திறப்பு நகர்வுகளின் வரிசையில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆட்டத்தை தொடங்கிய பிறகு சதுரங்க விளையாட்டின் முக்கியப் பகுதியாக திகழ்வது நடு ஆட்டமாகும். சதுரங்கப் பலகையில் உள்ள பெரும்பாலான காய்கள் தடையின்றி முன்னேற வழிகள் கிடைத்தவுடன் நடு ஆட்டம் துவங்குவதாக கருதப்படுகிறது. தொடக்கம் மற்றும் நடு ஆட்டங்களுக்கு இடையே தெளிவான வரிசைத் தொகுப்புகள் வரையறுக்கப்படவில்லை. ஏனெனில், திறப்புக் கோட்பாடுகளை முடித்துக் கொள்ளும் வீரர்கள், தங்கள் காய்களின் அமைவிடம், பலம், பலவீனம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சுயசிந்தனையில் தனித்துவமான திட்டங்களை அமைக்க முற்படுவர். இந்நிலையில் வீரர்கள் தங்கள் எதிரியைத் தாக்குதல், கைப்பற்றுதல், முன்னேறுதல், பலிகொடுத்தல் முதலான தந்திரங்களை கையாளும் சாத்தியக்கூறுகளை ஆராய்வர்.
ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய சேர்க்கை நகர்வுகள் படலம் நடு ஆட்டங்களில்தான் தோற்றம் பெறுகின்றன. சேர்க்கை நகர்வுகள் என்பன ஆதாயத்தை அடிப்படையாக கொண்ட சில தந்திர நகர்வுகளின் தொடர் ஆகும். திட்டமிடப்பட்ட இத்தொடர் நகர்வுகள் எதிரி ராசாவின் மீது தாக்குதல் தொடுக்கும் உத்தியோடு இணைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில பொதுவான நகர்த்தல் முறைகள் அவற்றைக் கண்டறிந்தவர்கள் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, போடென் மேட் அல்லது லஸ்கர்-பார் சேர்க்கைகள்.
வியூகத்தின் அடிப்படைகள்
சதுரங்கத்தின் வியூகம்; காய்களின் நிலைகளை மதிப்பிடல், இலக்குகளை முடிவு செய்தல், விளையாட்டுக்கான நீண்ட நேரத் திட்டங்களை உருவாக்குதல் என்பவற்றோடு தொடர்புடையது. மதிப்பீடு செய்யும்போது, விளையாடுபவர்கள் பலகையில் உள்ள காய்களின் மதிப்பு, போர்வீரர் அமைப்பு, அரசனின் பாதுகாப்பு, வெளிகள், முக்கிய கட்டங்களினதும் கட்டத் தொகுதிகளினதும் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்களின் நிலைகளை மதிப்பிடுவதில் முக்கியமானது இரு தரப்பினதும் மொத்தப் பெறுமதியைக் கணக்கிடுவதாகும். இதற்காகப் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டுப் புள்ளிகள் அநுபவத்தினால் பெறப்படுபவை. பொதுவாகப் படைவீரர்களுக்கு ஒரு புள்ளியும்; குதிரைக்கும், மந்திரிக்கும் மூன்று புள்ளிகள் வீதமும், கோட்டைக்கு ஐந்து புள்ளிகளும், அரசிக்கு ஒன்பது புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. விளையாட்டின் முடிவுக் கட்டத்தில், அரசனுக்கு, குதிரை அல்லது மந்திரியிலும் மதிப்புக் கூடுதலாக இருக்கும் ஆனால் கோட்டையிலும் குறைவான மதிப்பே அரசனுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசனுக்கு போரிடும் மதிப்பாக நான்கு புள்ளிகள் வழங்கப்படுவது உண்டு. இந்த அடிப்படை மதிப்புகள், காய்களின் நிலை, காய்களுக்கு இடையிலான தொடர்புகள், நிலையின் வகை'' போன்ற பிற சூழ்நிலைகளைப் பொறுத்து மாற்றம் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, முன்னேறி இருக்கும் படைவீரர்களுக்குத் தொடக்க நிலையில் இருக்கும் படைவீரரிலும் மதிப்பு அதிகம். இரண்டு மந்திரிகள் இருப்பது ஒரு மந்திரியும் ஒரு குதிரையும் இருப்பதிலும் கூடிய மதிப்பு உள்ளது. அதே வேளை பல படைவீரர்களுடன் கூடிய மூடிய நிலைகளில் குதிரைக்கு மதிப்பு அதிகம். படைவீரர்கள் குறைவாக இருந்து திறந்த நிலை காணப்படுமானால் மந்திரிக்குக் கூடுதல் மதிப்பு உண்டு.
சதுரங்க நிலைகளை மதிப்பீடு செய்வதில் இன்னொரு முக்கிய அம்சம் "படைவீரர் அமைப்பு". படைவீரர்களே சதுரங்கப் பலகையில் உள்ள காய்களில் நகர்திறன் குறைந்தவை. இதனால் இவை ஒப்பீட்டளவில் நிலையானவை என்பதுடன், இவை பெரும்பாலும் விளையாட்டின் வியூகம் சார்ந்த இயல்புகளைத் தீர்மானிக்கின்றன. தனிமையான, இரட்டையான, பின்தங்கிய, படைவீரர்களைக் கொண்ட அல்லது வெளிகொண்ட படைவீரர் அமைப்புக்கள் வலுக்குறைவானவை. ஒரு முறை உருவாகிவிட்டால் பொதுவாக அதுவே நிலைபெற்று விடுகிறது. இதனால், தாக்குதலுக்கான வாய்ப்பு முதலிய வேறு வாய்ப்புக்கள் இருந்தாலன்றி, இவ்வாறான நிலை ஏற்படாதவாறு பாதுகாத்துக்கொள்வது வழக்கம்.
உத்திகளின் அடிப்படைகள்
உத்திகள் குறுகிய நேரத்துக்குரிய நடவடிக்கைகளைக் குறிக்கின்றன. இவை குறுகிய நேரத்துக்கானவை என்பதால், மனித மூளையோ அல்லது கணினியோ இலகுவில் அதன் விளைவுகளைக் கணிக்கக்கூடியதாக இருக்கும். எனினும் இக் கணிப்பின் ஆழம் விளையாடுபவரின் திறமையையோ, கணினியின் ஆற்றலையோ பொறுத்தது. இரண்டு தரப்பிலும் நகர்த்தலுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும்போது அதிகம் ஆழமான கணிப்பு இலகுவானதல்ல. ஆனால் சிக்கலான வேளைகளில், குறைந்த அளவு வய்ப்புக்கள் இருக்கும்போது, ஆழமாக, தொடர்ச்சியான பல நகர்வுகளைக் கணிக்க முடியும்.
எளிமையான, ஒன்று அல்லது இரண்டு நகர்த்தல்களுக்குள் அடங்கும் உத்திசார்ந்த செயற்பாடுகள் - பயமுறுத்தல்கள், காய்களைக் கொடுத்து எடுத்தல், இரட்டைத் தாக்குதல் போன்றவற்றை - ஒன்று சேர்த்து மேலும் சிக்கலான உத்திகளாகப் பயன்படுத்தலாம். வழமையாக இது ஒரு தரப்பிலிருந்தோ அல்லது சில சமயங்களில் இரு தரப்பிலும் இருந்தோ வரக்கூடும். கோட்பாட்டாளர்கள் பல அடிப்படையான உத்தி முறைகளையும், வழமையான நகர்வுகளையும் விளக்கியுள்ளனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சதுரங்க விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள், அதற்கான நுட்பங்கள் -
செங்களம் தினமலர்
செங்களம் ஒரு அறிமுகம்
http://www.chathurangam.com/index.asp
http://www.chess-mate.com/
http://www.tamilchess.ch (தமிழில்)
http://tamilchess.com/
http://www.indianchessfed.org/
செங்களம் விளையாட
பன்னாட்டு நிறுவனங்கள்
FIDE – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
ICCF – [International Correspondence Chess Federation]
செய்திகள்
Chessbase news
The Week in Chess
தனிநபர் விளையாட்டுக்கள் |
1645 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82-%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%2C%201996%2C%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%201 | டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1 | டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1 ஒரு உலகப் பிரசித்தி பெற்றசெஸ் விளையாட்டாகும்.
செஸ் விளையாடும் கணினியொன்று வழக்கமான சுற்றுப்போட்டி விதிகளின்கீழ் (விசேடமாக நேரக் கட்டுப்பாடு) அக்காலத்திய உலக சம்பியன் ஒருவரை வென்ற முதலாவது விளையாட்டு இதுவாகும்.
டீப் புளூ காரி காஸ்பரோவை வெல்வதற்காக ஐபிஎம்-இனால் உருவாக்கப்பட்டதாகும். "டீப் புளூ" இந்த விளையாட்டை வென்றது. எனினும் மிகுந்த ஐந்து விளையாட்டுக்களில் 3 வெற்றிகளையும், 2 சமநிலைகளையும் பெற்றதுமூலம் 1996ல் காஸ்பரோவ் வெற்றிபெற்றார். 1997ல் மீண்டும் விளையாடியபோது இரண்டு விளையாட்டுக்களை மேலதிகமாக வென்றதுடன், முழு "மாட்ச்"சையும் வென்றது.
எனினும் காஸ்பரோவ் உலகின் தலைசிறந்த செஸ் விளையாட்டு வீரராகவே கருதப்படுகிறார்.
இவ் விளையாட்டு பெப்ரவரி 2, 1996 ல் பிலடெல்பியா, பென்சில்வேனியாவில் விலையாடப்பட்டது. கணினி வெள்ளைக் காய்களைப் பெற்றது. கீழே இயற்கணிதக் குறியீட்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
1. e4 c5 2. c3
2..... d5 3. exd5 Qxd5 4. d4 Nf6 5. Nf3 Bg4 6. Be2 e6 7. h3 Bh5 8. O-O Nc6 9. Be3 cxd4 10. cxd4 Bb4
11. a3 Ba5 12. Nc3 Qd6 13. Nb5 Qe7
14. Ne5! Bxe2 15. Qxe2 O-O 16. Rac1 Rac8 17. Bg5
17.... Bb6 18. Bxf6 gxf6
19. Nc4! Rfd8 20. Nxb6! axb6 21. Rfd1 f5 22. Qe3!
22... Qf6 23. d5!
23... Rxd5 24. Rxd5 exd5 25. b3! Kh8?
26. Qxb6 Rg8 27. Qc5 d4 28. Nd6 f4 29. Nxb7
29.... Ne5 30. Qd5
30.... f3 31. g3 Nd3
32. Rc7 Re8
33. Nd6 Re1+ 34. Kh2 Nxf2 35. Nxf7+ Kg7 36. Ng5+ Kh6 37. Rxh7+ 1-0
உசாத்துணைகள்
Burgess, Graham, John Nunn, and John Emms. The Mammoth Book of the World's Greatest Chess Games. 1998. New York: Carroll and Graf Publishers, Inc. .
Eade, James. Chess for Dummies. 1996. Foster City, CA: IDG Books Worldwide, Inc. .
Wheeler, David A. Deep Blue - Kasparov, 1996, Game 1. http://www.dwheeler.com/misc/deepblue-kasparov.txt (in Portable Game Notation)
சதுரங்கப் போட்டிகள்
1996 நிகழ்வுகள்
சதுரங்க ஆட்டங்கள் |
1647 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81 | எட்டுக்கோடு | எட்டுக்கோடு சிறுவர்களால் விளையாடப்படுகிறது. விசேடமாகச் சிறுமிகளே பெரும்பாலும் விளையாடுவது வழக்கம். இது பொதுவாக வெளியிலேயே விளையாடப்படுவதாயினும், இட வசதி இருந்தால், உள்ளக விளையாட்டாகவும் விளையாடப்படலாம். இந்த விளையாட்டை விளையாடுபவர்களுடைய எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. பங்கேற்பவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனிப் போட்டியாளராகவே பங்குபற்றுவது வழக்கம்.
தேவையானவை
இதை விளையாடுவதற்கான களத்தில் 8 கட்டங்கள் அமையக்கூடியவாறு கோடுகள் வரையப்பட்டிருக்கும். (அருகிலுள்ள படத்தைப் பார்க்கவும்)
கட்டங்களின் அளவு ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்குக் கெந்திப் பாய்வதற்கு (ஒற்றைக் காலில் பாய்தல்) வசதியாக அமைந்திருக்கும்.
இவ் விளையாட்டுக்கு அண்ணளவாக ஒரு அங்குல விட்டமுள்ள சிறிய, தடிப்புக் குறைந்த மட்பாண்டத் துண்டொன்று பயன்படுகின்றது. இதைச் "சில்லி" என்று அழைப்பார்கள்.
இது பல மட்டங்களாக விளையாடப்படுகிறது.
எட்டுச் சதுரங்கள் கொண்ட இப்பெட்டியில் இடது பக்கம் நான்கு பெட்டிகளும், வலது பக்கம் நான்கு பெட்டிகளும் இருக்கும். விளையாட்டை இடது பக்கம் இருந்தே தொடங்க வேண்டும். இடது பக்கமாகப் போகும் போது ஐந்தாவது பெட்டி அதாவது வலது பக்கத்தின் மேற்பெட்டி வீடு. இங்கு காலாறி ஓய்வெடுக்கலாம்.
விளையாடும் முறை
முதல் கட்டம்
சிப்பியை இடது பக்க முதற் பெட்டியில் போட வேண்டும். போடும் போது சிப்பி கண்டிப்பாகப் பெட்டிக்குள் விழ வேண்டும். கோடுகளில் வீழ்ந்து விடக் கூடாது.
ஒற்றைக்காலால் கெந்தி, அந்தச் சிப்பியை மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்துக் கொண்டு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பெட்டிகளுக்குள் கெந்தி ஐந்தாவது பெட்டிக்குள் இரண்டு கால்களையும் வைத்து நின்று விட்டு மீண்டும் ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் கெந்தி வெளியில் போக வேண்டும்.
இதே முறையில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போட்டு இதே ஒழுங்கில் சென்று மிதித்து, எடுத்துக் கொண்டு வெளியில் போக வேண்டும். ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போடும் போது இடது பக்க மூலையில் நின்றே போட வேண்டும்.
எட்டுப் பெட்டிகளும் விளையாடி முடிந்தால் அடுத்த கட்டம்
இப்போது சிப்பியை முதற் போலவே போட்டு, ஒற்றைக்காலால் கெந்தி மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்து, தூக்கி வைத்திருக்கும் கால் பாதத்தில் விரல்களின் மேல் வைத்துக் கொண்டு கெந்த வேண்டும். கெந்தும் போது சிப்பி கீழே வீழ்ந்து விடக் கூடாது. எட்டாவது பெட்டிக்கு வந்ததும் சிப்பியை பெட்டிக்கு வெளியில் போட்டு விட்டு கெந்தி அதை மிதிக்க வேண்டும்.
மூன்றாவது கட்டம்
சிப்பியை தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பெட்டிகளில் நடக்க வேண்டும். ஒற்றைக்கால் முதற்பெட்டியிலும் மற்றையகால் இரண்டாவது பெட்டியிலும்.. என்று வைத்து நடக்க வேண்டும். முகம் மெதுவாக மேலே தூக்கப் பட்டிருக்க வேண்டும். நடக்கும் போது "சரியோ? சரியோ?" என்று கேட்க வேண்டும். கால் விரல்கள் கோடுகளில் பட்டு விடக் கூடாது. பட்டுவிட்டால் "பிழை" என்பார்கள். 5வது பெட்டியில் இரண்டு கால்களையும் வைத்து நின்று கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் ஆறாவது ஏழாவது பெட்டிகளைக் கடந்து எட்டாவது பெட்டிக்கு வந்ததும் தலையில் உள்ள சிப்பியை கண்களை மூடிய படி நின்று வெளியில் வீழ்த்தி விட்டு கண்களைத் திறக்க வேண்டும். பின் கெந்தி மிதிக்க வேண்டும்.
நான்காவது கட்டம்
சரியாகச் சிப்பியில் மிதித்து விட்டால், சிப்பியை கையில் எடுத்து எட்டுக்கோட்டுக்கு புறமுதுகு காட்டி நின்று கொண்டு, சிப்பியை தலைக்கு மேலால் எட்டுக்கோட்டுக்குள் எறிய வேண்டும். சிப்பி கோடுகளிலோ, வெளியிலோ, ஐந்தாவது பெட்டிக்குள்ளோ விழக் கூடாது.
மூன்று சந்தர்ப்பங்கள் உங்களுக்குத் தரப்படும். சிப்பி எந்தப் பெட்டிக்குள் விழுகிறதோ அந்தப் பெட்டி உங்களுக்குச் சொந்தம். அது உங்கள் பழம். நீங்கள் அதற்குள் காலாறிப் போகலாம். மற்றவர்கள் அதைக் கடந்துதான் போகலாம். அவர்கள் அதற்குள் கால் வைக்க முடியாது.
அடுத்த பழத்துக்கு மீண்டும் முதலிலிருந்து விளையாட வேண்டும்
இரண்டு பேருக்கு அடுத்தடுத்த பெட்டிகளில் பழம் வந்து விட்டால் மற்றவர்கள் எப்படியாவது பாய்ந்து இரண்டு பெட்டிகளையும் கடக்க வேண்டும். யார் கூடிய பழங்கள் எடுக்கிறாரோ அவர் வென்றவர் ஆகிறார்.
வெளியக தமிழர் விளையாட்டுக்கள்
தமிழர் விளையாட்டுகள் |
1654 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | கேரளக் கட்டடக்கலை | கேரளக் கட்டடக்கலை என்பது இந்தியாவின் தென் மாநிலங்களிலொன்றான கேரளாவில் உருவாகி வளர்ந்த கட்டடக்கலைப் பாணியாகும். இந்தியாவின் பெரும்பாலான கட்டடக்கலைப் பாணிகளோடு ஒப்பிடும்போது கேரளக் கட்டடக்கலை தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. இப்பாணியில் மரம், ஓடு என்பவற்றின் தாராள உபயோகமும், கூரைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதன் வடிவமும், நேபாள, சீன மற்றும் பல்வேறு தென்கிழக்காசியக் கட்டடக்கலைப் பாணிகளுக்கு நெருங்கியவையாகத் தெரிகின்றன.
பண்டைய தமிழ் அரசுகளிலொன்றான சேர நாடான இன்றைய கேரளம், மலைகள் முதலிய இயற்கை அரண்களினால் அயல் பிரதேசங்களிலிருந்து வேறாக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அவ்வாறான பிரதேசங்களின் கட்டடக்கலைப் பாணிகளின் தாக்கம் குறைவாக இருந்ததால், கேரளம் தனித்துவமான பாணியொன்றை வளர்த்துக்கொள்ளக் கூடியதாக இருந்ததெனலாம். மர வளங்களைப் பெருமளவில் கொண்ட இந்த மாநிலத்தின் கட்டடக்கலையில் மரத்தின் பெருமளவிலான பயன்பாடு இருந்தது விளங்கத் தக்கதே. கேரளக் கட்டிக் கலையின் முக்கியமான பகுதி அதன் கோயில் கட்டடக்கலை ஆகும். அது தென்னிந்தியக் கோயில் கட்டடக்கலையில் இருந்து வேறுபட்டு உள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் போன்ற சில மட்டும் தென்னிந்தியக் கட்டிக் கலையைச் சார்ந்ததாக உள்ளன. கேரளத்தின் மற்ற கோயில்கள் அதன் தனித்தன்மை வாய்ந்த கட்டடக்கலையைப் பிரதிபலிப்பவை. தமிழ்நாட்டுக் கட்டடக்கலையில் கோயில்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. என்றாலும் தமிழ்நாட்டு வீடுகள் கோயில் கட்டடக்கலையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. ஆனால் கேரளத்தின் வீடுகள் கோயில் கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவை. கேரள வீட்டுக் கட்டடக்கலையில் பிரபலமானது நாலுகெட்டு வீடு ஆகும்.
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
கட்டடக்கலை
வெளிச் சுட்டிகள்
http://www.templenet.com/Kerala/kerala_archi.html
மேற்கோள்கள்
கேரளக் கட்டிடக்கலை
கேரளக் கலைகள் |
1655 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF | பெங் சுயி | பெங் சுயி (சீனம்: 风水 ஃபங் ஷுவெய் அல்லது ஃபங் ஷுயி, என்னும் "காற்று நீர்" or )) என்பது சூழலுடன் இசைந்து வாழ்வது தொடர்பாக சீனாவில் புழக்கத்திலிருக்கும் பாரம்பரிய அறிவுத்துறையாகும். இது இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம் போன்றதாகும். வாஸ்து சாஸ்திரத்திலிருந்தே பெங் சுயி தோன்றியிருக்கக்கூடுமென்றும் கருதப்படுகிறது. தற்காலத்தில் பெங் சுயி, சீனாவின் எல்லைகளைத் தாண்டி உலகின் பல பகுதிகளிலும் பின்பற்றுபவர்களைக் கொண்டுள்ளது.
பெங் சுயி என்பதன் பொருள்
பெங் சுயி என்பதன் நேரடியான பொருள், காற்றும், நீரும் என்பதாகும். மனிதனதும் ஏனைய உயிரினங்களதும் வாழ்க்கைக்குக் காற்றும் நீரும் இன்றியமையாதன. பூமியிலுள்ள காற்றுடனும், நீருடனும் இசைந்து வாழ்வது மனிதனுக்கு அதிட்டத்தையும், வளத்தையும் கொண்டுவரும் என்று பண்டைய சீனர்கள் நம்பினார்கள். அதனால்தான் அதிட்டத்தையும், வளத்தையும் கருதிக் கையாளப்பட்டுவரும் இந்த அறிவுத்துறைக்கு பெங் சுயி என்ற பெயர் வந்தது.
மேற்கோள்கள்
சீனப் பண்பாடு |
1660 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B | மைக்கலாஞ்சலோ | மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும், கட்டடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.
மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.
மைக்கலாஞ்சலோவின் புகழ் பெற்ற படைப்புகளான, பியேட்டா (Pietà), டேவிட் ஆகியவை 16ஆம் நூற்றாண்டின் இருபதுகளின் பிற்பகுதியிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் உருவாக்கப்பட்டவை. ஒவியம் தொடர்பாக இவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதபோதும், மேற்கத்திய ஓவியக் கலைத் துறையில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இரண்டு ஓவியங்களையும் இவர் படைத்துள்ளார். இவை ரோம் நகரிலுள்ள சிசுடைன் சிற்றாலய உட்கூரையிலும் அதன் பீடத்தின் பின்னுள்ள சுவரில் வரையப்பட்டுள்ள கடைசித் தீர்ப்பு ஓவியங்களாகும். இவருடைய வாழ்வின் பிற்பகுதியில் வத்திக்கானின் புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடத்தை (dome) வடிவமைத்தார்.
இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது இரண்டு வாழ்க்கை வரலாறுகள் வெளியிடப்பட்டது. இவற்றில் ஒன்றை எழுதிய ஜோர்ஜியோ வசாரி (Giorgio Vasari), இவரை, மறுமலர்ச்சிக் காலச் சாதனைகள் அனைத்துக்கும் சிகரம் போன்றவர் எனப் புகழ்ந்துள்ளார். இக்கருத்து, பின்வந்த நூற்றாண்டுகளில், கலைத்துறையில் ஆமோதிக்கப்பட்டது.
ஆரம்ப காலம்
மைக்கலாஞ்சலோ, மத்திய இத்தாலியப் பிரதேசமான தஸ்கனியிலுள்ள (Tuscany) அரெஸ்சோ (Arezzo) மாகாணத்தில் காப்ரெஸ் (Caprese) எனும் ஊரில் 1475 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தையார், லொடோவிகோ டி லியனார்டோ டி புவனரோட்டி டி சிமோனி (Lodovico di Leonardo di Buonarotti di Simoni) ஒரு நீதிபதியாக இருந்தவர். இவரது தாய் பிரான்செஸ்கா டி நேரி டெல் மினியாட்டோ டி சியேனா (Francesca di Neri del Miniato di Siena) என்பவர். புவனரோட்டி குடும்பம் தஸ்கனியின் பிரபுத்துவ குடும்பத்தின் வழிவந்தது. எனினும் மைக்கலாஞ்சலோவின் காலத்தில் இவர் குடும்பம் ஒரு முக்கியத்துவமற்ற பிரபுத்துவ குடும்பமாகவே கணிக்கப்பட்டனர். ஆரம்பகாலத்தில் மைக்கலாஞ்சலோ புளோரன்சிலேயே வளர்ந்து வந்தார். பின்னர், இவரது தாயார் நீண்டகாலம் நோய்வாய்ப் பட்டிருந்தபோதும், அவர் இறந்த பின்னரும், மைக்கலாஞ்சலோ, செட்டிக்னானோ (Settignano) என்னும் நகரத்தில் ஒரு கல் வெட்டுபவரின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த நகரத்தில் இவர் தந்தைக்கு ஒரு பளிங்குக்கல் அகழ்விடமும் (quarry), ஒரு சிறிய பண்ணையும் சொந்தமாக இருந்தது.
சிலகாலம் இலக்கணம் படித்த மைக்கலாஞ்சலோ, அவரது தந்தையாரின் விருப்பத்துக்கு மாறாக, டொமினிக்கோ கிர்லாண்டாயியோ (Domenico Ghirlandaio) என்பவரிடம் ஓவியத்துறையிலும், பெர்ட்டோல்டோ டி கியோவன்னி (Bertoldo di Giovanni) என்பவரிடம் சிற்பத்துறையிலும் பயிற்சி பெற்றார். 1488 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று, ஒரு பிரபல ஓவியரிடம் வேலை செய்வதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவரது திறமையால் கவரப்பட்ட இவரது பயிற்சியாளரான டொமெனிக்கோ, இவரை அந் நகரத்து ஆட்சியாளரான லொரென்சோ டி மெடிசிக்குச் (Lorenzo de' Medici) சிபாரிசு செய்தார். 1489 இல், தனது பயிற்சித் தலத்திலிருந்து விலகிய மைக்கலாஞ்சலோ, 1490 இலிருந்து 1492 வரை லொரென்சோவின் பாடசாலையில் படித்து வந்தார். இக்காலத்தில் அவர் பல பிரபலமானவர்களைச் சந்தித்தார். அவர்கள் மூலம் இவரது கலை பற்றிய எண்ணங்கள் மாற்றம் பெற்றதுடன், விரிவாக்கமும் பெற்றது.
மைக்கலாஞ்சலோவின் படைப்புத்திறன்
மைக்கலாஞ்சலோ, தான் ஓவியம் வரைவதற்கு முன்பயிற்சியாக சற்றேறக்குறைய பன்னிரண்டு ஆண்டு காலம் மனித உடற்கூறு இயல் (ANATOMY) குறித்து நன்குக் கற்றுத் தேர்ந்தார். அவரது ஓவியப் படைப்புகளை இக்கற்றல் அனுபவமும் நுட்பமும் உயிர்ப்புடையதாக ஆக்கின. இதன் காரணமாக, அவருடைய ஓவியம் மற்றும் சிற்பப் படைப்புகளில் மனித உடலின் எலும்பு அமைப்பு, உடல் தசையின் தோற்ற அமைப்பு, தோலின் வடிவமைப்பு முதலியவை துல்லியமான முறையில் உருவாகின. மேலும், ஓவியத்திற்கான வண்ணக் கலவைகளை மைக்கலாஞ்சலோவே உருவாக்கிக் கொண்டார். இந்த வேலைக்குத் தம்மிடம் பணிபுரியும் பணியாட்களையோ, தம்முடைய மாணாக்கர்களையோ அவர் அனுமதிப்பதை விரும்பவில்லை.
படைப்புக்கள்
ரோமில் அவரது படைப்புக்கள்
மைக்கேலேஞ்சலோ தன் 21 வயதில் 1496-ஆம் ஆண்டு ஜூன் 25 இல் ரோம் வந்தடைந்தார். அதே ஆண்டு ஜூலை 4, அவர் கார்டினல் ராஃப்யேல் ரியாரியோவுக்காக ரோமானிய மது கடவுள் பாக்கஸின் சமஅளவு சிலைக்கான வேலையைத் தொடங்கினார். பின் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கார்டினலால் நிராகரிக்கப்பட்டது, பின்னர், வங்கி அதிபர் ஜாகோபொ காலி தனது தோட்ட சேகரிப்புக்காக அதை வாங்கிக்கொண்டார்.
நவம்பர் 1497 இல், பிரஞ்சு புனித தூதுவர் பியாடா, இயேசு உடல் மீது கன்னி மேரி வருத்தப்படுவதைக் காட்டும் ஒரு சிற்பம் செதுக்க அவரை நியமித்தார், மைக்கேலேஞ்சலோ அதன் முடிந்த நேரத்தில் அவர் வயது 24ஆக இருந்தது. இந்தச் சிற்பம் உலகின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மைக்கேலேஞ்சலோ ரோமில், சாண்டா மரியா டி லொரேட்டோ தேவாலயம் அருகே வசித்து வந்தார். இங்கே, அவர் வெட்டோரியாவா க்ளோனா என்ற கவிஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரின் லொகோன் மற்றும் அவரது மகன்கள் என்ற சிற்பம் தற்காலத்தில் வாடிகனில் உள்ளது.
பியட்டா சிலையின் சிறப்புகள்
பியட்டா (Pieta) என்னும் சொல்லுக்கு இத்தாலிய மொழியில் இரக்கம் என்பது பொருள் ஆகும்.
இந்த பியட்டா சிலையானது சலவைக் கல் கொண்டு மைக்கலாஞ்சலோவால் உருவாக்கப்பட்டதாகும். இந்த பியட்டா சிலையின் தோற்றத்தில் அன்னை மேரியின் மடியில் இயேசு படுத்திருக்கும் காட்சி வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதில், அன்னை மேரியின் ஒரு கரம் இயேசுவின் உடலைத் தாங்கிப் பிடித்திருக்கும். அவரது பிறிதொரு கரமானது ஆகாயத்தை நோக்கித் திரும்பிக் காணப்படும். ஏஞ்சலோ அன்னை மேரியினை இங்கு இளம்பெண்ணாகச் சித்திரித்து இருப்பார். அச் சித்திரிப்பானது அன்னை மேரியின் கன்னித்தன்மையை உலகுக்கு உணர்த்துவதாகக் காணப்படுகின்றது. செயின்ட் பீட்டர் பஸிலிக்காவில் இப்பியட்டா சிலையானது பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த ஒரு சிலையில் மட்டுமே மைக்கலாஞ்சலோவின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.
டேவிட் சிலை
மைக்கேலேஞ்சலோ 1499-1501 இல் புளோரன்ஸ் திரும்பினார்.1498 இல் குடியரசு எதிர்ப்பு மறுமலர்ச்சி பூசாரி மற்றும் புளோரன்ஸ் கிரோலாமோ தலைவர் சவோனரோலான் வீழ்ச்சி மற்றும் கோந்ஃபாலொனிரெ பைரோ சொடெரினியின்(gonfaloniere Piero Soderini) எழுச்சி பின்னர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது, எனவே புளோரன்ஸ் சுதந்திரச் சின்னமாக டேவிட்ஐ சித்தரித்து ஒரு மாபெரும் சிலையை அகோச்டினோ டி டுச்சியோ மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது ஒரு முடிக்கப்படாத திட்டத்தை முடிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டார்.
மைக்கேலேஞ்சலோ 1504 இல் டேவிட் சிலையை முடித்தார்.
சிஸ்டின் சேப்பல் மேற்கூரை
1505 இல், மைக்கேலேஞ்சலோ புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் இரண்டாம் ஜூலியஸால் மீண்டும் ரோமிற்கு அழைக்கப்பட்டார். அவருக்குப் போபின் கல்லறையை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. மைக்கேலேஞ்சலோ போபின் பல்வேறு பணிகளை நிறைவேற்றியதன் பொருட்டு கல்லறையில் அவரது பணி தொடர்ந்து குறுக்கீடுகளை சந்தித்தது. அந்த சிக்கல்கள் காரணமாக அவர் 40 ஆண்டுகள் கல்லறையில் பணியாற்றினார்.
இதே காலத்தில், மைக்கேலேஞ்சலோ சிஸ்டின் சேப்பல் மேற்கூரையை முடிக்க சுமார் நான்கு ஆண்டுகள் (1508-1512) பிடித்தன.
மைக்கேலேஞ்சலோ முதலில் விண்மீன்கள் வானத்தின் பின்னணியில் பன்னிரண்டு அப்போஸ்தலர்களை வரைவதற்கு நியமித்தது, ஆனால் பின் மனிதனின் உருவாக்கம்,மற்றும் தீர்க்கதரிசிகள் வாக்குறுதிபடி வீழ்ச்சி, மற்றும் கிறிஸ்துவின் மரபுவழி குறிக்கும் ஆகியவற்றை வரையுமாறு ஒரு வேறுபட்ட மற்றும் மிகவும் சிக்கலான திட்டம் முன்மொழியப்பட்டது.கத்தோலிக்க திருச்சபை கொள்கையை மிகவும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக தேவாலயத்தில் உள்ள அலங்காரம் உள்ளதாக கூறப்படுகிறது.
கூரை மீது மிகவும் பிரபலமான ஓவியங்களான ஏதேன் தோட்டத்தின் மத்தியில் ஆடம், ஆதாம் மற்றும் ஏவாள் உருவாக்குதல், பெரிய வெள்ளம், நபி ஏசாயா ஆகியவை உள்ளன. சாளரத்தை சுற்றி கிறிஸ்துவின் முன்னோர்கள் வரையப்பட்டிருந்தது.
கடைசி தீர்ப்பு ( 1534-41 )
சிஸ்டின் மண்டபத்தில் பலிபீடத்தின் சுவரில் கடைசி தீர்ப்பு சுவரோவியம் பால் III மைக்கேலேஞ்சலோ மூலமாக தொடங்கியது. மைக்கேலேஞ்சலோ 1534 முதல் அக்டோபர் 1541 வரை வரைதலில் ஈடுபட்டிருந்தனர். சிஸ்டின் மண்டபத்தில் பலிபீடத்தின் பின்னால் முழு சுவரிலும் பரவியிருக்கின்றது. கடைசி தீர்ப்பு மற்றும் கிறிஸ்து வெளிப்படுத்தல் சித்திரம் உள்ளது.
அது முடிந்தவுடன், கிறிஸ்து மற்றும் கன்னி மேரி ஓவியம் நிர்வாண சித்தரிக்கப்பட்டிருந்தது புனிதத்துவத்தை பாழடிக்கிற குற்றமாக கருதப்படுகிறது, மைக்கேலேஞ்சலோ மரணத்திற்கு பிறகு அதன் பிறப்புறுப்புக்களை மறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு அசல் தணிக்கை நகல், நேபிள்ஸ் காபோடிமொண்டே அருங்காட்சியகத்தில் காண முடியும் .
மேற்கோள்கள்
1475 பிறப்புகள்
1564 இறப்புகள்
இத்தாலிய ஓவியர்கள்
இத்தாலியக் கட்டிடக் கலைஞர்கள்
இத்தாலியக் கவிஞர்கள் |
1661 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF | ராபர்ட் வெஞ்சூரி | இராபர்ட் வெஞ்சூரி (Robert Venturi, சூன் 25, 1925 – செப்டம்பர் 18, 2018) பிலடெல்பியாவைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் ஒரு சிறந்த கட்டிடக்கலைஞராக மட்டுமன்றி, திறமையான எழுத்தாளராகவும், ஓவியராகவும், ஆசிரியராகவும், ஒரு தத்துவஞானியாகவும்கூட விளங்கினார். ஒரு கட்டிடக்கலைஞன் என்றவகையில், பழக்கங்களினால் வழிநடத்தப்படுவதிலும், உணர்வுபூர்வமான கடந்தகால அனுபவங்களினால் வழி நடத்தப்படுவதையே விரும்புவதாகக் குறிப்பிட்டார். கட்டிடக்கலையில் சிக்கல்தன்மையையும், முரண்பாடுகளையும் அவர் விரும்பினார். நவீன கட்டிடக்கலை அளவுக்கதிகமாக எளிமைப்படுத்தப்பட்டுவிட்டதாகக் குறைப்பட்ட அவர், பிரபல கட்டிடக்கலைஞரான மீஸ் வான் டெர் ரோவினுடைய "குறைவே நிறைவு" ( Less is more.) என்ற கூற்றுக்குப் பதிலாகக் "குறைவு சுவாரசியமற்றது" (Less is Bore) என்று கூறினர்.
இவர் ஈரோ சாரினென் மற்றும் லூயிஸ் கான் ஆகிய பிரபல கட்டிடக்கலைஞர்களின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் ஜோன் ராவுஸ்ச் என்பவருடன் சேர்ந்து தனது தனியான நிறுவனத்தைத் தொடங்கினார். வெஞ்சூரியின் மனைவி டெனிசே ஸ்கொட் பிரவுனும் ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரும் 1969 ஆம் ஆண்டில் வெஞ்சூரியின் நிறுவனத்தில் பங்காளராக இணைந்தார். 1991 ஆம் ஆண்டுக்கான பிறிட்ஸ்கர் பரிசை வெஞ்சூரிக்கு வழங்கப்பட்டது. இவர் ஒரு பின்நவீனத்துவம் எனக் கருதப்படினும், இவரை இவ்வாறு வகைப்படுத்த முடியாது என்று சிலர் கருதுகிறார்கள். தனது தாயாருக்காக பிலடெல்பியாவில் இவர் வடிவமைத்த வீடு மூலம் கட்டிடக்கலைஞர் மத்தியில் இவரது திறமை முதலில் வெளிப்பட்டது.
இவரது நிறுவனத்தின் முக்கிய வேலைகள்:
கில்ட் ஹவுஸ், பிலடெல்பியா, பென்சில்வேனியா
புத்தகம்: Learning from Las Vegas
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Venturi, Scott Brown and Associates, Inc. firm web site
Online profile of Venturi, Scott Brown and Associates, Inc.
Stories of Houses: The Vanna Venturi House in Philadelphia, by Robert Venturi
Design Strategies of Robert Venturi and Denise Scott Brown
Robert Venturi interview
1925 பிறப்புகள்
2018 இறப்புகள்
அமெரிக்கக் கட்டிடக்கலைஞர்கள் |
1662 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81 | நாற்சார் வீடு | நாற்சார் வீடு என்பது, நடுவில் கூரையிடப்படாத திறந்த வெளியைச் சுற்றி அறைகளும், கூடங்களும் அமைத்துக் கட்டப்படும் வீடுகளாகும். நடுவிலுள்ள இத் திறந்த வெளி முற்றம் என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நடுவில் முற்றம் அமையக் கட்டப்படுகின்ற வீடுகள் உலகின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன. எனினும் அவற்றிடையே பல விதமான வேறுபாடுகள் உள்ளன. உள் நோக்கிய வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரங்களிலேயே இத்தகைய வீடுகள் பரவலாகக் காணப்படுகின்றன.
தமிழ் நாடு, இலங்கை ஆகிய தமிழர் வாழுமிடங்களிலே கட்டப்படும் இத்தகைய வீடுகளையே தமிழர் நாற்சார் வீடுகள் என அழைக்கிறார்கள். கேரள மாநிலத்தில் இவற்றை நாலுகெட்டு என வழங்குவர். தமிழ் நாட்டில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் வாழும் பகுதிகளில் காணப்படும் நாற்சார் வீடுகள் பெயர் பெற்றவையாகும். தற்காலத்தில் இப் பாணியிலமைந்த வீடுகள் கட்டப்படுவது குறைவு. மேற்கத்தியப் பாணி வீடுகளுக்கு இடம் கொடுத்து இந்தப் பாரம்பரிய வீடுகள் மறைந்து வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
திண்ணை
நடை
கட்டிடக்கலை
வீட்டு வகைகள் |
1663 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D | நாட்டுக்கோட்டை நகரத்தார் | நாட்டுக்கோட்டை நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டை செட்டியார் என்று அழைக்கப்படும் சாதியினர் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில் முற்பட்ட சாதியினர் பிரிவில் உள்ளனர். இவர்கள் நகரத்தார் என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சுற்றியுள்ள 76 ஊர்களைப் பூர்வீகமாகக் கொண்ட வணிகச் சமுதாயத்தினரான இவர்கள் வாழும் இந்தப் பகுதி செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது.
நகரத்தார்கள் வாணிபம் மட்டுமல்லாது சைவ சமயத்தையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். இச்சமுதாயத்தினரின் பெரும்பங்கினால் இன்று ஆசியா முழுவதும் இந்துக் கடவுளான முருகனின் கோயில்களை நம்மால் காணமுடியும். இச்சாதியினரின் திருமணங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. இவர்கள் சமையலில் தங்களுக்கென்று ஒரு தனி இடம் பிடித்தவர்கள். நகரத்தார்களின் வீடுகள் மிகப் பிரம்மாண்டமானவை, இவ்வீீீடுகள் செட்டிநாட்டு வீடுகள் என்று அழைக்கப்படுகிறது
வரலாறு
சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே இம்மக்களின் பூர்வீகம் ஆகும். திசையாயிரத்து ஐநூற்றுவர், நானாதேசிகள் எனப்பல்வேறு வணிகக்குழுவின் பெயரால் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறார்கள் பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் 96 ஊர்கள் 76 ஊராக மாறியது பாண்டிய மன்னனால் 9 சிவன் கோயில்கள் நகரத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அக்கோயில்களின் அடிப்படையில் 9 பிரிவுகள் உருவாக்கப்பட்டன. நகரத்தார்களில் ஒரே கோவிலைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பங்காளிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். ஆகவே திருமண உறவுகள் ஒரே கோயிலைச் சார்ந்தவர்களுக்குள் கிடையாது.
செட்டிநாடு என்று சொல் வழக்கில் இந்த 76 கிராமங்கள் அமைந்த பகுதி தனித்த கட்டிடக் கலையையும், பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர். இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் ஆலைத்தொழில், மருந்து வணிகம், தாள் வணிகம் முதலான பெரும் வணிகங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள்.
உறவுமுறைப் பெயர்கள்
ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும், மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள் குடும்பப் பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள் என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது.
பார்க்க முதன்மைக் கட்டுரை: நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்
தொழில்துறை வளர்ச்சி
1950ல் தமிழ்நாட்டிலுள்ள தொழில்களில் மூன்றில் ஒரு பகுதி நாட்டுக் கோட்டை செட்டிமார் கையிருந்ததாகச் செய்தி. நாட்டுக்கோட்டை செட்டிமாருடைய மொத்த ஜனத்தொகை அன்று 1½ லட்சம். 3 கோடி ஜனத்தொகையுள்ள தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தொழிலை ஒன்றரை லட்சம் ஜனத் தொகையுள்ள செட்டிமார் பெற்றது எப்படி? அவர்கள் குடும்பங்களில் அன்று ஒரு பழக்கம் இருந்தது. எவ்வளவு பணக்காரனானாலும் தன் பிள்ளைகளை மற்றவர்கள் கடைகளில் விட்டுப் பயிற்சி கொடுப்பது வழக்கம். முதல் பயிற்சி முடிந்தால் பையன் அரைக்கால் ஆள் ஆகிறான். அதிலிருந்து 8 கட்டம் தாண்டி முழு ஆளான பின் தன் சொந்தக்கடைக்கு வருகிறான். பிறரிடம் வேலை செய்வதால், செல்லம் கொடுக்க வழியில்லை. பயிற்சியில் எல்லா கட்டங்களும் உண்டு. பணம், பொருள், நிர்வாகம், கீழ்ப்படிதல், கணக்கு, வாடிக்கை, கொள்முதல் என எல்லாப் பகுதிகளுக்கும் பயிற்சியுண்டு. இது போன்ற முறையான பயிற்சியை தங்கள் நிறுவனத்தை விட்டு அகன்று பிள்ளைகள் பெற ஏற்பாடு செய்தது இந்தச் சமூகம் ஒன்றுதான். அவர்களுடைய நிறுவனங்கள் திவாலாவதில்லை. அவர்கள் செல்வம் அளவு கடந்து பெருகியதற்கு இப்பயிற்சியை ஏற்றுக் கொண்டதே காரணம். அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது இப்பயிற்சியாகும்.
ஒன்பது நகரக் கோயில்கள்
இளையாற்றங்குடி கோயில்
மாத்தூர் கோயில்
வைரவன் கோயில்
இரணிகோயில்
பிள்ளையார்பட்டி
நேமங்கோயில்
இலுப்பைக்குடி
சூரக்குடி
வேலங்குடி
இந்த ஒன்பது கோயில்களும் நகரக் கோயில் என்று அழைக்கப்படும். இவை பாண்டியனால் நகரத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய அளவில் சுட்டசெங்கலால் ஆன கோயிலாக இருந்து வந்துள்ளது. பின்னர் நகரத்தாரால் பெரிய கற்றளி கோயிலாக கட்டப்பட்டுள்ளது.
ஒரு கோயிலை சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இக்கோயிற்களுள் சிலவற்றில் உட்பிரிவுகளும் உண்டு. அவை, இளையாற்றங்குடி கோயில் : ஒக்கூருடையார், பட்டணசாமியார், பெருமருதூருடையார், கழனி வாசல்குடியார், கிங்கிணிக்கூருடையார், பேரசெந்தூருடையர், சிறுசெந்தூருடையர். மாத்துர் கோயில் : உறையூர், அரும்பாக்கூர், கண்ணூர், கருப்பூர், குளத்தூர், மண்ணூர், மணலூர். வைரவன் கோயில்: பெரிய வகுப்பு, பிள்ளையார் வகுப்பு, தெய்யானர் வகுப்பு.
நகரத்தார் சமுதாய ஊர்கள்
நாட்டுக்கோட்டை நகரத்தார் வாழும் 76 ஊர்கள்(ஒரு காலத்தில் 96 ஊராக இருந்தது)பின்வருமாறு.
அலவாக்கோட்டை
தேவகோட்டை
நாட்டரசன்கோட்டை
அரியக்குடி
ஆத்தங்குடி
காரைக்குடி
கீழப்பூங்குடி
பலவான்குடி
பனங்குடி
ஆவினிப்பட்டி
உலகம்பட்டி
கடியாபட்டி என்னும் இராமச்சந்திரபுரம்
கண்டவராயன்பட்டி
கல்லுப்பட்டி
கீழச்சிவல்பட்டி
குருவிக்கொண்டான்பட்டி
கொப்பனாபட்டி
சிறுகூடற்பட்டி
பனையப்பட்டி
பொன்புதுப்பட்டி
மகிபாலன்பட்டி
மதகுப்பட்டி
மிதிலைப்பட்டி
தேனிப்பட்டி
நற்சாந்துபட்டி
நேமத்தான்பட்டி
வலையபட்டி
வேகுப்பட்டி
வேந்தன்பட்டி
பிள்ளையார்பட்டி
அமராவதிபுதூர்
சொக்கலிங்கம்புதூர்
ஆ.தெக்கூர்
ஒக்கூர்
கண்டனூர்
கோட்டையூர்
செம்மபனூர்
செவ்வூர்
பள்ளத்தூர்
வெற்றியூர்
பாகனேரி
கருங்குளம்
தாணிச்சாவூரணி(சொர்ணநாதபுரம்)
அரண்மனை சிறுவயல்
ஆறாவயல்(சண்முகநாதபுரம்)
உ. சிறுவயல்
சிறாவயல்
புதுவயல்
காளையார்மங்கலம்
கொத்தமங்கலம்
பட்டமங்கலம்
ராயவரம்
கொத்தமங்கலம் லட்சுமிபுரம்
க.சொக்கனாதபுரம்
சோழபுரம்
நடராஜபுரம்
நாச்சியாபுரம்
வி. லட்சுமிபுரம்
குழிபிறை
விராமதி
பில்லமங்களம். அளகாபுரி
கொல்லங்குடி. அழகாபுரி
கோட்டையூர். அழகாபுரி
மேலச் சிவபுரி
விரையாச்சிலை
பூலாங்குறிச்சி
அரிமழம்
கண்டரமாணிக்கம்
கல்லல்
கானாடுகாத்தான்
கோனாபட்டு
சக்கந்தி
நெற்குப்பை
ஆ.முத்துப்பட்டணம்
மானகிரி
இராங்கியம்
நகரத்தார் சத்திரங்கள்
வட இந்தியாவில்
காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்
அலகாபாத் நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரம்
கயா நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரம்
குறிப்பிடத்தகுந்த நகரத்தார்கள்
அரசியல் பங்களிப்பாளர்கள்
ப. சிதம்பரம், இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர்.
இராஜா சர் முத்தையா செட்டியார், மெட்ராஸ் நகரின் முதல் மேயர்.
கா.சண்முகம் என்கிற காசிவிசுவநாதன் சண்முகம், சட்ட, உள்துறை அமைச்சர், சிங்கப்பூர்.
இரகுபதி, தமிழக சட்டத்துறை அமைச்சர்.
ராம நாராயணன்
பழ. கருப்பையா
கல்வியாளர்கள்
இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், நிறுவனர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
ராம. அழகப்பச் செட்டியார், நிறுவனர், அழகப்பா பல்கலைக்கழகம்
கருமுத்து.தியாகராசன் செட்டியார், நிறுவனர் தியாகராசர் கல்லூரி
சேவுகன் அண்ணாமலை செட்டியார், நிறுவனர், சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரி
நாகப்பன், துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்
கதிரேசன், துணைவேந்தர், அண்ணாமலை பல்கலைக்கழகம்.
சட்டத் துறையினர்
நீதியரசர் அரு. இலட்சுமணன், தலைவர், இந்திய சட்ட கமிஷன்; இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி.
நீதியரசர் மெ. சொக்கலிங்கம், மெட்ராஸ் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி.
விளையாட்டுத் துறை
மு. அ. சிதம்பரம் செட்டியார், தொழிலதிபர், முன்னாள் தலைவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். (சென்னையின் சேப்பாக்கம் கிரிக்கெட் ஆடுகளம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது.)
திரைப்படத் துறையினர்
ஏ. வி. மெய்யப்ப செட்டியார், நிறுவனர், ஏ.வி.எம். திரைப்பட நிறுவனம்.
கண்ணதாசன், திரைப்படப் பாடலாசிரியர்.
எஸ். பி. முத்துராமன், 75-க்கும் மேற்பட்ட ஜனரஞ்சக திரைப்படங்கள் இயக்கியவர்
இயக்குநர் வசந்த், ஏறத்தாழ 25 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியவர்.
கரு.பழனியப்பன், இயக்குநர்
ஏ.எல்.அழகப்பன், தயாரிப்பாளர்
ஏ. எல். விஜய், இயக்குநர்
இராம.நாராயணன், இயக்குநர், தயாரிப்பாளர்
பஞ்சு அருணாசலம், திரைக்கதை ஆசிரியர், கவிஞர், தயாரிப்பாளர்
ஊடகத் துறையினர்
சத்தி வை.கோவிந்தன், சத்தி காரியாலயம். தமிழ் பதிப்புலக தந்தை என போற்றக்கூடியவர்.
தமிழ்வாணன், எழுத்தாளர், கல்கண்டு பொறுப்பாசிரியர்
கண முத்தையா, தமிழ் பதிப்பகத் துறை முன்னோடி
சின்ன அண்ணாமலை ,தமிழ் புத்தகாலயம்.
எஸ். ஏ. பி. அண்ணாமலை, நிறுவனர், குமுதம் வார இதழ்.
லேனா தமிழ்வாணன், இணை ஆசிரியர், கல்கண்டு இதழ்.
விடுதலைப் போராட்ட வீரர்கள்
சின்ன அண்ணாமலை தேவகோட்டை
ஆர்ச் அண்ணாமலை தேவகோட்டை
சா.கணேசன், கம்பன் அடிப்பொடி, காரைக்குடி
பிற துறையினர்
● வீர. லெ. சிந்நயச் செட்டியார், பெரும்புலவர், சைவ சித்தாந்த வித்தகர்.
● பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், சைவ சித்தாந்த வித்தகர்.
● அருசோ, பொற்கிழிக்கவிஞர்
ரோஜா முத்தையா செட்டியார்
சோம வள்ளியப்பன் பொருளாதார நிபுணர்
நா வள்ளி, நகரத்தாரியல் ஆய்வாளர்
சு.இராசகோபால், கல்வெட்டு ஆய்வாளர்.
செட்டிநாட்டு நகைகள்
கழுத்திரு
கௌரிசங்கம்
அஞ்சல் தலைகள்
ராஜா சர் அண்ணாமலை செட்டியார், 1980
ராஜா சர் முத்தையா செட்டியார், 1987
அ.மு.மு.முருகப்ப செட்டியார், 2005
ஏ. வி. எம். மெய்யப்ப செட்டியார், 2006
வள்ளல் அழகப்ப செட்டியார், 2007
கவியரசர் கண்ணதாசன், 2013
மு. வெ. அருணாச்சலம் செட்டியார்
இவற்றையும் காண்க
செட்டிநாடு
செட்டிநாடு சமையல்
நகரத்தார் சமுதாய ஊர்கள்
நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்
மேலும் வாசிக்க
Rajeswary Brown. (1993). Chettiar capital and Southeast Asian credit networks in the inter-war period. In G. Austin and K. Sugihara, eds. Local Suppliers of Credit in the Third World, 1750-1960. New York: St. Martin's Press.
David Rudner. (1989). "Banker's Trust and the culture of banking among the Nattukottai Chettiars of colonial South India". Modern Asian Studies 23(3), 417-458.
David West Rudner. (1994). "Caste and Capitalism in Colonial India: The Nattukottai Chettiars". University of California Press.
Heiko Schrader. (1996). "Chettiar finance in Colonial Asia". Zeitschrift fur Ethnologie 121, 101-126.
Nishimura, Yuko Gender. (1998). Kinship and Property Rights: Nagarathar Womanhood in South India. Oxford University Press. .
பழ.கைலாஷ் (2022). "காசி விசாலாட்சி கோயில் தமிழ்க் கல்வெட்டுகள்". தமிழக தொல்லியல் கழகம் ஆவணம் இதழ் 33: பக் 89.
பழ.கைலாஷ் (2022 நவம்பர் 16). "தமிழ் அண்ணை விசாலாட்சி". ஒரேநாடு இதழ் : பக் 23.
வெளியிணைப்புகள்
நகரத்தார் மரபும் பண்பாடும் - காணொலி
Caste and Capitalism in Colonial India: The Nattukottai Chettiars, A Research by David W. Rudner submitted to University of California
Adaikkammai Appathal Padaippu Veedu (Nachandupatti) website is a No.1 website for padaippu veedu
Nagarathar History Researched and Compiled by PL. Chidambaram
PDF FILE - Chettiars in Burma by Sean Turnell a research paper
Classic Chettinad: Home Alone by Outlook traveler Dt: JUL 2004
Centenary celebrations of Dr Sir Rajah Muttiah Chettiar by "Daily life" Dt , Nov 25
History of a trading community by "The Hindu" Dt 06/08/2002
Life Sketch of SIR M.Ct. Muthiah Chettiar 1887-1929 in Hindu high school
Rituals & Customs - Tamil Chettiar on Shaadi online
நகரத்தார் உறவுமுறைப்பெயர்கள் - திண்ணை இணைய இதழில் முனைவர் மு.பழனியப்பன் கட்டுரை
வட அமெரிக்க நகராத்தார் சங்கம்
ஐக்கிய அரபு நகரத்தார் சங்கம்
UK நகரத்தார் சங்கம்
முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான "நகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்"கட்டுரை
காந்திய கிராமங்கள் வலைப்பூவில் வெளியான நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு
நகரத்தார் குல தெய்வங்கள்
நகரத்தார் திருப்பணி செய்த கோயில்கள்
உயர்ந்த மனிதர்கள்
மேற்கோள்கள்
தமிழரில் சாதிகள் |
1664 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 | மேல் மாகாணம், இலங்கை | மேல் மாகாணம் அல்லது மேற்கு மாகாணம் (Western Province, ) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்று. இலங்கையில் மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நிருவாக அலகுகளாக இருந்து வந்த போதும், 1987 இல் இலங்கை யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போதே இவற்றுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைத்தது. இதன் மூலம் மாகாணசபைகள் அமைக்கப்பட்டன. மேல் மாகாணம் இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் ஆகும். இம்மாகாணத்திலேயே சட்டபூர்வத் தலைநகர் சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, மற்றும் நிருவாக, வணிகத் தலைநகர் கொழும்பும் அமைந்துள்ளன.
இலங்கைத்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இது, கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. வடக்கே வடமேல் மாகாணத்தையும், தெற்கே தென் மாகாணத்தையும், கிழக்கில் சப்ரகமுவா மாகாணத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
முக்கிய நகரங்கள்
மேற்கோள்கள்
மேல் மாகாணம், இலங்கை |
1667 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 | மத்திய மாகாணம், இலங்கை | இலங்கையின் ஒன்பது மாகாணப் பிரிவுகளில் மத்திய மாகாணமும் ஒன்று. இது இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கண்டி இதன் தலை நகரமாகும். இது மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
வரலாறு
பிரித்தானிய ஆட்சியின் கீழ் மத்திய மாகாணமானது 1833இல் உருவானது. விடுதலை பெற்ற பின்னர், 1987ஆம் ஆண்டு வரை சட்டப்பூர்வ அங்கீகாரம் அல்லது அதிகாரமும் இதற்கு வழங்கப்படவில்லை.
மேற்கோள்கள்
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
இலங்கை
கண்டி இராச்சியம் |
1668 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 | வடமத்திய மாகாணம், இலங்கை | வடமத்திய மாகாணம் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் பெரும்பகுதியும் நாட்டின் உலர்வலயப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகரங்களான அனுராதபுரம், பொலநறுவை என்பன இம் மாவட்டத்திலேயே உள்ளன. எனினும் இப் பகுதிகள் மிகக்குறைந்த சனச் செறிவுள்ள பகுதிகளாகவே இன்று காணப்படுகின்றன. 1977 ஆம் ஆண்டுக்குப் பின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப் பிரதேசங்களில் பெருமளவு குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணத்தின் பரப்பளவு 10,472 km2
இதன் மக்கள் தொகை 1,266,663 ஆகும். இந்த மாகாணம் மக்கள் தொகை அடிப்படையில் மூன்றாவது பெரிய மாகாணம் ஆகும்.
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
இலங்கை
மேற்கோள்கள்
வடமத்திய மாகாணம், இலங்கை
கண்டி இராச்சியம் |
1669 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 | தென் மாகாணம், இலங்கை | தென் மாகாணம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கே, மேல்மாகாண எல்லையிலிருந்து கிழக்கே, கீழ் மாகாண எல்லை வரையுள்ள இலங்கைத் தீவின் தென் கரையோரம் முழுவதும் இம் மாகாணத்தினுள்ளேயே அடங்கியுள்ளது. மேல் மாகாணம், சபரகமுவா மாகாணம், ஊவா மாகாணம், கீழ் மாகாணம் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது இம் மாகாணம்.
மாவட்டங்கள்
முக்கிய விபரங்கள்
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
இலங்கை
சகோதர மாகாணங்கள்
ஹைனான் மாகாணம், சீனா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
1670 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 | வடமேல் மாகாணம், இலங்கை | இலங்கையின் மாகாணப் பிரிவுகளில் ஒன்றான வடமேல் மாகாணம் குருநாகல், புத்தளம்
சிலாபம் ,கம்பஹா ஆகிய நிர்வாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. வட மாகாணத்துக்கும், மேல் மாகாணத்துக்கும் இடைப்பட்ட மேற்குக் கடற்கரையை அண்டி அமைந்துள்ள இது, மேல் மாகாணம், சப்ரகமுவா மாகாணம், வட மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது.
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
இலங்கை
மேற்கோள்கள்
வடமேல் மாகாணம், இலங்கை |
1671 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D | சப்ரகமுவா மாகாணம் | சப்ரகமுவா மாகாணம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேல் மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், தென் மாகாணம் ஆகிய 5 மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
இலங்கை
மேற்கோள்கள்
சபரகமுவா மாகாணம், இலங்கை
கண்டி இராச்சியம் |
1672 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D | ஊவா மாகாணம் | ஊவா (Uva, ) இலங்கையில் பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாகானத்தின் தலைநகர் பதுளை ஆகும். இது 1896 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மத்திய மாகாணம், தென் மாகாணம், கிழக்கு மாகாணம், ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள்தொகை 1,259,880 ஆகும். இது இலங்கை மாகாணங்களில் இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணம் ஆகும்.
இம்மாகாணத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்கள் துன்கிந்தை அருவி, தியலுமை அருவி, இராவணன் அருவி, யால தேசிய வனம் (தெற்கு, கிழக்கு மாகாணங்களுடனும் இணைந்துள்ளது) கல்லோயா தேசியப் பூங்கா (கிழக்குடன் இணைந்தது) ஆகியவை ஆகும். கல்லோயா குன்றுகள், மற்றும் மத்திய குன்றுகள் இம்மாகாணத்தின் முக்கிய மலைப்பகுதிகள் ஆகும். மகாவலி, மெனிக் ஆறுகள், மற்றும் சேனநாயக்கா சமுத்திரம், மாதுரு ஓயா ஆகியன இங்குள்ள முக்கியமான நீர் நிலைகள் ஆகும்.
வரலாறு
இராமாயணக் கதாபாத்திரமான இராவணன் பதுளையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததாக நம்பப்படுகிறது. இராவணன் அருவி, ஸ்த்ரீபுரம் வளைவு சுரங்கம், ஹக்கலை மலை, தியூரும்வலை கோயில் ஆகியன இராவணனின் கதையுடன் தொடர்புள்ளவையாகும். கதிர்காமம் முருகன் கோயில் ஊவா மாகாணத்திலேயே அமைந்துள்ளது.
பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக இடம்பெற்ற 1818 கிளர்ச்சி ஊவா மாகாணத்திலேயே ஆரம்பமானது. பிரித்தானியர் இக்கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.
மாவட்டங்கள்
ஊவா இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
பதுளை மாவட்டம் 2,861கிமீ2
மொனராகலை மாவட்டம் 5,639கிமீ2
முக்கிய நகரங்கள்
பதுளை (மாநகர சபை)
பண்டாரவளை (மாநகரசபை)
அப்புத்தளை (நகரசபை)
மொனராகலை
வெலிமடை
பசறை
எல்லா
மகியங்கனை
தியத்தலாவை
ஆலிஎலை
பிபிலை
வெல்லவாயா
பெரகலை
லுணுகலை
புத்தளை
மதுல்லை
கதிர்காமம்
தனமல்விலை
பதல்கும்புரை
சியாம்பலந்துவை
ஓக்கம்பிட்டி
படக்காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஊவா மாகாணத்திலுள்ள நகரங்கள்
ஊவா மாகாணம் |
1685 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81 | பிறிட்ஸ்கர் பரிசு | பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு வாழ்ந்துகொண்டிருக்கும் கட்டிடக்கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக, பிறிட்ஸ்கர் குடும்பத்தால் நடத்தப்படும் ஹையாத் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். கட்டிடக்கலைத்துறைக்கான உலகின் முன்னணிப் பரிசு இதுவே. இது 1977ல், ஜே ஏ. பிறிட்ஸ்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பெரிதும் நோபல் பரிசைத் தழுவி உருவாக்கப்பட்டதனால், சில சமயங்களில் இது, "கட்டடக்கலையின் நோபல் பரிசு" எனக் குறிப்பிடப்படுவதுண்டு.
இப் பரிசு பெற்றவர்களின் முழுமையான பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பிறிட்ஸ்கர் உத்தியோகபூர்வ தளம்
கட்டிடக்கலை
பரிசுகளும் விருதுகளும் |
1686 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D | ஜோர்ன் உட்சன் | ஜர்ன் ஓபெர்க் ஊட்சன் (Jørn Oberg Utzon, ஏப்ரல் 9, 1918 - நவம்பர் 29, 2008), டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஓபெரா மண்டபத்தை வடிவமைத்தவர். மேலும் கோப்பன்ஹேகன் நகருக்கு அருகில் உள்ள பாக்ஸ்வெர்ட் தேவாலயம், குவைத் நாடாளுமன்றக் கட்டடம் முதலியவற்றையும் வடிவமைத்தவர். நவீன கட்டிடக்கலையில் உலக அளவில் குறிப்பிடத்தக்கப் பங்களித்த ஒரே டேனிய கட்டிடக்கலைஞர் என டென்மார்க்கின் கிம் டிர்கின்க்-ஹோம்ஃபெல்டால் புகழப்பட்டவர்.
வாழ்க்கை
இவர் டென்மார்க்கிலுள்ள கோப்பன்ஹேகனில் ஒரு கப்பல் வடிவமைப்பாளருக்கு மகனாகப் பிறந்தார். டென்மார்க்கின் தொழில் நகரமான அல்போர்கில் வளர்ந்து டேனிய முடியரசின் நுண்கலைக் கல்லூரியில் பயின்றார். பின் ஸ்வீடன், அமெரிக்கா நாடுகளில் பணியாற்றி இரண்டாம் உலகப்போருக்குப் பின் மீண்டும் கோப்பன்ஹேகனுக்கு வந்தார்.
1957ல் சீனா, யப்பான், இந்திய நாடுகளில் பயணமேற்கொண்டு வடிவமைப்பில் இணக்கம், அகம் புறங்களுக்கிடையேயான தொடர்பு முதலியனவற்றைக் கற்றார்.
ஓபெரா மண்டப வடிவமைப்பு
1957 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓபெரா மண்டபத்தை வடிவமைப்பதற்கான போட்டியில் பங்கேற்று முதற்பரிசு வென்றார். இவருடைய இந்தக் கட்டிடத்தின் கப்பற் பாய்களை நினைவுபடுத்தும் கூரையைக் கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் வரை முயன்று கட்டிடத்திலுள்ள இரண்டு பெரிய மண்டபங்களை மூடும் மேற்படி கூரைகளை அமைக்கும் முறையொன்றை உருவாக்கினார்.
இக்கட்டிடத்தின் உள்ளக அலங்காரத்துக்கான கவர்ச்சிகரமான திட்டமொன்றையும் உருவாக்கியிருந்தார். ஆனால், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு, புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட, நியூ சவுத் வேல்ஸின் அரசாங்கம், ஊட்சனுக்கான கொடுப்பனவுகளை நிறுத்தியது. 1966ல், அவர் நிறைவு பெறாத கட்டிடத்தையும் ஆஸ்திரேலிய நாட்டையும் விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளானார். எனினும் ஓபெரா மண்டபம், 1973ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் அடையாளச் சின்னமான இது உலகில் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகும்.
பிற படைப்புகள்
இவருடைய மற்ற கட்டிடப்படைப்புகளில் சில
பிளானட்ஷ்டாட்டண் வீடமைப்புத் திட்டம் - லுண்ட், சுவீடன் (1958)
கிங்கோ வீடமைப்புத் திட்டம் - எல்சிங்கர் (1960)
குவைத் நாடாளுமன்றக் கட்டடம் (1972)
பட்டம்
ஓபெரா மண்டபத்தை வடிவமைத்ததற்காக, சிட்னி பல்கலைக்கழகம் ஊட்சனுக்கு மார்ச் 2003ல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. உடல்நலக் குறைவு காரணமாக ஊட்சன் ஆஸ்திரேலியா வர முடியாமையினால், அவரது மகன் ஊட்சனின் சார்பில் இந்த பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
மேற்கோள்கள்
டென்மார்க் கட்டிடக்கலைஞர்கள்
சிட்னி
1918 பிறப்புகள்
2008 இறப்புகள் |
1690 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D | கௌதம புத்தர் | கௌதம புத்தர் (Gautama Buddha) என்பவர் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். இவரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது இயற்பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்.
புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழி காட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். குரு - சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டு வந்த இத்தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.
புத்தரின் வரலாறு
சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாரின் கனவில் ஒரு வெள்ளை யானை மீது தான் பயணிப்பதாகவும், அதில் வெள்ளைத் தாமரை சுமந்து செல்வதாகவும் கனவில் தோன்றியது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கையும், சிற்றனையுமான மகாபிரஜாபதி கௌதமி வளர்த்தார்.
சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. அவை;
ஒரு வயதான தள்ளாடும் கிழவர்
ஒரு நோயாளி
அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்
நாலாவதாக ஒரு முனிவன்
இக்காட்சிகளினூடாக மனித வாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில் உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், வாழ்வின் இரகசியத்தைக் காண கானகம் நோக்கிப் பயணித்தார். அவர் துறவறம் பூணவில்லை, மாறாக வாழ்வின் ரகசியத்தைக் காண்பதே அவரின் நோக்கம்.
கானகம் நோக்கிச் சென்ற சித்தார்த்தர், அப்போதைய வழக்கப்படி பட்டினி கிடந்து பல நாட்கள் குளிக்காமல் யோக நெறியில் தவத்தில் அமர்ந்தார். இவரின் தவத்தைக் கண்டு சில சீடர்கள் அவருக்குக் கிடைத்தனர்.
வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரைச் சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு நல்லறம் புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவாத்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்தச் சமய நூல்களில் அழைக்கப்படும்.
பலநாட்கள் கழித்து ஒரு இசைக்கலைஞன் அவர் தவம் புரிந்து கொண்டு இருந்த வழியாகச் சென்ற போது, தனது சீடனிடம் யாழ் பற்றியும் அதன் நுணுக்கம் பற்றியும் கூறிச் சென்றான். “ஒரு நாணை யாழில் இணைக்கும் பொழுது அதை அதிகமாக இழுத்துக் கட்டினால் நாண் அறுந்து விடும் என்றும், மிகத் தளர்வாகக் கட்டினால் இசை மீட்ட முடியாது என்றும் கூறிக் கொண்டு சென்றான்". சித்தார்த்தாவின் அறிவு அப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. தனது கடந்த காலத்தில் போதையிலும், பெண் போகத்திலும், செல்வச் செழிப்பிலும் வாழ்ந்த தான் இப்போது அதற்கு மிக மாறாக தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறேன் என்றும், இதே நிலை நீடிக்குமானால் தனது உடல் இறந்து விடும் என்றும்; தான் தேடி வந்த ஞானம் அடையும் முன்னமே தான் இறந்து விடுவோம் என்றும் உணர்ந்தார். எனவே கடுந்தவம் இருப்பதைக் கைவிட எண்ணினார். எனவே அதிக போக வாழ்க்கை, ஞானத்தினைக் கொண்டுவராது என்றும், மிக நெடிய தவமும் ஞானத்தினைக் கொண்டு வராது என்றும், நெடிய தவம் இருந்தால் இவ்வுடல் அழிந்து விடும் என்றும் யோசிக்கத் தொடங்கினார்.
எனவே முதன் முறையாக அவர் அருகே இருந்த ஆற்றில் சென்று குளிக்க வேண்டுமென முடிவு செய்தார். ஆற்றில் இறங்கும் பொழுது அந்த ஆற்றின் இழுப்பைத் தன்னால் ஈடு கொடுக்க முடியாமையை உணர்ந்தார். அவ்வாறு ஆற்றில் குளித்து விட்டு வரும் பொழுது, அங்கே இருந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுமி இவரின் நிலையைக் கண்டு தான் கொண்டு வந்த சோற்றை அவருக்கு ஊட்டி விட்டார்.
தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுஜாதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். ஒரு வாரம் தனது மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக அப்போது இருப்பதையும் உணர்ந்தார். புரிந்துணர்வே ஞானத்தின் அடிக்கல் என்பதை உணர்ந்தார்.
இந்நிலையே ததாகதர் நிலை என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலையை உணர்ந்து கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்தகயா என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.
அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர்.
இறப்பு
கௌதம புத்தர் குசிநகரத்துக்குச் செல்லும் வழியில் பாவாவில் உள்ள மாந்தோப்புக்குச் சென்றபோது அவரது கடைசி உணவான ஸூகர மத்தவத்தை (பன்றி இறைச்சி) அவருக்குப் பிச்சையாக அளித்த ஸுந்த கம்மாரபுத்த ஒரு கம்மாளர் மகன் ஆவார் . ஸுந்தவின் பிச்சையை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, புத்தர் கொடிய ரத்த பேதியால் அவதிப்பட்டார் . உயர் புரத (இறைச்சி) உணவின் காரணமாக இந்த நிலை க்ளோஸ்ட்ரிடியல் நெக்ரோடைசிங் என்டரிடிஸாக இருந்திருக்கலாம். மாமிசம் தேரவாதத்தில் உயர் நிலையில் உள்ள பிக்குகளை மதிக்கும் அடையாளமாக பிச்சையாக வழங்கப்படுகிறது .
பரிநிர்வாணத்திற்குள் நுழைவதற்கு முன் , புத்தர் ஆனந்தரிடம் ஸுந்தவைப் பார்க்கச் சொன்னார். மேலும் அவரது உணவுக்கும் அவர் நோய்வாய்ப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதனால் எந்தப் பழியோ வருத்தமோ உணர வேண்டாம் என்றும் கூறினார்; மாறாக, ததாகதவுக்கு மரணம் அடையும் முன் அவரது கடைசி உணவை வழங்குவது, புத்தத்தை அடைவதற்கு முன் அவரது முதல் உணவை அவருக்கு வழங்குவதற்கு சமமான பலனைத் தந்தது , இதனால் அவர் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் கூறினார்.
பெயர் விளக்கம்
சித்தார்த்தர், மெய்ஞானம் பெற்றது "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை
அறிந்தவர்) என்றும், சாக்கிய முனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டார்.
"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள் ஆகும். தன் ஆசையையும், அகந்தையையும் புத்தர் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "விடுதலை" அல்லது "நிர்வாண நிலை" என்றுரைப்பர்.
வரலாற்று ரீதியான சித்தார்த்த கௌதமர்
புத்தரின் வாழ்க்கையின் வரலாற்று உண்மைகள் குறித்து தகுதியற்ற கூற்றுக்களைக் கூற அறிஞர்கள் தயங்குகிறார்கள். பெரும்பாலானவர்கள் புத்தர் வாழ்ந்து, பயிற்றுவித்து, மகாஜனபத சகாப்தத்தின் போது பிம்பிசாரரின் (, அல்லது அண். கி. மு. 400) ஆட்சியின் போது துறவற ஒழுங்கை நிறுவினார் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். பிம்பிசாரர் மகத நாட்டின் ஆட்சியாளர் ஆவார். அஜாதசத்ருவின் ஆட்சியின் ஆரம்ப காலங்களின் போது புத்தர் இறந்தார். அஜாதசத்ரு பிம்பிசாரருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். இவ்வாறாக சமண தீர்த்தங்கரரான மகாவீரருக்குப் பிந்தைய காலத்தில் புத்தர் வாழ்ந்தார். "பிறப்பு, முதிர்ச்சி, துறவு, தேடல், விழிப்புணர்வு மற்றும் விடுதலை, கற்பித்தல், இறப்பு" ஆகியவற்றின் பொதுவான வரிசை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பாரம்பரிய சுயசரிதைகளில் உள்ள பல விவரங்களின் உண்மைத்தன்மை பற்றி குறைவான அளவே ஒருமித்த கருத்து உள்ளது.
கௌதமரின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய காலங்கள் பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் போது பெரும்பாலான வரலாற்றாளர்கள் கௌதமரின் வாழ்க்கையை அண். கி. மு. 563 முதல் கி. மு. 483 வரை என்று வரையறுத்தனர். தற்போது சிறிது காலத்திற்கு முன்னர் இவரது இறப்பு பிந்தைய நாட்களில் கி. மு. 411 மற்றும் கி. மு. 400க்கு இடையில் நிகழ்ந்தது என குறிப்பிடப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இந்த கேள்வி கேட்கப்பட்ட போது, பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கி. மு. 400 க்கு 20 வருடங்கள் முன்னர் அல்லது பின்னர் ஆகிய ஆண்டுகளில் புத்தர் இறந்திருக்கலாம் என்று அறுதியிட்டு கூறினர். எவ்வாறாயினும், இந்த மாற்று காலவரிசைகளை அனைத்து வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
வரலாற்றுச் சூழல்
ஆரம்ப கால நூல்களில் உள்ள ஆதாரங்களின்படி சித்தார்த்த கௌதமர் சாக்ய இனத்தில் பிறந்தார். இந்த இனம் புவியியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் கி. மு. 5 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்திய துணைக்கண்டத்தில் இருந்தது. இவரது பொதுவான பெயர் "சகமுனி" அல்லது "சாக்யமுனி" ("சாக்கியர்களின் முனிவர்"). அது ஒரு சிறிய குடியரசு அல்லது தன்னல குழுவாக இருந்தது. இவரது தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்லது தன்னல குழுவின் தலைவராக இருந்தார். புத்த மத பாரம்பரியத்தின் படி கௌதமர் லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். அந்த இடம் தற்கால நேபாளத்தில் உள்ளது. சாக்ய தலைநகரான கபிலவஸ்துவில் வளர்க்கப்பட்டார். கபிலவஸ்துஎன்பது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட் அல்லது இந்தியாவில் உள்ள பிப்ரவா என கூறப்படுகிறது.
வார்டர் என்ற வரலாற்றாளர் பின்வருமாறு கூறுகிறார்: "புத்தர் […] சாக்ய குடியரசில் பிறந்தார். அது கபிலவஸ்துவின் நகர அரசு ஆகும். அது வட இந்திய எல்லைக்கு அப்பால் தற்கால நேபாள எல்லைக்குள் இருந்த ஒரு மிகச்சிறிய அரசு ஆகும்".
வால்ஷே என்ற வரலாற்றாளர் பின்வருமாறு கூறுகிறார்: "இமயமலைகளின் ஓரத்தில் வாழ்ந்த சாக்ய இனத்தை சேர்ந்தவர் புத்தர். இவரது உண்மையான பிறந்த இடம் நேபாளத்தில் வட இந்திய எல்லைக்கு சில மைல்கள் வடக்கே அமைந்துள்ளது. இவரது தந்தை உண்மையில் அரசர் கிடையாது. மாறாக, இனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். பிற்காலத்தில் இவரது தந்தை அரசர் என்று புனையப்பட்டது. அவரும் ராஜா என்ற பட்டத்தை கொண்டிருந்தார். ஆனால் ராஜா என்ற பட்டத்தை கொண்டிருந்தவர்கள் பகுதி அளவிற்கே அரசருக்கு ஒப்பானவர்கள் ஆவர். அந்த நேரத்தில் வட இந்தியாவில் இருந்த சில அரசுகள் ராச்சியங்களாகவும் மற்றவை குடியரசுகளாகவும் இருந்தன. சாக்ய குடியரசானது தெற்கே இருந்த கோசலை அரசின் சக்தி வாய்ந்த அரசருக்கு கட்டுப்பட்டு இருந்தது".
பண்டைய கபிலவஸ்து அமைந்திருந்த உண்மையான இடம் எது என்று தெரியவில்லை. அது வட இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் உள்ள பிப்ரவா, அல்லது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட்டாக இருக்கலாம். இந்த இரண்டு நகரங்களும் ஒன்றுக்கொன்று 15 மைல் தொலைவில்தான் அமைந்துள்ளன.
புராணம் கலந்த வாழ்க்கை
பிறப்பும், ஆரம்ப வாழ்க்கையும்
பௌத்த மரபின் படி, கௌதமர் லும்பினியில் பிறந்தார். இந்த இடம் நவீன கால நேபாளத்தில் உள்ளது. இவர் கபிலவஸ்துவில் வளர்க்கப்பட்டார். பண்டைக் கால கபிலவஸ்து அமைந்திருந்த சரியான தளமானது அறியப்படவில்லை. தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ள பிப்ரவா அல்லது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட் ஆகியவற்றில் ஓர் இடமாக இது இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களுமே சாக்கியர்களின் நிலப்பரப்புக்குள் அமைந்திருந்தன. இவை இரண்டும் வெறும் 24 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளன.
பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் பேரரசர் அசோகர் லும்பினி தான் கௌதமர் பிறந்த இடம் என்று உறுதியுடன் குறிப்பிட்டார். அங்கு பின் வரும் கல்வெட்டை கொண்ட ஒரு தூணை நிறுவினார்: "இங்கு தான் சாக்கியர்களின் முனிவரான (சாக்கியமுனி) புத்தர் பிறந்தார்".
மகாவஸ்து மற்றும் லலிதவிஸ்தாரா போன்ற பிந்தைய வாழ்க்கை வரலாற்று நூல்களின் படி, சுத்தோதனரின் மனைவியும், இவரது தாயுமான மாயா (மாயாதேவி) தேவதகாவைச் சேர்ந்த ஓர் இளவரசி ஆவார். தேவதகா என்பது கோலியர்களின் இராச்சியத்தின் பண்டைக் கால தலைநகரம் ஆகும். இது நேபாளத்தின் ரூபந்தேஹி மாவட்டத்தில் அமைந்துள்ளது. புராணத்தின் படி, சித்தார்த்தர் தன் தாயின் வயிற்றில் கருவுற்ற இரவில் ஆறு வெள்ளை தந்தங்களை உடைய ஒரு வெள்ளை யானையானது தன் வலது பக்கத்தில் உட்புகுந்ததாக இராணி மாயா கனவு கண்டார். 10 மாதங்கள் கழித்து சித்தார்த்தர் பிறந்தார். சாக்கியர்களின் மரபின் படி இவரது தாய் இராணி மாயா இவரை தன் வயிற்றில் சுமந்த போது குழந்தை பிறப்புக்காக தனது தந்தையின் இராச்சியத்திற்கு சொல்வதற்காக கபிலவஸ்துவிற்கு சென்றார்.
பயணம் செல்லும் வழியில் லும்பினியில் ஒரு தோட்டத்தில் ஒரு குங்கிலிய மரத்தின் அடியில் புத்தர் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகிறது. ஆரம்ப கால பௌத்த நூல்கள் கௌதமர் (சமக்கிருதம்: கௌதமர்) என்று அழைக்கப்பட்ட ஒரு மேற்குடி சத்திரிய (பளி: கட்டியர்) குடும்பத்தில் புத்தர் பிறந்தார் என்று குறிப்பிடுகின்றன. கௌதமர்கள் சாக்கியர்களின் ஒரு பிரிவினராக இருந்தனர். இந்தியா மற்றும் நேபாளத்தின் நவீன கால எல்லைக்கு அருகில் வாழ்ந்த அரிசி விவசாயிகளின் ஒரு பழங்குடியினமாக சாக்கியர்கள் திகழ்ந்தனர். இவரது தந்தை சுத்தோதனர் "சாக்கிய இனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக" இருந்தார். இவரது தலை நகரம் கபிலவஸ்து ஆகும். புத்தரின் காலத்தின் போது விரிவடைந்து கொண்டிருந்த கோசல இராச்சியத்தால் கபிலவஸ்துவானது பிற்காலத்தில் இணைக்கப்பட்டது.
ஆரம்ப கால பௌத்த நூல்கள் கௌதம புத்தரின் பிறப்பு மற்றும் இளம் வயது குறித்து மிகவும் சிறிய தகவல்களையே கொண்டுள்ளன. பிந்தைய வாழ்க்கை வரலாறுகள் இளம் வயது கௌதம புத்தரின் வாழ்வில் ஓர் இளவரசராக மற்றும் இவர் சந்தித்த பிரச்சினைகளை கவனத்தை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்டுள்ளன. இசுவாகுவின் (பாளி: ஒக்ககம்) சூரிய குலத்தைச் சேர்ந்த ஒரு மரபு வழி முடியரசராக புத்தரின் தந்தை சுத்தோதனரை இவை குறிப்பிட்டன. இதை ஏற்றுக் கொள்ள சில வரலாற்றாளர்கள் மறுக்கின்றனர். சுத்தோதனர் வெறுமனே ஒரு சாக்கிய மேற்குடி சத்திரிய (பாளி: கட்டியர்) இனத்தை சேர்ந்தவர் என்கின்றனர். சாக்கிய குடியரசானது மரபு வழி முடியாட்சியாக இல்லை என்று பல அறிஞர்கள் எண்ணுகின்றனர். சிரமண சைன மற்றும் புத்த சங்கங்களின் வளர்ச்சி மீது, அதிகப் படியான சமத்துவ கொள்கையுடைய கன சங்க அமைப்பு அரசாங்கமானது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த அமைப்பானது இந்திய முடியரசுகளுக்கு ஒரு மாற்று அரசியல் அமைப்பாக இருந்தது. பெரும்பாலான இந்திய முடியரசுகள் அக்காலத்தில் பண்டைய வேத சமயத்தையே ஆதரித்தன.
புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்ற மற்றும் இறப்பு ஆகிய நாட்கள் தேரவாத பௌத்த நாடுகளில் வைசாகம் எனவும், இவர் தன் தாயின் வயிற்றில் உருவான நாளை போசோன் என்றும் பரவலாக கொண்டாடுகின்றன. நேபாளம், வங்கதேசம் மற்றும் இந்தியாவில் புத்தரின் பிறந்த தினமானது புத்த பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. ஒரு பௌர்ணமி நாளில் புத்தர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது.
பிந்தைய வாழ்க்கை வரலாற்று புராணங்களின் படி, இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எதிர் காலத்தை கணித்து கூறும் துறவியான அசிதர் தன்னுடைய மலை வாழ்விடத்தில் இருந்து பயணித்து புத்தரைக் காண வந்தார். "ஒரு மகா மனிதனுக்குரிய 32 அறிகுறிகள்" குழந்தையிடம் உள்ளதா என்று ஆராய்ந்தார். பிறகு புத்தர் ஒரு மகா மன்னன் (சக்கரவர்த்தி) அல்லது ஒரு மகா சமயத் தலைவர் ஆகிய இருவரில் ஒருவராக ஆவார் என்று கூறினார். புத்தர் பிறந்த 5ஆம் நாளில் ஒரு பெயர் சூட்டும் விழாவிற்கு சுத்தோதனர் ஏற்பாடு செய்தார். புத்தரின் எதிர் காலத்தை கணித்து கூறுவதற்காக எட்டு பிராமண அறிஞர்களை வருமாறு வேண்டினார். அனைவரும் இதே போன்ற கணிப்பை கூறினர். இதில் மிகவும் இளையவரான கௌந்தேயன் என்பவர் மட்டுமே தீர்க்கமாக சித்தார்த்தர் ஒரு புத்தராக மாறுவார் என்று கணித்து கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தரைத் தவிர்த்த முதல் அருகதராகவும் கௌந்தேயன் உருவானார்.
தன்னுடைய சமய தேடலுக்காக வெளியேறும் வரையில் தன் காலத்தில் இருந்த ஆதிக்கமிக்க சமய போதனைகளை கௌதமர் அறிந்திருக்கவில்லை என்று ஆரம்ப கால நூல்கள் பரிந்துரைக்கின்றன. இவரது தேடலானது மனிதர்களின் துன்பத்திற்கு எது காரணமாக அமைகிறது என்பதனால் தூண்டப்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு பௌத்த சமய பிரிவுகளைச் சேர்ந்த ஆரம்ப கால பௌத்த நூல்களின் படியும், இந்திய நூல்களின் மொழி பெயர்ப்பாக கிழக்காசியாவில் எழுதப்பட்ட ஏராளமான நூல்களின் படியும், கௌதமருக்கு யசோதரை என்ற ஒரு மனைவியும், ராகுலன் என்ற ஒரு மகனும் இருந்தனர். இது தவிர ஆரம்ப கால நூல்களில் புத்தர் "(எனது பெற்றோரின் வீட்டில்) நான் செல்லமாக, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டேன் துறவிகளே" என்று குறிப்பிட்டுள்ளார்.
புராணங்கள் கலந்த வாழ்க்கை வரலாறுகளான லலிதவிஸ்தாரா போன்றவை இளம் கௌதமரின் சிறப்பான போர் ஆற்றல் குறித்த கதைகளையும் குறிப்பிடுகின்றன. பிற சாக்கிய இளைஞர்களுக்கு எதிராக பல்வேறு போட்டிகளில் இவர் கலந்து கொண்டார் என்றும் குறிப்பிடுகின்றன.
துறவு
கௌதமர் ஓர் உயர்ந்த ஆன்மிக இலக்கை தேடியது மற்றும் சமய குருவுக்குரிய வினை முறை பயிற்சி அளிக்கப்படாத வாழ்க்கையால் விரக்தியடைந்தது ஆகியவற்றுக்கு பிறகு, ஒரு துறவி அல்லது சிரமனராக உருவானதை ஆரம்ப கால நூல்கள் வெறுமனே குறிப்பிடும் அதே நேரத்தில், பிந்தைய புராணம் கலந்த வரலாறுகள் புத்தர் எவ்வாறு ஒரு யாசகராக ஆனார் என்பதை ஒரு விரிவான, விளக்கங்களுடன் கூடிய, கவனத்தை ஈர்க்கக்கூடிய கதையாக குறிப்பிடுகின்றன.
பாளி மொழி ஆரியபரியேசன-சுத்தா ("உன்னதமான தேடல் குறித்த விவாதம்," மச்சிம நிகயம் 26) நூல் மற்றும் அதன் சீன இணை நூலான மத்தியம ஆகமத்தின் 204ஆம் பத்தி போன்றவற்றில் புத்தரின் ஆன்மீக தேடல் குறித்த ஆரம்ப கால குறிப்புகள் காணப்படுகின்றன. தன்னுடைய வாழ்வும் முதுமை, நோய் மற்றும் இறப்பு ஆகியவற்றை அடையும், மற்றும் இவற்றை விட சிறந்த ஒன்று (அதாவது விடுதலை, நிர்வாணம்) இருக்கும் ஆகியவை குறித்த எண்ணமே கௌதமர் துறவு மேற்கொள்வதற்கு இட்டுச் சென்றன என்று இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. தான் ஒரு சிரமனராக வந்ததற்கு புத்தர் கொடுத்த விளக்கத்தை இந்த ஆரம்ப கால நூல்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன: "இல்லற வாழ்க்கை, இந்த தூய்மையற்ற இடம் என்பது குறுகலானது - சமண வாழ்க்கையானது சுதந்திரமான வெட்ட வெளி காற்று போன்றது. பிழையற்ற, மிகவும் தூய்மையான மற்றும் பிழையற்ற புனித வாழ்வை ஓர் இல்லற வாழ்க்கை உடையவரால் வாழ்வது என்பது எளிதானது கிடையாது." மச்சிம நிகயம் 26, மத்தியம ஆகமம் 204, தர்மகுப்தக வினயம் மற்றும் மகாவஸ்து ஆகிய அனைத்து நூல்களுமே புத்தரின் இந்த முடிவை அவரது தாய் மற்றும் தந்தை எதிர்த்தனர் என்பதை ஒப்புக் கொள்கின்றன. புத்தர் துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வீட்டை விட்டு வெளியேறிய போது அவர்கள் "கண்ணீர் உடைய முகங்களுடன் அழுக" ஆரம்பித்தனர்.
தன்னுடைய அரண்மனையை விட்டு முதன் முறையாக வெளியுலகத்தை காண்பதற்காக கௌதமர் எவ்வாறு வெளியேறினார், மனிதர்கள் அடையும் துன்பங்களை இவர் கண்ட போது எவ்வாறு அதிர்ச்சி அடைந்தார் என்ற கதையையும் புராணம் கலந்த வரலாறுகள் குறிப்பிடுகின்றன. ஒரு பெரிய சமயத் தலைவராக மாறுவதற்கு பதிலாக ஒரு மகா மன்னனாக கௌதமர் வர வேண்டும் என்பதற்காக சமய போதனைகள் மற்றும் மனிதர்கள் அடையும் துன்பங்கள் குறித்த நிகழ்வுகளை கௌதமர் காணாமல் இருக்க கௌதமரின் தந்தை எவ்வாறு இவரை மறைத்து வளர்த்தார் என்பதையும் இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. பொ. ஊ. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாதக கதைகள் கௌதமர் ஒரு முதியவரைக் கண்டார் என்று குறிப்பிடுகின்றன. அனைவரும் ஒரு நாள் முதுமை அடைவார்கள் என்பதை கெளதமரின் தேரோட்டியான சந்தகன் விளக்கி கூறிய போது அரண்மனையைத் தாண்டி மேற்கொண்ட பயணங்களை இளவரசர் கௌதமர் மேற்கொண்டார். இத்தகைய ஒரு பயணத்தில் கௌதமர் ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதன், ஓர் அழுகிக் கொண்டிருந்த பிணம் மற்றும் தனக்கு அகத்தூண்டுதலாக விளங்கிய ஒரு துறவியையும் கண்டார். இவ்வாறு "நான்கு காட்சிகளை" கண்ட கதையானது விபசி என்ற ஒரு முந்தைய புத்தரை சித்தரித்திருந்த திக நிகயம் (திக நிகயம் 14.2) என்ற நூலின் முந்தைய பதிப்பில் இருந்து பெறப்பட்டதாக ஒரு சிலர் கருதுகின்றனர். விபசி என்ற ஒரு முந்தைய புத்தரின் இள வயது வாழ்க்கையை இந்நூல் சித்தரித்திருந்தது.
தன்னுடைய அரண்மனையிலிருந்து கௌதமர் வெளியேறியதை இந்த புராணம் கலந்த வரலாறுகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன. நான்கு காட்சிகளை கண்டதற்கு பிறகு சீக்கிரமே கௌதமர் ஓரிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்தார். காண்பதற்கு இனியதற்ற பிணம் போன்ற நிலையில் தன்னுடைய வேலை பெண்கள் இருப்பதை கண்டது இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தான் ஞானம் பெற்ற போது மிகவும் ஆழமாக பின்னர் தான் புரிந்து கொண்ட துக்கம் ("நிலையற்ற," "மனநிறைவின்மை") மற்றும் துக்கத்தின் முடிவு ஆகியவற்றை இவ்வாறாக கண்டறிந்தார். தான் கண்ட அனைத்து காட்சிகளாலும் மனமாற்றமடைந்த கௌதமர் தன்னுடைய தந்தையின் விருப்பத்திற்கு எதிராக ஒரு நள்ளிரவில் அரண்மனையிலிருந்து வெளியேறி ஓர் அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை வாழ முடிவு செய்தார்.
தன்னுடைய குதிரை கந்தகா மற்றும் சந்தகனுடன் கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறினார். தன்னுடைய மகன் ராகுலன் மற்றும் மனைவி யசோதரை ஆகியோரை விட்டு விட்டுச் சென்றார். அனோமியா ஆற்றுக்கு பயணித்தார். தன்னுடைய முடியை வெட்டினார். தன்னுடைய பணியாள் மற்றும் குதிரையை விட்டு விட்டு வனப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு துறவிகளுக்குரிய அங்கியை மாற்றிக் கொண்டார். எனினும், இக்கதையின் சில மாறுபட்ட பதிப்புகள், அனோமியா ஆற்றின் கரையில் பிரம்மாவிடமிருந்து அங்கிகளை கௌதமர் பெற்றார் எனக் கூறுகின்றன.
புராணம் கலந்த வரலாறுகளின் படி, துறவி கௌதமர் முதன் முதலில் ராஜககத்திற்கு (தற்கால ராஜகிரகம்) தெருக்களில் யாசகம் வேண்டுவதற்காக சென்றார். மகதத்தின் மன்னனான பிம்பிசாரர் கௌதமரின் இந்த தேடல் குறித்து அறிந்தார். தன்னுடைய இராச்சியத்தின் ஒரு பகுதியை அளிக்க முன் வந்தார். கௌதமர் இந்த வாய்ப்பை நிராகரித்தார். ஆனால், தான் ஞானம் பெற்றவுடன் முதன் முதலில் பிம்பிசாரரின் இராச்சியத்திற்கு வருகை புரிவேன் என்று உறுதியளித்தார்.
துறவு வாழ்வும், விழிப்படைதலும்
தன்னை வருத்தி கடு முயற்சி செய்து ஆன்மிகத் தேடலில் ஈடுபட்ட ஆண்டுகளின் போது கெளதர் தொலை தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வாழ்ந்தார் என்றும், காடுகளில் வாழும் போது தான் அடைந்த பயத்தை இவர் கட்டுக்குள் கொண்டு வர வேண்டி இருந்தது என்றும் மச்சிம நிகயம் 4 குறிப்பிடுகிறது. நிகய-நூல்கள் துறவி கௌதமர் இரண்டு ஆசிரியர்களுக்கு கீழ் யோக தியானத்தை பயின்றார் என்றும் கூறுகின்றன. ஆரியபரியேசன-சுத்தா (மச்சிம நிகயம் 26) மற்றும் அதன் சீன இணை நூலான மத்தியம ஆகமம் 204 ஆகியவற்றின் படி ஆலார காலமரின் பயிற்சியை முழுவதுமாக கற்றதற்குப் பிறகு அவர்களின் ஆன்மிக சமூகத்தின் ஒரு சமமான தலைவராக வரவேண்டும் என்று புத்தரை ஆலாரர் கேட்டுக் கொண்டார். ஆலரார் புத்தருக்கு "ஏதுமின்மையின் கோளம்" என்று அழைக்கப்பட்ட ஒரு தியான அடைதலை பயிற்றுவித்தார்.
கெளதமர் இந்த பயிற்றுவிப்பில் திருப்தி அடையவில்லை. ஏனெனில், இது (உலக வாழ்வு மீதான) கடும் வெறுப்புணர்ச்சிக்கோ, நிர்ச்சலனத்திற்கோ, அற்றுப் போதலுக்கோ, அமைதி நிலைக்கோ, அறிவாற்றலுக்கோ, விழிப்படைதலுக்கோ, நிப்பானத்திற்கோ (நிர்வாணம்) இட்டுச் செல்லவில்லை. பிறகு உத்தக ராமபுத்திரரின் ஒரு மாணவனாக பயில ஆரம்பித்தார். இவர் மூலமாக உயர் நிலை தியான உணர்வு நிலைகளை புத்தர் அடைந்தார். இந்த உணர்வு நிலையானது "உணர்ந்தறியும் ஆற்றல் அல்லது உணர்ந்தறியா ஆற்றலின் கோளம்" என்று அழைக்கப்பட்டது. இந்த முறையும் தன்னுடைய ஆசிரியரால் அவருடன் இணைந்து கொள்ளுமாறு புத்தருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் ஒரு முறை, ஏற்கனவே தான் கொண்ட அதே காரணங்களுக்காக புத்தர் திருப்தி அடையவில்லை. மீண்டும் தனது பயணத்தை புத்தர் தொடர ஆரம்பித்தார்.
சில சூத்திரங்களின் படி, தனது தியான ஆசிரியர்களிடம் இருந்து விலகியதற்கு பிறகு கௌதமர் துறவிகளின் உத்திகளைப் பின்பற்ற ஆரம்பித்தார். ஆரம்ப கால நூல்களில் விளக்கப்பட்டுள்ள புத்தர் கேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ள துறவு உத்திகளில் மிகக் குறைவான அளவே உணவை எடுத்துக் கொள்ளுதல், வேறுபட்ட வகையிலான மூச்சுக் கட்டுப்பாடு மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட மனக் கட்டுப்பாடு ஆகியவையும் அடங்கும். புத்தர் மிகவும் இளைத்ததன் காரணமாக இவரது எலும்புகள் தோல் வழியாக தெரிய ஆரம்பித்தன என்று இந்நூல்கள் குறிப்பிடுகின்றன. மகசச்சக-சுத்தா மற்றும் பெரும்பாலான அதன் இணை நூல்கள் துறவை அதன் மட்டு மீறிய உச்ச நிலைகளுக்கு கொண்டு சென்றதற்கு பிறகு நிர்வாணத்தை அடைவதற்கு இந்த உத்திகள் உதவில்லை என்பதை கௌதமர் உணர்ந்தார் என்றூ குறிப்பிடுகின்றன. தன்னுடைய இலக்கைத் தொடர்வதற்காக வலிமையை மீண்டும் பெற வேண்டும் என்ற தேவையை புத்தர் உணர்ந்தார். ஒரு பிரபலமான கதையானது சுஜாதா என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமப் பெண்ணிடமிருந்து பாலையும், அரிசி பாயாசத்தையும் புத்தர் எவ்வாறு ஏற்றுக் கொண்டார் என்பதை கூறுகிறது.
துறவில் இருந்து சற்றே இடை நிறுத்தத்தை புத்தர் எடுத்ததானது, இவரது ஐந்து தோழர்கள் இவரிடமிருந்து விலகுதற்கு வழி வகுத்தது என்று கூறப்படுகிறது. தன்னுடைய தேடலை கைவிட்டு விட்டு, ஒழுக்கமற்றவராக புத்தர் உருவாகிவிட்டார் என்று அவர்கள் நம்பியதால் இவ்வாறு விலகினர். இந்நிலையில் தன்னுடைய தந்தை வேலையில் ஈடுபட்டிருந்த போது தான் ஒரு குழந்தையாக ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்த போது தான் அடைந்த ஒரு முந்தைய தியான அனுபவத்தை கௌதமர் மீண்டும் ஞாபகம் கொண்டார். விடுதலை பெறுவதற்கான வழியானது தியானமே என்று உணர்ந்து கொள்ள இந்த நினைவானது இவருக்கு வழி வகுத்தது. புத்தர் அனைத்து நான்கு தியானங்களையும் கற்றார் என்றும், அதற்குப் பிறகு "மூன்று உயர்ந்த அறிவுகளையும்" (தெவிஜ்ஜா) பெற்றார் என்றும், இறுதியாக நான்கு உயர்ந்த உண்மைகள் குறித்த முழுவதுமான புரிதலையும் பெற்றார் என்றும், இவ்வாறாக மீண்டும் மீண்டும் பிறக்கும் முடிவற்ற சுழற்சியான பிறவிச்சுழற்சியில் இருந்து விடுதலை பெற்றார் என்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன.
தம்மசக்கபவத்தன சுத்தா (சம்யுத்த நிகயா 56) நூலானது ததாகதர், இன்பம் கொள்வது மற்றும் ஊனுருக வைப்பதின் மட்டு மீறிய நிலைகளாக இல்லாது ஒரு மிதமான வழியான "நடு வழி" அல்லது உன்னதமான எண்வகை மார்க்கங்களை உணர்ந்தார் என்று குறிப்பிடுகிறது. இந்த ததாகதர் என்ற சொல்லைத் தான் கௌதமர் பெரும்பாலும் அடிக்கடி தன்னைத் தானே குறிப்பிட்டுக் கொள்ள பயன்படுத்தினார். பிந்தைய நூற்றாண்டுகளில் தான் கௌதமர் புத்தர் அல்லது "விழிப்படைந்த ஒருவர்" என்று இவர் அறியப்பட ஆரம்பித்தார். புத்தர் என்ற இந்த பட்டமானது "தூங்கி கொண்டிருக்கும்" பெரும்பாலான மக்களிலிருந்து வேறுபடுத்தி, ஒரு புத்தர் என்பவர் நடைமுறையின் உண்மையான இயல்புக்கு "விழிப்படைந்த ஒருவரென்றும்", உலகம் 'எவ்வாறு உள்ளதோ அவ்வாறே' (யுத-புதம்) அதைக் காண்பவர் என்றும் குறிக்கிறது. துன்ப சுழற்சி மற்றும் மறு பிறப்பு ஆகியவற்றை தொடர வைக்கும் ஆசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகிய "நெருப்புகளை" அணைத்ததாக அறியப்படுகிற விடுதலை (விமுத்தி) அல்லது நிர்வாணத்தை அடைந்த ஒருவராக ஒரு புத்தர் அறியப்படுகிறார்.
தன்னுடைய தியான ஆசிரியர்களிடமிருந்து விலகிச் செல்லும் தன்னுடைய முடிவைத் தொடர்ந்து மத்தியம ஆகமம் 204 மற்றும் பிற ஆரம்ப இணை நூல்களில் குறிப்பிட்டுள்ள படி, முழுமையான விழிப்படைதலை (சம்ம-சம்போதி) அடையும் வரை தான் எழுந்திருக்கக் கூடாது என்ற முடிவுடன் கௌதமர் அமர்ந்தார். ஆரியபரியேசன-சுத்தா நூலானது "முழுமையான விழிப்படைதலை" பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், இவர் நிர்வாணத்தை அடைந்தார் என்று மட்டும் குறிப்பிடுகிறது. இந்நிகழ்வானது பீகாரின் புத்தகயையில் உள்ள, "போதி மரம்" என்று தற்போது அறியப்படும் ஓர் அரச மரத்தின் கீழ் நடந்தது என்று கூறப்படுகிறது.
பாளி திரு முறையைச் சேர்ந்த பல்வேறு நூல்களில் குறிப்பிட்டுள்ள படி, போதி மரத்தின் கீழ் புத்தர் ஏழு நாட்களுக்கு அமர்ந்திருந்தார். "விடுதலையின் நிறைவான மகிழ்ச்சியை" உணர்ந்தார். இவர் தொடர்ந்து தியானம் செய்தார் என்றும், நைரஞ்சன ஆற்றின் அருகில் வாழ்ந்து தம்மத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி சிந்தித்தார் என்றும் பாளி நூல்கள் மேலும் குறிப்பிடுகின்றன. இந்த அம்சங்களில் ஒரு தம்மமானது மற்றொரு தம்மத்திலிருந்து உருவாகிறது, ஐந்து ஆன்மிக புலன்கள் மற்றும் துன்பம் (துக்கம்) ஆகியவையும் அடங்கும்.
மகாவஸ்து, ஜாதக கதைகள் மற்றும் லலிதாவிஸ்தாரா போன்ற புராணம் கலந்த வரலாறுகள், ஆசைகள் உலகின் மன்னனான மாறன் புத்தர் நிர்வாணம் அடைவதை தடுப்பதற்காக மேற்கொண்ட ஒரு முயற்சியையும் குறிப்பிடுகின்றன. அவன் புத்தரை மயக்குவதற்காக தன்னுடைய மகள்களை அனுப்பினான், தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றான், இராட்சதர்களின் இராணுவத்தைக் கொண்டு புத்தரைத் தாக்கினான். எனினும், புத்தர் இதனால் சலனம் அடையவில்லை. தன்னுடைய முதன்மை நிலையை பூமி அறிந்து கொள்வதற்காக பூமியை அழைத்து தரையை தொட்டார். புராணங்களின் சில பதிப்புகளின் படி, பிருத்வியை அழைத்தார் என்று குறிப்பிடப்படுகிறது. பிறகு தியானத்தை மேற்கொண்டார். இது தவிர பிற அதிசயங்கள் மற்றும் மந்திர நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதல் சமயச் சொற்பொழிவும், சங்கம் உருவாக்கப்படுதலும்
மச்சிம நிகயம் 26இன் படி, தன்னுடைய விழிப்படைதலுக்கு பின் உடனடியாக, தன் தம்மத்தை பிறருக்கு போதிக்கலாமா அல்லது வேண்டாமா என்ற தயக்கம் புத்தருக்கு ஏற்பட்டது. "நுட்பமான, ஆழமான மற்றும் பின்பற்ற கடினமான" ஒரு பாதையை அறியாமை, பேராசை மற்றும் வெறுப்பால் ஆட்கொள்ளப்பட்டுள்ள மனிதர்களால் ஏற்றுக் கொள்ள இயலுமா என்ற கவலை ஏற்பட்டது. எனினும், கடவுள் பிரம்ம சகம்பதி புத்தரை இணங்க வைத்தார். குறைந்தது "தம் கண்களில் சிறு தூசி" உள்ள யாரேனும் இதை புரிந்து கொள்வார்கள் என்று வாதிட்டார். புத்தர் தணிந்தார். போதிக்க ஒப்புக் கொண்டார். மச்சிம நிகயம் 26, மத்தியம ஆகமம் 204 ஆகியவற்றுக்கு இணை சீன நூலான அனலயோவின் நூலில் இக்கதை காணப்படவில்லை. ஆனால், லலிதவிஸ்தாராவின் கதுஸ்பரிசத்-சூத்திரத்தின் எகோத்தரிக-ஆகம கருத்தாடல் போன்ற பிற இணை நூல்களில் இந்நிகழ்வு காணப்படுகிறது.
மச்சிம நிகயம் 26 மற்றும் மத்தியம ஆகமம் 204இன் படி, போதிக்க முடிவு செய்ததற்கு பிறகு புத்தர் ஆரம்பத்தில் தன்னுடைய முந்தைய ஆசிரியர்களான ஆலார காலமர் மற்றும் உத்தக ராமபுத்திரர் ஆகியோரை சந்திக்க விரும்பினார். தன்னுடைய போதனைகளின் தன்மையை அவர்களுக்கு கூற எண்ணினார். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்து இருந்தனர். எனவே, தன்னுடைய ஐந்து முன்னாள் தோழர்களை சந்திக்க இவர் முடிவு செய்தார். மச்சிம நிகயம் 26 மற்றும் மத்தியம ஆகமம் 204 ஆகிய இரு நூல்களுமே புத்தர் தான் வாரணாசிக்கு (பனாரசு) செல்லும் வழியில் மற்றொரு அலைந்து திரிந்த துறவியை சந்தித்தார். அவர் ஆசீவகத் துறவியான உபகர் ஆவார். இது மச்சிம நிகயம் 26இல் குறிப்பிடப்பட்டுள்ளது. தான் முழுமையான விழிப்படைதலை அடைந்து விட்டதாக புத்தர் தெரிவித்தார். ஆனால் உபகர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அவர் "மாற்று (ஆன்மிக) பாதையை" தேர்ந்தெடுத்தார்.
மச்சிம நிகயம் 26 மற்றும் மத்தியம ஆகமம் 204 ஆகியவை புத்தர் சாரநாத்தின் மான் பூங்காவை அடைந்ததுடன் தொடர்கின்றன. இவ்விடம் மிரிகவதம் மற்றும் ரிஷிபட்டணம் என்றும் அழைக்கப்பட்டது. ரிஷிபட்டணம் என்பதன் பொருள் "துறவிகளின் சாம்பல் விழும் தளம்" என்பதாகும். இது வாரணாசிக்கு அருகில் அமைந்திருந்தது. இங்கு புத்தர் ஐந்து துறவிகளின் குழுவை சந்தித்தார். அத்துறவிகளை தான் உண்மையில் முழுமையான விழிப்படைதலை அடைந்ததை நம்புமாறு செய்தார். மத்தியம ஆகமம் 204லும் (மச்சிம நிகயம் 26இல் இது குறிப்பிடப்படவில்லை), மேலும் தேரவாத வினயம் எனும் ஓர் எகோத்தரிக-ஆகம நூல், தருமகுப்தக வினயம், மகிசசக வினயம், மற்றும் மகாவஸ்து ஆகியவற்றின் படி, புத்தர் இவர்களுக்கு "முதல் சமயச் சொற்பொழிவை" போதித்தார். இது "பனாரசு சமயச் சொற்பொழிவு" என்றும் அறியப்படுகிறது. இதன் பொருள், "இன்பம் கொள்வது மற்றும் ஊனுருக வைப்பதின் மட்டு மீறிய நிலைகளில் இருந்து விலகி உன்னதமான எண்வகை மார்க்கங்கள் எனும் ஒரு நடு வழியை போதிப்பதாகும். முதல் சமயச் சொற்பொழிவுக்கு பிறகு துறவி கௌந்தேயன் முதல் அருகதராகவும் (விடுதலை பெற்ற மனிதன்), முதல் பௌத்த பிக்குவும் ஆனார் என பாளி நூல் குறிப்பிடுகிறது. பிற துறவிகளுக்கு போதிப்பதை பிறகு புத்தர் தொடர்ந்தார். பௌத்த துறவிகளின் குழுவான முதல் சங்கத்தை இவர்கள் நிறுவினர்.
மகாவஸ்து, தேரவாத வினயத்தின் மகாகந்தகம் மற்றும் கதுஸ்பரிசத்-சூத்திரம் போன்ற பல்வேறு நூல்கள் இவர்களுக்கு புத்தர் "தான்-அற்ற" (அனாத்மலக்சண சூத்திரம்) என்ற தன் இரண்டாவது கருத்தாடலையும் இந்நேரத்திலோ அல்லது ஐந்து நாட்கள் கழித்தோ போதித்தார் என்று குறிப்பிடுகின்றன. இந்த இரண்டாவது சமயச் சொற்பொழிவை கேட்டதற்கு பிறகு மீதமிருந்த நான்கு துறவிகளும் அருகதர் நிலையை அடைந்தனர்.
தேரவாத வினயம் மற்றும் கதுஸ்பரிசத்-சூத்திரம் ஆகியவையும் யசா என்ற ஓர் உள்ளூர் கழக எசமானர் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் மதம் மாறியதை குறிப்பிடுகின்றன. மதம் மாறி பௌத்த சமூகத்துக்குள் நுழைந்த முதல் உபாசகர்களில் இவர்களும் முதன்மையானோர் ஆவர். கசப்பா என்ற பெயருடைய மூன்று சகோதரர்கள் இதைத் தொடர்ந்து மதம் மாறினர். முன்னர் "சடை முடி துறவிகளாக" இருந்த ஐநூறு பேரை இவர்கள் தங்களுடன் அழைத்து வந்தனர். இந்த ஐநூறு பேரின் முந்தைய ஆன்மீக வழக்கமானது நெருப்பு பலியிடலாக இருந்தது. தேரவாத வினயத்தின் படி, கயைக்கு அருகில் இருந்த கயாசிசா குன்றில் பிறகு புத்தர் தங்கினார். ஆதித்தபரியாய சுத்தா (நெருப்பு கருத்தாடல்) என்ற தன் மூன்றாவது கருத்தாடலை புத்தர் ஆற்றினார். இந்த உலகில் உள்ள அனைத்தும் உணர்ச்சி ஆர்வத்தால் தூண்டப்பட்டுள்ளன என்றும், எண் வகை மார்க்கங்களை பின்பற்றுவோர் மட்டுமே விடுதலை பெறுவர் என்றும் இதில் போதித்தார்.
மழைக் காலத்தின் முடிவின் போது புத்தரின் சமூகமானது சுமார் 60 விழிப்படைந்த துறவிகள் அளவுக்கு வளர்ந்த போது அவர்களை தனியாக அலைந்து திரியுமாறு புத்தர் அறிவுறுத்தினார். பௌத்த சமூகத்துக்குள் மக்களை போதித்து சேர்க்குமாறு கூறினார். இதை உலகின் "நன்மைக்காகவும், அனுகூலத்திற்காகவும்" செய்யுமாறு கூறினார்.
பயணங்களும், சங்கத்தின் வளர்ச்சியும்
தன் வாழ்வின் எஞ்சிய 40 அல்லது 45 ஆண்டுகளுக்கு தற்போதைய உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் தெற்கு நேபாளத்தை உள்ளடக்கியிருந்த சிந்து-கங்கை சமவெளியில் புத்தர் பயணம் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. பல்வேறு வகைப்பட்ட மக்களுக்கு இப்பயணத்தில் புத்தர் போதித்தார். உயர்குடியினர் முதல் பணியாளர்கள் வரை, துறவிகள் முதல் இல்லற வாழ்வைப் பின்பற்றியவர் வரை, அங்குலிமாலா போன்ற கொலைகாரர்கள் முதல் ஆலவகன் போன்ற நரமாமிசம் உண்பவர்கள் வரை புத்தர் போதித்தார். சூமன் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப் படி, "யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருந்த கோசாம்பி (பிரயாக்ராஜுக்கு தென் மேற்கே 25 கி. மீ.) முதல் கம்பா (பாகல்பூருக்கு கிழக்கே 40 கி. மீ.) வரையிலும்" மற்றும் "கபிலவஸ்து (கோரக்பூருக்கு வட மேற்கே 95 கி. மீ.) முதல் உருவேலா (கயைக்கு தெற்கே) வரையிலும் புத்தரின் பயணமானது நடைபெற்றிருந்தது. இது 600 மற்றும் 300 கிலோமீட்டர் பரப்பளவுடைய ஒரு பகுதியாகும். கோசல மற்றும் மகத நாட்டு மன்னர்களின் புரவ்லத் தன்மையை இவரது சங்கமானது பெற்றிருந்தது. இவ்வாறாக இந்நாடுகளின் தலைநகரங்களான முறையே சவத்தி மற்றும் இராஜககம் ஆகியவற்றில் ஏராளமான நேரத்தை புத்தர் செலவழித்தார்.
புத்தர் என்ன மொழி பேசினார் என்பது தொடர்ந்து அறியப்படாமலேயே உள்ள போதிலும், நடு இந்தோ-ஆரிய மொழி வழக்குகளுடன் நெருங்கிய தொடர்புடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகை மொழிகளில் இவர் போதித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் தரப்படுத்தப்பட்டதாக பாளி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சங்கமானது ஆண்டு முழுவதும் அலைந்து திரிந்தது. இதில் விதி விலக்கு வச்சா மழைக் காலத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே ஆகும். இந்நேரத்தில் அனைத்து சமயத்தைச் சார்ந்த துறவிகளும் அரிதாகவே பயணம் மேற்கொண்டனர். இதற்கு ஒரு பங்கு காரணமானது தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு துன்பம் விளைவிக்காமல் பயணம் மேற்கொள்வது என்பது மழைக்காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது ஆகும். துறவிகளின் உடல் நலம் குறித்த ஐயப்பாடும் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆண்டின் இந்த நேரத்தின் போது சங்கமானது மடாலயங்கள், பொதுப் பூங்காக்கள் அல்லது காடுகளில் நடத்தப்பட்டது. இவ்விடங்களுக்குத் துறவிகளைத் தேடி மக்கள் வந்தனர்.
சங்கம் தொடங்கப்பட்ட போது முதல் மழைக் காலமானது வாரணாசியில் கழிக்கப்பட்டது. பாளி நூல்களின் படி சங்கம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு சீக்கிரமே புத்தர் மகத நாட்டின் தலைநகரமான இராஜககத்திற்கு பயணம் மேற்கொண்டார். மன்னர் பிம்பிசாரரை சந்தித்தார். பிம்பிசாரர் சங்கத்திற்கு ஒரு மூங்கில் வன பூங்காவை பரிசளித்தார்.
புத்தரின் சங்கமானது வட இந்தியாவில் இவருடைய ஆரம்ப கால பயணங்களின் போது தொடர்ந்து வளர்ந்தது. எளிதில் நம்பிக்கை கொள்ளாத சிரமனரான சஞ்சய பெலத்திப்புத்தரின் மாணவர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோரை அசாஜி எவ்வாறு மதம் மாற்றி புத்தரின் முதன்மையான சீடர்களாயினர் என்ற கதையை ஆரம்ப கால நூல்கள் குறிப்பிடுகின்றன. புத்தர் கபிலவஸ்துவில் உள்ள தனது பழைய வீட்டிற்கு வருகை புரிந்த போது புத்தரின் மகனான இராகுலன் எவ்வாறு தன்னுடைய தந்தையுடன் ஒரு பிக்குவாக இணைந்தார் என்ற கதையையும் இவை கூறுகின்றன. புத்தரின் உறவினரான ஆனந்தர், அனுருத்தர், முடி திருத்துபவரான உபாலி, புத்தரின் ஒன்று விட்ட சகோதரரான நந்தர் மற்றும் தேவதத்தன் போன்ற பிற சாக்கியர்களும் எவ்வாறு புத்தரின் சங்கத்தில் பிக்குகளாக காலப்போக்கில் இணைந்தனர் என்பதையும் குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில், புத்தரின் தந்தையான சுத்தோதனர் தன்னுடைய மகனின் போதனைகளை பற்றிய தகவல் அறிந்ததால் பௌத்த மதத்திற்கு மதம் மாறினார். தம்மத்தை அறிந்த, முதல் மூன்று பிணைகளிலிருந்து விடுபட்ட சொதபன்னர் ஆனார்.
ஆரம்ப கால நூல்கள் ஒரு முக்கியமான உபாசக சீடரான வணிகர் அனாதபிண்டிகனை பற்றியும் குறிப்பிடுகின்றன. புத்தருக்கு ஒரு வலிமையான உபாசக ஆதரவளிப்பவராக இவர் உருவானார். ஒரு பெரும் பணம் செலவழித்து (தேரவாத வினயமானது ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களை பற்றி கூறுகிறது) சங்கத்திற்கு ஜேதவனத்தை பரிசாகக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
பிக்குணி அமைப்பை உருவாக்குதல்
புத்தரின் சமூகத்தின் வளர்ச்சியின் மற்றொரு முக்கிய பங்காக ஆண் பிக்குகளை ஒத்த பெண் துறவிகளுக்குமான (பிக்குணி) ஓர் இணையான அமைப்பு உருவாக்கப்பட்டதை கூறலாம். இந்த தலைப்பு குறித்த அனலயோவின் ஒப்பீட்டு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள படி, வேறுபட்ட ஆரம்ப கால புத்த நூல்களில் இந்நிகழ்வை பற்றிய குறிப்பானது பல்வேறு பதிப்புகளாக உள்ளது.
அனலயோவால் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து முதன்மையான பதிப்புகளின் படியும், புத்தரின் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமி தனக்கும், சில பிற பெண்களுக்கும் புத்த சங்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுதலை வைத்த போது ஆரம்பத்தில் புத்தரால் அது நிராகரிக்கப்பட்டது. மகாபிரஜாபதியும், அவரது ஆதரவாளர்களும் பிறகு தமது முடியை மழித்து விட்டு, அங்கிகளை அணிந்து கொண்டு புத்தரை அவரது பயணங்களின் போது பின் தொடர ஆரம்பித்தனர். ஆண் மற்றும் பெண் துறவிகளின் புதிய அமைப்புக்கு இடையிலான உறவு முறையை கவனக் குவியலாகக் கொண்ட கருதம்மத்தின் (சமக்கிருதம்: குருதர்மம்) எட்டு நிபந்தனைகளை மகாபிரஜாபதி ஒப்புக்கொண்டால் அவரை பிக்குணி அமைப்பில் இணைத்துக் கொள்ளலாம் என ஆனந்தர் இறுதியாக புத்தரை இணங்கச் செய்தார்.
அனலயோவின் ஆய்வுப் படி, அனைத்து பதிப்புகளிலும் பொதுவாக காணப்படும், ஆனந்தரால் புத்தரை இணங்கச் செய்ய பயன்படுத்தப்பட்ட வாதமானது விழிப்படைதலின் அனைத்து நிலைகளையும் அடைய ஆண்களைப் போன்ற அதே ஆற்றலை பெண்களும் கொண்டுள்ளனர் என்பதாகும். பல்வேறு முரண்பாடுகள் காரணமாக எட்டு கருதம்மங்களை அவற்றின் தற்போதைய வடிவில் ஏற்றுக் கொள்வதை சில நவீன அறிஞர்கள் கேள்விக்கு உள்ளாகின்றனர் என்பதையும் அனலயோ குறிப்பிட்டுள்ளார். தற்போதைய எட்டு கருதம்மங்களின் பட்டியலின் வரலாற்று தன்மையானது சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்பதை அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இவை ஒருவேளை புத்தரால் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இருக்கலாம் என்றும் கருதுகிறார்.
ஓர் அலைந்து திரியும் சிரமண வாழ்வானது, தம் ஆண் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பின் கீழ் இல்லாத பெண்களுக்கு, பாலியல் தாக்குதல் மற்றும் கடத்தப்படுதல் போன்ற ஆபத்துகளை விளைவிக்கலாம் என்ற காரணமே பெண்களை சங்கத்தில் இணைத்துக் கொள்ள புத்தருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியதாக பல்வேறு பத்திகள் புலப்படுத்துகின்றன என அனலயோ குறிப்பிடுகிறார். இதன் காரணமாக, "ஓர் உபாசக பெண் தன் ஆண் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கும் சாத்தியப்படக் கூடிய பாதுகாப்பை முடிந்த வரை ஒத்த, உறவு முறையை ஆண் பிக்குகளுடன் புதிதாக உருவாக்கப்பட்ட பிக்குணி அமைப்பில் உள்ளவர்களும் பெற வேண்டும்" என்பதை உறுதிப்படுத்தும் ஒரு வழியாக கருதம்ம வழி முறைகள் இருந்திருக்கலாம் என கருதபப்டுகிறது.
பிந்தைய ஆண்டுகள்
யோவான் இசுடிராங் என்ற அமெரிக்க வரலாற்றாளரின் கூற்றுப் படி, தான் போதித்த ஆண்டுகளில் முதல் 20 ஆண்டுகளுக்கு பிறகு புத்தர் கோசல இராச்சியத்தின் தலைநகரான சிரவஸ்தியில் மெதுவாக வாழ ஆரம்பித்தார் என்று தோன்றுகிறது. தன்னுடைய பிந்தைய ஆண்டுகளில் பெரும்பாலானவற்றை இந்த நகரத்தில் கழித்தார்.
சங்கம் அதன் அளவில் வளர்ந்த போது, சங்கத்திற்கான ஒரு தரப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் அமைப்பிற்கான தேவையானது ஏற்பட்டது. சங்கத்திற்கான ஒரு குறிப்பிட்ட அளவிலான வழிமுறைகளை புத்தர் உருவாக்கினார் என்றும் தோன்றுகிறது. "பிரதிமோச்சம்" என்று அழைக்கப்படும் பல்வேறு நூல்களில் இவை பாதுகாக்கப்பட்டுள்ளன. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புத்த சமூகத்தால் இந்நூல்கள் போதிக்கப்பட்டன. பொதுவான அற நெறி விதிமுறைகள், மேலும் கிண்ணங்கள் மற்றும் அங்கிகள் போன்ற துறவற வாழ்வுக்கு இன்றியமையாத பொருட்கள் குறித்துமான விதிகளை பிரதிமோச்சம் உள்ளடக்கியிருந்தது.
இவரது பிந்தைய ஆண்டுகளில் புத்தரின் புகழானது அதிகரித்தது. சாக்கியர்களின் புதிய அரசவை மண்டபத்தின் திறப்பு விழா (மச்சிம நிகயம் 53) மற்றும் இளவரசர் போதியின் ஒரு புதிய அரண்மனை திறப்பு (மச்சிம நிகயம் 85) போன்ற முக்கியமான அரச குல நிகழ்வுகளுக்கு இவர் அழைக்கப்பட்டார். புத்தரின் முதுமை காலத்தின் போது எவ்வாறு மகத இராச்சியத்தின் அரியணையானது அஜாதசத்ரு எனும் ஒரு புதிய மன்னனால் நேர்மையற்ற முறையில் கைப்பற்றப்பட்டது என்பதையும் ஆரம்ப கால நூல்கள் பேசுகின்றன. அஜாதசத்ரு தனது தந்தை பிம்பிசாரரை பதவியில் இருந்து தூக்கி எறிந்து ஆட்சிக்கு வந்தார். சமன்னபால சுத்தா நூலின் படி, புதிய மன்னர் வேறுபட்ட துறவி ஆசிரியரிடம் பேசினார். இறுதியாக புத்தரிடம் தஞ்சமடைந்தார். எனினும், சைன நூல்களும் அஜாசத்ரு தங்களது நம்பிக்கைக்கு ஆதரவளித்தார் என்று குறிப்பிடுகின்றன. அஜாதசத்ரு புத்தரின் சங்கத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், வேறுபட்ட சமய குழுக்களுக்கும் ஆதரவளித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
புத்தர் பயணித்து, போதிப்பதை தொடர்ந்த போது பிற சிரமண பிரிவுகளின் உறுப்பினர்களுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதில் சில நபர்களை புத்தர் சந்தித்தார் என்றும், அவர்களது கொள்கைகளின் நிறை குறைகளை சுட்டிக் காட்டினார் என்றும் ஆரம்ப கால நூல்களில் சான்றுகள் காணப்படுகின்றன. சமன்னபால சுத்தா நூலானது இத்தகைய ஆறு சமயப் பிரிவுகளை அடையாளப்படுத்துகிறது.
ஆரம்ப கால நூல்கள் முதுமை காலத்தில் புத்தர் எவ்வாறு முதுகு வலியுடன் இருந்தார் என்பதையும் குறிப்பிடுகின்றன. தனது உடல் தற்போது மேற்கொண்ட ஓய்வை வேண்டியதால் தன்னுடைய முதன்மையான சீடர்களிடம் போதிக்கும் பணியை அளித்தார் என்று பல்வேறு நூல்கள் குறிப்பிடுகின்றன. எனினும், புத்தர் தானும் தொடர்ந்து தன்னுடைய முதுமைக் காலம் வரை போதித்தார்.
புத்தரின் முதுமைக் காலத்தின் போது மிகுந்த இடர்பாடு ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்றாக தேவதத்தன் பிரிந்து சென்றது திகழ்ந்தது. புத்தரின் மைத்துனனான தேவதத்தன் புத்த அமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற எவ்வாறு முயற்சித்தான் என்று ஆரம்ப கால நூல்கள் பேசுகின்றன. பிறகு பல்வேறு புத்த துறவிகளுடன் சங்கத்திலிருந்து பிரிந்து ஓர் எதிர்ப் பிரிவை உருவாக்கினான். இந்த பிரிவானது மன்னன் அஜாதசத்ருவால் ஆதரவளிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. பாளி நூல்கள் புத்தரை கொல்லவும் தேவதத்தன் திட்டமிட்டான் என்பதை குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன. தன்னுடைய இரண்டு முதன்மையான சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோரை பிரிந்து சென்ற சமூகத்துடன் பேசுவதற்காக புத்தர் அனுப்பியதையும் குறிப்பிடுகின்றன. தேவதத்தனுடன் சென்ற துறவிகளை இணங்க வைத்து திரும்ப அழைத்து வருவதற்காக இரு சீடர்களும் சென்றனர்.
அனைத்து முதன்மையான ஆரம்ப கால பௌத்த வினய நூல்களும் புத்த சமூகத்தை பிரிக்க முயற்சித்த ஒரு பிரிவினைவாத நபராக தேவதத்தனை குறிப்பிடுகின்றன. ஆனால், புத்தருடன் அவன் எந்தெந்த விஷயங்களில் முரண்பட்டான் என்பது குறித்து இந்து நூல்களுக்கிடையே வேறுபாடு உள்ளது. இசுதவிர நிகய நூல்கள் "ஐந்து கருத்துகள்" எனப்படும் மட்டு மீறிய துறவற பழக்கங்களின் மீது பொதுவாக பிரச்சினைக்குக் காரணம் என கவனம் கொள்கின்றன. மகாசங்கிக வினயமானது அதே நேரத்தில் ஒரு மிகுந்த விரிவான அனைத்தையும் உள்ளடக்கிய முரண்பாட்டை பற்றி பேசுகிறது. புத்தரின் போதனைகள் மற்றும் மேலும் துறவற ஒழுங்குகளையும் தேவதத்தன் மாற்றியதாக குறிப்பிடுகின்றன.
தேவதத்தன் பிரிந்த இதே நேரத்தின் போது அஜாதசத்ருவால் தலைமை தாங்கப்பட்ட மகத இராச்சியத்திற்கும், அவரை விட வயது முதியவரான மன்னர் பசேனதியால் தலைமை தாங்கப்பட்ட கோசல இராச்சியத்திற்கும் இடையில் ஒரு போர் ஏற்பட்டது. அஜாதசத்ரு இதில் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வுகள் புத்தருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
கடைசி நாட்களும், பரிநிர்வாணமும்
புத்தரின் கடைசி நாட்கள், இறப்பு மற்றும் இவரது இறப்பை தொடர்ந்த நிகழ்வுகளின் முதன்மையான விளக்கமானது மகாபரினிப்பன சுத்தா (திக நிகயம் 16) மற்றும் அதன் பல்வேறு சமக்கிருத, சீன மற்றும் திபெத்திய மொழி இணை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனலயோவின் கூற்றுப் படி, இதில் சீன நூலான திர்க ஆகமம் 2, "மகாபரிநிர்வாண சூத்திரத்தின் சமக்கிருத துணுக்குகள்" மற்றும் "சீன மொழியில் தனி மொழிபெயர்ப்பாக பாதுகாக்கப்பட்டுள்ள மூன்று கருத்தாடல்களும்" இதில் அடங்கும்.
மகாபரினிப்பன சுத்தா நூலானது போர் காலத்தின் போது புத்தரின் கடைசி ஆண்டை குறிப்பிடுகிறது. வஜ்ஜி நாடு மீது போர் தொடுக்க அஜாதசத்ரு முடிவு எடுத்ததுடன் இது தொடங்குகிறது. புத்தரிடம் ஆலோசனை கேட்பதற்காக ஒரு மந்திரியை அஜாதசத்ரு அனுப்புவதற்கு இது இட்டு சென்றது. ஏழு நியதிகளை தொடர்ந்து செய்யும் வரையில் வஜ்ஜி நாட்டவர் செழிப்படைந்து வருவார்கள் என்ற பதிலை புத்தர் கூறுகிறார். பிறகு, இந்த ஏழு நியதிகளை புத்த சங்கத்தில் பின்பற்றுமாறு கூறுகிறார். புத்த சங்கத்தின் எதிர் கால நலன் குறித்து புத்தர் அக்கறை கொண்டார் என்பதை இது காட்டுகிறது.
"வாடிக்கையாக அடிக்கடி நடைபெறும் கூட்டங்கள், ஒத்திசைவுடன் நடைபெறும் சந்திப்பு, பயிற்சியின் நியதிகளை மாற்றாமல் இருப்பது, தங்களுக்கு முன்னர் சங்கத்தில் இணைந்த அனுபவசாலிகளுக்கு மரியாதை செலுத்துதல், உலக ஆசைகளுக்கு இரையாகாமல் இருத்தல், காட்டில் துறவியாக வாழும் முறைக்கு உண்மையாக இருத்தல் மற்றும் தங்களது சொந்த விழிப்புணர்வை தக்க வைத்துக் கொள்ளுதல்" ஆகிய நியதிகளை கடைபிடிக்கும் வரையில் சங்கமானது தொடர்ந்து செழிப்படையும் என்று புத்தர் கூறினார். சங்கத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான அறநெறி நடத்தைகளின் பட்டியலையும் புத்தர் மேலும் அளித்தார்.
புத்தரின் இறப்பிற்கு சற்று முன்னர் புத்தரின் இரண்டு முதன்மையான சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோர் இறந்தனர் என்பதை ஆரம்ப கால நூல்கள் குறிப்பிடுகின்றன. மகாபரினிப்பன சுத்தா நூலானது தன்னுடைய வாழ்வின் கடைசி மாதங்களின் போது புத்தர் எவ்வாறு உடல் நலம் குன்றியதை உணர்ந்தார் என்று குறிப்பிடுகிறது. ஆனால், தொடக்கத்தில் இவர் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டார். தனக்குப் பிந்தைய தலைவராக யாரையும் கூற இயலாது என புத்தர் கூறியதாகவும் இது குறிப்பிடுகிறது. ஆனந்தர் இதற்காக வேண்டிய போது புத்தர் கூறிய பதிலாக மகாபரினிப்பன சுத்தா நூலானது பின்வருவனவற்றை பதிவிட்டுள்ளது:
பயணம் செய்து சில மேற்கொண்டவர்களுக்கு போதித்ததற்கு பிறகு புத்தர் தனது கடைசி உணவை உண்டார். சுந்தா கம்மரபுத்தா என்று பெயருடைய ஓர் இரும்பு கொல்லரிடமிருந்து யாசகமாக இந்த உணவை இவர் பெற்றார். இதன் பிறகு இவருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தன்னுடைய இறப்பிற்கு சுந்தாவின் இடத்தில் தான் உண்ட உணவு காரணமல்ல என்று அவருக்கு கூறுமாறு ஆனந்தரிடம் புத்தர் கூறினார். புத்தருக்கு கடைசி உணவாக இது அமைந்ததன் காரணமாக இந்த உணவானது உயர் நிலையை அடைந்தது என்றும் கூறுமாறு கூறினார். பிக்கு மெத்தனந்தோ மற்றும் செருமானிய இந்தியவியலாளர் ஆசுகர் வான் இனுபெர் ஆகியோர் உணவு விடமாக மாறியதால் அல்லாமல் வயது முதிர்வின் ஓர் அறிகுறியான மிகையான குடலுரிசார் குருதிக் குழாய் திசு இறப்பால் புத்தர் இறந்தார் என்று வாதிடுகின்றனர்.
புத்தரின் கடைசி உணவின் துல்லியமான உணவு பொருட்கள் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கு காரணம் வேறுபட்ட புனித நூல் மரபுகள் மற்றும் சில முக்கிய வார்த்தைகளின் மொழிபெயர்ப்பில் உள்ள தெளிவற்ற தன்மை ஆகியவை காரணமாகும். தேரவாத பௌத்த மரபானது புத்தருக்கு ஒரு வகை பன்றி இறைச்சி கொடுக்கப்பட்டது என்று பொதுவாக நம்புகிறது. அதே நேரத்தில், மகாயான பௌத்த மரபானது புத்தர் ஒரு வகை பூங்கிழங்கு அல்லது பிற காளான்களை உண்டார் என்று நம்புகிறது. பௌத்த சைவம் மற்றும், பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கான நியதிகள் ஆகியவற்றின் மீதான வேறுபட்ட மரபு வழி பார்வைகளை இவை பிரதிபலிக்கின்றன. நவீன அறிஞர்கள் கூட இந்த நிகழ்வில் முரண்படுகின்றனர். இது பன்றி இறைச்சியாகவோ அல்லது பன்றிகள் விரும்பி உண்ணும் ஒரு வகை தாவரமாகவோ அல்லது காளானாகவோ இது இருந்திருக்கலாம் என்று வாதிடுகின்றனர். எது எவ்வாறு இருந்தாலும், கடைசி உணவை குறிப்பிடும் எந்த ஓர் ஆதாரங்களும் புத்தரின் உடல் நலக்குறைவிற்கு இந்த கடைசி உணவு தான் காரணம் என குறிப்பிடவில்லை.
மகாபரினிப்பன சுத்தா நூலின் படி, சுந்தாவுடனான உணவிற்கு பிறகு புத்தர் மிகவும் பலவீனமானதால் புத்தரும், அவரது சீடர்களும் பயணத்தை நிறுத்தினர். இதனால் குசி நகரத்தில் அவர்கள் தங்க வேண்டியிருந்தது. அங்கு குங்கிலிய மரங்களின் ஒரு தோப்பில் புத்தர் தங்குவதற்கு ஆனந்தர் ஓர் இடத்தை உருவாக்கினார். சங்கத்தில் உள்ள அனைவருக்கும் தான் கடைசி நிர்வாணத்திற்குச் செல்வேன் என்று அறிவித்ததற்குப் பிறகு, சங்கத்திற்கு ஒரு கடைசி பிக்குவை தானாகவே புத்தர் இணைத்தார். இந்த பிக்குவின் பெயர் சுபத்தா ஆகும். பிறகு சங்கத்திற்கான தனது கடைசி அறிவுரையாக, தன்னுடைய இறப்பிற்கு பிறகு தம்மமும், வினயமும் அவர்களுக்கு ஆசிரியராக இருக்கும் என்று புத்தர் மீண்டும் கூறினார். தன்னுடைய போதனை குறித்து யாருக்கேனும் சந்தேகங்கள் இருக்கின்றனவா என்று கேட்டார். ஆனால், ஒருவரும் சந்தேகம் உள்ளதாக கூறவில்லை. புத்தரின் கடைசி வார்த்தைகளாக "அனைத்து சங்கரங்களும் (ஒன்றாக இணைக்கப்பட்ட அமைப்புகள்) படிப்படியாக அழிவுறுகின்றன. தளரா ஊக்கத்துடன் (அப்பமதம்) உங்களுடைய இலக்குகளுக்காக கடும் முயற்சி செய்யுங்கள்" (பாளி: 'வயதம்ம சங்கர அப்பமதேன சம்பதேதா') என்றார் என்று குறிப்பிடப்படுகிறது.
பிறகு புத்தர் தனது கடைசி தியானத்தில் மூழ்கினார். பிறகு இறந்தார். பரிநிர்வாணம் என்று அறியப்படும் நிலையை அடைந்தார். பரிநிர்வாணம் (உடலின் இறப்பிற்கு பிறகு பிறவி சுழற்சி மற்றும் துன்பத்தின் முடிவை அடைவதை இது குறிக்கிறது) என்பதன் பொருள் கடைசி நிர்வாணம் என்பதாகும். நான்கு தியான நிலைகளுக்குள் அடுத்தடுத்து நுழைந்ததற்கு பிறகு, நான்கு பொருட்படுத்த வேண்டியதல்லாத அடைதல்களையும், இறுதியாக நிரோத-சம்பத்தி என்று அறியப்படும் தியான நிலைக்குச் சென்று, தன்னுடைய இறப்பின் தருணத்தின் போது நான்காவது தியானத்திற்கு மீண்டும் வந்தார் என்று மகாபரினிப்பன சுத்தாவானது குறிப்பிடுகிறது.
மறைவிற்கு பிந்தைய நிகழ்வுகள்
மகாபரினிப்பன சுத்தாவின் படி புத்தரின் இறப்பை தொடர்ந்து வந்த நாட்களை குசி நகரின் மல்லர்கள் இவரது உடலுக்கு பூக்கள், இசை மீட்டுதல் மற்றும் வாசனை திரவியங்களால் மரியாதை செலுத்தினர். உடலை எரியூட்டுவதற்கு முன்னர் மதிப்பிற்குரிய மூத்தவரான மகாகாசியபர் வருகை புரிந்து தனது மரியாதையை செலுத்தும் வரை சங்கமானது காத்திருந்தது.
பிறகு புத்தரின் உடலானது எரியூட்டப்பட்டது. இவரது எலும்புகள் உள்ளிட்டவை இவரின் வாழ்வுடன் தொடர்புடைய பொருட்களாக பாதுகாக்கப்பட்டன. மகதம், சாக்கியம் மற்றும் கோலியம் போன்ற பல்வேறு வட இந்திய இராச்சியங்களுக்கு மத்தியில் இவை பகிர்ந்தளிக்கப்பட்டன. தாது கோபுரங்கள் என்று அழைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அல்லது மேடுகளில் இந்த பொருட்கள் வைக்கப்பட்டன. அந்நேரத்தில் இருந்த ஒரு பொதுவான இறுதிச் சடங்கு பழக்க வழக்கமாக இது இருந்தது. நூற்றாண்டுகள் கழித்து இவை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, மௌரியப் பேரரசு முழுவதும் பல புதிய தூபிக்களில் அசோகரால் இவை புனிதப்படுத்தப்பட்டன. புத்த மதம் பரவிய நேரத்தில் புத்தருடன் தொடர்புடைய பொருட்கள் என்று கூறப்பட்டப் பொருட்களின் வரலாற்றை சுற்றிலும் பல்வேறு இயற்கைக்கு மீறிய புராணக் கதைகள் சுற்றியிருந்தன. இதை வைத்திருந்த ஆட்சியாளர்களின் ஆட்சியின் முறைமையை அதிகமாக்கின.
பல்வேறு புத்த நூல்களின் படி புத்தரின் இறப்பிற்கு பிறகு இவரது போதனைகளை சேகரித்து, ஒப்புவித்து, மனனம் செய்வதற்காக புத்த மாநாடுகள் சீக்கிரமே நடத்தப்பட்டன. சபையின் தலைவராக சங்கத்தால் மகாகாசியபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், முதல் சபையின் வரலாற்றுத் தன்மை குறித்து மரபு வழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நவீன அறிஞர்கள் விவாதத்துக்கு உள்ளாக்குகின்றனர்.
குடும்பம்
கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனர் – மாயா தேவிக்கும் பிறந்த கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும். புத்தர் பிறந்த ஏழு நாளில் மாயாதேவி இறந்ததால், சிற்றன்னை மகாபிரஜாபதி கௌதமி புத்தரை வளர்த்தார். சித்தார்த்தர் யசோதரையை மணந்து ராகுலன் என்ற மகனை பெற்றெடுத்தார். புத்தரின் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமியின் மகன் நந்தன், மகள் நந்தா ஆவார். மற்ற பிற நெருங்கிய உறவினர்கள் ஆனந்தர், தேவதத்தன் ஆவார்.
புத்தரின் கூற்றுக்கள்
புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார். மேலும் புத்தர், ஆத்மாவைப் புறந்தள்ளி, அநாத்மா என்ற உடல் மற்றும் உலகத்திற்கு அதிகம் பொருள் தருகிறார். மேலும் வேதங்களையும், கடவுள் இருப்பையும் மறுக்காமல், அது குறித்து பேசாது விட்டார்.
புத்தரின் கொள்கைகள்
கௌதம புத்தர், வாரணாசியின் அருகிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா"வில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் காசி, கோசலம், மகதம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்கும், அரசப் பெருமக்களுக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை எடுத்துரைத்து வெற்றிகண்டார்.
கபிலவஸ்துவில் தன் மகன் ராகுலன் மற்றும் சிற்றனை மகாபிரஜாபதி கௌதமி ஆகியோரை சங்கத்தில் இணைத்துக் கொண்டார். மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன், அஜாதசத்ரு ஆகியோர்களைப் பௌத்த சமயத்தைத் தழுவும்படி பணித்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தைப் பின்பற்றிட வழிகோலினார்.
இந்த இடங்களிலெல்லாம் புத்தர் அவருடைய நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", பஞ்ச சீலங்களையும் மற்றும் "எண்வகை மார்க்கங்களையும்" பின்பற்றி வாழும்படி கூறினார். பௌத்த இல்லறத்தார்களான உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய அறங்களை கூறினார்ர். பிறகு தனது 80-வது வயதில்,குசி நகரத்தில் கி.மு. 483-ல் பரிநிர்வாணம் அடைந்தார். குசி நகரத்தைச் சேர்ந்தவர்கள் இவருடைய உடலுக்கு இறுதிக் கடன் ஆற்றினர். எரியூட்டப்பட்டு எஞ்சிய இவரது சாம்பலும் எலும்பும் எண்வகைப் பகுதிகளாக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு,பின் அவற்றின் மீது சைத்தியங்கள் எழுப்பப்பட்டன.
துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் பின்பற்றி ஒழுக வேண்டிய நெறிமுறைகளை வகுத்துத் தந்ததோடு அவர்களுக்கென பிக்குகளின் சங்கத்தையும் உருவாக்கினார். அரசர்களும் நில பிரபுக்களும் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் தங்குவதற்கு விகாரைகள் மற்றும் குடைவரைகள் அமைத்துக்கொடுத்து நிலபுலங்களைத் தானம் தந்தனர். பௌதத சமய உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச சீலங்கள்
கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவியது. கி.பி.முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது. இதற்கு அசோகர், கனிஷ்கர் முதலானோர் பேருதவிப் புரிந்தனர்.
புத்தரின் சீடர்கள்
புத்தருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சாரிபுத்திரர், மௌத்கல்யாயனர்,
மகாகாசியபர், சுபூதி, பூரணர், காத்தியாயனர், அனுருத்தர், உபாலி, ராகுலன், ஆனந்தர் மற்றும் மகதநாட்டின் அரசர் பிம்பிசாரரும், கோசலத்தின் அரசர் பிரசேனஜித் என்கிற பசேனதியும் இவருடைய சீடர்களாக இருந்து பௌத்த சமயம் பரவ அடிகோலினர். பெண் சீடர்களில் மகாபிரஜாபதி கௌதமி தலைமையானவர்.
புத்தரும் பிற மதங்களும்
சமணமும் பௌத்தமும் சமகாலத்தவை.பல்வேறு மதங்கள் புத்தர் காலத்தில் இருந்துவந்தாலும் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:சைனம்(சமணம்), ஆசீவகம், வைதீகம் (பிராமணம்) ஆகியவை.
மேலும்,இவரது கால கட்டத்தில் இந்திய மெய்யியல் தத்துவங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரம்மம், ஆத்மா, அநாத்மா போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்து முற்றிலும் வேறுபட்ட கருத்துகளை முதன் முதலில் எடுத்துரைத்தவர் புத்தர் ஆவார்.
புத்தரின் மற்ற பெயர்கள்
ததாகதர்
சமசுகிருத மொழியில் கௌதம புத்தரை ததாகதர் என்று அழைப்பர். ததாகதர் எனும் சமஸ்கிருதச் சொல் தத ஆகத என்ற சொற்களின் சந்தியினால் தோன்றும் சொல். "அவ்வாறு சென்றவர்" என்று பொருள் படும். இது கௌதம புத்தரை குறிக்கும் காரணப்பெயர். புத்தர் பிறவிச்சுழற்சியை கடந்து சென்றவர் என்ற காரணத்தைக்கொண்டு இப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.
மற்ற மதங்களில் புத்தர்
பாகவதத்தில் புத்தரை விஷ்ணுவின் 9வது அவதாரமாக போற்றுகிறது. ஆனால் தமிழகத்தில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் வழியே வந்த சைவ சித்தாந்தமும், ஶ்ரீ வைஷ்ணவமும் சாக்கியமுனி புத்தரை பரம விரோதியாக பாவிப்பது, பதிகங்களில் தெளிவாக பாடப்பட்டுள்ளது. பாகவத புத்தர் அந்தணர் குலத்தில் கீகட நகரத்தில் உதித்தவர் எனக்குறிப்பிடுவதால், சாக்கிய புத்தரை மற்றொருவராகக் கருதும் வழக்கமுள்ளது. சமணர் கழுவேற்றத்திற்கு முன், தன்னுடன் வாதிட்ட பௌத்தர் பெயர்களும் ஞானசம்பந்தரால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதி சங்கரரது அத்துவித ஸ்மார்த்தர்களும், அவரது வழியில் புத்தரை ஐற்பதில்லை.
பக்தி காலத்திற்கு முன்பான சங்க இலக்கியங்களில், பத்து அவதாரங்களில் புத்தர் இல்லை. பலராமர்தான் அதற்குமாறாக உள்ளார்
இந்திய புத்தர் கோயில்கள்
இந்தியாவில் புத்தருக்கு பல கோயில்கள் இருப்பினும், புத்தர் ஞானம் அடைந்த, பிகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில், பன்னாட்டு பௌத்தர்களுக்கு தலைமைக் கோயிலாக திகழ்கிறது.
இதனையும் காண்க
பௌத்த யாத்திரை தலங்கள்
கௌதம புத்தரின் குடும்பம்
புத்தர் தங்கியிருந்த இடங்கள்
மேற்கோள்கள்
துணை நூற்கள்
பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310
பௌத்தமும் தமிழும்,மயிலை சீனி.வேங்கடசாமி,2007, பாவை பப்ளிகேஷன்ஸ்,இராயப்பேட்டை, சென்னை-14
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
எட்வின் அர்னால்ட் இயற்றிய Light of Asia -- குட்டென்பர்க் திட்டத்தில் இலவச மின் நூல் e-text
புத்தரின் முதல் பேருரை
புத்தர்கள்
சமயத் தலைவர்கள்
தசவதார மூர்த்திகள்
சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள்
சமயங்களைத் தோற்றுவித்தோர் |
1692 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | இலங்கையின் அரசியல் கட்சிகள் | இலங்கையில் பல அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பல தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளே ஆட்சியில் இருந்து வந்துள்ளன. தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் எந்த ஒரு கட்சியும் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில், சிறிய கட்சிகளுடன் இப்பெரும் கட்சிகள் கூட்டணி அமைத்து வந்துள்ளன. இலங்கைத் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மட்டும் தமிழ்க் கட்சிகள் வெற்றி பெற்று வந்துள்ளன.
கூட்டணிகள்
நாடாளுமன்றக் கூட்டணிகள்
மேலதிக-நாடாளுமன்றக் கூட்டணிகள்
முக்கிய கூட்டணிகளுடனான கூட்டணிகள் |
1693 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகஸ்ட் 29, 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட சோல்பரி ஆணைக்குழுவின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, சமபல பிரதிநிதித்துவம் கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் இக் கட்சி சில ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராத நிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்ற நிலையிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தமிழ்க் காங்கிரஸ் முடிவு செய்தது.
மேற்கோள்கள்
இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள்
1944இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் |
1694 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF | இலங்கைத் தமிழரசுக் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி (Illankai Tamil Arasu Kachchi, ITAK, முன்னாள் சமஷ்டிக் கட்சி, Federal Party) இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அரசியற் கட்சியாகும். இக்கட்சி 1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. பின்னர் இக்கூட்டணியின் பெயர் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவராக இருந்த வீ. ஆனந்தசங்கரி பிரிந்து சென்றதை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இக்கட்சி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பலமான ஓர் அரசியல் கட்சியாக விளங்கி வருகிறது. இக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பின் முக்கிய உறுப்புக் கட்சியாகவும் தற்போது உள்ளது.
வரலாறு
மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிலிருந்து வெளியேறிய அணியினரால், டிசம்பர் 1949ல் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக்கட்சியாகும். ஒற்றையாட்சி முறை இலங்கையில் தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்றுகூறி தமிழரசுக்கட்சி கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்தது.
தேர்தல்கள்
1956 தேர்தலில் தமிழரசுக்கட்சி தமிழ்ப் பகுதிகளில் பெரும்பான்மை இடங்களை வென்று, தமிழர் அரசியலில் முன்னணிக்கு வந்தது. தாய்க்கட்சியான தமிழ்க் காங்கிரஸ், ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைந்திருந்தும், மொழிக்கொள்கை முதலான முக்கிய பிரச்சினைகளில் தமிழரின் விருப்பங்களை நிறைவு செய்யும் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டுவரமுடியாமற் போனது தமிழரசுக்கட்சியின் எழுச்சிக்கு வாய்ப்பாக அமைந்தது.
1956ல் இலங்கையின் ஆட்சியைப் பிடித்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா அவர் சிங்கள மக்களுக்கு உறுதியளித்தபடி சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிராகச் அகிம்சை முறையில் தமிழரசுக்கட்சி போராட்டங்களை அறிவித்தது. இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அரசினால் அடக்கப்பட்டன. 1958ல் தமிழருக்கு எதிராக நடந்த இனக்கலவரமும், பின்னர், தமிழ் மக்களின் குறைகளை ஓரளவு தீர்க்கும் நோக்கில் செல்வநாயகம், பண்டாரநாயக்கா ஆகியோரிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சிங்களவரின் கடும் எதிர்ப்புக் காரணமாகக் கிழித்தெறியப்பட்டதும், இலங்கையில் ஒரு இன ரீதியான முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தியது. ஒற்றையாட்சிக் கொள்கை மீது நம்பிக்கை வைத்து ஆட்சியிலிருக்கும் சிங்கள அரசாங்கங்களோடு ஒத்துழைக்க விரும்பிய தமிழ்க் காங்கிரசுக்கு எதிராகத் தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு மேலும் அதிகரித்துவந்தது. இது 1960 மார்ச், 1960 ஜூன், 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் பிரதிபலித்தது.
1965ல் நடைபெற்ற தேர்தலின்பின் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் தமிழரசுக்கட்சி இணைந்து கொண்டு ஒரு அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டது. எனினும் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஐ.தே.க அரசாங்கம், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமையினால் தமிழரசுக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டது. 1970ல் நடந்த தேர்தல் சிரிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்த ஐக்கிய முன்னணியைப் பதவிக்குக் கொண்டுவந்தது. இந்தப் பதவிக்காலத்தில் புதிய குடியரசு அரசியல் சட்டத்தை உருவாக்கிய ஐக்கிய முன்னணி அரசு, முன்னைய அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகளை நீக்கியதுடன், சிங்கள பௌத்தர்களின் அதிகாரத்தை வலுப்படுத்தியதாகக் கூறித் தமிழரசுக் கட்சியும் எனைய தமிழ்க் கட்சிகளும் எடுத்த நடவடிக்கைகள் பயனற்றுப் போயின.
இந்த நிலையில் தங்களுடைய எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு ஒண்றிணைந்து போராடத் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகளும் முன்வந்தன. விளைவாகத் திருவாளர்கள் எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோரைக் கூட்டுத் தலைவர்களாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் சகல அரசியல் நடவடிக்கைகளும் மேற்படி கூட்டணியின் சார்பிலேயே நடைபெற்றன. இதனால் தமிழரசுக்கட்சி பெயரளவிலேயே இருந்துவந்தது.
மேற்கோள்கள்
இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள்
1949இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
1695 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF | தமிழர் விடுதலைக் கூட்டணி | 1972 ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ்க் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவை சேர்ந்து தமிழர் கூட்டணி என்னும் கூட்டமைப்பை உருவாக்கின. மேற்படி கட்சிகளின் தலைவர்களாக இருந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோர் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
1976 ல் இவ்வமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி (சிங்களம்: ද්රවිඩ එක්සත් විමුක්ති පෙරමුණ ஆங்கிலம்: Tamil United Liberation Front) எனப் பெயர் மாற்றம் பெற்றதுடன், வட்டுக்கோட்டையில் நடந்த அதன் மாநாட்டில், "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்று பரவலாக அறியப்படும் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இத் தீர்மானம் இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது.
1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், சுதந்திரத் தமிழீழக் கொள்கைக்கு மக்கள் ஆணை கோரிப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றி பெற்று, இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக அமரும் வாய்ப்பைப் பெற்றது. கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.
70 களின் ஆரம்பத்திலிருந்தே சிறு சிறு குழுக்களாக இயங்கிவந்த தீவிரவாத இளைஞர்கள், படிப்படியாகப் பலம் பெற்றுவந்தார்கள். அதனால் 1983க்குப் பின்னர் தமிழர் அரசியலில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.
மேற்கோள்கள்
இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
1972இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் |
1706 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF | பாரதிய ஜனதா கட்சி | பாரதிய சனதா கட்சி (மொழிபெயர்ப்பு: இந்திய மக்கள் கட்சி; சுருக்கமாக பா. ச. க) இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதலாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய சனதா கட்சி அல்லது சுருக்கமாக பாசக என்றும் அழைப்பார்கள்.
பாரதிய சனதா கட்சி, தீனதயாள் உபாத்தியாயாவால் 1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த மனிதநேயம் என்ற தத்துவத்தை தனது அதிகாரப்பூர்வ கொள்கையாகக் கொண்டுள்ளது. "இந்து தேசியவாதக் கட்சி" என்று கூறப்படும் இக்கட்சி, சுதேசி இயக்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சுயச் சார்புக் கொள்கையும், தேசியவாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் கொண்டது. இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளில் இதுவும் ஒன்று.
பா.ச.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி, அடல் பிகாரி வாச்சுபாயைப் பிரதமராகக் கொண்டு 1998 முதல் 2004 வரை இந்தியாவை ஆண்டது. காங்கிரசு அல்லாத ஒரு அரசு தனது முழு ஐந்து வருட காலத்தையும் பூர்த்தி செய்தது அதுவே முதல் முறையாகும். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பா.ச.க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கியது. 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோதி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலிலும் பெரும்பான்மையைப் பெற்று தொடர்ந்து இரண்டுமுறை ஆட்சி அமைத்த காங்கிரசு அல்லாத முதல் கட்சி ஆனது.
கட்சி அமைப்பு
கட்சியின் தலைவரே கட்சியில் உயர்ந்த அதிகாரம் உடையவராவார். அவரது பதவிக்காலம் மூன்றாண்டுகளாகும். ஒருவர் தலைவர் பதவியில் அதிக பட்சம் இரண்டு முறை மட்டுமே செயல்பட முடியும். தலைவருக்கு அடுத்து துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் செயலாளர்கள் என பலர் உள்ளனர். கட்சியின் உயர்ந்த அதிகாரமுடைய அமைப்புகள் வருமாறு:
தேசியத் தலைவர்
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழு
பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு
பா.ஜ.க வின் பல தலைவர்கள் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்திலிருந்து இருந்தவர்கள். விசுவ இந்து பரிசத், அகில பாரத வித்தியார்த்தி பரிசத், சுதேசி ஜாக்ரன் மஞ்ச் போன்ற இன்ன பிற சங் பரிவார் அமைப்புகளோடு பா.ஜ.க நட்புறவு கொண்டுள்ளது.
பா ஜ க அணிகள்
இளைஞர் அணி
மகளிர் அணி
சிறுபான்மையினர் அணி
பட்டியல் சமூகத்தினர் அணி
பட்டியல் பழங்குடியினர் அணி
இதர பிற்படுத்தப்பட்டோர் அணி
வரலாறு
பாரதிய ஜன சங்கம்
சியாமா பிரசாத் முகர்ஜியால் இந்து தேசியவாத கொள்கையை வளர்ப்பதற்காக, 1951 ஆம் ஆண்டு பாரதிய ஜன சங் நிறுவப்பட்டது. காங்கிரசை கடுமையாக விமர்சித்த இக்கட்சி, தேசிய மற்றும் கலாசார அடையாளம், ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சமரசம் கூடாது என்ற கருத்துடையதாக விளங்கியது. இக்கட்சி, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் அரசியல் பிரிவு என்று பரவலாகக் கருதப்பட்டது.
ஜம்மு கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க நடந்த கலவரத்தின்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, 1953 ஆம் ஆண்டு மறைந்ததை அடுத்து, கட்சியின் பொறுப்புகள் அனைத்தும் தீனதயாள் உபாத்யாயாவிடம் வந்து சேர்ந்தன. அவர், பதினைந்து வருடங்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வளர்த்தார். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இளைஞர்களைக் கொண்டு கட்சியின் கொள்கைகளை செதுக்கினார். வாஜ்பாய், அத்வானி போன்ற அரசியல்வாதிகளுக்கு இவரே வழிகாட்டியாக விளங்கினார். கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்கள் (உபாத்யாயாவையும் சேர்த்து) ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கில் இருந்து வந்தவர்களாதலால், இயற்கையாகவே தேசப் பற்றும், ஒழுக்கமும் கொண்டவர்களாக விளங்கினர்.
இக்கட்சி 1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மூன்று இடங்களில் மட்டுமே வென்றது. இருப்பினும் தொடர்ந்து வளர்ந்த இக்கட்சி, 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டம், பசுவதைத் தடை, ஜம்மு கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறுவது, இந்தி மொழியை வளர்ப்பது போன்ற கொள்கைகள் கொண்ட இக்கட்சி, பல வட மாநிலங்களில் காங்கிரசின் அதிகாரத்திற்கு பெறும் சவாலாகத் திகழ்ந்தது.
இக்கட்சி, 1967க்குப் பிறகு ஒத்த கொள்கையுடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, உத்திரப் பிரதேசம், தில்லி போன்ற சில மாநிலங்களில் ஆட்சி அமைத்தது. இந்திரா காந்தியால் 1975 முதல் 1977 வரை அமல் படுத்தப்பட்ட அவசர காலத்தின் போது நடந்த அரசியல் கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததினால், இக்கட்சியின் பல தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இக்கட்சியும் வேறு சில கட்சிகளும் ஜனதா கட்சியுடன் இணைந்து, 1977 ஆம் ஆண்டு காங்கிரசிற்கு எதிராக களமிறங்கின.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று, மொரர்ஜி தேசாயைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. உபாத்யாயாவின் மரணத்திற்குப் பிறகு ஜன சங்கின் தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய், புதிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடிக்கவில்லை. மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள ஜன சங் பெறும் முயற்சி செய்தது. உட்கட்சிப் பூசலால் பாரதிய ஜன சங் கட்சி பெறும் நலிவுற்றது.
பாரதிய ஜன்தா கட்சி உருவாக்கம் (1980–)
பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினர். காங்கிரஸ் அரசை வன்மையாகக் கண்டித்த பா.ஜ.க, பஞ்சாப்பில் நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசின் ஊழலும் பாரபட்சமும் மிகுந்த ஆட்சியே காரணம் என்றது. 'இந்து - சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்' என்று சீக்கியத் தலைவர் தாராசிங் கூறியுள்ளார்.
பா. ஜ. க புளூஸ்டார் நடவடிக்கையை எதிர்த்த முக்கியக் கட்சிகளுள் ஒன்றாகும். இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காப்பாளர் சுட்டுக் கொன்றதால் தில்லியில் 1984 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை பா.ஜ.க வெளிப்படையாகக் கண்டித்தது. பா.ஜ.க விடம் 1984இல் இரண்டு நாடாளுமன்ற இடங்களே இருந்த போதிலும் தனது கொள்கைகள் மூலமாக இளைஞர்களைக் கவர்ந்து, விரைவிலேயே இந்திய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அப்போது வாஜ்பாய், கட்சியில் முக்கிய இடத்திலும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்தார். இந்து தேசியவாத கொள்கையுடைய பலர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர்.
விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ராம் ஜென்மபூமி மந்திர் இயக்கத்திற்கு உறுதுணையாக பா,ஜ.க விளங்கியதோடு, அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் கூறியது. அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம் எனவும், வெகு காலத்திற்கு முன் அங்கு ராமர் கோயில் இருந்தது எனவும் ஏராளமான மக்கள் நம்புகின்றனர். எனவே இந்துக்களின் புனித இடமான அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. லால் கிருஷ்ண அத்வானி கட்சியின் தலைவராக இருந்த போது, பல்வேறு ரத யாத்திரைகள் மேற்கொண்டு, இந்துக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
திசம்பர் 6, 1992 அன்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் அமைதியான போராட்டத்திலிருந்து கலவரத்தில் இறங்கி, பாபர் மசூதியை இடித்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் நடந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். விஷ்வ இந்து பரிஷத் இயக்கம் அரசால் தடை செய்யப்பட்டது. அத்வானி உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அயோத்தி விவகாரத்தை அரசியலாக்கியதாகக் கூறி பலரால் விமர்சனம் செய்யப்பட்டலும், கோடிக் கணக்கான இந்துக்களின் ஆதரவை பா.ஜ.க வென்று தேசிய முக்கியத்துவம் பெற்றது.
தில்லியில் 1993 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 1995 ஆம் ஆண்டு குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க வென்றது. திசம்பர் 1994 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் தேசிய அரசியலில் பெறும் முக்கியத்துவம் பெற்றது. மும்பையில், நவம்பர் 1995 இல் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில், மே 1996 இல் நடக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க வென்றால் வாஜ்பாய் பிரதமராவார் என்று அக்கட்சியின் தலைவர் அத்வானி அறிவித்தார். அத்தேர்தலில், பா. ஜ. க வெற்றி பெற்று அமைத்த அரசில் வாஜ்பாய் பிரதமரானார். இருப்பினும் பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால், 13 நாட்களில் வாஜ்பாய் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி, 1998 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்றது. இம்முறை பா.ஜ.க ஏற்கனவே இருந்த கூட்டணிக் கட்சிகளான சமதா கட்சி, சிரோமனி அகாலி தளம், சிவ சேனா போன்றவற்றோடு சேர்த்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளோடும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இவற்றுள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவ சேனா மட்டுமே பா.ஜ.க வுடன் ஒத்த கொள்கையுடைய கட்சியாகும். தெலுங்கு தேசம் கட்சி இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தது. மெலிதான பெரும்பான்மை பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தது. ஆனால், அ. இ. அ. தி. மு. க தலைவர் ஜெயலலிதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் கூட்டணி உடைந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
கார்கில் போரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து வாஜ்பாய்க்கு கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் 303 இடங்களில் வென்றது. பா. ஜ. க மட்டுமே 183 இடங்களில் வென்றது. வாஜ்பாய் மூன்றாவது முறையாகப் பிரதமராகவும், அத்வானி துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இம்முறை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டுகளும் நீடித்தது. வாஜ்பாய் தலைமையில் யஷ்வந்த் சின்காவை நிதி அமைச்சராகக் கொண்ட இந்த அரசு, பி. வி. நரசிம்ம ராவ் அரசு தொடங்கிய பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தியது.
இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பல அரசுடைமை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியதோடு, உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்களையும் நடைமுறைப்படுத்தியது. விமான நிறுவனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது, அந்நிய முதலீடுகளை அனுமதித்தது போன்ற கொள்கைகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகத் துணை புரிந்ததோடு, புதிய துணை நகரங்கள் உருவாகவும், உள்கட்டமைப்பு சிறக்கவும், உற்பத்தியும் ஏற்றுமதியும் உயரவும் வழிவகுத்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியது. இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்று, டாக்டர். மன்மோகன் சிங்கைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது.
கர்நாடகாவில், மே 2008 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்றது. இதுவே தென்னிந்திய மாநிலமொன்றில் பா.ஜ.க வென்றது முதல் முறையாகும். ஆனால் 2013 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா. ஜ. க தோற்று தனது ஆட்சியைக் காங்கிரசிடம் இழந்தது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா. ஜ. க மீண்டும் தோற்றதனால், மக்களவையில் அதன் பலம் 116 ஆகக் குறைந்தது. ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தராகண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்த செயல்பாடே அக்கட்சியின் தோல்விக்குக் காரணம் என்று கூறப்பட்டது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. பா. ஜ. க. மட்டுமே 282 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் 10 இடங்கள் மிகுதியாக வென்றதால் தனிப்பெரும்பான்மையோடு கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமலே தனித்து ஆட்சி அமைத்தது.
பொதுத் தேர்தல்களில்
கொள்கையும் அரசியல் நிலையும்
பாரதிய ஜனதா கட்சி, ஒருங்கிணைந்த மனிதநேயம், இந்துத்துவம் மற்றும் கலாசார தேசியவாதம் போன்ற கொள்கைகளைக் கொண்டது. பா.ஜ.க பலமான பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் கட்சியாகும்.
இந்துத்துவம்
வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்கிற அரசியல்வாதியால் உருவாக்கப்பட்ட கொள்கையான இந்துத்துவத்தை பா.ஜ.க பலமாக ஆதரிக்கிறது. இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றுக்கு மேற்கத்தியக் கொள்கைகளைவிட இந்துத்துவமே உகந்தது என்பது பா.ஜ.க வின் நிலைப்பாடு. பா. ஜ. க வின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பலரால் விமர்சிக்கப்பட்டாலும், கலாசார தேசியவாதம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும் கொள்கையே என்பது பா. ஜ. க வின் வாதம்.
காங்கிரஸ் கட்சி, போலியான மதசார்பின்மை கொள்கையை வைத்து அரசியல் செய்து மக்களை ஏமாற்றுகிறது என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் இந்திய கலாசாரத்திற்கு எதிராக மேற்கத்தியக் கலாசாரத்தைப் பரப்புகிறது என்றும் பா.ஜ.க, காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது. காங்கிரஸ் கட்சி, சிறுபான்மையினரின் வாக்குகளுக்காகவே அவர்களை ஆதரிக்கிறது என்றும் பா. ஜ. க கூறுகிறது.
அடல் பிகாரி வாஜ்பாயின் கருத்துப்படி, ஐரோப்பிய மதசார்பின்மைக் கருத்தியல் என்பது இந்தியாவின் கலாசாரத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும். மோகன்தாஸ் காந்தியால் முன்மொழியப்பட்டக் கோட்பாடான சர்வ தர்ம சம்பவ என்பதே இந்தியாவின் பாரம்பரியத்திற்கு உகந்த மதசார்பின்மை என்பது பா. ஜ. க வின் கருத்து. வாஜ்பாய், இந்திய மதசார்பின்மையைப் பின்வருமாரு விளக்குகிறார்:
அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதே காந்தியின் சர்வ தர்ம சம்பவ கோட்பாடாகும். இக்கோட்பாடு எந்த மதத்திற்கும் எதிரானதல்ல; அனைத்து மதங்களையும் சமமானதாகவே பார்க்கிறது. எனவே, இக்கோட்பாடே இந்தியாவிற்குகந்த கொள்கை; இதுவே மேற்கத்தியக் கொள்கைகளைவிட சிறந்தது.
பா.ஜ.க வின் கொள்கைகளுள் "ஒருங்கிணைந்த மனிதநேயம்" என்பது முக்கியமானதாகத் திகழ்கிறது. வலதுசாரி கொள்கை நிலைப்பாடுடைய பா.ஜ.க, சமூக பாதுகாப்பு மற்றும் முற்போக்கு ஆகிய கொள்கைகளுடையது. இக்கட்சியின் பெரும்பான்மையான கொள்கைகள் இந்தியாவின் பாரம்பரிய கலாசாரத்தைத் தழுவியே அமைந்துள்ளன. இக்கட்சியின் சாசனத்தில் அதன் குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
இக்கட்சி, இந்தியாவை வளமான மற்றும் பலமான தேசமாக வளர்க்க உறுதி பூண்டுள்ளது. பண்டைய கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன மற்றும் அறிவார்ந்த இந்தியாவை உருவாக்குவோம். சாதி, சமய மற்றும் பாலின வேறுபாடின்றி ஒரு ஜனநாயக நாட்டை உருவாக்கி அதில் அனைவருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நீதி, சம வாய்ப்பு, கருத்து மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திரம் கிடைக்க இக்கட்சி பாடுபடும். இக்கட்சி, இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டு அதன் கொள்கைகளான மதசார்பின்மை, நேர்மை, ஜனநாயகம், ஒருமைப்பாடு மற்றும் தேசத்தின் உரிமைகளைக் காக்கும்.
பா.ஜ.க அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோரி வருகிறது. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் பசுவைக் கொல்வதையும் உண்பதையும் தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய கலாசாரத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்க வேண்டும் என்றும் பா. ஜ. க கோரி வருகிறது. வாஜ்பாய் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, கல்லூரி பாடத்திட்டத்தில் வேத சோதிடத்தையும் சேர்க்க உத்தரவிட்டதோடு வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சில சர்ச்சைக்குரிய மாற்றங்களையும் செய்தார்.
பா.ஜ.க கர்நாடகத்தில் ஆட்சி செய்த போது இந்துகளின் புனித நூலான பகவத் கீதையை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் பா.ஜ.க மதமாற்றங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கருத்திற்கும் ஆதரவளிக்கிறது. பா.ஜ.க இந்திய அரசியலமைப்பை மதிப்பதாகக் கூறினாலும், சில பா.ஜ.க தலைவர்கள், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாற்றுக் கருத்துடைய கட்சிகளும் அடங்கியுள்ளதால் பா.ஜ.க தனது இந்துத்துவா கொள்கையை தளர்த்தியது.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவை பா.ஜ.க, இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கு, கஷ்மீர் விவகாரத்தைத் தீர்ப்பதில் செய்த தவறுகள் போன்றவற்றிற்காகக் கடுமையாக விமர்சித்தது. ஆயினும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலை, இந்தியாவை ஒருமைப்படுத்தியதற்காக பா. ஜ. க பாராட்டியுள்ளது.
டாக்டர். பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் நினைவு நாளை பா.ஜ.க அதிகாரப்பூர்வமாக அனுசரித்தாலும், நரேந்திர மோடி போன்றவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தாலும், மேல் சாதி இந்துக்களின் கட்சியே பா.ஜ.க என்று விமர்சிக்கப்படுகிறது.
ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் மீது எழுந்த, "இசுலாமியர்களுக்கு எதிரானது", "பாசிசக் கொளகையுடையது", "மதக் கலவரத்தைத் தூண்டுகிறது" போன்ற விமர்சனங்களால் பா.ஜ.க வும் பாதிக்கப்பட்டுள்ளது. வினாயக் தாமோதர் சாவர்க்கரின் கொள்கைகளை பா.ஜ.க பின்பற்றுவதால் அது காந்திக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் மீதுள்ள காந்தியின் கொலைப் பழி பா.ஜ.க வையும் பாதித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், காந்தியின் இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கையும், இந்தியப் பிரிவினைக்கு அவர் ஒப்புதல் அளித்ததையும் கடுமையாகக் கண்டித்தது. பா. ஜ. க காந்திக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரானது என்கிற வாதத்தை அக்கட்சி முழுமையாக மறுக்கிறது. அதுமட்டுமின்றி, தங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் சிறுபான்மையினரை அவர்களது வாக்குகளுக்காகவே ஆதரிக்கின்றனர் என்று பா.ஜ.க கூறுகிறது.
பொருளாதாரக் கொள்கைகள்
பா.ஜ.க வும் அதன் வழி வந்த கட்சிகளும், மார்க்சிசத்தையும், இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரசின் சமூகவுடைமைப் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்தன. சுதேசிக் கொள்கையையும், உள்நாட்டு நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் பா.ஜ.க பலமாக ஆதரித்ததோடு, வெளிநாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதியைக் குறைக்க வேண்டுமென்றது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில், வாஜ்பாய் அரசு 1991 இல் ஆரம்பிக்கப்பட்ட சந்தை சீர்திருத்தங்கள், பொருளாதார தாராளமயமாக்கல் போன்றவற்றைத் தொடர்ந்ததால், தேக்கத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது.
பா.ஜ.க தலைமையிலான அரசு, தங்க நாற்கர சாலை முதலிய சில முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ததோடு, அந்நிய முதலீட்டை ஈர்க்க கட்டற்ற வர்த்தகத்தையும் அறிமுகப்படுத்தியது. பா. ஜ. க ஆட்சியில் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தாலும், இந்தியாவின் ஏழை மக்களைவிட தொழில் முனைவோருக்கும், வர்த்தகர்களுக்குமே ஆதரவாக இருந்தது என்ற விமர்சனத்தால் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் அக்கட்சித் தோற்றது.
பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம்
பா.ஜ.க, இந்திய பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குதல், பலமான அணு ஆயுதத் தற்காப்பு போன்ற பலமான தேசியப் பாதுகாப்புக் கொள்கையை ஆதரிக்கும் கட்சியாகும். இந்திய அரசியலமைப்பால் ஜம்மூ கஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தைப் பயன்படுத்தி அதை முழுமையாக இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற கொள்கையை பா.ஜ.க ஆதரிக்கிறது.
வாஜ்பாய் அரசின் ஆட்சிக்காலத்தில், பொக்ரான்-II என்ற பெயரில் மே 1998 இல் ஐந்து அணு வெடிப்புச் சோதனைகள் நிகழ்த்தப்பட்டது மட்டுமின்றி பல முக்கிய ஏவுகணைகளும் சோதனை செய்யப்பட்டது. வாஜ்பாய் அரசு, இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரை ஆக்கிரமத்த பாகிஸ்தான் ராணுவத்தை வெளியேற்ற அனைத்து வழிகளையும் கையாள இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்டது. இதுவே தற்போது கார்கில் போர் என்று அறியப்படுகிறது. பாகிஸ்தானின் ஊடுருவலை காலதாமதமாகக் கண்டறிந்தமைக்காக அரசின் உளவுப் பிரிவு விமர்சிக்கப்பட்டாலும், அதன் பின்னர் அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளும் அதில் ராணுவம் கண்ட வெற்றியும் வாஜ்பாய் அரசுக்குப் புகழ் சேர்த்தது. இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001 இல் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, வாஜ்பாய் அரசு, ராணுவத்தை இந்திய-பாகிஸ்தான் எல்லையில் குவித்தது.
திசம்பர் 2001 இல் இந்திய நாடாளுமன்றத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த பிறகு, பா.ஜ.க அரசு தீவிரவதத் தடை சட்டம் (POTA) என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் உளவு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதோடு, காவல் துறைக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கியது. இச்சட்டம் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளால் இசுலாமியர்களுக்கு எதிரான சட்டமாகப் பார்க்கப்பட்டது. இதனால் இந்த மசோதாவை சட்டமாக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டப்பட்டது. பின்னர் வந்த காங்கிரஸ் அரசால் இச்சட்டம் நீக்கப்பட்டது.
காங்கிரஸ் அரசின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வலுவானதாக இல்லை என்று பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
வெளியுறவுக் கொள்கை
சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு பாராட்டிய காங்கிரஸ் அரசை பா.ஜ.க அடிக்கடி விமர்சித்து வந்துள்ளது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுடனான உறவை இந்தியா பலப்படுத்திக்கொண்டது. இந்திய-அமெரிக்க உறவுகள், 2000 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டனின் இந்திய வருகையின்போது மேலும் முன்னேற்றமடைந்தன. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 இல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் அல் காயிதா மற்றும் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கெதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்காவிற்கு இந்தியா தனது ஒத்துழைப்பை நல்கியது. இதற்குப் பிரதியாக அமெரிக்கா, இந்தியாவிற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் உதவியது.
இந்தியாவின் எதிரிகளாகக் கருதப்படும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவுகளையும், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா மேம்படுத்திக் கொண்டது. வாஜ்பாய், 1998 இல் பாகிஸ்தான் சென்று தில்லி-லாகூர் பேருந்துப் போக்குவரத்து சேவையைத் துவக்கி வைத்தார். 1998 அணு வெடிப்புச் சோதனைக்குப் பிறகு நலிவடைந்திருந்த இந்திய-பாகிஸ்தான் உறவுகளைப் புதிப்பித்துக்கொள்ள, இரு நாடுகளும் லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஆனாலும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது.
சில வருடங்கள் நீடித்த பதட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அதிபராக விளங்கிய பர்வேஸ் முஷரஃபை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் துவங்கப்பட்ட போதிலும் அவை எந்த ஒரு முடிவையும் எட்டவில்லை. மீண்டும் 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் போர் நிறுத்தத்தை அறிவித்து அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்கினார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதமர்கள்
மாநிலங்களில் பா.ஜ.க
பா.ஜ.க, ஜுன் 2024 நிலவரப்படி 13 மாநிலங்களில் (குஜராத்,ஹரியானா, , உத்திரப் பிரதேசம், உத்தராகண்ட், அசாம், கோவா, , அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், ) பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ளது. பீகார், சிக்கிம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதற்கு முன்பு பா.ஜ.க, கர்நாடகா , மேகாலயா, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்துள்ளது.
பா.ஜ.க வின் தற்போதைய மாநில முதலமைச்சர்கள்
கட்சித் தலைவர்கள்
சர்ச்சைகள்
தெஹல்கா போலி ஆயுத பேரம்
இந்திய ராணுவத்திற்கு வெப்ப பிம்பக் கருவிகள் வாங்க பாதுகாப்புத் துறைக்குப் பரிந்துரை செய்ததற்காக 100000 கையூட்டு வாங்கியதாக, 2001இல் பா.ஜ.க வின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமண் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கட்சியின் விதிகளுக்குட்பட்டு அவர் தலைவர் பதவியில் இருந்து பலவந்தமாக நீக்கப்பட்டார். அவர் மீது குற்றவியல் வழக்குப் பதியப்பட்டு, ஏப்ரல் 2012 இல் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
லிபேரான் குழுவின் அறிக்கை
மன்மோகன் சிங் லிபேரானால் 2009 இல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான 68 நபர்களில் சில பா.ஜ.க பிரமுகர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர்களுள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கட்சியின் அப்போதைய நாடாளுமன்றத் தலைவரான லால் கிருஷ்ண அத்வானி, உத்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வரான கல்யாண் சிங் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். தனக்கு சாதகமான அதிகாரிகளை அயோத்தியில் நியமித்ததாக கல்யாண் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.
முன்னாள் கல்வித் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷியின் மீதும் அத்வானியின் மீதும், உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம் சட்டப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று அத்வானியின் காவலுக்குப் பொறுப்பேற்றிருந்த காவல் துறை அதிகாரியான அஞ்சு குப்தா அவ்வழக்கில் சாட்சி கூறினார்.
இதனையும் காண்க
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம்
தமிழக பா.ஜ.க வின் இணையதளம்
பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியின் இணையதளம்
பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி இணையதளம்
பாரதிய ஜனதா கட்சியின் முகநூல் பக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் யூட்யூப் பக்கம்
இந்திய அரசியல் கட்சிகள்
1980இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
இந்துத்துவம்
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் துணை அமைப்புகள் |
1707 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81 | இந்திய தேசிய காங்கிரசு | இந்திய தேசிய காங்கிரசு (Indian National Congress; சுருக்கமாக இதேகா பொதுவாக காங்கிரசு கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885–இல் தொடங்கப்பட்ட இக்கட்சி இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.
வரலாறு
இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வரலாற்றை விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என இரு காலப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
விடுதலைக்கு முன்பான காலப் பகுதி
1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 திசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.
இதன் இரண்டாம் கூட்டம் 1886 திசம்பர் 27-ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் "Indian National Congress" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் "Indian National Union" காங்கிரசுடன் இனைக்கப்பட்டது.
முன்றாவது மாநாடு சென்னையில் 1887 திசம்பர் 27-ல் நடைபெற்றது.
பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரசின் கொள்கையில் மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907 -ல் காங்கிரசில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரசு இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது. இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.
இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரசு கட்சி உருவாக்கியது. காங்கிரசின் வரலாற்றை பட்டாபி சித்தராமையா எழுதி உள்ளார். இவா் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டுள்ளார். உமேசு சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி "The Saftey Wall Theory"-யில் கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக "ஆலன் ஆக்ட வின் ஹியூம் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார்.
காந்தியின் கால பகுதி
காந்தி 1915 ல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் காந்தியின் புகழ் இந்தியாவிலும் பரவியிருந்தது. தாயகம் திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரசு இயக்கம் அன்னி பெசன்ட் அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முசுலிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். திரும்பர் 1917ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக காந்தி ஓராண்டிற்குத் தெரிவானார்.
விடுதலைக்கு பிந்தைய காலப் பகுதி
இந்திரா காந்தி காலப் பகுதி
நேருவின் மறைவுக்குப் பின் இவர் லால் பகதூர் சாசுத்திரியின் அரசில் இந்திய மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சராகப் பணியாற்றினார். லால் பகதூர் சாசுத்திரியின் திடீர் மறைவை ஒட்டிப் பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் கு. காமராசின் முயற்சியும் காரணமாகும். பின் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார். காங்கிரசு கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாகக் கூறி காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரிக் கொள்கையுடன் இருந்த அவர்கள் பொருளாதாரக் திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. இதனால் காங்கிரசு இரு குழுக்களாக இந்திரா காங்கிரஸ் ,எனவும் நிறுவன காங்கிரசு எனவும் பிரிந்தது.மாநில காங்கிரசு நிருவாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசியக் காங்கிரசு என அறிவித்தது. அதனால் எதிர்க் குழுவான நிறுவன காங்கிரசு தனி கட்சியானது. 1970ம் ஆண்டு இவரது ஆட்சியில் பசுமைப் புரட்சி நடந்தது. 1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாக்கித்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்று வங்காள தேசம் உருவாகக் காரணமாக இருந்தார். 1974ல் சிரிக்கும் புத்தர் என்ற பெயரில் அணு சோதனை நடத்தினார்.
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1971 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி பெற்றுப் பிரதமரான போதிலும் காங்கிரஸ் கட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல மாநில கட்சிகளின் ஆதரவு அளித்தனர்.
அரசாங்க அதிகாரிகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி கொண்ட தவறான முறைகேடு செயல்களால். நீதிமன்றம் இந்திரா காந்திக்கு எதிராக பிரதமர் பதவியில் இருந்து விலகி சிறை தண்டனை பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்திரா காந்தி தான் மீதுள்ள தவறுகளை மறைப்பதற்கு இந்திய நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார்.
ஆனால் அதை காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும் தலைவர்களும் அக்கட்சிக்கு கூட்டணியில் இருந்து ஆதரவு கொடுத்த சில கட்சிகளும் இணைந்து பலமான எதிர்கட்சியான பாரதிய ஜன சங்கம், பாரதிய லோக் தளம் போன்ற கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஜனதா கட்சி என்ற ஒரு புதிய கட்சியை உருவாக்கினார்.
1977 நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முதலாக காங்கிரஸ் கட்சியையும் இந்திரா காந்தியையும் தொற்கடிக்கபட்டு ஜனதா கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
1980 ஆம் ஆண்டு எதிர்கட்சியான ஜனதா கட்சியில் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் மூன்றே வருடங்களில் ஆட்சி கவிழ்ந்தது.
பின்பு 1980 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இந்திரா காந்தி மூன்றாவது முறையாக பிரதமரானார்.
ஆனால் அக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அவர்கள் முந்தைய ஆட்சி காலத்தில் வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்க்கு கிழக்கு பாகிஸ்தான் என்ற பங்களாதேஷ் தனிநாடு பெற்று கொடுத்ததை போல் பஞ்சாப் தனிநாடு சுதந்திரம் கேட்டு சீக்கியர்கள் காலிஸ்தான் அமைப்பை கொண்டு ஆயுதம் ஏந்திய போராடிய போராளிகள் இந்திரா காந்தி நோக்கி பஞ்சாப் தனிநாடு கேட்டு பெரும் போராட்டம் செய்தனர்.
ஆனால் பஞ்சாப் தனிநாடு கேட்டு போராடிய சில சீக்கிய போராளிகளை இந்திரா காந்தி வன்மையாக கண்டித்தார். சீக்கியர்களின் புனித வழிபாட்டு தலமான அமிர்தசரஸ் பொற்கோயில்க்குள் இந்திய ராணுவ படையை ஏவி சில காலிஸ்தான் போராளிகளை கொன்ற கோபத்தால்.
ஒட்டுமொத்த பஞ்சாப் சீக்கியர்களின் கோபம் பிரதமர் இந்திரா காந்தி நோக்கி இருந்ததால். அவரது மெய்க்காப்பாளர் ஒருவரால் இந்திரா காந்தி சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சின்னம்
பூட்டிய இரட்டை மாடுகள் இதன் சின்னமாக 1969 பிளவுக்கு முன் வரை இருந்தது. பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்திரா பிரிவுக்கு இரட்டை மாடு சின்னத்தை ஒதுக்கியது.
இதை எதிர்த்து ஸ்தாபன காங்கிரசு (சிண்டிகேட் என இதை அழைப்பார்கள்) பிரிவு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதையடுத்து.
ஆளும் எதிர்கட்சியான ஜனதா கட்சி 1979ல் இரண்டாக பிளவுபட்டது. இதில் ஜனதா கட்சி பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் செயல்பட்டது.
ராஜ் நாராயணன் தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சி சார்பாக சரண் சிங் பிரதமராக பதவி வகித்தார். அதற்கு இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சரண் சிங் தலைமையிலான பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். பிரதமர் சரண் சிங் தலைமையிலான குழுவுக்கு பசுவும் கன்றும் சின்னம் கிடைத்தது.
பின்பு சரண் சிங் அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டதால். இது பின்பு சரண் சிங் தலைமையில் ஜனதா கட்சி (எஸ்) என அழைக்கப்பட்டது.
பின்பு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்த கை சின்னம் ஆனது காங்கிரஸ் கட்சியின் பிரதான தேர்தல் சின்னமாக மாறியது. அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பிற மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வென்றுள்ளது.
கொள்கை மாற்றம்
காங்கிரஸ் கட்சி இந்தியாவிற்கு அகிம்சா முறையில் சுதந்திரம் பெற்று கொடுத்த சோசலிசம் கட்சி என்று பார்த்தாலும் அதன் அடிப்படை கொள்கையானது இந்தியாவின் அடிப்படை மதமான இந்து மதம் சார்ந்த இந்து தேசியம் கொள்கை உடையது.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் நேருவின் மரணத்திற்கு பிறகு அவரது மகள் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்த போது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு எதிராக பல செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதும் வாரிசு அரசியல் சர்வதிகார போக்கில் இந்திரா காந்தி நடந்து கொண்டதால், காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டு காமராஜர் தலைமையில் நிறுவன காங்கிரஸ் என்றும் இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரசு என்று செயல்பட்டபோது பிரதமர் இந்திரா காந்தி தனது கட்சியின் ஆட்சிக்கு பிற கட்சிகளின் ஆதரவு பலத்தை பெறுவதற்கு தனது கட்சியின் கொள்கைகளான சமூக மக்களாட்சி, பழமைவாதம், இந்து தேசியம் கொள்கை உடன் மதச்சார்பின்மை என்ற கொள்கையை சேர்த்து கொண்டு அன்றைய காங்கிரசின் பிரதான எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கு அவ்வாறு இந்திரா காந்தி கொள்கை சமரசம் செய்து கொண்டார்.
மாநில அரசுகளில் காங்கிரஸ்
இந்தியாவில் தற்போது காங்கிரஸ் கட்சி இமாச்சல பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நேரடியாக ஆளும் கட்சியாக உள்ளது.
மேலும் தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் அசாத்தியமான வெற்றிக்கு காரணமானது கடந்த 2014 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் அன்றைய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி அவர்கள் அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கின மக்களின் வெகுநாள் கோரிக்கை போராட்டமான தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை ஏற்று ஆந்திரா பிரதேசத்தில் இருந்து வடக்கு மாகாணமான தெலுங்கானாவை தனி மாநிலமாக அங்கிகாரம் கொடுத்ததால். தற்போது காங்கிரஸ் கட்சி பலமான வெற்றி பெற்றுள்ளது.
அதனால் முதல் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் 10 வருடங்கள் கழித்து காங்கிரஸ் கட்சி தனிபெரும்பான்மையோடு அம்மாநில மக்கள் வெற்றி பெற வைத்து சோனியா காந்தியை அன்னை பராசக்தியாகவும், மகாகாளி, துர்காதேவியாக போற்றி வணங்கி வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி அம்மாநில கட்சிகளுடன் கூட்டணியில் ஆட்சி செய்துவருகிறது.
தற்போது ஜம்மு காஷ்மீரில் 10 வருட காலம் மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்தபடாமல் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தொடர் வெற்றி பெற்று இந்தியாவை ஆளும் பாஜகவின் இரண்டாவது ஆட்சி காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது ஆர்எஸ்எஸ்சின் உயிர்நாடி கொள்கையான ஜம்மு காஷ்மீர் தனி மாநில சிறப்பு உரிமை அந்தஸ்து 370 நீக்கப்பட்டு நடந்த முதல் மாநில தேர்தலான 2024 ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி–காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியே வெற்றி பெற்றது.
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தமுள்ள 114 சட்டமன்றத் தொகுதியில் 90 தொகுதிகளிலே தேர்தல் நடத்தப்பட்டு அதில் பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றிய போதிலும் மீதமுள்ள 24 சட்டமன்றத் தொகுதியானது பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருப்பதால் தற்போது அங்கு தேர்தல் நடத்தாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி செய்து வந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் கடந்த ஆட்சி காலத்தில் செய்த சொத்து குவிப்பு ஊழல் வழக்கின் விசாரணையில் சிறை சென்று மீண்டும் வந்து முதல்வரான பிறகும் எதிர்கட்சி பாஜகவினரால் பல அவதூறுகள் கூறப்பட்ட போதிலும் அதையும் கடந்து தற்போது அம்மாநில மக்கள் ஹேமந்த் சோரனை 2024 சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றி பெற செய்து மீண்டும் முதல்வராக்கி அவரது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா–காங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பில் தொடர் ஆட்சி அமைக்க செய்துள்ளனர்.
மேலும் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தற்போது பல மாநிலங்களில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், பிற மாநில கட்சிகளுக்கும் பலமான எதிர்கட்சியாக செயல்பட்டுவருகிறது.
இந்திய விடுதலை பெற்றது முதல் காங்கிரஸ் கட்சி இதுவரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெருபான்மையாக ஆட்சி புரிந்துள்ளது.
ஆனால் பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணத்திற்கு பிறகு வந்த அவரது மகளும், பிரதமருமான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி காலத்தில் காங்கிரஸ் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் சறுக்கலை கண்டது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இறுதி ஆட்சி காலத்தில் நடந்த கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் இந்திய அரசியலில் அதுவரை இல்லாத நாட்டின் பொருளாதார குறைப்பாடுகள் மற்றும் கூட்டணி ஆட்சி முறையால் பல நல்ல திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு செயல்படுத்த முடியாமல் அந்த ஆட்சி காலத்தில் போனதால் இன்று தற்போது பல மாநிலங்களிலும் இந்திய அளவிலும் காங்கிரஸ் கட்சி பலமான பின்னடைவும், தேர்தல்களில் தொடர் தோல்வியும் அடைந்து வருகிறது.
தற்போது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள்
காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் ஆளும் மாநிலங்கள்
காங்கிரசின் பிரதான எதிர்கட்சிகள்
காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள்
காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் பிரதமர்கள்
(மேலும் இந்த பட்டியலில் உள்ள 4 பிரதமர்களும் மக்களால் நேரடியாக தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படாமல் காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஎம் என இரண்டு இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற மாநில கட்சிகளின் ஆதரவு நிலைபாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் ஆவர்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மீட்சி பெறுமா காங்கிரஸ்?
இந்திய அரசியல் கட்சிகள்
1885இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
இந்திய விடுதலைப் போராட்டம் |
1708 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | திராவிட முன்னேற்றக் கழகம் | திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது. திராவிடக் கட்சிகளில் ஒன்றான திமுக அறிஞர் அண்ணாதுரை, பெரியார் ஆகியோரின் சமூக-சனநாயக, சமூக நீதிக் கொள்கைகளை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுள்ளது. பெரியாரினால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து (1944 வரை நீதிக் கட்சி என அழைக்கப்பட்டது) அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1949 செப்டம்பர் 17 இல் சென்னை, ஜார்ஜ் டவுன், இல. 7, பவளக்காரத் தெருவில் கூடித் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். 1947 செப்டம்பர் 18 இல் ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டு, கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.
அண்ணாதுரை 1949 முதல் 1969 பெப்ரவரி 3 இல் அவர் இறக்கும் வரை கட்சியின் பொதுச் செயலராக பணியாற்றினார். 1967 முதல் 1969 வரை அவர் தமிழக முதலமைச்சராகவும் இருந்தார். அண்ணாதுரையின் காலத்தில், 1967 இல், திமுக இந்திய தேசிய காங்கிரசுக்கு அடுத்தபடியாக, முதல் தடவையாக இந்திய மாநிலம் ஒன்றில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த முதலாவது அரசியக் கட்சி என்ற சாதனையையும் ஏற்படுத்தியது. அண்ணாதுரையின் மறைவை அடுத்து மு. கருணாநிதி 1969 முதல் 2018 ஆகத்து 7 இல் அவர் இறக்கும் வரை கட்சித் தலைவராகப் பதவியில் இருந்தார். மு. கருணாநிதி ஐந்து தடவைகள் முதலமைச்சராகப் பதவியில் இருந்தார். இவற்றில் இரண்டு இந்திய ஒன்றிய அரசினால் கலைக்கப்பட்டது. தற்போது, கருணாநிதியின் மகன் மு. க. இசுட்டாலின் கட்சித் தலைவராக உள்ளார். இசுட்டாலின் 2017 இல் கட்சியின் செயல் தலைவராகவும், பின்னர் 2018 இல் கருணாநிதி இறந்த பின்னர் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019 இந்தியப் பொதுத் தேர்தலில், திமுக 24 இடங்களைக் கைப்பற்றி, மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக செயல்பட்டு வருகிறது. திமுக தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஐந்து தடவைகள் ஆட்சியில் இருந்து, ஆறாவது தடவையாகத் தற்போது ஆட்சியில் உள்ளது. அண்ணா அறிவாலயம் என அழைக்கப்படும் கட்சியின் தலைமையகம் சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் அமைந்துள்ளது. புதுவை, காரைக்கால், கருநாடகம், ஆந்திரம், மும்பை, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இக்கட்சிக்கு கிளைகள் உண்டு. திமுக.வின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘முரசொலி’ வெளிவந்து கொண்டிருக்கிறது.
வரலாறு
1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது.
1953 சூலை 14, 15இல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது.
1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது.
1958 மார்ச் 2இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு உதயசூரியன் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது.
1959இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது.
ஏப்ரல் 19, 1961இல் அக்கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961இல் திமுக பேரணி நடத்தியது.
1962இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திராக் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார்.
1963இல் “பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 1963 சூன் 8, 9, 10 தியதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது.
“தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் 17இல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க.
தி.மு.க.வினர் ஆட்சி செய்த காலமும், சில நிகழ்வுகளும்
1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார்.
அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 சூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது.
அண்ணாவிற்கு பிறகு
அண்ணாதுரை 1969 பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்ததை அடுத்து, அண்ணா அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும், கல்வியமைச்சர் இரா. நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நெடுஞ்செழியன் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார். மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
1969- சூன் மாதத்தில் மு. கருணாநிதி தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.
1971இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுகவின் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. மு. கருணாநிதி, 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார்.
1972 அக்டோபர் 14இல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது.
1974 ஏப்ரல் 20இல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.
1975 சூன் 25இல் இந்திய அரசால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 முதல் 1976 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வின் செயல்பாடுகளில் அனைத்து சாதியினர் அர்ச்சகராதல் சட்டம் (1971 சனவரி 12), அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் (1970) ஆகியவை முக்கியமானவையாகும்.
1977 சூலை 4இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது.
1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது தி.மு.க.. 1976 முதல் 1980 வரை அமைந்த நிலையற்ற மத்திய அரசுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், நெருக்காடி கால நடவடிக்கைகளுக்காக, இந்திராகாந்தி அவர்கள் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் திமுகவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாலும், 1980இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது.
1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டன. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது.
1983 ஆகத்து 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொதுச் செயலர் பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9-ல் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
1987 திசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 சனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.
1989 திசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டது.
1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 1991 முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் (அக்கட்சியின்) ‘முரசொலி’ ஏடு ஒடுக்குமுறைக்குள்ளானது.
1993 அக்டோபர், 11-ல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை. கோபால்சாமி நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் 2-வது பெரிய பிளவு உருவானது.
1995-ல் தமிழீழத் தமிழர்களுக்கான ஆதரவுப் பேரணியை திமுக நடத்தியது.
1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2017 சனவரியில் செயல் தலைவர் பதவியில் மு. க. இசுதாலின் செயல்படுவார் என கருணாநிதி அறிவித்தார்.
தலைமை
அவைத் தலைவர்கள்
ஈ. வெ. கி. சம்பத் (1949 - 1963)
இரா. நெடுஞ்செழியன் (1963 - 1969)
தலைவர்கள்
மு. கருணாநிதி (1969 - 2018)
மு. க. ஸ்டாலின் (2018 முதல்)
செயல் தலைவர்கள்
மு. க. ஸ்டாலின் (2017 முதல் 2018 வரை )
பொதுச்செயலாளர்கள்
கா. ந. அண்ணாதுரை (1949 முதல் 1957 வரை)
இரா. நெடுஞ்செழியன் (1957 முதல் 1962 வரை)
கா. ந. அண்ணாதுரை (1962 முதல் 1969 வரை)
இரா. நெடுஞ்செழியன் (1969 முதல் 1977 வரை)
க. அன்பழகன் (1977 முதல் 2020 வரை
துரைமுருகன்(2020 முதல்)
பொருளாளர்கள்
காஞ்சி மணிமொழியார் (1949 - 1957)
கே. கே. நீலமேகம் (1957 - 1962)
மு. கருணாநிதி (1960 - 1969)
ம. கோ. இராமச்சந்திரன் (1969 - 1972)
க. அன்பழகன் (1972 - 1977)
எஸ். ஜே.சாதிக்பாட்சா (1977 - 1994)
ஆற்காடு நா. வீராசாமி (1994 - 2008)
மு. க. ஸ்டாலின் (2008 முதல் 28 ஆகத்து 2018 வரை)
துரைமுருகன் (28 ஆகத்து 2018 – 3 செப்டம்பர் 2020)
த. ரா. பாலு (2020 செப்டம்பர் 3ஆம் நாள் முதல்)
அணிகள்
தி.மு.க.வில் பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன
இலக்கிய அணி
இளைஞர் அணி
தி.மு.க. இளைஞர் அணி 1980 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் அமைப்பாளராக 1980 முதல் 1984 வரை மு.க.ஸ்டாலின் பொறுப்பு வகித்தார். பின்னர் அவ்வணியின் செயலாளராக 1984 முதல் 2017 - சனவரி - 6ஆம் நாள் வரை பொறுப்பு வகித்தார். அவருக்குப் பின்னர் 2017 - சனவரி - 6 ஆம் நாள் முதல் ???? வரை மு.பெ.சாமிநாதன் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.
மகளிர் அணி
மாணவர் அணி
சுற்றுச்சூழல் அணி
மாநாடுகள்
மாநில மாநாடுகள்
திமுக. பல்வேறு மாநில மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை:
முதல் மாநில மாநாடு 1951ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 13, 14, 15, 16ஆம் நாள்களில் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ.திடலில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
இரண்டாவது மாநில மாநாடு 1956ஆம் ஆண்டு மே மாதம் 17, 18, 19, 20ஆம் நாள்களில் திருச்சி பந்தயத்திடலில் இரா. நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.
மூன்றாவது மாநில மாநாடு 1961ஆம் ஆண்டு நாள்களில் மதுரை திருப்பரங்குன்றத்தில் சூலை 13, 14, 15, 16ஆம் நாள்களில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.,,
நான்காவது மாநில மாநாடு 1966ஆம் ஆண்டு திசம்பர் 29ஆம் நாள் முதல் 1967 சனவரி 1ஆம் நாள் வரை சென்னை விருகப்பாக்கத்தில் நடைபெற்றது.
ஐந்தாவது மாநில மாநாடு மு. கருணாநிதி தலைமையில் 1975 திசம்பர் 25, 26, 27, 28ஆம் நாள்களில் கோயமுத்தூரில் நடைபெற்றது,,
ஆறாவது மாநில மாநாடு 1990 பிப்ரவரி 9, 10, 11ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
ஏழாவது மாநில மாநாடு 1993 மார்ச் 26, 27, 28ஆம் நாள்களில் கோவையில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.,
எட்டாவது மாநில மாநாடு 1996 சனவரி 26, 27, 28ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
ஒன்பதாவது மாநில மாநாடு 2006 மார்ச் 3, 4, 5ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.,
பத்தாவது மாநில மாநாடு 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 15, 16 ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.. இம்மாநாடு திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே நடைபெற்றது.
பதினோராவது மாநாடு 2021 ஆம் ஆண்டு மார்ச் 14 தேதி திருச்சியில் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.இம்மாநாடு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே நடைபெறவுள்ளது.
மண்டல மாநாடுகள்
தென்மண்டல மாநாடு
தி.மு.க.வின் தென்மண்டல மாநாடு விருதுநகர் மாவட்டம் சத்திரெட்டியபட்டியில் 2004 பிப்ரவரி 21, 22ஆம் நாள்களில் நடைபெற்றது. ஆ.ராசா கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வரவேற்றார். மாநாட்டுப்பந்தலை சரத்குமார் திறந்துவைத்தார். பொதுச்செயலாளர் க. அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர். போலீசு கண்ணன் என்பவரின் கலைஞரின் பொற்காலம் என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தலறிக்கை வெளியிடப்பட்டது.
வடமண்டல மாநாடு
வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருட்டிணகிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் அடங்கிய தி.மு.க.வின் வடமண்டல மாநாடு வேலூர் பெருமுகை - புதுவசூரில் 2005 ஆகத்து 27, 28ஆம் நாள்களில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கமாக எசு.பி.சற்குணபாண்டியன் கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் சண்முகம் வரவேற்றார். பொன்முடி மாநாட்டுப் பந்தலைத் திறந்துவைத்தார். பொதுச்செயலாளர் க.அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி ஆகியோரை உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். மாநாட்டின் முதல்நாள் நிகழ்வுகளுக்கு வீரபாண்டி ஆறுமுகம் தலைமை வகித்தார்.
மாவட்ட மாநாடுகள்
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்ட இரண்டாவது திமுக மாநாடு 26-4-1953ஆம் நாள் லால்குடி பாண்டியனார் அரங்கில் நடைபெற்றது, மாநாட்டிற்கு ஈ.வெ.கி.சம்பத் தலைமை வகித்தார்; மாநாட்டை கே. ஏ. மதியழகன் திறந்து வைத்தார். அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, என்.எஸ்.இளங்கோ, எஸ்.கே.சாமி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, க. அன்பழகன், என்.வி.நடராசன், இராசு-தங்கப்பழம், தில்லை வில்லாளன், அரங்கண்ணல், தாமரைச்செல்வன், இளம்வழுதி, கண்ணதாசன், சத்தியவாணி முத்து, பூங்கோதை, அருண்மொழி ஆகியோர் உரையாற்றினர்.
தேர்தல் வரலாறு
நாடாளுமன்றத் தேர்தல்கள்
1957-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது. இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான பாரதிய ஜனதாவுடனும் தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய மதிமுகவுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக, பாரதிய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள்
புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல்கள்
சட்டமன்றத் தேர்தல்கள்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள்
ஒன்றிய அமைச்சர்
வி. பி. சிங், தேவ கௌடா, ஐ. கே. குச்ரால், வாச்பேயி (இரண்டாவது ஆட்சியில்), மன் மோகன் சிங் (இரு முறையும்) அமைச்சரவையில் திமுக பங்கெடுத்து அமைச்சர் பதவியை வகித்தது.
கூபொ -கூடுதல் பொறுப்பு
இ - இறப்பு
மூன்றாம் வாச்பாய் அரசு
இ - இறப்பு
முரசொலி மாறன் 9 நவம்பர் 2002 - 23 நவம்பர் 2003 காலத்தில் பிணியின் காரணமாக எப்பொருப்பும் வகிக்காமல் பதவியில் இருந்தார்.
திமுக டிசம்பர் 20 அன்று வாச்பாய் அரசில் இருந்து விலகியது, அன்று மாலை திமுகவின் அம்மைச்சர்கள் த. ரா. பாலுவும் ஆ. ராசாவும் பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் அளித்தார்கள். ஆனால் அரசை பிரச்சனைகளை பொறுத்து ஆதரிப்பதாக அறிவித்தது.
முதல் மன்மோகன் சிங் அரசு
இணை - சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறையுடன் இணைக்கப்பட்டது
இரண்டாம் மன்மோகன் சிங் அரசு
வெளியீடுகள்
சட்டதிட்டங்கள், 1952
தீர்மானங்கள், 1952
நம்நாடு என்னும் நாளிதழ் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதழாக 1953 சூன் 15 முதல் அண்ணாதுரையை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது.
The Answer என்னும் ஆங்கில வெளியீடு. 15-சூன் -1953ஆம் நாள் நடைபெற்ற மும்முனைப்போராட்டத்தில் சென்னையில் கைதுசெய்யப்பட்ட கா. ந. அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், ஈ. வெ. கி. சம்பத், என். வி. நடராசன், கே. ஏ. மதியழகன் ஆகியோர் நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலங்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தி. மு. க. அதிகாரப்பூர்வ இணையத்தளம்
தி.மு.கவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம் - இணையத்தில்
முரசொலி நாளிதழின் வலைதளம்
தி. மு. க. தலைவர் கருணாநிதி அவர்களின் வாழ்க்கை வரலாறு
திராவிட முன்னேற்றக் கழகம்
தமிழ்நாட்டு திராவிட அமைப்புகள்
1949இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
மு. கருணாநிதி
புதுச்சேரி அரசியல் கட்சிகள்
தமிழக அரசியல் கட்சிகள் |
1709 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ. இராமச்சந்திரனால் 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில் நிறுவப்பட்ட திராவிடக் கட்சி ஆகும். கா. ந. அண்ணாதுரை அவர்களின் அடிப்படையிலான சமூக-ஜனநாயக மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை ம. கோ. இராமச்சந்திரனால் அண்ணாயிசம் என்று கூட்டாக உருவாக்கியது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏழு முறை பெரும்பான்மை பெற்று, மாநில வரலாற்றில் மிக வெற்றிகரமான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
9 பிப்ரவரி 1989 முதல் 5 திசம்பர் 2016 வரை, அஇஅதிமுக பொதுச் செயலாளராக ஜெ. ஜெயலலிதா தலைமை வகித்தார். 21 ஆகத்து 2017 முதல் 23 சூன் 2022 வரை, இக்கழகம் இரட்டை தலைமையின் கீழ் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி க. பழனிசாமி ஆகியோர் முறையே கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் தலைமை வகித்தனர்.
11 சூலை 2022 முதல், அஇஅதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தலைமை வகித்து வருகிறார்.
சென்னை, இராயப்பேட்டையில் உள்ள "புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் மாளிகை" கழகத்தின் தலைமைச் செயலகமாகும். எம்.ஜி.ஆரின் மனைவியும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான வி. என். ஜானகி இராமச்சந்திரன் அவர்களால் 1986ஆம் ஆண்டு கழகத்திற்கு அக்கட்டிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
சித்தாந்தம் மற்றும் கொள்கைகள்
கழகத்தின் கொள்கைகள் தமிழ் சமூகத்தின் ஏழ்மையான பிரிவினர்-ஏழைகள், ரிக்ஷாக்காரர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள்-மற்றும் குழந்தைகளுக்கான மகத்தான மதிய உணவு திட்டத்தை மையப்படுத்தியது. இடஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் விவசாயிகளின் நலன்கள் குறித்து இருவேறு கருத்து நிலவியது.
கழகம் மாநிலத்தின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் இலக்காகக் கொண்டு பல நலத் திட்டங்களை வெளியிட்டது. அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மீனவர்கள், விவசாயிகள், பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2000ஆம் ஆண்டு வரை, கட்சிகள் மகப்பேறு விடுப்பு, பொது போக்குவரத்துக்கான மானியங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களைக் கொண்டிருந்தன. 2000களுக்குப் பிறகு, நுகர்வோர் பொருட்களின் விநியோகத்தில் கட்சிகள் அதிக அளவில் போட்டியிடத் தொடங்கின. அஇஅதிமுக ஆட்சியில் 2001-06 ஆட்சிக் காலத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. 2006 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், மற்ற கட்சிகளுக்குப் போட்டியாக இலவச வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது இரு கட்சிகளும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் பொதுமக்களுக்கு மிக்சி, மின்விசிறி, பிளெண்டர்கள் என அறிவித்தபோதும் போட்டி தொடர்ந்தது.
கலாச்சாரம்
தமிழ் மற்றும் ஆங்கிலம் தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய மொழிகளாக உள்ளது. இந்தியை ஒரே மொழியாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு எதிராக, "இரு மொழிக் கொள்கைக்கான" ஆதரவில் கழகம் உறுதியாக உள்ளது.
2016ல் கழகம் சார்பில் உள்ளூர் தெய்வங்களின் கோவில்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.
பொருளாதாரம்
2019 வசந்த காலத்தில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கழகம் பாராட்டியது, மத்திய அரசு பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்ததாகவும், பிராந்திய பொருளாதாரத்தில் நாட்டை "தீர்க்கமான வீரராக" மாற்றியதாகவும் கூறியது, மேலும் ஆதரவாக குரல் கொடுத்தது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) க்கு, அவர்களின் போட்டியாளரான திமுகவால் எதிர்க்கப்பட்டது.
சமூக நீதி
1980ல், ம. கோ. இராமச்சந்திரன் தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தலில் அஇஅதிமுக நெருங்கிய தோல்வியைச் சந்தித்த பிறகு, பொருளாதார அளவுகோல்கள் குறித்த தனது முடிவை மாற்றினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி, மொத்த இடஒதுக்கீட்டை 68 சதவீதமாகக் கொண்டு வந்தார்.
1993ல், ஜெ. ஜெயலலிதாவின் அஇஅதிமுக அரசு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், பட்டியலிடப்பட்ட சாதிகள், மற்றும் பழங்குடியினர் மசோதா, 1993 சட்டமன்றத்தில் (1994 சட்டம் 45) நிறைவேற்றியது. இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஜெயலலிதாவின் அஇஅதிமுக அரசு தலைமையிலான தமிழ்நாடு அரசியல்வாதிகளின் குறுக்குக் குழு டெல்லி சென்று மத்திய அரசை சந்திக்கச் சென்றது. தமிழ்நாடு அரசின் சட்டத்தை அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும், எந்த நீதிமன்றத்திலும் அதை எதிர்த்துப் போராட முடியாது என்றும் அவர் கோரினார். தமிழ்நாட்டிற்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்து குடியரசுத் தலைவரின் கையெழுத்து பெறப்பட்டது.
பிப்ரவரி 20, 2016 அன்று, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தமிழ்நாடு முனிசிபல் சட்டங்கள் (திருத்த) சட்டம், 2016 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் (திருத்த) சட்டம், 2016 ஆகியவற்றை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியது.
மாநில நீர் கொள்கை
2006 ஆம் ஆண்டில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான மாநில உரிமைகளை நிலைநாட்ட அஇஅதிமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் விளைவாக, மே 2014 இல், உச்சநீதிமன்றம் தீர்ப்பு, முல்லைப் பெரியாறு அணை நீர்த்தேக்க அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதைத் தள்ளுபடி செய்தது. 2006 இல் கேரளா அரசு சேமிப்பு அளவை 136 அடியாகக் கட்டுப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்துள்ளது.
பிப்ரவரி 2013 இல், இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் காவிரி நீர்ப் பிரச்சனைகள் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அறிவித்தது. 22 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, மாநிலத்திற்கு உரிய நீதி கிடைத்திருப்பது தனது அரசின் "மகத்தான சாதனை" என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். அப்போது ஜெயலலிதா அது தான் அவரது வாழ்வின் மகிழ்ச்சியான நாள் மற்றும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான நாள்; அவர் 1993 இல் மெரினா கடற்கரை இல் தனது புகழ்பெற்ற சாகும்வரை உண்ணாவிரதத்தை நினைவு கூர்ந்தார்.
சுற்றுச்சூழலும் இயற்கையும்
தேசிய விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மூலம் காளை வதை தடைக்கு எதிராக குரல் கொடுக்காத பாஜக உடன் இரண்டு கட்சிகளில் அஇஅதிமுகவும் ஒன்று. இருப்பினும், பாரம்பரிய காளைச் சண்டை தொடர்பான சட்டத்தில் விலக்கு கோரியுள்ளது; கழகம் விலங்கு வதைக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக ஜல்லிக்கட்டு எனப்படும் பாரம்பரிய காளைச் சண்டையை மத்திய அரசு தடை செய்யக்கூடாது என்ற தமிழ்நாட்டின் பிரபலமான கருத்தை ஆதரிக்கிறது. சர்ச்சையின் போது, கழக விலங்குகள் உரிமைகள் அமைப்புக்கு அழைப்பு விடுத்தது பீட்டா தடைசெய்யப்படும்.
2017 மார்ச் மாதம், அதிமுக அரசு விவசாயிகளின் பங்கேற்புடன் தமிழக நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் குடிமராமத்துத் திட்டம் என்ற பழமையான நடைமுறையை மீட்டெடுத்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் காற்றும், தண்ணீரும் கடுமையாக மாசுபடுவதை அறிந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உள்ளூர் மக்களால் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அஇஅதிமுக அரசு, மக்கள் நலனை கருதி அதை மூட உத்தரவிட்டது.
மேகதாது அணை கட்டப்படுவதை அஇஅதிமுக எதிர்க்கிறது, இதனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருவதை குறைக்கலாம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும்.
வரலாறு
ம. கோ. இராமச்சந்திரன் காலம் (1972–87)
மூத்த தமிழ் திரைப்பட நடிகரும், பிரபல அரசியல்வாதியுமான ம. கோ. இராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) அவர்களால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) 17 அக்டோபர் 1972 அன்று நிறுவப்பட்டது. இருவருக்குமிடையிலான தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, மு. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த அணியாக இது அமைக்கப்பட்டது. புதிய கட்சி தொடங்க நினைத்த எம். ஜி. ஆர், அதன்பின், "அதிமுக" என்ற பெயரில் பதிவு செய்திருந்த, அனகாபுத்தூர் ராமலிங்கத்தின் கழகத்தில் இணைத்தார். அப்போது, “சாதாரண தொண்டரால் தொடங்கப்பட்ட கட்சியில் சேர்ந்தேன்” என்று அறிவித்து, ராமலிங்கத்துக்கு சட்ட மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியை வழங்கினார். பின்னர், எம். ஜி. ஆர் உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (மிசா) பராமரிக்கும் போது கழகத்தைப் பாதுகாப்பதற்காக கழகத்தின் பெயருக்கு அனைத்திந்திய (அஇ) குறிச்சொல்லை முன்னொட்டப்பட்டது. அஇஅதிமுக மற்றும் திமுக, துவக்கம் முதலே, பரஸ்பர அவமதிப்புக்கு உட்பட்டது. எம். ஜி. ஆர் கழகத் தொண்டர்கள் உருவாக்க அவரது ரசிகர் வலையமைப்பைப் பயன்படுத்தினார்; முதல் இரண்டு மாதங்களில் தனது கழகம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்ததாக அவர் கூறுகிறார். கா. ந. அண்ணாதுரையின் சித்தாந்தவாதியும், திரைப்பட தயாரிப்பாளருமான இராம. வீரப்பன், எம். ஜி. ஆரை ஒருங்கிணைத்ததில் முக்கிய சிற்பி. ரசிகர் மன்றங்கள் மற்றும் 1970களில் கழக கட்டமைப்பை மேலும் பலப்படுத்தியது. நாஞ்சில் கி. மனோகரன் மற்றும் எஸ். டி. சோமசுந்தரம் போன்ற மற்ற முக்கிய தலைவர்கள் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்தனர். பாவலர் மு. முத்துசாமி கழகத்தின் முதல் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்ஜிஆரை மிகவும் ஆதரித்த அன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் கல்யாணசுந்தரம் அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டு எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றினார். 1972 எம்ஜிஆர் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் இணைந்து கருணாநிதி ஆட்சிக்கு எதிரான புகார் பட்டியலை ஆளுநர் கே.கே.ஷாவிடம் அளித்தனர். 1973 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் கே. மாயத் தேவர் பெற்ற வெற்றி மற்றும் ஓராண்டுக்குப் பிறகு நடைபெற்ற கோவை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் சி. அரங்கநாயகம் பெற்ற வெற்றி கட்சியின் முதல் வெற்றியாகும். 2 ஏப்ரல் 1973 அன்று, அஇஅதிமுக, 11 சட்டமன்ற உறுப்பினர்களால் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்தது. சனவரி 1976 வாக்கில், அஇஅதிமுக, 16 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 1975 மற்றும் 1977 க்கு இடையில் தேசிய அவசரநிலையை ஆதரித்ததன் மூலம், அஇஅதிமுக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக வளர்ந்தது.
திமுக தலைமையிலான அரசு 1976ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மத்திய அரசால் நீக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடித்து அஇஅதிமுக ஆட்சியைப் பிடித்தது. எம். ஜி. ஆர் 30 சூன் 1977 அன்று தமிழ்நாட்டின் மூன்றாவது முதலமைச்சராக பதவியேற்றார். 1977 பொதுத் தேர்தலில், கழகம் 18 இடங்களை வென்றது. 1979 ஆம் ஆண்டில், மத்திய அமைச்சரவையில் இணைந்த முதல் திராவிட மற்றும் பிராந்திய கட்சியாக கழகம் ஆனது. சத்தியவாணி முத்து மற்றும் அ. பால பஜனோர் ஆகியோர் அப்போதைய பிரதமர் சரண் சிங் தலைமையிலான குறுகிய கால மத்திய அமைச்சகத்தில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
கழகத்திற்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1980 பொதுத் தேர்தலில், காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்தது, மேலும் 39 மாநில நாடாளுமன்றத் தொகுதிகளில் 37 இடங்களில் கூட்டணி வெற்றி பெற்றது. கழகம் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்திரா காந்தி தமிழ்நாட்டில் கழக அரசு உட்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல மாநில அரசுகளை நீக்கினார்.
1980 சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியான திமுக காங்கிரசுடனான தேர்தல் கூட்டணியைத் தொடர்ந்ததால், மக்களவை தேர்தலைத் தொடர்ந்து பெரும் தலைகீழ் தலைகீழாக, கழகம் 234 இடங்களில் 129 இடங்களைப் பெற்று மாநில சட்டமன்றத்தில் வசதியான பெரும்பான்மையைப் பெற்றது. எம். ஜி. ஆர் 9 சூன் 1980 அன்று இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
1984 பொதுத் தேர்தலில், கழகம் மீண்டும் காங்கிரசுடன் இணைந்தது, மேலும் கூட்டணி 39 மாநில நாடாளுமன்ற இடங்களில் 37 இடங்களில் வெற்றி பெற்றது. 1984 சட்டமன்றத் தேர்தலில், எம்.ஜி.ஆரின் உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், கழகம் காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் மூன்றாவது பதவிக்காலத்தில் அவர் இறக்கும் வரை மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தார். 24 திசம்பர் 1987 அன்று காலமானார், மேலும் அண்ணாவுக்குப் பிறகு பதவியில் இருக்கும் போது இறந்த தமிழ்நாட்டின் இரண்டாவது முதலமைச்சர் ஆனார்.
ஜானகி மற்றும் ஜெயலலிதா தரப்பினரிடையே வாரிசு மோதல்
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவியும், நடிகையும், அரசியல்வாதியுமான வி. என். ஜானகி இராமச்சந்திரன், ஆர். எம். வீரப்பன் மற்றும் 98 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் கழகத்தின் தலைமைப் பதவிக்கு உயர்ந்தார். 1 சனவரி 1988 அன்று, ஜெயலலிதா தனது அணியின் தலைவர்களால் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் மறுநாள் அவர் கூட்டிய கட்சியின் பொதுக்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 7 சனவரி 1988 முதல் 30 சனவரி 1988 அன்று மாநில சட்டசபை இடைநிறுத்தப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி விதிக்கப்படும் வரை 23 நாட்கள் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக அவர் பணியாற்றினார். உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக சிதைவுறத் தொடங்கியது, ஒன்று ஜானகி இராமச்சந்திரன் தலைமையிலும் மற்றொன்று எம்.ஜி.ஆருடன் நடித்த மற்றொரு திரைப்பட நடிகை-அரசியல்வாதி ஜெ. ஜெயலலிதாவின் தலைமையிலும் என இரு அணிகளாக உடைந்தது. இந்திய தேர்தல் ஆணையம் 17 திசம்பர் 1988 அன்று "இரட்டை இலை" சின்னத்தை முடக்கியது. 1989 சட்டமன்றத் தேர்தலில் 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, மு. கருணாநிதி மூன்றாவது முறை முதலமைச்சராக பதவியேற்றார். அந்த பிளவின் காரணமாக, கழகம் தேர்தலில் பெரும் பாதிப்பை சந்தித்தது, ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகள் முறையே 2 மற்றும் 27 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன. தேர்தலில் அஇஅதிமுக படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஜானகி அரசியலில் தனக்கு பலம் இல்லை என்று உணர்ந்து அரசியலை விட்டு விலகினார், ஜெயலலிதா மற்றும் ஜானகி தலைமையிலான அணிகள் 7 பிப்ரவரி 1989 அன்று ஜெயலலிதா தலைமையின் கீழ் இணைந்தன. 8 பிப்ரவரி 1989 அன்று, அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி, ஜெயலலிதா தலைமையிலான ஒன்றுபட்ட கழகத்திற்கு இரட்டை இலைச் சின்னத்தை வழங்கினார். 1989 பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசுடன் கழகம் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றது.
ஜெ. ஜெயலலிதா காலம் (1989–2016)
9 பிப்ரவரி 1989 அன்று, ஜெ. ஜெயலலிதா தலைமையிலான கழகம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் முக்கிய எதிர்க்கட்சியாக மாறியது, மேலும் அவர் சட்டப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 ஆம் ஆண்டு கழகத்தின் கூட்டணிக் கட்சியாக இருந்த அப்போதைய பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசால், மாநிலத்தில் அரசியல் சாசன இயந்திரம் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டி, திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. கழகம் இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 1991 சட்டமன்றத் தேர்தலில் அவரது தலைமையில் ஆட்சியைப் பிடித்தது, மேலும் அவர் மாநிலத்தின் இரண்டாவது பெண் மற்றும் ஐந்தாவது முதலமைச்சரானார். அண்டை நாடான இலங்கையில் தாயகத்திற்காகப் போராடும் தமிழ் பிரிவினைவாதிகள் என சந்தேகிக்கப்படும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதில் இருந்து எழும் பதவிக்கு எதிரான அலைதான் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அடுத்து வந்த அரசு பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது, ஆனால் ஜெயலலிதா 5 ஆண்டுகள் முழுப் பதவியில் இருந்தார்.
1996 சட்டமன்றத் தேர்தலில், கழகம் காங்கிரசுடனான தனது கூட்டணியைத் தொடர்ந்தது, ஆனால் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று, பர்கூர் தொகுதியில் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தோல்வியடைந்ததுடன், பெரும் தோல்வியைச் சந்தித்தது. கழகம் 1996 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.
1998 ஆம் ஆண்டு, அதிமுக வெள்ளி விழா மாநாடு திருநெல்வேலியில் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் சனவரி 1 முதல் 3 வரை நடைபெற்றது. எல். கே. அத்வானி, வைகோ, ராமதாஸ், வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 1998 பொதுத் தேர்தலின் போது, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) ஆகியவற்றுடன் கழகம் கூட்டணி அமைத்தது. 1998 மற்றும் 1999 க்கு இடையில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில், கழகம் பாஜகவுடன் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டது, ஆனால் 1999 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆதரவை விலக்கிக் கொண்டது, இதனால் பாஜக அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடர்ந்து, 1999 பொதுத் தேர்தலில் கழகம் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தது, மேலும் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 இடங்களில் 13 இடங்களில் அந்தக் கூட்டணி வெற்றி பெற்றது.
2001 சட்டமன்றத் தேர்தலில் கழக தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) (தமாகா(மூ)), இடதுசாரி முன்னணி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கூட்டணி வென்ற 197 இடங்களில் கழகம் வென்றது 132 ஆகும். ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின் காரணமாக, ஜெயலலிதா பதவி வகிப்பது தடுக்கப்பட்டது. 21 செப்டம்பர் 2001 அன்று, ஓ. பன்னீர்செல்வம் முதன்முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தண்டனை மற்றும் தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்தவுடன், ஓ. பன்னீர்செல்வம் 2 மார்ச் 2002 அன்று ராஜினாமா செய்தார், அதை தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
அவரது இரண்டாவது பதவிக்காலம் ஊழல் மோசடிகளால் பாதிக்கப்படவில்லை. குலுக்கல் பரிசுச் சீட்டுகளை தடை செய்தல், மதுபானம் மற்றும் மணல் குவாரி வணிகங்களை அரசு நிறுவனங்களுக்கு கட்டுப்படுத்துதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்தல் போன்ற பல பிரபலமான முடிவுகளை அவர் எடுத்தார். 2003 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும், 150 பெண்களை உயரடுக்கு நிலை போலீஸ் கமாண்டோக்களாக நியமிப்பதன் மூலம் பெண்களை மாநில காவல்துறையில் சேர ஊக்குவித்தார். ஆயுதங்களைக் கையாளுதல், வெடிகுண்டுகளைக் கண்டறிதல் மற்றும் அப்புறப்படுத்துதல், வாகனம் ஓட்டுதல், குதிரையேற்றம் மற்றும் சாகச விளையாட்டுகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஆண்களைப் போலவே பெண்களும் பயிற்சி பெற்றனர். கடந்த 2004 அக்டோபரில், சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கண்டுபிடிப்பதற்காக, அவர் ஒரு சிறப்புப் படையை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு அனுப்பினார். 18 அக்டோபர் 2004 அன்று அவர் அதிரடிப்படையால் கொல்லப்பட்டதால், நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது.
2004 பொதுத் தேர்தலில்,மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து, அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டணி, தேர்தலில் வெற்றி பெற்றது.
பின்னர், 2006 சட்டமன்றத் தேர்தலில் தொங்கு சட்டசபை என்ற ஊடக ஊகங்கள் இருந்தபோதிலும், கழகம், மதிமுக மற்றும் சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே போட்டியிட்டு, 61 இடங்களை வென்றது. திமுக தலைமையிலான பாமக மற்றும் இடது முன்னணி காங்கிரஸ் கூட்டணியால். 2009 பொதுத் தேர்தலில் ஒன்பது இடங்களை வென்றது.
பரவலான ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கழகம், இடதுசாரி மற்றும் அரசியல்வாதியாக மாறிய நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தது, 202 இடங்களில் வெற்றி பெற்று, கழகம் 150 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கழக கூட்டணியில் ந. ரங்கசாமியின் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இணையாக நடைபெற்ற 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. மறுபுறம், கழகத்தை கலந்தாலோசிக்காமல் ஆட்சியை அமைத்த ரங்கசாமி, தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சியான கழகத்துடன் ஆட்சியைப் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார். அதனால் அவர் கூட்டணிக்கு துரோகம் செய்து விட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
2014 பொதுத் தேர்தலிலும் கழகத்தின் சிறப்பான தேர்தல் செயல்பாடு தொடர்ந்தது. எந்தக் கூட்டணியிலும் சேர வேண்டாம் என்று முடிவு செய்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. கழகம் போட்டியிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று, இந்திய நாடாளுமன்றத்தின் 16வது மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இது பொதுத் தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு பிராந்திய அரசியல் கட்சியும் அடையாத மாபெரும் வெற்றியாகும்.
29 ஆகத்து 2014 அன்று, ஜெ. ஜெயலலிதா தொடர்ந்து 7 வது முறையாக கழகத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இன்றுவரை கழகத்தின் பொதுச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர். முன்னதாக, 1988, 1989, 1993, 1998, 2003, 2008 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்தபோது, இரா. நெடுஞ்செழியன், கா. காளிமுத்து, புலமைப்பித்தன், சி. பொன்னையன் மற்றும் இ. மதுசூதனன் கழகத்தின் அவைத் தலைவர்களாக பணியாற்றினார்கள்.
27 செப்டம்பர் 2014 அன்று, ஜெயலலிதா, அவரது கூட்டாளிகள் வி. கே. சசிகலா, இளவரசி மற்றும் வி. என். சுதாகரன் ஆகியோருடன் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், அவரது கூட்டாளிகளுக்கு தலா ரூ. 10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றத் தண்டனையின் காரணமாக ஆளும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவது இதுவே முதல் முறை என்பதால் இந்த வழக்கு அரசியல் தாக்கங்களைக் கொண்டிருந்தது.
அவரது தகுதி நீக்கம் காரணமாக, ஓ. பன்னீர்செல்வம் 29 செப்டம்பர் 2014 அன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததால் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் 17 அக்டோபர் 2014 அன்று ஜாமீன் வழங்கியது. 11 மே 2015 அன்று, அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியது மற்றும் ஐந்தாவது முறையாக மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தலில், கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு, 234 இடங்களில் 135 இடங்களில் வெற்றி பெற்று, தேர்தலில் வெற்றி பெற்றார். தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்யாத அற்புதமான வெற்றிக்காக அவர் எடுத்த துணிச்சலான முடிவு இது. 23 மே 2016 அன்று ஜெயலலிதா ஆறாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
22 செப்டம்பர் 2016 அன்று, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்டகால நோய்க்குப் பிறகு, அவர் 5 திசம்பர் 2016 அன்று காலமானார், மேலும் அண்ணா மற்றும் அவரது வழிகாட்டியான எம்.ஜி.ஆருக்குப் பிறகு பதவியில் இருந்தபோது இறந்த மூன்றாவது தமிழ்நாடு முதலமைச்சர் ஆனார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு அப்பால் விரிவாக்கம்
ஜெயலலிதாவின் ஆட்சியில், கழகம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தாண்டி பரவியது. மாநில பிரிவுகள் கர்நாடகா மற்றும் கேரளாவில் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேஷ், மகாராஷ்டிரா, தேசிய தலைநகர் பிரதேசம் டெல்லி மற்றும் தெலுங்கானா போன்ற இடங்களிலும் அதே போல் தமிழ் மக்கள் இருக்கும் மற்ற நாடுகளிலும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.
கர்நாடகாவில், 1983 முதல் 2004 வரை மாநில சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த கழகம், பெங்களூரு மற்றும் கோலாரில் தமிழ் பேசும் பகுதிகளில் செல்வாக்கைக் கொண்டுள்ளது.
ஆந்திரப் பிரதேஷ், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில், கழகம் சில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டது, ஆனால் எந்தத் தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
வி.கே. சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் காலம் (2016–17)
5 திசம்பர் 2016 அன்று ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது நெருங்கிய உதவியாளர் வி. கே. சசிகலா 31 திசம்பர் 2016 அன்று கழகத்தின் தற்காலிக பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 பிப்ரவரி 2017 அன்று, அவர் முதலமைச்சராகவும் சட்டமன்றத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலாவுக்கு எதிராக கலகம் செய்த ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், பெங்களூரு மத்திய சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். அதற்கு முன், எடப்பாடி கே. பழனிசாமியை சட்டமன்றக் கட்சித் தலைவராக (முதலமைச்சராக) நியமித்தார்.
அவர் தனது மருமகனும், கழகத்தின் முன்னாள் பொருளாளருமான டி. டி. வி. தினகரனை கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார், 123 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர் ஆனார்.
23 மார்ச் 2017 அன்று, இந்திய தேர்தல் ஆணையம் இரு பிரிவுகளுக்கும் தனித்தனி கட்சி சின்னங்களை வழங்கியது. ஓ. பன்னீர்செல்வத்தின் அணி அஇஅதிமுக எனவும் எடப்பாடி கே. பழனிசாமியின் அணி அஇஅதிமுக (அம்மா) எனவும் அழைக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவால் காலியான டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆளும் அஇஅதிமுக (அம்மா) பெரிய அளவில் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் வெளியானதையடுத்து, இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. 17 ஏப்ரல் 2017 அன்று, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் அஇஅதிமுக (அம்மா) வேட்பாளராக இருந்த தினகரன் மீது, அஇஅதிமுகவின் தேர்தலுக்காக சின்னம் ஒதுக்கிட இந்திய தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும், லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பொது அதிகாரியை அடையாளம் காண காவல்துறை தவறிவிட்டதாக மத்திய மாவட்ட திஸ் ஹசாரி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
டி.டி.வி. தினகரன் தனது கட்சிப் பணியை 5 ஆகத்து 2017 அன்று தொடங்கினார். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, தினகரனுடன் முரண்பட்டு, தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்று அறிவித்தார். எனவே, "நாங்கள்தான் உண்மையான அஇஅதிமுக, 95% தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர்" என்றும் அவர் கூறினார்.
வி.கே. சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் வெளியேற்றம்
12 செப்டம்பர் 2017 அன்று, முன்னதாக அவரை நியமித்த அஇஅதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து, அடிப்படை உறுப்பினராக இருந்த அவரை கழகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கியது.
முன்னதாக 10 ஆகத்து 2017 அன்று எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சென்னை எம். ஜி. ஆர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் டி. டி. வி. தினகரன் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பெங்களூரு மத்திய சிறையில் தனது சிறைவாசத்தை முடித்த பின்னர், பிப்ரவரி 2021இல் சென்னை சிட்டி சிவில் IV நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், ஆனால் அது ஏப்ரல் 2022இல் அஇஅதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை உறுதி செய்தது. 5 திசம்பர் 2023 அன்று, சென்னை உயர் நீதிமன்றம் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தது.
ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி காலம் (2017–22)
எடப்பாடி பழனிசாமி முதல்வராய் பதவியேற்று 6 மாதங்களில் ஓ. பன்னீர்செல்வம் அணி மீண்டும் கட்சியில் இணைந்தது. ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசின் துணை முதல்வராக ஆக்கப்பட்டார். கட்சி கட்டமைப்பில் இரட்டை தலைமைத்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவியேற்றனர். சசிகலாவால் நீக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டனர். மேலும், பெங்களூர் சிறையிலிருந்த வி .கே. சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்கள், கட்சியின் அவசர பொதுக்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
அதிமுக அரசு மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியிடுவதற்கு ஜெயா தொலைக்காட்சிக்கு பதிலாக நியூஸ் ஜெ செய்தி தொலைக்காட்சி நவம்பர் 14, 2018 அன்று துவக்கப்பட்டது மற்றும் நமது எம் ஜி ஆர் நாளிதழுக்கு மாற்றாக நமது அம்மா எனும் பெயரில் புதிய நாளிதழ் 2018 பெப்ரவரி 24 அன்று துவக்கப்பட்டது.
இதன்பின் சசிகலாவிற்கு ஆதவராக, 18 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி பழனிச்சாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளித்தனர். இவர்களை விசாரித்து, பதவிநீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு, அ.தி.மு.க. சட்டசபை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இவர்களுள் உறுப்பினர் ஜக்கையன் மட்டும் மன்னிப்பு கடிதம் வழங்கினார், மீதமுள்ள 18 உறுப்பினர்களின் பதவிகள் சபாநாயகரால் பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து 18 உறுப்பினர்களின் மேல்முறையிட்டு மனுக்களும் தோல்வி அடைந்தன. மேலும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உட்பட 4 சட்டசபை உறுப்பினர்கள் மறைவால் தமிழகத்தில் 22 தொகுதிகள் வெற்றிடமாகின. 2019 மே மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தலும் நடந்தது. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் அந்த நபர்கள் 22 இடங்களிலும் அ.தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிட்டனர். ஆனால் அ.தி.மு.க. 12 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்தது; அமமுகவினர் அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தனர்.பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலில், அதே தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அதிமுக போட்டியிட்டது, திமுகவின் 133 இடங்களுடன் ஒப்பிடும்போது 66 இடங்களை வென்றது மற்றும் திமுக தலைமையிலான ஆட்சியில் இருந்து தள்ளப்பட்டது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. தேர்தலுக்குப் பிறகு, சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கட்சியாக அதிமுக உருவெடுத்தது. 11 மே 2021 அன்று, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், 14 சூன் 2021 அன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் அங்கீகரிக்கப்பட்டனர். 11 சூலை 2022 அன்று, நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினர்.
ஓ. பன்னீர்செல்வம் வெளியேற்றம்
11 சூலை 2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், பி. எச். மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே. சி. டி. பிரபாகர் ஆகியோரை அவர்கள் வகித்த பதவிகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும்"கழக விரோத" நடவடிக்கைகளுக்காக நீக்கப்பட்டனர்.
11 சூலை 2022 அன்று, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மாளிகையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ. பன்னீர்செல்வத்துக்குப் பதிலாக திண்டுக்கல் சி. சீனிவாசனை கழகத்தின் பொருளாளராக பழனிசாமி நியமித்தார். 17 சூலை 2022 அன்று நடைபெற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசித்து. 19 சூலை 2022 அன்று பன்னீர்செல்வத்திற்குப் பதிலாக, ஆர். பி. உதயகுமாரை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பழனிசாமி நியமித்தார். பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பு ராயப்பேட்டையில் உள்ள எம். ஜி. ஆர் மாளிகையில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கற்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கி, அருகில் இருந்த பல வாகனங்களை சேதப்படுத்தினர். இதையடுத்து தமிழ்நாடு வருவாய்த்துறையினர் எம். ஜி. ஆர் மாளிகையிற்கு சீல் வைத்தனர். இந்த மோதலில் மொத்தம் 47 பேர் காயமடைந்துள்ளனர்.
20 சூலை 2022 அன்று, எம். ஜி. ஆர் புரட்சியகத்தின் சீலை அகற்றி சாவியை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வழங்கி மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது முன்பு 11 சூலை 2022 அன்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. 12 செப்டம்பர் 2022 அன்று, பழனிசாமியிடம் சாவியை ஒப்படைப்பதற்கான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வத்தின் மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே கழகத்திற்கான சட்டப் போராட்டம்
17 ஆகத்து 2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது மற்றும் இரட்டை தலைமையை ஒழித்த கழகப் பொதுக்குழு கூட்டம் 11 சூலை 2022 அன்று செல்லாது என அறிவித்தது. சூன் 23-ம் தேதி இருந்த நிலையை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரின் கூட்டு ஒப்புதல் இல்லாமல் கழகத்தின் செயற்குழு அல்லது பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதைத் தடுத்து, இரட்டைத் தலைமையை திறம்பட மீட்டெடுக்கிறது. சூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தை செல்லாது என அறிவித்த நீதிமன்றம், 1.5 கோடி (15 மில்லியன்) முதன்மைக் கழக உறுப்பினர்களில் 95% பேர் தனக்கு கீழ் ஒற்றையாட்சித் தலைமையை ஆதரிப்பதாக எடப்பாடி கே. பழனிசாமி கூறியதை நிரூபிக்க எந்தத் தகவலும் இல்லை என்று கூறியது.
எடப்பாடி கே. பழனிசாமி ஒற்றை நீதிபதி நீதிமன்ற உத்தரவை பெரிய நீதிபதிகள் அமர்வுக்கு மேல்முறையீடு செய்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் கழக ஒற்றுமைக்கு வேண்டுகோள் விடுத்தார், அதில் பிளவுபட்ட அமமுகவும் அடங்கும். இந்த முறையீட்டை பன்னீர்செல்வத்தின் பதவி பசிக்கான நடவடிக்கை என நிராகரித்த பழனிசாமி, எம். ஜி. ஆர் மாளிகை வன்முறைக்கு அவரேப் பொறுப்பு எனவும் கூறினார்.
2 செப்டம்பர் 2022 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் 11 சூலை 2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவுகளை உறுதி செய்தது, மேலும் எடப்பாடி கே. பழனிசாமியின் மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் முந்தைய நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. ஒருங்கிணைந்த தலைமையை திறம்பட மீட்டெடுக்கிறது.
23 பிப்ரவரி 2023 அன்று, இந்திய உச்ச நீதிமன்றம் 11 சூலை 2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவுகளை உறுதிசெய்தது, மேலும் டிவிஷன் பெஞ்சின் முந்தைய உத்தரவை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
எடப்பாடி கே. பழனிசாமி காலம் (2022–தற்போது)
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 11 சூலை 2022 அன்று வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மாளிகையில் கழகப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இரட்டை தலைமைத்துவ முறையை ஒழித்துவிட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமிக்கு அதிகாரம் அளித்து, 4 மாதங்களில் அமைப்புத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கட்சிப் பொதுக்குழு அறிவித்தது.
ஜெ. ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் என வர்ணித்த விதி 20 நீக்கம், பொதுச் செயலாளர் பதவிக்கு புத்துயிர் அளித்தல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய அனைத்து அதிகாரங்களையும் மாற்றுவது உள்ளிட்ட 20 திருத்தங்களை கழகப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றியது. பொதுச் செயலாளரிடம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் கழகத்தின் இரட்டைத் தலைமையை திறம்பட முடிவுக்குக் கொண்டு வந்தன.
28 மார்ச் 2023 அன்று, சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது மற்றும் 11 சூலை 2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தது. அதே நாளில், எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் மூலம் கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
20 ஏப்ரல் 2023 அன்று, இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி கே. பழனிசாமியை கழகப் பொதுச் செயலாளராக அங்கீகரித்தது, கழக அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டது.
20 ஆகத்து 2023 அன்று, அதிமுக பொன் விழா கொண்டாட்டங்களின் எழுச்சி மாநாடு மதுரையில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்டது. அதில் லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
25 செப்டம்பர் 2023 அன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அஇஅதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.
தேர்தல் செயல்திறன்
இந்திய பொதுத் தேர்தல்கள்
மாநில சட்டமன்றத் தேர்தல்கள்
தற்போதைய நிர்வாகிகள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள்
கட்சி தலைவர்களின் பட்டியல்
பொதுச் செயலாளர்கள்
ஒருங்கிணைப்பாளர்கள்
சட்டமன்ற தலைவர்கள்
மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் பட்டியல்
முதலமைச்சர்கள் பட்டியல்
தமிழ்நாடு முதலமைச்சர்கள்
புதுச்சேரி முதலமைச்சர்
துணை முதலமைச்சர்கள் பட்டியல்
தமிழ்நாடு துணை முதலமைச்சர்
மக்களவை துணை சபாநாயகர்கள் பட்டியல்
மத்திய இணையமைச்சர்கள் பட்டியல்
ஒன்றிய அமைச்சர்
மேற்கோள்கள்
தமிழக அரசியல் கட்சிகள்
தமிழ்நாட்டு திராவிட அமைப்புகள்
1972இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
எம். ஜி. ஆர்
ஜெயலலிதா
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி அரசியல் கட்சிகள் |
1711 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | யாழ்ப்பாணப் பொது நூலகம் | யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் 1 இல் எரிக்கப்பட்டுச் சாம்பலானது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.
வரலாறு
இந்த நிறுவனத்துக்கான கரு யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த கே. எம். செல்லப்பா (கனகசபை முதலித்தம்பி செல்லப்பா, 24 பெப்ரவரி 1896 – 14 ஏப்ரல் 1958) என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.
1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.
நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குழு இது தொடர்பில் இந்திய நிபுணர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணியும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.
கட்டிடத்தை இரண்டு கட்டங்களில் கட்டிமுடிக்கத் தீர்மானித்து, முதற்கட்டமாக கட்டிடத்தின் முன்பகுதிக்கான அடிக்கல் 1953 மார்ச் மாதத்தில் நாட்டப்பட்டது. கட்டிடவேலைகள் தாமதமாகவே நடைபெற்றன. 1959 இல் கட்டிடவேலைகள் முற்றாக முடிய முன்னரே, அப்போது யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா நூலகத்தின் திறப்புவிழாவை நடத்தினார்.
நூலக எரிப்பு
உசாத்துணை
இவற்றையும் பார்க்கவும்
யாழ் பொது நூலகம் எரிப்பு
வெளி இணைப்புகள்
யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு
யாழ்ப்பாண நூல் நிலையம்
யாழ்ப்பாண மாவட்ட நிறுவனங்கள்
தமிழர் கல்வி
தமிழ் நூலகங்கள்
இலங்கை நூலகங்கள்
யாழ்ப்பாணத்திலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்
தமிழ்ச் சுவடிக் காப்பகங்கள் |
1714 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | மின்னணுவியல் | மின்னணுவியல் (Electronics) மின்னணுக்கள் அல்லது மின்னன்கள் வழி மின் ஆற்றலைக் கட்டுபடுத்தும் அறிவியல் புலமாகும். இலத்திரனியல் அல்லது மின்னணுவியல் மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்குப் பயன்படும் அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். மின்னணுவியல் தகவல்களைத் தேக்கவும் கையாளவும் பயன்படுகிறது. அதாவது, மின்ஆற்றலைக் கொண்டு மின்குறிகைகளை உருவாக்கலாம். மின்குறிகைகளால் தகவல்களை பதிலீடு செய்யலாம். இந்த மின்குறிகைகளை அல்லது தகவல்களை மின்னணுவியல் கருவிகளால் தேக்கலாம் அல்லது கணிக்கலாம்.
இந்தப் புலத்தில் வெற்றிடக் குழல்கள், திரிதடையங்கள், இருமுனையங்கள், நுண் தொகுப்புச்சுற்றுக்களும் ஒளிமின்னன் கருவிகளும் உணரிகளும் போன்ற செயல்படு மின்கூறுகளும் மின்தடையம், மின்தேக்கி, மின்தூண்டிகள் போன்ற செயலறு மின்கூறுகளால் ஆகிய மின்சுற்றுகளும் பெரும் பங்காற்றுகின்றன. எனவே பொதுவாக மின்னனியல் கருவிகளில் செயல்முனைவான அரைக்கடத்திகளும் செயலறு மின்சுற்று உறுப்புகளும் அமையும். இந்தச் சுற்றே மின்னணுவியல் சுற்று எனப்படுகிறது. மின்னணுவியல் இயற்பியலின் பிரிவாகவும் மின்பொறியியலின் பிரிவாகவும் கருதப்படுகிறது.
செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் மின்னன்களின் பாய்வைக் கட்டுப்படுத்தும் பண்பும் மிக நலிவுற்ற குறிகை அலைகளைக் கூட வலுப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், தொலைத்தொடர்பு, குறிகைச் செயலாக்கம் அல்லது பதப்படுத்தல் ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இக் கருவிகளை நிலைமாற்றிகளாகவும் பயன்படுத்தலாம்; இப்பயன்பாடு எண்ணிமத் தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. ஒருங்கிணைப்புச் சுற்றுத் தொழில்நுட்பங்கள், பொதியல்சுற்றுத் தொழில்நுட்பங்கள், பல்வேறு இணைப்புத் தொழில்நுட்பங்கள் ஆகியவை, மின்சுற்றுப் பலகை]]களின் மின்சுற்றுச் செயல்பாட்டை முழுமையாக்கிக் கலவையான மின்கூறுகள் வழியாக ஓர் ஒருங்கியமாக அல்லது ஓர் அமைப்பாகச் (System) செயல்படச் செய்கின்றன.
மின்னியல், மின்பொறியியல், மின்னணுவியல்
மின்னணுவியல் என்பது மின்னியல், மின்பொறியியல் ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட து; மின்பொறியியல் பொதுவாக மின்னாக்கம், மின்செலுத்தம், மின்பகிர்மானம் ஆகியவற்றையும் மின்னழுத்தம் அல்லது மின்னோட்டம்ஆகியவற்றின் நிலைமாற்றல், தேக்கிவைத்தல் பற்றியும் மின் ஆற்றலை பிற ஆற்றல் வடிவங்களுக்கும் மற்ற ஆற்றல் வடிவங்களிலிருந்து மின் ஆற்றலுக்கும் மாற்றுவதைப் பற்றியும் கருப்பொருளாக்க் கொண்டுள்ளது. இவற்றின் கூறுகளாக மின்கம்பிகள், மின் இயக்கிகள், மின்னியற்றிகள், மின்கலங்கள், நிலைமாற்றிகள், உணர்த்திகள், மின்மாற்றிகள், மின்தடையங்கள் அமைகின்றன. மின்னியலில் இருந்தான மின்னணுவியலின் பிரிவினை மின்னணுவியல் மிகைப்பிகள் நலிவுற்ற குறிகைகளின் வீச்சையும் திறனையும் மிகுக்கப் பயன்படுத்தத் தொடங்கிய 1906 இல் இருந்து தொடங்கியது எனலாம். 1950 வரை இதன் முதன்மைப் பயன்பாடு வானொலி சார்ந்த அலைபரப்பிகள், அலைவாங்கிகள் ஆகியவற்றிலும் அதற்குப் பயன்பட்ட வெற்றிடக் குழல்களிலும் மட்டுமே இருந்தமையால் இத்துறை தொடக்கத்தில் "வானொலி தொழில்நுட்பம்" என்றே அழைக்கப்பட்டு வந்தது.
இன்று, பெரும்பாலான மின்னணுவியல் கருவிகள் குறைக்கடத்திகளைப் பயன்படுத்தி மின்னன்களைக் கட்டுப்படுத்துகின்றன. குறைகடத்திக் கருவிகளின் அறிவியலும் தொழில்நுட்பமும் திண்மப்பொருள் இயற்பியலின் பிரிவாகக் கருதப்படுகிறது; நடைமுறை இடர்களுக்குத் தீர்வாக மின்னனியல் மின்சுற்றுக்களின் வடிவாக்கமும் உருவாக்கமும் மின்னணுவியல் பொறியியல் துறையாக உருமாறியது.
மின்னணுவியல் கிளைப்பிரிவுகள்
மின்னணுவியல் கீழுள்ள கிளைப்பிரிவுகளாக அமைகிறது:
எண்ணிம அல்லது எண்ணியல் மின்னணுவியல்
ஒப்புமை மின்னணுவியல்
நுண்மின்னணுவியல்
சுற்றதர் வடிவமைப்பு
ஒருங்கிணைந்த மின்சுற்றதர்கள்
ஒளிமின்னணுவியல்
செங்கடத்திக் (அரைக்கடத்திக்) கருவிகள்
பொதியல் சுற்றதர்கள்
மின்னனியல் உறுப்புகளின் வரலாறு
தொடக்கநிலை மின்னனியல்உறுப்புகளாக வெற்றிடக் குழல்கள் (வெம்மின்னணுக் கவாடங்கள்) அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் இவைதாம் மின்னனியல் புரட்சிக்கு வழிவகுத்தன. இவை வானொலி, தொலைக்காட்சி, இசைத்தட்டுகள், இராடார் (வீவாணி-வீச்சும் வாக்கும் காணி), நெடுந்தொலைவுத் தொலைபேசி ஆகிய தொழில்நுட்ப அமைப்புகளுக்கும் மேலும் பல நுட்பங்களுக்கும் வழிவகுத்தன. இவை 1980 கள் வரை நுண்ணலை உயர்திறன் செலுத்த்த்துக்கும் தொலைக்கட்சி அலைவாங்கிகளுக்கும் அடிப்படை உறுப்புகளாக அமைந்தன. 1980 களில் இவற்றின் இடத்தைத் திண்மநிலைக்கருவிகள் கைப்பற்றின. சிறப்புப் பயன்பாடுகளான உயர்திறன் வானொலி அலைவெண் மிகைப்பிகளிலும் எதிர்முனைக் கதிர்க்குழல்களிலும் சிறப்பு ஒலியியல் கருவியாகிய கிதார் மிகைப்பிகளிலும் குழிக்காந்த மிகைப்பி போன்ற நுண்ணலைக் கருவிகளிலும் வெற்றிடக் குழல்கள் தாம் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.
1955 ஏப்பிரலில் IBM 608 எனும் கணக்கீட்டுக் கருவியில் IBM நிறுவனம் முதலில் திரிதடையங்களைப் பயன்படுத்தியது. வணிகச் சந்தையில் புழங்கிய முதல் அனைத்துத் திரிதடையக் கணக்கீட்டுக் கருவி இதுவேயாகும். IBM 608 கணக்கீட்டுக் கருவியில் 3000 க்கும் மேற்பட்ட ஜெர்மேனியத் திரிதடையங்கள் பயன்பட்டன. தாமசு ஜே. வாட்சன் இளவல் IBM பொருள்களில் திரிதடையங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற ஆணையை வழங்கினார். அப்போதிலிருந்தே கணினி தருக்கத்திலும் பிற இணைகருவிகளிலும் திரிதடையங்கள் மட்டுமே பயன்படலாயின.
மின்னணுவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவியான திரிதடையம். கண்டுபிடித்த பின்னரே இத்துறை மாபெரும் வளர்ச்சி பெற்றது.கீழே சில மின்னனியல் வரலாற்று நிகழ்வுகள் தரப்படுகின்றன.
1897 - அணுத் துகள்களில் ஒன்றான மின்னனைக் (electron) ஜெ. ஜெ. தாம்சன். கண்டுபிடித்தார்.
1904 - ஜான் அம்புரோசு பிளெமிங் வெப்பமின்னணுக் குழலைக் கண்டுபிடித்தார். இது செயற்பாட்டில் திரிதடையங்ளை ஒத்த மும்முனையம் ஆகும்.
1947 - வில்லியம் ஷாக்லி, ஜான் பர்டீன், வால்டர் பிராட்டைன் ஆகியோர் திரிதடையத்தைக் கண்டுபிடித்தனர்.
1940-1950 - கணினி உருவாக்கம்
1959 - ஜாக் கில்பி ஒருங்கிணைந்த சில்லு கண்டுபிடித்தார்.
2000 - மீநுண் திரிதடையம்
மின்னணுவியல் கருவிகளும் உறுப்புகளும்
மின்னணுக் கூறு என்பது ஒரு இலத்திரனியல் அமைப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அவ்வமைப்பு செயல்பட ஏதுவாக இலத்திரன்களையோ அதன் தொடர்புடைய புலங்களையோ பாதிக்கின்ற உளதாம் பொருளாகும். இக்கூறுகள் பொதுவாக மற்றக்கூறுகளுடன்
குறிப்பிட்ட செயற்பாட்டை (காட்டாக பெருக்கி, வானொலி பெறும் கருவி, அல்லது அலையியற்றி) நிகழ்த்துமாறு இணைக்கப்பட்டிருக்கும். (பொதுவாக மின்சுற்றுப் பலகையில் பற்றவைக்கப்பட்டிருக்கும்.) மின்னணுக்கூறுகள் தனியாகவோ அல்லது சற்றே சிக்கலான ஒருங்கிணைந்த சில்லு போன்ற தொகுதிகளாகவோ பொதியப்படலாம். சில பரவலான மின்னணுக்கூறுகள்: மின்தேக்கிகள், மின்தூண்டிகள், மின்தடையங்கள், இருமுனையங்கள், திரிதடையங்கள் ஆகியனவாகும். மின்னணுக்கூறுகளை செயல்படு கூறுகள் என்றும் ( திரிதடையங்கள்,இருமுனையங்கள்) செயலறு கூறுகள் (மின்தடையங்கள்,மின்தேக்கிகள்) வகைப்படுத்தப்படுகின்றன.
வெற்றிடக் குழல்கள் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனிய கூறுகளில் ஒன்றாகும். இவை நடு1980கள் வரை முதன்மை செயல்படு கூறுகளாக இருந்தன. 1980களிலிருந்து திண்மநிலைக் கருவிகள் இவற்றிற்கு மாற்றாக அமைந்துள்ளன. இன்றும் வெற்றிடக் குழல்கள் உயராற்றல் பெருக்கிகள், எதிர்முனைக் கதிர்க்குழாய்கள், வல்லுநர் ஒலிக்கருவிகள், நுண்ணலைக் கருவிகள் போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
மின்சுற்று வகைகள்
மின்சுற்றுக்களும் இலத்தினியக் கூறுகளும் இருவகையாகப் பிரிக்கப்படலாம்: அலைமருவி மற்றும் எண்மருவி. ஒரு குறிப்பிட்ட கருவியில் இவற்றில் ஏதேனும் ஒருவகையிலோ அல்லது இரண்டும் கலந்துமோ பயன்படுத்தப்படலாம்.
ஒப்புமை மின்சுற்றுக்கள்
வானொலிப் பெட்டிகள் போன்ற பெரும்பாலான அலைமருவி இலத்தினிய சாதனங்கள் சில அடிப்படையான மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவற்றில் மின் அழுத்தத்தின் வீச்சு எவ்வித இடைவெளியும் இன்றி தொடர்ந்திருக்கும். எண்ணிம முறை (எண்மருவி)யில் மின் அழுத்தம் படிப்படியாக இடைவெளியுடன் இருக்கும். ஒரேஒரு இலத்தினியக் கூறு கொண்ட அலைமருவிச் சுற்றிலிருந்து பல கூறுகளை அடக்கிய சிக்கலான சுற்றுக்கள் வரை பல்லாயிரக்கணக்கான அலைமருவிச் சுற்றுக்கள் உள்ளன.
இவை சில நேரங்களில் நேரியல் சுற்றுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும் மின்னதிர்வு கலக்கிகள், அலைமாற்றிகள் போன்றவற்றில் இவை நேரியல் அல்லாத தன்மையைக் கொண்டுள்ளன.
அண்மைக்கால சுற்றுக்களில் முழுமையும் அலைமருவி சுற்றுக்கள் காணப்படுவதில்லை. பெரும்பாலும் எண்மச் சுற்றுக்களே காணப்படுகின்றன.சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே அலைமருவி முறையில் அமைக்கப்படுகின்றன; இவை கலப்பு மின்சுற்றுக்கள் எனப்படுகின்றன.
எண்ணிம மின்சுற்றுக்கள்
எண்மருவி சுற்றுக்களில் மின்னழுத்தம் பலதனித்தனி மதிப்புகளில் இருக்கும். காட்டாக, 1 வோல்ட், 1.5 வோல்ட், 2 வோல்ட் என்று பயன்படுத்தப்படும். இவற்றிற்கு இடையேயான 1.25 வோல்ட் போன்றவை இருக்காது. பூலியன் ஏரணம் என்ற கணிதவகையின் நிகழ் சார்பாள அமைப்பாக இவை விளங்குகின்றன. அனைத்து எண்ணிம கணினிகளும் இந்த ஏரணத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன.
பல எண்ணிம மின்சுற்றுக்கள் ஈரியல் எண்முறையில் இரண்டு மின்னழுத்த நிலைகளுடன், "0" மற்றும் "1" இயங்குகின்றன. பெரும்பாலும் ஏரணம் "0" கீழ்நிலை மின்னழுத்தமாகவும் ( "தாழ்" எனப்படும்) ஏரணம் "1" உயர்நிலை மின்னழுத்தமாகவும் ( "உயர்" எனப்படும்) உள்ளது. கணினிகள், இலத்திரனிய கைக்கடியாரங்கள், நிரலேற்பு தருக்கக் கட்டுப்படுத்திகள் எண்ணிம முறை மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுவன ஆகும்.
எண்ணிமச் சுற்றதரின் கட்டமைப்புக் கூறுகள்:
தருக்க அல்லது அளவையியல் வாயில்கள்
கூட்டிகள்
Flip-flopகள்
எண்ணிகள்
செயலாக்கப் பதிவகங்கள்
பன்மைப்படுத்திகள்
சுகிமிடு தொடங்கிகள்
எண்ணிம உயர்நிலை ஒருங்கிணைப்புக் கருவிகள்:
நுண்செயலிகள்
நுண்கட்டுபடுத்திகள்
சிறப்புப் பயன்பட்டு ஒருங்கிணைந்த சுற்றதர்கள் (ASIC)
எண்ணிமக் குறிகைச் செயலாக்கி (DSP)
கள நிரலாக்க வாயில் அணிகள் (FPGA)
வெப்பச் சிதர்வும் மேலாண்மையும்
இவற்றையும் பாக்க
இலத்திரனியல் கலைச்சொற்கள்
மின்காந்தவியல் தலைப்புகள் பட்டியல்
மேற்கோள்கள்
மின்னணுவியல் |
1716 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE | மலேசியா | மலேசியா (மலாய்: Malaysia; ஆங்கிலம்: Malaysia) ( ); என்பது தென்கிழக்காசியாவில் கூட்டாட்சி; அரசியல்சட்ட முடியாட்சி கொண்ட ஒரு நாடாகும். 13 மாநிலங்களையும்; மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ளது. மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என இரண்டு பிராந்தியங்களாக, தென்சீனக் கடலினால் பிரிக்கப்பட்டு உள்ளது.
மலேசியத் தீபகற்பத்தின் வடக்கே தாய்லாந்து நாட்டுடன் நிலம்; கடல் எல்லைகளையும்; தெற்கே சிங்கப்பூர்; வடகிழக்கே வியட்நாம்; மேற்கே இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது.
மலேசியாவின் கிழக்கு மலேசியா பகுதி; புரூணை, இந்தோனேசியா நாடுகளுடன் நில, மற்றும் கடல் எல்லைகளையும்; பிலிப்பீன்சு, வியட்நாம் நாடுகளுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது.
பொது
மலேசியாவின் தலைநகரம்; மற்றும் மலேசியாவின் மிகப்பெரிய நகரம் கோலாலம்பூர் ஆகும். புத்ராஜெயா நடுவண் அரசின் நிருவாகத் தலைநகரம் ஆகும்.
34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள மலேசியா உலகின் 44-வது மக்கள் அடர்த்தி கொண்ட நாடாகும். ஐரோவாசியா கண்டத்தின் தென்முனையான தஞ்சோங் பியாய் மலேசியாவில் தான் அமைந்து உள்ளது.
வெப்ப வலயத்தில் அமைந்துள்ள மலேசியா 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இனப் பெருக்க உயிரினங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 330,803 சதுர கிலோமீட்டர்கள் (127,724 சதுர மைல்கள்).
மக்கள் தொகை 32 மில்லியன்
தீபகற்ப மலேசியாவின் மக்கள் தொகை மட்டும் 20 மில்லியன். தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 3.2 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர்.
பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாம் மதம் மலேசியாவின் தேசிய சமயம் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும்.
1957-ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது. மலேசியாவின் மாமன்னரை யாங் டி பெர்துவான் அகோங் என்று அழைக்கிறார்கள். இப்போது பகாங் மாநிலத்தின் ஆறாவது மன்னர் சுல்தான் அப்துல்லா மாமன்னராக உள்ளார். இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடுகளின் பட்டியலில், மலேசியா இரண்டாவது இடம் பிடித்தது.
வரலாறு
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுக்கு முந்தைய காலச் சான்றுகள் மலேசியாவில் அதிகமாகக் கிடைத்து இருக்கின்றன. 2 இலட்சம் வருடங்களுக்கு முந்தைய கல்லாயுதங்கள் புக்கிட் சாவாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மலேசியாவின் சரவாக்கில் அமைந்துள்ள நியா குகைகளில் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்கள் காணப் படுகின்றன.
பூர்வகுடி செமாங்கு இனத்தவர்களின் மூதாதையர்கள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்கர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மலேசியத் தீபகற்பத்தின் மிக முந்தைய எலும்புக் கூடான பேராக் மனிதன் எலும்புக்கூடு; 11000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இது லெங்கோங் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்ப காலம்
கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த வணிகர்களும் குடியேற்றக்காரர்களும் வணிகத் துறைமுகங்களையும் நகரங்களையும் உருவாக்கினர். பிற்பகுதியில் மலேசியா சிறீ விசயப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.
11ஆம் நூற்றாண்டில் சோழ அரசன் இராசேந்திர சோழன் கடாரம் எனப்படும் இடத்தைப் போரில் வென்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் காணப்படுகின்றன. அடுத்த 20 வருடங்களில் சுமத்திரா மற்றும் மலாயாத் தீபகற்பத்தில் சோழர்களால் தொடர்ச்சியான படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சோழர்களின் வருகையும் போர்களும் சிறீ விசய ஆட்சியை வலுவிழக்கச் செய்தது.
சுல்தான்கள்
பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்து பல்வேறு சுல்தான்கள் ஆட்சி புரிந்தார்கள். சிறீ விசயப் பேரரசின் இளவரசனான பரமேசுவரா மலாயாத் தீபகற்பத்தின் முதல் சுதந்திர இராச்சியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானகத்தை நிறுவினார். இக்காலக் கட்டத்தில் இசுலாமிய சமயம் தீவிரமாகப் பரவியது. மேலும் இக்காலப் பகுதியில் மலாக்கா முக்கிய வாணிப மையமாகவும் விளங்கியது.
ஐரோப்பிய குடியேற்ற ஆட்சிகள்
1511-ஆம் ஆண்டில் மலாக்கா போர்த்துக்கீசர் வசமானது. பின் 1641-ஆம் ஆண்டில் இடச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. 1786-ஆம் ஆண்டில் கெடா சுல்தான் பினாங்கைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கு குத்தகைக்குக் கொடுத்தார். இதனால் பிரித்தானியப் பேரரசு மலாயாவில் காலூன்றியது. பிரித்தானியர் 1819-ஆம் ஆண்டில் சிங்கப்பூரைக் கைப்பற்றினர்ர்.
மேலும் 1824-ஆம் ஆண்டில் ஆங்கில-இடச்சு ஒப்பந்தப்படி மலாக்காவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1826-ஆம் ஆண்டில் பிரித்தானியர் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர், இலபுவான் தீவுகள் ஆகியவற்றை நேரடியாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் அவற்றைத் தமது முடிக்குரிய குடியேற்ற நாடாக்கினர்.
இரண்டாம் உலகப்போரின் போது 1943–1945 வரை சப்பான் ஆட்சி செலுத்தியது. இந்தக் காலப் பகுதியில் இனப் பிரச்சினைகள் உருவாகியதோடு தேசியவாதமும் மேலோங்கியது. போருக்குப்பின் மீண்டும் பிரித்தானியா அதிகாரத்திற்கு வந்தது.
மேலும் பிரித்தானியா மலாயாவின் நிருவாகத்தை ஒருங்கிணைத்து அதனை மலாயாக் கூட்டமைப்பு என்ற ஒரே முடிக்குரிய குடியேற்ற நாடாக்கியது. எனினும் மலாயர் இதனை எதிர்த்தனர். மேலும் மலாயாப் பொதுவுடைமைக் (கம்யூனிசு) கட்சியின் எஸ்.ஏ.கனபதி, பி.வீரசேனன் போன்றவர்கள் தலைமையில் ஒன்றிணைந்த போராளிகள் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகக் கொரில்லாப் போர் தொடுத்தனர்.
சமகாலம்
1957 ஆகத்து 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது. 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகியது. 1969-ஆம் ஆண்டு நடந்த இனக் கலவரத்திற்குப் பிறகு பூமிபுத்திரா எனப்படும் பூர்வகுடிமக்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் சம பங்கு வழங்கும் நோக்கோடு ஆராய்ச்சிக்குட்பட்ட புதிய பொருளாதார கொள்கை கொண்டுவரப்பட்டது.
அண்மைய காலங்களில் சிறுபான்மை இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப் படுவதாகக் கூறிப் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2007; பிப்பரவரி 2008 ஆகியக் காலக் கட்டங்களில் பெருந்திரளான இந்தியர் மக்கள் ஒன்றுகூடிப் போராட்டம் செய்தனர். அப்போது காவல் துறையினரால் கண்ணீர் புகை குண்டு வீசிக் கலைக்கப் பட்டனர்.
ஆட்சி பிரிவுகள்
மலேசியா 13 மாநிலங்கள் மற்றும்
மூன்று கூட்டாட்சிப் பகுதிகளின் கூட்டமைப்பாகும். இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவில் 11 மாநிலங்களும் இரண்டு கூட்டாட்சிப் பகுதிகளும் கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும் ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தையும் மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது.
13 மாநிலங்களும் வரலாற்று முறையான மலாய் இராச்சியங்களை மையமாகக் கொண்டவை. தீபகற்ப மலேசியாவிலுள்ள 11 மாநிலங்களில் 9 மாநிலங்கள், அவற்றின் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுகின்றன. அவை மலாய் மாநிலங்கள் எனவும் அறியப் படுகின்றன. ஒன்பது ஆட்சியாளர்களின் மன்றத்தில் இருந்து ஒரு மாமன்னர் தேர்ந்து எடுக்கப் படுகிறார். ஐந்தாண்டுகளுக்கு மாமன்னராகச் சேவையாற்றுகிறார். ஒவ்வொரு மாநிலமும் மாநிலச் சட்டமன்றம் எனப்படும் ஒற்றைச் சபையைக் கொண்டுள்ளன.
கிழக்கு மலேசியா மாநிலங்கள்
கிழக்கு மலேசியாவில் உள்ள மாநிலங்கள் (சபா மற்றும் சரவாக்); தமக்கு எனத் தனியான குடிவரவுக் கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.இதன்படி மலேசியாவின் ஏனைய பகுதிகள்(தீபகற்ப மலேசியா) குடிவரவுச் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் மேலும் முக்கிம்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சபாவிலும் சரவாக்கிலும் மாவட்டங்கள், பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
எல்லா மாநிலங்களுக்கும் சீரான நீதியை வழங்குவதற்காக மலேசிய நாடாளுமன்றம் நிலம், இஸ்லாமிய சமயம், உள்ளூராட்சி போன்ற பிரிவுகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாநிலம் ஒன்றின் வேண்டுகோளின் பேரில் அந்த மாநில நிர்வாகத்தில் தலையீடு செய்யவும், மலேசிய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
சில நிலம் தொடர்பான சட்டங்களைத் தவிர, மாநிலங்களுக்குள் நிகழும் பிரச்சினைகளை அந்த மாநிலங்களே கவனித்துக் கொள்கின்றன. நாட்டின் சட்டத்துக்கு அமைவாக, இஸ்லாமிய மதம் தொடர்பற்ற பிரச்சினைகள் மலேசிய ஒப்பந்தத்தைப் பேணும் வகையில் தேசிய மட்டத்திலேயே நிர்வகிக்கப் படுகின்றன.
புவியியல்
மலேசியா 3,30,803 சதுர கிலோமீட்டர்கள் மொத்த நிலப்பரப்பைக் கொண்டு 67வது பெரிய நாடாக விளங்குகிறது. இதனுடன் நில எல்லைகளை மேற்கு மலேசியாவில் தாய்லாந்தும் கிழக்கு மலேசியாவில் இந்தோனேசியாவும் புருணையும் பகிர்கின்றன.
சிங்கப்பூருடன் ஒரு குறுகிய தரைப் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. கடல்சார் எல்லையை வியட்நாமுடனும் பிலிப்பைன்சுடனும் பகிர்கிறது.
நில எல்லைகள் பெரும்பாலும் பெர்லிசு ஆறு, கோலோக் ஆறு மற்றும் பகலயன் கால்வாய் போன்ற புவியிடக் கூறுக்களால் வரையறுக்கப் பட்டுள்ளன. ஆனால் கடல்சார் எல்லைகள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. சரவாக் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் புருணை மலேசியாவினால் முழுதும் சூழப்பட்டுள்ளது.
ஆசிய நிலப் பகுதியிலும் மலாய் தீவுக் கூட்டங்களிலும் ஆட்சிப்பகுதி கொண்ட ஒரே நாடாக மலேசியா இலங்குகிறது. ஜொகூர் மாநிலத்தின் தெற்குக் கடைசியில் உள்ள தஞ்சோங் பியாய், ஆசியாக் கண்டத்தின் தெற்கு முனையாக உள்ளது. சுமாத்திராவிற்கும் மலேசியத் தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள உலகின் 40 சதவீத சரக்குகள் செல்லும் மலாக்கா நீரிணை உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
பொருளியல்
மலேசியா பொதுவாகத் திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் புதியதாகத் தொழில்மயமான சந்தைப் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது. பொருளியல் செயல்பாடுகளில் பேரளவு பொருளாதாரத் திட்டங்கள் மூலம் முக்கிய பங்காற்றும் அரசு தனது பங்காற்றலை படிப்படியாகக் குறைத்து வருகிறது.
ஆசிய நாடுகளில் சிறந்த பொருளியல் தரவுக் கூற்றுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1957 முதல் 2005 வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 6.5 % உயர்ந்து வந்துள்ளது. 2010இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்க டாலரில் $414,400 பில்லியனாக இருந்தது; இது ஆசியான் நாடுகளில் 3-வது மிகப்பெரிய மதிப்பாகும். உலகளவில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 29வதாக உள்ளது.
மக்கள் தொகையியல்
2010 கணக்கெடுப்பின்படி மலேசிய மக்கள் தொகை 28,334,135 ஆகும். இது உலகளவில் 43-ஆவது மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக அறியப்பட்டுள்ளது. இந்நாட்டில் பல இனக் குழுக்கள் வாழ்கின்றன. மலாய் இனக் குழுவினர் 50.4 % விழுக்காடும், மலாய் இனம் அல்லாத மற்ற பூமிபுத்திராக்கள் 11 விழுக்காடும் உள்ளனர். மலேசிய சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர். அவர்கள் மலாய் இனப் பண்பாட்டைப் பின்பற்றுபவர்கள்.
மலாய் இன மக்களே மலேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துபவர்கள். பூமிபுத்திரா என்ற தகுதி மலாய் இனம் அல்லாத தாய், கெமர், சாம் மக்களுக்கும் சபா, சரவாக் மாநிலப் பழங்குடி மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரவாக் மாநில மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர்.
பூமிபுத்திராக்கள்
சபா மாநிலத்தில் மூன்றுக்கு இரண்டு பேர் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர். மலேசிய தீபகற்பத்தில் தொல்குடி மக்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள். யார் பூமிபுத்திரா என்பதை வரையறுக்கும் சட்டம் மாநிலத்துக் மாநிலம் வேறுபடும்.
மலேசியா மக்கள் தொகையில் சீன வம்சாவளியினர் 23.7 விழுக்காடும்; இந்திய வம்சாவளியினர் 7.1 விழுக்காடும் உள்ளனர். இவர்களுக்குப் பூமிபுத்திரர்கள் என்ற தகுதி கிடையாது. சீனர்கள் மலேசிய வணிகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவாரியான இந்தியர்கள் மலேசியாவுக்கு பிரித்தானியர்களால் தோட்ட வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர் . இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர்
மலேசியாவில் பிறந்தால் மட்டும் ஒருவர் மலேசியக் குடியுரிமை பெற முடியாது. வெளிநாட்டில் இருந்தாலும் இரண்டு மலேசியர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்படும். மலேசியா இரட்டை குடியுரிமை வழங்குவதில்லை . கிழக்கு மலேசியா மற்றும் மேற்கு மலேசியாவில் இருப்பவர்களுக்குக் குடியுரிமையில் சிறிய வேறுபாடு உண்டு. இது குடி நுழைவு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது.
சமயம்
மலேசிய நாட்டின் அதிகாரபூர்வமான சமயமாக இசுலாம் இருந்தபோதிலும் மற்ற சமயங்களை சுதந்திரமாகப் பின்பற்றச் சட்டம் அனுமதிக்கிறது. தோராயமாக 63.5% பேர் இசுலாம் சமயத்தையும் 18.7% பேர் புத்த சமயத்தையும் 9.1% பேர் கிறித்தவ சமயத்தையும் 6.1% பேர் இந்து சமயத்தையும் 1.3 பேர் தாவோ சமயம், கன்பூசிய சமயம் மற்ற சீன சமயங்களையும் 0.7% பேர் எச் சமயத்தையும் சாராதவர்களாகவும் 1.4% பேர் மற்ற சமயங்களைப் பின்பற்றுவர்களாகவும் உள்ளனர் .
சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர் . 2010 மக்கள் தொகை கணக்கின் படி சீன வம்சத்தவர்களில் 83.6% பேர் பௌத்த சமயத்தையும் 3.4 % பேர் தாவோ சமயத்தையும் 11.1% பேர் கிறுத்துவ சமயத்தையும் சிறிய அளவில் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். இந்திய வம்சத்தவர்களில் 86.2% பேர் இந்து சமயத்தையும் 6.0% பேர் கிறுத்துவ சமயத்தையும் 4.1% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். மலாய் இனம் அல்லாத பூமிபுத்திரர்களில் 46.5% பேர் கிறுத்துவ சமயத்தையும் 40.4% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள் .
முசுலிம்களின் சமயம் தொடர்பான சிக்கல்களைச் சரியா நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக மணமுறிவு, திருமணம், வாரிசு உரிமை, மத மாற்றம், மதத்திலிருந்து விலகல் போன்றவற்றை அது விசாரிக்கும். குற்ற வழக்குகளும் உரிமையியல் குடிசார் வழக்குகளும் இதன் வரம்புக்குள் வராது. முசுலிம் அல்லாதவர்களின் சிக்கல்கள் சரியா நீதிமன்ற வரம்புக்குள் வராது. உரிமையியல் நீதிமன்றங்கள் இசுலாம் தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவற்றைச் சரியா நீதிமன்றங்களிடம் அனுப்பிவிடும் .
மொழி
மலேசியாவின் அதிகாரப்பூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். இது மலாய் மொழியின் தரப்படுத்தப்பட்ட வடிவமாகும். ஆங்கிலம் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. 1969-இல் நடந்த கலவரத்துக்குப் பின் மலேசிய மொழி முதன்மைப்படுத்தப்பட்டது . ஆங்கிலம் இரண்டாவது மொழியாகத் தொடர்ந்து உள்ளது.
பொதுப் பள்ளிக்கூடங்களில் கணிதம், அறிவியல் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது . பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட மலேசிய ஆங்கிலம் வணிகத்தில் பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும் .
மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன இவற்றில் தீபகற்ப மலேசியாவில் 41 மொழிகள் பேசப்படுகின்றன. கிழக்கு மலேசியாவில் உள்ள பழங்குடியின மக்கள் மலாய் மொழி அல்லாத தங்களின் மொழியைப் பேசுகின்றனர். இதை எளிதில் மலாய் அல்ல என்பதை உணரமுடியும். சரவாக் மாநில மக்கள் இபான் மொழியையும் சபா மக்கள் டுசுனிக் மொழியையும் பேசுகின்றனர் . மலேசியாவிலுள்ள சீனர்கள் தென் சீனத்தின் பல வட்டார மொழிகளைப் பேசுகின்றனர். கண்டோனீசு, மாண்டரின், ஓக்கியன், கேசிய மொழி போன்றவை. தமிழர்கள் தமிழ் பேசுகின்றனர். தமிழர்களே இங்குள்ள இந்தியர்களில் பெரும்பான்மையினர் ஆவர். இவர்கள் மலேசியத் தமிழர் என்று அறியப் படுகின்றனர்.
பண்பாடு
மலேசியாவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மற்றும் பல்வேறு மொழிபேசும் மக்கள் உள்ளனர். இப்பகுதியின் துவக்கநிலை பண்பாடு இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள், இங்கு இடம் பெயர்ந்த மலாய் இனத்தவரால் உருவானது. வெளிநாட்டு வணிகம் துவங்கிய வரலாற்றுக் காலத்திலேயே சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. பாரசீகர், அராபியர் மற்றும் பிரித்தானியர் பண்பாட்டுத் தாக்கங்களைப் பின்னதாக உள்வாங்கியது. அரசமைப்பு, சமூக உடன்பாடு போன்றவை காரணமாக இனச் சிறுபான்மையினரின் பண்பாடு தன்வயமாகவில்லை.
1971இல் மலேசிய அரசு "தேசிய பண்பாட்டுக் கொள்கை"யை அறிவித்தது; இதன்படி மலேசியப் பண்பாடு பழங்குடியினரின் பண்பாட்டின்படி அமையும் என்றும் பிற பண்பாடுகளிலிருந்து பொருத்தமானக் கூறுகளை உள்வாங்கும் என்றும் இசுலாம் பெரும் பங்கு வகிக்கும் என்றும் வரையறுத்தது. மேலும் மலாய் மொழியே மற்ற மொழிகளை விடப் பரப்பப்படும் எனக் கூறியது. இவ்வாறான அரசின் தலையீட்டை மலாய் அல்லாத சிறுபான்மையினர் தங்கள் பண்பாட்டுச் சுதந்தரத்தைக் குறைப்பதாக எதிர்த்தனர். சீனர்களின் சங்கங்களும் இந்தியச் சங்கங்களும் தங்கள் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் மனு ஒன்றை அளித்தனர்.
மலேசியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே (குறிப்பாக இந்தோனேசியா) பண்பாட்டுச் சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் ஒன்றையொத்த பாரம்பரியமும் வழைமையான பழக்கங்களும் உள்ளன. இருப்பினும் உணவுப் பொருள்களிலிருந்து மலேசியாவின் நாட்டுப்பண் வரை பல பிணக்குகள் எழுந்துள்ளன. இந்தப் பிணக்குகளைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் பலமுறை முயன்றுள்ளன.
மலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்காகும்.
விளையாட்டு
மலேசியாவில் பரவலாக விளையாடப் படுபவையாகக் காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிசு, சுவர்ப்பந்து, தற்காப்புக் கலைகள், குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட் பலகையோட்டம் ஆகியன . இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன; 1948-ஆம் ஆண்டு முதல் தாமசு கோப்பையைத் தக்க வைத்துள்ள மூன்று நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது.
மலேசிய புல்தரை பௌல்ஸ் கூட்டமைப்பு 1997-இல் பதிவு செய்யப்பட்டது. பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட சுவர்ப்பந்து விளையாட்டில் முதல் போட்டி 1939-இல் நடத்தப்பட்டது. சுவர்ப்பந்து பந்தடி மட்டைச் சங்கம் சூன் 25, 1972இல் உருவானது. மலேசியா தென்கிழக்கு ஆசியாவிற்கான ஓர் கால்பந்துக் கூட்டிணைவைப் பரிந்துரைத்துள்ளது.
ஆகத்து 2010-இல் மலேசியாவின் ஆடவர் வளைதடிப் பந்தாட்ட அணி உலகத் தரவரிசையில் 15வதாக இருந்தது. கோலாலம்பூரில் உள்ள மெர்டெக்கா விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் மூன்றாவது மற்றும் பத்தாவது போட்டிகள் நடத்தப்பட்டன. மலேசியாவில் பார்முலா 1 தடம்– சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை உள்ளது. தொலைவுள்ள இச்சுற்றுகையில் முதல் கிராண்ட் ப்ரீ போட்டி 1999இல் நடந்தது.
1953-இல் உருவான மலாயா ஒலிம்பிக் குழுவிற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அங்கீகாரம் 1954-இல் கிடைத்தது. மலேசியா 1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்றது. 1964-இல் இக்குழுவிற்கு மலேசியா ஒலிம்பிக் குழு என மறுபெயரிடப்பட்டது. தொடங்கிய காலத்திலிருந்து ஒன்றைத் தவிர அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது.
1972-ஆம் ஆண்டில் மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு மிக உயர்ந்தளவில் பங்கேற்பாளர்களை (57) அனுப்பி உள்ளது. மலேசிய போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் இதுவரை நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்; இவை அனைத்துமே இறகுப்பந்தாட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுநலவாய விளையாட்டுக்களில் 1950 முதல் மலாயா என்றும் 1966 முதல் மலேசியா என்றும் பங்கெடுத்து வந்துள்ளது.
1998-இல் இந்த விளையாட்டுக்கள் கோலாலம்பூரில் நடத்தப்பட்டன. தற்காப்புக் கலைகளில் மலேசியாவில் சிலாட் மற்றும் தோமோய் என்னும் இரு வகைகள் பயிலப்படுகின்றன.
ஊடகம்
மலேசியாவின் முதன்மை செய்தித்தாள்கள் அரசுடமை அல்லது ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் உடமையாக உள்ளன. இருப்பினும் சில பெரிய எதிர்க்கட்சிகளும் நாளிதழ்களின் உரிமையாளர்களாக உள்ளனர். நாட்டின் இரு பகுதிகளிலிருந்து வெளியாகும் ஊடகங்களிடையே பிளவு உள்ளது. தீபகற்ப ஊடகங்கள் கிழக்குப் பகுதி செய்திகளுக்குக் குறைந்த முன்னுரிமை வழங்குகின்றனர்; அப்பகுதியை தீபகற்ப மலேசியாவின் குடியேற்றப் பகுதியாகக் காண்கின்றனர்.
மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே வளரும் சிக்கல்களுக்கு ஊடகங்கள் குறை சொல்லப் படுகின்றன. இந்தோனேசியர்களைக் குறித்து தாழ்வான கருத்து நிலவவும் அவர்களே காரணமாக்கப் படுகின்றனர். மலேசியாவில் மலாய், சீனம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் வெளியாகின்றன.
ஊடகச் சுதந்திரம் மிகக் குறைவாக உள்ள காரணத்தால் அரசிற்கு பொறுப்புடைமை குறைவாக உள்ளது. அரசு தேர்தல்களுக்கு முன்னர் எதிர்கட்சி நாளிதழ்களை அடக்க முயன்றுள்ளது. 2007-இல் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுக்களை ஒளிபரப்ப வேண்டாமென்று அனைத்து தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டன;
இதனை எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சி கண்டித்துள்ளது. சபாவில் ஒன்றைத் தவிர அனைத்து நாளிதழ்களும் தனியார் வசமுள்ளன. இப்பகுதியே மலேசியாவில் மிகவும் சுதந்திரமான ஊடகங்கள் இருக்குமிடமாகும். அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் போன்றவை கருத்துச் சுதந்திரத்திற்கு தடங்கலாக இருப்பதாகச் சுட்டப்படுகிறது.
உள்கட்டமைப்பு
மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. 4.7 மில்லியன் நிலைத்த இடத் தொலைபேசி இணைப்புகளையும் 30 மில்லியன் நகர்பேசி இணைப்புக்களையும் கொண்டுள்ள இதன் தொலைத்தொடர்பு பிணையம் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது.
மலேசிய நாட்டில் ஏழு பன்னாட்டு வணிகம் புரியும் துறைமுகங்கள் உள்ளன; முக்கியமான துறைமுகமாகக் கிளாங் துறைமுகம் உள்ளது. 200 தொழிற் பேட்டைகளும் டெக்னாலஜி பார்க், மலேசியா மற்றும் குலிம் ஹ-டெக் பார்க் போன்ற சிறப்பு கட்டமைப்புக்களும் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன.
95% மக்களுக்குத் தூய குடிநீர் வழங்கப்படுகிறது. குடிமைவாத காலங்களில் பொருளியல் தாக்கமுள்ள நகரங்களிலும் பாதுகாப்பிற்கு வழிகோலும் இடங்களிலுமே மேம்பாட்டு கட்டமைப்புக்கள் உருவாகியிருந்தன.
விடுதலைக்குப் பின்னதாக ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியைக் குவியப்படுத்தி வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும் அவை இன்னமும் தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை விடப் பின்தங்கி உள்ளன. தொலைத்தொடர்பு சேவைகளும் நகரப்பகுதிகளில் சிறப்பாக இருந்தபோதும் உள்நாட்டுப் பகுதிகளில் அணுக்கம் குறைவாகவே உள்ளது.
மலேசியாவில் தொலைவிற்கு சாலைகள் இடப்பட்டுள்ளன; இவற்றில் தொலைவு விரைவுச் சாலைகளாகும். நாட்டின் மிக நீண்ட நெடுஞ்சாலையாக விளங்கும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தாய்லாந்தின் எல்லை முதல் சிங்கப்பூர் வரை தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவில் சாலைகள் நன்கு அமைக்கப்படவில்லை. தீபகற்ப மலேசியச் சாலைகளைப் போல் இல்லாது அவற்றின் தரமும் குறைந்த நிலையில் உள்ளன.
மலேசியாவில் 38 நன்கு பேணப்பட்ட நிலையங்கள் உட்பட 118 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நாட்டின் அரசுசார் மலேசியா ஏயர்லைன்சுடன் மேலும் இரு வான்பயண சேவை நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வான்பயணச் சேவைகளை நல்குகின்றன.
தொடர்வண்டிச் சேவைகள் அரசுமயமாக்கப்பட்டுள்ளது; தொலைவிற்கு சேவை அளிக்கின்றன. கோலாலம்பூர் போன்ற சில நகரங்களில் ஒப்புநோக்கில் குறைந்த செலவான உயரத்தில் செல்லும் இலகு தொடருந்து போக்குவரத்து அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. ஆசியான் விரைவுத் தொடருந்து (Asean Rail Express) கோலாலம்பூரை பாங்காக்குடன் இணைக்கும் தொடர்வண்டிச் சேவையாகும். இச்சேவை மூலம் எதிர்காலத்தில் சிங்கப்பூரையும் சீனாவையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வழமையாக, மலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே உள்ளது. நாட்டின் மின் உற்பத்தித் திறன் 13 GW ஆக உள்ளது. இன்னமும் 33 ஆண்டுகளுக்கான இயற்கை எரிவாயு இருப்பும் 19 ஆண்டுகளுக்கான எண்ணெய் இருப்புமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆற்றல் வளங்களைப் பயன்படுத்த அரசு முயன்று வருகிறது. 16 சதவீதம் நீர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற 84 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அரசுடமை நிறுவனமான பெட்ரோனாசு பெரும்பங்கு வகிக்கிறது. மின்சார ஆணையம் சட்டம், 2001இன்படி மலேசிய ஆற்றல் ஆணையம் (Energy Commission of Malaysia) தீபகற்ப மற்றும் சாபாவில் ஆற்றல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மலேசிய அரச இணையத்தளம்
பிரதம மந்திரியின் இணையத்தளம்
Department of Statistics Malaysia
என்சைக்கிளோபீடியா பிரித்தானிக்காவில் மலேசியா
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் |
1717 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88 | தொழிற்றுறை | தொழிற்றுறை (industry) என்பது கிடைக்கும் வள ஆதாரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றிய துறை ஆகும். புவியில் மனிதர்களின் தொழிலைப் பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே தீர்மானிக்கின்றன. அவற்றுள் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்தல், வணிகம் போன்ற பல தொழில்கள் அடங்கும். இத்தகைய தொழில்களால் மனிதர்கள் பயனை அடைகின்றனர். எனவே, இத்தகைய மனிதர்களின் நடவடிக்கைகள் பொருளாதார நடவடிக்கைகள் என அழைக்கப்படுகின்றன. பொருளாதார உற்பத்தியின் ஒரு பகுதியாகும். பல தொழிற்றுறைகளில் இலாபம் ஈட்டுவதற்கு முன் பெருமளவு பண முதலீடு தேவைப்படுகின்றது. மென்பொருள், ஆய்வு போன்ற துறைகளில் அறிவும் திறனும் முதலீடாகப் பயன்படுகின்றன.
தொழிற்றுறைகளை வகைப்படுத்தல்
தொழில்களை அவற்றின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்
முதல் நிலைத்தொழில்கள்
இரண்டாம் நிலைத்தொழில்கள்
மூன்றாம் நிலைத்தொழில்கள்
நான்காம் நிலைத்தொழில்கள்
ஐந்தாம் நிலைத்தொழில்கள்
என வகைப்படுத்தலாம்.
முதன்மைத் தொழில்
முதன்மைத்தொழில்களில் மனிதர்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செயல்படுவர். இவற்றை பழைமையான தொழில்கள் என அழைக்கலாம். இத்தொழில்களில் ஈடுபடுபவர்களை " சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் " ( Red collar workers) என அழைக்கிறோம்.
உணவு சேகரித்தல்
வேட்டையாடுதல்
மரம் வெட்டுதல்
வேளாண்மை
மீன்பிடிப்பு
சுரங்கத் தொழில்
காடுகள் பராமரிப்பு
இரண்டாம்நிலை தொழில்
மனிதர்கள் மூலப்பொருள்களை உற்பத்தி முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை முடிவுற்ற பொருளாக மாற்றுவதன் மூலம் மூலப்பொருள்களின் பயன்பாட்டினையும், மதிப்பினையும் பெருக்குகின்றனர். இந்த உற்பத்தித் தொழில்கள் இரண்டாம் நிலைத்தொழில்கள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாம் நிலைத்தொழில் புரியும் பணியாளர்கள் "நீல கழுத்துப்பட்டை தொழிலாளர்கள்" (Blue collar workers) என அழைக்கப்படுகின்றனர்.
உற்பத்தி
கட்டுமானம்
மூன்றாம் நிலைத் தொழில்
இரண்டாம் நிலைத் தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் தொழில்கள் மூன்றாம் நிலைத் தொழில்கள் ஆகும். தொழில்நுட்பத்தில் சிறப்பு மிக்க தொழில்நுட்பப் பணியாளர்களும், வங்கிப் பணியாளர்களும் மூன்றாம் நிலைத் தொழில் புரிவோர் ஆவர். இவர்கள் "வெளிர் சிவப்புக் கழுத்துப்பட்டைப் பணியாளர்கள்" ( pink collar workers ) என அழைக்கப்படுகின்றனர்.
வணிகம்
போக்குவரத்து
தகவல் தொடர்பு சேவைகள்
நான்காம் நிலைத் தொழில்
தனித்தன்மை கொண்ட சூழல்களில் பணிபுரிவோர் நான்காம் நிலைத்தொழிலாளர்கள் என அழைக்கப்படுவர். பொதுவாக இத்தொழில்கள் நகரங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் வெள்ளை கழுத்துப்பட்டை தொழிலாளர்கள் (White collar workers ) என அழைக்கப்படுகிறார்கள்.
மருத்துவம்
சட்டம்
கல்வி
பொழுது போக்கு
கேளிக்கை
நிர்வாகம்
ஆய்வு மற்றும் வளர்ச்சி
ஐந்தாம் நிலைத்தொழில்
ஆலோசனை வழங்குவோர் மற்றும் திட்டமிடுவோர் போன்ற உயர் நிலையில் உள்ளவர்கள் இவ்வகையில் அடங்குவர். இவர்கள் தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் ( Gold collar workers )என அழைக்கப்படுவர்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள தீர்மானிக்கும் திறன் கொண்ட அறிவுரை வழங்குவோர்]]
சட்டப்பூர்வமான அதிகாரிகள் (நீதிபதி)
வளர்ந்து வரும் நாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தொழில்களிலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைத்தொழில்களிலும் மக்கள் ஈடுபடுகின்றனர்.
வரலாறு
தொழில்துறை, தொழிற்புரட்சியின் போது, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் முக்கிய துறையாக உருவானது. இது முந்தைய வணிக, நிலப்பிரபுத்துவப் பொருளாதார முறைமைகளைப் பல்வேறு விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் நிலைகுலைய வைத்தது. நீராவி இயந்திரங்கள், மின்தறிகள், உருக்கு நிலக்கரி பெரும்படித் தயாரிப்பு, என்பன இவ்வாறான தொழில்நுட்பங்களுள் சிலவாகும். இரயில் பாதைகளும், நீராவிக் கப்பல்களும், முந்திய காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாத அளவு தூரத்திலிருந்தது. உலகம் தழுவிய சந்தை வாய்ப்புக்களை ஒருங்கிணைத்ததால், தனியார் நிறுவனங்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு எண்ணிக்கையிலும், செல்வத்திலும் வளர்ச்சியடைந்தன. தொழிற்புரட்சிக்குப் பின்னர், உலகப் பொருளாதார உற்பத்தியின் மூன்றிலொரு பங்கு அளவு, தொழில் துறையிலிருந்தே பெறப்பட்டது. இது விவசாயத்துக்கான உற்பத்திப் பங்கை விடக் குறைவானதாகும். ஆனால், இப்பொழுது சேவைத் துறையின் பங்கு, தொழில் துறையின் பங்கிலும் அதிகமாகும்.
சமூகம்
ஒரு தொழில்துறை சமூகத்தைப் பல வழிகளில் வரையறுக்க முடியும். இன்று, தொழிற்துறை பெரும்பாலான சமூகங்கள் மற்றும் நாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. ஒரு அரசாங்கமானது தொழில்துறை வேலை வாய்ப்பு, தொழில்துறை மாசடைதல், நிதி மற்றும் தொழில்துறைத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும், தொழில்துறைக் கொள்கைகள் சிலவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
தொழில்துறைத் தொழிலாளர்
ஒரு தொழில்துறை சமுதாயத்தில், தொழிற்துறைத் தொழிலாளர்கள் முழு அங்கத்தவர்களில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளனர். இது உற்பத்தி துறையிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. தொழிலாளர் சங்கம் என்பது சம்பளம், வேலைசெய்யும் மணிநேரம், மற்றும் வேலை நிலைமைகள் போன்ற முக்கிய பகுதிகளில் பொதுவான இலக்குகளைக் கொண்டுள்ள தொழிலாளர்களின் அமைப்பாகும்.
ஊதிய உழைப்பு
ஊதிய உழைப்பு (அமெரிக்க ஆங்கிலத்தில் wage labor) ஒரு தொழிலாளி மற்றும் ஒரு முதலாளிக்கு இடையேயான சமூக பொருளாதார உறவு ஆகும், அங்கு தொழிலாளி தனது உழைப்பு சக்தியை முறையான அல்லது முறைசாரா வேலை ஒப்பந்தத்தில் விற்கிறார். இந்த பரிவர்த்தனைகள் பொதுவாக தொழிலாளர் சந்தையில் நிகழும் ஊதியங்கள் சந்தை தீர்மானிக்கப்படுகின்றன. செலுத்தப்பட்ட ஊதியங்களுக்கு ஈடாக, வேலை தயாரிப்பு பொதுவாக அமெரிக்காவில் உள்ள அறிவுசார் சொத்துரிமை காப்புரிமைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளைத் தவிர்த்து, கண்டுபிடிப்பிற்காக தனிப்பட்ட முறையில் பொறுப்பாளியாக பொறுப்பேற்கப்பட்ட காப்புரிமை உரிமைகள் வழக்கமாக வழங்கப்படும். ஒரு கூலித் தொழிலாளி என்பது ஒரு நபர், இதன் மூலம் அவரது உழைப்பு சக்தியை விற்பதன் மூலம் வருமானம் முதன்மையானதாக இருக்கிறது.
வகைகள்
சம்பள உழைப்பின் மிகவும் பொதுவான வடிவம் தற்பொழுது நேரடி அல்லது முழுநேரமாக வேலை (உழைப்பு) உள்ளது.இது ஒரு வேலையாள் தனது வேலைக்கு ஒரு காலவரையற்ற காலம் (ஒரு சில ஆண்டுகளில் இருந்து தொழிலாளி முழு வாழ்க்கை வரை),பணம் சம்பளம் அல்லது சம்பளத்திற்காகவும், பொதுவாக ஒப்பந்த தொழில்லாளர்கள் அல்லது பிற ஒழுங்கற்ற பணியாளர்களிடமிருந்தும் பணியமர்த்தியுடனான தொடர்ச்சியான உறவுக்கு பதிலாக விற்கும் வேலை அல்லது உழைப்பு.இருப்பினும், ஊதிய உழைப்பு பல வேறு வடிவங்களை எடுத்துக் கொள்கிறது, மற்றும் வெளிப்படையான (அதாவது உள்ளூர் தொழிலாளர் மற்றும் வரிச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும்) போன்ற வெளிப்படையான ஒப்பந்தங்கள் அசாதாரணமானது அல்ல. பொருளாதார வரலாறு பல்வேறு வகையான வழிகளைக் காட்டுகிறது, இதில் தொழிலாளர் வர்த்தகம் மற்றும் பரிமாற்றம் செய்யப்படுகிறது வேறுபாடுகள் பின்வரும் வடிவத்தில் காண்பிக்கப்படுகின்றன:
வேலைவாய்ப்பு நிலை - ஒரு தொழிலாளி முழுநேர, பகுதி நேர அல்லது ஒரு சாதாரண அடிப்படையில் வேலை செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக அல்லது ஒரு நிரந்தர அடிப்படையில் மட்டுமே அவர் தற்காலிகமாக வேலை செய்ய முடியும். பகுதிநேர ஊதிய உழைப்பு பகுதி நேர சுயாதீனத்துடன் இணைந்திருக்கலாம். தொழிலாளி ஒரு பயிற்சி தொழிலாளியாகவும் பயன்படுத்தப்படலாம்.
சிவில் (சட்ட) நிலை - தொழிலாளி உதாரணமாக ஒரு இலவச குடிமகன், ஒரு ஒப்பந்தத் தொழிலாளர், கட்டாய உழைப்பு (சில சிறைச்சாலை அல்லது இராணுவ உழைப்பு உட்பட);ஒரு தொழிலாளி அரசியல் அதிகாரிகளால் ஒரு பணிக்காக நியமிக்கப்படுவார், அவர்கள் ஒரு அடிமை அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியமர்த்தப்பட்ட நிலத்திற்கு அடிமை கட்டப்படுகிறது.எனவே, உழைப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தன்னார்வ அடிப்படையில் அல்லது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாத நிலையில், இதில் பல தரநிலைகள் உள்ளன.
பணம் செலுத்தும் முறை (ஊதியம் அல்லது இழப்பீடு)- வேலை செய்யப்படும் பணம் (பணம்-ஊதியம்) அல்லது "வகையான" (பொருட்கள் மற்றும் / அல்லது சேவைகளை பெற்றுக் கொள்வதன் மூலம்) அல்லது " துண்டுகள்" வடிவத்தில், ஊதியம் தொழிலாளி உற்பத்தியை நேரடியாக சார்ந்துள்ளது.
பணியமர்த்தல் முறை- தொழிலாளி தனது சொந்த முயற்சியில் தொழிலாளர் ஒப்பந்தத்தில் ஈடுபடலாம், அல்லது அவர் ஒரு குழுவின் பகுதியாக தமது பணியை அமர்த்தலாம். ஆனால் அவர் அல்லது அவள் ஒரு மூன்றாம் தரப்பினருக்கு (ஒரு வேலைவாய்ப்பு நிறுவனம் போன்ற) ஒரு இடைத்தரகராக பணியாற்றலாம். இந்த வழக்கில், அவர் அல்லது அவர் இடைத்தரகர் பணம், ஆனால் இடைத்தரகர் செலுத்தும் ஒரு மூன்றாம் தரப்பு வேலை. சில சந்தர்ப்பங்களில், பல இடைத்தரகர்களுடனான, துணைக்குழுவில் பல முறை. இன்னொரு சாத்தியம் என்னவென்றால், தொழிலாளி ஒரு அரசியல் அதிகாரியால் பணிபுரிபவராகவோ அல்லது இடுகையிடப்படுவதிலோ அல்லது ஒரு நிறுவனம் ஒரு நிறுவனத்துடன் ஒன்றாக உற்பத்தி செய்வதற்கு ஒரு பணியாளரை பணியமர்த்துவதாக உள்ளது.
விமர்சனங்கள்
பல பொதுவுடைமைக்கார்கள் பார்வையில் கூலி தொழிலாளி வர்க்கத்தின் ஒரு அம்சமாக வரையறுக்கப்படவில்லை என்றால், நிறுவனத்தின் பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் தொழிலாளி சுய நிர்வகிப்பு மற்றும் பொருளாதார ஜனநாயகம் இருவரும் ஊதிய உழைப்புக்கும் முதலாளித்துவத்திற்கும் மாற்றுகளாக ஆதரிக்கின்றனர்.ஊதிய உழைப்பின் பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் உற்பத்தியின் முதலாளித்துவ உரிமையாளர்களை அதன் இருப்புக்காக குற்றம்சாட்டியுள்ள நிலையில், பெரும்பாலான அராஜகவாதிகள் மற்றும் பிற சுதந்திரவாத பொதுவுடைமைக்கார்கள் மாநிலத்திற்கு ஒரே ஒரு கருவியாக இருப்பதுடன், முதலாளித்துவவாதிகள் தங்களை மானியப்படுத்தி, உற்பத்தி முறையின் தனியார்மயமாக்கலின் தனியார் உடைமை நிறுவனத்தை பாதுகாக்கின்றன.இது ஒரு செல்வந்த உயரடுக்கின் மூலதனத்தை செறிவூட்ட அனுமதிக்காது. கூலி தொழிலாளர்கள் சில எதிர்ப்பாளர்கள் மார்க்சிச முன்மொழிவுகளிலிருந்து செல்வாக்கு செலுத்துகையில், பலர் தனியார் சொத்து எதிர்க்கிறார்கள், ஆனால் [[தனிப்பட்ட சொத்துக்களுக்கு] மரியாதை காட்ட வேண்டியுள்ளது.
அதேபோல், வேதியியல் பொருளாதாரம் இல் உள்ள பல அறிஞர்கள், ஊதிய உழைப்பு மீது மிகுந்த கவனம் செலுத்துகின்றனர், பெரும்பாலான ஆண்கள் வேலைக்கு பணம் செலுத்துகின்றனர், பெரும்பாலான பெண்களுக்கு வேலை கிடைக்காத நிலையில், விரிவான ஆய்வுகள் காட்டியுள்ளன. இந்தத் துறையில் உள்ள அறிஞர்கள், செலுத்தப்படாத பெண்களின் வேலைகள் பொருளாதார மதிப்பின் உற்பத்தியையும், சமூக இருப்புக்கான இனப்பெருக்கம் மற்றும் உற்பத்திக்கு ஆதரவளிப்பதையும் வாதிடுகின்றன.
உலகில் தொழில்துறையின் பரம்பல்
தொழில்மயமழிதல்
வரலாற்றில், வெவ்வேறு பொருளியல் காரணிகளினால், உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் குறைந்தோ அல்லது அழிவடைந்தோ போய்விடுகின்றன. ஈடுசெய்யும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவதனாலோ, அல்லது மேம்பாட்டில் ஏற்படும் போட்டியில் தோற்றுப் போவதனாலோ இது நிகழக்கூடும். eடுத்துக் காட்டாக தானுந்துkஅள் அதிகளவில் உற்பத்தியாகத் தொடங்கியது, குதிரை வண்டிகளின் உற்பத்தி குறைந்து போனது.
தொழில்துறை உற்பத்தியின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்
மேற்கோள்கள்
தொழிற்துறை |
1718 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | உயிரியல் | உயிரியல் என்பது வாழ்க்கை மற்றும் உயிரினங்கள் பற்றிய இயற்கை அறிவியலாகும். உயிரியலில் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு அல்லது படிமலர்ச்சி, பரம்பல், உயிரியல் வகைப்பாடு போன்றவை ஆராயப்படுகின்றன.. இப்புலம் உயிரினங்களுடைய இயல்புகளையும் நடத்தைகளையும், எப்படி தனிப்பட்ட உயிரினங்களும், உயிரின இனங்களும், தோற்றம் பெற்றன என்பதையும் அவை தங்களுக்குள்ளும், ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகளையும் பற்றிக் கருத்தில் கொள்கிறது.
உயிரியலின் வரலாறு
நவீன உயிரியல் ஒப்பீட்டளவில் சமீபத்திய வளர்ச்சி அடைந்து இருப்பினும், உயிரியலை உள்ளடக்கியதும் அதனுடன் தொடர்பானதுமான அறிவியல் தொல்பழங்காலத்தில் இருந்தே கற்கப்பட்டது. இயற்கை தத்துவம் மொசப்பத்தேமிய, எகிப்திய, சிந்துவெளி, சீன நாகரிகங்களில் இருந்தே கற்கப்பட்டது. இருப்பினும், நவீன உயிரியலும் இயற்கை ஆய்வும் அதன் அணுகுமுறை தோற்றம் என்பன பெரும்பாலும் பண்டைய கிரேக்க இயற்கை மெய்யியலோடு பெரிதும் தொடர்பு கொண்டுள்ளமை தெளிவாகிறது. அதேவேளை மருத்துவ முறையான கல்வி இப்பொகிரேட்டசு (Hippocrates) காலம் (கி.மு.460-கி.மு.370) வரை பின்னோக்கி செல்கிறது. அரிஸ்டாடில் உயிரியல் வளர்ச்சிக்கு மிகவும் பங்களித்துள்ளார்.
இடைக்கால இசுலாமிய உலக அறிஞர்களான அல்-சாகிசுவும் (al-Jahiz) (781–869), அல்-தினவாரும் (Al-Dinawari) (828–896) தாவரவியல் பற்றியும் , இராசெசு (Rhazes) (865–925) உடற்கூறியல் பற்றியும் உடலியங்கியல் பற்றியும் நூல்களை எழுதினர். குறிப்பாக கிரேக்க மெய்யியல் அறிவு மரபுகளை ஆய்வு செய்த இஸ்லாமிய அறிஞர்களால் மருத்துவம் சிறப்பாக கற்கப்பட்டது. அந்தோனி வான் இலியூவன்கோக் (Antony van Leeuwenhoek) நுண்ணோக்கியை மேம்படுத்திய பின் உயிரியல் விரைவில் விரிவாக வளரத் தொடங்கியது. இதன் பின்னரே விந்தணுக்களும் பாக்டீரியா எனும் குச்சுயிரியும் நுண்ணோக்கி அங்கிகளின் பாகுபாடும் கண்டுபிடிக்கப்பட்டன. நுண் நோக்கியியல் முன்னேற்றங்கள் உயிரியல் சிந்தனையில் மேலும் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உயிரியலாளர்கள் பலர் உயிர்க்கலத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர். 1838 மற்றும் 1839 இல், செல்டியனும் சுவானும் பின்வரும் கருத்துக்களை ஊக்குவிக்கத் தொடங்கினர்.
1) உயிரினங்களின் அடிப்படை அலகு உயிர்க்கலம் ஆகும்
2) தனிப்பட்ட உயிர்க்கலங்களில் வாழ்வின் அனைத்து பண்புகளும் உண்டு
3) அனைத்து உயிர்க்கலங்கள் மற்ற உயிர்க்கலங்களின் பகுப்பில் இருந்தே உருவாகின்றன.
இவை பின்னர் உயிர்க்கலக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டன .
உயிரியல் புலங்கள்
உயிரியல் ஒரு பரந்த அளவிலான, தனித்தனித் துறைகளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்வித் துறைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாகப் பல படிநிலை மட்டங்களில் உயிரினங்கள் பற்றியும், அவை வாழும் சூழல் பற்றியும் ஆய்வு செய்வதோடு, உயிரின வகைகளும் அவற்றை ஆயும் சிறப்பு முறைகள் பற்றியும் கூட ஆய்வு செகின்றன.
உயிரினங்களுள் நிகழும் வேதியியல் வினைகள் பற்றிய கற்கைத்துறை உயிர்வேதியியல் ஆகும்.
உயிரியல் மூலக்கூறுகளின் சிக்கலான ஊடாட்டங்களினை குறித்த ஆய்வு மூலக்கூற்று உயிரியல் ஆகும்.
அனைத்து உயிர்களின் அடிப்படை அலகான உயிரணு எனும் உயிர்க்கலம் பற்றிய அறிவியல் உயிரணு உயிரியல் அல்லது உயிர்க்கல உயிரியல் எனப்படுகிறது.
இழையம் அல்லது திசுக்களின் இயற்பியல், வேதியியல் செயல்பாடுகளைப் பற்றிய அறிவியல் உடலியங்கியல் ஆகும்.
உயிரினங்களின் உடலின் அமைப்புப் பற்றிய கற்கை உடற்கூற்றியல் ஆகும். அதுவே இழையங்கள் மட்ட ஆய்வு இழையவியல் ஆகும்.
உயிரிகளில் இழையம், உறுப்புகள், உறுப்புகள் இணைந்த தொகுதிகள் ஆகியவற்றில் நிகழும் இயற்பியல், வேதியியல் தொழிற்பாடுகள் பற்றிய அறிவு உடலியங்கியல் ஆகும்.
தனி உயிரினத்தின் தோற்றமும், வளர்ச்சியும் (Ontogeny) பற்றிய அறிவு வளர்ச்சி உயிரியல் (Developemental Biology) ஆகும்.
பல தலைமுறைகளுக்கு இடையிலான பரம்பரை அல்லது கால்வழித் தொடர்புகள் பற்றிய அறிவு மரபியல் ஆகும்.
விலங்குகளின் நடத்தைகள் பற்றிய அறிவு நடத்தையியல் ஆகும்.
முழு மக்கள்தொகை மட்டத்தில் மக்கள்தொகை மரபியல் ஊடாகவும்,
பல்வகை உயிரினங்களில், பல தலைமுறைகளூடாகவும் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வு படிமலர்ச்சி உயிரியல் ஆகும். அதன் வழியாக உயிரினப் பன்மையையும் உயிரினங்களை வகைப்படுத்தலையும் பற்றிய ஆய்வு உயிரியல் வகைப்பாடு ஆகும்.
புவிக்கு அப்பாலுள்ள உயிர்கள் மட்டத்திலான ஆய்வு புறவெளி உயிரியல் ஆகும்.
உயிரிகளுக்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவுகள் பற்றிய ஆய்வு சூழலியல் ஆகும்.
இவ்வாறே, மேலும் பல கற்கைத்துறைகளின் ஊடாக, உயிரியல் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றது.
நவீன உயிரியலின் அடிப்படைகள்
உயிரியலில் பல கோட்பாடுகள் இருந்தாலும், நவீன உயிரியலுக்கு அடிப்படையாக முதன்மை வாய்ந்த ஐந்து கோட்பாடுகள் கீழே கருதப்படுகின்றன:
கலக்கோட்பாடு - உயிர்க்கலங்களுடன் தொடர்புடைய அனைத்துக் கற்கைகளும் கலக்கோட்பாட்டில் அடங்கும். அனைத்து உயிரினங்களும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவகை உயிர்க்கலங்களைக் கொண்டிருக்கும். உயிரிகளின் கட்டமைப்பு வகையிலும் தொழிற்பாட்டு வகையிலுமான அடிப்படை அலகு உயிர்க்கலமாகும். அனைத்து உயிர்க்கலங்களும் முதலிலுள்ள கலங்களிலிருந்தே தோன்றும்.
படிமலர்ச்சிக் கோட்பாடு - மரபணுவில் ஏற்படும் மாற்றங்களாலும், இயற்கைத் தேர்வினாலும், ஒரு மக்கள்தொகையின் மரபுபேற்றுப் பண்புகள் தலைமுறைக்குத் தலைமுறை மாற்றமடையும். இதனால் புதிய இனங்களும், பரம்பரையாகக் கடத்தப்படக்கூடிய இயல்புகளும் உருவாகின்றன என படிமலர்ச்சிக் கோட்பாடு கொள்கிறது.
ஆற்றல் - அனைத்து உயிரினங்களின் நிலைப்பாட்டிற்கும் ஆற்றல் தேவைப்படுகின்றது. அந்த ஆற்றலை ஒரு வடிவத்தில் உள்ளெடுத்து, தமக்குத் தேவையான வடிவத்தில் உருமாற்றம் செய்துகொள்ளும் தன்மையை உயிரினங்கள் கொண்டிருக்கின்றன.
அகநிலைப்புக் கோட்பாடு - அனைத்து உயிரினங்களும் தமது உடற்சூழலை நிலையாகவும், மாறாமலும் பேணிச் சீரமைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும் என அகநிலைப்புக் கோட்பாடு கொள்கிறது..
மரபனியல் கோட்பாடு – மரபன் எனும் மரபணுவே மரபுபேற்றுக்கான அடிப்படை அலகாகும் என மரபனியல் கோட்பாடு கருதுகிறது.. ஓர் உயிரினத்தின் பண்புகள் அனைத்தும் டி.என்.ஏ எனும் மரபனில் இருக்கும்.
உயிரியலில் படிநிலை அமைப்பு
உயிரியல் அமைப்பானது, பல்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. வாழ்வின் மிக அடிப்படையான கூறிலிருந்து, சிக்கலான அமைப்புக்கள்வரை இந்தப் படிநிலைகள் விரிந்து செல்கின்றன. இந்தப் படிநிலைகளில் மிகவும் அடிப்படையான படிநிலையாக அணுவும், மிக உயர்ந்த படியாக சூழலியல் அமைப்பும் இருக்கின்றன.
அணுவின் துணையான பகுதிகள் - இலத்திரன், நியூட்ரான், புரோட்டான்
அணு - தனிமத்தின் இயல்புகளைத் தக்க வைத்திருக்கக்கூடிய, அதன் மிகச் சிறிய அலகு அணுவாகும். (எ.கா. ஐதரசன் அணு, ஆக்சிசன் அணு.
மூலக்கூறு - ஒரு தனித்த தனிமத்தினதோ, அல்லது வேறுபட்ட தனிமங்களினதோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் இணைந்து உருவாகும் மிகச் சிறிய அலகு மூலக்கூறு ஆகும். எ.கா. இரு ஐதரசன் அணுக்களும் ஒரு ஆக்சிசன் அணுவும் இணைந்து நீர் மூலக்கூறு உருவாகும்.
பெருமூலக்கூறு - இவ்வாறு பல அணுக்கள் இணைந்து உருவாகும் பெரிய, சார்பில் அதிக மூலக்கூற்று நிறை கொண்ட, சிக்கலான மூலக்கூறுகள் பெருமூலக்கூறு எனப்படும். எ.கா. கருவமிலம், புரதம், காபோவைதரேட்டு, லிப்பிடு
உயிர்க்கலம் - பல மூலக்கூறுகள் சேர்ந்து தன்னைத்தானே இனப்பெருக்கம் செய்து வாழக்கூடிய ஒரு சிறிய அலகை உருவாக்கும்போது, அந்த அலகு உயிரணு அல்லது உயிர்க்கலம் எனப்படும். உயிரணுவானது தனியாகவோ, அல்லது பல்கல உயிரினங்களின் ஒரு பகுதியாகவோ காணப்பட்டு உயிர்வாழக் கூடிய நிலையில் இருக்கும்.
இழையம் - ஒரே அமைப்பைக் கொண்ட பல உயிரணுக்கள் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டிற்காக ஒன்றாக இணைந்து, ஒரு குழுவாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்போது, அது இழையம் அல்லது திசு எனப்படும். எ.கா. புறவணியிழையம், தசையிழையம்.
உறுப்பு - சில செயல்களைப் புரிவதற்காக பல வேறுபட்ட இழையங்கள் ஒன்றாக இணைந்து தொழிற்படும்போது, அது உறுப்பு எனப்படும். எ.கா. இதயம், நுரையீரல், கண் போன்ற உறுப்புக்களில் தசையிழையம், நரம்பிழையம் போன்ற வேறுபட்ட பல இழையங்கள் ஒன்றாக இணைந்து தொழிற்படும்.
தொகுதி - ஒரு குறிப்பிட்ட உடலியக்கச் செயற்பாட்டிற்காக பல உறுப்புக்கள் ஒன்றாக இணைந்து ஒரு குழுவாக இருக்கும்போது அது உடல் தொகுதி எனப்படும். எ.கா. மனிதர்களில் வாய், உணவுக்குழாய் (களம்), இரைப்பை, கணையம், கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலவாய் (குதம்) போன்ற உறுப்புக்கள் இணைந்து, மனித உடல் தொகுதிகளில் ஒன்றான, உடலின் சமிபாட்டுச் செயல்முறைக்கான சமிபாட்டுத்தொகுதியை உருவாக்கும்.
உயிரினம் - தனியான உயிரணுவைக் கொண்ட அல்லது பல உயிரணுக்களைக் கொண்ட தனித்து வாழக்கூடிய தனியன்களின் குழுமல் உயிரினம் எனப்படும்.
மக்கள்தொகை - ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனத்தின் குழுவே மக்கள்தொகை எனப்படும்.
சமூகம் - ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் வாழும் வேறுபட்ட இனங்களின் மக்கள்தொகைகளைக் கூட்டாகச் சேர்த்து சமூகம் எனலாம்.
சூழல் மண்டலம் - ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் இருக்கும் ஒரு சமூகமும், அது சார்ந்திருக்கும் அனைத்து சூழலியல் காரணிகளும் இணைந்து சூழல்மண்டலம் எனப்படும். எ.கா. காடு, காட்டில் வாழும் விலங்குகள், தாவரங்கள், அங்கே ஒளி தரும் சூரியன், மண், நீர் அனைத்தும் இணைந்ததே சூழல்மண்டலம்.
உயிர்க்கோளம் - புவியில் உள்ள அனைத்து சூழல் மண்டலங்களும் இணைந்த தொகுப்பையே உயிர்க்கோளம் என்கின்றோம்.
உயிரியல் கிளைப்பிரிவுகள்
பின்வருவன உயிரியலின் கிளைப்பிரிவுகள் ஆகும்:
காற்றுயிரியல் – காற்றுவழி பிறக்கும் கரிமத் துகள்களைப் பற்றிய ஆய்வு
வேளாண்மை – நடைமுறைப் பயன்பாடுகளுக்காக, பயிரிடலும் கால்நடை வளர்ப்பும் பற்றிய ஆய்வு
உடற்கூற்றியல் – நிலைத்திணைகள் (தவரங்கள்), விலங்குகள், பிற உயிரிகள் குறிப்பாக மாந்தர்கள் ஆகியவற்ரின் வடிவமும் செயல்பாடும் பற்றிய ஆய்வு
இழையவியல் – உயிர்க்கலங்கள், இழையங்களைப் (திசுக்கள்) பற்றிய ஆய்வு. இது உடற்கூற்றியலின் நுண்ணோக்கிவழி ஆய்வாகும்.
விண்ணுயிரியல் (புறவெளி உயிரியல், புறவெளித் தொல்லுயிரியல், உயிர்வானியல்) – புடவியில் உயிரின் படிமலர்ச்சி, பரவல், வருங்காலம் பற்றிய ஆய்வு
உயிர்வேதியியல் – உயிர் நிலவவும் செயல்படவும் தேவைப்படும் உயிர்க்கல மட்ட வேதிவினைகளைப் பற்றிய ஆய்வு
உயிரிப் பொறியியல் – the study of biology through the means of engineering with an emphasis on applied knowledge and especially related to biotechnology
புவியுயிர்ப்பரப்பியல் – the study of the distribution of species spatially and temporally
உயிரித் தகவலியல் – the use of information technology for the study, collection, and storage of genomic and other biological data
உயிரின மொழியியல் – the study of the biology and evolution of language.
கணித உயிரியல் (or Mathematical biology) – the quantitative or mathematical study of biological processes, with an emphasis on modeling
உயிரியக்கவியல் – often considered a branch of medicine, the study of the mechanics of living beings, with an emphasis on applied use through prosthetics or orthotics
உயிர்மருத்துவ ஆராய்ச்சி – the study of health and disease
மருந்தியல் – the study and practical application of preparation, use, and effects of drugs and synthetic medicines
உயிரிசையியல் – the study of music from a biological point of view.
உயிரியற்பியல் – the study of biological processes through physics, by applying the theories and methods traditionally used in the physical sciences
உயிர்சார் குறியியல் – the study of biological processes through semiotics, by applying the models of meaning-making and communication
உயிரித் தொழினுட்பம் – the study of the manipulation of living matter, including genetic modification and synthetic biology
தொகுப்புயிரியல் – research integrating biology and engineering; construction of biological functions not found in nature
கட்டிட உயிரியல் – the study of the indoor living environment
தாவரவியல் – the study of plants
உயிர்க்கலவியல் – the study of the cell as a complete unit, and the molecular and chemical interactions that occur within a living cell
அறிதல்சார் உயிரியல் – the study of cognition as a biological function
பேணல் உயிரியல் – the study of the preservation, protection, or restoration of the natural environment, natural ecosystems, vegetation, and wildlife
தாழ்வெப்ப உயிரியல் – the study of the effects of lower than normally preferred temperatures on living beings
வளர்ச்சி உயிரியல் – the study of the processes through which an organism forms, from zygote to full structure
கருவியல் – the study of the development of embryo (from fecundation to birth)
சூழலியல் – the study of the interactions of living organisms with one another and with the non-living elements of their environment
சுற்றுச்சூழல் உயிரியல் – the study of the natural world, as a whole or in a particular area, especially as affected by human activity
கொள்ளை நோயியல் – a major component of public health research, studying factors affecting the health of populations
படிமலர்ச்சி உயிரியல் – the study of the origin and descent of species over time
மரபனியல் – the study of genes and heredity.
புறமரபியல் – the study of heritable changes in gene expression or cellular phenotype caused by mechanisms other than changes in the underlying DNA sequence
குருதியியல் (also known as Haematology) – the study of blood and blood-forming organs.
தொகுநிலை உயிரியல் – the study of whole organisms
நன்னீரியல் – the study of inland waters
கடல் உயிரியல் (or Biological oceanography) – the study of ocean ecosystems, plants, animals, and other living beings
நுண்ணுயிரியல் – the study of microscopic organisms (microorganisms) and their interactions with other living things
குச்சுயிரியல் – the study of bacteria
பூஞ்சையியல் – the study of fungi
ஒட்டுண்ணியியல் – the study of parasites and parasitism
நச்சுயிரியல் – the study of viruses and some other virus-like agents
மூலக்கூற்று உயிரியல் – the study of biology and biological functions at the molecular level, some cross over with biochemistry
மீநுண் உயிரியல் – the study of how nanotechnology can be used in biology, and the study of living organisms and parts on the nanoscale level of organization
நரம்பியல் – the study of the nervous system, including anatomy, physiology and pathology
மக்கள்தொகை உயிரியல் – the study of groups of conspecific organisms, including
உயிர்த்திரள் சூழலியல் – the study of how population dynamics and extinction
மக்கள்தொகை மரபனியல் – the study of changes in gene frequencies in populations of organisms
தொல்லுயிரியல் – the study of fossils and sometimes geographic evidence of prehistoric life
நோயியல் – the study of diseases, and the causes, processes, nature, and development of disease
உடலியங்கியல் – the study of the functioning of living organisms and the organs and parts of living organisms
Phytopathology – the study of plant diseases (also called Plant Pathology)
உள உயிரியல் – the study of the biological bases of psychology
குவைய உயிரியல் – the study of quantum mechanics to biological objects and problems.
சமூக உயிரியல் – the study of the biological bases of sociology
கட்டமைப்பு உயிரியல் – a branch of molecular biology, biochemistry, and biophysics concerned with the molecular structure of biological macromolecules
விலங்கியல் – விலங்கின வகைபாடு,உடலியங்கியல், வளர்ச்சி, நடத்தை ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு . இதில் பின்வரும் புலங்கள் அடங்கும்.
நடத்தையியல் – விலங்கு நடத்தையைப் பற்றிய ஆய்வு
பூச்சியியல் – பூச்சிகளைப் பற்றிய ஆய்வு
ஊர்வனவியல் – ஊர்வன பற்றிய ஆய்வு and amphibians
மீனியல் – மீன்களைப் பற்றிய ஆய்வு
பாலூட்டியியல் – பாலூட்டிகளைப் பற்றிய ஆய்வு
பறவையியல் – பறவைகளைப் பற்றிய ஆய்வு
குருத்தணுவியல் ஆராய்ச்சிகளில் மனித நகலெடுப்பதற்கும், நோயாலோ அல்லது காயப்பட்டு சிதைந்து போவதாலோ அழியும் திசுக்களைத் திரும்ப வளரச் செய்வதற்கும், குருத்துத் திசுக்களை பயன்படுத்தலைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.
படங்களின் தொகுப்பு
மேற்கோள்கள்
உயிரியல் துறைச்சொற்கள் |
1719 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D | கட்டிடம் | கட்டடம் அல்லது கட்டிடம் (Building) என்பது பல கூறுகளை இணைத்து உருவாக்கப்படும் ஒன்றாகும். மனிதனால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் நிலத்துடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.
கட்டடம் ஒரு தனிக் குடியிருப்பாளரை மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கூரை மட்டும் கொண்ட ஒரு குடிசையாகவோ அல்லது வெப்பநிலை, காற்றோட்டம், வெளிச்சம், வாயுக் கொள்ளளவு, பக்டீரியா நடமாட்டம், அமுக்கம், மக்கள் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வசதிகளைக் கொண்ட, சிக்கலான, மருத்துவ மனைகள் போன்ற கட்டிடங்களாகவோ இருக்கக்கூடும். சிக்கலான அமைப்புகளும், வசதிகளும் தேவைப்படும் கட்டடங்கள், கட்டிடக்கலைஞர்கள், அமைப்புப் பொறியாளர்கள், கட்டிடச் சேவைகள் பொறியாளர்கள் உட்படப் பல்வேறு தொழில் வல்லுநர்களின் உதவியுடன் கட்டப்படுகின்றன. எனினும் வீடுகள் போன்ற சிறிய, எளிமையான கட்டிடங்களில் நிபுணர்களின் பங்களிப்புகள் குறைவாகவேயிருக்கும். வளர்ந்துவரும் நாடுகளில் மிகக் குறைந்த வீதமான மக்களே கட்டடம் கட்டுவதற்குத் தொழில் நிபுணர்களின் பங்களிப்பை நாடுகின்றார்கள்.
பொதுவாக எல்லா நாடுகளிலும் பெரு நகரப்பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்களில் உரிய நிபுணர்களின் பங்களிப்பு இன்றிக் கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை அதற்குரிய அதிகாரம் பெற்ற நிறுவனங்களிலிருந்து பெறமுடியாது.
கட்டடம் கட்டப்படுகின்ற சூழல், உரிமையாளர்களின் நிதி நிலை, நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் என்பவற்றைப் பொறுத்துக் கட்டிடங்களில் கட்டிடப் பொருட்களின் பயன்பாடு அமைகின்றது.
கட்டிடங்களின் வகைகள்
கட்டடங்கள் அவற்றின் அமைவிடம், பயன்பாடு, அமைப்பு, பயன்படுத்தும் கட்டுமான பொருள், ஆகியவற்றைப் பொருத்து பல வகைகளில் பிரிக்கப்படுகிறது .
பயன்பாட்டை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு
குடியிருப்புக் கட்டடங்கள்
சட்டசபைக் கட்டடங்கள்
கல்விசார்ந்த கட்டடங்கள்
தொழில் சார்ந்த கட்டடங்கள்
கட்டிட உறுப்புக்கள்
ஒரு கட்டடம் பல வகையான கட்டிடக் கூறுகள் சேர்ந்து அமைந்த ஒன்று. இத்தகைய கூறுகள் சிலவற்றைக் கீழேயுள்ள பட்டியல் காட்டுகின்றது.
அத்திவாரம்
சுவர்
தூண்
கதவு
சாளரம்
கூரை
படிக்கட்டு
விதானம்
தரை
பீடம்
சாய்வுப் பாதைகள்
கட்டமைப்பு சுமைகள்
ஒரு கட்டிடமானது பலவகை சுமைகளுக்கு உட்படுகிறது .
நிலைச்சுமைகள்
சுமத்திய சுமைகள்
காற்று சுமைகள்
பனி சுமைகள்
நிலஅதிர்வுச் சுமைகள்
இவற்றையும் பார்க்கவும்
ஒளியமைப்பு
கட்டிடச் சக்தி மேலாண்மை முறைமை
மேற்கோள்கள்
கட்டிடக்கலை
கட்டடங்கள் |
1720 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D | கட்டிடப் பொருள் | கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்கள் பொதுவாகக் கட்டிடப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன. பல்வேறு வகையான கட்டிடப் பொருட்கள் இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ளன. மிகப்பழைய காலத்தில் கட்டிடம் கட்டப்படும் இடங்களுக்கு அண்மையில் கிடைக்கக் கூடிய பொருட்களையே கட்டிடங்கள் கட்டப் பயன்படுத்தினார்கள். போக்குவரத்து வசதிகள் குறைந்த அக் காலத்தில், அரசர்களும், பெருந் தனவந்தர்களும் மட்டுமே தூர இடங்களிலிருந்து பொருட்களை எடுத்துவந்து கட்டிடங்களைக் கட்ட இயலும். பெரும்பான்மையான சாதாரண பொது மக்கள், தமது வாழிடங்களையும், பிற கட்டிடங்களையும் சூழலில் கிடைக்கக் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியே கட்டிக் கொண்டார்கள். காட்டுமரக் கிளைகள், இலைகுழைகள், புற்கள், கற்கள், மண், விலங்குகளின் தோல், ஏன் பனிக் கட்டிகள் கூடக் கட்டிடப் பொருட்களாகப் பயன்படுகின்றன. மேலே குறிப்பிட்ட பொருட்கள் மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டத் தொடங்கிய ஆரம்ப காலங்களிலேயே உபயோகத்திலிருந்தும், இன்றுவரை உலகின் பல பகுதிகளிலும் இவை உபயோகத்திலிருந்து வருகின்றன.
முக்கியமான கட்டிடப் பொருள்கள்
மண்
சிறிய குடிசைகளை மட்டுமன்றிப் பெரும் நகரங்களையே கூட உருவாக்கிய பெருமை மண்ணுக்கு உண்டு. மண்ணால் கட்டப்படும் கட்டிடங்கள் நிரந்தரமானவையல்ல என்ற கருத்தே பொதுவாக நிலவினாலும், மண்ணால் கட்டப்பட்ட கட்டிடங்கள் பல ஆயிரக்கணக்கான வருடங்கள்கூட நிலைத்திருந்ததற்குச் சான்றுகள் உண்டு. பல நவீன கட்டிடப் பொருட்கள் போலன்றி, மண், புதுப்பிக்கப்படக்கூடியது. கட்டிடங்கள் அழிந்து போகும்போது மீண்டும் மண்ணுடனேயே கலந்துவிடக்கூடியது.
கல்
இயற்கையில் கிடைக்கும் பல்வேறு வகையான கற்கள் மிகப் பழங் காலத்திலிருந்தே கட்டடப் பொருளாகப் பயன்பட்டு வருகின்றது. சுண்ணாம்புக் கற்கள், மாபிள் கல், கருங்கல், மணற்கல் என்பவை இவற்றுள் முக்கியமானவை. நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டுமென விரும்பிய கட்டிடங்கள் இவ்வாறான ஏதாவதொரு கல்லைப் பயன்படுத்தியே கட்டப்பட்டன.
மரம்
தூண்கள், உத்தரங்கள், கூரைக்கான சட்டகங்கள், கதவுகள், யன்னல்கள், தளம், அலங்காரத்துக்குரிய கட்டிடக் கூறுகள் எனப் பலவாறாகக் கட்டிடங்களில் மரம் பயன்படுகின்றது.உலகின் பல பாகங்களில் மரம் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பொருளாக இருந்து வந்தது. இது ஒரு புதுப்பிக்கப்படக்கூடிய கட்டடப்பொருளுமாகும். எனினும், கட்டிடம் கட்டுதல், தளபாட உற்பத்தி, விறகு போன்ற பல்வேறு தேவைகளுக்காகவும், விவசாய விரிவாக்கம், நகராக்கம் என்பவற்றாலும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டமையால் மரம், பல நாடுகளில் ஒரு விலைகூடிய பொருளாக இருந்துவருகிறது. சுற்றுச் சூழல் காரணங்களுக்காகக் காடுகள் அழிவதைத் தடுக்கும் நோக்கிலும், பலத் தேவைகளுக்காகவும் மரத்துக்குப் பதிலாக வேறு கட்டிடப் பொருட்கள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டிலுள்ளன. ஆனாலும் மரம் இன்றும் ஒரு முக்கியமான கட்டிடப் பொருளே.
சுண்ணாம்பு
சீமெந்து
சீமைக்காரை அல்லது சீமெந்து என்பது மிக முக்கியமான கட்டுமான பொருளாகும் .இந்த சீமைக்காரையே கட்டுமானத்தின் அனைத்து வேலைப்பாடுகளிலும் முக்கியமானதாகும்
காங்கிறீற்று
இரும்பு
உருக்கு
கண்ணாடி
பிளாஸ்ட்டிக்கு
கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கு
கண்ணாடியிழைக் காங்கிறீற்று
இவற்றையும் பார்க்கவும்
பசுமைக் கட்டிடப் பொருள்
மேற்கோள்கள்
கட்டிடப் பொருட்கள்
கட்டிடக்கலை |
1721 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF | கண்ணாடி | கண்ணாடி என்று பொதுவாகக் குறிப்பிடும்போது இது, சாளரங்கள், போத்தல்கள், மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றின் உற்பத்தியில் பயன்படுவதும்; கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய, பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது. தொழில்நுட்ப அடிப்படையில், கண்ணாடி என்பது குளிர்ந்து பளிங்காகாமல் திண்மமாகிய கனிமப் பொருட் கலவை ஆகும். பெரும்பாலான கண்ணாடிகள் சிலிக்காவை முக்கிய கூறாகவும், கண்ணாடி உருவாக்கியாகவும் கொண்டுள்ளன. அறிவியல் அடிப்படையில் கண்ணாடி என்பது நெகிழிகள், பிசின்கள், பிற சிலிக்காவைக் கொண்டிராத பளிங்குருவற்ற திண்மங்கள் போன்ற எல்லாப் பளிங்குருவற்ற திண்மங்களையும் குறிக்கப் பயன்படுவதுண்டு. இது தவிர மரபு வழியான உருக்கும் நுட்பங்கள் தவிர்ந்த வேறு முறைகளையும் கவனத்துக்கு எடுத்துக் கொள்வது உண்டு. எனினும், கண்ணாடி அறிவியல் கனிம பளிங்குருவற்ற திண்மங்களை மட்டுமே உள்ளடக்குகின்றது. கரிம பளிங்குருவற்ற திண்மங்கள் பல்பகுதிய அறிவியல் துறையுள் அடங்கும்.
கண்ணாடி இன்று பல்வேறு அறிவியல் துறைகளிலும், தொழில் துறைகளிலும் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் ஒளியியல் இயல்புகளும், பிற இயற்பியல் இயல்புகளும் இதனைத் தட்டைக் கண்ணாடி, கொள்கலக் கண்ணாடி, ஒளியியல் மற்றும் ஒளிமின்னணுவியல் சார்ந்த பொருட்கள், சோதனைச்சாலைக் கருவிகள், வெப்பக்காவலிகள், வலிதாக்கல் கண்ணாடி இழைகள், கலைப் பொருட்கள் போன்றவற்றுக்கு உகந்த பொருளாக ஆக்குகின்றது.
இது இன்று ஒரு முக்கியமான கட்டிடப் பொருளாக விளங்குகிறது. கண்ணாடி கிறித்துவுக்கு முன் 4000 ஆண்டுகளிலேயே அறியப்பட்டிருந்ததாகக் கருதப்படினும், கட்டிடப் பொருள் என்ற அளவில் இதன் பயன்பாடு 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. கடந்த நூற்றாண்டிலேயே இது பெருமளவு வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை அடைந்ததெனலாம். கண்ணாடி, இன்றைய கட்டிடங்களில், நவீனத்துவத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது.
கண்ணாடியின் வரலாறு
பண்டைக்கால எகிப்தின் அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்கள் செய்யப் பயன்பட்ட கண்ணாடி மணிகள் கிமு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையெனக் கருதப்படுகின்றது. சிலிக்காக் கலவையினால் செய்யப்பட்ட சிறு அச்சுகளை உருகிய கண்ணாடிக்குள் தோய்த்து சிறு கண்ணாடிக் குவளைகள் செய்யும் முறை கிமு 1500ஐ அண்மித்த ஆண்டுகளில் உபயோகத்திலிருந்ததும் அறியப்பட்டுள்ளது. நீண்ட குழாய்களை உருகிய கண்ணாடிக் குழம்பினுள் தோய்த்து ஊதுவதன் மூலம் பல்வேறு பொருட்களைச் செய்யும் முறை கிமு 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பபிலோனியாவில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின் கண்ணாடியில் பாத்திரங்கள் செய்வது இலகுவானது.
உரோமன் காலத்தைச் சேர்ந்த அரை அங்குலம் தடிப்புள்ள பெரிய கண்ணாடிப் பலகையொன்று அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனினும் மேற்பரப்பைத் தேய்த்து அவற்றை ஒளிபுகவிடும் கண்ணாடியாக மாற்றும் முறையை அவர்கள் அறிந்திராததால் இவ்வாறான கண்ணாடித் தகடுகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. 1700கள் வரை கண்ணாடித் தகடுகளைச் செய்யும் முறை வளர்ச்சிபெறவில்லை. 17 ஆம் நூற்றாண்டில், கண்ணாடிக் குழம்பை ஊதும் முறையைப் பயன்படுத்திச் சிறிய தகடுகளைச் செய்யும் முறையொன்றைப் பிரான்சு நாட்டில் உருவாக்கினார்கள். இதன்படி ஓரளவு பெரிதாக ஊதிய குமிழ்களை மீள இளகவைத்துச் சுழற்றுவதன் மூலம் வட்டமான கண்ணாடித் தகடுகள் உருவாகின. இவ்வாறு உருவாக்கப் பட்ட கண்ணாடித் தகடுகளே ஆரம்பகாலக் கண்ணாடி யன்னல்களில் பயன்படுத்தப்பட்டன. வட்டக் கண்ணாடிகளிலிருந்து சதுரமான அல்லது நீள்சதுரமான சிறிய தகடுகள் வெட்டப்பட்டன. கிடைக்கக் கூடிய கண்ணாடிகளின் அளவு சிறிதாக இருந்ததால் ஒரு யன்னலில் அல்லது கதவில் பல கண்ணாடித் தகடுகளைப் பொருத்தவேண்டியிருந்தது. இத்தகைய யன்னல்கள் இன்றும் "பிரெஞ்ச் யன்னல்"கள் என்றே அறியப்படுகின்றன.
மேற்படி முறையில் செய்யப்பட்ட கண்ணாடிகள் அளவிற் சிறியனவாக இருந்தது மட்டுமன்றி, பல குறைபாடுகளையும் கொண்டிருந்தன. குமிழை ஊதும்போது குழாய் பிணைக்கப்பட்டிருந்த இடமும், சுழற்றியபோது ஏற்பட்ட மையப்பகுதியைச் சுற்றி உருவாகிய வளையம் வளையமான அடையாளங்களும் கண்ணாடித் தகடுகளில் காணப்பட்டன. இத்தகைய கண்ணாடிகளைத் தேய்த்து மட்டமாக்கும் முறை பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மட்டமான ஓரளவு தெளிவான கண்ணாடிகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது. ஆனாலும் இவற்றின் விலை சாதாரண மனிதருக்கு எட்டாத உயரத்திலேயே இருந்தது.
19 ஆம் நூற்றாண்டின் முதற் காலாண்டில் முன்னரிலும் பெரிய கண்ணாடித் தகடுகளை உருவாக்கும், "உருளை முறை" என அறியப்பட்ட முறையொன்று பயன்பாட்டுக்கு வந்தது.
இதிலும் ஊதலே அடிப்படையாக இருந்தாலும், குமிழை உதியபின் ஊசல் ஆடுவதுபோல் ஆட்டி நீளமான உருளைவடிவமாக ஆக்கப்பட்டது. இதனை இளக்கி இரண்டு அந்தங்களையும் வெட்டி நீக்கியபின்னர், நீளவாக்கில் வெட்டி விரிப்பதன் மூலம் தகடுகள் ஆக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட கண்ணாடித் தகடுகள் "உருளைக் கண்ணாடி"கள் எனப்பட்டன. பிரான்சில் முதலில் புழக்கத்துக்கு வந்த இம்முறை பிரித்தானியாவில் மேலும் விருத்தி செய்யப்பட்டது. இந்த முறையில் பிரித்தானியாவில் உற்பத்திசெய்யப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தியே புகழ்பெற்ற பளிங்கு அரண்மனை எனப்படும் கண்காட்சிகளுக்கான கட்டிடம் 1851 இல் கட்டப்பட்டது.
பின்னர் கண்ணாடி உற்பத்தி விரைவாக வளர்ச்சியடைந்தது. கண்ணாடியைச் சட்டகங்களில் உருக்கி வார்த்து உருளைகளால் உருட்டி மட்டமாக்கப்பட்டது. பின்னர் இரண்டு பக்கங்களையும் இயந்திரங்களிலிட்டுத் தேய்த்து மட்டமாக்கி, மினுக்கம் செய்யப்பட்டது. இது "பிளேட்" கண்ணாடி என வழங்கப்பட்டது. இதன் மூலம் ஓரளவு பெரிய கண்ணாடித் தகடுகளைச் செய்யக்கூடியதாக இருந்ததுடன், தெளிவான, நல்ல ஒளியியற் தன்மைகளுடன்கூடிய கண்ணாடிகளையும் பெறக்கூடியதாக இருந்தது.
உருக்கப்பட்ட கண்ணாடியைக் கொண்ட தொட்டியிலிருந்து, பல்வேறு மட்டங்களில் அமைக்கப்பட்ட உருளைகளினூடு இழுப்பதன் மூலம் தொடர்ச்சியாகக் கண்ணாடியை உருவாக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட கண்ணாடி "இழுக்கப்பட்ட" கண்ணாடி எனப்பட்டது. இதன் மூலம் மிகவும் பெரிய கண்ணாடித் தகடுகளைச் செய்வது சாத்தியமானதெனினும், இதையும் தேய்த்து மட்டமாக்கவேண்டிய தேவை இருந்தது.
1960களின் ஆரம்பத்தில் இவ்வாறு தேய்த்து மட்டமாக்கவேண்டிய தேவையில்லாத கண்ணாடி உற்பத்திமுறையொன்று அறிமுகமானது. இது "மிதப்புக்" கண்ணாடி எனப்பட்டது. இதில் உருகிய கண்ணாடியை, உருகிய தகரத்தின் மீது மிதக்கவிடுவதன் மூலம் தொடர்ச்சியான மிகவும் நீளமான கண்ணாடித் தகடுகள் செய்யப்பட்டன. இந்த முறையில் கண்ணாடிகளின் இரண்டு பக்கங்களும் முதலிலேயே மட்டமாக இருப்பதனால் தேய்த்து மட்டமாக்கவேண்டிய தேவை கிடையாது. இது அறிமுகமானதிலிருந்து இன்றுவரை இதுவே கண்ணாடி உற்பத்தியின் நியமமாக இருந்துவருகின்றது.
கண்ணாடி உற்பத்தி
கண்ணாடி மூலப் பொருட்கள்
தூய சிலிக்கா (SiO2), 10 பசுக்கால் செக்கன் பாகுநிலையில், 2300 °ச (4200 °ப) "கண்ணாடி உருகு நிலை"யைக் கொண்டது. தூய சிலிக்கா சில சிறப்புக் கண்ணாடித் தேவைகளுக்குப் பயன்படுகின்றது. ஆனால், சிலிக்காவுடன் பிற பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் உற்பத்தி முறைகளை எளிமையாக்கலாம். இவற்றுள் சோடியம் காபனேட்டும் (Na2CO3) ஒன்று. இது சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடியில் உருகு நிலையை 1500 °ச (2700 °ப) க்குக் குறைக்கின்றது. ஆனாலும், இது கண்ணாடியை நீரில் கரையக் கூடியது ஆக்குகிறது. இது விருப்பத்துக்கு உரியது அல்ல என்பதால், சுண்ணாம்புக்கல்லில் இருந்து பெறப்படும் கல்சியம் ஒட்சைட்டு (CaO), சிறிதளவு மக்னீசியம் ஒட்சைட்டு (MgO), அலுமீனியம் ஒட்சைட்டு போன்றவற்றைச் சேர்ப்பதன் மூலம் வேதியியல் உறுதிப்பாடு பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் கண்ணாடி, நிறை அடிப்படையில் சுமார் 70 தொடக்கம் 74% சிலிக்காவைக் கொண்டிருக்கும். இது சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடி எனப்படும். உற்பத்தியாகும் கண்ணாடிகளில் 90% ஆனவை சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடிகள் ஆகும்.
சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடிகள் உட்படப் பொதுவாக உற்பத்தி செய்யப்படும் கண்ணாடிகளுக்கு அவற்றின் இயல்புகளை மாற்றுவதற்காக வேறும் பல பொருட்களைச் சேர்ப்பது உண்டு. ஈயப் பளிங்குக் கண்ணாடி அல்லது தீக்கண்ணாடி எனப்படும் ஈயக் கண்ணாடிகள் அவற்றின் கூடிய முறிவுக் குணகம் காரணமாகக் கூடுதலாக ஒளிர்கின்றன. போரான் (boron) சேர்ப்பதன் மூலம் கண்ணாடிகளின் வெப்ப இயல்புகள், மின்னியல்புகள் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். பைரெக்ஸ் (Pyrex) எனப்படும் கண்ணாடி இத்தகையது. பேரியமும் கண்ணாடியின் முறிவுக் குணகத்தைக் கூட்டவல்லது. தோரியம் ஒட்சைட்டு கண்ணாடியின் முறிவுக் குணகத்தைக் கூட்டுவதுடன், ஒளிச் சிதறலையும் குறைப்பதால் முன்னர் தரமான கண்ணாடி வில்லைகளைச் செய்வதற்கு இதனைப் பயன்படுத்தினர். ஆனால் இச் சேர்வை கதிரியக்கம் கொண்டதால் தற்கால மூக்குக் கண்ணாடி வில்லைகளில் லந்தனம் ஒட்சைட்டு பயன்படுத்தப்படுகின்றது. அகச் சிவப்புக் கதிர்களை உறிஞ்சும் திறன் கொண்ட கண்ணாடிகளைச் செய்வதற்கு கண்ணாடிகளில் இரும்பு சேர்க்கப்படுகின்றது. செரியம்(IV) ஒட்சைட்டுச் சேர்ப்பதன் மூலம் புறஊதாக் கதிர்களை உறிஞ்சக்கூடிய கண்ணாடிகள் செய்யப்படுகின்றன.
மேலே குறிப்பிடப்பட்ட வேதிப் பொருட்களைத் தவிர மீள்பயன்பாட்டுக் கண்ணாடிகளையும் மூலப் பொருட்களுடன் சேர்ப்பது உண்டு. இது மூலப் பொருட்களைச் சேமிக்க உதவுவது மட்டுமன்றி உலைகளில் ஆற்றலைச் சேமிப்பதற்கும் உதவியாக உள்ளது. ஆனால், இவற்றில் இருக்கக்கூடிய மாசுப் பொருட்கள் உற்பத்திப் பொருட்களின் தரத்தைக் குறைப்பதுடன், கருவிகள் பழுதுபடுவதற்கும் காரணமாக அமையக்கூடும். கண்ணாடியில் இருக்கக்கூடிய குமிழிகளின் அளவைக் குறைப்பதற்கு சோடியம் சல்பேட்டு, சோடியம் குளோரைடு, அந்திமனி ஒட்சைட்டு என்பவை பயன்படுகின்றன.
சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடி உற்பத்தியில் "கலுமைட்டு" (calumite) என்னும் மூலப் பொருளும் பயன்படுத்தப்படுவது உண்டு. இது இரும்பு உற்பத்தித் தொழிற்சாலைகளில் துணை உற்பத்தியாகக் கிடைப்பது. கண்ணாடி போன்ற சிறு மணிகளாகக் காணப்படும் இப்பொருளில் சிலிக்கா, கல்சியம் ஒட்சைட்டு, அலுமினா, மக்னீசியம் ஒட்சைட்டு, சிறிய அளவில் இரும்பு என்பன உள்ளன.
சிலிக்கா இல்லாக் கண்ணாடிகள்
சிலிக்காவைத் தவிரப் பல வகையான கரிமச் சேர்வைகளில் இருந்தும், கனிமச் சேர்வைகளில் இருந்தும் கண்ணாடி செய்ய முடியும். இவற்றுள், நெகிழிகள், கரிமம், உலோகங்கள், காபனீரொட்சைட்டு, பொசுபேட்டுகள், போரேட்டுகள், சல்க்கோஜெனைட்டுகள், புளோரைட்டுகள், ஜேர்மனேட்டுகள், தெலுரைட்டுகள், அந்திமனேட்டுகள், ஆர்சனேட்டுகள், டைட்டனேட்டுகள், தந்தலேட்டுகள், நைத்திரேட்டுகள், காபனேட்டுகள் என்பன அடங்கும்.
கண்ணாடி இயற்பியல்
கண்ணாடியின் வரைவிலக்கணப்படி, அது உருகிய நிலையில் இருந்து சடுதியான வெப்பத்தணிப்பு மூலம் திண்மநிலைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதனால் கண்ணாடி பளிங்காகாமல் திண்மமாவதற்குப் போதிய அளவு விரைவாக மிகக்குளிர்ந்த திரவநிலைக்குக் கொண்டுவரப்படும். பொதுவாகக் கண்ணாடியின் கட்டமைப்பு அதன் பளிங்கு நிலையுடன் ஒப்பிடும்போது சிற்றுறுதி நிலையிலேயே இருக்கும்.
கண்ணாடியும், மிகைக்குளிர்ச்சியுற்ற நீர்மமும்
கண்ணாடி ஒரு பளிங்குருவற்ற திண்மம் என்பதேயன்றி நீர்மமாகக் கொள்ளப்படுவது இல்லை. கண்ணாடி ஒரு திண்மத்துக்கு உரிய எல்லாப் பொறிமுறை இயல்புகளையும் கொண்டுள்ளது. நீண்ட காலப்பகுதியில், கண்ணாடி பார்க்கக்கூடிய அளவுக்கு வழிந்தோடக் கூடியது என்னும் கருத்து சோதனை முறையிலோ, கோட்பாட்டு அடிப்படையிலான பகுப்பாய்வுகள் மூலமோ நிரூபிக்கப்படவில்லை. அன்றாட அனுபவங்களுக்கு ஏற்பக் கண்ணாடி இறுக்கமாக இருபதனால் பொது அறிவு நோக்கில் இதனை ஒரு திண்மமாகவே கொள்ள வேண்டும்.
இதற்கு முதல்வரிசை நிலை மாற்றம் இல்லாதிருப்பதால் கண்ணாடியை ஒரு நீர்மம் எனச் சிலர் கருதுகின்றனர். இந் நிலை மாற்றத்தின்போது சில வெப்பஇயக்கவியல் மாறிகளான கனவளவு, இயல்பாற்றல் (entropy), வெப்ப அடக்கம் (enthalpy) என்பன தொடர்ச்சியாகவே இருக்கின்றன. ஆனால், வெப்ப இயக்கவியல் மாறிகளான வெப்பக் கொள்ளளவு போன்றவை தொடர்ச்சியற்றவை ஆகக் காணப்படுவதால் கண்ணாடியின் நிலைமாற்ற வெப்பநிலையை ஒரு இரண்டாம் வரிசை நிலை மாற்றமாகக் கொள்ளமுடியும். இருந்தாலும், வெப்ப இயக்கவியலின் நிலைமாற்றக் கோட்பாடு கண்ணாடியின் நிலை மாற்றத்துக்கு முழுமையாகப் பொருந்துவதில்லை. இதனால் கண்ணாடி நிலை மாற்றத்தை உண்மையான வெப்பஇயக்கவியல் நிலை மாற்றமாகக் கொள்ள முடியாது.
பழைய கண்ணாடிகளின் நடத்தை
பழங்காலத்து சாளரக் கண்ணாடிகள் அடிப்பகுதியில் தடிப்புக் கூடியனவாக இருப்பது, நீண்ட காலத்தில் கண்ணாடி வழிந்தோடக் கூடியது என்னும் கருத்துக்குச் சான்றாக முன்வைக்கப்படுவது உண்டு. தொடக்கத்தில் அக் கண்ணாடித் தகடுகள் சீரான தடிப்புடன் இருந்தன என்றும் காலப்போக்கில் நீர்மங்களைப் போல் வழிந்ததால் அடிப்பகுதி தடிப்புக் கூடியதாக உள்ளது என்பதும் இதற்கான வாதம் ஆகும். ஆனால் அக்காலத்துக் கண்ணாடி உற்பத்தி முறை மூலம் சீரான தடிப்புள்ள கண்ணாடித் தகடுகளை உற்பத்தி செய்ய முடிவதில்லை. அக் கண்ணாடிகளைச் சாளரங்களின் சட்டங்களில் பொருத்தும்போது தடிப்பான பக்கம் அடிப்பகுதியில் இருக்கும்படி பொருத்துவது வழக்கம். சில சமயங்களில் கவனக் குறைவினால் தடிப்பான பக்கம் மேற்பகுதியிலோ அல்லது பக்கங்களிலோ இருக்கப் பொருத்தப் பட்டிருப்பதும் காணப்பட்டுள்ளது.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சாளரக் கண்ணாடிகள் பெரும்படியாக உற்பத்தி செய்யப்பட்ட போதும் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டன. உருகிய கண்ணாடி பெரிய குளிரூட்டும் மேசையில் ஊற்றப்பட்டுப் பரவ விடப்பட்டது இதனால் ஊற்றப்படும் இடத்தில் கண்ணாடி தடிப்புக் கூடியதாகக் காணப்பட்டது. பிற்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மிதப்புக் கண்ணாடிகள் சீரான தடிப்புக் கொண்டவை.
மேற்கோள்கள்
கட்டிடக்கலை
மூலப்பொருள்கள்
கண்ணாடிகள்
சிற்பக்கலைப் பொருட்கள் |
1724 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88 | பறவை | 'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளைக் குறிக்கும். பறவைகள் இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும். முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.
அறிமுகம்
மனிதர்தம் விரல் நீளமும் (5 செ.மீ அல்லது இரண்டேகால் அங்குலம்) 1.8 கிராம் எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான ஒரு வகை தாரிச்சிட்டு (ஓசனிச்சிட்டு) களிலிருந்து, 9 அடி உயரமும் 156 கிலோகிராம் எடையும் கொண்ட (பறக்காத) பெரிய தீக்கோழி மற்றும் ஈமியூ வரை, பறவைகள் பல பரும அளவுகளிலும் உள்ளன. அதிக எடையுள்ள 'பறக்கும்' பறவையான 'கானமயில்' (Great Indian Bustard) 18 கிலோ வரை பெருக்கும். பறவைகளில் மணிக்கு 160 கி.மீ விரைவில் பறக்கும் இனமும் உண்டு. நிலம், நீர், வானம் இவற்றில் விரைந்து நகரக்கூடிய விலங்கினங்கள் யாவற்றினும் மிக விரைந்து செல்லக்கூடியது பறவையினத்தைச் சேர்ந்த பொரி லகுடு (அ) அலையும் வல்லூறு(Falco peregrinus) என்னும் பறவையே. சில பறவைகள் நெடுந்தொலைவு ( 17,000 கி.மீ வரை) செல்ல வல்லன.
பல பறவைகள், பறப்பதையே முக்கியமான சிறப்பியல்பாகக் கொண்டிருப்பினும், சில பறவைகள் பறக்க முடியாதவையாகும். மற்றும் பல இனங்கள், குறிப்பாகத் தீவுகளில் வசிப்பவை பறக்குமியல்பை இழந்துவிட்டன. பறக்கமுடியாத பறவைகளுள், பென்குயின்கள், தீக்கோழிகள், நியூசிலாந்தின் கிவிகள், அழிந்துபோன டோடோக்கள் என்பன அடங்குகின்றன. பாலூட்டிகள் இன்மை அல்லது குறைவு என்ற சூழலில் (நியூசிலாந்து முன்பிருந்தது போன்ற சூழலில்) பறவைகள் பாலூட்டிகளின் சூழற்கூறை நிரப்பத் துவங்குகின்றன. இந்தப்படிமலர்ச்சியின்போது பறக்கும் தன்மையை அவை விடுக்கக்கூடும். மனிதர்கள் அல்லது மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படும் விலங்குகள் பறக்கமுடியாத பறவைகளின் வாழிடங்களுக்குள் வரும்போது, இப்பறவைகள் அழிந்து போவதற்கான வாய்ப்புகள் மிகுதி. பெரிய ஓக், பறக்கமுடியாத ரெய்ல் எனப்படும் ரால்லிடேக்கள் (Rallidae) கள், நியூசிலாந்தின் மோவாக்கள் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
பறவைகளின் உள்ளமைப்பு மற்ற வகைகளின் கலவையாக உள்ளது. பறவைகள் முதுகெலும்புள்ளவை. பாலூட்டிகளைப் (Mammals) போல நான்கு அறை இதயத்தையும் வெதுவெதுப்பான இரத்தத்தையும் கொண்டவை. இதன் காரணமாக சீரான தன் உடல் வெப்பத்தையும், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் தன்மையும் பெறுகின்றன. ஆனால் ஊர்வன (Reptiles) போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
உடலமைப்பு
சிறகுகள்
பறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் 'கெரோட்டின்'. நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோட்டின், ஆனால் நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும். இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவான ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற 'ஏரோடைனமிக்' மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது. பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம், குளிர் அகியவற்றிலிருந்து பறவைகளைக் காக்கிறது.
கண்கள்
பறவைகள் பெரும்பாலும் கூரிய பார்வை உடையன. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை மனிதர்களின் கண் இமையைப் போன்றது. கீழ் இமை தூங்கும் போது மட்டும் மூடிக் கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு. இது ஒளி ஊடுருவக்கூடிய தோல், கண்களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது.
காது
பறவைக்கு காது மிக முக்கியமானது. ஆனால் முழுவதும் உள்புறமாகவே அமைந்துள்ளது. கண்ணுக்குச் சற்று கீழே சிறிய துளை இருக்கும். பெரும்பாலும் சிறிய இறகுகளால் மூடப்பட்டிருக்கும். பறவைகளுக்கு காது ஒலியைக் கேட்பதற்காக மட்டுமல்லாமல் பறக்கும் போது ஈடான உடல் நிலைக்காகவும் தேவைப்படுகிறது.
மூளை
பறவைகளின் மூளை பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது விமானத்தைப் போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளுணர்வு, உடனடியாக உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின் அறிவுத் திறனும் வியப்பூட்டுமாறு சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியான பெருமூளைப் புறணி (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் மாந்தர்களுக்கும், பிற பாலூட்டிகளுக்கும் இல்லாத மீயடுக்கு மூளை (Hyperstriatum) என்னும் ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. பொதுவாக அறிவுத்திறனுக்கு உதவுவதாகக் கருதும் பெருமூளைப் புறணிக்கு மாறாக பறவைகளில் இந்த மீயடுக்கு மூளை இத்திறமைக்கு உறைவிடமாக இருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர், ஏனெனில் அறிவுத்திறம் கொண்டாதாகக் கருதப்படும் பறவைகளில் இப்பகுதி பெரிதாக இருக்கின்றது. இந்தப் பகுதியே பாடும் பறவைகள் பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனுக்கும் இதுவே காரணமாக இருக்கலாமென்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
அலகு
பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. வானம்பாடி போன்ற மலர்களில் தேன் குடிக்கும் பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை போன்ற ஊன்தின்னிப் பறவைகளுக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கவல்ல இரையை பிடித்துக் கொள்ள வாகான ரம்பம் போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, மரங்கொத்திப் பறவைக்கு உளி போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு.
இரை
பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை இரை தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில் உணவைச் சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி உண்பது அவசியமாகிறது.
பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு. காக்கை போன்றன இரண்டையுமே உண்கின்றன. சில பறவைகள் சிறப்பாக குறிப்பிட்ட இரைகளை மட்டுமே உண்ணும். எடுத்துக்காட்டாக, எவர்கிளேட் கைட் என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும். பறவைகளின் வயிறு சிறப்புத் திறன் பெற்றது. கடினமான கொட்டைகள், செல்பிசு போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை தின்னும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து தின்கின்றன. இவை வயிற்றில் கொட்டைகளை நொறுக்க உதவுகின்றன. குஞ்சுகளுக்கு இரை எடுத்துச் செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற உறுப்புக்களைக் கொண்டுள்ளன.
உறைவிடம்
இரவில் வேட்டையாடும் ஆந்தை போன்றவற்றைத் தவிர பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில் உறங்குகின்றன. குஞ்சு பொரிக்கும் காலங்களில் மட்டுமே கூட்டில் உறங்குகிறது. மற்ற நேரங்களில் கிளையோ, மரப்பொந்தோ, சில சமயம் ஒற்றைக் காலிலோ கிடைத்த இடத்தில் உறங்கிக் கொள்ளும். அவைகளுக்கு மனிதனைப் போல நீண்ட நேரத்தூக்கம் தேவைப்படுவதில்லை, மூளைக்கு ஓய்வளிப்பதற்காக் உறங்குவதுமில்லை. தசைகளை தளர்த்தவும், சக்தியைச் சேமிக்கவும் மட்டுமே தூக்கம் தேவைப்படுகிறது.
உருமறைப்பு
பல பறவையின் சிறகுகள் அவை வாழும் நிலத்திற்கு ஏற்றவாறும், அங்குள்ள மரஞ்செடி கொடிகளுக்கு ஏற்றவாறும், நிறத்திலும் சாயலிலும் ஒத்து உருமறைப்பு தன்மையைக் கொண்டிருப்பதால் அவற்றின் நிறமே அவற்றிற்கு தற்காப்பு அளிப்பதாக உள்ளன. உள்ளான், கானாங்கோழி போன்ற பறவைகள் மரங்களிலிருந்து விழும் தழைகளின் இடையிலும், புல் பூண்டு இவற்றின் இடையிலும் வாழ்கின்றன. அவற்றின் உடல் அமைப்பு வளைந்த கோடுகளையும் திட்டுக்களையும் கொண்டதாய் எளிதில் கண்டு கொள்ள முடியாதவாறு இருக்கின்றது. வேட்டையாடப்படுகின்ற கவுதாரி, காடை போன்ற பறவைகளின் நிறம் அவை வாழ்கின்ற வயல் மண்ணின் நிறம்போலப் பழுப்பாகவும் அங்கங்கே கரும்புள்ளிகள் உடையதாகவும் இருப்பதால், பக்கத்தில் போகும்போது கூட அவற்றை எளிதில் கண்டு கொள்ள முடியாது. கதிரவன் ஒளி பளிச்சென்று வீசும் பசுமையான தழைகள் அடர்ந்த இடங்களில் வாழும் பறவைகள் கரு நீலம், பச்சை , மஞ்சள், சிவப்பு, ஆகிய நிறங்களைக் கொண்டிருக்கின்றன. பகைவர்களின் கண்கள் கூசும்படியாக இந்த நிறங்கள் அமைந்துள்ளன.
வலிமையற்ற சில பறவைகளின் உருவம் வலிமையுள்ள வேறு இனத்தைச் சேர்ந்த பறவைகளின் உருவத்தை ஒத்திருப்பதாகவும் உள்ளன. வைரிபோலத் தோன்றும் கொண்டைக் குயில் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.
இணை
பெரும்பாலான பறவைகள் வாழ்நாளில் அல்லது குறைந்தது ஒரு கூடல்காலத்திற்காவது ஒரே இணையுடன் வாழ்பவை. வழக்கம் போல் இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. பாடுகின்ற பறவைகள் பாட்டாலேயே தங்கள் துணையைப் பிடிக்கின்றன. பெரும்பாலும் சத்தமாக நீளமாக பாடும் ஆணின் பாட்டிற்குத் தான் பெண் மயங்கி வந்து சேரும். மற்ற பறவைகள் தங்கள் இறகு அலங்காரத்தால் துணையை அசத்துகின்றன.
ஆண், பெண் இரண்டுமே முட்டையை அடைகாப்பதுண்டு. வெளிவரும் குஞ்சுகளில் பொதுவாக 10% மட்டுமே ஓர் ஆண்டு தாண்டி உயிர் வாழ்கிறது.
இடப்பெயர்ச்சி
உணவுத் தேவைகளுக்காகவும் மிக வெப்பம், மிகவும் குளிர் கால நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள் வருடாந்த இடப்பெயர்ச்சி செய்கின்றன. கடல் பறவைகள் மிக அதிக தூரம் (சில வகைகள் ஒரு வருடத்தில் 32,000 கிமீ வரை) பயணிக்கின்றன.
இடப்பெயர்ச்சி செய்யும் போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான இடத்திற்கு சென்று சேர்கிறது. பகலில் சூரியனின் திசையைக் கொண்டும், இரவில் சில நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், பூமியின் காந்த அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக் கொண்டும், சில தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளைக் கொண்டும் பாதையை உணர்ந்து கொள்கின்றன.
பறவைகள் கூட்டமாகச் செல்லும் போது 'V' போன்ற வடிவத்தில் பறப்பதைப் பார்த்திருக்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல் பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால் செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது.
தனியே பறந்து செல்லும் முன்னனுபவமில்லாத (முன்துய்ப்பில்லாத) சில இளம் பறவைகள் சமயங்களில் வழி தப்பி அதன் இனம் செல்லும் வழக்கமான வழியை விட ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி வந்து விடுவதையும் காணலாம்.
படிமலர்ச்சி
விஞ்ஞானிகள் தொன்மாக்களிலிலிருந்து பறவைகள் தோன்றினவா என்று ஆய்ந்திருக்கிறார்கள். டினோசாரின் ஒரு வகையான தெரொபோட் (Theropod) இனத்திலிருந்து பறவைகள் தோன்றின என்று ஒரு சாராரும், அதற்கு முன்பே தெகோடோன்ட்லிருந்து (Thecodont) (இது டினோசாரின் மரபுவழி முன்னோடி) பறவைகள் உருவானது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். பறவைகளின் படிமலர்ச்சி (பரிணாம வளர்ச்சி) பற்றிய ஆய்வுகளில் தொல்லுயிர் படிவங்கள் பெரிதும் துணையாயிருக்கின்றன. இவற்றுள் 1861-ம் ஆண்டு செருமனியிலுள்ள பவேரியாவில் ஒரு சுண்ணாம்புக் காளவாயில் கிடைத்த புதைபடிவம் குறிப்பிடத்தக்கது. அது 14 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வா்ழ்ந்த தொல்சிறகி (Archeopteryx) என்ற பறவையினுடையது. வாயில் பற்கள், அசைக்கத்தக்க மூன்று விரல்கள், சிறகில் நகங்கள் என மரக்கிளைகளில் தொற்றித்தாவும் வசதிகளையும் பெற்றிருந்த அவ்விலங்கு தொன்மாக்களுக்கும் இன்றைய பறவைகளுக்கும் இடைப்பட்ட படிமலர்ச்சிநிலையில் இருந்திருக்கக் கூடும்.
பறப்பதைப் பற்றியும் இரு கருத்துக்கள் உள்ளன. பறவைகளின் முன்னோர்கள் மரத்துக்கு மரம் தாவி அப்படியே பறக்கத் துவங்கினர் என்று சிலர் சொன்னாலும், நிலத்திலிருந்து இரைக்காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாவித் தாவி பறக்கத் துவங்கியதாக பொதுவாக நம்புகின்றனர்.
இவ்வாறு இரு கருத்துக்கள் இருந்தாலும் 'கிரெடாசியசு' (Cretaceous) யுகத்தில், அதாவது 138 மில்லியன் ஆண்டுகள் முன்பிலிருந்து 65 மில்லியன் வருடங்கள் முன்பு வரை உள்ள காலகட்டத்தில், பறவைகள் இருந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன.
பறவை இனங்கள்
முக்குளிப்பான் வரிசை- Order Podicipediformes
கூழைக்கடா வரிசை- Order Pelecaniformes
நாரை வரிசை - Order Ciconiformes
வாத்து வரிசை - Order Anseriformes
வைரி வரிசை - Order Falconiformes
கோழி வரிசை - Order Galliformes
உள்ளான் வரிசை - Order Charadmiiformes
புறா வரிசை - Order Columbiformes
கிளி வரிசை - Order Psittaciformes
குயில் வரிசை - Order Cuculiformes
ஆந்தை வரிசை - Order Strigiformes
சாவுக்குருவி வரிசை - Order Caprimulgiformes
முன்னி வௌவால் வரிசை - Order Apodiformes
மனிதனும் பறவைகளும்
பண்டைக்காலம் தொட்டே பறவைகள் கடவுளாக வணங்கப்பட்டும் கடவுளரின் ஊர்தியாக உருவகப்படுத்தப் பட்டும் வந்துள்ளன. மேலும் கோழி, வாத்து போன்ற பறவைகள் மனிதனுக்கு உணவாகவும் பயன்படுகின்றன.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
வெளி இணைப்புகள்
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
பறவைகள் பட்டியல்
அழிந்த பறவைகள்
பறவைகள் புலப்பெயர்வு
பறவைக் காய்ச்சல்
முதுகெலும்பிகள்
பறக்கும் விலங்குகள் |
1726 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D | பென்குயின் | பென்குயின் (வரிசை: Sphenisciformes, குடும்பம்: Spheniscidae) என்பது நீரில் வாழும் பறக்காத பறவை ஆகும். இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. எனினும் ஒரே ஒரு பென்குயின் இனம் மட்டும் நடுநிலக்கோட்டின் வடக்குப் பகுதியில் வாழ்கின்றது. இவை தங்களின் துடுப்பு போன்ற இரு இறகுகள் மூலம் கடலில் நீந்தும் திறன் பெற்றுள்ளன. இவை தங்கள் வாழ்வில் பாதியை நிலத்திலும் மீதியைக் கடலிலும் கழிக்கின்றன.
பென்குயின் வகைகளில் மிகப் பெரியது பேரரசப் பென்குயின் (Emperor Penguin) ஆகும். இது சுமார் 1.1 மீட்டர் உயரம் வரை வளருவதுடன், 35 கிலோகிராம் அல்லது அதை விட சற்று கூடிய எடையையும் கொண்டிருக்கும். சிறிய நீலப் பென்குயின் அல்லது தேவதைப் பென்குயின் என்பது மிகச் சிறிய பென்குயின் வகையாகும். இது சாதாரணமாக 35 செ.மீ தொடக்கம் 40 செ.மீ வரையான உயரத்தையும் சுமார் ஒரு கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும். பொதுவாகப் பெரிய பென்குயின்கள், சிறப்பாக வெப்பத்தை உள்வைத்துக்கொள்ளக் கூடியவையாக இருப்பதால், அதிக குளிர்ப்பகுதிகளில் வாழக்கூடியவையாக உள்ளன. சிறிய பென்குயின் வகைகள் மிதவெப்பக் காலநிலைப் பகுதிகள் அல்லது வெப்பக் காலநிலைப் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.
உடற்கூறு
பென்குயின்கள் நீர்வாழ்வுக்கு தக்கபடி இசைவாக்கம் பெற்றுள்ளன. துடுப்புகளாக மாற்றம் பெற்றுள்ள இவற்றின் இறகுகள், பறப்பதற்குப் பயனற்றவை. எனினும் அவற்றைத் துடுப்புகள் போன்று பயன்படுத்தி நீரில் பென்குயின்கள் வியக்கத்தக்க வகையில் விரைவாகவும், இலகுவாகவும் நீந்தவல்லவை. இவை நீந்தும் போது ஒரு பறவை பறப்பது போல் இருக்கும். எனவே நீரில் பென்குயின் நீந்தும்போது அவற்றின் பின்னால் தொடராக நீர்க்குமிழிகளைக் காணலாம். இறகின் கீழுள்ள காற்றுப் படலம், அட்லாண்டிக் கடல் குளிரில் இருந்து உடல் வெப்பத்தைப் பாதுகாக்க உதவுகிறது. வெப்ப மற்றும் மிதவெப்ப வலயங்களில் வாழும் பென்குயின்களின் இறகுகள் ஒப்பீட்டளவில் தடிப்புக் குறைந்தவை ஆகும்.
அனைத்துப் பென்குயின்களின் உடலும் வெண்ணிறக் கீழ்ப்பகுதியையும், இருண்ட நிறம் (பெரும்பாலும் கறுப்பு) கொண்ட மேற்பகுதியையும் கொண்டவை. இது உருமறைப்புக்கு உதவுகிறது. கொல்லும் திமிங்கிலம் அல்லது சிறுத்தை நீர்நாய் போன்ற, பென்குயின்களைக் கொன்று தின்னக்கூடிய விலங்குகள் நீரிலிருந்து பார்க்கும்போது, வெண்ணிற வயிற்றுப் பகுதியை கொண்ட பென்குயினையும், ஒளி தெறிக்கும் நீர்ப்பரப்பையும் வேறுபடுத்திக் கண்டுகொள்வது சிரமம்.
நீந்தும் போது பென்குயின்களின் வேகம் மணிக்கு ஆறு தொடக்கம் 12 கிலோமீட்டர் வரை இருக்கும். 27 கிமீ.மணி வரை வேகம் அவதானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. சிறிய பென்குயின்கள் அதிக ஆழத்தில் நீந்துவதில்லை. அவை தங்கள் உணவுகளை நீர் மேற்பரப்புக்கு அருகிலேயே பிடித்துக்கொள்வதுடன், ஒவ்வொரு நீச்சலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கின்றது. தேவையேற்படின் கூடிய ஆழத்துக்கு நீந்தவும் அவற்றால் முடியும். பெரிய பேரரசப் பென்குயின்கள் 267 மீட்டர் ஆழம் வரை சென்றது பதியப்பட்டுள்ளதுடன் இதன் கால அளவும் 18 நிமிடங்களாக அவதானிக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் பென்குயின்களின் நடத்தை லாவகமற்றது. அவை காலால், இருபுறமும் அசைந்து அசைந்து நடக்கின்றன அல்லது அவற்றின் வயிற்றினால் பனிக்கட்டியின் மீது வழுக்கிச் செல்கின்றன. ஆனாலும், உண்மையில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஈடாக அல்லது அவர்களிலும் வேகமாக ஓடுவதற்கும் பென்குயினால் முடியும். சக்தியைச் சேமிப்பதற்காகவும் அதேவேளை வேகமாக நகர்வதற்காகவும் இவை வயிற்றினால் வழுக்கிச் செல்கின்றன. இது ஆங்கிலத்தில் tobogganing என அழைக்கப்படுகின்றது.
இவற்றின் செவிப்புலன் மிகச் சிறப்பானது. கண்கள் நீர்க் கீழ்ப் பார்வைக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளன. இவையே உணவைப் பிடிப்பதற்கும், பிற விலங்குகளிடமிருந்து தப்புவதற்குமான, பென்குயின்களின் முதன்மையான வழியாகும். காற்றில் இவைகளால் நீண்டதூரம் பார்க்க முடியாது. இவற்றின் மணக்கும் சக்தி பற்றி அதிக தகல்வல்கள் தெரிய வரவில்லை.
வகைபிரிப்பு
குடும்பம் Spheniscinae
அரச பென்குயின், (Aptenodytes patagonicus)
பேரரசப் பென்குயின், (Aptenodytes forsteri)
கெண்டூ பென்குயின், (Pygoscelis papua)
அடேலி பென்குயின், (Pygoscelis adeliae)
தாடியுள்ள பென்குயின், (Pygoscelis antarctica)
ராக்ஹோப்பெர் பென்குயின், (Eudyptes chrysocome)
பியோர்லாண்ட் பென்குயின், (Eudyptes pachyrhynchus)
ஸ்னேர்ஸ் பென்குயின், (Eudyptes robustus)
நிமிர்-கொண்டை பென்குயின், (Eudyptes sclateri)
மக்கரோனி பென்குயின், (Eudyptes chrysolophus)
மஞ்சட்கண் பென்குயின், மெகாடைப்டெஸ் அண்டிபோடெஸ் (Megadyptes antipodes)
சிறிய பென்குயின் (அல்லது தேவதை பென்குயின்), (Eudyptula minor)
ஆபிரிக்கப் பென்குயின், (Spheniscus demersus)
மகெலனிக் பென்குயின், (Spheniscus magellanicus)
ஹும்போல்ட் பென்குயின், (Spheniscus humboldti)
கலப்பகொஸ் பென்குயின், (Spheniscus mendiculus)
வெளி இணைப்புகள்
Two new fossil penguin species found in Peru. news.nationalgeographic.com
Information about penguins at pinguins.info
Integrated Taxonomic Information System
Penguin research projects on the web
Penguin videos and photos on the Internet Bird Collection
Penguin World
Penguins in Te Ara: The Encyclopedia of New Zealand the Encyclopedia of New Zealand
Seaworld Penguin Information
"Lessons in a Land of Wind and Ice" from National Wildlife Magazine 1/15/2010
Live 24/7 camera inside a penguin habitat
பென்குயின்கள்
பறக்காத பறவைகள் |
1728 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF | தீக்கோழி | தீக்கோழி அல்லது நெருப்புக்கோழி (Ostrich, Struthio camelus) வாழும் பறவைகளுள் மிகப்பெரியது ஆகும். இது 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. பறக்காத ரடீட் எனப்படும் ஒப்பீட்டளவில் பழமையான பறவைக் குழுவைச் சேர்ந்தது.
இக் குழுவைச் சேர்ந்த ஏனையவை ரியாக்கள், எமுக்கள், கசோவரிகள் எக்காலத்திலும் அறிந்தவரை மிகப்பெரிய பறவையான, இன்று அழிந்துபோன எபியோர்னிக்ஸ் (Aepyornis) என்பவையாகும். தீக்கோழிகள் நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை. 70 கிமீ/மணி (43 மைல்/மணி) வேகத்தில் ஓடக்கூடியவை.
தீக்கோழிகள் இயற்கையில், ஆபிரிக்காவின் பூமத்திய ரேகைக் காட்டு வலயங்களில், வடக்கு, தெற்கு ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள சவான்னாக்கள், அரைப் பாலைவனங்களில் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு இனமான எஸ். சி. சிரியாக்கஸ் இப்பொழுது அழிந்துவிட்டது.
தீக்கோழிகளின் இறகுகள் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காக உபயோகப்பட்டு வந்தன. சிறிய உடலமைப்புள்ள மனிதர்கள் சவாரிசெய்யக் கூடிய அளவுக்குத் தீக்கோழிகள் பெரியவையாகும். இதனால் வட ஆபிரிக்காமற்றும் அரேபியாவின் சில பகுதிகளில் இவை ஓட்டப் பந்தயங்களில் பயன்படுத்தப்பட்டன.
சுவீடன் போன்ற குளிர்ப் பிரதேசங்களிற் கூட இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இறைச்சி கொழுப்பற்ற மாட்டிறைச்சி போன்ற சுவை கொண்டதாகச் சொல்லப்படுகின்றது.
ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்ளும் என்ற கதை மிகவும் பிரபலமானது. இத்தகைய நடைமுறையைக் காட்டும் அவதானிப்புப் பதிவுகள் எதுவும் இல்லையெனினும், எதிரி விலங்குகள் அண்மையிலுள்ளபோது, தான் தெளிவாகக் காணப்படாமலிருப்பதற்காகத், தீக்கோழி, தனது கழுத்தையும், தலையையும் நிலத்தில், படுக்கை நிலையில், வைத்துக்கொண்டிருப்பது அறியப்பட்டுள்ளது. பயமுறுத்தப்பட்டால், தீக்கோழி தனது வலுவான கால்களால் உதைத்துக் கடும் காயத்தை உண்டாக்கக்கூடியது.
தீக்கோழிகளுக்கு பற்கள் இல்லை. எனவே உணவை அரைத்து உண்பதற்காகவே கூடவே கற்களையும் விழுங்குகிறது.
தீக்கோழிகளில் கூட்டுக் கூடமைப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. பல பெண் தீக்கோழிகள் தங்கள் முட்டைகளை ஒரே கூட்டில் இடுகின்றன. இம் முட்டைகள் பகலில் பெண் தீக்கோழிகளாலும் இரவில் ஆண்களாலும் அடைகாக்கப் படுகின்றன. தீக்கோழிகளின் முட்டைகளே உலகில் பெரிய முட்டைகளாகும்.
உசாத்துணை
பறக்காத பறவைகள்
பறவைகள்
ஆப்பிரிக்கப் பறவைகள் |
1730 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%20%28%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%29 | கிவி (பறவை) | கிவி (Kiwi) என்பது நியூசிலாந்தில் வாழும், அப்டெரிக்ஸ் (அப்டெரிகைடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரே இனம்) இனத்தைச் சேந்த சிறிய, பறக்காத, ஏதாவதொரு வகைப் பறவையைக் குறிக்கும். ஒரு வீட்டுக் கோழியின் அளவைக் கொண்ட கிவிகளே வாழுகின்ற றட்டைட்களில் மிகச் சிறியனவாகும். இவை கசோவரிகள் அல்லது மோவாக்களுக்கு நெருக்கமான உறவையுடையனவாகக் கருதப்பட்டாலும், இவற்றின் பரிணாமத் தோற்றம் உறுதியாகத் தெரியவரவில்லை. பல கிவி வகைகள் அழியும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளன.
சுமார் 1300 CE அளவில், மனிதர்கள் வருவதற்குமுன், நியூசிலாந்தில் முள்ளந்தண்டுள்ள விலங்குகள் எதுவும் இருக்கவில்லை. உலகின் ஏனைய பகுதிகளில், குதிரைகள், ஓநாய்கள், எலிகள் எனப் பல்வேறுபட்ட பிராணிகளால் நிரம்பியிருந்த ecological niches, நியூசிலாந்தில், பறவைகளால் (குறைந்த அளவு ஊர்வனவற்றாலும்) நிரம்பியிருந்தன.
கிவிகள் வெட்கம் கொண்ட, nocturnal பிராணிகளாகும். இவை சிறப்பாக வளர்ச்சி பெற்ற முகர்ச்சிப் புலனைக் கொண்டுள்ளதுடன், பறவைகளில் வழமைக்கு மாறாக இவற்றின் மூக்குகள் கூரான சொண்டின் நுனியில் அமைந்துள்ளன. இவை தங்கள் சொண்டுகளை நிலத்துக்குள் செலுத்திப் புழுக்கள், பூச்சிகள், முள்ளந்தண்டற்ற ஏனைய பிராணிகள் முதலியவற்றைத் தேடி உண்கின்றன. இவை பழங்களையும் கூட உண்கின்றன. சந்தர்ப்பம் ஏற்பட்டால், இவை, சிறிய crayfish, நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிகள் மற்றும் eels போன்றவற்றையும் உணவாகக் கொள்கின்றன.
கிவிகளில் நிலத்தில் வாழ்வதற்கான இசைவாக்கம் விரிவானது. ஏனைய எல்லா ratites போலவே, மார்பெலும்புகளில், சிறகுத் தசைகளைப் பொருத்துவதற்கான keel மற்றும் சிறகுகளோகூட இல்லை. சிறகுகள் இருந்ததற்கான அடையாளம் கூட, மிகவும் சிறிதாக, கிவியின் உரோமங்களைப் போன்ற, இரண்டாகக் கிளைத்த இறகுகளுக்கு அடியில் மறைவாக உள்ளது. பொதுவாகப் பறவைகளுக்குப் பறப்பதற்கு வசதியாக, நிறையைக் குறைப்பதற்காக, உள்ளீடற்ற எலும்புகளே காணப்படுகின்றன. கிவியில், பாலூட்டிகளைப்போல எலும்புகளில் மச்சை (marrow) உண்டு.
கிவிகளில் மூன்று வகைகளும், அவற்றிலொன்றில் ஒரு துணை வகையும் உண்டு:
வட தீவு மண்ணிறக் கிவி அப்டெரிக்ஸ் அவுஸ்திரேலிஸ் மண்டெல்லி (Apteryx australis mantelli) , வடதீவின் மூன்றிலிரண்டு பகுதியில் பரந்துள்ளது. சுமார் 35,000 மீந்துள்ள இக் கிவியே மிகவும் பொதுவான கிவியாகும். இவற்றில் பெண் கிவிகள் 400 மிமீ உயரமும், 2.8 கிகி நிறையும் கொண்டவை. ஆண்கள் 2.2 கிகி நிறையுள்ளவை. இக் கிவிகள் குறிப்பிடத்தக்க resiliance ஐ வெளிப்படுத்துகின்றன. இவை பலதரப்பட்ட வாழிடங்களுக்குத் தங்களை இசைவாக்கிக் கொண்டுள்ளன. பெண் கிவிவிகள் பொதுவாக இரண்டு முட்டைகலை இடுகின்றன. இவற்றை ஆண் கிவிகள் அடைகாக்கின்றன.
ஒக்காரிட்டோ மண்ணிறக் கிவி அப்டெரிக்ஸ் அவுஸ்திரேலிஸ் அவுஸ்திரேலிஸ் (Apteryx australis australis), வட தீவு மண்ணிறக் கிவியின், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு துணை வகையாகும். கொஞ்சம் அளவிற் சிறியது. உடம்பில் சாம்பல் நிறச் சாயை கொண்டதுடன் சிலசமயம் முகத்தில் வெண்ணிற இறகுகளும் இருக்கும். பெண், ஒரு முட்டையிடும் காலத்தில் மூன்று முட்டைகளையிடும். ஒவ்வொன்றும் வெவ்வேறு கூடுகளில் இடப்படுகின்றன. ஆண், பெண் இரண்டுமே அடைகாக்கின்றன. பிராண்ஸ் ஜோசேப்பின் (Franz Josef) வடபகுதியின் தாழ்நிலக் காட்டுப்பகுதியில் சுமார் 140 பறவைகள் மட்டுமே வாழ்கின்றன.
பெரிய புள்ளிக் கிவியே அப்டெரிக்ஸ் ஹாஸ்தீ (Apteryx hastii) மிகப் பெரிய கிவியாகும். பெண், 450 மிமீ உயரமும், 3.3 கிகி நிறையும் உடையது. ஆண் கிவிகள் 2.4 கிகி நிறையுள்ளவை. இவை சாம்பல் கலந்த உடல் நிறமும், மங்கலான பட்டைகளையும் கொண்டவை. பெண் ஒரு முட்டை மட்டுமேயிட, ஆணும், பெண்ணும் அடைகாக்கின்றன. வடமேற்கு நெல்சனின் மலைப்பகுதிகள், வடபகுதியின் மேற்குக் கரை, மற்றும் தென் அல்ப்ஸ் பகுதிகளில் சுமார் 20,000 கிவிகள் வரை பரந்துள்ளன.
சிறிய புள்ளிக் கிவி அப்டெரிக்ஸ் ஓவெனீ (Apteryx owenii) மிகவும் சிறியது. இறக்குமதி செய்யப்பட்ட பன்றிகள், stoats மற்றும் பூனைகளினால் வேட்டையாடப்பட்டு, தலை நிலத்தில் முற்றாக அழிந்துவிட்டது. எல்லாக் கிவிகளிலும் கூடிய அபாய நிலையிலுள்ளது இதுவே. சுமார் 1000 வரை கப்பிட்டி தீவில் மீந்துள்ளன. ஊனுண்ணும் விலங்குகளில்லாத வேறு தீவுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, ஓரளவு நிலைபெற்று வருவது போல் தெரிகின்றது. 250 மிமீ உயரம்கொண்டது. பெண் பறவை 1.3 கிகி நிறையுள்ளது. பெண் ஒரு முட்டை மட்டுமேயிட ஆண் பறவை அடைகாக்கின்றது.
உசாத்துணை
வெளி இணைப்புகள்
.
.
.
.
.
.
.
.
.
பறக்காத பறவைகள் |
1731 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81 | பெரிய ஆக்கு | 75 சதம மீட்டர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஆக்கு அல்லது பெரிய ஓக் (Great Auk) பிங்குயினஸ் இம்பென்னிஸ் (அல்லது அல்கா இம்பென்னிஸ்), எல்லா ஆக்குகளிலும் பெரியதாகும். அற்றுப்போன இனமான இந்தப் பெரிய ஆக்குகள் வேல்சு மொழியில், அவற்றின் தலையிலுள்ள வெள்ளை நிறத்தை வைத்து, "வெண் தலை" எனப் பொருள்படும் பென்குயின் (penquin) என அழைக்கப்பட்டன. எனவும் இதுவே பின்னர் "பென்குயின்" என்ற பறவையின் பெயருக்கு அடிப்படையாக அமைந்தது எனவும் நம்பப்படுகின்றது. தென்னரைக் கோளத்தில் பெரிய ஆக்கை ஒத்த (தற்போது பென்குயின் என அறியப்படும்) பறவைகளைக் கண்ட கடற்பயணிகள், இவ்விரு பறவைகளுக்கிடையிலும் காணப்படும் ஒற்றுமை காரணத்தால், தாம் புதிதாகக் கண்ட பறவைகளையும் அதே பெயரில் அழைத்தனர்..
பெரிய ஆக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடுகின்றன. இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. பெரிய ஆக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, அயர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன.
ஏனைய ஆக்குகளைப் போல, பெரிய ஆக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதருக்கு இலக்காகக்கூடியனவாக இருந்தன. கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசி இணைகள், 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.
மேற்கோள்கள்
பின் வருவனவற்றையும் பார்க்கவும்
அழிந்த பறவைகள்
வெளியிணைப்புகள்
Great Auks described in The Birds of North America
அழிந்த பறவைகள்
பறக்காத பறவைகள்
ஆக்குகள் |
1739 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D | இந்திய மயில் | மயில் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற, இந்திய மயில் (பாவோ கிரிசுடேடசு), அல்லது நீல மயில் என்பது இந்தியத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவை இனமாகும். இது இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய மயில்கள் பால் ஈருருமை கொண்டிருக்கின்றன. ஆண் மயில்கள் வண்ணமயமான கண் போன்ற புள்ளிகள் கொண்ட இறக்கைகளாலான பெரிய தோகைகளை கொண்டிருக்கின்றன. பெண் மயில்களை கவர முற்படும்போது இந்த தோகைகளை உயர்த்தி ஒரு பெரிய விசிறி போல காட்டுகின்றன. மயிலின் விரிவான தொகையின் செயல்பாடு பற்றி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. 19 ஆம் நூற்றாண்டில், சார்லஸ் டார்வின், இது ஒரு புரியாத புதிர் என்றும், சாதாரணமான இயற்கைத் தேர்வு மூலம் விளக்குவது கடினம் என்றும் குறிப்பிட்டார். பெண் மயில்கள் பெரிய தோகைகளை கொண்டிருப்பதில்லை. அவை பெரும்பாலும் வெள்ளை நிற முகம், பச்சை நிற கீழ் கழுத்து, மற்றும் மந்தமான பழுப்பு அல்லது சாம்பல் நிற இறகுகளைக் கொண்டிருக்கின்றன.
மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருந்தாலும் பறக்கும் திறன் கொண்டவை. இந்திய மயில்கள் திறந்த காடுகளில் அல்லது பயிரிடப்பட்ட வயல்வெளிகளில் வாழ்கிறது, அங்கு இவை பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உண்கின்றன. இவை பாம்புகள், பல்லிகள் மற்றும் சிறிய கொறித்துண்ணிகளை வேட்டையாடுகின்றன. மயில்களின் அகவல் இவற்றைக் கண்டறிவதை எளிதாக்குகின்றன. இந்த அகவல் சத்தமானாது வனப் பகுதிகளில் புலி போன்ற வேட்டையாடும் விலங்குகள் இருப்பதை மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக பயன்படுகின்றன.
இந்த பறவை இந்து மற்றும் கிரேக்க புராணங்களில் பரவலாக காணப்படுகின்றது. தமிழ் கடவுளாக அறியப்படுகின்ற முருகனின் வாகனமாக கருதப்படுகின்றது. இது இந்தியாவின் தேசியப் பறவையாகும்.
தோற்றம்
இந்திய மயில்கள் பால் ஈருருமை கொண்டிருக்கின்றன. ஆண் மயில்கள் உருவில் பெரியவை. மயிலின் அலகின் முனையில் இருந்து வால் சிறகு வரை ஏறத்தாழ 100-115 செ. மீ. நீளமும், நன்கு வளர்ந்த முதிர்ந்த பறவைகளில் முழுவதுமாக வளர்ந்த தோகையின் கடைசி முனை வரை கணக்கிட்டால் ஏறத்தாழ 195-225 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். இதன் எடை ஏறத்தாழ 2.5 முதல் 4 கிலோ வரை இருக்கும். இந்திய மயில்கள் பறவை இனத்தின் பெரிய மற்றும் கனமான உறுப்பினர்களில் ஒன்றாகும்.
ஆண் மயில்கள் நீல நிற தலை மற்றும் கழுத்தைக் கொண்டிருக்கின்றன. தலையில் உள்ள இறகுகள் குறுகியதாகவும் சுருண்டதாகவும் இருக்கும். தலையில் உள்ள விசிறி வடிவ கொண்டை கருப்பு நிற தண்டுகளுடன் நீல-பச்சை நிற இறகுகளால் ஆனது. கண்ணுக்கு மேலே ஒரு வெள்ளைக் கோடும், கண்ணுக்குக் கீழே ஒரு பிறை வடிவ வெள்ளைத் திட்டும் காணப்படுகின்றன. தலையின் ஓரங்களில் பச்சை கலந்த நீல நிற இறகுகள் உள்ளன. பின்புறம் கருப்பு மற்றும் செம்பு நிற இறகுகள் உள்ளன. ஆண் மயில்கள் வண்ணமயமான கண் போன்ற புள்ளிகள் கொண்ட இறக்கைகளாலான பெரிய தோகைகளை கொண்டிருக்கின்றன. தோகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறகுகள் இருக்கும். பெண் மயில்களை கவர முற்படும்போது இந்த தோகைகளை உயர்த்தி ஒரு பெரிய விசிறி போல காட்டுகின்றன.
வயது முதிர்ந்த பெண் மயில்கள் ஒரு முகடு கொண்ட பழுப்பு நிற தலையைக் கொண்டுள்ளன. முகடின் நுனிகள் பச்சை நிறத்தில் உள்ளன. இதன் மேல் உடல் பழுப்பு நிறத்திலுள்ளது. கீழ் கழுத்து பச்சை நிறமாகவும், மார்பக இறகுகள் பச்சை நிறம் கலந்த அடர் பழுப்பு நிறத்தில் பளபளப்பாகவும் இருக்கும். அடிப்பகுதி வெண்மையாகவும், வால் சிறகுகள் அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். மயில் குஞ்சுகள் இளஞ்சிவப்பு கண்களுடன் கழுத்தில் கரும்பழுப்பு நிற அடையாளத்துடன் காணப்படுகின்றன.
மயில்கள் உரத்த அகவல் ஒலிகளை எழுப்புகின்றன. மயில்களின் அகவல் இவற்றைக் கண்டறிவதை எளிதாக்குகின்றன. இந்த அகவல் சத்தமானாது வனப் பகுதிகளில் புலி போன்ற வேட்டையாடும் விலங்குகள் இருப்பதை மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக பயன்படுகின்றன.
திரிபுகள் மற்றும் கலப்பினங்கள்
இந்திய மயில்களில் பல நிறமாற்றங்கள் உள்ளன. இவை காடுகளில் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் இவற்றைப் பொதுவானதாக ஆக்கியுள்ளது. கருப்பு தோள் கொண்ட திரிபுகள் ஆரம்பத்தில் இந்திய மயில்களின் ஒரு கிளையினமாகக் கருதப்பட்டது. இயற்கையியலாளர் மற்றும் உயிரியலாளர் சார்லஸ் டார்வின் (1809-1882) இது தனி கிளையினம் அல்ல என்றும், வளர்ப்பதற்காக உருவான ஒரு வகையானது என்பதற்கான உறுதியான ஆதாரங்களை முன்வைத்தார். இந்த பிறழ்வில், வயது முதிர்ந்த ஆண் மயில்கள் கறுப்பு இறக்கைகளுடைய கருநிறமிகளாக உள்ளன.
இந்திய மயிலின் பிற நிற வடிவங்களில் வெள்ளை நிற திரிபுகள் அடங்கும். இவை தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு மாறுபாட்டின் விளைவாகும். இந்த வெள்ளை நிற மயில்கள் பெரும்பாலும் விலங்குக் காட்சிச்சாலைகள் மற்றும் உயிரியல் பூங்காக்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
ஒரு ஆண் பச்சை மயில் (பாவோ மியூட்டிகசு) மற்றும் ஒரு பெண் இந்திய மயில் (பாவோ கிரிசுடேடசு) இடையேயான சேர்க்கை "சுபால்டிங்" எனப்படும் ஒரு கலப்பினத்தை உருவாக்குகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் உருவாக்கப்பட்ட அறியப்படாத வம்சாவளியைச் சேர்ந்த இந்த கலப்பின பறவைகள் காடுகளுக்குள் விடுவிக்கப்பட்டால் சிக்கல்கள் ஏற்படலாம், ஏனெனில் அத்தகைய கலப்பினங்கள் மற்றும் அவற்றின் சந்ததிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகின்றன.
வாழ்விடம்
இந்திய மயில் இந்திய துணைக்கண்டம் முழுவதும் வசிக்கும் ஒரு பறவையினமாகும். இது பொதுவாக வறண்ட தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கிறது. இந்திய மயில்கள் திறந்த காடுகளில் அல்லது பயிரிடப்பட்ட வயல்வெளிகளில் வாழ்கிறது. இந்தியாவின் பல பகுதிகளில், அவை பாதுகாக்கப்படுவதால், மக்கள் வசிக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சுற்றி காணப்படுகின்றன.
இந்திய மயில் ஐரோப்பாவில் கி.மு. 450 வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இது பிறகு உலகின் பல பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நடத்தை மற்றும் சூழலியல்
ஆண் மயில்கள் அதன் ஆடம்பரமான தோகைகளை விரித்து காட்டும் காட்சிகளுக்கு மிகவும் பிரபலமானது. இந்த தோகை இறகுகள் மயில்களின் முதுகில் இருந்து வளர்ந்தாலும், உயிரியலில் ரீதியாக வாலின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. தொகையின் நிறங்கள் எந்த நிறமிகளாலும் ஏற்படுவதில்லை மாறாக இறகுகளின் நுண்ணிய அமைப்பு மற்றும் அதன் விளைவாக ஒளியியல் நிகழ்வுகளால் வண்ணமயமாக தெரிகின்றன. ஆண் மயிலின் நீண்ட தோகை இறகுகள் இரண்டாவது வயதுக்கு பிறகு வளரத் தொடங்கும். நான்கு வயதாகும் போது முழுமையாக வளர்ந்த தோகைகள் காணப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் பெரும்பாலும் பிப்ரவரி மாதத்தில் முழுதாக உருவாகி பின்னர் ஆகத்து மாத இறுதியில் உதிர்க்கப்படுகின்றன.
பொதுவாக மயில்கள் சிறிய குழுக்களாக தரையில் உண்ணும். இந்த குழு ஒரு ஆண் மயில் மற்றும் 3 முதல் 5 பெண் மயில்கள் மற்றும் குஞ்சுகளைக் கொண்டிருக்கும். இனப்பெருக்க காலத்திற்குப் பிறகு, மந்தைகளில் பெண் மயில்கள் மற்றும் குஞ்சுகள் மட்டுமே இருகின்றன. இவை அதிகாலையில் திறந்த வெளியில் காணப்படுகின்றன. பகல் நேரத்தில் வெப்பத்தின் போது மர நிழல்களில் ஓய்வெடுக்க முனைகின்றன. அந்தி வேளையில், குழுக்களாக நீர் பருகுவதற்காக நீர்நிலைகளுக்கு செல்கின்றன. இடையூறு ஏற்படும் போது, மயில்கள் ஓடுவதை வழக்கமாக கொண்டுள்னன, சில அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே பறந்து தப்பிச்செல்கின்றன. மயில்கள் உயரமான மரங்களில் இரவில் குழுக்களாக கூடுகின்றன. சில நேரங்களில் பாறைகள், கட்டிடங்கள் அல்லது தூண்களைப் பயன்படுத்துகின்றன.
மயில்கள் குறிப்பாக இனப்பெருக்க காலத்தில் உரத்த அகவல் குரல்களை எழுப்புகின்றன. பொதுவாக இரு பாலினத்தாலும் ஆறு எச்சரிக்கை அழைப்புகளைத் தவிர ஏறக்குறைய ஏழு வெவ்வேறு அழைப்பு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இனப்பெருக்கம்
மயில்கள் பொதுவாக அணைத்து பருவங்களிலும் இனப்பெருக்கம் செய்தாலும், பெரும்பாலும் மழைக் காலத்தில் பரவலாக இனப்பெருக்கம் செய்கின்றன. மயில்கள் பொதுவாக 2 முதல் 3 வயதில் பாலியல் முதிர்ச்சியை அடைகின்றன. பல ஆண் மயில்கள் பெண் மயில்களை ஈர்ப்பதற்காக ஒரே தளத்தில் கூடலாம். ஆண் மயில்கள் தனக்கென ஓர் இடத்தை பராமரிக்கின்றன. அந்த இடத்தை பெண் மயில்களை பார்வையிட அனுமதிக்கின்றன. ஆண் மயில்கள் தனது பெரிய தோகையை விசிறி போல உயர்த்துகின்றன. இறகுகளை அவ்வப்போது அதிரவைத்து, ஒரு சலசலப்பான ஒலியை உருவாக்குகின்றன. ஒரு ஆண் மயில் பெண் மயிலை எதிர்கொள்ளும் போது அதன் தோகை அமைப்பைக் காட்டுவதற்காக பெண் மயிலை சுற்றி வருகிறது. பெண் மயில்கள் இல்லாவிட்டாலும் சில நேரங்களில் ஆண் மயில்கள் தோகைகளை விரித்துக் காட்சியளிக்கலாம். ஒரு ஆண் மயில் காட்சியளிக்கும் போது, பெண் மயில்கள் எந்த ஒரு ஆர்வமும் இல்லாதது போல தனது வேலையே தொடர்கின்றன.
ஒரு மயிலின் கூடு என்பது இலைகள், குச்சிகள் மற்றும் பிற குப்பைகளால் தரையில் அமைக்கப்படுவதாகும். கூடுகள் சில சமயங்களில் கட்டிடங்களில் மீது அல்லது முந்தைய காலங்களில் கழுகுகளின் பயன்படுத்தப்படாத கூடுகளில் அமைக்கப்பட்டன. பெண் மயில் நான்கு முதல் எட்டு முட்டைகளை இடுகின்றது. பொதுவாக முட்டைகளை பெண் மயில்கள் அடை காக்கின்றன. ஒரு ஆண் மயில் முட்டையை அடைகாக்கும் அசாதாரண நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முட்டைகள் அடை காக்கப்பட்டால் குஞ்சு பொரிக்க ஏறத்தாழ 28 நாட்கள் ஆகும். முட்டை பொரித்த பிறகு வெளிவரும் குஞ்சுகள் தாயைப் பின்தொடர்கின்றன. குஞ்சுகள் சில சமயங்களில் தங்கள் தாய்மார்களின் முதுகில் ஏறிக்கொள்ளும். பெண் பறவைகள் அவற்றை பாதுகாப்பான மரக்கிளைக்கு கொண்டு செல்ல இது உதவுகின்றது.
உணவு
மயில்கள் அனைத்துண்ணிகளாகும். இவை விதைகள், பழங்கள், தானியங்கள், பூச்சிகள், புழுக்கள், சிறிய பாலூட்டிகள், தவளைகள், கொறிப்பான்கள் மற்றும் பல்லிகள் போன்ற ஊர்வன ஆகியவற்றை உண்கின்றன. இவை சிறிய பாம்புகளை உண்கின்றன. இவை பூ மொட்டுகள், இதழ்கள், புல் மற்றும் மூங்கில் தளிர்களையும் உண்ணும். பயிரிடப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் மயில்கள் நிலக்கடலை, தக்காளி, நெல், மிளகாய், வாழை போன்ற பலதரப்பட்ட பயிர்களை உண்ணும்.
ஆயுட்காலம் மற்றும் இறப்பு காரணிகள்
சிறுத்தை, செந்நாய், நரி மற்றும் புலி போன்ற பெரிய விலங்குகள் வயது வந்த மயில்களை பதுங்கியிருந்து தாக்க வல்லவை. இருப்பினும் வழக்கமாக இந்த விலங்குகள் சிறிய மயில்களை மட்டுமே வேட்டையாடுகின்றன, ஏனெனில் வயது வந்த மயில்கள் பொதுவாக மரங்களுக்குள் பறப்பதன் மூலம் தரையில் வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்க முடியும். சில சமயங்களில் பருந்து மற்றும் ஆந்தை போன்ற பெரிய வேட்டையாடும் பறவைகளாலும் நெயில் குஞ்சுகள் வேட்டையாடப்படுகின்றன. வயது வந்த பறவைகளை விட குஞ்சுகள் வேட்டையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில சமயங்களில் இவை தெருநாய்களால் கொள்ளப்படுகின்றன. நாட்டுப்புற வைத்தியங்களுக்காக சில சமயங்களில் மனிதர்களால் இவை வேட்டையாடப்படுகின்றன. குழுக்களாக உணவு உண்பது பாதுகாப்பாக கருதப்படுகின்றது. நிலப்பரப்பில் வேட்டையாடும் விலங்குகளைத் தவிர்ப்பதற்காக இவை உயரமான மரங்களின் உச்சிகளில் கூடுகின்றன. இந்தப் பறவைகள் ஏறத்தாழ 23 ஆண்டுகள் வரை வாழ்கின்றன, ஆனால் காடுகளில் பெரும்பாலும் சராசரியாக 15 ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் நிலை
இந்திய மயில்கள் தெற்காசியா முழுவதும் காடுகளில் பரவலாக காணப்படுகின்றன. பல பகுதிகளில் கலாச்சார ரீதியாகவும் இந்தியாவில் சட்டத்தாலும் இவை பாதுகாக்கப்படுகின்றன. ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. மயில்கள் எளிதில் இனப்பெருக்கம் செய்கின்றன. உலகெங்கிலும் உள்ள உயிரியல் பூங்காக்கள், பூங்காக்கள், பறவை ஆர்வலர்கள் இவற்றை வளர்க்கின்றனர்.
இருப்பினும் இறைச்சிக்காக சட்டவிரோத வேட்டையாடுதல் இந்தியாவின் சில பகுதிகளில் தொடர்கிறது. பூச்சிக்கொல்லி விதைகளை உண்பதன் மூலம் பரவும் விஷம் காட்டு பறவைகளுக்கு அச்சுறுத்தலாக அறியப்படுகிறது. இறகுகள் பறிக்கப்பட்டதா அல்லது இயற்கையாக உதிர்க்கப்பட்டதா என்பதைக் கண்டறியும் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன, ஏனெனில் இந்தியச் சட்டம் உதிர்ந்த இறகுகளை மட்டுமே சேகரிக்க அனுமதிக்கிறது.
இந்தியாவின் சில பகுதிகளில், மயில்கள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயத்திற்கு தொந்தரவாக இருக்கின்றன. இருப்பினும், வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகளை அபரிமிதமான அளவில் உட்கொள்வதன் மூலம் அது வகிக்கும் நன்மையான பங்கால் ஈடுசெய்யப்படுவதாகத் தெரிகிறது. தோட்டங்கள் மற்றும் வீடுகளில் அவை தாவரங்கள் மற்றும் கண்ணாடிகள் போன்றவற்றை சேதப்படுத்துகின்றன. பல நகரங்களில் மயில் மேலாண்மைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பண்பாடு
பல கலாச்சாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பறவையான இது, 1963 இல் இந்தியாவின் தேசியப் பறவை என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கோவில் கலை, புராணங்கள், கவிதைகள், நாட்டுப்புற இசை மற்றும் மரபுகளில் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறது. பல இந்து தெய்வங்கள் மயில்களுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. விஷ்ணுவின் அவதாரமான கிருட்டிணன் தலையில் ஒரு மயில் இறகுடன் சித்தரிக்கப்படுகிறார். தமிழ் கடவுளான முருகன் பெரும்பாலும் மயில் வாகனத்தின் மீதமர்ந்தவாறு சித்தரிக்கப்படுகிறார். "இராமாயணத்தில்" தேவர்களின் தலைவன் இந்திரன், ராவணனை தோற்கடிக்க முடியாமல், மயிலின் இறக்கையின் கீழ் தஞ்சமடைந்ததை விவரிக்கிறது.
பௌத்த தத்துவத்தில், மயில் ஞானத்தை குறிக்கிறது. மயில் இறகுகள் பல சடங்குகள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மயில் உருவங்கள் இந்திய கோயில் கட்டிடக்கலை, பழைய நாணயங்கள், துணிகள் ஆகியவற்றில் பரவலாக உள்ளன மற்றும் பல நவீன கலை மற்றும் பயன்பாட்டு பொருட்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்க புராணங்களில் மயிலின் இறகுகளின் தோற்றம் பல கதைகளில் விளக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கல் மயில் உருவங்களைப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பறவைகள் பெரும்பாலும் பெரிய தோட்டங்களில் காட்சிக்காக வளர்க்கப்பட்டன. இடைக்காலத்தில், ஐரோப்பாவில் வீரர்கள் தங்கள் தலைக்கவசங்களை மயில் இறகுகளால் அலங்கரித்தனர். பல கதைகளில், வில்லாளர்கள் மயில் இறகுகளால் பொறிக்கப்பட்ட அம்புகளைப் பயன்படுத்துகின்றனர். மயில் இறகுகள் வைக்கிங் வீரர்கள் இறந்த பிறகு அவர்களுடன் புதைக்கப்பட்டன. பறவையின் சதை பாம்பு விஷம் மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இவற்றின் பல பயன்பாடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மயில் ஒரு பகுதியை பாம்புகள் இல்லாமல் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புக்கள்
BirdLife Species Factsheet
இந்திய மயில்
இந்திய மயில் படங்கள்
இந்திய தேசியச் சின்னங்கள்
மயில்கள் |
1740 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF | இலங்கைக் காட்டுக்கோழி | இலங்கைக் காட்டுக்கோழி (Srilankan Junglefowl)(கல்லசு இலபாயெட்டீ) பேசண்ட் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டும் வாழக்கூடிய அகணிய உயிரி ஆகும். இது வீட்டில் வளர்க்கும் கோழிகளை உருவாக்கிய காட்டுக்கோழியான, இந்தியாவின் சிவப்புக் காட்டுக்கோழி எனப்படும் கல்லசு கல்லசு சிற்றினத்திற்கு நெருங்கிய உறவுள்ளது.
இவை அளவிற் பெரிய பறவைகள். ஆண் பறவைகள் பல நிறம் கொண்ட இறகுகளைக் கொண்டவை. எனினும் அடர்த்தியான காடுகளில் இவற்றைக் கண்டுகொள்வது கடினம். இவை காடுகளிலும், பற்றைகளிலும் வாழுகின்றன. இலங்கையில் இவற்றை, கித்துல்கல, யால, சிங்கராஜ ஆகிய இடங்களில் காணலாம்.
இது கல்லது பேரினத்தைச சேர்ந்த நான்கு வகைப் பறவைகளில் ஒன்று. இது நிலத்தில் கூடு கட்டும் பறவை. ஒரு கூட்டில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். பெசண்ட் குடும்பத்தைச் சேர்ந்த பல பறவைகளைப் போலவே இவ்வகையிலும், ஆண் பறவைகள், அடைகாப்பதிலோ அல்லது பொரிக்கும் குஞ்சுகளை வளர்ப்பதிலோ எவ்வித பங்கும் வகிப்பதில்லை. இவ்வேலைகளை மங்கலான நிறத்துடன், சிறப்பான உருமறைப்புக்கான உடலைக் கொண்ட பெண் பறவைகளே செய்கின்றன.
ஆண் இலங்கைக் காட்டுக்கோழி சுமார் 66 முதல் 73 செ.மீ. வரை நீளம் கொண்ட பறவையாகும். இது நாட்டுக் கோழி போன்ற உடலமைப்பும், செம்மஞ்சள் கலந்த சிவப்பு நிற உடலும், கடும் ஊதா நிற சிறகுகளையும், வாலையும் கொண்டது. தலையின் பின்பகுதியும், கழுத்தும் பொன்னிறமானவை. முகம் வெறுமையான சிவப்புத் தோலையும், முகப்பகுதியிலிருந்து மடிந்து நீண்டு தொங்கும் செந்நிறத் தோற் பகுதியையும் கொண்டது. உச்சியிலமைந்துள்ள "கொண்டை" யும், மஞ்சளான மையப் பகுதியுடன் கூடிய சிவப்பு நிறமானதே.
பெண் மிகவும் சிறியது, 35 செ.மீ. நீளம் மட்டுமே உடையது. இவை அடிவயிற்றிலும், மார்பிலும் வெள்ளை நிறம் அமைந்த, மண்ணிற உடலை கொண்டவை.
பெரும்பாலான பெசண்ட் குடும்பப் பறவைகளைப் போலவே இலங்கைக் காட்டுக்கோழியும் நிலத்தில் வாழும் வகையாகும். இவை நிலத்தைக் கால்களால் கிளறி, பல்வேறு விதைகள், விழுந்த பழங்கள், மற்றும் பூச்சிகள் போன்றவற்றை எடுத்து உண்கின்றன.
இந்தக் காட்டுக்கோழி இலங்கையின் தேசியப் பறவையாகப் அறிவிக்கப்பட்டுள்ளது.
உசாத் துணை
Birds of India by Grimmett, Inskipp and Inskipp,
மேற்கோள்கள்
காட்டுக்கோழி
இலங்கையின் தேசிய சின்னங்கள் |
1743 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D | எண்கணிதம் | எண் கணிதம் (Arithmetic) என்பது கணிதத்தின் ஒரு பிரிவு (அல்லது அதன் முன்னோடி) ஆகும். இது எண்களின் மீது செய்யப்படும் செய்முறைகளின் அடிப்படை இயல்புகளை விளக்குகிறது. வழமையான செய்முறைகள், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பனவாகும். வர்க்கம், வர்க்கமூலம் போன்ற உயர்நிலைச் செய்கைகளும் இவற்றுடன் சேர்க்கப்படுவதுண்டு. எண்கணிதக் கணிப்பு ஒரு செய்முறை ஒழுங்குக்கு அமையச் செய்யப்படுகின்றது.
இயற்கை எண்கள், முழு எண்கள், விகிதமுறு எண்கள் (பின்ன வடிவிலானவை) மற்றும் உண்மை எண்கள் (தசம எண்கள்) என்பவை தொடர்பான எண்கணிதம் பொதுவாக ஆரம்ப வகுப்பு மாணவர்களால் கற்கப்படுகின்றது. நூற்றுவீத அடிப்படையில் எண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முறைகளும் இந் நிலையிலேயே கற்கப்படுகின்றன. பொதுவாகப் பெரும்பாலான நாடுகளில் ஆரம்பநிலை மாணவர்கள் கூட்டல் வாய்பாடு, பெருக்கல் வாய்பாடு என்பவற்றை மனனம் செய்வது கட்டாயமானது. இது வாழ்நாள் முழுவதும் எண் கணிதச் செய்கைகளைச் செய்வதற்கு அம் மாணவனுக்கு வேண்டியது. தற்காலத்தில் பெரும்பாலான வளர்ந்தவர்கள் எல்லா எண் கணிதக் கணிப்புகளுக்கும் கணிப்பொறி அல்லது கணினிகளையே உபயோகிக்கிறார்கள்.
வரலாறு
எண்கணிதத்தின் முற்பகுதி வரலாறு பற்றி ஒரு சிறிய அளவில் தான் ஆதாரங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று மத்திய ஆப்பிக்காவில் உள்ள கொங்கோ குடியரசு நாட்டில் 20,000 மற்றும் 18,000 கி.மு. இடைப்பட்ட காலத்தை கொண்ட ஈசாங்கோ எழும்பு கிடைத்துள்ளது.
கி.மு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முற்பகுதியிலேயே அனைத்து அடிப்படை எண்கணித நடவடிக்கைகளையும் எகிப்தியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் முதன்முதலில் பயன்படுத்திய ஆதாரங்கள் கிடைக்கப்பட்டுள்ளது. அந்த ஆதாரங்கள் அவர்கள் கண்க்குகளில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு எந்த செயல்முறையை பயன்படுத்தினர் என்பதுப் பற்றிய எந்த ஒரு குறிப்பும்மில்லை. ஆனால் குறிப்பிட்ட எண் அமைப்பு முறையின் பண்புகளைப் பற்றியும் மற்றும் சிக்கலான தன்மையை குறித்தும் ஆதாரக் குறிப்புகள் உள்ளது.
முந்தைய எண் அமைப்புகள், நிலைப்படுத்தப்பட்ட குறிமுறையை கொண்ட தசம எண்கள் அடிப்படையில் இல்லை. குறிப்பாக பாபிலோனிய கண்க்கீடு முறைகள் அறுபது (அடிப்படை 60) எண்களின் அடிப்படையிலும் மற்றும் மாயா எண்கள் இருபது (அடிப்படை 20) எண்களின் அடிப்படையிலும் உள்ளதாக இருந்திருககிறது. இந்த இட மதிப்பு கருத்தின் காரணமாக, வெவ்வேறு மதிப்புகளுக்கு அதே இலக்கங்களை மறுபரிசீலனை செய்வது, எளிதான மற்றும் திறமையான கணக்கீட்டு முறைகளுக்கு வழிவகுத்தது.
நவீன கணித தொடர்களின் தொடர்ச்சியான வரலாற்று வளர்ச்சி என்பது பண்டைய கிரேக்கத்தின் ஹெலனிசி நாகரீகத்தில் இருந்து ஆரம்பமாகிறது. இது பாபிலோனிய மற்றும் எகிப்திய உதாரணங்களைவிட மிகப் பிற்பாடு தோன்றியது. சுமார் 300 கி.மு. யுசிலிட் படைப்பிற்கு முன்னர், கணிதத்தில் கிரேக்க தத்துவ படிப்பு, ஆன்மீக நம்பிக்கையுடன் இணைந்திருந்தது. உதாரணமாக, நிகோமாச்சஸ், எண்களுக்கு முந்தைய பித்தேகோரியன் அணுகுமுறை மற்றும் அவரது படைப்பான எண்கணிதம் அறிமுகம் ஆகியவற்றில் ஆன்மீக நம்பிக்கையுடன் உள்ள உறவுகளை சுருக்கமாகக் குறிப்பிட்டார்.
ஆர்க்கிமெடெசு, திபோபாண்டசு பயன்படுத்திய கிரேக்க எண்கள் மற்றவர்கள் பயன்படுத்திய நிலைநிறுத்தக் குறிப்பு எண்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவை அல்ல. பூர்வ கிரேக்கர்கள் 0 பூச்சியத்திற்கான சின்னத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால் (எலனிசிடிக்கு காலம் வரை), அவை மூன்று தனித்தனி சின்னங்களைக் கொண்டிருந்தன. பத்தாவது இடத்திற்கு ஒன்று, நூறுக்கு ஒன்று. பின்னர் ஆயிரம் இடத்திற்கு அவை அலகு இடத்திற்கான சின்னங்களை மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தினர். அவற்றின் கூட்டல் வழிமுறை நம்முடையது போலவே இருந்தது, அவற்றின் பெருக்கல் வழிமுறை மிகவும் சற்று வித்தியாசமானது இருந்திருக்கிறது. ஆனால் வகுத்தல் வழிமுறை நம்முடையது போலவே இருந்திருக்கிறது மற்றும் ஆர்க்கிமிடீசுக்கு சதுர ரூட் கண்க்கிடும் முறை அறிந்திருக்கவும் மற்றும் கண்டுபிடித்திருக்கவும் வாய்ப்பிருந்திருக்கிறது. அவர் ஈரோ முறையை அதற்கு அடுத்தடுத்த தோராயமாக பயன்படுத்த விரும்புகிறார். ஏனெனில், ஒரு முறை கணக்கிடப்பட்டால், ஒரு எண் மாறாது, மற்றும் 7485696 போன்ற சரியான சதுரங்களின் சதுர ரூட், 2736 என உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பண்டைய சீனர்கள் இதேபோன்ற கண்க்கிடும் முறையை பயன்படுத்தினர். ஏனென்றால் அவரிகலிடத்தில் 0 பூச்சியத்திற்கான சின்னம் இல்லாதிருந்ததால், அவை ஒரு அலகு இடத்திற்கு ஒரு தொகுப்பு அடையாளமும், பத்தாவது இடங்களுக்கான இரண்டாவது தொகுப்பு அடையாளமும். நூறாவது இடத்திற்கு அடையாளங்களை மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தினர். அவர்களின் சின்னங்கள் பண்டைய எண்ணும் தண்டுகள் அடிப்படையிலானவை. சீனர்கள் நிலையான குறியீடுகள் எப்போது பயன்படுத்த தொடங்கினர் என்பது தெறியாது ஆனால் கி.மு. 400 க்கு முன்பே நிச்சயமாக இருந்திருக்கும். சிரியாவின் பிசப்பு, செவரஸ் செபோக் (650 கி.மு.), "இந்தியர்கள் கண்க்கிடும் முறையைப் பற்றி பாராட்ட எந்த வார்த்தையையும் போதுமானதாக இல்லை ஏனென்றால் அவர்கள் ஒரு சிறந்த கணக்கிடுவதற்கான முறையை கொண்டிருக்கிறார்கள்."
லியனார்டோ பிசா பிபநோசி, 1200 ஆம் ஆண்டில் லிபர் அபாசியில் இவ்வாறு எழுதினார். "இந்தியர்களின் கணக்கிடும் முறை எந்த அறியப்பட்ட முறையும் விஞ்சிவிட்டது. இது ஒரு அற்புதமான முறை. ஒன்பது குறியீடுகள் மற்றும் 0 பூச்சியம் குறியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்கள் கணக்கிடுகிறார்கள்."
இந்து-அரேபிய எண்களின் படிப்படியான வளர்ச்சி, இட மதிப்புத் தன்மை மற்றும் நிலைநிறுத்த குறிமுறை ஆகியவற்றை சுயாதீனமாக உருவாக்கியது, இது தசம கணக்கிடுதலுக்கான அடிப்படையான எளிமையான முறைகள் மற்றும் ஒரு இலக்கத்தின் 0 பூச்சியத்தைக் குறிக்கும் பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இந்த முறையானது ஒரு பெரிய மற்றும் சிறிய முழு எண்களை குறிப்பதற்கு ஒரு நிலையான அமைப்பை அனுமதித்துள்ளது. இந்த அணுகுமுறை இறுதியில் மற்ற அனைத்து அமைப்புகளையும் மாற்றியது. 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய கணிதவியலாளர் ஆர்யபட்டா இந்த அமைப்பின் தற்போதைய பதிப்பில் தனது ஆராய்ச்சிகளை தொட்ர்ந்தார், மேலும் பல்வேறு குறிப்புகளுடன் பரிசோதனைகளையும் செய்துள்ளார்.
7 ஆம் நூற்றாண்டில், பிரம்மகுப்தா 0 பூச்சியத்தைப் ஒரு தனி எண்ணாக பயன்படுத்தி, பூச்சியம் மற்றும் அனைத்து பிற எண்களின் பெருக்கல், பிரிவு, கூட்டல் மற்றும் கழித்தல் ஆகியவற்றின் முடிவுகளை நிர்ணயித்ததுள்ளார். ஆனால் 0 பூச்சியத்தால் வகுப்படும் எண்ணின் முடிவை அவரால் கூறமுடியவில்லை.
எண்கணித செயல்பாடுகள்
அடிப்படை எண்கணித செயல்பாடுகளை கூடுதலாக, கழித்தல், பெருக்கம் மற்றும் வகுத்தல் ஆகியவையாகும், இருப்பினும் இது மேலும் மேம்பட்ட செயல்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது, இது சதவிகிதம் கையாளுதல், சதுர வேர்கள், விரிவாக்கம் மற்றும் மடக்கை செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. ஒரு நிலையான செயல்பாடுகளின் படி எண்கணித செய்ல்படுகிறது. அனைத்து நான்கு கணித செயல்களும் (0 ஆல் வகுக்கப்படுவதைத் தவிர) எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம், இந்த நான்கு செயல்பாடுகள் வழக்கமான விதிகளுக்குள் உள்ளடங்கி, ஒரு களமாக அல்லது ஒரு துறையாக அழைக்கப்படுகின்றன.
கூட்டல் (+)
கூட்டல் என்பது கணிதத்தின் அடிப்படை செயல்பாடு ஆகும். அதன் எளிய வடிவத்தில், கூடுதலாக இரண்டு எண்கள், எண்களின் கூட்டுத்தொகை (2 + 2 = 4 அல்லது 3 + 5 = 8) ஒரு ஒற்றை இலக்கமாக எண் கிடைப்பது, கூட்டல் ஆகும்.
இரண்டு எண்களை விட அதிகமான எண்களை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கூட்டல்; இந்த நடைமுறை கூட்டுத்தொகை என அறியப்படுகிறது மற்றும் எண்ணற்ற எண்ணற்ற எண்ணை எண்ணற்ற வரிசையில் சேர்க்க வழிகள் உள்ளன; எண் 1 இன் தொடர்ச்சியான எண்ணிக்கையின் கணக்கிடுதல் மிக அடிப்படை வடிவம் ஆகும்.
கூட்டல் என்பது கூடுதலாக வகை மாற்று மற்றும் கூட்டுப்பண்புகள் கொண்டதாகவும் இருக்கிறது அதாவது ஒரு தொடரில் எண்ணின் நிலையை எப்படி மாற்றினாலும் அந்த எண்ணின் தொகை மாறாமல் இருக்கும். கூடுதலாக அடையாளம் உறுப்பு (கூடுதல் சேர்க்கை) 0 என்பது, எந்த எண்னுடன் கூட்டலின் போது அந்தக் கூட்டப்படும் எண்ணின் தொகை மாறாமல் அளிக்கிறது 0. கூடுதலாக, நேர்மாறு உறுப்பு (கூட்டல் நேர்மாறானது)
கூட்டப்படும் எண்ணின், அதாவது அந்த எண்ணின் எதிர் எண்ணுடன் சேர்த்துக்கொள்ளும் போது 0 பூஜ்ஜியம் கிடைக்கப்பெறும். உதாரணமாக, 7-ன் எதிர் -7, எனவே .
கழித்தல் (-)
கழித்தல் என்பது கூட்டலின் தலைகீழ் ஆகும். கழித்தல் இரண்டு எண்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டைக் காண்கிறது, அதாவது கழிக்கப்படும் எண் கழிபடும் எண்னை விட சிறியதாக இருந்தால் வேறுபாடு நேர்மறையாக இருக்கும் மாறாக கழிக்கப்படும் எண் கழிபடும் எண்னை விட பெறியதாக இருந்தால் வேறுபாடு எதிர்மறையாக இருக்கும். இரண்டு எண்களும் சமமாக இருந்தால் வேறுபாடு 0 பூஜ்ஜியமாக கிடைக்கும்.
பெருக்கல் (× or · or *)
பெருக்கல் என்பது கணிதத்தின் இரண்டாவது அடிப்படை செயல்பாடு ஆகும். பெருக்கல் இரண்டு வேறு வேறு முழு எண்களை ஒற்றை எண்ணின் தொடர் கூட்டுத்தொகையாக உருவாக்குகிறது. இரண்டு பெருக்கப்படும் அசல் அல்லது முழு எண்களை பெருக்கிகள் என்றும் , சில நேரங்களில் இரண்டு காரணிகள் என அழைக்கப்படுகின்றன.
பெருக்கல் ஒரு அளவிடுதலுக்கு பயன்ப்டுகிறது . எண்களை ஒரு வரிசையில் நிற்பதாக கற்பனை செய்தால், அந்தப் பல எண்களின் பெருக்கல், x எனக் கூறினால், அந்த் x 1 ஐ விட அதிகமாக இருக்க வேண்டும். இப்போது அந்த எண்கள் X எனற எண்ணின் எண்ணிக்கையில் சமமாக் அந்த வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை x ஆகும்.
a மற்றும் b பெருக்கல் இவ்வாறு எழுதப்படுகிறது or . கணினி நிரலாக்க மொழிகளிலும், மென்பொருள் தொகுப்புகளிலும், ஒரு விசைப்பலகையில் பொதுவாக காணக்கூடிய எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த முடியும், இது பெரும்பாலும் ஒரு நட்சத்திரத்துடன் எழுதப்படுகிறது: a * b.
வகுத்தல் (÷ or /)
வகுத்தல் என்பது பெருக்கத்தின் தலைகீழ் ஆகும். இது இரண்டு முழு எண்களை வகுப்பதால் ஈவு கிடைக்கப்பெறும். இதில் வகுபடும் எண், வகு எண்னை விட பெரியதாக இருந்தால் வகுத்தல் போது ஒரு நேர்மறை எண் ஈவாகக் கிடைக்கும். இதுவே வகுபடும் எண், வகு எண்னை விட சிறியதாக இருந்தால் வகுத்தல் போது ஒரு எதிர்மறை எண் ஈவாகக் கிடைக்கும். இப்போது ஈவை அந்த வகு எண்ணால் பெருக்கினால் வகுபடும் எண் கிடைக்கும். ஒரு முழு எண்னை 0 பூஜ்ஜியத்தால் வகுத்தால் ஈவு என்பது ஒரு முடிவில்லா ஒன்றாகும்.
வகுத்தல் என்பது வகை மாற்று பண்போ அல்லது கூட்டுப்பண்புகள் கொண்டதாகவோ இருக்கிறது. மேலும் கழித்தலை
கூட்டலாக பார்க்கவும், வகுத்தலை பெருக்கலாகப் பார்க்க இது பயனுள்ளதாக இருக்கும். வகுபடும் a எண்னை வகு
b எண்னின் தலைகீழ் பெருக்கினால் கிடைக்கும் விடை சமமாகும் . மேலும் பெருக்கலின் அனைத்து பண்புகளையும் கொண்டிருக்கிறது.
மேற்கோள்கள்
எண்கள்
எண்கணிதம் |
1744 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88 | ஆந்தை | ஆந்தை,() ஸ்ட்றைஜிபோர்மெஸ் வரிசையைச் சேர்ந்த, தனித்த, இரவில் திரியும் 200 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும்.
ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், சொண்டையும், மற்றும் facial disk என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது.
ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை, அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாது. எனினும், அவற்றின் பார்வை, விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது.
பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial diskகள், கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன.
அவற்றின் தோற்ற ஒற்றுமைக்குப் புறம்பாக, இவை, பாறுகள் மற்றும் ஏனைய இரவிற் திரியும் ஊனுண்ணிகளைவிட, whippoorwills மற்றும் ஏனைய பக்கிகள் அல்லது கேப்ரிமுல்கிபார்மஸ் என்பவற்றுக்கு நெருங்கிய உறவுள்ளவை. சில taxonomists, nightjarகளையும் ஆந்தையிருக்கும் அதே order இலேயே சேர்த்துள்ளார்கள். (Sibley-Ahlquist taxonomy ஐப் பார்க்கவும்).
ஆந்தைகளின் வலுவான நகங்களும், கூரிய சொண்டும், உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும், மங்கலான இறகுகளும், அவை சத்தமின்றியும், காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் சமிக்கப்படமுடியாத எலும்புகள், செதில்கள், மற்றும் இறகுகள் போன்றவற்றை, உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை, இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது. உயிரியல் பாடங்களின்போது பகுத்தாய்வதற்கு மாணவர்களுக்கு உதவுவதால், சில நிறுவனங்கள், இந்த உருண்டைகளைச் சேகரித்துப் பாடசாலைகளுக்கு விற்பனை செய்கின்றன.
ஆந்தை முட்டைகள் கிட்டத்தட்ட கோளவடிவம் கொண்டவை. ஆந்தைகள் அவற்றின் வகையைப் பொறுத்து, ஒரு சிலவற்றிலிருந்து பன்னிரண்டு வரையிலான முட்டைகளை இடுகின்றன. இவற்றின் கூடுகள் செம்மையற்றவை, மரங்கள், நிலத்தின் கீழான வளைகள், குகைகள் போன்ற இடங்களில் காணப்படும்.
பழங்கதைகளும், கிராமியக் கதைகளும்
இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல், பயத்துக்குரியதாகவும், கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது.
காகங்களும் வேறு பல பறவைகளும் அதிக புத்திக்கூர்மையுள்ளவையாக இருந்தும், ஆந்தைகள், பாரம்பரியமாகப் புத்திக்கூர்மையுடனும், ஆதெனா தெய்வத்துடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு வந்தது. பண்டைய எகிப்தியரின் எழுத்து வரிவடிவங்களில் "ம்" ஒலியைக் குறிக்க ஆந்தை உருவமே பயன்பட்டது. எனினும், ஊனுண்ணியான இது உயிர்பெற்றுத் தாக்குவதைத் தடுக்க, அதன் கால்கள் முறிந்த நிலையிலேயே வரைந்து வந்தார்கள். ஜப்பானியப் பண்பாட்டில், ஆந்தை இறப்பின் குறியீடாகக் கருதப்பட்டதுடன், இதனைக் காண்பதும் கெடுதியாகக் கருதப்பட்டது. ஹோபி பண்பாட்டில், இவை அழுக்கானவையாகவும், கஷ்டத்தைக் கொண்டுவருபவையாகவும் கருதப்பட்டன. 2003ல் அமெரிக்கப் பாடசாலைகளில் புழக்கத்திலுள்ள, மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் உள்ளீடுகளை, பல் பண்பாட்டு உணர்வுகளின் அடிப்படையில் மீளாய்வு செய்தபோது, பாம்புகள், தேள்கள் போன்ற பயத்தைக் கொடுக்கும் விலங்குகளுடன், ஆந்தைகளைப் பற்றிய கதைகள், கேள்விகளுக்கான உரைப்பகுதிகள் போன்றவற்றையும் நீக்கிவிட முடிவு செய்யப்பட்டது. தென்மேற்கு அமெரிக்க இந்தியப் பண்பாட்டைச் சேர்ந்த மாணவர்களை, ஆந்தை பற்றிய கேள்விகள் பயமுறுத்திப் பரீட்சையிலிருந்து திசைதிருப்பக் கூடுமென்பதால் இம் முடிவு எடுக்கப்பட்டதாம்.
மேற்கோள்கள்
North American Owls: Biology and Natural History by Paul A. Johnsgard, , Smithsonian Institution Press, 1997
வெளி இணைப்புகள்
விலங்கு Diversity இணையப் பக்கம்: ஆந்தைகள்
Australian Owls and Frogmouths
Owls of the World
ஆந்தைகள் |
1749 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D | செனிகல் | செனிகல் குடியரசு (Republic of Senegal) மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மேற்கில் அத்லாந்திக் சமுத்திரமும், வடக்கில் மௌரித்தானியாவும், கிழக்கில் மாலியும், தெற்கில் கினியாவும், கினி-பிசாவும் எல்லைகளாக உள்ளன. செனிகல் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கத்தாலும் காம்பியா நாட்டைச் சூழ, கடற்கரையிலிருந்து 300 கிமீ வரை உள்ளே நீண்டு செல்லும் ஒடுங்கிய நிலப் பகுதியாக அமைத்துள்ளது. கேப் வேர்டே தீவுகள் செனகல் கரையிலிருந்து 500 கிமீ க்கு அப்பால் அமைந்துள்ளது.
வெளியிணைப்புகள்
Gouvernement du Sénégal - உத்தியோகபூர்வ அரசாங்கத் தளம் (பிரெஞ்சு மொழியில்)
மேற்கோள்கள்
மேற்கு ஆப்பிரிக்க நாடுகள்
செனிகல்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் |
1767 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF | கிளி | கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் (அலகு) கொண்டன. ஆஸ்திரலேசியாவிலும், தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (Rose Ringed parakeet).
உணவு
விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு. கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்பவை.
வாழ்வியல்
கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்கா பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது. பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன.
பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை.
மேற்கோள்கள்
உசாத்துணை
அமுதம் தகவல் களஞ்சியம் |
1768 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | காகம் | காகம் (crow) என்பது கோர்வசு பேரினத்தினைச் சார்ந்த பறவையாகும். "காகம்" என்ற சொல் கோர்வசு பேரினத்தின் பல சிற்றினங்களைக் குறிக்கின்ற ஒரு பொதுப்பெயராக உள்ளது. கோர்வசு பேரினத்திலுள்ள பல்வேறு சிற்றினங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
கோர்வசு அல்பசு - பைட் காகம் (மத்திய ஆப்பிரிக்க கடற்கரைகள் தென்னாப்பிரிக்காவுக்கு)
கோர்வசு பென்னெட்டி - சிறிய காகம் (ஆஸ்திரேலியா)
கோர்வசு பிராச்சிரைன்கோஸ் - அமெரிக்க காகம் (அமெரிக்கா, தெற்கு கனடா, வடக்கு மெக்சிகோ)
கோர்வசு காரினசு - கேப் காகம் அல்லது கேப் ரூக் (கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா)
கோர்வசு கோர்னிக்சு - வடமேற்கு காகம் (ஒலிம்பிக் தீபகற்பம் முதல் தென்மேற்கு அலாஸ்கா வரை)
கோர்வசு கரோனே - ஹூட் காகம் (வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா)
கோர்வசு கொரோன் - கரியன் காகம் (ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியா)
கோர்வஸ் எடித்தே - சோமாலிய காகம் அல்லது குள்ள காக்கை (கிழக்கு ஆப்பிரிக்கா)
கோர்வசு என்கா - மெல்லிய பில் காகம் (மலேசியா, போர்னியோ, இந்தோனேசியா)
கோர்வசு புளோரென்சிசு - புளோரஸ் காகம் (புளோரஸ் தீவு)
கோர்வசு புசிகாபில்லசு - பழுப்பு-தலை காகம் (நியூ கினியா)
கோர்வசு ஹவாயென்சிசு (முன்னர் சி. டிராபிகசு ) - ஹவாய் காகம் (ஹவாய்)
கோர்வசு இம்பாரட்டசு - தமாஉலிபசு காகம் (மெக்சிகோ வளைகுடா கடற்கரை)
கோர்வசு இன்சுலாரிசு - பிசுமார்க் காகம் (பிசுமார்க் தீவுக்கூட்டம், பப்புவா நியூ கினியா)
கோர்வஸ் ஜமைக்காசென்சிஸ் - ஜமைக்கா காகம் (ஜமைக்கா)
கோர்வசு குபரி - மரியானா காகம் அல்லது ஆகா (குவாம், ரோட்டா)
கோர்வசு இலுகோக்னாபலசு - வெள்ளை கழுத்து காகம் (ஹைட்டி, டொமினிகன் குடியரசு, புவேர்ட்டோ ரிக்கோ)
கோர்வசு மேக்ரோஹைன்கோசு - காட்டு காகம் (கிழக்கு ஆசியா, இமயமலை, பிலிப்பைன்ஸ்)
கோர்வசு மேக்ரோஹைன்கோசு மேக்ரோஹைன்கோஸ் - பெரிய பில் காகம்
கோர்வசு மேக்ரோரைன்கசு லெவெலண்டி - கிழக்கு காட்டு காகம் (இந்தியா, பர்மா)
கோர்வசு மேக்ரோஹைன்கோசு குல்மினடசு - இந்திய காட்டுக் காகம்
கோர்வசு மீக்கி - பூகேன்வில் காகம் அல்லது சாலமன் தீவுகள் காகம் (வடக்கு சாலமன் தீவுகள்)
கோர்வசு மோனெடுலோயிட்சு - புதிய கலிடோனிய காகம் (புதிய கலிடோனியா, விசுவாச தீவுகள்)
கோர்வசு நாசிகசு - கியூபா காகம் (கியூபா, இஸ்லா டி லா ஜுவென்டுட், கிராண்ட் கைகோஸ் தீவு)
கோர்வசு ஓரு - டொரேசிய காகம் அல்லது ஆஸ்திரேலிய காகம் (ஆஸ்திரேலியா, நியூ கினியா மற்றும் அருகிலுள்ள தீவுகள்)
கோர்வசு ஆஸிஃப்ராகஸ் - மீன் காகம் (தென்கிழக்கு அமெரிக்க கடற்கரை)
கோர்வசு பால்மரம் - பனை காகம் (கியூபா, ஹைட்டி, டொமினிகன் குடியரசு)
கோர்வசு சினலோவா - சினலோவா காகம் (சோனோராவிலிருந்து கொலிமா வரை பசிபிக் கடற்கரை)
கோர்வசு ஸ்ப்ளென்டென்ஸ் - வீட்டுக் காகம் அல்லது இந்திய வீட்டு காகம் (இந்திய துணைக் கண்டம், மத்திய கிழக்கு, கிழக்கு ஆப்பிரிக்கா)
கோர்வஸ் டொர்குவடசு - காலர் காகம் (கிழக்கு சீனா, தெற்கே வியட்நாமில்)
கோர்வசு ட்ரிசுடிசு - சாம்பல் காகம் அல்லது வெற்று முகம் கொண்ட காகம் (நியூ கினியா மற்றும் அண்டை தீவுகள்)
கோர்வசு டைபிகசு - பைப்பிங் காகம் அல்லது செலிபசு பைட் காகம் (சுலவேசி, முனா, புட்டுங்)
கோர்வசு யூனிகலர் - பாங்கை காகம் (பாங்காய் தீவு)
கோர்வசு வேலிடசு- நீண்ட அலகு காகம் (வடக்கு மொலுக்காஸ்)
கோர்வசு வயலசெசு - வயலட் காகம் (செரம்) - மெல்லிய பில்ட் காகத்திலிருந்து சமீபத்திய பிளவு
கோர்வசு வூட்ஃபோர்டி - வெள்ளை பில் காகம் அல்லது சாலமன் தீவுகள் காகம் (தெற்கு சாலமன் தீவுகள்)
மேலும் காண்க
ரூக்
மேலும் படிக்க
காக்கைகள் |
1769 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | கரியன் காகம் | கரியன் காகம் (Carrion Crow), கோர்வஸ் கொரோனேயை Raven இலிருந்து அதன் அளவாலும், Hooded காகத்திலிருந்து அதன் உடல் நிறத்தாலும் வேறுபடுத்தி அறியமுடியும். எனினும், இதற்கும் Rookக்குமிடையே வேறுபாடு காண்பதில் அடிக்கடி குழப்பம் உண்டாவதுண்டு. காகத்தின் சொண்டு கனமானதாக இருப்பதால் கட்டையாகத் தோற்றும். முதிர்ந்த Rook இல் மூக்குத் துவாரம் வெறுமையாக இருக்கும், ஆனால் காகத்தில் அதன் எல்லா வயதிலும் மூக்குத்துவாரம் தும்பு போன்ற இறகுகளினால் மூடப்பட்டிருக்கும்.
இந்த வகை, கிழக்காசியாவில் காணப்படும், தொடர்புள்ள C. c. ஒரியெண்டலிஸ் உடன், மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழுகின்றது. இந்த இரண்டு வகைகளுக்கிடையிலான பிரிவு கடைசி பனி உலகில் இடம் பெற்றதாக நம்பப்படுகின்றது. இவையிரண்டுக்குமிடையிலான இடைவெளியை, நெருக்கமான தொடர்புள்ள Hooded Crow (தற்போது தனி "வகை" அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது) நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு வடிவங்களுக்குமிடையிலான எல்லைகளில், இவற்றுக்கிடையிலான கலப்பினங்கள் உருவாவது, இவை இரண்டுக்குமிடையிலான பரம்பரையியல் தொடர்புகளைக் காட்டுகின்றது.
கரியன் காகத்தின் உடல் நிறம், பச்சை அல்லது ஊதாப் பளபளப்புடன் கூடிய கறுப்பாகும். ஆனால் பளபளப்பு பனி யுகம்Rook இலும் கூடிய பச்சையானது. சொண்டு, கால்கள், பாதங்கள் என்பனவும் கறுப்பு நிறமே.
Rook பொதுவாகச் சேர்ந்து வாழ்வது. கரியன் காகம் தனிமையில் வாழ்வது. ரூக்குகள் எப்போதாவது தனியான மரங்களில் கூடு கட்டுகின்றன. காகங்கள் Rookகுகளுடன் சேர்ந்து உணவுண்ணக்கூடும். மேலும், காகங்கள் குளிர்காலத் தங்குமிடங்களில் சேர்ந்து வாழுகின்றன. இவற்றிடையே முக்கிய வேறுபாடு இவற்றின் குரலாகும். Rookகுகள் "கா" என்று கரைய, காகங்கள் pawk, pawk என்று சத்தம் எழுப்புகின்றன. அடித்தொண்டையிலிருந்து வரும் சிறிது அதிர்வுள்ள சத்தம், Rookகுகளின் சத்தங்களிலிருந்து வேறானது.
இப் பறவை அதிகம் சத்தம் எழுப்பிக்கொண்டிருப்பது. மரக்கிளையில் இருந்துகொண்டு தொடராகக் கரையும். ஒரு தொடரில் விரைவாக அடுத்தடுத்து மூன்று அல்லது நான்கு முறை ஒலியெழுப்பும், அடுத்தடுத்த தொடர்களிடையே சிறிது இடைவெளியிருக்கும். சிறகடிப்பு, ரூக்இன் சிறகடிப்பைக் காட்டிலும் மெதுவாகவும், நிதானமானதாகவும் இருக்கும்.
எல்லாவித அழுகும் உடல்களையும் தின்னும் வழக்கமுள்ளதாயினும், அதனால் பிடிக்கக்கூடிய சிறிய விலங்குகளைக் கொன்றும் தின்னக்கூடியது, அத்துடன் முட்டைகளைத் திருடித் தின்பதையும் வழக்கமாகக் கொண்டது. காகங்கள் இயற்கையில் தோட்டிகள், இதனால்தான், வீட்டுக் கழிவுகளை உண்பதற்காக மனிதர்கள் வாழும் இடங்களில் அடிக்கடி காணப்படுகின்றன.
மலையுச்சிகளின் தொங்குபாறைகளில் இவை கூடுகட்டுகின்றன, ஆனால் உள்நாடுகளில் மரங்களிலேயே கூடுகளை அமைக்கின்றன. இக் கூடுகள் raven களுடையதிப் போலவே இருந்தாலும், அளவிற் சிறியவை. நான்கு முதல் ஐந்து வரையிலான முட்டைகளைப் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரே இடுகின்றன. முட்டைகள், நீல அல்லது பச்சைப் பின்னணியில் மண்ணிறப் புள்ளிகளைக் கொண்டவையாக உள்ளன. முட்டையிலிருந்து வெளிவந்து ஆறு வாரகாலத்துக்குள், குஞ்சுகள் சிறகு முளைத்துப் பறக்கத் தயாராகிவிடுகின்றன.
முன்னைய வருடங்களில் பொரித்த குஞ்சுகள் அவ்விடத்திலேயே இருந்து புதிய குஞ்சுகளை வளர்க்க உதவுகின்றன. அவை உணவு சேகரித்துக் குஞ்சுகளுக்குக் கொடுப்பதில் பெற்றோருக்கு உதவுகின்றன.
புகைப்பட இணைப்புகள்:
Good profile shot
புகைப்பட வரிசை
கரியன் காகம்
கரியன் காகத்தின் மண்டையோடு
மேற்கோள்கள்
காக்கைகள்
ஐரோவாசியப் பறவைகள் |
1770 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE | சாதாரண மைனா | சாதாரண மைனா [Common myna (Acridotheres tristis)] அல்லது நாகணவாய் என்பது தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா, இலங்கை வரையான நாடுகளில் காணப்படும் நாகணவாய் இனமாகும். இது மனிதக் குரலில் அளவம் (குரல்போலி) செய்யக்கூடியது என்பதால் 'பேசும் மைனா' எனவும் அழக்கப்படுகிறது.
வகைப்பாடு
இது இரண்டு துணையினங்களாக அங்கிகரிக்கபட்டுள்ளது:
இந்திய மைனா (A. t. tristis) (லின்னேயஸ், 1766) – இது தெற்கு கசக்கஸ்தான், துருக்மெனிஸ்தான் கிழக்கு ஈரானில் இருந்து தெற்கு சீனா, இந்தோசீனா, மலாய் தீபகற்பம், தென்னிந்தியா வரை காணப்படுகிறது. இது ஹவாய் மற்றும் வட அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வாழிட எல்லையின் வடமேற்கே உள்ளவை சில சமயங்களில் ஒரு தனித்த கிளையினமாகப் பிரிக்கபட்டது, A. t. neumanni, நேபாளம் மற்றும் மியான்மரில் காணப்படுபவை A. t. tristoides.
இலங்கை மைனா (A. t. melanosternus) லெக், 1879 – இலங்கை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சாதாரண மைனா காணொளிகள், படிமங்கள் மற்றும் ஒலி
இந்திய மைனா
சாதாரண மைனா காணொளி
ANU இந்திய சாதாரண மைனா
மைனா
தெற்காசியப் பறவைகள்
இந்தியப் பெருங்கடல் பறவைகள்
மத்திய கிழக்குப் பறவைகள் |
1772 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D | கோராசீபோர்மெஸ் | கொராசீபோர்மெஸ்கள், மீன்கொத்திகள், கொண்டலாத்தி, தேனீ உண்ணிகள், காடைகள், இருவாய்ச்சிகள் என்பவற்றை உள்ளடக்கிய, வழக்கமாகப் பல நிறம் கொண்ட பறவைகளாகும்.
இந்த வரிசை ஒரு கலவை போலத் தெரிகின்றது. டி. என். ஏ. பகுப்பாய்வு புழக்கத்துக்கு வந்தபின்னர், பல குழுக்கள் திருத்தப்பட்ட பட்டியல் ஒழுங்குகளில் வைக்கப்படுகின்றன.
பறவைகள் |
1774 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE | மைனா | மைனா ஸ்டார்லிங் (ஸ்ட்டேண்டிடே) குடும்பத்து பறவையாகும். பசரீன் பறவைகள் குழுவைச் சேர்ந்த இவை, இயற்கையாகக் கிழக்காசியாவில் மட்டுமே வாழ்கின்றன, எனினும் இவற்றின் பல வகைகள், வட அமெரிக்காவுக்கும், சாதாரண மைனா தென்கிழக்கு அவுஸ்திரேலியாவுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மைனாக்கள் வலுவான பாதங்களைக் கொண்ட, நடுத்தர அளவிலான பசரீன்களாகும். இவற்றின் பறப்பு வலுவானதும் நேரானதுமாகும். இவை கூட்டமாக வாழ்வன. இவை விரும்பும் வாழிடம் ஓரளவு திறந்த வெளிகளாகும். இவை பூச்சிகளையும், பழங்களையும் உண்ணுகின்றன. பல வகைகள் மனித வாழிடங்களுக்கருகில் வசிப்பதுடன், எல்லாவகை உணவுகளையும் உண்ணக்கூடியன.
உடல் நிறம் பொதுவாகக் கடுமையானது, அதிகம் மண்ணிறம். சில வகைகள் மஞ்சள் நிறத்திலான தலை அலங்காரங்களைக் கொண்டுள்ளன.பெரும்பாலான வகைகள் பொந்துகளிலேயே கூடு கட்டி வாழுகின்றன.
மேற்கோள்கள்
மைனா |
1788 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D | மரம் | மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும், பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் (15 அடி) உயரமும், ஒரு தனி அடிமரத்தில் தாங்கப்பட்ட கிளைகளையும் கொண்டிருக்கும். மரங்கள், இயற்கை நிலத்தோற்றத்தில் முக்கியமான அம்சமாக இருப்பதுடன் நிலத்தோற்றக்கலையில் ஒரு முக்கியமான கூறுமாகும். ஏனைய வகைகளைச் சேர்ந்த செடிகொடி போன்ற நிலத்திணை வகைகளை விட, மரங்கள் நீண்டகாலம் வாழக்கூடியவை. சிலவகை மரங்கள் 100 மீ. (300 அடி), உயரம் வரை வளரக்கூடியவை, சில ஈராயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள செம்மரம் என்னும் வகை இப்படிப்பட்டன. இதே போல தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகர பட்டினம் என்னும் ஊரில் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட "பவோபாப் மரம்" இன்றும் ஆயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறது.
இந்த மரம் தமிழர்கள் ஆதிகாலத்தில் கடல் வணிகத்தில் உலகின் முன்னோடிகளாக இருந்தனர் என்பதற்கு நல்ல உதாரணமாக கூறலாம்.
காரணம் தமிழர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கப்பல் வழி வணிகம் செய்ய போகும் போது இந்த மரத்தின் விதைகளை அங்கிருந்து எடுத்து வந்து இங்கு விதைத்து இருகின்றனர்.
உருவவியல் (Morphology)
வேர்கள், அடிமரம், கிளைகள், சிறுகிளைகள், இலைகள் என்பவை மரத்தின் பகுதிகளாகும். மரத் தண்டு, தாங்குவதற்கானதும், நீர், உணவு முதலியவற்றைக் கடத்துவதற்குமான மென்சவ்வுகளைக் (காழ் (xylem) மற்றும் உரியம் (phloem)) கொண்டது. மரம் (மூலப்பொருள்), காழ்க் கலங்களைக் கொண்டது, மரப்பட்டை முக்கியமாக உரியங்களால் ஆனது. மரம் வளரும்போது இது ஆண்டு வளையங்களை உருவாக்குகின்றது. மிதவெப்ப மண்டலக் (temperate) காலநிலைப் பிரதேசங்களில் இந்த வளையங்களை எண்ணுவதன் மூலம் மரத்தின் வயதைக் கணிக்க முடியும். மரத்தின் வேர்கள் பெரும்பாலும் நிலத்திற்கு அடியிலேயே காணப்படும். இவை மரம் நிலத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ள உதவுவதுடன், மண்ணிலிருந்து நீர் மற்றும் போஷாக்குப் பொருட்களை உறிஞ்சவும் பயன்படுகின்றன. தாவரங்கள் உணவைத் தயாரிப்பதற்குச் சூரிய ஒளி தேவை. இலைகளின் மூலமே இச் செயற்பாடு நடைபெறுகின்றது. மரங்கள் அடர்த்தியாகவுள்ள இடங்களில் ஒளிக்காக மற்றத் தாவரங்களுடன், போட்டியிடவேண்டியுள்ளது. இதற்கு உதவும்பொருட்டுத், தண்டுகள், இலைகளைக் கொண்டுள்ள கிளைகளை உயரத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பல தாவரங்களில், இலைகள் கூடிய அளவு சூரிய ஒளியைப் பெறத்தக்கவகையில், கிளைகளின் ஒழுங்கு அமைந்திருக்கும்.
எல்லா மரங்களும் முன் கூறிய பாகங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணமாகப் பன்னங்கள் கிளைகளைக் கொண்டிருப்பதில்லை. வட அமெரிக்காவில் வளரும் சாகுவாரோ கக்டஸ்களுக்குச் செயற்பாடுள்ள இலைகள் இல்லை. மரப் பன்னங்கள் பட்டைகளைக் கொண்டிருப்பதில்லை. அவற்றின் பருமட்டான வடிவத்தையும், அளவையும், அடிப்படையாக வைத்து இவையனைத்தும் மரங்களாகவே கொள்ளப்படுகின்றன. சில சமயம் அளவே முக்கியமாகக் கருதப்படுகின்றது. பல கிளைகள் அல்லது தண்டுகளுடன் கூடிய, மரத்தைப் போலவே வடிவமுடைய தாவரமொன்று, அளவில் மிகவும் சிறிதாக இருக்கக்கூடும். இது செடியென்று அழைக்கப்படுகின்றது. எனினும் மரத்துக்கும், செடிக்கும் இடையில் சரியான வேறுபடுத்தும் எல்லை கிடையாது. சிறியனவாக இருப்பதால் "பொன்சாய்"கள் மரங்கள் என்று கொள்ளப்படமுடியாது, எனினும் மரவகைகளின் வடிவத்தைக் கருதும்போது, தனியொரு specimen இன் வடிவத்தோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. மூங்கில்கள் மரங்களின் பல இயல்புகளைக் கொண்டிருந்தாலும், அவை மரங்களென அழைக்கப்படுவதில்லை.
ஒன்றாக வளரும் சிறு கூட்டம் மரங்கள் தோப்பு எனப்படுகின்றன, பெரியதொரு நிலப்பரப்பில் மரங்கள் அடர்ந்திருக்கும்போது அது காடு எனப்படுகின்றது. பெரிய ஆனால் ஐதாக இருக்கும் மரங்களையும் இடையில் புல்வெளிகளையும் (வழக்கமாக மேய்ச்சலுக்கு விடப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட) கொண்ட பகுதி வெப்பப் புல்வெளி (savanna) எனப்படுகின்றது. மேலும்..
முக்கிய மரவகைகள் (genera)
மரங்கள் பல்வேறுபட்ட தாவரக் குடும்பங்களுள் அடங்குகின்றன. அதனால், இவை பல்வேறுவகையான இலை வகைகள், வடிவங்கள், பட்டைகள், பூக்கள், பழங்கள், முதலியவற்றைக் கொண்டவையாக உள்ளன. ஆரம்பகால மரங்கள், பெரிய காடுகளில் வளரும் மரப் பன்னங்களாக இருக்கக்கூடும். பின்னர் ஊசியிலை மரங்கள், கிங்க்கோக்கள், சைக்காட்டுகள் மற்றும் எனைய வித்துமூடியிலிகள் (gymnosperm) போன்றவை தோன்றின. இன்று பெரும்பாலான மரங்கள் பூக்கும் தாவரங்களும், ஊசியிலைத் தாவரங்களுமாகும். கிழேயுள்ள பட்டியல் பெரிதும் அறியப்பட்ட மரங்களின் பெயர்களையும், அவை பொதுவாக எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் காட்டுகின்றது.
பூக்கும் தாவரங்கள் (Magnoliophyta)
இருவித்திலைத் தாவரங்கள் (Magnoliopsida)
அனக்காடியேசியே (மரமுந்திரி குடும்பம்)
மரமுந்திரி, அனக்காடியம் ஒக்சிடென்தலே
மா, மங்கிபேரா இந்திகா
பசுங்கொட்டை, பிஸ்தாசியா வேரா (Pistacia vera)
Toxicodendron, டொக்சிகோடென்றன் வேர்ணிசிபு(f)ளூவா (Toxicodendron verniciflua)
Aquifoliaceae (ஐலெக்சு குடும்பம்)
Holly, Ilex வகை
அரலியேசியே (Hedera; Ivy குடும்பம்)
Kalopanax, கலோபானக்ஸ் பிக்டஸ் (Kalopanax pictus)
Betulaceae (Birch குடும்பம்)
Alder, Alnus வகை
Birch, Betula வகை
பொ(b)ம்பாகேசியே (பெருக்க மரம் குடும்பம்; sometimes included in மால்வேசியே)
பெருக்க மரம், அடன்சோனியா வகை
முள்ளிலவு, பொ(b)ம்பா(b)க்ஸ் சீபா(b) (Bombax ceiba)
Kapok, சீபா பெண்டந்திரா (Ceiba pentandra)
துரியான், துரியோ ஸிபெத்தினஸ் (Durio zibethinus)
பல்சா, ஒகுரோமா லகோ(g)பஸ் (Ochroma lagopus)
பர்சரேசியே
கார்வேம்பு, கரூகா பின்னாட்டா (Garuga pinnata)
கக்டாசியே (கள்ளி குடும்பம்)
உயரக் கற்றாழை, கார்னேஜியே ஜைஜண்டியா (Carnegiea gigantea)
கோர்னாசேசியே (Dogwood குடும்பம்)
Dogwood, கோர்னஸ் (Cornus) வகை
கோரிலேசியே (ஹஸெல் குடும்பம்)
Hornbeam, கார்பினஸ் (Carpinus) வகை
Hazel, கோரிலஸ் (Corylus) வகை
பா(f)பே(b)சியே (பட்டாணி குடும்பம்)
Honey locust, Gleditsia triacanthos
Black locust, Robinia pseudoacacia
Laburnum, லபூர்னம் (Laburnum) வகை
Pau Brasil, Brazilwood, Caesalpinia echinata
பா(f)கே(g)சியே (பீ(b)ச் குடும்பம் )
செசுநட், Castanea வகை
பீ(b)ச், Fagus வகை
Southern beech, Nothofagus வகை
Tanoak, Lithocarpus densiflorus
ஓக், Quercus வகை
Fouquieriaceae (Boojum குடும்பம்)
Boojum tree, போர்குவேரியா கொலம்னாரிஸ் (Fouquieria columnaris)
Hamamelidaceae (Witch-hazel குடும்பம்)
Sweet-gum, லிக்குயிடம்பர் (Liquidambar) வகை
Persian ironwood, பரோட்டியா பேர்ஸிக்கா (Parrotia persica)
ஜக்லண்டேசியே (வாதுமைக் கொட்டை குடும்பம்)
வாதுமைக் கொட்டை, ஜக்லான்ஸ் (Juglans) வகை
Hickory, Carya வகை
லோரேசியே (Bay laurel குடும்பம்)
கறுவா சினமோமம் ஸெலனிக்கம் (Cinnamomum zeylanicum)
Bay laurel லோரல் நொபிலிஸ் (Laurus nobilis)
அவகாடோ பேசியா அமெரிக்கானா (Persea americana)
லைத்திரேசியே Loosestrife குடும்பம்
Crape myrtle Lagerstroemia வகை
மக்னோலியேசியே (Magnolia குடும்பம்)
Liriodendron; Tulip tree, Liriodendron species
Magnolia, Magnolia வகை
மல்வேசியே (Tilia|திலியேசியே உள்ளடங்கியது) (Mallow குடும்பம்.)
Linden (Basswood, Lime), Tilia வகை
மெலியேசியே (மலைவேம்பு குடும்பம்)
வேம்பு, Azadirachta indica (A. Juss)
Bead tree, மெலியா அஸெடராச் (Melia azedarach)
மலை வேம்பு, சுவீதெனியா மககோனி (Swietenia mahagoni)
மோராசியே
ஆல், பை(f)க்கஸ் பெ(b)ங்காலென்சிஸ் (Ficus benghalensis)
அரசு, பை(f)க்கஸ் ரிலிஜியோசா (Ficus religiosa)
மைரிஸ்டிகேசியே (சாதிக்காய் மரம் குடும்பம்)
சாதிக்காய் மரம், மைஸ்ரிஸ்டிகா பி(f)ராகிரன்ஸ் (Mysristica fragrans)
மிர்ட்டேசியே (Myrtle குடும்பம் )
யுகலிப்டஸ், யுகலிப்டஸ் வகை
Myrtle, Myrtus வகை
கொய்யா, சிடியம் குவாஜாவா (Psidium guajava)
நாவல், Syzygium cumini
நைசாசியே (Nyssaceae):பூத்திருக்கும் ஒரு புறா மரம்
நைசாசியே (Tupelo குடும்பம்; சிலசமயம் Cornaceaeல் உள்ளடக்கப்படுகின்றது)
Tupelo, Nyssa வகை
புறா மரம், தாவிதியா இன்வொலுகிராட்டா (Davidia involucrata)
ஒலியேசியே (ஒலிவ் குடும்பம்)
ஒலிவ், Olea europaea
Ash, பிரக்ஸினஸ் (Fraxinus) வகை
பப்பிலியோனேசியே
புங்கை, பொங்கமியா பின்னாட்டா (Pongamia pinnata)
முருக்கு, முள்முருக்கு, எரித்ரைனா இந்திக்கா (Erythrina indica)
பிளாட்டனேசியே (பிளாட்டனஸ் குடும்பம்)
பிளாட்டனஸ், பிளாட்டனஸ் வகை
ரிஸோபோராசியே (அலையாத்தித் தாவரங்கள் குடும்பம்)
Red Mangrove, ரிஸோபோரா மங்கிள் (Rhizophora mangle)
ரோசேசியே (ரோஜா குடும்பம்)
Rowan, Sorbus வகை
Hawthorn, Crataegus வகை
பேரி, Pyrus வகை
அப்பிள், Malus வகை
வாதுமை, புரூணஸ் துல்ஸிஸ் (Prunus dulcis)
பீச், புரூணஸ் பேர்ஸிக்கா (Prunus persica)
பிளம், புரூணஸ் டொமெஸ்ட்டிக்கா (Prunus domestica)
செர்ரி, புரூணஸ் வகை
காஃபி குடும்பம் (Bedstraw குடும்பம்)
காப்பி, காபி(f)யா அராபிக்கா
Rutaceae (Rue குடும்பம்)
தோடை, Citrus aurantium
எலுமிச்சை, Citrus limon
Cork-tree, Phellodendron வகை
Euodia, Tetradium வகை
Salicaceae (Willow குடும்பம்)
Aspen, Populus வகை
Poplar, Populus வகை
Willow, Salix வகை
Sapindaceae (including Aceraceae, Hippocastanaceae) (Soapberry குடும்பம்)
மேப்பிள், Acer வகை
Buckeye, Horse-chestnut, Aesculus வகை
Mexican buckeye, Ungnadia speciosa
விளச்சிப்பழம், Litchi sinensis
Golden rain tree, Koelreuteria paniculata
Sapotaceaefamily
Tambalacoque, or dodo tree, Sideroxylon grandiflorum, previously Calvaria major
Simaroubaceae குடும்பம்
Tree of heaven, Ailanthus வகை
கண்ணாடி மரம் குடும்பம்
Cacao (cocoa), Theobroma cacao
அல்மேசீ (எல்ம் குடும்பம்)
Hackberry, Celtis வகை
எல்ம், Ulmus வகை
ஒருவித்திலைத் தாவரங்கள் (Liliopsida)
அகாவேசியே (அகாவே குடும்பம்)
Cabbage palm, கோர்டிலைன் அவுஸ்திரேலிஸ் (Cordyline australis)
Dragon மரம், ட்றசீனா ட்றாக்கோ (Dracaena draco )
Joshua மரம், யூக்கா brevifolia
அரெகேசியே (Palmae) (Palm குடும்பம்)
கமுகு, அரெக்கா காட்டெச்சு
தென்னை கோகோஸ் நியூசிபெ(f)ரா
பேரீந்து Palm, Phoenix dactylifera
Chusan Palm, Trachycarpus fortunei
போவாசியே (புல் குடும்பம்)
மூங்கில்கள் Poaceae subfamily Bambusoideae
வாழைகள், மரத்தன்மையற்றதாலும், பல்லாண்டுத் தாவரமல்லாததாலும், உண்மையில் மரங்களல்ல என்பதைக் கவனிக்கவும்.
ஊசியிலை மரங்கள்
கலிபோர்னியா செம்மரம், உலகின் அதி உயரமான மர வகை; ஒரு ஊசியிலை மரம்
Araucariaceae (ஆராக்கேரியா குடும்பம்)
ஆராக்கேரியா, அரொகேரியா வகை
Kauri, அகாதிஸ் வகை
குப்பிரசாசியே (சைப்பிரஸ் குடும்பம்)
சைப்பிரஸ், குப்பிரசெஸ் வகை
சைப்பிரஸ், Chamaecyparis வகை
Juniper, Juniperus வகை
Alerce or Patagonian cypress, Fitzroya cupressoides
Sugi, Cryptomeria japonica
கலிபோர்னியா செம்மரம், Sequoia sempervirens
பெரு மரம், Sequoiadendron giganteum
Dawn redwood, Metasequoia glyptostroboides
Bald சைப்பிரஸ், Taxodium distichum
பைனாசியே (பைன் குடும்பம்)
வெண் பைன், பைனஸ் வகை
Pinyon பைன், பைனஸ் வகை
பைன், பைனஸ் வகை
Spruce, பீசியா வகை
Larch, லாரிக்ஸ் வகை
டக்லஸ்-பே(f)ர், Pseudotsuga வகை
பே(f)ர், Abies வகை
செடார், Cedrus வகை
Podocarpaceae (Yellow-wood குடும்பம்)
African yellow-wood, Afrocarpus falcatus
Totara, Podocarpus totara
Taxaceae (Yew குடும்பம்)
Yew, Taxus வகை
Ginkgos
Ginkgoaceae (Ginkgo குடும்பம்)
Ginkgo, Ginkgo biloba
சைக்கட்டுகள் (வித்துமூடியிலித் தாவரங்கள்)
சைக்கடேசியே குடும்பம்
Ngathu சைக்காட், சைக்கஸ் ஆங்கிலாட்டா (Cycas angulata)
Zamiaceae குடும்பம்
Wunu cycad, Lepidozamia hopei
பன்னங்கள் (Fern)
Cyatheaceae and Dicksoniaceae families
மரப் பன்னங்கள், Cyathea, Alsophila, Dicksonia (ஒரு monophyletic கூட்டமல்ல)
வாழ்வுக் கட்டங்கள்
மரங்களின், விசேடமாக ஊசியிலை மரங்களின், வாழ்க்கை வட்டம், காடு வளர்ப்புத் துறையில், கணக்கெடுப்பு மற்றும் ஆவணப்படுத்தும் நோக்கங்களுக்காக பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது:
விதை
நாற்று: விதையிலிருந்து முளைத்துவரும், முளையத்தின் நிலத்துக்கு மேலுள்ள பகுதி.
Sapling: முளையம் வளர்ந்து 1மீ உயரத்திலிருந்து அதன் தண்டு 7 சமீ விட்டமுள்ளதாக ஆகும் வரையுள்ள கட்டம்.
Pole: 7 தொடக்கம் 30 சமீ விட்டமுள்ள இளம் மரங்கள்.
முதிர்ந்த மரம்: 30 சமீ க்கு மேற்பட்ட விட்டம், இனப்பெருக்கக் காலத்தின் தொடக்கம்.
முதிய மரம்: பழைய வளர்ச்சிக் காடுகளில் அதிகம்; உயர வளர்ச்சி பெருமளவு குறைந்துவிடும், அதிகரித்த விதை உற்பத்தி.
அளவுமீறிய முதிர்ச்சி: dieback மற்றும் பழுதடைதல் சாதாரணம்.
Snag: நிற்கும் இறந்த மரங்கள்
மரக்குற்றி/கழிவு: விழுந்த மரக்குற்றிகள்
மரத்தின் விட்டம், அதன் அடியில், நிலத்தின் அதியுயர்ந்த புள்ளியிலிருந்து 1.3 – 1.5 மீட்டர் உயரத்தில் அளக்கப்படுகின்றது. 7 சமீ விட்ட வரையறை பொருளாதார ரீதியிலானது. இதுவே கடதாசி உற்பத்தி போன்றவற்றுக்காக விற்கப்படக்கூடிய அதி குறைந்த விட்டமாகும். 30 சமீ விட்டமே அரியப்படும் மரங்களுக்கான ஆகக்குறைந்த விட்டம். ஒவ்வொரு கட்டமும் may be uniquely perceptive to different pathogens and suitable for especially adapted arboreal animals.
பண்பாடு
மரங்கள் வழக்கமாக பழங்கதைகளிலும், சமயத்திலும் முக்கிய குறியீடுகளாக இருந்துவருகின்றன. உதாரணமாக நோர்ஸ் பழங்கதைகளில்Yggdrasil, ஜெர்மானிக் பழங்கதைகளிலிருந்து பெறப்பட்ட நத்தார் மரம், யூதாயிசத்தினதும், கிறிஸ்துவத்தினதும் அறிவு மரம், பௌத்தத்தின் போதி மரம் மற்றும் இந்துப் பழங்கதைகள் கூறும் கற்பகதரு என்பவற்றைக் கூறலாம்.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
மரங்களின் பழமொழி
நத்தார் மரம்
காடு வளர்ப்பு
காடழிப்பு
மரப் பண்ணை
பொன்சாய்
மரவேலை |
1793 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D | நல்லூர் கந்தசுவாமி கோவில் | நல்லூர் கந்தசுவாமி கோயில் என்பது இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக அறியப்படுகிறது.
வரலாறு
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.
ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டை அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட புவனேகபாகு எனப்பெயர் கொண்டு கோட்டை அரசரான, செண்பகப் பெருமாள் என்பவரால் கட்டப்பட்டதாகும். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக்கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:
திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.
முன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.
உண்மையில் நல்லூர் இப்போது உள்ள அமைப்பானது முன்றாவது கோயில் கட்டுமானம் ஆகும். இந்த 3 வது கோயிலின் அமைப்பில் அது வரை இருந்த பழைய ஆலயத்தின் எந்த கட்டுமானங்களும் சமந்தப்படாத புதிய கட்டுமானம் தான் இப்போதுள்ள நல்லூர்கந்தன் ஆலயம் அகும்.
யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658–1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.
மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாத்திர விதிக்கமைந்த கட்டட முறைக்கும் மாற்றியமைத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவர வித்திட்டவர் ஆறுமுக நாவலர் ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.
ஆலய அமைப்பு
இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிலாவிக்கிருகத்திற்குப் பதிலாக வேல் அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி பிள்ளையார் முதலான பரிவாரத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாலயம் கிழக்கிலும், தெற்கிலும் வாசல்களைக் கொண்டுள்ளது. இவற்றின் மேல் பெருங்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தின் தெற்குப் புறத்தில் உள்ள தீர்த்தக்கேணி நன்கு திட்டமிடப்பட்டு, படிக்கட்டுகளும் மண்டபங்களும் கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளது. முருகனின் மூர்த்தங்களில் ஒன்றான தண்டாயுதபாணிக்கு அங்கு சிறு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன.
பூசைகளும் மகோற்சவமும்
இவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன.
தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜை இடம்பெறுகின்றமையும், மாலையில் பள்ளியறைப் பூஜை இடம்பெறுகின்றமையும் இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். திருவிழா காலங்களில் மட்டுமல்லாமல் தினமும் மாலையில் முருகப் பெருமானை ஊஞ்சற் பாட்டுப்பாடி, அழகிய சிறு மஞ்சத்தில் ஏற்றி பள்ளியறையில் துயில்கொள்ளச் செய்வதும், மறு நாள் அதிகாலையில் திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி பாடி, முருகனைத் துயிலெழுப்பி அதே சிறு மஞ்சத்தில் அழைத்து வந்து மூலஸ்தானத்தில் அமர்த்துவதும் சிறப்பான மரபாகும்.
இங்கு, ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆடி அமாவாசையின் ஆறாம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிறது.
மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடியாட்டம்|காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.
இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.
ஆலயம் பற்றிய நூல்கள்
கூழங்கைத் தம்பிரான் பாடிய நல்லைக் கலிவெண்பா.
இருபாலைச் சேனாதிராச முதலியாரின் நல்லை வெண்பா.
நல்லையந்தாதி.
நல்லைக் குறவஞ்சி.
நல்லை நகர்க் கந்தன் பேரில் திருவூஞ்சல்.
"" திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி"
உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் நல்லை கந்தசுவாமி விஞ்சதி.
நல்லை சரவணமுத்துப் புலவரின் நல்லை வேலவருலா'.
ஆறுமுக நாவலரின் தனி நிலைச் செய்யுள் ஒன்று.
உசாத்துணை நூல்கள்
உமாச்சந்திரா பிரகாஷ், நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில், 2016
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ
நல்லூரில் உள்ள கோயில்கள்
இலங்கையிலுள்ள முருகன் கோவில்கள்
யாழ்ப்பாணத்திலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும் |
1794 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | இசையமைப்பாளர்களின் பட்டியல் | இந்திய மொழித் திரைப்படங்களில், பாடல்களின் பங்கு இன்றியமையாத ஒன்று. அதுபோலத் தான் அப்பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளர்களின் பங்கும். இவர்களுள் ஒருசிலர் சிறந்த பாடகர்களாகவும் விளங்குகின்றனர்.
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்
1930களில்
1940களில்
1950களில்
1960களில்
1970களில்
1980களில்
1990களில்
2000களில்
2010களில்
2020களில்
மேற்கோள்கள்
+ |
1795 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | இந்துக் கோயில்களின் பட்டியல் | இந்துக் கோயில்கள்
இந்தியக் கோவில்கள்
பிருஹதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர், தமிழ்நாடு
மீனாட்சியம்மன் கோவில், மதுரை, தமிழ்நாடு
இலங்கைக் கோவில்கள்
திருக்கேதீஸ்வரம்
திருக்கோணேஸ்வரம், திரிகோணமலை
கதிர்காமக் கந்தன் ஆலயம், கதிர்காமம்
நல்லூர்க் கந்தசுவாமி கோவில், நல்லூர்
செல்வச் சந்நிதி, தொண்டமனாறு
வைத்தீஸ்வரர் ஆலயம், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
நாகபூஷணி அம்மன் கோயில், நயினாதீவு
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், மாவிட்டபுரம்
துர்க்கை அம்மன் கோயில், தெல்லிப்பழை
கருணாகரப் பிள்ளையார் கோவில், உரும்பிராய்
இணுவில் கந்தசுவாமி கோயில், இணுவில்
பன்றித்தலைச்சி அம்மன் கோவில், மட்டுவில்
சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம், வரணி
பெருமாள் கோயில், யாழ்ப்பாணம்
வரதராஜ பெருமாள் ஆலயம், பொன்னாலை
மண்டூர்க் கந்தசுவாமி கோயில், மண்டூர்
சித்தாண்டி முருகன் கோவில், சித்தாண்டி
வல்லிபுர ஆழ்வார் கோயில், வல்லிபுரம்
மருதடி விநாயகர் ஆலயம், மானிப்பாய்
ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம், ஒட்டிசுட்டான்
வற்றாப்பளை அம்மன் கோயில், வற்றாப்பளை, முல்லைத்தீவு
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், மாத்தளை
றம்பொட ஆஞ்சநேயர் ஆலயம், றம்பொட, நுவரெலியா
கல்முனை தென்பத்திரகாளி அம்மன் கோயில்
கோண்டாவில் மேற்கு காளி கோவில்
மலையாளன் காடு ஐயனார் அராலி கிழக்கு யாழ்ப்பாணம்
சிங்கப்பூர் கோயில்கள்
செண்பக விநாயகர் ஆலயம்
மகா மாரியம்மன் கோயில்
ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
தண்டாயுதபாணி கோயில்
வடபத்திர காளியம்மன் கோயில்
வீரமாகாளியம்மன் கோயில்
அவுஸ்திரேலியக் கோயில்கள்
இவற்றையும் பார்க்கவும்
இந்துக் கோயில் கட்டிடக்கலை
மேற்கோள்கள்
இந்து சமய கோயில்களின் பட்டியல் கட்டுரைகள் |
1800 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88 | கைலாய மாலை | கைலாயமாலை என்பது யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர் தான் பயன்படுத்திய முதனூல்களில் ஒன்றாகக் கைலாய மாலையையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது. நல்லூர் கைலாசநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள கைலாசநாதப் பெருமான் மேல் பாடப்பட்டதாகத் தோன்றினும், யாழ்ப்பாண அரசன் செகராசசேகரனின் புகழ் பாடுவதற்கான நூலே இதுவென்று கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்துக்குமுன் எழுதப்பட்டு இன்றும் கிடைக்ககூடிய மிகச் சில நூல்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆறுமுக நாவலரின் தமையனார் மகன் த. கைலாசபிள்ளை அவர்களால் அச்சிடப்பட்டது.
காலம்
யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சி தொடங்குவதற்கு முன்பே இந்நூல் எழுதப்பட்டது என்பது யாழ்ப்பாண வரலாற்றாளர்களின் பொதுக் கருத்தாக இருந்தாலும், துல்லியமாக இதன் காலத்தை அறுதியிட்டுச் சொல்வதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னர், 1604 ஆம் ஆண்டுக்கும் 1619 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டு, இந்நூலும் எழுதப்பட்டிருக்கலாம் என்பது இராசநாயக முதலியாரின் கருத்து. காசி நகரத்துக் கங்காதரரை அனுப்பும்படி சேதுபதிக்குச் செய்தி அனுப்பிய தகவல் நூலில் காணப்படுகிறது. நாயக்க அரசன் முத்துக்கிருட்டின நாயக்கர், 1604 ஆம் ஆண்டில், உடையான் சேதுபதி எனப்படும் சடையப்ப தேவரை முதன் முதலாக இராமநாதபுரத்துக்குத் தலைவராக நியமித்தார் என்பதால், இந்நூல் அந்த ஆண்டுக்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது வாதம்.
ஆனாலும், சேதுபதி என்னும் விருதுப் பெயர் நீண்ட காலமாகவே இருந்து வருவதாகவும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலேயே சேதுபதிகளுக்கும், யாழ்ப்பாணத்து அரசர்களுக்கும் தொடர்புகள் இருந்தன என்றும் பிற அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். கிபி 1260 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி காலத்திலேயே இந்நூல் எழுந்திருக்கலாம் என்று சி. பத்மநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அமைப்பு
இந்நூல் செய்யுள் வடிவில் அமைந்தது. வெண்பா வடிவில் அமைந்துள்ள காப்புச் செய்யுள் நீங்கலாக, இரண்டிரண்டு அடிகளால் ஆன 310 கண்ணிகளால் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பாடுபொருளையும், யாப்பிலக்கணத்தையும் பொறுத்தவரை இந்நூல் மெய்க்கீர்த்திமாலை, உலா ஆகிய சிற்றிலக்கிய வகைகளின் கலவையாக அமைந்துள்ளது.
கைலாயமாலையை அதன் உள்ளடக்க அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற் கண்ணி தொடக்கம் 46 ஆவது கண்ணி வரையிலான முதற் பகுதி, செகராசசேகர மன்னனுக்கு முற்பட்ட கால நிகழ்வுகளைக் கூறுகிறது. கதிரமலையில் இருந்து அரசாண்ட வாலசிங்கன், நரசிங்கராசன் ஆகிய மன்னர்கள் குறித்தும்,
நரசிங்கராசனின் முன் யாழ்ப்பாணன் ஒருவன் யாழ் இசைத்து நகரொன்றைப் பரிசாகப் பெற்றது குறித்தும், அதனால் அந்நகர் யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்றது குறித்தும், அந்நகரை யாழ்ப்பாணன் அரசாண்டு இறந்ததன் பின்னர் அது அரசனின்றித் தளம்பியது குறித்ததுமான செய்திகள் இப்பகுதியில் சுருக்கமாக இடம்பெறுகின்றன. 47 ஆம் கண்ணியிலிருந்து 211 ஆம் கண்ணி வரையிலான இரண்டாம் பகுதியில் செகராசசேகரனின் பெருமைகள், அவனை யாழ்ப்பாணத்தை ஆள அழைத்து வந்தமை, நல்லூர் நகரத்தை அமைத்து ஆட்சி செய்தது ஆகிய விடயங்கள் கூறப்படுகின்றன. இதற்குப் பிற்பட்ட மூன்றாம் பகுதி, செகராசசேகர மன்னன் கைலாயநாதர் கோயிலைக் கட்டிக் குடமுழுக்குச் செய்வித்தது தொடர்பான விடயங்களை உள்ளடக்குகிறது.
உசாத்துணை
வெளியிணைப்பு
கைலாய மாலை - மின்னூல்
ஈழத்து நூல்கள்
யாழ்ப்பாண வரலாறு |
1801 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயம் | யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வைத்திலிங்கம் செட்டியார் என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துத் தமிழரசர் காலத்துக்குப் பின், இந்துக் கோயில்கள் அனைத்தும் போத்துக்கீசரால் இடித்துத் தள்ளப்பட்டபின்னர், சுமார் 160 ஆண்டுகள் கழித்துக் கட்டப்பட்ட முதல் கோயில்களில் இதுவும் ஒன்று. இது வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் எனவும் பரவலாக அறியப்படுகின்றது.
இக்கோயில், காங்கேசந்துறை வீதியில், தற்கால யாழ்ப்பாண நகரின் மத்தியிலிருந்து சுமார் ஒரு கிமீ தூரத்துக்குள்ளேயே அமைந்துள்ளது.
தோற்றம்
யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில், சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் கோபாலச் செட்டியார். இவர் அங்கே வியாபாரம் செய்து வந்தார். இவ்வியாபாரம் மூலம் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த ஒல்லாந்த தேசாதிபதியின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. இவருடைய மகன் வைத்திலிங்கன். இவர் சிறுவனாக இருந்தபோது இவரைக்கண்ட தேசாதிபதியின் மனைவி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் தேசாதிபதியின் மனைவி அவரைத் தம் மாளிகையிலேயே வளர்த்து வந்தார். வளர்ந்து பெரியவனான பின்னர், தேசாதிபதியின் பரிந்துரையின்படி மூன்று முறைகள் முத்துக்குளிக்கும் குத்தகையைப் பெற்றுத் திறம்பட நடத்தி நல்ல இலாபம் பெற்றார்.
இவ்வாறு சம்பாதித்த செல்வத்தின் ஒரு பகுதியை, இவருடைய நண்பராயிருந்த கூழங்கைத் தம்பிரான் என்பவரின் ஆலோசனைப்படி, சிவபெருமானுக்குக் கோயிலமைப்பதில் செலவிட எண்ணினார். 1787 ல் இக்கோயில் அமைந்திருக்கும் நிலத்தை வாங்கி கோயில் திருப்பணியைத் தொடங்கினார். 1790 ஆம் ஆண்டில் கோயில் கட்டிடப்பணி நிறைவேற்றப்பட்டு வைத்தீஸ்வரப் பெருமானையும், தையல்நாயகி அம்மனையும் பிரதிட்டை செய்து வைத்தார்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலிலேயே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் தமது முதலாவது பிரசங்கத்தை 31 டிசம்பர் 1847 ஆம் ஆண்டு நிகழ்த்தினார்.
வெளி இணைப்புகள்
வண்ணார்பண்ணை வைதீசுவரன் கோயில்
வண்ணார்பண்ணையில் உள்ள கோயில்கள் |
1802 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | சிந்துவெளி நாகரிகம் | சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) என்பது தெற்காசியாவின் வடமேற்கு பகுதிகளில் இருந்த ஒரு வெண்கலக் கால நாகரிகம் ஆகும். இது பொ. ஊ. மு. 3300 முதல் பொ. ஊ. மு. 1300 வரை நீடித்திருந்தது. இது அதன் முதிர்ச்சியடைந்த கட்டத்தை பொ. ஊ. மு. 2600 முதல் பொ. ஊ. மு. 1900 வரை கொண்டிருந்தது. பண்டைய எகிப்து மற்றும் மெசொப்பொத்தேமியாவுடன் அண்மைக் கிழக்கு மற்றும் தெற்காசியாவின் மூன்று தொடக்க கால நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மூன்றில் இதுவே பரந்த நிலப்பரப்பை கொண்டிருந்தது. இந்நாகரிகத்தின் களங்கள் பெரும்பாலான பாக்கித்தான் முதல் வடகிழக்கு ஆப்கானித்தான் மற்றும் வடமேற்கு இந்தியா வரை பரவியிருந்தன. இந்நாகரிகம் சிந்து ஆற்றின் வண்டல் சமவெளி மற்றும் காகர்-கக்ராவுக்கு அருகில் ஓடிக் கொண்டிருந்த, நிலையான பருவப் பெயர்ச்சி காற்றின் மூலம் நீர் பெற்ற ஆறுகளின் ஓர் அமைப்புக்கு பக்கவாட்டில் அமைந்திருந்தது. சிந்து ஆறானது பாக்கித்தானின் நீளம் வழியாக ஓடுகிறது. காகர்-கக்ரா என்பது வடமேற்கு இந்தியா மற்றும் கிழக்கு பாக்கித்தானில் உள்ள ஒரு பருவ கால ஆறு ஆகும்.
அரப்பா நாகரிகம் என்ற சொல்லானது சில நேரங்களில் சிந்து நாகரிகத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்திலேயே முதன் முதலில் அகழ்வாய்வு செய்யப்பட்ட மாதிரி களமான அரப்பாவிலிருந்து இது இப்பெயரை பெறுகிறது. இப்பகுதி அந்நேரத்தில் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்தது. இது தற்போது பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ளது. அரப்பாவை கண்டறிந்தது மற்றும் சீக்கிரமே அதைத் தொடர்ந்து மொகெஞ்சதாரோவைக் கண்டறிந்தது ஆகியவை 1861ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இந்தியப் பேரரசில் இந்தியத் தொல்லியல் ஆய்வகமானது நிறுவப்பட்டதற்கு பிறகு தொடங்கப்பட்ட வேலைப்பாடுகளின் முடிவாகும். தொடக்க கால அரப்பா மற்றும் பிந்தைய அரப்பா என்ற பெயருடைய தொடக்க கால மற்றும் பிந்தைய பண்பாடுகள் இதே பகுதியில் இருந்தன. தொடக்க கால அரப்பா பண்பாடுகள் புதிய கற்கால பண்பாடுகளிலிருந்து மக்கள் தொகையை பெற்றன. இதில் தொடக்க காலத்தைச் சேர்ந்தது மற்றும் நன்றாக அறியப்பட்டதுமாக பாக்கித்தானின் பலுச்சிசுத்தானத்தில் உள்ள மெகர்கர் உள்ளது. தொடக்க கால பண்பாடுகளில் இருந்து பிரித்து அறிவதற்காக அரப்பா நாகரிகமானது சில நேரங்களில் முதிர்ந்த அரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.
பண்டைய சிந்து நகரங்கள் அவற்றின் நகரத் திட்டமிடல், செங்கல் வீடுகள், நுட்பமான கழிவு நீர் வெளியேற்றும் அமைப்புகள், நீர் வழங்கும் அமைப்புகள், குடியிருப்பு சாராத கட்டடங்களின் பெரிய திரள்கள் மற்றும், கைவினை பொருட்கள் மற்றும் உலோகவியல் நுட்பங்கள் ஆகியவற்றுக்காக அறியப்படுகின்றன. மொகெஞ்சதாரோ மற்றும் அரப்பா ஆகியவை 30,000 முதல் 60,000 பேரை கொண்டிருக்க கூடிய அளவுக்கு வளர்ந்திருந்தன என்று கருதப்படுகிறது. இதன் உச்ச நிலையின் போது 10 இலட்சம் முதல் 50 இலட்சம் வரையிலான மக்களை இந்நாகரிகம் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பொ. ஊ. மு. 3ஆம் ஆயிரம் ஆண்டுக் காலத்தின் போது இப்பகுதியானது படிப்படியாக வறண்டு போனதானது இதன் நகரமயமாக்கலுக்கான தொடக்க கால தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகவும், இந்நாகரிகத்தின் மக்கள் தொகையை கிழக்கிற்கு சிதற வைக்கவும் காரணமாகும் அளவுக்கு குடிநீர் வழங்குதலையும் இந்த வறண்ட நிலையானது இறுதியாக குறைத்தது.
1,000க்கும் மேற்பட்ட முதிர்ந்த அரப்பா களங்கள் குறிப்பிடப்பட்டும், கிட்டத் தட்ட 100 களங்கள் அகழ்வாய்வு செய்யப்பட்டும் உள்ளன. ஐந்து முதன்மையான நகர மையங்கள் இந்நாகரிகத்தைச் சேர்ந்தவையாக உள்ளன: சிந்துவெளியின் கீழ் பகுதியில் உள்ள மொகெஞ்சதாரோ ("மொகெஞ்சதாரோவின் தொல்லியல் சிதிலங்கள்" என 1980ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களமாக இது அறிவிக்கப்பட்டது), மேற்கு பஞ்சாபின் அரப்பா, சோலிஸ்தான் பாலைவனத்தில் உள்ள கனேரிவாலா, மேற்கு குசராத்தில் உள்ள தோலாவிரா ("தோலாவிரா: ஓர் அரப்பா நகரம்" என 2021ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது) மற்றும் அரியானாவில் உள்ள இராக்கிகர்கி. சிந்துவெளி மொழி என்பது நேரடியாக உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. சிந்துவெளி வரிவடிவம் தொடர்ந்து அறியப்படாமலேயே உள்ளதால், இம்மொழியுடன் தொடர்பானவை உறுதிப்படுத்தப்படாமல் உள்ளன. அறிஞர்களின் ஒரு பிரிவினரால் திராவிட அல்லது ஈல-திராவிட மொழி குடும்பத்துடனான அரப்பா மொழியின் தொடர்பானது முன் வைக்கப்படுகிறது.
பெயர்க் காரணம்
சிந்துவெளி நாகரிகமானது சிந்து ஆற்று அமைப்பின் பெயரைப் பெற்றுள்ளது. சிந்து ஆற்றின் வண்டல் சமவெளிகளில் தான் நாகரிகத்தின் தொடக்க கால களங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளன.
தொல்லியலின் ஒரு பழக்கத்தைத் தொடர்ந்து, இந்த நாகரிகமானது சில நேரங்களில் அரப்பா நாகரிகம் என்று குறிப்பிடப்படுகிறது. 1920களில் முதன் முதலில் அகழ்வாய்வு செய்யப்பட்ட மாதிரி களமான அரப்பாவே இதற்குக் காரணமாகும். 1947இல் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பயன்படுத்தப்படும் முறையாக இது உள்ளது.
"காகர்-கக்ரா" என்ற சொல்லானது சிந்து நாகரிகத்திற்கு பயன்படுத்தப்படும் நவீன பெயர்களில் ஒன்றாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. வடமேற்கு இந்தியா மற்றும் கிழக்கு பாக்கித்தானில் உள்ள காகர் ஆற்றின் பக்கவாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான களங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. "சிந்து-சரசுவதி நாகரிகம்" என்ற பெயரும் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருக்கு வேதத்தின் தொடக்க காலப் பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ள சரசுவதி ஆற்றுடன் காகர்-கக்ரா ஆறானது அடையாளப்படுத்தப்படுகிறது. பொ. ஊ. மு. 2ஆம் ஆயிரமாண்டில் வேத சமசுகிருதத்தில் உருவாக்கப்பட்ட மந்திரங்களின் ஒரு தொகுப்பு இருக்கு வேதம் ஆகும்.
இருக்கு வேதத்தில் பனியில் இருந்து நீர் ஆதாரத்தை பெறும் என விளக்கப்பட்டுள்ள சரசுவதி ஆற்றைப் போலல்லாமல், காகர்-கக்ரா என்பது நிலையான பருவ மழையால் நீர் ஆதாரத்தைப் பெறும் ஓர் அமைப்பாகும். சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாகரிகம் வீழ்ச்சியடைந்த அதே நேரத்தில் இவை பருவ மழையிலிருந்து நீர் ஆதாரத்தை பெறும் நிலைக்கு உள்ளாயின.
விரிவு
சிந்துவெளி நாகரிகமானது தோராயமாக பண்டைய உலகின் பிற ஆற்றங்கரை நாகரிகங்களுடன் சம காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது: நைலின் பண்டைய எகிப்து, புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆற்றால் நீரைப் பெற்ற நிலங்களில் இருந்த மெசொப்பொத்தேமியா, மஞ்சள் ஆறு மற்றும் யாங்சி ஆற்றின் வடிநிலத்தில் இருந்த சீனா. இதன் முதிர்ந்த கட்டத்தின் போது இந்நாகரிகமானது பிற நாகரிகங்களை விட பெரிய நிலப்பரப்பில் பரவி இருந்தது. சிந்து ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளின் வண்டல் சமவெளியில் 1,500 கிலோ மீட்டர்களை உடைய ஒரு மையப்பகுதியும் இதில் அடங்கும். இதனுடன் பல்வேறுபட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் இயற்கையான வாழ்விடங்களுடன் கூடிய ஒரு பகுதியாக, மையப் பகுதியைப் போல் 10 மடங்கு வரை பெரிய அளவுடையதாக இது அமைந்திருந்தது. இதன் கலாச்சார மற்றும் பொருளாதார வடிவத்தை சிந்து ஆறானது தீர்மானித்தது.
பொ. ஊ. மு. 6,500ஆம் ஆண்டு வாக்கில் சிந்து ஆற்றின் வண்டல் சமவெளிகளின் விளிம்புகளில் பலுச்சிசுத்தானத்தில் விவசாயமானது தோன்றியது. இதை தொடர்ந்து வந்த ஆயிரம் ஆண்டுகளில் சிந்து சமவெளிக்குள் நிலையான வாழ்க்கை முறையை கொண்ட மக்கள் வாழ ஆரம்பித்தனர். கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு இது சாதகமான அமைப்பை ஏற்படுத்தியது. மிகுந்த ஒருங்கிணைக்கப்பட்ட நிலையான வாழ்க்கை முறையானது பிறப்பு விகிதத்தில் நிகர அதிகரிப்புக்கு வழி வகுத்தது. மொகஞ்ச-தாரோ மற்றும் அரப்பாவின் பெரிய நகர்ப்புற மையங்களானவை 30,000 முதல் 60,000 பேரைக் கொண்டிருக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்திருந்தன. இந்நாகரிகத்தின் உச்ச நிலையின் போது துணைக் கண்டத்தின் மக்கள் தொகையானது 40 இலட்சம் முதல் 60 இலட்சம் பேரைக் கொண்டிருந்தது. மனிதர்கள் மற்றும் கொல்லைப்படுத்தப்பட்ட விலங்குகள் நெருக்கமான வாழும் சூழ்நிலையானது தொற்று நோய்களின் அதிகரிப்புக்கு வழி வகுத்தது. இதன் காரணமாக இறப்பு விகிதமானது இக்காலத்தின் போது அதிகரித்தது. ஒரு மதிப்பீட்டின் படி, சிந்துவெளி நாகரிகத்தின் மக்கள் தொகையானது அதன் உச்ச பட்ச நிலையின் போது 10 இலட்சம் முதல் 50 இலட்சம் பேரைக் கொண்டிருந்தது என்று குறிப்பிடப்படுகிறது.
இந்நாகரிகமானது மேற்கே பலுச்சிசுத்தானம் முதல் கிழக்கே உத்தரப் பிரதேசம் வரையிலும், வடக்கே வட கிழக்கு ஆப்கானித்தான் முதல் தெற்கே குசராத்து மாநிலம் வரையிலும் விரிவடைந்திருந்தது. இந்நாகரிகத்தின் பெரும் எண்ணிக்கையிலான களங்களானவை பஞ்சாப் பகுதி, குசராத்து, அரியானா, இராசத்தான், உத்தரபிரதேசம், சம்மு காசுமீர் மாநிலம், சிந்து மாகாணம் மற்றும் பலுச்சிசுத்தானத்தில் உள்ளன. கடற்கரை குடியிருப்புகளானவை மேற்கு பலுச்சிசுத்தானத்தின் சுத்கஜன் தோரில் இருந்து குசராத்தின் லோத்தல் வரை பரவியுள்ளன. ஒரு சிந்துவெளி களமானது ஆமூ தாரியாவின் சார்டுகாயிலும், வடமேற்கு பாக்கித்தானின் கோமல் ஆற்று சமவெளியிலும், சம்முவுக்கு அருகில் பியாசு ஆற்றின் கரையில் மண்டாவிலும், இந்தோன் ஆற்றின் கரையில் ஆலம்கீர்பூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆலம்கீர்பூரானது தில்லியிலிருந்து வெறும் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிந்துவெளி நாகரிகத்தின் தெற்குக் கோடி களமானது மகாராட்டிராவின் தைமாபாத்தில் உள்ளது. சிந்துவெளி களங்களானவை பெரும்பாலும் ஆற்றங்கரையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பண்டைக் கால கடற்கரையில் உள்ள பாலகோத் (கோத் பாலா) மற்றும் தீவுகளிலுள்ள தோலாவிரா ஆகிய களங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிப்பும், அகழ்வாய்வின் வரலாறும்
சிந்து நாகரிகத்தின் சிதிலங்கள் குறித்த முதல் நவீன குறிப்புகளானவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவரான சார்லசு மேசன் என்பவருடையவை ஆகும். 1829இல் பஞ்சாப் இராச்சியத்தின் வழியாக மேசன் பயணித்தார். தனது தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதற்கு பதிலாக கிழக்கிந்திய நிறுவனத்திற்கு உபயோகரமான உளவியல் தகவல்களை சேகரிப்பதற்காக இவர் சென்றார். இந்த ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக இவரது பயணங்களின் போது கிடைக்கப் பெறும் எந்த ஒரு பண்டைய வரலாற்றுப் பொருளையும் நிறுவனத்திடம் அளிக்க வேண்டும் என்ற மேற்கொண்ட நிபந்தனையும் இருந்தது. பண்டைய நூல்களை அறிந்திருந்தவரான மேசன் பேரரசர் அலெக்சாந்தரின் இராணுவப் படையெடுப்புகளைக் குறிப்பாக நன்கு அறிந்திருந்தார். அலெக்சாந்தரின் போர்ப் பயணங்களில் தொடர்புடைய சில அதே பட்டணங்களை தன்னுடைய அலைதலுக்காகத் தேர்ந்தெடுத்தார். வரலாற்றாளர்களால் இப்பட்டணங்களின் தொல்லியல் களங்களானவை குறிப்பிடப்பட்டுள்ளன. பஞ்சாபில் மேசனின் முதன்மையான தொல்லியல் கண்டுபிடிப்பாக அரப்பா திகழ்ந்தது. சிந்து ஆற்றின் கிளை ஆறான இராவி ஆற்றின் சமவெளியில் சிந்துவெளி நாகரிகத்தின் ஒரு நகரமாக அரப்பா அமைந்திருந்தது. அரப்பாவின் செழிப்பான வரலாற்று பொருட்கள் குறித்து ஏராளமான குறிப்புகளையும், விளக்கங்களையும் மேசன் உருவாக்கினார். இவற்றில் பெரும்பாலானவை பாதி அளவுக்கு மணலில் புதைந்து இருந்தவையாகும். 1842இல் பலுச்சிசுத்தானம், ஆப்கானித்தான் மற்றும் பஞ்சாபில் பல்வேறு பயணங்களின் குறிப்பு என்ற தலைப்புடைய நூலில் அரப்பா குறித்த தன்னுடைய பார்வைகளை இவர் குறிப்பிட்டிருந்தார். பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் ஒரு காலத்தை சேர்ந்தது என அரப்பா சிதிலங்களை இவர் காலமிட்டிருந்தார். அலெக்சாந்தரின் போர்ப் பயணங்களின் போது முன்னர் குறிப்பிடப்பட்டது என அரப்பாவை இவர் தவறுதலாக குறிப்பிட்டு இருந்தார். இக்களத்தின் பரந்த அளவு மற்றும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து ஏற்பட்ட அரிப்பால் உருவான ஏராளமான பெரிய மேடுகளால் இவர் பெரிதும் மதிப்புணர்வு கொண்டிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, தனது இராணுவத்திற்கு சாதகமான நீர் வழி பயணத்தை ஆய்வு செய்வதற்காக சிந்து ஆற்றின் நீரின் போக்கிற்கு எதிராக பயணம் மேற்கொள்ள அலெக்சாந்தர் பர்னசை கிழக்கிந்திய நிறுவனமானது ஒப்பந்தம் செய்தது. அரப்பாவிலும் பயணத்தை நிறுத்திய பர்னசு இக்களத்தின் பண்டைக் கால கட்டுமானத்தில் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டதை குறிப்பிட்டார். உள்ளூர் மக்களால் இந்த செங்கற்கள் அளவுக்கு மீறீ எடுக்கப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டார்.
இத்தகைய குறிப்புகள் இருந்த போதிலும், 1848-49இல் பஞ்சாபை பிரித்தானியர் இணைத்ததற்குப் பிறகு இதன் செங்கற்களுக்குக்காக அரப்பாவானது மேலும் அதிகப்படியான வகையிலே, இக்களத்திற்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையிலே சேதப்படுத்தப்பட்டது. பஞ்சாப்பில் போடப்பட்ட இருப்புப்பாதைகளுக்கு சரளைக் கற்களுக்கு பதிலாக பயன்படுத்துவதற்காக ஏராளமான செங்கற்கள் எடுத்துச் செல்லப்பட்டன. 1850களின் நடுவில் போடப்பட்ட முல்தான் மற்றும் லாகூருக்கு இடையிலான இருப்புப்பாதையில் கிட்டத்தட்ட 160 கிலோ மீட்டர் வழித்தடமானது அரப்பா செங்கற்களைக் கொண்டு போடப்பட்டதாகும்.
1861இல் கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து இந்தியாவில் பிரித்தானிய அரச குடும்பத்தின் நேரடி ஆட்சி நிறுவப்பட்டதை தொடர்ந்து துணைக் கண்டத்தில் தொல்லியல் ஆய்வானது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் நிறுவுதலுடன் அலுவல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டது. ஆய்வகத்தின் முதல் பொது இயக்குனரான அலெக்சாந்தர் கன்னிங்காம் 1853ஆம் ஆண்டு அரப்பாவுக்கு வருகை புரிந்தார். இதன் உன்னதமான செங்கல் சுவர்களை பற்றி குறிப்பிட்டார். மீண்டும் ஆய்வு செய்வதற்காக வருகை புரிந்தார். ஆனால் இந்த முறை அவர் வருவதற்கு முந்தைய இடைப்பட்ட காலத்தில் இக்களத்தின் ஒட்டு மொத்த மேல் பரப்பும் எடுக்கப்பட்டிருந்தது. 7ஆம் நூற்றாண்டு சீன பயணி சுவான்சாங்கால் குறிப்பிடப்பட்ட தொலைந்து போன ஒரு பௌத்த நகரம் அரப்பா என விளக்குவது என்பதே இவரது முதன்மையான இலக்காக இருந்தது. ஆனால், அது எளிதானதாக இல்லை. எனினும், கன்னிங்கம் 1875ஆம் ஆண்டு தன்னுடைய ஆய்வுகளைப் பதிப்பித்தார். முதல் முறையாக ஓர் அரப்பா முத்திரைக்கு இவர் விளக்கத்தை கொடுத்தார். இதில் உள்ள எழுத்துக்கள் அறியப்படாமலேயே இருந்தன. இவை அயல்நாட்டில் தோன்றிய எழுத்துகள் என்று இவர் முடிவு செய்தார்.
அரப்பாவில் தொல்லியல் வேலைகளானவை தேக்கம் கொண்டன. இந்தியாவின் புது வைசிராயான கர்சன் பிரபு 1904ஆம் ஆண்டில் பண்டைய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்துக்கு தலைமை தாங்க யோவான் மார்ஷலை நியமித்தது ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டும் வேலைகள் வேகமெடுத்தன. பல ஆண்டுகள் கழித்து அரப்பாவை ஆய்வு செய்ய மார்ஷலால் நியமிக்கப்பட்ட இரானந்த் சாஸ்திரி இக்களத்தை பௌத்தம் சாராதது என்றும், மிகவும் பண்டைய காலத்தைச் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டார். இச்சட்டத்தின் கீழ் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்காக அரப்பாவை தேசிய மயமாக்கிய பிறகு, இக்களத்தின் இரண்டு மேடுகளை அகழ்வாய்வு செய்ய இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியலாளர் தயாராம் சகானியை மார்ஷல் பணித்தார்.
மேலும் தெற்கே, சிந்து மாகாணத்தில் சிந்து ஆற்றின் கடைசி பெரிய கணவாயை ஒட்டி பெரும்பாலும் தொடப்படாத மொகெஞ்சதாரோ களமானது கவனத்தை ஈர்த்தது. களத்தை ஆய்வு செய்ய பந்தர்கர் (1911), ரக்கல்தாஸ் பானர்ஜி (1919, 1922–1923), மற்றும் மாதோ சரூப் வாட்ஸ் (1924) உள்ளிட்ட ஒரு தொடர்ச்சியான இந்தியத் தொல்லியல் ஆய்வக அதிகாரிகளை மார்ஷல் அனுப்பினார். 1923இல் மொகஞ்சதாரோவுக்கான தன்னுடைய இரண்டாவது பயணத்தின் போது பானர்ஜி இக்களத்தைக் குறித்து மார்ஷலுக்கு எழுதினார். இதன் பூர்வீகம் மிகப் பண்டைய காலத்தை சேர்ந்தது எனப் பரிந்துரைத்தார். இதன் பண்டைய பொருட்களில் ஒரு சில அரப்பாவுடன் ஒத்தவை எனக் குறிப்பிட்டார். பின்னர் 1923இல் மார்ஷலுடனான தனது தகவல் பரிமாற்றத்தில் வாட்சும் இரு களங்களிலும் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் மற்றும் எழுத்து வடிவங்கள் குறித்து மிக குறிப்பாக குறிப்பிட்டார். இந்த பார்வைகளை அடிப்படையாகக் கொண்டு இரு களங்களிடமிருந்தும் முக்கியமான தகவல்களை ஒரு இடத்திற்கு கொண்டு வர மார்ஷல் ஆணையிட்டார். இந்த விவாதத்தில் கலந்து கொள்ள பானர்ஜி மற்றும் சாகினியையும் அழைத்தார். 1924 வாக்கில் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தில் மார்ஷல் உறூதி கொண்டார். 24 செப்தம்பர் 1924 அன்று இல்லசுதிரேட்டட் லண்டன் நியூஸ் என்ற பத்திரிகையில் தோராயமான ஓர் அறிவிப்பைச் செய்தார்: "திரின்சு மற்றும் மைசினேவில் இசுலியேமனுக்கு கிடைத்தது போல அல்லது துருக்கிசுத்தானின் பாலைவனங்களில் இசுடெயினுக்கு கிடைத்தது போல, நீண்ட காலத்திற்கு மறைந்து போன நாகரிகத்தின் எஞ்சியவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வாய்ப்பானது தொல்லியலாளர்களுக்கு எப்போதுமே கிடைத்து விடுவதில்லை. எனினும், இந்த தருணத்தில் சிந்து சமவெளியில் அத்தகைய ஒரு கண்டுபிடிப்பை நாம் பெறும் தருவாயில் உள்ளோமோ என்று தோன்றுகிறது."
ஒரு வாரம் கழித்து பத்திரிகையின் அடுத்த பிரதியில் பிரிட்டனின் அசிரிய ஆய்வாளரான ஆர்ச்சிபால்டு சய்சு மெசொப்பொத்தேமியா மற்றும் ஈரானில் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த மிக ஒத்த முத்திரைகளை இதனுடன் தொடர்புபடுத்தினார். அரப்பாவின் காலம் குறித்து மிக வலிமையான பரிந்துரைகளை இவை கொடுத்தன. பிற தொல்லியலாளர்களின் ஒப்புக் கொள்ளுதல்களும் இதைத் தொடர்ந்து நடைபெற்றன. கே. என். தீட்சித் போன்றோரின் அமைப்பு ரீதியிலான அகழ்வாய்வுகள் மொகஞ்சதாரோவில் 1924-1925இல் தொடங்கின. எச். அர்கிரீவ்சு மற்றும் எர்னஸ்டு ஜே. எச். மெக்கே போன்றோரின் அகழ்வாய்வுகள் தொடர்ந்தன. 1931 வாக்கில் பெரும்பாலான மொகஞ்சதாரோவானது அகழ்வாய்வு செய்யப்பட்டது. ஆனால், இடையிடை நிகழ்வுகளான அகழ்வாய்வுகள் தொடர்ந்தன. இதில் 1944ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் புதிய பொது இயக்குனராக நியமிக்கப்பட்ட மோர்டிமர் வீலரின் தலைமையில் நடைபெற்ற அகழ்வாய்வுகளும், அகமது அசன் தானியின் அகழ்வாய்வுகளும் அடங்கும்.
1947இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சிந்துவெளி நாகரிகத்தின் பெரும்பாலான அகழ்வாய்வு செய்யப்பட்ட களங்கள் பாக்கித்தானுக்கு எனப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பில் இருந்தன. தன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதி குறைந்ததால் இந்திய தொல்லியல் ஆய்வகமானது பெரும் எண்ணிக்கையிலான ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகளை இந்தியாவின் காகர்-கக்ரா ஆற்று அமைப்பின் பக்கவாட்டில் நடத்தியது. சிந்து ஆற்று வடி நிலத்தை விட அதிக களங்களை காகர்-கக்ரா ஆற்று அமைப்பானது கொண்டிருக்கலாம் என சிலர் ஊகித்தனர். தொல்லியலாளர் இரத்நகரின் கூற்றுப் படி, இந்தியாவின் காகர்-கக்ரா களங்கள் மற்றும் பாக்கித்தானின் சிந்துவெளி களங்கள் ஆகியவை உண்மையில் உள்ளூர் பண்பாட்டை சேர்ந்தவையாகும். சில களங்கள் அரப்பா நாகரிகத்துடன் தொடர்பு கொண்டிருந்ததைக் காட்டின. ஆனால், வெகு சிலவே முழுமையாக வளர்ச்சியடைந்த அரப்பா களங்களாக இருந்தன. 1977 நிலவரப் படி, கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளி வரிவடிவ முத்திரைகள் மற்றும் பொறிக்கப்பட்ட பொருட்களில் சுமார் 90% பொருட்கள் சிந்து ஆற்றின் பக்கவாட்டில் பாக்கித்தானில் உள்ள களங்களில் கண்டெடுக்கப்பட்டவையாக உள்ளன. அதே நேரத்தில், பிற களங்கள் வெறும் 10% பொருட்களையே கொண்டிருந்தன. 2002 வாக்கில் 1,000க்கும் மேற்பட்ட முதிர்ந்த அரப்பா நகரங்கள் மற்றும் குடியிருப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் 100க்கும் குறைவானவையே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் சிந்து ஆறு மற்றும் காகர்-கக்ரா ஆறுகள் மற்றும் அவற்றின் கிளை ஆறுகளில் உள்ள பொதுவான பகுதிகளில் அகழாய்வு செய்யப்பட்டவையாகும். எனினும், வெறும் ஐந்து முதன்மையான அரப்பா நகர் களங்களே உள்ளன: அரப்பா, மொகெஞ்சதாரோ, தோலாவிரா, கனேரிவாலா மற்றும் இராக்கிகர்கி. 2008 நிலவரப் படி, சுமார் 616 களங்கள் இந்தியாவில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பாக்கித்தானில் 406 களங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1947க்கு பிறகு, இந்தியத் தொல்லியல் ஆய்வகமானது புதிய நாட்டின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சி ஆகிய இலக்குகளை ஒத்தவாறு தொல்லியல் வேலைகளை இந்திய மயமாக்கும் முயற்சித்தது. மாறாக, பாக்கித்தானில் தேசிய முக்கியத்துவமாக இசுலாமிய பாரம்பரியத்தை ஊக்குவிப்பது திகழ்ந்தது. இறுதியாக, முந்தைய களங்களின் தொல்லியல் வேலையானது அயல்நாட்டுத் தொழிலாளர்களிடம் விடப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு, 1944 முதல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்த மோர்திமர் வீலர் பாக்கித்தானில் தொல்லியல் நிறுவனங்கள் நிறுவப்படுவதை மேற்பார்வையிட்டார். மொகஞ்சதாரோ களத்தைப் பாதுகாக்க பணிக்கப்பட்ட ஓர் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் முயற்சியில் பின்னர் இணைந்தார். செருமானிய ஆச்சன் ரிசர்ச் புராஜெக்ட் மொகஞ்சதாரோ, இத்தாலிய மிசன் டு மொகஞ்சதாரோ, ஜார்ஜ் எப். தேல்சால் நிறுவப்பட்ட ஐக்கிய அமெரிக்க அரப்பா ஆர்ச்சியலாஜிக்கல் ரிசர்ச் புராஜெக்ட் உள்ளிட்டவை மொகஞ்சதாரோ மற்றும் அரப்பாவில் ஏற்படுத்தப்பட்ட பிற பன்னாட்டு முயற்சிகள் ஆகும். பலுச்சிசுத்தானத்தில் போலன் கணவாயின் அடிவாரத்தில் தொல்லியல் களத்தின் ஒரு பகுதியானது திடீர் வெள்ளத்தால் வெளிப்பட்டதைத் தொடர்ந்து, 1970களின் தொடக்கத்தில் பிரெஞ்சு தொல்லியலாளர் ஜீன்-பிராங்கோயிசு சர்ரிச் மற்றும் அவரது குழுவானது மெகர்கரில் அகழ்வாய்வுகளை நடத்தியது.
காலப் பகுப்பு
பண்டைய சிந்துவெளி நகரங்கள் "சமூக படிநிலை அமைப்புகள், அவற்றின் எழுத்து முறை அமைப்பு, அவற்றின் பெரிய திட்டமிடப்பட்ட நகரங்கள் மற்றும் அவற்றின் நீண்ட தூர வணிகம் ஆகியவற்றை ஒரு முழுமையான நாகரிகம் எனத் தொல்லியலாளர்களுக்குக் குறிக்கும் வகையில் கொண்டிருந்தன." அரப்பா நாகரிகத்தின் முதிர்ந்த கட்டமானது முதல் 1900 பொ. ஊ. மு. வரை நீடித்திருந்தது. முதிர்ந்த கட்டத்தின் முந்தைய மற்றும் பிந்தைய பண்பாடுகளான தொடக்க கால அரப்பா மற்றும் பிந்தைய அரப்பா ஆகியவற்றை முறையே இணைத்ததற்குப் பிறகு, ஒட்டு மொத்த சிந்துவெளி நாகரிகமானது பொ. ஊ. மு. 33 முதல் 14ஆம் நூற்றாண்டுகள் வரை நீடித்திருந்தது என்று கருதப்படுகிறது. சிந்துவெளி பாரம்பரியத்தின் ஒரு பகுதி இதுவாகும். சிந்துவெளி பாரம்பரியமானது அரப்பாவுக்கு முந்தைய மெகர்கரின் ஆக்கிரமிப்பையும் உள்ளடக்கியிருந்தது. சிந்துவெளியில் தொடக்க கால விவசாய களமாக மெகர்கர் விளங்கியது.
சிந்துவெளி நாகரிகத்தைக் குறிக்கும் போது பல காலப் பகுப்பு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் மிகப் பொதுவான முறையானது சிந்துவெளி நாகரிகத்தை தொடக்க கால, முதிர்ந்த மற்றும் பிந்தைய அரப்பா கட்டங்கள் எனப் பிரிக்கிறது. சாப்பர் என்பவரின் மற்றொரு முறையானது பரந்த சிந்துவெளி பாரம்பரியத்தை நான்கு சகாப்தங்களாகப் பிரிக்கிறது. அவை அரப்பாவுக்கு முந்தைய "தொடக்க கால உணவு உற்பத்தி சகாப்தம்", மண்டலமயமாக்கல், ஒருங்கிணைப்பு மற்றும் ஓரிடமயமாக்கல் சகாப்தங்கள் ஆகியவையாகும். இவை தோராயமாக தொடக்க கால அரப்பா, முதிர்ந்த அரப்பா மற்றும் பிந்தைய அரப்பா கால கட்டங்களுடன் ஒத்துப் போகின்றன.
அரப்பாவுக்கு முந்தைய சகாப்தம்: மெகர்கர்
மெகர்கர் என்பது பாக்கித்தானின் பலுச்சிசுத்தானம் மாகாணத்தில் உள்ள ஒரு புதிய கற்கால (பொ. ஊ. மு. 7,000 முதல் ) மலைக் களம் ஆகும். சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம் குறித்த புதிய நுண்ணோக்குகளை இது கொடுத்தது. தெற்காசியாவில் விவசாயம் மற்றும் மேய்ச்சல் வாழ்க்கை முறைக்கான ஆதாரங்களைக் கொடுத்த தொடக்க கால களங்களில் மெகர்கரும் ஒன்றாகும். மெகர்கரானது அண்மைக் கிழக்கின் புதிய கற்காலத்தால் தாக்கம் பெற்றிருந்தது. "கொல்லைப்படுத்தபட்ட கோதுமை வகைகள், விவசாயத்தின் தொடக்க கால கட்டங்கள், மட்பாண்ட முறை, பிற தொல்லியல் பொருட்கள், சில கொல்லைப்படுத்தப்பட்ட தாவரங்கள் மற்றும் மந்தை விலங்குகள்" ஆகியவற்றுக்கு இடையில் மெகர்கரும், அண்மை கிழக்கின் புதிய கற்காலக் களங்களும் ஒற்றுமைகளைக் கொண்டிருந்தன.
மெகர்கர் சுதந்திரமாகத் தோன்றிய ஒரு களம் என ஜீன்-பிராங்கோயிசு சர்ரிச் வாதிடுகிறார். "விவசாயப் பொருளாதாரமானது முழுமையாக அண்மைக் கிழக்கிலிருந்து தெற்காசியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது" மற்றும் கிழக்கு மெசொப்பொத்தேமியா மற்றும் மேற்கு சிந்துவெளியில் உள்ள புதிய கற்காலக் களங்களுக்கு இடையேயான ஒற்றுமையானது இந்தக் களங்களுக்கு இடையிலான ஒரு "பண்பாட்டுத் தொடர்ச்சியின்" சான்றாக உள்ளன என சர்ரிச் குறிப்பிடுகிறார். ஆனால், மெகர்கரின் தானாகத் தோன்றிய தன்மையைக் குறிப்பிடும் போது மெகர்கர் ஒரு தொடக்க கால உள்ளூர்ப் பின் புலத்தைக் கொண்டிருந்தது என சர்ரிச் முடிக்கிறார். "அண்மைக் கிழக்கின் புதிய கற்காலப் பண்பாட்டின் ஒரு 'பின் தங்கிய பகுதி'" இது கிடையாது எனக் குறிப்பிடுகிறார்.
லூகாக்சு மற்றும் எம்பில் ஆகியோர் மெகர்கரில் ஒரு தொடக்க கால உள்ளூர் வளர்ச்சி ஏற்பட்டது எனப் பரிந்துரைக்கின்றனர். பண்பாட்டு வளர்ச்சியில் ஒரு தொடர்ச்சியும், ஆனால் மக்கள் தொகை உட்புகலில் ஒரு மாற்றத்தையும் கொண்டிருந்தது எனப் பரிந்துரைக்கின்றனர். லூகாக்சு மற்றும் எம்பில் ஆகியோர், மெகர்கரின் புதிய கற்காலம் மற்றும் செப்புக் காலங்களுக்கு இடையில் ஒரு வலிமையான தொடர்ச்சி இருக்கும் அதே நேரத்தில், பற்கள் சார்ந்த ஆதாரங்கள் மெகர்கரின் புதிய கற்கால மக்கள் தொகையிலிருந்து அதன் செப்புக் கால மக்கள் தொகையானது தோன்றவில்லை என்பதைக் காட்டுவதாகக் குறிப்பிடுகின்றனர். இது "மிதமான அளவுக்கு மரபணு தொடர்ச்சியைப் பரிந்துரைக்கிறது". மசுகரன்கசு மற்றும் அவரது குழுவினர் (2015) "புதிய, அநேகமாக மேற்கு ஆசிய உடலமைப்புகளானவை தோகவு காலகட்டத்தில் (பொ. ஊ. மு. 3800) தொடங்கி மெகர்கரிலுள்ள சமாதிகளில் கிடைக்கப் பெறுவதாகக்" குறிப்பிடுகின்றனர்.
கல்லேகோ ரோமேரோ மற்றும் அவரது குழுவினர் (2011) இந்தியாவில் பாற்சக்கரை தாளாமை மீதான தங்களது ஆய்வுகளானவை "ரெயிச் மற்றும் அவரது குழுவினரால் (2009) அடையாளப்படுத்தப்பட்ட மேற்கு ஐரோவாசிய மரபணுப் பங்களிப்பானது ஈரான் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து மரபணு வருகையை முதன்மையாகப் பிரதிபலிப்பதாக உள்ளது" என்று பரிந்துரைக்கின்றனர். அவர்கள் மேலும் குறிப்பிடுவதாவது "தெற்காசியாவில் கால்நடை மேய்ச்சலின் தொடக்க கால ஆதாரமானது சிந்து ஆற்று சமவெளிக் களமான மெகர்கரிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. இது பொ. ஊ. மு. 7,000ஆம் ஆண்டுக்கு காலமிடப்படுகிறது".
தொடக்க கால அரப்பா
தொடக்க கால அரப்பாவின் இராவி கால கட்டமானது அருகில் உள்ள இராவி ஆற்றின் பெயரைப் பெற்றுள்ளது. இது முதல் பொ. ஊ. மு. 2800 வரை நீடித்திருந்தது. மலைகளைச் சேர்ந்த விவசாயிகள் படிப்படியாக தங்களது மலைக் குடியிருப்புகள் மற்றும் தாழ்நில ஆற்றுச் சமவெளிகளுக்கு இடையில் நகர்ந்த போது இக்கால கட்டம் தொடங்கியது. இது கக்ரா கால கட்டத்துடன் தொடர்புடையதாகும். இது மேற்கே இருந்த காகர்-கக்ரா ஆற்றுப் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. கோத் திசி கால கட்டத்துக்கு (2800–2600 பொ. ஊ. மு., அரப்பா 2) முந்தையது இதுவாகும். கோத் திசி என்பது மொகஞ்சதாரோவுக்கு அருகில் பாக்கித்தானின் வடக்கு சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு களம் ஆகும். சிந்துவெளி வரிவடிவத்தின் தொடக்க கால எடுத்துக்காட்டுகள் பொ. ஊ. மு. 3வது ஆயிரமாண்டுக்கு காலமிடப்படுகின்றன.
தொடக்க கால கிராமப் பண்பாடுகளின் முதிர்ந்த கால கட்டமானது பாக்கித்தானிலுள்ள இரெக்மான் தேரி மற்றும் அம்ரி ஆகியவற்றால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. முதிர்ந்த அரப்பா கால கட்டத்தை நோக்கிய கால கட்டத்தை கோத் திசியானது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நகர்க் காப்பரணானது மையப்படுத்தப்பட்ட அதிகாரம் மற்றும் வளர்ந்து வந்த நகரத் தரத்திலான வாழ்க்கை முறையைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. முதிர்ந்த கால கட்டத்தில் இருந்த மற்றொரு பட்டணமானது இந்தியாவில் கக்ரா ஆற்றின் அருகில் காளிபங்கான் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய மாகாணப் பண்பாடுகள் மற்றும் மூலப் பொருட்களுக்கான தொலை தூர ஆதாரங்களுடன் வணிக வழிகள் இந்தப் பண்பாட்டை இணைத்தன. இலபிசு இலசுலி மற்றும் பாசி தயாரிக்கத் தேவைப்படும் பிற பொருட்களும் இதில் அடங்கும். இந்த நேரத்தில் கிராமத்தவர்கள் ஏராளமான பயிர்களைக் கொல்லைப்படுத்தினர். இதில் பட்டாணிகள், எள்கள், பேரீச்சைகள் மற்றும் பருத்தி ஆகியவை அடங்கும். எருமை உள்ளிட்ட விலங்குகளையும் இவர்கள் கொல்லைப்படுத்தினர். தொடக்க கால அரப்பா சமூகங்கள் பொ. ஊ. மு. 2600 வாக்கில் பெரிய நகர மையங்களாக மாறின. இங்கிருந்து தான் முதிர்ந்த அரப்பா கால கட்டமானது தொடங்கியது. சிந்துவெளி மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர் என சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது.
பெரிய சுவர்களுடைய குடியிருப்புகளைக் கட்டுதல், வணிக வழிகளின் விரிவு, "மட்பாண்ட பாணிகள், ஆபரணங்கள் மற்றும் சிந்துவெளி வரிவடிவத்துடன் கூடிய முத்திரைகள்" ஆகியவற்றின் மூலம் ஓர் "ஒப்பீட்டளவில் ஒழுங்குபடுத்தப்பட்ட" பொருள்சார் பண்பாடாக மாகாண சமூகங்கள் அதிகரித்த ஒருங்கிணைப்புக்கு மாறியது ஆகியவற்றை உடையதாக தொடக்க கால அரப்பா கால கட்டத்தின் கடைசி கட்டங்கள் உள்ளன. முதிர்ந்த அரப்பா கால கட்டத்துக்கு மாறியதற்கு இது இட்டுச் சென்றது.
முதிர்ந்த அரப்பா
கியோசன் மற்றும் குழுவினரின் (2012) கூற்றுப் படி, ஆசியா முழுவதும் பருவக் காற்றுகள் மெதுவாக தெற்கு நோக்கி இடம் பெயர்ந்ததானது சிந்து மற்றும் அதன் கிளை ஆறுகளின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தியதன் மூலம் சிந்துவெளி கிராமங்கள் வளர்ச்சியடையவதற்கு அனுமதியளித்தது. வெள்ளத்தால் ஆதரவளிக்கப்பட்ட விவசாயமானது பெரும் விவசாய உற்பத்தி அதிகரிப்புக்கு வழி வகுத்தது. இது பதிலுக்கு நகரங்கள் வளர்ச்சியடைவதற்கு ஆதரவளித்தது. சிந்துவெளி நாகரிகக் குடியிருப்பு வாசிகள் நீர்ப்பாசன முறைகளை உருவாக்கவில்லை. கோடை வெள்ளங்களுக்கு வழி வகுத்த பருவ மழையையே பொதுவாகச் சார்ந்திருந்தனர். முன்னேற்றம் அடைந்த நகரங்களின் வளர்ச்சியானது மழைப் பொழிவில் ஏற்பட்ட குறைவுடன் ஒத்துப்போகிறது என புரூக் மேலும் குறிப்பிடுகிறார். மழைப் பொழிவில் ஏற்பட்ட குறைவானது பெரிய நகர மையங்களாக மக்கள் மீண்டும் ஒருங்கிணைந்ததற்குத் தூண்டு கோலாக அமைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஜே. ஜி. சாப்பர் மற்றும் டி. எ. லிச்டென்சுடெயின் ஆகியோரின் கூற்றுப் படி, முதிர்ந்த அரப்பா நாகரிகமானது "பகோர், கக்ரா மற்றும் கோத் திசி பாரம்பரியங்களின் அல்லது இந்தியா மற்றும் பாக்கித்தானின் எல்லைகளில் உள்ள காக்ரா சமவெளியில் இருந்த 'இனக்குழுக்களின்' ஓர் ஐக்கியம் ஆகும்."
மேலும், மிக சமீபத்திய மைசேல்சின் (2003) கூற்றுப் படி, "ஒரு கோத் திசிய/அம்ரி-நால் ஒருங்கிணைப்பில் இருந்து அரப்பா உலகமானது உருவாக்கப்பட்டது". மேலும் இவர் குறிப்பிடுவதாவது, நுட்பமான முன்னேற்றத்தில் கக்ரா-காகர் திரள் களங்களுடன் சேர்ந்து மொகஞ்சதாரோவின் களமானது முதன்மையானதாக உள்ளது. "கக்ரா-காகர் திரள் களங்களில் கோத் திசி தொடர்புடைய பொருட்களுடன் ஒப்பிடும் போது உண்மையில் கக்ரா மட்பாண்டங்கள் முதிர்ந்தவையாக உள்ளன". "நாம் தொடக்க கால அரப்பா (தொடக்க கால சிந்து) என்று அடையாளப்படுத்தும் ஒருங்கிணைப்பில் முடிவடைந்த கக்ரா, கோத் திசிய மற்றும் அம்ரி-நால் பண்பாட்டு அம்சங்களிலிருந்து உருவான ஒரு கூட்டிணைவை உருவாக்கிய கிரியாவூக்கியாக" இந்தப் பகுதிகளை இவர் காண்கிறார்.
பொ. ஊ. மு. 2600 வாக்கில் தொடக்க கால அரப்பா சமூகங்கள் பெரிய நகர மையங்களாக மாறியிருந்தன. இத்தகைய நகர மையங்களில் நவீன பாக்கித்தானில் உள்ள அரப்பா, கனேரிவாலா, மொகெஞ்சதாரோ மற்றும் நவீன இந்தியாவிலுள்ள தோலாவிரா, காளிபங்கான், இராக்கிகர்கி, ரூப்நகர், மற்றும் லோத்தல் ஆகியவையும் அடங்கும். மொத்தத்தில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்து மற்றும் காகர்-கக்ரா ஆறுகள் மற்றும் அவற்றின் கிளை ஆறுகளின் பொதுவான பகுதிகளில் இவை முதன்மையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நகரங்கள்
ஒரு நவ நாகரிக மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நகரப் பண்பாடானது சிந்துவெளி நாகரிகத்தில் தென்படுகிறது. இப்பகுதியில் முதல் நகர மையமாக இது இந்நாகரிகத்தை ஆக்குகிறது. நகரத் திட்டமிடலின் தரமானது நகரத் திட்டமிடல் குறித்த அறிவு மற்றும் திறமையான நகர அரசாங்கத்தை இது கொண்டிருந்திருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது. நகர அரசாங்கங்கள் சுகாதாரத்திற்கு பெரும் முக்கியத்துவத்தையோ அல்லது மாறாக சமயச் சடங்குகளுக்கு சாதகமான வழி முறையையோ உருவாக்கிக் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அரப்பா, மொகஞ்சதாரோ மற்றும் சமீபத்தில் பகுதியளவுக்கு அகழ்வாய்வு செய்யப்பட்ட இராக்கிகர்கி ஆகிய களங்களில் காணப்பட்டதைப் போல இந்த நகரத் திட்டமிடலானது உலகின் முதல் அறியப்பட்ட நகரக் கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புகளைக் கொண்டிருந்தது. நகரத்திற்குள் தனி வீடுகள் அல்லது வீடுகளின் குழுக்களானவை கிணறுகளில் இருந்து நீரைப் பெற்றன. குளிப்பதற்காக என்று ஒதுக்கி வைத்ததாகத் தோன்றும் ஓர் அறையிலிருந்து கழிவுநீரானது மூடப்பட்ட சாக்கடை அமைப்புகளுக்குத் திருப்பி விடப்பட்டது. இவை முதன்மையான தெருக்களில் கோடு போல் அமைக்கப்பட்டிருந்தன. உள் முற்றம் அல்லது சிறிய பாதைகளுக்கு மட்டுமே வீடுகள் திறந்து விடப்பட்டிருந்தன. இந்தப் பகுதியின் சில கிராமங்களில் வீடு கட்டும் முறையானது அரப்பா மக்களின் வீடு கட்டும் முறையை சில வகைகளில் இன்றும் ஒத்துள்ளது.
சிந்துப் பகுதி முழுவதும் நகரங்களில் முன்னேற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்ட பண்டைய சிந்துவின் கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புகளானவை மத்திய கிழக்கில் சமகாலத்தில் காணப்பட்ட எந்த ஒரு நகரக் களங்களில் இருந்தவற்றையும் விட மிகுந்த முன்னேற்றம் அடைந்தவையாக இருந்தன. இவர்களது படகு நிறுத்துமிடங்கள், குதிர்கள், தானியக் கிடங்குகள், செங்கல் நடைபாதைகள் மற்றும் காப்புச் சுவர்கள் ஆகியவை அரப்பா மக்களின் முன்னேறிய கட்டடக்கலையைக் காட்டுகிறது. சிந்து நகரங்களின் பெரும் சுவர்களானவை அநேகமாக வெள்ளங்களிலிருந்தும், இராணுவச் சண்டைகளிலிருந்தும் கூட அரப்பா மக்களைக் காத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நகர்க் காப்பரணின் தேவையானது இன்றும் விவாதத்திற்குரியதாக உள்ளது. இந்த நாகரிகத்தின் சமகால பிற நாகரிகங்களான மெசொப்பொத்தேமியா மற்றும் பண்டைய எகிப்துக்கு நேர்மாறாக எந்த ஒரு பெரிய நினைவுச்சின்ன கட்டடங்களும் இங்கு கட்டப்படவில்லை. அரண்மனைகள் அல்லது கோயில்களுக்கான தீர்க்கமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை. சில கட்டடங்கள் தானியக் கிடங்குகள் என்று கருதப்படுகின்றன. ஒரு நகரத்தில் ஒரு பெரும், நன்முறையில் கட்டப்பட்ட குளியலிடம் ("பெரும் குளியலிடம்") உள்ளது. இது ஒரு பொதுக் குளியலிடமாக இருந்திருக்க வாய்ப்பு இருந்துள்ளது. நகர்க் காப்பரண்கள் சுவர்களையுடையதாக இருந்த போதிலும் இந்தக் கட்டடங்கள் தற்காப்புக்காகப் பயன்படுத்தப்பட்டனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பெரும்பாலான நகரவாசிகள் வணிகர்களாகவோ அல்லது கைவினைஞர்களாகவோ இருந்திருப்பர் என்று தோன்றுகிறது. நன்றாகக் கட்டமைக்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் இதே தொழில்களைப் பின்பற்றிய பிறருடன் இவர்கள் வாழ்ந்தனர். முத்திரைகள், பாசிகள் மற்றும் பிற பொருட்களை உருவாக்க நகரங்களுக்கு தொலை தூரப் பகுதிகளில் இருந்து வந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அழகான பாசிகளும் அடங்கும். சோப்புக்கல் முத்திரைகளானவை விலங்குகள், மக்கள் (அநேகமாக கடவுள்கள்) மற்றும் பிற பொறிப்பு வகைப் படங்களைக் கொண்டிருந்தன. இதில் இன்றும் புரிந்து கொள்ளப்படாத சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்து முறையும் அடங்கும். சில முத்திரைகள் வணிகப் பொருட்கள் மீது முத்திரையிடப் பயன்படுத்தப்பட்டன.
சில வீடுகள் பிற வீடுகளை விடப் பெரியதாக இருந்த போதிலும் சிந்துவெளி நகரங்களானவை வெளிப்படையாக தெரியும் வகையிலோ அல்லது ஒப்பீட்டளவிலோ இவற்றின் சமத்துவத்திற்காக அறியப்படுகின்றன. அனைத்து வீடுகளும் நீர் பெறும் வசதி மற்றும் கழிவு நீர் வெளியேற்றும் அமைப்பைக் கொண்டிருந்தன. ஒப்பீட்டளவில் இச்சமூகத்தில் செல்வம் ஓரிடத்தில் குவிந்திருக்கவில்லை என்ற தோற்றத்தை இது நமக்குக் கொடுக்கிறது.
அதிகாரமும், அரசாங்கமும்
அரப்பா சமூகத்தில் ஒரு சக்தி மையத்திற்கு அல்லது சக்தியிலிருந்த மக்களின் பதவிகள் குறித்து உடனடி பதில்களைத் தொல்லியல் பதிவுகள் கொடுக்கவில்லை. ஆனால், சிக்கலான முடிவுகள் எடுக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டன என்பதற்கான தோற்றங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பெரும்பாலான நகரங்கள் ஓர் உயர்ந்த ஒழுங்கமைவு மற்றும் நன்முறையில் திட்டமிடப்பட்ட நேர் கோடுகளின் ஒழுங்கமைவு வடிவத்தில் அமைக்கப்பட்டன. ஒரு மைய அதிகாரத்தால் இவை திட்டமிடப்பட்டன என்பதை இது பரிந்துரைக்கிறது. மட்பாண்டங்கள், முத்திரைகள், எடைகள் மற்றும் செங்கற்கள், பொது வசதிகள் மற்றும் கட்டடங்களின் இருப்பு, சமாதி குறியீடுகள் மற்றும் சமாதிப் பொருட்களின் (சமாதிகளில் கிடைக்கப் பெற்ற பொருட்கள்) பல்வேறு வடிவங்கள் ஆகியவை அரப்பா மக்களின் மட்டு மீறிய ஒழுங்கமைவுக்குச் சான்றாக உள்ளது.
கீழ் காண்பவை இந்நாகரிகம் குறித்த சில முதன்மையான கோட்பாடுகள் ஆகும்:
ஒற்றை அரசானது இங்கு இருந்தது. பொருட்கள் ஒரே மாதிரியாகக் காணப்படுதல், திட்டமிடப்பட்ட குடியிருப்புகள், செங்கற்களின் அளவு ஒரே மாதிரியாக உள்ளது மற்றும் மூலப்பொருட்களின் ஆதாரங்களுக்கு அருகில் குடியிருப்புகள் நிறுவப்பட்டது ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
ஒற்றை ஆட்சியாளர் இங்கு இல்லை. ஆனால், மொகஞ்சதாரோ ஒரு தனி ஆட்சியாளரையும், அரப்பா மற்றுமொரு ஆட்சியாளரையும், இவ்வாறாக பல நகரங்கள் பல ஆட்சியாளர்களையும் கொண்டிருந்தன.
உலோகவியல்
அரப்பா மக்கள் உலோகவியலில் சில புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தினர். தாமிரம், வெண்கலம், ஈயம் மற்றும் வெள்ளீயம் ஆகியவற்றை உற்பத்தி செய்தனர்.
பனாவலியில் தங்கத் தூள்களைக் கொண்ட ஒரு தேய் கல்லானது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் தூய்மையை சோதிப்பதற்காக இது அநேகமாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் இத்தகைய தொழில்நுட்பமானது இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அளவியல்
சிந்து நாகரிக மக்கள் நீளம், எடை மற்றும் காலத்தை அளவிடுவதில் மிகுந்த துல்லியத் தன்மையைக் கொண்டிருந்தனர். ஒழுங்கமைவுடைய எடைகள் மற்றும் அளவீடுகளின் ஓர் அமைப்பை உருவாக்கிய முதல் மக்களில் இவர்களும் ஒருவராவர். கிடைக்கப் பெறும் பொருட்களின் ஒப்பீடானது சிந்து நிலப்பரப்பு முழுவதும் ஒரு பெருமளவிலான வேறுபாடு இருப்பதைக் காட்டுகிறது. இவர்களது மிகச் சிறிய பிரிவானது குசராத்தின் லோத்தலில் ஒரு யானைத் தந்தத்தில் குறியிடப்பட்ட அளவுகோல் ஆகும். இதன் நீளம் தோராயமாக 1.704 மில்லி மீட்டர் ஆகும். வெண்கலக் காலத்தில் ஓர் அளவீட்டுக் கருவியில் பதிவு செய்யப்பட்ட மிகச் சிறிய அளவீடு இதுவாகும். எடையை அளவிடுவது உள்ளிட்ட அனைத்து நடைமுறைத் தேவைகளுக்கும் தசமத்தை அடிப்படையாக கொண்ட அளவீட்டை அரப்பா பொறியியலாளர்கள் பின்பற்றினர். இது அவர்களது அறுமுகத்திண்ம எடைக்கற்கள் மூலம் நமக்குத் தெரிகிறது.
இந்த எடைக் கற்கள் 5:2:1 என்ற வீதத்தில் இருந்தன. எடைகள் 0.05, 0.1, 0.2, 0.5, 1, 2, 5, 10, 20, 50, 100, 200, மற்றும் 500 அலகுகளாக இருந்தன. இது ஒவ்வொரு அலகும் சுமார் 28 கிராம் எடை இருந்தது. சிறிய பொருட்களும் இதே போன்ற வீதத்தில் எடை போடப்பட்டன. அவற்றின் அளவுகள் 0.871 என்று இருந்தன. எனினும், மற்ற கலாச்சாரங்களில் உள்ளதைப் போலவே, உண்மையான எடையானது இப்பகுதி முழுவதும் ஒழுங்கமைவுடன் இல்லை. பிற்காலத்தில், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் (பொ. ஊ. மு. 4ஆம் நூற்றாண்டு) பயன்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள் லோத்தலில் பயன்படுத்தப்பட்ட அதே அளவீடுகளாக இருந்தன.
கலைகளும், கைவினைப் பொருட்களும்
களிமண் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஏராளமான சிந்துவெளி முத்திரைகளும், பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மிகச் சிறிய அளவில் கல் சிற்பங்களும், சில தங்க அணிகலன்களும், வெண்கலப் பாத்திரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுடுமண், வெண்கலம் மற்றும் சோப்பிக் கற்களில் உருவாக்கப்பட்ட உருவ ரீதியில் நுட்பமான விளக்கங்களையுடைய சில சிலைகளும் அகழ்வாய்வுக் களங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் சுடுமண் பாண்டங்கள் அநேகமாக பெரும்பாலும் விளையாட்டுப் பொருளாக இருந்திருக்கவே வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. அரப்பா மக்கள் பல்வேறு பொம்மைகளையும், விளையாட்டுகளையும் கூட உருவாக்கினர். இதில் முக்கியமானது கன சதுர வடிவ தாயக் கட்டையாகும். ஒவ்வொரு புறமும் 1 முதல் 6 துளைகள் வரை இதில் இடப்பட்டிருந்தது. மொகஞ்சதாரோ போன்ற களங்களில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பசுக்கள், கரடிகள், குரங்குகள் மற்றும் நாய்கள் ஆகியவை இந்த சுடுமண் பாண்ட சிலைகளில் உள்ளடங்கியுள்ளன. முதிர்ந்த அரப்பா கால கட்டத்தின் களங்களில் பெரும்பாலான முத்திரைகளில் சித்தரிக்கப்பட்ட விலங்கு எது என தெளிவாக அடையாளப்படுத்தப்படவில்லை. ஒரு பாதி காளையாகவும், ஒரு பாதி வரிக் குதிரையாகவும், பெரும் கொம்புடன் உள்ள விலங்கு ஊகத்திற்கு வழி வகுக்கக் கூடியதாக இருந்துள்ளது. இந்த உருவமானது சமய அல்லது வழிபாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததா என்பதற்கான போதுமான அளவு ஆதாரங்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால், இந்த உருவத்தின் பரவலாகக் காணப்படும் தன்மையானது, சிந்துவெளி நாகரிகத்தின் உருவங்களில் உள்ள விலங்கோ அல்லது வேறு உருவமோ சமயக் குறியீடுகளே என்ற கேள்வியை எழுப்புபவையாக உள்ளன.
"சிப்பி வேலைப்பாடுகள், மட்பாண்ட உற்பத்தி மற்றும், மணிக்கல் மற்றும் சோப்புக்கல் பாசி உருவாக்கம்" உள்ளிட்ட பல கைவினை வேலைப்பாடுகள் நடைபெற்றன. அணிகலன்கள், வளையல்கள் மற்றும் பிற பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் அரப்பா நாகரிகத்தின் அனைத்து கால கட்டங்களிலும் இருந்து பெறப்பட்டன. இந்த கைவினை வேலைகளில் சில இந்திய துணைக்கண்டத்தில் இன்றும் கூட பின்பற்றப்படுகின்றன. சீப்புகள், கண் மை மற்றும் ஒரு சிறப்பான மூன்று பயன்பாடுகளையுடைய ஓர் ஒப்பனைப் பொருள் போன்ற சில ஒப்பனைப் பொருட்கள் அரப்பாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை நவீன இந்தியாவிலும் அதை ஒத்த இணைப்புப் பொருட்களை இன்றும் கூட கொண்டுள்ளன. சுடுமண்ணில் செய்யப்பட்ட பெண் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன (–2600 பொ. ஊ. மு.). இச்சிலைகளில் முடி பிரியும் இடத்தில் சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.
சதுரங்கத்தை ஒத்த காய்களைக் கொண்ட ஒரு பலகையானது லோத்தல் நகரத்திலிருந்து பொ. ஊ. மு. 3000 முதல் 2000 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் சிதிலங்களில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.
மொகஞ்சதாரோவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடக்கத்தில் இலாகூர் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்தன. பிறகு புது தில்லியில் உள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமையகத்துக்கு இடம் மாற்றப்பட்டன. பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு புதிய தலைநகருக்கு என திட்டமிடப்பட்டிருந்த புதிய "மைய ஏகாதிபத்திய அருங்காட்சியத்துக்கு" இவை இடம் மாற்றப்பட்டன. அங்கு குறைந்தது ஒரு பகுதி பொருட்களாவது பார்வைக்கு வைக்கப்படும் என்று எண்ணப்பட்டது. இந்தியாவுக்கான சுதந்திரம் நெருங்கி வருகிறது என்று வெளிப்படையாக அந்நேரத்தில் தெரிந்தது. ஆனால், இந்தியப் பிரிவினையானது கடைசி கட்டத்தில் தான் எதிர்பார்க்கப்பட்டது. தங்கள் நிலப்பரப்பில் அகழ்வாய்வு செய்யப்பட்ட மொகஞ்சதாரோ பொருட்களைத் திருப்பிக் கொடுக்குமாறு புதிய பாக்கித்தானின் அரசுத் துறையினர் வேண்டினர். ஆனால், இந்திய அரசுத் துறையினர் மறுத்தனர். இறுதியாக ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது. பெரும்பாலும் சுடுமண் பாண்டங்களாக இருந்த சுமார் 12,000 பொருட்கள் என மொத்தமாக இருந்த இந்த கண்டுபிடிப்புகளை இரு நாடுகளுக்கும் இடையில் சரி சமமாக பிரித்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. சில நேரங்களில் இந்த வார்த்தைகள் அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டன. சில அணிகலன்கள் மற்றும் பட்டைகளில் இருந்த பாசிகள் பிரிக்கப்பட்டு இரண்டு குவியல்களாக அமைக்கப்பட்டன. "இரண்டு மிகுந்த முக்கியமான சிலைகளைப்" பொறுத்த வரையில், பாக்கித்தான் பூசாரி-மன்னன் சிலையைக் கேட்டுப் பெற்றது. அதே நேரத்தில், இந்தியா அதை விட சிறிய நடன மங்கை சிலையை வைத்துக் கொண்டது.
நீண்ட காலம் கழித்து எழுதப்பட்டிருந்தாலும் கலை நூலான நாட்டிய சாஸ்திரமானது () இசைக்கருவிகளை அவற்றின் உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கிறது. அவை நரம்புக் கருவிகள், தோல் கருவிகள், உறுதியான பொருள் கருவிகள் மற்றும் காற்றுக் கருவிகள் ஆகியவை ஆகும். சிந்துவெளி நாகரிகத்தின் காலத்தில் இருந்தே இத்தகைய கருவிகள் இருந்துள்ளன என்று அநேகமாகத் தெரிகிறது. எளிமையான கிளுகிளுப்பைகள் மற்றும் குடுவை புல்லாங்குழல்களின் பயன்பாட்டை தொல்லியல் ஆதாரங்கள் நமக்குக் காட்டுகின்றன. அதே நேரத்தில், ஒரு சித்தரிப்பானது தொடக்க கால யாழ் வகைக் கருவிகள் மற்றும் முரசுகளும் கூட பயன்படுத்தப்பட்டன என்பதற்கான ஆதாரத்தை காட்டுகிறது. சிந்துவெளி நாகரிகத்தின் ஒரு சித்திரக் குறியீடானது வளைந்த யாழ் வகைக் கருவியின் தொடக்க காலத்தில் அறியப்பட்ட சித்தரிப்பைக் கொண்டுள்ளது. இது பொ. ஊ. மு. 1800ஆம் ஆண்டுக்கு சற்று முன்னர் காலமிடப்படுகிறது.
மனித சிறு சிலைகள்
சிந்துவெளி நாகரிகக் களங்களில் இருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தத்ரூபமான சிறு சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது மெல்லிய கை கால்களை உடைய, வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட நடன மங்கை சிலையாகும். இச்சிலை மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சிலை மற்றொரு சிலையை மூலமாகக் கொண்டு வெண்கல வார்ப்பு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பிற தத்ரூபமான முழுமையடையாத சிறு சிலைகளும் அரப்பாவில் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாரம்பரியக் காலத்தை ஒத்த, மனித உருவங்களை இவை காட்டுகின்றன: ஆணாகத் தோன்றுகின்ற ஒரு நடனமாடும் நபரின் சிறு சிலை மற்றும் அரப்பா தோர்சோ என்றழைக்கப்படும் ஒரு சிவப்பு ஆணின் தோர்சோ சிலை. இவை இரண்டுமே தற்போது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளன. அரப்பாவிலிருந்து இந்த இரு சிறு சிலைகளைக் கண்ட போது சர் யோவான் மார்ஷல் ஆச்சரியத்துடன் பின்வருமாறு கூறினார்:
மனித உடலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இவற்றின் முன்னேற்றமடைந்த பாணியின் காரணமாக இந்த சிறு சிலைகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியவையாக உள்ளன. சிவப்பு தோர்சோ சிலையைப் பொறுத்த வரையில் அதைக் கண்டுபிடித்தவரான வாட்ஸ் இது ஓர் அரப்பா காலத்தைச் சேர்ந்தது எனக் கூறினார். ஆனால், மார்ஷல் இந்த சிறு சிலையை அநேகமாக வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதினார். குப்தர் காலத்திற்கு இதைக் காலமிட்டார். மிகுந்த பிந்தைய காலத்தைச் சேர்ந்த லோகானிபூர் தோர்சோ என்ற சிலையுடன் இதை ஒப்பிட்டார். ஓர் இரண்டாவது, ஆனால் இதே போன்ற, சாம்பல் கல்லில் செய்யப்பட்ட ஒரு நடனமாடும் ஆணின் தோர்சோ சிலையானது ஒரு பாதுகாக்கப்பட்ட முதிர்ந்த அரப்பா பகுதியில் சுமார் 150 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக, மானுடவியலாளர் கிரிகோரி போசெல் முதிர்ந்த அரப்பா கால கட்டத்தின் போது சிந்துவெளி கலையின் உச்ச நிலையை இந்தச் சிலைகள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதினார்.
முத்திரைகள்
ஆயிரக்கணக்கான சோப்புக்கல் முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அமைப்பானது ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது. 2 முதல் 4 செ. மீ. அளவில் பக்கத்தையுடைய சதுரங்களாக அவை இருந்துள்ளன. அவற்றைக் கையாள கயிறு கோர்ப்பதற்காகவோ அல்லது தனி நபர் அணிகலனாக அவற்றை பயன்படுத்துவதற்காகவோ பெரும்பாலான நேரங்களில் இம்முத்திரைகளின் பின்னால் ஓர் ஓட்டை காணப்படுகிறது. மேலும், ஒரு பெரும் எண்ணிக்கையிலான சிறு முத்திரைகளும் எஞ்சியுள்ளன. அதில் சிலவற்றை மட்டுமே முத்திரைகளாக எடுத்துக் கொள்ள முடியும். சிந்துவெளி வரிவடிவத்தின் பெரும் எண்ணிக்கையிலான எடுத்துக்காட்டுகள் முத்திரைகள் மேல் உள்ள குறியீடுகளின் சிறு குழுக்களாக உள்ளன.
மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் அதன் தலையில் ஊன்றியிருக்கும் ஓர் உருவத்தை சித்தரிப்பதையும், மற்றொரு முத்திரையான பசுபதி முத்திரையில் சம்மணமிட்டு அமர்ந்து, சிலர் குறிப்பிடுவது போல யோகா செய்வது போன்ற ஒரு தோற்றத்தில் இருப்பதையும் சித்தரிக்கின்றன. இந்த உருவங்கள் பலவராக அடையாளப்படுத்தப்படுகின்றன. சர் யோவான் மார்ஷல் இந்த முத்திரையை இந்துக் கடவுளான சிவனை ஒத்துள்ளதாக அடையாளப்படுத்துகிறார்.
கொம்புகள், குளம்புகள் மற்றும் ஒரு காளையின் வாலையுடைய ஒரு மனித தெய்வமும் கூட முத்திரைகளில் தோன்றுகிறது. குறிப்பாக ஒரு கொம்பை உடைய புலி போன்ற மிருகத்துடன் சண்டையிடும் தோற்றத்தில் தோன்றுகிறது. இந்தத் தெய்வமானது மெசொப்பொத்தேமியய காளை மனிதனான என்கிடுவுடன் ஒப்பிடப்படுகிறது. இரண்டு சிங்கங்கள் அல்லது புலிகளுடன் சண்டையிடும் ஒரு மனிதன், மேற்கு மற்றும் தெற்காசியாவின் நாகரிகங்களுக்குப் பொதுவான உருவமான "விலங்குகளின் எசமானன்" ஆகியவற்றையும் கூடக் காட்டும் பல முத்திரைகள் உள்ளன.
வணிகமும், போக்குவரத்தும்
சிந்துவெளி நாகரிகமானது மாட்டு வண்டிகளைக் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது தெற்காசியா முழுவதும் காணப்படும் மாட்டு வண்டிகளை ஒத்ததாக இவை இருந்தன. மேலும், படகுகளையும் இந்நாகரிகம் கொண்டிருந்தது என்று கருதப்படுகிறது. இதில் பெரும்பாலான படகுகள் அநேகமாக சிறிய, தட்டையான அடிப்பாகத்தைக் கொண்ட படகுகளாகும். இவை ஒரு வேளை தற்போது சிந்து ஆற்றில் காணப்படுவதை ஒத்த பாய் மரங்களால் இயக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு விரிவான கால்வாய் அமைப்பானது நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இது எச். பி. பிராங்போர்த்து என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
செப்புக் காலத்தின் 4300 முதல் 3200 பொ. ஊ. மு. வரையிலான காலத்தின் போது சிந்துவெளி நாகரிகத்தின் பகுதியானது தெற்கு துருக்மெனிஸ்தான் மற்றும் வடக்கு ஈரானுடன் மட்பாண்டங்களில் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இது இப்பகுதிகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க அளவுக்கு போக்குவரத்தும், வணிகமும் இருந்தைப் பரிந்துரைக்கிறது. தொடக்க கால அரப்பா காலத்தின் போது (சுமார் 3200-2600 பொ. ஊ. மு.) மட்பாண்டங்கள், முத்திரைகள், உருவங்கள், அணிகலன்கள் போன்றவற்றில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இவை நடு ஆசியா மற்றும் ஈரானியப் பீடபூமியுடன் சிந்துவெளி நாகரிகத்திற்கு இருந்த விரிவான கவிகை வண்டி வணிகத்திற்கு ஆவணமாக உள்ளன.
சிந்துவெளி நாகரிகத்தின் பொருட்கள் அகலப் பரவிக் காணப்படுவதன் அடிப்படையில், வணிக வழிகளானவை பொருளாதார ரீதியாக ஆப்கானித்தானின் பகுதிகள், ஈரானின் கடற்கரைப் பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு இந்தியா, மற்றும் மெசொப்பொத்தேமியா உள்ளிட்ட ஒரு பெரும் பகுதியை ஒன்றிணைத்தன என்று கருதப்படுகிறது. இது சிந்து-மெசொப்பொத்தேமியா உறவுகளின் முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது. அரப்பாவில் புதைக்கப்பட்ட நபர்களின் பற்களின் கெட்டியான வெண்ணிறப் பகுதிகள் குறித்த ஆய்வுகளானவை அரப்பாவின் சில குடியிருப்புவாசிகள் சிந்து சமவெளியையும் தாண்டிய பகுதிகளில் இருந்து இந்நகரத்திற்கு வந்து குடியேறினர் என்று பரிந்துரைக்கிறது. துருக்மெனிஸ்தானின் கோனுர் தேபே மற்றும் ஈரானின் சகிரி சுக்தே ஆகிய வெண்கலக் கால களங்களின் சமாதிகளின் பண்டைய மரபணு ஆய்வுகள் தெற்காசிய வழித்தோன்றல்களான 11 நபர்களை அடையாளப்படுத்துகிறது. இவர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் முதிர்ந்த கால கட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.
மத்திய அரப்பா கால கட்டத்தில் இருந்தே அரப்பா மற்றும் மெசொப்பொத்தேமியா நாகரிகங்களுக்கு இடையில் விரிவான கடல் வணிகமானது நடைபெற்றுள்ளது. இதில் பெரும்பாலான வணிகமானது "தில்முனைச் (பாரசீக வளைகுடாவிலுள்ள நவீன பகுரைன், கிழக்கு அரேபியா மற்றும் குவைத்தின் பைலகா தீவு) சேர்ந்த இடை வணிகர்களால்" கையாளப்பட்டது. தட்டையான அடிப் பாகத்தை உடைய படகுகளானவை தைக்கப்பட்ட நாணல் புற்கள் அல்லது துணிகளைப் பாய்களாகக் கொண்டு, ஓர் ஒற்றை மைய பாய்மரத்தால் இயக்கப்பட்ட நுட்பத்தின் உருவாக்கத்தின் காரணமாக இத்தகைய நீண்ட தூரக் கடல் வாணிகமானது சாத்தியமாகியது.
எனினும், அரப்பா நாகரிகத்துடன் தொடர்புடைய கடல் வணிகத்திற்கான சான்றுகள் தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை. தொல்லியலாளர்கள் பிரிட்சட் ஆல்ச்சின் மற்றும் ரேமண்ட் ஆல்ச்சின் தங்களது இந்தியா மற்றும் பாக்கித்தானில் நாகரிகத்தின் வளர்ச்சி என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்: … (பக். 173) லோத்தலில் உள்ள குடியிருப்பில் … கிழக்குப் பகுதியின் பக்கவாட்டில் ஒரு செங்கல் குழி தட்டமானது உள்ளது. ஓர் அண்டை கழிமுகத்துடன் கால்வாய்களால் இணைக்கப்பட்டிருந்த படகுகள் நிறுத்தும் இடமாக இது இருந்ததாக இதன் அகழ்வாய்வாளரால் கூறப்படுகிறது. … மேற்கு இந்தியாவின் பாரம்பரிய கடல்சார் சமூகங்களால் பயன்படுத்தப்படும் நவீன நங்கூரக் கற்களை ஒத்த ஏராளமான, கடுமையாகத் துளையிடப்பட்ட கற்களை அகழ்வாய்வாளர் இதன் முனையில் கண்டுபிடித்துள்ளார். எனினும், இந்த விளக்கம் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. குழி தட்டத்தின் அறியப்பட்ட மட்டம் மற்றும் நவீன கடல் மட்டத்தை ஒத்த இதன் வாயில் ஆகியவை இதற்கு மாறாக உள்ளதாகக் கருதப்படுகிறது. பண்டைக் காலம் முதல் இன்று வரை உள்ளூர் நீர் ஆதாரங்கள் உப்பாக உள்ள பகுதிக்குக் கால்வாய்களால் கொண்டு வரப்பட்ட நன்னீரைப் பெறும் ஒரு தொட்டி இது என இலெசுனிக் என்பவர் தெளிவாகப் பரிந்துரைக்கிறார். இரு விளக்கங்களுமே இன்னும் நிரூபிக்கப்படாதவை என நாங்கள் கருதுகிறோம். ஆனால், இரண்டாம் விளக்கத்தை ஆதரிக்கிறோம். … (பக். 188–189) வணிகம் குறித்த விவாதங்களானவை போக்குவரத்து வழி முறைகள் மீது கவனம் கொண்டுள்ளன. அரப்பா, மொகஞ்சதாரோ போன்ற பகுதிகளின் முத்திரைகள் மற்றும் கீறல்களில் கப்பல்கள் குறித்த ஏராளமான சித்தரிப்புகள் காணப்படுகின்றன (படங்கள். 7.15–7.16). குச்சியால் உருவாக்கப்பட்ட துளை மற்றும் கப்பல் பாய்களை நிலை நிறுத்தும் வடக் கயிறுகளுக்கான துளைகள் ஆகியவற்றை உடைய ஒரு கப்பலின் சுடுமண் பாண்ட மாதிரியும் லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லோத்தலில் படகுகள் நிறுத்தும் இடம் என ராவால் விளக்கப்பட்டுள்ள நாம் ஏற்கனவே மேலே கண்ட பெரும் செங்கல் தொட்டியானது ஐயத்துக்கு இடமின்றி அடையாளப்படுத்தப்படாமல் உள்ளது. அரப்பா காலத்தின் போது கடல் வணிகம் மற்றும் தொடர்பு குறித்த சான்றானது பெரும்பாலும் சூழல் சார்ந்ததாகவோ அல்லது மேலே விளக்கப்பட்டுள்ள படி மெசொப்பொத்தேமியா நூல்களிலின் அனுமானத்திலிருந்து தருவிக்கப்பட்டதாகவோ உள்ளது. (படம் 7. 15இன் விளக்கம்: மொகஞ்சதாரோ: ஒரு கல் முத்திரையில் கப்பலின் சித்தரிப்பு (நீளம் 4.3 செ. மீ.) (மெக்கேயின் விளக்கப் படி). படம் 7.16 மொகஞ்சதாரோ: சுடுமண் பாண்ட தாயத்தில் கப்பலின் சித்தரிப்பு (நீளம் 4.5 செ. மீ.) தேல்சின் விளக்கப் படி)
தேனியல் தி. பாட்சு பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
சிந்துவெளி (பண்டைய மெலுக்கா?) மற்றும் அதன் மேற்கு அண்டைப் பகுதிகளுக்கு இடையிலான பெரும்பாலான வணிகமானது நிலம் வழியாக அல்லாமல் பாரசீக வளைகுடா வழியாக நடைபெற்றது என்பது பொதுவாக நம்பப்படும் ஒன்றாகும். இது உண்மையென நிரூபிக்க உறுதியான ஆதாரங்கள் கிடையாது என்ற போதிலும், ஓமன் தீபகற்பம், பகுரைன் மற்றும் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் பரவிக் காணப்படும் சிந்துவெளி பாணியிலான பொருட்களானவை சிந்துவெளி மற்றும் வளைகுடாப் பகுதியை இணைத்த ஒரு தொடர்ச்சியான கடல் படி நிலைகளை நம்பத்தக்கதாக்குகிறது. இதை ஏற்றுக் கொண்டோமேயானால் கார்னேலிய பாசிகள், ஓர் அரப்பா பாணியிலான கன சதுர எடைக்கல் மற்றும் ஓர் அரப்பா பாணியிலான சூசாவில் கண்டெடுக்கப்பட்ட உருளை வடிவ முத்திரை (அமியேத் 1986ஏ, படங்கள். 92-94) ஆகியவை பொ. ஊ. மு. பிந்தைய 3ஆம் ஆயிரமாவது ஆண்டில் சூசா மற்றும் சிந்துவெளிக்கு இடையிலான கடல் வணிகத்திற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படலாம். மற்றொரு புறம், இதே போன்ற கண்டுபிடிப்புகள் குறிப்பாக கார்னேலிய பாசிகளானவை தேபே கிசார், ஷா தேபே, கல்லே நிசார், சலாலாபாத், மர்லிக் மற்றும் தேபே யகுயா (போசேல் 1996, பக். 153-54) உள்ளிட்ட நிலம்சூழ் களங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சூசாவில் இவை கண்டுபிடிக்கப்பட்டதற்குக் காரணமாக நிலம் வழியான கடத்தல் அல்லது கவிகை வண்டிகள் உள்ளிட்ட பிற வழிகளும் எடுத்துக் கொள்ளப்படலாம்.
1980களில் ஓமானின் ரசல் சின்சு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான தொல்லியல் கண்டுபிடிப்புகளானவை அரபுத் தீபகற்பத்துடனான சிந்துவெளியின் கடல் வழித் தொடர்புகளுக்குச் சான்றாக அமைந்தன.
தென்னிசு பிரேனேசு சமீபத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது:
சிந்து-பாணியிலான மற்றும் சிந்துவெளி-தொடர்பான பொருட்கள் நடு ஆசியா, ஈரானியப் பீடபூமி, மெசொப்பொத்தேமியா மற்றும் வடக்கு லெவண்ட், பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் தீபகற்பத்தை உள்ளடக்கிய ஒரு பெரிய மற்றும் பல்வேறு வகைப்பட்ட குடியிருப்பு உலகம் முழுவதும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முத்திரைகள், எடைக் கற்கள் மற்றும் கொள்கலன்கள் உள்ளிட்ட சிந்துவெளி வணிகக் கருவிகளின் கண்டுபிடிப்பானது ஒட்டு மொத்த நடு ஆசியா முழுவதும் நடைபெற்றுள்ளது. மெசொப்பொத்தேமிய சித்திர எழுத்து நூல்களில் உள்ள தகவல்களும் இதற்குச் சான்றாக அமைகின்றன. உள்ளூர் சமூகப்பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகளுடன் பரிமாற்றம் செய்ய இப்பகுதிகளுக்குள் சிந்துவெளிப் பகுதியின் வணிகர்கள் அடிக்கடிப் பயணித்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது. எனினும், சிந்துவெளிப் பொருட்களானவை இந்த மையப்பகுதியைத் தாண்டிய பகுதிகளிலும் கூட பண்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கு, அனத்தோலியா மற்றும் காக்கேசியா வரையிலும் இறுதியாகச் சென்றடைந்துள்ளன. மாறாக பெரிய சிந்துவெளியின் களங்களில் அயல்நாட்டு வணிகப் பொருட்கள் ஒரு சிறிய அளவிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளன. நடு மற்றும் மேற்கு ஆசியாவில் சிந்துவெளி வணிக வெற்றியானது சிந்து வணிகர்களின் ஆற்றல் மிக்க வணிகம் மற்றும் அவர்கள் வழங்கிய புதுமையான பொருட்களை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அயல்நாட்டுச் சந்தைகளின் குறிப்பிடத்தக்க தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சிந்துவெளியில் குறிப்பிட்ட பொருட்கள் செயலாற்றலுடன் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன. சிந்துவெளி கைவினைஞர்கள் தங்களது பூர்வீகப் பண்பாட்டு வெளியையும் தாண்டிப் பயணித்தனர். அயல் நாட்டு உயர்குடியினரின் சுவைக்குத் தகுந்தவாறு தங்களது தனித்துவமான பொருள் உற்பத்தியை தகவமைத்துக் கொண்டனர் அல்லது அந்த உள்ளூர் மாதிரிகளை மாற்றியமைத்தனர். வெளிப்புற வணிக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த குறிப்பிட்ட முத்திரைகள் மற்றும் உருவச் சித்தரிப்புகளை பின்பற்றியது என்பது ஓர் ஒத்திசைவானது மாகாணங்களுக்கு இடையிலான பொருட்களை விற்கும் உத்தியைச் செயல்படுத்தியதில் ஒரு உணர்திறன் கொண்ட முயற்சி இருந்தது என்பதைப் பரிந்துரைக்கிறது[…]
வேளாண்மை
கங்கல் மற்றும் குழுவினரின் (2014) கூற்றுப் படி, புதிய கற்கால வேளாண்மையானது அண்மைக் கிழக்கிலிருந்து வட மேற்கு இந்தியாவிற்குப் பரவியது என்பதற்கான வலிமையான தொல்லியல் மற்றும் புவியியல் சான்றுகள் உள்ளன. ஆனால், அதே நேரத்தில், "மெகர்கரில் வாற்கோதுமை மற்றும் நாட்டு மாடுகள் கொல்லைப்படுத்தப்பட்டன என்பதற்கான நல்ல சான்றுகளும்" கூட உள்ளன.
ஜீன்-பிராங்கோயிசு சர்ரிச்சின் கூற்றுப் படி, வேளாண்மையானது மெகர்கரில் சுதந்திரமாக உள்ளூர் அளவில் தோன்றியது. மெகர்கரானது அண்மைக் கிழக்கின் புதிய கற்காலப் பண்பாட்டின் ஒரு பின்தங்கிய பகுதியாக வெறுமனே திகழவில்லை என்று இவர் வாதிடுகிறார். கிழக்கு மெசொப்பொத்தேமியா மற்றும் மேற்கு சிந்துவெளியைச் சேர்ந்த புதிய கற்காலக் களங்களுக்கு இடையில் ஒற்றுமைகளானவை "பண்பாட்டுத் தொடர்வரிசை அமைவுக்கான" சான்றுகளாக இருந்த போதிலும் இவர் இவ்வாறு வாதிடுகிறார். தொல்லியலாளர் ஜிம் ஜி. சாப்பர் "உணவு உற்பத்தி என்பது தெற்காசியாவில் தானாகத் தோன்றிய, புரிந்து கொள்ளப்படாத நிகழ்வு" என்பதை மெகர்கர் களமானது விளக்குகிறது என்கிறார். "தெற்காசியாவின் வரலாற்றுக்கு முந்தைய நகரமயமாக்கல் மற்றும் சிக்கலான சமூக அமைப்பை உள்ளூர் முறையை அடிப்படையாகக் கொண்டதாகவும், ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக தன்னந்தனியாக இல்லாத பண்பாட்டு வளர்ச்சிக்குமான" விளக்கத்துக்கு தகவல்கள் ஆதரவளிக்கின்றன எனவும் குறிப்பிடுகிறார்.
மெகர்கரின் மக்கள் கொல்லைப்படுத்தப்பட்ட கோதுமை மற்றும் வாற்கோதுமைகளைப் பயன்படுத்தினர் என சர்ரிச் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், சாப்பர் மற்றும் லிச்டென்சுடெயின் இங்கு முதன்மையாக அறுவடை செய்யப்பட்ட தானியப் பயிராக இரண்டு வரிசை வாற்கோதுமையில் இருந்து பெறப்பட்ட ஒரு பயிரான ஆறு வரிசை வாற்கோதுமையைக் குறிப்பிடுகின்றனர். "மெகர்கரிலிருந்த புதிய கற்காலத்தைச் சேர்ந்த கொல்லைப்படுத்தப்பட்ட பயிர்களில் 90%க்கும் அதிகமானவை வாற்கோதுமையைக் கொண்டிருந்ததாகக்" கங்கல் ஒப்புக் கொள்கிறார்." வாற்கோதுமையானது இங்கு கொல்லைப்படுத்தப்பட்டதற்கு நல்ல சான்றுகள் உள்ளதாகக்" குறிப்பிடுகிறார். இருந்த போதிலும், இப்பயிரானது "ஒரு சிறிய அளவில் கோதுமைகளையும்" உள்ளடக்கியிருந்தது என்பதையும் கூட கங்கல் குறிப்பிடுகிறார். கோதுமையானது "அண்மைக் கிழக்கில் தோன்றிய ஒரு பயிர் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், கோதுமையின் காட்டுப் பயிர் வகைகளின் நவீன பரவலானது வடக்கு லெவண்ட் மற்றும் தெற்கு துருக்கி ஆகிய பகுதிகளுக்குள் அடங்கி விடுகிறது."
சிந்துவெளி முத்திரைகளில் அடிக்கடிச் சித்தரிக்கப்படும் கால்நடைகளானவை திமிலையுடைய இந்திய அரோச்சுசு மாட்டு வகையாகும் (பாசு பிரிமிசினியசு நமதிகசு). இவை நாட்டு மாடுகளை ஒத்த ஒரு வகையாகும். இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் இன்றும் பொதுவானவையாக இந்த நாட்டு மாடுகள் உள்ளன. இவை ஐரோப்பிய கால்நடைகளில் (பாசு பிரிமிசினியசு தாரசு) இருந்து வேறுபட்டவையாகும். இந்தியத் துணைக் கண்டத்தில், அநேகமாக பாக்கித்தானின் பலுச்சிசுத்தானப் பகுதியில் தனியாக இவை கொல்லைப்படுத்தப்பட்டன என்று நம்பப்படுகிறது.
ஜே. பேட்சு மற்றும் குழுவினரின் ஆய்வானது (2016) இரு பருவங்களிலும் சிக்கலான பல-பயிர் உத்திகளைப் பயன்படுத்திய தொடக்க கால மக்கள் சிந்துவெளி மக்கள் ஆவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. இவர்கள் கோடைக் காலம் (அரிசி, சிறு தானியங்கள் மற்றும் பீன்சு) மற்றும் குளிர் காலம் (கோதுமை, வாற்கோதுமை மற்றும் பயறு வகைகள்) ஆகிய பருவங்களில் உணவுப் பொருட்களை விளைவித்தனர். இது வேறுபட்ட நீர்ப்பாசன முறைகளுக்கான தேவையைக் கொண்டிருந்தது. பண்டைக் கால தெற்காசியாவில் ஓர் ஒட்டு மொத்தமாக, தனியாக அரிசி கொல்லைப்படுத்தபட்ட நிகழ்வுக்கான ஆதாரங்களையும் பேட்சு மற்றும் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த அரிசி வகைகள் காட்டுப் பயிரான ஒரைசா நிவாரவை அடிப்படையாகக் கொண்டவையாகும். பொ. ஊ. மு. 2000ஆம் ஆண்டு வாக்கில் உண்மையான ஈர நில அரிசியான ஒரைசா சட்டைவா ஜப்பானிக்கா வருவதற்கு முன்னர் உள்ளூர் ஒரைசா சட்டைவா இண்டிகா அரிசி வேளாண்மையானது "ஈர நில" மற்றும் "காய்ந்த நில" வேளாண்மையின் ஒரு கலவையான உள்ளூர் வேளாண்மையின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
உணவு
தொல்லியல் கண்டுபிடிப்புகளின் படி, சிந்துவெளி நாகரிக மக்கள் மாடுகள், எருமைகள், ஆடு, பன்றி மற்றும் கோழி போன்ற அசைவ உணவுகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். பால் பொருட்களின் எஞ்சியவையும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்சயேதா சூரியநாராயணன் மற்றும் குழுவினர், கிடைக்கப்பெறும் சான்றுகள் நாகரிகப் பகுதி முழுவதும் சமையல் முறைகளானவை ஒரே மாதிரியாக இருந்தன என்பதைக் காட்டுகின்றன எனக் குறிப்பிடுகின்றனர்: பால் பொருட்கள் (குறைந்த அளவில்), அசை போடும் விலங்குகளின் மாமிசம் மற்றும், அசை போடாத விலங்குகளின் மாமிசக் கொழுப்பு, தாவரங்கள் அல்லது இத்தகைய பொருட்களின் கலவையாக உணவுப் பொருட்கள் இருந்தன. நாகரிகம் வீழ்ச்சியடைந்த காலத்தின் போதும் உணவு முறையானது ஒரே மாதிரியாகவே இருந்தது.
ஏழு உணவுப் பந்துகள் ("இலட்டுகள்") கெட்டுப் போகாத வடிவத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் காளைகளின் இரண்டு உருவங்கள், ஒரு கையடக்க தாமிர வாசி ஆகியவை மேற்கு இராசத்தானில் இருந்து 2017ஆம் ஆண்டின் அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பொ. ஊ. மு. 2600ஆம் ஆண்டுக்குத் தோராயமாக காலமிடப்படுகின்றன. இந்த இலட்டுகள் இருபுற வெடி கனிகள், முதன்மையாக பாசிப் பயறு மற்றும் தானியங்களால் உருவாக்கப்பட்டிருந்தன. காளை உருவங்கள், வாசி மற்றும் ஒரு முத்திரை இதற்கு அருகிலேயே கிடைக்கப் பெற்றமையால் வரலாற்றாளர்கள் இந்த உணவுப் பந்துகளை சமய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதுகின்றனர்.
மொழி
சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் மொழியியல் ரீதியாக முதனிலைத் திராவிட மொழிகளைப் பேசினர் என்றும், முதனிலைத் திராவிட மொழிகளின் பிரிவானது பிந்தைய அரப்பா பண்பாட்டின் வீழ்ச்சியுடன் ஒத்துப் போகிறது என்றும் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பின்லாந்தைச் சேர்ந்த இந்தியவியலாளரான அஸ்கோ பார்ப்போலா சிந்துவெளி எழுத்துப் பொறிப்புகளின் சீரான தன்மையானது பரவலாக வேறுபட்ட மொழிகள் பயன்படுத்தப்பட்டிருந்திருக்க வேண்டும் என்ற நிலைக்கு மாற்றாக அமைகின்றன என்கிறார். சிந்துவெளி மக்களின் மொழியாகத் திராவிட மொழியின் தொடக்க கால வடிவம் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். தற்போது, திராவிடக் குடும்ப மொழிகளானவை பெரும்பாலும் தென்னிந்தியா மற்றும், வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் மட்டுமே அதிகம் பேசப்படுகின்றன. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக, எஞ்சிய இந்தியா மற்றும் பாக்கித்தான் (பிராகுயி மொழி) முழுவதும் இவை தொடர்ந்து பேசப்படுகின்றன. இது இவரின் கருத்தியலுக்கு நம்பகத் தன்மையைக் கொடுக்கிறது.
கெக்கார்ட்டி மற்றும் ரென்பிரேவ் ஆகியோர், திராவிட மொழிகளானவை இந்தியத் துணைக் கண்டத்திற்கு வேளாண்மை பரவியதுடன் சேர்ந்து பரவியிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். தாவீது மெக்கால்பின் திராவிட மொழிகளானவை இந்தியாவிற்கு ஈலாம் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்களுடன் கொண்டு வரப்பட்டன என்கிறார். தனது தொடக்க ஆய்வுகளில் ரென்பிரேவ் முதனிலைத் திராவிட மொழியானது இந்தியாவிற்கு ஈரானின் வளமான பிறை பிரதேசப் பகுதியில் இருந்து விவசாயிகளால் கொண்டு வரப்பட்டது என்று குறிப்பிடுகிறார். ஆனால், மிக சமீபத்தில் கெக்கார்ட்டி மற்றும் ரென்பிரேவ், "திராவிடத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை விளக்குவதற்கு இன்னும் ஏராளமான பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது" எனக் குறிப்பிடுகின்றனர். இவர்கள் மேலும், "மொழித் தகவல்களை மெக்கால்பின் பகுப்பாய்வு செய்தது மற்றும் அவரது கருத்துக்களானவை பரவலாக இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை" என்று குறிப்பிடுகின்றனர். கெக்கார்ட்டி மற்றும் ரென்பிரேவ் தகவல்களுடன் ஏராளமான கருத்தியல்கள் ஒத்துப் போகின்றன என முடிக்கிறார். இதை "மொழியியல் அறிஞர்களின் பார்வைக்கு விடுவதாகவும்" குறிப்பிட்டுள்ளனர். ஒரு 2021ஆம் ஆண்டு ஆய்வில் பகதா அன்சுமாலி முகோபத்யாய் பண்டைய சிந்துப் பகுதியில் ஒரு முதனிலைத் திராவிட மொழியின் இருப்பிற்கான மொழியியல் பகுப்பாய்வை முன் வைத்துள்ளார். பல், பற்குச்சி மற்றும் யானை ஆகியவற்றுக்கான திராவிட வேர்ச் சொற்களைப் பல்வேறு சம கால பண்டைய நாகரிகங்களில் பயன்படுத்தி இவர் இதை முன் வைத்துள்ளார்.
சாத்தியமான எழுத்து வடிவம்
400 மற்றும் 600க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் தனித்துவமான சிந்துவெளிக் குறியீடுகளானவை முத்திரைகள், சிறிய பட்டிகைகள், மட்பாண்டக் குடுவைகள் மற்றும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பிற பொருட்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் சிந்துவெளி நகரமான தோலாவிராவின் உள் நகர்க் காப்பரணின் வாயிற் கதவில் ஒரு காலத்தில் தொங்க விடப்பட்டதாகத் தோன்றும் ஒரு "பெயர்ப் பலகையும்" அடங்கும். பொதுவாக சிந்துவெளிப் பொறிப்புகள் நீளத்தில் ஐந்து எழுத்துக்களைக் கொண்டவையாக உள்ளன. தோலாவிரா "பெயர்ப் பலகையைத்" தவிர்த்து இதில் பெரும்பாலானவை சிறியவையாகவே உள்ளன. எந்த ஒரு தனியான பொருளின் மீதும் எழுதப்பட்டதில் மிக நீளமானவை ஒரு தாமிர தகட்டில் பொறிக்கப்பட்ட 34 குறியீடுகளை நீளமாகக் கொண்ட சொல்லாகும்.
இந்த பொறிப்புகளைச் சான்றாகக் கொண்டு சிந்துவெளி நாகரிகமானது பொதுவாக ஒரு கற்றறிந்த சமூகமென்று குறிப்பிடப்படும் அதே நேரத்தில், இத்தகைய விளக்கமானது பார்மர், இசுபுரோத் மற்றும் விட்செல் (2004) ஆகிய வரலாற்றாளர்களால் ஐயத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. இவர்கள் சிந்துவெளி வடிவமானது ஒரு மொழியைக் குறிப்பிடவில்லை என்றும், மாறாக, அண்மைக் கிழக்கு மற்றும் பிற சமூகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட மொழியல்லாத குறியீட்டு வடிவங்களின் ஒரு மாதிரியை ஒத்தவை என்றும் குறிப்பிடுகின்றனர். இவை குடும்பங்கள், இனங்கள், கடவுள்கள் மற்றும் சமயக் கருத்தியல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர். பிறர் சில நேரங்களில் இந்தக் குறியீடுகள் பொருளாதாரப் பரிமாற்றங்களுக்கு என தனித்துவமாகப் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர். ஆனால், பல சமயப் பொருட்களின் மீதான சிந்துவெளிக் குறியீடுகளின் தோற்றமானது எவ்வாறு என்பதை இந்தக் கருத்தியலானது விளக்கவில்லை. இதில் பெரும்பாலானவை வார்த்தல் முறை மூலம் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. எந்த பிற தொடக்க கால பண்டைய நாகரிங்களிலும் இத்தகைய மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட பொறிப்புகளானவை இவற்றை ஒத்த ஒரு முறையைக் கொண்டிருக்கவில்லை.
பி. என். ராவ் மற்றும் குழுவினரின் ஒரு 2009ஆம் ஆண்டு ஆய்வானது, சயின்சு இதழில் பதிப்பிக்கப்பட்டது. கணினி அறிவியலாளர்கள் பல்வேறு மொழியியல் வடிவங்கள் மற்றும் மொழியல்லாத அமைப்புகளுடன் குறியீடுகளின் அமைப்பு முறையை ஒப்பிட்டு சிந்துவெளி எழுத்து முறையின் வடிவமானது பேசும் சொற்களை நெருங்கியதாக உள்ளது எனக் கண்டறிந்தனர். இதில் மரபணு ஆய்வு மற்றும் ஒரு கணினி செயற் கட்டளை மொழியும் பயன்படுத்தப்பட்டது. இன்னும் அறியப்படாத ஒரு மொழியை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற கருத்தியலுக்கு இந்த ஆய்வானது ஆதரவளித்தது.
பார்மர், இசுபுரோத் மற்றும் விட்செல் ஆகியோர் இந்தக் கண்டுபிடிப்பை கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். "நடைமுறை உலக மொழியல்லாத அமைப்புகளுடன்" சிந்துவெளிக் குறியீடுகளை ராவ் மற்றும் குழுவினர் உண்மையில் ஒப்பிடவில்லை என்று குறிப்பிடுகின்றனர். மாறாக, "2,00,000 தோராயமான கட்டளையிடப்பட்ட குறியீடுகள் மற்றும் மற்றொரு 2,00,000 முழுவதுமாக கட்டளையிடப்பட்ட குறியீடுகளைக் கொண்ட, இரண்டு ஒட்டு மொத்தமாக செயற்கையாக அறிஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை இதில் பயன்படுத்தியுள்ளனர்" என்று குறிப்பிடுகின்றனர். "இது நடைமுறை உலகின் அனைத்து மொழியல்லாத குறியீட்டு அமைப்புகளையும் பிரநிதித்துவப்படுத்தவதாக" அவர்கள் ஐயத்திற்குரிய வகையில் குறிப்பிடுகின்றனர் என்கின்றனர். பார்மர் மற்றும் குழுவினர் நடுக் கால குறியீட்டு மொழிகள் போன்ற மொழியல்லாத அமைப்புகளுடன் ஓர் ஒப்பீட்டையும் கூட குறிப்பிடுகின்றனர். இவை இயற்கையான மொழிகளுடன் சிந்துவெளிக் குறியீடுகளால் ராவ் மற்றும் குழுவினர் பெற்ற அதே போன்ற முடிவுகளைக் கொடுப்பதாகக் குறிப்பிடுகின்றனர். மொழி அமைப்புகளிலிருந்து மொழியல்லாத அமைப்புகளை ராவ் மற்றும் குழுவினரால் பயன்படுத்திய முறையால் பிரித்தறிய இயலவில்லை என்று இவர்கள் முடிக்கின்றனர்.
முத்திரைகளின் மீதுள்ள செய்திகளானவை ஒரு கணினியால் பொருள் காணும் அளவை விட மிகச் சிறியதாக உள்ளன. ஒவ்வொரு முத்திரையும் ஒரு தனித்துவமான கலவையில் குறியீடுகளைக் கொண்டுள்ளன. ஒரு போதிய விளக்கத்தைக் கொடுப்பதற்கு ஒவ்வொரு நிரல் ஒழுங்கும் மிகச் சில எடுத்துக்காட்டுகளையே கொண்டுள்ளன. படங்களுடன் காணப்படும் குறியீடுகள் ஒரு முத்திரையிலிருந்து மற்றொரு முத்திரைக்கு மாறுபடுகின்றன. படங்களிலிருந்து குறியீடுகளுக்கான ஒரு பொருளைத் தருவிப்பது என்பது இதன் காரணமாக இயலாததாக உள்ளது. இருந்த போதிலும், முத்திரைகளின் பொருள் குறித்து ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விளக்கங்கள் பல பொருள்களை உடையவையாகவும், இடத்திற்கு இடம் மாறுபட்டும் காணப்படுகின்றன.
சிந்துவெளி முத்திரைகள் மற்றும் பொறிப்புகளின் தரவகம் (1987, 1991, 2010) என்ற நூலில் கிடைக்கப் பெறும் பொறிப்புகளின் ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் பல பதிப்பிக்கப்பட்டுள்ளன. இது அஸ்கோ பார்ப்போலா மற்றும் அவரது சக அறிஞர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. 1920கள் மற்றும் 1930களில் எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தொலைந்து போன அல்லது திருடப்பட்ட பொறிப்புகளின் புகைப்படங்கள் சமீபத்திய பிரதியில் மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. கடைசி சில தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பல பொறிப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னர், ஆய்வாளர்கள் தரவகத்தில் மார்ஷல் (1931), மெக்கே (1938, 1943) மற்றும் வீலர் (1947) ஆகியோரின் அகழ்வாய்வுக் குறிப்புகளில் எடுக்கப்பட்ட சிறிய புகைப்படங்களின் மூலப் பொருட்களைச் சேர்க்க வேண்டியிருந்தது அல்லது மிக சமீபத்திய அங்கொன்றும் இங்கொன்றுமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டவற்றைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
சமயம்
சிந்துவெளி மக்களின் சமயம் மற்றும் நம்பிக்கை அமைப்பானது குறிப்பிடத்தக்க அளவுக்குக் கவனத்தைப் பெற்றுள்ளது. இப்பகுதியில் பிந்தைய காலத்தில் வளர்ச்சியடைந்த இந்திய சமயங்களின் தெய்வங்களின் முந்தைய வடிவங்கள் மற்றும் சமயப் பழக்க வழக்கங்களை அடையாளப்படுத்துதல் என்ற பார்வையில் குறிப்பாகக் கவனத்தைப் பெற்றுள்ளன. எனினும், சான்றுகள் சிலவே உள்ளதாலும், அவையும் பல்வேறு விளக்கங்களுக்கு உள்ளாவதாலும், சிந்துவெளி வரிவடிவமானது தொடர்ந்து அறியப்படாமலேயே உள்ள உண்மையாலும் இவற்றின் முடிவுகளானவை ஒரு பகுதி ஊகங்களாகவும், மிக பிந்தைய இந்து சமய அணுகு முறையில் இருந்து கடந்த காலம் குறித்த பின்னோக்கிய பார்வையைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டதாகவும் உள்ளது.
அரப்பா களங்களைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகளின் இந்து சமய விளக்கங்களுக்கான பாணியை இப்பகுதியில் தொடங்கி வைத்த தொடக்க கால மற்றும் தாக்கத்தை ஏற்படுத்திய பணியானது யோவான் மார்ஷலுடையதாகும். சிந்துவெளி சமயத்தின் முக்கியமான பின் வரும் அம்சங்களை 1931ஆம் ஆண்டு இவர் அடையாளப்படுத்தினார்: ஒரு பெரும் ஆண் கடவுள் மற்றும் ஒரு தாய்க் கடவுள்; விலங்குகள் மற்றும் தாவரங்களைத் தெய்வமாக்குதல் அல்லது வழிபடும் முறை; லிங்கத்தின் ஒரு குறியீட்டுப் பிரதிநிதித்துவம்; சமயப் பழக்க வழக்கங்களில் குளியல் மற்றும் நீரைப் பயன்படுத்துதல். மார்ஷலின் விளக்கங்களானவை பெரும் அளவுக்கு விவாதிக்கப்பட்டுள்ளன, தொடர்ந்து வந்த தசாப்தங்களில் சில நேரங்களில் ஐயத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன.
ஒரு சிந்துவெளி முத்திரையானது ஒரு கொம்புடைய தலைப் பாகையையுடைய ஓர் அமர்ந்திருக்கும் உருவத்தைக் காட்டுகிறது. இதற்கு அநேகமாக மூன்று தலைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதைச் சுற்றி விலங்குகள் காணப்படுகின்றன. இந்துக் கடவுள் சிவனின் (உருத்திரன்) தொடக்க கால வடிவம் என இந்த உருவத்தை மார்ஷல் அடையாளப்படுத்தினார். சிவன் துறவு, யோகக் கலை மற்றும் லிங்கத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறார். விலங்குகளின் இறைவனாகக் கருதப்படுகிறார். பெரும்பாலும் மூன்று கண்களை உடையவராகக் காட்டப்படுகிறார். இவ்வாறாக, இந்த முத்திரையானது பசுபதி முத்திரை என்று அறியப்படத் தொடங்கியது. சிவனின் ஓர் அடை மொழியான பசுபதிநாதர் (அனைத்து விலங்குகளின் இறைவன்) என்ற பெயரை இது பெற்றுள்ளது. மார்ஷலின் விளக்கமானது சில ஆதரவைப் பெற்ற அதே நேரத்தில், பல விமர்சகர்கள் மற்றும் இவரது ஆதரவாளர்களும் கூட பல மறுப்புகளைத் தெரிவித்துள்ளனர். இந்த உருவமானது மூன்று முகங்களையோ அல்லது யோக நிலையிலோ இல்லை மற்றும் வேத இலக்கியத்தில் உருத்திரன் என்பவர் காட்டு விலங்குகளைப் பாதுகாப்பவர் கிடையாது என தோரிசு சீனிவாசன் வாதிடுகிறார். எர்பெர்ட்டு சுல்லிவன் மற்றும் ஆல்பு கில்தேபெய்தெல் ஆகியோரும் மார்ஷலின் முடிவுகளை நிராகரித்துள்ளனர். சுல்லிவன் இந்த உருவம் ஒரு பெண் உருவம் என்றும், கில்தேபெய்தெல் இந்த உருவத்தை எருமை வடிவக் கடவுளான மகிசன் என்றும், சுற்றியுள்ள விலங்குகளை நான்கு திசைகளுக்கான தெய்வங்களின் வாகனங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 2002ஆம் ஆண்டில் எழுதிய கிரிகோரி போசெல் இந்த உருவத்தை ஒரு தெய்வமாக எடுத்துக் கொள்வது ஏற்புடையதாக இருக்கும் அதே நேரத்தில், இதை எருமையுடன் தொடர்புபடுத்துவது, இதன் அமர்ந்திருக்கும் நிலையைச் சடங்குகளுடன் கூட தொடர்புபடுத்துவது, இதைத் தொடக்க கால சிவன் என்று குறிப்பிடுவது மிகைப்படுத்தலாக இருக்கும் என்று கருதுகிறார். இந்த முத்திரையை தொடக்க கால சிவனுடன் மார்ஷல் தொடர்புபடுத்தியதற்கான விமர்சனங்கள் இருந்த போதிலும், விலாசு சங்கவே போன்ற சில சைன அறிஞர்களால் இந்த உருவமானது தீர்த்தங்கரர் ரிசபநாதர் என்று விளக்கப்படுகிறது. எயின்ரிச் ராபர்ட் சிம்மர் மற்றும் தாமசு மெக்கெவில்லே போன்ற வரலாற்றாளர்கள் முதல் சைன தீர்த்தங்கரரான ரிசபநாதர் மற்றும் சிந்துவெளி நாகரிகத்துக்கு இடையில் ஒரு தொடர்பு இருப்பதாக நம்புகின்றனர்.
ஏராளமான பெண் உருவங்கள் அகழ்வாய்வு செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு தாய் கடவுளின் ஒரு வழிபாட்டு முறையானது இருந்திருக்கலாம் என்று மார்ஷல் ஒரு கருத்தியலை முன் வைத்தார். இந்து சமயப் பிரியான சாக்தத்தின் முன்னோடி இது என எண்ணினார். எனினும், சிந்துவெளி மக்களின் வாழ்வில் பெண் உருவங்களின் பங்கு குறித்து தெளிவாகத் தெரியவில்லை. மார்ஷலின் கருத்தியலுக்கான சான்றானது "உறுதியானதாக" இல்லை என போசெல் கருதுகிறார். புனித லிங்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்தியதாக மார்ஷல் விளக்கம் அளித்த சில கற்களானவை தற்போது குழவியாக பயன்படுத்தப்பட்டவையாகவோ அல்லது விளையாட்டுக்களில் எண்ணுவதற்காகப் பயன்படுத்தப்பட்டவையாகவோ இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. அதே நேரத்தில், யோனியைப் பிரதிநிதித்துப்படுத்தியதாக மார்ஷல் கருதிய மோதிர வடிவல் கற்களானவை தூண்களை நிறுத்தப் பயன்படுத்தப்பட்ட கட்டடக்கலை அம்சங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், இவற்றின் சமய முக்கியத்துவத்துக்கான சாத்தியமானது நிராகரிக்கப்படக் கூடியதாக இல்லை. பல சிந்துவெளி முத்திரைகள் விலங்குகளைக் காட்டுகின்றன. அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதை சில சித்தரிக்கின்றன. அதே நேரத்தில், பிற வெவ்வேறு விலங்குகளின் உடல் பாகங்களை ஒன்றாகக் கொண்ட சித்தரிப்புகள் உள்ளன. மொகஞ்சதாரோவைச் சேர்ந்த ஒரு முத்திரையானது ஒரு பாதி-மனிதன், ஒரு பாதி-எருமை உருவத்தை உடைய ஓர் இராட்சதன் ஒரு புலியைத் தாக்குவதைக் காட்டுகிறது. கிலுகாமிசுடன் சண்டையிடுவதற்காகப் பெண் தெய்வமான அருருவால் உருவாக்கப்பட்ட, சுமேரியப் புராணங்களில் உள்ள ஓர் இராட்சதனை இது ஒரு வேளை குறிக்கலாம் என்று கருதப்படுகிறது.
சம கால எகிப்திய மற்றும் மெசொப்பொத்தேமியா நாகரிகங்களுக்கு மாறாக, சிந்து வெளியானது எந்த ஒரு நினைவுச் சின்ன அரண்மனைகளையும் கொண்டிருக்கவில்லை. அகழ்வாய்வு செய்யப்பட்ட நகரங்கள் இச்சமூகமானது தேவையான பொறியியல் அறிவைக் கொண்டிருப்பதைக் காட்டும் போதும் கூட இவ்வாறு கொண்டிருக்கவில்லை. சமய விழாக்கள் என்று ஏதேனும் இருந்தால் அவை பெரும்பாலும் தனி வீடுகள், சிறிய கோயில்கள் அல்லது வெட்ட வெளியிலேயே நடந்திருக்க வேண்டும் என்பதை இது பரிந்துரைக்கிறது. மார்ஷல் மற்றும் பிந்தைய அறிஞர்களால் ஏராளமான களங்கள் சமயப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அநேகமாக அர்ப்பணிக்கப்பட்டவை என்று எண்ணப்படுகின்றன. ஆனால், தற்போது மொகஞ்சதாரோவில் உள்ள பெரும் குளியலிடம் மட்டுமே சமயப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகப் பரவலாக எண்ணப்படுகிறது. இது சடங்கு தூய்மைப்படுத்தலுக்கான ஓர் இடமாக இருந்தது. அரப்பா நாகரிகத்தின் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறைகளானவையாக பகுதியளவு சமாதி முறை (இதில் உடலானது எலும்புகளாக ஆக்கப்பட்டு பிறகு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது) மற்றும் உடல் தகனம் செய்யப்படும் முறையும் கூட குறிப்பிடப்படுகின்றன.
பிந்தைய அரப்பா
பொ. ஊ. மு. 1900 வாக்கில் ஒரு படிப் படியான வீழ்ச்சிக்கான அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கின. பொ. ஊ. மு. 1700 வாக்கில் பெரும்பாலான நகரங்கள் கைவிடப்பட்டன. அரப்பா காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் குறித்த சமீபத்திய ஆய்வானது, சிந்துவெளி நாகரிகத்தின் முடிவானது தனி நபர்களுக்கிடையிலான வன்முறை மற்றும், தொழு நோய் மற்றும் காச நோய் போன்ற தொற்று நோய்களின் அதிகரிப்பைக் கண்டது என விளக்குகிறது.
வரலாற்றாளர் உபிந்தர் சிங்கின் கூற்றுப் படி, "பிந்தைய அரப்பா கால கட்டத்தால் வெளிக் காட்டப்படும் பொதுவான தன்மையானது நகர்ப் புறப் பகுதி இணைப்புகளின் ஒரு சிதறல் மற்றும் கிராமப் புறப் பகுதிகளின் ஒரு விரிவாக்கம் ஆகும்".
1900 முதல் பொ. ஊ. மு. 1700க்கு இடைப்பட்ட தோராயமான காலத்தின் போது சிந்துவெளி நாகரிகத்தின் பகுதிக்குள் பல மாகாணப் பண்பாடுகள் உருவாகத் தொடங்கின. பஞ்சாப் பகுதி, அரியானா, மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் கல்லறை எச் கலாச்சாரமும், சிந்து மாகாணத்தில் சுகர் கலாச்சாரமும், குசராத்தில் ரங்பூர் கலாச்சாரமும் (இது ஒளிரும் சிவப்பு மட்பாண்டங்களால் பிரநிதித்துவப்படுத்தப்படுகிறது) தோன்றின. பலுச்சிசுத்தானத்தின் பிராக் மற்றும் இந்தியாவின் மகாராட்டிரத்தின் தைமாபாத் ஆகியவை அரப்பா பண்பாட்டின் பிந்தைய கால கட்டத்துடன் தொடர்புடைய பிற களங்கள் ஆகும்.
சோலிஸ்தான் பாலைவனத்தில் உள்ள குத்வலா, குசராத்தின் பேட் துவாரகை மற்றும் மகாராட்டிரத்தின் தைமாபாத் ஆகியவை பிந்தைய அரப்பா களங்களில் பெரியவையாக உள்ளன. இவற்றை நகர்ப்புற மையங்கள் எனக் கருதலாம். ஆனால், முதிர்ந்த அரப்பா நகரங்களுடன் ஒப்பிடும் போது இவை சிறியவையாகவும், எண்ணிக்கையில் குறைவானவையாகவும் இருந்தன. பேட் துவாரகையானது அரண்களை உடையதாக இருந்தது. பாரசீக வளைகுடா பகுதியுடன் தொடர்ந்து தொடர்புகளைக் கொண்டிருந்தது. ஆனால், பொதுவாகவே நீண்ட தூர வணிகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. மற்றொரு புறம் இந்தக் காலமானது வேளாண்மை அடிப்படையில் ஒரு வேறுபாட்டைக் கண்டது. பல்வேறு வகையான பயிர்கள், பல பயிர் முறையின் உருவாக்கம், மேலும் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கிச் செல்லும் போது கிராமப் புறக் குடியிருப்புகளாக மாறிய தன்மை ஆகியவற்றைக் கண்டது.
பிந்தைய அரப்பா கால கட்டத்தின் மட்பாண்டங்களானவை "முதிர்ந்த அரப்பா மட்பாண்டப் பழக்க வழக்கங்களுடன் சில தொடர்புகளைக் காட்டுகின்றன" என்று குறிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில், தனித்துவமான வேறுபாடுகளையும் கூட கொண்டிருந்தன. சில நூற்றாண்டுகளுக்கு பல களங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. எனினும், அவற்றின் நகர்ப்புற அம்சங்கள் குன்றி, மறைந்தன. எடைக் கற்கள் மற்றும் பெண் உருவங்கள் போன்ற முன்னர் பொதுவானதாக இருந்த பண்டைய பொருட்கள் அரிதானதாக மாறின. சில வட்ட முத்திரைகள் வடிவியல் கணிதம் சார்ந்த வடிவங்களுடன் காணப்படுகின்றன. ஆனால், நாகரிகத்தின் முதிர்ந்த கால கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிந்துவெளி வரிவடிவமானது தற்போது அரிதானது. தற்போது பானைகளின் பொறிப்புகளில் மட்டுமே அது காணப்படுகிறது. ஒளிரும் மட்பாண்டங்கள், கண்ணாடி மற்றும் கல் பாசிகளை உருவாக்குதலில் சில புதுமைகளை உள்ளூர்ப் பண்பாடுகள் அதே நேரத்தில் காட்டுகின்ற போதும், நீண்ட தூர வணிகமும் கூட ஒரு வீழ்ச்சியைக் கண்டது. நகர்ப் புற வசதிகளான கழிவு நீர் அமைப்புகள் மற்றும் பொதுக் குளியல் இடங்கள் பேணப்படவில்லை. புதிய கட்டடங்கள் "மோசமாகக் கட்டமைக்கப்பட்டன". கல் சிற்பங்கள் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டன. விலை உயர்ந்த பொருட்கள் சில நேரங்களில் குவியல்களாக மறைத்து வைக்கப்பட்டன. மக்களிடையே அமைதியின்மை இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விலங்குகளின் இறந்த உடல்கள் மற்றும் மனிதர்களின் உடல்களும் கூட புதைக்கப்படாமல் தெருக்களிலும், கைவிடப்பட்ட கட்டடங்களிலும் அப்படியே விடப்பட்டன.
பொ. ஊ. மு. 2வது ஆயிரமாண்டின் பிந்தைய பாதியின் போது பிந்தைய அரப்பா கால கட்டத்தைத் தாண்டிய நகர்ப் புறக் குடியிருப்புகளில் பெரும்பாலானவை முழுவதுமாகக் கைவிடப்பட்டன. தொடர்ந்து வந்த பொருள்சார் பண்பாடானது தற்காலிக ஆக்கிரமிப்பைப் பொதுவான இயல்பாகக் கொண்டிருந்தது. "நாடோடிகள் மற்றும் முதன்மையாக மேய்ச்சல் வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த ஒரு மக்களின் முகாம்களாக" இவை இருந்தன. இவர்கள் "ஒழுங்கற்ற, கைகளால் செய்யப்பட்ட மட்பாண்டங்களைப்" பயன்படுத்தினர். எனினும், பிந்தைய அரப்பா மற்றும், பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில், முதன்மையாக சிறிய கிராமப்புற குடியிருப்புகளில் இதைத் தொடர்ந்து வந்த பண்பாட்டு காலப் பகுதியைச் சேர்ந்த களங்கள் தமக்கு இடையில் ஒரு பெரும் தொடர்ச்சியையும், ஒற்றுமைகளையும் கொண்டிருந்தன.
ஆரியப் புலப்பெயர்வு
1953ஆம் ஆண்டு சர் மோர்டிமர் வீலர் நடு ஆசியாவிலிருந்து வந்த ஓர் இந்தோ-ஐரோப்பியப் பழங்குடியினமான "ஆரியர்களின்" படையெடுப்பானது சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமானது என்ற கருத்தை முன் வைத்தார். சான்றாக, மொகஞ்சதாரோவின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட 37 எலும்புக் கூடுகளின் ஒரு குழு மற்றும் வேதங்களின் பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் மற்றும் கோட்டைகளை இவர் குறிப்பிட்டார். எனினும், இந்த எலும்புக் கூடுகள் நகரம் கைவிடப்பட்டதற்குப் பிந்தைய ஒரு காலத்தைச் சேர்ந்தவையாகவும், நகர்க் காப்பரணுக்கு அருகில் இதில் ஓர் எலும்புக் கூடு கூட கிடைக்கப் பெறவில்லை என்பதன் காரணமாகவும் அறிஞர்கள் சீக்கிரமே வீலரின் கருத்தியலை நிராகரிக்கத் தொடங்கினர். 1994இல் கென்னத் கென்னடியால் எலும்புக் கூடுகள் குறித்த தொடர்ந்து வந்த ஆய்வுகளானவை மண்டை ஓடுகளில் காணப்பட்ட தடங்களானவை அரிப்பால் ஏற்பட்டவை என்றும், வன்முறையால் நிகழவில்லை என்றும் காட்டின.
கல்லறை எச் கலாச்சாரத்தில் (பஞ்சாப் பகுதியில் பிந்தைய அரப்பா கால கட்டம்) அஸ்திக் கலசங்களின் மீது தீட்டப்பட்ட சில வடிவங்கள் வேத இலக்கியத்தின் வழியாக விளக்கப்பட்டுள்ளன: எடுத்துக்காட்டாக, கூட்டு உடம்பையுடைய மயில்களுக்குள் ஒரு சிறிய மனித வடிவம் உள்ளது, இது இறந்தவர்களின் ஆன்மா என விளக்கப்படுகிறது; ஒரு வேட்டை நாய் உள்ளது, இது இறப்பிற்கான இந்துக் கடவுள் எமனின் வேட்டை நாய் என்று கருதப்படுகிறது. இந்தக் காலத்தின் போது புதிய சமய நம்பிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பதை இது அநேகமாகக் காட்டலாம். ஆனால், அரப்பா நகரங்களை அழித்தவர்களாக கல்லறை எச் கலாச்சார மக்களை எடுத்துக் கொள்ளக் கூடிய கருத்தியலுக்கு தொல்லியல் சான்றுகள் ஆதரவளிக்கவில்லை.
காலநிலை மாற்றமும், வறட்சியும்
சிந்துவெளி நாகரிகம் ஓரிடமயமாக்கப்பட்டதற்குப் பங்களித்த காரணங்களாக ஆற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் புவி சூடாதல் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. புவி சூடாதல் நிகழ்வானது மத்திய கிழக்கின் அண்டைப் பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கான காரணமாகவும் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 நிலவரப்படி பல அறிஞர்கள் வறட்சி மற்றும், எகிப்து மற்றும் மெசொப்பொத்தோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட ஒரு வீழ்ச்சி ஆகியவையே சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள் என்று நம்புகின்றனர். சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான புவியியல் மாற்றமானது "4,200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் வறட்சி மற்றும் புவி குளிர்ந்த திடீர் நிகழ்வின்" காரணமாக அநேகமாக நிகழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். கோலோசின் காலத்தின் தற்போதைய நிலையான மேகாலயக் காலம் தொடங்கியதை இது குறித்தது.
காகர்-கக்ரா ஆற்று அமைப்பானது மழையிலிருந்து நீரைப் பெற்றது. பருவப் பெயர்ச்சிக் காற்றுகளின் நீர் வழங்கலை இந்த ஆற்று அமைப்பு சார்ந்திருந்தது. பொ. ஊ. மு. 1800ஆம் ஆண்டு வாக்கில் இருந்து சிந்துவெளிக் காலநிலையானது குறிப்பிடத்தக்க அளவுக்கு குளிர்ந்தும், வறண்டும் போனது. அந்நேரத்தில் பருவப் பெயர்ச்சிக் காற்றின் பொதுவான, பலவீனமடைந்த நிலையுடன் இது தொடர்புபடுத்தப்படுகிறது. இந்தியப் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளின் மழை வழங்கலானது குறைந்தது. வறட்சி அதிகரித்தது. காகர்-கக்ரா ஆற்று அமைப்பானது அதன் விரிவை இமயமலை அடிவாரத்தை நோக்கி பின் இழுத்துக் கொண்டது. உறுதியாக நம்ப முடியாத மற்றும் விரிவு குறைவான வெள்ளங்களுக்கு இது வழி வகுத்தது. இவை பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு உணவளித்த வேளாண்மையை நீண்ட காலத்திற்குத் தொடர இயலாத நிலைக்கு உள்ளாக்கியன.
வறட்சியானது நாகரிகம் வீழ்ச்சியடைவதற்குக் காரணமாகும் அளவுக்கு நீர் வழங்கலைக் குறைத்தது. இதன் மக்களை கிழக்கு நோக்கிச் சிதற வைத்தது. கியோசன் மற்றும் குழுவினரின் (2012) கூற்றுப் படி, சிந்துவெளி நாகரிகக் குடியிருப்புவாசிகள் நீர்ப்பாசன செயல் வல்லமைகளைக் கொண்டிருக்கவில்லை. கோடை கால வெள்ளங்களுக்கு வழி வகுத்த பருவப் பெயர்ச்சி மழையையே முதன்மையாகச் சார்ந்திருந்தனர். பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் தொடர்ந்து தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த போது வேளாண்மைச் செயல்பாடுகளை நீண்ட காலம் தக்க வைக்க கூடிய வெள்ளங்கள் உறுதியாக நம்பக் கூடியவையாக இல்லை. பிறகு குடியிருப்பு வாசிகள் கிழக்கே இருந்த கங்கை வடி நிலத்தை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். அங்கு இவர்கள் சிறிய கிராமங்கள் மற்றும் தனித் தனியான பண்ணைகளை நிறுவினர். இந்த சிறிய சமூகங்களில் உற்பத்தி செய்யப்பட்ட சிறிய அளவு உபரிப் பொருட்கள் வணிகத்தின் வளர்ச்சிக்குப் போதுமானதாக இல்லை. நகரங்கள் வீழ்ச்சியடைந்தன.
தொடர்ச்சியும், உடன் வாழ்தலும்
அரப்பாவின் வீழ்ச்சியே மக்களைக் கிழக்கு நோக்கி இடம் பெயரச் செய்தது என்பதை தொல்லியல் அகழ்வாய்வுகள் காட்டுகின்றன. போசெலின் கூற்றுப்படி, பொ. ஊ. மு. 1900க்குப் பிறகு தற்போதைய இந்தியாவிலுள்ள களங்களின் எண்ணிக்கையானது 218லிருந்து 853ஆக உயர்கிறது. ஆந்த்ரூ லாவ்லர் என்பவர் "கங்கைச் சமவெளியை ஒட்டிய இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் பொ. ஊ. மு. 1200ஆம் ஆண்டு வாக்கில் நகரங்கள் அங்கு வளர்ச்சியடையத் தொடங்கின. இது அரப்பா கைவிடப்பட்டதற்கு வெகு சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரும், இதற்கு முன்னர் எண்ணப்பட்டதை விட அதிக காலத்திற்கு முன்னரும் நடைபெற்றுள்ளது" என்று குறிப்பிடுகிறார். ஜிம் சாப்பரின் கூற்றுப்படி, உலகின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே பண்பாட்டு வளர்ச்சிகளின் ஒரு தொடர்ச்சியானது இங்கும் நடந்தது. தெற்காசியாவில் நகரமயமாக்கலின் இரண்டு முதன்மையான கால கட்டங்களுக்கு இடையிலான இணைப்பாக இது உள்ளது.
அரியானாவின் பகவான்புரா போன்ற களங்களில் தொல்லியல் அகழ்வாய்வுகளானவை பிந்தைய அரப்பாவின் கடைசி கால கட்டத்தின் மட்பாண்டங்கள் மற்றும் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டின் தொடக்க கால கட்டத்தின் மட்பாண்டங்கள் ஆகியவை ஒரு காலத்தைப் பகிர்ந்து கொண்டிருந்திருக்கின்றன என்று கண்டறிந்துள்ளன. இரண்டாவது பண்பாடானது வேத காலப் பண்பாட்டுடன் தொடர்புடையதாகும். இது பொ. ஊ. மு. 1200ஆம் ஆண்டு வாக்கில் காலமிடப்படுகிறது. பல்வேறு சமூகக் குழுக்கள் ஒரே கிராமத்தை ஆக்கிரமித்து இருந்துள்ளதற்கான ஆதாரத்தை இந்தக் களமானது கொடுக்கிறது. ஆனால், அவர்கள் வேறுபட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தி, வேறுபட்ட பாணியிலான வீடுகளில் வாழ்ந்து வந்தனர்: "காலப்போக்கில் பிந்தைய அரப்பா மட்பாண்டமானது படிப்படியாக சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டத்தால் இடமாற்றம் செய்யப்பட்டது." குதிரை அறிமுகப்படுத்தப்பட்டது, இரும்புக் கருவிகள் மற்றும் புதிய சமயப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பிற பண்பாட்டு மாற்றங்கள் இக்காலத்தில் நிகழ்ந்தன என்பது தொல்லியல் ஆய்வு மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளது.
சௌராட்டிராவின் ராஜ்கோட் மாவட்டத்தில் ரோஜிதி என்ற இடத்தில் ஓர் அரப்பா களம் கூட உள்ளது. குசராத் மாநில தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒரு தொல்லியல் குழு மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து 1982-83இல் இந்தக் களத்தை அகழ்வாய்வு செய்யத் தொடங்கின. ரோஜிதி தொல்லியல் அகழ்வாய்வுகள் குறித்த தங்களது அறிக்கையில் கிரிகோரி போசெல் மற்றும் எம். எச். ராவல் ஆகியோர் அரப்பா நாகரிகம் மற்றும் பிந்தைய தெற்காசியப் பண்பாடுகளுக்கிடையில் "பண்பாட்டுத் தொடர்ச்சிக்கான வெளிப்படையான அறிகுறிகள்" உள்ள போதும், அரப்பா "சமூகப் பண்பாட்டு அமைப்பு" மற்றும் "ஒன்றிணைந்த நாகரிகத்தின்" பல அம்சங்கள் "நிரந்தரமாகத் தொலைந்துவிட்டன" என்று குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில், இந்தியாவின் இரண்டாவது நகரமயமாக்கலானது (வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுடன் தொடங்கியது, பொ. ஊ. மு.) "இந்த சமூகப் பண்பாட்டுச் சூழ்நிலைக்கு தொலை தூரத்துக்கு வெளியே அமைந்துள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.
அரப்பாவுக்குப் பின்
முன்னர், அறிஞர்கள் அரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சியானது இந்தியத் துணைக் கண்டத்தில் நகர வாழ்க்கையின் இடை நிற்றலுக்கு வழி வகுத்தது என்று நம்பினர். எனினும், சிந்துவெளி நாகரிகமானது உடனடியாக மறைந்து விடவில்லை. சிந்துவெளி நாகரித்தின் பல அம்சங்கள் பிந்தைய பண்பாடுகளில் காணப்படுகின்றன. கல்லறை எச் கலாச்சாரமானது பிந்தைய அரப்பா பண்பாட்டின் ஒரு வெளிப்பாடு என்று கருதப்படுகிறது. இது பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்த ஒரு பெரும் பகுதியில் பரவியிருந்தது. இதைத் தொடர்ந்து காவி நிற மட்பாண்டப் பண்பாடு வந்தது. பண்டைய வேத சமயமானது சிந்துவெளி நாகரிகங்களில் இருந்து பகுதியளவு அம்சங்களைக் கொண்டிருந்தது என்று உறுதியாக விளக்கிய மூன்று பிற முதன்மையான அறிஞர்களை தாவீது கார்டன் வைட் என்பவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
2016ஆம் ஆண்டு நிலவரப் படி, தொல்லியல் தரவுகளானவை பிந்தைய அரப்பா என்று வகைப்படுத்தப்பட்ட பொருள்சார் பண்பாடானது குறைந்தது -900 பொ. ஊ. மு. வரை நீடித்திருக்க வேண்டும் என்று காட்டுகின்றன. இது சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டுடன் பகுதியளவு சம காலத்தைச் சேர்ந்ததாக இருந்தது. ஆர்வர்டு தொல்லியலாளர் ரிச்சர்ட் மிடோவ் பிந்தைய அரப்பா குடியிருப்பான பிரக் பொ. ஊ. மு. 1800 முதல் பேரரசர் அலெக்சாந்தரின் பொ. ஊ. மு. 325ஆம் ஆண்டு படையெடுப்புக் காலம் வரை தொடர்ந்து செழித்திருந்தது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
சிந்துவெளி நாகரிகத்தின் ஓரிடமயமாக்கலுக்குப் பிறகு மாகாணப் பண்பாடுகள் உருவாகத் தொடங்கின. சிந்துவெளி நாகரிகத்தின் தாக்கத்தை பல்வேறு அளவுகளில் இவை காட்டுகின்றன. அரப்பாவின் முந்தைய பெரும் நகரத்தில் கல்லறை எச் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்ட ஒரு மாகாணப் பண்பாட்டின் அடக்கம் செய்யும் முறைகள் காணப்படுகின்றன. இதே நேரத்தில், காவி நிற மட்பாண்டப் பண்பாடு இராசத்தானில் இருந்து சிந்து-கங்கைச் சமவெளிக்குப் பரவியது. தகனம் செய்யும் முறையின் தொடக்க காலச் சான்றாக கல்லறை எச் கலாச்சாரமானது உள்ளது. இந்த தகனம் செய்யும் வழக்கமே தற்போது இந்து சமயத்தில் முதன்மையான பழக்கமாக உள்ளது.
சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி
கி.மு 1800 அளவில் இப் பண்பாட்டின் படிப்படியான வீழ்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகிறது. கி.மு 1700 இல் பெரும்பாலான நகரங்கள் கைவிடப்பட்டுவிட்டன. ஆனாலும்,சிந்துவெளிப் பண்பாடு சடுதியாக மறைந்துவிடவில்லை. இப் பண்பாட்டின் பல கூறுகள் பிற்காலப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றன. நடப்புத் தொல்லியல் தரவுகள், பிந்திய ஹரப்பாப் பண்பாடு என்று குறிக்கப்படுகின்ற பொருள்சார் பண்பாடு, கி.மு 1000 – 900 வரையிலுமாவது தொடர்ந்திருக்கக்கூடும் என்று காட்டுகின்றன.
சிந்துவெளிப் பண்பாட்டின் வீழ்ச்சிக்குக் காலநிலை மாற்றம் தொடர்பான இயற்கைக் காரணங்கள் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. . சிந்துவெளியின் காலநிலை கி.மு 1800 இலிருந்து, குறிப்பிடத் தக்க அளவு குளிரானதாகவும், வறண்டதாகவும் மாறியது. காகர்-கக்ரா ஆற்று முறைமையில் குறிப்பிடத்தக்க பகுதி இல்லாமல் போனதும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் மேற்படி எடுகோள் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஆரியர் முதலாக, ஆப்கானியர், துருக்கியர், முகலாயர் போன்றோர் இந்து குஷ் பகுதியில் உள்ள கணவாய்கள் வழியாகத் தென்னாசியாவுக்குள் ஊடுருவிய பாதையில், இப் பகுதி உள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சிந்து வெளிப் பண்பாட்டின் வீழ்ச்சி மற்றும் ஆரியர் வட இந்தியாவுக்குள் நுழைந்த இந்திய-ஆரிய இடப்பெயர்வு தொடர்பான எடுகோள்கள் ஆராயப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது ஓர் "ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை"யாக முன்வைக்கப்பட்டது. இதன் வீழ்ச்சிக்காலம் குறித்த தொல்லியல் சான்றுகளும், ஆரியர் உள்வரவு தொடர்பான கணிப்புக்களும் பொருந்தி வந்தது இக் கோட்பாட்டுக்கு ஒரு சான்றாக அமைந்தது. அத்துடன் போரில் இறந்த அடையாளங்களுடனான பலரின் புதை குழிகள் மேற்படைகளில் காணப்பட்டதும் இக் கோட்பாட்டிற்கு வலு சேர்த்தது. தொல்லியலாளரான மார்ட்டிமர் வீலர் இது பற்றிக் குறிப்பிட்டபோது, இந்தோ-ஆரிய போர்க் கடவுளான இந்திரனே, அழிவுக்காகக் "குற்றம் சாட்டப்படுகிறான்" என்றார். இன்று இக் கொள்கைக்கு மாற்றாக வேறு பல கொள்கைகளும் நிலவுகின்றன. ஆரியர் இந்தியாவுக்குள் வெளியிலிருந்து வரவில்லையென்றும், இந்தியாவே அவர்களது தாயகம் என்றும், இந்தோ ஐரோப்பிய மொழிகள் தோன்றியது இந்தியாவிலேயே என்றும், சில இந்திய ஆய்வாளர்கள், குறிப்பாக வட இந்திய ஆய்வாளர்கள் வாதாடி வருகிறார்கள். சிந்துவெளி நாகரீகம் ஆரியர்களுடையது என்பதும் இவர்களது வாதம். எனினும் இவ்வாதங்களுக்கு அனைத்துலக அளவில் அறிஞர்கள் மத்தியில் வரவேற்புப் பெறவில்லை.
சிந்துவெளி நகைகள்
மெசொப்பொத்தோமியாவின் ஊரின் முதல் வம்சத்தினர் காலத்தில் அழகிய பல வண்ண கல் தங்க நகைகள் சிந்துவெளியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
சிந்துவெளி எழுத்துக்கள்
மயிலாடுதுறையில் சிந்துவெளி எழுத்துக்கள்
மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து. இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும்.
காவிரிக்கரையில் சிந்துசமவெளி எழுத்துக்கள்
தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
சிந்து சமவெளி நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகம் உள்ள நகரான மொகஞ்சதாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணையான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.
இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது சிந்து சமவெளியில் திராவிட குடும்ப மொழியே பேசப்பட்டிருக்க வேண்டும் என்று கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார். சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நாகரீக கால போருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இவற்றையும் பார்க்கவும்
சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம்
சிந்துவெளிக் கட்டிடக்கலை
சிந்துவெளி நாகரிக மக்களின் மொழி
ஹரப்பா
மொஹெஞ்சதாரோ
இராக்கிகர்கி
லோத்தல்
தோலாவிரா
காளிபங்கான்
முண்டிகாக்
மெகர்கர்
சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்
நாகரிகத்தின் தொட்டில்
இந்து சமய வரலாறு
ஆப்கானித்தானின் வரலாறு
இந்திய வரலாறு
பாக்கித்தான் வரலாறு
குறிப்புகள்
மேற்கோள்கள்
நூற்பட்டியல்
*
*
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
*
*
*
*
*
*
*
*
*
(50th ICES Tokyo Session)
*
*
Singh, Kavita, "The Museum Is National", Chapter 4 in: Mathur, Saloni and Singh, Kavita (eds), No Touching, No Spitting, No Praying: The Museum in South Asia, 2015, Routledge, PDF on academia.edu (nb this is different to the article by the same author with the same title in India International Centre Quarterly, vol. 29, no. 3/4, 2002, pp. 176–196, JSTOR, which does not mention the IVC objects)
*
*
மேலும் படிக்க
*
வெளியிணைப்புகள்
The mysteries of a mass graveyard of early Indians
Harappa and Indus Valley Civilization at harappa.com
An invitation to the Indus Civilization (Tokyo Metropolitan Museum)
Cache of Seal Impressions Discovered in Western India
Indus Valley Civilization
'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே'
Ancient Indus Civilization Slideshows
ஆசிய வெண்கலக் காலம்
வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா
நாகரிகங்கள்
இந்திய வரலாறு
பண்டைய இந்தியா |
1803 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D | வேதம் | வேதங்கள் (Vedas) என்பவை பொதுவாக இந்து சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். பொ.ஊ.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்துக்களின் வேதங்கள் இன்றிருப்பது போலவே இருந்தது என்று பண்டித பால கங்காதர திலகர் நிரூபித்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.
சொற்பிறப்பியல்
இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் சமசுகிருதத்தில் அறிதல் என்று பொருளாகும். வேதங்கள் என்பதற்கு ’‘உயர்வான அறிவு’’ என்றும் பொருள்படும்.
வேதங்களின் வகைகள்
இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இருக்கு, யசுர், சாம, அதர்வண
வேதம் ஆகியவை தான் அடிப்படையில் வேதங்களாகக் கருதப்பட்டன. அதர்வணத்தை தீமை என்று கருதினார்கள். பிற்காலத்தில் தான் அது நான்காவது வேதமாகச் சேர்க்கப்பட்டது. இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). சமசுக்கிருத வேதங்கள்:
இருக்கு வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்
என்பனவாகும். வேதங்கள் நான்கு என வகுத்தவர் வியாசர். வேதங்களை "சுருதி, மறை" எனவும் கூறுவர்.
வேதங்களின் நான்கு பாகங்கள்
வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:
சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
பிராமணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனப்படும்.
வரலாறு
வேதங்களில் பல்வேறு கடவுள்களைப் புகழ்ந்து இந்த பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சடங்குகளின் போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்கள் யஜூர் வேதத்தில் குறிப்பிடப்படுகின்றன. சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோன்றியதாகவும் கூறப்படுகின்றது. அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.
இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், பொ.ஊ.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ பொ.ஊ.மு. 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைபெற்று வந்துள்ளது. விசய நகரப் பேரரசை ஆண்ட முதலாம் ஹரிஹரர் காலத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் (सायण) என்னும் 14 ஆவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.
இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
பொ.ஊ. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சதபத பிராமணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சதபத பிராம்மணம் சுமார் பொ.ஊ.மு. 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.
முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு.வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். இதனை ஞான காண்டம் என்பர். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.
கடவுள் கோட்பாடு
வேதகால கடவுட்கோட்பாடு முற்பட்ட கால கடவுள் கோட்பாடு, இடைபட்ட காலகடவுட்கோட்பாடு, பிற்பட்ட கால கடவுட் கோட்பாடு என மூன்று வகையாக நோக்கப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் வேதகால மக்கள் இயற்கை சக்திகளை வெல்லவோ, விளங்கவோ முடியாதவர்களாக காணப்பட்டனர். இடி,மின்னல்,மழை,புயல் போன்ற இயற்கையின் ஒவ்வொரு செயலையும் தமக்கு மேற்பட்ட சக்தியாகக் கருதினர். எனவே வேதகால மனிதன் பயத்தின் அடிப்படையில் இயற்கையை கடவுளாக வழிபட முனைந்ததோடு வேதகால கடவுள் கோட்பாடும் உதயமாயிற்று.
இயற்கையை வழிபட்ட மனிதன் அவ் இயற்கை சக்திகளுக்கு இறைநிலை கொடுத்து பல்வேறு பெயர்கள் சூட்டி வழிபடத் தொடங்கினான்.இவ்வாறு இருக்கு வேதகாலத்தில் 33 தெய்வங்கள் வணங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இத் தெய்வங்களை மண்ணுறை தெய்வங்கள், விண்ணுறை தெய்வங்கள், இடைநிலை தெய்வங்கள் என ஆய்வாளர்கள் மூன்று வகையாக பிரித்து நோக்குகின்றனர். இவற்றுள் இந்திரன், வருணன், அக்கினி, உருத்திரன், விஷ்ணு முதலிய தெய்வங்கள் குறிப்பிடத்தக்கன.
இருக்கு வேதகாலத்திலே பல தெய்வங்கள் வழிபட்டமை மறுக்கமுடியாத உண்மை. இருப்பினும்ஒவ்வொரு தேவைக்கும் அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட்டமை காணமுடிகின்றது. அவ்வேளை அந்த ஒரு தெய்வமே எல்லாவற்றிலும் உயர்ந்த மேலான தெய்வமாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு இடைப்பட்ட வேதகாலத்தில் தேவைகேற்ப ஒரு தெய்வத்தை முதன்மைப் படுத்தி வழிபடுகின்ற ஒரு தெய்வ கோட்பாடு தோன்றியது.
இருக்கு வேதம் 10ம் மண்டலத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு வினா காணப்படுகின்றது. நாம் யாருக்கு நமது அவி பாகத்தை செலுத்துவோம்? எல்லாவற்றிலும் உயர்ந்ததும் மேலானதுமான தெய்வம் எது?’’ என்று கேட்கபட்டன. அதற்கு “பிரஜாபதியே எல்லாவற்றிலும் உயர்ந்ததும் மேலானதுமான தெய்வம்.அவருக்கே உங்கள் அவிபாகத்தைக் கொடுங்கள்” என்று கூறப்படுகின்றது. இதுவும் இருக்கு வேதகால ஒரு தெய்வ கோட்பாட்டிற்கான ஒரு ஆதாரமாகும்.
இடைப்பட்ட வேதகால ஒரு தெய்வ கோட்பாட்டிலிருந்து மேற்பட்டதாக ஒரு பொருள் கோட்பாடு பிற்பட்ட வேதகாலத்தில் தோன்றியது. இருக்குவேதம் 10 மண்டலத்தில் ‘’ உள்பொருள் ஒன்று அதனை பலவென்று அழைப்பர்” எனப் பொருள்படும். “ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி’’ என்ற கூற்று காணப்படுகின்றது.மேலும் இங்கு பலவற்றிலும் வலிமை வாய்ந்தது ஒன்று என்ற கூற்றும் காணபடுகின்றது. புருஷன் ஒருவனே எல்லாவற்றிலும் இருக்குறான். இருந்தான், இருப்பான் போன்ற மகாவாக்கியங்கள், உள்பொருள் ஒன்று என்பதை விளக்குகின்றன.
இவ்வாறு உள்ள பொருளை பிற்காலத்தில் பிரமம் என்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்பட்டது. வேதாந்தம் ,சித்தாந்தம், உபநிடத தத்துவங்கள் தோன்றுவதற்கும் இதுவே வழிசமைத்தது.
முந்தைய வேதம்
ரிக் வேதம்
இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் காலம் பொ.ஊ.மு. 2200 முதல் பொ.ஊ.மு. 1600 வரை ஆகும். ரிக் வேதத்தில் 10600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இப்பாடல்கள் ரிக் வேத மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், பழக்கங்கள் ஆகியவற்றை தெளிவாக கூறுகின்றது. மேய்ச்சலே ரிக் வேதகால மக்களின் முக்கிய தொழிலாகும். ரிக் வேத மக்கள் தச்சு வேலைகளும் செய்துள்ளனர். மண்வேலைகள் செய்வது, நூல் நூற்றல், பருத்தி கம்பளி உடைகள் தயாரிப்பது ஆகியன ரிக்வேத கால மக்களின் உப தொழிலாக இருந்துவந்துள்ளன. மேலும் வேதங்கள் மக்களின் கடவுள்களைப் பற்றியும் அதிக தகவல்கள் தருகின்றன. ரிக் வேத மக்கள் இந்திரனையும், அக்னியையும் முதற்கடவுளாக வழிபட்டுவந்துள்ளனர்.
பிந்தைய வேதங்கள்
பிந்தைய வேத காலங்களில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளனர். இக்குறிப்புகளை பிந்தைய வேதங்கள் குறிப்பிடுகின்றன. பிந்தைய வேத காலங்களில் அவர்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்களும் மாற்றம் பெற்றுள்ளன. முந்தைய வேதகாலங்களில் கடவுளான இயற்கையை விட சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகியோரை வழிபட்டு வந்துள்ளனர்.
யசுர் வேதம்
இது பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும். இதன் காலம் பொ.ஊ.மு. 1400 முதல் பொ.ஊ.மு. 1000 வரை ஆகும்.
சாம வேதம்
இதுவும் பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும்.சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது.
அதர்வண வேதம்
அதர்வண வேதம் இறுதியான வேதமாகும். இதனை நான்காவது வேதம் என்றும் கூறுவர். அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.
வேத இலக்கியங்கள்
நான்கு வேதங்களைத் தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய அனைத்தும் வேத இலக்கியங்களில் அடங்குவனவாகும். வழிபாடுகள் மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கை பற்றிய விளக்கங்களை உபநிடதங்கள் கூறுகின்றன.
திறனாய்வு
இந்து மதம் பற்றிய பல ஆய்வாளர்கள் இந்து மதம் அனைத்து சமகால மதங்களின் கூறுகளையும் ஏற்றுக்கொள்கிறது என்றும், இந்து மதத்தின் வேத புராணங்கள் உட்பட பல வசனங்களில் ப பத்த மதம் த்தம், சமண மதம் மற்றும் சீக்கியம் ஆகிய கூறுகள் உள்ளன என்றும், கணிசமான அளவு கிரேக்க மற்றும் ஜோராஸ்ட்ரியனிசம் போன்ற மதக் கூறுகளை ஏற்றுக்கொண்டதாகவும் கூறுகின்றனர். அவெஸ்டா. இஸ்லாமிய நபி முஹம்மதுவின் தீர்க்கதரிசனம்), இந்திரனிலிருந்து இந்திரன் வரை, கந்தரேவாவிலிருந்து காந்தர்வா வரை, வஜ்ரா, வாயு, மந்திரம், யாம், அஹூதி, ஹுமாதா முதல் சுமதி வரை.
இவற்றையும் பார்க்கவும்
ஆகமங்கள்
உபவேதங்கள்
உபநிடதங்கள்
குறிப்புகள்
மேற்கோள்கள்
சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.
வெளி இணைப்புகள்
What are Vedas?
The Fours Vedas and the Parts of the Vedas
The Principal Upanishads
Upanishads Index
The Essentials of the Upanishads
The Essence of Upanishads
இந்து சமய நூல்கள்
இந்து மெய்யியல்
இந்திய மெய்யியல் |
1804 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D | பன்னம் | பன்னம் (அல்லது வித்திலியம், Fern) என்னும் செடி மற்றும் மர வகைகளை அறிவியலில் தெரிடொ-'வைட்டே (Pteridophyte) என்று அழைப்பர். தெரிடொ-ஃபைட்டா (Pteridophyta) என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் நிலைத்திணை வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை பூக்கும் தாவரங்கள் தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும் வளரும் நிலைத்திணை வகை. பன்னங்கள் அல்லது வித்திலியங்கள் எனப்படுவன, வித்துக்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக நுண்வித்துக்கள் (spores) மூலம் இனப்பெருக்கம் செய்யும் குழாயுடைத் தாவரம் (vascular plant) என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. உண்மையான இலைகளைக் கொண்டிருப்பதால் இவை லைக்கோபைட்டாக்களிலிருந்து வேறுபடுகின்றன. இவை வித்துக்கள் மற்றும் பூக்களைக் கொண்டிராததால், வித்துத் தாவரத்திலிருந்து வேறுபடுகின்றன.
பன்னத்தின் (அல்) வித்திலியத்தின் வாழ்க்கை வட்டம்
சாதாரணப் பன்னமொன்றின் வாழ்க்கை வட்டம், இரண்டு வேறுபட்ட உருவாக்கக் கட்டங்களைக் கொண்டுள்ளது. இவை பின்வருமாறு:
நுண்வித்திகளை உருவாக்கும் ஸ்போரோபைட்டே கட்டம்.
நுண்வித்திகள் கலப்பிரிவு மூலம் ஹப்லொயிட் புரோதலஸ் (haploid prothallus) ஆக வளர்ச்சியடைகின்றன. (கேம்டோபைட்டே கட்டம்)
புரோதலஸ் உயிர்வித்தினை (gametes) உருவாக்குகின்றது.
ஆண் gamete ஒரு பெண் உயிர்வித்தினைக் (gamete) கருக்கொள்ளச் செய்கிறது.
இது கலப்பிரிவு மூலம் திப்லோயிட் ஸ்போரோபைட்டே பன்னமாக வளர்ச்சியடைகின்றது.
பன்னத்தின் அமைப்பு
தண்டுகள்: பொதுவாக இவற்றின் தண்டுகள் மிகவும் உயரம் குறைவானவை. எனவே நிலக்கீழ் தண்டுகளைக் குறிக்கும் ரைசோம் என்ற பெயரால் இத்தண்டுகள் அழைக்கப்படுகின்றன. எனினும் சில இனங்கள் 20 m உயரம் வரை ளரக்கூடியன.
காழ்க்க்லன் மூலகம் இவற்றின் காழில் காணப்படுவதில்லை. இவற்றின் காழில் பிரதான கடத்தும் ஊடகம் குழற்போலிகளாகும். உரியத்தில் தோழமைக் கலங்கள் காணப்படுவதில்லை. மிகவும் எளிய கடத்தும் கலன்களைக் கொண்ட தாவரங்களாக பன்னங்கள் உள்ளன (லைக்கோபைட்டாக்களும் இது போன்ற எளிய கலன் இலையங்களைக் கொண்டுள்ளன.)
இலை: பன்னங்களின் இலைகள் பன்னோலை என அழைக்கப்படும். இவ்விலைகள் விரிக்கப்படும் முன்னர் உருட்டப்பட்டு சுருக்கப்பட்ட வடிவில் காணப்படுகின்றன. இவ்வோலைகளே பன்னங்களின் பிரதான ஒளித்தொகுப்பு நடைபெறும்
பகுதிகளாகும்.
வேர்: பன்னங்களின் வேர்கள் ஏனைய தாவரங்களின் வேர்களை ஒத்ததாகும்.
மேலுள்ள கட்டமைப்பு பன்னத்தின் வித்தித் தாவரத்துக்கே (2n தாவரம்) பொருத்தமானதாகும். பன்னத்தின் புணரித்தாவரம் (n தாவரம்) கட்டமைப்பில் மிக எளிமையானதாகும். இது கட்டமைப்பில் ஈரலுருத் தாவரம் போலக் காணப்படும். பன்னத்தின் புணரித்தாவரக் கட்டமைப்பு பின்வருமாறு காணப்படும்:
புரோதல்லசு: பச்சை நிறமான ஒளித்தொகுப்பில் ஈடுபடக்கூடிய ஒரு கட்டமைப்பாகும். இது புணரிகளை உருவாக்ககூடியது. இது 3-10 mm நீளமானதுடன் 2-8 mm அகலமானது. இது இதயம் அல்லது சிறிநீரகத்தின் வடிவுடைய மிக மெல்லைய ஒரு கலத் தடிப்புடைய கட்டமைப்பாகும்.
அன்தரீடியா: புணரித்தாவரத்தின் விந்துக்களை உருவாக்கும் பகுதி.
ஆர்கிகோனியா: புணரித்தாவரத்தின் சூலை (முட்டைக் கலத்தை) உருவாக்கும் பகுதி
ரைஸொட்கள்: புணரித்தாவரத்தின் வேர்களாகச் செயற்படும் நீட்டப்பட்ட கலன்களாலான பகுதி. எனினும் இவை உண்மையான வேர்களல்ல. இவை புணரித்தாவரத்தை நிலத்தில் பதித்து அதற்குத் தேவையான நீரையும், கனியுப்புக்களையும் பெற்றுக் கொடுக்கின்றன.
உசாத்துணை
வெளியிணைப்பு
Tree of Life Web Project: Filicopsida
A classification of the ferns and their allies
A fern book bibliography
Register of fossil Pteridophyta
L. Watson and M.J. Dallwitz (2004 onwards). The Ferns (Filicopsida) of the British Isles.
Ferns and Pteridomania in Victorian Scotland
Non-seed plant images at bioimages.vanderbilt.edu
"American Fern Society"
"British Pteridological Society"
Checklist of Ferns and Lycophytes of the World
Images of ferns of Hawaii
தாவர வகைகள்
அலங்காரத் தாவரங்கள்
மேலொட்டிகள் |
1806 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88 | தோட்டக்கலை | தோட்டக்கலை (Gardening) என்பது வீட்டுக்கு அருகில், முகப்பிலோ பின்னாலோ தாவரங்களை நட்டு வளர்க்கின்ற நடைமுறையாகும். தோட்டங்களில் அழகூட்டும் தாவரங்கள் அவற்றின் பூக்கள், இலைகள், அல்லது ஒட்டுமொத்தத் தோற்ற வனப்பு கருதி வளர்க்கப்படுகின்றன. கிழங்குகள், கீரைகள், பழங்கள், மூலிகைகள் தரும் தாவரங்களும் உணவுக்காகவும் சாயங்களுக்காகவும் மருத்துவத்துக்காகவும் நறுமணப் பொருள்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. தோட்டக்கலை ஓய்வுகொள்ளும் வேலையாகவும் கருதப்படுகிறது.
சிறிய பழத் தோட்டத்தில் இருந்து, செடிகள், மரங்கள், மூலிகைகள் எனப் பலவகைத் தாவரங்கள் வளர்க்கும் பெருந்தோட்டங்கள் வரை தோட்டவேலை அல்லது தோட்டவளர்ப்பு வரை அமையும். வீட்டுப் புறக்கடையில் வளர்க்கும் வீட்டுத் தோட்டம் முதல், தாழ்வாரங்கள், வீட்டோரங்கள் தொட்டியில் அமையும் மதில்சுவர்த் தோட்டங்கள், கட்டிட உட்புற, வெளிப்புறத் தோட்டங்களாகவும் அமையலாம். சிலவகைச் சிறப்புத் தோட்டங்களில் ஒரேவகைத் தாவரம் மட்டுமே அமையும். இன்னௌஞ் சிலவற்ரில் பலவகைத் தாவரங்களமிடையிடையில் கலந்து வளர்க்கப்படலாம். தோட்ட வளர்ப்பு கடின உழப்பினை வேண்டுகிறது, அழ்ந்த ஈடுபாட்டைக் கோருகிறது ஈவை பண்ணைகள், காடுகளைவிட செறிவான உழைப்பைக் கோருவதால் அவற்றில் இருந்து பெரிதும் வேறுபட்டுள்ளன.
தோட்டக்கலை வரலாறு
தொல்பழங்காலம்
உலகின் மிகப் பழைய தோட்ட வடிவம் காட்டுத் தோட்டமாகும். இது காடுசார்ந்த உணவு விலைச்சல் களாமாகவும் விளங்கியது. காட்டுத் தோட்டம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் ஆற்றோரமாக அமைந்த காடுகளிலும் பருவக்காற்று மழை வட்டாரங்களின் ஈரமான மலைச் சாரல்களிலும் தோன்றியது. மேலும் அவற்ருக்கு அருகே இருந்த பயன்மரங்களும் கொடிமுந்திரி தாவர இனங்களும் இனங்கண்டுப் பேணப்பட்டு மேம்படுத்தப்பட்டன. தோட்டத்தின் வேண்டாத் தாவர இனங்கள் நீக்கப்பட்டன. பிறகு, அயல்தாவரங்களும் தெரிவுசெய்து தோட்டத்தில் வளர்க்கப்பட்டன.
முதல் நாகரிகங்கள் தோன்றியதும், செல்வந்தர்கள் அழகுக்ககத் தோட்டங்களை வளர்க்கலாயினர். பண்டைய எகுபதியின் கல்லறைத் தோட்ட ஓவியங்களில் கிமு 1500 ஆண்டளவில் உருவாகிய புதிய அரசாட்சியில் தோட்டமும் நிலக்கிடப்பும் வடிவமைத்ததற்கன சான்றுகள் கிடைத்துள்ளன; அவை தாமரை மலர்ந்த சிறுகுளங்களையும் பனைமர வரிசையையும் சீரொருமையுடன் திகழும் வேலங்கன்றுகளையும் காட்டுகின்றன. பண்டையத் தோட்ட வடிவமைப்புக்கான சிறந்த எடுத்துக்காட்டு பாபிலோனியத் தொங்கும் தோட்டமாகும். இது பண்டையல் ஏழு வியப்புகளில் ஒன்றாகும். பண்டைய உரோம் நகரில் பல பத்து தோட்டங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.
பண்டைய எகுபதி நாட்டுச் செல்வந்தர்கள் நிழலுக்காக தோட்டங்களை வளர்த்துள்ளனர். எகுபதி நாட்டு மக்கள் மரங்களையும் தோட்டங்களையும் கடவுளரோடு தொடர்புபடுத்தினர். அவர்களின் தெய்வங்கள் தோட்டங்களைக் கண்டு மகிழ்ச்சி கொண்டதாகக் கருதினர். பண்டைய எகுபதியின் தோட்டச் சுவர் ஓரங்களில் மரங்களை வரிசைகளில் நட்டு வளர்த்துள்ளனர். இவற்றில் பரவலாகப் பேரீச்ச மரங்களும் ஊசியிலை மரங்களும் வில்லோ மரங்களும் கொட்டைதரும் மரங்களும் அமைகின்றன. தோட்டங்கள் உயர் சமூக, பொருளியல் செழிப்பின் அறிகுறிகள் ஆகின. இவர்கள் வைன் தோட்டங்களையும் செழிப்பின் அடையாளங்களாக வளர்த்தனர். எகுபதியத் தோட்டங்களில் உராசா, பாப்பி, டெய்சி, ஐரிசு பூக்களும் மலர்ந்து காணப்படும்.
தோட்ட வகைகள்
வீட்டுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தோட்டம் வீட்டுத் தோட்டம் எனப்படுகின்றது. பொதுவாகத் தோட்டங்கள் வீட்டைச் சூழவுள்ள நிலப்பகுதியிலேயே அமைவது வழக்கமெனினும், வீட்டுக் கூரைகள், பலகணித் தொட்டிகள், பலகணிகள் போன்ற பகுதிகளிலும் அமைக்கப்படுவதுண்டு.
"உள்ளகத் தோட்டக்கலை" என்பது கட்டிடங்களுக்குள் தாவரங்களை வளர்ப்பது ஆகும். வீட்டுத் தாவரங்கள் இதற்கென அமைக்கப்பட்ட காப்பகங்கள், பசுமைக்குடில் போன்றவற்றுள்ளும் வளர்க்கப்படுவதுண்டு.
"நீர்த் தோட்டக்கலை" என்பது சிறு குளங்கள், தடாகங்கள் போன்றவற்றுக்குப் பொருத்தமான தாவரங்களை வளர்ப்பதாகும் .
வீட்டுத்தோட்டங்களில் மட்டுமன்றி, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், நெடுஞ்சாலையோரங்கள், சுற்றுலாப்பகுதிகள் போன்றவற்றிலும் தோட்டக்கலை அறிவு பயன்படுகிறது.
தோட்டக்கலை நோக்கங்கள்
தாவரங்கள் பயன்பாடு சார்ந்த, பயன்பாடு சாராத பல்வேறு தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் சில பின்வருமாறு:
பயன்பாடு சார்ந்தவை
உணவு
கால்நடைத் தீவனம்
மருத்துவம்
சாயங்கள்
துணிவகைகள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றிற்கான மூலப் பொருள்கள்.
பயன்பாடு சாராதவை
அழகு
இயற்கையுடனான இசைவு
பொழுதுபோக்கு
மரக்கறி வகைகள், பழ வகைகள், மூலிகைகள், நிழல் மரங்கள், புல், பல்லாண்டுத் தாவரங்கள், அலங்காரத் தாவரங்கள், பூச்செடிகள் போன்ற பலவகைத் தாவரங்களும் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. பல தோட்டங்களில், இவற்றில் பலவற்றை ஒருங்கே காணக்கூடும்.
பழ மரங்கள் வீட்டுத் தோட்டங்களிலே வளர்க்கப்படுவது வழக்கமெனினும் பேரளவில் வளர்க்கும்போது தோப்புகளிலே வளர்ப்பார்கள்.
மேலும் காண்க
பொன்சாய்
அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்
தோட்டம் தலைப்புகள் பட்டியல்
வெளி இணைப்புகள்
National Gardening Association (USA) |
1989 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE | சினேகா | சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். 2001 இல் இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 இல் என்னவளே என்ற திரைப்படத்தில் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
பிறப்பும் கல்வியும்
சினேகா தமிழ்நாட்டில் இராசாராம் பத்மாவதி தம்பதியினருக்கு சுகாசினியாகப் பிறந்தார். இவரின் குடும்பம் இவரின் பிறப்புக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாக்குச் சென்றது, அங்கு அவர் ஓன் ஆங்கில உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்தார். பின்னர் இவர் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள பண்ருட்டி என்னும் ஊரில் குடியேறினர். அங்கே இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது.
திரைப்பட வாழ்க்கை
சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பக்சி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் தமிழ்த் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெறத் தொடங்கினார். மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார். இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது. தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார். பார்த்திபன் கனவு,
ஆட்டோகிராப் என்று ஏறத்தாழ எழுபது படங்களில் நடித்துள்ளார்.
சொந்த வாழ்க்கை
2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். பின்னர், பிரசன்னா சினேகாவின் வடிவழகு நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் 2011 நவம்பர் 9 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.. தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். 2015 ஆகத்து 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விகான் என்று பெயர் சூட்டினார்கள். சினேகா தமது பெண் குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
விளம்பர வடிவழகுத் தொழில்
சரவண ஸ்டோர்ஸ், ஹார்லிக்ஸ், ஆஷிர்வாட் போன்ற பல விளம்பரங்களில் அவர் தோன்றினார். திருமணத்திற்குப் பின் சினேகா தன் கணவருடன் பிரசன்னாவுடன் இணைந்து யுனிவர்சல் விளம்பரங்களில் பணிபுரிந்தார், சென்னை சர்வதேச ஃபேஷன் வீக், சிட்னி ஸ்லேடன் பேஷன் வாரம் மற்றும் சென்னை மற்றும் மும்பையில் நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் நடித்தார்.
பொது வாழ்வும் உதவியும்
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 41 நாளாக போராடினர். டெல்லியில் போராடிய விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு நடிகர் பிரசன்னா, சினேகா தம்பதியினர் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர். என்னுடைய சம்பளம் முழுவதும் கொடுக்கும் அளவுக்கு நான் ஊதியம் பெறவில்லை என்றாலும், இயன்றதைச் செய்து இன்பம் பெறும் முயற்சியாகவே நிதியுதவி அளித்துள்ளதாகவும், இதே போன்று நடிகர்கள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரும் நிதியுதவி அளிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நடித்த திரைப்படங்கள்
என்னவளே
ஆனந்தம்
பார்த்தாலே பரவசம்
விரும்புகிறேன்
ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
உன்னை நினைத்து
கிங்
புன்னகை தேசம்
பம்மல் கே. சம்பந்தம்
ஏப்ரல் மாதத்தில்
வசீகரா
பார்த்திபன் கனவு
வசூல்ராஜா எம். பி. பி. எஸ்
ஜனா''
போஸ்
ஆட்டோகிராப்
அதுவ
ஆயுதம்
சின்னா
ஏபிசிடி
புதுப்பேட்டை
நான் அவனில்லை (2007)
பள்ளிக்கூடம்
பிரிவோம் சந்திப்போம் (விஜய் விருதுகள் (சிறந்த நடிகை))
சிலம்பாட்டம்
கோவா
தீராத விளையாட்டுப் பிள்ளை
பவானி ஐ. பி. எஸ்.
பொன்னர் சங்கர் (திரைப்படம்)
ஒரு கல் ஒரு கண்ணாடி)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சர்வதேச திரைப்படத் தரவு தளத்தில்
சினேகாவின் இணையத்தளம்
1981 பிறப்புகள்
வாழும் நபர்கள்
தமிழ்த் திரைப்பட நடிகைகள்
தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
மலையாளத் திரைப்பட நடிகைகள்
பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் |
1990 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88 | மதுரை | மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இது மதுரை மாவட்டத்தின் தலைநகர் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில், இதுவும் ஒன்று. இது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், அடுத்த, நகர்புற பரப்பளவு அடிப்படையில், மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். மக்கள்தொகை அடிப்படையில், இந்நகரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். பதினைந்து லட்சம் மேல் மக்கட்தொகை கொண்ட மாநகரம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியத் துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.
மௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (பொ.ஊ.மு. 370 – பொ.ஊ.மு. 283), கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ் (பொ.ஊ.மு. 350 – பொ.ஊ.மு. 290) ஆகியோரின் குறிப்புக்களில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம், பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.
நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. நகரில், ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரைத் திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து இலட்சம் பேராற் கண்டுகளிக்கப்படும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல், நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள், பெயர் பெற்ற நிகழ்வுகளாகும்.
மதுரை, தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில், இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு, உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மதுரை மருத்துவக்கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற அரசு கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன. நகர நிர்வாகம், 1971-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. இது சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநகராட்சி ஆகும். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையும் இங்கு உள்ளது. இது இந்தியாவில், மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றாகும். மதுரையில், பன்னாட்டுச் சேவைகளை வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவின் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தெரிவு செய்யப்பட்டது.
மதுரை 147.99 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின்படி, மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர்.
பெயர்க் காரணம்
இந்நகரம் முந்தைய காலத்தில் மலைகள் மிகுந்த பகுதியாக இருந்ததால் இவ்வூருக்கு மலைதுரை என்ற பெயரலே அழைக்கபெற்றதாகவும் பின்னாளில் அப்பெயர் காலத்தால் மருவி மலைதுரை ம+(லை)+துரை மதுரையாக மாறியதாக கூறப்படுகிறது.
முன்னொரு காலத்தில் மலைதுரையை ஆண்ட மலைத்துவசபாண்டியனின் திருப்பெயராலே மலைத்துவசத்துறை என்ற பெயரே மதுரையாக மாறியது என்றும் கூறப்படுகிறது.
இவ்வூரை மதுரை, மலை நகரம், மதுராநகர், தென் மதுராபுரி, கூடல், முக்கூடல் நகரம், பாண்டிய மாநகர், மல்லிகை மாநகர், மல்லிநகரம், வைகை நகரம், நான்மாடக்கூடல், திரு ஆலவாய், சுந்தரேசபுரி, மீனாட்சி நகரம், போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது.
மருதத் துறை மதுரை; மருத மரங்கள் மிகுதியான பகுதியாக இருந்ததால் இவ்வூருக்கு மருதத்துறை என்பது மருவி மதுரை என ஆனது என ஒரு கருத்தும், (வைகை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி). இந்துக் கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால்(இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது.
முந்தைய 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற் புராணத்தில், மதுரையின் பல்வேறு பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கூடல் என்ற பெயர் மதுரையில் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களையும், நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரையைச் சூழ்ந்துள்ள நான்கு கோயில் கோபுரங்களையும் குறிக்கிறது. சிவனடியார்கள், மதுரையைத் திரு ஆலவாய் எனக் குறிப்பிடுகின்றனர்.
தமிழகக் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின்படி, பொ.ஊ.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்ப் பிராமி கல்வெட்டு ஒன்று மதிரை எனக் குறிக்கிறது. இதற்கு மதிலால் சூழப்பட்ட நகரம் என்பது பொருள்.
சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில் – இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்லை ஊர்கள். சீறா நாகம் – நாகமலை கறவா பசு – பசுமலை பிளிறா யானை – யானைமலை முட்டா காளை – திருப்பாலை ஓடா மான் – சிலைமான் வாடா மலை – அழகர்மலை காயா பாறை – வாடிப்பட்டி பாடா குயில் – கீழக்குயில்குடி
வரலாறு
பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து மதுரையில் மக்கள் வசித்து வருவதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் பொ.ஊ.மு. 570-ஆம் ஆண்டில் தம்பபன்னி இராச்சியத்தைத் தோற்றுவித்த விசயன் மதுராபுரியைச் சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்ததாக இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுகிறது. இங்கே மதுராபுரி எனக் குறிப்பிடப்படுவது பண்டைய மதுரையையே. பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணியான மெகசுதனிசு தனது குறிப்புகளில் "மதுரா" எனக் குறிப்பிடப்படுவதிலிருந்து, அவர் மதுரைக்கு வந்து இருக்கலாம் என அறியப்படுகிறது. இருப்பினும் சில அறிஞர்கள் "மதுரா" எனக் குறிப்பிடுவது மௌரியப் பேரரசில் புகழ் பெற்ற வடஇந்திய நகரமான மதுரா என்கின்றனர். மேலும் சாணக்கியர் எழுதிய அர்த்தசாத்திரத்திலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. தமிழின் பழமையான இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மதுரை குறித்து கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் "கூடல்" என்றும் சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு முதலிய நூல்களில் "மதுரை" என்றும் மதுரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது மதுரையைத் தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்று சிறுபாணாற்றுப்படையில், நல்லூர் நத்தத்தனாரும் மதுரையைப் பற்றி குறிப்பிடுகின்றார். ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் எனப் பல்வேறு அடைமொழிகளால் தான் எழுதிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் மதுரையைச் சிறப்பிக்கிறார். இவை தவிர கிரேக்க, உரோமானிய வாரலாற்றிலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. உரோமானிய வரலாற்றாய்வாளர்களான இளைய பிளினி (பொ.ஊ. 61 – c. பொ.ஊ. 112), தாலமி (c. பொ.ஊ. 90 – c. பொ.ஊ. 168), கிரேக்க புவியுலாளரான இசுட்ராபோ (பொ.ஊ.மு. 64/63 – c. பொ.ஊ. 24), மதுரை பற்றி குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக செங்கடல் செலவில் மதுரை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
சங்க காலத்தில் பாண்டியர் ஆளுகையின் கீழ் மதுரை இருந்தது என சங்க இலக்கியங்கள் மூலம் அறிய வருகிறது. சங்க காலத்துக்குப் பின், களப்பிரர் ஆளுகையின் கீழ் வந்த மதுரை பொ.ஊ. 590 பாண்டியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. ஆனால், 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பாண்டியர்கள் சோழர்களிடம் தோல்வியுற்றனர். இதனால் சோழர்களின் ஆளுகையின் கீழ் வந்த மதுரையானது, 13-ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் பாண்டியப் பேரரசு உருவாக்கப்படும் வரை சோழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (பொ.ஊ. 1268 – பொ.ஊ. 1308) மறைவுக்குப் பின் மதுரை தில்லி சுல்த்தானகத்தின் கீழ் வந்தது. பின் தில்லி சுல்தானகத்திலிருந்து பிரிந்து மதுரை சுல்தானகம் தனி இராச்சியமாக இயங்கியது. பின் பொ.ஊ. 1378-இல் விஜயநகரப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. பொ.ஊ. 1559-இல் விசய நகரப் பேரரசிடமிருந்து நாயக்கர்கள் தன்னாட்சி பெற்றனர். பின் 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பொ.ஊ. 1736-இல் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வரும்வரை மதுரையானது சந்தா சாகிப் (பொ.ஊ. 1740 – 1754), ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் (பொ.ஊ. 1725 – 1764) ஆகியோரால் மீண்டும் மீண்டும் பலமுறை கைப்பற்றப்பட்டது.
பின் 1801-இல், மதுரை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அவர்கள் ஆட்சியின் தொடக்க கால கட்டங்களில் ஆங்கில அரசு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதுடன் திருவிழாக்களிலும் பங்கு பெற்றது. 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நகரானது அரசியல், தொழில் துறை நகராக வளர்ந்ததுடன் அப்போதைய மதுரை மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கியது. 1837-ஆம் ஆண்டில், கோவிலைச் சுற்றி இருந்த கோட்டையானது அகற்றபட்டு, அகழி நிலத்தப்பட்டது. கிடைத்த இடிபாடுகள் மற்றும் பொருட்களைக் கொண்டு, புதிய தெருக்களான வெளி, மாரட், பெருமாள் மேசுதிரி வீதிகள் அமைக்கப்பட்டன. பொ.ஊ. 1836-இல் மதுரை நகராட்சியாகத் மாற்றப்பட்டது. நகராட்சியாக மாற்றப்பட்ட போது, ஆங்கில அரசானது மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துதலிலும் வரி வசூலிப்பதிலும் சில சிக்கல்களைச் சந்தித்தது. எனவே, பொ.ஊ. 1880 மற்றும் 1885 மதுரை நகரமும், மாவட்டமும் மறுஅளவீடு செய்யப்பட்டது பின்னர் நிர்வாக வசதிக்காக 5 நகராட்சிகள், 6 தாலுகாக்கள் மற்றும் இரண்டு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. நகரில் காவல் நிலையங்கள் எழுப்பப்பட்டு மதுரையைத் தலைமையிடமாக மாவட்டக் காவல் துறை ஆணையர் பதவியும் ஏற்படுத்தப்பட்டது.
1921 செப்டெம்பர் 26-ஆம் நாள், மதுரையில் அரையாடை அணிந்து வேலை செய்து கொண்டிருந்த விவாசாயிகளைக் கண்டு, இந்திய தேசியத் தலைவரான காந்தி முதன்முறையாக அரையாடையை அணிந்தார். 1939-இல் மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை மேற்கொண்ட தனது நண்பர் வைத்தியநாதையரைக் காப்பாற்றும் பொருட்டு அப்போதைய சென்னை மாகாண பிரதமர் இராசகோபாலாச்சாரி தலைமையிலான அரசு ஆலய நுழைவு உறுதிப்படுத்தலும் பாதுகாப்பும் சட்டத்தை இயற்றி நாடார்களும் தலித்துகளும் ஆலயம் நுழைவதற்கான தடையை நீக்கியது.
நகரமைப்பு
பண்டைய மதுரை நகரத்தின் புவியியல் மற்றும் வழிபாட்டு மையமாக விளங்கிய மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி மதுரை நகரமானது கட்டப்பட்டுள்ளது. நகரமானது பொது மையத்தைக் கொண்ட நான்கு நாற்கர வடிவமுடைய தெருக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது மதுரையை ஆண்ட நாயக்கர்களின் முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (பொ.ஊ. 1159–64) சதுர மண்டல முறையில் கட்டப்பட்டதாகும். இந்த தெருக்கள் அவற்றில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் தமிழ் மாதங்களின் பெயர்களால் ஆடி, சித்திரை, ஆவணி - மூல, மாசி வீதிகள் என தற்போதும் அழைக்கப்படுகின்றன. கோயில் பிரகாரத்திலும் அதனைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களிலும் திருவிழாக்களானது கொண்டாடப்படுவதுடன், தேரோட்டமும் நடைபெறுகிறது. நகர மையமும், அதனைச் சூழ்ந்துள்ள தெருக்களும் தாமரை மலர் மற்றும் அதன் இதழ் போன்ற தோற்றம் கொண்டதாக பழைய இலக்கியங்கள் கூறுகின்றன. நகரத்தின் அச்சானது காந்த ஊசிகளின் அச்சுடன் பொருந்தும் வண்ணம் அமைந்து, கோவிலின் நான்கு வாசல்களும் அதன் முனைகள் போல் உள்ளன. இந்த அமைப்பில் உயர்சாதியினர் கோவிலுக்கு அருகிலுள்ள தெருக்களிலும், ஏழை மற்றும் பிற்பட்ட படிநிலை மக்கள் தொலைவிலுள்ள தெருக்களிலும் குடியிருந்தனர். பின் 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வருகை, தொழில் துறை வளர்ச்சி மற்றும் நகரமயாமாதல் காரணமாக மதுரை நகரின் அமைப்பில் மாறுதல்கள் (கோட்டைச் சுவர் அகற்றப்பட்டு புதிய தெருக்கள் உருவாதல்) ஏற்பட்டு தற்போது அனைத்து படிநிலை மக்களும் ஒன்றிணைந்து வாழுகின்றனர்.
மதுரையின் கிழக்கு குடவரை கோவில் குன்னத்துார்(திருக்குன்றத்துார்) அமைந்துள்ளது. மாறவர்ம சுந்தரபாண்டியன் மற்றும் பலர் சிவலிங்க திருமேனியை மலையை குடைந்து உருவாக்கி உள்ளனர். இது பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
புவியியல் மற்றும் பருவநிலை
இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் உயரத்தில் வளமான வைகை ஆற்றின் சமவெளியில் அமைந்துள்ளது. வைகை ஆறு நகரின் வடமேற்கு-தென்கிழக்காக ஒடி நகரை ஏறக்குறைய இரு சமபகுதிகளாகப் பிரிக்கிறது. நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிறுமலை மற்றும் நாகமலைக் குன்றுகளும், வடகிழக்கே யானைமலைக் குன்றும் அமைந்துள்ளன. மதுரையைச் சூழ்ந்துள்ள நிலங்களில் பெரியாறு அணை பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. மதுரை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகள் தென்னிந்தியச் சமவெளிகள் போன்று சிறு சிறு குன்றுகள் காணப்படுகின்றன. மணலின் தன்மையைப் பொருத்த வரையில் மதுரையின் மையப்பகுதி களிமண்ணும், புறநகர்பகுதிகள் செம்மண் மற்றும் கரிசல் மண்ணும் கொண்டுள்ளன. நெல் அதிகம் பயிரிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து பயறு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு ஆகியவை பயிரிடப்படுகின்றன.
ஆண்டின் எட்டு மாதங்களுக்கு மதுரையில் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை நிலவுகிறது. அருகிலுள்ள திண்டுக்கல் மற்றும் மதுரையில் பிப்ரவரி மற்றும் மார்ச்சு மாதங்களில் குளிர் காற்று வீசுகிறது. மார்ச்சிலிருந்து சூலை வரை அதிக வெப்பமான மாதங்களாகும். ஆகசுட்டிலிருந்து அக்டோபர் வரை மிதமான வானிலையும், நவம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை இடி மற்றும் கனமழையுடன் மிதமான குளிரும் காணப்படுகிறது. மதுரையில் மூடுபனியானது குளிர்காலங்களில் மிக மிகக் குறைவாகவே ஏற்படுகிறது. கடல் மற்றும் மலையிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழையால் சம விளைவுகளே ஏற்படுகிறது. இருப்பினும் அக்டோபரிலிருந்து திசம்பர் வரை வீசும் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது. மதுரை மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு 85.76 செ. மீ.
கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 °செ, குறைந்தபட்ச வெப்பநிலை 26.3 °செ, இருப்பினும் சாதாரணமாக வெப்பநிலையானது 42 °செ வரை உயரும். நகரமயமாதல், வாகனப் பெருக்கம் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக மதுரையின் வளிமண்டல வெப்பநிலை உயர்ந்துள்ளது, இந்திய வானியலாய்வுத் துறையிடம் உள்ள 62 ஆண்டுகால தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது. 2001–2010 வரையான பத்தாண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலையான 42 °செ 2004 மற்றும் 2010 என இருமுறை பதிவாகியுள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மதுரையின் மொத்த மக்கள் தொகை 10,17,865 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929 ஐ விட மிக அதிகம் ஆகும். இதில் 1,00,324 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். இவர்களில் ஆண்கள் 51,485 மற்றும் பெண்கள் 48,389. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை முறையே 6.27% மற்றும் 0.31% ஆகும். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 81.95% உள்ளது. 1,224 விவசாயிகள், 2,178 முதன்மை வேளாண் தொழிலாளர்கள், 11,282 குடிசைத் தொழிலகங்கள், 3,48,849 பிற தொழிலாளர்கள், 27,782 குறு தொழிலாளர்கள், 388 குறு விவசாயிகள், 616 குறு வேளாண் தொழிலாளர்கள், 1,611 சிறு குடிசைத்தொழிலாளர்கள் மற்றும் 25,167 பிற குறு தொழிலாளர்கள் என மொத்தம் 3,91,315 தொழிலாளர்கள் உள்ளனர். மதுரை மாநகரரானது 14,62,420 மக்களுடன் தமிழக அளவில் மூன்றாவது பெரிய மற்றும் இந்திய அளவில் 44-ஆவது பெரிய மாநகரம் ஆகும் (Metropolitan City).
2011-ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 8,73,601 (85.83%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 86,886 (8.54%), கிறிஸ்தவர்கள் 52,737 (5.18%), மதம் குறிப்பிடாதோர் 3,002 (0.29%), சமணர்கள் 1,324, சீக்கியர்கள் 164, புத்த மதத்தினர் 74, மற்றவர்கள் 77 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர். தமிழ் மொழி அதிக அளவில் பேசப்படும் மொழியாகும். சௌராட்டிரம் கி. பி. 16-ஆம் நூற்றாண்டில் மதுரைக்கு இடம் பெயர்ந்த சௌராட்டிரர்களால் பேசப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள், ரோமன் கத்தோலிக்க மதுரை டையோசிசுடனும், புரட்டஸ்தாந்த கிறித்தவர்கள் தென்னிந்திய திருச்சபையின் மதுரை – இராமநாதபுரம் திருமண்டலத்தில் இணைந்துள்ளனர்.
2001-இல் குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 32.6 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 15.05% விட மிக அதிகம்.
(படத்திலிருந்து) 1971–1981-இல் 50% வரை மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகரிப்பிற்கு 1974-ஆல் மதுரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 13 பஞ்சாயத்துகள் மதுரையுடன் இணைக்கப்பட்டதே காரணமாகும். 1981 மற்றும் 2001-இல் மக்கள் தொகை வீதம் குறைவிற்கு மதுரை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 1984-இல் திண்டுக்கல் மற்றும் 1997-இல் தேனி மாவட்டம் உருவாக்கபட்டதே காரணமாகும். கூட்டாக ஆண்டு வளர்ச்சி வீதம் 1971–1981-இல் 4.10 சதவீதமும், 1991–2004-இல் 1.27 சதவீதமும் குறைந்துள்ளது.
ஆட்சி மற்றும் அரசியல்
நகரமைப்புச் சட்டம் 1865-இன்படி, மதுரை 1866-ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் நகராட்சியாக ஆக்கப்பட்டது. பின் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டு நகராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1891 மற்றும் 1896 தவிர). அப்போது இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசிய காங்கிரசே வெற்றி பெற்று வந்தது. மதுரை மாநகராட்சி சட்டம், 1971-இன்படி, மே 1, 1971 முதல் மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது. மதுரை தமிழகத்தின் 2011 முன்பு வரை இரண்டாவது பழைய பெரிய மாநகராட்சியாகும்.தற்போது மதுரை தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய நகரமாக உள்ளது. மாநகராட்சியானது நிர்வாகத்திற்காக 6 துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: பொது, பொறியியல், வருவாய், பொதுசுகாதாரம், நகரத் திட்டமிடல் மற்றும் கணினிப் பிரிவு. இந்தத் துறைகள் அனைத்தும் மதுரை மாநகராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவரே மாநகராட்சியின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் தலைவராக உள்ளார். இது தவிர சட்டமியற்றும் அதிகாரம் மாநகராட்சி உறுப்பினர்கள் வசம் உள்ளது. மாநகராட்சியின் 100 வார்டுகளிலிருந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உறுப்பினர் என 100 உறுப்பினர்கள் மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகர் மன்றத்தின் தலைவராக மேயர் செயல்படுகிறார். இவருக்கு உதவியாக துணைமேயரும் உள்ளார். இது தவிர மாநகராட்சி நிர்வாக வசதிக்காக மண்டலங்களாப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி அலுவலகம் தல்லாகுளம் அருகே செயல்பட்டு வருகின்றது. மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளது.
மதுரை நகரானது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது தவிர மதுரை மக்களைவைத் தொகுதியும் உள்ளது. இவற்றிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.
சட்டம் ஒழுங்கு தமிழக காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரை நகரமானது தனி காவல் துறை மாவட்டமாக உள்ளது. மதுரை மாநகர் காவல் துறையில், தல்லாகுளம், அண்ணா நகர், திலகர் திடல், டவுண் என நான்கு பிரிவுகளுடன் மொத்தம் 27 காவல் நிலையங்களும் உள்ளன. மாநகர் காவல் துறைத் தலைவராக காவல் துறை ஆணையாளர் உள்ளார். புறநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கானது மதுரை மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இது தவிர சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளையும் உள்ளது. இது மாநிலத் தலைநகருக்கு வெளியில் இருக்கும் வெகு சில உயர்நீதி மன்றங்களுள் ஒன்று. இது சூலை 2004 முதல் செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-கன்னியாகுமரி), தேசிய நெடுஞ்சாலை 49 (கொச்சி-தனுஷ்கோடி), தேசிய நெடுஞ்சாலை 45B (திருவண்ணாமலை-திருச்சிராப்பள்ளி-தூத்துக்குடி ), தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா) திருமங்கலம் – கொல்லம், தேசிய நெடுஞ்சாலை 38 தூத்துக்குடி - மதுரை - திருச்சி - விழுப்புரம் - திருவண்ணாமலை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் மதுரை வழிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும். இது தவிர மாநில நெடுஞ்சாலைகளான மா. நெ – 33, மா. நெ – 72, மா. நெ – 72ஏ, மா. நெ – 73 மற்றும் மா. நெ – 73ஏ ஆகியவையும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வண்ணம் உள்ளன. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை வட்டங்களுள் மதுரையும் ஒன்றாகும். இது தவிர மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) இயங்கி வருகிறது. இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரையில் மூன்று முக்கியப் பேருந்து முனையங்கள் உள்ளன. அவை மாட்டுத்தாவணி ஒருகிணைந்த பேருந்து முனையம்(MIBT), ஆரப்பாளையம் ஆகிய இரண்டும் புறநகர் பேருந்து முனையங்களாகவும், பெரியார் பேருந்து நிலையம் நகர் பேருந்து நிலையமாகவும் உள்ளது. அரசால் இயக்கப்படும் நகர் பேருந்துகள் தவிர 236 பதிவு பெற்ற தனியார் சிற்றுந்துகளும், 12,754 பதிவு பெற்ற தானிகளும் உள்ளன.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் : ( சென்னை, திருச்சி, முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், வடலூர், விருத்தசாலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி, நீடாமங்கலம், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, திருமயம், சிங்கம்புணரி, பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, தொண்டி, சிவகங்கை, காளையார்கோவில், இடையாங்குடி, நத்தம், மணப்பாறை, விராலிமலை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி, எட்டையபுரம், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, கீழக்கரை, சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பாபநாசம் என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம், புனலூர், கொட்டாரக்கரை, மூணார், கோட்டயம், எர்னாகுளம், பாலக்காடு, திருச்சூர், குருவாயூர், மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர் போன்ற முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, மைசூர், மடிக்கேரி, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து உள்ளன.)
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் :(கோயமுத்தூர், மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, திருப்பூர், அவிநாசி, அன்னூர், பல்லடம், தாராபுரம், ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், எடப்பாடி, சங்ககிரி, திருச்செங்கோடு, சேலம், ஓமலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல், கொடுமுடி, கரூர், ஆண்டிபட்டி, வருசநாடு, தேனி, போடி, உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர், குமுளி, கோம்பை, தேவாரம், பெரியகுளம், வத்தலகுண்டு, கொடைக்கானல், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி போன்ற இடங்களுக்கு பேருந்து உள்ளன.)
தொடருந்து
மதுரை சந்திப்பு தென் தமிழகத்தின் முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. இதனைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னக இரயில்வேயின் மதுரை இரயில்வே கோட்டம் செயல்படுகிறது. இது சென்னையை அடுத்து அதிக வருமானம் தரக் கூடிய கோட்டமாக உள்ளது. மதுரையிலிருந்து நாட்டின் மற்ற முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, பட்னா, கொல்கத்தா, ஐதராபாத், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம், திருவண்ணாமலை, திருப்பதி, வேலூர், கன்னியாகுமரி போன்றவற்றை இணைக்கும் வண்ணம் நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன. மதுரையானது நாட்டின் பிற பகுதிகளுடன் தொடருந்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் மாநில அரசினால் அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் சேவை திட்டமிடல் கட்டத்தில் உள்ளது.
விமானம்
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும். இது நகரின் மையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமானச் சேவையும் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இலங்கை, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இயக்கப்படுகிறது. விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஸ்பைஸ் ஜெட் ஆகியவற்றால் விமான சேவைகள் விளங்கப்படுகிறது. மதுரை விமான நிலையம் 5.2 இலட்சம் பயணிகளை ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2014 காலகட்டத்தில் கையாண்டுள்ளது.
கல்வி
மதுரை பல நூற்றாண்டுகளாக தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இசை, நடனம் மற்றம் பல கலைகளைக் கற்பிக்கும் மையமாக விளங்கியது. மதுரையை மையமாகக் கொண்டு மூன்று தமிழ்ச் சங்கங்கள் இயங்கி வந்துள்ளன. சங்க இலக்கியங்கள் பல இங்கு தான் அரங்கேற்றப்பட்டன எனவும் நம்பப்படுகிறது.
மதுரைத் தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் செயல்படுகிறது.
சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் பழந்தமிழர்களின் மேன்மையை படம் பிடித்து காட்டுகிறது.
மதுரையின் பழமையான கல்லூரி, 1881-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்கன் கல்லூரி ஆகும். நகரின் முதல் பெண்கள் கல்லூரியாக 1948-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டோக் பெருமாட்டி கல்லூரி உள்ளது. இவை தவிர, தியாகராசர் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1949), மதுரைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1889), பாத்திமா கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1953), தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1962), நாட்டின் பழமையான மேலாண்மைப்பள்ளிகளுள் ஒன்று மற்றும் சௌராஷ்டிரா கல்லூரி,சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, வக்பு வாரியக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1964), சரசுவதி நாராயணன் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1966) ஆகியவை நகரின் பழமையான கல்வி நிலையங்களில் குறிப்பிடத்தக்கவை.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் (ஆரம்ப காலங்களில் மதுரைப் பல்கலைக்கழகம்) 1966-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, ஒரு மாநிலப் பல்கலைக் கழகமாகும். இதனுடன் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள 109-இற்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 47 (தன்னாட்சி, அரசு உதவி, சுயநிதி, உறுப்பு கல்லூரி மற்றும் மாலை நேரக் கல்லூரிகள் உட்பட) பல்கலைக்கழகத்தால் ஏற்பு பெறப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இது தவிர ஏழு பல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் 5 தொழிற்பயிற்சிப் பள்ளிகள்(ஐடிஐ) மதுரையில் உள்ளன. இவற்றுள் அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி, தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை குறிப்பிடத்தக்கன. மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் என இரு மருத்துவக் கல்வி நிலையங்களும், 11 துணை மருத்துவக் கல்வி நிலையங்களும் மதுரையில் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற ஏழு பொறியியல் கல்வி நிலையங்கள் மதுரையில் உள்ளன. இதில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி பழமையானதாகும்.
இது தவிர மதுரையைச் சுற்றிலும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. 1979-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மதுரை சட்டக்கல்லூரி, தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளுள் ஒன்றாகும். இது தமிழ்நாடு அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை தவிர மதுரை நகரில் மூன்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், இரு இசைக் கல்லூரிகள், மூன்று மேலாண்மைக் கல்லூரிகள் மற்றும் 30-இற்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 1965-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது) தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வேளாண்மைக் கல்லூரி ஆகும். இதனுடன் மனையியல் கல்லூரி ஒன்றும் உள்ளது. மதுரை நகரில் சுமார் 369 ஆரம்ப, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
வழிபாட்டிடங்கள்
மதுரையில் பல கோவில்கள் இருப்பதால், இது கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் மீனாட்சியம்மன் கோவில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவிலாகும். இது வைகையாற்றின் தெற்கில் அமைந்துள்ளது. கோவில் கட்டிடமானது 45-50 மீ. உயரம் கொண்ட பல்வேறு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இதில் தெற்கு கோபுரம் 51.9 மீ. (170 அடி) உயரத்துடன் மிக உயரமானதாகும். கருப்ப கிரகத்தின் மேல் இரண்டு தங்க விமானங்களும் அமைந்துள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றி குறிப்பிடப்படுவது இதன் பழமைக்குச் சான்றாகும். கோவிலின் தற்போதைய அமைப்பானது பொ.ஊ. 1623-இலிருந்து 1655-இற்குள் கட்டப்பட்டதாகும். தினசரி 15,000 பேர்களும், வெள்ளிக்கிழமைகளில் 25,000 பேர் வரையும் கோவிலைப் பார்வையிடுகின்றனர். சுமார் 33,000 சிற்பங்கள் வரை கோவிலில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. புதிய உலக அதிசயங்களுக்கான முதல் முப்பது பரிந்துரைகளில் இக்கோவிலும் இடம் பெற்றிருந்தது.
நகரினுள் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் சிவாலயங்களில் காணப்படுவது போன்று நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் சோலைமலை அடிவாரத்தில் அழகர் கோவில் அமைந்துள்ளது. சோலை மலையின் மேல் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழமுதிர்சோலை அமைந்துள்ளது.
காசிமார் பெரிய பள்ளிவாசல் நகரின் பழமையான முசுலிம் வழிபாட்டுத் தலம் ஆகும். இப்பள்ளிவாசல் 13-ஆம் நூற்றாண்டில் குலசேகரப் பாண்டியனிடமிருந்து தானமாகப் பெற்ற நிலத்தில், ஓமனில் இருந்து வந்த காசி சையது தாசுத்தீன் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. சையது தாசுதீனின் வழித்தோன்றல்களே மதுரை நகரின் காசிகளாக தமிழக அரசால் நியமிக்கப்படுகின்றனர். மதுரை அசரத்தின் தர்காவான மதுரை மக்பரா இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம், மதுரையிலிருந்து எட்டு கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை அடுத்து திருப்பரங்குன்றம் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது. மேலும் மலைக் குன்றின் மீது அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசாவின் தர்காவும் அமைந்துள்ளது.
கோரிப்பாளையம் தர்காவானது கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது. கோர் என்ற பாரசீக வார்த்தைக்கு கல்லறை என்பது பொருள். இங்கு அசரத்து சுல்தான் அலாவுத்தீன் பாதுசா, அசரத்து சுல்தான் சம்சுத்தீன் பாதுசா மற்றும் அசரத்து சுல்தான் அபிபுத்தீன் பாதுசா ஆகியோரின் கல்லறைகள் உள்ளது.
புனித மரியன்னை தேவாலயமானது கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது.
கலாச்சாரம், சுற்றுலா மற்றும் கொண்டாட்டங்கள்
மதுரை நகரமானது இரவிலும் செயல்பாட்டில் இருப்பதால் "தூங்கா நகரம்" என பரவலாக அறியப்படுகிறது. மதுரை அதிக அளவு சுற்றுலா பயணிகளைக் கவரும் நகரங்களுள் ஒன்று. 2010-ஆம் ஆண்டில் மட்டும் 91,00,000 சுற்றுலா பயணிகள் மதுரை நகருக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் 5,24,000 வெளிநாட்டினரும் அடக்கம். மருத்துவச் சுற்றுலாப் பயணிகளும் தற்போது மதுரைக்கு பெருமளவு வருகின்றனர். இந்தோ சரசானிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் சுற்றுலாப் பயணிகளைப் பெருதும் கவர்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தேசிய நினைவுச் சின்னம் ஆகும். இங்கு தமிழக தொல்லியல் துறையால் திருமலை நாயக்கர் மற்றும் மகாலின் வரலாற்றைக் கூறும் ஒலி - ஒளிக் காட்சிகளும் மாலையில் காட்டப்படுகின்றன. இராணி மங்கம்மாளின் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தற்போது காந்தி அருங்காட்சியமாகச் செயல்படுகிறது. இது நாட்டிலுள்ள ஐந்து காந்தி நினைவு அருங்காட்சியகங்களுள் ஒன்று. இங்கு நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வருங்காட்சியத்தை பார்வையிட்டதே தனது நிறவெறிக்கெதிரான அமைதி வழிப் போராட்டத்துக்கு தூண்டுதலாக இருந்தது என மார்டின் லூதர் கிங் குறிப்பிட்டுள்ளார். தல்லாகுளத்தில் அமைந்துள்ள சூழலியல் பூங்கா விளக்கு மற்றும் ஒளியிழைக் கம்பிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்கள் மற்றும் நீர்ச் சுனைகளைக் கொண்டுள்ளது(மாலை நேரத்தில் மட்டும் அனுமதி). தமுக்கம் மைதானம் மற்றும் காந்தி அருங்காட்சியகத்துக்கு இடையே அமைந்துள்ள இராசாசி பூங்காவை விடுமுறை நாட்களில் 5000 பேர் வரையும் வேலை நாட்களில் 2000 – 3000 பேர் வரையும் பார்வையிடுகின்றனர். இது தவிர மதுரை – திண்டுக்கல் சாலையில் பரவை அருகே அதிசயம் பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது. இது தவிர செயற்கை இழை மைதானம், நீச்சல் குளம் கொண்ட எம். ஜி. ஆர். ரேசு கோர்சு மைதானமும் உள்ளது. இங்கு பல்வேறு தேசிய விளையாட்டுப் போட்டிகளும், பன்னாட்டு கபாடி போட்டிகளும் நடைபெறுகின்றன. "ஜில் ஜில் ஜிகர்தண்டா" என்று உள்ளூர் கடைக்காரர்களால் அழைக்கப்படும் சீனப் பாசி கலந்த ஒரு வகைக் குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது.
மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகும் முழுவதிலுமிருந்து பல இலட்சம் சுற்றுலா பயணிகளைக் கவர்கிறது. இதை ஒட்டி திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆவணிமூல விழாவில் சிவனின் அறுபத்து நான்கு திருவிளாயாடல்களும் நடத்தப்படுகின்றன. அது தை மாதம் முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் தெப்பத்திருவிழாவில் அலங்கரிக்கப்பட கடவுள் சிலைகள் தெப்பதில் வைத்து விடப்படுகின்றன.{{sfn|Tourism in Madurai} அதுபோல் பொங்கல் திருநாளை ஒட்டி மதுரை சுற்று வட்டார கிராமங்களில் ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) நடைபெறுகிறது. இவை தவிர கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, தெற்குவாசல் புனித மேரி தேவாலயத்தில் கொண்டாடப்படும் கிறித்துமசு விழா போன்றவை நகரின் பிற முக்கியத் திருவிழாக்கள். இது தவிர மதுரையை மையமாகக் கொண்டு பல திரைப்படப் படப்பிடிப்புகளும் நடைபெறுகின்றன.
ஊடகம் மற்றும் பிற சேவைகள்
நகரில் பல்வேறு வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு நிறுவனமான அனைத்திந்திய வானொலி, தனியார் நிறுவனங்களான ரேடியோ சிட்டி ,சூரியன் எப். எம், ரேடியோ மிர்ச்சி, ஹலோ எப். எம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. தினமலர், தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தினமணி, ஆகிய காலை நாளிதழ்களும், மாலை மலர், தமிழ் முரசு போன்ற மாலை நாளிதழ்களும், தி இந்து, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் மதுரையில் பதிப்புகளைக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான நிறுவனங்கள் தொலைக்காட்சி இணைப்பை வழங்குகின்றன.
மதுரை நகரின் மின்சேவையானது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரையானது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மதுரை வட்டாரத்தின் தலைமையிடமாக உள்ளது. மதுரை நகர் மற்றும் புற நகர் பகுதிகள் மதுரை மாநகர மின்பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ளது. இது மேலும் ஆறு துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரில் குடிநீரானது மதுரை மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படுகிறது. 2010–2011 காலகட்டத்தில் 87,091 இணைப்புகளுக்கு 950.6 இலட்சம் இலிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் சுமார் 400 மெட்ரிக் இடன்கள் அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. மழைநீரைச் சேகரிப்பதற்காக சாலையின் ஓரங்களில் மழைநீர் சேகரிப்பு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முதல் முதலில் 1924-ஆம் ஆண்டு பிரிட்டிசு ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்டன. பின் 1959 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் விரிவாக்கப்பட்டன. 2011-ஆம் ஆண்டின் ஜவகர்லால் நேரு தேசிய ஊரக புதுப்பிப்பு திட்டம் மூலம் நகரின் 90 விழுக்காடு பகுதிகள் பாதாள சாக்கடை திட்டத்தில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
மதுரை நகரானது, பி.எஸ்.என்.எல் -இன் மதுரை தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம் (GSM) மற்றும் சிடிஎம்ஏ இணைப்புகளும் மதுரை நகரில் கிடைக்கின்றன். இது தவிர அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் கிடைக்கப் பெறுகிறது. பாரத்து சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் அழைப்பாளர் தெரிவு வகை இணைப்பான நெட்ஒன் இணைப்பும் உள்ளது.
மதுரை நகரில் 2007, டிசம்பர் 17-இல் இருந்து கடவுச் சீட்டு அலுவலகம் இயங்கி வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகியவை இதன் ஆளுகையின் கீழ் உள்ளன. நகரில் தென் மாவட்டங்களில் பெரிய மருத்துவமனையான அரசு இராசாசி மருத்துவமனையும் உள்ளது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய அரசின் சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மாநகரங்களில் இதுவும் ஒன்றாகும். சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 17984கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் மதுரை மாநகரில் பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பணிகள்:
காங்கிரீட் சாலை, மழைநீர் வடிகால், குடிநீர் வசதி, வடிகால், தெருவிளக்கு, வாகன நிறுத்துமிடம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. சீர்மிகு நகர திட்டத்தின் ஒரு அங்கமான "பகுதி அடிப்படையிலான வளர்ச்சி(ABD)" என்பது நெருக்கடியை குறைப்பதும் ஆகும்.
நோக்கம்:
மதுரை சர்வதேச சுற்றுலா நகரமாக திகழ்கின்றது. சுற்றுலாவை மேம்படுத்த இந்த சுற்றுலா முனையமானது, சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் மற்றும் வசதி மையமாகவும் செயல்படுகின்றன. கோவில் திறந்திருக்கும் நேரங்கள், பாரம்பரிய தளங்கள், தங்குமிடம், உணவகங்கள், நகரப் பேருந்து விவரங்கள், நகரங்களுக்கு இடையேயான பயணத் தகவல் போன்றவை தொடர்பான உதவிகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குதல்.
நோக்கம்: சீர்மிகு நகர திட்டத்தின் ஒரு கூறான "பகுதி சார்ந்த வளர்ச்சி" திட்டத்தின் கீழ் 15 வார்டுகளிலுள்ள மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப 35000 வீடுகளுக்கு குடிநீர் வசதி வழங்கப்பட்டது.
நோக்கம்: 44857 வீடுகளிலிருந்து வைகை நதியில் கலக்கும் கழிவுநீரை தடுப்பது.
பிரச்சினைகள்
ஒவ்வொருநாளும் பெருகிவரும் இருசக்கர வாகனங்கள், மகிழுந்துகள் போன்றவற்றின் காரணமாக நகருக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்கள், முறைப்படுத்தப்படாத போக்குவரத்து விதிகள், வைகை ஆற்றில் கலந்துவிடப்படும் பல்வேறு விதமான மாசுபட்ட திட மற்றும் திரவக் கழிவுகள், சாலைகளின் ஓரங்களில் தீயநாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகள் மற்றும் சாக்கடைகள் எனப் பல சவால்களை மதுரை நகரம் எதிர்கொண்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
மதுரை நகர் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சினையாக வைகை ஆறு மாசுபடுவதைக் குறிப்பிடலாம். மதுரை நகரின் முக்கிய சாக்கடைகள், சிறு தொழிற்சாலைகளின் கழிவுநீர் போன்றவை வைகை ஆற்றில் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இது தவிர வைகையின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் குப்பைகளை அதிக அளவில் வைகை ஆற்றுக்குள் கொட்டுவதாலும் ஆறு மாசடைகிறது. இவற்றைப் பற்றி உள்ளூர் நாளிதழ்கள் சுட்டிக்காட்டுவதும், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுப்பதும் மதுரையில் வழமையாக நடக்கும் நிகழ்வுகள்.
வைகையாற்றில் கழிவுகள்
மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர், ஆற்றின் கரையோரம் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் முதலியன வைகை ஆற்றில நேரடியாக கலந்து விடப்படுகின்றன. இவை தவிர இறைச்சிக் கடை கழிவுகள் முதலிய திடக்கழிவுகளும் ஆற்றுக்குள் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு மிக அருகில் பந்தல்குடி கண்மாய் நீர் வைகையாற்றில் கலக்கும் இடம் தற்போது சாக்கடை கலக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே வருடத்தின் பெருவாரியான நாட்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடமும் மாசடைந்து காணப்படுகிறது.
போக்குவரத்து பிரச்சினைகள்
நீண்ட காலத்திற்கு முன்பு வடிவைக்கப்பட்ட நகரின் சில பிரதான சாலைகள் வளர்ந்து வரும் வாகனப் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், காமராஜர் சாலை போன்ற இடங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனை மனதில் வைத்து வழிமொழியப்பட்ட பறக்கும் சாலைகள் திட்டம் இன்னும் திட்ட அளவிலேயே இருக்கின்றது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மதுரை நகருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை.
சென்னையை அடுத்து கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு மெட்ரோ ரயில் போக்குவரத்து மதுரை நகருக்கு கிடைக்குமாயின் தற்போதைய போக்குவரத்துப் பிரச்சினை பெரும்பகுதி குறைக்கப்படும்.
இதனையும் காண்க
புதுமண்டபம்
திருமலை நாயக்கர் அரண்மனை
காந்தி அருங்காட்சியகம்
சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
மதுரை மாவட்ட ஆட்சியர் இணையதளம்
மதுரை மாநகராட்சியின் இணையதளம்
*மதுரை வரலாறு
1945-ஆம் ஆண்டில் மதுரை நகரம், காணொளி
Majestic Madura மதுரை வரலாறு - காணொளி
மதுரைக்கு அருகில் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய வணிக நகரம் காணொளிக் காட்சி
தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
இந்து புனித நகரங்கள்
பண்டைய இந்திய நகரங்கள் |
1996 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88 | யாழ்ப்பாணக் கோட்டை | யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது.
போத்துக்கீசர் காலம்
யாழ்ப்பாண அரசு 1619 இல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு கோட்டையையும் கட்டினர். 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629 இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637 இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம் (போர்த்துக்கேயர் குடியேற்றம்) கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.
ஒல்லாந்தர் காலம்
யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22 இல் கைப்பற்றினர். போர்த்துக்கேயரின் கோட்டையையே ஒல்லாந்ததும் சில ஆண்டுகள் பயன்படுத்தினர். பின்னர் அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள். முதலில் ஐங்கோணக் கோட்டையின் உள் அரண்களையும், பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் வெளிச் சுற்று அரண்களையும் கட்டினர். இக்கோட்டைக்குள் கட்டளைத் தளபதியின் இல்லமும், பிற படை அதிகாரிகளுக்கான இல்லங்களும் இருந்தன. மருத்துவமனை, சிறைச்சாலை என்பன உள்ளிட்ட வேறு பல கட்டடங்களும் இக்கோட்டைக்குள் காணப்பட்டன. இவற்றுடன், கிரேக்கச் சிலுவை வடிவில் அமைந்த தேவாலயம் ஒன்றும் அமைந்திருந்தது.
தற்காலம்
1984–1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன.
படங்கள்
மேலும் பார்க்க
யாழ்ப்பாண அரசு
யாழ்ப்பாண மாவட்டம்
யாழ்ப்பாண நகரம்
யாழ்ப்பாணக் குடாநாடு
யாழ்ப்பாண வரலாறு
மேற்கோள்கள்
யாழ்ப்பாண வரலாறு
யாழ்ப்பாணத்திலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்
யாழ்ப்பாணத்திலுள்ள கோட்டைகள்
இலங்கையின் தொல்லியற்களங்கள்
இலங்கையில் உள்ள போர்த்துக்கீசக் கோட்டைகள் |
1997 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%20%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE | பிலிப்பே டி ஒலிவேரா | பிலிப்பே டி ஒலிவேரா 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையிலிருந்த போத்துக்கீசத் தளபதிகளுள் ஒருவர். 1619 இல் இவரின் தலைமையில் வந்த படையினரே யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி அதனைப் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். இதன் பின்னர் இப்பகுதியின் "கப்டன் மேஜரா"க ஒலிவேராவே நியமிக்கப்பட்டார். கடும் போக்குக் கத்தோலிக்கரான இவர், பிரபலமான நல்லூர்க் கந்தன் கோயில் உட்பட, யாழ்ப்பாணத்திலிருந்த பல இந்துக் கோயில்களை இடிப்பித்தார். நல்லூர் கோயில் அழிக்கப்பட்டது தொடர்பாக குவைறோஸ் பாதிரியார் தானெழுதிய நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"பிலிப்பே டி ஒலிவேரா பெப்ரவரி 2 ஆம் திகதி நல்லூருக்குச் சென்று இந்துக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பெரிய கோயிலைத் தரைமட்டமாக்கும்படி ஆணையிட்டான். கோயிலை இடியாது விடுவதற்காக, வேண்டியவனைத்தும் தருவதாகவும், வீடுகள் கட்டித்தருவதாகவும் பலமுறை இந்துக்கள் கேட்டுக்கொண்டது, கோயிலை இடிக்கவேண்டுமென்ற அவனது விருப்பத்தை மேலும் அதிகரித்தது. ஏனெனில் அவன் ஒரு மகத்தான கிறிஸ்தவனாவான்.".
யாழ்ப்பாண அரசின் கீழிருந்த பகுதிகளின் தலைநகரமாக யாழ்ப்பாண நகரத்தை உருவாக்கியவரும் இவரே. சுமார் எட்டு வருடங்கள் கப்டன் மேஜராக யாழ்ப்பாணத்தை நிர்வகித்துவந்த ஒலிவேரா, 1627 ஆம் ஆண்டு மார்ச் 22 இல் தனது 53 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் இறந்தார்.
பிற சமயங்களின்பால் கடுமையாக நடந்து கொண்டாலும், யாழ்ப்பாணத்தில் ஏழைகளுக்கும், விதவைகள் முதலியவர்களுக்கும் பயன்படும்வகையில் "மிசரிக்கோடியா" என்று அழைக்கப்பட்ட வைத்தியசாலையொன்றைத் தன் சொந்தச் செலவிலேயே கட்டிக்கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எல்லோரும் ஒலிவேராமீது அன்பு கொண்டிருந்ததாகவும், அவரை "பிலிப்பே ராஜா" என்றே அழைத்து வந்ததாகவும் குவைறோஸ் பாதிரியார் குறிப்பிடுகின்றார். 1627 பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை உலுக்கிய சூறாவளியின் போது, அவரது வீட்டில் ஒதுங்கிய மக்கள் மீது அவர் காட்டிய அக்கறையையும் அவர்கள் தொடர்பில் அவர் நடந்துகொண்ட விதம் பற்றியும் குவைறோஸ் உயர்வாகப் பேசியுள்ளார்.
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி
1627 இறப்புகள்
போர்த்துக்கேய இலங்கை
17-ஆம் நூற்றாண்டில் இலங்கை
யாழ்ப்பாண அரசு |
1998 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D | சமசுகிருதம் | சமசுகிருதம் (ஆங்கிலம்: Sanskrit), சமற்கிருதம் அல்லது சங்கதம் என்பது இந்தியாவின், மிகப்பழைய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழியையும் பாகத மொழிகளையும் வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இது இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், உத்தராகண்ட மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது.
தற்போது கருநாடகா மாநிலத்தில், சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது. எனினும் இந்து சமயத்தின் நான்கு வேதங்கள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இராமாயணம் மற்றும் மகாபாரதம், புராணங்கள் போன்ற பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள் இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. காளிதாசர் சமசுகிருத மொழியில் பல இலக்கியங்களைப் படைத்தார். பாணினி என்பார் சமசுகிருத மொழி இலக்கணத்தைப் படைத்தார்.
இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். இந்தி, வங்காளி, குசராத்தி, மராத்தி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி, உருது முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது.
தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் வட மொழிச் சொற்கள் அதிகம் இருப்பதைக் காணலாம். எனினும் பல சொற்கள் தமிழ் மொழியில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுவர். சமற்கிருத பாரதி அமைப்பு, பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய வட மொழியை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது.
தமிழ் மொழிக்கு அடுத்து 2015-ஆம் ஆண்டில் சமசுகிருத மொழிக்கு செம்மொழி தகுதி கிடைத்தது.
தொல்காப்பிய தமிழாக்கல் முறை
தொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களிளும் தமிழில் வடமொழி என தமிழாக்க விதிக்கிறது. எனவே சமசுகிருதம் அல்லது சமற்கிருதம் எனும் சொற்கள் கொடுந்தமிழாக கருதப்படுகிறது. தற்கால பயனில் சீனிவாச சருமா இயற்றிய வடமொழி நாடக இலக்கிய வரலாறு, சு. சாத்திரியார் இயற்றிய வடமொழி நூல் வரலாறு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
தமிழ் மொழிக்கு அடுத்து 2015-ஆம் ஆண்டில் சமசுகிருத மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது.
வரலாறு
சமற்கிருதம் என்பதன் பொருள் (அழகு/இலக்கணம்) வடமொழி பிராகிருதத்தின் (பிராகிருதம் = மக்கள் பேச்சு வழக்கில் முதன்மை கொண்டது) செம்மையான மொழிவடிவம் என்று கருதப்படுகின்றது. பிராகிருதம் என்பது மகதி, மகாராட்டிரி, சவுரசேனி, பைசாச்சி முதலிய நான்கு அமைப்புகளுள் அடங்கும் மொழிகளை குறிக்கும். பாளி ஒரு பிராகிருத மொழியாகும். வேதிய வடமொழியிருந்து தோன்றி பிறகு பொ.ஊ.மு. முதலாம் ஆயிரவாண்டில் மக்கள் பேச்சுவழக்கில் திரிந்து வெவ்வேறு மொழிகளாக ஆனவை பிராகிருதம் என்ற பெயர் பெற்றது.
இம் மொழிக்கு பல கட்டங்களில் இலக்கணங்கள் இயற்றப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இதன் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். வேதகால வடமொழி ஈரானின் அவெத்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் உறுதியான பின்னர், இது ஒரு அழகியல் ஒழுங்கமைவுக்கு உட்பட்ட மொழியானதுடன், நாடகம், மருத்துவம், அரசியல், வானியல், கணிதம் முதலியவை சார்ந்த இலக்கியங்களும் உருவாயின.
பல மேம்பட்ட ஐரோப்பிய மொழிகளுடனும், கிரேக்கம், இலத்தீன் முதலிய செம்மொழிகளுடனுமான வடமொழியின் பொது உற்பத்தியை, வடமொழியில் தாய் (மாதர்), தந்தை (பிதர்) என்பவற்றுக்கான சொற்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். எயின்றிச்சு உரோத்து மற்றும் சொகான் ஏருணெட்டு அங்குலெடன் என்பவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஐரோப்பிய வடமொழி ஆராய்ச்சி, வில்லியம் இயோனுசு இந்த மொழிக்குடும்பத்தைக் கண்டுபிடிக்க வித்திட்டதுடன், மொழியியலின் வளர்ச்சியிலும் தலைமையான பங்கு வகித்தது. உண்மையில், மொழியியல், வடமொழிக்கான விதிகளை ஒழுங்கமைக்கும் முயற்சியின்போது, இந்திய இலக்கணவியலாளர்களாலேயே முதலில் வளர்க்கப்பட்டது. பிற்காலத்தில் உலகின் ஏனைய பகுதிகளில் வளர்ந்த மேம்பட்ட மொழியியல், மேற்படி இலக்கணவியலாளர்களுக்குப் பெருமளவு கடமைப்பட்டுள்ளது.
வடமொழியே இந்தோ-ஆரியனின் ஒரு கிளையான இந்தோ-ஈரானியனின் மிக மூத்த உறுப்பு மொழியாகும்.
வேதங்களும், தொன்மையான வடநூல்களும் எழுதப்பட்ட வேதகால வடமொழியே இம்மொழியின் மிகப்பழைய வடிவமாகும். மிகப் பழைய வேதமான இருக்கு வேதம் பொ.ஊ.மு. இரண்டாவது ஆயிரவாண்டின் இடையில் இயற்றப்பட்டது. வேதகால வடிவம் பொ.ஊ.மு. முதலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை வழக்கிலிருந்தது. ஏறத்தாழ இக் காலப்பகுதியில் வடமொழி, சமயம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை தனது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கியது. இக்காலப்பகுதியில் நிகழ்ந்த வடமொழியின் அமைப்புப் பற்றிய ஆய்வுகள் மொழியியலின் தொடக்கத்துக்கு வழி சமைத்தன. இப்பொழுது கிடைக்கும் மிகத் தொன்மையான வடமொழி இலக்கணம் பாணினியின் சு. பொ.ஊ.மு. 500 அட்டாத்தியாயி ("8 அத்தியாய இலக்கணம்"). காப்பிய வடமொழி என்று அழைக்கப்படும் ஒரு வடமொழி வடிவத்தை மகாபாரதம் மற்றும் ஏனைய இந்துக் காப்பியங்களில் காணலாம்.
கீழ் மட்ட வடமொழியே பிராகிருதமாகவும் (ஆரம்ப கால பௌத்த நூல்கள் இம் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன), மேம்பட்ட இந்திய மொழிகளாகவும் வளர்ச்சியடைந்திருக்கக்கூடும். வடமொழிக்கும் தென்னிந்தியாவின் திராவிட மொழிகளுக்கு இடையேயும் கூட இருவழிச் செல்வாக்கு இருந்துள்ளது.
எழுத்து
வரலாற்று நோக்கில் சமசுகிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமி எழுத்துக்கள் அசோகச் சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே கன்னடம் போன்ற எழுத்துக்களும், வடக்கே வங்காளம் மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்களே பரவலாக சமசுகிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன.
சமசுகிருதத் தொடர்பில் எழுத்து அறிமுகப் படுத்தப்பட்டது பிற்காலத்திலே ஆகும். பரம்பரை பரம்பரையாக அறிவு, வாய் மொழி மூலமே கடத்தப்பட்டு வந்தது. எழுத்து நடு கிழக்கிலிருந்து வந்த வணிகர்களூடாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம் என்று இரைசு இடேவிட்டு (Rhys Davids) என்பார் கருதுகின்றார். எனினும், சமசுகிருதம் தொடர்ந்தும் பல காலம் வாய்மூல மொழியாகவே புழங்கி வந்தது. எனினும், ஒலிகள் தொடர்பான வேத தத்துவங்களும், எழுத்திலக்கணமும், இந்துக் குறியீட்டு முறையில் வகிக்கும் பங்கு கவனிக்கத் தக்கதாகும். 51 எழுத்துக்களைக் கொண்ட வருணமாலா என்று அழைக்கப்படும் ஒலிமாலை, காளியின் 51 மண்டையோடுகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
செல்வாக்கு
நவீன இந்தியா
சமசுகிருதத்தின் சொற்றொகுதியையும், இலக்கண அடிப்படையையும் கொண்டு உருவான தற்காலத்து மொழிகள் மீதான அம்மொழியின் தாக்கம் மிகவும் பெரியது. சிறப்பாக, இந்தியச் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில், சமசுகிருதம், இந்து சமய நூல்களின் களஞ்சியமாகவும், வழிபாட்டுக்குரிய மொழியாகவும் போற்றப்படுகின்றது. வழிபாடுகளில் நாட்டார் மற்றும் பிரதேச வழக்காறுகளும் பரவலாகக் காணப்பட்டபோதிலும், பல இந்துக்கள் சமசுகிருத மந்திரங்களை ஓதி வருவதுடன், பெரும்பாலான கோயில்களில் கிரியைகளும் சமசுகிருத மொழியிலேயே இன்றும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பிரதேச மொழிகளான வங்காளி, குசராத்தி, இந்தி முதலியவற்றின், தூய நிலை எனக் கருதப்படும், உயர்நிலை வடிவங்கள் பெருமளவில் சமசுகிருதப் படுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. தற்கால இந்திய மொழிகளில், இந்தி பேச்சு வழக்கில் அரபி மற்றும் பாரசீக மொழிகளின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டிருந்தபோதும், வங்காளி, மராத்தி போன்ற மொழிகள் கூடிய அளவில் சமசுகிருத சொல் மூலங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடலாக கருதப்படும் சன கண மன, என்ற பாடல் பெருமளவில் சமசுகிருதப் படுத்தப்பட்ட வங்காள மொழியின் உயர்நிலை வடிவில் இயற்றப்பட்டது. வந்தே மாதரம் என்ற சுதந்திரப்பாடல் முழுமையாக சமசுகிருதத்தில் இயற்றப்பட்டதாகும். இந்து சமயம் தொடர்பான கல்வியைப் பொறுத்தவரை, சமுதாயத்தின் உயர்மட்டத்திலுள்ள படித்தவர்கள் மத்தியில் சமசுகிருதம் இன்னும் கற்கை மொழியாகப் போற்றப்பட்டது. இருப்பினும் இது தற்போது இறந்து போன மொழியாகவே கருதப்படுகிறது.
சீன மொழியிலும், பண்பாட்டிலும் கூடச் சமசுகிருத மொழியின் தாக்கங்கள் காணப்படுகின்றன. பௌத்த சமயம் சீனாவுக்குப் பரவியபோது சமசுகிருதம் கலந்த பிராகிருத மொழி நூல்களூடாகவே பரவியது. பௌத்த நூல்கள் சீன மொழியில் எழுதப்பட்டபோது, சமசுகிருதச் சொற்களை ஒலிமாற்றம் செய்தே எழுதினர். இதனால் பல சமசுகிருத மொழிச் சொற்கள் சீன மொழியிலும் கலந்தன.
இந்திய மொழிகளல்லாத வேறும் பல மொழிகளிலும் சமசுகிருதச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் தாய் மொழியிலும், மலைய மொழியிலும், சப்பானிய மொழியிலும், திபேத்திய மொழியிலும், பருமிய மொழியிலும் வேறு மொழிகளிலும் பல சமசுகிருதச் சொற்கள் உள்ளன. இந்துக் கடலோடிகளின் வழியாகப் பிலிப்பைன் நாட்டிலும் கூட அவர்களது தகலாகு (Tagalog) மொழியிலும் குரு (ஆசிரியர்) போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன.
ஒலியனியலும் எழுத்து முறைமையும்
சமசுகிருதம் 48 ஒலியன்களைக் கொண்டது (வேதகாலத்தில் 49 ஒலியன்கள் இருந்தன). பெரும்பாலான இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் சமசுகிருதத்தின் அசையெழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். உருது மற்றும் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றின் எழுத்து வடிவங்கள் இதற்கு விதி விலக்காகும் தமிழ் மட்டும் தனித்த மொழியாகும்.
ஒலிகள் அவற்றின் மரபுவழி வரிசைப்படி இங்கே தரப்படுகின்றன: உயிர்கள், வெடிப்பொலிகளும் (stops) மூக்கொலிகளும் (nasals) (வாயின் பின் பகுதியிலிருந்து முன்னோக்கி நகர்பவை), இறுதியாக இடையொலிகளும் (liquids), குழிந்துரசொலிகளும் (sibilants).
(குறிப்பு: நெட்டுயிர்கள், ஒத்த குறில்களிலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டவை. இவற்றுடன் மேலதிகமாக நீண்டொலிக்கும் உயிர்களும் உள்ளன. இவை அழைத்தல், வாழ்த்துதல் போன்ற சந்தர்ப்பங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுகின்றன.
ஒலிபெயர்ப்பு
சமசுகிருதத்தை ஒலிபெயர்ப்பதற்கு இலத்தீன் வரிவடிவங்களைப் பயன்படுத்தும் பல முறைகள் உள்ளன. பெருமளவு பயன்பாட்டிலுள்ளது IAST (International Alphabet of Sanskrit Transliteration) என்னும் அனைத்துலக சமசுகிருத ஒலிபெயர்ப்பு முறை ஆகும். கல்விசார்ந்த தேவைகளுக்கான தரநிலையான இம்முறை, ஒலியடிக் கூறுகளை (diacritical marks) உள்ளடக்கியது ஆகும். கணினிகளில் இம்முறையைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக வேறு முறைகளும் உருவாக்கப்பட்டன. இவற்றுள், ஆர்வட்டு-கியோட்டோ (Harvard-Kyoto), ITRANS என்பனவும் அடங்கும். ITRANS இணையத்தில் பரவலான பயன்பாட்டில் உள்ளது.
உயிரெழுத்துக்கள்
(கிட்டிய தமிழ் ஒலிக் குறியீடுகளுடன்)
अ - அ
आ - ஆ
इ - இ
ई - ஈ
उ - உ
ऊ - ஊ
ऋ "ரி". "ரு" என்பவற்றுக்கு இடையில்
ॠ "ரீ". "ரூ" என்பவற்றுக்கு இடையில்
ऌ லி லு என்பவற்றுக்கு இடையில்
ॡ லீ லூ என்பவற்றுக்கு இடையில்
(Sanskrit recognizes vocalic r (errr) and l (ulll), unlike, say, English)
கூட்டுயிர்கள்
(எளிய உயிரெழுத்துக்களின் சேர்க்கை) (Diphthongs)
ए - ஏ
ऎ - ஐ
ऒ- ஓ
औ - ஔ
உயிரெழுத்துக்கள் மூக்கொலிச் சாயல் (nasalization) பெறுவதுண்டு.
மெய்யெழுத்துக்கள்
சமசுகிருதம், பின்வரும் ஒலிப்பிடங்களில் (places of articulation), அதிர்வில் ஒலி (voiceless), ஃ இணையொலியுடன் கூடிய அதிர்வில் ஒலி (voiceless aspirate), அதிர்வுடை ஒலி (voiced), ஃ இணையொலியுடன் கூடிய அதிர்வுடை ஒலி (voiced aspirate) மற்றும் மூக்குத் தடையொலி (nasal stop) என்பவற்றைக் கொண்டுள்ளது:
மெல்லண்ணவொலி (Velar) (மெல்லண்ண நிலை) (k, kh, g, gh, n as in ing)
அண்ண நிலை ஒலி (Palatal) (வல்லண்ண நிலை) (c, ch, j, jh, ~n)
வளை நாவொலி (Retroflex) (t, th, d, dh, n)
பல்லொலி (Dental) (t, th, d, dh, n)
இதழினவொலி (Labial) (p, ph, b, bh, m)
மேற்கோள்களும் அடிக்குறிகளும்
வெளியிணைப்புகள்
Sanskrit language
Sanskrit Lessons (free online from the Linguistics Research Center at UT Austin)
Samskrita Bharati, organisation supporting the usage of Sanskrit
Sanskrit Documents—Documents in ITX format of Upanishads, Stotras etc.
Sanskrit texts at Sacred Text Archive
Sanskrit Manuscripts in Cambridge Digital Library
சமசுகிருதம்
தொன் மொழிகள்
இந்திய-ஆரிய மொழிகள் |
2000 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D | சிங்கப்பூர் | சிங்கப்பூர் அல்லது சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore, சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) என்பது தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது.
சிங்கப்பூர் தீவை ஜொகூர் நீரிணை, மலேசியாவில் இருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீரிணை இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆன நாடாகும். மிகக் pகுறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. நிலச் சீரமைப்பு மூலம் கூடுதலான நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது. 1819-ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியுடன் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
பொது
1824-இல் பிரித்தானியாவின் நேரடி ஆட்சியினுள் வந்தது. 1826-இல் தென்கிழக்காசியாவின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆனது. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும் 1945-இல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது.
அதன்பிறகு 1963-இல் ஏனைய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளுடன் சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1965 ஆகஸ்ட் 9-இல் மலேசியாவிலிருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது. அன்றிலிருந்து சிங்கப்பூரின் வளம் பெருமளவு விரிவடைந்து நான்கு ஆசியப் புலிகளில் ஒன்றானது.
நாடாளுமன்றக் குடியரசு
சிங்கப்பூர் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையில் ஓரவை நாடாளுமன்றக் குடியரசு ஆட்சியைக் கொண்டுள்ளது. 1959-ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.
கொள்வனவு ஆற்றல் சமநிலையின் அடிப்படையில், சிங்கப்பூரின் ஆள்வீத வருமானம் உலக நாடுகளில் மூன்றாவது நிலையில் உள்ளது. சிங்கப்பூரின் மக்கள்தொகை 5 மில்லியனுக்கும் சற்று மிகுதியாகும். இவர்களில் 2.91 மில்லியன் உள்ளூரில் பிறந்தவர்கள்.
சிங்கப்பூர் வாழ்க்கைத் தரம்
மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். இவர்களுக்கு அடுத்ததாக மலாய், மற்றும் சிங்கப்பூர் தமிழர்கள் உள்ளனர். சிங்கப்பூரின் அலுவல்முறை மொழிகள்: ஆங்கிலம், சீனம், மலாய் மொழி, தமிழ் மொழி ஆகியவையாகும்.
ஆசியான் அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் ஏப்பெக் அமைப்பின் செயலகம் அமைந்துள்ளது. அத்துடன், கூட்டுசேரா இயக்கம், பொதுநலவாய நாடுகள் ஆகிய அமைப்புகளிலும் உறுப்பு நாடாக உள்ளது.
மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச் சிறிய நாடாகும். இருப்பினும் விடுதலைக்குப் பின், அந்த நாட்டில் பல்வேறு பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. சிங்கப்பூர் அரசு தன் உள்கட்டுமானத்தைத் தரப்படுத்திக் கொண்டதால், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
பெயர் காரணம்
சிங்கப்பூர், சிங்கம் + புரம் = சிங்கப்பூர்; அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளைக் கொண்டது. சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய்ச் சொல்லில் இருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்); மற்றும் பூரா (புரம்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது.
மலாய் வரலாற்றின்படி 14-ஆம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் நீல உத்தமன், ஒரு கடும் புயலின் போது இந்தத் தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம்போல ஒரு மிருகத்தைப் பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக ஒரு வரலாற்றுக் கதை உண்டு.
வரலாறு
முந்தைய வரலாறு
சிங்கப்பூரின் காலனித்துவ ஆட்சிக்கு முந்தைய வரலாறு 14-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டு இருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது.
14-ஆம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாகக் காட்சி அளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்றும் மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.
சிங்கப்பூரா
ஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்டது. ஜாவாவில் இருந்த மயாபாகித் பேரரசு, தாய்லாந்தில் இயங்கிய அயூத்தியா அரசு போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன.
தாய்லாந்தின் அயூத்தியா அரசு குறைந்தது ஒரு முறை, துமாசிக் தீவைப் பெரிய அளவில் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்தக் கட்டத்தில் தான், அதாவது 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில், துமாசிக் நகருக்கு சிங்கப்பூரா எனும் புதிய பெயர் சூட்டப்பட்டது.
குடியேற்றவாத ஆட்சி
1819-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் என்பவர் தீபகற்ப மலேசியாவின் பெருநிலப் பகுதியில் தரை இறங்கினார். இந்தப் பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் சார்பில் வணிக நிலையம் ஒன்றை அமைக்க விரும்பினார்.
அந்த வகையில் 1819 பெப்ரவரி மாதம் 6-ஆம் தேதி ஜொகூர் சுல்தானகத்தின் மன்னராக இருந்த சுல்தான் உசேன் ஷா (Hussein Shah of Johor) என்பவருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அந்த ஒப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் வணிக நிலையம் ஒன்றையும்; குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக் கொண்டது. இருப்பினும் ஆகஸ்டு 1824-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் மலாய் ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது. ஆகஸ்டு 1824-இல் சிங்கப்பூர் முழுத் தீவையும் பிரித்தானியா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் பின்னர் சிங்கப்பூர், ஒரு பிரித்தானியக் குடியேற்றநாடு எனும் தகுதியைப் பெற்றது.
நவீன சிங்கப்பூரின் தொடக்கம்
அந்தக் கட்டத்தில், சிங்கப்பூரில் இருந்த இரண்டாம் நிலை அதிகாரியான ஜான் குரோபுர்ட் (John Crawfurd) என்பவரே சிங்கப்பூரைப் பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2-ஆம் தேதி சுல்தான் உசேன் ஷாவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் உசேன் ஷா, சிங்கப்பூர் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்கு வழங்கினார். இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம்.
ராபிள்சின் உதவி அதிகாரியான வில்லியம் பர்குவார் (William Farquhar) சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்லின மக்களின் உள்வருகையையும் ஊக்கப் படுத்தினார். இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற குடியேற்றக் கொள்கையின் காரணமாக ஏற்பட்டது. 1856-ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சி செய்தது.
நகரத் திட்டமிடல் முயற்சி
ஆனால் 1867-ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது. 1869-ஆம் ஆண்டில் சுமார் 100,000 மக்கள் சிங்கப்பூர் தீவில் வாழ்ந்தனர். சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி என்பது ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.
சிங்கப்பூர் ஆற்றுப் பகுதி, பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலைகள் செய்து வந்தனர். மலாய் மக்கள்கள் பெரும்பாலும் மீனவர்களாகவும், கடலோடிகளாகவும் இருந்தனர்.
கெனிங் மலைக் கோட்டை
அராபிய வணிகரும், அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவே இருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர்கள் கெனிங் மலைக் கோட்டைப் பகுதியிலும் (Fort Canning Hill), ஆற்றின் மேல் பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஐரோப்பியரைப் போலவே இந்தியர்களும் தீவின் உட்பகுதியிலேயே குடியேறினர்.
அந்த இடம் தற்சமயம், சின்ன இந்தியா (Little India) என்று அழைக்கப்படுகிறது. 1960-களில் பெரும் அளவிலான மீள்குடியெற்ற நடவடிக்கைகள் தான் இப்போது அறியப்படுகிறது. தவிர, அக்காலத்தின் நாட்டுப்புறத் தனியார் குடியேற்றங்கள்பற்றி மிகக் குறைவாகவே தெரிய வருகிறது.
உலகப்போர்
பினாங்கு, மலாக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் நீரிணைக் குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பாகமாக இருந்தது. சப்பானியருடைய எழுச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வேகமாகத் தமது படைகளைப் பெருக்கி வருவதைப் பிரித்தானியா அறிந்திருந்தது. தென்கிழக்காசியாவில் இருந்த தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகச் சிங்கப்பூரின் வட முனையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்குப் பிரித்தானியா முடிவு செய்திருந்தது.
ஆனால் ஜெர்மனியுடன் ஏற்பட்ட போரினால் போர்க் கப்பல்களையும், தளவாடங்களையும் ஐரோப்பாவுக்குக் கொண்டு வரவேண்டி இருந்ததனால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியப் படைகள் (ஜப்பானியப் படைகள்) மலாயாவைக் கைப்பற்றிக் கொண்டன.
தோமோயுகி யமாசிதா
ஜப்பானியப் படைகள் சிங்கப்பூரைத் தாக்கியபோது, சிங்கப்பூர் பிரித்தானிய அரசாங்கம், பெரும்பாலான தம் படைகளை ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டுக் குறைந்த படைபலத்துடன் இருந்தது. அதனால் பிரித்தானியர் 6 நாட்களில் தோல்வி அடைந்தது.
அத்துடன், புகமுடியாத கோட்டை என்று சொல்லப்பட்ட சிங்கப்பூரையும் 1942 பெப்ரவரி 15-ஆம் தேதி சப்பானியத் தளபதி தோமோயுகி யமாசிதாவிடம் (Tomoyuki Yamashita) ஒப்படைத்துச் சரண் அடைந்தது. இந்தத் தோல்வியை "பெரும் இழப்பு" என்றும் "பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய சரணாகதி" என்றும் அப்போதைய பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் கடற்படைத் தளத்தைச் சப்பானியர் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, அந்தத் தளம் சப்பானியரிடம் வீழ்ச்சி அடையும் முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. சிங்கப்பூரின் பெயரை "ஷோவாவின் காலத்தில் பெறப்பட்ட தெற்குத் தீவு" என்னும் சப்பானியத் தொடரைச் சுருக்கி "ஷொனான்டோ" என சப்பானியர் மாற்றினர். உலகப் போரில் சப்பானியர் தோல்வியுற்ற ஒரு மாதத்திற்குப் பின்னர் 1945-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
தற்போதைய சிங்கப்பூர்
1959-ஆம் ஆண்டில் சிங்கப்பூர், பிரித்தானியப் பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசுப் இசாக் (Yusof bin Ishak) என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ (Lee Kuan Yew) பிரதமராகவும் ஆயினர். 1963 ஆகஸ்டில் சிங்கப்பூர் ஒருதலைப் பட்சமாகத் தன்னை முழு விடுதலை பெற்ற நாடாக அறிவித்துக் கொண்டது.
1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலாயா, சபா, சரவாக் ஆகியவற்றுடன் சேர்ந்து மலேசியா எனும் மலேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து, 1965-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஆட்சியில் இருந்த மக்கள் செயல் கட்சிக்கும்; கோலாலம்பூரில் இருந்த மத்திய அரசுக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் ஏற்பட்டன.
மலேசியாவில் இருந்து விலகல்
அவற்றின் காரணமாக, அதே 1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி, மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர், விலகி இறைமையுள்ள ஒரு நாடானது. யூசுப் இசாக் சிங்கப்பூரின் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத் தொடர்ந்தார்.
சிங்கப்பூர் தன்னிறைவு பெற முயன்ற வேளையில், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலக வேண்டிய இக்கட்டான நிலைமை. அந்தக் கட்டத்தில் சிங்கப்பூரில் பெருமளவிலான வேலையில்லாமை, வீடு மனைகள் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை அதிகமாக இருந்தன. இவ்வாறான பெரும் பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டியிருந்தது.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வு
லீ குவான் யூ பிரதமராக இருந்த, 1959 தொடக்கம் 1990 வரையான காலப் பகுதியில் பரவலான வேலையில்லாப் பிரச்சினைகள் சமாளிக்கப்பட்டன. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப் பட்டது. பெருமளவிலான வீடமைப்புத் திட்டங்கள் அமைக்கப்பட்டன.
இந்தக் காலத்திலேயே நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சி அடைந்தன; இன முரண்பாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன; ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசியப் பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தகக் கப்பல்களைக் காணும் துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது.
புவியியல்
சிங்கப்பூர் 63 தீவுகளை உடையது, இதில் பெரிய முதன்மை தீவு சிங்கப்பூர் தீவென அழைக்கப்படுகிறது . மலேசியாவின் ஜொகூர் மாநிலத்துடன் இரண்டு சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள இணைப்பு சாலைக்குப் பெயர் ஜொகூர்-சிங்கப்பூர் காசுவல் வே, மேற்கில் உள்ள இணைப்பு சாலைக்கு டுவசு என்று பெயர். சந்தோசா, புளாவ் மேகோங்ர புளாவ் யுபின், ஜூராங் தீவு ஆகியவை மற்ற குறிப்பிடதக்க தீவுகள் ஆகும்.
கடலிலிருந்து நிலத்தை மீட்கும் திட்டம் செயலில் உள்ளது. இதன் காரணமாக 1960ல் 581.5 ச. கிமீ (224.5 சதுர மைல்) இருந்த நிலப்பரப்பு தற்போது் 704 ச.கிமீ (272 சதுர மைல்) ஆக உள்ளது. 2030ம் ஆண்டில் மேலும் 100 ச. கிமீ நிலம் மீட்கப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது . சில நிலமீட்பு திட்டங்களில் சிறிய தீவுகள் ஒன்றிணைக்கப்பட்டு பெரிய தீவு உருவாக்கப்படுகின்றன. நகரமயமாக்கல் பெரும்பாலான முதன்மை மழைக்காடுகளை அழித்துவிட்டாலும் 5% நிலமானது இயற்கை காடுகளாகப் பாதுகாக்கப்படுகிறது . புகிட் திமா என்பது குறிப்பிடத்தகுந்த அழிக்கப்படாத காடாகும்.
சிங்கப்பூர் அயனமண்டல தட்பவெப்பநிலை உள்ள நாடாகும். ஆண்டு முழுவதும் வெப்பநிலையில் பெரிய மாறுதல்கள் இருக்காது. அதிகளவு ஈரப்பதம், மழைப்பொழிவு இருக்கும். இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதால் இங்கு வானம் மங்கலாக மூட்டத்துடன் காணப்படும்.
பொருளாதாரம்
விடுதலைக்கு முன்பு இப்பகுதியிலிருந்த பிரித்தானிய குடியிருப்புக்களின் தலைநகராகச் சிங்கப்பூர் விளங்கியது. பிரித்தானியரின் முதன்மை கடற்படை தளமாகக் கிழக்காசியாவில் இது விளங்கியது. பிரித்தானியாவின் கடற்படை தளமாக இருப்பதால் சிங்கப்பூரில் உலகின் பெரிய உலர் கப்பல் பராமரிக்கும் களம் இருந்தது. சிங்கப்பூர் கிழக்கின் ஜிப்ரால்ட்டர் என்று அழைக்கப்பட்டது.
சுயஸ் கால்வாய் திறந்ததால் உலக வணிகத்தில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. அதனால் சிங்கப்பூர் வணிகத்தின் முதன்மை வழியாக விளங்கியது. அதன் காரணமாகச் சிங்கப்பூர் துறைமுகம் உலகின் பெரிய துறைமுகமாக மாறியது. விடுதலைக்கு முன்பு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நபர் ஒன்றுக்கு 511 டாலராக இருந்தது. இது அப்போது கிழக்காசியாவில் மூன்றாவது உயர்வான நிலையாகும். விடுதலைக்கு பின்பு அன்னிய நேரடி முதலீடு மற்றும் சிங்கப்பூர் முன்னெடுத்த தொழிற்புரட்சிக்கான வழிகளும் அந்நாட்டை புதிய பொருளாதார நாடாக மாற்றியது.
தற்போதைய சிங்கப்பூர் சந்தை பொருளாதாரத்தின் மூலம் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. சிங்கப்பூரின் பொருளாதாரம் முதலீட்டாளர்க்கு உகந்ததாகவும் வணிக கட்டுப்பாடுகள் குறைந்ததாகவும் உள்ளது. இது உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்று. சிங்கப்பூர் உலகின் 14வது பெரிய ஏற்றுமதியாளராகவும் 15வது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு, மூடிசு, பிட்ச் ஆகிய மூன்று கடன் மதிப்பீடு நிறுவனங்களின் நாணயநிலை மதிப்பீட்டில் ஆசியாவில் சிங்கப்பூர் மட்டுமே உயர் மதிப்பீடு (AAA) பெற்ற நாடாகும்.. ஐக்கிய அமெரிக்கா, நிப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. 1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. இங்குள்ள அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும். சிங்கப்பூரின் தொழிலாளர்களில் கிட்டதட்ட 44 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினராகும். சிங்கப்பூர் பத்தாவது பெரிய வெளிநாட்டு நிதியிருப்பை கொண்டுள்ள நாடாகும். சிங்கப்பூரின் நாணயம் சிங்கப்பூர் வெள்ளியாகும், இதை வெளியிடுவது சிங்கப்பூர் பண அதிகார அமைப்பாகும். சிங்கப்பூர் வெள்ளியை புருனை வெள்ளியுடன் பரிமாற்றிக்கொள்ளலாம் .
சிங்கப்பூர் பொருளாதாராம் ஏற்றுமதியையே பெரிதும் நம்பி உள்ளது. இயந்திர பொறியியல் துறை, உயிரிமருத்துவ அறிவியல் துறை, வேதிப்பொருட்கள், மின்னனு பொருட்கள் போன்றவை ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறிய நாடாக இருந்தபோதிலும் சிங்கப்பூர் பன்முகத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை கொண்டுள்ளது. இந்த உத்தியால் ஏதாவது ஒரு துறையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது நாட்டின் வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் பாதிக்காதென அரசு கருதுகிறது.
இதன் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையும் பெரும்பங்கு வகிக்கிறது. 2007ஆம் ஆண்டு 10.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்தார்கள் . சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு சூதாட்ட இடங்களை 2005ல் அரசு அனுமதித்தது. மருத்துவ சுற்றுலாவின் மையமாகத் தன்னை மேம்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் தீவிரமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 200,000 வெளிநாட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகச் சிங்கப்பூர் வருகிறார்கள். 2012-இல் ஒரு மில்லியன் மருத்துவ சுற்றுலாப் பயணிகளுக்கு மருத்துவம் பார்த்து 3 பில்லியன் அமெரிக்க வெள்ளியை வருமானமாகப் பெற அரசு குறிக்கோள் கொண்டுள்ளது. சிங்கப்பூர் கல்வி மையமாகவும் திகழ்கிறது.
2006ல் 80,000க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் இங்கு படித்தார்கள். 5,000-க்கும் அதிகமான மலேசிய மாணவர்கள் தினமும் ஜொகூர்-சிங்கப்பூர் காசுவல் வே வழியாகத் தினமும் வந்து படித்துச் செல்கிறார்கள். 2009ல் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் 20% வெளிநாட்டு மாணவர்கள் படித்தார்கள். வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலோர் தென்கிழக்காசியா, சீனா, இந்தியாவைச் சார்ந்தவர்கள்
.
சிங்கப்பூர் உலகின் நான்காவது முன்னணி நிதி மையமாகவும், சூதாட்டத்திற்கான இரண்டாவது பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. அதிக பொருட்களைக் கையாளும் உலகின் முன்னணித் துறைமுகங்களில் சிங்கப்பூர் துறைமுகமும் ஒன்றாகும்.
உலக வங்கி வணிகம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் மிகக்குறைந்த இடம் எனச் சிங்கப்பூரைத் தெரிவு செய்துள்ளது இதைச் சிறந்த தளவாடங்கள் மையம் எனவும் வரிசை படுத்தியுள்ளது. இலண்டன், நியு யார்க், டோக்கியோவிற்கு அடுத்து சிங்கப்பூர் நான்காவது பெரிய வெளிநாட்டு நாணய பரிமாற்ற மையமாகும்.
2001ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாகச் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.2% குறைந்தது. இதனால் 2001 டிசம்பரில் பொருளாதார மீளாய்வு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு அது பொருளாதாரத்தைச் சீரமைக்க பல்வேறு கொள்கைகளைப் பரிந்துரைத்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியால் சிங்கப்பூர் மந்தநலையிலிருந்து மீண்டது. 2004-இல் 8.3விழுக்காடு 2005ல் 6.4 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. 2006-இல் 7.9 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது.
2009-இல் 0.8 விழுக்காடு வளர்ச்சி குறைந்து 2010ல் பொருளாதாரம் மீண்டு 14.5 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. சேவைத் துறையிலேயே பெரும்பாலானவர்கள் வேலை செய்கிறார்கள். டிசம்பர் 2010 கணக்குப்படி 3,102,500 பணியிடங்களிலில் 2,151,400 பணியிடங்கள் சேவைத் துறையைச் சார்ந்தது ஆகும். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்கள் 2 விழுக்காடு ஆகும்.
விழுக்காடு கணக்கில் சிங்கப்பூரிலேயே அதிக மில்லியனர்கள் உள்ளனர். ஆறு வீட்டுகளில் ஒரு வீடு நிலம், வணிகம், வீடு, ஆடம்பர பொருட்கள் இல்லாமல் மில்லியன் அமெரிக்க வெள்ளியை கொண்டுள்ளது. சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு மிகவும் அதிகமாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்த நாடாக இருந்த போதிலும் இங்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது தீர்மானிக்கப்படவில்லை. முன்னேற்றமடைந்த நாடுகளில் இங்கு ஊதிய ஏற்றத்தாழ்வு மிக அதிகம்..
பண்பாடு
சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய் மக்கள், தமிழர், சீனர், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. சிங்கப்பூரின் வெற்றிக்கும் அதன் தனித்துவத்துக்கும் சமய, இன நல்லுறவு அரசாங்கத்தில் முக்கிய காரணமாக அதன் சமய, இன நல்லுறவுக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டின் மொத்தச் மக்கள்தொகையில் 42 விழுக்காடு வெளிநாட்டினராக உள்ளனர். அவர்கள் சிங்கப்பூரின் கலாசாரத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றனர்.
விளையாட்டும் பொழுதுபோக்கும்
பிரபலமான விளையாட்டுக்களாகக் கால்பந்து, கூடைப்பந்து, துடுப்பாட்டம், நீச்சல், படகோட்டம், மேசைப்பந்து, பூப்பந்து என்பன காணப்படுகின்றன. பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் பொது நீச்சல் குளங்கள், வெளிப்புற கூடைப்பந்தாட்ட திடல்கள், உள்ளரங்க விளையாட்டு வளாகங்கள் போன்ற வசதிகளை அருகில் கொண்ட பொது குடியிருப்பு பகுதிகளில் வாழ்கின்றனர். தண்ணீர் விளையாட்டுக்களான படகோட்டம், கயாகிங், நீர் சறுக்கு போன்றவை பிரபலமாக உள்ளன. இசுகூபா டைவிங் மற்றொரு பிரபலமான உற்சாக விளையாட்டாக இருக்கிறது.
1994-இல் உருவாக்கப்பட்ட சிங்கப்பூர் கால்பந்து லீக்,தற்போது வெளிநாட்டு அணிகள் உட்பட 12 கழகங்களைக் கொண்டுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய தேசிய கூடைப்பந்து லீக் எனப்படும் சிங்கப்பூர் சிலிங்கர்சு அக்டோபர் 2009-இல் நிறுவப்பட்ட ஆசியான் கூடைப்பந்து லீக்கில் உள்ள தொடக்க அணிகளில் ஒன்றாகும்.
ஊடகம்
ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சியும், வானொலியும், செய்தித்தாள்களும் உள்ளன. வசந்தம் என்பது தமிழ் தொலைக்காட்சியாகும். ஒலி என்பது தமிழ் வானொலி, தமிழ்முரசு என்பது செய்திதாள் ஆகும். மீடியாகார்ப் என்ற நிறுவனம் பெரும்பாலான தொலைக்காட்சி, வானொலி நிலையங்களை நடத்துகிறது. இது அரசு முதலீட்டு அமைப்புக்குச் சொந்தமானதாகும். சிங்கப்பூர் பிரசு கோல்டிங்சு என்பது செய்தித்தாள்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகும். தமிழ்முரசை இவ்வமைப்பே நடத்துகிறது.
சிங்கப்பூரில் ஊடக சுதந்திரம் குறைவு. சிங்கப்பூரில் 3.4 மில்லியன் இணைய பயனாளிகள் உள்ளனர். இது உலகளவில் அதிகமாகும். இணையத்திற்கு அதிக கட்டுப்பாடுகளை அரசு விதிக்கவில்லை. சில நூறு (பெரும்பாலும் ஆபாச தளங்கள்) இணைய தளங்களைத் தடை செய்துள்ளது. இத்தடை வீட்டு இணைப்புகளுக்கு மட்டுமே; அலுவலக இணைய இணைப்புகளுக்குத் தடை இல்லை.
மக்கள் தொகையியல்
மக்கள்
2011ம் ஆண்டின்படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.18 மில்லியன் ஆகும். இதில் 3.25 மில்லியன்(64%) மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள். மேலும் உலகளவில் ஒரு நாட்டின் சனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் 6ம் இடத்தை வகிக்கிறது. இவர்கள் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர். 2009 கணக்கெடுப்பின்படி சீனர்கள் 74.2%மாகவும், மலாயர் 13.4%மாகவும், இந்தியர் 9.2%மாகவும் உள்ளனர்.
2010ம் ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூர் மக்கள் தங்களை ஏதாவது ஒரு இனத்தை சார்ந்தவர்களாகத் தான் குறிப்பிடமுடியும். இயல்பாகத் தந்தையின் இனத்தையே மகன் அல்லது மகள் சார்ந்ததாக அரசு பதிவேட்டில் குறிப்பிடப்படும். இதனால் அரசு கணக்கின் படி பல்லின கலப்பு மக்கள் இல்லை என்றே இருக்கும். 2010க்கு பின்பு இரு இனங்களை சார்ந்தவர் எனப் பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது.
1000 மக்களுக்கு 1400 அலைபேசிகள் உள்ளன. நிலப்பற்றாக்குறையால் அரசு நிதியுதவி பெற்ற, அடுக்கு மாடி வீட்டு மனைகளை வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மக்களுக்கு வழங்குகிறது. குழந்தை பிறப்பு குறைவாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
மதம்
சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 33% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தத்தையும், 18% மக்கள் கிறித்துவத்தையும் பின்பற்றுகின்றனர். எந்த மதமும் சாராதவர்கள் 17% உள்ளனர். 15% மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். இசுலாமை பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் மலாய் மக்கள் ஆவர். டாவோயிசத்தை 11% மக்கள் பின்பற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர். பௌத்த சமயத்தையும் டாவோயிசத்தையும் பெரும்பாலும் சீனர்களே பின்பற்றுகின்றனர். இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்தியர் ஆவர்.
பௌத்தத்தின் மூன்று பிரிவுகளான மகாயாணம், வஜ்ராயணம், தேரவாததிற்கு இங்கு மடங்கள் உண்டு. பெரும்பாலோர் மகாயாணத்தை பின்பற்றுகின்றனர் . சீன மகாயாணமே இங்கு பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது.
மொழி
ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும். சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்களில் சுமார் 100,000 பேர் அல்லது 3 விழுக்காட்டினர் தமிழை தங்கள் சொந்த மொழியாகப் பேசுகின்றனர்.
சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. மலாய் தேசிய மொழியாக இருந்தாலும் நடைமுறையில் ஆங்கிலத்துக்கே அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது, அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா போன்றவற்றில் மலாய் தேசிய மொழியாக உள்ளதால் அண்டை நாடுகளுடன் சச்சரவுகளைத் தவிர்க்க மலாயை தேசிய மொழியாகக் கொண்டுள்ளது . அரசாங்கத்தின் அலுவல்கள், வணிகம், கல்வி போன்றவை ஆங்கிலத்திலேயே நடக்கின்றன.. சிங்கப்பூரின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன, . நீதிமன்றத்தின் மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது. நீதிமன்றத்தில் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழியில் முறையிட வேண்டும் என்றால் மொழிபெயர்ப்பாளர் தேவை.. 20 விழுக்காடு சிங்கப்பூர் மக்களுக்கு ஆங்கிலத்தில் படிக்கவோ எழுதவோ தெரியாது. 2010ம் ஆண்டு கணக்கின்படி 71 விழுக்காடு மக்களுக்கு இரண்டு அல்லது அதற்கு அதிகமான மொழிகள் தெரியும் . சிங்கப்பூரில் பெரும்பான்மை (பாதி மக்கள்) மக்களின் மொழியாக சீனம் உள்ளது.
கல்வி
ஆரம்ப, இரண்டாம், மூன்றாம் நிலைக் கல்விக்கு பெரும்பாலும் அரசு துணைபுரிகிறது. அனைத்து தனியார் மற்றும் பொதுக் கல்வி நிறுவனங்களும் கட்டாயமாகக் கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும். அரசு பள்ளிகளின் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. "தாய் மொழி" தவிர அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதுடன் தேர்வுகளும் ஆங்கிலத்திலேயே நடாத்தப்படுகின்றன. அதே சமயம் பொதுவாக "தாய் மொழி" சர்வதேச அளவில் முதல் மொழியைக் குறித்தாலும்; சிங்கப்பூர் கல்வி முறையில், இது இரண்டாவது மொழியைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது, ஆங்கிலம் முதல் மொழி எனப்படுகிறது. வெளிநாடுகளில் சிலகாலம் இருந்த மாணவர்கள் அல்லது தங்கள் "தாய் மொழியைக்" கற்க சிரமப்படுபவர்களுக்கு ஒரு எளிமையான பாடத்திட்டத்தினை எடுக்க அல்லது பாடத்தைக் கைவிட அனுமதிக்கப்படுகிறது.
கல்வி மூன்று நிலைகளில் நடைபெறுகிறது: அவை "ஆரம்பக் கல்வி", "இடைநிலைக் கல்வி", "பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி" என்பனவாகும். இவற்றில் ஆரம்பக் கல்வி மாத்திரமே கட்டாயமானது, இது மாணவர்களுக்கு நான்கு ஆண்டு அடிப்படைப் பயிற்சியையும் இரு ஆண்டுகள் திசையமைவு பயிற்சியையும் வழங்குகிறது. மொத்தமாக ஆரம்பப் பள்ளி ஆறு ஆண்டுகளாகும். பாடத்திட்டமானது ஆங்கிலம், தாய்மொழி, கணிதம் ஆகியவற்றிலான அறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலம், தாய்மொழி, கணிதம், அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரின் இரண்டு முக்கிய பொதுப் பல்கலைக்கழகங்களான சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் மற்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களினுள் அடங்குகிறன.
போக்குவரத்து
சிங்கப்பூர் சிறிய, மக்கள் அடர்த்திமிக்க நாடாகியதால் இங்கு தனியார் மகிழுந்து வைத்துக்கொள்ளப் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது சாலைகளில் நெரிச்சலை தவிர்க்கவும் மாசுபடுதலை குறைக்கவும் அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். மகிழுந்து வாங்க அதன் சந்தை மதிப்பை விட ஒன்றறை மடங்கு சுங்கத்தீர்வை வாங்குபவர் அரசுக்கு செலுத்த வேண்டும். மேலும் அவர் சிங்கப்பூரின் மகிழுந்து வாங்க உரிய தகுதி சான்றிதழ் (COE) வாங்க வேண்டும். இச்சான்றிதழ் 10 ஆண்டுகளுக்கு மகிழுந்தை சிங்கப்பூரில் ஓட்ட அனுமதிக்கிறது. இங்கு மகிழுந்தின் விலை அதிகம், சிங்கப்பூர்வாசிகளில் 10க்கு ஒருவர் மகிழுந்து வைத்துள்ளார் .
தனிப்பட்ட முறையில் மகிழுந்து வைத்துக்கொள்ளப் பல கட்டுப்பாடுகள் இருப்பதாலும் பேருந்து தொடருந்து வசதி நன்றாக இருப்பதாலும் பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகள் பேருந்து, தொடருந்து, வாடகை மகிழுந்து, மிதிவண்டி மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். எசு.பி.எசு டிரான்சிட் என்ற நிறுவனம் பேருந்துகளை இயக்குகிறது. எசு.எம்.ஆர்.டி கழகம் என்ற நிறுவனம் பேருந்துகளையும் தொடருந்துகளையும் இயக்குகிறது. 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாடகை மகிழுந்துகளை இயக்குகின்றன. 25,000 வாடகை மகிழுந்துகள் சிங்கப்பூரில் உள்ளன. மற்ற முன்னேரிய நாடுகளுடன் ஒப்பிடும் போது வாடகை மகிழுந்துகளின் வாடகை குறைவு, எனவே இவற்றின் பயன்பாடு மக்களிடையே அதிகம் உள்ளது.
சிங்கப்பூரின் சாலைகளின் மொத்த தொலைவு 3,356 கி.மீட்டர், இதில் 161 கிலோ மீட்டர் விரைவுச் சாலைகளாகும். உலகின் முதல் நெரிச்சல் கட்டண திட்டமான சிங்கப்பூர் வட்டார உரிம திட்டம் 1975ல் நடைமுறை படுத்தப்பட்டது. 1998ல் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு மின்னனு கட்டண சாலை என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் மின்னனுமுறையில் சுங்கம் வசுலித்தல், மின்னனு முறையில் உணர்தல், காணொளிமூலம் கண்காணித்தல் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆசியாவில் பன்னாட்டு போக்குவரத்தின் முக்கிய மையமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது. 2005ல் சிங்கப்பூர் துறைமுகம் 1.15 மில்லியன் டன் (கப்பலின் மொத்த சுமையளவு) கையாண்டது. சாங்காய் துறைமுகத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவான சரக்குகளை (423 மில்லியன் டன்) கையாண்டது. கப்பலின் பொருட்களை வேறு கப்பலுக்கு மாற்றும் முதன்மை மையமாகவும் திகழ்கிறது. கப்பல்கள் எரிபொருளை நிரப்பும் மையமாகவும் திகழ்கிறது.
தென்கிழக்காசியாவின் வானூர்தி மையமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது. இலண்டனிலிருந்து சிட்னி செல்லும் வானூர்திகள், பயணிகள் இடைத்தங்கும் இடமாகவும் சிங்கப்பூர் விளங்குகிறது . சிங்கப்பூரில் 8 வானூர்தி நிலையங்கள் உள்ளன. சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் 80 வானூர்தி நிறுவனங்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இவை 68 நாடுகளில் உள்ள 302 நகரங்களை இணைக்கின்றன. சிங்கப்பூர் வான்வழி இந்நாட்டின் தேசிய வானூர்தியாகும்.
இவற்றையும் பார்க்கவும்
சிங்கப்பூர் தமிழர்
சிங்கப்பூர் கோயில்கள்
குறிப்புகள்
மேற்கோள்கள்
Bibliography
Lee Kuan Yew (2000). From Third World To First: The Singapore Story: 1965–2000. New York: HarperCollins.
வெளி இணைப்புகள்
சிங்கப்பூர் அரசின் இணையதளம்
விக்கி ட்ரேவல் - சிங்கப்பூர் வழிகாட்டி
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்
ஆசியத் தலைநகரங்கள்
தீவு நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் |
2001 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | இராகம் | இராகம் () (சமஸ்கிருதம்: रागः, இந்தி: राग) என்பது இந்தியப் பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது.
இராகத்தின் அடிப்படை
"இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்."
இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகணத்தில் - आरोहणम्) கீழே செல்லும்போதும் (அவரோகணத்தில் - अवरोहणम्) எந்த ஸ்வரங்களை (स्वर) வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர பாவங்களை முன்னிலையில் காட்டும் வகையில் இசையமைக்க இராகம் உதவுகிறது.
ஸ்வரங்கள்
ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகணத்திலோ அவரோகணத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர (वक्र) ராகம் என்று அழைக்கப்படும். கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு.
ஒரு ஸ்தாயில் இருக்கும் ஏழு ஸ்வரங்களில் இரண்டாம், மூன்றாம், ஆறாம், ஏழாம் ஆகிய ஸ்வரங்கள் மூன்று வகைப்படலாம் (sharp and flat). நான்காம் ஸ்வரம் இரண்டு வகைப்படும். இந்த வகைகளில் எந்த ஸ்வரத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் இராகம் காட்டும்.
இராகத்திற்கு தகுந்த நேரம்
காலை, நன்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு பொழுதுகளுக்கும் தகுந்த இராகங்கள் உள்ளன. பொழுதிற்கு ஏற்ற ராகம் பாடும் வழக்கம் இந்துஸ்தானி இசையில் (வட இந்திய இசை) பின்பற்றப்படுகிறது, ஆனால் கர்நாடக இசையில் (தென் இந்திய இசை) குறைவாகவே பின்பற்றப்படுகின்றது.
கர்நாடக-இந்துஸ்தானி ஒற்றுமை வேறுபாடு
இந்திய பாரம்பரிய இசையின் இரு பாகங்களான கர்நாடக இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கும் வெவ்வேறு இராகங்கள் இருக்கின்றன.
சில ராகங்கள் இரு இசை முறைகளுக்கும் உரியன. தென் இந்திய இசையிலும் வட இந்திய இசையிலும் ஒரே ஆரோகணம் - அவரோகணத்தைக் கொண்டிருந்தாலும் வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. ஒரு எடுத்துக்காட்டாக கர்னாடக இசையில் "கல்யாணி" என்ற பெயர் கொண்ட இராகமும் இந்துஸ்தானி இசையில் "யமன்" என்ற பெயரைக் கொண்ட ராகமும் ஒரே ஆரோகணம் - அவரோகணத்தைக் கொண்டுள்ளன.
சில ராகங்கள் இரு இசை வழக்குகளில் ஒரே பெயரைக் கொண்டிருந்தாலும் வெவ்வேறு ஸ்வர வரிசைகளைக் கொண்டுள்ளன. ஒரு எடுத்துக்காட்டாக கர்னாடக இசையில் பைரவி ஹிந்துஸ்தானி இசையில் வரும் பைரவியை ஒப்பிடும் போது சில ஸ்வரங்கள் வேறுபாடு தவிர இராக பாவம் வேறு. ஹிந்துஸ்தானி இசையில் வரும் பைரவி கர்னாடக இசையின் தோடிக்கு சமம். கர்னாடக இசையின் பைரவி இந்துஸ்தானி இசையில் வரும் அஸாவாரி தாட்டோடு இணையும்.
இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து "தாட்" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றன. தென் இந்தியாவில் ராகங்கள் 72 மேளாகர்த்தா ராகங்களின் அடிப்படையில் ஜனக - ஜன்னிய ராகங்களாக வகுக்கப்படுகின்றன.
இராகம் அறிவியல் அல்ல
ராகங்கள் பழங்காலத்தில் எழுதப்படாமல், குரு - சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாக கற்பிக்கப்பட்டதால் சில ராகங்கள் வெவ்வேறு இடங்களில் வேறு விதமாக தோன்றலாம்.
இந்திய பாரம்பரிய இசை எப்போதும் இராக அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தாலும், ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இசை எல்லாம் பாரம்பரிய இசை என்பது உண்மை அல்ல. சினிமா பாட்டுகள் பலவும் ராகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன.
ஆரோகனம் அவரோகனம் தவிர வேறு எதுவும் எழுதப்படாது. ராக பாவங்கள் (எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும், எந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் போன்றவை) குரு சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாகக் கற்பிக்கப்படுகின்றன. இராக பாவங்களை வெளிப்படுத்த உதவும் சில பாட்டுகளுக்கு "வர்ணம்" என்ற பெயர் உண்டு. இப்பாட்டுகள் இராகத்தை வர்ணிப்பதே இவற்றின் பெயருக்குக் காரணம்.
உசாத்துணை
வெளியிணைப்புக்கள்
The Raga Guide (sections)
இராகம் தானம் பல்லவி தகவல்
இராகங்கள்
கருநாடக இசை |
2002 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF | தேவநாகரி | தேவநாகரி (Devanagari) என்பது சமசுகிருதம், இந்தி, மராட்டி, காசுமிரி, சிந்தி போன்ற இந்திய மொழிகளையும், நேபாளியையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு எழுத்து முறைமையாகும். தேவநாகரி அபுகிடா என்று அழைக்கப்படும் எழுத்து முறைமை வகையைச் சேர்ந்தது. அபுகிடா என்பது ஒவ்வொரு மெய்யெழுத்தும் உள்ளார்ந்த உயிரெழுத்தொன்றைக் (இங்கே "அ") கொண்டிருக்கும், வேறு குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம் இதனை மாற்றிக்கொள்ள முடியும். தேவநாகரி, கி.மு 500 வாக்கில் புழக்கத்துக்கு வந்த பிராமியின் வாரிசாகக் கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கிழக்கு அரமேய மொழி அரிச்சுவடி போன்ற செமிட்டிக் எழுத்துக்களிலிருந்து உருவானதாகப் பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றார்கள். கி.மு 2600 ஆண்டுகள் வரையாவது பழமையான சிந்து சமவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்ற அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்தும் உண்டு. பிராமிக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு எழுத்துக்களையும் ஏனைய பல இந்திய மொழிகள் பயன்படுத்துகின்றன.
தேவநாகரி என்னும் சொல், கடவுள் என்பதைக் குறிக்கும் சமசுகிருதச் சொல்லான "தேவ" என்பதும், நகரம் என்பதைக் குறிக்கும் "நாகரி" என்பதும் சேர்ந்து உருவானது. இச் சொல், கடவுளின் நகரத்தின் எழுத்து என்ற பொருள்படும்.
தேவநாகரி இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றது. சமசுகிருதத்தில் சொற்கள், மேற்கோடு முறியாமல் இடைவெளியின்றி எழுதப்படுகின்றன. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு. நவீன மொழிகளில் சொற்கள் தனித்தனியாக எழுதப்படுகின்றன. தேவநாகரியில் ஆங்கிலத்திலிருப்பது போல் பெரிய, சிறிய எழுத்து வேறுபாடுகள் கிடையாது.
சமசுகிருத எழுத்துக்கூட்டல் ஒலிப்பியல் முறை ஆனாலும் வரலாற்று மாற்றங்களினால் தேவநாகரியிலெழுதப்படும் நவீன மொழிகள் ஓரளவு மட்டுமே ஒலிப்பியல் முறைமையைக் கொண்டுள்ளது. அதாவது தேவநாகரியில் எழுதப்படும் சொற்கள் ஒரு வழியாக மட்டுமே உச்சரிக்கப்படமுடியுமாயினும், எல்லா உச்சரிப்புக்களையும் அச்சொட்டாக எழுத முடியாது. தேவநாகரி 34 மெய்யெழுத்துக்களையும் (வியஞ்சன்), 12 உயிரெழுத்துக்களையும் (இசுவர்) கொண்டுள்ளது.
பின்வரும் அட்டவணைகளிலுள்ள transliterations பிரபல கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கம் முறையைப் பின்பற்றியுள்ளது. ITRANS குறியீடு தேவநாகரியை ஆங்கிலத்துக்கு மாற்றுவதற்கான ஒரு lossless transliteration முறையாகும். இது Usenet இல் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ITRANS முறையில் தேவநாகரி என்னும் சொல் "devanaagarii" என எழுதப்படும்.
தேவநாகரியின் குறியீடுகள்
தேவநாகரியின் எல்லா உயிர்க் குறிகளும் மெய்யெழுத்துக்களுக்கு மேல் அல்லது கீழ்ப் பகுதியில் அல்லது இடப்பக்கத்தில் சேர்க்கப்படுகின்றன. "இ" உயிர் மட்டும் மெய்யெழுத்துக்கு வலப்பக்கம் சேர்க்கப்படும். "தேவநாகரி உயிரெழுத்துக்கள்" அட்டவணையில் "எழுத்துக்கள்" நிரலில் மெய்யெழுத்துச் சேர்க்கையின்றி வரும் உயிரெழுத்துக் குறியீடுகள் காட்டப்பட்டுள்ளன. "உயிர்க் குறியீடு" நிரல், உயிர் மெய்யெழுத்துக்களுடன் சேரும்போது பயன்படும் குறியீடுகளைக் கொண்டுள்ளது. "'ப' உடன் உயிர்" நிரலில் "ப்" மெய்யுடன் உயிரொலிகள் சேரும்போது வரும் குறியீடுகள் உதாரணமாகத் தரப்பட்டுள்ளன. "யுனிகோடு பெயர்" நிரல், உயிரொலிகளுக்கான யுனிகோடு specification இல் காணப்படும் பெயர்களைக் காட்டுகின்றது. "IPA" நிரல் அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி முறையில் தேவநாகரி எழுத்துக்களுக்கான உச்சரிப்புகளைத் தருகின்றது.
When no vowel is written, 'a' is assumed. To specifically denote the absence of a vowel, a halant (also called virama) is used.
இவற்றுள், ळ இந்தியில் பயன்படுத்தப்படுவதில்லை. மொத்தமும் மராத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
தேவநாகரி எழுத்துக்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன:
யுனிக்கோடில் தேவநாகரி
தேவநாகரியின் யுனிக்கோடு எல்லை U+0900 .. U+097F.
வெளியிணைப்புகள்
IndiX, Indian language support for Linux , a site by the Indian National Centre for Software Technology
Unicode Chart for Devanagari
On history of Indian writing
மேற்கோள்கள்
அபுகிடா எழுத்து முறைமைகள்
எழுத்து முறைகள்
பிராமிய எழுத்துமுறைகள்
இந்தி |
2004 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | மானிடவியல் | மானிடவியல் அல்லது மாந்தவியல் என்பது (Anthropology) மனித இனம் பற்றிய ஆய்வறிதல் ஆகும். இது மனித குலத்தைச் சமூக நிலை, பண்பாட்டு நிலை, உயிரியல் நிலை போன்ற வேறுபட்ட நிலைகளில் கடந்த கால மக்களையும், சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்து விரிந்த இலக்குடையதாக உள்ளது.
இது இரண்டு வகைகளில் முழுதளாவிய (holistic) தன்மை கொண்டது: இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த அனைத்து மனிதர்களையும், மனித இனத்தின் அனைத்து அம்சங்களையும் பற்றிக் கருத்தில் கொள்கின்றது. பண்பாடு பற்றிய எண்ணக்கருவும், மனித இயல்பு பண்பாடே எனும் கருத்தும் (notion); அதாவது எங்களுடைய இனம் உலகத்தை குறியீட்டு முறையில் விளங்கிக் கொள்வதற்கும், சமுதாய ரீதியில் குறியீட்டு முறையில் பயிலவும் பயிற்றுவிக்கவும், அக்குறியீடுகளின் அடிப்படையில் உலகத்தையும் எங்களையும் மாற்றிக் கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளது என்னும் கருத்துமே மானிடவியலின் அடிப்படையாகும்.
ஐக்கிய அமெரிக்காவில், மானிடவியல் பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது:
உடல்சார் மானிடவியல்: இது உயர் பாலூட்டியின் நடத்தைகள், மனித படிமலர்ச்சியியல், குடித்தொகை, மரபியல் என்பவை பற்றி ஆராய்கின்றது; இத் துறை சில சமயங்களில் உயிரியல்சார் மானிடவியல் எனவும் வழங்கப்படுகின்றது.
சமூக, பண்பாட்டு மானிடவியல்: இது சமூக மானிடவியல், பண்பாட்டு மானிடவியல் ஆகிய இரண்டையும் இணைத்து உருவாகியதாகும். இந்த ஆய்வுக் களம் சமூக வலையமைப்பு, சமூக நடத்தைகள், உறவுமுறை வடிவங்கள், அரசியல், நம்பிக்கைகள், உற்பத்தி வடிவங்கள், பரிமாற்றம், நுகர்வு மற்றும் ஏனைய பண்பாட்டு வெளிப்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கும்;
மொழிசார் மானிடவியல்: இது காலம் மற்றும் இடம் சார்ந்த நிலையில் மொழிகளின் வேறுபாடுகள், மொழியின் சமூகப் பயன்பாடு, மொழிப் பண்பாடு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு பற்றி ஆய்வு செய்கின்றது;
தொல்பொருளியல், இது மனித சமூகங்களின் பொருள்சார் எச்சங்களை ஆராய்கிறது. (இது பொதுவாக ஒரு தனியான துறையாகவே கணிக்கப்படுகின்றது).
மானிடவியல் எண்ணக்கருக்கள்
நடத்தை நவீனத்துவம்(Behavioral modernity)
குடியேற்றவாதம்
பண்பாடு
இனத்துவம்
பரிமாற்றம்(Exchange) மற்றும் கொடுத்துவாங்கல் (Reciprocity)
குடும்பம்
பால்சார் வகிபாகம் (Gender role)
உறவுமுறையும் மரபுவழியும்
திருமணம்
அரசியல் முறைமைகள்
இனம்
சமயம்
வாழ்க்கை நிலை
பிறபண்பாட்டுமயமாதல் (Transculturation)
மானிடவியல் துறைகளும் துணைத் துறைகளும்
உயிரியல் மானிடவியல் (அத்துடன்பௌதீக மானிடவியல்)
சட்ட மானிடவியல்
Paleoethnobotany
பண்பாட்டு மானிடவியல் (சமூக மானிடவியல் எனவும் கூறலாம்)
பயன்பாட்டு மானிடவியல்
பண்பாட்டிடை ஆய்வு
இணையவெளி மானிடவியல்
அபிவிருத்தி மானிடவியல்
சூழல் மானிடவியல்
பொருளாதார மானிடவியல்
பழங்கால இசையியல்
மருத்துவ மானிடவியல்
உளவியல் மானிடவியல்
அரசியல் மானிடவியல்
சமய மானிடவியல் (Anthropology of religion)
புறப்பொருள் மானிடவியல் (Public)
காட்சி மானிடவியல்
இனவரைவியல்
மொழியியல்சார் மானிடவியல்
விளக்கமுறை மொழியியல் (Synchronic linguistics) அல்லது விளக்க மொழியியல் (Descriptive linguistics)
வரலாற்றுமுறை மொழியியல் (Diachronic linguistics) அல்லது வரலாற்று மொழியியல் (Historical linguistics)
இனக்குழு மொழியியல் (Ethnolinguistics)
சமூகமொழியியல்
தொல்பொருளியல்
மேற்கோள்கள் |
2006 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D | மகாபாரதம் | மகாபாரதம் (Mahabharata) பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமசுகிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசமாகவும் இதுவரை இயற்றப்பட்ட செய்யுட்களிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படுகிறது. இதன் முழு அளவில் 100,000-க்கும் மேற்பட்ட சுலோகங்களும் (ஒவ்வொரு சுலோகங்களும் இரு வரிகள் கொண்டவையாக) 200,000-க்கும் மேற்பட்ட வரிகளும் உள்ளன. இது இலியட், ஒடிசி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.
நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.
இதனைத் தமிழில் "வில்லிபாரதம்" என்ற இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராசகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.
தோற்றம்
இதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (பொ.ஊ.மு. 5ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பொ.ஊ. நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பருவம் கூறுகிறது இது செயம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது.
இவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம்.
"மகாபாரதம்" என்னும் நூல் தலைப்பு, "பரத வம்சத்தின் பெருங்கதை" என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே "பாரதம்" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது "மகாபாரதம்" என அழைக்கப்பட்டது.
உள்ளடக்கப் பரப்பு
இது, குருச்சேத்திரப் போர் எனப்படும், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையிலான பெரும் போரை மையப்படுத்திய கதையாக இருந்தபோதிலும், இதில், பிரம்மம், ஆன்மா என்பன தொடர்பானமெய்யியல் உள்ளடக்கங்களும் பெருமளவில் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் நால்வகை நோக்கங்கள் தொடர்பான விளக்கங்கள் போன்றவை இவற்றுள் அடக்கம்.
மகாபாரதம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருப்பதாகக் கூறுகிறது. இதன் முதலாம் பர்வம், "இதில் காணப்படுபவை வேறிடங்களிலும் காணப்படலாம். இதில் காணப்படாதவை வேறெங்கும் காணப்படா" என்கிறது. இவ்விதிகாசத்தினுள் அடங்கியுள்ள முக்கிய ஆக்கங்களும் கதைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன.
பகவத் கீதை: பகவத் கீதை, மகாபாரதத்தின் ஆறாவது பர்வமான பீசுமபர்வத்தில் அடங்கியுள்ளது. குருச்சேத்திரப் போரின் தொடக்கத்தில், அப்போர் தேவைதானா என அருச்சுனனுக்கு ஏற்பட்ட ஐயத்தையும், தொய்வையும் நீக்குவதற்காகக் கண்ணன் கூறிய அறிவுரைகளை உள்ளடக்கியது இது.
விதுர நீதி: இது ஐந்தாம் பருவமான உத்யோக பருவத்தில் வருகிறது. திருதராட்டிரனுக்கு, விதுரன் ஓர் இரவு முழுவதும், மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக் கூடாது என்கிற வாழ்வியல் நீதிநெறிகளை விளக்கிக் கூறும் பகுதி இது.
நளன், தமயந்தி கதை: இதிகாசத்தின் மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் காணப்படுகின்றது. இது நளன் என்னும் அரசனும், தமயந்தி என்னும் இளவரசியும் காதலித்து மணம்புரிந்து கொள்வதையும், பின்னர் நளன் சனியால் பிடிக்கப்பட்டு நாடிழந்து பல ஆண்டுகள் அல்லலுற்று மீண்டும் இழந்த அரசுரிமையைப் பெறுவதையும் கூறும் கதை.
இராமாயணத்தின் சுருக்கம்: மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் உள்ளது.
மேலும் தேவயானி – கசன், யயாதி, நகுசன், சாரங்கக் குஞ்சுகளின் கதை, அகத்தியரின் கதை, யவக்ரீவன் கதை, தருமவியாதன் என்னும் கசாப்புக் கடைக்காரனின் கதை, சத்தியவான் சாவித்திரி கதை, துசுயந்தன் – சகுந்தலை கதை, நளாயினி கதை, அரிச்சந்திரன், கந்த பெருமான், பரசுராமர் மற்றும் கலைக்கோட்டு முனிவர் வரலாறுகள் என்று பலவும் ஆரண்யக பருவத்தில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வித வாழ்வியல் நீதி அல்லது நியதியை மையப்படுத்திய அற்புதக் கதைகள் ஆகும். இவை தம்மளவில் தனி ஆக்கங்களாகவும் கருதப்படத் தக்கவை.
வரலாறும் அமைப்பும்
இவ்விதிகாசம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்பை உடையது. இவ்வமைப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால், அருச்சுனனின் கொள்ளுப்பேரனான சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதைசொல்லியான உக்கிரசிரவசு என்பவரால் நைமிசாரண்யம் எனும் காட்டில் வாழும் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது.
மகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளின் காலத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் பல அறிஞர்கள் நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். மகாபாரதம் தொடர்பான மிக முற்பட்ட குறிப்புகள், கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 24,000 அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் தொடக்க வடிவங்களும், கிமு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகளைக் கொண்ட மூல வடிவம் கிமு 9-8 நூற்றாண்டுகளிலேயே தோன்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து.
வியாச பாரதத்தின் அமைப்பு
மொத்தம் 18 பெரும் பருவங்கள் கொண்ட வியாச பாரதம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஆத்ய பஞ்சகம்: ஆதி, சபா, ஆர்ண்ய, விராட மற்றும் உத்யோக ஆகிய 5 பர்வங்கள்
யுத்த பஞ்சகம்: பீசும, துரோண, கர்ண, சல்ய மற்றும் செளப்திக ஆகிய போர் நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்
சாந்தி த்ரையம்: சுதிரீ, சாந்தி மற்றும் அனுசாசன் ஆகிய அமைதி திரும்பியதை விவரிக்கும் 3 பர்வங்கள்
அந்த்ய பஞ்சகம்: அசுவமேதிக, ஆச்ரமவாஸிக, மெளசல, மகாப்ரசுதானிக மற்றும் சுவர்க்காரோகண ஆகிய இறுதி நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்
18 பர்வங்கள்
மகாபாரதத்தின் 18 பர்வங்கள் பின்வருமாறு:
ஆதி பருவம்: 19 துணைப் பருவங்களைக் (1-19) கொண்டது. நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இப் பருவத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பருவம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பருவத்தில் எடுத்தாளப்படுகின்றன.
சபா பருவம்: 20 – 28 வரையான 9 துணைப் பருவங்கள் இதில் உள்ளன. இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராசசூய யாகம் செய்தல் என்பன இப் பருவத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பருவத்தில் அடங்குகின்றன.
ஆரண்யக பருவம்: 29 – 44 வரையான 16 துணைப் பருவங்கள் இதில் அடங்குகின்றன. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்க்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.
விராட பருவம்: 45 – 48 வரையான 4 துணைப் பருவங்களைக் கொண்ட இப் பருவம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.
உத்யோக பருவம்: 49 – 59 வரையான 11 துணைப் பருவங்களைக் கொண்டது இது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் எடுத்தாள்கிறது.
பீசும பருவம்: இது 60 – 64 வரையான 5 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. இப்பருவத்தில் தான் பகவத் கீதை கிருட்டிணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது. பீசுமர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும், அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.
துரோண பருவம்: 65 – 72 வரையான 8 துணைப் பர்வங்களில், துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.
கர்ண பருவம்: 73 ஆம் துணைப் பர்வத்தை மட்டும் கொண்ட இப் பர்வத்தில் கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.
சல்லிய பருவம்: 74 – 77 வரையான 4 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரசுவதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும், போரில் துரியோதனனுக்கும், வீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான்.
சௌப்திக பருவம்: 78 – 80 வரையான 3 துணைப் பர்வங்களை இது அடக்குகிறது. அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கொன்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், கௌரவர் பக்கத்தில் மூவரும் மட்டுமே போரின் இறுதியில் எஞ்சினர்.
சுதிரீ பருவம்: 81 – 85 வரையான 5 துணைப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இப் பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது.
சாந்தி பருவம்: 86 – 88 வரையான மூன்று துணைப் பர்வங்களை அடக்கியது இப் பர்வம். அத்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீசுமர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.
அனுசாசன பருவம்: 89, 90 ஆகிய இரண்டு துணைப் பர்வங்களை அடக்கியது. பீசுமரின் இறுதி அறிவுரைகள்.
அசுவமேத பருவம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும், அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.
ஆசிரமவாசிக பருவம்: 93 – 95 வரையான 3 துணைப் பர்வங்கள் இதில் உள்ளன. திருதராட்டிரன், காந்தாரி, குந்திமற்றும் விதுரன் ஆகியோர் இமயமலையில் வனப்பிரசுதம் ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது.
மௌசல பருவம்: 96 ஆவது துணைப் பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இப் பர்வம் கூறுகிறது.
மகாபிரசுதானிக பருவம்: 97 ஆவது பர்வம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடு முழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது, அங்கே தருமர் தவிர்த்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன.
சுவர்க்க ஆரோகன பருவம்: 98 ஆவது துணைப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்சையும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன.
99, 100 ஆகிய துணைப் பருவங்களை உள்ளடக்கிய அரிவம்ச பருவம் எனப்படும் பருவம் முற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன.
வரலாற்றுச் சூழல்
வரலாற்று நோக்கில் குருச்சேத்திரப் போர் பற்றித் தெளிவு இல்லை. இப்படி ஒரு போர் நிகழ்ந்திருப்பின் அது பொ.ஊ.மு. 10 ஆம் நூற்றாண்டளவில் இரும்புக் காலத்தில் நடைபெற்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பொ.ஊ.மு. 1200–800 காலப்பகுதியில், குரு இராச்சியம் அரசியல் அதிகார மையமாக இருந்திருக்கலாம். இக்காலத்தில் இடம்பெற்ற வம்சம் சார்ந்த பிணக்கு ஒன்று தொடக்ககால பாரதம் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும்.
புராண இலக்கியங்கள் மகாபாரதத்துடன் தொடர்புடைய மரபுகளின் பட்டியல்களைத் தருகின்றன.
தொல்வானியல் முறைகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளின் காலத்தைக் கணிக்க எடுத்த முயற்சிகள் போர்க் காலத்தை கிமு நான்காம் ஆயிரவாண்டு முதல் கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை குறிக்கின்றன.ஆனாலும் இதில் தவறு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது ஆரியர்களின் காலம் கி.மு 1300 க்கு பிறகே வருவதாலும் ,அதற்கு பிறகே நடந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
கதைச் சுருக்கம்
மகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு குலத்தவரால் ஆளப்பட்டு வந்த அத்தினாபுரத்தின் ஆட்சி உரிமை குறித்து பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே உண்டான பிணக்கு ஆகும். திருதராட்டிரன் மற்றும் பாண்டு ஆகிய சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது. கௌரவர்களே இவர்களுள் மூத்த மரபினராக இருந்தாலும், கௌரவர்களில் மூத்தோனாகிய துரியோதனன், பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்தான். இதனால் துரியோதனன், தருமன் இருவருமே ஆட்சியுரிமையை வேண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருச்சேத்திரப் போராக வெடித்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இப்போர் உறவுமுறை, நட்பு போன்றவை தொடர்பான சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தியது.
மகாபாரதம் கர்ணனின் இறப்புடனும் தொடர்ந்த அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதுடனும் நிறைவடைகிறது. அத்துடன் இதன் முடிவுடன் கலியுகம் தொடங்குகிறது.
தமிழில் மகாபாரதம்
பாரதம் பாடிய பெருந்தேவனார் எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் பாரதத்தை தமிழ்ப்படுத்தினார். இவரின் காலமும் உறுதியாகத் தெரியவில்லை. இவர் தமிழ் மொழிப்படுத்திய பாரதமும் கிடைக்கவில்லை.
பின்னர் தொண்டைமண்டலத்து திருமுனைப்பாடி நாட்டு சனியூரைச் சேர்ந்த வில்லிப்புத்தூரார் தனது புரவலரான வக்கபாகை வரபதியாட்கொண்டான் வேண்டிக்கொண்டதற்கு இணங்க பாரதத்தைப் பாடினார். வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் பத்துப் பருவங்களே (மொத்தப்பாடல்கள் 4350) இருக்கின்றன. மகாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போரின் இறுதியுடன் தருமன் முடி சூட்டுதல், பாண்டவர் அரசாட்சி என்று முடித்து விடுகிறார். 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும் மட்டுமே முழுமையாகக் கிடைத்த பிரதிகள்.
இதன் பின்னர் மகாபாரதத்தை வேறு சிலரும் உரைநடையில் மொழியாக்கம் செய்துள்ளனர். அவற்றுள் முழுமையானதாக திருத்தமிகு பதிப்பாகக் கருதப்படுவது, 1903 இலிருந்து இருபத்தைந்து ஆண்டு காலம், ம. வீ. இராமானுசச்சாரியார் தலைமையில் பல வடமொழி தமிழ் மொழி வித்வான்களால் மொழிபெயர்க்கப் பட்ட மகாபாரதப் (கும்பகோண) பதிப்பாகும். 9000 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 1930களிலும் 1950களிலும் 2008இலும் பதிப்பிக்கப் பட்டன.
அதைத் தவிர குறிப்பிடத்தக்கவர் இராசாசி. அவருடையது "வியாசர் விருந்து" குறிப்பிடத் தகுந்தது.
அ. லெ. நடராசன் "வியாசர் அருளிய மகாபாரதம்" என்ற பெயரில் நான்கு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.
பத்திரிக்கையாளர் சோ "மகாபாரதம் பேசுகிறது" என்ற பெயரில் வியாச பாரதத்தை இரு பாகங்களாக எழுதியுள்ளார்.
இராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் வியாசரைத் தழுவி எழுதிய மகாபாரதம் குறிப்பிடத்தகுந்தது. 2013ஆம் ஆண்டு வெளியான பத்தொன்பதாம் பதிப்பு வரை 2,35,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.
ஜெயமோகன் மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் நாவல் வடிவில் எழுதிருக்கிறார். அவரது இணையதளத்தில் 2014 ஜனவரி 1 ஆம் தேதிமுதல் 2020 ஜூலை 16 வரை தொடராகப் பதிவேற்றப்பட்டது. மொத்தம் பத்து தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டு, 26 நாவல்களும் 25000 பக்கங்களும் அது விரிவடைந்து வெளியிடப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
மகாபாரத கதைமாந்தர்களின் பட்டியல்
மகாபாரதத்தில் கிருஷ்ணன்
பகவத் கீதை
மேற்கோற்கள்
மகாபாரதம்
இந்து தொன்மவியல்
இதிகாசங்கள்
சமசுகிருத இலக்கியம்
காப்பியங்கள்
பண்டைய நூல்கள்
கிழக்கின் புனித நூல்கள் |
2007 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | தொல்லியல் | தொல்லியல் (Archaeology) என்பது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும். இவ்வகைப் பொருள்சார் பண்பாட்டுத் தொல்லியல் ஆவணங்களில் கட்டிடக்கலை, தொல்பொருட்கள், தொல்லுயிர் எச்சம், மனித எச்சங்கள், சூழலியல் எச்சங்கள் ஆகியன உள்ளடங்கும். எனவே தொல்லியலை சமூகவியல் கிளைப்புலமாகவும் மாந்தவாழ்வியல் கிளைப்புலமாகவும் (humanities) கருதலாம். ஐரோப்பாவில் தனிப்புலமாகவும் பிறபுலங்கள் சார்ந்த கிளைப்புலமாகவும் பார்க்கப்படுகிறது; வட அமெரிக்காவில், தொல்லியல் மானிடவியலின் கிளைப்புலமாகவே நோக்கப்படுகிறது.
தொல்லியலாளர்கள் கிழக்கு ஆப்பிரிகாவில் உலோம்கிவியில் கிமு 3.3 மில்லியன் ஆண்டுகள் முந்தைய கற்கருவிகளின் கண்டுபிடிப்பு முதல் மிக அண்மைய பத்தாண்டுகள் வரையிலான மாந்தரின முந்து வரலாற்றையும் வரலாற்றுக் காலத்தையும் பயில்கின்றனர்.
தொல்பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.
தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச்சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.
தர்மபுரி/சீங்காடு
முனைவர்: விஜயகுமார்.வெ தொல்லியல் துறை ஆய்வாளர்.எம்,ஏ
தொல்லியலின் வரலாறு
ஃபிளவியோ பியோண்டோ என்ற இத்தாலிய வரலாற்று அறிஞர் பண்டைய உரோமின் தொல்பொருட்களைக் கொண்டு ஒரு முறையான காலக்கணிப்பு முறையை உருவாக்கினார். அதனால் இவர் தொல்லியலைக் கண்டுபிடித்தவர் என்று போற்றப்படுகிறார். சிரியேக்கோ பிசிகோலி என்ற இத்தாலிய வணிகர் கிழக்கு மத்திய கடலில் உள்ள தொல்பொருள்களைக் கொண்டு கமாண்டரியா என்ற ஆறு தொடர் புத்தகங்களை பதினான்காம் நூற்றாண்டில் எழுதினார். அதனால் இவர் தொல்லியலின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
இதன்பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இத்துறை பெரும் வளர்ச்சி அடைந்தது. ஐரோப்பியர்கள் மறைந்து போனதாகக் கருதப்படும் ட்ராய் நிலத்தை பற்றி அறிவதற்கான முயற்சிகளும் சார்லசு டார்வினின் பரிணாமக் கொள்கையும் இத்துறை வளர்ந்ததற்கு முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன.
கல்விசார் துணைத் துறைகள்
காலத்தினால் அல்லது பிரதேசத்தினால் வேறுபடுத்தப்படுகின்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துணைத்துறைகளைக் கீழே காண்க.
ஆப்பிரிக்கத் தொல்லியல்
அமெரிக்கப் பழங்குடி மக்களின் தொல்லியல்
ஆத்திரேலியத் தொல்லியல்
ஐரோப்பியத் தொல்லியல்
தொழில்துறைத் தொல்லியல் தொழிற் புரட்சியின் சின்னங்களான பொருட்களின் பேணுகையில் கவனம் செலுத்துவது.
நிலக்கிடப்புத் தொல்லியல் - நிலவியல் அமைப்புகளில் அகழாய்வுக்கு உட்பட்ட இடத்தின் நில அமைப்புகள் முன்பும் இப்போதும் எப்படி இருந்தன என்று படிக்கின்ற துறை.
கடல்சார் தொல்லியல் கடலில் மூழ்கிய பண்டைய தொல்லியல் எச்சங்களை கண்டறிந்து அந்நாகரிகத்தின் கடல்வணிகம், துறைமுகக் கட்டுமானம் மற்றும் கடல்சார் மக்களின் வாழ்க்கை போன்றவற்றை கண்டறிவதில் கவனம் செலுத்துவது. (எ.கா. இந்தியாவில் பல மாநில அல்லது தேசிய தொல்பொருளியல் அருங்காட்சியகங்கள் இருந்தாலும் தொல்லியல் அருங்காட்சியகம், பூம்புகார் மட்டுமே கடல்சார் தொல்லியல் பொருட்களை ஆவணப்படுத்துவதை கூறலாம்.
மத்திய கிழக்குத் தொல்பொருளியல்
மத்தியகாலத் தொல்பொருளியல் என்பது ரோமருக்குப் பிற்பட்ட, பதினாறாம் நூற்றாண்டு வரையான, ஐரோப்பியத் தொல்பொருளியல் பற்றிய படிப்பாகும்.
மத்திய காலத்துக்குப் பிற்பட்ட தொல்பொருளியல் ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட வரலாற்றை கண்டறிய உதவும் துறை.
நவீன தொல்பொருளியல்
காலக்கணிப்பு முறைகள்
தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்களை பல்வேறு முறைகளில் கிடைக்கும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றைக் காலக்கணிப்புக்கு உட்படுத்துகின்றனர். அவற்றை மூன்றாக வகைப்படுத்தி சார்பற்ற காலக்கணிப்பு முறைகள், சார்புடைய காலக்கணிப்பு முறைகள், சமான காலக்கணிப்பு முறைகள் அவற்றின் கீழ் பல்வேறு முறைகளை உள்ளடக்குகின்றனர்.
சார்பற்ற காலக்கணிப்பு முறைகள்
கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு
கால இடைவெளி அளவியல்
வெப்பக்குழலாய்வுச் காலக்கணிப்பு
ஒளிக்குழல் காலக்கணிப்பு
நாணயவியல்
பொட்டாசியம்-ஆர்கான் காலக்கணிப்பு
ஈய அரிப்புச் காலக்கணிப்பு
அமினோ அமிலக் காலக்கணிப்பு
தொல்பொருளின் மேல் படிந்த எரிமலைக் குழம்புக் கட்டியின் மீது நீரை பாய்ச்சும் முறை
சார்புடைய காலக்கணிப்பு முறைகள்
சார்புடைய காலக்கணிப்பு முறைகளாக அதிகம் அறிய வருவது மண்ணடுக்காய்வாகும். இம்முறையின் படி அகழாய்வில் கிடைக்கும் பொருள் எத்தனை அளவு ஆழத்தில் கிடைக்கின்றன என்பதை பொறுத்து தோண்டி எடுக்கப்பட்ட தொல்பொருளின் காலம் கணிக்கப்படுகிறது.
சமான காலக்கணிப்பு முறைகள்
தொல் புவிகாந்தவியல் - பூமியின் துருவங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மாறிக்கொண்டே இருக்கும். அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் பாலத்தில் உள்ளப்பாறைகளில் அக்காலத்தில் பாறையின் அச்சு எங்கிருந்தது என்பதை கணித்து அதை இப்போது பாறையின் அச்சு இருக்கும் இடத்தோடு தொடர்புப்படுத்தி அதில் வரும் கோண வித்யாசங்களைக் கொண்டு தொல்பொருளின் காலத்தை கணிக்கும் முறை.
எரிமலைச்சாம்பல் காலக்கணிப்பு - அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் பாலத்தில் ஏதேனும் எரிமலைக் குழம்பின் துணுக்குகள் காணப்பட்டால் அத்துணுக்கு எந்த எரிமலையில் வந்தது என்பதை கண்டறிந்து அந்த எரிமலை வெடித்ததன் காலத்தை தொடர்புப்படுத்தி தொல்பொருளின் காலத்தை கணிக்கும் முறை.
உயிர்வளிம ஓரகத் தனிம மண்ணடுக்காய்வு - அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் காலத்தில் இருந்த வானிலையைக் கொண்டு காலம் கணித்தல். (எ.கா. இடைப்பணியூழியின் பாலநிலையில் உள்ள பொருள் 1,15,000 ஆண்டுகள் பழமையானது என கணிக்கப்படும்.
மேலும் காண்க
மானிடவியல்
தொல்லியல்
தொல்மரபியல்
சமய, சடங்குசார் தொல்லியல்
செவ்வியல் தொல்லியல்
தொல்மானிடவியல்
மேற்கோள்கள்
நூல்தொகை
மேலும் படிக்க
Archaeology (magazine)
Lewis Binford - New Perspectives in Archaeology (1968)
Glyn Daniel – A Short History of Archaeology (1991)
Kevin Greene – Introduction to Archaeology (1983)
Thomas Hester, Harry Shafer, and Kenneth L. Feder – Field Methods in Archaeology 7th edition (1997)
Ian Hodder & Scott Hutson – "Reading the Past" 3rd. edition (2003)
International Journal of South American Archaeology - IJSA (magazine)
Internet Archaeology, e-journal
C.U. Larsen - Sites and Monuments (1992)
Adrian Praetzellis – Death by Theory, AltaMira Press (2000).
Colin Renfrew & Paul Bahn – Archaeology: theories, methods and practice, 2nd edition (1996)
Smekalova, T.N.; Voss O.; & Smekalov S.L. (2008). "Magnetic Surveying in Archaeology. More than 10 years of using the Overhauser GSM-19 gradiometer". Wormianum.
David Hurst Thomas – Archaeology, 3rd. edition (1998)
Robert J. Sharer & Wendy Ashmore – Archaeology: Discovering our Past 2nd edition (1993)
Bruce Trigger – "A History of Archaeological Thought" 2nd. edition (2007)
Alison Wylie – Thinking From Things: Essays in the Philosophy of Archaeology'', University of California Press, Berkeley CA, 2002
வெளி இணைப்புகள்
400,000 records of archaeological sites and architecture in England
Archaeolog.org
Archaeology Daily News
Archaeology Times | The top archaeology news from around the world
Council for British Archaeology
Estudio de Museología Rosario
Fasti Online – an online database of archaeological sites
Great Archaeology
Kite Aerial Photographers – Archaeology
NPS Archeology Program: Visit Archeology (Archeology travel guides)
Sri Lanka Archaeology
The Archaeological Institute of America
The Archaeology Channel
The Archaeology Data Service – Open access online archive for UK and global archaeology
The Archaeology Division of the American Anthropological Association
The Canadian Museum of Civilization – Archaeology
The Society for American Archaeology
The World Archaeological Congress
US Forest Service Volunteer program Passport in Time
World Archaeology News – weekly update from BBC Radio archaeologist, Win Scutt
The Italian Archaeological Mission in Uşaklı Höyük
Comprehensive Database of Archaeological Site Reports in Japan
மானிடவியல் |
2011 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | தாமரைக் கோலம் | தாமரைக் கோலம் ஒன்றுடனொன்று 45 பாகை கோணத்தில் வெட்டும் 4 இரட்டைக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கோடுகளின் ஒன்றுவிட்டொரு முனைகளை வளை கோடுகளால் இணைத்து எட்டு இதழ்களுடைய தாமரை வடிவம் வரையப்பட்டுள்ளது.
எளிமையான கோலம்
எளிமையான கோலங்களிலொன்று. இதன் ஒரு வேறுபாடாக ஒற்றைக் கோடுகளை உபயோகித்தும் இத் தாமரை வடிவம் வரையப்படுவதுண்டு.
இந்தியப் பண்பாட்டில் தாமரை
இந்தியப் பண்பாட்டில் தாமரை பன்னெடுங் காலமாகவே முக்கிய இடத்தை வகித்துவருகிறது. இந்து, பௌத்த கலைகளில் தாமரைக்கு முக்கியத்துவம் உண்டு.
சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை
சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை போன்றவற்றில் தாமரை சிறப்பிடம் பெறுகிறது. இதனால் தாமரைக் கோலங்களும் மிகப் பழங்காலத்திலிருந்தே வழக்கிலிருந்து வருவதாகக் கூற முடியும்.
இவற்றையும் பார்க்கவும்
கோலம்
கோலங்கள் - சில மாதிரிகள்
மேற்கோள்
கோலங்கள் |
Subsets and Splits