id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
1236
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பரதநாட்டியம்
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். இக்கலையை நாட்டிய சாஸ்திரம், பரத முனிவர் ஆகியவற்றுடன் தொடர்பு படுத்துதல் என்பவை எல்லாம் பரத நாட்டியத்தை சமசுகிருதமயமாக்க நடந்த ஏற்பாடுகள் என்ற கருத்து உள்ளது. அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகும். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம். இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராசர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாசியா' என்று அழைக்கப்படுகிறது. உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'சதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம், மற்றும் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன. பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார். பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம்,வழுவூர் பி. இராமையா பிள்ளை, திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, தனஞ்சயன், அடையார் இலட்சுமணன், கலாநிதி நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். சொற்பிறப்பியல் 1932 ஆம் ஆண்டில், ஈ. கிருஷ்ண ஐயர் மற்றும் ருக்மிணி தேவி அருண்டேல் ஆகியோர், சதிராட்டம், பரத்தையர் ஆட்டம் அல்லது தேவாராட்டம் என்றும் அழைக்கப்பட்டு வந்த நடனத்திற்கு, "பரதநாட்டியம்" என்று புதிய பெயரை சூட்ட சென்னை மியூசிக் அகதெமியின் ஒரு கூட்டத்தில் முன்மொழிந்தனர். அதன் வழியாக இந்த நடன வடிவத்திற்கு மரியாதை ஏற்படவேண்டும் என்றனர். முக்கியமாக பந்தநல்லூர் நடன பாணியை இப்பெயரில் மாற்றியமைப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். பரதம் என்ற சொல் ஒரு கற்பனையான சொற்றொடராகவும் பார்க்கப்படுகிறது. ப என்பது பாவம் (உணர்வுகள், உணர்ச்சிகள்), ர இராகம் (மெல்லிசை, இசைக் குறிப்புகளுக்கான வடிவமைப்புப் பணி), தம் என்பது தாளம் என்தைக் குறிக்கிறது. "நாட்டியம்" என்பது "நடனம்" என்பதற்கான சமசுகிருத சொல்லாகும். இதன்படி பரதநாட்டியம் என்ற கூட்டுச் சொல்லானது பாவம், ராகம், தாளம் ஆகியவற்றை இணக்கமாக வெளிப்படுத்தும் நடனத்தைக் குறிக்கிறது. வரலாறு பரதநாட்டியத்தின் கோட்பாட்டளவான அடித்தளங்கள் முதலில் தமிழில் கூத்த நூலில் காணப்படுகின்றன, பின்னர் நிகழ்த்துக் கலைகளின் பண்டைய இந்து நூலான நாட்டிய சாஸ்திரத்திலும் குறிப்பிடப்படுகின்றன. பரதநாட்டியத்தைப் பற்றிய நேரடியான வரலாற்றுக் குறிப்புகள் தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) மற்றும் மணிமேகலை (சு. 6ஆம் நூற்றாண்டு) ஆகியவற்றில் காணப்படுகின்றன. பழங்கால நூலான சிலப்பதிகாரம், மாதவி என்ற நடன மாதின் கதையை உள்ளடக்கியது; 113 முதல் 159 வரையிலான செய்யுள்களில் மாதவியின் அரங்கேற்றக் காதை எனப்படும் பகுதியில் நடனப் பயிற்சி முறை விவரிக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள், கிபி 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில், பரதநாட்டியம் கிபி முதல் ஆயிரம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் நன்கு வளர்ந்த ஒரு கலை வடிவத்தைக் காட்டுகிறது. சிதம்பரம் நடராசர் கோயிலின் தெற்கு வாயிலில் (≈12 ஆம் நூற்றாண்டு) நாட்டிய சாஸ்திரத்தில் கரணங்கள் என்று விவரிக்கப்படும் பரதநாட்டியத்தின் 108 தாண்டவங்கள் கல்லில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. சைவக் கோயில்களில் உள்ள பல பழமையான சிவன் சிற்பங்கள் பரதநாட்டிய நடனக் காட்சிகளைப் போலவே உள்ளன. எடுத்துக்காட்டாக, பாதாமி குடைவரைக் கோவில்களின் முதலாம் குகை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்குகையில் தாண்டவ நடனம் ஆடும் சிவனை நடராசாரராக சித்தரிக்கிறது. 5 அடி (1.5 மீ) உயரமுள்ள இந்த சிற்பத்தில் 18 கைகள் உள்ளன, இது வடிவியல் முறையில் அமைக்கப்பட்ட நடன நிலைகளைக் காட்டுகிறது. சிவனின் கரங்கள் பரதநாட்டியத்தில் காணப்படும் முத்திரைகளைக் காட்டுகிறன. தேவதாசிகள், நடன எதிர்ப்பு இயக்கம், காலனித்துவ கால தடை, வீழ்ச்சி சில காலனித்துவ இந்தியவியலாளர்கள் மற்றும் நவீன எழுத்தாளர்கள் பரதநாட்டியம் பண்டைய தேவதாசி பண்பாட்டின் வழித்தோன்றல் என்று வாதிடுகின்றனர். இது கிமு 300 மற்றும் கிபி 300 க்கு இடையில் தோற்றம் பெற்றதாக கூறினர். நவீன அறிஞர்கள் இந்தக் கோட்பாட்டுக்கு ஆதரவாக நேரடி நூல் சான்றோ அல்லது தொல்பொருள் சான்றுகளோ இல்லாததால் கேள்வி எழுப்பியுள்ளனர். வரலாற்று காலச் சிற்பங்கள் மற்றும் நூல்கள் நடன மாதுக்களை விவரிக்கின்றன, முன்னிறுத்துகின்றன. அதே போல் அவர்களுக்காக தளிச்சேரி எனப்படும் கோவில் குடியிருப்புகள் அமைக்கபட்டன. ஆனால் அவர்கள் அவர்களை வேசிகள் மற்றும் விபச்சாரிகள் என்று ஆரம்ப காலனித்துவ இந்தியவியலாளர்களால் கூறப்படவில்லை. தவேஷ் சோனேஜியின் கூற்றுப்படி, ஆய்வுகளை திறணாய்வு செய்கையில், அரசவையணங்கு நடனம் என்பது நவீன சகாப்தத்தின் ஒரு நிகழ்வு என்று கூறுகிறது. இது தமிழ்நாட்டின் நாயக்கர் காலத்தின் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்குகிறது என்கிறார். ஜேம்ஸ் லோக்டெஃபெல்டின் கூற்றுப்படி, பரதநாட்டியம் 19 ஆம் நூற்றாண்டு வரை இந்துக் கோயில்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டிலிலுந்தே கோயில்களுக்கு வெளியே மேடைகளில் நிகழ்த்தப்பட்டது. மேலும், தஞ்சையின் மராத்திய ஆட்சியாளர்கள் பரதநாட்டியத்திற்கு ஆதரவளித்தனர். 18 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய நிறுவனத்தின் வருகையின் தொடர்ச்சியாக, 19 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலத்தில், பல பாரம்பரிய இந்திய நடன வடிவங்கள் ஏளனப்படுத்தபட்டு, ஊக்கமிக்கச் செய்யபட்டன. மேலும் இந்த நிகழ்ச்சிகள் கலைகளை வீழ்ச்சியடையவைத்தன. கிறிஸ்தவ சமயப்பரப்பு குழுவினரும், பிரித்தானிய அதிகாரிகளும் வட இந்தியாவின் "ஆடல் கணிகையர்" (கதக்) மற்றும் தென்னிந்தியாவின் "தேவதாசிகள்" (பரதநாட்டியம்) ஆகியோரை "விலைமகளிர், இழிவான பாலின்ப உணர்வூட்டுபவர்கள்" என இழித்துரைத்தனர். மேலும் கிறிஸ்தவ சமயப்பரப்பு குழுவினர் 1892 இல் "நடன எதிர்ப்பு இயக்கம்" தொடங்கி இந்த நடனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரினர்., நடன எதிர்ப்பு பிரிவினர் இந்த நடன வடிவத்தை விபச்சாரத்திற்கான ஒரு வழி என்று குற்றம் சாட்டினர். 1910 ஆம் ஆண்டில், பிரித்தானியப் பேரரசின் மெட்ராஸ் ராஜதானி கோயில் நடனத்தையும், அதனுடனான இந்துக் கோயில்களில் பரதநாட்டிய பாரம்பரியத்தையும் முற்றிலும் தடை செய்தது. காலனித்துவத்திற்கு பிந்தைய மறுமலர்ச்சி 1910 ஆம் ஆண்டு தடைக்கு பலமான எதிர்ப்பு தோன்றியது. சமூக சீர்திருத்தத்தம் என்ற சாக்குப்போக்கின் கீழ் வரலாற்று சிறப்புமிக்க, செழுமையான நடன பாரம்பரியம் பாதிக்கப்படுவதாக தமிழ் மக்கள் கவலைப்பட்டனர். ஆடல் முறைகள் பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை: நிருத்தம் நிருத்தியம் நாட்டியம் ஆகியவையாகும். அபிநயம் அபிநயம் என்பது கருத்தையோ உணர்வையோ வெளிப்படுத்த உதவுவது. அபிநயத்தின் மூலம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு உணர்த்தலாம். பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும். அவை ஆகார்ய அபிநயம் வாசிக அபிநயம் ஆங்கிக அபிநயம் சாத்விக அபிநயம் என்பனவாகும். பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பர், "கைவழி நயனஞ் செல்லக் கண்வழி மனமும் செல்ல" மனம் வழி பாவமும் பாவ வழி ரசமும் சேர". எனக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிக அபிநயத்தில் அங்கம், உபாங்கம், பிரத்தியாங்கம் என்னும் மூன்று சிறப்பு பிரிவுகள் உள்ளன. இவற்றை திரியாங்கம் எனவும் அழைப்பர். அங்கம் தலை, கைகள், மார்பு, பக்கங்கள், இடை, பாதங்கள் ஆகிய ஆறும் அங்கம் எனப்படும். சிலர் கழுத்தையும் இதில் சேர்ப்பர். பிரத்தியாங்கம் புசங்கள், முன் கைகள், முதுகு, வயிறு, தொடைகள், முழங்கால்கள் ஆகியவற்றை பிரத்தியாங்கம் என்பர். உபாங்கம் உபாங்கம் என்பது கண், விழி, புருவம், கன்னம், மூக்கு, தாடை, பல், நாக்கு, உதடு, முகவாய் ஆகியனவாகும். சாத்விக அபிநயம் உள்ளத்தில் எழும்பும் உணர்வுகள் காரணமாக உடலில் ஏற்படும் மெய்ப்பாடுகளை உடல் மொழிகளால் வெளிப்படுத்துவது சாத்விக அபிநயமாகும். மெய்ப்பாடுகளை நவரசம் என்று சொல்வர். ஒன்பான் சுவை என்றும் சொல்வர். அச்சம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல். இது சாத்விக அபிநயமாகும். எடுத்துக்காட்டாக அச்சமேற்படும் போது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இத்தகு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும். நாட்டிய உருப்படிகள் பரத நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் உண்டு. ஒவ்வொரு உருப்படிக்கும் பெயர், தனித் தன்மை உண்டு. இவ் உருப்படிகள் ஓர் ஒழுங்கு நிரலில் இருக்கும். பரத நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் இறை வணக்கம் பாடுவது வழக்கம். பக்க இசையாளர் இதைப் பாடுவர். முதலில் நிருத்த வகை உருப்படிகள், அதன் பின் நிருத்திய, நாட்டிய வகை உருப்படிகள் தொடரும். உருப்படிகள் அலாரிப்பு சதிசுரம் சப்தம் வர்ணம் பதம் தில்லானா விருத்தம் மங்களம் என்பவையாகும். திரைப்படங்களில் தில்லானா மோகனாம்பாள் மணிச்சித்ரதாழ் சந்திரமுகி (திரைப்படம்) இதனையும் காண்க பரத முனிவர் மேற்கோள்கள் இவற்றையும் பார்க்க தமிழ் நாடக வரலாறு பங்கரா – பஞ்சாப் பகுதியின் உள்ளூர் நடனம் கதக் – வட இந்தியா கதகளி – கேரளம் குச்சிப்புடி – ஆந்திரப் பிரதேசம் மணிப்புரி – மணிப்பூர் மோகினியாட்டம் – கேரளம் ஒடிசி – ஒடிசா நடனம் – கலை வடிவம் வெளி இணைப்புகள் பாரதம் கண்ட பரதம் பேராசிரியை. ஞானாம்பிகை குலேந்திரன், பரதநாட்டியம் Bala (1976) - Satyajit Ray Documentary on T. Balasaraswati பரத நாட்டியமும் அதன் நுட்பங்களும் பரதநாட்டியம் இந்தியப் பண்பாடு நடன வகைகள் இந்திய நடனங்கள்
1237
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF
குச்சிப்புடி
குச்சிப்புடி (தெலுங்கு: కూచిపూడి) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது தென்னிந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிபுடி என்னும் கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது. கருநாடக இசையோடு இவ்வகை நடனம் ஆடப்படுவது வழக்கமாகும். அதோடு மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் மற்றும் தம்புரா ஆகிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படலாம். இது 7ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் புகழ்பெறத்தொடங்கியது. வரலாறு நெடுங்காலமாக தேவதாசிகள் இந்த நாட்டிய நாடகத்தை ஆந்திராவின் கோவில்களில் ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் பிராமணர்களால் இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது. தற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது. இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்த நடனம். நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கோ ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயற்பட்டிருக்கிறது. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம். இசைக்கருவிகள் இந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம், கஞ்சீரா, புல்லாங்குழல், வீணை மற்றும் வயலின் பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும். நடனமுறை குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு. மேற்கோள்கள் ஆந்திரப் பண்பாடு ஆந்திரா நாட்டியம் நடன வகைகள் இந்திய நடனங்கள்
1238
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF
கதகளி
கதகளி () இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதகளி நடனம், கேரள மக்களின் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக்கலை. இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன. பெரும்பானமையாக மலையாள சமூக மக்களால் இந்த நடனம் ஆடப்பட்டு வருகிறது. கதகளி என்றால் கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல் என்று பொருள். ஆட்டக்கதை என்ற மற்றோர் பெயரும் இதற்கு உண்டு. இந்த நாட்டிய நாடகம், பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழிபடும் ஆட்டங்களிலிருந்தும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. முடியேட்டு, பகவதி பாட்டு, காளியாட்டம், தூக்கு முதலான இந்த ஆடல் வகைகள், ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தே, மக்களின் வாழ்கையோடு ஒட்டித் தோன்றியதாகத் தெரிகிறது. கதகளியின் விஷேச அம்சங்களான, பேச்சு இல்லாத அபிநயம், சமயத் தொடர்பு, மந்திரவாதத் தொடர்பு, வினோத வேஷக்கட்டு, சண்டைக் காட்சிகள் எல்லாம் சம்பிரதாயமாக பழங்காலத்திலிருந்தே நிலைத்திருக்கின்றன. முகபாவமும், கையசைவுகளும் இந்த நடனத்தின் முக்கியமான அம்சங்களாகும். ஒப்பனையும், உடையலங்காரமும் இதனை ஒரு தனித்துவமான நடன வடிவமாக்குகின்றன. கதகளி வேசப் பொருத்தம் தேவர்கள், அசுரர்கள் முதலான புராண சம்பந்தமான பாத்திரங்களே பெரும்பாலும் இந்நாடகங்களில் வருகின்றபடியால், பரிச்சயமான தோற்றத்தைத் தவிர்த்து, அமானுஷ்யமான கதாபாத்திரங்களாக வேஷக்கட்டு அமைகிறது. கதகளி நடிகர்கள், பச்சை, கத்தி, தாடி, கரி, மினுக்கு என ஐவகை முக வேஷத்தை ஒட்டி பிரிக்கப் படுகின்றனர். பச்சை வேசம் தேவர்கள், கிருஷ்ணன், இந்திரன் போன்ற கதாபாத்திரங்கள் பச்சை வேஷத்திற்கு உரியவராவர். இத்தகைய பாத்திரங்களுக்கு, அரிசிப் பொடியையும் சுண்ணாம்பையும் கலந்து முகத்திற் 'சுட்டி' அமைப்பார்கள். காதின் மேற்புறத்திலிருந்து தாடை எலும்பைப்பற்றி வில் போல மத்தியில் அகன்றும் நுனியில் குறுகியும் இருக்கும்படி ஒப்பனை செய்வார்கள். சுட்டியின் உட்பாகத்திலும், முகத்திலும், நெற்றியிலும் பச்சைச்சாயம் தீட்டப்படும். இதழிலே சிவப்பு, புருவத்திலே மைக்கறுப்பு, நெற்றியிலே நாமம் முதலியன இடம்பெறும். கதகளி சம்பிரதாய அஹார்ய அபிநயம் வருமாறு: கச்சை, முன்வால், பின்வால், உடுத்துக்கட்டு, உள் குப்பாயம், வெளிக்குப்பாயம், தோள்பூட்டு, தோள்வளை, கடகம், பருத்திக்காய்மணி, கிரீடம், நெற்றிச்சுட்டு, மேல்கட்டு, சாமரம், வெள்ளிநகம் போன்ற ஆடையாபரணாதிகளே கதகளியின் சம்பிரதாய ஆஹார்ய அபிநயமாகும். கத்தி வேசம் மூக்கின் கீழிருந்து கண்வரை கத்தரிபோல, வெள்ளை பூசி, அதிலே ரத்தச் சிவப்புப் பூசினால் மேலே குறித்த பச்சை வேஷத்தில் மாறுதல் ஏற்பட்டு கத்தி வேஷம் ஆகிறது. நெற்றியிலே புருவங்களுக்கிடையிலும், மூக்கு நுனியிலும், வெள்ளை உருண்டைகள் ஒட்டப் பெற்று, முகத்தின் தோற்றமே மாறுபாடடைந்து இராவணன், ஹம்சன், சிசுபாலன் முதலிய அசுரர்களைக் குறிக்கின்றது. கோரப்பற்கள் பயங்கரமான இராக்ஷத தோற்றத்தை அளிக்க வல்லன. தாடி வேசம் சிவப்பு, வெள்ளை, கறுப்பு நிறத் தாடிகளைத் தாங்கியிருப்பதனால் இந்த வகைக்குத் தாடி வேஷம் என்று பெயர். சிவப்புத் தாடி துச்சாதனனைப் போன்ற கொடியவர்களையும், வெள்ளைத்தாடி அனுமன், சுக்கிரீவன் போன்றவர்களையும் குறிக்கிறது. கரி வேசம் கறுப்பு சாயத்திலும், கறுப்பு உடையிலும் தோன்றும் சூர்ப்பனகை போன்ற பாத்திரங்களுக்கு கரி வேஷம் என்று பெயர். மினுக்கு வேசம் உடம்பில் அழகிய நிறமாக இலேசாக வர்ணம் பூசி, மைக்காத் தூளைத் தெளிப்பார்கள். ரிஷிகள், பிராமணர்கள், அரக்கியர் அல்லாத மற்றப் பெண்கள் ஆகியோர்களைக் குறிக்க மினுக்கு வேஷம் அமைக்கப் பெறும். எல்லா வகைப் பாத்திரங்களும் தங்கள் கண்கள் சிவப்பாகத் தோன்றும்படி செய்து கொள்வார்கள். ஆடவர்கள் தங்கள் விரல்களில் நீண்ட வெள்ளி நகங்களைத் தரித்திருப்பார்கள். உடையிலும் அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. ஆடவர்கள் பெரும்பாலோர் கீரீடம் அணிந்திருப்பர். கதகளி நடிப்பு முறை பேச்சில்லாத நாடகமானபடியால் அபிநயம் நாடகத்தின் மொழியாக அமைகிறது. 10 அல்லது 12 வயதிலும் ஆரம்பிக்கப் பெற்று, நடிகர்களுக்குக் கடுமையான பயிற்சியளிக்கப் படுகிறது. கதகளி நடக்க இருப்பதை மத்தளம் முழக்கி அறிவிப்பார்கள். இரவு சுமார் 9 அல்லது 10 மணிக்குத் தொடங்கி இரவு முழுவதும் நாடகம் நடைபெறும். மேடையையும் சபையையும் பிரித்துக் காட்டும் வகையிலே, பெரிய குத்து விளக்கு வைக்கப் பெற்று, அதன் ஒளியிலே நாடகம் நடிக்கப் பெறும். முதலில் மத்தளம், செண்டை வாசிப்பார்கள். இது அரங்குகழி எனப்படும். அதன்பின் தெய்வ வணக்கம். அப்புறம் திரை நோக்கு. இது பக்திரஸமான பாடல். பாடும்போது திரைக்குப் பின்னாலிருந்து கலாசங்களுடன் ஆடும் பாடல். சில வேளைகளில் திரையைப் பதித்து முகத்தை மட்டும் சபையோருக்குக் காட்டுவார்கள். திரை எடுத்ததும் தோடயம், புறப்பாடு போன்ற ஆடல் வகைகள், அதற்கப்புறம் மேளப்பதம். இது கதையின் அறிமுகப்பாடல். இதன் பின்னர் ஆட்டக்கதை. இறுதியில் தனாசி என்னும் மங்களம் ஆகும். கதகளி நடனத்தில் பாடுபவர்களும், மத்தளம் செண்டை வாசிப்பவர்களும் இருப்பார்கள். பிரதான பாடகர் பாடும் ஒவ்வொரு வரியையும் சீடர்கள் திருப்பிப் பாடுவார்கள். இவர்கள் பாடும்போது நடிகர்கள் அபிநயம் பிடிப்பார்கள். பாட்டும், நடனமும் அநேகமுறை நடைபெறும். காதற் காட்சிகளுக்கு பதிஞ்ச ஆட்டம் என்று பெயர். இது மெதுவாக ஒருமணி நேரமாவது நிகழும். கதையிலே, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போராட்டம் நடந்து இறுதியில் தர்மத்தின் வெற்றியையும் அதர்மத்தின் அழிவையும் கதகளி நாடகங்கள் போதிக்கின்றன. வீரம், ரெளத்திரவம் ஆகிய ரஸங்கள் கதகளியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அசுர பாத்திரங்கள் மேடையில் தோன்றும்போது கர்ஜனை செய்வதும் முன்னால் பிடித்திருந்த திரையைப் பிடித்திழுப்பது போன்ற ஆர்ப்பாட்டங்களும் செய்வர். இவ்வாறாக இரவு முழுவதும் நடைபெறும் கதகளி விடியும் தருணத்தில் பக்தி ரஸமான நடனத்துடன் நிறைவுபெறும். மேற்கோள்கள் கேரளப் பண்பாடு கேரளக் கலைகள் கேரள நடனங்கள் நடன வகைகள் இந்திய நடனங்கள்
1240
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
துபாய்
துபாய் அல்லது துபை (Dubai, , ) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் சீர்படுத்துவதற்காகச் வகையில் முதலாவது நகரமாகும். இது அராபியத் தீபகற்பத்தில் அராபிய வளைகுடாவின் (பாரசீக வளைகுடா) தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் அபுதாபி அமீரகத்தை அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது. துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை மட்டுமே நடுவண் அரசின் முக்கிய தீர்மானங்களுக்கு எதிர்வாக்கு (வீட்டோ) அதிகாரம் கொண்டுள்ள அமீரகங்கள் ஆகும். துபாய் மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், முத்துக் குளித்தல் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அபுதாபி பகுதியிலிருந்து, "பனியாஸ்" என்னும் இனக்குழுவினர் அல்-மக்தூம் குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது. துபாய் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டில், துபாய் உலகிலேயே மிக விலையுயர்ந்த 22 நகரமாகவும் மத்திய கிழக்கில் மிகவும் விலையுயர்ந்த நகரமாகவும் இருந்தது. 2014 ஆம் ஆண்டில், ஜெனீவாவுக்குப் பிறகு, உலகின் மிக அதிக விலையுயர்ந்த ஹோட்டல் அறைகளாக துபாயின் ஹோட்டல் அறைகள் மதிப்பிடப்பட்டன. அமெரிக்க உலகளாவிய ஆலோசனை நிறுவனமான மெர்சர் மூலம் மத்திய கிழக்கில் வாழும் சிறந்த இடங்களில் துபாய் மதிப்பிடப்பட்டது. புவியியல் துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாரசீக வளைகுடா கரையோரத்தில் அமைந்துள்ளது மற்றும் இது கடல் மட்டத்திலிருந்து 16 மீற்றர் உயரத்தில் உள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,588 சதுர மைல் ஆகும். துபாய் நேரடியாக அரேபிய பாலைவனத்தில் உள்ளது. துபாயின் நிலப்பரப்பு, துபாய் வனப்பகுதிகளின் தெற்குப் பகுதியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வித்தியாசமாக உள்ளது, இது மணல் பாலைவகை வடிவங்களால் உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் க்வெவர் பாலைவனங்கள் நாட்டின் தெற்குப் பகுதியின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்குள்ள மணல் நொறுங்கிய சிப்பிகள், பவளங்களைக் கொண்டுள்ளதுடன் வெள்ளை நிறத்தில் நல்ல நிலையில் காணப்படுகின்றது. நகரத்தைச் சுற்றியுள்ள மணல் பாலைவனமானது காட்டு புற்கள் மற்றும் அவ்வப்போது பேரீச்சை மரங்களையும் கொண்டுள்ளது. மக்கட்தொகைப் பரம்பல் மக்கட்தொகையைப் பொறுத்தமட்டில் துபாய் மட்டுமன்றி, ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே ஒரு தனித்தன்மை உடையதாகும். இந்நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் வெளிநாட்டினராக உள்ளனர். இருப்பினும் ஆட்சி அதிகாரத்திலும், அரசுப் பணிகளிலும் பிற நாட்டினர் நுழையப் பல தடைகள் உள்ளன. மேலும், இந்நாட்டின் குடிமகனாவதற்கு கடுமையான பல சட்ட திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இந்நாட்டு மக்கள் சிறுபான்மை இனமாகவே இருந்தாலும், நாட்டின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் உள்ளது. துபாய் அமீரகத்தின் மக்கள்தொகை சுமார் 22 லட்சம் ஆகும். மதம் துபாய் மட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே இசுலாமிய மதத்தைப் பின்பற்றும் ஒரு நாடாகும். இந்நாட்டில் வாழும் வெளிநாட்டினர்களில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். இவற்றுள் இசுலாமியர், கிறித்தவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இசுலாமிய நாடாக இருந்த போதும், அங்கு வசிக்கும் மற்ற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவே உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக எல்லா மதத்தவர்களுக்கும் அவர் அவர் விருப்பபடி வணங்குவதற்கு கோயில், கிறித்தவக் கோவில்கள் மற்றும் சீக்கியக் கோயிலும் உள்ளது. துபாய் பொருளாதாரம் 2008 தரவுகளின்படி துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82.11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். துபை ஐக்கிய அரபு அமீரகங்களில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய அமீரகம் ஆகும். அபுதாபியை விட நிலப்பரப்பிலும், எண்ணெய் வளத்திலும் பல மடங்கு சிறிய ஒரு அமீரகம் துபாய். துபாய் அமீரகத்தின் தொடக்க கால வளர்ச்சிக்கு, அதன் எண்ணெய் வளம் காரணமாகவும், போதுமானதாகவும் இருந்தது. ஆனால் துபாயின் எண்ணெய் வளம் அதன் தொடர் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்பதை அந்த அமீரகத்தின் அரசாங்கம் உணர்ந்தே இருந்தது. இதன் காரணமாக, துபாய் அரசு எண்ணெய் சாரா பிற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. வெளிநாட்டு மூலதனத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களின் விளைவாக துபாய் கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக 2005-ல் வெளிநாட்டவர்கள் துபாயில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்தது வெளிநாட்டு முதலீடு பெருக ஒரு முக்கிய காரணம் ஆகும். துபாயின் கட்டுமானத் துறை, 2004 தொடங்கி ஐந்து ஆண்டுகள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, உருசியா, ஈரான், பாகித்தான் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்து வந்த முதலீடுகள் பெரும் காரணமாக அமைந்தது. 2008 ஆண்டு இறுதி வாக்கில் துபையின் கட்டுமானத் துறையும் அதை நம்பி இருந்த துபையின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அளவுக்கு அதிகமாக அதிகரித்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள். காலநிலை துபாய் வெப்ப பாலைவனக் காலநிலையைக் கொண்டது ஆகும். பொதுவாக ஆகஸ்ட் மாதமே அதிகூடிய வெப்பம் நிலவும் மாதம் ஆகும். இவற்றையும் பார்க்கவும் பாம் தீவுகள் பூர்ஜ் அல் அராப் துபை மெட்ரோ புர்ஜ் கலீஃபா கல்ப் நியூஸ் துபாய் நகர சுற்றுலா மேற்கோள்கள் ஐக்கிய அரபு அமீரகம் ஆசிய நகரங்கள்
1244
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
தேவாரம்
தேவாரம் (Tevaram) என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள். பாடலாசிரியர்கள் முதல் இருவரும் பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி அடையத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊரூராகச் சென்று சமயப் பிரச்சாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார். தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர். திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம். பொ.ஊ. 10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார். சுந்தரர் தேவாரம் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள். இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற இருவரான ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை. சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101. தேவாரப் பதிகங்கள் தொகுக்கப்பட்ட முறை பண்முறை: பண் வாரியாகத் திரட்டி ஒன்று முதல் ஏழு திருமுறையாக அடைவு செய்துள்ள முறை முதலாவதாகும். இது “பண்முறை” எனப்படும். தேவார ஆசிரியர் மூவருள் இயலிசைத் தமிழாகிய திருப்பதிகங்களை முதன்முதல் அருளிச் செய்தவர் திருஞானசம்பந்தர் ஆதலின், அவர் அருளிய திருப்பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாகவும், அவர்தம் கெழுதகை நண்பராய் விளங்கிய திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் நான்காம் திருமுறை – ஐந்தாம் திருமுறை – ஆறாந்திருமுறை என மூன்று திருமுறைகளாகவும், இவ்விரு பெருமக்களும் வாழ்ந்த காலப்பகுதியையொட்டிச் சில ஆண்டுகள் பிற்பட்டுத் தோன்றிய நம்பியாரூரர் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறையாகவும் தொகுக்கப்பட்டன. இப்பெருமக்கள் மூவரூள் முறையே ஒவ்வொருவரும் அருளிச் செய்தத் திருப்பதிகங்களில் அமைந்த பண்களை வகைப்படுத்தி ஒவ்வொரு பண்ணுக்கும் உரிய திருப்பதிகங்களையும் ஏழு திருமுறைகளாக வகுத்தெழுதியது பழைய முறையாகும். அடங்கன் முறை திருத்தலங்கள் வாரியாக மூவர் பாடல்களைத் தொகுத்து அடைவு செய்த முறை இரண்டாவதாகும். இது “அடங்கன் முறை” எனப்படும். தலமுறை மூவரில் ஒவ்வொருவர் பதிகங்களையும் தனித்தனியாக வைத்துத் தலங்கள் வாரியாகத் தொகுத்து அடைவு செய்த முறை மூன்றாவதாகும். இது தலமுறை எனப்படும். தலமுறையென்பது, கோயில், திருவேட்களம் முதலாகத் திருப்பதிகக் கோவையிற் குறித்த முறையையொட்டித் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களையெல்லாம் தில்லைப் பெருங்கோயில் முதலாக வரிசைப்படுத்தி அத்தலங்களுக்குரிய தேவாரப் பதிகங்களை முற்குறித்த ஏழு திருமுறைப் பாகுபாட்டிற்கு ஏற்ப முறைபடச் சேர்த்து அமைத்த முறையாகும். பாடியவாறு: பெரியபுராணத்தில் மூவரின் வரலாறுச் சேக்கிழார் கூறிவரும் போது, இன்ன பதிகம் – ஊர் எல்லையில் / இறைவன் திருமுன் / வலம் வரும்போது பாடப்பெற்றது என்று கூறி வருவதை அறியலாம். அதன்படி தேவாரம் பாடப்பெற்ற காலமுறைப்படி ஒரு தொகுப்பு இருந்தது என்று உறுதி செய்யலாம். சோழர் வரலாற்றில் அக்குறிப்பு உள்ளது. அதற்கு “பாடியவாறு” என்று பெயர். தற்கால நடைமுறை தலமுறை, பண்முறை வகைகளில் பண்முறையமைப்பே பழைய ஏட்டுச்சுவடிகளில் இடம் பெற்றுள்ளது. மூவர் தேவாரப்பதிகங்களை ஏழு திருமுறைகளாகப் பகுத்து வழங்கும் திருமுறைப் பகுப்புக்கு அடிப்படையாயமைந்தது இப்பண்முறையமைப்பே எனக் கருதல் பொருந்தும். பண்முறையமைப்பாகிய இதனை ஆதாரமாகக் கொண்டு நோக்கினால்தான் மூவர் திருப்பதிகங்களையும் முதல் ஏழு திருமுறைகளாகப் பகுத்து வழங்கிய நம் முன்னோரது பகுப்பு இனிது விளங்கும். தேவாரத் திருப்பதிகங்களைத் தலமுறையில் அமைத்துப் பயிலும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியதெனவே கருதவேண்டியுள்ளது. மூர்த்தி, தலம், திர்த்தம் என்பவற்றை முறையே கண்டு வழிபடும் விருப்புடைய சிவநேசச்செல்வர்கள், தாம் வழிபட விரும்பிய ஒவ்வொரு தலத்திற்கும் அமைந்த தேவாரத் திருப்பதிகங்கள் முழுவதையும் நாள்தோறும் முறையே பாராயணஞ் செய்தற்கு ஏற்ற வண்ணம் முறைப்படுத்தப்பெற்றதே இத்தலமுறைப் பகுப்பாகும். இப்பகுப்பு தில்லைப்பெருங்கோயிலை முதன்மைத் திருத்தலமாகக் கொண்டு அமைந்திருப்பது தேவார ஆசிரியர் மூவர் திருவுள்ளத்திற்கும் ஏற்புடையதாகும். இது சிவத்தலங்களெல்லாவற்றிற்கும் முதலில் வைத்துப் போற்றத்தகும் சிறப்புடைய திருத்தலம் என்ற நோக்கத்துடன் தில்லைப் பெருங்கோயிலைப் பற்றி அம் மூவரும் உளமுவந்து பாடிய திருப்பாடற் குறிப்புகளால் நன்கு புலனாகும். இக்குறிப்பினை விளக்கும் முறையில் கோயில், திருவேட்களம், நெல்வாயில், கழிப்பாலை எனத் தொடங்கும் திருப்பதிகக் கோவை அமைந்திருத்தல் அறியத்தக்கதாகும். மேற்குறித்த பண்முறை, தலமுறை என்னும் இருவகை முறைகளுள் தேவார ஆசிரியர் காலந்தொட்டு இடையீடின்றி வழங்கிவருவதும் சைவத்திருமுறைகள் பன்னிர்ண்டு என்ற பகுப்பிற்கு நிலைக்களமாக அமைந்ததும் பண்முறையே யாதலின் அம்முறையினைப் பின்பற்றித் தேவாரத் திருப்பதிகங்களின் அமைப்பினை நோக்குதல் ஏற்புடையதாகும். தேவாரப் பாடல்கள் எண்ணிக்கை பண் அமைத்தவர் இப்பொழுதுள்ளபடி தேவாரப் பாடல்களுக்குப் பண் அமைத்துக் கொடுத்தவர் இராசேந்திர பட்டணத்திலிருந்த ஒரு பெண்மணி என்று உ.வே.சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார். தேவார காலத்து இசைக் கருவிகள் 1. யாழ் 2. வீணை 3. குழல் 4 கின்னரி 5, கொக்கரி 6. சச்சரி 7. தக்கை 8. முழவம் 9. மொந்தை 10.மிருதங்கம் 11. மத்தளம் 12. தமருகம் 13. துந்துபி 14 குடமுழா 15. தத்தலகம் 16. முரசம் 17. உடுக்கை 18. தாளம் 19 துடி 20. கொடுகொட்டி முதலியன. இவற்றுள், பல பண்டைக்கால முதலே தமிழகத்தில் இருந்தவை. தேவாரத்தில் காணப்படும் பெரும்பாலான பண்கள் தமிழ்நாட்டிற்கே உரியவை. அவை பண்டை இசை நூல்களில் (அழிந்துபோன நூல்களில்) கூறப்பட்ட இசை நுணுக்கம் பொருந்தியவை. அப் பண்களில் சில சிலப்பதிகாரத்துட் காணலாம். பல்லவப் பேரரசர் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்ப்பண்களும் தமிழ் இசையும் களிநடம் புரிந்தன என்பதற்குத் திருமுறைகளே ஏற்ற சான்றாகும். இவற்றையும் காண்க தேவாரத் திருத்தலங்கள் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல் திருவாசகத் திருத்தலங்கள் தேவார வைப்புத் தலங்கள் திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள் திருவிசைப்பாத் திருத்தலங்கள் தேவாரப் பதிகங்கள் தொகுக்கப்பட்ட முறை மேற்கோள்கள் புற இணைப்புகள் பன்னிரு திருமுறைகள் - பாட்டும் பொருளும் தேவாரம் பாடல் பெற்ற தலம் தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயங்கள் - தினமலர் கோயில்கள் சைவத் திருமுறைகள் கருநாடக இசை
1245
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D
பண்
பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கப்படுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் (ஒரோவொருக்கால் துளை என்றும்) வழக்கப்படும். 2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழ்தான் பண்ணிசை. தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில் வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம். தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாகப் பாடப்பட்டுவருகின்றன. உலகிலேயே தாளத்தோடும் பண்ணோடும் ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய்ப் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது தமிழிசையில் உள்ள தேவாரப்பாடல்களே. கி.பி. 7-9 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில் அப்பர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 பாடல்கள் ஆகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்று. கி.மு. 200 - கி.பி. 200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம், வளர்ச்சி பற்றித் தெளிவாக உணர்த்துகின்றன. பண்பற்றிய செய்திகட்கொண்ட மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகின்றது. கி.பி. 200 - கி.பி. 400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப்பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால், பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும், இசை, நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்குகிறது. பண்கள் மொத்தம் 103 என்று குறிப்பிடப்பட்டுள்ளன. தேவாரத்திலும் திருமுறைகளிலே குறிக்கப்பட்டுள்ள 24 பண்களைக் கீழே காணலாம். அவற்றுக்குச் சமமான தற்கால இராகங்கள் அருகே தரப்பட்டுள்ளன. <table> பண் இராகம் தேவாரம் நட்டபாடை நாட்டை "நத்தார்படை ஞானன்" கொல்லி நவரோஸ்எல்லையில் புகழானனும் இமை இந்தளம் மாயாமாளவகௌளமுன்னிய கலைப்பொருளும் குறிஞ்சி ஹரிகாம்போதிகல்லால் நிழல்மேய கறைசேர் செந்துருத்தி மத்யமாவதி யாழ்முறி அடானா--- சீகாமரம் நாதநாமக்கிரியாசூலப் படையானை நட்டராகம் பந்துவராளிஇத்தனையாம் ஆற்றை அறிந்திலேன் தக்கராகம் காம்போதிமடையில் வாளை பாய மாதரார் பழந்தக்கராகம் சுத்தசாவேரிகொல்லை முல்லை நகையின் பழம்பஞ்சுரம் சங்கராபரணம்கண்ணனும் நான்முகன் காண் தக்கேசி காம்போதிபரக்கும் பெருமை இலங்கை என்னும் செவ்வழி யதுகுல காம்போதிபொடிகள் பூசிப் பல பியந்தைக் காந்தாரம் நவரோஸ்அன்ற வான்நிழல் அமர்ந்து காந்தாரம் நவரோஸ்உறவியும் இன்புறு சீரும் காந்தார பஞ்சமம் கேதாரகௌளைமந்திர மறையவை கொல்லிக்கௌவானம் நவரோஸ்நஞ்சியிடையின்று கௌசிகம் பைரவிவாழ்க அந்தணர் வானவர் பஞ்சமம் ஆகிரிபொடிதனை பூசும் மார்பில் சாதாரி பந்துவராளிசெந்தமிழர் தெய்வமறை நாவர் புறநீர்மை பூபாளம்சீருறு தொண்டர் கொண்டடி அந்தாளக்குறிஞ்சி சாமாகல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் மேகராகக் குறிஞ்சி நீலாம்பரிநீறுசேர்வதொர் மேனியர் வியாழக் குறிஞ்சி சௌராஷ்டிரம்பந்தத்தால் வந்தெப்பால் பண்
1253
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் பொ.ஊ.மு. 500-இல் இருந்து பொ.ஊ. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் நிலையில் உள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன.சங்ககால மக்களின் வாழ்க்கை நிலை இரண்டு பிரிவுகளாக சங்க இலக்கியங்கள் வழி அறியலாம். இல்லற வாழ்க்கை பற்றிய செய்திகளை அகம் என்றும், கொடை, போர், வீரம், ஆட்சி, முதலியவற்றை பற்றிய செய்திகளை புறம் என்றும் சங்க இலக்கியங்கள் பிரித்துக் காட்டுகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாத ஐயர் ஆகியோரின் முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் தான் சங்க இலக்கிய நூல்கள். இவை பதினெண்மேற்கணக்கு நூல்கள் எனவும்; சங்கமருவிய நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எட்டுத்தொகை நூல்கள் (பதினெண் மேற்கணக்கு) பத்துப்பாட்டு நூல்கள் (பதினெண் மேற்கணக்கு) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கியம் சங்கம் மருவிய காலம் சங்க காலப் புலவர்கள் எட்டுத்தொகை தொகுப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் உரையுடன்கூடிய சங்க இலக்கியங்களின் தொகுப்பு மதுரைத் திட்டம் கூடல் சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்-தமிழ் எழுத்தாளர்கள் மனையுறை குருவிகளின் காதல். இம்மென் கீரனார். சங்கஇலக்கிய ஊர்ப்பெயர்கள் ஆய்வு(சிறப்பாய்வு- உறையூர்) சங்க இலக்கியத்தில் மனித நேயம். சங்க இலக்கியம் தமிழ்நாட்டு பண்பாட்டு வரலாறு
1254
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE
புஜைரா
புஜைரா (Fujairah) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று. அந்த அமீரகத்தின் ஒரே நகரமும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நாட்டின் கிழக்குக் கரையில் முழுமையாக அமைந்துள்ள ஒரே அமீரகம் இதுவேயாகும். ஐக்கிய அரபு அமீரகம்
1256
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
கோர்பக்கான்
கோர்பக்கான் () ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களிலொன்றான சார்ஜாவின் ஒரு பகுதியாகும். இந்த நகரம், நாட்டின் கிழக்குக்கரையில் அமைந்துள்ளது. இதன் கடற்கரைப்பகுதிகள் கண்ணுக்கு அழகான காட்சிகளைக் கொண்டவை. மேற்குக்கரையிலுள்ள முக்கிய நகரங்களைப்போலன்றி, மலைப்பாங்கான நிலத்தோற்றத்தைக் கொண்டது இப்பகுதி. கோர்பக்கான் துறைமுகம் நாட்டின் கிழக்குக்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகும். புசைரா நகரத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கிழக்குக் கடற்கரைப் பகுதியாக உள்ளது. இதன் அழகிய கடற்கரை, நாட்டின் சந்தடி மிக்க நகரப் பகுதிகளிலிருந்து அமைதி வேண்டும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளைக் கவர்கின்றது. மேற்கோள்கள் ஐக்கிய அரபு அமீரகம்
1289
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE
துபாய் கடைவல விழா
துபாய் கடைவல விழாவில், (Dubai Shopping Festival) "குளோபல் வில்லேஜ்" என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உலகக் கிராமம் ஒரு துபாயின் சுற்றுலாத் துறையின் முக்கியமான அங்கமாகும். ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படுகின்ற பலவகையான உற்பத்திப் பொருட்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கே ஒரு சேரக் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும், முன்னைய ஆண்டிலும் அளவிலும் தரத்திலும் வளர்ச்சியடைந்து செல்லும் இது, 2004 ஆம் ஆண்டில் 58 நாடுகளின் காட்சியகங்களைக் கொண்டுள்ளது. ஓவ்வொரு ஆண்டும், இந்நாடுகள் தங்கள் தங்கள் நாடுகளின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில், புத்துப்புதுக் கருத்து வடிவங்களைக் கொண்டு, இந்தத் தற்காலிகக் கட்டிடங்களைக் கண்கொள்ளாக் காட்சியாகத் தருகின்றன. 2003 ல், ராஜஸ்தான் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்தியக் காட்சியகம், சிறந்த காட்சியகமாகத் தெரிவுசெய்யப்பட்டது. 2004 ல், இந்தியக் காட்சியகம் கேரளத்தின் பாணியைத் தழுவியுள்ளது. இந்த விழா நடைபெறும் ஒரு மாதகாலம் முழுதும், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்து குவியும் மக்களுக்கு இந்த உலகக் கிராமம் ஒரு முக்கிய இலக்காகும். இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர், எகிப்து, சிரியா, தாய்லாந்து, லெபனான் போன்ற நாடுகளின் காட்சியகங்களுக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதுபோல வித்தியாசமான கைப்பணிப் பொருட்களால் நிறைந்திருக்கும் ஆபிரிக்க நாடுகளின் காட்சியகங்களும் மக்களைப் பெருமளவில் கவர்கின்றன. ஒவ்வோராண்டும் இந்தியா தனது காட்சியகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்படும் அரங்கில் கலைநிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இதேபோல் வேறும் பல நாடுகள் தங்கள் தங்கள் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். உசாத்துணை துபாய் சாப்பிங்க் விழா ஐக்கிய அரபு அமீரகம்
1290
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
மேளகர்த்தா
மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இதைத் தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இராகம், என்ற பெயர்களால் அழைப்பர். பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு, உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான், இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன, இதுவே சரியானது என்றும் கருதப் பெறுகின்றது, ஆனால் வேங்கடமகி என்பவர், தமது சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலில், 12 சுருதித் தானங்களையே 16 ஆக ஒருவாறு இரட்டுறக் கொண்டு (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு), 72 மேளகர்த்தா இராகங்களை ஆக்கினார். இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும். இவற்றிலிருந்து பிற பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன. 72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் 12 சுரத்தான அடிப்படையில் அமைந்துள்ளன. விதிமுறைகள் ஜனக இராகங்கள் அல்லது தாய் இராகங்கள் 5 விதிகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன: சம்பூர்ண ஆரோகணம் அவரோகணம் அல்லது ஏழுசுர ஏறுவரிசை இறங்கு வரிசை. கிரம சம்பூர்ண அரோகண அவரோகணம் அல்லது வரிசைப்படியான ஏறு இறங்கு வரிசைகள். அரோகணத்தில் வரும் சுரத்தானங்களே அவரோகணத்திலும் வருதல். ஆரோகண அவரோகணம் அஷ்டகமாக அமைந்திருத்தல். மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து மேல்ஸ்தாயி ஷட்ஜம் வரை சுரங்கள் ஒழுங்காகச் செல்லுதல். அமைப்பு 72 மேளகர்த்தாச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது. வெங்கடமகி இயற்றிய சதுர்த்தண்டிப்பிரகாசிகை என்னும் கிரந்தத்தினின்றும் விளங்கியது. 72 மேளகர்த்தாச் சக்கரம் 2 சம பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 72 மேளகர்த்தாக்களும் 12 சிறிய சக்கரங்களாக வகுக்கப் பட்டிருக்கின்றது. வரலாறு மேளகர்த்தாக்களின் வரலாறு 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெங்கடமகி எழுதிய சதுர்த்தண்டிப் பிரக்காசிகை என்னும் நூலிலும் கோவிந்தாச்சாரியார் என்பவர் இயற்றிய சங்கிரக சூடாமணி என்னும் நூலில் இருந்தும் அறிய முடிகின்றது. மேளகர்த்தா இராகங்களின் பட்டியல் மேளகர்த்தா இராகங்களையும், அவற்றின் வகைகளையும், அவை உருவாகும் விதத்தையும் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம். மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் வெளி இணைப்புகள் விக்கி ஊடக நடுவத்தில் ஆரோகணம் அவரோகணம் படிமங்கள்
1291
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
தீரசங்கராபரணம்
சங்கராபரணம் (அல்லது தீரசங்கராபரணம்) கருநாடக இசை முறையில் 29 ஆவது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்துஸ்தானி இசையில் பிலாவல் தாட் என்றழைக்கப்படுகிறது. பண்டைய தமிழிசைப் பண்களில் பழம்பஞ்சுரம் என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது. இலக்கணம் பாண என்று அழைக்கப்படும் 5வது வட்டத்தில் (சக்கரத்தில்) 5வது மேளம். கடபயாதி திட்டத்தின் படி தீரசங்கராபரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை. சிறப்பு அம்சங்கள் இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் மேசகல்யாணி ஆகும். இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, ப, த ஆகிய சுரங்கள் முறையே கரகரப்பிரியா, ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன. உருப்படிகள் கிருதி : எதுட நிலிசிதே : ஆதி : தியாகராஜர். கிருதி : எந்துகு பெத்தலவலெ : ஆதி : தியாகராஜர். கிருதி : மநஸு ஸ்வாதீநமைந : ரூபகம் : தியாகராஜர். கிருதி : ஸுந்தரேஷ்வராய : ரூபகம் : முத்துசுவாமி தீட்சிதர். கிருதி : ஸ்ரீ கமலாம்பிகயா : ரூபகம் : முத்துசுவாமி தீட்சிதர். கிருதி : ஸரோஜதள நேத்ரீ : ஆதி : சியாமா சாஸ்திரிகள். வர்ணம் :சலமே :கண்ட ஜாதி அட தாளம்: சுவாதித் திருநாள் ஜன்ய இராகங்கள் பல ஜன்ய இராகங்களைக் கொண்ட மேளகர்த்தா. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Tanam-Thillana in Raga Shankarabharanam - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி மேளகர்த்தா இராகங்கள்
1292
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்
உலகின் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்றாகக் கருதப்படும் கருநாடக இசையை வளர்த்து உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்ததிலும், தற்போது பேணி காத்து வருவதிலும் ஏராளமான இசைக் கலைஞர்களுக்குப் பங்கு உண்டு. சிலருடைய பெயர்கள் இசை வரலாற்றில் நின்று நிலைத்துள்ளன. வேறும் சிலருடைய பெயர்கள் போதிய பிரபலமில்லாது போயிருக்கலாம். இசை ரசிகர்களுடைய மனங்களில் இருக்கும் கலைஞர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும். அவர்களில் சிலருடைய பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. கருநாடக இசையின் முன்னோடிகள் அறிவனார் ஜெயதேவர் (1101-1173) முத்துத் தாண்டவர் அன்னமாச்சாரியார் (1424-1503) புரந்தரதாசர் (1494-1564) சோமநாதர் (16ம் நூற்றாண்டு) கனகதாசர் (1508-1606) நாராயண தீர்த்தர் (17-ம் நூற்றாண்டு) கருநாடக இசையின் தமிழ் மும்மூர்த்திகள் முதன்மைக் கட்டுரை: தமிழிசை மூவர் முத்துத் தாண்டவர் அருணாசலக் கவிராயர் (1711-1788) மாரிமுத்துப் பிள்ளை கருநாடக இசையின் மும்மூர்த்திகள் தியாகராஜ சுவாமிகள் (1767-1847) முத்துசுவாமி தீட்சிதர் (1776-1835) சியாமா சாஸ்திரிகள் (1762-1827) கருநாடக இசையின் ஏனைய இசை மேதைகள் பத்ராசல ராமதாசர் (1608-1682) ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (1700-1765) கோபாலகிருஷ்ண பாரதியார் (1811-1896) க்ஷேத்ரக்ஞர் (1600-1680) வீணை குப்பய்யர் (1798-1860) மைசூர் சதாசிவராவ் (1800-1870) சுப்பராய சாஸ்திரிகள் (1803-1862) சுவாதித் திருநாள் (1813-1846) தாயுமானவர் வேங்கடரமண பாகவதர் சுப்பராம ஐயர் கவிகுஞ்சர பாரதியார் அண்ணாமலை ரெட்டியார் இராமலிங்க அடிகள் ஆபிரகாம் பண்டிதர் விபுலாநந்த அடிகள் இலட்சுமணப் பிள்ளை பொன்னையாபிள்ளை மாயூரம் வேதநாயகம் பிள்ளை அண்மைக்கால இசை மேதைகள் வாய்ப்பாட்டு செம்பை வைத்தியநாத பாகவதர் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் செம்மங்குடி சீனிவாச ஐயர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் மகாராஜபுரம் சந்தானம் மதுரை மணிஐயர் மதுரை சோமு தண்டபாணி தேசிகர் மாயூரம் ராஜம் ஐயர் மழவராயனேந்தல் சுப்பிரமணிய ஐயர் டைகர் வரதாச்சாரியார் மதுரை சிறீரங்கம் ஐயங்கார் திருவையாறு சபேச ஐயர் மைசூர் வாசுதேவாச்சாரியார் ஆலத்தூர் வெங்கடேச ஐயர் ஆலத்தூர் சகோதரர்கள் உமையாள்புரம் சுவாமிநாத ஐயர் ஜி. என். பாலசுப்பிரமணியம் சீர்காழி கோவிந்தராஜன் எம். எஸ். சுப்புலட்சுமி எம். டி. இராமநாதன் டி. ஆர். மகாலிங்கம் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் எம். எல். வசந்தகுமாரி டி. கே. பட்டம்மாள் டி. கே. ஜெயராமன் டி. பிருந்தா ஆர். கே. ஸ்ரீகண்டன் ஈழத்து இசை மேதைகள் வீரமணி ஐயர் சிவஞானசேகரம் வீணை மாயூரம் சிற்சபேச ஐயர் வீணை தனம்மாள் சுந்தரம் பாலச்சந்தர் கல்பகம் சுவாமிநாதன் கொட்டு வாத்தியம் திருவிடைமருதூர் சக்காராம் ராவ் வயலின் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை மருங்காபுரி கோபாலகிருஷ்ண ஐயர் மைசூர் டி. சௌடையா திருவாளப்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை குன்னக்குடி வைத்தியநாதன் லால்குடி ஜெயராமன் எம். எஸ். கோபாலகிருஷ்ணன் கஞ்சிரா மாமுண்டியா பிள்ளை மிருதங்கம் பழனி சுப்பிரமணிய பிள்ளை குற்றாலம் சிவவடிவேல் பிள்ளை புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை தஞ்சாவூர் நாராயணசாமி அப்பா உமையாள்புரம் கோதண்டராம ஐயர் கும்பகோணம் அழகநம்பி பிள்ளை கும்பகோணம் ரங்கு ஐயங்கார் தஞ்சாவூர் ராமதாஸ் ராவ் சென்னை வேணு நாயக்கர் குற்றாலம் குப்புஸ்வாமிப் பிள்ளை வழுவூர் நடராஜசுந்தரம்பிள்ளை இராமநாதபுரம் சித்சபை சேர்வை குற்றாலம் சிவவடிவேலு பிள்ளை பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் இராமநாதபுரம் சி. எஸ். முருகபூபதி பாலக்காடு ஆர். ரகு கடம் உமையாள்புரம் கோதண்டராம ஐயர் ஆலங்குடி ராமச்சந்திரன் புல்லாங்குழல் பல்லடம் சஞ்சீவ ராவ் மாலி நாதஸ்வரம் கோட்டூர் என்.ராஜரத்தினம்பிள்ளை அய்யம்பேட்டை வேணுகோபால்பிள்ளை என். கே. பத்மநாதன் இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணு பிள்ளை காருக்குறிச்சி அருணாசலம் பிள்ளை கீரனூர் சகோதரர்கள் குழிக்கரை காளிதாஸ் பிள்ளை குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை செம்பனார்கோவில் கோவிந்தசாமிபிள்ளை சகோதரர்கள் திருச்சேறை சிவசுப்பிரமணியப்பிள்ளை திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை திருவாடுதுறை கக்காயி என்கிற நடராஜசுந்தரம் பிள்ளை டி. என். ராஜரத்தினம் பிள்ளை சேக் சின்ன மௌலானா திருவாரூர் ராஜரத்தினம்பிள்ளை திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை திருவீழிமிழலை சகோதரர்கள் திருவீழிமிழலை எஸ். தக்சிணாமூர்த்தி பிள்ளை திருவெண்காடு சுப்பரமணியபிள்ளை நாச்சியார்கோயில் என்.கே.ராஜம்,என்.கே.துரைக்கண்ணுப்பிள்ளை நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் பெரம்பலூர் அங்கப்பாப்பிள்ளை வேதாரண்யம் வேதமூர்த்திபிள்ளை வடுவூர் எஸ்.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இஞ்சிக்குடி ஈ. எம். சுப்ரமணியம் மாம்பலம் எம் கே எஸ் சிவா செம்பொனார்கோயில் சகோதரர்கள் செம்பொனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன் திருவிடைமருதூர் பி. எஸ். வி. ராஜா தவில் அன்னாவரவு பஸ்வய்யா இலுப்பூர் ஆர். சி. நல்லகுமார் தஞ்சாவூர் டி. ஆர். கோவிந்தராஜன் திருவாளப்புத்தூர் பசுபதியாபிள்ளை திருவிழந்தூர் வேணுகோபாலப்பிள்ளை புஸலூரி குருவய்யா பெரும்பள்ளம் வெங்கடேசபிள்ளை வெல்டூரி நாராயணி நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை வி. தெட்சணாமூர்த்தி வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை திருராமேஸ்வரம் டி.பி.ராதாகிருஷ்ணன் மேண்டலின் யு. ஸ்ரீநிவாஸ் நிகழ்கால இசைக் கலைஞர்கள் நாதசுவரம் எம். பி. என். பொன்னுசாமி திருவிழா ஜெயசங்கர் தவில் தஞ்சாவூர் ஆர் கோவிந்தராஜன் தவில் குரு அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல் திருராமேஸ்வரம் டி.பி.ராதாகிருஷ்ணன் வாய்ப்பாட்டு கே. ஜே. யேசுதாஸ் திருச்சூர் வி. இராமச்சந்திரன் மதுரை டி. என். சேஷகோபாலன் ஆர். வேதவல்லி டி. வி. சங்கரநாராயணன் பம்பாய் சகோதரிகள் அருணா சாயிராம் சஞ்சய் சுப்ரமண்யன் என். விஜய் சிவா நித்யஸ்ரீ மகாதேவன் பாம்பே ஜெயஸ்ரீ சாருலதா மணி காயத்ரி வெங்கடராகவன் டி. எம். கிருஷ்ணா எஸ். சௌம்யா சுதா ரகுநாதன் நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி சிக்கில் குருச்சரண் வயலின் டி. என். கிருஷ்ணன் எல். சுப்ரமணியம் அ. கன்னியாகுமாரி நாகை முரளிதரன் லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன் லால்குடி விஜயலக்சுமி டாக்டர் நர்மதா எம்பார் கண்ணன் வரதராஜன் சஞ்சீவ் நாகை ஸ்ரீராம் மிருதங்கம் உமையாள்புரம் கே. சிவராமன் திருச்சி சங்கரன் டி. கே. மூர்த்தி டி. வி. கோபாலகிருஷ்ணன் காரைக்குடி மணி திருவாரூர் பக்தவத்சலம் ஜெ. வைத்யநாதன் புல்லாங்குழல் என். ரமணி சிக்கில் சகோதரிகள் சாக்சபோன் கத்ரி கோபால்நாத் கிளாரினெட் ஏ. கே. சி. நடராஜன் மேண்டலின் வீணை ஈ. காயத்ரி கடம் டாக்டர். கார்த்திக் திருப்புனித்துறை இராதாகிருஷ்ணன் ஜலதரங்கம் ஆனையம்பட்டி எஸ். கணேசன் மோர்சிங் ஐ. எஸ். முருகேசன் இறைக் கதை சொல்லுதல் (கதாகாலக்சேபம்) விசாகா ஹரி கலை தொடர்பான பட்டியல்கள்
1299
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
கோலங்களின் வகைகள் பட்டியல்
கம்பிக் கோலங்கள் பாம்புக் கோலம் தாமரைக் கோலம் புள்ளிக் கோலங்கள் நேர்ப்புள்ளிக் கோலங்கள் புள்ளிகளை இணைத்தல் தொட்டில் கோலம் புள்ளிகளிடையே வரைதல் தேர்க் கோலம் துளசி மாடம் குத்து விளக்குக் கோலம் ஊடுபுள்ளிக் கோலங்கள் புள்ளிகளை இணைத்தல் வில்வ இலைக் கோலம் பாகல் இலைக் கோலம் புள்ளிகளிடையே வரைதல் பிற புள்ளிக்கோலங்கள் புள்ளிகளை இணைத்தல் இதயக்கமலம் இவற்றையும் காணவும் திருக்குளம் கோலம்-8 வெளி இணைப்புகள் சில கோலங்களுக்கான வரையும் முறைகள் கோலசுரபி - கோலம் உருவாக்கும் இணைய செயலி கோலங்கள்
1301
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
வில்வ இலைக் கோலம்
இது மிகப்பரவலாக அறியப்பட்டதும், பொதுவாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுவதுமான ஒரு கோலமாகும். மிகச் சிறிய ஐந்து புள்ளிக் கோலத்திலிருந்து, விரும்பியபடி எந்த அளவுக்கும் பெரிதாக்கிக் கொண்டு செல்லக்கூடிய இலகுவான கோலங்களில் இதுவுமொன்று. நிறப் பொடிகளால் நிரப்பி அழகு படுத்துவதற்கும் மிகவும் ஏற்றது. இவற்றையும் பார்க்கவும் கோலம் கோலங்கள் - சில மாதிரிகள் மேற்கோள் கோலங்கள்
1302
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
சமையல்
சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும். இது பக்குவப்படுத்துதல் என்ற பொருள் கொண்ட சமை என்ற வினைச்சொல்லுடன் தொடர்புடைய சொல்லாகும். குறுகிய பொருளில் இது, உணவுப்பொருளின் சுவை, தோற்றம், ஊட்டப்பண்புகள் போன்றவற்றை விரும்பத்தக்க வகையில் வெப்பத்தைப் பயன்படுத்தி மாற்றுவதாகும். மனிதன் நெருப்பைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட காலம் முதல் சமையல் என்பது பண்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாக வளர்ச்சி பெற்றுள்ளது. தீமை விளைவிக்கக் கூடிய கோலுரு நுண்ணுயிர்களைக் கொல்வதும் வெப்பமூட்டுவதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். 45 முதல் 140 °F (அல்லது 5 to 60 °C) வரையான வெப்பநிலையே ஆபத்து வலயமாகும். இவ் வெப்பநிலைகளில் பக்டீரியாக்கள் தீவிரமாக வளர்ச்சியடைகின்றன. அதிக வெப்பமூட்டல் பலவகையான உயிர்ச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் சிதைத்துவிடக் கூடும். வெப்பம் பயன்படுத்தாமலும் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுவதுண்டு. வரலாறு உணவு எப்போது முதன்முதலில் சமைக்கப்பட்டது என்பது தொல்லியல் ரீதியாக இன்றும் மிகத்துல்லியமாக அறியப்படவில்லை. 250,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதன், அடுப்புகள் தோன்றியதும் சமைக்கத் தொடங்கிவிட்டான் என்பது மானிடவியலாலர்களின் கருத்தாகும். கிரிஸ் ஓர்கன், சார்லஸ் நுன், சாரின் மச்சாண்டா மற்றும் ரிச்சார்ட் ரங்கம் ஆகிய தொகுதிப் பிறப்பு ஆய்வாளர்கள், சமைப்பது சுமார் 1.8 மில்லியன் ஆண்டிலிருந்து 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாக கூறுகின்றனர். சமைத்தல் என்பது மனிதக் கூர்ப்புபின் முக்கிய அம்சம் என ரங்கம் குறிப்பிடுகிறார், இது மனிதனுடைய நேரத்தையும் வேலையையும் இலகுவாக்கியதால் மூளை வளர்ச்சிக்கு வித்திட்டது என கூறுகிறார். அவர் ஆரம்ப மனிதனின் குடல் அளவு சதவீதம் குறைய நேரடியாக மூளையின் வளர்ச்சி அதிகரித்திருக்கும் என மதிப்பிடுகிறார். எப்படியிருந்தாலும் அதிகமான ஏனைய மனிதவியலாளர்கள் ரங்கமை எதிராக கூறுகின்றனர், அவர்கள் 300,000 ஆண்டுகளுக்கு முதலே மனிதன் சமையலைத் தொடங்கினான் என்பதற்கு ஆதாரங்களை முன்வைக்கின்றனர். முற்கால அடுப்புக்கள் மற்றும் பூமி அடுப்புக்கள் என்பன ஐரோப்பாவிலும் மத்தியகிழக்கிலுமே முதலில் தோன்றின. இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுலகில் மனிதனால் தேவைக்காக எரிக்கப்பட்டதென நம்பப்படுகின்ற இடங்களே மற்ற மானுடவியலாளர்களுக்கு நிரூபணமாக உள்ளது. அதிகமான மானிடவியலாளர்கள், மூளை வளர்ச்சி சமையல் அறிமுகமாக முதலே மனிதன் இடம்பெயர்ந்த போது கொட்டைகள், பெரிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை பெற்றுக்கொள்ளும்போதே ஏற்படாதென நம்புகின்றனர். உணவு மற்றும் சமையற்கலை கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியாவில் உணவு ஒரு உன்னதமான அடையாளமாக மாறியது. எப்படியிருந்தாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமையற்கலை என்பது ஒருநாட்டின் அடையாளத்தை பிரதிபலிப்பதாக மாற்றமடைந்தது. நவீன உலகக் கண்டுபிடிப்புக்கள் உணவு வரலாற்றில் ஒரு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. காரணம் ஐரோப்பாவிலிருந்தும் ஐரோப்பாவிற்கும் மாற்றம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, தக்காளி, சோளம், அவரை மற்றும் மரக்கறிகள் போன்றவை. தொழிற்புரட்சியும் தேசியத்தில் உணவின் முக்கியத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தியது. உள்ளீடுகள் உணவைச் சமைக்க பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலும் உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன. மரக்கறிகள், பழங்கள், தானியங்கள், சுவைச்சரக்குகள் போன்றவை தாவரங்களிலிருந்து பெறப்பட இறைச்சி, முட்டை மாறும் பாலுணவுகள் மிருகங்களிலிருந்து பெறப்படுகின்றன. சமைப்பதற்குப் பயன்படும் காளான் மற்றும் மதுவம் என்பன ஒரு வகையான பூஞ்சையிலிருந்து பெறப்படுகின்றன. சமையற்காரர்கள் நீர் மற்றும் உப்பு போன்ற கனிமங்களையும் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். புரதம், கார்போவைதரேட்டு மற்றும் கொழுப்பு போன்ற பல்வேறு வகையான மூலக்கூறுகள் இயற்கையாகவே உணவில் காணப்படும். அவைகளும் நீர் மற்றும் கணிமங்களையும் கொண்டுள்ளன. சமையல் முறைகள் = சமையலில் பல வகையான முறைகள் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன. ஆவியில் வேகவைத்தல் நீரில் வேகவைத்தல் தழலில் சுடுதல் பாத்திரத்திலிட்டுச் சுடுதல் வறுத்தல் காய்ச்சுதல் பொரித்தல் வெதுப்புதல் சமையல் குறிப்புகள் பல்வேறு நாடுகளில் உள்ள உணவு வகைகள் தயாரிக்கும் முறைகள் இங்கு இடம்பெறும். வெளி இணைப்புகள் அறுசுவை இணையத்தளம் Instant Pot Guide - New Technology For Cooking மேற்கோள்கள் சமையல்
1306
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
பாகல் இலைக் கோலம்
பாகல் இலைக் கோலம் பாகற்கொடியின் இலைகளை ஒத்த வடிவங்களைக் கொண்டு வரையப்படும் ஒரு கோலம் ஆகும். அருகில் உள்ள படம் 15 புள்ளிகளில் தொடங்கி, ஊடுபுள்ளிகளாக ஒன்றுவரை புள்ளிகள் இட்டு வரையப்பட்ட கோலம் ஒன்றைக் காட்டுகிறது. புள்ளிகள் நேர்கோடுகளாலும், வளைகோடுகளாலும் இணைக்கப்படுகின்றன. அடிப்படை அலகு இக் கோல வடிவத்தின் அடிப்படை அலகு, ஒன்பது புள்ளிகளுடன் தொடங்கி வரையப்படக்கூடியது. ஒரு அலகில், ஆறு இலைகள் ஒரு வளையம் போல் இணைந்த அமைப்பு உள்ளது. இவ்வளையத்தின் நடுவில் ஒரு நட்சத்திர வடிவம் உள்ளது. மையத்தில் உள்ள தனிப் புள்ளியைச் சுற்றி ஒரு சிறு வட்டம் வரையப்படும். நான்கு அலகுகள் இங்கே காட்டப்பட்டுள்ள கோலம் இத்தகைய நான்கு அலகுகள் இணைந்த வடிவமாகும். மேலும் அலகுகளை இணைப்பதன்மூலம் இதனை வளர்த்துச் செல்ல முடியும். இவற்றையும் பார்க்கவும் கோலம் கோலங்கள் - சில மாதிரிகள் மேற்கோள் கோலங்கள்
1307
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
தேர்க் கோலம்
இது இவ்வகைக் கோலத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது கோயில்களில் பயன்படுத்தப்படுகின்ற தேரின் வடிவத்தைப் போல் வரையப்பட்டது. கோலம் போடுபவர்கள் தமது கற்பனை வளம், கால அவகாசம், இட வசதி என்பவற்றுக்கு அமைய இக் கோலத்தின் அளவு, வடிவம் என்பவற்றைத் தேவைக்கேற்ப மாற்றுவதன் மூலம் பல வகைத் தேர்க் கோலங்களை உருவாக்குகிறார்கள். இவற்றையும் பார்க்கவும் கோலம் கோலங்கள் - சில மாதிரிகள் மேற்கோள் கோலங்கள்
1316
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-8
கோலம்-8
அழகிய கோலம் குறைந்த நேரத்தில் இலகுவாக வரையக்கூடிய அழகிய கோலம். புள்ளிகளில்லாத வேறு குறியீடுகளை உபயோகப்படுத்தும் கோலங்களில் இதுவுமொன்று. அளவும், வடிவமும் வேண்டியபடி மாற்றிக்கொள்ளப்படக் கூடியது. இவற்றையும் பார்க்கவும் கோலம் கோலங்கள் - சில மாதிரிகள் மேற்கோள் கோலங்கள்
1317
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
யாழ்ப்பாண மாவட்டம்
யாழ்ப்பாண மாவட்டம் (Jaffna District) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்று. இது நாட்டின் வடகோடியில் அமைந்துள்ளது. மேற்கில் மன்னார் வளைகுடாவும், வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியாலும் சூழப்பட்டுள்ளது. இலங்கையின் தலை போல் அமைந்துள்ள, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை இந்த மாவட்டம் உள்ளடக்கியுள்ளதுடன், தெற்கேயுள்ள பல தீவுகளும் இதனுள் அடங்கும். இத் தீபகற்பத்தினுள்ளிருக்கும், தொண்டமானாறு, உப்பாறு போன்ற கடல்நீரேரிகளால், இம்மாவட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி என அழைக்கப்படுகின்றன. இம் மாவட்டத்தின் தெற்கு எல்லையில், யாழ்மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து 1984 பெப்ரவரியில் பிரிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உள்ளது. காலநிலை யாழ்ப்பாண மாவட்டம் இலங்கையின் வறண்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றினால் மழையைப் பெறும் இப்பகுதி ஆண்டு தோறும் 1231 மிமீ மழை வீழ்ச்சியைப் பெறுகிறது. ஆகக்கூடிய மாதாந்த சராசரி வெப்பநிலை 29.5 C ஆகவும், குறைந்த வெப்பநிலை 25.2 C ஆகவும் உள்ளது. சராசரி ஈரப்பதன் --- ஆகும். தாவரவகை யாழ்ப்பாண மாவட்டத்துக்குச் செல்லும் எவருக்கும், அம் மாவட்டத்தின் தனித்துவமான தன்மையாகத் தெரியும் முதல் விடயம், மைல் கணக்கில் பரந்து கிடக்கும் பனந்தோப்புக்களாகும். மக்கள் யாழ் மாவட்டம் வரண்டதாகவும், அளவிற் சிறியதாகவும் இருந்தும், இது மிகவும் சனத்தொகைச் செறிவு மிக்கதாகும். ஐந்து மாவட்டங்களையும் 8848.11 ச.கிமீ பரப்பளவையும் கொண்ட வடமாகாணத்தில், 1025.2 ச.கிமீ அளவுக்குள் அடங்கியுள்ள இம்மாவட்டத்தினுள் 66.6% வீதமான மக்கள் வாழ்ந்ததாக 1981 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புக் காட்டுகிறது. இங்கே தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் எனும் மூவினத்தவரும் வாழ்ந்தாலும், யாழ்மாவட்டத்தின் மக்கள் தொகையில் மிகப்பெரும்பான்மையினர் இலங்கைத் தமிழர் ஆவர். சமய அடிப்படையில், இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ளனர். பௌத்தர்கள் மிகக் குறைவே. நிர்வாகம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இம்மாவட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரி, மாவட்டச் செயலாளர் (முன்னர் அரசாங்க அதிபர்) என அழைக்கப்படுகிறார். இம்மாவட்டம் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளாக (முன்னர் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள்) என அழைக்கப்படும் பல துணைப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் பிரிவுகள் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கானை சண்டிலிப்பாய் தெல்லிப்பழை உடுவில் கோப்பாய் கரவெட்டி மருதங்கேணி பருத்தித்துறை சாவகச்சேரி ஊர்காவற்றுறை வேலணை காரைநகர் நெடுந்தீவு ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவும் ஒரு பிரதேச செயலாளரின் கீழ் செயல்படுகின்றது. இந்தத் துணைப் பிரிவுகளும் மேலும் 434 கிராம சேவை அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரதேச சபைகள் இவற்றைவிட மக்களால் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் அடங்கும், மாநகரசபை, நகரசபை, மற்றும் பிரதேச சபைகளாகவும் யாழ்ப்பாண மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாநகர சபை வல்வெட்டித்துறை நகரசபை பருத்தித்துறை நகரசபை சாவகச்சேரி நகரசபை பருத்தித்துறை பிரதேச சபை சாவகச்சேரி பிரதேச சபை நல்லூர் பிரதேச சபை காரைநகர் பிரதேச சபை ஊர்காவற்றுறை பிரதேச சபை நெடுந்தீவு பிரதேச சபை வேலணை பிரதேச சபை வலிகாமம் மேற்கு பிரதேச சபை வலிகாமம் வடக்கு பிரதேச சபை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை வலிகாமம் தெற்கு பிரதேச சபை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை பாதுகாப்பு ஏ-9 கண்டி-யாழ் நெடுஞ்சாலை 2006, ஆகத்து 11 முதல் மூடப்பட்டு 2009 ஆம் ஆண்டில் நான்காம் ஈழப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து மீளத் திறக்கப்பட்டது. இவற்றையும் பார்க்கவும் யாழ்ப்பாணம் யாழ்ப்பாண அரசு யாழ்ப்பாண நகரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் யாழ் மாவட்ட செயலகம் இலங்கையின் மாவட்டங்கள்
1318
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88
பனை
{{taxobox |name = பனை மரங்கள் |image = Asian palmyra (Borassus flabellifer).JPG |image_caption = Borassus flabellifer, இலங்கை |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = ஒருவித்திலை |unranked_ordo = Commelinids |ordo = Arecales |familia = பனைக்குடும்பம் |genus = பனை | type_species = [[ஆசியப் பனை|Borassus flabellifer]]| type_species_authority = L. |}} பனை (தாவர வகைப்பாட்டியல்: Borassus, ஆங்கிலம்:Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த, தாவரப் பேரினம் ஆகும். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus'') என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமென கருதப்படுகிறது. அதன் வாழ்நாள், மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள், ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பெயரிடல் பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது. புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630) அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631) பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர். பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை 1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை இனங்கள் போரசசு (பனை) என்னும் பேரினத்தில் வரும் இனங்கள் போராசசு அத்தியோபம் - ஆப்பிரிக்கப் பனை மரம் (Borassus aethiopum) போ. அகேசி - மேற்கு ஆப்பிரிக்கப் பனை (Borassus akeassii – Ake Assi`s Palmyra Palm (West Africa) ) போ. ஃப்ளாபெல்லிபர் - ஆசியப் பனை (Borassus flabellifer – Asian Palmyra Palm (southern Asia and southeast Asia) ) போ. என்னியனசு - நியூ கினி பனை (Borassus heineanus – New Guinea Palmyra Palm (New Guinea) ) போ. மடகாசுகரியன்சிசு - மடகாசுகர் பனை (Borassus madagascariensis – Madagascar Palmyra Palm (Madagascar) ) போ. சாம்பிரானென்சிசு - சாம்பிரானோ பனை (மடகாசுகர்)(Borassus sambiranensis – Sambirano Palmyra Palm (Madagascar) ) காட்சியகம் காணப்படும் இடங்கள் இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் எங்கெங்கு இடம்பெயர்ந்ததோ அவ்விடங்களில் எல்லாம் ஆதி மனிதர்கள் பனை விதைகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர் எனச் சொல்லப்படுகிறது. ஏனென்றால், பனை மரங்கள் மக்கள் வாழும் பகுதிகளின் அருகிலேயே பெரும்பாலும் இருக்கிறது. இது பெரும்பாலும் அடர் காடுகளில் காண இயலாததற்கு காரணமாக இது கூறப்படுகிறது. இது ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன. கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளன. சேலம்,நாமக்கல்,சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன. பனையின் பயன்கள் பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது. விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும். பனையின் இன்னல்கள் பனங்கருக்கு பனங்கருக்குகள், பனைமரமேறிகளுக்கு மிகுந்த ஊறு விளைவிப்பவையாகும். கூர்மையான அந்த முட்கள் போன்ற அமைவுகள், அவ்வேழை பனைமரமேறிகளுக்கு இன்னல் தருகிறது. பனங்கை பனங்கை அல்லது பனை வரிச்சல் என்பது பனை மரத்தை நீளவாக்கில் அறுத்தால் வரும் நீளமான மரக்கட்டை ஆகும். இது கட்டிடக் கூரைகளில் பயன்படுத்தப்படுகிறது. பனையேற்றம் பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகத்து மாதம் வரை இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் ஆகத்து முதல் மார்ச்சு மாதம் வரை கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் பனையேற்றம் நிகழும். இது ஒரு பருவ காலத் தொழிலாக இருப்பதால் இம்மாவட்டங்களில் வேலை தேடி இடம்பெயருதல் பெருமளவு நிகழ்கிறது. பனையேற்றம் என்பது மரமேறுதல், பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் எனப் பல்வேறு திறன்களை உள்ளடக்கிய தொழில் ஆகும். மரமேற நெஞ்சப் பட்டை, இடை வார், தளை ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இத்தொழில் புரியும்போது மரத்தின் சொரசொரப்பான பகுதியில் உடல் உராயும்பொழுது சிராய்ப்பு ஏற்பட்டு உடல் பொலிவிழக்கிறது. மரம் ஏறுதலின் இடரையும் துன்பத்தையும் களைய இயந்திரச் சாதனங்கள் எதுவுமில்லை. ஒரு மரம் சராசரி 36 முதல் 42 மீட்டர் வரை உயரமுடையது. எனவே ஒரு நாளைக்கு இரு முறை 30 முதல் 40 மரங்கள் ஏறுதல் என்பது பெரும் இடர் மிகுந்தது ஆகும். எனவே மிகுந்த அனுபவசாலிகளே பனைமரமேறுவர். தளைநாரைக் காலில் கட்டி பனைமரம் ஏறுவர். பனைத்தொழிலாளர் நிலை 80 விழுக்காட்டிற்கும் அதிகமான பனைத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்கிறார்கள். ஒரு பனைத் தொழிலாளர் நாள்தோறும் 10 முதல் 15 மணி நேரம் வரை மேற்கொள்ளும் வேலைக்கு 15 ரூபாய்கள் வரை சம்பாதிக்கிறார். எனவே ஒரு பனைத் தொழிலாளரின் குடும்ப வருமானமானது அவர் எத்தனை பனை மரங்கள் ஏறுகிறார் என்பதனையும் அவர் குடும்பத்தில் எத்தனை உழைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் பொருத்தே அமைகிறது. பெரும்பான்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சொந்த மரங்களில்லை. தமிழகத்தில் உள்ள பனையேறும் குடும்பங்களில் 67.85% குடும்பங்களுக்கு சொந்த மரங்கள் கிடையாது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிலக்கிழார்கள் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கக் குறைந்த கூலிக்கு ஆள்களை நியமித்துக்கொள்கிறார்கள். பனஞ்சாறு உடலுக்கு நலம் தரும் நீரகம். இதில் கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்சத்துகள், இரும்பு, எரியம், சுண்ணாம்பு, கரிநீரகி ஆகியன உள்ளன. இது சத்துள்ளது. எளிதில் செரிக்கக் கூடியது. இது எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும் தன்மையுடையது என்றும் ஈரல் நோய்க்கு ஏற்ற மருந்தென்றும் கருதப்படுகிறது. 25% குறையாத பதனீர் நேரடியாகவே நுகரப்படுகிறது. மீதம் உள்ளவை வெல்லம் தயாரிக்கப் பயன்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்தின் பெரும்பகுதி உள்ளூரிலேயே விற்கப்படுகிறது. அவசரப் பணத்தேவை, சந்தைவிலையை அறியாமை, சந்தைக்குக் கொண்டு செல்ல நேரமின்மை ஆகியவற்றின் காரணமாக இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். பனைத்தொழில் உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றிலும் கூடச் சிக்கல்கள் உள்ளன. போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தையே நல்கும்நிலையில் பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்களை பெருமளவில் ஈர்க்க முடியாமல் இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது. எவ்வாறாயினும் பனைத்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பும்; உணவு மற்றும் உணவிலிப் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை இருத்தல் வெள்ளிடை மலை. பனங்கற்கண்டு போன்ற மதிப்புடை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தல் மூலம் முன்னைய சிக்கல்களை வினைவலிமையோடு எதிர்கொள்ள முடியும் என்பதை மார்த்தாண்டத்திலுள்ள பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் கண்டது. பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற்கண்டு தயாரித்தல் இலாபமுடையது என்று கண்டறியப்பட்டது. இவ்வுற்பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழிற்றுறையின் வளர்ச்சியும் மேம்படுவது ஐயத்திற்கு இடமின்றி நிரூபனமானது. உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத்துறையும் தன்னார்வத் தொண்டகங்களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்துவதில் பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் முன்னோடியாகத் திகழ்கிறது. காட்சியகம் இவற்றையும் பார்க்கவும் பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் ஆசியப் பனை மேற்கோள்கள் பனை
1321
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
மொழியியல்
மொழியியல் (Linguistics) என்பது மொழியை அறிவியல் முறைப்படி ஆராய்வதற்குரிய ஒரு துறையாகும். மொழியின் வடிவம், பொருள், சூழல் போன்றவற்றையும் மொழியியல் ஆய்வு செய்கிறது . பொதுவான சகாப்தத்திற்கு முன்திய 4 ஆம் நூற்றாண்டில் இந்திய இலக்கண அறிஞரான பானிணி சமசுகிருத மொழியைப்பற்றி ஒரு முறையான ஆய்வு விளக்கத்தை எழுதியுள்ளார் . மொழியியலாளர்கள் சொற்களின் ஒலி மற்றும் பொருளுக்கு இடையிலான ஓர் ஒற்றுமையைக் கவனிப்பதன் மூலம் பாரம்பரியமாக மனித மொழியை பகுப்பாய்வு செய்கின்றனர் . ஒலிப்பியல் என்பது பேச்சு மற்றும் உரையாடல் ஒலிகளைப் பற்றிய ஆய்வு ஆகும், மேலும் இது அவர்களின் ஒலி தொடர்பான மற்றும் ஒலிகளை தெளிவாக உச்சரிப்பதற்குரிய உச்சரிப்பொலியியல் பண்புகளுக்குள்ளும் நுழைகிறது. மறுபுறம், மொழியின் அர்த்தத்தை ஆய்வு செய்து உலகின் பிற கூறுகள், பண்புகள் மற்றும் உலகின் பிற அம்சங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான உறவுகளை எவ்வாறு புரிந்துகொள்வது, செயல்படுத்துவது மற்றும் பொருளை வழங்குவது, அத்துடன் எவ்வாறு நிர்வகிப்பது, தோன்றும் கருத்து மயக்கத்தை எவ்வாறு தீர்ப்பது ஆகியவற்றைப் பற்றியும் மொழியியல் பேசுகிறது . அதேவேளையில் சொற்பொருள்களைப்பற்றிய ஆய்வு, சூழல் எவ்வாறு மொழிக்கான பொருளை உருவாக்குகிறது என்ற உண்மை நிலையையும் ஆராய்வதை மொழியியல் நடைமுறையாகக் கொண்டுள்ளது . இலக்கணம் என்பது ஒரு மொழியில் சொற்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை நிர்வகிக்கும் விதிமுறைகள் தொடர்பான நடைமுறையாகும். இவ்விதிமுறைகள் ஒலிகளுக்கும் அவை தரும் பொருளுக்கும் பொருந்தும். மேலும், ஒலிக்கும் ஒலியமைப்புகளின் அமைப்பு சார்ந்த குரலியல், சொற்களின் அமைப்பு மற்றும் உருவாக்கம் சார்ந்த உருபனியல், சொற்றொடர்கள் உருவாக்கம் மற்றும் அமைப்பு சார்ந்த தொடரியல் உள்ளிட்டவற்றின் உட்கூறுகள் சார்ந்த துணைவிதிகளையும் இலக்கணம் வரையறை செய்கிறது. இலக்கணத்தின் கொள்கைகளில் நவீன இலக்கணக் கோட்பாடுகள் கவனம் செலுத்துகின்றன. இவை பெரும்பாலும் நோம் சோம்சுகியின் சித்தாந்தக் கல்வியின் பொது இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. [ மொழியியல் ஆய்வு, கீழே தரப்பட்டுள்ள மூன்று விதமான அடிப்படைகளில் நடைபெறுவதாகக் காணப்படுகிறது. பழங்கால இலக்காண பதிப்பான தொல்காப்பியம், தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் உலக மொழிகளில் ஒரு மொழியியல் அய்வு என்பதில் முதான்மயும், தொன்மையும் பெற்றது. விளக்கமுறையும் வரலாற்றுமுறையும் (Synchronic and diachronic) -- விளக்கமுறை, என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மொழியின் நிலையைக் கருத்திலெடுத்து ஆய்வு செய்வதைக் குறிக்கும். வரலாற்றுமுறை என்பது ஒரு மொழியின் அல்லது ஒரு மொழிக் குழுவின் வரலாற்றையும், அவற்றில் எவ்வாறான அமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் ஆராய்வதாகும். கோட்பாட்டு மற்றும் பயன்பாட்டு முறை -- கோட்பாட்டு மொழியியல், தனிப்பட்ட மொழிகளை விவரிப்பதற்கான சட்டகங்களை (frameworks) உருவாக்குவதுடன், அனைத்து மொழிகள் தொடர்பான கோட்பாடுகள் பற்றியும் கவனத்திற் கொண்டுள்ளது. சூழ்நிலைசார் மற்றும் சுதந்திரமான -- இப்பகுப்பு தொடர்பில் சொற்கள் சரியாக நிலைநிறுத்தப்படாததால், வசதி கருதி இப் பெயர்கள் இங்கே பயன்படுத்தப் படுகின்றன. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பெரு மொழியியல் (macrolinguistics), நுண் மொழியியல் (microlinguistics), என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறது. சூழல்சார் மொழியியல், ஒரு மொழி எவ்வாறு இந்த உலகத்துடன் பொருத்தப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை, அதன் சமூகச் செயற்பாடு, எவ்வாறு பெறப்பட்டது, எவ்வாறு உருவானது மற்றும் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பவற்றைக் கருத்திலெடுத்து ஆராய்கின்றது.சுதந்திர மொழியியல், மொழிகளின் புறநிலை அம்சங்களைக் கருத்தில்கொள்ளாது, அம் மொழிகளைத் தனியாக ஆராய முற்படுகிறது. இவ்வாறான பகுப்புகள் இருந்தாலும், பொதுவாக எவ்வித சிறப்பு அடைமொழிகளுமில்லாது, வெறுமனே "மொழியியலாளர்கள்" என்று அழைக்கப்படுபவர்கள், மொழியியலின் மையக்கருவாகக் கருதப்படும் சுதந்திர, கோட்பாட்டு விளக்கமுறை (synchronic) மொழியியல் பற்றியே முக்கியமாக ஆர்வமுடையவர்களாக உள்ளார்கள். இதுவே பொதுவாகக் "கோட்பாட்டு மொழியியல்" என்று அழைக்கப்படுகிறது. கோட்பாட்டு மொழியியற் பகுதிகள் கோட்பாட்டு மொழியியல் பொதுவாக, ஓரளவுக்குத் தனித்தனியாக ஆராயத்தக்க வகையில் பல்வேறு பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. கீழ்வரும் பிரிவுகள் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: ஒலிப்பியல் (phonetics), ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு ஒலிகள் பற்றிய துறை; ஒலியியல் (phonology), ஒரு மொழியின் அடிப்படை ஒலிகளின் வடிவுரு பற்றி ஆராயும் துறை; உருபனியல், சொற்களின் உள் அமைப்புப் பற்றி ஆராயும் துறை; சொற்றொடரியல் (syntax), எவ்வாறு சொற்கள் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட வசனங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் துறை; சொற்பொருளியல் (semantics), சொற்களின் நேரடியான (literal) பொருளை ஆராய்தலுக்கும்,(சொல் குறிக்கும் பொருள் (lexical semantics)), அவை சேர்ந்து உருவாக்கும் வசனங்களின் நேரடியான பொருள்களையும் ஆராயும் துறை; மொழிநடை (stylistics), மொழியின் பாணிகளை ஆராயும் துறை; சூழ்பொருளியல் (pragmatics), தொடர்புச் செயற்பாடுகளில் எவ்வாறு utterances பயன்படுத்தப்படுகின்றன (literally, figuratively, அல்லது வேறுவிதமாக) என்பது பற்றிய ஆய்வு; தொடரியல் (syntax) ஒலி, உருபன், இந்த ஒவ்வொரு பகுதியினதும் தனிப்பட்ட முக்கியத்துவம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, எனினும், கிட்டத்தட்ட எல்லா மொழியியலாளருமே இந்தப் பிரிவுகள் குறிப்பிடத்தக்க அளவு பொதுப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன என்பதை ஒத்துக்கொள்வர். இருந்தாலும் ஒவ்வொரு துணைப்பிரிவும், குறிப்பிடத்தக்க அறிவுபூர்வ ஆய்வுகளைச் செய்யக்கூடிய அளவுக்குத் தனியான அடிப்படையான எண்ணக்கருக்களைக் கொண்டுள்ளன. வரலாற்று மொழியியல் (Diachronic linguistics) கோட்பாட்டு மொழியியலின் மையக்கருவானது, மொழியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (அநேகமாக நிகழ்காலம்) ஆராய்வதோடு சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை, வரலாற்று மொழியியல், எப்படி மொழி காலப்போக்கில், சிலவேளைகளில் நூற்றாண்டுகளில், மாற்றமடைகின்றது என்பதை ஆராய்கின்றது. வரலாற்று மொழியியல் வளமான வரலாற்றையும் (மொழியியல் துறை வரலாற்று மொழியியலிலிருந்தே உருவானது), மொழி மாற்றங்களை ஆராய்வதற்கான பலமான கோட்பாட்டு அடிப்படையையும் கொண்டுள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில், வரலாறல்லாத நோக்கின் கையே ஓங்கியுள்ளதாகத் தெரிகிறது. வரலாறல்லாத நோக்கு சார்ந்த திருப்பம், பேர்டினண்ட் சோசருடன் தொடங்கி நோம் சோம்சுக்கி காலத்தில் முன்னணிக்கு வந்தது. வெளிப்படையாக வரலாற்று நோக்கு வரலாறுசார்-ஒப்பீட்டு மொழியியல் மற்றும் சொற்பிறப்பியல் (etymology) என்பவற்றை உட்படுத்தியுள்ளது. பயன்பாட்டு மொழியியல் கோட்பாட்டு மொழியியல், ஒவ்வொரு மொழிக்கு உள்ளேயும், ஒரு குழுவாக எல்லா மொழிகளுக்கு இடையேயும் உள்ள பொதுவான தன்மைகளைக் கண்டுபிடித்து விளக்கமுயலுகின்ற அதேவேளை, பயன்பாட்டு மொழியியல், இந்தக் கண்டுபிடிப்புகளின் பெறுபேறுகளை ஏனைய துறைகளில் பயன்படுத்துகிறது. வழக்கமாகப் பயன்பாட்டு மொழியியல், மொழியியல் ஆய்வை, மொழி கற்பித்தல், மற்றும் ஏனைய துறைகளில் பயன்படுத்துவதைக் குறிப்பிடுகிறது. பேச்சுத் தொகுப்பு (Speech synthesis) மற்றும் பேச்சு அடையாளம்காணல் (Speech recognition), என்பன, கணனிகளில் குரல் இடைமாற்றிகளை ஏற்படுத்துவதற்கு மொழியியல் அறிவைப் பயன்படுத்தும் உதாரணங்களாகும். சூழ்நிலை மொழியியல் சூழ்நிலை மொழியியலே, மொழியியல் ஏனைய கல்வித்துறைகளுடன் தொடர்பு கொள்ளும் பகுதியாகும். சமூக மொழியியல், மானிடவியல்சார் மொழியியல் (anthropological linguistics), மொழியியல் மானிடவியல் (linguistic anthropology) என்பன சமூகத்தை முழுமையாகக் கருத்திலெடுக்கின்ற சமூக அறிவியலும், மொழியியலும் தொடர்பு கொள்ளுகின்ற இடமாகும். திறனாய்வுப் பேச்சுக்கூறுபாடு (critical discourse analysis) இலே தான்பேச்சுக்கலை (rhetoric) உம் தத்துவமும் மொழியியலோடு தொடர்புகொள்ளுகின்றன. உளமொழியியலும் (psycholinguistics) நரம்புமொழியியலும் (neurolinguistics), மருத்துவ அறிவியல்கள் மொழியியலைச் சந்திக்கும் இடமாகும். ஏனைய, மொழியியலின் வேறு துறைத்தொடர்புகளுள்ள பகுதிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும். மொழி கற்றல் (language acquisition), படிமலர்ச்சி மொழியியல், stratificational linguistics, மற்றும் அறிதிற அறிவியல் (cognitive science). தனிப்பட்ட, மொழிபேசுபவர்கள், மொழிச் சமுதாயங்கள், மற்றும் மொழியியற் பொதுமைகள் (linguistic universals) எந்த அளவு பரந்த மொழி பயன் படுத்தும் குழுவினரை ஆராயவேண்டும் என்பதிலும் மொழியியலாளர்கள் வேறுபடுகிறார்கள். சிலர் குறிப்பிட்ட ஒருவருடைய மொழியை அல்லது மொழி அபிவிருத்தியை மிகவும் நுணுக்கமாக ஆராய்வர். சிலர் ஒரு முழு பேச்சுச் சமுதாயத்தினதுக்குத் தொடர்பான மொழிபற்றி ஆய்வு செய்வர். வேறு சிலர் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா மனித மொழிகளுக்கும் பொருந்தக்கூடிய விடயங்கள் பற்றி ஆராய முயல்வர். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட திட்டத்துக்காக நோம் சோம்சுக்கி பிரபலமாக வாதிட்டார், அத்துடன் இது, உளவியல்சார் மொழியியல் (psycholinguistics) மற்றும் அறிதிற அறிவியல் துறைகளைச் சேர்ந்த பலரைக் கவர்ந்தது. மனித மொழியிற் காணப்படும் பொதுமைகள் மனித மனத்தின் பொதுமைகள் பற்றிய முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்தும் எனக் கருதப்பட்டது. விளக்கமுறையும் (Description) விதிப்புமுறையும் (prescription) "மொழியியல்" என்ற பெயரில் தற்போது நடைபெறும் பெரும்பாலான வேலைகள், சுத்தமாக விபரிப்பு சார்ந்தவையாகும். மொழியியலாளர்கள், கருத்துக்களெதையும் கூறாமல் அல்லது மொழியின் எதிர்காலப் போக்குத் திசைகளைக் குறிப்பிட்டுக் காட்டாமல், மொழியின் இயல்பை விளக்கவே முனைகிறார்கள். எனினும் பல தொழில்சார் மற்றும் அமெச்சூர் மொழியியலாளர்கள், எல்லோரும் பின்பற்றவேண்டிய நியமங்களை வைத்து, மொழிக்கான விதிகளையும் குறித்துக் காட்டுகிறார்கள். விதிப்புமுறை சார்பாளர்கள் (Prescriptivists), "பிழையான பயன்பாடு" என்று கருதி முத்திரை குத்தும் ஒரு விடயத்தில், விளக்கமுறையாளர்கள் (descriptivists) அப் பயன்பாட்டின் மூலம் எதுவென்று ஆராய முயல்வர்; அல்லது அதை "வினோதப் போக்கு" (idiosyncratic), என விளக்குவர், அல்லது, மிக நவீனமானது அல்லது அங்கீகரிக்க முடியாத வட்டார மொழிகளிலிருந்து பெறப்பட்டது போன்ற காரணங்களுக்காக விதிப்புமுறை சார்பாளர்களால் விரும்பப்படாத சில ஒழுங்குமுறைகளை வெளிப்படுத்துவார்கள். பேச்சு எதிர் எழுத்து பெரும்பாலான சமகால மொழியியலாளர்கள் பேச்சு மொழியே மிகவும் அடிப்படையானது அதனால், எழுத்து மொழியிலும், பேச்சு மொழி பற்றி ஆராய்வதே முக்கியமானது என்ற கருதுகோளுடன் செயல் படுகிறார்கள். இதற்கான காரணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்: பேச்சு மனித இனம் முழுவதற்கும் பொதுவானதாகத் தெரிகின்ற அதேவேளை, பல பண்பாடுகளில், எழுத்துத் தொடர்பு முறை காணப்படவில்லை; மக்கள், எழுதுவதிலும், பேசுவதற்கும் கிரகித்துக்கொள்வதற்கும் பேச்சு மொழி எளிதாகப் பழகி விடுகிறார்கள்; பல அறிதிற அறிவியலாளர்களின் கூற்றுப்படி, மூளையில் உள்ளார்ந்த "மொழிப் பிரிவு" ஒன்று உள்ளதாகவும், அதற்கான அறிவு எழுத்தைவிடப் பேச்சைக் கற்பதன் மூலமாகவே கிடைக்கிறது என்றும் தெரிகிறது. எழுத்து மொழியைப் பயில்வது பெறுமதியானது என்பதில் எல்லா மொழியியலாளர்களும் ஒத்த கருத்தையேகொண்டுள்ளார்கள். மொழித் தொகுப்பு மற்றும் கணிப்புமுறை மொழியியல் (computational linguistics), முறைகளைப் பயன்படுத்தும் மொழியியல் ஆராய்ச்சிகளில், பெருமளவு மொழியியல் தரவுகளைக் கையாள்வதற்கு, எழுத்து மொழி மிகவும் வசதியானதாகும். பெருமளவு பேச்சு மொழித் தரவுகளை உருவாக்குவதும், கண்டுபிடிப்பதும் கடினமாகும். மேலும், எழுத்து முறைமை பற்றிய ஆய்வும் மொழியியலின் பாற்பட்டதேயாகும். மொழியியல் தொடர்பான ஆராய்ச்சிப் பகுதிகள் ஒலிப்பியல் (phonetics), ஒலியியல் (phonology), தொடரியல் (syntax), சொற்பொருளியல் (semantics), சூழ்பொருளியல் (pragmatics), சொற்பிறப்பியல் (etymology), சொல்லியல் (lexicology), அகராதிக் கலை (lexicography), கோட்பாட்டு மொழியியல், வரலாற்று-ஒப்பீட்டு மொழியியல் மற்றும் விளக்க மொழியியல், மொழியியற் குறியீட்டியல் (linguistic typology), கணிப்புசார் மொழியியல், மொழித் தொகுப்பு, குறியியல் (semiotics). துறைகளிடை மொழியியல் ஆராய்ச்சி பயன்பாட்டு மொழியியல், வரலாற்று மொழியியல், எழுத்திலக்கணம் (orthography), எழுத்து முறைமைகள், ஒப்பீட்டு மொழியியல், சமூகமொழியியல், மொழியியல்சார் மானிடவியல், திறனாய்வுப் பேச்சுக்கூறுபாடு, உளவியல்சார் மொழியியல், மொழி கற்றல், படிமலர்ச்சி மொழியியல், மானிடவியல்சார் மொழியியல், அறிதிற அறிவியல், நரம்பியல்சார் மொழியியல், மற்றும் கணனி அறிவியல் என்பவற்றிலும் இயல்பு மொழி விளக்கம், பேச்சு அடையாளங்காணல் (speech recognition), பேசுனர் அடையாளங்காணல் (speaker recognition) (authentication), பேச்சுத் தொகுப்பு (speech synthesis), மற்றும் மேலும் பொதுவாக, மேற்கோள்கள் உசாத்துணைகள் Rymer, p. 48, quoted in Fauconnier and Turner, p. 353) Gilles Fauconnier and Mark Turner (2002). The Way We Think: Conceptual Blending and the Mind's Hidden Complexities. அடிப்படை நூல்கள். Rymer, Russ (1992). "Annals of Science: A Silent Childhood-I". New Yorker, April 13. Steven Pinker, The Language Instinct வெளி இணைப்புகள் Multilingual Morphology Software Grammar Book Syllabification algorithm The hyphenation block அறிதிற அறிவியல் மொழி
1322
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
எழுத்து முறை
எழுத்து முறைமை (writing system), என்பது ஒரு மொழியைப் பார்க்கக்கூடிய வகையில் குறியீடுகள்மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். மிகப் பழைய வகை எழுத்துக்கள் ஓவிய எழுத்துக்கள் (pictographical) அல்லது கருத்தெழுத்துக்கள் (ideographical) ஆகும். பெரும்பாலான எழுத்து முறைமைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: உருபனெழுத்து முறை (logographic), அசையெழுத்து முறை (syllabic) மற்றும் ஒலியனெழுத்து முறைமை (alphabetic). எழுத்து முறைமையில் குறியீடுகளை எழுத்துக்கள் என அழைப்பர். glyph என்பது ஒரு எழுத்தை வரைபு முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். எழுத்து முறைமைகளின் வரலாறு உலகின் முதல் எழுத்து முறைமை கிரேக்க மொழி யில் தான் முதன்முதலில் எழுதப்பட்டது. இது மூங்கில் குச்சிகளை கொண்டு முதன் முதலில் எழுதப்பட்டது. பின் கி.மு. 4 ஆவது ஆயிரவாண்டின் இறுதியையொட்டிச் சுமேரியர்களிடையே உருவான ஆப்பெழுத்து (cuneiform) ஆகும். எனினும் இதனை மிக அண்மையாகத் தொடர்ந்து, எகிப்திலும், சிந்துப் பள்ளத்தாக்கிலும் எழுத்து தோற்றம் பெற்றது. இதில் தொடங்கி, வெவ்வேறு நாகரிகங்கள் தொடர்பில் பல இடங்களிலும் எழுத்துக்கள் தோன்றின. உருபனெழுத்து முறைமை உருபனெழுத்து என்பது ஒரு முழுச் சொல்லை அல்லது ஒரு உருபனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாகும். பல சீனமொழி எழுத்துக்கள் உருபனெழுத்து என வகைப்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு குறியீடும், ஒவ்வொரு சொல்லை அல்லது உருபனைப் பிரதிநிதித்துவம் செய்வதனால், ஒரு மொழியின் சகல சொற்களையும் எழுதப் பெருமளவு உருபனெழுத்துக்கள் தேவைப்படும். ஏராளமான குறியீடுகளும் அவற்றுக்கான பொருள்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதும், ஒலியனெழுத்து முறைமையோடு ஒப்பிடும்போது, இம்முறைமைக்குள்ள முக்கியமான வசதிக்குறைவாகும். எனினும் சொல்லின் பொருள் குறியீட்டிலேயே பொதிந்திருப்பதால், கோட்பாட்டளவில் ஒரே குறியீட்டையே வெவ்வேறு மொழிகளுக்குப் பயன்படுத்த முடியும். செயற்பாட்டளவில், syntactical constraints ஒரே குறியீட்டு முறைமையைக் எல்லா மொழிகளுக்கும் பயன்படக்கூடிய தன்மையைக் குறைப்பதால், இது, சீன மொழியின் வட்டார வழக்குகள் (dialects) போல மிக நெருக்கமான மொழிகளிடையே மட்டுமே சாத்தியமாகும். கொரிய மொழியும் ஜப்பானிய மொழியும் சீன உருபனெழுத்துக்களைத் தங்கள் எழுத்து முறைமைகளில் பயன்படுத்துவதுடன், பல குறியீடுகளும் ஒரே பொருளிலேயே பயன்படுகின்றன. எனினும் அவையிரண்டும், சீன மொழியில் எழுதப்பட்டவைகளை ஜப்பானியர்களோ, கொரியர்களோ இலகுவில் வாசித்து விளங்க முடியாத அளவுக்கு, சீன மொழியிலிருந்து வேறுபட்டவையாகும். பெரும்பாலான மொழிகள் முழுமையாக logographic எழுத்து முறைமைகளைப் பயன்படுத்தாவிட்டாலும், பல மொழிகள் சில logogram களைப் பயன்படுத்துகின்றன. நவீன உருபனெழுத்துக்களுக்குச் சிறந்த உதாரணம் அராபிய எண்கள்ஆகும். இக் குறியீடுகளைப் பயன்படுத்தும் எல்லோருக்கும், அவர்கள் அதை வண், யூனோ, ஒன்று, ஏக் என்று எப்படி அழைத்தாலும், 1 எதைக் குறிக்கிறது என்று விளங்கும். பல மொழிகளிலும் பயன்படும் ஏனைய உருபனெழுத்துக்கள் &, @ என்பவற்றையும் உள்ளடக்கும். உருபனெழுத்துக்கள் சில சமயங்களில் கருத்தெழுத்துக்கள் (Ideogram) என அழைக்கப்படுவதுண்டு. பண்பியல் (abstract) எண்ணங்களை வரைபுருவினாற் குறிப்பதால் இந்தப் பெயர். மொழியியலாளர்கள் இதன் உபயோகத்தைத் தவிர்க்கிறார்கள். மிக முக்கியமான (அத்துடன், ஓரளவுக்கு, வாழுகின்ற ஒரே) நவீன உருபனெழுத்து முறைமை சீனம் ஆகும். இதன் எழுத்துக்கள் வேறுபாடான அளவு மாற்றங்களுடன், சீன மொழி, ஜப்பானிய மொழி, கொரிய மொழி, வியட்நாமிய மொழி மற்றும் பல ஆசிய மொழிகளில் பயன்படுகின்றன. பழங்கால எகிப்திய hieroglyphics மற்றும் மாயன் எழுத்து முறைமையும் உருபனெழுத்து வகையைச் சார்ந்தவையே. இவை இப்போது வழக்கிலிருந்து மறைந்து விட்டன. முழு உருபனெழுத்து முறைமையினதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும். அசை எழுத்து முறைமைகள் முதன்மைக் கட்டுரை: அசையெழுத்து உருபனெழுத்து முறைமைகள் ஒரு முழுச் சொல்லுக்கு ஒரு குறியீட்டையே பயன்படுத்துகின்றவேளை, அசையெழுத்து, சொற்களை உருவாக்கும் அசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி எழுதப்பட்ட ஒரு தொகுதி குறியீடுகளைக் கொண்டுள்ளது. அசையெழுத்துக்களில் உள்ள ஒரு குறியீடு பொதுப்படையாக மெய்யொலியையும் அதைத் தொடர்ந்து வரும் உயிரொலியையும் கூட்டாகவோ; அதாவது ஒரு உயிர்மெய்யொலியையோ அல்லது தனியாக ஒரு உயிரொலியையோ குறிக்கின்றது. ஒரு உண்மையான அசையெழுத்து முறையில், ஒத்த ஒலியமைப்பையுடைய எழுத்துக்களிடையே ஒழுங்கு முறையிலமைந்த வரைபு ஒப்புமை இருப்பதில்லை (சில முறைமைகளில் உயிரெழுத்துக்களில் இவ்வாறான ஒற்றுமை காணப்படுகின்றது). அதாவது, "கே", "க", மற்றும் "கோ" போன்றவற்றைக் குறிக்கும் எழுத்துக்களிடையே ஒரு பொது "க்" தன்மையைக் காணமுடியாது. ஜப்பானிய மொழியைப்போல் ஒப்பீட்டளவில் எளிமையான அசை அமைப்பைக் கொண்ட மொழிகளுக்கே அசையெழுத்து முறை மிகவும் பொருத்தமானது. ஆங்கில மொழியைப் போன்ற சிக்கலான அசை அமைப்பையும், பெருமளவிலான மெய்யொலிகளையும், சிக்கலான மெய்யொலிக் கூட்டங்களையும் கொண்ட மொழிகளில் சொற்களை அசையெழுத்து முறையில் எழுதுவது கடினமாகும். அமையக்கூடிய ஒவ்வொரு அசைக்கும் ஒரு எழுத்துப்படி ஜப்பானிய மொழியில் 100 எழுத்துக்களுக்குமேல் கிடையா. ஆங்கிலத்தை இதேமுறையில் எழுதுவதாயின் பல ஆயிரம் எழுத்துக்கள் வேண்டியிருக்கும் எனக்கூறப்படுகிறது. அசை எழுத்து முறைமையைப் பயன்படுத்தும் மொழிகளுள் பின்வருவனவும் அடங்கும். மைசீனியன் (Mycenaean) கிரேக்கமொழி (லீனியர் B) மற்றும் செரோக்கீ போன்ற உள்ளூர் அமெரிக்க மொழிகள். பழங்கால அண்மைக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பல மொழிகள், சில அசை அல்லாத அம்சங்களையும் கொண்ட அசையெழுத்து முறையிலான ஆப்பெழுத்து வடிவங்களைப் பயன்படுத்தின. முழு அசையெழுத்துக்களின் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும். ஒலியன் எழுத்து முறைமை முதன்மைக் கட்டுரை: ஒலியனெழுத்து ஒலியனெழுத்து (Alphabetic) என்பது ஒவ்வொன்றும், பேச்சு மொழியொன்றிலுள்ள, ஒரு ஒலியனை, அண்ணளவாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது பிரதிநிதித்துவப்படுத்திய சிற்றளவிலான எழுத்துக்களைக் கொண்ட தொகுதி - அடிப்படையான குறியீடுகள்- ஆகும். ஆங்கிலத்தில் இச் சொல்லைக் குறிக்கும் "அல்பபெட்" (alphabet) என்னும் சொல், கிரேக்க அரிச்சுவடியின் முதல் இரண்டு எழுத்துக்களான "அல்பா", "பீட்டா" என்பவற்றைச் சேர்த்துப் பெறப்பட்டது. ஒரு முழுமையான ஒலியன் எழுத்து முறைமையில் (phonological alphabet), ஒலியன்களும் (phoneme), எழுத்துக்களும் ஒன்றுடனொன்று இரண்டு திசைகளிலே முழுமையாகப் பொருந்தக்கூடியன: ஒரு சொல்லின் உச்சரிப்புக் கொடுக்கப்பட்டால், எழுதுபவர் ஒருவர் அதற்குரிய எழுத்துக்களைக் கண்டுகொள்ளக்கூடியதாகவும், சொல்லுக்குரிய எழுத்துக்கள் கொடுக்கப்படும்போது, பேசுபவரொருவர் அதன் உச்சரிப்பை அறியக்கூடியதாகவும் இருக்கும். ஒவ்வொரு மொழிக்கும், அதன் எழுத்துக்களுக்கும், ஒலியன்களுக்கும் இடையிலான கூட்டைக் (association) கட்டுப்படுத்தும் பொது விதிகள் உள்ளன. ஆனால், மொழிகளைப் பொறுத்து, இவ் விதிகள் ஒரு தன்மைத்தாகப் பின்பற்றப்படவோ அல்லது பின்பற்றப்படாமல் இருக்கவோ கூடும். முழுமையான ஒலியன் எழுத்துக்கள் பயன்படுத்துவதற்கும், பயிலுவதற்கும் இலகுவானது என்பதுடன், கல்வி வளர்ச்சியில் அவ்வாறான மொழிகள், சிக்கலானதும், ஒழுங்கற்றதுமான எழுத்துக்கூட்டு முறைகளைக் கொண்ட ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் குறைந்த தடைகளைக் கொண்டவையாகும். பொதுவாக மொழிகள் எழுத்துமுறைமைகளில் தங்கியிராமல் வளர்வதாலும், எழுத்து முறைமைகள், குறிப்பிட்ட மொழிகளுக்கென வடிவமைக்கப்படாது, வேறு மொழிகளிலிருந்து கடன் பெறுவது உண்டு என்பதாலும், ஒலியன்களும், எழுத்தும் ஒன்றுடனொன்று பொருந்தும் அளவு மொழிக்கு மொழி வேறுபடுகின்றது. சில சமயம் ஒரு மொழிக்குள்ளேயே வேறுபடுகின்றது. நவீன காலத்தில், மொழியியலாளர், ஏற்கனவே எழுத்துமுறைகளைக் கொண்டிராத மொழிகளுக்குப் புதிய எழுத்துமுறைமைகளை உருவாக்கும்போது, முழுமையான ஒலியன் எழுத்து முறைமைகளை உருவாக்குவதே இலக்காக உள்ளது. ஒலியன் எழுத்து (alphabet) பற்றிய மேலதிக விபரங்களுக்கு, ஒலியன் எழுத்து கட்டுரையைப் பார்க்கவும். எல்லா ஒலியன் எழுத்துக்களினதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும். அப்ஜாட்கள் விருத்தியாக்கப்பட்ட முதலாவது வகை உருபன் எழுத்து, அப்ஜாட் (Abjad) ஆகும். அப்ஜாட் என்பது ஒவ்வொரு மெய்யெழுத்துக்கும் ஒவ்வொரு குறியீட்டைக் கொண்டுள்ள, உருபன் எழுத்து முறைமையாகும். அப்ஜாட்கள், மெய்யொலிகளுக்கு மட்டுமே எழுத்துக்களைக் கொண்டுள்ளன. இந்த வகையில் அவை, வழமையான ஒலியன் எழுத்துக்களிலிருந்து வேறுபடுகின்றன. அப்ஜாட்டில் உயிரொலிகளுக்குக் குறியிடப்படுவதில்லை. அறியப்பட்ட எல்லா அப்ஜாட்களும் செமிட்டிக் குடும்ப எழுத்துவகையைச் சார்ந்தவை. அத்துடன் அவையனைத்தும், மூல வடக்கு நீள் அப்ஜாட்டிலிருந்து பெறப்பட்டவயாகும். செமிட்டிக் மொழிகள், பெரும்பாலான சமயங்களில் உயிர்க் குறியீட்டைத் தேவையற்றதாக்கும் உருபன் அமைப்பைக் (morphemic structure) கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும். அரபி, ஹீப்ரூ பொன்ற சில அப்ஜாட்கள் உயிர்களுக்கான குறியீடுகளையும் கொண்டுள்ளனவெனினும், கற்பித்தல் போன்ற விசேட சந்தர்ப்பங்களில் மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. அப்ஜாட்களிலிருந்து பெறப்பட்ட பல மொழிகள், உயிர்க் குறியீடுகளைச் சேர்த்து விரிவாக்கப்பட்டதன் மூலம், முழுமையான உருபன் எழுத்துகள் ஆகின. போனீசியன் அப்ஜாட்டிலிருந்து, முழுமையான கிரேக்க ஒலியன் எழுத்து உருவானது, ஒரு பிரபலமான உதாரணமாகும். இவ்வெழுத்துக்கள் செமிட்டிக் அல்லாத மொழிகளுக்குப் பயன்படுத்தப்பட்டபோதே பெரும்பாலும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. முழு abjads இனதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும். அபுகிடாக்கள் எழுத்து முறைமை வகைபிரிப்பு தமிழ் எழுத்துமுறை பிராமி எழுத்து தமிழ் பிராமி எனப்படும் தமிழி எழுத்துமுறையானது பழந்தமிழை முதன் முதலாக எழுத பயன்படுத்தபட்ட பண்டைய எழுத்துமுறை ஆகும். இது இந்திய அளவிலான பிராமி எழுத்துமுறையின் தமிழ்மொழிக்கான தழுவலாக அமைந்திருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், தமிழ்-பிராமி எழுத்துக்களிலேயே தமிழ் மொழி எழுதப்பட்டு வந்தது. இதனைப் பழங்காலக் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடியும். நான்காம் நூற்றாண்டு வரையிலும் தமிழ்-பிராமி எழுத்துமுறை வழக்கத்தில் இருந்தது. பின்னர் ஐந்தாம் நூற்றாண்டளவில், இது வட்டெழுத்தாக உருமாற்றம் அடைந்தது. வட்டெழுத்து பனை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கு ஏதுவாகத் தமிழ் பிராமி எழுத்துமுறையானது வட்டெழுத்து முறையாக உருமாறத் தொடங்கியது. வட்ட வடிவில் எழுதப்படும் தமிழ் எழுத்து வட்டெழுத்து என வழங்கப்பட்டது. தமிழில் வட்டெழுத்துகள் உருவான அதே கால கட்டத்தில், வடமொழியின் பிராமி எழுத்துமுறையில் பல்லவ கிரந்தம் என்ற புதிய எழுத்துமுறை பல்லவர் காலத்தில் உருவானது. தமிழ் வட்டெழுத்தும் பல்லவ கிரந்தமும் ஒருசேர வளர்ச்சி பெறத் தொடங்கின. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியில் இந்த வட்டெழுத்து பயன்படுத்தப்பட்டது. இது சற்றேறக்குறைய ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. அதன் பின்னர், தமிழ் வட்டெழுத்து முறையின் பயன்பாடுகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின. பிறகு, நவீன தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியில், பல்லவத் தமிழ் எழுத்துமுறை உருவாகியது. இருப்பினும், 11 ஆம் நூற்றாண்டு வரை தமிழில் வட்டெழுத்து பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனாலும், கேரளத்தின் மலையாள மொழியில் இவ் வட்டெழுத்து முறையானது பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. வட்டெழுத்து முறையின் மற்றுமொரு எழுத்து வடிவமாகத் திகழ்ந்த கோலெழுத்து முறையானது, மலையாள மொழியில் நீண்ட காலம் வழக்கில் இருந்து வந்தது. வட்டெழுத்தில் புள்ளியின் பயன்பாடுகள் மிகுதியாகக் காணப்படும். இதன்விளைவாக, எகரம் மற்றும் ஒகரம் ஆகியவை தெளிவாக எழுதப்பெறும். இவற்றில் பகர, வகர வேறுபாடுகளைத் தெளிவாக வட்டெழுத்தில் அறிய முடியாதது ஒரு பெருங்குறையாகும். ஏனெனில், தமிழ் வட்டெழுத்து முறையில் இவை இரண்டும் வேறுபாடுகள் அறியவியலாத வகையில் ஒத்த வடிவங்களைக் கொண்டதாக அமைந்து காணப்படும். பல்லவர் கால எழுத்துமுறை அண்மைக்காலத் தமிழ் எழுத்துமுறையானது பல்லவர் கால எழுத்துமுறையிலிருந்து உருவானதாதாகும். எனினும், பல்லவர் கால தமிழ் எழுத்துமுறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. தமிழ் எழுத்துகளில் இடம்பெறும் புள்ளி குறிக்கப்படாதது வாசித்தலில் சிக்கல்கள் ஏற்பட காரணமாக இருந்தது. இதனால், ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டு வாசிப்புகளும் எளிதில் பொருள் கொள்ளும் விதமும் இடையூறாக அமைந்தன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் About African writing systems by the John Henrik Clarke Africana Library at Cornell University: http://www.library.cornell.edu/africana/Writing_Systems/Welcome.html General about writing systems http://www.omniglot.com/index.htm Alphabetic Writing Systems Alphabets of Europe The Unicode Consortium A Typographic Outcry : a curious perspective உசாத்துணைகள் Hannas, William. C. 1997. Asia's Orthographic Dilemma. University of Hawaii Press. (paperback); (hardcover) DeFrancis, John. 1990. The Chinese Language: Fact and Fantasy. Honolulu: University of Hawaii Press. Smalley, W.A. (ed.) 1964. Orthography studies: articles on new writing systems, United Bibe Society, London. மொழியியல் வட்டெழுத்துக் கல்வெட்டுகள்
1323
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88
மந்திரிமனை
மந்திரி மனை என்பது இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் ஆகும். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது. இக்கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், யாழ்ப்பாண அரச தொடர்பு உடையவையாக இருந்திருக்கமுடியும் எனக் கருத இடமுண்டு. சிறுவனாக இருந்த கடைசி மன்னன் சார்பில் அரசப் பிரதிநிதியாக இருந்த சங்கிலி குமாரனுடைய அரண்மனை இருந்த இடம் எனக் கருதப்படும் சங்கிலித்தோப்பும், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும், வேறும் பல அரசத் தொடர்புள்ளவைகளாகக் கருதப்படுபவையும், இதற்கு அண்மையிலேயே உள்ளன. ஆனாலும், இக்கட்டிடத்தின் பெரும்பகுதி பிற்காலத்தைச் சேர்ந்தது என்பதே பல ஆய்வாளர்களது கருத்து. கட்டிட அமைப்பு தற்போதைய நிலையில் இக் கட்டிடம் ஏறத்தாழ 70 x 80 மீட்டர்கள் அளவுகளைக் கொண்ட நிலப்பரப்பில், அதன் தென்மேற்கு மூலையை அண்டி அமைந்துள்ளது. தொடக்கத்தில் இதற்குரிய நிலம் இன்னும் பெரிதாக இருந்திருக்கக்கூடும். காலம் இக்கட்டிடம் கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருள்களான செங்கட்டி, சுண்ணாம்புச் சாந்து, மரங்கள், ஓடுகள் என்பவைகளையும்; இக்கட்டிடத்தின் அமைப்பையும், அதன் முன்புறத்தில் செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைகளையும் கருத்தில் கொண்டு, இக்கட்டிடம் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடமாக இருக்கலாம் என யாழ்ப்பாணச் சரித்திரவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனாலும், இக்கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சில கூறுகள், குறிப்பாக அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தாலான சில தூண்கள், போதிகைகள் போன்றவை யாழ்ப்பாண அரசர் காலத்துக்கு உரியவை என்ற கருத்தும் உண்டு. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின், தலைநகரத்தை நல்லூரிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு மாற்றினாலும், நல்லூரில் எஞ்சியிருந்த அரச கட்டிடங்களும், நிலங்களும் போத்துக்கீசரின் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் வந்த ஒல்லாந்தரும் இவ்வாறே பயன்படுத்தினர். பின்னவர்கள் மேற்சொன்ன நிலங்களிலே புதிய கட்டிடங்களைக் கட்டிய ஆதாரங்களும் உண்டு. "மந்திரிமனை" என அழைக்கப்படும் இந்தக் கட்டிடமும் இவ்வாறே புதிதாக அமைக்கப்பட்ட அல்லது பெருமளவுக்குத் திருத்தியமைக்கப்பட்ட கட்டிடமாகவே இருக்கவேண்டும் என்பதும் இவர்களது கருத்து. இக்கட்டிடத்தில் கடந்த நூற்றாண்டில் சில திருத்த வேலைகள் சில நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. எப்படியாயினும், யாழ்ப்பாணத்தில் அதன் குடியேற்றவாதக் காலத்துக்கு முற்பட்ட தொடர்புகளைக் கொண்ட, எஞ்சியுள்ள மிகச் சில கட்டிடங்களில் ஒன்று என்றவகையில், இது முக்கியத்துவம் பெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்வரை இக்கட்டிடம், அருகிலுள்ள சட்டநாதர் சிவன் கோயிலுடன் தொடர்புடையவரால் குடும்பமொன்றினது இருப்பிடமாகப் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டு வநதுள்ளது. அக்காலத்திலேயே இதன் பெரும்பகுதி கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது. அண்மைக்காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் இக்கட்டிடமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது இது ஓரளவு திருத்தப்பட்டு உள்ளது. இவற்றையும் பார்க்கவும் யாழ்ப்பாண அரசின் சிதைவுகள் சங்கிலித்தோப்பு யமுனா ஏரி குறிப்புகள் உசாத்துணைகள் சிவசாமி, வி., நல்லூரும் தொல்பொருளும், ஒளி, 1972. யாழ்ப்பாணத் தொல்லியல் யாழ்ப்பாண அரசு இலங்கையின் தொல்லியற்களங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்
1325
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்
பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டன. பனையிலிருந்து பல உப உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மனிதர்களின் உணவும், விலங்குகளின் உணவும் அடங்கும். உணவுப்பொருட்கள் மட்டுமல்லாது கட்டடப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல பொருட்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. உணவுப்பொருட்கள் நுங்கு பனம் பழம் பூரான் பனாட்டு – (பனை + அட்டு) பனம்பழத்தைப் பிழிந்து எடுத்து உலரவைத்து செய்யப்படும் பொருள். பாணிப்பனாட்டு பனங்காய்ப் பணியாரம் கள்ளு பனங்கள்ளு பனஞ்சாராயம் வினாகிரி பதநீர் பனங்கட்டி = கருப்பட்டி = பனைவெல்லம். சில்லுக் கருப்பட்டி பனங்கற்கண்டு பனஞ்சீனி (பனை வெல்லம்) பனங்கிழங்கு ஒடியல் ஒடியல் புட்டு ஒடியல் கூழ் புழுக்கொடியல் முதிர்ந்த ஓலை விலங்கு உணவு குருத்து உணவுப்பொருள் அல்லாதவை குருத்தோலை சுவடிகள் வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் பனையோலை பெட்டி நீற்றுப் பெட்டி கடகம் பனைப்பாய் கூரை வேய்தல் வேலியடைத்தல் உமல் விசிறி விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் கிணற்றுப் பட்டை எரு துலா அலங்காரப் பொருட்கள் பனம் மட்டை வேலியடைத்தல் நார்ப் பொருட்கள் தட்டிகள் பின்னல் உணவு உண்ணப் பயன்படும் பொருட்கள் பிளா ஓலை நட்டி வேறு பயன்பாடுகள் கங்குமட்டை தும்புப் பொருட்கள் விறகு மரம் கட்டிடப்பொருட்கள் தளபாடங்கள் பனம் விதை எரிபொருள் பனம் சவர்க்காரம் பனையியல்
1327
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88
திராவிடக் கட்டடக்கலை
இந்தியக் கட்டடக்கலை வரலாற்றில் தமிழர் கட்டடக்கலை என்னும் தென்னிந்தியக் கட்டடக்கலை (Southern Indian temple style) முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய கர்நாடகப் பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ் அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய தமிழக கட்டிடக்கலைப் பாணி முகம் காட்டத் தொடங்கியது. எனினும், இப் பாணியின் மூலக்கருவை குப்தர்காலப் பௌத்த கட்டிடங்கள் சிலவற்றில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தப் பாணியை ஏழாம் நூற்றாண்டளவில் ஆந்திரப் பிரதேசப் பகுதிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்லவ அரசர்களின் கீழும் பின்னர் சோழர், பாண்டியர், விஜயநகரம், நாயக்கர் ஆகிய ஆட்சிகளின் கீழும் தொடர்ந்து வளர்ந்து உயர்நிலை அடைந்தது. தமிழகக் கட்டடக்கலையைப் பல துணைப் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். பொதுவாகக் கால அடிப்படையில், அந்தந்த காலங்களில் முதன்மை பெற்றிருந்த அரசுகளின் தொடர்பில் இத் துணைப் பிரிவுகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியக் கட்டிடக்கலை (Indian Archtecture) என்னும் ஆங்கில நூலில் பேர்சி பிறவுன் என்பார் பின்வருமாறு தமிழக கட்டிடக்கலையைத் துணைப்பிரிவுகளாக வகுத்துள்ளார். தமிழகக் கட்டடக்கலையில் கால வரைவு பின்வருமாறு: பல்லவர் காலம் (பொ.ஊ. 600 – பொ.ஊ. 900) சோழர் காலம் (பொ.ஊ. 900 – பொ.ஊ. 1150) பாண்டியர் காலம் (பொ.ஊ. 1100 – பொ.ஊ. 1350) விஜயநகரக் காலம் (பொ.ஊ. 1350 – பொ.ஊ. 1565) நாயக்கர் காலம் (பொ.ஊ. 1600 – ) பல்லவர் காலம் கல்லினால் கட்டிடங்களை அமைக்கும் முறையைத் தென்னகத்தில் அறிமுகப்படுத்தியது பல்லவர்களே. ஆரம்பத்தில் பாறைகளைக் குடைந்து குடைவரை கோயில்களை அமைத்தனர். அத்துடன் பாறைகளை வெளிப்புறத்தில் செதுக்கி ஒற்றைக்கல் கோயில்களையும் அமைத்தனர். பின்னர் கற்களைப் பயன்படுத்திக் கட்டுமானக் கோயில்கள் அமைக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி, திருக்கழுக்குன்றம், தளவானூர், பல்லாவரம், நாமக்கல் ஆகியவை உட்படப் பல இடங்களில் பல்லவர்களின் குடைவரை கோயில்களைக் காணலாம். மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற "பஞ்ச பாண்டவர் ரதங்கள்" என அழைக்கப்படும் கோயில்கள் ஒற்றைக் கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டவை ஆகும். காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப்பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என்பனவும் புகழ் பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலும் பல்லவர்களின் கட்டுமானக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். சோழர் காலம் தமிழகத்தில் சோழராட்சி முன்னணிக்கு வந்த முற்பகுதியில் (பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டு) மிகுதியான அளவில் கோயில்கள் கட்டப்படதாகத் தெரியவில்லை; கட்டப்பட்டவையும் அளவிற் சிறியவையே. இக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களுக்கு எடுத்துக்காட்டாகத் திருக்கட்டளையிலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர் கோயில், திருமயம், கண்ணனூரிலுள்ள பாலசுப்பிரமணியர் கோயில், திருச்சிராப்பள்ளி, சிறீனிவாசநல்லூரில் கட்டப்பட்ட குரங்கநாதர் கோயில் என்பவற்றைக் கூறலாம். சோழராட்சியின் தொடக்கக்காலக் கோயில்களில் பல கூறுகளில் புதிய பாணிகள் தென்பட்டபோதும், பல்லவர் காலக் கட்டிடக்கலை கூறுகளும் முற்றாக மறைந்து விடவில்லை. இக்காலக் கட்டிடங்கள் முன்னர் கூறியது போல் அளவிற் சிறியனவாக இருந்தாலும், பல்லவர் கட்டிடங்களோடு ஒப்பிடுகையில் முழுமை பெற்றவையாகக் காணப்படுகின்றன. சோழராட்சியின் பிற்பகுதி திராவிடக் கட்டிடக்கலையின் பொற்காலம் எனலாம். இராஜராஜ சோழன் காலத்தில் சோழர்கள் மிகவும் பலம் பெற்று விளங்கினர். அவர்களுடைய நாடு பரந்து விரிந்து இருந்தது. இந்திய நாட்டுக்கு வெளியேயும் அவர்களுடைய ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம். இந்த அதிகார பலத்தினதும், செல்வ வளத்தினதும் பின்னணியிலேயே தஞ்சைப் பெருவுடையார் கற்றாளி (கோவில்) கட்டப்பட்டது. மேற்கோள் தரவுகள் கட்டிடக்கலை
1329
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D
புல்லாங்குழல்
புல்லாங்குழல் () மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. சுமார் 43,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையான பல புல்லாங்குழல்கள் இன்றைய ஜெர்மனியின் ஸ்வாபியன் ஜுரா பகுதியில் கிடைத்துள்ளன. இந்தப் புல்லாங்குழல்கள் ஐரோப்பாவில் நவீன கால மனிதனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வளர்ந்துள்ள ஒரு இசை பாரம்பரியத்தின் சாட்சியாக உள்ளது. புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட குழல்கள், கி.மு. 1500 முதல் இந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு முதன்மைக் கடவுளான கண்ணன் புல்லாங்குழலைக் கொண்டிருப்பார். பொருளியல் மற்றும் சொல் 1150 - 1500 காலகட்டத்தில், ஆங்கிலத்தில் புல்லாங்குழல் முதன்முதலில் புளூட் (flute) அல்லது else flowte, flo(y)te எனவும், 9 முதல் 14 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பேசப்பட்ட பழைய பிரெஞ்சு மொழியில் ப்ளாட் (flaute) எனவும், பழைய ஆக்சிதம் மொழியில், அல்லது மற்றும் பழைய பிரெஞ்சு மொழியில் ஃபிளாட் (flaüt), ஃப்ளூட்டெ ( fleüte), ஃப்லாட்டெ ( flaüte), ஃப்ளஹுட் ( flahute) எனவும் அழைக்கப்பட்டது.  இடைக்கால உயர் ஜேர்மன் மொழியில் floite அல்லது இடச்சு மொழியில் fluit எனவும் வழங்கப்பட்டது. புல்லாங்குழலை குறிக்கும் புலூட் (flute) என்ற சொல் முதன்முதலில் 14 ஆம் நூற்றாண்டில் அறியப்படுகிறது. ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின்படி, இது ஜெஃப்ரி சாசர்ரின் த ஹவுஸ் ஆஃப் ஃபேமில், c.1380 இல் பயன்படுத்தப்பட்டது. இன்று, புல்லாங்குழல் குடும்பத்தைச் சார்ந்த எந்தவொரு கருவியையும் வாசிக்கும் ஒரு இசைக்கலைஞர் ஆங்கிலத்தில் flutist (அமெரிக்காவின் பொதுவான உச்சரிப்பு "FLEW-tist"), அல்லது flautist (ஐக்கிய இராச்சியத்தில் பொதுவாக உச்சரிக்கப்படுவது "FLAW-tist"), அல்லது வெறுமனே ஒரு புலூட் பிளேயர் (flute player) (மிகப் பொதுவாக) என அழைக்கப்படுகிறார். இப்போது கிட்டத்தட்ட வழக்கற்றுப் போன பிற ஆங்கில சொற்கள் ஃப்ளட்டர் (fluter) (15 -19 நூற்றாண்டுகள்) மற்றும் புளூட்டினிஸ்ட் (flutenist) (17 -18 ஆம் நூற்றாண்டுகள்). வரலாறு இதுவரையான காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புல்லாங்குழலில் பழமையான புல்லாங்குழலானது, ஒரு இளம் குகைக் கரடியின் தொடை எலும்பால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் இரண்டு முதல் நான்கு துளைகள்வரை இருந்திருக்கலாம், இது சுலோவியாவின் டிஜீ பேபே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இது சுமார் 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இருப்பினும், இது சர்ச்சைக்குரியதாக உள்ளது. 2008 ஆம் ஆண்டில் குறைந்தது 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றொரு புல்லாங்குழல் மீண்டும் ஜெர்மனியின் உல்ம் நகருக்கு அருகில் உள்ள, ஹோஹெல் ஃபெல்ஸ் குகையில் காண்டெடுக்கப்பட்டது. இந்தப் புல்லாங்குழலானது ஐந்து துளைகளுடன் V- வடிவ வாயைக் கொண்டதாக உள்ளது. இது ஒரு பிணந்தின்னிக் கழுகின் இறக்கை எலும்பில் செய்யப்பட்டதாகும். இந்தக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் 2009 ஆகத்தில் நேச்சர் பத்திரிக்கையில் தங்கள் கண்டுபிடிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இந்த கண்டுபிடிப்பானது, உலக வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு இசைக் கருவியையும்விட பழமையானதாகும், ஜெர்மனியின் ஜியாசென்ஸ்கொஸ்டெர்லேர் குகையில் காண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல்கள் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தின அவை 42,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை பழமையான காலகட்டத்தவையாக கருதப்பட்டன. இலக்கியத்தில் புல்லாங்குழல் இந்தியாவின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புகள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப்பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் கடவுளான விஷ்ணு பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு. முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் முருகன். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே, “குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்” என வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம். “குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்” என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். எது முக்கியமோ அதை முதலில் சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக் கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழ்கின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம் சுப்பிரமணிய சுவாமி. வகைகள் இந்திய புல்லாங்குழல் இந்திய பாரம்பரிய இசை வரலாற்றில் புல்லாங்குழல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.இவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றது.இந்துக்களின் கடவுளான கிருஷ்ணரே புல்லாங்குழலின் குருவாக கருதப்படுகிறார்.மேற்கத்திய புல்லாங்குழலினை விட இவை சாதாரணமாகவே இருக்கின்றன.இந்திய புல்லாங்குழல்களில் இரண்டு வகைகள் உள்ளன.ஒன்று பன்சூரி வகையாகும்.இதில் ஆறு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.வட இந்திய ஹிந்துஸ்தானி இசைக்கு இவை பயன்படுகின்றன.மற்றொருவகை வேணு இவை தெனிந்திய கர்நாடக இசைகளில் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் எட்டு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.தற்போது தென்னிந்திய புல்லாங்குழலாக கருதப்படுவது 20-ஆம் நூற்றாண்டில் சரப சாஸ்திரி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஏழு விரல்துளைகள் கொண்ட புல்லாங்குழல் ஆகும். சீனப் புல்லாங்குழல் சீனப் புல்லாங்குழல்கள் டிசி என அழைக்கப்படுகின்றன. இவை பல்வேறு அளவுகளிலும், பல்வேறு அமைப்புக்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் துளைகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 11 வரை வேறுபடுகின்றன. பெரும்பாலானவை மூங்கிலால் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் மரம், எலும்பு, இரும்பு ஆகியவற்றாலும் ஆக்கப்பட்டவையும் காணப்படுகின்றன. நவீன சீன இசைநிகழ்ச்சிகளில் காணப்படக்கூடிய புல்லாங்குழல்களாவன பங்டி (梆笛), கூடி (曲笛), சிந்தி (新笛), டாடி (大笛) என்பனவாகும். நிலைக்குத்தாக வைத்து வாசிக்கப்படும் மூங்கிலாலான புல்லாங்குழல் சியாவோ (簫) என அழைக்கப்படுகின்றது. ஜப்பானியப் புல்லாங்குழல் ஜப்பானியப் புல்லாங்குழல்கள் ஜப்பானிய மொழியில் பியூ (fue) (笛) (ஹிரகனா ふえ) என அழைக்கப்படுகின்றன. முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படுபவை, குறுக்க்காக வைத்து வாசிக்கப் படுபவை என இரு வகையிலும் பல சங்கீதப் புல்லாங்குழல்கள் ஜப்பானில் காணப்படுகின்றன. சோடினா மற்றும் சுலிங் சோடினா எனப்படுவது முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படும் ஒருவகைப் புல்லாங்குழல் ஆகும். இது இந்து சமுத்திரத்தில் உள்ள தென்கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த மடகஸ்கார் தீவுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தென்கிழக்காசியாவிலும் இந்தோனேசியாவிலும் இது சுலிங் என அழைக்கப்படுகின்றது. சமகாலத்தில் வசித்த பிரசித்தி பெற்ற சோடினா வாசிப்பவரான இரகோடோ பிராவின் (இறப்பு2001) புகைப்படம் அந்நாட்டுப் பணத்தாள் ஒன்றில் அச்சிடப்பட்டுள்ளது. அமைப்பு புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம். இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும். வாசிக்கும் முறை குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது. புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும். புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு 7 துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும். பல்வேறு குழல்கள் உலகம் முழுவதிலுமுள்ள பல விதமான இசைகளுக்கு ஒத்ததாகப் பல்வேறு சிறிய மாற்றங்களுடன் வெவ்வேறு விதமாகப் புல்லாங்குழல்கள் செய்யப்படுகின்றன பிரபல புல்லாங்குழல் மேதைகள் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை டி. ஆர். மகாலிங்கம் டி. ஆர். நவநீதம் என். ரமணி மேற்கோள்கள் வெளியிணைப்புகள் They're heard… but faintly Bamboo to bansuri - புல்லாங்குழல் தயாரிக்கும் முறை இவற்றையும் பார்க்கவும் பஞ்சமரபு காற்றிசைக் கருவிகள் துளைக் கருவிகள்
1331
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
டோரிக் ஒழுங்கு
டொரிக் ஒழுங்கு என்பது கிரேக்கக் கட்டிடக்கலையின் மூன்று ஒழுங்குகள் அல்லது ஒழுங்கு முறைமைகளுள் ஒன்றாகும். அயனிக் ஒழுங்கு, கொறிந்தியன் ஒழுங்கு என்பன ஏனைய இரண்டு ஒழுங்குகளுமாகும். இவற்றுள் டொறிக்கே காலத்தால் முந்தியது. கி.மு 7 ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்பட்ட இது கி.மு 5 ஆம் நூற்றாண்டில் முதிர்ச்சி நிலையை எட்டியது. கிரேக்க டொறிக் தூண்கள் அடியில் பீடம் எதுவுமின்றி, நேரடியாகவே தளத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ளன. ஆரம்பகாலத்தில் தூண்களின் அடிப்பகுதியின் விட்டத்துக்கும், உயரத்துக்கும் உள்ள விகிதம் கிட்டத்தட்ட ஒன்றுக்கு நான்காக அமைந்திருந்தது. பிற்காலத்தில் உயரம், விட்டத்தின் ஐந்தரை மடங்குகளுக்கு மேல் உயரமுடையனவாக மெலிந்து அமைந்தன. தூண்களின் தம்பங்களைச் சுற்றித் தவாளிகள் (grooves) உருவாக்கப்பட்டன. அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதிவரை ஒடுங்கிச் செல்லுகின்ற இத் தூண்களின் மேற்பகுதி, அடிப்பகுதியின் முக்கால் தொடக்கம் நாலில் மூன்று பங்கு வரையிலான விட்டத்தைக் கொண்டிருக்கின்றது. தம்பத்தின் உச்சியில் தூண்களின் தலைகள் அல்லது போதிகைகள் உள்ளன. தூணின் கழுத்துப் பகுதியிலிருந்து வளைவுடன், விரிந்துசெல்லும் இது, "அபகஸ்" என்று அழைக்கப்படும் சதுரவடிவப் பலகையில் நிறைவுறுகிறது. "எண்ட்ராபிளேச்சர்" (entablature) எனப்படும் தலைமை உத்திரம் இதன் மீது தாங்கப்பட்டுள்ளது. இந்த "எண்ட்ராபிளேச்சர்", ஒன்றன்மீதொன்று அமைந்துள்ள மூன்று பகுதிகளாக உள்ளது. இப்பகுதிகள் 1) ஆர்க்கிட்றேவ் (Architrave), 2) பிறீஸ் (Frieze), 3) கோர்னிஸ் (Cornice) என்பனவாகும். பிறீஸ், ஒரு குறிப்பிட்ட இடைவெளியிலமைந்த, தவாளிப்புகளிட்டு அலங்கரிக்கப்பட்ட நீள்சதுர வடிவுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது. இவை ட்றைகிளிப்ஸ் (triglyphs) எனப்படுகின்றன. உண்மையில் இவை கோயில்கள் மரத்தால் கட்டப்பட்ட காலத்தில் இருந்த உத்திரங்களின் அந்தலைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவனவாகும். ட்றைகிளிப்ஸ் களுக்கு இடையில் அமையும் வெளிகள் மெட்டோப்ஸ் (metopes) எனப்படுகின்றன. இவை வெறுமையாக விடப்படுவதுண்டு; அல்லது செதுக்கு வேலைகளால் நிரப்பப்படுவதுமுண்டு. டொறிக் ஒழுங்கின் ஆரம்பகால உதாரணங்களுள் ஒன்றாக, மக்னா கிறீசியா என் அழைக்கப்படும், தெற்கு இத்தாலியின் பீஸ்ட்டம்(Paestum) என்னுமிடத்திலுள்ள கோயில் விளங்குகின்றது. கி.மு 449 அளவில் கட்டப்பட்ட, ஏதென்சிலுள்ள ஹெப்பீஸ்தஸ் கோயில் டொறிக் ஒழுங்கின் உயர்நிலை விளக்கமாக அமைந்துள்ளது. இதன் சமகாலத்ததும், அக்கால ஏதென்ஸின் மிகப்பெரிய கோயிலுமான பார்த்தினனும், சிற்றளவு அயனிக் அம்சங்கள் இருந்தாலும், பெரிதும் டொறிக் ஒழுங்கைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளது. செந்நெறிக் கட்டிடக்கலை
1334
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
எப்பெசுடசு கோயில்
எப்பெசுடசு கோயில் ( Temple of Hephaestus ) கிரீஸ் நாட்டின் மத்திய ஏதென்ஸில் உள்ளது. உலகில், கூடிய அளவு நல்ல நிலையிலிருக்கும் பழங்காலக் கிரேக்கக் கோவில் இதுவே எனினும், இதன் அண்மையிலிருக்கும், பிரபலமான கோயிலான பார்த்தினனிலும் குறைவாக அறியப்பட்டதாகவே இது உள்ளது. எப்பெசுடத்தியம் என்றும் இது அழைக்கப்படுகின்றது. பைசண்டைன் காலத்தில், கிரேக்கக் காவிய நாயகனான தீசியஸ் என்பவனுடைய எலும்புகள் இங்கே புதைக்கப்பட்டுள்ளதாக நிலவும் ஐதீகத்தைத் தொடர்ந்து, தீசியம் ( Theseum ) என்றும் இது அழைக்கப்படுவதுண்டு. கட்டிட பாணி இந்தக் கோயில், அக்கிரோப்பொலிஸிலிருந்து 500 மீட்டர் தொலைவிலும், நவீன ஆதென்ஸின் மையமான சிந்தக்மா சதுக்கத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கி.மு 449ல், அக்கால ஏதென்ஸின் மேற்கு எல்லையில், வார்ப்புத் தொழிலகங்களையும், உலோக வேலைத்தலங்களையும் கொண்டிருந்த பகுதியில் கட்டப்பட்டது. இதனால் இக்கோயில், கொல்லர்கள் மற்றும் உலோகவேலைக்கான கிரேக்கக் கடவுளான எப்பெசுடசுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. பார்த்தினனின் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த இக்தினஸ் என்னும் கட்டிடக்கலைஞரால் இது வடிவமைக்கப்பட்டது. இது சிறிது உயர்வான இடத்தில் அமைந்திருப்பதால், பழங்காலத்தில், அகோராவிலிருந்து பார்க்கக்கூடியதாக இருந்திருக்கும். பெந்தெலுஸ் மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக் கற்களினால் டொறிக் ஒழுங்கைப் பின்பற்றிக் கட்டப்பட்ட இக் கட்டிடம், ஹெக்சாஸ்டைல் என அழைக்கப்படுகின்றது. இதன் முகப்பிலும், பின் பக்கத்திலும் ஒவ்வொன்றும் ஆறு தூண்களைக் கொண்டிருக்கின்றன என்பது இதன் கருத்தாகும். பக்கங்கள் ஒவ்வொன்றிலும் தலா 13 தூண்கள் உள்ளன. நடுவில் நாற்புறமும் சுவர்களால் சூழப்பட்ட அறை உண்டு. தூண் வரிசைகளுக்கு மேல் அவற்றின் மீது தாங்கப்பட்டுள்ள எண்ட்ராபிளேச்சர் என வழங்கப்படும் உத்திரப் பகுதியில் அமைந்துள்ள பிறீஸ், பொதுவாக ஒரு டொரிக் பாணிக்கட்டிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய படி, அலங்காரங்களற்றதாகவே உள்ளது. எனினும் இதற்கு மேல் அமைந்துள்ள, மரக்கட்டிடங்களில் துருத்திக்கொண்டிருக்கும் மர உத்திரங்களின் அந்தங்களைப் பிரதிபலிக்கும், தவாளிப்புகளினால் அலங்கரிக்கப்பட்ட ட்ரிக்ளிப்ஸ்(triglyphs) எனப்படும் உறுப்புக்களிடையேயுள்ள இடைவெளிகள் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பார்த்தினனைப் போலன்றி, இக் கோயிலின் தூண்கள், பீடம், கூரையின் பெரும் பாகம் என்பன குறிப்பிடத்தக்க அளவு நல்ல நிலையிலேயே உள்ளன. எனினும் சில பகுதிகளும், அலங்கார அம்சங்களும், திருடர்களாலும், அரும்பொருட் கொள்ளையர்களாலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கி.பி 7 ஆம் நூற்றாண்டில் இக்கட்டிடம் கிறிஸ்தவ தேவாலயமாகப் - சென் ஜோர்ஜ் தேவாலயமாக - பயன்படுத்தப்பட்டது, இக்கட்டிடம் நல்ல நிலையிலிருப்பதற்கு முக்கிய காரணமாகும். எனினும் இதே காரணம் இதன் உட்புறத்தின் பழங்கால அம்சங்கள் அகற்றப்பட்டு கிறித்தவ தேவாலயத்துக்கேற்ற புதிய உட்புறம் அமைவதற்கு ஏதுவாகியது. வரலாறு கிறீசில் ஓட்டோமான் ஆட்சி நிலவிய நூற்றாண்டுகளில் எதென்ஸின் முதன்மையான கிரேக்க ஓதோடொக்ஸ் தேவாலயமாக இதுவே விளங்கியது. கிரீசின் முதலாவது சுதந்திர அரசனான மன்னன் ஓதோன், 1834ல் நகருக்குள் நுழைந்தபோது, அவனை வரவேற்பதற்கான முதல் பிரார்த்தனையும் இங்குதான் நடைபெற்றது. சுற்றுலா தகவல் இன்று, கிரேக்க உட்துறை அமைச்சின் கீழுள்ள அரும்பொருட் செயலகத்தின் மேற்பார்வையில், ஒரு தொல்பொருள் களமாகப் பாதுகாக்கப்படுகின்றது. இதனைச் சுற்றி ஒரு வேலி போடப்பட்டிருப்பினும், பார்த்தினன் மற்றும் பல தொல்பொருட் சின்னங்களைவிட அருகில் சென்று இக்கட்டிடத்தைப் பார்க்க முடியும். இப்பொழுது இதனைச் சுற்றி ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது ஏதென்ஸின் மத்தியில் ஒரு ரம்மியமான பசுமைப் பகுதியாக உள்ளது. இருந்தும், அக்ரோபொலிஸ் போன்ற இடங்களைவிடக் குறைவான சுற்றுலாப்பயணிகளே இங்கு வருகிறார்கள். மேற்கோள்கள் ஏதென்சு கிரேக்கக் கோவில்கள்
1342
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D
பார்த்தினன்
பார்த்தினன் (Parthenon) என்பது கிரீசு நாட்டின் ஏதென்சு நகரத்திற்கு அண்மையிலுள்ள கோட்டையில் காவல் தெய்வம் கன்னி ஆதெனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழங்கால கிரேக்க கோயிலாகும். கிரீசு நாட்டில் எஞ்சியுள்ள கட்டிடங்களில் மிகவும் புகழ்பெற்றது இந்தப் பார்த்தினன் கோயில் ஆகும். உலகம் போற்றும் இப்பழைய கோயில் கட்டிடம் 2500 ஆண்டுகளாக அங்கு நின்று கொண்டிருக்கிறது. ஏதெனியப் பேரரசின் ஆட்சி உச்சகட்டத்தில் இருந்த கி.மு 447 ஆம் ஆண்டு இக்கட்டிடத்தின் கட்டுமாணமப் பணி தொடங்கியது. கி.மு. 438 இல் கோயில் கட்டி முடிக்கப்பட்டாலும் கி.மு.432 வரை கோயிலை அலங்கரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. பொதுவாக இக்கோயில் கிரேக்கக் கட்டிடக்கலையின் மூன்று ஒழுங்குகளுள் ஒன்றான டோரிக் ஒழுங்கின் உச்சநிலையாக கருதப்படுகிறது. கோயிலுள்ள அலங்கார சிற்பங்கள் கிரேக்க கலையின் உச்சப்புள்ளிகளாகக் கருதப்படுகின்றன. பண்டைய கிரேக்கம், ஏதெனியக் குடியரசு மற்றும் மேற்கத்திய நாகரிகம் ஆகியனவற்றுக்கான ஒரு நிலையான அடையாளச் சின்னமாகவும் , உலகின் மிகச்சிறந்த கலாச்சார நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும் பார்த்தினன் கோயில் கருதப்படுகிறது. பார்த்தினன் மற்றும் அக்ரோபோலிசில் கட்டப்பட்ட நினைவுச்சின்னங்களை கட்டிய ஏதென்சியர்கள் இவற்றை பாரசீக படையெடுப்பாளர்கள் மீது போரிட்டு வெற்றி பெற்ற எலனிக்கியர்களை கொண்டாடுவதற்காகவும், அவ்வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொல்வதற்காகவும் கட்டியதாகவே நினைத்தார்கள் . கோயிலின் சீரழிந்த பகுதிகளை சிரமைப்பதற்குத் தேவையான தேர்ந்தெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டங்களை கிரேக்க கலாச்சார அமைச்சகம் தற்போது நடத்தி வருகிறது . பழைய ஆதெனா ஆலயம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதிய பார்த்தினன ஆலயம் மட்டும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. வரலாற்று அறிஞர்கள் அதை முந்தைய பார்த்தினன் அல்லது பழைய பார்த்தினன் என்று அழைத்தார்கள் இது கி.மு. 480 இல் பாரசீக படையெடுப்பின் போது பழைய பார்த்தினன் ஆலயம் அழிக்கப்பட்டது. பார்த்தினன் ஆலயம் வாந்தொல்பொருளியல் அடிப்படையில் ஐயாடெசு விண்மீன்கொத்தை நேரமைத்து கட்டப்பட்டுள்ளது . பெரும்பாலான கிரேக்க கோயில்களைப் போலவே, பார்த்தினன் கோயிலும் நடைமுறையில் ஒரு கருவூலமாகப் பணியாற்றியது . ஒரு காலத்தில் இக்கோயில் டெலியன் கூட்டணியின் கருவூலமாக இருந்தது, பின்னர் அது ஏதேன் பேரரசு ஆனது. ஆறாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டில் பார்த்தினன் கன்னி மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிறித்துவ தேவாலயமாக மாற்றப்பட்டது. 1460களின் தொடக்கத்தில் ஒட்டோமான் வெற்றிக்குப் பிறகு இது ஒரு பள்ளிவாசலாக மாறியது. நீண்ட வரலாறு கொண்ட பார்த்தினான் 1687 ஆம் ஆண்டு. நடைபெற்ற துருக்கியப் போரின் (1683-1699) ஒரு பகுதியாக, வெனிசியர்கள் ஏதென்சைத் தாக்கவும் அக்ரோபோலிசைக் கைப்பற்றவும் மேற்கொண்ட போரில் மிகப்பெரிய பேரழிவினால் சேதப்படுத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் 26 அன்று கோயில் கட்டிடத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த தேவையற்ற படைதளவாடங்களை வெனீசியன் ஒருவன் பற்றவைத்த காரணத்தால் தீவிபத்து ஏற்பட்டு கோயில் வெடித்துச் சிதறியது. சிலைகள் சேதமடைந்தன. எல்கின் பளிங்குகள் அல்லது பார்த்தினன் பளிங்குகள் என்று அழைக்கப்பட்ட அச்சிலைகள் 1816 ஆம் ஆண்டில் இலண்டனிலுள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டன. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அச்சிலைகளைத் திரும்ப ஒப்படைக்கும்படி 1983 ஆம் ஆண்டு முதல் கிரீசு அரசாங்கம் பிரிட்ட்டன் அரசை கேட்டு வருகிறது. பெயர்க்காரணம் பார்த்தினன் என்ற பெயரின் தோற்றம் கிரேக்கச் சொல்லான παρθενών (பர்தினோன்) என்பதிலிருந்து வந்தது ஆகும், "திருமணமாகாத பெண்களின் அடுக்கு மாடி குடியிருப்பு" என்பது இதன் பொருள் எனக் குறிப்பிடப்படுகிறது, பார்த்தினனைப் பொறுத்தவரை கோவிலின் ஒரு குறிப்பிட்ட அறைக்கு மட்டுமே இப்பொருள் பயன்படுத்தப்பட்டது . கோயிலின் எந்த அறை இவ்வாறு பயன்படுத்தப்பட்டது? அதற்கு எப்படி அந்த பெயர் வந்தது என்பதைப் பற்றி விவாதங்கள் நடந்தன. லிடெல்-சுகாட்-யோன்சு என்ற கிரேக்க-ஆங்கில அகராதி தொகுப்பாளர் யே.பீ. ப்யூரி கூறியது போலவே இந்த அறை பார்த்தினானின் மேற்கு செல்லாதான் எனக் கூறுகிறார் .. பனாதெனாயிக் விழாவில் ஆதெனாவுக்கு உடுத்துவதற்காக ஆடை நெய்யும் நான்கு பெண்கள் இருக்கும் அறையே பாத்தினான் என்று யமௌர்டி டி கிரீன் தெரிவிக்கிறார் . ஆதெனா பார்த்தியோசு ஆதெனா பொலியாசுடன் ஒத்ததாக இருக்கவில்லை, ஆனால் அதனுடன் நெருக்கமாக இணைந்திருக்கின்ற ஆதெனா பார்தியோசு உருக்குலைந்த ஒரு தனித்துவமான வழிபாட்டு ஆதெனாவை கொண்டிருப்பதாக கிறிசுடோபர் பெல்லிங் வலியுறுத்துகிறார் . இந்த கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கினால் பார்த்தினான் என்ற சொல்லின் பொருள் "கன்னித் தேவியின் ஆலயம்" என்றும் கோவில் தொடர்புடைய ஏதெனா பார்த்தினோசின் வழிபாட்டு முறையையும் குறிக்கிறது . பார்த்தினோசு என்ற புனைபெயர் கன்னிப்பெண், ஆனால் திருமணமாகாத கன்னிப் பெண் என்பது பொருளாகும். மேலும் குறிப்பாக ஆர்ட்டெமிசு என்ற வனவிலங்குகளைக் காப்பாற்றுவதாகக் கருதப்படும் பெண் தெய்வத்தைக் குறிக்கும். வேட்டை மற்றும் தாவரங்கள், கைவினைகள், தந்திரம், புத்திசாலித்தனம், நடைமுறைகள் முதலானவற்றின் தெய்வமும் பார்த்தினோசு எனப்படுகிறது . கோயிலின் பெயர் மறைமுகமாகத் திருமணமாகாத கன்னிப் பெண்னைக் குறிப்பதால் அப்பெண்களின் உன்னதமான தியாகம் நகரத்தின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் என்றும் கருதப்பட்டது . பார்த்தினாசு கிறித்துவப் பெண் தெய்வம் கன்னி மரியாவைக் குறிப்பிடுவதாகவும் கொள்ளப்படுகிறது. இதனால் பார்த்தினான் கோயில் ஆறாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் கன்னி மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிறித்துவ தேவாலயமாக மாற்றப்பட்டது. கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த . டெமோசுடேனசின் எழுத்துக்களில் பார்த்தினன் என்பது கண்டிப்பாக முழு கட்டிடத்தையும் குறிக்கின்ற ஒரு பெயர் என்று காணப்படுகிறது. 5 ஆம் நூற்றாண்டு கட்டிடக் கணக்குகளில் இந்த அமைப்பு வெறுமனே ஒரு கோயில் என்று மட்டும் சுட்டுவதாக கருதப்ப்படுகிறது. கட்டிடக்கலைஞசர்களின் குறிப்புகளில் ஏதெனியக் கட்டிடக்கலையைச் சிறப்பிக்கும் நூறு அடிக் கட்டிடம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது , மேலும் நான்காம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் இந்த கட்டிடம் நூறு அடிக்கட்டிடமாகவும் பார்த்தினனாகவும் இருந்தது என்றும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளர் புளுடார்ச்சு இந்த கட்டிடத்தை எகாடோம்பெடோசு பார்த்தினன் எனக் குறிப்பிடுகிறார் . கிரேக்கர்களின் காக்கும் தேவியான ஆதெனாவிற்கு பார்த்தினன் அர்ப்பணிக்கப்பட்டதால் சில நேரங்களில் அது மினெர்வா கோயில் என்று குறிப்பிடப்படுகிறது, இது, குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டில் ஆதெனாவின் ரோமானிய பெயர் மினெர்வா ஆகும் . பணிகள் பார்த்தினோன் கட்டடக்கலையின்படி ஒரு கோயில் என்றாலும், பொதுவாக இது அழைக்கப்படுகின்ற சொல்லின் வழக்கமான அர்த்தத்தில் உண்மையில் இல்லை . பழைய சரணாலயத்தின் தளத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டிடத்திற்குள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆதெனாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதெனாவை நெருங்கி தெய்வத்தின் அருளைப் பெறவியலும் எனக்கருதப்பட்டது . ஆனால் ஏதென்சின் காவல்தெய்வமான ஆதெனா போலியாசின் வழிபாட்டுக்கு ஒருபோதும் பாத்தினன்னை வழங்கவில்லை. ஆதெனோபோலியாசிற்கு அக்ரீபோலிசுக்கு வடக்கில் ஆலயம் உள்ளது. மீட்டெடுத்தல் 1975 ஆம் ஆண்டில் கிரேக்க அரசாங்கம் பார்த்தினன் மற்றும் பிற அக்ரோபோலிசு கட்டமைப்புகளை மீட்டெடுக்க ஒரு ஒருங்கிணைந்த முயற்சியைத் தொடங்கியது. சிறிய தாமதத்திற்கு பின்னர், அக்ரோபோலிசு நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பதறகான குழு ஒன்று 1983 இல் நிறுவப்பட்டது . இந்தத் திட்டம் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெற்றது. தொல்பொருள் குழுவானது தளம் முழுவதும் மீதமுள்ள ஒவ்வொரு கலைப்படைப்பையும் முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளது, மற்றும் கட்டிட வடிவமைப்பாளர்கள் கணினி மாதிரிகளின் உதவியினால் தங்கள் மாதிரி இடங்களை தீர்மானித்தனர். அக்ரோபோலிசு அருங்காட்சியகத்திற்கு சிலைகள் மாற்றப்பட்டன. மீட்டெடுக்கும் பணி மிகவும் கவனத்துடன் தொடங்கப்பட்டது. . மேற்கோள்கள் புற இணைப்புகள் The Acropolis of Athens: The Parthenon (official site with a schedule of its opening hours, tickets and contact information) (Hellenic Ministry of Culture) The Acropolis Restoration Project (Hellenic Ministry of Culture) The Parthenon Frieze UNESCO World Heritage Centre – Acropolis, Athens Metropolitan Government of Nashville and Davidson County – The Parthenon The Athenian Acropolis by Livio C. Stecchini (Takes the heterodox view of the date of the proto-Parthenon, but a useful summary of the scholarship.) (Internet Archive) The Friends of the Acropolis Illustrated Parthenon Marbles – Dr. Janice Siegel, Department of Classics, Hampden–Sydney College, Virginia Parthenon:description, photo album கிரேக்கக் கோவில்கள் பண்டைய கிரேக்கக் கட்டிடக்கலை உலகப் பாரம்பரியக் களங்கள் கிரேக்கத்தில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்
1343
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88
பைசண்டைன் கட்டிடக்கலை
பைசண்டைன் கட்டிடக்கலை (Byzantine architecture) என்பது, பைசண்டைன் பேரரசு காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பாணியாகும். கி.பி 330ல், கொன்ஸ்டண்டைன், உரோமப் பேரரசின் தலைநகரத்தை பைசண்டியத்துக்கு மாற்றியதுடன் பைசண்டைன் பேரரசு உதயமானது. இந்த பைசண்டியம் என்றபெயர் பின்னர் கொன்ஸ்டண்டினோப்பிள் என்று மாற்றப்பட்டது. தற்போது இதுவே இஸ்தான்புல் என வழங்குகிறது. பளிங்குக் கற்கள் அல்லது அதன் வண்ணத்திலான கற்களினால் உள்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், கல் மற்றும் செங்கற்களும் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்பகால பைசண்டைன் கட்டிடக்கலை, உரோமக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியாகவே இருந்தது. இக் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணங்களாக, பைசண்டியம் சுவர்கள், யெரெபாட்டன் சரே என்பன விளங்குகின்றன. அண்மைக் கிழக்கு நாடுகளின் கட்டிடக்கலைச் செல்வாக்கினால், படிப்படியாகப் புதிய பாணியொன்று உருவாகத் தொடங்கியது. அத்துடன், கிறிஸ்தவ ஆலயக் கட்டிடக்கலையில் இன்றுவரை பின்பற்றப்படும், கிரேக்க சிலுவைக் கிடைப்பட வடிவம் பின்பற்றப்பட்டது. கற்களுக்குப் பதிலாகச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. கிளாசிக்கல் ஒழுங்குகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. வளைவான அலங்காரங்களுக்குப் பதில் மொசைக்குகள் பயன்படுத்தப்பட்டன. குவிமாடங்களைத்(dome) தாங்குவதற்காகப் பெண்டெண்டிவ் என வழங்கப்படும் புதிய முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டது. இறுதியில் பைசண்டைன் கட்டிடக்கலை, ரோமனெஸ்க் மற்றும் கோதிக் (Gothic) கட்டிடக்கலைகளுக்கு இடம் விட்டு ஒதுங்கியது. கிழக்கில் இது, ஆரம்பகால இஸ்லாமியக் கட்டிடக்கலையில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்தது. டமாஸ்கஸில் உள்ள உம்மாயாட் பெரிய பள்ளிவாசல், மற்றும் ஜெரூசலத்தில் உள்ள டோம் ஒப் த ரொக் (Dome of the Rock) என்பன சிறந்த உதாரணங்களாகும். பைசண்டைன் கட்டிடக்கலைக்குச் சிறந்த உதாரணங்களாக விளங்குவன: தற்கால எகிப்தில் சென் கத்தறீன் மடாலயம், சினாய் தற்கால கிரீசில் நியா மோனி கத்தோலிக்கொன், சியோஸ் புரோண்டோச்சியோன் மடாலயம், மிஸ்ட்ரா மவுண்ட் அத்தோஸ் மடாலயங்கள் தற்கால இத்தாலியில் எக்சார்ச் மாளிகை, ரவேன்னா சன் மார்க்கோ டி வெனெஸியா டோர்செல்லொ பேராலயம், வெனிஸ் தற்காலத் துருக்கியில் எல்ம்ஸ்லி கிலிசே, சப்பாடோசியா ஹேகியா சோபியா, இஸ்தான்புல் தற்கால உக்ரேனில் சென். சோபியா, கீவ் மேற்கோள்கள் கட்டிடக்கலை கட்டிடக்கலைப் பாணிகள்
1346
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
ஹேகியா சோபியா
ஹேகியா சோபியா (; , "புனித ஞானம்"; / Sancta Sapientia; ) துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் உள்ளது. முன்னர் கிழக்கத்திய மரபுவழிக் கிறித்தவப் பிரிவினரின் பெருங்கோவிலாக விளங்கிய இது, பின்னர் 1453 இல், மசூதியாக மாற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் இது ஒரு அருங்காட்சியகம் ஆக்கப்பட்டு, அயசோஃப்யா அருங்காட்சியகம் என அழைக்கப்படுகின்றது. இது உலகின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. எட்டாவது அதிசயம் என வர்ணிக்கப்படும் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. ஓட்டோமான் பேரரசு நிகழ்த்திய படையெடுப்பைத் தொடர்ந்து காண்ஸ்டாண்டிநோபுள் வீழ்ச்சியுற்றபோது, இப்பெருங்கோவிலை ஓட்டோமான்கள் கைப்பற்றினர். இதன் விளைவாகக் கிறித்தவம் நலிவடையத் தொடங்கியது. தொடக்க கால வரலாறு இக்கட்டடத்தை உருவாக்கும் பணி கி.பி. 532-537இல் நடந்தது. அதிலிருந்து கி.பி. 1453ஆம் ஆண்டுவரை அக்கட்டடம் கீழை மரபுவழித் திருச்சபையின் பெருங்கோவிலாகவும், திருச்சபை முதுமுதல்வரின் ஆட்சியிருக்கையாகவும் விளங்கியது. கி.பி. 1204–1261 காலகட்டத்தில் மட்டும் அப்பெருங்கோவில் உரோமன் கத்தோலிக்க இலத்தீன் பிரிவினரின் கையகம் வந்தது. உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்கு மாறியது. ஓட்டொமான் பேரரசு (உதுமானியப் பேரரசு இக்கோவிலைக் கைப்பற்றியது 1453இல் ஆகும். கிறித்தவ சமயத்தின் போதனைகளை விளக்கும் விதத்தில் அக்கோவிலில் எண்ணிறந்த கலை ஓவியங்கள் இருந்தன. அவற்றை இசுலாமிய ஆளுநர்கள் பெரும்பாலும் அழித்துவிட்டனர். அல்லது அக்கலை ஓவியங்களுக்கு மேலே இசுலாமியக் கலை அமைப்புகளைத் திணித்தனர். ஹாகியா சோபியா ஒரு முசுலிம் தொழுகைக் கூடமாக மாற்றப்பட்டது. 1453–1931 ஆண்டுக்காலத்தில் முசுலிம் தொழுகைக் கூடமாகச் செயல்பட்ட ஹாகியா சோபியா கட்டடம் சமயச் சார்பற்ற கட்டடமாக மாற்றப்பட்டது. 1935ஆம் ஆண்டு பெப்ருவரி 1ஆம் நாளிலிருந்து அது ஒரு கலைக்கூடமாக மாற்றப்பட்டது. தொடக்க காலக் கோவில் அர்ப்பணம் ஆறாம் நூற்றாண்டில் ஹாகியா சோபியா பெருங்கோவில் கட்டப்பட்டபோது அதற்கு அளிக்கப்பட்ட கிரேக்கப் பெயர் ”Ναός τῆς Ἁγίας τοῦ Θεοῦ Σοφίας” (Shrine of the Holy Wisdom of God = ”இறைவனின் தூய ஞானத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம்”). கிறித்தவக் கொள்கைப்படி, கடவுளின் ஞானமாக விளங்குபவர் கடவுளின் வார்த்தை ஆவார். அவரே மனிதராக இவ்வுலகில் உருவெடுத்த இயேசு கிறிஸ்து ஆவார். இயேசு கிறிஸ்து மனிதராகப் பிறந்த விழா திசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது. இக்கோவில் சுருக்கமாக “புனித ஞானம்” (கிரேக்கம்: ஹாகியா சோபியா; இலத்தீன்: Sancta Sophia) என்று அழைக்கப்பட்டது. கோவிலின் குவிமாடம் ஹாகியா சோபியா கோவிலின் குவிமாடம் உலகப் புகழ் பெற்றது. பிரமாண்டமாக அமைந்துள்ள அக்குவிமாடம் பைசான்சிய கலைக்கு உன்னத எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அது கட்டடக் கலையின் போக்கையே மாற்றியதாகக் கருதப்படுகிறது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டளவாக இக்கோவில் உலகனைத்திலுமுள்ள எல்லாக் கிறித்தவக் கோவில்களிலும் மிகப் பெரிய பெருங்கோவிலாக விளங்கியது. 1520இல் எசுப்பானியா நாட்டு செவீயா பெருங்கோவில் (Seville) கட்டப்பட்ட வரை ஹாகியா சோபியா கோவில் பரப்பளவில் முதலிடம் பெற்றது. குறிப்புகள் நூல் தொகுப்பு . Hagia Sophia Church , also known as Church of Holy Wisdom. Hagia Sophia. . Accessed 23 Sept 2014. மேல் ஆய்வுக்கு Harris, Jonathan, Constantinople: Capital of Byzantium. Hambledon/Continuum (2007). Scharf, Joachim:Der Kaiser in Proskynese. Bemerkungen zur Deutung des Kaisermosaiks im Narthex der Hagia Sophia von Konstantinopel. In: Festschrift Percy Ernst Schramm zu seinem siebzigsten Geburtstag von Schülern und Freunden zugeeignet, Wiesbaden 1964, S. 27–35 Weitzmann, Kurt, ed., Age of spirituality: late antique and early Christian art, third to seventh century, no. 592, 1979, Metropolitan Museum of Art, New York, கட்டுரைகள் Bordewich, Fergus M., "A Monumental Struggle to Preserve Hagia Sophia" , Smithsonian magazine, December 2008 கல்பதிகை ஓவியங்கள் Hagia Sophia, hagiasophia.com: Mosaics. வெளி இணைப்புகள் Contemporary description by Procopius, Buildings (De Aedificiis), published in 561. Aya Sofya Photo Gallery by Dick Osseman துருக்கி
1355
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கொலோசியம்
கொலோசியம் அல்லது கொலிசியம் ( ) (Colosseum, Coliseum, அல்லது Flavian Amphitheatre) மேலும் ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் என்றும் அழைக்கப்படுவது, (இலத்தீன்: Amphitheatrum Flavium; இத்தாலியம்: Anfiteatro Flavio அல்லது Colosseo), என்பது, இத்தாலியின் ரோம் நகரத்தின் மையத்தில் ஒரு நீள்வட்ட இன்போஃபிடேட்டர் வகைக் கட்டடம், இது பைஞ்சுதை மற்றும் மணல் கொண்டு கட்டப்பட்ட கட்டடம் ஆகும், கொலோசியம் ரோமானிய மன்றத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. கி.பி. 72 இல் பேரரசர் வெஸ்பாசியின் ஆட்சிக் காலத்தில் இதன் கட்டுமானம் கட்டப்படத் தொடங்கியது, கி.பி .80 ஆம் ஆண்டில் அவரது வாரிசான டைட்டஸின் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. டோமிடியன் (81-96) ஆட்சி காலத்தில் கட்டடத்தில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மூன்று பேரரசர்கள் ஃபிளவியன் வம்சத்தவர்களாக அறியப்படுகின்றனர். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 முதல் 80,000 மக்கள்வரை இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள். எனினும் இதில் சராசரியாக சுமார் 65,000 பார்வையாளர்களைக் கொண்டுருக்கலாம்; கொலோசியமானது தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்ட வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் (amphitheatre) எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் வட்டவடிவ அரங்கம் என்ற பொருள் கொண்டது. ‘’மிகப் பிரம்மாண்ட’’ எனும் வேறு அர்த்தமும் கொலோசியத்திற்கு இருந்துவந்துள்ளது. இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, பிளேவியன் அம்ஃபிதியேட்டர் என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். துவக்கக்கால இடைக்கால சகாப்தத்தில் பொழுதுபோக்கிற்காக இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. இது பின்னர் வீடுகள், பட்டறைகள், மத ஒழுங்கு, கோட்டை, கிறிஸ்தவ ஆலயம் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டது. நிலநடுக்கங்கள் மற்றும் கல்-திருட்டு ஆகியவற்றால் ஏற்படும் சேதங்கள் காரணமாக பகுதியளவு பாழடைந்தாலும், கொலோசியம் இன்னும் உரோமைப் பேரரசின் ஒரு சின்னமாக உள்ளது. மேலும் உரோமின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இது ஒன்றாகும். ஒவ்வொரு புனித வெள்ளி அன்றும் திருத்தந்தையால், கொலாேசியத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிலுவைப்பாதை ஊர்வலம் துவக்கி வழிநடத்தப்படுகிறது. கொலாேசியம் இத்தாலியப் பதிப்பைக்கொண்ட ஐந்து செண்ட் யூரோ நாணயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோலோசியத்தின் அசல் லத்தீன் பெயர் ஆம்பிபிடியம் ஃப்ளாவியம் (Amphitheatrum Flavium), பின்னர் ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் (Flavian Amphitheatre) என ஆங்கிலமயமானது. இந்தக் கட்டடம் நீரோவின் ஆட்சியைத் தொடர்ந்துவந்த ஃப்ளாவியன் வம்சத்தின் பேரரசர்களால் கட்டப்பட்டது. இந்த பெயர் இன்னும் நவீன ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பொதுவாக இந்த அமைப்பு கொலோசியம் என்று அழைக்கப்படுகிறது. கோலோசியம் என்ற பெயர் நீரோவின் ஒரு பெரிய சிலையின் பெயரில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது (நீரோவின் சிலை ரோடஸின் கொலோசஸின் பெயரால் அழைக்கப்படுகிறது). இந்த சிலை பின்னர் ஹெரோயோஸ் (சோல்) அல்லது அப்போலோ போன்ற தோற்றத்திலும், சூரியக் கிரீடத்தைச் சேர்ப்பதன் மூலம் சூரியன் கடவுளாகவும், நீரோவுக்கு பின்வந்தவர்களால் மாற்றியமைக்கப்பட்டது, இதேபோல நீரோவின் தலையும் பல முறை மாற்றப்பட்டது. இந்த சிலை அதிசயத்தக்கதாகவாறு இடைக்கால கட்டத்திலும் நன்றாக நின்று கொண்டிருந்து, ரோமின் நிரந்தரதிர அடையாள சின்னமாக இது காணப்பட்டது. கொலோசஸ் சிலை இறுதியில் விழுந்துவிட்டது. வரலாறு இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக சவ ஊர்வலத்தின் முன் மூன்று சோடிகளிடையே சண்டையிட்டுக்கொள்ளும் வழக்கம் ரோமானிகளின் வழக்கமாகும். இதனை பிற்காலத்திய அரசர்கள் ஒரு விழாவாக கொண்டாடத் தொடங்கினர். இதற்காக கட்டப்பட்டதே கொலோசியம் ஆகும். இதில் சண்டையிடுபவர்கள் கிளாடியேட்டர்கள் என்று அழைக்கப்பட்டனர். சுபானிய மொழியில் கிளாடி என்பதற்கு கத்தி என்று பொருளாகும். முதலில் இவ்வகை சண்டைகள் கத்தியை வைத்தே போடப்பட்டன. பின் கோடாரி, இரும்பிலால் ஆன வளையம், கேடையம், வீச்சரிவாள், பழுக்கக்காய்ச்சிய இரும்பு ஆகியவற்றைக் கொண்டு சண்டையிடத் தொடங்கியுள்ளனர். இங்கு சண்டையிடுபவர்கள் அடிமைகளாகவும், கீழ்சாதிகாரர்களாகவும், கைதிகளாகவும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாகவும் இருந்துவந்துள்ளனர். மேலும் கிறித்துவ மதம் அக்காலத்தில் வளர்ச்சி அடையாத காரணத்தினால் கிறித்துவர்களும் இது போன்ற சண்டை விளையாட்டுகளில் பங்கு பெறச் செய்யப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் ஒரே ஒருவர் மட்டுமே வெல்ல முடியும். மற்றவர்கள் அரசரின் ஆணைக்கேற்ப சிறைபிடிக்கப்படுவர் அல்லது விடுதலை செய்யப்படுவர். கைதி ஒருவர் வென்றால் அவருக்கு விடுதலைக் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இவ்விளையாட்டுகளில் உணவிடாத சிங்கம், புலி ஆகியவற்றைக் கொண்டும் மனிதர்களைக் கொன்றுள்ளனர். கட்டுமானம் கி.பி 72 ஆம் ஆண்டில், வெஸ்பாசியன் (Vespasian) என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ஆம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. இதன் உயரம் சுமார் நூற்றைம்பது அடிகளாகும். இது நீரோ மன்னனின் மாளிகைக்கு அருகில், நீரோவின் ஏரி இருந்த இடத்தில் அமைந்துள்ளது. நீரோ அரசரின் பிரம்மாண்ட சிலைக்கு அருகினில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு கேலரிகள் கட்டப்பட்டுள்ளன. முதல் கேலரி அரசர் மற்றும் அவரது குடும்பத்தினரும் அமர்வதற்கான இடமாகும். இரண்டாம் கேலரி பெரும் நிலப்பிரபுக்களும், முக்கியமானவர்களும் அமரும் இடம் ஆகும். கோலோசியத்தின் கூரையாக கப்பல்களில் பயன்படுத்தப்படும் பாயினை பயன்படுத்தியுள்ளனர். போட்டிகள் நடைபெறும் பொழுது மட்டும் இவற்றை வைத்து அரங்கத்தை மூடியுள்ளனர். எண்ணற்றவர்கள் வந்து செல்வத்ற்கு வசதியாக பல நுழைவு வாயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கொலோசியம் உலக அதிசயமாகவும் கருதப்பட்டது ஆகும். மூன்றாம் கேலரி தொழிலாளர்களும், நான்காம் கேலரி பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது ஆகும். நான்கு கேலரிகள் மட்டும் அல்லாது ஒரு அடித்தளமும் கொலோசியதில் கட்டப்பட்டுள்ளது. இது அடிமைகள் காத்திருக்கும் இடமாகவும், ஆயுதங்கள் வைக்கும் இடமாகவும் , மிருகங்களின் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. கொலோசியத்தின் திறப்புவிழாவுக்கான நூறு நாள் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது 9,000 காட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக பண்டைய ரோமானிய வரலாற்றாளரான டியோ கசியஸ் (Dio Cassius) என்பவர் கூறியுள்ளார். மேலும் இவ்விழாவில் ஆயிரம் கிளாடியேட்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விழாவின் ஒரு பகுதியாக அரங்கம் முழுவதும் நீர் நிரப்பி படகில் அடிமைகளை சண்டையிட வைத்துள்ளனர். ரோமர் வரலாற்றின் பிற்காலம் 217 ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சேதமாகும் வரை, கொலோசியம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தது. 238 ல் மீண்டுமமைக்கப்பட்ட இது, கிறிஸ்தவம், படிப்படியாக மனித உயிர்கள் பலியாகும் வீரவிளையாட்டுக்களுக்கு முடிவுகட்டும் வரை பயன்பட்டு வந்தது. காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுகளுக்காகவும், வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், கொலோசியம் 524 ஆம் ஆண்டுவரை பயன்பட்டது. 442 இலும், 508 இலும் ஏற்பட்ட புவியதிர்வுகளினால் இக்கட்டிடம் பலத்த சேதத்துக்கு உள்ளானது. மத்தியகாலமும், மறுமலர்ச்சிக் காலமும் 847, 1349 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் ஏற்பட்ட புவியதிர்வுகளால் கடுமையாகச் சேதமடைந்த இது, பின்னர் ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இதன் முகப்பை மூடியிருந்த சலவைக் கற்கள், வேறு கட்டிடவேலைகளில் பயன்படுத்தப்பட்டதுடன், இவற்றை எரித்துச் சுண்ணாம்பும் தயாரித்தார்கள். மறுமலர்ச்சிக்காலத்தில், சிறப்பாக 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளில், ரோம ஆளும் குடும்பங்கள், புனித பேதுரு பேராலயம் மற்றும் தனியார் மாளிகைகளைக் கட்டுவதற்காக இந்தக் கட்டிடத்திலிருந்து சலவைக் கற்களை எடுத்துவந்தனர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தினால் இக்கொலோசியத்தில் இருந்த இரும்பு துண்டுகளை உள்ளூர் மக்களே பெயர்த்து எடுத்து மேலும் சிதிலமாக்கியுள்ளனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் The colosseum Un-official information website Cross-section view of the Colosseum The flora of the Colosseum Virtual tour of the Colosseum LacusCurtius entry on the Colosseum Photos of the Colosseum Views of the Flavian Amphitheatre (Coliseum) பண்டைய உரோமர் காலக் கட்டிடக்கலை 1-ஆம் நூற்றாண்டு இத்தாலிய அருங்காட்சியகங்கள் உரோமானியத் தொல்லியல் வரலாற்றுச் சின்னங்கள் உலகப் பாரம்பரியக் களங்கள் 80
1357
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
தொல்பழங்காலம்
தொல்பழங்காலம் என்பது கற்காலம் தொடங்கிய காலத்துக்கும், மனிதர்களுக்கு எழுதும் பழக்கம் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலம் எனக் கருதப்படுகிறது. இது ~3.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் கல் கருவிகள் பயன்படுத்தத் தொடங்கியது முதல் ~5300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதும் முறைமைகள் கண்டுபிடிக்கப்பட்டது வரையிலான காலம் என்று வரையறுக்கப்படுகிறது. மெசபடோமியாவில்  உள்ள சுமேரிய நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், பண்டைய எகிப்து நாகரிகம் ஆகியவை முதன்மை நாகரிகங்கள் ஆகும். இவை தங்களுக்கு சொந்த எழுத்துக்களைக் கொண்டிருந்தன. வரலாற்று பதிவுகளை உருவாக்கின. இது வெண்கலக் காலத்திலேயே தொடங்கி விட்டது. அண்டை நாகரிகங்கள் இவற்றைப் பின்பற்றின. மற்ற பெரும்பாலான நாகரிகங்கள் இரும்புக் காலத்தின் போது தொல்பழங்காலத்தின் இறுதியை அடைந்துவிட்டன. தொல்பழங்காலத்தில் மூன்று கால அமைப்புகள் உள்ளன. அவை கற்காலம் வெண்கலக் காலம், மற்றும் இரும்புக் காலம் ஆகியவை. ஐரோவாசியா மற்றும் வட ஆப்ரிக்கா ஆகியவற்றில் உலோகப் பயன்பாடு மிகுந்து இருந்தது அமெரிக்கா, ஓசியானியா, ஆஸ்திரேலியா மற்றும் சப்-சஹாரா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், இங்கு புதிய கலாச்சாரங்களுடன் அதிக அளவு கடின உலோகப் பயன்பாடு கொண்ட வேலைகள் நடைபெற்று வந்தன. அமெரிக்காவில்  முன் கொலம்பிய நாகரிகங்கள் ஏற்படும் முன்னும், ஐரோவாசியகள் கலாச்சாரத்திற்கு முன்னும், சிக்கலான எழுத்து முறைமைகள் அறியப்படவில்லை. மிகச் சமீப காலங்களில் இவை முன் வரலாற்றுக் காலத்தை எட்டின. யூரேசியாவுக்கு வெளியே உள்ள பல கலாச்சாரங்களில் எழுது பொருட்கள் வெவ்வேறு காலங்களில் அறிமுகமாகின. எழுது பொருட்களின் புழக்க காலமே உள்ளூர் வரலாற்றுக் காலமாகும். அதன்பின் எழுத்துமுறை என்பது வெற்றிக் கலாச்சாரமாக அறியப்பட்டது. முன் கலாச்சாரங்கள் எழுதப்பட்டன. தொல்பழங்காலத்தைப் பற்றி எழுதப்பட்ட பதிவுகள் ஏதும் இல்லை. எனவே வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்களின் வயதைக் கணிப்பது கடினமாக உள்ளது. 19 ஆம் நூற்றாண்டு வரை காலத்தை கணிப்பதற்கான தெளிவான நுட்பங்கள் அறியப்படவில்லை. வரையறை தொடக்கம் அண்டம் அல்லது பூமி தோன்றியதிலிருந்து உள்ள இடைவெளிக் காலம் அல்லது அதிகளவில் குறிப்பிடப்படுவதுபோல் பூமியில் உயிர்கள் தோன்றியதிலிருந்து உள்ள காலம் அல்லது மிகக் குறிப்பாக கூறுவோமானால் மனிதன்-போன்ற உயிரினங்கள் தோன்றியது முதல் உள்ள காலம் "முன் வரலாற்றுக் காலம்" அல்லது தொல்பழங்காலம் என்பதன் தொடக்கம் என்று வரையறுக்கப்படுகிறது. இறுதி ஒரு மதத்திலோ அல்லது பிராந்தியத்திலோ, முன் வரலாற்றுக் காலம் அல்லது தொல்பழங்காலத்தின் இறுதி என்பது, அந்த மதத்தில் அல்லது பிராந்தியத்தில், அவை தொடர்பாக எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவுகள், ஒரு அறிவுசார் வளமாக பயன்பாட்டுக்கு வந்த காலமாகும். எழுத்தில் வரலாற்றுப் பதிவுகள் வரத் தொடங்கிய காலத்துடன், அந்த மதம் அல்லது பிராந்தியத்திற்கான தொல்பழங்காலம் முடிவுக்கு வருகிறது. உதாரணமாக: சுமார் கி. மு. 3200ல்  எகிப்தின் முன் வரலாற்றுக் காலம் முடிந்தது மிகச் சமீபத்தில், சுமார் கி. பி. 1900ல் நியூ கினியாவின் முன் வரலாற்றுக் காலம் முடிந்தது ஐரோப்பாவில் கிரேக்கம்,  பண்டைய ரோம் மற்றும்  அண்டை கலாச்சாரங்களில் ஒப்பீட்டளவில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பாரம்பரிய கலாச்சாரங்கள் இருந்தன பண்டைக் கிரேக்கம், கெல்ட்டியர் (Celts), எட்ரஸ்கேன்ஸ் (Etruscans) ஆகிய கலாச்சாரங்களின் எழுத்துவடிவ ஆதாரங்கள் இல்லை. இந்நிலையில், வரலாற்றாசிரியர்கள் உரிய ஆதாரங்களுடன் பாரபட்சமற்ற முறையில் வரலாற்றுக்கு முந்தைய கால இறுதியைக் கணக்கிட வேண்டும். இது ரோமன் மற்றும் கிரேக்க கலாச்சாரங்களுக்கு மிகவும் பொருந்தும். கால அளவுகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை பிரிக்கும் முறைகள்: வரலாற்றாசிரியர்கள் பொதுவாக மூன்று வயது அமைப்புகளைப் பயன்படுத்துகின்றனர் அறிஞர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைக் கணக்கிட நன்கு வரையறுக்கப்பட்ட புவியியல் பதிவுகள் மற்றும் அதன் சர்வதேச அளவில் வரையறுக்கப்பட்ட அடுக்கு மண்டல புவியியல் நேர அளவைகளைப் பயன்படுத்துகின்றனர் வரலாற்றின் முற்பகுப்பானது, மூன்று தொடர்ச்சியான காலங்களில், பகுக்கப்பட்டது. அவற்றின் அடிப்படையில் முக்கிய கால அளவிடல் கருவி தொழில்நுட்பங்கள் திட்டமிடப்பட்டன. கற்காலம் வெண்கலக் காலம் இரும்புக் காலம் காலத்தின் வரலாறு தொல்பொருள் வல்லுநர்கள், எழுதப்படாத பதிவுகளற்ற பழங்கால மக்களைக் குறிக்கும் போது, முதனிலை இன மனிதன் என்று குறிப்பிட்டனர். இந்நிலையில், "வரலாற்றுக்கு முந்தைய காலம்" சார்ந்த விளக்கத் தெளிவு பெறுதல் அவசியமானது. எனவே இச்சொற்றொடர் உருவானது. 1836 இல் ஆங்கிலத்தில் வெளியுறவு காலாண்டு ஆய்வுப் பதிப்பில் இருப்பினும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்ற சொற்றொடரின் முதல் பயன்பாடு வெளியானது. ஆய்வின் முக்கியத்துவம் வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி அறிய உதவும் முக்கிய மூலம் தொல்பொருளியல் ஆகும். ஆனால், சில அறிஞர்கள் இயற்கை மற்றும் சமூக அறிவியல் சான்றுகளைப் பயன்படுத்தத் தொடங்குகி உள்ளனர். ஆழ்ந்த வரலாற்றறிஞர்களால் இந்த கருத்து முன்வைத்து ஆதரிக்கப்படுகிறது. கற்காலம் பழைய கற்காலம் பழைய கற்காலம், கல் கருவிகள் பயன்பாட்டைக் முதலாகக் கொண்டு தொடங்குகிறது. பழைய கற்காலம் என்பது ஆரம்ப காலக் கற்காலமாகும். பழைய கற்காலத்தின் ஆரம்பப் பகுதி கீழ்ப் பழைய கற்காலம் என அழைக்கப்படுகிறது. இது சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ ஹபிலிஸ்களையும் (Homo habilis), தொடர்புடைய இனங்களையும், அதிலிருந்து வந்த மனித சேப்பியன்களின் (Homo sapiens) வாழ்வையும், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கல் கருவிகளையும் குறிக்கிறது. ஆரம்பகால மனித சேப்பியன்கள் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருந்தன. இது மத்திம பழைய கற்காலம் என்று அழைக்கப்படுகிறது. மத்திம பழைய கற்காலத்தின்போது நவீன மொழி திறனைக் குறிக்கும் உடற்கூறு மாற்றங்கள் எழுகின்றன. மத்திம பழைய கற்காலம் முழுவதும், மனிதர்கள் பொதுவாக நாடோடிகளாகவும், வேட்டைக்காரர்களாகவும், நாடோடி வேட்டைக்கார சமூகங்களாகவும் வசித்து வந்தனர். இச்சமூகங்கள், சிறியனவாகவும், மனித சமூக சமத்துவம் உடையதாகவும் இருந்தன. இச்சமூகங்கள், ஏராளமான இயற்கை ஆதாரங்களைப் பெற்றிருந்தன. மேம்பட்ட உணவு-சேமிப்பு நுட்பங்களைக் கொண்டிருந்தன. சில சமயங்களில் சிக்கலான சமூக கட்டமைப்புகளுடன் கூடிய ஒழுக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றின. இடைக் கற்காலம் இடைக் கற்காலம் என்பது கிரேக்க மொழியில் "mesos=நடுத்தர", மற்றும் "lithos=கல்" என்பதைக் குறிக்கிறது. பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையே உள்ள மனித தொழில்நுட்ப வளர்ச்சி, இடைக் கற்காலத்தின் தாக்கம் ஆகும். இந்த காலத்தில் காடழிப்புக்கான முதல் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. விவசாயம் செய்வதற்கு நிலங்கள் தேவைப்பட்டதால் அவர்கள் காடுகளை அழித்தனர். இது நவீன கற்காலத்திற்கான ஆரம்ப அறிகுறியாகும். புதிய கற்காலம் புதிய கற்காலம் பழைய கற்காலத்தில், பல வகை மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம். எனினும், புதிய கற்காலத்தில் ஹோமோசெபியன்ன்ஸ் மட்டுமே இருந்தனர். புதிய கற்காலம் என்பது நடத்தைகள், கலாச்சார பண்புகள், நடத்தை மாற்றங்கள், கலாச்சார மாற்றங்கள் ஆகியவற்றின் முன்னேற்றமாகும், இது, காட்டுப் பயிர்கள், உள்நாட்டுப் பயிர்கள், காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள் ஆகியவற்றின் பயன் தெரிந்த காலமாக இருந்தது. 12,200 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய கற்காலத் தொடக்கம் வரை, புளோரெஸ் மனிதன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இது பழமையான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்கான ஒரு காலமாகும். இது கி.மு. 10,200ல் மத்திய கிழக்கில் சில பகுதிகளிலும், பின்னர், உலகின் பிற பகுதிகளிலும், பரவியது. கி.மு. 4,500ல் புதிய கற்காலம் தொடங்கி கி.மு. 2,000ல் முடிவுற்றது. காலக் கோடு காலக் கோடு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அனைத்து தேதிகளும் தோராயமானவை. மானுடவியல், தொல்லியல், மரபியல், புவியியல், அல்லது மொழியியல் துறைகளில் ஆராய்ச்சி மூலம் பெறப்பட்டவை மற்றும் உய்த்துணரப்பட்டவை. புதிய கண்டுபிடிப்புகள் அல்லது மேம்படுத்தப்பட்ட கணக்கீடுகளால் இவை அனைத்தும் திருத்தியமைக்கப்படுகின்றன. இவற்றில் குறிக்கப்படும், பி.பி. (BP) என்பது, தற்போதைய காலத்திற்கு முன் (1950) என்பதையும், பி.சி.ஈ. (BCE) என்பது, பொது சகாப்தத்திற்கு முன் என்பதையும் குறிக்கின்றன. கீழ்ப் பழைய கற்காலம் இ. 2.8 மில்லியன் ஆண்டுகள் பி.பி (BP) - ஹோமோ என்ற இனத்தோற்றம். இ. 2.5 மில்லியன் ஆண்டுகள் பி.பி - ஆரம்பகால மனித கருவிகளின் ஆதாரம். இ. 600,000 ஆண்டுகள் பி.பி - வேட்டையாடுவது - உணவு மற்றும் பொருள் சேகரிப்பது. இ. 400,000 ஆண்டுகள் பி.பி - ஆரம்பகால மனிதர்கள் மூலம் தீ கட்டுப்பாடு குறித்து அறிந்திருத்தல் மத்திம பழைய கற்காலம் இ. 300,000-30,000 ஆண்டுகள் பி.பி - ஐரோப்பாவின் நியன்டர்தலில் (Neanderthal) முஸ்டெரியன் (Mousterian) கலாச்சாரம். ஒ இ. 200,000 ஆண்டுகள் பி.பி - உடற்கூறியல் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் தோன்றிய நவீன மனிதர்கள். அவற்றில் மனிதக் குரங்கு வகை உயர் விலங்கினத்தின் ஒரு பிரிவு, பிற உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உடல் முடிகளைப் பெற்றிருக்கவில்லை. இ. 170,000? -83,000 ஆண்டுகள் பி.பி - உடைகள் கண்டுபிடிப்பு இ. 75,000 ஆண்டுகள் பி.பி - டோபா எரிமலை வெடித்து, பாறைக் குழம்பை வெளியிட்டது. இ. 80,000-50,000 ஆண்டுகள் பி.பி - ஹோமோ சேபியர்கள் ஆப்பிரிக்காவை விட்டு ஒரே குழுவாக வெளியேற்றம். அடுத்த நூற்றாண்டில், இந்த மக்கள், தெற்கு இந்தியா, மலாய் (Malay) தீவுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, சைபீரியா, அலாஸ்கா மற்றும் வட அமெரிக்காவின் வடமேற்கு கரையோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். இ. 80,000-50,000? BP - நவீன நடத்தை, மொழி, அதிநவீன அறிவாற்றல், ஆகியவை பழைய கற்காலத்தில் மேலோங்கி இருந்தன. இ. 45,000 BP / 43,000 பொது சகாப்தத்திற்கு முன் (பொ.ச.மு.-BCE) - பிரான்சில் சாட்டல்பெரோனியன் (Châtelperronian) கலாச்சாரத் தொடக்கம். இ. 40,000 BP / 38,000 (பொ.ச.மு.) - சிட்னி, பெர்த், [34] மற்றும் மெல்போர்ன் ஆகிய இடங்களில் முதல் ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் குடியேற்றம். மேற்கோள்கள் கால வரிசைப்படி வரலாறு
1380
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D
மில்லெனியம் டோம்
மில்லெனியம் டோம் இங்கிலாந்தின் தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ளது. மூன்றாவது ஆயிரவாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அமைந்த கண்காட்சியொன்றுக்காக இது கட்டப்பட்டது. அக்கண்காட்சி ஜனவரி 1, 2000 முதல் டிசம்பர் 31, 2000 வரை நடைபெற்றது. மேற்கோள்கள் கட்டிடக்கலை தொடர்பான குறுங்கட்டுரைகள் இங்கிலாந்து
1381
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
தாஜ் மகால்
தாஜ் மகால் (Taj Mahal), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. தோற்றம் பொ.ஊ. 1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஜ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஜ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷாஜகானே இக் கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகின்றது: தாஜ்மகால், பாரசீகக் கட்டிடக்கலை மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பாக, தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான ஸ்ள்ள தைமூரின் சமாதி, ஹுமாயூன் சமாதி, ஷா ஜகான் கட்டுவித்த, டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிற மணற்கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஷா ஜகான் வெண்ணிறச் சலவைக்கற்களைப் பயன்படுத்தியுள்ளான். இவன் காலத்தில் கட்டிடங்கள் மிகவும் திருந்திய நிலையை அடைந்தன. கட்டிடக்கலை சமாதி தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக்கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றி வடிவமானது. இதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு மினார்கள் அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது. இக் கட்டிடத்தின் சலவைக்கல் குவிமாடம் ஏறத்தாழ 35 மீட்டர் உயரம் கொண்டது. வெங்காய வடிவம் கொண்ட இக் குவிமாடம் 7 மீட்டர் உயர உருளை வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சியில் தாமரை வடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக, மற்றும் இந்து அம்சங்களை உடையதாகக் காணப்படும் இது கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது. இக் கலசம் 1800 ஆம் ஆண்டுவரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் பின்னர் வெங்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதன் உச்சியில் இஸ்லாம் மதத்தைக் குறிக்கும் பிறை உள்ளது. இப் பெரிய குவிமாடத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இவையும் பெரிய குவிமாடத்தைப் போலவே வெங்காய வடிவம் கொண்டவை. வட்டமான வரிசைகளில் அமைந்த தூண்களில் தாங்கப்பட்டுள்ள இச் சிறிய குவிமாடங்களுக்குக் கீழிருக்கும் கூரை திறந்து உள்ளதால் அவற்றினூடாக கட்டிடத்தின் உட்பகுதிக்கு சூரிய ஒளி செல்லக்கூடியதாக உள்ளது. கூரைப்பகுதியில் உள்ள சுவர்களின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகள் கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன. அடித்தளத்தின் மூலைகளில் கட்டப்பட்டுள்ள மினார்கள் எனப்படும் கோபுர அமைப்புக்கள் 400 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கின்றன. இவை மரபுவழியாக இஸ்லாமிய மசூதிகளில் காணப்படும், தொழுகைக்காக மக்களை அழைப்பதற்குப் பயன்படும் மினார்களைப் போல் அமைக்கப்பட்டுள்ளன. கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் உருளை வடிவ அமைப்பைக் கொண்ட இவை ஒவ்வொன்றையும் சுற்றி, இடையில் அமைக்கப்பட்டுள்ள உப்பரிகைகள் அவற்றை மூன்று சம அளவான பகுதிகளாகப் பிரிக்கின்றன. இவற்றின் உச்சியிலும் ஒரு உப்பரிகையும் அவற்றின் மேல் குவிமாடங்களுடன் கூடிய கூடுபோன்ற அமைப்புக்களும் காணப்படுகின்றன. இக் குவிமாடங்கள், முதன்மைக் கட்டிடத்திலுள்ள குவிமாடங்களின் அதே வடிவில் சிறிய அளவுள்ளவையாகவும் அங்குள்ளதைப் போன்றே தாமரை வடிவ அலங்காரம், கலசம் ஆகியவற்றைக் கொண்டனவாகவும் உள்ளன. வெளிப்புற அழகூட்டல் தாஜ்மகாலின் வெளிப்புற அழகூட்டல், முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த பிற கட்டிடங்களோடு ஒப்பிடும்போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக் கட்டிடத்தின் வெளிப்புற அழகூட்டல், நிறப்பூச்சு, சாந்துப்பூச்சு அல்லது கற்கள் பதித்தல் மூலம் செய்யப்பட்டுள்ளது. மனித உருவங்களையோ பிற விலங்கு உருவங்களையோ அழகூட்டல்களில் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ள இஸ்லாமிய மரபுகளுக்கு இணங்க அழகூட்டல்களில், வனப்பெழுத்துக்களும், செடி கொடி வடிவங்களும் பயன்பட்டுள்ளன. தாஜ்மகாலில் பயன்படுத்தப்பட்டுள்ள வனப்பெழுத்துக்கள் "துலுத்" எனப்படும் வகையைச் சார்ந்தது. இவற்றைப் பாரசீக வனப்பெழுத்துக் கலைஞரான அமானத் கான் என்பவரால் உருவாக்கியுள்ளார். இவ் வனப்பெழுத்துக்கள் சலவைக்கல்லில், சூரியகாந்தக்கற்கள் பதித்து உருவாக்கப்பட்டவை. உட்புற அழகூட்டல் தாஜ்மகாலின் உட்புறக் கூடம் மரபுவழியான அழகூட்டல்களையும் தாண்டிச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. உட்கூடம் எண்கோண வடிவானது. இதன் எல்லாப் பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன எனினும் தெற்குப் பக்கப் பூங்காவை நோக்கியுள்ள கதவு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. உட்புறச் சுவர்கள் சுமார் 25 மீட்டர் உயரம் கொண்டவை. இவற்றின் மேல் சூரிய உருவினால் அழகூட்டப்பட்ட "போலி"க் குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா தாஜ்மகால் கட்டிடத் தொகுதி, 300 மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு முகலாயப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதைகள், பூங்காவின் நான்கு காற்பகுதிகளையும் 16 பூம்படுகைகளாகப் பிரிக்கின்றன. கட்டிடத்துக்கும் தொகுதியின் நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியின் நடுவில் ஒரு குளம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு அச்சில் நின்று பார்க்கும்போது கட்டிடத்தின் விம்பம் இக் குளத்தில் தெரியுமாறு அமைந்துள்ளது. பூங்காவின் பிற இடங்களில் மர வரிசைகளுடன் கூடிய பாதைகளும், செயற்கை நீரூற்றுக்களும் காணப்படுகின்றன. பாரசீகப் பூங்காக்களின் வடிவமைப்பைப் பின்பற்றி அமைக்கப்பட்ட முகலாயப் பூங்காக்கள், முகலாயப் பேரரசர் பாபரினால் இந்தியாவுக்கு அறிமுகமானது. இது நான்கு ஆறுகள் பாயும் சுவர்க்கத்திலுள்ள பூங்காவுக்கான ஒரு குறியீட்டு வடிவமாகும். முகலாய இஸ்லாமிய நூலொன்றில், சுவர்க்கம் என்பது, மையத்தில் அமைந்துள்ள ஒரு ஊற்றிலிருந்து நான்கு திசைகளிலும் பாயும் ஆறுகளைக் கொண்ட ஒரு பூங்கா எனக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான முகலாயப் பூங்காக்கள், சதுர வடிவானவையாகவும், சமாதியையோ அல்லது ஒரு காட்சிக் கூடத்தையோ அதன் மையப் பகுதியில் கொண்டதாக அமைந்திருப்பது வழக்கம். ஆனால், இந்த வழக்கத்துக்குப் புறம்பாக தாஜ்மகாலில் சமாதி ஒரு பக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. யமுனை ஆற்றுக்கு மறு பக்கத்தில், மஹ்தாப் பாக் அல்லது நிலவொளிப் பூங்கா கண்டு பிடிக்கப்பட்டிருப்பதுடன், இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம், யமுனை நதியையும், நிலவொளிப் பூங்காவையும் உட்படுத்தி இத்தொகுதியை வடிவமைத்து இருக்கலாம் எனக் கருத்து வெளியிட்டுள்ளது. இங்கே யமுனை ஆற்றை, சுவர்க்கத்தின் ஆறுகளில் ஒன்றாக வடிவமைப்பில் சேர்த்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தாஜ்மகால் பூங்காவுக்கும், ஷாலிமாரில் உள்ள பூங்காவுக்கும் அவற்றின் அமைப்பிலும், அவற்றிலுள்ள, ஊற்றுக்கள், செங்கல் மற்றும் சலவைக்கற்கள் பதித்த நடைபாதைகள், வடிவவியல் உருக்களில் அமைந்த செங்கல் வரம்பிட்ட பூம்படுகைகள் ஆகிய கட்டிடக்கலைக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமையும், ஷாலிமாரை அமைத்த, அலி மர்தான் என்னும் பொறியாளரே தாஜ்மகால் பூங்காவையும் அமைத்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இப் பூங்காவைப் பற்றிய பழையகாலக் குறிப்புகள், இங்கே பலவிதமான பூஞ்செடிகளும், பழமர வகைகளும் ஏராளமாக இருந்ததாகக் கூறுகின்றன. முகலாயப் பேரரசு சரிவடையத் தொடங்கியதோடு இப் பூங்காவின் பராமரிப்பும் குறைந்தது. இப்பகுதி பிரித்தானியர் கைக்குப் போனபோது அவர்கள் இப் பூங்காவின் அமைப்பை மாற்றி இலண்டனில் உள்ளது போன்ற புற்றரைகளை அமைத்தனர். வெளிக் கட்டிடங்கள் தாஜ்மகால் தொகுதி மூன்று பக்கங்களில் செந்நிற மணற்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. யமுனை ஆற்றை நோக்கியுள்ள பக்கத்தில் சுவர்கள் இல்லை. சுவருக்கு வெளியே ஷா ஜகானின் ஏனைய மனைவியர்களுடையவை உட்பட மேலும் பல சிறிய சமாதிக் கட்டிடங்கள் உள்ளன. இவற்றுள் சற்றுப் பெரிய கட்டிடம் மும்தாஜின் விருப்பத்துக்குரிய பணிப்பெண்ணுடையது. இவற்றுட் பெரும்பாலானவை, அக்காலத்து சிறிய முகலாயச் சமாதிக் கட்டிடங்களைப் போல் செந்நிற மணற்கற்களால் ஆனவை. சுற்றுச் சுவர்களின் உட்பக்கங்களில், வளைவுகளுடன் கூடிய தூண் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இந்தியாவின் இந்துக் கோயில்களில் காணப்படும் அம்சம் முகலாயக் கட்டிடங்களில் பயன்பட்டது. முக்கியமாகச் சலவைக்கல்லால் அமைக்கப்பட்ட முதன்மை நுழைவாயில் முந்திய பேரரசர்கள் காலத்து முகலாயக் கட்டிடங்களை நினைவூட்டுகிறது. இது சமாதிக் கட்டிடத்தை ஒத்த வளைவுகளையும், புடைப்புச் சிற்பங்களையும், பதிப்பு அழகூடல்களையும் கொண்டுள்ளது. கட்டுமானம் ஆக்ரா நகருக்குத் தெற்கே உள்ள நிலமொன்றில் தாஜ்மகால் கட்டப்பட்டது. மகாராஜா ஜெய் சிங் என்பவருக்குச் சொந்தமான இந்த நிலத்தைப் பெறுவதற்காக, ஷா ஜகான் அவருக்கு ஆக்ரா நகரின் மையப்பகுதியில் பெரிய நிலமொன்றை வழங்கினார். ஏறத்தாழ மூன்று ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட பகுதி அகழப்பட்டு மண் நிரப்பி இறுக்கப்பட்டு ஆற்று மட்டத்திலிருந்து 50 மீட்டர் உயரத்துக்கு நிரப்பப்பட்டது. முதன்மைக் கட்டிடப் பகுதியில் ஆழமான கிணறு போன்ற அமைப்புகள் தோண்டப்பட்டு கற்களும், சிறு பாறைகளும் இட்டு நிரப்பி அத்திவாரம் இடப்பட்டது. மூங்கிலால் ஆன சாரமரங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்காக செங்கற்களால் தற்காலிக அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வமைப்புக்கள் மிகவும் பெரிதாக இருந்ததால் இதை அகற்றுவதற்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடுமென்று அக்காலத்து மேற்பார்வையாளர்கள் கருதியதாகத் தெரிகிறது. மரபுவழிக் கதைகளின்படி கட்டிடம் கட்டி முடிந்ததும், இந்தத் தற்காலிக அமைப்பில் இருந்து எவரும் கற்களை எடுத்துத் தாங்களே வைத்துக் கொள்ளலாம் என அறிவித்தானாம் இதனால் ஓரிரவிலேயே இவ்வமைப்புக்கள் அகற்றப்பட்டனவாம். சலவைக்கற்களை கட்டிடக் களத்துக்கு எடுத்துச் செல்வதற்கு 15 கிலோமீட்டர் நீளமான சாய்தளப் பாதை ஒன்று மண் போட்டு இறுக்கி அமைக்கப்பட்டதாம். 20 தொடக்கம் 30 எருதுகளைக் கொண்ட குழுக்களைக் கொண்டு இதற்கென உருவாக்கப்பட்ட வண்டிகளில் கற்களை ஏற்றி இழுத்துவந்ததாகச் சொல்லப்படுகின்றது. இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. கறுப்பு நிறத் தாஜ் மஹால் தாஜ் மஹாலைத் தன் பிரியமான மனைவிக்காகக் கட்டியெழுப்பச் சொன்ன மன்னன் ஷாஜகான் அதே சமயம் தன்னைக் குறிக்கும் வகையிலும் தாஜ்மஹாலைப் போன்ற தோற்றம் கொண்ட கறுப்பு நிறத் தாஜ் மஹாலைக் கட்டியெழுப்பியுள்ளதாகவிருந்த சந்தேகத்தின்படி ஆராய்ச்சியாளர்கள் அத்தாஜ்மஹால் இருந்த இடத்தின் சான்றுகளை ஆராய்ந்துள்ளனர்.அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர் தாஜ்மகால் கட்டப்பெற்ற சில தூரங்களில் கறுப்பு நிறத் தாஜ் மஹாலைப் போன்ற தோற்றம் அங்கு காணப்படவில்லை ஆனால் அதன் அமைப்புகள்,கற்கள் போன்றனவற்றையும் கண்டெடுத்துச் சான்றுகளைப் பார்த்தனர் அவ்வாறு கறுப்பு நிறத் தாஜ் மஹால் கட்டப்படவில்லை எனவும் இன்று விளக்குகின்றனர்.ஆனால் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஒரு குளம் ஒன்றின் மீது மாலை நேரங்களில் தாஜ் மகாலின் தோற்றமானது கறுப்பு நிற வடிவில் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.அதாவது ஷாஜகான் கவலையில் ஆழும் பொழுது கறுப்பு நிறத் தோளாடை போர்த்தப்பெற்ற இக்குளத்திலிருந்து பிரியமான மனைவி மும்தாஜ் மஹாலுக்குக் கட்டியெழுப்பிய தாஜ்மகாலைப் பார்த்து வந்தார் என்பதும் தாஜ்மகாலின் நிழல் அக்குளத்தில் விழும்பொழுது கறுப்பு நிறமாகத் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும். அமில மழை தாஜ் மஹால் அமில மழையால் மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது. அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதி மன்றம் தாஜ்ம ஹாலைச் சுற்றி உள்ள 10,400 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள அனைத்து தொழிலகங்களும் நிலக்கரிக்குப் பதில் இயற்கை எரிவாயுவையே பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டது. தூய்மைப்படுத்தல் நடவடிக்கை தாஜ்மகால் மீது களிமண் பூசி தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் நடவடிக்கையை தொல் பொருள் ஆய்வுத்துறை தொடங்க உள்ளதாகவும் வெயில், மழை, பனி, காற்றினால் பரவு தூசி போன்ற காரணங்களினால் உலகப் பிரசித்திப் பெற்ற இந்த தாஜ்மகால் கட்டடம் மாசு படிந்து வருகின்றது என்றும் கவலையான தகவல்கள் வெளிவருகின்றன. அத்துடன் தாஜ்மகாலை காண உலகெங்கும் இருந்து கிட்டத்தட 25 லட்சம் பயணிகள் வந்து செல்வதாகவும், தாஜ்மகாலை கட்டடத்தைச் சுற்றி குப்பை கூளங்கள், பசுவின் சாணம் போன்றனவும் பரவிக்கிடக்கின்றனவாம். அத்துடன் தாஜ்மகால் வரும் சுற்றுலாப் பயணிகளது உடைமைகளை வைத்துக்கொள்வதற்கான அறை வசதிகள், மலசலக்கூடங்களுக்கான வழிகாட்டு அடையாளக் குறிகள் போன்றனவும் போதிய அளவில் இல்லை எனும் செய்திகளும் வருகின்றன. இவை பொறுப்பானவர்களின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது. தாஜ்மகால் பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து சுவாமி விவேகானந்தர் தாஜ்மகாலைப் பார்த்த போது கூறிய கருத்து: "இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும். இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும்." மேற்கோள்கள் இந்தியத் தொல்லியற்களங்கள் இந்திய வரலாற்றுச் சின்னங்கள் ஈரானிய கட்டிடக்கலை இசுலாமியக் கட்டிடக்கலை இந்தியாவில் உள்ள கல்லறைகள்
1382
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய நாடுகள் தலைமையகம்
ஐக்கிய நாடுகள் தலைமையகம், நியூயார்க் நகரில் உள்ள தனித்துவமானதொரு கட்டிடத் தொகுதியாகும். இது 1952 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகள் அவையின் தலைமை அலுவலகமாகச் செயற்பட்டு வருகின்றது. இது மான்ஹட்டனின் கிழக்குப் பகுதியில், டர்ட்டில் பே (Turtle Bay) வட்டகையில், ஈஸ்ட் ஆற்றை நோக்கியிருக்கும் பரந்த நிலத்தில் அமைந்துள்ளது. இது நியூயார்க் நகரத்தில் இருந்தாலும், இக் கட்டிடத்தொகுதி அமைந்துள்ள இடம் ஒரு அனைத்துலக ஆட்சிப் பகுதியாகும். இந் நிலப்பகுதி, மேற்கில் முதலாவது அவெனியூவையும், கிழக்கு 42 ஆவது தெருவைத் தெற்கிலும், கிழக்கு 48 ஆவது தெருவை வடக்கிலும், ஈஸ்ட் ஆற்றைக் கிழக்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஃபிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் ஈஸ்ட் ஆற்றுச் சாலை (Franklin D. Roosevelt East River Drive) இக் கட்டிடத்தொகுதியின் கீழாகச் செல்கிறது. இக் கட்டிடத் தொகுதியில் மூன்று முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. 39 மாடிகளைக் கொண்ட செயலகக் கட்டிடம், சபையின் உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச் சபைக் கட்டிடம், டாக் ஹாமர்ஷீல்ட் நூலகம் என்பனவே அவையாகும். இவை தவிர இத் தொகுதி, கட்டிடங்களைச் சுற்றி அமைந்துள்ள பூங்காக்களுக்கும், சிற்பங்களுக்கும் பெயர்பெற்றது. ஐக்கிய நாடுகள்சபையின் இந்தத் தலைமையகக் கட்டிடத் தொகுதி, 1949, 1950 ஆம் ஆண்டுகளில், ஜோன் டி, ராக்பெல்லர் ஜூனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது. மேற்கோள்கள் ஐக்கிய நாடுகள் கட்டிடங்கள்
1383
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
சுவர்க்கக் கோவில்
சுவர்க்கக் கோவில் (()) என்பது பீஜிங் நகரத்தில் உள்ள சமயக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம் கட்டும் பணி 1420-ல் தொடங்கியது. பீஜிங்கில் உள்ள நான்கு பெருமைக்குரிய கோவில்களின் இதுவே மிகவும் பெரியதாகும். 1889ஆம் ஆண்டில் இதன் உண்மையான கட்டிடம் மின்னல் தாக்கி எரிந்தது. மேற்கோள்கள் குறுங்கட்டுரைகள் சீனக் கோயில்கள் சீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்
1384
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஹிரோஷிமா சமாதான நினைவகம்
ஜப்பானிய மொழியில், அணுகுண்டுக் குவிமாடம் (Atomic Bomb Dome) எனப் பொருள்படும் கென்பாக்கு டோம் (原爆ドーム) என்னும் பெயர் கொண்ட ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஜப்பானின், ஹிரோஷிமா நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கா இந்த நகரத்தின் மீது முதலாவது அணுகுண்டைப் போட்டது. இந்த அணுகுண்டால் இந்தக்கட்டடம் நேரடியாகப் பாதிக்கப்பட்டது. ஆற்றல் மிக்க அணுகுண்டால் பாதிக்கப்பட்டும் அந்நகரத்தில் எஞ்சி நின்ற ஒரே கட்டடம் இதுதான். கட்டடத்தின் புறச்சுவர்கள் பாதிக்கப்பட்டாலும் இதன் குவிமாடம் பாதிக்கப்படவில்லை. நகரத்தை மீண்டும் உருவாக்கியபோது, இதை மீண்டும் கட்டாமல் அணுகுண்டின் அவலங்களை நினைவுகூரும்வகையில் இதை நினைவகமாக பராமரிக்க முடிவுசெய்யப்பட்டது. இது 26.ஆகத்து 1996 இல் யுனெஸ்கோ, பாரம்பரிய கட்டடமாக அறிவித்தது. இந்த கட்டடத்தை செக் குடியரசைச் சேர்ந்த ஜான் லெட்செல் (Jan Letzel) வடிவமைத்துள்ளார். இது கட்டப்பட்ட 1915 முதல் ஹிரோஷிமா வர்தக கண்காட்சியகம் என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்தது. 1933இல் ஹிரோஷிமா தொழிற்சாலை மேம்பாட்டு காட்சியகம் என்ற பெயர் மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. குறுங்கட்டுரைகள் நினைவகங்கள் சப்பானிய உலக பாரம்பரியக் களங்கள்
1388
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா
நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா, கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியால் நகரின் வரலாற்று முக்கியத்துவப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பசிலிக்கா ஆகும். இதன் கட்டிடம், கவனத்தை ஈர்க்கும் உலகின் சிறந்த கட்டிடக்கலைகளுள் ஒன்று எனலாம். இதன் உள் பகுதி பல நிறங்களைக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. இதன் விதானம் (ceiling), கருநீல நிறம் பூசப்பட்டுப் பொன் நிற நட்சத்திர வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்காணக்கான நுண்ணிய மரச் செதுக்கு வேலைகளினாலும், சமயம் சார்ந்த பல சிலைகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறச் சுவரில் அமைந்துள்ள நிறக் கண்ணாடி வேலைப்பாடுகள், வழமையான தேவாலயங்களில் உள்ளதைப் போல விவிலியம் சம்பந்தமான காட்சிகளைச் சித்தரிக்காமல் மொன்றியலின் சமயம் சார்ந்த வரலாற்றுக் காட்சிகளைச் சித்தரிக்கின்றன. வரலாறு 1657 ஆம் ஆண்டில், உரோமன் கத்தோலிக்க சுல்பிசியன் சபையைச் சேர்ந்தவர்கள், இன்று மொன்றியல் என அழைக்கப்படும், வில்லே-மேரி (Ville-Marie) என்ற இடத்தை வந்தடைந்தார்கள். தீவின் கட்டுப்பாடு இவர்களுக்கு வழங்கப்படவே, இவர்கள் இதனை 1840 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தனர். இங்கு அவர்கள் உருவாக்கிய பங்கு மரியாளின் புனித பெயரால் அர்ப்பணம் செய்யப்பட்டதுடன், இப் பங்குத் தேவாலயமான நொட்ரே-டேம் 1672 இல் அங்கே நிறுவப்பட்டது. 1824 இல், இத் தேவாலயத்துக்கு வருவோர் தொகை அது கொள்ளக்கூடிய அளவுக்கு மேலாக வளர்ந்ததனால், நியூயார்க்கைச் சேர்ந்த ஐரிஷ்-அமெரிக்க புரட்டஸ்தாந்தவரான ஜேம்ஸ் ஓடொன்னெல் என்பவரிடம், புதிய தேவாலயமொன்றை வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. கோதிக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை இயக்கத்தின் ஆதரவாளரான ஓடொன்னெல், அப் பாணியிலேயே அத் தேவாலயத்தை வடிவமைத்தார். இந்தத் தேவாலயத்தின் நிலவறையில் புதைக்கப்பட்டவர் இவர் மட்டுமே. இதற்காகவே மரணப்படுக்கையில் இவர் கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. கட்டி முடிக்கப்பட்ட காலத்தில், வட அமெரிக்காவின் மிகப் பெரிய தேவாலயமாக இது விளங்கியது. மேற்கோள்கள் கியூபெக் கனடாவிலுள்ள கிறித்தவக் கோவில்கள்
1389
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பண்டைய உலக அதிசயங்கள்
பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் (Seven Wonders of the Ancient World) மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும், ஹீரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக் கருதப்படுகின்றது எனினும், இவை பற்றிய குறிப்புகள் மட்டுமே கிடைத்துள்ளன. பின்னணி துவக்கத்தில் "அதிசயங்கள்" என்பதற்குப் பதிலாக, பண்டைய கிரேக்கர்கள் "தீமட்டா" (θεάματα) என்ற சொல்லைப் பயன்படுத்தினர், அதற்கு "காட்சிகள்", என்று பொருளாகும். வேறுவிதமாகக் கூறினால், "பார்க்க வேண்டியவை" (Τὰ ἑπτὰ θεάματγα τῆς οῆς οῼκ heptà theámata tēs oikoumenēs [gēs] ) என்று பொருள்படும்.பின்னர், "ஆச்சரியம்" ("தௌமடா" θαύματα, "அதிசயங்கள்") என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. எனவே, இந்தப் பட்டியல் பண்டைய உலகின் பயண வழிகாட்டி புத்தகத்தின் இணையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பண்டைய உலக ஏழு அதிசயங்கள் தற்போது வழக்கிலுள்ள, அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தை உள்ளடக்கிய, பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின் பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப் பதிலாக, பபிலோனின் சுவர்களே காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த பட்டியல் இது. கிசாவின் பெரிய பிரமிட், பழங்கால எகிப்திய பாரோ (அரசன்) கூபுவின் சமாதியாகும் இது. கி.மு 2680ல் கட்டிமுடிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பபிலோனின் தொங்கு தோட்டம் மற்றும் பபிலோனின் சுவர் என்னுமிரண்டும், நெபுச்சட்னெஸ்ஸார் என்பவனால், கி.மு 600ல், ஈராக்கில் கட்டப்பட்டது. ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, இன்றைய கிரீஸில், கி.மு ஔஐந்தாம் நூற்றாண்டில், கிரேக்கச் சிற்பி, பீடியாஸ் என்பவரால் செதுக்கப்பட்டது. ஆர்ட்டெமிஸ் கோயில், கி.மு 350ல், இன்றைய துருக்கியிலுள்ள எபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. மௌசோல்லொஸின் மௌசோலியம், காரியாவின் பாரசீக சத்ரப்பினால், ஹலிகர்னாசஸ் என அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியிலுள்ள போட்றம் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. ரோடொஸின் கொலோசஸ், ஹெலியோசின் பிரம்மாண்டமான சிலை. தற்கால கிரீசில், கி.மு 280ல் உருவாக்கப்பட்டது. அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம், இன்றைய எகிப்திலுள்ளது. கி.மு 3ஆம் நூற்றாண்டில், சொஸ்த்திராட்டஸ் என்பவரால் கட்டப்பட்டது. இவற்றில் தலா இரண்டு அதிசயங்கள், இன்றைய எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று ஈராக்கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை தப்பியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம் நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ் ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள் மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சியொன்றினால் விழுந்துவிட்டது. இவற்றையும் பார்க்கவும் புதிய ஏழு உலக அதிசயங்கள் மேற்கோள்கள் ஏழு பண்டைய உலக அதிசயங்கள் பண்டைய வரலாறு உலகப் பாரம்பரியக் களங்கள்
1390
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
பாபிலோனின் தொங்கு தோட்டம்
பாபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின் தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பாபிலோனின் சுவர்களும் பண்டைய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுகாத்நேசர் (II|Nebuchadnezzar) தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பாபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகம் இன்னமும் உள்ளது. இரண்டாம் நெபுகாத்நேசர் என்ற மன்னனின் முயற்சியால் அவருடைய அரண்மனையில் கி.மு.600 ஆண்டுகளுக்கு முன் கற்களால் வளைவுகளும் மொட்டை மாடிகளும் கட்டப்பட்டன. அவற்றில் செடிகளும் தாவரங்களும் பயிரிடப்பட்டன. யூப்ரேட்ஸ் ஆற்றிலிருந்து கப்பி முறையில் தண்ணீரை இறைத்து குழாய்கள் வழியாகச் செடிகளுக்குப் பாய்ச்சினர். இசுட்ராபோ, டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பாபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. உசாத்துணை இவற்றையும் பார்க்கவும் பண்டைய உலக அதிசயங்கள் ஈராக்கின் வரலாறு பாபிலோனின் செமிராமிஸ் தோட்டக்கலை தோட்டக்கலை வரலாறு ஏனையவை தொங்கு தோட்டங்கள் தொங்கு தோட்டம் (சினிமா) வெளி இணைப்புகள் ஏழு உலக அதிசயங்கள்: பாபிலோனின் தொங்கு தோட்டம் மெசொப்பொத்தேமியாவின் வரலாறு ஏழு பண்டைய உலக அதிசயங்கள்
1392
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D
அங்கோர் வாட்
அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் பௌத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது பண்டைய கெமீர் இனத்தை சேர்ந்த இரண்டாம் சூரியவர்மனால் (பொ.ஊ. 1113–1150) 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. "அங்கோர்" என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும். இது கெமீர் மொழிச் சொல்லாகும். வரலாறு அங்கோர் வாட், சியம் ரீப்பின் நவீன நகரத்தின் வடக்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில், முந்தைய தலைநகரமான பாஃபுஆனுக்கு சற்றே தென் கிழக்கில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது. இக்கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றது. 1177ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜயவர்மன் சிறிது தூரம் வடக்கே தள்ளி தன் புதிய தலைநகரத்தையும், மாநில கோவிலையும் நிறுவினார். 13ஆம் நூற்றாண்டின் போது, அங்கோர் வாட், இந்து கோவிலில் இருந்து தேராவத புத்த மத பயன்பாட்டுக்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கோர் வாட், அங்கோர் கோயில்களிலேயே மிகவும் அசாதாரணமானது, 16ஆம் நூற்றாண்டிலேயே அக்கோயில் ஒரளவு புறக்கணிக்கப்பட்டு வந்தாலும் முழுமையாக கைவிடப்படவில்லை, ஏனெனில், அக்கோயிலின் அகழி காட்டின் அத்துமீறலில் இருந்து சிறிது பாதுகாப்பளித்தது. மேற்கத்திய பார்வையாளர்கள் இக்கோயில் கெமர் மக்களால் கட்டப்பட்டது என்பதை நம்ப இயலாமல் இக்கோயில் உரோம சகாப்தத்தின் போதே கட்டப்பட்டது எனத் தவறாக தேதியிட்டனர். ஆனால், அக்கோயிலைப் புதுப்பித்த போது மேற்கொள்ளப்பட்ட கல்வெட்டுகளின் ஆய்வில் அது மற்ற அங்கோர்களிருந்து தனித்து இருப்பதை உணர்ந்தனர். 20ஆம் நூற்றாண்டின் போது தொடங்கப்பட்ட புதுப்பித்தல் பணி, உள்நாட்டுப் போர் மற்றும் 1970, 1980களின் கெமர் ரூச்சின் ஆட்சியினால் நிறுத்தப்பட்டது. ஆனால் மற்ற அங்கோரியன் சிலை திருட்டு மற்றும் சேதத்தை ஒப்பிடும் போது அங்கோர் வாட்டின் சேதம் குறைவே. கட்டமைப்பு இக்கோயில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. மத்திய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது. சுவர்களும், அகழியும், பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது. இக்கோயில் நகரத்தில் இருந்து சிறிது உயர்த்தப்பட்ட ஒரு தளத்தின் மீது அமைந்துள்ளது. மூன்று சதுர கூடங்கள், மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது. இக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கபட்டுள்ளது என கூறபடுகிறது. முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (ceiling) தாமரை வடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச்சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களின் சுவர்களிலும் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது. இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த மேல்தளத்தின் மீது ஒன்றோடொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் இரண்டு நூலகங்கள் அல்லது சிறிய கோவில் அமைப்புக்கள் உள்ளன. அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்கள் உள்ளன. இன்றைய அங்கோர் வாட் 1982 மற்றும் 1992ன் மத்தியில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இக்கோயிலின் புதுப்பித்தல் பணியினை செய்தது. அப்போதிலிருந்து இக்கோயிலின் சுற்றுலா வரவு பெருகியது. இக்கோயில் 1992ல் நிறுவப்பட்ட அங்கோரின் உலக பாரம்பரிய களத்தின் ஒரு பகுதியாக இருப்பதனால் இதைப் பராமரிக்க கம்போடிய அரசுக்கு ஊக்கமும், நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் அப்சரா பாதுகாப்பு திட்டம், இக்கோயிலின் அலங்காரத்தையும், கட்டமைப்பையும் பேணும் தேவதாக்களைப் பாதுகாத்து வருகிறது. உலக நினைவிடங்கள் நிதியம், 2008ல் பாற்கடல் கூடத்தை பல ஆய்வுகளுக்கு பின்னர் புதுப்பிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது, இப்பணியின் முக்கிய கட்டம் 2012ல் முடிவடைந்தது, இறுதிக் கட்டமாக முக்கோண வடிவிலான அலங்கார கும்பம் 2013ல் நிறுவப்படும் எனத் தெரிகிறது. 2004 மற்றும் 2005ல், கம்போடிய அரசாங்க புள்ளிவிவரங்களின் படி முறையே, 561,000 மற்றும் 677,000 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக கம்போடியாவுக்கு வருகை புரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா வர்த்தகம் இக்கோயிலைப் பாதுகாக்க பெரும் அளவில் உதவியது. ஆனால் அதிக அளவு பார்வையாளர்களின் வரவால் இக்கோயிலின் சுற்று வட்டாரம் மாசு பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதைக் கட்டுப்படுத்த யுனெஸ்கோவும் அதன் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவும் சேர்ந்து அதனைப் பாதுகாக்க முடிவு கொண்டது. மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு கம்போடியாவில் உள்ள பிற பழமையான கோயில்களைப் போலவே அங்கோர் வாட்டும் தாவர வளர்ச்சி, பூஞ்சை, தரை இயக்கங்கள், போர் சேதம் மற்றும் திருட்டு ஆகியவற்றை ஏராளமாக சந்தித்துள்ளது. கம்போடியாவின் கோவில் இடிபாடுகளை மீதமுள்ள கோயில்களுடன் ஒப்பிடும்போது அங்கோர் வாட் கோயிலுக்கான போர் சேதம் மிகவும் குறைவாகவே உள்ளது, மேலும் இதை மிகவும் கவனமாக புதுப்பிக்க வேண்டியதாகவும் உள்ளது. நவீன காலத்திய அங்கோர் வாட் மறுசீரமைப்பும் பாதுகாப்பும், பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம் என்ற பிரான்சுநாட்டு அமைப்பு மேற்கொண்டது. இதற்கு முன்னர் 1908 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முதன்மையாக தள ஆராய்ச்சியுடன் சம்பந்தப்பட்டிருந்தன. 1970களின் முற்பகுதி வரை அங்கோர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் அதன் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அங்கோர் வாட் பாதுகாப்பு மையம் பொறுப்பு வகித்தது. 1970களின் முற்பகுதிவரை புதுப்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1960களில் அங்கோர்வாட்டின் பெரும்பான்மையான புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கெமர் ரூச் ஆட்சிக்காலத்தில் இப்பணிகள் கைவிடப்பட்டன. அங்கோர்வாட் பாதுகாப்பு மையம் கலைக்கப்பட்டது. 1986-க்கும் 1992-க்கும் இடையில் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கோவில் மீது மறுசீரமைப்பு பணியை மேற்கொண்டது, அந்த நேரத்தில் கம்போடிய அரசாங்கத்தை பிரான்சு அங்கீகரிக்கவில்லை. தொடக்கக்கால பிரெஞ்சு மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் குறிப்பாக இந்தியா மேற்கொண்ட புதுப்பித்தல் வேலைகள் ஆகியவற்றைப் பற்றி விமர்சனங்கள் எழுப்பப்பட்டன, இப்பணிகளில் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களும் சிமெண்ட்டும் கற்களின் மேற்பரப்பில் சேதத்தை ஏற்படுத்தியது என்ற ஐயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.. 1992 ஆம் ஆண்டில் கம்போடியாவின் மன்னர் நொரடோம் சீயனூக், உதவியால் அங்கோர் வாட் யுனெசுகோவின் உலகளாவிய அபாயநிலையில் உள்ள உலகளாவிய மரபுச்சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றது. (2004 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது) அங்கோரை காப்பாற்றுவதற்காக சர்வதேச சமூகத்திற்கு யுனெசுகோ மூலம் முறையிடப்பட்டது. 1994 ஆம் ஆண்டில் அங்கோர் தளத்தை பாதுகாப்பதற்காக ஒரு மண்டலம் அமைக்கப்பட்டது. அங்கோர் மற்றும் சீயெம் ரீப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையம அப்சரா என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கம்போடிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான சட்டமும் 1996இல் உருவாக்கப்பட்டது. பிரான்சு, சப்பான் மற்றும் சீனா போன்ற பல நாடுகள் தற்போது பலவகையான அங்கோர் வாட் பாதுகாப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதனையும் காண்க கம்போடியா வாட் (புத்தக்கோவில்) கம்போடியாவில் பௌத்தம் புத்தக் கோவில்களின் பட்டியல் மேற்கோள்கள் உசாத்துணை Briggs, Lawrence Robert (1951, reprinted 1999). The Ancient Khmer Empire. White Lotus. Falser, Michael (2020). Angkor Wat – A Transcultural History of Heritage. Volume 1: Angkor in France. From Plaster Casts to Exhibition Pavilions. Volume 2: Angkor in Cambodia. From Jungle Find to Global Icon. Berlin-Boston DeGruyter Forbes, Andrew; Henley, David (2011). Angkor, Eighth Wonder of the World. Chiang Mai: Cognoscenti Books. Freeman, Michael and Jacques, Claude (1999). Ancient Angkor. River Books. . Higham, Charles (2001). The Civilization of Angkor. Phoenix. Higham, Charles (2003). Early Cultures of Mainland Southeast Asia. Art Media Resources. Hing Thoraxy. Achievement of "APSARA": Problems and Resolutions in the Management of the Angkor Area Petrotchenko, Michel (2011). Focusing on the Angkor Temples: The Guidebook, 383 pages, Amarin Printing and Publishing, 2nd edition, Ray, Nick (2002). Lonely Planet guide to Cambodia (4th edition). வெளியிணைப்புகள் Angkor Wat: Its Layout, Architecture nnd Components Multimedia Resources of Angkor Wat March 2023 Angkor Wat and Angkor photo gallery by Jaroslav Poncar May 2010 Buckley, Michael (1998). Vietnam, Cambodia and Laos Handbook. Avalon Travel Publications. Online excerpt The Churning of the Ocean of Milk retrieved 25 July 2005 கம்போடிய இந்துக் கோயில்கள் கம்போடியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டு இந்துக் கோயில்கள் பௌத்த யாத்திரைத் தலங்கள்
1393
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கல்வட்டம்
கல்வட்டம் என்பது வில்ட்ஷையர், இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும். இது, பெருங்கற்கள் (megalith) என அழைக்கப்படும், வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் உள்ளடக்கும். இதன் காலம் பற்றி இன்னும் விவாதங்கள் இருப்பினும், பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் இவ்வமைப்பு கி.மு 2500 க்கும், கி.மு 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப் பட்டிருக்கலாம் என எண்ணுகிறார்கள். இத்தொல்பொருட் சின்னத்தின், மிகப் பழைய பகுதியாகக் கருதப்படும், பழைய வட்டவடிவ மண் மேடுகளும், குழிகளும் கி.மு 3100 ஐச் சேர்ந்தவையெனக் கூறப்படுகின்றது. இது அமைந்துள்ள இடமும், சுற்றாடலும், 1986ல் யுனெஸ்கோ வினால், உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. இது பண்டையகால தேசிய நினைவு சின்னமாதலால், சட்டபூர்வமாக பாதுகாக்கப்படுகிறது. தேசிய அறக்கட்டளைக்கு சொந்தமான ஸ்டோன்ஹெஞ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலங்கள், இங்க்லீஷ் ஹெரிடேஜ் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மைக் பார்க்கர் பியர்சன், ஸ்டோன்ஹெஞ்ச் ரிவர்சைட் ப்ராஜெக்டின் தலைவர், ஸ்டோன்ஹெஞ்ச் என்பது பண்டைய கால கல்லறையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும் என்கிறார். இக்கட்டுமானங்கள் குறைந்தது 1500 வருடங்களாவது நீடித்திருக்கிறது. கால அளவீடும், புரிந்துகொள்ளுதலும்; ஆரம்பகால தரமில்லாத அகழ்வாராய்ச்சி, விலங்குகளின் துளைத்தல் மற்றும் சரியில்லாத அறிவியல் பூர்வ கால் அளவீடு முதலிய காரணங்களால் மிகவும் கடினமாகிறது. 2008 ஆம் ஆண்டின் ஸ்டோன்ஹெஞ் ரிவர்சைடு திட்டம் மூலம் கிடைத்த தொல்லியல் சான்றுகள் ஸ்டோன்ஹெஞ் அதன் ஆரம்ப காலத்திலிருந்து ஒரு கல்லரையாக இருந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது. தளத்தில் காணப்படும் மனித எலும்புகள் கி.மு. 3000 ஆம் ஆண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என தெரிகிறது. இத்தகைய உடல் தகனங்கள் குறைந்தது அடுத்த 500 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இந்த தளம் யாத்திரை மேற்கொள்ளும் மத முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக இருந்துள்ளது. [சான்று தேவை] ஆரம்பகால வரலாறு ஸ்டோன்ஹெஞ் பல கட்டங்களாக உருவானது. அதன் கட்டுமானம் குறைந்தது 1,500 ஆண்டுகள் நீடித்திருந்தது. அதை சுற்றி பெரிய அளவிலான கட்டுமானம் நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன. இது ஒருவேளை 6,500 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்கலாம். விலங்குகளின் செய்கையால் சுண்ணாம்புக்கல் சிதைவுற்றிருப்பது, தரமற்ற ஆரம்ப அகழ்வாராய்ச்சி பதிவுகள், மற்றும் துல்லியமான, அறிவியல் பூர்வமான தேதிகள் இல்லாததால் பல்வேறு காலகட்டங்களில் கட்டுமானம் குறித்து புரிந்து கொள்வது சிக்கலாக உள்ளது. செயல்பாடு மற்றும் கட்டுமானம் ஸ்டோன்ஹெஞ் எழுதப்பட்ட பதிவுகளை விட்டு செல்லும் ஒரு கலாச்சாரத்தால் கட்டப்படவில்லை. ஸ்டோன்ஹெஞ்சின் பல அம்சங்கள் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றன. ஸ்டோன்ஹெஞ் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுமான நுட்பங்கள் குறித்து எந்த நேரடி சான்றும் இல்லை. பல ஆண்டுகளாக, பல ஆசிரியர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் (இல்லையெனில் அந்த கற்களை நகர்த்துவது சாத்தியமற்றது) என்று கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இத்தளம் வானியல் ஆய்வுக்கோ, சமய தளமாகவோ பயன்படுத்தப்பட்டிருக்களாம் என்ற கருத்தும் நிலவுகிறது. சமீபத்தில் இரண்டு முக்கிய புதிய கோட்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. பேராசிரியர் ஜெஃப்ரி வைன்ரைட் மற்றும் புர்னெமவுத் பல்கலைக்கழகம் சேர்ந்த பேராசிரியர் டிமோதி, ஸ்டோன்ஹெஞ் லூர்து சமமான ஒரு சிகிச்சையளிக்கும் இடமாக இருந்தது என்று கருதுகின்றனர். இந்த பகுதியில் உள்ள கல்லறைகளில் புதைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதை வைத்து அவர்கள் வாதிடுகின்றனர். எனினும் மூதாதையர் வழிபாட்டிற்கு இத்தளம் பயன்படுத்தப்பட்டிறுக்கிறது என்பதையும் அவர்கள் ஒப்புகொள்கின்றனர். ஐசோடோப்பு பகுப்பாய்வு புதைக்கப்பட்ட நபர்களில் சிலர் மற்ற பகுதிகளில் இருந்தவர்கள் என்று தெரிகிறது. ஸ்டோஹெஞ் ஒரு இறுதி ஊர்வல நினைவுச்சின்னமாக கட்டப்பட்டது என்ற யோசனையை முன்வைப்போரும் உண்டு. அதன் வடிவமைப்பு கிரகணம் உள்ளிட்ட பிற வான நிகழ்வுகளை கணிப்பதை முக்கியமான குறிக்கோளாக கொண்டுள்ளது. 2012 ல் முன்மொழியப்பட்ட மற்றொரு கோட்பாடு, ஸ்டோன்ஹெஞ் பிரித்தானிய தீவின் பல்வேறு மக்களை ஐக்கியப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டது என்று அறிவுறுத்துகிறது. இந்த கோட்பாட்டின் படி ஸ்டோன்ஹெஞ் கட்டுமானத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இடையேயான பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் தேவை குறிப்பாக கற்கள் வேல்ஸ் போன்ற பகுதியில் இருந்த குவாரிகளில் இருந்து, மிக நீண்ட தூரம் எடுத்து செல்லப்பட்டது. நவீன வரலாறு "ஹீல் ஸ்டோன்" அல்லது "சன் ஸ்டோன்" ஹீல் ஸ்டோன் தற்போதைய A344 சாலையை அடுத்து , ஸ்டோஹெஞ்சின் முக்கிய நுழைவாயிலுக்கு வெளியே உள்ளது. 16 அடி (4.9 மீ) உயரமான அந்த கரடுமுரடான கல் கல் வட்டம் நோக்கி உட்புறமாக சாய்ந்து இருக்கிறது. இது "ஹீல் ஸ்டோன்" மற்றும் "சன் ஸ்டோன்" உட்பட, கடந்த காலத்தில் பல பெயர்களில் அழைக்கப்பட்டுது. கோடைகால உச்சத்தில் கல் வட்டத்தின் உள்ளே நின்று வாசல் வழியாக வட கிழக்காக பார்த்தால் ஹீல் ஸ்டோன் மீது சூரிய உதயத்தை காணலாம். 16 ஆம் நூற்றாண்டு முதல் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அமெஸ்பரி அபே மற்றும் அதன் சுற்றியுள்ள நிலங்களை கைப்பற்றியது முதல் ஸ்டோன்ஹெஞ்சின் உரிமை பல முறை மாறிவிட்டது. 1540 ம் ஆண்டில் ஹென்றி, ஹெர்ட்ஃபோர்டை சேர்ந்த கோமானுக்கு கொடுத்தார். இது பின்னர் லார்ட் கார்லேடன் பின்னர் மார்க்வெஸ் குயின்ஸ்பரியிடம் சென்றது. சேஷையரை சேர்ந்த அன்ட்ரோபஸ் குடும்பம் 1824 ஆம் ஆண்டு அதை வாங்கியது. முதல் உலக போரின் போது ஒரு விமான நிலையம் இந்த வட்டத்தின் மேற்கு பகுதியில் கட்டப்பட்டது. உலர் பள்ளத்தாக்கில் ஒரு முக்கிய சாலை சந்திப்பும், ஓட்டலும் கட்டப்பட்டது. அவர்களின் கடைசி வாரிசு பிரான்ஸ் மோதல்களில் கொல்லப்பட்ட பின் அன்ட்ரோபஸ் குடும்பம் அந்த இடத்தை விற்றது. பின்னர் சாலிஸ்ப்யூரியை சேர்ந்த நைட் பிராங்க் & ருட்லெய் முகவர் மூலம் 21 செப்டம்பர் 1915 அன்று ஏலம் விடப்பட்டது. மேற்கோள்கள் இங்கிலாந்தில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்
1394
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D
அக்ரோபோலிஸ்
அக்ரோபோலிஸ் (acropolis, ) என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களின் குறியீட்டு மையப்பகுதியைக் குறித்தது. சமயம் தொடர்பான கட்டிடங்களும், குடிமக்களுக்கான பொதுக் கட்டிடங்களும் இப்பகுதியில் ஒருங்கே அமைந்திருந்தன. அக்காலத்து ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு ஆகும். அக்ரோபோலிஸ் (Acropolis) என்னும் சொல், acron = விளிம்பு, polis = நகரமென்னும் இரு கிரேக்கச் சொற்களின் இணைவினால் உருவானது. நேரடியாக மொழி பெயர்க்கும்போது, நகரத்தின் விளிம்பு என்ற பொருள் தருகின்றது. அக்ரோபோலிஸ்கள் உயர்ந்த நிலப்பகுதிகளிலேயே அமைக்கப் பட்டிருக்கின்றன. பொதுவாக செங்குத்தான பக்கங்களைக் கொண்ட குன்றுகளே தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய இடங்கள் நகரத்தின் பாதுகாப்புக்கு வாய்ப்பான இடங்களாகும். பண்டைய கிரேக்க நகரங்களான ஏதென்ஸ், ஆர்கோஸ் (Argos), தேபிஸ் (Thebes), கொறிந்த் (Corinth) என்பவற்றில் அக்ரோபோலிஸ்கள் இருந்தன. இது கிரேக்க நகரங்கள் தொடர்பிலேயே உருவானபோதும், பிற்காலத்தில் பல இடங்களிலும் உருவான நகர மையங்களும் அக்ரோபோலிஸ் என்று அழைக்கப்பட்டன. மிகவும் பிரபலமான அக்ரோபோலிஸ், கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரிலுள்ள அக்ரோபோலிஸே ஆகும். இதனால் எவ்வித அடைமொழியுமின்றி அக்ரோபோலிஸ் என்றால் அது ஏதென்ஸில் உள்ளதையே குறித்தது. இதனையும் காண்க ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் பண்டைய கிரேக்கக் கட்டிடக்கலை
1408
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
சீனப் பெருஞ் சுவர்
சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China) (長城 எளிதாக்கப்பட்டது: 长城 பின்யின்: (ச்)சாங் (ச்)செங், நேரடிக் கருத்து: "நீண்ட நகர் (கோட்டை)") என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். இதில் சில சுவர்கள் 7ஆம் நூற்றாண்டுப் பகுதியின் துவக்கத்தில் கட்டப்பட்டதாகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது. இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. வரலாறு கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள்பற்றி அறிந்திருந்தனர். இச் சுவர், குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில், சண்டையிட்டு வந்த சி, யான், சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது. இச்சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட்ட மண், சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு, வாள், ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப்பிடிக்கக் கூடியனவாக இருந்தன. கிமு 221 ஆம் ஆண்டில் சின் ஷி ஹுவாங் எதிரி நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி சீனாவை ஒன்றிணைத்து சிங் வம்ச அரசை நிறுவினார். மையப்படுத்திய ஆட்சியை நடத்துவதற்காகவும், நிலப்பிரபுக்கள் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்கவும், தனது பேரரசுக்கு உட்பட்ட நாடுகளின் இடையில் அமைந்திருந்த எல்லைச் சுவர்களை இடித்துவிட அவர் ஆணையிட்டார். இடையிடையே காணப்பட்ட இடைவெளிகளையும் நிரப்பி வடக்கு எல்லைச் சுவரை முழுமைப்படுத்தினார். பின் வந்த வம்சங்களினால் திருத்தப்பட்டும், விரிவாக்கப்பட்டும் வந்த இச்சுவர், மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது. வெவ்வேறான நான்கு முக்கிய கட்டுமானங்களும், திருத்தவேலைகளும் நடைபெற்றிருக்கின்றன: கிமு 208 (கின் வம்சம்) கிமு முதலாம் நூற்றாண்டு (ஹான் வம்சம்) 1138–1198 (பத்து வம்சங்களினதும் ஐந்து அரசுகளினதும் காலம்) 1368 (மிங் வம்சம்) மிங் வம்சப் பெருஞ் சுவர், கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹுவாங்டாவோ (Qinghuangdao)வில் போஹாய் குடாவுக்கு அருகில் ஷன்ஹாய் கடவையில் தொடங்குகிறது. ஒன்பது மாகாணங்களையும், 100 'கவுண்டி'களையும் கடந்து, மேற்கு முனையில், வடமேற்கு கன்சு மாகாணத்திலுள்ள ஜியாயு கடவையில் முடிவடைகின்றது. ஜியாயு கடவை, பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர், ஜியாயு கடவையில் முடிவடைகின்றபோதும், ஜியாயு கடவையையும் தாண்டிப் பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்கப் புகைச் சைகைகளைப் பயன்படுத்தின. முக்கிய படை அதிகாரியான வு சங்குயியை, ஷஹாய்க் கடவையின் கதவைத் திறந்துவிடச் சம்மதிக்க வைத்ததன் மூலம், மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள். அவர்கள் உள்ளே வந்து சீனாவைக் கைப்பற்றிய பின்னர், யாரைத் தடுப்பதற்காகச் சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருந்ததால், பெருஞ் சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது. அரசாங்கம் சுவர் கட்டும் வேலையில் ஈடுபடும்படி மக்களுக்கு உத்தரவிட்டது. அவர்கள் படைகளால் தாக்கப்படக்கூடிய ஆபத்தைத் தொடர்ச்சியாக எதிர் நோக்கினார்கள். சுவரின் கட்டுமானப் பணிகளின்போது பலர் இறந்த காரணத்தால், இச்சுவர் "உலகின் அதி நீளமான மயானம்" என்றும் அழைக்கப்படுவதுண்டு. குறிப்பிடத்தக்க பகுதிகள் பின்வரும் மூன்று பகுதிகள் பெய்ஜிங் மாநகரசபைப் பகுதிக்குள் வருகின்றன. இவை திருத்தப்பட்டு இருப்பதுடன், தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வரும் இடங்களாகவும் உள்ளன. வடக்குக் கடவை அல்லது ஜூயோங்குவான் கடவை. சீனர்கள் தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்கு இச் சுவரைப் பயன்படுத்திய காலத்தில், சுவரின் இப்பகுதியில் பல காவலர்கள் இருந்து தலைநகரான பெய்ஜிங்கைப் பாதுகாத்தனர். மலைப்பகுதியிலிருந்து எடுத்த கற்களாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட இச் சுவர்ப்பகுதி, 7.8 மீட்டர் (25.6 அடி) உயரமும், 5 மீட்டர் (16.4 அடி) அகலமும் கொண்டது. மேற்குக் கடவை அல்லது ஜியாயுகுவான் கடவை. இக் கோட்டை, சீனப் பெருஞ் சுவரின் மேற்குப் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. ஷான்ஹாய்குவான் கடவை. இக்கோட்டை பெருஞ்சுவரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் சரிவான மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மிங் காலச் சுவர்ப் பகுதி, மிகவும் கவர்ச்சியானது. இது 11 கிலோமீட்டர் (7 மைல்) நீளமும், 5 முதல் 8 மீட்டர்வரை (16 – 26 அடி) உயரமும் கொண்டது. அடிப்பகுதியில் 6 மீட்டர் (19.7 அடி) அகலத்தைக் கொண்ட இச் சுவர்ப்பகுதி உச்சியில் 5 மீட்டர் (16.4 அடி) அகலத்தைக் கொண்டுள்ளது. வாங்ஜிங்லூ என்பது ஜிங்ஷான்லிங்கின் 67 காவல் கோபுரங்களில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 980 மீட்டர் (3,215 அடி) உயரத்தில் உள்ளது. ஜின்ஷான்லிங்கின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முத்தியான்யு பெருஞ்சுவர் மலையொன்றைச் சுற்றி அமைந்துள்ளது. தென்கிழக்கிலிருந்து, வடமேற்காகச் செல்லும் இச் சுவர் 2.25 கிலோமீட்டர் (1.3 மைல்) நீளமானது. இது மேற்கில் ஜுயோங்குவான் கடவையுடனும், கிழக்கில் குபெய்க்குவுடனும் இணைந்துள்ளது. இன்னொரு குறிப்பிடத்தக்க பகுதி சுவரின் கிழக்கு முனைப் பகுதிக்கு அண்மையில் உள்ளது. இங்கேதான் பெருஞ் சுவரின் முதல் கடவை இச் சுவர் ஏறும் முதல் மலையான ஷான்ஹாய்குவானில் கட்டப்பட்டது. இச் சுவரில் பாலமாகக் கட்டப்பட்ட ஒரே பகுதியான ஜியோமென்கூ உள்ளது. சோங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட மெங் ஜியாங்-நு கோயில் இங்கிருப்பதால், ஷான்காய்குவான் பெருஞ் சுவர், "பெருஞ்சுவர்க் கட்டுமானத்தின் அருங்காட்சியகம்" எனப்படுகிறது. காவற் கோபுரங்கள் பெருஞ்சுவரின் நீளம் முழுவதும் இருந்த படையினருக்கு இடையேயான தகவல் தொடர்புகளும், தேவையான போது கூடுதல் படைகளை அழைப்பதற்கான வசதிகளும், எதிரிகளின் நகர்வுகள்குறித்து, பாசறைகளில் இருந்த படைகளை எச்சரிக்க வேண்டியதும் முக்கியமான தேவைகள். இதனால், மலை முகடுகளிலும், சுவர்ப் பகுதிகளில் அமைந்த பிற உயரமான பகுதிகளிலும், சமிக்ஞைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கட்டிடப்பொருள்கள் செங்கற்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர், பெருஞ்சுவர் மண், கற்கள், மரம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருந்தது. மிங் வம்சக் காலத்தில், சுவரின் பல இடங்களில் செங்கற்களும், கற்கள், ஓடுகள், சுண்ணாம்பு என்பனவும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. செங்கற்களின் அளவு, கற்கள், மண் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்வதிலும் பார்க்கக் கட்டுமான வேலையை வேகமாகச் செய்ய உதவியது. அத்துடன் செங்கற்கள் கூடுதலான சுமையைத் தாங்கக்கூடியவையாக இருந்ததுடன் மண்சுவர்களை விடக் கூடிய காலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. கற்கள் அவற்றின் நிறை காரணமாகச் சுவரை உறுதியாக வைத்திருக்கக் கூடியன என்றாலும், அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் கடினமானது. இதனால், நீள்சதுரக் குற்றிகளாக வெட்டப்பட்ட கற்கள், அத்திவாரம், வாயில் பகுதிகள் போன்றவற்றுக்குப் பயன்பட்டன. தற்போதைய நிலைமை பெய்ஜிங்குக்கு வடக்கே சுற்றுலா மையங்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டும், சில வேளைகளில் மீளமைப்புச் செய்யப்பட்டும் இருந்தாலும் ஏனைய இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை. சில இடங்களில் இது ஊர் விளையாட்டு இடங்களாகவும், இன்னும் சில இடங்களில், சுவரின் சில பகுதிகளில் சுலோகங்களும் எழுதப்படுகின்றன. கட்டுமானத் திட்டங்களின்போது குறுக்கேயிருந்தமையால் சில பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டுமுள்ளன. சீனப் பெருஞ் சுவர்ச் சங்கம் சுவரைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2003 வரை சீன அரசாங்கம் சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை. விரிவான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இச்சுவரின் எவ்வளவு பகுதி எஞ்சியுள்ளது என்று கூறமுடியாதுள்ளது. குறிப்பாகத் தொலைதூரப் பகுதிகளில் இச் சுவரின் நிலை பற்றிக் கூறுவது கடினமானது. கான்சு மாகாணத்திலுள்ள 60 கிலோமீட்டர் நீளமான இச் சுவரின் பகுதி, மணற்புயலினால் ஏற்படும் அரிப்பினால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அழிந்துவிடக்கூடும் என அஞ்சப்படுகின்றது. சிறப்பு மதிப்பீடு இச் சுவர் சிலசமயம் "நவீன உலகின் ஏழு அதிசயங்களுள்" ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆனாலும் இது கிரேக்கர்களினால் அடையாளம் காணப்பட்ட பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றல்ல. 1987 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் அறிவிக்கப்பட்டது. 1938 ஆம் ஆண்டில், ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய "அதிசயங்களின் இரண்டாவது புத்தகம்", சந்திரனிலிருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு சீனப் பெருஞ் சுவர் மட்டுமே என்று குறிப்பிட்டது. இந்தக் குறிப்பு நிலைத்து, நகரத்துப் பாரம்பரியக் கதை நிலையைப் பெற்றதுடன், பாடப் புத்தகங்கள் சிலவற்றிலும் இடம் பெற்றது. எனினும் சீனப் பெருஞ் சுவரை நிலவிலிருந்து வெறும் கண்ணால் பார்க்கமுடியும் என்ற பொருளை இது தருமாயின் அது உண்மையல்ல. எனினும் தாழ்வான பூமியைச் சுற்றும் சுற்றுப்பாதையிலிருந்து, அதாவது சந்திரனிலும் ஆயிரம் மடங்கு குறைவான தூரத்திலிருந்து பார்க்கும்போது, சில வாய்ப்பான சமயங்களில் இது வெறும் கண்ணுக்குத் தெரியக்கூடும். பெருஞ் சுவர் சில மீட்டர்கள் அகலம் மட்டுமே கொண்டது, அதனால் நெடுஞ்சாலைகள், விமான ஓடுபாதைகள் முதலிய பூமியிலுள்ள பல்வேறு அமைப்புக்களுடன் ஒப்பிடக்கூடியது. விண்வெளி விமானிகள் வெவ்வேறுவிதமான குறிப்புகளைத் தந்துள்ளனர். இது அதிசயப்படத்தக்கதல்ல. ஒளியின் திசையைப் பொறுத்து, சில சமயங்களில் தெளிவாகத் தெரியும் சந்திர மேற்பரப்பிலுள்ள சில அம்சங்கள், வேறு சமயங்களில் கண்ணுக்குப் புலப்படாமற் போவதுண்டு. "விமான ஓடுபாதையளவுக்குச் சிறியவற்றைக்கூட நாங்கள் பார்க்கமுடிகிறது, (ஆனால்) 180 மைல்கள் மட்டுமேயான உயரத்திலிருந்து சீனப் பெருஞ் சுவர் தெரியவேயில்லை" என ஒரு விண்வெளிக் கலத்தின் விமானி அறிக்கையிட்டார். விமானி வில்லியம் போக் என்பவர் ஸ்கைலாப்பிலிருந்து தான் அதைப் பார்த்ததாக நினைத்தார். ஆனால் பின்னர், உண்மையில் அவர் பார்த்தது பீக்கிங்குக்கு அண்மையிலுள்ள பெருங் கால்வாயையே எனக் கண்டுகொண்டார். இவர் தொலை நோக்குக் கண்ணாடிகளைப் பயன்படுத்திப் பெருஞ் சுவரைக் காண்பதில் வெற்றிகண்டார் என்றாலும் வெற்றுக் கண்களுக்குச் சுவர் தெரியவில்லை என்றார். அண்மையில் சீன விண்வெளி விமானி யாங் லிவெய், தன்னால் அதைப் பார்க்கவே முடியவில்லை என அறிவித்தார். ஒரு அப்போல்லோ விமானி, சில ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பார்க்கும் போது எந்த மனிதரமைத்த அமைப்புமே தெரியவில்லை என்றார். அனுபவம் மிக்க அமெரிக்க விமானி Gene Cernan, 160 கிமீ தொடக்கம் 320 கிமீ உயரத்திலுள்ள பூமிச் சுற்றுப்பாதையிலிருந்து சீனப் பெருஞ் சுவர் வெற்றுக் கண்ணுக்குத் தெரியவே செய்கிறது என்று கூறினார். எவ்வாறெனினும் சீனப் பெருஞ் சுவர், மனிதனாலாக்கப்பட்ட வேறெந்த அமைப்பையும் விட விண்வெளியிலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரியக் கூடியது என்ற கதை உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவு. காட்சியகம் இவற்றையும் பார்க்கவும் சீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் International Friends of the Great Wall  – organization focused on conservation UNESCO World Heritage Centre profile Enthusiast/scholar website Photoset of lesser visited areas of the Great Wall சீனக் கட்டிடக்கலை வரலாற்றுச் சின்னங்கள் சீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்
1409
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AF%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D
எல் காஸ்ட்டீயோ பிரமிட்
எல் காஸ்ட்டீயோ (El Castillo) என அழைக்கப்படும் குக்குல்கான் பிரமிது (Kukulcan Pyramid) அல்லது குக்குல்கான் கோவில் (Temple of Kukulcan) என்பது மெக்சிக்கோவின் யுகட்டான் மாநிலத்தில் உள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இடை அமெரிக்கப் படிக்கட்டுப் பிரமிது ஆகும். எல் காஸ்ட்டீயோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் எசுப்பானிய மொழிச் சொல்லாகும். கோவில் கட்டிடம் தொல்பொருள் ஆய்வாளர்களால் சிச்சென் இட்சா கட்டமைப்பு 5பி18 (Structure 5B18) என முறையாக நியமிக்கப்பட்டுள்ளது. கிபி 8-12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், முன்-கொலம்பியக் காலத்திற்கு முந்தைய மாயா நாகரிகத்தால் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், குக்குல்கான் என்ற கடவுளுக்கு ஒரு கோவிலாக செயல்பட்டது. குக்குல்கான் யுக்காடெக் மாயா இறகுகள் கொண்ட பாம்பு தெய்வம், ஆசுடெக்குகள் மற்றும் பிற மத்திய மெக்சிக்க கலாச்சாரங்களுக்கு தெரிந்த கிட்சால்குவாடலியுடன் நெருங்கிய தொடர்புடையது. இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அதே நோக்கத்திற்காக கட்டப்பட்ட ஒரு உட்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. கோவிலுக்கு நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் கொண்ட சதுரமான மொட்டை மாடிகள் உள்ளன. பாம்புகளின் சிற்பங்கள் வடக்குக் கைப்பிடிச் சுவர்களின் ஓரங்களில் ஓடுகின்றன. வசந்த கால மற்றும் இலையுதிர்கால சம இரவுக் காலங்களின் போது, ​​பிற்பகுதிச் சூரியன் கோவிலின் வடமேற்கு மூலையைத் தாக்கி, வடமேற்குக் கைப்பிடிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான முக்கோண நிழல்களை வீசுகிறது, இதன்போது இறகுகள் கொண்ட பாம்பு கோயிலின் கீழே "தவழும்" மாயையை உருவாக்குகிறது. தற்காலப் பார்வையாளர்களுக்கு, இந்த நிகழ்வு மிகவும் பிரபலமாக உள்ளது. வசந்த சமவிரவுக் காலங்களில் ஆயிரக்கணக்கானோர் இதனை கண்டுகளிக்கின்றனர். ஆனால் இந்த நிகழ்வு ஒரு நோக்கத்துடன் கூடிய வடிவமைப்பின் விளைவாக இருந்ததா என்பது தெரியவில்லை, ஏனெனில் ஒளி மற்றும் நிழல் விளைவை சமவிரவுக்கு அருகில் பல வாரங்கள் பெரிய மாற்றங்கள் இல்லாமல் காணலாம். 1998 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள், மனிதர்கள் அதைச் சுற்றிக் கைதட்டும்போது குவெட்சால் பறவையின் ஒலியைப் பிரதிபலிப்பதாகக் கூறுகிறது. இந்த நிகழ்வு தற்செயலானது அல்ல என்று ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர், இந்தக் கோவிலைக் கட்டியவர்கள் இந்தக் கட்டமைப்பின் எதிரொலி விளைவால் தெய்வீக வெகுமதியை உணர்ந்தனர். தொழில்நுட்ப ரீதியாக, கைதட்டல் சத்தம் கோவிலின் உயரமான மற்றும் குறுகலான சுண்ணாம்புப் படிகளுக்கு எதிராகச் சிதறி, அதிர்வெண்ணில் குறையும் ஒரு குற்றொலி போன்ற தொனியை உருவாக்குகிறது. கோவிலின் நான்கு பக்கங்களிலும் தோராயமாக 91 படிகள் உள்ளன, அவை ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, இறுதிப் "படியாக" மேலே உள்ள கோவில் மேடையையும் சேர்த்து, மொத்தம் 365 படிகளை உருவாக்கலாம் (கோயிலின் தென்புறத்தில் உள்ள படிகள் அரிப்புற்றதாகக் காணப்படுகின்றன). அந்த எண்ணிக்கை மாயா ஹாப்''' ஆண்டின் நாட்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும், அத்துடன் இது மாயா நாகரீக சடங்குகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இந்த அமைப்பு 24 மீ (79 அடி) உயரம் கொண்டது, உச்சியில் உள்ள கோயிலுக்கு கூடுதலாக 6 மீ (20 அடி) உள்ளது. சதுர அடித்தளம் 55.3 மீ (181 அடி) குறுக்கே உள்ளது. பிரமிதின் அமைப்பு இது சதுரவடிவத் தளங்களைக் கொண்ட ஒரு படிக்கட்டுப் பிரமிட் ஆகும். இதன் நான்கு பக்கங்களிலும், மேலேறிச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன. உச்சியில் கோயில் அமைந்துள்ளது. காலத்துக்குக் காலம், பழைய பிரமிட்டுகளைப் பெருப்பித்து அவற்றைப் பெரிய பிரமிடுகளாக உருவாக்குவது இடை அமெரிக்க நகரங்களில் வழக்கமாக இருந்தது. இதுவும் அத்தகைய ஒரு பிரமிடுக்கான எடுத்துக்காட்டு ஆகும். இப்போதைய பிரமிடின் அடிப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் உள்ள கதவொன்றின் வழியாக உள்ளே சென்று பழைய பிரமிடில் அமைந்துள்ள படிமீது ஏற முடியும். உள்ளே அமைந்துள்ள பழைய பிரமிட்டின் உச்சியிலுள்ள அறையொன்றில் குக்குல்கான் மன்னனின் அரியணை அமைந்துள்ளது. இதன் வடிவம் சந்திர கால அட்டவணையான புதிய பிரமிடை உள்ளடக்கிய சூரிய கால அட்டவணையாக பழைய பிரமிட் உள்ளதாக கூறப்படுகிறது. மறுகட்டமைப்பு இதன் கட்டமைப்பு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது பாழடைந்த நிலையிலிருந்து அறைகுறையாக மறுக்கட்டுமானம் செய்யப்பட்டது. இதன் இரு பக்கங்கள் வாஷிங்டன் நகரிலுள்ள கார்னெகி கல்வி நிறுவனத்தின் 17 ஆண்டுகால பெருமுயற்சியால் ஏறத்தாழ முழுமையுமாக மறுகட்டுமானம் செய்யப்பட்டது. நன்கறிந்த மாயன் நாகரீக நிபுணர் சில்வேனஸ் ஜி. மார்லே என்பவரது தலைமையில் 1920களின் கடைக்காலத்தில் தொடங்கிய இந்த மறுகட்டுமானப்பணி 1940 ஆம் ஆண்டு நிறைவேறியது. இந்த கோயில் மெக்சிகோவின் புகழ்வாய்ந்த சின்னமாக மாறியது. மற்ற இரு பக்கங்களை மெக்சிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980-களில் புனர்நிர்மாணம் செய்தனர். பிரமிடின் வெளிப்பகுதி நான்கு பக்கதிலும் படிக்கட்டுகளை உடைய இக்கட்டிடத்தின் ஒவ்வொரு படிக்கட்டும் 91 படிகளை கொண்டதாக அமைந்துள்ளது. மேல்தளத்தையும் ஒரு படியாகக் கணக்கிட்டால் மொத்தம் 365 படிகள். ஒவ்வொரு படியும் ஹாப் என்னும் மாயன் நாகரீக கால அட்டவணையின் ஒரு நாளை குறிக்கிறது. இந்த கட்டிடத்தின் உயரம் மேல்தளம் வரை 24 மீட்டர், கூடுதலாக மேலுள்ள கோயில் ஒரு 6 மீட்டர். சதுரமான கீழ்த்தளம் குறுக்கில் 55.3 மீட்டராக உள்ளது. பிரமிட்டின் வெளிமுனையிலுள்ள பெரிய படிகள் ஒன்பதும் சூரியக் குடும்பத்தின் ஒன்பது கோள்களை குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஸ்பெயினின் யுகாட்டன் ஆக்கிரமிப்புக் காலமான 1530-களில் ஆக்கிரமிப்பு அரசர் இளைய ஃப்ரான்சிஸ்கோ-டி-மான்டியோ இந்த கட்டிடத்தின் மேல் பீரங்கி பொருத்தி கோட்டையாக பயன்படுத்தினார். இன்று 'எல் காஸ்ட்டிலோ' மிகப்புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மெக்சிகோவின் சுற்றுலாத்தலங்களில் ஒன்று. காட்சியகம் இவற்றையும் பார்க்கவும் சிச்சென் இட்சா மேற்கோள்கள் உசாத்துணைகள் Šprajc, Ivan, and Pedro Francisco Sánchez Nava (2013). Astronomía en la arquitectura de Chichén Itzá: una reevaluación. Estudios de Cultura Maya'' XLI: p. 31–60. Gray, Richard. "Sacred Sinkhole Discovered 1,000-year-old-Mayan-Temple-Eventually-Destroy-Pyramid." Science & tech August 17, 2015. Dailymail. Web. August 17, 2015. Justice, Adam. "Scientists discover sacred sinkhole cave under Chichen Itza pyramid." Science (2015). Ibtimes. Web. August 14, 2015. Juárez-Rodríguez, O., Argote-Espino D., Santos-Ramírez, M., & López-García, P. (2017). Portable XRF analysis for the identification of raw materials of the Red Jaguar sculpture in Chichén Itzá, Mexico. Quaternary International, Quaternary International. Tejero-Andrade, A., Argote-Espino, D., Cifuentes-Nava, G., Hernández-Quintero, E., Chávez, R.E., & García-Serrano, A. (2018). ‘Illuminating’ the interior of Kukulkan's Pyramid, Chichén Itzá, Mexico, by means of a non-conventional ERT geophysical survey. Journal of Archaeological Science, 90, 1-11. Wren, L., Kristan-Graham, C., Nygard, T., & Spencer, K. R. (2018). Landscapes of the Itza : Archaeology and art history at Chichen Itza and neighboring sites. Gainesville: University Press of Florida. மாயன் கட்டிடக்கலை மெக்சிக்கோ பிரமிடுகள்
1411
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
எவரெசுட்டு சிகரம்
எவரெசுட்டு சிகரம் (அல்லது எவரெஸ்ட் சிகரம்), நேபாளத்தில் சாகர்மா என்றும், சீனாவில் சோமோலுங்குமா என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகிலேயே யாவற்றினும் மிக உயர்ந்த கொடுமுடியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) ஆகும். இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் எவரெஸ்ட் மலை அமைந்து உள்ளது. மேலும், பூமியின் மையத்தில் இருந்து அளக்கப்பட்டால், 5 வது உயரமான மலை ஆகும். இது இமயமலையின் பிரிவில் அமைந்துள்ளது. சீனா (திபெத் தன்னாட்சிப் பகுதி) மற்றும் நேபாளம் இடையேயான சர்வதேச எல்லையானது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ளது. அதன் மேல்பகுதியில் அண்டை சிகரங்கள் இலோட்ஃசே மலை, 8,516 மீ (27,940 அடி); நபுட்சே, 7,855 மீ (25,771 அடி), மற்றும் சாங்சே, 7,580 மீ (24,870 அடி) ஆகும். 1856 ஆம் ஆண்டில், இந்தியாவின் கிரேட் டிரிகோனெமெட்டிகல் சர்வே ஆஃப் இந்தியா எவரெஸ்ட்டின் உயரத்தை முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் பீக் XV என அழைக்கப்பட்டு,   8,840 மீ (29,002 அடி) என நிறுவியது. சீனா மற்றும் நேபாளால் அங்கீகரிக்கப்பட்ட தற்போதைய அதிகாரபூர்வ உயரம் 8,848 மீ (29,029 அடி) 1955 ஆம் ஆண்டு இந்திய ஆய்வின் மூலம் இது நிறுவப்பட்டது, பின்னர் 1975 ஆம் ஆண்டு சீன ஆய்வு ஒன்றால் இது உறுதிப்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டில், சீனா மலை உயரத்தை 8844.43 மீ என அளந்தது. சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் எவரெஸ்டின் உயரம் பற்றிய வாதம் 2005 முதல் 2010 வரை ஐந்து ஆண்டுகள் நீடித்தது. சீனா மலையின் உயரத்தை பாறையின் உயரம்வரை 8,844 மீட்டர் உயரம் என்று வாதிட்டது,   ஆனால் நேபாளம் அதன் பனி உயரம் 8,848 மீட்டர் என்ற அளவே சரி என்றது. 2010 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் உயரம் 8,848 மீ என்று இரு தரப்பினரிடனும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது, எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,844 மீ என சீனாவின் கூற்றை நேபாளம் அங்கீகரிக்கிறது. இந்திய பிரித்தானிய சர்வேயர் ஜெனரல் ஆண்ட்ரூ வாவ் ஒரு பரிந்துரையின் பேரில். 1865 ஆம் ஆண்டில், எவரெஸ்ட் என்ற அதிகாரப்பூர்வ ஆங்கில பெயரை ராயல் புவியியல் சமூகம் வழங்கியது. பல்வேறு உள்ளூர் பெயர்கள் இருப்பதாகத் தோன்றியதாலும், ஜார்ஜ் எவரெஸ்டின் ஆட்சேபனைகள் இருந்த போதிலும், வு பதவிக்கு வந்த பிறகு, மலைக்கு தன் முன்னோடியின் பெயரை தேர்வு செய்தார். எவரெஸ்ட் சிகரம் பல ஏற்ற வீரர்களை ஈர்க்கிறது, அவற்றில் சிலர் மிகவும் அனுபவமுள்ள மலையேறிகளாவர். இரண்டு முக்கிய ஏறும் வழிகள் உள்ளன, நேபாளத்தில் தென்கிழக்குப்பகுதியில் ("நிலையான பாதை" என அழைக்கப்படும்) பாதை ஒன்று மற்றும் சீனாவின், திபெத்தின் வடக்கில் உள்ள ஒரு பாதை. நிலையான பாதைகளில் ஏற கணிசமான தொழில்நுட்ப சவால்கள் இல்லாதபோதும், உயரத்தில் ஏறும்போது ஏற்படும் வாத நோய், வானிலை, காற்று, பனிச்சரிவுகள், பனிப்பொழிவு போன்ற குறிப்பிடத்தக்க ஆபத்துகள் எவரெஸ்ட் சிகரத்தில் உள்ளன. 2016 ஆம் ஆண்டுவரை மலை மீது 200 க்கும் மேற்பட்ட சடலங்கள் உள்ளன.   இதில் சில இடங்களின் அடையாளங்களாகவும் செயல்படுகின்றன. இது நேபாள-திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது. இக்கொடுமுடியை 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதன் முதலாக எடுமண்டு இல்லரி என்னும் நியூசிலாந்துக்காரரும் டென்சிங் நார்கே என்னும் நேப்பாளத்து செர்ப்பாக்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே ஒப்பரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நில உருண்டையின் உச்சிக்கோடுதனையே (கோடு = மலை உச்சி) மனிதன் வென்றுவிட்டான் என்று எண்ணி உலகம் பெருமைப்பட்டது. மலையேற்றத்தில் மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே எவரெசுட்டு உச்சியை எட்ட முடியும் என்றாலும் அண்மையில் இரு கால்களும் இல்லாதவரும், கண் பார்வை அற்றவர்களும் இக்கொடுமுடியை எட்டிப் புகழ் படைத்துள்ளனர். எவரெசுட்டுக்கு பல பழம்பெயர்கள் வழக்கில் உள்ளன. தேவ'கிரி, தேவ'துர்கா என்று வடமொழியிலும், (அண்மைக்காலத்தில், சுமார் 1960ல் இருந்து சாகர்மாதா என்றும்), திபேத்திய மொழியில் கோமோலுங்குமா (= அண்டங்களின் தாய்) என்றும் அழைக்கப்படுகின்றது. இம்மலை ஆண்டொன்றுக்கு 4 மில்லி மீட்டர் உயரம் கூடுவதாக அறிஞர்கள் கண்டுள்ளனர். இப்பெருமலைத்தொடர் எவ்வாறு உருவாகியது என்பதற்கு இமயமலை கட்டுரையைப் பார்க்கவும். உயர அளவீடும் பெயர் சூட்டும் இராதானாத் சிக்தார் (1813–1870) என்னும் வங்காளத்து இந்தியரே முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் இதன் உயரம் சுமார் 8,848 மீட்டர் என்று கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ தொலைவில் இருந்து கொண்டே தியோடலைட்டு என்னும் கருவியினால் முக்கோண முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார். இச்சிகரத்தை முறைப்படி அளவிடும் முன் இதனை கொடுமுடி-15 என்றுமட்டும்தான் குறித்து வைத்திருந்தார்கள். பின்னர் நில அளவை அணியின் தலைவராக இருந்த சியார்ச் எவரெசுட்டு (George Everest) என்பவரின் பெயரை இக்கொடுமுடிக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வாகு (Andrew Waugh) என்பவர் சூட்டினார். இச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 28844 அடி உயரமுடையது. எவரெசுட்டு சிகரத்தின் உயரமும், உருவாக்கமும் எவரெசுட்டு சிகரம் பூமியின் இளம் சிகரங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலுமாக வலுவூட்டப்பட்ட படிவுக்கலன்கள் மற்றும் உருமாறி பாறைகளைக் கொண்டுள்ளன. நவீன டெக்டோனிக் கொள்கையின்படி இமயமலை இந்திய ஆஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்களிடையே நிகழ்ந்த மோதலால் உருவாகியது. இது தான் மடிப்பு மலை என்று கூறுகிறோம். இந்த மடிப்பு மலைகளில் எவரெசுட்டும் ஒன்று ஆகும். வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய-ஆஸ்திரேலிய தகடுக்கும் யுரேசியன் தகடுக்கும் 7 கோடி ஆண்டுகள் முன்பு இந்த மோதல் தொடங்கியது . 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வேகமாக நகரும் இந்திய ஆஸ்திரேலிய தகடு முழுமையாக தெதைஸ் பெருங்கடலை மூடிவிட்டது, இதன் இருப்பு அங்குள்ள படிவ பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகின்றது. இந்த படிவுகள் அடர்த்தி குறைவாக இருந்ததால் அவை கடலின் கீழே போகாமல் ஒன்று சேர்ந்து மலையை உருவாக்கின. இந்திய ஆஸ்திரேலிய தட்டு கிடைமட்டமாக நகர்வதால் திபெத்திய பீடபூமி உயர்ந்து வருகிறது. மியான்மரில் உள்ள அரகான் யோமா உயர்நிலங்கள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்த மோதலால் உருவாகியது. இன்னும் இந்திய ஆஸ்திரேலிய தட்டு வருடத்திற்கு 67 மிமீ நகர்ந்து வருகிறது, மற்றும் அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இது ஆசியாவினுள் 1,500 கிமீ நகரும். இந்திய-ஆசிய குவிதல் ஆண்டிற்கு 20 மிமீ தெற்கு இமாலய முகப்பின் அழுத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது. இந்தியத் தகடு, ஆசியத் தகடுகள் நுழைவதால் இப் பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது உயரம் பற்றிய கருத்துவேறுபாடு நேபாளம் இதன் உயரத்தை 8848மீ என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் சீனா இதன் உயரம் 8844மீ என்கிறது. சீனா அரசு எவரெசுட்டின் உயரத்தை அளக்க அதன் சிகரத்தை அளவுகோலாக கொள்ளவேண்டும் என்கிறது. நேபாளம் சிகரத்தில் உள்ள பனிக்கட்டியையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறது. உலகின் மற்ற கொடுமுடிகளின் உயரம் அதன் உச்சியில் உள்ள பனியை கணக்கில் கொண்டுதான் அளக்கப்படுகிறது என்று நேபாளம் கூறுகிறது. உயரம் தொடர்பாக நேபாளத்திற்கும் சீனாவிற்கும் நடந்த பேச்சில் இறுதியான உடன்பாடு எட்டப்படவில்லை. 1999 மே மாதத்தில் அமெரிக்க குழு புவியிடங்காட்டி கொண்டு எவரெசுட்டின் உயரம் 8850மீ என்று கணித்தது, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை 8850மீ என்பதையே பயன்படுத்துகிறது. இதை நேபாளம் ஏற்கவில்லை. குறிப்பிடத்தக்க எவரெசுட்டு ஏறிய பதிவுகள் 2010 ஏறும் பருவத்தின் முடிவில், 3,142 தனிநபர்கள் உச்சி தொட்டுள்ளனர். மின் பகதூர் செர்ஷன் தனது முதல் முயற்சியிலேயே உச்சியை அடைந்த போது அவருக்கு கிட்டத்தட்ட 77 வயது அப செர்ப்பா உச்சியை 21 முறை அடைந்துள்ளார். 1922 - ஜார்ஜ் பின்ச் மற்றும் கேப்டன் சி ஜெஃப்ரி புரூஸ் 8,000 மீட்டர் (26,247 அடி) முதல் ஏறு, 1952 – 1952 சுவிஸ் எவரெஸ்ட் பயணம் மூலம் தென் கோல், முதல் ஏறு 1953 – 1953 பிரித்தானிய எவரெஸ்ட் பயணமாக நார்கே மற்றும் எட்மண்ட் ஹிலாரி டென்சிங் முதல் ஏற்றம் 1975 - ஜுங்கோ, முதல் பெண் ஏற்றம், 1978 - ரீன்ஹோல்ட் மெஸ்னர் மற்றும் பீட்டர் ஹபெலெர் ஆக்சிஜனை இல்லாமல் முதல் ஏற்றம் 1980 - ரீன்ஹோல்ட் மெஸ்னர் , முதல் தனி ஏற்றம் 1988 - ஜீன் மார்க் பொய்வின், மிதப்பான் மூலம் முதல் ஏற்றம் 1995 - அலிசன் ஹார்க்ரீவஸ் ,ஆக்சிஜன் இல்லாமல் முதல் பெண் ஏற்றம் 1998 -. வேகமான 20 மணி நேரத்தில் ,ஆக்சிஜனை இல்லாமல், முதல் ஏற்றம் 2000 – Davo Karničar மூலம் ஸ்கை முதல் வம்சாவளியை 2001 - எரிக் வெய்ன்மேயர், ஒரு பார்வையற்றவர் முதல் ஏற்றம் 2004 - செர்ப்பா, 8 மணி நேரம், 10 நிமிடங்களில் முதல் ஏற்றம் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் Mount Everest on Himalaya-Info.org (German) 360 panorama view from top of Mount Everest – large dimension drawing National Geographic site on Mt. Everest NOVA site on Mt. Everest Imaging Everest, a collection of photographs Panoramas: North South Interactive climb of Everest from Discovery Channel Mount Everest on Summitpost Full list of all ascents of Everest up to and including 2008 (in pdf format) Summits and deaths per year Mount Everest panorama, Mount Everest interactive panorama (QuickTime format), Virtual panoramas National Geographic, 2015 article with info-graphic on climbing routes சிகரங்கள் எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் இமயமலைத் தொடர் நேபாள மலைகள் சீன மலைகள்
1412
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
விடுதலைச் சிலை
சுதந்திர தேவி சிலை (Statue of Liberty அல்லது Liberty Enlightening the World) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார், வரலாறு அமெரிக்கப் புரட்சியின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும் முகமாக பிரான்ஸ் நாட்டினால் ஐக்கிய அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்தச் சுதந்திரதேவி சிலை. இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது. ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுதலை கிடைத்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் முகமாக அமெரிக்காவும், பிரான்சும் ஒன்றிணைந்து சிலை ஒன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. அதன் அடிப்படையில் பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதென்றும், பிரான்ஸ் மக்கள் சிலையினை நிர்மாணிப்பதென்றும் முடிவு செய்தனர். அதன்பின் இரு நாட்டவர்களையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. அதனால் பிரான்ஸ் நாடு களியாட்டங்கள், அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு, மூலம் நிதியைத் திரட்டியது. அமெரிக்கா கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், மற்றும் வேறு நிகழ்வுகள் மூலமும் நிதியை திரட்டினர். 1875-ஆம் ஆண்டு இந்த சிலையின் கட்டுமானம் தொடங்கியது. 1884-ஆம் ஆண்டு இச்சிலை முழுமை அடைந்தது. பிரான்சில் இருந்து அது கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி அமெரிக்க மக்களுக்குச் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது. 1924 ஆம் ஆண்டு இந்தச் சிலை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. சிலையின் அமைப்பு சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது. இடது கையில் ஜூலை 4, 1776 என்று எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறது. இது அமெரிக்கா விடுதலைப் போரின் சரித்திரத்தைக் குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர் ஆகும். சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன் ஆகும். உசாத்துணை வெளி இணைப்புகள் Statue of Liberty National Monument Statue of Liberty-Ellis Island Foundation Soleia Company Preserved and repurposes artifacts from the centennial restoration of the Statue of Liberty National Monument. "A Giant's Task – Cleaning Statue of Liberty", Popular Mechanics (February 1932) Views from the webcams affixed to the Statue of Liberty Made in Paris The Statue of Liberty 1877-1885 - many historical photographs ஐக்கிய அமெரிக்க வரலாறு ஐக்கிய அமெரிக்காவின் உலகப் பாரம்பரியக் களங்கள் பிரெஞ்சுக் கட்டிடக்கலை
1414
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
விக்டோரியா அருவி
விக்டோரியா அருவி அல்லது விக்டோரியா நீர்வீழ்ச்சி, உலகின் மிக அழகிய அருவிகளுள் ஒன்று. இது ஸாம்பிசி ஆற்றில், சாம்பியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியில் (17°55′1″S, 25°51′0″E) அமைந்துள்ளது. இது அண்ணளவாக 1.7 கிலோமீட்டர் (1 மைல்) அகலமும், 128 மீட்டர் (420 அடிகள்) உயரமும் கொண்டது. டேவிட் லிவிங்ஸ்டன் என்னும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பயணி ஒருவர் 1855 இல் இவ்விடத்துக்கு வந்தார். உள்ளூர் மக்கள் இந் நீர்வீழ்ச்சியை, புகையும் இடியும் என்னும் பொருளில், மோசி-ஓவா-துன்யா (Mosi-oa-Tunya) என்று அழைத்து வந்தார்கள். எனினும், லிவிங்ஸ்டன், இதன் பெயரை மாற்றி விக்டோரியா அரசியின் பெயரை அதற்கு வைத்தார். இது இரண்டு தேசியப் பூங்காக்களின் பகுதியாக உள்ளது. ஒருபக்கத்தில் இது ஸாம்பியாவிலுள்ள, மோசி-ஓவா-துன்யா தேசியப் பூங்காவும், மறுபக்கம், ஸின்பாப்வேயின் விக்டோரியா அருவி தேசியப் பூங்காவும் உள்ளன. இது ஆபிரிக்காவிலுள்ள மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவதுடன், யுனெஸ்கோ வின் உலகப் பாரம்பரிய இடமாகவும், உள்ளது. இங்கு விழும் தண்ணீர் மற்றும் தெளிக்கும் மூடுபனி மூலம் வானவில் உருவாகிறது. இந்த அருவி உலக புவியியல் மற்றும் புவிப்புறவியல் அம்சங்களில் மிக சிறந்ததாகும். வறண்ட பருவத்தில் தண்ணீர் குறைவாக இருக்கும் போது யானைகள், வரிக்குதிரைகள், நீர்யானைகள், ஒட்டகசிவிங்கிகள் போன்ற விலங்கினங்கள் சாம்பேஸி பகுதியை கடந்து செல்வது கண் கொள்ளாக்காட்சியாகும். மேலும் பால்கான், கருப்பு நாரை, கழுகு, வல்லூரு போன்ற பறவைகளும் அடிக்கடி இங்கு காணலாம். இந்த உலகின் மிக பெரும் நீர்வீழ்ச்சியாக இது உள்ளது. இந்த சாம்பேஸி அருவி 2 கிலோமீட்டர் அகலம் கொண்டது. மேலும் காண்க இகுவாசு அருவி மேற்கோள்கள் அருவிகள் ஆப்பிரிக்கப் புவியியல்
1418
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D
ரோடொஸின் கொலோசஸ்
ரோடொஸின் கொலோசஸ் (Colossus of Rhodes) கிரேக்கத் தீவான ரோட்சில் ஈலியோஸ் கடவுளுக்காக எழுப்பப்பட்ட மாபெரும் சிலையாகும். 34 மீட்டர் உயரமாகவிருந்த இச்சிலை பழங்கால உலகின் மிக உயரமான சிலையாக இருந்தது. அதிசயங்களுள் ஒன்றாகும். இலிந்தோசின் சாரசினால் கி. மு. 292 - கி. மு. 280 காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இச்சிலை 56 ஆண்டுகளே நிலைத்திருந்தது. கி. மு. 224 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிலையின் காற்பகுதியில் முறிவு ஏற்பட்டு விழுந்துவிட்டது. மேற்கோள்கள் ஏழு பண்டைய உலக அதிசயங்கள்
1419
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81
கிசாவின் பெரிய பிரமிடு
கிசாவின் பெரிய பிரமிடு அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு (Great Pyramid of Giza) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிடுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும். இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும். இது பண்டைய எகிப்தை ஆண்ட 4-ஆவது வம்சத்தின் பாரோ கூபுவின் சமாதியாகும். இது கிமு 2560 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 எக்டேர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமான ஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தில் அமைந்த பிரமிட், ஒவ்வொன்றும் இரண்டு தொடக்கம் நான்கு தொன்கள் வரை நிறையுள்ள, சுண்ணக்கல், எரிமலைப்பாறை, கருங்கல் போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த நிறை 7 மில்லியன் தொன்கள் எனவும், கன அளவு 2,600,600 கன மீட்டர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே எகிப்தியப் பிரமிடுக்களுள் மிகப் பெரியது. (மெக்சிக்கோவிலுள்ள சோலுலாவின் பெரிய பிரமிட் கன அளவில் இதைவிடப் பெரியது.) ) வரலாறும் விளக்கமும் <div style="float:right; border:2px; border-style:solid; padding:8px; margin-left: 1em; text-align:center"> கிசாவின் பெரிய பிரமிட் 19 ஆம் நூற்றாண்டு stereopticon அட்டைப் புகைப்படம்</div> இது 4வது வம்ச எகிப்திய பார்வோன் எனப்படும் மன்னர் கூபுவின் சமாதி என்றும் இதன் கட்டுமானம் 20 ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. கூபுவின் தலைமைப் பணியாளரான ஹேமன் அல்லது ஹெமயுனு என்றழைக்கபட்டவரால் இந்த பிரமிடு வடிவமைக்கபட்டிருக்கலாம். உண்மையில் கிசாவின் பெரிய பிரமீடு 146.5மீட்டர் உயரம் உடையதாகும். ஆனால் காலத்தால் ஏற்பட்ட அறிப்புகளாலும் இதன் மேல்முனையில் உள்ள தலைமை கல்லின் சேதத்தினாலும் இதன் தற்போதய உயரம் 138.8மீட்டராக உள்ளது. இதன் ஒவ்வொரு பக்கவாட்டு அளவானது 230.4மீட்டர்களாகும். கிசா பிரமிடின் மொத்த அடர் எடை 5.9மில்லியன் என அளவிடப்பட்டுள்ளது. இதன் உள்ளீடோடு சேர்த்து இந்த பிரமீடின் கன அளவானது 2500000 கன மீட்டர்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவீடுகளின் படி இதனை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயிருக்கலாம் எனவும் அளவிடப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமானத்தின் பொழுது தினசரி 800 தொன்கள் அளவுள்ள கட்டுமான கற்களை நிறுவியிருக்க கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் முதல் நுணுக்க மதிப்பீடானது எகிப்திய வரலாற்றின் ஆராய்ச்சியாளரான சர் ப்ளிண்டேர்ஸ் பெற்றி என்பவரால் 1880 - 82 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது. பிராமிட் ஹிம்ஹோடப் என்பவரால் உருவாக்கப்பட்டது.இவர் எல்லா கல்வி துறைகளிலும் சிறந்து விளங்கினார்.அரசர்களுக்கு ஆலோசகராகவும் பணிப்புரிந்துள்ளார். கட்டுமான பொருள்கள் கிசா பிரமிடு 2.3 மில்லியன் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அருகில் உள்ள கற்குவாரியில் இருந்து எடுத்துவரப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது. அரசனின் பகுப்பறையை சுற்றிலும் 20 முதல் 80 தொன்கள் எடையுள்ள மிகப்பெரிய கட்டுமான கற்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவை அனைத்தும் 500 மைல்களுக்கு அப்பாலுள்ள அஸ்வான் எனுமிடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளன. பாறைகளில் வரிசையாக சிறு துளையிட்டு அந்த துளைகளில் மரத்தாலான ஆப்புக்களை இறுக்கி அவற்றின் மீது நீரை ஊற்றும்போது மரம் ஈரத்தின் காரணமாக உப்பலாகி பாறைகளில் பெரிய விரிசலை ஏற்படுத்துகின்றன. இந்த பிரபலமான முறைதான் பழங்கால எகிப்தியர்கள் கற்களை வெட்டி எடுக்கவும் உதவியிருக்கிறன.இப்படி வெட்டி எடுக்கப்பட்ட பெரிய கற்களானது படகுகள் மூலம் நைல் நதியின் வழியாக கட்டுமான இடங்களுக்கு இடம்பெயர்த்தபட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட 5.5 மில்லியன் தொன்கள் எடையுள்ள சுண்ணாம்பு கற்களும் 8000 தொன்கள் எடையுள்ள கிரனைட் கற்களும் 500000 தொன்கள் எடையுள்ள சாந்து கலவையும் இதன் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப்பட்டுள்ளன. வார்ப்பு கற்கள் இந்த பிரமிடின் கட்டுமான முடிவின் உச்சமாக வார்ப்பு கற்கள் உள்ளன. வார்ப்பு கற்கள் என்பன சாய்வு முகப்புடைய, தட்டையான மேற்பரப்பைடைய கற்கள் ஆகும்.இவை உயர் தரத்தில் மெருகேற்றப்பட்ட வெள்ளை சுண்ணாம்புக் கற்கள் ஆகும். மிக கவனமாக ஒரே சாய்கோணத்தில் வெட்டப்பட்ட இந்த சுண்ணாம்புக் கல்லானது பிரமிடுக்குத் தேவையான வடிவத்தைக் கொடுக்கிறது. இன்றைய நிலையில் உட்பக்கமாக அமைக்கப்பெற்ற வர்ப்புகர்களின் அடிப்பாகங்கள் மட்டுமே பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன.வெளிப்பக்கமாயிருந்த வழவழப்பான வார்ப்பு கற்கள் அனைத்தும் கி.பி.1300இல் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அழிந்துவிட்டன. பின்னாளில் அவற்றை கொண்டு தான் பஹ்ரி வம்சாவழியில் வந்த பஹ்ரி சுல்தான் அன்-நசிர் நசிர்-அத்-தின் அல்-ஹசன் என்பார் 1356இல் கெய்ரோவில் மசூதிகள் கட்டினார். இன்றும் இந்த மசூதிகளின் கட்டுமானத்தில் இந்த பிரமிடின் வார்ப்பு கற்கள் காணப்படுகிறன. உட்புற அமைப்பு பெரிய பிரமிடின் உண்மையான நுழைவு வாயில் தரைமட்டத்தில் இருந்து 17 மீட்டர் (56 அடி) உயரத்திலும் பிரமிடு மையக்கோடில் இருந்து கிழக்கே 7,29 மீட்டர் ( 23.9 அடி ) தூரத்தில் உள்ளது. இந்த நுழைவு வாயிலில் இருந்து கீழே 26° 31' 23"" கோணத்தில் .96 X 1.04 மீட்டர்(3.1 X 3.4 அடி) அளவிலான ஒரு இறங்கு பாதையை கொண்டுள்ளது. இது 105,23 மீட்டர் (345.2 அடி) தூரத்தினை கடந்த பிறகு கிடைமட்டப் பாதையை அடைகின்றது. இப்பகுதி முழுமை அடையாமல் உள்ளது. மேலும் இப்பகுதியானது ஒரு தோண்டப்பட்ட குழியை கொண்டுள்ளது.இதுவே அரசனின் உண்மையான புதைகுழியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நுழைவு வாயிலில் இருந்து 28.2 மீட்டர் (93 அடி) தூரத்தில் கீழிறங்கும் பாதையின் கூரையில் ஒரு சதுர துளை உள்ளது. கற்களால் மறைக்கப்பட்ட இது இந்த ஏறும் பாதையின் ஆரம்பமாக உள்ளது. ஏறும் பாதை 39.3 மீட்டர் ( 129 அடி) நீளம் உடையது. மேலும் இது இறங்கு பாதையின் அதே நீள அகலங்களையும் கோணத்தையும் உடையது. அதிலிருந்து இராணியின் அறைக்கு செல்லும் வழியில் பெரும் சித்திர காட்சி உள்ளது. இராணியின் அறை இராணியின் அறையானது மிகச்சரியாக பிரமிடின் கிழக்கு மற்றும் வடக்கு முகங்களில் நடுவில் உள்ளது.இது 5.23 மீட்டர் ( 17.2 அடி ) நீளம் மற்றும் 5.75 மீட்டர் ( 18.9 அடி ) அகலத்துடன் அதிகபட்சம் 6.23 மீட்டர் உயரத்துடன் ஒரு முக்கோண வடிவ கூரையை கொண்டுள்ளது. இராஜாவின் அறை இராஜாவின் அறையானது கிழக்கு மேற்காக 5.234 மீட்டர் (17.17 அடி) நீளமும் வடக்கு தெற்காக 10.47 மீட்டர் ( 34.4 அடி ) அகலமும் 5,974 மீட்டர் (19.60 அடி) உயரமுடைய ஒரு தட்டையான கூரை கொண்ட அறையாகும்.தரையில் இருந்து 0.91 மீ (3.0 அடி) உயரத்தில் வடக்கு மற்றும் தெற்கு சுவர்களில் இரண்டு குறுகிய துளைகளை கொண்டுள்ளது.எனினும் இதன் பயன்கள் தெளிவாக தெரியவில்லை. இந்த அறையானது முழுவதும் கருங்களால் ஆன 400 டன் எடை கொண்ட 9 பாளங்களால் ஆனது. நவீன நுழைவு வாயில் இன்று சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் நுழைவு வாயிலானது கி.பி.820 ல் கலிப்-அல்-மாமுமின் வேலையாட்களால் தோண்டப்பட்ட திருடர்கள் ' சுரங்கமாகும்.இந்த சுரங்கப்பாதையானது ஏறு பாதையை அடையும் வரை சுமார் 27 மீட்டர் ( 89 அடி ) தூரம் சென்று இடபுறம் திரும்புகிறது.ஏனெனில் அப்பகுதியின் கற்களை அகற்றமுடியாததால் அதை சுற்றியுள்ள மென்மையான சுண்ணாம்பு கற்களை சுற்றி சென்று ஏறும் பாதையை அடைகின்றது. இதனையும் காண்க எகிப்தின் பிரமிடுகள் பட்டியல் கூபு கூபு கப்பல் எகிப்தின் நான்காம் வம்சம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் "மாபெரும் ஜீஷா" பிரமிட்டு. Pyramids—The Inside Story from PBS' Nova (TV series) Building the Khufu Pyramid எகிப்தியப் பிரமிடுகள் ஏழு பண்டைய உலக அதிசயங்கள் எகிப்தின் வரலாறு எகிப்திய நாகரிகம் எகிப்தியக் கட்டிடக்கலை எகிப்தில் உள்ள தொல்லியல் களங்கள் எகிப்தின் நான்காம் வம்சம்
1421
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
ஆர்ட்டெமிஸ் கோயில்
ஆர்ட்டெமிஸ் கோயில் ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் அத்திவாரமும், உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் சலவைக்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. வெண்கலக் காலத்திலேயே ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கல்லிமாக்கசு என்பார் தமது பாடல்களில் வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இவ்விடத்தின் தோற்றத்தை கிரேக்கத் தொன்மங்களில் வரும் அமேசோன்களுடன் தொடர்புபடுத்தி உள்ளார். இவர்களுடைய வழிபாடு உருவ வழிபாடாக இருந்ததாக அவர் கற்பனை செய்தார். கி.மு ஏழாம் நூற்றாண்டில் பழைய கோயில் பெரு வெள்ளத்தினால் அழிந்துபோயிற்று. உலக அதிசயமாகக் கரிதப்பட்ட புதிய கோயிலின் கட்டுமானம் கி.மு 550 அளவில் தொடங்கியது. 120 ஆண்டுகள் பிடித்த இத் திட்டம் முதலில் கிரேத்தக் கட்டிடக்கலைஞரான செரிசிபுரோன் என்பவராலும் அவரது மகன் மெத்தாசெனசு என்பவராலும் வடிவமைத்துக் கட்டப்பட்டடது. மேற்கோள்கள் ஏழு பண்டைய உலக அதிசயங்கள் கிரேக்கக் கோவில்கள் பண்டைய கிரேக்க கட்டிடங்களும், கட்டமைப்புகளும்
1423
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
சி. என். கோபுரம்
சி. என். கோபுரம்(CN Tower () ), 553.3 மீட்டர் உயரம் (1,815.3 அடி) உயரம் கொண்ட கோபுரமானது கனடாவின் டோரண்டோவில், ஒன்றாரியோ மாகணத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றாகும். 1973 ஆம் ஆண்டு, பெப்ரவரி 6 ஆம் திகதி தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 1976 ஆண்டு பூர்த்தியாயின. 1976 ஆம் ஆண்டு, ஜூன் 26 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட இந்தக் கோபுரம், 2010 ஆம் ஆண்டில் புர்ஜ் கலிஃபா என்னும் துபாய் கோபுரம் மற்றும் கன்டொண் கோபுரம் ஆகிய கோபுரங்கள் கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது . மேற்கு அரைக்கோளத்தில் தனித்த நிலையான கட்டுமானம் கொண்ட உயரமான கோபுரங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தொராண்டோ நகரின் வான்வரையாக இருக்கிறது. இந்த கோபுரத்தைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை புரிகின்றனர் . இதன் பெயரான சி என் என்பது கனாடியன் நேஷனல் (தேசிய கனடா இரயில்வே) எனும் நிறுவன பெயரின் சுருக்கமாகும். 1995 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கட்டடப் பொறியாளர்கள் சமூகமானது , சி. என் கோபுரத்தை நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தது. இது பெரிய கோபுரங்கள் உலக சம்மேளனத்திற்கு சொந்தமானதாகும். வரலாறு 1968 ஆம் ஆண்டில் கனடிய தேசிய இரயில்வே நிறுவனம் தொராண்டோ நகரத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு தளத்தை உருவாக்க விரும்பியபோது சி. என் கோபுரம் உருவாக்குவதற்கான யோசனை வந்தது.அடுத்த சில ஆண்டுகளில் இதனைத் தோற்றுவிப்பதற்கான வேலைகள் நடந்தன. 1972 இல் இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கோபுரம் மெட்ரோ சென்டரின் (மையத்தின்) ஒரு அங்கமாக இருந்தது. இந்தக் கோபுரத்தின் முதன்மைப் பொறியாளர்களாக ஜான் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மென்கெஸ் ஆகியோர் இருந்தனர். கட்டுமானம் சி. என் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளானது பெப்ரவரி 6, 1973 இல் துவங்கப்பட்டது. இதன் அடித்தளத்திற்காக (கட்டுமானம்) பேரளவு அகழ்தல் பணி நடைபெற்றது. குறிப்பாக 56,000டன் (61,729 குறுகிய டன்கள், 55,116 நீண்ட டன்கள்) அளவுள்ள மண் மற்றும் களிப்பாறைகள் நீக்கப்பட்டன. பைஞ்சுதைக்காக 450 டன் (496 குறுகிய டன்கள், 443 நீண்ட டன்கள் ) மேலும் 36 டன்கள் (40 குறுகிய டன்கள், 35 நீண்ட டன்கள்) எஃகு , 6.7 மீட்டர் (22.0 அடி) மின்கம்பிகள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டன. அடித்தளப் பணிகள் மிக விரைவாக நடைபெற்றன. பணிகள் துவங்கிய நான்கு மாதங்களில் அடித்தளப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்தது. கட்டிடக் கலைஞர்கள் WZMH கட்டிடக்ககலையினர், ஜான் ஹாமில்டன் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மற்றும் ஈ. ஆர். பால்வினின் உடஹ்வியுடன் மென்ஹஸ் ஹவுஸ்டன். திறப்பு விழா சி. என். கோபுரமானது சூன் 26, 1976 அன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்காக சுமார் 63 மில்லியன் டாலர்கள் செலவானது. பதினைந்து ஆண்டுகளில் இதற்கான செலவினத் தொகையானது திருப்பிச் செலுத்தப்பட்டது. பின் தேசிய கனடிய இரயில்வே நிறுவனம் இதனை விற்பனை செய்தது. கட்டுமான நிலைகள் சான்றுகள் வெளியிணைப்புகள் சி. என் கோபுரம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொராண்டோ கோபுரங்கள்
1425
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
செஞ்சதுக்கம்
செஞ்சதுக்கம் (Red Square, ) உருசிய நாட்டின் மாசுக்கோவிலுள்ள ஒரு புகழ் பெற்ற சதுக்கமாகும். இது முன்னைய அரசர் காலத்துக் கோட்டையும், தற்போதைய உருசிய சனாதிபதியின் வசிப்பிடமும் ஆகிய கிரெம்லினை "கித்தாய்-கோரோட்" எனப்படும் வரலாற்றுப் புகழ் மிக்க வணிகப் பகுதியில் இருந்து பிரிக்கிறது. இங்கிருந்து விரிந்து செல்லும் முக்கியமான சாலைகள் நகருக்கு வெளியே நெடுஞ்சாலைகள் ஆகி நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்கின்றன. இதனால், செஞ்சதுக்கம் மாசுக்கோவினது மையமாக மட்டுமன்றி, முழு உருசியாவினதும் மையச் சதுக்கமாகக் கருதப்படுகின்றது. தோற்றமும் பெயரும் இச் சதுக்கத்தைச் சுற்றிலும் காணப்படும் செங்கற் கட்டிடங்களைக் காரணமாக வைத்தோ, பொதுவுடைமைக் கொள்கைக்கும் செந்நிறத்துக்கும் உள்ள தொடர்பினாலோ இதற்குச் செஞ்சதுக்கம் என்னும் பெயர் ஏற்படவில்லை. "கிராஸ்னாயா" (красная) என்னும் உருசியச் சொல்லுக்கு "சிவப்பு", "அழகு" என்னும் இரு பொருள்கள் உள்ளன. இச் சதுக்கத்துக்கு அருகில் அமைந்துள்ள புனித பசில் பேராலயத்தைக் குறிக்க "அழகு" என்னும் பொருளில் "கிரானஸ்யா" என்னும் பெயர் வழங்கியது. இது பின்னர் அருகில் உள்ள சதுக்கத்தைக் குறிப்பதாயிற்று. இச் சதுக்கம் முன்னர் "எரிந்துபோன இடம்" என்னும் பொருள்படும் "போசார்" என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 17 ஆம் நூற்றாண்டிலேயே இதற்குத் தற்போதைய பெயர் புழங்கத் தொடங்கியது. வரலாறு செஞ்சதுக்கத்தின் சிறப்பான வரலாறு, வசிலி சுரிக்கோவ், கான்சுட்டன்டின் யுவோன் போன்ற பல ஓவியர்களினால் வரையப்பட்ட ஓவியங்களில் வெளிப்படுகின்றன. இச் சதுக்கம் மாசுக்கோவின் முக்கிய சந்தைப் பகுதியாகவே உருவாக்கப்பட்டது. பல்வேறு பொது விழாக்கள் இடம்பெறும் இடமாகவும், பிரகடனங்கள் செய்யப்படும் இடமாகவும் இச் சதுக்கம் பயன்பட்டதுடன், சிலவேளைகளில் சார் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. படிப்படியாக வளர்ச்சி பெற்ற இச் சதுக்கம் பின்னர் எல்லா அரசாங்கங்களினதும் அரச விழாக்களுக்கான இடமாக விளங்கி வருகிறது. உலக பாரம்பரியக் களம் 13 ஆம் நூற்றாண்டில் இருந்து உருசிய வரலாற்றோடு பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பதனால் இச் சதுக்கமும் கிரெம்லினும், 1990 ஆம் ஆண்டில் யுனெசுக்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. பிரதான காட்சி இவற்றையும் பார்க்கவும் புனித பசில் பேராலயம் கிரெம்லின் சுவர் வெளியிணைப்புக்கள் மாசுக்கோ வாழ்க்கை: மாசுக்கோவின் செஞ்சதுக்கத்துக்கான வழிகாட்டி செஞ்சதுக்கத்தின் முப்பரிமாணத் தோற்றம் செஞ்சதுக்கத்துக்குச் செல்லல் – செஞ்சதுக்கத்துக்கும் கிரெம்லினுக்கும் செல்வோருக்கான பயனுள்ள தகவல்கள் செஞ்சதுக்கமும் சுற்றாடலும் உருசியா உருசியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்
1427
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
கோல்டன் கேற் பாலம்
கோல்டன் கேட் பாலம் (Golden Gate Bridge) பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது. கோல்டன் கேட் பாலம் கட்டப்படுவதற்கு முன்னால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் மாரின் மாகாணத்தை இணைக்கும் ஒரே வழி பசிபிக் பெருங்கடலில் படகு சவாரி செய்வது தான். ஸ்ட்ராஸ் என்னும் பொறியாளர் கோல்டன் கேட் பாலத்தின் வடிவம் மற்றும் கட்டுமானப்பணியின் தலைமை பொறுப்பு வகித்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் (A documentary film about the construction of the Golden Gate Bridge.) (Educational poster.) கலிபோர்னியா தொங்கு பாலங்கள்
1428
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை
ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை (Statue of Zeus at Olympia) கிமு 433 இல் சுமார் 12.4 மீ (41 அடி) உயரமுள்ள ஒரு மாபெரும் அமர்ந்த உருவம்பீடியசு என்னும் கிரேக்கச் சிற்பியால் கிரேக்க நாட்டில் செதுக்கப்பட்டு அங்குள்ள ஜீயசு கோயிலில் அமைக்கப்பட்டது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிபி 394 இல், இது கொன்ஸ்தந்தினோப்பிள் (தற்கால இஸ்தான்புல்) நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும், அங்கு தீக்கு இரையானதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சிலை, இதற்கெனக் கட்டப்பட்ட கோயிலின் நிரலின் முழு அகலத்தையும் நிரப்பியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. சமகால மூலங்களின்படி, இது 12 மீட்டர் உயரத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சேயுஸ் தந்தத்தில் செதுக்கப்பட்டு, யானைத் தந்தம், தங்கம், கருங்காலி போன்றவற்றாலும் விலைமதிப்பற்ற கற்களாலும் இழைக்கப்பட்ட செடார் மரச் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருந்தது. சேயுஸின் வலக்கரத்தில், வெற்றிக் கடவுளான (பெண்) நிக்கேயின் சிறிய சிலையும், இடக்கரத்தில் கழுகும் இருந்தது. பின்வருவனவற்றையும் பார்க்கவும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Alaa K. Ashmawy's Statue of Zeus at Olympia. Unmuseum's Statue of Zeus ஏழு பண்டைய உலக அதிசயங்கள் பண்டைய கிரேக்கக் கட்டிடக்கலை
1430
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%201600
அறிவியலில் 1600
'அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் 1600 ஆம் ஆண்டு பல நிகழ்வுகளைக் கண்டுள்ளது. அவற்றுட் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. நிகழ்வுகள் டிசம்பர் 31 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது. டடூசாக், பிரான்ஸின் முதலாவது வர்த்தக நிலையம் தலைநிலமான நியூ பிரான்சில் (இப்பொழுது கனடா) நிறுவப்பட்டது. வில்லியம் கில்பர்ட், பூமியின் காந்தப் புலம் பற்றி விபரித்த டி மக்னட்டே என்ற நூலைப் பதிப்பித்தார், இதுவே நவீன புவிக்காந்தவியலின் ஆரம்பமாகும். லுடோல்ப் வான் செயுலென் என்பவர் π (பை) இன் முதல் 35 தசம தானங்களை இச் சமயத்தில் கணக்கிட்டார். வில்லியம் கில்பர்ட் மின்சாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான electricity'' என்பதை முதலில் உபயோகித்தார். சைமன் ஸ்டீவின் invents a carriage propelled by sails. பிறப்புகள் ஜோன் ஒகில்பி, தேசப்படவியலாளர் இறப்பு மேற்கோள்கள் அறிவியலின் வரலாறு 1600
1431
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
மனித-வலுப் போக்குவரத்து
மனித-வலுப் போக்குவரத்து என்பது ஆட்களையும் பொருட்களையும் மனிதர்கள் தங்கள் சொந்த வலுவையோ அல்லது பிற மனிதர்களுடைய வலுவையோ பயன்படுத்தி ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்த்துவதைக் குறிக்கும். இதுவும், விலங்கு-வலுப் போக்குவரத்துமே இயந்திரங்களுக்கு முற்பட்டகாலப் போக்குவரத்து முறைகளாகும். சில இயந்திரங்கள் மனித-வலு இயக்கத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டுகள்: மிதிவண்டிகள் Canoeing பனிச் சறுக்கு ரிக்‌ஷா Roller skate படகு Skateboard Skiing நீச்சல் நடத்தல் பின்வருவனவற்றையும் பார்க்கவும் விலங்கு-வலுப் போக்குவரத்து சாலையோர நடைமேடை மனித-வலுப் போக்குவரத்து
1461
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
கணிதம்
கணிதம் அல்லது கணிதவியல் () (Mathematics) என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளைப் பிரதிபடுத்துகின்றன: அளவு (quantity) – எண்கணிதம் அமைப்பு (structure) – இயற்கணிதம் பரவெளி (space) – வடிவவியல் மாற்றம் (change) – பகுவியல் (analysis) – நுண்கணிதம் பல்வேறு கணிதவியலாளர்களுக்கும் இடையே கணிதத்தின் சரியான வீச்சையும் வரையறையையும் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. கணிதவியலாளர் தோரணங்களைத் தேடுகின்றனர்; கண்டுபிடித்த தோரணங்களைப் பயன்படுத்தி புதிய கணிப்புகளை உருவாக்குகின்றனர். தங்கள் கணிப்புகளின் மெய்,பொய் நிலைகளை கணித நிறுவல் மூலம் தீர்க்கின்றனர். உண்மை நிகழ்வுகளின் நல்ல முன்மாதிரிகளாக கணித அமைப்புக்கள் இருக்கும்போது கணித ஏரணங்கள் இயற்கை குறித்த புரிதலையும் முன்னறிவிதல்களையும் சாத்தியமாக்குகின்றது. எண்ணுதல், கணக்கிடுதல், அளவியல் இவற்றிலிருந்து நுண்கருத்துக்களையும் ஏரணத்தையும் பயன்படுத்தி கணிதம் முன்னேறியுள்ளது; பொருட்களின் வடிவங்களையும் இயக்கங்களையும் ஒழுங்குமுறையுடன் ஆராய்கின்றது. ஆவணங்கள் பதியப்பட்டபோதே செயல்முறைக் கணிதம் மாந்தச் செயற்பாடாக விளங்கியது. சில கணிதத் தீர்வுகளுக்கு பல ஆண்டுகள் அல்லது நூற்றாண்டுகள் தொடர்ந்த தேடுதல் நடந்துள்ளது. கிரேக்க கணிதத்தில் கடுமையான கருத்தாய்வுகள் முதலில் தோன்றின; குறிப்பாக யூக்ளிடின் கூறுகளைக் கூறலாம். சூசெப்பெ பியானோ (1858–1932), டேவிடு இல்பேர்ட்டு (1862–1943) போன்றோரின் ஆக்கங்கள் மற்றும் பிற 19வது நூற்றாண்டு கணிதவியல் அமைப்புகளை அடுத்து ஏற்றுக்கொண்ட வரைவிலக்கணத்தின்படி கடுமையான கணித பகுத்தறிதல் மூலம் மெய்கோள்களின் உண்மையை நிறுவவதே கணித ஆராய்ச்சி என்ற கருத்து உருவானது. மறுமலர்ச்சிக் காலம் வரை மெல்லவே முன்னேறிய கணிதவியல் அறிவியல் கண்டுபிடிப்புகளின் இடைவினையால் கணித புத்தாக்கங்கள் மிக விரைவாக மேம்படத்தொடங்கின; இந்த விரைவான வளர்ச்சி இன்றுவரை தொடர்கின்றது. கணிதம் இயற்கை அறிவியல், பொறியியல், மருத்துவம், நிதியியல், சமூக அறிவியல் போன்று உலகின் பல துறைகளில் முக்கியமானக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. கணிதத்தை மற்றத் துறைகளில் பயன்படுத்துவதைக் குறித்த பயன்பாட்டுக் கணிதம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்களைத் தூண்டவும் அவற்றைப் பயன்படுத்தவும் பயனாகின்றது. புள்ளியியல், ஆட்டக் கோட்பாடு போன்ற கணிதத்துறைகள் இவ்வாறு உருவானவையே. கணிதவியலாளர்கள் கணிதத்தைக் கொண்டு கணிதத்தை (தனிக் கணிதவியல்) அறியவும் முயல்கின்றனர். இந்தத் தனிக் கணிதத்தையும் பயன்பாட்டுக் கணிதத்தையும் பிரிக்கும் தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. தனிக்கணிதமாக துவங்கியவை பயன்பாட்டுக் கணிதமாக மாறுகின்றன. வரையறை கணிதம் (Math அல்லது Maths) இலக்கங்களும், அதன் செய்முறைகளும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல்), அத்துடன் உருவ அமைப்புக்களும் (shapes) மட்டுமல்லாது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடனும், அதன் பிரயோகங்களுடனும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் ஓர் அறிவியல் சாதனமாகும். கணிதத்தின் தேவை எமது அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும். கலிலியோ "கணிதத்தின் உதவியால் நாம் இவ்வுலகத்தையே அறியலாம்" என்று கூறினார். எண்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட கணிப்பியலோ (arithmetic) வடிவங்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட வடிவியலோ இவைதான் கணிதவியல் என்று நினைப்போர் பலர். இன்னும் சிலர் எண்களுக்குப் பதிலாகக் குறிப்பீடுகளை வழங்கி அவைகளையும் எண்கள்போல் கணிப்புகள் செய்யும் இயற்கணிதம் தான் கணிதத்தின் முக்கிய பாகம் என்பர். மற்றும் சிலர் வடிவங்களை அலசி ஆராயும் வடிவியல் வளர்ச்சி தான் கணிதத்தின் இயல்பு என்று கூறுவர். ஆனால் கணிதம் இதையெல்லாம் தாண்டிய ஒன்று. வரலாறு தோற்றம் தொடர்ந்து வளர்ந்த நுண்கருத்துக்களின் தொடராக கணிதம் உருவானது. பல விலங்குகளும் பகிரும் முதல் நுண்கருத்து எண்களாக இருக்கக் கூடும்: இரண்டு எண்ணிக்கை ஆப்பிள்களின் தொகுப்பும் இரண்டு எண்ணிக்கை மாம்பழங்களின் தொகுப்பும் ஏதோவொரு வகையில் பொதுவாக உள்ளன, அது அவற்றின் எண்ணிக்கை என்ற உணர்வாகும். எலும்புகளில் காணப்பட்ட கணக்கீடு குறிகளைக் கொண்டு, தொல் பழங்கால மக்கள் கட்புலனாகும் பொருட்களை எண்ணுவதை அறிந்திருந்ததுடன் நாட்கள், பருவ காலங்கள், ஆண்டுகள் போன்ற கட்புலனாகா அமைப்புக்களையும் எண்ணக் கற்றிருந்தனர் என அனுமானிக்கலாம். மிகச் சிக்கலான கணிதவியல் கி.மு.3000 வரை தோன்றவில்லை; அப்போதிலிருந்துதான் பபிலோனியர்கள், எகிப்தியர்கள் வரி மற்றும் பிற நிதிக் கணக்கீடுகள், கட்டிட மற்றும் கட்டுமானம், வானியல் போன்ற துறைகளில் எண்கணிதம், இயற்கணிதம், வடிவவியல் போன்றவற்றைப் பயன்படுத்தத் துவங்கினர். வணிகம், நில அளவியல், ஓவியக் கலை, நெசவுத் தோரணங்கள் மற்றும் நேரப் பதிகை ஆகியன கணிதத்தின் ஆரம்ப கால பயன்பாடுகளாக இருந்தன. இந்தியக்கணித வரலாறு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போல என வள்ளுவர் கூறுகிறார். திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, "அறு", "எழு", "எண்", பத்து, "கோடி" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் "தொண்டு" அல்லது "தொன்பது" பயன்படுத்தப்படவில்லை. எண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும் பூச்சியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக் கணிதக் குறியீட்டுமுறைக்கு அடிகோலிட்டது பழையகால இந்தியா. இதைத்தவிர இந்தியக் கணிதவியலர்கள் (ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர், இன்னும் பலர்) மேற்கத்திய நாடுகள் மறுமலர்ச்சியடைந்து அறிவியலில் வளர்வதற்கு முன்னமேயே பலதுறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தனர். வேதகாலத்துக்கணிதத்தின் கணிப்பு முறைகள் சுல்வசூத்திரங்களின் வடிவியல் சூனியமும் இடமதிப்புத் திட்டமும் எண்களின் அடிப்படைகளைப்பற்றி ஜைனர்கள் பாக்சாலி கையெழுத்துப்பிரதிகளின் சமன்பாடுகள் வானவியல் இவையெல்லாம் இந்தியக்கணிதத்தின் சிறப்புகள். தற்காலத்திய கணிதத்தின் வரலாறு 14 வது நூற்றாண்டில் தொடங்கி, சென்ற ஆறு நூற்றாண்டுகளில் கணிதத்தின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள கணிதவியலாளர்கள் பலரின் வரலாறுகளே தக்க சான்றுகள். ஃபெர்மா, நியூட்டன், ஆய்லர், காசு, கால்வா, ரீமான், கோசி, ஏபல், வியர்சிற்றாசு, கெய்லி, கேன்ட்டர், இல்பட்டு, இப்படி இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கு கொண்டு உருவாக்கப்பட்ட கணிதம் இன்றைய கணிதம். குறியீடு, மொழி, மற்றும் கடும்நெறி இன்று கணிதவியலில் பயன்படுத்தப்படும் பல குறியீடுகள் 16வது நூற்றாண்டு வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு முன்னால் கணிதத்தை சொற்களால்தான் விவரித்தனர்; இது மிகவும் கடினமாகவும் புத்தாக்கங்களுக்குத் தடையாகவும் இருந்தது. இன்று பயன்படுத்தப்படும் பல குறியீடுகள் ஆய்லரால் (1707–1783) உருவாக்கப்பட்டவை. தற்காலக் குறியீடுகள் கணிதவியலாளர்களுக்கு கணிதத்தை எளிமையாக்கினாலும் புதியவர்களுக்கு கடினமாக உள்ளது. இவை மிகவும் சுருக்கப்பட்டவை; சில குறியீடுகள் அல்லது சின்னங்கள் நிரம்ப தகவலை உள்ளடக்கி உள்ளன. இசைக் குறியீடுகளைப் போலவே தற்கால கணிதக் குறியீடுகளுக்கும் கடுமையான இலக்கணங்கள் உள்ளன (ஆசிரியருக்கு ஆசிரியர் அல்லது துறைக்குத் துறை இவை சிறிதே வேறுபட்டிருக்கலாம்). இவற்றிலுள்ளத் தகவலை எழுத்தில் வடிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். புதியவர்களுக்கு கணித மொழி மிகவும் கடினமானதாகத் தெரியலாம். அல்லது மற்றும் மட்டுமே போன்ற சொற்கள் வழக்குமொழியை விட மிகத் துல்லியமான பொருளைக் கொண்டவை. தவிரவும், சிலச் சொற்கள் சிறப்பானத் தனிப் பொருள் உடையன. கலைச்சொற்களான இடவியல் உருமாற்றம், தொகையீடு போன்றவற்றிற்கு கணிதத்தில் துல்லியமானப் பொருள் உண்டு. மேலும், சில சொல்லாடல்கள் iff for "if and only if" கணிதத்திற்கு மட்டுமேயானவை. சிறப்பு குறியீடுகளுக்கும் கலைச்சொற்களுக்கும் காரணம் உள்ளது: கணிதத்திற்கு வழக்குசொல்லாடலை விடத் துல்லியம் தேவைப்படுகின்றது. கணிதவியலாளர்கள் இந்தத் துல்லியமான மொழியையும் ஏரணத்தையும் கடும்நெறி (rigor) என்கின்றனர். கணிதவியல் புலங்கள் கணிதத்தின் தற்காலப் புலங்களைப் பற்றிப் பட்டியலிடவேண்டுமானால் அப்பட்டியலில் 100 புலங்களுக்கும் மேலாக இருக்கும். இப்புலங்களுக்குள் மிகவும் வியப்பு தரும் உறவுகளும் உண்டு. இவைகளிலெல்லாம் கணிதத்திற்கென்றே தனித்துவம் வாய்ந்த மரபும் குறிப்பிடத்தக்கது. இம்மரபுதான் கணிதத்தை மற்ற அறிவியல் துறைகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.இவைதவிர, கணிதத்தின் அடிப்படைகளுக்கும் மற்ற துறைகளுக்குமான தொடர்பை ஏரணவியல் ஆய்கின்றது. மேலும் புள்ளியியல் போன்ற நேரடியாகப் பயன்படும் கணிதப் புலங்களும் உண்டு. அளவு (Quantity) எண்கணிதம் அளவியல் {| style="border:1px solid #ddd; text-align:center; margin: auto;" cellspacing="20" | || || || || |- | இயல்பெண்கள்|| முழு எண்கள் || விகிதமுறு எண்கள் || மெய்யெண்கள் || செறிவெண்கள் |} அமைப்பு (Structure) இயற்கணிதம் {| style="border:1px solid #ddd; text-align:center; margin: auto;" cellspacing="15" | || || || |- | எண் கோட்பாடு || நுண்புல இயற்கணிதம் || குலக் கோட்பாடு (Group Theory) || Order theory |} வெளி (Space) {| style="border:1px solid #ddd; text-align:center; margin: auto;" cellspacing="15" | || || || || |- |வடிவவியல் || முக்கோணவியல் || வகையீட்டு வடிவவியல் (Differential geometry) || இடவியல் || பகுவல் |} மாற்றம் (Change) கணித அடித்தளங்கள் (Foundations and philosophy) {| style="border:1px solid #ddd; text-align:center; margin: auto;" cellspacing="15" | || || |- | ஏரணவியல் (கணிதம்) || கணக் கோட்பாடு, கணம் (கணிதம்) || பகுப்புக் கோட்பாடு (Category theory) || |} இலக்கமியல் கணிதம் (Discrete mathematics) {| style="border:1px solid #ddd; text-align:center; margin: auto;" cellspacing="15" | || || || |- | சேர்வியல் || கணிமைக் கோட்பாடு || வரைவியல் (Cryptography) || கோலக்கோட்பாடு (Graph theory) |} கணிதக்கட்டுரை விமரிசனங்கள் கணித விமரிசனங்கள் (Mathematical Reviews) என்ற ஒரு பத்திரிகை 1940 இல் ஒரு சில பக்கங்களுடன் தொடங்கி ஒவ்வொருமாதமும் கணிதத்தில் எழுதப்படும் புது ஆய்வுக்கட்டுரைகளை விமரிசிக்கவென்றே ஏற்படுத்தப்பட்டது. அது இன்று மாதத்திற்கு 2000 பக்கங்கள் கொண்டதாக வளர்ந்து, ஆயிரக்கணக்கான ஆய்வுப்பத்திரிகைகளிலிருந்து ஏறக்குறைய இருபது லட்சம் கட்டுரைகளின் விமரிசனத்தைக் கணிதப் பொக்கிஷமாகக் காத்து வருகிறது. மேலும் காண்க கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்) கணித மரபு கணிதப் பிரிவுகளின் உறவுகள் கணித அமைப்பு கணிதத்தின் நிலைப்பிகள் கணித இயல் வகைப்பாடு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மணிக்கணிதம் (Abacus) இந்தியா – கேரளா – ஆண்டு 10 பாட புத்தகத்தின் இணையப் பிரதி – அருமையான நடை, விளக்கம் தமிழ் இணைய பல்கலைகழகத்தின் கணித கலைச்சொல் அகராதி Chennai Mathematical Institute The Institute of Mathematical Sciences, Chennai ஆய கலைகள் அறுபத்து நான்கு மேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை
1462
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D
எண்
எண் (Number) என்பது எண்ணுதல், அளவிடுதல் மற்றும் சிட்டையிடுதலுக்குப் பயன்படும் ஒரு கணிதப் பொருளாகும். கணிதத்துறையில் பலவகையான எண்கள் உள்ளன. எண்களுக்கான இயல் எண்கள் (1, 2, 3, 4, ...) எண்களுக்கான அடிப்படை எடுத்துக்காட்டாகும். எண்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடானது எண்ணுரு எனப்படும். மனிதன் தோன்றிய காலத்திலேயே அவன் கைவிரல்களை எண்ண எப்பொழுது தானே கற்றுக்கொண்டானோ அன்றே 'எண்' என்ற கருத்து உண்டானதாகக் கொள்ளலாம். எண்களின் கருத்து வளர்ச்சியே கணிதவியலின் தோற்றம் ஆகும். கணிதத்தில், பல நூற்றாண்டுகளாக பூச்சியம் எதிர்ம எண்கள், விகிதமுறு எண்கள் (, ), மெய்யெண்கள், (, ), சிக்கல் எண்கள் என எண்களின் தொகுப்பு நீட்சியடைந்தது. எண்கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், அடுக்கேற்றம் ஆகிய கணிதச் செயலிகளின் மூலம் எண்கள் கணிக்கிடப்படுகின்றன. எண் கோட்பாட்டில் எண்களின் பண்புகள் விளக்கப்படுகிறது. எண் என்ற கருத்துரு தொன்மக் காலம் தொட்டு தமிழர்களிடம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப; இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற திருவள்ளுவர் குறளும், "எண் எழுத்து இகழேல்" என்ற ஒளவையார் கூற்றும் பழந்தமிழர் சிந்தனையில் எண்ணுக்கும், எழுத்துக்கும் தொன்றுதொட்டு தந்த முக்கியத்துவத்தை விளக்குகின்றன. வகைப்பாடு இயல் எண், மெய் எண் போன்ற எண் தொகுப்புகள் அல்லது கணங்களாக எண்கள் வகைப்படுத்தப்படுகின்றன. எண்களின் முக்கிய வகைப்பாடுகள்: இயல் எண்கள் நடைமுறையில் மிகவும் பழக்கமான எண்கள், எண்ணுவதற்குப் பயன்படும் எண்கள் இயற்கை எண்களாகும். இவைகளை இயல் எண்கள் அல்லது இயலெண்கள் என்றும் குறிப்பிடலாம். இவை 1, 2, ... என்பன. இவ்வெண் தொகுதி (கணம்) என்னும் சிறப்பெழுத்தால் கணிதத்தில் குறிக்கப்படுகின்றது. முழு எண்கள் இயல் எண்களுடன் பூச்சியம் மற்றும் எதிர்ம எண்களையும் (-1, -2, -3, ...) சேர்த்து, முழு எண்கள் கணம் அமைகிறது. இக்கணத்தின் குறியீடு ஆகும். முழு எண்கள் மூன்று வகைப்படும்: மிகை எண்கள் அல்லது நேர்ம எண்கள்: 1, 2, 3, ... பூச்சியம் அல்லது சூனியம்: 0 குறை எண்கள் அல்லது எதிர்ம எண்கள்: -1, -2, -3, ... இம்முழு எண்களின் கணம் இயல் எண்களின் கணமான ஐ உள்ளடக்கியது. அதாவது விகிதமுறு எண்கள் அரை, கால், ஒன்றேமுக்கால் என்பன போன்று முழு எண்களால் ஆன விகிதங்களால் குறிப்பிடப்படுவன ஒரு வகுகோட்டின் மேலும் கீழுமாக முழு எண்களால் குறிப்பிடப்படும் வகுனி எண்கள் அல்லது விகிதமுறு எண்கள் (rational numbers) எனப்படும். இவை அரை கால், வீசம் போன்ற கீழ்வாய் எண்களாக அல்லது குறைஎண்களாக (பின்னங்கள், பிள்வங்கள்) இருக்கலாம், அல்லது 7/3, 21/6 என்பன போன்று ஒன்றின் மிகையான எண் அளவைக்குறிக்கும் எண்களாகவும் இருக்கலாம். இவ் வகுனி எண்கள் கணம் என்னும் எழுத்தால் குறிக்கப்படுகின்றது. இந்த விகிதமுறு கணம் முழு எண்களின் கணமான ஐ உள்ளடக்கியது. அதாவது . மெய்யெண்கள் எல்லா எண்களும் விகிதமுறு எண்களல்ல என்பது முதலிய எண்களின் உதாரணம் கொண்டு கணித ஆய்வாளர்கள் கிரேக்க கணிதகாலத்திலிருந்தும், இந்துக்களின் சுல்வசூத்திரங்களிலிருந்தும் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் என்ற விகிதமுறு எண்கள் கணத்தையும் உள்ளடக்கி ஒரு மிகப்பெரிய எண்கணம் என்பதொன்று உண்டென்றும் அதுதான் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லா எண்களையும் உள்ளடக்கியது என்றும் மனிதன் ஐயமறத் தெரிந்துகொள்வதற்கு 19வதுநூற்றாண்டு வரையில் காத்திருக்கவேண்டியதாயிற்று. என்றகணத்தின் உறுப்புகளுக்கு மெய் எண்கள் என்றும், உள்ளது உள்ளபடி இருப்பதால் உள்ளக எண்கள் என்றும் பெயர்கள் உண்டு. இதனில், விகிதமுறு எண்களை எடுத்துவிட்டால், இதர எண்கள் விகிதமுறா எண்கள் எனப்படும். விகிதமுறா எண்கள் இரண்டு வகைப்படும்: இயற்கணித எண்கள், விஞ்சிய எண்கள். கலப்பெண்கள்(Complex numbers) இதற்குமேலுள்ள எண்கணங்களெல்லாம் கணித இயலர்களின் படைப்புகளே. எடுத்துக்காட்டாக, செறிவெண்கள் (பலக்கெண், அல்லது சிக்கலெண் என்னும் ஒருவகை எண்களுக்குக் கணிதத்திலும் அதன் எல்லா பயன்பாடுகளிலும் முக்கிய இடமுண்டு. சிக்கலெண்களின் கணம் என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு சிக்கலெண்ணிலும் ஒரு உள்ளகப் பகுதியும் (மெய்ப்பகுதி) ஒரு அமைகணப் பகுதியும் (கற்பனைப் பகுதி) உண்டு. இலுள்ள ஒவ்வொரு எண் z ம் a + ib என்ற உருவத்தில் இருக்கும். இங்கு a யும் b யும் மெய்யெண்கள். a க்கு z இன் உள்ளகப் பகுதி அல்லது மெய்ப்பகுதி என்றும் b க்கு z இன் அமைகணப் பகுதி அல்லது கற்பனைப் பகுதி என்றும் பெயர். இதில், i என்பது கற்பனை அலகு ஆகும். இவ்வெண் வகைகளின் தொடர்பு கீழே காட்டியவாறு உள்ளது: பகா எண்கள் பகா எண் என்பது 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு நேர் வகுத்திகள் இல்லாத, 1 ஐ விடப் பெரிய இயல் எண்ணாகும். 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு வகுத்திகள் கொண்ட பிற இயல் எண்கள் (1 நீங்கலாக) கலப்பெண்கள் (composite numbers) என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இயல் எண் 11 ஒரு பகா எண். அதற்கு 1 ஐத் தவிர வேறு வகுத்திகள் இல்லை. இயல் எண் 6 ஒரு கலப்பெண். ஏனெனில் இதன் வகுத்திகள்: 1, 2, 3, 6. கணிதத்தில் மட்டுமல்லாது, அறிவியலைச் சார்ந்த மிகப்பல பிரிவுகளிலும், பகா எண் என்ற கருத்து எண்களைப் பற்றிய பற்பல உறவுகளில் பங்களிக்கிறது. எண் கோட்பாட்டில் பகா எண் முக்கிய பங்குவகிக்கிறது. எண்கள் தோன்றிய காலத்திலிருந்தே பகா எண் என்ற கருத்துள்ள பெயர் இருந்திருக்காவிட்டாலும், கருத்தளவில் அது மனிதனின் எண்ணத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்றும், அத்தோன்றலே அறிவியலின் தொடக்கம் என்ற கருத்தும் உள்ளது. பகா எண்களைப் பற்றிச் சில கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட முடியாமலே பல நூற்றாண்டுகள் சென்றபிறகு, தற்காலத்தில் கணினிகளின் உதவியால் அவை மீண்டும் பெரிய அளவிலே ஆய்வு செய்யப்பட்டு வெற்றியும் தந்து கொண்டிருக்கின்றது. இலக்கங்கள் இலக்கங்கள் அல்லது எண்ணுருக்கள் என்பவை எண்களிலிருந்து வேறுபட்டவை. இலக்கங்கள் எண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடுகளாகும். பல வகையான எண் முறையினங்கள் புழக்கத்தில் உள்ளன. முதன்முதலில் எகிப்தியர்கள் மறையீட்டு எண்ணுருக்களைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து கிரேக்கர்கள் எண்களை ஐயோனிய மற்றும் டோரிக் (Ionian and Doric) எழுத்துக்களோடு எண்களைத் தொடர்புபடுத்தினர். எழுத்துக்களின் சேர்ப்பாக அமைந்த ரோம என்ணுருக்கள், 14 ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் அராபிய எண்ணுருக்கள் அறிமுகமாகும் முன்னரான இடைக்காலம் வரை ஐரோப்பாவில் முக்கியப் பயன்பாட்டில் இருந்தது. அராபிய எண்ணுருக்களே இன்றுவரை உலகில் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. கிட்டத்தட்ட கிபி 500 இல் பண்டைய இந்தியக் கணிதவியலாளர்களால் கண்டறியப்பட்ட பூச்சியத்தால் அராபிய எண்ணுருக்கள் அதிகப் பயனுள்ளதாக அமைந்தது. காப்ரேகர் எண்கள் இந்தியக் கணிதவியலாளர் கப்ரேகர் கண்டுபிடித்த கப்ரேகர் எண்கள் என்பவை கணிதத்தில் குறிப்பிடத்தக்கவையாகும். எடுத்துக்காட்டாக, 703 என்பது ஒரு கப்ரேகர் எண்ணாகக் குறிப்பிடப்பெறுகிறது. இவ்வெண்ணின் சிறப்பியல்புகளாவது, இந்த எண்ணின் வர்க்கம், அதாவது இந்த எண்ணை இதே எண்ணால் பெருக்கிவரும் பெருக்கற்பலனை, இரு பகுதிகளாக வகைப்படுத்தி, அவ்விரு பகுதிகளின் கூட்டற்பலன் என்பது மூல எண்ணாக, அதாவது 703 ஆகவே அமையும். 703 X 703 = 494209 பெருக்கற்பலன் 494209 இன் இரு பகுதிகள் என்பவை 494 மற்றும் 209 இவ்விரு பகுதிகளின் கூட்டற்பலன்: 494 + 209 = 703 வரலாறு விலங்கின் எலும்புகளே முதலில் எண் முறைமைக்கு மானுடத்தால் பயன்படுத்தப்பட்டது. வரலாற்றில் முதலில் மதிப்பாக எண்களைப் பயன்படுத்தியவர்கள் மெசொப்பொத்தேமியர்கள் ஆவர். இவர்கள் கி. மு. 3400 ஆண்டுகளின் வாக்கில் அறுபதின்ம எண் முறையைப் பயன்படுத்தினர். எகிப்தியர்கள் கி. மு. 3100 ஆண்டுகளின் வாக்கில் பதின்ம எண் முறையைப் பயன்படுத்தினர். பாபிலோனியர்களும், எகிப்தியர்களும் சுழியத்தை (0) சொல்லாகவும் இந்தியர்கள் சுழியத்தை சூன்யம் என்ற சொல்லாகவும் பயன்படுத்தினர். எதிர்ம எண்கள் கிமு 100 முதல் கிமு 50 வரையிலான காலகட்டங்களில் சீனாவில் எதிர்மறை எண்களின் சுருக்கத் தொகுப்புகள் உணரப்பட்டன. ஒன்பது இயல்களை உள்ளடக்கிய கணிதக் கலை நூலில் எண்களைக் குறிக்க பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன. நேர்ம எண்களைக் குறிப்பிட சிவப்புக் கோல்கள் பயன்படுத்தப்பட்டன. கருமையான கோல்கள் எதிர்ம எண்களைக் குறிப்பிடுவதற்கு பயன்பட்டன. மேற்கத்தியப் பயன்பாட்டில் இவ்வெண்கள் பற்றிய முதல் குறிப்புகள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் காணப்பட்டன. தைபோபாண்டசு (Diophantus) இன் அரித்மேட்டிகாவில் (Arithmetica) 4x + 20 = 0 என்கிற ஒரு சமன்பாட்டின் தீர்வாக எதிர்ம எண் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இச்சமன்பாடானது ஒரு அபத்தமான தீர்வை தந்தது என்றும் கூறியது. கி.பி. 600 காலகட்டங்களில் எதிர்ம எண்கள் இந்தியாவில் கடன்கள் குறித்த பிரதியாதலில் பயன்படுத்தப்பட்டன. கி.பி. 628 இல் இந்தியக் கணிதவியலாளரான பிரம்மகுப்தரின் ”பிராமசுபுத சித்தாந்தா” (Brāhmasphuṭasiddhānta) வானது, தைபோபாண்டசின் முந்தைய குறிப்புகள் பற்றி அதிக வெளிப்படைத்தன்மையுடன் விவாதித்தது. பிரம்மகுப்தர் எதிர்ம எண்களைப் பயன்படுத்தித் தோற்றுவித்த, பொதுவாக நான்கு பகுதிகளை உள்ளடக்கிய இருபடி வாய்ப்பாடு (Quadratic formula), தற்காலத்திலும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. எனினும், இந்தியாவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாசுகரர் என்பார் இருபடிச் சமன்பாடுகளுக்கான எதிர்ம மூலங்களை அளித்தார். மேலும் அவர் எதிர்ம மதிப்பானது எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறினார். எதிர்ம மூலங்களின் போதாமையின் காரணமாக, மக்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. ஐரோப்பியக் கணிதவியல் அறிஞர்களுள் பெரும்பாலோனோர் பதினேழாம் நூற்றாண்டு வரை, எதிர்ம எண்கள் பற்றிய கருத்தினை எதிர்த்தனர். இருந்தபோதிலும், பிபோனாச்சி (Fibonacci), நிதி சம்மந்தப்பட்ட பிரச்சினைகளில் எதிர்மத் தீர்வுகளை அனுமதித்தார். அங்கு, அவை முதலில் கடன்களாகக் ( Liber Abaci , 1202 இல் 13 ஆவது அத்தியாயம் ) கொள்ளப்பட்டன. அதன்பின்னர், நட்டங்களுக்குப் பதிலீடாகக் கருதப்பட்டன. அதேவேளையில், சீனர்கள், நேர்ம எண்களின் வலக்கோடி பூச்சியமற்ற எண்ணுருவின் ஊடாக மூலைவிட்டக் கோடு வரைந்து அந்த நேர்ம எண்களுக்குரிய எதிர்ம எண்களைக் குறிப்பிட்டனர். பதினைந்தாம் நூற்றாண்டில் நிக்கோலோ சூகுத் (Nicolas Chuquet) என்பவர், ஐரோப்பியக் கணிதச் செயற்பாடுகளில் முதன்முதலாக எதிர்ம எண்களின் பயன்பாட்டைக் கொண்டுவந்தார். அவ்வெண்களை அடுக்குகளாக (Exponents) உபயோகப்படுத்தினார். ஆனாலும், அவற்றை அபத்த எண்கள் (Absurd numbers) என்று குறிப்பிட்டார். விஞ்சிய எண்கள் விஞ்சிய எண்களின் இருப்பதை லியோவில் (Liouville) 1844, 1851 களில் முதன்முதலாக நிறுவினார். 1873 இல் கெர்மைத் (Hermite) என்பார், e ஒரு விஞ்சிய எண் என்று நிரூபித்தார். 1882 இல் லிண்டெமன் (Lindemann) என்பதை ஒரு விஞ்சிய எண் என நிரூபணம் செய்தார். முடிவாக, காண்டர் (Cantor) என்பவர், மெய் எண்களின் தொகுப்பை எண்ணுறா முடிவிலி (Uncountably infinite) கணம் என்று எடுத்துரைத்தார். ஆனால், இயற்கணித எண்களின் தொகுப்பை எண்ணுரு முடிவிலி (Countably infinite) எனக் குறிப்பிட்டார். ஆகவே, விஞ்சிய எண்கள் எண்ணுறா முடிவிலிகளாக உள்ளன. முடிவிலி முடிவிலி பற்றிய கணிதக் கருத்தானது, பண்டைய இந்திய வேதநூலான எசுர்வேதத்தில் குறிப்பிடப் பெற்றுள்ளது. அதில் எடுத்துரைக்கும் ஒரு கருத்தாவது, முடிவிலியிலிருந்து ஒரு பகுதியை அகற்றினாலோ, முடிவிலியில் ஒன்றை சேர்த்தாலோ முடிவிலியானது மாற்றம் அடையாது நீடித்திருக்கும் என்பதாகும். கி.மு. 400 இல் சமண சமய கணிதவியலாளர்களிடையே, அவர்தம் மெய்யியல் கல்வியின் குறிப்பிடத்தக்கப் பாடமாக முடிவிலி அமைந்திருந்தது. அவர்கள் முடிவிலியினை ஐந்து வகையாக வகைப்படுத்தியிருந்தனர். அவையாவன: ஒற்றை திசை முடிவிலி இரு திசை முடிவிலி பரப்பு முடிவிலி யாண்டு முடிவிலி நிலைத்த முடிவிலி இவற்றையும் பார்க்கவும் தமிழ் எண்கள் எண் அமைப்பு எண்களின் பட்டியல் கணித மாறிலிகள் ஒற்றை, இரட்டை எண்கள் பகா எண்கள் சிறிய எண்கள் பெரிய எண்கள் அளவு (எண்கள்) அடிப்படையிலான வரிசை பதினறும எண்கள் பல்வேறு மொழிகளில் எண்கள் எண்ணுருக்கள் (Numerals) விகிதமுறு எண்கள் விகிதமுறா எண்கள் hyperreal numbers surreal numbers p-adic numbers மேற்கோள்களும் குறிப்புகளும் வெளி இணைப்புகள் சொல்லாக்கத்தைப்பற்றிய குறிப்புகள் எண்கள் குலக்கோட்பாடு கணித உருப்படிகள்
1464
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
எண்களின் பட்டியல்
இது எண்களைப் பற்றிய கட்டுரைகளின் ஒரு பட்டியலாகும். விகிதமுறு எண்கள் முழு எண்கள் இயற்கை எண்கள் குறிப்பிடத்தக்க முழு எண்கள் கணித இயல்புகளுக்காகவோ அல்லது பண்பாட்டுக் காரணங்களுக்காகவோ குறிப்பிடத்தக்க ஏனைய எண்கள்: -1 127 137 144 222 255 273 360 496 666 720 1001 1729, இராமானுசன் எண் 32767 2147483647 ஏனைய சிறப்பாக அறியப்பட்ட முழு எண்கள் Steinhaus' Mega and Megiston, Moser's number, Skewes' number மற்றும் கிரகாமின் எண். எண் பெயரீடு See How to name numbers in English for more information on nameing numbers. மாற்றுப் பெயர்கள் பின்ன/விகிதமுறு எண் 1/2 0.25 (அனைத்து முடிவுறு தசமங்களும் விகிதமுறு எண்கள் - 0.5 ஆனது 5/10 என்றும் 0 .05 ஆனது 5/100 என்றும் எழுதப்படலாம்.) விகிதமுறா எண்கள் மெய்யெண்கள் அட்சரகணித விகிதமுறா உண்மை எண்கள் இரண்டின் வர்க்கமூலம்: √2 = 1.41421... பொன் விகிதம்: (Golden ratio) φ = 1.61803... விஞ்சிய உண்மை எண்கள் (Transcendental real numbers) நேப்பியரின் மாறிலி: e = 2.71828... பை: π = 3.14159... and probably Euler-Mascheroni constant: γ = 0.57721... Feigenbaum constants: δ = 4.6692... and α = 2.5029... Hypercomplex numbers அட்சரகணித சிக்கலெண்கள் கற்பனை அலகு: i = √(-1) ஏனைய அதிபரசிக்கலெண் (hypercomplex) எண்கள் The quaternions The octonions The sedenions The dual numbers (with an infinitesimal) சில வரம்பிலி (transfinite) எண்கள் முடிவிலி பொதுவாக: ∞ Aleph-null: ℵ0 Aleph-one: ℵ1 Beth-one, the cardinality of the continuum: 2ℵ0 Other surreal numbers, ordinal numbers, and cardinal numbers Number bases அடி 2 அடி 3 அடி 4 அடி 6 அடி 8 அடி 10 அடி 12 அடி 16 அடி 20 அடி 60 அடி 64 தொகுதிப் பெறுமானமில்லாத எண்கள் umpteen zillion gazillion பின்வருவனவற்றையும் பார்க்கவும் பிபனாச்சி எண்கள் மறை எண்கள் எண் பெயர்கள் ஆங்கில மொழி இலக்கங்கள் தமிழ் மொழி இலக்கங்கள் Orders of magnitude (numbers) பெரிய எண்கள் சிறிய எண்கள் சுய எண்கள் மிதவைப் புள்ளி பின்னம் பகா எண்கள் முதன்மை எண்களின் பட்டியல் முதன்மைச் சினைகளின் அட்டவணை கணித மாறிலி மேற்கோள்கள் எண்கள்
1466
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
முக்கோணம்
முக்கோணம் அல்லது முக்கோணி (Triangle) என்பது மிகச் சிறிய எண்ணிக்கையுள்ள நேர்கோடுகளால் ஒரு பரப்பை அடைக்க வல்ல ஓர் அடிப்படையான வடிவம். வடிவக்கணித (கேத்திர கணித) அடிப்படை வடிவங்களில் ஒன்று. பெயருக்கு ஏற்றாற் போல் இவ்வடிவம் மூன்று கோணங்களையும் மூன்று உச்சிகளையும் நேர்கோடுகளாலான மூன்று பக்கங்களையும் கொண்ட, ஒரு தட்டையான இரு பரிமாண உருவமாகும். யூக்களிடியன் வடிவியலில் ஒரே நேர்கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் ஒர் குறித்த முக்கோணத்தையும் தளத்தையும் வரையறுக்கின்றன.(இருபரிமாண யூக்ளிடியன் வெளி). முக்கோணத்தின் வகைகள் பக்க நீளங்கள் சார்பாக முக்கோணங்களை, அவற்றின் பக்கங்களின் நீளங்கள் தொடர்பில் வகைப்படுத்தமுடியும். அவை பின்வருமாறு:- எல்லாப் பக்கங்களும் ஒரே அளவு நீளமுள்ளதாக இருப்பின் அது, சமபக்க முக்கோணம் எனப்படும். ஒரு சமபக்க முக்கோணம், சமகோண (எல்லாக் கோணங்களும் சமம்) முக்கோணமாகவும் இருக்கும். இரண்டு பக்கங்கள் சம அளவுள்ளதாக இருக்கும் முக்கோணம் இருசமபக்க முக்கோணம் எனப்படும். இருசமபக்க முக்கோணமொன்றில் இரண்டு கோணங்களும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும். ஒன்றுக்கொன்று சமனில்லாத மூன்று பக்கங்களையுடைய முக்கோணம் சமனில் பக்க முக்கோணம் ஆகும். இவ்வகை முக்கோணத்தின் ஏதாவது இரண்டு கோணங்களும் சமனற்றவையாகும். உட்கோணங்கள் சார்பாக முக்கோணங்களின் மிகப்பெரிய உட்கோணத்தின் அடிப்படையிலும், முக்கோணங்களை வகைப்படுத்தலாம். ஒரு கோணம் செங்கோணமாக (90 பாகை அல்லது π/2 ரேடியன் அளவு) அமைந்துள்ள முக்கோணங்கள், செங்கோண முக்கோணங்கள் எனப்படுகின்றன. செங்கோணத்துக்கு எதிராக உள்ள பக்கம் செம்பக்கம் என அழைக்கப்படும். இதுவே செங்கோண முக்கோணமொன்றின் மிக நீளமான பக்கமாகும். முக்கோணத்திலுள்ள யாதேனும் ஒரு கோணம் செங்கோணத்திலும் பெரிதாக இருந்தால் அது விரிகோண முக்கோணம் எனப்படும். எல்லாக் கோணங்களும் செங்கோணத்திலும் சிறிதாக இருப்பின் அத்தகைய முக்கோணம் ஒரு கூர்ங்கோண முக்கோணம் ஆகும். அடிப்படை உண்மைகள் முக்கோணம் மூன்று பக்கங்களுடைய ஒரு பல்கோணமாகும். ஒரு முக்கோணத்தைச் சீராக விரிவடையச் செய்வதன் மூலம் மற்றைய முக்கோணத்தைப் பெறமுடியுமெனில், அவ்விரு முக்கோணங்களும் ஒத்த முக்கோணங்கள் எனக் கூறப்படுகின்றன. இதில் அம்முக்கோணங்களின் பக்கங்கள் விகிதசமனானவை. முக்கோணமொன்றின் நீளமான பக்கம், ஒத்த முக்கோணமொன்றின் நீளமான பக்கத்தின் இரண்டு மடங்காயின், முதல் முக்கோணத்தின் சிறிய பக்கமும் மற்ற முக்கோணத்தின் சிறியபக்கத்தின் இரண்டு மடங்காக இருக்கும். மூன்றாவது பக்கமும் அவ்வாறே மற்றதன் இரண்டு மடங்காகக் காணப்படும். அத்துடன் முதல் முக்கோணத்தின் ஏதாவது இரண்டு பக்கங்களுக்கிடையேயான விகிதம், இரண்டாவது முக்கோணத்தின் ஒத்த பக்கங்களுக்கிடையேயான விகிதத்துக்குச் சமனாகும். இரண்டு முக்கோணங்களின் ஒத்த கோணங்கள் ஒன்றுக்கொன்று சமனாக இருப்பின் மட்டுமே அவ்விரு முக்கோணங்களும் ஒத்தவையாக இருக்கும். செங்கோண முக்கோணங்களையும் ஒத்த முக்கோணங்கள் பற்றிய எண்ணக்கருவையும் பயன்படுத்தி, சைன், கோசைன் போன்ற திரிகோணகணிதச் சார்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. A, B, C என்பவற்றை உச்சிகளாகவும் α, β, γ என்பவற்றைக் கோணங்களாகவும் a, b, c ஆகியவற்றைப் பக்கங்களாகவும் கொண்ட முக்கோணத்தில், பக்கம் a கோணம் α வுக்கும், உச்சி A க்கும் எதிரேயுள்ளது. இதே போலவே ஏனைய பக்கங்களுமாகும். எனின், α, β, γ கோணங்களின் கூட்டுத்தொகை இரண்டு செங்கோணங்களுக்குச் சமன் அல்லது 180 பாகை ஆகும். (α + β + γ = 180 பாகை). முக்கோணம் தொடர்பான தேற்றங்களில், பைதகரசின் தேற்றம் முக்கியமான ஒன்று. இது ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களுக்கிடையேயான தொடர்பைக் காட்டுகிறது. இதன்படி, ஒரு செங்கோண முக்கோணத்தில், செம்பக்கத்தின் வர்க்கம், ஏனைய இரண்டு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமன். மேலேயுள்ள முக்கோணத்தில் γ ஒரு செங்கோணமாக இருந்தால், பைதகரசின் தேற்றத்தை எல்லா முக்கோணங்களுக்கும் பொருந்தக்கூடியவகையில் பொதுமைப்படுத்த முடியும். இது கோசைன் விதி என அழைக்கப்படும். இதன்படி: முக்கோணம் தொடர்பான சைன் விதியின் படி, இயல்பொத்தவை, ஒருங்கிசைவானவை ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் அவற்றுக்கு ஒத்த மற்றய முக்கோணத்தின் கோணங்களுக்குச் சமனாக இருப்பின் அவை இயல்பொத்தவை அல்லது வடிவொத்தவை எனப்படும். அந்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்களின் நீளங்களிற்கிடையேயான விகிதங்கள் சமனாக இருக்கும், இந்தப்பண்பு இயல்பொப்புமையை நிறுவ போதுமானது. இயல்பொத்த முக்கோணங்களின் சில பண்புகள்: இரு முக்கோணங்களிற்கிடையே ஒத்த கோணங்கள் சமனாக இருப்பின் அந்த முக்கோணங்கள் இயல்பொத்தவை. இரு முக்கோணங்களின் மூன்று ஒத்த பக்கங்களிற்கிடையேயான விகிதங்களும் சமனாக இருப்பின் அவை இயல்பொத்தவை. இரு முக்கோணங்களின் இரு ஒத்த பக்கங்களிற்கிடையேயான விகிதங்கள் சமனாகவும் அவற்றுடன் தொடர்புடைய கோணங்கள் சமனாகவும் இருப்பின் அவை இயல்பொத்தவை. அளவிலும் வடிவத்திலும் சர்வ சமனாக இருக்கும் இரு முக்கோணங்கள் ஒருங்கசைவானவை எனப்படும். அனைத்து ஒத்தசோடி உட்கோணங்களும் சமனானவை, அனைத்து ஒத்தசோடிப் பக்கங்களும் ஒரே நீளத்தை கொண்டிருக்கும். இரு சோடி முக்கோணங்கள் ஒருங்கிசைவதற்கான நிபந்தனைகள்: ப.கோ.ப: முக்கோணத்தின் இரு பக்கங்களின் நீளங்கள் அதற்கொத்த மற்றய முக்கோணத்தின் இரு பக்கங்களின் நீளத்திற்கு சமனாக இருக்க வேண்டும், அந்தப் பக்கங்களிற்கிடையேயான கோணம் இரு முக்கோணங்களிலும் சமனாக இருக்க வேண்டும். கோ.ப.கோ: முக்கோணத்தின் இரு கோணங்களும் அவற்றிற்கிடையேயான பக்கமும் மற்றய முக்கோணத்தின் இரு கோணங்களிற்கும் அவற்றிற்கிடையேயான பக்கத்திற்கும் சமனாக இருக்க வேண்டும். ப.ப.ப:முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் நீளங்களும் மற்றய முக்கோணத்தின் அதற்கொத்த பக்கங்களின் நீளங்களிற்கு சமனாக இருக்கவேண்டும். கோ.கோ.ப: ஒரு முக்கோணத்தின் இரு கோணங்களும் ஒரு பக்கமும் மற்றய முக்கோணத்தின் இரு கோணங்களிற்கும் குறித்த பக்கத்திற்கும் சமனாக இருக்கவேண்டும். செ.ப: இரு செங்கோண முக்கோணிகளில் ஒரு முக்கோணியின் செம்பக்கமும், ஒரு பக்கமும் முறையே மற்றய முக்கோணியின் செம்பக்கத்திற்கும் ஒரு பக்கத்திற்கும் சமனாக இருக்கவேண்டும். செங்கோண முக்கோணி பைத்தகரசின் தேற்றத்தின் படி யாதயினும் ஓர் செங்கோண முக்கோணியில் செம்பக்க நீளத்தின் வர்க்கமானது மற்றய பக்க நீளங்களின் வர்கங்களின் கூட்டுத்தொகைக்கு சமனாகும். செம்பக்க நீளத்தை c எனவும் மற்றய பக்க நீளங்களை a, b எனக்கொண்டால் தேற்றத்தின் படி இதன் மறுதலையும் உண்மையானது, ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் மேற்படி சமன்பாட்டை சரி செய்தால் பக்கம் c இற்கு எதிர்ப்பக்கத்தில் செங்கோணம் அமைந்திருக்கும். செங்கோண முக்கோணத்தைப் பற்றிய வேறுசில உண்மைகள்: செங்கோண முக்கோணியில் கூர்ங்கோணங்கள் ஒன்றிற்கொன்று நிரப்புக்கோணங்கள். செங்கோண முக்கோணியின் செம்பக்கமல்லாத பக்கங்களின் நீளங்கள் சமனாயின் அவற்றின் கோணங்கள் 45 பாகையாக இருக்கும். முக்கோணத்துடன், புள்ளிகள், கோடுகள், வட்டங்கள் என்பவற்றின் தொடர்பு முக்கோணத்தின் பரப்பைக் கணித்தல் ஒரு முக்கோணத்தின் பரப்பளவு பின்வரும் சமன்பாட்டினால் தரப்படுகின்றது. S = 1/2 × அடி × உயரம் இங்கு S முக்கோணத்தின் பரப்பளவாகும். முக்கோணங்களின் பரப்பளவைக் கணிக்கப் பயன்படும் இன்னொரு சமன்பாடு எரோனின் வாய்ப்பாடு பின்வருமாறு:- இங்கே s = 1/2 (a + b + c) அதாவது முக்கோணத்தின் சுற்றளவின் அரைவாசி. மாற்றாக S = sr இங்கே s மேலே வரையறுக்கப்பட்டபடியும், r முக்கோணத்தின் உள்வட்டத்தின் ஆரையுமாகும். பின்வருவனவற்றையும் பார்க்கவும் முக்கோண எண் வெளி இணைப்புகள் மேற்கோள்கள் வடிவவியல் வடிவங்கள் முக்கோண வடிவவியல்
1469
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D
முக்கோண எண்
வடிவவியலில் முக்கோண எண் (triangular number) என்பது வடிவ எண்களில் ஒரு வகையாகும். படத்தில் உள்ளவாறு, ஒரு முக்கோண எண் என்பது ஒரு சமபக்க முக்கோண வடிவில் ஒழுங்குபடுத்தத்தக்க ஒரு எண்ணாகும். (மரபின்படி, முதலாவது முக்கோண எண் 1 ஆகும்.) n -ஆம் முக்கோண எண் என்பது ஒரு பக்கத்திற்கு n புள்ளிகளெனக் கொண்ட சமபக்க முக்கோணத்துக்குள் அமையும் மொத்தப் புள்ளிகளின் எண்ணிக்கையாகும். ஒவ்வொரு வரிசையும் அதற்கு முன்னுள்ள வரிசையைக்காட்டிலும் ஒரு அலகு கூடுதலாக உள்ளது. இதன் மூலம் முதல் முக்கோண எண் 1; இரண்டாம் முக்கோண எண் 1+ 2 = 3; மூன்றாம் முக்கோண எண் 1 + 2 + 3 = 6;.... என இயல் எண் களின் கூட்டுத்தொகையாக ஒவ்வொரு முக்கோண எண்ணும் அமைவதைக் காணலாம். n -ஆம் முக்கோண எண்ணின் மதிப்பு 1 முதல் n வரையிலான இயல் எண்களின் கூடுதலுக்குச் சமமாக இருக்கும். முக்கோண எண்களின் தொடர்வரிசை : 1, 3, 6, 10, 15, 21, 28, 36, 45, 55,..... வாய்பாடு n -ஆம் முக்கோண எண்ணின் மதிப்பு 1 முதல் n வரையிலான இயல் எண்களின் கூடுதலுக்குச் சமம் என்பதால் முக்கோண எண்களுக்கான மீள்வரு வாய்ப்பாடு: இவ்வாய்பாட்டை காட்சி நிறுவல் மூலம் விளக்கலாம்.வலது இறுதியில் உள்ளது ஒரு ஈருறுப்புக் கெழு. இக்கெழு, n + 1 பொருள்களில் இருந்து தேர்ந்தெடுக்கக்கூடிய சோடிகளின் எண்ணிக்கையைத் தருகிறது. பெருக்கலில் உள்ள தொடர் பெருக்கத்தைப் போன்றவை கூட்டலுக்கு முக்கோண எண்கள். தொடர் பெருக்கம் n !, 1 முதல் n வரையிலான இயல் எண்களின் பெருக்கலுக்குச் சமம். முக்கோண எண் 1 முதல் n வரையிலான இயல் எண்களின் கூடுதலுக்குச் சமம். ஒவ்வொரு புள்ளியையும் இணைத்து வரையக் கூடிய கோடுகளின் எண்ணிக்கையைப் பின்வரும் வாய்ப்பாடு மூலம் காணலாம்: புள்ளிகள் மற்றும் இக்கோடுகளின் எண்ணிக்கைகளுக்கு இடையிலான விகிதத்தின் குறிப்பிடத்தக்கதொரு பண்பு: ஒவ்வொரு முக்கோண எண் க்கும், அதற்குச் சமமான என்ணிக்கையிலான பொருட்களை கீழேயுள்ள படத்திலுள்ளதுபோல ஒரு அரைச்-செவ்வக வடிவில் அமைப்பதாகக் கொள்ளலாம். இதே அமைப்பின் படிமத்தைச் சுழற்றி முழுச் செவ்வகமாக உருவாக்கினால் அதிலுள்ள பொருட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாவதோடு அச்செவ்வகத்தின் அளவானது ஆக இருக்கும். மேலும் இன் மதிப்பு செவ்வகத்திலுள்ள பொருட்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவும் இருக்கும். எனவே: . எடுத்துக்காட்டு: (பச்சையும் மஞ்சளும்) (பச்சை) இவ்வாய்பாட்டை கணிதத் தொகுத்தறிதல் முறையில் நிறுவமுடியும். எனில், இவ்வாய்பாடு உண்மையாவதை எளிதாகக் காணலாம்: என்ற இயலெண்ணுக்கு இவ்வாய்ப்பாடு மெய் என எடுத்துக்கொள்ள: . இருபுறமும் ஐக் கூட்டக் கிடைப்பது: அதாவது, வாய்பாடு என்ற மதிப்பிற்கு உண்மையாக இருக்கும்போது அது மதிப்பிற்கும் உண்மையாகிறது. எனவே, கணிதத்தொகுத்தறிதலின்படி வாய்பாடு அனைத்து இயலெண் மதிப்புகளுக்கும் உண்மையாகும். வரலாறு செருமானிய கணிதவியலாளர் கார்ல் பிரீடிரிக் காஸ், அவரது இளமைக்காலத்தில் இதனைக் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இதனை முதன்முதலாகக் கண்டறிந்தவர் காஸ் அல்ல. கிமு 5 ஆம் நூற்றாண்டிலேயே இது அறியப்பட்டிருந்தது என்ற கருத்தும் உள்ளது 816 இல், அயர்லாந்தைச் சேர்ந்த துறவி திக்குய்ல் என்பவரும் அவரது இயேசுவின் உயிர்த்தெழுதல் நாட்கணிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திக்குய்லின் குறிப்புகளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் உள்ளது. கைகுலுக்கல் சிக்கல் "கைகுலுக்கல் சிக்கலுக்கான" தீர்வை முக்கோண எண் தருகிறது. நபர்கள் உள்ள ஓர் அறையில் ஒருவர் மற்ற ஒவ்வொருவருடனும் கைகுலுக்கினால் நிகழும் மொத்த கைகுலுக்கல்களின் எண்ணிக்கையை முக்கோண் எண் அளிக்கிறது In other words, the solution to the handshake problem of நபர்களின் கைகுலுக்கல் கணக்குக்கான விடை ஆகும். தொடர்கூட்டல் சார்பு அமெரிக்கக் கணினி அறிவியலாளரான டோனால்டு நத், தனது நூலில் n முழுஎண்களின் தொடர்பெருக்கத்துடன் ஒத்தவொன்றாக "தொடர்கூட்டல் சார்பு" ("Termial function") என்பதை உருவாக்கினார். இத்தொடர்கூட்டலின் குறியீடு n? .இது முக்கோண எண் க்குச் சமம். தொடர் பெருக்கம்: n! = 1.2.3....n தொடர் கூட்டல்: எடுத்துக்காட்டாக: ஏனைய வடிவ எண்களுடனான தொடர்பு முக்கோண எண்கள் மற்ற வடிவ எண்களோடு அதிகத் தொடர்புடையன. எடுத்துக்காட்டுகள்: அடுத்தடுத்த இரு முக்கோண எண்களின் கூடுதல் ஒரு வர்க்க எண் (சதுர எண்). இக்கூடுதலின் மதிப்பு, இந்த இரு முக்கோண எண்களின் வித்தியாசத்தின் வர்க்கமாகும். மேலேயுள்ள ஒவ்வொரு எடுத்துக்காட்டிலும், இரண்டு பொருந்துகின்ற முக்கோணங்களிலிருந்து ஒரு சதுரம் அமைவதைக் காணலாம். எண்ணற்ற முக்கோண எண்கள் வர்க்க எண்களாகவும் அமைகின்றன. அவற்றுள் சிலவற்றை பின்வரும் மீள்வரு வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்: இதில், அனைத்து வர்க்க முக்கோண எண்களையும் பின்வரும் மீள்வரு வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம். இதில் மற்றும் n -ஆம் முக்கோண எண்ணின் வர்க்கம் 1 முதல் n வரையிலான முழு எண்களின் கனங்களின் கூடுதலுக்குச் சமம். 1 முதல் n வரையிலான முக்கோண எண்களின் கூடுதல் n ஆம் நான்முக எண்ணாகும். பொதுவாக, n -ஆம் m -பலகோண எண் மற்றும் n -ஆம் (m + 1)-பலகோண எண்ணிற்குமுள்ள வித்தியாசம் (n – 1) -ஆம் முக்கோண எண்ணாக அமையும். எடுத்துக்காட்டு: ஆறாம் எழுகோண எண் = 81. ஆறாம் அறுகோண எண் = 66 இவற்றின் வித்தியாசம் = 81 – 66 = 15. இது ஐந்தாம் முக்கோண எண்ணாகும். முக்கோண எண்களைப் பயன்படுத்தி எந்தவொரு மையப்படுத்தப்பட்ட பலகோண எண்ணையும் காணமுடியும். n -ஆம் மையப்படுத்தப்பட்ட k-கோண எண்ணைக் காணும் வாய்ப்பாடு: இங்கு -முக்கோண எண்; -n -ஆம் மையப்படுத்தப்பட்ட k-கோண எண். இரு முக்கோண எண்களின் நேர்ம வித்தியாசம் ஒரு சரிவக எண். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Triangular numbers at cut-the-knot There exist triangular numbers that are also square at cut-the-knot Triangular numbers via 12 days of Christmas by Vi Hart இவற்றையும் பார்க்கவும் சதுர எண் பல்கோண எண் முக்கோண சதுர எண் எண்கள் வடிவவியல் முக்கோணங்கள் முழுஎண் தொடர்வரிசைகள் வார்த்தைகளற்ற நிறுவல்கள்
1470
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D
பல்கோண எண்
கணிதத்தில், ஒரு பல்கோண எண் (Polygonal number) என்பது, ஒழுங்கான பல்கோண வடிவில் ஒழுங்குபடுத்தக்கூடிய ஒரு எண்ணாகும். பண்டைய கணிதவியலாளர்கள், எண்கள் கற்கள், விதைகள் போன்றவற்றால் குறிக்கப்படும்போது, அவற்றைக் குறிக்கப்பட்ட விதங்களில் ஒழுங்குபடுத்த முடியும் எனக் கண்டறிந்தனர். எடுத்துக்காட்டாக எண் 10 ஐ, ஒரு முக்கோணமாக ஒழுங்குபடுத்தமுடியும் (முக்கோண எண் பார்க்கவும்): {| | align="center" | |} ஆனால் 10 ஐ ஒரு சதுரமாக அடுக்கமுடியாது. எண் 9 ஐ அவ்வாறு அடுக்கமுடியும். (சதுர எண் பார்க்கவும்): {| | align="center" | |} 36 போன்ற சில எண்களைச் சதுரமாகவும், முக்கோணமாகவும் அடுக்கமுடியும். ( முக்கோண சதுர எண்): {| |- align="center" valign="bottom" | | | |} ஒரு பல்கோணத்தின் இரு அடுத்துள்ள பக்கங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு புள்ளியை அதிகப்படுத்தி அப்புள்ளிகளுக்கிடையே மற்ற தேவையான பக்கங்களைச் சேர்த்தால் இதற்கு அடுத்த அளவுப் பல்கோணம் கிடைக்கும். கீழேயுள்ள படங்களில் புதிதாகச் சேர்க்கப்பட்ட புள்ளிகள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. பல்கோண எண்களின் வகைகள் சில முக்கோண எண்கள் சதுர எண்கள் ஐங்கோணி, அறுகோணி போன்ற கூடிய பக்கங்களைக்கொண்ட பல்கோணிகளும் புள்ளிகளின் அடுக்காகக் காட்டப்படக்கூடியவை. (convention படி, எத்தனை பக்கங்கொண்ட பல்கோணிக்கும் 1 முதலாவது பல்கோண எண்ணாகும்). ஐங்கோண எண்கள்: அறுகோண எண்கள் 36: (இது முக்கோண எண்ணும், ஒரு சதுர எண்ணுமாகும்.) வாய்ப்பாடு s -பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை எனில், n -வது s-கோண எண், P(s,n) காணும் வாய்ப்பாடு: n-வது s- கோண எண்ணுக்கும் முக்கோண எண் Tn -க்குமுள்ள தொடர்பு: எனவே: தரப்பட்ட s-கோண எண் P(s,n) = x எனில் அட்டவணை ஆதாரங்கள் The Penguin Dictionary of Curious and Interesting Numbers, David Wells (Penguin Books, 1997) []. MathWorldல் பல்கோண எண்கள் வடிவ எண்கள் ru:Последовательность двенадцатиугольника
1471
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
தமிழ் எழுத்து முறை
தமிழ் அரிச்சுவடி (Tamil script) என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகின்றன. தமிழில் 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் 216 உயிர்மெய் எழுத்துகளுமாக மொத்தம் 247 எழுத்துகள், தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துகள் தமிழ் நெடுங்கணக்கைச் சேர்ந்தவையல்ல. எழுத்துகள் தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஒவ்வொன்றுடனும் சேர்ந்து உருவாகும் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12 x 18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துகளும், 18 மெய் எழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துகள் தமிழ் மொழியில் உள்ளன. தமிழ் நெடுங்கணக்கில் சேராச் சில கிரந்த எழுத்துகள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52-உம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துகளும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர். மனித உடலின் இயக்கத்திற்கு ஆதாரமாகும் இதயம் இடப்புறம் இருப்பதனால் தமிழ்மொழியின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் ஒலி வடிவங்களைக் குறிக்கும் வரிவடிவத் தமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன. தமிழ் எழுத்துகளின் வரலாறு தமிழ் எழுத்து ஏனைய பிராமிய குடும்ப எழுத்துகள் போன்று பிராமி எழுத்துமுறையில் இருந்து உருவாகியது என்று கருதப்படுகின்றது. தொடக்ககாலத் தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படும் அசோக பிராமியை ஒத்த எழுத்துகளை ஆய்வாளர்கள் தமிழ்ப் பிராமி அல்லது தமிழி எனக் குறிப்பிடுகின்றனர். இது, பல கூறுகளில் அசோக பிராமியில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, அசோக பிராமியைப் போலன்றித் தமிழ்ப் பிராமியில் அகரமேறிய உயிர்மெய்களில் இருந்து தனி மெய்யெழுத்தைப் பிரித்துக் காட்டுவதற்கான முறை ஒன்று இருந்தது. அத்துடன், ஐராவதம் மகாதேவனின் கூற்றுப்படி, தொடக்க காலத் தமிழ்ப் பிராமியில் உயிர்மெய் எழுத்துகளில் உயிரொலிகளைக் குறிக்கச் சற்று வேறுபட்ட குறியீடுகள் பயன்பட்டன. மேலும், சமசுக்கிருதத்தில் இல்லாத ஆனால் தமிழில் உள்ள ஒலிகளைக் குறிக்கக் கூடுதலான எழுத்துகள் இருந்ததுடன், சமசுக்கிருதத்தில் உள்ள ஆனால் தமிழுக்குத் தேவையற்ற ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் இல்லாமலும் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒலிப்புள்ள மெய்யொலிகள் தமிழ்ப் பிராமியில் காணப்படவில்லை. 2-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய கல்வெட்டுகளில் சற்று மாறுபட்ட தமிழ்ப் பிராமி வடிவம் காணப்படுகிறது. இவ்வடிவம், தொல்காப்பியத்தில் விளக்கப்பட்ட தமிழ் எழுத்து முறையைப் பெருமளவுக்கு ஒத்ததாக உள்ளது. முக்கியமாக, அகரமேறிய மெய்யெழுத்துகளில் இருந்து தனி மெய்யைப் பிரித்துக்காட்ட புள்ளிகள் பயன்பட்டதைக் காண முடிகிறது. இதன் பின்னர்த் தமிழ் எழுத்துகள் வளைகோடுகளைக் கொண்டனவாக வளர்ச்சியடைந்தன. கி.பி. 5-ஆம் 6-ஆம் நூற்றாண்டுகளில் இவை தொடக்க வட்டெழுத்து என அழைக்கப்படும் வடிவத்தை அடைந்தன. தற்காலத் தமிழ் எழுத்துகள் வட்டெழுத்துகளில் இருந்து வளர்ச்சி அடைந்தவை அல்ல. 7 ஆம் நூற்றாண்டில், பல்லவர்கள் புதிய தமிழ் எழுத்துமுறையைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துகள் கிரந்த எழுத்துகளை எளிமையாக்கி உருவாக்கப்பட்டவை. கிரந்த எழுத்துகள் சமசுக்கிருதத்தை எழுதுவதற்காகத் தென்னிந்தியாவில் உருவான எழுத்துகள். 8-ஆம் நூற்றாண்டளவில், தமிழகத்தின் வடபகுதியான சோழ நாட்டிலும், பல்லவ நாட்டிலும் இப்புதிய எழுத்துமுறை வட்டெழுத்துக்குப் பதிலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. தமிழகத்தின் தென் பகுதியில் இருந்த சேர நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வட்டெழுத்து முறை 11-ஆம் நூற்றாண்டில் பாண்டியநாடு சோழர்களால் கைப்பற்றப்படும்வரை பயன்பாட்டில் இருந்தன. பின் வந்த நூற்றாண்டுகளில் சோழ-பல்லவ தமிழ் எழுத்துமுறை நவீன தமிழ் எழுத்து முறையாக வளர்ச்சி பெற்றது. தமிழ் எழுத்துகள் உயிரெழுத்துகள் (12) உயிரெழுத்துகளில் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து எழுத்துகள் குறைந்த ஒலியளவு கொண்டவை இதனால் இவை "குறில்கள்" என்றும், கூடிய ஒலிப்பளவு கொண்ட ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் எழுத்துகள் "நெடில்கள்" என்றும் குறிக்கப்படுகின்றன. ஐ, ஔ என்னும் இரு எழுத்துகளும் கூட்டெழுத்துகள். இவை முறையே அ + இ, அ + ஒ என்னும் சேர்க்கையால் உருவாகும் ஒலிப்புகளைக் குறிக்கின்றன. தொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்து முறையில், ஏகாரமும், ஓகாரமும் மேல் புள்ளி பெற்று எகரத்தையும், ஒகரத்தையும் குறித்தன. பிற்காலத்தில் 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை எகரம், ஏகாரம் என்னும் இரண்டும் எ என்னும் எழுத்தாலும், ஒகரம், ஓகாரம் என்னும் இரண்டும் ஒ என்னும் எழுத்தாலும் குறிக்கப்பட்டன. இந்தக் குழப்பத்தைப் போக்குவதற்காக 18-ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எனப்பட்ட இத்தாலிய மதபோதகரான கான்சுடண்டைன் பெசுக்கி என்பார் நெடிலைக் குறிக்க சுழிகளைப் பயன்படுத்தும் முறையைக் கையாண்டார். ஓகாரத்தைக் குறிக்க அவரது முறையே இன்றும் பயன்பட்டு வருகிறது. ஆனாலும் ஏகாரத்தைக் குறிக்க அவரது சுழிப்பு முறை இன்று பயன்பாட்டில் இல்லை. அதற்குப் பதிலாக எ என்னும் எழுத்தின் நிலைக்குத்துக் கோட்டில் கீழ் முனையில் இருந்து இடப்பக்கம் சாய்ந்த கீழ் நோக்கிய கோடொன்றைச் (இடப்புறச் சாய்வுக் கீற்று) சேர்த்து இப்போது ஏ என எழுதப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐ, ஔ ஆகிய எழுத்துகளைக் கைவிட்டு, அய், அவ் என்று எழுதவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும் இக்கோரிக்கை இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மெய்யெழுத்துகள் (18) பிற இந்திய மொழி எழுத்துமுறைகளைப் போலவே தமிழிலும் அகரமேறிய மெய்களே அடிப்படைக் குறியீடுகளாக இருக்கின்றன. இவற்றுக்கு மேலே புள்ளி இடுவதன் மூலம் மெய்யொலிகள் குறிக்கப்படுகின்றன. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதில் இருந்து இது பழமையான வழக்கு என்பதை அறிந்துகொள்ள முடியும். பிற்காலத்தில், பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும்போது பனையோலை கிழிந்து விடுவதைத் தவிர்ப்பதற்காகப் புள்ளியிடும் முறை கைவிடப்பட்டது. அப்போது, மெய்யெழுத்துகளும், அகர உயிர்மெய்களும் ஒரே மாதிரியாகவே குறிக்கப்பட்டு வந்தன. மயக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டுப் பிற்காலத்தில் மீண்டும் புள்ளியிடும் வழக்கம் புழக்கத்துக்கு வந்தது. உயிர்மெய்யெழுத்துகள் (216) உயிரும் மெய்யும் சேர்ந்து உருவாகும் ஒலிகளைக் குறிப்பன உயிர்மெய் எழுத்துகள் ஆகும். உயிர்மெய் எழுத்துகளின் வடிவங்கள் குறித்துத் தொல்காப்பியம், எழுத்ததிகாரத்தில் 17-ஆவது நூற்பா கூறுகிறது. இதன்படி மெய் அகரத்தோடு கூடும்போது உருவம் திரிபடையாமல் இருக்கும். பிற உயிர்களோடு சேரும்போது உருவம் திரிபு அடையும். திரிபடையும் எழுத்துகள், பின்வருமாறு திரிபடைகின்றன: மேல் விலங்கு பெறுதல் கீழ் விலங்கு பெறுதல் கோடு பெறுதல் புள்ளி பெறுதல் கோடும் புள்ளியும் பெறுதல் தற்கால எழுத்து முறையில் இவை பின்வருமாறு அமைகின்றன. மெய்கள் இகரத்துடனும், ஈகாரத்துடனும் சேரும்போது மேல் விலங்கு பெறுகின்றன. இதைத் தற்காலத்து "விசிறி"யை ஒத்தது. எடுத்துக்காட்டாக, கி (மேல் விலங்கு), கீ (மேல் விலங்குச் சுழி) என்பன இவ்வாறு விசிறி பெற்ற எழுத்துகள். உகரத்துடனும், ஊகாரத்துடனும் சேரும்போது மெய்கள் கீழ் விலங்கு பெறுகின்றன. கு (கீழ் விலங்கு), கூ (பின் வளை கீற்று) போன்றவை கீழ் விலங்கு பெற்ற மெய்களுக்கு எடுத்துக்காட்டுகள். "கோடு" என்பது தற்காலத்து ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு ஆகியவற்றை ஒத்தது. எகர, ஏகார உயிர்மெய்கள் இவ்வாறானவை. கெ, கே என்னும் மெய்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆகாரத்தோடு சேர்ந்த மெய்கள் புள்ளி பெற்றுத் திரிபடைவதற்கு எடுத்துக்காட்டுகள். தற்காலத்தில் இது கா, சா போன்றவற்றை ஒத்தது. ஒகர, ஓகார மெய்கள் கோடும், புள்ளியும் பெறுவன. தற்கால எழுத்துகளில் கொ, கோ போன்றவற்றை இவற்றுடன் ஒப்பிடலாம். தொல்காப்பியர் காலத்தில் மேல், கீழ் விலங்குகள், கோடு, புள்ளி என்பவை, தற்கால வடிவங்களுடன் வேறுபட்டுக் காணப்பட்டாலும், அடிப்படைக் கருத்துரு தற்கால எழுத்து முறையிலும் மாறாமல் இருப்பதைக் காணலாம். மேலும் உயிர்மெய் எழுத்துகள் ஏற்கும் மாற்றங்களை நுட்பமாக ஆய்வு செய்த பிற்கால இலக்கண அறிஞர்கள், துணைக்கால் (கா, சா, தா), கொம்புக்கால் இணை (ஊ, கெள, செள), மடக்கு ஏறுகீற்றுக் கால் (ணூ,தூ,நூ), ஒற்றைக்கொம்பு (கெ, நெ, செ), இரட்டைக்கொம்பு (கே, நே, சே), இணைக்கொம்பு/சங்கிலிக்கொம்பு (கை, சை, நை), இறங்கு கீற்று (பு, சு, வு) மடக்கு ஏறு கீற்று (ணு, து, நு), பின்வளைகீற்று (கூ), மேல்விலங்கு (கி, தி, பி), கீழ்விலங்கு (மு, ரு, கு) இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி (சூ, பூ), மேல்விலங்குச் சுழி (கீ, தீ, ரீ), கீழ்விலங்குச் சுழி (மூ, ரூ), என எழுத்துகள் ஏற்கும் மாற்றங்களுக்குரிய காரணப் பெயரை விளக்கமாகக் குறிப்பிட்டனர். கீழேயுள்ள அட்டவணையின் முதலாவது வரிசையில் மெய்யெழுத்துகள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் கூடும் இடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்து காட்டப்பட்டுள்ளது. ஆய்த எழுத்து (1) அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என பல பெயர்களுள்ள ஆய்த எழுத்து. தமிழில் கிரந்த எழுத்துகள் கிரந்தம் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் சமசுகிருத மொழியில் இருந்து தோன்றி தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்களை எழுதப் பயன்பட்ட ஓர் இலிபி (எழுத்து முறை). இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாக செய்த தாக்கத்தாலும் கிரந்தத்தின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் சமசுகிருதம் மற்றும் தமிழின் கலப்பால் உருவான மணிப்பிரவாளம் பரவலாக இருந்த பொழுது கிரந்த எழுத்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மணிப்பிரவாளத்தின் செல்வாக்கு குறைந்தாலும், 'ஜ', 'ஶ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ', 'ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துகள் வடமொழி மூலம் தோன்றிய சொற்களிலும் பிறமொழிச் சொற்களிலும், தமிழில் இல்லா இவ்வோசைகளை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் எழுதும் முறைமை தமிழ் எழுதும் முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துகளை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம். நீங்கள் விரும்பும் கோப்பினை, உங்கள் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலே பயன் படுத்தலாம். ஒவ்வொரு கோப்பும், ஏறத்தாழ 6kb அளவிலேயே இருக்கிறது. தமிழ் எண்கள் தமிழில் 0 முதல் 9 வரைக்குமான எண்களும் 10, 100, 1000 ஆகியவற்றைக் குறிக்கவென தனி எண்களும் உள்ளன. அத்துடன் நாள், மாதம், ஆண்டு, செலவு, வரவு, மேலேயுள்ளபடி, உருவா, இலக்கம் என்பவற்றைக் குறிக்க குறியீடுகளும் உள்ளன. தமிழ் எழுத்துகளும் கணினியும் தமிழ் ஒருங்குறி U+0B80 முதல் U+0BFF வரை உள்ளது. <table class="wikitable collapsible collapsed" style="text-align:center"> தமிழ் ஒருங்குறி மொழியியல் உயிரெழுத்துகள் →மெய்யெழுத்துகள்↓ அ0B85 ஆ0B86 இ0B87 ஈ0B88 உ0B89 ஊ0B8A எ0B8E ஏ0B8F ஐ0B90 ஒ0B92 ஓ0B93 ஔ0B94 க் 0B950BCD க 0B95  கா 0B950BBE கி 0B950BBF கீ 0B950BC0 கு 0B950BC1 கூ 0B950BC2 கெ 0B950BC6 கே 0B950BC7 கை 0B950BC8 கொ 0B950BCA கோ 0B950BCB கௌ 0B950BCC ங் 0B990BCD ங 0B99  ஙா 0B990BBE ஙி 0B990BBF ஙீ 0B990BC0 ஙு 0B990BC1 ஙூ 0B990BC2 ஙெ 0B990BC6 ஙே 0B990BC7 ஙை 0B990BC8 ஙொ 0B990BCA ஙோ 0B990BCB ஙௌ 0B990BCC ச் 0B9A0BCD ச 0B9A  சா 0B9A0BBE சி 0B9A0BBF சீ 0B9A0BC0 சு 0B9A0BC1 சூ 0B9A0BC2 செ 0B9A0BC6 சே 0B9A0BC7 சை 0B9A0BC8 சொ 0B9A0BCA சோ 0B9A0BCB சௌ 0B9A0BCC ஞ் 0B9E0BCD ஞ 0B9E  ஞா 0B9E0BBE ஞி 0B9E0BBF ஞீ 0B9E0BC0 ஞு 0B9E0BC1 ஞூ 0B9E0BC2 ஞெ 0B9E0BC6 ஞே 0B9E0BC7 ஞை 0B9E0BC8 ஞொ 0B9E0BCA ஞோ 0B9E0BCB ஞௌ 0B9E0BCC ட் 0B9F0BCD ட 0B9F  டா 0B9F0BBE டி 0B9F0BBF டீ 0B9F0BC0 டு 0B9F0BC1 டூ 0B9F0BC2 டெ 0B9F0BC6 டே 0B9F0BC7 டை 0B9F0BC8 டொ 0B9F0BCA டோ 0B9F0BCB டௌ 0B9F0BCC ண் 0BA30BCD ண 0BA3  ணா 0BA30BBE ணி 0BA30BBF ணீ 0BA30BC0 ணு 0BA30BC1 ணூ 0BA30BC2 ணெ 0BA30BC6 ணே 0BA30BC7 ணை 0BA30BC8 ணொ 0BA30BCA ணோ 0BA30BCB ணௌ 0BA30BCC த் 0BA40BCD த 0BA4  தா 0BA40BBE தி 0BA40BBF தீ 0BA40BC0 து 0BA40BC1 தூ 0BA40BC2 தெ 0BA40BC6 தே 0BA40BC7 தை 0BA40BC8 தொ 0BA40BCA தோ 0BA40BCB தௌ 0BA40BCC ந் 0BA80BCD ந 0BA8  நா 0BA80BBE நி 0BA80BBF நீ 0BA80BC0 நு 0BA80BC1 நூ 0BA80BC2 நெ 0BA80BC6 நே 0BA80BC7 நை 0BA80BC8 நொ 0BA80BCA நோ 0BA80BCB நௌ 0BA80BCC ப் 0BAA0BCD ப 0BAA  பா 0BAA0BBE பி 0BAA0BBF பீ 0BAA0BC0 பு 0BAA0BC1 பூ 0BAA0BC2 பெ 0BAA0BC6 பே 0BAA0BC7 பை 0BAA0BC8 பொ 0BAA0BCA போ 0BAA0BCB பௌ 0BAA0BCC ம் 0BAE0BCD ம 0BAE  மா 0BAE0BBE மி 0BAE0BBF மீ 0BAE0BC0 மு 0BAE0BC1 மூ 0BAE0BC2 மெ 0BAE0BC6 மே 0BAE0BC7 மை 0BAE0BC8 மொ 0BAE0BCA மோ 0BAE0BCB மௌ 0BAE0BCC ய் 0BAF0BCD ய 0BAF  யா 0BAF0BBE யி 0BAF0BBF யீ 0BAF0BC0 யு 0BAF0BC1 யூ 0BAF0BC2 யெ 0BAF0BC6 யே 0BAF0BC7 யை 0BAF0BC8 யொ 0BAF0BCA யோ 0BAF0BCB யௌ 0BAF0BCC ர் 0BB00BCD ர 0BB0  ரா 0BB00BBE ரி 0BB00BBF ரீ 0BB00BC0 ரு 0BB00BC1 ரூ 0BB00BC2 ரெ 0BB00BC6 ரே 0BB00BC7 ரை 0BB00BC8 ரொ 0BB00BCA ரோ 0BB00BCB ரௌ 0BB00BCC ல் 0BB20BCD ல 0BB2  லா 0BB20BBE லி 0BB20BBF லீ 0BB20BC0 லு 0BB20BC1 லூ 0BB20BC2 லெ 0BB20BC6 லே 0BB20BC7 லை 0BB20BC8 லொ 0BB20BCA லோ 0BB20BCB லௌ 0BB20BCC வ் 0BB50BCD வ 0BB5  வா 0BB50BBE வி 0BB50BBF வீ 0BB50BC0 வு 0BB50BC1 வூ 0BB50BC2 வெ 0BB50BC6 வே 0BB50BC7 வை 0BB50BC8 வொ 0BB50BCA வோ 0BB50BCB வௌ 0BB50BCC ழ் 0BB40BCD ழ 0BB4  ழா 0BB40BBE ழி 0BB40BBF ழீ 0BB40BC0 ழு 0BB40BC1 ழூ 0BB40BC2 ழெ 0BB40BC6 ழே 0BB40BC7 ழை 0BB40BC8 ழொ 0BB40BCA ழோ 0BB40BCB ழௌ 0BB40BCC ள் 0BB30BCD ள 0BB3  ளா 0BB30BBE ளி 0BB30BBF ளீ 0BB30BC0 ளு 0BB30BC1 ளூ 0BB30BC2 ளெ 0BB30BC6 ளே 0BB30BC7 ளை 0BB30BC8 ளொ 0BB30BCA ளோ 0BB30BCB ளௌ 0BB30BCC ற் 0BB10BCD ற 0BB1  றா 0BB10BBE றி 0BB10BBF றீ 0BB10BC0 று 0BB10BC1 றூ 0BB10BC2 றெ 0BB10BC6 றே 0BB10BC7 றை 0BB10BC8 றொ 0BB10BCA றோ 0BB10BCB றௌ 0BB10BCC ன் 0BA90BCD ன 0BA9  னா 0BA90BBE னி 0BA90BBF னீ 0BA90BC0 னு 0BA90BC1 னூ 0BA90BC2 னெ 0BA90BC6 னே 0BA90BC7 னை 0BA90BC8 னொ 0BA90BCA னோ 0BA90BCB னௌ 0BA90BCC ஶ் 0BB60BCD ஶ 0BB6  ஶா 0BB60BBE ஶி 0BB60BBF ஶீ 0BB60BC0 ஶு 0BB60BC1 ஶூ 0BB60BC2 ஶெ 0BB60BC6 ஶே 0BB60BC7 ஶை 0BB60BC8 ஶொ 0BB60BCA ஶோ 0BB60BCB ஶௌ 0BB60BCC ஜ் 0B9C0BCD ஜ 0B9C  ஜா 0B9C0BBE ஜி 0B9C0BBF ஜீ 0B9C0BC0 ஜு 0B9C0BC1 ஜூ 0B9C0BC2 ஜெ 0B9C0BC6 ஜே 0B9C0BC7 ஜை 0B9C0BC8 ஜொ 0B9C0BCA ஜோ 0B9C0BCB ஜௌ 0B9C0BCC ஷ் 0BB70BCD ஷ 0BB7  ஷா 0BB70BBE ஷி 0BB70BBF ஷீ 0BB70BC0 ஷு 0BB70BC1 ஷூ 0BB70BC2 ஷெ 0BB70BC6 ஷே 0BB70BC7 ஷை 0BB70BC8 ஷொ 0BB70BCA ஷோ 0BB70BCB ஷௌ 0BB70BCC ஸ் 0BB80BCD ஸ 0BB8  ஸா 0BB80BBE ஸி 0BB80BBF ஸீ 0BB80BC0 ஸு 0BB80BC1 ஸூ 0BB80BC2 ஸெ 0BB80BC6 ஸே 0BB80BC7 ஸை 0BB80BC8 ஸொ 0BB80BCA ஸோ 0BB80BCB ஸௌ 0BB80BCC ஹ் 0BB90BCD ஹ 0BB9  ஹா 0BB90BBE ஹி 0BB90BBF ஹீ 0BB90BC0 ஹு 0BB90BC1 ஹூ 0BB90BC2 ஹெ 0BB90BC6 ஹே 0BB90BC7 ஹை 0BB90BC8 ஹொ 0BB90BCA ஹோ 0BB90BCB ஹௌ 0BB90BCC <tr> <th title="TAMIL CONSONANT KSS" align="center">க்ஷ் 0B950BCD0BB70BCD</span></th> <td title="TAMIL SYLLABLE KSSA" align="center">க்ஷ 0B950BCD0BB7 </span></td> <td title="TAMIL SYLLABLE KSSAA" align="center">க்ஷா 0B950BCD0BB70BBE</span></td> <td title="TAMIL SYLLABLE KSSI" align="center">க்ஷி 0B950BCD 0BB7 0BBF</span></td> <td title="TAMIL SYLLABLE KSSII" align="center">க்ஷீ 0B950BCD 0BB7 0BC0</span></td> <td title="TAMIL SYLLABLE KSSU" align="center">க்ஷு 0B950BCD0BB70BC1</span></td> <td title="TAMIL SYLLABLE KSSUU" align="center">க்ஷூ 0B950BCD0BB70BC2</span></td> <td title="TAMIL SYLLABLE KSSE" align="center">க்ஷெ 0B950BCD0BB70BC6</span></td> <td title="TAMIL SYLLABLE KSSEE" align="center">க்ஷே 0B950BCD0BB70BC7</span></td> <td title="TAMIL SYLLABLE KSSAI" align="center">க்ஷை 0B950BCD0BB70BC8</span></td> <td title="TAMIL SYLLABLE KSSO" align="center">ஷொ 0B950BCD0BB70BCA</span></td> <td title="TAMIL SYLLABLE KSSOO" align="center">க்ஷோ 0B950BCD0BB70BCB</span></td> <td title="TAMIL SYLLABLE KSSAU" align="center">ஷௌ 0B950BCD0BB70BCC</span></td> </tr> </table> மேலும் காண்க தமிழ் தட்டச்சு பண்டைத் தமிழர் அளவை முறைகள் கிரந்த எழுத்துமுறை பாரதி புடையெழுத்து தமிழ் எழுத்துகள் (தமிழ் விக்கி நூல்) குறிப்புகள் வெளி இணைப்புகள் ஆல்தமிழ் தட்டச்சு தமிழை தமிழால் எழுத கிளிக்கெழுதி w3 Tamil Web Keyboard Information about Tamil Tamil Alfabet table learntamil பிராமிய எழுத்துமுறைகள் தமிழ் எழுத்துமுறை
1472
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81
எண்ணுரு
எண்ணுரு அல்லது எண்குறி (Numeral) என்பது, ஒரு எண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சொல், குறியீடு அல்லது குறியீடுகளின் சேர்க்கையாகும். "1, 2, 3, 4, 5,..." என் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணுருக்கள் அராபிய எண்ணுருக்கள் எனப்படுகின்றன. இவை "I, II, III, IV, V, ..." என எழுதப்படும் ரோம எண்ணுருக்களிலிருந்து வேறுபட்டிருப்பினும், இரண்டும் ஒரே எண்களையே குறிக்கின்றன. இதேபோல சொற்களும் எண்ணுருக்களாகலாம். மேலே குறிப்பிட்ட எண்களை, "ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,...." எனச் சொற்களைப் பயன்படுத்தியும் இலகுவாக குறித்துக் காட்டலாம். கணனிச் சமூகத்துக்குப் பழக்கமான பதினறும எண்ணுரு முறைமையில் "A" தொடக்கம் "F" வரையிலான எழுத்துக்கள் எண்ணுருக்களை உருவாக்கப் பொதுவாகப் பயன்படுகின்றன. இவை, அளவு (முதலெண்) , வரிசையெண், அதிர்வெண் (ஒருமுறை, இருமுறை) மற்றும் பகுதி (பின்னம்) போன்ற உறவுகளை வெளிப்படுத்தலாம். சில வெவ்வேறுவகை எண்ணுருக்கள் பின்வருமாறு: அராபிய எண்ணுருக்கள் ரோம எண்ணுருக்கள் சீன எண்ணுருக்கள் கிரேக்க எண்ணுருக்கள் ஹீப்ரூ எண்ணுருக்கள் தாய் எண்ணுருக்கள் பபிலோனிய எண்ணுருக்கள் மாயர் எண்ணுருக்கள் இவற்றையும் பார்க்கவும் எண்ணுரு முறைமை கணித்தல் தசமங்கள் பின்னம் நூற்றுவீதம் கணிதக் குறியீடுகள் அலகு மேற்கோள்கள் எண்ணுருக்கள்
1473
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இந்து-அரபு எண்ணுருக்கள்
அராபிய எண்ணுரு முறைமை அல்லது இந்து-அரபு எண்ணுரு முறைமை (Hindu–Arabic numeral system) எனப் பொதுவாக அழைக்கப்படும் எண்ணுரு முறைமையே, எண்களைக் குறிக்க மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் குறியீட்டுமுறை. அராபிய எண்ணுரு முறைமை இடஒழுங்கிலமைந்த, அடி 10 ஐக் கொண்ட ஒரு எண்ணுரு முறைமையாகும். இதில் 10 இலக்கங்களைக் குறிக்க 10 வெவ்வேறான glyphs உள்ளன. வலது கோடியிலமைந்த இலக்கமே ஆகக்கூடிய பெறுமானத்தைக் கொண்டது. அராபிய எண்ணுரு முறைமை ஒரு பதின்மக் குறியையும் (பொதுவாக ஒரு பதின்மப் புள்ளி அல்லது ஒரு பதின்மக் காற்புள்ளி) பயன்படுத்துகின்றது. இது ஒற்றைத் தானத்தையும், பத்திலொன்றாம் தானத்தையும் பிரிக்கின்றது. இதைவிடப் பதின்மத் தானங்கள் திரும்பத் திரும்ப முடிவிலியாகத் தொடர்வதைக் குறிக்கும் ஒரு குறியீடும் பயன்படுகின்றது. இவ்வாறாக வளர்ச்சியடைந்த இன்றைய அராபிய எண்ணுரு முறைமை எந்தவொரு விகிதமுறு எண்ணையும், 13 glyph களைப் (பத்து இலக்கங்கள், தசமப் பிரிப்பான், தொகுப்புக்கோடு, எதிரெண்ணைக் குறிக்கும் இடைக்கோடு) பயன்படுத்திக், குறியீடாகத் தரவல்லது. அராபிய எண்ணுரு முறைமை பலவகையான glyph தொகுதிகளைப் பயன்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதிகளை இரண்டு முக்கியக் குடும்பங்களாகப் பிரிக்கலாம். ஒன்று மேற்கு அராபிய எண்ணுருக்கள், மற்றது கிழக்கு அராபிய எண்ணுருக்கள். இன்றைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பகுதியில், ஆரம்பத்தில் வளர்ச்சி பெற்ற, கிழக்கு அராபிய எண்ணுருக்கள் "அரபு-இந்திக்" என்னும் பெயரில் கீழேயுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. கிழக்கு அரபு-இந்திக் என்பது, கிழக்கு அராபிய எண்ணுருக்களின் ஒரு வகையாகும். ஸ்பெயின், மக்ரெப் போன்ற இடங்களில் வளர்ச்சியடைந்த மேற்கு அராபிய எண்ணுருக்கள், படத்தில் "ஐரோப்பிய" என்று காட்டப்பட்டுள்ளன. சொற்பிறப்பியல் இந்து-அராபிய எண்ணுருக்கள் முதலில் இந்தியக் கணிதவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த எண்ணிருக்களை ”இந்து எண்ணுருக்கள்” எனப் பெர்சிய-அராபியக் கணிதவியலாளர்கள் அழைத்தனர். பின்னர் அராபிய வணிகர்கள் மூலம் மேற்கு நாடுகளுக்கு இவை பரவியதால் ஐரோப்பாவில் “அராபிய எண்ணுருக்கள்” என அழைக்கப்பட்டது. வரலாறு அராபிய எண்ணுரு முறைமை, கணிதத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. இதன் தோற்றம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பின்வருவனவும் அவற்றுள் அடங்கும். இது சீனாவில் தோற்றம் பெற்றது. இது அல் கவாரிஸ்மிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இது மத்திய கிழக்கில் தோன்றியது. இந்திய எண்ணுரு முறைமையின் மேற்கு நோக்கிய பரவலே அராபிய எண்ணுரு. மேற்கண்ட ஒவ்வொரு கோட்பாட்டிலும் வெவ்வேறு அளவு உண்மையிருந்தாலும், இக் கோட்பாடுகளை ஆதரிப்பவர்கள் தங்கள் தங்கள் கோட்பாடுகளுக்குச் சாதகமானவற்றை மட்டும் பெருப்பித்துக் காட்டுகிறார்கள். எனினும், அராபிய எண்ணுரு முறைமையில் இந்தியக் கணிதத்தின் செல்வாக்கு இருந்ததைப் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். மேற்கோள்கள் மேலும் பார்க்க மாயர் எண்ணுருக்கள் ரோம எண்ணுருக்கள் பபிலோனிய எண்ணுருக்கள் எண்ணுருக்கள் அடிப்படைக் கணிதம்
1477
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பாபிலோனிய எண்ணுருக்கள்
பாபிலோனிய எண்குறிகள் (Babylonian numerals) அல்லது பபிலோனிய எண்ணுருக்கள் ஆப்புவடிவத்தில் ஆப்புநுனி எழுத்துளியால் மென்மையாக பொறித்து களிமண் இலச்சினைகள் செய்து அவற்றை வெயிலில் உலர்த்தி நிலையான ஆவணங்களாக உருவாகீயன ஆகும். வானியல் நோக்கீடுகளிலும் கணக்கீடுகளிலும் பெற்றிருந்த வல்லமைக்காக பாராட்டப்படும் பாபிலோனியர்கள், (மணிச்சட்ட உதவியால்) அறுபதின்ம இலக்க எண்குறிகளைப் பயன்படுத்தினர். இந்த எண்மானம் சுமேரிய அல்லது எபிலாவைட்டு நாகரிகங்களில் இருந்து பெறப்பட்ட்தாக கருதப்படுகிறது. என்றாலும் இந்த இரு முந்தைய நாகரிக எண்குறிகளும் இலக்கமுறை அடிமானம் எதையும் அலகுகளாக, அதாவது பதின்ம்ம், இருமம் போன்ற அடிமானம் எதையும், பெற்றிருக்கவில்லை. தோற்றம் இந்த எண்குறி முறை கிமு 2000 கால அளவில் தோன்றியுள்ளது; இதன் கட்டமைப்பு செமித்திய மொழிகளின் அகரமுதலி எண்குறிகளைப் போல அமைந்துள்லதே தவிர சுமேரிய அகரமுதலி எண்களைப் போல அமையவில்லை. என்றாலும், 60 என்ற எண்ணுக்கான குறி சுமேரியச் சிறப்புக் குறியில் இருந்து (இதற்கு இரண்டு செமித்தியக் குறிகள் உள்ளன) பெறப்பட்டுள்ளது attests to a relation with the Sumerian system. எண்குறி முறைமை எண் உருக்கள் பாபிலோனிய முறை தான் முதலில் தோன்றிய இலக்க எண்குறி முறையாகும் எனக் கருதப்படுகிறது. இம்முறையில் குறிப்பிட்ட இலக்கத்தின் மதிப்பு, அது அமைந்த எண்ணின் எண்மதிப்போடு அதன் இருப்பையும் சார்ந்துள்ளது. இது மிகவும் அரிய வளர்ச்சியாகும். ஏனெனில், பத்து, நூறு, ஆயிரம் போன்ற ஒவ்வொரு அடிமான அடுக்குகளுக்குத் தனிக் குறியுள்ள இலக்க முறையற்ற எண்மானங்களில் கணக்கீடுகள் செய்வது அரிதாகும். இந்த எண்மான முறையில் 59 சுழியல்லாத தனி எண்களைக் குறிப்பதற்காக, என்பதை ஒற்றை எண்களைக் குறிக்கவும் என்பதைப் பத்துகளைக் குறிக்கவும் என இரு குறியீடுகள் மட்டும் பயன்பட்டுள்ளன. இந்தக் குறியீடுகளையும் அவற்றின் இட மதிப்புகளையும் இணைத்து (உரோம எண்குறி முறைபோல) ஓர் எண்ணை உருவாக்கியுள்ளனர்; எடுத்துகாட்டாக, 23 என்ற எண்ணைக் குறிக்க, என்பதைப் பயன்படுத்தியுள்ளனர் (கீழுள்ள பட்டியலைப் பார்க்கவும்). தற்காலச் சுழியைக் குறிக்க ஒரு வெற்று இடைவெளியைப் பயன்படுத்தியுள்ளனர். பாபிலோனியர்கள் பின்னர் சுழியைக் குறிக்க இந்த வெற்று இடைவெளிக்கு மாற்றாக,புதிய குறியை உருவாக்கியுள்ளனர். . பாபிலோனிய எண்மானத்தில் தற்காலப் பதின்மப் புள்ளியைப் போன்ற பகவுப் (பின்னப்) புள்ளி இல்லாததால், ஒற்றை என்களின் இட மதிப்பைக் குறிப்பிட்ட சூழலைச் சார்ந்தே உய்த்தறிதல் வேண்டும்: என்பது 23 அல்லது 23×60 அல்லது 23×60×60 அல்லது 23/60, போன்றவற்றைக் குறிக்கலாம். பாபிலோனிய முறை எண்களைக் குறிக்க அகப் பதின்மத்தைப் பயன்படுத்தியுள்ளன; என்றாலும், இது பதின்மான, அறுமானக் கலப்புப் பகுப்பு முறையைப் பின்பற்றவில்லை. பத்து அடிமானம் பெரிய எண்களைக் குறிக்கும் தேவைக்கான ஏந்தாக மட்டுமே பயன்பட்டுள்ளது. இதன் பதின்ம எண்சரம்தெளிவாக அறுபதின்ம அடிமான முறையையே இடமதிப்பாகப் பெற்றிருந்தது. இந்த எண்சரக் கணக்கீடுகளும் அறுபதின்ம முறை சார்ந்தே அமைந்தன. இந்த அறுபதின்ம முறை கோணங்களை அளக்க இன்றும் பயன்பாட்டில் உள்ளது. வட்டத்துக்கு 360 கோணப் பாகைகளையும் சமபக்க முக்கோணத்துக்கு 60 கோணப் பாகைகளையும் முக்கோண அளவியலில் பாகை, பாகைத்துளி, பாகைநொடிகளையும் பயன்படுத்துகிறோம். காலம் அளக்கவும் இம்முறை பயன்படுகிறது. என்றாலும், இவையிரண்டும் கலப்புப் பகுப்பு முறையையே பின்பற்றுகின்றன என்பது குறிப்பிட்த்தக்கது. மேலும் காண்க பாபிலோன் பாபிலோனியா சுழியின் வரலாறு எண்குறி முறைமை அராபிய எண்ணுருக்கள் ஆர்மீனிய எண்ணுருக்கள் சீன எண்குறிகள் கிரேக்க எண்குறிகள் எபிரேய எண்ணுருக்கள் இந்திய எண்குறிகள் மாயர் எண்ணுருக்கள் உரோம எண்குறிகள் குறிப்புகள் நூல்தொகை வெளி இணைப்புகள் Babylonian numerals Cuneiform numbers Babylonian Mathematics High resolution photographs, descriptions, and analysis of the root(2) tablet (YBC 7289) from the Yale Babylonian Collection Photograph, illustration, and description of the root(2) tablet from the Yale Babylonian Collection Babylonian Numerals by Michael Schreiber, Wolfram Demonstrations Project. CESCNC - a handy and easy-to use numeral converter பாபிலோனியக் கணிதவியல் செந்தரமற்ற இலக்க எண்குறி முறைமைகள் எண்குறி முறைமைகள் எண்ணுருக்கள்
1479
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
எழுத்து முறைமைகளின் பட்டியல்
வெவ்வேறுவகை எழுத்து முறைமைகளின் விபரங்களுக்கு எழுத்து முறைமை கட்டுரையைப் பார்க்கவும். வித்தியாசமாக இருப்பின் மொழியின் பெயர், அதை எழுதப் பயன்பட்ட எழுத்தின் பெயரைத் தொடர்ந்து தரப்பட்டுள்ளது. Logographic எழுத்து முறைமை Hieroglypics - பண்டை எகிப்திய எழுத்து முறைமை ஹான்சி (சீனம்) டொங்பா (நக்சி) வியட்நாமிய வரிவடிவம் (நொம், வழக்கிழந்தது) யுர்ச்சென் கன்ஜி (ஜப்பானியம்) கிதான் லீனியர் B மாயன் தங்குட் அசையெழுத்துகள் (Syllabaries) Carrier (டக்கேல்) செல்டிபேரியன் செரோக்கி கிரீ சைப்பிரோய்ட் கே'எஸ் (Ge'ez), எதியோப்பிக் என்றும் அழைக்கப்படும். ஹிரகனா (ஜப்பானியம்) ஐபீரியன் இனுக்டிட்டுட் கட்டக்கானா (ஜப்பானியம்) பேலே(Kpelle) நிஜூக்கா (Ndjuká) ஒஜிப்வே வை யி ஒலியன் எழுத்து (Alphabets) ஆர்மீனியன் அவெஸ்தான் பஸ்ஸா பீதா குக்ஜு (அல்பேனியன்) கொப்ட்டிக் சிரில்லிக் எல்பாசன் (அல்பேனியன்) எட்ரஸ்கன் பிரேஸர் அசம்டாவ்ருலி (ஜோர்ஜியன்) கிளகோலித்திக் (பழைய சேர்ச் சல்வோனிக்) கோதிக் கிரேக்கம் ஹங்கேரியன் ரூனெஸ் அனைத்துலக Phonetic Alphabet (IPA) மன்ச்சு ம்கேட்ருல் (ஜோர்ஜியன்) மங்கோலியன் லத்தீன்/ரோமன் என்'கோ (மலின்கே, பம்பாரா, டயுலா) நுஸ்கா-குகுரி (ஜோர்ஜியன்) பழைய சேர்ச் சல்வோனிக் ஓகம் (செல்ட்டிக் மொழி, பிக்ட்டிஷ்) பழைய இத்தாலிக் alphabets (இலத்தீன்) பழைய பெர்மிக், அல்லது அபுர் (கோமி) ஒர்கோன் (Turkic runes) பொல்லார்ட் மியாவோ (மியாவோ) ரூனிக் alphabet (ஜெர்மானிக் மொழி) சந்தாலி, அல்லது ஒல்' செமெட் சோமாலி alphabet தாய் லூவே (லூவே)(Lue) தானா (டிவேஹி) Abjads டைவ்ஸ் அகுரு (டிவேஹி) அராமைக் அரபி மத்திய பார்சி ஹீப்ரூ பார்த்தியன் (மத்திய பார்சி) நபத்தீயன் அரிச்சுவடி சபீயன் அரிச்சுவடி ப்சால்டர் (மத்திய பார்சி) போனிசியன் சிரியக் தென் அராபியன் (சபைக், கட்டாபானிக், ஹிம்யாரிட்டிக் மற்றும் ஹத்ராமௌட்டிக்) சமாரித்தான் உகாரித்திக் திபினாக் (தமாஷெக்) Abugidas அஹோம் பாலி பட்டக் வங்காளம் பிராமி பேபயின் (தகாலொக்) பர்மிய (பர்மிய மொழி, கரென் மொழி, மொன் சம் டெஹொங் (டெஹொங் டாய்) தேவநாகரி (ஹிந்தி, சமஸ்கிருதம், மராட்டி, நேபாளி) குஜராத்தி (குஜராத்தி, கச்சி) குர்முகி (பஞ்சாபி) ஹனூனோ'ஓ பஹாவ் ஹ்மொங் (ஹ்மொங்) ஜாவானியன் கன்னடம் (கன்னடம், துளு) கரோஷ்ட்டி அரிச்சுவடி (காந்தாரி, சமஸ்கிருதம்) கெமர் லாவோ லெப்ச்சா லிம்பு லொண்டாராவும் மகசாரும் அரிச்சுவடி புகிஸ், மகசார், மற்றும் மண்டர் மலையாளம் மோடி (மராட்டி) ஒரியா பக்ஸ்-பா (மங்கோலியம் ரஞ்சனா (நேவாரி) ககங்கா (ரேஜாங்) சிங்களம் சோராங் சொம்பெங் சௌராஷ்டிரம் சொயோம்போ சிலோட்டி நாக்ரி தகாலொக் தக்பன்வா தாய் டாம் தமிழ் தெலுங்கு தாய் திபேத்தியன் தொச்சாரியன் வராங் க்ஷிதி புரிந்துகொள்ளப்படாத எழுத்து முறைமை (Undeciphered) இந்த எழுத்து முறைகள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. கோடெக்ஸ் செராபினியனஸ் எட்ரஸ்க்கன் முதல்நிலை-எலமைட் சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம் பழைய எலமைட் லீனியர் A பைஸ்ட்டோஸ் தட்டு மெரோய்ட்டிக் வொய்னிச் Manuscript ரொங்கோ ரொங்கோ வின்கா (பழைய ஐரோப்பிய மொழி) மூலம் Omniglot - எழுத்து முறைமைகளுக்கான வழிகாட்டி எண்கள்
1480
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
சிந்துவெளி வரிவடிவம்
சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம் என்பது, சிந்துவெளி நாகரிக அழிபாடுகளிடையே கிடைத்த ஆயிரக்கணக்கான முத்திரை குத்துவதற்கான அச்சுக்களிலும், அவற்றின்மூலம் முத்திரை குத்தப்பட்ட பல களிமண் வில்லைகளிலும் காணப்படுகின்ற வரிவடிவங்கள் ஆகும். இவை அக்காலத்தில் சிந்துவெளி மக்களால் பேசப்பட்ட மொழிக்கான வரிவடிவங்களாகக் கருதப்படுகின்றன. கிடைத்த சான்றுகளின்படி இவ்வரிவடிவங்கள் கி.மு 2,500 அளவில் பயன்பாட்டில் இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. சுமார் 450 வெவ்வேறான குறியீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ் வரிவடிவங்கள் இன்னும் வாசித்துப் புரிந்துகொள்ளப்படவில்லை. 1920ல் இவ் வரிவடிவங்கள் வெளிக்கொணரப்பட்ட பின்னர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள அறிஞர்கள் பலர் இவ்வரிவடிவங்களை வாசித்தறிய முயன்றுவருகின்றார்கள். எனினும் 1960 களுக்கு முன்னர் இவ்வாராய்ச்சி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது. குறியீடுகள் குறியீடுகளின் தொடக்ககால எடுத்துக்காட்டுக்கள் தொடக்ககால அரப்பா, சிந்துவெளி நாகரிகச் சூழலில் கிடைக்கின்றன. இவை கி.மு 35 நூற்றாண்டுகளுக்கு முந்தியவையாக இருக்கலாம். கி.மு 2600 முதல் கி.மு 1900க்கு இடைப்பட்ட முதிர் அரப்பாக் காலத்தில் தட்டையான சதுரவடிவ முத்திரைகளிலும் கருவிகள், அணிகள், மட்பாண்டங்கள் போன்ற பிற பொருட்களிலும், இவ்வாறான குறியீடுகளின் தொடர்கள் காணப்படுகின்றன. இக்குறியீடுகள் வெட்டுதல், செதுக்குதல், பூசுதல், அழுத்திப் பதித்தல் போன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்திக் குறித்த பொருட்களில் பொறிக்கப்பட்டுள்ளன. குறியீடுகள் பொறிக்கப்பட்ட பொருட்களும், மாவுக்கல், எலும்பு, ஓடுகள், சுடுமண், மணற்கல், செப்பு, வெள்ளி, பொன் போன்ற பல வகைகளாகக் காணப்படுகின்றன. பிந்திய அரப்பாக்காலம் கி.மு 1900க்குப் பின்னர், அதாவது முதிர் அரப்பாக் காலத்தின் கடைசிக் கட்டத்துக்குப் பின்னர், குறியீடுகளின் முறைப்படியான பயன்பாடு முடிவுற்றதாகக் காணப்படுகிறது. சில அரப்பாக் குறியீடுகள், கி.மு 1100 (இந்திய இரும்புக் காலத்தின் தொடக்கம்) வரை காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குசராத்தில் உள்ள வெட் துவாரகைக்கு அருகில் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூன்றுதலை விலங்குடன் கூடிய பிற்காலச் சிந்துவெளி முத்திரைகளை வெளிப்படுத்தியுள்ளன. பிந்திய அரப்பாக் குறியீடுகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், மினுக்கமுள்ள சிவப்புப்பாண்டக் கிண்ணங்கள், தட்டுகள், கால் பொருத்திய கிண்ணம், துளைகள் உள்ள சாடிகள் போன்ற கி.மு 16 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஏராளமான மட்பாண்டப் பொருட்கள் துவாரகை, ரங்பூர், பிரபாசு ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. வெப்பவொளிர்வுக் காலக்கணிப்பு வெட் துவாரகையின் மட்பாண்டங்கள் கி.மு 1528ஐச் சேர்ந்தவையாகக் காட்டுகின்றன. இது, அரப்பாக் குறியீடுகள் கி.மு 1500 வரையாவது பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றாகக் கொள்ளப்படுகிறது. சிந்துவெளி வரிவடிவத்தின் தன்மை கிடைக்ககூடிய சான்றுகளின்படி இவ்வரிவடிவத்தின் தன்மைகள் குறித்துச் சில தகவல்கள் தெரியவந்துள்ளன. இது வலமிருந்து இடமாக எழுதப்பட்டது. இது படஎழுத்து வகையைச் சார்ந்தது. வாசித்தறிய இயலுமை குறித்த கருத்துக்கள் ஒரு புறத்தில் பல ஆய்வாளர்கள் சிந்துவெளிக் குறியீடுகளை வாசித்தறிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கும்போது, மைக்கேல் விட்செல், இசுட்டீவ் ஃபாமர் ஆகியோர் இக்குறியீடுகள் மொழிகளுக்கானவை அல்ல என்றும் இவை குடும்பங்கள், இனக்குழுக்கள், கடவுள்கள், மதக் கருத்துருக்கள் போன்றவற்றுக்கான குறியீடுகளே என்றும் ஒரு எடுகோளை முன்வைத்தனர். 2004 ஆம் ஆண்டில் தாம் எழுதிய கட்டுரையொன்றில், ஃபாமர், இசுப்புரோட், விட்செல் ஆகியோர் இக்குறியீடுகள் மொழிக்கானவை அல்ல என்ற தமது கருத்தை நிறுவப் பல வாதங்களை முன்வைத்தனர். பொறிப்புக்கள் மிகமிகச் சுருக்கமாக இருத்தல், அரிதாகக் காணப்படும் குறியீடுகள் பெருமளவில் இருத்தல், மொழிகளுக்குப் பொதுவான, குறியீடுகள் திரும்ப வருதல் ஒழுங்கற்ற முறையில் அமையும் தன்மை குறைவாக இருத்தல் என்பன இவர்களது வாதங்களுள் முக்கியமானவை. 2005 ஆம் ஆண்டில், விட்செல் முதலானோரின் கருத்தை மறுத்த அஸ்கோ பார்ப்போலா, முன் குறித்த வாதங்கள் இலகுவாகப் பிழையென நிறுவப்படக்கூடியவை என்றார். சீன மொழியில், பெருமளவில் அரிதாக வரும் குறியீடுகள் இருப்பதை எடுத்துக்காட்டிய பர்ப்போலா, தொடக்ககால படவெழுத்து முறையில் எழுதப்பட்ட குறைந்த நீளப் பொறிப்புக்களில் குறியீடுகள் திரும்ப வருவதற்கான காரணங்கள் கிடையாது என்றார். 2007ம் ஆண்டில் விரிவுரை ஒன்றில் மீண்டும் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், ஃபாமர் முதலானோரின் முக்கியமான 10 வாதங்கள் ஒவ்வொன்றுக்கும் பதிலளித்தார். ஒரு எழுத்துமுறை, சில குறியீடுகளை ஒலிக்கக்கூடிய வகையில் "ரீபசு" (rebus) கோட்பாட்டைப் பயன்படுத்துமானால், சிறு பெயர்ச்சொல் தொடர்களும், முழுமையற்ற வாக்கியங்களும்கூட, முழுமையான ஒரு மொழிக்குரிய எழுத்து முறையாகக் கொள்ளப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். வாசித்தறிவதற்கான முயற்சிகள் இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சவாலாக அமைந்துள்ள விடயங்களுள் பின்வருவனவும் அடங்கும். இவ் வரிவடிவங்களைப் பயன்படுத்திய மொழியைப்பற்றி எதுவும் தெரியாது. கிடைத்த முத்திரைகளில் எழுதப்பட்டிருப்பவை பெரும்பாலும் 5 அல்லது 6 குறியீடுகளைக் கொண்டவையாகவே உள்ளன. நீளமான விவரணங்கள் எதுவும் இல்லை. அறியப்பட்ட வேறு வரிவடிவங்களைக் கொண்ட இருமொழிக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பேசப்பட்ட மொழி இந்த வரிவடிவம் தொடர்பான சர்ச்சையில் முக்கிய இடம்பெறுவது, இது எத்தகைய மொழிக்காகப் பயன்பட்டது என்பது தொடர்பிலேயாகும். பொதுவாக இரண்டு கொள்கைகள் ஆய்வாளர்களிடையே நிலவின. இது முதல்நிலைச் சமஸ்கிருத மொழிக்கானது (ப்ராகிருதம்) என்பது ஒரு கொள்கை. இல்லை இது தமிழிய மொழிக்கான (தமிழ்) எழுத்து வடிவமே யென்பது இரண்டாவது கொள்கை. தமிழிய மொழிக் கருதுகோள் உருசிய அறிஞரான யூரி நோரோசோவ், சிந்துவெளிக் குறியீடுகள் படவெழுத்து முறைக்கானவை என்றும், கணினிப் பகுப்பாய்வுகளின்படி, இதற்கு அடிப்படையான மொழி ஒட்டுநிலைத் தமிழிய மொழியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கருத்து வெளியிட்டார். இவருடைய கருத்துக்கு முன்பே என்றி ஏராசு (Henry Heras) முந்து தமிழிய மொழி என்ற எடுகோளின் அடிப்படையில் சில குறியீடுகளுக்கான தனது வாசிப்புக்களை வெளியிட்டிருந்தார். பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் ஆஸ்கோ பர்ப்போலாவும், சிந்துவெளி எழுத்துக்களும், அரப்பா மொழியும் பெரும்பாலும் தமிழிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தாகவே இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். 1960'கள் முதல் 1980'கள் வரை இவரது தலைமையில் ஒரு பின்லாந்துக் குழுவினர் கணினிப் பகுப்பாய்வுகளின் மூலம் சிந்துவெளிக் குறியீடுகளை ஆய்வு செய்தனர். அரப்பா மொழி முந்து தமிழ் மொழி (கற்பனை மொழி) என்ற எடுகோளின் அடிப்படையில் பல குறிகளுக்கான தமது வாசிப்பை அவர்கள் முன்வைத்தனர். இவர்களது சில வாசிப்புக்கள் ஏராசு, நோரோசோவ் ஆகியோரது வாசிப்புக்களுடன் பொருந்தின ("மீன்" குறியீட்டைத் தமிழ்ச் சொல்லான "மீன்" என்னும் சொல்லாகவே வாசித்தமை), வேறு சில முரண்பட்டன. 1994 வரையான பர்ப்போலாவின் ஆய்வுகளின் விரிவான விளக்கங்கள் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்தறிதல் (Deciphering the Indus Script) என்னும் அவரது நூலில் தரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அண்மையில், சிந்துவெளிக் குறியீடுகள் எனக் கருதப்படும் குறியீடுகளுடன் கூடிய புதியகற்காலக் (2 ஆயிரவாண்டுத் தொடக்கம். அரப்பாவின் வீழ்ச்சிக்கு முந்திய காலம்) கற்கோடரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தமிழிய மொழிக் கருதுகோளுக்கு வலிமை சேர்ப்பதாகச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். 2007 மே மாதத்தில், தமிழ்நாடு தொல்லியல் பகுதியால் பூம்புகாருக்கு அண்மையில் உள்ள மேலப்பெரும்பள்ளம் என்னும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில், அம்புத்தலைக் குறியீடுகளுடன்கூடிய பானைகள் கிடைத்தன. இந்தக் குறிகள், 1920ல் மொகெஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளிலுள்ள குறியீடுகளுடன் ஒத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற ஆராய்ச்சி யாளர்கள் சமஸ்கிருதம், கி.மு 1500 க்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களுடனேயே கொண்டுவரப்பட்டதென்றும், கி.மு 2500 க்கு முற்பட்ட சிந்துவெளி வரிவடிவங்களோடு அதற்குத் தொடர்பு இருக்கமுடியாது என்றும் வாதிக்கிறார்கள். அதற்கான தொல்லியல் சான்றுகளையும் நிறுவி உள்ளனர். அத்துடன் ஆரியப் பண்பாட்டை விளக்குவதாகக் கருதப்படும் மிகப் பழைய நூலான ரிக் வேதம் நூறுவீதக் கிராமப் பண்பாட்டுக்குரியது என்றும் சிந்துவெளிப் பண்பாடு போன்ற நகரப் பண்பாடு ரிக் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆரியப் பண்பாட்டின் இன்னொரு அம்சமான குதிரை, சிந்துவெளி முத்திரைகளிற் சித்தரிக்கப்படாமையும் அவர்களுடைய சான்றுகளில் ஒன்றாகும். சிந்து எழுத்தாய்வு, தொல்லியல் ஆய்வாளர் நா. ப. பூரணச்சந்திர ஜீவா என்பவர் 2004 இல் வெளியிட்ட "சிந்து வெளியில் முந்து தமிழ்" என்ற நூலில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு உரியவர்கள் (தமிழே ள்) என்று சான்றுகளுடன் விளக்குகிறார்.. அந்நூலில் அனைத்து எழுத்துகளும் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. கடந்த 25 வருட ஆய்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு தயாரிக்கபட்டது அந்நூல். இரா. மதிவாணன் என்னும் தமிழறிஞர் சிந்துவெளி எழுத்துக்கள் அனைத்னைத்தையும் படித்து சிந்துவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே என்று நிறுவியுள்ளார். அதை உலகநாடுகளின் பல மேடைகளிலும் முழங்கியுள்ளார். https://www.youtube.com/embed/kCeVvX-czZw எனும் வலையொளி இணைப்பில் சிந்துவெளி எழுத்துக்களில் உயிர்எழுத்துக்கள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். https://www.youtube.com/embed/UVgWd9zvCV4 எனும் வலையொளி இணைப்பில் சிந்துவெளி எழுத்துக்களில் மெய்எழுத்துக்கள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். சமசுக்கிருத எடுகோள் இந்தியத் தொல்லியலாளர் சிக்காரிபுர ரங்கநாத ராவ், தான் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்துவிட்டதாக அறிவித்தார். சிந்துவெளி நாகரிகத்தின் முழுப்பரப்பிலும் ஒருசீரான எழுத்துக்களே பயன்பாட்டில் இருந்தன என்ற எடுகோளுடன், அவ்வெழுத்துக்களை அவர் பினீசிய எழுத்துக்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் சிந்துவெளிக் குறியீடுகளுக்கு ஒலிப் பெறுமானங்களை வழங்கினார். இவ்வாறான இவரது வாசிப்பு ஒரு சமசுக்கிருத வாசிப்பாக அமைந்தது. 1, 3, 4, 5, 7, 10, 12, 100 போன்ற எண்களுக்கும், ஏக்க, ட்ரா, சத்துஸ், பன்ட்டா, ஹப்தா/சப்தா, தசா, த்வாதசா, சத்தா என சமசுக்கிருத ஒலிப்புக்களாகவே வாசித்தார். பிந்திய அரப்பா வரிவடிவங்களுக்கும், பினீசிய எழுத்துக்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வடிவ ஒற்றுமைகளை எடுத்துக்காட்டிய அவர், பினீசிய எழுத்துக்கள் அரப்பா எழுத்துக்களிலிருந்தே உருவானதாக வாதித்தார். ஜான் ஈ. மிச்சினர் இவ்வாறான சில வாசிப்பு முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ராவினுடைய வாசிப்பு ஓரளவுக்கு முறையான அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும், பெருமளவு தற்சார்பு கொண்டதாகவும், இந்திய-ஐரோப்பிய மொழி அடிப்படையை விளக்குவதில் இது நம்பத்தக்க முயற்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பிந்திய அரப்பா வரிவடிவங்களின் மிகப் பொதுவாகக் காணப்படும் 10 குறிகள், பிராமி எழுத்துக் குறியீடுகளுடன் வடிவ அடிப்படையில் பெருமளவு ஒத்திருப்பது, சிந்துவெளிக் குறியீடுகளுக்கும், பிராமிக்கும் இடையே ஒரு தொடர்ச்சி இருப்பதற்கான சான்றாகக் காட்டப்படுகிறது. எண்களின் பயன்பாட்டிலும் இவ்வாறான தொடர்ச்சிக்கான சான்றுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விரு எழுத்துமுறைகளுக்கு இடையிலான தொடர்புகள் குறித்த தாஸ் என்பவரின் புள்ளியியல் ஆய்வுகளும் மேற்படி தொடர்ச்சிக்கு வலுச்சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது. ஆய்வுகளின் நிலை காலத்துக்குக் காலம் தாங்கள் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்துவிட்டதாகக் கூறுபவர்களும் இருக்கிறார்கள் எனினும், இவையெதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் காண்க சிந்துவெளி முத்திரை மேற்கோள்கள் வெளியிணைப்புகள் Harappa.com Five Cases of 'Dubious Writing' in Indus Inscriptions ஹரப்பா நாகரிகத்தின் மொழி பற்றிய கட்டுரை Indus Script (ancientscripts.com) Indus Script (http://www.shangrilagifts.org/hp/indus.html – Comparison of Indus Valley Harappan 哈拉帕 and Ancient Chinese Jia-Gu-wen 甲骨文 "Bone Script") "Discovery of a century" in Tamil Nadu ("Discovery of a century" in Tamil Nadu ) BBC – 'Earliest writing' found How come we can't decipher the Indus script? (from The Straight Dope) Iravatham Mahadevan, Towards a scientific study of the Indus Script "Studies in Indus Scripts – I" by S. Srikanta Sastri, published in Quarterly Journal of Mythic Society, Vol XXIV, No. 3 "Studies in Indus Scripts – II" by S. Srikanta Sastri, published in Quarterly Journal of Mythic Society, Vol XXIV, No 4 Script Image;Article Collection of essays about the Indus script (Steve Farmer) WIRED.com (WIRED.com) . Rao, Rajesh (2011) "A Rosetta Stone for a Lost Language" - காணொளி சிந்துவெளி நாகரிகம் வாசித்துப் புரிந்துகொள்ளப்படாத குறியீடுகள்
1484
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88
கருந்துளை
கருங்குழி (Black Hole) அல்லது கருந்துளை என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பாரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு (mass) காரணமாக இது முடிவிலியான அடர்த்தியைக் கொண்டுள்ளது. இதனைப் பார்க்க முடியாது எனினும், இதன் நிகழ்வெல்லைக்கு அப்பால் இருக்கும் பொருள்கள் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் அவற்றின் இருப்புப் பற்றி அறிந்துகொள்ள முடியும். எடுத்துக் காட்டாக, ஒரு தொகுதி விண்மீன்கள் கருங்குழியொன்றின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை அவதானிப்பதன் மூலம் கருங்குழியின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் தெரிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருங்குழிகள் அண்ட வெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வளிமங்களைக் கவர்ந்து இழுக்கின்றன. இவ்வளிமங்கள் கருங்குழிகளை வேகமாகச் சுற்றியபடி உட்செல்லும்போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகின்றது. இவற்றை புவியில் உள்ள அல்லது விண்வெளித் தொலைநோக்கிகள் மூலம் உணர முடியும். இவ்வாறான அவதானிப்புகளின் மூலம் கருங்குழிகள் உள்ளன என்னும் பொதுக் கருத்து அறிவியலாளரிடையே ஏற்பட்டுள்ளது. ஒளியைக் கூடத் தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்பு சக்தி கொண்ட பொருள் பற்றிய எண்ணக்கருவொன்றை 1783 ஆம் ஆண்டில் தொழில்சாராப் பிரித்தானிய வானியலாளரான வண. ஜான் மிச்சல் (John Michell) என்பவர் முன்வைத்தார். 1795 இல் பிரெஞ்சு இயற்பியலாளர் பியரே-சைமன் லாப்பிளாஸ் (Pierre-Simon Laplace) என்பவரும் இது போன்ற முடிவொன்றை வெளியிட்டார். இன்று புரிந்து கொள்ளப்பட்டவாறான கருங்குழி பற்றிய விளக்கம் 1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் முன்மொழிந்த பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்தே பெறப்பட்டது. போதிய அளவு பெரிதான ஒரு திணிவு போதிய அளவு சிறிதான வெளிப் பகுதி ஒன்றில் இருக்கும்போது சூழவுள்ள வெளி உட்புறமாக மையத்தை நோக்கி வளைந்து அதனுள் இருக்கும் எந்தப் பொருளும் கதிர்வீச்சும் தப்பி வெளியேறாதபடி தடுத்துவிடும். பொதுச் சார்புத் தத்துவம் கருங்குழியை, மையத்தில் புள்ளி போன்ற சிறப்பொருமையுடன் (singularity) கூடிய வெறுமையான வெளியாகவும், அதன் விளிம்பில் உள்ள நிகழ்வெல்லையாகவும் விபரிக்கும் அதே வேளை, குவாண்டம் பொறிமுறையின் தாக்கங்களைக் கருதும்போது இதன் விளக்கம் மாறுகின்றது. கருங்குழிக்குள் அகப்பட்ட பொருட்களை முடிவின்றி உள்ளே வைத்திராமல், கருங்குழிகள் இவற்றை ஒருவித வெப்பச் சக்தி வடிவில் கசியவிடக்கூடும் என இத் துறையிலான ஆய்வுகள் காட்டுகின்றன. இது ஹோக்கிங் கதிர்வீச்சு எனப்படுகின்றது. வரலாறு ஜான் மிச்சல் எனும் வானியலாளர் 1783-4 ஆம் ஆண்டு வெளியிட்ட தன் கடிதத்தில் ஒளி கூட வெளியேற முடியாத உயர்பொருண்மை வான்பொருள் குறித்த கருத்துப்படிமத்தை முன்மொழிந்தார். இவரது எளிய கணக்கீடுகள் சில கற்பிதங்களைக் கொண்டமைந்தன. இப்பொருளின் அடர்த்தியை சூரியனின் அடர்த்திக்குச் சமமாக அமைவதாகவும் ஒரு விண்மீனின் விட்டம் சூரியனைப் போல 500 மடங்குக்கும் மேலாக அமைகையிலும் அதன் மேற்பரப்பின் தப்பிப்பு அல்லது விடுபடு வேகம் ஒளியின் விறைவினும் கூடும் போதும் இத்தகைய வான்பொருள் உருவாகும் என்றும் கருதினார். இத்தகைய மீப்பொருண்மை, கதிர்வீசாத வான்பொருள்களை, அருகில் அமையும் கட்புலப் பொருள்களின்பால் அவை ஏற்படுத்தும் ஈர்ப்பு விளைவுகளால் அறியலாம் என மிச்சல் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஜான் மிச்சல் கருதியதைப் போல மீப்பொருண்மை விண்மீனின் மேற்பரப்பில் இருந்து வெளியேறும் ஒளிக்கதிர், விண்மீனின் ஈர்ப்பால் வேகம் குறைந்துக்கொண்டே வந்து சுழியாகி மறுபடியும் விண்மீனின் மேற்பரப்பில் வீழும் என்பது இக்கால சார்பியல் கோட்பாட்டின்படி சரியன்று என்பதை நாம் இப்போது அறிவோம். பொதுச் சார்பியல் ஆல்பர்ட் அய்ன்சுட்டீன் 1915இல் பொதுச் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கினார். அதில் ஈர்ப்பு ஒளியின் இயக்கத்தையும் கட்டுபடுத்தும் எனக் கூறினார். சில மாதங்களுக்குள்ளாகவே சுவார்சுசைல்டு அய்ன்சுட்டீனின் புலச் சமன்பாடுகளுக்கான சுவார்சுசைல்டுப் பதின்வெளித் தீர்வைக் கண்டுபிடித்தார். இத்தீர்வு புள்ளிப் பொருண்மை, கோளப் பொருண்மைகளுக்கான எளிய தீர்வை விவரிக்கிறது. சுவார்சுசைல்டுவுக்கு சில மாதங்கள் கழித்து, என்றிக் இலாரன்சின் மாணவராகிய யோகான்னசு துரோசுதே தனித்து புள்ளிப் பொருண்மைக்கான இதே தீர்வைக் கண்டுபிடித்து அதன் இயல்புகளை மிகவும் விரிவாக எழுதினார். இத்தீர்வு சுவார்சுசைல்டு ஆரத்தில் வியப்பான நடத்தையைப் பெற்றிருந்தது. இங்கு இது கணிதவியல் தனிமைப்புள்ளி ஆகியது. இது அய்ன்சுட்டீனின் சமன்பாட்டில் உள்ல சில கோவைகள் ஈரிலியாக அமைதலைச் சுட்டியது. இம்மேற்பரப்பின் தன்மை அப்போது விளங்கவில்லை. ஆர்த்தர் எடிங்டன் 1924 இல் மேற்கோள் ஆயங்களிஅ மாற்றும்போது இந்தத் தனைமைப்புள்ளி மறைதலை எடுத்துகாட்டினார். இந்தப் புது ஆயங்கள் எடிங்டன் – பின்கிள்சுட்டீன் ஆயங்கள் எனப்பட்டன. கியார்க்சு இலைமைத்ரே 1933 இல் சுவார்சுசைல்டு ஆரத்தில் உள்ள தனைமைப்புள்ளி இய்ர்பியல்சாரா ஆயத் தனிமைப்புள்ளி என உணர்த்தினார்.> ஆர்த்தர் எடிங்டன் அவரது 1926 ஆம் ஆண்டு நூலில் சுவார்சுசைல்டு ஆரத்துக்குப் பொருண்மை அமுங்கிய விண்மீன் பற்றிக் கருத்துரைக்கிறார். அதில் அய்ன்சுட்டீனின் கோட்பாடு கட்புல விண்மீன்களுக்கு மிகவும் பேரளவு அடர்த்திகள் அமைதலை மறுத்துரைக்க இசைவதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார். ஏனெனில், "250 மில்லியன் கிமீ ஆரமுள்ள விண்மீன் சூரயன் அளவுக்கு உயர் அடர்த்தியைக் கொண்டிருக்க முடியாது. முதலாவதாக, அதில் இருந்து ஒளி வெளியேற முடியாத அளவுக்கு அதன் ஈர்ப்பு விசை அமைவதால், கதிர்களவும் விண்மீனின் மேற்பரப்பையே,. புவியில் எறிந்த கல்லைப் போல, அடையும். இரண்டாவதாக, கதிர்நிரல் கோடுகளின் செம்பெயர்ச்சி, அது புறநிலையில் நிலவவே முடியாத அளவுக்குப் பெரிதாகஇருக்கும். மூன்றாவதாக, வெளியானது, நம்மைப் புறத்தே எறிந்துவிட்டு விண்மீனைச் சுற்றி மூடுறும் அளவுக்கு, அதன் பொருண்மை காலவெளி வளைமையை உருவாக்கும்." கருங்குழியில் இருந்து தப்ப முடியாதது ஏன்? இது குறித்த பொதுவான விளக்கங்கள் விடுபடு திசைவேகம் என்னும் கருத்துருவின் அடிப்படையிலேயே கொடுக்கப்படுகின்றன. விடுபடு திசைவேகம் என்பது ஒரு பெரிய பொருளொன்றின் மேற்பரப்பில் இருந்து புறப்படும் ஒரு கலம் அப்பொருளின் ஈர்ப்புப் புலத்தை முழுமையாகக் கடப்பதற்குத் தேவையான வேகம் ஆகும். நியூட்டனின் ஈர்ப்பு விதியின்படி பொருளின் ஈர்ப்பு விசை அதிகரிக்கும்போது அதாவது பொருளின் அடர்த்தி அதிகரிக்கும்போது விடுபடு திசைவேகமும் அதிகரித்துச் செல்லும். இவ்விசை ஒரு குறிப்பிட்ட அளவை அடையும்போது விடுபடு திசைவேகம் ஒளியின் வேகத்துக்குச் சமமாகவோ அல்லது அதனிலும் கூடுதலாகவோ ஆகக்கூடும். ஒளியின் வேகத்துக்கு மிஞ்சிய வேகம் எதுவும் இல்லை என்பதைக் காட்டி, அத்தகைய அடர்த்தி கொண்ட பொருளிலிருந்து எப்பொருளும் தப்பமுடியாது என்னும் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. இந்த விளக்கத்தில் ஒரு தவறு உள்ளது. இது ஒளி ஏன் ஈர்க்கும் பொருளினால் பாதிக்கப்படுகிறது என்பதையோ அது ஏன் தப்பமுடியாது என்பதையோ விளக்கவில்லை. இத் தோற்றப்பாட்டை விளக்குவதற்கு ஐன்ஸ்டீன் அறிமுகப்படுத்திய இரண்டு கருத்துருக்கள் தேவைப்படுகின்றன. முதலாவது, வெளியும் நேரமும் தனித்தனியான இரண்டு கருத்துருக்கள் அல்ல, அவை வெளிநேரம் என்னும் ஒரே தொடர்பத்தை உருவாக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பானவை ஆகும். இந்தத் தொடர்பம் சில சிறப்பு இயல்புகளைக் கொண்டுள்ளது. ஒரு பொருள் தான் விரும்பியபடி வெளிநேரத்தில் நகர முடியாது. அது எப்பொழுதும் நேரத்தில் முன்னோக்கியே நகர முடியும். அத்துடன், அப்பொருள் தனது நிலையை ஒளி வேகத்திலும் வேகமாக மாற்றிக் கொள்ளவும் முடியாது. இதுவே சிறப்புச் சார்புக் கோட்பாட்டின் முக்கியமான விளைவு. இரண்டாவது கருத்துருவே பொதுச் சார்புக் கோட்பாட்டின் அடிப்படை: திணிவு, வெளிநேரத்தின் அமைப்பை உருமாற்றுகிறது. வெளிநேரத்தில் திணிவின் தாக்கத்தை, நேரத்தின் திசையை திணிவு நோக்கிச் சாய்த்தல் எனப் பொதுவாகக் கூறலாம். இதனால் பொருள்கள் திணிவை நோக்கி நகர்கின்றன. இது ஈர்ப்பாக உணரப்படுகிறது. திணிவுக்கும் பொருளுக்கும் இடையிலான தூரம் குறையும்போது நேரத்தின் திசையின் சாய்தலும் அதிகரிக்கும். திணிவுக்கு அருகில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இச் சாய்வு மிகவும் வலுவடைந்து, இயலக்கூடிய எல்லாப் பாதைகளுமே திணிவை நோக்கியே செல்லும். இப் புள்ளியைக் கடக்கும் எந்தப் பொருளும் அத்திணிவில் இருந்து விலகிச் செல்வது முடியாது. இப் புள்ளியே நிகழ்வெல்லை எனப்படும். உலகின் முதல் கருந்துளை ஒளிப்படம் நிகழ்வெல்லை தொலைநோக்கியானது பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மெஸ்ஸியர் 87 என்ற விண்மீன் திரளில் காணப்படும் போவேஹி என்ற மீ ராட்சச கருந்துளை மற்றும் 26,000 ஒளியாண்டுதொலைவில் உள்ள சஜிடேரியஸ்A* என்ற கருந்துளை ஆகியவற்றின் ஒளிப்படத்தை எடுத்துள்ளதாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். M87 கருந்துளையானது விர்கோ விண்மீன் திரளுக்கு அருகில் மெசியர் 87 இன் மத்தியில் காணப்பட்டுள்ளது. இந்த கருந்துளை சூரியனை விட சுமார் 650 கோடி மடங்கு பெரியதாகும் எனவும், சஜிடேரியஸ்A* நாற்பது லட்சம் சூரிய நிறை கொண்டதாகும் எனவும் இந்தக்கருந்துளைகளைப் படமெடுக்க 12 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், 200-க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் மாபெரும் அறிவியல் சாதனையை படைத்திருப்பதாகவும் திட்டத்தின் தலைவர் ஷெப்பர்டு எஸ். டோலிமேன் தெரிவித்தார். 29 வயதுடைய கேட்டி பௌமேன் என்ற பெண் அறிவியல் அறிஞரின் படிமுறை கொண்டு நிகழ்படம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருந்துளை கண்டிபிடிப்பாளர்களுக்கு நோபல் பரிசு கருந்துளைகள் தொடர்பான மிகச் சிறப்பு வாய்ந்த கோட்பாடுகளை உருவாக்கியதற்காக பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் பென்ரோஸுக்கும், நமது சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளி மண்டலத்தின் நடுவே இருப்பது ஒரு கருந்துளைதான் என்பதை உறுதிப்படுத்திய அமெரிக்காவின் ஆண்டிரியா கெஸ்ஸுக்கும், ஜெர்மனியின் ரெய்ன்ஹார்டு ஜென்ஸலுக்கும் 2020 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்புகள் மேலும் படிக்க மக்கள் படிக்க பல்கலைக்கழகப் பாட நூல்களும் தனிவரைவுகளும் , the lecture notes on which the book was based are available for free from Sean Carroll's website. Black holes Teviet Creighton, Richard H. Price இசுக்கோலர்ப்பீடியா 3(1):4277. மீள்பார்வை ஆய்வுரைகள் Lecture notes from 2005 SLAC Summer Institute. வெளி இணைப்புகள் கருந்துளைக்கு பின்னால் ஒளி - விண்வெளி அறிவியல் அதிசயம் கருந்துளைகள் இன்னொரு பிரபஞ்சத்துக்கான வாசல்!:40 வருடமாக நீடிக்கும் சர்ச்சை தொடர்பில் ஹாவ்கிங்! பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும், சி. ஜெயபாரதன் Stanford Encyclopedia of Philosophy: "Singularities and Black Holes" by Erik Curiel and Peter Bokulich. Black Holes: Gravity's Relentless Pull—Interactive multimedia Web site about the physics and astronomy of black holes from the Space Telescope Science Institute ESA's Black Hole Visualization Frequently Asked Questions (FAQs) on Black Holes "Schwarzschild Geometry" Hubble site Videos 16-year-long study tracks stars orbiting Milky Way black hole Movie of Black Hole Candidate from Max Planck Institute Nature.com 2015-04-20 3D simulations of colliding black holes Computer visualisation of the signal detected by LIGO Two Black Holes Merge into One (based upon the signal GW150914 விண்மீன் பேரடைகள் சார்பியல் கோட்பாடு
1485
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
ஒளியாண்டு
ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவைக் குறிக்கும் ஒரு நீள வானியல் அலகு ஆகும். இது விண்வெளியில் உள்ள விண்மீன்கள் முதலான விண்பொருட்ளுக்கு இடையேயான தொலைவுகளை அளக்க வானியலில் பயன்படுத்தும் அலகு. வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் (தூரங்கள்) மிகவும் பிரம்மாண்டமானவை. விண்மீன்கள், விண்மீன்களின் கூட்டங்களாகிய விண்மீன் திரள்கள் (நாள்மீன்பேரடைகள்) மற்றும் அண்டவெளியில் பரந்துகிடக்கும் விண்பொருட்களிடைத் தொலைவுகளை அளவிட மீட்டர், கிலோமீட்டர் போன்ற சாதாரண நீள அலகுகள் போதாது. இதனாலேயே மிக மிகப் பெரும் தொலைவுகளைக் குறிப்பதற்காக ஒளியாண்டு எனப்படும் புதிய நீள அலகு உருவாக்கப்பட்டது. ஒளியாண்டு என்பது ஒரு கால அளவல்ல; ஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும் வரைவிலக்கணம் ஒளியாண்டில் குறிக்கப்பெறும் ஆண்டானது ஒரு ஜூலியன் ஆண்டாகும். ஒரு ஜூலியன் ஆண்டில் ஒவ்வொன்றும் 86400 நொடிகள் (செக்கன்கள்) கொண்ட நாட்கள் 365.25 உள்ளன. ஒளியாண்டின் துல்லியமான வரையறை பின்வருமாறு கூறப்படும்: ஒளித்துகளாகிய ஓர் ஒளியன் (photon), எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் எவ்வித விசைப்புலங்களுக்கும் உட்படாமல், தன்னியல்பால் அணுக்கள் இல்லாப் புறவெளியில் ஓரு ஜூலியன் ஆண்டுக்காலம் செல்லும் தொலைவே ஓர் ஒளியாண்டு எனப்படுகின்றது. ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு (செக்கனுக்கு) 299,792,458 மீட்டர்களாகும். எனவே ஓர் ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு, அண்ணளவாக 9.46 × 1015 மீ = 9.46 பேட்டா மீட்டர் ஆகும். ஒளியாண்டோடு தொடர்புள்ள அலகுகளான ஒளி-நிமிடம், ஒளி-நொடி என்பன ஒளி, வெற்றிடத்தில் முறையே ஒரு நிமிடம், ஒரு நொடி (செக்கன்) என்னும் கால இடைவெளிகளில் செல்லும் தொலைவைக் குறிக்கின்றன. ஒரு ஒளி-நிமிடம் 17,987,547,480 மீட்டர்களுக்குச் சமனானது. ஒளி-நொடி 299,792,458 மீட்டர்களாகும். சில துணுக்குத் தகவல்கள் சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வந்துசேர 8.32 நிமிடங்கள் எடுக்கிறது. அதாவது, ஒரு வானியல் அலகை (சூரியனுக்கும் பூமிக்கும் இடையான தூரம்), ஒளி பயணிப்பதற்கு ஏறத்தாழ 499 விநாடிகள் (8.32 நிமிடங்கள்) எடுத்துக் கொள்கிறது. மாந்தைன் மிக மிகத் தொலைவான விண்வெளி ஆய்வுப்பயணம், வொயேஜர் 1, ஜனவரி 2004 ல், 12.5 ஒளி-மணித் தொலைவில் இருந்தது. பூமிக்கு மிக அண்மையிலுள்ள (சூரியனன்றி) விண்மீனான புரொக்சிமா செண்டோரி (Proxima Centauri) 4.22 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. பால் வழி என்றழைக்கப்படும், விண்மீன் திரளின் (நாள்மீன்பேரடை) குறுக்களவு 100,000 ஒளியாண்டுகளாகும். நாம் கண்ணாலும், தொலைநோக்கிகளாலும், பிற துணைக்கருவிகளாலும் உணரக்கூடிய அண்டம் அண்ணளவாக 15,000,000,000 ஒளியாண்டுகள் ஆரம் அல்லது ஆரையைக் (radius) கொண்டது. இந்த ஆரத்தின் (ஆரையின்) நீளமானது ஒரு நொடிக்கு ஓர் ஒளி-நொடி வீதம் அதிகரித்துச் செல்லுகிறது. ஒளியாண்டுகளில் தூரங்கள் தொடர்புடைய அலகுகள் ஒளியாண்டுடன் தொடர்புபட்ட பல அலகுகள் இன்றுவழக்கத்தில் உள்ளன. உதாரணமாக வானியலில் பயன்படுத்தப்படும் ஒளி வினாடியானது மீற்றர்கள் அல்லது ஒரு ஒளியாண்டின் பகுதியாகும் உசாத்துணைகள் அலகுகள் நீள அலகுகள் வானியல் அலகுகள் வானியல் வானியற்பியல்
1487
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
சட்டம்
சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வதற்கு உதவுவதே சட்டம் என்ற திட்டத்தின் நோக்கமாகும். சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஜோனாதன் சுவிஃப்ட் என்பவர் சட்டம் என்பது சிறிய பூச்சிகளை மட்டுமே பிடித்துக்கொண்டு பெரிய குளவி போன்ற பூச்சிகளை வெளியேறவிடும் ஒரு சிலந்திவலை போன்றது என்கிறார். கி.மு. 350-இல், அரிசுட்டாட்டில் சட்டத்தைப் பற்றி எழுதுகையில், தனிமனிதர்களின் ஆட்சியைவிட, சட்டத்தின் ஆட்சி மேலானது என்று குறிப்பிட்டார். அறிஞர் அண்ணா சட்டம் ஓர் இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; அது ஏழைக்கு எட்டாத விளக்கு. என்று கூறியுள்ளார். அரசின் சட்டங்கள், தனியார்களிடையே ஏற்படும் ஒப்பந்தங்கள் போன்றன இவ்வகையான சட்டங்களாகும். ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்தவிர்ப்பு குறித்த தண்டனை வழங்குகிற அதிகாரத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பதே சட்டத்தின் தனித்தன்மையாகும். தோற்றம் சட்டத்தின் தோற்றம் மனிதகுலத்தின் தொன்மைச் சமூகவாழ்க்கைக் காலத்தின் தோற்றத்தோடு தொடர்புடையதாகும். சமூகமாகத் திரண்ட மனிதர்களிடம் ஏற்பட்ட வகுப்பு வேறுபாட்டால் தோன்றிய அரசு எனும் நிறுவனத்தின் தோற்றத்தோடு சட்டத்தின் வரலாறு தொடங்குகிறது. இன்னதைச் செய், இன்னதைச் செய்யாதே என்று உரைக்கும் அதிகாரமும் அதனை ஒப்பாத அல்லது மீறுகிற எவரையும் தண்டிக்கிற அதிகாரமும் சட்டத்தின் இரு முதன்மைக் கூறுகளாகும். இதன்படி அரசின் தோற்றக்காலமே சட்டத்தின் தோற்றக்காலமாக இருந்திருக்க கூடியதாகும். வரலாறு சட்டமும் அறமும் அறம் என்பது மனிதவாழ்வின் விழுமியங்களை உருவாக்குவதும் கற்பிப்பதுவுமான கருத்தோட்டமாகும். அதன் மற்றொரு வடிவமே சட்டம் என்று கருதப்படுகிறது. திருடுதல் கெடுநடத்தை என்று அறம் போதிக்கிறது. திருடினால் தண்டனை உண்டு என்று சட்டம் எச்சரிக்கிறது. உயிர்களைக் கொல்லுதல் பாவம் என்று அறம் கருணையோடு கற்பிக்கிறது. கொலை தண்டிக்கத்தக்கது என்று சட்டம் மிரட்டுகிறது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே சட்டமும் அறமும் என்று கருதுவதற்கு இக்கருத்தியலே அடிப்படையாகும். தமிழ்நாட்டின் மிகப்பழைய சட்டம் ஒழுங்கு குலைவுக் காலமான களப்பிரர் காலத்தில் நீதியிலக்கியங்கள் பல தோற்றம் பெற்றன எனும் வரலாற்றுக் குறிப்பு இதனை உறுதிப்படுத்துகிறது. சட்டமும் நீதியும் நீதி ஒரு செயல் அல்லது செயல்தவிர்ப்பால் பாதிப்புற்றவர்மேல் வினைபுரிவதாகும். சட்டம் அச்செயல் அல்லது செயல்தவிர்ப்பைப் புரிந்தவரின் மீது வினைபுரிவதாகும். சட்டத்தின் வரம்பு நீதியின் வரம்போடு ஒப்பிடுகையில் குறுகியது. நீதியின் நோக்கத்தோடு ஒப்பிடுகையில் சட்டத்தின் நோக்கம் எளிமையானது. நவீன சட்டங்கள் சட்டத்துறைகள் அனைத்து சட்ட அமைப்புகளும் அதே அடிப்படை சிக்கல்களை எதிர்கொள்கின்றன, ஆனால் சட்ட விதிமுறைகள் பல்வேறு வழிகளில் அதன் சட்ட விஷயங்களை வகைப்படுத்தி அடையாளம் காட்டுகின்றன. "பொதுச் சட்டம்" (அரசுக்கு நெருக்கமாக தொடர்புடைய, மற்றும் அரசியலமைப்பு, நிர்வாக மற்றும் குற்றவியல் சட்டம் உட்பட) மற்றும் "தனியார் சட்டம்" (ஒப்பந்தம், சித்திரவதைகள் மற்றும் சொத்துக்களை உள்ளடக்கியது) ஆகியவற்றுக்கு இடையேயான பொதுவான வேறுபாடு ஆகும். சிவில் சட்ட அமைப்புகள், ஒப்பந்தம் மற்றும் துன்புறுத்தல் ஆகியவை ஒரு பொதுச் சட்டத்தின் கடமைகளின் கீழ் வருகின்றன, அதே சமயத்தில் டிரஸ்ட் சட்டமானது சட்டரீதியான ஆட்சி அல்லது சர்வதேச மரபுகளின்கீழ் கையாளப்படுகிறது. சர்வதேச, அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம், குற்றவியல் சட்டம், ஒப்பந்தம், சித்திரவதைகள், சொத்துச் சட்டம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவை "பாரம்பரிய கோர் பாடங்களில்" கருதப்படுகின்றன, இருப்பினும் இன்னும் பல துறைகளும் உள்ளன. சர்வதேசச் சட்டம் சர்வதேச சட்டம்‌‌ மூன்று விஷயங்களைக் குறிக்கலாம்: பொது சர்வதேச சட்டம், தனியார் சர்வதேச சட்டங்கள் அல்லது சட்டங்களின் மோதல்கள் மற்றும் பிரபுத்துவ அமைப்புகளின் சட்டம். பொது சர்வதேச சட்டம் இறையாண்மை நாடுகளுக்கு இடையிலான உறவு சம்பந்தப்பட்டது. பொது சர்வதேச சட்டத்தின் அபிவிருத்திக்கான சர்வதேச சட்டத்தின் ஆதாரங்கள் தனிபயன், நடைமுறை மற்றும் இறையாண்மை நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள்,ஜெனீவா உடன்படிக்கைகள் போன்றவை. ஐக்கிய நாடுகள் சபையால் (இரண்டாம் உலகப் போரைத் தடுப்பதற்காக உலக நாடுகள் சங்கம் தோல்வியடைந்த பிறகு நிறுவப்பட்டது) சர்வதேச அமைப்பு மூலம் பொது சர்வதேச சட்டத்தை உருவாக்க முடியும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு, உலக வணிக அமைப்பு அல்லது சர்வதேச நாணய நிதியம். பொது சர்வதேச சட்டம், மற்றும் நீதிமன்றங்கள் (எ.கா., சர்வதேச நீதிமன்றம் முதன்மையான ஐ.நா. நீதித்துறை உறுப்பு) போன்றவை இல்லை என்பதால், பொது சர்வதேச சட்டத்திற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து உள்ளது, ஏனெனில் சர்வதேச நீதிமன்றம்த்தால் கீழ்ப்படியாமைக்கு தண்டனை கொடுக்க முடியாது. இருப்பினும், வர்த்தக தடைகளால் பிணைக்கப்படும் கட்டுப்பாட்டு நடுவண் மற்றும் விவாதத் தீர்வுக்கான பயனுள்ள அமைப்பாக WTO போன்ற ஒரு சில அமைப்புகள் உள்ளன. மோதல்களின் சட்டங்கள் (அல்லது நாடுகளில் "தனியார் சர்வதேச சட்டம்" சிவில் சட்டம்) ,  தனியார் சட்டங்களுக்கு இடையில் ஒரு சட்டரீதியான விவாதம் கேட்கப்பட வேண்டிய கவலைகள் மற்றும் அதிகார வரம்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் விவரிக்கிறது.   இன்று, வணிகங்கள் எல்லைகளை கடந்து மூலதன வியாபாரங்களுடன் வர்த்தகம் செய்வதன் மூலம், மூலதனம் (பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் இன்னும் அழுத்தும் கொடுக்கிறது. அதிக எண்ணிக்கையிலான வர்த்தக நிறுவனங்கள், வணிகரீதியான நடுவண்மையாளர்களிடமிருந்து New York Convention 1958 ஆகியவற்றின் கீழ் தேர்வுசெய்யப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய சட்டம், ஐ.நா. தவிர வேறு சர்வதேச அங்கீகார சட்ட முறைமை மற்றும் உலக வணிக அமைப்பு, பெருகிய பூகோள பொருளாதார ஒருங்கிணைப்பின் போக்கு, பல பிராந்திய உடன்படிக்கைகள், குறிப்பாக தென் அமெரிக்க நாடுகள் சங்கம் - அதே மாதிரியை பின்பற்றுவதற்கான பாதையில் உள்ளன என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில், இறையாண்மை நாடுகள் தங்கள் அதிகாரத்தை நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் அமைப்பு அமைப்புகளில் சேர்த்துள்ளன. இந்த நிறுவனங்கள் பொது சர்வதேச சட்டத்தின் மூலம் சாத்தியமற்ற முறையில் ஒரு உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் மற்றும் குடிமக்களுக்கு எதிரான சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும் திறனை அனுமதிக்கின்றன. 1960 களில் ஐரோப்பிய நீதிமன்ற நீதிபதி கூறுகையில், ஐரோப்பிய ஒன்றிய சட்டம் உறுப்பு நாடுகளின் பரஸ்பர சமூக மற்றும் பொருளாதார நன்மைக்கான "சர்வதேச சட்டத்தின் புதிய சட்ட ஒழுங்கு" ஆகும். அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம் அரசியலமைப்பு மற்றும் நிர்வாக சட்டம் அரசின் விவகாரங்களை நிர்வகிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் மாநிலத்திற்கு எதிராக தனிநபர்களின் நிர்வாக, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் அல்லது சிவில் உரிமைகள் இடையேயான உறவுகளைப் பற்றியது ஆகும். அமெரிக்காவின் சட்டம் மற்றும் பிரான்ஸ் போன்ற பெரும்பாலான சட்டவாக்கங்கள், சட்ட உரிமைகள் கொண்ட ஒரு தனிப்படுத்தப்பட்ட அரசியலமைப்பைக் கொண்டுள்ளன.ஐக்கிய இராச்சியத்தின் ஐக்கிய இராச்சியம் போன்ற ஒரு சில அத்தகைய ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை. ஒரு "அரசியலமைப்பு" என்பது சட்டம், மற்றும் அரசியலமைப்பு மாநாட்டில் (அரசியல் தனிபயன்) அரசியல் அமைப்பாகும். என்டி வி கேரிங்டன் முன்னணி நீதிபதி லார்ட் கேம்டன்,பொதுவான சட்டத்திலிருந்து பெறப்பட்ட ஒரு அரசியலமைப்பு கொள்கை பின்வருமாறு விளக்குகிறார். திரு என்டிக் வீட்டில் ஷெரீஃப் கார்ட்ட்டனால் தேடப்பட்டு, சூறையாடப்பட்டது. திரு எம்ரிக் நீதிமன்றத்தில் புகார் அளித்தபோது, ஷெரிப் கரிங்டன் ஒரு அரசாங்க மந்திரி, ஜார்ஜ் மான்டேக்-டங்க், இரண்டாம் ஹாலிஃபாக்ஸ் எர்ல் ஆஃப் ஹாலிஃபாக்ஸ், சரியான அதிகாரமாக இருந்தார் இருப்பினும், எழுதப்பட்ட சட்டரீதியான விதி அல்லது நீதிமன்ற அதிகாரம் அவருக்கு இல்லை என்று வாதிட்டார். சமுதாயத்திற்குள் நுழைந்தவர்களின் பெரும் முடிவு, அவர்களுடைய சொத்துக்களைப் பாதுகாப்பதாகும். அனைத்து உரிமைகளிலும் அது பொதுமக்கள் சட்டத்தின் மூலம் எடுத்துக் கொள்ளப்படாமலோ அல்லது குறைக்கப்படாமலோ எவ்விதத்திலும் புனிதமானதாக இருக்க முடியாது. எந்த காரணமும் கண்டுபிடிக்கப்படவோ அல்லது தயாரிக்கவோ முடியாவிட்டால், புத்தகங்களின் மௌனம் என்பது ஒரு அதிகாரத்திற்கு எதிரானது. பிரதிவாதி, மற்றும் வாதியாகவும் தீர்ப்பு வேண்டும். குற்றவியல்ச் சட்டம் ஒப்பந்தச் சட்டம் கவனக்குறைவு சட்டம் கவனக்குறைவு சட்டம்,சில நேரங்களில் சித்திரவதை, அல்லது சிவில் தவறுகள் என்று அழைக்கப்படும். சித்திரவதைக்கு உட்பட்ட, ஒருவர் மற்றொரு நபருக்கு கடமைப்பட்டிருக்க வேண்டும், அல்லது ஏற்கனவே உள்ள சட்டப்பூர்வ உரிமைகளை மீறுவதாக இருக்க வேண்டும். ஒரு எளிய எடுத்துக்காட்டு ஒருவர் கவனக்குறைவால் கிரிக்கெட் பந்தை அடித்து யாரோ ஒருவர் மீது தற்செயலாக படும்போது, கவனக்குறைவு சட்டத்தின் கீழ், மிகவும் பொதுவான குற்றம், காயமடைந்த கட்சி, கட்சியின் பொறுப்பிலிருந்து தங்கள் காயங்களுக்கு இழப்பீடு வழங்கலாம் என்று கவனக்குறைவின் கோட்பாடுகள் டோனோகி வே ஸ்டீவன்சன் என்பவரால் விவரிக்கப்படுகின்றன. கவனக்குறைவுக்கு,பொதுமக்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியின் தவறான செயலுக்கு தார்மீக விலை செலுத்த வேண்டிய வரும் என்பதில் சந்தேகமே இல்லை.நீ உன் அயலானை நேசிக்கிறாயானால், நீ உன் அயலானுக்குத் தீங்கு செய்யாதிருப்பாய்; மற்றும் வழக்கறிஞர் கேள்வி, யார் என் அண்டை? கட்டுப்படுத்தப்பட்ட பதிலைப் பெறுகிறது. நீங்கள் நியாயமாக முன்னறிவிப்பு செய்யக்கூடிய செயல்களையோ அல்லது புறக்கணிப்புகளையோ தவிர்ப்பதற்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும். சித்திரவதையின் இன்னொரு உதாரணம், அண்டை வீட்டுக்காரருடன் மிகுந்த உரத்த சப்தங்களைச் செய்து வருவது. ஒரு தொல்லை கோரிக்கை கீழ் இரைச்சல் நிறுத்தப்பட்டது. சோதனைகள், அத்திமீறல் அல்லது குற்றச்சாட்டுகள் போன்ற வேண்டுமென்றே செயல்படும் செயல்களையும் உள்ளடக்கியது. உதாரணமாக, ஒரு செய்தித்தாள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஒரு அரசியல்வாதியின் நற்பெயருக்கு சேதத்தை விளைவிக்கும்போது அவதூறு என்பது ஒரு நன்கு அறியப்பட்ட சித்திரவதையாகும். சில நாடுகளில் தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையிலான வேலைநிறுத்தங்கள், மாநிலம் சட்டம் விதிவிலக்கு அளிக்காத போது, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதன் மூலம் இருக்கும். சொத்துச் சட்டம் சொத்துச் சட்டம் என்பது பொருளாதார குறிக்கோளை குறித்து இயற்றப்பட்ட ஓர் சட்டமாகும் இந்த சட்டத்தின் படி ஒருவர் தன் உழைப்பின் கீழ் சேர்க்கும் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கு முழு உரிமையாளராகிறார். அவரின் சொத்துக்கள் அனைத்தும் அவரின் விருப்பத்தின் பேரில் யாருக்கும் விற்பனை செய்யவோ, தானமாகவோ, உயிலாகவோ கொடுப்பதற்கு உரிமை உள்ளவர் ஆவார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சட்டம், சட்டம்சார்சொற்கள், மற்றும் உசாத்துணை
1489
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
ரோலண்ட் ஹில்
ரோலண்ட் ஹில் (Rowland Hill, டிசம்பர் 3, 1795 - ஆகஸ்ட் 27, 1879), நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர். ரோலண்ட் ஹில், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் "தபால் அலுவலகச் சீர்திருத்தம்: இதன் முக்கியத்துவமும் நடைமுறைச் சாத்தியமும்" ("Post Office Reform: its Importance and Practicability") என்ற அவரது பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரத்தில் அவர் அதிகாரப்பூர்வ, முன்னரே அச்சடிக்கப்பட்ட கடித உறைகளையும், ஒட்டத்தக்க தபால்தலைகளையும் வெளியிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார். பிரித்தானியத் தீவுகளுக்குள் எந்த இடத்துக்கும் அரை அவுன்ஸ் நிறையுள்ள தபாலை அனுப்புவதற்குக் குறைந்த சீரான கட்டணமான ஒரு பென்னியை அறவிடவேண்டுமெனவும் அவர் ஆலோசனை வழங்கினார். இதற்கு முன்னர் தபால் விநியோகம் செய்யப்பட வேண்டிய தூரத்தையும், கடிதத்தின் தாள்களின் எண்ணிக்கைக்கும் ஏற்பவே கட்டணம் அறவிடப்பட்டது. ரோலண்ட் ஹில்லின் ஆலோசனைப்படி, ஒரு பென்னி கட்டணம், குறிப்பிட்ட நிறைக்கு உட்பட்ட கடிதமொன்றை நாட்டின் எந்தமூலைக்கும் அனுப்ப முடிந்தது. முன்னர் தபால் கட்டணம் 4d க்கும் கூடுதலாகவே இருந்தது. எனினும் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்துவது அனுப்புனரா, பெறுனரா என்ற பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் விருப்பத்துக்குரியதாகவே இருந்துவந்தது.தபாலதிபர் நாயகமாக (Postmaster general) இருந்து ரோலண்ட் ஹில் எடுத்த முயற்சிகள் பல ஆண்டுகள் பலனளிக்காமலேயிருந்தது. குறைந்த கட்டணம், எழுத வாசிக்கத்தெரிந்த கூடுதலானவர்கள் தபால் சேவையைப் பயன்படுத்த வழி செய்தது. 1840 மே 6ஆம் திகதி முதலாவது தபால்தலை வெளியிடப்படுவதற்கு முன்னரே, அதே ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி, முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது. மேற்கோள்கள் அஞ்சல் தலை சேகரிப்பு 1795 பிறப்புகள் 1879 இறப்புகள் ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர்கள்
1490
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF
பென்னி
பென்னி என்பது ஒரு நாணய அலகாகும். ஆங்கிலம் பேசப்படும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு பென்னி 1971 இன் பின்னரான பிரித்தானியப் பயன்பாட்டின்படி 1 பவுண்ட் ஸ்ரேர்லிங் = 100 பென்ஸ் (பென்னிகள்) பெப்ரவரி 15, 1971 இன் முன்னர் ஒரு பிரித்தானிய பவுண்டு = 240 பென்ஸ் ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் ஒரு சத நாணயம் (ஒரு டொலரின் 1/100) பென்னி என அழைக்கப்படுகிறது. இது உத்தியோகபூர்வமானதல்ல. நாணய முறை
1491
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
புகழ்பெற்ற இந்தியர்கள்
அரசர்கள் அசோகச் சக்கரவர்த்தி சிவாஜி பாண்டியன் நெடுஞ்செழியன் கரிகால் சோழன் இராஜராஜ சோழன் இராஜேந்திர சோழன் சேரன் செங்குட்டுவன் முதலாம் நரசிம்ம பல்லவன் மகேந்திர பல்லவன் திருமலை நாயக்கர் அக்பர் அரசியல் தலைவர்கள், சீர்திருத்தவாதிகள் அம்பேத்கர் பெரியார் கௌடில்யர் ராணி லட்சுமிபாய் லோகமான்ய திலகர் பிபின் சந்திர பால் வ. உ. சிதம்பரம் பிள்ளை ஈஸ்வர சந்திர வித்யாசாகர் லாலா லஜபத் ராய் சுபாஷ் சந்திர போஸ் முத்துராமலிங்கத் தேவர் மகாத்மா காந்தி கான் அப்துல் கப்பார் கான் ஜவஹர்லால் நேரு சியாமா பிரசாத் முகர்ஜி ஏகநாத் ரானடே வினாயக் தாமோதர் சாவர்க்கர் வல்லபாய் பட்டேல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆச்சார்ய கிருபளானி முத்துலட்சுமி ரெட்டி முகம்மது அலி ஜின்னா அருணா ஆசஃப் அலி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மொரார்ஜி தேசாய் காமராஜர் பெரியார் சி. என். அண்ணாதுரை மு. கருணாநிதி இந்திரா காந்தி ராஜீவ் காந்தி எம். ஜி. இராமச்சந்திரன் சே. ப. இராமசுவாமி ஐயர் பாபு ராஜேந்திர பிரசாத் ஜெயப்பிரகாஷ் நாராயணன் என். எம். ஆர். சுப்பராமன் கே. வி. இராமாச்சாரி எல். கே. துளசிராம் அடல் பிகாரி வாச்பாய் லால் கிருஷ்ண அத்வானி சோனியா காந்தி ஜெ. ஜெயலலிதா அறிவியலாளர்கள் இராமானுசன் சர். சி.வி.ராமன் டாக்டர். சுப்பிரமணியன் சந்திரசேகர் அப்துல் கலாம் ஹோமி பாபா ஜகதீஷ் சந்திர போஸ் மேக்நாத் சாகா சாந்தி சுவரூப் பட்நாகர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா டி. டி. கோசாம்பி எஸ். எஸ். பிள்ளை கே. ஆனந்த ராவ் வி. கணபதி அய்யர் விஜய் குமார் பட்டோடி கே. எஸ். கிருஷ்ணன் சி. எஸ். சேஷாத்ரி சலீம் அலி மாதவ் காட்கில் உரோமுலசு விட்டேக்கர் தியோடர் பாசுகரன் ஜே. சி. டேனியல் மா.கிருஷ்ணன் விக்ரம் சாராபாய் அப்துல் கலாம் சமயத் தலைவர்கள் காரைக்கால் அம்மையார் ஆதி சங்கரர் இராமானுஜாச்சாரியார் மத்வர் வேதாந்த தேசிகர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் வித்யாரண்யர் சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமி குருபரானந்தர் சைதன்யர் அப்பைய தீட்சிதர் இராமகிருஷ்ண பரமஹம்சர் ரமண மகரிஷி சுவாமி விவேகானந்தர் பெசண்ட் அம்மையார் பால பிரஜாபதி அடிகளார் அரவிந்தர் கிருபானந்த வாரியார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநாவுக்கரசு நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசக நாயனார் நம்மாழ்வார் குரு நானக் மாதா அமிருதானந்தமயீ மகேஷ் யோகி சுவாமி சின்மயானந்தா அன்னை தெரெஸா ஜே. கிருஷ்ணமூர்த்தி ஜோதி ராமலிங்க சுவாமிகள் கவிஞர்கள் / புலவர்கள் / எழுத்தாளர்கள் திருவள்ளுவர் வால்மீகி காளிதாசர் வியாசர் கம்பன் துளசிதாசர் இளங்கோவடிகள் ஔவையார் சுப்பிரமணிய பாரதியார் பாரதிதாசன் தேவநேயப் பாவாணர் பெருஞ்சித்திரனார் உ. வே. சாமிநாதையர் பம்மல் சம்பந்த முதலியார் கண்ணதாசன் பிரபஞ்சன் வைரமுத்து வாலி இரவீந்திரநாத் தாகூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சரோஜினி நாயுடு ஜாகீர் ஹுசைன் தேசிக விநாயகம் பிள்ளை பிரேம் சந்த் ஏ. கே. ராமானுஜன் மு. கருணாநிதி எம். வி. வெங்கட்ராம் கே. ஆர். சேதுராமன் இசை/மென்கலை வல்லுனர் மாரிமுத்துப் பிள்ளை அருணாசலக் கவிராயர் புரந்தரதாசர் முத்துத் தாண்டவர் ரவி வர்மா ருக்மிணி அருண்டேல் தியாகராஜ சுவாமிகள் வேங்கடரமண பாகவதர் வேங்கட சூரி சுவாமிகள் முத்துசுவாமி தீட்சிதர் அன்னமாச்சாரியார் சியாமா சாஸ்திரிகள் தண்டபாணி தேசிகர் சத்யஜித் ரே பெரியசாமி தூரன் விபுலாநந்தர் ஆபிரகாம் பண்டிதர் பாலமுரளி கிருஷ்ணா இளையராஜா எம். எஸ். சுப்புலட்சுமி மகாராஜபுரம் சந்தானம் ரவிசங்கர் ரஹ்மான் பிஸ்மில்லா கான் தொழிலதிபர்கள் / பொருளாதார வல்லுனர்கள் தாதாபாய் நௌரோஜி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் திருபாய் அம்பானி ஜாம்செட்ஜி டாட்டா அ.மு.மு.முருகப்ப செட்டியார் டீ.வீ. சுந்தரம் அய்யங்கார் இராம.அழகப்ப செட்டியார் திருபாய் அம்பானி அனில் அம்பானி முகேசு அம்பானி கருமுத்து தியாகராஜன் ரத்தன் டாட்டா சிவ நாடார் அசிம் பிரேம்சி சி. எஸ். இராமாச்சாரி விளையாட்டு வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் விஸ்வநாதன் ஆனந்த் சுனில் காவஸ்கர் கபில்தேவ் சௌரவ் கங்குலி ராகுல் திராவிட் பி. டி. உஷா லியாண்டர் பயஸ் மகேஷ் பூபதி சானியா மிர்சா மில்கா சிங் தன்ராஜ் பிள்ளை அபினவ் பிந்த்ரா இவற்றையும் பாக்க இந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள்
1492
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88.%20%E0%AE%B5%E0%AF%86.%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF
ஈ. வெ. இராமசாமி
{{dablink|பெரியார் என்ற பட்டப்பெயரின் ஏனைய பயன்பாடுகளுக்கு பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்) பக்கத்தைப் பாருங்கள்.}} பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , , செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தருமம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வு சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். தமிழக அரசு இவரது பிறந்தநாளை சமூக நீதி நாளாக(செப்17) அறிவித்தது. இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார். வாழ்க்கை பெயர்க்காரணம் குடிஅரசு இதழில் ஆசிரியர் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்றுதான் 18 திசம்பர், 1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25 திசம்பர், 1927 குடிஅரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம் வெட்டப்பட்டது. இது குறித்து வே. ஆனைமுத்து 'பெரியார் களஞ்சியம்' எனும் தொகுப்பு நூலில்,அவ்வாறாக, 'நாயக்கர்' என்ற பட்டச் சொல்லை அவருடைய பெயருக்குப் பின்னால் இருந்து நீக்கிவிட்ட நிலையில், 'நாயக்கர்' என்ற பட்டச் சொல் இல்லாமல் அவரது பெயரைக் குறிப்பிடுவதானது, அவருக்கு உரிய பெருமையைக் குறைத்துவிடுமோ என நம் இனப் பெருமக்கள் அஞ்சினர். அங்ஙனம் அஞ்சிய பலருள் 'நாயக்கர்' என்ற சொல் இருந்த இடத்தில் 'பெரியார்' என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து 'ஈ. வெ. இராமசாமிப் பெரியார்' என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு. பி. சிதம்பரம் பிள்ளையே ஆவார் என்று கூறுகிறார். இந்த விளக்கத்தினை 21-5-1973இல், திருச்சியில் இராமசாமி, தனக்கு உணர்த்தியதாகக் குறிப்பிடுகிறார். இளமைக் காலம் ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் செப்டம்பர் 17, 1879ல் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார். இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருட்டிணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர் ஆவர். 1929 இல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். இராமசாமி மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி தெலுங்கு ஆகும். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். தன் தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் பண்டிதர் ஒருவரின் அறிவுரைகளைக் (உபதேசங்களைக்) கேட்கும்படி தன் தந்தையால் இராமசாமி பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் அறிவுரைகளை மிக ஆர்வமுடன் கேட்டு அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. இராமசாமி வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களைச் சுரண்டுவதற்காகப் போற்றப்பட்ட போர்வையாகப் போர்த்தப்பட்டுள்ளதைக் களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும், இம்மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார். குடும்பம் இராமசாமியின் 19ஆவது வயதில் அவருக்குத் திருமணம் செய்யப் பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல் நேசித்த 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மை தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்குத் தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்களில் பெண் மகவை ஈன்றெடுத்தார். அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. தனது அண்ணன் மகன் ஈ. வெ. கி. சம்பத்தை திராவிடர் கழகத்தின் எதிர்காலத் தலைவராக நியமிப்பதாக இருந்தார். ஆனால் சம்பத் அண்ணாதுரையின் சீடராக விளங்கியதால், ஈ. வெ. இராமசாமி தமது 70-ஆவது வயதில் 32 வயதுடைய காந்திமதி எனும் மணியம்மையை மணந்தார். இத்திருமணத்தால் திராவிடர் கழகத் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அண்ணாதுரை போன்ற தலைவர்கள் இராமசாமியை விட்டுப் பிரிந்தனர். ஈ. வெ. இராமசாமி, மணியம்மையை தனது சொத்துக்களுக்கும், திராவிடர் கழகத்திற்கும் பாதுகாவலராக நியமித்தார். காசிப் பயணம் 1904இல் இராமசாமி, இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசிக்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார். இதனிடையே காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் இராமசாமிக்கு பிராமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தமுற்றவரானார். இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பிராமணர் போல் பூணூல் அணிந்து வலிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறி உள்நுழைய முயன்றார். ஆனால் அவர் மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பிராமணர் யாரும் இந்து சாத்திரத்தின்படி, இவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பதில்லை என்று கோயில் காவலாளியால் வலிந்து தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார். பசிதாளாமல் வீதியின் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிக்கொண்டார். பிராமணரல்லாதார் கட்டிய அன்னசத்திரத்தில் பிராமணரல்லாதாருக்கு உணவு வழங்கப் பிராமணர்களால் மறுக்கப்படுகின்றதே என்ற நிலைமையை எண்ணி வருந்தினார். இந்து சமயத்தின் வேற்றுமை காணும் (வருண ஏற்றத்தாழ்வு) உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே புனிதமான காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார். அதன் விளைவாக அதுவரை இறைப்பற்றுள்ளவராக இருந்த இராமசாமி காசி யாத்திரைக்குப் பின், தன்னை ஒரு இறைமறுப்பாளராக மாற்றிக்கொண்டார். அரசியல் வாழ்வு காங்கிரசு கட்சியின் உறுப்பினர் (1919–1925) இராமசாமி 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரசு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்துப் பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவியான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையாரும் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார். 1922 இல் இராமசாமி சென்னை இராசதானியின் (மதராசு இராசதானி) காங்கிரசு கட்சித் தலைவராகத் (தற்பொழுது -தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக், காங்கிரசு கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிறுத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரசு கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றது. அதனால் 1925 இல் காங்கிரசு கட்சியிலிருந்து விலகினார். வைக்கம் போராட்டம் (1924–1925) கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகர் திருவாங்கூர் சமத்தானத்தில் உள்ளது. கேரள வழக்கப்படி அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயிலுக்குள் நுழையவும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்புப் (சத்தியாகிரகம்) போராட்டத்தைக் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. வைக்கம் போராட்டம் கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி. கே. மாதவன் என்பவரால் முன்னெடுக்கப்பட்டது. அவர் காங்கிரசில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். வைக்கம் போராட்டத்திற்கு முப்பதாண்டு கால வரலாறு உண்டு. டி. கே. மாதவன் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு திருவிதாங்கூர் சட்டச்சபை உறுப்பினராக ஆனதும், அந்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். அன்னி பெசண்டின் உதவியையும் பின்னர் காந்தியின் உதவியையும் நாடினார். போராட்டத்தைக் காந்தியின் வழிகாட்டலுடன் (சத்தியாகிரக) அறப்போராட்டமாக முன்னெடுத்தார். நாடெங்கிலும் இருந்து காங்கிரசு தலைவர்களும் தொண்டர்களும் அதில் பங்குகொண்டார்கள். வினோபா பாவே அதில் பங்கெடுப்பதற்காக வந்தார். கேரளத்தில் காங்கிரசு தலைவர்களாக இருந்த கேளப்பன், கெ. பி. கேசவமேனன், இ. எம். எசு., ஏ. கே. கோபாலன் போன்றவர்களும் பங்கெடுத்தார்கள். தமிழகத்தில் இருந்து ஈ. வே. ரா, கோவை அய்யாமுத்து, எம். வி. நாயுடு ஆகியோர் பங்கெடுத்தார்கள். போராட்டத்தில் ஈ. வே. ரா முக்கியமான பங்கு வகித்து சிறைசென்றார். ஈ. வே. ரா அந்தப்போரில் பங்கெடுத்தது சில மாதங்கள் மட்டுமே. ஆனால் வைக்கம் போராட்டம் மேலும் பல மாதங்கள் நீடித்தது. ஏப்ரல் 14 அன்று இராமசாமி அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் கலந்து கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டுத் தனித்தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின்படி, இப்போராட்டத்தில் கேரளாவைச் சாராதவர்கள், இந்து சமயம் சாராதவர்கள் கலந்து கொள்ளவில்லை. இராமசாமி வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார். விடுதலைக்கான பல போராட்டத்தில் கலந்து கொண்ட இராமசாமிக்கு கிடைக்காத பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது. நடுவே போராட்டம் வலுவிழந்தபோது காந்தியும் நாராயணகுருவும் நேரில் வந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். கேரளத்தில் மாபெரும் சமூக சக்தியாக விளங்கிய நாராயணகுரு பங்கெடுத்து நடத்திய ஒரே போராட்டம் இதுவே. கடைசியில் வெற்றி ஈட்டியது. அமைதி ஒப்பந்தத்தில் காந்தி சார்பில் தேவதாசு காந்தியும் போராட்டக்குழு சார்பில் இராசாசியும் கையெழுத்திட்டனர் பின்னர் இப்போராட்டம் அனைத்துக் கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவெங்கும் ஆலயப்பிரவேச இயக்கமாகக் காந்தியால் கொண்டு செல்லப்பட்டது சுயமரியாதை இயக்கம் இராமசாமி மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்கக் கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பலர் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி வந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் தொடக்கத்தில் பிராமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள் என்ற பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கம் 1925 இல் இராமசாமியால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது. சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர். ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது. சாதி மறுப்பு திருமணத்தையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது. அளவில்லா குழந்தைகள் பெறுவதைத் தடுத்து குடும்பக் கட்டுப்பாட்டை 1920 களிலேயே வலியுறுத்தியது. கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களைக் கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது. இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராசு அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928லேயே வலியுறுத்தியது. இந்த பரப்புரை மற்றும் தத்துவங்களை முழுநேரச் செயல்பாடுகளாக இராமசாமி 1925 இலிருந்து செயல்படுத்தி வந்தார். இதைப் பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925 முதல் துவக்கினார். ஆங்கிலத்தில், ரிவோல்ட் என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார். சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையே வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. 1929 இல் சுயமரியாதையாளர்கள் மாநாடு பட்டுக்கோட்டையில் எசு.குருசாமி மேற்பார்வையில் மதராசு இராசதானி சார்பில் நடைபெற்றது. சுயமரியாதையாளர்களின் தலைமையை கே.வி.அழகிரிசாமி ஏற்றார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய மதராசு இராசதானியின் பல மாவட்டங்களில் சுயமரியாதையாளர்களின் கூட்டங்கள் நடைபெற்றன. இதற்கான பயிற்சிப் பட்டறையாக, பயிற்சிக் களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது. இதன் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சிக்காக மட்டுமில்லாமல் சமுதாயப் புரட்சிக்காகவும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற புதிய சமுதாயத்தை உருவாக்கவும் வழி செய்தது. வெளிநாடு சுற்றுப்பயணம் (1929–1932) 1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங், மலாக்கா, கோலாலம்பூர், கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எசு.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். எகிப்து, கிரீசு, துருக்கி, உருசியா, செருமனி, இங்கிலாந்து, சுபெயின், பிரான்சு, மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர் 1 அன்று இந்தியா திரும்பினார். இச்சுற்றுப்பயணங்கள் இராமசாமியின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன. உருசியாவின் பொதுவுடமைக் (கம்யூனிசம்) கொள்கை இவருடைய கொள்கையை ஒத்ததாகவே இருந்தது. பலவிடங்களில் இராமசாமியின் கருத்துக்கள் மார்க்சியத்தின் சமூகப் பொருளாதாரக் கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக இருந்தது ஆனால் தனியார் முதலாளித்துவத்தை முற்றிலும் ஒழிப்பதில் உடன்பாடில்லை. இராமசாமி திரும்பியதும் உடனே மார்க்சியத் தலைவர் எம். சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் இராமசாமியின் கொள்கை சோசலிசத்துடன் கூடிய சுயமரியாதைக் கொள்கையாக மாறிற்று. இதனால் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று. இந்தி எதிர்ப்பு 1937 இல் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் மதராசு மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில், இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. நீதிக்கட்சியைச் சார்ந்தவர்களான சர். ஏ. டி. பன்னீர் செல்வம் மற்றும் இராமசாமி இப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இப்போராட்டம் 1938 இல் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் இராசாசி அரசால் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது. அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது. இராமசாமி பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது ஆரியர்கள், திராவிடர்களின் பண்பாடுகளை ஊடுருவிச் சிதைக்கத் திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என குறிப்பிட்டார். இந்தியை ஏற்றுக்கொள்வது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களைப் பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாகப் பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்று இராமசாமி வலியுறுத்தினார். தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952, மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன நீதிக்கட்சித் தலைவராக (1938–1944) தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அரசியல் கட்சி 1916 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராகவும் துவக்கப்பட்டது. இக்கட்சியே, பின்னாளில் நீதிக்கட்சி எனப் பெயர்மாற்றம் பெற்றது. பிராமணர் அல்லாதவர்களின் சமூக நீதி காத்திடவும், அவர்களின் கல்வி, அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. அக்கட்சி, பிராமணரல்லாதாரை ஒடுக்க, பிராமணர்கள் பின்பற்றி வந்த வர்ணாசிரம தத்துவத்தை முற்றிலும் எதிர்த்தது. 1937 இல் இந்தி கட்டாயப் பாடமாக மதராசு மாகாணப் பள்ளிகளில் அரசால் திணிக்கப்பட்டபோது, தனது எதிர்ப்பை நீதிக்கட்சியின் மூலம் வெளிப்படுத்தினார். 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக திராவிட இயக்கத்திற்கு கணிசமான மாணவர்களின் ஆதரவு கிட்டியது. பின்னாட்களில் இந்தி எதிர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்தது. இந்தியை ஏற்றுக்கொள்வதால் தமிழர்கள் அடிமைப்படுவார்கள் என்ற காரணத்தால் முற்றிலும் எதிர்க்கப்பட்டது. நீதிக்கட்சிக்கு மிகுதியான மக்களாதரவு இல்லாததினால் மிகவும் நலிவடைந்திருந்தது. 1939, இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும் அக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவரின் தலைமையில் கட்சி சிறப்புடன் வளர்ச்சி கண்டது. இருப்பினும், கட்சியின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தமையால் பலர் இராமசாமியின் தலைமையின் கீழ் ஈடுபட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர். திராவிடர் கழகம் (1944-முதல்) திராவிடர் கழகம் உருவாதல் 1944 இல் நீதிக்கட்சித் தலைவராக இராமசாமி முன்னின்று நடத்திய நீதிக்கட்சிப் பேரணியில் திராவிடர் கழகம் என இராமசாமியால் பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இருப்பினும் இராமசாமி நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணி, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, பொ. தி. இராசன், தலைமையில் துவக்கப்பட்டு 1957 வரை அம்மாற்று அணி செயல்பட்டது. திராவிடர் கழகத்தின் கொள்கை நகர மக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டன. அவ்வடையாளங்களின் பாதுகாவலர்களாக விளங்கும் பார்ப்பனர்கள், இந்நிலையை எதிர்த்து வாய்மொழித் தாக்குதல்களைத் தொடுக்கலாயினர் . 1949 முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர். திராவிடர் கழகம் தலித்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் இவற்றில் தனிக்கவனம் செலுத்தினர். அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு 1949 இல் இராமசாமியின் தலைமைத் தளபதியான காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை இராமசாமியிடமிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை 17 செப்டம்பர் 1949 அன்று சென்னையில் துவக்கினார். இந்தப் பிரிவுக்கு இராமசாமி மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் எனக் கூறப்படுகின்றது. இராமசாமி திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அண்ணாதுரை தில்லி அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார். அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். இராமசாமி தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிறுத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகச் சிறிதும் விலகி நிற்க அல்லது விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் இராமசாமி தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார். இராமசாமியிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள், சூலை 9, 1948 அன்று இராமசாமி, தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையாரை மறுமணம் புரிந்ததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து அண்ணாதுரைத் தலைமையில் விலகினர். அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய தலைவனை வணங்கி கண்ணீர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால், அண்ணாதுரையின் திமுக கட்சியை, கண்ணீர்த்துளி கட்சி என அதுமுதல் இராமசாமி வர்ணிக்கலானார். அதன் பின், பெரியாருக்காக திமுக தலைவர் பதவி காலியாக உள்ளது என அண்ணாதுரை அறிவித்தார். அண்ணாதுரை மறைவின் பின் திமுக தலைவராக பெரியாரின் ஆசியுடன் மு.கருணாநிதி பொறுப்பு ஏற்றார். 1957 தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு இராமசாமி 1957 தேர்தலில் காங்கிரசை முழுமையாக ஆதரித்தார். அத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 15 இடங்களைப் பிடித்தது. இறுதிக் காலம் 1956 இல் சென்னை, மெரினாவில் இந்துக் கடவுளான இராமரின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை நடத்திய இராமசாமிக்குத் தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவராக இருந்த பி.கக்கன்னால், கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இராமசாமி அப்போராட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1958 இல் இராமசாமி மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் இராமசாமி ஆங்கிலத்தை, இந்திக்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திப் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார். 1962 இல் இராமசாமி தனது கட்சியான திராவிடர் கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக கி.வீரமணியை முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் நியமித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இராமசாமி வட இந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார். இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி 1970 சூன் 27 அன்று இயுனசுகோ மன்றம் என்ற உள்ளூர் அமைப்பு "புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்கிரடிசு; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதழ்கள், ஏடுகள் மற்றும் நாளிதழ்கள் ஈ.வெ.ராமசாமி தன்னுடைய கருத்துகளைப் பரப்புவதற்காகப் பின்வரும் இதழ்களை வெளியிட்டு வந்தார்: குடிஅரசு (வார இதழ்) 1925 மே 2ஆம் நாள் தொடங்கப்பட்டது. ரிவோல்ட் (Revolt) (ஆங்கில வார இதழ்) 1928 நவம்பர் 07 ஆம் தொடங்கப்பட்டது. முதல் இதழை கோவை இரத்தினசபாபதியார் தலைமையில் பட்டிவீரன்பட்டி ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன் 6-11-1928ஆம் நாள் வெளியிட்டார். இதழுக்கு ஈ.வெ.இராவும் எசு. இராமநாதனும் ஆசிரியராக இருந்தனர்; நாகம்மையார் வெளியீட்டாளர். சசுடிசைடு (Justicite). புரட்சி (வார இதழ்) 1933 நவம்பர் 20 ஆம் நாள்தொடங்கப்பட்டது. 17.6.1934ஆம் நாள் இறுதி இதழ் வெளிவந்தது. பகுத்தறிவு (நாளிதழ்). 1934 ஏப்ரல் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டு 1934 மே 27ஆம் நாளோடு நிறுத்தப்பட்டது பகுத்தறிவு (வார இதழ்) 1934, ஆகத்து 26 ஆம் நாள் முதல் 1935 சனவரி 1ஆம் நாள் வரை 20 இதழ்கள் வெளிவந்தன. பகுத்தறிவு (மாத இதழ்) 1935, மே 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது 1939 சனவரி வரை வெளிவந்தது. விடுதலை (வாரம் இருமுறை) 1935, சூன் 01ஆம் நாள் தொடங்கப்பட்டது. விடுதலை (நாளிதழ்) 1937, சூன் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது உண்மை (மாத இதழ்) தி மார்டர்ன் இரேசனலிசிட்டு (The Modern Rationalist) (ஆங்கில மாத இதழ்) 1971 செப்டம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது., மறைவு தந்தை பெரியார் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், திசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற இராமசாமி, வேலூர் சி. எம். சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இராமசாமி, சிகிச்சை பலனின்றி திசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார். விமர்சனங்கள் இராமசாமி மத மூடநம்பிக்கைகளையும், பிராமணியத்தையும் இந்து மத இதிகாசம் இராமாயணத்தையும் எதிர்த்தார். பிற மதங்களைப் பற்றி அவர் விமர்சிக்கவில்லை. பாரதியாரை, கிறுக்கன் பாரதி என்று குறிப்பிடுகின்றார். பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் நூல் என்றும், "விபசாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிசம்" என்றும் இராமசாமி சிலப்பதிகாரத்தை விமர்சித்தார். தமிழ் மொழியை "காட்டுமிராண்டி பாடை" என்றார். தமிழ் மொழியில் அறிவியல் வளர்ச்சி இல்லை எனவும் பழந்தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் நிறைந்து இருப்பதாகவும் அதற்குக் காரணம் சொன்னார். நினைவகங்கள் தமிழ்நாடு அரசு ஈ.வெ.ராமசாமி நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு இராமசாமியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இராமசாமி அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் உள்ளது. மறைக்கப்பட்ட புத்தகம் 1979 ஆம் ஆண்டு ம.கோ.இரா தலைமையிலான அரசு நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் குழு அமைத்து நெ.து. சுந்தரவடிவேலுவை இராமசாமி வாழ்க்கை வரலாற்றைச் சிறுவர்களுக்காக எழுதப்பணித்தது. 1000 பக்க அளவிலான நூலாக அவரும் எழுதித்தந்த பின்னரும் அவை எக்காரணம் கொண்டோ வெளிவரவில்லை. இவற்றையும் பார்க்க பெரியார் அறக்கட்டளையின் கீழ் நிறுவனங்கள் பெரியார் (திரைப்படம்) பெரியார் திடல் பெரியார் விருது குறிப்புகள் சில இடங்களில் கன்னடம் என குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால் தெலுங்கு என்பதே சரி. சான்றுகள் மேற்கோள்கள் Arora, N.D.; S.S. Awasthy, (2007). Political Theory and Political Thought. Har-Anand Publications: New Delhi. . Bhaskaran, R., (1967). Sociology of Politics: Tradition of politics in India. Asia Publishing House: New York. Bandyopadhyaya, Sekhara, (2004). From Plassey to Partition: A history of modern India. Orient Longman: New Delhi. Chatterjee, Debi, [January 1981](2004) Up Against Caste: Comparative study of Ambedkar and Periyar. Rawat Publications: Chennai. Diehl, Anita, (1977). E. V. Ramaswami Naidu-Periar: A study of the influence of a personality in contemporary South India. Scandinavian University Books: Sweden. . Dirks, Nicholas B., (2001). Castes of Mind: Colonialism and the Making of Modern India. Princeton University Press: Princeton. . Geetha, V.; S.V. Rajadurai, (1987). Towards a Non-Brahmin Millennium: From Iyothee Thass to Periyar. M. Sen for SAMYA: Calcutta, p. 481. . Gopalakrishnan, G.P., (1991). Periyar: Father of the Tamil race. Emerald Publishers: Chennai. Ghurye, G.S., (1961). Caste, Class, and Occupation. Popular Book Depot: Bombay. International Tamil Language Foundation, (2000).Tirukkural/ The Handbok of Tamil Culture and Heritage. ITLF: Chicago, p. 1346. Kandasamy, W.B. Vasantha; Florentin Smarandache; K. Kandasamy (2005). Fuzzy and Neutrosophic Analysis of E.V. Ramasamy's Views on Untouchability. Hexis: Phoenix. . Mehta, Vrajendra Raj; Thomas Pantham, (2006). Political Ideas in Modern India: thematic explorations. Sage Publications: Thousand Oaks. . Misra, Maria, (2008). Vishnu's Crowded Temple: India since the great rebellion. New Haven: Yale University Press. Pandian, J., (1987).Caste, Nationalism, and Ethnicity. Popular Prakashan Private Ltd.: Bombay. Richman, Paula, (1991). Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia. University of California Press: Berkeley. . Saraswathi, S. (2004) Towards Self-Respect. Institute of South Indian Studies: Madras. Thakurta, Paranjoy Guha; Shankar Raghuraman (2004). A Time of Coalitions: Divided We Stand. Sage Publications. New Delhi. . Veeramani, Dr. K.(2005). Collected Works of Periyar E.V.R.. Third Edition. The Periyar Self-Respect Propaganda Institution: Chennai. Veeramani, Dr. K.(1992). Periyar on Women's Rights. Emerald Publishers: Chennai. மேலும் படிக்க Bandistse, D.D., (2008). Humanist Thought in Contemporary India. B.R. Pub: New Delhi. Biswas, S.K., (1996). Pathos of Marxism in India. Orion Books: New Delhi. Chand, Mool, (1992). Bahujan and their Movement. Bahujan Publication Trust: New Delhi. Dirks, Nicholas B., (2001). Castes of mind : colonialism and the making of modern India. Princeton University Press: Princeton, New Jersey. Geetha, V., (1998). Periyar, Women and an Ethic of Citizenship. Sameeksha Trust: Bombay. Kothandaraman, Ponnusamy, (1995). Tamil Varalarril Tantai Periyar (Tamil). Pumpolil Veliyitu: Chennai. Mani, Braj Ranjan, (2005). Debrahmanising History: Dominance and Resistance in Indian Society. Manohar: New Delhi. Mission Prakashan, (2003). Second Freedom Struggle: Chandapuri’s Call to Overthrow Brahmin Rule. Mission Prakashan Patna: Bihar. Omvedt, Gail, (2006). Dalit Visions. Oscar Publications: New Delhi. Pandian, M.S.S., (2007). Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present. Manohar: New Delhi. Ram, Dadasaheb Kanshi, (2001). How to Revive the Phule-Ambedkar-Periyar Movement in South India. Bahujan Samaj Publications: Bangalore. Ramasami, Periyar, [3rd edition] (1998). Declaration of War on Brahminism. Chennai. Ramasami, Periyar E.V., [ new ed] (1994). Periyana. Chintakara Chavadi: Bangalore. Ramasami, Periyar, [new ed] (1994). Religion and Society:: Selections from Periyar’s Speeches and Writings. Emerald Publishers: Madras. Sen, Amiya P., (2003). Social and Religious Reform: The Hindus of British India. Oxford University Press: New Delhi; New York. Srilata, K., (2006). Other Half of the Coconut: Women Writing Self-Respect History – an anthology of self-respect literature, 1928–1936. Oscar Publications: Delhi. Thirumavalavan, Thol; Meena Kandasamy (2003). Talisman, Extreme Emotions of Dalit Liberation: Extreme emotions of Dalit Liberation. Popular Prakashan: Mumbai. Thirumavalavan, Thol; Meena Kandasamy (2004). Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers. Popular Prakashan. Venugopal, P., (1990). Social Justice and Reservation. Emerald Publishers: Madras. Yadav, Bibhuti, (2002). Dalits in India (A set of 2 Volumes). Anmol Publications. New Delhi. வெளி இணைப்புகள் periyar.org திராவிட இயக்கத் தலைவர்கள் தமிழ் இறைமறுப்பாளர்கள் நீதிக்கட்சித் தலைவர்கள் 1879 பிறப்புகள் 1973 இறப்புகள் பெரியாரியல் பெண்ணியவாதிகள் தமிழ் சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள் தமிழ்ச் சமூகப் போராளிகள் ஈரோடு மாவட்ட நபர்கள் இந்திய பகுத்தறிவாளர்கள் இந்திய இறைமறுப்பாளர்கள் தமிழ்நாட்டு இறைமறுப்பாளர்கள் பெரியார் ஈ. வெ. இராமசாமி
1496
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
இந்திரா காந்தி
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தியாக.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார். இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார். ஒரு பிரதம மந்திரியாக, அவருக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார். அவருக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய தேசிய காங்கிரசிலிருந்த பலம் மிக்க முதிர்ந்த தலைவர்களை ஓரங்கட்டினார். இதன் ஒரு அங்கமாக 1969-இல் குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட, இவருடைய தலைமையில் அமைந்த பிரிவு மிகுந்த பலத்துடன் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது. 1971-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அச்சமயத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது. 1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பிழையாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார். எனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முன்னைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது. எனினும் இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984-இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இளமை இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் ஒரே குழந்தையாக பிறந்தார். இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஒரு செல்வவளம் மிக்க வழக்கறிஞர் ஆவார். காந்திக்கு முந்தைய காலத்தில் இந்திய தேசிய காங்கிரசில் மோதிலால் நேரு மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு நன்கு படித்தவரும், இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவருமாவார். இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு புகழ்பெற்ற தலைவரும் ஆவார். இந்திரா பிறந்ததிருந்த காலத்தில், காந்தியின் தலைமையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் நேரு நுழைந்தார். நோயாளியும், நேரு வீட்டுப்பொருட்களில் இருந்து விலகி இருந்த தமது தாய் கமலா நேருவின் முழு கவனிப்பில் வளர்ந்த இந்திரா, வலுவான பாதுகாப்பு உள்ளுணர்வையும், ஒரு தனிப்பட்ட பண்பையும் வளர்த்துக் கொண்டார். இவரின் தாத்தாவும், தந்தையும் தொடர்ச்சியாக தேசிய அரசியலில் சிக்கிக் கொண்டிருந்ததால், அதுவும் இவரின் உன்னிப்பான பிரச்சனைகளுடன் ஒன்றி கலந்தது. விஜயலட்சுமி பண்டிட் உட்பட, தந்தையின் சகோதரிகளுடன் இவர் முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். இது அரசியல் உலகிலும் தொடர்ந்தது. நேருவின் சுயவரலாற்று நூலில், விடுதலையை நோக்கி என்ற பகுதியில், தாம் சிறையில் இருந்த போது காவலர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்ததாகவும், தன் மீது அரசாங்கம் விதித்திருந்த அபராதங்களுக்காக சில நாற்காலிகளை எடுத்துச் சென்றதாக அவர் எழுதுகிறார். "இந்த தொடர்ச்சியான நாசப்படுத்தும் செயல்முறைகள், என் நான்கு வயது மகளான இந்திராவை மிகவும் பாதித்தது. மேலும் அவள் காவலரை எதிர்த்தாள், அத்துடன் அவளின் வலுவான எதிர்ப்பையும் தெரிவித்தாள். அந்த ஆரம்பகட்ட உணர்வுகள் பொதுவாக காவல் படை குறித்த அவளின் எதிர்கால கண்ணோட்டத்தை மாற்றியமைக்கக் கூடும் என்று நான் அஞ்சினேன்." என்று குறிப்பிட்டுள்ளார். இந்திரா இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக வானரசேனா என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இவ்வானரசேனா அமைப்பு போராட்டங்கள் மற்றும் கொடி அணிவகுப்புகள் ஆகியன நடத்தியதன் மூலமாகவும், காங்கிரஸ் அரசியல்வாதிகளின் உணர்வுப்பூர்வமான வெளியீடுகளை மற்றும் தடைவிதிக்கப்பட்டவைகளை வினியோகித்ததன் மூலமாகவும் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிறு பங்கை வகித்தது. ஐரோப்பாவில் கல்வி 1936இல், இந்திராவின் அன்னை கமலா நேரு, ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இறுதியாக காசநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அந்த சமயத்தில் இந்திராவிற்கு 18 வயது. இந்திரா தனது இளமைப்பருவத்தில் ஒருபோதும் ஒரு நிலையான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சோமெர்வெல்லி கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, அதாவது 1930களின் பிற்பகுதியில், இலண்டனை மையமாக கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினரானார். 1940களின் தொடக்கத்தில், தீராத நுரையீரல் நோயிலிருந்து மீண்டு வர இந்திரா சுவிட்சர்லாந்தில் வீட்டு ஓய்வில் நேரத்தை செலவிட்டார். அவரின் குழந்தைப்பருவத்திலிருந்தே தனது தந்தையுடன் கடிதம் மூலம் கொண்டிருந்த உறவைப் போலவே, தற்போதும் தந்தையுடன் நீண்ட கடிதங்கள் மூலம் அவரின் தொலைதூர உறவையும் தக்க வைத்துக்கொண்டிருந்தார். அவர்கள் அரசியல் குறித்தும் கடிதங்கள் மூலம் விவாதித்தார்கள். ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த ஆண்டுகளில், அரசியலில் செயல்பட்டு வந்த பெரோஸ் காந்தி என்ற ஒரு பார்சி இளைஞரை சந்தித்தார். பெரோஸ் காந்தியுடன் திருமணம் இந்திரா மற்றும் பெரோஸ் காந்தி இந்தியாவிற்கு திரும்பிய போது, அவர்கள் காதலர்களாக இருந்தார்கள். மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு இடையில், திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானித்தார்கள். பெரோசின் திறந்த மனப்பான்மை, நகைச்சுவை உணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை இந்திராவிற்கு பிடித்திருந்தது. இவ்வளவு விரைவாக அவர் மகள் திருமணம் செய்து கொள்வதை நேரு விரும்பவில்லை. மேலும் அவர்களின் காதல் உறவை பிரிக்க மகாத்மா காந்தியின் உதவியையும் நாடினார். காதலில் இருந்த இந்திரா மிகவும் பிடிவாதமாக இருந்தார். 1942 மார்ச்சில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. பெரோசும் , இந்திராவும் இருவருமே இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்தனர். 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் அவர்கள் பங்கெடுத்த போது, இருவருமே கைது செய்யப்பட்டார்கள். சுதந்திரத்திற்கு பின்னர், தேர்தலில் களம் இறங்கிய பெரோஸ் , உத்திர பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகிய இரண்டு மகன்கள் பிறந்த பின்னர், ஏதோ சில கருத்து வேறுபாடுகளால் 1958 வரை அந்த தம்பதியினர் பிரிந்து வாழ்ந்தார்கள். பெரோஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் உடைந்த திருமண வாழ்வு மீண்டுமிணைந்தது. ஆனால் 1960 செப்டம்பரில் பெரோஸ் மரணமடைந்தார். அரசியல் ஈடுபாடு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் 1959 மற்றும் 1960ன் போது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நின்ற இந்திரா காந்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவிகாலம் குறிப்பிடத்தக்கதாக அமையவில்லை. தந்தையின் பிரதிநிதியாக நடிக்க வேண்டி இருந்தது. இந்திரா 1960இல் நடைபெற்ற தேர்தலில் ஓர் இடத்திற்கும் போட்டியிடவில்லை. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் 1964 மே 27இல் நேரு மரணமடைந்தார், புதிய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரியின் வலியுறுத்தலின் பேரில் இந்திய தேர்தல்களில் போட்டியிட்டு, உடனடியாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தார். இந்தி மொழி பேசாத மாநிலமான தமிழ்நாட்டில் இந்தி தேசிய மொழியாக ஆக்கப்பட்டதன் காரணமாக எழுந்த போராட்டங்கள் காரணமாக இந்திரா மெட்ராஸ் விரைந்தார். அங்கு அரசாங்க அதிகாரிகளுடன் பேசிய அவர், சமுதாய தலைவர்களின் கோபத்தை மட்டுப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டுமான முயற்சிகளையும் பார்வையிட்டார். தாங்கள் காட்டத் தவறிய இதுபோன்ற முனைவால், லால்பகதூர் சாஸ்திரியும், பிற மூத்த அமைச்சர்களும் வியப்படைந்தார்கள். அமைச்சர் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் சாஸ்திரியைக் குறிவைத்தோ அல்லது அவரின் சொந்த அரசியல் முன்னேற்றங்களையோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அறிவிக்கப்பட்ட வகையில் அவர் அவரின் அமைச்சக செயல்பாடுகளில் ஒவ்வொரு நாளும் ஆர்வமில்லாமல் இருந்தார், ஆனால் ஊடக ஆர்வலராகவும், அரசியல் மற்றும் தனிச்சிறப்பை உருவாக்குவதிலும் அவர் தனித்திறன் பெற்றிருந்தார். "திருமதி. இந்திராகாந்திக்கும் அவரின் போட்டியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களின் போது, பல மாநிலங்களில் இருந்த மத்திய காங்கிரஸ் [கட்சி] தலைமைகள் மற்றும் மாநில காங்கிரஸ் [கட்சி] அமைப்புகளில் இருந்த மேல் சாதித் தலைவர்களை மாற்றி பிற்பட்ட சாதியினரை அவர்களுக்கு மாற்றாக இருத்தவும், இதன் மூலம் மாநில காங்கிரஸிலும், எதிர்கட்சியிலும் இருந்த போட்டியாளர்களைத் தோற்கடிக்கவும், பிந்தைய சாதியினரின் ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவும் முனைந்தது. இந்த தலையீடுகளால் ஏற்பட்ட விளைவுகள், (இவற்றில் சில வெறுமனே சமூக முன்னேற்றமாகவும் உணரப்பட்டது), பொதுவாக இன பிராந்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தியது...." இந்தியா-பாகிஸ்தான் போர் 1965ல் இந்திய-பாக்கிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திரா காந்தி ஸ்ரீநகர் பிராந்திய எல்லைகளில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். பாகிஸ்தான் போராளிகள் நகரத்திற்கு மிக நெருக்கமாக ஊடுறுவி இருந்ததாக இராணுவத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும், அவர் ஜம்முவிற்கோ அல்லது டெல்லிக்கோச் செல்ல மறுத்துவிட்டார். மாறாக, உள்ளூர் அரசாங்கத்தை கூட்டியதுடன், ஊடக கவனத்தையும் ஈர்த்தார். பாகிஸ்தானின் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது, 1966 ஜனவரியில் தாஸ்கண்ட் என்ற இடத்தில் உருசியாவின் முன்னிலையில், தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பாகிஸ்தானின் அயூப் கானுடன் ஓர் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு பின்னர், சாஸ்திரி மாரடைப்பால் காலமானார். பின்னர், மொரார்ஜி தேசாயின் எதிர்ப்பு இருந்த போதினும், இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக ஆக்குவதில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் கே. காமராஜ் ஒரு கருவியாக இருந்தார். மொரார்ஜி தேசாய் பின்னர் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டார், இதில் இந்திரா காந்தி 355 க்கு 169 வாக்குகள் பெற்று மொரார்ஜி தேசாயியைத் தோற்கடித்து இந்தியாவின் ஐந்தாவது தலைமை அமைச்சராகவும் அப்பதவியைப் பெறும் முதல் பெண்மணியாகவும் ஆனார். தலைமை அமைச்சர் முதல் பதவிகாலம் 1966ல் இந்திரா காந்தி தலைமை அமைச்சரான போது, காந்தியின் தலைமையிலான பொதுவுடைமைவாதிகள் மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான பழமைவாதிகள் என காங்கிரஸ் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. ராம் மனோகர் லோகியா 'செவிட்டு பொம்மை' என்ற அர்த்தத்தில் குங்கி குடியா என்று இந்திராவை அழைத்தார். இந்த உட்பூசல்கள் 1967 தேர்தல்களில் எதிரொளித்தது, இத்தேர்தலில் காங்கிரஸ் 545மக்களவை இடங்களில் 297 இடங்களை வென்று 60 இடங்களுக்கு மிகக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்வியடைந்தது. இந்திரா மொரார்ஜி தேசாயை இந்தியாவின் துணை பிரதம மந்திரியாகவும், நிதி மந்திரியாகவும் நியமிக்க வேண்டிதாயிற்று. 1969இல், தேசாயுடனான அவரின் பல ஒத்துழையாமைக்குப் பின், இந்திய தேசிய காங்கிரஸ் உடைந்தது. அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் பொதுவுடைமைவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவில் ஆட்சி புரிந்தார். அதே ஆண்டில், 1969 ஜூலையில் அவர் வங்கிகளை தேசியமயமாக்கினார். 1971ல் பாகிஸ்தானுடனான யுத்தம் பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானின் உள்நாட்டு மக்களுக்கு எதிராக பரந்தளவிலான அட்டூழியங்களை நடத்தியது. கணக்கிடப்பட்ட வகையில் 10 மில்லியன் அகதிகள் இந்தியாவிற்கு வந்தனர், இதனால் நாட்டில் நிதி தட்டுப்பாடும், உறுதியற்ற நிலையும் ஏற்பட்டது. அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, கிழக்கு பாகிஸ்தானியர்கள் அவர்களின் சுதந்திரத்தை அடைய உதவும் வகையில், இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது போர் அறிவி்த்தார். ரிச்சர்ட் நிக்சன் தலைமையிலான அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததுடன் போர் தொடுத்ததற்காக இந்தியாவை எச்சரி்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானமும் நிறைவேற்றியது. நிக்சன் தனிப்பட்ட வகையில் இந்திராவை வெறுத்தார். நிக்சன் அவரின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹென்றி கிஸ்சென்கருடனான இரகசிய உரையாடலில் (தற்போது அரசுத்துறையால் இது வெளியிடப்பட்டுள்ளது) இந்திராவை "சூனியக்காரி" என்றும் "தந்திர நரி" என்றும் குறிப்பிட்டிருந்தார். . இந்திரா நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இது ஐக்கிய நாடுகள் அவையில் அரசியல் ஆதரவு மற்றும் ஒரு சோவியத் வீட்டோ அதிகாரம் கிடைக்க வழி வகுத்தது. 1971 பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது, பங்களாதேஷ் உருவானது. வெளிநாட்டு கொள்கை இந்திரா பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி சுல்பிகார் அலி பூட்டோவை ஒரு வாரகால மாநாட்டிற்கு சிம்லாவிற்கு வர அழைப்பு விடுத்தார். பேச்சு வார்த்தைகளின் பல-தோல்விகளுக்குப் பின்னர், இரண்டு நாட்டு தலைவர்களும் இறுதியில் சிம்லா உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இது இரு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதி வழியில் தீர்ப்பதில் உடன்பட்டிருந்தது. நிக்சனின் மீதான அவரின் வெறுப்பால், அமெரிக்காவுடனான இந்திராவின் உறவுகள் விலகியிருந்தது. அதே வேளையில் சோவியத் ஒன்றியத்துடனான உறவுகள் நெருக்கமாக வளர்ந்தன. இந்தியா பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒரு நிரந்தர எல்லையாக உருவாக்காததற்காக இந்திராகாந்தி சிலரால் விமர்சிக்கப்பட்டார், சில விமர்சகர்கள், பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலான காஷ்மீர் பாகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூட கூறினார்கள். இப்பகுதியின் 93,000 போர்க்கைதிகள் இந்திய கட்டுப்பாட்டின்கீழ் இருந்தனர். ஆனால் இந்த உடன்படிக்கை உடனடியாக ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மூன்றாம் நாடுகளின் குறுக்கீடுகளை நீக்கியது, அத்துடன் பாகிஸ்தான் உடனடியாக எதிர்காலத்தில் ஒரு பெரிய தாக்குதலைத் தொடுப்பதற்கான விருப்பத்தையும் பெருமளவில் குறைத்தது. ஒரு முக்கிய பிரச்சனையில் பூட்டோ முழுமையாக சரணடைய வேண்டும் என்று கோராமல், பாகிஸ்தான் உறுதிபெறவும், சராசரி நிலையடையவும் இந்திரா அனுமதித்தார்.பல தொடர்புகள் ஆண்டுகளாக உறைந்து (மூடப்பட்டு) போயிருந்தாலும் கூட, வர்த்தக உறவுகளும் சராசரி நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. ரூபாய் மறுமதிப்பீடு 1960களின் இறுதிப்பகுதியில், வணிகத்தை அதிகரிக்க இந்திராவின் நிர்வாகம் இந்திய ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலரின் அடிப்படையில் 4லிருந்து 7க்கு 40% மறுமதிப்பீடு செய்ய ஆணையிட்டது. அணு ஆயுதங்கள் திட்டம் சீனாவின் மக்கள் குடியரசிடம் இருந்து வந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு பிரதிபலிப்பாகவும், அணுசக்தி அதிகாரங்களிடமிருந்து இந்தியாவின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைச் சுதந்திரமாக வைத்திருக்கவும் 1967ல் ஒரு தேசிய அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. 1974ல், மறைமுகமாக "சிரிக்கும் புத்தர்" என்ற இரகசிய சொல்லுடன், ராஜஸ்தானில் பொக்ரான் என்ற இடத்தில் இந்தியா வெற்றிகரமாக ஒரு நிலத்தடி அணுச்சோதனை நடத்தியது. இந்த சோதனை அமைதி நோக்கம் கொண்டது தான் என்ற அறிவிப்புடன், இந்தியா உலகின் இளம் அணுசக்தி அதிகாரமாக உருவானது. பசுமை புரட்சி 1960களில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு விவசாய கண்டுபிடிப்பு திட்டங்கள் மற்றும் கூடுதல் அரசு உதவியானது, இந்தியாவில் கடுமையாக நிலவி வந்த உணவுப் பற்றாக்குறையை நீக்கியது. கோதுமை, அரிசி, பருத்தி மற்றும் பால் ஆகியவற்றின் கூடுதல் உற்பத்திக்கு வழிகோலியது. நிக்சன் தலைமையிலான அமெரிக்காவிடம் இருந்து உணவுப்பொருள் மானியத்தைப் பெறுவதற்கு பதிலாக, இந்தியா ஒரு உணவு ஏற்றுமதியாளராக மாறியது. அதன் வணிகமுறையிலான பயிர் உற்பத்தியுடன் கூடிய இந்த சாதனை "பசுமை புரட்சி" என்று கூறப்பட்டது. அதே வேளையில், குறிப்பாக இளம் குழந்தைக்களுக்கு இருந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை, எதிர்த்து போராட உதவும் வகையில், பால் மற்றும் முட்டை உற்பத்தியில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் வெண்மை புரட்சி எனப்பட்டது. 'உணவு பாதுகாப்பு' என்று அழைக்கப்பட்ட திட்டம், 1975 வரையிலான ஆண்டுகளில் இந்திரா காந்திக்கு உதவியாக இருந்தது. 1960களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட, மாவட்ட வேளாண் விரிவாக்க திட்டத்திற்கு அளிக்கப்பட்ட பெயர் தான் பசுமை புரட்சி. இது ஏராளமான, விலைமதிப்பற்ற தானியங்களை நகர்புறவாசிகளுக்கு உறுதியளித்தது. இவர்களின் ஆதரவை காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே மிகவும் நாடியிருந்தார். இந்த திட்டம் நான்கு முன்னுரையைக் கொண்டிருந்தது: புதிய வகை விதைகள், இந்திய வேளாண்மையில் இரசாயனமாக்கலின் தேவையை ஏற்றுக்கொள்வது, அதாவது உரங்கள், பூச்சிகொல்லிகள், களை கொல்லிகள் மற்றும் இதர பிற புதிய மற்றும் மேம்பட்ட தற்போதிருக்கும் விதை வகைகளை விரிவு செய்ய தேசிய மற்றும் சர்வதேசிய கூட்டுறவிற்கு பொருப்பு உயர்கல்வி கல்லூரிகளில் விஞ்ஞான, வேளாண் பயிலகங்களை விரிவு செய்வதற்கான திட்டம். சுமார் பத்து ஆண்டுகளை நிலைத்திருந்த பின்னர், இறுதியாக கோதுமை உற்பத்தியை சுமார் மும்மடங்காக்கவும், ஒரு குறைந்தளவிலான ஆனால் குறிப்பிடத்தக்க அரிசி உற்பத்தி உயர்வையும் இந்த திட்டம் கொண்டு வந்தது. தினை, கிராம்பு மற்றும் பருவெட்டான தானியங்கள் போன்ற தானியங்களின் விளைச்சலில் சிறிதும் உயர்வு ஏற்படவில்லை. உண்மையில், இவை அறிவிக்கப்பட்ட வகையில் நிலையான விளைச்சலைத் தக்க வைத்திருந்தன. 1971 தேர்தல் வெற்றியும், இரண்டாவது பதவி காலமும் (1971–1975) 1971ஆம் ஆண்டு பொது தேர்தலில் சிறப்பான வெற்றிக்குப் பின்னர் இந்திராவின் அரசாங்கம் முக்கிய பிரச்சனைகளை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் உள் கட்டமைப்பு அதன் எண்ணிலடங்கா பிளவுகளைத் தொடர்ந்து, கட்சி இந்திராவின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது. கரீபி ஹட்டாவோ (வறுமையை விரட்டு) என்பது தான் இந்திரா காந்தியின் 1971ஆம் ஆண்டு கருத்துருவாக இருந்தது. இந்த பிரச்சாரமும், அதனுடன் சேர்த்து முன்வைக்கப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களும், கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளின் அடிப்படையில், இந்திராவுக்கு ஒரு சுதந்திரமான தேசிய ஆதரவைப் பெற்றுத் தந்தது. இதனால் மாநிலத்திலும், உள்நாட்டு அரசாங்கத்திலும் இரண்டிலும் செல்வாக்கு பெற்றிருந்த கிராமப்புற சாதிகளும், நகர்புற பெருமக்களும் அரசியலில் செல்வாக்கு பெறுவதைத் தவிர்க்கும்படி செய்தது. மேலும், முன்னர் குரல்கொடுக்க முடியாத ஏழைகள் இறுதியில் அரசியல் செல்வாக்கிலும், அரசியல் வலுவிலும் அவர்களின் பங்கிற்கு ஆதாயம் பெற்றார்கள். உள்ளூரில் மட்டும் செயல்படுத்தப்பட்ட போதினும், வறுமையை விரட்டு எனும் கொள்கை மூலம் உருவாக்கப்பட்ட திட்டங்கள் புது டெல்லியாலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாலும் நிதி உதவி வழங்கப்பட்டு, விரிவு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டன, அதற்கென ஊழியர்களும் நியமிக்கப்பட்டார்கள். "புதிய மற்றும் பரந்த ஆதரவு வளங்களை... நாடு முழுவதும் செலவிட்டு இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமென்ற முனைப்பை இந்த திட்டங்கள் அளித்தது.". வறுமையை ஒழிப்பதில் கரீபி ஹட்டாவோ திட்டத்தின் தோல்வியை கல்வி ஆய்வாளர்களும், வரலாற்றாளர்களும் தற்போது ஒத்து கொள்கிறார்கள். அதாவது பொருளாதார முன்னேற்றத்திற்காக மொத்த நிதியில் சுமார் 4 சதவீதம் ஒதுக்கப்பட்டு மூன்று வறுமை ஒழிப்பு தி்ட்டங்களுக்கு அளி்க்கப்பட்டது. இதில் சிறிதளவு கூட மதிப்புமிக்க அளவில் ஒருபோதும் 'ஏழைகளிலும் ஏழைகளுக்கு' சென்று சேரவில்லை. மாறாக, இந்த திட்டத்தின் வெறும் கூச்சல்கள், இந்திரா காந்தியின் மறு-தேர்வுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டப் பயன்படுத்தப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுகளும், தேர்தல் முறைகேடு பற்றிய தீ்ர்ப்பும் 1971 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராஜ் நரேன் என்பவர் இந்திரா மீது தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கொன்றைத் பதிவு செய்தார். ராஜ் நரேன், இந்திராகாந்திக்கு இணையாக, சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தினார். இவருக்கு எதிராக இந்திரா எப்போதும் போராடி வந்தார். அரசாங்க வளங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய பல பெரிய மற்றும் சிறிய சம்பவங்களை குறித்து குற்றஞ்சாட்டி இருந்தார். 1971 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்தரப்பாளரை இந்திரா காந்தி தோற்கடித்திருந்தார். வழக்கின் போது தம் வாதத்திற்கு ஆதாரங்கள் அளித்த இந்திராகாந்தி, நேர்மையற்ற தேர்தல் நடவடிக்கைகள், அதிகபடியான தேர்தல் செலவுகள் மற்றும் அரசு இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகளை கட்சி நலனுக்கு பயன்படுத்தியது ஆகியவற்றிற்காக குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டார். அவருக்கு எதிராக பெரும் ஊழல் குற்றங்களை நீதிபதி நிராகரித்தார். ராஜ் நரேனால் கொண்டு வரப்பட்ட இவ்வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட்டது. 1975 ஜூன் 12ல், முறைகேடுகளின் அடித்தளத்தில் மக்களவைக்கான தேர்தலில் இந்திராகாந்தியின் தேர்வு அமைந்திருப்பதாக அலஹாபாத் உயர்நீதிமன்றம் அறிவி்த்தது. நீதிபதி சின்கா அந்த தீர்ப்பை வழங்கி இருந்தார். (1971ல் ராஜ் நரேனுக்கு எதிராக இந்திரா தேர்தல் முறைகேடுகள் செய்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், 1977 நாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திராவை தோற்கடித்தார்) , இதனால் நாடாளுமன்றப் பதவியில் இருந்து இந்திரா நீக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தடை விதித்தது. தலைமை அமைச்சரானவர் மக்களவையில் (இந்திய நாடாளுமன்றத்தில் கீழ்சபை) அல்லது மாநிலங்களவையில் (நாடாளுமன்றத்தின் மேல்சபை) ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். இவ்வாறு, இந்த முடிவு அவரை பதவியில் இருந்து இறக்கியது. ஆனால் பதவித் துறப்பு செய்வதற்கான வலியுறுத்தல்களை நிராகரித்த இந்திராகாந்தி, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான திட்டங்களை அறிவித்தார். நீதிமன்றத்தின் உத்தரவால் நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் இருந்து நீ்க்கப்படவிருந்த போதிலும், இந்த தீர்ப்பு தமது பதவிக்கு குழிபறிக்காது என்று இந்திரா குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "எங்களின் அரசாங்கம் சுத்தமாக இல்லை என்று நிறைய பேச்சுக்கள் இருக்கின்றன, ஆனால் எங்களின் அனுபவத்தில் {எதிர்} கட்சிகள் அரசாங்கங்கள் உருவாக்கினால் நிலைமை மேலும் படு மோசமாக இருக்கும்" என்றார். அனைத்து கட்சிகளும் பயன்படுத்திய அதே முறையைத் தான் தேர்தல் பிரச்சார நிதிக்காக அவரின் காங்கிரஸ் கட்சியும் பின்பற்றியது என்று கூறி அவர் விமர்சனங்களை நிராகரித்தார். இந்திரா கட்சியின் ஆதரவைத் தக்க வைத்திருந்தார், அது அவருக்கு ஆதரவாக ஓர் அறிக்கை வெளியிட்டது. தீர்ப்பு குறித்த செய்திகள் பரவியவுடன், அவரின் வீட்டின் முன் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தங்களின் பற்றுறுதியை வலியுறுத்தினார்கள். இந்திராகாந்தியின் தீர்ப்பு அவரின் அரசியல் வாழ்க்கையைப் பாதிக்காது என்று இந்திய உயர்மட்ட ஆணையாளர் பி.கே. நேரு தெரிவித்தார். "திருமதி. இந்திராகாந்தி நாட்டில் இன்னமும் தொடர்ந்து ஆதரவை பெற்றிருக்கிறார்," என்று அவர் தெரிவித்தார். "இந்திய வாக்காளர்கள் முடிவெடுத்தாலொழிய இந்திய பிரதம மந்திரி அவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்றார். போராட்டங்களும், உள்நாட்டுக் கலகங்களும் இந்திரா அவரின் முடிவை அறிவித்த போதும், "அவர் தமது கடைசி மூச்சு" உள்ளவரை மக்களுக்கான சேவையைத் தொடர இருப்பதாக அறிவித்த போதும், எதிர்கட்சிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் அந்த சூழ்நிலைகளில் இருந்து அரசியல் மூலதனத்தைப் பெற விருப்பம் கொண்டார்கள், அவர்கள் அவரின் இராஜினாமாவை வலியுறுத்தி பெருந்திரளான பேரணியை நடத்தினார்கள். பல மாநிலங்களி்ல் சங்கங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் வேலைநிறுத்தங்கள் வாழ்க்கையையே நிலைதடுமாற வைத்தது. இந்த போராட்டத்தை வலுப்படுத்த, ஆய்தமற்ற பொதுமக்களின் கூட்டங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டால், அந்த உத்திரவுகளுக்கு கீழ்படிய வேண்டாம் என்று ஜெய பிரகாஷ் நாராயண் காவலரைக் கேட்டுக் கொண்டார். இந்திராவின் அரசாங்கத்திடமிருந்து தெளிந்திருந்த பொதுமக்களின் மயக்கமும், மோசமான பொருளாதாரக் காலமும் ஒன்றிணைந்தன. அவரின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லியில் அவரின் வீட்டின் முன்பாகவும், நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றியும் பெருமளவிலான எதிர்ப்பாளர்களின் கூட்டங்கள் சுற்றி வளைத்தன. இந்திரா ஏற்கனவே அதிகாரத்துவத்திற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அவரின் வலுவான நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அவரின் ஆளும் காங்கிரஸ் கட்சி அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வந்திருந்தது. அது மத்திய அரசுக்கு ஆதரவாக மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே அதிகாரப்பகிர்வை மாற்றியது. எதிர்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள் சட்ட "ஒழுங்கின்றியும், காட்டுமிராண்டித்தனமாக" இருப்பதாகவும் கூறி அரசியல் அமைப்பின் 356வது பிரிவின்கீழ் அவர் இரண்டு முறை ஜனநாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்து கட்டுப்பாட்டை பறித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும், நிர்வாக சேவையாளர்களும் இந்திராவின் மிக நெருங்கிய அரசியல் ஆலோசகராக இருந்த சஞ்சய் காந்தியின் அதிகரித்து வந்த செல்வாக்கி்ல் சீற்றம் கொண்டார்கள். இந்திரா பதவி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், இந்திராவின் ஆலோசகராக இருந்த பி. என். அக்சருக்கு மாற்றாக சஞ்சய்காந்தி நியமிக்கப்பட்டிருந்தார். அதிகாரப் பதவியைப் பயன்படுத்துவதற்கான அவரின் புதிய போக்குக்கிற்கான எதிரொலியாக பொதுமக்கள் தலைவர்களும், ஜெய பிரகாஷ் நாராயண், சத்யேந்திர நாத் சின்ஹா மற்றும் ஆச்சார்ய கிருபாளனி போன்ற முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திராவுக்கும், அவரின் அரசாங்கத்திற்கும் எதிராகப் பேசிக் கொண்டு நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டனர். நாட்டின் அவசரகால நிலை (1975–1977) தேர்தல் முறைகேடு குறித்து அவர் மீதான தீர்ப்புக்கு எதிராக இந்திரா ஒரு மேல்முறையீடு செய்தார். மேலும் ஜனநாயகத்திற்கு இடையூறு செய்வதற்கான திட்டம் இருப்பதாக கூறி, அவர் முரண்பாடாக அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தினார். சுமார் 20 மத்திய மந்திரிகள் உட்பட, ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய ஊடகம் தணிக்கை செய்யப்பட்டது. 1975 ஆகஸ்ட் மாதம், எதிர்கட்சியினரை ஆயுதந்தாங்கிய வலுமையுடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே கொண்டு சென்றதுடன், பலரை கைது செய்த நிலையில், அவரின் ஊழல் குற்றங்களில் இருந்து விடுவிக்க மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபெற்ற பெரும்பாலான எதிர்கட்சியினரை கைது செய்ய உத்தரவிட்டதன் மூலம் இந்திராகாந்தி ஆணையைத் தக்க வைக்கும் முயற்சியி்ல் இருந்தார். பின்னர் அலஹாபாத் உயர்நீதி மன்ற முடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒழுங்கின்மை மற்றும் சட்டமுறையின்மையால் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது, நாட்டில் அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்று இந்திராவின் அமைச்சரவையும், அரசாங்கமும் கேட்டுக் கொண்டது. அதன்படி, 1975 ஜூன் 26ல் அரசியல் அமைப்பு 352 பிரிவின் அடிப்படையில் உள்நாட்டு ஒழுங்கின்மையின் காரணமாக நாட்டில் அவசரகால நிலையை குடியரசுத் தலைவர் அறிவித்தார். சில மாதங்களுக்கு உள்ளாகவே, எதிர்கட்சிகளின் ஆட்சியில் இருந்த குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மொத்த நாடும் மத்திய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஊரடங்குச் சட்டங்கள் ஏற்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. குடிமக்கள் காலவரம்பின்றிக் காவலில் வைக்கப்பட்டார்கள். செய்திகள் மற்றும் ஊடகங்களின் அனைத்து வெளியீடுகளும் கணிசமான அளவிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் தணிக்கை செய்யப்பட்டன. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் இந்தர் குமார் குஜ்ரால் அவரின் பணியில் சஞ்சய் காந்தியின் தலையீட்டிற்கு எதிராக பதவியைத் துறந்தார். பிற்காலத்தில் இந்தர் குமார் குஜ்ரால் இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவி வகித்தார். இறுதியாக, நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தல்கள் காலவரம்பின்றி தள்ளி வைக்கப்பட்டன. இத்துடன் மாநில ஆளுநரின் பரிந்துரையுடன் மாநில அரசாங்கங்களைக் கலைக்கலாம் என்ற அரசியல் அமைப்பு பிரிவைப் பயன்படுத்தி, எதிர்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் நீ்க்கப்பட்டன. தனக்கு அதிக அதிகாரங்களைப் பெற அவசரகால சட்டங்களை இந்திரா பயன்படுத்தினார். "வலுவான முதலமைச்சர்களி்ன் கட்டுப்பாட்டிலும், அவர்களின் அரசியல் கட்சிகளுடனும் மற்றும் மாநில கட்சி அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பிய அவர் தந்தையைப் (நேரு) போலில்லாமல், சுதந்திரமான அடித்தளத்தைக் கொண்டிருந்த ஒவ்வொரு காங்கிரஸ் முதலமைச்சரையும் திருமதி. காந்தி வெளியேற்றினார். மேலும் அவருக்கு தனிப்பட்ட வகையில் ஆதரவான அமைச்சர்களை அவர்களுக்கு மாற்றாக நியமித்தார்...இவ்வாறு இருந்தும், மாநிலங்களில் ஸ்திரமின்மையைத் தக்க வைக்க முடியவில்லை..." தீர்ப்பின்படி ஆட்சி தீர்ப்பாய ஆட்சியை அனுமதிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமற்ற ஆணைகளை குடியரசுத் தலைவர் அஹ்மத் வெளியிடுமாறு அவர் செய்தார் என்றும் இந்திரா மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. அதே வேளையில், ஆயிரக்கணக்கான அரசியல் செயல்வீரர்களின் கைது மற்றும் காவல் உட்பட கருத்துவேறுபாடுகளை நீக்கும் ஒரு பிரச்சாரத்தை இந்திராவின் அரசாங்கம் கையில் எடுத்தது. ஜக் மோகன் கண்காணிப்பில் (இவர் பின்னர் டெல்லியின் துணை கவர்னராக ஆக்கப்பட்டார்) டெல்லியின் ஜமா மஸ்ஜித்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சேரிகளை அகற்றும் முனைப்பில் சஞ்சய் கருவியாக இருந்தார். இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இது நாட்டின் தலைநகரத்தில் இருந்த அந்த பகுதி சமூகத்திடையே சினமூட்டியதுடன், ஆயிரக்கணக்கான தந்தையர்களின் விதைநாளத்தில் கட்டாயமாக செய்யப்பட்ட குடும்ப கட்டுப்பாடு திட்டம் ஆகியவையும் மக்களிடையே எரிச்சலூட்டின. இவை பெரும்பாலும் மோசமாக நிர்வகிக்கப்பட்டன. தேர்தல்கள் அவசரகால நிலையை இரண்டு முறை விரிவாக்கியதற்குப் பின்னர், 1977ல் அவரின் ஆட்சியை நியாயப்படுத்த வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திராகாந்தி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். கடுமையாக தணிக்கை செய்யப்பட்ட பத்திரிக்கைகள் அவரை பற்றி என்ன எழுத வேண்டுமென நினைத்தாரோ அதனை எழுதின. அதை படித்ததன் மூலம் அவரின் செல்வாக்கை ஒட்டுமொத்தமாகத் தவறாகக் கணித்தார். எந்த விஷயத்திலும், அவர் ஜனதா கட்சியால் எதிர்க்கப்பட்டார். "ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு" இடையில் ஒரு நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்தியாவிற்கான கடைசி வாய்ப்பு தான் இந்த தேர்தல் என்று அவரின் நீண்டகால எதிர்க்கட்சியான ஜனதா, அதன் தலைமையான மொரார்ஜி தேசாயுடனும் ஆன்மீக வழிகாட்டியான ஜெய் பிரகாஷ் நாராயண் உடனும் சேர்ந்து அறிவித்தது. இத்தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ் கட்சி கடுமையான் தோல்வியைத் தழுவியது. இந்திரா மற்றும் சஞ்சய் இருவரும் அவர்களின் தொகுதியில் தோல்வியடைந்தார்கள். அத்துடன் காங்கிரஸ் (அதற்கு முந்தைய மக்களவையில் 350 இடங்களுடன் ஒப்பிடுகையில்) 153 இடங்களை மட்டுமே கைப்பற்றியது, அதில் 92 இடங்கள் தெற்கில் இருந்து கிடைத்தவையாகும். நீக்கம், கைது மற்றும் மறுபிரவேசம் 1969இல் இந்திய அரசியல் அமைப்பிற்கான தேர்வாக, மொரார்ஜி தேசாய் தலைமை அமைச்சராகவும், நீலம் சஞ்சீவி ரெட்டி குடியரசுத் தலைவராகவும் பதவியேற்றார்கள். 1978 இடைதேர்தலில் வெற்றி பெறும் வரையில் இந்திரா காந்தி அவரை அவரே, பணியோ, வருமானமோ அல்லது இருப்பிடமோ இல்லாமல் இருப்பதாகக் கண்டார். 1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் உடைந்தது. ஜகஜீவன் ராம், பஹூகுணா மற்றும் நந்தினி சத்பதி போன்ற இந்திராவின் மிக முக்கியமான முன்னாள் ஆதாரவாளர் பிரிந்து வெளியேறினார்கள். அவர்கள் மூவரும் இந்திராவிற்கு மிக நெருக்கமாக இருந்தார்கள், ஆனால் சஞ்சய்காந்தியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் அரசியல் தந்திரத்தால் வலுக்கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சஞ்சய் இந்திராவின் செல்வாக்கைச் சிதைக்க விரும்பம் கொண்டிருந்தார் என்று பின்னர் வதந்தி ஏற்பட்டது. அப்போது அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக இருந்த போதிலும், காங்கிரஸ் (இந்திரா) கட்சி நாடாளுமன்றத்தில் வெகு சிறிய குழுவாக இருந்தது. பல்வேறு கூட்டணிப் பூசல்களுக்கு இடையில் ஆட்சி புரிய முடியாமல், ஜனதா அரசாங்கத்தின் உள்நாட்டு மந்திரி சௌத்ரி சரண் சிங், பல குற்றச்சாட்டுக்களுக்காக இந்திரா மற்றும் சஞ்சய் காந்தியை கைது செய்ய உத்தரவிட்டார். இதில் எந்த குற்றச்சாட்டையும் இந்திய நீதிமன்றத்தில் எளிதாக நிரூபிக்க முடியவில்லை. கைது என்றால் இந்திரா தானாகவே நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதை குறிக்கிறது. எவ்வாறிருப்பினும், இந்த வழிமுறை பேரழிவுமிக்க வகையில் திருப்பி அடித்தது. அவரின் கைது மற்றும் நீண்ட கால வழக்குகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரை ஒரு கொடுங்கோலராக பார்த்த மக்களிடையே அவருக்கு பெரியளவில் அனுதாபத்தைப் பெற்று தந்தது. இந்திரா (அல்லது "அந்த பெண்மணி", பலரால் இவ்வாறு தான் அழைக்கப்பட்டார்) மீதான வெறுப்பின் காரணமாக மட்டுமே ஜனதா கூட்டணி ஒன்றுபட்டிருந்தது. பொதுவில் சிறுபான்மையுடன், அரசாங்கம் உட்பூசல்களில் சிக்கி்க் கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையை இந்திரா அவரின் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முடிந்தது. மறைமுகமாக அவசரகால நிலையின் போது செய்த "தவறுகளுக்காக" வருத்தம் தெரிவி்த்து, மீண்டும் அவர் அறிக்கைகள் அளிக்கத் தொடங்கினார். 1979 ஜூனில் மொரார்ஜி தேசாய் பதவித் துறப்பு செய்தார், சரண் சிங் அரசாங்கத்திற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று இந்திரா உறுதி அளித்ததைத் தொடர்ந்து ரெட்டியால் சரண் சிங் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்திரா ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர், அவர் அவரின் ஆரம்பநிலை ஆதரவைத் திரும்ப பெற்றார், 1979 குளிர்காலத்தில் ஜனாதிபதி ரெட்டி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அதை தொடர்ந்து வந்த ஜனவரியில் நடத்தப்பட்ட தேர்தல்களில், காங்கிரஸ் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்குத் திரும்பியது. 1980களில், இந்திரா காந்தியின் அரசாங்கம் விடுதலைப்புலிகளிற்கும், இலங்கையில் இருந்த பிற தமிழ் போராளிகள் குழுக்களுக்கும் பணம், ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்சிகளை அளித்தது. மூன்றாம் பதவி காலம் செலாவணி நெருக்கடி 1980களின் தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 7ல் இருந்து 12ஆக 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததை இந்திராவின் நிர்வாகம் தடுத்து நிறுத்துவதில் தோல்வியுற்றது. பஞ்சாப் நடவடிக்கை இந்திரா காந்தியின் பிந்தைய ஆண்டுகள் பஞ்சாப் பிரச்சனைகளுடன் தொல்லையில் இருந்தது. பஞ்சாபில் சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து வந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். 1984 ஜூனில், ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவின் சிக்கிய சுந்திர போராட்டக் காலிஸ்தான் பிரிவினைவாத குழு, சிக்கியர்களின் புனிதத்தளமான பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்தது. இதனைத் தீர்க்க ஆபரேசன் புளூஸ்டார் என்ற நடவடிக்கை இந்திரா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். பொற்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருந்த போதினும், அந்த நேரத்தில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கை சர்வதேச ஊடகத்தால் பெரிதும் கண்டனத்திற்குள்ளானது. பாதிக்கப்பட்ட இராணுவ மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையில் அரசாங்க எண்ணிக்கையும், அரசு சார்பற்ற எண்ணிக்கையும் வேறுபடுகிறது. நான்கு அதிகாரிகள், 79 வீரர்கள் மற்றும் 492 சிக்கியர்கள் என்று அரசாங்கம் கணக்கிட்டது; அரசுசாரா கணக்கீடு இதை விட அதிகமாக இருந்தது. ஒருவேளை 500 அல்லது அதற்கு மேலான துருப்புகளும், துப்பாக்கி சூட்டில் சிக்கி கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 3,000 சிக்கியர்களும் இருந்திருக்கலாம். உண்மையான ஆவணங்கள் இல்லாததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குறித்த துல்லியமான விபரங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் மற்றும் முறையும் பரவலாக விமர்சிக்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான விமர்சனங்கள் சிக்கியர்கள் மீதான ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்பதாக இந்திரா காந்திக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டது. சிக்கியர்களின் சுதந்திரம் பற்றிய யோசனைகளையும், காலிஸ்தான் என்றழைக்கப்படும் ஒரு பிரிவினைவாத அரசை உருவாக்குவதற்கான யோசனையையும் போதித்தன் மூலம் "விரோதத்தை" வளர்த்து வந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேயை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறி அதை அவர் நியாயப்படுத்தினார். படுகொலை தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்திக்கு எண்ணிலடங்கா காவலர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங், இருவருமே சீக்கியர்கள். அவர்கள் 1984 அக்டோபர் 31ஆம் தேதி, புதுடெல்லியில் உள்ள எண் 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த தலைமை அமைச்சரின் வீட்டுத் தோட்டத்தில் தங்களின் சேவை ஆயுதங்களால் இந்திரா காந்தியைப் படுகொலை செய்தனர். ஐரிஷ் தொலைக்காட்சிக்காக பிரித்தானிய நடிகர் பீட்டர் உஸ்தினோவ்வால் ஓர் ஆவணப்படத்திற்கு பேட்டி அளிப்பதற்காக, இந்திரா சத்வந்த் மற்றும் பீண்ட்டின் காவலில் இருந்த விக்கெட் கேட்டைக் கடந்து சென்றார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக கிடைத்த தகவலின்படி, பீண்ட் சிங் அவரின் பக்கவாட்டு ஆயுதத்தால் அவரை மூன்று முறை சுட்டார், சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியால் 30 ரவுண்டுகள் சுட்டார். அவரின் பிற காவலாளிகளால் பீ்ண்ட் சிங் சுட்டு கொல்லப்பட்டார், சத்வந்த் சிங் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்திரா அவரின் அரசாங்கக மகிழுந்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது வழியில் உயிர் துறந்தார், ஆனால் பல மணி நேரங்களுக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை. அவர் அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான பயிலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் 29 உள் சென்று வெளியேறிய காயங்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது, சில அறிக்கைகள் அவரின் உடலில் இருந்து 31 குண்டுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. அவர் ராஜ்காட்டிற்கு அருகில் நவம்பர் 3ஆம் தேதி எரியூட்டப்பட்டார். அவரின் இறப்புக்கு பின்னர், புதுடெல்லியைச் சுற்றி வளைத்த இந்திரா காந்தியின் மதிப்பிற்கு பாத்திரமான காங்கிரஸ் அரசியல்வாதிகளால் அதிருப்தி உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டது. காந்தியின் நண்பரும், சுயசரிதையாளருமான புபுல் ஜெயகர் இந்திராவின் பதட்டத்தையும், ஆப்ரேஷன் ப்ளூஸ்டாரின் விளைவாக என்ன நடக்கும் என்பது குறித்த அவரின் முன்னெச்சரிக்கையும் வெளிப்படுத்தி காட்டினார். சொந்த வாழ்க்கை நேரு-காந்தி குடும்பம் தொடக்கத்தில் சஞ்சய் அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசாக இருந்தார்; ஆனால் ஒரு விமான விபத்தில் அவர் இறந்த பின்னர், விருப்பமற்றிருந்த ராஜீவ்காந்தியை, விமான ஓட்டியாக இருந்த அவரின் வேலையை விட்டுவிட்டு, 1981 பிப்ரவரியில் அரசியலில் நுழையுமாறு இந்திரா வலியுறுத்தினார். இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்னர், ராஜீவ் காந்தி தலைமை அமைச்சரானார். 1991 மே மாதத்தில், அவரும் படுகொலை செய்யப்பட்டார், அவர் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது தமிழீழ விடுதலை புலிகளின் மனித வெடிகுண்டினால் கொல்லப்பட்டார். ராஜீவின் மனைவி சோனியா காந்தி, 2004 மக்களவை தேர்தல்களில் ஓர் ஆச்சரியமூட்டும் தேர்தல் வெற்றிக்குப் பின் ஐக்கிய முன்னேற்ற கூட்டணியைத் தலையேற்று நடத்தினார். சோனியா காந்தி இந்தியத் தலைமை அமைச்சராகப் பதவியை ஏற்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார், ஆனால் காங்கிரஸ் அரசியல் இயந்திரங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்;இவரின் பேர குழந்தைகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அரசியலில் இறங்கினர். சஞ்சய் காந்தியின் விதவை மனைவி மேனகா காந்தியும் (சஞ்சையின் மரணத்திற்கு பின்னர், இந்திராவிடமிருந்து பிரிந்து வந்த இவர், அனைவராலும் அறியப்பட்ட வகையில் பிரதம மந்திரியின் வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்), சஞ்சயின் மகன் வருண் காந்தியும் முக்கிய எதிர்கட்சியான பிஜேபி கட்சியின் உறுப்பினர்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். முரண்பாடுகள் மறைந்த இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தி, 1970களில் உத்தியோகப்பூர்வமாக இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் தங்களை கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டாய கருத்தடைத் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் அறியாமையிலிருந்த ஆண்களும் கருத்தடை செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. இந்தியாவில் இந்த திட்டம் இன்றும் நினைவு கூறப்படுவதுடன் விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்ப கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்குவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது. கவுரவங்கள் பெருமை அமெரிக்க மூத்த அரசியல்வாதி ஹென்றி ஏ. கிஸ்ஸிங்கர் இந்திரா காந்தியை "இரும்புப் பெண்மணி" என்று வர்ணித்தார். 1971-இல் வங்காளதேச விடுதலைப் போரில் பாக்கித்தானுக்கு எதிராக இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, இந்தியக் குடியரசுத் தலைவர் வி. வி. கிரி இந்திராகாந்திக்கு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருதை வழங்கினார். 2011ஆம் ஆண்டு, வங்கதேச விடுதலைப் போருக்கு இவர் ஆற்றிய "சிறந்த பங்களிப்புகளுக்காக" வங்களாதேசத்தின் மிக உயர்ந்த குடிமகன் விருதான வங்காளதேச விடுதலை மரியாதை, மரணத்திற்குப் பின் இந்திராகாந்திக்கு வழங்கப்பட்டது. பாக்கித்தானை தோற்கடித்து கிழக்கு பாகித்தானை சுதந்திர வங்களாதேசமாக மாற்றுவதற்கான அமெரிக்க அழுத்தத்தின் முகத்தில் இந்திராகாந்தி உறுதியாக இருந்தார். அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகளின் குழுவில் இந்தியா இணைவதற்கும் இவர் காரணமாக இருந்தார். இந்தியா அணிசேரா இயக்கத்தின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வமாக இருந்தாலும், இவர் இந்திய வெளியுறவுக் கொள்கையை சோவியத் முகாமை நோக்கி அமைத்தார். 1999 ஆம் ஆண்டில், பிபிசியால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி வாக்கெடுப்பில் இந்திராகாந்தி "மில்லேனிய பெண்" என்று அழைக்கப்பட்டார். 2012இல், அவுட்லுக் இந்தியாவின் சிறந்த இந்தியர் என்ற வாக்கெடுப்பில் ஏழாவது இடத்தை இந்திராகாந்தி பிடித்தார். இவற்றையும் பார்க்கவும் இந்தியப் பிரதமர்கள் பிரபல இந்தியர்களின் பட்டியல் கூடுதல் வாசிப்பு வேத் மெஹ்தா, குடும்ப விவகாரம்: மூன்று பிரதம மந்திரிகளின் கீழ் இந்தியா (1982) ஐஎஸ்பிஎன் 0-19-503118-0 புப்புல் ஜெயகார், இந்திரா காந்தி: ஓர் உன்னத வாழ்க்கை வரலாறு (1992) ஐஎஸ்பிஎன் 9780679424796 கேத்ரீன் பிரான்க், இந்திரா: இந்திரா நேருவின் வாழ்க்கை ஐஎஸ்பிஎன் 0-395-73097-X ராமாச்சந்திரா குஹா, காந்திக்கு பின்னர் இந்திரா: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வரலாறு (2007) ஐஎஸ்பிஎன் 978-0-06-019881-7 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Rare pictures of Indira Gandhi website of Indira gandhi hjtjg இந்திய பிரதம மந்திரிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் 1917 பிறப்புகள் 1984 இறப்புகள் நேரு-காந்தி குடும்பம் அரசியலில் இந்திய பெண்கள் இந்திய இந்துக்கள் கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் இந்தியப் பிரதமர்கள் வரலாற்றில் பெண்கள் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் இந்திய நிதியமைச்சர்கள் லெனின் அமைதிப் பரிசு பெற்றவர்கள் இந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் பெண் அரசுத் தலைவர்கள் 4வது மக்களவை உறுப்பினர்கள் இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் 5வது மக்களவை உறுப்பினர்கள் 6வது மக்களவை உறுப்பினர்கள் 7வது மக்களவை உறுப்பினர்கள் இந்திராகாந்தி படுகொலை பெண் பிரதமர்கள்
1498
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
மோகன்தாசு கரம்சந்த் காந்தி
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, , அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. வாழ்க்கை இளமை மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி; தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவதாஸ் (1890). மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, தனது 16வது வயதில் தந்தையை இழந்தார். பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் தாதா அப்துல்லாஹ் கம்பெனி எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார். தென்னாப்பிரிக்காவில் இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார். தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார். 1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார். மும்பை துறைமுகத்தில் 1915 -ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார். அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். (தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து வெளிநாடுவாழ் இந்தியர் நாள் கொண்டாடப்படுகின்றது) இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். 1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார். பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரித்தானிய அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரித்தானிய சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். வேறு வழியில்லாமல் பிரித்தானிய அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார். உண்ணாநிலைப் போராட்டங்கள் காந்திஜி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டார். அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தினார். மகாத்மா காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். மறைவு மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். நினைவு நாள் மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. கொள்கைகள் பகவத் கீதை, ஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். இவர் தனது காமத்தை வெல்லும் பொருட்டு பல்வேறு சோதனைகளைச் செய்து வந்தார். அவை பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது மனைவியின் அனுமதியுடன் தான் செய்தார். இவை இன்றளவும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார். வேறுபாடுகள் தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்வதை அனுமதிக்க வேண்டும் என ஆலய நுழைவுப் போராட்டத்தை காந்தி துவங்கிய பொழுது, அம்பேத்கர் அதை ஆதரிக்கவில்லை. ஒட்டுமொத்த வர்ணாசிரம முறையையே ஒழிக்க வேண்டும் எனவும், வர்ணாசிரம முறை ஒழிந்தபின் ஆலய நுழைவு போராட்டமே அர்த்தமற்றது எனவும் அம்பேத்கர் கருதினார். தீண்டாமையும் ஏற்றத் தாழ்வுகளும் இல்லாத வர்ணாசிரம முறையைத் தான் ஏற்றுக் கொள்வதாக காந்தி அறிவித்தார். திருநெல்வேலி சைவ சித்தாந்த குருகுலப் பள்ளியில், சமூகத்தில் உயர்ந்த வகுப்பினர்க்கு தனி விடுதி, மற்றவர்க்கு தனி விடுதி என கடைபிடிக்கப்பட்டதை, இந்து மத அறத்தின்படி சரி என காந்தி வாதிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே, ஈ. வெ. இராமசாமியை பேராய காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுக்க தள்ளியது. இதனை ஒட்டி, பெங்களூரில் ஈ. வெ. இராமசாமிக்கும், காந்திக்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இக் கலந்தாய்விலும், காந்தி இந்து மத அறத்தின் தேவையை வலியுறுத்தியதால் ஈ. வெ. இராமசாமி பேராய கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்தார். சுயசரிதை காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும் An Autobiography: The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் காந்தியின் நினைவுச் சின்னங்கள் தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது. மதுரையில் இராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடத்தில் 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது. மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் ஏலம் இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய சர்க்காவும், அவரது கடைசி உயிலும் 2013இல் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது.அவரது சர்க்கா 1,10,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் ஒரு கோடி), அவரது கடைசி உயில் 20,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் 18 லட்சம்) ஏலம் போனது. இந்த ஏலம் பற்றி முன்னமே அறிந்திருந்தும் எந்த தடையும் இந்திய அரசு ஏற்படுத்தாதலால், அவை தனி நபர் வசம் செல்லும் மதிப்பற்ற நிலை அந்தப் பொருட்களுக்கு ஏற்பட்டது. விமர்சனங்கள் பகத்சிங்கின் தூக்குதண்டனை காந்தி - இர்வின் ஒப்பந்தத்தில் பகத் சிங் முதலியவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான சரத்தினை சேர்க்க வலியுறுத்தாமைக்காக பலரால் விமர்சிக்கப்படுகிறார். கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதம் தென் ஆப்பிரிக்க காந்தி: பேரரசின் பல்லக்குப் பணியாளன் (The South African Gandhi: Stretcher-Bearer of Empire) என்ற நூலும் தெய்வீக முகமூடிக்குப் பின்னால் உள்ள காந்தி (Gandhi Behind the Mask of Divinity) என்ற நூலும் பிற பல கட்டுரைகளும் காந்தியை அவரது தென் ஆப்பிரிக்க எழுத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்வைத்தும் கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதியாகவும், வெள்ளை அரசுக்கு சார்பான ஆரிய பேரினவாதியாகவும் சித்தரிக்கின்றன, விமர்சிக்கின்றன. எ.கா நற்றல் (Natal) நாடுளுமன்றத்துக்கு 1893 ஆம் ஆண்டு காந்திய எழுதிய ஒரு கடிதத்தில் பின்வருமாறு கூறுகிறார்: மேற்கோள்கள் இவற்றையும் பார்க்க கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி புத்லிபாய் மீரா பென் வெளி இணைப்புகள் விக்கிமூலத்தில் காந்தியின் எழுத்துகள், பேச்சக்கள் காந்தியின் சுயசரிதை — ஆங்கில e-text http://www.gandhiserve.org/ http://www.mahatma.org.in/ காந்தி மேடைப் பேச்சு காணொளி காந்தி ஸ்மிருதி அருங்காட்சியகம் காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் காந்தி: அபூர்வ புகைப்படங்களில் சாதியை பற்றிய அம்பேத்கர் எழுப்பிய கேள்வியும், காந்தியின் அதிசயிக்க பதிலும் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு இந்திய அரசியல்வாதிகள் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் அறப் போராளிகள் காந்தியம் 1869 பிறப்புகள் 1948 இறப்புகள் குஜராத் மக்கள் குடியியற் சட்டமறுப்பு செயற்பாட்டாளர்கள் இந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் இந்தியப் புரட்சியாளர்கள் மகாத்மா காந்தி குடும்பம் 20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள்
1499
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
இராஜீவ் காந்தி
இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 21 மே 1991 அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். சமய நல்லிணக்க நாள் இராசீவ் காந்தி பிறந்த நாளான ஆகத்து, இருபதாம் நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது. இவற்றையும் பார்க்கவும் இராசீவ் காந்தி படுகொலை இந்தியப் பிரதமர்கள் வெளி இணைப்புகள் இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள் இந்தியப் பிரதமர் குறிப்புகள் கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் இந்தியப் பிரதமர்கள் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் 1944 பிறப்புகள் 1991 இறப்புகள் இந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் நேரு-காந்தி குடும்பம் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்திய நிதியமைச்சர்கள் இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள் 10வது மக்களவை உறுப்பினர்கள் 7வது மக்களவை உறுப்பினர்கள் இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
1501
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81
ஜவகர்லால் நேரு
ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889 – மே 27, 1964), இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் ஆவார். இவர் பண்டிட் நேரு என்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், இவர் காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார். இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் குடியரசு இந்தியாவின் முதல் தலைமை அமைச்சராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்துலக அரசியலில் மிக முக்கியமான ஆளுமையாகத் திகழ்ந்தார். வாழ்க்கை வரலாறு உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் "சிகப்பு நகை" என்று பொருள்; இச்சொல்லிலிருந்து "ஜவஹர்லால்" என்ற பெயர் உருவானது. நேரு குடும்பத்தார் காசுமீரி பண்டிதர் கவுல் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள். (காசுமீரக் கால்வாயைக் குறிக்கும் சொல் நெகர் மருவி நேரு ஆயிற்று. இராசகவுலின் பின் வந்தோருக்கு நேரு பட்டம் ஆகியது). நேரு குடும்பம் முதன்மை வீதியையும் சந்தடி நிறைந்த கடைத் தெருவையும் ஒட்டியிருந்த பழைய பகுதியான சௌக்கியில் முதலில் வசித்து வந்தது. மோதிலால் நேரு, பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அலகாபாத்திற்கு வந்து வழக்குரைஞர் தொழில் புரிந்தார். அரசர்கள், நிலக்கிழார்கள் மற்றும் பணக்காரர்களின் வழக்குகளை ஏற்று நடத்தியதால் பெயரும் புகழும் நிதியும் இவரிடம் குவிந்தன. எனவே மோதிலால் தனது இருப்பிடத்தை, பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார். இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேருவும் அவரின் இரு சகோதரிகளுமான, விஜயலட்சுமி பண்டிட்டும், கிருஷ்ணாவும் ஆனந்தபவன் என்ற பெரிய மாளிகையில் வளர்ந்து வந்தனர். அக்காலத்தில் இந்திய உயர் குடிமக்களால், அன்று அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர். கல்வி ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். ஜவகர்லால் நேரு, ஹார்ரோவில் உள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. அவர், பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாகவும், தங்குமிடத்தின் நிலை, வீட்டிலிருந்து வெகுதொலைவு வந்ததையும் உணர்ந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்சு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். நேரு, அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார். சுதந்திர வெளிப்பாட்டிற்குப் பெயர்பெற்ற அப்பல்கலைக்கழகம், வரிசையான பல பாடத்திட்டம் அல்லாத கலைகளில் பங்கு பெற ஊக்குவித்தது. மற்றும் அவருடைய பொது உருவ அமைப்பாலும் முக்கிய தாக்கத்தை உண்டாக்கியதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பில்-இல் சட்டம் பயிலப் பதிவு செய்து கொண்டார். ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாகத் தந்தை வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு, இறுதித்தேர்வில் 1912 இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில்-இல் ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார். திருமணம் கமலா கவுல் என்ற 16 அகவை நிரம்பிய காசுமீரிப் பிராமணப் பெண்ணை, 1916 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதியன்று மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி என்கிற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோசு காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாகச் செயல்பட்டார். ஆனால், 1936-ஆம் ஆண்டு கமலா நேரு இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.. அவரின் கடைசிக் காலத்தில் தன் மகளோடும் தங்கை விசயலட்சுமி பண்டிதையருடனும் வாழ்ந்தார். அரசியல் 1916-இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919-இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். சிறை வாழ்க்கை 1920-இல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921-இல் நேரு முதல் முறையாக சிறைக்குச் சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் அறவழியில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 16 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஓர் எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை முழங்கினார். ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்குக் கொடுக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களாட்சி, உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக் கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை எதிரொளிக்கின்றன. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. சில சமயங்களில் இவரை "நவீன இந்தியாவின் சிற்பி" என்று குறிப்பிடுவதுண்டு. இவருடைய மகள் இந்திரா காந்தியும், பேரன் ராஜீவ் காந்தியும் இந்தியாவின் தலைமை அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். இந்தியாவின் முதல் பிரதம மந்திரி நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1945-ஆம் ஆண்டு சூன் மாதம் 15-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை மாற்றித்தரும் திட்டத்துடன் இங்கிலாந்து அமைச்சரக தூதுக்குழு வந்ததால் நேருவும் அவரின் சகாக்களும் விடுவிக்கப்பட்டனர். நேரு இடைக்கால அரசாங்கத்தைத் தலைமையேற்று நடத்திச் செல்லும்போது மத வன்முறை, அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க் கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக், முஸ்லிம்களுக்காகப் பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரியது ஆகியவற்றால் உண்டான கலவரங்கள் நேருவின் ஆற்றலை முடக்கின. சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் நேரு தயக்கத்துடன் வேறு வழியின்றி 1947 சூன் 3-இல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். 15 ஆகஸ்ட் 1947 அன்று, இந்தியாவின் முதல் தலைமை அமைச்சராக, பதவி ஏற்று விதியுடன் ஒரு போராட்டம் என்கிற தலைப்பில் தொடக்க உரையாற்றினார். "பல வருடங்களுக்கு முன்னால் நாம் விதியுடன் போராடினோம். இப்போது நாம் செய்த சத்தியத்தை செயலாக்கும் நேரம் முழுவதுமாக இல்லாவிட்டாலும் அல்லது முழு அளவில் இல்லாவிட்டாலும் மிக அவசியமாக வந்து விட்டது. நடுநிசி நேரத்தில், உலகம் உறங்கும்போது இந்தியா சுதந்திரத்துடன் உயிர்ப்புடன் விழிக்கும். சரித்திரத்தில் மிக அரிதான சமயம் வரும், அப்போது ஒரு சகாப்தம் முடியும்போது மற்றும் தேசத்தின் ஆத்மா கொடுமைப்பட்டது முடிவதை தேடும்போது பழையனவற்றிலிருந்து நாம் புதியனவற்றிற்காக வர வேண்டும். இந்தப் புனிதமான நேரத்தில் இந்தியாவின் சிறந்த மனிதநேயத்திற்காகவும் இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று நாம் பிரமாணம் செய்துகொள்வோம்." இந்தக் காலகட்டம் ஆழமான சமுதாய வன்முறையால் குறிப்பிடப்பட்டது. இந்த வன்முறை பஞ்சாப் மாகாணம், டில்லி, வங்காளம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்தது. நேரு பாகிஸ்தானிய தலைவர்களுடன் பாதிக்கப்பட்ட அகதிகளின் கோபத்தைத் தணித்து அமைதியை உண்டாக்கி உற்சாகப்படுத்த எல்லா இடங்களுக்கும் பயணம் செய்தார். நேரு, மௌலானா ஆசாத் மற்றும் பிற முஸ்லிம் தலைவர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களைப் பாதுகாத்து அவர்களை இந்தியாவிலேயே இருக்கும்படி உற்சாகப்படுத்தினார். அந்த நேரத்து வன்முறை அவரை மிகவும் பாதித்ததால் எல்லாவற்றையும்எவற்றை? நிறுத்த ஆணையிட்டார். ஐக்கிய நாடுகள் அவையும் 1947 இந்திய பாகிஸ்தான் போரை நிறுத்தச் சொன்னது. சமுதாயக் கலவரங்களுக்காகப் பயந்த நேரு, ஐதராபாத் மாநிலத்தைச் சேர்க்க ஆதரவு அளிக்கத் தயங்கினார். சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த ஆண்டுகளில் நேரு அவரின் சொந்த விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளவும் அவரைக் கவனித்துக் கொள்ளவும் அடிக்கடி மகள் இந்திராவையே நாடினார். 1952-இல் நடந்த தேர்தலில் நேருவின் தலைமையின் கீழ் காங்கிரசு பெருமளவில் வெற்றி பெற்றது. நேருவைக் கவனிப்பதற்காக இந்திரா, அவருடைய அதிகாரப் பூர்வமான வீட்டிற்கு குடிபெயர்ந்தார். பொருளாதாரக் கொள்கைகள் நேரு நவீன புதுப்பிக்கப்பட்ட இந்திய முறைப்படியான மாநிலத்திட்டம் மற்றும் பொருளாதாரத்தின் மேல் கட்டுப்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்த ஆயத்தமானார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951-இல் வரைந்தார். அது அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. தொழில்களை அதிகப்படுத்துதல், வருமான வரிகள்மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்கள் நன்மைக்குச் சேவை செய்யும் சில நுணுக்கமான தொழிற்சாலைகளான சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற் சாலைகள் தனியாரிடம் போவதை தடுத்து அரசாங்கமே நடத்த திட்டமிட்டார். நேரு நில மறு பங்கீட்டை முதன்மைபடுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டும் திட்டத்தை அமல்படுத்தினார், மேலும் விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையைப் பரப்பினார். தொடர்ச்சியான சமுதாய முன்னேற்றத் திட்டங்களை, குடிசைத்தொழில்களைப் பரப்பும் நோக்கத்துடன் செயல்படுத்தினார். பெரிய அணைகளை (இவற்றை "இந்தியாவின் புதுக் கோவில்கள்" என்று அழைத்தார்) கட்ட ஊக்கப்படுத்தியதோடு அல்லாமல் விவசாயம், நீர் மின்சாரம் ஆகியவற்றை பெரிதும் ஆதரித்தார். அணுஆற்றலில் இந்தியா சிறக்கவும் திட்டங்களைச் செயல்படுத்தினார். பிரதம மந்திரியாக நேரு பதவி வகுத்த காலத்தில் பெரும்பாலான காலங்களில் விவசாய உற்பத்தி அதிகரித்தும், முன்னேறி இருந்தும் கூட இந்தியா தொடர்ந்து மிகவும் மோசமான உணவுப் பற்றாக்குறையை சந்திக்க வேண்டி இருந்தது. நேருவின் தொழிற்சாலை கொள்கைகள் "தொழிற்சாலை கொள்கை தீர்வு" 1956-இல் மாறுபட்ட உற்பத்திகள் மற்றும் கனரக இயந்திரங்கள் வளர்ச்சியை ஊக்குவித்தது. இருப்பினும் மாநிலத்திட்டம், கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றினால் உற்பத்தி, தரம் மற்றும் லாபம் முடங்கத் தொடங்கின. இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 2.5% என்ற நிலையான வளர்ச்சி தரத்தை எட்டினாலும், கடுமையான வேலையில்லா திண்டாட்டம், பரவலான வறுமை மக்களைத் தொடர்ந்து ஆட்டிப்படைத்தது. கல்வி மற்றும் சமூக சீர்திருத்தம் இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு, அதில் மிகவும் அக்கறை காட்டினார். அவரது அரசாங்கம் உயர் கல்வி நிறுவனங்களை அமைத்துக் கவனித்து வந்தது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள், தேசிய தொழில்நுட்ப கழகங்கள் ஆகியவை அவற்றுள் சில. நேரு தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் குழந்தைகளுக்குப் பால் மற்றும் மதிய உணவு அளிக்கும் திட்டத்தையும் அமலாக்கினார். கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். இந்திய நாடாளுமன்றம், நேருவின் அறிவுரைப்படி இந்து மதம் சட்டத்தில், ஜாதி வேறுபாடுகளைக் குற்றமாகப் பாவித்தல், பெண்களுக்கான சமூக சுதந்திரம் மற்றும் சட்ட உரிமைகளை அதிகப்படுத்துதல் போன்ற மாற்றங்களை உருவாக்கியது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைசாதியினர் அனுபவித்த சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மேல் நிலையில் உள்ளவர்களுடன் அவர்கள் போட்டியிடும்போது ஏற்படும் குறைபாடுகளைக் களையும் வகையில் அரசாங்கப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்காக இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார். மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம் போன்றவற்றை ஆதரித்த நேரு அரசில் சிறுபான்மையினர் அதிகளவில் பங்குபெறச்செய்தார். தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆங்கில ஆளுமையிலிருந்து சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலங்களில், புதிய சுதந்திர இந்தியாவை நேரு 1947 முதல் 1964 வரை வழிநடத்தினார். அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும், தங்களுக்குள் நடந்த பனிப் போரின்போது இந்தியாவைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ள இரண்டு நாடுகளும் போட்டியிட்டன. 1948-இல் காஷ்மீரில் ஐக்கிய நாடுகளின் ஆணையால் ஒரு மாநாடு நடத்துவதாக உறுதி அளித்திருந்தாலும், ஐக்கிய நாடுகளின் பேரில் வளர்ந்த அதிகமான சலிப்பினால் 1953-இல் மாநாடு நடத்துவதைக் கைவிட்டார். தான் முன்பு ஆதரித்த காஷ்மீரி அரசியல்வாதி ஷேக் அப்துல்லா, பிரிவினையைத் தூண்டும் நோக்கத்துடன் செயல்பட்டதாக இப்போது சந்தேகித்து அவரைக் கைது செய்ய ஆணை இட்டார். அவருக்குப் பதிலாகப் பக்ஷி குலாம் முகமது இடம் பெற்றார். உலகப் பார்வையில் நேரு சமாதானப்படுத்துவதில் மன்னர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளர். கூட்டுச்சேராக் கொள்கை மற்றும் கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கி, முறைப்படுத்திய நாடுகளுக்கு முன்னோடியாக இருந்து பகைமை நாடுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் நடுநிலை வகிக்க முனைந்தார்.இயக்கம் தோற்றுவித்த உடன், மக்கள் குடியரசான சீனாவை அடையாளம் கண்டுகொண்டு (நிறைய வட தேசங்கள் தொடர்ந்து சீனாவுடன் நல்லுறவு கொண்டிருந்தன), நேரு சீனாவை ஐக்கிய நாடுகளுடன் சேர்த்துக் கொள்ள வாதாடினார். மற்றும் கொரியர்களுடனான சண்டையில் சீனர்களை ஆத்திரக்காரர்கள் என்று பிரகடனப் படுத்துவதை நேரு மறுத்தார். 1950 இல் திபெத் ஊடுருவியும் அதனுடன் சுமூகமான உறவை ஏற்படுத்த வழி வகுத்தார். கம்யுனிச நாடுகளுக்கும், மேற்கத்திய தேசங்களுக்கும் இடையில் இறுக்கத்தைத் தளர்த்தி பிளவைச் சரிக்கட்ட நம்பிக்கையுடன் தூதுவர்போல் செயல்பட்டார். மிதவாதக் கொள்கை மற்றும் சீனாவின் மீது இருந்த நம்பிக்கையும், சீனா, 1962-இல் திபெத்தை ஒட்டியிருந்த அக்ஸாய் சின்னை காஷ்மீரிலிருந்து தன்னுடன் இணைத்துக் கொண்டது சீன-இந்திய போருக்கு வழிவகுத்தது. அணுஆயுத பயங்கரத்தையும், மிரட்டல்களையும் மற்றும் உலக துன்பத்தையும் தணிக்க நேருவின் கடின முயற்சி பலராலும் ஆதரிக்கக்கப்பட்டது. அணு ஆயுதங்களால் மனித சமுதாயத்திற்கு உண்டாகும் விளைவுகளைப் பற்றிய அவரது முதல் ஆராய்ச்சி மற்றும் அவரால் "பயங்கரமான அழிவு இயந்திரங்கள்" என்று கூறப்பட்டவைகளை ஒழிக்க அயராது பிரச்சாரம் செய்தார். அணு ஆயதங்களை அவர் ஆதரிக்காததற்கு அவரிடம் பல காரணங்கள் இருந்தன. இந்த அணு ஆயுதப் போட்டி ராணுவத்தையும் தாண்டித் தன் சொந்த நாட்டைப் போல் மற்ற நாடுகளையும் வளர்ச்சி குறைவானதாக்கி விடும் என்று நேரு கருதினார். 1956-இல் இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் இஸ்ரேல் சேர்ந்து சசூயஸ் கால்வாயை ஊடுருவியதை விமர்சித்தார். சந்தேகமும் நம்பிக்கையின்மையும் இருந்தும் இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையில் குளிர்ந்த உறவைக் கண்டு சந்தேகம் ஏற்பட்டதால் சோவியத் யூனியனை ஆதரிக்க வேண்டியதாயிற்று. இங்கிலாந்து மற்றும் உலக வங்கியின் நடுநிலையால் நேரு 1960-இல் இண்டஸ் தண்ணீர் உடன்படிக்கையில் பாகிஸ்தான் ஆட்சியாளர் ஆயுப் கானுடன் கையெழுத்திட்டார். இது பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முக்கிய நதிகளின் வளங்களைப் பங்கு போட்டுக்கொள்வதில் நடந்த நீண்ட நாள் வழக்குகளைத் தீர்ப்பதற்காகக் கையெழுத்திடப்பட்டது. இறுதிக் காலம் தேர்தலில் நேரு காங்கிரசை மிகப் பெரிய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனாலும் அவருடைய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது. உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப் போன நேரு பதவியைத் துறக்க நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார். 1959-இல் தனது மகள் இந்திரா, காங்கிரசு தலைவரானதும் அதிக விமரிசனங்கள் எழுந்தன. நேரு மக்களாட்சிக்குப் புறம்பானது என்று கூறி தன் கட்சியில் இந்திராவின் பதவியை மறுத்தார். இந்திராவே கொள்கை விஷயத்தில் தன் தந்தையுடன் மிகுந்த கசப்புணர்வுடன் இருந்தார்; குறிப்பாக, காங்கிரசு காரிய கமிட்டி கேரளா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசை நீக்கியது. நேரு தொடர்ந்து மகளின், நாடாளுமன்றப் பழமையை மதிக்காதது மற்றும் தூக்கி எறிவது போல் நடப்பது போன்றவற்றால் தர்மசங்கடத்திற்கு உள்ளானார். தன் தந்தையின் பெயரால் இல்லாமல் தன் சொந்த அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்திரா செயல்பட்டது மிகுந்த மனவருத்தத்தை அவருக்கு ஏற்படுத்தியது. திபெத்தின் மீதான 1954 சீன-இந்திய உடன்படிக்கையில் பஞ்சசீலக் கொள்கைகள் அடிப்படையாக இருந்தாலும், பின்னர் நேருவின் வெளியுறவுக் கொள்கை எல்லைச்சண்டையினால் மற்றும் தலாய்லாமாவுக்கு அடைக்கலம் தர முடிவு செய்து அனுமதி அளித்தது, இவையெல்லாம் சீனாவின் எதிர்ப்பை அதிகப்படுத்தியதால் சிரமப்பட்டது. பல வருடங்கள் தொடர்ந்து சமாதானம் பேசியும் தோல்வியடைந்ததால், நேரு 1961-இல் போர்த்துக்கலிலிருந்து கோவாவை இணைத்துக் கொள்ள இந்திய ராணுவத்திற்கு அனுமதியளித்தார். கோவா விடுதலை மூலம் அவரது புகழ் அதிகரித்தாலும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவருக்குக் கண்டனங்களும் அதிகரித்தன. நேரு 1962-இல் நடந்த தேர்தலில் குறைந்த ஆதரவுடன் காங்கிரசை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். எதிர்க்கட்சிகளான இடது சாரி பாரதிய ஜன சங்கம், சுதந்திரா கட்சி சமூகவாதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவைகள் நன்கு பரிமளித்தன. ஒரு சில மாதங்களில் சீனா உடனான எல்லைத் தகராறு, வெளிப்படையான சண்டையானது. முன்னாள் ஏகாதிபத்தியத்தினால் பாதிக்கப் பட்டவைகள் ஆதலால் சொல்வழக்காக "இந்தி-சைனி பாய் பாய்" (இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்) என்று கூறப்பட்டதுபோல் இருவரும் ஓர் உறுதித்தன்மையைப் பங்கிட்டுக் கொண்டதாக நேரு ஊகித்தார். வளரும் நாடுகளுக்கு மத்தியில் சகோதரத்துவம் மற்றும் உறுதித்தன்மை போன்ற நல்ல நெறிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தார். நேரு, ஒரு பொதுவுடைமை நாடு தன்னைப் போன்ற இன்னொரு நாட்டைத் தாக்கும் என்பதை நம்பவில்லை. மற்றும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் அவர், உடைக்கமுடியாத பனிபடர்ந்த இமாலயச் சுவருக்குப் பின்னால் பாதுகாப்பாக உணர்ந்தார். இந்த இரண்டும்,சீனாவின் உள்நோக்கங்களையும்,மற்றும் ராணுவ சக்தியையும் நேரு மிகத் தவறாகக் கணக்கிட்டதை நிரூபித்தன. பின்வரும் அறிக்கைகள் சீனா சண்டையிட்ட இடங்களை ஆக்கிரமித்து விடக் கூடாது என்ற நேருவின் எண்ணத்தை -சுருக்கமாக, நினைவில் நிற்கக்கூடிய ஒரு வரியில் தெரிவிக்கின்றன அது, ராணுவத்திடம் "அவர்களை வெளியே தூக்கி எறியுங்கள்" என்று கூறியதுதான். சீனா அதிரடியாகத் தன் தாக்குதலைத் தொடங்கியது. சில நாட்களில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் சீனா ஊடுருவி இந்திய ராணுவத்தின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி, சீன சக்திகள் அஸ்ஸாம் வரை சென்று விட்டன. அவருடைய அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகள்மீது போதுமான கவனம் செலுத்தவில்லை என்று அதிக அளவில் விமர்சிக்கப்பட்டது. இதனால் நிர்ப்பந்தத்தின் பேரில் பாதுகாப்பு அமைச்சரான கிருஷ்ண மேனனை பதவியிலிருந்து நீக்கி, அமெரிக்க ராணுவ உதவியை நாடினார். 1963 நேருவின் ஆரோக்கியம், குறைந்து வந்ததால் மாதக் கணக்கில் அவர் காஷ்மீரில் கட்டாய ஓய்வுக்காகத் தங்க வேண்டி வந்தது. சில வரலாற்றாளர்கள் இதைச் சீன ஊடுருவலிலிருந்து தப்பிக்க நடத்தப்பட்ட நாடகமாகக் கதை கட்டி எழுதியதை, நேரு நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார். 1964-இல் காஷ்மீரிலிருந்து திரும்பியதும் நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். அவர் 1964, மே 27 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அவர் பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. டில்லித் தெருக்களில் இருந்தும், மயானத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். சட்டமயமாக்கல் இந்தியாவின் முதல் பிரதமமந்திரி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக நேரு, மிகச் சக்திவாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையுடன் நவீன இந்திய அரசாங்கத்தை மற்றும் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். கிராமத்தின் மூலை முடுக்குகளில் இருந்த குழந்தைகளை அகில உலக ஆரம்பக் கல்வி சென்றடைய அவர் உருவாக்கிய முறையால் வெகுவாகப் பாராட்டப்பட்டார். நேருவின் கல்வித் திட்டங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்விநிறுவனங்கள் உருவாகி வளர்ச்சியடையக் காரணமானதால் பாராட்டுப் பெற்றன. அத்தகைய நிறுவனங்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம், அகில இந்திய நிர்வாகக் கல்வி நிலையம் ஆகியவை. இந்தியப் பாரம்பரிய மக்கள் கூட்டத்திற்கு, சிறுபான்மை மக்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஆதிவாசிகள் ஆகியோருக்கு சரிசமமான சந்தர்ப்பங்கள் மற்றும் உரிமைகள் கிடைக்க, தொலைநோக்கோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தியதற்காகப் பெருமைப்படுத்தப்பட்டார்.. பெண்கள் மற்றும் தாழ்ந்த பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நடந்து கொள்வது போன்றவற்றிற்கு முடிவு கட்டும் வகையில் மாநில அரசுகளைக் கடுமையாக உழைக்கத் தூண்டி மிகவும் அக்கறை காட்டினார்.அவர் வாழ்நாளில் இதில் மிகக் குறைந்த வெற்றியே பெற்றார். பிராந்திய வேறுபாடுகளைப் பாராட்டினாலும் நேருவின் தோல்வியடையாத தேசியவாத உறுதி இருப்பினும் இந்தியர்களுக்கு இடையில் ஒற்றுமையை உறுதிபடுத்தக்கூடிய திட்டங்களை வகுத்தார். இங்கிலாந்து விலகிச் சென்றபின் சுதந்திரத்திற்கு முன்னாள் இருந்த வேறுபாடுகள் தலைதூக்கின. பொதுக் குழுவின் கீழ் மாகாணத் தலைவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாகக் கூற விரும்பவில்லை என்பதை முக்கியமாகக் குறிப்பிட்டு நிரூபித்தது. மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் மொழி இரண்டும் புதிய தேசத்தின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்த நேரத்தில் நேரு, தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் தேசிய இலக்கிய கழகம் உருவாக்கி மொழிகளுக்கு இடையே பிராந்திய இலக்கியங்களை மொழி மாற்றம் செய்யும் திட்டம், மற்றும் ஒரு ராஜ்யத்திலிருந்து பொருள்களை வேறு ராஜ்யங்களுக்கு மாற்றல் செய்வது ஆகிய திட்டங்களை வகுத்து ஒரே ஐக்கிய இந்தியாவாக வளர்க்க நினைத்தார். நேரு, "ஒன்று சேர் அல்லது அழி" என்று எச்சரித்தார். அவருடைய வாழ்நாளில் நேரு இந்தியாவில் நல்ல தகுதியை அனுபவித்தார் மற்றும் உலகம் முழவதும் அனைவராலும் அவருடைய நல்ல நெறிகளுக்காகவும், உயர்ந்த மனித பண்புக்காகவும் புகழப்பட்டார். அவரின் பிறந்தநாள், 14 நவம்பர் இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அவர் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்தியக் குழந்தைகள் அவரை சாச்சா நேரு (மாமா நேரு) என்றே இன்று வரை நினைவு வைத்துள்ளனர். காங்கிரசு கட்சியின் புகழ் பெற்ற அடையாளமாக அவருடைய நினைவு அடிக்கடி கொண்டாடுகிறது. காங்கிரசு தலைவர்களும் மற்றவர்கள் பலரும் அவருடைய ஆடைகள் அணியும் முறையைக் குறிப்பாக காந்தி குல்லாவை விருப்பமாக அணியத்துவங்கினர். நேருவின் திட்டங்களும் மற்றும் கொள்கைகளும் காங்கிரசு கட்சியின் கொள்கைகளையும் மற்றும் முக்கிய அரசியல் தத்துவங்களையும் வடிவமைத்தன. அவருடைய உணர்ச்சிமயமான பந்தம் பின்னாளில் அவர் மகள் இந்திரா, தேசிய அரசாங்கம் மற்றும் காங்கிரசு கட்சியின் தலைவராகக் கருவியாய் செயல்பட்டார். நேருவின் வாழ்க்கையைப் பற்றிக் குறும் படங்கள் எடுக்கப்பட்டன. 1988 தொலைக் காட்சித் தொடரான 'பாரத் ஏக கோஜ் ', தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற அவரது நூலைத் தழுவியது. மற்றும் 2007 இல் ராஜின் இறுதி நாட்கள் என்ற தொலைக்காட்சி படம், கேட்டன் மேத்தாவின் சர்தார் திரைப்படம், இதில் பெஞ்சமின் கிலானி நேருவாக நடித்தார். நேருவின் சொந்த விருப்பமான ஷெர்வானி அணிவது வட இந்தியாவில் இன்றும் ஒரு விழா உடையாக, சீருடையாகக் கருதப்படுகிறது. அதோடல்லாமல், அவருடைய தனி உடை அலங்காரத்திற்காக ஒரு வகைக் குல்லா மற்றும் நேரு சட்டையென அவர் பெயர் வழங்கப்பட்டுள்ளது. நினைவு இந்தியா முழுவதும் நிறையப் பொதுநிறுவனங்கள் மற்றும் நினைவகங்கள் நேருவின் நினைவிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று. மும்பை நகரத்தின் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம். டில்லியில் நேருவின் வசிப்பிடம், நேரு நினைவுக் கூடம் மற்றும் நூலகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. நேரு குடும்பத்தாரின் ஆனந்த பவன் மற்றும் சுராஜ் பவன் ஆகியவைகளும் நேரு மற்றும் அவர் குடும்பத்தாரின் சட்டபூர்வமான நினைவகமாக இருக்கின்றன. எழுதிய நூல்கள் நேரு சிறந்த ஆங்கில எழுத்தாளராகத் திகழ்ந்தார். அவர் எழுதிய நூல்கள் "தி டிஸ்கவரி ஆஹ்ப் இந்தியா", "க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி", அவருடைய "சுயசரிதை" மற்றும் "டுவார்ட்ஸ் ப்ரீடம்" ஆகியவை ஆகும். பத்திரிகை ஜவகர்லால் நேரு நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை 1938-ஆம் ஆண்டு துவங்கினார். அப்பத்திரிகை நிறுவனம் 2008-ஆம் ஆண்டு மூடப்பட்டது. குறிப்புகள் மேற்கோள்கள் மேலும் படிக்க 1947 ம் ஆண்டு "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற பெயரில் ஜவஹர்லால் நேரு நடத்திய வரலாற்றுசிறப்பு மிக்க பேச்சு நேரு: தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா எழுதியவர் சசி தரூர்(நவம்பர் 2003) ஆர்காட் புகஸ் ஜவஹர்லால் நேரு (எழுதியவர் எஸ்.கோபால் மற்றும் உமா ஐயங்கார்) (ஜுலை 2003) தி எசென்ஷியல் ரைட்டிங்ஸ் ஆஃப் ஜவஹர்லால் நேரு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழக அச்சகம் சுயசரிதை: சுதந்திரத்தை நோக்கி , ஆக்ஸ்போடு பல்கலைகழக அச்சகம் ஜவஹர்லால் நேரு: வாழ்க்கை மற்றும் பணி எழுதியவர்,எம்.சலபதி ராவ தேசிய புத்தகக் கிளப் (1 ஜனவரி 1966) ஜவஹர்லால் நேரு எழுதியவர் M. சலபதி ராவ். [புது டெல்லி] பதிப்பகப் பிரிவு, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, இந்திய அரசாங்கள் (1973) தன் மகள் இந்திராவுக்கு, சிறையிலிருந்து நேரு எழுதிய கடிதங்களின் மொத்த எண்ணிக்கை 930 எனக் கருத்தப்படுகிறது. அவற்றில் 30 கடிதங்கள், நூல்வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. தந்தையிடமிருந்து மகளுக்கான கடிதம் எழுதியவர் ஜவஹர்லால் நேரு, குழந்தைகள் புத்தக அறக்கட்டளை நேரு: ஒரு அரசியல் சுயசரிதை எழுதியவர் மைக்கேல் ப்ரெச்சர் (1959). லண்டன்:ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழக அச்சகம் நேருவிற்குப் பிறகு, வெல்ஸ் ஹேன்கன் வாங்கியவர்(1963). லண்டன்: ரூபர் ஹார்ட்_டேவிஸ் நேரு: ஜியஃப்ரி டைசன் எழுதிய தி இயர் ஆஃப் பவர் (1966). லண்டன்: பால் மால் அச்சகம் சுதந்திரம் மற்றும் அதற்குப் பிறகு: செப்டம்பர் 1946 முதல் 1949 வரையிலான காலகட்டத்தில் நேரு ஆழ்த்திய மிக முக்கியமான உரைகள் (1949). டெல்லி: பதிப்பகப் பிரிவுகள், இந்திய அரசாங்கம். கமாண்டிங் ஹைட்ஸ் எழுதியவர் ஜோஸப் ஸ்டானிஸ்லா மற்றும் டேனியல் ஏ.யெர்ஜின்(சைமன் & ஸ்கஸ்டர், இன்க்: நியூயார்க்), 1998. http://www.pbs.org/wgbh/commandingheights/shared/pdf/prof_jawaharla.pdf "இந்திய தேசியயத்திற்கு விடப்பட்ட சவால்கள்." எழுதியவர் ஹசலிக் எஸ்.ஹேரிஸன் வெளியுறவுகள் துறை வால். 34, எண். 2 (1956): 620-636. “நேரு, ஜவஹர்லால்.” எழுதியவர் ஆயின்ஸ்லீ டி.எம்ப்ரீ,ed.,மற்றும் தி ஆசியா சொஸைட்டிஆசிய வரலாற்றின் என்சைக்குளோபீடியா வால். 3. சார்லெஸ் ஸ்க்ரிப்னர்ஸ் மகன்கள் நியூ யார்க்(1988): 98-100. “நேரு: தி கிரேட் அவேக்கனிங்” எழுதியவர் ராபர்ட் ஹஷரட்சட்டர்டே ஈவினிங் போஸ்ட்'' வாள். 236, எண். 2 (19 ஜனவரி 1963): 60-67. வெளி இணைப்புகள் ஜவஹர்லால் நேரு சுயசரிதை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஹரப்பா.காம் _ ல் நேருவின் வரலாறு நேருவின் சொற்றொடர்கள் இந்தியா டுடே _ வின் நேரு குறித்த கட்டுரை நேரு புகைப்படங்கள் இந்தியாவில் நேருவின் சட்டமயமாக்கல் கம்யூனலிஸம் மீதான நேரு மே 27: சிறியன சிந்தியாத நேருவின் நினைவு தினம் சிறப்பு பகிர்வு... இந்திய அரசியல்வாதிகள் இந்தியப் பிரதமர்கள் இந்திய இறைமறுப்பாளர்கள் இந்திய எழுத்தாளர்கள் இந்திய பிரதம மந்திரிகள் நேரு-காந்தி குடும்பம் 1889 பிறப்புகள் 1964 இறப்புகள் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் இந்திய நிதியமைச்சர்கள் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஜவகர்லால் நேரு 1ஆவது மக்களவை உறுப்பினர்கள் 2ஆவது மக்களவை உறுப்பினர்கள் 3வது மக்களவை உறுப்பினர்கள் இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் 20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்கள்
1505
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%90%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர்களில் ஒருவராக கருதப்படுவதோடு, இதுவரை வாழ்ந்த இயற்பியலாளர்களில் தலைசிறந்த இயற்பியலாளர்களுள் ஒருவராக பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல் புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். குவாண்டம் எந்திரவியல்,சார்புக் கோட்பாடு இரண்டும் நவீன விஞ்ஞானத்தின் இரு தூண்களாக கருதப்படுகிறது.ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது. வாழ்க்கைக் குறிப்பு இளமை, கல்லூரி ஐன்ஸ்டைன் ஜெர்மனியில், வுர்ட்டெம்பர்க் இலுள்ள உல்ம் என்னுமிடத்தில், 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார், ஹேர்மன் ஐன்ஸ்டீன், பிற்காலத்தில் ஒரு மின்வேதியியல் (electrochemical) சார்ந்த தொழில் நிலையமொன்றை நடத்திவந்தார். தாயார் போலின் கோச். இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார். எனினும், சிறுவனாக இருந்தபோது இவருக்கு மிக மெதுவாகவே கற்கமுடிந்தது எனச் சிலர் கூறுகிறார்கள். இவர் தனது 12 ஆவது அகவையிலேயே கணிதம் படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம். இவரது தந்தையாருடைய தொழிலில் நட்டம் ஏற்பட்டதனால், 1894 ல், அவரது குடும்பம் மியூனிக்கிலிருந்து, இத்தாலியிலுள்ள மிலான் நகரையடுத்துள்ள பேவியா என்னுமிடத்துக்கு, இடம் பெயர்ந்தது. ஆனால் அல்பர்ட், மியூனிக்கிலேயே பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காகத் தங்கியிருந்தார். பாடசாலையில் ஒரு தவணையை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் இணைந்துகொள்ளப் பேவியா சென்றார். பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காக ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். 1896ல் பாடசாலைப் படிப்பை முடித்துக்கொண்டு, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இந்தச் சமயத்தில் அவர் தனது ஜெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு, நாடற்றவரானார். 1898ல் மிலேவா மாரிக் என்னும் உடன்கற்றுவந்த செர்பிய பெண்ணொருவரைக் கண்டு காதல் கொண்டார். 1900 இல், சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். 1901 இல், இவர் சுவிற்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றார். இவருக்கு, மிலேவாமூலம், ஒரு மகள் 1902ல் பிறந்தார். வேலையும், முனைவர் பட்டமும் படிப்பு முடிந்ததும் இவருக்குக் கற்பித்தல் வேலையெதுவும் கிடைக்கவில்லை. இவருடன் படித்த ஒருவரின் தந்தையார் 1902 ல், சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில், தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக வேலை கிடைத்தது. அங்கே கருவிகளைப் பற்றி விளங்கிக் கொள்வதற்கு இயற்பியல் அறிவு பணியாளர் ஒருவர் தேவைப்பட்டது, அங்கே கருவிகளுக்கான காப்புரிம விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதே அவரது வேலை. பிரௌனியன் இயக்கம் 1905 இல் வெளிவந்த அவரது முதலாவது கட்டுரையான "நிலையான திரவத்தில் தொங்கும் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக்கூற்றுக் கொள்கையினால் வேண்டப்படும் இயக்கத்தில்" அவரது பிரௌனியன் இயக்கம் தொடர்பான ஆராய்ச்சியை விவரித்தது. அப்போது சர்ச்சைக்குள்ளாகியிருந்த திரவ இயக்கவியலைப் பாவித்து, முதன் முதலில் அவதானிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதும் கூட திருப்தியான விளக்கம் கொடுக்கப்படாத இந்த பிரௌனியன் இயக்கமானது அணுக்கள் இருப்பதற்கான அனுமான ரீதியான ஆதாரமாகக் கொள்ளப்படலாம் என இக்கட்டுரை நிறுவியது.அத்துடன் அப்போது சர்ச்சையில் இருந்த இன்னொரு விடயமான புள்ளிவிவர எந்திரவியலையும் (statistical mechanics) இது தெளிவுபடுத்தியது. இக்கட்டுரை வெளிவரும் முன் அணுக்கள் என்பது ஒரு பயன்பாட்டு கோட்பாடாக அங்கீகரிக்கபட்டிருந்தாலும் கூட, அணுக்களின் இருக்கை தொடர்பாக இயற்பியலாளர்களுக்கும் வேதியியலாளர்களுக்கும் இடையில் சூடான விவாதங்கள் நடைபெற்று வந்தன. அணுக்கொள்கை தொடர்பான ஐன்ஸ்டீனின் புள்ளிவிபரம் ரீதியான விளக்கம், சாதாரண நுணுக்குக்காட்டியினூடாக நோக்குவதன் மூலம் அணுக்களை எண்ணும் வழியினைப் பரிசோதனையாளர்களுக்கு வழங்கியது. அணுவுக்கெதிரான கொள்கையை வில்கெல்ம் ஒஸ்ட்வால்ட் என்பவர் கொண்டிருந்தார், இவர் ஐன்ஸ்டீனின் பிரெளணியனின் இயக்கம் தொடர்பான முழுமையான விளக்கம் காரணமாகத்தான், தான் அணு தொடர்பாக நம்புதலைப் பெற்றிருந்தார் எனப் பின்னாளில் அர்னால்ட் சொமர்பெல்ட் என்பவரிடம் கூறியிருந்தார். ஒளிமின் விளைவு ஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றீடு தொடர்பான ஓர் ஆய்வு ரீதியான நோக்கம்" ("Über einen die Erzeugung und Verwandlung des Lichtes betreffenden heuristischen Gesichtspunkt") என்கின்ற அவரது இரண்டாவது ஆய்வுக்கட்டுரையானது ஒளிச்சக்திச் சொட்டு (Light quanta) (இப்போது போட்டோன் (Photon) என அழைக்கப்படுகிறது) என்ற கருதுகோளினை முன்வைத்ததுடன் இது எவ்வாறு ஒளிமின் விளைவு போன்ற விடயங்களை விளக்க பயன்படுத்தப்படலாம் எனவும் விவரித்தது. இச்சக்தி சொட்டுக் கருதுகோளானது, ஒளிச் சக்தியானது ஒரு குறித்த அளவுடைய (தொடர்ச்சியற்ற) சக்திச் சொட்டுக்களாகவே (quanta) உறிஞ்சப்படவோ காலப்படவோ முடியும் எனக் கருதும் போது, மாக்ஸ் பிளாங்க்கினால் முன்வைக்கப்பட்ட கரும்பொருட் கதிர்வீச்சு விதியினை (law of black-body radiation) வலுப்படுத்தியது. ஓளியானது உண்மையில் தனித்தனி சக்திப் பொட்டலங்களாலேயே (Packets) உருவாக்கப்பட்டது எனக் கருதுவதன் மூலம், ஐன்ஸ்டீனினால் மர்மமாகவிருந்த ஒளிமின் விளைவை விளக்க முடிந்தது. ஒளியின் இச் சக்திச் சொட்டுக் கருதுகோளானது, ஜேம்ஸ் மாக்ஸ்வெல்லின் மின் காந்த நடத்தைக்கான சமன்பாடுகளினால் வழிநடத்தப்படும் ஒளியின் அலைக்கொள்கையோடு முரண்பட்டதுடன், பெளதிகத் தொகுதிகளிலுள்ள சக்தியானது மேலும் மேலும் முடிவற்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியும் (infinite divisibility of energy) என்ற கருத்துடனும் பொதுப்படையாக முரண்பட்டது. ஒளிமின் விளைவுக்கான ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் மிகச் சரியானவை என பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, அவரது விளக்கமானது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும், 1921 இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது ஒளி மின்னியலில் அவருடைய உழைப்பு வியந்துரைக்கப்பட்ட பின்னரே பெரும்பாலான பெளதீகவியலாளர்கள் அவருடைய சமன்பாடு hf = Φ + Ek சரியெனவும் ஒளிச் சொட்டு சாத்தியமெனவும் ஏற்றுக்கொண்டனர் (எண்ணத்தலைப்பட்டனர்). சக்திச் சொட்டுப் பொறிமுறையினைத் தோற்றுவித்தவர்களால் அடிப்படைத் தத்துவமாகப் பயன்படுத்தப்பட்ட கருதுகோளான ஒளியின் அலைத்-துகள் இரட்டைத்தன்மை (wave-particle duality), அதாவது பெளதிகத் தொகுதிகள் அலைத்தன்மை, துகள் தன்மை ஆகிய இரு வேறுபட்ட இயல்புகளையும் காட்டவல்லவை என்ற கருத்தினைச் சக்திச் சொட்டுக் கொள்கை வலியுறுத்தியது. சக்திச் சொட்டுப் பொறிமுறை விருத்தியடைந்த பின்னரே ஒளி மின் விளைவு தொடர்பான முழுமையான தெளிவு பெறப்பட்டது. சிறப்புத் தொடர்பியல் ஐன்ஸ்டைனின் மூன்றாவது ஆய்வுக்கட்டுரையான, "இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல்" ("Zur Elektrodynamik bewegter Körper") என்பது 1905 ஜூன் 30 இல் வெளிவந்தது. இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஐன்ஸ்டீன் மிலேவாவுக்கு "சார்பு இயக்கத்தில் எமது உழைப்பு" என்பது பற்றி கடிதம் எழுதியுள்ளமையானது, மிலேவாவும் இவ் ஆய்வில் பங்கு பெற்றிருந்தாரா எனச் சிலரை வினவ இடமளிக்கிறது. இக்கட்டுரையானது நேரம், தூரம், திணிவு மற்றும் சக்தி தொடர்பான விசேட தொடர்புக் கொள்கையினை அறிமுகப்படுத்தியதுடன் மேக்ஸ்வெலின்மின்காந்தவியலுடன் பொருந்துவதாயும் புவியீர்ப்பு விசையைத் தவிர்ப்பதாயும் இருந்தது. ஏனைய சில தெரிந்த அலைகளைப்போன்றல்லாது, ஒளி அலை பயணம் செய்வதற்கு நீர், காற்று போன்ற ஓர் ஊடகம் அவசியமில்லை என்பதைக் காட்டிய மைக்கல்சன்-மோர்லி பரிசோதனையினால் (Michelson-Morley experiment) உருவான குழப்பத்தை சிறப்பு சார்பியல் தீர்த்து வைத்தது. இதன் மூலம் ஒளியின் வேகமானது மாறாதது, அவதானியின் இயக்கத்தில் தங்கியது அல்ல என்பது நிரூபணமாயிற்று. நியூட்டனின் புராதனப் பொறிமுறையின் (Newtonian classical mechanics) கீழ் இது சாத்தியமற்றதாகவிருந்தது. இயங்கும் பொருட்கள் அவற்றின் இயக்கத்திசையில் நெருக்கப்பட்டிருக்குமாயின் மைக்கல்சன்-மோர்லி முடிவு பயன்படுத்தப்பட முடியும் என்பதை 1894 இல் ஏற்கனவே ஜோர்ஜ் பிற்சரால்ட் (George Fitzgerald) என்பவர் ஊகித்திருந்தார். உண்மையில் ஐன்ஸ்டீனின் இவ் ஆய்வுக்கட்டுரையின் சில முக்கியமான சமன்பாடுகளான லோறன்ஸ் மாற்றீடுகள் (Lorentz transforms), 1903 இல் போர்த்துக்கீசிய இயற்பியலாளரான ஹென்ட்றிக் லோரன்ட்ஸ் (Hendrik Lorentz) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதுடன் அவை பிற்சரால்டினுடய ஊகத்தினைக் கணித வடிவில் கூறின. ஆனாலும் இக் கேத்திரகணித விசித்திரத்திற்குரிய காரணங்களை ஐன்ஸ்டீன் தெரியப்படுத்தினார். நிறை-ஆற்றல் சமன்மை விதி ஐன்ஸ்டைனின் மிக புகழ்பெற்ற சமன்பாடான [[ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு|E=mc2]] சிறப்பு சார்பு கொள்கையின் மூலம் தருவிக்கப்பட்டதே ஆகும். இது நிறை-ஆற்றல் சமன்மையை பற்றி விளக்குகிறது. இது அணுக்கரு வினைகளின் செயல்பாடுகளை பற்றியும்,விண்வெளியில் உள்ள ஆற்றல் எவ்வாறு நிறையாக மாறுகிறது, நிறை எங்கே போகிறது என்பதையும் விளக்குகிறது. மேலும், இச்சார்பியல் கொள்கையின் மூலம் கால-வெளி வரைபடத்தை வரைய ஏதுவாகிறது. இது காலப் பயணம் போன்ற சுவாரசியமான கருத்துகளுக்கு அடிகோலுகிறது. ஐன்ஸ்டைனின் படைப்புகள் சிந்தனைகளும் கருத்துக்களும் உலகம் எனது பார்வையில் (மெயின் வெல்ட்பில்டின் மொழியாக்கம்) Relativity: The Special and General Theory (Project Gutenberg E-text ) "Zur Elektrodynamik bewegter Körper" Annalen der Physik. June 30, 1905 (English translation: On the Electrodynamics of Moving Bodies) "Ist die Trägheit eines Körpers von seinem Energieinhalt abhängig? ". Annalen der Physik. September 27, 1905. (English translation: Does the Inertia of a Body Depend Upon Its Energy Content?) "புருசிய அறிவியல் கழகத்தில் ஆற்றிய முகப்புரை ". 1914. [PDF] "Die Grundlage der allgemeinen Relativitätstheorie". Annalen der Physik, 49. 1916. (English translation: The Foundation of the General Theory of Relativity ) "ஏன் பொதுவுடைமை," Monthly Review, May, 1949. "ஈர்ப்புவிசையின் பொது கோட்பாட்டு பற்றி". April, 1950. இவற்றையும் பார்க்கவும் சர்வதேச இயற்பியல் ஆண்டு 2005 இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை வெளி இணைப்புகள் அல்பர்ட் ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்புகள் பற்றிய பி.பி.சி. தரவு (தமிழில்) ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒன்லைன் புகழ்பெற்ற உரைகளின் ஒலிப்பேழைகள்: E=mc2 மற்றும் தொடர்பியல் Impossibility of atomic energy arms race 1921 நோபல் பரிசு தொடர்பியல் கொள்கை ரூஸ்வெல்ட்டுக்கு ஐன்ஸ்டைன் எழுதிய கடிதம் FBI கோப்புகள் ஐன்ஸ்டீன் சொன்ன ஈர்ப்புவிசை அலையை விஞ்ஞானிகள் 'கண்டுபிடித்தனர்' ஈர்ப்பு சக்தி அலைகள் ஏன் முக்கியமானவை?- ஐந்து காரணங்கள் 1879 பிறப்புகள் 1955 இறப்புகள் அமெரிக்க இயற்பியலாளர்கள் அமெரிக்க மெய்யியலாளர்கள் அமெரிக்கப் பொறியியலாளர்கள் செருமானிய இயற்பியலாளர்கள் செருமானிய அறிவியலாளர்கள் நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள் செருமானியக் கண்டுபிடிப்பாளர்கள் அண்டவியலாளர்கள் அமெரிக்க அறியொணாமையியலாளர்கள் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் நோபல் பரிசு பெற்ற செருமானியர்கள் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள் நோபல் பரிசு பெற்ற யூதர்கள்
1510
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
புகழ்பெற்ற இயற்பியலாளர்கள்
புகழ்பெற்ற ஆரம்பகால இயற்பியலாளர்கள் 18 ஆம் நூற்றாண்டின் பிரபல இயற்பியலாளர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிரபல இயற்பியலாளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் பிரபல இயற்பியலாளர்கள் மேலும் பார்க்க இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் இயற்பியல்
1511
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D
ஐசாக் நியூட்டன்
{{Infobox scientist | name = சர் ஐசக் நியூட்டன்Sir Isaac Newton | image = GodfreyKneller-IsaacNewton-1689.jpg | alt = | caption = ஐசக் நியூட்டன் (வரைந்தவர்: காட்பிரி கெல்லர், 1689) | birth_date = 25 டிசம்பர் 1642 | birth_place = வூல்சுதோர்ப், லிங்கன்சயர், இங்கிலாந்து | death_date = | death_place = கென்சிங்டன், மிடில்செக்சு, இங்கிலாந்து, பெரிய பிரித்தானியா | resting_place = வெஸ்ட்மின்ஸ்டர் மடம் | residence = இங்கிலாந்து | nationality = ஆங்கிலேயர் | fields = | workplaces = | alma_mater = திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் | academic_advisors = {{unbulleted list | ஐசக் பாரோ | பெஞ்சமின் புலெயின்<ref>"Newton, Isaac" in the Dictionary of Scientific Biography, n.4.</ref> }} | notable_students = | known_for = | influences = | influenced = | signature = Isaac Newton signature.svg | signature_alt = Is. Newton }} '''சார் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton) ஓர் ஆங்கிலப் பேரறிவாளர் மற்றும் கணிதவியலாளர் ஆவார். 1643 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி இங்கிலாந்தின் வூல்ஸ்தோர்ப் மன்றத்தில் பிறந்தார். இயற்பியலில் பங்களித்துக்கொண்ட அவரது முக்கியமான கண்டுபிடிப்பு எனப்படும் "ஐசக் நியூட்டனின் இயக்கவியலின் மூன்று விதிகள்" விஞ்ஞான வரலாற்றில் மிகுந்த புகழ்பெற்றவை. இந்த விதிகள் விசையின், இயக்கத்தின் மற்றும் வேகத்தின் தொடர்புகளை விளக்குகின்றன. நியூட்டன் காந்த சிதறல் மற்றும் வெள்ளிகண்ணாடி தொலைநோக்கியை கண்டுபிடித்தார். மேலும், அவர் வெள்ளிக்கணிதத்தை (Calculus) விரிவாக விளக்கியார். அவரது தத்துவ இயற்பியல் தாத்துவியக்கூறல் (Philosophiæ Naturalis Principia Mathematica) நூல் 1687 ஆம் ஆண்டு வெளியானது, இது அறுபதாண்டுகளுக்கும் மேலாக அறிவியல் உலகில் மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி, நியூட்டன் ஒளியியல், தரவுப் பரிசோதனை மற்றும் காந்தவியல் போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1727 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நியூட்டன் இறந்தார். அவரது ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் அறிவியல் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவை. அவரது பெயர் இன்று வரை அறிவியலின் பொற்காலத்தை குறிக்கின்றது. |url=https://bigthink.com/the-past/smartest-person-world-isaac-newton/ |access-date=28 September 2023 |website=Big Think |archive-date=28 September 2023 |archive-url=https://web.archive.org/web/20230928161012/https://bigthink.com/the-past/smartest-person-world-isaac-newton/ |url-status=live }}</ref> . அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார். 1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், மரபார்ந்த விசையியல் (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார். நியூட்டனின் பிரின்சிப்பியாவிலேயே, பின்வந்த மூன்று நூற்றாண்டுகளில் பௌதீக அண்டம் தொடர்பான அறிவியலாளரின் நோக்கில் ஆதிக்கம் செலுத்திய, இயக்க விதிகள், பொது ஈர்ப்பு ஆகியவை உருவாக்கம் பெற்றன. இது புவியில் பொருட்களின் இயக்கங்களையும், அண்டவெளியில் உள்ள கோள்கள் முதலிய பொருட்களின் இயக்கங்களையும் ஒரே கோட்பாடுகளின் அடிப்படையில் விபரிக்கலாம் என விளக்கியது. நியூட்டன் நடைமுறைச் சாத்தியமான முதலாவது தெறிப்புத் தொலைநோக்கியை உருவாக்கியதுடன், முப்பட்டைக் கண்ணாடி வெள்ளொளியைப் பிரித்துப் பல நிற ஒளிகளைக் கொண்ட நிறமாலையாகத் தரும் கவனிப்பை அடிப்படையாகக்கொண்டு நிறக் கோட்பாடு ஒன்றையும் உருவாக்கினார். ஒலியின் வேகம் குறித்தும் இவர் ஆய்வுகள் செய்தார். நுண்கணிதத்தில் இவரது ஆய்வுகளுக்குப் புறம்பாக, ஒரு கணிதவியலாளராக, அடுக்குத் தொடர் குறித்த ஆய்வுகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார். இளமை ஐசக் நியூட்டன் 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார். கல்வி நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை நையப் புடைத்த பின் தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது, தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் 1661ல், அவரைப் புகழ்பெற்ற கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில் சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலிலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார். 1665 ல், ஈருறுப்புத் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதக் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்தவைதான். வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்துத் தந்தவையே. பணிகள் 1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன தொலைநோக்கிகள் நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். கண்டுபிடிப்புகள்10முக்கியம் புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார். இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு. வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து, மேற்படி விதிகளை விரிவாக்கினார். ஒளியியல் ஆய்வுகள் பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரேgeshopan. வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு. ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். பார்க்க: அலை-துணிக்கை இருமைத்தன்மைஇரண்டு துணிக்கைளுக்கிடையிலான ஈர்ப்பு விசையானது அவற்றின் திணிவுகளுக்கு நேர்விகிதசமனெனவும் அவற்றுக்கிடையிலான துாரத்துக்கு நேர்மாறுவிகிதசமனெனவும் கருத்தறிவித்தார். ஈர்ப்பு விதி கண்டறிந்தமை நியூட்டன் ஆப்பிள் மரமொன்றின் கீழ் இருந்தபோது, அப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இது அவரது சொந்தக் கதையான, வூல்ஸ்தோர்ப் மனோரின்யின் யன்னலோரம் இருந்து ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைக் கவனித்த கதையை மிகைப் படுத்திக் கூறியதாகும் எனக் கருதப்படுகிறது. நியூட்டனின் கதையும், பிற்காலத்தில் அவரால் கட்டப்பட்டது என்பது பலருடைய கருத்து. 1667 ல், தனது கண்டுபிடிப்புக்கள் குறித்த முடிவிலித் தொடர்கள் மூலமான பகுப்பாய்வு பற்றி (De Analysi per Aequationes Numeri Terminorum Infinitas) என்ற நூலினையும் பின்னர் தொடர்களினதும், பிளக்ஸியன்களினதும் வழிமுறைகள் பற்றி (De methodis serierum et fluxionum ) என்ற நூலினையும் வெளியிட்டார். நியூட்டனும், லீப்னிசும் நுண்கணிதக் கோட்பாடுகளைத் தனித்தனியே உருவாக்கியதுடன், வெவ்வேறு குறியீடுகளையும் பயன்படுத்தினார்கள். நியூட்டன் அவருடைய வழிமுறைகளை லீப்னிசுக்கு முன்னரே உருவாக்கியிருந்தும், பின்னவருடைய குறியீடுகளும்,வகையீட்டு வழிமுறை"யும், மேம்பட்டதாகக் கருதப்பட்டுப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நியூட்டன், அவர் காலத்தைச் சேர்ந்த மிகத் திறமையான அறிவியலாளருள் ஒருவராக இருந்தும், அவருடைய கடைசி 25 வருடங்கள், லீப்னிசுடனான பிரச்சினைகளால் பாழாக்கப்பட்டது. லீப்னிஸ் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைத் திருடியதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார். நியூட்டனுக்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் தூண்களாக இருந்தன. அவருடைய கோட்பாடுகள் வன்மையாக எதிர்க்கப்பட்ட போதெல்லாம் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. தன்னம்பிக்கையோடு தனது ஆராய்ச்சிகளை தொய்வின்றி தொடர்ந்தார். 1669 ல், கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய இந்தப்பதவி இவர், கல்லூரியின் ஆய்வாளாராக(Fellow) நீடிப்பதற்குத் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்ற விதியிலிருந்து விலக்குப் பெற்றதுடன், அவருடைய எதிர்-திரி(கிறி?)த்துவவாதக் கருத்துக்கள் காரணமாக மரபுவாதத் தேவாலயத்துடன் ஏற்படவிருந்த முரண்பாடுகளையும் தவிர்த்துக்கொண்டார். விசை பற்றிய கோட்பாடுகள் எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும். ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும். ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது. நியூட்டனின் நூல்கள் நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு "Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார். நூல்கள் மெத்தேட் ஆஃப் ஃபிளக்சியான்ஸ் (Method of Fluxions) (1671) ஆப்டிக்ஸ் (Opticks) (1704) அரித்மெட்டிகா யுனிவர்சலிஸ் (Arithmetica Universalis) (1707) சிறப்புகள் 1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார்.ஐசாக் நியூட்டன் இயற்பியல் துறையில் மிகப்பெரிய சாதனை புரிந்திருந்தபோதும் தம் சாதனையைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார். இறுதிக்காலம் இங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம்'' (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்டது. நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது. இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது! உசாத்துணை வெளி இணைப்பு திண்ணை இதழில் நியூட்டன் பற்றிய திரு. சி.ஜெயபாரதன் அவர்களின் கட்டுரை 1642 பிறப்புகள் 1727 இறப்புகள் கிறித்தவ சித்தர்கள் ஆங்கிலேய அறிவியலாளர்கள் பிரித்தானிய இயற்பியலாளர்கள் ஆங்கிலேயக் கணிதவியலாளர்கள் மேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை ஆங்கிலேய வானியலாளர்கள் ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர்கள் ஆங்கிலேய இயற்பியலாளர்கள்
1512
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF
கலீலியோ கலிலி
கலீலியோ கலிலி (Galileo Galilei; இத்தாலிய ஒலிப்பில்: கலிலேயோ கலிலே; 15, பிப்ரவரி 1564 – 8, சனவரி 1642), ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நோக்கு வானியலின் தந்தை", "நவீன இயற்பியலின் தந்தை", "நவீன அறிவியலின் தந்தை" என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார். தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களைக் (அவரது புகழைச் சொல்லும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளை நோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும். கலீலியோ பயனுறு அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஈடுபட்டு, மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார். கலீலியோவின் சூரியமையக் கொள்கை, அவரது வாழ்நாளில் பிறரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நிறைய வானியலாளர்கள் இந்தக் கோட்பாட்டை எதிர்த்தனர். அக்காலத்தில், பெரும்பாலான வானியலாளர்கள் புவிமையக் கொள்கையையோ, தைக்கோனிக் அமைப்பையோ ஏற்றுக் கொண்டிருந்தனர். கலீலியோ பின்னர் தனது "இருவகை முதன்மை உலகக் கண்ணோட்டம் சார்ந்த உரையாடல்கள் " என்ற புத்தகத்தில் அவருடைய சூரியமையக் கொள்கைக்கு நிறைய சான்றுகளை அளித்தார். ஆனால் அது திருத்தந்தை எட்டாம் அர்பனைத் தாக்குவது போல் தோன்றியதால், புலன் விசாரிக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். கலீலியோ தன் இறுதிக் காலம் முழுவதையுமே வீட்டுச்சிறையிலேயே கழித்தார். கலீலியோ இப்படி வீட்டுச்சிறையில் இருந்தபோது தான் தன் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றும் இறுதிப் படைப்புமான இரண்டு புதிய அறிவியல்கள் என்ற நூலை எழுதினார். தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய, தற்போது இயங்கியல், பொருட்களின் வலிமை என்று அறியப்படும் துறைகளைப் பற்றிய ஆய்வுகளை இந்த நூலில் தொகுத்து அளித்தார். இளமையும் குடும்பமும் கலீலியோ, இத்தாலியில் (அப்போது பிளொரன்சு குறுமன்னராட்சியில் இருந்த) பைசா நகரில் 1564இல் பிறந்தார்; புகழ்பெற்றிருந்த குழல் இசைக்கருவிக் கலைஞரும் இசையமைப்பாளருமான வின்சென்சோ கலிலி என்பவருக்கும் கியுலியா அம்மனாட்டிக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார். குழல் இசையைத் தந்தையிடமிருந்து கற்றுத் தேர்ந்தார். தந்தையிடமிருந்தே மேலும் நிறுவப்பட்டிருந்த கோட்பாடுகள் மீதான ஐயங்கள், நன்கு வரையறுக்கப்பட்ட சோதனை முடிவுகளின் மதிப்பு, கணிதமும் சோதனையும் இணைந்து உருவாக்கும் முடிவுகள் ஆகியவற்றின் மீது பிடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். கலீலியோவுடன் பிறந்த ஐவரில் மூவரே இளவயதைத் தாண்டினர். மிகவும் இளையவரான மைக்கேலேஞ்சலோ குழல் வாசிப்பதில் திறமை பெற்றிருந்தார்; இவரே கலீலியோவின் இளமைக் காலத்து நிதிச் சுமைப் பிரச்சினைகளுக்குக் காரணமாகவிருந்தார். தனது தந்தை உறுதியளித்திருந்த வரதட்சணையை மைக்கேலேஞ்சலோ தனது மனைவி குடும்பத்தாருக்குக் கொடுக்க இயலாது சட்ட வழக்குகளைச் சந்தித்தார். தவிரவும் தனது இசை முயற்சிகளுக்கும் சுற்றுலாக்களுக்கும் கலீலியோவிடம் கடன் கேட்டவண்ணம் இருந்தார். இந்த நிதித் தேவையே கலீலியோவை புத்தாக்கங்களை உருவாக்கி கூடுதல் வருவாய் ஈட்ட உந்துதலாக இருந்திருக்க வேண்டும். கலீலியோ எட்டாண்டுகள் இருந்தபோது இவரது குடும்பம் புளோரன்சிற்குக் குடிபெயர்ந்த போது, யகோபோ போர்கினியிடம் இரண்டாண்டுகள் விட்டுச் செல்லப்பட்டார். பின்னர் புளோரன்சிலிருந்து தென்கிழக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள வல்லம்புரோசாவில் கமல்டோலெசு துறவியர்மடத்தில் கல்வி கற்றார். குடும்பப் பெயர் கலிலீ என்ற குடும்பப் பெயர் கி.பி 1370 முதல் 1450 வரை பிளாரன்சில் மருத்துவராக வாழ்ந்த கலீலியோ போனலுத்தி என்ற முன்னோரின் பெயரில் இருந்து பெறப்பட்டதாகும். போனலுத்தி பல்கலைக்கழக ஆசிரியராகவும், அரசியலாளராகவும் திகழ்ந்தவர்; இவரின் வழிதோன்றிகள் குடும்பப் பெயரைப் போனலுத்தி என்பதிலிருந்து கலிலீ என 14 ஆம் நூற்றாண்டில் இருந்து அவருக்கு மதிப்புத் தர மாற்றிக்கொண்டனர். கலீலியோ போனலுத்தி, 200 ஆண்டுகட்குப் பின்னர் அவரது பெயர்பெற்ற பிறங்கடையான (வாரிசான) கலீலியோ கலீலி புதைக்கப்பட்ட அதே தேவாலயக் கல்லறையான பிளாரன்சு நகரத்தின் சாந்தா குரோசு பாசிலிக்காவில் புதைக்கப்பட்டுள்ளார். பதினாறாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தசுக்கான் குடும்பங்களில் மூத்தமகனுக்குத் தந்தையாரின் பெயரைக் குடும்பப் பெயராக வைத்தல் பொதுவான வழக்கில் இருந்தது - எனவே இவரது பெயர் கட்டாயமாக கலீலியோ போனலுத்தி என்ற முன்னோர் பெயரில் இருந்துதான் பெறப்பட்டிருக்கவேண்டும் என்பதில்லை. இத்தாலிய ஆண்பெயராக கலீலியோ வைக்கப்பட்டிருக்கலாம். (மேலும் குடும்பப் பெயராக அன்று விவிலியம் வழி பெயர்பெற்றிருந்த வடக்கு இசுரவேலின் நகரான கலிலீ, இலத்தீனில் கலீலியசு என்றால் கலிலீ சார்ந்த என்று பொருள், என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்).. இவரது பெயர், குடும்பப் பெயர் ஆகியவற்றின் விவிலிய வேர்கள் 1614 இல் பின்வரும் கலீலியோ சார்ந்த நிகழ்வில் இரட்டுற மொழிதலுக்கு வழிவகுத்தன. கலீலியோவின் எதிர்ப்பாளர்களில் ஒருவரான டொமினிக்கான் பாதிரியாரான தொம்மாசோ காச்சினி, கலீலியோவுக்கு எதிராக மிகவும் தாக்கம் விளைவித்த ஓர் உரையை ஆற்றினார். இதில் விவிலியத்தில் இருந்து (Acts 1:11), "கலீலி நகரத்தவர்களே, ஏன் வானகத்தில் வந்து மலங்க மலங்க விழிக்கின்றீர்கள்?" எனும் மேற்கோளை எடுத்துரைத்தார். குழந்தைகள் உண்மையிலேயே உரோமனியக் கத்தோலிக்க இறையன்பு சான்றவராக இருந்தபோதிலும், கலீலியோ, மரீனா காம்பா என்பவரோடு மணம்புரியாமல் வாழ்ந்து மூன்று குழந்தைகட்குத் தந்தையானார். இவர்கட்கு வர்ஜீனியா (பிறப்பு 1600), இலிவியா (பிறப்பு 1601) என இருமகள்களும் வின்செஞ்சோ காம்பா (பிறப்பு 1606) என்று ஒரு மகனும் பிறந்தனர் . சட்ட நடைமுறைக்கு மாறாக பிறந்ததால் இவர் தன் பெண்மக்கள் இருவரும் திருமணம் புரியத் தகுதியற்றவராகக் கருதினார். இல்லாவிட்டாலும் தன் உடன்பிறந்தவர்கட்கு நடந்ததைப் போலவே பேரளவு சீர்தரவேண்டிய நிதிநிலைச் சுமையை ஏற்கவேண்டும் எனக் கருதினார். இதற்கு மாறாக, இவருடைய பெண்மக்களின் வாழ்க்கை சமய வாழ்க்கையாகவே இருந்தது. இரு பெண்களுமே ஆர்செட்ரியில் இருந்த சான் மாத்தியோ துறவுமடத்தால் கன்னித் துறுவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அங்கேயே தம் முழுவாழ்நாளையும் கழித்தனர். மடத்துள் வர்ஜீனியா மரியா செலெசுட்டே எனும் பெயரை ஏற்றார். இலிவியா அர்சஞ்சேலா எனும் பெயரை ஏற்றார். மரியா 2 ஏப்ரல் 1634 இல் இறந்தார். பிளாரன்சில் சாந்தா குரோசில் இருந்த பாசிலிக்கா எனும் கலீலியோவின் கல்லறையிலேயே அவருடன் புதைக்கப்பட்டார். இலிவியாவோ தன் வாழ்நாள் முழுவதும் உடல்நலமின்றியே வாழ்ந்துள்ளார். வின்செஞ்சோ பின்னர் கலீலியோவின் சட்டப்படியான மகனாக ஏற்பு பெற்று சேசுடில்லா போச்சினேரியை திருமணம் செய்து கொண்டார். அறிவியல் அறிஞராக கலிலியோ முதலில் பைசா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலத்தான் சேர்ந்தார். 1581 இல், அவர் மருத்துவம் படிக்கும்போது, ஒரு நாள், வளியோட்டங்கள் பெரிய, சிறிய அலைவுகளில் சரவிளக்கை தனி ஊசல் போல ஆடவைப்பதை கவனித்தார். தன்னுடைய இதயத்துடிப்பை வைத்துப்பார்க்கும்போது அந்த சரவிளக்கு பெரிய அலைவிலும் சிறிய அலைவிலும் ஓரலைவை ஒரே நேரம் எடுத்துக் கொள்வதைப் பார்த்தார். தனது வீட்டிற்கு திரும்பியதும் இரண்டு ஒரே நீளம் கொண்ட தனி ஊசல்களை வெவ்வேறு அளவில் அலையவிட்டுப் பார்க்கும்போது அவை இரண்டும் ஒரே நேர அளவில் அலைவதைக் கவனித்தார். இதன் பிறகுதான் கிறித்தியன் ஐகன்சு இந்த நெறிமுறையைப் பயன்படுத்தி ஒரு துல்லியமான கடிகாரத்தை உருவாக்கினார். இதுவரைக்கும் தன் வாழ்வில் தான் கணித படிப்பிலிருந்து தள்ளி இருந்துள்ளார். ஏனெனில் அக்காலத்தில் ஓர் இயற்பியலாளரை விட ஒரு கணிதவியலாளர் குறைந்த பணத்தையே ஈட்ட முடிந்துள்ளது. ஆனால் வடிவவியல் பற்றிய ஒரு சொற்பொழிவைக் கேட்டபிறகு தன் தந்தையைத் தன்னைக் கணிதம் படிக்க இசையவைத்தார். பிறகு அவர் வெப்பநிலைமானியின் முன்வடிவமைப்பை) உருவாக்கினார். 1586 இல் தான் கண்டுபிடித்த நீரியல் துலாவைப் பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இதுதான் அவரை முதன்முதலாக அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்தியது. 1589 இல், இவர் பைசா நகரப் பல்கலைக்கழகத்தின் "கணிதக் கட்டிலுக்குப்" பேராசிரியராக அமர்த்தப்பட்டார். 1591 இல் கலிலியோவின் தந்தை இறந்தார். எனவே தம்பி மைக்கேலேஞ்சலோவைப் பார்த்துகொள்ளும் பொறுப்பையும் ஏற்றார். 1592 இல், கலிலியோ படுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1610 வரை அங்கு வடிவியல், இயக்கவியல், வானியல் ஆகிய துறைகளில் கல்வி பயிற்றுவித்தார். இந்த காலங்களில் கலிலியோ தூய அடிப்படை அறிவியல் (எடுத்துக்காட்டாக, இயக்கவியல், வானியல்) செயல்முறை அறிவியலில் (எடுத்துகாட்டாக, பொருட்களின் வலிமை, தொலைநோக்கியின் முன்னேற்றம் ஆகியவை இரண்டிலும்) நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். கலீலியோவும் கெப்ளரும் ஓதக் கோட்பாடுகளும் பேராயர் பெல்லார்மைன் கோப்பர்நிக்கசுவின் சூரிய மையக் கோட்பாட்டமைப்பு எற்கப்பட வேண்டுமென்றால், முதலில் புறநிலையாக சூரியன் புவியைச் சுற்றவில்லை எனவும் புவிதான் சூரியனைச் சுற்றுகிறது எனவும் நிறுவிடவேண்டும் என்று 1615 இல் கூறினார்". கலீலியோ புவி இயங்குவதை நிறுவிடும் புறநிலையான சான்றாகத் தன் ஓதக் கோட்பாட்டைக் கருதினார். இந்தக் கோட்பாட்டின் அருமையைக் கருதியே இருபெரும் உலக அமைப்புகள் பற்றிய உரையாடல் என்ற தன் நூலின் பெயரையே கடலோத உயரோதமும் பாய்வும் பற்றிய உரையாடல் என மாற்றினார். கலீலியோவின் வீட்டுச்சிறையாணைக்குப் பிறகு நூலின் தலைப்பில் இருந்து கடலோத மேற்கோள் நீக்கப்பட்டுவிட்டது. புவி தன் சாய்வான அச்சில் சூரியனைச் சுற்றிவரும்போது அதன் சுழற்சியில் அமையும் வேக ஏற்றமும் குறைவும் தான், கலீலியோவின் கருத்துப்படி, கடல்நீரில் ஏற்ற வற்றத்தை உருவாக்கி கடலோதங்களை உருவாக்குகின்றன.இவர் முதன்முதலில் தன் ஓதக் கோட்பாட்டை 1616 இல் பேராயர் ஆர்சினிக்கு அனுப்பிவைத்தார். இவர் கோட்பாடு தான் முதலில் ஓதங்களின் உருவளவின் மீதும் தோன்றும் நேரத்தின் மீதும் கடல்வடிவம் தரும் விளைவை நன்கு விளக்கியது; இவர் அட்ரியாட்டிக் கடல் நடுவில் ஓதமின்மையையும் முனைகளில் ஓதம் உருவாதலையும் சரியாகக் கூறினார். என்றாலும் ஓதங்களுக்கான பொதுக்கோட்பாடாகத் தோல்வியே கண்டது. இந்தக் கோட்பாடு சரியென்றால் ஒருநாளில் ஓர் உயரோதம் தன் ஏற்படவேண்டும். கலீலியோவும் மற்றவரும் இப்போதாமையை அறிந்தே இருந்தனர். வெனிசில் ஒருநாளில் இரு ஓதங்கள் 12 மணி நேர இடைவெளியில் ஏற்படுவதை அறிந்திருந்தனர். கலீலியோ இந்தப் பிறழ்வைப் புறக்கணித்ததோடு இந்நிலை கடல்வடிவம், கடலாழம் போன்ற பிற காரணிகளால் ஏற்படுவதாக்க் கூறினார். கலீலியோவின் இந்த வாதங்கள் பொய்யானவை என உறுதிப்படுத்திய அய்ன்சுட்டீன், கலீலியோ இந்த நயப்பான வாதங்களை உருவாக்கி சான்றின்றி ஏற்றது புவியின் சுழற்சியைப் புறநிலையாக நிறுவிடவே எனும் கருத்தையும் வெளியிட்டார். நிலா ஈர்ப்பு விசை தான் கடலோதங்களை ஏற்படுத்துகிறது என்ற அவரது சமகாலத்தவரான யோகான்னசு கெப்ளரின் கருத்தைக் கலீலியோ புறக்கணித்தார். (மேலும் கெப்ளரின் கோள்களின் நீள்வட்ட வட்டணைகளில் கலீலியோ ஆர்வம் காட்டவில்லை.) வால்வெள்ளிகள் குறித்த முரண்பாடும் மதிப்பிடுதல் நூலும் கலீலியோ 1619 இல் இயேசுசார் உரோமனோ கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராகவிருந்த ஒராசியோ கிராசியுடன் முரண்பட நேர்ந்துள்ளது.முதலில் இது வால்வெள்ளிகளின் தன்மை குறித்த விவாதமாகத் தொடங்கி, கலீலியோ தன் மதிப்பீடு நூலை 1623 இல் வெளியிட்டதும், கடைசியில் இவ்விவாதம் விரிவடைந்து, அறிவியலின் தன்மை குறித்த முரண்பாடாக முற்றியுள்ளது. நூலின் முதல் பக்கம் இவரை தசுக்கனி பேரரசின் முதன்மைக் கணிதவியலாளராகவும் மெய்யியலாளராகவும் குறிப்பிடுகிறது. மதிப்பிடு நூலின் அறிவியல் நடைமுறை பற்றிய கலீலியோவின் வளமான எண்ணக் கருக்கள் செறிந்திருந்ததால், இது அவரது அறிவியல் கொள்கை அறிக்கையாகவே கருதப்படுகிறது. பாதிரி கிராசி 1619 இன் தொடக்கத்தில், 1618 ஆம் ஆண்டின் மூன்று வால்வெள்ளிகள் குறித்த வானியல் விவாதம் எனும் சிறுநூலைப் பெயரின்றி வெளியிட்டார். இது முந்தைய ஆண்டு நவம்பரில் தோன்றிய வால்வெள்ளியின் தன்மையைக் குறித்து அலசியது. அதில் கிராசி வால்வெள்ளி புவியில் இருந்து நிலையான தொலைவுள்ள பெருவட்டத்தில் இயங்கும் நெருப்பு வான்பொருளாகும் எனும் முடிவை வெளியிட்டிருந்தார். மேலும் இது நிலாவை விட மெதுவாக இயங்குவதால் இது நிலாவை விட நெடுந்தொலைவில் அமைந்திருக்கவேண்டும் எனவும் அறிவித்திருந்தார். சூரிய மைய நிலைப்பாடு குறித்த முரண்பாடு இறப்பு சூரியனை மையமாகக் கொண்டு புவியும் மற்ற கிரகங்களும் சுற்றுகிறது என்ற கிறித்தவ சமய நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மையை மக்களிடையே வெளிப்படுத்தியமைக்காக 1642 முதல் இறக்கும் வரை கத்தோலிக்க திருச்சபையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் இவர் காய்ச்சலும் இதய குலைவும் கண்டு 1642 ஜனவரி 8 இல் தன் 77 ஆம் அகவையில் இறந்தார். தசுக்கனியி பேரரசரான இரண்டாம் பெர்டினாண்டோ, இவரது தந்தையும் முன்னோரும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சாந்தா குரோசில் உள்ள பாசிலிக்காவில் முதன்மைப் பகுதியில் அடக்கம் செய்து ஒரு சலவைக்கல் நினைவுச் சின்னமும் எழுப்பிட விரும்பினார். கத்தோலிக்கத் தேவாலயத்தால் இவரது கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கலீலியோ கண்டிக்கப்பட்டவர் என்பதால், எட்டாம் உர்பன் போப்பும் பேராயர் பிரான்செசுகோ பார்பெரினியும் எதிர்க்கவே இத்திட்டம் கைவிடப்பட்டது. மாற்றாக இவர் பாசிலிக்காவின் தென்வளாகத்துக்கு அருகில் அமைந்த நோவிசெசு கல்லறைத் தோட்டத்திற்கு அண்மையில் ஒரு சிறிய அறையில் புதைக்கப்பட்டார் from the southern transept of the basilica to the sacristy. இவருக்கு மதிப்பு தர பாசிலிக்கா கல்லறையில் நினைவுச் சின்னம் எழுபப்பட்டதும் இவரின் முழு உடலும் அங்கே 1737 இல் மீள அடக்கம் செய்யப்பட்டது; இந்நிலையில் இவர் உடலில் இருந்து மூன்று விரல்களும் ஒரு பல்லும் நீக்கப்பட்டன. இம்மூன்றில் ஒன்றான வலது கை நடுவிரல் பிளாரன்சில் உள்ள கலீலியொ அருங்காட்சியகத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் முறைகள் கலீலியோ செய்முறைகளாலும் கணிதவியலின் துனைகொண்டும் இப்புதுமை வாய்ந்த சேர்க்கை வாயிலாக இயக்கம் பற்றிய அறிவியலுக்குப் பெரும்பங்களிப்பு செய்துள்ளார். அக்கால அறிவியலின் வகைமை, காந்தமும் மின்சாரமும் குறித்த வில்லியம் கில்பர்ட்டின் பண்பியலான ஆய்வுகளாலேயே வறையறுக்கப்பட்டிருந்தது. இசைக்கலைஞரும் இசைக்கோட்பாட்டாளருமான கலீலியோவின் தந்தையார் வின்செஞ்சோ கலிலீ செய்முறைகள் வாயிலாக முதன்முதலில் இயற்பியலின் நேரியல்பற்ற உறவைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளார்: ஒருநீட்டிய சரத்தின் (கம்பியின்) உரப்பு இழுப்பின் சதுர (குழிப்பு அல்லது இருபடி) வேராக அமைதலைச் செய்முறையால் அவர் நிறுவினார். கலீலியோ தான் இயற்பியல் விதிகளை மிகத் தெளிவாக கணிதவியலாக விளக்கிய முதல் அறிவியலாளர் ஆவார். வானியல் கலிலியோ 1609 இல் 3x உருப்பெருக்கல் கொண்ட ஒரு தொலைநோக்கியை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் 30x உருபெருக்கல் வரை கொண்ட தொலைநோக்கிகளை உருவாக்கினர். ஒரு கலிலியன் தொலைநோக்கி மூலம் பார்வையாளர் பெரிதான நிமிர்ந்த படங்களை பார்க்க முடியும். கலிலியோ இதை வானத்தை ஆராய பயன்படுத்தினார். அந்த காலத்தில் இந்த தேவைக்கான நல்ல தொலைநோக்கிகளை உருவாக்கக்கூடிய வெகு சிலரில் அவர் ஒருவர். 25 ஆகஸ்ட் 1609 இல், அவர் வெனிஸ் நகர சட்டமியற்றுபவர்களிடம் சுமார் 8 அல்லது 9 உருப்பெருக்கல் கொண்ட தன் தொலைநோக்கியை விவரித்தார். அவரது தொலைநோக்கிகளை கலிலியோ கடல்வணிகர்களுக்கு அளித்து பணம் ஈட்டினார். அவ்வணிகர்கள் அத்தொலைநோக்கிகளை கடலில் நன்கு பயன்படுவதாக பார்த்தனர். அவர் சைட்ரஸ் நுன்சியஸ் (விண்மீன்கள் தூதன்) என்ற தலைப்பில் ஒரு சிறிய ஆய்வு கட்டுரையில் மார்ச் 1610 இல் தனது ஆரம்ப தொலைநோக்கி வானியல் ஆய்வுகளை வெளியிட்டார். வியாழன் 7 ஜனவரி 1610 இல் கலிலியோ வியாழனுக்கு அருகில் மூன்று நட்சத்திரங்களை கண்டார். அதற்கடுத்த இரவுகளில் இந்த "நட்சத்திரங்கள்" வியாழனுக்கு ஒப்பிடும்போது நகர்கின்றன என்பதை கவனித்தார்.ஆதலால் அவைகள் நிலையான நட்சத்திரங்கள் அல்ல என்று கண்டறிந்தார். 10 ஜனவரியில் அவற்றில் ஒன்று மறைந்துவிட்டதை அவர் கண்டார். அது வியாழனின் பின் மறைந்திருக்கவேண்டும் என்று அவர் எண்ணினார். ஆதலால் அம்மூன்றும் வியாழனின் நிலாக்களாக இருக்கவேண்டும் என்பதை அவர் கண்டார். அவர் ஜனவரி 13 ஆம் தேதி நான்காவது வியாழனின் நிலாவை கண்டறிந்தார். பிறகு வானவியலாளர்கள் இந்நான்கு நிலைகளையும் கலிலியன் நிலாக்கள் என்று அவர் பெருமையில் பெயரிட்டனர். இந்த நிலாக்கள் தற்போது ஐயோ, ஐரோப்பா, கேனிமெட் மற்றும் கால்லிச்டோ என்று அழைக்கப்படுகின்றன. வியாழன் கோளைப் பற்றிய தனது இந்த கவனிப்புகள் வானவியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் அதுவரை அனைத்து வானியல் பொருட்களும் பூமியையே சுற்றுகின்றன என்ற அரிஸ்டாட்டிலின் கருத்தே உலகில் மேலோங்கியிருந்தது. மேலும் முதலில் நிறைய வானவியலாளர்கள் இதை நம்ப மறுத்தனர். தனது ஆய்வுகள் கிறிஸ்டோபர் க்ளவியசின் ஆய்வுமையத்தால் சரி என்று கூறப்பட்டது. அதன் பின்னர் 1611 இல் ரோமுக்கு சென்ற போது அவர் ஒரு நாயகனின் வரவேற்பு பெற்றார். கலிலியோ அடுத்த பதினெட்டு மாதங்களில் செயற்கைக்கோள்களை கண்காணித்து தொடர்ந்து, 1611 இன் மத்தியில் அவர் அவை குறித்த குறிப்பிடத்தக்க துல்லியமான மதிப்பீடுகளை பெற்றார். கெப்லெர் இத்தகைய காரியம் சாத்தியமே இல்லை என்று எண்ணினார். சூரியனின் கரும்புள்ளிகள் கலிலியோ சூரியனின் கரும்புள்ளிகளை கவனித்த முதல் ஐரோப்பியர்களில் ஒருவர் ஆவார். கெப்லர் அறியாமல் 1607 இல் இதை கண்டார். ஆனால் அப்போது அவர் அதை மெர்குரி என எண்ணினார். அவர் முன்னர் மெர்குரி என்று சார்லிமேக்னி காலத்தில் தவறாக கருதப்பட்ட ஒரு அவதானிப்பை அது உண்மையில் சூரியனின் கரும்புள்ளி என கூறினார். சூரியனின் கரும்புள்ளிகளின் இடமாற்றம் சூரியன் சுழல்கிறது என்ற கெப்லரின் கூற்றை ஆதரித்தது. மேலும் பிரான்செஸ்கோ சிச்சியின் கரும்புள்ளி மீதான கவனிப்புகள் ப்டோலேமியின் வானியல் கூற்றுகளை தகர்த்தது. நிலா தனது தொலைநோக்கி மூலம் தாமஸ் ஹாரியட் (ஒரு ஆங்கிலேய கணிதவியலாளர் மற்றும் ஆய்வாளர்) ஏற்கனவே நிலாவில் வெளிச்சம், அது ஒரு கச்சிதமான உருண்டையாக இருந்திருந்தால் எப்படி பரவ வேண்டுமோ அப்படி பரவவில்லை என்பதை கண்டார். ஆனால் தனது அறியாமையால் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் போய்விட்டார். கலிலியோவோ அவ்வெளிச்சத்தின் பரவலில் இருக்கும் மாறுதல்களை சரியாக நிலாவில் மலைகளும் குழிகளும் உள்ளன என்று புரிந்துகொண்டார். தனது ஆய்வில் அவர் நிலாவின் டாப்பலாஜிக்கல் வரைபடங்களை வரைந்தார். மேலும் நிலாவின் மலைகளின் உயரத்தை கணிக்கவும் செய்தார். நிலவு நீண்ட காலமாக அரிஸ்டாட்டில் கூறியபடி ஒரு அருமையான உருண்டை அல்ல என்பது அப்போது தெரியவந்தது. வெள்ளி, சனி, மற்றும் நெப்டியூன் செப்டம்பர் 1610 முதல், கலிலியோ வெள்ளி நிலவை ஒத்த பரிமாணங்களை காட்டின என்பதை கவனித்தார். நிக்கோலஸ் கோப்பர்நிக்கசால் உருவாக்கப்பட்ட சூரியமைய மாதிரி சூரியனை சுற்றி வீனஸ் சுற்றுவதனால் அதன் அனைத்து நிலா போன்ற பரிமாணங்களையும் பார்க்க முடியும் என்று கூறுகிறது. ஆனால் ப்டாலமியின் பூமிமைய மாதிரி மூலம் இதை விவரிக்க முடியாது. ஆதலால் இதன் மூலம் பூமிமைய கொள்கை தகர்க்கப்பட்டது. ஆனாலும் முழு சூரியமைய கொள்கை தேவையில்லாமல் பாதி சூரியமைய மற்றும் பாதி பூமிமைய கொள்கை கொண்டும் இதை விளக்கமுடியும். ஆதலால் நிறைய வானவியலாளர்கள் முதலில் பாதி சூரியமைய மற்றும் பாதி பூமிமைய கொள்கைக்கு மாறி பின்னர் வேறு பிற வாதங்களின் விளைவாக முழு சூரியமைய கொள்கைக்கு மாறினார். கலிலியோ சனி கிரகத்தை கவனித்தார், மேலும் முதலில், அதன் வளையங்களை தவறாக கிரகங்கள் என எண்ணினார். கலிலியோ 1612 இல் நெப்டியூன் கிரகத்தை பார்த்தார். அது மங்கலான நட்சத்திரங்களில் ஒன்றாக அவரது கையேடுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு அது ஒரு கிரகம் என்று தெரியவில்லை, ஆனால் அவர் அதை கண்காணிப்பதை இழப்பதற்கு முன் நட்சத்திரங்களுக்கு ஒப்பிடும் போது அது நகர்கிறது என்ற கவனிப்பை ஏற்படுத்தியிருந்தார். தொழில்நுட்பம் 1595 மற்றும் 1598 க்கு இடையில், கலிலியோ ஒரு வடிவவியல் மற்றும் இராணுவ திசைகாட்டியை உருவாக்கினார். இராணுவ வீரர்களுக்கு இது பீரங்கிகளை சரியாக உயர்த்துவது மட்டுமல்லாமல் எவ்வளவு வெடி மருந்து தேவை என்பதை நிர்ணயிக்கவும் பயன்பட்டது. 1593இல் கலிலியோ ஒரு வெப்பமானி உருவாக்கினார். ஒரு விளக்கில் உள்ள காற்றின் விரிவடைதல் மற்றும் சுருங்குதலை பயன்படுத்தி அதனுடன் இணைக்கப்பட்ட குழாயில் நீரில் இயக்கத்தை உருவாக்கி இச்செயலை அவர் சாத்தியமாக்கினார். விழும் பொருட்கள் கலிலியோவின் மாணவர் வின்சென்சோ விவியாணி கலிலியோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதில் வெவ்வேறு எடை கொண்ட பொருட்களை அவர் பைசாவின் சாய்ந்த கோபுரத்தில் இருந்து விழச்செய்து அவை இரண்டும் கீழே வர ஒரே நேரம் எடுத்துக்கொள்கின்றன என்பதை காட்டினார். இது அரிஸ்டாட்டிலின் பொருட்கள் விழ எடுத்துக்கொள்ளும் நேரம் அவைகளின் எடையை பொருத்து அமையும் என்ற கூற்றை பொய்ப்பித்தது. கலிலியோ ஒரு பொருள் விழும் போது அது வெற்றிடத்தில் விழுந்தால் அது சீரான வேகமாற்றத்துடன் விழும் என்று அனுமானித்திருந்தார். மேலும் ஓய்வில் இருந்து ஆரம்பித்து சீரான வேகவளர்ச்சியில் செல்லும் ஒரு பொருளுக்கான இயக்கவியல் விதியை (d ∝ t 2) கலிலியோ சரியாக கணித்திருந்தார். மேலும் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய தூய துறைகளில் நிறைய பங்களிப்புகள் வழங்கியிருக்கிறார். இவற்றையும் பார்க்க தொலைநோக்கி கலிலியோ விண்கலம் கலிலியின் நிலவுகள் அரிசுட்டார்க்கசு வெளி இணைப்புகள் உசாத்துணை இத்தாலிய அறிவியலாளர்கள் 1564 பிறப்புகள் 1642 இறப்புகள் கலிலியோ கலிலி இத்தாலிய வானியலாளர்கள் நிலா கண்டுபிடிப்பாளர்கள் இத்தாலிய இயற்பியலாளர்கள் கணித இயற்பியலாளர்கள் வானியலாளர்கள் கணிதவியலாளர்கள்
1513
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
துணிக்கை
கூட்டுத் துணிக்கைகள் மூலக்கூறுகள் என்பன ஒரு பதார்த்தத்தின் பௌதீகப் பண்பு மாறாமல் அப் பதார்த்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படக்கூடிய மிகச் சிறிய துணிக்கையாகும். ஒவ்வொரு வித மூலக்கூறும் ஒரு குறிப்பிட்ட வேதியியற் சேர்வையை ஒத்திருக்கும். CAS பதார்த்தத் தரவுத்தளம் 23 மில்லியன் சேர்வைகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. மூலக்கூறுகள் ஒன்று அல்லது பல அணுக்களைக் கொண்டதாகும். அணுக்கள், வேதியியற் தாக்கங்களின் மூலம் ஒரு பதார்த்தத்திலிருந்து பிரிக்கப்படக்கூடிய மிகச்சிறிய நடுநிலைத் துணிக்கைகளாகும். ஒரு அணு, பாரமான ஒரு கருவையும், அதைசுற்றி ஒப்பீட்டளவில் பெரிய ஆனால் பாரம் குறைந்த இலத்திரன் cloud ஐயும் கொண்டன. ஒவ்வொருவகை அணுவும், ஒரு குறிப்பிட்ட வேதியியற் தனிமத்தை ஒத்திருக்கும். இதுவரை 110 தனிமங்கள் அறியப்பட்டுள்ளன. விபரங்களுக்கு ஆவர்த்தன அட்டவணையைப் பார்க்கவும். அணுக்கருக்கள் நியூத்திரன், புரோத்தன் ஆகியவற்றால் ஆனது. ஒவ்வொருவகைக் கருவும் nuclide என்று அழைக்கப்படுகின்றன. அணுக்கருத் தாக்கங்கள் ஒரு nuclide ஐ இன்னொன்றாக மாற்றக்கூடியவை. KAERI இலுள்ள Nuclidesகளின் அட்டவணை, 3000க்கு மேற்பட்ட Nuclidesகளின் தகவல்களைக் கொண்டுள்ளது. ஹட்ரோன்கள், குவாக்ஸ் மற்றும்/அல்லது எதிர்-குவாக்ஸ் சேர்ந்து உருவாகின்றன. வலுவான அணுக்கரு விசையினால் இறுக்கமாகப் பிணைக்கப்படுகின்றன. குவாக் உள்ளீடுகளைப் பொறுத்து, ஹட்ரோன்கள், மேலும் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பரியன்கள் ஒவ்வொன்றும் மூன்று குவாக்குகளைக் கொண்டுள்ளன. அணுக்கருவில் அவற்றின் தோற்றத்தின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுகின்றன. நியூக்கிளியோன்களே புரோத்தனும், நியூத்திரனும் ஆகும். இரண்டும் அணுக்கருவின் பகுதிகளாகும். ஹைப்பரோன்கள் - Δ, Λ, Ξ மற்றும் Ω துணிக்கைகள் - பொதுவாகக் குறைந்த வாழ்வுக்காலம் கொண்டவை. வழக்கமாக அணுக்கருவில் காணப்படுவதில்லை. மெசோன்கள், குவாக், எதிர்-குவாக் என்பவற்றினால் உருவாகின்றன. பியொன்கள், காவொன்கள் மற்றும் வேரு பலவகை மெசோன்களையும் உள்ளடக்குகின்றன. அணுக்கருவிலுள்ள புரோத்தன்களுக்கும், நியூத்திரன்களுக்கும் இடையிலான வலுவான விசை மேசோன்களூடாகவே பெறப்படுகின்றன. எக்சோட்டிக் பரியன்கள் அண்மையிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. டெட்ராகுவாக் துணிக்கைகள், இரண்டு குவாக்குகளையும், இரண்டு எதிர் குவாக்குகளையும் கொண்டுள்ளன. பெண்டாகுவாக் துணிக்கைகள், நாலு குவாக்குகளையும், ஒரு எதிர் குவாக்கையும் கொண்டது. ஆரம்பநிலைத் துணிக்கைகள் ஆரம்பநிலைத் துணிக்கைகள் அவற்றின் சுழற்சியின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுகின்றன. இயற்பியல்
1514
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88
தனிம அட்டவணை
தனிம அட்டவணை என்பது வேதியியற் தனிமங்களின் அணு எண், எதிர்மின்னி அமைப்பு, மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின் அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய (நேர்மின்னிகளின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். 1869 இல் திமீத்ரி மெண்டெலீவ் என்ற ரஷ்ய நாட்டு அறிஞர் இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தார். கண்டறியப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அணு எண் 1(ஐதரசன்) முதல் 118 (அன்அன்ஆக்டியம்) வரையான தனிமங்கள் தனிம அட்டவணையில் உள்ளன. இது தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டது. பின்னர் மோஸ்லே என்பவர் தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தார். தனிமங்களின் அணு எண்களே, அணு நிறைகளைக் காட்டிலும் முக்கிய அடிப்படைப் பண்பு எனக் கண்டறிந்தார். இவர் நவீன ஆவர்த்தன விதியைக் கூறினார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், அறிவியலறிஞர்கள் ஒத்த தனிமங்களை ஒன்றாகத் தொகுத்தனர். வேறுபட்ட தனிமங்கள் பிரிக்கப்பட்டன. வரலாறு வேதியியற் பண்புகளைப் புரிந்துகொள்ளவதில் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை ஆவர்த்தன அல்லது தனிம அட்டவணை வரலாறு காட்டுகின்றது. திமீத்ரி மென்டெலெயேவ் என்பவர் 1869 ல் தனிம அட்டவணை ஒன்றை வெளியிட்டது இந்த வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது. மென்டெலெயேவுக்கு முன்னரே அந்துவான் இலவாசியே, ஜான் நியூலாண்ட் போன்ற சில வேதியியலாளர்கள் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டாலும், உருசிய வேதியலாளரான திமீத்ரி மென்டெலெயேவுக்கே தனிம அட்டவணை உருவாக்கியதற்கான சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு == கூட்டங்கள் தனிம அட்டவணையில் நிலைக்குத்தான நெடுவரிசைகள் கூட்டங்கள் எனப்படும். ஆவர்த்தனங்களைக் காட்டிலும் கூட்டங்களிலேயே மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அவதானிக்க இயலும். ஒரே கூட்டத்திலுள்ள தனிமங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான இறுதி இலத்திரன் (அல்லது எதிர்மின்னி) ஓட்டைக் கொண்டிருக்கும். வேதியற் பண்புகள் எதிர்மின்னி அமைப்பில் அதிகம் தங்கி இருப்பதால் கூட்டங்களிடையே வித்தியாசமான வேதியியற் பண்புகளை அவதானிக்கலாம். உதாரணமாக கூட்டம் 1-இல் உள்ள தனிமங்கள் அதிக தாக்கமுள்ளவை கூட்டம் 18-இல் உள்ளவை தாக்கம் மிகவும் குறைவானவை. அதாவது கூட்டங்கள் தனிமங்களின் இலத்திரன் அமைப்பைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முன்னர் பயன்படுத்தப்பட்ட I முதல் VIII வரையான உரோம இலக்கக் கூட்ட முறைமை இறுதி ஓட்டிலுள்ள எதிர்மின்னி எண்ணிக்கையைக் கொண்டமைந்தது. உதாரணமாக இறுதி ஓட்டில் 4 எதிர்மின்னிகளைக் கொண்ட கார்பன் IV கூட்டத்தில் வகைப்படுத்தப்பட்டது. தற்போது 1 தொடக்கம் 18 வரையான கூட்ட வகைப்படுத்தல் பின்பற்றப்படுகின்றது. ஆவர்த்தனங்கள் ஆவர்த்தனங்களும் சில ஆவர்த்தன இயல்பைக் காட்டுகின்றன. அணு ஆரை, அயனாக்கல் சக்தி, எதிர்மின்னித் தன்மை என்பன இதில் அடங்கும். ஒரு ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாக செல்லும் போது, பொதுவாக அணு ஆரை குறைவடையும்: ஏனெனில் அருகேயுள்ள தனிமம் ஒரு அதிகரித்த நேர்மின்னியும் எதிர்மின்னியையும் பெறும் இதனால் நேர்மின்னி எதிர்மின்னியை ஈர்ப்பதால் அணு ஆரை இடமிருந்து வலம் செல்ல குறைவடையும். அணு ஆரை ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாக குறைவடைவதால் அயனாக்கல் சக்தி இடமிருந்து வலமாக அதிகரித்துச் செல்லும். ஏனெனில் அணுவின் எதிர்மின்னிகள் மீதான ஈர்ப்பு அதிகரிப்பதால் எதிர்மின்னிகளை வெளியேற்றி அயன்களை உருவாக்குவதற்கான சக்தியின் தேவைப்பாடு அதிகரிப்பதனாலெயாகும். டாபர்னீரின் மும்மை விதி தனிமங்களின் அணு நிறைக்கும், வேதிப்பண்புகளுக்கும் இடையேயான தொடர்பை பற்றியதாகும். ஒத்த பண்புகளைப் பெற்ற தனிமங்களை மும்மூன்று தனிமங்களாகத் தொகுக்கப்பட்டு‍ மும்மைகள் (Triads) என்று வகைப்படுத்தப்பட்டது. தனிமங்களின் ஒரு மும்மையில் உள்ள மையத் தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறைகளின் சராசரியாக அமையும். இதுவே மும்மை விதியாகும். இவ்விதி சில தனிமங்களுக்கு மட்டுமே பொருந்தியது. எண்ம விதி நியூலாண்ட் என்னும் அறிஞர் தனிமங்களை அவற்றின் அணுநிறைகளின் ஏறுவரிசையில் அடுக்கிய பொழுது, ஒரு தனிமத்தின் பண்புகளுக்கும் அதிலிருந்து எட்டாவதாக அமைந்த தனிமத்தின் பண்புகளுக்கும் இடையே ஒப்புமை இருப்பதை உணர்ந்தார். இவ்விதி கால்சியத்திற்குப் பின்வரும் தனிமங்களுக்குப் பொருந்தவில்லை. பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மந்த வாயுக்களுக்கும் இவ்விதி பொருந்தவில்லை. திமீத்ரி மெண்டெலீவ் தனிம வரிசை வகைபாடு ரஷ்ய அறிவியலார் டிமிட்ரி மெண்டலீப் மற்றும் ஜெர்மன் அறிவியலாளர் லோதர் மேயர் ஆகியோர் தனிம வரிசை அட்டவணையை தனித்தனியே உருவாக்கினார்கள். மெண்டலீஃப் தனிமங்களை அவற்றின் அணுநிறையின் ஏறு வரிசையில் அமைத்தார். அவர் ஒரு ஆவர்த்தன விதையைக் கொடுத்தார். அது மெண்டலீஃபின் ஆவர்த்தன விதி எனப்பட்டது. தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஆவர்த்தன முறையில் மாற்றம் அடைகின்றன. மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்கள் அவற்றின் அணு எடைகளின் ஏறுவரிசையில் அமைந்துள்ளன. செங்குத்தாக அமைந்துள்ள பத்திகள், தொகுதிகள் என அழைக்கப்பட்டன. இவை I முதல் VIII மற்றும் பூஜ்யம் எனக் குறிக்கப்பட்டன. பூஜ்யத் தொகுதி தனிமங்கள் மெண்டலீஃபின் காலத்தில் கண்டுபிடிக்கப் படவில்லை. I முதல் VII வரையிலான ஒவ்வொரு தொகுதியும் இரண்டு உட்தொகுதிகளாக A, B என பிரிக்கப்பட்டுள்ளன. VIII -வது தொகுதி மூன்று உட்தொகுதிகளைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு உட்தொகுதியிலும் மூன்று தனிமங்கள் உள்ளன. பூஜ்யத் தொகுதி மந்த வாயுக்களைப் பெற்றுள்ளது. ஏழு கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் எனப்படுகின்றன. இவை 1 முதல் 7 எண்ணால் பெயரிடப்பட்டுள்ளன. முதல் தொடரில் இரண்டு தனிமங்கள் உள்ளன (H, He). இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்கள் (குறுகிய தொடர்) ஒவ்வொன்றிலும் 8 தனிமங்கள் காணப்படுகின்றன. நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர்கள் (நீண்ட தொடர்) 32 தனிமங்கள் உள்ளன. ஏழாவது தொடர் முழுமையாக நிரம்பாமல் உள்ளது. இதில் 19 தனிமங்கள் உள்ளன. (டிரான்ஸ் யுரேனியம் தனிமங்கள்). இவற்றில் பெரும்பான்மையான தனிமங்கள் செயற்கை முறையில் தயார்க்கப்பட்டவை. மெண்டலீஃப் அட்டவணையின் பயன்கள் புதிய தனிமங்கள் இருக்கும் என முன்பே அறிந்து கூறப்பட்டது. அட்டவணையில் சில காலியிடங்கள் இருந்தன. இக்காலியிடங்கள், அதுவரை கண்டுபிடிக்கப் படாத புதிய தனிமங்கள் இப்பூமியில் உள்ளதை உணர்த்தின. இத்தனிமங்களை மெண்டலீஃப், ஈகா-அலுமினியம், ஈகா-சிலிக்கான் என அழைத்தார். பின்னர் அவை கண்டுபிடிக்கப்பட்ட முறையே காலியம், ஜெர்மேனியம் என அழைக்கப்பட்டன. மெண்டலீஃப் அட்டவணையின் குறைபாடுகள் ஹைட்ரஜனிற்கு முறையான இடம் தரப்படவில்லை. அதிக அணு நிறையைப் பெற்ற தனிமங்கள் குறைந்த அணு நிறையைப் பெற்ற தனிமங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளன. அணு எண் 57 முதல் 71 வரை உள்ள 15 தனிமங்கள் லாந்தனைடுகள் அல்லது அரிய மண் தனிமங்கள் என்று அழைக்கிறோம். இவை III B தொகுதியில் 6-வது தொடரில் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று ஆக்டினைடுகள் எனப்படும் மற்றொரு வகை தனிமங்களுக்கு தனிம வரிசை அட்டவணையில் சரியான இடம் அளிக்கப்படவில்லை. தனிமங்களின் ஐசோடோப்புக்கள் அத்தனிமங்கள் இருக்கும் இடத்திலேயே காணப்படுகின்றன. ஆனால் மெண்டலீஃபின் கொள்கைப்படி அவற்றின் அணுநிறைக்கேற்ப வெவ்வேறு இடத்தில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். வேதிப்பண்புகளின் அடிப்படையில் ஒத்த பண்புகளை உடைய தனிமங்களான காப்பர், மெர்குரி போன்றவை வெவ்வேறு தொகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வேறுபட்ட பண்புகளையுடைய தனிமங்களான காப்பர், சில்வர், கோல்டு ஆகியவை ஒரே தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. நவீன ஆவர்த்தன விதி 1912-ல் மோஸ்லே என்ற அறிவியலறிஞர் தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அணு எண்களின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று அறிந்தார். இதன் அடிப்படையில் நவீன ஆவர்த்தன விதி உருவானது. இவ்விதிப்படி தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகள் அத்தனிமங்களின் அணு எண்களுக்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன. தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையி்ல் அமைத்தால் ஒத்த பண்புகளையுடைய தனிமங்கள் சீரான இடைவெளிக்குப் பின் அமைகின்றன. இதுவே ஆவர்த்தனத் தன்மை எனப்படுகிறது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிம வரிசை அட்டவணை நீள் வரிசை அட்டவணை ஆகும். தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான் அமைப்பின் அடிப்படையில் 1. மந்தவாயு தனிமங்கள் 2. பிரதிநிதித்துவ தனிமங்கள் 3. இடைநிலைத் தனிமங்கள் 4. உள் இடைநிலைத் தனிமங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நவீன ஆவர்த்தன அட்டவணையின் சிறப்பம்சங்கள் தனிம வரிசை அட்டவணையில் உள்ள கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரு தொடரில், ஒரே வரிசையாக அமைந்த தனிமங்கள் ஒரே இணைதிறன் கூட்டைப் பெற்றிருக்கும். மொத்தம் 7 தொடர்கள் உள்ளன. முதல் தொடரில் 2 தனிமங்கள் உள்ளன. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் (மிகக்குறுகிய தொடர்). இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர், ஒவ்வொன்றிலும் 8 தனிமங்கள் உள்ளன. (குறுகிய தொடர்) நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர்கள் ஒவ்வொன்றும் 18 தனிமங்களைக் கொண்டுள்ளன. (நீண்ட தொடர்கள்) ஆறாவது தொடரில் லாந்தனைடுகளை உள்ளடக்கிய 32 தனிமங்கள் உள்ளன. (மிக நீண்ட தொடர்) ஏழாவது தொடர் ஆக்டினைடு தனிமங்களை உள்ளடக்கியது. இது முற்றுப் பெறாத தொடராகும். தற்பொழுது ஏழாவது தொடர் 19 தனிமங்களை பெற்று பூர்த்தி செய்யப்படாத தொடராக உள்ளது. நவீன தனிம அட்டவணையில் 18 தொகுதிகள் உள்ளன. இதில் காணப்படும் செங்குத்துப் பத்திகள் தொகுதிகள் ஆகும். ஒத்த எலக்ட்ரான் அமைப்புடைய வெளி ஆற்றல் கூடுகளைக் கொண்ட தனிமங்கள் ஒரே தொகுதியில் செங்குத்து வரிசையில் அமைந்துள்ளன. ஒரே தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒர் குடும்பத் தனிமங்களாக உள்ளன. I A முதல் VII A வரையில் உள்ள தனிமங்கள் பிரதிநிதித்துவத் தனிமங்கள். I A தொகுதித் தனிமங்கள் கார உலோகங்களாகும். II A தொகுதி தனிமங்கள் கார மண் உலோகங்கள் ஆகும். VI A தொகுதித் தனிமங்கள் (16) சால்கோஜென் அல்லது ஆக்சிஜன் குடும்பத் தனிமங்களாகும். VII A தொகுதித் தனிமங்கள் (17) ஹாலஜன் அல்லது உப்பீனிக் குடும்பத் தனிமங்களாகும். I B -லிருந்து மற்றும் VII -B மற்றும் VIII-வது தொகுதித் தனிமங்கள் இடைநிலைத் தனிமங்கள் ஆகும். பூஜ்யத் தொகுதி தனிமங்கள் மந்த வாயுக்கள் (அரிய வாயுக்கள்) எனப்படும். லாந்தனைடுகளும், ஆக்டினைடுகளும் ஒரே தொகுதியில் இருந்தாலும் அவைகள் அட்டவணைக்குக் கீழே தனி அமைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன. தனிம வரிசை அட்டவணையும் எலக்ட்ரான் கட்டமைப்பும் தொகுதிகள் I-ல் இருந்து பூஜ்யம் வரை உள்ள தனிமங்கள் பொதுவாக முதன்மைத் தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன. தனிமங்களின் பண்புகள், அட்டவணையில் அவற்றின் இருப்பிடம், எலக்ட்ரான் கட்டமைப்பு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தொகுதி II-ல் உள்ள தனிமங்கள் 2 வெளி எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன. மெக்னீசியம் அணு, அதன் 3-வது வெளிக்கூட்டில் இரண்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது. எனவே இது தொதுதி II-ல் வைக்கப்பட்டுள்ளன. ஆர்கான் வெளிக்கூட்டில் நிலைப்பு அமைப்பான எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது. எனவே அது பூஜ்யத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பொட்டாசியம் அணு அதன் வெளிக்கூட்டில் ஒரு எலக்ட்ரானைப் பெற்றுள்ளது. எனவே, தொகுதி I-ல் தொடர் 4-ல் வைக்கப்படுள்ளது. ஒரு தனிமத்தின் அணுவின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களே அதன் வேதிப் பண்புக்குக் காரணமாக அமைகின்றன. இதனால் தான் ஒரு தொகுதியில் உள்ள தனிமங்கள் அனைத்தும் பண்புகளில் ஒத்திருக்கின்றன. அரிய வாயுக்கள் மிகவும் நிலைப்புத் தன்மையுடைய எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றிருக்கின்றன. எனவே வினைதிறன் அற்றவை. தனிம வரிசை அட்டவனையில் ஒர் தொகுதியில் கீழ்நோக்கிச் சென்றால் அணுக்களின் உருவ அளவு அதிகரிக்கிறது. தொடரில் வலது நோக்கி நகர்ந்தால் உருவ அளவு குறைகிறது. கீழ்நோக்கி தொகுதிகளில் நகர்ந்தாலும், தொடரில் இடது நோக்கி நகர்ந்தாலும் தனிமங்களின் உலோகப் பண்புகள் அதிகரிக்கின்றன. உலோகத் தொகுதியில் கீழ்நோக்கி நகர்ந்தால் உலோகங்களின் வினைதிறன் அதிகமாகிறது. தொகுதி I -ன் அடிப்படையில் உள்ள தனிமம் மிகவும் வினைதிறன் உடைய தனிமம் ஆகும். ஒர் தொடரின் வலது பகுதியில் அலோகங்கள் காணப்படுகின்றன. அலோகங்கள் உள்ள தொகுதியில், அதிக வினைதிறன் கொண்ட தனிமம் தொகுதியின் தலைப்பில் உள்ளது. ஏழாவது தொகுதியில் முதலாவதாக அதிக வினை திறன் கொண்ட அலோகம் உள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் நான்கு புதிய தனிமங்கள் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? தனிம அட்டவணை தனிமங்கள்
1524
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D
வூல்ஸ்தோர்ப் மனோர்
இங்கிலாந்து, லிங்கன்ஷயர் என்னுமிடத்திலுள்ள வூல்ஸ்தோர்ப் மனோர் (Woolsthorpe Manor), சர். ஐசாக் நியூட்டன் பிறந்தவீடாகும். இவர் 1642, டிசம்பர் 25ல் (பழைய காலக்கணிப்பு) இங்கே பிறந்தார். அக்காலத்தில் இது செம்மறி ஆடுகளை வளர்க்கும் ஒரு பண்ணையாக இருந்தது. இதன் காரணமாகவே "வூல்" (கம்பளி) என்ற சொல் இப் பெயரில் உள்ளது. "தோர்ப்" என்பது டேனிஷ் மொழியில் பண்ணையைக் குறிக்கும். கொள்ளை நோய் (plague) காரணமாக கேம்பிரிச் பல்கலைக்கழகம் மூடப்பட்டபோது, நியூட்டன் இங்கே வந்தார். ஒளி மற்றும் ஒளியியல் சம்பந்தமான சோதனைகள் உட்படப் பல புகழ் பெற்ற இவரது சோதனைகளுக்குக் களமாக அமைந்தது இவ்விடமே. 17 ஆம் நூற்றாண்டில் சில வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்பாக (hamlet) இருந்த வூல்ஸ்தோர்ப், இன்று பல நூறு வீடுகளைக் கொண்ட ஒரு சிறு ஊராக வளர்ந்துள்ளது. வூல்ஸ்தோர்ப் மனோர் அமைந்திருந்த நிலத்தின் பெரும்பகுதி, அண்மையிலிருந்த ஒரு குடும்பத்தினருக்கு விற்கப்பட்டது. இதற்கு அருகிலிருந்த வெற்று நிலங்கள் பலவற்றிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. ஆயினும், வூல்ஸ்தோர்ப் மனோர் இன்றும் ஊரின் எல்லையை அண்டி, வயல்கள் சூழ அமைந்துள்ளதைக் காணலாம். தேசிய நம்பிக்கை நிதியத்தின் பொறுப்பிலுள்ள இக் கட்டிடம், வசந்த காலம் முதல் இலையுதிர் காலம் வரை பொது மக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்படுகின்றது. வூல்ஸ்தோர்ப் மனோர், இலண்டனிலிருந்து ஏறத்தாழ 100 மைல்கள் தொலைவிலுள்ளது. இங்கிருந்து வடக்காகப் பத்து மைல் தொலைவிலுள்ள, கிரந்தாம் (Grantham) புகைவண்டி நிலையத்திலிருந்து, மோட்டார் வண்டியில் இவ்விடத்திற்குச் செல்லமுடியும். வூல்ஸ்தோர்ப் என்னும் பெயரில் லிங்கன்ஷயரில் இன்னொரு ஊரும் உள்ளது. இது "பீவர் அருகிலுள்ள வூல்ஸ்தோப்" எனவும், வூல்ஸ்தோர்ப் மனோர் அமைந்துள்ள இடம், "கோல்ஸ்வர்த் அருகிலான வூல்ஸ்தோர்ப்" எனவும் குறிப்பிடப் படுகின்றன. மேற்கோள்கள் வெளியிணைப்புகள் தேசிய நம்பிக்கை நிதியத்தின் இணையத் தளத்திலுள்ள, வூல்ஸ்தோர்ப் மனோர் பக்கம் ஐக்கிய இராச்சியம் de:Woolsthorpe-by-Colsterworth#Woolsthorpe Manor
1526
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
கோட்பிரீட் லைப்னிட்ஸ்
கோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலேயே எழுதியுள்ளார். சட்டம், தத்துவம் ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, இடாய்ச்சுலாந்து நாட்டுப் பிரபுக்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே இங்கிலாந்தில் அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், கணித வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. நியூட்டனுக்குப் வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார். இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன. வாழ்க்கைக் குறிப்பு இவர் 30 ஆண்டு கால யுத்தமுடிவில் சிட்ரிக் லெய்பினிஸ், கத்தரினா ஸ்மக்கிற்கும் 1647ல் 07 மாதம் முதல் நாள் பிறந்தார் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Translations by Jonathan Bennett, of the New Essays, the exchanges with Bayle, Arnauld and Clarke, and about 15 shorter works. Gottfried Wilhelm Leibniz: Texts and Translations, compiled by Donald Rutherford, கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ) Leibnitiana, links and resources edited by Gregory Brown, ஹியூஸ்டன் பல்கலைக்கழகம் Philosophical Works of Leibniz translated by G.M. Duncan (1890) The Best of All Possible Worlds: Nicholas Rescher Talks About Gottfried Wilhelm von Leibniz's "Versatility and Creativity" "Protogæa" (1693, Latin, in Acta eruditorum) – Linda Hall Library Protogaea (1749, German) – full digital facsimile from Linda Hall Library Leibniz's (1768, 6-volume) Opera omnia – digital facsimile Leibniz' arithmetical machine, 1710, online and analyzed on BibNum [click 'à télécharger' for English analysis] Leibniz' binary numeral system, 'De progressione dyadica', 1679, online and analyzed on BibNum [click 'à télécharger' for English analysis] 1646 பிறப்புகள் 1716 இறப்புகள் செருமானியக் கணிதவியலாளர்கள் செருமானிய மெய்யியலாளர்கள் செருமானிய அறிவியலாளர்கள் செருமானிய எழுத்தாளர்கள் இலத்தீன் எழுத்தாளர்கள் செருமானியக் கண்டுபிடிப்பாளர்கள் செருமானிய இயற்பியலாளர்கள் அறிவாய்வியலாளர்கள் அறிவியலின் மெய்யியலாளர்கள் பகுத்தறிவாளர்கள் 18 ஆம் நூற்றாண்டு மேற்குலக மெய்யியல் 17 ஆம் நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்
1528
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%2C%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D
திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்
இங்கிலாந்தின், கேம்பிரிட்ஜிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியே திரித்துவக் கல்லூரி ஆகும். கேம்பிரிட்ஜிலுள்ள கல்லூரிகளில் மிகப் பெரியது இதுவே. அத்துடன் ஒக்ஸ்பிரிட்ஜ் கல்லூரிகளில் அதிக நிதி வளம் கொண்டதும் இதுவேயாகும். £700 மில்லியன்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இதன் கட்டிடங்களுக்குப் புறம்பாக, இதற்குரிய அறக்கொடைகளும் £700 மில்லியன்கள் வரை உள்ளதாகக் கூறப்படுகின்றது. கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளில் சிறப்பான சாதனைகள் புரிந்துள்ள இக் கல்லூரி, மாணவர்வீத அடிப்படையில், உலகிலேயே மிக அதிக அளவில் அறக்கொடை பெறும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. திரித்துவக் கல்லூரி, மிகச் சிறப்பான கல்விமரபைக் கொண்டது. இக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் முப்பத்தொரு நோபல் பரிசுகளை வென்றுள்ளார்கள். இது பெரும்பாலான நாடுகள் பெற்ற நோபல் பரிசுகளின் எண்ணிக்கையிலும் அதிகமாகும். அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே இதைவிடக் கூடிய எண்ணிக்கையில் நோபல் பரிசு பெற்றவர்களைக் கொண்டுள்ளன. இக் கல்லூரியைச் சார்ந்தவர்கள் பலர் மிகவும்புகழ் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களுள் ஐசாக் நியூட்டன் சிறப்பாகக் குறிபிடத்தக்கவர். வரலாறு ஏற்கெனவேயிருந்த, "மைக்கேல்ஹவுஸ்" மற்றும் "கிங்ஸ்ஹோல்" ஆகிய இரண்டு கல்லூரிகளை இணைத்தது மூலம் 1546 ஆம் ஆண்டில் எட்டாம் ஹென்றியால் இக்கல்லூரி நிறுவப்பட்டது. இவற்றுள் மைக்கேல்ஹவுஸ் 1324 இல் ஹார்வே டி ஸ்டண்டன் என்பவரால் நிறுவப்பட்டது. கிங்ஸ்ஹோல் 1317 இல் இரண்டாம் எட்வேர்டால் நிறுவப்பட்டு, 1337 இல் மூன்றாம் எட்வேர்டால் மீண்டும் மீளமைப்புச் செய்யப்பட்டது. அக்காலத்தில், ஹென்றி அரசன் தேவாலயங்களுக்கும், கிறிஸ்தவ மடாலயங்களுக்கும் உரிய நிலங்களைக் கையகப்படுத்தி வந்தான். கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட் ஆகிய பல்கலைக் கழகங்கள் சமய நிறுவனங்களாயும், பெரும் நிதி வளம் உள்ளவையாகவும் இருந்த காரணத்தால், இவையும் அரசால் கையகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசனும், எந்தக் கல்லூரியின் நிலங்களையும் கையகப்படுத்த வழிசெய்யும் சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் உருவாக்கினான். கையகப்படுத்தப்படுவதில் இருந்து தப்ப வேண்டிய நிலைக்குள்ளான பல்கலைக் கழகங்கள் இரண்டும் அரசனின் ஆறாவது மனைவியான கத்தரீன் பார் (Catherine Parr) இதைத் தடுக்க வழிசெய்யுமாறு வேண்டிக்கொண்டன. கத்தரீனின் தலையீட்டின் பேரில், பல்கலைக் கழகங்களைக் கையகப் படுத்தாது விட்டதுமன்றிப் புதிய கல்லூரியொன்றை உருவாக்கவும் அரசன் உடன்பட்டான். எனினும் அரசின் நிதியிலிருந்து இதற்குச் செலவு செய்ய விரும்பாத அரசன், முன்னர் குறிப்பிட்ட இரண்டு கல்லூரிகளையும், ஆறு தங்கும் விடுதிகளையும் இணத்துத் திரித்துவக் கல்லூரியை உருவாக்கினான். இவற்றுடன் தேவாலயங்களிடம் இருந்து நிலங்களையும் சேர்த்துக் கொண்டதனால் இது மிகப்பெரிய அளவுகொண்டதாயும், பணக்காரக் கல்லூரியாகவும் ஆனது. மேற்கோள்கள் ஐக்கிய இராச்சியத்திலுள்ள பல்கலைக்கழகங்கள்
1531
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D
கோள்
கோள் (planet) விண்மீனைச் சுற்றிவரும் வான்பொருளாகும் இது. தனது ஈர்ப்பு விசையாலுருண்டையாகத் திரளத் தக்க அளவு பொருண்மை மிக்கதாகும்; வெப்ப அணுக்கருப் பிணைவு நிகழ்வை உருவாக்க இயலாத அளவு பொருண்மை கொண்டதாகும்; மேலும் இது தன் வட்டணையின் வட்டாரத்தில் கோளெச்சம் ஏதும் அமையாமல் நீக்கியிருக்கவேண்டும். கோள் எனும் சொல் வரலாறு, கணியவியல், அறிவியல், தொன்மவியல், சமயம் சார்ந்த பண்டைய சொல்லாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம். இவை பல பண்டைய நாகரிகங்களால் தெய்வீகத் தன்மையோடும் தெய்வங்களால் அனுப்பப்பட்டனவாகவும் உணரப்பட்டன. அறிவியல் அறிவு வளர்ந்ததும், கோள்கள் பற்றிய கண்ணோட்டம் மாறலானது. பன்னாட்டு வானியல் ஒன்றியம் 2006 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பக் கோள்களுக்கான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இந்த வரையறை எங்கு, எவற்றை வட்டணையில் சுற்றிவருகின்றன என்பதைப் பொறுத்து கோல்பொருண்மை உடைய பல வான்பொருள்களைத் தவிர்க்கிறது. இக்கால வரையறைப்படி, 1950 க்கு முன்பு கண்டுபிடித்த எட்டு கோள்கள் மட்டுமே கோள்களாகக் கருதப்படுகின்றன; இந்த வரையறையின்கீழ் சீரெசு, பல்லாசு, யூனோ, வெசுட்டா (குறுங்கோள்பட்டையில் உள்ள வான்பொருள்கள்), புளூட்டோ (முதல் நெப்டியூனுக்கு அப்பால் கண்டறிந்த கோள்) ஆகியவை முன்பு கோள்களாகக் கருதப்பட்டு வந்திருந்தாலும், இப்போதும் இனியும் அவ்வாறு கருதப்படவியலாது. கோள்கள் புவியைச் சுற்றி வேறுபட்டப் புறவட்டிப்பு இயக்கங்களில் உள்ளதாகத் தாலமி கருதியுள்ளார். பலமுறை சூரிய மையக் கருதுகோள் பரிந்துரைக்கப்பட்டு வந்திருந்தாலும், நோக்கீட்டு வானியல்வழியாகத் தொலைநோக்கி கொண்டு கலீலியோவால் நிறுவப்பட்ட 17 ஆம் நூற்றாண்டுவரை அது ஏற்கப்படவில்லை. அப்போது டைக்கோ பிராகேவும் யோகான்னசு கெப்ளரும் தொலைநோக்கிக்கு முந்தைய நோக்கீட்டுத் தரவுகளை திரட்டிப் பகுத்தாய்ந்து கோள்கள் வட்டமான வட்டணையில் இயங்காமல், நீள்வட்டமான வட்டணையில் இயங்குகின்றன எனக் கண்டறிந்தனர். நோக்கீட்டுக் கருவிகள் மேம்பட்ட்தும், வானியலாளர்கள் புவியைப் போலவே பிறகோள்களிலும் பனிக்கவிப்பும் பருவகால மாற்றங்களும் அமைதலையும் அச்சுகள் சாய்வாக உள்ளதையும் கண்டனர். விண்வெளி ஊழி வளர்ந்ததும், விண்கல நோக்கீடுகள் அனைத்துக் கோள்களிலும் எரிமலை உமிழ்வு, கடுஞ்சூறாவளிகள், கண்டத்தட்டு நகர்வு நீரியல் பான்மைகள், ஆகியவற்றைக் கண்ணுற்றனர். கோள்கள் பொதுவாக இருமுதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, தாழ் அடர்த்திப் பெருங்கோள்கள் அல்லது வியாழன்நிகர் கோள்கள், சிறிய பாறையாலான புவிநிகர் கோள்கள் ஆகும். பன்னாட்டு வானியல் ஒன்றிய வரையறைகளின்படி, சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உண்டு. சூரியனில் இருந்து தொலைவு கூடக்கூட முதலில் புவிநிகர் கோள்களான புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகியவை அமைகின்றன. அடுத்து பெருங்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை அமைகின்றன. முதல் இரண்டு கோள்களில் நிலா ஏதும் இல்லை. ஆறுகோள்களில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிலாக்கள் உள்ளன. நம் பால்வழியில் உள்ள விண்மீன்களைப் பல்லாயிரம் கோள்கள் அல்லதுப் புறக்கோள்கள் சுற்றிவருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புறக்கோள்களைப் பொறுத்தவரை, நிலாவைவிடச் சற்றே பெரிய அளவுடைய கெப்ளர்-37b முதல் வியாழனைப் போல இருமடங்கு பெரிய வாசுப்-17b போன்ற வளிமக் கோள்கள் வரையிலானவை தனிக் கோளமைப்புகளிலும் பன்மைக் கோளமைப்புகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நூறு புறக்கோள்கள் புவியின் அளவு கொண்டவை; இவற்றில் ஒன்பது தன் விண்மீனில் இருந்து, சூரியனில் இருந்து புவி அமையும் தொலைவில், உள்ளவை. கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கிக் குழு 2011 திசம்பர் 20 இல் புவிநிகர் புறக்கோள்களாக, கெப்ளர்-20e, கெப்ளர்-20f ஆகிய இருகோள்கள் சூரியநிகர் விண்மீனாகிய கெப்ளர்-20 ஐ வட்டணையில் சுற்றிவருவதைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறது.. 2012 ஆம் ஆய்வு, ஈர்ப்பு நுண்வில்லைத் தரவைப் பகுத்தாய்ந்து, நம் பால்வழியில் உள்ள ஒவ்வொரு விண்மீனுக்கும் 1.6 கட்டுண்ட கோள்கள் அமைந்துள்ளதாக மதிப்பிடுகிறது. ஐந்துச் சூரியநிகர் விண்மீன்கள் ஒன்றில் புவியின் உருவளவுள்ள planet in its habitableவட்டாரம் அமைவதாகக் கருதப்படுகிறது. பொதுவாக, ஒரு விண்மீனைச் சுற்றிவரும் அனைத்துக் கோள்களும், பெரும்பாலும் அவ்விண்மீன் சுழலும் திசையிலேயே அதன் கோள்களின் நீள்வட்டப்பாதையில் செல்லும். ஆனால், தற்போது அவ்வாறல்லாமல் எதிர்த் திசையில் கோள்கள் சுழலும் ஒரு சூரியக் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆகத்து 18, 2013 அன்று சயன்சு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். கெப்லர் விண்கலம் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெப்லர்-56 என்ற இந்த விண்மீன் நமது சூரியனை விட சற்று அதிக எடையுள்ளது. இதனை இரண்டு கோள்கள் சுற்றி வருவதாக 2012 ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது. சூரியக் குடும்பம் சூரியக் குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன. புதன் வெள்ளி பூமி செவ்வாய் வியாழன் சனி யுரேனஸ் நெப்டியூன் இவற்றில் வியாழன்தான் மிகப்பெரிய கோளாகும். இது 318 மடங்கு புவிப்பொருண்மையக் கொண்டுள்ளது. இவற்றில் புதன் எனும் அறிவன் கோள்தான் மிகவும் சிறிய கோளாகும். இது புவியைப் போல 0.055 பங்கு பொருண்மையைக் கொண்டுள்ளது. சூரியக் குடும்பக் கோள்களை அவற்றின் உள்ளியைபுக்கு ஏற்பக் கீழ்வருமாறு பிரிக்கலாம்: புவிநிகர் கோள்கள்: இவை புவியைப் போன்றவை.இவற்றின் உட்கூறு பெரும்பாலும் பாறைகளால் ஆயதாகும். எ. கா. : புதன், வெள்ளி, புவி, செவ்வாய். புதன் மிகச்சிறிய புவிநிகர் கோள்ளாகும். இவ்வகைக் கோள்களில் புவி தான் மிகப் பெரியதாகும். பெருங்கோள்கள் (வியாழன்நிகர் கோள்கள்): இவை புவிநிகர் கோள்களைவிட கணிசமான அளவு பெரியவை. எ. கா. : வியாழன், சனி, யுரேனசு, நெப்டியூன். வளிமப் பெருங்கோள்கள் : வியாழனும் சனியும் நீரகமும் எல்லியமும் செறிந்த மிகப்பெரிய சூரியக் குடும்பக் கோள்களாகும். வியாழன் 318 புவிப் பொருண்மைகளும் சனி 95 புவிப் பொருண்மைகளும் கொண்டுள்ளன. பனிப்பெருங்கோள்கள்: யுரேனசிலும் நெப்டியூனிலும் நீர், மீத்தேன், அம்மோனியா போன்ற தாழ் கொதிநிலைப் பொருள்களும் தடிப்பான நீரக, எல்லிய வளிமண்டலங்களும் அமைந்துள்ளன. இவை வளிமப் பெருங்கோள்களைவிடக் குறைந்த பொருண்மையைக் (14, 17 மடங்கு புவிப் பொருண்மையைக்) கொண்டுள்ளன. குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் International Astronomical Union website Photojournal NASA NASA Planet Quest – Exoplanet Exploration Illustration comparing the sizes of the planets with each other, the Sun, and other stars "Regarding the criteria for planethood and proposed planetary classification schemes." article by Stern and Levinson Planetary Science Research Discoveries (educational site with illustrated articles) மேலும் காண்க புறக்கோள் நோக்கீட்டு வானியல் கோள் அறிவியல்
1533
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%29
புதன் (கோள்)
புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியிலிருந்து காணும்போது இது 116 நாட்கள் எடுத்துக் கொள்வதைப் போலத் தோன்றும். இதற்கு இயற்கை நிலவுகள் எதுவும் அறியப்படவில்லை. இந்தக் கோளுக்கு மேற்கத்தியப் பண்பாட்டில் உரோமை தூதுக் கடவுளான மெர்க்குரியின் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டில் அறிவுக்கு காரணமாகும் புதன் என்ற கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை (angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம். புதனில் சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் மற்றெந்தக் கோள்களையும் விட புதனின் கோள்பரப்பு பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது; கோள்நடுக்கோடு அருகே பகல் நேரத்தில் ஆகவும் இரவுநேரத்தில் ஆகவும் உள்ளது. முனையங்களில் (துருவங்களில்) எப்போதுமே குளிர்ச்சியாக கீழுள்ளது. புதனின் அச்சு சூரியக் குடும்பத்திலேயே மிகக் குறைந்த சாய்வைக் (ஏறத்தாழ பாகை) கொண்டுள்ளது. ஆனால் இதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் மிகக் கூடியதாக உள்ளது. பெரும்பாலான மற்றக் கோள்களைப் போல இங்கு பருவங்கள் ஏற்படுவதில்லை. புதன் ஞாயிற்று அண்மைநிலையில் சூரியனிடமிருந்து இருக்கும் தொலைவை விட ஞாயிற்றுச் சேய்மைநிலையில் 1.5 மடங்குத் தொலைவில் உள்ளது. புதன் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் தனித்துவமான முறையில் சூரிய ஈர்ப்பில் பிணைந்து சுற்றுகின்றது. நிலைத்த விண்மீன்களிலிருந்து காணும்நிலையில் தனது சுற்றுப்பாதையில் இரண்டு சுற்றுக்கள் வரும் காலத்தில் தன்னைச் சுற்றி மூன்று முறை சுற்றிக் கொள்கின்றது. சுற்றுப்பாதையில் சுழலும் குறியீட்டச்சு கொண்டுள்ள சூரியனிலிருந்து காணும்போது, இரண்டு புதனாண்டுகளுக்கு ஒருமுறை தன்னைச் சுற்றிக் கொள்கின்றது. புதனில் இருக்கும் கூர்நோக்கருக்கு ஒருநாள் இரண்டு ஆண்டுகளாகும். தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக் (craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974–1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது. உட்கட்டமைப்பு புதன் கோள் சூரியக் குடும்பத்தின் நான்கு புவிநிகர் கோள்களில் ஒன்றாகும். புவியைப் போன்றே பாறைகளால் ஆனது. சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய கோள் இது வாகும். இதன் நிலநடுக் கோட்டின் ஆரம் 2,439.7 கிமீ. புதனில் அண்ணளவாக 70% உலோகமும், 30% சிலிக்கேட்டுப் பொருளும் காணப்படுகிறது. சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய அடர்த்தியான கோளான இதன் அடர்த்தி 5.427 கி/செமீ3. இது புவியின் அடர்த்தியான 5.515 கி/செமீ3. ஐ விட சிறிது குறைவாகும். காந்தப் புலமும் காந்தமண்டலமும் சிறிய அளவினதாக இருந்தாலும் மெதுவான 59-நாள்-தன்சுற்றுகையைக் கொண்டிருந்தாலும் புதனில் குறிப்பிடத்தக்க, பரப்பெங்குமான, காந்தப் புலம் நிலவுகின்றது. மாரினர் 10 எடுத்த அளவைகளின்படி புதனின் காந்தப்புலம் புவியினுடையதை விட 1.1% வலிமையுள்ளதாக இருக்கிறது. புதனின் கோள்நடுக்கோட்டில் உள்ள காந்தப் புலத்தின் வலிமை ஆகும். புவியைப் போலவே, புதனின் காந்தப் புலமும் இருமுனையி. ஆனால் புவியைப் போலன்றி புதனின் காந்த முனையங்கள் கோளின் சுழல் அச்சுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளன. மற்றும் மெசஞ்சர் விண்துருவிகளிலிருந்து பெறப்பட்ட அளவைகளிலிருந்து இந்தக் காந்தப் புலத்தின் வலிமையும் வடிவமும் நிலையாக உள்ளன. புவியைப் போன்றே இங்குள்ள காந்தப் புலமும் மின்னாக்கி விளைவால் உருவாகியுள்ளது. இந்த மின்னாக்கி விளைவு கோளின் இரும்புமிக்க நீர்ம கருவகத்தின் சுற்றோட்டத்தால் ஏற்படுகின்றது. கோளின் மிகுந்த சுற்றுப்பாதை விலகலின் காரணமாக ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கருவகத்தை நீர்மநிலையில் வைத்திருக்க உதவுகின்றது. புதனின் வலிதான காந்தப்புலம் சூரியக்காற்றை கோளைச் சுற்றி திசைவிலகிச் செல்ல வைக்கின்றது. இதனால் கோளைச் சுற்றிலும் காந்தமண்டலம் ஒன்று உருவாகியுள்ளது. இது சிறிய அளவினதாக இருந்தாலும் சூரியக் காற்றை பிடிக்க போதுமானதாக உள்ளது. இது கோளின் மேற்பரப்பு விண்வெளியால் தேய்தலுக்கு வழிவகுக்கின்றது. எடுத்த கூர்நோக்குகளின்படி கோளின் இரவுப் பகுதியில் உள்ள காந்த மண்டலத்தில் குறைந்த ஆற்றல் பிளாசுமா கண்டறியப்பட்டுள்ளது. கோளின் காந்த வால்பகுதியில் ஆற்றலுள்ள துகள்களின் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன; இது கோளின் காந்த மண்டல செயற்பாட்டுத் திறனை சுட்டுகின்றது. அக்டோபர் 6, 2008இல் தனது இரண்டாவது முறை பறப்பின்போது மெசஞ்சர் புதனின் காந்தப் புலம் மிகவும் "கசிவுடையதாக" கண்டது. புவியில் இருந்து புவியில் இருந்து புதனை பார்க்கும் போது அது அதிக நீட்சியின் பகுதியில் இருக்கும் போது பார்த்தால் தெளிவாகத் தெரிய வாய்ப்புண்டு. மேற்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு மேற்கில் இருக்கும் போது சூரிய உதய்த்துக்கு முன்னரும், கிழக்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு கிழக்கில் இருக்கும் போது சூரிய அஸ்தமனத்துக்கு பின்னரும் மட்டுமே புவியில் இருந்து இதன் அதிக பகுதிகளை (அரைப் பகுதியிலேயே சூரிய ஒளிப்படும். புவியில் இருந்து பார்க்கும் போது ஒளிப்படும் பகுதியிலும் பாதியையே பார்க்க முடியும்.) நோக்க முடியும் என்பது இயற்பியல் வழக்கு. ஆனால் இந்த இயற்பியல் வழக்கின் படிப் பார்த்தாலும் புதனின் அதிகப் பகுதிகளை தெளிவாகப் பார்க்க முடியாது. அதன் காரணம் புதனின் தோற்ற ஒளிர்மையே ஆகும். அதனால் புதனின் குவிகோடுகள் வளைந்த நிலையில் இருக்கும் போதே புதனை எளிதாக பார்க்க முடியும். அதாவது கிழக்கதிக நீட்சிக்கு சில நாட்கள் முன்னரும், மேற்கதிக நீட்சிக்கு சில நாட்கள் பின்னருமே இதை தெளிவாக மானிடர்களின் வெற்றுக் கண்களால் நோக்க முடியும். புதனில் மானிடக் குடியேற்றத்தின் சாத்தியங்கள் நிலவை ஒத்த புதன் மானிடர் குடியேற்றம் என்ற நோக்கில் பார்க்கும் போது நிலவில் மானிடர் குடியேறுவதற்கு தேவைப்படும் விடயங்களே இங்கும் தேவைப்படுகின்றன. மேலதிகமாக சூரியனின் வெப்பத்தில் இருந்து தப்புவதற்கான வெப்பக் கேடயங்களும் தேவைப்படும். இதற்கான கண்க்கிடப்பட்ட நகரும் குடியேற்றத்தையும் உருவாக்க வேண்டும். (வலது பக்கம் இருக்கும் படத்தைப் பார்க்க) இங்கு இருக்கும் சூரிய எரிசக்தி மிகவும் அதிகம் என்பதால் மின்சாரத்தை எளிதாக பெற முடியும். புவியில் சூரிய மின்தடுகளை வைத்து பெரும் மின்சாரத்தை விட இங்கு ஆறரை மடங்கு அதிகமாக மின்சாரத்தைப் பெற முடியும் என்பது இதன் அனுகூலமாகும். நீராதாரம் புதன் கிரகத்தில் நீர் பனிக்கட்டியாக அதன் துருவங்களில் உள்ளது. இவை பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களாக இருந்ததால் இன்றும் ஆவியாகாமல் உள்ளது. புதன் கிரகத்தின் வட துருவத்தில் உள்ள ஆழமான பள்ளங்களில் காணப்படுகின்ற ஏராளமான அளவிலான பனிக்கட்டிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திரங்களால் வந்து விழுந்த "பனிக்கட்டி உருண்டைகள்" என்று கருதப்படுகிறது. தடைகள் இதில் மானிடர் குடியேற்றம் நடக்க அதிக நுட்பங்களை உருவாக்குதல், இதற்கான வெப்பக் கேடயங்களை தயாரிக்கும் முறையை கண்டறிந்து உருவாக்குதல், இக்கோளில் இருந்து வேறு கோளுக்கு செல்ல மிக அழுத்தமும் வேகமும் தரக்கூடிய விண்கலன்களை உருவாக்குதல் போன்றவை புதனில் மானிடர் குடியேறுவதற்கு பெரும் தடைகளாய் உள்ளன. குறிப்புகள் மேற்கோள்கள் உசாத்துணைகள் வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், . வெளியிணைப்புகள் Mariner 10 Atlas of Mercury – NASA Mercury nomenclature and map with feature names from the USGS planetary nomenclature page MESSENGER Mission web site Mercury QuickMap from MESSENGER web site SolarViews.com – Mercury Astronomy Cast: Mercury Geody Mercury World's search engine that supports நாசா வேல்ட் வின்ட், Celestia, and other applications. A Day On Mercury flash animation Mercury articles in Planetary Science Research Discoveries 'BepiColombo', ESA's Mercury Mission 5 சூன் 2013 MESSENGER False Color Mercury Globe Spin – APOD கோள்கள் புவியொத்த கோள்கள் சூரியக் குடும்பம் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
1563
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%28%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%29
வெள்ளி (கோள்)
வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும்.. சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது காலை நட்சத்திரம் , விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது கூடுதலான பைங்குடில் விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் ஆகும். வெள்ளி ஞாயிறை ஒவ்வொரு 224.7 புவி நாட்களில் சுற்றி வருகின்றது. இக்கோளிற்கு இயற்கைத் துணைக்கோள் ஏதுமில்லை. ஐரோப்பிய வழக்குகளில் இதற்கு உரோமைத் தொன்மவியலில் அழகிற்கும் காதலுக்குமான பெண்கடவுள் வீனசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தியத் தொன்மவியலில் அசுரர்களின் குருவான சுக்கிரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியில் இக்கோளின் தோற்ற ஒளிப்பொலிவெண் −4.6 ஆக உள்ளதால் இதன் ஒளியினால் நிழல்கள் உருவாகும். வெள்ளிக்கோள் புவியிலிருந்து சூரியனை நோக்கிய உட்புறக் கோளாக இருப்பதால் எப்போதுமே சூரியனுக்கு அருகாமையில் இருப்பதாகத் தோன்றுகின்றது. வெள்ளிக்கோள் ஒரு புவியொத்த கோள் ஆகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" எனப்படுகின்றது. இக்கோள் புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து வேறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது. தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் மிக அடர்த்தியான வளிமண்டலம் உள்ள கோள் வெள்ளியாகும். இந்த வளிமண்டலம் 96%க்கும் கூடிய காபனீரொக்சைட்டு அடங்கியது. கோளின் தரைப்பரப்பில் வளிமண்டல அழுத்தம் புவியை விட 92 மடங்காக உள்ளது. சூரியக் குடும்பத்தின் மிகவும் வெபமிகுந்த கோளாக விளங்கும் வெள்ளியின் தரைமட்ட வெப்பநிலை ஆக உள்ளது. இங்கு கார்பன் சுழற்சி நடைபெறாமையால் பாறைகளோ தரைப்பரப்பு மேடுபள்ளங்களோ உருவாகவில்லை; தவிரவும் உயிர்த்திரளில் கரிமத்தை உள்வாங்கிட எவ்வித கரிம உயிரினமும் இல்லை. வெள்ளியின் வளிமண்டலத்தில் சல்பூரிக் அமில மேகங்களின் எதிரொளிப்பால் கீழுள்ள தரைப்பரப்பை ஒளி மூலம் காணவியலாது உள்ளது. முன்னொரு காலத்தில் வெள்ளியில் பெருங்கடல்கள் இருந்திருக்கலாம்; ஆனால் இவை பைங்குடில் விளைவின் வெப்பநிலைகளால் ஆவியாகியிருக்கலாம். ஆவியான நீர் ஒளிமின்பிரிகையால் பிரிக்கப்பட்டிருக்கலாம்; கோளில் காந்தப்புலங்கள் இல்லாமையால் கட்டற்ற ஐதரசன் சூரியக் காற்றால் கோள்களிடையேயான விண்வெளிக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். வெள்ளியின் தரைப்பகுதி வறண்ட பாலைவனமாக, அவ்வப்போதைய எரிமலை வெடிப்புகளால் புதிப்பிக்கப்பட்ட வண்ணம், உள்ளது. 2020 செப்டம்பரில் பாஸ்பீன் வளிமம் வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறியப்பட்ட இயற்கை மூலங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று நம்பப்படுவதை விட சுமார் பத்தாயிரம் மடங்கு அதிகமான செறிவுகளில் கோளின் வளிமண்டலத்தில் இவ்வாயு உள்ளது. வெள்ளியின் வளிமண்டலத்தில் பாஸ்பீன் கண்டறியப்பட்டமை, அக்கோளின் வளிமண்டலத்தில் கரிம வாழ்வின் சாத்தியக்கூறுகள் இருப்பதற்கான ஊகத்திற்கு வழிவகுத்துள்ளது. பௌதிகப் பண்புகள் இது புவியைப் போல கற்கோளத்தைக் கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டத்தட்ட புவியினுடையதை ஒத்துப் போவதால் இக்கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் ஆரை 12092 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டது. புவியியல் வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது. அதில் 10 சதவீதம் மென்மையான லோபடே சமவெளியும் 70 சதவீதம் மென்மையான, ​​எரிமலை சமவெளியும் அடக்கம். இதில் வடதுருவத்தில் ஒரு கண்டமும் வெள்ளியின் நிலநடுக்கோட்டிற்கு சற்று தெற்கில் ஒரு கண்டமும் அமையப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா கண்டத்திற்கு இணையான பரப்பளவு கொண்ட வடக்கு கண்டம் பாபிலோனியக் காதல் தெய்வமான இசுதாரின் பெயரில் அழைக்கப்படுகிறது. மேக்ஸ்வெல் மோன்டசு, வெள்ளியின் மிக உயர்ந்த மலையாகும். அதன் சிகரம் சராசரி மேற்பரப்பு உயரமான 11 கி.மீ. தொலைவில் உள்ளது. பரப்பளவில் இரண்டு தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இணையான தெற்குக் கண்டம் அப்ரோடிட் டெர்ரா கிரேக்க காதல் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. காந்தப் புலமும் மையக்கருவும் 1967இல் செலுத்தப்பட்ட வெனரா 4 என்ற விண்கலம் வெள்ளியில் உள்ள காந்தப்புலம் புவியினுடையதை விட மிக வலிவற்றதாக இருப்பதைக் கண்டறிந்தது. இந்தக் காந்தப் புலமும் அயனிமண்டலத்திற்கும் சூரியக் காற்றுக்குமிடையேயான இடைவினையால் தூண்டப்பட்டதாகும்; பொதுவாக கோள்களின் கருவத்தில் காணப்படும் உள்ளக மின்னியற்றி போன்று வெள்ளியில் இல்லை. வெள்ளியின் சிறிய தூண்டப்பட்ட காந்த மண்டலம் அண்டக் கதிர்களிலிருந்து வளிமண்டலத்திற்கு எவ்வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. இந்தக் கதிர்களால் மேகங்களுக்கிடையே மின்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. புவியை ஒத்த அளவினதாக இருப்பினும் வெள்ளியில் காந்தப்புலம் இல்லாதிருப்பது வியப்பளிப்பதாக உள்ளது. உள்ளக மின்னியற்றி இயங்கிட மூன்று முன்தேவைகள் உள்ளன: கடத்துகின்ற நீர்மம், தற்சுழற்சி, மற்றும் மேற்காவுகை. வெள்ளியின் கருவம் மின்கடத்தும் தன்மையதாக கருதப்படுகின்றது; வெள்ளியின் சுழற்சி மிக மெதுவாக இருப்பினும் ஆய்வகச் சோதனைகளில் இந்த விரைவு மின்னியக்கி உருவாகப் போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளியில் மின்னியக்கி இல்லாதிருப்பதற்கு மேற்காவுகை இல்லாதிருக்கலாம் என நம்பப்படுகின்றது. புவியில் மையக்கருவின் வெளிப்புற அடுக்குகளில் உள்ள நீர்மத்தின் வெப்பநிலையை விட உட்புற அடுக்குகளில் மிகக் கூடுதலாக இருப்பதால் மேற்காவுகை நிகழ்கின்றது. வெள்ளியில் ஏதேனும் மேற்புற நிகழ்வினால் தட்டுநிலப் பொறைக் கட்டமைப்பை மூடி கருவத்தில் குறைந்த வெப்பச்சலனத்தை உண்டாக்கி இருக்கலாம். இதனால் மேலோட்டு வெப்பநிலை உயர்ந்து உள்ளிருந்து வெப்பப் பரவலை தடுத்திருக்கலாம். இக்காரணங்களால் புவிசார் மின்னியக்கி செயற்பாடு இல்லாதிருக்கலாம். மாற்றாக, கருவத்தின் வெப்பத்தால் மேலோடு சூடுபடுத்தப்படலாம். மற்றொரு கருத்தாக, வெள்ளியில் திண்மநிலை உட்கருவம் இல்லாதிருக்கலாம் அல்லது அந்தக் கருவம் குளிரடையவில்லை என முன்வைக்கப்படுகின்றது. இதன் காரணமாக முழுமையான நீர்மப்பகுதி அனைத்துமே ஒரே வெப்பநிலையில் இருக்க வாய்ப்புள்ளது. வெள்ளியின் கருவம் முழுமையுமே திண்மமாக மாறிவிட்டது என்ற மாற்றுக் கருத்துக்கும் வாய்ப்புள்ளது. உட்கருவத்தில் உள்ள கந்தகத்தின் அடர்வைப் பொறுத்து கருவத்தின் நிலை இருக்கும்; ஆனால் கந்தக அடர்த்தி குறித்து இதுநாள் வரை அறியப்படவில்லை. வெள்ளியில் காந்தப்புலம் வலிவற்றதாக இருப்பதால் அதன் வெளிப்புற வளிமண்டலத்துடன் சூரியக்காற்று நேரடியாகவே இடைவினையாற்றுகின்றது. இங்கு புற ஊதாக்கதிர்களால் நடுநிலை மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டு ஐதரசன், ஆக்சிசன் அயனிகள் உருவாகின்றன. இந்த அயனிகளுக்கு வெள்ளியின் ஈர்ப்புப் புலத்திலிருந்து விடுபட சூரியகாற்று தேவையான ஆற்றலை வழங்குகின்றது. இந்த அரித்தலால் குறைந்த நிறையிலுள்ள ஐதரசன், ஹீலியம், ஆக்சிசன் அயனிகள் இழக்கப்படுகின்றன; உயர்நிறை உள்ள மூலக்கூறுகளான கார்பன் டைஆக்சைடு போன்றவை தக்க வைத்துக்கொள்ளப்படுகின்றன. இத்தகைய சூரியக்காற்றின் செய்கையால் வெள்ளியில் அது உருவானபோது இருந்திருக்கக்கூடிய நீர் முதல் பில்லியன் ஆண்டுகளில் இழக்கப்பட்டிருக்கலாம். தவிரவும் இச்செய்கையால் உயர்ந்த வளிமண்டலத்தில் நிறை குறைந்த ஐதரசனுக்கும் நிறையான தியூட்டிரியத்திற்குமான விகிதம் உட்புற வளிமண்டலத்தில் நிலவும் விகிதத்தை விட 150 மடங்கு குறைந்துள்ளது. புறத் தோற்றம் புவியில் இருந்து மானிடர் நோக்கும் போது வெள்ளிக் கோளே எந்த விண்மீனை (சூரியனைத் தவிர்த்து) விடவும் வெளிச்சமாக உள்ளது. வெள்ளி பூமியின் அருகில் இருக்கும் போது அதன் பிரகாசம் அதிகமாகவும், தோற்றப்பருமன் -4.9 ஆகவும், பிறை கட்டத்திலும் காணப்படுகிறது. சூரியன் பின்னோளி வீசும் போது இதன் பிரகாசம் -3 ஆக மங்குகிறது. இக்கோள் நடுப்பகலிலும் காணத்தக்க பிரகாசமாக இருப்பதுடன் சூரியும் கீழ் வானில் இருக்கும் போது எளிதில் காணக் கூடியதாகவும் இருக்கிறது. இதன் சுற்றுப்பாதை சூரியனுக்கும் புவியின் சுற்றுப்பாதைக்கும் நடுவில் இருப்பதால் புவியில் இருந்து பார்க்கும் போது சூரியனின் நிலநடுக்கோட்டில் இருந்து 47 டிகிரி சாய்வு வரை அதிகமாக செல்வது போல் தோற்றம் அளிக்கிறது. மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம் வெள்ளிக் கோள் பரப்பின் சூழல் தற்போது மானிடர் வாழும் சூழலை பெறவில்லை. ஆனால் வெள்ளிக் கோள் பரப்பில் இருந்து ஐம்பது கிலோமீட்டர்களுக்கு மேல் உள்ள வளி மண்டலம் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வாயுக்களான நைட்ரசனையும் ஆக்சிசனையும் பெற்றுள்ளது. அதனால் வெள்ளியின் வானில் மானிடர் மிதக்கும் நகரங்களை உருவாக்க வாய்புள்ளது. காற்றினும் எடை குறைந்த மிதக்கும் நகரங்களை (வலது பக்கத்தில் உள்ள மிதக்கும் விண்கலன் போல்) உருவாக்கி அதில் நிரந்தரக் குடியேற்றங்களை அமைக்க முடியும். ஆனால் இதில் மிகப்பெரிய அளவுக்கு பொறியியல் தொழில்நுட்பச் சவால்களும், இந்த உயரத்தில் உள்ள கந்தக அமிலத்தின் அடர்த்தியும் இதற்கு தடைகள் ஆகும். சூரியனைக் கடக்கும் போது முதன்மைக் கட்டுரை - வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு அல்லது வெள்ளியின் இடைநகர்வு என்பது சூரியக் குடும்பத்தில் உள்ள வெள்ளி கோளானது சுற்றுப்பாதையில் வரும்போது சூரிய வட்டத்தைக் கடப்பதைக் குறிப்பதாகும். அதாவது, வெள்ளிக்கோள் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் செல்வதைக் இது குறிக்கும். இந்த இடைநகர்வின் போது வெள்ளி சூரிய வட்டத்தில் ஒரு சிறு கரும் புள்ளியாகக் கண்ணுக்குத் தெரியும். இந்த இடைநகர்வு இடம்பெறும் காலம் பொதுவாக மணித்தியாலங்களில் கூறப்படுகிறது. இந்த இடைநகர்வு நிலவினால் ஏற்படும் சூரிய கிரகணத்தை ஒத்தது. வெள்ளி பூமியில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதனால் (நிலவுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தை விடவும், வெள்ளிக்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரம் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம்), வெள்ளியின் விட்டம் நிலவை விட 3 மடங்கு அதிகமானதாக இருந்தாலும்கூட, வெள்ளி இடைநகர்வின்போது, வெள்ளி மிகச் சிறியதாகத் தெரிவதுடன், மிக மெதுவாக நகர்வதையும் காணலாம். அவதானிப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Venus profile at NASA's Solar System Exploration site Missions to Venus and Image catalog at the National Space Science Data Center Soviet Exploration of Venus and Image catalog at Mentallandscape.com Image catalog from the Venera missions Venus page at The Nine Planets Transits of Venus at NASA.gov Geody Venus, a search engine for surface features Interactive 3D gravity simulation of the pentagram that the orbit of Venus traces when Earth is held fixed at the centre of the coordinate system Gazetteer of Planetary Nomenclature: Venus by the International Astronomical Union Venus crater database by the Lunar and Planetary Institute Map of Venus by Eötvös Loránd University Google Venus 3D, interactive map of the planet புவியொத்த கோள்கள் சூரியக் குடும்பம்
1564
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
புவி
புவி (), கதிரவனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் , எனவும் குறிப்பிடுகின்றனர். மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்தப் புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாகக் கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது, மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அதுமுதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. அதனால் பல வளி சார்ந்த உயிரினங்கள் பெருகின. ஓசோன் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டலத்தோடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களைத் தடுத்து உலகில் உயிர்கள் தழைப்பதற்கு வழி ஏற்பட்டது. இக்காலகட்டங்களில் புவியின் பௌதிகத் தன்மையினாலும் புவி சூரியனைச் சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. உயிர்களுக்கு ஏதுவான தற்போதுள்ள சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வுத் தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. புவியின் மேற்பரப்பு பல இறுக்கமான பிரிவுகளாக, அல்லது டெக்டோனிக் பலகைகளாக அமைந்துள்ளது. அவை புவியின் மேற்பரப்பில் சிறிது சிறிதாக பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து வருகிறது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது. மேலும் இன்று கூட அங்கு நீர் காணப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் எனலாம். அடர்ந்த திட மூடகம் (Mantle) அடுக்கு, காந்த மண்டலத்தை உருவாக்கும் திரவ வெளி மையம் மற்றும் திட உள் மையம் ஆகியவற்றால் புவியின் உட்பகுதி மிகுந்த ஆற்றலுடன் இயங்குகிறது. புவி, ஞாயிறு மற்றும் நிலா உட்பட பரவெளியில், உள்ள மற்ற பொருட்களுடன் ஊடாடுகிறது. தற்போது புவி தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 366.26 முறை கதிரவனையும் சுற்றி வருகின்றது. இதற்கான மொத்த கால அளவு ஒரு விண்மீன் ஆண்டு (sidereal year), இது 365.26 சூரிய நாட்களுக்குச் (solar day) சமம். புவியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து, 23.4° செங்குத்தாக விலகி சாய்ந்து இருப்பதால், கோளின் மேற்பரப்பில் கால மாறுபாடுகளை ஒரு வெப்ப ஆண்டுக்குத் (tropical year) தோற்றுவிக்கிறது (365.24 சூரிய நாட்கள்). புவியின் நாமறிந்த ஒரே இயற்கையான செயற்கைக்கோள் நிலா, 4.53 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அதனைச் சுற்ற ஆரம்பித்தது, இது கடலில் அலைகளை உருவாக்குவதோடு, புவியின் அச்சு சாய்வை நிலைப்படுத்தி, அதன் சுழற்சியையும் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. தோராயமாக 4.1 மற்றும் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடையே காலம் தாழ்ந்த பலத்த தாக்குதல் (Late Heavy Bombardment) நடந்த வேளையில் பெரு விண்கற்களின் (asteroid) தாக்கம் புவியின் சுற்றுச் சூழலில் குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்தியது. புவியின் கனிம வளங்கள் மற்றும் உயிர்க் கோளத்தில் உருவான பொருட்கள் இரண்டுமாக உலக மக்கள்தொகை பெருக்கத்திற்கு துணை புரியும் வகையில் வளங்களை அளித்தது. அங்கு வாழ்பவர்கள் 200 தனித்த ஏகாதிபத்திய நாடுகளாக குழுவாக்கப்பட்டு, அரசியல், பயணம், வணிகம் மற்றும் இராணுவ செயல்பாடுகள் மூலமாக தொடர்பு கொண்டனர். தெய்வ வழிபாடு உட்பட, தட்டையான புவி அல்லது அண்டத்தின் மையத்தில் புவி உள்ளது போன்ற நம்பிக்கைகள், நவீன உலகப்பார்வையில் ஒருமைப்பாட்டுடன் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் இடம் என மக்கள் கலாச்சாரம் இக்கோளை பற்றி பல்வேறு விதமான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காலவரிசை அறிவியல் அறிஞர்கள் புவியின் கடந்த கால வரலாற்றை பற்றி விரிவாக வரையறுத்துள்ளனர். சூரிய மண்டலத்தில் காணப்படும் மிகப் பழமையான பொருள் 4.5672 ± 0.0006 பில்லியன் வருடங்களுக்கு முந்தியது. கடந்த 4.54 பில்லியன் வருடங்களுக்குள் (1% ஐயப்பாட்டுடன்) பரிதி உருவாகி, எஞ்சிய வாயு மற்றும் தூசுப்பொருட்களால் ஆகிய தட்டு வடிவத்தில் இருந்த சூரிய நெபுலாவிலிருந்து புவி மற்றும் மற்ற கோள்கள் தோன்றின. இவ்வாறு இயற்கையான சேர்மானத்தால் 10–20 மில்லியன் வருடங்களுக்குள் புவியின் பெரும்பான்மையான பகுதி உருவாகியது. வளிமண்டலத்தில் நீர் சேர ஆரம்பித்தவுடன் முதலில் உருகிய நிலையில் இருந்த புவியின் மேற்பரப்பு குளிர்ந்து இறுகத் தொடங்கியது. இதற்குப்பின் புவியின் இயற்கை துணைக்கோள் நிலா உருவானது. நிலா, செவ்வாய் கிரகத்தின் பரப்பை ஒத்த ஒரு விண் வெளி பொருள் (தீயா என்று சில சமயம் அழைக்கப்படும்), புவியின் பத்தின் ஒரு பங்கு திண்மத்தை கொண்டதுமாகிய அப்பொருள் புவியின் மீது கொண்ட தாக்கத்தால் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வேற்றுலக பொருளின் ஒரு பகுதி புவியுடன் கலந்திருக்கலாம் எனவும் மற்ற பகுதிகள் விண் வெளியில் சிதறியும், புவியின் காந்த விசையால் புவியை சுற்றும் பாதையை அடைந்து சந்திரனாகவும் மாறியிருக்கலாம் எனவும் எண்ணப்படுகிறது. எரிமலை சீற்றம் மற்றும் வாயுக்களின் வெளிக்கொணர்வு ஆகியன ஆதிகால புவியின் வளிமண்டலத்தை உருவாக்கின. விண் பெருகற்கள், வால் நட்சத்திரம், பெரிய முன்கிரகங்கள் மற்றும் நெப்ட்டியூனைத் தாண்டி உள்ள சூரிய மண்டலத்திலுள்ள விண் வெளிப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட பனிக்கட்டி, நீர் ஆகியனவும் வளிமண்டலத்திலிருந்து சுருங்கும் நீராவியினாலும், சமுத்திரங்கள் உருவாகின. கண்டங்களின் படிப்படியான வளர்ச்சியை விவரிக்க இரு மாதிரிகள் விவரிக்கப்பட்டுள்ளன: இன்றுவரை நிலையான மாற்றத்தினால் அவை உண்டானது என்பதும் மற்றொன்று புவியின் ஆரம்பகாலத்திலேயே துரித மாற்றத்தினால் அவை ஏற்பட்டன என்பதுவாகும். தற்போதைய ஆய்வின்படி இரண்டாவது கூற்றே, அதாவது புவியின் ஆரம்பத்திலேயே துரித வளர்ச்சியுடன் கண்டங்களின் ஓடு உருவாகிவிட்டதென்றும், பிறகு அவை நிரந்தர கண்ட பரப்பாக உருவாகியதே ஏற்கக்கூடியதாக உள்ளது. பல நூறு மில்லியன் வருட கால அளவில் நோக்கும் போது, புவியின் மேற்பரப்பு கண்டங்கள் தொடர்ச்சியாக உருவாவதாலும் அழிவதாலும் மாறிக்கொண்டு வந்துள்ளது. இதனால் கண்டங்கள் புவியின் மேற்பரப்பில் நகர்ந்து எப்போதாவது ஒன்றோடு ஒன்று இணைந்து மகா கண்டங்கள் உருவாகின. தோராயமாக 750 மில்லியன் வருடங்களுக்கு முன் (மிமு), அப்போதறிந்த மகாகண்டம் ரோடினியா (Rodinia), உடைய ஆரம்பித்தது. அது பின்னர் இணைந்து பென்னசியா (Pannotia) என்ற கண்டமாக உருமாறி பின், 600–540 மிமுவின், பின் இறுதியில் பான்சியா (Pangaea) என்ற கண்டமாக உருவடைந்து, பின் 180 மிமுவில் மீண்டும் உடைந்து பிரிந்தது. உயிர்களின் பரிணாம வளர்ச்சி இன்றைய நிலையில், புவியில் மட்டுமே உயிர்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட ஏதுவான சூழல் உள்ளது. நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆற்றல் மிகு வேதியியல் வினைகளால் சுயமாக உருவாகும் மூலக்கூறுகள் ஏற்பட்டன, பிறகு அரை பில்லியன் வருடங்களுக்குள் எல்லா உயிரினங்களின் பொது மூதாதையரான உயிரினம் உருவாகியது. தாவர உயிரினங்களின் ஒளிச்சேர்க்கைத் தன்மையினால் சூரிய ஆற்றலை உபயோகப்படுத்தின; இந்த வேதி வினையினால் ஏற்பட்ட பிராணவாயு (ஆக்சிஜன்) வளிமண்டலத்தை நிரப்பியது. மேலும் ஓசோன் (ஆக்சிசன் மூலக்கூறின் ஒருவடிவம் [O3]) படலம் மேல் வளி மண்டலத்தில் உருவாக உதவியது. பல சிறு செல்கள் பெரிய செல்களுடன் சேர்ந்ததினால் நுணுக்கமான செல்கள் யூகேர்யோட்டுகள் (eukaryotes) உருவாகின. இப்படிப்பட்ட காலனிகளில் அடங்கிய செல்கள் தனித்தன்மையுடன் செயல்படத் தொடங்கியபோது உண்மையான பல செல் படைத்த உயிரினங்கள் உருவாகின. மேலும் வளி மண்டலத்தின் மேற்பரப்பில் அமைந்த ஓசோன் மண்டலம் வெளியிலிருந்து புவிக்கு வரும், கேடு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சியதால் பூவுலகில் உயிர்கள் தழைத்தன. 1960 ஆம் ஆண்டு முதல் ஆய்வாளர்கள், நியோபுரோட்டிசோயிக் காலத்தில் அதாவது 750 மற்றும் 580 மிமுவில் புவியின் பெரும்பகுதி பனியால் மூடியிருந்ததென்றும் மற்றும் மிகப்பல பனிக்கட்டியாறுகள் ஓடியதென்றும் அறிவிக்கின்றனர். அந்தக் காலத்திய புவியை "பனிப்பந்து புவி" என அழைக்கின்றனர். அந்த காலகட்டம் மிகவும் இன்றியமையாததாக கருதப்படுகிறது ஏனெனில் இது பல செல் உயிரினங்கள் தோன்றி பரவிய கேம்ப்ரியன் விரிவாக்க காலத்திற்கு முன்னால் வந்தது. கேம்ப்ரியன் காலத்து விரிவாக்கத்தைத் தொடர்ந்து, 535 மில்லியன் வருடங்களில் புவியில் ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடைசியாக ஏற்பட்ட பேரழிவு 65 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் புவியில் வந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்கத்தினால் டைனோசர் உட்பட பல ராட்சத பல்லிகள் மற்றும் பறவையினங்களைத் தவிர்த்து மற்ற எல்லாமுமே கூண்டோடு அழிந்து போனது. இதில் தப்பியது எலியைப் போன்ற சுரூ என்றழைக்கப்படும் பாலுண்ணிகளே. கடந்த 65 மில்லியன் வருடங்களில் பாலுண்ணிகள் பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளன, சில மில்லியன் வருடங்களுக்கு முன், ஆப்பிரிக்கா கண்டத்தில் மனிதக்குரங்கைப் போன்ற ஓர் மிருகம் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது. அவ்வாறு நின்றதால் கருவிகளை உபயோகிக்கவும் தகவல் பரிமாறவும் முடிந்தது, இதுவே மூளையின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இவ்வாறு அதிவிரைவாக வளர்ந்த மனிதனே முதலில் புவியில் விவசாயம் மற்றும் நாகரீகத்தையும் அறிமுகப்படுத்தினான். இதனால் ஏற்பட்ட தாக்கம் மற்ற புவி வாழ் உயிரினங்களின் வாழ்க்கை மற்றும் போக்கு இவற்றை மாற்றியமைத்தது. இப்போதுள்ள பனிக்கால சுழற்சி 40 மில்லியன் வருடங்களுக்கு முன் ஏற்பட்டதென்றும் மூன்று மில்லியன் வருடங்களுக்கு முன் பிளாய்டோசீன் காலத்தில் தீவிரமடைந்தது என்றும் கூறப்படுகிறது. அது முதல் துருவப் பகுதிகளில் உள்ள பனி 40–100,000 ஆண்டுகளுக்கொரு முறை உருகியும், உறைந்தும் ஏற்படுகின்றது. கடைசி பனிக்காலம் 10,000 வருடங்களுக்கு முந்தி முடிவடைந்தது. எதிர்காலம் புவியின் எதிர்காலம் சூரியனைச் சார்ந்துள்ளது. சூரியனின் உட்கருவில் சேர்ந்து வரும் ஈலியம் வாயுவினால், அதன் மொத்த ஒளிர்வுத்தன்மை மெல்ல வளரும். சூரியனின் இந்த ஒளிர்திறன் அடுத்த 1.1 கிகா ஆண்டுகளில் (1.1 நூறு கோடி வருடங்கள்) 10 சதவிகிதமும் அடுத்த 3.5 கிகா ஆண்டுகளில் 40 சதவிகிதமும் அதிகரிக்கும். காலநிலை கணிப்பின்படி புவியை வந்தடையும் அதிக கதிர்வீச்சு, கடல் இழப்பு போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். புவியின் மேற்பரப்பு வெப்பம் அதிகரிப்பதால் அசேதன CO2 சுழற்சியை துரிதப்படுத்தி, அடுத்த 900 மில்லியன் வருடங்களில் தாவரங்களுக்கு அத்தியாவசியமான கரியமலவாயு (C4 ஒளிச்சேர்க்கைக்குத் 10 பிபிஎம்) வளிமண்டலத்தில் குறையும். தாவரங்கள் அழிவதால் அது வெளியிடும் ஆக்சிசன் தடைப்படும், அதனால் மற்ற உயிரினங்கள் சில மில்லியன் ஆண்டுகளிலேயே முழுவதுமாக அழிந்து விடும். சூரியன் அழிவில்லாத மற்றும் நிலையான ஒன்றாக இருந்தாலும், குறைந்த எரிமலையாக்கத்தின் காரணமாக புவியின் உட்புற குளிர்ச்சி பெரும்பான்மையான வளி மண்டலத்தையும் கடற் பரப்பையும் குறைத்திருக்ககூடும். அடுத்த நூறு கோடி வருடங்களில் புவியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீர் அனைத்தும் மறைந்திருக்கும். மேலும் புவியின் சராசரி வெப்பநிலை 70 °C யை வந்தடையும். அந்தக் கால கட்டத்திலிருந்து அடுத்த 500 மில்லியன் வருடங்களுக்கு புவி வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் வளிமண்டலத்தில் உள்ள நைதரசன் நீக்கப்படுமானால் இது மேலும் 2.3 பில்லியன் ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். சூரியன் அதன் பரிணாம வளர்ச்சியில் மற்றும் 5 பில்லியன் வருடங்களில் ஒரு மாபெரும் சிகப்பு நட்சத்திரமாக மாறும். சூரியன் தற்போதைய அரைவிட்டத்தை போல தோராயமாக 250 மடங்கு விரிவடையும் என்று உருமாதிரிகள் கணிக்கின்றன. புவியின் தலைவிதி தெளிவாகத் தெரியவில்லை. மாபெரும் சிகப்பு நட்சத்திரமாகிய சூரியன், தன்னுடைய அதிகபட்ச ஆரத்தை எட்டும் போது, சூரியன் தன் எடையில் 30% த்தை இழக்கும் அப்போது அலைகளினால் ஏற்படும் தாக்கம் இன்றியே, புவி சூரியனிலிருந்து அளவு கொண்ட சுற்றுப்பாதைக்குத் தள்ளப்படலாம். அவ்வாறு தள்ளிப்போவதால், சூரியனின் வெளி மண்டலத்தின் தாக்கத்திலிருந்து புவி தன்னைக் காத்துக் கொள்ளும், ஆனால் சூரியனின் அதிகமாகும் ஒளிர்வுக் கதிர்களால், எல்லா உயிரினங்களும் அழிந்து போகும். எனினும், சமீபத்திய ஆராய்ச்சியின்படி அலைகளால் ஏற்படும் தாக்கத்தால், புவி அதன் சுற்றுப்பாதையிலிருந்து விலகி, மாபெரும் சிகப்பு நட்சத்திரமான சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்த முழுவதுமாக கரைந்து போகலாம். புவியின் சேர்மானமும் கட்டமைப்பும் புவி ஒரு திடமான கிரகம், அதாவது முழுவதும் காற்றாலே ஆன மாபெரும் வாயுக்கிரகமான வியாழன் போலல்லாது கடினமான உடலால் ஆனது. இது சூரியக் குடும்பத்திலுள்ள நான்கு திட கிரகங்களுள் உருவத்திலும் திண்மத்திலும் மிகப் பெரியது. இந்த நான்கு கிரகங்களில், புவி அதிக அடர்த்தியானதும், மிகுந்த மேற்பரப்பு புவியீர்ப்பு விசையைக் கொண்டதும், வலிமையான காந்தப் புலனைக் கொண்டதும் மற்றும் வேகமான சுழற்சியைக் கொண்டதுமாகும். திடக் கிரகங்களிலேயே புவியில் மட்டுமே டெக்டோனிக் தட்டுகளின் நகர்தல் காணப்படுகிறது. வடிவம் புவியின் உருவம் துருவங்களில் தட்டையாகவும் நிலநடுக் கோட்டிற்கு அருகில் விரிவடைந்தும் உள்ள நீள்வட்ட கோளத்தைப் போல் காணப்படுகின்றது. புவியின் சுழற்சியால் இந்த இடை விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது, மேலும் விட்டங்களை ஒப்பிடுகையில் நிலநடுக்கோடு துருவங்களை விட 43 கிமீ அதிகமாயுள்ளது. இக் கோளத்தின் சராசரி விட்டம் 12,742 கிமீ (7,918 மைல்) அதாவது 40,000 கிமீ/π, ஏனென்றால் மீட்டரை முதலில் வரையறுக்கும் போது அது பூமத்திய ரேகையிலிருந்து வட துருவத்திற்கு பிரான்சில் உள்ள பாரிசு நகர வழியாக கணக்கிடும் தூரத்தில் 1/10,000,000 ஈடாக கொள்ளப்பட்டது. புவி அதன் இடவமைப்பான (topography) சிறு மேடு பள்ளங்களை வைத்து காணும் போது கோள வடிவிலிருந்து புவி மாறுபடும் ஆனால் மொத்தத்தில் இந்த வேறுபாடு மிகவும் சிறியது: உண்மையான கோளத்தோடு ஒப்பிடுகையில் புவி 584 அல்லது 0.17% விலகியுள்ளது, இது பில்லியர்ட்ஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பில்லியர்ட் பந்திற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய 0.22% மாற்றத்தை விட சிறியதே. புவியின் மேற்பரப்பில் மிக அதிகமாக கோள வடிவிலிருந்து விலகியுள்ள இரு இடங்கள் எவரஸ்ட் சிகரம் (கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம்) மற்றும் மரியானா ட்ரென்ச் (கடல் மட்டத்திலிருந்து 10,911 மீ கீழுள்ளது). புவி, நிலநடுக்கோட்டருகே விரிந்திருப்பதால் பூமியின் நடுவிலிருந்து மிகவும் தள்ளி உள்ள இடம் நில நடுக்கோட்டருகே உள்ள ஈக்வெடார் நாட்டின் (Ecuador) சிம்போராசோ சிகரமாகும். புவியின் இரசாயன சேர்மானம் பூமியின் நிறை ஏறக்குறைய 5.98 கி.கி. ஆகும். பூமி, இரும்பு (32.1%), ஆக்சிஜன் (30.1%), சிலிக்கன் (15.1%), மெக்னீசியம் (13.9%), சல்பர் (2.9%), நிக்கல் (1.8%), கால்சியம் (1.5%), மற்றும் அலுமினியம் (1.4%); மீதமுள்ள 1.2% மிகவும் குறைந்த அளவிலுள்ள தனிமங்களால் ஆனது. நிறை பிரிவினால் புவியின் உட்கரு பிரதானமாக இரும்பினாலும் (88.8%) சிறிதளவு நிக்கல் (5.8%) மற்றும் சல்பர் (4.5%) ஆகியவற்றாலும், மேலும் ஒரு விழுக்காடு அரிதான தனிமங்களாலும் ஆகியுள்ளது. புவியியலாளர் எப். டபிள்யூ. கிளார்க் 47 விழுக்காட்டுக்கு சிறிது கூடதலான பிராணவாயு இருப்பதாக கணக்கிட்டுள்ளார். பூமியின் மேற்பரப்பில் பரவியிருக்கும் கற்கள் பெரும்பாலும் ஆக்சைடுகளாலேயே ஆனது. மற்ற குளோரின், சல்பர், ப்ளூரின் இவை 1% க்குள் அடங்கும். இவற்றில் முதன்மையான ஆக்சைடுகள் சிலிக்கா, அலுமினா, இரும்பு ஆக்சைடு, சுண்ணாம்பு, மெக்னீசியா, பொட்டாசியம் மற்றும் சோடா ஆகும். சிலிகா அமிலத்தைப் போல் செயல்பட்டு சிலிக்கேட்டுகளை உருவாக்குகின்றது. பெரும்பாலும் தீப்பாறையில் காணப்படும் எல்லா கனிமங்களும் இதைப் போலவே செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,672 வகையான பாறைகளை ஆராய்ந்து பார்த்ததில் புவியியலாளர் கிளார்க் 11 வகையான ஆக்சைடுகள் (வலது பக்கம் உள்ள அட்டவணையைப் பார்க்க) 99.22% இருப்பதாக கண்டறிந்துள்ளார். இதர எல்லா தனிமங்களும் வெகு சிறிதளவே இவற்றில் அடங்கியுள்ளது. புவியின் உள்கட்டமைப்பு புவியின் உட்பகுதி மற்ற திட கோள்களைப் போல் அதன் வேதியியல் அல்லது இயற்பியல் (பாய்வு) பண்புகளின் திடப்பொருட்களின் ஓட்டம் கொண்டு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புவியின் வெளி வடிவம் சிலிக்கேட்டால் ஆன திட மேல் ஓடு, இதனடியே பாகு நிலையிலுள்ள திட மூடகம் உள்ளது. புவியின் மேலோடு மூடகத்திலிருந்து மோஹோரோவிசிக் தொடர்பின்மையினால் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மேலோட்டின் தடிமன் சமச்சீராக இல்லை: கடல்களுக்கு அடியில் சராசரியாக 6 கி.மீட்டரும் நிலப்பரப்பில் 30–50 கி.மீ. வரையிலும் உள்ளது. புவியின் மேலோடு மற்றும் குளிர்ந்த, கடினமான மேல் மூடகம் இணைந்தது லித்தோ அடுக்கு (lithosphere) ஆகும்; நிலவியல் பலகைகள் இந்த லித்தோ அடுக்கிலேயே அமைந்துள்ளது. லித்தோ அடுக்கிற்கு கீழே இருப்பது அஸ்த்னோ அடுக்கு (asthenosphere), ஒப்பிடுகையில் குறைந்த பாகு நிலையில் உள்ள இந்த படிவத்தின் மேலே லித்தோ அடுக்கு நகர்கின்றது. மூடகத்தினூடே முக்கியமான பளிங்கு கட்டமைப்பு மாறுதல்கள் 410 முதல் 660 கிமீ ஆழத்திலேயே உருவாகின்றது, இந்த மாறுதல் வளையம் மேல் மற்றும் அடி மூடக படிவங்களைப் பிரிக்கின்றது. மூடகத்தினூடே மிகவும் குறைந்த பாகுநிலையில் வெளிக்கருவும் அதனடியில் திடமான உட்கருவும் உள்ளது. உட்கருவானது மற்ற புவியின் பகுதிகளை விட அதிகமான கோண வேகத்தில் சுழல்கிறது, அதாவது ஒவ்வொரு வருடமும் 0.1–0.5° அதிகமாகிறது. பூமியின் வெப்பம் பூமியின் உட்புற வெப்பம் கிரகச் சேர்க்கையினால் உண்டாகும் மீத வெப்பத்தாலும் (சுமார் 20%) மற்றும் அணுச் சிதைவுகளாலும் (80%) உருவானது. பூமியில் அதிகமான வெப்பத்தை உருவாக்கும் ஐசோடோப்புகள் பொட்டாசியம்-40, யுரேனியம்-238, யுரேனியம்-235 மற்றும் தோரியம்-232 ஆகும். பூமியின் மத்தியில் வெப்பம் 7,000 கெல்வினையும் மற்றும் அழுத்தம் 360 கிகாபா (GPa)-வையும் அடையலாம். பூமியின் வெப்பம் பெரும்பாலும் அணுச்சிதைவிலிருந்து உருவாவதால், அறிவியலாளர்கள் பூமியின் ஆரம்பகால கட்டத்தில், குறைந்த அரை வாழ்வு கொண்ட ஐசோடோப்புகள் மறையுமுன், புவியின் வெப்பம் அதிகமாயிருந்திருக்கும் என்றும் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன் தற்போதைய வெப்பத்தை விட இருமடங்கு வெப்பம் உற்பத்தி ஆகிய போது, பூமியின் வெப்பம்சார் தன்மைகள் மாறியிருக்கும், அதிகமான மூடக பரப்பலும், டெக்டோனிக் பலகை நகர்தலும், மேலும் கோமடைட்ஸ் (komatiites) என்ற தீப்பாறைகள் உருவானதும் (இவை இன்று உருவாவதில்லை) ஏற்பட்டிருக்கும் என்று நம்புகின்றனர். பூமியிலிருந்து ஏற்படும் மொத்த வெப்ப இழப்பு 163 உட்கருவின் வெப்ப ஆற்றலில் ஒரு பகுதி மூடக ஆழ் கிணறுகளின் (mantle plumes) மூலமாக மூடகத்திற்கு கடத்தப்படுகிறது; இது ஒருவகை அதி வெப்பப் பாறை எனலாம். இந்த வெப்ப ஆழ் கிணறுகள் வெப்ப மையங்களையும் வெப்ப பாறை வெள்ளத்தையும் ஏற்படுத்தவல்லது. பூமியின் மிகையான வெப்ப இழப்பு டெக்டோனிக் பலகை நகர்வதாலும் நடுக்கடல் மேடுகளுடன் சேர்ந்து மூடகங்கள் மேல்நோக்கி நகர்வதாலும் ஏற்படுகின்றது. இறுதியாக மிக அதிக வெப்ப இழப்பு, லித்தோ அடுக்கின் வெப்ப கடத்தலால் ஏற்படும், அதாவது பெரும்பாலும் அவை கடல் வழியே ஏற்படும் ஏனெனில் தரையை விட கடலினடியில் உள்ள லித்தோ அடுக்கின் பருமன் குறைவு. நிலப்பலகைத் தட்டு மிகவும் இறுக்கமான புவியின் மேல் பரப்பு, லித்தோ அடுக்கு எனப்படும் இது, நிலப்பலகைத் தட்டுகளாக உடைந்து பிரிந்திருக்கின்றது. இந்தத் தட்டுகள் இறுக்கமான அமைப்புகளைக் கொண்டது மேலும் அவை ஒன்றோடொன்று நகர்ந்து மூன்று வகைத் தட்டுளாக எல்லைகளை உருவாக்குகின்றன: அவை முறையே குறுகும் எல்லைகள், இரண்டு தட்டுகள் ஒன்றை நோக்கி மற்றொன்று நகர்தல், விலகும் எல்லைகள், பலகைகள் ஒன்றைவிட்டு மற்றொன்று விலகுதல் மற்றும் உருமாறும் எல்லைகள், இரண்டு தட்டுகள் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் உரசிச் செல்வது என்பனவாம். இந்த செயல்களால் தட்டுகளின் எல்லைகளில் பூகம்பம், எரிமலைகள், மலைகள் உருவாக்கம் மற்றும் ஆழ் கடலடிப் படுபள்ளங்கள் உருவாகுகின்றன. நிலப்பலகைத் தட்டுகள் அசுதனோ அடுக்கின் மேல் நகர்ந்துச் செல்கின்றது, அதாவது இவ்வடுக்கின் பாகு நிலையிலுள்ள ஆனால் திடமான மேல் மூடகத்தின் பகுதிகள் நிலப்பலகைத் தட்டுகளுடன் நகரக்கூடிய தன்மையைக் கொண்டதாய் உள்ளது, மேலும் இவற்றின் இயக்கம் புவியின் மூடகத்தின் உள்ளே ஏற்படும் இயக்க மாதிரிகளை சார்ந்தே அமைகின்றது. நிலப்பலகை தட்டுகள் கோளின் மேற்பரப்பில் நகர்வதால், குறுகும் எல்லைகளில் உள்ள பெருங்கடல் தரைகள் உள்ளிழுத்துக் கொள்ளப்படுகின்றது. அதே சமயம், தட்டுகளில் விலகு எல்லைகளால் மூடகப் பொருட்கள் வெளியேறி நடுப் பெருங்கடல் அகழிகள் உருவாகின்றன. இந்த இரு செயல்களாலும் பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு தொடர்ச்சியாக மூடகத்தோடு மீள் சுழற்சியில் ஈடுபடுகின்றது. இந்த மீள் சுழற்சியால், பெரும்பாலான பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. உலகிலேயே பழமையான பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு சராசரியாக 200 மில்லியன் ஆண்டுடையது. இது மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கையில் பழமையான கண்டங்களின் மேலோடு 4030 மில்லியன் வருடம் பழமையானது. மற்ற முக்கிய தட்டுகள், இந்தியத் தட்டு, அரேபியத் தட்டு, கரீபியத் தட்டு, தென் அமெரிக்காவின் வடகரையில் இருக்கும் நாசுகாத் தட்டு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள சுகோசியத் தட்டு என்பனவாம். ஆஸ்திரேலியத் தட்டு இந்தியத் தட்டுடன் 50 முதல் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இணைந்தது. பெருங்கடல் தட்டுகளிளே மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பவை, இதில் கோகோசுத் தட்டு வருடத்தில் 75 மீட்டரும் மற்றும் பசிபிக் பெருங்கடல் தட்டு ஆண்டிற்கு 52–69 மி.மீ. வரையிலும் நகர்கின்றன. மறுபுறத்தில் மிகவும் மெதுவாக நகரும் தட்டுகளில் யுரேசியன் தட்டு ஆகும், இது வருடத்திற்கு 21 மீட்டர் தூரம் நகர்கின்றது. மேற்பரப்பு பூமியின் நிலம் இடத்திற்கு இடம் மிக வேறுபட்டுள்ளது. பூமியின் மேற்பகுதி 70.8% நீரினால் சூழப்பட்டுள்ளது மேலும் கண்டங்களின் அடுக்குப் பகுதிகள் கடலுக்கடியே உள்ளன. நீரால் மூழ்கப்பட்ட இடங்களில் மலை போன்ற அமைப்புகள், பூமி முழுவதும் பரவியுள்ள நடுப்பெருங்கடல் மலைத்தொடர், எரிமலைகள், பெருங்கடல் அகழிகள், ஆழ்கடல் படுபள்ளங்கள், பெருங்கடல் பீடபூமிகள் மற்றும் ஆழமான கணக்கிலடங்கா சமவெளிகள் இவையாவும் அடங்கும். இதைத் தவிர்த்து பூமியின் மீது தண்ணீருக்கு வெளியே உள்ள 29.2% இடத்தில் மலைகள், பாலைவனங்கள், சமவெளிகள், பீடபூமிகள் மற்றும் நிலப்பரிமாண அமைப்புகளும் அடங்கும். பூமியின் மேற்பரப்பு டெக்டோனிக் செயல்கள் மற்றும் அரித்தலால் காலப்போக்கில் உருமாறிக் கொண்டே இருக்கிறது மேற்பரப்பில் டெக்டோனிக் பலகை நகர்தலால் ஏற்படும் குவிந்த மற்றும் தகர்ந்த அமைப்புகள் மேலும் மழைகளால் (precipitation) சிதைவதும் வெப்ப சுழற்சி மற்றும் ரசாயனங்களாலும் தாக்கப்படுகின்றன. பனியாறு உருவாதல், கடற்கரை அரிப்பு, பவளப்பாறைகள் ஏற்படுதல் மற்றும் பெரும் விண்கற்களின் தாக்கம் ஆகியவற்றாலும் பூமியின் மேற்பரப்பு மாற்றியமைக்கப்படுகின்றது. கண்டங்களின் மேலோடு குறைந்த திண்மத்தையுடைய தீப்பாறைகள், கிரானைட் மற்றும் அன்டிசைட்களால் (andesite) ஆனது. பசால்ட் எனப்படும் அதிக திண்மத்தைக் கொண்ட தீப்பாறைகள் அரிதாக காணப்படுகின்றன. மேலும் இவையே கடற்கரையில் காணப்படும் முக்கிய பாறைவகையாம். படிவுப்பாறைகள் வண்டல்கள் அழுத்தத்தினால் உருமாறி ஒன்று சேர்ந்து தோற்றுவிக்கப்படுகின்றன. படிவுப்பாறைகள் பூமியின் மேலோட்டில் 5% உள்ளது எனினும் அவை கண்டங்களின் மேற்பரப்பில் 75% மாக உள்ளது. பூமியின் மீது காணப்படும் மூன்றாவது வகைப் பாறைகள் உருமாறிப்பாறைகள், இவை மற்ற பாறைகள் அதிக அழுத்தம், அதிக வெப்பம் அல்லது இரண்டினாலும் உருப்பெயருவதால் ஏற்படுபவை. பூமியில் மிக அதிகமாகக் காணப்படும் சிலிக்கேட்டுகள் குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார் (feldspar), ஆம்பிபோல் (amphibole), மைக்கா, பைராக்சீன் (pyroxene) மற்றும் ஒலிவைன் (olivine) ஆகும். பொதுவாக காணப்படும் கார்பனேட்டுகள் கால்சைட்டு (சுண்ணாம்பு கற்களில் காணப்படுவது), அராகோனைட்டு மற்றும் டோலோமைட்டு ஆகும். புவியில் எல்லாவாற்றிற்கும் மேலே உள்ள பரப்பு பீடோ அடுக்கு (pedosphere). இது மண்ணால் ஆனது மற்றும் இது மண் உருவாகும் செயலுக்கும் உட்பட்டது. இது லித்தோ அடுக்கு, வளிமண்டலம், நீர்க்கோளம் மற்றும் உயிர்க்கோளத்திற்கு இடையே உள்ளது. தற்போதைய நிலையில் பூமியின் மேற்பரப்பில் 13.31% மட்டுமே காற்றோட்டமான நிலமாகும் மற்றும் இதில் 4.71% இல் மட்டுமே நிரந்தர விவசாயம் செய்ய ஏற்றதாக இருக்கிறது. பூமியின் நிலப்பரப்பில் 40% இடம் விவசாயத்திற்கும், மேய்ச்சல் நிலத்திற்கும் பயன்படுகின்றது, அதாவது, தோராயமாக விவசாயத்திற்கு 1.3 கிமீ² நிலமும், மேய்ச்சலுக்கு 3.4 கிமீ² நிலமும் பயன்படுத்தப்படுகின்றது. பூமியின் மேற்பரப்பிலிருந்து நிலத்தோற்றத்தைக் காணும் போது மிகவும் தாழ்வான இடம் −418 மீ ஆழத்தில் உள்ள சாக்கடல் (Dead Sea), மற்றும் 2005 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மிகவும் உயரமான இடம் 8,848 மீட்டர் அளவு கொண்ட எவரெஸ்ட் சிகரம் ஆகும். நிலத்தின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து 840 மீட்டர் ஆகும். நீர்க்கோளம் பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் அதன் தனித் தன்மையாகும் மற்றும் இதுவே நம் "நீலக்கிரகத்தை" சூரிய மண்டலத்திலுள்ள மற்ற கிரகங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. பூமியின் நீர்க்கோளம் முதன்மையாக பெருங்கடல்களால் ஆனது. ஆனால் முழுதாக கணக்கிலெடுத்தால் உள்நாட்டுக் கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் 2,000 மீட்டர் வரையுள்ள நிலத்தடி நீரும் இதிலடங்கும். அதிக ஆழமான நீருக்கடியில் இருக்கும் இடம் -10,911.4 மீட்டரில் பசிபிக் பெருங்கடலிலுள்ள மரியானா அகழியில் அமைந்திருக்கும் சாலஞ்சர் ஆழமாகும். பெருங்கடல்களின் சராசரி ஆழம் 3,800 மீட்டர் ஆகும், இது கண்டங்களின் சராசரி உயரத்தைவிட நான்கு மடங்கு அதிகம். பெருங்கடல்களின் சராசரி நிறை 1.35 மெட்ரிக் டன்கள், அல்லது பூமியின் மொத்த நிறையில் 1/4400, மற்றும் 1.386கிமீ3 கனஅளவு இடத்தைப் பிடித்துள்ளது. பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சமமாக பரவியிருக்குமானால் நீரின் மட்டம் நிலத்தின் மீது 2.7 கி.மீ. உயர்ந்து இருக்கும். மொத்த நீரில் 97.5% உப்பு நீராகும் மற்ற 2.5% தூய நீராகும். இதில் பெரும்பான்மையான தூயநீர், அதாவது 68.7% தற்போது பனிக்கட்டிகளாக உள்ளது. பெருங்கடல்களின் மொத்த நிறையில் 3.5% உப்பாலானது. இந்த உப்பானது எரிமலை நிகழ்வுகளாலும் மற்றும் குளிர்ந்த தீப்பாறைகளிலிருந்தும் வெளிப்பட்டதாகும். வளிமண்டலத்திலுள்ள பல வாயுக்கள் பெருங்கடலில் கரைந்து அதில் வாழும் உயிரினங்களுக்கு ஆதாரமாய் உள்ளது. கடல் நீர் உலகின் பெரிய வெப்ப தேக்கமாக செயல்படுவதால் புவியின் வானிலையில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. பெருங்கடல்களில் வெப்பப் பங்கீட்டில் மாற்றம் நேரும் போது குறிப்பிடும் வகையில் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதால் எல் நினோ தெற்கு திசை ஊசலாட்டம் (ElNiño – Southern Oscillation) போன்றவை ஏற்படும். வளிமண்டலம் இந்த புவியின் மேற்பரப்பில் உள்ள வளி மண்டல அழுத்தம் சராசரியாக 8.5 கி.மீ. அளவு உயரம் வரை 101.325 கிலோபா (KPa) ஆக இருக்கிறது. இது 78% நைட்ரஜன், 21% ஆக்சிஜன் மற்றும் சிறிய அளவில் நீராவி, கரிமிலவாயு போன்ற மற்ற வாயு மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. அடிவளிமண்டல (Troposphere) உயரமானது பூமியின் கிடைமட்ட பரப்பை பொறுத்து மாறும். தட்பவெப்ப மற்றும் காலநிலை மாறுபாட்டின் காரணமாக இது துருவங்களில் 8 கி.மீ. முதல் பூமத்தியரேகையில் 17 கி.மீ. வரை இருக்கும். புவியின் உயிர்கோளம் வளிமண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பிராணவாயு ஒளிச்சேர்க்கை முதன்முதலில் தற்போதுள்ள நைட்ரஜன் - ஆக்சிஜன் வளி மண்டலத்தை உருவாக்கியது. இந்த மாற்றமானது வளி சார்ந்த உயிரினங்கள் வளர்ச்சி மற்றும் ஓசோன் படலத்தையும் உருவாக்கியதோடு, புவியின் காந்தபுலம் புற ஊதாக் கதிர்கள் சூரியனின் கதிர்வீச்சு ஆகியவற்றை தடுத்து, புவியில் உயிரினங்கள் வாழ வழிசெய்கிறது. புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான நீராவி பரிமாற்றம், வாயுக்கள், சிறிய விண்கற்களை புவியை தாக்கும்முன் எரியசெய்தல் மற்றும் மிதமான வெப்பநிலை போன்றவற்றை அளிப்பதில் வளி மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இறுதியாக குறிப்பிட்ட வளிமண்டல வெப்பநிலை மாற்றத்தை கிரீன் ஹவுஸ் மாற்றம் என குறிப்பிடுவர் (Greenhouse Effect): இது நிலத்தில் இருந்து வெளிவரும் வெப்ப ஆற்றலை வளிமண்டலத்தில் உள்ள சிறிதளவிலான மூலக்கூறுகள் சிறைப்படுத்தி அதன் மூலம் வளி மண்டலத்தின் சராசரி வெப்பத்தை உயர்த்துவதை குறிக்கும். கார்பன் டை ஆக்சைடு, நீராவி, மீத்தேன் மற்றும் ஓசோன் போன்றவை புவியின் வளி மண்டலத்தில் உள்ள பிரதான கிரீன் ஹவுஸ் வாயுக்கள் ஆகும். இந்த வெப்பம் தக்கவைத்தல் நடக்காவிடில் புவியின் மேற்புற வெப்பம் −18° செ ஆக இருந்திருக்கும் மற்றும் உயிரினங்கள் வாழ ஏதுவாய் இருந்திருக்காது. வானிலை மற்றும் பருவ நிலை புவியின் வளிமண்டலத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை கிடையாது, அது உயரே செல்ல செல்ல மெலிந்து அண்ட வெளியில் மறைந்து போகின்றது. வளி மண்டலத்தின் மொத்த நிறையில் மூன்றில் ஒரு பகுதி பூமியின் மேற் பரப்பிலிருந்து முதல் 11 கி.மீ.ரிலேயே அடங்கி விடுகின்றது. இந்த அடியில் உள்ள அடுக்கே அடிவளிமண்டலம் ஆகும். சூரியனிலிருந்து வரும் வெப்ப சக்தி இந்த அடுக்கை மற்றும் இதனடியில் உள்ள பூமியின் மேற்பரப்பையும் சூடு படுத்தி பிறகு இதனுடன் தொடர்புள்ள காற்றை விரிவாக்குகின்றது. இந்த குறைந்த அடர்த்தியுடைய காற்று மேலெழுகிறது, அவ்விடத்தை அதிக அடர்த்தியுள்ள குளிர்ந்த காற்று நிரப்புகின்றது. இவ்வாறு ஏற்படும் செயல் வளிமண்டலத்தில் சுழற்சியை ஏற்படுத்துகின்றது அதனால் வெப்ப சக்தி நகர்ந்து வானிலை மற்றும் பருவநிலை ஏற்பட காரணமாகின்றது. முதன்மை வளிமண்டல சுழற்சியின் தடத்தில் நிலநடுக்கோட்டிலிருந்து 30° பாகைகள் உருவாகும் வியாபாரக் காற்றுகள் மற்றும் மேற்கத்திய காற்றுகள் இவை மத்திய-நில நேர்ககோட்டில் 30° மற்றும் 60° பாகைக்குள் உருவாகின்றன. பெருங்கடல்களின் ஓட்டமும் வானிலை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன, முக்கியமாக வெப்ப ஹேலைன் சுழற்சி பூமத்திய கடல்களில் இருந்து துருவக்கடல்களுக்கு வெப்ப ஆற்றலைப் பரப்புகிறது. பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நீராவி, சுழற்சியான முறையில் வளிமண்டலத்தை சென்றடைகிறது. வளிமண்டலத்தின் நிலை அனுமதிக்கும் போது சூடான ஈரப்பதம் மிக்க காற்று மேலெழும்பி, பிறகு குளிர்ந்து, மழையாகி, பூமியை அடைகின்றது. இது பெரும்பாலும் ஆற்றின் மூலமாக பெருங்கடல் அல்லது ஏரிகளை சென்றடைகிறது இந்நீரின் சுழற்சி பூமியில் உயிரினங்கள் வாழ மிக முக்கியமானது மற்றும் வெகு காலமாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் புவியின் மேற்புற அமைப்புகளின் அரிப்புகளுக்கும் காரணமாகின்றது. மழை பொழிவது இடத்திற்கு இடம் வெகுவாக வேறுபடுகின்றது, அது பல மீட்டரில் இருந்து சில மில்லி மீட்டர் வரை மாறுபடுகின்றது. ஒவ்வொரு இடத்திலும் காணப்படும் வளிமண்டல சுழற்சி, மேற்புற அமைப்பு மற்றும் வெப்ப மாற்றத்தை பொறுத்தே அவ்விடத்து மழை அமையும். பூமியின் பகுதிகளை அதன் நில நேர்க்கோட்டின் படி சராசரியான ஒரே தட்பவெப்ப நிலைகள் உள்ளவைகளாக பிரிக்கலாம். பூமத்திய ரேகையிலிருந்து துருவங்கள் வரையிலான தட்பவெப்பத்தை வெப்ப வளையம் (அல்லது ஈக்வடோரியல்), மிதவெப்ப வளையம், மிதமான வளையம் மற்றும் துருவ வளைய தட்பவெப்பம் என பிரிக்கலாம். தட்பவெப்பத்தை வெப்பம் மற்றும் பெய்யும் மழையைக்கொண்டும் வகைப்படுத்தலாம், அதாவது அவ்வவ்விடத்தின் சீரான காற்றின் அடர்த்தியைக் கொண்டும் பிரிக்கலாம். பொதுவாக உபயோகத்தில் உள்ள கோப்பெனின் தட்பவெப்ப முறையின் படி (விளாடிமிர் கோப்பெனின் மாணாக்கர் ருடால்ப் கைகர் மாற்றியமைத்தது) தட்பவெப்பங்களை ஐந்து பெரும் பிரிவுகளாக (ஈரப்பதம் மிக்க வெப்ப பகுதி, வறண்ட பகுதிகள், ஈரப்பதம் மிக்க மத்திய நில நேர்க்கோட்டு பகுதிகள், மிதமான குளிர் பகுதிகள் மற்றும் மிகக்குளிர் துருவ பகுதிகள்) பிரித்துள்ளார், மேலும் இவை குறிப்பிட்ட உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மேல் வளிமண்டலம் வளிமண்டலத்தில், அடி வளிமண்டலத்தின் மேற்பகுதி, வழக்கமாக ஸ்ட்ரடோ அடுக்கு (stratosphere), மீசோ அடுக்கு (mesosphere), வெப்பஅடுக்கு என பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்கும், அதன் உயரத்திற்கு ஏற்ப, தோன்றும் வெப்ப மாறுபாட்டிற்கு ஏற்றாற்போல் வெவ்வேறு இழப்பு விகிதத்தைக் கொண்டிருக்கும். இவற்றை தாண்டி, எக்சோ அடுக்கு எனப்படும் வெளி அடுக்கு மெலிந்து காந்த அடுக்கில் கலந்துவிடுகிறது. இந்த அடுக்கில்தான், பூமியின் காந்த புலம் சூரியக் கதிர் காற்றுடன் ஊடாடுகிறது. பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான ஒரு பகுதி வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் அடுக்கு ஆகும், இது ஸ்ட்ரடோ அடுக்கில் இருந்துகொண்டு பூமியின் மேற்பரப்பை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கார்மன் கோடு வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள எல்லையை நிர்ணயிக்கிறது. வெப்ப ஆற்றலால், வளிமண்டலத்தின் வெளி விளிம்பில் உள்ள சில மூலக்கூறுகளின் வேகம் அதிகரித்து ஒரு சமயம் அவை புவியின் ஈர்ப்பு சக்தியிலிருந்த விடுபடுகின்றது. இதன் விளைவாக நிதானமாக அதே சமயம் நிலையாக வளிமண்டலம் விண்வெளியில் நுழைகிறது. ஏனெனில், நிலையற்ற ஹைட்ரஜன் மூலக்கூறு நிறை குறைவாக இருப்பதால், அது மிக விரைவிலேயே விடுபடும் வேகத்தை அடைகிறது. மேலும் மற்ற வாயுக்களை விட மிக வேகமாக விண்வெளிக்குள் நுழைகிறது. இதுவே பூமி ஆரம்ப ஒடுக்க நிலையிலிருந்து தற்போதைய ஆக்சிஜனேற்ற நிலையை அடைவதற்கு காரணமாகும். ஒளிச்சேர்க்கை ஆக்சிஜன் மிகுதியாக கிடைக்க வழி செய்கிறது. அதே சமயத்தில், ஒடுக்கும் காரணியான ஹைட்ரஜன் குறைவதற்கும் காரணமாகிறது. வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகமாக பரவுவதற்கு இதுவே காரணமாக இருந்திருக்கும் என நம்பப்படுகிறது. எனவே, பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறக்கூடிய ஹைட்ரஜனின் தன்மை, பூமியில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறது. தற்போதைய ஆக்சிஜன் நிறைந்த வளிமண்டலத்தில், ஹைட்ரஜன் வளிமண்டலத்தை விட்டு வெளியேறும் முன்னரே, நீராக மாற்றப்படுகிறது. அதற்கு பதிலாக, வளிமண்டலத்தின் மேல்பகுதியில் ஏற்படும் மீத்தேனின் அழிவே, ஹைட்ரஜன் இழப்பிற்கு காரணமாகிறது. காந்தப்புலம் புவியின் காந்தப்புலத்தின் காந்த இரு துருவங்கள், அதன் இரு புவியியல் துருவங்களுக்கு அருகில் தற்போது அமைந்திருப்பதாக தோராயமாக கருதப்படுகிறது. இயக்கவியல் கொள்கையின்படி, காந்தப்புலமானது, பூமியின் உருகிய நிலையில் உள்ள வெளிக்கருவில், வெப்பம் கடத்தும் பொருள்களின் கடத்துத் திறனை உருவாக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடத்தில், உருவாக்கப்படுகிறது. இதுவே, பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. வெளிக்கருவில், வெப்ப கடத்துத் திறன் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும். மேலும், அது அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். இந்த காந்தப்புல மாற்றம் ஒவ்வொரு மில்லியன் வருடத்திற்கு சில முறை ஒழுங்கற்ற இடைவெளியில் மாறிக்கொண்டேயிருக்கும். இறுதியாக இந்த மாற்றம் 700,000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. இந்த புலமானது காந்த அடுக்கை (magnetosphere) ஏற்படுத்தி, சூரியக் கதிர் காற்றுக்கு அருகில் உள்ள துகள்களை விலக்குகிறது. சூரிய கதிரின் பௌ ஷாக் (bow shock) நுனி புவியின் ஆரத்தை போன்று 13 மடங்கைக் கொண்டது. காந்தப்புலதிற்கும் சூரிய காற்றுக்கும் நிகழும் மோதலினால் வான் ஆலன் கதிர்வீச்சு வளையம் உண்டாகிறது. அது பொது மையமாகக்கொண்ட, டாரஸ் (torus) வடிவமுள்ள மின்னூட்டதுகள்கள் கொண்ட பகுதியாகும். பிளாஸ்மா புவியின் வளிமண்டலத்தில் காந்த துருவங்களில் நுழையும்போது கனல் (அரோரா) ஆக மாறுகிறது. பூமியின் கோளப்பாதை மற்றும் சுழற்சி சுழற்சி பூமியின் சுழலும் காலம் சூரியனை ஒப்பிடுகையில்-அதன் சராசரி சூரிய நாள்-அதாவது சராசரி சூரிய நேரத்தில் 86,400 விநாடிகளாகும். இந்த ஒவ்வொரு வினாடியும் எஸ்.ஐ (SI) முறை வினாடியை விட சிறிது கூடுதல். ஏனெனில் 19 ஆம் நூற்றாண்டை ஒப்பிடும் போது தற்போதைய பூமியின் சூரிய நாள் அலை முடுக்கத்தால் சிறிதே நீண்டிருக்கிறது. புவியின் சுழற்சிக் காலத்தை நிலையான விண்மீன்களுடன் ஒப்பிடுவதை, அதன் ஸ்டெல்லர் நாள் என சர்வதேச புவி சுழற்சி மற்றும் ஒப்பிடு காரணி அமைப்பு (IERS) கூறுகிறது, இது சராசரி சூரிய நேரத்தில் (UT1) அல்லது பூமியின் சுழற்சிக் காலத்தை அதன் ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றம் அல்லது சராசரி வெர்னல் இஃகுவினாக்ஸ் உடன் ஒப்பிடுவதை, ஒரு விண்மீன் நாள் என தவறாக பெயரிடப்பட்டது, இது சராசரி சூரிய நேரம் (UT1) ஆகும். எனவே ஒரு விண்மீன் நாள் ஸ்டெல்லர் நாளை விட 8.4 ms. சிறியது. SI நிமிடங்களில் 1623–2005 மற்றும் 1962–2005 காலங்களுக்கு சராசரி சூரிய நேரம் IERS -லிருந்து கிடைக்கப் பெறும். வளிமண்டலத்துள் விண் கற்கள் (meteor) தாழ் சுழற்சி விண்கலங்கள் மற்றும் அனைத்து விண்ணுலக பொருட்களையும் பூமியின் மீதிருந்து பார்க்கும் போது மேற்கு நோக்கி மணிக்கு 15° = நிமிடத்திற்கு 15' என்ற அளவில் போவது போல் தோன்றும். இந்நகர்தல் இரு நிமிடத்தில் சூரியன் அல்லது சந்திரன் அடையும் விட்டமாகும்; நம் கண்களுக்கு சூரியனும் சந்திரனும் ஒரே அளவினவாகத் தோன்றும். கோளப்பாதை பூமி சூரியனைச் சுற்றி தன் கோளப்பாதையில் சராசரியாக 365.2564 சூரிய நாட்களில் 150 மில்லியன் கி.மீ. அல்லது ஒரு விண்மீன் ஆண்டை (sidereal year) கடக்கின்றது. இதனால் சூரியன், நட்சத்திரங்களை ஒப்பிடுகையில் கிழக்கு நோக்கி நாளொன்றுக்கு 1° நகர்வதாக அல்லது சூரியன் அல்லது சந்திரன் விட்டத்தை 12 மணி நேரத்தில் கடப்பதாகத் தோன்றுகிறது. இந்தச் செயலால் சராசரியாக ஒரு சூரிய நாள் அல்லது 24 மணி நேரத்தில் பூமி தன் அச்சிலேயே ஒருமுறை சுழன்று சூரியன் அதன் ஆரம்ப நிலை மெரிடியனை வந்தடைகின்றது. பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் சுழல்கிறது, இது பூமியின் விட்டத்தை (ஏறத்தாழ 12,600 கி.மீ.) ஏழு நிமிடங்களிலும், சந்திரனுக்கு செல்லும் தூரத்தை (384,000 கி.மீ.) நான்கு மணி நேரத்திலும் கடக்க ஏதுவான வேகமாகும். சந்திரன் பூமியுடன் சேர்ந்து பொதுவான ஒரு பேரி மையத்தை (barycenter), அதன் பின் காணப்படும் விண்மீன்களை ஒப்பிடுகையில் 27.32 நாட்களில் சுழன்று வருகிறது. சூரியனைச் சுற்றி, பூமி மற்றும் சந்திரன் ஆகியவற்றின் பொதுவான சுழற்சியைச் சேர்த்தால், சைனோடிக் மாத காலமாகும், பௌர்ணமியிலிருந்து பௌர்ணமி வரை 29.53 நாட்களாகும். விண்வழி வட துருவத்திலிருந்து காணும் போது பூமி, சந்திரன் மற்றும் அவற்றின் அச்சு சுழற்சி, எதிர்மறை சுழற்சியாக தோன்றும். பூமி மற்றும் சூரியன் ஆகியவற்றின் வட துருவத்திலிருந்து காணும் போது பூமி சூரியனை எதிர்மறையாக சுழன்று வருவது தெரியும். பூமியின் கோளப்பாதையும் அச்சுத் தட்டும் ஒன்றி அமையவில்லை: பூமி சூரிய தட்டின், செங்குத்தான கோட்டிலிருந்து 23.5 கோணங்கள் பூமியின் அச்சு சாய்ந்து காணப்படுகிறது மற்றும் பூமி சந்திரன் தட்டு பூமி சூரிய தட்டிலிருந்து ஐந்து கோணங்கள் பெயர்ந்து உள்ளது. இந்தச் சாய்வான அமைப்பு இல்லையென்றால் சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் இருவாரங்களுக்கு ஒருமுறை ஏற்படும் அமைப்பு இருக்கும். ஹில் அடுக்கு (Hill sphere) அல்லது புவியீர்ப்பு அடுக்கு பூமியிலிருந்து 1.5 கிகா மீட்டர் (அல்லது 1,500,000 கிலோமீட்டர்கள்) ஆரமுடையதாகும். பூமியின் புவியீர்ப்பு விசை மற்ற விண் பொருட்களாகிய சூரியன் மற்றும் மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையை விட அதிகமாக இருக்கும் மற்றும் அதிகபட்ச தொலைவில் இருக்கும் இடமுமாகும். பூமியின் கட்டில் இருக்கும் அனைத்து பொருட்களும் இந்த தொலைவுக்குள் இருக்க வேண்டியது அவசியம் மீறினால் அவை சூரியனின் ஈர்ப்பு விசையினால் பூமியை விட்டு வெளியேறி விடும். பூமி சூரிய மண்டலத்தோடு பால்வெளி (Milky Way) கேலக்ஸியில் (galaxy) அதன் மையத்தை 28,000 ஒளி ஆண்டுகளில் சுழலும் பாதையில் அமைந்துள்ளது. இது தற்போது இந்த மண்டலத்தின் நில நடுதட்டிலிருந்து (equatorial plane) 20 ஒளி ஆண்டுகள் மேலேயும் ஓரியன் மண்டலத்தின் சுழல் கையிலும் (Orion spiral arm) அமைந்துள்ளது. பூமி அச்சின் சாய்வும் காலங்களும் பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால், பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் பெரிதும் வேறுபடுகின்றது. இது பல காலம் சார்ந்த தட்பவெப்பநிலை மாற்றங்களை, ஏற்படுத்துகின்றது, வடதுருவம் சூரியனை நோக்கி உள்ள போது வட கோளார்தத்தின் கோடை காலமும், அதுவே சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர்காலமாகவும் ஏற்படுகின்றது. கோடை காலத்தின் நாட்கள் நீண்டும் சூரியன் வானில் உயரேயும் காணப்படுகின்றது. குளிர் காலத்தில், தட்பவெப்ப நிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் மற்றும் நாட்கள் குறுகியும் காணப்படும். ஆர்க்டிக் வளையத்திற்கு மேல் ஓர் அதீதமான செயல் காணப்படுகின்றது, அங்கே வருடத்தின் ஒரு பகுதி காலத்தில் வெளிச்சமே இருப்பதில்லை - இது துருவ இரவு என்றழைக்கப்படுகின்றது. தென் துருவம் வடதுருவத்திற்கு எதிர்புறம் அமைந்திருப்பதால், தென் கோளார்த்த காலங்கள் வட கோளார்த்த காலங்களுக்கு எதிர்மறையாக அமைந்திருக்கிறது. வானியல் மரபுப்படி, நான்கு பருவ காலங்களும், புவி தனது கோளப் பாதையில் சூரியனை நோக்கி அல்லது சூரியனிலிருந்து விலகும் அதிகபட்ச அச்சு சாய்வுப் புள்ளியான சால்ஸ்டிஸ் (solstice) என்பதையும், இஃவினாக்ஸ் (equinox) சாயும் திசை சூரியனை நோக்கிச் செங்குத்தாக இருக்குமானால், இவை இரண்டையும் வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. குளிர் கால சால்ஸ்டிஸ் டிசம்பர் 21 அன்று ஏற்படும், கோடை கால சால்ஸ்டிஸ் ஜூன் 21 தேதி வாக்கில் ஏற்படும், வசந்தகால இஃவினாக்ஸ் மார்ச் 20 ஆம் தேதி வாக்கில் ஏற்படும், இலையுதிர்கால இஃவினாக்ஸ் செப்டம்பர் 23 ஆம் தேதி வாக்கில் ஏற்படும். புவியின் சாய்வு கோணம் பல காலங்களுக்கு நிலையாக இயங்கக்கூடியது. இருப்பினும் இந்தச்சாய்வும் சிறிதளவு ஒழுங்கற்ற இயக்கம் (nutation) கொண்டிருக்கிறது, அதாவது மிகச்சிறிய ஒழுங்கற்ற இயக்கம் 18.6 ஆண்டுகளில் ஏற்படுகின்றது. புவி அச்சின் நிலையும் (கோணமல்லாது) காலவாக்கில் மாறுகின்றது, 25,800 ஆண்டு காலம் ஒரு முழு வட்டப்பாதையில், சிறிய ஆனால் தொடர்ச்சியான ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றத்துடன் (precessing) சுழன்று வருகிறது; இந்த மாற்றமே விண்மீன் ஆண்டு மற்றும் வெப்ப ஆண்டிற்கு இடையே உள்ள வேறுபாட்டிற்கான காரணமுமாகும். இந்த இரண்டு நகர்தலும் புவியின் நிலநடுக்கோட்டைச் சார்ந்த வீக்கத்தின் மீது சூரியன் மற்றும் சந்திரனின் வேறுபட்ட கவர்ச்சியினால் ஏற்படுகிறது. புவியிலிருந்து காணும் போது, துருவங்கள் கூட சில மீட்டர் தூரம் மேற்பரப்பில் நகர்கிறது. இந்த துருவ நகர்தல் பல சுழற்சி பகுதிகள் அடங்கியதாகும், இந்த பல பகுதிகள் மொத்தமாக பகுதி கால நகர்தல் என்றழைக்கப்படுகின்றது. இந்த நகர்தலுக்கு ஒரு வருட சுற்றோடு 14 மாத சுற்றும் உள்ளது, அதை சாண்ட்லேர் தள்ளாட்டம் என குறிப்பிடுகின்றனர். பூமியின் சுழல் வேகமும் தின நேர மாற்றம் என்ற செயலால் பாதிக்கப்படுகின்றது. இந் நாட்களில் புவியின் சூரிய சிறும வீச்சு ஜனவரி மூன்றாம் தேதியும் சூரிய பெரும வீச்சு ஜூலை நான்காம் தேதியும் ஏற்படுகின்றது. இந்த நாட்கள் நிலையானதல்ல, இவை காலப்போக்கில் புவியின் சுழற்சியாலும் ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றங்களாலும் மாறிக்கொண்டே இருக்கின்றது மேலும் இது மிலன்கோவிட்ச் சுற்று எனும் சுழல் அமைப்பை பின்பற்றுகின்றது. சூரியன் மற்றும் பூமிக்கிடையே ஆன தூரம் அதிகமாகிக்கொண்டிருப்பதால் சூரிய சிறும வீச்சுக்கும் பெரும வீச்சுக்கும் இடையே பூமியை அடையும் கதிர் வீச்சில் 6.9% வேறுபாடு உள்ளது. பூமி சூரியனின் மிக அருகே செல்லும் போது அதன் தென் துருவம் சூரியனை நோக்கி இருப்பதால் அதற்கு சூரிய சக்தி வட துருவத்தை ஒப்பிடுகையில் ஒரு வருடத்தில் அதிகமாகக் கிடைக்கின்றது. ஆனால் தென் துருவம் இந்த வகையில் அடையும் சக்தி அது புவி அச்சின் சாய்வு மற்றும் அதிக ஆற்றலை உறிஞ்சும் தென் துருவ நீரினால் கிடைக்கும் மொத்த சக்தியை விட மிக குறைவே ஆகும். நிலா சந்திரன் பூமியை விட பெரிய, நிலம் சம்பந்தப்பட்ட, செயற்கைக்கோள் போன்ற ஒரு கோளாகும், இதன் விட்டமானது பூமியின் விட்டத்தைப் போன்று கால் மடங்கு பெரியதாகும். அதன் கோளோடு ஒப்பிடுகையில் சந்திரன்தான் சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரியதாகும். (சாரன் (Charon) என்பது சிறிய கோளான ப்ளூடோவை விட பெரியதாகும்) மற்ற கோள்களைச் சுற்றி வரும் இயற்கையான செயற்கைக்கோள்கள் பூமியினுடையதைப் போலவே "சந்திரன்கள்" என்று அழைக்கப்படுகின்றன. புவிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள புவிஈர்ப்பு சக்திதான் புவியில் பேரலைகள் உண்டாகக் காரணமாக இருக்கிறது. இதுவே சந்திரனில் பேரலை நிறுத்தத்திற்கும் காரணமாகிறது: இதன் சுழற்சிக் காலமானது அது பூமியைச் சுற்றி வரும் காலத்திற்குச் சமமாகும். இதன் காரணமாகவே, இது பூமிக்கு எப்பொழுதும் ஒரே பகுதியைக் காட்டுகிறது. சந்திரன் பூமியைச் சுற்றி வருவதால், அதன் வெவ்வேறு பகுதிகள் சூரியனால் ஒளிரச் செய்யப் படுகின்றன. மேலும், இது சந்திரனின் முகங்களைக் காட்டுகிறது; சந்திரனின் இருள் பகுதிகள் ஒளிர்கின்ற பகுதியிலிருந்து சூரியனின் ஒளிக்கற்றைகளால் பிரிக்கப்படுகிறது. இந்தப் பேரலைகள் ஊடாடுவதன் காரணமாக, சந்திரன் பூமியை விட்டு வருடத்திற்கு 38 மி.மீ. விலகிச் செல்கிறது. பல மில்லியன் வருடங்களுக்கு மேலாக, இந்த சிறு மாற்றங்களும்-ஒரு வருடத்திற்கு 23 µs வீதம் பூமியின் ஒரு நாள் நீள்வதும், பல குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, தேவோனியன் காலத்தின் பொழுது, (தோராயமாக 410 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) ஒரு வருடத்திற்கு 400 நாட்களும், ஒரு நாளுக்கு 21.8 மணிநேரமுமாக இருந்தது. பூமியின் தட்பவெப்பநிலையை மாற்றுவதன் மூலம் சந்திரன் பூமியில் வாழ்க்கையின் முன்னேற்றத்தை பெரிதும் பாதித்திருக்கிறது. தொல்லுயிர் ஆராய்ச்சியின் முடிவுகளும் மற்றும் கணினியின் மாதிரிகளும் பேரலைகளுக்கு சந்திரனுடன் உள்ள கவர்ச்சியினால்தான் பூமியினுடைய அச்சின் சாய்வு நிலையாக உள்ளது என்பதை நமக்கு காட்டுகிறது. சூரியனும் இதர கோள்களும் பூமியின் நிலநடுக்கோட்டைச் சார்ந்த வீக்கத்திற்கு கொடுக்கும் உந்து அழுத்தத்திற்கு எதிராக இந்த நிலைப்புத்தன்மை இல்லையெனில் பூமியின் சுழலும் அச்சு ஒரு நிலையிலன்றி குழப்பமானதாக இருந்திருக்கும், மேலும் செவ்வாய் கோளில் நடப்பதைப் போல மில்லியன் வருடங்களுக்கு மேல் நிலைமாறான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என சில கொள்கையாளர்கள் நம்புகிறார்கள். பூமியின் சுழலும் அச்சு நீள்வட்டப்பாதையை அடைய நேர்ந்தால் உயர்ந்தபட்ச காலநிலை மாறுபாடுகளினால் உயர்ந்தபட்ச மோசமான தட்பவெப்ப நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு துருவம் கோடைக்காலத்தில் சூரியனை நோக்கியும் குளிர்காலத்தில் சூரியனுக்கு எதிர் திசையிலும் அமைந்திருக்கும். இதனை ஆராய்ந்த வான் கோள் அறிவியலாளர்கள் இது எல்லா பெரிய விலங்குகளையும் மற்றும் உயர்ந்த தாவரங்களையும் அழிக்கக்கூடும் என கருதுகின்றனர். எனினும் இது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாகும், மேலும் பூமியைப் போலவே சுழற்சியையும் சுழலும் காலத்தையும் உடைய ஆனால் பெரிய சந்திரனும் திரவ உட்கருவும் இல்லாத செவ்வாய் கோளை பற்றிய ஆராய்ச்சி இதற்கு ஒரு தீர்வைக் கொடுக்கலாம். பூமியிலிருந்து பார்க்கும்பொழுது, சந்திரன் வெகு தொலைவில் இருப்பது போலவும் சூரியனைப் போன்றே சிறிய கோள வடிவத்திலும் காட்சியளிக்கிறது. இந்த இரண்டின் கோண அளவும் (அல்லது திட கோணம்) ஒத்திருக்கிறது ஏனெனில், சூரியனுடைய விட்டம் சந்திரனுடையதைப் போல 400 மடங்கு பெரியதாக இருந்தாலும், அது சந்திரனை விட 400 மடங்கு அதிக தொலைவிலும் இருக்கிறது. இது பூமியில் முழு மற்றும் வருடாந்திர கிரகணம் ஏற்பட காரணமாகவும் இருக்கின்றது. சந்திரனின் தோற்றம் பற்றிய உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தாக்க விதியின்படி (giant impact), செவ்வாயின் அளவை ஒத்த தேயியா (Theia) எனப்படும் மாதிரி கோளும் ஆதிகால பூமியும் மோதிக்கொண்டதனால் ஏற்பட்டது. இந்தக் கூற்றின்படி (மற்றவைகளுடன்) சந்திரனில், பூமியை ஒப்பிடுகையில் குறைந்த அளவு இரும்பு மற்றும் ஆவியாகக்கூடிய தனிமங்கள் இருப்பதும் மற்றும் அதனுடைய கட்டமைப்பு ஏறக்குறைய பூமியின் மேலோட்டை ஒத்திருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. பூமிக்கு குறைந்தது இரண்டு துணை-சுற்று பெரு விண்கற்கள், 3753 க்ருதினே மற்றும் 2002 AA29 என இருக்கிறது. புவியில் உயிர்களின் புழக்கம் ஒரு கோள், உயிர்களை தக்க வைத்துக் கொள்ளுமானால் உயிர்கள் அங்கே தோன்றாவிடினும் அது உயிர்கள் புழங்கத்தக்கதாக கருதப்படுகிறது. பூமி (தற்போதைய கூற்றுகளின் படி) உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய திரவ நீர், சுற்றுச் சூழலில் கடினமான உயிர் வேதியல் மூலக்கூறுகள் உருவாகும் தன்மை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு தேவையான சக்தி ஆகியவற்றைப் பெற்றிருக்கிறது. பூமி சூரியனிலிருந்து உள்ள தூரம், அதன் சுழற்சியில் காணப்படும் முரண், சுழலும் வேகம், அச்சுச் சாய்வு, புவியின் வரலாறு, வளிமண்டல தக்க வைத்துக் கொள்ளல் மற்றும் பாதுகாக்கும் காந்தப்புலன் இவையாவும் இந்த கிரகத்தில் உயிர்கள் உருவாக மற்றும் தக்க வைத்துக் கொள்ள காரணிகளாகச் செயல்பட்டுள்ளன. உயிர்க்கோளம் புவியின் உயிர்கள் சேர்ந்து அதன் "உயிர்க்கோள"த்தை அமைக்கின்றது. இந்த உயிர்க்கோளம் பூமியில் 3.5 மில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகி பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கியது. அண்டத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் இருப்பதாக தற்போது நாமறிவோம். சில அறிவியலாளர்கள் பூமியைப் போன்ற உயிர்க்கோளம் அரிதானது என நம்புகின்றனர். இந்த உயிர்க் கோளம் பல உயிர்க்கட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது ஒத்த தாவர மற்றும் விலங்கு வகைகளை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது. நிலத்தில் நிலநீர்க்கோடு மற்றும் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள உயரம் இரண்டும் உயிர்க்கட்டுகளைப் பிரிக்கிறது. ஆர்க்டிக், அண்டார்க்டிக் வளையங்களுக்குள் அல்லது அதிக உயரமான இடங்களிலும் காணப்படும் நில உயிர்க்கட்டுகளில் மிக அரிதாகவே தாவரங்களும் விலங்குகளும் காணப்படுகின்றன, ஆனால் பூமத்திய ரேகை அருகே காணப்படும் உயிர்க்கட்டில் நீண்ட பலவகை உயிரினங்கள் காணப்படுகின்றன. இயற்கை வளங்கள் மற்றும் நிலம் பயன்பாடு பூமி, பயனுள்ள பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் வகையில் பல வளங்களை மனிதனுக்கு அளிக்கிறது. இவற்றில் சில புதுப்பிக்க இயலாத வளங்கள் (non-renewable), அதாவது தாது எரிபொருள் போன்றவை குறுகிய காலத்தில் உருவாவதில்லை. அதிக அளவிலான தொல்லுயிர் படிம எரிபொருட்கள் பூமியின் மேலோட்டிலிருந்து கிடைக்கின்றது, அவை நிலக்கரி, பெட்ரோல், இயற்கை வாயு மற்றும் மீத்தேன் கிளாத்ரேட்டுகளாம். இந்த எரிபொருட்களை ஆற்றல் உருவாக்குதலுக்கும், வேதி பொருட்கள் உருவாக்க முன்னோடியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பூமியின் மேலோட்டில் கனிம தாதுக்கள் படிமங்களாக தாது உருவாக்கல் மூலம் மற்றும் அரித்தல், பலகை டெக்டோனிக் மூலம் உருவாகி படிந்துள்ளன. இவை உலோகம் மற்றும் உபயோகமுள்ள தனிமங்கள் உருவாக்குவதற்கு ஒருநிலைப்பட்ட மூலமாக பயன்படுத்தப்படுகிறது. புவியின் உயிர்க்கோளம் மனிதனுக்குத் தேவையான பல உயிர் பொருட்களை உருவாக்குகின்றது, இவை உணவு, மரம், ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள் மற்றும் உயிர்க்கழிவுகளின் மறுசுழற்சி ஆகியவையாகும். நில ஆதாரமான சூழலமைப்பு மேல்மண் மற்றும் தூயநீரை சார்ந்தும் மற்றும் கடல் சூழலமைப்பு நிலத்திலிருந்து கரைந்து கடலை அடையும் ஊட்ட பொருட்களைச் சார்ந்தும் உள்ளது. மனிதர்களும் நிலத்தில் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு குடில்கள் அமைத்து வாழ்கின்றனர். 1993 கணக்கெடுப்பின் படி, மனிதர்கள் உபயோகப்படுத்தும் நிலம் தோராயமாக: 1993 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி விவசாயம் செய்யப்படும் நிலம் 2,481,250 சதுர கி.மீ. இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் அபாயம் பூமி மீதுள்ள பல இடங்கள் அதீதமான வானிலையால் அதாவது புயல், சூறாவளி, சுழல்காற்று ஆகியவற்றால் பாதிப்படைகின்றன. மேலும் பல இடங்களில் நில நடுக்கம், நில சறுக்கம், ஆழிப் பேரலைகள், எரிமலைகள், சுழற்காற்று, புதைகுழிகள், பனிப்புயல், வெள்ளம், வறட்சி மற்றும் விபத்துகளும் பேரழிவுகளும் ஏற்படுகின்றன. பல இடங்களில் மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுப்புற மாசு, காற்று மற்றும் நீரை பாதித்ததோடல்லாமல், அமில மழை, நச்சுப்பொருட்கள், பயிரழித்தல் (மிகையான மேய்ச்சல், காட்டை அழித்தல், பாலைவனமாக்கல்), வன உயிர்கள் அழித்தல், உயிரினங்களின் மறைவு, மண் அழிப்பு, மண் மறைவு, மண் அரிப்பு மற்றும் ஆக்கிரமிக்கும் உயிரினங்களை அறிமுகப்படுத்தல் போன்றவற்றையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு அறிவியல் அமைப்பு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரியமில வாயுவினால் கோள வெதும்பல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. இதனால் பனிக்கட்டியாறு மற்றும் பனிக்கட்டி மலை (ice sheet) உருகுதல், அதீதமான வெப்பநிலை மாற்றங்கள், வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் கடல் மட்ட அளவு உயருதல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் எனக் கண்டறிந்துள்ளனர். பூமியின் மேல் வளிமண்டலத்தில் மனிதனால் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் 3,000 தான் தற்சமயம் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை 8,000 செயற்கைக்கோள்களை உலக நாடுகள் அனுபிவைத்துள்ளன. இவை அனைத்தும் பூமிக்கு மேலே 250 கிலோ மீட்டர் முதல் 850 கிலோ மீட்டர்கள் உயரத்தில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. மனிட புவியியல் வரைபடவியல், வரைபடங்களைப் பற்றி அறிந்து, அவற்றை உருவாக்கும் முறை மற்றும் புவியியல் இவை இரண்டும் புவியை வரையறுக்க உதவியாய் இருந்தன. ஆய்வின் மூலம் இடங்கள் மற்றும் தூரங்களை தீர்மானிப்பதும் மற்றும் சிறு அளவில் பயண திசை தீர்மானம் செய்தல், மேலும் ஒன்றின் நிலையையும் அதன் திசையும் கண்டறிதல் யாவும் வரைபடவியல் மற்றும் புவியியலோடு சேர்ந்து வளர்ந்து தேவையான மற்றும் பொருந்தக்கூடிய விளக்கங்களை அளித்திருக்கின்றது. நவம்பர் 2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி புவியில் 6,740,000,000 மனிதர்கள் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகை 2013 ஆம் ஆண்டுக்குள் 7 பில்லியனை எட்டும் எனவும் 2050 ஆம் ஆண்டுக்குள் 9.2 பில்லியனை எட்டும் எனவும் நம்பப்படுகிறது. இந்த வளர்ச்சி வளர்ந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நெருக்கம் உலகில் வெவ்வேறு விதமாக உள்ளது, ஆனால் பெரும்பான்மையினர் ஆசியாவில் வாழ்கின்றனர். 2020 ஆம் ஆண்டிற்குள், உலக மக்கள் தொகையில் 60% மக்கள் கிராமபுரங்களில் அல்லாமல் நகரங்களில் வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புவியின் மேற்பரப்பில் எட்டில் ஒரு பங்கு மட்டுமே மனிதன் வாழ உகந்ததாக கணக்கெடுப்பு காட்டுகின்றது மேலும் மூன்றில் ஒரு பங்கு நீராலும் மற்றும் நிலத்தில் பாதி பாலைவனமாகவோ,(14%) உயர்ந்த மலைகளாகவோ (27%), அல்லது குறைந்த தகுதி உடைய இடங்களாகவோ உள்ளன. புவியின் வடகோடியில் இருக்கும் நிரந்தர குடியிருப்பு கனடா நாட்டிலுள்ள நுனாவட் (Nunavut) மாகாணத்திலுள்ள, எல்லெஸ்மியர் தீவிலுள்ள (Ellesmere) அலர்ட் (Alert) நகரமாகும்.(82°28′N) அதே போன்று தென் கோடியில் இருக்கும் குடியிருப்பு, அண்டார்க்டிகாவில் தென் துருவத்திலிருக்கும், அமண்ட்சன் - ஸ்காட் தென் துருவ நிலையம் ஆகும். (90°S) சுதந்திர ஏகாதிபத்ய நாடுகள் அன்டார்ட்டிகாவின் சில பகுதிகளைத் தவிர்த்து, பூமியின் மொத்த நிலப்பரப்பையும் ஆக்ரமித்துள்ளன. 2007 ஆம் ஆண்டின் படி பூமியில் 201 ஏகாதிபத்திய நாடுகள் உள்ளன இதில் 192 ஐக்கிய நாடுகளின் அங்கத்தினராக இருக்கும் நாடுகளும் அடங்கும். இதைத்தவிர 59 சார்ந்த இடங்களும், பல தனித்தியங்கும் இடங்களும் மற்றும் சர்ச்சைக்குரிய இடங்களும் இவற்றில் அடங்கும். புவியின் வரலாற்றில் அதன் மொத்த பரப்பும் ஓர் ஏகாதிபத்திய அரசின் கீழ் இருந்ததில்லை, ஆனால் பலமுறை பல நாடுகள் மொத்த உலக அதிகாரத்தையும் பெற முயற்சித்து தோல்வியுற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பு, இது நாடுகளுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை போர்கள் மூலமல்லாது சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ள நிறுவப்பட்டது. இருந்தாலும் இது ஓர் உலக அரசாங்கமன்று. ஐ.நா சபை சர்வதேச சட்டத்தை அளித்து, பொதுவான விதிகளைக் கடைபிடிக்கின்றது, மேலும் அங்கத்தினர்களால் ஒரு சேர தீர்மானிக்கும் போது ஆயுதமேற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கின்றனர், ஐநா சபை பெரும்பாலும் சர்வதேச அரசாங்க விவகாரங்களைத் தீர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. பூமியை சுற்றிய முதல் மனிதர் யூரி காகரின் ஆவார், இவர் ஏப்ரல் 12, 1961 அன்று இதைச் செய்தார். 2004ஆம் ஆண்டு வரை மொத்தம் 400 மனிதர்கள் வெளி அண்டத்திற்குச் சென்று மீண்டும் பூமியை அடைந்துள்ளனர், மேலும் இதில் அப்போலோ திட்டத்தின் கீழ் பனிரெண்டு பேர் சந்திரனில் நடந்துள்ளனர். பொதுவாக விண்வெளியில் வாழக்கூடிய மனிதர்களாக இருப்பவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் வசிப்பவர்கள் தான். இந்த மையத்தில் இருக்கும் மூன்று நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றனர். இதுவரையில் பூமியிலிருந்து அதிகமான தூரத்தை மனிதர்கள் 1970 ஆம் ஆண்டில் அப்போல்லோ 13 விண்கலத்தில் பூமியிலிருந்து 400,171 கி.மீ. தூரத்தில் கடந்துள்ளனர். கலாச்சார பார்வை புவியின் வானியல் சின்னம் ஒரு வட்டத்தைச் சார்ந்த கூட்டல் குறியை உள்ளடக்கி இருந்தது. தமிழில், ஆர்(பெரியது) → தர் → தரை(terra) என்றாகும். மற்றும், ஓலா → உலா → நெலா → நிலா → நிலம் என்றும் ஆகும். புவியை ஒரு தெய்வமாக, குறிப்பாக ஒரு பெண் தெய்வமாக உருவகப்படுத்தி வழிபடுகின்றனர். பல கலாச்சாரத்தில் பெண் தெய்வத்தை, தாய் மண் என்று அழைப்பதோடு, மனித வள தெய்வமாக உருவகப்படுத்துகின்றனர். பல மதங்களின் படைப்பு இதிகாசங்களில் புவி உருவான வரலாறு பற்றி கூறும் போது புவி அதிக சக்தி வாய்ந்த ஒரு தெய்வம் அல்லது தெய்வங்களால் உருவாக்கப்பட்டதாக உள்ளது. பல்வேறு சமயப் பிரிவுகள், அடிப்படைவாத பிராட்டஸ்டண்ட் பிரிவினர் அல்லது இஸ்லாம் சமயத்தவர், புனித உரைகளில் படைப்பு இதிகாசத்தை பற்றிய தமது விளக்கங்கள் உண்மையானவை அவை உலகம் உருவான விதம் மற்றும் உயிர்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய அறிவியல் விளக்கங்களுடன் அல்லது அவற்றிற்கு பதிலாக அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இத்தகைய வாதங்களை அறிவியல் சமூகம் மற்றும் மற்ற சமய குழுக்கள் எதிர்க்கின்றன. இதற்கு பிரபலமான எடுத்துக்காட்டு படைப்பு பரிணாம விவாதம். பண்டைய காலத்தில் பூமி தட்டையானது என்ற நம்பிக்கை வெவ்வேறு நிலைகளில் நிலவியுள்ளது ஆனால் இதுவே மனிதன் உலகை சுற்றி வந்து பார்த்த பிறகு உலகம் உருண்டையானது தான் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியது. விண்வெளி கலங்களில் வெளியே பறந்து அண்டத்திலிருந்து பூமியை பார்க்கும் போது அதன் பரிமாணம் வேறுபட்டதாய் தெரிந்தது, அதாவது தற்போது புவியின் உயிர்க்கோளம் என்பது உலகளாவிய நோக்கிலேயே கருதப்படுகின்றது. இதன் பிரதிபலிப்பு வளரும் சுற்றுசூழ் பாதுகாப்பு அமைப்புகள் மனிதரால் புவிக்கு ஏற்படும் மாறுதல்கள் மற்றும் கேடுகளைப் பற்றி கவலையை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்புகள் மேற்கோள்கள் ஆதார தொகுப்பு புற இணைப்புகள் பூமிக்கு இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்தது? விண்வெளி அதியசியங்கள் யுஎஸ்ஜிஎஸ் புவிகாந்தவியல் (Geomagnetism) திட்டம் நாசா (NASA) புவி கண்காணிப்பு மையம் நாசாவின் சூரிய அமைப்பு ஆய்வில் இருந்து புவி குறிப்பு பருவநிலை மாறுபாடு புவியின் உருவத்தில் மாறுபாட்டை ஏற்படுத்துகிறது - நாசா விண்வெளி வீரரின் புவி நிழற்பட நுழைவாயில் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்: நாசா புவியியல் நிலவியல் புவியொத்த கோள்கள் new:बँग्वारा
1565
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%28%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%29
செவ்வாய் (கோள்)
செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது.இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு புவிசார் கோளான இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன. 1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக மரினர் 4 வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர். கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன. இவை கடல்களும், கண்டங்களுமாக இருக்கலாம் என எண்ணினர். மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் என விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன. இது, போபோசு, டெய்மோசு என்னும் இரண்டு நிலவுகளைக் கொண்டுள்ளது. இவை சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. செவ்வாயின் டிரோசான் சிறுகோளான 5261 யுரேக்காவைப்போல் இவை செவ்வாயின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறுகோள்களாக இருக்கலாம். இயற்பியல் பண்புகள் செவ்வாயின் விட்டம் புவியின் விட்டத்தின் அரைப்பங்கு அளவு கொண்டது. இதன் அடர்த்தி புவியினதைக் காட்டிலும் குறைவானது. செவ்வாய் புவியின் கனவளவின் 15%க்குச் சமமான கனவளவையும், புவியின் திணிவின் 11%க்குச் சமமான திணிவையும் கொண்டது. இதன் மேற்பரப்பின் பரப்பளவு, புவியின் உலர் நிலப்பகுதியின் பரப்பளவைக் காட்டிலும் சற்றே குறைவானது. செவ்வாய் புதன் கோளிலும் பெரியதும் திணிவு கூடியதும் ஆகும். ஆனால், புதன், செவ்வாயிலும் கூடிய அடர்த்தி கொண்டது. நிலவியல் செவ்வாய், சிலிக்கன், ஆக்சிசன், உலோகங்கள், இன்னும் பிற பாறைகளை உருவாக்கும் தனிமங்களைக் கொண்ட கனிமங்களாலான ஒரு புவிசார் கோள். செவ்வாயின் மேற்பரப்பு பெரும்பாலும் தோலெயிட்டிக் பசாற்றுக் கற்களால் ஆனது. எனினும் சில பகுதிகள் பொதுவான பசாற்றுக் கற்களிலும் கூடிய சிலிக்காச் செறிவு கொண்டது. இது புவியின் எரிமலைப் படிகப் பாறையைப் போலவோ, சிலிக்காக் கண்ணாடியைப் போலவோ இருக்கக்கூடும். குறைவான ஒளிதெறிதிறன் கொண்ட பகுதிகளில் சரிவுவகை களிக்கற் செறிவுகளும், குறிந்த ஒளிதெறிதிறன் கொண்ட வடபகுதியில் வழமையான செறிவில் தகட்டுச் சிலிக்கேற்றுகளும், உயர்-சிலிக்கன் கண்ணாடியும் காணப்படுகின்றன. தென்பகுதி மேட்டு நிலங்களின் சில பகுதிகளில் கண்டறியக்கூடிய அளவில் உயர்-சிலிக்கன் பைரொட்சீன்கள் காணப்படுகின்றன. ஆங்காங்கே ஏமட்டைட்டு, ஆலிவைன்கள் என்பனவும் உள்ளன. மண் பீனிக்சு இறங்குகலம் அனுப்பிய தகவல்கள், செவ்வாயின் மண் காரத்தன்மை கொண்டது எனவும், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற தனிமங்களைக் கொண்டது எனவும் காட்டுகின்றன. புவியிலுள்ள தோட்டங்களில் காணப்படும் இவை தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இறங்குகலச் சோதனைகளின் படி மண் பி.எச் 8.3 கொண்டதுடன், பேர்குளோரேட்டு உப்புக்களையும் கொண்டது எனத் தெரிகிறது. செவ்வாயில் கீறல்கள் பொதுவாகக் காணப்படுவதுடன், கிண்ணக்குழிகள், பள்ளத்தாக்குகள் என்பவற்றின் சரிவுகளில் புதிய கீறல்களும் தோன்றுகின்றன. முதலில் கடுமையான நிறத்துடன் காணப்படும் இக்கீறல்கள் காலம் செல்லச் செல்ல மங்கலான நிறத்தை அடைகின்றன. சில வேளைகளில் சிறியனவாகத் தோன்றும் இக்கீறல்கள் பின்னர் பல நூறு மீட்டர்களுக்கு விரிவடைகின்றன. இக்கீறல்கள் தமது பாதையில் காணும் பாறைகள், பிற தடைகள் போன்றவற்றின் விளிம்போடு செல்வதையும் காண முடிகிறது. நீரியல் தாழ்வான பகுதிகளில் குறைந்த நேரத்துக்கு நீர் திரவ நிலையில் இருக்கக்கூடுமாயினும், குறைந்த வளியமுக்கம் காரணமாகச் செவ்வாயின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பது சாத்தியம் இல்லை. இரண்டு துருவங்களிலும் காணப்படும் பனி மூடிகள் பெரும்பாலும் நீரினால் ஆனதாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. தென் துருவப் பனி மூடியில் உள்ள பனிக்கட்டி உருகினால் உருவாகக்கூடிய நீர் செவ்வாயின் முழு மேற்பரப்பையும் 11 மீட்டர்களுக்கு மூடுவதற்குப் போதுமானதாக இருக்கும். செவ்வாயில் தெரியும் நிலத்தோற்றங்கள், ஒரு காலத்தில் அதன் மேற்பரப்பில் நீர்ம நீர் இருந்திருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. வெளிப்போக்குக் கால்வாய்கள் என அறியப்பட்ட பாரிய நீள்வடிவ நீரரிப்பு நிலங்கள், சுமார் 25 இடங்களில் செவ்வாய் மேற்பரப்புக்குக் குறுக்கே வெட்டிச் செல்கின்றன. நிலத்தடி நீத்தேக்கங்களில் இருந்து வெளியேறிய, பேரழிவை ஏற்படுத்திய நீர் வழிந்தோடியபோது ஏற்பட்ட மண்ணரிப்புத் தடங்களே இவை என நம்பப்படுகின்றது. எனினும் சிலர் இவை பனியாறுகள் அல்லது எரிமலைக் குழம்புகளினால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்புகின்றனர். இவற்றுள் மிகப் பிந்திய கால்வாய்கள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றின. பிற பகுதிகளில் காணப்படும் இத்தகைய காய்வாய் வலையமைப்புக்களில் வடிவத்தில் இருந்து, செவ்வாயின் தொடக்க காலத்தில் பெய்த மழையினால் அல்லது பனிக்கட்டி மழையினால் ஏற்பட்ட வழிந்தோடிய அடையாளங்களாக இவை இருக்கலாம் எனக் கருதுகின்றனர். செவ்வாயின் தட்பவெப்பம் செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் -88.3 வரை). ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படுகிறது. பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக இருக்கின்றன. இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் 'ட்ரை ஐஸ்' எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடாகும். மேலும் செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் மிகப்பெரிய பனிப்பள்ளம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் (டிசம்பர்-2018) இந்த பனிப்பள்ளத்தில் 5,905 அடி தடிமன் உள்ள பிரம்மாண்ட ஐஸ்பாறைகளைச் சுற்றி தண்ணீரும் உள்ளது16. பனிப்பாறை ஐரோப்பாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியின்போது இந்த பனிப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தில் தனது ஆய்வினை மேற்கொள்ளும் போது இந்த பனிப்பாறையானது இதன் கேமராவில் சிக்கியிருக்கிறது.16. வட துருவத்தில் சுமார் 50.1 மைல் நீளமும் 1.2 மைல் அகலமும் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு ஒன்று அமைந்திருக்கிறது. இதற்கு கொரோலோவ் (Korolev crater) பள்ளத்தாக்கு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற விண்வெளித்துறை பொறியாளரான Sergei Korolev வின் நினைவாக இந்தப்பெயர் சூட்டப்பட்டது. ஸ்புட்னிக், வோஸ்டாக் போன்ற விண்வெளி ஆராய்ச்சித்துறையில் மைல்கல் பதித்த திட்டங்களில் தலைமை ராக்கெட் ஏவுதளப் பொறியாளராகப் பணியாற்றியவர் கொரோலோவ். பீகிள்2 - பிரிட்டனின் செவ்வாய் பயணம் ஏற்கனவே 1997ம் ஆண்டு அமெரிக்காவின் பாத்ஃபைண்டர் வாகனம் செவ்வாயில் இறக்கிவிடப்பட்டுள்ளது. பிரிட்டனின் பீகிள்2 வாகனம், செவ்வாயில் பழமையான குன்றுகளுக்கும், வடக்கு சமவெளிக்கும் இடைப்பட்ட 'இசிடிஸ் ப்ளானிட்டியா' என்ற சமதளப் பிரதேசத்தில் இறக்கிவிட ஐரோப்பிய வான்வெளி ஏஜன்சி (ESA) டிசம்பர் 2000ல் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகிள்2வை ESAவின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்கிற ராக்கெட் ஜூன் 2003ல் கஜகஸ்தானில் உள்ள (ரஷ்ய) பைக்கானூர் காஸ்மோடிரோம் தளத்தில் இருந்து ஏவப்படும். பீகிள்2-வின் குறிக்கோள் செவ்வாயில் உயிர்கள் இருக்கின்றதா அல்லது எப்போதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு முடிவான விடை காண்பதே. அதற்கு 'இசிடிஸ் ப்ளாண்டியா' தான் மிகச் சிறந்த இடம், முன்பு எப்போதாவது செவ்வாயில் உயிர்கள் இருந்தால் அதன் பாஸில்கள் கிடைக்க இங்கு அருமையான வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பீகிள்2 செவ்வாயில் பாதுகாப்பாக தரையிறங்க 'ஏர் பேக்குகள்' உபயோகிக்கப்படும். செவ்வாயில் தரையில் படும் போது இந்த ஏர் பேக்குகள் பந்து போல் எம்பி விழுந்து நிலைத்து நின்ற பின் அதனுள் இருக்கும் வாயு வெளியேற்றப்பட்டு வாகனம் சேதமின்றி வெளிவரும். ரோவர் - அமெரிக்காவின் மற்றொரு செவ்வாய் ஆய்வுத் திட்டம் பீகிள்2 திட்டம் ஒரு புறமிருக்க, அமெரிக்கா இரண்டு ரோபோட்களை 2004ம் ஆண்டு செவ்வாயில் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு 'ரோவர்'களுமே முக்காலத்தில் அங்கு நீர், அதாவது திரவ வடிவில் நீர் ஆதாரங்களைத் தேடும் உபகரணங்களைப் பெற்றிருக்கும். திரவ வடிவில் நீரென்றால் அது நிச்சயம் 0 – 100 டிகிரிக்குள் தான் இருக்க முடியும். மேலும் நீரில் ஆக்ஸிஜனும் இருக்குமென்பதால் அதில் உயிர்கள் (ஒரு செல் உயிர்கள், பாக்டீரியாக்கள் முதல் பல வித உயிரினங்கள்) உண்டாகி வாழந்திருக்ககூடிய சாத்தியங்கள் அதிகமாக உண்டு. பூமியில் உயிரினம் முதன்முதலில் தோன்றியதே நீரில் தான் என்று நம்பப்படுகிறது. செவ்வாயில் தரையிறங்க வாய்ப்பான 185 இடங்கள் பட்டியலில் தொடங்கி தற்போது 30 மிக முக்கியமான இடங்கள் பட்டியலாகக் குறுக்கப்பட்டுள்ளது. இதில் சேதமின்றித் தரையிறங்க வாய்ப்பான இடம் என்பதை விட விஞ்ஞான ரீதியாக சான்றுகள் கிடைக்க வாய்ப்பான இடம் என்பதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏவுவதற்கு ஓராண்டு முன்பாக இறங்கும் இடம் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். தற்போது செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் 'மார்ஸ் க்ளோபல் சர்வேயர்' எனும் விண்கலம் அனுப்பும் தகவல்கள் இதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகள் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ரோவர் பயணத் திட்டங்கள் அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் கேப் காணவெரல் தளத்திலிருந்து முதல் ரோவர் ரோபோட் மே 30, 2003 லும், இரண்டாவது அதே வருடம் ஜூன் 27லிலும் ஏவப்படும். செவ்வாயில் முறையே 2004ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியிலும், பெப்ரவரி 8ம் தேதியிலும் தரையிறங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரோவர்கள் தற்போது MER-A மற்றும் MER-B என்றும் அழைக்கப்படுகிறது. (MER – Mars Exploration Rover). இரண்டு ரோவர்களும் ஒரு செவ்வாய் தினத்திற்கு (24.62 மணிகள்) 100 மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். ஆரோக்கியம் நல்லபடியாக இருந்தால் இவை 2004 ஏப்ரல் மாதத்தைத் தாண்டிக் கூட வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்புகள் உசாத்துணை வெளி இணைப்புகள் செவ்வாய்க்கிரகத்தின் நாசா ஆய்வுக்கலம் புதிய சாதனை நிலா முற்ற கட்டுரை 68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் புதிய தகவல் செவ்வாய் கிரகத்தில் பனிப்பாறைகள் கண்டுபிடிப்பு புவியொத்த கோள்கள் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
1566
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%29
வியாழன் (கோள்)
வியாழன் (Jupiter) என்பது கதிரவனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோளும் கதிரவ அமைப்பிலேயே மிகப்பெரிய கோளும் ஆகும். இதன் நிறை கதிரவனின் நிறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே ஆகும். எனினும் அது கதிரவ அமைப்பில் உள்ள மற்ற கோள்களை இணைத்தால் கிடைக்கும் நிறையை விட இரண்டரை மடங்கு அதிகமானதாகும். வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டும் வளிமப் பெருங்கோள்கள் ஆகும்; மற்ற இரு பெருங்கோள்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டும் பனிப் பெருங்கோள்கள் ஆகும். பழங்காலத்திலேயே வியாழன் கோளைப் பற்றி வானியலாளர்கள் அறிந்து வைத்திருந்தனர். கதிரவ ஒளியை எதிரொளிக்கும் திறமை காரணமாக நிலவு மற்றும் வெள்ளியை அடுத்து வியாழனே இரவு வானில் புலப்படும் மூன்றாவது வெளிச்சமான பொருளாக உள்ளது. இது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிக அதிக காந்த புலத்தை கொண்டுள்ளது. புறக்கோள்களில் ஒன்றான வியாழன் ஒரு வாயுக்கள் திரண்ட கோளம் ஆகும். இது கனமான உலோகங்கள் நிறைந்த பாறை உட்கருவைக் கொண்டிருந்தாலும், மற்ற பெருங்கோள்களைப் போல் இதன் மேற்பரப்பும் திடமின்றி உள்ளது. வியாழனுக்கு 79 அறியப்பட்ட நிலவுகள் உள்ளன, அவற்றுள் பெரிய நிலவான கனிமீடின் விட்டம் புதன் கோளை விடப் பெரியதாகும். புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது நொடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது. கதிரவ சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சுமார் 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் கதிரவனைச் சுற்றி வருகிறது.புவியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் கதிரவனைச் சுற்றும் வியாழன், புவியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை புவியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. இது புவியீர்ப்பு விசையை விட 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது. இந்த வளிமம் பெருங்கோளின் நடுவரை விட்டம் சுமார் 88,700 மைல். சற்று சப்பையான துருவ விட்டம் சுமார் 83,000 மைல். வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன. சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, சிறுகோள்கள், வால் விண்மீன்கள் போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது. ஹைட்ரஜன் வாயுவால் முதன்மையாகவும் மேலும் ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ள வியாழன், இவ்வளிமங்களின் கடும் அழுத்ததால் அழுத்தப்பட்ட நிலையில் சில தனிமப்பாறைகளாலான உள்ளகமும் கொண்டது. வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலீலியோவால் 1610ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 67 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவான கானிமீடு புதன் கோளை விடவும் பெரியது. வியாழன் தானியங்கி விண்கலங்களால் பலமுறை ஆயப்பட்டுள்ளது; குறிப்பாக துவக்க கால பயனியர், வொயஜெர் பறப்புகளின் வழியிலும் பின்னதாக கலிலியோ திட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. மிகவும் அண்மையில் புளூட்டோவிற்கு அனுப்பப்பட்ட நியூ ஹரைசன்ஸ் விண்கலத்தால் 2007 பெப்ரவரியின் பிற்பகுதியில் ஆராயப்பட்டது. இந்தத் தேடுகலம் வியாழனின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி முடுக்கம் பெற்றது. வருங்கால வியாழ அமைப்புகளின் தேடாய்வுகளில் இதன் துணைக்கோள் ஐரோப்பாவிலுள்ள பனிபடர்ந்த நீர்மக் கடல்களை ஆராய்வதும் அடங்கியிருக்கும். கட்டமைப்பு வியாழன் முதன்மையாக வளிமப், நீர்ம்ப் பொருட்களால் ஆனது. நான்கு வளிமக்கோள்களில் இதுவே மிகப்பெரியதாகும்; தவிரவும் சூரியக் குடும்பக் கோள்களிலேயே மிகப்பெரும் கோளாகவும் விளங்குகின்றது. இதன் விட்டம் நிலநடுக்கோட்டில் ஆக உள்ளது. 1.326 கி/செமீ3 அடர்வுள்ள வியாழன் வளிமக் கோள்களில் மிகவும் அடர்த்தியான இரண்டாவது கோளாக உள்ளது. இருப்பினும் தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் எவற்றையையும் விட இதன் அடர்வு குறைவாகும். வளிமண்டலம் வியாழனின் வளிமண்டலம் உயரத்திற்கு பரவியுள்ளது; இதுவே சூரிய குடும்பத்தில் கோளத்திற்கான மிகப்பெரும் வளிமண்டலம் ஆகும். வியாழனுக்கு தரைப்பரப்பு என்பது இல்லாமையால் வளிமண்டல அழுத்தம் இருக்குமிடம் வளிமண்டலத்தின் துவக்கமாகக் கொள்ளப்படுகின்றது. இது புவியில் தரைமட்ட அழுத்தத்தைப் போல பத்து மடங்கு ஆகும். மேகப் படலங்கள் வியாழனைச் சுற்றிலும் எப்போதும் அம்மோனியா படிகங்களும், அம்மோனிய ஐதரோசல்பைடும் அடங்கிய மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த மேகங்கள் வெப்பநிலை மாறு மண்டல எல்லையில் அமைந்துள்ளன; பல நிலநேர்க்கோடுகளில் பட்டைகளாக அமைந்துள்ளன. இவை வெளிர்வண்ண மண்டலங்களாகவும் கருவண்ண பட்டைகளாகவும் வகைப் பிரிக்கப்பட்டுள்ளன. முரண்படும் சுற்றுகை உள்ள இவற்றின் இடைவினைகளால் புயல்களும் கொந்தளிப்பு ஓட்டங்களும் ஏற்படுகின்றன. மண்டல வளித்தாரைகளில் வளிவேகங்கள் 100 மீ/சவி (360 கிமீ/ம) ஆக உள்ளன. இந்த மண்டலங்களின் அகலம், வண்ணம், தீவிரம் ஆண்டுக்காண்டு மாறுபடுவதாக கவனிக்கப்பட்டுள்ளது; ஆனால் இவை ஒரே இடத்தில் அமைந்திருப்பதால் வானியலாளர்களால் இவற்றை அடையாளப்படுத்துமுகமாக பெயர்கள் வழங்க இயன்றுள்ளது. மேகப்படலம் ஆழம் மட்டுமே உள்ளது; இவை குறைந்தது இரண்டு அடுக்குகளிலாவது உள்ளன: அடர்த்தியானக் கீழ்ப்பகுதியும் அடர்த்தி குறைவான, தெளிந்த மேற்பகுதியும். அம்மோனியாப் படலங்களுக்கு கீழே மெல்லிய நீர் மேகப் படலம் இருக்கலாம்; வியாழனில் அவதானிக்கப்பட்டுள்ள மின்னல் கீற்றுக்கள் இதற்கு வாய்ப்புள்ளதற்கு சான்றாக அமைகின்றன. இது நீரின் முனைவுத்தன்மையால் ஏற்படுகின்றது; மின்மங்கள் பிரிக்கப்பட்டு மின்னல்கள் ஏற்பட ஏதுவாகின்றது. வியாழனினில் காணப்படும் மின்னல்கள் புவியில் காணப்படுபவற்றை விட ஆயிரமடங்கு வலுவானவை. உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பத்தினால் நீர் மேகங்களில் இடிமின்னற்புயல்கள் ஏற்படலாம். வியாழனின் மேகங்களில் காணப்படும் இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு வண்ணங்கள் அவற்றிலுள்ள சேர்மங்களில் சூரியனின் புறஊதாக்கதிர் பட்டு ஏற்படுகின்றன. சேர்மங்களின் அளவுகள் சரியாக மதிப்பிடப்படவிட்டாலும் இவற்றில் பாசுபரசு, கந்தகம், மற்றும் நீரகக்கரிமங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த வண்ணமிகு சேர்மங்கள் கீழுள்ள மேக அடுக்கில் கலக்கின்றன. அம்மோனியா படிகமாகும் போது கீழுள்ள மேகங்கள் மறைக்கப்படுவதினால் மண்டலங்கள் உருவாகின்றன. வியாழனின் குறைந்த அச்சுச் சாய்வினால் இதன் முனையங்களில் எப்போதுமே குறைந்த சூரிய ஒளிதான் கிடைக்கின்றது. கோளின் உட்புற மேற்காவுகையால் ஆற்றல் முனையப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மேகப்படலங்களுக்கிடையேயான வெப்பத்தை சமப்படுத்தப்படுகின்றது. கோள் வளையங்கள் வியாழன் கோளுக்கு மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்படும் மெல்லிய வளையங்களைக் கொண்டுள்ளது: உட்புறத்தில் துருத்துகின்ற பொருட்களடங்கிய வளையம் பரிதிவட்டம் எனப்படுகின்றது, சற்றே ஒளிர்மை மிக்க முதன்மை வளையம், வெளிப்புற சிலந்திவலை இழையடுக்கு வளையம். இந்த வளையங்கள் சனிக்கோளின் பனியாலான வளையங்களைப் போலன்றி தூசியாலானவை. முதன்மை வளையம் அட்ராசுட்டீயா மற்றும் மெட்டிசு நிலவுகளிலிருந்து வெளியேறிய பொருட்களால் ஆகியிருக்கலாம். நிலவிற்கு பொதுவாக உள்ளிழுக்கப்ப வேண்டிய பொருட்கள் வியாழனின் வலிய ஈர்ப்பு சக்தியால் வெளியே இழுக்கப்பட்டிருக்கலாம். இந்தப் பொருட்கள் வியாழனைச் சுற்றி வருகையில் கூடிய தாக்கங்களால் புதிய பொருட்கள் சேருகின்றன. இதேபோல தேபெ, அமால்தியா நிலவுகளின் பொருட்களால் இரண்டு குறிப்பிடத்தக்க அங்கங்களை உடைய தூசான சிலந்தி வலையடுக்கு வெளிப்புற வளையம் உருவாகியிருக்கக் கூடும். அமால்தியா நிலவைச் சுற்றியும் அதன் மீது தாக்கியப் பொருட்களாலான பாறையாலான வளையமொன்று கண்டறியப்பட்டுள்ளது. மேற்கோள்கள் உசாத்துணைகள் வெளி இணைப்புகள் —A simulation of the 62 Jovian moons. June 2010 impact video வெளிக்கோள்கள் கோள்கள் வளிமப் பெருங்கோள்கள் வியாழன்
1567
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%20%28%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%29
சனி (கோள்)
சனி (Saturn) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சனி கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும். இதன் சராசரி ஆரம் புவியினுடையதை விட ஒன்பது மடங்காகும். புவியின் அடர்த்தியில் எட்டில் ஒருபங்கே இருந்தபோதும் தனது பெரிய அளவினால் புவியை விட 95 மடங்கு நிறையுடையதாக உள்ளது. சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இதன் உள்ளகம் இரும்பு, நிக்கல் மற்றும் பாறைகளும் (சிலிக்கான், ஆக்சிஜன் சேர்மங்கள்) கொண்ட கருவைச் சுற்றி தடிமனான மாழை நிலையிலான ஐதரசன், ஈலியம் அடுக்குகளும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. இக்கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா படிகங்கள் இருப்பதால் வெளிர் மஞ்சள் சாயை கொண்டுள்ளது. மாழைநில ஐதரசன் அடுக்கில் ஏற்படும் மின்னோட்டத்தால் சனிக்கோளிற்கு காந்தப் புலம் உருவாகின்றது. இந்தக் காந்தப்புலம் புவியினுடையதை விட வலிமை குறைந்து காணப்படுகின்றது; ஆனால் சனிக்கோளின் பெரிய விட்டத்தின் காரணமாக இதன் காந்தத் திருப்புத்திறன் புவியை விட 580 மடங்காக உள்ளது. சனியின் காந்தப்புலத்தின் வலிமை வியாழனின் காந்தப் புலவலிமையில் இருபதில் ஒன்றாக உள்ளது. சனியின் வெளிப்பரப்பு எவ்வித மேடுபள்ளங்களும் இல்லாது உள்ளது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்; ஆனால் நெப்டியூனில் நிலவும் காற்று வேகங்களை விடக் குறைவாகும். சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான கானிமீடுக்கு அடுத்தது இந்த டைட்டன். சனி சூரியனில் இருந்து 1.400.000.000 கிமீ (869,000,000 மைல்) தூரத்தில் உள்ளது. இது சூரியனின் சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றி முடிக்க அல்லது ஒரு சனி ஆண்டு என்பது பூமியின் 29.6 ஆண்டுகள் ஆகும். சனி கிரேக்கப் புராணங்களில் குரோநோசு (KRONOS) என அழைக்கப்பட்டது. உரோமானிய வேளாண்மைக் கடவுளான சாட்டர்னஸ் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. எனவே சனி கோளின் சின்னம் அரிவாள் சின்னம் (♄) ஆகும். இந்து தொன்மவியலில் சனிக் கடவுளின் பெயர் இக்கோளிற்கு சூட்டப்பட்டுள்ளது. இயல்பு பண்புகள் சனியின் புறப்பரப்பு பெரும்பாலும் வளிமங்களால் ஆனதால் அது வளி அரக்கக்கோள் எனப்படுகின்றது. இருப்பினும் சனிக்கு திண்மையான உள்ளகம் இருக்கலாம். சனி தன்னைத்தானே சுற்றுவதால் அதற்கு பருநடு நீளுருண்டை வடிவம் அமைந்துள்ளது; அதாவது, முனையங்களில் தட்டையாகவும் நடுப்பகுதியில் பருத்தும் காணப்படுகின்றது. நடுக்கோட்டு ஆரத்திற்கும் முனைய ஆரத்திற்கும் 10% வரையிலான வேறுபாடுள்ளது: முறையே 60,268 கிமீ எதிர் 54,364 கிமீ. சூரியக் குடும்பத்தின் மற்ற வளி அரக்கக்கோள்களான வியாழன், யுரேனசு, நெப்டியூனும் இதே போன்று பருத்தநடுவத்தைக் கொண்டுள்ள போதிலும் அவற்றில் இந்தளவிற்கு வேறுபாடில்லை. சூரியக் குடும்பத்தில் நீரை விட குறைவான அடர்த்தி உள்ளக் கோள் சனி மட்டுமே ஆகும்—ஏறத்தாழ 30% குறைவு. சனியின் கருவம் நீரை விட அடர்த்திக் கூடுதலாக இருப்பினும் வளிநிறைந்த புறப்பரப்பால் சராசரி சாரடர்த்தி 0.69 கி/செமீ3 ஆக உள்ளது. வியாழனின் நிறை புவியினுடையதை விட 318 மடங்காகும், ஆனால் சனியினுடையது 95 மடங்கே ஆகும். சூரியக் குடும்பத்தில் உள்ள மொத்த கோள்களின் நிறையில் 92% வியாழன்,சனிக் கோள்களினதாகும். சனவரி 8, 2015இல் சனிக்கோளின் மையத்தையும் அதன் நிலவுகளின் மையங்களையும் துல்லியமாக கண்டறிந்துள்ளதாக அறிவித்தது. சனியின் வளையங்கள் கிரக வளையங்களைக் கொண்ட சனி நம் சூரிய குடும்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமாக விளங்குகிறது . இவ்வளையங்கள் சனியின் பூமத்திய ரேகைக்கு மேல் சுமார் 6630 கி.மீ.இலிருந்து 120700 கி.மீ வரை நீண்டிருக்கிறது , அதன் சராசரி தடிமன் 20 மீட்டர் , மற்றும் தோலின் மாசுக்கள் கொண்ட 93 சதவிகிதம் நீர்-பனி உள்ளது . மீதமுள்ள 7சதவிகிதம் பளிங்குருவில்காபன் உள்ளது . வளையங்களில் சிறு புள்ளியிலிருந்து ஒரு வாகனத்தின் அளவு கொண்ட துணிக்கைகள் உள்ளன.சனியின் வளையங்களின் உருவாக்கம் குறித்து இருவேறு கோட்பாடுகள் உள்ளன . சனியின் அழிந்த நிலவின் எஞ்சிய பாகங்களே இவ்வளையங்கள் என்பது ஒரு கோட்பாடு . சனி உருவாகிய வான்புகையுருவின் எஞ்சிய பொருட்களே இவ்வளையங்கள் என்கிறது இன்னொரு கோட்பாடு. அக்டோபர் 6, 2009 அன்று சனியின் பூமத்திய தட்டிலிருந்து 27 கோணலாக , போஎபெயின் வட்டப்பாதையில் ஒரு வெளி வட்டு வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலம் சனியின் வளிமண்டலத்தின் வெளி பகுதியில் 3% ஹீலியம், 0.4% மீத்தேன் மற்றும் 0.01% அம்மோனியா, மற்றும் 96% ஹைட்ரஜன் கொண்டது. மற்றும் அசிடிலின்,ஈதேன் மற்றும் பாஸ்பீன் மிக சிறிய அளவில் உள்ளன. சனியின் மேகங்கள் வியாழன் காணப்படும் மேகப்பட்டைகள் போன்ற, ஒரு பட்டை முறையில் பூமத்தியரேகையில் பரந்துள்ளன. சனி குறைந்த மேக அடுக்கு நீர் பனி சேர்ந்து 10 கிமீ (6 மைல்) தடித்தது. இங்கு வெப்பநிலை மிகவும் குறைவாக உள்ளது.மேல் அடுக்கு, 77 கிமீ (48 மைல்) தடித்த, அம்மோனியம் ஹைட்ரோ சல்பைடு பனியால் உருவாக்கப்பட்டது.அதற்கு மேலே உயர்ந்த அடுக்கு ஹைட்ரஜனால் உருவாக்கப்பட்டது துணைக்கோள்கள் சனியைச் சுற்றி அறுபத்தி ஒன்று நிலவுகள் சுழல்கின்றன. இதில் தொண்ணூறு விழுக்காட்டை (இடை அளவில்) மிக பெரிய நிலவான டைட்டன் பங்களிக்கிறது. சனியின் இரண்டாவது பெரிய நிலவு ரியாவுக்கு சுற்றுவலயம் இருக்கிறது. மற்ற நிலவுகள் மிகவும் சிறியவை: 10 கிமீ விட்டத்தின் கீழ் முப்பத்து நான்கு நிலவுகள் மற்றும் 50 கிமீ விட்டத்தின் கீழ் பதினான்கு நிலவுகளும் இருக்கின்றன. சம்பிரதாயமாக, அனைத்து சனியின் நிலவுகளுக்கும் கிரேக்கக் கடவுள்களான டைடன்களின் பெயர்களே சூட்டப்படுகின்றன. சனியின் வரலாறு 1610 ல் கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி மூலம் அதன் வளையங்களை கண்டுபிடித்தார். அதைபார்த்து கலிலியோ வளையங்களை ஒன்றை மற்றொரு தொட்ட மூன்று தனித்தனி கிரகங்கள் என்று நினைத்தார்.1655 ஆம் ஆண்டில், கிறிஸ்டியன் ஹிகென்ஸ் சனியை சுற்றிய வளையங்களை கண்டறிந்த முதல் அதிகாரபூர்வ நபராவார். கலிலி காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், அவர் சனி "எங்கும் தொட்டு, ஒரு மெல்லிய, தட்டையான,வளையத்தால் சூழப்பட்டுள்ளது என கண்டறிந்தார். சனியில் தண்ணீர் சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில ஜெர்மனியைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் பால் ஹார்டாக் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சனி கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். சனி கிரகத்தை சுற்றி பல சந்திரன்கள் உள்ளன. அவற்றில் அக்கிரகத்தின் மேல் பகுதியில் ஆறாவது மிகப்பெரிய சந்திரன் உள்ளது. அது முழுவதும் ஐஸ் கட்டினால் மூடப்பட்டுள்ளது. இதனால் சனிகிரகத்தில் மழை பெய்து அதன் மூலம் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அங்கு ஆவி நிலையில் தண்ணீர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவை சனி கிரகத்தை சுற்றி வட்டவடிவில் உள்ளது. இது அந்த கிரகத்தின் சுற்றளவை விட 10 மடங்கு பெரியதாக உள்ளது. இதனால் இங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளி ஆய்வு சனி முதன்முதலில் செப்டம்பர் 1979 ல் பயனீர் 11 விண்கலம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.கிரகத்தின் மேகத்தின் மேலே 20,000 கி.மீ. ( 12,427 மைல்) உயரத்தில் பறந்தது.இது கிரகத்தின் மற்றும் அதன் சந்திரன்களை ஒரு சில புகைப்படங்கள் எடுத்தது ஆனால் தரம் குறைவாக இருந்தன.இதன்மூலம் F வளையம் என்று ஒரு புதிய , மெல்லிய வளையம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சன் நோக்கி பார்த்தபோது இருட்டில் மோதிரத்தை இடைவெளிகளை விட பிரகாசமான தோன்றும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.இது இடைவெளிகள் காலியாக இல்லை காட்டுகிறது. நவம்பர் 1980 இல் , வாயேஜர் 1 சனியை அடைந்தது.இந்த புகைப்படங்கள் நிலவுகள் மேற்பரப்பில் அம்சங்கள் காட்ட முடிந்தது.வாயேஜர் 1 டைட்டன் அடைந்தது.மற்றும் அதன் வளிமண்டலம் பற்றி நிறைய தகவல் கிடைத்தது. ஜூலை 1 , 2004 அன்று , காசினி ஹூவாஜன்ஸ் சனி சுற்றுப்பாதையில் நுழைந்தது. டிசம்பர் 25 , 2004 அன்று , ஹிகென்ஸ் டைட்டன் மேற்பரப்பில் நுழைந்து ஜனவரி 14 , 2005 அன்று அங்கு தரையிறங்கியது. இது ஒரு உலர் மேற்பரப்பில் இறங்கியது.மேலும் டைட்டனின் வடக்கு துருவத்தில் அருகே ஹைட்ரோகார்பன் ஏரிகள் அமைந்துள்ளது என்று ஜூலை 2006 ல் நிரூபிக்கப்பட்டது. காசினி 2005 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சனியில் நிகழும் மின்னல் பதிவுசெய்யப்பட்டது.இந்த மின்னகளின் சக்தி பூமியில் சக்தி வாய்ந்த மின்னலை விட 1,000 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் படிக்க கலீலியோ கலிலி - 1610-இல் சனி கிரகத்தின் வளையங்களை முதன் முதலில் கண்டறிந்தவர். மேற்கோள்களும் குறிப்புகளும் குறிப்புகள் மேற்சான்றுகள் வெளி இணைப்புகள் சனி கிரகத்தின் துணைக்கோள் என்ஸலாடஸ் - சீன வானொலிக்கட்டுரை சனியின் சந்திரன் (TITAN) - நிலா முற்றம் கட்டுரை சனியில் நீர் https://simple.wikipedia.org/wiki/Saturn_planet சனிப் பெயர்ச்சி என்பது என்ன? சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020 வளிமப் பெருங்கோள்கள்
1568
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81
யுரேனசு
இராகு (Uranus) சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் இயுரேனசின் நினைவாகப் பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாகக் கருதவில்லை. இயுரேனசு ஒரு பெரிய வளிக்கோளம் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஐதரசன், ஈலியம், மீத்தேன் போன்ற வளிகள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 பாகை செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் இயுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாள்கள் ஆகும். வரலாறு இக்கோள் 1781 ஆம் ஆண்டு வில்லியம் செருசல் என்ற வானியலாளரால் கண்டறியப்பட்டது. இது கண்டறியப்படும் வரை சனிக் கோளோடு சூரிய மண்டலம் முடிவடைந்து விட்டதாகவே கருதினர். இக்கோள் சூரிய மண்டலத்தின் விட்டத்தை இரண்டு மடங்கு பெரிதாக்கியது. அதன் காரணம் சூரியனுக்கும் சனிக் கோளுக்கும் இடைப்பட்ட தூரமே, சனிக் கோளுக்கும் இயுரேனசுக்கும் இருந்தது. தன்மைகள் இதனுடைய வளி மண்டலத்தில் 83 விழுக்காடு ஐதரசனும், 15 விழுக்காடு ஈலியமும் மீதி அளவில் மீத்தேனும் ஐதரோ கார்பன்களும் உள்ளது. அதனால் இது வளிக்கோள்களில் மூன்றாவது பெரிய அளவுடையது ஆகும். முதல் இரண்டு பெரிய வளிக்கோள்கள் வியாழனும், சனியும் ஆகும். உருளும் கோள் சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்கள் குறைவான சுழற்கோணத்தைக் கொண்டிருந்தாலும் இக்கோள் மட்டும் ஏறத்தாழ படுத்துக் கொண்டே சுழற்கிறது. அதனால் இதன் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் 42 வருடங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புண்டு. மற்ற கோள்கள் ஓரளவுக்கு செங்குத்து நிலையில் சுழல இக்கிரகம் மட்டும் படுத்துக் கொண்டே உருளும் காரணம் பற்றி ஆராய்ந்த வானியலாளர்கள் இக்கிரகம் முதலில் ஓரளவு செங்குத்தாக சுற்றியிருந்து பிறகு ஒரு மிகப்பெரும் விண்கல் மோதியதால் இது உருளும் நிலையில் சுழல ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகின்றனர். வளையங்கள் இக்கோளைச் சுற்றி 11 பெரு வளையங்களும் 2 நடுத்தர வளையங்களும் மேலும் சில சிறு வளையங்களும் உள்ளன. 1977 ஆம் ஆண்டில் இவ்வளையங்கள் கண்டறியப்பட்டன. இவ்வளையங்கள் நீர்ப்பனிக் கட்டிகளாலும், தூசிகளாலும், கற்பாறைகளாலும் ஆனவை. உள்ளிருந்து வெளியாக 1986U2R/ζ, 6, 5, 4, α, β, η, γ, δ, λ, ε, ν and μ. என்ற பெயரில் இவை அறியப்படுகின்றன. இந்த வளையங்களில் சில 2500 கிலோமீட்டர்கள் அகலம் கொண்டவையாகவும் உள்ளன. இந்த வளையங்கள் இயுரேனசு கோளின் வயதை விட வயதில் இளையதாய் இருப்பதால் இவை இயுரேனசு கோள் தோன்றிய போது உருவாகவில்லை. அதனால் இது முன்பு இயுரேனசின் நிலவாக இருந்த ஒரு துணைக்கோள். இயுரேனசின் ஈர்ப்பு விசையால் நொறுக்கவோ வேறு துணைக்கோள்களின் மீது மோதப்பட்டு பொடி ஆக்கப்பட்டிருக்கலாம். இப்பொடிகளே நாளடைவில் வளையங்களாக மாறின என்று ஆய்வாளர் கருதுகின்றனர். நிலவுகள் இக்கோளுக்கு உள்ள நிலவுகளுள் 27 கண்டறிந்து பெயரிடப்பட்டுளள்ளன. இவற்றுக்கு வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் ஆகியோரின் படைப்புகளில் உள்ள கதைமாந்தர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன. மிராண்டா, ஏரியல், அம்ப்ரியேல், டைட்டானியா ஆகியவை ஐந்து பெரிய நிலவுகளாகும். கார்டிலியா மற்றும் கப்டிலியா என்ற இரண்டு நிலவுகள் மற்ற நிலவுகள் போல் தனிச் சுற்றுப்பாதை இல்லாமல் மேற்கொடுத்த வளையங்கள் ஊடாக சுற்றி வருவதால் அவை யுரேனசு வளையங்களின் மேய்பான்கள் என்று கூறப்படுகிறது. இன்னும் பல நிலவுகள் கண்டறியப்படாமல் இருந்தன. யுரேனசின் நிலவுகள் கண்டறியப்பட்ட வரலாறு வாயேஜர் 2 1986 ஆம் ஆண்டில் நாசாவின் வாயேஜர் 2 யுரேனசை கடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இக்கோளைப் புரிந்து கொள்ள உதவியுள்ளன. இந்த விண்கலம் 145 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் 27 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. மேகங்கள் யுரேனசு நீல நிற மேகங்களால் சூழப்பட்டுள்ளது. இம் மேகங்கள் மீத்தேனால் ஆனவை. யுரேனசில் மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம் சூரியக்கோள்களில் மிகப்பெரும் நான்கு வாயுக்கோள்களில் இந்த யுரேனசு கோளே குறைந்த விடுபடு வேகத்தைக் கொண்டது. அதனால் இக்கோளுக்கான துணைக்கோள்களில் மானிடர் வசிக்க முடியுமா என ஆய்வுகள் நடந்து வருகிறது. ஒருவேளை அது சாத்தியப்படவில்லை என்றால் மானிடர் அக்கோளைச் சுற்றி வருமாறு மிதக்கும் நகரங்களை கட்டமைக்க நேரும். அப்போது மானிடர் செயற்கைக்கோள் 1 பார் அழுத்தத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Uranus at European Space Agency NASA's Uranus fact sheet Uranus Profile at NASA's Solar System Exploration site Planets – Uranus A kid's guide to Uranus. Uranus at Jet Propulsion Laboratory's planetary photojournal. (photos) Voyager at Uranus (photos) Uranus (Astronomy Cast homepage) (blog) Uranian system montage (photo) வளிமப் பெருங்கோள்கள்
1569
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D
நெப்டியூன்
நெப்டியூன் (Neptune) சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளாகும். நெப்டியூன் (Neptune) என்பதன் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும். சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் அடர்த்தி குறைந்த) யுரேனஸ்-ஐ விட சற்று பெரியது. சராசரியாக நெப்டியூன் சூரியனை 30.1 வாஅ தூரத்தில் சுற்றுகிறது. நெப்டியூன் ஒரு வாயுக்கோளாகும். இது சூரியக் குடும்பத்தில் விண்கள் பட்டைக்கு வெளியே உள்ளது. இதனைச் சுற்றி வாயுவினால் ஆன ஒரு வளையம் உள்ளது. நெப்டியூனின் பண்புகள் நெப்டியூன் திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 கி.மீ அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது. இது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் ஆகும். இதனால் வெறும் கண்களால் இதைக் காண முடிவதில்லை. நெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் நீடிக்கும். மேலும் நெப்டியூனில் ஓராண்டு என்பது அதாவது அது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 165 புவி வருடங்களாகும். நெப்டியூன் சூரியனிடமிருந்து மிக அதிக தூரத்திலுள்ள கிரகம் என்பதும் அது சூரியனைச் சுற்றி வரும் வேகம் குறைவு என்பதனாலுமே அதன் ஓராண்டு புவியின் ஒரு வருடத்தின் 165 மடங்காக உள்ள காரணமாகும். மேலும் நெப்டியூனின் சுற்றுப்பாதை ஏனைய கிரகங்களைப் போல் அல்லாது கிட்டத்தட்ட வட்டப் பாதையாகும். நெப்டியூனைச் சுற்றி இதுவரை 13 துணைக் கோள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானது ட்ரைட்டன் எனும் நிலவாகும். இந்நிலவு நெப்டியூனைப் பின்பக்கமாகச்சுற்றி வருகின்றது. மேலும் ட்ரைட்டனில் வறண்ட நிலங்களும் நைட்ரஜன் திரவ நிலையிலும் வெந்நீர் ஊற்றுக்களும் நிறைந்துள்ளன. சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களை அவதானித்த வண்ணம் அதைத் தாண்டிச் செல்லும் நோக்கத்துடன் நாசாவால் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 செய்மதி இறுதியாகக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் அனுப்பியது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தே ஆகும். மேலும் அது நெப்டியூனையும் அதன் துணைக்கோள் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது. கண்டுபிடிப்பு பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன். நெப்டியூன் கிரகம் கணித ரீதியான கணிப்புக்களினூடாகவே முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அதிக பார்க்கும் திறன் உள்ள தொலைக் காட்டிகள் இல்லாத காலமான 1846 ஆம் ஆண்டு யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப் பாதையில் அதன் ஈர்ப்பு நடுக்கம் காரணமாக அதன் அருகில் அதை ஒத்த கோளொன்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வில்லியம் எர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்புச் சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருப்பதாலே... அதன் ஈர்ப்புச் சக்தியின் காரணமாக யுரேனஸில் தள்ளாட்டம் ஏற்படுகிறது என கணித்தனர் வானவியலாளர்கள். சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது கணக்கை எடுத்துச் சென்றார். இளைஞரான ஆடம்ஸ் கூற்று சரியாக இருக்காது என நினைத்த எய்ரி, இதைச் சட்டை செய்யவில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார். அதன் இயக்குநரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்குச் செவி மடுத்த இயக்குநர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள், சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டுச் சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர். இவ்வாறு கணிதம் கொண்டு பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்டது நெப்டியூன். இதனைத் தொடர்ந்து கணித மற்றும் வானியல் அறிஞர்களான உர்பைன் லெ வெர்ரியர், ஜான் கூச் ஆடம்ஸ், யோகன் காத்ரிபைட் கால் ஆகியோரால் நெப்டியூனின் துணைக் கோளான ட்ரைட்டனும் கண்டு பிடிக்கப்பட்டது. இப்படி 1846-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து நெப்டியூன்,2011 ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதிதான் சூரியனை ஒரு முறை வலம் வந்துள்ளது. தன்னைத்தானே 19.1 நாளில் சுற்றும் நெப்டியூன், சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும். இதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் சொவால்டர் கண்டுபிடித்தார் என்று கூறுவோறும் உளர். குறிப்புகள் உசாத்துணை வெளி இணைப்புகள் NASA's Neptune fact sheet Neptune from Bill Arnett's nineplanets.org Neptune Astronomy Cast episode No. 63, includes full transcript. Neptune Profile at NASA's Solar System Exploration site Planets – Neptune A children's guide to Neptune. வளிமப் பெருங்கோள்கள்