text
stringlengths
135
969
<s>[INST]செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்[/INST] இது திருக்குறள் 301 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:31, வெகுளாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்லதனின் தீய பிற[/INST] இது திருக்குறள் 302 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:31, வெகுளாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீயபிறத்தல் அதனான் வரும்[/INST] இது திருக்குறள் 303 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:31, வெகுளாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்பகையும் உளவோ பிற[/INST] இது திருக்குறள் 304 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:31, வெகுளாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்[/INST] இது திருக்குறள் 305 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:31, வெகுளாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்[/INST] இது திருக்குறள் 306 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:31, வெகுளாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று[/INST] இது திருக்குறள் 307 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:31, வெகுளாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று[/INST] இது திருக்குறள் 308 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:31, வெகுளாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி யெனின்[/INST] இது திருக்குறள் 309 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:31, வெகுளாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை[/INST] இது திருக்குறள் 310 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:31, வெகுளாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னாசெய்யாமை மாசற்றார் கோள்[/INST] இது திருக்குறள் 311 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:32, இன்னா செய்யாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்[/INST] இது திருக்குறள் 312 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:32, இன்னா செய்யாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்[/INST] இது திருக்குறள் 313 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:32, இன்னா செய்யாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்[/INST] இது திருக்குறள் 314 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:32, இன்னா செய்யாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போற் போற்றாக் கடை[/INST] இது திருக்குறள் 315 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:32, இன்னா செய்யாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கட் செயல்[/INST] இது திருக்குறள் 316 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:32, இன்னா செய்யாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை[/INST] இது திருக்குறள் 317 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:32, இன்னா செய்யாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க் கின்னா செயல்[/INST] இது திருக்குறள் 318 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:32, இன்னா செய்யாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னாபிற்பகல் தாமே வரும்[/INST] இது திருக்குறள் 319 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:32, இன்னா செய்யாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்[/INST] இது திருக்குறள் 320 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:32, இன்னா செய்யாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும்[/INST] இது திருக்குறள் 321 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:33, கொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்தொகுத்தவற்று ளெல்லாந் தலை[/INST] இது திருக்குறள் 322 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:33, கொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று[/INST] இது திருக்குறள் 323 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:33, கொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்கொல்லாமை சூழும் நெறி[/INST] இது திருக்குறள் 324 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:33, கொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை[/INST] இது திருக்குறள் 325 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:33, கொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லா துயிருண்ணுங் கூற்று[/INST] இது திருக்குறள் 326 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:33, கொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிதின்னுயிர் நீக்கும் வினை[/INST] இது திருக்குறள் 327 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:33, கொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கங் கடை[/INST] இது திருக்குறள் 328 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:33, கொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து[/INST] இது திருக்குறள் 329 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:33, கொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர்[/INST] இது திருக்குறள் 330 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:33, கொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை[/INST] இது திருக்குறள் 331 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:34, நிலையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அருவிளிந் தற்று[/INST] இது திருக்குறள் 332 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:34, நிலையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்[/INST] இது திருக்குறள் 333 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:34, நிலையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்வாள துணர்வார்ப் பெறின்[/INST] இது திருக்குறள் 334 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:34, நிலையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யாப் படும்[/INST] இது திருக்குறள் 335 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:34, நிலையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை யுடைத்திவ் வுலகு[/INST] இது திருக்குறள் 336 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:34, நிலையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுபகோடியு மல்ல பல[/INST] இது திருக்குறள் 337 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:34, நிலையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றேஉடம்போ டுயிரிடை நட்பு[/INST] இது திருக்குறள் 338 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:34, நிலையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கிவிழிப்பது போலும் பிறப்பு[/INST] இது திருக்குறள் 339 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:34, நிலையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சி லிருந்த உயிர்க்கு[/INST] இது திருக்குறள் 340 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:34, நிலையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் அலன்[/INST] இது திருக்குறள் 341 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:35, துறவு, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டியற் பால பல[/INST] இது திருக்குறள் 342 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:35, துறவு, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு[/INST] இது திருக்குறள் 343 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:35, துறவு, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து[/INST] இது திருக்குறள் 344 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:35, துறவு, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க் குடம்பும் மிகை[/INST] இது திருக்குறள் 345 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:35, துறவு, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும்[/INST] இது திருக்குறள் 346 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:35, துறவு, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு[/INST] இது திருக்குறள் 347 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:35, துறவு, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர்[/INST] இது திருக்குறள் 348 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:35, துறவு, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும்[/INST] இது திருக்குறள் 349 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:35, துறவு, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு[/INST] இது திருக்குறள் 350 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:35, துறவு, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்மருளானாம் மாணாப் பிறப்பு[/INST] இது திருக்குறள் 351 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:36, மெய்யுணர்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு[/INST] இது திருக்குறள் 352 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:36, மெய்யுணர்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வான நணிய துடைத்து[/INST] இது திருக்குறள் 353 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:36, மெய்யுணர்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர் வில்லா தவர்க்கு[/INST] இது திருக்குறள் 354 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:36, மெய்யுணர்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு[/INST] இது திருக்குறள் 355 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:36, மெய்யுணர்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி[/INST] இது திருக்குறள் 356 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:36, மெய்யுணர்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு[/INST] இது திருக்குறள் 357 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:36, மெய்யுணர்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்செம்பொருள் காண்ப தறிவு[/INST] இது திருக்குறள் 358 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:36, மெய்யுணர்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய்[/INST] இது திருக்குறள் 359 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:36, மெய்யுணர்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமங் கெடக்கெடு நோய்[/INST] இது திருக்குறள் 360 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:36, மெய்யுணர்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்தவாஅப் பிறப்பீனும் வித்து[/INST] இது திருக்குறள் 361 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:37, அவா அறுத்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்[/INST] இது திருக்குறள் 362 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:37, அவா அறுத்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்ப தில்[/INST] இது திருக்குறள் 363 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:37, அவா அறுத்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும்[/INST] இது திருக்குறள் 364 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:37, அவா அறுத்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்அற்றாக அற்ற திலர்[/INST] இது திருக்குறள் 365 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:37, அவா அறுத்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா[/INST] இது திருக்குறள் 366 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:37, அவா அறுத்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும்[/INST] இது திருக்குறள் 367 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:37, அவா அறுத்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்தவாஅது மேன்மேல் வரும்[/INST] இது திருக்குறள் 368 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:37, அவா அறுத்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்துன்பத்துள் துன்பங் கெடின்[/INST] இது திருக்குறள் 369 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:37, அவா அறுத்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும்[/INST] இது திருக்குறள் 370 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:37, அவா அறுத்தல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்று மடி[/INST] இது திருக்குறள் 371 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும் ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:38, ஊழ், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூ ழுற்றக் கடை[/INST] இது திருக்குறள் 372 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:38, ஊழ், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்[/INST] இது திருக்குறள் 373 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:38, ஊழ், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]இருவே றுலகத் தியற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு[/INST] இது திருக்குறள் 374 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:38, ஊழ், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்நல்லவாஞ் செல்வஞ் செயற்கு[/INST] இது திருக்குறள் 375 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:38, ஊழ், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம[/INST] இது திருக்குறள் 376 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:38, ஊழ், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடிதொகுத்தார்க்குந் துய்த்த லரிது[/INST] இது திருக்குறள் 377 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:38, ஊழ், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்[/INST] இது திருக்குறள் 378 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:38, ஊழ், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்[/INST] இது திருக்குறள் 379 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:38, ஊழ், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்[/INST] இது திருக்குறள் 380 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:38, ஊழ், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசரு ளேறு[/INST] இது திருக்குறள் 381 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:39, இறைமாட்சி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தற் கியல்பு[/INST] இது திருக்குறள் 382 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் – இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:39, இறைமாட்சி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்நீங்கா நிலனாள் பவற்கு[/INST] இது திருக்குறள் 383 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:39, இறைமாட்சி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமான முடைய தரசு[/INST] இது திருக்குறள் 384 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:39, இறைமாட்சி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்தவகுத்தலும் வல்ல தரசு[/INST] இது திருக்குறள் 385 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:39, இறைமாட்சி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம்[/INST] இது திருக்குறள் 386 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:39, இறைமாட்சி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு[/INST] இது திருக்குறள் 387 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:39, இறைமாட்சி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கிறையென்று வைக்கப் படும்[/INST] இது திருக்குறள் 388 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:39, இறைமாட்சி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கு முலகு[/INST] இது திருக்குறள் 389 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:39, இறைமாட்சி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி[/INST] இது திருக்குறள் 390 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:39, இறைமாட்சி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக[/INST] இது திருக்குறள் 391 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:40, கல்வி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்கண்ணென்ப வாழும் உயிர்க்கு[/INST] இது திருக்குறள் 392 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:40, கல்வி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்[/INST] இது திருக்குறள் 393 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:40, கல்வி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்[/INST] இது திருக்குறள் 394 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:40, கல்வி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்[/INST] இது திருக்குறள் 395 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:40, கல்வி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு[/INST] இது திருக்குறள் 396 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:40, கல்வி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு[/INST] இது திருக்குறள் 397 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:40, கல்வி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்கெழுமையும் ஏமாப் புடைத்து[/INST] இது திருக்குறள் 398 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் – எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:40, கல்வி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]தாமின் புறுவ துலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்[/INST] இது திருக்குறள் 399 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:40, கல்வி, பால்: பொருட்பால்</s>
<s>[INST]கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை[/INST] இது திருக்குறள் 400 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:40, கல்வி, பால்: பொருட்பால்</s>