text
stringlengths
135
969
<s>[INST]செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது[/INST] இது திருக்குறள் 101 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாதுஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:“வாராது வந்த மாமணி” என்பதுபோல், “செய்யாமற் செய்த உதவி” என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:11, செய்ந்நன்றியறிதல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது[/INST] இது திருக்குறள் 102 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:11, செய்ந்நன்றியறிதல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது[/INST] இது திருக்குறள் 103 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:11, செய்ந்நன்றியறிதல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்[/INST] இது திருக்குறள் 104 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:11, செய்ந்நன்றியறிதல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]உதவி வரைத்தன் றுதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து[/INST] இது திருக்குறள் 105 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:11, செய்ந்நன்றியறிதல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு[/INST] இது திருக்குறள் 106 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:11, செய்ந்நன்றியறிதல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு[/INST] இது திருக்குறள் 107 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:11, செய்ந்நன்றியறிதல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று[/INST] இது திருக்குறள் 108 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:11, செய்ந்நன்றியறிதல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன் றுள்ளக் கெடும்[/INST] இது திருக்குறள் 109 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:11, செய்ந்நன்றியறிதல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு[/INST] இது திருக்குறள் 110 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லைஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:11, செய்ந்நன்றியறிதல், பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்பாற்பட் டொழுகப் பெறின்[/INST] இது திருக்குறள் 111 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:12, நடுவு நிலைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப் புடைத்து[/INST] இது திருக்குறள் 112 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:12, நடுவு நிலைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே யொழிய விடல்[/INST] இது திருக்குறள் 113 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:12, நடுவு நிலைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]தக்கார் தகவிலர் என்ப தவரவர்எச்சத்தாற் காணப் படும்[/INST] இது திருக்குறள் 114 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:12, நடுவு நிலைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க் கணி[/INST] இது திருக்குறள் 115 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:12, நடுவு நிலைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்[/INST] இது திருக்குறள் 116 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:12, நடுவு நிலைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]கெடுவாக வையா துலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு[/INST] இது திருக்குறள் 117 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:12, நடுவு நிலைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்கோடாமை சான்றோர்க் கணி[/INST] இது திருக்குறள் 118 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:12, நடுவு நிலைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்[/INST] இது திருக்குறள் 119 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:12, நடுவு நிலைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்[/INST] இது திருக்குறள் 120 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:12, நடுவு நிலைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்[/INST] இது திருக்குறள் 121 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:13, அடக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு[/INST] இது திருக்குறள் 122 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:13, அடக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்தாற்றின் அடங்கப் பெறின்[/INST] இது திருக்குறள் 123 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:13, அடக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது[/INST] இது திருக்குறள் 124 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:13, அடக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து[/INST] இது திருக்குறள் 125 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:13, அடக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்து[/INST] இது திருக்குறள் 126 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் – அரணாக இருந்து உதவும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:13, அடக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு[/INST] இது திருக்குறள் 127 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:13, அடக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்றாகா தாகி விடும்[/INST] இது திருக்குறள் 128 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:13, அடக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு[/INST] இது திருக்குறள் 129 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:13, அடக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து[/INST] இது திருக்குறள் 130 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:13, அடக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்[/INST] இது திருக்குறள் 131 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:14, ஒழுக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை[/INST] இது திருக்குறள் 132 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:14, ஒழுக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்[/INST] இது திருக்குறள் 133 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:14, ஒழுக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்[/INST] இது திருக்குறள் 134 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:14, ஒழுக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லைஒழுக்க மிலான்கண் உயர்வு[/INST] இது திருக்குறள் 135 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:14, ஒழுக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்து[/INST] இது திருக்குறள் 136 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:14, ஒழுக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவ ரெய்தாப் பழி[/INST] இது திருக்குறள் 137 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:14, ஒழுக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்[/INST] இது திருக்குறள் 138 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:14, ஒழுக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்[/INST] இது திருக்குறள் 139 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:14, ஒழுக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்கல்லா ரறிவிலா தார்[/INST] இது திருக்குறள் 140 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:14, ஒழுக்கம் உடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தறம்பொருள் கண்டார்க ணில்[/INST] இது திருக்குறள் 141 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:15, பிறனில் விழையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடைநின்றாரிற் பேதையா ரில்[/INST] இது திருக்குறள் 142 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லைஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:15, பிறனில் விழையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்[/INST] இது திருக்குறள் 143 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:15, பிறனில் விழையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்[/INST] இது திருக்குறள் 144 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:15, பிறனில் விழையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி[/INST] இது திருக்குறள் 145 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:15, பிறனில் விழையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்[/INST] இது திருக்குறள் 146 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:15, பிறனில் விழையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்பெண்மை நயவா தவன்[/INST] இது திருக்குறள் 147 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனேஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:15, பிறனில் விழையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கறனென்றோ ஆன்ற வொழுக்கு[/INST] இது திருக்குறள் 148 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:15, பிறனில் விழையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறற்குரியாள் தோள்தோயா தார்[/INST] இது திருக்குறள் 149 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரேஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:15, பிறனில் விழையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று[/INST] இது திருக்குறள் 150 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:15, பிறனில் விழையாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை[/INST] இது திருக்குறள் 151 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:16, பொறையுடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பொறுத்த லிறப்பினை யென்றும் அதனைமறத்த லதனினும் நன்று[/INST] இது திருக்குறள் 152 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:16, பொறையுடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை[/INST] இது திருக்குறள் 153 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வதுஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:16, பொறையுடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்[/INST] இது திருக்குறள் 154 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:16, பொறையுடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து[/INST] இது திருக்குறள் 155 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:16, பொறையுடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்[/INST] இது திருக்குறள் 156 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:16, பொறையுடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்தறனல்ல செய்யாமை நன்று[/INST] இது திருக்குறள் 157 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லதுஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:16, பொறையுடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்தகுதியான் வென்று விடல்[/INST] இது திருக்குறள் 158 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:16, பொறையுடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்[/INST] இது திருக்குறள் 159 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:16, பொறையுடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொ னோற்பாரிற் பின்[/INST] இது திருக்குறள் 160 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:16, பொறையுடைமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்தழுக்கா றிலாத இயல்பு[/INST] இது திருக்குறள் 161 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:17, அழுக்காறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின்[/INST] இது திருக்குறள் 162 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:17, அழுக்காறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்பேணா தழுக்கறுப் பான்[/INST] இது திருக்குறள் 163 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:17, அழுக்காறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக் கறிந்து[/INST] இது திருக்குறள் 164 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:17, அழுக்காறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்வழுக்கியுங் கேடீன் பது[/INST] இது திருக்குறள் 165 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:17, அழுக்காறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉ மின்றிக் கெடும்[/INST] இது திருக்குறள் 166 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:17, அழுக்காறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்[/INST] இது திருக்குறள் 167 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:17, அழுக்காறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்[/INST] இது திருக்குறள் 168 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:17, அழுக்காறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்[/INST] இது திருக்குறள் 169 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவைஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்கஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:17, அழுக்காறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்[/INST] இது திருக்குறள் 170 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லைஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:17, அழுக்காறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்[/INST] இது திருக்குறள் 171 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:18, வெஃகாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்நடுவன்மை நாணு பவர்[/INST] இது திருக்குறள் 172 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:18, வெஃகாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரேமற்றின்பம் வேண்டு பவர்[/INST] இது திருக்குறள் 173 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:18, வெஃகாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர்[/INST] இது திருக்குறள் 174 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:18, வெஃகாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின்[/INST] இது திருக்குறள் 175 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:18, வெஃகாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்[/INST] இது திருக்குறள் 176 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:18, வெஃகாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்[/INST] இது திருக்குறள் 177 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:18, வெஃகாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்[/INST] இது திருக்குறள் 178 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:18, வெஃகாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்திறனறிந் தாங்கே திரு[/INST] இது திருக்குறள் 179 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:18, வெஃகாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்வேண்டாமை யென்னுஞ் செருக்கு[/INST] இது திருக்குறள் 180 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:18, வெஃகாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்புறங்கூறா னென்றல் இனிது[/INST] இது திருக்குறள் 181 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லதுஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:19, புறங்கூறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அறனழீஇ யல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை[/INST] இது திருக்குறள் 182 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:19, புறங்கூறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்அறங்கூறும் ஆக்கந் தரும்[/INST] இது திருக்குறள் 183 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:19, புறங்கூறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்கமுன்னின்று பின்னோக்காச் சொல்[/INST] இது திருக்குறள் 184 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:19, புறங்கூறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்[/INST] இது திருக்குறள் 185 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:19, புறங்கூறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்திறன்தெரிந்து கூறப் படும்[/INST] இது திருக்குறள் 186 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:19, புறங்கூறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்[/INST] இது திருக்குறள் 187 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:19, புறங்கூறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்என்னைகொல் ஏதிலார் மாட்டு[/INST] இது திருக்குறள் 188 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:19, புறங்கூறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்புன்சொ லுரைப்பான் பொறை[/INST] இது திருக்குறள் 189 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:19, புறங்கூறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னு முயிர்க்கு[/INST] இது திருக்குறள் 190 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:19, புறங்கூறாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்[/INST] இது திருக்குறள் 191 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:20, பயனில சொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கட் செய்தலிற் றீது[/INST] இது திருக்குறள் 192 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:20, பயனில சொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நயனில னென்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை[/INST] இது திருக்குறள் 193 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:20, பயனில சொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்து[/INST] இது திருக்குறள் 194 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:20, பயனில சொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்[/INST] இது திருக்குறள் 195 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:20, பயனில சொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி யெனல்[/INST] இது திருக்குறள் 196 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:20, பயனில சொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்று[/INST] இது திருக்குறள் 197 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:20, பயனில சொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்பெரும்பய னில்லாத சொல்[/INST] இது திருக்குறள் 198 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:20, பயனில சொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்[/INST] இது திருக்குறள் 199 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:20, பயனில சொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>
<s>[INST]சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்[/INST] இது திருக்குறள் 200 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:20, பயனில சொல்லாமை, பால்: அறத்துப்பால்</s>