text
stringlengths 135
969
|
---|
<s>[INST]தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை யென்னுஞ் செறுக்கு[/INST] இது திருக்குறள் 201 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:21, தீவினையச்சம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்[/INST] இது திருக்குறள் 202 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:21, தீவினையச்சம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அறிவினு ளெல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்குஞ் செய்யா விடல்[/INST] இது திருக்குறள் 203 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:21, தீவினையச்சம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு[/INST] இது திருக்குறள் 204 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:21, தீவினையச்சம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இலனென்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றுப் பெயர்த்து[/INST] இது திருக்குறள் 205 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:21, தீவினையச்சம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்[/INST] இது திருக்குறள் 206 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:21, தீவினையச்சம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென் றடும்[/INST] இது திருக்குறள் 207 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:21, தீவினையச்சம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயா தடியுறைந் தற்று[/INST] இது திருக்குறள் 208 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:21, தீவினையச்சம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்[/INST] இது திருக்குறள் 209 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:21, தீவினையச்சம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்[/INST] இது திருக்குறள் 210 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:21, தீவினையச்சம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டென்னாற்றுங் கொல்லோ உலகு[/INST] இது திருக்குறள் 211 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:22, ஒப்புரவறிதல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு[/INST] இது திருக்குறள் 212 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:22, ஒப்புரவறிதல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற[/INST] இது திருக்குறள் 213 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறர்க்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:22, ஒப்புரவறிதல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்[/INST] இது திருக்குறள் 214 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:22, ஒப்புரவறிதல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு[/INST] இது திருக்குறள் 215 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:22, ஒப்புரவறிதல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்[/INST] இது திருக்குறள் 216 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:22, ஒப்புரவறிதல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்[/INST] இது திருக்குறள் 217 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:22, ஒப்புரவறிதல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்கடனறி காட்சி யவர்[/INST] இது திருக்குறள் 218 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:22, ஒப்புரவறிதல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீரசெய்யா தமைகலா வாறு[/INST] இது திருக்குறள் 219 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:22, ஒப்புரவறிதல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து[/INST] இது திருக்குறள் 220 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:22, ஒப்புரவறிதல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்குறியெதிர்ப்பை நீர துடைத்து[/INST] இது திருக்குறள் 221 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:23, ஈ.கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று[/INST] இது திருக்குறள் 222 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:23, ஈ.கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள[/INST] இது திருக்குறள் 223 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:23, ஈ.கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணு மளவு[/INST] இது திருக்குறள் 224 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:23, ஈ.கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியைமாற்றுவா ராற்றலிற் பின்[/INST] இது திருக்குறள் 225 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:23, ஈ.கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி[/INST] இது திருக்குறள் 226 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:23, ஈ.கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்தீப்பிணி தீண்ட லரிது[/INST] இது திருக்குறள் 227 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:23, ஈ.கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்[/INST] இது திருக்குறள் 228 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:23, ஈ.கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமிய ருணல்[/INST] இது திருக்குறள் 229 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:23, ஈ.கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈத லியையாக் கடை[/INST] இது திருக்குறள் 230 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:23, ஈ.கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஈத லிசைபட வாழ்தல் அதுவல்லதூதிய மில்லை உயிர்க்கு[/INST] இது திருக்குறள் 231 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:24, புகழ், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்[/INST] இது திருக்குறள் 232 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:24, புகழ், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்பொன்றாது நிற்பதொன் றில்[/INST] இது திருக்குறள் 233 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:24, புகழ், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தே ளுலகு[/INST] இது திருக்குறள் 234 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:24, புகழ், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது[/INST] இது திருக்குறள் 235 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:24, புகழ், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று[/INST] இது திருக்குறள் 236 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:24, புகழ், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவ தெவன்[/INST] இது திருக்குறள் 237 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:24, புகழ், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்[/INST] இது திருக்குறள் 238 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:24, புகழ், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்[/INST] இது திருக்குறள் 239 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:24, புகழ், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்[/INST] இது திருக்குறள் 240 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:24, புகழ், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணு முள[/INST] இது திருக்குறள் 241 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:25, அருளுடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை[/INST] இது திருக்குறள் 242 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:25, அருளுடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்[/INST] இது திருக்குறள் 243 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:25, அருளுடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்பதன்னுயி ரஞ்சும் வினை[/INST] இது திருக்குறள் 244 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:25, அருளுடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்குமல்லன்மா ஞாலங் கரி[/INST] இது திருக்குறள் 245 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:25, அருளுடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார்[/INST] இது திருக்குறள் 246 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:25, அருளுடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லாகி யாங்கு[/INST] இது திருக்குறள் 247 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:25, அருளுடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது[/INST] இது திருக்குறள் 248 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:25, அருளுடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்[/INST] இது திருக்குறள் 249 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:25, அருளுடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேற் செல்லு மிடத்து[/INST] இது திருக்குறள் 250 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:25, அருளுடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்[/INST] இது திருக்குறள் 251 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:26, புலால் மறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு[/INST] இது திருக்குறள் 252 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:26, புலால் மறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்உடல்சுவை யுண்டார் மனம்[/INST] இது திருக்குறள் 253 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:26, புலால் மறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்பொருளல்ல தவ்வூன் தினல்[/INST] இது திருக்குறள் 254 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதேஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:26, புலால் மறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யா தளறு[/INST] இது திருக்குறள் 255 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:26, புலால் மறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்[/INST] இது திருக்குறள் 256 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:26, புலால் மறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ண துணர்வார்ப் பெறின்[/INST] இது திருக்குறள் 257 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:26, புலால் மறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்[/INST] இது திருக்குறள் 258 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:26, புலால் மறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று[/INST] இது திருக்குறள் 259 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:26, புலால் மறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும்[/INST] இது திருக்குறள் 260 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:26, புலால் மறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு[/INST] இது திருக்குறள் 261 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் “தவம்” என்று கூறப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:27, தவம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனைஅஃதிலார் மேற்கொள் வது[/INST] இது திருக்குறள் 262 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:27, தவம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்மற்றை யவர்கள் தவம்[/INST] இது திருக்குறள் 263 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:27, தவம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்எண்ணின் தவத்தான் வரும்[/INST] இது திருக்குறள் 264 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:27, தவம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்[/INST] இது திருக்குறள் 265 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:27, தவம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு[/INST] இது திருக்குறள் 266 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:27, தவம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு[/INST] இது திருக்குறள் 267 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:27, தவம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்[/INST] இது திருக்குறள் 268 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:“தனது உயிர்” என்கிற பற்றும், “தான்” என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:27, தவம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு[/INST] இது திருக்குறள் 269 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:27, தவம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்[/INST] இது திருக்குறள் 270 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:27, தவம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும்[/INST] இது திருக்குறள் 271 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:28, கூடா ஒழுக்கம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்தானறி குற்றப் படின்[/INST] இது திருக்குறள் 272 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:28, கூடா ஒழுக்கம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று[/INST] இது திருக்குறள் 273 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:28, கூடா ஒழுக்கம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று[/INST] இது திருக்குறள் 274 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:28, கூடா ஒழுக்கம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றேதம் பலவுந் தரும்[/INST] இது திருக்குறள் 275 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:28, கூடா ஒழுக்கம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணா ரில்[/INST] இது திருக்குறள் 276 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:28, கூடா ஒழுக்கம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்து[/INST] இது திருக்குறள் 277 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:28, கூடா ஒழுக்கம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மனத்தது மாசாக மாண்டார்நீ ராடிமறைந்தொழுகு மாந்தர் பலர்[/INST] இது திருக்குறள் 278 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் – இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:28, கூடா ஒழுக்கம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனைவினைபடு பாலாற் கொளல்[/INST] இது திருக்குறள் 279 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும் அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:28, கூடா ஒழுக்கம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்த தொழித்து விடின்[/INST] இது திருக்குறள் 280 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:28, கூடா ஒழுக்கம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்கள்ளாமை காக்கதன் நெஞ்சு[/INST] இது திருக்குறள் 281 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:29, கள்ளாமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்கள்ளத்தால் கள்வே மெனல்[/INST] இது திருக்குறள் 282 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:29, கள்ளாமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]களவினா லாகிய ஆக்கம் அளவிறந்தாவது போலக் கெடும்[/INST] இது திருக்குறள் 283 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:29, கள்ளாமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமந் தரும்[/INST] இது திருக்குறள் 284 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:29, கள்ளாமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்[/INST] இது திருக்குறள் 285 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:29, கள்ளாமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்கன்றிய காத லவர்[/INST] இது திருக்குறள் 286 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:29, கள்ளாமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்க ணில்[/INST] இது திருக்குறள் 287 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:29, கள்ளாமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்களவறிந்தார் நெஞ்சில் கரவு[/INST] இது திருக்குறள் 288 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:29, கள்ளாமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர்[/INST] இது திருக்குறள் 289 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:29, கள்ளாமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்தள்ளாது புத்தே ளுலகு[/INST] இது திருக்குறள் 290 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:29, கள்ளாமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்தீமை யிலாத சொலல்[/INST] இது திருக்குறள் 291 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:30, வாய்மை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்[/INST] இது திருக்குறள் 292 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:30, வாய்மை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்[/INST] இது திருக்குறள் 293 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:30, வாய்மை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்[/INST] இது திருக்குறள் 294 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:30, வாய்மை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை[/INST] இது திருக்குறள் 295 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:30, வாய்மை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்[/INST] இது திருக்குறள் 296 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:30, வாய்மை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று[/INST] இது திருக்குறள் 297 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:30, வாய்மை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்[/INST] இது திருக்குறள் 298 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:30, வாய்மை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு[/INST] இது திருக்குறள் 299 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:30, வாய்மை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற[/INST] இது திருக்குறள் 300 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:30, வாய்மை, பால்: அறத்துப்பால்</s> |
Subsets and Splits