text
stringlengths 1
20.1k
|
---|
நடிகர் விக்கி கவுஷல் நடிக்கும் 'தி இம்மார்டல் அஸ்வத்தாமா' படத்தை தயாரிக்கும் ரோனி ஸ்க்ரூவாலா மோஷன் பிக்சர்ஸின் செய்தித் தொடர்பாளர், ''இந்தப் படம் எங்களுக்கு ஒரு லட்சிய திட்டம். ஆனால் ஸ்கிரிப்டின் கடைசி வரைவில் பட்ஜெட் பொருந்தவில்லை. விஎஃப்எக்ஸ் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இருந்தது. என்றாலும், படத்தை ஒப்புக் கொண்டுள்ளோம். தற்போதைய சூழல் காரணமாக படத்தை நிறுத்தி வைத்துள்ளோம். படப்பிடிப்புக்குச் செல்ல இன்னும் ஒன்பது மாதங்கள் ஆகலாம்" என்று விளக்கியிருக்கிறார். |
திரைப்படத் தயாரிப்பாளர், வர்த்தக நிபுணர் கிரிஷ் ஜோஹர் இந்த நிலையை விவரிக்கிறார். ''அதிக அளவு பட்ஜெட்டுகள் கொண்ட திட்டங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தாங்கள் போடும் முதலீட்டை எடுக்க தியேட்டர்கள் உட்பட அனைத்து வழிகளும் கிடைக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதனால்தான் தற்போதைய மறுபரிசீலனைகள், புதிய அணுகுமுறைகள் வெளிப்படுகின்றன. இந்த அளவு பெரிய பட்ஜெட் படங்கள் ஸ்ட்ரீமிங் சேவைகளில் மட்டும் போதுமான வருமானத்தை தராது என்று அவர்களுக்குத் தெரியும்" என்று கூறியுள்ளார். |
''இவர்கள் சொல்லும் காரணங்கள் மட்டுமல்ல. ஓடிடி தளங்களில் இருக்கும் உலகின் சிறந்த உள்ளடக்கங்களை கொண்டாடும் இளைஞர்கள்தான் திரையரங்குகளுக்குச் செல்லும் முதன்மை பார்வையாளர்கள். ஓடிடி தளங்கள் வழக்கமான மசாலா பாணியிலான திரைப்படங்களை உருவாக்கவோ அல்லது பார்வையாளர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவோ முடியாது என்பதை திரைத்துறையினருக்கு உணர்த்தியுள்ளது. இதுவும் ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது. இதனால் அரைத்த மாவை அரைக்கும் கதைகளை தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். இனி ஒரே பாணியிலான வாழ்க்கை வரலாறு மற்றும் தேசபக்தி கருப்பொருள்களைத் தயாரிக்க முடியாது" என்றுள்ளார் மும்பையில் உள்ள இளைஞர் ஊடகமான யுவா ஒரிஜினல்ஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிகில் தனேஜா என்பவர். |
பாலிவுட்டின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எலிப்சிஸ் என்டர்டெயின்மென்ட் இந்த பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி தாங்கள் தயாரிக்க இருந்த பல ஸ்கிரிப்ட்களை கைவிட்டுள்ளது. இந்த ஸ்கிரிப்ட்கள் தற்போது உள்ள சூழலுக்கு ஏற்றவாறு இல்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளது அந்த நிறுவனம். |
''பாலிவுட்டில் இயங்கும் சூப்பர் ஸ்டார் பின்புலம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளையில், அவர்களை போன்ற பெரிய நடிகர்கள் இல்லாமல் சிறந்த உள்ளடக்கத்தால் இயக்கப்படும் படங்கள் நல்ல வரவேற்பை பெறும் என்ற முடிவுக்கு பல்வேறு தயாரிப்பாளர்கள் வந்துள்ளனர். இதனால் பாலிவுட் அதன் தன்மையிலிருந்து மெதுவாக மாறத் தொடங்கி இருக்கிறது. விரைவில் பெரிய மாற்றங்கள் நிகழலாம். ஓடிடி வரவும் பாலிவுட்டில் இருந்து இனி அதிகமாக இருக்கலாம்" என்கிறார் தயாரிப்பாளர் அபிஷேக் பதக் என்பவர். |
வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதாகத் தெரிவித்து, கடனட்டைகளில் இருந்து தரவுகள் திருடல் |
இணையத்தளத்தினூடாக வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதாகத் தெரிவித்து, கடனட்டைகளில் இருந்து தரவுகளை திருடியமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. |
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் போலி இணையத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார். |
அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத அவ்வாறான இணையத்தளங்களில் இருந்து பொருட்கொள்வனவில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். |
இணையத்தளத்தினூடாக பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட முயன்ற சில போலி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். |
இருட்டு அரையில் முரட்டுகுத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை யாஷிகா ஆன்ந்த். அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு கடைசி வாரம் வரையில் இருந்தார். யாஷிகாவுன் ஐஸ்வர்யா தத்தாவுன் சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜாலியாக பார்ட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள். |
போட்டோஹுட்டில் அதிக ஆர்வமுடன் இருக்கும் யாஷிகா சமீபத்தில் படுமோசமாக ஆடைகளை அணிந்து புகைப்படத்தினை வெளியிட்டு வருகிறார். ஒரு பேட்டியொன்றில் தான் 12ம் வகுப்பு படிக்கும் போது என் பள்ளியில் 9 வது படிக்கும் பையனுடன் டேட்டிங் சென்றேன். அது எனக்கு பெரிய தவறாக தெரியவில்லை. |
தன்னுடைய ஹாட்டான படங்களை பார்த்த ரசிகர்கள் இவர் ஆபாச நடிகை மியா கலிஃபா போல இருப்பதாக சொல்லி இருப்பதை கண்டித்து மற்றவர்களை ஒப்பிட்டு என்னை பேசிவது தவறு என்றும், நான் அப்படி எல்லாம் இல்லவே இல்லை என்று கூறியுள்ளார். |
மேலும் என்னை கவர்வதற்கு நல்ல பர்ஃப்யூம் போட்டும், உயரமாக, தாடி அதிகமாக வைத்திருக்கும் ஆண்களை இருந்தால் போதும் என்று கூறியுள்ளார். |
இனிப்பான ஆபத்து அறிவோம் |
ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு சர்க்கரையை அறவே தவிர்த்து விடுவார்கள் சிலர். ஆனாலும், அவர்கள் உட்கொள்ளும் பல உணவுகளிலும் மறைமுகமாகச் சர்க்கரையின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள். |
ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ளக் கூடாது என்கிறது ஒரு பரிந்துரை. நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருள்களில் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கும் அதிகமாக மறைந்திருக்கிறது சர்க்கரை. |
நேரடியாகச் சர்க்கரையைத் தவிர்ப்பதுடன், மறைமுகமாகவும் சர்க்கரையைத் தவிர்க்கும் வழிகளை அறிந்துகொள்ளுங்கள். |
இயற்கைச் சர்க்கரைக்கு மாற்றாகச் செயற்கைச் சர்க்கரையை உட்கொள்வது மிக மோசமான உத்தி. சர்க்கரையைவிட மோசமானது செயற்கைச் சர்க்கரை. இதைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமே தவிர, குறையாது. |
ஆபத்து வெள்ளைச் சர்க்கரையில்தான் பிற வகை இனிப்புகளில் பிரச்னை இல்லை என்று நினைக்காதீர்கள். சர்க்கரை எதிலிருந்தாலும் ஆரோக்கியக் கேடுதான். அது, வெள்ளைச் சர்க்கரையாக இருந்தாலும், தேனாக இருந்தாலும் ஒன்றுதான். இரண்டும் உடம்புக்கு குளுக்கோஸைத்தான் தரும். எனவே, வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகத் தேனைப் பயன்படுத்தி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். |
நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் பானங்களின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டிய நேரம் இது. டீ, காபி போன்றவற்றில் சர்க்கரையின் அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக்கொண்டே வாருங்கள். பானங்களில் சர்க்கரை சேர்ப்பதைக் குறைத்துக்கொண்டே வந்தால் தேவைக்கு அதிகமான சர்க்கரையைச் சேர்ப்பது தானாகவே குறைத்துவிடும். உடலளவிலும் மாற்றங்களை உணர்வீர்கள். |
கடைகளில் விற்கப்படும் பாதாம் பால், ராகிமால்ட் போன்றவற்றை அருந்தும்போது கவனம் தேவை. சுவையை அதிகமாக்கிக் காட்டுவதற்காக அவற்றில் அதிகம் சர்க்கரை சேர்த்திருப்பார்கள். |
சாப்பாட்டிற்குப் பின்னர் இனிப்பு ஆகாது |
இரவு உணவுக்குப் பின்னர் செரிமானத்துக்கு உதவும் என்று நினைத்துப் பெரும்பாலானவர்கள் இனிப்புகளைச் சாப்பிடுவார்கள். அது நல்லதல்ல. இனிப்புக்குப் பதிலாக புதினா டீ போன்றவற்றைச் சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம் அல்லது மாலையிலேயே பல் துலக்கிவிட்டால், இரவு உணவுக்குப் பின் இனிப்புச் சாப்பிடும் வேட்கை குறைந்துவிடும். |
பொருள்களை வாங்கும்போதே, லேபிளைப் பார்த்து அதில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரையின் அளவைத் தெரிந்துகொள்ளுங்கள். அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்திடுங்கள். சர்க்கரை அளவைக் குறைக்க இதுவும் ஓர் எளிமையான, விரைவான வழி. |
பண்டைத் தமிழ் பண்பாட்டுப் பிரதேசமான, கிழக்கு மண்ணில் தமிழ் மொழியைப் அதனை பாதுகாப்பதனூடாக, தமிழர்களின் இருப்பையும், இன அடையாளத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் "தமிழுக்காக நாம் தமிழராய் நாம்" என்னும் விசேட செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். |
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது. |
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் , அந்த இனத்தின் மொழியை அழித்து விடுங்கள். இனம் தானாக அழிந்துவிடும். என்று சொல்வார்கள் . அந்த வகையில் 2009 ற்கு பின்னர் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் ஒரு புறம் நடக்க, மறுபுறம் தமிழ் மொழியை அழிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகிறது. |
கிழக்கை பொறுத்தமட்டில் தமிழன் என்று சொல்வதும் தமிழ் மொழியை முதன்மைப் படுத்துவதும் இனவாதமாக சித்திரிக்கப்படுகிறது. அதனை எமது தமிழர்களும் சிலர் ஏனையவார்களுடன் இணைந்து செய்கிறார்கள். மாற்று சமூகங்களை திருப்திப்படுத்த தமிழன் என்ற அடையாளத்தையே கைவிட தயாராக இருக்கின்றார்கள். |
இலங்கையின் அரச கரும மொழியாக இரண்டு மொழிகளே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை சிங்கள, தமிழ் மொழிகளாகும். ஆனால் கிழக்கில் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களே அதிமாக வாழ்கின்றனர். தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி, அதனை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களையும் கடந்த காலங்களில் பெரியளவில் நாம் முன்னெடுக்க தவறியுள்ளதாக உணருகிறேன். |
எனவே தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி அதனை கிழக்கு மாகாணம் பூராவும் நடைமுறைப்படுத்தும் வகையில் "தமிழுக்காக நாம் தமிழராய் நாம்" என்ற வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிக்க உள்ளோம். இதன் ஊடாக |
1.கிராமங்கள் தோறும் பகுதி நேர தமிழ்ப் பள்ளிகள் நிறுவுதல் |
2. பொதுக்கட்டிடங்களுக்கு தமிழ் பெயர்களைச் சூட்டுதல். |
3. வீதிகளின் பெயர்களை தமிழில் வைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல்.(பெயர் சூட்டப்படாத வீதிகள்) |
4. வியாபார நிலைய விளம்பரப் பலகைகளில் தமிழ் மொழியை முதன்மைப்படுத்தல். |
5. தமிழ் பெரியார்களின் உருவச் சிலைகளை நிறுவுதல். |
6. தினமும் பாடசாலைகளை தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பித்தல். |
8. பொது இடங்களில், தமிழ் மொழியில், மனித விழுமியத்தை வளர்க்கக்கூடிய வாசகங்களை காட்சிப்படுத்தல். |
9. தமிழர்களுக்கே உரித்தான தனித்துவமான கலை, இலக்கிய, பண்பாட்டம்சங்களை அழிந்துவிடாமல் பேணிப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல். |
10. கிழக்கில் அனைத்து அரச தனியார் துறைகளில் அரசகரும மொழியான தமிழை முதன்மொழியாகப் பயன்படுத்தல். |
11. பூங்காக்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள், வாசிகசாலைகள் போன்றவற்றிற்கு தமிழ் பெயர்களைச் சூட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்தல். |
12. தமிழ்க் கிராமங்களின் பெயர்களை மாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்தி தமிழ் பெயர்களைப் பேணிப்பாதுகாக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்தல். |
13. தமிழ் மொழி தொடர்பான அறிவாற்றலை சிறியோர் முதல் பெரியோர் வரை முறையாக கற்றுக்கொள்வதற்கான வேலைத்தி்ட்டங்களை ஆரம்பித்தல். |
போன்ற இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். |
இதற்கான ஆரம்ப நிகழ்வானது எதிர்வரும் திங்கட்கிழமை 09.07.2018 அன்று செங்கலடி பிரதேச செயலக மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் நடாத்த தீர்மானித்துள்ளோம். |
மேற்படி நிகழ்வுக்கு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார். |
எனவே தாய் தமிழ் மொழியை வளர்த்து தமிழினத்தை பாதுகாப்பதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் இளைஞர்கள்,யுவதிகள்,சமூக ஆர்வலர்கள்,என அனைவரையும் தமிழுக்காக நாம் தமிழராய் நாம் என்ற கோசத்துடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார். |
பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக அறிமுகமானார். அதன்பின்பு, இவர் 2013 ஆம் ஆண்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் நடித்தார். இந்தப் படத்தில் பவர் ஸ்டாரின் நகைச்சுவையால் அதிக ரசிகர்களை பெற்றார். |
அக்குபஞ்சர் மருத்துவரான பவர் ஸ்டார் பல தொழில்கள் நடத்தி வந்துள்ளார். சூப்பர் மார்க்கெட், மால்கள், பைனான்ஸ் போன்ற தொழில்கள் நடத்தியுள்ளார். பவர் ஸ்டார் இடம் 150 பேர் வேலை செய்து வந்தனராம். இவர்களுக்கு மாதம் 50 லட்சம் வரை சம்பளம் கொடுத்து வந்தார். பவர் ஸ்டார் ஒரு சிறிய வட்டத்திலே யாரும் அறியாதவாறு இருந்ததால் மிகவும் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்துள்ளது. அதனால் இவர் சினிமா துறையை தேர்ந்தெடுத்துள்ளார். |
இதனால் பவர் ஸ்டார் சென்னை வந்து முதலில் ஒரு படத்தை தயாரித்தார். பின்பு அவரே நடிக்கலாம் என்று யோசித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். |
பவர் ஸ்டார் பிக்கப் டிராப் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது வனிதா விஜயகுமார் தொடங்கிய பொட்டிக் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். |
பவர் ஸ்டார் ஆறு மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பின்போது திடீரென மயங்கி விழுந்தார். படக்குழு அதிர்ச்சி அடைந்து உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மயங்கி விழுந்ததாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. |
தற்போது பவர் ஸ்டாருக்கு மீண்டும் திடீரென வலி எடுக்க நடக்கமுடியாமல் போய் விட்டது. இதனால் தற்போது ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மருத்துவமனையில் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. பவர் ஸ்டார் தற்போது ரொம்ப வலியுடன் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார். நல்லபடியாக குணமாகி வீடு திரும்புவேன் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். |
மனித கண்களுடன் ஆடு ஒன்று பிறந்த சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. |
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூர். இதன் புறநகர் பகுதியான நிமோடியாவில் சில நாட்களுக்கு முன்னர் ஆடு ஒன்று வினோதமான அங்கங்களை கொண்டதாக செய்திகள் வெளியாகின. இந்த ஆட்டின் உரிமையாளர் முகேஷ் என்பவராவார். இவர் சென்ற வாரத்தில் தன்னுடைய வீட்டில் ஒரு விகார ஆடு இருப்பதாக சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். |
அந்த வீடியோவில் ஆடு ஒன்று மிகவும் விகாரமாக இருந்தது. அந்த ஆடு தட்டையான முகத்தை கொண்டிருந்தது என்றும், மனிதர்களை போன்று கண் மற்றும் வாய் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆடு அப்பகுதியில் "கடவுள் அவதாரமாக" கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. |
இதனிடையே மருத்துவ ரீதியில் ஆலோசித்த போது சைக்கிளோபியா என்று பிறவி குறைபாட்டின் காரணமாக சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதனடிப்படையில்தான் நெற்றியில் கண் தோன்றியிருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கணிக்கின்றனர். |
அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக மட்டும் ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளது தெரியவந்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அளித்த பதிலில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. |
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்திற்கும் ஆன செலவு பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு மருத்துவ செலவு மொத்தமாக ரூ.6,85,69,58 ஆகியுள்ளது. |
இதில், 6.41 கோடிக்கான காசோலை மட்டும் அதிமுக தரப்பில் இருந்து மருத்துவமனை பெற்றுள்ளது. இன்னும், 44.56 லட்சம் பாக்கி உள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின் பதிலில் இடம்பெற்றுள்ளது. |
மாலை நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. சூரியனின் வெப்பம் மெல்லத் தணிய ஆரம்பித்தது. |
சம்யுக்தனின் தங்கை, சகுந்தலை, தன் அழகிற்கு மேலும் அழகு சேர்க்க அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். தன்னுடைய நீண்ட கூந்தலை பின்னலிட்டுக்கொண்டே, இதழ்களில் காதல் ரசம் சொட்டும் கானம் ஒன்றைப் பாடினாள். பின்னி முடித்தவுடன் ஒரு வெற்றிக் களிப்பை முகத்தில் காட்டிவிட்டு பின்னலை பின்னால் இட்டாள். அந்த பின்னல் இரு நாகங்கள் பின்னிப் பிணைந்து உறவாடிக் கொண்டிருப்பது போல் இருந்தது. அலங்காரம் முடிந்ததும் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து, ஒரு வெட்கம் கலந்த புன்னகையை வீசினாள். |
அப்போது சம்யுக்தனின் தந்தை தேவராஜன் வீட்டினுள் நுழைந்தார். அலங்காரம் முடிந்த பின்னும் கண்ணாடியில் தன் அழகை ரசித்துக்கொண்டிருந்த சகுந்தலை, கண்ணாடியில் தன் தந்தையின் உருவம் தெரிந்ததும், கனவில் மிதந்திருந்த அவள் கனவைக் கலைத்து எழுந்து நின்றாள். |
மந்திரி தேவராஜன் தன் கோபத்தை கண்களில் காட்டியபடியே "உன் அண்ணன் எங்கே?" என்று கேட்டார். தன் தந்தையின் செல்லப்பிள்ளையான சகுந்தலை அவர் கோபமாக இருப்பது தெரிந்தும் சிறு புன்னகையை வீசியபடியே, "அண்ணன் இன்னும் வரவில்லை தந்தையே" என்றாள். |
தேவராஜனின் குரலைக் கேட்டதும் சம்யுக்தனின் தாயார் புஷ்பவதி ஒரு சிறிய குவளையில் தண்ணீர் கொண்டு வந்து தேவராஜனிடம் கொடுத்தார். உஷ்ணத்திலிருந்த தேவராஜன் மறுமொழி பேசாமல் அக்குவளையை வாங்கி நீரைப் பருகினார். ஆயினும் உஷ்ணம் அடங்கியபாடில்லை. |
தேவராஜன் குவளையை புஷ்பவதியிடம் கொடுத்தவாறே, "உன் பிள்ளை என்ன காரியம் செய்திருக்கிறான் தெரியுமா?" என்று கூறிக்கொண்டே ஓர் இருக்கையில் அமர்ந்தார். |
தேவராஜன் இருவரையும் கோபம் கொப்பளிக்க பார்த்தார். "நீங்கள் விதண்டாவாதம் செய்வது போல் அவன் செய்தது சிறு தவறு ஒன்றும் இல்லை. அவன் உயிரே பறி போயிருக்கும்" என்று கோபத்தையும் பாசத்தையும் கலந்து வெளிப்படுத்தினார். |
அதைக் கேட்ட புஷ்பவதி அதிர்ச்சியில் கையிலிருந்த குவளையை நழுவ விட்டார். மேகத்தைக் கிழித்து மழை பூமிக்கு வருவது போல் அவர் கண்களிருந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. சகுந்தலை பேய் அறைந்தாற்போல் உணர்வற்று அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள். மூவருக்குள்ளும் பேச்சு வார்த்தை ஒரு கணம் நின்று போனது. அங்கு ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. உதடுகளின் சம்பாஷணை நின்றுபோய் உள்ளங்களின் சம்பாஷணை கதறி அழ ஆரம்பித்தது. புஷ்பவதி வாயில் வார்த்தை வராமல் தவித்தார். மேற்கொண்டு சம்யுக்தன் என்ன செய்தானென்று கேட்க அவர் விரும்பவில்லை. தேவராஜன் சொன்னதே அவர் இதயத்தை குத்தீட்டியால் குத்தியது போல் வலி உண்டாயிற்று. அவருக்கு, கண்களில் காட்சிகள் மங்கி தலை சுற்றியது. பூமியே சுற்றுவது போலிருந்தது. |
சகுந்தலை புஷ்பவதியின் தோளில் கைவைத்து "என்ன ஆயிற்று தாயே" என்று கேட்கும் போது தான், அவர் சுயநினைவுக்கு வந்தார். |
சகுந்தலை, "அண்ணன் அப்படி என்ன செய்தார்?" என்று தந்தையிடம் வினவினாள். |
தேவராஜன் புஷ்பவதியின் முகத்தைப் பார்த்து, மேற்கொண்டு ஏதேனும் சொன்னால் அவர் மேலும் கலக்கம் அடைந்து மனம் உடைந்து போவார் என்று நினைத்து, "இதை அப்படியே விட்டுவிடுவோம்" என்று கூறினார். |
"சம்யுக்தன் எப்போது வருவான்?" |
"தெரியவில்லை தந்தையே, ஆனால் வரும் நேரம் தான்" |
"சிறிது நேரம் என்னைத் தனியாக விடுங்கள்" என்று தேவராஜன் கூறினார். |
சகுந்தலை தன தாயாரின் தோள்களைப் பற்றி அங்கிருந்து இட்டுச் சென்றாள். புஷ்பவதி ஒரு நடைப் பிணம் போல் அவளுடன் சென்றார். இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து துளி கூட மீளவில்லை. |
தேவராஜன், தனிமையில் வெறுமையாய் உட்கார்ந்து யோசித்தார். அரசசபையில் மற்ற அமைச்சர்கள் சம்யுக்தனை பற்றி ஏளனமாகக் கூறியது அவர் நினைவில் சூறாவளியாய் சுழன்றடித்தது. |
"உன் பிள்ளை அதிகபிரசங்கித்தனமான காரியத்தில் ஈடுபட்டு எல்லோருக்கும் தலைவலியை உண்டு பண்ணிவிட்டான்" என்று ஒரு அமைச்சர் கூறினார். |
சம்யுக்தன் இப்படி அறிவின்மையாக நடந்துகொள்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று இன்னொரு அமைச்சர் கூறினார். |
"சம்யுக்தனால் அவன் நண்பர்களையும் காணவில்லை. அவர்கள் கதி என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை" |
இப்படி ஒவ்வொருவரும் தன மகனைக் குறை கூறியதைக் கேட்ட தேவராஜன் உடைந்து போனார். |
தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலை வாய்ப்பு |
குஜராத் அருகே உறவாகி உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியை காரணமாக பருவ மழை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளில் தீவிரம் அடைந்த நிலையில் இருக்கும். தென் இந்திய தீபகற்பத்தின் தெற்கு பகுதிகளில் பருவ மழை சற்று தொய்வான நிலையில் காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. இதன் காரணமாக கேரளா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகளில் கடந்த சில தினங்களை விட மழை குறைந்து காணப்படும். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் இதே போன்ற நிலை நீடிக்கக்கூடும் என வானிலை படிவங்கள் எதிர் பார்க்கின்றன. |
பருவ மழை சற்று பலம் குறைந்து உள்ளதால் தமிழகத்தில் பரவலாக தெளிந்த வானிலை காணப்படும் இதன் காரணமாக பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட சற்று உயர்ந்து காண வாய்ப்பு உள்ளது. சென்னை போன்ற கடலோர பகுதிகளில் மாலை நேரத்தில் மிதமான கடற்காற்று ஊடுருவ வாய்ப்பு உள்ளது |
தற்போதைய கல்விமுறை மீதுமட்டுமல்ல, சமூக வலைத்தளங்கள் மீதும் பெற்றோருக்கு ஒருவித அதிருப்தி இருப்பதை உணரமுடிகிறது. ஆனால் பெற்றோர்களால் வெறுக்கப்படும் அந்த வலைத்தளங்கள் மூலமாகவும் சம்பாதிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் என்ஜினியரிங் மாணவரான பா. ராகுல். இவர் முகநூல் மூலம் மாதம் ஆறாயிரம் ரூபாய் ஈட்டுகிறார் என்பது வியப்பல்லவா? ராகுலை சந்தித்தோம். "எல்லோரையும் போலத்தான் நானும் முகநூல் கணக்குத் துவங்கினேன்." என ஆர்வத்துடன் பேசத்துவங்கினார். |
ஒரு படத்தின் தயாரிப்பாளர் தனது படத்தை பிரபலமாக்குவதற்காக குறிப்பிட்ட பணத்தை ஒதுக்குவார். இந்த பணம் மூன்று கட்டமாக வழங்கப்படுகிறது. முதலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர் ஆன்லைன் புரமோட்டர்களுக்கு வழங்குவார். அதாவது தனது படத்தின் நூறு போஸ்டர்களை ஷேர் செய்யவேண்டியது இந்த புரமோட்டார் வேலை. இதற்குத்தான் படத்தயாரிப்பாளர் அவருக்குப் பணம் வழங்குகிறார். இந்த புரமோட்டார் தனக்கு சொந்தமான பேஜ் வைத்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இவர் 15 முதல் 25 லட்சம் லைக் வைத்திருக்கும் பேஜ்களின் நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் தங்களுக்கு தந்த போஸ்டர்களை அனுப்புவார். இது ஆன்லைன் புரமோஷனின் இரண்டாவது கட்டம். மூன்றாவது கட்டமாக 5 முதல் 15 லட்சம் லைக் வைத்திருக்கும் என் போன்றோருக்கு போஸ்டர்கள் அனுப்புவார். இவ்வாறு படத்தை ஷேர் செய்வதன் மூலம் மாதம் ஆறாயிரம் வரை பெறுகிறேன். |
தனது கிரியேட்டிவிட்டி திறமையினால், தான் சம்பாதிப்பதை ராகுல் என்ன செய்கிறார் என்பதுதான் இன்னும் ஆச்சர்யப்படுத்தும் விஷயம். "இதன் மூலம் கிடைக்கும் பணத்தை சிறுதுளி என்ற தொண்டு நிறுவனத்துக்குக் கொடுத்து விடுகிறேன். அந்த நிறுவனமானது மாணவர்களின் படிப்பு செலவுக்கு உதவி செய்து வருகிறது. இது ஆத்ம திருப்தி அளிக்கிறது" என்கிற ராகுலின் முகத்தில் மென்மையான புன்னகை படர்கிறது. |
முனைக்காடு கிராமத்தில் "காப்புமுனை" சஞ்சிகை வெளியீடு. |
சஞ்சிகையின் முதற்பிரதியினை ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.மானாகப்போடி ஐயர் நாகசக்தி கலை மன்றத்தின் உறுப்பினர்களான சிறுவர்களுக்கு வழங்கி வைத்தார். இச்சஞ்சிகையினையை நாகசக்தி இந்து இளைஞர் மன்றத்தினர் வெளியீடு செய்துவைத்துள்ளனர். |
முனைக்காடு கிராமத்தில் இருந்து 1984ம் ஆண்டு ஒளிக்கல்லூரி அமைப்பினால், சி.வரதசீலன் அவர்களை இதழாசிரியராகக் கொண்டு "ஒளி" என்ற பெயரில் சஞ்சிகை வெளிவந்திருக்கின்றது. காலப்போக்கில் இடம்பெற்ற யுத்தம், பல்வேறு அனர்த்தங்களின் காரணமாக ஒளி சஞ்சிகை ஒளி இழந்த நிலையில், 2012ம் ஆண்டு எழுதளிர் அமைப்பினால் "தளிர்"என்ற சஞ்சிகையும் வெளியீடு செய்யப்பட்டு இதுவரை தளிர் என்ற பெயரில் மூன்று சஞ்சிகைகள் 2016ம் ஆண்டு வரை வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே வ.துசாந்தன் அவர்களை இதழாசிரியராக கொண்டு "காப்புமுனை"சஞ்சிகை வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. |
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விடியோ காட்சியை வெளியிட்டவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். |
இச்சம்பவத்துக்கு பின்னர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே கார் விபத்தில் இறந்தார். |
இந்த விடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கும், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறந்ததற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த விடியோ காட்சி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. |
இதற்கிடையே இந்த விடியோ காட்சி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பும் நோக்கிலும், அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருப்பதாகவும், விடியோ காட்சியை வெளியிட்ட மாத்யூ, அந்த விடியோவில் பேட்டியளிக்கும் சயன்,மனோஜ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது. |
அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், மாத்யூ, சயன், மனோஜ் ஆகியோர் மீது அவதூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார், அவர்கள் 3 பேரிடமும் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. |
"கட்சிக்குள் கூட்டம் நடந்தது. எனக்குக் கிடைத்த தகவல்களின் படி மோதி அரசை கலைத்தால் தான் அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அத்வானி தெரிவித்துள்ளார். ஆகவே வாஜ்பேயி அந்த முடிவைக் கைவிட நேர்ந்தது, அதனால் மோதி தொடந்து முதல்வராக நீடிக்க முடிந்தது |
பொருளாதார ரீதியாக நாடு பின்னடைவைச் சந்தித்துள்ளது. அடுத்த அரசு 'உடைந்த பொருளாதார நிலைமைகளை' சந்திக்கும். |
ஒரு பிரதமர் எது பேசினாலும் அவரிடமிருந்து ஒரு கவுரவமான பேச்சையே எதிர்பார்க்கிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசி வாயிலாகப் பேசி, அவருக்கு அரசு வீடு மீண்டும் ஒதுக்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. |
"தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பு வீட்டை காலி செய்ய அரசு அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து நல்லகண்ணு அந்த வீட்டை காலி செய்து கே.கே. நகரில் வாடகை வீட்டுக்குச் சென்றுள்ளார். இது பலத்த சர்ச்சையாகி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர் |
இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசி வாயிலாக நல்லகண்ணுவை சனிக்கிழமை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். |