Dataset Viewer
Auto-converted to Parquet
text
stringlengths
309
27.8k
ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்தபடி அக்பரும் – பீர்பாலும் பேசிக்கொண்டு உலவிக் கொண்டிருந்தனர்.அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் ஆசை ஏற்பட்டு பீர்பால் அவர்களே! எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று அரசர் கேட்டார். அரசரின் பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார். என்றாலும் மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று தயங்கியபடியே முயன்றால் முடியும் மன்னா! என்றார்.எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. அதற்கான ஆக்கபூர்வமான வேலையில் இறங்கி வெகு சீக்கிரம் முடியுங்கள் என்றார் அரசர்.மன்னரின் ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டும் ஆசை எப்படி சாத்தியமாகும். அசட்டுத்தனமான இந்த ஆசை நிறைவேறவே வாய்ப்பு இல்லை. ஆகாயினால் இந்த வேலை முடியாதது என்பதை மன்னரே உணரந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் பீர்பால். என்ன பீர்பால்…. நான் கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் மவுனமாக உள்ளீர்! என்றார்.அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டுவதற்கு முன்னர் பல முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதனைச் செய்வதற்கே மூன்று மாதம் ஆகிவிடும். அதன் பின்னர் தான் கட்டிடம் கட்ட முடியும் என்றார் பீர்பால்.தாங்கள் கூறியபடியே ஏற்பாடுகளைச் செய்யுங்கள் நாளை காலை கஜானாவிலிருந்து அதற்கான பணம் வரும் என்றார் மன்னர். பீர்பால் கூறியபடியே மறுநாள் காலை வேடன் ஒருவன் வந்து சில கிளிகளைக் கொடுத்து விட்டுச் சென்றான்.வேடன் சென்றதும் கிளிகளை ஒரு கூண்டில் அடைத்து அதற்கு சில வார்த்தைகளைப் பேசக் கற்றுக் கொடுத்தார். அதன் பின்னர் ஆகாயத்தில் மாளிகை கட்டும் பணிக்கு ஆட்களை திரட்டி வர வெளியூர் சென்றிருப்பதாகவும் மன்னருக்கு தகவல் சொல்லியனுப்பினார் பீர்பால். மூன்று மாதங்கள் முடிந்ததும் அரண்மனைக்கு வந்து அரசரை சந்தித்தார் பீர்பால்.அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்ட ஆட்களை தயார் செய்து விட்டேன். அவர்களை நீங்கள் வந்து பார்வையிட்டதும் வேலையைத் தொடங்கி விடலாம்! என்றார் பீர்பால்.பீர்பால் கூறியதைக் கேட்டு மன்னர் மகிழ்ச்சியடைந்தார். ஆர்வமிகுதியால் உடனே பீர்பாலுடன் புறப்பட்டுச் சென்றார் மன்னர்.கிளிகள் இருந்த அறைக்கு அரசரை அழைத்துச் சென்றார் பீர்பால். அந்த அறையில் அரசரும் பீர்பாலும் மட்டுமே இருந்தனர்.அரசரைப் பார்த்ததும் கிளிகள், சுண்ணாம்பு கொண்டு வா! செங்கல்லை கொண்டு வா! சாரத்தைக் கட்டு! கல்லை இந்தப் பக்கம் போடு! சுண்ணாம்பைப் பூசு! என்று ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தது. அரசருக்கு ஆச்சர்யமும், அதே சமயம் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. பீர்பால் இது என்ன? என்றார் கடுங்கோபத்துடன். மன்னர் பெருமானே! என்னை மன்னிக்க வேண்டும் ஆகாயத்தில் கட்டடம் கட்ட பறவைகளினால்தான் முடியும்! கையினால் தான் இவைகள் பேசுகின்றன. இவைகளெல்லாம் நல்ல பயிற்சி பெற்றவையாகும். ஆதலால் ஆகாயத்தில் மாளிகை கட்டும் வேலையை இப்போதே ஆரம்பித்து விடலாம் என்றார் பீர்பால். பீர்பால் கூறியதைக் கேட்டதும் மன்னருக்குப் புரிந்து விட்டது. ஆகாயத்தில் அந்தரத்தில் எப்படி மாளிகை கட்ட முடியும். இது நடக்க முடியாத விஷயம் என்பதை நாசுக்காக நமக்கு உணர்த்துகின்றார் என்பதை புரிந்து கொண்டு புன்னகைத்தார் மன்னர்.கட்டிடம் கட்டும் தொடர்பான வார்த்தைகளை சிரமப்பட்டு பீர்பால் கற்றுக் கொடுத்ததை எண்ணி பீர்பாலை மனதாரப் பாராட்டினார் அக்பர்.
சோகமே உருவாக அமர்ந்திருந்தான் அரசி மதுவந்தி. அகண்ட அவள் விழிகளில் துயரம் தேங்கிக் கிடந்தது. சமீப காலமாக அவளை ஏதோ கவலை பிடித்து ஆட்டி வந்தது. அடிக்கடி, சோர்ந்த முகத்துடன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவளாக அமர்ந்து விடுகிறாள். "உள்ளே வரலாமா அரசியாரே?" குரலைக் கேட்ட மாத்திரத்தில் அரசியாரின் முகம் மாறியது. "வா கனகதாரா" என்றாள். வந்தது அமைச்சர் வித்யார்த்தியின் மனைவி கனகதாரா. அரண்மனையிலேயே, சொல்லப்போனால் அந்த பிரத்யுக தேசத்திலேயே மதுவந்திக்கு மிகவும் நெருக்கமானவள் கனகதாராதான். "ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தீர்கள் போலிருக்கிறது........ இடையூறு செய்துவிட்டேனோ?", "ம்ம்ம்......அதெல்லாம் ஒன்றுமில்லை." சேடிப் பெண்டிரை வெளியேறுமாறு சைகை செய்தாள் மதுவந்தி. "நான் சரியான இக்கட்டு ஒன்றில் மாட்டிக்கொண்டு விட்டேன் கனகதாரா. அதிலிருந்துவெளியேற வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் யோசனை" வருத்தமுடன் சொன்னாள். "அப்படியென்ன அரசியாருக்கு இக்கட்டு?" சிலகாலம் முன்பு க்ருஷ்ய தேசத்திலிருந்து சட்ஷயன் என்ற மாந்திரீகன் அரசனைக் காண வந்தான். அரசன் அநிருத்யபாலனுக்கு மாந்திரீகம் தொடர்பான விஷயங்களில் மட்டு மீறிய ஆவலும் ஈடுபாடும் இருந்து வந்தது. ஒரு திங்கள் சட்ஷயனை அரண்மனையில் தங்கவைத்து ராஜ உபசாரம் செய்தான் அரசன். தினமும் பலமணி நேரம் அரசனும் சட்ஷயனும் மாந்திரீகம் சம்பந்தமாக ரகசியமாக உரை யாடினர். சட்ஷயன் அரசனுக்குப் பல மாந்திரீக விஷயங்களைக் கற்றுத்தந்ததாகவும் அரண்மனையில் பேச்சு. அரசனது உபசரிப்பால் மனம் குளிர்ந்த சட்ஷயன், கிளம்பும்போது தன்னிடம் குற்றேவேல் புரிந்து வந்து பூதங்களில் ஒன்றை அரசனுக்குப் பரிசாகத் தந்துவிட்டுச் சென்றான். சட்ஷயன் அரசனுக்குப் பரிசாகத் தந்த பூதத்தின் பெயர் கனவுப் பூதம். அடுத்தவரது கனவில் நுழைந்து அவரறியாமல் அவர் காணும் கனவை அப்படியே கண்டுவந்து சொல்லக் கூடியது. பூதம் இரவில் மட்டுமே பூதத்திற்குண்டான குணங்களைக் கொண்டு விளங்கும். பகலில் அது அரண்மனை விதூஷகனைப் போன்ற உருவத்தில் அரசமண்டபத்தில் காணப்படும். அதன் சிருங்கார ரசம் சொட்டும் பேச்சை அரசன் மிகவும் விரும்பிக் கேட்பான். அவையில் பலருக்கு அதன் பேச்சு அருவருப் பூட்டியது. அரசனுக்குப் பயந்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக் காட்டாமல் மறைத்து வந்தார்கள். அது மட்டுமன்றி அந்த விதூஷகன் தான் கனவுப்பூதம் என்று எல்லோரும் அறிந்திருந்ததால் எங்கே தங்கள் கனவில் புகுந்து தம்மை மீறி வெளிப்படும் பாதகமான எண்ணங்களை ஒற்றறிந்து அரசனிடம் அது சொல்லிவிடுமோ என்ற பயப்படவும் செய்தனர். அரசன் அநிருத்யபாலன் தீவிர உறங்காநோயினால் பாதிப்புற்றிருப்பதாகவும், இரவுகளில் உறங்காமல் உப்பரிகையில் உலாத்திக் கொண்டிருக்கும் அவனால் இனி ஒருபோதும் உறங்க முடியாதெனவும், உறங்க இயலாத காரணத்தால் இனி தன் வாழ்வில் எப்போதும் அவனால கனவு காணமுடியாதென்றும், அதனாலேயே அடுத்தவரது கனவை ஒற்றறியும் பூதத்தைக் கொண்டு அடுத்தவரது கனவுகளைக் கண்டு தனது கனவு ஏக்கத்தைப் பூர்த்தி செய்து கொள்வதாகவும் அரண்மனையில் ரகசியமாகப் பேசிக்கொண்டனர். கனவுப் பூதம் கனவுகளை ஒற்றறிந்து சொல்வதோடு மட்டுமல்லாமல் அந்தக் கனவுகளுக்குத் துல்லியமாகப் பலன்களைக் கணிப்பதிலும் திறமை பெற்றிருந்தது. இப்படித்தான் அது அநிருத்யபாலனின் தளபதி மௌத்திகவாசனது திட்டத்தைக் கண்டறிந்து அரசனிடம் சொன்னது. கனவுப் பூதம் மௌத்திகவாசனது கனவில் நுழைந்த போது விழுதூன்றிப் படர்ந்து கிடந்த ஆலமரமொன்றின் கிளையொன்றை யாருமற்ற இரவில் அவன் மறைந்திருந்து ரகசியமாக வெட்டுவதாகக் கண்ட கனவை ஒற்றறிந்து அரசனிடம் சொன்னது. அக் கனவின்படி மௌத்திகவாசன் பிரத்யுக தேசத்தின் ஒரு பகுதியைத் தந்திரமாகக் கைப்பற்ற மனதிற்குள் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாகப் பூதம், கனவுக்கு வியாக்யாணமும் சொன்னது. அரசன் அநிருத்யபாலனும் மௌத்திகவாசனை ரகசியமாகக் கண்காணிக்கும்படி ஒற்றர்களுக்கு உத்தரவிட்டான். கனவுப் பூதம் சொன்னது போலவே படையினரில் ஒரு பிரிவை கைக்குள் போட்டுக் கொண்டு திடீர்ப்புரட்சி மூலம் தேசத்தின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்ற அவன் ரகசியத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. தக்க நேரத்தில் தளபதியை பிடித்து சிறையிலடைத்து நிகழவிருந்த புரட்சியை ஒடுக்கினான் அரசன். இப்படிப் பலரது கனவிலும் புகுந்து ஒற்றறிந்து சொன்ன கனவுப் பூதம் ஒரு நாள் விளையாட்டாக பட்ட மகிஷி மதுவந்தியின் கனவிலும் புகுந்தது. அன்றைக்குப் பார்த்து தன் கனவில் அவள் அவித்யுக தேச அரசன் சாம்பவகேசனுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாள். கனவுப் பூதம் இதை அரசனிடம் சொல்லவில்லை. தன் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டது. ஒரு நாள் அரசனில்லாத வேளை அந்தப்புரத்தில் நுழைந்து அரசி மதுவந்தியிட்ம் அவள் கண்ட கனவைப் பற்றிச் சொன்ன்து. அரசி ஆடிப் போனாள். அவையில் நிற்க வைத்து ஆடைகளைக் களைந்தது போல நெஞ்சம் பதறி உடல் குறுகிப் போனாள். சாம்பவகேசன் மதுவந்தியின் இளவயது கனவுப் புருஷன். அவளது தந்தையின் நாடான வசுத்யாயபுரியின் அண்டைநாடுதான் அவித்யுக தேசம். மதுவந்தியை சாம்பவகேசனுக்கு மணமுடிப்பதாக சிறுவயதிலேயே பேசி முடித்திருந்தது. மணநாளை நோக்கிய ஏக்கத்துடன் பரஸ்பரம் எதிர்பார்ப்புடன் இருவரும் காத்திருந்த வேளையில் தான் வசுத்யாயபுரி பிருகத்ஷானர்களது படையெடுப்புக்கு ஆளானது. தன்னைக் காத்துக்கொள்வதற்கே பெரும் பிரயத்தனம் புரிய வேண்டியிருந்த அவித்யுக அரசன் சாம்பவசேகனால் மதுவந்தியின் தந்தைக்கு உதவ முடியாத நிலை. எனவே பிரத்யுக மன்னன் அநிருத்யபாலனுக்கு, உதவிகேட்டு அவசரத் தூது அனுப்பப்பட்டது. பிரத்யுக தேசத்துப் படைகளை வசுத்யாயபுரிக்கு ஆதரவாகப் போரிட அனுப்புவதற்குப் பிரதிபலனாக மதுவந்தியை தனக்கு மணமுடித்துத் தரக் கேட்டான் அநிருத்யபாலன். மனமின்றி மகள் மதுவந்தியை அநிருத்யபாலனுக்கு மணமுடித்துத்தர வாக்களித்தார் வசுத்யாயபுரி மன்னர். அநிருத்யபாலனின் படைகள் பிருகத்ஷானர்களை விரட்டியடித்து வசுத்யாயபுரியை ஆபத்திலிருந்தும் காத்தன. சண்டை முடிந்த பின் தந்தையின் வாக்குக்குக் கட்டுப்பட்டு அநிருத்யபாலனை மணந்தாள் மதுவந்தி. அநிருத்யபாலனுக்கு அப்போது அகவை அறுபத்து மூன்று. ஏற்கனவே அவனுக்கு மூன்று மனைவியர். ஒருவருக்கும் புத்தியர பாக்கியம் இல்லை. பிரத்யுக தேச வழக்கப்படி அரசனுக்கு வாரிசை ஈன்று தருபவளே பட்டத்து மகிஷியாவாள். திருமணமான மறுவருடமே மதுவந்தி ஒர் ஆண் மக€வைப் பெற்றெடுத்தாள். பட்டத்து அரசியும் ஆனாள். ஆனால் அவள் மனதில் ஒரு மூலையில் எங்கோ சாம்பவகேசன் மீதான காதல் அவளறியாமலே துளிர்விட்டபடி இருந்திருக்கிறது. அதுதான் அன்று கனவில் அப்படி வெளிப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கனவை வெளியில் யாரிடமும் சொல்லாமல் வேண்டாமென கனவுப் பூதத்திடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டாள். பூதம் அவளைப் பார்த்து குறும்பாகச் சிரித்தது. நீ கண்ட கனவை நான் யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் ஒருமுறை நீ என் ஆசைக்கு இணங்கவேண்டும் என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் வெளியேறிச் சென்றுவிட்டது. "மனதின் விந்தைதானே கனவு. எங்கோ ஆழத்திலிருக்கும் காலம் கடந்த நினைவுகளும் கனவாகக் கூடுமல்லவா? அப்படிப்பட்ட கனவுக்கு நாமெப்படிப் பொறுப்பாக முடியும் கனகதாரா?", "நீங்கள் சொல்வது சரிதான் அரசியாரே, ஆனால் இதை அந்த பூதத்துக்கோ அல்லது அரசருக்கோ நம்மால் விளங்கவைக்க முடியுமா?" தனது தோழியின் இக்கட்டை அறிந்து கனகதாரவும் கவலை கொண்டாள். இந்த இக்கட்டிலிருந்து வெளியேறும் வழி அவளுக்கும்புலப்படவில்லை. "இதோ பார் கனகதாரா, அரசரை மணமுடித்த நாள் தொட்டு இன்றளவும் நான் சிந்தனையிலும் சரி, செயலிலும் சரி, பதிவிரதையாகவே இருக்கிறேன். ஆனால் கனவு என்பது என் கட்டுப்பாடுகளை மீறிய ஒன்று. அதற்கும் என் பதிவிரதைத் தன்மைக்கும் எந்த சம்பந்தமுமில்லையே." விதூஷகன் பேசுகிறான். "அரசே முப்பது தசாப்தங்களுக்கு முன் க்ருஷ்ய தேசத்தில் வாழ்ந்த சமஸ்கிருதக் கவியொருவன் பாடிப்போன கவிதையைச் சொல்வேன், கனிவுடன் கேட்பீர். கவி சொல்கிறான். "கன்னிப் பெண்கள் கலவியில் ஈடுபடுவது எதனாலென்றால் அதில் என்ன இருக்கிறதென்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தினால். வேசையருக்குக் கலவி ஒரு பொருளீட்டும் வழி. விதவையருக்கோ தங்கள் கடந்த கால நினைவுகளை வருடிப் பார்க்குமொரு சந்தர்ப்பம். மனைவியருக்கு ஒரு நாளில் பல்வேறு கடமைகளுள் கலவியும் ஒன்று. அகவே இவ்வுலகில் பெண்டிர் கலவியின் பூரண இன்பத்தையும் துய்ப்பது கள்ளப் புணர்ச்சியில்தான்.", "ஆஹா, பேஷ்" என்கிறார் அரசர். அரண்மனையில் உலவ ஆரம்பித்த நாள் தொட்டே கனவுப் பூதத்துக்கு அரசி மதுவந்தி மீது ஒரு கண். அது என்னவோ மதுவந்தியைப் பார்க்கையில் எல்லாம் தானொரு பூத கணம் என்பதையும் மறந்து அதற்கு காதல் பொங்கிப் பிரவகிக்க ஆரம்பித்துவிடும். அவள் அரசனின் மனைவி, அதுவும் பட்டத்து ராணி. தன் மனதிலிருப்பது அரசருக்குத் தெரியவந்தால். பெரும் விபரீதமாகிவிடும். இப்படியெல்லாம் தனக்குள்ளேயே அது சிந்தித்தாலும் தன் இச்சையை அடக்கும் வழி மட்டும் அதற்கு புலப்படவில்லை. நிலை கொள்ளாமல் அது தவித்துக் கொண்டிருந்த போதுதான் எதேச்சையாக ஒரு நாள் அரசி மதுவந்தியின் கனவுக்குள் புகுந்து பார்த்தது. வழக்கமாக பூத கணங்கள் மானுடரோடு காதல் உறவு கொள்வதில்லை. இருந்தாலும் சில விதிவிலக்குகள் உண்டு. மானுடரோடு கூடும் பட்சத்தில் பூதங்கள் தமக்குரிய மாய இயல்புகளை இழந்துவிடும் அபாயமும் உண்டு. கனவுப் பூதத்துக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லையென்று தோன்றியது. மதுவந்தியுடன் ஒரு முறை கூடியிருந்து அதனால் உயிரே போனாலும் பரவாயில்லையெனும் அளவுக்கு உன்மத்தம் அதைப் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. அது அடிக்கடி சென்று பணிந்தும் குழைந்தும் மிரட்டியும் மதுவந்தியை தன் ஆசைக்குப் பணியவைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. "அரசியாரே, பரிவிருட்ஷ மலையடிவாரத்திலிருக்கும் ரிஷி ஒருவரிடமிருந்து மூலிகையொன்று பெற்று வந்திருக்கிறேன். உங்களது இக்கட்டு தீர இம்மூலிகை உதவிகரமாக இருக்கும்.", "என்ன மூலிகை, எப்படி அது என் இக்கட்டு தீர உதவமுடியும் கனகதாரா?", "இந்த விசேஷ மூலிகையை ஒருவர் முகர்ந்தால் அவருக்குத் தன் பழைய நினைவுகளனைத்தும் மறந்து போகும். பல வருடத்து நினைவுகளை சுத்தமாக அழித்துவிடக்கூடிய சக்தி வாய்ந்த மூலிகை இது. இதை எப்படியாவது அந்த கனவுப் பூதம் முகரும்படி செய்துவிடவேண்டும்.", "நீ சொல்வது சரிதான். ஆனால் இந்த மூலிகை பூதங்களிடம் பலிக்குமா?" முயன்றுதான் பார்ப்போம், எனக்கென்னவோ பலிக்கும் என்றுதான் தோன்றுகிறது.", "சரி கனகதாரா. எப்படியோ இந்த இக்கட்டு நீங்கினால் சரி. நாள் ஒவ்வொன்றும் யுகமாகக் கழிகிறது எனக்கு." கனவுப் பூதத்தின் இச்சைக்கு இணங்க இசைந்துவிட்டதாக மதுவந்தி அதற்கு ரகசியமாக தகவல் சொல்லியனுப்பினாள். அன்றைய தினம் பிரத்யுக நாடெங்கும் பெருமழை பெய்துகொண்டிருந்தது. அதிகாலை தொடங்கியே ஓயாது மழை கொட்டிக் கொண்டிருந்தது. நலக்குறைவு எனச்சொல்லி அன்றிரவு அரசரை அந்தப்புரம் வரவேண்டாமென கேட்டுக் கொண்டிருந்தாள். கனவுப்பூதம் இரண்டாம் சாமம் கடந்து வருவதாக ஏற்பாடு. கனகதாரா பச்சைப் பனையோலைப் பெட்டியில் வைத்துக் கொடுத்தனுப்பியிருந்த மூலிகையை மஞ்சத்துக்கு அருகிலேயே வைத்திருந்தாள். பூதத்தின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். ஒரே பதற்றமாக இருந்தது. பூதம் வந்ததும் என்ன செய்யவேண்டுமென்பதை பலமுறை மனதில் ஒத்திகை பா‘த்திருந்தாள். முறுவலுடன் பூதத்தை வரவேற்று நைச்சியமாகப் பேச வேண்டும். பேசியபடியே, "உங்களுக்காக ஆபூர்வ மலரொன்றை கொண்டு வந்திருக்கிறேன். முகர்ந்து பார்த்து என்ன மலரென்று சொல்லுங்கள் பார்ப்போம்" என்று பனையோலைப் பெட்டியை பூதத்திடம் தர வேண்டும். பூதம் பெட்டியை வாங்கித் திறந்து முகர்ந்து பார்க்கும். உடனே மயங்கி விழுந்துவிடும். மயக்கம் தெளிந்து எழும்போது அதன் நினைவுகளனைத்தும் அழிந்திருக்கும். ஒரு வேளை பூதம் மயங்கி விழவில்லையாயின் மதுவந்தி மயங்கி விழுந்தவள்போல் நடித்து உடல் நலமில்லையென்று சொல்லி பூதத்தை பிறகொருநாள் வரும்படி சொல்லி அனுப்பி விடவேண்டும். ஒத்திகை கச்சிதம்தான். நிஜத்திலும் அப்படியே நடந்து விட வேண்டும். பூதம் மயங்கி விழுந்து அதன் நினைவுகள் அழிந்து போகவேண்டும். மதுவந்திக்கு நிலைகொள்ளவில்லை. இன்னும் இரண்டாம் சாமம் கடக்கவில்லை. திடீரென அவளுக்கு ஒரு ஐயம். பனையோலைப் பெட்டியில் மூலிகை நல்லவிதமாக இருக்கிறதா, அது தன் வேலையைச் சரியான விதத்தில் செய்யுமா? பனையோலைப் பெட்டியைக் கையிலெடுத்து மெதுவாகத் திறந்தாள். உள்ளிருந்த மூலிகையின் நெடி அவள் நாசியைத் தாக்கியது. அப்படியே மயங்கி மஞ்சத்தில் சரிந்தாள். அவள் நினைவு தப்பியது. மழையில் நனைந்தபடி அந்தப்புரத்தை அடைந்த கனவுப் பூதம் ஒருக்களித்திருந்த கதவைத் திறந்தது உள்ளே நுழைந்தது. விளக்கு மிகவும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. சிரமத்துடன் கண்களால் துழாவியபடியே அரசி மதுவந்தி மஞ்சத்தில் நிலைகுலைந்து கிடப்பதைக் கண்டது. காத்திருந்த களைப்பில் அரசியார் உறங்கிவிட்டிருக்க வேண்டும் என நினைத்த கனவுப் பூதம் உன்மத்தத்தின் விளிம்பில் நின்றது. அவளைத் தொட அதன் கைகள் பரபரத்தன. அவளது கால்களைத் தொட்டு மெதுவாக அசைத்து "மதுவந்தி" என்றது. மயக்கம் நீங்கி எழுந்த மதுவந்திக்கு அந்தக் குறை வெளிச்சத்தில் எதிரில் ஒர் ஆடவன் நிற்பதை உணர சிறிது அவகாசம் பிடித்தது. அவள் முகம் ஒரு பூவைப் போல மலர்ந்தது. செல்லச் சிணுங்கலுடன் அவள் சொன்னாள். "ஏன் சாம்பவகேசரே இத்தனை தாமதம். பாருங்கள் காத்திருந்த களைப்பில் நான் உறங்கியே போய்விட்டிருக்கிறேன். ஆமாம் இன்று என் தந்தைக்குத் தெரியாமல் எப்படி அரண்மனைக்குள் நுழைந்தீர்கள்?" கனவுப் பூதத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதிர்ச்சி நீங்காமலேயே அது அவசரம் அவசரமாக அந்தப்புரத்தைவிட்டு வெளியேறியது. கனத்த அதன் பாதச் சுவடுகளை மழை பின்தொடர்ந்து அழித்தபடியே வந்தது. அன்றிலிருந்து இரவுகளில், உறக்கம் வராமல் அரண்மனை உப்பரிகையில் இரண்டு பேர் உலாத்துவதைப் பார்க்க முடிந்தது. நன்றி: வார்த்தைப்பாடு
முல்லாவிற்கு அன்றுதான் திருமணம் முடிந்திருந்தது.புதுமனைவி மற்றும் உறவினர்களுடன் தனது ஊருக்கு புறப்பட்டார்.வழியில் பெரிய ஆற்றை கடந்து செல்லவேண்டும்!ஒரு பெரிய் படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள்.படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல்க்காற்று வீசி படகு அங்கும் இங்குமாக் தள்ளாடியது.முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார்.இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்!முல்லாவிடமே கேட்டுவிட்டாள்.முல்லா பதில் ஏதும் பேசாமல் மனைவி அருகில் சென்று தன் இடுப்பில் இருந்த கூரிய கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார்.மனைவி எவ்வித சலனுமுமின்றி இருந்ததை கண்ட முல்லா மனைவியை பார்த்து இந்த அபயகரமான கத்தியை பார்த்து உனக்கு பயமில்லையா? என கேட்டார்.அவரது மனைவி,"கத்தி வேண்டுமானால் அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை கையில் ஏந்தி இருப்பவர் எனது அன்பான கணவர்" என்றாள்.உடனே முல்லா பதிலளித்தார்,"அதுபோலத்தான் ஆற்றில் உருவான சூறாவளி அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை உருவாக்கிய அல்லா என் மீது அன்பு கொண்டவர் நமக்கு எந்த தீங்கும் நேரிடாது என்றாராம்!! ந்ம்பிக்கையே வாழ்க்கை!
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார். “இது என்ன? எதற்காக அவர் என்னை கூப்பிட்டு வீட்டிற்க்குள் பூனையை அனுமதிக்காதே” என்றார் என்று புரியவில்லை அந்த தலைமை சீடருக்கு. அவர் வயது முதிர்ந்த கிழவர்களிடம் கேட்டுப்பார்த்தார். இதில் ஏதோ ஒரு செய்தி இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இது ஏதோ ஒரு குறியீடாக இருக்கலாம், இல்லாவிடில் அவர் இதை ஏன் சொல்ல வேண்டும் இதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவர் இறந்து போய் விட்டார். ஏன் நீங்கள் பூனைகளுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று நான் கேட்டிருப்பேன். உங்களது வாழ்க்கை முழுவதும்…. உங்களது ஒழுக்கம் வழிமுறை நெறிமுறை விளக்கம் வரையறை அனைத்தும் இதற்குத்தானா? – பூனையை வீட்டினுள் அனுமதிக்காதே. ஒரு வயதான மனிதர் கூறினார், “எனக்கு அது என்ன என்று தெரியும். இது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்ட செய்தி. ஏனெனில் அவர் ஒரு பூனையால் அவதிக்குள்ளானார். அந்த குரு கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவரிடம் இரண்டே இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்தன”. ஒரு துறவிக்கு அது மட்டுமே உடை. உங்களுக்கு அது உள்ளாடை ஆனால் அவருக்கு அது மட்டுமே ஆடை. அவரிடம் இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்ததில் பிரச்னை என்னவென்றால் அங்கிருந்த எலிகள் அவருடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. அவர் கிராமத்திலுள்ளவர்களிடம் “இந்த எலிகள் மிகவும் தந்திரமானவை. அவை என்னுடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. என்ன செய்வது?” என்று கேட்டார். ஒருவர், “அது மிகவும் சுலபம். நாங்கள் கிராமத்தில் பூனையை வைத்துக் கொள்வோம். நீங்களும் ஒரு பூனையை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பூனையை பிடித்துவந்து தருகிறேன்.” என்றார். அந்த குரு, “சரி, இது ஒரு எளிய வழிதான்.” என்று ஒத்துக் கொண்டார். பூனை வந்தது. அது அதன் வேலையை மிகச் சரியாக செய்தது. எல்லா எலிகளையும் தின்று முடித்து விட்டது. இப்போது பிரச்னை துவங்கி விட்டது. எலிகள் தீர்ந்துவிட்டன. பூனைக்கு பசி வந்துவிட்டது. அது எனக்கு பால் வேண்டும் எனக் கேட்டது. அது எப்போதும் துறவி எதிரே வந்து பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தது. பூனைகள் பசியோடிருக்கும்போது பார்த்தால் மிகவும் பாவமாக தோன்றும். அது அதன் வேலையை முடித்து விட்டது. ‘நான் உனக்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்து விட்டேன், எல்லா எலிகளையும் தின்று விட்டேன். ஆனால் இப்போது எனக்கு பசிக்கிறது’ என்று சொல்லாமல் சொல்லியது. அந்த குரு திரும்பவும் வந்து, “இப்போது என்ன செய்வது அந்த பூனை என் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு பசியோடு என்னை பார்க்கிறது. எனக்கு உணவு கொடு இல்லாவிடில் நான் போகிறேன். நான் போய் விட்டால் எலிகள் திரும்பவும் வந்து விடும். என்பது போல பார்க்கிறது. அதை அது சொல்லவில்லை, ஆனால் நான் அதை அதன் கண்களில் பார்க்கிறேன். அதற்கு பால் கொடுப்பதற்கு எனக்கு பால் வேண்டும். “ என்று கேட்டார். அந்த மனிதன், “ஒவ்வொரு நாளும் நீங்கள் பாலுக்கு வர வேண்டியிருக்கும். என்னிடம் பல பசுக்கள் உள்ளன. அதில் ஒன்றை கொடுக்கிறேன். அதை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றான். அவர் பசுவை வாங்கிக் கொண்டு சென்றார். ஆனால் அதனால் பிரச்னைகள்தான் அதிகமாயின. இப்போது பசுவுக்கு புல் தேவை பட்டது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்துக்குச் சென்றார். மக்கள், “நீ ஒரு கிறுக்கன், பிரச்னை பிரச்னை. நீங்கள் ஏன் உங்கள் குடிசையை சுற்றி உள்ள இடத்தில் புல் வளர்த்துக் கொள்ளக் கூடாது?. அங்கே ஏகப்பட்ட இடம் சும்மா தரிசாக கிடக்கிறது. நாங்கள் விதை தருகிறோம். இந்த விதைகளை வைத்து எதையாவது விதைத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உதவும். நீங்களும் சாப்பிட்டு பசுவுக்கும் எதையாவது கொடுங்கள்.” என்றனர். அதனால் அந்த குரு, விதை விதைத்து வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் பிரச்னை வந்தது. இப்போது அந்த பயிரை அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அவரோ ஒரு துறவி, அவர் இந்த வேலைகளை செய்ய கூடாது. ஆனால் ஒரு விஷயம் மற்றொரு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்திற்கு சென்றார். “பயிர் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஆனால் அதை செய்ய என்னிடம் கருவிகள் எதுவும் கிடையாது. அதனால் எனக்கு உதவி வேண்டும்.” என்று கேட்டார். மக்கள், “இங்கே பாருங்கள் உங்களோடு மிகவும் தொந்தரவாகி விட்டது. உங்களால் எந்த பயனும் இல்லை. எதற்கும் உங்களால் தீர்வு காண முடியாது. நாங்கள் தான் எதற்கும் தீர்வு காண வேண்டும். இது மிகவும் எளிது. இங்கே ஒரு விதவை பெண் இருக்கிறாள். அவள் உங்களை, உங்கள் பசுவை, உங்கள் பயிரை, உங்கள் உணவை, எல்லாவற்றையும் – எல்லாவற்றையும் என்றால் பூனை. எலி …… அவள் மிகவும் அனுபவம் வாய்ந்த பெண்.” ஆனால்! என்ற துறவி நான் ஒரு துறவி. என்றார். அவர்கள், இந்த துறவு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். என்ன வகையான துறவி நீங்கள்.! உங்களிடம் பசு, பூனை, நிலம். பயிர் ஆகிய எல்லாமும் உள்ளன. ஆனால் நீங்கள் நான் ஒரு துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். மேலும் இந்த திருமணம் போலியான ஒன்று. உங்களுக்கு அந்த பெண்ணிடம் எந்த உறவும் கிடையாது. அவள் வறுமையில் கஷ்டத்தில் இருக்கிறாள். நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு நல்லது.” என்றனர். அவர், “அப்படியானால் சரி, அது சட்டபூர்வமானதாக இல்லாவிடில் சரி. அதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் எனது குரு திருமணம் செய்து கொள்ளாதே என்று தான் கூறியுள்ளார். இதற்கு எதிராக எதுவுமே சொல்லவில்லை. நான் தான் திருமணம் செய்யவில்லையே. நான் அந்த பெண்ணுடன் வாழ்வதைப் பற்றி இந்த கிராமம் எதுவும் சொல்லாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு என்பதால் இது எனக்கு சரிதான். நான் அவளை எனது மனைவி என்று சொல்லிகொள்ளலாம், ஆனால் உண்மையில் நான் அவளது கணவனாக எதுவும் செய்யவேண்டியதில்லை, அவளும் எனது மனைவியாக உண்மையில் எதுவும் செய்யவேண்டியதில்லை.” என்று ஒத்துக் கொண்டார். அவர் அந்த பெண்ணுடன் பேசினார். அவள், எனக்கு மறுபடியும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஒருமுறை செய்ததே போதும். ஆனால் நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள், நானும் சிரமத்தில் இருக்கிறீர்கள். அதனால் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வோம். அந்த விதத்தில் இது எனக்கு சரிதான்.” என்றாள். அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது எல்லாமும் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் சில நாட்களில் அவள் அவருக்கு சிசுரிஷை செய்தாள். மெதுமெதுவாக அவர் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தார். ஒரு ஆண் ஆண்தான், ஒரு பெண் பெண்தான். பெண்ணும் அவரை விரும்ப ஆரம்பித்தாள். அவர்கள் இருவருமே தனிமையை உணர்ந்தனர். ஒரு குளிர்கால இரவில் இங்கே குளிராக இருக்கிறது நாம் ஏன் நெருங்கி இருக்கக் கூடாது என மற்றவர் கேட்கவேண்டும் என இருவருமே விரும்பினர். இறுதியில் அந்த பெண், இங்கே மிகவும் குளிராக இருக்கிறது என்று கூறினாள். அந்த துறவியும் இங்கேயும் குளிராக இருக்கிறது என்றார். அப்போது அந்த பெண், உங்களுக்கு தைரியம் இல்லைபோல தோன்றுகிறதே என்றாள். அவர், அதுசரிதான். நீ இங்கே வா, எனக்கு தைரியம் இல்லை. நான் ஒரு துறவி, நீ ஒரு அனுபவமுள்ள பெண்மணி. நீ இங்கே வா. இருவரும் சேர்ந்திருந்தால் கதகதப்பாக இருக்கும். என்றார். கதகதப்பாகத்தானே இருக்கும். இப்படித்தான் அவரது முழு துறவறமும் வீணாகிப்போனது. அவர் இறக்கும்போது அவர் தனது சீடர்களிடம் உங்களுடன் எந்த பூனையையும் தங்க விடாதீர்கள். என்று கூறி விட்டு இறந்தார். வயதான மனிதன் அந்த தலைமை சீடரிடம், “அதிலிருந்து உங்களது பாதையில் ஒவ்வொரு குருவும் தனது சீடர்களிடம் பூனையைப் பற்றி கவனமாக இருங்கள் என்று கூறுவது வழக்கமாகிப் போனது. பூனையைப் பற்றி கவனமாக இருப்பது மிகவும் கடினம். எப்படியோ பூனை உள்ளே வந்து விடும் – வாழ்க்கை மிகவும் விசித்திரமானது”. என்றார்.
ஒரு சமயம் ஜப்பானின் இராணுவத்தில் ஸொகன் என்ற உயரிய பதவி வகித்த ஒருவர் தன்னுடைய விருந்தினர் அறையில் இருந்த டொகோனோமோ எனப்படும் மாடத்தில் கோழியின் அழகான படம் ஒன்றினை மாட்டி வைக்க விரும்பினார். அந்த ஊரிலேயே இருந்த சிறந்த ஓவியன் ஒருவனை சந்தித்து, "உங்கள் திறமை எல்லாம் காட்டி எனக்கு ஒரு சிறந்த கோழியின் படத்தினை வரைந்து கொடுக்க முடியுமா?" என்று கேட்டார். ஓவியர் "ஓ, தாரளமாக, கண்டிப்பா வரைஞ்சு தருகிறேன்" என்றார். ஓவியர் உடனே ஃபூஜி மலையின் மேலிருந்த தனது சிறிய ஓவியம் வரையும் அறைக்கு சென்றார். பறவைகளின் உடற்கூறுகளைப் பற்றி அலசி ஆராய்ந்து கூறும் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்தார். முன்பு பறவைகளைப் பற்றி புகழ்பெற்ற ஒவியர்கள் எழுதியதைப் பற்றி வாங்கிப் படித்தார். கோழிகளை ஒரு சிற்பியைப் போல கல்லில் வடிவமைத்தார். ஆயில் வண்ணங்களை உபயோகித்து கோழிகளை வரைந்தார். மரத்தினாலான அச்சுக்களை உபயோகித்து கோழியைப் போல வடிவமைத்தார். ஒரு அச்சிலிருந்து மற்றொரு அச்சு அதைவிட தத்ரூபமாக இருக்கும் படி மற்றொரு படியினையும் எடுத்தார். சமுராய் வீரர்களின் புஸிடோ எனப்படும் வீரம் தோய்ந்த கவசம் அணிந்த கோழியினை உருவாக்கினார். ஒரு சமுராய் வீரன் மற்றொருவனுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் போல் இரண்டு கோழிகளின் சண்டைகளை உருவகப் படுத்தினார். சாந்தமே உருவான சாதுக்களைப் போல் கோழிகளை அமைதி தோய்ந்த முகத்துடன் வரைந்தார். சுமி தூரிகையை உபயோகித்து கோழிக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையினை மனதில் நினைத்து அதன் சேட்டைகளையும் அனத்தங்களையும் அனைத்துக் கோணங்களிலும் வரைந்துப் பார்த்தார். கோழியின் உருவங்களை இயற்கைகாட்சிகள் நிறைந்த சூழ் நிலையில் வரைந்துப் பார்த்தார். தானியங்களை தின்னும் நிலையிலும், கோழிச்சண்டை நடப்பதை மக்கள் இரசிக்கும் விதமாகவும் வரைந்தார். இப்படியாக பத்து வருடங்கள் ஒடியிருக்கும். ஒரு நாள் ஸொகன் அம்புகளை விட்டு பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடிரென ஓவியரிடம் தான் கோழியின் ஓவியம் வரையச் சொன்னது ஞாபகம் வந்தவராக, தன்னுடைய போர்க் குதிரையின் மேல் ஏறி அதனை பறக்க விட்டு கொண்டு ஓவியனுடைய இடத்தை வந்து அடைந்தார். கதவினை திறந்து கொண்டு உள்ளே வருவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. உள்ளே நுழைந்தவர் கோழியைப் பற்றி வரைந்த ஓவியங்களின் மாதிரிகள் அந்த அறையின் மேல் முகட்டு வரை தொட்டிருந்ததினைக் கண்டார். கோழிகளின் சிலைகளின் மாதிரிகள் அறை முழுவதும் அடைத்திருந்தது. கோழிகளின் எலும்புக் கூடுகள், ஆயில் வண்ணப் படங்கள் என எங்கும் கோழி, எதிலும் கோழியின் உருவமாக இருந்தது. நிற்பதற்கே இடம் இல்லாத போது உட்காருவதற்கு அங்கே ஏது இடம்? "எங்கே எனக்காக வரைந்த கோழியினுடைய படம்?" என்று உரிமையுடன் அதட்டிக் கேட்டார் ஸொகன். "ஓ!! சுத்தாமாக மறந்தே போய் விட்டேன், மன்னித்து விடுங்கள்", என்று கூறிய ஓவியர். துரிகையை எடுத்தார் ஒரு அரிசியால் செய்த தாளில் இலாவகமாக அப்படியும் இப்படியும் வேகமாக சுழற்றினார். "இந்தாருங்கள்" என்று அந்த தாளினை ஸொகனிடம் கொடுத்தார்.
முல்லாவுக்கு மிகுந்த பண நெருக்கடியாக இருந்தபோது ஒரு செல்வந்தனிடம் ஆயிரம் காசுகள் கடன் வாங்கி விட்டார். முல்லாவின் பொருளாதார நிலை அவர் எதிர் பார்த்த அளவுக்கு முன்னேறாததால் சொன்ன கெடுவுக்குள் பணத்தைத் திருப்பித்தர முடியவில்லை. கடன் கொடுத்தவர் பல தடவை கடனைக் கேட்டும் இதோ தருகிறேன் அதோ தருகிறனே; என முல்லா சாக்குபோக்கு சொல்லிக் காலம் தள்ளினார். முல்லாவிடமிருந்து பணம் வாங்குவது கஷ்டம் என்று தெரிந்தவுடன் கடன் கொடுத்தவன் நீதிபதியிடம் முறையிட்டான். அந்தக் காலத்தில் நீதிமன்றத்துக்கு வாதியே தன் பொறுப்பில் பிரதிவாதியை அழைத்துவர வேண்டும் என்பது வழக்கம். அதனால்தான் கடன் கொடுத்தவர் முல்லாவின் வீட்டுக்கு வந்து நீதிமன்றத்துக்கு வருமாறு வற்புறுத்தினார். முல்லா கடன் கொடுத்தவரிடம் தந்திரமாகப் பேசத் தொடங்கினார். " ஐயா நீதிமன்றத்துக்கு வரும் அளவுக்கு என்னிடம் கண்ணியமான உடை இல்லை, என்னுடைய இப்போதைய பிச்சைக்காரக் கோலத்துடன் நீதிமன்றத்துக்குச் சென்றால் இவ்வளவு கேவலமான நிலையில் உள்ளவனுக்கு ஏன் கடன் கொடுத்தாய் என்று நீதிபதி கேட்பார். உனக்கு எதிராகத்தான் தீர்ப்பு ஆகும். " " அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என் எதிர்பார்க்கிறீர்?" என்று கடன் கொடுத்தவர் கேட்டார். " உம்மிடம் உள்ள விலை உயர்ந்த ஆடைகள் தலைப்பாகை, வைர மோதிரம் எல்லாவற்றையும் இரவலாகக் கொடும் இவற்றை அணிந்து கொண்டு நீதிமன்றம் வருகிறேன். நீதிமன்றத்திலிருந்து திரும்பிய உடனே உங்கள் துணிமணிகளைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் " என்றார் முல்லா. கடன் கொடுத்தவர் அவ்வாறே தம்முடைய ஆடை அணிகளில் மிகவும் விலை உயர்ந்தவைகளை எல்லாம் கொடுத்தார். அணிகளை அணிந்து கொண்டு முல்லா நீதி மன்றம் சென்றார். " நீதிமன்றத்தில் நீதிபதி முல்லாவை நோக்கி இந்த மனிதரிடம் நீ ஆயிரம் பொற்காசுகள் கடனாகப் பெற்றீரா?" என்று கேட்டார். " மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே நான் இவரிடம் கடனாக எதையும் பெறவே இல்லை" என்றார் முல்லா. " அப்படியானால் இவர் தாம் உமக்கு ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கொடுத்ததாகக் கூறுவது பொய்யா?" என்று நீதிபதி கேட்டார். " தர்ம பிரபு, இந்த மனிதருக்கு ஒரு மாதிரியான வியாதி உண்டு. தெருவில் செல்லும் யாரைக் கண்டாலும் அவருக்குத் தாம் கடன் கொடுத்திருப்பதாகக் கூறுவார். சிலரைப் பார்த்தால் அவர் அணிந்திருக்கிற ஆடை அணிகள் எல்லாம் தம்முடையவை என்று சொல்வார் இப்படி ஒரு மோசமான மனநோய் இவருக்கு" என்றார் முல்லா. " நீர் சொல்வதை எவ்வாறு நிரூபிக்க முடியும்?" என்று நீதிபதி வினவினார். " நான் நிரூபிக்கிறேன் தாங்கள் அருள் கூர்ந்து நான் அணிந்திருக்கிற ஆடை அணிகளை ஒவ்வொன்றாகக் கழட்டிக் காண்பித்து அது யாருடையது என வினவுங்கள் " என்று முல்லா கேட்டுக் கொண்டார். அதன் படியே நீதிபதி கேட்டார். " இவர் அணிந்திருக்கும் சட்டை யாருடையது" என்று நீதிபதியின் வினாவுக்கு " என்னுடைய சட்டை தான் என கடன் கொடுத்தவர் " சொன்னார். " இவருடைய தலைப்பாகை?" என நீதிபதி வினா எழுப்பினார். " என்னுடையதே" என்றார் கடன் கொடுத்தவர். " இவர் விரலில் இருக்கும் மோதிரம் கூட உம்முடையததானா?" என நீதிபதி கேட்டார். " ஆமாம் " என்றார் கடன் கொடுத்தவர். இந்த மனிதருக்கு சரியாகப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் என்ற நீதிபதி தீர்மானித்துக் கொண்டார். " உமக்கு ஏதோ மூளைக் கோளாறு இருக்கிறது. இந்த மனிதருடைய ஆடை அணிகள் எல்லாம் உம்முடையது என்கிறீர் நீர் உண்மையாகவே இவருக்குக் கடன் கொடுத்திருப்பீர் என்று தோன்றவில்லை. நீர் இவர் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டேன் " என்று நீதிபதி தீர்ப்பளித்தார். வீட்டுக்கு வந்ததும் முல்லா கடன் கொடுத்தவரின் ஆடை அணிகளைத் திருப்பித் கொடுத்து விட்டார். பிறகு கடன் கொடுத்தவரை " நோக்கி ஐயா உம்மை நான் ஏமாற்றிவிட மாட்டேன். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் உங்கள் கடனை நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் " என்றார்.
ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர். குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் "எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?" என்று கேட்டான். குயவன் "அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு … கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!" என்று கொட்டாவி விட்டான். அதற்கு வைர வியாபாரி சொன்னான் "உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி… நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்…" என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான். எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை. ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று "ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள். பெரியவர் புன்னகைத்துக் கொண்டே "உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார். அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள். "உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?" என்று அவர்களிடம் கேட்டார். "எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!" பயத்துடன் பதில் சொன்னார்கள். "அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?" பெரியவர் கேட்டார். "களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்" என்று இருவரும் சொன்னார்கள். "உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்" என்று முடித்தார்.
அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார். இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான். தத்துவஞானியைப் பார்த்து, “ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?” எனக் கேட்டான். அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.
பங்கி என்னும் ஜென் ஞானிக்கு நல்ல புகழ். அவரிடம் நிறைய மாணவர்கள். பொறாமைக்காரரான நிச்சேரியன் துறவிக்கு இது பிடிக்கவில்லை. பங்கியிடம் விவாதம் புரிவதற்காக அவர் இருந்த ஆலயத்திற்கு வந்தார். ""பங்கி ! உங்களுக்கு யாராவது மரியாதை செய்தால் நீங்கள் பணிபுரிவீர்கள் ; இல்லையா? என்னைப் போன்றவர்கள் உமக்கெல்லாம் மரியாதை தருவதில்லை. என்னை உன்னால் பணிய வைக்க முடியுமா ?" என்று கேட்டார். "" என் அருகில் வாருங்கள். அது எப்படி என்று விளக்குகிறேன்"என்றார் பங்கி. உடனே, துறவி கூட்டத்தை விலக்கிக்கொண்டு, ஆணவமாக, பங்கியை நோக்கி வந்தார். ""இப்படி, எனது இடதுபக்கம் வாருங்கள்". துறவி அவ்வாறே சென்றார். ""ரொம்ப வந்து விட்டீர்கள். ஒரு இரண்டடி பின்னால் போங்கள்!" - போனார். பங்கி அமைதியாக, ""சரி! நான் சொன்னபடியெல்லாம் நீ பணிந்து நடந்ததால், நீ ஒரு கவுரவமான மனிதன் என்று நினைக்கிறேன். இப்போது நீ எனது பக்கத்தில் அமர்ந்து பாடத்தை கவனி !" என்றார்.
“குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?” என்று கேட்டான் முட்டாள். “பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?” என்றார் பரமார்த்தர். “தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்” என்றான் மூடன். “அப்படியானால் நம் பத்திரிகைக்குத் ‘தினப் புளுகு’ என்று பெயர் வைக்கலாம்” என்றார் குரு. “பெயருக்குக் கீழே “கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை!” என்று போடலாம்” என்றான் மண்டு. அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், ‘தினப் புளுகு’ நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர். இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான். அதைக் கண்ட மட்டி, “அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?” என்று கேட்டான். “திருடுவதற்காக இருக்கும்” என்றான் மடையன். “ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?” என்று சந்தேகம் கொண்டான், மட்டி. “எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்” என்று விளக்கினான், மடையன் “அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!” என்றான் மட்டி. மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள். வேலியே பயிரை மேய்கிறது! பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!! இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார். இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள். “தேர்தலில் நம்மை எதிர்த்துப் போட்டி போட்டவர்களைச் சும்மா விடக்கூடாது. பழி வாங்கியே தீர வேண்டும்” என்றான் மண்டு. “மந்திரிகள் பேரிலும் ஊழல் பட்டியல் தயாரிப்போம்” என்று கத்தினான் மூடன். உடனே மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள். அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா! அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார். ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன? இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு! இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள். “நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!” என்றான் முட்டாள். “என்ன எழுதுவது?” எனக் கேட்டான் மூடன். சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள். ‘மண்ணில் புரளுவது எப்படி?’ என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி! ‘தொப்பை வளர்ப்பது எப்படி?’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை ‘அறிவியல்’ பகுதியில் எழுதினார் பரமார்த்தர். ‘பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! ‘தத்துவத் தந்தை’ பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!’ இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர். எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், “எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார். பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள். ‘தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!’ என்று கத்தினான் முட்டாள். சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர். செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் ‘குற்றப்பத்திரிகை’ வாசிக்கப்பட்டது. “பரமார்த்தரோ, “இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; ‘தினப் புளுகு’ என்று தானே போட்டிருக்கிறோம்” என்று கூறினார். அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும். ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது. கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது. எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை. கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான். மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது. அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது. கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான். கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான். அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது. மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது. தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது. நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது.பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர்.மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே…குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!""பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு.இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்தது."சீடர்களே! எப்படியாவது இந்தப் பந்தயத்தில் நாம் ஜெயித்து விட்டால்…. நான் பல ஊர்களுக்குத் தலைவன் ஆகிவிடுவேன்! உங்களுக்கும் பதவி கிடைக்கும். அப்புறம் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை"குருவின் திட்டத்தைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் எகிறி எகிறிக் குதித்தனர்."குருவே! நீங்கள் கவலையே படாதீர்கள். எப்படியும் நாங்கள் வெற்றிபெற்றுக் காட்டுகிறோம்!" என்று முட்டாள் சொன்னான்."நம் குரு மட்டும் எப்படியாவது ராஜா ஆகி விட்டால்… மகிழ்ச்சியாக இருக்கலாமே! விதம் விதமான குதிரைகள் பூட்டிய தேரில் ஜம்மென்று ஊர்வலம் வரலாம்!" என்று கனவு கண்டான் மூடன்."அது மட்டுமா? தெருவில் போனால், எல்லோரும் நம் காலில் விழுந்து விழுந்து கும்பிடுவார்களே!" என்று சிரித்தான், மட்டி."ஆமாம், ஆமாம். எனக்கும்கூட இலவசமாக நிறைய சுருட்டுகள் கிடைக்கும். பணத்துக்குப் பதில் சுருட்டையே வரியாகக் கட்டச் சொல்ல வேண்டும்!" என்றார் பரமார்த்தர்."குருவே! இன்னொரு கட்டளையும் போட வேண்டும். "இனிமேல் புதிதாகக் குதிரைகள் போடும் முட்டைகள் எல்லாம் மன்னருக்கே சொநதம்" என்று சொல்லி விட்டால், எல்லா குதிரைகளும் நமக்கே கிடைத்து விடும் என்று மடையன் யோசனை சொன்னான்."சீடர்களே, அற்புதமான யோசனைகள்! அருமையான எதிர்காலம்! வெற்றி நமக்கே! விடாதீர்கள்… ஓடுங்கள்…" என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டார், பரமார்த்தார்."குருவுக்கு ஜே" என்றபடி எல்லோரும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.ஒரு வீதியில் குருவும் சீடர்களும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது."ஐயா! அந்த மாட்டைப் பிடியுங்கள்" என்று கூச்சலிட்டுக் கொண்டு ஒரு தடித்த அம்மாள் பரங்கிக்காய் போன்ற தன் உடலை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்து வந்தாள்.இலேசாகக் காற்று வீசினால் கூட மூன்று முறை குட்டிக்கரணம் போட்டு உருளும் அளவுக்கு ஒரு பசுமாடு வாயில் நுரை வழிய நொண்டி நொண்டித் தள்ளாடி நடந்துவந்தது. அது, அவளுக்குப் "போக்கு" காட்டிக் கொண்டிருந்தது. அதன் விலாவில் வரிவரியாக எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.மாட்டுப் பொங்கல் என்பதால் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பூவும் சுற்றப்பட்டு இருந்தது.பொங்கல் தயாரித்த பின் அதைத் தன் அருமையான பசுமாட்டுக்கு ஊட்டுவதற்காக ஒரு பெரிய கிண்ணத்தில் வைத்திருந்தாள். அந்தக் கிண்ணம் அடிக்கடி பசுமாட்டுக்கு மருந்து கரைத்து ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவது. எனவே ஏதோ மருந்து ஊட்ட வருகிறாள் என்று நினைத்துப் பசு தள்ளாடித் தடுக்கி ஓட்டம் பிடிக்கத் தொடங்கியிருந்தது.இதற்கிடையே தாடி மீசையும், சுருட்டும் புகையுமாக பரமார்த்த குருவும், அலங்கோல விசித்திரங்களாக அவரது சீடர்களும் எதிரே வரவே அவர்களைக் கண்டு மாடு மிரண்டது."இதோ ஒரு ஜல்லிக்கட்டு காளை! மைதானத்திலிருந்து தப்பி வந்திருக்கிறது!" என்று சீடர்கள் அதைச் சூழ்ந்து கொண்டார்கள்."விடாதே! விடாதே! வாலைப்பிடி! இதை அடக்கி மன்னரிடம் பரிசு வாங்கி விடலாம்!" என்று குரு கட்டளையிட எல்லா சீடர்களும் ஒரே நேரத்தில் மாட்டின் வாலைப் பிடித்து இழுத்தார்கள். வால் பாதியாக அறுந்தது.வேதனை தாளாமல் குரல் எழுப்பிய மாடு தன்னிடமிருந்த கொஞ்சம் நஞ்சம் சக்தியையும் திரட்டி, கழுதைபோல் ஒரு உதை விட்டது. இதில் மட்டிக்கம் மடையனுக்கும் மூக்கு பிய்ந்தது. இருவரும் கதறிக் கொண்டு தூரப்போய் விழுந்தார்கள்."இது மாடா? அல்லது கழுதையா?" என்று திகைத்த குரு, கொம்பு இருப்பதைப் பார்த்து "பொல்லாத மாடாக இருக்கிறதே! கொம்மைப் பிடியுங்கள்! அப்போதுதான் அடங்கும்!" என்று பதறியவாறே சொன்னார்.முட்டாளும் மூடனும் மண்டுவும், மாட்டின் மீது போய் விழுந்தார்கள். இவர்கள் பாய்ந்த வேகத்தில் இரண்டு கொம்புகளும் பிய்ந்து கையோடு வந்து விட்டன. பசு கால்களை விரித்துப் படுத்தே விட்டது."ஆ..! மாடு அடங்கி விட்டது! அடங்கி விட்டது!" என்று குருவும் சீடர்களும் குதித்தார்கள்."ஐயோ! என் கண்ணுன! என் செல்லம்.. போச்சே! தினமும் நாலுபடி பால் கறக்கும் அருமைப் பசுவைக் கொன்று விட்டீர்களே! என்று குண்டுக் கிழவி கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டாள்."கவலைப்படாதே பாட்டி! மாட்டை அடக்கிய வீரச் செயலை மன்னரிடம் சொல்லி, கிடைக்கும் பரிசுப் பணத்தில் உனக்கு நஷ்ட ஈடு கொடுத்து விடுகிறோம்!" என்று கூறி அவளைச் சீடர்கள் சமாதானப்படுத்தினார்கள். குற்றுயிராகக் கிடந்த பசு மாட்டை ஒரு கட்டை வண்டியில தூக்கிப் போட்டுக் கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்குப் போனார்கள். போய் சேருவதற்கள் மாடு இறந்து விட்டது.ஜல்லிக் கட்டுக் காளையை அடக்குவதாக நினைத்து நோஞ்சான் பசு மாட்டின் உயிரையும் போக்கிய குருவையும் சீடர்களையும் கண்டு மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.ஆனால், ஒரு பசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் குருவுக்கும் சீடர்களுக்கும் சாட்டையடிகள் தரப்பட்டன.
ஒரு காட்டில் கொடிய சிங்கம் ஒன்று இருந்தது. பசி இல்லாவிட்டாலும் விலங்குகளை வேட்டையாடும் இரக்கமற்ற சிங்கம் அது. அந்தச் சிங்கத்தை கண்டாலே எல்லா விலங்குகளும் அஞ்சி ஓடிவிடும். இதற்கு ஒரு தீர்வு காண அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் குகைக்குச் சென்றன. "சிங்க ராஜா, நீங்கள் வேட்டையாடுவதில் வல்லவர். ஆனால் உங்களால், இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் அழிகின்றன. நீங்கள் வேட்டையாடாமல் உங்கள் கூகையிலே இருந்தால், தினம் ஒரு விலங்கை நாங்கள் உங்கள் குகைக்கே அனுப்புகிறோம். அதைத் தின்று நீங்கள் பசி ஆரலாம். இப்படிச் செய்தால் மற்ற விலங்குகள் உயிர் பிழைக்கும்." என்று சிங்கத்திடம் முறையிட்டன. சிங்கமும் தினமும் இரை தன் குகைக்கே வந்தால் வேலை மிச்சம் என்று மகிழ்ந்தது. "இந்த உடன்பாட்டிற்கு நான் சம்மதிக்கிறேன். ஆனால் தினமும் ஒரு விலங்கு என் குகைக்கு வரவேண்டும். ஒரு நாள் தவறினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்." என்றது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்கு சிங்கத்தின் குகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிங்கம் குகைக்கு வரும் விலங்கை மட்டும் தின்று விடும். மற்ற விலங்குகள் எல்லாம் நிம்மதியாகக் காட்டை சுற்றி வந்தன. இப்படிப் பல நாட்கள் செல்ல, ஒரு நாள் ஒரு சிறு முயல் தேர்ந்தெடுக்கப்பட்டது. முயலுக்கு இறக்க விருப்பம் இல்லை. சிங்கத்தை எதிர்த்துப் போர் இட தன்னால் முடியாது என்பதை உணர்ந்த புத்திசாலி முயல் யோசித்தது. முன்பு ஒருநாள் தான் பார்த்த கிணற்றின் ஞாபக வர ஒரு திட்டம் தீட்டியது. சிங்கத்தின் குகைக்கு வேண்டும் என்றே தாமதமாக சென்றது. சிங்கம் கடும் பசியில் இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் முயல் வரவில்லை என்றால் எல்லா விலங்குகளையும் கொன்று விட எண்ணியது. இறுதியில் குகைக்கு ஓடிவந்த முயலைப் பார்த்த சிங்கம் கோபமடைந்து. தன் பெரும் பசிக்கு ஒரு சின்ன முயல் எப்படி ஈடாகும்? சினம் கொண்ட சிங்கம் "ஏ முயலே.. உனக்கு என்ன தயிரியம். ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய். நீ மிகவும் சிறியதாகவும் இருக்கிறாய். உன்னைத் தின்றால் எனக்கு எப்படிப் பசி தீரும்? நான் உனக்காகக் காலையில் இருந்து காத்துக் கிடக்கிறேன். முதலில் உன்னைக் கொன்று, பிறகு உன் முயல் கூட்டத்தை கொன்று தின்கிறேன். என்னை ஏமாற்ற நினைத்தால் இது தான் தண்டனை." என்றது. அதற்கு முயல் பணிவுடன் "சிங்க ராஜா, நான் தாமதமாக வந்ததற்கு நான் காரணம் இல்லை. தங்களை ஏமாற்ற யாரும் நினைக்க வில்லை. உங்கள் குகைக்கு வர நான் காலையிலே புறப்பட்டு விட்டேன். ஆனால்..." என்று இழுத்தது. சிங்கம், "ஆனால் என்ன.. ? " என்று கர்ச்சித்தது.அதற்கு முயல், "என்னால் உங்கள் பசியை தீர்க்க முடியாது என்று எனக்கும் முயல் கூட்டத்திற்கும் நன்றாகத் தெரியும். அதனால் தான் என்னோடு வேறு நான்கு முயல்களும் வந்தன. ஆனால் வரும் வழியில் வேறொரு சிங்கம் இருந்தது. நாங்கள் எவ்ளவு சொல்லியும் மற்ற நான்கு முயல்களையும் பிடித்து வைத்துக் கொண்டது. மேலும் அந்தச்சிங்கம் தான் இந்தக் காட்டின் உண்மையான ராஜா என்றும் நீங்கள் போலி என்றும் சொன்னது. உங்களுக்கு உண்மையில் வீரம் இருந்தால் தன்னை வீழ்த்த வரும்படி அழைத்தது. இந்தச் செய்தியை உங்களுக்குத் தர தான் என்னை உயிருடன் விட்டது. இது தான் நான் தாமதமாக வந்ததற்குக் காரணம்." என்றது. தன் காட்டில் இன்னொரு சிங்கம் இருப்பதைக் கேட்ட சிங்க ராஜாவிற்கு கடும் கோவம் ஏற்பட்டது. "உடனே என்னை அந்தச் சிங்கத்திடம் அழைத்துச் செல். அந்தச் சிங்கத்தை ஒரே அறையில் கொன்று விடுகிறேன். என் காட்டில் வந்து என்னையே அவமானப் படுத்துகிறான்." என்று முயலிடம் கேட்டது. அதற்கு முயல், "சிங்க ராஜா, அந்தத் திமிர் பிடித்த சிங்கம் மிகவும் பெரிதாகவும் வலிமையாகவும் இருக்கிறது. அது ஒரு விசித்திர குகையில் இருக்கிறது. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். " என்று கூறி சிங்கத்தை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்றது. கிணற்றுக்கு அருகில் வந்தவுடன் முயல், "சிங்க ராஜா!.. இது தான் அந்த பொல்லாத சிங்கத்தின் குகை. நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் சென்று அந்தச் சிங்கத்தைக் கொன்று விடுங்கள்." என்றது. சிங்ககும் கிணற்றை எட்டிப் பார்த்தது. கிணற்று நீரில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்து, உள்ளே ஒரு சிங்கம் இருப்பதாக நினைத்தது. முயல் சொன்னது உண்மை என்றும் தன் காட்டுக்குள் வேறொரு சிங்கம் நுழைந்து விட்டதென்றும் நம்பியது முட்டாள் சிங்கம். பிறகு சிங்கம் கிணற்றில் எட்டிப்பார்த்து தன் முழு பலத்துடன் கர்ச்சித்தது. உடனே அந்தச் சத்தம் மிக அதிகமாகக் கீழ் இருந்து மேலே எதிரொலித்தது. மீண்டும் கிணற்றில் உள்ள சிங்கம் தான் இப்படிக் கர்ச்சித்ததென்று ஏமார்ந்து சிங்கம். சினம் கொண்ட சிங்கம் கிணற்றுக்குள் குதித்தது. உள்ளே வெறும் தண்ணீர் இருப்பதைக் கண்ட சிங்கம், முயல் தன்னை ஏமாற்றியதை உணர்ந்தது. பலத்த காயம் அடைத்த சிங்கம் மேலே வர முடியாமல் கிணற்றுக்குள் இறந்தது. முயலும் மற்ற விலங்குகளும் நிம்மதியாக இருந்தனர். முயல் அந்தக் காட்டிற்கே செல்ல விலங்கானது.
தினசரி அதிகா​லையில் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் ​தொழிலாளி ஒருவன் அரண்ம​ணைக்கு வருவது வழக்கம். தினசரி கா​லையில் முகத்​தை மழித்து முடி​யைத் திருத்துபவராதலால் அந்தத் ​தொழிலாளியிடம் ​வேடிக்​கையாக எ​தையாவது​ பேசுவது கிருஷ்ண​தேவராயரின் வழக்கம். அவனும் மன்னர் ​கேட்கும் ​கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலு​ரைப்பான். ஒருநாள் அவன் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருக்கும் ​போது,"நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்​றே. நமது நாட்டு மக்களின் வாழ்க்​கைத் தரம் எந்த நி​லையில் இருக்கிறது என்று உனக்குத்​ தெரிந்திருக்கு​மே என்றார்."​ மேன்​மை தாங்கிய மகாராஜா அவர்க​ளே! தங்களு​டைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர். மக்களின் ஒவ்​வொருவர் இல்லத்தில் கு​றைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது. அதனால் எவரும் கவ​லையில்லாமல் இருக்கின்றனர்" என்றார் சவரத்​தொழிலாளி. சவரத்​ தொழிலாளி ​சென்ற பின்னர் எப்​போதும் ​போன்று மன்ன​ரைக் காண அப்பாஜி வந்தார் அப்பாஜியிடம் சவரத் ​தொழிலாளி கூறிய​தை மன்னர் கூறினார்."இவன் இப்படிக் கூற என்ன காரணம்? இவன் ​சொன்னது ​போன்று எப்படி ​எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் ​பொன் இருக்கும்? எலுமிச்சம்பழ அளவு ​பொன் என்பது சாதாரண மக்கள்​ வைத்திருக்க முடியாது! ​பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும். ஆ​கையினால் இதுபற்றித் ​தெரிந்து ​கொள்ள ​வேண்டும்!" என்று வினவினார்."இதற்கு வி​ரைவில் வி​டை​யைக் கூறுகி​றேன்" என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் ​சென்றுவிட்டார். மறுநாள் வழக்கம்​போல் சவரத் ​தொழிலாளி அரண்ம​னைக்கு வந்து கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருந்தான். அச்சமயம் அப்பாஜி, காவலர்க​ளை அ​ழைத்து"சவரத் ​தொழிலாளியின் இல்லத்​தை ​சோத​னை ​செய்துவிட்டு வி​ரைவில் வாருங்கள்" என்று கட்ட​ளையிட்டார். காவலர்கள் சவரத் ​தொழிலாளியின் இல்லத்திற்குச் ​சென்று ​சோத​னை ​செய்த​போது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு ​பொன் இருப்ப​தைக் கண்டு வந்து கூறினர்.அத ​னை மன்னரிடம் ​கொடுத்துவிட்டு, மன்னர் ​பெருமா​னே! அடுத்த நாள் சவரத் ​தொழிலாளி வந்ததும், முதலில் ​கேட்டது ​போன்று ​கேளுங்கள். அவனிடமிருந்து ​வேறு விதமான பதில் கி​டைக்கும்" என்றார் அப்பாஜி. வழக்கம் ​போல் கா​லை கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிக்க சவரத் ​தொழிலாளி வந்தமர்ந்தான். வரும்​போ​தே அவனது முகம் வாடியிருந்தது. அவன் தனது ​வே​லை​யை ஆரம்பிக்கும் சமயம்,"இப்​​பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?" என்று வினவினார் மன்னர்."​பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்க​ளே! அ​தை ஏன் ​கேட்கின்றீர்கள்? எல்​லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர். ​ கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்​தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?" என்று சவரத்​ தொழிலாளி கண்களில் நீர் மல்க ​தொண்​டை அ​டைக்கக் ​கூறினான். அச்சமயம் வந்த அப்பாஜி,"மன்னர் ​பெருமா​னே! இப்​போது வி​டை ​தெரிந்து விட்டதா? உலகத்திலுள்ள ஒவ்​வொருவரும் தன்னு​டைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நி​லை​யை நிர்ணயிக்கின்றனர். தன்​னைப் ​போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நி​னைக்கின்றனர். தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநி​லையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்" என்றார் அப்பாஜி. உட​னே காவல​னை அ​ழைத்து,"கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு ​பொன்​னைக் ​கொண்டு வந்து சவரத் ​தொழிலாளியிடம் ​கொடுங்கள்" என்று ஆ​ணையிட்டார் மன்னர். ​ கொண்டு ​கொடுத்த ​பொன்னுடன் சிறிது ​பொன்னும் பரிசாகச் சவரத் ​தொழிலாளிக்குக் ​கொடுத்தார். அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் ​வாங்கிச் ​சென்றான். மனித இயல்​பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திற​மை​யைப் பாராட்டினார் கிருஷ்ண​தேவராயர்.
சக்கிரவர்த்தி அக்பரும் அவருடை மதியூக மந்திரியான பீர்பாலும் ஒரு நாள் மாறுவேட மணிந்து நகர் சோதனை செய்து வந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த அகபர், இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு பயனுள்ள தொழிலெதுவும் செய்யத் தெரியாதா? என்று கேட்க, பீர்பாலின் மனத்தில் முள்ளெனத் தைத்தன அந்த வார்த்தைகள். பிறகு அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்துக் கேட்டபொழுது தன்னுடைய பெரிய குடும்பத்தைக் காப்பற்ற வேறு வழி புலப்படாததால் பிச்சையெடுக்க முற்பட்டதாகவும், இதன் மூலம் நாளொன்றுக்கு 25 காசுகள் கிடைக்கின்றன என்றும் கூறினான். அதைச் செவியுற்ற பீர்பால் அவன் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்திரி ஜபம் செய்வதாக இருந்தால் அன்றாடம் அவனுக்கு 50 காசுகள் தருவதாகக் கூறினார். அந்த ஏழையும் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு பீர்பால் சொன்னபடி ஜபம் செய்து வந்தான். பயனெதுவும் கருதாமல் நாள் பூராகவும் காயத்திரி ஜபம் செய்து வந்ததால் அவன் முகத்திற்கு ஒரு அசாதரணமான காந்தி ஏற்பட்டது. இதை அறிந்த பீர்பால் அந்த ஏழையை அணுகி தினம் 108 தடவை காயத்திரி ஜபம் செய்தால் அவனுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னார். அதற்கும் ஒப்புக்கொண்டு அந்த ஏழையும் தீவிரமாக ஜபம் செய்தார். ஒரு நாள் அவனுக்கு அஞ்ஞான இருள் நீங்கியது. அவனுக்கு அமோகமான் ஆன்மீக வளர்ச்சியும் தெய்வீக ஒளியும் ஏற்ப்பட்டு, தினந்தோறும் திரளான மக்கள் அவனை நாடி வணங்கி அருள் பெற்று வந்தனர். ஒரு மாதம் ஆனதும் அந்த ஏழை பணம் வாங்க வராததால் பீர்பாலே அவன் வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தார். ஆனால் அவன் பணிவுடன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து, அவனுக்குச் சிறந்த ஆன்மீக வழியைக் காட்டியதற்காக பீர்பாலுக்கு நன்றி தெரிவித்தான். மறுநாள் பீர்பால் அக்பரை அந்த ஏழை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் முகத்தில் தென்பட்ட தேஜஸையும் அங்கு அருள் பெற வந்த மக்களையும் பார்த்து அக்பர் மிக ஆச்சரியப்பட்டார். அக்பரும் அவ்ர் காலில் விழுந்து அருள் புரியுமாறு வேண்டினார். சில மாதங்களுக்கு முன் நீங்க்ள் இகழ்ந்து பேசிய அதே பிச்சைக்காரன் தான் இவன் என்று சக்கிரவர்த்தியின் காதில் கிசு கிசுத்தார் பீர்பால். சக்கிரவர்த்தி நம்பாமல் அந்த எழையை இந்த மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டார். அவ்னும் நடந்ததைச் சொன்னான். காயத்திரி ஜபம் செய்ததால் வந்த பெருமை என்று பீர்பால் விளக்கினார்.. சுருங்க கூறின், காயத்திரி ஜபத்தினால் பட்ட மரம் தழைக்கும், தரித்திரனும் தனிகனாவான். வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்பவர்கள் நிம்மதியும், மனச் சாந்தியும் பெறுவார்கள். சத்தருக்கள் நாசமடைவார்கள், பாபங்கள் நீங்கிப் பிறவித்துயர் நீங்கும். வேதஸாரமான் இந்த மஹா மந்திரம் நம் ரிஷிகளின் அருளினால் நமக்குக் கிடைத்த அறிய பொக்கிஷம்
திடீரென்று பரமார்த்தரின் தொப்பை பெரிதாகிக் கொண்டே போனது. உட்கார்ந்தால் நிற்க முடியவில்லை; நின்றால் உட்கார முடியவில்லை. இதைக் கண்ட சீடர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தனர். "குருவே! தினம் தினம் உங்கள் தொப்பை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே போகிறதே! எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது" என்றான் மட்டி. "வயிறு இவ்வளவு பெரியதாய் இருக்கிறதே! ஒரு வேளை உங்களுக்குக் குழந்தை ஏதாவது பிறக்கப் போகிறதா?" என்று ஆச்சரியப்பட்டான், மூடன். "குருவே! இதை இப்படியே விட்டுவிடக் கூடாது. அப்புறம் ஒரு நாளைக்கு உங்கள் தொப்பை டமார் என்று வெடித்து விடும்!" என்று பயம் காட்டினான் மடையன். "ஐயையோ!" என்று அலறிய பரமார்த்தர், "இதற்கு என்ன செய்வது?" என்று கேட்டார். "சித்த வைத்தியர் யாரிடமாவது காட்டலாம்" என்று யோசனை சொன்னான் மண்டு. "வைத்தியரிடம் போனால் நிறைய செலவாகும். அதனால் நாங்களே காட்டுக்குச் சென்று மூலிகைகள் பறித்து வருகிறோம். அதிலிருந்து ஏதாவது லேகியம் தயாரித்துச் சாப்பிட்டால், தொப்பை கரைந்து விடும்!" என்று வேறொரு யோசனை சொன்னான், முட்டாள். உடனே மூடன், கிடுகிடு என்று பரண்மேல் ஏறி, செல்லரித்துப் போன பழைய ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்தான். "குருவே! தொப்பை கரைச்சான் லேகியம் என்பது பற்றி இதிலே எழுதியிருக்கு! இதில் குறிப்பிட்டிருக்கும் செடிகளை நாங்கள் கொண்டு வருகிறோம்" என்றபடி கீழே குதித்தான். எப்படியாவது தொப்பை கரைந்தால் போதும் என்று நினைத்த பரமார்த்தர், "சீடர்களே! சீக்கிரம் புறப்படுங்கள். நிறைய லேகியம் தயாரித்தால் அதை மற்றவர்களுக்கும் விற்று விடலாம்" என்று அனுப்பி வைத்தார். காட்டுக்குச் சென்ற சீடர்கள், "தொப்பை கரைச்சான் மூலிகை" எது என்று தெரியாமல் விழித்தார்கள். அப்போது சற்றுத் தூரத்தில் முனிவர் ஒருவ ஒட்டிய வயிறுடன் தவம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட மட்டி, இவர் வயிறு இவ்வளவு ஒட்டி இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் போனான். "முனிவரே! இந்தச் செடிகளில் தொப்பை கரைச்சான் செடி எது என்று தெரியுமா?" என்று பலமாகக் கத்தி அவரது தவத்தைக் கலைத்தான். கோபம் கொண்ட முனிவர், "எந்தச் செடி நாறுகிறதோ, அதுதான் நீ கேட்கும் செடி!" என்று வேண்டுமென்றே சொல்லி அனுப்பினார்! முனிவர் சொன்னதை நம்பிய சீடர்கள், கண்ட கண்ட இலைகளையும் பறிக்க ஆரம்பித்தார்கள். சாப்பிட்டால் பல வியாதிகளை உருவாக்குகிற இலைகளை எல்லாம் பறித்து மூட்டை கட்டினார்கள். சீடர்கள் பறித்து வந்த இலைகளை மோந்த பரமார்த்தர், முகத்தைச் சுளித்தார். "நன்றாக நாறுகிறது! எப்படியும் என் தொப்பை கரைந்து விடும்!" என்று மகிழ்ந்தார். அதன்பிறகு, "சீக்கிரம் ஆகட்டும்! எல்லாவற்றையும் கலந்து அரைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். முட்டாளும் மூடனும் இலைகளைத் துண்டு துண்டாகக் கிள்ளிப் போட்டனர். மட்டியும் மடையனும் கல்லில் வைத்து அரைக்க ஆரம்பித்தனர். அப்போது இலையில் இருந்து நாற்றம் வரவே, ஒருவர் மூக்கை இன்னொருவர் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அரைத்தனர். எல்லாவற்றையும் வழித்துச் சட்டியில் போட்டனர். அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சினான். அதன்பிறகு சீடர்கள் அனைவரும் லேகியத்தை உருண்டை பிடித்து எடுத்துக் கொண்டு குருவிடம் போனார்கள். "எங்கள் அருமை குருவே! இதோ, தொப்பை கரைச்சான் லேகியம் தயார்! உடனே இதைச் சாப்பிடுங்கள்" என்று பரமார்த்தரை வேண்டினார்கள். "பார்ப்பதற்குக் கொழ கொழ என்றும் கன்னங்கரேல் என்றும் இருந்த லேகியத்தைக் கண்டதுமே பரமார்த்தரின் முகம் பல கோணலாக மாறியது. முட்டளிடமிருந்து ஓர் உருண்டையை வாங்கி மூக்கருகே கொண்ட போனார். அதிலிருந்து வந்த நாற்றம் அவர் வயிற்றைக் கலக்கியது. "குருவே! யோசிக்காதீர்கள். நீங்கள் உயிர் வாழ வேண்டுமானால் உங்கள் தொப்பை கரைய வேண்டும். உங்கள் தொப்பை கரைய வேண்டுமானால் இதைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!" என்று கூறினான், மட்டி. பரமார்த்தரும், வேறு வழியின்றி இரண்டு உருண்டைகள் விழுங்கினார். "குருவே! இதையும் சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் தொப்பை சீக்கிரம் கரையும்!" என்ற படி இன்னும் சில உருண்டைகளை அவர் வாயில் கட்டாயமாகத் திணித்தனர், முட்டாளும் மூடனும். பரமார்த்தர் தம் தொப்பையைக் கரைப்பதற்காக ஏதோ ஒரு லேகியம் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்ட ஊர் மக்களில் சிலர், தாங்களும் அந்த லேகியத்தைச் சாப்பிட ஆசைப்பட்டனர். அந்த நாட்டு அரசனுக்கும் பெரிய தொப்பை இருந்ததால், அவனும் பரமார்த்தர் தயாரித்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டான். நேரம் செல்லச் செல்ல, எல்லோருக்கும் வயிற்றைக் கலக்கியது. "ஐயோ! என் தொப்பை வலிக்கிறதே!" என்று பரமார்த்தரும், மற்ற தொப்பைக்காரர்களும் அலற ஆரம்பித்தனர். தொப்பை கரைச்சான் லேகியம் என்று நினைத்து கண்டதையும் சாப்பிட்டதால், அனைவருக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டது. எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஏரிக் கரைக்கு ஓடினார்கள். மன்னரின் நிலைமையும் மோசமாகி விடவே, பரமார்த்தர் மீது கோபம் கொண்டார். இத்தனைக்கும் காரணமான அந்தக் குருவைப் பத்து நாட்களுக்குச் சிறையில் அடைத்துப் பட்டினி போடுங்கள்!" என்று ஆணையிட்டான். சிறையிலிருந்து தள்ளாடியபடி அந்தக் குருவைக் கண்ட சீடர்களுக்கு வியப்பாகப் போயிற்று. முன்பு வீங்கியிருந்த அவரது தொப்பை இப்போது கரைந்து அளவாக இருந்தது. "குருவே! நாங்கள் தயாரித்த லேகியம் தான் உங்கள் தொப்பையைக் கரைத்திருக்கிறது" என்று சீடர்கள் பெருமையோடு சொன்னார்கள். "லேகியமாவது, மண்ணாங்கட்டியாவது! சோறு தண்ணீர் இல்லாமல் பத்து நாட்கள் சிறையில் பட்டினி கிடந்தேன். அதுதான் இப்படி ஆகிவிட்டேன்!" என்றபடி பசிக் களைப்பால் சுருண்டு விழுந்தார், பரமார்த்தர்.
நல்வழிப்படுத்தவும். Saturday, April 08, 2006 கதை எண் 91 - முட்டாள்களுக்கு வீண் உபதேசம் எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன. "நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?" என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன. அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது. கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு அந்த ஆட்டிற்கு சிரிப்பே வந்துவிட்டது. "கழுதைகளே! நலம்தானா? நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தெரிகின்றதே…" என்று அவர்கள் வாயை கிளறியது. "ஆடே! ஆடே நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்திருக்கிறாய்!" என்றவாறு கழுதைகள் இரண்டும் ஆட்டை நோக்கின. "கழுதைகளே! நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நானும் அறிவேன். உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. முட்டாள்தனமான உங்கள் சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை…" என்று கூறியது ஆடு. இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்துவிட்டது. "ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு… இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு… அதை விட்டு விட்டு முட்டாள்தனமான சந்தேகம் எனக் கூறி எங்களை இன்சல்ட் பண்ணாதே," என்று கோபமாக கூறின. "கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? அப்படியிருக்க முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகி விடுவேன்," என்று கூறியது. கழுதைகள் இரண்டும் பொறுமை இழந்தன. தங்களின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன. கழுதைகள் இரண்டும் உதைத்த வேகத்தில் ஆடு எங்கோ சென்று விழுந்தது. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது.
ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து " என் வீட்டில் குடும்ப விழா ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும் சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து விடுகிறேன் " என்று கேட்டார். முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு மிகவும் பெரிய கெட்டிப் பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மாதிரியான நையாண்டி மனிதர். யாரையும் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கச் செய்வது அவரது வழக்கம். முல்லாவிடம் இரவல் வாங்கி பாத்திரத்தை அவர் திரும்பிக் கொடுக்கும் போது ஏதாவது ஒரு விதத்தில் முல்லாவை நையாண்டி செய்து பார்க்க வேண்டும் என அவர் தீர்மானித்தார். அவர் பாத்திரங்களை திரும்பிக் கொடுக்க வந்தபோது, முல்லா கொடுத்த இரண்டு பாத்திரங்கள் கூட ஒரு செம்பும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். " நான் இந்தச் செம்பை உங்களுக்கு கொடுக்கவில்லையே?" என வியப்புடன் கேட்டார் முல்லா. " முல்லா அவர்களே உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இருந்த போது இந்தச் சொம்பைக் குட்டி போட்டன. அதனால் குட்டியையும் உடனே கொண்டு வந்தேன் " என்றார் அண்டை வீட்டுக்காரர். சற்று யோசித்த முல்லாவுக்கு அவர் நம்மை நையாண்டி செய்வதற்காக இந்த நாடகமாடுகிறார் என்று புரிந்து கொண்டார். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவருக்குச் சரியான புத்தி கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். " ஆமாம் நண்பரே பாத்திரங்களை கொடுக்கும்போது அவை கர்ப்பமாக இருக்கின்றன என்ற உண்மையைச் சொல்ல மறந்து விட்டேன் " என்று கூறியவாறு அண்டை வீட்டுக்காரர் கொடுத்த பாத்திரங்களை வாங்கிக் கொண்டார் முல்லா. சில நாட்கள் கடந்தன, ஒரு நாள் முல்லா அண்டை வீட்டுக்காரரிடம் சென்று என் வீட்டில் ஒரு விசேஷம் புழங்குவதற்குத் தேவையான பெரிய பாத்திரம் இல்லை. தயவு செய்து பெரிய பாத்திரங்கள் இரண்டு கொடுங்கள் என்று கேட்டார். அந்த வீட்டுக்காரரும் இரண்டு பெரிய பாத்திரங்களை கொடுத்தார். முல்லா அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்தார். இரண்டு நாட்கள் கழித்து முல்லா ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அண்டை வீட்டுக்காாரிடம் சென்றார். " உங்களிடம் வாங்கிய பாத்திரம் இதோ இருக்கிறது. பெற்றுக்கொள்ளுங்கள" ் என்றார். " நான் இரண்டு பாத்திரம் கொடுத்தேனே ஒன்றுதான் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் ?" என அண்டை வீட்டுக்காரர் கேட்டார். முல்லா தமது முகத்தில் வருத்தம் பிரதிபலிக்க " நண்பரே ஒரு தீய நிகழ்ச்சியினைச் சொல்வதற்காக வருந்துகிறேன். தாங்கள் எனக்கு அளித்த பாத்திரங்களில் ஒன்றான பெண் பாத்திரம் கர்ப்பமாக இருந்திருக்கிறது. என் வீட்டுக்கு வந்த இரவே அது பிரசவ வேதனைப்பட ஆரம்பித்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக அது பிரசவித்த குழந்தையும் செத்து விட்டது. தாயும் இறந்து விட்டது. அவை இரண்டையும் தகனம் செய்து விட்டேன் " என்றார். முல்லா தனக்குச் சரியானபடி பதிலடி தருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அண்டை வீட்டுக்காரர் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். " இனி இந்த மாதிரி உங்களை நையாண்டி செய்ய மாட்டேன். தயவு செய்து என் பாத்திரத்தைத் திருப்பித் கொடுத்து விடுங்களஞ் என்று வேண்டிக் கொண்டார். முல்லா அவரடைய பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.
செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது. ஓநாயும் "நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை….." என்று வருத்தத்துடன் கூறியது."அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. "சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!" என்றது ஓநாய்."அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!" என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று."உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை…அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?
ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள். இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான். இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான். போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன். இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார். உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார். அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர். அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான். ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான். அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான். உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது. அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர். தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மனனர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே.. பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார். அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.
ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள். வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான். மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள். ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள். மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள். பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான். அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான். அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: "மகனே! நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது?" மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: "அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்" குயவனின் மனைவிக்குத் தான் செய்த காரியத்தின் தீவிரம் புரிந்தது. மிகவும் வருந்தினாள். மாமியாரைத் தன் வீட்டுடன் வரவழைத்து மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.
ஓரு தடவை முல்லா ஒரு திருமணத்துக்குச் சென்றார். இரண்டொரு தடவை அவர் திருமணத்திற்கு சென்று திரும்பிவந்து பார்த்தபோது அவருடைய செருப்பு காணாமல் போய்விட்டது. அதனால் அன்று செருப்பை வெளியே விட்டுச் செல்ல முல்லாவுக்கு மனம் வரவில்லை. அந்தக் காலத்தில் செருப்பணிந்த காலுடன் வீட்டுக்குள் நடமாடக் கூடாது. செருப்புக்களை இழக்க விரும்பாத முல்லா அவற்றைக் கழற்றி ஒரு துணியில் சுற்றிக் கையில் வைத்துக் கொண்டார். முல்லாவின் கையில் ஏதோ காகிதப் பொட்டலம் இருப்பதைக் கண்ட திருமண வீட்டுக்காரர், " முல்லா அவர்களே ஏதோ காகிதப் பொட்டலத்தை வைத்திருக்கிறீரே, அதில் என்ன இருக்கிறது ? மணமகனுக்கு அளிக்கப்பட வேண்டிய பரிசா?" என்று கேட்டார். அது மிகவும் புனிதமான ஒரு வேதாந்த நூல் என்று முல்லா பதிலளித்தார். " வேதாந்த நூலா? இதை எங்கே வாங்கினீர்? " என திருமண வீட்டுக்காரன் வினவினான். செருப்புக் கடையில் வாங்கினேன் என்று முல்லா பதிலளித்தார். அவர் என்ன பதிலளித்தார் என்று விளங்கிக் கொள்ள முடியாமல் திருமண வீட்டுக்காரர் தத்தளித்தார்.
ஜப்பானிய செல்வந்தர் ஒருவர் சம்பந்தப்பட்ட விழாவுக்கு ஜென்ஞானி காசன் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன் இப்படியொரு ஆடம்பர விழாவில் அவர் கலந்து கொண்டதில்லை. எனவே, அவருக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது. வியர்த்து கொட்டியது. இந்நிகழ்ச்சிக்குப் பின் காசன் தன் மாணவர்களை அழைத்தார். ""என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களுக்கு ஆசிரியராக இருக்கத் தகுதியற்றவன். உலகத்தில் ஏற்படும் பிரபலத்தை சமமாகப் பாவிக்க முடியாத மனநிலையில் தற்போது இருக்கிறேன். நீங்கள் வேறு ஆசிரியரிடம் சென்று பயிலுங்கள்" என்று கூறி விடைபெற்றார். பின்னர், ஒரு கோயிலில் சென்று தனிமையில் தியானம் செய்தார். வேறு ஓர் ஆசிரியரிடம் மாணவராகச் சேர்ந்து பயின்றார். எட்டு ஆண்டுகளுக்குப் பின்காசன் ஞானம் அடைந்தவராக புதிய மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
End of preview. Expand in Data Studio

This is a no-instruct fork of aitamilnadu/tamil_stories

Downloads last month
94