text
stringlengths 3
79k
|
---|
எல்லப்பன் வட்டம் |
இருச கவுண்டர் வட்டம் |
ரகுபதிநகர் |
காமராஜி நகர் |
பெருமாள் கவுண்டர் வட்டம் |
மேற்கோள்கள் சகஜானந்த் சரஸ்வதி (Sahajanand Saraswati) (1889 பிப்ரவரி 22 - 1950 சூன் 26) இவர் ஓர் சந்நியாசியும், ஒரு தேசியவாதியும் மற்றும் இந்தியாவின் விவசாயத் தலைவருமாவார். |
வடமேற்கு மாகாணங்களில் (இன்றைய உத்தரப்பிரதேசம் ) பிறந்திருந்தாலும், இவரது சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகள் ஆரம்ப நாட்களில் பெரும்பாலும் பீகாரில் கவனம் செலுத்தியது. மேலும் படிப்படியாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை உருவாக்கியதன் மூலம் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இவர் பீகார் அருகே பிக்தா என்னுமிடத்தில் ஒரு ஆசிரமத்தை அமைத்திருந்தார். அங்கிருந்து தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் தனது பெரும்பாலான பணிகளை மேற்கொண்டார். இவர் ஒரு அறிவார்ந்த, செழிப்பான எழுத்தாளரும், சமூக சீர்திருத்தவாயும் மற்றும் புரட்சியாளராகவும் இருந்தார். |
சுயசரிதை |
சுவாமி சகஜானந்த சரசுவதி 1889 ஆம் ஆண்டில் கிழக்கு வடமேற்கு மாகாணங்களில் காசிப்பூர் மாவட்டம் துல்லாப்பூர் அருகே உள்ள தேவா என்ற கிராமத்தில் ஜிஜோதியா பிராமணர்களின் குடும்பத்தில் பிறந்தார். ஆறு மகன்களில் கடைசியாக பிறந்த இவர் பின்னர் னௌரங் ராய் ஜிஜோதியா என்று அழைக்கப்பட்டார். இவர் குழந்தையாக இருந்தபோது இவரது தாயார் இறந்துவிட்டார். இவரை இவரது அத்தை வளர்த்தார். |
ஜிஜோதியா பிராமணர்கள் "கன்னியாகுப்ஜா பிராமணர்களின்" ஐந்து கிளைகளில் ஒன்றாகும். இவரது தந்தையின் பெயர் "பண்டிதர் பெனி ராய் ஜிஜோதியா", அவர் கர்மகாண்டி பிராமணரும் விவசாயியும் ஆவார். அவருக்கு நிறைய நிலம் இருந்தது, எனவே இந்த மக்களின் குடும்பப்பெயர் நில உரிமையாளரின் குடும்பப் பெயருடன் பிராமண குடும்பப் பெயருடன் தொடர்புடையது. |
சுவாமி சகஜானந்தா பிறந்த சிறிது காலத்திலேயே இவரது தாய் இறந்துவிட்டதால், சுவாமிஜியின் தாயின் பெயர் தெரியவில்லை. |
பின்னர் சுவாமி சகஜானந்த சரசுவதி "பூமிகார்கள்" துறவிகளின், வழிகாட்டியாகவும் மற்றும் ஆலோசகராகவும் ஆனார். அதனால்தான் இவரை பூமிகார் என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டனர். |
பூமிகார்களுடன இவரது தொடர்பு காரணமாக, இவரது ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகள் பெரும்பாலும் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஆரம்பித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை உருவாக்கிய பின்னர் இந்தியா முழுவதும் பரவியது. இவர் பட்னாவுக்கு அருகிலுள்ள பிக்தாவில் ஒரு ஆசிரமத்தை கட்டியிருந்தார். அங்கிருந்து இவர் தனது வாழ்க்கையின் பிற்பகுதியின் அனைத்து பணிகளையும் நடத்தி வந்தார். |
1929 ஆம் ஆண்டில் சுவாமி சகஜானந்தா தலைமையில் பீகாரில் விவசாயிகள் சங்கம் உருவானது. இதன்மூலம் அவர்களின் ஆக்கிரமிப்பு உரிமைகள் மீதான ஜமீன்தாரி தாக்குதல்களுக்கு எதிராக விவசாயிகளின் குறைகளைத் திரட்டுவதற்காகவும், இதனால் இந்தியாவில் விவசாயிகளின் இயக்கங்களுக்கும் வித்திட்டது. |
படிப்படியாக விவசாயிகள் இயக்கம் தீவிரமடைந்து இந்தியாவின் பிற பகுதிகளிலும் பரவியது. விவசாயிகள் முன்னணியில் இந்த தீவிரமான முன்னேற்றங்கள் அனைத்தும் 1936 ஏப்ரல் மாதம் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் இலக்னோ அமர்வில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உருவாவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது, சரசுவதி அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் என்.ஜி.ரங்கா மற்றும் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு போன்ற போன்ற முக்கிய தலைவர்கள் அதில் ஈடுபட்டனர். ஆகத்து 1936 இல் வெளியிடப்பட்ட விவசாயிகள் அறிக்கையில், ஜமீன்தாரி முறையை ஒழிக்க வேண்டும், கிராமப்புற கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. அக்டோபர் 1937 இல், அகில இந்திய விவசாயிகள் சங்கம் சிவப்புக் கொடியை அதன் கொடியாக ஏற்றுக்கொண்டது. அதன் தலைவர்கள் காங்கிரசுடன் அதிக கருத்து வேற்பாட்டுடன் இருந்தனர். மேலும் பீகார் மற்றும் ஐக்கிய மாகாணத்தில் காங்கிரசு அரசாங்கங்களுடன் பலமுறை மோதலில் ஈடுபட்டனர். |
சரசுவதி 1937-1938 இல் பீகாரில் பகாஷ் இயக்கத்தை ஏற்பாடு செய்தார். "பகாஷ்" என்றால் சுய விவசாயம் செய்பவர் என்பதாகும். இந்த இயக்கம் பகாஷ் நிலங்களில் இருந்து குத்தகைதாரர்களை ஜமீன்தார்களால் வெளியேற்றுவதற்கு எதிரானதாக இருந்தது. மேலும் பீகார் குத்தகை சட்டம் மற்றும் பகாஷ் நில வரி ஆகியவற்றை நிறைவேற்ற வழிவகுத்தது. பிக்தாவில் உள்ள டால்மியா சர்க்கரை ஆலையில் வெற்றிகரமான ஒரு போராட்டத்திற்கும் இவர் தலைமை தாங்கினார். |
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுவாமி சரசுவதி கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சி இவரை பிரிட்டிசு அரசு சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடிவு செய்து ஏப்ரல் 28 ஐ அகில இந்திய சுவாமி சகஜானந்தா தினமாக கொண்டாட முடிவு செய்தனர். |
சரசுவதி 1950 சூன் 26 அன்று இறந்தார். |
அங்கீகாரம் |
சுவாமி சகஜானந்தா நினைவாக இவரது சொந்த மாவட்டமான காசிப்பூரில் (உத்தரப் பிரதேசம்) சுவாமி சகஜானந்தா முதுகலை கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. |
சரசுவதியின் நினைவாக ஒரு அஞ்சல் முத்திரையை இந்திய அரசு சார்பில் 2000 சூன் 26 அன்று அப்போதைய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த ராம் விலாஸ் பாஸ்வான் வெளியிட்டார். |
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் சுவாமி சகஜானந்த சரசுவதி விரிவாக்க விஞ்ஞானி / தொழிலாளர் விருதை வழங்குகிறது . |
2001 ஆம் ஆண்டில், சரசுவதியின் 112 வது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு நாள் விவசாயிகள் மகாபஞ்சாயத்து ஏற்பாடு செய்யப்பட்டது. |
பீகார் ஆளுநர் ஆர்.எஸ்.கவாய் பட்னாவில் சரஸ்வதியின் 57 வது நினைவு ஆண்டு விழாவில் இவரது வாழ்க்கை குறித்த புத்தகத்தை வெளியிட்டார். |
Swami Sahajanand Saraswati images |
http://www.bihartimes.in/articles/Manish_Thakur/swami_sahjanand.htmlவரலொட்டி ஊராட்சி (Varalotti Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2350 ஆகும். இவர்களில் பெண்கள் 1188 பேரும் ஆண்கள் 1162 பேரும் உள்ளனர். |
நாகம்பட்டி |
வரலொட்டி |
மேற்கோள்கள் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (இந்தியா) (The Central Institute of Brackishwater Aquaculture (CIBA), என்பது இந்தியாவில் உவர்நீர் மீன் வளர்ப்பு ஆய்வை மேம்படுத்த, இந்திய நடுவண் அரசின் வேளாண்மை அமைச்சகத்தின், இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகத்தால் (ICAR) சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆய்வுக் கழகமாகும்.இக்கழகத்தின் தலைமையகம் ராஜா அண்ணாமலைபுரம், சென்னையிலும், ஆய்வு மையம், மேற்கு வங்காளத்தின் காக்தீப் என்ற இடத்திலும், கள ஆய்வு நிலையம், முட்டுக்காடு, சென்னையிலும் அமைந்துள்ளது. |
சர்ச்சைகள் |
மத்திய அரசாங்கம் தனது 103 தேசிய வேளாண் ஆராய்ச்சி மையங்களுள் ஒரே பயிருக்காக இருவேரு இடங்களில் செயல்படும் 43 நிறுவனங்களை மூட நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது, இதில் தமிழ்நாட்டிலுள்ள மூன்று தேசிய விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களை மூட உத்தேசித்துள்ளதாகவும் தெரிகிறது. சென்னையிலுள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தினை கொச்சியில் செயல்படும் நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாகவும் நவம்பர் 2017ல் செய்தி வந்ததையடுத்து தமிழக விவசாயிகள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. |
on Wikimapia |
Profile பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம் |
ICAR booklet on CIBA |
Booklet on CIBA பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம்டேவிட் லார்ட்டர் (David Larter, பிறப்பு: ஏப்ரல் 24 1940, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 182 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1962 - 1965 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.இலங்கை காப்பிலி அல்லது இலங்கை காபிர் அல்லது இலங்கை ஆப்பிரிக்கர் (Sri Lankan Kaffirs, போர்த்துக்கீச மொழி: cafrinhas, சிங்களம்: කාපිරි) எனப்படுவோர் 16ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் போர்த்துக்கேயர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போது, ஆப்பிரிக்க அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் உள்ளூர் மக்களுடன் கலந்து கொண்ட இனத்தவரைக் குறிக்கும். இவர்களின் முன்னோர்களாக ஆப்பிரிக்கர்களும் போர்த்துக்கேய வணிகர்களும் காணப்படுகின்றனர். இன்று இவர்கள் எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின், சிரம்பியடி பகுதியிலும், சிறு எண்ணிக்கையானோர் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் உள்ளனர். இவர்கள் பேசியது போர்த்துக்கீசம் கலந்த காப்பிலி (ஆப்பிரிக்க) கிரியோல் மொழியாக இருந்தபோதிலும், தற்போது சிங்களமே இவர்களின் தாய்மொழியாக மாறிவிட்டது. புகழ்பெற்ற 'பைலா' என்ற இசை ஆட்டத்திலிருந்து 'கப்ரிஞ்சா' மற்றும் 'மஞ்சா' என்னும் அவர்களது ஆடல் பண்பாட்டுத் தனித்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. |
மக்கட்தொகைக் கணக்கெடுப்பு |
இலங்கை மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இவர்களது இன அடையாளமான, ஆப்பிரிக்க வம்சாவளியினராக அல்லாமல், சிங்களவர்களாகவே கணக்கெடுக்கப்படுவதாகவும் செய்திகள் காணப்படுகின்றன. |
புத்தளத்தில் ஆபிரிக்க கஃபீர் இன குடும்பங்கள் 50 அளவில் வாழ்கின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். திருகோணமலையில் வாழும் ஆபிரிக்க கஃபீர்களுடன் இவர்களுக்குத் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால், மட்டக்களிப்பில் வாழும் ஆபிரிக்க கஃபீர்களுடனான தொடர்புகள் இவர்களுக்குக் குறைவு. மட்டக்களப்பில் வாழும் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் தமிழ் மொழியையே பேசுகின்றனர் |
தற்போது ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் சிங்களவர்களுடன் கலப்புத் திருமணங்களை செய்து வருவதனால், அவர்களது இளம் தலைமுறையினரின் முகத் தோற்றத்தில் நாம் வித்தியாசங்களை அவதானிக்கலாம். ஆபிரிக்க இனத்தவர் என்பதற்கான அடையாளங்கள் இளம் தலைமுறையினரில் குறைந்தே வருகின்றது. |
ஆப்பிரிக்க இலங்கையர் |
மேற்கோள்கள் உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. 2005ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 213 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்றதுடன் ஆண்டு 1 முதல் ஆண்டு 9 வரை வரை வகுப்புக்கள் நடைபெற்றன.100,000 குடியிருப்பவரின்படி ஆண்டுக்கு வேண்டுமென்றே செய்கின்ற மனிதக்கொலை விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல். இந்த மனிதக்கொலை விகிதத் தரவு வேறுபடலாம். |
பிராந்தியம் |
நாடு |
குறிப்பு |
ஆப்கானித்தான். ஆப்கானித்தானில் போர் (1978-தற்போது). |
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு. மத்திய ஆபிரிக்கக் குடியரசு முரண்பாடு (2012–தற்போது). |
கொலொம்பியா. கொலொம்பியா உள்நாட்டுப் போர் (1964–தற்போது). |
ஈராக். ஈராக் போர். |
இசுரேல். இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு. |
லிபியா. 2011 லிபிய உள்நாட்டுப் போர். |
மெக்சிக்கோ. மெக்சிக்கோ போதைப் பொருள் போர். |
நோர்வே. 2011 நோர்வே தாக்குதல்கள். |
பாக்கித்தான். வட மேற்குப் போர். |
பலத்தீன் நாடு. இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு. |
சோமாலியா. சோமாலிய உள்நாட்டுப் போர். |
சூடான். சூடான் பிணக்குகள். |
யெமன். யெமன் சியா தாக்குதல்கள். |
ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் |
OECD Murder Rates பரணிடப்பட்டது 2013-04-14 at the வந்தவழி இயந்திரம் : open, downloadable historical murder rates |
குண்டுகள் |
இரு குண்டுகள் ஏந்திய தற்கொலைப்படை வீரர்கள் ஒரு பாதுகாவலரைக் கொன்று, மற்றொருவரைத் தாக்கி தேவாலயத்திற்குள் நுழைந்தனர். தொடர்ந்து காவலாளி ஒருவரால் நிறுத்தப்படும்போது ஒரு தற்கொலைப்படை வீரர் குண்டினை வெடிக்கச் செய்தார். இரண்டாவது தற்கொலைப்படை வீரர் தேவாலயத்திற்குள் நுழைந்து அங்கு குண்டினை வெடிக்கச் செய்தான். தாக்குதலைப் பார்த்த ஒருவரது தெரிவிப்பின்படி, பக்தர்கள் இலவச உணவுக்காக தேவாலயத்தின் புல்வெளியில் காத்திருந்தபொழுது குண்டு வெடித்தது என்று கூறுகின்றார். தேவாலயத்தின் சுவர்களிலும் சன்னல்களிலும் ஓட்டைகல் இருந்தன. மேலும், குண்டின் தாக்கத்தில் பக்கத்துக் கட்டடங்களும் சேதத்திற்கு உட்பட்டன. தாக்குதல் நடத்தியவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. இந்த தாக்குதல் 6 கிலோ கிராம் வெடிமருந்து கொண்டு நடத்தப்பட்டது. |
மேற்கோள்கள் பத்தாங் பெனார் (மலாய்: Batang Benar; ஆங்கிலம்: Batang Benar; என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலம், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறுநகரம். இந்த நகரம் நெகிரி செம்பிலான் - சிலாங்கூர் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. |
சிரம்பான் தொடருந்து சேவையின் (KTM Komuter) வழியாக இந்த நகரம் சிரம்பான் நகருடன் எளிதாக இணைக்கப் படுகிறது. இந்த நகரம் முதலில் ஒரு கிராமமாக இருந்தது. அது இப்போது நகரமாக மாற்றப்பட்டுள்ளது. |
பொது |
இந்த நகரத்திற்கு அருகாமையில் உள்ள நகரங்கள்: பாஜம், மந்தின். மிக அருகில் உள்ள பெரிய நகரம் நீலாய். |
இந்த நகரத்தின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்தது. குறிப்பாக பழத்தோட்டங்கள். இங்கு நிறைய டுரியான் பழத் தோட்டங்கள் உள்ளன. |
பத்தாங் பெனார் தமிழ்ப்பள்ளி |
பத்தாங் பெனார் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. |
வெளி இணைப்புகள் அர்ச்சனா ரவி (பிறப்பு 17 ஜூன் 1996) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த விளம்பர மாதிரிப் பெண்ணும், அழகுப் போட்டியாளரும், நடிகையும் பாரம்பரிய நடனக் கலைஞருமாவார். பல்வேறு அழகிப்போட்டிகளில் பட்டம் வென்றுள்ள இவர், பிப்ரவரி 2019 இல், குழந்தைகளை மேம்படுத்துவதற்காக "நண்பர் திட்டம்" என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். |
தொழில் வாழ்க்கை |
விளம்பரங்களில் மாதிரிப்பெண்ணாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அர்ச்சனா, அதன் மூலம் திரைப்படத் துறையில் நுழைந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அட்டு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாயுள்ளார் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்ததோடு இல்லாமல், பல்வேறு உலக, இந்திய, மாநில அழகிப்போட்டிகளில் பங்கேற்று இளைஞர்களின் சின்னமாக மாறியுள்ளார். ஃபெமினா மிஸ் இந்தியா 2019 கேரளா போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியில் முதல் மூன்று மிஸ் இந்தியா கேரளாவில் ஒருவராக வென்றுள்ளார். பின்னர் அவர் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2020 அழகிப்போட்டியில் பங்கெடுத்து முதல் பத்து பேரில் ஒருவராக, இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டில், மிஸ் இன்டர்நேஷனல் 2021 அழகிப்போட்டி மற்றும் மிஸ் மல்டிநேஷனல் 2021 அழகிப்போட்டிக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் 2021 பதிப்பிற்கான கிளாமனண்ட் சூப்பர்மாடல் என்ற தகுதிபோட்டியில் வென்று, இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
திரைப்படவியல் |
மேற்கோள்கள் எம் இன்னாசு அலி (M Innas Ali) (செப்டம்பர் 1, 1916 – மே 3, 2010) ஓர் வங்காளதேச இயற்பியலாளர் ஆவார். இவர் வங்காளதேச அணுசக்தி ஆணையத்தின் நிறுவனத் தலைவராக இருந்தார். 1994 இல் வங்காளதேசத்தின் தேசியப் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
கல்வி |
அலி, 1940 இல் தாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். பின்னர் இவர், 1948இல் நியூயார்க்கு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியையும், 1955இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அணு இயற்பியலில் ஆரய்ச்சியையும் முடித்தார். அலி, வங்காளதேச அறிவியல் கழகத்தின் தலைவராகவும், சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சுதந்திர தின விருது .1991 இல் இவருக்கு வழங்கப்பட்டது. |
An undying soul dedicated to scienceதாபிதா சாலமன் (Tabitha Solomon) (பிறப்பு 1901) இந்தியாவில் பல் மருத்துவராக தகுதி பெற்ற முதல் பெண்களில் ஒருவர் ஆவார். 1928இல் கொல்கத்தா பல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு சித்தரஞ்சன் சேவா சதன் மருத்துவமனையில் பல் மருத்துவ நிலையத்தைத் தொடங்கினார். மேலும் தபெரின் மருத்துவமனையிலும் பணிபுரிந்தார். பக்தாத் யூத சமூகத்தின் உறுப்பினரான இவர் யூத சமுதாயப் பணிகளில் நெருக்கமாக ஈடுபட்டார். |
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் |
தாபிதா சாலமன் 1900ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவில் பாக்தாதி யூத சமூகத்தில் பிறந்தார். இந்தியாவில் பல் மருத்துவராக தகுதி பெற்ற முதல் பெண்களில் இவரும் ஒருவர், கொல்கத்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (பின்னர் டாக்டர் ஆர். அகமது பல் கல்லூரி) பட்டம் பெற்றார், 1928 மார்ச் 30 அன்று பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். அதே கல்லூரியிலிருந்து 1923 இல் தகுதி பெற்ற ஒரே முந்தைய பல் மருத்துவரான பாத்திமா அலி ஜின்னாவிற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், லாகூரில் உள்ள டி'மொன்ட்மோர்ன்சி பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவத்தில் 1944 இல் தகுதி பெற்ற விம்லா சூட் என்பவருக்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்பும் இவரது சாதனை இருந்தது. |
இவர், கல்கத்தா டென்டல் ஜர்னல் என்ற இதழில் இரபியுதீன் அகமது என்பவருடன் பணிபுரிந்து சித்தரஞ்சன் சேவா சதான் மருத்துவமனையில் பல் மருத்துவ நிலையத்தைத் தொடங்கினார். மேலும், தபெரின் மருத்துவமனையில் கௌரவ மருத்துவராகப் பணிபுரிந்தார். |
இவர் யூத காரணிகளில் நெருக்கமாக ஈடுபட்டார். மகளிர் சர்வதேச சியோனிச அமைப்பு, நலக்குழுக்கள், கொல்கத்தா யூத சங்கம், பன்முக கலாச்சார கொல்கத்தா மகளிர் குழு ஆகியவற்றில் பணியாற்றினார். |
சொந்த வாழ்க்கை |
தபிதா சாலமன் எரிக், சார்லசு என்ற இரண்டு மகன்களையும் ஹெப்பே என்ற ஒரு மகளையும் பெற்றார். |
Remembering Tabitha Solomon,the first Indian woman dentist. White Coat Nerd.கே. வி. வி. ராஜமாணிக்கம் (K. V. V. Rajamanickam) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1991 தேர்தல்களிலும், 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு (மூப்பனார்) கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
இராஜமாணிக்கத்தின் சொந்த ஊர் கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஆகும். இவர் தொடர்ந்து மூன்று முறை மேலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். |
இவரின் தந்தை கே. வி. வீரன் அம்பலம் தொடர்ந்து இரண்டு முறை மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். |
மேற்கோள்கள் பெத்தானியாவின் இலாசர் அல்லது புனித இலாசர் என்பவர் யோவான் நற்செய்தியின்படி இறந்த நான்கு நாட்களுக்குப்பின்னர் இயேசு கிறித்துவால் உயிர் பெற்றவர் ஆவார். இந்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் இயேசு செய்த ஏழு புதுமைகளில் ஒன்றாகும். கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மரபுகளில் இலாசரின் பின்னாட்கள் குறித்த ஒத்த கருத்தில்லை. |
கடவுளே எனக்கு உதவி எனப்பொருள்படும் இலாசர் என்னும் பெயரானது லூக்கா நற்செய்தியில் செல்வந்தனும் இலாசரசும் உவமையில் மறொருவருக்கும் வழங்கப்படுவது குறிக்கத்தக்கக்து. |
யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்படும் இந்த நிகழ்வினாலே இறந்ததாகக்கருதப்படும் உயிரினம் உயிர்பெறும் நிகழ்வை குறிக்க இலாசரின் பெயர் பயன்படுத்தப்படுகின்றது. Lazarus taxon என்னும் சொல் தொல்லுயிர் எச்சப் பதிவுகளில் சில காலத்திற்கு காணாமல் இருந்ததால் அழிந்த இணம் எனக்கருதப்பட்டவை மீண்டும் காணக்கிடைக்கும் நிகழ்வைக்குறிக்கின்றது. அதேபோல Lazarus phenomenon என்னும் சொல் மீளுயிர்ப்புச் சுவாசம் கைவிடப்பட்டப்பின்பு மீண்டும் உயிர்பெற்று இதயம் துடிக்கும் நிகழ்வை குறிக்கப்பயன்படுத்தப்படுகின்றது. |
கலையில் |
கிறிஸ்து இலாசரை உயிர்பெறச்செய்த நிகழ்வானது கிறித்தவ சமயக்கலையில் அதிகம் இடம்பெற்றுள்ளது. ரெம்பிரான்ட், வின்சென்ட் வான் கோ முதலிய பல குறிக்கத்தக்க ஓவியர்கள் இதனைத்தீட்டியுள்ளனர். |
இலாசர் உயிர்பெறுதலை சித்தரிக்கும் ஓவியங்கள் |
மேற்கோள்கள் மணல்பருத்திக்காடு (Manalparuthikadu) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். |
இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இங்கு மொத்த குடியிருப்புகள் 72,. |
மேற்கோள் பிடாரனேந்தல் வேதபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், பிடாரனேந்தல் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். |
இக்கோயிலில் வேதபுரீஸ்வரர் சுவாமி, புஷ்பவள்ளி அம்மன் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், சனிஸ்வரர், துர்க்கையம்மன், லெட்சுமிஅம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. |
இக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. |
மேற்கோள்கள் அன்புக்கரங்கள் (Anbu Karangal) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். |
பாடல்கள் |
ஆர். சுதர்சனம் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். |