text
stringlengths
3
79k
நாரியா படுகொலை (Naria massacre வங்காள மொழி: নড়িয়া হত্যাকান্ড ) பாக்கித்தான் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் 5 மே 1971 இல் சில்ஹெட் மாவட்டத்தில் உள்ள நாரியா கிராமத்தில் பெங்காலி இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.
பின்னணி
நாரியா கிராமம் மேல் காகபலா யூனியனில், மவுல்விபஜார் சதர் உபாஸிலாவின் மேற்கு முனையில் அமைந்துள்ளது, 1971 இல், மௌலிபஜார் மாவட்டம் சில்ஹெட் மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவாக இருந்தது. கிராமம் ஏராளமான பனிப் படிகங்களால் சூழப்பட்டுள்ளது, இது மழையின் போது கிராமத்தை அணுக முடியாததாக ஆக்குகிறது. கிராமப் படகுகள் தான் மழையின் போது கிராமத்திற்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் ஒரே வழியாக உள்ளது. 1971 ஆம் ஆண்டில், கிராமத்தில் பெரும்பாலும் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் வசித்து வந்தனர், இவர்கள் குறைந்த உழைப்பு மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டனர்.
மார்ச் 26 அன்று, பாக்கித்தான் ஆக்கிரமிப்பு இராணுவம் ஆபரேஷன் சர்ச்லைட்டை ஆரம்பித்து இந்துக்களை அழிக்க இலக்கு வைத்தது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் லட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இந்த நேரத்தில் உள்ளூர் ரசாக்கர்கள், நாரியா மக்களை மதம் மாறுவதற்கும் தங்களது பெண்களை முஸ்லீம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறும் கூறினார். இவ்வாறு செய்தால் பாக்கித்தான் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் தாக்குதலில் இருந்து அந்த கிராமம் காப்பாற்றப்படும் எனக் கூறினர். கிராம மக்கள் மறுத்தபோது, ரசாகர்கள் தங்கள் அனைத்து மாடுகளையும் ஒப்படைக்கச் சொன்னார்கள், அதற்கு கிராம மக்கள் மறுத்தனர். அப்போது,ரசாகர்கள் இவர்களை மிரட்டினார்கள்.
நிகழ்வுகள்
மே 5 அன்று, செர்பூர் முகாமில் இருந்து 12 பாக்கித்தானிய வீரர்கள் அருகிலுள்ள சத்துகாட்டி கிராமம் வழியாக, நாரியா கிராமத்திற்கு வந்தனர். இவர்களுடன் மௌலிபஜார் அமைதி குழு தலைவர் இருந்தார். கிராமவாசிகளில் சிலர் ஏற்கனவே அருகிலுள்ள ஃபர்ச்சா பீலில் தஞ்சமடைந்துள்ளனர், மற்றவர்கள் உயிருக்கு போராடினர், பாக்கித்தான் வீரர்கள் கிராமத்திற்கு வந்தபோது. பாக்கித்தான் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உள்ளூர் ஒத்துழைப்பாளர்கள், ரசாகர்கள் மற்றும் அல்-பாதரைச் சேர்ந்தவர்கள் கிராமவாசிகள் தப்பிப்பதைத் தடுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிடிபட்டு, பின்னர் கிராமத்தில் வசிக்கும் இந்து காமினி குமார் தேப் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் ஆண்களிடமிருந்து பிரிக்கப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டனர். காமினி குமார் தேப் உள்பட ஆண்கள் ஒரு வரிசையில் நிற்க வைக்கப்பட்டு வெடி வைத்து கொல்லப்பட்டனர். ஆண்களைக் கொன்ற பிறகு, பெண்கள் பாக்கித்தான் வீரர்களால் பாலியல் வன்கலவி செய்யப்பட்டனர். ரசாகர்கள் மற்றும் அல் பத்ரைச் சேர்ந்த உள்ளூர் ஒத்துழைப்பாளர்கள் கிராமத்தில் உள்ள 19 வீடுகள் மற்றும் 6 தானியக் கிடங்குகளுக்கு தீ வைத்தனர்.
படுகொலைக்குப் பிறகு, நாரியா ஒரு வெறிச்சோடிய கிராமமாக மாறியது மற்றும் இறந்த உடல்கள் எரியாமல் அங்கே கிடந்தன. காமினி குமார் தேப் மற்றும் இவரது மனைவியின் எலும்புக்கூடுகள் இரண்டு நாட்களுக்குப் பிறகு இவர்களின் எரிந்த வீட்டுப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டன. இறந்த உடல்களிலிருந்து துர்நாற்றம் தாங்கமுடியாததால், ரசாகர்கள் இறந்தவர்களின் உறவினர்களை உடல்களை புதைக்க மிரட்டினார்கள். அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அருகிலுள்ள அப்தல்பூர், நோகான் மற்றும் கக்ரகண்டி கிராமங்களைச் சேர்ந்த ஐந்து அல்லது ஆறு இந்துக்கள் , காமினி குமார் தேப் வசிக்கும் வளாகத்தில் இறந்த உடல்களை புதைத்தனர்.
சான்றுகள் பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள், இந்தியத் துணைக்கண்டத்தில் முதன் முதலாக கிடைத்த கல்வெட்டுக்கள், கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து வெளியில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் ஆகும். ஆனால் இக்கல்வெட்டுக் குறிப்புகள் இதுவரை யாராலும் முழுமையாக படித்து அறியப்படவில்லை
வட இந்தியாவில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட அசோகரின் கல்வெட்டுகளும், தமிழ்நாட்டில் தமிழி எழுத்தில், தமிழ் மொழியில் எழுதப்பட்ட மாங்குளம் கல்வெட்டுகள் முதலில் அறியப்பட்டதாகும்.
தென்னிந்தியாவில் சமணர்களின் தமிழ் பிராமி, பட்டிபிரோலு எழுத்து முறையிலும் கடம்ப எழுத்துமுறையிலும் பொறித்த கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் பழனி கொடுமணல் மற்றும் ஆதிச்சநல்லூரில் கிமு 500 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அசோகர் காலத்திற்கு முந்தைய கல்வெட்டுகள் இலங்கையின் அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிபி நான்காம் நூற்றாண்டு காலத்திய சமசுகிருத மொழி கல்வெட்டுக் குறிப்புகள் முதன்முதலில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
கிபி முதல் ஆயிரமாண்டிற்குப் பின்னர் பாறை, தூண், சமணர் படுகைகள் மற்றும் குடைவரை சுவர்களில் கல்வெட்டுகள் மற்றும் செப்புப் பட்டயங்கள் அதிகம் கண்டறியப்பட்டது.
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கண்டெடுத்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில், 60,000 கல்வெட்டுக்கள் தமிழ் மொழி கல்வெட்டுகளாகும். ஒரு இலட்சம் கல்வெட்டுகளில், 5% கல்வெட்டுக்கள் மட்டுமே தெலுங்கு, கன்னடம், சமசுகிருதம், மராத்தி மொழி கல்வெட்டுகளாகும்.
இந்தியத் துணைக்கண்டத்தில் அறியப்பட்ட முதல் எழுத்துமுறைகள்
வெண்கலக் காலத்திய சிந்து வெளி எழுத்துக்களுக்குப் பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலாக அறிமுகமான எழுத்துமுறைகளில், கிமு 250-களில் அசோகரின் கல்வெட்டுக்களில் எழுதப்பட்ட பிராமி எழுத்துமுறை ஆகும்.
அசோகர் காலத்திற்கு முந்தைய, கிமு 5-ஆம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள், தமிழ்நாட்டின் பழனி ஈரோடு, (கொடுமணல்) and ஆதிச்சநல்லூர், மற்றும் இலங்கையின் அனுராதபுரம் போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரலாறு மற்றும் ஆய்வு
இந்தியத் துணைக்கண்டத்தில் கிடைத்த கல்வெட்டுகளையும், மற்றும் செப்புப் பட்டயங்களையும், 1886 முதல் தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்து, அவைகளை தமிழ் பிராமி மற்றும் பிராமி என வகைப்படுத்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தனர்.
வட இந்தியவில் அசோகரின் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துமுறையிலும்; தென்னிந்தியாவின் தமிழ் கல்வெட்டுக்கள் தமிழ் பிராமி எழுத்துமுறையிலும் இருந்தது. பின்னர் தமிழ் பிராமி எழுத்துமுறைகள், வட்டெழுத்து முறையில் மாறி, கோயில் கருங்கல் சுவர்களில் செதுக்கப்பட்டிருந்தது.
கிபி 1-ஆம் நூற்றாண்டு முதல் பட்டிபிரோலு மற்றும் கடம்பர் எழுத்துமுறைகளிலிருந்து கன்னடம் மற்றும் தெலுங்கு எழுத்துமுறைகள் உருவானது.
குறிப்பிடத்தக்க கல்வெட்டுகள்
கிமு 250 காலத்திய 33 அசோகர் கல்வெட்டுக்கள் மற்றும் அசோகரின் தூண்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள், கிமு 2-ஆம் நூற்றாண்டின் மாங்குளம் கல்வெட்டுகள், கலிங்க மன்னர் காரவேலன் காலத்திய ஹத்திகும்பா கல்வெட்டு, கிமு இரண்டாம் நூற்றாண்டின் சாதவாகனர் காலத்திய நானாகாட் பிராமி எழுத்துமுறை பாறைக் கல்வெட்டுக்கள், ஹேலியோடோரஸ் தூண், கிபி 150-இல் ருத்திரதாமனின் ஜூனாகத் பாறைக் கல்வெட்டு, சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கொளெ கல்வெட்டு, (கிபி 634), தமிழ்நாட்டின் செப்புப் பட்டயங்கள் முக்கியமானவைகள்.
யவன இராச்சியக் கல்வெட்டு
தமிழ்க் கல்வெட்டுகள்
ஹத்திகும்பா கல்வெட்டுக்கள்
கிமு 2-ஆம் நூற்றாண்டு காலத்திய, உதயகிரி மற்றும் கந்தகிரி குகைகளில், கலிங்க மன்னர் காராவேலனால் நிறுவப்பட்ட ஹத்திகும்பா கல்வெட்டுகள், பிராமி எழுத்தில் 17 வரிகள் கொண்டது.
ரபதக் கல்வெட்டுக்கள்
கிரேக்க எழுத்தில், பாக்திரியா மொழி கல்வெட்டு ஒன்று 1993-இல் ஆப்கானித்தான் நாட்டின் சுர்க் கோட்டல் எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இக்கல்வெட்டில் குசான் பேரரசர் கனிஷ்கரின் ஆட்சிக் குறித்தும், குசான் வம்சம் குறித்தும் குறிப்புகள் உள்ளது.
தமிழ் செப்பேடுகள்
தென்னிந்திய மன்னர்கள் குறிப்பாக சோழர், விஜயநகரப் பேரரசுகள், கிபி 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை, வேளாண் நிலங்கள் மற்றும் வேளாண் நிலத்துடன் கூடிய கிராமங்கள், கோயில்கள், சைவ மடங்கள், அன்னசாலைகள் போன்ற பொதுநிறுவனக் காரியங்களை நிர்வாகிக்க, தனிநபர்களுக்கும், பொதுநிறுவனங்களுக்கும், செப்பேடுகள் மூலம் தானமாக வழங்கியதை வேள்விக்குடி செப்பேடுகள் போன்றவைகள் மூலம் அறியப்படுகிறது.
விஜயநகர பேரரசின் தமிழ் செப்பேடுகள், தர்மேஸ்வரர் கோயில், கொண்டரஹள்ளி, ஒசகோட்டே]
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள பகுதிகளில் கல்வெட்டுகள் பிராகிருதம் மற்றும் சமசுகிருத மொழியில் அதிகம் கொண்டிருந்த போதும், தமிழ்நாட்டில் மட்டும் தமிழி எழுத்தில் கொண்டிருந்தது.
சங்க இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியில், பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்தது.
இச்சங்க இலக்கியங்கள் கிமு 4 - கிமு 3-ஆம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்டிருக்கலாம் அறிஞர்கள் கருதுகிறார்கள். கிமு 3-ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழ் கல்வெட்டுகள் தமிழ் பிராமி எழுத்துமுறையில் இருந்தது.
தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் கிமு 5 – 2-ஆம் நூற்றாண்டு காலமாக இருக்கலாம் அறிஞர்கள் கணித்துள்ளனர்.
படக்காட்சிகள்
இதனையும் காண்க
சிந்துவெளி வரிவடிவம்
பிராமி எழுத்துமுறை
தமிழ்ப் பிராமி
மாங்குளம் கல்வெட்டுகள்
தமிழ் கல்வெட்டுகள்
அசோகர் கல்வெட்டுக்கள்
அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
அசோகரின் தூண்கள்
தார் இரும்புத் தூண்
தில்லி இரும்புத் தூண்
மண்டோசோர் கல்வெட்டுக்கள்
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Banavasi Old Kannada Inscription
Halmidi Inscription
Records and revelations பரணிடப்பட்டது 2010-10-21 at the வந்தவழி இயந்திரம்
Inscribed lid of stone reliquary – Brahmi Scriptகுருவிக்கூடு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ரீனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள் காந்தன் புகார் நகரத்தில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட சோழப் பெருவேந்தன். பரசுராமன் மன்னர் என்று யார் இருந்தாலும் அவர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருந்தான். அவனுக்குப் பயந்து காந்தன் மாறுவேடத்தில் இருந்தான். அந்தக் காலத்தில் சோழநாட்டை ஆளும் உரிமையை ககந்தனிடம் ஒப்படைத்திருந்தான். இந்தக் ககந்தன் என்பவன் காந்தனுக்கும் கணிகை ஒருத்திக்கும் பிறந்த மகன். அரசாளும் உரிமை இல்லாதவன். அதனால் இவனைப் பரசுராமன் கொல்லமாட்டான்.
இந்தக் ககந்தனின் மகன் மருதி (பார்ப்பினி) என்பவளைத் தன் ஆசைக்கு இணங்கும்படி அழைத்தான். மருதி கற்புடையவள். இதனை அறிந்த ககந்தன் தன் மகனை வேட்டி வீழ்த்தினான் என்று மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.
மேற்கோள் பாதுக் (பாரசீக மொழி: بدوک ‎) எனும் ஈரானியத் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கியது. பாதுக் எனும் பாரசீக மொழிச் சொல், சட்ட விரோத பொருள்களைக் எல்லை தாண்டி நடந்தே கொண்டு செல்லும் குழந்தைகளைக் குறிக்கிறது. இத்திரைப்படமானது பலுசிஸ்தான் பகுதியில் படமாக்கப்பட்டது. இயக்குனர் மஜித் மஜிதி அவரது தொடக்ககால ஆவணப்படங்களுக்குப் பின் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும்.
ஜாபர் மற்றும் அவனது சகோதரி ஜமால் இருவரும் பெற்றோரின் மறைவுக்குப் பின் கடத்தப்பட்டு அடிமைகளாக விற்கப்படுகின்றனர். ஜமாலை சவுதி இளவரசருடன் அனுப்பி விடுகிறார்கள். ஜாபர் பாக்கிஸ்தான் மற்றும் ஈரான் இடையே சட்டவிரோதமாக பொருட்களைக் கடத்திச் செல்லும் வேலைக்கு அனுப்பப்படுகிறான். ஜாபர் அவனுடைய நண்பன் நூர்தீநுடன் இணைந்து அவனது சகோதரியை மீட்கிறான்.
நடிகர்கள்
முகம்மது காஸாபி (Mohammad Kasebi)
மெஹ்ரூலா மரஸிஹி (Mehrolah Mararzehi)
நுராஹ்மத் பராஹோலி (Norahmad Barahoi)
ஹூசைன் ஹாய்ஜார் (Hossein Haijar)
வெளியீடு
இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தின் தணிக்கை தொடர்பாக மஜித் மஜிதி பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தார். மேலும் இத்திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
விருதுகள்
ஃபாஜர் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் விருது ( Best New Film, 10th Annual Fajr Film Festival)
ஃபாஜர் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை விருது (Best Screen Play, 10th Annual Fajr Film Festival)
மசூத் மெஹ்ராபி இணையதளம்
இணையதளம்அலுமினியம் போரோவைதரைடு (Aluminium borohydride) என்பது Al(BH4)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியம் டெட்ரா ஐதரோபோரேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், உடனடியாகத் தீப்பற்றும் சேர்மமாகவும் உள்ள இச்சேர்மம் இராக்கெட் எரிபொருளாகவும், ஆய்வகங்களில் ஒடுக்கும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான உலோக போரோ ஐதரைடுகள் போல இல்லாமல் அலுமினியம் போரோவைதரைடு ஒரு சகப்பிணைப்புச் சேர்மமாகும். மற்றவை அயனிப் பிணைப்புக் கட்டமைப்பில் உள்ளன.
தயாரிப்பு
சோடியம் போரோவைதரைடு உடன் அலுமினியம் குளோரைடு வினை புரிவதால் அலுமினியம் போரோவைதரைடு உருவாகிறது:.
3 NaBH4 + AlCl3 → Al(BH4)3 + 3 NaCl
அல்லது ஒர் உடன் தீப்பற்றாத டெட்ரா ஐதரோபியுரான் கூட்டு விளைபொருளாக,டெட்ரா ஐதரோபியுரானில் உள்ள அலுமினியம் குளோரைடு மற்றும் கால்சியம் போரோவைதரைடுடன் ஒத்த வினையில் ஈடுபடுகிறது:.
3 Ca(BH4)2 + 2 AlCl3 → 3 CaCl2 + 2 Al(BH4)3
வினைகள்
எல்லா போரோவைதரைடுகளையும் போல இச்சேர்மம் ஒரு ஒடுக்கும் முகவராகவும் ஐதரைடு வழங்கியாகவும் செயல்படுகிறது. தண்ணீருடன் வினைபுரிந்து தனிமநிலை ஐதரசன் வாயுவைக் கொடுக்கிறது. மேலும் கார்பாக்சிலிக் எசுத்தர்கள், ஆல்டிகைடுகள், கீட்டோன்கள் ஆகியனவற்றை ஒடுக்கி ஆல்ககாலாக மாற்றுகிறது.
துணை நூல்கள்
Hinkamp, James B.; Hnizda, Vincent (1955). "Aluminum Borohydride Preparation". Industrial & Engineering Chemistry 47 (8): 1560. doi:10.1021/ie50548a032.பி. பக்தவச்சலம் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினராக
வெளியிணைப்புகள் த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1 (ஆங்கில மொழி: The Hunger Games: Mockingjay – Part 1) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அறிவியல் கற்பனை சாகசத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பிரான்சிஸ் லாரன்ஸ் இயக்க, நீனா ஜேகப்ஸன் மற்றும் ஜான் கிளிக் தயாரித்துள்ளார்கள். இந்த திரைப்படத்துக்கு டேனி ஸ்ட்ராங் மற்றும் பீட்டர் க்ரெய்க் கதை எழுதியுள்ளார்கள். இது த ஹங்கர் கேம்ஸ் திரைப்படவரிசையில் 3ஆம் பாகம் ஆகும்.
இந்த திரைப்படத்தில் ஜெனிபர் லாரன்ஸ், ஜோஷ் ஹட்சர்சன், லியம் ஹெம்ஸ்வர்த், வூடி ஹாரெல்சன், எலிசபெத் பாங்க்ஸ், ஜூலியானா மூரே, பிலிப் சீமோர் ஹாப்மன், ஜெஃப்ரி ரைட், ஸ்டான்லி துச்சி, டொனால்ட் சதர்லேண்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் நவம்பர் 21, 2014ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியாவுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம்
இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1
பாக்சு ஆபிசு மோசோவில் The Hunger Games: Mockingjay, Part 1
அழுகிய தக்காளிகள் தளத்தில் The Hunger Games: Mockingjay - Part 1
Mockingjay Part 1 at The Numbers (website)கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் வடக்கு பராவூர் நகரில் உள்ள சரசுவதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற கோயில் தட்சிண மூகம்பிகா கோயில் ஆகும். இந்த கோவிலில் தலைமை தெய்வம் சரசுவதி மற்றும் துணை தெய்வங்கள் கணபதி, சுப்ரமணியர், மகாவிட்டுணு, யட்சி, அனுமன் மற்றும் வீரபத்ரன். யட்சி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சன்னதி தென்மேற்கு மூலையில் உள்ளது. கோவிலில் கருவறை தாமரைக் குளத்தின் நடுவே உள்ளது.
புராணங்களின்படி, பராவூரைச் சேர்ந்த தம்புரன் (ஆட்சியாளர்) மூகாம்பிகா தேவியின் சிறந்த பக்தர். அவர் ஒவ்வொரு ஆண்டும் மங்களூர் அருகில் உள்ள கொல்லூர் கோயிலுக்கு சென்று தெய்வத்திற்கு மரியாதை செலுத்துவார். வயது முதிர்வின் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. எனவே, அவரால் கொல்லூருக்கு நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. கொல்லூர் மூகாம்பிகை அரசரின் கனவில் தோன்றி அரண்மனைக்கு அருகில் தன்னுடைய சிலையை கட்டும்படி கட்டளையிட்டது. தம்புரன் தெய்வத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, பராவூரில் இக்கோவிலைக் நிறுவினார்.
பண்டிகைகள்
புகழ்பெற்ற நவராத்திரி திருவிழா இங்கு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் "நவராத்திரி இசை" விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். துர்காட்டமியில், சரசுவதி தேவியின் உருவத்திற்கு முன்பாக புத்தகங்கள் வைக்கப்படுகிறது. மேலும் விசயதசமியன்று காலையில், ஏசுதிரினிருத்து அல்லது வித்யாரம்ப விழா அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சிறப்பாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகள் அரிசியால் அவர்களின் நாக்குகள் அல்லது மணல் ஆகியவற்றில் தங்க மோதிரத்துடன் "அரிசிரீ" என்ற வார்த்தையை எழுதி தங்களுடைய கல்வியினைத் தொடங்குகிறார்கள்.
நவராத்திரி பண்டிகை தவிர, "பத்து நாள் ஆண்டு விழா" மகரம் மாதத்தில் (செனவரி - பிப்பிரவரி) கொண்டாடப்படுகிறது. இசை விழா மற்றும் வித்யராம்ப விழா ஆகியவை இந்தக் கோயிலின் முக்கிய அங்கங்கள் ஆகும்.
மேற்கோள்கள் சாபர் சைஃபுல்லா சாங்லிகர் (Zafar Saifullah Sanglikar) 1993 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் மந்திரிசபை செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் ஆவார். 1936 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.
சாபர் சைபுல்லா இந்திய நிர்வாக சேவை அதிகாரிகளின் கர்நாடக தொகுதியைச் சேர்ந்தவர். அமைச்சரவை செயலாளராகப் பணியாற்றுவதற்கு முன்பு, இவர் கர்நாடக அரசின் இந்திய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர், அரியானா ஆளுநரின் ஆலோசகர், கிராமப்புற மேம்பாட்டுச் செயலர், கர்நாடகா அரசு, உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார்.
2008 ஆம் ஆண்டில் சைஃபுல்லா சுலைமானிசு – லிவ்சு லெசு ஆர்டினரி என்ற புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டார். இந்த புத்தகத்தை இந்திய துணை சனாதிபதி அமீது அன்சாரி வெளியிட்டார்.
இந்தியாவின் அமைச்சரவை செயலாளராக பணியாற்றிய முதல் முசுலீம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சாபர் சைபுல்லா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
README.md exists but content is empty.
Downloads last month
59