id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
3
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
முதற் பக்கம்
விக்கிப்பீடியா மொழிகள்
12
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88
கட்டடக்கலை
கட்டடக்கலை என்பது கட்டடங்கள் மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும். கட்டடக்கலை படைப்புகள், கட்டடங்கள் பொருள் வடிவம், பெரும்பாலும் கலாச்சார சின்னங்களாக மற்றும் கலை படைப்புகளாக காணப்படுகின்றது. வரலாற்று நாகரிகங்கள் பெரும்பாலும் அவர்களின் கட்டடக்கலை சாதனைகளின் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டடக்கலைக்குள் அடக்கும். மேற்படி விடயத்தில், தற்போது கிடைக்கும் மிகப் பழைய ஆக்கம், பொ.ஊ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமானியக் கட்டடக் கலைஞரான விட்ருவியஸ் என்பாரது "கட்டடக்கலை தொடர்பில்", என்ற நூலாகும். இவரது கூற்றுப்படி, நல்ல கட்டடம், அழகு, உறுதி, பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும். மேற்படி மூன்றும், ஒன்றின்மீதொன்று அளவுமீறி ஆதிக்கம் செலுத்தாமல், தங்களிடையே சமனிலையையும், ஒருங்கினைப்பையும் கொண்டிருத்தலே கட்டடக்கலை என்று சொல்லலாம். ஒரு மேலான வரைவிலக்கணம், கட்டடக்கலையைச், செயற்பாட்டு, அழகியல், உளவியல் என்பன தொடர்பான விடயங்களைக் கையாளல் என்ற விதத்தில் நோக்குகிறது. எனினும், இன்னொரு விதத்தில் பார்த்தால், செயற்பாடு என்பது, அழகியல், உளவியல் உட்பட்ட எல்லா அளபுருக்களையும் தன்னுள் அடக்குவதாகக் கொள்ளலாம். கட்டடக்கலை, கணிதம், அறிவியல், கலை, தொழினுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம், பொன்றவற்றுடன் தொடர்புள்ள, ஒரு பல்துறைக் களமாகும். விட்ருவியசின் சொற்களில், "கட்டடக்கலையென்பது, வேறுபல அறிவியல் துறைகளிலிருந்து எழுவதும், பெருமளவு, பல்வேறுபட்ட அறிவுத்துறைகளினால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு அறிவியலாகும்: இதன் உதவியைக் கொண்டே பல்வேறு கலைத் துறைகளினதும் விளைவுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன". மேலும் ஒரு கட்டடக் கலைஞன், இசை, வானியல் முதலிய துறைகளிலும் நல்ல பரிச்சயமுடையவனாயிருக்க வேண்டும் என்பது விட்ருவியசின் கருத்து. தத்துவம் குறிப்பாக விருப்பத்துக்குரியது. உண்மையில், அணுகுமுறை பற்றிக் கருதும்போது, ஒவ்வொரு கட்டடக் கலைஞனதும் தத்துவம் பற்றிக் குறிப்பிடுகிறோம். பகுத்தறிவியம், பட்டறிவியம், கட்டமைப்பியம், பின்கட்டமைப்பியம் மற்றும் தோற்றப்பாட்டியல் என்பன போன்ற போக்குகள், கட்டடக்கலையில், தத்துவத்தின் செல்வாக்கைக் காட்டும் சில எடுதுதுக்காட்டுகளாகும். கட்டடக்கலைக் கோட்பாடுகள் லியொன் பட்டிஸ்டா ஆல்பர்ட்டி என்பவர் தான் எழுதிய நூலொன்றில் விட்ருவியசின் கருத்துக்களை விரிவாக்கினார். அலங்காரங்களும் அழகுக்குப் பங்களிப்புச் செய்த போதிலும், அழகு என்பது, அளவுவிகிதம் (proportion) தொடர்பிலானது என்று இவர் எழுதினார். ஆல்பர்ட்டியின் கருத்துப்படி ஒரு முறையான உடலமைப்புக் கொண்ட மனிதனின் உடலின் அளவுவிகிதங்களைக் கட்டுப்படுத்தும் விதிகளே சிறப்பான அளவுவிகிதங்களுக்கான விதிகளாகும். அழகைப் பொருளின் தன்மைக்குப் புறம்பாக வெளியிலிருந்து கொண்டுவந்து ஒட்டவைக்க முடியாது, பொருள்களோடு அவற்றின் அழகு இயல்பாக அமைந்திருக்கிறது என்னும் கருத்தே இங்கு முக்கியமான அம்சம். கட்டடக்கலையிலும், பிற அழகியல் கலைகளிலும் பாணி என்னும் ஒரு அம்சம் இடைக்காலத்தில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால், பாணி என்னும் கருத்துரு 16-ஆம் நூற்றாண்டில் வாசரி என்பவர் எழுதிய நூல்களினூடாகவே அறிமுகமானது. இந் நூல்கள் 18-ஆம் நூற்றாண்டில் இத்தாலிய மொழி, பிரெஞ்சு மொழி, ஸ்பானிய மொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலக் கலைத் திறனாய்வாளரான ஜான் ரஸ்கின் என்பவர் 1849-இல் வெளியிட்ட "கட்டடக்கலையின் ஏழு விளக்குகள்" என்னும் நூலில், "கட்டடக்கலை என்பது அதனைக் காண்போருக்கு உள நலத்தையும், ஆற்றலையும், இன்பத்தையும் தரக்கூடிய வகையில், அமைத்து, அலங்கரித்து உருவாக்கப்பட்ட கட்டடங்களாகும்" என்றார். ரஸ்கினுக்கு, கட்டடக்கலையைப் பொறுத்தவரை அழகியலே யாவற்றிலும் முக்கியமான அம்சமாக இருந்தது. மேலும், ஏதோ ஒரு வகையில் அலங்கரிக்கப்படாத கட்டடங்கள் கட்டடக்கலை ஆகாமாட்டா என்ற கருத்தையும் அவர் கொண்டிருந்தார். கட்டடங்களும், கட்டடக்கலையும் ஒரு கட்டடக்கலை சார்ந்த கட்டடத்துக்கும், சாதாரண கட்டடத்துக்கும் உள்ள வேறுபாடு பலரதும் கவனத்தை ஈர்க்கின்ற விடயமாக இருந்துவருகின்றது. இது குறித்து எழுதிய பிரபலமான பிரெஞ்சுக் கட்டடக்கலைஞரான லெ கொபூசியே, "நீங்கள், கற்கள், மரம், காங்கிறீட்டு என்பவற்றைக் கொண்டு ஒரு வீட்டையோ மாளிகையையோ அமைக்கலாம். அது கட்டுமானம். ஆனால் ஆக்கத்திறன் சிறப்பாக அமையும்போது, அது எனது நெஞ்சைத் தொடுகிறது. நீங்கள் எனக்கு நல்லது செய்திருக்கிறீர்கள். மிகவும் அழகாக இருக்கிறது என்கிறேன் நான். அதுவே கட்டடக்கலை." எனக் குறிப்பிடுகிறார். 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாற்றாசிரியரான "நிக்கொலஸ் பெவ்ஸ்னர்" என்பாருடைய கூற்றுப்படி, ஒரு துவிச்சக்கரவண்டிக் கொட்டகை ஒரு சாதாரண கட்டடமும், லிங்கன் பேராலயம் ஒரு கட்டடக்கலை சார்ந்த கட்டடமுமாகும். தற்காலச் சிந்தனைப் போக்குகளுக்கு அமைய இத்தகைய பிரிவு அவ்வளவு தெளிவானதாக இல்லை. "பெர்னாட் ருடோவ்ஸ்கி" என்பாரது "கட்டடக்கலைஞன் இல்லாத கட்டடக்கலை" (Architecture without architects) என்னும் பிரபலமான நூல், சாதாரண மக்களால் கட்டப்பட்ட பல்வேறு தரத்திலான கட்டடங்களையும், கட்டடக்கலையின் ஆளுகைக்குள் கொண்டுவந்தது. வரலாற்றில் பின்னோக்கிச் செல்லும்போது, கட்டடக்கலைசார் கட்டடங்கள் எவை, அவ்வாறில்லதவை எவை என்பதிலே கருத்தொற்றுமை காணப்பட்டது. விருவியசைப் போல், நல்ல கட்டடங்களே கட்டடக்கலைசார்ந்த கட்டடங்கள் என வரைவிலக்கணப்படுத்தினால், கூடாத கட்டடக்கலைசார்ந்த கட்டடங்கள் இல்லையா என்ற கேள்வி எழும். இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு, கட்டடக்கலைசார் கட்டடங்கள் என்பதற்கு, கட்டடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்கள் என்றும் வரைவிலக்கணம் கூறலாம் எனச் சிலர் கூறுகிறார்கள். இது கட்டடக்கலைஞர் என்பதன் வரைவிலக்கணம் பற்றிய இன்னொரு சர்ச்சையை உருவாக்குவதைத் தவிர்க்க முடியாது. கட்டடக்கலையின் தற்காலக் கருத்துருக்கள் 19-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டடக்கலைஞர் லூயிஸ் சலிவன் கட்டடக்கலை வடிவமைப்பில் புதிய நோக்கு ஒன்றை வளர்ப்பதற்கு முயற்சித்தார். செயற்பாட்டுத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நோக்குக்கு அமைய "செயற்பாட்டுத் தேவைகளிலிருந்தே வடிவம் உருவாகின்றது" (Form follows function) என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. செயற்பாட்டு நோக்கின் அடைப்படையிலேயே அமைப்பும் அழகியலும் நோக்கப்படவேண்டும் என்னும் இக் கருத்து பரவலான ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றது. செயற்பாடு என்னும் இப் புதிய கருத்துரு கட்டடங்களின் உளவியல், அழகியல், பண்பாட்டுப் பயன்கள் உட்பட எல்லா வகையான பயன்களும் குறித்த எல்லா அளபுருக்களையும் தன்னுள் அடக்கியிருந்தது. கட்டடக்கலைஞர்களும் கோட்பாடும் பல கட்டடக்கலைஞர்கள் கோட்பாட்டை ஒதுக்கித் தள்ளினாலும், செயல்முறையை (practice) வளம்படுத்துவதில் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. விட்ருவியஸ் தொடர்ந்து சொன்னபடி, "செய்முறையும், கோட்பாடும் கட்டடக்கலையின் பெற்றோருக்குச் சமம். செயல்முறை என்பது, கொடுக்கப்பட்ட வேலைகளை நடைமுறைப்படுத்தும் முறைகளைக் கைக்கொள்ளும்போது, அடிக்கடி நிகழும், தொடர்ச்சியான, சமநிலைப்படுத்தும் செயலை, அல்லது வெறுமனே உடற் செயல்பாட்டின்மூலம், ஒரு பொருளைச் சிறந்த பயன்படத்தக்க ஒன்றாக மாற்றுவதைக் குறிக்கும். கோட்பாடு என்பது, ஒரு பொருள், பிரேரிக்கப்பட்ட முடிவை அடையும்வகையில், மாற்றப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதும், விளக்குவதுமான காரணத் தொடர்பாக்கத்தின் விளைவாகும். வெறுமனே செய்முறையிலூறிய கட்டடக்கலைஞன், தான் எடுத்துக்கொண்ட வடிவுருக்களுக்கான (forms) காரணங்களை எடுத்துக்காட்ட முடிவதில்லை; கோட்பாட்டுக் கட்டடக்கலைஞனும், பொருளை விட்டு நிழலைப் பிடிப்பதன் மூலம் தோல்வியடைகிறான். எவனொருவன் கோட்பாடு செயல்முறை இரண்டிலும் வல்லவனாக இருக்கிறானோ அவன் இரட்டைப் பலமுள்ளவன்; தன்னுடைய வடிவமைப்பின் தகுதியை நிரூபிக்கக்கூடியவனாக இருக்கின்றது மட்டுமன்றி, அதைத் திறமையாகச் செயற்படுத்தக்கூடியவனயும் இருப்பான்." வரலாறு தொல்பழங்காலமும் கட்டடக்கலையும் கட்டடக்கலையென்பது, ஆரம்பத்தில், தேவைகளுக்கும், (உகந்த சூழல், பாதுகாப்பு என்பன) Means (கிடைக்கக் கூடிய கட்டடப்பொருள்கள், தொழில் நுட்பம் முதலியன) என்பவற்றுக்கிடையிலான இயக்கப்பாடுகளிலிருந்து பரிணமித்ததாகும். தொல்பழங்கால, பழங்காலக் கட்டடங்கள் இவ்வகையைச் சேர்ந்தனவாகும். மனித முன்னேற்றத்துடன், அறிவுத்துறைகளும், வாய்மொழி மரபுகளினாலும், செயல்முறைகளினாலும், ஒழுங்கமையத் தொடங்கியபோது, கட்டடம் கட்டுதல் ஒரு கலையாக உருவானது. இங்கே முதலில் முயன்று தெரிதல் (Trial and Error) முறையின் பயன்பாடு, பின்னர் அவற்றில் தேவைக்கேற்ற மாற்றங்கள் அல்லது வெற்றிகரமான முயற்சிகளைப் பிரதிபண்ணல் எனப் பரிணாம வளர்ச்சி நடைபெற்றது. கட்டடக்கலைஞர் மட்டுமே இங்கு முக்கியமானவர் அல்ல. இவர்கள் பங்கு சதவீத அடிப்படையில் மிகக் குறைவே; விசேடமாக வளரும் நாடுகளில் இது 5% அளவுக்கும் குறைவே என்றும் கூறப்படுகின்றது. அவர் தொடர்ந்துவரும் கட்டடக்கலை மரபுகளில் ஒரு பகுதியேயாவர். நாட்டார் மரபு "(Vernacular Tradition)" என்று அழைக்கப்படும் மரபுசார் கட்டடமுறை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். உலகின் எல்லாப் பகுதிகளிலும், பெரும்பாலான கட்டடங்கள் இம்முறையிலேயே கட்டடக்கலைஞர் அல்லாதவர்களால் உருவாக்கப்படுகின்றன. முற்கால மனிதர் குடியிருப்புகள் கிராமம் சார்ந்தவையாகும். உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டபோது கிராமச் சமுதாயங்கள் நகர்சார் சமுதாயங்களாக வளர்ச்சி பெறத்தொடங்கின. கட்டடங்கள் அதிக சிக்கலானவையாக ஆனதுடன், அவற்றின் வகைகளும் அதிகரித்தன. வீதிகள், பாலங்கள் போன்ற குடிசார் கட்டுமானங்களும், பாடசாலைகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகளுக்கான கட்டடங்கள் எனப் புதிய கட்டடவகைகளும் பெருகத்தொடங்கின. எனினும் சமயம் சார்ந்த கட்டடக்கலை அதன் முதன்மையிடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது. பல்வேறு கட்டடப்பாணிகளும், வளர்ச்சியடையத் தொடங்கியதுடன், கட்டடக்கலை பற்றிய எழுத்தாக்கங்களும் உருவாகின. இவற்றிற் சில, கட்டடங்கள் வடிவமைத்தல், கட்டுதல் தொடர்பில் பின்பற்றவேண்டிய விதிகளாக உருப்பெற்றன. இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், சீனாவிலெழுந்த பெங் சுயி போன்ற கீழைத் தேச நூல்களும், மேலை நாட்டிலெழுந்த விட்ருவியசின் நூலும் இதற்கு உதாரணங்களாகும். "கிளாசிக்கல்" மற்றும் மத்திய காலங்களில், ஐரோப்பாவில், கட்டடக்கலைத் துறையில் தனிப்பட்ட கட்டிடக்கலைஞர்கள் முதன்மைப்படுத்தப்படவில்லை. பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை கட்டடக்கலையின் வரலாற்றில் பாரிய கட்டுமானங்களைக் கட்டிய மிகப் பழைய நாகரிகங்களுள் ஆப்பிரிக்காவின் நைல் ஆற்றங்கரையில் உருவாகிச் செழித்த எகிப்திய நாகரிகம் முதன்மையானது. இம் மக்கள் மிகப் பெரிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் உருவாக்கினர். பல வரலாற்றாளர்களும் உலகக் கட்டடக்கலை வரலாற்றின் தொடக்கத்தை இங்கிருந்துதான் தொடங்குகிறார்கள். ஐரோப்பாவின் தொடக்ககால நாகரிகங்களான கிரேக்க, ரோமர்காலக் கட்டடக்கலைகளுக்கான பல அடிப்படைகளை எகிப்தியக் கட்டடக்கலையில் அடையாளம் காண முடியும். மெசொப்பொத்தேமியக் கட்டடக்கலை தற்கால ஈராக்கிலுள்ள யூபிரட்டீஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகளுக்கு இடையேயுள்ள பகுதியில் செழித்து வளர்ந்த மெசொப்பொத்தேமிய நாகரிகம், உலகக் கட்டடக்கலை வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புக்களைச் செய்த இன்னொரு தொன்மையான ஆசிய நாகரிகம் ஆகும். மெசொப்பொத்தேமிய ஆற்றுப்படுக்கையிலும், மேற்கு ஈரானியப் பீடபூமியிலும் கட்டப்பட்ட சிகுரட் எனப்படும் கூம்பக வடிவ கோயில் கோபுரங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. இவை பல படிகளாகக் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறான 32 சிகுரட்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றுள் 28 ஈராக்கிலும், 4 ஈரானிலும் உள்ளன. பண்டைய கிரேக்க கட்டடக்கலை பண்டைக் கிரேக்க நாகரிகம் பொ.ஊ.மு. 1900 தொடக்கம் பொ.ஊ.மு. 133 வரையான காலப்பகுதியில் செழித்திருந்தது. ஆனால் இதன் தாக்கம் இன்றுவரை மேற்கு நாட்டுப் பண்பாட்டில் உணரப்பட்டு வருகிறது. கிரேக்கர்கள் உலகக் கட்டடக்கலைக்குப் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். இக்காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களுள் முதன்மையானவை கோயில்கள் ஆகும். கிரேக்கக் கோயில்கள் எகிப்தியக் கோயில்களைவிடச் சிறியவை. இவை, ஆள்பவர்களின் அதிகாரத்தைக் காட்டுவதற்காகவோ, பெருமளவிலான மக்கள் குழுமி வழிபடுவதற்காகவோ கட்டப்படவில்லை. இவை முக்கியமாகப் புற அழகுக்காகவும், சூழலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களுக்குமாகவே வடிவமைக்கப்பட்டன. கிரேக்கக் கட்டடக்கலையில் ஒழுங்குகள் எனப்படும் மூன்று விதமான பாணிகள் பயன்படுத்தப்பட்டன. இவை டொரிக், அயனிக், கொறிந்தியன் என அழைக்கப்பட்டன. ஒழுங்குகள் என்பன தூண்களின் அமைப்பு, அவற்றின் அளவுவிகிதங்கள், அலங்காரங்கள், அவற்றால் தாங்கப்படும் வளைகளின் அமைப்பு அலங்காரம் முதலியவை தொடர்பானது. பண்டைய ரோமக் கட்டடக்கலை ரோமர் காலம் பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. ரோமர்களின் கட்டடக்கலை ஓரளவுக்குக் கிரேக்கக் கட்டடக்கலையின் தொடர்ச்சியே எனினும் ரோமர் காலத்தில் கட்டடக்கலையில் பெருமளவு வளர்ச்சிகள் ஏற்பட்டன. ரோமர் புத்தாக்கத் திறனும், கட்டடப்பொருள்கள் பற்றிய நல்ல அறிவும் கொண்டிருந்தனர். இயற்கையாகக் கிடைத்த கற்கள் முதலியவற்றை வெட்டிக் கட்டடக் கற்களை உருவாக்கும் முறைக்குப் பதிலாகச் சுண்ணாம்பு, மணல், சிறு கற்கள் போன்றவற்றை நீருடன் கலந்து ஒருவகைக் காங்கிறீட்டுச் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் ரோமர்களே. கட்டடக்கலை ஒழுங்குகளைப் பொறுத்தவரை ரோமர் மேலும் இரண்டு ஒழுங்குகளைப் பயன்படுத்தினர். இவை கூட்டு ஒழுங்கு, டஸ்கன் ஒழுங்கு என்பவையாகும். மறுமலர்ச்சிக்காலமும் கட்டடக்கலைஞரும் "ரெனசான்ஸ்" என்று அழைக்கப்பட்ட, மறுமலர்ச்சிக் காலகட்டத் தொடக்கத்துடன், சமயத்தைவிட மனிதசமுதாயமும், தனிப்பட்டவர்களும், முதன்மை பெறத் தொடங்கியமையும், அக்காலத்திலேற்பட்ட முன்னேற்றமும், அதன் பெறுபேறுகளும், கட்டடக்கலைத்துறையில் புதிய அத்தியாயமொன்றுக்கு அடிகோலின. கட்டடக்கலை தொடர்பில், தனிப்பட்ட கட்டடக்கலைஞர்கள் பெருமைப்படுத்தப்பட்டனர். மைக்கலாஞ்சலோ, லியொனார்டோ டா வின்சி, புரூணலெஸ்ச்சி போன்றவர்களை உதாரணமாகக் காட்டலாம். அக்காலத்தில், சிற்பி, கட்டடக் கலைஞன், பொறியியலாளன் எனத் தொழிற்பிரிவுகள் இருக்கவில்லை. ஒரு சிற்பியே (சிற்பம் செய்பவன்) பாலமொன்றை வடிவமைத்துக் கட்டக்கூடிய நிலை இருந்தது. அதற்குத் தேவையான கணித அறிவும்கூடப் பொதுமை அறிவின் பாற்பட்டதாகவேயிருந்தது. இந்தியாவிலும், சிற்பக் கலைஞர்களே கட்டடங்களையும் வடிவமைத்துக் கட்டினார்கள். கட்டடக்கலை, பொறியியல் அனைத்தும் இச் சிற்பக் கலைக்கு உள்ளேயே அடங்கியிருந்தன. கட்டடம் சார்ந்த தேவைகளின் அதிகரிப்பு, அவை தொடர்பான பெருமளவு அறிவு வளர்ச்சி என்பவற்றோடு, புதிய கட்டடப்பொருட்களின் அறிமுகம், தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பனவும் சேர்ந்து கட்டடத்துறையினுள் பல்வேறு தொழிற்பிரிவுகள் உருவாக வழி சமைத்தன. கூடிய தொழில் நுட்ப அம்சங்களை எடுத்துக்கொண்டு பல்வேறு பொறியியற் துறைகள் பிரிந்துபோகக் கட்டடக்கலை அழகியல் அம்சங்களையும், இடவெளி(space)வடிவமைப்புத் தொடர்பான பொறுப்புக்களையும் உள்ளடக்கி, வளர்ச்சியடைந்தது. "சீமான் கட்டடக்கலைஞர்" என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் உருவாகினர். பொதுவாகப் பெரும் பணக்காரர்களை வாடிக்கையாளராகக் கொண்டிருந்த இவர்கள், தோற்றம் சார்ந்த அம்சங்களிலேயே கூடிய கவனம் செலுத்தினர். அதுவும் பெரும்பாலும், வரலாற்றுக் கட்டட மாதிரிகளையே பின்பற்றிவந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சிலிருந்த இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (Ecole des Beaux Arts) என்னும் நிறுவனம், சூழ்நிலை சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடாது, அழகிய வரைபடங்களை உள்ளடக்கிய விரைவான திட்டங்களை உருவாக்குவதற்கே பயிற்சி கொடுத்துவந்தது. இதற்கிடையில், தொழிற்புரட்சி தொகையான நுகர்வுக்கான பாதையைத் திறந்துவிட்டதுடன், ஒருகாலத்தில் விலையுயர்ந்த கைவினைத்திறனோடு சம்பந்தப்பட்டிருந்த அலங்காரப் பொருட்கள், இயந்திர உற்பத்தியின் கீழ் மலிந்ததன் காரணமாக, அழகியல் மத்தியதர மக்கள் மட்டத்திலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியது. எனினும், உற்பத்தி வழிமுறைகளின் வெளிப்பாடுகளோடு இயைந்த நேர்மையும், அழகும் இவ்வுற்பத்திப் பொருட்களிற் குறைவாகவே காணப்பட்டன. நவீனத்துவமும் கட்டடக்கலையும் இவ்வாறான ஒரு பொதுவான நிலைமையினால் உருவான திருப்தியின்மை, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல புதிய சிந்தனைப் பாதைகளுக்கு வித்திட்டது. கட்டடக்கலையைப் பொறுத்தவரை இது நவீன கட்டடக்கலைக்கு முன்னோடியாக அமைந்ததெனலாம். சிறந்த தரத்தையுடைய இயந்திர உற்பத்திப் பொருட்களை உற்பத்திசெய்வதற்காக உருவாக்கப்பட்ட டொய்ச் வேர்க்பண்ட் (Deutshe Werkbund) இவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். கைத்தொழில் வடிவமைப்புத் துறை இங்கேதான் ஆரம்பமானதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 1919 ல், ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட பௌஹவுஸ் (Bauhaus) பாடசாலை வரலாற்றை நிராகரித்துவிட்டு, கட்டடக்கலை என்பது கலை, கைவினை மற்றும் தொழில்நுட்பத்தின் ஒரு தொகுப்பு என்ற கருத்தைக் கொண்டிருந்தது. முதன்முதலில் நவீன கட்டடக்கலை பயிலப்படத் தொடங்கியபோது, அது, தார்மீக, தத்துவ, அழகியல் அடிப்படைகளிலமைந்த, ஒரு முன்னோடி இயக்கமாக இருந்தது. வரலாற்றை நிராகரித்து, வடிவத்தை உருவாக்கும் காரணியாகச் செயற்பாட்டை (function), கருதியதுமூலம் உண்மையைத் தேட முயற்சிக்கப்பட்டது. கட்டடக்கலைஞர்கள் பிரபலமனார்கள். பின்னர், நவீன கட்டடக்கலை, பொருளாதார நோக்கத்தையும், எளிமையையும் கருத்தில் கொண்டு, பெரும்படி உற்பத்திமுறையை நோக்கிச் சென்றது. நவீனத்துவக் கட்டடக்கலைஞர்கள், கட்டடங்களை அவற்றின் அடிப்படையான வடிவங்களுக்கு எளிமையாக்க முயன்றனர். இவர்கள் கட்டடங்களில் அலங்காரங்களை நீக்கிவிட்டனர். உருக்குத் தூண்கள், வளைகள், காங்கிறீற்று மேற்பரப்புக்கள் போன்ற தங்கள் உண்மையான அமைப்புக்களை வெளிப்படுத்தும் கட்டடங்கள் அலங்காரங்கள் இன்றித் தம்மளவிலேயே அழகானவையாகக் கருதப்பட்டன. மீஸ் வான் டெர் ரோ போன்ற கட்டடக்கலைஞர்கள், கட்டடப்பொருட்கள், கட்டுமான நுட்பங்கள் என்பவற்றின் உள்ளார்ந்த அழகியல் இயல்புகளைப் பயன்படுத்திக் கட்டடங்களை அழகாக்க முயன்றனர். இவர்கள் மரபுவழியான வரலாற்று வடிவங்களுக்குப் பதிலாக எளிமையான வடிவவியல் வடிவங்களை உருவாக்கினர். எனினும், நவீன கட்டடக்கலையில் ஒரு தரக்குறைவு ஏற்பட்டிருப்பதை, 1960களிலிருந்து, பொதுமக்கள் உணர ஆரம்பித்தனர். கருத்தின்மை, வரட்சித்தனம், அழகின்மை, ஒருசீர்த்தன்மை மற்றும் உளவியற் தாக்கங்கள் என்பன இந்நிலைக்குக் காரணமாகக் காட்டப்பட்ட சில விடயங்களாகும். கட்டடக்கலையில் இருக்கவேண்டிய ஆழத்தைத் தியாகம் செய்துவிட்டு, வெளித்தோற்ற அளவில் பொதுமக்களைக் கவரக்கூடிய கட்டடங்களைக் கொடுக்கும் பாதையொன்றைக் கைக்கொள்வதுமூலம், மேற்கூறிய நிலைமைக்குப் பதிலளிக்கக் கட்டடக்கலைத் துறை முயன்றது. இது பின்நவீனத்துவம் (Postmodernism) என அழைக்கப்பட்டது. உள்ளே செயல்பாடுகளுக்கு உகந்தபடியான வடிவமைப்பையும், வெளியில் அலங்கரிக்கப்பட்டதுமான கொட்டகை; உள்ளும், புறமும் ஒரே நேரத்தில் சிந்தித்து வடிவமைக்கமுயன்று, கவர்ச்சியற்ற கட்டடத்தைக் கட்டுவதிலும் சிறந்தது என்ற தொனிகொண்ட, ராபர்ட் வெஞ்சூரி என்னும் கட்டடக்கலைஞரது கருத்து, இந்த அணுகுமுறையின் நோக்கத்தை விளக்குகிறது. கட்டடக்கலை இன்று கட்டடக்கலைத் துறையின் இன்னொரு பகுதியினரும், கட்டடக்கலைஞரல்லாதோர் சிலரும், பிரச்சினையின் அடிப்படை என்று அவர்கள் கருதிய விடயங்களுக்குத் தீர்வுகாண்பதன் மூலம் இப் பிரச்சினையை அணுக முயன்றனர். கட்டடக்கலையென்பது, தனிப்பட்ட கட்டடக்கலைஞர்கள் தங்கள் விருப்பங்கள், தத்துவங்கள் அல்லது அழகியல் நோக்கங்களை அடைவதற்கான ஒன்றல்லவென்றும், மாறாக மக்களுடைய நாளாந்தத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தி , வாழ்வுக்குகந்த சூழலை வழங்குவதாக இருக்கவேண்டுமென அவர்கள் கருதினர். சிறந்த உற்பத்திகளை உருவாக்குவதற்கு வழிசமைக்கக் கூடிய, புதிய வடிவமைப்பு வழிமுறையைக் கண்டுபிடிக்கும் நோக்கில், கிறிஸ் ஜோன்ஸ், கிறிஸ்தோபர் அலெக்ஸாண்டர் போன்றவர்களைக் கொண்ட வடிவமைப்பு வழிமுறைகள் இயக்கம் (Design Methodology Movement) ஆரம்பிக்கப்பட்டது. நடத்தை, சூழல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த விடயங்களில் விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, வடிவமைப்பு வழிமுறைகளுக்கு உதவக்கூடிய தகவல்கள் பெறப்பட்டன. மேலும் பல பிரச்சினைகள் அடையாளம் காணப்படத் தொடங்கியபோது, கட்டடச் சேவைகள் போன்ற அம்சங்கள் தொடர்பில், கட்டடங்களின் சிக்கல்தன்மை அதிகரித்து, கட்டடக்கலை, எப்பொழுதுமில்லாதபடி பல்துறைசார்ந்த ஒன்றாக ஆனது. இதனால், கட்டடக்கலை சார்ந்த கட்டடங்களின் உருவாக்கத்துக்கு, பல உயர்தொழில் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு தேவைப்பட்டது. ஆரம்பத்தில் இக்குழுவுக்குக் கட்டடக் கலைஞரே தலைவராக விளங்கினார். தற்காலத்தில் இத் தலைமைப் பொறுப்புக்கும், பல சிறப்புப் பயிற்சிகள் தேவைப்பட்ட காரணத்தினால், திட்ட முகாமைத்துவம் போன்ற புதிய துறைகள் தோன்றிக் கட்டடக்கலைத் துறையின் தலைமை நிலையையும் பிடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. எனினும், கட்டடங்களின் வடிவமைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, கட்டடக்கலைத்துறை இன்னும் பலமாகவேயிருந்து வருகின்றது. விசேடமாக, பண்பாட்டுச் சின்னங்களாகக் கருதப்படக்கூடிய கட்டடவகைகளில், கட்டடக்கலைப் பாணி சார்ந்த பரிசோதனைகள் இன்னும் நிகழக்கூடிய நிலையுள்ளதுடன் அவை மேற்படி பரிசோதனைகளின் காட்சியகங்களாகவும் விளங்குகின்றன. மனித இனத்தின் உற்பத்திகளிலே, எக்காலத்திலும், மிகக் கூடிய அளவு பார்வைக்குத் தெரிகின்றவை கட்டடங்களேயாகும். இருந்தும், அவற்றுட் பெரும்பாலானவை, சாதாரண மக்களினாலேயோ அல்லது வளரும் நாடுகளிலுள்ளதுபோல், கொத்தனார்களாலேயோ கட்டப்படுகின்றன. வளர்ந்த நாடுகளிலே தரப்படுத்தப்பட்ட (standardised) உற்பத்திமுறைகள் மூலம் பெருமளவு கட்டடங்கள் உருவாகின்றன. கட்டட உற்பத்தியின் மிகக் குறைவான வீதமே கட்டடக்கலைஞரின் ஈடுபாட்டைக் கொண்டுள்ளன. சிக்கலான கட்டட வகைகளிலும், பண்பாட்டு, மற்றும் அரசியற் சின்னங்களாக விளங்கக்கூடிய கட்டடங்களில் மட்டுமே கட்டடக்கலைஞரின் திறமை பெரும்பாலும் வேண்டப்படுகின்றது. இவற்றைத்தான் பொதுமக்களும், கட்டடக்கலை சார்ந்த கட்டடங்களாகக் கருதுகிறார்கள். சமூகத்துக்கும், கட்டடக்கலைஞருக்குமிடையே எப்பொழுதும் ஒரு கருத்துப்பரிமாற்றம் நடந்துகொண்டுதான் வருகிறது. இப் பரிமாற்றத்தின் விளைவுகள்தான் கட்டடக்கலையும், அதன் உற்பத்திப்பொருட்களுமாகும் என்று சொல்லலாம். இவற்றையும் பார்க்கவும் கட்டிடக் கலைஞர் கட்டிடக்கலை வரலாறு கட்டிடக்கலைப் பாணி கட்டிடங்களின் பட்டியல் கட்டிடக்கலையில் வடிவங்கள் (Forms) குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் வானளாவி (Skyscraper) இடவெளித் தொகுப்பு (Space Syntax) தாங்குதிறன் வடிவமைப்பு (Sustainable Design) உருப்படிம மொழி (Pattern Language) கணிதமும், கட்டிடக்கலையும் கட்டிட வரைபடங்கள் கட்டிடக்கலைசார் அழகியல் பசுமைக் கட்டடங்கள் (Green Buildings) கட்டிடக்கலை மானிடவியல் (Architectural Anthropology) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Famous architects – Biographies of well-known architects, almost all of the Modern Movement. Dravidian Temple Architecture Vitruvius' "Ten Books of Architecture" online Skyscrapers.com database on skyscrapers and tall structures Royal Institute of British Architects American Institute of Architects Institute for Architectural Theory, Swiss Federal Institute of Technology, Zurich What is New Urbanism? - Congress for the New Urbanism What is Landscape Architecture? - American Society of Landscape Architects Architecture and Urban Research Laboratory Canadian Centre for Architecture – International Research Centre and Museum devoted to Architecture http://www.architexturez.net http://www.pritzkerprize.com/ http://www.vitruvio.ch/
13
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
கட்டிடங்களின் பட்டியல்
பிரபலமான அல்லது குறிப்பிடத்தக்க கட்டிடங்கள்: 1 கனடா சதுக்கம், இலண்டன், ஐக்கிய இராச்சியம் 191 பீச்ட்றீ கோபுரம், அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் 30 சென் மேரி அக்ஸ், இலண்டன் 8 கனடா சதுக்கம், இலண்டன் அல் அக்சா மசூதி, ஜெரூசலம் அஸ்ரீலி மையம் வட்டக் கோபுரம், தெல்-அவீவ், இஸ்ரேல் அஸ்ரீலி மையம் முக்கோணக் கோபுரம், தெல்-அவீவ், இஸ்ரேல் அமெரிக்க வங்கி பிளாசா, அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் சீன வங்கிக் கோபுரம், ஹொங்கொங் Bauhaus, Dessau, ஜெர்மனி Bayreuth Festspielhaus, Bayreuth, ஜெர்மனி Beaulieu Palace, Essex, England, ஐக்கிய இராச்சியம் பிராண்டென்பேர்க் நுழைவாயில், பெர்லின், ஜெர்மனி பிருஹதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர், இந்தியா பி.டி (BT) கோபுரம், இலண்டன், ஐக்கிய இராச்சியம் புக்காரெஸ்ட் Mall, புக்காரெஸ்ட், ருமேனியா பக்கிங்ஹாம் அரண்மனை, இலண்டன் புல்குக்சா, வட கியொங்சாங், வட கொரியா ககுவாஸ் (Caguas) கோபுரம், ககுவாஸ், புவேர்ட்டோ ரிக்கோ காசா மிலா (Casa Milà), பார்சிலோனா, ஸ்பெயின் Cathedral of Christ the Saviour , மாஸ்கோ, ரஷ்யா மத்திய பிளாசா (Central), ஹொங்கொங் செண்டர் பொயிண்ட் (Centre Point), இலண்டன் கிறிஸ்லெர் கட்டிடம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் பெருநகர் நுழைவாயில், ராமத்-கன், இஸ்ரேல் கொலோன் தேவாலயம், கொலோன், ஜெர்மனி கொலோன் நாடக அரங்கு (Cologne Theater), புவெனஸ் அயர்ஸ், ஆர்ஜெண்டீனா கொலோசியம், ரோம், இத்தாலி கொமேர்ஸ்பாங்க் கோபுரம், பிராங்க்பர்ட், ஜெர்மனி கொன்செர்ட்கெபவ், ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து கிறிஸ்டல் மாளிகை, இலண்டன், ஐக்கிய இராச்சியம் சி.என் கோபுரம் (C.N. Tower), டொரான்டோ, ஒண்டாரியோ, கனடா டி.ஜி வங்கி கட்டிடம் (D.G. Bank Building), பெர்லின், ஜெர்மனி பாறைக் குவிமாடம், ஜெருசலெம், இஸ்ரேல் டொங்லின் கோவில், ஜியாங்ஷி, மக்கள் சீனக் குடியரசு டுபாய் லாண்ட், துபாய், ஐக்கிய அரபு அமீரகம் ஈபெல் கோபுரம், பாரிஸ், பிரான்ஸ் எமிரேட்ஸ் கோபுரங்கள், துபாய், ஐக்கிய அரபு அமீரகம் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல் எஸ்கோரியல், ஸ்பெயின் பிளடிரோன் கட்டிடம் (Flatiron), நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் குளோப் நாடக அரங்கு (Globe Theatre), இலண்டன், ஐக்கிய இராச்சியம் பெரிய பிரமிட், கிஸா, எகிப்து குகென்ஹெயிம் அருங்காட்சியகம், பில்போ, ஸ்பெயின் ஹபிட்டாற் '67 (Habitat '67), மொன்றியல், கியூபெக், கனடா ஹேகியா சோபியா, இஸ்தான்புல், துருக்கி ஹெயின்சா (Haeinsa), வட கியொங்சாங், வட கொரியா ஜோன் ஹன்கொக் கட்டிடம், சிகாகோ, இலினொய்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஹிமேஜி கோட்டை (Himeji castle), Hyogo prefecture, ஜப்பான், ஜப்பான் ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஹிரோஷிமா, ஜப்பான் ஹொலிவூட் மாளிகை, எடின்பரோ, ஐக்கிய இராச்சியம் ஹோப்வெல் செண்டர், ஹொங்கொங் ஜெபெர்சன் வளைவு (Arch), சாந். லூயிஸ், மிசோரி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஜெபெர்சன் நினைவகம், வாஷிங்டன், டி. சி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஜே.பி. மோர்கன் சேஸ் கோபுரம், ஹியூஸ்டன், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் காபா, மக்கா, சவுதி அரேபியா பீசாவின் சாய்ந்த கோபுரம், பீசா, இத்தாலி லீன்ஸ்டர் ஹவுஸ், டப்லின், அயர்லாந்து அலெக்ஸாண்ட்ரியா கலங்கரை விளக்கம், அலெக்ஸாண்ட்ரியா, எகிப்து Madeleine, Église de la, பாரிஸ், பிரான்ஸ் மால் ஆஃப் அமெரிக்கா (Mall of America), புளூமிங்டன், மினசோட்டா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மேரி-ரெனி-து-மாந்தே தேவாலயம் (Marie-Reine-du-Monde Cathedral), மொன்றியல், கியூபெக், கனடா மிலான் மத்திய நிலையம், மிலான், இத்தாலி இத்வோமோ தி மிலானோ (Duomo di Milano), மிலான், இத்தாலி மில்லெனியம் டோம், இலண்டன், ஐக்கிய இராச்சியம் நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா, மொன்றியல், கியூபெக், கனடா நொட்ரே-டேம் டி பாரிஸ், பாரிஸ், பிரான்ஸ் ஓர்சன்மிச்சேல், புளோரன்ஸ், இத்தாலி பான் அம் கட்டிடம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் பார்த்தினன், பாரிஸ், பிரான்ஸ் பாரிஸ் ஒபேரா (பலைஸ் கார்னியர்), பாரிஸ், பிரான்ஸ் பார்த்தினன், ஏதென்ஸ், கிரீஸ் பெண்டகன், ஆர்லிங்டன், வெர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா பெட்ரோனாஸ் கோபுரங்கள், கோலாலம்பூர், மலேசியா பிளாஸா லாஸ் அமெரிக்காஸ், சான் ஜுவான், பியூட்டோரிக்கோ பிறாடோ நூதனசாலை, மாட்ரிட், ஸ்பெயின் புரொமெனேட் II, அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் றீச்ஸ்டயிக் கட்டிடம் (Reichstag Building), பெர்லின், ஜேர்மனி ரிலையண்ட் அஸ்ட்ரோடோம், ஹூஸ்டன், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா ரொபர்ட்டோ கிளெமண்ட் கொலிசியம், பியூட்டோரிக்கோ ரோயல் ஒப்பேரா ஹவுஸ், இலண்டன், ஐக்கிய இராச்சியம் ரியூக்யொங் ஹோட்டல், பியொங்யாங், வட கொரியா சக்ராதா பமிலியா (Sagrada Família), பார்சிலோனா, ஸ்பெயின் Sainte-Chapelle, பாரிஸ், பிரான்ஸ் சென். ஜோசப் டியு மொண்ட்-ரோயல், மொண்ட்ரியல் சாந்தா மரியா நொவெல்லா, புளோரன்ஸ் ஷலோம் மெயர் கோபுரம், தெல்-அவிவ், இஸ்ரேல் ஷெரட்டன் சிட்டி கோபுரம், ரமாத்-கன், இஸ்ரேல் சொலமன் ஆர். குகனீம் நூதனசாலை, நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் சென் போல்ஸ் பேராலயம், இலண்டன், ஐக்கிய இராச்சியம் புனித பீட்டர் தேவாலயம் (St.Peters Basillica), ரோம், இத்தாலி லா ஸ்காலா அரங்கம், மிலான், இத்தாலி ஷௌன்ப்ர்ண் அரண்மனை (Schönbrunn Palace), ஆஸ்திரியா சியேர்ஸ் கோபுரம், சிகாகோ, இலினொய்ஸ், ஐக்கிய அமெரிக்கா ஸ்கை டோம், டொரான்டோ, ஒண்டாரியோ, கனடா சிங்கர் கட்டிடம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் சிமித் கோபுரம், சியாடில், வொஷிங்டன், ஐக்கிய அமெரிக்க நாடுகள் சொன்குவாங்சா, தெற்கு ஜோல்லா, தென் கொரியா சௌத்டேல், எடினா, மினசோட்டா, ஐக்கிய அமெரிக்கா விண்வெளி ஊசி (Space Needle), சியாட்டில், வொஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா ஸ்டீபன்ஸ்டம் (Stephansdom), வியன்னா கோடை அரண்மனை, பீஜிங், மக்கள் சீனக் குடியரசு சண்ட்ரஸ்ட் பிளாஸா, அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் சிட்னி ஒப்பேரா மாளிகை, சிட்னி, அவுஸ்திரேலியா தாய்ப்பே 101, தாய்ப்பே, தாய்வான் தாஜ் மஹால், ஆக்ரா, இந்தியா டி & சி கோபுரம், Kaohsiung, தாய்வான் தெல்-அவிவ் மத்திய பேருந்து நிலையம், தெல்-அவிவ், இஸ்ரேல் சுவர்க்கக் கோவில், பீஜிங், மக்கள் சீனக் குடியரசு டோக்கியோ கோபுரம், டோக்கியோ, ஜப்பான் கோபுரம் 42, இலண்டன், ஐக்கிய இராச்சியம் ட்ரான்ஸ் அமெரிக்கா பிரமிட், சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா ட்ரிபியூன் கோபுரம், சிகாகோ, இலினொய்ஸ், ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய நாடுகள் தலைமையகம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் யூ.எஸ். வங்கி கோபுரம், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா வெர்செயிலஸ் அரண்மனை, வெர்செயிலஸ், பிரான்ஸ் வில்லா சவோய், பொய்சி-சர்-சீனே, பிரான்ஸ் மேற்கு எட்மண்டன் அங்காடி, எட்மண்டன், அல்பேர்ட்டா, கனடா வெஸ்டின் பீச்ட்ரீ பிளாஸா, அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே, இலண்டன், ஐக்கிய இராச்சியம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, இலண்டன் வெள்ளை மாளிகை, வாஷிங்டன், டி.சி., ஐக்கிய அமெரிக்கா வின்செஸ்டர் மர்ம மாளிகை, சான் ஜோஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா குளிர்கால அரண்மனை, சென். பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா வூல்வேர்த் கட்டிடம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் உலக வர்த்தக மையம், நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் ரிக்லே கட்டிடம், சிகாகோ, இலினொய்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் இவற்றையும் பார்க்கவும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 உயரமான கட்டிடங்கள். Amphitheatre நீர்காவி (Aqueduct) கட்டிடக்கலை பெருநகர் நுழைவாயில் பதுகாப்புச் சுவர் List of abbeys and priories List of basilicas பாலங்களின் பட்டியல் இந்துக் கோவில்களின் பட்டியல் பௌத்த கோவில்களின் பட்டியல் கட்டிட வகைகளின் பட்டியல் List of castles பேராலயங்களின் பட்டியல் (Cathedrals) அணைக்கட்டுகளின் பட்டியல் பிரபல தொல்பொருளியற் களங்களின் பட்டியல் பிரபல களங்களின் பட்டியல் (sites) வரலாற்றுச் சிறப்புமிக்க வீடுகளின் பட்டியல் கலங்கரை விளக்கங்களின் பட்டியல் வானளாவிகளின் பட்டியல் (skyscrapers) உலகின் உயரமான அமைப்புகளின் பட்டியல் சுவர்களின் பட்டியல் Opera house அரண்மனைகள் அங்காடித் தொகுதி இலண்டனின் உயரமான கட்டிடங்கள் வெற்றி வளைவுகள் (Triumphal arch) உலக பாரம்பரியக் களங்கள் கட்டிடக்கலை
16
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D
கட்டடக் கலைஞர்
ஒரு கட்டிடக்கலைஞன் அல்லது கட்டிடச்சிற்பி (Architect) என்பவன் கட்டிடத் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டிட நிர்மாண மேற்பார்வை என்பவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவனாவான். கட்டிடக்கலையைப் பார்க்கவும். கட்டிடக்கலைஞர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பொறியியலாளர்களைப்போல உயர்தொழில் வல்லுனர்களாகக் கணிக்கப்படுகிறார்கள். ஒரு கட்டிடக்கலைஞன் பெறக்கூடிய அதி கௌரவம் பிரிட்ஸ்கெர் பரிசு (Pritzker Prize) ஆகும். முற்காலத்தில் கட்டிடக்கலைஞர்கள், திட்டமிடல், வடிவமைப்பு, மேற்பார்வை மட்டுமின்றி, தாங்களே முன்னின்று கட்டிடவேலைகளில் ஈடுபட்டார்கள். பழங்காலக் கட்டிடங்களிலே சிற்பவேலைப்பாடுகள் மிக முக்கிய இடத்தை வகித்தபடியால், இவர்களும் சிற்பிகள் என்றே அழைக்கப்பட்டார்கள். பல நாடுகளிலே, கட்டிடக்கலைஞர்கள் தொழில்புரிவதற்கு அனுமதி பெற்றிருக்கவேண்டும். தொழில் முறையில், கட்டிடக் கலைஞர் ஒருவரின் தீர்மானங்கள் பொதுப் பாதுகாப்பைப் பாதிக்கக் கூடியவை. அதனால், உயர்நிலைக் கல்வியையும், செய்முறை அனுபவத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கும் ஒருவருக்கே கட்டிடக்கலைத் தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி, பொதுச் சட்டவிதிகளின் கீழ் அமைக்கப்பட்ட தனி அமைப்பொன்றினாலோ அல்லது கட்டிடக்கலைஞர் நிறுவனங்களினாலோ வழங்கப்படுகின்றது. நாட்டுக்கு நாடு இந்த அனுமதிபெறுவதற்கான, வழிமுறைகளும், பயிற்சிகளும், சிற்றளவில் வேறுபடுகின்றன. பல நாடுகளில் "கட்டிடக்கலைஞர்" என்னும் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டு உள்ளது. இந்நாடுகளில், உரிய பயிற்சி பெறாமல் கட்டிடக்கலைஞர் என்று அழைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம். குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்கள் இங்கு தரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் அவர்களுடைய முக்கியமான வேலைகளின் காலப்பகுதியைத் தழுவி, காலஒழுங்கு அடிப்படையிலும், அக் காலப்பகுதியினுள் அகரமுதல் அடிப்படையிலும் உள்ளது. கட்டிடக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்: பாஹாவுஸ் (Bauhaus), ஜெர்மனி இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (Ecole des Beaux Arts), பாரிஸ் மேற்கோள்கள் மேலும் பார்க்க குடிசார் பொறியியல் (Civil engineering) அமைப்புப் பொறியியல் (Structural engineering) கட்டிடக்கலைஞர் சங்கங்கள் குடிசார் பொறியாளர் கட்டிடக்கலை
17
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் முற்காலக் கட்டிடக்கலைஞர்கள் மார்க்கஸ் அக்ரிப்பா ட்ரலசிய அந்தேமியஸ் (Anthemius of Tralles) இம்ஹோடெப் (Imhotep) இக்டினொஸ் (Iktinos) மிலெட்டஸ் இசிடோர் (Isidore of Miletus) கல்லிக்கிறேட்டஸ் (Kallikrates) நெசிக்கிள்ஸ் (Mnesicles) நிம்ரொட் விட்ருவியஸ் விவாஸ்வட் பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் ராபர்ட் டி லுஸார்ச்செஸ் வில்லார்ட் டி ஹொன்னெக்கோர்ட் பதினைந்தாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் லியொன் பட்டிஸ்டா அல்பர்ட்டி டொனாட்டோ பிரமண்டே பிலிப்போ புருனெலெஸ்ச்சி (Filippo Brunelleschi) லியொனார்டோ டா வின்சி மிக்கெலொஸ்ஸோ மிக்கெலொஸ்ஸி (Michelozzo Michelozzi) பதினாறாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் கலீஸ்ஸோ அலெஸ்ஸி (Galeazzo Alessi) பார்த்தொலோமியோ அம்மானத்தி (Bartolomeo Ammanati) மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி Philibert de l'Orme அண்ட்ரியா பல்லாடியோ (Andrea Palladio) அண்டோனியோ சங்கால்லோ ரஃபாயேலோ சாண்டி (Raffaello Santi) சினான் ஜோர்ஜியோ வசாரி கியாகோமோ பரோஸ்சி டா விக்னோலா (Giacomo Barozzi da Vignola) பதினேழாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் கியான் லொரென்ஸோ பெர்னினி ( Gian Lorenzo Bernini) பிரான்ஸெஸ்கோ பொரோமினி (Francesco Borromini) பியெட்ரோ டா கொர்தோனா(Pietro da Cortona) குவாரினோ குவாரினி (Guarino Guarini) உஸ்தாத் இஸா (Ustad Isa) இனிகோ ஜோன்ஸ் கார்லோ மடேர்னோ கார்லோ ரைனால்டி (Carlo Rainaldi) ஜான் வெப் (John Webb) கிறிஸ்தோபர் ரென் (Christopher Wren) பதினெட்டாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் ராபர்ட் ஆடம் (Robert Adam) கொஸ்மாஸ் டாமியன் ஆசாம் (Cosmas Damian Asam) எகிட் குயிரின் ஆசாம் (Egid Quirin Asam) Étienne-Louis Boullée வில்லியம் சேம்பர்ஸ் (William Chambers) கிரிஸ்தோஃப் தியென்சென்ஹோபர் (Christof Dienzenhofer) கிலியன் இக்னாஸ் தியென்சென்ஹோபர் (Kilian Ignaz Dienzenhofer) ஜோஹான் பெர்ன்ஹார்ட் ஃபிஷர் வொன் ஏர்லாச் (Johann Bernhard Fischer von Erlach) ஜொஹான் மைக்கேல் ஃபிஷர் (Johann Michael Fischer) நிக்கொலாஸ் ஹோக்ஸ்மூர் (Nicholas Hawksmoor) Johann Lukas von Hildebrandt ஜேம்ஸ் ஹோபன் (James Hoban) தோமஸ் ஜெஃபர்சன் ஃபிலிப்போ ஜுவார்ரா (Filippo Juvarra) வில்லியம் கெண்ட் (William Kent) பெஞ்சமின் லாட்ரோப் (Benjamin Latrobe) Jules Hardouin Mansart ஜோசெஃப் முங்கெனாஸ்ட் (Josef Munggenast) பல்தாசர் நியூமான் (Balthasar Neumann) Giuseppe Piemarini Jakob Prandtauer ஜொஹான் மைக்கேல் புரூன்னர் (Johann Michael Prunner) Jacques-Germain Soufflot வில்லியம் தோர்ன்டன் (William Thornton) Luigi Vanvitelli John Vanbrugh Bernardo Vittone Dominikus Zimmermann Johann Baptist Zimmermann பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் Dankmar Adler சர் சார்லஸ் பரி (Charles Barry) சார்லஸ் பரி (junior) Edward Middleton Barry Frederic Auguste Bartholdi Charles Bulfinch William Burges எட்வார்ட் கிளாக் (Edward Clark) Thomas Cubitt Pierre Cuypers Alexandre Gustave Eiffel சார்லஸ் கார்னியர் (Charles Garnier) பிலிப் ஹார்ட்விக் (Philip Hardwick) விக்டர் ஹோர்ட்டா Horta (Victor Horta) ரிச்சார்ட் ஹண்ட் (Richard Hunt) Henri Labrouste Benjamin Henry Latrobe William LeBaron Jenney Charles Follen McKim ஜான் நாஷ் (John Nash) Frederick Law Olmsted ஜோசேஃப் பக்ஸ்டன் (Joseph Paxton) A. W. N. Pugin ஜேம்ஸ் ரென்விக் (James Renwick) ஹென்றி ஹொப்சன் ரிச்சார்ட்சன் (Henry Hobson Richardson) ஜான் ரூட் (John Root) ஜார்ஜ் கில்பர்ட் ஸ்கொட் (George Gilbert Scott) கொட்பிரைட் செம்பர் (Gottfried Semper) John Soane லூயிஸ் சலிவன் (Louis Sullivan) Eugene Viollet-le-Duc Thomas Ustik Walter Alfred Waterhouse Stanford White இருபதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் அல்வார் ஆல்டோAlvar Aalto டேவிட் அட்லர்David Adler கிறிஸ்தோபர் அலெக்சாண்டர்Christopher Alexander Tadao Ando லூயிஸ் பராகன் (Luis Barragan) Frederic Bereder Henrik Petrus Berlage Gottfried Boehm ரிக்காடோ போவில் (Ricardo Bofill) Mario Botta Marcel Lajos Breuer J. van den Broek Gordon Bunshaft John Burgee டானியேல் பர்ண்ஹம் (Daniel Burnham) சந்தியாகோ கலத்ராவா (Santiago Calatrava) Ralph Adams Cram Pierre de Meuron Willem Marinus Dudok Peter Eisenman ஆர்தர் எரிக்சன் (Arthur Erickson) Sverre Fehn நார்மன் பாஸ்டர் (Norman Foster) பக்மின்ஸ்டர் புல்லர் (Buckminster Fuller) அண்டோனியோ கௌடி (Antonio Gaudi) பிராங்க் கெரி (Frank Gehry) Cass Gilbert மைக்கேல் கிறேவ்ஸ் (Michael Graves) வால்டர் பர்லி கிறிபின் (Walter Burley Griffin) வால்டர் குறோப்பியஸ் (Walter Gropius) வலஸ் ஹரிசன் (Wallace Harrison) Jacques Herzog சார்ல்ஸ் ஹோல்டன் (Charles Holden) Hans Hollein ரேமண்ட் ஹூட் (Raymond Hood) Arata Isozaki ஆர்னே ஜகொப்சன் (Arne Jacobsen) Helmut Jahn பிலிப் ஜான்சன் (Philip Johnson) லூயிஸ் கான் (Louis Kahn) கென்ஸோ டாங்கே (Kenzo Tange) Hans Kolhoff Rem Koolhaas Leon Krier Kisho Kurokawa லெ கொபூசியே (Le Corbusier) மாயா லின் (Maya Lin) அடொல்ப் லூஸ் (Adolf Loos) Edwin Lutyens Fumihiko Maki சார்ல்ஸ் ரெனி மக்கின்டோஷ் (Charles Rennie Mackintosh) Robert Mallet-Stevens McKim, Mead, and White ரிச்சர்ட் மீயர் (Richard Meier) லுட்விக் மீஸ் வான் டெர் ரோLudwig Mies van der Rohe Giovanni Michelucci Samuel -Sambo- Mockbee ராபேல் மோனியோ (Rafael Moneo) சார்ல்ஸ் மூர் (Charles Moore) ஜூலியா மோர்கன் (Julia Morgan) வில்லியம் மொறிஸ் (William Morris) Glenn Murcutt ரிச்சர்ட் நியூட்ரா (Richard Neutra) ஒஸ்கார் நிமேயர் (Oscar Niemeyer) ஒஸ்கார் நிற்ஸ்கே (Oscar Nitzchke) Nouvel Jean J.J.P.Oud ஐ.எம்.பே (I. M. Pei) ரென்ஸோ பியானோ (Renzo Piano) கியோ பொண்டி (Gio Ponti) ஜோன் போர்ட்மன்John Portman Christian de Portzamparc ரால்ப் ரப்சன் (Ralph Rapson) ஸ்டீன் எய்லெர் ராஸ்முசென் (Steen Eiler Rasmussen) Gerrit Rietveld கெவின் ரோச் (Kevin Roche) ரிச்சர்ட் ரோஜர்ஸ் (Richard Rogers) அல்டோ ரொஸ்ஸி (Aldo Rossi) போல் ருடொல்ப் (Paul Rudolf) ஈரோ சாரினென் (Eero Saarinen) எலியெல் சாரினென் (Eliel Saarinen) Moshe Safdie கர்லோ ஸ்கார்ப்பா (Carlo Scarpa) Paul Schmitthenner Margarete Schütte-Lihotzky கைல்ஸ் கில்பர்ட் ஸ்கொட் (Giles Gilbert Scott) ஹரி சீட்லெர் (Harry Seidler) Shreeve, Lamb, and Harmon அல்வாரோ சிஸா (Alvaro Siza) Skidmore, Owings, and Merrill பவோலோ சோலேரி (Paolo Soleri) அல்பர்ட் ஸ்பியர் (Albert Speer) James Stirling Edward Durrell Stone கென்சோ டாங்கே (Kenzo Tange) Bruno Taut பெர்ணார்ட் சூமி (Bernard Tschumi) ஜோர்ன் அட்சன் (Jørn Utzon) வில்லியம் வான் அலன் (William van Alen) Aldo van Eyck ராபர்ட் வெஞ்சூரி (Robert Venturi) ஜன் வில்ஸ் (Jan Wils) பிரான்க் லாய்டு ரைட் (Frank Lloyd Wright) மினோரு யமசாகி (Minoru Yamasaki) இருபத்தோராம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள் Richard Nash Gould Steven Holl Daniel Libeskind
18
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
புவியியல்
புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. இவை, இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு; நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது; மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு; புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு; என்பனவாகும். ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், இயற்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, மானிடப் புவியியல், இயற்கைப் புவியியல் (physical geography) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அறிமுகம் முன்னர் புவியியலாளர்களை, நிலப்பட வரைவாளர்களைப் போலவும், இடப்பெயர்களையும் அவற்றின் எண்ணிக்கைகளையும் ஆய்வு செய்பவர்களைப் போலவுமே மக்கள் நோக்கி வந்தனர். பல புவியியலாளர்கள், புவிப்பரப்பியல், நிலப்பட வரைவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றிருப்பினும், அவர்களின் முதன்மையான பணி அதுவல்ல. புவியியலாளர்கள், தோற்றப்பாடுகள், செயல்முறைகள், அம்சங்கள், மனிதனுக்கும் அவனது சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் என்பவற்றின் இடம் சார்ந்தனவும், உலகியல் சார்ந்தனவுமான பரம்பல்கள் குறித்து ஆராய்கிறார்கள். வெளியும், இடமும்; பொருளியல், உடல்நலம், காலநிலை, தாவரங்கள், விலங்குகள் என்பவற்றின் மீது தாக்கங்களைக் கொண்டிருப்பதால், புவியியல் ஒரு பலதுறைத் தொடர்பு கொண்ட துறையாக உள்ளது. புவியியலின் இரண்டு பிரிவுகளுள், மானிடப் புவியியல், பெரும்பாலும் கட்டிடச் சூழல் பற்றியும்; அவற்றை எவ்வாறு மனிதர்கள் உருவாக்குகிறார்கள், நோக்குகிறார்கள், மேலாண்மை செய்கிறார்கள், அவற்றின் மீது செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்பது பற்றியும் ஆய்வு செய்கிறது. இரண்டாவது வகையான இயற்கைப் புவியியல், காலநிலை, தாவரவகை, பிற உயிர்வகைகள், நில அமைப்பு என்பன எவ்வாறு உருவாகின்றன, எத்தகைய தொடர்புகளை அவற்றுள் கொண்டுள்ளன என்பவற்றை உள்ளடக்கிய இயற்கைச் சூழல் குறித்து ஆய்வு செய்கிறது. புவியியலின் பிரிவுகள் இயற்கைப் புவியியல் இயற்கைப் புவியியல், புவியியலை புவி பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் (layout), கற்கோளம் (lithosphere), நீர்க்கோளம் (hydrosphere), வளிமண்டலம், மேலோட்டுக் கோளம் (pedosphere), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள் பற்றிப் புரிந்து கொள்ள முயல்கிறது. இயற்கைப் புவியியலைப் பின்வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். நிலவியல் (Geology) நில உருவாக்கவியல் (Geomorphology) நீர்வள இயல் (Hydrology) பனியாற்றியல் (Glaciology) உயிரினப் புவியியல் (Biogeography) காலநிலையியல் மண்ணியல் (Pedology) புவி உருவவியல் (Geodesy) தொல்புவியியல் (Palaeogeography) சூழற் புவியியலும் மேலாண்மையும் நிலத்தோற்ற வாழ்சூழலியல் (Landscape ecology) மானிடப் புவியியல் மானிடப் புவியியல் என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் (patterns), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, மனிதன், அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மானிடப் புவியியலின் முக்கிய இலக்கு புவியின் இயல் நிலத்தோற்றமாக (physical landscape) இல்லாதிருப்பினும், மனிதச் செயற்பாடுகள் யாவும் இயல் நிலத்தோற்றப் பின்னணியிலேயே நடைபெறுவதால், இதன் தொடர்பின்றி மானிடப் புவியியலை ஆராய முடியாது. சூழற் புவியியல் இவ்விரு துறைகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக உருவாகி வருகிறது. மானிடப் புவியியல் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். பொருளாதாரப் புவியியல் (Economic geography) வளர்ச்சிப் புவியியல் (Development geography) மக்கள் தொகைப் புவியியல் அல்லது மக்கட் பரம்பல் (Population geography or Demography) நகரப் புவியியல் (Urban geography) சமூகப் புவியியல் (Social geography) நடத்தைப் புவியியல் (Behavioral geography) பண்பாட்டுப் புவியியல் (Cultural geography) அரசியற் புவியியல் (Political geography) புவிசார் அரசியலும் (Geopolitics) அடங்கலாக. வரலாற்றுப் புவியியல் (Historical geography) பிரதேசப் புவியியல் (Regional geography) சுற்றுலாப் புவியியல் (Tourism geography) உத்திசார் புவியியல் (Strategic geography) பாதுகாப்புப் புவியியல் (Military geography) பெண்ணியப் புவியியல் (Feminist geography) மானிடப் புவியியலின் துணைப்பிரிவுகள் பலவற்றுக்கும் இடையிலான வேறுபாடுகள் பொதுவாகத் தெளிவற்ற நிலையிலேயே இருப்பதால் மேலே தரப்பட்டுள்ள பட்டியல் ஒரு முடிவான பட்டியல் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும். சூழற் புவியியல் சூழற் புவியியல், புவியியலின் ஒரு கிளைத் துறை. இது மனிதருக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான தொடர்புகளின் இடம் சார்ந்த அம்சங்களையும், சூழலை எவ்வாறு மனிதர் கருத்துருவாக்கம் செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது. மானிடப் புவியியலும், இயற்கைப் புவியியலும் கூடிய அளவில் சிறப்பாக்கம் பெற்று வருவதன் விளைவாக, இவ்விரண்டுக்கும் இடையிலான ஒரு இணைப்புப் பாலமாக, சூழற் புவியியல் உருவாகியுள்ளது. மேலும், சூழலுடனான மனிதரின் தொடர்புகள், உலகமயமாதல், தொழில்நுட்ப மாற்றங்கள் போன்றவற்றால் மாற்றம்பெற்று வருவதனால், இந்த மாறுகின்றதும் இயங்குதன்மை கொண்டதுமான தொடர்புகளை விளங்கிக் கொள்வதற்கு புதிய அணுகுமுறையும் தேவைப்பட்டது. பேரழிவு மேலாண்மை (disaster management), சூழல் மேலாண்மை, தாங்குதிறன் (sustainability), அரசியல் சூழலியல் (political ecology) என்பன சூழற் புவியியலின் கீழ் அடங்கும் ஆய்வுப் பரப்புகள் ஆகும். புவித்தகவற்கணியவியல் புவித்தகவற்கணியவியல் (Geomatics) என்பதும் புவியியலின் ஒரு கிளைத்துறை. 1950களின் நடுப்பகுதியில், புவியியலில் கணியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இத்துறை உருவானது. நிலப்படவரைவியல், நிலவுருவவியல் ஆகிய துறைகளில் பொதுவாகப் புழங்கும் நுட்பங்களையும், அவற்றைக் கணினியில் பயன்படுத்தும் முறைகளையுமே புவித்தகவற்கணியவியல் பயன்படுத்துகின்றது. புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல் போன்ற நுட்பங்களைப் பிற துறைகளும் பயன்படுத்துவதனால் புவித்தகவற்கணியவியல் இன்று ஒரு பரந்துபட்ட துறையாக மாறியுள்ளது. இத்துறை, நிலப்படவரைவியல், புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல், விண்கோள் நில அளவை முறைமை (Global positioning systems) போன்ற இடஞ்சார் பகுப்பாய்வுகளுடன் கூடிய பலவகை அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மண்டலப் புவியியல் பிரதேசப் புவியியல் (Regional geography), புவியியலின் ஒரு கிளைத்துறை. இது புவியில் உள்ள எல்லா அலவிலான மண்டலங்களையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது விளக்கும் இயல்பு கொண்ட ஒரு துறை. இதன் முக்கிய குறிக்கோள், ஒரு மண்டலத்தின், இயற்கை மற்றும் மனிதக் கூறுகள் உட்பட்ட, இயல்புகளை அல்லது சிறப்புத்தன்மையைப் புரிந்துகொள்வது அல்லது வரையறுப்பது ஆகும். பகுதிகளை மண்டலங்களாகப் பிரித்து எல்லை வகுப்பதற்கான முறையான நுட்பங்களைத்தன்னுள் அடக்கும் மண்டலமயமாதல் (regionalization) குறித்தும் இது கவனம் செலுத்துகின்றது. மண்டலப் புவியியல், புவி அறிவியல் ஆய்வுகளில் ஒரு அணுகுமுறையாகவும் கருதப்படுகின்றது. தொடர்புள்ள துறைகள் நகரத் திட்டமிடல், மண்டலத் திட்டமிடல், இடஞ்சார் திட்டமிடல் ஆகிய துறைகள், புவியியல் அறிவைப் பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு, அழகு, பொருளியல் வாய்ப்புக்கள், கட்டிட அல்லது இயற்கைப் பாரம்பரியங்களைக் காத்தல் போன்றவை தொடர்பிலான நோக்கங்களை அடைவதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை எவ்வாறு திருத்தியமைக்கலாம் அல்லது திருத்தாமல் விடலாம் போன்ற விடயங்களைப் புவியியல் அறிவு கொண்டு முடிவு செய்யலாம். நகரங்கள், பெருநகரங்கள், நாட்டுப்புறப் பகுதிகள் ஆகியவற்றைத் திட்டமிடுவதைப் பயன்பாட்டுப் புவியியலாகப் பார்க்க முடியும். மண்டல அறிவியல்: 1950ல் வால்ட்டர் இசார்ட் என்பவரால் வழிநடத்தப்பட்ட மண்டல அறிவியல் இயக்கம், புவியியல் பிரச்சினைகளுக்குக் கணிய மற்றும் பகுப்பாய்வு அடிப்படைகளை வழங்குவதற்காக உருவானது. இது மரபுவழியான புவியியல் திட்டங்களின் விளக்கும் போக்கிலிருந்து மாறுபடுகின்றது. மண்டல அறிவியலானது, இடஞ்சார் நோக்கை முக்கியமாகக் கொண்ட, மண்டலப் பொருளியல், வள மேலாண்மை, அமைவிடக் கோட்பாடு, நகர மற்றும் மண்டலத் திட்டமிடல், தகவல் தொடர்பு, மானிடப் புவியியல், மக்கள்தொகைப் பரம்பல், நிலத்தோற்றச் சூழலியல், சூழல் தரம் அறிவுத் தொகுதிகளை உள்ளடக்கியது. கோள் அறிவியல்கள் புவியியல் பொதுவாகப் புவி தொடர்பானதே ஆனாலும், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களைப் போன்ற பிற கோள்களை ஆய்வு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும். புவியைக் காட்டிலும் பெரிய தொகுதிகள் பற்றிய ஆய்வு பொதுவாக வானியல், அண்டவியல் ஆகிய துறைகளுக்கு உட்பட்டது. பிற கோள்களை ஆயும் துறை கோளியல் (planetology) எனப்படும். புவியியலின் வரலாறு மிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த அனக்சிமாண்டர் (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவருடைய எண்ணங்கள் பற்றிப் பிற நூல்களில் குறிப்பிட்டிருப்பது தவிர இவரது ஆக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடக்ககாலத்தில் நிலநேர்க்கோட்டை அளப்பதற்குக் கிரேக்கர்கள் பயன்படுத்திய, எளிமையான ஆனால் செயற்றிறன் கொண்ட கருவியைக் கண்டுபிடித்தவரும், கிரகணங்களை எதிர்வு கூறுவதற்கான வழிமுறையை வகுத்தவரும் இவரே என்று கருதப்படுகிறது. புவியியலுக்கான அடிப்படைகளைப் பல பண்டைக்காலப் பண்பாடுகளில் காண முடியும். பண்டைய, இடைக்கால, தற்காலத் தொடக்கம் ஆகிய காலப்பகுதிகளுக்குரிய சீனப் பண்பாட்டில் இதற்கான சான்றுகள் உள்ளன. புவியியலை ஒரு அறிவியலாகவும், தத்துவமாகவும் கருதி முதன்முதலில் ஆராய்ந்தவர்கள் கிரேக்கர் ஆவர். இவர்கள் இதனை, நிலப்படவரைவியல், மெய்யியல், இலக்கியம், கணிதம் போன்ற துறைகளூடாகச் செய்தனர். புவி கோள வடிவானது என்பதைக் கண்டு பிடித்தது யார் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இது, பாராமெனிட்ஸ் (Parmenides) அல்லது ஆக்கிமிடீசாக இருக்கலாம் என்கின்றனர். அனக்சாகோரஸ் என்பவர் கிரகணங்களைச் சான்றாகக் கொண்டு புவி வட்டமான விளிம்புத் தோற்றம் கொண்டது என விளக்கினார். எனினும் அவர், அவர் காலத்தின் பல அறிஞர்களைப் போலவே புவி ஒரு வட்டமான தட்டுப் போன்றது என நம்பினார். புதிய நாடுகளைத் தேடிப்போன ரோமர்கள் புவியியல் ஆய்வில் புதிய நுட்பங்களைப் புகுத்தினார்கள். மத்திய காலங்களில், இத்ரிசி, இபின் பட்டுடா, இபின் கால்டுன் போன்ற அராபியர்களும் கிரேக்க மற்றும் ரோமன் நுட்பங்களைப் பயன்படுத்தியதோடு அவற்றை மேலும் விருத்தி செய்தனர். மார்க்கோ போலோவின் பயணங்களைத் தொடர்ந்து புவியியல் பற்றிய ஆர்வம் ஐரோப்பா எங்கும் பரவியது. 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற நாடுகாண் கடற் பயணங்கள் அச்சொட்டான புவியியல் விபரங்களையும், புவியியல் சார்பான கோட்பாட்டு அடிப்படைகளையும் பெற்றுக்கொள்வதில் புதிய ஆர்வத்தை உருவாக்கின. இக்காலப்பகுதி பெரிய புவியியற் கண்டுபிடிப்புக்களுக்கான காலப்பகுதியாகவும் அறியப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் புவியியல் ஒரு தனித் துறையாக அங்கீகாரம் பெற்றிருந்ததுடன், ஐரோப்பாவின் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களிலும் இடம் பெற்றிருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் புவியியல் அறிவின் அளவு பலமடங்காக விரிவடைந்துள்ளது. புவியியலுக்கும், நிலவியல், தாவரவியல் ஆகிய அறிவியல் துறைகளுடனும், பொருளியல், சமூகவியல், மக்கட்தொகைப் பரம்பல் ஆகியவற்றுடனும் பிணைப்புகள் உருவாகி வலுப்பெற்றுள்ளன. மேற்கு நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில், புவியியல் துறை நான்கு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. இவை சூழல் அறுதிப்பாட்டியம் (environmental determinism), பிரதேசப் புவியியல் (regional geography), கணியப் புரட்சி (quantitative revolution), மற்றும் critical geography என்பனவாகும். புவியியல் நுட்பங்கள் இடஞ்சார் ஊடு தொடர்புகள் புவியியலுக்கு முக்கியமான அம்சங்களாக இருப்பதால், நிலப்படங்கள் (maps) இத்துறைக்கு இன்றியமையாத கருவிகளாக அமைந்துள்ளன. இத்துறையில் நீண்ட காலமாக வழக்கிலிருந்துவரும் நிலப்பட வரைவியலுடன், நவீன புவியியல் பகுப்பாய்வுக்கு உதவியாகக் கணினி சார்ந்த புவியியற் தகவல் முறைமையும் (geographic information systems (GIS)) இணைந்து கொண்டுள்ளது. நிலப்பட வரைவியல்: புவியியற் தகவல் முறைமைகள் என்பது தேவையின் நோக்கத்துக்கு உகந்த வகையில், அச்சொட்டான (accurate) முறையில், கணினிமூலம் தன்னியக்கமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் புவி பற்றிய தகவல்களைச் சேமிப்பது தொடர்பானது. புவியியலின் எல்லாத் துணைத் துறைகளையும் அறிந்திருப்பதோடு, கணினி அறிவியல் மற்றும் தரவுத்தள முறைமைகள் பற்றியும் ஒரு புவியியற் தகவல் முறைமைகள் நிபுணர் அறிந்திருக்க வேண்டும். புவியியற் தகவல் முறைமைகள் நிலப்பட வரைவியல் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கியுள்ளன. இன்று ஏறத்தாள எல்லா நிலப்பட ஆக்க முயற்சிகளுமே ஏதாவதொரு புவியியற் தகவல் முறைமைகள் மென்பொருள் மூலமே செய்யப்படுகின்றன. புவியியல் கல்வி தமிழக மாணவர்களுக்கான புதிய முறை தமிழகத்தில் புவியியல், வரைபடம், நேரம் கணக்கீடு தொடர்பான பாடங்களை புதிய முறையில் 35 லட்சம் மாணவர்களுக்குக் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டது. இந்த புதுமுறைக் கல்விமுறை மூலம் கற்ற மாணவர்கள் தாங்களாகவே தங்கள் அமைவிடத்திற்கும் வெளிநாடுகளுக்கும் உள்ள நேர வித்தியாசத்தைக் கணக்கிட முடியும். இவற்றையும் பார்க்கவும் உலக நாடுகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Definition of geography at Dictionary.com Definition of geography by Lexico Origin and meaning of geography by Online Etymology Dictionary Topic Dictionaries at Oxford Learner's Dictionaries புவி அறிவியல்கள் சமூக அறிவியல்கள் முக்கிய தலைப்புக் கட்டுரைகள்
19
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம். விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும் இனி வரவிருக்கும் நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு சீர்தரத்துக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தது. மேலதிக மூலங்களுக்கு புவியியல் குறிப்புகளைப் பார்க்கவும். {| id="toc" border="0" ! : அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ |} <table border=1 cellpadding=1 cellspacing=0 style="float: right; border-collapse: collapse;"> நாடுவாரியான பட்டியல் அ (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஒல்லாந்து நெதர்லாந்து பார்க்கவும். ஓ க (முன்னர் ஸயர்) 2 ச 1 (தாய்வான்) ட ட்ரினிடாட்டும் டொபாகோவும் டொங்கா டொமினிக்கா டொமினிகன் குடியரசு டோகோ த தாய்வான் (பார் சீனக் குடியரசு1) தான்ஸானியா தாஜிக்ஸ்தான் திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்) துருக்மெனிஸ்தான் துவாலு துனீசியா தென் கொரியா தென்னாபிரிக்கா ந 2 ப பர்மா (இப்பொழுது மியன்மார்) (பார் மேற்குக் கரை) 3 ம 6 மேற்கு சமோவா(இப்பொழுது சமோவா) 5 ய யேமன் யப்பான் ர ரஷ்யா ருமேனியா ருவாண்டா ல லெய்செஸ்டீன்(Liechtenstein) வ 4 (Holy See) ஹ ஹங்கேரி ஹைத்தி ஹொண்டூராஸ் ஸ ஸ்பெயின் சிலவாக்கியா சிலவேனியா சாம்பியா ஸயர் (இப்பொழுது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) ஸிம்பாப்வே ஜ ஜமேக்கா ஜிபூட்டி ஜெர்மனி ஜோர்தான் ஜோர்ஜியா குறிப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளின் நிலைமை / இறைமை பற்றிய விபரங்கள். 1 சீனக் குடியரசு(தாய்வான்): Political status of Taiwan பார்க்கவும். 2 குக் தீவுகளும் நியூவும்: நியூசிலாந்துடனான ஒரு free கூட்டு (association); Niue Constitution Act 1974 (NZ) ஐயும் பார்க்கவும். 3 பலஸ்தீனம்: "பலத்தீன் நாடு" 1988 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுப் பல அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. proposals for a Palestinian state ஐயும் Palestinian territories ஐயும் பார்க்கவும். காஸா Strip, மேற்குக் கரை, இஸ்ரேல் என்பவற்றுக்குப்பலஸ்தீனப் பிரதேசம் தொடர்பில் கட்டுரைகள் உள்ளன. 4 வத்திக்கான்: Holy See பார்க்கவும். 5 மேற்கு சஹாரா: Politics of Western Sahara பார்க்கவும். 6 மசிடோனியக் குடியரசு: "முன்னாள் யூகோஸ்லாவியாவின் மசிடோனியக் குடியரசாக" அனைத்துலக அளவில் பரிச்சயமானது. **http://www.un.org/documents/ga/res/47/a47r225.htm ஐப் பார்க்கவும். தொடர்புள்ள தலைப்புகள் ஐ.எசு.ஓ 3166-1 இறைமையுள்ள நாடு உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக) பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் உலக நாடுகளின் மரபுச் சின்னங்கள் ஏற்கப்படாத நாடுகள் சார்பு மண்டலம் நாடுகள் தொடர்பான பட்டியல்கள் nds:Land#Länner sv:Världsgeografi#Lista över länder
21
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81
கிறித்தோபர் கொலம்பசு
கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) (1451–1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. எசுப்பானியப் பேரரசின் கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியில் கொலம்பசு நான்கு கடற்பயணங்களை அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டுள்ளார். இந்தக் கடற்பயணங்களும் லா எசுப்பானியோலா தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் புதிய உலகம் என அழைக்கப்பட்ட அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றத்தைத் துவக்கின. புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய பேரரசுவாத போக்கு மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களிடையேயான பொருளியல்நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பசு மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பசு 1492இல் மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார். பகாமாசு தீவுக்கூட்டங்களில் தாம் பின்னர் சான் சால்வதோர் எனப் பெயரிட்ட தீவில் வந்திறங்கினார். மேலும் மேற்கொண்ட மூன்று கடற்பயணங்களில் கொலம்பசு பெரிய மற்றும் சிறிய அண்டிலிசு தீவுகளையும் வெனிசுவேலா, நடு அமெரிக்காவின் கரிபியக் கடலோரப் பகுதிகளையும் கண்டறிந்து அவற்றை எசுப்பானியப் பேரரசுக்கு உரியதாக உரிமை கோரினார். கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் ஐரோப்பியரல்லர்; 11வது நூற்றாண்டிலேயே லீப் எரிக்சன் தலைமையேற்ற நோர்சு குழு வட அமெரிக்காவில் இறங்கியுள்ளது.) இருப்பினும் இவரது கடற்பயணங்களே அமெரிக்காக்களுடனான ஐரோப்பாவின் முதல் நிரந்தர தொடர்பை ஏற்படுத்தியது; இவற்றை அடுத்தே பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பியர்களின் நாடுகாணுதல், கைப்பற்றுதல், குடியேற்றவாதம் தொடர்ந்தன. எனவே இவரது கண்டறிதல் தற்கால மேற்கத்திய உலகின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது. இதுவரை ஐரோப்பியர்கள் கண்டறியாத புதிய கண்டத்தை வந்தடைந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ளாத கொலம்பசு இங்கு வாழ்ந்திருந்த மக்களை இன்டியோசு ("இந்தியர்களுக்கான" எசுப்பானியச் சொல்) என்றே அழைத்தார். அமெரிக்காவில் குடியேற்றப்பகுதிகளுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமித்தது தொடர்பான எசுப்பானிய பேரரசருடனான பிணக்கு காரணமாக 1500இல் லா எசுப்பானியோலாவின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னால் நீண்ட வழக்காடலுக்குப் பின்னர் கொலம்பசும் அவரது வாரிசுகளும் கோரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. கொலம்பசின் வரலாற்று முக்கியத்துவம் கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார். கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும். உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் இல்லை . ஏனென்றால் அங்கே ஏற்கனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும். இளமைக்காலம் கொலம்பசு இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 1451-ல் பிறந்தார். அவருடைய தந்தை டொ மினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள்,ஒரு சகோதரி. 1471-இல் கொலம்பசு எசுபெனோலா ஃபினான்சியர்சு நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் கியோஸ் கியோசு (ஏஜியன் கடல்-இல் உள்ள ஒரு தீவு) பகுதியைச் சுற்றி வந்த அக்கப்பலில் ஒரு வருடம் வேலை செய்தார். சில நாட்கள் நாடு திரும்பிய பின் மறுபடியும் கியோசுப் பகுதியில் மற்றோர் ஆண்டு வேலை செய்தார். இக்கால கட்டத்தில் ஏகயன் துருக்கியர் வசம் இருந்தது(இவர்கள் கான்ஸ்டான்டினோபில்-ஐ மே 29, 1453 இல் கைப்பற்றியிருந்தனர்). 1476-இல் கொலம்பசு ஒரு வணிகப் பயணத்தை அட்லாண்டிக் கடலின் மீது மேற்கொண்டார். இந்தக் கப்பல் கேப் ஆஃப் செயின்ட் வின்சென்ட் இன் பிரெஞ்சு பிரைவெட்டீயெர்ஸ்-ஆல் தாக்கப்பட்டது. கொலம்பஸ் கப்பல் எரிந்து போய் அவர் ஆறு மைல்கள் நீந்திக் கரை சேர்ந்தார். 1477-இல் கொலம்பசு லிஸ்பன் நகரில் வாழ்ந்தார். போர்த்துக்கல் கடல் தொடர்பான நடத்தைகளுக்கு ஒரு மையமாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஐசுலாந்து, மடீயெரா, த அசோர்சு, ஆப்பிரிக்காக்குச் செல்லும் கப்பல்களுடன் விளங்கியது. கொலம்பசின் உடன்பிறந்தார் பார்த்தலோமியோ லிசுபனில் ஒரு வரைபடங்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ்வமயம் இவ்விரு உடன்பிறந்தவர்களும் வரைபடங்கள் வரைபவர்களாகவும், புத்தகங்களைச் சேமிப்பவர்களாகவும் விளங்கினர். கொலம்பசு வணிகக் கடற்பயணியாக போர்ச்சுகீசிய கப்பல்களில் மாறினார். 1477-ல் ஐசுலாந்துக்கும், 1478-இல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க கடலோரங்களுக்கு 1482லும் 1485-இலும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான ஸாவோ ஜார்ஜ் டா மைனா என்ற கினியாக் கரைக்கும் சென்றார். கொலம்பசு பிலிப்பா பெரெசிட்டெல்லோ எ மோனிசு என்ற போர்ச்சுகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்(1479-இல்). அவர்களுக்கு தியெகோ என்ற ஒரு மகன் பிறந்தான். பிலிப்பா 1485-இல் காலமானார். கொலம்பசு பின்னர் பீட்ரிஸ் என்ரிகுவெசு என்ற பெண்ணைத் திருமணம் செய்து (1488-இல்) கொண்டார். அவர்களுக்கு பெர்டினான்ட் என்ற மகன் பிறந்தான். கொலம்பசின் தாய் நாடு கொலம்பசின் தாய் நாடு பற்றிய உறுதியான விவரம் இன்னும் தெரியவில்லை.பொதுவாக அவர் இத்தாலியில் உள்ள ஜெனொவாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். 1470க்கு முன்னரான கொலம்பசின் வரலாறு சரியாக அறியப்படவில்லை.தன் வாழ்விலுள்ள ஏதோ ஒரு மர்மத்தைக் காப்பதற்காகவே, தன் தாய் நாடு பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருந்தார் என்று கூறுவோரும் உண்டு.கொலம்பஸ் பிழையற்ற ஸ்பானிய மொழியில் எழுத வல்லவர் என்பது மட்டுமின்றி, அவர் இத்தாலியர்களுக்கு எழுதிய கடிதங்கள் கூட ஸ்பானிய மொழியிலேயே இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய உணர்வுகளின் எழுச்சிக்குப் பின்னரே,கொலம்பசின் தாய் நாடு பற்றிய உண்மை விவாதத்திற்குரியதானது; கொலம்பஸ் கண்டுபிடிப்புகளின் ஐநூறாவது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 1892ல் நடந்தது; அதுவரை கொலம்பசின் தாய் நாடு பற்றிய சர்ச்சை இருந்ததில்லை.அவர் ஜெனோவா நாட்டைச் சேர்ந்தவர் என்பது இத்தாலிய அமெரிக்கர்களுக்கு பெருமைக்குரிய விடயமாக இருந்தது. நியூ யார்க் நகரத்தில், எதிரெதிர் இசுப்பானிக்கு மற்றும் இத்தாலிய சமூகக் குழுக்களால் கொலம்பசின் உருவச் சிலைகள் செய்யப்பட்டு, கொலம்பஸ் வட்டம் மற்றும் மையப் பூங்கா போன்ற முக்கிய இடங்களில் அவை நிறுவப்பட்டன. சில பாசுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் கொலம்பஸ் பாசுக்கைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், அவர் கிறித்தவ சமயத்திற்கு மாறிய எசுப்பானிய யூதர் என்றும், யூத சமயத்தை ரகசியமாக பின்பற்றும் பல எசுப்பானிய யூதர்களைப் போல அவரும் பின்பற்ற எண்ணி தன் தாய் நாடு பற்றிய விவரங்களை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வேறு சிலர், அவர் ஜெனொவா ஆட்சியின் கீழ் இருந்த, தேச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெயர் போன கோர்சிகா தீவைச் சேர்ந்தவர் என்றும், அதனால் தன் அடையாளத்தை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். சிலர் அவர் காத்தலோனியா அல்லது கிரீஸ் அல்லது போர்த்துக்கல்-ஐச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். சிந்தனைத் தோற்றம் 1480-இல், கொலம்பசு மேற்காக அட்லாண்டிக் ஊடாக இண்டீசுவிற்கு (குத்து மதிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு (ஆசியா) ) செல்வதற்கு ஒரு திட்டத்தை வகுத்தார். இது தெற்கு மற்றும் கிழக்கு வழியாக (ஆப்பிரிக்கா) செல்வதைவிட விரைவான வழி என்று அவர் நம்பினார். இத்திட்டத்திற்கு அவர் உதவி பெறுவது மிகக் கடியதாக இருந்ததாகத் தெரிகிறது(ஏனென்றால் அப்போதைய ஐரோப்பியர், புவி தட்டையானது என்று நம்பினர்). ஆனால் அக்காலத்தைய கடற்பயணிகள், வழிகாட்டிகள் புவி உருண்டையானது என்று அறிந்திருந்தனர். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் கொலம்பசு இண்டீசிற்கு எவ்வளவு தூரம் என்பதை அறுதியிடாததுதான். பல ஐரோப்பியர் தாலமி-யின் கருத்தான பெரு நிலப்பரப்பு(உரேசியாவும் ஆப்பிரிக்காவும் சேர்ந்து) 180 பாகை புவி அளவையும், மீதம் 180 பாகை நீர் அளவையும் கொண்டதாக நம்பினர். (உண்மையில் இது 120 பாகை நிலப்பகுதி, மீதம் அறியப்படாத பகுதி). கொலம்பசு டி'ஐல்லியின் அளவீடுகளை, அதாவது 225 பாகை நிலம், 135 பாகை நீர் என்பது, ஏற்றுக்கொண்டார். அதிலும் குறிப்பாக கொலம்பசு 1 பாகை என்பது எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட அளவைவிட சற்று குறைவாகவே அவர் எடுத்துக்கொண்டார். கடைசியாக கொலம்பசின் வரைபடம் உரோமன் மைல் அளவில் (5000 அடிகளைக்கொண்டதாக), கடல் மைல் (6,082.66 அடி புவிநடுக்கோட்டுப் பகுதியில்) அளவைவிட இருந்தது. கொலம்பசு கேனரித் தீவுகளிலிருந்து சப்பான் 2,700 மைல்கள் இருப்பதாகத் தீர்மானித்தார். உண்மையில் இத்தொலைவு 13,000 மைல்கள், பெரும்பாலான ஐரோப்பிய கடற்பயணிகளும் வழிகாட்டிகளும் இண்டீசு என்பது தொலைதூரத்தில் இருப்பதாகத் தயங்கி வந்தனர். கடற்பயணங்கள் 1492க்கும் 1503க்கும் இடையே கொலம்பசு எசுப்பானிவிலிருந்து நான்கு முறை அமெரிக்காக்களுக்கு பயணித்துள்ளார். இந்த நான்கு பயணங்களுக்கும் காசுட்டில் இராச்சியமே புரவலளித்தது. இவை ஐரோப்பியக் கண்டுபிடிப்பு காலத்திற்கும் அமெரிக்கக் கண்டங்களின் குடிமைப்படுத்தலுக்கும் துவக்கமாக அமைந்தன. எனவே இவை மேற்கத்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். சான்றுகள் எதிராக இருந்தபோதிலும் கொலம்பசு எப்போதும் தாம் கண்டறிந்த நிலப்பகுதிகள் மார்க்கோ போலோவாலும் பிற ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளாலும் விவரிக்கப்பட்ட ஆசியாவைச் சேர்ந்தவை என்றே உறுதியாக இருந்தார். இந்த மறுப்புதான் புதிய கண்டங்களுக்கு இவர் பெயரை வைக்காது பிளாரென்சின் தேடலாய்வாளர் அமெரிகோ வெஸ்புச்சியின் பெயரை ஒட்டி அமெரிக்கா என பெயரிட அமைந்த காரணங்களில் ஒன்றாயிற்று. முதல் பயணம் கொலம்பசு முதலில் தன்னுடைய திட்டத்தை போர்ச்சுக்கல் அரச சபையில் 1485-இல் தெரிவித்தார். ஆனால் அரசரின் நிபுணர்கள் கொலம்பசின் வழி கொலம்பசு நினைப்பதை விடப் பெரியது என நம்பினர். அதனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். கொலம்பசு பின்னர் எசுப்பானியா அரசவையை நாடினார். ஆனால் பல நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின்னர் 1492-இல் அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றார். எசுப்பானிய அரசரும் அரசியும்( பெர்டினான்ட் ஆப் ஆரகன், காசிட்டைலின் இசபெல்லா) அப்போது தான் கடைசி முசுலிம் கோட்டையான கிரானாடா-வைக் கைப்பற்றியிருந்தனர். அவர்கள் பயணத்திற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். செலவில் பாதியைத் தனியாரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஏற்கெனவே கொலம்பசு திட்டம் வகுத்திருந்தார். கொலம்பசு அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டு, புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும், வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும் அரசவை ஒப்புக்கொண்டது. அவ்வாண்டு ஆகத்து 3 அன்று, கொலம்பசு பாலோசில் இருந்து மூன்று கப்பல்களில் சாண்டா மரியா, நின்யா, பின்டா புறப்பட்டார். முதலில் அவர் கேனரித் தீவுகளை அடைந்தார். அங்கே ஒரு மாதம் தங்கினார். பின்னர் பெரும் பயணத்தைத் துவக்கினார். அவர் தன்னுடைய குறிப்பேடுகளில் தான் பயணித்த தூரத்தை விடக்குறைவான தூரத்தையே பதிவு செய்து தன்னுடைய மாலுமிகளை ஏமாற்றினார். இன்றைக்கும் அவர் முதலில் அடைந்த தீவு எது என்பதில் சர்ச்சை இருந்தாலும், அவர் பகாமாஸ்-இல் ஒரு தீவையே அடைந்திருக்க வேண்டும் என்பது உறுதி. அவர் அக்டோபர் 12, 1492-இல் கரையேறினார். அவர் அங்கிருந்த அமெரிக்கப் பழங்குடிகளை எதிர்கொண்டார். அவர்கள் டையனோ அல்லது ஆராவாக், மிகவும் அமைதியானவர்களாகவும், நட்புணர்வுடனும் விளங்கினர். அக்டோபர் 14, 1492 குறிப்பில் கொலம்பசு எசுப்பானியாவின் அரசர் பெர்டினான்டு, அரசி இசபெல்லா ஆகியோருக்கு டையாகுட்;நோ பற்றி பின்வருமாறு எழுதினார். "அரசர் விரும்பினால், அவர்கள் அனைவரையும் காஸ்டைலுக்குக் கொண்டு வரமுடியும்;அல்லது,அவர்களது தீவிலேயே பிணையாளிகளாக ஆக்கமுடியும்.அவர்களில் ஐம்பது பேரை உங்களுடைய பொறுப்பில் விடுகிறேன். நீங்கள் அவர்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம்." கொலம்பசு அவருடைய முதல் பயணத்தில், கியூபாவிலும், லா எசுப்பானியோலா விலும் பயணத்திருந்தார்(அக்டோபர் 28-இல்).சாண்டா மரியா தரை தட்டியதால், அதை அவர் கைவிட வேண்டியதாயிற்று. கொலம்பசு லா நாவிடாட் என்ற குடியேற்றத்தை அங்கே அமைத்து அங்கே தன்னுடன் வந்த 39 பேரை விட்டு விட்டார். சனவரி 4, 1493-இல் அவர் நாடு திரும்பப் பயணப்பட்டார்.ஆனால், புயல் காரணமாக அவர் போர்ச்சுகல்லில் இறங்க வேண்டியதாயிற்று. அப்போது போர்ச்சுகல்லுக்கும், காஸ்டைலுக்குமான உறவு மிகவும் மோசமாக இருந்த படியால் அங்கே அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் மார்ச் 15-இல் அவர் எசுப்பானியாவை அடைந்தார். அங்கே அவர் தான் கொண்டு வந்த தங்கம் மற்றும் கொண்டு வந்த அமெரிக்கப்பழங்குடிகள் ஆகியவற்றை அரசவையில் ஒப்படைத்தார். அங்கே அதுவரை அறியப்படாதிருந்த புகையிலையையும், அன்னாசியையும் அன்னாக்கு ஆகியவைகளைப்பற்றி அங்கே விளக்கினார். அங்கே அவர் ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார். அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கும் பரவியது. இரண்டாம் பயணம் அவர் தனது இரண்டாம் பயணத்தை (1493–1496)-இல் செப்டெம்பர் 24 1493-இல் துவக்கினார். டையனோ ஆதிவாசிகளை வசப்படுத்தவும், அத்தீவுகளைக்குடியேற்ற நாடுகளாக்கவும் 17 கப்பல்களில்,1200 பேருடன் வேண்டிய கருவிகளுடன் கிளம்பினார். இந்த முறை அவர் முன்னைவிட தெற்காகச் சென்றார். முதலில் டொமினிக்கா-வையும், பின்னர் வடக்காகக் கிளம்பி, குவாடெலோப், மோன்ட்செர்ராட், ஆன்டிகுவா மற்றும் நேவிஸ் ஆகிய சிறிய ஆன்டில்லெஸ்-இல் உள்ள தீவுகளைக் கண்டறிந்து அவற்றிற்கு அப்பெயர்களைச் சூட்டினார். அத்தீவுகளில் இறங்கி அவற்றை ஸ்பெயினின் பகுதிகளாக கன்னித் தீவுகள் மற்றும் பியுர்டோ ரிகோ போல தானே கூறிக்கொண்டார். பின்னர் அவர் லா எசுப்பானியோலா-விற்குச்சென்று, அங்கே அவர் விட்டுச் சென்றவர்கள் அங்குள்ள ஆதிவாசிகளுடன் சண்டையில் ஈடுபட்டு கொல்லப்பட்டதை அறிந்தார். லா எசுப்பானியோலா தீவுகளில் வடகடற்கரையில் உள்ள இசபெல்லா தீவுகளில்(இங்கே முதன்முதலில் தங்கத்தைக்கண்டார்), இவர் குடியேற்றங்களை அமைத்தார். ஆனால் இங்கே இவர் நினைத்தது போல தங்கம் அவ்வளவாகக்கிட்டவில்லை. பின்னர் இவர் இசபெல்லாத்தீவின் உட்பகுதியில் தங்கத்தைத்தேடி சிறிது கிடைப்பதை அறிந்தார். அங்கே ஒரு சிறு கோட்டையைக் கட்டினார். கியூபா-வின் தென் கடற்கரையில் பயணித்து, பின்னர் அது ஒரு தீபகற்பம், தீவு அல்ல என்பதை அறிந்தார். பின்னர் ஜமைக்காவைக் கண்டுபிடித்தார். தன்னுடைய இரண்டாம் பயணத்தின் போது பெர்டினான்ட் மற்றும் இஸபெல்லாவினால் அங்குள்ள குடிகளிடம் நட்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால் கொலம்பஸ் தன் இரண்டாம் பயணத்தில் அரசருக்கு ஒரு கடிதம் அனுப்பி அங்குள்ள குடிகளை அடிமைப்படுத்த உரிமை வழங்குமாறு கேட்டார். ஏனென்றால் கரிப்-இலிருந்த குடிகள் முரடர்களாக இருப்பதாக அவர் உணர்ந்திருந்தார். அவருடைய வேண்டுகோள் மறுக்கப்பட்ட போதிலும் கொலம்பஸ் பிப்ரவரி, 1495 -இல் கொலம்பசு ஆராவக்-ஐச்சேர்ந்த 1600 பேரை பிணையாளிகளாக்கினார். 550 பேர் எசுபானியாவுக்குக் கப்பலில் அனுப்பப்பட்டனர். அவர்களில் 200 பேர் கப்பலிலேயே இறந்தனர் (நோயால் இருக்கக்கூடும்). எசுப்பானியாவை அடைந்த பாதிப் பேர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். ஆனால் எசுப்பானியா வந்தவர்கள் மறுபடியும் கப்பலில் திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறாக அமெரிக்கக் குடிகளை வளைத்து அடிமைகளாக்குவது எசுப்பானியர்களுக்கும், அங்குள்ள குடிகளுக்குமான சண்டைகளுக்கு வழிவகுத்தது. கொலம்பசின் பயணத்தின் மிக முக்கியக் குறிக்கோள் தங்கமே. அதற்காக எயிட்டி-இலுள்ள சிகாவோ தீவுகளில் இருந்த குடிகளை ஒரு திட்டத்திற்கு ஆட்படுத்தினார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தங்கத்தைக் கொண்டு வரவேண்டுமென்று அவர்களை மிரட்டினார். அவ்வாறு கொண்டு வராதவர்களின் கைகள் வெட்டப்படும் என்றும் மிரட்டினார்.அப்படியிருந்தும் அவரால் அவ்வளவாக தங்கத்தைப் பெற முடியவில்லை. அவர் தன்னுடைய எசுப்பானிய அரசருக்கான கடிதங்களில் கொத்தடிமைப்படுத்துவதன் அவசியத்தை அடிக்கடி வலியுறுத்தினார். ஆனால் அவையாவும் அரசரால் மறுக்கப்பட்டன. அரச குடும்பத்தினர் அமெரிக்கக்குடிகள் கத்தோலிக்கத்திருச்சபையின் எதிர்கால உறுப்பினர்களாக அவர்கள் விரும்பினர். குறிப்பாக, கொலம்பஸ் என்கோமியென்டா எனப்படும் எசுப்பானியர்களின் 'அமெரிக்க குடிகளை கிறித்துவர்களாக மாற்றினால் அவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளலாம்' திட்டத்தைத் தன்னலக் கண்ணோட்டத்துடன் பயன்படுத்தினார். இந்தத் திட்டம் அமெரிக்கக்குடிகள் கொத்தடிமைகளாக மாற வழிவகுத்தது. சில சமயங்களில் இந்தியக்குடிகள் சாகும்வரை வேலை செய்தனர். சில சமயங்களில் அவர்கள் ஐரோப்பியர்களால் அவர்களுக்குப் பரப்பப்பட்ட நோயினாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் இறந்தனர். கொலம்பசிற்கு முன்னதான மக்கள் தொகை பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. 1496-இல் பார்த்தலோமே டி லாஸ் காஸாஸ் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினார். 3,000,000 டையனோக்கள் இருந்ததாக அது தெரிவிக்கிறது. 1514-இல் எடுக்கப்பட்ட ஒரு எசுப்பானியக் கணக்கெடுப்பு 22,000 டையனோக்கள் இருந்ததாகத் தெரிவிக்கின்றது. 1542-இல் 200 பேர் மட்டுமே இருந்ததாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. கொலம்பசு தன்னுடைய உடன்பிறந்தவர்களை இந்தக்குடியிருப்புகளுக்கு அதிகாரிகளாக நியமித்து விட்டு ஹிஸ்பானியோலாவை விட்டு ஐரோப்பாவிற்கு மார்ச் 10, 1496 -இல் புறப்பட்டார். அவருடைய உடன்பிறந்தவர்களும் மற்ற எசுப்பானியர்களும் என்கோமியென்டா என்னும் கொலம்பசின் திட்டத்தை அமெரிக்கா முழுவதும் செயல்படுத்தினர். கொலம்பசு அவர் கண்டுபிடித்த தீவுகளின் ஆளுநராக அமர்த்தப்பட்டார். அத்தோடு அட்லாண்டிக் கடலில் பல்வேறு பயணங்களை அவர் மேற்கொண்டார். அவர் மிகப்பெரும் கடல் பயணியாக இருந்தபோதிலும் அவர் ஒரு மோசமான நிர்வாகியாகக் கருதப்பட்டார். அதனால் அவர் 1500-ல் ஆளுநர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். மூன்றாம் பயணம் மற்றும் கைதுப்படலம் 1498-இல் கொலம்பஸ் மூன்றாம் முறையாக புதிய உலகிற்கு, இளம் பார்த்தலோமி டி லாஸ் காஸாஸ்(இவர் பின்னர் கொலம்பசின் குறிப்புக்களை தந்தவர்) உடன் , கிளம்பினார். இந்த முறை அவர் ட்ரினிடாட் தீவுகளை ஜுலை 31இல் கண்டுபிடித்தார். அத்தோடு தென் அமெரிக்காவின் நிலப்பகுதியையும் கண்டுபிடித்தார். அங்கே அவர் ஒரினோகோ ஆற்றையும் கண்டார். முதலில் இந்த நிலப்பரப்புக்கள் புதிய கண்டம் என்று கூறியவர், பின்னர் அவை ஆசியாவின் பகுதிகள் என்று மாற்றிச் சொன்னார். ஸ்பானிய குடியேற்றவாசிகள், கொலம்பசின் புதிய உலகைப்பற்றிய மிகைப்படுத்திய கூற்றுக்களால் ஏமாந்து போனார்கள்.கொலம்பஸ் குடியேற்றவாசிகளுக்கும், அமெரிக்கக்குடிகளுக்கும் இடையிலான சண்டைகளைத்தீர்க்க வேண்டியவரானார்.தன்னுடைய பேச்சைக் கேளாத ஸ்பெயின் நாட்டவர்களைத் தூக்கிலிடவும் செய்தார். இதனால் ஸ்பெயினுக்குத் திரும்பிய பலர் கொலம்பசைப் பற்றி அவதூறாகக் குற்றம் சாட்டினர். அரசரும் அரசியும், பிரான்சிஸ்கோ டி போபடில்லா என்ற ஒரு அரச நிர்வாகியை 1500-இல் அனுப்பினர். இவர் வந்து கொலம்பஸ் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்து ஸ்பெயினுக்கு அனுப்பினர். கொலம்பஸ் தன்னுடைய கைவிலங்கை ஸ்பெயின் திரும்பும்வரை கழற்ற மறுத்தார்.அப்போது அவர் ஸ்பெயின் அரசருக்கு ஒரு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். அவர் ஸ்பெயினில் விடுவிக்கப்பட்டாலும், அவருடைய ஆளுநர் பட்டம் திரும்பத் தரப்படவில்லை. அத்தோடு வேதனையான விடயமாக, போர்த்துகீசியர்கள் இன்டீசுக்கான போட்டியில் வெற்றியும் பெற்றனர்: வாஸ்கோ ட காமா செப்டெம்பர் 1499-இல் இந்தியாவிற்குப்பயணம் மேற்கொண்டு திரும்பினார்(ஆப்பிரிக்கா வழியாக கிழக்கில் பயணித்து). கடைசிப்பயணமும் வாழ்வின் கடைசிக்கட்டமும் கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை 1502-1504-இல்(ஸ்பெயினைவிட்டு மே 9, 1502) மேற்கொண்டார். இந்தப் பயணத்தில், தன்னுடைய இளைய மகன் பெர்டினான்டுவையும் கூட்டிக்கொண்டு சென்றார். இப்போது நடு அமெரிக்கா-வின் பெலிஸ்-இலிருந்து பனாமா வரை பயணித்தார். 1502-இல் இப்போது ஹோன்டுராஸ் எனப்படும் தீவின் கரையில் ஒரு சரக்குக் கப்பலை எதிர்கொண்டார். இது ஸ்பானியர்களின் மீசோ அமெரிக்கா நாகரிகத்தின் அமெரிக்கக்குடிகள் உடனான முதல் சந்திப்பாகும். பிறகு கொலம்பஸ் ஜமைக்காவில் ஒரு வருடம் தவிக்கவேண்டியதாயிற்று. பிறகு அவர் இரண்டு பேரை கேனோவில் ஹிஸ்பேனியோலாவிற்கு உதவி கேட்டு அனுப்பி வைத்தார். இந்நிலையில் அவர் அமெரிக்கக்குடிகளிடம் மிகக் சரியாக சந்திரகிரகணத்தைக் கணித்துச்சொல்லி அவர்களது நன்மதிப்பைப்பெற்றார். கடைசியாக அவருக்கு உதவி கிடைத்ததூ. அதன்பின் ஸ்பெயினுக்கு 1504-இல் திரும்பச்சென்றார். கொலம்பஸ் கிறிஸ்துவரல்லாதவர்களைக் கிறிஸ்துவர்களாக்குவதற்காகவே இவ்வாறு கடற்பயணம் செய்வதாகச் சொல்லி வந்தார். தனது முதிர்ந்த வயதில் மிகவும் ஆன்மீகவாதியாக மாறினார்.அவர் தனக்கு தெய்வக்குரல் கேட்பதாகக் கூடச்சொல்லி வந்தார். ஜெருசலேம் நகரை மீட்கும் சிலுவைப்போரில் ஈடுபடப்போவதாகக் கூறி, பிரான்சிஸ்கன் அணிந்து வந்தார். தன்னுடைய கண்டுபிடிப்புகளை சொர்க்கம் என்றும் அவை கடவுளின் திட்டமென்றும் கூறிவந்தார். தனது கடைசிக் காலத்தில் கொலம்பஸ் தனக்கு ஸ்பானிய அரசிடமிருந்து பத்து விழுக்காடு புதிய தீவுகளிலிருந்து லாப ஈட்டுத்தொகை வழங்க வேண்டுமென்று கேட்டு வந்தார். ஆனால் ஸ்பானிய அரசர் இதை நிராகரித்தார். மே 20, 1506-இல் கொலம்பஸ் இறந்தார். அப்போது கூட தான் கண்டுபிடித்தது, ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினார். அவருடைய இறப்பின் பின்கூட அவரது பயணம் தொடர்ந்தது. முதலில் வல்லாடோலிட்இலும், பின் செவில்-இலும் பின்னர் அவருடைய மகன் டியெகோ, அப்போதைய ஹிஸ்பானியோலாவின் ஆளுநர், அவரது முயற்சியில் ஸாண்டா டோமிங்கோவிற்கு அவரது உடல் 1542-இல் கொண்டு வரப்பட்டது. 1795-இல் பிரெஞ்சு அதைக்கைப்பற்றியதால், ஹவானாவிற்கு மாற்றப்பட்டது. 1898 போருக்குப்பிறகு கியூபா தனித்த நாடானதும், அவருடைய உடல் மறுபடியும் ஸ்பெயினுக்குக் கொண்டுவரப்பட்டு செவிஜா (Seville) ஆலயத்தில் வைக்கப்பட்டது. ஆனால் பலர் இன்னும் அவரது உடல் ஸாண்டா டோமிங்கோ வில் இருப்பதாக நம்புகின்றனர். பின்னாள் வாழ்க்கை மதமாற்றத்தை தனது கடலோடிப் பயணங்களின் ஒரு நோக்கமாக கொலம்பசு மொழிந்திருந்தாலும் தனது பிந்தைய நாட்களிலேயே மிகவும் சமயப்பற்று மிக்கவராக விளங்கினார். தனது மகன் டியாகோ மற்றும் நண்பர் காசுபர் கொர்ரிசியோவின் உதவியுடன் கொலம்பசு இரு நூல்களை வெளியிட்டார்: தமக்கும் தமது வாரிசுகளுக்கும் எசுப்பானிய அரசு தரவேண்டிய உரிமைகளை விவரித்த புக் ஆவ் பிரிவிலேசசு (1502), தனது கடலோடிப் பயணங்களின் சாதனைகளை விவிலிய முன்மொழிதலாக கருதி எழுதப்பட்ட புக் ஆவ் பிரொபெசீசு (1505). புதிய நிலப்பகுதிகளிலிருந்து பெறப்படும் அனைத்து இலாபத்திலிருந்தும் 10% தமக்கு சேர வேண்டும் என எசுப்பானிய அரசரை வேண்டினார்; ஆனால் ஆளுநர் பதவியிலிருந்து அவரை விலக்கிய பிறகு அந்த உடன்பாடு முடிவுக்கு வந்தது என்று அரசர் இந்த கோரிக்கையை நிராகரித்தார். கொலம்பசின் மறைவிற்குப் பின்னரும் அவருடைய வாரிசுகள் அரசர் மீது வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு மிக நீண்டதாக இருந்தது. இந்த வழக்குகள் கொலம்பிய சட்டவழக்குகள் (pleitos colombinos) எனப்படுகின்றன. உடல்நலக் கேடும் மறைவும் தமது கடைசி கடற்பயணத்தின் திரும்பும்வழியில் கடுமையானப் புயலை எதிர்கொண்டார்; 41 அகவைகள் நிறைந்த கொலம்பசிற்கு அச்சமயம் கீல்வாதம் பற்றியது. தொடர்ந்த ஆண்டுகளில் இன்ஃபுளுவென்சா மற்றும் பிற நோய்களால் அவதிப்பட்டார். கீல்வாதத்தின் கடுமையும் கூடியது. இதனால் பல மாதங்களுக்கு படுத்த படுக்கையில் இருந்தாக வேண்டியதாயிற்று. இந்த நோய்களே பதினான்கு ஆண்டுகளில் அவரது மறைவிற்கு காரணமாயின. கொலம்பசின் வாழ்முறையையும் நோய் உணர்குறிகளையும் கொண்டு தற்கால மருத்துவர்கள் அவருக்கு நேர்ந்தது கீல்வாதமல்ல என்றும் ரீய்ட்டரின் கூட்டறிகுறி என்றும் கருதுகின்றனர். ரீய்ட்டரின் கூட்டறிகுறி குடல் தொற்றுக்களால் ஏற்படும் ஓர் மூட்டு நோயாகும்; இது கிளமிடியா அல்லது கொணோறியா போன்ற பாலுறவு பரவு நோய்களிலிருந்தும் வந்திருக்கலாம். அவருடைய கடற்பயணங்களில் எங்காவது உணவு நச்சுமை தொற்றி இந்நோய் வந்திருக்கலாம் என டெக்சாசு மருத்துவ பள்ளியின் பேராசிரியரும் வாதவியலாளருமான மரு. பிராங்க் சி. ஆர்னெட் கருதுகிறார். மே 20, 1506இல் தமது 54வது அகவையில் கொலம்பசு எசுப்பானியாவிலுள்ள வல்லாடோலிடில் இறந்தார். கொலம்பசின் உடல் முதலில் வல்லாடோலிடில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் லா எசுப்பானியோலாவின் ஆளுநராக இருந்த அவரது மகன் டியாகோவின் உயில்படி செவீயாவின் லா கார்துஜாவிலுள்ள ஓர் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. 1542இல் காலனித்துவ சான்டோ டோமிங்கோவிற்கு (தற்கால டொமினிக்கன் குடியரசு) மாற்றப்பட்டது. 1795இல், லா எசுப்பானியோலாவை பிரான்சு கையகப்படுத்தியபோது மீண்டும் கூபாவின் அவானாவிற்கு மாற்றப்பட்டது. 1898இல் எசுப்பானிய அமெரிக்கப் போரை அடுத்து கூபா விடுதலை பெற்றபோது மூண்டும் எசுப்பானியாவிற்கே கொண்டு செல்லப்பட்டு செவீயா பெருங்கோயிலில் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் வைக்கப்பட்டது. 1877இல் சான்டோ டொமிங்கோவில் "டான் கிறித்தோபர் கொலம்பசு" என்று குறியிடப்பட்ட ஈயப்பெட்டி கிடைத்தது; இதனுள்ளே எலும்பு துண்டுகளும் துப்பாக்கி இரவையும் இருந்தன. இதனால் தவறான உடலெச்சங்கள் அவானாவிற்கு மாற்றப்பட்டதோ என்ற குழப்பத்தை தீர்க்க சூன் 2003இல் செவீயாவிலிருந்த உடலின் டி. என். ஏ. கூறுகள் கொலம்பசின் தம்பி, மகன் ஆகியோரின் டி. என். ஏ கூறுகளுடன் ஒப்பிடப்பட்டன. துவக்கத்தில் கொலம்பசின் வயதிற்கும் உடற்கட்டுக்கும் தொடர்புபடுத்தக்கூடிய அளவில் எலும்புகள் இல்லை எனத் தோன்றியது; டி.என். ஏ கிடைப்பதும் கடினமாக இருந்தது; இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடியின் சிறு கூறுகளே கிடைத்தன. இந்த இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி கூறுகள் கொலம்பசின் உடன்பிறப்பின் கூறுகளுடன் ஒத்திருந்தன; இருவரும் ஒரே அன்னைக்குப் பிறந்தவர்களாக உறுதி செய்யப்பட்டது. இச்சான்றும், பிற மானிடவியல், வரலாற்று பகுப்பாய்வுகளும் கொண்டு செவீயாவிலுள்ள எச்சங்கள் கொலம்பசினுடையதே என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர். சான்ட்டோ டொமிங்கோவில் இருந்த அதிகாரிகள் அங்கிருந்த உடலெச்சத்தை ஆய்வு செய்ய அகழ்ந்தெடுக்க அனுமதிக்கவில்லை; இதனால் அங்கிருப்பது கொலம்பசின் உடலின் பாகங்களாக என்பதை உறுதி செய்ய முடியவில்லை. சான்டோ டொமிங்கோவில் இந்த கல்லறை "கொலம்பசு கலங்கரைவிளக்கத்தில்" (Faro a Colón) உள்ளது. கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள் கொலம்பசின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளையும் தாண்டி, அவர் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்; ஒரு சின்னமாகவும் சகாப்தமாகவும் மாறியுள்ளார்.அவரைப் பற்றிய யூகங்கள், ஒரு கோணத்தில் அவரை ஒரு வரலாற்று நாயகனாகவும் மற்றொரு கோணத்தில் அவரை ஒரு மனித குல எதிரியாகவும் சித்தரிக்கின்றன. புதிய நிலப்பகுதிகளுக்கு ஐரோப்பியர்களின் வருகையும், அதன் பின்னர் பரவலான கிறிஸ்தவ மற்றும் ரோமன் கத்தோலிக்க நம்பிக்கைகளைப் பற்றிய ஒருவரின் கருத்தைக் பொறுத்து,கொலம்பஸ் நல்ல விதமாகவும் மோசமாகவும் சித்தரிக்கப்படுகிறார். கொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டடைந்து 400 ஆண்டுகள் ஆன 1892 வாக்கில், கொலம்பசை கொண்டாடும் போக்கு அதன் உச்சத்தை அடைந்தது. ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிலும் லத்தீன் அமெரிக்காவிலும் அவருடைய உருவச் சிலைகள் நிறுவப்பட்டன. தன் சம காலத்தவர்களைப் போலன்றி,கொலம்பஸ் மட்டுமே உலகம் உருண்டையானது என்று கருதினார் என்ற வாதம் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்த வாதம், கொலம்பஸ் மிகவும் முற்போக்கானவர் என்றும் சிறந்த அறிவாளர் என்றும் எடுத்துரைக்கப் பயன்பட்டது. கொலம்பஸ், மரபை மீறி, கிழக்குப் பகுதியைச் சென்றடைய மேற்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டது, அமெரிக்கப் பாணிப் படைப்பூக்கத்திற்குச் சான்றாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் வாழ்ந்து வந்த கத்தோலிக்க, இத்தாலிய-அமெரிக்க, இஸ்பானிக்க சமூகத்தினர் கொலம்பசின் புகழைப் பரப்புவதில் முனைப்புடன் இருந்தனர். அமெரிக்க ஆதிக்கக் கலாச்சாரத்தால் ஒடுக்கப்பட்ட இச்சமூகத்தினர், நடுநிலக்கடற் பகுதிக் கத்தோலிக்கர்களாலும் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுக்கு சிறந்த பங்காற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக கொலம்பசின் சாதனைகளை சுட்டிக்காட்டினர். கொலம்பஸ் - மனித குல எதிரி கொலம்பஸ் ஒரு முரண்பட்ட மனிதர். சிலர், குறிப்பாக அமெரிக்கப் பழங்குடிகள், அவரை அமெரிக்கா மீதான ஐரோப்பாவின் சுரண்டல் மற்றும் மேற்கிந்தியத்தீவுகளின் கொத்தடிமை இவற்றிற்கு நேரடியான அல்லது மறைமுகமான காரணமாகக் கருதுகின்றனர். பார்த்தலோம் டி லாஸ் காசாஸ் எனும் சமயத் தலைவர் கொலம்பஸ் செய்த கொடுமைகளைப் பற்றி எழுதியிருந்தார் என்றாலும், 1960களுக்குப் பிறகே, அவரை ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அக்கிரமங்களின் - கொத்தடிமைப்படுத்தல், இனப்படுகொலை, பண்பாட்டுச் சிதைப்புகள் - சின்னமாகக் கருதும் போக்கு பரவலானது.ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அனைத்து தவறுகளுக்கும் கொலம்பசை குற்றம் சாட்ட இயலாது என்றாலும், 1493-1500ல் ஸ்பெயின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வைஸ்ராய் (அரச சார்பாளர்) ஆகவும் ஆளுநராகவும் அவர் செய்த கொடுஞ்செயல்கள், அவரை இனப்படுகொலைகளுக்காகக் குற்றஞ்சாட்ட போதுமான காரணம் என்று சிலர் கருதுகின்றனர். சமீப காலங்களில்,கொலம்பசின் சாதனைகள் பற்றிய பிரச்சாரமும் கொலம்பஸ் தினக் கொண்டாட்டங்களும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. 1992ல் கொலம்பஸ் முதல் கடல் பயணம் தொடங்கிய 500வது ஆண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2002ல், வெனிசுலா அதிபர் குகொ சவெஸ் கொலம்பஸ் தினத்தை "உள்நாட்டு எதிர்ப்பு நாள்" என்று பெயர் மாற்றும் தீர்மானத்தில் கையெழுத்திட்டார். நினைவுக் கொண்டாட்டம் 1492இல் கொலம்பசு அமெரிக்காக்களில் வந்திறங்கிய நாள் அக்டோபர் 12 கனடா தவிர்த்த அனைத்து அமெரிக்க நாடுகளிலும் எசுப்பானியாவிலும் கொண்டாடப்படுகிறது. எசுப்பானியாவில் இது பியஸ்டா நாசியோனல் டெ எசுப்பானா யி டியா டெ லா இஸ்பானியட் எனக் கொண்டாடப்படுகிறது. பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் இதனை டியா டெ லா ராசா எனக் கொண்டாடுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் இது கொலம்பசு நாள் எனவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரின் இரண்டாவது திங்களன்றும் கொண்டாடப்படுகின்றது. 1893இல் சிக்காகோவில் நடந்த உலக கொலம்பியக் கண்காட்சியில் கொலம்பசு வந்திறங்கிய நானூறாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. ஆறு மாதங்கள் நடந்த இக்கண்காட்சிக்கு 27 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் வருகை தந்தனர். ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறையும் இக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு 16 தபால்தலைகள் அடங்கிய நினைவு தபால்தலைத் தொகுப்பை வெளியிட்டது; இவை கொலம்பசு, அரசி இசபெல்லா, மற்றும் அவரது கடற்பயணங்களின் வெவ்வேறு நிலைகளை குறித்தனவாக இருந்தன. ஒரு சென்ட் மதிப்பிலிருந்து 5 டாலர் மதிப்பில் இவை இருந்தன. இந்த நினைவுத் தபால்தலைகள் மிகவும் புகழ்பெற்று ஏராளமாக விற்கப்பட்டன. ஆறு மாதகாலத்தில் மொத்தமாக இரண்டு பில்லியன் தபால்தலைகள் விற்கப்பட்டன; இதில் இரண்டு சென்ட் மதிப்பிலான "கொலம்பசின் வந்திறங்கல்" தபால்தலை 72% ஆகும். 1992இல், 500வது நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டமாக இரண்டாம் முறை இத்தகையத் தபால்தலைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இவை முதல்முறை தபால்தலைகளின் நகலாக இருப்பின்ம் வலது மூலையில் தேதி மட்டும் மாற்றப்பட்டிருந்தன. ஐக்கிய அமெரிக்காவுடன் இத்தாலி, போர்த்துகல் மற்றும் எசுப்பானியாவும் இத்தபால்தலைகளை அந்நாட்டு செலாவணியில் வெளியிட்டன. மரபுவழி எச்சம் அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களில் பரவலாக கொலம்பசு "அமெரிக்காவைக் கண்டறிந்தவர்" என்ற கருத்து இருப்பினும் உண்மையில் முதலில் கண்டறிந்தவர்கள் இங்கு பல காலமாக வாழ்ந்திருந்த உள்ளூர் குடிகளாகும். கொலம்பசு முதல் ஐரோப்பியர் கூடக் கிடையாது; வைக்கிங்குகள் தான் முதலில் வந்திறங்கிய ஐரோப்பியர்கள். ஆனால் கொலம்பசு தான் அமெரிக்காவை ஐரோப்பாவில் பிரபலப்படுத்தியவர். மேற்கத்திய கவனத்திற்கு புதிய நிலப்பகுதியைக் கொண்டு வந்ததன் மூலம் புவியின் இரு முதன்மையான நிலப்பகுதிகளுக்கிடையேயும் அங்கு வாழ்பவர்களிடையேயும் நிலைத்த தொடர்பை துவங்கி வைத்தார். வரலாற்றாளர் மார்ட்டின் துகார்டு "கொலம்பசின் பெருமை அமெரிக்காவை முதலில் சென்றடைந்தவர் என்பதல்ல, அங்கு முதலில் தங்கியவர் என்பதாகும்" எனக் கூறியுள்ளார். கொலம்பசு தாம் கண்டறிந்த நிலப்பகுதி ஆசியாவின் அங்கமென்றே இறுதி வரை எண்ணியிருந்ததாக வரலாற்றாளர்கள் பொதுவாக கருதியபோதும் கிர்க்பாட்றிக் சேல் கொலம்பசின் புக் ஆவ் பிரிவிலேஜசில் புதிய கண்டத்தைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளதாக சுட்டுகிறார். தவிரவும், மூன்றாம் கடற்பயணத்தின் பதிவேடுகளில் "பரியா நிலம்" , "இதுவரை காணாத" கண்டம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில் கொலம்பசின் மற்ற ஆவணங்களில் சியாவை சென்றடைந்ததாகவே குறிப்பிட்டுள்ளார்; 1502இல் திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டருக்கு எழுதியக் கடிதத்தில் கூபா ஆசியாவின் கிழக்குக் கடலோரம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய கண்டமான தென்னமெரிக்கா ஓரியன்ட்டின் இறுதியிலிருக்கும் பூலோக சொர்க்கம் என்றார். எனவே, அவருடைய உண்மையான கருத்துக்கள் என்னவென்று அறுதியாகத் தெரியவில்லை. கொலம்பசின் முதல் கடற்பயணத்திற்குப் பின்னர் அமெரிக்காவிற்குப் பயணித்த அமெரிகோ வெஸ்புச்சி தான் முதலில் இந்த நிலப்பகுதி ஆசியா அல்லவென்றும் யூரேசியர்களுக்கு இதுவரைத் தெரியாத புதிய கண்டம் என்றும் கூறியவர். செருமன் நிலப்பட வரைவாளர் மார்ட்டின் வால்ட்சிமுல்லருக்கு இந்த முடிவை எட்ட 1502-04இல் வெளியான அமெரிகோ வெஸ்புச்சியின் பயணப்பதிவேடுகளே மூலமாக அமைந்தன. கொலம்பசு இறந்த அடுத்த ஆண்டு, 1507இல் வெளியிட்ட தமது உலக நிலப்படத்தில் வால்ட்சிமுல்லர் அமெரிக்கா என்று புதிய கண்டத்தை அழைத்திருந்தார்; இது வெஸ்புச்சியின் இலத்தீனப் பெயரான "அமெரிகசு" என்பதலிருந்து வந்தது. பலகாலமாக, பிரித்தானியர்கள் கொலம்பசை அல்லாது வெனிசிய ஜான் கபோட்டை முதல் தேடலாளராக கொண்டாடினர். ஆனால் புதிய நாடாக வளர்ந்து வந்த ஐக்கிய அமெரிக்காவில் கபோட் தேசிய அங்கீகாரம் பெறவில்லை. குடிமைபடுத்திய காலங்களிலிருந்தே அமெரிக்காவில் கொலம்பசிற்கான வழிபாடு வளர்ந்தது. அமெரிக்காவிற்கு கொலம்பியா என்ற பெயர் 1738இல் பிரித்தானிய நாடாளுமன்ற விவாதங்களில் இடம் பெற்றது. அமெரிக்கப் புரட்சிக்குப் பின்னர் புதிய உலகைக் கண்டறிந்தவர் கொலம்பசு என்றக் கருத்தாக்கம் அமெரிக்கா முழுமையிலும் பரவியது. ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசுத் தலைநகருக்கும் (கொலம்பியா மாவட்டம்), இரண்டு மாநிலங்களின் தலைநகரங்களுக்கும் (ஒகையோ, தென் கரொலைனா), கொலம்பியா ஆற்றுக்கும் கொலம்பசின் பெயர் சூட்டப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியே 1819இல் தற்கால கொலொம்பியாவின் முன்னோடிக்கு கிரான் கொலொம்பியா எனப் பெயரிடப்பட்டது. பல நகரங்கள், ஊர்கள், கவுன்ட்டிகள், சாலைகள், அங்காடி வளாகங்கள் இவரதுப் பெயரைத் தாங்கி உள்ளன. 1866இல் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக கருதப்பட நியமிக்கப்பட்டார். இத்தகைய வழிபாட்டின் உச்சமாக 1892இல் அமெரிக்காவை அடைந்த 400வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. சிக்காகோவில் கொலம்பியக் கண்காட்சியும் நியூயார்க் நகரத்தில் கொலம்பசு வட்டமும் நிறுவப்பட்டன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Excerpts from the log of Christopher Columbus's first voyage The Letter of Columbus to Luis de Sant Angel Announcing His Discovery Columbus Monuments Pages (overview of monuments for Columbus all over the world) "But for Columbus There Would Be No America", Tiziano Thomas Dossena, Bridgepugliausa.it, 2012 நாடுகாண் பயணிகள் இத்தாலியர் 1451 பிறப்புகள் 1506 இறப்புகள்
26
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
இலங்கையின் புவியியல்
இலங்கை, இந்தியாவுக்குத் தெற்கே, இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடாகும். {| class="toccolours" border="1" cellpadding="4" style="float: right; margin: 0 0 1em 1em; width: 250px; border-collapse: collapse; font-size: 95%;padding:0.1em" |- | colspan="2" style="margin-left: inherit;background:#077cd0; color:white; font-size: 1.5em; text-align:center" | இலங்கை புவியியல் |- |புவியியல் ஆள்கூறுகள் |7 00 வ, 81 00 கி |- |பரப்பளவு |65,610 ச.கிமீ |- |நிலப்பரப்பளவு |64,740 ச.கிமீ |- |நீர்ப்பரப்பளவு |870 ச.கிமீ |- |கரையோர நீளம் |1,340 கிமீ |- |நில எல்லைகள் |0 கிமீ |- |} கடல்சார் உரிமைகள் தொடர்ச்சியான பகுதியாக (contiguous zone) 24 கடல் மைல் தொலைவையும், கண்டமேடையாக 200 கடல் மைல் தூரத்தையும் கொண்டுள்ளது.கடல்சார் உரிமைகள்:தொடர்ச்சியான பகுதி: 24 கடல் மைல் (nm) கண்ட மேடை: 200 கடல் மைல் (nm) பிரத்தியேக பொருளாதார வலயம்: 200 nm பிரதேச கடல்: 12 nmகாலநிலை:tropical பருவப் பெயர்ச்சிக் காற்று; வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று(டிசம்பரிலிருந்து மார்ச் வரை); தென்மேற் பருவப் பெயர்ச்சிக் காற்று(ஜூனிலிருந்து அக்டோபர் வரை)நிலத்தோற்றம்:பெரும்பாலும் தாழ்வானது, தட்டை முதல் சிற்றளவான ஏற்ற இறக்கங்கள் கொண்டது; மலைகள் தெந் மத்திய பகுதியில்.நிலைப்பட அந்தலைகள்:மிகத் தாழ்ந்த புள்ளி: இந்து சமுத்திரம் 0 m அதியுயர் புள்ளி: பிதுருதலாகலை 2,524 mஇயற்கை வளங்கள்:சுண்ணாம்புக் கல், காரீயம், கனிம மணல்கள், இரத்தினங்கள், பொஸ்பேற்றுகள், களி, நீர் மின்சாரம்நிலப் பயன்பாடு:பயிர்த்தொழில் செய்யத்தக்க நிலம்: 14% நிலையான பயிர்: 15% நிலையான புல்வெளிகள்: 7% காடுகளும் மரச்செறிவுகளும்: 32% ஏனையவை: 32% (1993 கணக்கீடு)நீர்ப்பாசனமுள்ள நிலங்கள்:5,500 சது. கிமீ(1993 கணக்கீடு)இயற்கை அழிவுகள்:அவ்வப்போது தோன்றும் புயல்களும், சூறாவளிகளும்.சூழல் - தற்காலச் சிக்கல்கள்:காடழிப்பு; மண்ணரிப்பு; சட்டவிரோத வேட்டையினாலும், நகராக்கத்தினாலும், வனவிலங்குகள் ஆபத்துக்குள்ளாகியிருத்தல்; அகழ்வு நடவடிக்கைகளினாலும், அதிகரித்துவரும் மாசடைதலாலும், கரையோர degradation; தொழிற்சாலைக் கழிவுகளாலும், கழிவு நீர் கலத்தலாலும், நன்நீர் வளங்கள் மாசடைதல்; கழிவு அகற்றல்; கொழும்பில் காற்று மாசடைதல்.சுற்றுச்சூழல் - அனைத்துலக ஒப்பந்தங்கள்:'party to:உயிரினப் பன்வகைமை (Biodiversity), காலநிலை மாற்றம், பாலைவனமாதல், அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள், சுற்றுச் சூழல் மாற்றம், ஆபத்து விளைவிக்ககூடிய கழிவுகள், கடற் சட்டம், அணுவாயுத சோதனைத் தடை, ஓசோன் படலப் பாதுகாப்பு, கப்பல்கள் தொடர்பான மாசடைதல், ஈர நிலங்கள்.கையெழுத்திடப்பட்டது, ஆனால் ஏற்கப்படவில்லை:'' கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு புவியியல் குறிப்புகள் முக்கிய இந்தியப் பெருங்கடல் கடற்பாதைக்கு அண்மையிலுள்ள அமைவிடம். இந்து தொல் நம்பிக்கைகளின்படி இராமபிரானால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் ஆதாம் பாலம் எனப்படும், இந்தியாவுடனான நிலத்தொடர்பு. இது தற்போது பெரும்பாலும் கடலுள் அமிழ்ந்தும் சில பகுதிகள் மட்டும் சங்கிலித் தொடர் போன்ற திட்டுகளாகக் கடல் மட்டத்துக்கு மேல் தெரியும் படியாகவும் அமைந்துள்ளது. பின்வருவனவற்றையும் பார்க்கவும் இலங்கை ஆள்கூறு 2000 இலங்கைச் சூறாவளி உசாத்துணை மேற்கோள்கள்
32
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இந்தியத் துணைக்கண்டம்
இந்தியத் துணைக் கண்டம் (Indian subcontinent) என்பது ஆசியாவின் தெற்குப் பகுதியாகும். இதைப் பொதுவாக துணைக்கண்டம் என்று அழைப்பார்கள். இத்துணைக்கண்டத்தின் பெரும்பகுதி இந்தியத் தட்டில் அமைந்துள்ளது. இமயமலையில் இருந்து தெற்கு நோக்கி இந்தியப் பெருங்கடலில் துருத்தி பரவியுள்ளது. இந்திய துணைக் கண்டம் கோண்ட்டுவானாவில் இருந்து சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிக்கப்பட்டு யூரேசிய தட்டுடன் இணைந்த நிலப்பகுதியாக இருக்கலாம் என்று நிலவியலில் கருதப்படுகிறது. புவியியல் ரீதியாக தெற்கு-மத்திய ஆசியாவில் உள்ள ஒரு தீபகற்பப் பிரதேசம் என்று இந்தியத் துணைக்கண்டம் புவியியல்ரீதியாக விளக்கப்படுகிறது. வடக்கில் இமயமலையால் வளைக்கப்பட்டும், மேற்கில் இந்து குஷ் மலைத்தொடரும், கிழக்கில் அரகான் மலைத்தொடரும் இத்தீபகற்பத்தைச் சூழ்ந்துள்ளன. அரசியல் ரீதியாக இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மியன்மார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தெற்காசியாவின் ஒரு புவியியல் பகுதியாக கருதப்படுகிறது. சில நேரங்களில் தெற்காசியா என்ற சொல் இந்திய துணைக் கண்டத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. தெற்காசியா, இந்தியா என்ற பாகுபாட்டின் கீழ் ஒவ்வொன்றிலும் எந்த நாடுகள் சேர்க்கப்பட வேண்டும் என்பது பற்றிய ஒருமித்த கருத்து ஏதுமில்லை. சொற்பிறப்பியல் தனித்துவமான புவியியல், அரசியல் அல்லது கலாச்சார அடையாளம் கொண்ட ஒரு கண்டத்தின் துணைப்பிரிவு என்றும் ஒரு கண்டத்தைக் காட்டிலும் சற்றே சிறிய நிலப்பகுதி என்றும் ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியில் துணைக் கண்டம் என்ற சொல்லுக்கு பொருள் கூறப்பட்டுள்ளது. தனித்தனி கண்டங்களாக கருதப்படுவதற்கு முன்னர் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவைக் குறிப்பதற்காக 1845 ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியத் துணைக்கண்டம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்துதான் இந்திய துணைக் கண்டத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டாதாக அறிய முடிகிறது. பிரித்தானிய இந்தியா மற்றும் பிரித்தானிய வணிகவியல் மேலதிகாரத்தின் கீழ் உள்ள மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) இரண்டையும் உள்ளடக்கிய பகுதியை குறிப்பிடுவதற்கு இந்தியத் துணைக்கண்டம் என்ற பெயர் மிகவும் வசதியாக இருந்தது. இந்திய துணைக் கண்டம் என்ற சொல் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. பல்வேறு கண்டங்களைப் போலவே, 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகக் கருதப்படும் பெருநிலப்பகுதியான கோண்டுவானாவின் ஒரு பகுதியாக இந்திய துணைக் கண்டமும் இருந்ததாகக் கருதப்படுகிறது. புவி ஓடுகளின் தொடர்ச்சியான பிளவுகள் காரணமாக பல்வேறு வடிநிலங்கள் உருவாகி அவை ஒவ்வொன்றும் பல்வேறு திசைகளில் இழுத்துச் செல்லப்பட்டன. இந்திய துணைக் கண்ட வடிநிலமாகப் பிளந்த பகுதியுடன் ஒரு காலத்தில் மடகாசுகர், சீசெல்சு, அண்டார்டிக்கா, ஆசுத்திரலேசியா ஆகியபகுதிகளும் சேர்ந்து மகா இந்தியா என்று அழைக்கப்பட்டது. தொல்லூழி காலத்தின் முடிவில் சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வடிநிலம் யூரோசியாவுடன் மோதியதால் உடைந்த பகுதியே இந்தியத் துணைக்கண்டம் என்று புவியியல் ரீதியான வரையறையும் இத்துணைக் கண்டத்திற்குக் கொடுக்கப்படுகிறது. பெயரியல் இந்திய துணைக் கண்டம் என்ற சொல் குறிப்பாக பிரித்தானிய பேரரசிற்கும் அதனைத் தொடர்ந்து வந்தவர்களுக்கும் பொதுவானதாக இருந்தது. மரபு ரீதியாகவும் முன் நவீன ரீதியாகவும் இப்பகுதி இந்தியா, மகா இந்தியா அல்லது தெற்காசியா என்ற பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்று மிதல் மற்றும் தர்சுபை முதலானோர் தெரிவிக்கின்றனர். பிபிசி மற்றும் சில கல்வி மூலங்கள் இப் பிராந்தியத்தை ஆசிய துணை கண்டம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றன. சில கல்வியாளர்கள் தெற்காசிய துணை கண்டம் என்று இந்தியத் துணைக்கண்டத்தைக் குறிப்பிடுகின்றனர். இந்திய துணைக்கண்டம், தெற்காசியா என்ற பெயர்கள் ஒரே பொருளில் மாற்றி மாற்றி பயன்படுகின்றன. எந்தெந்த நாடுகளை தெற்காசியா அல்லது இந்தியத் துணைக்கண்டத்துடன் இணைத்துக் கொள்வது என்பது தொடர்பான உலகாய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை ஏதுமில்லை. வரையறை அகராதிகளில் உள்ளிட்டபடி துணைக் கண்டம் என்பது ஒரு கண்டத்தின் ஒரு பெரிய, தனித்துவமான துணைப்பிரிவை குறிக்கிறது. நிலவியல் 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய சுராசிக் காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து விலகிச் சென்ற கோண்டுவானா என்ற பெருநிலப்பரப்பான மகா இந்தியாவின் ஒரு பகுதியாக முதலில் இந்தியத் துணைக்கண்டம் இருந்தது என்று நிலவியல் ரீதியாக வரையறை செய்யப்படுகிறது. இப்பகுதி பெரும் எரிமலை வெடிப்புகள் மற்றும் பல புவித்தட்டுப் பிரிவுகளுக்கு உட்பட்டு மடகாசுகர், சீசெல்சு, அண்டார்ட்டிக்கா, ஆசுத்திரலேசியா மற்றும் இந்தியத் துணைக்கண்ட வடிநிலப்பகுதிகளை உருவாக்கியது. தொல்யுக முடிவில் சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய துணைக் கண்டம் வடகிழக்கு நோக்கி நகர்ந்து சென்று யுரேசிய தட்டுடன் மோதிக்கொண்டது. இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மியன்மார் மற்றும் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தெற்காசியாவின் புவியியல் நிலப்பகுதியாகக் கருதப்படுகிறது. யுரேசியத் தட்டும் இந்தியத் துணைக்கண்டத் தட்டும் சந்திக்கும் மண்டலத்தில் நிகழும் தொடர்ச்சியான புவிநடவடிக்கைகளால் அடிக்கடி பூகம்பங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது எனக் குறிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் குறிக்கப்படும் துணைக்கண்டம் என்ற சொல் தொடர்ச்சியாக இந்தியத் துணைக்கண்டத்தையே குறித்து வருகிறது. பொருள்களின் இயற்கை அமைப்புப் புவியியலின் படி இந்தியத் துணைக்கண்டம் தெற்கு-மத்திய ஆசியாவில் உள்ள ஒரு தீபகற்பப் பிரதேசம் என்று விளக்கப்படுகிறது. வடக்கில் இமயமலையால் வளைக்கப்பட்டும், மேற்கில் இந்து குஷ் மலைத்தொடரும், கிழக்கில் அரகான் மலைத்தொடரும் இத்தீபகற்பத்தைச் சூழ்ந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் தெற்கு நோக்கி வடமேற்காக அரபிக் கடலுடனும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவுடனும் இந்தியத் துணைக்கண்டம் பரவி நீண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்தியத் தட்டிலேயே அமைந்திருக்கின்றன, ஆசியாவின் பிற பகுதிகளை இப்பகுதியிலிருந்து பெரிய மலைப் பாறைகள் தனிமைப்படுத்தப்படுகின்றன. இந்தியா, பாக்கித்தான்,வங்காள தேசம், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் உள்ளிட்ட பகுதியே இந்திய துணைக் கண்டம் என்று விரிவான வரையறையின்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியத் துனைக்கண்டம் 4.4 மில்லியன் சதுர கிமீ² (1.7 மில்லியன் மைல்) பரப்பளவில் விரிவடைந்துள்ளது. ஆசியக் கண்டத்தின் பரப்பில் இது 10% ஆகும். அல்லது உலகின் நிலப்பரப்பு பகுதியில் 3.3% ஆகும். மொத்தத்தில், ஆசியாவின் மக்கள்தொகையில் சுமார் 45% அல்லது உலக மக்கள்தொகையில் 25% மக்கள் இத்துணைக் கண்டத்தில் வாழ்கின்றனர். பல்வேறு வகை இனங்களைச் சேர்ந்த மக்களும் இதில் அடங்கியுள்ளனர். அரசியல் இந்திய துணைக் கண்டம் அல்லது தெற்காசியா என்று எப்படி அழைக்கப்பட்டாலும் இப்பிராந்தியத்தின் புவியியல் அளவின் வரையறை மாறுபடுகிறது. இப்பகுதி மகா இந்தியா என்ற பெயரில் அழைக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பையும் உள்ளடக்கியது என்கிறது பூகோள அரசியல். பொதுவாக இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்காள தேசம் முதலிய நாடுகள் இப்பகுதியில் அடங்குகின்றன. 1947 க்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதி பிரித்தானிய இந்தியாவின் பகுதியாக இருந்தது. இது பொதுவாக நேபாளம், பூட்டான் மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவு தீவு ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும். இந்திய துணைக் கண்டம் தெற்காசியாவின் பெரும்பாலான நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்று மானுடவியலாளர் யான் ஆர். லூக்காசு கருத்து தெரிவிக்கிறார். அரசியல் விஞ்ஞான பேராசிரியர் டாட் வான்கானன் கூறுகையில், "தெற்காசியாவின் ஏழு நாடுகளும் இந்திய துணைக் கண்டத்தைச் சுற்றி புவியியல்ரீதியாக ஒரு கச்சிதமாக ஒரு சிறிய பகுதியாக உள்ளது என்கிறார். இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியப் பெருங்கடலின் பிற சிறிய தீவுகள் ஆகியவை இந்திய துணைக்கண்டத்தின் புவிசார் அரசியல் எல்லைகள் ஆகுமென தாவேந்திர குமார் தெரிவிக்கிறார். இந்திய தீபகற்பத்திற்கு தென் மேற்கில் அமைந்துள்ள சிறிய தீவுக்கூட்டமான மாலத்தீவுகளும் இந்தியத் துணைக்கண்டத்துடன் சேர்க்கப்படவேண்டிய பகுதியாகும். ஆப்கானித்தானின் பகுதிகள் சிலவும் இந்திய உபகண்டத்தில் சேர்க்கப்படுகின்றன என்று ஐரா எம். லாபிடசு என்ற வரலாற்ருப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். மத்திய ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் இந்திய துணைக் கண்டத்திற்கும் எல்லையாக இது அமைந்துள்ளது. ஆப்கானித்தானின் சமூக-மத வரலாறு துருக்கியின் செல்வாக்கு பெற்ற மத்திய ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தது. தற்போது இப்பகுதி பாக்கித்தான் எனப்படுகிறது. ஆப்கன் மத்திய ஆசியாவின் ஒரு பகுதி யாகும். அதை இந்திய துணைக்கண்டத்தில் சேர்க்கக்கூடாது என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். வரலாற்று அறிஞர்களான கேத்தரின் ஆசர் மற்றும் சிந்தியா டால்போட்டு ஆகியோர், இந்திய துணைக் கண்டம் என்பது யூரேசியாவின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட தெற்கு ஆசியாவின் ஓர் இயற்கையான நிலப்பகுதி என்கின்றனர். இமயமலையின் வழியாக செல்லும் கடினமான பாதை காரணமாக இந்திய துணைக் கண்டத்தின் சமூகவியல், மத மற்றும் அரசியல் தொடர்பு, வடமேற்கில் உள்ள ஆப்கானித்தான் பள்ளத்தாக்குகள் வழியாக பரவியது. கிழக்கில் மணிப்பூர் வழியாகவும் கடல்கடந்தும் பரவியது.. மிகவும் கடினமான ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு திபெத்திய முன்னோடிகளால் ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களும் இடைவினைகளும் இந்து மதம் மற்றும் புத்த மதத்தின் இணைப்புக்கான பரவலை வழிநடத்தியிருக்கின்றன. உதாரணமாக, இந்திய துணைக் கண்டத்தில் இருந்த ஆசியாவின் பிற பகுதிகளில், ஆப்கானித்தானிலிருந்தும் கடல் வழியாகவும் இசுலாமியர்கள் குடிபெயர்ந்தனர். கருத்து வேறுபாடுகள் இந்தியத் துணைக் கண்டம், தெற்காசியத் துணை கண்டம் மற்றும் தெற்காசியம் போன்ற புவிசார் அரசியல் வரையறை மற்றும் பயன்பாடுகளில் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே உள்ளன. மேற்கோள்கள் இந்தியப் புவியியல் ஆசியா தெற்கு ஆசியா கண்டங்கள் ஆசியப் புவியியல்
574
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%206-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கிமு 6-ஆம் நூற்றாண்டு
கி.மு. 6-ஆம் நூற்றாண்டு (6th century BC) என்பது கி.மு. 600-ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து கி.மு. 501-ஆம் ஆண்டின் கடைசி நாளன்று முடிவடைந்த காலப்பகுதியைக் குறிக்கும். இந்நூற்றாண்டில் அல்லது சிறிது காலத்தின் பின்னர் இந்தியாவின் பாணினியில் சமக்கிருத இலக்கணம் எழுதப்பட்டது. பாபிலோனியப் படைகள் எருசலேமைக் கைப்பற்றின. பாபிலோனியர்களின் ஆட்சி பின்னர் 540களில் பேரரசர் சைரசுவினால் கவிழ்க்கப்பட்டு, அகாமனிசியப் பேரரசு உருவாக்கப்பட்டது. பாரசீக இராச்சியம் விரிவாக்கப்பட்டது. இரும்புக் காலத்தில், கெல்ட்டியர் விரிவு இடம்பெற்றது. நிகழ்வுகள் பாரசீகர் பண்டைய எகிப்தைக் கைப்பற்றினார்கள், கிழக்கு நடுநிலக் கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். கார்த்தேசுவின் வணிக இராச்சியம் சிறிது சிறிதாக மேற்கு நடுநிலக் கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. உரோமக் குடியரசு உருவாக்கப்பட்டது. யூதா இராச்சியத்தின் அழிவும், முதல் யெருசலேம் கோயிலின் அழிவும் (கிமு 586), பல தசாப்தங்களுக்குப் பின்னர் யூதர்கள் திரும்பிவருதல். புத்தர், இந்தியாவில் பௌத்த சமயத்தை உருவாக்கினார். கன்பூசியஸ், கன்பூசியம் என அழைக்கப்படும் நீதிநூல் முறைமையை உருவாக்கினார், இது சீனாவில் பெரும் செல்வாக்குப் பெற்றது. குறிப்பிடத்தக்கவர்கள் புத்தர் கன்பூசியஸ் மஹா சைரஸ் - பாரசீகத்தின் அரசன் தாலெஸ் (Thales) கிரேக்கக் கணிதர். கிரகணமொன்றை எதிர்வுகூறினார். பைதகரஸ், கிரேக்கக் கணிதர். பைதகரசின் தேற்றம் பார்க்க. மகாவீரர், 24வது தீர்த்தங்கரர், (கிமு 599–கிமு 527) கிமு 563 — புத்தரின் தாய் மாயா இறப்பு சுன் சூ, போர்க்கலை நூலாசிரியர் லாவோ சீ புத்தாக்கங்கள், கண்டுபிடிப்புக்கள், அறிமுகப்படுத்தல்கள் மேற்கோள்கள் நூற்றாண்டுகள் கிமு 6-ஆம் நூற்றாண்டு
575
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
அனுராதபுரம்
அனுராதபுரம் (Anuradhapura) இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும். ஆரம்பத்தில் அனுராதகிராமம் என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்கு மாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்தது. தற்போதும் கூட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே. மக்கள்தொகையியல் மூலம்: www.statistics.gov.lk - கணக்கெடுப்பு ஆண்டு 2001 ஸ்ரீ மகா போதி இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. தற்பொழுது உலகின் மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து வருகிறது. நீர்ப்பாசனம் இந்த நகரைச் சுற்றி, 5 பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மிகப் பழைய காலம் முதலே இருந்து வருகின்றன. அனுராதபுரத்திலே வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத்தேவைகளுக்காக, சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்கு இக் குளங்கள் பயன்பட்டன. சுமார் 2500 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக அதனைச் சுற்றிப் பல பாரிய பௌத்த விகாரைகளும் இருந்தன. மீள் கண்டுபிடிப்பு கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக் கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தொல்பொருளாய்வாளர்களினால் வெளிக்கொணரப்பட்டது. அரண்மனைகள், வழிபாட்டிடங்கள், பௌத்த பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், வைத்தியசாலைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன. அனுராதபுரத்திலுள்ள அழிபாடுகள் ஸ்ரீ மகாபோதி ருவான்வெலிசாய தூபாராமய லோவமகாபாய அபயகிரி விகாரை ஜேதவனாராமய மிரிசவெட்டி தாதுகோபுரம் லங்காராமய இசுருமுனிய மகுல் உயன வெஸ்ஸகிரி ரத்ன பிரசாதய இராணி மாளிகை தக்கிண தாதுகோபுரம் செல சைத்திய நாக விகாரை கிரிபத் வெஹெர குட்டம் பொக்குண சமாதி சிலை தொலுவில சிலை இவற்றையும் பார்க்க அனுராதபுரம் குண்டுவெடிப்பு, அக்டோபர் 2008 எல்லாளன் நடவடிக்கை 2007 மேற்கோள்கள் பௌத்த யாத்திரைத் தலங்கள் இலங்கை மாவட்டத் தலைநகரங்கள் இலங்கையின் தொல்லியற்களங்கள்
578
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
இந்தியா
இந்தியா (ஆங்கிலம்: India) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. உலகில் பரப்பளவு அடிப்படையில் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும். இதற்குத் தெற்கே இந்தியப் பெருங்கடலும், தென் மேற்கே அரபிக்கடலும், தென் கிழக்கே வங்காள விரிகுடாவும் சூழ்ந்துள்ளன. மேற்கே பாக்கித்தான், வடக்கே சீனா, நேபாளம், மற்றும் பூட்டான், கிழக்கே வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகியவற்றுடன் நில எல்லைகளை இது பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு அருகில் இந்தியா அமைந்துள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளானவை தாய்லாந்து, மியான்மர் மற்றும் இந்தோனேசியாவுடன் ஒரு கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியத் துணைக்கண்டத்திற்கு குறைந்தது 55,000 ஆண்டுகளுக்கு முன்னரே வந்தனர். தொடக்கத்தில் தனிமைப்படுத்தப்பட்டதன் வேறுபட்ட வடிவங்களில் வேட்டையாடி-சேகரித்து உண்பவர்களாக இவர்கள் நீண்ட காலமாக ஆக்கிரமித்து இருந்தனர். இது இப்பகுதியை மரபணு ரீதியில் மிக அதிக வேற்றுமைகளை உடையதாக ஆக்கியுள்ளது. மனித மரபியற் பல்வகைமையில் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இதன் காரணமாக இந்தியா உள்ளது. துணைக்கண்டத்தில் குடியமர்ந்த வாழ்வானது 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து ஆற்று வடிநிலத்தின் மேற்கு எல்லைகளில் தோன்றியது. படிப்படியாக பரிணாமம் அடைந்த இது சிந்துவெளி நாகரிகமாகப் பொ. ஊ. மு. 3வது ஆயிரம் ஆண்டில் உருவாகியது. பொ. ஊ. மு. 1,200 வாக்கில் ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழியான சமசுகிருதத்தின் தற்போது வழக்கில் இல்லாத வடிவமானது வடமேற்கில் இருந்து இந்தியாவுக்குள் பரவியது. இதற்கான ஆதாரமானது இந்நாட்களில் இருக்கு வேதத்தின் சமயப் பாடல்களில் காணப்படுகிறது. மன உறுதியுடன் கவனமாக மனப்பாடம் செய்யப்பட்ட வாய் வழிப் பாரம்பரியத்தால் இது பாதுகாக்கப்பட்டு இருந்தது. இந்தியாவில் இந்து சமயத்தின் தோற்றத்தை இருக்கு வேதமானது பதிவிடுகிறது. இதனால் இந்தியாவில் திராவிட மொழிகளானவை வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இடமாற்றம் செய்யப்பட்டன. பொ. ஊ. மு. 400 வாக்கில் சாதியால் படி நிலை அமைப்பு மற்றும் விலக்கலானது இந்து சமயத்திற்குள் உருவாகத் தொடங்கியது. பௌத்தம் மற்றும் சைனம் தோன்றின. சமூகப் படி நிலைகளானவை மரபு வழியுடன் தொடர்பற்றவை என்று அறிவித்தன. தொடக்க கால அரசியல் ஒன்றிணைப்புகள் உறுதியாக பொருந்தியிராத மௌரிய மற்றும் குப்தப் பேரரசுகளை கங்கை வடி நிலத்தை அடிப்படையாகக் கொண்டவையாகத் தோன்றச் செய்தன. இப்பேரரசுகளின் ஒட்டு மொத்த சகாப்தமானது பரவலான படைப்பாற்றலால் பரப்பப்பட்டுள்ளது. ஆனால், பெண்களின் நிலை வீழ்ச்சியடைந்ததையும் கூட இக்காலம் குறிக்கிறது. தீண்டாமையை ஓர் ஒன்றிணைக்கப்பட்ட நம்பிக்கை அமைப்பாக உருவாக்கியதிலும் இக்காலம் பங்கு வகித்தது. தென்னிந்தியாவில் நடுக் கால இராச்சியங்கள் திராவிட மொழி எழுத்து முறைகளையும், சமயப் பண்பாடுகளையும் தென்கிழக்காசியாவின் இராச்சியங்களுக்கு ஏற்றுமதி செய்தன. நடுக் கால சகாப்தத்தின் தொடக்கத்தில் கிறித்தவம், இசுலாம், யூதம் மற்றும் சரதுசம் ஆகியவை இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்குக் கடற்கரைகளில் நிறுவப்பட்டன. நடு ஆசியாவைச் சேர்ந்த முசுலிம் இராணுவங்கள் இந்தியாவின் வடக்குச் சமவெளிகள் மீது விட்டு விட்டுத் தாக்குதல் ஓட்டம் நடத்தின. இறுதியாக தில்லி சுல்தானகத்தை நிறுவின. நடுக் கால இசுலாமின் பிற நாடுகளின் பண்பாட்டுத் தாக்கம் கொண்ட இணையத்திற்குள் வடக்கு இந்தியாவை இழுத்தன. 15ஆம் நூற்றாண்டில் விசய நகரப் பேரரசானது தென்னிந்தியாவில் ஒரு நீண்ட காலம் நீடித்து இருந்த வேறுபட்ட கூறுகளின் தொகுதியான இந்துப் பண்பாட்டை உருவாக்கியது. பஞ்சாப் பகுதியில் சீக்கியம் உருவாகியது. அமைப்பு ரீதியான சமயத்தை நிராகரித்தது. 1526இல் முகலாயப் பேரரசு தொடங்கப்பட்டது. ஒப்பீட்டளவில் அமைதியான இரு நூற்றாண்டுகளைத் தொடங்கி வைத்தது. ஒளிரும் கட்டடக் கலையின் ஒரு மரபை விட்டுச் சென்றது. படிப்படியாக பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியானது விரிவடைந்தது. இந்தியாவை ஒரு காலனித்துவப் பொருளாதாரமாக மாற்றியது. அதே நேரத்தில் இந்தியாவின் இறையாண்மையையும் உறுதி செய்தது. 1858இல் பிரித்தானிய அரச குடும்பத்தின் ஆட்சியானது தொடங்கியது. ஒரு முன்னோடியான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய விடுதலை இயக்கமானது உருவாகியது. இது அதன் அகிம்சை வழியிலான எதிர்ப்புக்காக அறியப்படுகிறது. பிரித்தானிய ஆட்சியை முடித்து வைத்ததில் ஒரு முக்கியமான ஆக்கக் கூறாக உருவானது. 1947இல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசானது இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்திய மேலாட்சி அரசு மற்றும் முசுலிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பாக்கித்தான் மேலாட்சி அரசு என இரு சுதந்திரமான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பெருமளவிலான உயிரிழப்பு மற்றும் அதற்கு முன்னர் நடந்திராத இடம் பெயர்வுக்கு நடுவில் இது பிரிக்கப்பட்டது. இந்தியா 1950ஆம் ஆண்டு முதல் ஒரு கூட்டமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட குடியரசாக உள்ளது. ஒரு சனநாயக நாடாளுமன்ற முறை மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. 1947இல் இதன் விடுதலை நேரத்தில் இருந்து உலகின் மிக அதிக மக்கள் தொகையுடைய சனநாயக நாடாகத் திகழ்கிறது. பல அதிகார அமைப்புகளையுடைய, பல மொழிகளையுடைய மற்றும் பல இனங்களையுடைய சமூகமாக இது உள்ளது. இந்தியாவின் பெயரளவு தனி நபர் வருமானமானது 1951ஆம் ஆண்டில் இலிருந்து 2022ஆம் ஆண்டில் ஆக உயர்ந்தது. இதன் கல்வியறிவு வீதமானது 16.6%திலிருந்து 74%ஆக உயர்ந்துள்ளது. இதே நேரத்தில், இதன் மக்கள் தொகையானது 36.10 கோடியிலிருந்து கிட்டத்தட்ட 140 கோடியாக உயர்ந்துள்ளது. 2023ஆம் ஆண்டு உலகின் மிக அதிக மக்கள் தொகையுடைய நாடாக இந்தியா உருவானது. 1951ஆம் ஆண்டு ஒப்பீட்டளவில் வறிய நாடாக இருந்ததிலிருந்து இந்தியா உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக உருவாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சேவைகளுக்கு ஒரு மையமாகவும், விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரையும் கொண்டுள்ளது. பல்வேறு திட்டமிடப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட புவி தாண்டிய இலக்குகளை அடைய விண்வெளித் திட்ட அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. இந்தியத் திரைப்படங்கள், இசை மற்றும் ஆன்மீகப் போதனைகள் உலகளாவிய பண்பாட்டில் ஓர் அதிகரித்து வரும் பங்கை ஆற்றி வருகின்றன. பொருளாதாரச் சம நிலையற்ற தன்மை அதிகரித்து வந்த போதிலும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவுக்கு அதன் வறுமை வீதத்தைக் குறைத்துள்ளது. இந்தியா அணு ஆயுதங்களையுடைய ஒரு நாடாகும். இராணுவச் செலவீனங்களில் உயர் தர வரிசையை இது பெறுகிறது. பாலினப் பாகுபாடு, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காற்று மாசுபாட்டின் அதிகரித்து வரும் நிலைகள் ஆகியவை இந்தியா எதிர் கொள்ளும் சமூக-பொருளாதாரச் சவால்களில் சிலவாகும். இந்தியாவின் நிலம் பெரும்பல்வகைமையை உடைய நிலமாகும். நான்கு உயிரினப் பல்வகைமையுடைய இடங்கள் இங்கு உள்ளன. நாட்டின் பரப்பளவில் காடுகள் 21.7%ஐக் கொண்டுள்ளன. இந்தியாவின் காட்டுயிர்கள் இந்தியப் பண்பாட்டில் பாரம்பரியமாக சகிப்புத் தன்மையுடன் பார்க்கப்படுகின்றன. இவை இந்தக் காடுகள் மற்றும் பிற இடங்களில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்களில் ஆதரவு பெற்றுள்ளன. பெயர்க் காரணம் ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியின் (2009ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பு) படி, "இந்தியா" என்ற பெயரானது பாரம்பரிய இலத்தீன் சொல்லான இந்தியாவில் இருந்து பெறப்படுகிறது. இது தெற்கு ஆசியா மற்றும் அதற்குக் கிழக்கே இருந்த துல்லியமாகத் தெரிந்திராத பகுதியையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இச்சொல்லான "இந்தியா" என்ற பெயரும் எலனிய கிரேக்க வார்த்தையான இந்தியா (Ἰνδία), பண்டைக் கிரேக்க மொழியின் இந்தோசு (Ἰνδός), பழைய பாரசீக ஹிந்துஷ் (அகாமனிசியப் பேரரசின் ஒரு கிழக்கு மாகாணம்) மற்றும் தொடக்கத்தில் அதன் ஒத்த சமசுகிருத வேர்ச் சொல்லான சிந்து, அல்லது "ஆறில்" இருந்து பெறப்பட்டது. குறிப்பாக இது சிந்து ஆற்றைக் குறிக்கிறது. குறிப்பாக, உட்கருத்தாக இந்த ஆற்றின் நன்றாகக் குடியமரப்பட்ட வடி நிலத்தை இது குறிக்கிறது. பண்டைய கிரேக்கர்கள் இந்தியர்களை இந்தோயி (Ἰνδοί) என்று குறிப்பிட்டனர். இதன் மொழி பெயர்ப்பானது "சிந்து ஆற்று மக்கள்" என்பதாகும். பாரத் (; ) என்ற சொல்லானது இந்திய இதிகாசம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகிய இரண்டிலுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வேறுபட்ட வடிவங்களில் பல இந்திய மொழிகளில் இது பயன்படுத்தப்படுகிறது. வரலாற்று ரீதியான பெயரான பரதவர்சத்தின் நவீன கால வடிவமாக பாரத் என்ற சொல்லானது 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல் இந்தியாவின் ஒரு பூர்வீகப் பெயராக அதிகரித்து வந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. பரதவர்சம் என்பது உண்மையில் வட இந்தியாவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஹிந்துஸ்தான் () என்பது இந்தியாவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு நடுக் காலப் பாரசீக மொழிப் பெயர் ஆகும். 13ஆம் நூற்றாண்டு வாக்கில் இது பிரபலமானது. முகலாயப் பேரரசின் சகாப்தத்தில் இருந்து இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஹிந்துஸ்தானின் பொருளானது வேறுபட்டு இருந்து வந்துள்ளது. வட இந்தியத் துணைக் கண்டத்தை (தற்கால வடக்கு இந்தியா மற்றும் பாக்கித்தான்) உள்ளடக்கிய ஒரு பகுதியை அல்லது முழு இந்தியாவையும் குறிக்க இது பயன்படுத்தப்பட்டுள்ளது. வரலாறு பண்டைக் கால இந்தியா பண்டைக் கால இந்தியாவானது நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் நவீன மனிதர்கள் அல்லது ஓமோ செப்பியன்கள் எனப்படுவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வருகை புரிந்தனர். ஆப்பிரிக்காவில் அவர்கள் முன்னரே பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தனர். தொடக்க காலத்தில் அறியப்பட்ட நவீன மனிதர்களின் எஞ்சிய பகுதிகளானவை தெற்காசியாவில் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்படுகின்றன. பொ. ஊ. மு. 6,500ஆம் ஆண்டுக்குப் பின்னர் உணவுப் பயிர்கள் மற்றும் விலங்குகள் கொல்லைப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள், நிலையான கட்டடங்களின் உருவாக்கம், விவசாய மிகு உற்பத்திப் பொருட்களைச் சேமித்து வைக்கும் அமைப்புகள் ஆகியவை மெஹெர்கர் மற்றும் பலூசிஸ்தான் போன்ற பிற களங்களில் தோன்றுகின்றன. இவை படிப்படியாக சிந்துவெளி நாகரிகமாக வளர்ச்சி அடைந்தன. இது தெற்காசியாவின் முதல் நகர்ப்புறப் பண்பாடு ஆகும். பொ. ஊ. மு. 2,500-1,900 ஆகிய காலங்களுக்கு இடையில் பாக்கித்தான் மற்றும் மேற்கு இந்தியாவில் இது செழிப்படைந்தது. மொகெஞ்சதாரோ, அரப்பா, தோலாவிரா, மற்றும் காளிபங்கான் போன்ற நகரங்களைச் சுற்றி மையமாக இருந்தது. வேறுபட்ட வடிவங்களில் சொற்ப அளவு உணவைக் கொண்டு இவர்கள் உயிர் வாழ்ந்தனர். கைவினைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் பரவலான வகைப்பட்ட வணிகம் ஆகியவற்றில் இந்நாகரிகமானது கடுமையாக ஈடுபட்டிருந்தது. பொ. ஊ. மு. 2,000 - பொ. ஊ. மு. 500 வரையிலான காலத்தின் போது துணைக்கண்டத்தின் பல பகுதிகள் செப்புக் காலப் பண்பாட்டில் இருந்து இரும்புக் காலப் பண்பாட்டிற்கு மாற்றமடைந்தன. இந்து சமயத்துடன் தொடர்புடைய மிகப் பழமையான புனித நூல்களான வேதங்களானவை இக்காலத்தின் போது எழுதப்பட்டன. பஞ்சாப் பகுதி மற்றும் மேல் கங்கைச் சமவெளியில் ஒரு வேத காலப் பண்பாடு இருந்தது என்பதை வேதங்களை ஆய்வு செய்ததை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர். வடமேற்கில் இருந்து இந்தியத் துணைக்கண்டத்துக்குள் பல்வேறு அலைகளாக வந்த இந்திய-ஆரியப் புலப்பெயர்வுகளையும் இக்காலகட்டமானது உள்ளடக்கியிருந்தது என பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். புரோகிதர்கள், போர் வீரர்கள் மற்றும் சுதந்திர விவசாயிகள் ஆகியோரை உள்ளடக்கி ஆனால் பூர்வீக மக்களை அவர்களது பணிகள் தூய்மையற்றவை என்று முத்திரையிட்டு ஒதுக்கி வைத்த ஒரு படி நிலை அமைப்பை உருவாக்கிய சாதி அமைப்பானது இக்கால கட்டத்தின் போது தோன்றியது. தக்காணப் பீடபூமியில் இக்கால கட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆதாரங்களானவை அரசியலமைப்பின் ஒரு தலைவனை உடைய அமைப்பின் நிலையின் இருப்பைப் பரிந்துரைகின்றன. தென்னிந்தியாவில் இக்கால கட்டத்துக்குக் காலமிடப்படுகிற பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் ஒரு பெரும் எண்ணிக்கையிலானவை நிலையான வாழ்க்கை முறை முன்னேற்றம் அடைந்ததைக் காட்டுகின்றன. மேலும், வேளாண்மை, நீர்ப்பாசன தொட்டிகள் மற்றும் கைவினைப் பாரம்பரியங்களின் அருகிலிருந்த ஆதாரங்களும் கூட இவற்றைக் காட்டுகின்றன. பிந்தைய வேத காலத்தில் பொ. ஊ. மு. சுமார் 6ஆம் நூற்றாண்டின் போது கங்கைச் சமவெளி மற்றும் வடமேற்குப் பகுதிகளில் இருந்த சிறிய அரசுகள் மற்றும் தலைவர்களைக் கொண்ட அமைப்புகள் 16 சிலவர் ஆட்சி அமைப்புகள் மற்றும் முடியரசுகளாக ஒன்றிணைந்தன. இவை மகாஜனபாதங்கள் என்று அறியப்பட்டன. வளர்ந்து வந்த நகரமயமாக்கலானது வேதம் சாராத சமய இயக்கங்களின் வளர்ச்சிக்குக் காரணமானது. இதில் இரண்டு இயக்கங்கள் தனி சமயங்களாக உருவாயின. இச்சமயத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த மகாவீரரின் வாழ்வின் போது சைனம் முக்கியத்துவம் பெற்றது. கௌதம புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு பௌத்தம் உருவானது. இரண்டும் நடுத்தர வர்க்கத்தினரைத் தவிர்த்து அனைத்து சமூக வகுப்பினரிடமிருந்தும் பின்பற்றுபவர்களை ஈர்த்தது. இந்தியாவில் வரலாறு பதிவு செய்யப்படுதலின் தொடக்கத்தின் மையமானது புத்தரின் வாழ்வைப் பதிவு செய்ததாக அமைந்தது. அதிகரித்து வந்த நகர்ப்புற செல்வத்தின் காலத்தின் போது இரு சமயங்களும் துறவே சிறந்தது என்று குறிப்பிட்டன. நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும் துறவற மரவுகளை இரு சமயங்களும் நிறுவின. அரசியல் ரீதியாக பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டில் மகத இராச்சியமானது பிற அரசுகளை இணைத்து அல்லது குறைத்து மௌரியப் பேரரசாக உருவானது. இப்பேரரசானது தொலைதூர தெற்குப் பகுதி தவிர்த்து பெரும்பாலான இந்தியத் துணைக்கண்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்று ஒரு காலத்தில் எண்ணப்பட்டது. ஆனால், இதன் மையப் பகுதிகளானவை பெரிய சுயாட்சியுடைய பகுதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது என்று தற்போது எண்ணப்படுகிறது. மௌரிய மன்னர்கள் தங்களது பேரரசு உருவாக்கம் மற்றும் பொது மக்களின் வாழ்வை முனைப்புடன் நிர்வகித்தது ஆகியவற்றுக்கு அறியப்படும் அதே அளவுக்கு இராணுவத் தன்மையை அசோகர் துறந்தது மற்றும் பௌத்த தம்மத்தைத் தொலைதூரப் பகுதிகளுக்குப் பரப்பியது ஆகியவற்றுக்காகவும் அறியப்படுகின்றனர். தமிழின் சங்க இலக்கியங்கள் பொ. ஊ. மு. 200 மற்றும் பொ. ஊ. 200க்கு இடையில் தெற்குத் தீபகற்பப் பகுதியானது சேரர், சோழர், பாண்டியரால் ஆளப்பட்டது என்பதை வெளிக் காட்டுகின்றன. இந்த அரசமரபுகள் விரிவாக உரோமைப் பேரரசு, மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியாவுடன் வணிகத்தில் ஈடுபட்டது. வட இந்தியாவில் குடும்பத்துக்குள் தந்தையின் கட்டுப்பாட்டை இந்து சமயம் உறுதிப்படுத்தியது. பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தாழ்த்தப்பட்ட அதிகரித்து வந்த நிலைக்கு இது வழி வகுத்தது. 4ஆம் மற்றும் 5ஆம் நூற்றாண்டுகளின் வாக்கில் குப்தப் பேரரசு பெரிய கங்கைச் சமவெளிப் பகுதியில் நிர்வாகம் மற்றும் வரி விதிப்பின் ஒரு சிக்கலான அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பானது பிந்தைய இந்திய இராச்சியங்களுக்கு ஒரு முன் மாதிரியாக உருவானது. குப்தர்களுக்குக் கீழ் சடங்கு முறையை அடிப்படையாகக் கொண்டிருக்காமல் பக்தியை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதுப்பிக்கப்பட்ட இந்து சமயமானது அதன் நிலையை உறுதிப்படுத்தத் தொடங்கியது. இந்த புதுப்பிப்பானது சிற்பங்கள் மற்றும் கட்டடக் கலை மலர்ந்ததன் மூலம் பிரதிபலிக்கப்படுகிறது. இது நகர்ப்புற உயர் குடியினர் மத்தியில் புரவலர்களைப் பெற்றது. செவ்வியல் சமசுகிருத இலக்கியமும் வளர்ந்தது. இந்திய அறிவியல், வானியல், மருத்துவம் மற்றும் கணிதம் ஆகியவை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றன. நடுக்கால இந்தியா இந்தியாவின் தொடக்க கால நடுக் காலமானது பொ. ஊ. 600 முதல் பொ. ஊ. 1,200 வரை நீடித்திருந்தது. பிராந்திய இராச்சியங்கள் மற்றும் பண்பாட்டு வேற்றுமை ஆகியவற்றை இது இயல்புகளாகக் கொண்டிருந்தது. கன்னோசியின் ஹர்ஷவர்தனர் அந்நேரத்தில் பெரும்பாலான சிந்து-கங்கைச் சமவெளியை பொ. ஊ. 606 முதல் பொ. ஊ. 647 வரை ஆண்டார். தெற்கு நோக்கி விரிவடைய முயற்சி மேற்கொண்டார். தக்காணத்தின் சாளுக்கிய ஆட்சியாளரால் தோற்கடிக்கப்பட்டார். இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் கிழக்கு நோக்கி விரிவடைய முயற்சித்த போது அவரும் வங்காளத்தின் பால மன்னனால் தோற்கடிக்கப்பட்டார். சாளுக்கியர்கள் தெற்கு நோக்கி விரிவடைய முயற்சி செய்த போது மேலும் தெற்கே இருந்த பல்லவர்களால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பல்லவர்களும் பதிலுக்கு இன்னும் தெற்கே இருந்த பாண்டியர் மற்றும் சோழர்களால் எதிர்க்கப்பட்டனர். இக்காலத்தின் எந்த ஓர் ஆட்சியாளராலும் ஒரு பேரரசை உருவாக்கவோ அல்லது தங்களது மையப் பகுதியைத் தாண்டி தொலைவில் இருந்த நிலங்களைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைக்கவோ இயலவில்லை. இக்காலத்தின் போது மேய்ச்சல் முறையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் நிலங்களானவை வளர்ந்து வந்த வேளாண்மைப் பொருளாதாரத்துக்கு வழி விடுவதற்காக அழிக்கப்பட்டன. அவர்கள் சாதி சமூகத்திற்குள் இணைக்கப்பட்டனர். பாரம்பரியம் சாராத புதிய ஆளும் வகுப்பினரும் இவ்வாறு இணைக்கப்பட்டனர். சாதி அமைப்பானது பின் விளைவாக பிராந்திய வேறுபாடுகளைக் காட்டத் தொடங்கியது. 6ஆம் மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளில் தமிழில் முதல் பக்தி சமயப் பாடல்கள் உருவாக்கப்பட்டன. இந்தியா முழுவதும் இந்த நடத்தையானது பின்பற்றப்பட்டது. இந்து சமயத்தின் புத்தெழுச்சி மற்றும் துணைக் கண்டத்தின் அனைத்து நவீன மொழிகளின் வளர்ச்சிக்கும் இது வழி வகுத்தது. இந்தியாவின் பெரிய மற்றும் சிறிய அரச குடும்பங்கள் மற்றும் அவர்களால் புரவலத் தன்மை பெற்ற கோயில்கள் ஆகியவை தலை நகரங்களுக்குப் பெரும் எண்ணிக்கையிலான குடி மக்களை வரவழைத்தன. இவை பொருளாதார மையங்களாகவும் கூட உருவாயின. இந்தியா மற்றுமொரு நகரமயமாக்கலின் கீழ் சென்றதால் பல்வேறு அளவுகளில் கோயில் பட்டணங்கள் தோன்றத் தொடங்கின. 8ஆம் மற்றும் 9ஆம் நூற்றாண்டுகளின் வாக்கில் இந்த விளைவுகள் தென் கிழக்காசியாவிலும் உணரப்பட்டன. தென்னிந்தியப் பண்பாடு மற்றும் அரசியல் அமைப்புகளானவை இந்நிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலங்கள் நவீன கால மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், புரூணை, கம்போடியா, வியட்நாம், பிலிப்பீன்சு, மலேசியா, மற்றும் இந்தோனேசியாவின் பகுதிகளாக உருவாயின. இந்திய வணிகர்கள், அறிஞர்கள் மற்றும் சில நேரங்களில் இராணுவங்கள் இந்த மாற்றத்தில் பங்கெடுத்தன. தென்கிழக்காசியர்களும் இந்த மாற்றத்தை முன்னெடுத்தனர். இந்திய இறையிடங்களில் பலர் தற்காலிகமாகத் தங்கினர். தங்களது மொழிகளுக்குப் பௌத்த மற்றும் இந்து சமய நூல்களை மொழி பெயர்த்தனர். 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு முசுலிம் நடு ஆசிய நாடோடி இனங்கள் வேகமான குதிரைப் படையைப் பயன்படுத்தி இனம் மற்றும் சமயத்தால் இணைக்கப்பட்ட பரந்த இராணுவங்களை ஒன்றிணைத்தன. தெற்காசியாவின் வடமேற்குச் சமவெளி மீது அடிக்கடி தாக்குதல் நடத்தின. 1206இல் இறுதியாக இசுலாமிய தில்லி சுல்தானகம் நிறுவப்படுவதற்கு இது வழி வகுத்தது. வட இந்தியாவின் பெரும்பாலான பகுதியின் கட்டுப்பாட்டைக் கொண்டதாகவும், தென்னிந்தியாவுக்குள் பல ஊடுருவல்களை நடத்தியதாகவும் சுல்தானகம் திகழ்ந்தது. இந்திய உயர் குடியினருக்கு முதலில் இடையூறாக இருந்த போதும் சுல்தானகமானது அதன் பரந்த முசுலிம் அல்லாத குடிமக்களை அவர்களின் சொந்த சட்டங்கள் மற்றும் பழக்க வழக்கங்களைப் பெரும்பாலும் பின்பற்ற விட்டது. 13ஆம் நூற்றாண்டில் மங்கோலிய ஊடுருவாளர்களைத் தொடர்ந்து முறியடித்ததால் மேற்கு மற்றும் நடு ஆசியாவுக்கு ஏற்பட்ட அழிவிலிருந்து இந்தியாவைச் சுல்தானகமானது காப்பாற்றியது. தப்பித்து வந்த வீரர்கள், கற்றறிந்த மனிதர்கள், இறையியலாளர்கள், வணிகர்கள், கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் ஆகியோர் இப்பகுதியிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்திற்கு நூற்றாண்டுகளாக இடம் பெயர்ந்ததற்கு மங்கோலியர்கள் காரணமாயினர். இவ்வாறாக வடக்கில் பல சமயங்கள், பண்பாடுகள் மற்றும் சிந்தனைகள் இணைந்த இந்தோ-இசுலாமியப் பண்பாட்டை இது உருவாக்கியது. தென்னிந்தியாவின் பிராந்திய இராச்சியங்கள் மீதான சுல்தானகத்தின் ஊடுருவல் மற்றும் அவற்றைப் பலவீனமாக்கியது தென்னிந்தியாவைப் பூர்வீகமாக உடைய விசயநகரப் பேரரசு தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. விசயநகரப் பேரரசானது ஒரு வலிமையான சைவப் பாரம்பரியத்தைத் தழுவியிருந்தது. சுல்தானகத்தின் இராணுவத் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான தீபகற்ப இந்தியாவின் கட்டுப்பாட்டை இந்தப் பேரரசு கொண்டிருந்தது. இதற்குப் பிறகும் நீண்ட காலத்திற்குத் தென்னிந்திய சமூகம் மீது தாக்கத்தை இது ஏற்படுத்தியது. தொடக்க கால நவீன இந்தியா தொடக்க கால 16ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக முசுலிம் ஆட்சியாளர்களின் கீழ் இருந்த வட இந்தியாவானது நடு ஆசியாவின் ஒரு புதிய தலைமுறைப் போர் வீரர்களின் உயர் தர வேகம் மற்றும் தாக்குதலுக்கு மீண்டும் ஒரு முறை வீழ்ந்தது. இதன் விளைவாக ஏற்பட்ட முகலாயப் பேரரசானது அது ஆள வந்த உள்ளூர்ச் சமூகங்களை அழிக்கவில்லை. மாறாக, புதிய நிர்வாகப் பழக்க வழக்கங்கள், பல தரப்பட்டோர் மற்றும் அவர்களை உள்ளடக்கிய ஆளும் வர்க்கத்தினர் ஆகியோரின் வழியாக சம நிலையை அளித்து அமைதிப்படுத்தியது. மிகுந்த அமைப்பு ரீதியிலான, மையப்படுத்தப்பட்ட மற்றும் சீர் படுத்தப்பட்ட ஆட்சிக்கு வழி வகுத்தது. பழங்குடியின இணைப்புகள் மற்றும் இசுலாமிய அடையாளம் ஆகியவற்றை வேண்டுமென்றே தவிர்த்தது. குறிப்பாக அக்பருக்குக் கீழ் இவ்வாறு நடைபெற்றது. முகலாயர்கள் தங்களது தொலைதூர நிலப்பரப்புகளை விசுவாசத்தின் மூலம் இணைத்தனர். ஒரு பாரசீகமயமாக்கப்பட்ட பண்பாட்டின் வழியாக எண்ணங்களை வெளிப்படுத்தினார். கிட்டத் தட்ட கடவுளின் நிலைக்கு அருகில் இருந்த ஒரு பேரரசரால் இது ஆளப்பட்டது. முகலாய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் அவர்களின் பெரும்பாலான வருவாய்களை வேளாண்மையில் இருந்தே பெற்றன. நன்றாக முறைப்படுத்தப்பட்ட வெள்ளி நாணயத்தில் வரியைச் செலுத்த வேண்டி இருந்தது. பெரிய சந்தைகளுக்குள் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் நுழைவதற்கு இது காரணமானது. 17ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலத்தின் போது பேரரசால் பேணப்பட்ட ஒப்பீட்டளவிலான அமைதியானது இந்தியாவின் பொருளாதார விரிவில் ஒரு காரணியாக அமைந்தது. ஓவியம், இலக்கிய வடிவங்கள், துணிகள் மற்றும் கட்டடக்கலை ஆகியவற்றுக்குப் பெருமளவிலான புரவலத் தன்மை கிடைப்பதில் இது முடிவடைந்தது. மராத்தியர், இராசபுத்திரர் மற்றும் சீக்கியர் போன்ற தெளிவும், எளிமையும் உடைய புதிய சமூகக் குழுக்கள் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் முகலாய ஆட்சியின் போது இராணுவ மற்றும் அரசாளும் எண்ணங்களைப் பெற்றன. முகலாயர்களுடன் இணைந்தது அல்லது எதிர்த்தது என்பது அங்கீகாரம் மற்றும் இராணுவ அனுபவம் ஆகிய இரண்டையுமே இவர்களுக்குக் கொடுத்தது. முகலாய ஆட்சியின் போது விரிவடைந்த வணிகமானது புதிய இந்திய வணிக மற்றும் அரசியல் உயர் குடியினர் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் கடற்கரைகளில் தோன்றி வளர்ச்சி பெறக் காரணமானது. பேரரசு சிதைய ஆரம்பித்த போது இந்த உயர் குடியினரில் பலர் தங்களது சொந்த விவகாரங்களைக் கையிலெடுத்துக் கொள்ள முடிந்தது. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வாக்கில் வணிக மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு இடையிலான கோடுகளானவை அதிகரித்த வகையில் மங்கிப் போயின. ஆங்கிலேயேக் கிழக்கிந்திய நிறுவனம் உள்ளிட்ட ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் கடற்கரைகளில் படைத்துறை புறக்காவல் பாசறைகளை நிறுவின. கிழக்கிந்திய நிறுவனமானது கடல்கள், அதிகப்படியான வளங்கள், மற்றும் மிக முன்னேறிய இராணுவப் பயிற்சி மற்றும் தொழில் நுட்பத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. அதன் இராணுவ வலிமையை அதிகரித்து வந்த நிலையில் உறுதிப்படுத்தவதற்கு இவை வழி வகுத்தன. இந்திய உயர் குடியினரின் ஒரு பகுதியினருக்கு ஈர்ப்புடையதாக நிறுவனம் உருவாக இது காரணமானது. 1765இல் வங்காளப் பகுதியின் மீதான கட்டுப்பாட்டை நிறுவனம் பெறுவதற்கு அனுமதியளித்ததில் இக்காரணிகள் மிக முக்கியமானவையாக இருந்தன. பிற ஐரோப்பிய நிறுவனங்களைத் தவிர்த்து இவ்வாறு அந்த நிலையை இது பெற்றது. வங்காளத்தின் வளங்களுக்கான இதன் மேற்கொண்ட உரிமை, இறுதியாக இதன் இராணுவத்தின் அதிகரித்த வலிமை மற்றும் அளவானது 1820கள் வாக்கில் பெரும்பாலான இந்தியாவை இணைக்கவோ அல்லது அடிபணிய வைக்கவோ இதற்கு அனுமதியளித்தது. நீண்ட காலமாக இந்தியா தான் முன்னர் ஏற்றுமதி செய்தது போல் தயாரிப்புப் பொருட்களை அந்நேரத்தில் ஏற்றுமதி செய்யவில்லை. ஆனால் மாறாக இப்பொருட்களை உருவாக்க பிரித்தானியப் பேரரசுக்கு மூலப் பொருட்களை விநியோகம் செய்தது. இந்தியாவின் காலனித்துவ காலத்தின் தொடக்கம் என வரலாற்றாளர்கள் இதைக் கருதுகின்றனர். இக்காலத்தில் அதன் பொருளாதார சக்தியானது பிரித்தானியப் பாராளுமன்றத்தால் கடுமையாகக் குறைக்கப்பட்டிருந்த போது பிரித்தானிய நிர்வாகத்தின் ஒரு பிரிவாக இதை ஆக்கியிருந்த போது கிழக்கிந்திய நிறுவனமானது மிகக் கவனத்துடன் பொருளாதாரம் சாராத கல்வி, சமூகச் சீர்திருத்தம் மற்றும் பண்பாடு போன்ற பொருளாதாரம் சாராத பகுதிகளுக்குள் நுழையத் தொடங்கியது. நவீன இந்தியா வரலாற்றாளர்கள் இந்தியாவின் நவீன காலமானது 1848 மற்றும் 1855க்கு இடையில் ஒரு நேரத்தில் தொடங்கியது என்று கருதுகின்றனர். ஒரு நவீன அரசுக்குத் தேவையான மாற்றங்களுக்கான படியானது 1848ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் புதிய ஆளுநராக டல்ஹவுசி பிரபு நியமிக்கப்பட்ட போது தொடங்கி இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இறையாண்மையின் உறுதிப்படுத்துதல் மற்றும் எல்லை வரையறை, மக்கள் தொகை மேற்பார்வை மற்றும் குடிமக்களின் கல்வி ஆகியவை இம்மாற்றங்களில் அடங்கும். இருப்புப் பாதைகள், கால்வாய்கள் மற்றும் தந்தி போன்ற தொழில் நுட்ப மாற்றங்கள் ஐரோப்பாவில் அவற்றின் அறிமுகத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் பிடிக்காமல் இங்கும் உடனயே அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், நிறுவனத்தின் மீதான அதிருப்தியும் கூட இக்காலத்தின் போது அதிகரித்தது. 1857இல் சிப்பாய்க் கிளர்ச்சிக்குக் காரணமானது. படையெடுப்பு போன்ற பிரித்தானிய பாணியிலான சமூக சீர்திருத்தங்கள், கடுமையான நில வரிகள் மற்றும் சில செல்வந்த உரிமையாளர்கள் மற்றும் இளவரசர்கள் பொதுவாக நடத்தப்பட்ட விதம் உள்ளிட்ட வேறுபட்ட வெறுப்புகள் மற்றும் பார்வைகளால் இக்கிளர்ச்சி ஏற்பட்டது. வடக்கு மற்றும் நடு இந்தியாவின் பல பகுதிகளை இக்கிளர்ச்சி அதிரச் செய்தது. நிறுவன ஆட்சியின் அடித் தளத்தை அசைத்தது. 1858 வாக்கில் கிளர்ச்சியானது ஒடுக்கப்பட்டிருந்தாலும் கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்படுவதற்கு இது வழி வகுத்தது. பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவின் நேரடி நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது. ஒருமுக அரசு மற்றும் ஒரு படிப்படியான ஆனால் வரம்புக்குட்பட்டவை பிரித்தானிய பாணியிலான பாராளுமன்ற அமைப்பு அறிவிக்கப்பட்டது. புதிய ஆட்சியாளர்கள் இளவரசர்கள் மற்றும் நிலங்களையுடைய உயர் சமுதாயத்தினரையும் கூட எதிர் கால அமைதியின்மைக்கு எதிரான ஒரு நிலப் பிரபுத்துவம் சார்ந்த பாதுகாப்பாகக் கருதினர். இதைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில் இந்தியா முழுவதும் பொது வாழ்வானது படிப்படியாக உருவாகத் தொடங்கியது. 1885இல் இறுதியாக இந்திய தேசிய காங்கிரசு நிறுவப்படுவதற்கு வழி வகுத்தது. 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொழில்நுட்பம் அவசரமாகப் புகுத்தப்பட்டது மற்றும் வேளாண்மையானது வணிக மயமாக்கப்பட்டது ஆகியவை பொருளாதாரப் பின்னடைவுகளை ஏற்படுத்தியது என்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. தொலை தூரத்திலிருந்த சந்தைகளின் தற்போக்கு எண்ணத்தைச் சார்ந்தவர்களாக பல சிறு விவசாயிகள் உருவாயிப் போயினர். பெரிய அளவிலான பஞ்சங்கள் எண்ணிக்கையில் அதிகரித்தன. இந்தியர்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சியில் இடர் வாய்ப்புகள் இருந்த போதிலும் இந்தியர்களுக்கு சொற்ப அளவே தொழில் துறை வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது. வரவேற்கப்படாத நல் விளைவுகளும் கூட ஏற்பட்டன. அவற்றில் வணிகப் பயிர் விளைவிப்பு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புதிதாகக் கால்வாய்கள் வெட்டப்பட்ட பஞ்சாபில் இது நடைபெற்றது. இது உள்நாட்டு நுகர்வுக்கு என உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு வழி வகுத்தது. தொடருந்து அமைப்பானது இன்றியமையாத பஞ்ச நிவாரணத்தை அளித்தது. குறிப்பாகப் பொருட்களைக் கொண்டு செல்லும் செலவைக் குறைத்தது. தொடக்க நிலையில் வளர்ந்து வந்த இந்தியர்களால் உடைமையாகக் கொள்ளப்பட்டிருந்த தொழில் துறைக்கு உதவி புரிந்தது. தோரயமாக 10 இலட்சம் இந்தியர்கள் சேவையாற்றிய முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு புதிய காலமானது தொடங்கியது. இக்காலமானது பிரித்தானியச் சீர்திருத்தங்களால் குறிக்கப்பட்டது என்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. ஆனால், ஒடுக்கு முறை சட்டங்களும் கூட இயற்றப்பட்டன. இந்தியர்கள் சுயாட்சிக்கு அழைப்பு விடுத்தனர். ஒத்துழையாமை இயக்கம் எனும் ஓர் அறப் போராட்ட இயக்கத்தைத் தொடங்கினர். இதற்கு மோகன்தாசு கரம்சந்த் காந்தி தலைவரும், அதன் நீடித்த அடையாளமும் ஆனார். 1930களின் போது மெதுவான சட்டச் சீர்திருத்தம் பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து வந்த தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வெற்றியைப் பெற்றது. அடுத்த தசாப்தமானது இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் பங்களிப்பு, ஒத்துழையாமை இயக்கத்துக்கான காங்கிரசின் கடைசி உந்துதல் மற்றும் முசுலிம் தேசியவாதத்தில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகிய பிரச்சனைகளால் நிரம்பி இருந்தது. அனைவரும் 1947இல் இந்தியாவின் சுதந்திரத்தின் வருகையால் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்தியா மற்றும் பாக்கித்தான் என இரு அரசுகளாக இந்தியா பிரிக்கப்பட்டதால் சினம் கொண்டனர். ஒரு சுதந்திர நாடாக இந்தியாவின் சுய உருவத்திற்கு இன்றியமையாததாக அதன் அரசியலமைப்பு இருந்தது. இது 1950ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஒரு மதச்சார்பற்ற மற்றும் சனநாயகக் குடியரசை அமைத்தது. இலண்டன் சாற்றுரையின் படி இந்தியா பொது நலவாய அமைப்பில் அதன் உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த அமைப்புக்குள் இருந்த முதல் குடியரசாக உருவானது. 1980களில் தொடங்கிய பொருளாதாரத் தாராளமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்காக சோவியத் ஒன்றியத்துடன் இணைந்து செயல்பட்டது ஆகியவை ஒரு பெரிய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரை உருவாக்கியது. இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றியது. இந்தியாவின் புவிசார் அரசியல் செல்வாக்கை அதிகரித்தது. இருந்த போதிலும் ஒழிக்க முடியாத வறுமையாலும் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. கிராமப் புறம் மற்றும் நகர்ப் புறம் ஆகிய இரு பகுதிகளிலுமே வறுமை காணப்படுகிறது. சமயம் மற்றும் சாதி சார்ந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்டுகளால் அகத் தூண்டுதல் பெற்ற நக்சலைட் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நீடித்துள்ள சனநாயக சுதந்திரங்களானவை உலகின் புதிய நாடுகளுக்கு மத்தியில் தனித்துவமானதாகும். சமீபத்திய பொருளாதார வெற்றிகள் இருந்த போதிலும் இதன் பின் தங்கிய மக்களுக்கான தேவைகள் இன்னும் ஓர் அடையப்படாத இலக்காகவே தொடர்ந்து உள்ளது. புவியியல் இந்தியத் துணைக் கண்டத்தில் பெரும்பாலான பகுதிகளை இந்தியா கொண்டுள்ளது. இந்தியப் புவித் தட்டின் மேல் இது அமைந்துள்ளது. இது இந்திய-ஆஸ்திரேலியப் புவித் தட்டின் ஒரு பகுதியாகும். இந்தியாவை வரையறுத்த புவியியல் செயல்பாடுகளானவை 7.50 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கின. அப்போது இந்தியப் புவித் தட்டானது தெற்கு பெருங்கண்டமான கோண்டுவானாவின் ஒரு பகுதியாக இருந்தது. இதற்கு தென் மேற்கே கடலின் அடிப்பரப்பு பரவியதன் காரணமாக ஒரு வடக்கு-கிழக்கு திசையை நோக்கி இந்தியப் புவித் தட்டு நகர ஆரம்பித்தது. பின்னர் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் நகர ஆரம்பித்தது. இதே நேரத்தில் பரந்த டெதிசு பெருங்கடல் மேல் ஓடானது அதன் வடகிழக்கு திசையில் ஐரோவாசியப் புவித்தட்டுக்கு அடியில் கீழமிழத் தொடங்கியது. இந்த இரு செயல்பாடுகளும் புவியின் இடைப்படுகையில் வெப்பம் ஊடாகச் சென்றதால் ஏற்பட்டன. இரண்டுமே இந்தியப் பெருங்கடலை உருவாக்கின. இந்தியக் கண்ட மேல் ஓடானது இறுதியாக ஐரோவாசியப் புவித்தட்டுக்கு இடையில் தள்ளப்பட்டு இமயமலையை உயர்த்தியது. வளர்ந்து வந்த இமயமலைகளுக்குத் தெற்கே உடனடியாக புவித்தட்டு இயக்கமானது ஒரு பரந்த பிறை வடிவ தாழ் பகுதியை உருவாக்கியது. இது வேகமாக ஆற்றால் கொண்டு வரப்பட்ட கசடுகளால் நிரப்பப்பட்டது. இது தற்போது சிந்து-கங்கைச் சமவெளியின் பகுதியாக உள்ளது. உண்மையான இந்தியத் தட்டானது அதன் முதல் தோற்றத்தை கசடுகளுக்கு மேல் பண்டைக் கால ஆரவல்லி மலைத்தொடரில் உருவாக்குகிறது. இது தில்லி மலைத்தொடர்களிலிருந்து ஒரு தென் மேற்கு திசையில் விரிவடைந்துள்ளது. இதன் மேற்கே தார்ப் பாலைவனம் அமைந்துள்ளது. தார்ப் பாலைவனத்தின் கிழக்குப் பகுதியானது ஆரவல்லி மலைத் தொடர்களால் தடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இந்தியப் புவித் தட்டானது தீபகற்ப இந்தியாவாக உள்ளது. இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் புவியியல் ரீதியாக மிகவும் நிலையான பகுதியாக இது உள்ளது. நடு இந்தியாவில் சாத்பூரா மற்றும் விந்திய மலைத் தொடர்களாக தொலைதூர வடக்கு வரை இது விரிவடைந்துள்ளது. இந்த இணையான சங்கிலிகள் மேற்கே குசராத்தின் அரபிக் கடற்கரையிலிருந்து கிழக்கே சார்க்கண்டின் நிலக்கரி வளமுடைய சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் வரை உள்ளது. தெற்கே எஞ்சிய தீபகற்ப நிலப்பரப்பானது தக்காணப் பீடபூமியாக உள்ளது. இது மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என்று அறியப்படும் கடற்கரை மலைத் தொடர்களைப் பக்கவாட்டில் கொண்டுள்ளது. தீபகற்பமானது நாட்டின் மிகப் பழமையான பாறை அமைப்புகளைக் கொண்டுள்ளது. இதில் சில 100 கோடி ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை ஆகும். இவ்வாறான பாணியில் உருவாக்கப்பட்ட இந்தியா புவி நில நடுக்கோட்டுக்கு வடக்கே 6° 44′ மற்றும் 35° 30′ வடக்கு அட்ச ரேகை, மற்றும் 68° 7′ மற்றும் 97° 25′ கிழக்கு தீர்க்க ரேகைக்கு இடையில் அமைந்துள்ளது. இந்தியாவின் கடற்கரை நீளமானது 7,517 கிலோமீட்டர்கள் ஆகும். இதில் 5,423 கிலோமீட்டர்கள் தீபகற்ப இந்தியாவிலும், 2,094 கிலோமீட்டர்கள் அந்தமான், நிக்கோபார் மற்றும் இலட்சத்தீவுத் தொடர்களிலும் உள்ளன. இந்தியக் கடற்படை நீர்மயியல் அளவீடுகளின் படி கண்டப் பகுதியின் கடற்கரையானது பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது: 43% மணல் கடற்கரைகள்; 11% பாறைக் கடற்கரைகள், இதில் மலை விளிம்புகளும் அடங்கும்; 46% குக்குப்கள் அல்லது சதுப்பு நிலக் கடற்கரைகள். இந்தியா வழியாகப் பெருமளவுக்குப் பாயும் இமயமலையில் தோன்றும் முதன்மையான ஆறுகளானவை கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகியவையாகும். இவை இரண்டும் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. கங்கையின் முக்கிய துணை ஆறுகளாக யமுனை மற்றும் கோசி ஆகியவை உள்ளன. இதில் கோசி மிகவும் குறைவான சரிவு வாட்டத்தைக் கொண்டுள்ளது. நீண்டகால வண்டல் படிவால் இது இவ்வாறு உள்ளது. கடுமையான வெள்ளங்கள் மற்றும் ஆற்றின் போக்கு மாறுவதற்கு இது வழி வகுத்துள்ளது. முதன்மையான தீபகற்ப ஆறுகள் கோதாவரி, மகாநதி, காவிரி மற்றும் கிருஷ்ணா ஆகியவையாகும். இந்த ஆறுகள் ஆழமான சரிவு வாட்டத்தை வெள்ளத்திலிருந்து தங்களது நீரைத் தடுப்பதற்காகக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன; நருமதை மற்றும் தபதி ஆகியவை அரபிக் கடலில் கலக்கின்றன. மேற்கு இந்தியாவின் சதுப்பு நிலக் கட்ச் பாலைவனம் மற்றும் கிழக்கிந்தியாவின் வண்டல் சார்ந்த சுந்தரவனக்காடுகள் கழிமுகம் ஆகியவற்றை கடற்கரைகள் கொண்டுள்ளன. சுந்தரவனக்காடுகள் வங்காள தேசத்தாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்தியா இரண்டு தீவுக்கூட்டங்களைக் கொண்டுள்ளது: இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரையைத் தாண்டியுள்ள இலட்சத்தீவுகள் எனப்படும் பவளத் தீவுகள்; அந்தமான் கடலில் உள்ள ஒரு எரிமலைச் சங்கிலியான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள். இந்தியாவின் தட்ப வெப்ப நிலையானது இமயமலைகள் மற்றும் தார்ப் பாலைவனத்தால் வலிமையாகத் தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளது. பொருளாதார மற்றும் பண்பாட்டு ரீதியாக திருப்பு முனையாக அமையும் கோடை மற்றும் குளிர் காலப் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை இந்த இரண்டு அமைப்புகளும் கடத்துகின்றன. இமயமலைகள் குளிரான நடு ஆசிய கதபதியக் காற்றுகளை வீசுவதில் இருந்து தடுக்கின்றன. இதே அட்ச ரேகையில் உள்ள பெரும்பாலான இடங்களை விட இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை வெது வெதுப்பாக இவை வைத்துள்ளன. இந்தியாவில் பொழியும் மழையில் பெரும்பாலானவற்றைக் கொடுக்கும் ஈரப்பதமுடைய தென் மேற்கு கோடை காலப் பருவ காற்றுகளை ஈர்க்கும் ஒரு முக்கியமான பங்கை தார்ப் பாலைவனமானது ஆற்றுகிறது. இப்பருவக் காற்றுகள் சூன் மற்றும் அக்டோபருக்கு இடையில் வீசுகின்றன. இந்தியாவில் நான்கு முதன்மையான தட்ப வெப்ப நிலைகள் ஆதிக்கம் மிக்கவையாக உள்ளன: வெப்ப மண்டல ஈரப் பகுதி, வெப்ப மண்டல உலர் பகுதி, துணை வெப்ப மண்டல ஈரப் பகுதி, மற்றும் மலைச் சூழ்நிலைப் பகுதி. 1901 மற்றும் 2018க்கு இடையில் இந்தியாவின் வெப்ப நிலைகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் காலநிலை மாற்றமானது இதற்கான காரணம் எனப் பொதுவாக எண்ணப்படுகிறது. இமயமலை பனிப்பாறைகள் உருகியதானது முக்கியமான இமயமலை ஆறுகளின் ஓடும் வீதத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதில் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளும் அடங்கும். சில சமீபத்திய கணிப்புகளின் படி தற்போதைய நூற்றாண்டின் முடிவில் இந்தியாவில் வறட்சிகளின் எண்ணிக்கை மற்றும் கடுமையானது குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்று கூறுப்படுகிறது. உயிரினப் பல்வகைமை இந்தியா ஒரு பெரும்பல்வகைமை நாடாகும். அதிக உயிரியற் பல்வகைமையைக் கொண்டுள்ள 17 நாடுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல் இதுவாகும். தனியாக இம்மண்ணின் தோன்றலாக அல்லது அகணிய உயிரிகளாகப் பல உயிரினங்களைக் கொண்டுள்ள நாடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. அனைத்துப் பாலூட்டிகளில் 8.6%மும், அனைத்துப் பறவைகளில் 13.7%மும், அனைத்து ஊர்வனவற்றில் 7.9%மும், அனைத்து நீர் நில வாழ்வனவற்றில் 6%மும், அனைத்து மீன்களில் 12.2%மும், மற்றும் அனைத்துப் பூக்கும் தாவரங்களில் 6.0%மும் இந்தியாவை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. இந்தியத் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன. உலகின் 34 உயிரினப் பல்வகைமை மையங்களில் இந்தியா நான்கையும் கூடக் கொண்டுள்ளது அல்லது அதிக அகணியத்தின் இருப்பில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வாழ்விடம் அழிதலைக் காட்டும் பகுதிகளைக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வப் புள்ளி விவரங்களின் படி, இந்தியாவின் காடுகளின் பரப்பளவு 7,13,789 சதுர கிலோமீட்டர் ஆகும். இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 21.71% ஆகும். இது மேலும் மறைப்பு அடர்த்தியின் பரந்த வகைகளாகப் பிரிக்கப்படலாம் அல்லது அதன் மர மறைப்பால் மூடப்பட்ட ஒரு காட்டின் பரப்பளவுக்கு தகவுப் பொருத்த அளவாகப் பிரிக்கப்படலாம். மிக அடர்த்தியான காடு என்பது 70%க்கும் மேற்பட்ட மறைப்பு அடர்த்தியைக் கொண்டதாகும். இந்தியாவின் நிலப்பரப்பில் 3.02%ஐ இது ஆக்கிரமித்துள்ளது. அந்தமான் தீவுகள், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் வடகிழக்கு இந்தியாவின் வெப்ப மண்டல சிறிதளவு ஈரமுள்ள காடுகளில் இவ்வகைப் பிரிவு அதிகமாக உள்ளன. மிதமான அடர்த்தியுடைய காட்டின் மறைப்பு அடர்த்தியானது 40% முதல் 70% வரை இருக்கும். இந்தியாவின் நிலப்பரப்பில் 9.39%ஐ இவ்வகைப் பிரிவானது ஆக்கிரமித்துள்ளது. இமயமலையின் மிதவெப்ப ஊசியிலைக் காடுகள், கிழக்கு இந்தியாவின் சிறிதளவு ஈரமுள்ள இலையுதிர் சால் காடுகள், நடு மற்றும் தென் இந்தியாவின் வறண்ட தேக்குக் காடுகள் இப்பிரிவில் அதிகமாக உள்ளன. வெட்ட வெளிக் காடு என்பதன் மறைப்பு அடர்த்தியானது 10% முதல் 40% வரை உள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பில் 9.26%ஐ இது ஆக்கிரமித்துள்ளது. இந்தியா முள் காடுகளின் இரண்டு இயற்கையான பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் ஒன்று தக்காணப் பீடபூமியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு உடனடியாகக் கிழக்கே அமைந்துள்ளது. மற்றொன்று சிந்து-கங்கைச் சமவெளியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது தற்போது செழிப்பான வேளாண்மை நிலமாக நீர்ப் பாசனத்தால் மாற்றப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் தற்போது வெளியில் தெரிவதில்லை. இந்தியத் துணைக் கண்டத்தின் குறிப்பிடத்தக்க உள்நாட்டு மரங்களில் கசப்புச் சுவையுடைய வேம்பு முக்கியமானதாகும். இது இந்திய கிராமப்புற மூலிகை மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அரச மரம் மொகஞ்சதாரோவின் பண்டைய முத்திரைகளில் காட்டப்பட்டுள்ளது. பாளி திருமுறையின் படி இம்மரத்தின் கீழ் தான் புத்தர் விழிப்படைந்தார். பல இந்திய உயிரினங்கள் இந்தியா 10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தனியாகப் பிரிந்த தெற்கு மீப்பெரும் கண்டமான கோண்டுவானாவைச் சேர்ந்தவற்றின் வழித் தோன்றியவையாகும். ஐரோவாசியாவுடனான இந்தியாவின் இறுதியான மோதலானது உயிரினங்கள் ஒரு பெரும் அளவுக்குப் பரிமாற்றப்படுவதைத் தொடங்கி வைத்தது. எனினும், எரிமலை வெடிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பல உயிரினங்கள் அழிந்து போவதற்குப் பின்னர் காரணமானது. எனினும், பிறகு ஆசியாவிலிருந்து பாலூட்டிகள் இந்தியாவுக்குள் இமயமலையின் பக்கவாட்டில் உள்ள இரண்டு விலங்குப் புவியியல் வழிகள் வழியாக நுழைந்தன. இந்தியப் பாலூட்டிகள் மத்தியில் அவற்றின் அகணியத் தன்மையைக் குறைத்த விளைவை இது ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே இந்தியாவில் அகணிய உயிரினங்களாக 45.8% ஊர்வனவும், 55.8% நீர் நில வாழ்வனவும் இருப்பதற்கு மாறாகப் பாலூட்டிகளில் அகணிய உயிரினங்களாக வெறும் 12.6% மட்டுமே உள்ளன. அகணிய உயிரிகளில் அழிவாய்ப்பு இனங்களாக நீலகிரி மந்தி மற்றும் அழியும் நிலையில் உள்ள இனமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பெத்தோமின் தேரை ஆகியவை உள்ளன. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அழியும் நிலையில் உள்ள இனங்களாகப் பிரிக்கப்பட்டவற்றில் 172 இனங்களை அல்லது 2.9% அருகிய இனங்களை இந்தியா கொண்டுள்ளது. இதில் அருகிய இனங்களான வங்காளப் புலி மற்றும் கங்கை ஆற்று டால்பின் ஆகியவை அடங்கும். மிக அருகிய இனங்களாக சொம்புமூக்கு முதலை, கானமயில் மற்றும் வெண்முதுகுக் கழுகு ஆகியவை உள்ளன. இக்கழுகானது டைக்ளோஃபீனாக் மருந்தை உட்கொண்ட கால்நடைகளின் இறந்த உடலை உண்ணும் போது அதன் உயிருக்கு ஆபத்தாக முடிந்த காரணத்தால் இவை கிட்டத்தட்ட அழிந்து விடும் நிலைக்குச் சென்றன. வேளாண்மைக்கு விரிவாகப் பயன்படுத்துதல் மற்றும் மனிதக் குடியிருப்புகளுக்காக அழிக்கப்படுவதற்கு முன்னர் பஞ்சாபின் காடுகள் வெட்ட வெளிப் புல்வெளிகளுடன் விட்டு விட்டுக் கலந்திருந்தன. இப்புல்வெளிகளில் புல்வாயின் பெரும் மந்தைகள் மேய்ந்தன. வேங்கைப் புலிகளால் இப்புல்வாய்கள் உண்ணப்பட்டன. புல்வாயானது பஞ்சாபில் தற்போது இல்லை. இந்தியாவில் தற்போது மிக அருகிய இனமாக இது உள்ளது. வேங்கைப் புலிகள் இந்தியாவில் அழிந்து விட்டன. சமீபத்திய தசாப்தங்களின் வியாபித்துள்ள மற்றும் சுற்றுச் சூழல் ரீதியாக அழிவை ஏற்படுத்திய மனித ஆக்கிரமிப்பானது இந்தியாவின் உயிரினங்களை மிக அருகியவையாக ஆக்கியுள்ளது. பதிலுக்கு, தேசியப் பூங்காக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் அமைப்பானது 1935இல் முதன் முதலில் நிறுவப்பட்டது. மிகுதியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. 1972இல் இந்தியா முக்கிய காட்டியல்பான இடங்களைப் பாதுகாக்க வன உயிர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது. 1980இல் வனப் பாதுகாப்புச் சட்டமானது இயற்றப்பட்டது. 1988இல் இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா 500க்கும் மேற்பட்ட வன விலங்குச் சரணாலயங்களையும், 18 உயிர்க்கோளக் காப்பகங்களையும் கொண்டுள்ளது. இதில் நான்கு உயிர்க்கோளக் காப்பகங்களின் உலகளாவிய இணையத்தின் பகுதியாக உள்ளன. 75 சதுப்பு நிலங்கள் ராம்சர் சாசனத்தின் கீழ் பதியப்பட்டுள்ளன. அரசியலும், அரசாங்கமும் அரசியல் பல கட்சி அமைப்பையுடைய ஒரு நாடாளுமன்றக் குடியரசான இந்தியா ஆறு அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளைக் கொண்டுள்ளது. இதில் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை அடங்கும். 50க்கும் மேற்பட்ட மாநிலக் கட்சிகளை இந்தியா கொண்டுள்ளது. இந்திய அரசியல் பண்பாட்டில் காங்கிரசு மைய சித்தாந்தக் கட்சியாகவும், பா. ஜ. க. வலதுசாரிக் கட்சியாகவும் கருதப்படுகின்றன. இந்தியா முதன் முதலில் குடியரசான 1950, மற்றும் 1980களின் பிற்பகுதி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பெரும்பாலான காலத்தில் காங்கிரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. எனினும், பிறகு அரசியல் நிலையை இது பா. ஜ. க.வுடன் அதிகரித்து வந்த நிலையாகப் பகிர்ந்து கொண்டிருந்தது. மேலும், இந்த மாநிலக் கட்சிகளால் அடிக்கடி மத்தியில் பல கட்சிக் கூட்டணி அரசுகளை உருவாக்கும் நிலைக்கும் கட்டாயப்படுத்தப்பட்டது. இந்தியக் குடியரசின் முதல் மூன்று பொதுத் தேர்தல்களான 1951, 1957 மற்றும் 1962இல் ஜவகர்லால் நேருவால் தலைமை தாங்கப்பட்ட காங்கிரசானது எளிதான வெற்றிகளைப் பெற்றது. 1964இல் நேருவின் இறப்பின் போது லால் பகதூர் சாஸ்திரி குறுகிய காலத்திற்குப் பிரதம மந்திரியானார். 1966இல் அவரின் எதிர்பாராத இறப்பைத் தொடர்ந்து அவருக்குப் பின் நேருவின் மகளான இந்திரா காந்தி 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் தேர்தல் வெற்றிகளைப் பெற்ற காங்கிரசுக்குத் தலைமை தாங்கினார். 1975இல் இவர் அறிவித்த நெருக்கடி நிலைப் பிரகடனத்தால் ஏற்பட்ட பொது மக்களின் அதிருப்தியைத் தொடர்ந்து 1977இல் காங்கிரசு பதவியில் இருந்து நீக்கப்பட்டது. அப்போது புதிய கட்சியாக இருந்த ஜனதா கட்சி நெருக்கடி நிலையை எதிர்த்திருந்தது. அக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. அந்த அரசாங்கமானது இரண்டு ஆண்டுகளுக்கும் சற்றே மேலான காலத்திற்கு மட்டுமே நீடித்திருந்தது. இக்காலத்தின் போது இரண்டு பிரதம மந்திரிகளான மொரார்ஜி தேசாய் மற்றும் சரண் சிங் ஆகியோர் பதவி வகித்தனர். 1980இல் மீண்டும் பதவிக்கு வந்த காங்கிரசு 1984இல் அதன் தலைமையில் ஒரு மாற்றத்தைக் கண்டது. அப்போது இந்திரா காந்தி அரசியல் கொலை செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு அவரது மகன் இராஜீவ் காந்தி காங்கிரசு தலைவரானார். அதே ஆண்டு பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் எளிதான வெற்றியைப் பெற்றார். 1989ஆம் ஆண்டு காங்கிரசு மீண்டும் பதவியிலிருந்து நீக்கப்பட்டது. அப்போது தேசிய முன்னணிக் கூட்டணியானது புதிதாக உருவாக்கப்பட்ட ஜனதா தளத்தால் தலைமை தாங்கப்பட்டிருந்தது. இதனுடன் இடது சாரிகள் கூட்டணி வைத்தனர். அவர்கள் தேர்தலில் வென்றனர். இந்த அரசாங்கம் ஒப்பீட்டளவில் மிகக் குறுகிய காலத்திற்கே இருந்தது என நிரூபணமானது. இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே இது நீடித்திருந்தது. இக்காலத்தின் போது இரண்டு பிரதம மந்திரிகளான வி. பி. சிங் மற்றும் சந்திரசேகர் பதவி வகித்தனர். 1991ஆம் ஆண்டில் தேர்தல்கள் மீண்டும் நடத்தப்பட்டன. எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மிகப் பெரிய ஒற்றைக் கட்சியான காங்கிரசால் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க முடிந்தது. 1996 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து 2 ஆண்டு கால அரசியல் குழப்ப நிலை வந்தது. மத்தியில் பல குறுகிய காலமே நீடித்திருந்த கூட்டணிகள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டன. 1996இல் குறுகிய காலத்திற்கு பா. ஜ. க. அரசாங்கத்தை அமைத்தது. இதைத் தொடர்ந்து ஒப்பீட்டளவில் நீண்ட காலத்துக்கு நீடித்திருந்த இரண்டு ஐக்கிய முன்னணிக் கூட்டணிகள் ஆட்சி அமைத்தன. இவை வெளியில் இருந்து வந்த ஆதரவைச் சார்ந்திருந்தன. இக்கால கட்டத்தின் போது இரண்டு பிரதமர்களாக தேவ கௌடா மற்றும் ஐ. கே. குஜரால் இருந்தனர். 1998இல் பா. ஜ. க.வால் ஒரு வெற்றிகரமான கூட்டணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியை அடல் பிகாரி வாச்பாய் தலைமையில் அமைக்க முடிந்தது. ஐந்தாண்டு காலத்தை முடித்த காங்கிரசு அல்லாத முதல் கூட்டணி அரசாக தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவானது. 2004இல் மீண்டும் நடந்த இந்திய பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. ஆனால், காங்கிரசு மிகப் பெரிய ஒற்றைக் கட்சியாக உருவாகியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற மற்றுமொரு வெற்றிகரமான கூட்டணியை அமைத்தது. இடதுசாரி கட்சிகள் மற்றும் பா. ஜ. க.வை எதிர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இது கொண்டிருந்தது. 2009 பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது மீண்டும் ஆட்சிக்கு அதிகப்படியான உறுப்பினர்களுடன் வந்தது. இந்தியாவின் பொதுவுடமைக் கட்சிகள் வெளியிலிருந்து தெரிவித்த ஆதரவு இதற்கு தேவைப்படவில்லை. அந்த ஆண்டு மன்மோகன் சிங் 1957 மற்றும் 1962 ஆண்டுகளில் ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு முதல் தொடர்ச்சியான ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதம மந்திரியானார். 2014இல் 1984ஆம் ஆண்டிற்குப் பிறகு பெரும்பான்மை பெற்ற முதல் அரசியல் கட்சியாக பா. ஜ. க. உருவானது. பிற கட்சிகளிடமிருந்து ஆதரவின்றி அரசை அமைத்தது. 2019 பொதுத் தேர்தலில் பா. ஜ. க. மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 2024 பொதுத் தேர்தலில் பா. ஜ. க.வால் பெரும்பான்மை பெற இயலவில்லை. பா. ஜ. க.வால் தலைமை தாங்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியானது அரசாங்கத்தை அமைத்தது. குசராத்தின் முன்னாள் முதலமைச்சரான நரேந்திர மோதி இந்தியாவின் 14வது பிரதம மந்திரியாக தனது மூன்றாவது கால கட்டத்தை மே 26, 2014 முதல் சேவையாற்றி வருகிறார். அரசாங்கம் இந்திய அரசியலமைப்பின் கீழ் ஒரு நாடாளுமன்ற முறை மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு கூட்டாட்சி இந்தியாவாகும். இந்திய அரசியலமைப்பு நாட்டின் உச்சபட்ச சட்ட ஆவணமாக உள்ளது. இந்தியா ஓர் அரசியலமைப்புக் குடியரசு ஆகும். நடுவண் அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வை இந்தியக் கூட்டாட்சி முறையானது வரையறுக்கிறது. 26 சனவரி 1950 அன்று நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்பானது உண்மையில் இந்தியா "ஓர் இறையாண்மையுடைய, சனநாயகக் குடியரசு" என்று குறிப்பிடுகிறது. இந்த இயற்பண்பானது 1971இல் "ஓர் இறையாண்மையுடைய, சமூகவுடைமை, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசு" என்று திருத்தப்பட்டது. இந்தியாவின் அரசாங்க வடிவமானது பாரம்பரியமாக வலிமையான நடுவண் அரசு மற்றும் பலவீனமான மாநில அரசுகள் என்பதுடன் "ஓரளவு-கூட்டாட்சி" என்று விளக்கப்படுகிறது. 1990களின் பிற்பகுதியில் இருந்து அதிகப்படுத்தப்பட்ட வகையில் கூட்டாட்சி முறையானது வளர்ந்துள்ளது. இது அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களின் ஒரு விளைவாகும். இந்திய அரசாங்கமானது மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது: செயலாட்சி: இந்தியக் குடியரசுத் தலைவர் பெயரளவில் நாட்டின் தலைவராக உள்ளார். இவர் தேசிய மற்றும் மாநில சட்ட அவைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வாக்காளர் குழுவால் ஒரு ஐந்தாண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்தியப் பிரதமர் அரசின் தலைவராக உள்ளார். பெரும்பான்மையான செயல் அதிகாரத்தை அவர் கொண்டுள்ளார். இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். மரபின் படி நாடாளுமன்றத்தின் கீழவையில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அல்லது அரசியல் கூட்டணியால் பிரதமர் ஆதரிக்கப்படுகிறார். இந்திய அரசாங்கத்தின் செயலாட்சிப் பிரிவானது குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ளது. அமைச்சரவைக்குப் பிரதமர் தலைமை தாங்குகிறார். அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்கள் செயலதிகாரம் உடையவர்களாக உள்ளனர். பதவியில் உள்ள எந்த ஓர் அமைச்சரும் நாடாளுமன்றத்தின் ஏதாவது ஓர் அவையின் உறுப்பினராகக் கட்டாயம் இருக்க வேண்டும். இந்திய நாடாளுமன்ற அமைப்பில் செயலாட்சிப் பிரிவானது சட்ட அவைக்குக் கீழ்ப்படிந்தாக உள்ளது. பிரதமர் மற்றும் அமைச்சரவையானது நாடாளுமன்றத்தின் கீழவைக்கு நேரடியாக பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக உள்ளனர். குடியியல் சேவையாளர்கள் நிரந்தரமான செயலதிகாரம் உடையவர்களாகச் செயல்படுகின்றனர். செயலாட்சியின் அனைத்து முடிவுகளும் இவர்களால் செயல்படுத்தப்படுகின்றன. சட்டவாக்க அவை: இந்தியாவின் சட்ட அவையானது ஈரவை முறைமையை உடைய நாடாளுமன்றம் ஆகும். ஒரு வெஸ்ட்மின்ஸ்டர் பாணி மக்களாட்சி முறைமையை உடைய நாடாளுமன்ற அமைப்பின் கீழ் இது செயல்படுகின்றது. இது மாநிலங்களவை என்று அழைக்கப்படும் ஒரு மேலவையையும், மக்களவை என்றழைக்கப்படும் ஒரு கீழவையையும் உள்ளடக்கியதாக உள்ளது. மாநிலங்களவை என்பது 245 உறுப்பினர்களை உடைய ஒரு நிரந்தர அவையாகும். இதன் உறுப்பினர்கள் 6 ஆண்டு காலத்திற்குச் சேவையாற்றுகின்றனர். ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதற்குத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலானவர்கள் மாநில மற்றும் நடுவண் அரசின் சட்ட அவைகளால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேசிய மக்கள் தொகையில் அவர்களது மாநிலத்தின் பங்குக்கு தாகவுப் பொருத்தமுள்ள எண்ணிக்கையில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மக்களவையின் 545 உறுப்பினர்களில் இருவரைத் தவிர மற்ற அனைவரும் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஒற்றை உறுப்பினர் உடைய தொகுதிகளை இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மக்களவையின் இரு உறுப்பினர் இடங்கள் பிரிவு 331இன் கீழ் ஆங்கிலோ இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டதாகும். இவை தற்போது நீக்கப்பட்டு விட்டன. நீதித்துறை: இந்தியா ஒரு மூன்றடுக்கு, ஒற்றை, சுதந்திரமான நீதித் துறையைக் கொண்டுள்ளது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் தலைமை தாங்கப்படும் உச்சநீதிமன்றம், 25 உயர் நீதிமன்றங்கள் மற்றும் ஒரு பெரும் எண்ணிக்கையிலான விசாரணை நீதிமன்றங்கள் உள்ளடங்கியுள்ளன. அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள், மாநிலங்கள் மற்றும் நடுவண் அரசுக்கு இடையிலான பிரச்சினைகள் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கான மேல் முறையீடு போன்றவற்றின் மீது உண்மையான நீதி அதிகாரத்தை உச்சநீதிமன்றம் கொண்டுள்ளது. அரசியலமைப்புக்கு மாறாக உள்ள நடுவண் அல்லது மாநிலச் சட்டங்களை செல்லாததாக்கவும், அரசியலமைப்புக்கு எதிரானது என்று எண்ணும் எந்த ஓர் அரசாங்கத்தின் செயலையும் செல்லாததாக்கவும் உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. நிர்வாகப் பிரிவுகள் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகளை உடைய இந்தியா ஒரு கூட்டாட்சி ஒன்றியம் ஆகும். சம்மு மற்றும் காசுமீர், புதுச்சேரி மற்றும் தில்லி தேசியத் தலைநகரப் பகுதி ஆகியவற்றுடன் அனைத்து மாநிலங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவைகளையும், வெஸ்ட்மின்ஸ்டர் பாணி அமைப்பைப் பின்பற்றும் அரசாங்கங்களையும் கொண்டுள்ளன. எஞ்சிய ஐந்து ஒன்றியப் பகுதிகள் நேரடியாக நடுவண் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மூலம் ஆட்சி செய்யப்படுகின்றன. 1956ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் மாநிலங்கள் மொழியின் அடிப்படையில் மறு ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டன. நகரம், பட்டணம், வட்டாரம், மாவட்டம் மற்றும் கிராம நிலைகளில் 2.50 இலட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் அரசாங்க அமைப்புகள் உள்ளன. மாநிலங்கள் ஒன்றியப் பகுதிகள் அயல்நாட்டு, பொருளாதார மற்றும் உத்தி ரீதியிலான உறவு முறைகள் 1950களில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் குடியேற்ற விலக்கத்திற்கு இந்தியா வலிமையான ஆதரவளித்தது. கூட்டுசேரா இயக்கத்தில் ஒரு முன்னணிப் பங்காற்றியது. அண்டை நாடான சீனாவுடன் சுமூகமான தொடக்க கால உறவுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையில் 1962ஆம் ஆண்டு போர் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1967இல் மற்றுமொரு இராணுவச் சண்டை வந்தது. இதில் இந்தியா வெற்றிகரமாக சீனத் தாக்குதலை முறியடித்தது. இந்தியா அண்டை நாடான பாக்கித்தானுடன் பதட்டமான உறவு முறைகளைக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் நான்கு முறை போரிட்டுள்ளன. அவை 1947, 1965, 1971 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகள் ஆகும். இதில் மூன்று போர்கள் காசுமீரைச் சார்ந்ததாக அமைந்தது. மூன்றாவது போரான 1972ஆம் ஆண்டுப் போர் வங்காள தேசத்தின் சுதந்திரத்திற்கு இந்தியா ஆதரவளிப்பதில் முடிந்தது. 1980களின் பிற்பகுதியில் இந்திய இராணுவமானது இரு முறை ஒரு நாட்டின் அழைப்பின் பேரில் எல்லை தாண்டித் தலையிட்டுள்ளது. 1987 மற்றும் 1990க்கு இடையில் இலங்கையில் அமைதி காக்கும் படையாகவும், மாலத்தீவுகளில் 1988ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தடுக்கும் ஓர் ஆயுதம் ஏந்திய தலையீட்டிலும் பங்கெடுத்துள்ளது. 1965ஆம் ஆண்டு பாக்கித்தான் போருக்குப் பிறகு இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளைப் பின்பற்ற ஆரம்பித்தது. 1960களின் பிற்பகுதியில் சோவியத் ஒன்றியம் இந்தியாவின் மிகப் பெரிய ஆயுத வழங்குநராகத் திகழ்ந்தது. உருசியாவுடனான இதன் தற்போதுள்ள தனிச் சிறப்புமிக்க உறவு முறையைத் தவிர்த்து இந்தியா பரவலான பாதுகாப்பு உறவு முறைகளை இசுரேல் மற்றும் பிரான்சுடன் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு மற்றும் உலக வணிக அமைப்பு ஆகியவற்றில் இது முக்கியமான பங்கை ஆற்றியுள்ளது. நான்கு கண்டங்களில் 35 ஐ. நா. அமைதி நடவடிக்கைகளில் சேவையாற்ற இந்தியா 1 இலட்சம் இராணுவ மற்றும் காவல் துறையினரைக் கொடுத்துள்ளது. கிழக்கு ஆசிய கூட்டமைப்பு, ஜி8+5, மற்றும் பிற பன்னாட்டு அவைகளில் இது பங்கெடுத்துள்ளது. தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுடன் இந்தியா நெருக்கமான பொருளாதார உறவு முறைகளைக் கொண்டுள்ளது. இந்தியா கீழ்த்திசை கவனக்குவிப்பு கொள்கையைப் பின்பற்றுகிறது. ஆசியான் நாடுகள், சப்பான் மற்றும் தென் கொரியாவுடனான நட்பை வலுப்படுத்த இக்கொள்கை வேண்டுகிறது. இக்கொள்கையானது பல விவகாரங்களைச் சுற்றி அமைந்ததாக உள்ளது. ஆனால், குறிப்பாக பொருளாதார முதலீடு மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு ஆகியவற்றைச் சார்ந்ததாக உள்ளது. 1964ஆம் ஆண்டு சீனா நடத்திய அணு ஆயுதச் சோதனை மற்றும் 1965ஆம் ஆண்டு போரில் பாக்கித்தானுக்கு ஆதரவாகத் தலையிடும் என்ற அதன் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் ஆகியவை அணு ஆயுதங்களை உருவாக்க இந்தியாவை இணங்க வைத்தது. 1974இல் இந்தியா அதன் முதல் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. 1998இல் மேற்கொண்ட தரைக்குக் கீழான சோதனையையும் நடத்தியது. விமர்சனம் மற்றும் இராணுவத் தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதும் இந்தியா முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு அல்லது அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் ஆகிய இரண்டிலுமே கையொப்பமிடவில்லை. இந்த இரு உடன்பாடுகளுமே குறைபாடுடையவை மற்றும் பாரபட்சமுடையவையாக இருப்பதாக இந்தியா கருதுகிறது. அணு ஆயுதத்தை "முதல் முறை பயன்படுத்த மாட்டோம்" என்ற அணு ஆயுதக் கொள்கையை இந்தியா பேணி வருகிறது. குண்டு வீச்சு விமானங்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஆகியவற்றின் மூலம் அணு ஆயுதங்களை ஏவும் மும்முனை ஆற்றலை அதன் "இந்தியாவின் நம்பகத்தன்மை உடைய குறைந்தபட்ச கட்டுப்பாடு" கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியா உருவாக்கி வருகிறது. ஒரு தொலை தூர ஏவுகணைத் தற்காப்பு அமைப்பு மற்றும் ஐந்தாம் தலை முறை தாக்குதல் விமானம் ஆகியவற்றை இந்தியா உருவாக்கி வருகிறது. விக்ராந்த் வகை விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் அரிகாந்த் வகை நீர் மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றை வடிவமைத்து உருவாக்கும் பிற உள்நாட்டு இராணுவத் திட்டங்களில் இந்தியா பங்கெடுத்துள்ளது. பனிப் போரின் முடிவில் இருந்து இந்தியா ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தன் பொருளாதார, உத்தி ரீதியிலான, மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அதிகரித்துள்ளது. 2008இல் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இடையில் ஒரு குடிசார் அணு ஆயுத ஒப்பந்தமானது கையொப்பமிடப்பட்டது. இந்தியா அந்நேரத்தில் அணு ஆயுதங்களைக் கொண்டிருந்தது மற்றும் அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் பங்கெடுக்காத நாடாக இருந்த போதிலும் பன்னாட்டு அணுசக்தி முகமையகம் மற்றும் அணுவாற்றல் வழங்குவோர் குழுமம் ஆகியவற்றிடமிருந்து விலக்குகளை பெற்றது. இந்தியாவின் அணு ஆயுதத் தொழில் நுட்பம் மற்றும் வணிகம் மீதான முந்தைய கட்டுப்பாடுகளை இது முடித்து வைத்தது. இதன் விளைவாக இந்தியா நடைமுறை ரீதியில் ஆறாவது அணு ஆயுத நாடாக உருவானது. குடிசார் அணு எரிசக்தியுடன் தொடர்புடைய ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை உருசியா, பிரான்சு, ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் இந்தியா இதைத் தொடர்ந்து கையொப்பமிட்டது. நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு உச்சபட்ச தலைவராக இந்தியக் குடியரசுத் தலைவர் உள்ளார். 14.50 இலட்சம் செயல்பாட்டிலுள்ள துருப்புகளுடன் இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது. இந்திய இராணுவமானது தரைப்படை, கடற்படை, வான்படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. 2011ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ இந்தியப் பாதுகாப்புச் செலவீனமானது அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.83% ஆகும். 2022-23 நிதியாண்டுக்குப் பாதுகாப்புச் செலவீனமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டை விட இது 9.8% அதிகரிப்பாகும். இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ளது. 2016 மற்றும் 2020க்கு இடையில் ஒட்டு மொத்த உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 9.5%ஐ இந்தியா கொண்டிருந்தது. பெரும்பாலான இராணுவச் செலவீனமானது பாக்கித்தானுக்கு எதிரான தற்காப்பு மற்றும் இந்தியப் பெருங்கடலில் வளர்ந்து வரும் சீனச் செல்வாக்கை எதிர் கொள்வது ஆகியவற்றை கவனக் குவியமாகக் கொண்டுள்ளது. மே 2017இல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமானது ஜிசாட்-9 என்ற செயற்கைக் கோளை ஏவியது. இந்தியாவிடம் இருந்து அதன் அண்டை நாடுகளான தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு நாடுகளுக்கு இது ஒரு பரிசாகும். அக்தோபர் 2018இல் இந்தியா உருசியாவுடன் மதிப்புடைய ஒப்பந்தத்தை நான்கு எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்காகக் கையொப்பமிட்டது. இவை தரையில் இருந்து வானில் உள்ள ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தற்காப்பு அமைப்புகளாகும். உருசியாவின் மிக முன்னேறிய நீண்ட தூர ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு இதுவாகும். பொருளாதாரம் அனைத்துலக நாணய நிதியத்தின் மதிப்பீட்டின் படி 2024இல் இந்தியப் பொருளாதாரமானது பெயரளவு மதிப்பாக ஐக் கொண்டிருந்தது. சந்தை பரிமாற்ற வீதங்களின் படி இது ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாகும். கொள்வனவு ஆற்றல் சமநிலையின் படி மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக சுமார் மதிப்புடையதாக உள்ளது. கடந்த இரு தசாப்தங்களாக சராசரி ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமான 5.8%ஐ இது கொண்டுள்ளது. 2011-2012 காலத்தின் போது 6.1%ஐ அடைந்தது. உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாகும். எனினும், இதன் குறைவான சராசரி தனி நபர் வருமானத்தின் காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருமானக் குழுவில் வந்து விடுகின்றனர். இந்தியாவின் சராசரி தனி நபர் வருமானமானது பெயரளவில் உலகிலேயே 136வது இடத்தையும், கொள்வனவு ஆற்றல் சமநிலையின் படி 125வது இடத்தையும் பெறுகிறது. 1991 வரை அனைத்து இந்திய அரசாங்கங்களும் பாதுகாப்புவாதப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றின. இக்கொள்கைகள் பொதுவுடமைவாதப் பொருளாதாரக் கொள்கைகளால் தாக்கம் பெற்றிருந்தன. பரவலான அரசின் தலையீடு மற்றும் ஒழுங்குபடுத்தும் செயலானது வெளி உலகில் இருந்து பொருளாதாரத்தைப் பெரும்பாலும் சுவரால் தடுத்திருந்தது போல இருந்தது. 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிரமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணத் தொகைக்கு இடையே உள்ள வேறுபாடானது நாட்டை அதன் பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கும் நிலைக்குத் தள்ளியது. அன்றிலிருந்து இது அதிகரித்து வந்த நிலையாக ஒரு கட்டற்ற சந்தை அமைப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. அயல் நாட்டு வணிகம் மற்றும் நேரடி உள்நாட்டு முதலீடுகளுக்கு முக்கியத்துவம் தருகிறது. 1 சனவரி 1995இல் இருந்து உலக வணிக அமைப்பின் உறுப்பினராக இந்தியா உள்ளது. 2017ஆம் ஆண்டில் 52.20 கோடி பணியாளர்களைக் கொண்ட இந்தியாவின் பணியாட்கள் படையானது உலகின் இரண்டாவது மிகப் பெரியதாகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறை 55.6%யும், தொழில் துறை 26.3%யும், வேளாண்மைத் துறை 18.1%யும் கொண்டுள்ளது. 2022இல் இந்தியாவின் அந்நியா செலாவணி செலுத்துதல்களானவை ஆக இருந்தது. இது உலகிலேயே மிக அதிகமான செலுத்துதல் தொகையாகும். அயல் நாடுகளில் பணியாற்றிய 3.2 கோடி இந்தியர்களால் இதன் பொருளாதாரத்திற்கு இது பங்களிக்கப்பட்டது. அரிசி, கோதுமை, எண்ணெய் வித்துக்கள், பருத்தி, சணல், தேயிலை, கரும்பு மற்றும் உருளைக் கிழங்குகள் உள்ளிட்டவை முதன்மையான வேளாண்மை உற்பத்திப் பொருட்களாக உள்ளன. ஜவுளி, தொலைத் தொடர்புகள், வேதிப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயிரித் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், எஃகு, போக்குவரத்து உபகரணங்கள், சிமென்ட், சுரங்கம், பெட்ரோலியம், எந்திரங்கள் மற்றும் மென்பொருள் உள்ளிட்டவை முதன்மையான தொழில் துறைகளாக இருந்தன. 2006இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளி நாட்டு வணிகத்தின் பங்கானது 24% ஆக இருந்தது. 1985இல் இருந்த 6%இல் இருந்து இது ஓர் அதிகரிப்பாகும். 2008இல் உலக வணிகத்தில் இந்தியாவின் பங்களிப்பானது 1.7%ஆக இருந்தது. 2021இல் இந்தியா உலகின் ஒன்பதாவது மிகப் பெரிய இறக்குமதியாளராகவும், 16வது மிகப் பெரிய ஏற்றுமதியாளராகவும் இருந்தது. பெட்ரோலியப் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள், ஆபரணங்கள், மென்பொருள், பொறியியல் பொருட்கள், வேதிப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட தோல் பொருட்கள் உள்ளிட்டவை முதன்மையான ஏற்றுமதிப் பொருட்களாக இருந்தன. கச்சா எண்ணெய், எந்திரங்கள், இரத்தினங்கள், உரங்கள் மற்றும் வேதிப் பொருட்கள் உள்ளிட்டவை முதன்மையான இறக்குமதிப் பொருட்களாக இருந்தன. 2001 மற்றும் 2011க்கு இடையில் மொத்த ஏற்றுமதியில் பெட்ரோலிய வேதியல் மற்றும் பொறியியல் பொருட்களின் பங்கானது 14%லிருந்து 42%ஆக அதிகரித்தது. 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஜவுளி ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்கிறது. 2007ஆம் ஆண்டுக்கு முந்தைய பல ஆண்டுகளுக்குப் பொருளாதார வளர்ச்சி வீதமாக 7.5%ஐ சராசரியாகக் கொண்டிருந்த இந்தியா 21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் போது அதன் ஒரு மணிக்கான சம்பள வீதங்களை இரண்டு மடங்குக்கும் அதிகமாக ஆகியுள்ளது. 1985இலிருந்து சுமார் 43.1 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். 2030ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் சுமார் 58 கோடிப் பேராக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய போட்டித் திறனில் 68வது இடத்தைக் கொண்டிருந்தாலும், 2010ஆம் ஆண்டு நிலவரப் படி, இந்தியா நிதிச் சந்தை நுட்பத் திறனில் 17வது இடத்தையும், வங்கித் துறையில் 24வது இடத்தையும், வணிக நுட்பத் திறனில் 44வது இடத்தையும், புதுமைகள் உருவாக்கத்தில் 39வது இடத்தையும் பல முன்னேறிய பொருளாதாரங்களுக்கு முந்தியதாகக் கொண்டுள்ளது. உலகின் முதல் 15 தகவல் தொழில் நுட்பப் பணிகளை எடுத்துச் செய்யும் நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் இந்தியாவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. 2009ஆம் ஆண்டு நிலவரப் படி ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது மிக விரும்பத்தக்க பணிகளை எடுத்துச் செய்யும் இடமாக இந்தியா பார்க்கப்படுகிறது. 2024இல் உலகளாவிய புதுமையை உருவாக்கும் பட்டியலில் இந்தியா 39வது இடத்தைப் பெற்றது. 2023ஆம் ஆண்டு கணக்குப் படி இந்தியாவின் நுகர்வோர் சந்தையானது உலகின் ஐந்தாவது மிகப் பெரியதாகும். வளர்ச்சியால் உந்தப்பட்டதால் இந்தியாவின் பெயரளவு தனி நபர் வருமானமானது பொருளாதாரத் தாராளமயமாக்கல் தொடங்கிய 1991இல் நிலையாக லிருந்து 2010இல் ஆக அதிகரித்தது. 2024இல் இது ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026இல் ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற பிற ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளின் தனி நபர் வருமானத்தை விட இது தொடர்ந்து குறைவானதாகவே உள்ளது. அருகில் உள்ள எதிர் காலத்திலும் இவ்வாறே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சுவின் அறிக்கையின் படி கொள்வனவு ஆற்றல் சமநிலையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்தை 2045இல் முந்தும் என்று குறிப்பிடப்பட்டது. அடுத்த நான்கு தசாப்தங்களின் போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஆண்டுக்குச் சராசரியாக 8% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2050ஆம் ஆண்டு வரை உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியாவை இது ஆக்குவதற்கு வாய்ப்புள்ளது. இந்த அறிக்கையானது முக்கியமான வளர்ச்சிக் காரணிகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது: ஓர் இளம் மற்றும் வேகமாக வளரும் பணி செய்யும் வயதுடைய மக்கள்; அதிகரித்து வரும் கல்வி மற்றும் பொறியியல் திறன் நிலைகளின் காரணமாக உற்பத்தித் துறையில் ஏற்படும் வளர்ச்சி; வேகமாக வளரும் நடுத்தர வர்க்கத்தினரால் உந்தப்படும் நுகர்வோர் சந்தையின் நிலையான வளர்ச்சி. இந்தியா அதன் பொருளாதார உள்ளார்ந்த ஆற்றலைச் சாதிக்க அது பொதுப் பணித் துறை சீர்திருத்தம், போக்குவரத்து உட்கட்டமைப்பு, வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி, பணியாளர் ஒழுங்கு முறைகளை நீக்குதல், கல்வி, எரிசக்திப் பாதுகாப்பு, மற்றும் பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றின் மீது தொடர்ந்து கவனக் குவியத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று உலக வங்கி அறிவுறுத்துகிறது. 2017ஆம் ஆண்டின் உலகளாவிய வாழ்க்கை முறை விலை வாசி அறிக்கையின் படி மிகவும் செலவு குறைவான நகரங்களில் நான்கு இந்தியாவில் உள்ளன: பெங்களூர் (3ஆம்), மும்பை (5ஆம்), சென்னை (5ஆம்) மற்றும் புது தில்லி (8ஆம்) இடம் பிடித்தன. இந்த அறிக்கையானது பொருளாதார உளவியல் பிரிவால் வெளியிடப்பட்டது. 400க்கும் மேற்பட்ட தனியான விலை வாசிகளை 160 பொருட்கள் மற்றும் சேவைகளுடன் கணக்கிட்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டது. தொழில் துறைகள் இந்தியாவின் தொலைத் தொடர்புத் தொழில் துறையானது உலகின் இரண்டாவது மிகப் பெரியதாகும். இது 120 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 6.5% பங்களிப்பை இது அளிக்கிறது. 2017ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்காவை இந்தியா முந்தி உலகின் இரண்டாவது மிகப் பெரிய திறன் பேசிச் சந்தையாக உருவானது. முதல் இடத்தில் சீனா உள்ளது. இந்தியாவின் தானுந்துத் தொழில் துறையானது உலகின் இரண்டாவது மிக வேகமாக வளரும் தானுந்து தொழில் துறையாக உள்ளது. 2009-2010ஆம் ஆண்டின் போது உள்நாட்டு விற்பனையை 26% இது அதிகரித்தது. 2008-2009ஆம் ஆண்டு ஏற்றுமதியில் 36%ஐ அதிகரித்தது. 2022இல் சப்பானை முந்தி சீனா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மூன்றாவது மிகப் பெரிய வாகனச் சந்தையாக இந்தியா உருவானது. 2011ஆம் ஆண்டின் முடிவில் இந்தியத் தகவல் தொழில் நுட்பத் தொழில் துறையானது 28 இலட்சம் திறத் தொழிலாளர்களைக் கொண்டிருந்தது. க்கு நெருக்கமான வருவாய்களை ஈட்டியது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5%க்குச் சமமானதாகும். இந்தியாவின் பொருள் ஏற்றுமதியில் 26%க்கு இது பங்களித்தது. இந்தியாவின் மருந்துத் தொழில் துறையானது உலகளாவிய ஒரு துறையாக உருவானது. 2022ஆம் ஆண்டு நிலவரப் படி 3,000 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் 10,500 உற்பத்திப் பிரிவுகளுடன் இந்தியா உலகின் மூன்றாவது மிகப் பெரிய மருந்து உற்பத்தியாளராகவும், பொதுவான மருந்துகளின் மிகப் பெரிய உற்பத்தியாளராகவும், உலகளாவிய தடுப்பூசித் தேவையில் 50-60%ஐ வழங்கும் நாடாகவும் உள்ளது. இவை அனைத்தும் ஏற்றுமதியில் களுக்குப் பங்களிக்கின்றன. இந்தியாவின் உள்நாட்டு மருந்துச் சந்தையானது வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. உலகின் முதல் 12 உயிரித் தொழில் நுட்ப இடங்களில் இந்தியா உள்ளது. இந்திய உயிரித் தொழில் நுட்பத் தொழில் துறையானது 2012-2013ஆம் ஆண்டில் 15.1% அதிகரித்தது. அதன் வருவாய்களை 20,440 கோடியிலிருந்து 23,524 கோடியாக (சூன் 2013 நிதிப் பரிமாற்ற வீதங்களின் படி ஐஅ$3.94 பில்லியன்) அதிகரித்தது. ஆற்றல் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தித் திறனானது 300 கிகா வாட்டுகள் ஆகும். இதில் 42 கிகா வாட்டுகள் புதுப்பிக்கத்தக்கவையாகும். இந்தியாவால் வெளியிடப்படும் புவியைச் சூடேற்றும் வாயு வெளியீடுகளுக்கான ஒரு முதன்மையான காரணமாக நிலக்கரியைப் பயன்படுத்துவது உள்ளது. ஆனால், இதன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனானது அதிகரித்து வருகிறது. உலகின் புவியைச் சூடேற்றும் வாயு வெளியீட்டில் சுமார் 7%ஐ இந்தியா வெளியிடுகிறது. ஓராண்டுக்கு ஒரு நபரால் 2.5 டன் கார்பனீராக்சைடு வெளியிடப்படுவதற்கு இது சமமானதாகும். உலக சராசரியில் இது பாதி அளவாகும். இந்தியாவில் ஆற்றலுக்கான முக்கியத்துவம் வாய்ந்தவையாக மின்சாரத்திற்கான வாய்ப்பு அதிகரிப்பு மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவின் மூலம் தூய்மையான முறையில் சமைத்தல் ஆகியவை உள்ளன. சமூக-பொருளாதாரச் சவால்கள் சமீபத்திய தசாப்தங்களின் போது பொருளாதார வளர்ச்சி இருந்த போதிலும் இந்தியா தொடர்ந்து சமூக-பொருளாதாரச் சவால்களை எதிர் கொண்டுள்ளது. 2006ஆம் ஆண்டில் உலக வங்கியின் சர்வதேச வறுமைக் கோடான ஒரு நாளைக்கு க்குக் கீழான தொகையை வருமானமாகக் கொண்டு வாழும் மக்களில் பெரும்பாலான எண்ணிக்கையிலானோரை இந்தியா கொண்டிருந்தது. 1981இல் 60%லிருந்து 2005ஆம் 42%ஆக இந்தியாவின் பங்கு குறைந்தது. உலக வங்கியின் பிந்தைய திருத்தி அமைக்கப்பட்ட வறுமைக் கோட்டின் படி 2011இல் இந்தியாவின் பங்கு 21%ஆக இருந்தது. ஐந்து வயதுக்குட்பட்ட இந்தியாவின் குழந்தைகளில் 30.7% குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. 2015ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை பாதுகாப்பு அமைப்பின் அறிக்கையின் படி மக்களில் 15% பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் இலவச மதிய உணவுத் திட்டமானது இந்த வீதங்களைக் குறைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஒரு 2018ஆம் ஆண்டு வாக் பிரீ அமைப்பின் அறிக்கையானது இந்தியாவில் கிட்டத்தட்ட 80 இலட்சம் மக்கள் தற்கால அடிமை முறைகளின் பல்வேறு வடிவங்களான கொத்தடிமை முறை, குழந்தைத் தொழிலாளர், மனிதர்கள் கடத்தப்படுதல், மற்றும் கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைத்தல் மற்றும் பிற வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று மதிப்பிட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 1.01 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். 2001ஆம் ஆண்டின் 1.26 கோடி என்ற அளவிலிருந்து 26 இலட்சம் குறைவான அளவு இதுவாகும். 1991ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையிலான பொருளாதார சமமற்ற நிலையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. 2007இல் செழிப்பான மாநிலங்களின் தனி நபர் வருமானமானது ஏழ்மையான மாநிலங்களைப் போல் 3.2 மடங்காக இருந்தது. இந்தியாவில் ஊழலானது குறைந்து விட்டது என்று கருதப்படுகிறது. ஊழல் மலிவுச் சுட்டெண்ணின் படி, 2018இல் 180 நாடுகளில் 78வது இடத்தை இந்தியா பெற்றது. 100க்கு 41 மதிப்பெண்களைப் பெற்றது. 2014இல் இருந்த 85வது இடத்தில் இருந்து இது ஒரு முன்னேற்றமாகும். மக்கள் தொகை, மொழிகள் மற்றும் சமயம் 2023இல் 142,86,27,663 குடியிருப்பவர்களைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதன் படி இந்தியாவானது உலகின் மிக அதிக மக்கள் தொகையுடைய நாடாகும். 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 121,01,93,422 குடியிருப்பவர்கள் குறிப்பிடப்பட்டிருந்தனர். 2001லிருந்து 2011 வரை இந்தியாவின் மக்கள் தொகையானது 17.64% அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய தசாப்தத்துடன் (1991-2001) ஒப்பிடும் போது இது 21.54% சதவீத வளர்ச்சியாகும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மனித பாலின விகிதமானது 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்றுள்ளது. 2020இல் சராசரி வயது 28.7ஆக உள்ளது. காலனித்துவ காலத்திற்குப் பிந்தைய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. 36.10 கோடி மக்கள் இருந்ததாகக் கணக்கிடப்பட்டது. கடைசி 50 ஆண்டுகளில் அடையப்பட்ட மருத்துவ முன்னேற்றங்கள், மேலும் "பசுமைப் புரட்சியால்" கொண்டு வரப்பட்ட அதிகப்படியான வேளாண்மை உற்பத்தியானது இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக வளரக் காரணமாகி உள்ளது. இந்தியாவில் சராசரி ஆயுட் காலமானது 70 ஆண்டுகளாக உள்ளது. பெண்களுக்கு 71.50 ஆண்டுகளாகவும், ஆண்களுக்கு 68.70 ஏழு ஆண்டுகளாகவும் உள்ளது. 1 இலட்சம் மக்களுக்கு சுமார் 93 மருத்துவர்கள் இங்கு உள்ளனர். இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் முக்கியமான செயல்பாடாக கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு நடைபெறும் இடம் பெயர்வு உள்ளது. 1991 மற்றும் 2001க்கு இடையில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கையானது 31.2% அதிகரித்தது. இருந்தும் 2001இல் 70%க்கும் மேற்பட்டோர் இன்னும் கிராமப்புறப் பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 27.81%ஆக இருந்த நகரமயமாக்கலின் நிலையானது 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது 31.16%ஆக இருந்தது. ஒட்டு மொத்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் வேகம் குறைந்ததற்குக் காரணமானது 1991இல் இருந்து கிராமப்புறப் பகுதிகளில் வளர்ச்சி வீதத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியே ஆகும். 2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 5.30 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட நகர்ப்புறக் குடும்பங்கள் உள்ளன. இவற்றில் மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஐதராபாத்து (இந்தியா) மற்றும் அகமதாபாது ஆகியவை மக்கள் தொகைக் குறைவின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு கல்வியறிவு வீதமானது 74.04%ஆக இருந்தது. பெண்களுக்கு 65.46%ஆகவும், ஆண்களுக்கு 82.14%ஆகவும் இருந்தது. கிராமப்புற-நகர்ப்புற கல்வியறிவு இடைவெளியானது 2001இல் 21.2%லிருந்து 2011ஆம் ஆண்டு 16.1%ஆகக் குறைந்தது. கிராமப்புறக் கல்வியறிவு வீதத்தின் முன்னேற்றமானது நகர்ப்புறப் பகுதிகளில் உள்ளதைப் போல இரு மடங்காக இருந்தது. கேரளம் இந்தியாவிலேயே மிக அதிகக் கல்வியறிவு பெற்ற மாநிலமாக 93.91% கல்வியறிவுடன் உள்ளது. பீகார் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கல்வியறிவு வீதமாக 63.82%ஐக் கொண்டுள்ளது. இந்திய மொழிகளைப் பேசுபவர்களில் 74% பேர் இந்திய-ஆரிய மொழிகளையும், 24% பேர் திராவிட மொழிகளையும் பேசுகின்றனர். இந்திய-ஆரிய மொழிகளானவை இந்திய-ஐரோப்பிய மொழிகளின் கிழக்கு கோடி பிரிவாகும். திராவிட மொழிகாளானவை தெற்காசியாவைப் பூர்வீகமாக உடையதாகும். இந்திய-ஆரிய மொழிகள் பரவுவதற்கு முன்னர் பரவலாக இம்மொழிகள் பேசப்பட்டன. 2% பேர் ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் அல்லது சீன-திபெத்திய மொழிகளைப் பேசுகின்றனர். இந்தியாவுக்கு தேசிய மொழி கிடையாது. அதிகப்படியான எண்ணிக்கையிலானவர்கள் இந்தியைப் பேசுகின்றனர். இந்தியானது அரசாங்கத்தின் அலுவல் மொழியாக உள்ளது. வணிகம் மற்றும் நிர்வாகத்தில் பரவலாக ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு "துணை அலுவல் மொழி" என்ற நிலையை ஆங்கிலம் கொண்டுள்ளது. கல்வியில், குறிப்பாக உயர் கல்வியின் மொழியாக ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாநிலமும், ஒன்றியப் பகுதியும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலுவல் மொழிகளைக் கொண்டுள்ளன. அரசியலமைப்பானது 22 "அட்டவணை மொழிகளுக்கு" அங்கீகாரம் கொடுக்கின்றது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது அதிகப் படியான பின்பற்றாளர்களைக் கொண்ட இந்திய சமயமாக இந்து சமயத்தையும் (மக்கள் தொகையில் 79.80%), அதைத் தொடர்ந்து இசுலாம் (மக்கள் தொகையில் 14.23%); எஞ்சியோர் கிறித்தவ சமயத்தையும் (2.30%), சீக்கியம் (1.72%), பௌத்தம் (0.70%), சைனம் (0.36%) மற்றும் பிறர் (0.9%) சம்யங்களைப் பின்பற்றுகின்றனர். உலகிலேயே இந்தியா மூன்றாவது மிகப் பெரிய முசுலிம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. முசுலிம்கள் பெரும்பான்மையினராக இல்லாத ஒரு நாட்டின் மிக அதிகப்படியான மக்கள் தொகை இதுவாகும். பண்பாடு இந்தியாவின் பண்பாட்டு வரலாறானது 4,500 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவடைந்துள்ளது. வேத காலத்தின் () போது இந்து மெய்யியல், தொன்மவியல், இறையியல் மற்றும் இலக்கியத்திற்கான அடித்தளங்கள் அமைக்கப்பட்டன. தருமம், கர்மம், யோகா மற்றும் மோச்சம் போன்ற பல நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் இன்றும் காணப்படுகின்றன. இவை அந்நேரத்தில் நிறுவப்பட்டன. இந்தியா அதன் சமய வேறுபாடுகளுக்காக அறியப்படுகிறது. இந்து சமயம், பௌத்தம், சீக்கியம், இசுலாம், கிறித்தவம் மற்றும் சைனம் ஆகியவை நாட்டின் முதன்மையான சமயங்களில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. பெரும்பான்மை சமயமான இந்து சமயமானது பல்வேறு எண்ணங்களின் வரலாற்றுப் பள்ளிகளால் வடிவம் பெற்றுள்ளது. இதில் உபநிடதம், யோக சூத்திரங்கள், பக்தி இயக்கம் ஆகியவை அடங்கும். பௌத்த மெய்யியலாலும் இது வடிவம் பெற்றுள்ளது. காட்சிக் கலை இந்தியா ஒரு மிகப் பழமையான கலைப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. எஞ்சிய ஐரோவாசியாவுடன் பல விதமான தாக்கங்களை இது பரிமாறிக் கொண்டுள்ளது. குறிப்பாக முதலாம் ஆயிரமாண்டில் இவ்வாறு நடைபெற்றது. அந்நேரத்தில் பௌத்த கலையானது இந்திய சமயங்களுடன் நடு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் பரவியது. தென்கிழக்கு ஆசியாவானது இந்துக் கலையாலும் பெருமளவுக்குத் தாக்கம் பெற்றுள்ளது. பொ. ஊ. மு. மூன்றாம் ஆயிரமாண்டின் சிந்து வெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பொதுவாக விலங்குகளின் உருவங்களைச் செதுக்குதல்களாகக் கொண்டுள்ளன. ஆனால் சில மனித உருவங்களுடன் கூட உள்ளன. 1928-29இல் பாக்கித்தானின் மொகெஞ்சதாரோவில் அகழ்வாய்வு செய்யப்பட்ட பசுபதி முத்திரையானது இதில் மிகவும் நன்றாக அறியப்பட்ட ஒன்றாகும். இதற்குப் பிறகு ஒரு நீண்ட காலத்திற்குக் கிட்டத்தட்ட ஒன்றுமே எஞ்சியிருக்கவில்லை. இதற்குப் பிந்தைய கிட்டத்தட்ட அனைத்து எஞ்சிய பண்டைக்கால இந்தியக் கலையும் பல்வேறு வடிவங்களில் பல சமயச் சிற்பங்களாக நீடித்து இருக்கக் கூடிய பொருட்கள் அல்லது நாணயங்களில் காணப்படுகிறது. வட இந்தியாவில் மௌரியக் கலையானது முதல் ஏகாதிபத்திய இயக்கமாக இருந்தது. இதைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் மனித உருவங்களைச் சிற்பமாக்கும் ஒரு தனித்துவமான இந்தியப் பாணியானது உருவானது. பண்டைக்கால கிரேக்கச் சிற்பக் கலையை விட துல்லியமான உடல் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இது குறைவான கவனத்தையே கொண்டிருந்தது. ஆனால் மென்மையாக உள்ள வடிவங்களாக பிரணத்தை ("மூச்சுக்காற்று" அல்லது உயிர் ஆற்றல்) வெளிப்படுத்துபவையாகக் காட்டப்பட்டன. உருவங்களுக்குப் பல கைகள் அல்லது தலைகளைக் கொடுக்க வேண்டிய தேவை அல்லது அர்த்தநாரீசுவரர் உருவத்தில் உள்ளதைப் போன்ற சிவன் மற்றும் பார்வதி உருவங்களின் இடது மற்றும் வலது பகுதிகளில் வேறுபட்ட பாலினங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் போன்றவற்றால் இது பெரும்பாலும் சிக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொடக்க காலப் பெரிய சிற்பங்களானவை பௌத்தத்தைச் சேர்ந்தவையாக இருந்தன. சாஞ்சி, சாரநாத், அமராவதி போன்ற பௌத்த தாதுக் கோபுரங்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டவையாகவோ அல்லது அஜந்தா, கர்லா மற்றும் எல்லோரா போன்ற தளங்களில் பாறையில் வெட்டப்பட்ட புடைப்புச் சிற்பங்களாகவோ இருந்தன. இந்து மற்றும் சைனத் தளங்கள் பிந்தைய காலத்திலேயே தோன்றுகின்றன. இந்த சிக்கலான சமயப் பாரம்பரியங்களின் கலவை இருந்த போதிலும் பொதுவாக நடப்பிலிருந்த கலை பாணியானது எந்த ஒரு நேரம் மற்றும் இடத்திலும் முதன்மையான சமயக் குழுக்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தது. சிற்பிகள் அநேகமாக பொதுவாக அனைத்து சமூகங்களுக்கும் சேவையாற்றி இருந்துள்ளனர். குப்தக் கலையின் உச்ச நிலையான காலமானது பொதுவாக ஒரு செவ்வியல் காலமாகக் கருதப்படுகிறது. இதற்குப் பிறகு வந்த பல நூற்றாண்டுகளுக்கும் கூட இதன் தாக்கம் நீடித்திருந்தது. எலிபண்டா குகைகளில் உள்ளதைப் போல இந்துச் சிற்பங்களின் ஒரு புதிய ஆதிக்கத்தை இது கண்டது. வடக்கு முழுவதும் க்குப் பிறகு இந்நிலையானது இறுக்கமானதாகவும், வாடிக்கையான ஒன்றாகவும் மாறியது. சிலைகளைச் சுற்றி சிறப்பாக செதுக்கப்பட்ட நுணுக்கங்கள் செழிப்படைந்து இருந்த நிலை இருந்தது. ஆனால் தெற்கில் பல்லவர் மற்றும் சோழர்களின் கீழ் கல் மற்றும் வெண்கலம் ஆகிய இரண்டிலுமே செதுக்கப்பட்ட சிற்பங்கள் பெரும் சாதனையின் நீடித்த காலத்தைக் கொண்டிருந்தன. சிவனை நடராசராகச் சித்தரிக்கும் பெரிய வெண்கலச் சிலைகள் இந்தியாவின் அடையாளக் குறியீடாக மாறிப் போயின. பண்டைக் கால ஓவியங்கள் வெகு சில தளங்களில் மட்டுமே எஞ்சியுள்ளன. இதில் அஜந்தா குகைகளில் உள்ள அரசவை வாழ்வின் கூட்டமான காட்சிகள் இருப்பதிலேயே மிக முக்கியமானவையாகும். இது நிரூபிக்கப்பட்டதாக வகையில் முன்னேறியதாக இருந்தது. குப்தர் காலத்தில் அரசவைச் சாதனையாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவையாக் எஞ்சியுள்ள சமய நூல்களின் ஓவியமுடைய கையெழுத்துப் பிரதிகள் 10ஆம் நூற்றாண்டில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன. இதில் தொடக்க காலத்தைச் சேர்ந்தவையாக உள்ள பெரும்பாலானவை பௌத்த சமயத்தைச் சேர்ந்தவையாகும். பிந்தையவை சைன சமயத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. பெரிய ஓவியங்களில் இவற்றின் பாணியானது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. பாரசீகத்தில் இருந்து தருவிக்கப்பட்ட தக்காண ஓவியமானது முகலாய ஓவியத்திற்குச் சற்று முன்னர் தொடங்குகிறது. இவற்றுக்கு இடையில் சமயம் சாராத ஓவியத்தின் முதல் பெரும் வழி முறை தொடங்குகிறது. இது உருவப் படங்கள் மீது தனிக் கவனத்தைக் கொண்டிருந்தது. அரசர்களின் பொழுது போக்குகள் மற்றும் போர்களைப் பதிவிட்டிருந்தது. இந்த பாணியானது இந்து அரசவைகளுக்குப் பரவியது. குறிப்பாக இராசபுத்திரர்கள் மத்தியில் பரவியது. ஒரு பல்வேறு வகைப் பாணிகளாக மேம்பட்டது. இதில் சிறிய அரசுகளே பெரும்பாலும் புதுமைகளைக் கொண்டு வந்தவையாக இருந்தன. நிகல் சந்த் மற்றும் நைன்சுக் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்க ஓவியவர்கள் ஆவர். ஐரோப்பியக் குடியிருப்புவாசிகள் மத்தியில் ஒரு புதிய சந்தை உருவான போது குறிப்பிடத்தக்க அளவுக்கு மேற்குலகத் தாக்கத்தைக் கொண்டிருந்த, இந்திய ஓவியர்களால் வரையப்பட்ட கிழக்கிந்திய நிறுவன பாணி ஓவிய முறையால் இவை வழங்கப்பட்டன. 19ஆம் நூற்றாண்டில் கடவுள்கள் மற்றும் அன்றாட வாழ்வு குறித்த மலிவான கலிகத் ஓவியங்கள் தாள்களில் வரையப்பட்டன. கொல்கத்தாவைச் சேர்ந்த நகர்ப்புறக் கலை இதுவாகும். இது பின்னர் வங்காள கலை பாணிக்குக் காரணமானது. பிரித்தானியரால் நிறுவப்பட்ட கலைக் கல்லூரிகளை இது பிரதிபலித்தது. நவீன கால இந்திய ஓவிய முறையின் முதல் இயக்கம் இதுவாகும். கட்டடக்கலை தாஜ் மகால், இந்தோ-இசுலாமிய முகலாயக் கட்டடக் கலையின் பிற வேலைப்பாடுகள் மற்றும் தென்னிந்திய கட்டடக் கலை உள்ளிட்ட பெரும்பாலான இந்தியக் கட்டடக் கலையானது பண்டைக்கால உள்ளூர் பாரம்பரியங்களை இறக்குமதி செய்யப்பட்ட பாணிகளுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கட்டடக் கலையும் கூட அதன் பண்புகளில் பிராந்தியப் பண்புகளைக் கொண்டுள்ளது. வாஸ்து சாஸ்திரம் என்பது மயன் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் இலக்கிய ரீதியான பொருளானது "கட்டடக் கலை அறிவியல்" அல்லது "கட்டடக் கலை" என்பதாகும். மனித வாழ்விடங்களை இயற்கையின் விதிகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இது ஆராய்கிறது. துல்லியமான வடிவியற் கணிதம் மற்றும் உணரப்படும் பிரபஞ்ச கட்டமைப்புகளைப் பிரதிபலிப்பதற்காக திசை வரிசைகளை இது பயன்படுத்துகிறது. இந்துக் கோயில் கட்டடக் கலையில் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் போல இது சில்ப சாஸ்திரங்களால் தாக்கம் கொண்டுள்ளது. இச்சாத்திரங்கள் ஒரு தொடர்ச்சியான அடிப்படை நூல்களாகும். இதன் அடிப்படையான புராண வடிவமானது வாஸ்து-புருஷ மண்டலம் ஆகும். "முழுமையைக்" கொண்டிருக்கும் ஒரு சதுரம் இதுவாகும். 1631 மற்றும் 1648க்கு இடையில் முகலாயப் பேரரசர் ஷாஜகானால் தனது மனைவியின் நினைவாக ஆக்ராவில் கட்ட ஆணையிடப்பட்ட தாஜ் மகாலானது உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது. "இந்தியாவில் முசுலிம் கலையின் ஆபரணமாகவும், உலகின் பாரம்பரியத்தின் பிரபஞ்ச ரீதியில் போற்றப்படும் தனிச் சிறப்பு மிக்க படைப்புகளில் ஒன்றாகவும்" இது குறிப்பிடப்படுகிறது. இந்தோ சரசனிக் பாணியானது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்டது. இது இந்தோ-இசுலாமியக் கட்டடக் கலையிலிருந்து தருவிக்கப்பட்டதாகும். இலக்கியம் பொ. ஊ. மு. 1500 மற்றும் பொ. ஊ. 1200க்கு இடையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் தொடக்க கால இலக்கியமானது சமசுகிருத மொழியில் இருந்தது. இருக்கு வேதம் (), இதிகாசங்களான மகாபாரதம் () மற்றும் இராமாயணம் ( மற்றும் பிறகு), அபிஞான சாகுந்தலம் மற்றும் காளிதாசனின் () பிற நாடகங்கள் மற்றும் மகா காவியக் கவிதை உள்ளிட்டவை சமசுகிருத இலக்கியத்தில் முதன்மையான வேலைப்பாடுகளாக உள்ளன. தமிழில் சங்க இலக்கியமானது () 2,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இது 473 புலவர்களால் இயற்றப்பட்டதாகும். தமிழில் உள்ள தொடக்க கால வேலைப்பாடு இதுவாகும். 14ஆம் முதல் 18ஆம் நூற்றாண்டுகள் வரை இந்தியாவின் இலக்கியப் பாரம்பரியங்கள் ஒரு பெரும் மாற்றத்தை அடைந்த காலத்தின் வழியாகச் சென்றன. இதற்குக் காரணம் கபீர், துளசிதாசர் மற்றும் குரு நானக் போன்ற பக்திக் கவிஞர்களின் வருகையாகும். இக்காலமானது ஒரு வேறுபட்ட மற்றும் பரவலான எண்ண மற்றும் வெளிப்பாடுகளை இயற்பண்புகளாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக நடுக் கால இந்திய இலக்கிய வேலைப்பாடுகளானவை செவ்வியல் பாரம்பரியங்களில் இருந்து பெருமளவுக்கு வேறுபட்டுள்ளன. 19ஆம் நூற்றாண்டில் இந்திய எழுத்தாளர்கள் சமூகக் கேள்விகள் மற்றும் உளவியல் விளக்கங்களில் ஒரு புதிய ஆர்வத்தைக் கொண்டிருந்தனர். 20ஆம் நூற்றாண்டில் இந்திய இலக்கியமானது வங்காளக் கவிஞர், எழுத்தாளர் மற்றும் தத்துவவாதியான இரவீந்திரநாத் தாகூரின் வேலைப்பாடுகளால் தாக்கம் பெற்றது. இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் வென்றுள்ளார். வேடக் கலைகளும், ஊடகமும் சங்கீத நாடக அகாதமியானது எட்டு இந்திய நடன பாணிகளை செவ்வியல் வகையைச் சேர்ந்தவை என்று அடையாளப்படுத்தியுள்ளது. அவை (1) மணிப்புரி; (2) கதக்; (3) கதகளி; (4) சத்ரியா நடனம்; (5) மோகினியாட்டம்; (6) குச்சிப்புடி; (7) ஒடிசி நடனம்; மற்றும் (8) பரதநாட்டியம் ஆகியவை ஆகும். இந்திய இசையானது பல்வேறு பாரம்பரியங்கள் மற்றும் பிராந்தியக் காராணிகள் என வேறுபட்டுள்ளது. பாரம்பரிய இசையானது இரண்டு பகுதிகளையும், அவற்றின் வேறுபட்ட நாட்டுப்புறப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.வடக்கு இந்துத்தானி மற்றும் தெற்கு கருநாடக இசை ஆகியவை இவையாகும். திரைப்பட மற்றும் நாட்டுப்புற இசை உள்ளிட்ட பிராந்திய மயமாக்கப்பட்ட பிரபலமான வடிவங்கள் உள்ளன. பௌல்களின் பல ஆக்கக் கூறுகளை ஒன்றிணைத்த பாரம்பரியமானது நாட்டுப்புற இசையின் நன்றாக அறியப்பட்ட வடிவமாகும். இந்திய நடனமும் கூட வேறுபட்ட நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய வடிவங்களைச் சிறப்பம்சங்களாகக் கொண்டுள்ளது. நன்றாக அறியப்பட்ட நாட்டுப்புற நடனங்களில் பஞ்சாபின் பாங்கரா, அசாமின் பிஹு, சார்க்கண்டு, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் ஜூமர் மற்றும் சாவ், குசராத்தின் கர்பா மற்றும் தாண்டியா, இராசத்தானின் கூமர் நடனம், மற்றும் மகாராட்டிராவின் லாவணி ஆகியவை உள்ளன. 8 நடன வடிவங்கள் சங்கீத நாடக அகாதமியால் செவ்வியல் நடன நிலையைப் பெற்றுள்ளன. இவற்றில் பல விவரிப்பு வடிவங்கள் மற்றும் தொன்மவியல் காரணிகளைக் கொண்டுள்ளன. அவை தமிழ்நாட்டின் பரதநாட்டியம், உத்தரப் பிரதேசத்தின் கதக், கேரளாவின் கதகளி மற்றும் மோகினியாட்டம், ஆந்திரப் பிரதேசத்தின் குச்சிப்புடி, மணிப்பூரின் மணிப்புரி, ஒடிசாவின் ஒடிசி மற்றும் அசாமின் சத்ரியா நடனம் ஆகியவையாகும். இந்தியாவில் நாடகமானது இசை, நடனம் மற்றும் முன்னேற்பாடற்ற அல்லது எழுதப்பட்ட வசனங்களை ஒன்றிணைத்ததாக உள்ளது. இவை பெரும்பாலும் இந்துத் தொன்மவியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஆனால் நடுக்காலக் காதல் கதைகள் அல்லது சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளில் இருந்தும் இவை நடத்தப்படுகின்றன. குசராத்தின் பவாய், மேற்கு வங்காளத்தின் சத்ரா, வட இந்தியாவின் நௌதாங்கி மற்றும் இராமலீலை, மகாராட்டிராவின் தமாசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணாவின் புர்ரகதை, தமிழ் நாட்டின் தெருக்கூத்து மற்றும் கருநாடகாவின் யக்சகானம் உள்ளிட்டவை இந்திய நாடக வகைகளாகும். புது தில்லியில் அமைந்துள்ள தேசிய நாடகப் பள்ளி என்ற பெயருடைய ஒரு நாடகப் பயிற்சிப் பள்ளியையும் இந்தியா கொண்டுள்ளது. இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தன்னாட்சியுடைய ஓர் அமைப்பு இதுவாகும். உலகின் மிக அதிகமாகப் பார்க்கப்படும் திரைப்படங்களை இந்தியத் திரைத் துறையானது தயாரிக்கிறது. அசாமியம், பெங்காலி, போச்புரி, இந்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, குசராத்தி, மராத்தி, ஒடியா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நிறுவப்பட்ட பிராந்திய திரைத்துறைப் பாரம்பரியங்கள் உள்ளன. 2022இல் மொத்த வசூலில் இந்தித் திரைத் துறை 33% பங்கையும், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தை உள்ளடக்கிய தென் இந்திய திரைத் துறையானது 50% பங்கையும் கொண்டிருந்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பானது இந்தியாவில் 1959ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தொலைத் தொடர்பு ஊடகமாகத் தொடங்கியது. இரு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலத்திற்கு மெதுவாக விரிவடைந்தது. 1990களில் தொலைக்காட்சி ஒளிபரப்பில் அரசின் ஏகபோக உரிமையானது முடிந்தது. அன்றிலிருந்து இந்திய சமூகத்தின் பிரபலமான பண்பாட்டிற்கு தொலைக்காட்சி அலைவரிசைகள் அதிகரித்த வந்த வகையில் வடிவம் கொடுத்துள்ளன. இன்று இந்தியாவில் மிகவும் ஊடுருவிய ஊடகமாகத் தொலைக்காட்சி விளங்குகிறது. 2012ஆம் ஆண்டு நிலவரப் படி, 55.4 கோடி தொலைக்காட்சி சந்தாதாரர்களும், 46.2 கோடி செயற்கைக்கோள் அல்லது கம்பி இணைப்பு தொலைக் காட்சி தொடர்புகளும் உள்ளன என தொழில் துறை மதிப்பீடுகள் காட்டுகின்றன. பத்திரிகை (35 கோடி), வானொலி (15.6 கோடி), அல்லது இணையம் (3.7 கோடி) போன்ற பிற பொது ஊடக வடிவங்களுடன் ஒப்பிடுகையில் தொலைக்காட்சி இவ்வாறாக உள்ளது. சமூகம் பாரம்பரிய இந்திய சமூகமானது சில நேரங்களில் சமூகப் படி நிலை அமைப்பால் விளக்கப்படுகிறது. பெரும்பாலான சமூகப் படி நிலை மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படும் பல சமூகக் கட்டுப்பாடுகளை இந்திய சாதி அமைப்பானது கொண்டுள்ளது. சமூக அமைப்புகளானவை அகமணத்தை மரபு வழியாகக் கொண்ட ஆயிரக்கணக்கான குழுக்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. இவை பொதுவாக சாதிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. 1950இல் அரசியலமைப்பின் நடைமுறைப்படுத்தலிலிருந்து இந்தியா தீண்டாமையை ஒழித்தது. அன்றிலிருந்து பிற பாரபட்சத்துக்கு எதிரான சட்டங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்களை இந்தியா கொண்டு வந்துள்ளது. குடும்ப விழுமியங்கள் இந்தியப் பாரம்பரியத்தில் முக்கியமானவையாகும். இந்தியாவில் பல தலைமுறையான தந்தை வழி உறவு முறைக் கூட்டுக் குடும்பங்கள் பொதுவானவையாக உள்ளன. எனினும், நகர்ப் புறங்களில் தனிக் குடும்பங்கள் பொதுவானவையாக உருவாகி வருகின்றன. இந்தியர்களில் பெருமளவினர் தங்களது விருப்பத்துடன் தங்களது பெற்றோர் அல்லது பிற மூத்த குடும்ப உறுப்பினர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களைப் புரிகின்றனர். திருமணங்கள் வாழ் நாள் முழுவதற்குமானவையாக நடத்தப்படுகின்றன. விவாகரத்து வீதமானது மிக மிகக் குறைவாகும். ஓர் ஆயிரத்தில் ஒன்றுக்கும் குறைவான அளவு திருமணங்களே விவகாரத்தில் முடிகின்றன. சிறுவர் திருமணங்கள் பொதுவானவையாகும். குறிப்பாக கிராமப் புறப் பகுதிகளில் இவை பொதுவானவையாக உள்ளன. பல பெண்கள் தங்களது சட்டப்பூர்வ திருமணம் செய்யும் வயதான 18 வயதை அடையும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். பெண் சிசுக்கொலை மற்றும் பிந்தைய காலத்தில் பெண் கருக்கலைப்பு ஆகியவை பாலின விகிதத்தை வளைக்கும் அளவுக்கு உருவாகியுள்ளன. நாட்டில் காணாமல் போகும் பெண்களின் எண்ணிக்கையானது 2014ஆம் ஆண்டு முடிந்த 50 ஆண்டு காலத்தில் 1.5 கோடியிலிருந்து 6.3 கோடியாக நான்கு மடங்காக ஆகியுள்ளது. இதே காலத்தில் ஏற்பட்ட மக்கள் தொகை வளர்ச்சியை விட இது அதிகமாகும். இது இந்தியப் பெண் வாக்காளர்களில் 20%ஐ உள்ளடக்கியுள்ளது. இந்திய அரசாங்க ஆய்வின் படி மேற்கொண்ட 2.1 கோடிப் பெண்கள் வேண்டப்படுவதில்லை மற்றும் போதுமான கவனிப்பைப் பெறுவதில்லை. பாலினத்தை அறிந்து கருவைக் கலைக்கும் செயல் மீது அரசாங்கம் தடை ஏற்படுத்தியுள்ள போதும் இந்தியாவில் இது ஒரு பொதுவான வழக்கமாகியுள்ளது. தந்தை வழிச் சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கான தேர்ந்தெடுப்பின் பின் விளைவு இதுவாகும். சட்டத்துக்குப் புறம்பானமாக இருந்தாலும் வரதட்சணை அனைத்து வகுப்பினரின் மத்தியிலும் பரவலாக உள்ளது. பெரும்பாலும் மணமகள் எரிப்பாக நடைபெறும் வரதட்சணை காரணமான இறப்புகளானவை கடுமையான வரதட்சணைத் தடுப்புச் சட்டங்கள் இருக்கும் போதிலும் அதிகரித்து வருகின்றன. பல இந்திய விழாக்கள் சமயப் பூர்வீகத்தை உடையவை ஆகும். தீபாவளி, விநாயக சதுர்த்தி, தைப்பொங்கல், ஹோலி, துர்கா பூஜை, ஈகைத் திருநாள், தியாகத் திருநாள், கிறித்துமசு, மற்றும் வைசாக்கி உள்ளிட்டவை இதில் நன்றாக அறியப்பட்டவை ஆகும். கல்வி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சுமார் 73% மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். ஆண்கள் 81% ஆகவும், பெண்கள் 65% ஆகவும் இருந்தனர். 1981டன் ஒப்பிடும் போது அந்நேரத்தில் வீதங்களானவை முறையே 41%, 53%, மற்றும் 29% ஆக இருந்தன. 1951இல் வீதங்கள் 18%, 27% மற்றும் 9% ஆக இருந்தன. 1921இல் வீதங்களானவை 7%, 12% மற்றும் 2% ஆக இருந்தன. 1891இல் வீதங்களானவை 5%, 9% மற்றும் 1% ஆக இருந்தன. லத்திகா சௌதாரி என்பவரின் கூற்றுப் படி, 1911இல் ஒவ்வொரு 10 கிராமங்களுக்கும் மூன்று தொடக்கப் பள்ளிகள் இருந்தன. புள்ளியியல் ரீதியாக அதிகப் படியான சாதி மற்றும் சமய வேறுபாடானது தனி நபர் செலவீனத்தைக் குறைத்தது. தொடக்கப் பள்ளிகள் கல்வியைக் கற்பித்தன. எனவே, உள்ளூர் வேறுபாடானது செலவீனத்தின் வளர்ச்சியை வரம்புக்கு உட்படுத்தியது. இந்தியாவின் கல்வி அமைப்பானது உலகின் இரண்டாவது மிகப் பெரியதாகும். 900 பல்கலைக்கழகங்கள், 40,000 கல்லூரிகள் மற்றும் 15,00,000 பள்ளிகளை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் உயர் கல்வி அமைப்பில் வரலாற்று ரீதியாக நலிவுற்ற நிலையில் உள்ளோருக்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளின் கீழ் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இடங்களானவை ஒதுக்கப்பட்டுள்ளன. சமீபத்திய தசாப்தங்களில் இந்தியாவின் முன்னேற்றப்பட்ட கல்வி அமைப்பானது அதன் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்த முதன்மையான காரணிகளில் ஒன்றாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. உடை பண்டைய காலங்கள் முதல் நவீன காலம் வரை இந்தியாவில் மிகப் பரவலாக அறியப்பட்ட பாரம்பரிய உடையானது போர்த்தப்பட்ட வடிவத்தில் இருந்தது. பெண்களுக்கு இது புடவையின் வடிவத்தில் இருந்தது. பல அடி நீளமுள்ள ஒற்றைத் துணி புடவையாகும். இந்த உடையானது பாரம்பரியமாக உடலின் கீழ் பகுதி மற்றும் தோள் பட்டையைச் சுற்றி அணியப்படும். ஆண்களுக்கு இதே போன்ற ஆனால் குறுகிய நீள துணியான வேட்டி உடலின் கீழ் பகுதிக்கான உடையாகப் பயன்படுத்தப்படுகிறது. தைக்கப்பட்ட ஆடைகளின் பயன்பாடானது முதலில் தில்லி சுல்தானகம் () பிறகு முகலாயப் பேரரசால் () தொடரப்பட்ட முசுலிம் ஆட்சி நிறுவப்பட்டதற்குப் பிறகு பரவலாக ஆனது. அந்நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் இன்னும் பொதுவாக அணியப்படும் ஆடைகள்: சல்வார் மற்றும் பைசாமா, இவை இரண்டுமே கால் சட்டைகளின் வகைகளாகும் மற்றும் மகளிர் தளராடைகளான குர்த்தா மற்றும் கமீஸ். தென்னிந்தியாவில் பாரம்பரியமான போர்த்தப்பட்ட ஆடைகள் நீண்ட கால தொடர்ச்சியான பயன்பாட்டைக் கண்டன. சல்வார்கள் இடுப்புப் பகுதியில் பொதுவாக அகன்றும் ஆனால் முன் கைப் பகுதியில் குறுகியும் காணப்படும். முழுக் கால் சட்டைகளானவை அகன்றும், பெரிய அளவில் தளர்வுடனும் காணப்படலாம், அல்லது அவை மிகக் குறுகலாக மூலை விட்டத்தில் வெட்டப்பட்டிருக்கலாம். அவ்வாறு இருப்பின் அவை சுரிதார்கள் என்று அழைக்கப்படும். அவை இடுப்புப் பகுதியில் வழக்கமான அகலத்துடனும், அவற்றின் அடிப் பகுதிகள் மடித்துத் தைக்கப்பட்ட ஓரத்தையும் கொண்டிருந்தால் அவை பைசாமாக்கள் என்று அழைக்கப்படும். கமீஸ் என்பது நீண்ட சட்டை அல்லது தளராடை ஆகும். குர்த்தா பாரம்பரியமாக கழுத்துப் பட்டையின்றி, பருத்தி அல்லது பட்டால் உருவாக்கப்பட்டிருக்கும்; இது ஒப்பனை வேலைப்பாடு இன்றியோ அல்லது சிகான் போன்ற தையல் பூ வேலையுடனோ அணியப்படும்; பொதுவாக இதன் நீளத்தின் முடிவானது அணிபவரின் கால் முட்டிக்கு சற்று மேல் அல்லது சற்று கீழ் முடியும். கடைசி 50 ஆண்டுகளில் இந்தியாவில் உடை உடுத்தும் பாணியானது பெருமளவுக்கு மாறியுள்ளது. அதிகரித்து வரும் நிலையாக நகர்ப் புற வட இந்தியாவில் புடவையானது சம்பிரதாய வேளைகளில் பிரபலமானதாக இருந்தாலும் அன்றாட உடையாக அது இருப்பதில்லை. இளம் நகர்ப் புறப் பெண்களால் பாரம்பரிய சல்வார் கமீஸானது அரிதாகவே அணியப்படுகிறது. அவர்கள் சுரிதார்கள் அல்லது ஜீன்ஸ்களையே விரும்புகின்றனர். அலுவலக வேலைச் சூழலில், பரவலாகக் காணப்படும் காற்று பதன அமைப்பானது ஆண்கள் ஆண்டு முழுவதும் விளையாட்டுக் குறுஞ்சட்டைகளை அணிய அனுமதியளிக்கிறது. For weddings and formal occasions திருமணங்கள் மற்றும் சம்பிரதாய வேளைகளில், நடுத்தர அல்லது உயர் வர்க்க ஆண்கள் பொதுவாக ஜோத்பூரி பன்ட்கலா அல்லது குட்டையான நேரு கச்சுடையை கால் சட்டைகளுடன் அணிகின்றனர். மணமகனும், மணமகனின் தோழர்களும் செர்வானிகளை அணிகின்றனர். ஒரு நேரத்தில் இந்து ஆண்கள் எல்லோராலும் அணியப்பட்ட வேட்டியானது தற்போது நகரங்களில் காணப்படுவதில்லை. சமையல் பாணி பொதுவான இந்திய உணவின் அடிப்படையானது ஓர் எளிமையான பாணியில் சமைக்கப்பட்ட தானியம் ஆகும். இதனுடன் தனித்துவமான உப்புச் சுவையுடைய துணை உணவு பரிமாறப்படும். சமைக்கப்பட்ட தானியம் வேக வைத்த சோறாக இருக்கலாம்; கோதுமை மாவிலிருந்து செய்யப்படும் ஒரு மெலிதான, பொங்க வைக்கும் பொருள் சேர்க்கப்படாத ரொட்டியான சப்பாத்தியாக இருக்கலாம், அல்லது அவ்வப் போதான சோள உணவாக இருக்கலாம், தோசைக் கல்லில் உலர் சமையல் செய்யப்பட்டதாக இருக்கலாம்; ஒரு வேக வைக்கப்பட்ட காலை உணவுப் பண்டமான இட்லி, அல்லது கல்லில் சுடப்பட்ட தோசையாக இருக்கலாம். இவை இரண்டுமே அரிசி மற்றும் உளுந்து சேர்க்கப்பட்ட மாவிலிருந்து செய்யப்பட்டவை ஆகும். உப்புச் சுவையுடைய உணவானது மைசூர்ப் பருப்புகள், இருபுற வெடிக்கனி மற்றும் காய்கறிகளை உள்ளடக்கியதாக, நறுமணப் பொருட்களாக இஞ்சி மற்றும் வெள்ளைப்பூண்டு சேர்க்கப்பட்டதாக இருக்கலாம். கொத்தமல்லி, சீரகம், மஞ்சள், இலவங்கப்பட்டை, ஏலம் மற்றும் சமையல் முறையைப் பொருத்து பிற நறுமணப் பொருட்களின் கலவையை உள்ளடக்கியவையாகவும் கூட இருக்கலாம். கோழி, மீன், அல்லது பிற மாமிச உணவுகளையும் கூட உள்ளடக்கியிருக்கலாம். சில நேரங்களில் சமையலின் போது பொருட்கள் ஒன்றாகக் கலக்கப்படலாம். பொதுவாக உண்ணப் பயன்படுத்தும் தட்டானது சமைக்கப்பட்ட தானிய வகைக்கு என ஒதுக்கப்பட்ட மைய இடத்தைப் பொதுவாகக் கொண்டுள்ளது. தனித்துவமான சுவையுடைய துணை உணவுகளுக்கு என துணை இடங்களைக் கொண்டுள்ளது. துணை உணவுகள் பொதுவாக சிறிய கிண்ணங்களில் பரிமாறப்படுகின்றன. தானிய வகையும், துணை உணவுகளும் தனித் தனியாக உண்ணப்படாமல் ஒரே நேரத்தில் உண்ணப்படுகின்றன. சோறு மற்றும் பாசிப் பருப்புக் குழம்பைப் போல் கலந்தோ, அல்லது சப்பாத்தியை சமைக்கப்பட்ட காய்கறிகள் அல்லது பாசிப் பருப்புக் குழம்புடன் மடித்து, சுற்றி மூடி, முகந்தெடுத்து அல்லது முக்கியெடுத்து உண்பது போலோ உண்ணப்படலாம். இந்தியா தனித்துவமான சைவ உணவுகளைக் கொண்டுள்ளது. அவை சார்ந்த மக்களின் புவியியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றின் ஒரு சிறப்பம்சமாக இந்த உணவுகள் உள்ளன. இந்திய வரலாற்றின் தொடக்கத்தில் பல சமயப் பிரிவுகளில் அனைத்து வகையான உயிரினங்களை நோக்கிய வன்முறையைத் தவிர்ப்பது அல்லது அகிம்சையின் தோற்றமானது இந்தியாவின் இந்து மக்களின் ஒரு பெரும் அளவிலானோர் மத்தியில் சைவ உணவுகள் ஆதிக்கமிக்கவையாக இருப்பதற்குக் காரணம் என எண்ணப்படுகிறது. குறிப்பாக, உபநிடத இந்து சமயம், பௌத்தம் மற்றும் சைனத்தில் சைவ முறை காணப்படுகிறது. தென்னிந்தியா, குசராத்து, வட-நடு இந்தியாவின் இந்தி பேசும் பட்டைப் பகுதி, மேலும் சைன சமயத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இந்தப் பழக்கங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் மாமிசமானது பரவலாக உண்ணப்பட்டாலும் ஒட்டு மொத்த உணவில் மாமிசத்தின் அளவானது குறைவாகவே உள்ளது. அதன் அதிகரித்து வந்த பொருளாதார வளர்ச்சியின் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சராசரி தனி நபர் மாமிச நுகர்வை அதிகரித்த சீனாவைப் போல் இல்லாமல் இந்தியாவின் வலிமையான உணவுக் கட்டுப்பாட்டுப் பாரம்பரியங்கள் மாமிசம் அல்லாது பால் உணவுப் பொருட்களானவை விலங்குப் புரத நுகர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமாக மாறுவதற்குப் பங்களித்துள்ளன. கடந்த ஆயிரம் ஆண்டுகளின் போது இந்தியாவுக்குள் சமையல் நுட்பங்களின் மிக முக்கியமான இறக்குமதியானது முகலாயப் பேரரசின் காலத்தின் போது ஏற்பட்டது. பிலாப் (புலாவ்) போன்ற உணவுகள் அப்பாசியக் கலீபகத்தில் உருவாக்கப்பட்டவையாகும். தயிரில் மாமிசத்தை ஊற வைப்பது போன்ற சமையல் நுட்பங்கள் வடமேற்குப் பகுதிகளிலிருந்து வடக்கு இந்தியாவுக்குள் பரவியது. பாரசீகத்தின் எளிமையான தயிரில் ஊற வைக்கப்பட்ட மாமிசத்துடன், வெங்காயம், பூண்டு, பாதாம் மற்றும் நறுமணப் பொருட்கள் இந்தியாவில் சேர்க்கத் தொடங்கப்பட்டன. பகுதியளவு வேக வைத்த சோறு மற்றும் குறைவான எண்ணெயில் அதிக வெப்பத்தில் சமைக்கப்பட்ட மாமிசம் ஆகியவை மாறி மாறி அடுக்குகளாக வைக்கப்பட்டு பாத்திரமானது இறுக்கமாக மூடப்பட்டு மற்றுமொரு பாரசீக சமையல் நுட்பத்தின் படி மெதுவாகச் சமைக்கப்படும். இவ்வாறு உருவானது தான் இந்தியப் பிரியாணியாகும். இந்தியாவின் பல பகுதிகளில் விருந்து உணவின் ஓர் அம்சமாக இது உள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்திய உணவகங்களில் பரிமாறப்படும் இந்திய உணவின் வேறுபட்ட வகைகளானவை பகுதியளவுக்குப் பஞ்சாபி உணவுகளின் ஆதிக்கத்தால் மறைக்கப்பட்டுள்ளன. தந்தூர் அடுப்பில் சமைக்கப்படும் தந்தூரி சிக்கனின் பிரபலமானது 1950களின் போது தொடங்கியது. 1947 இந்தியப் பிரிப்பால் இடம் மாற்றப்பட்ட பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த மக்களின் ஒரு வியாபார எதிர் வினையால் ஒரு பெரும் அளவுக்கு இது சாத்தியமாகியுள்ளது. தந்தூர் அடுப்பானது கிராமப்புற பஞ்சாப் மற்றும் தில்லி பகுதியில் ரொட்டிகளை வேக வைக்கப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் அடுப்பு ஆகும். குறிப்பாக, முசுலிம்கள் மத்தியில் இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது உண்மையில் நடு ஆசியாவிலிருந்து பரவியதாகும். விளையாட்டுகளும், ஓய்வுப் பொழுது போக்குகளும் சடுகுடு, கோ-கோ, பெலவானி, கிட்டிப் புள்ளு, பாண்டி ஆட்டம் போன்ற பல பாரம்பரிய உள் நாட்டு விளையாட்டுகள் மற்றும் களரிப்பயிற்று மற்றும் வர்மக்கலை போன்ற சண்டைக் கலைகள் தொடர்ந்து பிரபலமானவையாக உள்ளன. செஸ் விளையாட்டானது இந்தியாவில் சதுரங்கம் என்ற பெயரில் தொடங்கியது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இந்திய கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. 2007இல் விசுவநாதன் ஆனந்த் உலக சதுரங்க வாகையை வென்றார். 2013 வரை இந்நிலையைத் தக்க வைத்திருந்தார். 2000 மற்றும் 2002இல் உலகக் கோப்பையையும் கூட இவர் வென்றுள்ளார். 2023இல் ர. பிரக்ஞானந்தா இவ்விளையாட்டில் இரண்டாம் இடம் பெற்றார். பர்ச்சீசி எனும் அமெரிக்க விளையாட்டு தாயத்தில் இருந்து பெறப்பட்டது ஆகும். தாயமானது மற்றொரு பாரம்பரிய இந்தியப் பொழுது போக்கு விளையாட்டாகும். தொடக்க நவீன காலங்களில் முகலாயப் பேரரசர் அக்பரால் ஒரு பெரும் பளிங்கு அவையில் இவ்விளையாட்டு விளையாடப்பட்டது. இந்தியாவின் மிகப் பிரபலமான விளையாட்டு கிரிக்கெட் ஆகும். முக்கியமான உள் நாட்டுப் போட்டியாக இந்திய பிரிமியர் லீக் உள்ளது. இந்தியன் சூப்பர் லீக் (கால்பந்து) மற்றும் புரோ கபடி கூட்டிணைவு உள்ளிட்டவை பிற விளையாட்டுகளில் நடத்தப்படும் தொழில் முறைப் போட்டிகள் ஆகும். 1983 மற்றும் 2011 ஆகிய இரு துடுப்பாட்ட உலகக்கிண்ணங்களை இந்தியா வென்றுள்ளது. 2007இல் முதல் முறையாக ஆடப்பட்ட ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணத்தை இந்தியா வென்றுள்ளது. 2024இல் அக்கோப்பையை மீண்டும் வென்றது. 2002 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் இரு முறை ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்தயும் கூட இந்தியா வென்றுள்ளது. கிரிக்கெட்டின் உலக சாம்பியன்ஷிப்பின் ஒரே ஒரு தொடரையும் இந்தியா 1985இல் வென்றது. கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா எட்டு தங்கப் பதக்கங்களையும் கூட ஆக்கியில் வென்றுள்ளது. 2010களின் தொடக்கத்தில் இந்திய டேவிஸ் கோப்பை அணி மற்றும் பிற டென்னிஸ் வீரர்களால் தரப்பட்ட முன்னேற்றமடைந்த முடிவுகளானவை நாட்டில் டென்னிசை அதிகரித்து வந்த பிரபலத் தன்மையுடையதாக மாற்றியது. துப்பாக்கி சுடும் விளையாட்டுகளில் இந்தியா ஒப்பீட்டளவில் வலிமையான இருப்பைக் கொண்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள், உலக துப்பாக்கி சுடும் போட்டிகள் மற்றும் பொது நலவாயப் போட்டிகளில் பல பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இறகுப்பந்தாட்டம், குத்துச்சண்டை, மற்றும் மல்யுத்தம் உள்ளிட்டவை சர்வதேச அளவில் இந்தியர்கள் வெற்றியடைந்துள்ள பிற விளையாட்டுகள் ஆகும். மேற்கு வங்காளம், கோவா, தமிழ்நாடு, கேரளம், மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கால்பந்து பிரபலமானதாக உள்ளது. தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பாரம்பரியமாக ஆதிக்கம் மிகுந்த நாடாக உள்ளது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு கூடைப்பந்துப் போட்டிகளில் அதன் ஆதிக்கம் ஆகும். இன்று வரை நடந்த ஐந்து கூடைப்பந்து தொடர்களில் நான்கை இந்திய அணி வென்றுள்ளது. இந்தியா தனியாகவோ அல்லது பிற நாடுகளுடன் இணைந்தோ பல பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தியுள்ளது: 1951 மற்றும் 1982 ஆசியப் போட்டிகள்; 1987, 1996, 2011 மற்றும் 2023 துடுப்பாட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் (2031லும் இப்போட்டியை இந்தியா நடத்த உள்ளது); 1978, 1997 மற்றும் 2013 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் (2025லும் இப்போட்டியை இந்தியா நடத்தவுள்ளது); 1987, 1995 மற்றும் 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்; 1990-91 ஆண்கள் ஆசியக் கோப்பை; 2002 செஸ் உலகக் கோப்பை; 2003 ஆப்பிரிக்க-ஆசியப் போட்டிகள்; 2006 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் (2029லும் இப்போட்டியை நடத்தவுள்ளது); 2006 மகளிர் ஆசியக் கோப்பை; 2009 உலக பேட்மிண்டன் போட்டிகள்; 2010 ஆக்கி உலகக் கோப்பை; 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்; 2016 ஐசிசி உலக இருபது20 கிரிக்கெட் உலகக்கோப்பை (2026லும் இப்போட்டியை இந்தியா நடத்தவுள்ளது); 2016 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை மற்றும் 2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை. இந்தியாவில் ஆண்டு தோறும் நடத்தப்படும் முக்கியமான பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் சென்னை ஓப்பன், மும்பை மாரத்தான், டெல்லி பகுதியளவு மாரத்தான், மற்றும் இந்திய மாஸ்டர்ஸ் கோல்ப் உள்ளடங்கும். 2011ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முதல் பார்முலா 1 இந்திய கிராண்ட் பிரீ போட்டியானது நடத்தப்பட்டது. ஆனால், 2014ஆம் ஆண்டிலிருந்து பார்முலா 1 கால அட்டவணையிலிருந்து இது நடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றையும் பார்க்கவும் இந்திய வரலாற்று காலக் கோடு துணை நூல்கள் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உடன் ய.சு.ராஜன். நெல்லை சு. முத்து (தமிழாக்கம்). (2002). இந்தியா 2020. சென்னை: நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (பி) லிட். மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம். குறிப்புகள் மேற்கோள்கள் நூற்பட்டியல் பொது மதிப்பீடு Robinson, Francis, ed. The Cambridge Encyclopedia of India, Pakistan, Bangladesh, Sri Lanka, Nepal, Bhutan and the Maldives (1989) சொற்பிறப்பியல் வரலாறு புவியியல் உயிரினப் பல்வகைமை அரசியல் அயல்நாட்டு உறவுகளும், இராணுவமும் பொருளாதாரம் மக்கள் தொகை கலை பண்பாடு வெளி இணைப்புகள் அரசாங்கம் Official website of the Government of India Government of India Web Directory பொதுத் தகவல் India. த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. India from BBC News Key Development Forecasts for India from International Futures அதிகாரப்பூர்வமான இணைப்புகள் இந்திய அரசின் செம்மொழித் தமிழ் இணையத்தளம் இந்திய அரசு இணையத்தளங்களின் பட்டியல் இந்தியப் பிரதமரின் இணையத்தளம் இந்தியக் குடியரசுத் தலைவரின் இணையத்தளம் இந்திய நாடாளுமன்றத்தின் இணையத்தளம் ஆசிய நாடுகள் ஜி-20 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் தெற்காசிய நாடுகள் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
579
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29
யாழ்ப்பாணம் (தொடர்புடைய பக்கம்)
யாழ்ப்பாணம் (Jaffna) என்ற சொல் குறிக்கும் பொருள்கள் பற்றிய தனித்தனியான விபரங்களை அறிய கீழே பொருத்தமானவற்றைத் தெரியுங்கள். யாழ்ப்பாணம், யாழ்ப்பாண நகரம் யாழ்ப்பாண மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாடு யாழ்ப்பாணம் (வானூர்தி) வரலாறு யாழ்ப்பாண அரசு யாழ்ப்பாண வரலாறு யாழ்ப்பாண இராசதானி நிருவாகம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள் யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல் யாழ்ப்பாண மாநகரசபை நூல்கள் யாழ்ப்பாண வைபவமாலை யாழ்ப்பாண வைபவ கௌமுதி வேறு யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணக் கடல் நீரேரி புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர் யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்
581
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
வரலாறு
வரலாறு (history, கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு") என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது . எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அனைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம் பெறுகின்றன. வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் எனப்படுகின்றனர். வரலாறு ஒரு பாடப் பிரிவாகக் கருதப்படுவது மட்டுமின்றி கடந்த கால நிகழ்வுகளின் வரிசை முறையை ஆய்வு செய்வதற்கும், அவற்றை விளக்குகின்ற ஒரு விரிவுரையாகவும் பயன்படுகிறது. கடந்தகால நிகழ்வுகளுக்கான காரணங்களையும், விளைவுகளையும் உய்த்துணரவும் அவற்றை உறுதிப்படுத்தவும் வரலாறு பயன்படுகிறது . வரலாற்று வல்லுநர்கள் சில நேரங்களில் வரலாற்றின் இயல்பு மற்றும் அதன் பயன்பாடு பற்றி விவாதித்ததன் மூலம், வரலாறு என்பதற்கு அதுவே ஒரு முடிவு என்றும், தற்போதுள்ள பிரச்சினைகளைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகவும் வரலாற்றைக் கருதுகின்றனர். வெளிப்புற ஆதாரங்கள் ஏதுமில்லாத ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குரிய ஆர்தர் அரசனைச் சேர்ந்த கதைகள் போன்ற சில பொதுவான கதைகள் வழக்கமாக கலாச்சார பாரம்பரியங்கள் அல்லது புனைவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் வரலாற்றின் ஒழுங்குமுறை இலக்கணத்திற்குத் தேவையான தேடல் இல்லாமல் அவை உள்ளன . மேற்கத்திய பாரம்பரியத்தில் இரோட்டோடசு என்ற 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்று வல்லுநர் வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார். மேலும் சமகால வரலாற்று வல்லுநரான ஏதென்சின் துசைடைட்சும் இவரும் சேர்ந்து மனித வரலாற்றின் நவீன ஆய்வுக்கான அடித்தளங்களை உருவாக்க உதவினர். இவ்விருவரின் படைப்புக்கள் யாவும் இன்றும் வாசிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கலாச்சாரம் சார்ந்த இரோட்டோடசுக்கும், இராணுவத் தளமான துசைடைட்சுக்கும் இடையேயான இடைவெளி நவீன வரலாற்று எழுத்துக்களின் கருத்துக்கு அல்லது அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான புள்ளியாக உள்ளது. ஆசியாவில், சிபிரிங் அண்டு ஆட்டம் ஆனல்சு என்ற வரலாற்று கலைக்களஞ்சியம் கி.மு. 722 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய நூல்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. வரலாற்றின் தன்மை பற்றிய பல மாறுபட்ட விளக்கங்கள் பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ளன மற்றும் பெயர்க்காரணம் பண்டைய கிரேக்க மொழியிலிருந்து வரலாறு என்ற பொருள் கொண்ட ἱστορία, historia என்ற சொல் வரப்பெற்றுள்ளது. அரிசுடாட்டிலும் இதே பொருளில் விலங்குகள் குறித்த தேடல் என்ற பொருள் கொண்ட Περὶ Τὰ Ζῷα Ἱστορίαι என்ற படைப்பில் பயன்படுத்தியுள்ளார் . முன்னுரை சொல்லான ἵστωρ என்ற சொல் எராக்ளிப்டசின் பண்டைய சில வழிபாட்டுப் பாடல்களில், சில கல்வெட்டுகளில் இடம் பெற்று சான்றாக உள்ளது. கிரேக்கச் சொல்லானது பாரம்பரிய இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும். கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான தேடல், விசாரணை, ஆய்வு, கணக்கு, விளக்கம், நிகழ்வுகளை எழுதுதல், கடந்தகால நிகழ்வுகளின் பதிவு செய்யப்பட்ட அறிவு என பல்வேறு பொருளையும் இச்சொல் தாங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. History என்ற சொல் பண்டைய அயர்லாந்து அல்லது வேல்சு மொழியிலிருந்து ஆங்கிலந்திற்குள் வந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது . இதற்கிடையில் இலத்தீன் மொழியில் பண்டைய பிரெஞ்சு (ஆங்கிலோ-நார்மன்) மொழியில் வரலாற்றின் தன்மையானது ஒரு தனி நபரின் வாழ்க்கை நிகழ்வுகள் (12 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்), ஒரு குழு அல்லது மக்களின் புதிய முன்னேற்றங்கள், வரலாற்று நிகழ்வுகளின் வியத்தகு விளக்கம் அல்லது சித்தரிப்பு, மனித பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடைய அறிவியல் அறிவு, உண்மையான அல்லது கற்பனை நிகழ்வுகளின் கதை போன்ற மேலும் பல பொருள்களைக் கொண்ட சொல்லாகவும் உருவானது , ஆங்கிலோ நார்மன் மொழியில் இருந்து வந்த history என்ற இச்சொல் மத்திய ஆங்கிலத்திற்கும் கடனாகப் பெறப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் காணப்படும் இச்சொல் பிற்கால 14 ஆம் நூற்றாண்டில் ஒரு பொதுச் சொல்லாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது. மத்திய கால ஆங்கிலத்தில் வரலாற்றின் பொருள் பொதுவாக கதை என்று கருதப்பட்டது. கடந்த நிகழ்வுகள் பற்றி அறியும் அறிவின் கிளை, கடந்தகால நிகழ்வுகள் மற்றும் கடந்த மனித நிகழ்வுகளை ஆய்வு செய்தல் போன்ற அர்த்தம் பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் எழுந்தது பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சிசு பேகன் "இயற்கை வரலாறு" என்று எழுதியபோது இந்த சொல்லின் பயன்பாடு கிரேக்க மொழிச் சொல்லின் அர்த்தத்தை எட்டியது. இச்சொல்லின் பல்வேறு அர்த்தங்கள் மறுமலர்ச்சியால் புத்துயிர் பெற்றன. அவரைப் பொறுத்தவரை வரலாறு என்பது விண்வெளி மற்றும் காலத்தினால் தீர்மானிக்கப்பட்ட பொருள்களின் அறிவு என்று கருதப்பட்டது . மனித வரலாறு மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றிற்கான தனி வார்த்தைகள் மொழியியல் சிந்தனையுடன் பகுப்பாய்வு அல்லது தனிமைப்படுத்தல் அல்லது இருமை வெளிப்பாடு போன்றவை ஆங்கில சொல்லுக்கு நிகராக சீன சொற்களும் உருவாகியுள்ளன. நவீன செருமன், பிரஞ்சு மற்றும் பெரும்பாலான செருமானிய மொழிகளிலும் இதே சொல்லே உறுதியாகவும் செல்வாக்குடனும் வரலாறு மற்றும் கதை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. 1661 களில் ஒரு பெயர் சொல்லாக இது மாற்றம் கண்டது . வரலாற்றை ஆய்வு செய்பவர் வரலாற்று ஆய்வாளர் என்ற பொருள் 1531 ஆம் ஆண்டில் அங்கீகாரம் பெற்றுள்ளது. உண்மையான மனிதனின் வரலாறு, கடந்தகால நிகழ்வுகளின் ஆய்வு என்ற இரு நோக்குகளிலும் வரலாறு பொருள் கொள்ளப்படுகிறது. வரலாற்றின் விளக்கம் வரலாற்றாசிரியர்கள் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். மற்றும் சில சமயங்களில் தங்களின் சொந்த சமுதாயத்திற்கான பாடங்களாகவும் இவர்கள் வரலாற்றை எழுதுகின்றனர். பெனிதெட்டோவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அனைத்து வரலாறும் சமகால வரலாறு எனலாம். மனித இனம் தொடர்பான முந்தைய நிகழ்வுகளின் கதை மற்றும் பகுப்பாய்வை உண்மையான விளக்கத்தை உருவாக்குவதன் மூலம் வரலாறு எளிதாக்கப்படுகிறது. வரலாற்றின் நவீன விளக்கமானது இவ்விளக்கத்தின் அடிப்படையில் பல புதிய கோணங்களை உருவாக்குகிறது. சில உண்மையான நினைவில் வைத்து பாதுகாக்கப்படுகிற அனைத்து நிகழ்வுகளும் வரலாற்றுப் பதிவுகள் எனப்படுகின்றன. கடந்த காலத்தின் துல்லியத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் பங்களிப்பு செய்யும் ஆதாரங்களை அடையாளம் காண்பதே வரலாற்று ஆய்வின் பணியாகும். எனவே, வரலாற்றாளரின் காப்பகம் சில நூல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துவதை செல்லாததாக்குதல் மூலம் உருவாக்கப்படுகிறது. வரலாற்று ஆய்வு சில நேரங்களில் சமூக அறிவியல் பகுதியாகவும் மற்ற நேரங்களில் மானுடவியலின் ஒரு பகுதியாகவும் வகைப்படுத்தப்படுகிறது . இந்த இரு பரந்த துறைகளுக்கும் இடையே ஒரு பாலமாகவும், இரண்டின் வழிமுறைகளையும் உள்ளடக்கியும் வரலாற்று ஆய்வு காணப்படுகிறது. சில தனிப்பட்ட வரலாற்றாசிரியர்கள் ஒன்று அல்லது மற்றொரு வகைப்பாட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு வரலாற்றாசிரியரான பெர்னாண்ட் பிரேடால் உலக வரலாறு பற்றிய ஆய்வுகளில் பொருளாதாரம், மானுடவியல் மற்றும் புவியியல் போன்ற வெளிப்புற துறைகளைப் பயன்படுத்தி வரலாற்றை ஆய்வில் ஒரு புரட்சியை உண்டாக்கினார். பாரம்பரியமாக, கடந்த கால நிகழ்வுகளை எழுதி வைத்து அல்லது வாய்வழியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கடத்திவந்து வரலாற்று கேள்விகளுக்கு பதிலளிக்க வரலாற்றாசிரியர்கள் முயன்றனர். தொடக்கத்தில் இருந்தே வரலாற்று வல்லுனர்கள் நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் படங்கள் போன்ற ஆதாரங்களையும் பயன்படுத்தினர். பொதுவாக வரலாற்று அறிவின் ஆதாரங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன: என்ன எழுதப்பட்டுள்ளது, எனன சொல்லப்படுகிறது, என்ன பாதுகாக்கப்பட்டுள்ளது என்பன அம்மூன்று வகைபாடுகளாகும் . வரலாற்றாளர்கள் பெரும்பாலும் இம்மூன்றையும் கணக்கில் கொள்கின்றனர். ஆனால் எழுத்து கடந்தகாலத்திலிருந்து என்னவெல்லாம் இருந்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டு வரலாற்றைச் சிறப்பாக்குகிறது. புதையுண்ட தளங்கள் மற்றும் பொருள்களைக் கையாள்வதில் தொல்பொருளியல் துறை குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் ஒரு துறையாகும் தொல்பொருளியல் தளங்களும் பொருட்களும் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டால் அவை வரலாற்றின் ஆய்வுக்கு பங்களிப்புச் செய்கின்றன. அரிதாக சில சமயங்களில் அதன் கண்டுபிடிப்பை நிறைவு செய்வதற்காக கதை மூலங்களைப் பயன்படுத்தி தொல்பொருளியல் ஒரு தனித்துறையாகவும் சிறப்படைகிறது. இருப்பினும் வரலாற்றில் இருந்து பிரிக்கப்பட்ட சில பகுப்பாய்வு முறைகள் மற்றும் அணுகுமுறைகளை தொல்பொருளியல் கொண்டுள்ளது. அதாவது, தொல்பொருளியல் என்பது உரை ஆதாரங்களில் இடைவெளிகளை நிரப்பும் என்று சொல்ல இயலாது. உண்மையில், "வரலாற்று தொல்லியல்" என்பது தொல்பொருளியலின் ஒரு குறிப்பிட்ட கிளையாகும், இத்துறை பெரும்பாலும் சமகால உரைகளின் ஆதாரங்களுக்கு எதிராக அதன் முடிவுகளுடன் வேறுபடுத்துகிறது. உதாரணமாக, அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் அனாபொலிசு நகரத்தைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான மார்க் லியோன் அவர்களின் ஆய்வினைக் குறிப்பிடலாம். உரை ஆவணங்கள் மற்றும் பொருட் பதிவுகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள முரண்பாட்டை புரிந்து கொள்ள இவர் முயற்சித்தார். அந்த நேரத்தில் கிடைக்கப்பெற்ற எழுதப்பட்ட ஆவணங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த வரலாற்றுச் சூழலையும் கணக்கில் கொண்டு அடிமைகள் தொடர்பான ஆய்வுக்கு இவர் பயன்படுத்தினார். காலவரிசைப்படியும், கலாச்சார ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும், ஆய்வுப்பொருள் சார்ந்தும் வரலாறு பல்வேறு விதமான ஒழுங்கமைக்கப்பட்ட வழிகளால் ஆக்கப்படுகிறது. இந்தப் பிரிவுகள் அனைத்தும் முற்றிலும் தனிதன்மை கொண்டவையாக இல்லாமல் இவற்றினிடைல் குறிப்பிடத்தக்க கலப்பும் கொண்டுள்ளன. சில நடைமுறை அல்லது கோட்பாட்டு நோக்கத்துடன் வரலாறு பெரும்பாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, ஆனாலும் எளிமையான அறிவார்ந்த ஆர்வம் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது . இவற்றையும் பார்க்கவும் தொல்பொருளியல் மேற்கோள்கள் உசாத்துணை History & Mathematics: Historical Dynamics and Development of Complex Societies. Moscow: KomKniga, 2006. புற இணைப்புகள் Best history sites .net BBC History Site Internet History Sourcebooks Project See also Internet History Sourcebooks Project. Collections of public domain and copy-permitted historical texts for educational use The History Channel Online History Channel UK An attempt at NPOV history with a "Chronology of Events in History, Mythology, and Folklore": http://www.b17.com/family/lwp/frameset/frameset.html "Timelines of History," A collection of timelines organized by time, location and subject matter: http://timelines.ws கீற்று- வரலாற்றுவரைவியலுக்கான கோட்பாடுகளைத் தந்தவர் இ.எச்.கார் மனிதநேயம் முக்கிய தலைப்புக் கட்டுரைகள்
582
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
பொறியியல்
பொறியியல் (Engineering) என்பது கட்டமைப்புகள், எந்திரங்கள், பொருட்கள், ஏற்பாடுகள் (கருவிகள்), அமைப்புகள், செயல்முறைகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் புத்தாக்கம், வடிவமைப்பு, கட்டுமானம், இயக்குதலும் பேணுதலும் சார்ந்த செயல்பாடுகளுக்கு அறிவியல், கணிதவியல் முறைகள், பட்டறிவு சான்று ஆகியவற்றின் முறையியலைப் பயன்படுத்தும் ஆக்கநிலைச் செயல்பாடாகும். பொறியியல் துறை அல்லது திணைக்களம் அகல்விரிவான பொறியியல் துறைகளைக் கொண்ட தொகுப்பாகும். இவற்றின் ஒவ்வொரு பொறியற் புலம் தனக்கே உரிய களங்களில் பொறியியல் சார்ந்த் மேற்கூறிய முறையியலைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன. பொறியியல் எனும் சொல், இலத்தீன மொழிச் சொல்லான ingenium என்ற வேர்ச்சொல்லில் (கிபி1250) இருந்து வந்தது. இதன் பொருள் " தந்திரம் அல்லது மதிநுட்பம்" என்பதாகும். மேலும் ingeniare எனும் இலத்தின மொழி வினைச்சொல்லின் பொருள் "புனை(வி), ஏற்படுத்து(வி)" என்பதாகும். எனவே, பொறியியல் அறிவியல், கணிதவியல்]] கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற்பாட்டுக் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருள் அறிவியல்(materials science), திண்ம / பாய்ம இயக்கவியல் (Solid/Fluid Mechanics), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொறியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இருவகை இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர். பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், நெடுங்காலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், தொல்படிவ எரிபொருட்கள்(Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை வளிமம், காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, அணுக்கருப் பிளவு போன்றவை. வரையறை பொறியியல், தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கும் வாரியத்துக்கு) (ABET) முன்பு அப்பணியை நிறைவேற்றிய அமெரிக்கத் தொழில்முறை வளர்ச்சி மன்றம் (ECPD) "பொறியியல்" புலத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறது: பொறியியல் என்பது கட்டமைப்புகளையும் எந்திரங்களையும் ஆய்கருவிகளையும் பொருட்செயல்முறைகளையும் தனியாகவோ கூட்டாகவோ அறிவியல் நெறிமுறைகளை ஆக்கமிகப் பயன்படுத்தி, வடிவமைத்து, உருவாக்குதலாகும்; இதில் வடிவமைப்பின்படி அவற்றைக் கட்டியமைத்து இயக்குதலும், குறிப்பிட்ட இயக்க நிலைமைகளில் அவற்றின் நடத்தையை முன்கணித்தலும் அடங்கும்; இந்த அனைத்துமே பொருட்களுக்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பு அளிப்பதோடு சிக்கனத்தோடும் கடைபிடிக்கப்பட வேண்டும்.Engineers' Council for Professional Development definition on Encyclopædia Britannica (Includes Britannica article on Engineering) வரலாறு பொறியியல் ஆப்பு, நெம்பு, ஆழி (சக்கரம்) கப்பி, உருளை போன்ற புதுமைபுனைவுகளை இயற்றிய பண்டைய காலத்தில் இருந்தே நிலவி வருகிறது. பொறியியல் என்ற சொல், பொறியாளர் எனும் சொல்லில் இருந்து 1390 முதலேவழக்கில் உள்ளது. அப்போது பொறியாளர் என்பது ஒரு பொறியை இயக்குபவரையும் படைசார் பொறிகளைக் கட்டியமைப்பவரையும் குறித்தது. பொறி எனும் சொல் அப்போது படைசார் எந்திரத்தைக் குறித்தது அதாவது, போர் செய்ய பயன்படுத்திய எந்திரக் கருவியைக் குறித்தது( எடுத்துகாட்டாக, கவணைக் குறித்தது). பொறியியல் எனும் சொல், இலத்தீன மொழிச் சொல்லான ingenium என்ற வேர்ச்சொல்லில் (கிபி1250) இருந்து வந்தது. இதன் பொருள் " இயற்பண்பு, அல்லது மதிநுட்பம், உளத்திறல்" என்பதாகும். எனவே பொறியியல் நுட்பமான (தந்திரமான) ஆக்கம் ஆகும். பொறியியல் என்ற தமிழ்ச்சொல், "Engineering" என்பதற்கு இணையாக பயன்படுத்தும் ஒன்றாகும். பொறி (கருவிகள் ஆக்குவது, இயங்குவது பற்றியது)+அறிவியல் = பொறியியல். பொறியியல் என்னும் சொல் தமிழில் பயன்பாட்டுக்கு வருமுன்னர் யந்திரவியல் (வடமொழி), இயந்திரவியல், எந்திரவியல் போன்ற சொற்களும் பயின்று வந்துள்ளன. மிகவும் பிற்காலத்தில் அறிமுகமான "Engineering" என்ற ஆங்கிலச் சொல் "Engineer" என்பதிலிருந்தும், இது பொறி என்று பொருள்படும் "Engine" என்னும் சொல்லிலிருந்து உருவானதே. இதன் மூலம் இலத்தீன் மொழிச் சொல்லான "ingenium" என்பதாகும். "Engineer" என்பதைக் குறிக்கும் engineour என்னும் நடு ஆங்கிலச் சொல் 14 ஆவது நூற்றாண்டில் இருந்து ஆங்கில-பிரெஞ்ச் மொழிகளில் பயின்று வந்துள்ளது பிற்காலத்தில் பாலங்கள், கட்டிடங்கள் போன்ற கட்டமைப்புகளை வடிவமைக்க தொடங்கி முதிர்நிலைத் தொழில்நுட்பமாக வளர்ந்ததும் அதைக் குறிக்க குடிசார் பொறியியல் எனும் சொல், படைசார் பொறியியல் புலத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்ட, உருவாகியது இது படைசாராத திட்டங்களையும் படைசார்ந்த கட்டகப் பணிகளையும் குறிக்கலானது. தொல்பழங் காலம் கிரீசில் உள்ள பார்த்தெனான், ஏதென்சு நகர அக்ரோபோலிசு, உரோமர்களின் நீர்க்குழாய்கள், கொலோசியம், தியொத்திகுவாகான், பாபிலோனின் தொங்கு தோட்டம், எகுபதியில் உள்ள அலெக்சாந்திரியா நகர பரோவாக்களின் பிரமிடுகள், மாயன் நாகரிகப் பிரமிடுகள், சீனப் பெருஞ்சுவர், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் போன்ற அமைப்புக்கள் அக்காலத்து குடிசார் மற்றும் படைசார் பொறியாளர்களின் திறமைகளுக்குச் சான்றாக அமைகின்றன. மிகப் பழைய காலத்துப் பெயர் குறிப்பிட்டு அறியப்படுகின்ற பொறியாளர், பாரோவாவின் அலுவலரான இம்கோதெப் (Imhotep) என்பவராகும்.< ref name="ECPD Definition on Britannica"/> பாரோவா தியோசர் அலுவலரான இவரே எகிப்திலுள்ள சக்காரா என்னுமிடத்தில் உள்ள பாரோவா தியோசரின் பிரமிடுவான படிப் பிரமிடுவை வடிவமைத்துக் கட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதன் காலம் கிமு 2630 - கிமு 2611 ஆகும். உலகக் கட்டிடக்கலையில் முதலில் அறியப்பட்ட தூண்களை வடிவமைத்தவரும் இவராகவே இருக்கக்கூடும். பண்டைய கிரேக்கம் குடிசார், படைசார் பொறியியல் புலங்களில் எந்திரங்களை உருவாக்கியது; முதல் எந்திரவகை ஒப்புமைக் கணினியை உருவாக்கியது; ஆர்க்கிமெடீசின் கண்டுபிடிப்புகளும் புதுமைபுனைவுகளும் மிக முந்திய எந்திரப் பொறியியல் எடுத்துகாட்டுகளாகும். சில ஆர்க்கிமெடீசின் புதுமைபுனைவுகளுக்கும் ஒப்புமை எந்திரக் கணினிக்கும் வேறுபாட்டுப் பல்லிணைகள் அறிவும் புறத்துருளும் பல்லிணைகளின் அறிவும் அதாவது தொழிற்புரட்சியின் பல்லிணைத்தொடர்களை வடிவமைத்த இரண்டு எந்திரம் சார்ந்த கோட்பாடுகள் தேவைபட்டிருக்க வேண்டும். இக்கோட்படுகள் இன்றும் தானூர்திப் பொறியியலிலும் எந்திரன்களின் வடிவமைப்பிலும் பயன்படுகின்றன. பண்டைய கிரேக்க, சீன, உரோம, அங்கேரியப் படைகள் கிமு நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் வடிவமைத்த கவண், எறிபடை போன்ற படைசார் எந்திரங்களையும் புதுமைபுனைவுகளையும் பயன்படுத்தியுள்ளனர். இடைக்காலத்தில், கல் ஏவுபடை உருவாக்கப்பட்டது. இடைக்காலம் அல்-யசாரி என்னும் ஈராக்கியர் ஒருவர், 1174 க்கும் 1200க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் துருக்கிய ஆர்த்துஜிட் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஒருவரது மாளிகைகளில் நீருயர்த்துவதற்கு தற்கால எக்கிகளைப் போன்ற எந்திரங்களை உருவாக்கியதாகத் தெரிகிறது. இரட்டைச் செயற்பாட்டு முன்பின்னியக்க (reciprocating motion) உலக்கை எக்கிகள் பிற்காலப் பொறியியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. ஏனெனில், இதுவே இணைதண்டையும் (connecting rod), வணரித்தண்டையும் (Crankshaft) உள்ளடக்கி, சுழல் இயக்கத்தை முன்பின் இயக்கமாக மாற்றும் வல்லமை கொண்ட முதல் எந்திரமாகும். இன்றும் கூடச் சில விளையாட்டுப் பொருட்களில், அல் யசாரியின் கூட்டுப்பூட்டு (combination lock) தன்னியக்கப் பொறிகள் ஆகியவற்றில் காணப்படும் பல்சட்டம் – நெம்புருள் (cam-lever) இயங்குமுறை பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். ஐம்பதுக்கு மேற்பட்ட பொறியியல் கருவிகளைக் கண்டுபிடித்த அல்-யசாரி, துண்டுப் பல்லிணைகள் (segmental gears), பொறியியல் கட்டுப்பாடுகள், தப்பிப்புப் (escapement) இயங்குமுறைகள், மணிக்கூடு, வடிவமைப்பு, பொருள் செயல்முறைகளுக்கான நடைப்படிகள் போன்றவற்றை மேம்படுத்திப் புதுமைகளையும் புகுத்தியுள்ளார். மறுமலர்ச்சிக் காலம் உலகின் முதலாவது மின் பொறியியலாளராகக் கருதப்படுபவர் வில்லியம் கில்பர்ட் என்பவராவார். 1600 ஆம் ஆண்டில் காந்தம் (De Magnete) என்னும் நூலை எழுதியுள்ள இவரே முதன் முதலில் "electricity" (மின்சாரம்) என்னும் சொல்லைப் பயன்படுத்தியவராவார். முதல் நீராவிப் பொறியை எந்திரப் பொறியாளரான தாமஸ் சவேரி (Thomas Savery) 1698 ஆம் ஆண்டில் உருவாக்கினார். ]]. இதன் உருவாக்கம் பிற்காலத்தில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்குக் காரணமாயிற்று. இது பெருந்திரளாக்கத்தின் (mass production) தொடக்கமாகவும் அமைந்தது. 18 ஆம் நூற்றாண்டில் பொறியியல் ஒரு தொழில்முறையாக வளர்ச்சியடைந்ததுடன், பொறியியல் என்னும் சொல், கணிதம் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தும் துறைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது. அத்துடன், படைத்துறைப் பொறியியல், குடிசார் பொறியியல் என்பவற்றுக்குப் புறம்பாக எந்திரக் கலைகள் எனப்பட்ட துறைகளும் பொறியியலுக்குள் சேர்க்கப்பட்டன. தற்காலம் தாமசு சவேரி, இசுகாட்டியப் பொறியாளரான ஜேம்ஸ் வாட் ஆகியோரின் புதுமைபுனைவுகள் தற்கால இயந்திரப் பொறியியல் துறையின் தோற்றத்துக்குக் காரணமாகின. சிறப்புத் தன்மைகளைக் கொண்ட இயந்திரங்களினதும், அவற்றைப் பேணுவதற்குத் தேவையான கருவிகளினதும் வளர்ச்சி, இயந்திரப் பொறியியல், அதன் பிறப்பிடமான பிரித்தானியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் வேகமாக வளர்வதற்குத் துணை செய்தன. ஐக்கிய அமெரிக்காவின் 1850 ஆம் ஆண்டைய மக்கள்தொகைக் கணக்கின்படி, 2000 பொறியாளர்கள் அப்போது இருந்துள்ளனர். அமெரிக்கவில் 1865 ஆம் ஆண்டுக்கு முன்பு 50 பொறியியல் பட்டதாரிகளே இருந்தனர். இயந்திரப் பொறியாளர் எண்ணிக்கை 1870 இல் வெறும் பன்னிரண்டாகவே இருந்தது. இந்த எண்ணிக்கை 1875 இல் 43 ஆக உயர்ந்தது. குடிசார், சுரங்க, இயந்திர, மின் பொறியியல் ஆகிய நான்கு பொறியியல் துறைகளில் அமெரிக்கவில் 1890 இல் 6,000 பொறியாளர்கள் இருந்துள்ளனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1875 வரை பயன்முறை இயங்கமைப்புகளுக்கோ பயன்முறை இயக்கவியலுக்கோ தனித்துறை கிடையாது. ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1907 வரையில் பொறியியலுக்கான துறையே உருவாக்கப்படவில்லை. இதற்கு முந்தியே செருமனி தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை நிறுவியது. அலெசாந்திரோ வோல்ட்டா, மைக்கேல் ஃபாரடே, ஜார்ஜ் ஓம் ஆகியோர் 1800 களில் நிகழ்த்திய செய்முறைகளும், தொலைவரி 1816 இல் உருவானதும் மின்னோடி 1872 இல் உருவானதும் மின்பொறியியல் துறையைத் தொடக்கி வைத்தன. இதேபோல, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜேம்ஸ் மாக்சுவெல், என்றிக் எர்ட்சு ஆகியோருடைய ஆய்வுகள், மின்னன் இயலின் தொடக்கமாக விளங்கின. தொடர்ந்து வந்த காலங்களில் வெற்றிடக் குழாய், திரிதடையம் (transistor) போன்றவற்றின் உருவாக்கம் மின் பொறியாளர், மின்னணுப் பொறியாளர் ஆகியோரின் எண்ணிக்கையைக் கூட்டியது. அக்காலத்தில் இவர்கள் பிற துறைகளைச் சேர்ந்த பொறியாளரைவிட அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. . வேதிப் பொறியியல் துறையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தொழிற்புரட்சிக் காலத்தின்போதே உருவானது. தொழிலக அளவிலான பேரளவு வேதிபொருள் ஆக்கங்களுக்குப் புதிய பொருட்களும், செயல்முறைகளும் தேவைப்பட்டன. 1880 ஆம் ஆண்டளவில், வேதிப்பொருட்களுக்கு இருந்த தேவைகள் அதிகமாக இருந்ததால், பாரிய எந்திரங்களைப் பயன்படுத்தி வேதிப்பொருட்களைப் புதிய தொழிலக அணிகளில் பேரளவில் உருவாக்குவதற்கான புதிய தொழில்முறைப் பொறியியல் புலம் தொடங்கியது. . வேதிப் பொறியாளரின் பணி இத்தகைய எந்திரத் தொகுதிகளையும், செயல்முறைகளையும் வடிவமைப்பது ஆகும். . , இசுகாட்லாந்து]] வானூர்திப் பொறியியல், வானூர்திகளை வடிவமைத்தல், பேணுதல் தொடர்பான துறை. அதேவேளை வான் வெளிப் பொறியியல் என்பது வானூர்திப் பொறியியலுக்கும் அப்பால் விண்கலங்களின் வடிவமைப்புக்களையும் உட்படுத்திய விரிவான துறையாகும். இத்துறைகளுடன் தொடர்புடையனவாகக் கருதப்படக்கூடிய, சர் ஜார்ஜ் காலே என்பவரின் பணிகள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்தனவாயினும், இத்துறைகளின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டுக்கு மாறுகின்ற காலப்பகுதியைச் சேர்ந்தது என்பதே பொதுக் கருத்து. இத் துறைகள் தொடர்பான பழங்காலத்து அறிவு, பட்டறிவு வாயிலானது என்பதுடன், சில கருத்துருக்களும், திறமைகளும் பிற பொறியியல் துறைகள் வழியாகப் பெறப்பட்டனவுமாகும். . பொறியியலில் (பயன்முறை அறிவியல், பொறியியல் துறையில்) முதல் முனைவர் பட்டம் ஐக்கிய அமெரிக்காவில் 1863 இல் யேல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது; இது ஐக்கிய அமஎரிக்காவில் அறிவியலில் தரப்பட்ட இரண்டாம் முனைவர் பட்டமும் ஆகும். உரைட் உடன்பிறப்புகள் வெற்றிகரமாக வானில் பறந்து காட்டிய பத்தாண்டுகளுக்குள், வானூர்திப் பொறியியல் வேகமாக வளர்ந்து, முதல் உலகப் போருக்கான படைசார் வானூர்திகளை வடிவமைத்து தந்தது. இதற்குள் கோட்பாட்டு இயற்பியலையும் செய்முறைகளையும் இணைத்து, தொடர்ந்து நடத்திய ஆராய்ச்சிகள் இப்புலத்துக்கான அறிவியல் அடித்தளத்தை உருவாக்கின. கணினித் தொழில்நுட்பத்தின் எழுச்சி 1990 இல் நிகழ்ந்ததும், முதல் தேடல்பொறி கணினிப் பொறியாளர் ஆலன் எந்தாகேவால் உருவாக்கப்பட்டது. பொறியியலின் முதன்மைக் கிளைப்பிரிவுகள் பொறியியல் அகல்விரிவான புலம் என்பதால் அதைப் பல உட்புலங்களாகப் பிரிக்கலாம். ஒரு பொறியாளர் ஒரு குறிப்பிட்ட புலத்தில் பயிற்சி பெற்றாலும் அவர் பட்டறிவு வாயிலாக பலபுல வல்லுனர் ஆகலாம். பொறியியல் வழக்கமாக நான்கு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது: அவை வேதிப் பொறியியல், குடிசார் பொறியியல், மின்பொறியியல், இயந்திரப் பொறியியல் என்பனவாகும். வேதிப் பொறியியல் வேதிப் பொறியியல் என்பது இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறியியல் நெறிமுறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, வணிக அளவில் வேதியியல் செயல்முறைகளை வடிவமைத்து வணிக வேதிப் பொருட்களையும் சிறப்பு வேதிப் பொருட்களையும் செய்தலாகும்; மேலும் இப்பொறியியல் எண்ணெய்த் (பெட்ரோல்) தூய்மிப்பு, நுண்ணிலைப் புனைவு, நொதித்தல், உயிர் மூலக்கூறு ஆக்கம் ஆகிய பணிகள் சார்ந்த வேதிச் செயல்முறைகளையும் வடிவமைக்கவும் நிகழ்த்தவும் பொறுப்பேற்கிறது. குடிசார் பொறியியல் மின்பொறியியல் இயந்திரப் பொறியியல் அமைப்புப் பொறியியல் - Systems Engineering குடிசார் பொறியியல் – civil Engineering இயந்திரப் பொறியியல் – mechanical Engineering மின்பொறியியல் – Electrical Engineering இலத்திரனியல் பொறியியல் – Electronic Engineering கணினிப் பொறியியல் உற்பத்திப் பொறியியல் கருவியியல் பொறியியல் -Instrumentation Engineering மென்பொருட் பொறியியல் – Software Engineering வானூர்திப் பொறியியல் - Aircraft Engineering/Aeronautical Engineering வான்வெளிப் பொறியியல் - Aerospace Engineering நாவாய்ப் பொறியியல் – Marine Engineering வேதிப் பொறியியல் – Chemical Engineering உயிரித் தொழில்நுட்பம் வேளாண் பொறியியல் - Agri Engineering உயிர்மருத்துவப் பொறியியல் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் - Electronics and Communication Engineering தகவல் தொழில்நுட்பம் நானோ தொழில்நுட்பம் பொருள் பொறியியல் ஒலிநுட்பப் பொறியியல் கட்டமைப்புப் பொறியியல் – structural engineering பொறியியல் வழிமுறை பொறியியலாளர்கள் இயற்பியல் மற்றும் கணித அறிவியல்களை பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வுகளை காண்பதற்கு அல்லது நிலையை மேம்படுத்துவதற்கு பிரயோகிக்கிறார்கள். முன்னெப்போதையும் விட அதிகமாக, தற்போது பொறியியலாளர்கள் அவர்களுடைய வடிவமைப்பு திட்டங்களுக்கு தேவையான அறிவியல் அறிவை பெறவேண்டியுள்ளது. இதன் விளைவாக அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் புதிய விடயங்களை கற்றுக் கொண்டிருக்க வேண்டும். பல தெரிவுகள் இருக்கும் போது பொறியியலாளர்கள் பல்வேறு வடிவமைப்புத் தேர்வுகளில் அவற்றின் தரத்தை ஆழ்ந்து எண்ணிப்பார்த்து தேவைக்கு மிகப் பொருத்தமான தீர்வை தெரிவு செய்வார்கள். வெற்றிகரமான விளைவை பெறுவதற்கு வடிவமைப்பிலுள்ள தடைகளை அடையளம் கண்டு, புரிந்து கொண்டு விளக்குவது பொறியியலாளரின் முக்கியமான மற்றும் தனிப்பட்ட பணியாகும். ஏனெனில், பொதுவாக ஒரு தயாரிப்பு தொழிநுட்பரீதியாக வெற்றிகரமானதாக இருப்பதோடு மேலும் பல தேவைகளை பூர்த்தி செய்தாக வேண்டும். கிடைக்கின்ற வளங்கள், பௌதீக, கற்பனையான அல்லது தொழிநுட்ப குறைபாடுகள், எதிர்காலத்தில் திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்களுக்கான நெகிழ்வுத்தன்மை இன்னும் ஏனைய காரணிகள்: அதாவது செலவு, பாதுகாப்பு, சந்தைப்படுத்தல், உற்பத்தி மற்றும் சேவை வசதிகளுக்கான தேவைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம். பொறியியலாளர்கள் இவ்வாறான கட்டுப்பாடுகளை புரிந்து கொள்வதன் மூலம் எவ்வாறான பொருட்களின் உற்பத்தி பொருத்தமானது மற்றும் எவ்வாறான இயக்க அமைப்பு பொருத்தமானது என்பது தொடர்பான வரம்புகளை நிர்ணயிக்கிறார்கள். பொறியியலாளரின் வேலை ஒரு பொறியாளர் எடுத்துக்கொண்ட விடயம் தொடர்பிலான வரையறைகளை அடையாளங்கண்டு அவற்றைப் புரிந்து கொண்டு வடிவமைப்புச் செய்யவேண்டும். இங்கே வரையறைகள் என்பது, கிடைக்கக்கூடிய வளங்கள்; பௌதீக அல்லது தொழில்நுட்பம்சார் வரையறைகள்; எதிர்கால மாற்றங்களுக்கும், விரிவாக்கத்துக்கும் ஏற்றதாயிருத்தல்; செலவு; உற்பத்தி செய்யக்கூடிய தன்மை; பேணக்கூடிய தன்மை; சந்தைப்படுத்தல்; அழகியல், சமூகம் மற்றும் நெறிமுறைகள் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியது. Engineering is therefore a contingent enterprise influenced by many considerations. முக்கிய பொறியியல் படைப்புகள் அமெரிக்கத் தேசியப் பொறியியல் கல்விக்கழகத்தின்படி பின்வருவன இருபது 20 நூற்றாண்டின் முதன்மையான பொறியியல் படைப்புகள் ஆகும். அனேகமானவையை கண்டுபிடிக்க அமெரிக்காவே முக்கிய பங்காற்றியுள்ளது. மின்திறன் வழங்கல் - Electrification தானுந்து – Automobile வானூர்தி – Airplane உயிர்மருத்துவப் பொறியியல் Biomedical engineering நீர் வழங்கலும் பகிர்வும் - Water Supply and Distribution இலத்திரனியல் – Electronics வானொலி, தொலைக்காட்சி – Radio and Television வேளாண்மை எந்திரமயமாக்கம் - Agricultural Mechanization கணினி – Computers தொலைபேசி – Telephone காற்று பதனாக்கம், குளிர்பதனம் - Air Conditioning and Refrigeration நெடுஞ்சாலைகள் - Highways விண்கலம் – Spacecraft இணையம் – Internet படிம மாக்கம் - Imaging வீட்டுப் பயன்கருவிகள் - Household Appliances உடல்நலத் தொழில்நுட்பம் - Health Technologies பெட்ரோலியம், பெட்ரோவேதிமத் தொழில்நுட்பம் - Pertroleum and Petrochemical Technologies ஒருங்கொளி, நுண்ணிழை ஒளியியல் - Laser and Fiber Optics அணுத் தொழில்நுட்பம் - Nuclear Technologies உயர் செயல்திறப் பொருட்கள் - High Performance Materials மேலே குறிப்பிடவற்றுள் கட்டிடத் தொழில்நுட்பம், துப்புரவு அமைப்பு(Sanitation System), படைசார் தொழில்நுட்பங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொறியியலும் சமூகமும் 'பொறியியல் வாழ்க்கையில் தப்பிபிழைத்து வாழுவதற்கான உந்தலை மீறியது. புதிய சாத்தியக்கூறுகளை அது சிந்திக்கிறது. கலைகளைப் போல பொறியியலில் அழகு உண்டு, அளவுகளின் மதிப்பீடு உண்டு. பொறியிலாளர் இயற்கையைப் போட்டிக்கு அழைக்கின்றார்கள். சூறாவளியை எதிர்க்கின்றனர், நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு என இயற்கையின் மூர்க்கமான ஆற்றல்களோடு பொறியலாளர் போட்டிபோடுகின்றார்கள். அதேவேளை, இயற்கையுடன் இயைந்து செயற்படுகிறார்கள். மண்ணை, கனிமத்தை, வெவேறு தனிமங்களை அவர்கள் விளங்கிகொள்கிறார்கள். அறிவியலையும் கணிதத்தையும் அறிந்து பயன்படுத்திக்கொள்கிறார்கள். மனித நல்வாழ்க்கைக்கு பொறியிலாளரின் பங்களிப்பு அளப்பரியது.'Samuel C. Florman. (1987). The Civilized Engineer. New York: St. Martin's Press. தமிழர்களும் பொறியியலும் தமிழர்கள் பண்டைய காலத்திலிருந்தே பொறியியல் துறைகளில் கோலேச்சியே வந்துள்ளனர், கட்டுமானப் பொறியியல் துறைகளின் சான்றாக கல்லணை, தஞ்சைப் பெரியகோவில் ஆகியன இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவற்றையும் பார்க்க எல்லைகளற்ற பொறியியலாளர்கள் மென்பொருள் பொறியியல் வழிமுறை மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் National Society of Professional Engineers position statement on Licensure and Qualifications for Practice National Academy of Engineering (NAE) American Society for Engineering Education (ASEE) The US Library of Congress Engineering in History bibliography Engineering videos at a secondary school level. History of engineering bibliography at University of Minnesota நூல்தொகை Nigel Cross. Engineering Design Methods: Strategies for Product Design. 2nd ed. Toronto: John Wiley & Sons, 1994. Martyn S. Ray. Elements of Engineering Design. Toronto: Prentice Hall, 1985. John W. Priest. Engineering Design for Producibility and Reliability. New York: Marcel Dekker, 1988. அறவியல் அறிவியலின் மெய்யியல்
583
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
எமிரேட்ஸ் கோபுரங்கள்
எமிரேட்ஸ் கோபுரங்கள் என அழைக்கப்படும் இரட்டைக் கோபுரங்கள், டுபாயிலுள்ள, ஷேக் ஸயத் வீதி என்று பெயரிடப்பட்டுள்ள, துபாய் - அபுதாபி பெருந்தெருவை அண்டி அமைந்துள்ளது. முக்கோணவடிவ வெட்டுமுகத்தையுடைய இவ்விரு கோபுரங்களிலொன்று மற்றதிலும் சிறிது உயரமானது. இக் கட்டிடத்தின் கீழ்த் தளங்கள், பரந்த ஒரு podium ஆக அமைந்து மேற்படி இரு கோபுரங்களையும் தாங்குவது போலுள்ளது. 56 மாடிகளைக் கொண்ட, 355 மீட்டர் உயரமான பெரிய கோபுரம், பெரும்பாலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 54 மாடியையும், 309 மீட்டர் உயரத்தையும் கொண்ட சிறிய கோபுரம், 500 அறைகளைக் கொண்ட ஒரு ஐந்து நட்சத்திர தங்குவிடுதி (Hotel) ஆக அமைந்துள்ளது. இணைப்பு மேடைபோலமைந்துள்ள கீழ் ஐந்து தளங்களிலும், உணவுச்சாலைகள், அங்காடிகள் மற்றும் வாகனத் தரிப்பிடங்கள் என்பன அமைந்துள்ளன. இக் கட்டிடம், கிடைக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது 2000 ஆவது ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட போது, மத்திய கிழக்கின் அதியுயர்ந்த கட்டிடமாகவும், உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்பதாவது இடத்திலும் இருந்தது. இது நோர் குரூப் (Norr Group) கட்டிட ஆலோசனை நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது. மேற்கோள்கள் வானளாவிகள்
585
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
கோலம்
கோலம் (, , ) என்பது முகு (), தரை அலகங்காரம் மற்றும் ரங்கோலி () என்பது வீட்டு வாயில்களில் அல்லது வாசலில் அரிசி மாவு அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி பெண்களால் வரையப்படும் வடிவங்கள் ஆகும். கோலத்தின் பிறப்பிடம் தமிழகம் ஆகும். பழங்கால தமிழ்நாட்டிற்கு சொந்தமானது, இந்த கலை. இக்கலை பின்னர் மற்ற தென்னிந்திய மாநிலங்களான கருநாடகம், தெலங்காணா, ஆந்திரா மற்றும் கேரளாவிற்கும் பரவியுள்ளது. கோவா மற்றும் மகாராட்டிராவின் சில பகுதிகளிளும் கோலமிடுவதை இன்றும் காணலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சில ஆசிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் கோலம் போடும் வழக்கம் காணப்படுகிறது. கோலம் அல்லது முகு என்பது நேர்கோடுகள், வளைவுகள் மற்றும் சுழல்களால் ஆன ஒரு வடிவியல் கோட்பாட்டு வரைதல் ஆகும். இது புள்ளிகளின் கட்ட வடிவத்தைச் சுற்றி வரையப்படுகிறது. ஆண்களும் சிறுவர்களும் கூட இந்த பாரம்பரியத்தை கடைப்பிடித்தாலும், பெண்களால் தங்கள் வீட்டு நுழைவாயிலுக்கு முன்னால் பரவலாகப் வரையப்படுகிறது. கோலத்தின் பிராந்திய மாறுப்பாடுகள் இவற்றின் தனித்துவமான வடிவங்களுடன் இந்தியாவில் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன: மகாராட்டிராவில், என [[மிதிலா (இந்தியா)|மிதிலாவிலும்] ], மேற்கு வங்கத்தில் அல்போனா என்றும் கருநாடகாவில் கன்னடத்தில் ஹசே மற்றும் ரங்கோலி என்றும் அழைக்கப்படுகிறது. திருவிழா நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது மிகவும் சிக்கலான, சிறப்பான கோலங்கள் வரையப்பட்டு வண்ணங்கள் பலச் சேர்க்கப்படுகின்றன. கோலமிடுவதற்கான பொருட்களும், முறையும் தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களில், கோலங்கள் அரிசிமாவு, முருகைக்கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து அழுத்த விரல்களில் வடியும் மாக்கரைசலினால் பேனாவால் வரைவதுபோல் கோலம் வரையலாம். காய்ந்த பின்னர் இது நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடியது. கோலங்களின் வகைகள் கோலங்களை அவை வரையப்படும் முறையை ஒட்டி இரண்டு பிரிவுகளாக வகுக்க முடியும். கம்பிக் கோலம் புள்ளிக் கோலம் கம்பிக் கோலம் கம்பிக் கோலம் என்பது கோடுகளை எளிமையான வடிவவியல் ஒழுங்குகளில் வரைவதன் மூலம் அழகிய சீரான வடிவங்களைப் பெறுதலைக் குறிக்கும். புள்ளிக் கோலம் புள்ளிக் கோலம் என்பது, கோடுகளை வரையும் முன், வழிகாட்டல் புள்ளிகளை இட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும். புள்ளிகளிடுவதிலும் இருவித முறைகள் உள்ளன. ஒரு வகையில் கிடைவரிசையிலும், நிலைக்குத்துவரிசையிலும் ஒரு சதுர வலைப்பின்னல் வடிவில் அமையும்படி புள்ளிகள் இடப்படும். இரண்டாவது முறையில், நிலக்குத்தாக வரும் புள்ளித்தொடர்களில் (நிரல்கள்), ஒன்றுவிட்டு ஒரு நிரல்களிலுள்ள புள்ளிகள் ஒரே கிடைக் கோட்டிலும், அவற்றினிடையே வரும் நிரல்களிலுள்ள புள்ளிகள், முன்கூறிய வரிசைகளுக்கு இடையிலும் வரும். இவ்வாறு போடப்படும் புள்ளிகள் சமபக்க முக்கோண வலைப்பின்னல் வடிவில் அமைந்திருக்கும். இவ்விரு வகைகளையும் முறையே: நேர்ப் புள்ளிகள் ஊடு புள்ளிகள் என்று கூறுவர். <table border="0"> சதுர வலைப்பின்னல்வடிவில் புள்ளிகள் நேர்ப் புள்ளிகள் ஊடுபுள்ளிகள் </tr> </table> இப்புள்ளிக் கோலங்களும், புள்ளிகள் தொடர்பில் கோடுகள் வரையப்படும் முறைபற்றி இருவகையாகப் பகுக்கலாம். புள்ளிகளில் தொடாது, அவற்றுக்கு இடையால் வரையப்படும் நேர் அல்லது வளை கோடுகள் மூலம் வடிவங்களை உருவாக்கல். புள்ளிகளைக் கோடுகளால் இணைப்பதன் மூலம் வடிவங்களை உருவாக்கல். <table align="center" border="0"> நேர்கோடுகளால் இணைக்கப்பட்டபுள்ளிகள் வளைகோடுகளால் இணைக்கப்பட்டபுள்ளிகள் </tr></table> அநேகமாக எல்லாக் கேத்திரகணித வடிவ அமைப்புகளைப் பற்றி வரையப்படும் கோலங்களையும் முடிவின்றி விரிவாக்கிக்கொண்டு செல்லலாம். கோலமிடப் பயன்படும் பொருட்கள் ஆராய்ச்சி கோலங்களின் கணிதப் பண்புகளை கணினி அறிவியல் துறை பயன்படுத்துகின்றது. கோலம் வடிவங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பல்வேறு வடிவங்களுடன் கோலம் வடிவமைப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோலம் வரைவதற்கான வழிமுறைகள் படம் வரைதல் கணினி மென்பொருளின் வளர்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றன. கோலங்கள் கணக்கீட்டு மானுடவியலில் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. கோலங்கள் சமகால கலை மற்றும் வரலாற்றுடன் வலுவான உறவைக் கொண்டிருப்பதால், இவை கலை மற்றும் ஊடகத் துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. கோலங்கள் சிக்கலான புரதக் கட்டமைப்புகளின் பிரதிநிதித்துவத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையும் பார்க்கவும் நிறக்கோலம் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் சு. சக்திவேல் தமிழர் பண்பாட்டில் கோலங்கள் மணிவாசகர் பதிப்பக வெளியீடு கோலசுரபி - கோலம் உருவாக்கும் இணைய செயலி கோலத்திற்கான இணையதளம் கோலங்கள்
589
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
வானியல்
வானியல் (Astronomy) என்பது விண்பொருட்கள் (அதாவது இயற்கைத் துணைக்கோள்கள், கோள்கள், விண்மீன்கள், விண்முகில்கள் மற்றும் விண்மீன் பேரடைகள்) பற்றியும், அவற்றின் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை (உ-ம்: மீயொளிர் விண்மீன் வெடிப்பு, காமா கதிர் வெடிப்பு, விண்-நுண்ணலை-பின்புலம் (Cosmic microwave background) போன்றவற்றை) அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். வானியலுடன் தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான அண்டவியல் என்பது அண்டத்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும். வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களின், அதாவது எகிப்து மற்றும் நுபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன. மேலும், ஆரம்பகால நாகரிகங்களான பபிலோனிய, கிரேக்க, இந்திய, ஈரானிய, சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் விண்வெளியை அவதானித்துக்குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனாலும், ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு தொலைநோக்கியின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்தது; அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. வரலாற்று பூர்வமாக வானியல் பல உட்பிரிவுகளையும், துறைகளையும் கொண்டிருந்தது; வான்பொருளியக்க அளவியல் (Astrometry), விண்-தெரிமுறை செலுத்துநெறி (Celestial Navigation), அவதானிப்பு வானியல் மற்றும் நாட்காட்டி தயாரித்தல் போன்றவை. வானியல் பெரிதும், வானியற்பியலுடன் தொடர்புபட்டது. தற்காலத்தில், தொழில்முறை வானியல் என்பது வானியற்பியலையே குறிக்கின்றது. 20-ஆம் நூற்றாண்டில், வானியல் அவதானிப்பு வானியல் மற்றும் கருத்தியல் வானியல் என்று இரு-துறைகளாகப் பிரிந்தது. விண்பொருட்களை அவதானித்து, தரவுகள் சேகரித்து, அவற்றை இயற்பியல் முறைகளால் பகுத்தாய்வது அவதானிப்பு வானியல் ஆகும். விண்பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை, கணினி மற்றும் கணக்கீட்டு மாதிரிகள் கொண்டு விளக்க முற்படுவது கருத்தியல் வானியல் ஆகும். இவ்விரு துறைகளும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. கருத்தியல் கோட்பாடுகளை விளக்க அவதானிப்புகளும், அவதானிப்பு நிகழ்வுகளை விளக்கக்கருத்தியல் கோட்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. விழைஞர்கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கின்ற மிகச் சில அறிவுத்துறைகளிலே வானியலும் ஒன்று ஆகும். விசேடமாக மாறுகின்ற தோற்றப்பாடுகளைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றைக் கவனித்து வருவதிலும் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இதைச் சோதிடத்துடன் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. சோதிடம், கோள்களின் பெயர்ச்சிகளைக் கண்டறிவதன் மூலம், மனிதர்களின் எதிர்காலத்தைப் பற்றிக்கூற முற்படும் ஒன்றாகும்; இது அறிவியல் முறைகளைத் தழுவிய ஒன்றல்ல. வரலாறு முற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், அவற்றின் இயக்கங்களை முன்கூட்டியே கூறுவதையும் உள்ளடக்கியிருந்தது. சில இடங்களில் பண்டைய பண்பாட்டினர், பாரிய கற்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி உருவாக்கிய அமைப்புக்கள் வானியல் நோக்கங்களைக் கொண்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. "ஸ்டோன்ஹெஞ்ச்" இத்தகைய அமைப்புக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். இத்தகைய அமைப்புக்களின் சடங்கு ரீதியான பயன்பாடுகளுக்குப் புறம்பாகப் பருவ காலங்களை அறிந்து கொள்ளவும், கால அளவுகள் பற்றி அறிந்து கொள்ளவும் பயன்பட்டிருக்கக்கூடும் என கருதப்படுகிறது. தொலைநோக்கிகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் வானியல் ஆய்வுகளை மேற்கொள்வோர், உயர்ந்த கட்டிடங்களில் அல்லது வேறு உயர்ந்த இடங்களில் நின்று வெறும் கண்களாலேயே உற்று நோக்கித் தகவல்களைச் சேகரிப்பர். நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தபோது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனா ஆகிய இடங்களிலும், இஸ்லாமிய உலகிலும், வானியல் அவதானிப்பகங்கள் நிறுவப்பட்டிருந்ததுடன், அண்டத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. பெரும்பாலும் பழைய வானியல், கோள்கள் மற்றும் விண்மீன்களின் நிலைகளைப் படங்களில் குறிப்பதையே உள்ளடக்கியிருந்தது; இது தற்காலத்தில் வானளவையியல் (astrometry) என்றழைக்கப்படுகிறது. இவ்வாறான அவதானிப்புகள் மூலம் கோள்களின் இயக்கங்கள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாக்கப்பட்டன; மேலும், அண்டத்திலுள்ள சூரியன், சந்திரன், புவி மற்றும் பிற கோள்கள் ஆகியவற்றின் இயல்புகள் பற்றி மெய்யியல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. புவியானது மையத்தில் இருக்க, சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள் என்பன புவியைச் சுற்றிவருவதாக அக்காலத்தில் நம்பப்பட்டது. இது அண்டத்தின் புவிமைய மாதிரி எனப்படும்; தொலெமியின் கருத்துகளை மையமாகக்கொண்ட தொலெமியின் மாதிரி என்றும் கூறப்படும். தொடக்க காலகட்டங்களில் நிகழ்ந்த மிகமுக்கியமான முன்னேற்றம், கணித மற்றும் அறிவியல் முறைகளில் வானியலை அணுகுவதன் தோற்றமாகும். இத்தகைய செயல்பாடு முதன்முதலில் பாபிலோனியர்களால் முன்னெடுக்கப்பட்டது; அதைப் பின்பற்றி மற்ற பல நாகரிகங்களிலும் வானியல் ஆய்வுகள் செய்யப்பட்டன. சந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட சுழற்சி முறையில் நிகழ்வதைப் பாபிலோனியர்கள் கண்டறிந்தனர்; இது சாரோசு சுழற்சி எனப்படும். சிலகுறிப்பிடத்தக்கவானியல்கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக் காட்டாகச் சூரியப் பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது. சந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத் திரும்பநடைபெறுவதைக்கால்டியர் அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் ஹிப்பார்க்கஸ் மதிப்பீடு செய்திருந்தார். மத்தியகாலத்தில், ஐரோப்பாவில், நோக்கு வானியல் பெரும்பாலும் தேக்கநிலையை அடைந்திருந்தது. இது 13 ஆம் நூற்றாண்டு வரையாவது நீடித்தது. எனினும் இது இஸ்லாமிய உலகிலும் உலகின் பிற பகுதிகளிலும் செழித்திருந்தது. இவ்வறிவியலுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த இரு அராபிய வானியலாளர்கள் அல்-பத்தானியும், தெபிட் என்பவருமாவர். அறிவியல் புரட்சி மறுமலர்ச்சிக் காலத்தில் நிக்கலஸ் கோப்பர்நிக்கஸ், சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழிந்தார். கலிலியோ கலிலி, ஜொகான்னஸ் கெப்ளர் ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர். கலிலியோ கலிலிதனது ஆய்வுகளுக்குத் தொலைநோக்கியைப் பயன்படுத்தினார். சூரியனை மையத்தில் கொண்ட கோள்களின் இயக்கங்களைச் சரியாக விளக்கும் முறையொன்றை முதலில் உருவாக்கியவர் கெப்ளரேயாவார். எனினும், தானெழுதிய இயக்க விதிகளின் பின்னாலுள்ள கோட்பாடுகளை உருவாக்குவதில் அவர் வெற்றியடையவில்லை. இறுதியில் ஐசாக் நியூட்டன், விண்சார் இயக்கவியலையும், ஈர்ப்பு விதியையும் உருவாக்கிக் கோள்களின் இயக்கங்களையும் விளக்கினார். தெறிப்புத் தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவரும் இவரே ஆவார். தொலைநோக்கியின் அளவும், தரமும் கூடிக்கொண்டு வர அத்துடன் புதிய கண்டுபிடிப்புக்களும் நிகழ்த்தப்பட்டன. லாக்கைல் என்பவர் விண்மீன்கள் பற்றிய விரிவான விபரக்கொத்து ஒன்றை உருவாக்கினார். வானியலாளரான வில்லியம் ஹேர்ச்செல், புகையுருக்கள், கொத்தணிகள் என்பன பற்றிய விபரக்கொத்தை உருவாக்கியதுடன், 1781 இல், யுரேனஸ் கோளையும் கண்டுபிடித்தார். இதுவே புதிய கோளொன்று கண்டுபிடிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும். வானியலின் பிரிவுகள் வானியல் பல கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மையான வேறுபாடு, கோட்பாட்டு வானியலுக்கும், அவதானிப்பு வானியலுக்கும் இடையிலானது. அவதானிப்பவர்கள் வெவ்வேறு தோற்றப்பாடுகளைப்பற்றி விபரங்கள் திரட்டுவதற்குப் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார்கள். இவ்விபரங்கள், அவதானங்களை விளக்கும் கோட்பாடுகளையும், மாதிரிகளையும் உருவாக்குவதற்கும், புதியனவற்றை எதிர்வு கூறுவதற்கும், கோட்பாட்டாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் கீழ்வரும் கற்கைத்துறைகள் வேறு இரு வழிகளிலும் வகைப்படுத்தப் படுகின்றன: விடயங்கள் வாரியாக, வழக்கமாக, விண்வெளிப் பிரதேசங்கள் தொடர்பில் (உம்: கலக்ட்டிக் வானியல்) பகுக்கப்படுகின்றன, அல்லது நட்சத்திர உருவாக்கம், அண்டவியல் போல, கையாளப்படும் பிரச்சினைகள் தொடர்பில் வகைப்படுத்தப்படுகின்றன. விடயங்கள் வாரியாக [[படிமம்:dust.devil.mars.arp.750pix.jpg|thumb|right|250px|கோள்சார் வானியல்: ஒரு செவ்வாய்க் கிரகப் புழுதி devil. நீளமான கருங் கீறல், செவ்வாய்க்கிரகக் காற்றுமண்டலத்தின் சுழல் நிரல்களின் (பூமியி சூறாவளிகளையொத்த) இயக்கத்தினால் ஏற்படுகிறது. இது "நாசா"வால் செவ்வாயின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட குளோபல் சர்வேயரினால் படம்பிடிக்கப்பட்டது. புழுதிப் பிசாசு(?)(கரும் புள்ளி) பள்ளச் சுவரில் ஏறுகிறது. காற்றுமண்டலம், சூடான மேற்பரப்பினால் வெப்பமாக்கப்பட்டு, சுழன்றுகொண்டு எழும்போது, புழுதிப் பிசாசு(?) உருவாகிறது. வலது அரைப் பாகத்தில் தெரியும் கீறல்கள், பள்ளத்தின் தளத்திலுள்ள மணல் மேடுகளாகும்.]] வானியலின் உபதுறைகள்: வான் உயிரியல் வான் வேதியியல் விண்வெளி இயங்கியல் வான்பொருளியக்க அளவியல் வானியற்பியல் அண்ட வேதியியல் அண்டவியல் மீதுருஅண்ட வானியல் அண்ட வானியல் அண்டவியற்பியல் கோள்நிலப் பண்பியல் கோள் அறிவியல் கோள்கள் பற்றியும் அவற்றின் நிலவுகள் மற்றும் கோள் கூட்டம் பற்றிய கற்கையே கோள் அறிவியல் (Planetary science) எனப்படும். பொதுவாக இது சூரியக் குடும்பத்தின் கோள்களையே குறித்தாலும் ஏனைய கிரகங்களும் இதில் அடங்கும். சூரிய வானியல்சூரிய வானியல்''' என்பது சூரியனைப்பற்றி கற்பதாகும். இது நாம் வாழும் புவிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் ஆகும். சூரிய வானியலைக் கற்பதன் மூலம் சூரியனைப் போன்ற மற்றைய விண்மீன்களின் தொழிற்பாடு உருவாக்கம் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம். அத்தோடு மக்கள் சூரிய வானியலைக் கற்பதால் அணுக்கரு இணைவு எவ்வாறு செயற்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். தகவல்கள் பெறும் வழிகள் வானியலில் தகவல்களைப் பெறும் முக்கிய வழி, மின்காந்தக் கதிர்வீச்சு, போட்டன்களைக் கண்டுபிடித்து ஆராய்தல் மூலமாகும், ஆனால் தகவல்கள், அண்டக் கதிர்கள், நியூட்ரினோக்கள், மூலமாகவும் கிடைக்கின்றன. மிக விரைவில் ஈர்ப்பு அலைகளும் இதற்குப் பயன்படும். (LIGO மற்றும் LISA வைப் பார்க்கவும். ஒரு மரபுரீதியான வானியல் பகுப்பு, அவதானிக்கப்பட்ட மின்காந்த அலைமாலை (electromagnetic spectrum)அடிப்படையில் கொடுக்கப்படுகிறது: ஒளிசார் வானியல் ஒளிசார் வானியல் கண்ணுக்குப் புலப்படுகின்றவையும் (அண்ணளவாக 400 - 800 nm)அவற்றுக்குச் சற்று வெளியே உள்ளவையுமான அலை நீளங்களுடன் கூடிய ஒளியைக் கண்டறியவும், பகுப்பாய்வு செய்யவும் பயன்படும் நுட்பங்களோடு தொடர்பானது. இது மிகவும் பழமை வாய்ந்த வானியல் முறைமை ஆகும். மின்னணுப் படமாக்கிகள், நிறமாலை வரைவிகள் போன்றவற்றுடன் கூடிய தொலைநோக்கியே இதற்குப் பயன்படும் பொதுவான கருவிகள் ஆகும். மிகப் பழைய வானியல் முறை இதுவே. முற்காலத்தில், கண்ணால் பார்ப்பவற்றைக் கையால் வரைந்து பதிவு செய்தனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலம் முழுவதும் விம்பங்களைப் பதிவு செய்வதற்கு ஒளிப்படக் கருவிகளைப் பயன்படுத்தினர். புறஊதா வானியல் புறஊதா வானியல் அண்ணளவாக 100 - 3200 Å (10 - 320 nm) அலைநீளம் கொண்ட கதிர்களைக் கண்டறிந்து கூர்ந்தாய்வது பற்றியது . இத்தகைய அலைநீளங்களில் அமைந்த கதிர்களை வளிமண்டலம் உறிஞ்சி விடுவதனால் இவற்றுக்கான நோக்கங்கள் மேல் வளிமண்டலத்தில் அல்லது விண்வெளியிலேயே இருக்கவேண்டும். புறஊதா வானியல், வெப்பக் கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்வதற்கும், இந்த அலைநீளத்தில் பிரகாசமாகத் தெரியும் சூடான நீல விண்மீன்களில் இருந்து வரும் கதிர்வீச்சுக்களை ஆராய்வதற்கும் மிகவும் உகந்தது. இது, பல புறஊதாக் கதிர் ஆய்வுகளுக்கு உட்படுகின்ற பிற விண்மீன் பேரடைகளில் இருக்கும் நீல விண் மீன்களையும் உள்ளடக்கும். அகச்சிவப்பு வானியல் அகச்சிவப்பு வானியல் சிவப்பு ஒளியிலும் கூடிய அலைநீளம் கொண்ட அகச் சிவப்புக் கதிர்களைக் கண்டறிவது தொடர்பானது. கண்ணுக்குப் புலனாகக் கூடிய அலைநீளங்களுக்கு அண்மையாக உள்ள அலைநீளங்களோடு கூடிய கதிர்களைத் தவிர, பெரும்பான்மையான அகச் சிவப்புக் கதிர்கள் வளிமண்டலத்தினால் உறிஞ்சப்படுகின்றன. வளிமண்டலமும் குறிப்பிடத்தக்க அளவில் அகச்சிவப்புக் கதிர்வீச்சை வெளிவிடுகின்றது. இதனால், அகச்சிவப்புக் நோக்கிகள் உயரமானதும் உலர்வானதுமான இடத்தில் அல்லது வளிமண்டலத்துக்கு வெளியே விண்வெளியில் இருத்தல் வேண்டும். அகச்சிவப்புக் கதிர்கள் கண்ணுக்குப் புலனாகும் ஒளியை வெளிவிட முடியாத அளவுக்குக் குளிர்ச்சியான பொருள்களை ஆராய்வதற்கு உதவுகின்றன. அகச்சிவப்புக் கதிர்களின் கூடிய அலைநீளம், அவை காணக்கூடிய ஒளியைத் தடுத்துவிடக் கூடிய முகில்களையும், தூசிப் படலங்களையும் ஊடுருவக் கூடியன ஆதலால், மூலக்கூற்று முகில்களுக்குள் இருக்கும் இளம் விண்மீன்கள் அல்லது கலக்சிகளின் மையப்பகுதிகளில் இருக்கும் விண்மீன்களை ஆய்வு செய்ய உதவுகிறது. அகச் சிவப்புக் கதிர்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்றதாக்கப்பட்ட தொலைநோக்கிகளே இதற்குப் பயன்படும் முக்கிய கருவிகளாகும். வளிமண்டலத்தில் ஏற்படும் மின்காந்த இடையீடுகளைத் தவிர்ப்பதற்காக விண்வெளித் தொலை நோக்கிகளும் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ரேடியோ-வானியல் ரேடியோ வானியலில் கதிர் வீச்சுக்களைக் கண்டறிவதற்கு முற்றிலும் வேறான கருவிகள் பயன்படுகின்றன . இவை ஒலிபரப்பில் பயன்படும் வானொலி ஏற்பிகளைப் போன்றவை. ஒளியியல் வானியலுக்கும், வானொலி வானியலுக்கும் தொடர்பான கதிர்வீச்சுக்கள் வளிமண்டலத்தினூடு வருவதில் பிரச்சினைகள் எதுவும் இல்லாததால், புவியில் அமைந்துள்ள நோக்ககங்களைப் (observatory) பயன்படுத்தமுடியும். அகச்சிவப்புக் கதிர்களை வளிமண்டலத்தில் உள்ள நீராவி உறிஞ்சிவிடுவதால் இதற்கான நோக்ககங்கள் வரட்சியானதும் உயரமானதுமான இடங்களில் அல்லது வளிமண்டலத்துக்கு வெளியே வெண்வெளியில் அமைந்திருக்க வேண்டும். எக்ஸ் கதிர் வானியல், காம்மாக் கதிர் வானியல், புறஉதாக் கதிர் வானியல் ஆகியவற்றில் பயன்படும் அலைநீளங்களைக் கொண்ட கதிர் வீச்சுக்கள் வளிமண்டலத்தினூடாகப் புவியை அடைய முடியாது. இதனால் இவை தொடர்பான நோக்ககங்கள் உயரே பலூன்களில் அல்லது விண்வெளியிலேயே அமைய வேண்டும். இவற்றையும் பார்க்க விண்வெளி அறிவியல்... அண்டவியல் வானியல்த் தலைப்புக்களின் பட்டியல் விண்மீன் குழாம் அனைத்துலக வானியல் ஆண்டு சூரியக் குடும்பம் விண்வெளிப் பயணம் விண்மீன் வானியற் கருவிகள் தொலைநோக்கி கணனிகள் கணிப்பொறி உசாத்துணைகள் நூற்பட்டியல் Available at Project Gutenberg,Google books வெளியிணைப்புகள் மாறும் விண்மீன் நோக்கர்களின் அமெரிக்கக் கழகம் டர்காம் பகுதி வானியற் கழகம் தேசிய ஒளியியல்சார் வானியல் நோக்ககங்கள் வட யார்க் வானியற் கழகம் கனடா அரச வானியல் கழகம் அரச வானியற் கழகம் (ஐக்கிய இராச்சியம்) செக் வானியற் கழகம் ஹேர்ஸ்பர்க் வானியற்பியல் நிறுவனம் இஸ்லாமிய மற்றும் அராபிய வானியல் Encyclopedia of Astronomy and Astrophysics Los Alamos Astrophysics e-Print Database Astronomy Picture of the Day 20th Century Astronomers Tamil Astronomy (தமிழ் மொழியில்) வானியல்
591
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%201
இசுப்புட்னிக் 1
இசுப்புட்னிக் 1 (Sputnik 1) பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட மனிதனால் செய்யப்பட்ட முதலாவது செயற்கைக் கோள் ஆகும். இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இச் செயற்கைக்கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது. இசுப்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4, 1958ல் மீண்டும் பூமியில் விழுந்தது. மேற்கோள்கள் இசுப்புட்னிக் திட்டம்
592
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
திரைப்படம்
திரைப்படம் (Film) அல்லது நகரும் படம் (Motion Picture) என்பது அனுபவங்களை உருவகப்படுத்தி, யோசனைகள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது சூழ்நிலையைப் பயன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தும் காட்சிக் கலைப் பணியாகும். இந்தப் படங்கள் பொதுவாக ஒலியுடனும் மிகவும் அரிதாக, பிற உணர்ச்சி தூண்டுதல்களுடன் இருக்கும். திரைப்படம் ஆக்கம் செய்யும் முறையானது ஒரு கலையாகவும், ஒரு தொழிற்துறையாகவும் விளங்குகிறது. திரைப்படங்கள் பொதுவாக ஒளிப்படலங்களில் பதியப்பட்டு, பின் அதனை ஒளிப்படப் பெருக்கியின் மூலம் திரையின் மீது பெரிய அளவிலான படமாக காட்சிப்படுத்துவர். தற்காலத்தில் எண்முறை ஒளிப்படலங்களாக வன்வட்டிலோ அல்லது பளிச்சுவட்டிலோ ரெட் ஒன் ஒளிப்படக்கருவியின் உதவியால் காட்சிகளைப் பதியப்படுகிறது. திரைப்படம், பொதுவாக பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்பட்டு முன்னர் திரையரங்குகளின் திரைகளில் காண்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர தொலைக்காட்சி, குறுந்தட்டு, பேழை, இணையம் போன்ற ஊடகங்கள் மூலமும் வினியோகிக்கப்படும் நகரும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாகும். திரைப்படங்கள் பெரும்பாலும் பின்னணி இசை, உரையாடல்கள் மற்றும் பாடல்களுடன் காணப்படும். அவ்வகையான ஒலிப்படலம் திரையில் காணப்படும் ஒளிப்படத்திற்கு ஏற்றார் போன்று அமைந்திருக்கும். படச்சுருளுக்குள் ஒரு பகுதியில் உள்ளதாகவும், திரையில் காட்சிப்படுத்தப்படாத ஒரு பகுதியாகவும் இது அமைந்திருக்கும். வரலாறு ஒளிப்படம் எடுக்கும் முறையினை 1830ஆம் ஆண்டில் கண்டறிந்த பிறகு, எட்வர்ட் மைபிரிட்ஷ் என்னும் ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையின் அசைவுகளை இயக்கப்படமாக எடுத்து வெற்றி கண்டார். அதன்பின், ஈஸ்ட்மென் என்பவர் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்க, அமெரிக்க அறிஞர் பிரான்சிஸ் சென்கின்ஸ் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படமொன்றைப் பலரும் காணும்வகையில் வடிவமைத்துக் காட்டினார். இதுவே, புதிய படவீழ்த்திகள் உருவாக அடிப்படையாக அமைந்தது. பிரான்சிஸ் உருவாக்கிய இவ்வியக்கப் படத்தில் நாட்டியம், கடல் அலைகள் கரையில் மோதும் காட்சிகள் முதலியன காணப்பட்டது. மேலும், இவையனைத்தும் ஊமைப் படங்களாக அமையப்பெற்றன. இவற்றை மக்களிடையே காண்பித்து கட்டணம் பெறப்பட்டது. இந்தியா, சீனா, ஜாவா போன்ற நாடுகளில் சினிமா போன்று திரையில் காட்டப்படும் பாவைக்கூத்து நடைமுறையில் இருந்தது. திரைப்படத்தின் வரலாறு தொடங்கும் முன்பே, நாடகம் மற்றும் நடனங்களுக்கு பல அங்கங்கள் இருந்தன.அவை நாடகக் குறிப்புகள், நாடக வடிவமைப்புகள், நாடக உடைகள், தயாரிப்பு, இயக்கம், நாடகக் கலைஞர்கள், ரசிகர்கள், கதைப்படங்கள், இசை ஆகியவையாகும். அதன் பிற அங்கங்கள் புதிதாக உருவாயின. அத்துடன் மைஸ் அன் சீன் (முழுத் திரைப்படமும் ஒரே ஒரு முறை மட்டும்) போன்று பல விமர்சனங்களும் எழுந்தன. அப்பொழுது இருந்த தொழினுட்பங்களினால் ஒரு முறை திரையிடப்பட்ட திரைப்படத்தை மறுமுறை திரையிட இயலவில்லை. ஒளி ஊடுருவும் வகையில் மெல்லியதாக உள்ள இழைத்து பக்குவப்படுத்தப்பட்ட மிருகங்களின் தோல்களில் வண்ண உருவங்களை வரைந்து, அவற்றை ஒளி உமிழும் விளக்குக்கும், வெண்திரைக்கும் நடுவில் அசைய செய்து, அதன் மூலம் பாவைக்கூத்து கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களையும், விளக்கங்களையும் உண்மையான மனிதர்கள் தங்கள் குரலில், திரைக்குப்பின் நின்று கொண்டு, அந்த கதாபாத்திரங்களுக்காக பேசினார்கள். இவற்றின் முக்கிய அம்சம் பொழுதுபோக்கு ஆகும். திரைப்படக் கருவிகள்:படச்சுருள் திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள், செலுலாய்டு எனும் பொருளால் ஆனது. படம் எடுக்கப் பயன்படும் சுருளானது எதிர்ச்சுருள் ஆகும். தனித்தனிப் படச்சுருள்களில் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் எடுக்கப்படும். படம்பிடிக்கும் கருவி திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யும் கருவிக்குப் படம்பிடிக்கும் கருவி என்று பெயர். இக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகப் படம்பிடிக்கப்படும். ஒலிப்பதிவு திரைப்படத்துக்கான பாடல்கள் மற்றும் உரையாடல்களில் எழும் ஒலியலைகளை நுண்ணொலிப் பெருக்கியானது மின் அதிர்வுகளாக்கும். இவை பெருக்கப்பட்டு ஒளியாக்கப்படுகின்றன. இவ்வொளி படச்சுருளின் விளிம்புப் பகுதியில் படிந்து ஒலிப்பாதையாகக் காணப்பெறும். நவீன சினிமா ஒளி ஊடுருவும் பிலிமில் படங்களை பிரிண்ட் செய்து வேகமாக இயக்குவதன் மூலம் ஒரு காட்சிப்பொருளாக மாற்ற முடியும் என்று முதன்முதலில், பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஜோசப் பிளாட்டே கண்டறிந்தார். படங்களை ஒன்றிணைத்து சலனமடைய செய்த முறையும், படம் பிடிக்க செலுலாயிட் பிலிமையும் கண்டுபிடித்தனர். இதை வைத்து ஒருவர் மட்டுமே பார்க்கக்கூடிய ‘கினிட்டோஸ்கோப்’ என்ற கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் 1893 வருடம் கண்டுபிடித்தார். சி. பிரான்சிஸ் ஜென்கின்ஸ் என்ற அமெரிக்கர் அசையும் படத்தை பலரும் பார்க்கும் வகையில் திரையில் விழச்செய்யும் கருவி ஒன்றை முதன்முதலாக வடிவமைத்தார். இவருடைய கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே தற்போதைய சினிமா புரொஜக்டர்கள் இயங்குகின்றன. இவ்விரண்டு கருவிகளையும் ஒன்றிணைத்து லூமியேர் சகோதரர்கள், சலனப்படம் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தினார்கள். அதன் பயனாக அவர்கள் நவீன திரைப்படத்திற்கு வித்திட்டனர். நவீன திரைப்படக் காட்சிப்பதிவு முறைகள் நவீன திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி, ஒலிப்படக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் மேலும் அடியிலும் வட்டவடிவில் இரு பெட்டிகள் அமையப்பெற்றிருக்கும். காட்டவேண்டிய படச்சுருள் மேல் பெட்டியில் பொருத்தப்படும். இதில் பல பற்சக்கரங்களும் சக்கரங்களும் காணப்படும். படச்சுருளைப் பற்சக்கரங்களுக்கிடையில் செலுத்தி அடிப்பக்கம் உள்ள பெட்டியில் மீளவும் சுற்றிக் கொள்ளும்படி அமைத்துக் கொள்ளப்படும். இவ்வாறு படச்சுருள் பிரிந்து மீண்டும் பழையபடி சுருளாகிக் கொள்ளும். ஒளிமிகு விளக்குகளுக்கும் உருப்பெருக்கிகளுக்கும் இடையே படம் வரும். முன்புறமுள்ள மூடிக்கு இரு கைகள் உண்டு. நொடிக்கு எட்டு முறை வீதம் அவை பதினாறு முறை சுழலும். அப்படிச் சுழலும்போது, அதன் கைகள் ஒளியை மறைக்கும். அந்த நேரம் படச்சுருள் நழுவி, அடுத்த படம் வந்து நிற்கும். அதற்குள் மூடியானது திறந்துவிட, பதிவு செய்யப்பட்ட படமானது திரையில் விழுந்து காட்சியாகும். திரைப்பட வகைகள்: கருத்துப்படம் வால்ட் டிஸ்னி என்பவர் முதன்முதலில் கருத்துப்படம் உருவாக்கியவராவார். அடிப்படையில் அவர் ஓர் ஓவியராக இருந்தமையால் ஒன்றுக்கொன்று சிறிது சிறிதாக மாறும்படியான பல்லாயிரக்கணக்கான படங்களை வரைந்துகொண்டு இப்படங்களை வரிசைப்படி அடுக்கி மிக வேகமாகப் புரட்டி ஒரே நிகழ்வாகத் தோன்றும் கருத்துப்படங்களை வடிவமைத்தார். ஒவ்வொரு காட்சியிலும் வரும் விவரங்களையும் பின்னணியையும் தனித்தனியாக எழுதியும், ஒளிபுகும் செல்லுலாய்ட் தகட்டில் தீட்டியும் திரைப்படப் படப்பிடிப்புக் கருவியைக்கொண்டும் கருத்துப்படம் எடுக்கப்படும். கதைக்கேற்ப ஒலிப்பதிவு செய்யப்படும். நவீன கருத்துப்படங்கள் பொம்மைகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. செய்திப்படம் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமாக்கிக் காட்டுவது செய்திப்படமாகும். செய்திப்படம் தயாரிப்பதென்பது எளிய காரியமல்ல. விளக்கப்படம் விளக்கப்படம் என்பது ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு, அது குறித்து முழு விளக்கத்தையும் தருவதாகும். கல்விப்படம் கற்போர் எளிதில் கல்வி கற்க எடுக்கப்படும் படங்கள் கல்விப்படங்களாகும். முதல் திரைப்படம் 1895–ம் வருடம், டிசம்பர் மாதம் 28–ந்தேதி முதன் முதலில் மாலை நேரத்தில் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் கபே என்ற ஓட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்படத்திற்கு ஒரு பிராங்க் கட்டணம் வசூலிக்கப்பட்டது. முதல் திரைப்படத்தை அரங்கேற்றியவர்கள் லூமியேர் மற்றும் லூயி லூமியேர் என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த இரட்டையர்கள் ஆவர். 1903ஆம் வருடம் காட்டப்பட்ட இரயில்கொள்ளை என்ற எட்டு நிமிடம் ஓடிய படம்தான் முதல் சினிமா என்கின்றனர். லூமியர் சகோதரர்கள் காட்டியதை இயங்கும் படமென்றாலும் கதையம்சத்துடன் திகழ்ந்த முதல் திரைப்படமாக ரயில்கொள்ளை உள்ளது. தொடர்ந்து படம் எடுக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படப்படிப்புத் தளங்கள் தோன்றின.இதனால் புதிய நடிகர்கள் உருவாயினர்.கிரிபித் என்பார் 1915இல் மூன்று மணி நேரம் ஓடக்கூடிய ஒரு நாட்டின் தோற்றம் என்ற படத்தை பல்வேறு புது உத்திகளைப் பயன்படுத்தி எடுத்திருந்தார். இப்படத்தில் முதன்முதலாக 75 பேர் கொண்ட இசைக்குழு இசையமைத்திருந்தது. இதைத்தொடர்ந்து பல ஊமைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. 1927இல் முதல் பேசும் படம் வார்னர் பிரதர்சால் ஜான்சிங்கர் என்னும் பெயரில் எடுக்கப்பட்டது. இதில் உரையாடலுடன் பாடல்களும் இடம்பெற்றிருந்தது. நாளடைவில் வண்ணத் திரைப்படங்கள் வெளிவரத்தொடங்கின. தமிழகத்தில் திரைப்பட வளர்ச்சி 1897இல் திரைப்படக்கலையானது லூமியர் சகோதரர்களால் சென்னை வந்தடைந்தது. 1900இல் மேஜர் வார்விக், மின் திரையரங்கம் என்னும் முதல் அரங்கத்தைத் தோற்றுவித்தார். பின், ரகுபதி வெங்கையா, திருச்சி சாமிக்கண்ணு வின்சென்ட் ஆகிய இருவரும் திரையரங்கு அமைத்தனர். ஆர். நடராஜ முதலியார் புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் தென்னிந்தியாவில் முதல் முறையாகத் தயாரிக்கப்பட்ட அவரது கீசக வதம் 1916 இல் வெளியிடப்பட்டது.தமிழ் சினிமாவின் வரலாற்றின் தொடக்கமாக இது கருதப்பட்டு வருகிறது. பிரகாஷ் என்பவர் பீஷ்மப் பிரதிகளும் கஜேந்திர மோட்சம் போன்ற புராணப் படங்களைத் தயாரித்து வெளியிட்டார். தமிழில் முதல் பேசும்படம் காளிதாஸ் 1931இல் வெளியானது. ஹெச். எம். ரெட்டி என்பார் இதை இயக்கியிருந்தார். இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உரையாடல்கள் காணப்பட்டன. பாடல்கள் அதிகம் இடம்பெற்றன. எல்லிஸ் ஆர்.டங்கனின் திரைப்பட பங்களிப்புகள் எல்லிஸ் ஆர்.டங்கன் (1909-2001)அமெக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள பார்டன் நகரில் பிறந்தவர்.தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒளிப்பதிவியலில் பட்டம் பெற்று, 1935ல் இந்தியா வந்து சேர்ந்தார். அதற்குக் காரணமானவர் அவரோடு அமெரிக்காவில் சினிமாவைப் பயின்ற மணிலால் டான்டன் என்ற மும்பையைச் சேர்ந்த இந்தியராவார். டங்கனுடன் அவரது வகுப்புத் தோழன் மைக்கேல் ஆர்மலேவ் என்பவரும் உடன் வந்தார். கொல்கத்தாவில் நந்தனார் படத்தை எடுத்துக்கொண்டிருந்த டான்டன் குழுவினர் மூலமாக சதிலீலாவதிபடத்தின் தயாரிப்பாளருடன் அறிமுகமானார் டங்கன். அப்போது சதிலீலாவதியை இயக்க டங்கன் ஒப்பந்தமானார். டங்கனின் அந்த நுழைவு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. சதிலீலாவதியின் சிறப்புகள் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதியில் எம்.கே.ராதா, எம்.எஸ்.ஞானாம்பாள், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா முதலான நட்சத்திரங்கள் அறிமுகமாயினர்.எம்.கே.ராதாவின் தந்தையும் முன்னணி நாடகக்காரருமான எம்.கந்தசாமி முதலியார் இப்படத்திற்கு வசனம் எழுதினார். பாடல்களை சுந்தர வாத்தியார் இயற்றினார். ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதி வந்த எஸ்.எஸ்.வாசனின் புதினமே இப்படத்தின் கதையாகும்.இந்தப் படத்தின் தயாரிப்பை கோவை மருதாசலம் செட்டியார் என்பவர் ஏற்றிருந்தார்.18ஆயிரம் அடி மொத்த நீளம் கொண்ட இந்தப் படத்தின் ஓரிரு காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கப்பட்டன. மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வைத் தூண்டும் படமாக சதி லீலாவதி இருந்தது.அத்துடன் இலங்கைத் தீவில் வாழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் இது படம்பிடித்துக் காட்டியிருந்தது.1936 இல் வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தி சதிலீலாவதி முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.புராணங்களை மையப்படுத்திக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா முதன்முறையாக சமூகப் பிரச்சினையைப் பேசிய காரணத்தால் ஆடல்பாடல் எனும் சினிமா பத்திரிகை தனது 1937ஜனவரி மாத இதழில் சதி லீலாவதி படத்தைப் பாராட்டி எழுதியிருந்தது. டங்கனின் பிற படங்கள் எல்லிஸ் ஆர்.டங்கன் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் இந்தியிலும் படங்களை இயக்கி இந்திய திரைப்பட வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றினார்.சதி லீலாவதியைத் தொடர்ந்து சீமந்தினி (1936), இரு சகோதரர்கள்(1936), அம்பிகாபதி(1937), சூர்யபுத்திரி(1940), சகுந்தலா(1940), காளமேகம்(1940), தாசிப் பெண்(1943), வால்மீகி(1945), மீரா(1945), பொன்முடி(1950), மந்திரிகுமாரி(1950) ஆகிய படங்களைத் தமிழில் எடுத்தார்.பின்னர் 1947இல் மீராவை இந்தியிலும் இயக்கினார்.மேலும்,டங்கன் தி ஜங்கிள்(1952),தி பிக் ஹன்ட், ஹாரி பிளாக் அண்ட் தி டைகர்(1958),வீல்ஸ் டு ப்ராகிரஸ்(1959),டார்ஜான் கோஸ் டு இன்டியா(இரண்டாவது யூனிட் தயாரிப்பாளர்) (1962),ஃபார் லிபர்ட்டி அண்ட் யூனியன் (1977),ஜேசையாஃபாக்ஸ் (1987) போன்ற படங்களை ஆங்கிலத்திலும் உருவாக்கினார்.இதுதவிர,அவர் ஆன்டிஸ் கேங்(1955-1960)எனும் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியையும் இயக்கி வழிகாட்டினார். இந்தியாவின் தரம்மிக்க கலைப்படைப்பாக மீரா மற்றும் சகுந்தலை ஆகிய படங்கள் அமைந்திருந்தன. அவற்றில் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்துப் பெருமைப்படுத்தியிருந்தார்.1945இல் வெளியான மீரா படத்தைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு, மௌண்ட்பேட்டன் பிரபு,கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நடிப்பின் திறத்தைக் கண்டு வியந்து போயினர். திரைப்படமும் தொழில்நுட்பமும் அடிப்படையில் நிழற்படக் கருவியும் (கேமரா),, ஆடியும்(லென்ஸ்)தான் சினிமாவை உருவாக்குகிறது. எனினும், அது கலைப்படைப்பாகவோ அல்லது தொழில்நுட்பமாகவோ உருவாகவில்லை. மாறாக, சினிமா என்பது ஒரு கிளர்ச்சியூட்டும் புதிராக நோக்கப்படுவதால் சினிமா, மற்ற கலைகளிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. சினிமாவின் இரண்டாவது நூற்றாண்டில்,டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட எளிய காட்சி ஊடகமாகிவிட்டது. படப்பிடிப்பு அடிப்படையில் திரைப்பட படப்பிடிப்பு என்பது கேமரா வைப்புமுறை, ஒளியமைப்பு, சூரிய ஒளித்தன்மை பற்றிய தெளிவு,ஒலியமைப்பு,லென்ஸ் குறித்த அறிவு என்று தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். பின் தயாரிப்புப் பணிகள் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததும்,பட பின் தயாரிப்புப் பணிகள் (Post Production Works)தொடங்கும்.இப்பணிகளின்போது, படத்தொகுப்பு மற்றும் ஒலிச் சேர்க்கைப் பணிகள் அடங்கும்.இந்த ஒலிச் சேர்க்கையின் போது பின்னணி இசைக் கோர்ப்புகளும் பாடல்களும் சேர்க்கப்படும். இவையனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தவையாகும். உசாத்துணை நூல்கள் பத்தாம் வகுப்பு,தமிழ்ப் பாடநூல்,தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம்,சென்னை. வகைமை இலக்கிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, பாக்யமேரி,NCBH வெளியீடு,சென்னை-98. திரைவிருந்து,கீற்று இணையதளம். இவற்றையும் பார்க்கவும் இயக்கமூட்டல் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013 மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் Allmovie– Information on films: actors, directors, biographies, reviews, cast and production credits, box office sales, and other movie data. Film Site– Reviews of classic films Rottentomatoes.com – Movie reviews, previews, forums, photos, cast info, and more. The Internet Movie Database (IMDb) – Information on current and historical films and cast listings. திரைப்படம் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் மகிழ்கலை ஊடக வடிவங்கள் 19-ஆம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்புகள்
594
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்
தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் என்பது தமிழ்நாடு, சென்னையில் உள்ள தமிழகத் திரைப்படத்துறையில் ("கோலிவுட்") முன்பு பணியாற்றிய அல்லது தற்போது பணியாற்றி வரும் பிரபல முன்னணி திரைப்பட நடிகர்களின் பெயர்களை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு குறைந்தது ஐந்து படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் மட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1930கள் 1940கள் 1950கள் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள் 1950க்கு முன்பு 1950கள் 1970கள் 1980கள் 1980கள் 1990கள் 2000ம் ஆண்டிற்கு பின்பு மேற்கோள்கள்
595
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
சிவாஜி கணேசன்
{{Infobox person | name = சிவாஜி கணேசன் | image = SivajiGanesan 19620824.jpg | imagesize = 230px | caption = சிவாஜி கணேசன், 1962 ஆகத்து 24 பிலிம்பேரில் வெளியானது | birth_name = விழுப்புரம் சின்னையா மன்ராயா்.கணேசமூர்த்தி (வி.சி.கணேசன்) | birth_date = | birth_place = விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா | death_date = | death_place = சென்னை, தமிழ்நாடு, இந்தியா | awards = கலைமாமணி விருதுபத்ம ஸ்ரீபத்ம பூசன்தாதாசாஹெப் பால்கே விருதுஎன். டி. ஆர் தேசிய விருதுசெவாலியர் விருது | othername = நடிகர் திலகம், சிம்மக்குரலோன்| yearsactive = 1952 – 1999 | spouse = கமலா கணேசன் | children = சாந்திஇராம்குமார் பிரபு தேன்மொழி | parents = தந்தை: சின்னையா மன்ராயா்தாயாா்: ராஜாமணி அம்மாள் | relatives = உடன்பிறந்தோா் :- வி. சி. திருஞானசம்பந்தர்வி. சி. கனகசபைநாதன்வி. சி. தங்கவேல்வி. சி. சண்முகம்வி. சி. பத்மாவதி.வேணுகோபால்பேரன்கள்:விக்ரம் பிரபுதுஷ்யந்த் | nationality = இந்தியர் | religion = இந்து }}சிவாஜி கணேசன் (Sivaji Ganesan, 1 அக்டோபர் 1928 – 21 சூலை 2001) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி' ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் போற்றப்படுகிறார். சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன். சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு இளமைப் பருவம் சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் 4 ஆவது மகனாக விழுப்புரத்தில் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்தார். சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் விழுப்புரம். அங்குதான் 1928 இல் சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் இரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் மேலும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் இரயிலுக்கு சின்னையா வெடி வைத்ததற்காக அவருக்கு ஆங்கிலேய அரசால் 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார். கணவர் சிறை சென்று விட்டதால் ராஜாமணி அம்மாள், பால் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றினார். சிவாஜிக்கு 4 வயதாக இருக்கும் போது சின்னையா மன்றாயர் நன்னடத்தைக்காக, 7 வருட தண்டனை 4 ஆண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். பிறகு சிவாஜியின் குடும்பம் திருச்சியில் உள்ள சங்கிலியாண்டபுரம் என்ற இடத்திற்கு குடியேறியது. மேடை நாடக வாழ்க்கை சிறுவயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றபோது தானும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், சிவாஜி கணேசன் மனதில் ஆழமாகப் பதிந்தது. நடிப்பின் மீது எற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தனது ஏழு வயதில் பெற்றோருக்கு தெரியாமல் திருச்சியில் முகாமிட்டு இருந்த மதுரை ஸ்ரீபாலகான சபா என்ற நாடகக்குழுவில் சேர்ந்தார். அந்த நாடகக் குழுவில் இருந்த சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் தான் சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். ஏழு வயது சிறுவனாக சிவாஜி கணேசன் நடித்த முதல் மேடை நாடகம் ராமாயணம் அதில் அவர் போட்ட வேடம் சீதை. ஆரம்பத்தில் பெண் வேடங்களில் நடித்த இவருக்கு பிறகு பரதன், சூர்ப்பனகை, இந்திரஜித் என பல வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுவனாக நாடகங்களில் நடித்த போதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்ற்றிருந்தார். திராவிட கழக மாநாட்டில் (1946), பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. இல்லற வாழ்க்கை பராசக்தியில் நடித்துக் கொண்டிருந்தபோதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம் நடந்து விட்டது. தனது உறவுக்கார பெண்ணான கமலா என்பவரை 1952 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி மணந்தார். பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் சீர்திருத்த முறைப்படி திருக்குறள் பாடப்பட்டு எளிமையாக நடந்தது. இவர்களது மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர் ஆவர். சிவாஜிகணேசன் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் கொண்டவர். எனவே தனது பெற்றோர், தம்பி வி .சி. சண்முகம் மற்றும் அண்ணன் வி .சி. தங்கவேலு ஆகியோரின் குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார். இவரது மகன் பிரபு புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். 1982 ஆம் ஆண்டு வெளிவந்த சங்கிலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மேலும் சிவாஜியின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு 2011 ஆம் ஆண்டு கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. நிதியுதவி கல்வி கூடங்கள் கட்டுவதற்கும், இயற்கை சீற்றங்களின் போதும் போர், கால சமயங்களிலும் பல நிதி உதவிகளை சிவாஜி கணேசன் செய்துள்ளார். 1959ல் மதிய உணவு திட்டத்திற்கு அன்றைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி , 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கி உள்ளார். 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் கொடுத்துள்ளார். 1965ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் போது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் தனக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 சவரன் போர் நிதியாக கொடுத்தார். கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி, அதில் தனது செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தார் அது இப்போதும் நினைவு சின்னமாக திகழ்கின்றது. 1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் திருவள்ளுவருக்கு தானே முன்மாதிரியாக நின்று சிலை அமைத்து கொடுத்தார். மேலும் உலக தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் நிதியாக அளித்தார். தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கினார். திரைப்பட வாழ்க்கை ஆரம்ப காலம் சிவாஜி கணேசன் 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இது கிருஷ்ணன்-பஞ்சு என்ற இரட்டையரால் இயக்கப்பட்டது. இந்த திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது, பல திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது, மேலும் அது வெளியிடப்பட்ட 62 மையங்களிலும் 50 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. சக்தி நாடகசபா நடத்திய நூர்ஜஹான் என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக நடித்த சிவாஜியின் நடிப்பு நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. எனவே பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். இதற்காக திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்ட கணேசனைப் புகைப்படமெடுத்து வசனம் பேசச் செய்தனர். அவர் திரைப்படத்தில் வரும் "சக்ஸஸ்" என்ற வசனத்தைப் முதல் முதலாக பேசி நடித்தார். இதற்குப் பல வித எதிர்ப்புகள் கிளம்பின. படத்துக்குப் பண உதவி செய்த ஏ.வி.எம். செட்டியாரும், புதுமுகத்தை வைத்துப் படமெடுப்பதை விரும்பவில்லை. ஆனால் பி.ஏ. பெருமாள் மட்டும் கணேசன் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் பராசக்தி படத்தில் சிவாஜி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக கணேசனுக்கு மாத சம்பளமாக ₹250 வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பிற்கால முதல்வர் மு. கருணாநிதி இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதினார். நீளமான மற்றும் ஆழமான வசனங்களும் சிவாஜி கணேசனின் ஒப்பற்ற நடிப்பும் ஒரே படத்தில் இவருக்கு மாபெரும் கலைஞன் அந்தஸ்து கொடுத்தது. 'சிவாஜி' கணேசன் 275 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் இரண்டு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். சரித்திர மற்றும் புராண படங்கள் இவர் நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. விடுதலைப் போராட்ட வீரர்களின் வேடங்கள் அதே போல் சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்டபொம்மன், வ. உ. சி போன்ற தேச தலைவர்களின் பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடிக்க செய்தார். 1959 ஆம் ஆண்டு வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததிற்காக ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் வ. உ. சிதம்பரம் பிள்ளையாகவும் , ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் பகத்சிங், திருப்பூர் குமரன் போன்றோரின் வேடங்களிலும் , சினிமாப் பைத்தியம் படத்தில் வாஞ்சிநாதனாகவும் நடித்து திரைப்படங்களின் மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மக்களுக்கு உணர்த்தினார். புராண படங்கள் மேலும் சிவாஜி கணேசன் பல புராண கதாபாத்திரங்கள் மற்றும் கடவுளின் கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமானாக நடித்தபோது சிவபெருமானுக்கே உருவம் கொடுத்தவர் சிவாஜி கணேசன் என்று மக்களால் புகழ பெற்றவர். சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் நாரதராகவும் , திருவருட்செல்வர் திரைப்படத்தில் சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் போன்ற நாயன்மார்களின் வேடங்களிலும் நடித்து புகழ் பெற்றார். மேலும் கந்தன் கருணை திரைப்படத்தில் வீரபாகுவாகவும் , திருமால் பெருமை திரைப்படத்தில் பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களின் கதாபாத்திரங்களில் தத்ரூபமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதனாக நடித்தார். அத்திரைப்படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் 'நான் பரதனைக் கண்டேன்' என்று பாராட்டினார். குடும்ப மற்றும் சமூக திரைப்படங்கள் ’பா’ வரிசைப் படங்கள் ’பா’ வரிசைப் படங்கள் எடுப்பவர் என்று பேரெடுத்தவர் இயக்குநர் ஏ. பீம்சிங். சிவாஜியை வைத்து இவர் இயக்கிய பல படங்களின் முதல் எழுத்து ‘பா’ என்றே ஆரம்பிக்கும். இவர்கள் கூட்டணியில் வந்த முதல் திரைப்படம் ராஜா ராணி. பின்னர் பதிபக்தி, பெற்ற மனம், படிக்காத மேதை போன்ற பல படங்களை ஏ. பீம்சிங் இயக்கினார். இவரது இயக்கத்தில் வெளிவந்த பாகப்பிரிவினை திரைப்படம் 1960 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது. 1961ம் ஆண்டு வெளியான பாசமலர், பாவ மன்னிப்பு, பாலும் பழமும் என மூன்று படங்களும் ‘பா’ வரிசைப் படங்களாக, சிவாஜி - பீம்சிங் கூட்டணியில் அமைந்தன. மூன்று படங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வெவ்வேறு கதைக்களத்துடன் வந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. அண்ணன் தங்கை பாசத்திற்கு உதாரணமாக இன்றும் பாசமலர் திரைப்படம் திகழ்கின்றது. பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இஸ்லாமிய இளைஞராகவும், பாலும் பழமும் திரைப்படத்தில் மருத்துவராகவும் தனது சிறந்த நடிப்பு திறனை சிவாஜி கணேசன் வெளிப்படுத்தி இருப்பார். மேலும் சிவாஜி-பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம், பார் மகளே பார், பச்சை விளக்கு போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. வித்யாசமான கதாபாத்திரங்கள் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கதாபாத்திரம் வித்யாசமாக இருக்க வேண்டும் என்பதில் சிவாஜி கணேசன் தனி கவனம் செலுத்தினார். அதற்கேற்றவாறு உடல்மொழி, ஒப்பனை, நடை, நடிப்பு போன்றவற்றை மாற்றியமைத்து கொள்வது இவரின் தனிச்சிறப்பாகும். பலே பாண்டியா, ஆலயமணி, குலமகள் ராதை, இருவர் உள்ளம், புதிய பறவை, ஆண்டவன் கட்டளை, சாந்தி, பழநி, மோட்டார் சுந்தரம் பிள்ளை, செல்வம், நெஞ்சிருக்கும் வரை, தில்லானா மோகனாம்பாள், உயர்ந்த மனிதன், தங்கச் சுரங்கம், தெய்வமகன், சிவந்த மண், எங்க மாமா, வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், சவாலே சமாளி, ஞான ஒளி , பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை, பாரத விலாஸ், கௌரவம் , ராஜபார்ட் ரங்கதுரை'' போன்ற திரைப்படங்கள் மற்றும் பல படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை. நகைச்சுவை திரைப்படங்கள் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, பலே பாண்டியா, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், மூன்று தெய்வங்கள், சுமதி என் சுந்தரி, எமனுக்கு எமன் போன்ற திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்புக்காக போற்றப்பட்டவை. பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள் தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் "பாசமலர்", "பாவ மன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார். புகழ் எகிப்து அதிபர் கமால்அப்தெல்நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்கும் ஆவேசமான கதாபாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசனை நேரில் காண வேண்டும் என்பதற்காக அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து சென்ற முதல் நடிகர் என்ற பெருமைக்கு உரியவர் சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர். பெற்ற விருதுகளும், சிறப்புகளும் சர்வதேச விருதுகள் ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது. செவாலியர் விருது, 1995 இந்திய விருதுகள் பத்ம ஸ்ரீ விருது, 1966 பத்ம பூஷன் விருது, 1984 தாதாசாகெப் பால்கே விருது, 1996 தமிழக விருதுகள் கலைமாமணி விருது, 1962 சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது 1969. (தெய்வமகன்) சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ், 1972. (ஞான ஒளி) சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ், 1973. (கௌரவம்) சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ், 1985. (முதல் மரியாதை) மற்ற விருதுகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின கௌரவ டாக்டர் பட்டம் 1986 என். டி. ஆர் தேசிய விருது (1998) சிறப்புகள் 1962 இல் அமெரிக்கா நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார். தியாகராய நகரில் சிவாஜி கணேசனின் வீடான ‘அன்னை இல்லம்’ இருக்கும் சாலைக்கு 1995 ஆம் ஆண்டு தமிழக அரசு செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று பெயரிட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைத்துறைக்கு ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவரது பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 2018 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டது. சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான அக்டோபர் 1 2021 இல் கூகுள் தனது தேடுபொறியின் முகப்பு பக்கத்தின் அவரின் டூடுலை (Doodle) வெளியிட்டு சிறப்பு செய்தது சிலை மற்றும் நினைவிடம் சிலை சென்னை மெரினா கடற்கரையில், காமராசர் சாலையில் 2006 சூலை 21 அன்று அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சரான மு. கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி ‘‘நான் எழுதிய கவிதை வரிகளுக்கும், வசனங்களுக்கும் உயிர்கொடுத்தவர்; தமிழாக வாழக்கூடியவர்; தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர்; என்னருமைத் தோழர், எனதாருயிர் நண்பர் என்றும், என்னுள்ளே உறைந்திருப்பவர் சிவாஜி கணேசன்’’ என்றும் குறிப்பிட்டதோடு, ‘‘எனது நண்பரின் சிலை மட்டும் இங்கே அமையாது போயிருக்குமேயானால், நானே இங்கு சிலையாகியிருப்பேன்’’ என்று நெகிழ்ந்து குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தின் மதுரை, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பல இடங்களில் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்க பட்டுள்ளது. மணிமண்டபம் சிவாஜி கணேசனின் சாதனைகளை போற்றும் வகையில் 2017 ஆம் ஆண்டு தமிழக அரசால் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அமைக்க பட்டது. இந்த நினைவிடம் தமிழக அரசின் பொதுப்பணித்துறையால் 2017 ஆம் ஆண்டில் 2 கோடியே 80 இலட்சம் செலவில் கட்டப்பட்டதாகும். இந்த நினைவிடமானது 28,300 சதுர அடி அளவில் பரந்து கிடக்கிறது. இந்தக் கட்டிடமானது திராவிட பாணி கட்டிடக் கலையில் கட்டப்பட்டு குவிமாடங்களால் அழகு சேர்க்கப்பட்டதாகும். அரசியல் வாழ்க்கை 1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பெருந்தலைவர் காமராஜர் மீது அதீத பிரியம் கொண்டவர். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார்.1990 ஆம் ஆண்டு ஜனதா தளம் கட்சியின் முதல் தமிழக தலைவர் ஆனார். நடித்த திரைப்படங்கள் தமிழ்த் திரைப்படங்கள் தெலுங்குத் திரைப்படங்கள் பெம்புடு கொடுக்கு (1953) .... மோகன் வேடம் தால வன்சானி வீருடு (1957) பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (1960) பவித்ர பிரேமா (1962) ராமதாசு (1964) பங்காரு பாபு (1972) பக்த துகாரம் (1973) .... சிவாஜி சானக்ய சந்திரகுப்தா (1977) விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987) மலையாளத் திரைப்படங்கள் தச்சோளி அம்பு (1978) ஒரு யாத்ர மொழி (1997) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 1927 பிறப்புகள் 2001 இறப்புகள் இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள் பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள் பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் செவாலியே விருது பெற்றவர்கள் பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் கலைமாமணி விருது பெற்றவர்கள் 1928 பிறப்புகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
596
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், UAE ), சுருக்கமாக அமீரகம் அல்லது எமிரேட்சு என்பது பாரசீக வளைகுடாவில் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கே ஓமான், தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும், உள்ளன. கத்தார், ஈரான் ஆகியவை கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. 2013 ஆம் ஆன்டில் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியன்கள் ஆகும். இவர்களில் 1.4 மில். பேர் அமீரகத்தினரும், 7.8 மில்லியன் பேர் வெளிநாட்டினரும் ஆவார். 1971 டிசம்பரில் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று நிறுவப்பட்ட இந்நாடு அபுதாபி (தலைநகரமாக செயல்படுகிறது), அஜ்மான், துபாய், புஜைரா, ரஃஸ் அல்-கைமா, சார்ஜா, உம் அல்-குவைன் ஆகிய ஏழு அமீரகங்களைக் கொண்ட ஒரு கூட்டரசாகும். தனி முடியாட்சிகளைக் கொண்ட ஒவ்வொரு அமீரகமும் நடுவண் உச்சப் பேரவி ஒன்றின் மூலம் கூட்டாக நிருவகிக்கப்படுகிறது. ஏழு முடியாட்சிகளில் ஒருவர் அமீரகத்தின் சனாதிபதியாக இருப்பார். அமீரகத்தின் அதிகாரபூர்வ சமயம் இசுலாம் ஆகும், அதிகாரபூர்வ மொழி அரபி (அரபு) ஆகும். ஆனாலும், ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அமீரகத்தின் எண்ணெய் வளம் உலகின் நான்காவது-பெரியதாகும். அதேவேளையில், இதன் இயற்கை வாயு வளம் உலகின் 17-வது பெரியதாகும். அமீரகத்தின் ஆரசுத்தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான காலஞ்சென்ற சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் அமீரகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வருவாயை சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு செலவிட்டார். அமீரகத்தின் பொருளாதாரம் வளைகுடா நாடுகளிலேயே அதிகம் பல்வகைப்படுத்தப்பட்டதாக உள்ளது. அதிக மக்கள்தொகையைக் கொண்ட துபாய் நகரம் பன்னாட்டு வணிக, மற்றும் போக்குவரத்துக்கு உகந்த இடமாக மாறியுள்ளது. ஆனாலும், நாட்டின் பொருளாதாரம் அதன் எண்ணெய், இயற்கை வாயு வளத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. வரலாறு ஐக்கிய அரபு அமீரகம் அரபியக் குடாநாட்டில் பாரசீகக் குடாவின் தெற்குக் கரையோரத்திலும், ஓமான் குடாவின் வடமேற்குக் கரைப்பகுதியிலும் இருந்த இனக்குழு அமைப்பைக் கொண்ட சேக்ககங்கள் இணைந்து உருவானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப் பகுதியில் கடலோடிகளான மக்கள் வாழ்ந்து வந்தனர். 7 ஆம் நூற்றாண்டில் இவர்கள் இசுலாம் மதத்தைத் தழுவினர். 16 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் போத்துக்கேயரின் விரிவாக்கம் ஏற்பட்டபோது பாரசீகக் குடாப்பகுதிகளிலும் அவர்கள் உதுமானியருடன் போர்களில் ஈடுபட்டனர். பாரசீகக் குடாப்பகுதி சுமார் 150 ஆண்டுகள் போத்துக்கேயரின் செல்வாக்குக்குள் இருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் இன்றைய ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகள் உதுமானியப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்தன. பிற்காலத்தில் இப்பகுதிகளில் கடற் கொள்ளையர்களும் வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி இந்தியா சென்றுவரும் பிரித்தானியக் கப்பல்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததால், பிரித்தானியா இதிற் தலையிட்டது. 1820 இல் பிரித்தானியா இக் கரையோரத்தில் அமைந்திருந்த சேக்ககங்களுடன் ஒரு அரைகுறை அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது. 1853 ல் இது ஒரு முழுமையான ஒப்பந்தமாகியது. இதன்படி அந் நாடுகள் அவற்றின் பாதுகாப்பு, வெளிவிவகாரங்களின் கட்டுப்பாட்டை ஐக்கிய இராச்சியத்துக்கு வழங்கின. இதன் பின் இவை அமைதி ஒப்பந்த நாடுகள் எனவும், இக் கரைப்பகுதி அமைதி ஒப்பந்தக் கரை எனவும் அழைக்கப்பட்டன. பிரித்தானியா இதில் தொடர்புள்ள 9 நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததேயன்றி அவற்றைக் குடியேற்ற நாடுகளாக நிர்வாகம் செய்யவில்லை. பிற ஐரோப்பிய நாடுகளும் இப்பகுதிகள் மீது கண் வைத்திருந்ததால் பிரித்தானியாவும், அமைதி ஒப்பந்த நாடுகளும் மேலும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக 1892 ஆம் ஆண்டில் இன்னொரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. இதன்படி சேக்குகள், தங்கள் ஆட்சிப்பகுதிகளைப் பயன்படுத்த வேறு நாடுகளை அனுமதிப்பதில்லை என்றும், பிரித்தானியாவின் அனுமதியின்றி வேறு நாடுகளுடன் உறவுகளை வைத்துக்கொள்வதில்லை என்றும் இணங்கினர். இதற்குப் பதிலாக கடல்வழியான எல்லாத் தாக்குதல்களிலுமிருந்து அமைதி ஒப்பந்த நாடுகளைப் பாதுகாப்பது எனவும், தரை வழித்தாக்குதல்கள் எதையும் முறியடிக்க அவர்களுக்கு உதவுவதெனவும் பிரித்தானியா ஒத்துக்கொண்டது. 1960களின் தொடக்கத்தில் அபூ ழபீயில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இது கூட்டமைப்பு உருவாக்கும் கோரிக்கைக்கு வழி வகுத்தது. 1967 ஆம் ஆண்டில் சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான் அபூ ழபீயின் ஆட்சியாளர் ஆனார். இதே வேளை பிரித்தானியர் அங்கே தமது எண்ணெய் முதலீடுகளை ஐக்கிய அமெரிக்காவிடம் இழந்து வந்தனர். பிரித்தானியா தமது கடல் கடந்த ஆட்சிப் பகுதிகள் பலவற்றை இழந்ததனாலும், பிற சிக்கல்களினாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். அவர்களிடம் போதிய பலமோ, பணமோ இருக்கவில்லை. பிரித்தானியர் வளர்ச்சி அலுவலகம் ஒன்றை அமைத்திருந்தனர். இதன் மூலம் அமீரகங்களில் சில சிறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் உதவினர். அமீரகங்களின் சேக்குகள் அப்போது தமக்கிடையிலான விடயங்களை ஒருங்கிணைப்பதற்காக அவை ஒன்றை அமைக்க முடிவு செய்ததுடன் வளர்ச்சி அலுவலகத்தையும் பொறுப்பேற்றனர். அவர்கள் சமாதான ஒப்பந்த அவை ஒன்றை உருவாக்கி அக்காலத்தில் துபாயின் ஆட்சியாளரான சேக் ராசித் பின் சயீத் அல் மக்தூமின் சட்ட ஆலோசகராக இருந்த அதி பித்தார் என்பவரை செயலாளராகத் தெரிவு செய்தனர். இந்த அவை 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் அமையும் வரை இயங்கியது. 1968 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் சமாதான ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளும் தனது முடிவை அறிவித்ததுடன், 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அம்முடிவை உறுதிப்படுத்தியது. அவ்வொப்பந்தத்தோடு தொடர்புடைய ஒன்பது சேக்ககங்களும் கூட்டமைப்பை உருவாக்க முயன்றனவாயினும், 1971 நடுப்பகுதி வரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை. ஆகத்தில் பகுரைன் விடுதலை பெற்றது. செப்டெம்பர் மாதத்தில் கத்தாரும் விடுதலை பெற்றது. அபுதாபி, துபாய் ஆகிய அமீரகங்களின் ஆட்சியாளர்கள் தமது இரு அமீரகங்களிடையே கூட்டமைப்பை உருவாக்க இணங்கி, அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவும், பின்னர் ஏனைய அமீரகத்தினரையும் அழைத்து அவர்களும் கூட்டமைப்பில் சேருவதற்கான வாய்ப்பை வழங்குவது எனவும் முடிவு செய்தனர். அதி பித்தார் 1971 டிசம்பர் 2 ஆம் திகதியளவில் அரசியல் சட்டத்தை எழுதி முடிக்கவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. 1971 ஆம் ஆண்டில் பிரித்தானியா பாரசீகக் குடாப் பகுதியில் இருந்து விலகிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து சமாதான ஒப்பந்த நாடுகளான அபுதாபி, அஜ்மான், ஃபுஜைரா, சார்ஜா, துபாய், மற்றும் உம் அல் குவெய்ன் என்பன இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் என்ன்னும் கூட்டமைப்பை உருவாக்கின. 1972ல் ராஸ் அல்-கைமாவும் இவற்றுடன் இணைந்தது. எஞ்சிய இரண்டு நாடுகளான பஹ்ரைன், கத்தார் ஆகியவை இக் கூட்டமைப்பில் இணையாது விலகிக் கொண்டன. அரசியல் உயர் கவுன்சில், ஏழு அமீரகங்களினதும் ஆட்சியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. ஜனாதிபதியும், உப ஜனாதிபதியும், ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை, உயர் கவுன்சிலினால் தெரிவுசெய்யப்படுவார்கள். அமைச்சரவை, உயர் கவுன்சிலினால் தெரிவு செய்யப்படும் அதேநேரம், எல்லா அமீரகங்களிலிருந்தும் தெரியப்படும் 40 உறுப்பினர் கூட்டாட்சி தேசிய அவை முன்வைக்கப்படும் சட்டங்களை ஆய்வு செய்யும். ஒரு கூட்டாட்சி நீதி மரைமையும் உண்டு; துபாயையும், ராஸ் அல் கைமாவையும் தவிர்ந்த ஏனைய அமீரகங்கள் இதில் இணைந்துள்ளன. எல்லா அமீரகங்களும், குடிசார், குற்றவியல் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான இஸ்லாமியச் சட்டங்களையும், மதச் சார்பற்ற சட்டங்களையும் கொண்டுள்ளன. பொருளாதாரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் செல்வம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 33% ஐக் கொண்ட எண்ணெய், எரிவாயு என்பவற்றின் உற்பத்தியைச் சார்ந்துள்ளது. வளைகுடாவில், சவுதி அரேபியா, ஈரான் என்பவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடு இதுவாகும். 1973 இலிருந்து, பாலைவன சிறு நாடுகளைக்கொண்ட ஏழ்மைப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து, உயர் வாழ்க்கைத்தரத்தைக் கொண்ட நவீன நாடாக மாற்றம் பெற்றுள்ளது. இந் நாட்டின் நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்னணி மேற்கு ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம் குறைந்தது அல்ல. இதன் எண்ணெய் வருமானம் தொடர்பிலான தாராளமும், மிதமான வெளிநாட்டுக் கொள்கையும், இந்நாடு இப்பிரதேசத்தின் விவகாரங்களில் முக்கிய பங்கு வகிப்பதற்கு அனுமதித்துள்ளன. அமீரகங்கள் ஐக்கிய அரபு அமீரகம் பின்வரும் அமீரகங்களைக் கொண்டுள்ளது: புவியியல் ஐக்கிய அரபு அமீரகம்,மத்திய கிழக்கில், ஓமான் வளைகுடா, பாரசீக வளைகுடா என்பவற்றை எல்லையாகக் கொண்டு, ஓமானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே அமைந்துள்ளது. இது ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பெரிய பாலைவனத்துடன் கலக்கும், மட்டமான கரையோரத் தரிசு நிலங்களையும், கிழக்கில் மலைகளையும் கொண்டது. ஹோர்முஸ் நீரிணையின் தென் அணுகுபாதையோடு அமைந்துள்ள இதன் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், உலக கச்சா(crude) எண்ணெயின் இடை மாற்றுப் பகுதியாக இதனை ஆக்கியுள்ளது. மக்கள்தொகைப் பரம்பல் ஐக்கிய அரபு அமீரக மக்கள்தொகை இயற்கைக்கு மாறான ஆண்-பெண் பரம்பலைக் கொண்டுள்ளது. இதன் மக்கள்தொகையில் ஆண்களின் தொகை பெண்களின் தொகையிலும் இரண்டு மடங்கு ஆகும். 15-65 வயது எல்லைக்குட்பட்டோரின் ஆண்/பெண் பால் விகிதம் 2.743 ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்தப் பால் சமநிலையின்மை உலகிலேயே மிகவும் அதிகமானது ஆகும். இதனைத் தொடர்ந்து கட்டார், குவைத், பஹ்ரேன், ஓமான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் வருகின்றன. இவையனைத்தும், வளைகுடாக் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கில் மிக அதிகமான பல்வகைமைத் தன்மை கொண்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். இந்நாட்டின் மக்கள்தொகையில் அமீரகத்தினர் 19% மட்டுமே. பிற அராபியரும், ஈரானியரும் 23% உள்ளனர். இங்கு வாழ்பவர்களில் சுமார் 73.9% மக்கள் பிற நாட்டவர்கள். உலகில், வெளிநாட்டில் பிறந்தவர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் இதுவும் ஒன்று. 1980களுக்குப் பின்னர் தெற்காசியாவின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமானவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளனர். வாழ்க்கைத் தரமும், பொருளாதார வாய்ப்புக்களும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளிலும், தெற்காசியா, தென்கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் இருப்பதைக் காட்டிலும் மிக அதிகமாக இருப்பதால், இந்தியர், பாகிஸ்தானியர், பிலிப்பைன்ஸ் நாட்டினர், வங்காளதேசத்தவர், இலங்கையர் போன்றோருக்கு இது மிகவும் கவர்ச்சிகரமான இடமாக விளங்குகிறது. 2006 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் மொத்தத் தொகை 2.15 மில்லியனாக இருந்தது. அரசியல் அகதிகளாகவும், புலம் பெயர்ந்தோராகவும் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அரபு நாடுகளிலிருந்தும் பலர் இங்கு வந்து வாழ்கின்றனர். 2.4 மில்லியனைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் சனத்தொகையில் சுமார் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டவர்களாகும், அதிலும் 50% வீதமானவர்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களாகும். அயல் நாடுகளோடு ஒப்பிடும்போது இதன் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைவானதாகும். மத நம்பிக்கையைப் பொறுத்தவரை இந்நாட்டினர் அனைவருமே இஸ்லாமியர்களேயாகும். சனத்தொகையில் சுமார் 80% எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக உள்ளார்கள். பண்பாடு இஸ்லாமியப் பண்பாட்டில் வேரூன்றிய ஐக்கிய அரபு அமீரகம், அரபுலகின் ஏனைய நாடுகளுடன் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளது. அரசாங்கம் பாரம்பரியக் கலை, பண்பாட்டு வடிவங்களைப் பேணுவதில் உறுதிபோண்டுள்ளது. அபுதாபி கலாச்சார நிறுவகத்தினூடான செயல்பாடுகளும் இதில் அடங்கும். சமூக வாழ்வில் மாற்றங்கள் தெரிகின்றன; பெண்கள் தொடர்பான மனப்போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன. பாரம்பரியமான ஒட்டகச் சவாரியுடன், நவீன விளையாட்டுகளும் பிரபலமாகி வருகின்றன. விடுமுறைகள் இவற்றையும் பார்க்க ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மாநகரங்களின் பட்டியல் பாம் தீவுகள் பூர்ஜ் அல் அராப் துபை மெட்ரோ புர்ஜ் கலீஃபா கல்ப் நியூஸ் குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
597
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
சமயம்
சமயம் அல்லது மதம் என்பது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாட்டமைப்புகளில் ஒன்று ஆகும். ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும் அது தொடர்பான செயற்பாடுகளும், சமயச் சடங்குகளும் மதம் குறிக்கிறது. சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்துக்களின் தொகை 81.3% 80.5% 54% 33.7% 28% 25% 20% 18.2% 15% 12.6% 12% 9.6% 8.1% 6.7% 6.3% 5.1% 3% 2.1% 1.8% 1.69% கிறித்தவர்களின் தொகை 100% 100% (100% ஏழாம் நாள் வருகை சபை) ~99% 99% 98.3% 98.1% (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்) 98% (96% ரோமன் கத்தோலிக்கம்) 98% (95% கிரேக ஒர்தோடக்ஸ்) 97.2% 97.2% 97% (~97% ரோமன் கத்தோலிக்கம்) 96.9% (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்) 96.5% (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்) 96.4% 96% ~96% 95.1% 94.8% 94.2% 93.5% (பெரும்பாலும் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை) 93% முஸ்லிம்களின் தொகை 100 % (90–95% சுன்னி இசுலாம், 5–10% சியா இசுலாம்) 100% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்) 100% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்) 99.8% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்) 99.8% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்) ~99% (பெரும்பாலும் சுன்னி இசுலாம், 20% சியா இசுலாம்) 99.1% (99.9%) (65–70% சுன்னி இசுலாம், 30–35% சியா இசுலாம்) 98.7% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்) 98.3% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்) 98% (பெரும்பாலும் சியா இசுலாம்) 98% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்) 98% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்) 97% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்) 96.6% (99%) (சுன்னி இசுலாம்) 96.4% (85–90% சுன்னி இசுலாம், 10–15% சியா இசுலாம்) 95% (60–65% சியா இசுலாம், 33–40% சுன்னி இசுலாம்) 94% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்) 93% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்) 89.4% (சுன்னி இஸ்லாம்) 89.3% (சுன்னி இஸ்லாம்) பௌத்தர்களின் தொகை 97% (தேரவாதம் – 93%) 96% (மகாயானம் – 36%) 95% (தேரவாதம் – 93%) 93% (மகாயானம் – 35%) 93% (வஜ்ரயானம் – 53%) 90% (தேரவாதம் – 80%) 90% (மகாயானம் – 15%) 84% (வஜ்ரயானம் – 75%) 80% (மகாயானம் – 17%) 75% (மகாயானம் – 10%) 75% (மகாயானம் – 36%) 70% (தேரவாதம் – 69%) 67% (தேரவாதம் – 65%) 51% (மகாயானம் – 33%) 50% (மகாயானம் – 20%) 50% (மகாயானம் – 23%) 21% (மகாயானம் – 18%) 17% (மகாயானம் – 9%) 16% (மகாயானம் – 10%) 14% (மகாயானம் – 2%) சமயத்தில் உள்ள பிரிவுகள் ஆபிரகாமிய சமயங்கள் யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம் கிறிஸ்லாம் தர்ம சமயங்கள் இந்து சமயம் பௌத்தம் சமணம் ஆசீவகம் சீக்கியம் டாவோயிசம் கன்பூசியம் சொராட்டிரியம் இந்து சமயத்தின் உட்பிரிவுகள் சைவம் வைணவம் சாக்தம் சௌரம் கௌமாரம் காணாபத்தியம் கிறித்துவ சமயத்தின் உட்பிரிவுகள் கத்தோலிக்க திருச்சபை புரடஸ்தாந்தம் பெந்தேகோஸ்து கிழக்கு மரபுவழி திருச்சபை ராஸ்தஃபாரை இசுலாமிய சமயத்தின் உட்பிரிவுகள் சுன்னி இசுலாம் சியா இசுலாம் சூபியிசம் பஹாய் அகமதியா இவற்றையும் பார்க்க தமிழர் சமயம் வெளி இணைப்புகள் மக்கள் மதங்களை பின்பற்ற காரணம் என்ன? மேற்கோள்கள் சமயம் பண்பாடு
599
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். பொ.ஊ. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி பொ.ஊ. 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன. இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் இயுனெசுகோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தஞ்சாவூர் அரண்மனை தேவத்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். சொல்லிலக்கணம் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில், பெரிய கோயில், இராசராசேசுவரன் கோயில், இராசராசேச்சரம் என்றும் அழைக்கப்படுகிறது. முதலாம் இராசராச சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராசராசேச்சரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. வரலாறு முதலாம் இராசராச சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்தார். இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராசராச சோழனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (பொ.ஊ. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (பொ.ஊ. 1009–1010). கோயிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் போதிகைகள் கொண்ட பன்முகத் தூண்கள் காணப்படுகின்றன. தனித்துவமான திராவிடகட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இடைக்காலச் சோழர்கள் பொ.ஊ. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இடைக்காலச் சோழர் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன. பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம் காஞ்சியில் இராசசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் இராசராசனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராசராசன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராசர் கோவிலில் உள்ள அசலேசுவரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராச சோழனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும். திருவிடைமருதூர்க் கோவிலில் உள்ள மூலவரின் பெயர் மகாலிங்கம். இராசராச சோழனின் பெயருக்கு ஏற்றார் போல் அந்த விக்கிரகம் இல்லை என்று எண்ணம். பின்னாளில் பெருவுடையார் என்ற பெயருக்கு ஏற்ப லிங்கமும் கோவிலும் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இக்கோயிலைக் கட்டத் தூண்டியது என்றும் ஓர் செய்தி உண்டு. கட்டமைப்பு இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் இராசராசப்பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும், இலேபட்சி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது. முதன்மைக் கடவுளான இலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் பிரகாரம் 240 மீ. x 125 மீ. அளவிலானது. 108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் பாண்டியர்களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும் விசயநகர அரசர்களால் முருகர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது. தஞ்சை நாயக்கர்களாலும் இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது. கோயில் அமைப்பு முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேசுவரத்தில் கட்டப்பட்ட இலிங்கராசர் கோயிலின் உயரம் 160 அடியாகும். இராசராசேச்சரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன. இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த (Axial) மண்டபங்களும், விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது. வடிவமைப்பு கோட்பாடு:1 எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல, சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை-லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன. கோட்பாடு:2 எல்லோரா குகைகள் (பொ.ஊ. 700) எப்படி ஒரு பெரிய மலையை குடைந்து கட்டப்பட்டதோ; அது போல் தஞ்சை பெரிய கோவில் விமானமும் (பொ.ஊ. 1000) ஒரு பெரிய மலையை அந்த கோபுர வடிவத்திற்கு வெட்டப்பட்டபின், நுட்பமாக சிற்பங்கள் அந்த விமானத்தில்மேல் செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. விமானம் முக்கிய விமானம் உத்தம வகையைச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தரை மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்றன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது. மேலேயும் கீழேயும் பத்ம தளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்கங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது. இடைச்சிக் கல் தஞ்சைப் பெருவுடையார் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருண்மொழிவர்மன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை இராசகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பெருவுடையார் மேல் விழுகிறது. நந்தி மண்டபம் தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராசராசனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின் தஞ்சை நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராசராசன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றப்பட்டது. சந்நிதிகள் சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேசுவரர், அம்மன், நடராசர், வராகி, முருகர், விநாயகர் மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன. பெருவுடையார் சந்நிதி -பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். இந்த மூலவரை இராசராச சோழன் இராசராசீச்சரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார். இம்மூலவருக்கு பீடம் இல்லை. பெரியநாயகி அம்மன் சந்நிதி - இக்கோவிலின் அம்மன் பெரியநாயகியாவார். கருவூர் சித்தர் சந்நிதி - இக்கோவிலில் கருவூர் சித்தருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது. வராகி அம்மன் சந்நிதி - இது சோழர் கால கட்டுமானமாக இருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது. வேறெங்கிலும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வியக்கத்தக்கது. கல்வெட்டுக்கள் இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் அருண்மொழி வர்மன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது. கோவிலின் முதல் கல்வெட்டே இதற்கு சான்று. "நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...." தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. இங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன் -- தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன. கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன. விழாக்கள் பிரம்மோற்சவம் - இராசராசசோழன் பிறந்தநாள் விழா அன்னாபிசேகம் திருவாதிரை ஆடிப்பூரம் கார்த்திகை பிரதோசம் சிவராத்திரி தேரோட்டம் தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு இக்கோவில் விமானத்தின் உயரம் 216 அடி (66மீ) உயரம் கொண்டது. இக்கோவிலில் தமிழின் சிறப்புக்களும் மாமன்னர் இராசராச சோழனின் தமிழ் பற்றும் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும் இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை இராசராசன் எழுப்பினார். இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும். தமிழகத்தில் சற்றொப்ப இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், திருபுவனம் கம்பகரேசுவரர் கோயில் ஆகியவையாகும். 1010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டு, தபால் தலை தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும். மத்திய அரசு 1995 ஆம் ஆண்டில் மாமன்னர் இராசராச சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது. ஆயிரமாண்டு நிறைவு விழா தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது. மத்திய மந்திரி ஆ. ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முன்னால் முதல்-அமைச்சர் மு. கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார். சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முன்னால் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ். எஸ். பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் இராசராசன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார். விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதசுவர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முன்னால் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது. 2020 குடமுழுக்கு தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 5 பிப்ரவரி, 2020 ஆம் ஆண்டு காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இராசகோபுரம், அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை தொடர்ந்து அனைத்து கும்பங்களுக்கும் மகாதீபாரதனை நடைபெற்றது. தமிழ், சமசுகிருதத்தில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. கருத்துகளும் உண்மைகளும் தஞ்சை பெரிய கோயிலின் கோபுர நிழனானது தரையில் விழாது என்றொரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இக்கோயிலின் விமான நிழல் தரையில் விழுகின்ற படியே அமைக்கப்பட்டிருக்கிறது. விமானத்தின் கோபுரம் 80 டன் எடைகொண்ட ஒரே கல்லால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவறான தகவலாகும். ஒரே கல்லால் கட்டப்படாமல், தனித்தனி கற்களை ஆரஞ்சு பழத்தின் சுளைபோல் இணைத்து விமானக் கோபுரத்தைக் கட்டியுள்ளனர். திருமேனிகள் செப்புபட்டையங்கள், திருச்சுற்று மாளிகை மற்றும் கோயிலை சுற்றியுள்ள கல்வெட்டுகளிலிருந்து கோயிலுக்கு கொடுக்கப்பட்ட திருமேனிகளை கல்வெட்டு அறிஞர்கள் பட்டியல் இட்டுள்ளனர். அவையாவன: நம்பியாரூரார் நங்கை பரவையார் திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர் பெரிய பெருமாள்(இராஜராஜர் சிலை) பெரிய பெருமாள் நம்பிராட்டியார் (இராஜராஜர் மனைவி ஒலோகமாதேவி சிலை) சந்திரசேகர தேவர் ஷேத்ரபாலர் ஆடுகின்ற பைரவ மூர்த்தி சிறுத்தொண்ட நம்பி திருவெண்காட்டு நங்கை சீராளதேவர் ஆடவல்லான் ஆடவல்லான் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி மிலாடுடையார் ரிஷபவாகனதேவர் ரிஷபவாகனதேவர் நம்பிராட்டியார் ரிஷபம் கணபதி இலிங்கபுராண தேவர் சிவபெருமானின் கல்யாண சுந்தரர் திருமேனி, தஞ்சை அழகர், தஞ்சை அழகர் நம்பிராட்டியார், கணபதி(நின்ற நிலை), பதஞ்சலித் தேவர் ஆடவல்லார் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி, தட்சிணமேருவிடங்கர் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி தஞ்சைவிடங்கர் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி பொன்மாளிகை துஞ்சியதேவர் (சுந்தர சோழர் சிலை) வானவன் மாதேவி சிலை (குந்தவை தம் அம்மையாக எழுந்தருள்வித்த திருமேனி) பிச்சத்தேவர் திருமேனி சண்டேச பிரதாச தேவர் பஞ்சதேக மூர்த்தி தட்சிணாமூர்த்தி சண்டேசர் பிருங்கீசர் சூர்ய தேவர் கிராதார்ச்சுன தேவர் சிலை காளபிடாரி திருமேனி உமாஸகிதர் உமா பரமேஸ்வரி கணபதி சுப்பிரமண்யர் வில்லானைக்கு குருக்களாக எழுந்தருள்வித்த திருமேனி துர்க்கா பரமேஸ்வரி படங்கள் மேலும் பார்க்க அழியாத சோழர் பெருங்கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் ஐராவதேசுவரர் கோயில் தஞ்சைப் பெரிய கோயில் தேரோட்டம் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள் உசாத்துணை • குடவாயில் பாலசுப்ரமணியன், இராஜராஜேச்சரம், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், 2010 • தஞ்சைப்பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குறித்து குடவாயில் பாலசுப்ரமணியன் - காணொலி தஞ்சை பெரிய கோயில்: 10 சுவாரஸ்ய தகவல்கள் தஞ்சை பெரிய கோவில் வரலாறு டாட் காம் இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ் கீதம் டாட் நெட்டில் கோவில் பற்றி தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் ஒளி-ஒலி காட்சிகள் தஞ்சை பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல் ரகசியம்: வல்லுநர்கள் புதிய தகவல் ''சிறப்புமிகு தஞ்சைத் தரணியில் ராஜராஜனின் கலைக்கோயில்' இந்துக் கோயில் கட்டிடக்கலை தமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் தஞ்சாவூர் வரலாறு தஞ்சாவூர் மாவட்டம்
600
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு (Leisure) அல்லது ஓய்வு நேரம் என்பது ஒரு நடவடிக்கை அல்லது ஆர்வமாகும். பெரும்பாலும் ஓய்வு நேரத்தில் இன்பத்திற்காக அல்லது ஓய்விற்காக பொழுதுபோக்கு மேற்கொள்ளப்படுகிறது. ஓய்வு நேரம் என்பது வணிகம், வேலை, வேலை தேடுதல், வீட்டு வேலைகள் மற்றும் கல்வி ஆகியவற்றிலிருந்து விலகி, உணவு மற்றும் தூக்கம் போன்ற தேவையான செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்படுவதாகும். இலவச நேரத்தை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் அணுகுமுறைகளின் பன்முகத்தன்மையின் காரணமாக இதை வரையறுப்பது என்பது எளிதானது அல்ல. எடுத்துக்காட்டாக, சமூக சக்திகள் மற்றும் சூழல்கள் குறித்த சமூகவியல் மற்றும் உளவியல் மன மற்றும் உணர்ச்சி நிலைகள் மற்றும் நிலைமைகள் என வெவ்வேறு துறைகள் அவற்றின் பொதுவான பிரச்சினைகளை பிரதிபலிக்கும் வரையறைகளைக் கொண்டுள்ளன. ஒரு ஆராய்ச்சி கண்ணோட்டத்தில், இந்த அணுகுமுறைகள் காலப்போக்கில் அளவிடக்கூடியவை எனவும் மற்றும் ஒப்பிடக்கூடியவை எனவும் உள்ளது. ஓய்வு நேரப் படிப்புகள் மற்றும் ஓய்வு நேரத்தின் சமூகவியல் ஆகியவை ஓய்வு நேரத்தைப் பற்றிய ஆய்வு மற்றும் பகுப்பாய்வு தொடர்பான கல்வித் துறைகளாகும். ஓய்வு நேரம் என்பது பொழுதுபோக்கிலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் இது செயல்பாட்டு சூழல்களில் ஓய்வு நேர அனுபவத்தை உள்ளடக்கிய ஒரு நோக்கமான செயலாகும். ஓய்வுக்காலங்கள் ஊதியத்தைப் போன்ற ஒரு நபருக்கு மதிப்புமிக்கவை என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இல்லையெனில், மக்கள் ஓய்வு எடுப்பதற்கு பதிலாக வேலை செய்திருப்பார்கள். இருப்பினும், ஓய்வு நேரத்திற்கும் தவிர்க்க முடியாத செயல்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடு கடுமையாக வரையறுக்கப்படவில்லை. எ. கா. மக்கள் சில நேரங்களில் இன்பத்திற்காகவும் நீண்ட கால பயன்பாட்டிற்காகவும் வேலை சார்ந்த பணிகளைச் செய்கிறார்கள். ஓய்வு நேரம் என்பது மனித உரிமைகளுக்கான உலக மனித உரிமைகள் சாற்றுரையின் 24 வது பிரிவில் உணரப்பட்டது. வரலாறு ஓய்வு என்பது வரலாற்று ரீதியாக உயர் வர்க்கத்தின் சலுகையாகவே இருந்து வருகிறது. ஓய்வு நேரத்திற்கான வாய்ப்புகள் அதிக பணம் அல்லது அமைப்பு மற்றும் குறைந்த வேலை நேரத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை ஓய்வு வியத்தகு முறையில் அதிகரித்து, பெரிய பிரித்தானியாவில் தொடங்கி ஐரோப்பாவின் பிற பணக்கார நாடுகளுக்கு பரவியது. செல்வம் இருந்தபோதிலும் மிகக் குறைவான ஓய்வு நேரத்தை வழங்கியதற்காக ஐரோப்பாவில் அந்த நாடு நற்பெயரைக் கொண்டிருந்தாலும், அது அமெரிக்காவிற்கும் பரவியது. அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள் ஐரோப்பாவை விட கடினமாக உழைக்க வேண்டும் என்பதைக் கண்டறிந்தனர். அமெரிக்கர்கள் ஏன் அதிக நேரம் வேலை செய்கிறார்கள் என்பதை பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். சமீபத்திய புத்தகத்தில், லாரண்ட் டர்கோட் என்பவர், ஓய்வு என்பது 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்படவில்லை. ஆனால் வரலாற்றின் தொடக்கத்திலிருந்து மேற்கத்திய உலகில் ஊக்குவிக்கப்படுகிறது என்று வாதிடுகிறார். கனடா கனடாவில், ஓய்வு நேரம் வேலை நேரத்தின் சரிவுடன் தொடர்புடையது . அங்கு தார்மீக மதிப்புகள் மற்றும் இன-மத மற்றும் பாலின சமூகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் நீண்ட இரவுகள் மற்றும் கோடையின் நீண்ட பகல்நேரத்துடன் கூடிய ஒரு குளிர்ந்த நாட்டில், குதிரைப் பந்தயம், வளைதடிப் பந்தாட்டம், கூட்டமாக கூடி பாடல்களைப் ஆடுவது, பனிச்சறுக்கு மற்றும் பலகை விளையாட்டுகள் போன்ற குழு விளையாட்டுகள் பிடித்த ஓய்வு நடவடிக்கைகளில் அடங்கும். தேவாலயங்கள் ஓய்வு நேர நடவடிக்கைகளை வழிநடத்த முயன்றன. குடிப்பழக்கத்திற்கு எதிராக பிரசங்கம் செய்தன. மேலும், வருடாந்திர மறுமலர்ச்சிகள் மற்றும் வாராந்திர சங்க நடவடிக்கைகளைத் திட்டமிட்டன. 1930 வாக்கில் கனடியர்களை தங்கள் உள்ளூர் அல்லது பிராந்திய வளைத்தடிப்பந்தாட்ட அணிகளுக்குப் பின்னால் ஒன்றிணைப்பதில் வானொலி முக்கிய பங்கு வகித்தது. பிரான்சு பிரான்சில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஓய்வு என்பது இனி ஒரு தனிப்பட்ட செயல்பாடாக இருக்கவில்லை. இது மேலும் மேலும் ஒழுங்கமைக்கப்பட்டது. 1858இல் 80,000 மக்கள் தொகை கொண்ட பிரெஞ்சு தொழில்துறை நகரமான லீல் நகரத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு தொழிலாள வர்க்கத்திற்கான உணவகங்களின் எண்ணிக்கை 1300 அல்லது ஒவ்வொரு மூன்று வீடுகளுக்கும் ஒன்று என எண்ணப்பட்டன. அங்கு 63 மது விடுதிகளும் மற்றும் பாடும் சங்கங்களும், 37 சீட்டாட்ட விடுதிகளும், 23 பந்து வீச்சு சங்கங்களும் மற்றும் வில்வித்தைக்கு 18 சங்கங்களும் இருந்ததென கணக்கிடப்பட்டது. தேவாலயங்களும் தங்கள் சமூக அமைப்புகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சங்கத்திலும் அதிகாரிகளின் நீண்ட பட்டியல் மற்றும் விருந்துகள், திருவிழாக்கள் மற்றும் போட்டிகளின் பரபரப்பான அட்டவணை இருந்தது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான பொழுது போக்குச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. ஐக்கிய இராச்சியம் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பிரிட்டனில் கல்வியறிவு, செல்வம், பயணத்தின் எளிமை மற்றும் சமூகத்தின் விரிவான உணர்வு வளர்ந்ததால், அனைத்து வகை மக்களின் பங்கிலும் அனைத்து வகையான ஓய்வு நேர நடவடிக்கைகளிலும் அதிக நேரமும் ஆர்வமும் இருந்தது. பொழுதுபோக்குகளின் வகைகள் பொழுதுபோக்குர நடவடிக்கைகளின் வரம்பு மிகவும் முறைசாரா மற்றும் சாதாரணமானவை முதல் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் வரை நீண்டுள்ளது. பொழுதுபோக்கு என்பது தனிப்பட்ட திருப்திக்காக மேற்கொள்ளப்படும் ஒரு செயலாகும். சமூகம் மாறும்போது பொழுதுபோக்குகளின் பட்டியல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. வாசிப்பு புத்தகங்கள், பத்திரிகைகள், காமிக்கள் அல்லது செய்தித்தாள்கள் போன்றவற்றை வாசிப்பது வாசித்தல் எனப்படுகிறது. இது ஒரு வழக்கமான பொழுதுபோக்காகும். மேலும் இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கமாகும்.1900க்குப் பிறகு கல்வியறிவு மற்றும் ஓய்வு நேரம் விரிவடைந்ததால், வாசிப்பு ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறியது. வயது வந்தோருக்கான புனைகதைகள் 1920 களில் இரட்டிப்பாகியது. 1935 வாக்கில் ஆண்டுக்கு 2800 புதிய புத்தகங்களை எட்டியது. நூலகங்கள் தங்கள் பங்குகளை மூன்று மடங்காக அதிகரித்தன. மேலும் புதிய புனைகதைகளுக்கான பெரும் தேவையைக் கண்டன. 1935 ஆம் ஆண்டில் பெங்குயின் பதிப்பகத்தாரின் ஆலன் லேன் என்ற விலை மலிவான புத்தகம் ஒரு வியத்தகு கண்டுபிடிப்பாகும். அந்நிறுவனம் வெளியிட்ட நூல்களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே மற்றும் அகதா கிறிஸ்டி ஆகியோரின் புதினங்களும் அடங்கும். அவை மலிவாக விற்கப்பட்டன. இருப்பினும், போர் ஆண்டுகளில் வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தகக் கடைகளுக்கு ஊழியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் 1940 ஆம் ஆண்டில் பாட்டர்னோஸ்டர் சதுக்கத்தில் நடந்த விமானத் தாக்குதலால் அங்கிருந்த காகித கிடங்குகளில் 5 மில்லியன் புத்தகங்கள் எரிந்தது. சாதாரண பொழுதுபோக்கு "சாதாரண பொழுதுபோக்கு என்பது ஒப்பீட்டளவில் குறுகிய கால, மகிழ்ச்சியான செயலாகும். இதை அனுபவிக்க சிறப்பு பயிற்சி ஏதும் தேவையில்லை". பண்பாட்டு வேறுபாடுகள் பொழுதுபோக்குக்கான நேரம் ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்திற்கு மாறுபடும். இருப்பினும் வேட்டைக்காரர்கள் மிகவும் சிக்கலான சமூகங்களில் உள்ளவர்களை விட கணிசமாக அதிக பொழுதுபோக்கிற்கான நேரத்தைக் கொண்டுள்ளனர் என்று மானுடவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் விளைவாக, வட அமெரிக்காவில் வாழும் பழங்குடிகளான சோஷோன் போன்ற இசைக்குழு சமூகங்கள் ஐரோப்பிய காலனித்துவவாதிகளுக்கு அசாதாரணமாக சோம்பேறியாக தெரிந்தனர். புள்ளிவிவரப்படி, வீட்டு மற்றும் பெற்றோருக்குரிய பொறுப்புகள் மற்றும் ஊதியம் பெறும் வேலையில் பங்கேற்பது ஆகிய இரண்டின் காரணமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆண்கள் பெண்களை விட அதிக பொழுது போக்கிற்கான நேரத்தைக் கொண்டுள்ளனர். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், வயது வந்த ஆண்களுக்கு ஒவ்வொரு வாரமும் பெண்களை விட ஒன்று முதல் ஒன்பது மணி நேரம் வரை அதிக பொழுதுபோக்கிற்கான நேரம் கிடைக்கும். குடும்பப் பொழுதுபோக்கு குடும்பப் பொழுதுபோக்கு என்பது பெற்றோர், குழந்தைகள் மற்றும் உடன்பிறப்புகள் ஆகியோருடன் நேரம் அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஒன்றாக செலவழிக்கும் ஒரு செயலாகும். மேலும் இது தாத்தா பாட்டி, பெற்றோர் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோருடன் பொழுதுபோகும் நடவடிக்கைகளில் ஒன்றாக விரிவுபடுத்தப்படலாம். மேலும், வார இறுதி நாளில் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து விளையாடுவதும் இவ்வகையில் அடங்கும் முதுமை பொழுதுபோக்கு என்பது வாழ்நாள் முழுவதும் முக்கியமானது . இது கட்டுப்பாடு மற்றும் சுய மதிப்பு உணர்வை எளிதாக்கும். குறிப்பாக, வயதானவர்கள், உடல், சமூகம், உணர்ச்சி, கலாச்சார மற்றும் ஆன்மீக அம்சங்களால் பயனடையலாம். எடுத்துக்காட்டாக, பேரக்குழந்தைகளுடன் ஓய்வு நேரத்தில் ஈடுபடுவது தலைமுறை உணர்வுகளை மேம்படுத்தும். இதன் மூலம் வயதானவர்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்வதன் மூலம் நல்வாழ்வை அடைய முடியும். இதனையும் காண்க மகிழ்கலை உழைப்பு (பொருளியல்) வேலை-வாழ்வு சமநிலை மேற்கோள்கள் மேலும் வாசிக்க Cross, Gary S. Encyclopedia of recreation and leisure in America. (2004). Harris, David. Key concepts in leisure studies. (Sage, 2005) Hunnicutt, Benjamin Kline. Free Time: The Forgotten American Dream. (Temple University Press, 2013). Ibrahim, Hilmi. Leisure and society: a comparative approach (1991). Jenkins, John M., and J.J.J. Pigram. Encyclopedia of leisure and outdoor recreation. (Routledge, 2003). . Kostas Kalimtzis. An Inquiry into the Philosophical Concept of Scholê: Leisure As a Political End. London; New York: Bloomsbury, 2017. Rojek, Chris, Susan M. Shaw, and A.J. Veal, eds/ A Handbook of Leisure Studies. (2006). Rose, Julie L. (2024). "The Future of Work? The Political Theory of Work and Leisure". Annual Review of Political Science. 27 (1) பொழுதுபோக்கின் வரலாறு Abrams, Lynn. Workers' culture in imperial Germany: leisure and recreation in the Rhineland and Westphalia (2002). Beck, Peter J. "Leisure and Sport in Britain." in Chris Wrigley, ed., A Companion to Early Twentieth-Century Britain (2008): 453–469. Borsay, Peter. A History of Leisure: The British Experience since 1500 (Palgrave Macmillan, 2006). Burke, Peter. "The Invention of Leisure in Early Modern Europe". In: Past and Present 146 (1995), pp. 136–150. Cross, Gary. A social history of leisure since 1600 (1990). De Grazia, Victoria. The culture of consent: mass organisation of leisure in fascist Italy (2002). Hatcher, John. "Labour, Leisure and Economic Thought before the Nineteenth Century". In: Past and Present 160 (1998), pp. 64–115. Koshar, Rudy. Histories of Leisure (2002). Levinson, David, and Karen Christensen. Encyclopedia of world sport: from ancient times to the present (Oxford UP, 1999). Marrus, Michael R. The Emergence of Leisure. New York 1974 Poser, Stefan: Leisure Time and Technology, European History Online, Mainz: Institute of European History, 2011, retrieved: 25 October 2011. Stearns, Peter N. ed. Encyclopedia of European social history from 1350 to 2000 (2001) 5:3–261; 18 essays by experts Struna, Nancy L. People of Prowess Sport Leisure and Labor in Early Anglo-America (1996) excerpt Towner, John, and Geoffrey Wall. "History and tourism." Annals of Tourism Research 18.1 (1991): 71–84. online Towner, John. "The Grand Tour: a key phase in the history of tourism." Annals of tourism research 12#3 (1985): 297–333. Turcot, Laurent Sports et Loisirs. Une histoire des origines à nos jours, Paris, Gallimard, 2016. Turcot, Laurent "The origins of Leisure", International Innovation, April 2016 Walton, John K. Leisure in Britain, 1780–1939 (1983). Withey, Lynne. Grand Tours and Cook's Tours: A history of leisure travel, 1750 to 1915 (1997). வரலாற்றுப் பதிவு Akyeampong, Emmanuel, and Charles Ambler. "Leisure in African history: An introduction." International journal of African historical studies 35#1 (2002): 1–16. Mommaas, Hans, et al. Leisure research in Europe: methods and traditions (Cab international, 1996), on France, Poland, Netherlands, Spain, Belgium, and the UK. வெளி இணைப்புகள் Leisure Peter Burke, The invention of leisure in early modern Europe, Past & Present, February 1995 The Development of Leisure Amongst the Social Classes During the Industrial Revolution (archived 9 May 2008) மனித சூழ்நிலையியல் ஓய்வு
601
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
நூற்றாண்டுகளின் பட்டியல்
இந்தப் பக்கங்கள், ஆயிரவாண்டுகளினதும், நூற்றாண்டுகளினதும் போக்குகளைக் கொண்டுள்ளன. தனித்தனி நூற்றாண்டுப் பக்கங்கள், தசாப்தங்களையும், ஆண்டுகளையும் பட்டியலிட்டுள்ளன. வரலாற்று நிகழ்வுகளின் வெவ்வேறு ஒழுங்கமைப்புகளுக்கு வரலாறு பக்கத்தைப் பார்க்கவும். முந்திய காலப்பகுதிகளுக்கு cosmological timeline, புவிச்சரிதவியல் நேர அலகு, பரிணாம நேரவரிசை, pleistocene, மற்றும் பழைய கற்காலம் என்பவற்றைப் பார்க்கவும்.. கிமு 10வது ஆயிரவாண்டு கிமு 9வது ஆயிரவாண்டு கிமு 8வது ஆயிரவாண்டு கிமு 7வது ஆயிரவாண்டு கிமு 6வது ஆயிரவாண்டு கிமு 5வது ஆயிரவாண்டு கால வரிசைப்படி வரலாறு நூற்றாண்டுகள் பட்டியல்கள்
602
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
பொழுதுபோக்குகளின் பட்டியல்
பொழுதுபோக்குகளின் பட்டியல். பொழுதுபோக்கு என்பது ஓய்வு நேரத்தில் செய்யும் விருப்பமான அல்லது ஆசுவாசப்படுத்தக்கூடிய செயல்பாடாகும். பொதுவான ஈடுபாடுகள் விளையாட்டுக்கள் கல்வி சார்ந்த ஈடுபாடுகள் சேகரிப்பு சார்ந்த ஈடுபாடுகள் உள்புறம் வெளிப்புறம் போட்டி சார்ந்த ஈடுபாடுகள் உள்புறம் வெளிப்புறம் கவனிப்பு சார்ந்த ஈடுபாடுகள் உள்புறம் வெளிப்புறம் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பொழுதுபோக்கு ஈடுபாடுகள்
603
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%2010%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கிமு 10ஆம் ஆயிரமாண்டு
கிமு 10-ஆம் ஆயிரமாண்டு (10th millennium BC) என்பது கிமு 10000 ஆம் ஆண்டு முதல் 9001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இவ்வாயிரமாண்டு ஒலோசீன் ஊழியின் முதற் பகுதியாகக் கருதப்படும் இடைக் கற்காலம் மற்றும் எப்பிபெலியோலிதிக்கு (Epipaleolithic) காலங்களின் ஆரம்பக் கட்டமாகும். தென்மேற்கு ஆசியாவில் நெல் மற்றும் சிறுதானியங்களின் அடிப்படை வேளாண்மை தொடங்கிய காலகட்டம். இக்காலகட்டத்தில் வளமான நிலங்களில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அடுத்த 2,000 ஆண்டுகளுக்கு வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகள் பெரும்போக்காக கடைப்பிடிக்கப்படவில்லை. உலக மக்கள் தொகை ஒன்று தொடக்கம் பத்து மில்லியன் ஆகக் காணப்பட்டது, இதில் பெரும்பாலானவர்கள் அண்டார்டிக்கா மற்றும் சிலாந்தியா கண்டங்களைத் தவிர மற்றைய கண்டங்களில் உணவுதேடி வேட்டையாடும் சமூகத்தை சார்ந்த குழுக்களாகவே பல இடங்களில் சிதறிக் காணப்பட்டனர். பனிப்பாறையாக்கத்தின் பல பகுதிகள் முடிவுக்கு வந்ததனால், உலகின் வடக்குப் பகுதிகளில் மீள்குடியேற்றம் நிகழத்தொடங்கியது. நிகழ்வுகள் கிமு 10,000:மெசொப்பொத்தேமியாவில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் துவங்கியது. லெவண்ட் பகுதியில் நூத்துபியப் பண்பாடு விளங்கியது. கிமு 10,000: மீசோலிதிக் காலப்பகுதியின் முதலாவது குகைச் சித்திரங்கள் சண்டை மற்றும் சமைய நிகழ்வுகளை சித்தரிக்கும் வண்ணம் வரையப்பட்டது. கிமு 10,000: சுரைக்காய் பயிரிடப்பட்டு திரவம் கொண்டுசெல்லும் போத்தல்களாக பயன்பட்டது. கிமு 10,000: இறுதிப் பனிப்பாறையாக்கம் முடிவுக்கு வந்தது. கிமு 9,700: பெலிஸ்டோசின் சகாப்த்தம் முடிவுக்கு வந்து கோலோசின் சகாப்தம் தொடங்கியது. கிமு 9,700: அறுவடை செய்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விவசாய அறுவடை என்று கருதவேண்டியதில்லை. காட்டுப்புற்கள் அனத்தோலியா என்கிற பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்டிருக்கலாம். கிமு 9,500: கொபெக்லி தேபே என்கிற ஆலையத்தொகுதி கட்டுமானம் செய்யப்பட்டது. கிமு 9,300: அத்திமரப் பழங்கள் ஜோர்டான் ஆற்றுப் பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்டன. கிமு 9,100: நாமறிந்த மிகப்பழைய பெரும்கற்கள் கொபெக்லி தேபே ஆலையத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டன. சில பெரும்கற்களின் எடை 20 தொன். கிமு 9,000: புதிய கற்கால கலாச்சாரம் பழைய அண்மைய கிழக்கில் உதயமாகியது. மேற்கோள்கள் துணை நூல்கள் (2006a): "Early Domesticated Fig in the Jordan Valley". Science 312(5778): 1372. (HTML abstract) Supporting Online Material (2006b): "Response to Comment on 'Early Domesticated Fig in the Jordan Valley. Science 314(5806): 1683b. PDF fulltext (2006): "Comment on 'Early Domesticated Fig in the Jordan Valley. Science 314(5806): 1683a. PDF fulltext (1994): History of the World. Penguin. ஆயிரமாண்டுகள்
604
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%209%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கிமு 9ஆம் ஆயிரமாண்டு
கிமு 9-ஆம் ஆயிரமாண்டு (9th millennium BC) என்பது கிமு 9000 ஆம் ஆண்டு முதல் கிமு 8001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இது புதிய கற்காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. வளமான நிலமெங்கும் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது. மட்பாண்ட வகைகள் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டன. எரிக்கோ போன்ற பெரும் குடியேற்றங்கள் உப்பு, தீக்கல் வணிக வழியே உருவாக்கப்பட்டன. கடைசிப் பனியாற்றுக் காலத்தின் பனியாறுகள் குறைவடைந்ததை அடுத்து ஐரோவாசியா மீள்குடியேற்றம் இடம்பெற்றது. உலக மக்கள் தொகை ஏறத்தாழ ஐந்து மில்லியனுக்குக் குறைவாக இருந்தது. நிகழ்வுகள் சில விலங்குகள் வளர்ப்பு விலங்குகளாக வீடுகளில் வளர்க்கப்பட்டன. மெசொப்பொத்தேமியாவில் பயிர்த்தொழில், வேளாண்மை (விவசாயம்) துவக்கம். அம்பு, வில் கண்டுபிடிப்பு. சப்பானில் மிகப் பழைய மட்பாண்டம் செய்யப்பட்டது. எரிக்கோவில் புதிய கற்காலக் குடியேற்றம். கிமு 8350. நோர்வேயின் எய்க்கர் கிமு 8000 அளவில் குடியேறியிருந்தார்கள். நாடோடி வேடர்கள் இங்கிலாந்து வந்தனர் கிமு 8300. ஆயிரமாண்டுகள்
605
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%208%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கிமு 8ஆம் ஆயிரமாண்டு
நிகழ்வுகள் கி.மு. 8000-இல் பனியுகம் முடிவுற்றது. கட்டல்ஹோயுக், கிமு 7500ல் தொடங்கப்பட்டது. உருளைக்கிழங்கு, அவரை என்பன தென் அமெரிக்காவில் பயிரிடப்பட்டன. கிழக்காசியாவில் அரிசி பயிரிடலின் தொடக்கம். தென்மேற்கு ஆசியாவில் செம்மறி ஆடு வளர்ப்பு துணை நூல்கள் வெளி இணைப்புகள்
606
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%207%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கிமு 7ஆம் ஆயிரமாண்டு
நிகழ்வுகள்: மெசொப்பொத்தேமியாவில் கிமு 6500-இல் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் முடிவடைந்தது. மட்பாண்ட புதிய கற்காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு., சமார்ரா பண்பாடு, உபைதுகள் காலம், ஹலாப் பண்பாடுகள் நிலவியது. தென்னாசியாவிலுள்ள மெஹெர்கரில் விவசாயமும், குடியேற்றமும், கிமு 7000. விவசாயம், ஐரோப்பாவில் தோற்றம். (கிரீஸ், இத்தாலி ) மந்தை மேய்ப்பும், தானியங்கள் பயிர்ச் செய்கையும். (கிழக்கு சகாரா) மெசொப்பொத்தேமியாவில் முதலாவது மட்பாண்டம். பொன்னும், இயற்கையாகக் கிடைக்கும் செப்பும் பயன்படத் தொடங்கின. ஆங்கிலக் கால்வாய் உருவானது. கிமு 6500. துணை நூல்கள் வெளி இணைப்புகள் ஆயிரமாண்டுகள்
607
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%206%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கிமு 6ஆம் ஆயிரமாண்டு
நிகழ்வுகள் மெசொப்பொத்தேமியாவில் நீர்ப்பாசனம். ( கிமு 55வது நூற்றாண்டு) தென்னாசியாவில் மெஹர்கரில் மட்பாண்டம் கிமு 5500. நைல் பள்ளத்தாக்கில் வேளாண்மை, பயிர்த்தொழிலின் தோற்றம். ஆசியாவில் அரிசி பயிரிடப்பட்டது. சில்லு, ஏர் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. வைன் முதன்முதலாக பெர்சியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கோவில்கள் கட்டப்பட்டன (கிமு 52வது நூற்றாண்டு) கருங்கடல் உப்பு நீரால் நிரம்பியது. கிமு 5600. செப்டெம்பர் 1, கிமு 5509 - இந்த நாளையே பைசன்டைன் பேரரசு உலகம் படைக்கப்பட்ட நாளாக எடுத்துத் தங்கள் கால அட்டவணையின் தொடக்கமாகக் கொண்டார்கள். பார்க்க: படைப்புநாள் பற்றிய மதிப்பீடுகள். துணை நூல்கள் வெளி இணைப்புகள்
608
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%205%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கிமு 5ஆம் ஆயிரமாண்டு
நிகழ்வுகள்: நைல்பிரதேசத்தில், மெரிம்டே நாகரிகம், கிமு 4750 - 4250. மெசொப்பொத்தேமியாவில் சூசா மற்றும் கிஷ் நாகரிகங்கள் (கிமு 4500) நைல் பிரதேசத்தில் பதரி பண்பாடு, கிமு 4400 - 4000. குறிப்பிடத் தக்கவர்கள்: புத்தாக்கங்கள், கண்டுபிடிப்புகள், அறிமுகங்கள் ஐரோப்பாவில் ஏரின் (கலப்பை) அறிமுகம் (கிமு 4500) எழுத்தின் அறிமுகம். துணை நூல்கள் வெளி இணைப்புகள்
609
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அஞ்சல்தலை சேகரிப்பு
அஞ்சல்தலை சேகரிப்பு என்பது அஞ்சல்தலைகளையும், அதனுடன் தொடர்புடைய வேறு பொருட்களையும் சேகரித்தல் என்று பொருள்படும். இது உலகின் மிகப் பரலமான பொழுது போக்குகளில் ஒன்று. உலக அளவில் பரவி இருந்தும், பெரும்பாலானோருக்கு இது ஒரு இலாபமில்லாத முயற்சியாகவே இருந்து வருகிறது. எனினும், சில சிறிய நாடுகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட, சிறுதொகையான அஞ்சல்தலைகளை, அஞ்சல்தலை சேகரிப்பாளர்களைக் கருத்தில் கொண்டு மட்டுமே வெளியிட்டு வருமானம் பெறுகின்றன. இந்நாடுகள் வெளியிடும் அஞ்சல் தலைகள் அவற்றின் அஞ்சல் துறைத் தேவைகளிலும் அதிகமாகவே இருக்கும். அஞ்சல்தலை சேகரிப்பின் வரலாறு பென்னி பிளாக் (Penny Black) என்று அழைக்கப்படும், முதலாவது அஞ்சல்தலை, 1840இல் பெரிய பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது. இளம் அரசி விக்டோரியாவின் படத்தைத் தாங்கியிருந்த இது, துளைகளில்லாமல் வெளியிடப்பட்டதனால் பயன்படுத்தும்போது கத்தரிக்கோல்களினால் வெட்டிப் பிரிக்கப்படவேண்டியிருந்தது. பயன்படுத்தப்படாத 'பென்னி பிளாக்' அஞ்சல்தலைகள், கிடைத்தற்கரிதாயிருக்கின்ற அதேவேளை, பயன்படுத்தப்பட்டவை பொதுவாகக் கிடக்கின்றன. இவற்றை $25 முதல் $150 வரை அவற்றின் நிலையைப் பொறுத்து வாங்கலாம். 1960களிலும், 1970களிலும், பொதுவாகச் சிறுவர்களும், இளவயதினருமே தொடக்ககாலச் சேகரிப்பாளர்களாக இருந்தார்கள். பெரியவர்கள் பலர் இதையொரு சிறுவர் செய்யும் செயலாகக் கருதி ஒதுக்கினார்கள். 1800களின் இறுதிப் பகுதியில், இவ்வாறான சேகரிப்பாளர்கள் பெரியவர்களாகி, அஞ்சல்தலைகள், அவற்றின் உற்பத்தி, அஞ்சல்தலையில் அச்சுப் பிழைகள் போன்றவை தொடர்பாக முறையாக ஆராய்ந்து வெளியிட்டார்கள். அரிய அஞ்சல்தலைகளுக்குப் கிடைத்த பிரபலம் பலருக்குத் தூண்டுதலாக அமைந்து, 1920களில், சேகரிப்பாளர்களது தொகை விரைவாக அதிகரித்தது. முந்திய அஞ்சல்தலைகள் நல்ல நிலையில் கிடைக்காததால், அவற்றின் பெறுமதியும் பெருமளவு கூடியது. பொதுவாக இரண்டு, மூன்று, நான்கு என்று சேர்ந்து இருந்த பழைய அஞ்சல்தலைகள் கிடைத்தற்கு அரிதாயிருந்தன. 1920களில் வெளியிடப்பட்ட அமெரிக்கத் அஞ்சல்தலைகளின் பெறுமதி கிடுகிடுவென உயர்ந்ததால், 1930களில், பல அமெரிக்கச் சேகரிப்பாளர்கள், சில ஆண்டுகளின் பின்னர் நல்ல விலைக்கு விற்கும் எண்ணத்துடன், புத்தம்புதிய அஞ்சல்தலைகளை வாங்கிக் குவித்தனர். இவ்வெண்ணம் ஈடேறவில்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்பொழுதுகூட, புத்தம்புதிய நிலையில் 1930களின் அமெரிக்க வெளியீடுகளை, கிட்டத்தட்ட அவற்றின் குறித்த விலையிலேயே வாங்கமுடியும். பல சேகரிப்பாளர்களும், வணிகர்களும் இன்னும் 1930களின் அஞ்சல்தலைகளைக் கடிதம் அனுப்பப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது. அஞ்சல்தலை சேகரிப்புப் பொருட்கள் அஞ்சல்தலைகள் சேகரிப்பாளர்களது சேகரிப்புப் பொருட்களில் பின்வருவன அடங்கும்: அஞ்சல்தலைகள் அஞ்சல் எழுதுபொருட்கள் அஞ்சல் அட்டைகள் விமான அஞ்சல்கள் விமான அஞ்சல் தாள் இறைவரி முத்திரைகள் அஞ்சல் கட்டண நிலுவை முத்திரைகள் வாத்து முத்திரைகள் நினைவுத் தாள்கள் முதல் நாள் உறைகள் முதல் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நினைவுப் பக்கங்கள் அஞ்சல்தலையியல் நூல்கள் அஞ்சல்தலை தொடர்பில் அரசு வெளியிடும் பொருட்கள் (உ.ம்., அஞ்சலுறைகள்) அஞ்சல் தலையொத்த பெயர்ச் சுட்டிகள் (labels) உண்மையான அஞ்சல்தலைகளின் படங்களைக் கொண்ட, வேறு அஞ்சல்தலையல்லாத பொருட்கள் அஞ்சல்தலையொத்த பெயர்ச் சுட்டிகளின் படங்களைக் கொண்ட, வேறு அஞ்சல்தலையல்லாத பொருட்கள் போலியான/ஏமாற்று அஞ்சல் தலைகள் அஞ்சல் தொடர்பான போலிகள் அரிய அஞ்சல்தலைகளின் போலிகள் மீள்பதிப்புகள் faked stamps அஞ்சல்நிலையக் குறிகள் வரையறைகள் இன்று பல்வேறு நாடுகளும் வெளியிடும் அஞ்சல்தலைகள் கணக்கிட முடியாதவை. 1840 க்குப் பின்னர் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அனைத்து நாடுகளும் வெளியிட்ட அஞ்சல்தலைகளோடு ஒப்பிடும்போது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சேகரிக்ககூடியவை மிகச் சிலவே. ஒரு வரையறையின்றி, கிடைக்கக் கூடிய எல்லாத் அஞ்சல்தலைகளையும் சேகரிக்க முயலும் ஒருவரின் சேகரிப்பில் எவ்வித ஆழமும் இருக்க முடியாது. இதனால் தற்காலத்தில் சேகரிப்பாளர்கள், தங்கள் சேகரிப்பு முயற்சிகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறான வரையறுப்புகள் சில பின்வருமாறு: ஒற்றை நாட்டுச் சேகரிப்பு - இது ஒரு நாடு வெளியிட்ட அஞ்சல் தலைகளை மட்டும் சேகரிப்பதாகும். தலைப்புசார் சேகரிப்பு - இது ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாகப் பல்வேறு நாடுகளும் வெளியிட்ட அஞ்சல்தலைகளைச் சேகரிப்பதாகும். பறவைகள், விலங்குகள், புகைவண்டிகள், விண்வெளிப் பயணம் என்பன அஞ்சல்தலை சேகரிப்பில் பரவலமான சில தலைப்புகளாகும். முதலீடுகள் இப் பொழுதுபோக்கு இலாபமற்றதாக இருந்தும், பல புதிய சேகரிப்பாளர்கள் அஞ்சல்தலைகளில் முதலீடு செய்கிறார்கள். அஞ்சல்தலையியல் முதலீடு உயர் மட்டச் சேகரிப்பாளரிடையே பரவலாக இருந்துவருகிறது. அரிய அஞ்சல்தலைகள், தொட்டுணரக்கூடிய முதலீடுகளில், இலகுவாகக் காவிச்செல்லக் கூடியவை என்பதுடன் சேமித்துவைப்பதும் இலகுவாகும். ஓவியங்கள், சேகரிப்புப் பொருள் முதலீடுகள், பெறுமதியான உலோகங்கள் என்பவற்றுக்குக் கவர்ச்சிகரமான மாற்றீடாக இவை இருந்து வருகின்றன. எனினும், இந்தப் பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் கிடைக்கும் மன நிறைவுக்கும், பொது அறிவு வளர்ச்சிக்குமாகவே, இதில் ஈடுபடும்படி புதியவர்களைத் தூண்டுகிறார்கள். மிகச் சிறிய வண்ணப்படங்களான அஞ்சல்தலைகள் பல பயனுள்ள தகவல்களைத் தம்முள் புதைத்து வைத்துள்ளன. இவை இளம் சேகரிப்பாளர்களது அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன. அஞ்சல்தலை ஆய்வுகள் அஞ்சல்தலைகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதும் ஒரு தனித்துறையாக இருந்து வருகிறது. இதனை 'அஞ்சல்தலையியல்' (Philately) என்பார்கள். இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அஞ்சல்தலைகள் சேகரிப்பதும் வழக்கமாக இருப்பதால், அஞ்சல்தலையியலும் அஞ்சல்தலை சேகரிப்பும் ஒன்றே என்று பிழையாக எண்ணப்படுகிறது. அஞ்சல்தலையியல் என்பது அஞ்சல்தலைகளையும், தொடர்புடைய பொருட்களையும் ஆய்வு செய்யும் ஒரு விரிவான துறையைக் குறிக்கும் ஒரு பதமாகும். விபரப் பட்டியல்கள் பலவகையான அஞ்சல்தலை விபரப் பட்டியல்கள் உள்ளன. ஸ்டான்லி கிப்பன் (ஐக்கிய இராச்சியம்) ஸ்கொட் விபரப்பட்டியல் (ஐக்கிய அமெரிக்கா) மிச்சேல் (செருமனி) யிவேர்ட் (yvert) (பிரான்சு) இவற்றையும் காணவும் அஞ்சல் வரலாறு அஞ்சலட்டை அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும் வெளி இணைப்புகள் அமெரிக்காவிலுள்ள மாநிலங்கள் வாரியாக தபால்தலைக் காட்சியகங்கள் உலக புதிய அஞ்சல்தலைகள் புதிய முத்திரை பிரச்சினைகள் அடைவு (ஆங்கிலத்தில், ஆனால் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்க) மேற்கோள்கள் பொழுதுபோக்கு
610
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
அஞ்சல் தலை
அஞ்சற்றலை அல்லது தபால்தலை என்பது அஞ்சல் சேவைக்கு முன் கட்டணம் செலுத்தப்பட்டதற்குச் சான்றாக கொடுக்கப்படுவது. பொதுவாக இது ஒரு நீள்சதுர வடிவிலமைந்த சிறு காகிதத் துண்டாக இருக்கும். தபால் சேவை மூலம் அனுப்பப்படவுள்ள கடிதஉறையில், மேற்சொன்ன தபால்தலைகளை ஒட்டுவதன் மூலம், அக் கடிதத்தை அனுப்புபவர் அதை அனுப்புவதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார் என்பதற்குச் சான்று அளிக்கின்றார். முன் கட்டணம் செலுத்தப்பட்ட உறைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க அதிகம் விரும்பப்படும் முறை இதுவாகும். அஞ்சல்தலை என்ற சொல்லுக்குப் பதிலாக முத்திரை என்ற பதமும் வழக்கிலுள்ளது. இச் சொல் தபால்தலை என்பதை மட்டுமன்றி வேறு பொருள்களையும் கொடுக்கக் கூடுமெனினும், சாதாரணமாக முத்திரை என்பது, தபால் தலையையே குறிக்கும். நீள் சதுரமாக மட்டுமன்றித் தபால்தலைகள் பல்வேறு வடிவங்களிலும் வெளியிடப்படுவதுண்டு. முக்கோணம், வட்டம், பல்கோணம், இணைகரம் போன்ற வடிவங்களிலும் தபால்தலைகள் உண்டு. வரலாறு ஒட்டும் தன்மையுள்ள தபால்தலைகளும், ஒருதன்மைத்தான தபால் கட்டணமும், 'ஜேம்ஸ் சாமேர்ஸ்' என்பவரால் 1834 அளவில் முன்வைக்கப்பட்டது. இதே கருத்தை 1837ல் 'ரோலண்ட் ஹில்' என்பவரால் வெளியிடப்பட்ட, தபால் துறைச் சீரமைப்பு: இதன் முக்கியத்துவமும், செயற்படுதன்மையும் என்னும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. தபால் பெறுனர், கட்டணம் செலுத்தவிரும்பாவிடில், தபாலை வாங்க மறுக்கலாம் எனவே தபால் கட்டணத்தை, பெறுனரிடம் அறவிடுவதிலும், அனுப்புனரிடம் அறவிடுவதே சிறந்தது என அதில் அவர் வாதாடினார். எவ்வளவு தூரத்தில் வழங்கப்படுகிறது என்பதைக் கருதாமல், ஒருசீரான கட்டணமாக ஒரு பென்னியை அறவிடவேண்டுமென்றும் அவர் கருத்து கூறினார். வெவ்வேறு தொலைவிடங்களுக்கு வெவ்வேறு கட்டண அறவீட்டு முறை, கணக்கு வைக்கும் செலவை அதிகரிக்கும் என்றும், ஒரு சீரான கட்டணமுறையில் அரச தபால் சேவைக்குப் பணம் மிச்சப்படும் என்பதையும் எடுத்துக் காட்டினார். சாமேர்ஸின் முன்வைப்பு இறுதியாக 1839 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் தபால் அலுவலகம், 1840ல் பென்னி தபால் சேவையை ஆரம்பித்ததுடன், 1 பென்னியும், 2 பென்னியும் பெறுமானமுள்ள, படம் அச்சிடப்பட்ட உறைகளையும் வெளியிட்டது. மூன்று மாதங்களின் பின்னர், விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்ட பென்னி பிளாக் என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளியிட்டது. முதலாவது தபால் தலையை வெளியிட்ட காரணத்தினால், அனைத்துலகப் பயன்பாட்டுக்குத் தபால்தலைகளை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துக்களில் அவற்றில் பொறிக்கப் பட வேண்டுமென்ற அதன் விதியிலிருந்து, ஐக்கிய இராச்சியத்துக்கு, அனைத்துலக தபால்சேவைச் சங்கம் (U.P.U.) விலக்கு அளித்துள்ளது. யூ.பி.யூ வில் இணைவதற்கு முன்னர் பல நாடுகள் இப்படிச் செய்வதில்லை, எனினும் பின்னர் மிகக் குறைந்த மீறல்களே இருந்தன. இதன் காரணமாக சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பெரும்பாலான பழைய வெளியீடுகளிலுள்ள கீழை நாட்டு எழுத்துக்களுக்கு மேற்கு நாட்டுப் புதிய சேகரிப்பாளர்கள் அறிமுகமில்லாதவர்களாக உள்ளார்கள். ஒரு தபால் தலை, அதன் பெறுமதியையும், அந் நாட்டு நாணயத்தில் கொண்டிருக்கவேண்டும். சில நாடுகள், ஒரு எழுத்தையோ அல்லது First Class என்பது போன்ற குறிப்புக்களையும் பெறுமதிக்குப் பதிலாகக் கொடுக்கின்றன. யூ.பி.யூ வின் விதி காரணமாக இது உள்ளூர் சேவைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றது, எனினும் மீறல்களும் அதிகம் கவனிக்கப்படுவதில்லை.(ஐரோப்பிய தபால் சேவைக்கான பிரித்தானியாவின் "E" தபால்தலையும், தென்னாபிரிக்காவின் "பன்னாட்டு கடித விகிதம்" என்ற தபால் தலையும் மேற்சொன்ன விதிவிலக்குகளில் அடங்கும்). வழங்கல் தொடக்க காலத்திலிருந்தே, எப்படித் தபால் தலைகள் வழங்கப்படுகின்றன அல்லது விற்கப்படுகின்றன என்பது தொடர்பில், பல்வேறு புதிய முறைகள் கையாளப்பட்டு வந்தன. அண்மையில் ஒருவர் தனது கணனியிலேயே தபால்தலைகளை அச்சிட்டுப் பெறக்கூடியதாக இருந்தது. 2002ல் ஐக்கிய அமெரிக்கத் தபால் சேவை வலைத் தபால்தலைகளை வெளியிடுவதற்கு ஸ்டாம்ப்ஸ்.காம் முக்கு (Stamps.com) அனுமதி வழங்கியது. தபால்தலைகளின் வகைகள் வான்வழி அஞ்சல் - வான்வழி அஞ்சல் சேவைகளுக்கான கட்டணத்துக்காக. வான்வழி அஞ்சல் சேவைகளுக்கான தபால்தலைகளில், வாழ்வழி அஞ்சல் என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருப்பது பொதுவான வழக்கம். தபால்தலை விபரப்பட்டியல்களை வெளியிடும் ஸ்கொட் நிறுவனம், அக்காலத்தில் புழக்கத்திலிருந்த வான்வழி அஞ்சல் கட்டணங்களுக்குப் பொருத்தமானதும், வானூர்தியொன்றின் நிழல்வரிப்படம் பொறிக்கப்பட்டவையுமான, ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்ட சில தபால்தலைகளை, வான்வழி அஞ்சல்களாகப் பட்டியல் இட்டுள்ளது. ஏனைய மூன்று முக்கிய விபரப் பட்டியல்களும், வான்வழி அஞ்சல்தலைகளுக்கு சிறப்புத் தகுதி எதையும் கொடுக்கவில்லை. ஏடிஎம் (ATM) தூதுவரின் தபால்தலை (carrier's stamp) சான்றளிக்கப்பட்ட அஞ்சல் தபால்தலைகள் (certified mail stamps) ஞாபகார்த்த தபால்தலைகள் விரைவுத் தபால்தபால்தலை/ சிறப்பு வழங்கல் தபால்தலை காலம்தாழ்ந்த கட்டணத் தபால்தலை உள்ளூர் தபால் படையினர் தபால்தலை அரசு ஏற்புபெற்ற அஞ்சல் தபால்தலைகள் ஆக்கிரமிப்புத் தபால்தலை பொதித் தபால் தபால் கட்டண நிலுவை தபால் வரி தானொட்டுத் தபால்தலைகள் பகுதி-அஞ்சல் / ஈகை தபால்தலை (semi-postal / charity stamp) சிறப்புக் கையாள்கை சோதனைத் தபால்தலை போர் வரி தபால்தலை (War tax stamp) நீர்-தூண்டற் தபால்தலை (water-activated stamp) சேகரித்தல் முதன்மைக் கட்டுரை: அஞ்சல்தலை சேகரிப்பு சில நாடுகள் தபால் சார்ந்த தேவைகளுக்காகவன்றி, சேகரிப்பாளர்களுக்காகவே தபால்தலைகளை வெளியிடுகின்றார்கள். இது அவ்வாறான நாடுகளின் வருமானத்தின் குறிப்பிடத்தக்க அளவுக்குக் காரணமாக உள்ளது என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு சேகரிப்பாளர்களைக் குறி வைத்துத் தபால் தலைகளை வெளியிடும் கொள்கை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சேகரிப்பாளர்களால் ஆதரிக்கப்படுவது இல்லை. இக்கொள்கையை மிதமான அளவுக்குப் பயன்படுத்தும்போது சேகரிப்பாளர்களிடம் வரவேற்புப் பெறும் அதே வேளை, அளவுக்கு மீறித் தபால்தலைகளை வெளியிடும் நாடுகள் கண்டனத்துக்கு உள்ளாகின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன், சில தனியார் நிறுவனங்கள், சிறிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அந்நாடுகளுக்கான தபால்தலைகளை இலவசமாக அச்சிட்டுக் கொடுத்தன. ஆனால், இதற்கு மாற்று உதவியாக, எஞ்சியிருக்கும் தபால்தலைகளை சேகரிப்பாளர்களுக்கு விற்கும் உரிமையைத் தாங்கள் பெற்றுக்கொண்டன. பெயர்பெற்ற தபால்தலைகள் பென்னி பிளாக் மொரீஷியஸ் நீல பென்னி தலைகீழ் ஜென்னி பிரித்தானிய கயானா 1 சென்ட் சாந்து பாசெல் புறா கருப்பு ஹொண்டூராஸ் (Black Honduras) சென் லூயிஸ் கரடிகள் (St. Louis Bears) தபால்தலையை வட்ட வடிவில் வெளியிட்டது மலேசியா நாடு. தி இந்து தமிழ், ஜூன் 29, 2014 மேற்கோள் வெளி இணைப்புகள் Joseph Luft's Philatelic Resources on the Web – largest collection of links to other stamp-related sites philately.com அஞ்சல் தலைகள் அஞ்சல் தலை சேகரிப்பு 19-ஆம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்புகள்
611
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D
பென்னி பிளாக்
பென்னி பிளாக் (Penny Black) உலகின் முதலாவது உத்தியோகபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலையாகும். இது பெரிய பிரித்தானியாவால் 1840 மே 1 அன்று மே 6ம் திகதியிலிருந்து உபயோகிப்பதற்காக வெளியிடப்பட்டது. தபால் சேவைக்காக முன்கட்டணம் செலுத்தப்பட்டதைக் காட்ட, ஒட்டக்கூடிய தபால்தலையைப் பயன்படுத்தும் எண்ணம், ரோலண்ட் ஹில் என்பவரது, பிரித்தானிய தபால் முறைமையின் மறுசீரமைப்புக்கான 1837 ஆம் வருடத்திய முன்வைப்பின் ஒரு பகுதியாகும். 1839ல், பிரித்தானியத் திறைசேரி, புதிய தபால்தலை வடிவமைப்புக்காகப் போட்டியொன்றை அறிவித்ததாயினும், சமர்ப்பிக்கப்பட்ட வடிவமைப்புகள் எதுவும் ஏற்கப்படவில்லை. அதனால், முன்னர் ஒரு பதக்கத்துக்காக வில்லியம் வயன் என்பவரால் உருவாக்கப்பட்ட விக்டோரியா மகாராணியின் உருவப்படமொன்றைப் பயன்படுத்தத் திறைசேரி முடிவுசெய்தது. மேல்பகுதியில் "POSTAGE" என்ற சொல்லும், அடியில் "ONE PENNY" என்ற பெறுமானமும் அச்சிடப்பட்டிருந்தது. இவற்றுடன் அடிப்பக்கத்து இரண்டு மூலைகளிலும், பெரிய தாளில், குறிப்பிட்ட தபால்தலையின் இடத்தைக் குறிக்கும், "A A", "A B", போன்ற எழுத்துக்கள் இருந்தன. அதன் பெயர் குறிப்பதுபோல், தபால்தலை முழுவதும் கறுப்பு நிறத்திலேயே அச்சிடப்பட்டிருந்தது. தபால்தலைகள் பேர்க்கின்ஸ் பேக்கன் (Perkins Bacon) நிறுவனத்தால் அச்சிடப்பட்டது. At the time it was normal for the recipient to pay postage on delivery, charged by the sheet and on distance travelled. By contrast, the Penny Black allowed letters of up to to be delivered at a flat rate of one penny, regardless of distance. மே 6 உத்தியோகபூர்வமான முதல் நாளாக இருப்பினும், மே 2ல் தபால்குறியிடப்பட்ட மூன்று உறைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. இது தபாலதிபர்கள் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தபால்தலைகளை விற்றதன் காரணமாக இருக்கலாம். பென்னி பிளாக், ஒரு வருடத்துக்கும் சற்றுக் கூடியகாலமே உபயோகத்தில் இருந்தது. கறுப்பு நிறத்தின் மேல் சிவப்பு நிற மையினால் அடித்தல் செய்தால்கூடத் தெளிவாகத் தெரிவதில்லை என்ற அனுபவத்தின் காரணமாக, பென்னி ரெட் என்னும் சிவப்பு நிறத் தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டு, கறுப்பு மையினால் அடித்தல் செய்யப்பட்டது. பென்னி பிளாக் தாராளமாகக் கிடைக்கக்கூடியதெனினும், அதனுடைய முக்கியத்துவம் காரணமாக அதற்கு சேகரிப்பாளரிடையே அதிக மதிப்பு உள்ளதால், மலிவாகக் கிடைப்பதில்லை. 2000ல் நல்ல நிலையிலுள்ள ஒரு பயன்படுத்திய தபால்தலை US$200க்கும், பயன்படுத்தாதது US$3,000 க்கும் விலைபோனது. மாறாக பயன்படுத்திய பென்னி ரெட் $ 3 மட்டுமே பெற்றது. மேற்கோள்கள் அஞ்சல் தலை சேகரிப்பு
612
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
தமிழர்
தமிழர் (, Tamils, Tamilians) என்பவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 1800 முதல் 1900-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள், மேலும் மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-ஆம் ஆண்டுக்குப் பின்னர்த் தமிழர் தொழில் வல்லுநர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்ட பெருமளவு ஈழத்தமிழர்கள் ஆத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, செருமனி, சுவிட்சர்லாந்து, தென்மார்க்கு, நோர்வே ஆகிய நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகக் கொண்டுள்ளனர். வரலாறு தமிழர் தோற்றம் பற்றி 4 கருதுகோள்கள் உள்ளன. தமிழர் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருதுகோள். பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். மூன்றாவது கருதுகோள் தமிழர்கள் ஆதியில் ஆப்பிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாகத் தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே என்கிறது. தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படியாயினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஆதிச்ச நல்லூரில், நடந்த அகழ்வாராய்ச்சியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புதையுண்ட மண்பாண்டங்கள் கிமு 1000-ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தவைகளாகும். இவை தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றாக விளங்குகின்றன. அப்புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இஃது உறுதி செய்கிறது. சமீபத்தில் இவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துகள் குறைந்தது பொ.ஊ.மு. 500-ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகும். இதையும் சங்கத்தமிழ் இலக்கிய ஆதாரங்களையும் கொண்டு குமரிக்கண்டத்தில் இருந்து தமிழர் வந்தார்கள் என்று சிலர் கூறுவர். புரோட்டோ-தமிழர்கள் மற்றும் திராவிடர்கள் பொதுவாக இணைக்கப்பட்டுள்ளனர் மற்றும் பண்டைய தெற்கு ஈரானில் உள்ள கற்கால சாக்குரோசு விவசாயிகளுடன் ஒரு பொதுவான தோற்றத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று பல ஆய்வுகள் முடிவு செய்கின்றன. இந்தக் கற்கால மேற்கு ஆசிய தொடர்பான குடிகள் அனைத்துத் தெற்காசியர்களின் முக்கிய மூதாதையரின் அங்கமாக அமைகிறது. அசுகோ பருபோலாவின் கூற்றுப்படி, புரோட்டோ-தமிழர்கள், மற்றத் திராவிடர்களைப் போலவே, சிந்து சமவெளி நாகரிகத்தின் வழித்தோன்றல்களாக உள்ளனர், இஃது எலாமியர்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. புவியில் தமிழ் மக்களின் பரம்பல் தமிழர் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தாலும் ஒரு சில இடங்களிலேயே செறிந்து வாழ்கின்றனர். அத்தகைய இடங்களாகப் பின்வருவன உள்ளன. இந்தியத் தமிழர்கள் பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றிலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். எனினும் கருநாடக மாநிலத்தின் மாண்டியா, எப்பார் பகுதிகளிலும், கேரள மாநிலத்தின் பாலக்காட்டிலும் மற்றும் மகாராட்டிரா மாநிலம் புனே, மும்பையின் தாராவி பகுதிகளிலும் இடைக்காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர். இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் ஆவர். இவர்கள் இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழ் முசுலீம்கள் மற்றும் மலையகத் தமிழர் என மூன்று வகையினராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையைத் தமது தாயகமாகக் கொண்டோர் இலங்கைத் தமிழர் ஆவர். நீண்ட காலமாக இலங்கையில் வசித்து, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, இசுலாம் மதத்தைப் பின்வற்றுவோர் இலங்கைத் தமிழ் முசுலீம்கள் (சோனகர்) ஆவர். 1800-ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இலங்கை மலைநாட்டுத் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கெனத் தமிழகத்திலிருந்து குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் மலையகத் தமிழர் என்றழைக்கப்படுகிறார்கள். இலங்கையில் அனைத்துத் தமிழர்களது மனித உரிமைகளையும் சிங்களப் பேரினவாத அரசு மறுத்து, அவர்களை வன்முறைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்தே ஈழப்போராட்டம் வெடித்தது. தென்கிழக்கு ஆசியாவில் தமிழர் தென்கிழக்கு ஆசியாவுடன் தமிழர் அரசியல், வணிக, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணியும், அங்குப் பரவலாக வசித்தும் வருகின்றார்கள். குறிப்பாகச், சோழப் பேரரசு சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அதிகாரம் கொண்டிருந்ததால், பல தமிழர் இங்கு குடியமர்ந்து பின்னர் இனக்கலப்புக்கு உள்ளாகி இன்று அந்நாட்டு மக்களாகவே வாழ்கின்றார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழர் இந்நாடுகள் சிலவற்றில் கூலிகளாகக் குடியமர்த்தப்பட்டனர். குறிப்பாக மலேசியா, (கடாரம்), சிங்கப்பூர், மியன்மார் (அருமணதேயம்), தாய்லாந்து, இந்தோனேசியா (சாவா (சாவகம்), சுமத்திரா), கம்போடியா ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியமர்த்தப்பட்டனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்கள் மொழி, பண்பாட்டைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளில் பயிலுவதே இதற்குச் சான்றாகும். அனைத்திற்கும் மேலாகத் தனது மக்கள் தொகையில் 10 விழுக்காடுக்கும் குறைவான தமிழர்களைக் கொண்ட சிங்கப்பூர், தமிழைத் தனது ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் தமிழர் ஆப்பிரிக்காவில் தமிழர்கள் 19-ஆம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே வசித்து வருக்கின்றார்கள். குறிப்பாக 1850-ஆம் ஆண்டில் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் தமிழர்கள் தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, மடகாசுகர், இரீயூனியன் ஆகிய நாடுகளில் குடியமர்த்தப்பட்டனர். இங்குத் தமிழர்களிடேயே தமிழ்மொழி பரவலாகப் பேசப்படாவிட்டாலும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளும் உணர்வுகளும் உயிர்ப்புடன் இருக்கின்றன. மொரீசியசு நாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துகளும், எண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 20-ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவின் நைசீரியா, கென்யா, சிம்பாப்புவே நாடுகளுக்குத் தமிழர்கள் ஆசிரியர்களாகவும், பிற தொழில் வல்லுநர்களாகவும் சென்றனர். பலர் தமது பணிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தாயகத்துக்கோ வேறு நாடுகளுக்கோ சென்று விடுவர். ஐரோப்பாவில் தமிழர் இந்தியா மற்றும் இலங்கை தமிழர்கள், 1950-ஆம் ஆண்டின் பின்னரே தொழில் துறை வல்லுநர்களாகப் பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.1983-இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரங்களுக்குப் பின்னர்த் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஐரோப்பியத் தமிழர் என்றழைக்கப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார வளர்ச்சியடைந்து வாழ்கின்றனர். பிரித்தானியா, பிரான்சு, செருமனி, இத்தாலி, சுவிட்சலாந்து, நோடிக்கு நாடுகள், ஆகிய நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். ஏறக்குறைய 4 முதல் 5 நூறாயிரம் தமிழர்கள் ஐரோப்பாவில் வசிக்கின்றனர். ஓசியானியாவில் தமிழர் ஆத்திரேலியா, நியூசிலாந்து, பிசி ஆகிய ஓசானிய நாடுகளிலும் கணிசமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பிசித் தீவுகளில் தமிழர்கள் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே ஆவர். இவர்களில் பலர் தமது அடையாளங்களை அங்கு அதிகமாக வாழும் இந்தி பேசும் மக்களுடன் கலந்துவிட்டார்கள். ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பொருளாதார வாய்ப்புகள் தேடி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் சென்றார்கள். வட அமெரிக்காவில் தமிழர் வட அமெரிக்காவில் கணிசமான அளவில் தமிழர்கள் வாழ்கின்றனர்.1950-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் தேடித் தமிழர் வட அமெரிக்காவுக்குச் சென்றனர் பின்னர் 1983-இல் இலங்கையில் வெடித்த கறுப்பு யூலை இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட பெருந்தொகை ஈழத்தமிழர்கள் கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றனர். இன்று கனடாவில் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், ஐக்கிய அமெரிக்காவில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். சமூக அமைப்பு தமிழர் சமூக அமைப்பு சாதிய படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. தமிழர் சமூக அமைப்பில் சமயத்தின் பங்கும் முக்கியம். தற்காலத்தில் சமூக எதிர்ப்புப்போராட்டங்கள், சாதீயத்துக்கு எதிரான அரசியல் சட்ட நிலைப்பாடுகள், நகரமயமாதல், பொருளாதார முன்னேற்றம், நவீனமயமாதல் போன்ற பல காரணிகள் சாதிய கட்டமைப்பைத் தளர்த்தி உள்ளன. பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புகள் பல மடங்கு பெருகி உள்ளன. அரசியல் சட்ட உரிமைகளும் கோட்பாட்டு நோக்கில் சமமாக உள்ளன. திராவிட இயக்கத்தின் இறைமறுப்பு கொள்கை, அறிவியல் வளர்ச்சி ஆகியவை சமயம் மீதான தீவிர நம்பிக்கையைக் குறைத்துள்ளன. மொழியும் இலக்கியமும் தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழ் மொழி சமசுகிருதத்திற்கு இணையாக இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 2004-ஆம் ஆண்டு தமிழ் மொழியே முதலாவது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மொழி அந்நாடுகளின் அரசால் அலுவல் மொழியாக உள்ளது. சங்க இலக்கியம் தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் உரைக்கின்றது. பொ.ஊ.மு. 300 தொடக்கம் பொ.ஊ. 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்க இலக்கியத்தில் செடிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுந்த அற நூல் திருக்குறள், இந்நூல் உலகில் அதிகம் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறை இவரின் பெயர் தாங்கிய தமிழர் ஆண்டு முறையாகும். சங்கம் மருவிய கால இலக்கியம் பொ.ஊ. 300-இலிருந்து பொ.ஊ. 700-வரை தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே சிலப்பதிகாரமும், பெளத்த தமிழ்க் காப்பியங்களான மணிமேகலை, குண்டலகேசி ஆகியவையும், சைன தமிழ் காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, மற்றும் ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றின. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசி தமிழில் எழுந்த முதல் தர்க்க நூலாகக் கருதப்படுகிறது. பக்தி கால இலக்கியம் பொ.ஊ. 700-இலிருந்து பொ.ஊ. 1200-வரையுள்ள காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் தமிழ்ப் பக்தி இயக்கம் வலுப்பெற்றதது.சைவமும், வைணவமும் ஆதரவு பெற்றன. சைவ நாயன்மார்கள் பல ஆயிரம் தேவாரங்களைப் பாடினர். வைணவ ஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடப்பெற்றன. இக்காலத்தில் திருமந்திரம் சிவஞானபோதம் உட்பட பதினான்கு சைவ சிந்தாந்த நூல்களும் இயற்றப்பட்டன. கலிங்கத்துப்பரணி, கம்ப இராமாயணம் ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. பொ. ஊ. 850-ஆம் ஆண்டில் இருந்து பொ.ஊ. 1250-ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசு சிறப்புற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இடைக் கால இலக்கியம் பொ.ஊ. 1200-இலிருந்து பொ.ஊ. 1800-வரையுள்ள காலப்பகுதி இடைக் காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர். இக்காலத்திலேயே தமிழ் இசுலாமிய இலக்கியம் மற்றும் தமிழ் கிறித்தவ இலக்கியம் ஆகியவை தோன்றின. முதல் தமிழ் அகரமுதலி, சதுரகராதி என்ற பெயரில், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான வீரமாமுனிவர் என்று அறியப்படும் கிறித்தவ மத ஆசிரியரால் பொ.ஊ. 1732-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலான நிகண்டுகள் இயற்றப்பட்டதும் இக்காலத்திலேயே. தற்கால இலக்கியம் 18-ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் புதுப்பித்துப் பாதுகாத்தனர். 1916-ஆம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமற்கிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர். தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராகச் சுப்பிரமணிய பாரதியார் கருதப்படுகிறார். இக்காலத்தில் புதுக்கவிதை பிறந்தது. உரைநடை வீச்சு பெற்றது. புதினம், சிறுகதை, கட்டுரை ஆகிய எழுத்து வடிவங்கள் தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954–1968 காலப்பகுதிகளில் தமிழ்க் கலைக்களஞ்சியம் பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் மரபு, மார்க்சிய, முற்போக்கு, நற்போக்குப் போக்குகள் இனங்காணப்பட்டன. திராவிட இயக்கத்தினர் தமிழைக் கருவியாகப் பயன்படுத்தித் தமது கருத்துகளை மக்களுக்கு எடுத்துச்செல்வதில் பெரும் வெற்றி கண்டனர். தற்காலத்தில் பெண்ணிய கருத்துகளையும் எடுத்துரைத்த அம்பை, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி, உமாமகேசுவரி, இளம்பிறை, சல்மா, வெண்ணிலா, முனிவர், மாலதி, வைகைச்செல்வி, தாமரை உட்பட தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளும் வலுப்பெற்று இருக்கின்றன. உலகத்தமிழர்களின் எழுத்துகளும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளன. நாளிதழ், இதழ், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் எனப் பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் வேரூன்றிப் பரவி நிற்கின்றது. அறிவியல் தமிழின் அவசியம் அறிந்து தமிழ்நாடு அரசும் பிற அமைப்புகளும் அதை வளர்ப்பதைக் குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அதே வேளை தமிழ்நாட்டில் பரவலாகப் புழங்கும் தமிங்கிலம் தமிழ் மொழிப் பேணலைச் சரவலுக்கு உட்படுத்தியிருக்கிறது. பண்பாடு தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவப் பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும். கட்டடக்கலை தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்து வருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறித்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள். இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டடங்கள் பலவும் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ் நாட்டில் கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின் உயர் மரபைச் சார்ந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டடக்கலை எனப்படுகின்ற கட்டடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சிற்பக்கலை சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்குக் கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது. ஓவியக்கலை ஓவியம் ஒரு கவின் கலை. தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில், தமிழர்களால் ஆக்கப்படும் ஓவியங்களைத் தமிழர் ஓவியம் எனலாம். ஓவியத்தைச் சித்திரம் என்றும் குறிப்பிடுவர். சங்க காலத்தில் இருந்தே தமிழரிடையே ஓவியக்கலை வளர்ச்சி இருந்தது. இருப்பினும் தமிழ் ஓவியங்களுக்கு ஒரு தொடர்ச்சியான மரபு இல்லை. "சற்று முந்தியது என்று நாயக்கர் கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து வெளித்தெரிந்த தஞ்சை கோயில் ஓவியங்கள் அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல நூற்றாண்டுகள் இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம்". தற்காலத்தில் ஓவியக்கலையில் ஒரு புதிய ஈடுபாடு இருக்கிறது. வரைகதை, வரைகலை, இயங்குபடங்கள் என்று பல்வேறு வடிவங்களில் இந்த ஆக்க ஊற்றுகளைக் காணமுடியும். நாடகக்கலை இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ்களில் ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தித் தொன்று தொட்டு தமிழர், நாடகக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. தமிழர் நாடகங்கள் தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன. இசைக்கலை தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு தமிழிசையாகச் செம்மை பெற்றது. தமிழிசை மிகப் பழமையானது. தொல்காப்பியர் இயற்றிய "தொல்காப்பியம்" என்னும் நூலில் இசையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் காணலாம். சிலப்பதிகாரத்திலும், சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சங்கத்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் இசை நயத்துடன் கூடிய பாடல்களைக் காணலாம். ஆடற்கலை ஆடலைக் கூத்து என்றும் நாடகத்தை 'கதை தழுவி வரும் கூத்து' என்றும் கூறுவர். தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உள்ளன. ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பல நாட்டுபுற கலையின் நடன வகைகளும் உண்டு. பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்காப்புக் கலைகள் நடனம், இசை, மொழி போன்றே ஒவ்வொரு இன, மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபைக் கொண்டிருக்கின்றது. தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு கூறாகத் தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் பல்லவ, சேர, சோழ, பாண்டிய நாட்டுப் போர் சாதிகளின் மரபில் தோன்றிய சண்டை, தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றது. சிலம்பம், வர்மக்கலை, குத்துவரிசை, அடிதடி, மல்லாடல் ஆகியவை இன்றும் பயிலப்படும் தமிழர் தற்காப்புக் கலைகள் ஆகும். யோகக்கலை இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். இந்தக் கலையை நீண்ட காலமாகத் தமிழர்கள் பயின்றும், அதற்குப் பங்களித்தும் வந்துள்ளார்கள். யோகக்கலை பற்றியும் அதன் இதர பாகங்களைபற்றியும் தமிழ் நூலான திருமந்திரம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாணவர்களுக்கும் யோகக்கலையை ஒரு கட்டாயப் பாடமாக அறிவித்துள்ளது. சுவாமி சிவானந்தா, யாழ்ப்பாணம் யோகர் சுவாமியின் சீடரான சத்யகுரு சிவாய சுப்ரமணியசுவாமி, சுவாமி சச்சிதானந்தா, வேதாத்திரி மகரிசி போன்றோர் யோகக்கலையை மேற்கு நாடுகளில் பயிற்றுவிக்கப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்கள். திரைப்படக்கலை தமிழ்த் திரைக்கலை அல்லது தமிழ்ச் சினிமா தற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் ஒரு கலைத்துறை ஆகும். தமிழ்ச் சினிமாவே இந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழித் திரைப்பட செல்வாக்கை தமிழர் மத்தியில் தவிர்த்தது. நாடகம், இசை, ஆடல், சிலம்பம் எனப் பல்வேறு மரபுக் கலைகளையும் தமிழ்த் திரைக்கலை பயன்படுத்திக்கொண்டது. சிவாஜி, எம். ஜி. ஆர், ரஜினிகாந்த், கமல்காசன், கே. பி. சுந்தராம்பாள், மனோரமா ஆகிய நடிகர்களும் கே. பாலச்சந்தர், மணிரத்னம், பாரதிராஜா ஆகிய இயக்குநர்களும் தமிழ்த் திரைப்படத்துறையில் புகழ் மிக்க சிலர். தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் இளையராசா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் புகழ்பெற்ற சிலர். தமிழ்த் திரைப்படங்கள் "வாழ்க்கையைச் சிதைத்துப் பிரதி பலிக்கின்றது. பொய்மைகளைத் தீர்வுகளாகப் புலப்படுத்துகின்றன" போன்ற பல விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. நகைச்சுவை நகைச்சுவை தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம். வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், இலக்கியம், இதழ்கள், திரைப்படம், தொலைக்காட்சி என பல வழிகள் மூலம் நகைச்சுவை பகிரப்படுகிறது. என். எஸ். கிருஷ்ணன், சந்திரபாபு, கே. ஏ. தங்கவேலு, நாகேஷ் ஆகியோர் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்கள் ஆவர். வடிவழகன், திண்டுக்கல் ஐ. லியோனி, விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் புகழ் பெற்ற இன்றைய நகைச்சுவை விண்ணர்களில் சிலர். கலக்கப்போவது யாரு, அசத்தப் போவது யாரு? போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் வழங்கப்பட்ட மேடைச் சிரிப்புரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஈரோடு மகேஸ், மதுரை முத்து ஆகியோர் நல்ல மேடைச் சிரிப்புரையாளர்கள். பேச்சுக்கலை அரசியல் மேடையில், கோயிலில், பட்டிமன்றத்தில், நீதிமன்றத்தில், நாடகத்தில், திரைப்படத்தில், ஒலிபரப்பில், எனப் பல துறைகளில் தமிழில் பேசுதல் ஒரு பயன்மிகு கலையாகும். பசும்பொன் முத்துராமலிங்க தேவர், அண்ணாதுரை, பெரியார், ம. பொ. சிவஞானம், கிருபானந்த வாரியார் போன்றோர் சிறந்த பேச்சாளர்கள். திரைப்படத்தில் வசனம் பேசுவதில் சிவாஜி கணேசன் புகழ் பெற்றவர். இன்று கருணாநிதி, வைகோ, சீமான், சுகிசிவம் ஆகியோர் சிறந்த பேச்சாளர்களில் சிலர். தமிழகத்தில் சிறந்த பேச்சாளரைத் தேர்தெடுப்பதெற்கன நடாத்தப்பட்ட தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு நிகழ்ச்சியில் விசயன் வெற்றி பெற்றார். ஈழத்து பேச்சுப்பாரம்பரியம் ஆறுமுகநாவலர் போன்ற சமயப்பிரசங்கிகள் முதல் அரசியல் பேச்சாளர்கள் ஈறாகப் பலவகையில் வளர்ச்சிபெற்று உள்ளது. போராட்ட காலங்களில் பல போராளிகளின் பேச்சுக்கள் மக்களுக்கு விடுதலை வேட்கை தூண்டுவதில் முன்னின்றன. இலக்கிய சொற்பொழிவுகளில் கம்பன் கழகத்து ஜெயராஜ் போன்றவர்கள் பரவலாக அறியப்பெற்றாவர்கள். நாட்டாரியல் தமிழர் பண்பாடு இலக்கியம், நுண்கலைகள், நுட்பம் ஆகிய பெரும் மரபுகளையும், பொது மக்கள் பங்களித்து எளிமையாக ஆக்கிப் பகிர்ந்த நாட்டாரியலையும் கொண்டிருக்கிறது. இரண்டும் ஒரு சமூகத்தின் வெவ்வேறு வேட்கைகளை நிவர்த்தி செய்கிறது. மக்களின் பழக்க வழக்கங்கள், மொழி, வாய்மொழி இலக்கியங்கள், பாட்டு, இசை, ஆடல்கள், உணவு, உடை, உறையுள், நம்பிக்கைகள் முதலானவற்றை நாட்டாரியல் குறிக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் கிராமத்தில் (எ. கா: 2008 – தமிழ்நாடு 53%) வாழ்வதால் நாட்டாரியல் கிராமத்துக் கூறுகளைச் சிறப்பாகச் சுட்டி நிற்கிறது. எனினும் இது நகரச்சூழலிலும் வெளிப்படுகின்றது. சென்னை நகரப்புற சேரிகளில் இருந்து தோன்றிய கானா பாடல்கள், ஈழத்தில் போராளி மகளை/மகனை இழந்த தாயின் ஒப்பாரிப் பாடல்களையும் இவ்வாறு சுட்டலாம். சினிமா போன்ற பெரும் ஊடகங்கள் நாட்டார்கலைகளை நலிவடையச் செய்திருந்தாலும், இணையம் போன்ற சில நவீன தொழில்நுட்பங்கள் அனைவரும் பங்களித்து பயன் பெறும் ஆக்க முறைகளை ஊக்குவிக்கின்றன. சித்தரியல் தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒரு முரண்பாடான, ஆக்கபூர்வமான உறவைச் சித்தர்கள் வைத்திருந்தார்கள். இவர்கள் பெரும் சமய மரபுகளின் குறைகளை எடுத்துகூறினார்கள். மரபுவழிப் புலவர்கள் பலர் இன்ப அல்லது போற்றி இலக்கியங்களில் மட்டும் ஈட்பட்டிருக்க சித்தர்கள் மருத்துவம், கணிதம், வேதியியல், தத்துவம், ஆத்மீகம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு தமிழர் சிந்தனைச் சூழலைப் பலப்படுத்தினார்கள். சமயம் தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயுத போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அறிஞர் சிலர் வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை அறிந்தும் பின்பற்றியும் வந்துள்ளார்கள். தமிழர்கள் ஐந்து நிலங்களுக்கும் உரிய தெய்வங்களாக மாயோன், சேயோன், வேந்தன், வருணன், கொற்றவை ஆகியோரை வணங்கி வந்துள்ளனர். பௌத்தம், சமணம், இந்து, இசுலாம், கிறித்தவம் ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். சங்க காலத்தில் ஆசீவகம் சமணம், பௌத்தம் ஆகிய மதங்கள் இருந்தன. பெரும்பாலான தமிழர் தமது கடவுளாக முருகனை வணங்குகின்றனர். முருகனை விட ஐயனார், மதுரை வீரன், கண்ணகி, இசக்கி அம்மன், கறுப்புசாமி, சுடலை மாடன், பெரியண்ணன், முனீசுவரர், காத்தவராயன் ஆகிய காவல் தமிழ்க் கடவுள்கள் வழிபாடும் பரவலாக இருக்கின்றது. நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளைப் பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றி சிறப்புற்றவைதான். இன்று திருக்குறளைப் பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, இறைமறுப்பு (நாத்திகம்), அறியாமைக் கொள்கை, உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள். இந்து மதம் என்று ஆங்கிலேய அரசால் 19 ஆம் நூற்றான்டில் கொன்டு வரப்படாத வரை தமிழ்நாடு (மதராசு மாகாணம்) மற்றும் ஈழத்திலும் இருந்த தமிழ் மக்கள் தங்கள் மதத்தை தமிழ் என்றே குறித்து வந்தனர். 19ஆம் நூற்றான்டில் இசுலாமியர், கிருத்தவர், சீக்கியர் அல்லாதவர்களை இந்துக்கள் என்று கொன்டுவந்ததால் தமிழ் மதத்தை பின்பற்றிய தமிழர்கள் இந்துக்கள் என அடையாளபட்டனர். பல புலம்பெயர்ந்த மற்றும் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் மதமாக தமிழ் மதத்தை கடைபிடிக்கின்றனர். மெய்யியல் தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்குகின்றார்கள் என்பதைத் தமிழர் "மெய்யியல் எனலாம்". தமிழர் மெய்யியலை அறநூல்களில் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியல் மருவி வந்திருக்கிறது. எடுத்துக்காட்டக அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனத் தமிழ் மகளிர் கட்டுப்படுத்தப்பட்டனர். இன்று துணிவு, அறிவு, திறமை என்று நவீனப் பெண்களாகத் தம்மை வளர்த்துக்கொண்டனர். தமிழர் மெய்யியல் உலகின் தன்மை (அகம், புறம்), வாழ்வின் நோக்கம் (அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு), வாழ்தலில் ஒழுக்கம் (அறக் கோட்பாடு) ஆகியவற்றை விளக்குகின்றது. தமிழரின் பண்டைய வாழ்வியலைத் திணைக் கோட்பாடு விளக்குகிறது. இன்றைய உந்துதலைத் திராவிடம் எடுத்துரைக்கிறது. வாழ்வியல் உணவு தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாகத் தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு நாட்டுப்புறச் சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன் சமைக்க, விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது. பல்வகை மரக்கறிகள், சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. சோறும் குழம்பும் கறியும் தமிழரின் முதன்மை உணவாகும். குழம்புகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக் குழம்பு, பருப்பு, கீரைவகை, மசியல், ஆட்டுக்கறி, முயல்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, மீன்கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் குழம்புகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம். உடை தமிழர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம் ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. அனைத்துத் தமிழர்களுக்கும் இதுதான் உடை என்று ஏதும் இல்லை. எனினும், வேட்டி, சேலை, தாவணி, பாவாடை போன்றவை தமிழரின் மரபார்ந்த உடைகளாகக் கருதப்படுகின்றன. நகர்ப்புறங்களில் சல்வார் கமீசு, சுரிதார், முழுக்காற்சட்டை, நீலக்கால் சட்டை போன்ற உடைகள் அணியும் போக்கு கூடி வருகிறது. கொண்டாட்டங்கள் பொங்கல், தமிழ் புத்தாண்டுப் பிறப்பு ஆகியன சமய சார்பற்று அனைத்து தமிழர்களும் கொண்டாடும் விழாக்கள் ஆகும். தைப்பூசமும் தீபாவளியும் இந்து சமயத் தமிழர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகள் ஆகும். கப்பற்கலை தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடற் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர் ஈடுபட்டனர். இத்துறை வல்லுநர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பயன்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம். அரசியல் தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளைப் பேணும் முறைகளையும் நடத்தைகளையும் தமிழர் அரசியல் குறிக்கின்றது. தமது சுதந்திரத்தை நிலைநாட்டி, உரிமைகளைப் பேணி, சமத்துவத்துடன், பொருளாதார வசதியுடன், பண்பாட்டுச் சிறப்புடன் அனைத்து தமிழர்களும் மனிதர்களும் வாழ வழிசெய்வதே தமிழர் அரசியலின் கருத்தியல் இலக்கு. தமிழர் அரசியல் பன்முகம் கொண்டது; வெவ்வேறு செல்வாக்கு அதிகார வட்டங்களுக்கு உட்பட்டது. அன்றும் இன்றும் தமிழர் அனைவரும் ஒரே அரசியல் அலகின் கீழ் இயங்கியது இல்லை. இன்று தமிழர்களுக்கு அவரவர் வாழும் நாடுகளின் அரசியலே முதன்மை பெறுகின்றது. எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல், மலேசிய அரசியல், சிங்கப்பூர் அரசியல், மொரிசியசு அரசியல் என்று அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டு அரசியல்களே முக்கியம் பெறுகின்றன. உலகத் தமிழர்களுக்கென ஒரு வலுவான அமைப்போ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமைத்துவமோ இல்லை. இருப்பினும் உலகத்தமிழர் தமிழர் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுத்தும், தமிழர் நலன்களின் மீது அக்கறை காட்டியும் செயற்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக மலேசியத் தமிழர் உரிமைகள் பாதிக்கப்பட்ட போது தமிழக முதல்வர் மு. கருணாநிதி கண்டனம் தெரிவித்து நியாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று வேண்டினார். ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவியைக் கண்டித்தும் தென்னாபிரிக்கத் தமிழர் நடாத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் உலகத்தமிழர் ஒரு நாட்டின் தமிழர் அரசியலில் அக்கறையுடன் செயற்படுவதை எடுத்துகாட்டுகின்றன. அமைப்புகள் தமிழர்கள் பல்வேறு குறிக்கோள்களுக்காக அமைப்பு முறையில் ஒருங்கிணைந்து செயற்படுகிறார்கள். மொழி, அரசியல், வணிகம், தொழில், சமயம், ஈடுபாடுகள் எனப் பல நோக்கங்களை மையமாக வைத்துத் தமிழர் அமைப்புகள் இயங்குகின்றன. சங்கம், கோயில், இயக்கம் (தமிழீழ விடுதலைப் புலிகள், திராவிடர் கழகம், தலித் இயக்கங்கள்), மன்றம் (சாதி மன்றங்கள்), ஒன்றியம் (புகலிட ஊர் ஒன்றியங்கள்), இணைய அமைப்புகள், கட்சி, அறக்கட்டளை, அவை, பேரவை, கூட்டுறவுகள், சமூகக் கூடங்கள், நூலகங்கள், ஊராட்சி, ஊரவை ஆகியவை தமிழ்ச் சூழலில் காணப்படும் அமைப்புகள் ஆகும். இயக்கங்கள் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம், தமிழ் நாட்டு அரசியலில் முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வியக்கம் தன்மானத்தையும் பகுத்தறிவையும் ஊக்குவிக்கவும் சாதிகளுக்கு எதிராகப் போராடவும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான ஒடுக்கு முறையை எதிர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் யாவும் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றியே உள்ளன. தமிழ் நாட்டு அரசியலில் தேசியக் கட்சிகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது. உலகமயமாதலும் தமிழரும் உலகமயமாதல் பல்வேறு பண்பாடுகளை உள்வாங்கி ஒரு உலகப் பண்பாட்டை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. இந்த உலகப் பண்பாடு இன்றைய ஆங்கில, மேற்கத்தைய ஆதிக்க ஈடுபாடுகளையே பெரிதும் எதிரொளிக்கும். இத்தகைய நிலையில் தமிழ் மொழி, பண்பாடு, சூழல், அறிவு சிதைந்து போக வாய்ப்புள்ளது. அதே வேளை தமது அடிப்படைக் கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஏற்று மேம்பட முடியும். அதாவது இருப்பதை அழிக்காமல் மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்துதலாகவும் உலகமயமாதலைப் பார்க்கலாம். இவற்றையும் பார்க்க தமிழர் வரலாறு புலம்பெயர் தமிழர் தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக மேற்கோள்கள் உசாத்துணைகள் தமிழ் அ. தட்சிணாமூர்த்தி, 1994. தமிழர் நாகரிகமும் பண்பாடும், சென்னை: ஐந்திணைப் பதிப்பகம். ஆ. வேலுப்பிள்ளை, 1985. தமிழர் சமய வரலாறு. சென்னை: பாரி புத்தகப்பண்ணை. ஆறு. அழகப்பன், 2001. தமிழ்ப் பேழை. சென்னை: திருவரசு புத்தக நிலையம். க. த. திருநாவுக்கரசு, 1987. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு. சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். கா. சிவத்தம்பி, 1989. தமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் கணேசலிங்கன், செ.. (2001). நவீனத்துவமும் தமிழகமும். சென்னை: குமரன் பதிப்பகம் தனிநாயகம் அடிகள், 1980. தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும். கொழும்பு: தந்தை செல்வா அறங்காவற்குழு. வி. சிவசாமி, 1973. திராவிடர் ஆதிவரலாறும் பண்பாடும். பொ. சங்கரப்பிள்ளை, 1991. நாம் தமிழர். கொழும்பு: கொழும்புத் தமிழ்ச் சங்கம். ந. சி. கந்தையா, (). சிந்துவெளித் தமிழர். தெல்லியூர் எஸ். நடராஜன், (1947). தமிழன் மாட்சி. இலங்கை: இளைஞன் பிரசுராலயம். ந. சி. கந்தையா, (). உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு. மாத்தளை சோமு, 2005. வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். சி. மெளனகுரு, 2005. தமிழர் வரலாறும் பண்பாடும். இலங்கை: குமரன் புத்தக இல்லம். ஆங்கிலம் Hart, G.L. (1979). "The Nature of Tamil Devotion." In M.M. Deshpande and P.E. Hook (eds.), Aryan and Non-Aryan in India, pp. 11–33. Michigan: Ann Arbor. Hart, G.L. (1987). "Early Evidence for Caste in South India." In P. Hockings (ed.), Dimesions of Social Life: Essays in honor of David B. Mandelbaum. Berlin: Mouton Gruyter. Mahadevan, Iravatham (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. Cambridge, Harvard University Press. . Pillai, Suresh B. (1976). Introduction to the study of temple art. Thanjavur : Equator and Meridian. Ramaswamy, Sumathi. (1998). Passions of the Tongue: language devotion in Tamil India 1891–1970. Delhi: Munshiram. . Sastri, K.S. Ramaswamy. (2002). The Tamils : the people, their history and culture. Vol. 1 : An introduction to Tamil history and society. New Delhi : Cosmo Publications. . Sharma, Manorama. (2004). Folk India : a comprehensive study of Indian folk music and culture. Vol. 11: Tamil Nadu and Kerala. New Delhi : Sundeep Prakashan. . Suryanarayan, V. (2001). "In search of a new identity", Frontline 18(2). Swaminatha Iyer, S.S. (1910). A brief history of the Tamil country. Part 1: The Cholas. Tanjore : G.S. Maniya. வெளி இணைப்புகள் தமிழர் - தேசங்கள் கடந்த இனம் இந்திய இனக்குழுக்கள் இலங்கை இனக்குழுக்கள் திராவிடர்
613
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
திராவிட மொழிக் குடும்பம்
திராவிட மொழிகள் (Dravidian languages) பெரும்பாலும் தென்னாசியாவில் பேசப்படும் 86 மொழிகளை உள்ளடக்கிய ஒரு மொழிக் குடும்பமாகும். இம்மொழிகளை 215 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசுகின்றனர். இவை தெற்கு, தென்-மத்தி, மத்தி, வடக்கு என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்நான்கு மொழிகளும் முறையே தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் அலுவல் மொழிகளாகத் திகழ்கின்றன. தென்னிந்திய மொழிகள்பற்றி ஆராய்ந்து, 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஓர் ஒப்பிலக்கணம்' என்ற நூலை 1856-இல் எழுதிய இராபர்ட்டு கால்டுவெல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த வேறு சில மொழிகளையும் சேர்த்து, அவற்றைச் சுட்டுவதற்காகத் 'திராவிட' என்ற சொல்லை உருவாக்கினார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிகளைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகித்தானிலுள்ள பலூச்சித்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கி வருவதை எடுத்துக்காட்டினர். வரலாறு பொ.ஊ.மு. 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தன என்பது பல ஆய்வாளர்களது கருத்து. திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரசுவதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அரப்பா, மொகஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: தென் திராவிடம் தென்-நடுத் திராவிடம் நடுத் திராவிடம் வட திராவிடம் வகைப்படுத்தப்படாதவை என்பனவாகும். இவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றுள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகளாகும்.தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் தமிளியன் அல்லது தமுலிக் என்று வழங்கினர். சான்று:திராவிட மொழிகள், ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூல், தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், சென்னை. வகைப்பாடு பரம்பல் எண்கள் ஒன்று முதல் பத்து வரையான எண்கள் பல்வேறு திராவிட மொழிகளில் கொடுக்கப் பட்டுள்ளன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திராவிட மொழிகள் குறித்த முத்தமிழ் மன்றம் என்ற வலைப்பக்கம் திராவிட மொழிகள் திராவிட மொழியியல் - ஒரு கண்ணோட்டம் - கீற்று மின்னிதழில் திராவிட மொழி வேர்ச்சொற்கள் மற்றும் கிளைச்சொற்கள் தரவு மொழிக் குடும்பங்கள் திராவிட மொழிகள்
615
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
நாடுகள்வாரியாக நகரங்களின் பட்டியல்
இது நாடு வாரியாக நகரங்களின் பட்டியலைத் தரும் பட்டியலாகும் நாடுகள் தொடர்பான பட்டியல்கள்
616
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
இந்தியாவிலுள்ள நகரங்களின் பட்டியல்
மாநிலத் தலைநகர்கள் நகர இணைவுகள் {| class="wikitable" |- bgcolor="#CCCCCF" align="center" |பெயர்||மக்கள்தொகை||மாநிலம் |- |பெரிய மும்பாய் ||11,914,398 ||மகாராஷ்டிரம் |- |டில்லி மாநகரக் கார்ப்பொரேஷன் || 9,817,439 || |- |கொல்கத்தா||4,580,544|| மேற்கு வங்காளம் |- |பெங்களூர்||4,292,223||கர்நாடகம் |- |சென்னை||4,681,087||தமிழ்நாடு |- |அகமதாபாத்||3,515,361||குஜராத் |- |ஹைதராபாத்||3,449,878||ஆந்திரப் பிரதேசம் |- |புனே||2,540,069</td>மகாராஷ்டிரம் |- |கான்பூர் ||2,532,138 ||--- |- |சூரத்||2,433,787||--- |- |ஜெய்ப்பூர்||2,324,319||--- |- |நாக்பூர்||2,051,320 ||--- |- |இந்தோர்||1,597,441||--- |- |போபால்||1,433,875||--- |- |லூதியானா||1,395,053||பஞ்சாப் |- |பாட்னா||1,376,950||பீகார் |- |வடோதரா||1,306,035||--- |- |தானே||1,261,517||--- |- |ஆக்ரா||1,259,979||டெல்லி |- |கல்யாண்-டொம்பிவலி||---||--- |- |வாரணாசி||1,100,748||--- |- |நாசிக்||1,076,967||--- |- |மீரட்||1,074,229||--- |- |பரீதாபாத்||1,054,981||--- |- |ஹவுரா||1,008,704||--- |- |பிம்பிரி-சிஞ்ச்வடு||1,006,417 ||--- |} மேற்கோள்கள் இந்தியப் புவியியல் பட்டியல்கள்
619
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
இலங்கை மாநகரங்களின் பட்டியல்
இலங்கையிலுள்ள எல்லா நகரங்களுமே, உலக மட்டத்தில் நோக்கும் போது மிகச் சிறியனவாகும். தலைநகரான கொழும்பின் மக்கள் தொகை, அண்ணளவாக 6 இலட்சம் ஆகும். ஏனைய நகரங்கள் அனைத்தும் 2 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையே கொண்டுள்ளன. எனினும் இலங்கையில் நகரப்பகுதிகளின் பகுப்பு முறைகளின்படி, மாநகரசபைகளினால் (Municipality) நிர்வகிக்கப்படுகின்ற நகரங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றையும் பார்க்கவும் இலங்கையின் மாகாண சபைகள் உசாத்துணை இலங்கை தொடர்பான பட்டியல்கள்
620
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மாநகரங்களின் பட்டியல்
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒவ்வொரு அமீரகத்திலும் ஒன்றிரண்டு நகரங்களே உள்ளன. அமீரகங்களும் அவற்றின் தலைநகரங்களும் ஒரே பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இந் நகரங்கள் மாநகரசபைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றுள் அபுதாபி முழுநாட்டினதும் தலைநகரமாக உள்ளது. துபாய் நகரம், வர்த்தக ரீதியில் முதன்மை பெற்ற நகரமாக விளங்குகிறது. கீழேயுள்ள பட்டியலில் அல் எயின் தவிர்ந்த எல்லா நகரங்களும் கடற்கரை நகரங்களாகும். அல் எயின் நகரம் அபுதாபி அமீரகத்தின் ஒரு பகுதியாகும். கீழே தரப்பட்டுள்ள எல்லா நகரங்களும் ஒரே தரத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், முதல் நான்கும் தவிர்ந்த ஏனையவை ஒப்பீட்டளவில் மிகவும் சிறியவை ஆகும். அபுதாபி அல் எயின் துபாய் சார்ஜா அஜ்மான் உம் அல் குவெய்ன் ராஸ் அல் கைமா புஜேரா இவற்றையும் பார்க்கவும் நாடுகள் வாரியாக மாநகரங்களின் பட்டியல் மேற்கோள்கள் ஐக்கிய அரபு அமீரகம்
622
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
சார்ஜா அமீரகம்
சார்ஜா என்ற பெயர், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மூன்றாவது பெரிய அமீரகத்தையும், அதன் தலைநகரத்தையும் குறிக்கும். சார்ஜா அமீரகம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் நாட்டின் கிழக்கு, மேற்கு இரண்டு கரைகளையும், அதாவது ஒரு பக்கம் பாரசீக வளைகுடாவையும், மறுபக்கம் இந்து சமுத்திரத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரே அமீரகம் இதுவாகும். இது மேற்குக் கரையில் சார்ஜா மாநகரத்தையும், அதை அண்டியபகுதிகளையும், கிழக்குக் கரையில், கோர்பக்கான், திப்பா, --- ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தெற்கே துபாய் அமீரகமும், வடக்கே அஜ்மான் அமீரகமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கே, உம் அல்-குவைன், ராஸ் அல் கைமா, புஜேரா ஆகிய அமீரகங்களைத் தொட்டுச் செல்லும் இதன் எல்லையில் ஓமான் நாடும் உள்ளது. மேற்கோள்கள் இவற்றையும் பார்க்கவும் பாம் தீவுகள் பூர்ஜ் அல் அராப் துபை மெட்ரோ புர்ஜ் கலீஃபா கல்ப் நியூஸ் ஆசிய நகரங்கள் ஐக்கிய அரபு அமீரகம்
623
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
விண்வெளி அறிவியல்
விண்வெளி என்பது ஒப்பீட்டளவில், கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான பகுதியாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 கி.மீற்றருக்கு மேலே ஆரம்பமாவதாகக் கொள்ளலாம். விண்வெளி அறிவியல், அல்லது விண்வெளி அறிவியல்கள், பின்வருவன போன்ற பல்வேறு துறைகளை அடக்கியுள்ளது. வானியலும், வான்பௌதீகவியலும் Exobiology- புறவெளி உயிரியல் நுண்ணீர்ப்புச் சூழல் (Microgravity environment) பிளாஸ்மா பௌதீகவியல் விண்வெளிப் போக்குவரத்து ஏவுகணை உந்துகை (Rocket propulsion) ஏவுகணை ஏவுதற் தொழில்நுட்பம் கோள்களிடைப் பயணம் நட்சத்திரங்களிடைப் பயணம் (Interstellar travel) விண்கல உந்துகை (Spacecraft propulsion) விண்வெளிப் பயணம் (Space exploration) ஆளில்லா விண்வெளித் திட்டங்கள் (Unmanned space missions) ஆட்களுடனான விண்வெளித் திட்டங்கள் (Manned space missions) விண்வெளிக் குடியேற்றம் இவற்றுடன், விண்வெளி அறிவியல்கள், விண்வெளிச் சூழலிலுள்ள நுண்ணுயி உயிரியலிலிருந்து, மற்றைய கோள்களினதும், விண்பொருட்களினதும் புவிச்சரிதவியல் வரையும்,அதுபோல், நட்சத்திரங்களிடை வெளிகளிலும், நட்சத்திரங்களுள்ளேயும் அணுப் பௌதீகவியலும் போன்ற, வேறு பல துறைகள்மீது தாக்கங் கொண்டோ அல்லது அவற்றுடன் தொடர்புபட்டோ உள்ளன. இவற்றையும் பார்க்கவும் செய்மதி மேற்கோள்கள்
624
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
அப்பல்லோ திட்டம்
அப்பல்லோ திட்டம் என்பது 1961–1972 வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும். இது, தசாப்தம் 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கி, பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது. சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது. அறிமுகம் மேர்க்குரித் திட்டம், ஜெமினி திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அப்பல்லோ திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது ஆளேற்றிய விண்பறப்புத் திட்டமாகும். அப்பல்லோ, டுவைட் டி. ஐசனாவர் நிர்வாகத்தில், மேர்க்குரித் திட்டத்தின் தொடர்ச்சியாக, உயர்நிலை பூமிச்சுற்று ஆய்வுகளுக்காக, உருக்கொடுக்கப்பட்டது. பின்னர், மே 25, 1961ல், அமெரிக்கக் காங்கிரசின் விசேட கூட்டு அமர்வில், ஜனாதிபதி கெனடியால் அறிவிக்கப்பட்டபடி, தீவிர நிலவில் இறங்கும் நோக்கத்துக்காக மாற்றியமைக்கப்பட்டது. ஒரு திட்ட முறையைத் தெரிவுசெய்தல் சந்திரனை இலக்காகத் தீர்மானித்ததன் பின்னர், மனித உயிருக்கான ஆபத்து, செலவு, தொழில்நுட்பம், விமானிகள் திறமை ஆகிய தேவைகளின் குறைந்த அளவு உபயோகத்துடன், கெனடி அறிவித்த நோக்கங்களை அடைவதற்காகப் பறப்புத் திட்டங்களை வடிவமைப்பதில், அப்பல்லோ திட்டத்தின் திட்டமிடலாளர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கினார்கள். மூன்று திட்டங்கள் கருத்திலெடுக்கப்பட்டன. முதலாவதாக, விண்கலத்தை நேரடியாகச் சந்திரனுக்கு ஏற்றுதல். இதற்குத் தற்போது திட்டமிடப்பட்டிருப்பனவற்றிலும் பார்க்கச் சக்தி கூடிய நோவா தூக்கி வேண்டியிருக்கும். இரண்டாவது, பூமிச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு (EOR) என அழைக்கப்பட்டது. இதன்படி, ஒன்றில் விண்கலத்தையும், மற்றதில் எரிபொருளையும் வைத்து, இரண்டு சனி 5 (Saturn V) ராக்கெட்டுகள் ஏவப்பட வேண்டும். விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் தரித்து நிற்க, நிலவுக்குச் சென்று திரும்பிவரப் போதுமான அளவு அதற்கு எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். சந்திரச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு உண்மையாகக் கடைப் பிடிக்கப்பட்ட திட்டத்தின் உருவாக்குனர், ஜோன் ஹூபோல்ட் என்பவராவர். இத்திட்டம் 'சந்திரச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு' (LOR) என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது. விண்கலம் கூறுகளாக உருவாக்கப் படும், இவற்றுள் ஒரு 'கட்டளை/சேவை கூறு' (CSM) மற்றும் ஒரு 'நிலா கூறு' (LM; சந்திரப் பயண கூறு என்ற அதன் ஆரம்ப ஆங்கிலப் பெயரையிட்டு, 'லெம்' என உச்சரிக்கப்படும்) என்பன அடங்கியிருக்கும். கட்டளை/சேவை கூறு மூன்று பேரடங்கிய குழுவுக்கு, 5 நாள் நிலவுக்குச் சென்று திரும்பும் பயணத்துக்குத் தேவையான, உயிர் காப்பு முறைமைகளைக் கொண்டிருப்பதுடன், அவர்கள் பூமியின் காற்றுமண்டலத்துள் நுழையும்போது தேவைப்படும், வெப்பத் தடுப்புகளையும் கொண்டிருக்கும். நிலா கூறு, சந்திரச் சுற்றுப்பாதையில், கட்டளை/சேவை கூறிலிருந்து பிரிந்து, இரண்டு விண்வெளிவீரர்களை நிலா மேற்பரப்பில் இறக்குவதற்காகக் கொண்டுசெல்லும். நிலா கூறு தன்னுள் இறங்கு மேடையொன்றையும், ஏறு மேடையொன்றையும் கொண்டுள்ளது. முன்னது, ஆய்வுப்பயணக் குழு, சந்திரனைவிட்டுப் புறப்பட்டுப் பூமிக்குச் திரும்புமுன், சுற்றுப்பாதையிலிருக்கும் கட்டளை/சேவை கூறு உடன் இணையச் செல்லும்போது, பின்னையதற்கு ஏவு தளமாகப் பயன்படும். இத் திட்டத்திலுள்ள ஒரு வசதி என்னவென்றால், நிலா கூறு கைவிடப்படவுள்ள காரணத்தால், அது மிகவும் பாரமற்றதாகச் செய்யப்படலாம் என்பதுடன், சந்திரப்பயணம் ஒற்றை சாடர்ன் V ஏவூர்தியால் ஏவப்படவும்கூடியதாக உள்ளது. ஏவு வாகனங்கள் அப்பல்லோ திட்டம் தொடங்குவதற்கு முன்னர், வெர்னர் வான் பிரவுன் மற்றும் அவரது ராக்கெட் பொறியாளர்களின் குழுவினர் சாடர்ன் தொடர் மற்றும் நோவா தொடர் ஆகிய மிகப்பெரும் ஏவூர்திகளின் வடிவமைப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த திட்டங்களின் நடுவில், வான் பிரவுன் இராணுவத்திலிருந்து நாசாவிற்கு மாற்றப்பட்டு மார்ஷல் விண் பறத்தல் மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில், மூன்று விண்வெளி வீரர்களைச் சுமந்துசெல்லும் அப்பல்லோ கட்டளை / சேவைப் பெட்டகத்தை நேரடியாக சந்திர மேற்பரப்புக்கு அனுப்புவதாகத் திட்டமிடப்பட்டது; இதற்கு சுமையைச் சுமந்துசெல்லுமளவுக்கான திறன்கொண்ட நோவா வகை ஏவூர்திகள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஜூன் 11, 1962-ல் நிலவுச் சுற்றுப்பாதையில் பிரிந்து/இணையும் வண்ணம் கட்டளை / சேவைப் பெட்டக திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்ததன்பின் சனி தொடர் ஏவூர்திகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை முடுக்கிவிடப்பட்டது. லிட்டில் ஜோ II மெர்க்குரித் திட்டத்தைப் போலவே, அப்பல்லோ திட்டத்திலும் ஏவுதலில் தோல்வியேதும் ஏறபடுமாயின் வீரர்கள் தப்பிப்பதற்கு ஏவுநிலை விடுபடு அமைப்பு (Launch Escape System) தேவையானதாகவிருந்தது; அதற்கு சிறிய அளவிலான ஏவூர்தி பறத்தல் சோதனைகளுக்குத் தேவையாக இருந்தது. மெர்க்குரித் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட லிட்டில் ஜோ-வினை விட சற்றே திறன்மிகுந்த ஏவூர்தி அத்தேவையைப் பூர்த்தி செய்யும் எனக் கணக்கிடப்பட்டது. இதன்பிறகு, லிட்டில் ஜோ II ஏவூர்தியானது ஜெனரல் டைனமிக்ஸ் / கான்வெய்ர் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது. ஆகஸ்டு 1963-இல் நிகழ்த்தப்பட்ட தேர்வுநிலை சோதனைப் பறத்தலின் பிறகு, மே 1964-க்கும் சனவரி 1966-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நான்கு ஏவுநிலை விடுபடு அமைப்பு சோதனை பறத்தல்கள் நிகழ்த்தி சோதிக்கப்பட்டது. பறப்புகள் அப்பல்லோத் திட்டம் அப்பல்லோ 7 முதல் அப்பல்லோ 17 வரையான, 11 ஆளேற்றிய பறப்புக்களை உள்ளடக்கியிருந்தது. இவையனைத்தும், புளோரிடாவிலுள்ள கெனடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டன. அப்பல்லோ 2 இலிருந்து அப்பல்லோ 6 வரை, ஆளில்லா சோதனைப் பறப்புகள். முதல் ஆளேற்றிய பறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்த அப்பல்லோ 1, ஏவுதளச் சோதனையொன்றின்போது தீப் பிடித்து, மூன்று விண்வெளிவீரர்களும் இறந்துபோயினர். முதல் ஆளேற்றிய பறப்பில் சற்றேர்ண் 1-B ஏவுவாகனம் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த பறப்புகள் அனைத்தும், கூடிய சக்தி வாய்ந்த சாடர்ன் V-ஐப் பயன்படுத்தின. இவற்றில் இரண்டு (அப்பல்லோ 7 உம் அப்பல்லோ 9 உம்) பூமிச் சுற்றுப் பாதைப் பயணங்கள். அப்பல்லோ 8 உம் அப்பல்லோ 10 உம் நிலாச் சுற்றுப்பாதைப் பயணங்கள். ஏனைய 7 பயணங்களும், சந்திரனில் இறங்கும் பயணங்களாகும். (இவற்றுள் அப்பல்லோ 13 தோல்வியடைந்தது.) சுருக்கமாக, அப்பல்லோ 7, அப்பல்லோ கட்டளை மற்றும் சேவைக் கூறைப் (CSM) புவியின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 8 CSM ஐச் சந்திரனின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 9, லூனார் கூறை (LM), புவியின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 10, லூனார் கூறை (LM), சந்திரனின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 11, ஆளேற்றிக்கொண்டு நிலவிலிறங்கிய முதற் பயணமாகும். அப்பல்லோ 12, சந்திரனில், குறித்த இடத்தில் சரியாக இறங்கிய முதற் பயணம் என்ற பெயரைப் பெற்றது. அப்பல்லோ 13, சந்திரனில் இறங்கும் முயற்சியில் தோல்வியுற்றதெனினும், பேரழிவாக முடிந்திருக்கக்கூடிய பறப்பினுள் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பாகப் பயணக்குழுவைப் பூமியிலிறக்கி வெற்றிகண்டது. அப்பல்லோ 14, சந்திர ஆய்வுப் பயணத் திட்டத்தை மீண்டும் துவக்கியது. அப்பல்லோ 15, சந்திர ஆய்வுப்பயண வல்லமையில், நீண்ட தங்கு நேரம் கொண்ட LM, மற்றும் நிலவில் திரியும் வாகனம் மூலம், புதிய மட்டத்தை அறிமுகம் செய்தது. அப்பல்லோ 16 தான் சந்திரனின் உயர் நிலத்திலிறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். அப்பல்லோ 17, அறிவியலாளரான, விண்வெளி வீரரைக் கொண்ட முதற் பயணமும், திட்டத்தின் இறுதிப் பயணமுமாகும். திட்ட நிறைவு தொடக்கத்தில், அப்பல்லோ 18 தொடக்கம் அப்பல்லோ 20 வரை மூன்று மேலதிக பயணங்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயணங்கள், விண்வெளி விமான உருவாக்கத்தின் நிதித் தேவைகளுக்காகவும், அப்பல்லோ விண்கலத்தையும், சாடர்ன் V ஏவு வாகனங்களையும், ஸ்கைலேப் திட்டத்துக்குக் கொடுக்கும் பொருட்டும், கைவிடப்பட்டது. ஒரு சற்றேர்ண் V மட்டுமே உண்மையில் பயன்படுத்தப்பட்டது; ஏனையவை நூதனசாலைக் காட்சிப்பொருள்களாயின. அப்பல்லோவுக்கான காரணங்கள் அப்பல்லோ திட்டமானது, சோவியத் யூனியனுடனான கெடுபிடிப் போர்ச் சூழலில், விண்வெளித்தொழில் நுட்பத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியனிலும் தாழ்ந்த நிலையிலிருந்ததற்குப் பதிலளிக்குமுகமாகவே, ஓரளவுக்கு ஒரு உளவியல்சார்-அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் தூண்டப்பட்டது. இதில் அது மிகத் திறமையான முறையில் வெற்றிபெற்றது. உண்மையில் ஆளேற்றிய விண்பறப்புக்களில் அமெரிக்காவின் மேலாண்மை, முதலாவது அப்பல்லோ பறப்புக்கு முன்னரே, ஜெமினி திட்டம் மூலம் பெறப்பட்டது. தங்களுடைய N-1 ராக்கெட்டுகளை முழுமை நிலைக்குக் கொண்டுவர இயலாமை காரணமாக சோவியத் சந்திரனுக்குச் செல்வது தடைப்பட்டதுடன், 1990 கள் வரை அவர்கள் ஒரு நிலவுத் திட்டத்தைக் கொண்டிருப்பதையும் தடுத்துவந்தது. அப்பல்லோத் திட்டம் தொழில்நுட்பத்தின் பல துறைகளுக்குத் தூண்டுதலாக அமைந்தது. லூனாரிலும், கட்டளை கூறிலும் பயன்படுத்தப்பட்ட, ஒரேமாதிரியான, பறப்புக் கணனியே ஒருங்கணைந்த சர்க்கியூட்டுகளையும், காந்த முதன்மை நினைவகம் ஐயும் பயன் படுத்திய முதற் சந்தர்ப்பமாகும். இக் கணினிகள் அப்பல்லோ வழிகாட்டுக் கணினிகள் நானாவித தகவல்கள் அப்பல்லோ திட்டத்துக்கான செலவு: $25.4 பில்லியன் சந்திரனிலிருந்து கொண்டுவரப்பட்ட சந்திரப் பொருட்களின் அளவு: 381.7 கிகி அப்பல்லோ என்ற பெயர் கிரேக்கக் கடவுளைக் குறிக்கும். பயணங்கள் அப்பல்லோ பறப்புகளில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம், சற்றேர்ண் ராக்கெட்டுகளை வடிவமைத்த மார்ஷல் விண்வெளிப் பறப்பு மையம், பறப்புகளை, சற்றேர்ண் - அப்பல்லோ (SA) என்று குறிப்பிட, கெனடி விண்வெளி மையம் அப்பல்லோ - சற்றேர்ண் (AS) என்று குறிப்பிடுகிறது. ஆளில்லா சற்றேர்ண் 1 SA-1 – S-1 ராக்கெட்டின் சோதனை SA-2 – S-1 ராக்கெட்டின் சோதனை மற்றும், வானொலி ஒலிபரப்பு, காலநிலை என்பவற்றின் தாக்கங்களைப் பரிசோதிக்க, 109,000 லீற்றர்களை ஏற்றிச் செல்லல். SA-3 – SA-2 போல SA-4 - நிறைவுக்கு முந்திய இயந்திர நிறுத்தத்தின் தாக்கம் பற்றிய சோதனைகள். SA-5 – நேரடி முதற் பறப்பு, இரண்டாம் கட்டம். A-101 - அப்பல்லோ கட்டளை/சேவை கூறின் வெப்பக்கலன் தகட்டின் அமைப்புத்திறனை சோதித்தது A-102 - சற்றேர்ண் 1 தூக்கியின் முதல் நிரல்தகு கணனியை எடுத்துச் சென்றது; கடைசி சோதனை பறப்பு A-103 - புவியின் சுற்றுப்பாதையில் சின்னஞ்சிறு விண்கற்களின் தாக்கத்தை ஆய்வு செய்த பிகாசசு விண்மதியை எடுத்துச் சென்றது. A-104 – A-102 போல A-105 – A-102 போல ஆளில்லா ஏற்றுமேடை இடைச்சிதை சோதனைகள் ஏற்றுமேடை இடைச்சிதை சோதனை-1 - ஏற்றுகை தப்புதல் அமைப்பிற்கு தரைநிலையில் எறியூட்டல் ஏற்றுமேடை இடைச்சிதை சோதனை-2 - ஏற்றுமேடை இடைச்சிதை சோதனை-1 போல ஆளில்லா லிட்டில் ஜோ II A-001 - ஏற்றுகைக்குப்பின் ஏற்றுகை தப்புதல் அமைப்பை சோதித்தல் A-002 – A-001 போல A-003 – A-001 போல A-004 – A-001 போல ஆளில்லா அப்பல்லோ-சற்றேண் AS-201 – சற்றேர்ண் IB ராக்கெட்டின் முதற் சோதனைப் பறப்பு. AS-203 - நிறையற்ற தன்மையை S-IVB இன் எரிபொருட் தாங்கியில் பரிசோதித்தல். AS-202 – கட்டளை மற்றும் சேவை கூறு வின் துணை சுற்றுப்பாதைச் சோதனைப் பறப்பு. அப்பல்லோ 4 - சற்றேர்ண் V தூக்கி பரிசோதனை அப்பல்லோ 5 - சற்றேர்ண் IB தூக்கி பரிசோதனையும் நிலா கூறும். அப்பல்லோ 6 - சற்றேர்ண் V தூக்கியின் ஆளில்லாப் பரிசோதனை ஆளியக்கியவை அப்பல்லோ 1 - விமானிகள் குழு சோதனை முயற்சியொன்றிபோது அழிந்தனர் அப்பல்லோ 7 - முதலாவது ஆளேற்றிய அப்பல்லோ பறப்பு அப்பல்லோ 8 - நிலவுக்கு முதலாவது ஆளேற்றிய பறப்பு அப்பல்லோ 9 - நிலா கூற்றின் முதலாவது ஆளேற்றிய பறப்பு அப்பல்லோ 10 - நிலவைச் சுற்றிய,நிலா கூற்றின் முதலாவது ஆளேற்றிய பறப்பு அப்பல்லோ 11 - நிலவில் முதல் மனிதனின் இறக்கம். அப்பல்லோ 12 - நிலவில் முதலாவது அச்சொட்டான இறக்கம் அப்பல்லோ 13 - வழியில் ஒட்சிசன்தாங்கி வெடிப்பினால் குலைந்துபோன இறக்கம். அப்பல்லோ 14 - அலன் ஷெப்பேட், சந்திரனில் நடந்த முதல் அசல் விண்வெளி வீரரானார். அப்பல்லோ 15 – நிலவு உலவு வாகனத்துடன் முதலாவது பயணம். அப்பல்லோ 16 - சந்திர உயர் நிலத்தில் முதல் இறக்கம். அப்பல்லோ 17 - நிலவுக்குக் கடைசி ஆளேற்றிய பறப்பு. (இது வரை...) பின் தொடர்ந்த திட்டங்கள் ஸ்கைலேப் அப்பல்லோ-சோயுஸ் மேலும் பார்க்க மெர்க்குரித் திட்டம் ஜெமினி திட்டம் சாடர்ன் V உசாத்துணைகள் வெளி இணைப்புகள் உத்தியோகபூர்வ வலைத்தளம்
625
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%2011
அப்பல்லோ 11
அப்பல்லோ 11 (Apollo 11) என்பது சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது அப்பல்லோ திட்டத்தின் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது ஜூலை 16, 1969இல் 39ஏ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ஜூலை 24, 1969ல் இது திரும்பியது. இத்திட்டத்தில் கட்டளை அலுவலராக நீல் ஆம்ஸ்ட்ரோங்கும், கட்டளைக் கூறு விமானியாக மைக்கேல் கொலின்சும், சந்திரக் கூறு விமானியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர். கட்டளைக்கூறு: கொலம்பியா சந்திரக் கூறு: ஈகிள் இறக்கம்: ஜூலை 20, 1969 சந்திரனில் இறங்கிய இடம்: 1.1 வ, 23.8 கி -- அமைதிக் கடல் (Mare Tranquillitatis) பரப்பின் மேல்: 21.6 மணிகள் லூனார் EVA: 2.5 மணிகள் Samples: 22 கிகி ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த முதல் மனிதராவார். அல்ட்ரின் அவருக்கு அடுத்தவராவார். கொலின்ஸ், நிலவின் மேல் சுற்றுப்பாதையிலேயே இருந்தார். பயணத்திட்டக் குறிப்புகள் ஜுலை 20ல், சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, "ஈகிள்" என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, "கொலம்பியா"விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினும் ஈகிளுடன் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கினர். சந்திர மேற்பரப்பை நோக்கி இறங்கும் போது, கண்காணிப்புப் புகைப்படங்களில் காணப்பட்டதுபோலன்றி, இறங்க உத்தேசித்திருந்த இடம் எதிர்பார்த்ததிலும் கூடிய பாறைப் பிரதேசமாய் இருந்ததை, விண்வெளிவீரர்கள் அவதானித்தனர். ஆம்ஸ்ட்ரோங், இக்கட்டத்தில், ஆளியக்கக் கட்டுப்பாட்டைக் கையாண்டு, மட்டமான நிலப்பகுதியொன்றில் இறங்குவதற்கு வழிகாட்டினார். இப் பிரதேசம் பின்னர் "அமைதித் தளம்" (Tranquility Base) என அழைக்கப்பட்டது. இறக்கத்தின் பின் ஆறரை மணி நேரம் கழிந்தபின், ஆம்ஸ்ட்ரோங், சந்திர மேற்பரப்பில் இறங்கி, அந்தப் பிரபலமான அறிக்கையை விடுத்தார்; "இது [ஒரு] மனிதனைப் பொறுத்தவரை, சிறிய காலடி, ஆனால் மனித இனத்துக்கு இது பாரிய பாய்ச்சலாகும்." (அவர் பேசும்போது, "ஒரு" என்ற சொல் விடுபட்டு, பொருள் மாற்றம் ஏற்பட்டுவிட்டாலும், சில வரலாற்றாசிரியர்கள், தாராள மனப்பாண்மையுடன், இது ஆம்ஸ்ட்ரோங்கின் தவறு என்பதிலும், தொலைத் தொடர்புக் கோளாறு என்றே கூறுகின்றனர்.) 21 மணி 36 நிமிடங்களின் பின்னர், ஈகிள் தனது ஏறும் இயந்திரத்தை இயக்கி, மீளும் கொலம்பியாவுடன் இணைந்தது. விண்வெளிவீரர்கள் ஜூலை 24ல், பூமிக்குத் திரும்பியபோது, பெரும் வீரர்களாக வரவேற்கப்பட்டார்கள். இத்திட்டத்தின் கட்டளைக் கூறு வாஷிங்டன், டி.சி. யிலுள்ள தேசிய ஆகாய மற்றும் விண்வெளி நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, மற்றும் சந்திரக் கூறு ஜூலை 21 1969ல் வீசப்பட்டது. நிலவில் அது விழுந்த இடம் இதுவரையில் தெரியவரவில்லை. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் NASA: Apollo Lunar Surface Journal Map of activities on Lunar surface for Apollo 11 அப்பல்லோ திட்டம்
626
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
விண்வெளி நிலையம்
விண்வெளி நிலையம் (Space station) என்பது விண்ணில் மனிதர் வாழ்வதற்கென வடிவமைக்கப்பட்டு, மனிதனால் செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். விண்வெளி நிலையம், பெரிய அளவில் உந்தல் அல்லது இறங்கல் வசதிகளைக் கொண்டிராமையை வைத்து, ஏனைய ஆளேற்றிய விண்கலங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகிறது - பதிலாக, விண்வெளி நிலையத்திலிருந்து போக்குவரத்துக்கு ஏனைய வாகனங்கள் பயன்படுகின்றன. விண்வெளி நிலையங்கள், சுற்றுப்பாதையில், சில மாதங்களைக்கொண்ட இடைத்தரக் கால அளவு வாழ்க்கைக்காக வடிவமைப்புச் செய்யப்படுகின்றன. கடந்தகால, நிகழ்கால விண்வெளி நிலையங்கள்: சல்யூட் ஸ்கைலாப் மிர் அனைத்துலக விண்வெளி நிலையம் (ISS) சில விண்வெளி நிலைய வடிவமைப்புகள், கூடிய அளவு மக்களுக்காக, நீண்ட கால விண்வெளி வாழிட நோக்கங்களைக் கருத்திற்கொண்டு முன்மொழியப் பட்டுள்ளன. முக்கியமாக இவை, மக்கள் வீடுகள் கட்டிக்கொள்ளக் கூடிய "விண்வெளி நகரங்களாகும்". இம் முன்மொழிவுகள், செயல்படுத்தும் நோக்கத்துக்காகத் தீவிர கவனத்துக்கு உட்படவில்லை. மேற்கோள்கள் மாந்த வாழிடங்கள்
628
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88
ஐக்கிய நாடுகள் அவை
ஐக்கிய நாடுகள் அமைப்பு அல்லது அதிகாரபூர்வமாக ஐக்கிய நாடுகள் (United Nations, UN, ஐநா) என்பது உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவு உறவுகளை வளர்த்தல், பன்னாட்டு ஒத்துழைப்பைப் பேணல், நாடுகளின் நடவடிக்கைகளை ஒத்திசைப்பதற்கான மையமாக இருத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகும். இது உலகின் மிகப்பெரியது பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ள பன்னாட்டு நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் முக்கிய அலுவலகங்கள் செனீவா, நைரோபி, வியென்னா, டென் ஹாக் ஆகிய இடங்களில் உள்ளன. இந்த அமைப்பு அதன் உறுப்பு நாடுகளில் இருந்து மதிப்பிடப்பட்ட மற்றும் தன்னார்வப் பங்களிப்புகளால் நிதியளிக்கப்படுகிறது. ஐநா அமைப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிர்காலப் போர்களைத் தடுக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இதற்கு முன்னர் இருந்த பன்னாட்டு அமைப்பான உலக நாடுகள் சங்கம் பயனற்றது என்று வகைப்படுத்தப்பட்டு கலைக்கப்பட்டது. 1945 ஏப்ரல் 25 , 50 அரசுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு மாநாட்டிற்காகச் சந்தித்து, ஐக்கிய நாடுகளின் பட்டயத்தை உருவாக்கத் தொடங்கின, இது 1945 சூன் 25 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1945 அக்டோபர் 24 இல் நடைமுறைக்கு வந்தது. ஐநாவின் பட்டயத்தின்படி, அமைப்பின் நோக்கங்களில் பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், பன்னாட்டு சட்டத்தை நிலைநிறுத்துதல் ஆகியவை அடங்கும். இவ்வமைப்பு நிறுவப்பட்ட போது, இது 51 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்தது; 2011 இல் தெற்கு சூடானின் சேர்க்கையுடன், உறுப்பினர்களின் எண்ணிக்கை 193 ஆக உள்ளது, இது உலகின் அனேகமாக அனைத்து இறையாண்மை நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உலக அமைதியைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் நோக்கம் அதன் ஆரம்ப தசாப்தங்களில் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் அந்தந்த நட்பு நாடுகளுக்கும் இடையிலான பனிப்போரால் சிக்கலானது. அதன் பணிகளில் முதன்மையாக நிராயுதபாணியான இராணுவப் பார்வையாளர்கள், இலேசான ஆயுதம் ஏந்திய துருப்புகள் ஆகியன முதன்மையாகக் கண்காணிப்பு, அறிக்கை தயாரித்தல், நம்பிக்கையை வளர்க்கும் செயற்பாடுகளைக் கொண்டிருந்தன. 1960களில் தொடங்கிய பரவலான குடியேற்ற விலக்கத்தைத் தொடர்ந்து ஐநா உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாக வளர்ந்தது. அப்போதிருந்து, 80 முன்னாள் குடியேற்ற நாடுகள் விடுதலை பெற்றுள்ளன, இதில் 11 ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சிகள் அறக்கட்டளை பிரதேசங்கள் ஐநா அறங்காவலர் குழுவால் கண்காணிக்கப்பட்டு வந்தன. 1970களில், பொருளாதார, சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஐ.நா.வின் வரவுசெலவுத் திட்டம், அமைதி காக்கும் பணிக்கான செலவினங்களை விட அதிகமாக இருந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, ஐ.நா. தனது களச் செயல்பாடுகளை மாற்றியும், விரிவுபடுத்தியும், பல்வேறு சிக்கலான பணிகளை மேற்கொண்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுச் சபை; பாதுகாப்புப் பேரவை; பொருளாதார, சமூகப் பேரவை (ECOSOC); பொறுப்பாட்சி மன்றம்; அனைத்துலக நீதிமன்றம்; ஐக்கிய நாடுகள் செயலகம் ஆகிய ஆறு முக்கிய உறுப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றை விட உலக வங்கிக் குழுமம், உலக சுகாதார அமைப்பு, உலக உணவுத் திட்டம், யுனெசுக்கோ, சிறுவர் நிதியம் ஆகிய சில சிறப்பு நிறுவனங்கள், நிதி அமைப்புகள், திட்டங்களையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கொண்டுள்ளது. அத்துடன், கூடுதலாக, அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு ECOSOC மற்றும் பிற நிறுவனங்களுடன் ஐ.நா.வின் பணிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகின்றன. ஐநாவின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுச் செயலாளர் ஆவார். தற்போதைய பொதுச் செயலாளராக போர்த்துகீசிய அரசியல்வாதியும் தூதருமான அந்தோனியோ குத்தேரசு பதவியில் உள்ளார். இவர் தனது முதல் ஐந்தாண்டு பதவிக்காலத்தை 2017 சனவரி 1 தொடங்கினார், 20121 சூன் 8 அன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய நாடுகள் அமைப்பும் அதன் கிளை அமைப்புகளும் அமைதிக்கான நோபல் பரிசுகள் பலவற்றை வென்றுள்ளன, இருப்பினும் அதன் செயல்திறன் பற்றிய பக்கசார்பற்ற மதிப்பீடுகள் கலவையாக உள்ளன. சிலர் இவ்வமைப்பு அமைதி மற்றும் மனித மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய சக்தியாக இருப்பதாக நம்புகிறார்கள், வேறு சிலர் இது பயனற்றது, பக்கச்சார்பானது அல்லது ஊழல் மிகுந்தது என்றும் கூறுகின்றனர். வரலாறு தேசங்களின் அணி இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக் கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தாங்காது எனக்கருதியதால் வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது. 1943 அக்டோபரில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஆகிய நாடுகள் மாஸ்கோவில் ஒன்றுகூடி, உலகில் அமைதியை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக 1945 இல் சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்றது. இதில் அச்சு நாடுகளுக்கு எதிராக 50 நாடுகள் கலந்துகொண்டன. அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்கென தனி சாசனம் வரையப்பட்டது. அதில் நிறுவனத்தின் நோக்கம், அதில் அமைக்கப்பட்ட சபைகள், அவற்றின் செயல்கள் ஆகியனபற்றித் தெளிவாகக் கூறப்பட்டன. நோக்கங்கள் கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்; பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல். மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல் மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல். இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே. உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது. ஐக்கிய நாடுகள் முறைமை ஐக்கிய நாடுகள் முறைமை 1994 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்வரும் 6 முதன்மை அமைப்புகளைக் கொண்டிருந்தது: ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் ஐக்கிய நாடுகள் செயலகம் அனைத்துலக நீதிமன்றம் 1994ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப் பகுதியான பலோ (Palau) சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் செயலற்றுப் போனது. இப்போது ஏனைய ஐந்து அமைப்புக்கள் மட்டுமே உள்ளன. இந்த ஐந்து அமைப்புக்களுள் நான்கு நியூ யார்க் நகரில் உள்ள அனைத்துலக ஆட்சிப்பகுதியுள் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இயங்குகின்றன. அனைத்துலக நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ளது. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த மேலும் சில முக்கியமான அமைப்புக்கள் செனீவா, வியன்னா, நைரோபி போன்ற நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய மேலும் பல அமைப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன. அரசுகளுக்கு இடையிலான கூட்டங்களிலும், ஆவணங்களிலும் ஆறு மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இவை, அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் என்பன. செயலக வேலைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகள் பயன்பட்டு வருகின்றன. ஆறு அலுவல் மொழிகளுள் நான்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தேசிய மொழிகள். இவற்றுக்குப் புறம்பாக, அதிகமான நாடுகளில் தேசிய மொழிகளாக உள்ள எசுப்பானியமும், அரபு மொழியும் அலுவல் மொழிகளாகச் சேர்க்கப்பட்டன. இவற்றுள் எசுப்பானியம் 20 நாடுகளிலும், அரபு மொழி 26 நாடுகளிலும் அலுவல் மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுள் ஐந்து ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட போதே அலுவல் மொழிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. அரபு மொழி 1973 ஆம் ஆண்டில் அலுவல் மொழியாக்கப்பட்டது. ஐநாவின் கைநூலில் பிரித்தானிய ஆங்கிலமும், ஆக்சுபோர்டு எழுத்துக் கூட்டலுமே ஆங்கிலத்துக்கு நியமமாகச் சொல்லப்படுகின்றன. எளிமையாக்கிய சீனமே சீன மொழிக்குரிய நியம எழுத்து முறையாகக் கொள்ளப்படுகின்றது. 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமை சீனக் குடியரசிடம் இருந்து, மக்கள் சீனக் குடியரசுக்குக் கைமாறியபோது சீன எழுத்துமுறைக்கான நியமம் மரபுவழிச் சீன எழுத்து முறையில் இருந்து, எளிமையாக்கிய சீன எழுத்து முறைக்கு மாற்றப்பட்டது. பொதுச் சபை பொதுச் சபையே ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான கலந்தாராய்வு அவை ஆகும். எல்லா உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பொதுச் சபை, ஆண்டுக்கு ஒரு முறை, உறுப்பு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்படும் தலைவர் ஒருவரின் தலைமையில் கூடுகிறது. அமர்வின் தொடக்கத்தில் இரண்டு வாரகாலம் எல்லா உறுப்பு நாடுகளும் அவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மரபுவழியாக பொதுச் செயலர் முதலாவது பேச்சை நிகழ்த்த, அடுத்ததாக அவைத் தலைவர் பேசுவார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு 1946 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் தேதி இலண்டனில் இடம்பெற்றது. 51 நாடுகளின் பேராளர்கள் இந்த அமர்வில் பங்குபெற்றனர். பொதுச் சபை முக்கியமான விடயங்களில் வாக்களிக்கும்போது, அமர்வில் கலந்து கொண்டு வாக்களித்தவர்களுள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. மேற்சொன்ன முக்கியமான விடயங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக, அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பான சிபாரிசுகள்; அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்; உறுப்பினர்களை அனுமதித்தல், இடை நிறுத்துதல், வெளியேற்றுதல்; வரவு செலவு விடயங்கள் போன்றவற்றைக் காட்டலாம். பிற விடயங்கள் சாதாரண பெரும்பான்மை மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. வரவு செலவு விடயங்கள் தவிர்ந்த பிற தீர்மானங்கள் உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்துவதில்லை. பாதுகாப்புச் சபையின் கீழ் வரும் அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பானவை தவிர்ந்த பிற விடயங்கள் தொடர்பில் பொதுச் சபை சிபாரிசுகளை வழங்க முடியும். பாதுகாப்புச் சபை நாடுகளுக்கிடையே அமைதியையும் பாதுகாப்பையும் பேணவேண்டிய பொறுப்பு பொதுச்சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பிற உறுப்புக்கள் உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசுகளை மட்டுமே வழங்க முடிகின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகள் பட்டயம் 25 ஆவது துணைப் பிரிவின்படி, பாதுகாப்புச் சபைக்கு, உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் உண்டு. இத்தகைய தீர்மானங்கள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் என அறியப்படுகின்றன. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகப் 15 நாடுகள் உள்ளன. இவற்றுள் சீனா, பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகள். ஏனைய 10ம் தற்காலிக உறுப்பினர். 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இவ்வுறுப்பினர் பிரதேச அடிப்படையில் பொதுச் சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவி ஒவ்வொரு மாதமும் பெயர் அடிப்படையிலான ஆங்கில அகர வரிசைப்படி சுழற்சி முறையில் சபையின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகின்றது. நடைமுறை சார்ந்த தீர்மானங்களைத் தவிர்த்துத் தமக்கு ஏற்பு இல்லாத தனித் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கக்கூடிய தடுப்பு அதிகாரம் (வீட்டோ) நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு. ஆனாலும், இத்தீர்மானங்கள் குறித்த விவாதங்களைத் தடுக்கும் அதிகாரம் கிடையாது. செயலகம் ஐக்கிய நாடுகள் செயலகம், பொதுச் செயலாளரின் தலைமையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிசார் அலுவலர்களின் துணையுடன் இயங்குகின்றது. இது ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்புக்களின் கூட்டங்களுக்குத் தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பதுடன், தகவல்களையும், பிற வசதிகளையும் வழங்குகிறது. அத்துடன், ஐநா பாதுகாப்புச் சபை, ஐநா பொதுச் சபை, ஐநா பொருளாதார, சமூக அவை ஆகியவையும் பிற ஐநா அமைப்புக்களும் வழங்கும் வேலைகளையும் ஐக்கிய நாடுகள் செயலகம் நிறைவேற்றுகின்றது. பரந்த புவியியல் பகுதிகளிலிருந்தும் வேலைக்கு அமர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டும், உயர்ந்த செயற்றிறன், தகுதி, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் செயலகத்தின் அலுவலர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் பட்டயம் கூறுகின்றது. ஐநா பட்டயத்தின்படி செயலக அலுவலர்கள் ஐநா தவிர்ந்த வேறெந்த அமைப்பிடம் இருந்தும் அறிவுறுத்தல்களை எதிர்பார்க்கவோ, பெற்றுக்கொள்ளவோ கூடாது. உறுப்பு நாடுகள் செயலகத்தின் அனைத்துலகப் பட்டயத்தை மதித்து நடப்பதுடன், செயலகத்தின் அலுவலர்கள் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முயலக்கூடாது. அலுவலர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு பொதுச் செயலாளருக்கு மட்டுமே உரியது. பொதுச் செயலாளரின் கடமைகளுள், பன்னாட்டுத் தகராறுகளைத் தீர்க்க உதவுதல், அமைதிப்படைச் செயற்பாடுகளை நிர்வகித்தல், அனைத்துலக மாநாடுகளை ஏற்பாடு செய்தல், பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பிலான தகவல்களைச் சேகரித்தல், பல்வேறு முன்னெடுப்புக்கள் குறித்து உறுப்பு நாட்டு அரசுகளுடன் ஆலோசித்தல் போன்றவை அடங்குகின்றன. இவை தொடர்பான முக்கிய அலுவலகங்களுள் மனிதாபிமான அலுவல்கள் ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், அமைதிகாப்புச் செயற்பாட்டுப் பிரிவு அலுவலகம் என்பவை உள்ளன. அனைத்துலக அமைதிக்கு இடையூறாக அமையக்கூடும் என அவர் கருதும் எந்த ஒரு விடயத்தையும், பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவரலாம். பொதுச் செயலாளர் ஐநா செயலகத்தின் தலைமைப் பொறுப்பில் பொதுச் செயலாளர் உள்ளார். நடைமுறையில், ஐநாவின் பேச்சாளராகவும், முன்னணி நபராகவும் இருப்பவர் இவரே. தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கு அண்டோனியோ கட்டரோ ஆம் 2016 ஆண்டில் அப்போதய செயலாளரான பாங் கீ மூன் இடம் இருந்து பதவிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் இவர் 2021 ஆண்டின் இறுதிவரை பொறுப்பில் இருப்பார். "உலகின் மட்டுறுத்துனர்" என பிராங்க்ளின் ரூசுவெல்ட்டினால் கருதப்பட்ட இப்பதவியை, அமைப்பின் "தலைமை நிர்வாக அலுவலர்" என ஐநா பட்டயம் வரையறுக்கிறது. எனினும், உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது எனக் கருதும் எந்த விடயத்தையும் பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்று ஐநா பட்டயம் கூறுவதன் மூலம் உலக அளவில் நடவடிக்கைக்கான பெரிய வாய்ப்பு இப்பதவிக்குக் கிடைக்கிறது. ஐநா அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் அதே வேளை, உறுப்பு நாடுகளிடையேயான தகராறுகள் தொடர்பிலும், உலக விடயங்களில் உறுப்புநாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும், ஒரு இராசதந்திரியாகவும், நடுவராகவும் செயற்படுவதன் மூலம், இப்பதவி ஒரு இரட்டைப் பொறுப்புக்கொண்ட ஒன்றாக உருவாகியுள்ளது. பொதுச் செயலாளர், ஐநா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையுடன், பொதுச் சபையினால் தெரிவு செய்யப்படுகிறார். இவ்விடயத்தில் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் தமது தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கோட்பாட்டளவில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். ஆனாலும், இந்நிலை இதுவரை ஏற்பட்டதில்லை. இப்பதவிக்கான வரன்முறைகள் எதுவும் கிடையா. எனினும். இப்பதவியை ஐந்தாண்டுகள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஒருவர் வகிக்கலாம் என்பதும், புவியியற் பகுதி அடிப்படையிலான சுழற்சி முறையில் இப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், இப்பதவியில் இருப்பவர் நிரந்தர உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஐக்கிய நாடுகள் - அதிகாரபூர்வ வலைத்தளம் ஐக்கிய நாடுகள் சபை பன்னாட்டு அமைப்புகள் சாகரவ் பரிசு பெற்றவர்கள்
629
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்
தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையில் 193 {| class="sortable wikitable" |- ! உறுப்பினர் ! உறுப்பினரான நாள் ! இவற்றையும் பார்க்கவும் |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR |- | | | |- | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: யூகோசுலாவியா |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- style="background:#ccddff;" | | | முன்னாள் உறுப்பினர்கள்: Republic of சீனா |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: யூகோசுலாவியா |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | [[#செக்கோசுலொவாக்கியா|முன்னாள் உறுப்பினர்கள்: செக்கோசுலொவ| முன்னாள் உறுப்பினர்கள்: செக்கோசுலொவாக்கியா|- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- style="background:#ccddff;" | | | |- style="background:#ccddff;" | | | முன்னாள் உறுப்பினர்கள்: United Arab Republic|- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR|- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR|- | | | முன்னாள் உறுப்பினர்கள்: Federal Republic of ஜெர்மனி and இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு|- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | Withdrawal of இந்தோனீசியா (1965–1966)|- style="background:#ccddff;" | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR|- | | | |- | | | |- | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR|- | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR|- style="background:#ccddff;" | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | லீக்டன்ஸ்டைன் | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR|- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: யூகோசுலாவியா and முன்னாள் உறுப்பினர்கள்: செர்பியா and மாண்ட்டினீகுரோ|- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- style="background:#ccddff;" | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- style="background:#ccddff;" | | | |- style="background:#ccddff;" | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR|- | | | |- style="background:#ccddff;" | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR|- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: யூகோசுலாவியா and முன்னாள் உறுப்பினர்கள்: செர்பியா and மாண்ட்டினீகுரோ|- | | | |- | | | |- | | | |- | | | [[#செக்கோசுலொவாக்கியா|முன்னாள் உறுப்பினர்கள்: செக்கோசுலொவ| முன்னாள் உறுப்பினர்கள்: செக்கோசுலொவாக்கியா |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: யூகோசுலாவியா |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | முன்னாள் உறுப்பினர்கள்: United Arab Republic |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR |- | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: யூகோசுலாவியா |- | | | |- | | | |- | | | |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR |- | | | |- | | | |- style="background:#ccddff;" | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR |- | | | |- style="background:#ccddff;" | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: Tanganyika and சான்சிபார் |- style="background:#ccddff;" | | | |- style="background:#ccddff;" | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: USSR |- | | | |- style="background:#ccddff;" | | | | |- | | | |- | | | முன்னாள் உறுப்பினர்கள்: யேமன் and Democratic யேமன் |- | | | |- | | | |} சீனாவின் இடம் தலைமைக் கட்டுரை: சீனாவும், ஐக்கிய நாடுகளும் சீனக் குடியரசு, 1945 ல், ஐநாவை ஆரம்பித்து வைத்த 5 நாடுகளுள் ஒன்றாகும். எனினும், 1971 ஆம் ஆண்டு அக்டோபரில், பிரகடனம் 2758 பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டு, சீனக் குடியரசு, ஐநாவின் சகல உறுப்பு நிறுவனங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்டதுடன், பாதுகாப்புச் சபையில் சீனாவுக்குரிய இடம் மக்கள் சீனக் குடியரசினால் நிரப்பப்பட்டது. இது, மக்கள் சீனக் குடியரசு மட்டுமே, "ஐக்கிய நாடுகளுக்கு, சீனாவின் ஒரே சட்டபூர்வமான பிரதிநிதி" என்றும் பிரகடனப்படுத்தியது மூலம், சீனக்குடியரசு ஒரு renegade என்று முத்திரை குத்தியது. ஐநாவில் மீண்டும் இணைவதற்கான சீனக் குடியரசின் முயற்சிகளெதுவும், குழு நிலையைத் தாண்டவில்லை. அவதானி நாடுகள் மேலே குறிப்பிடப்பட்ட உறுப்பு நாடுகளுக்கு மேலதிகமாக, ஒரு உறுப்பினரல்லாத, அவதானி நாடு ஒன்றும் உள்ளது. இந்நாடு வத்திக்கான் நகர நாடு ஆகும். இது நிரந்தரமான, அவதானிப்புத் தூதுக்குழுவொன்றை ஐநா தலைமையகத்தில் வைத்துள்ளது. சில அனைத்துலக நிறுவனங்களும் இவ்வாறான அவதானிகள் நிலையில் உள்ளன. இவற்றின் பட்டியலுக்கு ஐநா பொதுச்சபையைப் பார்க்கவும். ஆதாரம் அதிகாரப்பூர்வ ஐக்கிய நாடுகள் ஐ.நா இணையத்தளம் நாடுகள் தொடர்பான பட்டியல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
630
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
தேசிய இனவாரியாக மக்கள் பட்டியல்
இந்தப் பக்கம், இனவாரியாக, பிரஜா உரிமைவாரியாக, மொழிவாரியாக, அமைவிடவாரியாக ஆட்களின் பட்டியல்கள் போன்ற தொடர்பான பட்டியல்களையும் உள்ளடக்குகிறது. தேசியஇனம், இனம், பிரஜாஉரிமை, மொழி, அல்லது அமைவிடம் வாரியாக See also: இடப் பெயர்களின் பெயரெச்ச வடிவங்கள், நாடுகளின் பட்டியல், உசாத்துணை அட்டவணைகள் பட்டியல் நாடுகள் சமுதாயம் தொடர்பான பட்டியல்கள்
631
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
ஈபெல் கோபுரம்
ஈபெல் கோபுரம் (பிரெஞ்சு: Tour Eiffel, /tuʀ ɛfɛl/) பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 63 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். இக் கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28 ஆம் திகதி பெற்றது. அறிமுகம் 1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889, மார்ச் 31 ஆம் திகதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில், உயர்த்திகளைப் பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும். இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 தொன்களிலும் (2 கோடியே 10 இலட்சம் இறாத்தல்) கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்ட காலத்தில், இதுவே உலகின் அதிக உயரமான அமைப்பாக இருந்தது. இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 தொன்கள் கடும் மண்ணிறப் பூச்சு மை பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சதம மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது. இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இருக்காதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது. ஆரம்பத்தில், இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈபெல் அனுமதி பெற்றிருந்தார், எனினும், தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இருந்ததனால், அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும், கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது. கட்டுமானம் ஈபெல் கோபுரத்தின் அடித்தளம் 1887ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.கிழக்கு மற்றும் தெற்கு கால்கள் நேராகவும் மற்றும் ஒவ்வொரு காலும் 6 அடி 6 அங்குலம் உள்ள திண்ணமான சிமிட்டிப் பலகையில் நிறுத்தப்பட்டது. மற்ற இரு கால்களும், சேனி நதி அருகே இருந்ததால் ஒவ்வொன்றிக்கும் இரண்டு ஆழ் அடித்தளம் தேவைப்பட்டது.அவை அழுத்தப்பட்ட காற்று கேய்சான்கள் மூலமாக (49 X 20 X 22 அடி ) அமைக்கப்பட்டது. இந்த பலகையானது இரும்பு வேலைப்பாடுகளை(லாடம்) தாங்கக்கூடிய வளைந்த தலை உடைய சுண்ணாம்பு தொகுதியால் அமைக்கப்பட்டது.இந்த லடாமானது 25 அடி நீளமும் 4 அங்குலம் சுற்றளவும் கூடிய திருகு அச்சாணியால் இரும்பு வேலைப்பாட்டுடன் கோக்கப்பட்டது. ஒவ்வொரு லாடமும் கற்களைக் கொண்டும், 10 செ.மீ (4 அங்குலம்) விட்டமும் 7.5 மீ நீளமும் (25 அடி) உடைய ஒரு சோடி பூட்டாணிகள் (Bolt) கொண்டு நிலைநிறுத்தப்பட்டது. அடிப்படைக் கட்டுமானம் ஜூன் 30 ஆம் தேதி நிறைவடைந்தது. பின்னர் இரும்புகளை தூக்கி நிறுத்தும் வேலைகள் தொடங்கப்பட்டன. நாம் காணக் கூடிய எழிலான இரும்புக் கோபுரத்திற்கு பின்னால் ஏகப்பபட்ட முன் தயாரிப்பு வேலைகளும் கடின உழைப்பும் அடங்கியுள்ளன.வரைபட அலுவலகமானது 1,700 பொது வரைபடங்களையும்,கோபுரத்திற்குத் தேவைப்படும் 18,038 பொருட்களின் 3,629 விரிவான வரைபடங்களையும் தயாரித்தது. வரைதல் மற்றும் வடிவமைப்பில் சிக்கலான கோணங்கள் மற்றும் துல்லியமான அளவுக் கூறுகளுடன் வரைவது மிகவும் சிக்கலானதாக இருந்தது.பொருத்தி முடிக்கப்பட்ட சில பகுதிகள் பாரிசின் புறநகர்ப்பகுதியான லெவல்லோஸ்-பெரெட்டிலுள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து குதிரை வண்டிகளில் கொண்டுவரப்பட்டன. துளையிடுதல் அல்லது வடிவமைத்தல் போன்ற எந்தவொரு வேலையும் கட்டுமான தளத்தில் செய்யவில்லை மாறாக ஏதாவதொரு பகுதியும் பொருந்தவில்லை என்றால், அதை மாற்றுவதற்கு தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. மொத்தத்தில், இது 18,038 இரும்புத் துண்டுகள் 2.5 மில்லியன் அறையாணிகள் (rivrerts) பயன்படுத்தி சேர்ந்து ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள மாபெரும் கோபுரக் கட்டுமாணமாகும். மின்தூக்கிகள் அரசின் ஆணைக்குழு மேற்பார்வையில் போதுமான பாதுகாப்பு வசதிகளுடன் பயணிகள் மின்தூக்கிகள் கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் கோபுரத்தின் இரு நிலைகளுக்கும் செல்வதற்குரிய மின் தூக்கிகள் உள்ளன.கோபுரத்தின் முதல் நிலைக்குச் செல்வதற்குறிய மின்தூக்கிகளை கட்டமைக்க ரொக்ஸ், கம்பலுசீயர் மற்றும் லெபாபே (Roux, Combaluzier & Lepape) என்ற பிரெஞ்சு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன.அவை கோபுரத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கால்களில் இரண்டு நேரான மின்தூக்கிகளை அமைத்தன .ரொக்ஸ், கம்பலுசீயர் & லெபாபே நிறுவனம் இரு சோடி வளையாத இணைக்கப்பட்ட முடிவிலா சங்கிலிகளை பயணிகள் அமரும் பெட்டியுடன் பொருத்தினர். சங்கிலியின் மேல் அல்லது திரும்பிய பகுதிகளின் சில இணைப்புகள் அமரும் பெட்டியின் பெரும்பகுதி எடையை லாவகமாக எதிரீடு (counterbalanced) செய்கிறது. பெட்டியானது கீழிருந்து தள்ளப்படாமல் மேலிருந்து இழுக்கப்பட்டது.சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று திருகிக்கொள்வதைத் தடுக்க முறுக்காற்றிகள் அல்லது கடத்தலி (conduit) பயன்படுத்தப்பட்டன. கீழ் பகுதியில் சங்கிலிகள் 3.9 மீ விட்டமுடைய பற்சக்கரத்தில் பொருந்திச் சுழலுமாறு செய்யப்பட்டுள்ளது. மேற்பகுதியில் சிறிய பற்சக்கரத்தைக் கொண்டு இது வழிநடத்தப்படகிறது. துவக்கவிழா மற்றும் 1889 விரிவாக்கம் 1889 மார்ச் இறுதியில் ஈபெல் கோபுரத்தின் முக்கிய கட்டுமாண வேலைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மார்ச் 31 ல் அரசாங்க அலுவலர் குழுக்கள் பல்வேறு செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் கோபுரத்தின் உச்சியில் விழா கொண்டாடப்பட்டது. மின்தூக்கிகள் அமைக்கப்படாத நிலையில் அனைவரும் படிக்கட்டுகள் வழியாக அழைத்தச்செல்லப்பட்டு கோபுரத்தின் பல்வேறு வடிவமைப்புகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. படிக்கட்டுகளில் நடந்து மேலே செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆனது.இதனால் பலர் முதல் தளத்திலேயே தங்கி விட அமைப்பு பொறியாளர் எமிலி நவ்குயிர், கட்டுமாண தலைவர் ஜீன் காம்பேகன் . பாரிசு நகரத் தலைவர் மற்றும் லீ பிகாரோ , லீ மான்டி இலுஸ்டர் பத்திரிக்கைகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மட்டும் மேல் கட்டுமாணம் வரை சென்றனர். பிற்பகல் 2.35 மணியளவில் 25 குண்டுகள் முழங்க பிரான்சின் மூவண்ணக்கொடி முதல் கட்டுமாணத் தளத்தில் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிகள் ஜனவரி 12, 1908 ல், முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது. 1929 ல், கிறிஸ்லெர் கட்டிடம் நியு யார்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது, ஈபெல் கோபுரம், உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது. அடால்ஃப் ஹிட்லர், இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர். அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார். ஜனவரி 3, 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது. 1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது. தொடர்பாடல் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, வானொலி ஒலிபரப்பியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1950 வரை, மின்கம்பி மூலமாகவே இணைக்கப்பட்டிருந்தது. 1909ம் ஆண்டு நெடுந்தொலைவு அலைபரப்பிகள், கட்டிடத்தின் அடியில் பதிக்கப்பட்டது. தெற்கு தூணிலிருக்கும் இந்த அலைபரப்பியை இப்பொழுதும் காணலாம். இன்று, இரு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் ஈபெள் கோபுரத்தின் மூலம் தங்கள் அலைவரிசைகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது. பண்பலை பிரதிபண்ணல்களும், போலிகளும் ஈபெல் கோபுரத்தின் பிரதிகளை உலகம் முழுவதும் காணலாம் அவற்றுல் முக்கியமானவை சில: டோக்கியோ, யப்பான் டோக்க்யோ கோபுரம் என அழைக்கப்படு இது ஈபெல் கோபுரத்தைவிட 13 மீட்டர் உயரமானதாகும்.(அளவு விகிதம் 1.04:1) உலகின் உயரமான கோபுரங்கள் பிரான்சிலுள்ள ஈபெல் கோபுரத்தைவிட உயரமான கோபுரங்கள் காட்சியகம் வெளி இணைப்புகள் ஐபீல் கோபுரம் Tour Eiffel Webcam Tour Eiffel – ஈபெல் கோபுரம் : Pictures Official site of the Eiffel Tower - English version Discover France - ஈபெல் கோபுரம் Panoramic photo of the Eiffel Tower VR format Eiffel Tower ஆச்சரியமாக ஈபிள் கோபுரம் ஒரு எளிமையான கதை பிரான்சு வானளாவிகள் கோபுரங்கள்
632
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். 1930கள் 1940கள் 1950கள் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள் 2010கள் 2020கள் வகைப்படுத்த வேண்டியவை மேலும் காண்க தமிழகத் திரைப்படத்துறை மேற்கோள்கள் திரைப்படம் தொடர்பான பட்டியல்கள்
634
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு
அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு (History of science and technology, HST) என்பது,அறிவியலும், தொழில்நுட்பமும் பற்றிய மனித இனத்தின் விளக்கம், காலங்களூடாக எவ்வாறு மாற்றமடைந்து வருகின்றது என்றும், இவ்விளக்கம், எவ்வாறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உதவியது என்பதுபற்றியும் ஆராயும் ஒரு வரலாற்றுத் துறையாகும். பண்பாட்டு, பொருளியல் மற்றும் அரசியல் துறைகளில் அறிவியற் புத்தாக்கங்களின் தாக்கங்கள் பற்றியும் இத் துறை ஆராய்கிறது. நவீன அறிவியல் ஒரு "கிரேக்கப் புத்தாக்கம்" என நம்புவது தவறாக இருக்கக்கூடும் எனினும், நவீன கணிதம் சார்ந்த அறிவியலின் தோற்றம் ஹெலனிய பைதகோரியர்களுடன் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. கணித, அறிவியல் பரிசோதனைகளில் கிரேக்கர்களின் செல்வாக்கு, ஏனைய பழங்கால நாகரீகங்களைச் சார்ந்த மக்களுடைய பங்களிப்புகளிலும் சிறந்த முறையிற் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது என்பது கூடிய பொருத்தமாயிருக்கும். முக்கிய பகுதிகள்/துணைக் களங்கள் அறிவியல் உயிரறிவியல் உயிரியல் உடற்கூற்றியல் / உறுப்பியல் வரலாறு(History of anatomy) பரிணாமக் கோட்பாடு சார்ள்ஸ் டார்வினும், இனப் பிரிவுகளின் தோற்றமும் (Origin of Species) பரம்பரையியல் (Genetics) டி.என்.ஏ (DNA) தொல்லுயிரியல்(Paleontology) பௌதீக அறிவியல் வேதியியல் பகுப்பாய்வு வேதியியல் / இரசாயனம் Analytical chemistry உயிர்வேதியியல் அசேதன வேதியியல்(Inorganic chemistry) சேதன வேதியியல் பௌதீக வேதியியல் பௌதீகத்தின் வரலாறு வானியலின் வரலாறு புவிச்சரிதவியல் மற்றும் புவி அறிவியல் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல் தத்துவம் மற்றும் ஏரணம் சமூக அறிவியல் மானிடவியல் தொல்பொருளியல் பொருளியல், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கைத் தொழில் நிறுவனங்கள் (தொழில் நிறுவனமயம்) மற்றும் தொழிலாளர் புவியியல் மொழியும், மொழியியலும் அரசறிவியல் உளவியல் சமூகவியல் தொழில்நுட்பவியல் குடிசார் பொறியியல் கட்டிடக்கலையும், கட்டிடக் கட்டுமானமும் பாலங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், அணைக்கட்டுகள் நில அளவையியல், உபகரணங்களும், நிலப்படங்கள், நிலப்பட வரைவியல், நகரப் பொறியியல், நீர் வழங்கலும், கழிவகற்றலும் போக்குவரத்து சக்தி மாற்றம் (conversion) பொருள்களும் பதப்படுத்தலும் நூல் நிலையங்களும்,தகவல் அறிவியலும் கணனிகளின் வரலாறு உடல்நல அறிவியல் மருத்துவத்தின் வரலாறு உயிர்த் தொழினுட்பம் விவசாயம் குடும்பமும், நுகர்வியல் (consumer science) படைசார் தொழில்நுட்பவியல்(Military technology) தந்தி- புகைச் சைகையிலிருந்து வலையகம் வரை. பொது அறிவியலும், தொழில்நுட்பவியலும் கண்டுபிடிப்பாளர்கள் சரிதம், ஆய்வுப் பயணிகள் (explorers), மற்றும் அறிவியலாளர்கள் அறிவியலாளர் பட்டியல், பொறியியலாளர் பட்டியல் மற்றும் கண்டுபிடிப்பாளர் பட்டியல் அறிவியலினதும், தொழில்நுட்பத்தினதும் நேரவரிசைகள் அறிவியலில் ஆண்டுகளின் பட்டியல் தொழில்நுட்பச் சங்கங்கள், தொழில்நுட்பக் கல்வி பொருளியல், அரசியல், மற்றும் சமூக வரலாறு தொழில்நுட்பத்துக்கும், பண்பாட்டுக்குமிடையிலான பொதுவான தொடர்புகள்; தொழில்நுட்பத் தத்துவம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றாக்கம் (Historiography of Science and Technology) கிரான்ஸ்பர்க்கின் தொழில்நுட்ப விதிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றாசிரியர்கள்: தோமஸ் பி. ஹியூஸ் ஆர்னே கைஜ்செர் தோமஸ் குன் (Thomas Kuhn) போல் பெயராபெண்ட் (Paul Feyerabend) ஆய்வு நிறுவனங்கள்: அறிவியல் வரலாற்றுக்கான மக்ஸ் பிளான்க் நிறுவனம், பெர்லின் (Max Planck Institute for the History of Science , Berlin) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் (மதிப்பிடல்) தொழில்நுட்ப சார்பினொருமை தொழில்நுட்ப முதலீட்டியம் அறிவியல் தத்துவம் தோமஸ் குன் கார்ல் பொப்பர் சூதறியா துய்ப்பறிவு பழங்கால தொழில்நுட்பக் கருவிகள் அன்டிகிதீரா இயந்திரநுட்பம் (Antikythera mechanism) கவண் மற்றும் உண்டைவில் சூரிய கடிகாரம் மற்றும் மடிப்பலகை மேலும் பார்க்க அறிவியல் ஆய்வுகள் அறிவியல் வரலாறு மேற்கோள்கள் அறிவியலின் வரலாறு தொழில்நுட்ப வரலாறு
637
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
தேசியக் கொடிகளின் பட்டியல்
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ See also: கொடிகள் காட்சியகம், கொடிகளின் பட்டியல், தேசியக் கொடி அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ தேசியக் கொடிகள் நாடுகள் தொடர்பான பட்டியல்கள்
638
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF
தேசியக் கொடி
தேசியக் கொடி என்பது நாடொன்றிற்குக் குறியீடாக அமையும் ஒரு கொடியாகும். இது அந்நாட்டுக் குடிமக்களால் பறக்கவிடப்படக்கூடியது. வழக்கமாக இதே கொடியே அந்த நாடுகளை வெளிநாடுகளில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பயன்படுகிறது. பாடசாலைகள், நீதிமன்றங்கள், பல்வேறு அரசுக் கட்டிடங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களில், தேசியக் கொடிகளை அவற்றின் மிகவுயர்ந்த இடங்களிலோ அல்லது அவற்றின் முன்றலில் அமைக்கப்படுகின்ற பிரத்தியேகமான கொடித் தம்பங்களிலோ பறக்கவிடுவது வழக்கம். முக்கியமான தனியார் கட்டிடங்களிற்கூட இவ்வழக்கம் பின்பற்றப்படுவதுண்டு. கப்பல்களும் தேசியக் கொடிகளை அவற்றின் அதியுயர் புள்ளிகளிலிருந்து பறக்க விடுகின்றன. சிறிய கலங்களும், படகுகளும் கூட, விசேடமாக, அதிகாரப்பூர்வ சேவையில் ஈடுபட்டிருக்கும் போது இக் கொடியைப் பறக்கவிடுகின்றன. இராஜதந்திர வாகனங்களும் சிறிய அளவிலான தேசியக் கொடியொன்றை அவற்றின் முன்பகுதியில் இணைக்கப்படுகின்ற தண்டொன்றில் பறக்கவிடப்படுவது வழக்கம். இராஜதந்திரப் பாதுகாப்பையும், அவற்றுக்குரிய சிறப்பு சட்ட நிலையையும் காட்டுவதற்காக இவ்வாறு செய்யப்படுகின்றது. குறிப்பிட்ட நாடுகள் இயக்கும் விமான சேவைகளைச் சேர்ந்த விமானங்களிலும் தேசியக் கொடியின் படம் அவற்றின் முன் பகுதியில் பொறிக்கப்படுவதுண்டு. (விண்வெளி ஓடம் இதற்குச் சிறந்ததொரு உதாரணமாகும்.) ஆயுதப்படைப் பிரிவுகள் வழமையாகத் தேசியக் கொடிகளைப் பயன்படுத்துவதில்லை. பதிலாக, பிரிவுகளின் கொடிகளையோ அல்லது அவ்வாயுதப் படைச் சேவைக்குத் தனித்துவமான வேறு சிறப்பான கொடிகளையோ பயன்படுத்துவார்கள். எனினும், இக் கொடிகள் வழக்கமாகச் சம்பந்தப்பட்ட தேசியக் கொடிகளை அடியொற்றியே வடிவமைக்கப்படுகின்றன. படைத் தளங்களில்பொதுவாகத் தேசியக் கொடிகளே பறக்கவிடப்படுகின்றன. தேசியக் கொடிகளின் முறையான காட்சிப்படுத்தலில் பல வைபவரீதியான அம்சங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்காவின் கொடியைப் போல, சில தேசியக் கொடிகள், உதவிக்கான அழைப்பு மற்றும் அடையாளம் காணப்படக்கூடிய அபாயச் சைகைகளாகவன்றி, தலைகீழாக ஒருபோதும் பறக்கவிடக்கூடாது. தேசியக் கொடிகளைக் காட்சிப்படுத்துவது தொடர்பாகப் பல விதிகள் உள்ளன. பின்வருவது தென்னாபிரிக்காவிலிருந்து பெறப்பட்டதாயினும், இது பல நாடுகளும் பின்பற்றும் மாதிரியை ஒத்ததேயாகும். தேசியக் கொடிகளை வேறு கொடிகளுடன் ஏற்றும்போது, முதலில் ஏற்றப்பட்டு, இறுதியாக இறக்கப்பட வேண்டும்; மற்ற நாடுகளின் தேசியக் கொடிகளுடன் ஏற்றப்படும்போது, எல்லாக் கொடிகளும் சம அளவினதாக ஒரே உயரத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அத்துடன் தென்னாபிரிக்காவின் தேசியக்கொடி, கட்டிடத்தின் அல்லது மேடையின் வலது பக்கத்தில் பறக்கவிடப்பட வேண்டும். (அதாவது, பார்வையாளர்களுக்கு இடதுபக்கத்தில் இருக்கவேண்டும்); தேசியக் கொடிகளல்லாத வேறு கொடிகளுடன், தனிக்கம்பங்களில் ஏற்றப்படும்போது, நடுவில் அல்லது பார்வையாளருக்கு இடது பக்கத்தில் அல்லது மற்றவற்றிலும் உயரமாக ஏற்றப்பட வேண்டும்; வேறு கொடிகளுடன் ஒரே கம்பத்தில் ஏற்றப்படும்போது, இது மேலே இருக்கவேண்டும்; வேறு கொடிகளுடன் குறுக்குக் கம்பங்களில் ஏற்றப்படும்போது, தேசியக்கொடி பார்வையாளருக்கு இடப்பக்கத்திலும் இருப்பதுடன், அத கம்பம் மற்றதற்கு முன்னும் இருக்கவேண்டும்; மற்றும் மற்றக் கொடிகள் அல்லது கொடிகளுடன் ஊர்வலத்தில் கொண்டுசெல்லும்போது, தேசியக்கொடி வலப்பக்கத்தில் செல்லவேண்டும். ஒரு கொடி வரிசை இருந்தால், மேலேயுள்ள (c) பயன்படுத்தப்பட வேண்டும். தேசியக் கொடிகளின் பட்டியலுக்கு தேசியக் கொடிகளின் பட்டியலைப் பார்க்கவும். பின்வருவனவற்றையும் பார்க்கவும் தேசியக் கொடிகளின் பட்டியல் தேசிய கீதங்கள் வெளி இணைப்புகள் Flags of the World வலைத்தளம் தேசிய மற்றும் வேறுவகைக் கொடிகளின் படங்களைக் கொண்டுள்ளது.
639
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
நல்லூர்
நல்லூர் என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: ஊர்கள் சங்ககால இடைக்கழிநாட்டு நல்லூர் சிறுபாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய சங்ககாலப் புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர். தேவாரத் திருத்தலங்களில் நல்லூர் நல்லூர் அளையணி நல்லூர் நல்லூர்ப் பெருமணம் அவளிவண் நல்லூர் பந்தணை நல்லூர் திருவெண்ணெய் நல்லூர் இலங்கை நல்லூர் (யாழ்ப்பாணம்) நல்லூர் (பூநகரி) - (பூநகரி, இலங்கை) நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவு, இலங்கை நல்லூர் தேர்தல் தொகுதி தமிழ்நாடு நல்லூர் ஊராட்சி ஒன்றியம் கடலூர் மாவட்டம் நல்லூர் (கன்னியாகுமரி) நல்லூர் (திருநெல்வேலி) நல்லூர், திருப்பூர் நல்லூர் (ஒசூர்), கிருட்டிணகிரி மாவட்டம் நல்லூர், பாலக்கோடு, தருமபுரி மாவட்டம் நல்லூர் (வேப்பனபள்ளி) நல்லூர், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் (சேலம் மாவட்டம்) நல்லூர், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் (சேலம் மாவட்டம்) திருவெண்ணெய் நல்லூர் ஆதிச்சநல்லூர் அலங்காநல்லூர் தென் நல்லூர் கோயில்கள் தமிழகக் கோயில்கள் அறையணி நல்லூர் யாழ்ப்பாணக் கோயில்கள் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் நல்லூர் கைலாசநாதர் கோயில் நல்லூர் சட்டநாத ஈஸ்வரர் கோவில் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில் வேறு நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்
640
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%28%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%29
நல்லூர் (யாழ்ப்பாணம்)
நல்லூர் (Nallur) தற்போது யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்குகிறது. யாழ்நகர நடுப்பகுதியிலிருந்து, கிட்டத்தட்ட மூன்றரைக் கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. பெயர் உருவாகிய வரலாறு யாழ்ப்பாண அரசர் காலத்தில் (1215 தொடக்கம் 1619 வரை) நல்லூர் ராஜதானியாக விளங்கி வந்தது. தொடக்கத்தில் 'சிங்கை நகர்' என்று அறியப்பட்ட வல்லிபுரத்தில் இருந்த தலைநகரை ஆரியசக்கரவர்த்தி நல்லூருக்கு இடம் மாற்றினார். அதன் அரசன் 'சிங்கை ஆரியன்' என்றும் அழைக்கப்பட்டான். கோட்டை மன்னனிடம் யாழ்ப்பாண அரசை தோற்று விட்டு, 14 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் கைப்பற்றிய கனகசூரிய மன்னனின் மகன் பரராஜசேகரன் சிங்கை ஆரியன் (1478–1519) 'சிங்கை ஆரியன்' எனும் பட்ட பெயரை சூட்டிக் கொண்ட கடைசி மன்னாவான். ஆகையால் இக்காலத்தில் தான் நல்லூராய் மாறியது என்று கொள்ளலாம். அக்காலத்தில் எழுதப்பட்ட கைலாய மாலை எனும் நூல் 'நல்லூர்' என்ற பெயராலே தமிழரின் தலைநகரை குறிப்பிடுகிறது. வரலாறு யாழ்ப்பாண அரசைப் போர்த்துக்கீசர் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக இருந்து வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனரென்றும், 15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், 13 ஆம் நூற்றாண்டளவில் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியான கூழங்கைச் சக்கரவர்த்தியே இந்நகரைக் கட்டுவித்தவன் என்பதும், சிங்கைநகர், நல்லூரின் இன்னொரு பெயர் என்பதுவும், பெரும்பான்மை ஆய்வாளர்களுடைய கருத்து. 1620 இல், போர்த்துக்கீசப் படைகள், ஒலிவேரா என்பவன் தலைமையில் நல்லூரைக் கைப்பற்றின. அவன் சிறிதுகாலம் நல்லூரிலிருந்து நிர்வாகத்தை நடத்திவந்தானாயினும், இக்காலப்பகுதியில் நடைபெற்ற பல தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பின் நிமித்தம், நிர்வாகம், நல்லூரையண்டிக் கடற்கரையோரமாக இருந்த யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது. போர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை. அக்காலத்துக் கட்டிடங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் இன்றுவரை நிலைக்கவில்லை என்றே கொள்ளலாம். அரசனின் அரண்மனையையும், வேறு சில முக்கியஸ்தர்களின் வாசஸ்தலங்களையும்விடக் கோயில்கள் மட்டுமே நிலைத்திருக்கக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும். நகரின் நான்குதிசைகளிலும், கந்தசுவாமி கோயில், வீரமாகாளியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோவில், நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்,சட்டநாதர் கோயில் ஆகிய கோயில்கள் இருந்ததும், யமுனை நதியிலிருந்து கொண்டுவந்த நீர் விடப்பட்ட யமுனா ஏரி எனப்பட்ட கேணியொன்றிருந்ததும் அக்காலத்திலும், அதன்பின்னரும் எழுதப்பட்ட சில நூல்கள்மூலம் தெரியவருகின்றது. நல்லூர் யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்ததற்கு ஆதாரமாக இன்று இருப்பவை, அக்காலத்திய அரண்மனையிருந்ததாகக் கருதப்படும், சங்கிலித்தோப்பு எனப்படும் நிலமும், அதிலுள்ள ஒரு நுழைவாயில் வளைவும், அதற்கு அண்மையிலுள்ள மந்திரிமனை எனப்படும் ஒரு வீடுமாகும். இவற்றைவிட, நாயன்மார்கட்டு குளம், பண்டாரக்குளம், பண்டாரவளவு, இராஜ வீதி, கோட்டை வாயில் முதலிய அரசத்தொடர்புகளைக் குறிக்கும் இடப்பெயர்களும் உண்டு. சங்கிலித்தோப்பு வளைவும், மந்திரிமனையும் ஒல்லாந்தர் காலக் கட்டிடங்களின் பகுதிகளென்பது அவற்றின் கட்டடக்கலைப் பாணியிலிருந்து தெரிகிறது. பண்டைக் கால நகரின் அமைப்பு பண்டை நல்லூர் எவ்வாறு அமைந்திருந்தது என்று அறிய பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. சிங்கை ஆரியர்கள் காலத்தில் எழுதப்பட்ட கைலாயமாலை, வையாபாடல் போன்ற நூல்களும், ஒல்லாந்தர் காலத்தில் ( அதாவது 1658 தொடக்கம் 1796 வரை) எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலை நூழும் இதில் உதவியன. மேலும் தற்போதைய நகர் அமைப்பிலும் பண்டைக் கால நகரின் அமைப்பை எம்மால் கவனிக்க முடிகின்றது. அன்றைய நகர் முத்திரை சந்தையை மையமாக கொண்டு அமைந்திருந்தது. அதன் அண்மையில் பண்டை நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இருந்தது (தற்போது St James' Church இருக்கும் இடம்). 2 வீதிகள் அம்முத்திரை சந்தையில் வந்து சேரும்: வடக்கு-தெற்கு வீதி மற்றும் கழக்கு-மேற்கு வீதி. நகரை சுற்றி மதில்கள் கட்டபட்டன. நாங்கு திசைகளிலும் நாங்கு நுழைவாய்கள் அமைந்திருந்தன. அங்கு காவல் தெய்வங்களுக்கு கோயில்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த தகவல்கள் தமிழர் எழுதிய நூல்களில் மட்டும் இல்லாமல் போர்த்துகேயர்களாலும் குறிப்பிடபட்டுள்ளது. கைலாய மாலை (1519–1619 இடையில் எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது) யாழ்ப்பாண அரசு உருவாகிய கதையை சொல்லுகிறது. பாண்டி மழவன் யாழ்ப்பாண தமிழ் குடிகள் படும் கஷ்டத்தை கண்டு மதுரைக்கு சென்று ஓர் இளவரசனை கூட்டிக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்புகிறான். இளவரசனின் பட்டாபிசேகம் இடம் பெறவுள்ளது. நல்லூர் நகர் எவ்வாறு அமைந்திருந்தது என்று சில குறிப்புகள் பின்வரும்வாறு தரப்பட்டுள்ளது: « தாவும் மதித்த வளங்கொள் வயல் செறி நல்லூரிற் கதித்த மனை செய்ய கருதி, விதித்த ஒரு (செய்யுள் 90) நல்ல முகூர்தம் இட்டு, நாலு மதிலும் திருத்திச் சொல்லும் சுவரியற்றித் தூண் நிரைத்து, நல்ல (91) பருமத தரம் பரப்பிப் பல்கணியும் நாட்டி திரு மச்சு மேல்வீடு சேர்த்து, கருமச் (92) சிகரம் திருத்தி திருவாயில் ஆற்றி, மிகுசித்ரம் எல்லாம் விளக்கி, நிகரற்ற (93) சுற்று நவரத்ன வகை சுற்றியழுத்தி திருத்தி பத்திசெறி சிங்கா சனம் பதித்து ஒத்த பந்தற் (94) கோல விதானம் இட்டு கொத்து முத்தின் குச்சணித்து, நாலு திக்கும் சித்ரமடம் நாட்டுவித்து, சாலும் (95) அணிவீதி தோறும் வளர் கமுகு வாழை அணியணியாய் அங்கே அமைத்து துணிவுபெறுந் (96) தோரணங்கள் இட்டு சுதாகலச கும்பநிகர் பூரண கும்பம் பொருந்த வைத்து காரணமாய் (97) எல்லா எழிலும் இயற்றி நிறைத்த பின்பு...» இங்கு வர்ணிக்கப்படும் நல்லூர் மேல்மாடி கட்டிடங்களும் மாளிகைகளும் உடைய ஓர் அழகிய நகரமாகும். படக் காட்சியகம் நல்லூரிலுள்ள கோயில்கள் நல்லூர் கந்தசுவாமி கோவில் நல்லூர் கைலாசநாதர் கோயில் நல்லூர் சட்டநாத ஈஸ்வரர் கோவில் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில் நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம் நாயன்மார்கட்டு வெயிலுகந்த விநாயகர் ஆலயம் முக்குறுணிப் பிள்ளையார் கோயில் இங்கு பிறந்து புகழ் பூத்தவர்கள் அரசகேசரி நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் ஆறுமுக நாவலர் சுவாமி ஞானப்பிரகாசர் எஸ். பொன்னுத்துரை Reference யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும் யாழ்ப்பாண மாவட்டம் யாழ்ப்பாண அரசு
641
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் (Jaffna, ) என்பது இலங்கைத் தீவின் வடமுனையிலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், 88,138 மக்கட்தொகையினைக் கொண்டு 12வது பெரிய நகரமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத் தலைநகராக யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1981இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, யாழ் நகரின் மக்கள்தொகை 118,000 ஆக இருந்தது. 20 ஆண்டுகளின் பின் நாட்டில் 2001ல் கணக்கெடுப்பு நடந்தபோது, யாழ்ப்பாணத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனினும் அவ்வாண்டில் இந்நகரின் மக்கள்தொகை 145,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாகப் பல வழிகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், உரிய வளர்ச்சியைப் பெறவில்லை. 1981ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும், குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வந்தார்கள். சிங்களவர்கள் மிகவும் குறைவே. சமய அடிப்படையில் யாழ்நகரில், இந்துக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். பெயர்க் காரணம் தற்காலத்தில் யாழ்ப்பாணம் என்பது, இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களில் ஒன்றாக அதன் வட கோடியில் அமைந்துள்ள மாவட்டத்தையும், அம்மாவட்டத்தின் பிரதான நகரத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விட போர்த்துக்கீசர் கைப்பற்றுவதற்கு முன்னர் இலங்கையின் வடபகுதியில், இருந்துவந்த தமிழர் நாடும் யாழ்ப்பாண அரசு என்றே குறிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறு பற்றி, ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இலங்கையில் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே முரண்பாடுகள் உச்சக்கட்டத்திலிருக்கும் இக்காலத்தில், இரண்டு இனங்களையும் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளுக்குப் பொருந்தும் விதத்தில், வெவ்வேறு ஆய்வாளர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். 18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன் ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றி (அல்லது மணற்றிடல்) எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப்பிரதேசத்துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்றும் கூறும். இம்மணற்றி என்னும் பெயர் இறையனார் அகப்பொருள் உதாரணச் செய்யுட்களில் வருகின்றது. அவர்களின் இடமாற்றம் பசையூர் மற்றும் குருநகர் என அறியப்படும் நகரத்தின் பகுதியாகும் என்று நம்பப்படுகிறது. மணவை அல்லது மணற்றி என்ற பெயர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குரிய பொதுப்பெயராக இருந்துள்ளது. அது பின்னர் இன்றைய மேற்குப் பகுதிக்குரியதாக மாறியது. அவ்வாறு மாறிய வேளையில் மணற்றி (மணல் ஊர்) என்ற அர்த்தப்படும் வகையில் வலி (மணல்) கம (ஊர்) எனச் சிங்களப்பெயராக உருமாறியது எனப்பல அறிஞர் கருதுவர். கொழும்புத்துறையில் அமைந்துள்ள கொழும்புத்துறை வணிகக் களஞ்சியமும் குருநகர் பகுதியிலுள்ள முன்னர் அமைந்துள்ள "அலுப்பாந்தி " என்றழைக்கப்படும் துறைமுகமும் அதன் ஆதாரங்களாகத் தெரிகிறது. வேறு சிலர், நல்லூர் என்னும் கருத்தைத் தருகின்ற சிங்களச் சொல்லான, யஹபனே என்பதிலிருந்தோ, அல்லது சிங்கள இலக்கியங்கள் சிலவற்றில், இப்பகுதியைக் குறிக்கப் பயன்பட்ட, யாபாபட்டுன என்ற சொல்லிலிருந்தோ மருவி வந்ததே யாழ்ப்பாணம் என்கிறார்கள். எனினும் யாழ்ப்பாணம் என்ற பெயரில் இருந்தே யஹபனே, யாபாபட்டுன ஆகிய சொற்கள் மருவி வந்ததாகக் கொள்ளப்படுகிறது. வடவிலங்கை இராச்சியத்தை யாழ்ப்பாண அரசு என அழைத்தமை, 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரேயாகும். 1435 இல் திருமாணிக்குழி எனுமிடத்தில் பொறிக்கப்பட்ட விஜயநகரக் கல்வெட்டிலே முதன் முதலாக யாழ்ப்பாணாயன் பட்டினம் என்ற பெயர் வடவிலங்கை இராச்சியத்திற்கும், ஈழம் என்ற பெயர் தென்னிலங்கை இராச்சியத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைய யாழ் மருத்துவமனைக்குத் தெற்குப்பக்கமாக உள்ள வணிக நிலையங்கள் மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் யாழ் கோட்டை வரைக்கும் பரந்து காணப்படுகின்றது. இந்தப் பகுதி இன்றளவும் ஐநூற்றுவன் வளவு என்று அழைக்கப்படுகிறது. வட மொழியில் ஆரியபுரா என்றும் தமிழில் ஐந்நூற்றுவர் என்றும் அறியப்பட்ட வலிமையான வணிகக் குழு தென்னிந்தியாவில் உருவாகி தென்கிழக்காசியா முழுவதும் பரவியிருந்தனர். இவர்கள் வீர வளஞ்சிய தர்மம் எனப்பட்ட வீர தீர அல்லது உயர் மரபு வணிகச் சட்டத்தின் காவலர்களாயிருந்தனர். இவர்களின் கொடியிற் காணப்பட்ட காளை மாட்டைச் சின்னமாகக் கொண்டிருந்த இவர்கள் தீரமிக்க வணிகர்களாகப் புகழ் பெற்றிருந்தனர். ஜாவகன் சேரி சாவகச்சேரி என மாற்றமடைந்தது போன்றே இவர்களால் உருவாக்கபட்ட பட்டினமாதலால் முன்பு ஐநூற்றுவன் பட்டினம் என்றழைக்கப்பட்டு பின்னர் ஜாழ்ப்பாண பட்டினம் என மருவி இன்று யாழ்ப்பாணம் என வழங்குகின்றது எனலாம். இந்த பெயரே பின்னர் போர்ச்சுகீசர் ஒல்லாந்தர் முதலானோரும் பயன்படுத்தலானர். வரலாறு யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் ‘மணிபுரம்' எனப்படுகிறது; அங்கு நாகரும் இருந்தமையால் ‘மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து-Sprout) போலக் காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. தோற்றம் 1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண அரசு போத்துக்கீசர் வசம் செல்லும் வரையில், அதன் தலைநகரம் என்ற வகையில் நல்லூரே இப் பகுதியில் பிரதான நகரமாக இருந்தது. அக்காலத்தில் இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் கொழும்புத்துறையில் ஒரு சிறிய இறங்கு துறையும், பின்னர் போத்துக்கீசரின் கோட்டை இருந்த இடத்தில் முஸ்லிம் வணிகர்களின் இறங்குதுறையும், பண்டசாலைகளும், சில குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது. 1590 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசனைக் கொன்று அவ்விடத்தில் இன்னொரு அரசனை நியமித்த பின்னர் அவர்களது செல்வாக்கு அதிகரித்தது. தொடர்ந்து சமயம் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் யாழ்ப்பாணக் கடற்கரையோரத்தில் கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்றையும், அவர்களுக்கான இருப்பிடங்களையும் கட்டியிருந்தனர். பின்னர் முஸ்லிம் வணிகர்களின் பண்டசாலைகள் இருந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டு அவ்விடத்தில் முன்னரிலும் பெரிதாகக் கட்டிடங்களைக் கட்டியிருந்ததாகத் தெரிகிறது. இக்கட்டிடங்கள் வழிபாட்டிடங்களாகவும், சமயம் பரப்பும் இடங்களாகவும் இருந்தது மட்டுமன்றிச் சில சமயங்களில் போத்தூக்கீசருக்கான ஆயுதக் கிடங்குகளாகவும், பாதுகாப்பு இடங்களாகவும் இருந்தன. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை யாழ்ப்பாண அரசன் நாவாந்துறைப் பகுதியில் குடியேற்றினான். கரையோரப்பகுதிகளில் மீன்பிடிக் குடியேற்றங்களும் இருந்தன. தற்போதைய யாழ்ப்பாண நகரத்தின் மையப்பகுதி அமைந்துள்ள இடங்கள் அக்காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், பனங் கூடல்களாகவுமே இருந்ததாகத் தெரிகிறது. 1620ல் யாழ்ப்பாண அரசை மீண்டும் தாக்கிய போத்துக்கீசர் அதனைக் கைப்பற்றித் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நல்லூர் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என உணர்ந்த அவர்கள் தங்கள் நிர்வாகத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். போத்துக்கீசரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம் யாழ்ப்பாணத்தைத் தங்களுடைய நிர்வாக மையம் ஆக்கிய போத்துக்கீசர், முன்னர் தங்களுடைய தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் சதுர வடிவில் அமைந்த பெரிய கோட்டையொன்றைக் கட்டினார்கள். மதிலால் சூழப்பட்டிருந்த இக் கோட்டையுள் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், வேறு நிர்வாகக் கட்டிடங்களும் அமைந்திருந்தன. கோட்டைக்கு வெளியே போத்துக்கீசரின் இருப்பிடங்களோடுகூடிய யாழ்ப்பாண நகரம் அமைந்திருந்தது. யாழ்ப்பாண நகரில் அமைந்திருந்த கட்டிடங்களுள் கோட்டையையும் அது சார்ந்த கட்டிடங்களையும் தவிர, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க மடங்களைச் சேர்ந்த பெரிய கட்டிடங்களும் இருந்ததாகத் தெரிகிறது. உள்ளூர் மக்களின் குடியிருப்புக்கள் இக்காலத்திலும், பெரும்பாலும் நல்லூரை அண்டியே இருந்திருக்கக்கூடும். இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் சோனகத்தெரு என்று அழைக்கப்படும் இடத்தில் சிறிய அளவில் முஸ்லிம் வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இன்றைய கரையூர், பாசையூர் ஆகிய இடங்களை அண்டிச் சிறிய சிறிய மீன்பிடிக்குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது. போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தில் 40 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே ஆட்சி செலுத்தினர் இதனால் யாழ்ப்பாண நகரம் பெருமளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் இல்லை. எனினும், இன்று யாழ்ப்பாண நகரத்துள் பெரிய அளவில் மக்களால் பின்பற்றப்படும் கத்தோலிக்க சமயமும், நிர்வாகம் தொடர்பான சில இடப்பெயர்களும் போத்துக்கீசர் தொடர்பை இன்றும் எடுத்துக்காட்டுகின்றன. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரம் ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடைந்தது ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம் 1658 முதல் 1795 முடிய ஏறத்தாழ 140 ஆண்டுகள் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்டனர்.இதனால் அவர்களின் சுவடுகளை இன்றும் யாழ்ப்பாண நகரத்தில் காணமுடியும். போத்துக்கீசர் கட்டிய கோட்டையை இடித்துவிட்டு, புதிய கோட்டையொன்றை ஒல்லாந்தர் கட்டினர். இன்று பறங்கித் தெரு என்று அழைக்கப்படும் இடத்திலேயே ஒல்லாந்தருடைய குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. மிக அண்மைக்காலம் வரை இப்பகுதியில் ஒல்லாந்தர் காலக் கட்டிடக்கலையைக் காட்டும் பல கட்டிடங்கள் இருந்தன. அண்மைக்காலத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளால் இவற்றுட் பல அழிந்துபோய் விட்டன. இவர்களுடைய காலத்தில் யாழ்ப்பாண நகரம் ஓரளவுக்கு விரிவடைந்தது என்று சொல்லமுடியும். பறங்கித் தெருப் பகுதியைத் தவிர, வண்ணார்பண்ணை போன்ற பகுதிகள் நகரத்தின் உள்ளூர் மக்களுக்குரிய பகுதிகளாக வளர்ச்சி பெற்றன. இவர்களுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்து சமயம் தொடர்பான பிடிவாதம் தளர்ந்ததைத் தொடந்து முக்கியமான இந்துக் கோயில்கள் சில இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் எல்லைக்குள் அமைந்தன. பிற்காலத்தில் இப்பகுதிகள் சைவ சமயத்தவரின் பண்பாட்டு மையங்களாக உருவாக இது வழி சமைத்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில், யாழ் பெருமாள் கோயில் என்பன இவற்றுள் முக்கியமானவை. இது போன்றே, அடக்கி வைக்கப்பட்டு இருந்த கத்தோலிக்க மதமும் புத்துயிர் பெறலாயிற்று. பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம் பிரித்தானியர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 152 ஆண்டுகாலம் நீடித்தது. இக் காலத்தில் யாழ்ப்பாணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக, பொருளாதார மற்றும் பௌதீக வளர்ச்சிகளைப் பெற்றது. தற்காலத்து யாழ்ப்பாணக் கல்வி மேம்பாட்டுக்கு அச்சாணியாக விளங்கிய பாடசாலைகள் அனைத்தும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. யாழ்ப்பாண நகரத்திலிருந்து குடாநாட்டின் பல பகுதிகளையும் இணைக்கும் வீதிகள் அமைக்கப்பட்டன. அத்துடன், யாழ்ப்பாணத்துடன் கண்டி,கொழும்பு போன்ற தென்னிலங்கை நகரங்களுக்கான வீதிகளும் உருவாகின. யாழ்ப்பாண நூலகம் 1935இல் உருவான யாழ்ப்பாணப் பொது நூலகம் இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கியது. 1981இல் இந்நூல் நிலையம் சிங்கள வன்முறைக் கும்பல் ஒன்றினால் 97,000 அரிய நூல்களுடன் முழுவதும் எரியூட்டி அழிக்கப்பட்டது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், பல வரலாற்று நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் அழிந்து போயின. ஆட்சி யாழ்ப்பாண மாநகரசபை யாழ் நகரை ஆட்சி செய்கின்றது. இது 1865 மாநகர சபைகளின் அவசரச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. பிரித்தானியர் அதிகாரத்தைப் பகிர விரும்பாததால் யாழ் நகர் பல வருடங்களாக யாழ் நகர் மாநகர சபை தேர்வு செய்யப்படாமல் இருந்தது. முதலாவது தெரிவு செய்யப்பட்ட மாநகர முதல்வர் கதிரவேலு பொன்னம்பலம் ஆவார். இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 11 வருடங்களின் பின் 2009 இல் இடம்பெற்றது. மாநகர சபை 29 உறுப்பினர்களைக் கொண்டது. புவியியல் மற்றும் காலநிலை யாழ் ஏரியினால் நகரம் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. யாழ் தீபகற்பம் சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு காணப்படுகின்றது. முழு நிலமும் தட்டையாகவும் கடலிலிருந்து உயர்ந்தும் காணப்படுகின்றது. பனை மரங்கள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. தளை அலரி போன்ற மரங்களும் அதிகம் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் வெப்பமண்டல மழைகாட்டு காலநிலையைக் கொண்டு மிக வறட்சியான காலநிலையுடைய மாதம் அற்றுக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் இலங்கையில் அதிகளவு சராசரி வெப்ப நிலையான 83 °F (28 °C)க் கொண்டுள்ளது. வெப்பம் ஏப்ரல், மே, ஆகஸ்து, செப்டெம்பர் மாதங்களில் உயர்ந்து காணப்படும். திசம்பர், சனவரி மாதங்களில் குளிர்ச்சியாகக் காணப்படும். வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் வருடாந்த கிடைக்கின்றது. இடத்துக்கிடம் வருடத்திற்கு வருடம் இது வேறுபடும். யாழ் தீபகற்பத்தின் மேற்குப் பகுதி சராசரி மழை வீழ்ச்சி 5 அங்குலம் ஆகும். மக்கள் தொகையியல் வரலாற்று அடிப்படையில் யாழ் நகரில் தமிழர், இலங்கைச் சோனகர், பறங்கியர் வாழ்ந்து வந்தனர்.1880 முதல் 2010 வரையான சனத்தொகை யாழ் புறநகர்ப்பகுதி யாழ்ப்பாண புறநகர்ப்பகுதிகள் பின்வருமாறு: அரியாலை நாயன்மார்கட்டு குருநகர் சுன்னாகம் நல்லூர் சுண்டிக்குளி நாவற்குழி திருநெல்வேலி கோப்பாய் கொக்குவில் கோண்டாவில் மண்டைதீவு உரும்பிராய் கைதடி அளவெட்டி பின்வருவனவற்றையும் பார்க்கவும் யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் யாழ்நகரப் பாடசாலைகள் யாழ்ப்பாண மாநகரசபை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம் உசாத்துணை வெளி இணைப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும் இலங்கை மாவட்டத் தலைநகரங்கள் யாழ்ப்பாண மாவட்டம்
642
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ்
இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (École des Beaux-Arts ) என்பது பிரெஞ்சு மொழியில், கவின்கலைக் கல்லூரி என்னும் பொருள் தருவது. இப் பெயரில் பிரான்ஸில் பல கலைக் கல்லுரிகள் உள்ளன. பழையதும், பிரபலமானதுமான நிறுவனம் பாரிஸில் அமைந்துள்ளது. இவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது: இக்கோல் நஷனேல் சுப்பீரியர் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், பாரிஸ் [École nationale supérieure des beaux-arts (Ensba)] இக்கோல் நஷனேல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் டி டிஜொன், டிஜொன் [École nationale des beaux-arts de Dijon] இக்கோல் நஷனேல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் டி பூர்ஜெஸ், பூர்ஜெஸ் [École nationale des beaux-arts de Bourges] இக்கோல் நஷனேல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் டி நான்ஸி, நான்ஸி [École nationale des beaux-arts de Nancy] இக்கோல் நஷனேல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் டி லியன், லியன் [École nationale des beaux-arts de Lyon] கனடாவிலுள்ள மொன்றியல், கியூபெக்கிலும் ஒரு இக்கோல் நஷனேல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் உள்ளது. வெளி இணைப்புகள் இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், பாரீஸ் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் sv:École des Beaux-Arts
643
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%2C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D
இக்கோல் நஷனேல் சுப்பீரியர் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், பாரிஸ்
1648 ஆம் ஆண்டில், பிரான்ஸிலுள்ள பாரிஸ் நகரில் சில இளம் கலைஞர்கள் ஒன்றுகூடி Academie Royale de peinture et de sculpture என்னும் பெயரில் ஒரு கவின்கலை நிறுவனமொன்றை உருவாக்கினர். இதுவே இக்கோல் நஷனல் சுப்பீரியர் டெஸ் பியூக்-ஆர்ட்ஸ் இன் முன்னோடி நிறுவனமாகும். இதில் முக்கிய பங்கு வகித்தவர் சார்ள்ஸ் லே புரூண் என்பவராவார். திறமையுள்ள மாணவர்களுக்கு, அவர்களுடைய பின்னணியைப் பாராது, இலவசமாகக் கலைத்துறைகளிற் பயிற்சியளிப்பது இந் நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். பண்டைய கிரேக்க, ரோமானியக் கலைப் பாணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே, இந் நிறுவனத்தின் பயிற்சிகள் அமைந்திருந்தன. ஒவியம், சிற்பம் போன்ற துறைகளிற் பயிற்சி கொடுப்பதற்காக, 'சிற்ப, ஓவிய அக்கடமி' என்ற பிரிவும், கட்டிடக்கலைப் பயிற்சிக்காகக் 'கட்டிடக்கலை அக்கடமி' என்ற பிரிவுமாக இரண்டு பிரிவுகளாக இது இருந்தது. அக்காலத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தினால் ரோம் நகரில் அமைக்கப்பட்டிருந்த Academie de France a Rome என்னும் புகழ்பெற்ற நிறுவனத்தில் 4 ஆண்டுகள் படிப்பதற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காகக் கடுமையான போட்டிகளை மாணவரிடையே, ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனம் நடத்திவந்தது. இந் நிறுவனம், 1816ல் பாரிஸிலுள்ள புதிய இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. இந்த இடத்திலேயே இது இன்றுவரை இருந்து வருகிறது. 1863ல் இது தற்போதிய பெயருக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பிரான்சின் கலை வரலாற்றில் இந் நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது எனக் கூறப்படுகிறது. இதன் நிறுவப்பட்டதன்பின், 19 ஆம் நூற்றாண்டுவரை, இருந்த பல புகழ் பெற்ற கலைஞர்கள் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். மேற்கோள்கள் பிரான்சு
644
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
யாழ்ப்பாணக் குடாநாடு
யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் வடக்கு அந்தலையில் அமைந்துள்ளது. இதன் வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், மற்றும் மேற்கிலும், தெற்கிலும் யாழ்ப்பாணக் கடலேரியும் அமைந்துள்ளது. இந்தக் குடாநாடு, ஆனையிறவு என்ற இடத்தில் ஒரு ஒடுங்கிய நிலப்பகுதி தென் எல்லையாக அமைந்து ஆனையிறவு கடல் நீரேரி வன்னிப் பகுதியை பிரிக்கிறது. யாழ்ப்பாணக் குடாநாடு, உப்பாறு கடல்நீரேரி, தொண்டைமானாறு கடல்நீரேரி என்பவற்றால் கிட்டத்தட்ட மூன்று தீவுகளாகப் பிரிக்கப்பட்டது போல் தோற்றமளிக்கிறது. இந்த இயற்கைப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, யாழ் குடாநாடு, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுகள் என நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. மக்கட்பரம்பலைப் பொறுத்தவரை யாழ் குடாநாடு மிகவும், மக்கள் அடர்த்தி கூடிய ஒரு பகுதியாகும். 1981 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வட மாகாணத்தின் 11.6% நிலப்பரப்பைக் கொண்ட குடாநாட்டில் 66.59% மக்கள் வாழும் அதேவேளை, 88.4% மிகுதிப் பகுதியில், 33.41% மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். உசாத்துணை யாழ்ப்பாணம் மூவலந்தீவுகள் யாழ்ப்பாண மாவட்டம்
645
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஆரியச் சக்கரவர்த்திகள்
ஆரியச் சக்கரவர்த்திகள் என்பது, இலங்கைத் தீவின் வட பாகத்திலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தை 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை ஆண்ட அரச வம்சத்து மன்னர்களைக் குறிக்கும். இவ்வம்சத்தின் தோற்றம் பற்றியோ இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியோ எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்கள் ஏதும் இல்லை. பெரும்பாலும் இவர்கள் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் அமைச்சர் ஆரியச் சக்கரவர்த்தி வழி வந்தவர்களே என்று கூறப்பட்டாலும் மாற்றுக் கருத்துகளும் உள்ளன. இவ்வரசைத் தொடங்கிய கூழங்கைச் சக்கரவர்த்தி தென்னன் நிகரானவன் என்று போற்றப்படுவதால் இது பாண்டியர் ஆணை கீழ் நட்ந்த இராச்சியம் என்பது பெரும்பாலானோர் கருத்து. யாழ்ப்பாணத்தின் வரலாறு பற்றிக் கூறும் வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள், யாழ்ப்பாண அரசு அரசனில்லாது இருந்தபொழுது, தமிழ்நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இளவரசனாலேயே இந்த வம்சம் ஆரம்பித்துவைக்கப் பட்டதாகக் கூறுகின்றன. எனினும் இம் முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் பற்றியோ அல்லது அவ்வரசனுடைய அடையாளம் பற்றியோ பொதுக்கருத்துக் கிடையாது. வடமேற்கு இந்தியாவின், குஜராத், கிழக்கிந்தியாவிலிருந்த கலிங்க தேசம், தமிழ் நாட்டிலுள்ள ராமேஸ்வரம், சோழநாடு போன்ற பல இடங்களையும், அவர்களது பூர்வீக இடங்களாகக் காட்டப் பல ஆய்வாளர்கள் முயன்றுள்ளார்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியை கூழங்கைச் சக்கரவர்த்தி, விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி, கோளறு கரத்துக் குரிசில் எனப் பலவாறாக குறிப்பிடுகின்றன. அவ்வரசனின் கையிலிருந்த ஊனம் (கூழங்கை) காரணமாகவே இப்பெயர்கள் வழங்கியதாகக், காரணமும் கூறப்படுகிறது. இது தவிர, 13ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் படைகளின் உதவியோடு வட பகுதி உட்பட்ட இலங்கையின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய கலிங்க தேசத்தவனான, கலிங்க மாகன் என்பவனே முதல் ஆரியச்சக்கரவர்த்தி எனவும் சிலர் நிறுவ முயன்றுள்ளார்கள். காலிங்கச் சக்கரவர்த்தி என்பதே கூழங்கைச் சக்கரவர்த்தியெனத் திரிபடைந்திருக்கக் கூடும் என்பது அவர்களது கருத்து. இவ்வம்சத்தின் தோற்ற காலம் பற்றியும், கருத்து-எதிர்க்கருத்துகள் (வாதப் பிரதிவாதங்கள்) உண்டு. யாழ்ப்பாண வைபவமாலை, வையாபாடல் போன்றவை முதலரசன் காலத்தை முறையே --க்கும், --க்கும் முன்தள்ளியுள்ளன. யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதல் மன்னனாகவிருந்த இளவரசன் பற்றிக் குறிப்பிடும்போது, யாழ்ப்பாண வரலாறு கூறும் நூல்களில் முந்தியதாகக் கருதப்படும் கைலாயமாலை, பின்வருமாறு கூறுகிறது. .......செல்வமது ரைச்செழிய சேகரன்செய் மாதங்கள் மல்க வியன்மகவாய் வந்தபிரான்-கல்விநிறை தென்ன(ன்)நிக ரான செகராசன் தென்னிலங்கை மன்னவனா குஞ்சிங்கை ஆரியமால்............ இதன்படி பாண்டியன் (செழிய சேகரன்) மகன் செகராசன் என்னும் சிங்கை ஆரியன் என்பதே அவனை அடையாளம் காட்டும் தகவல்கள். இதில், முதற்பகுதி தந்தையையும், அடுத்த பகுதி இடப்பட்ட பெயரையும் குறித்தது. மூன்றாம் பகுதி சிங்கை. பிற்பகுதி, ஆரியன் என்பதாகும். சிங்கை என்பது சிங்கபுரம் அல்லது சிங்கைநகர் என்னும், இந்த அரச வம்சத்தவரோடு தொடர்புள்ள, இடப்பெயரைக் குறிக்கின்றது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது எனினும், எங்கேயுள்ளது என்பது பற்றியும் அதனுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பின் தன்மை பற்றியும் ஒத்த கருத்து இல்லை. ஆரியன் என்பது இவர்கள் பிராமணர்கள் என்பதைக் குறிப்பதாகச் சிலரும், இவர்கள் கலிங்கத்து ஆரியர் இனத்தவர் என்பதைக் குறிப்பதாக வேறு சிலரும் கூறுகிறார்கள். ஆரியன் என்பது பாண்டிய மரபினரைக் குறிக்கும் சொல்லாக மகாவம்ச நூல் மற்றும் பிங்கல நிகண்டு தெரிவிக்கின்றது. ஆரியன் என்ற சொல்லிற்கு அழகன், உயர்ந்தவன், பாண்டியன் எனப் பொருட் கொண்டு தென்னிலங்கையில் உரோகணை மற்றும் கல்யாணி நாடுகளை ஆரியர் என்ற பெயரில் பாண்டிய வம்சத்தினர் ஆட்சி செய்த செய்தியை மகாவம்சம் கூறுகின்றது. ஆரியர் என்ற சொல் ஆழியர் என்ற சொல்லின் திரிபாகவும் பிங்கல நிகண்டு அறிவிக்கின்றது. அனைத்தும் இவர் தம் பாண்டிய மன்னரின் தொடர்பையே காட்டுகின்றது. ராமேஸ்வரம் கோவிலை  பரராஜ சேகரன் என்றவர் 1414 ம் வருடம் கட்டினார்  என்ற குறிப்பு கோவிலின் கல்வெட்டுகளில் உள்ளது. அதற்கு தேவையான  தூண்களும் மற்ற பாறைகளும் திருகோணமலை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு இராமேஸ்வரம் கொண்டு செல்ல பட்ட குறிப்பு இலங்கையில் உள்ளது.            கோவிலில் இருந்த கல்வெட்டு குறிப்புகள் 1866 ம் ஆண்டு ராம்நாடு அரசனால் அழிக்க பட்டும் - திருத்தமும் செய்ய பட்டு உள்ளது.இதை அழிக்கவேண்டிய காரணம் கோவில் உரிமை பற்றிய உண்மை வெளியே தெரியாமல் இருக்க மட்டுமே என்று தெரிய வருகிறது. திருப்புல்லாணி கோவில் கல்வெட்டில் உள்ள குறிப்புகள் -                                                         கோவிலுக்கு கொடுக்க பட்ட தேவதான  நிலங்களை பற்றிய குறிப்பில் தெய்வ சிலையான் அழகிய ஆர்ய சக்ரவர்த்தியும் -பராக்கிரம பாண்டியனின் மாமன் ஆன ராமன்வகை ஆர்ய சக்கரவர்த்தியும் என்று கூறப்பட்டுஉள்ளது. இதனால் ஆரிய சக்ரவர்த்தியை பாண்டியனின் மாமன் என்று கூறப்பட்டுள்ளதால் அவர்கள் பாண்டியனுக்கு பெண் கொடுத்து உள்ளது உறுதி செய்ய பட்டு உள்ளது. மாறவர்மன் குலசேகரன் காலத்தில் ராம்நாடு -சிவபுரியில் தேவர் ஆரிய சக்கரவர்த்தியும் -ஸ்ரீரங்கம் கல்வெட்டில் நல்லூர் செவ்விருக்கைநாட்டு ஆரிய சக்கரவர்த்தி பற்றியும் கூறப்பட்டு உள்ளது. ஆர்ய சக்கரவர்த்திகளுக்கு தனிநின்று வென்ற பெருமாள் என்ற பட்டம் கொடுக்க பட்டு உள்ளது. சிங்கள வரலாற்று இலக்கியங்களில் ஒன்றான சூளவம்சத்தில் வரும் பின்வரும் கூற்றுக்கள் காணப்படுகின்றன, “முன்பு பஞ்சம் ஒன்று நிலவியகாலத்திலே பாண்டிய இராச்சியத்தில் ஆட்சிபுரிந்த சகோதரர்களான ஐந்து மன்னர்கள் ஆரியச்சக்கரவர்த்தி என்னும் பெயர் கொண்ட தமிழ்ச் சேனாதிபதியின் தலைமையில் படையொன்றை அனுப்பி வைத்தார்கள். அவன் ஆரியனல்லானாயினும் மிகுந்த செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட பிரதானியாக விளங்கினான். இராச்சியத்தின் எல்லாப் பக்கங்களையும் அழித்துவிட்டு அரண்கள்; பொருந்திய சுபபட்டணத்தினுள் (யப்பகூவாவிற்குள்) அவன் புகுந்தான். அங்கிருந்த தந்ததாதுவையும், விலைமதிக்கமுடியாத செல்வங்களையும் கவர்ந்து கொண்டு ஆரியச்சக்கரவர்த்தி பாண்டிநாட்டுக்குச் சென்றான். அங்கு பாண்டிய மன்னர் குலமெனும் தாமரையை மலர்விக்கின்ற கதிரவனையொத்த குலசேகர மன்னனுக்கு அவற்றைக் கொடுத்தான்”. மேற்கூறப்பட்ட கூற்றிலிருந்து ஆரியச்சக்கரவர்த்திகள் ஆரியர்கள் அல்லாத தமிழர் என்று கூறப்பட்டிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. தல்கால ஆய்வாளர்களான பத்மநாதன் (ஆங்கிலத்தில் யாழ்ப்பாண அரசு என்ற நூலை எழுதியவர்) போன்றோர், முதல் ஆரியச்சக்கரவர்த்தியின் காலம் 13ஆம் நூற்றாண்டு என்றே நம்புகிறார்கள். இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்களாகப் போர்த்துக்கீசருக்கு முன் 13 பெயர்களும், போர்த்துக்கீசர் காலத்தில் 6 பெயர்களுமாக மொத்தம் 19 அரசர்கள் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் பரராசசேகரன், செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டு அரசாண்டார்கள். வம்சத்தின் தோற்றம் விளக்கும் கதை சிங்கை ஆரியர்களின் தோற்றத்தை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தங்கள் தோற்றத்தை எவ்வாறு விளக்கினார்கள் என்பது தான் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வகையில் 1519-1619 கால பகுதியில் எழுதப்பட்டதாக நம்பப்படும் 'கைலாய மாலை' எனும் நூல் ஒரு சில விளக்கத்தை எமக்கு தருகின்றது: « பாண்டி மழவன் பரிந்து சென்று வேண்டி பெருகு புகழ் யாழ்ப்பாணம் பேரரசு செய்ய வருகுதி நீ என்று வணங்க, திருவரசு மாறற்குச் செம்பொன் மகுடம் அணிந்தோனின் வழி காரணிவனான பெரும் காரணத்தால், பேறு தரச் சாற்றும் இவன் மொழியை தன் மனத்தோர்ந்து எண்ணி, மறு மாற்றமுரை யாது நல்ல வாய்மை சொல்லி... துன்று புகழ் தென் மதுரை விட்டு திரு நகர் யாழ்ப்பாணத்து மன்னரசு செய்ய மனமகிழ்ந்து" (செய்யுள்கள் 79-82 மற்றும் 86) ஆகையால், கடைசி காலத்து யாழ்ப்பாண அரசர்கள் தங்கள் வம்சத்தை உருவாக்கியது மதுரையை சேர்ந்த ஓர் பாண்டிய இளவரசன் என நம்பினார்கள் என்று கவனிக்க முடிகிறது. வம்சத்தின் வரலாறு 1215 தொடக்கம் 1619 வரை இந்த வம்சத்தை சேர்ந்த 19 மன்னர்கள் யாழ்ப்பாண சிம்மாசனத்தில் ஏறியுள்ளனர். அவர்கள் பல்வேறு பெயர்களுடனும் வேவ்வேறு விதமாய் அரசு புரிந்தார்கள். ஆரம்ப காலத்தில் சிங்கை ஆரியர்கள் பாண்டிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். இஸ்லாமியர்கள் மதுரையை நாசம் செய்து பாண்டியர்களை வீழ்திய பின்பு தான் (1335 ஆம் ஆண்டில்) இந்த வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் முக்கியத்துவம் பெற தொடங்கினர். அக்காலத்து மன்னன் மார்தாண்ட சிங்கை ஆரியனாவான். இவன் காலத்தில் மொரோக்கோ நாட்டில் இருந்து இலங்கை வந்த இப்னு பதூதா என்பவனின் மூலம் அக்காலத்தில் சிங்கை ஆரியர்கள் தான் இலங்கை தீவிலே முக்கியத்துவம் வாய்ந்த மன்னர்கள் என்று தெரிகிறது. மார்தாண்டன் புத்தள பகுதியை கைப்பற்றி முத்து வியாபாரத்தால் யாழ்ப்பாண ராஜ்யம் செழிப்படன் காணப்பட்டது என்றும் அறிய முடிகின்றது. இவன் காலத்தில் சிங்கள மன்னர்களுடன் போர்களும் நடை பெற்றன. கனகசூரிய சிங்கை ஆரியனின் காலம் (1440 தொடக்கம் 1478 வரை) இன்னொரு முக்கித்துவம் வாய்ந்த ஒன்று: 1450 தொடக்கம் 1467 வரை செம்பக பெருமான் எனும் கோட்டை அரசனின் வளர்ப்பு மகன் யாழ்ப்பாண அரசை கைப்பற்றி அரசு புரிந்தான். இக்காலத்தில் கனகசூரிய மன்னன் மதுரையில் தஞ்சம் தேடினான். இருப்பினும் 1467 இல் ஒரு சிறிய படை எழுப்பிய கனகசூரிய அரசன் யாழ்ப்பாணத்தை மீழப் பெற்றான். அதன் பிறகு இந்த வம்சத்தை சேர்ந்த மன்னர்களிடம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கூற ஒரு ஆவல் காணப்பட்டது. அக்காரணத்தால் கனகசூரியனின் மகன் பரராஜசேகரனின் காலத்தில் தமிழ் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. மேலும் இம்மன்னன் காலத்தில் பல்வேறு நூழ்கள் எழுதப்பட்டன (கணிதம், மருத்துவம், தோதிடம் மற்றும் வரலாறு நூழ்கள்) அவனுக்கு பிறகு வரும் மன்னர்கள் 'சிங்கை ஆரியர்கள்' என்று தங்களை அழைத்துக் கொள்வதை நிருத்தினார்கள். அவ்வம்சம் மெல்ல மெல்ல அதன் அதிகாரத்தை இழக்க தொடங்கியது. முதலாம் சங்கிலியம் மற்றும் இரண்டாம் சங்கிலியன் போன்ற மன்னர்கள் யாழ்ப்பாண அரசின் புகழை மீழ பெருவதற்கு முயர்சித்தனர் ஆனால் 1619 ஆம் ஆண்டில் போர்த்துகேயர் சங்கிலிக்கு தூக்கு தண்டனை விதித்ததன் மூலம் வம்ச அழிவுக்கும் காரணமாகினார். மேற்கோள்களும் குறிப்புகளும் இவற்றையும் பார்க்கவும் யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல் பாண்டியர்கள் எனக் கருதப்படுவோர் இலங்கைத் தமிழ் அரசர்கள் யாழ்ப்பாண அரசு தமிழ் அரச வம்சங்கள்
646
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
வையாபாடல்
வையாபாடல் என்பது யாழ்ப்பாண வரலாற்றை ஆராய முற்படுவோருக்கான மூல நூல்களிலொன்றாகும். இதன் காப்புச் செய்யுளிலும், தொடர்ந்து வரும் பல இடங்களிலும், இலங்கையின் வரலாற்றைக் கூறுவதே குறிக்கோளெனக் காணினும், இது வட இலங்கையின் வரலாறு பற்றியே கூறுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலுக்கு முதல் நூலாக அமைந்த நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலானது 104 செய்யுள்களினாலானது. நூலாசிரியர் இந்நூலின் ஆரம்பத்தில் அதனை ஆக்கியோன் பற்றிக் கூறும் பாடலிலே, "ததீசிமா முனிதன் கோத்திரத் திலங்கு வையாவென விசைக்கு நாதனே" என்று வருவதனால் இதன் ஆசிரியர் பெயர் வையாபுரி ஐயர் ஆவார் கி.பி 1500 ஆம் ஆண்டளவில் இந்நூல் எழுதப்பட்டதாகும். காலம் இந்நூல் 1440 ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்த கனகசூரிய சிங்கையாரியனுடைய இரண்டாவது புதல்வனாகிய ஏழாம் செகராசசேகரன் யாழ்ப்பாண அரசனாயிருந்த காலத்துடன் நிறைவெய்துகிறது. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய சங்கிலியின் ஆட்சிபற்றி எதுவும் குறிப்பிடப்படாமையால், இந்நூல் சங்கிலியின் காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டதெனக் கொண்டு, இதன்காலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குமிடையில் இருக்கக் கூடுமென 1980 ல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட வையாபாடல் நூலின் பதிப்பாசிரியரான கலாநிதி க. செ. நடராசா அவர்கள் கணித்துக் கூறியுள்ளார். மேற்கோள்கள் வையாபாடல் - க. செ. நடராசா பதிப்பு (மின்னூல் - நூலகம் திட்டம்) வெளி இணைப்புகள் வையாபாடல் நூல் - தமிழ் இணையக் கல்விக்கழகம் ஈழத்து நூல்கள் யாழ்ப்பாண வரலாறு 14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்
648
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்
யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும், அதனையாண்ட அரசர்கள் பட்டியலுக்கு, யாழ்ப்பாண வைபவமாலையையே முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ளனர். எனினும் யாழ்ப்பாண வைபவமாலை தரும் அவர்களது காலம் பற்றிய தகவல்கள், கிடைக்கக் கூடிய ஏனைய தகவல்களுடன் பொருந்தி வராமையினால், வெவ்வேறு ஆய்வாளர்களுடைய முடிவுகளுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. கீழேயுள்ள பட்டியல் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஞான) எழுதி 1928ல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனம், மற்றும் 1926ல் வெளிவந்த, முதலியார் செ. இராசநாயகம் (இராச) அவர்களுடைய பழங்கால யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்ற ஆங்கில நூல் ஆகியவற்றில் காணப்படும் காலக்கணிப்பைத் தருகிறது. 1450ல் கோட்டே அரசனின் பிரதிநிதியான சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான் 1467ல் யாழ்ப்பாணம் மீண்டும் கனகசூரிய சிங்கையாரியன் வசம் வந்தது 1560ல் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் கைப்பற்றிச் சங்கிலியைப் பதவியினின்றும் அகற்றினர் 1620ல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு, அவர்களின் நேரடி ஆதிக்கத்துள் கொண்டுவரப்பட்டது உசாத்துணைகள் ஞானப்பிரகாசர், சுவாமி., யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம், ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி) யாழ்ப்பாண அரசு
650
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
யாழ்ப்பாண வைபவமாலை
யாழ்ப்பாண வைபவமாலை (Yalpana Vaipava Malai) என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் அக்காலத்திலிருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரென நம்பப்படும் மேக்கறூன் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க இது எழுதப்பட்டதாக, இந்நூலிலுள்ள சிறப்புப் பாயிரச் செய்யுளொன்றினால் அறியப்படுகிறது. இது ஐக்கிய தேசியக் கட்சியினால் யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பின் போது அழிக்கப்பட்டது. கைலாய மாலை, வையாபாடல், பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை போன்ற நூல்களை முதல் நூல்களாகக் கொண்டே வைபவமாலையை இயற்றினாரென்று மேற்படி செய்யுளில் புலவர் எடுத்துக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தையாண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் கால வரலாறுபற்றிக் கூடிய அளவு தகவல்களைக் கொண்டுள்ள தற்போது கிடைக்கக்கூடிய நூல் இதுவேயாகும். எனினும் மேற்படி காலப்பகுதியின் இறுதியின் பின் 150 தொடக்கம் 200 ஆண்டுகள் வரை கழிந்த பின்னரே இந் நூல் எழுதப்பட்ட காரணத்தால், பல்வேறு நிகழ்வுகளின் காலங்கள் தொடர்பிலும், மேலும் பல விடயங்களிலும், பிழைகளும், குழப்பங்களும் நேர்ந்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும் யாழ்ப்பாண வரலாறு தொடர்பில் இந் நூலின் பெறுமதியைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. உள்ளடக்கம் இந் நூல் ஆரம்பத்தில் இராமாயணத்திலிருந்து, இராம இராவண யுத்தத்தின்பின் ஏற்பட்ட விபீஷணன் ஆட்சியைத்தொட்டுப் பின் மகாவம்சத்திலிருந்து, வட இந்தியாவிலிருந்து வந்த விஜய ராஜனின் கதையையும், அவன் பின் அரியணையேறிய அவன் தம்பியின் மகனாகிய பண்டுவாசனதும் கதைகூறிப் பின் அவன் வம்சத்தில் வந்த ஒருவனிடமிருந்து தென்னிந்தியப் பாணன் ஒருவன் பரிசாகப்பெற்ற மணற்றிடர் என்ற இடம் யாழ்ப்பாணமான கதைகூறி யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொடங்குகிறது. இலங்கையின் மேற்குக்கரையிலுள்ள திருக்கேதீஸ்வரத்தின் புனரமைப்பு, கிழக்குக்கரையிலுள்ள திருக்கோணேஸ்வரம், தெற்கிலுள்ள சந்திரசேகரன் கோயில் மற்றும் வடகரையிலுள்ள திருத் தம்பலேஸ்வரம் என்பவற்றை விஜய ராஜனின் திருப்பணிகளாக இந்நூல் கூறுகிறது. பின்னர் யாழ்பாடியின் வரவுக்கு முன்னரே வன்னியர்களின் குடியேற்றம் பற்றியும் பேசப்படுகிறது. யாழ்பாடிக்குப் பின் யாழ்ப்பாணத்திலேற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிலிருந்து, கூழங்கைச் சக்கரவர்த்தி அழைத்துவரப்பட்டமை, நல்லூர் இராஜதானியின் தோற்றம், யாழ்ப்பாணத்தில் மேலும் தமிழர்களின் குடியேற்றம், என்பவற்றை விபரிக்கும் இந்நூல், தொடர்ந்து இந் நாட்டையாண்ட மன்னர்கள் பற்றியும் அவர்கள் காலத்தில் நடந்த முக்கிய சில சம்பவங்கள் பற்றியும் சுருக்கமாக விபரந் தருகிறது. போர்த்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைய முன் நடந்த சம்பவங்களிலும், காலப்பகுதிகளிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. போர்த்துக்கீசர் ஆட்சிபற்றியும், பின்னர் அவர்களின் வீழ்ச்சிபற்றியும் கூறும் இந்நூல், ஒல்லாந்தரின் ஆட்சிபற்றியும் ஓரளவுகூறி நிறைவுபெறுகிறது. ஒல்லாந்தர் ஆட்சியின்போது அவ்வரசின் அதிகாரியொருவரின் வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்ட இந் நூலில் காணப்படும் ஒல்லாந்தர் ஆட்சிபற்றிய சில கடுமையான விமர்சனங்களும், பிரித்தானியர் ஆட்சிபற்றி வருகின்ற பகுதிகளும், பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும். இவற்றையும் பார்க்கவும் யாழ்ப்பாண வைபவ விமரிசனம் - தமிழரசர் உகம் ஆக்கியோன் நல்லூர், சுவாமி ஞானப்பிரகாசர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் யாழ்ப்பாண வைபவ மாலை (நூலகம்) ஈழ வரலாற்றுப் பரப்பில் யாழ்ப்பாண வைபவ மாலை - சி. பத்மநாதன், நூலகம் திட்டத்தில் யாழ்ப்பாண வரலாறு ஈழத்து நூல்கள் 18 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள் யாழ்ப்பாண அரசு
652
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
கூழங்கைச் சக்கரவர்த்தி
யாழ்ப்பாணத்து வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையின்படி, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது மன்னன் கூழங்கைச் சக்கரவர்த்தியாவான். இவன் தென்னன் நிகரானவன் என்று போற்றப்படுவதால் பாண்டியர் கீழ் ஆட்சி புரிந்த பாண்டிய அமைச்சன் என்று கூறுவோரும் உண்டு. வையாபாடல் இப் பெயரின் வடமொழியாக்கமான கோளுறு கரத்துக் குரிசில் என்ற பெயரில் இவனைக் குறிப்பிடும். இவன் கை ஊனமுற்று இருந்த காரணத்தால், "கூழங்கையன்" என அழைக்கப்பட்டுப் பின்னர் "கூழங்கைச் சக்கரவர்த்தி" அல்லது "கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி" எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. "மணற்றிடர்" என்று அன்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ற யாழ்ப்பாணனே, இந்தியாவிலிருந்து, தசரதன் மைத்துனனான குலக்கேது என்பவனின் மகனான கூழங்கைச் சக்கரவர்த்தியைக் கூட்டிவந்து முடிசூட்டினான் என வையாபாடல் கூற, சோழ வம்சத்தில் வந்த திசையுக்கிர சோழனுடைய மருமகனான சிங்ககேது என்பவனுடைய மகனே இவனெனவும், யாழ்பாடியின் பின் அரசனில்லாதிருந்த யாழ்ப்பாணத்தை ஆள இந்தியாவிலிருந்து இவனைப் பாண்டிமழவன் என்னும் ஒருவன் அழைத்து வந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறும். வையா பாடலின்படி இவனுடைய ஆட்சித் தொடக்கம் கலியுக ஆண்டு 3000 (கி.மு. 101) ஆகும். தற்கால ஆய்வாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்ப் படைகளின் உதவியுடன் இலங்கைமீது படையெடுத்து அப்போதைய தலைநகரமான பொலநறுவையைத் துவம்சம் செய்த கலிங்க மாகன் எனும் கலிங்கத்து இளவரசனே காலிங்கச் சக்கரவர்த்தி என்னும் பெயருடன் தனியரசு நடத்தினான் என்றும் இப்பெயரே திரிபடைந்து கூழங்கைச் சக்கரவர்த்தியானதென்பதும், சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம் போன்றோருடைய கருத்து. தற்போது இதற்குப் போதிய ஆதரவு இல்லை. கூழங்கைச் சக்கரவர்த்தியின் காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு என்பதே தற்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் காலக் கணக்கு ஆகும். இவ்வரசனே நல்லூர் நகரைக் கட்டியவன் என வைபவமாலை குறிப்பிடுகிறது. இவன் சிங்கைநகர் என அழைக்கப்பட்ட இன்னொரு இடத்திலிருந்தே ஆண்டான் என்றும், 15 ஆம் நூற்றாண்டிலேயே நல்லூர் கட்டப்பட்டது என்பதும் சிலருடைய கருத்து. எனினும் நல்லூர் மட்டுமே ஆரியச்சக்கரவர்த்திகளுடைய தலைநகராக அமைந்திருந்ததென்பதே இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும். மேற்கோள்களும் குறிப்புகளும் யாழ்ப்பாண அரசர்கள்
653
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
மார்க்கஸ் விட்ருவியஸ் பொல்லியோ
பொதுவாக விட்ருவியஸ் என்று அழைக்கப்படும் மார்க்கசு விட்ருவியசு பொல்லியோ (Marcus Vitruvius Pollio), ஒரு ரோமானிய எழுத்தாளரும், கட்டிடக்கலைஞரும், பொறியியலாளருமாவார். இவர் கி.மு முதலாவது நூற்றாண்டளவில் வாழ்ந்தவர். ஆரம்பத்தில் ரோமானியச் சக்கரவர்த்தியான சூலியசு சீசருக்குக் கீழும், பின்னர் முதலாம் அகட்டசுக்குக் கீழும் பொறியியலாளராகப் பணியாற்றினார். பணியிலிருந்து இளைப்பாறிய பின் 10 தொகுதிகளைக் கொண்ட கட்டிடக்கலை பற்றிய தனது நூலை எழுதினார். இதுவே இன்று கிடைக்கக் கூடிய காலத்தால் முற்பட்ட கட்டிடக்கலை நூலாகக் கருதப்படுகிறது. அன்றைய ஆர்க்கிடெக்சர் (கட்டிடக்கலை என்பது இன்றைய பொருள்) என்ற துறையினுள், கட்டிடக்கலை, நகர அமைப்பு, நிலத்தோற்ற அமைப்பு (Landscape), துறைமுகங்கள், கடிகாரம், நீர்காவி அமைப்புகள் (Aquaducts), பம்பிகள், இயந்திரங்கள் எனப் பலவகையான விடயங்களும் அடங்கியிருந்ததனாற் போலும், இவர் எழுதிய புத்தகம் மேற்படி எல்லா விடயங்களையும் எடுத்தாள்கிறது.இவற்றைவிட இசை, மருத்துவம் போன்ற விடயங்கள் பற்றியும் இப்புத்தகத்தில் குறிப்புகள் உள்ளன. இவர் ஒரு புகழ் பெற்ற கட்டிடக்கலைஞராகவும், அவர்காலத்தின் அறிவுத்துறைகளிலும், தொழில்நுட்பத்திலும், பரந்த புலமையுள்ளவராகவும் போற்றப்படுகின்ற அதேவேளை, இவர் தன் காலத்துக்கு முந்தியகாலத்து விடயங்கள் பற்றியே சிலாகித்து எழுதியுள்ளாரென்றும், பழமைவாதியாக விளங்கினாரென்றும் இவரைக் குற்றம் சாட்டுபவர்களும் உள்ளனர். மனித சமுதாயத்துக்குப் புதிதாக எதையும் இவர் வழங்கவில்லை என்றும் இவர்கள் கூறுகிறார்கள். வெளியிணைப்புகள் The Ten Books on Architecture இலத்தீன் மூலமும், ஆங்கில மொழிபெயர்ப்பும். The Ten Books on Architecture பர்சியஸ் கிளாசிக் சேமிப்பு (Perseus Classics Collection) தளத்திலிருந்து. இலத்தீன் மற்றும் ஆங்கில உரைகள். படிமங்கள். இலத்தீன் பகுதிக்கு அகராதி இணைப்புகள் உண்டு. இலத்தீன் உரை, பதிப்பு 2 கட்டிடக் கலைஞர்கள் கிமு 1ஆம் நூற்றாண்டு பிறப்புகள் முதலாம் நூற்றாண்டு இறப்புகள் இலத்தீன் எழுத்தாளர்கள்
656
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
போக்குவரத்து
போக்குவரத்து (Transport or transportation) என்ற சொல் மனிதர்கள், விலங்குகள், பொருட்கள் முதலியன ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்வதைக் குறிக்கின்றது. காற்று, ரயில், சாலை, தண்ணீர், கம்பி, குழாய் மற்றும் விண்வெளி உள்ளிட்டவை போக்குவரத்து முறைகளாகும். பொதுவாக இத்துறை உள்ளகக் கட்டமைப்பு, வாகனங்கள், இயக்கம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மனிதர்களுக்கிடையில் வர்த்தகம் நடைபெறவும், நாகரிகங்களின் வளர்ச்சிக்கும் போக்குவரத்து மிகவும் இன்றியமையாததாகும். சாலைகள் இருப்புப் பாதைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், கால்வாய், குழாய் அமைப்புகள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், படகுத் துறைகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், உள்ளிட்டவை உள்ளகக் கட்டமைப்புப் பிரிவில் உள்ளடங்குகின்றன. மோட்டார் வாகனங்கள், சைக்கிள்கள், பேருந்துகள், தொடர் வண்டிகள், லாரிகள், விமானங்கள், உலங்கு வானூர்திகள், கப்பல்கள், விண்வெளி ஊர்திகள் உள்ளிட்டவை போக்குவரத்து வலையமைப்பில் இயங்குகின்ற வாகனங்கள் என்ற பிரிவில் அடங்குகின்றன. மேலும், போக்குவரத்து உள்ளகக் கட்டமைப்புகளின் வடிவமைப்பு, பொதுவாகக் குடிசார் பொறியியலாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடலாளர்களுடைய பணியாகும். வாகனங்களின் உருவாக்கம், இயந்திரப் பொறியியலினுள் அடங்கும். வாகனங்களை இயக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நிதியளித்தல், சட்டங்கள் மற்றும் கொள்கைகள் உட்பட்டவை இயக்கம் என்ற பிரிவுக்குள் வருகின்றன. போக்குவரவு என்ற நோக்கத்திற்காக அமைக்கப்படும் நடைமுறைகள். போக்குவரத்து துறையில், உள்கட்டமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் உரிமைகள் நாடு மற்றும் முறைமைகளைப் பொறுத்து, பொதுத் துறை அல்லது தனியார் துறை என்ற அமைப்புகள் தோன்றுகின்றன. இயக்க பொறுப்புகள் செயற்பாட்டு ஆய்வாளர்களையும், முறைமைப் பொறியாளர்களையும் சார்ந்துள்ளது. பயணிகள் போக்குவரத்து பொதுத் துறையாகக் கருதப்படுகிறது. திட்டமிட்ட சேவைகள், அல்லது தனியர்களால் இவை இயக்கப்படுகின்றன. சரக்கு போக்குவரத்து கொள்கலன்களில் கவனம் செலுத்துகிறது, எனினும் பெரும் அளவிலான மொத்த போக்குவரத்திற்கு தனிப்போக்குவரத்து முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் உலகமயமாதலுக்கும் போக்குவரத்து என்பது ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. பங்கைக் கொண்டுள்ளது, ஆனால் பெரும்பாலான போக்குவரத்து வகைகள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அதிக அளவு நிலத்தைப் பயன்படுத்துகின்றன. அரசாங்கங்கள் பெரிதும் மானியங்களை வழங்கி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், நகர்ப்புற விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சீரிய போக்குவரத்து திட்டமிடல் அவசியமாகிறது. போக்குவரத்து முறைகள் வாகனம், உள்கட்டமைப்பு மற்றும் இயக்கத்தின் குறிப்பிட்ட வகையைப் பயன்படுத்துவதற்கான ஒரு தீர்வாக போக்குவரத்து முறை உள்ளது. ஒரு நபர் அல்லது சரக்கு போக்குவரத்தின் திட்டத்தில் ஒரு முறை அல்லது பல முறைகள் இருக்கலாம், ஒரே வகையான போக்குவரத்து முறைமையுடன் அல்லது பல்வகை முறைமையுடன் கூடிய திட்டமாக அது இருக்கலாம். ஒவ்வொரு முறைமைக்கும் அதற்கான சொந்த அனுகூலங்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளன. மேலும், செலவு, திறமை மற்றும் பாதை ஆகியவற்றின் அடிப்படையில் இம்முறைமக்கள் பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. போக்குவரத்து வகைகள் மனித வலுப் போக்குவரத்து விலங்கு-வலுப் போக்குவரத்து விமானப் போக்குவரத்து கம்பி வட போக்குவரத்து மனித-வலுப் போக்குவரத்து கலப்புப் (Hybrid) போக்குவரத்து மோட்டாரிலியங்கும் வீதிப் போக்குவரத்து மோட்டாரிலியங்கும் போக்குவரத்து (off-road transport) குழாய்வழிப் போக்குவரத்து தொடர்வண்டிப் போக்குவரத்து கப்பற் போக்குவரத்து விண்வெளிப் போக்குவரத்து முன்வைக்கப்பட்டுள்ள எதிர்காலப் போக்குவரத்து மனித வலுப் போக்குவரத்து மனித சக்தி மூலமான போக்குவரத்து நிலையான போக்குவரத்து வகையாகும். மனிதனது தசையின் சக்தி மூலம் மனிதர்களையோ அல்லது உற்பத்திப் பொருட்களையோ ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குக் கொண்டு செல்லும் வழிமுறையாகும். நடத்தல், ஓடுதல் மற்றும் நீந்துதல் போன்ற செயல்களின் ஒரு வடிவமாகவே இது கருதப்படுகிறது. புதிய தொழினுட்பமானது அறிமுகப்படுத்திய இயந்திரங்கள் பெருகிய பின்னரும் மனித சக்தி வழிமுறைப் போக்குவரத்து முறை மேலும் அதிகரித்து, மனித சக்திப் போக்குவரத்து பிரபலமானதாகவே நிலைத்திருக்கிறது. ஏனெனில் இவ்வழி முறையால் பணச்சேமிப்பும் அல்லது சிக்கனமும் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்துடன் பொழுதுபோக்காகவும், சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தாததுமான, உடலுக்கு நல்ல உடற்பயிற்சியைக் கொடுப்பதாகவும் காணப்படுகின்றது. வளர்ச்சி குறைந்த பிரதேசங்களிலும் மற்றும் அணுக முடியாத பிரதேசங்களிலும் மனித சக்திப் போக்குவரத்து முறையே பெரும் பயன் விளைவிக்கின்றது. இருப்பினும், மனித வலுவைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த உட்கட்டமைப்பும் போக்குவரத்து விதிகளும் அவசியமாக உள்ளன. விலங்கு வலு போக்குவரத்து விலங்கினங்களின் உடல்சக்தியை உந்தும் வலுவாகப் பயன்படுத்தி போக்குவரத்து வண்டிகளைச் செலுத்துதல் விலங்கு-வலுப் போக்குவரத்து ஆகும். விலங்கு வலுப்போக்குவரத்தில் பல்வேறு விலங்குகள் பண்டைதொட்டுப் பயன்படுத்தப் பட்டுவருகின்றன. வான்வழி ஒரு நிலை இறக்கை விமானம், பொதுவாக வானூர்தி என்று அழைக்கப்படும் விமானத்தை விடக் கனமான ஒரு விமானம் ஆகும், இங்கு இறக்கைகளுடன் தொடர்புடைய காற்று விமானத்தை உயர்த்தப் பயன்படுகிறது. சுழல் இறக்கை விமானத்திலிருந்து வேறுபடுத்துவதற்காகவே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது, சுழல் இறக்கை விமானத்தில் காற்றுடன் தொடர்புடைய மேற்பரப்பு விமானத்தை உயர்த்துவதற்காக இயங்குகிறது. சிலவகை சுழல் விமானங்களில் நிலை இறக்கை மற்றும் சுழல் இறக்கை என்ற இரண்டு விதமான இறக்கைகளும் பயன்படுகின்றன. நிலை இறக்கை விமானங்கள் சிறிய பயிற்சி விமானங்கள் முதலாக பெரிய இரணுவ சுமையேற்றி விமானங்கள் வரையில் பயனாகின்றன. இறக்கைகளுக்கு மேலாக காற்று இயக்கமும், இறங்கும் பகுதியும் விமானப் போக்குவரத்திற்கு தேவையான இரண்டு காரணிகள் ஆகும். பராமரிப்பு, மீளமைத்தல், எரிபொருள் நிரப்புதல், சரக்கு மற்றும் பயணிளை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றிற்காக பெரும்பாலான விமானங்களுக்கு உள்கட்டமைப்புடன் கூடிய ஒரு விமான நிலையமும் தேவைப்படுகிறது. விமானங்கள் பறப்பதற்கும், கீழிறங்குவதற்கும் ஏராளமான நிலம் மற்றும் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. சிலவகை விமானங்கள் பனிக்கட்டி மற்றும் அமைதியான நீரில் இருந்து உயரவும் இறங்கவும் திறன் கொண்டவையாக உள்ளன. இராக்கெட்டுகளுக்கு அடுத்ததாக விமானங்களே மிக வேகமான போக்குவரத்து முறை ஆகும். வர்த்தக விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு 955 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குகின்றன. ஒற்றை இறக்கை விமானங்கள் 555 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குகின்றன. பொதுவாக விமானங்கள், மக்களையும் சரக்குகளையும் நீண்ட தூரங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்கின்றன. ஆனால் அதிக செலவும் ஆற்றலும் பயன்படுத்தப்படுகிறது. குறுகிய தூரம் அல்லது அணுக முடியாத இடங்களில் சுழலிறக்கை விமானங்கள் பயன்படுகின்றன. ஏப்ரல் 28, 2009 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தி கார்டியன் கட்டுரை, 500,000 பேர் எந்த நேரத்திலும் விமானங்களில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது". தொடர்வண்டிப் போக்குவரத்து இரயில் பாதை என்று அழைக்கப்படும் இரண்டு இணை எஃகு தண்டவாளங்களின் தொகுப்பு மீது ஒரு இரயில் நகர்ந்து செல்வதனால் இரயில் போக்குவரத்து இயங்குகிறது. நிலையான இடைவெளிக்காக தண்டவாளங்கள், மரங்கள், கற்கூழ் அல்லது எஃகு ஆகியவற்றின் மீது செங்குத்தாக இணைக்கப்படுகின்றன. தண்டவாளங்கள் மற்றும் செங்குத்துத் தூண்கள் ஆகியவையும் கற்கூழால் ஆன ஒர் அடித்தளத்தின் மீது பொருத்தி வைக்கப்படுகின்றன. மாற்று முறைகள் மோனோ இரயில் மற்றும் மக்லெவ் போன்றவை மாற்று வழிமுறைகளாகும். ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட பெட்டிகள் சேர்ந்து இரயில் வாகனம் உருவாகிறது. பயணிகள் அல்லது சரக்குகளை எடுத்துச் செல்லக்கூடிய தொடர்ச்சியான பெட்டிகள், மின்னாற்றல் மூலம் இயங்கும் ஒரு வாகனத்தால் அனைத்து பெட்டிகளும் இழுக்கப்படுகின்றன. நீராவி, டீசல் அல்லது தண்டவாளத்தின் பக்கமாக அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளால் மின்சாரம் வழங்கப்பட்டு தொடர் வண்டி இயக்கப்படுகிறது. மாற்றாக, சில அல்லது அனைத்து பெட்டிகளும் மின்னிணைப்பால் இணைக்கப்பட்டு பல அலகுகளாகவும் இயக்கப்படுகின்றன. மேலும், குதிரைகள், கேபிள்கள், புவி ஈர்ப்பு சக்தி, வாயுக்கள் மற்றும் வாயு விசையாழிகளாலும் கூட இரயில்கள் இயக்கப்படுவதுண்டு. சாலையில் செல்லும் இரப்பர் சக்கர வாகனங்களைக் காட்டிலும் இரயில்கள் குறைவான உராய்வைக் கொண்டு நகர்கின்றன. நகரங்களை இணைக்கும் தொலைதூர இரயில் சேவை அமைப்புகள் நகரங்களை இணைக்கின்றன. அதிநவீன இரயில்கள் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ள பாதைகளில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகம் வரைக்கும் பயணிக்கின்றன. பிராந்திய மற்றும் பயணிகள் ரயில்கள் புறநகர்பகுதியையும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளையும் நகரங்களுடன் இணைக்கின்றன. அதே நேரத்தில் நகர்ப்புற போக்குவரத்துக்காக அதிக திறன் கொண்ட டிராம் மற்றும் விரைவு வண்டிகள் பெரும்பாலும் நகரின் பொது போக்குவரத்துக்கான முதுகெலும்பாக உள்ளன. சரக்கு ரயில்கள் பாரம்பரியமாக பெட்டிகளைப் பயன்படுத்துகின்றன, இவற்றுக்காக கைகளால் ஏற்றுதல் மற்றும் சரக்குகளை இறக்குதல் ஆகிய செயல்கள் தேவைப்படுகின்றன. 1960 களில் இருந்து கொள்கலன் ரயில்கள் சரக்குகளை ஏற்றிச் செல்வதில் ஆதிக்கம் செலுத்துகின்றான. அதே நேரத்தில் பெரிய அளவிலான சரக்குகளை இடம்பெயர்த்துச் செல்ல இதற்காகவே இரயில்கள் அர்ப்பணிப்பு செய்யப்பட்டு அதன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. சாலை போக்குவரத்து சாலை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களுக்கு இடையில் அமைந்து ஒரு அடையாளத்தைக் காட்டக்கூடிய வழியாகும் . பாதை அல்லது சாலை என்பவை பொதுவாக மென்மையானவையாக பண்படுத்தப்பட்டு எளிதாக அல்லது சுலபமான பயணத்தை ஒருவருக்கு அனுமதிக்கத் தயாராக உள்ளன ; தேவைப்படாவிட்டாலும், வரலாற்று ரீதியாக பல சாலைகள் எந்தவொரு முறையான கட்டுமான அல்லது பராமரிப்புமின்றி எளிதில் அடையாளம் காணக்கூடிய பாதைகளாக இருந்தன .நகர்ப்புறங்களில், சாலைகள் நகரம் அல்லது கிராமம் வழியாக செல்கின்றன. அவை நகர்ப்புறத்திற்கான இட ஒதுக்கீடு மற்றும் பாதை போன்ற இரட்டை செயல்பாடுகளை வழங்குகின்றன . சக்கரங்களால் இயங்கும் உந்தூர்திகள் மிகவும் பொதுவான சாலை வாகனங்களாக பயணிகளை சுமப்பவையாக உள்ளன. பேருந்துகள், லாரிகள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் போன்றவை இவ்வகை வாகனங்களாகும். 2010 ஆம் ஆண்டு வரை, உலகமெங்கும் 1.015 பில்லியன் வாகனங்கள் இருந்தன என்று கணக்கிடப்பட்டது. பயணிகளுக்கு சாலை போக்குவரத்து மிகவும் சுதந்திரமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கும், ஒரு வரிசையிலிருந்து மறு வரிசைக்கும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியை சாலைப்போக்குவரத்து அளிக்கிறது. இருப்பிடம், திசை, வேகம் மற்றும் பயண நேரங்களின் மாற்றம் முதலான நெகிழ்வுகளை மற்ற போக்குவரத்து முறைகளில் சாலை போக்குவரத்து வாயிலாக மட்டுமே வீட்டுக்கு வீடு நிறுத்திச் செல்லும் சேவையை அளிக்க இயலும். மோட்டார் வாகனங்கள் குறைந்த அளவிலான திறன் கொண்ட வாகனங்களாக இருந்தாலும், அதிக ஆற்றலும் பரப்பளவும் இவற்றுக்கும் தேவையாகும். நகரங்களில் இரைச்சல் மற்றும் காற்று மாசுபாட்டிற்கு இவையே முக்கிய ஆதாரங்களாகும். குறைந்த செலவில் அதிக நிகிழ்வுத்தன்மை கொண்ட சொகுசான பயணத்தை பேருந்துகள் அனுமதிக்கின்றன . சரக்குகளை கொண்டு செல்வதில் ஆரம்பம் மற்றும் இறுதி நிலைகள் பெரும்பாலும் சரக்குந்துகளிலேய நிறைவடைகின்றன. நீர்வழிப் போக்குவரத்து கடல், ஏரி, கால்வாய் அல்லது நதி போன்ற நீர்வழிகளில் நீரூர்திகள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதே நீர்வழிப் போக்குவரத்து எனப்படும். பரிசல், படகு, கப்பல், பாய்மரப்படகு போன்றவை நீரூர்திகளாகும். இவைகள் இயக்கப்படுவதற்கு மிதப்பாற்றல் அவசியமாகிறது. கட்டுமானம், பராமரிப்பு மற்றும் தோற்றம் முதலானவை நீர்வழிப் போக்குவரத்தில் மேலோங்கி நிற்கும் அம்சங்களாகும். 19 ஆம் நூற்றாண்டில், முதலாவது நீராவி கப்பல்கள் வளர்ச்சியடைந்தன. கப்பலை நகர்த்துவதற்கு உதவும் துடுப்பு சக்கரத்தை அல்லது உந்தியை ஓட்டுவதற்கு ஒரு நீராவி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு இவை உருவாக்கப்பட்டன. நீராவி ஒரு கொதிகலனில் மரம் அல்லது நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் இந்நீராவி வெளியெரி இயந்திரத்தின் மூலம் அளிக்கப்பட்டது. இப்போது பெரும்பாலான கப்பல்களில் உள்ளெரி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் பங்கர் பெட்ரோலியம் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற சில கப்பல்கள் நீராவியைத் தயாரிக்க அணு சக்தியைப் பயன்படுத்துகின்றன. பொழுதுபோக்கு அல்லது கல்விச் செயல்திறன் படகுகள் இன்னும் காற்று சக்தியை பயன்படுத்துகிறது, சில சிறிய கைவினைப் படகுகளில் உள்ளெரி பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. பயணம் மெதுவாக இருப்பினும், நவீன கடல் போக்குவரத்து என்பது பெரிய அளவிலான பொருட்களைச் சுமந்து செல்வதற்கான மிகவும் திறமையான ஒரு போக்குவரத்து முறையாகும். வர்த்தக கப்பல்கள், கிட்டத்தட்ட 35,000 எண்ணிக்கையில், 2007 ஆம் ஆண்டில் மட்டும் 7.4 பில்லியன் டன் சரக்குகளை சுமந்துள்ளன. கடற்போக்குவரத்திற்கான செலவு விமான போக்குவரத்தை விட சிக்கனமாக உள்ளது. குறுகிய கடல் போக்குவரத்தும் பாய்மரப் பயணமும் கடலோரப்பகுதிகளில் பயன்பாட்டிலுள்ளன short sea shipping and ferries remain viable in coastal areas.. பிற போக்குவரத்து முறைகள் குழாய்வழிப் போக்குவரத்து ஒரு குழாயினூடாக பொருட்களை அனுப்புகிறது. பொதுவாக திரவம் மற்றும் வாயுக்கள் இம்முறையில் அனுப்பப்படுகின்றன, ஆனால் வாயு குழாய்களில் அமுக்கப்பட்ட காற்றைப் பயன்படுத்தும் காற்றியக்கக் குழாய்கள் மூலம் திடப்பொருட்களும் அனுப்பப்படுகின்றன. நிலைப்புத் தன்மை மிக்க திரவங்கள், வாயுக்கள் எதுவாக இருப்பினும் இம்முறையில் அனுப்பப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட குழம்பு, நீர் மற்றும் பியர் ஆகியவை குறுகிய தூரங்கள் போக்குவரத்திற்கான அமைப்புகளால் செலுத்தப்படுகின்றன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை நீண்ட அமைப்புகள் மூலம் செலுத்தப்படுகின்றன. கம்பிவழிப் போக்குவரத்து என்பது பரந்த முறையில் பயன்பாட்டில் உள்ளது, இங்கு உள்ளக மின்சக்திக்கு பதிலாக கம்பிகளால் வாகனங்கள் இழுக்கப்படுகின்றன. பொதுவாக செங்குத்தான சாய்வுத் தொலைவுகளில் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக வான்வழி வாகனங்கள், மின்தூக்கிகள், வான்தூக்கிகள், நகரும் படிகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றனர். இவற்றுள் சில ஓடும் பட்டைகளைப் பயன்படுத்துபவை எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. விண்வெளிப் பறத்தல் மூலம் புவியின் வளிமண்டலத்திலிருந்து விடுபட்டு விண்வெளிக்குச் செல்ல விண்வெளி ஊர்திகள் பயன்படுகின்றன. இதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கும் அறிவியல் சோதனைகளை நடத்துவதற்கும் என அரிதாகவே விண்வெளிப் பறத்தல் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், மனிதன் சந்திரனில் இறங்கியுள்ளான் சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களுக்கும் ஆய்வுக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. துணை சுற்றுப்பாதை விண்வெளிப்பறத்தல் முறையில் பூமிக்குள் ஒரு இடத்திலிருந்து பூமிக்குள்ளேயே உள்ள ஒரு தொலைதூர இடத்திற்கு செல்வது மிக வேகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. புவியின் தாழ் சுற்றுப்பாதைப் பகுதியில் விரைவான போக்குவரத்தை அடைய முடியும் என்கிறார்கள். விளைவுகள் பொருளாதாரம் பல்வேறு இடங்களின் உற்பத்தியையும், உற்பத்தி நுகர்வையும் ஏற்படுத்துவதற்கு போக்குவரத்து என்பது ஒரு முக்கிய தேவையாக உள்ளது. வரலாறு முழுவதும் போக்குவரத்து விரிவடைந்து வந்துள்ளது. சிறந்த போக்குவரத்து அதிக வர்த்தகத்தையும் மக்கள் பரவலையும் அனுமதிக்கிறது. பொருளாதார வளர்ச்சியானது எப்போதும் போக்குவரத்து வளர்ச்சி அதிகரிப்பதைச் சார்ந்துள்ளது. மேலும் போக்குவரத்துத் துறையால் ஏற்படும் ஆற்றல் இழப்பும் பெரிய சிக்கலை உருவாக்குகிறது. நவீன நகரங்களும் சமூகங்களும் திட்டமிடப்பட்டு செயல்படுவதால், வீடு மற்றும் வேலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு வழக்கமாக உருவாக்கப்படுகிறது, பணியிடங்களை நோக்கி, படிக்கும் இடங்களை நோக்கி, ஓய்விடங்களை நோக்கி அல்லது தற்காலிகமாக மற்ற தினசரி நடவடிக்கைகளை நோக்கி மக்கள் இடமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சுற்றுலா பயணம், வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் போக்குவரத்து இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. போக்குவரத்துத் திட்டமிடல் புதிய உள்கட்டமைப்பு தொடர்பான அதிக பயன்பாடுகளையும் குறைந்த தாக்கங்களையும் போக்குவரத்துத் திட்டமிடல் அனுமதிக்கிறது. திட்டமிடுபவர்கள் போக்குவரத்து முன்கணிப்பு மாதிரிகளைப் பயன்படுத்தி, எதிர்காலப் போக்குவரத்து முறைகள் கணிக்க முடியும். விநியோக சங்கிலியின் ஒரு பகுதியாகக் கருதி போக்குவரத்தைத் திட்டமிட போக்குவரத்து உரிமையாளர்களை செயற்பாட்டு நிலையில் ஏற்பாட்டியல் அனுமதிக்கிறது. ஒழுங்குமுறைக் கொள்கையை உருவாக்குவதில் ஓர் அங்கமாக விளங்கும் போக்குவரத்துப் பொருளாதாரம் மூலமாகவும் போக்குவரத்துத் துறை ஆராயப்பட்டது. பயணத்தலைமுறை, பயண விநியோகம், பயணத் தேர்வு, பயணப்பாதை நியமபிப்பு போன்ற அம்சங்களை குடிமுறைப் பொறியியலின் துணைப்பிரிவான போக்குவரத்துப் பொறியியல் கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போக்குவரத்து பொறியியல் மூலமே செயற்பாட்டு நிலையும் கையாளப்பட வேண்டும். போக்குவரத்து முறைமை தேர்வும், அதிகரிக்கும் திறனும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதால், போக்குவரத்து பெரும்பாலும் சர்ச்சைக்குரியாக பொருளாகவே பார்க்கப்படுகிறது. வாகன போக்குவரத்து பொதுமக்களை துயருக்கு ஆளாக்குவதையும் காணலாம், தனி நபருக்காக நெகிழும் வசதிவாய்ப்புகள், அனைவருக்குமான இயற்கை மற்றும் நகர்ப்புற சூழலை மோசமடையச் செய்கின்றன. வளர்ச்சி அடர்த்தி, பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக சிறந்த இடவசதி பயன்பாட்டை அனுமதிக்கின்ற போக்குவரத்து முறையைப் பொறுத்தே வளர்ச்சியின் அடர்த்தி அமைகிறது. அதிகமான உள்கட்டமைப்பும், மிக அதிகமான வாகன உற்பத்தியை அதிகப்படுத்துவதும் பல நகரங்களில் அதிக போக்குவரத்து நெரிசலையும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகின்றன. பாரம்பரிய நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்கும் இந்நிலை சமீபத்து ஆண்டுகளில் மட்டுமே பல இடங்களில் உள்ளது. போக்குவரத்தும் சுற்றுச்சூழலும் போக்குவரத்திற்காகவே ஆற்றல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உலகின் பெட்ரோலிய வளத்தில் பெரும்பகுதி இதற்காகவே எரிக்கப்படுகிறது. இதனால் நைட்ரசு ஆக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் உமிழப்பட்டு சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது . மிகவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிரிவாக உள்ள போக்குவரத்துத் துறையின் பங்கு இதில் அதிகமாகும் . இதிலும் குறிப்பாக துணை அலகான சாலைப் போக்குவரத்து மிகமிக அதிகமான மாசை உருவாக்குகிறது . வளர்ந்த நாடுகளில் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைச் சட்டங்கள் மூலம் தனிப்பட்ட வாகனங்களின் வாயு உமிழ்வுகள் குறைக்கப்பட்டுள்ளன . இருப்பினும், வாகனங்களின் எண்ணிக்கையும், பயன்பாடும் அதிகரித்தபடியுள்ளது. சாலைப் போக்குவரத்தில் வெளிப்படும் கார்பன் அளவைக் குறைப்பதற்கு சில வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகின்றன . எரிசக்தியின் பயன்பாடும், உமிழ்வுகளும் பெரும்பாலும் போக்குவரத்து முறைகளிடையே வேறுபடுகின்றன. எனவே, மின்மயமாக்கல் மற்றும் ஆற்றல் செயல்திறன் மேம்பாடு போன்ற மாற்றங்களை சுற்றுச்சூழல்வாதிகள் பரிந்துரைக்கின்றனர். போக்குவரத்து நெரிசல், நகர்ப்புற விரிவாக்கம் போன்ற இதர தாக்கங்கள் போக்குவரத்து வளர்ச்சியால் விளைகின்றன. இயற்கை வாழ்விடம் மற்றும் விவசாய நிலங்கள் குறைகின்றன. பூமியின் காற்றுத் தரம், அமில மழை, புகை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் கணிசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக அளவில் போக்குவரத்து உமிழ்வுகளை குறைத்தால் மட்டுமே நேர்மறையான விளைவுகளை எதிர்பார்க்கலாம் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் . இவற்றையும் காண்க வண்டி பாலம் மேற்கோள்கள் புற இணைப்புகள் Transportation from UCB Libraries GovPubs America On the Move An online transportation exhibition from the National Museum of American History, Smithsonian Institution World Transportation Organization The world transportation organization (The Non-Profit Advisory Organization) போக்குவரத்து உற்பத்தியும், தயாரிப்பும்
1202
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். "வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். வாஸ்து சாஸ்திரம் என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். வேதத்தில் வாஸ்து சாஸ்திரம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் (Concrete) கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை. வாஸ்து பூமிபூஜை வாஸ்து பூமிபூஜையின் அடிப்படை தத்துவம் ஒரு கட்டிடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே. பண்டைய வாஸ்து சாஸ்திர நூல்கள் அதர்வ வேதம் தவிர வராஹமிஹிரரால் ஆக்கப்பட்ட பிருஹத் சம்ஹிதை என்னும் சமஸ்கிருத சோதிட நூலிலும் வாஸ்து சாஸ்திரம் பற்றிக் குறிப்பிடத்தக்க அளவு தவல்கள் உள்ளன. மயனால் எழுதப்பட்ட மயமதம், மானசாரரால் ஆக்கப்பட்ட மானசாரம், விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம் முதலிய பல நூல்கள் தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுந்த நூல்களாகும். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறது. இதில் கண்டவை 1) விசுவதர்மம், 2) விசுவேசம், 3) விசுவசாரம், 4) விருத்தம், 5) மிகுதாவட்டம், 6) நளம், 7) மனுமான், 8) பானு, 9) கற்பாரியம், 10)சிருஷ்டம், 11) மானசாரம், 12) வித்தியாபதி, 13) பாராசரியம், 14) ஆரிடகம், 15) சயித்தியகம், 16) மானபோதம், 17) மயிந்திரமால், 18) வஜ்ரம், 19) ஸௌம்யம், 20) விசுவகாசிபம், 21) கலந்திரம், 22) விசாலம், 23) சித்திரம், 24) காபிலம், 25) காலயூபம், 26) நாமசம், 27) சாத்விகம், 28) விசுவபோதம், 29) ஆதிசாரம், 30) மயமான போதம், 31) மயன்மதம், 32) மயநீதி என்பனவாகும். இவற்றுள் பல இன்று இல்லை. இப் பட்டியலில் காணப்படும் இன்றும் புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மயன்மதம் (மயமதம்) என்பவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டாலும், தென்னிந்திய நுல்களாகும். வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும் கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன. முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்ட திக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள். இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப் படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும்போது, வடகிழக்கில் தலையும், தென் மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப் படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகிறான் இவற்றையும் பார்க்கவும் சிற்பநூல்கள் இந்து மெய்யியல் கருத்துருக்கள் சோதிடம் கட்டிடக்கலை இந்து சமய கட்டிடக்கலை இந்தியாவில் மூடநம்பிக்கைகள் இந்துக் கோயில் கட்டிடக்கலை இந்தியக் கட்டிடக்கலை
1203
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
குகென்ஹெயிம் அருங்காட்சியகம்
குகென்ஹெயிம் நூதனசாலை பில்போ ஸ்பெயின், பாஸ்க் நாட்டிலுள்ள பில்போவில் அமைந்துள்ள, ஒரு நவீனஓவிய நூதனசாலையாகும். இது, சொலொமன். ஆர் குகென்ஹெயிம் பவுண்டேஷன் நிறுவனத்தின் பல நூதனசாலைகளுள் ஒன்றாகும். பிராங்க் கெரி (Frank Gehry) என்னும் கட்டிடக்கலைஞருடைய நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இக் கட்டிடம், 1997ல் பொதுமக்களுக்காகத் திறந்துவைக்கப்பட்டதுமே, உலகின் கவர்ச்சிகரமான, நவீன கட்டிடங்களிலொன்றாகப் பிரபலமானது. இந்த நூதனசாலையின் வடிவமைப்பும், கட்டுமானமும், பிராங்க் கெரியின் பாணியினதும், வழிமுறைகளினதும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கெரியின் மற்ற கட்டிடங்களைப் போலவே, இக் கட்டிடமும், தீவிர சிற்பத்தன்மையுடையதாகவும், இயல்பான வளைவுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. முழுக்கட்டிடத்தில் எங்கேயுமே தட்டையான மேற்பரப்பு இல்லையென்று கூறப்படுகிறது. நெடுஞ்சாலைப் பாலமொன்று கட்டிடத்தின் ஒரு பகுதிக்குக் குறுக்கே செல்கிறது, கட்டிடத்தின் பெரும் பகுதி, கடதாசித் தடிப்புள்ள டைட்டேனியம் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. கட்டிடம், துறைமுக நகரமொன்றில் அமைக்கப்பட்டதால், ஒரு கப்பலைப்போலத் தோன்றவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மினுக்கமான தகடுகள் மீன் செதில்களை ஒத்துள்ளன. இவை, கெரியின் வடிவமைப்புகளில் அடிக்கடி காணப்படும் organic வடிவங்களைக் குறிப்பாக மீன்போன்ற அமைப்புக்களைப் பிரதிபலிப்பதுடன், அது அமைந்திருக்கும் நேர்வியன் ஆற்றையும் நினைவூட்டுகிறது. அத்துடன் கெரியின் வழமையான தன்மைக்கு ஒப்பக் கட்டிடம் தனித்துவமான, காலத்தோடிசைந்த தொழில்நுட்பத்தின் உற்பத்தியாகவும் உள்ளது. கட்டிடத்தின் வடிவமைப்பில் பெருமளவுக்குக் கணினி உதவி வடிவமைப்பு (Computer aided design) முதலியன பயன்படுத்தப்பட்டன. கட்டிட அமைப்பின் கணனி simulations, முந்திய சகாப்தத்தின் கட்டிடக்கலைஞர்களால் நினைத்துப் பார்த்திருக்க முடியாத பல விடயங்களை முடியக்கூடியனவாக்கிற்று. கட்டுமானத்தின்போது, கற்பலகைகள் "லேசர்" எனப்படும் சீரொளிக் கதிர் கொண்டு வெட்டப்பட்டன. இந்த நூதனசாலை, பில்போ நகரத்துக்கும், பாஸ்க் நாட்டிற்குமான புத்தூக்க முயற்சிகளின் ஒரு பகுதியாகத் திறந்துவைக்கப்பட்டது. திறந்துவைக்கப்பட்ட உடனேயே, குகென்ஹெயிம் பில்போ, உலகம் முழுவதிலுமிருந்து பயணிகளைக் கொண்டுவரும், ஒரு பிரபல சுற்றுலாக் கவர்ச்சியுள்ள இடமாகியது. பில்போவை உலகப்படத்தில் இடம்பெறச் செய்த பெருமையில் பெரும் பங்கு இக்கட்டிடத்துக்கும் உரியதென்று பரவலாகக் கருதப்படுகிறது. இங்குள்ள காட்சிப்பொருள்கள் அடிக்கடி மாறுகின்றன. பெரும்பாலானவை 20 ஆம் நூற்றாண்டுக் கலைப் பொருட்களாகும். பாரம்பரிய ஓவியங்களும், சிற்பங்களும் சிறுபான்மையே. படத்டொகுப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரபூர்வ இணையத் தளம் இக் கட்டிடம் பற்றிய விமர்சனம் Google Maps satellite view of Guggenheim Museum Bilbao Scholars on Bilbao - academic works that analyse Bilbao's urban regeneration Guggenheim Museum Bilbao - Project for Public Spaces Hall of Shame Pictures of the Guggenheim Museum Bilbao Guggenheim Museum in an artistic short movie Bilbao. Basque Pathways to Globalization எசுப்பானிய அருங்காட்சியகங்கள் எசுப்பானியாவின் 12 புதையல்கள்
1204
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பெற்றோனாசு கோபுரங்கள்
பெட்ரோனாஸ் கோபுரங்கள் அல்லது பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் (ஆங்கிலம்: Petronas Towers; மலாய்: Menara Petronas; சீனம்: 大马国油双峰塔) என்பது மலேசியா, கோலாலம்பூரில் அமையப் பெற்றுள்ள உலகிலேயே ஐந்தாவது மிக உயரமான கட்டிடங்களாகும். 20-ஆம் நூற்றாண்டின் மிக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இந்தக் கட்டிடம் ஆகும். 2003 அக்டோபர் 17-ஆம் தேதி தாய்ப்பே 101 வானளாவிக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, பெட்ரோனாஸ் கோபுரங்கள்தான் உலகின் உயரமான கட்டிடங்களாக இருந்து வந்தன. எனினும், உலகின் மிக உயரமான இரட்டைக் கோபுரங்களாக இன்னமும் இருந்து வருகின்றன. கோலாலம்பூர் மாநகரின் அடையாளச் சின்னமாகவும் இருந்து வருகிறது. சீசர் பெலி என்னும் கட்டிடக் கலைஞரால் 1998-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும், அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துருப் பிடிக்காத உருக்குகளையும், கண்ணாடிகளையும் பயன்படுத்தி இந்த 88 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடிகள் உயரத்தில் கட்டிட உச்சியைக் கொண்டு இருந்தாலும், அதன் உச்சியில் அமைந்துள்ள கூரிய அமைப்புக்கள் 1483 அடி உயரத்தைத் தொடுகின்றன. மலேசியாவின் முஸ்லிம் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும், இஸ்லாமியக் கலையில் காணப்படும் வடிவ அமைப்பைக் கொண்டதாகவும் இந்தக் கட்டிடம் அமைந்து உள்ளது. வரலாறு 1990-களில், மலேசியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், உலகின் உயரமான கட்டிடத்தைக் கட்ட விரும்பியது. சியர்ஸ் கோபுரங்கள் போன்ற உலகின் மற்ற உயரமானக் கட்டிடங்கள் அலுவலகப் பயன்பாட்டுக்குரிய தளங்களைக் கொண்டுள்ளன. அந்த உயரமான கட்டிடங்களைப் போல ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு பெட்ரோனாஸ் ஏற்பாடுகளைச் செய்தது. பெட்ரோனாஸ் கோபுரங்களைக் கட்டுவதற்கான திட்டங்கள் 1992 ஜனவரி 1-இல் வரையப்பட்டன. பலமான காற்று வீசும் போது ஏற்படும் விளைவுகள், கட்டமைப்புக் கூறுகள் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. 1993 மார்ச் 1-இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. கட்டிடங்கள் கட்டப்படும் பகுதிகளில் 30 மீட்டர் (98 அடிகள்) ஆழத்திற்கு மண் தோண்டி எடுக்கப்பட்டது. 21 மீட்டர் உயரத்திற்கு காப்புச் சுவர் தோண்டிய மண்ணை அப்புறப் படுத்துவதற்கு ஒவ்வோர் இரவும் 500 சுமையுந்துகள் பயன்படுத்தப்பட்டன. பகலில் மற்ற வேலைகள் நடைபெற்றன. அதன் பின்னர், ஒவ்வொரு கட்டிடத்தின் அடித்தளத்தில், 13,200 கனமீட்டர் (470,000 கன அடி) கல்காரை பைஞ்சுதை (concrete) 54 மணி நேரத்திற்கு தடைபடாமல் ஊற்றப்பட்டது. ஆக மொத்தம் 104 பைஞ்சுதை பாளங்கள் உருவாக்கம் பெற்றன. தொடர்ந்து 21 மீட்டர் உயரத்திற்கு காப்புச் சுவர் கட்டப்பட்டது. அதன் சுற்றளவு 1,000 மீட்டர்கள். இந்தக் காப்புச் சுவரை மட்டும் 40 தொழிலாளர்கள், ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமாக இரண்டு ஆண்டுகளில் கட்டினர். கோலாலம்பூர் குதிரைப் பந்தயத் திடல் 1994 ஏப்ரல் 1-இல் தலைக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1996 ஜனவரி 1-இல் உட்புற வடிவமைப்புகள், தளவாடப் பொருட்களைப் பொருத்தும் வேலைகள் முடிவடைந்தன. 1996 மார்ச் 1இல் உச்சிக் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. 1997 ஜனவரி 1இல் பெட்ரோனாஸ் ஊழியர்களில் முதல் தொகுதியினர் பணிபுரியத் தொடங்கினர். 1999 ஆகஸ்ட் 1இல், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். முன்பு கோலாலம்பூர் குதிரைப் பந்தயத் திடல் இருந்த இடத்தில்தான் இப்போதைய பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டப்பட்டன. இருந்தாலும் தொடக்கக் கட்டத்தில் நில ஆய்வுகள் செய்யும் போது அசல் கட்டுமான நிலப்பகுதி ஒரு செங்குத்துப் பாறையின் விளிம்பில் அமரும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலப்பகுதியின் பாதி அளவில் அழுகிய சுண்ணப்பாறைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் கட்டுமானப் பகுதி 61 மீட்டர்கள் (200 அடி) தூரத்திற்கு அப்பால் நகர்த்தி வைக்கப்பட்டது. 114 மீட்டர் கற்காரைக் குத்தூண்கள் ஒட்டு மொத்தக் கட்டுமானப் பகுதியும் திடமான ஒரு கற்பாறையில் அமரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மிக ஆழமான அடித்தளங்களை அமைப்பதற்காக மிக ஆழமான குழிகள் தோண்ட வேண்டி வந்தது. 60 லிருந்து 114 மீட்டர் உயரமுள்ள கற்காரைக் குத்தூண்கள் ஊன்றப்பட்டன. ஏறக்குறைய 104 கற்காரைக் குத்தூண்கள் கட்டுமானப் பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோனாஸ் கோபுரங்களின் அடித்தளங்களில் பல ஆயிரம் டன்கள் பைஞ்சுதை கல்காரை ஊற்றப்பட்டுள்ளது. இந்த அடித்தளங்களுக்கான வேலைகள் 12 மாதங்களில் முடிவுற்றது. இந்த ஒரு வேலையை மட்டும் பாச்சி சோலேதாஞ்சே () எனும் பிரித்தானிய நிறுவனம் செய்து முடித்தது. இதற்கு டோமோ ஒபியாசே எனும் ஹைத்திய பொறியியலாளர் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தார். இரண்டு கட்டுமான கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் ஆறு ஆண்டுகளில் கட்டிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் வரையறுத்தது. அதன் விளைவாக, ஒவ்வொரு கோபுரத்திற்கும் ஒரு கட்டுமான கூட்டமைப்பு என இரண்டு கட்டுமான கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மேற்கு கோபுரத்தைக் கட்டும் பொறுப்பை (மேல் வலது புகைப்படத்தில் வலதுபுறமாக இருக்கும் கோபுரம்) ஜப்பானிய கட்டுமான கூட்டமைப்பான ஹசாமா கார்ப்பரேசன் (Hazama Corporation) ஏற்றுக் கொண்டது. கிழக்கு கோபுரத்தைக் கட்டும் பொறுப்பை (மேல் வலது புகைப்படத்தில் இடதுபுறமாக இருக்கும் கோபுரம்) தென் கொரிய கட்டுமான கூட்டமைப்பான சாம்சுங் இஞ்ஜினியரிங் & குக்டோங் இஞ்ஜினியரிங் (Samsung Engineering & Construction and Kukdong Engineering & Construction) ஏற்றுக் கொண்டது. கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஆரம்பக் கட்டத்தில் வழக்கமாக நடைபெறும் உறுதிக்கலவை வலிமைச் சோதனையில் (routine strength test) ஒரு பகுதியில் பலகீனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் தற்காலிக நிறுத்தம் கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. அதுவரையில், கோபுரங்களில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த எல்லாப் பகுதிகளிலும் சோதனைகள் செய்யப்பட்டன. ஒரே ஒரு மாடியில், ஒரே ஒரு பகுதி மட்டும் பலகீனமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்தப் பகுதி தகர்க்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், ஒரு நாளைக்கு 700,000 அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டது. அதனால், உறுதிக்கலவைகளைத் தயாரிக்க, அங்கேயே மூன்று தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இதில் ஏதாவது ஒரு தொழிற்சாலை தவறான உறுதிக்கலவையைத் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தயார்நிலையில் இருக்கும் மற்ற இரு தொழிற்சாலைகளில் ஒன்று உடனடியாக மாற்றுத் தயாரிப்பில் இறங்கும். இது செலவுகளைக் குறைக்கும் அவசரத் திட்டங்களில் ஒன்றாகும். வான்பாலத்தைக் (sky bridge) கட்டுவதற்கான பொறுப்பை குக்டோங் இஞ்ஜினியரிங் நிறுவனம் (Kukdong Engineering & Construction) ஏற்றுக் கொண்டது. கிழக்கு கோபுரம்தான் முதன்முதலில் வானளாவிச் சென்றது. அப்போதைக்கு அதுதான் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்; மிக உயரமான கோபுரமும்கூட. இவற்றையும் பார்க்கவும் வானளாவி மேற்கோள்கள் மேலும் காண்க கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் வானளாவிகள் மலேசிய பல்லூடகப் பெருவழி மலேசியக் கட்டிடங்கள்
1205
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
சியேர்ஸ் கோபுரம்
சியேர்ஸ் கோபுரம் (Sears Tower) சிகாகோ, இலினாயிசிலுள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். கட்டுமானப்பணிகள் 1970 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி, 1973 மே 4ல் இதன் அதியுயர் உயரத்தை அடைந்தது. இது கட்டி முடிக்கப்பட்டபோது, நியூயார்க்கிலிருந்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களை உயரத்தில் விஞ்சி உலகின் அதியுயர்ந்த கட்டிடம் என்ற பெருமை பெற்றது. இது 110 மாடிகளைக்கொண்ட 443 மீட்டர் (1454 அடி) உயரமுள்ளதாகும். இக்கட்டிடத்தின் உச்சியிலுள்ள இரண்டு தொலைக் காட்சி அண்டனாக்கள் உட்பட இந்த அமைப்பின் மொத்த உயரம் 520 மீட்டர் (1707 அடி) ஆகும். உச்சியிலுள்ள அலங்கார ஈட்டியமைப்பு உட்பட, 542 மீட்டர் உயரமான, மலேசியா, கோலாலம்பூரிலுள்ள, பெட்ரோனாஸ் கோபுரங்கள் 1997ல், உலகின் அதியுயர்ந்த கட்டிடம் என்ற பெருமையை, சியேர்ஸ் கோபுரத்திடமிருந்து தட்டிக்கொண்டது. சியேர்ஸ் கோபுரம், ஐக்கிய அமெரிக்காவின் அதியுயர்ந்த அலுவலகக் கட்டிடம் என்ற பெருமையையும், அதன் பிரதான வாயிலுக்கருகிலுள்ள நடைபாதையிலிருந்து, அண்டெனா உச்சிவரையுள்ள உயரத்துக்கான உலக சாதனையையும், இன்னும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. உலகின் அதி உயரமான கூரையைக் கொண்ட கட்டிடம் என்ற பெயரையும், அதிகூடிய உயரத்திலுள்ள மக்கள் பயன்படுத்தக்கூடிய தளம் என்ற பெயரையும், அண்மையில், சீன குடியரசில் கட்டப்பட்ட, தாய்ப்பே 101 என்ற கட்டிடத்திடம் இழந்தது. சிகாகோவின் பரவலாக அறியப்படும் சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது. இக் கோபுரத்தின் மேல் தட்டிலுள்ள அவதானிப்புத் தளம், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றது. காற்றுள்ள நாளில், இக் கட்டிடம் ஊசலாடுவதை உல்லாசப் பயணிகள் அனுபவத்தில் அறிந்துகொள்ள முடியும். இங்கிருந்து, ஒரு தெளிவான காலநிலையுள்ள நாளில், இல்லினோயிசின் பரந்த சமவெளிக்கு மேலாகவும், மிச்சிகன் ஏரிக்கு மேலாகவும், நெடுந்தூரம் பார்க்க முடியும். இவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கக் கூடிய வசதியிருந்தும், சிகாகோவின் இரவுக் காட்சியையும், ஏரிக் காட்சியையும் காண்பதற்கு, ஜோன் ஹன்னொக் கட்டிடம் கொண்டுள்ளது போன்ற ஒரு நல்ல அமைவிடம், சியேர்ஸ் கோபுரத்துக்கு இல்லை. இவற்றையும் பார்க்கவும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 அதியுயர் கட்டிடங்கள் உலகின் அதியுயர் அமைப்புகள் ஐக்கிய அமெரிக்க வானளாவிகள்
1206
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%20101
தாய்ப்பே 101
தாய்ப்பே 101 (臺北 101) சின்யீ (Xìnyì) மாவட்டம், தாய்ப்பே, தாய்வான் நாட்டிலமைந்துள்ள, 106 மாடிகளைக் கொண்ட ஒரு வானளாவி (skyscraper) ஆகும். ஆரம்பத்தில் இது, சீன மொழியிலுள்ள, உத்தியோகபூர்வப் பெயரான, தாய்ப்பே அனைத்துலக நிதியப் பெருங் கோபுரக் கட்டிடம் (臺北國際金融大樓 - Taipei International Financial Grand Tower-Building) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்ட, தாய்ப்பே நிதிய மையம் (Taipei Financial Center) என அழைக்கப்பட்டது. அக்டோபர் 2003 இல் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து, துபாய், புர்ஜ் கலிஃபா கட்டடம் 2010 இல் கட்டப்படும் வரை இது உலகின் மிக உயர்ந்த கட்டடமாக இருந்தது. இது உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நகர வாழிடங்களுக்கான கவுன்சில் (Council on Tall Buildings and Urban Habitat (CTBUH)) நியமித்துள்ள, உலகின் உயர்ந்த கட்டிடங்களுக்கான நான்கு பட்டங்களில் இரண்டை இக் கட்டிடம் பெற்றது. இது நில மட்டத்துக்கு மேல் 101 மாடிகளையும், 5 நிலக்கீழ்த் தளங்களையும் உடையது. உயர்ந்த கட்டிடங்களை வகைப்படுத்தும் 4 முறைகள்: நிலத்திலிருந்து அலங்கார உச்சிவரை - இது தற்போது சியேர்ஸ் கோபுரத்திடம் உள்ளது. (529 மீ = 1736 அடி) நிலத்திலிருந்து அமைப்பு உச்சிவரை - முன்னர் பெட்ரோனாஸ் கோபுரங்கள் (452 மீ = 1483 அடி) நிலத்திலிருந்து கூரைவரை - முன்னர் சியேர்ஸ் கோபுரம் (431 மீ = 1430 அடி) நிலத்திலிருந்து அதியுயரத்திலுள்ள ஆட்கள் பயன்படுத்தும் தளம் வரை - தற்போது சியேர்ஸ் கோபுரம் (2004 ல் பயன்பாட்டுக்கு விடப்படும் போது, தாய்ப்பே கோபுரம் இப் பெருமையைப் பெறும்). மேலே சொல்லப்பட்ட வகைகளில், தாய்ப்பே 101 , முறையே பின்வரும் உயரங்களையுடையது. அலங்கார மற்றும் அமைப்பு உச்சிவரை - 508 மீ = 1667 அடி கூரைவரை - 448 மீ = 1470 அடி அதி உயர் தளம் வரை - 438 மீ = 1437 அடி இன்றுவரை கட்டப்பட்டுள்ள வானளாவிகளுள் (skyscraper), பல அம்சங்களில் தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த நிலையிலுள்ளது இதுவேயாகும். இக் கட்டிடத்தில் செக்கனுக்கு ஒரு கிகாபைட்டு வரை வேகமுள்ள பைபர் ஒப்டிக் (fiber-optic) மற்றும் செயற்கைக்கோள் வலையக இணைப்புகள் உண்டு. தோஷிபா(Toshiba) நிறுவனத்தினால் செய்யப்பட்ட, நிமிடத்துக்கு 1008 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய, உலகின் அதிவேக உயர்த்திகள் இரண்டு இங்கே பொருத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கம், புயல் மற்றும் காற்றுத் தாக்கங்களுக்கு எதிராகக் கட்டிடத்தை நிலைப்படுத்துவதற்காக, 800 தொன் அளவுள்ள, tuned mass damper, 88 ஆவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.கோபுரத்துக்கு அருகில் 6 மாடிகளைக்கொண்ட அங்காடியொன்றும் உள்ளது. 2003 ஜூலை 1 ஆம் திகதி, 448 மீட்டர் உயரத்தில், கோபுரத்துக்குக் கூரையிடப்பட்டது. 2003, அக்டோபர் 17 ல், நகர் மேயர் மா யிங் ஜூ அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவொன்றுடன், அதன் உச்சி அமைப்புப் (pinnacle) பொருத்தப்பட்டது. இதன்மூலம், இக்கட்டிடம், பெட்ரோனாஸ் கோபுரத்திலும் 50 மீட்டர் (165 அடி) கூடுதலாக உயர்ந்து உலகின் உயர்ந்த கட்டிடமாகியது. ஆறு மாடிகளைக்கொண்ட அங்காடிக்கட்டிடம் 2003 நவம்பரிலும், மிகுதி அலுவலகக் கட்டிடம் 2004ன் மூன்றாம் காலாண்டிலும் திறந்து வைக்கப்படவுள்ளது. சிலர் இக்கட்டிடம் தாய்வானில் சகஜமான நிலநடுக்கத்துக்கு தாக்குப்பிடியாது என்று கருதினர். 2002, மார்ச் 31ஆம் திகதி ரிக்டர் அளவையில் 6.8 ஆகப் பதிவாகிய புவியதிர்வு ஒன்றினால், அந்த நேரத்தில் அதியுயர்ந்த தளமாக இருந்த இக்கட்டிடத்தின் 56 ஆவது மாடியிலிருந்து, பாரந்தூக்கியொன்று (crane) விழுந்து, 5 பேர் இறந்தபோதிலும், கட்டிடம் பாதிப்புக்குள்ளாகவில்லை. இக்கோபுரம் ரிக்டர் அளவையில் 7 அலகு வரை புவியதிர்வைத் தாங்கக் கூடியதாகவும், நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய பெருஞ் சூறவளியைத் தாங்கக் கூடியதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புக்களும், உசாத்துணைகளும் Taipei Financial Corp : கம்பனித் தகவல்கள், நேரவரிசை, பங்குதாரர்கள், குடியிருப்போர் தகவல்களும், விலைமதிப்பும், செய்திக்கடிதம். http://www.taipei-101.tk/ : தற்போது,அதிகம் பார்க்கப்படும் தாய்ப்பே 101 வலைத் தளம். நாளொன்றுக்கு 500 பார்வையாளர்கள். 500+ படிமங்கள், தொழில்நுட்பத் தரவுகள், மற்றும் கட்டுமான நிகழ்நிலைப்படுத்தல். http://www.taipei101mall.com உத்தியோகபூர்வ தாய்ப்பே 101 அங்காடி வலைத்தளம். வானளாவிகள் தைவான்
1207
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
எம்பயர் ஸ்டேட் கட்டிடம்
நியூயார்க் நகரிலுள்ள 102 மாடிகளைக் கொண்ட ஆர்ட் டெக்கோ கட்டிடமான எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (Empire State Building), ஷ்ரெவ், லாம்ப் மற்றும் ஹேர்மன் அசோசியேட் நிறுவனத்தினால் 1930ல் வடிவமைப்புச் செய்யப்பட்டது. இது 102 ஆவது தளத்திலுள்ள அவதான நிலையம் வரை, 390 மீ உயரம் கொண்டது. 2001 இல் தாக்குதலுக்குள்ளாகி அழிந்துபோன உலக வர்த்தக மையக் கட்டிடம் கட்டப்படுவதற்குமுன், இந்த நகரத்தில் அதி உயர்ந்த கட்டிடமாக இருந்தது. உலகின் அதியுயர் கட்டிடமாகவும் பல ஆண்டுகள் இருந்தது. கிறிஸ்லர் கட்டிடத்திடமிருந்து, உலகின் அதியுயர் கட்டிடமென்ற பெயரைத் தட்டிச் செல்வதற்காக, இதன் கட்டுமானப் பணிகள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன. இக்கட்டிடம், 1931, மே 1ல் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. 1940கள் வரை இதன் பெருமளவு அலுவலகத்தளங்கள் வாடகைக்கு எடுக்கப்படாமலேயிருந்தன. இதன் உச்சியிலுள்ள, பொது அவதான நிலையத்திலிருந்து, நகரின் கவர்ச்சியான காட்சியைக் காணமுடியும். இது பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். கட்டிடத்தின் மேற்பகுதி, ஒளிபாச்சும் மின் விளக்குகளினால், இரவில், பல்வேறு நிற ஒளிகளில், ஒளியூட்டப்படுகின்றது. இந் நிறங்கள் காலங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருத்தமாகத் தெரிவு செய்யப்படுகின்றது. உலக வர்த்தக மையத்தின் அழிவைத்தொடர்ந்து பல மாதங்கள், இது சிவப்பு, வெள்ளை மற்றும் நீலத்தில் ஒளியேற்றப்பட்டது. 1945ஆம் ஆண்டு ஜூலை 28, சனிக்கிழமை மு.ப. 9:49 அளவில் ஒரு B-25 மிச்செல் குண்டுவீச்சு விமானம் 79 ஆம் மாடியின் வடக்குப் பக்கத்தில் , தேசிய கத்தோலிக்க நல்வாழ்வுக் கவுன்சில் அமைந்திருந்த பகுதியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் இறந்தனர். அதனால் ஏற்பட்ட தீ 40 நிமிடத்தில் அணைக்கப்பட்டது. எம்பயர் ஸ்டேட் கட்டிடம், அமெரிக்கக் குடிசார் பொறியியல் சொசைட்டி (American Society of Civil Engineers) யினால் நவீன ஏழு அற்புதங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இது 350 5 ஆவது அவெனியூ, 33ஆவது மற்றும் 34ஆவது வீதிகளுக்கு இடையே, மான்ஹற்றன் மத்திய நகரில் அமைந்துள்ளது. பெயர் நியூயார்க் மாநிலத்தின், "எம்பயர் ஸ்டேட்" என்ற செல்லப் பெயர் தொடர்பிலேயே இக் கட்டிடத்துக்குப் பெயரிடப்பட்டது. திரைப்படங்களில் இக் கட்டிடம் சம்பந்தப்பட்ட, மிகவும் பிரபலமான, மக்கள் கலாச்சார வெளிப்பாடாகக் கருதப்படக்கூடிய ஒரு விடயம், 1933ல், வெளியிடப்பட்ட, கிங் கொங் ஆங்கிலத் திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய பாத்திரமான கிங் கொங் என்னும் இராட்சத மனிதக் குரங்கு, தன்னைப் பிடித்து வைத்திருப்பவர்களிடமிருந்து தப்புவதற்காக, இந்தக் கட்டிடத்தின் உச்சிக்கு ஏறி இறுதியில், அங்கிருந்து விழுந்து இறந்து விடுகிறது. 1983ல் இப் படத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவின் போது, ஒரு காற்றூதப்பட்ட, கிங் கொங் உருவம் உண்மையான எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் வைக்கப்பட்டது. எனினும் இது ஒருபோதும் முழுமையாகக் காற்றூதப்பட்டு இருக்கவில்லை. Love Affair மற்றும் Sleepless In Seattle போன்ற ஆங்கிலத் திரப்படங்களில் இக் கட்டிடத்தின் அவதானிப்பு நிலையம், படத்தில் வரும் காதலர்கள் சந்திக்கும் இடமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரக வாசிகளின் படையெடுப்பு தொடர்பான, ஐ லவ் லூசி படத்திலும் இவ்விடம் இடம் பெறுகின்றது. பப்பற் என்னும் அறிவியற் கற்பனைத் தொலைக்காட்சித் தொடரின் ஒரு அங்கமான தண்டர்பேர்ட்ஸ்'' இக் கட்டிடத்தைத் தண்டவாளங்களிலேற்றி வேறிடத்துக்கு நகர்த்தும் முயற்சியைக் காட்டுகிறது. நிகழ்வுகள் விமான தாக்குதல், 1945 1945ஆம் ஆண்டு ஜூலை 28, சனிக்கிழமை மு.ப. 9:49 அளவில் ஒரு B-25 மிச்செல் என்ற விமானத்தை வில்லியம் பிராங்க்ளின் ஸ்மித் என்பவர் ஓட்டி வந்தார். கடும் பனிப் பொழிவின் காரணமாக, விமானத்தை இயக்க முடியாத சூழ்நிலையில் தவறுதலாக கட்டிடத்தின் வடக்குப் பகுதியிலுள்ள 79 மற்றும் 80ம் தளங்களின் மத்தியில் மோதியது. மோதிய அதிர்ச்சியின் காரணமாக விமானத்தின் எந்திரப்பகுதி, அதற்கு அடுத்த தளத்தின்மீது மோதியது. விமானத்தின் மற்றொரு பாகம், கட்டிடத்தின் உயர்த்தியை தாக்கியது.கட்டிடத்தின் தாக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட தீ, 40 நிமிடங்களில் அணைக்கப்பட்டது. இருப்பினும், 14 பேர் இறந்தனர். அதற்குப் பின்னர் வந்த திங்கட்கிழமை, கட்டிடம் மீண்டும் செயல்படத் துவங்கியது. சம்பவம் நடந்த ஒராண்டு கழித்து, மற்றொரு விமானம் இதேபோல மோத நேரிட்டது. ஆனால், விமான ஓட்டியின் சாதுர்யத்தால் விமானத்தை திசை திருப்பிவிட்டார். தற்கொலைகள் 2006ம் ஆண்டின் சராசரியாக 30க்கும் மேற்பட்டோர், கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கட்டிடத்தின் முதல் தற்கொலையானது, கட்டிடம் முடிப்பதற்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. 1947ம் ஆண்டில் தொடர்ச்சியான மூன்று வாரங்களில், அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்துள்ளனர். மே மாதம் 1ம் நாள் 1947ம் ஆண்டு, எவிலின் மெக்ஹல் (22) என்பவர், 86வது தளத்திலிருந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். திசம்பர் மாதம் 1943ம் ஆண்டு, வில்லியம் லாயடு ராம்போ என்பவரும் அதே தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நவம்பர் மாதம் 3ம் நாள் 1932ம் ஆண்டு, பெட்ரிக் எக்கர்ட் என்பவர் மட்டுமே, கட்டிடத்தின் உயர் மேல்தளமான 102ம் தளத்திலிருந்து குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். தற்கொலை முயற்சிகள் திசம்பர் மாதம் 2ம் நாள் 1979 ஆண்டு, எல்வித்தா ஆதம் என்பவர் 86வது தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால், இடுப்பெழும்பு முறிவுகளுடன் காப்பாற்றப்பட்டார். ஏப்ரல் மாதம் 25ம் நாள் 2013ம் ஆண்டு, 85வது தளத்திலிருந்து ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் சிறு காயங்களுடன் காப்பாற்றப்பட்டார். <center> </center> துப்பாக்கிச்சூடுகள் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திலும் அதன் முன்பக்கத்திலும் இரண்டு முக்கிய துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றுள்ளன.1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத் 23ம் தேதி எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 86 வது தளத்தின் காட்சி மாடத்தில் துப்பாக்கி ஏந்திய ஒருவனால் 7 பேர் சுடப்பட்டனர். 69 வயதுடைய பாரஸ்தீன ஆசிரியரான அபுல் கமால் எனும் பெயருடைய அந்நபர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்ற அறுவர் காயமும் அடைந்தனர்.இசுரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நிகழ்ந்த சச்சரவு சம்பவங்களுக்காக இது நடத்தப்பட்டதாக கூறப்பட்டது . இக்கட்டிடத்தின் ஐந்தாவது வாயிலின் ஓர நடைபாதையில் ஆகஸ்ட் 24, 2012 அன்று 9.00 மணியளவில் ஜெஃப்ரி டி. ஜான்சன் (வயது 58) என்பவர் 2011 ல் தான் பணிநீக்கப்பட்டதால் எழுந்த ஆத்திரத்தால் தன் முன்னாள் சக பணியாளரை சுட்டுக் கொன்றார். துப்பாக்கி ஏந்திய அந்நபரை எதிர்கொண்டு 16 முறை அந்நபரை நோக்கிச் சுட்டனர். இருந்தபோதிலும் இச்சம்பவத்தால் அருகிலிருந்த ஒன்பது பேர் காயமடைந்தனர்.அதில் மூவர் நேரடியாக குண்டுகளால் தாக்கப்பட்டனர். கட்டிடக்கலை உட்பக்க வடிவமைப்பு (Interior) எம்பயர் ஸ்டேட் கட்டிடம் 102 வது தளம் வரை 1,250 அடி (381 மீட்டர்) உயரமும் 2013 அடி (61.9 மீட்டர்) உயரம் கொண்ட உச்சி கோபுரமும் சேர்த்து 1,453 அடி 8 9⁄16 அங்குலம் (443.092 மீட்டர்) உயரம் கொண்டது.இக்கட்டிடத்தின் 2,158,000 சதுர அடிகள் பரக்களவு (200,500 மீ2) கொண்ட 85 அடுக்குகள் வர்த்தகம் மற்றும் அலுவலகப் பயன்பாடுகளுக்கு வாடைகைக்கு விடப்பட்டள்ளது. 86 வது தளத்திர் ஒரு உள் மற்றும் வெளிப்புற பார்வையாளர் மேடை உள்ளது. மீதமுள்ள 16 தளங்கள் கலை அலங்கார வடிவமைப்பு கோபுரமாக உள்ளது. 102 வது தளம் கண்காணிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 203 அடிகள் கொண்ட உச்சி கோபுரம் ஒளிபரப்பு வானலை வாங்கி அலைக்கம்பங்களும் (Broadcasting Antenna) முகட்டு உச்சியில் இடி தாங்கியும் நிறுவப்பட்டுள்ளது. எம்பயர் ஸ்டேட் கட்டிடம் 100 தளங்கள் கொண்ட உலகின் முதல் கட்டிடமாகும்.இது 6,500 சன்னல்களையும், 73 மின் தூக்கிகளையும் தரையிலிருந்து 102 வது மாடி வரை 1,860 படிகளையும் கொண்டுள்ளது. இதன் மொத்த பரப்பு 2,768,591 சதுர அடி (257,211 மீ2). இக்கட்டிடத்தின் அடித்தளம் இரண்டு ஏக்கர் (8,094 மீ2).10118 என்ற சொந்த சிப் (ZIP) குறியீடு (அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள 5 அல்லது 9 எண்கள் கொண்ட அஞ்சல் இலக்கம்) கொண்ட இந்த கட்டிடத்தில் 1,000 தொழில் நிறுவனங்கள் அல்லது அவற்றுக்கான தலைமை அலுவலகங்கள் உள்ளன.2007 ஆண்டு நிலவரப்படி இக்கட்டிடத்தில் ஒவ்வொரு நாளும் தோராயமாக 21,000 பணியாளர்கள் பணி புரிகிறார்கள்.அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பெண்டகனைத் தொடர்ந்து அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய அலுவலக வளாகமாக இக்கட்டிடம் திகழ்கிறது இக்கட்டிடம் 40,948,900 அமெரிக்க டாலர் (2016 நிலவரப்படி இதன் மதிப்பு $644,878,000 ) செலவில் கட்டப்பட்டள்ளது.கட்டிடத்தின் வாழ்நாளை கருத்திற்கொண்டு முன்கணிப்பு வடிவமைப்பு முறையில் பல கட்டங்களாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் இதுவாகும், கட்டிடத்தின் எதிர்கால நோக்கம் மற்றும் பயன்கள் முந்தைய தலைமுறைகளின் தேவைகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. மின்சார அமைப்பின் மேலதிக வடிவமைப்பு கட்டிடத்தின் நயத்திற்குச் சான்று பகிர்வதாக உள்ளது. கலையம்சம் கொண்ட 16 தளங்கள் நியூயார்க்கில் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கட்டிடக்கலை வடிவமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.33 வது மற்றும் 34 வது தெருக்களில் இக்கட்டிடத்திற்கு வருவதற்காக உள்ள நுழைவாயிலில் நவீனத்திறன் வாய்ந்த எஃகு விதானங்கள் உள்ளன. இரண்டு அடுக்கு உயர் தாழ்வாரங்கள் மின்தூக்கி மையகத்திற்கு எஃகு மற்றும் கண்ணாடி பாலங்கள் வழியாகக் கடந்துசெல்கின்றன.இத்தளத்தில் மின் உயர்த்தி மையம் 67 மின் உயர்த்திகளைக் கொண்டுள்ளது. முகவாயில் அறையானது (lobby) மூன்று தளங்கள் உயரமுடையது.அலுமினியத்தாலான உச்சி கோபுரமானது 1952 வரை ஒளிபாப்பு கோபுரம் நிறுவப்படாமல் இருந்தது.1964 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கண்காட்சிக்காக ராய் ஸ்பார்க்கியா மற்றும் ரெனீ நெமாரோவ் ஆகியோரால் 1963 ல் இக்கட்டிடத்தின் வடக்குத் தாழ்வாரத்தில் எட்டு ஒளியேற்றப்பட்ட சட்டங்கள் நிறுவப்பட்டது.பாரம்பரியமான ஏழு அதியங்களுக்கு அடுத்ததாக இது உலகின் எட்டாவது அதிசயமாக சித்தரிக்கப்பட்டது. சான்றுகள் இவற்றையும் பார்க்கவும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 அதியுயர் கட்டிடங்கள் வெளி இணைப்புகள் எம்பயர் ஸ்டேட் கட்டிடம்: அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஐக்கிய அமெரிக்க வானளாவிகள்
1209
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
பீசாவின் சாய்ந்த கோபுரம்
பீசாவின் சாய்ந்த கோபுரம் (Leaning Tower of Pisa இத்தாலியம் )) இத்தாலியின் பீசா நகரில் உள்ள பீசா பேராலயத்தின் மணிக்கோபுரமாகும். இது நிமிர்ந்து நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், ஆகஸ்ட் 9, 1173ல் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட போதே சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. நிலத்திலிருந்து கோபுரத்தின் உயரம் 55 மீட்டர் ஆகும். இதன் நிறை . என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய சரிவு சுமார் 10%. இது 297 படிகளைக் கொண்டுள்ளது. இத்தாலிய அரசாங்கம் இந்த சாயும் கோபுரம் விழுந்து விடாமல் பாதுகாக்க உதவும்படி 1964, பெப்ரவரி 27ல் கோரிக்கை விடுத்தது. 1990, சனவரி 7ல் இக் கோபுரம் பாதுகாப்புக் காரணங்களுக்காக, பொதுமக்களுக்கு மூடப்பட்டது. அண்மையில் கோபுரத்தின் சரிவுக் கோணத்தைக் குறைப்பதற்காகச் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. 10 ஆண்டு வேலைகளுக்குப்பின் 2001, சூன் 16ல் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official Website http://www.pbs.org/wgbh/nova/pisa/ இத்தாலி
1210
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கிரைஸ்லர் கட்டிடம்
கிறிஸ்லெர் கட்டிடம் நியூயோர்க் நகருக்குத் தனித்துவமான ஒரு அடையாளச் சின்னமாகும். 1930ல் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் 1046 அடிகள் (319 மீட்டர்) உயரமானதாகும். மான்ஹற்றனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கிறிஸ்லெர் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்காகக் கட்டப்பட்ட இது, இப்பொழுது டி.எம்.டப்ளியூ (TMW) ரியல் எஸ்டேட் நிறுவனத்தாலும் (75%), திஷ்மான் ஸ்பேயர் ப்ரொப்பர்ட்டீஸ் நிறுவனத்தாலும் (25%) கூட்டாக வாங்கப்பட்டுள்ளது. கிறிஸ்லெர் கட்டிடம், வில்லியம் ஹெச் ரெனோல்ட்ஸ் என்னும் ஒப்பந்தக்காரருக்காக, வில்லியம் வான் அலன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இவ் வடிவமைப்புப் பின்னர் வால்டெர் கிறிஸ்லெர் என்பவரால் அவரது நிறுவனத்தின் தலைமையகத்துக்காக வாங்கப்பட்டது. இக் கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில், உலகின் உயர்ந்த வானளாவியெக் கட்டுவது தொடர்பாக, கட்டிடம் கட்டுபவர்களிடையே கடும் போட்டியிருந்தது. கிறிஸ்லெர் கட்டிடம் வாரத்துக்கு 4 தளங்கள் வீதம் கட்டப்பட்டது. இக் கட்டுமானத்தின் போது ஒரு வேலையாள் கூட பணிக்காலத்தில் இறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டிடம் கட்டிமுடிப்பதற்குச் சற்றுமுன், ஹெச். கிரெய்க் செவெரன்ஸின், 40 வால் தெருவிலுள்ள கட்டிடத்துடன் சம அளவில் இருந்தது. செவெரன்ஸ் அவர்கள் பின்னர் தன்னுடைய கட்டிடத்துக்கு மேலும் இரண்டடி சேர்த்து உயரமாக்கித் தனது கட்டிடமே உலகின் உயரமான கட்டிடம் என்று கூறிக்கொண்டார்.(இது ஈபெல் கோபுரம் போன்ற "அமைப்பு"க்களை உள்ளடக்கவில்லை.) வான் அலன், 125 அடி (38.1 மீட்டர்) உயரமான spire ஒன்றைக் கட்டுவதற்காக இரகசியமாக அனுமதி பெற்று வைத்திருந்தார். இது கட்டிடத்தினுள்ளேயே கட்டப்பட்டுவந்தது. துருப்பிடியாத உருக்கினால் செய்யப்பட்ட இந்த அமைப்பு, நவம்பர் 1929 இல் ஒருநாள் பின்னேரத்தில் கட்டிடத்துக்கு மேல் உயர்த்தப்பட்டதன் மூலம் கிரிஸ்லெர் கட்டிடம், உலகின் உயரமான கட்டிடம் மட்டுமன்றி, உயரமான அமைப்புமாக ஆக்கப்பட்டது. வான் அலனும், கிறிஸ்லெரும் இந்தப் பெருமையை, எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திடம் இழக்கும்வரை, ஒரு வருடத்துக்கும் குறைவாகவே அனுபவிக்க முடிந்தது. துரதிர்ஷ்டவசமாக வான் அலனுடைய திருப்தி, கிரிஸ்லெர் அவருடைய கட்டணத்தைச் செலுத்த மறுத்ததனால் இல்லாமல் போனது. கிரிஸ்லெர் கட்டிடம், ஆர்ட் டெக்கோ கட்டிடக்கலையின் பிரமிக்கத்தக்க உதாரணமாகும். கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட தனித்துவமான அலங்காரங்கள், கிரிஸ்லெர் மோட்டார் வாகனங்களில் பயன்படுத்திய ஹப்கப்களின் (hubcaps) அடிப்படையில் அமைந்திருந்தது. வாயில் மண்டபமும், அதேபோல அழகானது. கட்டிடம் முதலில் திறந்துவைக்கப்பட்டபோது, உச்சியில் ஒரு பொது காட்சிக்கூடம் அமைந்திருந்தது. சில காலங்களின்பின் அது ஒரு உணவகமாக மாற்றப்பட்டது. இவ்விரண்டு முயற்சிகளுமே அக்காலத்தின் பாரிய பொருளாதார மந்தநிலை காரணமாக, நிதியடிப்படையில் தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ள முடியாமற்போனதால், முந்தைய அவதானிப்புத் தளம் ஒரு தனியார் விடுதியாக (private club) மாற்றப்பட்டது. கட்டிடத்தின் உச்சிக்குக் அருகில் உள்ள தளங்கள், ஒடுக்கமானவையாகவும், உயரம் குறைந்த, சரிவான சீலிங்குகளைக் கொண்டனவாகவும் இருந்தன. இவை வெளித் தோற்றத்துக்காகவே வடிவமைக்கப்பட்டவை. உள்ளே இயந்திரங்களும், மின் உபகரணங்களும், வானொலிக்கருவிகளும் வைப்பதற்கே பயன்படக்கூடியவையாக இருந்தன. கிறிஸ்லெர் கட்டிடம், பயன்பாடுசார்ந்த நவீனத்துவத்திலிருந்து விலகியிருந்த, அதன் அற்பத்தனமான அலங்காரங்களுக்காக, அக்காலத்திய விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டது. எனினும், பொது மக்கள், விரைவில் அதனைப் பாராட்டுக்குரிய கவர்ச்சியான கட்டிடமாக ஏற்றுக்கொண்டனர். காலப் போக்கில், இக் கட்டிடம், 1920களின் கட்டிடக்கலையின் சிறந்த வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவற்றையும் பார்க்கவும் ஐக்கிய அமெரிக்காவின் 50 அதியுயர்ந்த கட்டிடங்கள் உலகின் அதியுயர் அமைப்புக்கள் ஐக்கிய அமெரிக்க வானளாவிகள்
1211
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88
பக்கிங்காம் அரண்மனை
பக்கிங்ஹாம் அரண்மனை (Buckingham Palace ()) இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ இலண்டன் இல்லமும், முக்கிய பணியிடமும் ஆகும். சிட்டி ஆஃப் வெஸ்ட்மினிஸ்டரில் அமைந்துள்ள இந்த அரண்மனை மாநில நிகழ்ச்சிகளுக்கும் முக்கிய விருந்தோம்பலுக்குமான அமைப்பை கொண்டுள்ளது. முதலில் பக்கிங்ஹாம் இல்லம் என அறியப்படும் இவ்விடம் 1703 ல் பக்கிங்ஹாம் பிரபு ஜோன் ஷெவ்வீல்ட்டுக்காகக் கட்டப்பட்டது. பின்னர் 1761ல் மூன்றாம் ஜார்ஜால் அரசி ஷார்லட்டுகான தனிப்பட்ட இல்லமாக பெறப்பட்டு அரசியின் இல்லம் என அழைக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் கட்டிட கலைஞர்கள் ஜான் நாஷ் மற்றும் எட்வார்ட் ப்லோரால் இவ்விடம் விரிவாக்கப்பட்டது. 1837ல் அரசி விக்டோரியா பொறுப்பேற்ற பின் இவ்விடம் அரச குடும்பத்தின் இருப்பிடமானது. கடைசி முக்கிய கட்டமைப்புகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கட்டபட்டன. ஆனால், இவ்வரண்மனை தேவாலயம், இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் வெடிகுண்டுகளால் அழிந்து போனது; அங்கே அரசியின் இராஜரீகமான ஓவிய சேகரிப்புகளுக்கான கலைக்காட்சி கூடம் நிறுவப்பட்டு 1962ல் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. விக்டோரியா அரசியாரின் சிலையொன்று முதன்மை வாயிற்கதவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது. அரண்மனையை நோக்கிச் செல்லும் பாதை மால் என அழைக்கப்படுகிறது. அரண்மனைக்குப் பின்புறம் பக்கிங்ஹாம் அரண்மனைப் பூங்காவும், அரச குதிரை லாயங்களும் உள்ளன. சுற்றுலாப்பயணிகளைக் கவரும், பாதுகாவலர்கள் முறைமாறும் மரபார்ந்த நிகழ்ச்சி பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே நடைபெறுகிறது. 1990 ல், அரண்மனையின் ஒரு பகுதியைப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டது, மரபுக்கு மாறான புரட்சிகர மாற்றமாகும். வரலாறு முற்காலத்தில் இவ்விடம் மேனர் ஆஃப் எபரி எனும் தனிப்பட்ட பண்ணை நிலமாக இருந்தது. இந்நிலம் டைபர்ன் ஆற்றால் நீர் பாய்ச்ச பெற்றது, இப்போதும் இந்த அறு அரண்மனையின் முற்றத்திற்கு அடியில் தெற்கு சாரியாக பாய்கிறது. இந்நிலம் பல உரிமையாளர்களின் கை மாறியது. பின்னர், 1531ல் எட்டாம் ஹென்ரி, புனித ஜேம்ஸ் மருத்துவமனையை ஈட்டன் கல்லூரியிடம் இருந்து பெற்ற போது, 1536ல் மேனர் ஆஃப் எபரியையும் வெஸ்ட்மினிஸ்டர் அபெவிடம் இருந்து பெற்றார். 500 வருடங்களுக்கு பிறகு இந்நிலம் திரும்ப அரச கைகளுக்கே திரும்ப வந்தது. அரச இருப்பிடம் முதலில் இவ்விடம் அரசி ஷார்லட்டின் தனிப்பட்ட இல்லமாக இருந்தது. அதுவரை புனித ஜேம்ஸ் அரண்மனையே அதிகாரப்பூர்வ அரச குடியிருப்பாக இருந்து வந்தது. 1762ல் கட்டிடத்தின் மறுவடிவமைப்பு தொடங்கப்பட்டது. 1820ல் நான்காம் ஜார்ஜ் அரியணை ஏறியவுடன் அவ்வில்லத்தினை சிறிய அரண்மனையாக மாற்ற கட்டிட வடிவமைப்பாளர் ஜான் நாஷின் உதவியுடன் சில மாற்றங்களை செய்தார். கார்ல்டனின் இல்லத்தில் இருந்து அலங்கார பொருட்கள் கொண்டு வரப்பட்டது, மீதம் ஃப்ரென்ச் புரட்சி சமயம் ஃப்ரான்சில் வாங்கப்பட்டது. வெளி முகப்பின் தோற்றம் நான்காம் ஜார்ஜின் விருப்பத்திற்கு ஏற்ப ஃப்ரென்ச் மரபு சார்ந்து கட்டப்பட்டது. மறுசீரமைப்பின் செலவு அதிகமானதுடன் 1829ல் ஜான் நாஷின் ஊதாரித்தனமான வடிவமைப்பு அவரை பக்கிங்காம் அரண்மனை வடிவமைப்பாளரில் இருந்து நீக்கியது. 1830ல் நான்காம் ஜார்ஜின் மறைவுக்கு பின்னர், அவரின் சகோதரர் நான்காம் வில்லியம் எட்வர்ட் ப்லோரை கொண்டு வேலையை முடித்தார். ஒரு கட்டத்தில் அரண்மனையை பாரளுமன்ற விடுதியாக மாற்றவும் யோசித்து இருந்தார். பக்கிங்காம் அரண்மனை இறுதியாக 1837ல் விக்டோரிய அரசியின் பதவியேற்பிற்கு பின் அரச இருப்பிடமாக மாறியது. நான்காம் வில்லியம் கட்டிட பணி முடியும் முன்னரே மறைந்து போனதால் அரசி விக்டோரியாவே பக்கிங்காம் அரண்மனையில் தங்கிய முதல் ராணி. அறைகளில் வண்ணங்களும், தங்க மூலாம் பூசல்களும் அமர்களமாகவே இருந்தாலும், ஆடம்பரம் மிக குறைவாகவே இருந்தது. 1840ல் அரசியின் திருமணத்தை தொடர்ந்து, இளவரசர் ஆல்பர்ட் அரண்மனையின் பராமரிப்பு பகுதிகள், வேலையாட்கள் மற்றும் இன்ன பிற குறைகளை சரி செய்தார். 1847ல் கணவனும், மனைவியும் பெருகும் தம் குடும்பத்திற்கு அவ்விடம் சிறிதாக தோன்றியதால் எட்வர்ட் ப்லோரைக் கொண்டு மேலும் ஒரு ஒரு பகுதி தாம்ஸ் கியுபிட்டால் கட்டப்பட்டது. அவ்விடமே பின்னர் அரச குடும்பம் முக்கியமான சந்தர்ப்பங்கள், ட்ரூப்பிங்க் தி கலர் எனும் நிகழ்ச்சிக்கு பின்னர் கூட்டத்தை சந்திக்க எற்படுத்தப் பட்ட உப்பரிகையாகும். நடனமாடும் அறையும்,பிற அறைகளும் இந்த கால கட்டதில் கட்டபட்டவையே ஆகும். இளவரசர் ஆல்பர்டின் மரணத்துக்கு முன்னர் இவ்விடம் எப்போதும் இசை நிகழ்ச்சி நடக்கும் இடமாகவும், பகட்டான விழாக்களும் நடைபெறும் இடமாகவும் இருந்தது. ஆனால் அதன் பின்னர் வருத்தம் சூழ்ந்து கொண்ட நிலையில் அரசி விண்ட்சர் கோட்டையிலேயே தன் பொழுதை கழித்ததுடன் அரண்மனை வாயிலும் பெரும்பாலும் மூடியே இருந்தது. நவீன வரலாறு 1901ல் ஏழாம் எட்வார்ட் மன்னர் அரியணை ஏறினார். பக்கிங்காம் அரண்மனையின் நடன அறை, பிரம்மாண்ட நுழைவாயில், மார்பில் அறை, பிரம்மாண்ட படிகள், கூடங்கள், வரவேற்பறை என அனைத்தயும் பெல்லெ எபொஃ எனும் பாலாடை வெள்ளை நிறமும், தங்கமுலாமும் பூசப்பட்டது, இந்நிறம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. 1999ல் ராயல் கலக்ஷென் டீபார்ட்மென்ட் வெளியிட்ட புத்தகத்தில் அவ்வரண்மனை 19 பெரிய அறைகளும், 52 முக்கிய படுக்கை அறைகளும், 188 பணியாளர் படுக்கை அறைகளும், 92 அலுவலகங்களும், 78 கழிப்பறைகளையும் கொண்டுள்ளது எனக் குறிப்பிடபட்டுள்ளது. ஆனால் இது புனித பீட்டர்ஸ்பெர்க் மற்றும் சார்ஸ்கொ செலொவில் இருக்கும் ரஷிய இம்பீரியல் அரண்மனை, உரோம்மில் உள்ள பாபல் அரண்மனை, தி ராயல் பாலஸ் ஆஃப் மாட்ரிட், தி ஸ்டாக்ஹோம் அரண்மனை, வைட் ஹால் அரண்மனை ஆகியவற்றை காட்டிலும் சிறிது. ஒவ்வொரு வருடமும் சுமார் 50,000 விருந்தினர்கள் கேளிக்கை விருந்திற்கும், வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும், இன்ன பிற நிகழ்ச்சிகளுக்கும் வரவேற்கப் படுகின்றனர். கார்டன் பார்ட்டி எனப்படும் விருந்து வருடத்திற்கு மூன்று முறை, கோடையிலும், ஜூலை மாதங்களிலும் நடைபெறும். பக்கிங்காம் அரண்மனையின் முன் வருடம்தோறும் நிகழும் தி சேஞ்சிங்க் ஆஃப் கார்ட்ஸ் எனும் நிகழ்ச்சி அனைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்நிகழ்ச்சி கோடையில் தினம்தோறும், பனிகாலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் நடைபெறும். விண்ட்ஸர் கோட்டை எனும் அரண்மனை, பிற மன்னர் அரசின் உடைமைகளான சான்றின்காம் இல்லம், பல்மோரல் கோட்டை போல அல்லாது ப்ரிட்டிஷ் அரசுக்கு சொந்தமானது. பக்கிங்காம் அரண்மனை, விண்ட்ஸர் கோட்டை, கென்சிங்க்டன் அரண்மனை, புனித ஜேம்ஸ் அரண்மனை ஆகிய அரண்மனைகளில் உள்ள பொருட்கள் இராஜரீக நினைவுச் சின்னமாக பாதுகாக்க பட்டு வரப்படுகிறது. அவை மக்கள் பார்வைக்கு அரசியின் கலைக்கூடத்தில் வைக்கப்படுகிறது. அரண்மனையின் அறைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் 1993ல் இருந்து மக்கள் பார்வையிட திறந்து வைக்கப்படும். மே 2009ல் இராஜ குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ப்ரிட்டிஷ் அரசு, அரண்மனை மேலும் 60 நாட்கள் திறந்திருக்க அனுமதி வழங்கியது மட்டுமல்லாமல், அதில் வரும் வருமானம் கொண்டு அவ்வரண்மனையின் பராமரிப்பு செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு அனுமதியளித்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Buckingham Palace, Official website of the British monarchy Directory of Buckingham Palace's rooms for virtual navigation (high and low resolution) Account of Buckingham Palace, with prints of Arlington House and Buckingham House, from Edward Walford, Old and New London, Vol 4, Chap. VI (1878) Account of the acquisition of the Manor of Ebury, from F.H.W. Sheppard (ed.), Survey of London, vol. 39, "The Grosvenor Estate in Mayfair", part 1 (1977) இவற்றையும் பார்க்கவும வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை - 1049 தொடக்கம் 1530 வரை அரச வாசஸ்தலம் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அரண்மனைகள் இலண்டனில் உள்ள கட்டிடங்கள்
1212
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
சீன வங்கிக் கோபுரம்
சீன வங்கிக் கோபுரம் (சுருக்கம்: BOC கோபுரம்) இது ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டுள்ள சீன வங்கியின் தலைமையகம் ஆகும். இதன் அமைவிடம் ஹொங்கொங் தீவின் , சென்ட்ரல் மற்றும் மேற்கு மாவட்டத்தில் இலக்கம்-1 கார்டன் வீதி, சென்ட்ரல் நகரில் உள்ளது. உலகில் அதிக வானளாவிகளைக் கொண்ட நாடாக ஹொங்கொங்காக விளங்கியப்போதும், ஹொங்கொங் கட்டிக்கலையின் தனித்துவமானச் சின்னமாக இந்த சீன வங்கிக் கோபுரம் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஹொங்கொங்கின் அடையாளச் சின்னம் (Hong Kong's icon) என்றும் குறிப்பிடுவர். கட்டட வடிவமைப்பு இந்த கட்டடத்தை வடிவமைத்த கட்டடக் கலைஞரின் பெயர் யெஹ் மிங் பெய் (Ieoh Ming Pei) எனும் அமெரிக்கச் சீனராகும். தனது கட்டட வடிவமைப்புத் துறையில் பல விருதுகளையும் இவர் பெற்றவராவர். இவரை சுருக்கமாக இவரின் பெயரின் முதலெழுத்துக்களைக் கொண்டு ஐ. எம். பெய்) என அழைக்கப்படுகிறார். இக்கட்டடத்தின் உயரம் (1,033.5 அடிகள்) 315 மீட்டராகும். கட்டடத்தின் முனையில் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு கூர்முனைகளின் உயரத்தையும் சேர்த்து கணக்கிட்டால் இதன் முழு உயரம் (1,205.4 அடிகள்) 367.4 மீட்டராகும். இக்கட்டடம் 72 மாடிகளை கொண்டுள்ளது. இக்கட்டடம் கட்டிமுடிக்கப்பட்ட காலகட்டத்தில் (1989 - 1992) ஹொங்கொங்கின் அதிக உயரமான கட்டடமாக இது விளங்கியது. அக்காலகட்டத்தில் ஆசியாவிலேயே அதிக உயரமான கட்டமாகவும் இதுவே விளங்கியுள்ளது. தற்போது இதனை விடவும் உயரமான கட்டடங்கள் பல ஹொங்கொங்கில் எழுந்துள்ளன. இருப்பினும் இக்கட்டடத்தின் வடிவமைப்பு இதன் தனித்துவத்தை க் காட்டி நிமிர்ந்து நிற்கிறது. கட்டடத்தைச் சுழ பசுமையான மரங்களும், குறும் நீர்வீழ்ச்சிகளும், பூங்காவுமாக காண்போரின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கட்டடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சீன வங்கி கோபுரம் குறித்து, சீனப் பாரம்பரியக் கட்டடக்கலை பெங் சுயி நிபுணர்கள் இதன் கூரிய விளிம்புகள் குறித்து விமர்சித்துள்ளனர். இந்த விளிம்புகள் இரவு நேரத்தில் வெள்ளை மின் கோடுகளாக மிளிரும். வரலாறு இக்கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் நிலப்பரப்பு, பிரித்தானியரினால் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்களில் ஒன்றான முறே இல்லம் அமைக்கப்பட்டிருந்த இடமாகும். இந்த முறே இல்லத்தின் ஒவ்வொரு கற்களாகப் பெயர்த்தெடுத்து, அவற்றை அப்படியே கடல் வழியூடாக கப்பலில் ஏற்றிச்சென்று ஹொங்கொங் தீவின் கிழக்கில், ஸ்டேன்லி எனும் இடத்தில் அதன் வடிவமைப்போ, கட்டிடச் சிதைவோ இல்லாமல் அப்படியே மீளெழுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த முறே இல்லம் அமைந்திருந்த நிலப்பரப்பில் 1985 ஆம் ஆண்டு சீன வங்கிக் கோபுரத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பம் ஆகின. கட்டிட நிர்மானப் பணிகள் நிறைவடைந்து, 1990 ஆம் ஆண்டு, மே மாதம் 7 ஆம் திகதி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. கட்டிட மாடிகள் 72 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் அடிப்பகுதியில் உள்ள 19 மாடிகள் வரையிலான பகுதியும், கட்டிடத்தின் முனைப்பகுதியில் 4 மாடிகளையும் சீன வங்கியின் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஏனைய மாடிகள் அனைத்தும் பிற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. துணை நூல்கள் மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம். வெளி இணைப்புகள் சீன வங்கி தலைமையகம், ஹொங்கொங் புகைப்படக் காட்சி ஹொங்கொங் தீவு ஹொங்கொங்கின் கட்டடங்கள் கோபுரங்கள்
1213
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கட்டிட வகைகள்
கட்டிடவகைகள் சிலவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இது சகல வகைகளையும் உள்ளடக்கிய முழுமையான பட்டியல் அல்ல. முழுமையான பட்டியலொன்றை உருவாக்குவதற்கான முதற்படியாகும். குறிப்பிட்ட தனிக் கட்டிடங்களுக்கு, கட்டிடங்களின் பட்டியல் பார்க்கவும். வர்த்தகக் கட்டிடங்கள்: வங்கி சந்தை அலுவலகம் கடை பேரங்காடி (Shopping mall) பங்குச்சந்தை(Stock exchange) பெருஞ்சந்தை(Supermarket) தொழில்துறை சார்ந்த கட்டிடங்கள்: தொழிற்சாலை குடியிருப்புகள்: அடுக்ககம் தங்கு விடுதிகள் வீடு கல்வி சார்ந்த கட்டிடங்கள்: கல்லூரி பாடசாலை பல்கலைக்கழகம் நூலகம் கண்காட்சியகங்கள் அருங்காட்சியகம் ஒவியக் காட்சியகங்கள் பொழுதுபோக்குக்குரிய கட்டிடங்கள்: கலையரங்கம் (Theater) நாடக அரங்கம் திறந்த அரங்கம் (Amphitheater) Concert hall திரையரங்கு Opera house ஒத்தின்னியம் அரச கட்டிடங்கள்: செயலகம் அரண்மனை நாடாளுமன்றம் மருத்துவம் சார்ந்த கட்டிடங்கள்: மருத்துவமனை படையினர் கட்டிடங்கள்: படைத்தளம் கோட்டை காவற்கோபுரம் களஞ்சியம்: கிட்டங்கி வாகனத் தரிப்பிடம்: பல்தளத் தரிப்பிடம் கொட்டகை விளையாட்டு தொடர்பான கட்டிடங்கள்: உடற்பயிற்சிக் கூடம் உள்ளக விளையாட்டரங்கு விளையாட்டு மைதானம் நீச்சல் குளங்கள் சமயம்சார்ந்த கட்டிடங்கள்: தேவாலயம்(Church) பசிலிக்கா பேராலயம் கட்டிடம்|சிற்றாலயம் இந்துக்கோயில் புத்தகோயில் குருதர்பார் மசூதி சமாதிகள்: பிரமிட் பயணம்: விடுதி(Hotel) Motel மடங்கள் பயணவழி மடங்கள் கோயில் மடங்கள் சந்தை மடங்கள் போக்குவரத்து நிலையங்கள்: வானூர்தி நிலையம் பேருந்து நிலையம் பாதாள தொடர்வண்டி நிலையம் தொடர்வண்டி நிலையம் துறைமுகம் கலங்கரை விளக்கம் வேறு பயன்பாட்டுக்குரிய கட்டிடங்கள்: மணிக்கூட்டுக் கோபுரம் கட்டிடக்கலை
1214
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%20%28%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29
வீடு (கட்டிடம்)
பொதுவான பயன்பாட்டில், வீடு என்பது, மனிதர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்படும் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்களைக் குறிக்கும். இங்கே வாழ்வது என்பது, உணவு சமைத்தல், சாப்பிடுதல், இளைப்பாறுதல், தூங்குதல், விருந்தினர்களை வரவேற்றல், வருமானந்தரும் செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை உள்ளடக்கும். இது தனியாகவோ, குடும்பத்துடனோ பல குடும்பங்கள் சேர்ந்து கூட்டாகவோ மேற்கூறியவற்றில் ஈடுபடுவதையும் குறிக்கும். எளிமையான மிகச் சிறிய குடிசைகள் முதல் சிக்கலான அமைப்புக்களைக் கொண்ட பெரிய மாளிகைகள் வரையான கட்டிடங்களை வீடு என்னும் பொதுப் பெயரால் குறிக்கலாம். பல்வேறு அடிப்படைகளில் வீடுகளைப் பல வகைகளாகப் பிரிக்க முடியும். பயன்படும் கட்டிடப் பொருட்களின் அடிப்படையில் வீடுகளைத் தற்காலிகமானவை அல்லது நிரந்தரமானவை என்றும்; கட்டுமானத் தன்மையின் அடிப்படையில் நிரந்தரமாக ஓரிடத்தில் அமையும் வீடுகள் அல்லது இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய வீடுகள் என்றும்; அளவின் அடிப்படையில் குடிசைகள், மாளிகைகள் என்றும்; இவை போன்ற வேறு அடிப்படைகளிலும் வீடுகளை வகைப்படுத்த முடியும். மரபு வழியாக, நெருங்கிய உறவினர்களை உள்ளடக்கிய ஒரு குடும்பத்தினரே ஒரே வீட்டில் வாழ்கின்றனர். இக் குடும்பம் தாய், தந்தை பிள்ளைகளை மட்டும் உள்ளடக்கிய தனிக் குடும்பமாகவோ, பல தலைமுறைகளையும், பல தனிக் குடும்பங்களையும் உள்ளடக்கிய கூட்டுக் குடும்பமாகவோ இருக்கலாம். சில வேளைகளில் இக் குடும்பங்களின் பணியாட்களும் அவர்களுடன் வாழ்வதுண்டு. தற்காலத்தில், குறிப்பாக நகரப் பகுதிகளில் ஒருவருக்கொருவர் உறவினரல்லாத ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் அல்லது பல தனியாட்கள் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்வதும் உண்டு. பெயர்களும் சொற்பிறப்பும் வீடு என்பதற்கு இணையாகத் தமிழில் பல சொற்கள் உள்ளன. இல், இல்லம், மனை, உறையுள், அகம் போன்றவை இவற்றுட் சில. பழந் தமிழ் இலக்கியங்களில் இல், இல்லம், மனை ஆகிய சொற்களே பெரும்பாலும் வழக்கில் இருந்தன. தற்போது எடுத்துக்கொண்ட பொருளில் வீடு என்னும் சொற் பயன்பாடு காலத்தால் பிற்பட்டது. வீட்டின் பல்வேறு வகைகளைக் குறிக்கப் பலவகையான சொற்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. குடில், குடிசை, குரம்பை, குறும்பு போன்ற சொற்கள் சிறிய உறையுள்களைக் குறித்தன. மனை, மாடம், நெடுநகர் போன்றவை நிலையான பெரிய வீடுகளைக் குறித்தன. வரலாறு மிகப் பழங்கால மனிதர்கள் குகைகளிலேயே வாழ்ந்தனர் என்றும் மனிதர்களின் முதல் வாழிடம் குகையே என்றும் பொதுவான கருத்து உண்டு. எனினும், வீடுகளின் வரலாறு பற்றி எழுதிய நோபர்ட் இசுக்கோனர் (Norbert Schoenauer) என்பவர் இதை மறுத்து உலகின் பல பகுதிகளில் குடிசைகளே மக்களின் முதல் வாழிடங்களாக இருந்தன என்கிறார். வெய்யில், மழை போன்ற இயற்கை மூலங்களிடமிருந்தும், காட்டு விலங்குகள் முதலியவற்றிடம் இருந்தும், தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, முன்னர் கூறிய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு, உகந்த அமைப்புகளின் தேவை ஏற்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள், தங்கள் சுற்றாடலில் கிடைத்த பொருள்களைப் பயன்படுத்தி, வீடுகளை அமைக்கக் கற்றுக்கொண்டனர். இப்பரந்த உலகில், காலநிலை, நில அமைப்பு, கிடைக்கக் கூடிய பொருட்கள், தாவர வகை போன்ற இன்னோரன்ன அம்சங்களில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுவதாலும், மக்களின் தேவைகளும், முன்னுரிமைகளும் இடத்துக்கிடம் மாறுபடுவதாலும், அவர்களால் அமைக்கப்பட்ட வீடுகளும் பல்வேறு விதமாக அமைந்தன. வளமான பிரதேசங்களில், விவசாயத்தின் அறிமுகத்தோடு, நிரந்தரமாக ஓரிடத்தில் குடியேற முற்பட்டவர்கள், அயலில் இலகுவாகக் கிடைத்த, மரம், இலை குழை போன்றவற்றை உபயோகித்து, வீடுகளை அமைக்கக் கற்றுக்கொண்டனர். வரண்ட பிரதேசங்களில் மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டுக் காலத்துக்குக் காலம் இடம் மாறவேண்டிய நிலையிலிருந்தவர்கள், விலங்குத் தோலைப் பயன்படுத்தி இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை அமைக்கப் பழகினர். பனிபடர்ந்த துருவப் பகுதிகளில் வாழ்ந்த எசுகிமோக்கள், பனிக்கட்டிகளை உபயோகித்தே தங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு எண்ணற்ற வகை வீடுகள் உலகம் முழுதும் பரந்து கிடக்கின்றன. மனித இனத்தின் அனுபவம், தேவைகளின் அதிகரிப்பு, வாழ்க்கை முறைகளில் சிக்கல் தன்மை அதிகரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புக்கள் என்பன வீடுகளின் அமைப்புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. சமூகத்தில் மனிதரிடையே சமமற்ற தன்மை, அதிகார வர்க்கத்தின் வளர்ச்சி, அரசு இயந்திரத்தின் தோற்றம், நகராக்கம் என்பனவும், வீடுகளின் வேறுபாடான வளர்ச்சிக்கு வித்திட்டன. பல்பயன்பாட்டுக்குரிய ஓரிரு அறைகளை மட்டும் கொண்டிருந்த வீடுகள், சமுதாயத்தின் உயர்மட்ட மனிதர்களுக்காகச் சிறப்புப் பயன்பாடுகளுடன் கூடிய பல அறைகள் கொண்டதாக வளர்ந்தன. வீடுகளின் அமைப்பு முற்காலத்திலும், தற்காலத்தில், நகராக்கத்தின் தாக்கம் இல்லாத பல இடங்களிலும், பொதுமக்களுடைய வீடுகள் அடிப்படையில் ஒரேவிதமாகவே அமைந்திருக்கும். இத்தகைய வீடுகளை, சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு காலங்காலமாக கைக்கொள்ளப்பட்டு வருகின்ற வடிவமைப்புகளின் அடிப்படையில் தாங்களே கட்டிக்கொள்வார்கள். இவ்வடிவமைப்புகள், அவ்வப்பகுதி மக்களின் கலாச்சாரத்தைப் பெருமளவு பிரதிபலிப்பவையாக உள்ளன. தற்காலத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தின் அதிக ஆதிக்கத்தின் காரணமாக, வளமான, சொந்தக் கலாச்சாரப் பாரம்பரியங்களைக் கொண்ட சமுதாயங்களிற் கூட, மேற்கத்திய பாணி வீடுகளே பிரபலம் பெற்றுள்ளன. நகர்ப்புறங்களில் பல பெரிய வீடுகள் கட்டிடக்கலைஞர்களினால் வடிவமைப்புச் செய்யப்படுகின்றன. தற்காலத்தின் சிக்கல் மிக்க வாழ்க்கைமுறையின் தேவைகளுக்கு ஏற்பப் பல்வேறு அம்சங்களையும் கருத்திலெடுத்து, வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. வீட்டு உரிமையாளரின் பொருளாதாரம், தகுதி, வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என்பவற்றைப் பொறுத்து, வீடுகள் பின்வருவனவற்றில் பொருத்தமானவற்றைக் கொண்டிருக்கும். வரவேற்பு அறை குடும்ப இருக்கை அறை தொலைக்காட்சி அறை சாப்பாட்டறை சமையலறை முதன்மைப் படுக்கையறை பாதுகாப்பு அறை உடுத்தும் அறை படுக்கை அறை விருந்தினர் படுக்கையறை அலுவலக அறை சிறுவர் அறை படிப்பு அறை நூலக அறை சாமியறை உடற்பயிற்சி அறை உள்ளக விளையாட்டு அறை களஞ்சிய அறை வேலையாட்களுக்கான அறை குளியலறை சலவையறை விறாந்தை நீச்சல் குளம் நீச்சல்குள உடைமாற்று அறை வாகனத் தரிப்பிடம் வீட்டு மிருகங்களுக்கான கொட்டகை பூங்கா பூங்கா உபகரணக் களஞ்சியம் பாதுகாவல் அறை மிகவும் எளிமையான வீடுகள் அல்லது குடிசைகள் ஒரு அறையை மட்டும் கொண்டனவாக இருக்கலாம். இந்த ஒரு அறையிலேயே அவ்வீட்டில் வாழ்பவர்களின் பல வகையான செயற்பாடுகள் இடம்பெறும். பெறுமதியான பொருட்களையும் உணவுப் பொருட்களையும் சேமித்து வைத்தல், பெண்கள் உறங்குதல், உடை மாற்றுதல் என்பன இத்தகைய செயற்பாடுகளிற் சில. இத்தகைய வீடுகளில் வாழ்பவர்கள் சில செயற்பாடுகளை வீட்டுக்கு அருகில் திறந்த வெளியிலேயே வைத்துக்கொள்வர். விருந்தினரை வரவேற்றல், சமையலுக்கான ஆயத்தங்கள் செய்தல், ஆண்கள் இளைப்பாறுதல் போன்றவை வீடுக்கு வெளியில் இடம்பெறக் கூடியவை. ஒரு அறையை மட்டும் கொண்ட வீடுகள் சிலவற்றில் வாயிலுக்கு முன் திண்ணை அல்லது விறாந்தை போன்ற அமைப்புக்கள் இருப்பது உண்டு. இது கூரையால் மேலே மூடப்பட்டிருந்தாலும், பக்கங்கள் பெரும்பாலும் திறந்திருக்கும். சூடான காலநிலைகளைக் கொண்ட பகுதிகளில் இவ்வாறான அமைப்புக்கள் பெரிதும் விருப்பத்துக்கு உரியனவாக உள்ளன. இவ்வாறான சில வீடுகளில் அவற்றில் ஒரு பக்கத்தில் தாழ்வாரத்தைச் சற்று நீட்டி அதன் கீழ் சமைப்பதற்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வதும் உண்டு. சற்றுக் கூடிய வசதி உள்ளவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தனியான சமையல் அறையைக் கட்டிக்கொள்வர். இவ்வாறு வசதிக்கும் தேவைக்கும் ஏற்றபடி வீட்டுக்கு அருகில் தனித்தனியான அமைப்புக்களைக் கட்டுவது உண்டு. இம்மாதிரியாக வெவ்வேறு செயற்பாடுகளுக்கான தனித்தனி அமைப்புக்களைக் கொண்ட வீடுகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இத்தகைய வீடுகளுள் பெரும்பாலானவை மரம், மண், புல், ஓலை போன்ற நீடித்துழைக்காத பொருட்களால் ஆனவையாக இருக்கின்றன. கூடிய பணவசதி உள்ளவர்கள் தமது தேவைக்கு ஏற்றபடி பல அறைகளுடன் கூடிய வீடுகளைக் கட்டுவர். பல்வேறு செயற்பாடுகளுக்கும் தனித்தனியான அறைகளும், கூடங்களும் இவ்வீடுகளில் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அறைகள் இருப்பதும் உண்டு. இவ்வாறான பெரிய வீடுகள் பெரும்பாலும், செங்கல், காங்கிறீட்டு, கூரை ஓடுகள், உலோகம் போன்ற நீடித்துழைக்கக்கூடிய கட்டிடப் பொருட்களால் கட்டப்படுகின்றன. பெரிய வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டவையாக அமைக்கப்படுவது உண்டு. வீடுகள் உருவாகும் சமூக பண்பாட்டுச் சூழல்களைப் பொறுத்து, அவை, உள்நோக்கிய வகையினவாக அல்லது வெளி நோக்கிய வகையினவாக இருக்கலாம். பழமை பேணும் கீழைநாட்டுச் சமுதாயங்கள் பலவற்றில் மரபுவழி வீடுகள் உள்நோக்கிய தன்மை கொண்டனவாக இருக்கின்றன. இவ்வீடுகளில் வெளிப்புறம் திறப்பதற்கான பெரிய சாளரங்கள் காணப்படுவதில்லை. மாறாக வீட்டுக்கு நடுவே முற்றம் அமைக்கப்பட்டு அறைகளும் கூடங்களும் இம்முற்றத்துக்குத் திறந்திருக்கும்படி அமைக்கப்படுகின்றன. வெளிநோக்கிய தன்மை கொண்ட வீடுகள் பெரிய சாளரங்களைக் கொண்டவையாகவும், சுற்றிலும் மரங்கள், செடிகளுடன் கூடிய நிலத்தோற்ற அமைப்புக்களுடன் கூடியவையாகவும் அமைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது சில அறைகளை அருகிலுள்ள திறந்த வெளிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தும்படியான வடிவமைப்புக்களும் இருப்பதுண்டு. வீடுகளின் வடிவமைப்பு இன்றும் உலகில் கட்டப்படும் மிகப் பெரும்பாலான வீடுகளைக் கட்டிடக்கலைஞர்கள் வடிவமைப்பதில்லை. அத்தகைய வீடுகளில் பலவற்றை மரபுவழியான வடிவமைப்புக்களின் அடிப்படையிலேயே கட்டிக்கொள்கின்றனர். எனினும், பல தலைமுறைகளின் அனுபவத்தின் அடிப்படையிலான வடிவமைப்பில் அமைவதால், அதில் வாழ்பவர்களின் செயற்பாடுகளுக்கும், உடல் நலத்துக்கும், பண்பாட்டுத் தேவைகளுக்கும் பொருத்தமானவையாக இவ்வீடுகள் அமைகின்றன. எப்படியானாலும், ஒரு வீட்டின் பல்வேறு பகுதிகளின் அமைவிடங்களும், அவற்றுக்கு இடையிலான தொடர்புகளும் வீட்டு வடிவமைப்பின் முக்கியமான அம்சங்களாக அமைகின்றன. சமூக பண்பாட்டுக் காரணிகளைப் பொறுத்து வெவ்வேறு சமூக பண்பாட்டுச் சூழல்களில் இத்தகைய தொடர்புகளுக்கான தேவைகள் வேறுபட்டு அமைவது உண்டு. முக்கியமாகப் பல்வேறு செயற்பாட்டுத் தேவைகளினால் இத்தொடர்புகள் தீர்மானிக்கப்பட்டாலும், சில சமுதாயங்களில், பல்வேறு வகையான நம்பிக்கைகளும்கூட வீட்டு வடிவமைப்பில் பங்கு வகிப்பதைக் காணலாம். சோதிடம், வாசுது, பெங் சுயி போன்றவற்றின் மீதான நம்பிக்கை இதற்கு எடுத்துக்காட்டுக்கள். தற்காலத்தில் வீடுகளின் வடிவமைப்பில் மேற்கத்திய பண்பாட்டுத் தாக்கங்கள் பெருமளவில் காணப்படுவதால் செயற்பாட்டுத் தேவைகளின் அடிப்படையிலான வடிவமைப்புக்களில் பெருமளவு பொதுமை காணப்படுகின்றது. மூன்று படுக்கை அறைகள், வரவேற்பறை, சாப்பாட்டறை என்பவற்றுடன் தொடர்புடைய பிற பகுதிகளையும் கொண்ட வீடொன்றின் செயற்பாட்டுப் பகுதிகளுக்கு இடையிலான தொடர்புகளை அருகில் உள்ள வரைபடம் காட்டுகிறது. விருந்தினர் அறை, வரவேற்பு அறை போன்ற வெளியார் வரக்கூடிய பகுதிகள் நுழைவாயிலுக்கு அண்மையில் அமைந்திருக்கும். வரவேற்பு அறைக்கு வரும் விருந்தினர்கள் சில வேளைகளில் சாப்பாட்டு அறைக்கும் செல்லவேண்டி இருக்கும் என்பதால் வரவேற்பு அறையில் இருந்து சாப்பாட்டு அறைக்கு நேரடித் தொடர்பு இருப்பது வழக்கம். சாப்பாட்டு அறைக்குப் பக்கத்திலேயே சமையல் அறையும் இருக்கும். படுக்கை அறைகள் பொதுவாக வெளியார் வரக்கூடிய பகுதிகளில் இருந்து விலகி உட்புறமாக இருப்பது விரும்பப்படுகிறது. இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்ட வீடுகளில், வரவேற்பறை, சாப்பாட்டறை, விருந்தினர் அறை, சமையல் அறை போன்றவை நிலத் தளத்திலும் அமைத்துப் படுக்கை அறைகளைப் பெரும்பாலும் மேற்தளங்களில் அமைக்கின்றனர். தற்காலத்தில் ஒவ்வொரு படுக்கை அறைக்கும் தனியான குளியல் அறையும் இருப்பது வழக்கம். விருந்தினர் பயன்படுத்துவதற்காக, வரவேற்பறை, சாப்பாட்டறை ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாகக் கழுவறை ஒன்றும் இருப்பது உண்டு. குறிப்புகள் உசாத்துணைகள் Schoenauer. Norbert, 6,000 Years of Housing, W. W. Norton and Company, Nee York. 2000. சண்முகதாஸ், மனோன்மணி., பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலம் - இருப்பிடம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002. இவற்றையும் பார்க்கவும் இல்லம் பலவகை வீடுகளின் பட்டியல் இக்லூ - எஸ்கிமோவர் வீடு நாற்சார் வீடு வீடு மாந்த வாழிடங்கள்
1215
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
பலவகை வீடுகளின் பட்டியல்
உலகம் முழுவதிலும், மனிதர்கள் வாழ்வதற்காகக் கட்டப்பட்ட, சிறிதும் பெரிதுமான பல நூறு வகையான வீடுகள் காணப்படுகின்றன. இவற்றைக் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அமைந்துள்ள இடம், வீட்டின் அளவு என்பன எப்படியிருந்தாலும், இவை அனைத்துமே, மனித இனத்தின் வரலாறு, பண்பாடு போன்ற கூறுகள் தொடர்பில் ஏராளமான தகவல்களைத் தம்முள் அடக்கிவைத்துள்ளன. இவற்றில் பொதிந்துள்ள தத்துவங்களும், குறியீட்டு அர்த்தங்களும் ஆர்வத்தை தூண்டுபவை. உலகிலுள்ள பல்வேறு இனங்களும், இனக்குழுக்களும், தங்கள் வாழிடங்களில் அமைத்துக்கொண்டுள்ள வீடுகள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. கட்டிடக்கலை
1216
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
பனிக் கட்டிக் குடில்
பனிக் கட்டிக் குடில் அல்லது இக்லூ (Igloo) என்பது பனிக்கட்டிகளைக்கொண்டு கட்டப்படும் வீடுகளாகும். ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்கின்ற எஸ்கிமோவர்கள் இவ்வாறான வீடுகளைக் கட்டுகிறார்கள். இவ்வீடுகள் பார்ப்பதற்கு இது அரைக்கோள வடிவம் கொண்டதாகத் தோற்றமளிக்கிறது. என்றாலும் உண்மையில் இது பரவளையவுரு (paraboloid) வடிவம் கொண்டது. இந்த வடிவம் மிக அழுத்தத்தில் அந்த பனிகட்டிகள் ஒன்றோடொன்று இணைந்து இருப்பதற்கு உதவுகிறது. பனிக் கட்டிக் குடில் பெரும்பாலும், கனடாவின் கனடாவின் வட எல்லையில் வாழும் பழங்குடிகளான இனூயிட் மக்களோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. இங்கே மழைக் காலத்தில் வேட்டையாடுபவர்களால் இந்தப் பனிக்கட்டி வீடுகள் தற்காலிக வாழும் இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெட்டி அவற்றை உகந்த முறையில் அடுக்குவதற்கு இடந்தரும் வகையில், போதிய அளவு பலமுள்ளவையாக, இக்லூ கட்டப் பயன்படும் பனிக்கட்டிகள் இருக்கவேண்டியது அவசியம். காற்றினால் அடித்துவரப்பட்ட பனியே பனிக் கட்டிக் குடில் கட்டச் சிறந்ததெனக் கூறப்படுகின்றது. இது பனிக்கட்டிப் பளிங்குகளை ஒன்றுடனொன்று பிணைத்து, இறுக்கமாக்க உதவுகிறது. பனிக்கட்டிக் குற்றிகளை வெட்டியெடுக்கும்போது உண்டாகும் பள்ளம், வழமையாகப் பனிக் கட்டிக் குடில் உட்பகுதியின் கீழ் அரைவாசியாக அமைகின்றது. வாயிற் கதவைத் திறக்கும் போது காற்று உள்ளேசெல்வதையும், வெப்ப இழப்பையும் தடுப்பதற்காகப் பெரும்பாலும் வாயிலில் ஒரு குறுகிய சுரங்கப்பாதை அமைக்கப்படும். பனிக்கட்கிகள் வெப்பத்தை கடத்தாத தன்மை கொண்டிருப்பதால், மனிதர் வாழும் இக்லூக்களின் உட்பகுதி ஆச்சரியப்படத்தக்க வகையில் இதமானதாக இருக்கும். மத்திய எஸ்கிமோவர், சிறப்பாக, டேவிஸ் நீரிணையைச் சுற்றி வாழ்பவர்கள், உள்ளே வாழும் பகுதியைத் தோலால் மூடுவார்கள். இது உள்ளேயுள்ள வெப்பநிலையை 2°ச இலிருந்து 10-20°ச வரை உயர்த்தக்கூடியது. கட்டிடக்கலைரீதியில் பனிக் கட்டிக் குடில் தனித்துவமானது. தாங்கும் அமைப்பு எதுவுமின்றியே, தனித்தனிப் பனிக்கட்டிகளை தாங்களே ஒன்றையொன்று தாங்கும்படி அடுக்குவதன்மூலம் இதன் அரைக்கோளவடிவ "கவிமாடம்" ஐக் கட்டியெழுப்ப முடியும். "இக்லூ", என்பது இனுக்டிடுட் மொழியில் "வீடு" என்ற பொருள்படும். பொதுவாக மூன்று வகை பனிவீடுகள் உண்டு. அவற்றின் பரப்பளவும், நோக்கமும் வெவ்வேறானவை. மிகச் சிறிய பனிக்கட்டி வீடுகள் தற்காலிகத் தங்குதலுக்கு அதாவது ஓரிரு இரவுகள் மட்டும் தங்க இவை பயன்படுகின்றன. நடுத்தர அளவு இக்ளூக்கள் குடும்பமாக வாழ்வதற்கு ஏற்றவை. இவை ஒரே ஒரு அறை கொண்டவை. இதில் ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் தங்க முடியும். அடுத்தடுத்து பல வீடுகள் இப்படிக் கட்டப்படும். குடியிருப்பு அல்லது கிராமமாக இவை விளங்கும். அடுத்து மிகப் பெரிய பனிக்கிடில் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். ஒன்று தற்காலிகமாகத் தங்குவதற்கும். மற்றொன்று நிரந்தரமாகத் தங்குவதற்கும். இவற்றில் ஐந்து அறைகள்கூட இருக்கும். அதிகபட்சம் இருபதுபேர்கூடத் தங்கலாம். சிலசமயம் சின்னச் சின்ன பனிக்குடில்களைச் சுரங்கப்பாதைகளின் மூலம் இணைத்துப் பல குடும்பங்கள் அங்கே தங்கப் பயன்படுத்துவது உண்டு. பின்வருவனவற்றையும் பார்க்கவும் எஸ்கிமோ கிறீன்லாந்து பனி பனிமனிதன் இக்லூலிக் பனி விடுதி மேற்கோள்கள் பனி வாழிடம் வீட்டு வகைகள்
1217
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
தமிழ் இலக்கியம்
தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சி கொண்டு இவ்வுலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளைத் தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் எனப் பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. வரலாறு மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு: பழங்காலம் சங்க இலக்கியம் (பொ.ஊ.மு. 500 – பொ.ஊ. 300) நீதி இலக்கியம் (பொ.ஊ. 300 – பொ.ஊ. 500) இடைக்காலம் பக்தி இலக்கியம் (பொ.ஊ. 700 – பொ.ஊ. 900) காப்பிய இலக்கியம் (பொ.ஊ. 900 – பொ.ஊ. 1200) உரைநூல்கள் (பொ.ஊ. 1200 – பொ.ஊ. 1500) புராண இலக்கியம் (பொ.ஊ. 1500 – பொ.ஊ. 1800) புராணங்கள், தலபுராணங்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் இக்காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு கிறிஸ்தவ தமிழ் இலக்கியம் புதினம் இருபதாம் நூற்றாண்டு கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை, ஆராய்ச்சிக் கட்டுரை இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் தமிழ், கணினித் தமிழ் முதற்சங்கம், இடைச்சங்கம் தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச் சங்கங்கள் தோன்றித் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களில் கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்துபோனதாகக் கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ உறுதியான ஆதாரங்கள் இல்லை. சங்க இலக்கியம் முதன்மைக் கட்டுரை: சங்க இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் பொது ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் புரிந்தோரும், பெண்களும் அடங்குவர். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய்ச் சங்க இலக்கியங்கள் உள்ளன. பண்டைத் தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் நமக்கு அறியத் தருகின்றன. பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுப்புகளே சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இவை மதுரையில் அமைந்த கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன. சங்கம் மருவிய காலம் / நீதி நூற்காலம் சங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தன. எனவே இக்காலம் நீதிநூற்காலம் எனப்படுகிறது. இந்நூல்களுள் போதிக்கப்படும் நீதி, பெரும்பாலும் சமயச் சார்பற்றவையாகக் கருதப்படுகிறது. நாலடியார் முதற்கொண்டு இன்னிலை / கைந்நிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவையே நீதி நூல்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் இத்தொகுப்பினுள் அடக்கம். சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள் இயற்றப்பட்டதும் இக்காலத்தில்தான். தற்கால இலக்கியம் பொ.ஊ. 18-ஆம், 19-ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. பல்வேறு பேரரசுகளின் ஆட்சியாலும், ஆங்கில மொழியின் வரவாலும் ஒரு தேக்கம் ஏற்பட்டது தமிழ் இலக்கியத்தில். பின்னர் நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், ஐரோப்பிய மிஷனரிகளின் தமிழ் மொழி ஈர்ப்பும், அவர்கள் கொண்டுவந்த அச்சியந்திரங்களும், பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலகட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலகட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன: சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும். உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19-ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி) புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) மணிப்பிரவாள நடை ஒழிந்தது. (20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) அச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே. சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும், அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது. இவற்றையும் பார்க்கவும் தமிழ் உரை நூல்கள் தமிழ் உரைநூல் ஆசிரியர்கள் தமிழ் இலக்கியப் பட்டியல் கும்பகோணம் தமிழ் இலக்கியங்கள் கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் உரையுடன்கூடிய சங்க இலக்கியங்களின் தொகுப்பு Thamizh Literature Through the Ages தமிழ் இலக்கியங்களின் அரிய தொகுப்பு இலக்கிய வரலாறு மொழி வாரியாக இலக்கியங்கள்
1219
https://ta.wikipedia.org/wiki/1%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
1 கனடா சதுக்கம்
1 கனடா சதுக்கம் (1 Canada Square) என்பது இலண்டன் மாநகரில் உள்ள கேனரி வார்ஃப் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு உயரமான கட்டிடமாகும். 1990 முதல் 2010 வரை ஐக்கிய இராச்சியத்தில் இதுவே மிகவுயர்ந்த கட்டிடமாக மதிக்கப்பட்டது. 50 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் தரை மட்டத்தில் இருந்து 720 அடி உயரம் (235 மீட்டர்) அளவுக்கு வானில் உயர்ந்து நின்றது. 2012 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட சார்டு கட்டிடம் 1 கனடா சதுக்கத்தின் இருபது ஆண்டுகால சாதனையை முறியடித்து முதல் இடத்தைப் பிடித்தது. இக்கட்டிடத்தின் உயரம் 1016 அடிகள் ( 309.6 மீட்டர்) ஆகும்.ஹட்டேர்ஸ்பீல்ட் (Huddersfield) என்னுமிடத்திலுள்ள, 330 மீட்டர் உயரமான எம்லே மூர் தொலைக்காட்சிக் கம்பமே நாட்டின் அதி உயரமான "அமைப்பு" ஆகும். பெயர்க்காரணம் ரீச்மன் குடும்பத்துக்குச் சொந்தமான, ஒலிம்பியாவும், யோர்க்கும் என்ற கனடாவைச் சேர்ந்த நிறுவனத்தினால் கட்டப்பட்டமையாலேயே, இக்கட்டிடத்துக்குக் கனடா சதுக்கம் என்ற பெயர் வந்தது. "கனரி வார்வ்" (Canary Wharf ) பகுதியைக் கட்டும் முயற்சியில் இந் நிறுவனம் வங்குரோத்து நிலையடைந்தது.இக்கட்டிடம் "கனரி வார்வ்"இன் (Canary wharf) ஒரு பகுதியாக இருப்பதால், இது கனரி வார்வ் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. உட்கட்டமைப்பு சீசர் பெல்லி என்ற முதன்மை கட்டிடக்கலை வல்லுநர் 1 கனடா சதுக்கத்தை வடிவமைத்தார். முக்கியமாக உலக நிதிநிறுவனம் மற்றும் எலிசபெத் கோபுரம் ஆகிய கட்டிடங்களை அடிப்படையாக நினைத்தே இவர் இச்சதுக்கத்தை வடிவமைத்தார். துருப்பிடிக்காத எஃகு இந்த அழகிய கட்டிடத்தின் மேற்புறத்தை அலங்கரிக்கிறது. இச்சதுக்கத்தின் உச்சியில் உள்ள ஒளிரும் பிரமீடு விமானங்களுக்கான எச்சரிக்கை விளக்காக இருருப்பதுதான் இச்சதுக்கத்தின் மிகமுக்கியமான தனிச்சிறப்பு ஆகும். தனித்துவமாகத் தெரியும் இந்த பிரமீடு உச்சிமுடி கடல்மட்டத்தில் இருந்து 800 அடி (240 மீட்டர்) உயரத்தில் உள்ளது. அலுவலகம் கீழ் தரைத் தளத்தில் சில சில்லறை வணிகக் கடைகள் இடம்பெற்றிருந்த போதிலும் இச்சதுக்கத்தில் முதன்மையாக அலுவலகங்கள் இடம்பெற்றன. 1 கனடா சதுக்கத்தில் அலுவலகங்கள் அமைந்திருப்பது பெரிய ஒரு கௌரவமாகக் கருதப்பட்டது. சனவரி 2013 நிலவரப்படி மதிப்புமிக்க இச்சதுக்கத்தின் அனைத்து பகுதிகளும் அலுவலகங்களாய் நிரம்பியிருந்தன இச்சதுக்கம் இலண்டனின் மைல்கல் என அங்கீகரிக்கப்பட்டது. இதனால் திரைப்படங்கள்,தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களில் இதன் புகழ்பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள உயரமான கட்டிடங்கள் என்று பட்டியலிடப்பட்டதனால் இச்சதுக்கம் மேலும் பலருடைய கவனத்தை ஈர்ப்பது தொடர்கிறது . தாக்குதல் 1996 ல், இங்கு, ஐரிஷ் குடியரசு இராணுவம் (IRA) என்ற தீவிரவாத இயக்கம் குண்டுத் தாக்குதல் நடத்தியது. மேற்கோள்கள் இவற்றையும் பார்க்கவும் இலண்டனின் உயரமான கட்டிடங்கள் வெளி இணைப்புகள் Skyscrapernewsல் 1 கனடா சதுக்கம் பற்றிய கோப்பு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வானளாவிகள்
1220
https://ta.wikipedia.org/wiki/191%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
191 பீச்ட்றீ கோபுரம்
191 பீச்ட்றீ கோபுரம் (பொதுவாக "பீச்ட்றீ" கோபுரமென்றே அழைக்கப்படுகிறது) அட்லான்டாவின் நான்காவது உயரமான வானளாவியாகும். 50 மாடிகளையும், 235 மீட்டர் உயரத்தையும் கொண்ட இக் கட்டிடம், உலகின் மிக உயர்ந்த 200 கட்டிடங்களுள் ஒன்றாகும். மிகவும் அழகிய தோற்றம் கொண்ட இக் கட்டிடம், 1991, மற்றும் 1998 ஆம் ஆண்டுகளுக்கான போமா (BOMA) விருதைப் பெற்றது. இதன் இரண்டு கோபுரங்களினதும் முகப்புகளுக்கு "ரோசா தாந்தே" எனும் கருங்கல் பலகைகள் பதிக்கப்பட்டுள்ளன. யன்னல்கள், சாம்பல் நிற கண்ணாடிகளால் ஆனவை. ஒவ்வொரு கோபுரமும், இரவில் ஒளியூட்டப் படுகின்ற உச்சிகளைக் கொண்டுள்ளன. கட்டிடக்கலை நிறுவனங்களான கெண்டால்/ஹீற்றன் அசோசியேற் நிறுவனமும், ஜோன்சன்/பர்கீ ஆர்க்கிட்டெக்ட் நிறுவனமும் இக்கட்டிடத்தை வடிவமைத்துள்ளன. இக்கட்டடம் முன்னாள் முக்கிய விடுதியாகிய மஜஸ்டிக் விடுதி இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது. உசாத்துணை வெளி இணைப்புகள் One Ninety One Peachtree Tower at Cousins Properties ஐக்கிய அமெரிக்க வானளாவிகள்
1221
https://ta.wikipedia.org/wiki/30%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
30 சென் மேரி அக்ஸ்
30 புனித மேரி ஆக்சு (30 St Mary Axe) அல்லது கெருக்கின் அல்லது சுவிசு மீள்காப்புறுதி கட்டிடம் என்பது இலண்டனின் முதன்மை நிதி மாவட்டமாகிய இலண்டன் நகரத்தின் வணிக வானளாவிக் கட்டிடம் ஆகும். இது 2003 திசம்பரில் முடிக்கப்பட்டு 2004 ஏப்பிரலில் திறக்கப்பட்டது. இது 41 மாடி கொண்ட 180 மீ உயரக் கட்டிடம் ஆகும். இது முன்பு பால்டிக் தொடர்பகமும் கப்பல்வணிகப் பெருங்கூடமும் நிலவிய இடத்தில் நிறுவப்பட்டது. புனித மேரி ஆக்சு தெருவில் இருந்த இவை இரண்டும் 1992 இல் தற்காலிக ஐரியக் குடியரசு படையால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இக்கட்டிடம் அது அமைந்துள்ள புனித மேரி ஆக்சு தெருவின் பெயரைக் கொண்டுள்ளது. பின்னர் திட்டமிடப்பட்ட 92 மாடி புத்தாயிரக் கோபுரத் திட்டம் கைவிடப்பட்டது. இது நார்மன் பாசுட்டராலும் அரூப் குழுமத்தாலும் வடிவமைக்கப்பட்டது. இது சுகான்சுகா குழுமத்தால் 2001 இல் தொடங்கி 2003 இல் கட்டி முடிக்கப்பட்டது. இது இலண்டனின் சிறந்த காட்சிப் பொருளாகியது. இது இலண்டனின் மிக அண்மைக் கவின்கட்டமைப்பால் உருவாக்கப்பட்டதாக்க் கருதப்படும் கட்டிடம் ஆகும். கள இருப்பிடம் இந்தக் கட்டிடம், முந்தைய கப்பல் விற்பனை, கப்பல்சார் தகவலுக்கான உலகச் சந்தையின் தலைமையகமாக விளங்கிய பால்டிக் தொடர்பகக் கட்டிடம் இருந்த இடத்திலும் (24-28, புனித மேரி ஆக்சு தெரு) கப்பல்வணிகப் பெருங்கூடம் இருந்த இடத்திலும் (30-32 புனித மேரி ஆக்சு தெரு) நிறுவப்பட்டுள்ளது. பால்டிக் தொடர்பகத்தின் அருகில் 1992 ஏப்பிரல் 10 இல் தாற்காலிக ஐரியக் குடியரசுப் படை குண்டுவெடித்து தகர்த்து, வரலாற்ருச் சிரப்பு வாய்ந்த அந்தக் கட்டிட்த்துக்கும் அருகமியில் இருந்த கட்டிடங்களுக்கும் பேரளவு அழிவை உருவாக்கியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுச்சூழல் பற்றி, பிரித்தானிய அரசின் சட்ட அறிவுரைக் குழுமமாகிய ஆங்கிலேய பழமரபு அமைப்பும் இலண்டன் நகராட்சி அமைப்பும் எந்தவொரு மீளாக்கமும் புனித மேரி ஆக்சு தெருவில் பால்டிக் தொடர்பகம் பெற்றிருந்த பழமரபுப் பெருமையை மீட்கத் தக்கதாக அமையவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். தொடர்பக்க் கூடம் கப்பல் தொழில்வணிகச் சந்தையின் கவின்மிகு பொருத்தமைவுகளைக் கொண்டிருந்தது. முதலில் கருதியதைக் காட்டிலும் சிதைவு கடுமையாக அமைவதை உணர்ந்த ஆங்கிலேய பழமரபுக் குழுமம், இருந்தாலும் கவின்கட்டமைப்பு வேட்போர் முழு மீள்கட்டுமானத்துக்காக வாதிட்ட போதும், முழுமையாக மீட்கும்வேண்டலைக் கைவிட்டு விட்டது;. இதற்கிடையில் பால்டிக் தொடர்பகமும் கப்பல்வணிகப் பெர்டுங்கூடமும் 1995 இல் தம் மனைகளை திரபால்கர் இல்லத்துக்கு விற்றுவிட்டனர். இதற்கிடையில் பால்டிக் தொடர்பகத்தின் எஞ்சியிருந்த பெரும்பகுதிக் கட்டமைப்புகள் காப்பாக நீக்கப்பட்டன தொடர்பக பரிமாற்றக் கூடமும் முகப்பமைப்பும், இக்கட்டிடத்தின் எதிர்கால மீளமைப்பில் நம்பிக்கையோடு, பேணிப் பாதுக்க்கப்பட்டன . கட்டிடச் சிதைவுப் பொருள்க எசுத்தோனியாவைச் சேர்ந்த தாலினின் குழுமத்துக்கு 800,000 ப்வுண்டுகளுக்கு விற்கப்பட்டு, எசுத்தோனிய நகர வணிக மையத்தின் நடுப்பகுதியை மீளாக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. திரபால்கர் இல்லம் 1996 இல் புத்தாயிரம் கோபுரக் கட்டிடத் திட்டத்தை ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்தத் திட்டத்தின்படி, கட்டிடம் 92 மாடிகளும் 386 மீ உயரமும் கொண்டது: பரப்பளவு140000 ச.மீ: இதில் அலுவலகங்கள், அடுக்ககங்கள், கடைகள் தங்கும் விடுதிகள் தோட்டங்கள் ஆகியவை அமையும். இது வான்போக்கு வரத்துச் சிக்கலாலும் இலண்டன் மாநகரை விட பாரிய அமைப்பு கொண்டிருந்ததாலும் கைவிட நேர்ந்தது; மேலும் சிறிய கட்டிடத்துக்கான மாற்றிரிய வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. வில்லை என வழங்கும் இதன் உச்சிப் பன்முகக் கும்மட்டம் பல்டிக் தொடர்பகத்தின் கூம்புக் கண்ணாடிக் கும்மட்டத்தை நினைவுகூர்வதாக அமைந்துள்ளது. முன்பு இந்தக் கூம்புக் கண்ணாடிக் கும்மட்டம் பால்டிக் தொடர்கத்தின் தரைப்பகுதியில் இருந்தது. அதன் பெரும்பகுதி இப்போது தேசிய கடல்சார் அருங்காட்சியகத்தில்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வெள்ளரி ஊறுகாய் எனப் பொருள்படும் கெருக்கின் என்ற பெயர் இக்கட்டிடத்துக்கு 1999 முதலே சூட்டப்பட்டது. இது அதன் பழைய மரபு அமைவைக் கிண்டல் செய்யவே உருவாகியது. திட்டமிடல் பிரித்தானியத் துணை முதன்மை அமைச்சர் ஜான் பிரெசுகோட்டு அக்களத்தில் முந்தைய தொடர்பகத்தை விட பெரிய கட்டிட்த்தை நிறுவும் திட்டத்துக்கான ஒப்புதலை 2000 ஆகத்து 23 இல் அளித்தார். இந்தக் களம் சிறப்பானதாகும். வளர்ச்சி வேண்டிநிற்கும் இடமாகும். ஆனால் அந்த வளர்ச்சி இலண்டனைச் சுற்றி எங்கிருந்து பார்த்தாலும் புனித பவுல் பேராலயக் கும்மட்டத்தை மறைக்கவோ அதன் பார்வையக் குன்றச்செய்யவோ கூடாது. இந்தத் திட்டம் பால்டிக் தொடர்பகத்தை மீள கட்டியமைத்தலுக்கானதே ஆகும். GMW கட்டிடக்கலை வல்லுனர்கள் குழுமம் மீட்ட தொடர்பகத்ட்தைச் சுற்றி செவ்வக வடிவில் புதிய கட்டிடம் அமைத்தலை முன்மொழிந்தது: சதுர வடிவம், பல வங்கிகள் விரும்பியபடி, பெரிய தரையமைப்பைக் கொண்டமையும். இறுதிடாக திட்டமீட்டாளர்கள் தொடர்பகத்தை மீட்டலியலாது என்பதை உணரலாயினர். எனவே கட்டிடம் சார்ந்த கட்டுத்தளைகளைக் கைவிட நேர்ந்தது; கணிசமான கவின்கட்டமைவுள்ள கட்டிட்டிடத்துக்கு மட்டுமே நகராட்சி அதிகாரமும் ஏற்பை அளிக்கும் என்பதையும் அறிந்தனர். எனவே, கட்டிடக்கலையாளர்கலுக்குக் கட்டற்ற முறையில் வடிவமைப்பை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது, இது முதலீடு மிக்க பெருவருமானம் கிடைக்கும் வணிக்க் கட்டுபாடுகளைக் கருதவேண்டிய நிலை தளைந்து வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு வடிவமைக்க முடிந்தது. சுவிசு மீள்காப்புறுதி நிறுவனத்தின் தாழ் உயர திட்டம், திட்டமீட்டு அதிகாரத்தின் குறுகலான பல் தெருக்கள் அமைந்த இலண்டன் மரபு தெருவமைப்பைப் பாதுகாக்கும் விருப்பத்தைச் சந்திக்க வல்லதாயிற்று. சுவிசு மீலாக்க கோபுரம் கட்டுபாடுகள் குறைந்ததாகவும் அமைந்தது. இலண்டன் இலன்பார்டு தெருவில் உள்ள பார்க்கிளே வங்கியின் முந்தைய நகரத் தலைமையகம் போல, அருகாமையில் உள்ள தெருக்களில் போவோர் வருவோர் கோபுர அடியில் வரும்வரை கோபுரத்தின் பார்வை தெளிவாக படவேண்டும் என்ற எண்ணக்கரு அல்லது ஏடல் திட்டமிடலில் கருத்தில் கொள்ளப்பட்டது. வடிவமைப்பும் கட்டுமானமும் இந்தக் கட்டிடம் சுகான்சுகாவால் 2003 இல் கட்டி முடிக்கபட்டு, 2004 ஏப்பிரல் 23 இல் திறந்து வைக்கப்பட்டது. இதில் முதன்மை குடியிருப்போராக உலக மீள்காப்பீடுக் குழமமாகிய சுவிசு மீள்காப்பீட்டுக் கழகம் தனது பிரித்தானிய நாட்டுச் செயல்பாட்டுத் தலைமையக அமைவிடமாக இயங்கி வருகிறது. எனவே. இது சிலவேளைகளில் சுவிசு மீள்காப்பகம் என அழைக்கப்படுகிறது. ஆனால், இப்பெயர் அலுவல்சார் பெயரல்ல என்பது மட்டுமல்ல நாளடைவில் அருகி வருகிறது. அன்னல், இந்த குழுமத்தின் தலைமையகம் சூரிச்சில் அமைந்துள்ளது. கெருக்கின் என்ற பெயரே கட்டிடத்துக்குப் பரவலாக வழங்கலானது. கட்டிமுடித்த பிறகு கோபுரத்தின் 2/3 பகுதி உயரத்தில் அமைந்த கண்ணாடிப் பலகங்கள் 2005 ஏப்பிரலில் கீழிருந்த நயவளாகம் மீது விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அந்த வளாகம் மட்டும் மூடப்பட்டது. கொப்புரப் பிற கட்டிடப் பகுதிகள் திறந்தே இருந்தன. ஒரு தற்காலிக நடைவழி வளாகத்தின் குறுக்கு வரவேற்பு பகுதிவரை உருவாக்கி வருகையாளர்கள் சென்றுவரவும் பாதுகாப்புக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே, பொறியாளர்கள் உடனடியாக கட்டிடத்தில் அமைந்த மற்ற 744 கண்ணாடிப் பலகங்களையும் ஆய்வு செய்தனர். பழுதுபார்ப்புச் செலவை முதன்மை ஒப்பந்தக்காரர் சுகான்சுகாவும் திரை சுவர் வழங்கிய சுகிமிட்லினும் ஏற்றனர். வாடகையாளர்கள் இக்கட்டிடத்தின் பகுதிகளை 2015 இல் பின்வரும் நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர்: செந்தர ஆயுள் (Standard Life) மீக்கொணர்வுகள் (SuperDerivatives) - இது பன்னாட்டுத் தொடர்பகத்துக்கு (Intercontinental Exchange) உரிமையானது இணைந்த உலக உறுதியம் (Allied World Assurance) இரீகசு (Regus) அயான் வணிகம் (ION Trading) கிர்க்லாந்து அன்டு எல்லிசு (Kirkland & Ellis) டாயிட்சு பிபான்ட்பிரீப் வங்கி ஏஜி (Deutsche Pfandbrief bank AG) அன்டன் அன்டு வில்லியம்சு (Hunton & Williams) கோல்மன் பென்னெட் பன்னாட்டு அறிவுரைஞர் குழுமம் (Coleman Bennett International Consultancy Plc) பால்கன் குழு (Falcon Group) ஐபி சாஃப்ட் (IPsoft) கட்டற்ரு வாழ் (Live Free) நிறுவனம் சுவிசு மீள்காப்புறுதி (Swiss Re) ஆய்பவகம்49 (Lab49) உடை தொழிலகம் (The Clothing Factory) இரைட்சிப் (RightShip) ஆல்கோடெக்சு (Algotechs) கூடுதலாக, Sterling and Bridge's Newsagent போன்ற பல நிறுவனங்களும் கோபுர அடிவாரத்தில் களத்தில் செயல்படுகின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Norman Foster's site about the project ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வானளாவிகள்
1222
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D
அல் அக்சா பள்ளிவாசல்
அல் அக்சா பள்ளிவாசல் (அரபு:المسجد الاقصى, மஸ்ஜித் அல்-அக்ஸா) யெருசலேமிலுள்ள, மாஜெத் குன்று அல்லது அல்-ஹாரம் ஆஷ்-ஷெரிப் (Noble Sanctuary) எனப்படும், சமயக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இசுலாம்களின் மரபுப்படி முகமது நபி அவர்கள் மலை 621 இலிருந்து சுவர்க்கம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த பள்ளிவாசல் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதமான பள்ளிவாசலாகக் கருதப்படுகிறது. பாறைக் குவிமாடம் இற்குப் பின்னர் (கிபி 690), கிபி 710 இல், உமயாட்டுகளால் மரத்தாலான முதலாவது அல் அக்ஸா பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது குறைந்தது 5 தடவையாவது மீளக்கட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால், ஒரு தடவையாவது, முற்றாக அழிந்துள்ளது. கடைசியாக, பெரிய மீளமைப்பு 1035 ஆம் ஆண்டு நடைபெற்றது. அல் அக்சா பள்ளிவாசலே யெருசலேமிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாகும். 5000 பேர்வரை உள்ளேயும், வெளியிலுமிருந்து தொழக்கூடிய வசதிகள் உண்டு. இக்கட்டிடத்தில், சிலுவைபடையினர்களின் (Crusader) பாணியுட்பட பல பாணிகளின் கலவை காணப்படுகிறது. சிலுவைபடையினர் யெருசலேமைக் கைப்பற்றி வைத்திருந்தபோது, இந்த பள்ளிவாசல் ஓர் அரண்மனையாகப் பயன்படுத்தினார்கள். முற்காலத்தில் யூத ஆலயம் இருந்த இடத்தில் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையில், அப்பொழுது இது சொலமனின் ஆலயம் என அழைக்கப்பட்டது. அவ்வப்போது, அல்-அகசா ஆக்கிரமிப்பு யூத தேசமான இஸ்ரேலின் ராணுவ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காக இருந்தது எனினும், பெரும்பாலான தாக்குதல்கள், பாலஸ்தீன மற்றும் ஜோர்டான் பாதுகாப்புப் படைகளால் முறியடிக்கப்பட்டது இம் பள்ளிவாசலின் சுற்றுமதிலின் ஒருபகுதியான மேற்குச் சுவர் யூதர்களின் வணக்கத்துக்குரியதாக இருப்பதால், யெரூசலத்தின் ஒரு சிறிய பகுதியான இது முசுலிம்கள், யூதர்களுக்கிடையேயான முறுகல் நிலைக்குக் காரணமாகக் கூடியது. உசாத்துணை வெளி இணைப்புகள் Noble Sanctuary: அல்-அக்ஸா பள்ளிவாசல் 1969 தகராறு பற்றிய அறிக்கை த டைம்ஸ் இலிருந்து. இசுலாமியப் புனித இடங்கள் பாலத்தீனத்தில் உள்ள பள்ளிவாசல்கள்
1224
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
பரிசுகள், பதக்கங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல்
பிரபல பரிசுகள், பதக்கங்கள், மற்றும் விருதுகள் என்பனவற்றின் பட்டியல் கிண்ணங்கள், சுற்றுக் கோப்பைகள், கோப்பைகள், படிகள் மற்றும், அரச அலங்காரங்கள் முதலியன உட்பட. அறிவியல், கணிதம், தொழினுட்பம் நோபல் பரிசு: பௌதீகம், வேதியியல், மருத்துவம், Economics பல்சான் பரிசு - மானிடவியல், சமூகவியல், இயற்கை அறிவியல், பண்பாடு ஆகிய துறைகளில் வழங்கப்படும் பன்னாட்டு பரிசு வன்னெவார் புஷ் விருது லொமொனொசோவ் தங்கப் பதக்கம் Longitude prize பிரிட்ஸ் பிரெகல் பரிசு - அவுஸ்திரேலிய அறிவியல் மார்செல் பெனோயிஸ்ட் பரிசு - சுவிஸ் அறிவியல் கியோட்டோ பரிசு: உயர் தொழினுட்பம், அடிப்படை அறிவியல்கள், கலை மற்றும் தத்துவம். அஸ்தூரியஸ் இளவரசர் விருது - அறிவியல், பொது விவகாரம், மற்றும் மானிடவியல்கள் தொடர்பான சாதனைகள். வூல்வ் பரிசு தேசிய அறிவியல் அக்கடமி விருது கிப்ஸ் சகோதரர்கள் பதக்கம் - naval architecture, கடல்சார் பொறியியல் NAS Award in Aeronautical Engineering - aeronautical engineering கோப்லே விருது ரோயல் சொசைட்டியால் வழங்கப்படுவது. அல்பேர்ட் ஐன்ஸ்டீன் அறிவியலுக்கான உலக விருது கணிதம் அபெல் பரிசு Fields Medal Clay Mathematics Institute's Millennium Prize Problems ஜோன் வொன் நியூமன் கோட்பாட்டுப் பரிசு நெவன்லின்னா பரிசு கணிதத்துக்கான Schock பரிசு கணனி அறிவியல், பொறியியல், தொழினுட்பம், மற்றும் கண்டுபிடிப்பு லெமெல்சன்-MIT பரிசு IEEE ஜோன் வொன் நியூமன் பதக்கம் ACM Turing Award Charles Stark Draper Prize கலைகளும், Letters இலக்கியத்துக்கான நோபல் பரிசு List of books by award or notoriety ஆர்க்கிபால்ட் பரிசு, Australia's premier portraiture award Beck's Futures புக்கர் பரிசு: winners and shortlisted authors Carnegie Prize, the highest award for painting in the world கிரியாமா விருது ஸ்கொக் பரிசுகள் Visual கலைகளிலும் இசைக் கலைகளிலும் டேணர் விருது ஐக்கிய அமெரிக்காவின் கென்னடி மையக் கௌரவம்: கௌரவம் பெற்றோர் பட்டியல் அமெரிக்க இலக்கியம் புலிட்சர் பரிசு நாவல் வரலாறு கற்பனைக் கதை கவிதை பொது கற்பனைக் கதையல்லாதன விமர்சனம் தந்திமூல செய்தி அனுப்புதல் - அனைத்துலகம் உருவாகும் செய்திப் புகைப்படம் உருவாகும் செய்தி அறிக்கை பான்குறொப்ட் பரிசு ஹொப்வூட் விருது தேசியப் புத்தக விருது PEN/கற்பனைக் கதைகளுக்கான போல்க்னர் விருது Whiting எழுத்தாளர் விருது பிரித்தானிய இலக்கியம் புக்கர் பரிசு பொதுநலவாய எழுத்தாளர் பரிசு டவ்ப் (Duff) கூப்பர் பரிசு ஹெசெல்-டில்ட்மான் பரிசு அனைத்துலக IMPAC டப்ளின் இலக்கிய விருது ஜோன் லெவெலின் றீஸ் பரிசு வைற்பிறெட் பரிசு நியூடிகேற் பரிசு கற்பனைக் கதைக்கான ஒறேஞ்ச் பரிசு சாமுவேல் ஜோன்சன் பரிசு கனேடிய இலக்கியம் புக்கர் பரிசு கனேடியக் கவிஞர் விருது பொதுநலவாய எழுத்தாளர் பரிசு ஜெரால்ட் லம்பேர்ட் விருது கில்லர் (Giller) பரிசு கிறிபின் கவிதைக்கான பரிசு ஆளுனர் நாயகம் (Governor General) விருது மரியன் ஏங்கெல் விருது மில்டன் அக்கோர்ன் மக்கள் கவிதை விருது பட் லோத்தர் விருது ஸ்டீபன் லீக்கொக் விருது ட்றில்லியம் விருது பின்னிஷ் இலக்கியம் இலக்கியத்துக்கான பின்லாந்தியா பரிசு பிரெஞ்சு மொழி இலக்கியம் பிரிக்ஸ் டிசம்பர் (Prix Décembre) பிரிக்ஸ் டெஸ் டியுக்ஸ்-மகொட்ஸ் (Prix des Deux-Magots) பிரிக்ஸ் பெமினா (Prix Fémina) பிரிக்ஸ் கொங்கோர்ட் (Prix Goncourt) பிரிக்ஸ் மெடிசிஸ் (Prix Médicis) இந்திய இலக்கியம் ஞானபீட விருது காளிதாஸ் சம்மான் இத்தாலிய இலக்கியம் பகுத்தா பரிசு வியாரெஜியோ (Viareggio) பரிசு ஸ்பானிய இலக்கியம் பிரேமியோ செர்வாந்தெஸ் சுவீடிஷ் இலக்கியம் Augustpriset Lilla Augustpriset அறிவியல் புனைவுகள் மற்றும் கனவுருப்புனைவு (அறிவியற் கட்டுக்கதைக்கான விருதுகளின் பட்டியல்) ஐயும் பார்க்கவும் ஹியூகோ விருது நெபுலா விருது Sidewise Award for Alternate History Tiptree award BSFA விருது பிரிக்ஸ் அப்பொல்லோ ஆர்தர் சி. கிளர்க் விருது எதிர்கால எழுத்தாளர்கள் - புதிய எழுத்தாளர்களுக்கான போட்டி Illustrators of the Future - contest for new illustrators சிறந்த அறிவியல் கட்டுக்கதைகளுக்கான ஜோன் டப்ளியூ. கம்பெல் நினைவு விருது சிறந்த புதிய எழுத்தாளர்களுக்கான ஜோன் டப்ளியூ. கம்பெல் நினைவு விருது பிலிப் கே. டிக் நினைவு விருது புறொமேதியஸ் விருது - சிறந்த நூலகர் SF Janusz A. Zajdel Award - award given by Polish fandom உலக Fantasy விருது சிறுவர் இலக்கியம் நியூபெரி பதக்கம் Caldecott பதக்கம் Carnegie பதக்கம் கட்டிடக்கலை பிறிட்கெர் பரிசு ஸ்டெர்லிங் பரிசு வியாபாரமும், முகாமைத்துவமும் Malcolm Baldrige National Quality Award Henry Laurence Gantt Medal மனிதாபிமானம் நோபல் சமாதானப் பரிசு Karlspreis Templeton Prize Right Livelihood Award Big Brother Award - anti-privacy Brandeis Award - pro-privacy Freedom Award Lenin Peace Prize Logic and தத்துவமும் Schock Prize in Logic and Philosophy பொதுச் சாதனைகள் MacArthur Fellowship List of BSA merit badges Man of the Year/Person of the Year (Time Magazine) Ramon Magsaysay award for achievement by Asians Spingarn Medal for achievement by Black Americans தேசிய கௌரவங்கள், ஆயுதப்படை,மற்றும் தேசபக்த பதக்கங்கள் அவுஸ்திரேலியா அவுஸ்திரேலிய விருதுகளின் பட்டியல் வருடத்துக்கான அவுஸ்திரேலியன் Order of Australia கனடா Canada's Walk of Fame Order of Canada பிரான்ஸ் Légion d'honneur (Legion of Honour) ஜெர்மனி Pour le Mérite (The "Blue Max") Bundesverdienstkreuz Iron Cross ஐஸ்லாந்து Order of the Falcon இந்தியா இந்தியாவின் உயரிய விருதுகள் காந்தி அமைதிப் பரிசு பாரத ரத்னா பத்ம விபூசண் பத்ம பூசன் பத்மசிறீ தேசிய வீரதீர விருது சாகித்திய அகாதமி விருது ஞான பீட விருது தாதாசாகெப் பால்கே விருது தேசிய திரைப்பட விருதுகள் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் சங்கீத நாடக அகாதமி விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா அர்ஜுனா விருது துரோணாச்சார்யா விருது (பயிற்றுகை) தியான் சந்த் விருது சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது கங்கா சரண் சிங் விருது கணேஷ் இந்தி வித்யார்த்தி விருது ஆத்மாராம் விருது சுப்ரமண்யம் பாரதி விருது முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது பத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது}}}} நியூசிலாந்து நியூசிலாந்து கௌரவ முறைமை ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாயம் பிரித்தானிய கௌரவ முறைமை பிரித்தானிய கௌரவத்தை வாங்க மறுத்தவர்கள் பட்டியல் British and Commonwealth orders and decorations Victoria Cross (VC) Most Noble Order of the Garter (KG) Distinguished Flying Cross (DFC) 100 Greatest Britons (result BBC poll in 2002) 100 Worst Britons (result Channel 4 poll in 2003) ஐக்கிய அமெரிக்கா காங்கிரஸ் கௌரவ விருது ஜனாதிபதி விடுதலைப் பதக்கம் காங்கிரஸ் தங்கப் பதக்கம் Navy Cross Defense Distinguished Service Medal Distinguished Service Medal Silver Star Defense Superior Service Medal Legion of Merit Medal Distinguished Flying Cross கப்பற்படை/கடல்சார் படைகள் பதக்கம் Bronze Star Medal Purple Heart Honorary Citizen of the United States பின்வருவனவற்றையும் பார்க்கவும்: படையினர் பட்டிகள் பதக்கங்களின் பட்டியல் பொழுதுபோக்கு People's Choice Award (for television, film, and music in the United States) அழகு மிஸ் அமெரிக்கா மிஸ் கனடா International Miss Teen Canada International மிஸ் யூனிவர்ஸ் மிஸ் வேர்ல்ட் மிஸ்டர் யூனிவர்ஸ் மிஸ் இந்தியா திரைப்படம் பின்வருவனவற்றையும் பார்க்கவும்:: திரைப்பட விருதுகளின் பட்டியல் பின்வருவனவற்றையும் பார்க்கவும்: திரைப்பட விழா BAFTA விருதுகள் சீசர் விருது (France) Crystal Globe (Karlovy Vary International Film Festival) கோயா விருதுகள் (ஸ்பெயின்) Golden Bear (Berlin Film Festival) Golden Leopard (Locarno International Film Festival) Golden Lion (Venice Film Festival) Gemini Awards Hollywood Walk of Fame Palme d'Or (Cannes Film Festival) Étalan de Yennenga (FESPACO) SIGNY award (adult entertainment) Golden Globe Awards Film Best Actor, Drama Best Actor, Comedy/Musical Best Actress, Drama Best Actress, Comedy/Musical Best Drama Best Comedy/Musical Best Director Television Best Series, Drama Best Series, Musical/Comedy ஒஸ்கார் (அக்கடமி விருது) இந்தியத் திரைப்பட விருதுகள் தாதாசாஹெப் பால்கே விருது நகைச்சுவை நகைச்சுவை விருதுகள் அமெரிக்க நகைச்சுவைக்கான, மார்க் டுவைன் பரிசு பெர்ரியர் நகைச்சுவை விருது Internet Webby Award இசை யூரோவிஷன் பாடல் போட்டி, உம். 2002, 2003 கிராமி விருது. Currently in 101 categories, e.g. கிரம்மி விருது_2002|2002]], கிரம்மி விருது_2003|2003]] Grammy Hall of Fame Award recipients A-D, E-I, J-P, Q-Z ஜூனோ விருது சான் ரெமோ இசை விழா எம்டிவி வீடியோ இசை விருது மேடை டோனி விருது ஓபி விருது லொரென்ஸ் ஒலிவர் விருது தொலைக்காட்சி பீபொடி விருது எம்மி விருது விளையாட்டுகள் ஒலிம்பிக் பதக்கம் பெற்றவர்கள் Athletics (men) Athletics (women) பேஸ்பால் கூடைப்பந்து Biathlon Gymnastics பேஸ்பால் சிவை யங் விருது வருடத்துக்கான றூக்கி விருது மிகப் பெறுமதியான விளையாட்டுவீரர் விருது கோல்ட் கிளவ் ஒலிம்பிக் பதக்கம் பெற்றவர்கள் உலகத் தொடர்கள் குத்துச் சண்டை கோல்டன் கிளவ்ஸ் ஏனைய விளையாட்டுக்கள் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி Super Bowl அல்பைன் பனிச்சறுக்கு உலகக் கோப்பை ரக்பி யூனியன் உலகக் கோப்பை கிரிக்கெற் உலகக் கோப்பை கால்பந்து உலகக் கோப்பை பிறவுன்லா பதக்கம் (அவுஸ்திரேலிய கால்பந்து) World Championships in Biathlon டேவிஸ் கோப்பை (டென்னிஸ்) கிறே கோப்பை (கனேடியக் கால்பந்து) ஸ்டான்லி கோப்பை (பனி ஹொக்கி) விம்பிள்டன் வெற்றியாளர்கள் பட்டியல் பொஸ்டன் மரதன் வெற்றியாளர் பட்டியல் குவிஸ்போல் (Quiz Bowl) College Bowl மெரிடித் கோப்பை கார்ப்பர் விருது நானாவிதமானவை அனைத்து-அமெரிக்க நகர விருதுகள் Mock பரிசுகள் Ig நோபல் பரிசு தங்க ராஸ்ப்பெரீஸ் (Razzie) தங்க டர்க்கி விருது டார்வின் பரிசு Bulwer-Lytton Fiction Contest Foot in Mouth Prize Bad Sex in Fiction Award பின்வருவனவற்ரையும் பார்க்கவும் அனைத்துலகப் பரிசுகள் மன்று உசாத்துணை அட்டவணைகளின் பட்டியல் List of honorary societies பரிசுகளும் விருதுகளும் he:פרסים
1226
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
தெலுங்கு மொழி
தெலுங்கு (Telugu, ) தென்னிந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்காணத்தில் அரசு ஏற்பு பெற்ற மொழி. இந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் தெலுங்கு ஒன்றாகும். இம்மொழி தமிழ்நாடு, கருநாடகம் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 13-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 9 கோடியே 30 இலட்சம் (93 மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். கர்நாடக இசையில் மிக அதிக அளவில் பயன்படும் மொழியும் 'வடுகத்' தெலுங்கு ஆகும். 2008-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் தெலுங்கு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. தோற்றம் தெலுங்கு தமிழிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி. மற்ற தமிழ் மொழிக் குடும்ப பிரிவுகளை போலவே தெலுங்கு மொழி சமசுகிருதத்தில் இருந்து தோன்றவில்லை. இந்தியாவில் ஆரியமொழி நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் தமிழ் மொழி பேசப்பட்டு வந்தது. முழுவதுமாக நிறுவப்படாது இருப்பினும், சிந்து சமவெளி நாகரீகம் தமிழ் மொழி நாகரீகமாக இருப்பதற்கு அதிக அடிப்படை வாய்ப்புகள் உள்ளன. தெலுங்கு பழந்தமிழ் மொழியில் இருந்து தோன்றிய ஒரு மொழி. இது தக்காண உயர்பீட நிலப்பகுதியில் உள்ள மக்கள் பேசும் தென்-நடு தமிழ் மொழித் துணைக்குடும்பத்தைச் சார்ந்தது. இக்குடும்பத்தைச் சார்ந்த மற்ற மொழிகள் கொண்டி, கூய், குவி போன்ற தெலுங்குடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய மொழிகள் ஆகும். இந்தியாவில் மிக அதிகளவில் பேசப்படும் தமிழ் மொழிக் குடும்பத்திம் தெலுங்கே. தெலுங்கு மற்ற மொழிகளின் சொற்களை மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளும். சமசுகிருத மொழி தெலுங்கு இலக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்தியது போல், வேறெந்த மொழியும் தாக்கம் ஏற்படுத்தியதில்லை என்று கூறுவர் (இதேக் கருத்தை வங்காளி, மராத்தி மொழியாளர்களும் கூறுவர்). தெலுங்கு மொழியில் பல எழுத்துக்கள் முக்கியமாக ஹ கலந்த எழுத்துக்கள் சமசுகிருத மொழிக்காகவே நெடுங்கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சமசுகிருத்தின் தாக்கம் தமிழை தவிர்த்து அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ளது தான். உருது மொழி மற்றும் ஆங்கில மொழி சொற்களைக்கூட தெலுங்கு மொழி ஏற்றுக்கொண்டுள்ளது. சொற்பிறப்பியல் பொ.ஊ. 1000 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டுகளில் தெலுகு என்ற சொல் காணமுடியாது. 11-ஆவது நூற்றாண்டில் "தெலுங்கு பூமிபாலுரு" (తెలుంగు భూమిపాలురు), "தெல்கரமாரி" (తెల్గరమారి), "தெலிங்ககுலகால" (తెలింగకులకాల), "தெலுங்க நாடோளகண மாதவிகெறிய" (తెలుంగ నాడోళగణ మాధవికెఱియ) போன்ற குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே தெனுகு என்ற சொல் வழக்கில் வரத் துவங்கியது. சிலர் திரிலிங்கம் என்ற சொல்லில் இருந்து தெலுங்கு தோன்றியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். திரிலிங்கம் என்பது காலேசுவரம், சிரீசைலம், திரட்சராமம் முதலிய மூன்று சிவத்தலங்களை குறிக்கும். இம்மூன்று இடங்களும் தெலுங்கு தேசத்தின் எல்லைகளாக அமைந்த காரணத்தினால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். சிலர் திரிலிங்கம் என்ற சொல்லில் இருந்து தெலுங்கு தோன்றியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஆனால் இது பின்னர் எழுந்த பண்பாட்டு அடிப்படையில் தரும் காரணம் எனவும் தெலுகு என்ற சொல்லே பழமையானது எனவும் வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 12-ஆம் நூற்றாண்டில் "நவலட்ச தெலங்கு" (నవలక్ష తెలంగు) என்ற குறிப்பு காணப்படுகிறது. தெலுங்கு என்ற சொல்லின் தோற்றம் குறித்து பலவாறாகவும் கூறப்பட்டுள்ளது. "தெலு" என்றால் வெண்மை என்று பொருள் எனவே வெண்மையான மக்கள் என்ற பொருளில் தெலுங்கு தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. அதே நேரத்தில் தென் – என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து, தென்னகத்தின் மக்கள் என்ற பொருளில் தெலுங்கு தோன்றி இருக்கலாம் எனவும் கருதுவது உண்டு. எது எவ்வாறாக இருப்பினும், தெலுங்கு தேசத்தின் பெயர் தெலிங்க தேசம் அல்லது தெலங்க தேசம் என்றிருந்திருக்க வேண்டும். எனவே அதன் வேர்ச்சொல் தெலி (తెలి – "பிரகாசம்") ஆகவும் இருக்கலாம். தெலுங்குப்பண்டிதர்கள் தெலுங்கு என்பதன் சரியான வடிவம் தெனுகு எனக் கூறுகின்றனர். தெனுகு என்றால் தேன் போன்ற மொழி என்று பொருள் (తేనె (தேனெ) – "தேன்"). தேன் போன்ற இனிய மொழி ஆகையால் தெனுகு என்பது பிற்காலத்தில் தெலுகு என ஆகியிருக்கலாம் என்பது இவர்கள் கருத்து மொழி வரலாறு தெலுங்கு மொழியில் வரலாற்றைப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம் பொ.ஊ. 200 – பொ.ஊ. 500 பழங்கால பிராகிருத/சமசுகிருத பிராமி கல்வெட்டுகளில், தெலுங்கு இடம் மற்றும் பெயர்கள் காணப்படுகின்றனர். இதிலிருந்து ஆந்திர தேசத்தை ஆண்ட சாதவாகனர்கள் பிராகிருதத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எனத்தெரிகிறது. தெலுங்குச் சொற்கள் மகாராட்டிரிப் பிராகிருதத்தில் எழுதப்பட்ட பாடல்களில் காணப்படுகின்றன. பொ.ஊ. 500 – பொ.ஊ. 1100 தெலுங்கு மொழி, கல்வெட்டுகள் முதன்முதலாக ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பொ.ஊ. 575-ஆம் காலத்திய கல்வெட்டாகும். இக்கல்வெட்டு ரேனாட்டி சோழர்களால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர்களே முதன் முதலாக சமசுகிருதத்தை விடுத்து உள்ளூர் மொழியான தெலுங்கில் கல்வெட்டுக்களை வெளியிட்டனர். இவர்களுக்குப் பிறகு பிற சாளுக்யர்களும் கல்வெட்டுகளைத் தெலுங்கில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இக்காலத்தில் தான் தெலுங்கு இலக்கியம் தோன்ற ஆரம்பித்தது. தெலுங்கில் எழுதப்பட்ட முதல் இலக்கியமாகக் கருதப்படும் நன்னய்யரின் மகாபாரதம் இக்காலகட்டத்திலே எழுதப்பட்டது. மேலும், இதே காலத்தில் தெலுங்கு மொழியில் பல்வேறு ஒலியியல் வேறுபாடுகள் ஏற்பட்டன. பொ.ஊ. 1100 – பொ.ஊ. 1400 இக்காலகட்டத்தில் இலக்கிய தெலுங்கு பேச்சு வழக்கில் இருந்து மிகவும் வேறுபடத்துவங்கியது. ஒரு நிலையில் கேதனர் என்ற புலவர் மக்கள் பயன்படுத்தும் சொற்களை இலக்கியங்களில் கையாளாகாது, எனக்கருத்தை வெளியிட்டார். மேலும் பல வடமொழி நூல்கள் தெலுங்கில் மொழிப்பெயர்க்கப்பட்டது. மேலும் தெலங்காணா பகுதிகளில் சுல்தான்களின் இதே காலகட்டத்தில்தான் துவங்கியது பொ.ஊ. 1400 – பொ.ஊ. 1900 இக்காலத்தில், தெலுங்கு மற்ற இந்திய மொழிகளைப் போலவே பலவிதமான வேறுபாடுகளை சந்தித்தது. இசுலாமிய தாக்கத்தின் காரணமாக தெலங்காணா வழக்கு மற்றப் பொதுத் தெலுங்கு வழக்கிலிருந்து மிகவும் வேறுபட்டுவிட்டது. தெற்கில் கோதாவரி நதி பகுதிகளில், விசயநகர அரசு 1336 முதல் 1600 வரை மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தது. விசய நகர அரசர் கிருட்டிண தேவராயரின் காலம் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என கருதப்படுகிறது. தெலுங்கு இலக்கியம் இவரது காலத்தில் மிகவும் எழுச்சியுடன் திகழ்ந்தது. விசய நகர அரசின் வீழ்ச்சிக்கு பிறகு தெலுங்கு பேசும் பகுதிகளில் இசுலாமிய ஆட்சி நிறுவப்பெற்றது. இதன் காரணத்தால் பல பாரசீக மற்றும் உருது சொற்களும் தெலுங்கு மொழியில் கலந்தன. பொ.ஊ. 1900 முதல் இன்று வரை 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயரின் ஆட்சியின் காரணமாக, ஆங்கிலத்தில் தாக்கம் தெலுங்கு மொழியில் ஏற்பட்டது. குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் இத்தாக்கம் உணரப்பட்டது. இக்காலகட்டத்தில் பல்வேறு நவீன கால இலக்கியங்கள் தோன்ற துவங்கின. ஆனால் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருந்தன. இதைக் கருத்தில் கொண்டு தெலுங்கை, மக்கள் பேச்சு மொழிக்கு ஒட்டிய நடையில் தற்போது எழுதி வருகிறார்கள். பேசப்படும் பகுதிகள் தெலுங்கு மொழி, இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேச தெலங்கானா மாநிலங்களில் அதிக அளவில் பேசப்படும் மொழி. மேலும் தமிழ் நாடு, கருநாடகம், ஒரிசா முதலிய பக்கத்து மாநிலங்களிலும் பேசப்படுகிறது..விசயநகரப் பேரரசின் காலத்தில் தமிழ் நாட்டில் தோன்றிய நாயக்கர் ஆட்சி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. நாயக்கர்கள் ஆட்சியின்போது ஆந்திராவில் இருந்து பல்வேறு மக்கள் தமிழ்நாட்டில் குடியேறினர். மேலும் பகுரைன், இங்கிலாந்து, பிசி, மலேசியா, மொரிசியசு போன்ற நாடுகளிலும் இம்மொழி பேசப்படுகிறது. அரசு ஏற்புநிலை தெலுங்கு மொழி ஆந்திர மாநிலத்திலும் தெலங்கானா மாநிலத்திலும் அரசு ஏற்புபெற்ற மொழியாகும். மேலும் இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ள 22 மொழிகளில் தெலுங்கும் ஒன்று. இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் ஆட்சிப்பகுதியைச் சேர்ந்த யானம் பகுதியின் ஏற்பு பெற்ற மொழியாகவும் இது விளங்குகிறது. வட்டார வழக்குகள் பேரத், தசரி, தொம்மரம், கொலரி, கமதி, கொண்டாவ், கொண்ட-ரெட்டி, சலேவரி, தெலங்காணம், வடகம், சிரீகாகுளம், விசாகபட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ராயலசீமா, நெல்லூர், குண்டூர், வடரி மற்றும் ஏனாடு ஆகியவை தெலுங்கு மொழியில் வெவ்வேறு வட்டார வழக்குக்கள் ஆகும். தமிழ் நாட்டில் பேசும் தெலுங்கு மொழியை, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் வட்டார வழக்கென பிரிக்கலாம். மேலும், விருதுநகர், புதுக்கோட்டை, கடலூர், மதுரை, தஞ்சாவூர் பகுதிகளில் தெலுங்கு பேசுவோர் உள்ளனர். தமிழ்நாட்டில் பேசும் தெலுங்கில் அதிக அளவில் தமிழ் மொழி கலப்பைக் காண முடியும். செம்மொழியாக அறிவிக்க கோரிக்கை இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்ததை அடுத்து தெலுங்கு மொழிக்கு செம்மொழி என்னும் சிறப்புநிலை வேண்டுமென கோரிக்கையை இந்திய அரசுக்கு விடப்பட்டு அது ஏற்கொள்ளப்பட்டது. தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய இருமொழிகளும் செம்மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. ஒலிகள் மற்றும் எழுத்துமுறை தெலுங்கு எழுத்துமுறை அபுகிடா வகையைச் சார்ந்தது. தெலுங்கு எழுத்துக்களை கோலமி போன்ற திராவிட மொழிகளை எழுதவும் அரிதாக பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கு எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களில் இருந்து உதித்த பல்லவ கிரந்த எழுத்துக்களில் இருந்து தோன்றியது. உயிரெழுத்துக்கள் தெலுங்கில் திராவிட மொழிகளுக்கே உரிய எகர ஒகர ஒலியுடன் சமசுகிருதத்தில் உள்ள அனைத்து உயிரெழுத்துகளும் உள்ளன. ఋ ౠ ఌ ౡ అం అః மெய்யெழுத்துக்கள் தெலுங்கு சமசுகிருத நெடுங்கணக்கில் உள்ள அனைத்து எழுத்துக்களுடன், திராவிட மொழிகளுக்கு உரிய ளகரம் மற்றும் றகரமும் கொண்டுள்ளது. தெலுங்கு மொழியில் பழங்காலத்தில் ழகரம் இருந்தது. ஆனால் தற்சமயம் அவ்வொலி மறைந்து விட்டது. క ఖ గ ఘ ఙ చ ఛ జ ఝ ఞ ట ఠ డ ఢ ణ త థ ద ధ న ప ఫ బ భ మ య ర ఱ ల ళ వ స శ ష హ தெலுங்கு மொழி மிகவும் இனிமையான மொழியாகப் பலரால் கருதப்படுகிறது. தெலுங்கில் அனைத்துச் சொற்களும் இத்தாலிய மொழியைப் போல் உயிரெழுத்துடன் முடிவடைகிறது. எனவே தான் இம்மொழியின் இனிமையைக்கருதி ஆங்கிலேயர்கள் இதை கிழக்கின் இத்தாலிய மொழி (Italian of the East) என அழைத்தனர். தெலுங்கில் ஒரு பெயர் அறியப்படாத கவி இவ்வாறு கூறியுள்ளார். இலக்கியம் தெலுங்கு இலக்கியத்தை கீழ்க்கண்ட காலங்களாக பிரிப்பர்: நன்னய்யருக்கு முற்காலம் – பொ.ஊ. 1020 வரை; புராண காலம் – பொ.ஊ. 1020 முதல் பொ.ஊ. 1400 வரை; சிரீநாதரின் காலம் – பொ.ஊ. 1400 முதல் பொ.ஊ. 1510 வரை; பிரபந்த காலம் – பொ.ஊ. 1510 முதல் பொ.ஊ. 1600 வரை; தெற்கு காலம் – பொ.ஊ. 1600 முதல் பொ.ஊ. 1820 வரை; நவீன காலம் – பொ.ஊ. 1820 முதல் இன்று வரை. தெலுங்கு மொழியில் முதல் இலக்கியமாக நன்னய்யரின் (1022–1063) மகாபாரதம் கருதப்படுகிறது. இவரது காலத்துக்கு பிறகு திக்கன்னா, எர்ரன்னா போன்ற பல்வேறு புலவர்களால் தெலுங்கு இலக்கியம் செறிவடைந்தது. பிறகு சிரீநாதர் (1365–1441) என்பவர் பிரபந்த இலக்கியத்தை பிரபலமாக்கினார். வேறு சிலர் வடமொழி நூல்களை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தனர். சிரீநாதருக்கு பிறகு போதனா (1450–1510), சக்கன்னா, கௌரனா போன்றோர் சமயம் தொடர்பான இலக்கியங்களை எழுதினர். எனினும், பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த விசயநகர அரசர் கிருட்டிணதேவராயரின் காலம் தான் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. விசயநகர காலத்தில் தஞ்சாவூர் மற்றும் மதுரையில் பல்வேறு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றின. பிறகு சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டதால் தெலுங்கு இலக்கியத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் தான் தியாகராயர் தன்னுடைய கீர்த்தனைகளைத் தெலுங்கு மொழியில் எழுதினார். 20ஆம் நூற்றாண்டுகளில் மேலை நாட்டு இலக்கியங்களின் தாக்கத்தால் சிறுகதை, நாவல் போன்ற நவீன கால இலக்கியங்கள் தோன்றின. எண்கள் அன்றாட வழக்குகள்: எதிர் குருக்கு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தெலுங்கு மொழி மற்றும் இலக்கியம் தெலுங்கிற்கான எதனலாக் அறிக்கை தமிழ், இந்தி, தெலுங்கு: எந்த மொழி பழமையானது, இவற்றின் வேர்கள் எங்கே உள்ளன? தெலுங்கு திராவிட மொழிகள் இந்திய மொழிகள்
1227
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
மலையாளம்
மலையாளம் (Malayalam , "மலயாளம்") தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். இந்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். தமிழினை மூல மொழியாக கொண்டு தோன்றிய மலையாளம், நாளடைவில் தனி மொழியாக உருப்பெற்றது. சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு தமிழ், சமசுகிருதம் முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக மலையாளிகள் என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு கேரளர்கள் எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர். மொழியின் பழமொழி ஒரு மலையாளி மலையாளம் கற்றுக் கொள்கிறானோ இல்லையோ மந்திரம் கற்றுக் கொள்ள வேண்டும் அவன் தான் உண்மையான மலையாளி என்ற மலையாளிகளின் பழமையான பழமொழி உள்ளது. அதாவது மலையாளம் என்பதே வடவர்களால் அதாவது இன்றைய வட இந்தியாவில் இருந்து வந்த வடநாட்டவர்களான பிராமணர்களின் ஒரு பிரிவினரான (நம்போதிரிகள்) வடமொழியால் உருவாக்கப்பட்ட ஒரு மந்திர மொழி என்று கூறப்படுகிறது. இந்த வடவர்களால் உருவாக்கப்பட்ட நகரமே கேரளாவில் வடவனூர் என்ற பெயரில் ஒரு பெரிய நகரம் உள்ளது. தோற்றம் தமிழ், தோடா, கன்னடம் மற்றும் துளுவுடன் இணைந்து மலையாளம் தென் திராவிட துணைக்குடும்பத்தை சார்ந்தது ஆகும். தமிழுடன் மிகுந்த ஒற்றுமையுடைய மொழி மலையாளம். மலையாளம் ஆதித் தமிழ்-மலையாளம் என்ற கூட்டுமொழியிலிருந்து நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டுகளில் வேறுபடத் துவங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழிலிருந்து மிக வேறுபட்டு மலையாளம் ஒரு தனி மொழியாக உருப்பெற்றது. ஆட்சி மொழியாகவும் அவை மொழியாகவும் இருந்த தமிழின் பெருந்தாக்கம் மலையாளத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தது. பின்னர் நம்பூதிரிகளின் வரவால், வடமொழி ஆதிக்கம் நிலவியது. அரேபியர்களுடான வணிகம், போர்த்துகீசியர் வரவு ஆகியவற்றால் ரொமானிய மற்றும் செமிட்டிக் மொழியின் தாக்கத்தையும் மலையாளத்தில் உணரலாம் பழங்காலத்தில் கேரளம் என்பது சேர நாடாகத் தமிழக இலக்கியங்களில் அறியப்படுகிறது. சொற்பொருளாக்கம் மலையாளம் என்ற சொல்லுக்கு 'மலை மற்றும் கடல் சார்ந்த பகுதி' என்று பொருள் ஆகும். அதாவது மலை + ஆளம் (கடல்) என்பதே மலையாளமாக ஆனது என சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். முதலில் இந்த சொல் மலைகளுக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை குறிக்க பயன்பட்டு பின்னர் அந்த நிலப்பகுதியில் பேசப்பட்ட மொழிக்கும் பெயராயிற்று என்று கருதப்படுகிறது. மொழி வரலாறு மலையாள மொழி தமிழும் வடமொழியும் சேர்ந்து தோன்றிய மொழி. இதை நிராகரிப்பதற்காக இரண்டு விதமான வாதஙகள் வைக்கப்பட்டன. ஒன்று மலையாளம் மலைநாட்டுத்தமிழில் இருந்து தோன்றியது இன்னொன்று பழந்திராவிடமொழியிலிருந்து தமிழுடன் ஒத்த மொழியாக உருவாகியது. மலையாள மொழியைக் குறித்து முதல் முதலில் ஆய்வு செய்தவர் அறிஞர் கால்டுவெல் அவர்கள். இவரைப் பொறுத்த வரையில் மலையாளம் தமிழின் ஒரு பிரிவு என அபிப்ராயம் தெரிவித்தார். புருடபேத நிராசம், சமசுகிருத பாகுல்யம் முதலியவற்றால் தமிழிலிருந்து மலையாளம் தமிழிலிருந்து வேறுபட்டு நிற்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். அவரைத்தொடர்ந்து ஏ.ஆர்.ராசராசவர்மாவும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இவருடைய கருத்தின்படி, மலைநாட்டிலே பேசப்பட்டு வந்தது தமிழே. தமிழ் செந்தமிழ், கொடுந்தமிழ் என இரண்டு வகையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பலவகை கொடுந்தமிழ்களில் ஒன்றுதான் மலையாளமாக உருமாறியது. மலைநாட்டில் வழங்கி வந்த கொடுந்தமிழே சமசுகிருதத்தின் தாக்கத்தினால் தனி மொழியாக ஆனது என்பது ராசராசவர்மாவின் கருத்தாகும். ஆனால் வி.கே.பரமேசுவரன் அவர்களின் கருத்துப்படி தமிழும் மலையாளமும் தனித்த மொழிகளாகும். கேரளத்தில் ஏற்பட்ட சோழ, பாண்டிய நாடுகளின் ஆதிக்கத்தால் மலையாளம் தமிழால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அரசு சாசனங்களிலும், ஆட்சிமொழியாகவும், உயர்குடி மக்களின் மொழியாகவும் செந்தமிழே வழங்கிவந்தது. ஆனால் இந்தத் தாக்கம் அரசர்களிடம் மட்டுமே இருந்தது. மக்களிடம் மலையாளமே வழங்கி வந்ததாகவும் இவர் கருதுகின்றார். எனவே பிரதான திராவிட மொழியான தமிழுக்கு மலையாளத்துக்கு உள்ள பந்தம் மிகவும் முக்கியமானது ஆகும். ஆட்சியாளர்களின் மொழியாக ஒரு காலத்தில் கேரளத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் தாக்கம் மலையாளம் காண்பதில் வியப்பொன்றும் இல்லை. பிராமண குடியேற்றங்களினால் இந்தோ-ஆரிய மொழிகளின் தாக்கமும், அரபு மொழியின் தாக்கமும், ஐரோப்பிய தேசங்களின் ஆக்கிரமப்பினால் ஐரோப்பிய மொழிகளின் தாக்கமும் மலையாளத்தில் சில மற்றங்களை ஏற்படுத்தியுள்ளன மலையாளம் என்ற சொல் ஒரு காலத்தில் நாட்டின் பெயரை மட்டும் குறித்தது. எனவே மலையாள நாட்டில் பேசப்பட்டு வந்த மொழியாகையால் மலையாளம் என்பது மொழியின் பெயராக ஆகியிருக்கலாம். என்றாலும் இம்மொழி மலையாண்ம என்ற பெயராலேயே அறியப்பட்டு வந்தது. நாட்டின் பெயர் மொழியின் பெயர் ஆனவுடன், பழைய மலையாள மொழியின் பெயரை குறிக்க சிலர் மலையாண்ம என்ற சொல்லை பயன்படுத்தினர். மொழியியல் வல்லுனர்கள் கருத்து பின்வருமாறு. மலையாளம் தமிழிலிருந்தே பிறந்ததாகும். எல்லா மொழிகளையும் போல் தமிழுக்கும் வட்டார வழக்குகள் உள்ளது. இது ஒரு விதமான கொடுந்தமிழிலிருந்து தான் பின்னர் மலைநாட்டின் மொழியான மலையாளம் உருவம் பெற்றது. இவ்விதமான மாற்றம் நிகழ்ந்ததற்கு பின்வருபவன காரணமாகத் திகழ்ந்தன: மலைநாட்டையும் தமிழ்நாட்டையும் புவியியல் ரீதியாக மலை வேறுபடுத்தியது; வட்டார ஆசாரங்களும் வாழ்க்கைமுறையும்; நம்பூதிரிகளின் ஆரிய பண்பாடு. மலையாள மொழியின் வரலாற்றில் நிலையான பாதிப்பை ஏற்படுத்திய காரணங்களில் முதன்மையானது நம்பூதிரிமார்களின் சமஸ்கிருத பிரச்சாரமாகும். மேற்குடி சமூக-அரச சம்பவங்கள் இந்த ஒரு மாற்றத்தின் தாக்கத்தை கூட்டுவதாக இருந்தது. பாண்டிய சோழ சேர அரசர்களின் அதிகாரம் தென்னிந்தியாவில் குறைந்ததும், மலையாள நாட்டில் பெருமக்கன்மாரின் ஆட்சி ஏற்பட்டதும் தமிழக மக்களுடான வணிக உறவுகளில் குறைவுகள் ஏற்பட்டன. கிழக்கே இருந்த மலையும் தமிழ்நாட்டுக்கும் மலையாள நாட்டுக்குமான தூரத்தை இன்னும் அதிகப்படுத்தியது. இந்த காரணங்களினால் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாயின. மேலும் மருமக்கன்தாயம், முன்குடுமி, உடை வேறுபாடுகள் போன்றவை பண்பாட்டு வேறுபாடுகளும் தமிழகமக்களையும் மலையாள மக்களையும் வேறுபடுத்தி பிரித்தது. பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டுகளில் கேரள கிராமங்களில் பிராமண சமூகங்கள் குடியேறத் துவங்கின. தங்களுடைய உடைகளையும் சில ஆசார அனுட்டானங்களையும் திராவிட மக்களுக்க்காகப் புறக்கணித்ததினால் அவர்களுக்கு மலைநாட்டில் ஒரு நீங்காத இடம் கிடைக்குமாறு செய்தது. பிராமணர்களிடமிருந்தும் சமஸ்கிருதம் பொதுமக்களின் மொழியில் கலந்தது. இதனால் கொடுந்தமிழும் சமஸ்கிருதமும் இணைந்து ஒன்று சேர்ந்து மலையாண்ம என்ற மொழியாக உருவம் பெற்றது. நெடுங்கணக்கு மலையாள நெடுங்கணக்கில் வடமொழி நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களோடு தமிழ் ஒலிகளான எ, ஒ, ற, ள, ழ ஆகியவையும் மலையாள நெடுங்கணக்கில் உள்ளன. மேலும் னகரம் முற்காலத்தில் இருந்தது, ஆனால் ந, னகரத்துக்கான வேறுபாடுகள் மறைந்ததால், னகரம் மறைந்து விட்டது. உயிரெழுத்துக்கள் சேர்க்கப்படக்கூடாத சில்லெழுத்துக்கள். இவை அனைத்தும் ஒற்றெழுத்துக்களாக கருதப்படவேண்டும் மலையாள எழுத்துக்கள் திராவிட மொழிகளின் வரி வடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே தோன்றியது ஆகும். இந்த பிராமி எழுத்துமுறை திராவிட மொழிகளை எழுதுவதற்காக சில மாற்றங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்டு வந்தது. இந்த பிராமி எழுத்துமுறையே பிற்காலத்தில் தமிழகத்திலும் மலைநாட்டிலும் வட்டெழுத்தாக பயன்பட்டுவந்தது. திராவிட ஒலிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக வட்டெழுத்து அமைந்திருந்தது. இதனால், சமசுகிருதம் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது. பல்லவ கிரந்தம், தமிழ் கிரந்தம் என்ற கிரந்த எழுத்து முறைகளில் பழமையான பல்லவ கிரந்தமே கேரளத்தில் அறிமுகப்படுதப்பட்டது. சமசுகிருததில் பிராசரத்தினால் சமசுகிருத சொற்கள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் சமசுகிருத ஒலிகளை குறிக்க வட்டெழுத்து போதுமானதாய் இல்லை. எனவே திராவிட சொற்களை வட்டெழுத்திலும் சமசுகிருத சொற்களை கிரந்தம் கொண்டும் எழுதப்பட்ட நூல்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் இவ்வாறாக காணப்பட்டன. மணிப்பிரவாள இலக்கியத்தை இயற்றிவர்களும் இந்த முறையினையே பின்பற்றிவந்தனர். இப்போதைய மலையாள எழுத்துமுறை துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. கலப்பு எழுத்துமுறைகளால் ஏற்பட்ட வேறுபாடுகளை தவிர்க்க கிரந்த எழுத்திலிருந்து திராவிட ஒலிகளுக்குறிய எழுத்துக்களோடும் தற்போதை மலையாள எழுத்துமுறையினை நிறுவினார். இலக்கணம் மூல மொழியில் வரலாற்றுரீதியாக, வந்துசெல்லும் உள்ளார்ந்த வேறுபாடுகளை கொண்டு மட்டுமே ஒரு மொழியினைத் தனித்த, சுதந்திர மொழியாகக் கொள்ளல் ஆகாது. எனினும், இவ்விதமான மாற்றங்கள் அந்த மொழியின் தோற்றத்திலும், இலக்கணத்திலும் ஏற்படுத்தும் நிரந்தர மாற்றங்களே மூல மொழியிலிருந்து அதை ஒரு சுதந்திரமான தனித்த மொழியாக உருமாற்றி அடையாளப்படுத்துகிறது. மலையாள வையாகரணனும் கேரளபாணினி என்றழைக்கப்படும் ஏ. ஆர். ரவி வர்ம்மாவின் கருத்துப்படி தமிழ் மொழியில் இருந்து மலையாளம் இவ்விதமாக வேறுபடுகிறது. அவையாவன: அனுனாசிகாதிப்ரசரம் (അനുനാസികാതിപ്രസരം) அதாவது, மெல்லினத்தை ஒட்டி வரும் இன எழுத்துக்கள், மெல்லினமாகவே மாறுதல். அவர்க்கோபமர்த்தம் அல்லது தாலவ்யாதேசம் (തവര്‍ഗ്ഗോപമര്‍ദ്ദം അഥവാ താലവ്യാദേശം) சுவரசம்வரணம் (സ്വരസംവരണം) புருடபேதனிராசம் (പുരുഷഭേദനിരാസം) கிலோபசங்கிராகம் (ഖിലോപസംഗ്രഹം) அங்கபங்கம் (അംഗഭംഗം) இலக்கியம் பழங்கால இலக்கியம் மலையாள இலக்கியத்தின் ஆரம்ப காலம் நாடோடி பாடல்கள், தமிழ் - சமசுகிருத மொழிகளுடன் துவங்கியது. . மலையாளத்தில் கிடைத்திருக்கும் மிகப்பழைய கல்வெட்டு சேரப்பெருமக்கன்மார்காளில் ராசசேகரன் பெருமாளின் காலத்தியதாகும். பொ.ஊ. 830இல் எழுதப்பட்டதாக இந்த வாழப்பள்ளி கல்வெட்டு கருதப்படுகிறது. கிரந்த எழுத்துக்களில் உள்ள இந்த கல்வெட்டு, சேரப்பெருமக்கன்மார்களுடைய வம்சாவளியும் நிலவிவரங்களும் (കാര്‍ഷികവിവരങ്ങളും) பதிவாகப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் வளர்ந்து வந்த மலையாள இலக்கியத்தை இவ்விதமாக பிரிக்கலாம். தமிழ் மரபை ஒட்டிய பாட்டு இலக்கியங்கள். வடமொழி மரபை ஒட்டிய மணிப்பிரவாள இலக்கியங்கள். மலையளத்திலுள்ள தூது காவியங்கள் (സന്ദേശകാവ്യങ്ങള്‍), சம்பூக்கள் (ചമ്പൂക്കള്‍) மற்றும் இதர படைப்புகள். பாட்டிலக்கியத்தில் பழமையானது சீராமன் எழுதிய ராமசரிதம் (രാമചരിതം) ஆகும். பெயரில் குறிப்பிட்டது போல் இது ராமனின் கதையாகும். இதில் யுத்தகாண்டத்தின் சம்பங்களே பிரதானமாகவும் விவரமாகவும் கூறப்பட்டுள்ளது. வடமொழி காவிய முறையில் இருந்து விலகி உள்ளூர் முறையில் எழுத்தப்பட்ட காவிய என்ற நிலையில் ராமசரிதம் சிறந்த படைப்பாகும். லீலாதிலகத்திலும் மற்றும் அதைச்சார்ந்த பாட்டு காவியங்களையும் படித்தால் ஒரு தமிழ் படைப்பென்று பொது மக்களுக்கு தோன்றும். தமிழ் கலப்பில் இருந்து விலகி முற்றிலும் மலையாள மரபில் இயற்றப்பட்ட காவியம் என்றால் அது கண்ணசராமயணத்தில் காணலாம். அதிதே வனிலமிழ்ந்த மனகாம்புடய சீரமானன்பினோடியற்றின தமிழ்கவி வல்லோர் - என தமிழ் கலப்போடு உள்ளது ராமசரிதம் நரபாலகர் சிலரிதின் விறச்சார் நலமுடெ சானகி சந்தோசிச்சாள் அரவாதிகள் பயமீடுமிடி த்வனியால் மயிலானந்திப்பதுபோலே - என தெளிவான மலையளத்தில் உள்ளது கண்ணசராமாயணம்‍ ராமசரிதம் எழுதப்பட்ட 12ஆம் நூற்றிண்டிலேயே வைகாசிகதந்திரம் என்ற மணிப்பிரவாள நூல் எழுதப்பட்டது. பொது மணிப்பிரவாளப் படைப்புகள் சமசுகிருத விபக்திபிரயோகங்களும் (വിഭക്തിപ്രയോഗങ്ങളും) தமிழ்ச் சொற்களும் மற்றும் பழைய மலையாளச் சொற்களும் சேர்ந்தவையாக இருந்தன. சமசுகிருதத்தின் கூடுதல் தாக்கமுடைய சுகுமாரகவின் சிரீகிருட்டிவிலாசமும், சங்கராச்சாரியருடைய தோத்திர மரபில் இயற்றப்பட்ட நூல்களும் இதே காலகட்டத்தில் பிரபலமாக இருந்தன. வில்வங்கள சுவாமியாரின் சமசுகிருத தோத்திரங்களும் மணிப்பிரவாளத்தில் வசுதேவத்தவம் போலுள்ள படைப்புகளும் 12ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டவையாகும். கேரள காவிய மரபு தெரிந்தது செறுச்சேரின் கிருட்டிணகாதையில் ஆகும். தமிழிலிருந்தும் சமசுகிருதத்திலிருந்தும் கலப்பதில் இருந்து இது அகன்று நின்றது. நாடோடிப் பாடல்களும் தெளிவான மலையாள மொழியும் சேர்ந்த கிருட்டிணகாதை மலையாள கவிதைகளுக்கு ஒரு புதிய பிறவி நல்கியது. தற்கால மலையாள கவிகளான வள்ளத்தோள், வைலோபிள்ளி, பாலாமணியம்ம போன்றவர்களுடைய கவிதைகளில் கிருட்டிணகாதையின் தாக்கத்தை காணலாம். தனித்த மலையாள மரபு என்ற நிலையில் மலையாள இலக்கியத்தில் தூதுகாவியங்களும் சம்பூக்களும் இவ்வகையில் சேரும். தற்கால இலக்கியம் தற்கால இலக்கியக்கூறுகளை ஈர்த்துக்கொள்வதின் மூலம் மலையாள இலக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆங்கிலேயரின் காலத்தில், மற்ற ஐரோப்பிய மொழிகளைக் குறித்த அறிவு, அப்போதைய படைப்புகள் முதலியவற்றின் தாக்கம் மலையாள இலக்கியத்தில் சில நவீன சிந்தனைகளின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. அகராதிகள், இலக்கண நூல்கள், பத்திரிக்கைகள் முதலியவை இந்த வளர்ச்சிக்கு உதவின. ஆங்கிலேயர் காலத்துக் கல்விமுறைகள் மூலம் பெறப்பட்ட அறிவியல், சர்வதேசக் கருத்துகள் ஆகியவை மலையாள இலக்கியத்தின் கதியை நிர்ணயித்தது. உரைநடை இலக்கியமே தற்கால மலையாள இலக்கியத்தின் முகாந்திரமாக இருந்தது. திருவிதாங்கூர் மகாராசாவின் ஆயில்யம் திருநாள் அன்று ராமவர்ம்மாவின் பாட்சாசாகுந்தளம் (ഭാഷാശാകുന്തളം) என்ற காளிதாசரின் நூலுக்கான உரை வெளியிடப்பட்டது. சில காலத்திலேயே மலையாள இலக்கியம் உரைநடையை நோக்கி வழிமாறச்செய்தது இந்தச்செயல். பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பதென்பது ராமவர்மாவின் காலம் முதல் இன்று வரை தொடர்கிறது. எர்மன் குண்டர்ட் என்ற ஜெர்மன் பாதிரியாரின் மிகுந்த உழைப்பினால் மலையாளத்தின் முதல் அகராதியும் இலக்கண நூலும் இயற்றப்பட்டன. இந்த நூல்களை ஆதாரமாக கொண்டுதான் 19ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற நூல்கள் எழுந்தன. பி.கோவிந்தவிள்ளாவின் பாட்சாசரித்ரம் (ഭാഷാചരിത്രം) பிரசித்தி பெற்றதும் 19ஆம் நூற்றாண்டில் தான். கேரளவர்மாவின் தாய்மாமன் ஏ.ஆர்.ராசராசவர்மாவின் படைப்புகள் காதல் கதைகளுக்கும் (റൊമാന്‍റിസം) பிற உயர்தரமான (നിയോ-ക്ലാസിക്) இலக்கியத்துக்கும் வித்திட்டன. வட்டார வழக்குகள் கேரள பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிப்பிரிவு நடத்திய ஆய்வில், 12 வட்டார வழக்குகள் மலையாளத்துக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தொக்கன் (திருவிதாங்கூர்), மத்திய கேரளம் (கோட்டயம்), திரிச்சூர், மலபார் ஆகிய நான்கு வழக்குகள் முதன்மையாக வழக்குகளாகும். இவற்றுள் கோட்டயம் வழக்கின் தாக்கம் எழுத்து மொழியில் அதிகமாக உள்ளது. இதற்கு அச்சுப்பதிப்பு கோட்டயம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முதலில் தோன்றியதே காரணமாகும். பிற மொழிகள் ஏற்பு மலையாள மொழி மிகவும் அதிக அளவில் ஏற்றுக்கொண்டது தமிழ் மற்றும் வடமொழியே ஆகும். இதற்கு திராவிட பின்புலமும், பிராமண தாக்கமுமே காரணம் ஆகும். உலகின் பிற மொழிகளின் கூறுகளையும் மலையாள மொழியில் காணலாம். ஆதி காலம் தொட்டே, கேரளத்தின் வணிக உறவினால் இது நிகழ்ந்துள்ளது. இந்தி, உருது, ஐரோப்பிய மொழிகள், சீனம் ஆகியவற்றின் பல கூறுகளையும் மலையாளம் நல்கியுள்ளது. மலையாள யூனிகோடு மலையாள யூனிகோடு U+0D00 முதல் U+0D7F வரை துணுக்குச் செய்திகள் ஆங்கிலத்தில் மலையாளம் என்பது இருவழி ஒக்கும் சொல் (Palindrome) ஆகும். Malayalam என்பதை முன்னிருந்து பின்னாக படித்தாலும், பின்னிருந்து முன்னாக படித்தாக ஒரே சொல் வருவதை கவனிக்க. இவற்றையும் காண்க கேரள வரலாறு மணிப்பிரவாளம் மேற்கோள்கள் கேரளபாணினீயம் - ஏ. ஆர். ராஜாவர்ம்மா கேரள சரித்தரம் - ராகவ வாரியர், ராஜன் குருக்கள் வெளி இணைப்புகள் மலையாள இலக்கியம். கேரள மாநிலத்தின் அதிகராப்பூர்வ இணையதளம் மலையாள யூனிகோடு அட்டவணை(PDF) English மலையாள அகராதி மலையாளம் கற்க உதவும் இணையம்.
1228
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கன்னடம்
கன்னடம் (ಕನ್ನಡ , க1ந்நட3, Kannada) தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 36 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு திராவிட மொழியாகும். பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். மேலும் தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ள திராவிடமொழி கன்னடமே. இந்தியாவின் 22 தேசிய மொழிகளுள் இதுவும் ஒன்று. 2008ம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இம்மொழியின் எழுத்து வடிவம் தெலுங்கு மொழியின் எழுத்து வடிவத்தை ஒத்து இருந்தாலும் இலக்கணம்,சொற்கள் அடிப்படையில் தமிழ்தான் மிகவும் நெருங்கியதாகும். மொழி வரலாறு கன்னட மொழியானது மூல தென் திராவிட மொழியிலிருந்து பிரிந்ததாக எண்ணுகின்றனர். எப்பொழுது இப்பிரிவு நிகழ்ந்தது என்று கூறப் போதிய சான்றுகள் இல்லை. பேச்சு மொழியாக 2000 ஆண்டுகளேனும் இருந்திருக்க வேண்டும். பிராகிருத, சமசுகிருத மொழிகளின் தாக்கத்தை இம்மொழியில் காணலாம். மொழியின், அகரவரிசை நெடுங்கணக்கில் வல்லின மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் சமசுகிருதம் போல நான்கு வேறுபாடுகள் உள்ளனவாக அமைத்துக்கொண்டனர். இவ்வமைப்பு எப்பொழுதிலிருந்து நிலவி வருகின்றதெனத் தெரியவில்லை. கல்வெட்டுக்களில் மிகவும் தொன்மையானது பொ.ஊ. 450 ஐச் சார்ந்த ஹல்மிதி கல்வெட்டாகும். இது ஹளே கன்னடம் (= பழைய கன்னடம்) மொழியில் உள்ளது. பதாமி மலையில் பொ.ஊ. 543 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் ஹளே கன்னட மொழி எழுத்துக்களில் சமசுகிருத மொழி கல்வெட்டு ஒன்று உள்ளது. பழைய கன்னடத்தில் தமிழ் ழகரமும், தமிழ் வல்லின றகரமும், இரண்டுசுழி னகரமும் இருந்தன. தென்கன்னடப் பகுதியில் (தக்ஷின் கன்னடாவில்) 1980ல் தான் னகரத்தை விலக்கினார்கள். செப்பேடுகளில்: மேற்கு கங்கர் ஆட்சிக் காலத்தில் (பொ.ஊ. 444) எழுதப்பட்டதாகக் கருதப்படும் தும்புலா செப்பேடுகளில் சமசுகிருத-கன்னட இருமொழி பொறிப்புகள் உள்ளது. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் கன்னடப் பகுதியில் பெல்மன்னு என்னும் இடத்தில், ஆலுவரச-2 என்னும் அரசன் ஆண்ட காலத்தில் ஹளே கன்னட மொழி எழுத்துக்களில் முழு கன்னட மொழி செப்பேடு ஒன்று அறியப்படுகின்றது. இலக்கிய வகையில், பொ.ஊ. 700 ஆம் ஆண்டளவில் திரிபாதி சந்தத்தில் கப்பெ அரபட்டா எழுதிய பாடல்கள் பழமையானவை. ஆனால் இன்று கிடைத்துள்ளவற்றுள் நிருபதுங்க அமோகவர்ஷா என்னும் அரசனால் பொ.ஊ. 850 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட கவிராஜமார்கம் என்னும் நூலே பழமையானது. பொ.ஊ. 900ல் சிரவணபலகுலாவைச் சேர்ந்த பத்திரபாஃகுவின் வாழ்க்கையை விளக்கும், சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே (?) என்னும் நூல் அடுத்ததாக உள்ள பழமையான நூல் ஆகும். தற்கால இலக்கியம் 20 ஆம் நூற்றாண்டு இலக்கியத்தில் கன்னடம் முன்னணி வகிக்கும் ஓர் இந்திய மொழி ஆகும். இந்தியாவில் எம்மொழியினும் அதிக எண்ணிக்கையில் ஞானபீடப் பரிசுப் பெற்ற மொழி கன்னடம் ஆகும். இதுவரை 7 இலக்கிய எழுத்தாளர்கள் ஞானபீடப் பரிசுகள் பெற்றுள்ளனர். இது தவிர 48 சாகித்திய அகாதமிப் பரிசகளும் பெற்றுள்ளது. ஞானபீட பரிசு பெற்றவர்கள்: 1967 குவெம்பு (ஸ்ரீ ராமாயண தர்ஷனம்) (Kuvempu for Sri Ramayana Darshanam) 1973 டா. ரா பெந்த்ரே (நாக்கு தந்தி) (Da.Ra.Bendre for Naaku thanthi) 1977 சிவராம் கரந்த் (மூக்காஜ்ஜிய கனசுகளு) (Shivaram Karanth for Mookajjiya Kanasugalu) 1983 மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (சிக்கவீர ராஜேந்திரா) (Masti Venkatesh Iyengar for Chikaveera Raajendhra) 1990 வி.க்ரு கோகக் (பாரத சிந்து ராஷ்மி) (Vi.Kru.Gokak for Bhaaratha Sindhhu Rashmi) 1994 யு.ஆர். ஆனந்தமூர்த்தி (கன்னட சங்கிரஹ சாஹித்யம்/ கன்னட மொழி ஆக்கங்களுக்கு) (U.R.Ananthamurthy for his works in Kannada / samagra sahitya) 1998 கிரிஷ் கர்னாட் (கன்னட சங்கிரஹ சாஹித்ய நாடக ஆக்கங்களுக்கு) (Girish Karnad for his dramatic works in Kannada / samagra sahitya) மொழி உயிர் எழுத்துக்கள் கன்னடத்தில் 13 உயிர் எழுத்துக்கள் உள்ளன. உயிரெழுத்துக்களை ஸ்வர என்று அழைக்கின்றனர். அவையாவன: ಅ (அ), ಆ (ஆ), ಇ (இ), ಈ (ஈ), ಉ (உ), ಊ (ஊ), ಋ (ரு), ಎ (எ), ಏ (ஏ), ಐ (ஐ), ಒ (ஒ), ಓ (ஓ), ಔ (ஔ) யோகவாஹா உயிர் எழுத்துக்கள் தவிர, பாதி உயிரெழுத்து ஒலியாகவும், பாதி மெய்யெழுத்து ஒலியாகவும் இருப்பதாகக் கருதப்படும் யோகவாஹா என்னும் இரு எழுத்துக்கள் உண்டு. அவையாவன: அனுஸ்வரம்: ಂ (அம்) விசர்கம்: ಃ (ஃ) மெய் எழுத்துக்கள் கன்னட மொழியில் தமிழில் உள்ள க,ச,ட,த,ப ஆகிய ஐந்து வல்லின எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் நான்கு விதமாக வேறுபடுத்திக் காட்டுவர். மேலுள்ளனவன்றி, தமிழில் உள்ளது போன்ற இடையின மெய்யெழுத்துக்கள் வரிசையும் உண்டு. அவையாவன: ಯ (ய, ya), ರ (ர, ra), ಲ (ல, la), ವ (வ, va), ಶ (ஶ, sha), ಷ ( ஷ, shha), ಸ (ஸ, sa), ಹ (ஹ, ha), ಳ (ள, lla), மற்றும்,ಱ (ற, Ra),ೞ (ழ, zha) (ழ&றகரங்கள் 12ஆம் & 18ஆம் நூற்றாண்டுகளில் உபயோகத்திலிருந்து மறைந்துவிட்டன) பேச்சுக் கன்னடம் கன்னடத்தின் எழுத்துருவம் தெலுங்கை ஒத்துள்ளபோதிலும் பேச்சுக் கன்னடம் தமிழை ஓரளவு ஒத்தாகும். எண்கள் - ஒந்து (ஒன்று ) - எரடு (இரண்டு ) - மூரு (மூன்று ) - நாலக்கு (நான்கு ) - ஐது (ஐந்து ) - ஆறு (ஆறு ) - ஏளு (ஏழு ) - என்டு (எட்டு ) - ஒம்பத்து (ஒன்பது ) - ஹத்து (பத்து ) - நூறு (நூறு ) - ஸாவிரா (ஆயிரம் ) பொதுவானவை நானு - நான் குத்கொலி - அமருங்கள் (பேச்சுத் தமிழ்: உக்காருங்க, சென்னை, செங்கல்பட்டுத் தமிழில் குந்து, குந்திக்கோங்க) பருத்தீரா? - வாறீங்களா ஹௌதா? - அப்படியா ஆமேலே பர்த்தினி - அப்புறமா வரேன் எஷ்டு - (எவ்வளவு எஷ்டாகிதே - (எவ்வளவு ஆகீயிருகுதுங்க கன்னட சொல்ப சொல்ப பரத்தே (கன்னடம் கொஞ்சம் கொஞ்சம் அறிவேன் ) கெண்டித்தி/மனையவரூ (மனைவி ) ஊட்டா (சாப்பாடு ) திண்டி (சிற்றுண்டி ) நிம்ம ஹெசரு ஏனு (உங்க பெயர் என்ன? ) சென்னாகிதீரா? (நலமாக உள்ளீர்களா? ) ஹேகிதிரா? - (எப்படி இருக்கிறீர்கள்? ) மல்கொளி - (படுத்துக் கொள்ளுங்கள் ) மனே எள்ளீதே (வீடு எங்குள்ளது ) பூப்பசந்திர ஹோகுதா இல்வா? (பொதுவா பஸ்களில்: பூப்பசந்திரம் போகுதா இல்லையா? ) சொல்ப நீர் கொடி (கொஞ்சம் தண்ணீர் தரவும்) நானு நிம்கெ ப்ரீத்தி மாடுத்தேனெ(நான் உங்களைக் காதலிக்கின்றேன் ) மேற்கோள்கள் மேலும் காண்க குருக்கு கன்னட எழுத்துமுறை கன்னட இலக்கியம் வெளி இணைப்புகள் கன்னட மொழி கற்க Robert Zydenbos (2020): A Manual of Modern Kannada. Heidelberg: XAsia Books (Open Access, PDF format) கர்நாடகம் கன்னடம் திராவிட மொழிகள்
1229
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
தென்னிந்தியா
தென்னிந்தியா (South India) அல்லது தென் இந்தியா என்பது தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளம் மாநிலங்கள் மற்றும் ஆட்சி பகுதிகளான அந்தமான் நிக்கோபார், இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியனவை உள்ளடக்கியதாகும். இது இந்தியாவின் நிலபரப்பில் 19.31% ஆக்கிரமித்து உள்ளது. இந்தியாவின் தெற்கு பகுதியான தக்காண பீடபூமியை உள்ளடக்கி, கிழக்கில் வங்காள விரிகுடா, மேற்கில் அரபிக் கடல் மற்றும் தெற்கில் இந்திய பெருங்கடலால் சூழப்பட்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை நடுவில் பீடபூமியை நடுப்பகுதியாக கொண்டுள்ளது. கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, காவிரி மற்றும் சிறுவாணி ஆறுகள் தலைமை நீர் அடையாளங்களாகும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை, விசாகப்பட்டினம், கொச்சி மற்றும் கோழிக்கோடு மிகப் பெரிய நகர்ப்புற பகுதிகளாகும். தென் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் நான்கு முக்கிய திராவிட மொழிகளில் ஒன்றான தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியனவற்றையே பேசுகின்றனர். தென் இந்தியா பகுதிகளை பல வம்ச மன்னர்கள் ஆண்டனர் மற்றும் தென் இந்திய கலாச்சாரம் தெற்கு ஆசியா முழுவதும் பரவியது. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் மற்றும் விஜயநகரப் பேரரசு ஆகியவை தென் இந்தியாவில் நிறுவப்பட்ட தலைமை வம்சாவளிகள் ஆகும். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு பல ஏற்ற இறக்கங்கள் பட்ட பிறகு, தென்னிந்திய மாநிலங்கள் மெதுவாக பொருளாதார முன்னேற்றம் அடைந்தன. கடந்த முப்பதாண்டுகளாக, நாட்டு சராசரி வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. தென் இந்திய மாநிலங்களில் சில முன்னேற்றம் கண்ட அதே வேளை, வறுமை நாட்டின் ஏனைய பகுதிகளை போல சிக்கலாக இருக்கிறது. தென் மாநிலங்களில் பொருளாதாரம் வட மாநிலங்களை விட அதிக வேகத்தில் வளர்ச்சி பெற்றுவிட்டது. கல்வியறிவு விகிதம் தென் மாநிலங்களில் சுமார் 80% ஆக உள்ளது. இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் விட அதிகமானதாகும். தென்னிந்தியாவின் குழந்தை பிறப்பு வீதம் 1.9 ஆகும். அனைத்து இந்திய பகுதிகளில் இதுவே குறைவானதாகும். தென்னிந்தியாவின் முதல் தர பத்து மிகப்பெரிய நகரங்கள் தென்னிந்தியாவில் பல தொழில் முதலீடுகளை உள்ள நகரங்கள் பல உள்ளன. மேலும் தென்னிந்தியாவின் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வகையில் கீழ்கண்ட முதல் பத்து நகரங்கள் தென்னிந்திய பொருளாதாரத்தில் பெரும் பங்காக உள்ளது. சென்னை ஹைதராபாத் பெங்களூரு கோயம்புத்தூர் திருவனந்தபுரம் விசாகப்பட்டினம் மதுரை மைசூர் ஹூப்ளி கொச்சி போன்ற நகரங்கள் தென்னிந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய மாநகரங்கள் ஆகும். இதன் தர வரிசையே தென்னிந்திய பெருநகரங்கள் மற்றும் தென்னிந்திய வரிசைப்படட்டியல் நகரங்கள் ஆகும். சொற்பிறப்பு தீபகற்ப இந்தியா என்றும் அழைக்கப்படும் தென்னிந்தியா, பல பெயர்களால் அறியப்படுகிறது. கடலோரப் பகுதிகளைத் தவிர்த்து தீபகற்ப இந்தியாவின், பெரும்பகுதி தக்காணப் பீடபூமியால் காணப்படுகிறது. "டெக்கான்" என்ற சொல், தக்ஷின் என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்ட தக்ஹின் என்ற பிராகிருத வார்த்தையின் ஆங்கில வடிவமாகும். கருநாடகமும் தென்னிந்தியாவுடன் தொடர்புடையது ஆகும். வரலாறு பண்டைய காலம் இரும்புக் காலத்திலிருந்து (பொ.ஊ.மு. 1200 - பொ.ஊ.மு. 24), பொ.ஊ. 14ம் நூற்றாண்டு வரையிலான பாண்டியர், சோழர், சேரர், சாதவாகனர், சாளுக்கியர், இராஷ்டிரகூடர், பல்லவர், காக்கத்தியர், போசளர் காலத்திய பண்டைய தென்னிந்திய வரலாறு அறியப்படுகிறது. களப்பிரர்கள் (பொ.ஊ. 250 – 600 ) சேர, சோழ, பாண்டியர்களை வென்று தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர். தென்னிந்திய அரச குலங்கள், தங்கள் பேரரசின் நிலவிரிவாக்கத்திற்கு ஒன்றுடன் ஒன்று எப்போதும் போரிட்டுக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு, குறிப்பாக வடநாட்டு இசுலாமிய படைகளுடனும் எதிர்த்து நின்றது. தென்னிந்திய பேரரசுகளில், விஜயநகரப் பேரரசு, வட இந்தியா இசுலாமிய முகலாயர்களின் தாக்குதல்களை முடியறிடித்து, தென்னிந்தியாவிற்கு அரண் ஆக விளங்கியது. விடுதலைக்குப் பின்பு 1956ல் இந்திய அரசு இயற்றிய மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, தென்னிந்தியாவில் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளை ஆந்திரப் பிரதேசம் எனும் புது மாநிலத்துடன் இணைத்தனர். கன்னட மொழி பேசும் பகுதிகள் மைசூர் மாநிலத்துடன் இணைத்தனர். மலையாளம் பேசும் பகுதிகள் கேரளா எனும் புதிய மாநிலத்துடன் இணைத்தனர். 1968ல் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்டது. 1972ல் மைசூர் மாநிலத்தின் பெயரை கர்நாடகா எனப் பெயரிடப்பட்டது. 1961ல் போர்த்துகேய இந்தியாவின் பகுதியான கோவா இந்தியாவின் ஒன்றியப் பகுதியானது. பின்னர் 1987ல் கோவா தனி மாநிலமாக உயர்ந்தது. 1950ல் பிரெஞ்சு இந்தியாவின் பகுதியான புதுச்சேரி, இந்தியாவின் ஒன்றியப் பகுதியானது. ஆந்திரப் பிரதேசத்தின் பழைய ஐதராபாத் இராச்சியத்தின் பகுதிகளைக் கொண்டு 2014ல் தெலங்கானா மாநிலம் உருவானது. புவியியல் இந்தியாவில் தெற்கில் தலைகீழ் முக்கோண வடிவ அமைப்பில் அமைந்த தென்னிந்திய தீபகற்பத்தின் எல்லைகளாக கிழக்கில் வங்காள விரிகுடா, தெற்கில் இந்தியப் பெருங்கடல், மேற்கில் அரபுக் கடல், வடக்கில் விந்திய மலைத்தொடர்களும் எல்லைகளாக உள்ளது. சாத்பூரா மலைத்தொடர்களுக்கு தெற்கே அமைந்த தக்காண பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளை கொண்டுள்ளது. தக்காண பீடபூமியின் மகாராட்டிரா மாநிலத்தின் கிழக்கில் பருத்தி அதிகம் விளையும் வறட்சி மிக்க விதர்பா மற்றும் மரத்வாடா பிரதேசங்கள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கும், அரபுக் கடலுக்கும் இடையே மலபார் பிரதேசம் மற்றும் கொங்கண் மண்டலம் உள்ளது. வடக்கிலிருந்து தெற்காக அமைந்த மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கிடையே மலைநாடு, மலபார் கடற்கரை, நீலகிரி, வயநாடு ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் மலைக்காடுகள் உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் திருமலை, ஸ்ரீசைலம் போன்ற திருத்தலங்களும், நல்லமலா மலைக்காடுகளும் அமைந்துள்ளது தாவரங்கள் மற்றும் விலங்குகள் மக்கள் தொகை 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதிப்பிடப்பட்ட தென் இந்தியாவின் மக்கள்தொகை 25.2 கோடியாகும். இது இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். குழந்தை பிறப்பு வீதமானது மக்கள் தொகையை வீழ்ச்சி அடையாமல் வைத்திருக்கக்கூடிய 2.1க்கும் குறைவாகவே அனைத்து தென்னிந்திய மாநிலங்களுக்கும் உள்ளது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு இந்திய அளவிலேயே மிகக் குறைந்த குழந்தை பிறப்பு விதமாக 1.7 ஐப் பெற்றுள்ளன. இதன் காரணமாக 1981 முதல் 2011 வரை இந்திய மக்கள் தொகையில் தென் இந்தியாவின் பங்கு குறைந்து கொண்டே வந்துள்ளது. தென்னிந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி சுமாராக ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 463 பேர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தென் இந்தியாவின் மக்கள்தொகையில் 18 சதவீதம் பேர் ஆவர். பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். 47.5% பேர் விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தென் இந்தியாவின் மக்கள் தொகையில் 60% பேர் நிலையான வீட்டு அமைப்புகளில் வாழ்கின்றனர். 67.8% தென்னிந்தியா குழாய் குடிநீர் வசதி பெற்றுள்ளது. கிணறுகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் குடிநீர் வழங்குவதில் முக்கியமான ஆதாரங்களாக உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தென் இந்திய பொருளாதாரம் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பிறகு கடந்த மூன்று தசாப்தங்களாக தேசிய சராசரியை விட அதிக வேகத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் சில சமூக பொருளாதார அளவீடுகளில் மேம்பட்ட போதிலும், வறுமையானது மற்ற இந்திய பகுதிகளைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவு வறுமை குறைந்துள்ள போதிலும் அதன் தாக்கம் தொடர்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்திய மாநிலங்களின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் ஆனது அதிகமாக உள்ளது மற்றும் பெரும்பாலான வட இந்திய மாநிலங்களை காட்டிலும் பொருளாதாரமானது வேகமாக வளர்ந்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 80%. இது தேசிய சராசரியான 74% விட குறிப்பிடத்தக்க அளவு அதிகம். தென்னிந்திய மாநிலங்களில் கேரளா அதிகபட்ச எழுத்தறிவு வீதமாக 93.91% ஐப் பெற்றுள்ளது. தென்னிந்தியா, பாலின விகிதமான 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்பதனை அதிகமாக பெற்றுள்ளது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. பொருளாதார சுதந்திரம், ஆயுட்காலம், குடிநீர் வசதி, சொந்த வீடு வைத்திருப்பது மற்றும் சொந்த டிவி வைத்திருப்பது ஆகிய அளவீடுகளில் தென்னிந்திய மாநிலங்கள் இந்திய அளவில் முதல் பத்து இடங்களுக்குள் வருகின்றன. தென்னிந்திய மாநிலங்களில் 19% பேர் ஏழைகளாக உள்ளனர். அதே நேரத்தில் மற்ற இந்திய மாநிலங்களில் 38% பேர் ஏழைகளாக உள்ளனர். தென்னிந்திய மாநிலங்களில் சராசரி தனிநபர் வருமானம் . இது மற்ற இந்திய மாநிலங்களின் சராசரி தனிநபர் வருமானமான ஐக் காட்டிலும் அதிகம். ஐக்கிய நாடுகள் அவை 2015க்குள் அடைய வேண்டும் என்று சில இலக்குகளை புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் என்று அறிவித்து உள்ளது. இதில் மக்கள் தொகை சார்ந்த மூன்று புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை கேரளா மற்றும் தமிழ்நாடு 2009லேயே அடைந்துவிட்டன. அந்த இலக்குகள் தாயின் ஆரோக்கியம், சேய் இறப்பு விகிதத்தை குறைப்பது மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பது ஆகியவையாகும். மொழிகள் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் சுமார் 73 மொழிகள் உள்ளன. தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகும். துளு மொழி கடற்கரையோர கேரளா மற்றும் கருநாடகாவில், 15 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. கொங்கணி எனப்படும் இந்தோ ஆரிய மொழி கொங்கண் கடற்கரையில் 10 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. தென்னிந்தியாவின் நகரப்பகுதிகளில் ஆங்கிலமும் பரவலாக பேசப்படுகிறது. தென்னிந்தியாவில் உருது மொழி சுமார் 1.2 கோடி முஸ்லிம்களால் பேசப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் கொங்கணி ஆகியவை அலுவல் மொழிச் சட்டம் 1963 இன் படி இந்தியாவின் அலுவல் மொழிகளான 22 இல் ஒன்றாக வருகின்றன. இந்திய அரசாங்கத்தால் செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்ட முதல் மொழி தமிழ் ஆகும். 2004 இல் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டது. செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்ட பிறமொழிகள் கன்னடம் (2008), தெலுங்கு (2008) மற்றும் மலையாளம் (2013) ஆகும். மதம் தென்னிந்தியாவின் மிகப் பெரிய மதமாக 80% மக்கள் பின்பற்றக்கூடிய இந்துமதம் உள்ளது. 11% பேர் இஸ்லாமையும், 8% பேர் கிறித்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். வரலாற்றுக்கு முந்தைய மதம் தென்னிந்தியாவில் பின்பற்றப்பட்டுள்ளதற்கு ஆதாரமாக நடனங்கள் மற்றும் சடங்குகளை விவரிக்கும் கற்கால ஓவியங்கள் கிழக்கு கர்நாடகாவின் குப்கல் போன்ற இடங்களில் சிதறி காணப்படுகின்றன. அடிக்கடி உலகின் பழமையான மதமாக கருதப்படும் இந்து மதம் அதன் ஆரம்பத்தை இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் கொண்டுள்ளது. தென்னிந்தியாவின் முக்கியமான ஆன்மீக பாரம்பரியங்களாக இந்து மதத்தின் சைவ மற்றும் வைணவ கிளைகள் கருதப்படுகின்றன. எனினும் புத்த மற்றும் ஜைன தத்துவங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் செல்வாக்கு செலுத்திய போதும் இவை அவ்வாறு கருதப்படுகின்றன. தென்னிந்தியாவின் தெற்குப் பகுதிகளில் அய்யாவழியும் பரவி காணப்படுகிறது. தென்னிந்தியாவிற்கு இஸ்லாமானது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கேரளாவின் மலபார் கடற்கரையில் அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. 17 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தக்காண சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இது பரவியது. அரேபிய வழி வந்த கேரள இஸ்லாமியர்கள் மாப்பிளமார் என்று அழைக்கப்படுகின்றனர். கிறித்தவ மதம் தென்னிந்தியாவிற்கு புனித தோமையாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் பொ.ஊ. 52 இல் கேரளாவின் முசிறிக்கு விஜயம் செய்து கேரளாவின் யூதக் குடியிருப்புக்களுக்கு ஞானஸ்நானம் செய்தார். கேரளா உலகின் மிகப் பழமையான யூத சமூகங்களில் ஒன்றுக்கு உறைவிடமாகவும் உள்ளது. அவர்கள் சாலமன் ஆட்சிக்காலத்தில் மலபார் கடற்கரைக்கு வந்ததாக கருதப்படுகிறது. பொருளாதாரம் தென்னிந்தியாவின் பொருளாதாரம் நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு சோசலிச கட்டமைப்பை நோக்கி உறுதி அடைந்துள்ளது. தனியார் துறையின் பங்கெடுப்பு, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு கடினமான அரசாங்க கட்டுப்பாடுகள் உள்ளன. 1960 முதல் 1990 வரை தென்னிந்திய பொருளாதாரங்கள் கலவையான பொருளாதார வளர்ச்சியை பெற்றன. 1960களில் கேரளா சராசரி பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது. அதே நேரத்தில் ஆந்திரப்பிரதேசத்தின் பொருளாதாரம் அக்காலகட்டத்தில் சரிவை சந்தித்தது. 1970களில் கேரளா பொருளாதார சரிவை சந்தித்தது. அதே நேரத்தில் 1970க்குப் பிறகு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பொருளாதாரங்கள் தேசிய சராசரி வளர்ச்சி விகிதத்தை விட அதிகப்படியான வளர்ச்சி விகிதத்தை பெற்றன. மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் காரணமாக அவை இந்த வளர்ச்சியை பெற்றன. 2017–18 கணக்கின்படி தென்னிந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 56 லட்சம் கோடி (US$780 பில்லியன்) ஆகும். இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெற்றுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு பிறகு இரண்டாவது அதிக தொழில்மயமான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மார்ச் 2015-இன் கணக்கெடுப்பின்படி தென்னிந்தியாவில் 109 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 60% தென்னிந்தியாவில்தான் உள்ளன. தென்னிந்திய மக்களில் 48%க்கும் அதிகமானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். விவசாயமானது பெரும்பாலும் பருவ மழையை நம்பியே உள்ளது. நெல், சோளம், திணை, பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, மிளகாய் மற்றும் ராகி ஆகியவை தென்னிந்தியாவில் அறுவடை செய்யப்படும் முக்கியமான பயிர் வகைகள் ஆகும். பாக்கு, காப்பி, டீ, ரப்பர் மற்றும் நறுமணப் பொருட்கள் மலை சார்ந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படுகின்றன. மக்களின் பிரதான உணவு பயிராக நெல் உள்ளது. கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி டெல்டா பகுதிகள் நாட்டின் அதிக அரிசி உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்றாக உள்ளன. அடிக்கடி ஏற்படும் பஞ்சங்கள் காரணமாக விவசாயிகள் கடனாளிகளாகவும், தங்களது ஆடு மாடுகளை விற்கும் நிலைக்கும் மற்றும் சில நேரங்களில் தற்கொலை செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இந்தியாவின் மொத்த காப்பி உற்பத்தியில் 92% தென்னிந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பருத்தி, டீ, ரப்பர், மஞ்சள், மாம்பழங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உற்பத்தி செய்யும் முக்கியமான பகுதியாகவும் தென்னிந்தியா விளங்குகிறது. மற்ற பிற முக்கிய விவசாய உற்பத்தி பொருட்களானவை பட்டு மற்றும் கோழி சார்ந்த உற்பத்திப் பொருட்கள் ஆகும். பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கோயம்புத்தூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவை நாட்டின் முக்கியமான தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக உள்ளன. இதில் பெங்களூரு இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப மையங்களின் வளர்ச்சி தென்னிந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வேலை தேடுவோரை ஈர்த்துள்ளது. 2005–06ல் தென்னிந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி 64 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. சென்னை "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த வாகன மற்றும் வாகன பாக உற்பத்தியில் 35% சென்னையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதி இந்தியாவின் மோட்டார்கள் மற்றும் பம்புகள் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை கோயம்புத்தூர் உற்பத்தி செய்கிறது. மேலும் நகைகள், ஈர அரவை இயந்திரங்கள் மற்றும் வாகன பொருட்கள் ஏற்றுமதி செய்யும் பெரிய பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. தென்னிந்தியாவின் மற்றொரு முக்கிய தொழில்துறை ஜவுளித் துறை ஆகும். இந்தியாவில் உள்ள மொத்த நார் ஜவுளி ஆலைகளில் 60% தென்னிந்தியாவில் குறிப்பாக கோயம்புத்தூர்,திருப்பூர், ஈரோட்டில் தான் உள்ளன. சுற்றுலாத்துறை தென் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் மற்றும் தெலுங்காணா ஆகிய மாநிலங்கள் சுற்றுலா பயணிகள் வருகையின் எண்ணிக்கையில் முதல் பத்து மாநிலங்களுக்குள் வருகின்றன. உள்நாட்டு சுற்றுலா பயணிகளில் 50%க்கும் மேற்பட்டோர் இந்த நான்கு மாநிலங்களுக்குத்தான் வருகின்றனர். மேற்கோள்கள் இந்தியப் பகுதிகள்
1230
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
இசை
இசை () (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. இசையை சிரவண கலை எனவும் அழைப்பர். சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் தொனி(ஒலி)களைப் பற்றிய கலையாகும். இசையை வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும். வரலாறு தொல்பொருளியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட பல பொருட்களில் இருந்து, பண்டைய காலத்தில் இசை எவ்வாறு இருந்தது என்பதை ஊகித்தறிய முடிகிறது. பழைய கற்காலத்தில் மனிதர்கள் எலும்புகளில் துளைகளையிட்டு புல்லாங்குழல் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஏழு துளைகள் கொண்ட புல்லாங்குழல், மேலும் சில வகையான நரம்புகள் கொண்ட இசைக்கருவிகள் என்பன, தொல்பொருளாய்வில் சிந்துவெளி நாகரிகம் இருந்த காலத்திலிருந்து பெறப்பட்டிருக்கின்றன. இந்தியா மிகப் பழமையான இசை மரபைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இருப்பதாக அறியப்படுகிறது. மிகப் பழமையானவையும், மிக அதிக அளவிலான பழைய கற்கால இசைக்கருவிகள் சீனாவில் இருப்பதாக அறியப்படுகிறது. அவை 7000 – 6600 கி.மு விலானவையாக இருக்கின்றன. மொழியில் இசை மொழியின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் இயல். பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது நாடகம். நாடகத்தைப் பழந்தமிழ் கூத்து எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது பண்ணிசைக்கு ஏற்பக் காலடி வைத்து ஆடும் ஆட்டம். நாடகம் என்பது கதை நிகழ்வைக் காட்டும் தொடர் கூத்து. சங்ககாலத்தில் கூத்து ஆடியவரைக் கூத்தர் என்றனர். நாடகம் ஆடியவரைப் பொருநர் என்றனர். இசை முறைகள் உலகில் பல்வேறு இசை முறைகள் வழங்கி வருகின்றன. அவையாவன: இந்திய இசை ஐரோப்பிய இசை பாரசீக இசை கிரேக்க இசை எகிப்திய இசை சீன இசை அரபு இசை இந்த ஒவ்வொன்றும் பல்வேறு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளன. இவற்றுள் சிறப்பான சில அம்சங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்திய இசை இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. நூற்றுக்கணக்கான இனங்கள் / இனக்குழுக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும் தன்னகத்தே அடக்கியது. இதனால் இப்பண்பாடுகளின் வெளிப்பாடுகளாகவுள்ள இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளும் பல்வேறு விதமான வேறுபாடுகளுடன் நாடு முழுவதும் பரந்துள்ளன. இவற்றுள் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் இசைவடிவங்களுட் பல தொன்மையான வரலாற்றைக் கொண்டவை. நூற்றாண்டுகளினூடாக சீர் செய்யப்பட்டு வளமான முதிர்ந்த நிலையிலுள்ளவை. உலகம் முழுவதிலும் அறியப்பட்டவை. இவற்றைவிட ஏராளமான கிராமிய, உள்ளூர் இசை மரபுகள், அந்தந்தப் பிரதேசத்துச் சமூக, பொருளாதார, ஆன்மீகத் தேவைகளோடு இணைந்து பயிலப்பட்டு வருவனவாக உள்ளன. பின்வருவன இந்தியாவின் முக்கிய இசை மரபுகளுட் சிலவாகும். கருநாடக இசை இந்துஸ்தானி இசை கசல் கவ்வாலி கிராமிய இசை பழந்தமிழ் இசை கருநாடக இசை கருநாடக இசை அல்லது பண்ணிசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசை வடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும். செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘ஸ்வரம்’ என்றனர்.. கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு ஸ்வரங்களும் ஸ - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. கிராமிய இசை கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப் பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு. "மண் வாசனை வீசும் கிராமிய இசையை தமிழகமெங்கும் தவழவிட்டவர் இளையராஜா. கிராமிய மெட்டு, கிராமிய இசைக் கருவிகள் ஆனால் மேற்கத்திய பாணியில் வாத்தியங்களின் ஒருங்கிணைப்பு என்று இசைக்கலைஞனின் கற்பனையில் உச்சத்தில் நின்று பாடல்களை வழங்கியவர் இளையராஜா." கிராமிய இசைக் கருவிகள் எக்காளம் திருச்சின்னம் கஞ்சிரா பூசாரிக் கைச்சிலம்பு தவண்டை உடுக்கை தம்பட்டம் பழந்தமிழ் இசை பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். பழந்தமிழிசை எனக் குறிப்பிடும் போது ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகிறது. சங்கத்தமிழானது இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம். இந்துஸ்தானி இசை இந்துஸ்தானி இசை வட இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் சங்கீதப் பாரம்பரியமாகும். கருநாடக இசை போலவே இங்கும் தாளம், இராகம் முக்கியமான அங்கங்களாகும். வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாம கானத்திலிருந்தே தோன்றியவை ஆகும். 13ம் நூற்றாண்டில் சாரங்க தேவரின் காலத்தின் பின் இஸ்லாமியர்கள் வடஇந்தியாவைக் கைப்பற்றிய பின் இந்தியாவின் கலாசாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய இசையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.பாரசீகக் கலையுடன் இருந்த தொடர்பே இந்துஸ்தானிய இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளிக்குக் காரணமாகும். இந்திய இசையின் தனித்தன்மைகள் இந்திய இசை தனி இசை (melody)யை ஆதாரமாகக் கொண்டது. மேற்கத்திய இசை கோர்வை இசை (harmony)யை ஆதாரமாகக் கொண்டது. இந்திய இசையின் இராக அமைப்பு, பகைச்சுரங்களைக் கொண்ட மேளங்கள் 40ம், பகைச்சுரங்கள் இல்லாத மேளங்கள் 32ம் இன்று கருநாடக இசையில் கையாளப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவை தேவாரப் பண்கள் ஆகும். இந்திய இசை வரலாற்றிலேயே இராக தாளத்துடன் நமக்குக் கிடைக்கப்பட்ட மிகப் பழமையான இசை வடிவம் தேவாரம் ஆகும். எண்ணற்ற இராகங்களுக்குத் தேவாரப் பண்களே ஆதாரமாயிருந்தன. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் இந்தியா முழுவதும் ஒரே வகையான இசைதான் இருந்தது. அக்காலத்தில் இந்துஸ்தானி, கர்நாடகம் என்று பிரிவு ஏற்படவில்லை. எனவே இந்திய இசைக்கே ஓர் அடிப்படியாக இருப்பது பண்கள் என்று கூறலாம். இசை நூல்கள் தமிழ்ச் சூழலில் பண்டைக் காலத்தில் இருந்த முச்சங்கங்கள் இசையைப் பேணி வளர்த்தன.இசை நூல்கள் பல இயற்றப்பட்டன. அவை காலத்தால் அழிந்துபோயின. இவ்வாறு மறைந்த நூல்களாக முதுநாரை, முதுகுருகு, சிற்றிசை, பேரிசை, பெருநாரை, பெருங்குருகு, பஞ்ச பாரதீயம், பரதம், அகத்தியம், செயிற்றியம், குணநூல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 33 ஆவது நூற்பாவான, 'அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உள வென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்' என்பதில் சுட்டப்படும் 'நரம்பின் மறை'யை இசைநூலாகக் கொள்கின்றனர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் இசை நுணுக்கம்(சிகண்டியார்), இந்திரகாளியம் (யாமளேந்திரர்), பஞ்ச மரபு(அறிவனார்), பரத சேனாபதியம் (ஆதிவாயிலார்), மதிவாணர் நாடகத் தமிழ்(பாண்டியன் மதிவாணனார்)ஆகிய நூல்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் பஞ்ச மரபு இன்றும் உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு இசை நூல்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம், விபுலானந்தரின் யாழ் நூல், எஸ்.இராமநாதனின் [[சிலப்பதிகாரத்து இசை நுணுக்கம்]], குடந்தை ப.சுந்தரேசனாரின் [[இசைத் தமிழ்ப் பயிற்சி நூல்]], மதுரை பொன்னுசாமி பிள்ளையின் பூர்வீக சங்கீத உண்மை ஆகியவையாகும். ஏழு சுரங்களும் அவற்றின் விளக்கமும் ஸ ரி க ம ப த நி, என்பவை ஏழு சுரங்களாகும். இவற்றை சப்தசுரங்கள் என்பர். சப்தசுரங்கள் ஏழும் தனது இயற்கையான சுர நிலைகளில் இருந்து சற்றே உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ ஒலிக்கும் போது அவை அந்தந்த சுரங்களின் துணை சுரமாகின்றன. அடிப்படை இசை குறியீடு குரல் 2. துத்தம் 3. கைக்கிளை 4. உழை 5. இளி 6. விளரி 7. தாரம் இவற்றிற்குரிய உயிர் எழுத்துக்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ. இவை வடமொழியில், சட்ஜம் - ஸ 2. ரிஷபம் - ரி 3. காந்தாரம் - க 4. மத்தியமம் - ம 5. பஞ்சமம் - ப 6. தைவதம் - த 7. நிஷாதம் - நி என்று குறிப்பிடப்படுகின்றன.இந்த ஏழு இசை ஒலிகளும் சுரங்கள் என அழைக்கப்படுகின்றன. சுரங்களின் வளர்ச்சி ஏழு சுரங்களும் பின்னர் பன்னிரு சுரங்களாக வளர்ச்சி பெற்றன. இவற்றுள் குரலும்(ஸ), இளியும்(ப) வகை பெறா சுரங்களாகும். ஏனைய துத்தம்(ரி), கைக்கிளை(க), உழை(ம), விளரி(த), தாரம்(நி) ஆகிய இரு வகைபெறும் சுரங்களாகும்.இவ்வாறு பன்னிரு சுரங்கள் உருவாகின. ஆங்கில மொழியில் Sharp, Flat என்பதுபோல் தமிழில் நிறை-குறை எனவும், வன்மை-மென்மை எனவும்,ஏறிய-இறங்கிய எனவும் குறிக்கப்பெறும். வடமொழியில் கோமள-தீவிர என்று அழைக்கப்படுகின்றன. ஏழிசை அல்லது பன்னிரு இசைநிலைத் தொகுப்புகளை ஒரு மண்டிலம் என்று வழங்குவர். இயக்கு, ஸ்தாயி, தானம் ஆகியவை இதன் வேறுபெயர்களாகும். பன்னிரு இசைநிலைத் தொகுப்புகள் குரல் - வகைபெறா சுரம் - குறியீடு(ஸ) 2. துத்தம் - குறை துத்தம்(தமிழில்) - சுத்த ரிஷபம்(வட மொழியில்) - ரி1 3. துத்தம் - நிறை துத்தம் - சதுஸ்ருதி ரிஷபம் - ரி2 4. கைக்கிளை - குறை கைக்கிளை-சாதாரண காந்தாரம் - க1 5. கைக்கிளை - நிறை கைக்கிளை-அந்தர காந்தாரம் - க2 6. உழை - குறை உழை - சுத்த மத்தியமம் - ம1 7. உழை - நிறை உழை - பிரதி மத்தியமம் - ம2 8. இளி - வகைபெறா சுரம் - ப 9. விளரி - குறை விளரி - சுத்த தைவதம் - த1 10. விளரி - நிறை விளரி - சதுசுருதி தைவதம் - த2 11. தாரம் - குறை தாரம் - கைசிகி நிஷாதம் - நி1 12. தாரம் - நிறை தாரம் - காகலி நிஷாதம் - நி2 இது சமன், மெலிவு, வலிவு, சமன் மண்டிலம், மத்திய ஸ்தாயி எனவும், மெலிவு மண்டிலம், மந்த்ர ஸ்தாயி எனவும், வலிவு மண்டிலம், தாரஸ்தாயி எனவும் மூவகைப்படும். மெலிவில் நான்கு சுரங்களும்(ம ப த நி மற்றும் நான்கு கீழ்ப்புள்ளிகள்), சமனில் ஏழு சுரங்களும்(ஸ ரி க ம ப த நி), வலிவில்(ச ரி க மற்றும் மூன்று மேல் புள்ளிகள்) என பதினான்கு சுரங்கள் இசைக் குறிப்பில் குறிக்கப்பெறும். பாலையும் பண்ணும் பாலை என்பது பகுப்பு ஆகும். எழுவகைப் பாலைகள் உள்ளன. ஏழிசையின் பகுப்பானது ஆயம், சதுரம், திரிகோணம், வட்டம் ஆகிய நான்கு வகைகளில் அமைகின்றன. வட்டப் பாலை எனப்படுவது முழுமையாக ஒரு வட்டத்தில் பன்னிரண்டு கோணம் அமைத்து அதில் ஏழு கோணத்தைக் கொண்டு உறழ்வதாகும். சுரங்கள் ஏழும் பன்னிரண்டு இராசிகளில் வல, இட முறையாக உறழப்படுவதால் ஏழு பெரும்பாலைகள் உருவாகின்றன. அவையாவன: குரல் குரலாயது - செம்பாலை - அரிகாம்பதி ராகம். 2. துத்தம் குரலாயது - படுமலைப் பாலை - நடபைரவி ராகம். 3. கைக்கிளை குரலாயது - செவ்வழிப் பாலை - பஞ்சமமில்லாத தோடி ராகம். 4. உழை குரலாயது - அரும்பாலை - சங்கராபரணம் ராகம். 5. இளி குரலாயது - கோடிப்பாலை - கரகரப்ரியா ராகம். 6. விளரி குரலாயது - விளரிப்பாலை - தோடி ராகம் 7. தாரம் குரலாயது - மேற்செம்பாலை - கல்யாணி ராகம். இராகம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் பண் ஆகும். பண் எனப்படுவது இனிமையான இசைத் தொடருடைய ஒலி உருவ அமைப்பாகும். உசாத்துணை நூல்கள் முனைவர் இ.அங்கயற்கண்ணி, தமிழக இசையும் ஆய்வும், கலையகம் வெளியீடு,தஞ்சாவூர்-7, முதற்பதிப்பு:டிசம்பர்-2002 Colles, Henry Cope (1978). The Growth of Music: A Study in Musical History, 4th ed., London: Oxford University Press. (1913 edition online at Google Books) Small, Christopher (1977). Music, Society, Education. John Calder Publishers, London. மேற்கோள்கள் மகிழ்கலை பண்பாடு
1231
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
கருநாடக இசை
கருநாடக இசை அல்லது கருநாடக சங்கீதம் தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. பெயர் விசயநகரப் பேரரசுக்கும் அவர்கள் வழியாக வந்த நாயக்கர் ஆட்சிக்கும் உட்பட்டு இருந்த பகுதிகள் கருநாடக பிரதேசம் என்று அழைக்கபட்டது. எனவே இந்தப் பகுதியில் பாடபட்ட இசையானது கருநாடக இசை என்று பிற்காலத்தில் பெயர் பெற்றது. வரலாற்று பின்னணி தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும். செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘சுரம்’ என்றனர். தியாகராய சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாத்திரிகள் என்னும் மூவரும் கருநாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கருநாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராய சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள். கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. சட்சம், இரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச – ரி – க – ம – ப – த – நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. இரிடபம், காந்தாரம், தைவதம், நிசாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் உள்ளன. இந்த ஏழு சுரங்களிலும், முற்கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக்கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புகளைப் பெற முடியும். இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான இராகங்கள் பெறப்படுகின்றன. நாதம் செவிக்கு இனிமை கொடுக்கும் தொனி நாதம் எனப்படும். சங்கீதத்தில் மூலாதாரமாக விளங்குவது நாதம் ஆகும். ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் எனப்படுகிறது. ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஒலி இரைச்சல் எனப்படுகிறது. நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து சுரமும், சுரத்திலிருந்து இராகமும் உண்டாகிறது. நாதத்தில் இரு வகை உண்டு அவையாவன. ஆகதநாதம் – மனித முயற்சியினால் உண்டாக்கப்படும் நாதம் ஆகத நாதம் எனப்படும். அநாகதநாதம் – மனித முயற்சி இல்லாமல் இயற்கையாக உண்டாகும் நாதம் அநாகத நாதம் எனப்படும். சுருதி பாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேட ஒலியே சுருதி எனப்படும். இதுவே இசைக்கு ஆதாரமானது. இது கேள்வி என்றும், அலகு என்றும் அழைக்கப்படும். நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகிறது. சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் அதாவது சுருதி தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானம் என்பதால் சுருதி மாதா என அழைக்கப்படும். சுருதி இரண்டு வகைப்படும், அவையாவன... பஞ்சம சுருதி – மத்திமத்தாயி சட்சத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது பஞ்சம சுருதி எனப்படும். சபசு எனப் பாடுவது. மத்திம சுருதி – மத்திமத்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது மத்திம சுருதி எனப்படும். சமசு எனப் பாடுவது. சாதாரண உருப்படிகள் யாவும் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிசாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்கள் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. அனேகமான நாட்டார் பாடல்கள் மத்திம சுருதியில் தான் பாடப்படுகிறது. சுருதி சேர்க்கப்படும் சுரங்கள் சபசு (சா பாசாபாசா). சுரம் இயற்கையாக ரஞ்சனையை, (இனிமையைக்) கொடுக்கும் தொனி சுரம் எனப்படும். சங்கீதத்திற்கு ஆதாரமான சுரங்கள் ஏழு ஆகும். இவை சப்த சுரங்கள் எனப்படும். தமிழிசையில் சுரத்திற்கு கோவை எனப் பெயர் உண்டு. ஏழு சுரங்களும் அவற்றின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் பின்வருமாறு அமையும். தாளம் கையினாலாவது கருவியினாலாவது தட்டுதல் தாளம் எனப்படும். இது பாட்டை ஒரே சீராக நடத்திச்செல்கிறது. இது எமக்குத் தந்தை போன்றது. அதனால் தான் இசையில் சுருதி மாதா எனவும் லயம் பிதா எனவும் அழைக்கப்படுகிறது. லகு, துருதம், அனுதுருதம் என மூன்று அங்கங்களாக விரிவு பெறுகிறது. லயம் பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது லயம் எனப்படும். சுருதி இல்லாமல் பாட்டு எப்படி மதிப்பில்லையோ அதே போல் லயம் இல்லாத பாட்டிற்கும் மதிப்பில்லை எனவே இது பிதா எனப்படுகிறது. லயம் மூன்று வகைப்படும். அவையாவன, விளம்பித லயம்; மத்திம லயம்; துரித லயம். ஆவர்த்தம் ஒரு தாளத்தில் அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை போட்டு முடிப்பது ஓர் ஆவர்த்தம் எனப்படும். இது ஆவர்த்தனம், தாளவட்டம் என்றும் அழைக்கப்படும். இதன் குறியீடு / உதாரணமாக ஆதி தாளத்தை எடுத்துக்கொண்டால் ஒரு லகுவையும் 2 துருதங்களையும் போட்டு முடித்தால் ஒரு ஆவர்த்தனம் எனப்படும். தாளம் தாளங்கள் கர்நாடக இசையில் கால அளவுக்கு அடிப்படையாக அமைகின்றன. ஏழு அடிப்படையான தாளங்களும், அவற்றிலிருந்து உருவாகும் நூற்றுக்கு மேற்பட்ட தாளங்களும் உள்ளன. மேலும் காண்க கருநாடக இசைக் கருவிகள் புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல் தமிழிசை கருநாடக இசைச் சொற்கள் விளக்கம் மேளகர்த்தா இராகங்கள் சன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு சுரங்களின் அறிவியல் கருநாடக - இந்துத்தானி இசைகள் ஒப்பீடு கருநாடக - மேலைத்தேச இசைகள் ஒப்பீடு மேற்கோள் வெளி இணைப்புகள் carnaticindia.com 'ஸ்ருதி' மாத இதழ் இந்திய இசை தமிழிசை வடிவங்கள்
1232
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கருநாடக இசைக் கருவிகள்
இசைக்கருவிகள் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்பட்ட நரம்புகளைத் தட்டி இசை உருவாக்குகின்ற அடிப்படையிலமைந்த கருவிகள், நரம்பு வாத்தியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. துளைகளினூடாக அல்லது அதிர்வு மூலம் ஒலியுண்டாக்கும் ஒரு பொருள்மீது காற்றுச் செலுத்துவதன் மூலம் இசை உருவாவதை அடிப்படையாகக் கொண்ட வாத்தியங்கள் காற்று வாத்தியங்கள் எனப்படுகின்றன. தாள லயத்தை உருவாக்கும் கருவிகள் தாள வாத்தியங்கள் ஆகும். கர்நாடக இசைக் கருவிகளின் பட்டியல் நரம்பு வாத்தியங்கள் யாழ் வீணை2 தம்புரா வயலின் கோட்டு வாத்தியம் காற்று வாத்தியங்கள் புல்லாங்குழல் நாதஸ்வரம் முகவீணை தாள வாத்தியங்கள் தவில் மிருதங்கம் கஞ்சிரா கடம் மோர்சிங் ஜலதரங்கம் உடுக்கை சல்லாரி உசாத்துணை இசைக் கருவிகள் கருநாடக இசை கருநாடக இசை குறித்த பட்டியல் கட்டுரைகள் வலைவாசல் கருநாடக இசை
1233
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
மிருதங்கம்
மிருதங்கம் அல்லது தண்ணுமை என்பது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஓர் இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது. பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம். மிருதங்கம் 'மிருத்+அங்கம்' என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு 'மண்ணை அங்கமாகக் கொண்டது' என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும். தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல்வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர். வலந்தலையின் நடுவே கரணை இடப்பட்டிருக்கும். கிட்டான் என்ற ஒரு வகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்கு சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் அடுக்கடுக்காய் வட்டமாக வலந்தலையின் மத்தியில் இடப்படும். இதற்குக் கரணை அல்லது சோறு என்று பெயர். இந்தக் கரணையினாலேயே மிருதங்கம் ஸ்ருதி வாத்யம் ஆகிறது. அதாவது பாடகரின் ஸ்ருதியிலேயே மிருதங்கத்தின் ஸ்ருதியையும் கூட்டிக் கொள்ளும் வசதி உண்டு. தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களும் கேட்பதற்கு இனிமையாக இருப்பினும், அவற்றை பாடகர் அல்லது வீணை, குழல் முதலான வாத்தியத்தின் ஸ்ருதியோடு சேர்த்துக் கொள்ள முடியாது. கடம் போன்ற வாத்யங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் 'மிருதங்கம்' தமிழகத்துக்குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்து மிருதங்கம், தஞ்சை வந்தபின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின. குச்சி மிருதங்கம் வலது பக்கத்தில் இரு தோல்களுக்கு நடுவே மெல்லியக் குச்சிகளை சொருகுவர். இதன்மூலம் வித்தியாசமான ஒலியினைக் கொண்டுவர இயலும்.. இவையும் பார்க்க மிருதங்கக் கலைஞர்கள் சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் எடுத்துக்காட்டு - அடி நுண்ணிய மேலோட்டம் - எப்படி மிருதங்கம் வாசிப்பது - தி இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை Mridangam maestro’s son honours maker of instrument ஆய கலைகள் அறுபத்து நான்கு மிருதங்கம் கருநாடக இசைக்கருவிகள் தாள இசைக்கருவிகள் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் தோற் கருவிகள்
1234
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கடம்
கடம் () கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இதுவொரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட இசைக்கலைஞர்கள் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார். சில வித்துவான்கள் கடத்தைத் தூக்கிப் போட்டு அது கீழே வரும்போது தாளத்திற்கேற்ப ஒலி எழுப்புவர். கருநாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது. வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு இடையிலும், தனி நிகழ்ச்சிகளாகவும் நடைபெறும். மிருதங்கம், கடம், கஞ்சிரா, தவில் போன்ற கருவிகள் சேர்ந்த தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. கடம் தயாரிப்பு தமிழ் நாடு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை மட்பாண்ட தயாரிப்புகளுக்குப் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு தயாரிக்கப்படும் கடத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி கௌரவித்தது. மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பிசையும் மண்ணில் இசை இசையில் சர்வதேசத்தையும் அதிர வைக்கும் மானாமதுரை கடம் Portrait of a ghatam-maker Pots with musical prowess கட தரங்கிணி என அழைக்கப்படும் ஒரு புதிய வகை இசை நிகழ்ச்சி குறித்த கட்டுரை தாள இசைக்கருவிகள் தமிழர் இசைக்கருவிகள் கருநாடக இசைக்கருவிகள்
1235
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
நடன வகைகள் பட்டியல்
இந்திய பாரம்பரிய நடனங்கள் பரத நாட்டியம் குச்சிப்புடி கதகளி மோகினி ஆட்டம் ஒடிசி மணிபூரி இந்திய கிராமிய நடனங்கள் தென்னிந்தியக் கிராமிய நடனங்கள் தேவராட்டம் தொல்லு குனிதா தண்டரியா கரகம் கும்மி கூட்டியாட்டம் படையணி கோலம் (நடனம்) லவா நிக்கோபாரிய நடனம் வடஇந்தியக் கிராமிய நடனங்கள் டும்ஹால் ரூவ்ப் லாமா நடனம் பங்கி நடனம் பங்காரா ராஸ் கிட்டா தம்யால் டுப் லகூர் துராங் மாலி நடனம் தேரா தலி கிழக்கிந்தியக் கிராமிய நடனங்கள் நாகா நடனம் ஹஸாகிரி மூங்கில் நடனம் நொங்கிறேம் பிகு தங்-டா கர்மா பொனுங் பிரிதா ஓர் வ்ரிதா ஹுர்க்கா பாவுல் காளி நாச் கண்ட பட்டுவா பைக் தல்காய் மேற்கிந்திய நடனங்கள் கெண்டி பகோரியா நடனம் ஜாவார் கர்பா தாண்டியா காலா டிண்டி மண்டோ மேற்கத்திய நடனங்கள் பாலே (மேற்கத்திய மரபு நடனம்) டிஸ்கோ போல்கா லம்பாடா லிம்போ (கிடையான குச்சிக்கு கீழே வளைந்து ஆடுவது) இலத்தீன நடனங்கள் சால்சா தாங்கோ பிளமேன்கோ நடனங்கள் முதன்மைக் கட்டுரை: பிளமேன்கோ நடனங்கள் வெளி இணைப்புகள் இந்தியாவின் புகழ் பெற்ற நடனங்கள்