Malasar ASR Resources
Collection
4 items
•
Updated
audio_path
audioduration (s) 3.56
50.4
| sentence
stringlengths 53
444
|
---|---|
மத்தவருகளுக்கு சொந்தமான பொருட்களுலயி நீவியி நம்பிக்கையா மேற்பார்வை செய்யுலைந்தா, மேலோகத்துலயி நும்முக்கு சொந்தமாகப்போகுன சொத்துக்களவு பெறுனதுக்குமு கடவுளு நும்மவு எப்பிடி அனுமதிப்பரு? |
|
ஆனா தன்னவு நானு சீஷனு இல்லையிந்து, மத்தவருது முன்னுக்கு செல்லுலையிந்தா! நானுமு அவனு என்னுது சீஷனில்லையிந்து, கடவளுது தூதருகளுதூதர்களு கேட்குனதுகணக்கவு செல்லுவ. |
|
மத்த மக்களு இயேசு கடவுளுதுகிட்டருந்து வந்த கிறிஸ்து அப்பிடினதவு நிரூபிக்கணுந்து ஒரு அற்புதமு செய்யுனீ அப்பிடிந்து கேட்டுக்கொண்டருகளு.அவரவு சிக்க வக்கணுமுந்தேயி அவருகளு இப்பிடியி கேட்டருகளு. |
|
அதுமட்டுமில்லாதயி நீவியி வெதைக்காத இன்னொருத்தருது வயக்காட்டுலயி, பம்மலு செய்யுன ஒரு காட்டுக்காரு போலயி,நீவியி நும்முக்கு சொந்தமில்லாதயி இருக்குன மத்தவருது பணத்தக்கூட எடுக்குனவருதான“அப்பிடிந்து சென்னனு. |
|
அவருதுகளுலையி ஒருத்தரவு கடவுளு மோலோகத்துக்கு எடுத்துக்கோவரு. மத்தவரவு விட்டுவிடுவரு. அப்பிடியிந்து நானு நிம்முக்கு செல்லுன அப்பிடியிந்தரு. |
|
பணக்காருகளே நும்முக்கு ஐயோ! நீவியி நல்ல மொறையிலயி பொழச்சதுனாலயி இதுக்குமேலயி சீரழியுவீ. |
|
பரிசேயர்களுதுலயி ஒருத்தனு இயேசுவவு அவர்களுது கூடயி சேந்து சாப்பிடக்கு கூப்புட்டிருந்தனு.இயேசுவுமு அந்த பரிசேயனுது சாலைக்கு போயி பந்தியிலயி குக்கியிருந்தரு. |
|
அவருகளு எல்லாருமு ஒலிவமலையிலிருந்து ரங்கியி போகுன அந்த தடத்துலையி எருசலேமுக்குப் பக்கத்துலையி வந்துகொண்டுருந்தருகளு.அப்பவு இயேசு சீஷர்களா இருந்த நெறைய மக்கள் கூட்டமு சந்தோஷப்பட்டு கடவுளவு புகழக்கு ஆரம்புச்சருகளு. அந்த மக்களு இயேசு செஞ்ச அற்புதங்களவு நேருலயி பாத்ததுனாலயி அதுகணக்கவு செஞ்சருகளு. |
|
அப்பவு அவனுது எஜமானு அவனவுப் பாத்து, “அப்பிடியிந்தா, நீயி பட்டணத்துக்கு வெளியயி தடத்தோரத்துலயிமு, வேலிக்கிட்டையிமு போயி, என்னுது சாலையி நெரம்புன அளவுக்கு மக்களவு வற்புறுத்தியி கூட்டிக்கொண்டு வா“ அப்பிடிந்து சென்னனு. |
|
யாக்கோபு அப்பிடினவருகளு ஒடம்பளவுலயி செத்துப்போயிருந்தாலுமு அவருகளு இன்னுமு என்னவு கும்புடுனருகளு அப்பிடிந்து கடவுளு சென்னரு.இதுலருந்து நம்முக்கு எந்தி தெரியுதுந்தா,அவருது உயிர்கெளைகளு இன்னுமு உயிரோட தா இருக்குது. |
|
கடவுளுது சட்டதிட்டத்துலையி செல்லியிருக்குனது கணக்கவேயி, அம்மைக்குமு, மகனுக்குமு செய்யின எல்லாசடங்கவுமு யோசேப்புமு, மரியாளுமு செஞ்சு முடுச்சருகளு. அப்பவு அவருகளு கலிலேயாவுலையி இருக்குன அவருது சொந்த ஊரு நாசேரேத்துக்கு திரும்பிப்போனருகளு. |
|
நும்முது காலு கல்லுலையி தடுக்காதப்புடிக்கு, அவர்களு அவருது கையிலயி ஏந்திக்கொண்டு போவருகளு அப்பிடிந்துமு கடவுளுது புஸ்தகத்துலயி எழுதியிருக்குதே அப்பிடிந்து சென்னனு. |
|
அதுக்கு இயேசு, ‘’கெவனிச்சுக் கேளுனீ,நீவியி எருசலேம் பட்டணத்துக்கு போனதுக்கப்பறமு ஒரு கொடத்துலயு தண்ணி சொமந்து கொண்டுபோகுன ஒரு மனுஷனவு பாக்குவீ.அவனுது பறக்கே போனீ’’அவனு ஒரு சாலைக்குள்ளயி போகுவனு,நீவியிமு அவனுதுகூடயி போயி, |
|
அதுக்கப்பறமு அவருகளு இயேசுவவு பாத்து, யோவனுது சீஷருகளு, நெறையத்தடவையி விருதமிருந்து கடவுளுகெட்டையி வேண்டிக்கொண்டு வன்னருகளு, பரிசேயருது சீஷருகளுமு அதுகணக்கவேயி செய்யினரு. ஆனா நிம்முது சீஷருந்தா தின்னுனதுமு குடிக்குனதுமா இருக்குனருகளு அப்பிடியிந்து கேட்டருகளு. |
|
அப்பறமு இயேசு அவர்களுக்கு ஒரு வெளக்க கதையவு சென்னரு:அத்தி மரத்தவுமு மத்த எல்லா மரத்தவுமு பாருனீ. |
|
. அப்பவு எதேட்சையா நீர்நோக்காடுனாலயி, கை, காலு வீங்கி இருக்குன ஒரு மனுஷனுமு அங்கையி இருந்தனு. |
|
அப்பறமு நெறைய ஊர்களுக்கு போயி கடவுளுது நல்ல சேதியவு,மக்களுக்கு செல்லியி, நோக்காடா இருந்தவர்களவுமு சொகமாக்குனரு. |
|
பதினெட்டு வருஷமா கெட்ட ஆவியினாலயி கஷ்டப்பட்டு நோக்காடா இருந்த பொம்பளையி ஒருத்தியி அங்கையி இருந்தளு. அவளு கொஞ்சம் கூட நிமிர முடியாத அளவுக்கு கூனியா இருந்தளு. |
|
அதுனாலயி, நானு நின்னுக்கு செல்லுன; இவளு செஞ்ச எல்லா பாவத்தவுமு மன்னிச்சுக்கெஞ்ச.ஏனுந்தா இவளு என்னுது மேலயி நெறைய அன்பு காட்டுனளு.ஆனா கொஞ்சமா மன்னிக்கப்பட்டவர்களு கொஞ்ச அன்பு காட்டுனவர்களு’’அப்பிடிந்தரு. |
|
அதுனாலயி,அவருகளு அவரவு கெவனமாவு பாத்துக்கொண்டிருந்தருகளு.அதுவுமல்லாதயி அவரவு பேசுலையி சிக்க வச்சு அவருதுமேலயி குத்தஞ்சாட்டியி ரோம ஆளுனருது அதிகாரத்துக்கு கீழருக்குனவருகிட்டயி அவரவு புடுச்சுக்குடுக்கணுந்து நெனச்சு நல்லவரு கணக்கவு நடிக்குன செல வேவுக்காருகளவு அவருதுகிட்டையி அனுப்புனருகளு. |
|
இயேசு அவர்களவு பாத்து, “ஓய்வுநாளுலயி நல்லது செய்யுனதா, கெட்டது செய்யுனதா எது நல்லதுந்து நும்மவு கேட்குன. ஒரு உசிரவு காப்பாத்துனதா இல்ல சாகடிக்குனதா எது செரியானது? அப்பிடிந்து கேட்டரு. |
|
இயேசு அவனவுப்பாத்து, அந்த கெட்டஆவியவு வெளிய போகச்செல்லியி கட்டளை இட்டரு. அப்பவு அந்த கெட்ட ஆவி புடுச்ச மனுஷனு கத்திக்கொண்டே வந்து அவருது முன்னுக்கு விழுந்து, ‘’இயேசுவே,நீவியி ரொம்ப மேலான கடவுளுது மகனு.நானு கெட்ட ஆவியு.நும்முக்குமு என்னுக்குமு எந்தி சம்பந்தமு?எம்மவு தொந்தரவு பண்ண வாண்டாமுந்து நும்மவு வேண்டிக்கொள்ளுன அப்பிடிந்து ரொம்ப சத்தமா சென்னனு. |
|
ஒரு ஓய்வுநாளுலயி இயேசு, பரிசேயர்களுது தலைவனு ஒருத்தனுது சாலைக்கு சாப்பிடக்கு போயிருந்தரு. யூதசட்டதிட்டத்தவு அறிஞ்ச செலருமு, செல பரிசேயருமு அங்கையி இருந்தருகளு.அவருகளு இயேசு மேலயி குத்தஞ்சொமத்தணுமுந்து அவரு ஏதாசுமு செய்யுவரா அப்பிடிந்து உத்துப் பாத்துக் கொண்டிருந்தருகளு |
|
வேலச்செயினவருகளு, வேலசெய்யினப்பவு உடுத்தியிருக்குன துணிகளுகணக்கவு, உடுத்தியி வேலசெய்யக்கு ஆயத்தமாவு இருக்குனதுப் போலையி, கடவளுது வேலையவு செய்யக்கு எப்பவுமு ஆயித்தமா இருனீ; ராத்திரி முழுச்சுமு வளக்கவு எரியவச்சுக்கொண்டிருக்குன ராத்திரி வேலக்காருகணக்கவுளக்கவு கடவளுது வேலையவுச் செய்யக்கு, நீவியிமு இருனீ. |
|
இயேசுவவு காவக்காத்துக்கொண்டிருந்த மனுஷருகளு, அவரவு பரியாசம்பண்ணியி, அடிச்சருகளு. |
|
பள்ளமெல்லாமு மூடப்படுமு.எல்லா மலைகளுமு குண்டுகளுமு தரமட்டமாக்கப்படுமு.கோணையா இருக்குன தடமு நேராக்கப்படுமு.குண்டுக் குழியிமா இருக்குன தடமு சவுனாகுமு. |
|
அதுனாலயி பரிசேயர்களுமு, வேதசட்டதிட்டத்தவு நல்லா படிச்சு தெரிஞ்சவர்களுமு ரொம்ப கோவப்பட்டருகளு. அவர்களு இயேசுவவு நாமு எந்தி செய்யிலா’’அப்பிடிந்து ஒருத்தருக்கொருத்தரு பேசிக்கொண்டருகளு. |
|
“நும்முலயி ஒருத்தனுது அடிமை வேலைக்காரனு வயக்காட்டுலயி ஒழவு ஓட்டியசா, இல்லைந்தா ஆட்டு மந்தையவு மேச்சுக்கெஞ்சா வயக்காட்டுலருந்து சாலைக்கு திரும்பியி வன்னனுந்து வச்சுக்கோனீ.அப்பவு எஜமானா இருக்குன நீயி அவனவுப்பாத்து, ‘நீயி என்னுது கூடயி சேந்து குக்கியி,சோறு தின்னக்கு இப்பவேயி வா அப்பிடிந்து செல்லுவையா?அப்பிடி நீயி செல்லமாட்டயல்லா. |
|
கெட்ட ஆவியி ஒரு மனுஷனவு புடுச்சிருந்ததுனாலயி அவனுதுனாலயி பேச முடியாதயி போய் விட்டுசு.ஒரு நாளு இயேசு அந்த கெட்ட ஆவியவு அவனுதுகிட்டருந்து தொரத்துனரு.அதுக்கப்பறமு அந்த மனுஷனு பேசத்தொடங்குனனு. அதவுப் பாத்த நெறைய மக்களு ஆச்சரியப்பட்டருகளு. |
|
இயேசு ரொம்பவுமு வேதனைப்பட்டு,ரொம்ப உருக்கமாவு கடவுளுதுகிடையி வேண்டிக்கொண்டிருந்தரு.அவருது வேர்வையி இரத்தத்துத்த பெருந்துளியா விழுந்துசு. |
|
ஆனா, வேசிகளோடயி சேந்து நும்முது சொத்தவெல்லாமு அழிச்சுக்கெஞ்சு வந்த, சின்ன மகனு திரும்பி வந்ததுமு கொழுகொழுந்திருக்குன கந்தவு அடிச்சிருக்குனியே! இது எந்தி நாயமு அப்பிடியிதுக் கேட்டனு. |
|
அவருகளுது நம்பிக்கையவு பாத்த இயேசு மொடக்குவாதக்காரனவு பாத்து, “நானு நின்னுது பாவத்தவு மன்னிக்குன“ அப்பிடியிந்தரு. |
|
ஒந்தவு நல்லா தெருஞ்சுகோ மேலோகத்துலருந்து மனுஷனா வந்த நானு, கடவுளவு விட்டு வெலகியி போன, நின்னுது கணக்கவு இருக்குன மத்த மக்களவு தேடி கண்டிபிடிச்சு, காப்பாத்தக்கிந்தேயி வந்திருக்குன‘ அப்பிடிந்து சென்னரு. |
|
நும்முக்கு வரப்போகுன கஷ்டங்களவு பத்தியி பேடியஞ்சாதயி,அதவு சகிக்கக்கு குண்டான பெலனு கெடைக்கணுந்து கடவுளுதுகிட்டையி வேண்டிக்கோனீ.அப்பவு மேலோகத்துலருந்து மனுஷனா வந்த என்னுது முன்னுக்கு நீவியி நம்பிக்கையோடயி நிக்குவீ”அப்பிடிந்து சென்னரு. |
|
நும்முதுலயி யாரசுமு கவலப்பட்டு கவலப்பட்டு. அவனுது வாழ்நாளு முளுச்சுமு, ஒரு நாளவுக்கூட கூட்ட முடியாதல்லா? |
|
அப்பவு சீமோனு இயேசுவவுப் பாத்து, “ ஐயா, நாமு மீனவு புடிக்கக்கு ராத்திரியெல்லாமு ரொம்ப கஷ்டப்பட்டு வலைகளவு போட்டுப்பாத்தமு ஒரு மீனுமு எம்முக்கு கடைக்கவே இல்ல. ஆனாலுமு நீவியி செல்லுனது கணக்கவேயி நானு வலையவு போடுன“ அப்பிடியிந்து சென்னனு. |
|
யாக்கோபுது மகனு யூதாவு, யூதாஸ்காரியோத்து அப்பிடினவர்களு ஆவர்களு. இந்த யூதாசு இயேசுவவு எதிரிகளுதுகிட்டயி ஒப்புக்குடுத்தவனு. |
|
இயேசு சுத்திலுமிருக்குன எல்லாத்தமு பாத்தரு.அப்பறமு அந்த மனுஷனவு பாத்து, “எங்க நின்னுது கையவு நீட்டு,நானு பாக்கிட்டு’’அப்பிடிந்தரு.அந்த மனுஷனு கையவு நீட்டுனவொடனே அந்த கையி சொகமாச்சு. |
|
அந்த சாலையிலயி இருக்குனவருகளு, கடவளுத் தந்த மன அமதியவு வாங்கிக்கோகக்கு தகுதியாவு இருந்தா, அவருகளு அதவு அனுபவிப்பருகளு, இல்லையிந்தா அவருகளு அல்ல நீவிமாத்தரமு அனுபவிக்குவீ. |
|
சின்ன சின்ன காரியங்களவுமு நம்பிக்கைக்கையா மேற்பார்வை செய்யுனவருகளு பெரிய பெரிய காரியங்களவுமு நம்பிக்கையா மேற்பார்வையி செய்யுவருகளு. சின்ன சின்ன காரியங்களவுமு நேர்மையில்லாதயி மொறையிலயி கையாளுனவருகளு பெரிய பெரிய காரியத்துலயிமு நேர்மையில்லாத மொறையில தா கையாளுவருகளு. |
|
அவனுதன்னுது எல்லாச்சொத்துக்குமு அதிகாரியா ஆகுவனு அப்பிடியிந்து நானு நும்முக்கு நெசமாலுமேயி செல்லுன. |
|
ஆனா மேலோகத்திலிருந்து மனுஷனா வந்த என்னவு நீவி ஒரு நாளு எல்லா வல்ல கடவுளுது பக்கத்துலையி குக்கியி ஆட்சி செய்யுனதவு பாக்குவீ அப்பிடிந்து சென்னரு. |
|
அப்பறமு இயேசு அவர்களுக்கு இப்பிடி ஒரு வெளக்கக்க கதையவு சென்னரு; பணக்காரணாயிருந்த ஒருத்தனுது காடு நல்லா வெளைஞ்சிருந்துது. |
|
நீவி என்னவு நம்புனதுனாலயி பொதுவா, பெரும்பாலான மக்களு நும்மவு வெறுப்பருகளு. |
|
ஆனா ஆபிரகாமு அவனுதுகிட்டையி, “நானு லாசருவவு அங்கையி அனுப்ப மாட்ட.ஏனுந்தா யூதருகளு ஆராதிக்கக்கு கூடுன எடங்களுக்கு போயி,மோசேயுமு தீர்க்கத்தரிசிகளுமு எழுதியிருக்குனதவு அங்கையிருக்குன பூசாரிகளு வாசிக்குனப்பவு அவருகளுதுனாலயி கேட்க முடியுமு. மோசேயுமு தீர்க்கத்தரிசிகளுமு எழுதியிருக்குனதவு அவருகளு கேட்குட்டு“அப்பிடிந்து சென்னனு. |
|
அப்பிடினதவு படிச்சுக்கெஞ்சு, இயேசு போயி குக்கிக்கொண்டரு.அங்கையி குக்கியிருந்த எல்லா மக்களுமு அவரவு உத்துப்பாத்தருகளு. |
|
ஆனாலுமு நும்முது ஆத்துமாக்களுக்கு எந்த சேதமுமு வராது. |
|
நானு நின்னுக்கு எந்தி செய்யணுமுந்து இருக்குன அப்பிடிந்து கேட்டரு. அதுக்கு அவனு: “ஆண்டவரே, என்னவு பார்வையடையச் செய்யுனீ“ அப்பிடிந்து சென்னனு. |
|
இயேசு அவருது நெனப்புகளவு தெரிஞ்சுகொண்டு, ஒரு சின்னபுள்ளையவு எடுத்து,அவருதுககெட்டையி நிறுத்தியி, |
|
அந்த நாளுலையி ராத்திரியிலையி, வயக்காட்டுலையி ஆட்டுக்காருகளு அவரவருது ஆடுகளவு காவக்காத்துக்கொண்டிருந்தருகளு. |
|
அதுகணக்கவேயி அந்த ரெண்டு சீஷருகளுமு பட்டணத்துக்குள்ளயி போயி இயேசு அவருகளுக்கு செல்லியிருந்தது கணக்கவேயி எல்லாத்தவுமு பாத்து,அந்த மேல்மாடி அறையிலயி பஸ்கா விருந்தவு ஆயத்தம் செஞ்சருகளு. |
|
மக்களு நடந்து போய்க்கொண்டிருக்குன சத்தவுக் கேட்டு,அவனு, ‘இங்கையி எந்தி நடக்குது?’அப்பிடிந்து ஒருத்தங்கிட்டையி விசாரிச்சனு. |
|
ஆனா நீவிப்போகுன ஊருகளுலையி, மக்களு நிம்மவு ஏத்துக்கொள்ளுலையிந்தா!அந்த வீதிகளுலையிப் போயி, எம்முது காலுலையி ஒட்டியிருக்குன நும்முது ஊர்த் தூசிகளவு ஒதருனமு, இது நிம்முக்கு எச்சரிக்கையா இருக்குமு, ஆனாலுமு கடவுளு மக்களவு ஆளுன நேரமு பக்கம் வந்து விட்டுசு அப்பிடினதவு தெரிஞ்சுகோனீ’’அப்பிடியிந்து அவருதுககெட்டையிச் செல்லுனீ. |
|
அப்பவு இத கேட்ட எல்லாருமு, அவருது அவருது ஊருக்குப் பேருகளவு சேத்தக்கு போனருகளு. |
|
அப்பவு யூத தலைவனு ஒருத்தனு அவருதுகிட்டையி,“நல்ல போதகரே, மேலோகத்துலயி எந்தைக்குமே வாழக்கு நானு எந்தி செய்யணு?” அப்பிடிந்து கேட்டனு. |
|
காக்கைகளவு கெவுனிச்சுப்பாருனீ;அதுகளு வெதைக்கினதுமில்ல;அறுக்கினதுமில்ல;அதுகளு சேத்தி வக்கைக்கு எடமுமில்ல.களமுமில்ல. ஆனா கடவுளு அதுகளுக்கு தேவப்படுன சாப்பாடுட்டவு தந்து வாழ வக்கினரு.நீவியிமு அதுகளவிடவு நெறைய மதிப்பிருக்குனவருகளு. ஆதுனாலையி கடவளு நிம்முக்கு தேவப்படுன எல்லாத்தவுமு கண்டிப்பாத் தருவரு. |
|
நேவாவுமு அவனுதுக் குடும்பத்துக்காருகளுமு, போழக்குலையி போகுன அந்தக்காலத்திலிருந்து, வெள்ளக்பெருக்கு வந்து ஒலகமக்களு எல்லாத்தவுமு அழிச்ச அந்த நாளுவரைக்குமு, மக்களு எப்பவும்போலையி திந்து, குடிச்சுமு, பொண்ணெடுத்துமு பொண்ணுக்குடுத்துமு, இருந்தருகளு. |
|
அப்பவு சீஷர்களு இயேசுகிட்டையி, ‘ஆண்டவரே,இது எங்கையி நடக்குமு’அப்பிடிந்து கேட்டருகளு.அதுக்கு இயேசு அவர்களுதுகிட்டையி, செத்த மிருகத்துத்த ஒடம்பு எங்கையி கடக்குதோ அங்கையி அதவு தின்னக்கு கழுவுகளு வந்து கூட்டங்கூடுமு. அதுகணக்கவேயி எங்கையெல்லாமு மக்களு கடவுளவு தெருஞ்சு கோகதையி செத்தவரு கணக்கவு இருக்குனரோ! அவருகளவு கடவுளு தண்டிக்குவரு அப்பிடிந்து சென்னரு. |
|
அப்பறமு யாரத்தா நீவி பாக்கப்போனீ?ஒரு தீர்க்கத்தரிசியவா?ஆமா,நானு நும்முக்கு செல்லுன யோவானு ஒரு தீர்க்கத்தரிசியவு விட ரொம்ப ஒசந்தவனு. |
|
அப்பறமு, இயேசு அந்த பொம்பளையிது பக்கமு திரும்பியி, சீமோனுதுகிட்டையி “இவளப் பாத்தையா? நானு நின்னுது சாலைக்கு வந்தப்பவு நிம்முது வழக்கத்துப்படியி நீயி என்னுது காலுகளவு கழுவக்கு தண்ணி மோந்து தல்ல.ஆனா இவளு கண்ணீருனாலயி என்னுது கால்களவு நனச்சு அவளுது தலைமுடியினாலயி தொடச்சளு. |
|
இவருதுகூடயி ஏரோது மாளிகையிது மேற்பார்வையாளரு கூசாவுது பொண்டு யோவான்னாளுமு, சூசன்னாளுமு,வேற பல பொம்பளைகளுமு இருந்தருகளு.இவர்களு இயேசுவுக்குமு அவருது சீஷர்களுக்குமு அவர்களுது பணத்து மூலமா உதவி செஞ்சு வந்தருகளு. |
|
நெறைய மக்களு என்னப்பத்தியி சேதியவு, ஏத்துக்கொள்ளக்கு ஆயத்தமாவு இருக்குனருகளு.ஆனா அவருகளவு, கடவுளுகெட்டையி கொண்டுவரக்கு நெறைய ஊழியக்காருகளு இல்ல,அதுனாலையி அந்த மக்களவு ஒன்னுச்சேத்தக்கு, ஆண்டவராகிய கடவளு, ஊழியக்காருகளவு முடுக்கனுமிந்து, அவருதுகெட்டையி வேண்டிக்கொள்ளுனீ. |
|
நானு பொறப்பட்டு,என்னுது அப்பங்கிட்டயி போயி, ‘’அப்பா,கடவுளுக்குமு நும்முக்குமு எதுராவு நானு பாவஞ்செஞ்ச’’ |
|
அப்பவு, இயேசு அந்த அஞ்சு அப்பங்களவுமு, ரெண்டு மீனுகளவுமு எடுத்து,மானத்தவு அண்ணாந்து பாத்து,அதவு ஆசீர்வதிச்சு புட்டு,மக்களுக்கு பந்தி வளம்பச் செல்லியி சீஷர்களுதுகிட்டையி குடுத்தரு. |
|
நும்மவு ஏத்துக்கொள்ளாத்தவருது பட்டணத்தவு விட்டு பறப்படுனப்பவு, நும்முது காலுகளுலையி ஒட்டியிருக்குன தூசியவு ஒதறி விடுனீ.இது நாயந்தீக்குன நாளுலையி கடவுளு அவர்களவு தண்டிக்குவரு, அப்பிடியிந்து இது எச்சரிக்குமு அப்பிடியிந்தரு. |
|
எல்லா மனுஷருமு கடவுளுது இரட்சிப்பவு தெரிஞ்சுகோவரு”அப்பிடிந்து அந்த சத்தமு கேட்டுசு. |
|
இயேசு அவனவு பாத்து, “அப்பிடிந்தா, இப்பவே நீ பார்வையடையுவ; நீ என்னவு நம்புனதுனாலயி நானு நின்னவு சொகமாக்குன’அப்பிடிந்து சென்னரு. |
|
நீவியி எல்லா மக்களுது முன்னாடியிமு இவரவு ஆயத்தப்படுத்துனீ. |
|
“வரணுமிந்து இருந்த கிருஸ்து நீவிதானா? இல்லைந்தா இன்னொருத்தரு வரக்கு காத்துக்கொண்டு இருக்கணுமா? அப்பிடியிந்து கேட்டு தெரிஞ்சுகோகக்கு இயேசுகெட்டையி அவர்களவு யோவானு முடிக்கிவிட்டனு. |
|
ஆனா இயேசு ‘’அப்பிடியேயானாலுமு,கடவுளுது போதனையவு கேட்டு, சென்னபேசு கேட்குன மக்களு நெசமாலுமே ரொம்பவுமு ஆசீர்வதிக்கப்பட்டவர்களு’’அப்பிடிந்து சென்னரு. |
|
கடவுளுக்கு நன்றி செல்லக்கு இந்த சமாரியனு மட்டுமு தா திரும்பியி வந்ததவு பாத்தா என்னுக்கு ஏமாத்தமாவு இருக்குது. மத்த ஒம்பது பேருத்துலையிமு ஒருத்தருமு எங்கிட்டையி திரும்பியி வல்லையே! அப்பிடிந்து கேட்டரு. |
|
அந்த நேரத்துலயி ஒருத்தரவு ஒருத்தரு மெதிக்குன அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்களு தெரண்டு வந்திருக்குனப்பவு இயேசு மொதலுலையி அவருது சீஷர்களுதுகூடயி பேசக்கு ஆரம்பிச்சரு. சீஷர்களுதுகிட்டையி இப்பிடி சென்னரு;பரிசேயருதுகணக்கவு மாய்மாலபண்ணதையி, அதுலையி கெவனமாவு இருனீ. |
|
அப்பறமு இயேசு பரிசேயருகளவு பாத்து,“மேலோகத்துலையிருந்து வந்தவரு நானு;அதுனாலயி ஓய்வுநாளுலயி என்னுது சீஷர்களு எதவு செய்யுனது நல்லது அப்பிடிந்து முடிவெடுக்குன அதிகாரமு என்னுக்கு இருக்குது” அப்பிடிந்து சென்னரு. |
|
ஆனா மக்களு நெறைய கூட்டமாவு இருந்ததுனாலையி அவனவு சாலக்கொளையி கொண்டுபோகக்கு அவருதுகளுதுனாலையி முடியவேயில்ல. அதுனாலையி அவருகளு சாலமேலையி ஏறியி ஓட்டவு பிருச்சு, அந்த சந்துலையி மக்களுது நடுவுலையி அவனவு கட்டலோடையி இயேசுது முன்னுக்கு ரக்குனருகளு. |
|
வருஷா வருஷமு யூதருகளுது நோம்பியவு கும்புடக்கு இயேசுது அம்மையிமு, அப்பனுமு எருசலேமுக்கு போயிம்வந்துமு இருந்தருகளு. |
|
மாய்மாலம் பண்ணுனவரே, கருக்களவுமு, காத்தவுமு, கெவுனிச்சுப்பாத்து, மானமு எப்பிடியிருக்குமு அப்பிடியிந்து தெருஞ்சுகொகக்கு முடியிது, ஆனா இந்தக்காலத்துலையி கடவளு செஞ்சுகொண்டியருக்குனதவு, நிம்முதுனாலையி கணிக்கைக்கு முடியில அபிடியின்து ரொம்ப எருச்சலு வன்னது கணக்கவு இருக்குது. |
|
நும்முது கண்ணுகளு கெட்டுப்போயிருந்தா, நும்முதுனாலயி எதவுமு பாக்க முடியாது.அது இருட்டுலயி இருக்குனது கணக்கவு தா. நீவியி என்னுது போதனைகளவு ஏத்துக்கொள்ளுலைந்தா கடவுளப்பத்துன எந்த காரியத்தவுமு தெரிஞ்சுகோக முடியாது. |
|
அது ஒரு மனுஷனு தன்னுது நெலத்துலயி வெதச்ச கடுகு வெதை கணக்கவு இருக்குது. அது ஒரு பெரிய மரங்கணக்கவு ஆகுனவரைக்குமு வளந்து கொண்டே இருந்துசு.பறவைகளு வந்து கூடு கெட்டுன அளவுக்கு அந்த மரமு பெரிசா மாறுசு“அப்பிடிந்து சென்னரு. |
|
அதுகணக்கவேயி சோதோமு பட்டணத்துலையி லோத்து வாழுந்தப்பவுமு, அங்கிருந்த மக்களுமு எப்பவும்போலையி திந்துகுடுச்சுமு, பொருளுகளவு வாங்குனருகளு, பொருளுகளவு வித்தருகளு வயிலுலயி நடவுபோட்டருகளு, சாலைகளவு கெட்டுனரு. |
|
. ஏனுந்தா,என்னுது சின்ன மகனு செத்தவனங்கணக்கவு இருந்தனு.மறுக்கவுமு உசிரோடயி வந்திருக்குனனு.காணதையி போயிருந்தனு;மறுக்கவுமு கடைச்சிருக்குனனு அப்பிடிந்தரு.அப்பிடியே அவர்களு சந்தோஷப்பட்டு விருந்து கொண்டாடக்குத் தொடங்குனருகளு. |
|
ஆனா, என்னுது வாத்தையவு கேட்டு, அதுகணக்கவு செய்யாத ஒவ்வொரு மனுஷனுமு அஸ்திபாரமில்லாதயி மண்ணுமேலயி சாலைகெட்டுனவனப்போலயி இருக்குனனு. வெள்ளப்பெருக்கு வந்து, அதுமேலயி மோதுனதுமு அந்த சாலையி இடிஞ்சு அதுக்கு பெரிய அழிவு வந்துசு அப்பிடிந்தரு. |
|
இன்னுமு செல வெதைகளு நல்லா வெளச்சல் குடுக்குன வயக்கட்டுலயி விழுந்துச்சு.அது வளந்து நூறு மடங்கா வெளஞ்சு நல்ல பலனவு குடுத்துச்சு.இப்பிடியி இயேசு செல்லி முடிச்சதுக்கப்பறமு, “நானு செல்லுனதவு கேட்டுக்கொண்டிருக்குன மக்களே, கெவனிச்சுக் கேளுனீ’’அப்பிடிந்து சென்னரு. |
|
இயேசு சாத்தானுதுகிட்டையி, “நின்னுது ஆண்டவரான கடவுளவு மட்டுமே கும்புட்டு அவருக்கு மட்டுமே வேலை செய்யு அப்பிடியிந்து கடவுளுது புஸ்தகத்துலயி எழுதியிருக்குதே, அதுனாலையி நீ செல்லுனதவு நானு செய்ய மாட்ட“ அப்பிடிந்து சென்னரு. |
|
இவர்களு சந்தையிலயி குக்கியி ஒருத்தரவு ஒருத்தரு கூப்புட்டு “நாமு கொழல் ஊதுனமு ஆனா நீவியி ஆடுல.அதுக்கப்பறமு ஒப்பாரி வச்சமு; நீவியி கதறவே இல்ல“அப்பிடிந்து செல்லியி வளையாடுன சின்னப்புள்ளைகளப் போல நீவி இருக்குனவர்களு. |
|
அப்பவு இயேசு அவளவுப் பாத்து, “அம்மா, நீவி என்னுது வல்லமையவு நம்புனதுனாலயி, நானு நிம்மவு சொகமாக்குன. நிம்மதியோடயி போனீ’’அப்பிடிந்து சென்னரு. |
|
நேரி மெல்கியிது மகனு. மெல்கி அத்தியிது மகனு.அத்தி கோசாமுது மகனு. கோசாம் எல்மோதாமுது மகனு. எல்மோதாம் ஏரியிது மகனு. |
|
திருப்தியா இருக்குன மக்களே, நும்முக்கு ஐயோ! ஏனுந்தா நீவியி பசியா இருக்குவீ.இப்பவு சிரிக்குன மக்களே,நும்முக்கு ஐயோ! ஏனுந்தா நீவியிமு துக்கப்பட்டு கதறுவீ. |
|
இங்கபாருனீ, அவரு இங்கையி ஆளுனரு, இல்லையிந்தா அங்கையி ஆளுனரு அப்பிடிந்து மக்களுகளுதுனாலையி செல்லக்குமுடியாது. ஏனுந்தா கடவுளு நிம்முது அடி மனசுக்குள்ளையி இப்பவுமு ஆண்டுகொண்டுதா இருக்குனரு“ அப்பிடிந்து சென்னரு. |
|
அதுமட்டுமல்லாதயி, சண்டைகளவுமு, கலவரங்களவுமு பத்தியி கேள்விப்படுனப்பவு பேடியஞ்சாதிருனீ. ஏனுந்தா இதுகளுலெல்லாமு நடக்கணுமுந்து கடவுளு ஏற்கெனவே செல்லியிருக்குனருஅப்பிடினதவு மனசுலயி வச்சுக்கோனீ. ஆனாலுமு இந்த ஒலகமு ஒடனே முடிவுக்கு வந்துவிடுமு அப்பிடினது அதுத்த அர்த்தமு அல்ல அப்பிடிந்துமு சென்னரு. |
|
இயேசுது பறக்கு காலுக்கிட்டையி வந்து கதறிக்கொண்டே நிந்தளு.அவருது பாதங்களவு அவளுது கண்ணீருனாலயி நனச்சு,அவளுது தலைமுடியிலயி தொடச்சு,நெறைய தடவையி முத்தியி,அவருது பாதங்களுலையி வாசனைத் தைலத்தவு பூசுனளு. |
|
அப்பவு எல்லாருமு கடவுளுது மகத்துவத்தவுமு, பெருமையவுமு பாத்து, மலச்சு போயி நிந்து, ஆச்சிரியப்பட்டருகளு. |
|
இந்த நேரத்துலருந்து கடவுளு என்னவு மன்னனாக்குன வரைக்குமு நானு திராட்சபழரசத்தவு குடிக்குனதில்லையிந்து நானு நும்முக்குச் செல்லுன அப்பிடிந்து சென்னரு. |
|
அதுனாலயி சகேயி இயேசு நடந்துபோயிக் கொண்டிருந்த தடத்துலையி கொஞ்சதூராமு முன்னுக்கு ஓடிப்போயி, இயேசுவவு பாக்கணுந்து செல்லியி ஒரு காட்டத்தி மரத்துமேலையி ஏறிக்கொண்டனு. |
|
நங்காய் மாகாத்தியிது மகனு. மாகாத்தி மத்தத்தியாவுது மகனு. மத்தத்தியா சேமேயிது மகனு. சேமேயி யோசேப்புது மகனு. யோசேப்பு யூதாவுது மகனு. |
|
அதுக்கப்பறமு மேற்பார்வையாளனு வேறொருத்தனவு பாத்து, ‘நீ வாங்குன கடனு எவ்வளவு?’அப்பிடிந்து கேட்டனு.அதுக்கு அவனு, ‘நூறு மூட்டை கோதுமையி’ அப்பிடிந்து சென்னனு.அப்பவு மேற்பார்வையாளனு,’நீ நின்னுது சீட்டவு வாங்கியி,எம்பது அப்பிடிந்து எழுது’ அப்பிடிந்து சென்னனு. |
|
விபச்சாரஞ்செய்யாத, கொலை செய்யாத, திருடாத, பொய்சாட்சி செல்லாத, நின்னுது அம்மையவுமு அப்பனவுமு மதிச்சு நடந்துகோ அப்பிடிந்த கடவுளுது கட்டளையி நின்னுக்கு தெரியுமல்ல!“அப்பிடிந்து அவனுதுகிட்டயி சென்னரு. |
|
அப்பறமு, இயேசு அவர்களவு பாத்து ஒரு வெளக்க கதையவு சென்னரு.கண்ணுத்தெரியாத ஒருத்தனு இன்னொரு கண்ணுத்தெரியாத்தவனுக்கு தடத்தக்காட்ட முடியுமா? அப்பிடி காட்டுனனுந்தா ரெண்டு பேருமே குழியிலயி விழுகுவர்களு. |
|
அப்பவு இயேசு அவர்களவு எழுப்பியு அவருதுககெட்டையி,”இப்பிடி எந்தியாசுமு நும்மவு சோதிக்குனப்பவு அதுலருந்து தப்பக்கு கடவுள் நும்முக்கு உதவி செய்யணுந்து அவருதுகிட்டையி வேண்டுதல் செய்யுனீ அப்பிடிந்தரு. |
|
என்னுது இன்னொரு நம்பனு ஒருத்தனு பயணம் போன வழியிலயி திடீர்ந்து என்னுதுகிட்டையி வந்திருக்குனனு. அவனுக்கு குடுக்கக்கு என்னுதுகிட்டையி ஒந்துமில்லை’’அப்பிடிந்து கேட்குனியிந்து வந்துக்கோனீ. |
|
எருசலேமுக்கு வெளியயிருக்குன சீலோவாமிலேயி கோபுரம் விழுந்ததுனாலயி பதினெட்டு பேரு செத்துப்போனருகளு. அவர்களு எருசலேம் பட்டணத்துலயி குடியிருந்த மத்த எல்லாத்தவுமு விட ரொம்பவுமு பாவிகளு அப்பிடிந்து நீவி நெனைக்குனியா? |