text
stringlengths 309
27.8k
|
---|
ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்தபடி அக்பரும் – பீர்பாலும் பேசிக்கொண்டு உலவிக் கொண்டிருந்தனர்.அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் ஆசை ஏற்பட்டு பீர்பால் அவர்களே! எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று அரசர் கேட்டார். அரசரின் பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார். என்றாலும் மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று தயங்கியபடியே முயன்றால் முடியும் மன்னா! என்றார்.எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. அதற்கான ஆக்கபூர்வமான வேலையில் இறங்கி வெகு சீக்கிரம் முடியுங்கள் என்றார் அரசர்.மன்னரின் ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டும் ஆசை எப்படி சாத்தியமாகும். அசட்டுத்தனமான இந்த ஆசை நிறைவேறவே வாய்ப்பு இல்லை. ஆகாயினால் இந்த வேலை முடியாதது என்பதை மன்னரே உணரந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் பீர்பால். என்ன பீர்பால்…. நான் கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் மவுனமாக உள்ளீர்! என்றார்.அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டுவதற்கு முன்னர் பல முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதனைச் செய்வதற்கே மூன்று மாதம் ஆகிவிடும். அதன் பின்னர் தான் கட்டிடம் கட்ட முடியும் என்றார் பீர்பால்.தாங்கள் கூறியபடியே ஏற்பாடுகளைச் செய்யுங்கள் நாளை காலை கஜானாவிலிருந்து அதற்கான பணம் வரும் என்றார் மன்னர். பீர்பால் கூறியபடியே மறுநாள் காலை வேடன் ஒருவன் வந்து சில கிளிகளைக் கொடுத்து விட்டுச் சென்றான்.வேடன் சென்றதும் கிளிகளை ஒரு கூண்டில் அடைத்து அதற்கு சில வார்த்தைகளைப் பேசக் கற்றுக் கொடுத்தார். அதன் பின்னர் ஆகாயத்தில் மாளிகை கட்டும் பணிக்கு ஆட்களை திரட்டி வர வெளியூர் சென்றிருப்பதாகவும் மன்னருக்கு தகவல் சொல்லியனுப்பினார் பீர்பால். மூன்று மாதங்கள் முடிந்ததும் அரண்மனைக்கு வந்து அரசரை சந்தித்தார் பீர்பால்.அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்ட ஆட்களை தயார் செய்து விட்டேன். அவர்களை நீங்கள் வந்து பார்வையிட்டதும் வேலையைத் தொடங்கி விடலாம்! என்றார் பீர்பால்.பீர்பால் கூறியதைக் கேட்டு மன்னர் மகிழ்ச்சியடைந்தார். ஆர்வமிகுதியால் உடனே பீர்பாலுடன் புறப்பட்டுச் சென்றார் மன்னர்.கிளிகள் இருந்த அறைக்கு அரசரை அழைத்துச் சென்றார் பீர்பால். அந்த அறையில் அரசரும் பீர்பாலும் மட்டுமே இருந்தனர்.அரசரைப் பார்த்ததும் கிளிகள், சுண்ணாம்பு கொண்டு வா! செங்கல்லை கொண்டு வா! சாரத்தைக் கட்டு! கல்லை இந்தப் பக்கம் போடு! சுண்ணாம்பைப் பூசு! என்று ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தது. அரசருக்கு ஆச்சர்யமும், அதே சமயம் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. பீர்பால் இது என்ன? என்றார் கடுங்கோபத்துடன். மன்னர் பெருமானே! என்னை மன்னிக்க வேண்டும் ஆகாயத்தில் கட்டடம் கட்ட பறவைகளினால்தான் முடியும்! கையினால் தான் இவைகள் பேசுகின்றன. இவைகளெல்லாம் நல்ல பயிற்சி பெற்றவையாகும். ஆதலால் ஆகாயத்தில் மாளிகை கட்டும் வேலையை இப்போதே ஆரம்பித்து விடலாம் என்றார் பீர்பால். பீர்பால் கூறியதைக் கேட்டதும் மன்னருக்குப் புரிந்து விட்டது. ஆகாயத்தில் அந்தரத்தில் எப்படி மாளிகை கட்ட முடியும். இது நடக்க முடியாத விஷயம் என்பதை நாசுக்காக நமக்கு உணர்த்துகின்றார் என்பதை புரிந்து கொண்டு புன்னகைத்தார் மன்னர்.கட்டிடம் கட்டும் தொடர்பான வார்த்தைகளை சிரமப்பட்டு பீர்பால் கற்றுக் கொடுத்ததை எண்ணி பீர்பாலை மனதாரப் பாராட்டினார் அக்பர். |
சோகமே உருவாக அமர்ந்திருந்தான் அரசி மதுவந்தி. அகண்ட அவள் விழிகளில் துயரம் தேங்கிக் கிடந்தது. சமீப காலமாக அவளை ஏதோ கவலை பிடித்து ஆட்டி வந்தது. அடிக்கடி, சோர்ந்த முகத்துடன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவளாக அமர்ந்து விடுகிறாள். "உள்ளே வரலாமா அரசியாரே?" குரலைக் கேட்ட மாத்திரத்தில் அரசியாரின் முகம் மாறியது. "வா கனகதாரா" என்றாள். வந்தது அமைச்சர் வித்யார்த்தியின் மனைவி கனகதாரா. அரண்மனையிலேயே, சொல்லப்போனால் அந்த பிரத்யுக தேசத்திலேயே மதுவந்திக்கு மிகவும் நெருக்கமானவள் கனகதாராதான். "ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தீர்கள் போலிருக்கிறது........ இடையூறு செய்துவிட்டேனோ?", "ம்ம்ம்......அதெல்லாம் ஒன்றுமில்லை." சேடிப் பெண்டிரை வெளியேறுமாறு சைகை செய்தாள் மதுவந்தி. "நான் சரியான இக்கட்டு ஒன்றில் மாட்டிக்கொண்டு விட்டேன் கனகதாரா. அதிலிருந்துவெளியேற வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் யோசனை" வருத்தமுடன் சொன்னாள். "அப்படியென்ன அரசியாருக்கு இக்கட்டு?" சிலகாலம் முன்பு க்ருஷ்ய தேசத்திலிருந்து சட்ஷயன் என்ற மாந்திரீகன் அரசனைக் காண வந்தான். அரசன் அநிருத்யபாலனுக்கு மாந்திரீகம் தொடர்பான விஷயங்களில் மட்டு மீறிய ஆவலும் ஈடுபாடும் இருந்து வந்தது. ஒரு திங்கள் சட்ஷயனை அரண்மனையில் தங்கவைத்து ராஜ உபசாரம் செய்தான் அரசன். தினமும் பலமணி நேரம் அரசனும் சட்ஷயனும் மாந்திரீகம் சம்பந்தமாக ரகசியமாக உரை யாடினர். சட்ஷயன் அரசனுக்குப் பல மாந்திரீக விஷயங்களைக் கற்றுத்தந்ததாகவும் அரண்மனையில் பேச்சு. அரசனது உபசரிப்பால் மனம் குளிர்ந்த சட்ஷயன், கிளம்பும்போது தன்னிடம் குற்றேவேல் புரிந்து வந்து பூதங்களில் ஒன்றை அரசனுக்குப் பரிசாகத் தந்துவிட்டுச் சென்றான். சட்ஷயன் அரசனுக்குப் பரிசாகத் தந்த பூதத்தின் பெயர் கனவுப் பூதம். அடுத்தவரது கனவில் நுழைந்து அவரறியாமல் அவர் காணும் கனவை அப்படியே கண்டுவந்து சொல்லக் கூடியது. பூதம் இரவில் மட்டுமே பூதத்திற்குண்டான குணங்களைக் கொண்டு விளங்கும். பகலில் அது அரண்மனை விதூஷகனைப் போன்ற உருவத்தில் அரசமண்டபத்தில் காணப்படும். அதன் சிருங்கார ரசம் சொட்டும் பேச்சை அரசன் மிகவும் விரும்பிக் கேட்பான். அவையில் பலருக்கு அதன் பேச்சு அருவருப் பூட்டியது. அரசனுக்குப் பயந்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக் காட்டாமல் மறைத்து வந்தார்கள். அது மட்டுமன்றி அந்த விதூஷகன் தான் கனவுப்பூதம் என்று எல்லோரும் அறிந்திருந்ததால் எங்கே தங்கள் கனவில் புகுந்து தம்மை மீறி வெளிப்படும் பாதகமான எண்ணங்களை ஒற்றறிந்து அரசனிடம் அது சொல்லிவிடுமோ என்ற பயப்படவும் செய்தனர். அரசன் அநிருத்யபாலன் தீவிர உறங்காநோயினால் பாதிப்புற்றிருப்பதாகவும், இரவுகளில் உறங்காமல் உப்பரிகையில் உலாத்திக் கொண்டிருக்கும் அவனால் இனி ஒருபோதும் உறங்க முடியாதெனவும், உறங்க இயலாத காரணத்தால் இனி தன் வாழ்வில் எப்போதும் அவனால கனவு காணமுடியாதென்றும், அதனாலேயே அடுத்தவரது கனவை ஒற்றறியும் பூதத்தைக் கொண்டு அடுத்தவரது கனவுகளைக் கண்டு தனது கனவு ஏக்கத்தைப் பூர்த்தி செய்து கொள்வதாகவும் அரண்மனையில் ரகசியமாகப் பேசிக்கொண்டனர். கனவுப் பூதம் கனவுகளை ஒற்றறிந்து சொல்வதோடு மட்டுமல்லாமல் அந்தக் கனவுகளுக்குத் துல்லியமாகப் பலன்களைக் கணிப்பதிலும் திறமை பெற்றிருந்தது. இப்படித்தான் அது அநிருத்யபாலனின் தளபதி மௌத்திகவாசனது திட்டத்தைக் கண்டறிந்து அரசனிடம் சொன்னது. கனவுப் பூதம் மௌத்திகவாசனது கனவில் நுழைந்த போது விழுதூன்றிப் படர்ந்து கிடந்த ஆலமரமொன்றின் கிளையொன்றை யாருமற்ற இரவில் அவன் மறைந்திருந்து ரகசியமாக வெட்டுவதாகக் கண்ட கனவை ஒற்றறிந்து அரசனிடம் சொன்னது. அக் கனவின்படி மௌத்திகவாசன் பிரத்யுக தேசத்தின் ஒரு பகுதியைத் தந்திரமாகக் கைப்பற்ற மனதிற்குள் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாகப் பூதம், கனவுக்கு வியாக்யாணமும் சொன்னது. அரசன் அநிருத்யபாலனும் மௌத்திகவாசனை ரகசியமாகக் கண்காணிக்கும்படி ஒற்றர்களுக்கு உத்தரவிட்டான். கனவுப் பூதம் சொன்னது போலவே படையினரில் ஒரு பிரிவை கைக்குள் போட்டுக் கொண்டு திடீர்ப்புரட்சி மூலம் தேசத்தின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்ற அவன் ரகசியத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. தக்க நேரத்தில் தளபதியை பிடித்து சிறையிலடைத்து நிகழவிருந்த புரட்சியை ஒடுக்கினான் அரசன். இப்படிப் பலரது கனவிலும் புகுந்து ஒற்றறிந்து சொன்ன கனவுப் பூதம் ஒரு நாள் விளையாட்டாக பட்ட மகிஷி மதுவந்தியின் கனவிலும் புகுந்தது. அன்றைக்குப் பார்த்து தன் கனவில் அவள் அவித்யுக தேச அரசன் சாம்பவகேசனுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாள். கனவுப் பூதம் இதை அரசனிடம் சொல்லவில்லை. தன் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டது. ஒரு நாள் அரசனில்லாத வேளை அந்தப்புரத்தில் நுழைந்து அரசி மதுவந்தியிட்ம் அவள் கண்ட கனவைப் பற்றிச் சொன்ன்து. அரசி ஆடிப் போனாள். அவையில் நிற்க வைத்து ஆடைகளைக் களைந்தது போல நெஞ்சம் பதறி உடல் குறுகிப் போனாள். சாம்பவகேசன் மதுவந்தியின் இளவயது கனவுப் புருஷன். அவளது தந்தையின் நாடான வசுத்யாயபுரியின் அண்டைநாடுதான் அவித்யுக தேசம். மதுவந்தியை சாம்பவகேசனுக்கு மணமுடிப்பதாக சிறுவயதிலேயே பேசி முடித்திருந்தது. மணநாளை நோக்கிய ஏக்கத்துடன் பரஸ்பரம் எதிர்பார்ப்புடன் இருவரும் காத்திருந்த வேளையில் தான் வசுத்யாயபுரி பிருகத்ஷானர்களது படையெடுப்புக்கு ஆளானது. தன்னைக் காத்துக்கொள்வதற்கே பெரும் பிரயத்தனம் புரிய வேண்டியிருந்த அவித்யுக அரசன் சாம்பவசேகனால் மதுவந்தியின் தந்தைக்கு உதவ முடியாத நிலை. எனவே பிரத்யுக மன்னன் அநிருத்யபாலனுக்கு, உதவிகேட்டு அவசரத் தூது அனுப்பப்பட்டது. பிரத்யுக தேசத்துப் படைகளை வசுத்யாயபுரிக்கு ஆதரவாகப் போரிட அனுப்புவதற்குப் பிரதிபலனாக மதுவந்தியை தனக்கு மணமுடித்துத் தரக் கேட்டான் அநிருத்யபாலன். மனமின்றி மகள் மதுவந்தியை அநிருத்யபாலனுக்கு மணமுடித்துத்தர வாக்களித்தார் வசுத்யாயபுரி மன்னர். அநிருத்யபாலனின் படைகள் பிருகத்ஷானர்களை விரட்டியடித்து வசுத்யாயபுரியை ஆபத்திலிருந்தும் காத்தன. சண்டை முடிந்த பின் தந்தையின் வாக்குக்குக் கட்டுப்பட்டு அநிருத்யபாலனை மணந்தாள் மதுவந்தி. அநிருத்யபாலனுக்கு அப்போது அகவை அறுபத்து மூன்று. ஏற்கனவே அவனுக்கு மூன்று மனைவியர். ஒருவருக்கும் புத்தியர பாக்கியம் இல்லை. பிரத்யுக தேச வழக்கப்படி அரசனுக்கு வாரிசை ஈன்று தருபவளே பட்டத்து மகிஷியாவாள். திருமணமான மறுவருடமே மதுவந்தி ஒர் ஆண் மக€வைப் பெற்றெடுத்தாள். பட்டத்து அரசியும் ஆனாள். ஆனால் அவள் மனதில் ஒரு மூலையில் எங்கோ சாம்பவகேசன் மீதான காதல் அவளறியாமலே துளிர்விட்டபடி இருந்திருக்கிறது. அதுதான் அன்று கனவில் அப்படி வெளிப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கனவை வெளியில் யாரிடமும் சொல்லாமல் வேண்டாமென கனவுப் பூதத்திடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டாள். பூதம் அவளைப் பார்த்து குறும்பாகச் சிரித்தது. நீ கண்ட கனவை நான் யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் ஒருமுறை நீ என் ஆசைக்கு இணங்கவேண்டும் என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் வெளியேறிச் சென்றுவிட்டது. "மனதின் விந்தைதானே கனவு. எங்கோ ஆழத்திலிருக்கும் காலம் கடந்த நினைவுகளும் கனவாகக் கூடுமல்லவா? அப்படிப்பட்ட கனவுக்கு நாமெப்படிப் பொறுப்பாக முடியும் கனகதாரா?", "நீங்கள் சொல்வது சரிதான் அரசியாரே, ஆனால் இதை அந்த பூதத்துக்கோ அல்லது அரசருக்கோ நம்மால் விளங்கவைக்க முடியுமா?" தனது தோழியின் இக்கட்டை அறிந்து கனகதாரவும் கவலை கொண்டாள். இந்த இக்கட்டிலிருந்து வெளியேறும் வழி அவளுக்கும்புலப்படவில்லை. "இதோ பார் கனகதாரா, அரசரை மணமுடித்த நாள் தொட்டு இன்றளவும் நான் சிந்தனையிலும் சரி, செயலிலும் சரி, பதிவிரதையாகவே இருக்கிறேன். ஆனால் கனவு என்பது என் கட்டுப்பாடுகளை மீறிய ஒன்று. அதற்கும் என் பதிவிரதைத் தன்மைக்கும் எந்த சம்பந்தமுமில்லையே." விதூஷகன் பேசுகிறான். "அரசே முப்பது தசாப்தங்களுக்கு முன் க்ருஷ்ய தேசத்தில் வாழ்ந்த சமஸ்கிருதக் கவியொருவன் பாடிப்போன கவிதையைச் சொல்வேன், கனிவுடன் கேட்பீர். கவி சொல்கிறான். "கன்னிப் பெண்கள் கலவியில் ஈடுபடுவது எதனாலென்றால் அதில் என்ன இருக்கிறதென்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தினால். வேசையருக்குக் கலவி ஒரு பொருளீட்டும் வழி. விதவையருக்கோ தங்கள் கடந்த கால நினைவுகளை வருடிப் பார்க்குமொரு சந்தர்ப்பம். மனைவியருக்கு ஒரு நாளில் பல்வேறு கடமைகளுள் கலவியும் ஒன்று. அகவே இவ்வுலகில் பெண்டிர் கலவியின் பூரண இன்பத்தையும் துய்ப்பது கள்ளப் புணர்ச்சியில்தான்.", "ஆஹா, பேஷ்" என்கிறார் அரசர். அரண்மனையில் உலவ ஆரம்பித்த நாள் தொட்டே கனவுப் பூதத்துக்கு அரசி மதுவந்தி மீது ஒரு கண். அது என்னவோ மதுவந்தியைப் பார்க்கையில் எல்லாம் தானொரு பூத கணம் என்பதையும் மறந்து அதற்கு காதல் பொங்கிப் பிரவகிக்க ஆரம்பித்துவிடும். அவள் அரசனின் மனைவி, அதுவும் பட்டத்து ராணி. தன் மனதிலிருப்பது அரசருக்குத் தெரியவந்தால். பெரும் விபரீதமாகிவிடும். இப்படியெல்லாம் தனக்குள்ளேயே அது சிந்தித்தாலும் தன் இச்சையை அடக்கும் வழி மட்டும் அதற்கு புலப்படவில்லை. நிலை கொள்ளாமல் அது தவித்துக் கொண்டிருந்த போதுதான் எதேச்சையாக ஒரு நாள் அரசி மதுவந்தியின் கனவுக்குள் புகுந்து பார்த்தது. வழக்கமாக பூத கணங்கள் மானுடரோடு காதல் உறவு கொள்வதில்லை. இருந்தாலும் சில விதிவிலக்குகள் உண்டு. மானுடரோடு கூடும் பட்சத்தில் பூதங்கள் தமக்குரிய மாய இயல்புகளை இழந்துவிடும் அபாயமும் உண்டு. கனவுப் பூதத்துக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லையென்று தோன்றியது. மதுவந்தியுடன் ஒரு முறை கூடியிருந்து அதனால் உயிரே போனாலும் பரவாயில்லையெனும் அளவுக்கு உன்மத்தம் அதைப் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. அது அடிக்கடி சென்று பணிந்தும் குழைந்தும் மிரட்டியும் மதுவந்தியை தன் ஆசைக்குப் பணியவைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. "அரசியாரே, பரிவிருட்ஷ மலையடிவாரத்திலிருக்கும் ரிஷி ஒருவரிடமிருந்து மூலிகையொன்று பெற்று வந்திருக்கிறேன். உங்களது இக்கட்டு தீர இம்மூலிகை உதவிகரமாக இருக்கும்.", "என்ன மூலிகை, எப்படி அது என் இக்கட்டு தீர உதவமுடியும் கனகதாரா?", "இந்த விசேஷ மூலிகையை ஒருவர் முகர்ந்தால் அவருக்குத் தன் பழைய நினைவுகளனைத்தும் மறந்து போகும். பல வருடத்து நினைவுகளை சுத்தமாக அழித்துவிடக்கூடிய சக்தி வாய்ந்த மூலிகை இது. இதை எப்படியாவது அந்த கனவுப் பூதம் முகரும்படி செய்துவிடவேண்டும்.", "நீ சொல்வது சரிதான். ஆனால் இந்த மூலிகை பூதங்களிடம் பலிக்குமா?" முயன்றுதான் பார்ப்போம், எனக்கென்னவோ பலிக்கும் என்றுதான் தோன்றுகிறது.", "சரி கனகதாரா. எப்படியோ இந்த இக்கட்டு நீங்கினால் சரி. நாள் ஒவ்வொன்றும் யுகமாகக் கழிகிறது எனக்கு." கனவுப் பூதத்தின் இச்சைக்கு இணங்க இசைந்துவிட்டதாக மதுவந்தி அதற்கு ரகசியமாக தகவல் சொல்லியனுப்பினாள். அன்றைய தினம் பிரத்யுக நாடெங்கும் பெருமழை பெய்துகொண்டிருந்தது. அதிகாலை தொடங்கியே ஓயாது மழை கொட்டிக் கொண்டிருந்தது. நலக்குறைவு எனச்சொல்லி அன்றிரவு அரசரை அந்தப்புரம் வரவேண்டாமென கேட்டுக் கொண்டிருந்தாள். கனவுப்பூதம் இரண்டாம் சாமம் கடந்து வருவதாக ஏற்பாடு. கனகதாரா பச்சைப் பனையோலைப் பெட்டியில் வைத்துக் கொடுத்தனுப்பியிருந்த மூலிகையை மஞ்சத்துக்கு அருகிலேயே வைத்திருந்தாள். பூதத்தின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். ஒரே பதற்றமாக இருந்தது. பூதம் வந்ததும் என்ன செய்யவேண்டுமென்பதை பலமுறை மனதில் ஒத்திகை பா‘த்திருந்தாள். முறுவலுடன் பூதத்தை வரவேற்று நைச்சியமாகப் பேச வேண்டும். பேசியபடியே, "உங்களுக்காக ஆபூர்வ மலரொன்றை கொண்டு வந்திருக்கிறேன். முகர்ந்து பார்த்து என்ன மலரென்று சொல்லுங்கள் பார்ப்போம்" என்று பனையோலைப் பெட்டியை பூதத்திடம் தர வேண்டும். பூதம் பெட்டியை வாங்கித் திறந்து முகர்ந்து பார்க்கும். உடனே மயங்கி விழுந்துவிடும். மயக்கம் தெளிந்து எழும்போது அதன் நினைவுகளனைத்தும் அழிந்திருக்கும். ஒரு வேளை பூதம் மயங்கி விழவில்லையாயின் மதுவந்தி மயங்கி விழுந்தவள்போல் நடித்து உடல் நலமில்லையென்று சொல்லி பூதத்தை பிறகொருநாள் வரும்படி சொல்லி அனுப்பி விடவேண்டும். ஒத்திகை கச்சிதம்தான். நிஜத்திலும் அப்படியே நடந்து விட வேண்டும். பூதம் மயங்கி விழுந்து அதன் நினைவுகள் அழிந்து போகவேண்டும். மதுவந்திக்கு நிலைகொள்ளவில்லை. இன்னும் இரண்டாம் சாமம் கடக்கவில்லை. திடீரென அவளுக்கு ஒரு ஐயம். பனையோலைப் பெட்டியில் மூலிகை நல்லவிதமாக இருக்கிறதா, அது தன் வேலையைச் சரியான விதத்தில் செய்யுமா? பனையோலைப் பெட்டியைக் கையிலெடுத்து மெதுவாகத் திறந்தாள். உள்ளிருந்த மூலிகையின் நெடி அவள் நாசியைத் தாக்கியது. அப்படியே மயங்கி மஞ்சத்தில் சரிந்தாள். அவள் நினைவு தப்பியது. மழையில் நனைந்தபடி அந்தப்புரத்தை அடைந்த கனவுப் பூதம் ஒருக்களித்திருந்த கதவைத் திறந்தது உள்ளே நுழைந்தது. விளக்கு மிகவும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. சிரமத்துடன் கண்களால் துழாவியபடியே அரசி மதுவந்தி மஞ்சத்தில் நிலைகுலைந்து கிடப்பதைக் கண்டது. காத்திருந்த களைப்பில் அரசியார் உறங்கிவிட்டிருக்க வேண்டும் என நினைத்த கனவுப் பூதம் உன்மத்தத்தின் விளிம்பில் நின்றது. அவளைத் தொட அதன் கைகள் பரபரத்தன. அவளது கால்களைத் தொட்டு மெதுவாக அசைத்து "மதுவந்தி" என்றது. மயக்கம் நீங்கி எழுந்த மதுவந்திக்கு அந்தக் குறை வெளிச்சத்தில் எதிரில் ஒர் ஆடவன் நிற்பதை உணர சிறிது அவகாசம் பிடித்தது. அவள் முகம் ஒரு பூவைப் போல மலர்ந்தது. செல்லச் சிணுங்கலுடன் அவள் சொன்னாள். "ஏன் சாம்பவகேசரே இத்தனை தாமதம். பாருங்கள் காத்திருந்த களைப்பில் நான் உறங்கியே போய்விட்டிருக்கிறேன். ஆமாம் இன்று என் தந்தைக்குத் தெரியாமல் எப்படி அரண்மனைக்குள் நுழைந்தீர்கள்?" கனவுப் பூதத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதிர்ச்சி நீங்காமலேயே அது அவசரம் அவசரமாக அந்தப்புரத்தைவிட்டு வெளியேறியது. கனத்த அதன் பாதச் சுவடுகளை மழை பின்தொடர்ந்து அழித்தபடியே வந்தது. அன்றிலிருந்து இரவுகளில், உறக்கம் வராமல் அரண்மனை உப்பரிகையில் இரண்டு பேர் உலாத்துவதைப் பார்க்க முடிந்தது. நன்றி: வார்த்தைப்பாடு |
முல்லாவிற்கு அன்றுதான் திருமணம் முடிந்திருந்தது.புதுமனைவி மற்றும் உறவினர்களுடன் தனது ஊருக்கு புறப்பட்டார்.வழியில் பெரிய ஆற்றை கடந்து செல்லவேண்டும்!ஒரு பெரிய் படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள்.படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல்க்காற்று வீசி படகு அங்கும் இங்குமாக் தள்ளாடியது.முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார்.இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்!முல்லாவிடமே கேட்டுவிட்டாள்.முல்லா பதில் ஏதும் பேசாமல் மனைவி அருகில் சென்று தன் இடுப்பில் இருந்த கூரிய கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார்.மனைவி எவ்வித சலனுமுமின்றி இருந்ததை கண்ட முல்லா மனைவியை பார்த்து இந்த அபயகரமான கத்தியை பார்த்து உனக்கு பயமில்லையா? என கேட்டார்.அவரது மனைவி,"கத்தி வேண்டுமானால் அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை கையில் ஏந்தி இருப்பவர் எனது அன்பான கணவர்" என்றாள்.உடனே முல்லா பதிலளித்தார்,"அதுபோலத்தான் ஆற்றில் உருவான சூறாவளி அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை உருவாக்கிய அல்லா என் மீது அன்பு கொண்டவர் நமக்கு எந்த தீங்கும் நேரிடாது என்றாராம்!! ந்ம்பிக்கையே வாழ்க்கை! |
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார். “இது என்ன? எதற்காக அவர் என்னை கூப்பிட்டு வீட்டிற்க்குள் பூனையை அனுமதிக்காதே” என்றார் என்று புரியவில்லை அந்த தலைமை சீடருக்கு. அவர் வயது முதிர்ந்த கிழவர்களிடம் கேட்டுப்பார்த்தார். இதில் ஏதோ ஒரு செய்தி இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இது ஏதோ ஒரு குறியீடாக இருக்கலாம், இல்லாவிடில் அவர் இதை ஏன் சொல்ல வேண்டும் இதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவர் இறந்து போய் விட்டார். ஏன் நீங்கள் பூனைகளுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று நான் கேட்டிருப்பேன். உங்களது வாழ்க்கை முழுவதும்…. உங்களது ஒழுக்கம் வழிமுறை நெறிமுறை விளக்கம் வரையறை அனைத்தும் இதற்குத்தானா? – பூனையை வீட்டினுள் அனுமதிக்காதே. ஒரு வயதான மனிதர் கூறினார், “எனக்கு அது என்ன என்று தெரியும். இது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்ட செய்தி. ஏனெனில் அவர் ஒரு பூனையால் அவதிக்குள்ளானார். அந்த குரு கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவரிடம் இரண்டே இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்தன”. ஒரு துறவிக்கு அது மட்டுமே உடை. உங்களுக்கு அது உள்ளாடை ஆனால் அவருக்கு அது மட்டுமே ஆடை. அவரிடம் இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்ததில் பிரச்னை என்னவென்றால் அங்கிருந்த எலிகள் அவருடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. அவர் கிராமத்திலுள்ளவர்களிடம் “இந்த எலிகள் மிகவும் தந்திரமானவை. அவை என்னுடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. என்ன செய்வது?” என்று கேட்டார். ஒருவர், “அது மிகவும் சுலபம். நாங்கள் கிராமத்தில் பூனையை வைத்துக் கொள்வோம். நீங்களும் ஒரு பூனையை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பூனையை பிடித்துவந்து தருகிறேன்.” என்றார். அந்த குரு, “சரி, இது ஒரு எளிய வழிதான்.” என்று ஒத்துக் கொண்டார். பூனை வந்தது. அது அதன் வேலையை மிகச் சரியாக செய்தது. எல்லா எலிகளையும் தின்று முடித்து விட்டது. இப்போது பிரச்னை துவங்கி விட்டது. எலிகள் தீர்ந்துவிட்டன. பூனைக்கு பசி வந்துவிட்டது. அது எனக்கு பால் வேண்டும் எனக் கேட்டது. அது எப்போதும் துறவி எதிரே வந்து பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தது. பூனைகள் பசியோடிருக்கும்போது பார்த்தால் மிகவும் பாவமாக தோன்றும். அது அதன் வேலையை முடித்து விட்டது. ‘நான் உனக்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்து விட்டேன், எல்லா எலிகளையும் தின்று விட்டேன். ஆனால் இப்போது எனக்கு பசிக்கிறது’ என்று சொல்லாமல் சொல்லியது. அந்த குரு திரும்பவும் வந்து, “இப்போது என்ன செய்வது அந்த பூனை என் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு பசியோடு என்னை பார்க்கிறது. எனக்கு உணவு கொடு இல்லாவிடில் நான் போகிறேன். நான் போய் விட்டால் எலிகள் திரும்பவும் வந்து விடும். என்பது போல பார்க்கிறது. அதை அது சொல்லவில்லை, ஆனால் நான் அதை அதன் கண்களில் பார்க்கிறேன். அதற்கு பால் கொடுப்பதற்கு எனக்கு பால் வேண்டும். “ என்று கேட்டார். அந்த மனிதன், “ஒவ்வொரு நாளும் நீங்கள் பாலுக்கு வர வேண்டியிருக்கும். என்னிடம் பல பசுக்கள் உள்ளன. அதில் ஒன்றை கொடுக்கிறேன். அதை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றான். அவர் பசுவை வாங்கிக் கொண்டு சென்றார். ஆனால் அதனால் பிரச்னைகள்தான் அதிகமாயின. இப்போது பசுவுக்கு புல் தேவை பட்டது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்துக்குச் சென்றார். மக்கள், “நீ ஒரு கிறுக்கன், பிரச்னை பிரச்னை. நீங்கள் ஏன் உங்கள் குடிசையை சுற்றி உள்ள இடத்தில் புல் வளர்த்துக் கொள்ளக் கூடாது?. அங்கே ஏகப்பட்ட இடம் சும்மா தரிசாக கிடக்கிறது. நாங்கள் விதை தருகிறோம். இந்த விதைகளை வைத்து எதையாவது விதைத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உதவும். நீங்களும் சாப்பிட்டு பசுவுக்கும் எதையாவது கொடுங்கள்.” என்றனர். அதனால் அந்த குரு, விதை விதைத்து வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் பிரச்னை வந்தது. இப்போது அந்த பயிரை அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அவரோ ஒரு துறவி, அவர் இந்த வேலைகளை செய்ய கூடாது. ஆனால் ஒரு விஷயம் மற்றொரு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்திற்கு சென்றார். “பயிர் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஆனால் அதை செய்ய என்னிடம் கருவிகள் எதுவும் கிடையாது. அதனால் எனக்கு உதவி வேண்டும்.” என்று கேட்டார். மக்கள், “இங்கே பாருங்கள் உங்களோடு மிகவும் தொந்தரவாகி விட்டது. உங்களால் எந்த பயனும் இல்லை. எதற்கும் உங்களால் தீர்வு காண முடியாது. நாங்கள் தான் எதற்கும் தீர்வு காண வேண்டும். இது மிகவும் எளிது. இங்கே ஒரு விதவை பெண் இருக்கிறாள். அவள் உங்களை, உங்கள் பசுவை, உங்கள் பயிரை, உங்கள் உணவை, எல்லாவற்றையும் – எல்லாவற்றையும் என்றால் பூனை. எலி …… அவள் மிகவும் அனுபவம் வாய்ந்த பெண்.” ஆனால்! என்ற துறவி நான் ஒரு துறவி. என்றார். அவர்கள், இந்த துறவு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். என்ன வகையான துறவி நீங்கள்.! உங்களிடம் பசு, பூனை, நிலம். பயிர் ஆகிய எல்லாமும் உள்ளன. ஆனால் நீங்கள் நான் ஒரு துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். மேலும் இந்த திருமணம் போலியான ஒன்று. உங்களுக்கு அந்த பெண்ணிடம் எந்த உறவும் கிடையாது. அவள் வறுமையில் கஷ்டத்தில் இருக்கிறாள். நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு நல்லது.” என்றனர். அவர், “அப்படியானால் சரி, அது சட்டபூர்வமானதாக இல்லாவிடில் சரி. அதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் எனது குரு திருமணம் செய்து கொள்ளாதே என்று தான் கூறியுள்ளார். இதற்கு எதிராக எதுவுமே சொல்லவில்லை. நான் தான் திருமணம் செய்யவில்லையே. நான் அந்த பெண்ணுடன் வாழ்வதைப் பற்றி இந்த கிராமம் எதுவும் சொல்லாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு என்பதால் இது எனக்கு சரிதான். நான் அவளை எனது மனைவி என்று சொல்லிகொள்ளலாம், ஆனால் உண்மையில் நான் அவளது கணவனாக எதுவும் செய்யவேண்டியதில்லை, அவளும் எனது மனைவியாக உண்மையில் எதுவும் செய்யவேண்டியதில்லை.” என்று ஒத்துக் கொண்டார். அவர் அந்த பெண்ணுடன் பேசினார். அவள், எனக்கு மறுபடியும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஒருமுறை செய்ததே போதும். ஆனால் நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள், நானும் சிரமத்தில் இருக்கிறீர்கள். அதனால் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வோம். அந்த விதத்தில் இது எனக்கு சரிதான்.” என்றாள். அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது எல்லாமும் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் சில நாட்களில் அவள் அவருக்கு சிசுரிஷை செய்தாள். மெதுமெதுவாக அவர் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தார். ஒரு ஆண் ஆண்தான், ஒரு பெண் பெண்தான். பெண்ணும் அவரை விரும்ப ஆரம்பித்தாள். அவர்கள் இருவருமே தனிமையை உணர்ந்தனர். ஒரு குளிர்கால இரவில் இங்கே குளிராக இருக்கிறது நாம் ஏன் நெருங்கி இருக்கக் கூடாது என மற்றவர் கேட்கவேண்டும் என இருவருமே விரும்பினர். இறுதியில் அந்த பெண், இங்கே மிகவும் குளிராக இருக்கிறது என்று கூறினாள். அந்த துறவியும் இங்கேயும் குளிராக இருக்கிறது என்றார். அப்போது அந்த பெண், உங்களுக்கு தைரியம் இல்லைபோல தோன்றுகிறதே என்றாள். அவர், அதுசரிதான். நீ இங்கே வா, எனக்கு தைரியம் இல்லை. நான் ஒரு துறவி, நீ ஒரு அனுபவமுள்ள பெண்மணி. நீ இங்கே வா. இருவரும் சேர்ந்திருந்தால் கதகதப்பாக இருக்கும். என்றார். கதகதப்பாகத்தானே இருக்கும். இப்படித்தான் அவரது முழு துறவறமும் வீணாகிப்போனது. அவர் இறக்கும்போது அவர் தனது சீடர்களிடம் உங்களுடன் எந்த பூனையையும் தங்க விடாதீர்கள். என்று கூறி விட்டு இறந்தார். வயதான மனிதன் அந்த தலைமை சீடரிடம், “அதிலிருந்து உங்களது பாதையில் ஒவ்வொரு குருவும் தனது சீடர்களிடம் பூனையைப் பற்றி கவனமாக இருங்கள் என்று கூறுவது வழக்கமாகிப் போனது. பூனையைப் பற்றி கவனமாக இருப்பது மிகவும் கடினம். எப்படியோ பூனை உள்ளே வந்து விடும் – வாழ்க்கை மிகவும் விசித்திரமானது”. என்றார்.
|
ஒரு சமயம் ஜப்பானின் இராணுவத்தில் ஸொகன் என்ற உயரிய பதவி வகித்த ஒருவர் தன்னுடைய விருந்தினர் அறையில் இருந்த டொகோனோமோ எனப்படும் மாடத்தில் கோழியின் அழகான படம் ஒன்றினை மாட்டி வைக்க விரும்பினார். அந்த ஊரிலேயே இருந்த சிறந்த ஓவியன் ஒருவனை சந்தித்து, "உங்கள் திறமை எல்லாம் காட்டி எனக்கு ஒரு சிறந்த கோழியின் படத்தினை வரைந்து கொடுக்க முடியுமா?" என்று கேட்டார். ஓவியர் "ஓ, தாரளமாக, கண்டிப்பா வரைஞ்சு தருகிறேன்" என்றார். ஓவியர் உடனே ஃபூஜி மலையின் மேலிருந்த தனது சிறிய ஓவியம் வரையும் அறைக்கு சென்றார். பறவைகளின் உடற்கூறுகளைப் பற்றி அலசி ஆராய்ந்து கூறும் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்தார். முன்பு பறவைகளைப் பற்றி புகழ்பெற்ற ஒவியர்கள் எழுதியதைப் பற்றி வாங்கிப் படித்தார். கோழிகளை ஒரு சிற்பியைப் போல கல்லில் வடிவமைத்தார். ஆயில் வண்ணங்களை உபயோகித்து கோழிகளை வரைந்தார். மரத்தினாலான அச்சுக்களை உபயோகித்து கோழியைப் போல வடிவமைத்தார். ஒரு அச்சிலிருந்து மற்றொரு அச்சு அதைவிட தத்ரூபமாக இருக்கும் படி மற்றொரு படியினையும் எடுத்தார். சமுராய் வீரர்களின் புஸிடோ எனப்படும் வீரம் தோய்ந்த கவசம் அணிந்த கோழியினை உருவாக்கினார். ஒரு சமுராய் வீரன் மற்றொருவனுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் போல் இரண்டு கோழிகளின் சண்டைகளை உருவகப் படுத்தினார். சாந்தமே உருவான சாதுக்களைப் போல் கோழிகளை அமைதி தோய்ந்த முகத்துடன் வரைந்தார். சுமி தூரிகையை உபயோகித்து கோழிக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையினை மனதில் நினைத்து அதன் சேட்டைகளையும் அனத்தங்களையும் அனைத்துக் கோணங்களிலும் வரைந்துப் பார்த்தார். கோழியின் உருவங்களை இயற்கைகாட்சிகள் நிறைந்த சூழ் நிலையில் வரைந்துப் பார்த்தார். தானியங்களை தின்னும் நிலையிலும், கோழிச்சண்டை நடப்பதை மக்கள் இரசிக்கும் விதமாகவும் வரைந்தார். இப்படியாக பத்து வருடங்கள் ஒடியிருக்கும். ஒரு நாள் ஸொகன் அம்புகளை விட்டு பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடிரென ஓவியரிடம் தான் கோழியின் ஓவியம் வரையச் சொன்னது ஞாபகம் வந்தவராக, தன்னுடைய போர்க் குதிரையின் மேல் ஏறி அதனை பறக்க விட்டு கொண்டு ஓவியனுடைய இடத்தை வந்து அடைந்தார். கதவினை திறந்து கொண்டு உள்ளே வருவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. உள்ளே நுழைந்தவர் கோழியைப் பற்றி வரைந்த ஓவியங்களின் மாதிரிகள் அந்த அறையின் மேல் முகட்டு வரை தொட்டிருந்ததினைக் கண்டார். கோழிகளின் சிலைகளின் மாதிரிகள் அறை முழுவதும் அடைத்திருந்தது. கோழிகளின் எலும்புக் கூடுகள், ஆயில் வண்ணப் படங்கள் என எங்கும் கோழி, எதிலும் கோழியின் உருவமாக இருந்தது. நிற்பதற்கே இடம் இல்லாத போது உட்காருவதற்கு அங்கே ஏது இடம்? "எங்கே எனக்காக வரைந்த கோழியினுடைய படம்?" என்று உரிமையுடன் அதட்டிக் கேட்டார் ஸொகன். "ஓ!! சுத்தாமாக மறந்தே போய் விட்டேன், மன்னித்து விடுங்கள்", என்று கூறிய ஓவியர். துரிகையை எடுத்தார் ஒரு அரிசியால் செய்த தாளில் இலாவகமாக அப்படியும் இப்படியும் வேகமாக சுழற்றினார். "இந்தாருங்கள்" என்று அந்த தாளினை ஸொகனிடம் கொடுத்தார். |
முல்லாவுக்கு மிகுந்த பண நெருக்கடியாக இருந்தபோது ஒரு செல்வந்தனிடம் ஆயிரம் காசுகள் கடன் வாங்கி விட்டார். முல்லாவின் பொருளாதார நிலை அவர் எதிர் பார்த்த அளவுக்கு முன்னேறாததால் சொன்ன
கெடுவுக்குள் பணத்தைத் திருப்பித்தர முடியவில்லை. கடன் கொடுத்தவர் பல தடவை கடனைக் கேட்டும் இதோ தருகிறேன் அதோ தருகிறனே; என
முல்லா சாக்குபோக்கு சொல்லிக் காலம் தள்ளினார். முல்லாவிடமிருந்து பணம் வாங்குவது கஷ்டம் என்று தெரிந்தவுடன் கடன் கொடுத்தவன்
நீதிபதியிடம் முறையிட்டான். அந்தக் காலத்தில் நீதிமன்றத்துக்கு வாதியே தன் பொறுப்பில் பிரதிவாதியை அழைத்துவர
வேண்டும் என்பது வழக்கம். அதனால்தான் கடன் கொடுத்தவர் முல்லாவின் வீட்டுக்கு வந்து நீதிமன்றத்துக்கு வருமாறு
வற்புறுத்தினார். முல்லா கடன் கொடுத்தவரிடம் தந்திரமாகப் பேசத் தொடங்கினார். " ஐயா நீதிமன்றத்துக்கு வரும் அளவுக்கு என்னிடம் கண்ணியமான உடை இல்லை,
என்னுடைய இப்போதைய பிச்சைக்காரக் கோலத்துடன் நீதிமன்றத்துக்குச் சென்றால் இவ்வளவு
கேவலமான நிலையில் உள்ளவனுக்கு ஏன் கடன் கொடுத்தாய் என்று நீதிபதி கேட்பார். உனக்கு
எதிராகத்தான் தீர்ப்பு ஆகும். " " அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என் எதிர்பார்க்கிறீர்?" என்று கடன் கொடுத்தவர்
கேட்டார். " உம்மிடம் உள்ள விலை உயர்ந்த ஆடைகள் தலைப்பாகை, வைர மோதிரம் எல்லாவற்றையும்
இரவலாகக் கொடும் இவற்றை அணிந்து கொண்டு நீதிமன்றம் வருகிறேன். நீதிமன்றத்திலிருந்து
திரும்பிய உடனே உங்கள் துணிமணிகளைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் " என்றார்
முல்லா. கடன் கொடுத்தவர் அவ்வாறே தம்முடைய ஆடை அணிகளில் மிகவும் விலை உயர்ந்தவைகளை எல்லாம்
கொடுத்தார். அணிகளை அணிந்து கொண்டு முல்லா நீதி மன்றம் சென்றார். " நீதிமன்றத்தில் நீதிபதி முல்லாவை நோக்கி இந்த மனிதரிடம் நீ ஆயிரம் பொற்காசுகள்
கடனாகப் பெற்றீரா?" என்று கேட்டார். " மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே நான் இவரிடம் கடனாக எதையும் பெறவே இல்லை" என்றார் முல்லா. " அப்படியானால் இவர் தாம் உமக்கு ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கொடுத்ததாகக் கூறுவது
பொய்யா?" என்று நீதிபதி கேட்டார். " தர்ம பிரபு, இந்த மனிதருக்கு ஒரு மாதிரியான வியாதி உண்டு. தெருவில் செல்லும் யாரைக்
கண்டாலும் அவருக்குத் தாம் கடன் கொடுத்திருப்பதாகக் கூறுவார். சிலரைப் பார்த்தால்
அவர் அணிந்திருக்கிற ஆடை அணிகள் எல்லாம் தம்முடையவை என்று சொல்வார் இப்படி ஒரு
மோசமான மனநோய் இவருக்கு" என்றார் முல்லா. " நீர் சொல்வதை எவ்வாறு நிரூபிக்க முடியும்?" என்று நீதிபதி வினவினார். " நான் நிரூபிக்கிறேன் தாங்கள் அருள் கூர்ந்து நான் அணிந்திருக்கிற ஆடை அணிகளை
ஒவ்வொன்றாகக் கழட்டிக் காண்பித்து அது யாருடையது என வினவுங்கள் " என்று முல்லா
கேட்டுக் கொண்டார். அதன் படியே நீதிபதி கேட்டார். " இவர் அணிந்திருக்கும் சட்டை யாருடையது" என்று நீதிபதியின் வினாவுக்கு " என்னுடைய
சட்டை தான் என கடன் கொடுத்தவர் " சொன்னார். " இவருடைய தலைப்பாகை?" என நீதிபதி வினா எழுப்பினார். " என்னுடையதே" என்றார் கடன் கொடுத்தவர். " இவர் விரலில் இருக்கும் மோதிரம் கூட உம்முடையததானா?" என நீதிபதி கேட்டார். " ஆமாம் " என்றார் கடன் கொடுத்தவர். இந்த மனிதருக்கு சரியாகப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் என்ற நீதிபதி
தீர்மானித்துக் கொண்டார். " உமக்கு ஏதோ மூளைக் கோளாறு இருக்கிறது. இந்த மனிதருடைய ஆடை அணிகள் எல்லாம்
உம்முடையது என்கிறீர் நீர் உண்மையாகவே இவருக்குக் கடன் கொடுத்திருப்பீர் என்று
தோன்றவில்லை. நீர் இவர் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே
வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டேன் " என்று நீதிபதி தீர்ப்பளித்தார். வீட்டுக்கு வந்ததும் முல்லா கடன் கொடுத்தவரின் ஆடை அணிகளைத் திருப்பித் கொடுத்து
விட்டார். பிறகு கடன் கொடுத்தவரை " நோக்கி ஐயா உம்மை நான் ஏமாற்றிவிட மாட்டேன். கொஞ்சம்
அவகாசம் கொடுங்கள் உங்கள் கடனை நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் "
என்றார்.
|
ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர். குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் "எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?" என்று கேட்டான். குயவன் "அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு … கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!" என்று கொட்டாவி விட்டான். அதற்கு வைர வியாபாரி சொன்னான் "உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி… நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்…" என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான். எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை. ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று "ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள். பெரியவர் புன்னகைத்துக் கொண்டே "உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார். அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள். "உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?" என்று அவர்களிடம் கேட்டார். "எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!" பயத்துடன் பதில் சொன்னார்கள். "அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?" பெரியவர் கேட்டார். "களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்" என்று இருவரும் சொன்னார்கள். "உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்" என்று முடித்தார். |
அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார். இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான். தத்துவஞானியைப் பார்த்து, “ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?” எனக் கேட்டான். அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.
|
பங்கி என்னும் ஜென் ஞானிக்கு நல்ல புகழ். அவரிடம் நிறைய மாணவர்கள். பொறாமைக்காரரான நிச்சேரியன் துறவிக்கு இது பிடிக்கவில்லை. பங்கியிடம் விவாதம் புரிவதற்காக அவர் இருந்த ஆலயத்திற்கு வந்தார். ""பங்கி ! உங்களுக்கு யாராவது மரியாதை செய்தால் நீங்கள் பணிபுரிவீர்கள் ; இல்லையா? என்னைப் போன்றவர்கள் உமக்கெல்லாம் மரியாதை தருவதில்லை. என்னை உன்னால் பணிய வைக்க முடியுமா ?" என்று கேட்டார். "" என் அருகில் வாருங்கள். அது எப்படி என்று விளக்குகிறேன்"என்றார் பங்கி. உடனே, துறவி கூட்டத்தை விலக்கிக்கொண்டு, ஆணவமாக, பங்கியை நோக்கி வந்தார். ""இப்படி, எனது இடதுபக்கம் வாருங்கள்". துறவி அவ்வாறே சென்றார். ""ரொம்ப வந்து விட்டீர்கள். ஒரு இரண்டடி பின்னால் போங்கள்!" - போனார். பங்கி அமைதியாக, ""சரி! நான் சொன்னபடியெல்லாம் நீ பணிந்து நடந்ததால், நீ ஒரு கவுரவமான மனிதன் என்று நினைக்கிறேன். இப்போது நீ எனது பக்கத்தில் அமர்ந்து பாடத்தை கவனி !" என்றார். |
“குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?” என்று கேட்டான் முட்டாள். “பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?” என்றார் பரமார்த்தர். “தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்” என்றான் மூடன். “அப்படியானால் நம் பத்திரிகைக்குத் ‘தினப் புளுகு’ என்று பெயர் வைக்கலாம்” என்றார் குரு. “பெயருக்குக் கீழே “கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை!” என்று போடலாம்” என்றான் மண்டு. அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், ‘தினப் புளுகு’ நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர். இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான். அதைக் கண்ட மட்டி, “அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?” என்று கேட்டான். “திருடுவதற்காக இருக்கும்” என்றான் மடையன். “ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?” என்று சந்தேகம் கொண்டான், மட்டி. “எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்” என்று விளக்கினான், மடையன் “அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!” என்றான் மட்டி. மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள். வேலியே பயிரை மேய்கிறது! பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!! இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார். இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள். “தேர்தலில் நம்மை எதிர்த்துப் போட்டி போட்டவர்களைச் சும்மா விடக்கூடாது. பழி வாங்கியே தீர வேண்டும்” என்றான் மண்டு. “மந்திரிகள் பேரிலும் ஊழல் பட்டியல் தயாரிப்போம்” என்று கத்தினான் மூடன். உடனே மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள். அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா! அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார். ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன? இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு! இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள். “நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!” என்றான் முட்டாள். “என்ன எழுதுவது?” எனக் கேட்டான் மூடன். சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள். ‘மண்ணில் புரளுவது எப்படி?’ என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி! ‘தொப்பை வளர்ப்பது எப்படி?’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை ‘அறிவியல்’ பகுதியில் எழுதினார் பரமார்த்தர். ‘பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! ‘தத்துவத் தந்தை’ பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!’ இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர். எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், “எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார். பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள். ‘தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!’ என்று கத்தினான் முட்டாள். சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர். செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் ‘குற்றப்பத்திரிகை’ வாசிக்கப்பட்டது. “பரமார்த்தரோ, “இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; ‘தினப் புளுகு’ என்று தானே போட்டிருக்கிறோம்” என்று கூறினார். அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
|
முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும். ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது. கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது. எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை. கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான். மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது. அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது. கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான். கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான். அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது. மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது. தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது. நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.
|
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது.பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர்.மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே…குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!""பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு.இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்தது."சீடர்களே! எப்படியாவது இந்தப் பந்தயத்தில் நாம் ஜெயித்து விட்டால்…. நான் பல ஊர்களுக்குத் தலைவன் ஆகிவிடுவேன்! உங்களுக்கும் பதவி கிடைக்கும். அப்புறம் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை"குருவின் திட்டத்தைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் எகிறி எகிறிக் குதித்தனர்."குருவே! நீங்கள் கவலையே படாதீர்கள். எப்படியும் நாங்கள் வெற்றிபெற்றுக் காட்டுகிறோம்!" என்று முட்டாள் சொன்னான்."நம் குரு மட்டும் எப்படியாவது ராஜா ஆகி விட்டால்… மகிழ்ச்சியாக இருக்கலாமே! விதம் விதமான குதிரைகள் பூட்டிய தேரில் ஜம்மென்று ஊர்வலம் வரலாம்!" என்று கனவு கண்டான் மூடன்."அது மட்டுமா? தெருவில் போனால், எல்லோரும் நம் காலில் விழுந்து விழுந்து கும்பிடுவார்களே!" என்று சிரித்தான், மட்டி."ஆமாம், ஆமாம். எனக்கும்கூட இலவசமாக நிறைய சுருட்டுகள் கிடைக்கும். பணத்துக்குப் பதில் சுருட்டையே வரியாகக் கட்டச் சொல்ல வேண்டும்!" என்றார் பரமார்த்தர்."குருவே! இன்னொரு கட்டளையும் போட வேண்டும். "இனிமேல் புதிதாகக் குதிரைகள் போடும் முட்டைகள் எல்லாம் மன்னருக்கே சொநதம்" என்று சொல்லி விட்டால், எல்லா குதிரைகளும் நமக்கே கிடைத்து விடும் என்று மடையன் யோசனை சொன்னான்."சீடர்களே, அற்புதமான யோசனைகள்! அருமையான எதிர்காலம்! வெற்றி நமக்கே! விடாதீர்கள்… ஓடுங்கள்…" என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டார், பரமார்த்தார்."குருவுக்கு ஜே" என்றபடி எல்லோரும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.ஒரு வீதியில் குருவும் சீடர்களும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது."ஐயா! அந்த மாட்டைப் பிடியுங்கள்" என்று கூச்சலிட்டுக் கொண்டு ஒரு தடித்த அம்மாள் பரங்கிக்காய் போன்ற தன் உடலை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்து வந்தாள்.இலேசாகக் காற்று வீசினால் கூட மூன்று முறை குட்டிக்கரணம் போட்டு உருளும் அளவுக்கு ஒரு பசுமாடு வாயில் நுரை வழிய நொண்டி நொண்டித் தள்ளாடி நடந்துவந்தது. அது, அவளுக்குப் "போக்கு" காட்டிக் கொண்டிருந்தது. அதன் விலாவில் வரிவரியாக எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.மாட்டுப் பொங்கல் என்பதால் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பூவும் சுற்றப்பட்டு இருந்தது.பொங்கல் தயாரித்த பின் அதைத் தன் அருமையான பசுமாட்டுக்கு ஊட்டுவதற்காக ஒரு பெரிய கிண்ணத்தில் வைத்திருந்தாள். அந்தக் கிண்ணம் அடிக்கடி பசுமாட்டுக்கு மருந்து கரைத்து ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவது. எனவே ஏதோ மருந்து ஊட்ட வருகிறாள் என்று நினைத்துப் பசு தள்ளாடித் தடுக்கி ஓட்டம் பிடிக்கத் தொடங்கியிருந்தது.இதற்கிடையே தாடி மீசையும், சுருட்டும் புகையுமாக பரமார்த்த குருவும், அலங்கோல விசித்திரங்களாக அவரது சீடர்களும் எதிரே வரவே அவர்களைக் கண்டு மாடு மிரண்டது."இதோ ஒரு ஜல்லிக்கட்டு காளை! மைதானத்திலிருந்து தப்பி வந்திருக்கிறது!" என்று சீடர்கள் அதைச் சூழ்ந்து கொண்டார்கள்."விடாதே! விடாதே! வாலைப்பிடி! இதை அடக்கி மன்னரிடம் பரிசு வாங்கி விடலாம்!" என்று குரு கட்டளையிட எல்லா சீடர்களும் ஒரே நேரத்தில் மாட்டின் வாலைப் பிடித்து இழுத்தார்கள். வால் பாதியாக அறுந்தது.வேதனை தாளாமல் குரல் எழுப்பிய மாடு தன்னிடமிருந்த கொஞ்சம் நஞ்சம் சக்தியையும் திரட்டி, கழுதைபோல் ஒரு உதை விட்டது. இதில் மட்டிக்கம் மடையனுக்கும் மூக்கு பிய்ந்தது. இருவரும் கதறிக் கொண்டு தூரப்போய் விழுந்தார்கள்."இது மாடா? அல்லது கழுதையா?" என்று திகைத்த குரு, கொம்பு இருப்பதைப் பார்த்து "பொல்லாத மாடாக இருக்கிறதே! கொம்மைப் பிடியுங்கள்! அப்போதுதான் அடங்கும்!" என்று பதறியவாறே சொன்னார்.முட்டாளும் மூடனும் மண்டுவும், மாட்டின் மீது போய் விழுந்தார்கள். இவர்கள் பாய்ந்த வேகத்தில் இரண்டு கொம்புகளும் பிய்ந்து கையோடு வந்து விட்டன. பசு கால்களை விரித்துப் படுத்தே விட்டது."ஆ..! மாடு அடங்கி விட்டது! அடங்கி விட்டது!" என்று குருவும் சீடர்களும் குதித்தார்கள்."ஐயோ! என் கண்ணுன! என் செல்லம்.. போச்சே! தினமும் நாலுபடி பால் கறக்கும் அருமைப் பசுவைக் கொன்று விட்டீர்களே! என்று குண்டுக் கிழவி கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டாள்."கவலைப்படாதே பாட்டி! மாட்டை அடக்கிய வீரச் செயலை மன்னரிடம் சொல்லி, கிடைக்கும் பரிசுப் பணத்தில் உனக்கு நஷ்ட ஈடு கொடுத்து விடுகிறோம்!" என்று கூறி அவளைச் சீடர்கள் சமாதானப்படுத்தினார்கள். குற்றுயிராகக் கிடந்த பசு மாட்டை ஒரு கட்டை வண்டியில தூக்கிப் போட்டுக் கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்குப் போனார்கள். போய் சேருவதற்கள் மாடு இறந்து விட்டது.ஜல்லிக் கட்டுக் காளையை அடக்குவதாக நினைத்து நோஞ்சான் பசு மாட்டின் உயிரையும் போக்கிய குருவையும் சீடர்களையும் கண்டு மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.ஆனால், ஒரு பசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் குருவுக்கும் சீடர்களுக்கும் சாட்டையடிகள் தரப்பட்டன. |
ஒரு காட்டில் கொடிய சிங்கம் ஒன்று இருந்தது. பசி இல்லாவிட்டாலும் விலங்குகளை வேட்டையாடும் இரக்கமற்ற சிங்கம் அது. அந்தச் சிங்கத்தை கண்டாலே எல்லா விலங்குகளும் அஞ்சி ஓடிவிடும். இதற்கு ஒரு தீர்வு காண அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் குகைக்குச் சென்றன. "சிங்க ராஜா, நீங்கள் வேட்டையாடுவதில் வல்லவர். ஆனால் உங்களால், இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் அழிகின்றன. நீங்கள் வேட்டையாடாமல் உங்கள் கூகையிலே இருந்தால், தினம் ஒரு விலங்கை நாங்கள் உங்கள் குகைக்கே அனுப்புகிறோம். அதைத் தின்று நீங்கள் பசி ஆரலாம். இப்படிச் செய்தால் மற்ற விலங்குகள் உயிர் பிழைக்கும்." என்று சிங்கத்திடம் முறையிட்டன. சிங்கமும் தினமும் இரை தன் குகைக்கே வந்தால் வேலை மிச்சம் என்று மகிழ்ந்தது. "இந்த உடன்பாட்டிற்கு நான் சம்மதிக்கிறேன். ஆனால் தினமும் ஒரு விலங்கு என் குகைக்கு வரவேண்டும். ஒரு நாள் தவறினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்." என்றது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்கு சிங்கத்தின் குகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிங்கம் குகைக்கு வரும் விலங்கை மட்டும் தின்று விடும். மற்ற விலங்குகள் எல்லாம் நிம்மதியாகக் காட்டை சுற்றி வந்தன. இப்படிப் பல நாட்கள் செல்ல, ஒரு நாள் ஒரு சிறு முயல் தேர்ந்தெடுக்கப்பட்டது. முயலுக்கு இறக்க விருப்பம் இல்லை. சிங்கத்தை எதிர்த்துப் போர் இட தன்னால் முடியாது என்பதை உணர்ந்த புத்திசாலி முயல் யோசித்தது. முன்பு ஒருநாள் தான் பார்த்த கிணற்றின் ஞாபக வர ஒரு திட்டம் தீட்டியது. சிங்கத்தின் குகைக்கு வேண்டும் என்றே தாமதமாக சென்றது. சிங்கம் கடும் பசியில் இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் முயல் வரவில்லை என்றால் எல்லா விலங்குகளையும் கொன்று விட எண்ணியது. இறுதியில் குகைக்கு ஓடிவந்த முயலைப் பார்த்த சிங்கம் கோபமடைந்து. தன் பெரும் பசிக்கு ஒரு சின்ன முயல் எப்படி ஈடாகும்? சினம் கொண்ட சிங்கம் "ஏ முயலே.. உனக்கு என்ன தயிரியம். ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய். நீ மிகவும் சிறியதாகவும் இருக்கிறாய். உன்னைத் தின்றால் எனக்கு எப்படிப் பசி தீரும்? நான் உனக்காகக் காலையில் இருந்து காத்துக் கிடக்கிறேன். முதலில் உன்னைக் கொன்று, பிறகு உன் முயல் கூட்டத்தை கொன்று தின்கிறேன். என்னை ஏமாற்ற நினைத்தால் இது தான் தண்டனை." என்றது. அதற்கு முயல் பணிவுடன் "சிங்க ராஜா, நான் தாமதமாக வந்ததற்கு நான் காரணம் இல்லை. தங்களை ஏமாற்ற யாரும் நினைக்க வில்லை. உங்கள் குகைக்கு வர நான் காலையிலே புறப்பட்டு விட்டேன். ஆனால்..." என்று இழுத்தது. சிங்கம், "ஆனால் என்ன.. ? " என்று கர்ச்சித்தது.அதற்கு முயல், "என்னால் உங்கள் பசியை தீர்க்க முடியாது என்று எனக்கும் முயல் கூட்டத்திற்கும் நன்றாகத் தெரியும். அதனால் தான் என்னோடு வேறு நான்கு முயல்களும் வந்தன. ஆனால் வரும் வழியில் வேறொரு சிங்கம் இருந்தது. நாங்கள் எவ்ளவு சொல்லியும் மற்ற நான்கு முயல்களையும் பிடித்து வைத்துக் கொண்டது. மேலும் அந்தச்சிங்கம் தான் இந்தக் காட்டின் உண்மையான ராஜா என்றும் நீங்கள் போலி என்றும் சொன்னது. உங்களுக்கு உண்மையில் வீரம் இருந்தால் தன்னை வீழ்த்த வரும்படி அழைத்தது. இந்தச் செய்தியை உங்களுக்குத் தர தான் என்னை உயிருடன் விட்டது. இது தான் நான் தாமதமாக வந்ததற்குக் காரணம்." என்றது. தன் காட்டில் இன்னொரு சிங்கம் இருப்பதைக் கேட்ட சிங்க ராஜாவிற்கு கடும் கோவம் ஏற்பட்டது. "உடனே என்னை அந்தச் சிங்கத்திடம் அழைத்துச் செல். அந்தச் சிங்கத்தை ஒரே அறையில் கொன்று விடுகிறேன். என் காட்டில் வந்து என்னையே அவமானப் படுத்துகிறான்." என்று முயலிடம் கேட்டது. அதற்கு முயல், "சிங்க ராஜா, அந்தத் திமிர் பிடித்த சிங்கம் மிகவும் பெரிதாகவும் வலிமையாகவும் இருக்கிறது. அது ஒரு விசித்திர குகையில் இருக்கிறது. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். " என்று கூறி சிங்கத்தை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்றது. கிணற்றுக்கு அருகில் வந்தவுடன் முயல், "சிங்க ராஜா!.. இது தான் அந்த பொல்லாத சிங்கத்தின் குகை. நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் சென்று அந்தச் சிங்கத்தைக் கொன்று விடுங்கள்." என்றது. சிங்ககும் கிணற்றை எட்டிப் பார்த்தது. கிணற்று நீரில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்து, உள்ளே ஒரு சிங்கம் இருப்பதாக நினைத்தது. முயல் சொன்னது உண்மை என்றும் தன் காட்டுக்குள் வேறொரு சிங்கம் நுழைந்து விட்டதென்றும் நம்பியது முட்டாள் சிங்கம். பிறகு சிங்கம் கிணற்றில் எட்டிப்பார்த்து தன் முழு பலத்துடன் கர்ச்சித்தது. உடனே அந்தச் சத்தம் மிக அதிகமாகக் கீழ் இருந்து மேலே எதிரொலித்தது. மீண்டும் கிணற்றில் உள்ள சிங்கம் தான் இப்படிக் கர்ச்சித்ததென்று ஏமார்ந்து சிங்கம். சினம் கொண்ட சிங்கம் கிணற்றுக்குள் குதித்தது. உள்ளே வெறும் தண்ணீர் இருப்பதைக் கண்ட சிங்கம், முயல் தன்னை ஏமாற்றியதை உணர்ந்தது. பலத்த காயம் அடைத்த சிங்கம் மேலே வர முடியாமல் கிணற்றுக்குள் இறந்தது. முயலும் மற்ற விலங்குகளும் நிம்மதியாக இருந்தனர். முயல் அந்தக் காட்டிற்கே செல்ல விலங்கானது. |
தினசரி அதிகாலையில் கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் தொழிலாளி ஒருவன் அரண்மணைக்கு வருவது வழக்கம். தினசரி காலையில் முகத்தை மழித்து முடியைத் திருத்துபவராதலால் அந்தத் தொழிலாளியிடம் வேடிக்கையாக எதையாவது பேசுவது கிருஷ்ணதேவராயரின் வழக்கம். அவனும் மன்னர் கேட்கும் கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலுரைப்பான். ஒருநாள் அவன் கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழித்துக் கொண்டிருக்கும் போது,"நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்றே. நமது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்று உனக்குத் தெரிந்திருக்குமே என்றார்." மேன்மை தாங்கிய மகாராஜா அவர்களே! தங்களுடைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர். மக்களின் ஒவ்வொருவர் இல்லத்தில் குறைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது. அதனால் எவரும் கவலையில்லாமல் இருக்கின்றனர்" என்றார் சவரத்தொழிலாளி. சவரத் தொழிலாளி சென்ற பின்னர் எப்போதும் போன்று மன்னரைக் காண அப்பாஜி வந்தார் அப்பாஜியிடம் சவரத் தொழிலாளி கூறியதை மன்னர் கூறினார்."இவன் இப்படிக் கூற என்ன காரணம்? இவன் சொன்னது போன்று எப்படி எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் பொன் இருக்கும்? எலுமிச்சம்பழ அளவு பொன் என்பது சாதாரண மக்கள் வைத்திருக்க முடியாது! பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும். ஆகையினால் இதுபற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்!" என்று வினவினார்."இதற்கு விரைவில் விடையைக் கூறுகிறேன்" என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். மறுநாள் வழக்கம்போல் சவரத் தொழிலாளி அரண்மனைக்கு வந்து கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் அப்பாஜி, காவலர்களை அழைத்து"சவரத் தொழிலாளியின் இல்லத்தை சோதனை செய்துவிட்டு விரைவில் வாருங்கள்" என்று கட்டளையிட்டார். காவலர்கள் சவரத் தொழிலாளியின் இல்லத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு பொன் இருப்பதைக் கண்டு வந்து கூறினர்.அத னை மன்னரிடம் கொடுத்துவிட்டு, மன்னர் பெருமானே! அடுத்த நாள் சவரத் தொழிலாளி வந்ததும், முதலில் கேட்டது போன்று கேளுங்கள். அவனிடமிருந்து வேறு விதமான பதில் கிடைக்கும்" என்றார் அப்பாஜி. வழக்கம் போல் காலை கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழிக்க சவரத் தொழிலாளி வந்தமர்ந்தான். வரும்போதே அவனது முகம் வாடியிருந்தது. அவன் தனது வேலையை ஆரம்பிக்கும் சமயம்,"இப்பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?" என்று வினவினார் மன்னர்."பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்களே! அதை ஏன் கேட்கின்றீர்கள்? எல்லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர். கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?" என்று சவரத் தொழிலாளி கண்களில் நீர் மல்க தொண்டை அடைக்கக் கூறினான். அச்சமயம் வந்த அப்பாஜி,"மன்னர் பெருமானே! இப்போது விடை தெரிந்து விட்டதா? உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் தன்னுடைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நிலையை நிர்ணயிக்கின்றனர். தன்னைப் போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நினைக்கின்றனர். தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநிலையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்" என்றார் அப்பாஜி. உடனே காவலனை அழைத்து,"கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு பொன்னைக் கொண்டு வந்து சவரத் தொழிலாளியிடம் கொடுங்கள்" என்று ஆணையிட்டார் மன்னர். கொண்டு கொடுத்த பொன்னுடன் சிறிது பொன்னும் பரிசாகச் சவரத் தொழிலாளிக்குக் கொடுத்தார். அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் வாங்கிச் சென்றான். மனித இயல்பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திறமையைப் பாராட்டினார் கிருஷ்ணதேவராயர். |
சக்கிரவர்த்தி அக்பரும் அவருடை மதியூக மந்திரியான பீர்பாலும் ஒரு நாள் மாறுவேட மணிந்து நகர் சோதனை செய்து வந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த அகபர், இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு பயனுள்ள தொழிலெதுவும் செய்யத் தெரியாதா? என்று கேட்க, பீர்பாலின் மனத்தில் முள்ளெனத் தைத்தன அந்த வார்த்தைகள். பிறகு அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்துக் கேட்டபொழுது தன்னுடைய பெரிய குடும்பத்தைக் காப்பற்ற வேறு வழி புலப்படாததால் பிச்சையெடுக்க முற்பட்டதாகவும், இதன் மூலம் நாளொன்றுக்கு 25 காசுகள் கிடைக்கின்றன என்றும் கூறினான். அதைச் செவியுற்ற பீர்பால் அவன் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்திரி ஜபம் செய்வதாக இருந்தால் அன்றாடம் அவனுக்கு 50 காசுகள் தருவதாகக் கூறினார். அந்த ஏழையும் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு பீர்பால் சொன்னபடி ஜபம் செய்து வந்தான். பயனெதுவும் கருதாமல் நாள் பூராகவும் காயத்திரி ஜபம் செய்து வந்ததால் அவன் முகத்திற்கு ஒரு அசாதரணமான காந்தி ஏற்பட்டது. இதை அறிந்த பீர்பால் அந்த ஏழையை அணுகி தினம் 108 தடவை காயத்திரி ஜபம் செய்தால் அவனுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னார். அதற்கும் ஒப்புக்கொண்டு அந்த ஏழையும் தீவிரமாக ஜபம் செய்தார். ஒரு நாள் அவனுக்கு அஞ்ஞான இருள் நீங்கியது. அவனுக்கு அமோகமான் ஆன்மீக வளர்ச்சியும் தெய்வீக ஒளியும் ஏற்ப்பட்டு, தினந்தோறும் திரளான மக்கள் அவனை நாடி வணங்கி அருள் பெற்று வந்தனர். ஒரு மாதம் ஆனதும் அந்த ஏழை பணம் வாங்க வராததால் பீர்பாலே அவன் வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தார். ஆனால் அவன் பணிவுடன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து, அவனுக்குச் சிறந்த ஆன்மீக வழியைக் காட்டியதற்காக பீர்பாலுக்கு நன்றி தெரிவித்தான். மறுநாள் பீர்பால் அக்பரை அந்த ஏழை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் முகத்தில் தென்பட்ட தேஜஸையும் அங்கு அருள் பெற வந்த மக்களையும் பார்த்து அக்பர் மிக ஆச்சரியப்பட்டார். அக்பரும் அவ்ர் காலில் விழுந்து அருள் புரியுமாறு வேண்டினார். சில மாதங்களுக்கு முன் நீங்க்ள் இகழ்ந்து பேசிய அதே பிச்சைக்காரன் தான் இவன் என்று சக்கிரவர்த்தியின் காதில் கிசு கிசுத்தார் பீர்பால். சக்கிரவர்த்தி நம்பாமல் அந்த எழையை இந்த மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டார். அவ்னும் நடந்ததைச் சொன்னான். காயத்திரி ஜபம் செய்ததால் வந்த பெருமை என்று பீர்பால் விளக்கினார்.. சுருங்க கூறின், காயத்திரி ஜபத்தினால் பட்ட மரம் தழைக்கும், தரித்திரனும் தனிகனாவான். வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்பவர்கள் நிம்மதியும், மனச் சாந்தியும் பெறுவார்கள். சத்தருக்கள் நாசமடைவார்கள், பாபங்கள் நீங்கிப் பிறவித்துயர் நீங்கும். வேதஸாரமான் இந்த மஹா மந்திரம் நம் ரிஷிகளின் அருளினால் நமக்குக் கிடைத்த அறிய பொக்கிஷம் |
திடீரென்று பரமார்த்தரின் தொப்பை பெரிதாகிக் கொண்டே போனது. உட்கார்ந்தால் நிற்க முடியவில்லை; நின்றால் உட்கார முடியவில்லை. இதைக் கண்ட சீடர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தனர். "குருவே! தினம் தினம் உங்கள் தொப்பை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே போகிறதே! எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது" என்றான் மட்டி. "வயிறு இவ்வளவு பெரியதாய் இருக்கிறதே! ஒரு வேளை உங்களுக்குக் குழந்தை ஏதாவது பிறக்கப் போகிறதா?" என்று ஆச்சரியப்பட்டான், மூடன். "குருவே! இதை இப்படியே விட்டுவிடக் கூடாது. அப்புறம் ஒரு நாளைக்கு உங்கள் தொப்பை டமார் என்று வெடித்து விடும்!" என்று பயம் காட்டினான் மடையன். "ஐயையோ!" என்று அலறிய பரமார்த்தர், "இதற்கு என்ன செய்வது?" என்று கேட்டார். "சித்த வைத்தியர் யாரிடமாவது காட்டலாம்" என்று யோசனை சொன்னான் மண்டு. "வைத்தியரிடம் போனால் நிறைய செலவாகும். அதனால் நாங்களே காட்டுக்குச் சென்று மூலிகைகள் பறித்து வருகிறோம். அதிலிருந்து ஏதாவது லேகியம் தயாரித்துச் சாப்பிட்டால், தொப்பை கரைந்து விடும்!" என்று வேறொரு யோசனை சொன்னான், முட்டாள். உடனே மூடன், கிடுகிடு என்று பரண்மேல் ஏறி, செல்லரித்துப் போன பழைய ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்தான். "குருவே! தொப்பை கரைச்சான் லேகியம் என்பது பற்றி இதிலே எழுதியிருக்கு! இதில் குறிப்பிட்டிருக்கும் செடிகளை நாங்கள் கொண்டு வருகிறோம்" என்றபடி கீழே குதித்தான். எப்படியாவது தொப்பை கரைந்தால் போதும் என்று நினைத்த பரமார்த்தர், "சீடர்களே! சீக்கிரம் புறப்படுங்கள். நிறைய லேகியம் தயாரித்தால் அதை மற்றவர்களுக்கும் விற்று விடலாம்" என்று அனுப்பி வைத்தார். காட்டுக்குச் சென்ற சீடர்கள், "தொப்பை கரைச்சான் மூலிகை" எது என்று தெரியாமல் விழித்தார்கள். அப்போது சற்றுத் தூரத்தில் முனிவர் ஒருவ ஒட்டிய வயிறுடன் தவம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட மட்டி, இவர் வயிறு இவ்வளவு ஒட்டி இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் போனான். "முனிவரே! இந்தச் செடிகளில் தொப்பை கரைச்சான் செடி எது என்று தெரியுமா?" என்று பலமாகக் கத்தி அவரது தவத்தைக் கலைத்தான். கோபம் கொண்ட முனிவர், "எந்தச் செடி நாறுகிறதோ, அதுதான் நீ கேட்கும் செடி!" என்று வேண்டுமென்றே சொல்லி அனுப்பினார்! முனிவர் சொன்னதை நம்பிய சீடர்கள், கண்ட கண்ட இலைகளையும் பறிக்க ஆரம்பித்தார்கள். சாப்பிட்டால் பல வியாதிகளை உருவாக்குகிற இலைகளை எல்லாம் பறித்து மூட்டை கட்டினார்கள். சீடர்கள் பறித்து வந்த இலைகளை மோந்த பரமார்த்தர், முகத்தைச் சுளித்தார். "நன்றாக நாறுகிறது! எப்படியும் என் தொப்பை கரைந்து விடும்!" என்று மகிழ்ந்தார். அதன்பிறகு, "சீக்கிரம் ஆகட்டும்! எல்லாவற்றையும் கலந்து அரைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். முட்டாளும் மூடனும் இலைகளைத் துண்டு துண்டாகக் கிள்ளிப் போட்டனர். மட்டியும் மடையனும் கல்லில் வைத்து அரைக்க ஆரம்பித்தனர். அப்போது இலையில் இருந்து நாற்றம் வரவே, ஒருவர் மூக்கை இன்னொருவர் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அரைத்தனர். எல்லாவற்றையும் வழித்துச் சட்டியில் போட்டனர். அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சினான். அதன்பிறகு சீடர்கள் அனைவரும் லேகியத்தை உருண்டை பிடித்து எடுத்துக் கொண்டு குருவிடம் போனார்கள். "எங்கள் அருமை குருவே! இதோ, தொப்பை கரைச்சான் லேகியம் தயார்! உடனே இதைச் சாப்பிடுங்கள்" என்று பரமார்த்தரை வேண்டினார்கள். "பார்ப்பதற்குக் கொழ கொழ என்றும் கன்னங்கரேல் என்றும் இருந்த லேகியத்தைக் கண்டதுமே பரமார்த்தரின் முகம் பல கோணலாக மாறியது. முட்டளிடமிருந்து ஓர் உருண்டையை வாங்கி மூக்கருகே கொண்ட போனார். அதிலிருந்து வந்த நாற்றம் அவர் வயிற்றைக் கலக்கியது. "குருவே! யோசிக்காதீர்கள். நீங்கள் உயிர் வாழ வேண்டுமானால் உங்கள் தொப்பை கரைய வேண்டும். உங்கள் தொப்பை கரைய வேண்டுமானால் இதைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!" என்று கூறினான், மட்டி. பரமார்த்தரும், வேறு வழியின்றி இரண்டு உருண்டைகள் விழுங்கினார். "குருவே! இதையும் சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் தொப்பை சீக்கிரம் கரையும்!" என்ற படி இன்னும் சில உருண்டைகளை அவர் வாயில் கட்டாயமாகத் திணித்தனர், முட்டாளும் மூடனும். பரமார்த்தர் தம் தொப்பையைக் கரைப்பதற்காக ஏதோ ஒரு லேகியம் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்ட ஊர் மக்களில் சிலர், தாங்களும் அந்த லேகியத்தைச் சாப்பிட ஆசைப்பட்டனர். அந்த நாட்டு அரசனுக்கும் பெரிய தொப்பை இருந்ததால், அவனும் பரமார்த்தர் தயாரித்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டான். நேரம் செல்லச் செல்ல, எல்லோருக்கும் வயிற்றைக் கலக்கியது. "ஐயோ! என் தொப்பை வலிக்கிறதே!" என்று பரமார்த்தரும், மற்ற தொப்பைக்காரர்களும் அலற ஆரம்பித்தனர். தொப்பை கரைச்சான் லேகியம் என்று நினைத்து கண்டதையும் சாப்பிட்டதால், அனைவருக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டது. எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஏரிக் கரைக்கு ஓடினார்கள். மன்னரின் நிலைமையும் மோசமாகி விடவே, பரமார்த்தர் மீது கோபம் கொண்டார். இத்தனைக்கும் காரணமான அந்தக் குருவைப் பத்து நாட்களுக்குச் சிறையில் அடைத்துப் பட்டினி போடுங்கள்!" என்று ஆணையிட்டான். சிறையிலிருந்து தள்ளாடியபடி அந்தக் குருவைக் கண்ட சீடர்களுக்கு வியப்பாகப் போயிற்று. முன்பு வீங்கியிருந்த அவரது தொப்பை இப்போது கரைந்து அளவாக இருந்தது. "குருவே! நாங்கள் தயாரித்த லேகியம் தான் உங்கள் தொப்பையைக் கரைத்திருக்கிறது" என்று சீடர்கள் பெருமையோடு சொன்னார்கள். "லேகியமாவது, மண்ணாங்கட்டியாவது! சோறு தண்ணீர் இல்லாமல் பத்து நாட்கள் சிறையில் பட்டினி கிடந்தேன். அதுதான் இப்படி ஆகிவிட்டேன்!" என்றபடி பசிக் களைப்பால் சுருண்டு விழுந்தார், பரமார்த்தர்.
|
நல்வழிப்படுத்தவும். Saturday, April 08, 2006 கதை எண் 91 - முட்டாள்களுக்கு வீண் உபதேசம் எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன. "நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?" என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன. அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது. கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு அந்த ஆட்டிற்கு சிரிப்பே வந்துவிட்டது. "கழுதைகளே! நலம்தானா? நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தெரிகின்றதே…" என்று அவர்கள் வாயை கிளறியது. "ஆடே! ஆடே நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்திருக்கிறாய்!" என்றவாறு கழுதைகள் இரண்டும் ஆட்டை நோக்கின. "கழுதைகளே! நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நானும் அறிவேன். உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. முட்டாள்தனமான உங்கள் சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை…" என்று கூறியது ஆடு. இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்துவிட்டது. "ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு… இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு… அதை விட்டு விட்டு முட்டாள்தனமான சந்தேகம் எனக் கூறி எங்களை இன்சல்ட் பண்ணாதே," என்று கோபமாக கூறின. "கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? அப்படியிருக்க முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகி விடுவேன்," என்று கூறியது. கழுதைகள் இரண்டும் பொறுமை இழந்தன. தங்களின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன. கழுதைகள் இரண்டும் உதைத்த வேகத்தில் ஆடு எங்கோ சென்று விழுந்தது. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது. |
ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து " என் வீட்டில் குடும்ப விழா
ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும்
சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து
விடுகிறேன் " என்று கேட்டார். முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு மிகவும் பெரிய கெட்டிப் பாத்திரங்கள் இரண்டை
இரவலாகக்
கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மாதிரியான நையாண்டி மனிதர். யாரையும் கேலியும் கிண்டலும்
செய்து சிரிக்கச் செய்வது அவரது வழக்கம். முல்லாவிடம் இரவல் வாங்கி பாத்திரத்தை அவர் திரும்பிக் கொடுக்கும் போது ஏதாவது ஒரு
விதத்தில் முல்லாவை நையாண்டி செய்து பார்க்க வேண்டும் என அவர் தீர்மானித்தார். அவர் பாத்திரங்களை திரும்பிக் கொடுக்க வந்தபோது, முல்லா கொடுத்த இரண்டு பாத்திரங்கள்
கூட ஒரு செம்பும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். " நான் இந்தச் செம்பை உங்களுக்கு கொடுக்கவில்லையே?" என வியப்புடன் கேட்டார் முல்லா. " முல்லா அவர்களே உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இருந்த போது இந்தச் சொம்பைக்
குட்டி போட்டன. அதனால் குட்டியையும் உடனே கொண்டு வந்தேன் " என்றார் அண்டை
வீட்டுக்காரர். சற்று யோசித்த முல்லாவுக்கு அவர் நம்மை நையாண்டி செய்வதற்காக இந்த நாடகமாடுகிறார்
என்று புரிந்து கொண்டார். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவருக்குச் சரியான புத்தி
கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். " ஆமாம் நண்பரே பாத்திரங்களை கொடுக்கும்போது அவை கர்ப்பமாக இருக்கின்றன என்ற
உண்மையைச் சொல்ல மறந்து விட்டேன் " என்று கூறியவாறு அண்டை வீட்டுக்காரர் கொடுத்த
பாத்திரங்களை வாங்கிக் கொண்டார் முல்லா. சில நாட்கள் கடந்தன, ஒரு நாள் முல்லா அண்டை வீட்டுக்காரரிடம் சென்று என் வீட்டில்
ஒரு விசேஷம் புழங்குவதற்குத் தேவையான பெரிய பாத்திரம் இல்லை. தயவு செய்து பெரிய
பாத்திரங்கள் இரண்டு கொடுங்கள் என்று கேட்டார்.
அந்த வீட்டுக்காரரும் இரண்டு பெரிய பாத்திரங்களை கொடுத்தார். முல்லா அவற்றை
வீட்டுக்கு எடுத்து வந்தார். இரண்டு நாட்கள் கழித்து முல்லா ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அண்டை
வீட்டுக்காாரிடம் சென்றார். " உங்களிடம் வாங்கிய பாத்திரம் இதோ இருக்கிறது. பெற்றுக்கொள்ளுங்கள" ் என்றார். " நான் இரண்டு பாத்திரம் கொடுத்தேனே ஒன்றுதான் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்
?"
என அண்டை வீட்டுக்காரர் கேட்டார். முல்லா தமது முகத்தில் வருத்தம் பிரதிபலிக்க " நண்பரே ஒரு தீய நிகழ்ச்சியினைச்
சொல்வதற்காக வருந்துகிறேன். தாங்கள் எனக்கு அளித்த பாத்திரங்களில் ஒன்றான பெண்
பாத்திரம் கர்ப்பமாக இருந்திருக்கிறது. என் வீட்டுக்கு வந்த இரவே அது பிரசவ
வேதனைப்பட ஆரம்பித்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக அது பிரசவித்த குழந்தையும் செத்து
விட்டது. தாயும்
இறந்து விட்டது. அவை இரண்டையும் தகனம் செய்து விட்டேன் " என்றார். முல்லா தனக்குச் சரியானபடி பதிலடி தருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அண்டை
வீட்டுக்காரர் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். " இனி இந்த மாதிரி உங்களை நையாண்டி செய்ய மாட்டேன். தயவு செய்து என் பாத்திரத்தைத்
திருப்பித் கொடுத்து விடுங்களஞ் என்று வேண்டிக் கொண்டார். முல்லா அவரடைய
பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.
|
செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது. ஓநாயும் "நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை….." என்று வருத்தத்துடன் கூறியது."அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. "சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!" என்றது ஓநாய்."அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!" என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று."உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை…அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா? |
ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள். இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான். இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான். போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன். இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார். உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார். அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர். அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான். ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான். அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான். உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது. அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர். தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மனனர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே.. பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார். அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.
|
ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள். வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான். மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள். ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள். மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள். பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான். அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான். அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: "மகனே! நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது?" மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: "அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்" குயவனின் மனைவிக்குத் தான் செய்த காரியத்தின் தீவிரம் புரிந்தது. மிகவும் வருந்தினாள். மாமியாரைத் தன் வீட்டுடன் வரவழைத்து மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டாள். |
ஓரு தடவை முல்லா ஒரு திருமணத்துக்குச் சென்றார். இரண்டொரு தடவை அவர் திருமணத்திற்கு
சென்று திரும்பிவந்து பார்த்தபோது அவருடைய செருப்பு காணாமல் போய்விட்டது. அதனால்
அன்று செருப்பை வெளியே விட்டுச் செல்ல முல்லாவுக்கு மனம் வரவில்லை. அந்தக் காலத்தில் செருப்பணிந்த காலுடன் வீட்டுக்குள் நடமாடக் கூடாது. செருப்புக்களை
இழக்க விரும்பாத முல்லா அவற்றைக் கழற்றி ஒரு துணியில் சுற்றிக் கையில் வைத்துக்
கொண்டார். முல்லாவின் கையில் ஏதோ காகிதப் பொட்டலம் இருப்பதைக் கண்ட திருமண வீட்டுக்காரர்,
" முல்லா அவர்களே ஏதோ காகிதப் பொட்டலத்தை வைத்திருக்கிறீரே, அதில் என்ன இருக்கிறது
? மணமகனுக்கு அளிக்கப்பட வேண்டிய பரிசா?" என்று கேட்டார். அது மிகவும் புனிதமான ஒரு வேதாந்த நூல் என்று முல்லா பதிலளித்தார்.
" வேதாந்த நூலா? இதை எங்கே வாங்கினீர்? " என திருமண வீட்டுக்காரன் வினவினான்.
செருப்புக் கடையில் வாங்கினேன் என்று முல்லா பதிலளித்தார். அவர் என்ன பதிலளித்தார் என்று விளங்கிக் கொள்ள முடியாமல் திருமண வீட்டுக்காரர்
தத்தளித்தார். |
ஜப்பானிய செல்வந்தர் ஒருவர் சம்பந்தப்பட்ட விழாவுக்கு ஜென்ஞானி காசன் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன் இப்படியொரு ஆடம்பர விழாவில் அவர் கலந்து கொண்டதில்லை. எனவே, அவருக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது. வியர்த்து கொட்டியது. இந்நிகழ்ச்சிக்குப் பின் காசன் தன் மாணவர்களை அழைத்தார். ""என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களுக்கு ஆசிரியராக இருக்கத் தகுதியற்றவன். உலகத்தில் ஏற்படும் பிரபலத்தை சமமாகப் பாவிக்க முடியாத மனநிலையில் தற்போது இருக்கிறேன். நீங்கள் வேறு ஆசிரியரிடம் சென்று பயிலுங்கள்" என்று கூறி விடைபெற்றார். பின்னர், ஒரு கோயிலில் சென்று தனிமையில் தியானம் செய்தார். வேறு ஓர் ஆசிரியரிடம் மாணவராகச் சேர்ந்து பயின்றார். எட்டு ஆண்டுகளுக்குப் பின்காசன் ஞானம் அடைந்தவராக புதிய மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். |
வானம் குமுறிக் கொண்டிருந்தது...... ஜானகியின் மனசைப் போல.... இந்தப் பதினாறு நாட்களாக அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. ஆனால் கண்கள், இன்னும் வற்றி விடவில்லை. ஒரு காலத்தில் வேல்விழி, மீன்விழி, மான்விழி என்றெல்லாம் அவன் கணவனால் வர்ணிக்கப்பட்ட அந்தக் கண்களிலிருந்து புது மரத்தில் கீறல் விழுந்ததும் பிதுங்கிக்கொண்டு வரும் பாலைப் போல வெதுவெதுப்பான நீர் சுரந்தவண்ணமாக இருந்தது. வீட்டுக்கு முன்பாக தற்காலிகமாக சீனன் போட்டுவிட்டுப் போன தகரக் கூரையின் கீழாக உற்றத்தார் சுற்றத்தார் என்று பலரும் கூடியிருந்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலிகள் ஒரு சீராக இல்லை. அவர்களின் எண்ணங்களைப் போல தாறுமாறாக இருந்தன. சிலர் வட்டமான மேசையிட்டு ஆறு ஆறு பேராகத் துருப்புச்சீட்டுப் போட்டுக் கொண்டிருந்தனர். உலகமென்னும் வட்ட மேசையில் இறைவன் மனிதர்களைத் துருப்புச் சீட்டாகப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்தே விட்டவர்கள் போல் அவர்களுக்கு அதிலே சுவாரஸ்யம்! சில பெரியவர்கள் வெற்றிலையைப் போட்டுக் குதப்பிக் கொண்டு ஜெயராமனைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் நடுவாக, நட்டுவைக்கப்பட்ட ஒரு கல்லின் அருகில் பலகாரப் படையலும் பூ மனமும் சூழ்ந்த இடத்தில் ஜானகியின் கணவன் ஜெயராமன் விற்றிருந்தார். உயிரோடு அல்ல படமாக! ஜெயராமன் தெய்வமாகிவிட்டார். இன்றோடு பதினாறு நாட்கள் ஓடிவிட்டன. எப்படிப்பட்ட தவறு செய்தவனாக இருக்கட்டும் செத்த பிறகு உடனே அவன் தெய்வ ஸ்தானத்திற்கு உயர்ந்து விடுகிறானே! ஜெயராமனின் படத்தையே கூர்ந்து பார்த்து விம்மினாள் ஜானகி. அவரோடு வாழ்ந்த காலத்தில் உண்டான அனுபவங்கள், இடையிலே ஏற்பட்ட கசப்புக்கள், திடீரென்று உண்டான திருப்பங்கள் யாவும் திரும்பத் திரும்ப அவள் நினைவுக் குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்தன. ஜானகிக்கு ஐம்பத்திரண்டு வயது. ஆனால் இந்தப் பதினாறு நாட்களுக்கு முன்பு அவளைப் பார்த்த எவரும் நாற்பது வயதுக்கு மேல் நிச்சயம் மதிக்க மாட்டர்கள். அப்படி ஓர் உடற்கட்டு அவளுக்கு. ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான பின்னரும்கூட அவளுடைய மேனிச் செறிவைக் கலைக்க முடியாமல் இயற்கை அவளிடம் களைத்துப் போயிருந்தது. ஆனால், அந்த இயற்கை இப்போது கர்வம் கொண்டிருந்தது. ஆம். ஜானகி இந்த பதினாறு நாட்களில் மிகவும் நொய்த்துப் போயிருந்தாள். எவ்வளவு பெரிய காற்றாக இருந்தாலும் தாக்குப் பிடித்து நடமாடிக் கொண்டிருக்கும் விளக்குச் சுடர் எண்ணெய் தீர்ந்ததும் தானாகவே அடங்கிவிடுவதில்லையா! கையில் தேங்காய் எண்ணெயுடன் அங்கே நுழைந்த விமலா, அங்கிருந்த விளக்கிற்குத்தாராளமாக எண்ணெய் ஊற்றினாள். அவள்தான் ஜானகியின் மூத்த பெண். அவளுக்கும் கண்கள் சிவந்து போயிருந்தன. விளக்கில் எண்ணெய் ஊற்றும் போது அந்தச் சிவந்த விழிகள் ஒரு சில கணங்கள் தாயின் முகத்தின் மேல் படிந்து திரும்பின. அம்மாவைப் பார்க்க அவள் விழி மடைகள் மேலும் திறந்தன. விளக்கில் ஊற்றிய எண்ணெயோடு அவள் விழி நீரும் விழுந்து கலந்தது. விமலாவுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகளாகின்றன. இரண்டு விசுக்கட்டான் குழந்தைகளையும் அவள் கணவன் ராகவன் வெளியில் வைத்துக் கொண்டிருந்தான். எண்ணெய் ஊற்றிவிட்டுத் திரும்பிய விமலாவை நிமிர்ந்து பார்த்த ஜானகி துக்கத்தை அடக்க முடியாமல் அவளைக் கட்டிக் கொண்டு ''ஓ'' வென்று அழுதாள். அந்தக் காட்சியைக் காணப் பொறுக்காமல் அங்கிருந்த பெண்கள் அனைவரும் அழுதனர். வெளியில் வெற்றிலை குதப்பிக் கொண்டிருந்த சில கிழடுகள் கண்களில் மல்கிய நீரை ஆள்காட்டி விரலால் வழித்துச் சுண்டியும், கட்டை விரலால் தேய்த்தும் விட்டுக் கொண்டன. தன்னுடைய இறப்புக்காக அழ முடியாத மனிதப் பிறவி, பிறருக்காகவாவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடவேண்டாமா? ''யாராவது அழுகையை அடக்குங்க'' என்று வெளியிலிருந்து ஒருவர் குரல் கொடுத்தார். கூடத்திலிருந்த பெண்கள் சிலர் அந்த முயற்சியில் இறங்கினர். சற்று நேரத்தில்அமைதி நிலவியது. கொஞ்ச நேரம் அரற்றி அழுததால் சற்றே கலைந்த ஜானகியின் அலங்காரத்தை மீண்டும் சரி செய்வதில் இரண்டொரு பெண்கள் முனைந்தனர். தலை நிறைய பூவும், நெற்றி கொள்ளாத குங்குமத் திலகமும், கழுத்து நிறைந்த நகைகளும், இரு கை தொய்ந்து விழும்படியாக வளையலுமாக ஜானகி சர்வஅலங்கார பூஜிதையாக அமர்த்தி வைக்கப்பட்டிருந்தாள்.... கணவனை இழந்த கைம்ப்பெண்ணை இப்படி அலங்காரம் செய்து வைத்து பதினாறாம் நாள் கிரியையின் போது ஆவேசம் வந்தவர்களைப் போல் அவளுடைய அணிகலன்களை ஒவ்வொன்றாகப் பறித்து சுமங்கலியைப் பலபேர் நடுவே அமங்கலியாக்கிப் பார்க்கும் அந்த நமது மரபு வரிசை இன்று ஜானகிக்கும் நடக்கப் போகிறதோ! அதற்காக அவளுக்கு இத்தனை அலங்காரமோ! ஜானகி மூக்கும் முழியுமாக ஒரு கணம் நிதானித்துப் பார்க்கும் அழகியாக அந்த லாயர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த போது ஜெயராமன் அங்கே டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். யாருமில்லாத அனாதையாக இனிமேலும் சொந்தக்காரர்களுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்ற முடிவோடு ஜானகி அங்கே வேலைக்கு வந்த சமயம் வாலிப முறுக்கோடு இருந்த ஜெயராமன் சும்மா அவளைச் சீண்டவும் அது அவளுக்கு ஒத்துப் போகவும் வெகு சீக்கிரம் அவர்களுக்குத் திருமணம் நடந்தது! அதைவிட வெகு சீக்கிரம் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. விமலாவை அடுத்தடுத்து கோகிலாவும் யசோதாவுமாக இரண்டு பெண்கள். மூன்று பெண்ணாக பிறந்துவிட்ட ஏமாற்றமோ அல்லது டிரைவர் வேலை என்றாலே ஓரிடத்தில் நிலையாக இருக்க முடியாது; ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும் என்ற சித்தாந்தமோ தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் ஜெயராமன் காணாமற் போய்விட்டார். அப்போது கடைசிப் பெண் யசோதாவுக்கு ஒரு வயதுதான் ஆகியிருந்தது. ஜானகி, சிறகில் அடிபட்ட பறவைபோல் தவித்தாள். எங்கெல்லாமோ ஓடினாள்... யார் யாரிடமோ விசாரித்தாள்... விசாரிக்கச் சொன்னாள்.... ஆனால், ஜெயராமனின் மறைவு, மெய்வழிச்சாலை சாமியாரின் மறைவு மாதிரி மர்மமாகவே போய்விட்டது. மூன்று பிள்ளைகளையும் தெரிந்தவர்கள் வீட்டில் விட்டு வேலைக்குப் போவதும், மாலையில் பிள்ளைகளை வீட்டுக்கு இட்டு வந்து சோற்றுக் கஞ்சி ஊற்றுவதுமாக இரண்டு வருடங்களை ஒட்டினாய் ஜானகி. அந்தச் சிரமமான நேரத்தில்தான், அவளுடைய வாழ்க்கையில் சுந்தரம் வந்து கலந்துகொண்டான். கட்டையில் செய்து கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்ட கனிகள் வேண்டுமானால் அப்படியே இருக்கலாம். செடியில், கொடியில், மரத்தில் இருக்கும் கனிகளால் அப்படியே இருந்துவிட முடியுமா? நொந்து போன ஜானகிக்குச் சுந்தரத்தின் துணை அப்போது இதமாகவும் இன்றியமையாததாகவும் இருந்தது. சுந்தரமும் அவளிடம் ஒரு பண்புள்ள மனிதனாகவும் பொறுப்புள்ள கணவனாகவும், கடமையுள்ள தந்தையாகவுமே நடந்து கொண்டான். அவனுக்குப் பிறந்த இரண்டும் ஆண் பிள்ளைகள். ஆனால், ஒரு நாள் கூட அவன் தனக்கு இரண்டு பிள்ளைகள் தாம் என்று எண்ணியதே இல்லை. ஏதோ ஒரு விடுபட்ட தொடர்பு மீண்டும் ஒட்டிக் கொண்டதைப் போல் அவர்களுடைய வாழ்க்கை நடந்தது. என்றாவது ஒரு நாள் ஜெயராமன் வருவானோ என்ற உறுத்தல் ஜானகிக்கு இருந்ததுண்டு. ஆனால் அந்த உறுத்தலே மக்கிப் போகும் அளவுக்குக் காலம் ஜெயராமன் என்ற நினைவையே தேய்த்துவிட்டிருந்தது. மூத்தவள் விமலா, அடுத்தவள் கோகிலா. இருவரின் திருமணத்தையும் எந்தக் குறையுமில்லாமல் சுந்தரமே செய்து வைத்தான். அடுத்து இருபத்திரண்டு வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் யசோதாவுக்கும் அவன் நிச்சயம் நல்லது செய்து வைக்கத்தான் போகிறான். சுந்திரத்திடம் இருக்கும் இந்த நல்ல குணத்தை அவன் தன்னிடம் வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே தெரிந்துகொண்டுதானோ என்னவோ ஜானகி அன்றொரு நாள் அவனிடம் அப்படிச் செய்யச் சொன்னாள்! ''இந்தாங்க, தன் கையால் கட்டின தாலிக்கு எந்த அர்த்தமும் இல்லாமப் பண்ணிட்டு அவரு போயிட்டாரு. அந்தத் தாலியை நானும் எந்த அர்த்தமும் இல்லாமப் போட்டுக்கிட்டிருக்கேன். இப்பவே இதைக் கழற்றி உங்க கையில தர்றேன். இந்த சாமி படத்துக்கு முன்னாடி நீங்களே இதை எனக்கு மாட்டிவிடுங்க'' என்று சொல்லி உடனே அந்தத் தாலியைக் கழற்றவும் போன ஜானகியை சுந்தரம் தடுத்துவிட்டான். ''ஜானகி புருசன் உயிரோட இருக்கானா இல்லையான்னு தெரிஞ்சுக்காம ஒரு பொண்ணு தன்னுடைய தாலியைக் கழட்டுறது ரொம்பப் பாவம், அதனால என்ன, தாலியைக் கழற்ற வேணாம். நீ இதுல இருக்கிற முடிச்சை என்கிட்ட காட்டு, அதை அவிழ்த்துவிட்டு புதுசா நானே மூணு முடிச்சு போட்டுடுறேன்''. என்று மூன்று முடிச்சையும் அவிழ்த்துப் போட்டுவிட்டான் சுந்தரம். இது நடந்து எத்தனையோ ஆண்டுகள்.... யசோதாவுக்கு மூன்று வயதாக இருக்கும் போது நடந்தது இது. அதே யாசோதாவுக்கு இருபத்தொரு வயதாகும்போதும் ஒன்று நடந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. சுந்தரம் வீட்டில் இருந்தான். கதவைத் தட்டியது யாரென்று பார்க்க ஜானகி கதவைத் திறந்த போது அறுபது வயதை எட்டிப்பிடித்தபடி ஒரு கையால் வாசல் தூனைப் பிடித்தபடி நின்ற அந்த உருவத்தைப் பார்த்து ஜானகி கையும் ஓடாமல் காலும் ஓடாமல் கண் பிதுங்கிப் பேதலித்து நின்றபோது நிலைமையை உணர்ந்து கொண்ட சுந்தரம் ''வாங்கண்ணே'' என்று முகமலர்ச்சியோடு சொல்லியும் அதைத் தாங்கிக்கொள்ளத் திராணியில்லாமல் அந்த வீட்டு அஞ்சடியிலேயே படுத்தவர்தான் ஜெயராமன். அதன் பிறகு அங்கே அவர் இருந்த ஒரு வாரத்தில் இல்லறத்தில் ஏற்பட்ட விரக்தியால் ஓடிப்போனதாகவும், தங்கா மலையில் ஒரு சாமியாரிடம் அடைக்கலமாக இருந்ததாகவும் திடீரென்று குடும்பத்தின்பால் நினைவு வந்ததாகவும் அதனால் ஓடி வந்ததாகவும் புலம்பிக் கொண்டிருந்தார். ஒரு நாள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலி வலி என்று கத்த, சுந்தரமும் ஜானகியும் பிள்ளைகளுமாக அவரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே உயிர் போய்விட்டது. அப்போதே ஜெயராமன் தெய்வமாகிவிட்டார். இன்று பதினாறாம் நாள் கருமக்கிரியை செய்வதற்கு உற்றத்தாரும் சுற்றத்தாரும் வந்திருக்கிறார்கள். சற்று முன்புவரை இவர்களுக்குள் ஒரு பெரிய பிரச்சனை. விவாதித்துத் தீர்ப்புக்காண முடியாத பிரச்சனை. ஜானகியின் கணவன் ஜெயராமன் இறந்துவிட்டான். அதனால் ஜானகி தாலி அறுத்துத்தான் ஆகவேண்டும்! இப்படிச் சொன்னவர்கள் ஜெயராமனின் சொந்தக்காரர்கள். ''இத்தனை வருசமா உண்மையான கணவனா இருந்து, கஞ்சி தண்ணி ஊத்தி காப்பாத்துற சுந்தரம் உயிரோடதானே இருக்கான்! ஜானகி ஏன் தாலி அறுக்கணும்?'' இப்படிக் கேட்டவர்கள் சுந்தரத்தின் சொந்தக்காரர்கள். ஜானகி ஜெயராமனின் படத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள்! சுந்தரம் வந்திருந்தவர்களுக்குத் தேநீர் கொடுத்துக் கொண்டிருந்தான். விடிவதற்குள் முடிவு தெரிய வேண்டுமே! யார் முடிவு சொல்வது?
|
நான் யார்? இந்தப் பேரண்டத்திற்குள் நான் எங்கோ ஓரிடத்தில், சிறு உயிரியாக, வாழ்ந்து கொண்டிருப்பவனாகத் தெரிகின்ற போதிலும், சில நாட்களாக இப்படி ஒரு எண்ணவோட்டம்: அண்டத்தினுள் நான் இல்லை. வேறெங்கோ இருக்கிறேன். ஒரு சிறு உயிரியாக பேரண்டத்திற்குள் நான் வாழ்வதாக எனக்குத் தோன்றுவதெல்லாம், வேறொன்றுமல்ல, நான் காணும் கனவு. இந்தக் கனவுதான் வாழ்க்கையென்று நம்பிக் கொண்டு இதுநாள் வரை இருந்துவிட்டேன். இந்தக் கனவை உருவாக்கியவை என் ஆறு அறிவுகள். நான் யார் என்பது கனவைத் துறக்கும்போதுதான் தெரியும். கண்களைத் திறக்கும் போதல்ல; ஐம்புலன்களையும் மூடும்போதுதான் அந்தக் கனவு போகும். இது சுலபமில்லை. ஆனாலும்கூட அந்த நிலையை கற்பனை செய்து கொள்வது சுலபம். கற்பனையில் நான் செய்து கொள்ளும் இந்தப் பரிசோதனைகள், நான் எண்ணிக் கொண்டிருக்கும் இந்தக் கருத்துக்கு மேலும் வலுசேர்க்கக்கூடும்.. கண்திறந்து அமர்ந்திருக்கிறேன் நான். என் முன்னால் அண்டத்தின் பல்வேறு உருவங்கள். குழந்தை ஒன்றின் மனோபாவத்துடன் பார்க்கிறேன் அவற்றை. பல்வேறு வடிவங்களில், நிறங்களில், சிறியதாகவும், பெரியதாகவும் உருவங்கள் தெரிகின்றன. நான் நினைக்கும்போது நினைத்தபடி நகரக்கூடிய, எனக்குக் கீழேயுள்ள உருவம் ஒன்றை மட்டும் என்னுடையதென கருதி வருகிறேன். கைகளை தட்டி விளையாடப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு கைத்தட்டலையும் நான்கு விதமாக உணர்கிறேன். கைகள் இணையும் காட்சியாகவும், தட்டிக் கொள்ளும் சப்தமாகவும், கைகள் தொட்டுக் கொள்ளும் உணர்ச்சியாகவும், கைதட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியாகவும் என நான்கு விதமாக. முதல் பரிசோதனையை மேற்கொள்ளப் போகிறேன். என் கண்களை மூடிக் கொள்கிறேன். உருவங்கள் மறைந்துவிட்டன என நான் நினைத்தாலும் இல்லையென்கின்றன விழிதிரவத்திலுள்ள தூசிகள். அங்குமிங்கும் அசைந்தும், பல வண்ணங்களை உமிழ்ந்து கொண்டும் இருக்கின்றன. இதைவிட பெரிய காட்சியாக, அவற்றிற்கு அப்பால் பிரம்மாண்டமான இருட்டொன்று பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது, தியானங்கள், தவங்கள் மூலம் ஞானிகள் பெறும் சக்தியை நான் பெற்றுவிட்டதாக வைத்துக்கொள்வோம். அதாவது என் பார்வை என்கிற அறிவை இழந்து விடுகிறேன். இப்போது இருட்டு கூட எனக்குத் தெரிவதில்லை. இருப்பினும் என் மூளையில் கண்கள் மூலம் நான் கண்ட பழைய நினைவுகளின் காட்சிகள் அனைத்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதோ, என் நினைவுகளிலிருந்து காட்சிகளை மட்டும் அழித்துவிடுகிறேன். ஒரு பிறவிக்குருடன் மூலையிலிருப்பது போன்று என் நினைவுகள் இப்போது காட்சிகளற்றுக் கிடக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்பு நான் கைத்தட்டிய நிகழ்ச்சியும் கூட. பார்வையை இழந்த கையோடு அடுத்த பரிசோதனைக்கு உட்படுகிறேன். என் காதுகளால் இனி எந்த சப்தத்தையும் கேட்கப் போவதும் கிடையாது. கேட்டல் அறிவையும் இழந்து விடுவதாய் என் கற்பனைப் பரிசோதனை நீள்கிறது. இருப்பினும், ஒலியலைகளால் ஆகாத சப்தங்கள் என் மூளையில் ஒலிக்கிறது. நான் கற்ற மொழியால் ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டிருந்தன என் நினைவுகள். என் தாய்மொழி வடிவில்தான் நான் இதுவரை சிந்தித்து வந்திருக்கின்றேன். இப்போது என் நினைவுகளிலிருந்து மொழியை நீக்கிவிடும் அதிசயத்தையும் செய்கிறேன். இப்போது பிறந்ததிலிருந்து உள்ள என் நினைவுகள் அனைத்தும், மொழி அறியாத ஆதிவாசி மனிதனின் வார்த்தைகளற்ற மன பதிவுகள் போன்று இருக்கின்றன. நான் கைதட்டியது கூட அவ்வாறே பதிந்திருக்கிறது. என் நுகர்தல், சுவைத்தல் அறிவுகளை அகற்றிவிட்டு, அடுத்த பரிசோதனைக்கு வரும்போது நான் நான்கு அறிவுகளற்று இருக்கிறேன். நான் எங்கோ அமர்ந்திருப்பதாக மட்டும் என்னால் உணரமுடிகிறது. அமர்ந்தபடியே இருக்கிறேனென்பதால் என் முட்டிகள் வலிக்கின்றன. இரத்த ஓட்டம் செல்லாத பாதப் பகுதி சோகை பிடித்து மந்தமாக இருக்கிறது. இதோ இப்போது உடலால் நான் உணரக்கூடிய தொடு உணர்வு, வலி, கூச்சம், சுகம் போன்ற அனைத்தையும் இழக்கிறேன். அதோடு, தொடு உணர்வு, சம்பந்தப்பட்ட என் மூளைப் பதிவுகளையும் கூட. இந்த வினாடி முதல் உடல் என்னுடையதல்லாததாக மாறுகிறது. ஆனாலும் நான் இருக்கிறேன். "ஏன் கைத்தட்டினேன்" என்பது உள்ளிட்ட பல வருட நினைவுகளோடு மட்டும். ஐம்புலன் அற்றவனாக இன்னும் "நான்" இருக்கிறேன். ஆனால் என் ஐந்து தூரிகைகளால் வரையப்பட்ட பிரபஞ்சம் என்ற ஓவியத்தின் அழகிற்குள் மயங்கிக் கிடக்கும் வேடிக்கை மனிதனாய் அன்று. இத்தனை பரிசோதனைக்குப் பின்பும், மனநிறைவில்லை. கேள்விகள் நச்சரித்துக் கொண்டிருக்கும் போது எப்படி தூங்கமுடியும். பல கேள்விகள். ஏன் இந்த பேரண்டம் இருந்தது? ஏன் இதை இல்லாமல் செய்ய வேண்டும்? ஏன் நான்? ஏன் பிறப்பு? ஏன் வாழ்க்கை? ஏன் இறப்பு? என்று நீண்டு கொண்டே வந்த பட்டியல் ஒரு கேள்வியோடு முற்றுப் பெற்றது. "ஏன்" ஏன்? ஏன் என்று நான் காரணங்களைத் தேடுவது ஏன்? என் ஆறாவது அறிவுதான் அதன் காரணம். இப்போது அதையும் நீக்க நான் முற்படுகிறேன். நீக்கினேன். கடைசிப் பரிசோதனையும் முற்றுப் பெற்றது- ஆறாவது அறிவை பயன்படுத்திதான் நான் இந்தக் கற்பனைப் பரிசோதனையை மேற்கொள்கிறேன். அதனால்தான், கடைசி நிலையை என்னால் முழுமையாக உணரமுடியவில்லை. ஆனால் இதுதான் அது ... "புத்தர், மாவீரர், இயேசு, நம் மண்ணில் சித்தர்கள் என அனைவரும் சொன்ன "அது" இதுதான். இதை நோக்கிதான் மனிதனின் பயணம் தொடங்க வேண்டும். இதுதான்.... யாரோ என் தோளைப் பிடித்து ஆட்டியதால் ஒரு பள்ளத்திற்குள் விழுந்துவிட்ட நினைப்பு. கண்விழித்துப் பார்த்தபோது கட்டிலின் ஓரத்தில் அம்மா அமர்ந்திருக்கிறாள். மல்லாக்கில் படுத்திருந்த என் நெஞ்சில் கவிழ்த்தப்பட்டிருந்த புத்தகத்தைக் கையில் எடுத்த அம்மா முன் பக்கத்தைப் பார்க்கிறாள். "ஏண்டா... இதுல இருந்துதான் இன்னக்கி கேள்வி கேக்கப் போறாங்களா... பாடுபட்டு இரத்தஞ் சொட்டிச் சம்பாதிச்சு உன்னப் படிக்க வக்கிறோம்... சும்மால்ல.... நீ... பெயிலாப்போயி... அரியர் வக்கிறப்ப எங்க மனசு எவ்வளவு கஷ்டப்படுது" அம்மாவின் குரல், "மனவலியை" தழுதழுத்தது வெளிக் காட்டியது. நான் எழுந்து அமர்கிறேன் படுக்கையில். "நானும் ரெண்டு நாளாப் பாக்குறேன்... இதே புத்தகத்தத்தான் படிச்சிக்கிட்டிருக்க. இன்னக்கி மதியம் பரிச்சைய வைச்சுக்கிட்டு. இந்தத்தடவயாவது அந்தப் பேப்பர எழுதி முடிப்பேன்னு நெனச்சேன்" அம்மா அழுதே விட்டாள். " அம்மா.... சரி..... படிக்கிறேன்... அழுகாத... ஈஸிதான்... ஏற்கனவே படிச்சுட்டேன்... சரி... இப்ப என்ன... இந்தாப் படிக்க ஆரம்பிச்சுட்டேன்." எழுந்து செல்கிறேன் என் அலமாரியை நோக்கி. பாடப்புத்தகங்கள், கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த அலமாரியின் நடு அரையில் தியானத்தின் முறைகள் பற்றிய அந்தப் புத்தகத்தை வைக்க மனம் ஒப்பவில்லை. காலியாக இருந்த மேல் அறையில் அதை வைத்து, அழகு பார்த்துவிட்டு, பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்கிறேன். என் அம்மா இன்னும் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். |
ஒரு செல்வந்தர் ஜென் ஞானி சென்காய் என்பவரிடம் வந்து, ""எங்களது தலைமுறையினர் தொடர்ந்து எப்போதும் செழிப்புடன் இருக்க ஏதாவது ஆசீர்வாதம் எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டார். சென்-காய் ஒரு காகிதத்தை எடுத்து, ""தந்தை இறக்க, மகன் இறக்க, பேரன் இறக்க !" என்று எழுதிக் கொடுத்தார். செல்வந்தர் திடுக்கிட்டார். ""எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கத்தான் உங்களிடம் ஆசீர்வாத வாக்கியம் கேட்டேன். ஏன் இப்படி எழுதி விட்டீர்கள் ?"என்று விசனப்பட்டார். சென்-காய் அமைதியாக, ""இதில் குற்றம் ஒன்றும் இல்லை. உனக்கு முன் உன் மகன் இறந்தால் அது உனக்கு துன்பத்தைத் தரும். உன் பேரன் இறந்தால், அது உனக்கும் உன் மகனுக்கும் பெரும் துன்பமாகும். உனது வம்சம் தலைமுறை தலைமுறையாக நான் குறிப்பிட்ட ஒழுங்கில் நடைபெற்று வந்தால், அதுவே இயற்கையான வாழ்வு முறை. அதைத்தான் எழுதி அளித்திருக்கிறேன்"என்றார். |
ஒரு கொக்கு இருந்தது. அது இடுகிற முட்டைகளை யெல்லாம் ஒரு நாகப் பாம்பு தெரியாமல் வந்து தின்று கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாத கொக்கு, தனக்குத் தெரிந்த நண்டு ஒன்றிடம் போய் என்ன செய்யலாம் என்று கேட்டது. அது ஓர் அருமையான வழி சொல்லிக்கொடுத்தது. ஒரு கீரி வளையிலிருந்து பாம்புப் பொந்து வரை வரிசையாக மீனைப் போட்டு வைக்கச் சொல்லியது. கொக்கு அவ்வாறே பிடித்துக் கொண்டு போய்ப் போட்டது. கீரிப்பிள்ளை ஒவ்வொரு மீனாகத் தின்று கொண்டே பாம்பின் பொந்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்த பாம்போடு சண்டையிட்டு, அதைக் கடித்துக் கொன்று விட்டது. திருட்டுப் பிழைப்பு என்றும் ஆபத்துதான். |
அன்று சக்கரவர்த்தி அக்பர் ஏதோ காரணத்தால் காலையிலிருந்தே எரிச்சலுடன் இருந்தார். அவருடைய கோபத்தைத் தணிக்க விரும்பிய பீர்பல், “பிரபு! நீங்கள் இவ்வாறு இருப்பது சிறிதும் நன்றாகயில்லை. சிறிது சாந்தமாக இருக்கக்கூடாதா?” என்று பணிவாகக் கூறினார். “எப்போது சாந்தமாக இருக்க வேண்டும், எப்போது கோபமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டிது இல்லை!” என்று அக்பர் பீர்பல் மீது எரிந்து விழுந்தார். “அதற்கு சொல்லவில்லை பிரபு! சிடுசிடுவென்று இருந்தால் இயற்கையில் அழகான உங்கள் முகம் விகாரமாக மாறிவிடுகிறது! அதனால்…” பீர்பலை இடைமறித்த அக்பர் “என்ன தைரியம் இருந்தால் என்னை சிடுமூஞ்சி என்றும் விகாரமானவன் என்றும் குறிப்பிடுவாய்? இனி, உன் முகத்தில் விழிக்க நான் விரும்பவில்லை! எங்காவது கண்காணாத இடத்திற்கு ஒழிந்து போ!” என்றார். இதைக் கேட்டு மனமுடைந்த பீர்பல் உடனே அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார். அடுத்த நாள் அக்பர் தர்பாருக்கு வந்ததும் சபையில் பீர்பல் மட்டும் காணப்படாததை கவனித்த அக்பர் அவரைப்பற்றி விசாரித்தார். தர்பாரில் ஒருவர் எழுந்து நின்று, “பிரபு! நேற்று நீங்கள் அவர்மீது கோபமுற்று இந்த நகரத்தை விட்டுக் கண்காணாத இடத்திற்குச் சென்று விடுமாறு கட்டளையிட்டீர்களாம்! அதனால் பீர்பல் தலைநகரை விட்டுச் சென்று விட்டார்!” என்றார். “அடடா! பீர்பல் உண்மையாகவே சென்று விட்டாரா?” என்று அக்பர் வருந்தினார். தான் அவ்வளவு கடுமையாகத் பேசியிருக்கக்கூடாது என்று உணர்ந்த அக்பர் தன் தவறுக்காக வருந்தினார். பீர்பலை மீண்டும் சந்திக்க வேண்டுமென்று அவர் மனம் அடித்துக் கொண்டது. ஆனால் பீர்பல் எங்கு சென்று விட்டார் என்று யாருக்கும் தெரியவில்லை. அன்று முழுவதும் பீர்பல் எங்கு சென்றிருக்கக்கூடும் என்பது பற்றியும், அவரை எவ்வாறு மீண்டும் திரும்பி வரவழைப்பது என்றும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்த அக்பருக்கு, இறுதியாக ஒரு யோசனை தோன்றியது.உடனே அவர் மந்திரியை அழைத்து “மந்திரியாரே! கொளுத்தும் நடுப்பகல் வெயிலில் குடையின்றி ஒருவன் பிரதான சாலையில் நடந்து வரவேண்டும். அப்படி வருபவனுக்கு நூறு பொற்காசுகள் தரப்படும் என்று ராஜ்யமெங்கும் தண்டோராப் போடுங்கள்!” என்றார்.“பிரபு! இப்போது கடுங்கோடை காலம்! குடையில்லாமல் அரை மணிநேரம் நடந்தாலும் நடப்பவன் சுருண்டு விழுந்து விடுவான். அப்படிஇருக்க யார் தங்கள் உயிரை நூறு பொற்காசுக்காக விட முன்வருவார்கள்?” என்றார். “நான் சொல்வது போல் தண்டோராப் போட்டு அறிவியுங்கள்! போதும்!” என்றார் அக்பர். உடனே மந்திரியும் அக்பரின் விருப்பப்படி ராஜ்யமெங்கும் தண்டோராப் போட்டு அறிவித்தார்.அக்பரின் அறிக்கையைக் கேட்ட பொதுமக்கள் ஆச்சரியமமுற்றனர். “சக்கரவர்த்திக்கு என்ன இப்படி ஒரு வினோதமான ஆசை? இந்த சவாலை யார்தான் ஏற்பார்கள்?” என்று தங்களுக்குள் கூடிக்கூடிப் பேசிக் கொண்டார்கள். தலைநகருக்கு அருகேயிருந்த ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்த ஒரு பரம ஏழை இந்த செய்தியைக் கேட்டு பரபரப்படைந்தான்.வாழ்க்கையில் பொற்காசுகளையே பார்த்திராத அவன் ஒரே சமயத்தில் நூறு பொற்காசுகள் கிடைக்கும் என்ற அறிக்கை அவன் ஆசையைத் தூண்டியது. அந்தத் தொகை மட்டும் கிடைத்தால், அவனுடைய ஏழைமை பரிபூரணமாக விலகிவிடும்.அதைப்பற்றி அவன் தன் மனைவியிடம் விவாதித்த போது, அவள், “நமக்குப் பக்கத்து வீட்டில் சில நாள்களுக்கு முன் குடிவந்துஇருக்கும் வீரேந்திரனைக் கேட்டுப் பாருங்களேன்! அவன் அதிபுத்திசாலியாகக் காணப்படுகிறான். அவன் நிச்சயம் இதற்கு ஏதாவது ஒருவழி கூறுவான்” என்றாள்.அவ்வாறே அவன் தன்னுடையப் பக்கத்து வீட்டுக்காரனான வீரேந்திரனை யோசனை கேட்டவுடன் அவன் உடனே, “அது ஒன்றும் கஷ்டம்இல்லையே! நீ ஒரு நாற்காலியை அல்லது சோபாவைத் தலைக்கு மேல் சுமந்து போ! உன் மேல் வெயில்படாது!” என்று வீரேந்திரன் கூறினான்.“ஆகா! என்ன அருமையான யோசனை? இது ஏன் யாருக்குமே தோன்றவில்லை!” என்று மகிழ்ச்சியுடன் கூவிய அந்த ஏழை, “நான் நீ கூறியவாறு நாளைக்கே தலைநகர் ஆக்ராவிற்குச் செல்லப் போகிறேன்” என்றான். அவ்வாறே மறுநாள் கிளம்பிய அவன் தலைக்குமேல் ஒரு சிறிய சோபாவைத் தூக்கிக் கொண்டு கால்நடையாகவே அக்பரின் தர்பாரை அடைந்தான்.“பிரபு! குடை இல்லாமலே கொளுத்தும் வெயிலில் என் கிராமத்தில் இருந்து இங்கு கால்நடையாக வந்துதிருக்கிறேன்!” என்று பரபரப்புடன் அறிவித்தான். “சபாஷ்! யாருக்குமே தோன்றாத இந்த யோசனை உனக்கு மட்டும் எப்படித் தோன்றியது?” என்று அக்பர் ஆவலுடன் கேட்டார்.“பிரபு! உண்மையில் எனக்கு இந்த யோசனையை சொல்லிக் கொடுத்தது என் பக்கத்து வீட்டுக்கார வீரேந்திரன்!” என்றான் ஏழை! அது பீர்பல் தான் என்றும் யூகித்துக் கொண்ட அக்பர் தன் திட்டம் பலித்ததையெண்ணி மிக மகிழ்ச்சியுற்றார். நான் அறிவித்தபடியே உனக்கு நூறு பொற்காசுகள் தருகிறேன். அந்தப் பணத்தை உன் கிராமத்திற்கு பத்திரமாக எடுத்துச் செல்ல உன்னுடன் இரு காவலர்களையும் அனுப்புகிறேன்.நீ உன் வீட்டை அடைந்ததும், அந்த புத்திசாலி வீரேந்திரனை காவலர்களிடம் ஒப்படைத்து விடு!” என்றார். அவ்வாறே மிக்க மகிழ்ச்சியுடன் அந்த ஏழை இருவீரர்களின் துணையுடன் தன் வீட்டை அடைந்தான். அவன் அடையாளம் காட்டிய வீரேந்திரனைக் காவலர்கள் தங்களுடன் அழைத்துக் கொண்டு ஆக்ரா திரும்பினர்.தர்பாரில் நுழைந்த வீரேந்திரன் தன் முகத்தை ஒரு பையினால் மூடிக் கொண்டு வந்தான். “வீரேந்திரா! உன் முகத்தை ஏன் மூடிக் கொண்டிருக்கிறாய்? பையை அகற்று!” என்றார் அக்பர். “பிரபு! நான் வீரேந்திரன் இல்லை! நான்தான் பீர்பல்! உங்கள் முகத்தில் இனி நான் விழிக்கக் கூடாது என்ற உங்கள் கட்டளைப்படியே நான் எனது முகத்தை மூடிக்கொண்டு வந்து உள்ளேன்!” என்றான்.“பீர்பல்! உன் முகத்தை நான் இப்போதே பார்க்க விரும்புகிறேன்! இதுவும் என் கட்டளையே!” என்று கூறிய அக்பர் தானே முன்சென்று பையை அகற்றி விட்டு, பீர்பலை மிகுந்தப் பிரியத்துடன் கட்டித் தழுவிக் கொண்டார்.
|
அரசியின் கொட்டாவி திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார்.அம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்த தெனாலிராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார்.அம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் மன்னர் எனது இருப்பிடத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று வருந்தினாள். தெனாலிராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அம்மையாருக்கு வாக்குகொடுத்துச் சென்றான்.ஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். தெனாலி ராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து "பயிர் நன்றாக வளர வேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது" என்றான்.மன்னரும் மற்றவர்களும் தெனாலிராமனை வினோதமாகப் பார்த்தனர். தெனாலிராமனோ விடாமல் "விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடவே கூடாது. அப்போது தான் பயிர் நன்றாக வளரும்" என்றான்.மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. "ராமா, இது என்ன வினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா?" என்றார்."வேறென்ன மன்னா, உங்கள் முன்னால் கொட்டாவி விடும்போது உங்களுக்கு கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக்கொள்ளாதா? கேவலம் கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா?" என்று கூறிவிட்டு மன்னரை ஓரக்கண்ணால் பார்த்தார் தெனாலி ராமன்.மன்னருக்கு தெனாலிராமன் சூசகமாக் என்ன சொன்னார் என்று புரிந்து போனது. அப்போதே கேவலம் கொட்டாவிக்காக தன் மனைவியை கோபித்துக் கொண்டேனே என்று வருந்தினார். தெனாலி ராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதை புரியவைத்தான் என்பதையும் எண்ணி மகிழ்ந்தார்.பின்னர் மகிழ்ச்சியில் திளைத்த அம்மையாரும் மன்னரும் சேர்ந்து, தெனாலிராமனுக்கு பரிசுகளை பல அளித்து மகிழ்ந்தார்கள். |
ஒரு நாள் முல்லா ஒரு துணிக் கடைக்குச் சென்றார். அங்கு தலைப்பாகைகளும் விற்கப்பட்டன.
தமக்கு ஒரு தலைப்பாகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் முல்லா அங்கு சென்றார்.
அழகான ஒரு தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்து விலை பேசினார். பிறகு தலைப்பாகையைத் தலையில் அணிந்து கொண்டார். அந்தக் கடையில் அழகான சால்வைகளும் விற்கப்படுவதை முல்லா கண்டார். தலைப்பாகைக்கு
பதிலாக சால்வையை வாங்கி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. அதனால் அவர்
கடைக்காரனைப் பார்த்து இந்தப் தலைப்பாகை;குப் பதிலாக சால்வையை வாங்கிக் கொள்கிறேன்.
இரண்டின் விலையும் ஒன்றாகத்தானே இருக்கிறது? என்றார். உங்கள் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர்.
முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்து விட்டு சால்வையை எடுத்துக் கொண்டு
புறப்பட்டார். ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று
கடைக்காரர் கேட்டார். நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாகத்தானே
சால்வையை வாங்கிக் கொண்டேன் என்றார் முல்லா. அப்படியானால் தலைபாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர். தலைப்பாகைக்கு ஏன்
பணம் தரவேண்டும்? அதைத்தான் உங்களிடம் திருப்பி
கொடுத்துவிட்டேனே? என்று கூறிவாறு கடையை விட்டுக் கம்பீரமாக வெளியே நடந்தார். கடைக்காரருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவருடைய மூளை குழம்பி விட்டது. |
ஒரு காட்டில் கொடிய சிங்கம் ஒன்று இருந்தது. பசி இல்லாவிட்டாலும் விலங்குகளை வேட்டையாடும் இரக்கமற்ற சிங்கம் அது. அந்தச் சிங்கத்தை கண்டாலே எல்லா விலங்குகளும் அஞ்சி ஓடிவிடும். இதற்கு ஒரு தீர்வு காண அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் குகைக்குச் சென்றன. "சிங்க ராஜா, நீங்கள் வேட்டையாடுவதில் வல்லவர். ஆனால் உங்களால், இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் அழிகின்றன. நீங்கள் வேட்டையாடாமல் உங்கள் கூகையிலே இருந்தால், தினம் ஒரு விலங்கை நாங்கள் உங்கள் குகைக்கே அனுப்புகிறோம். அதைத் தின்று நீங்கள் பசி ஆரலாம். இப்படிச் செய்தால் மற்ற விலங்குகள் உயிர் பிழைக்கும்." என்று சிங்கத்திடம் முறையிட்டன. சிங்கமும் தினமும் இரை தன் குகைக்கே வந்தால் வேலை மிச்சம் என்று மகிழ்ந்தது. "இந்த உடன்பாட்டிற்கு நான் சம்மதிக்கிறேன். ஆனால் தினமும் ஒரு விலங்கு என் குகைக்கு வரவேண்டும். ஒரு நாள் தவறினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்." என்றது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்கு சிங்கத்தின் குகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிங்கம் குகைக்கு வரும் விலங்கை மட்டும் தின்று விடும். மற்ற விலங்குகள் எல்லாம் நிம்மதியாகக் காட்டை சுற்றி வந்தன. இப்படிப் பல நாட்கள் செல்ல, ஒரு நாள் ஒரு சிறு முயல் தேர்ந்தெடுக்கப்பட்டது. முயலுக்கு இறக்க விருப்பம் இல்லை. சிங்கத்தை எதிர்த்துப் போர் இட தன்னால் முடியாது என்பதை உணர்ந்த புத்திசாலி முயல் யோசித்தது. முன்பு ஒருநாள் தான் பார்த்த கிணற்றின் ஞாபக வர ஒரு திட்டம் தீட்டியது. சிங்கத்தின் குகைக்கு வேண்டும் என்றே தாமதமாக சென்றது. சிங்கம் கடும் பசியில் இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் முயல் வரவில்லை என்றால் எல்லா விலங்குகளையும் கொன்று விட எண்ணியது. இறுதியில் குகைக்கு ஓடிவந்த முயலைப் பார்த்த சிங்கம் கோபமடைந்து. தன் பெரும் பசிக்கு ஒரு சின்ன முயல் எப்படி ஈடாகும்? சினம் கொண்ட சிங்கம் "ஏ முயலே.. உனக்கு என்ன தயிரியம். ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய். நீ மிகவும் சிறியதாகவும் இருக்கிறாய். உன்னைத் தின்றால் எனக்கு எப்படிப் பசி தீரும்? நான் உனக்காகக் காலையில் இருந்து காத்துக் கிடக்கிறேன். முதலில் உன்னைக் கொன்று, பிறகு உன் முயல் கூட்டத்தை கொன்று தின்கிறேன். என்னை ஏமாற்ற நினைத்தால் இது தான் தண்டனை." என்றது. அதற்கு முயல் பணிவுடன் "சிங்க ராஜா, நான் தாமதமாக வந்ததற்கு நான் காரணம் இல்லை. தங்களை ஏமாற்ற யாரும் நினைக்க வில்லை. உங்கள் குகைக்கு வர நான் காலையிலே புறப்பட்டு விட்டேன். ஆனால்..." என்று இழுத்தது. சிங்கம், "ஆனால் என்ன.. ? " என்று கர்ச்சித்தது.அதற்கு முயல், "என்னால் உங்கள் பசியை தீர்க்க முடியாது என்று எனக்கும் முயல் கூட்டத்திற்கும் நன்றாகத் தெரியும். அதனால் தான் என்னோடு வேறு நான்கு முயல்களும் வந்தன. ஆனால் வரும் வழியில் வேறொரு சிங்கம் இருந்தது. நாங்கள் எவ்ளவு சொல்லியும் மற்ற நான்கு முயல்களையும் பிடித்து வைத்துக் கொண்டது. மேலும் அந்தச்சிங்கம் தான் இந்தக் காட்டின் உண்மையான ராஜா என்றும் நீங்கள் போலி என்றும் சொன்னது. உங்களுக்கு உண்மையில் வீரம் இருந்தால் தன்னை வீழ்த்த வரும்படி அழைத்தது. இந்தச் செய்தியை உங்களுக்குத் தர தான் என்னை உயிருடன் விட்டது. இது தான் நான் தாமதமாக வந்ததற்குக் காரணம்." என்றது. தன் காட்டில் இன்னொரு சிங்கம் இருப்பதைக் கேட்ட சிங்க ராஜாவிற்கு கடும் கோவம் ஏற்பட்டது. "உடனே என்னை அந்தச் சிங்கத்திடம் அழைத்துச் செல். அந்தச் சிங்கத்தை ஒரே அறையில் கொன்று விடுகிறேன். என் காட்டில் வந்து என்னையே அவமானப் படுத்துகிறான்." என்று முயலிடம் கேட்டது. அதற்கு முயல், "சிங்க ராஜா, அந்தத் திமிர் பிடித்த சிங்கம் மிகவும் பெரிதாகவும் வலிமையாகவும் இருக்கிறது. அது ஒரு விசித்திர குகையில் இருக்கிறது. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். " என்று கூறி சிங்கத்தை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்றது. கிணற்றுக்கு அருகில் வந்தவுடன் முயல், "சிங்க ராஜா!.. இது தான் அந்த பொல்லாத சிங்கத்தின் குகை. நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் சென்று அந்தச் சிங்கத்தைக் கொன்று விடுங்கள்." என்றது. சிங்ககும் கிணற்றை எட்டிப் பார்த்தது. கிணற்று நீரில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்து, உள்ளே ஒரு சிங்கம் இருப்பதாக நினைத்தது. முயல் சொன்னது உண்மை என்றும் தன் காட்டுக்குள் வேறொரு சிங்கம் நுழைந்து விட்டதென்றும் நம்பியது முட்டாள் சிங்கம். பிறகு சிங்கம் கிணற்றில் எட்டிப்பார்த்து தன் முழு பலத்துடன் கர்ச்சித்தது. உடனே அந்தச் சத்தம் மிக அதிகமாகக் கீழ் இருந்து மேலே எதிரொலித்தது. மீண்டும் கிணற்றில் உள்ள சிங்கம் தான் இப்படிக் கர்ச்சித்ததென்று ஏமார்ந்து சிங்கம். சினம் கொண்ட சிங்கம் கிணற்றுக்குள் குதித்தது. உள்ளே வெறும் தண்ணீர் இருப்பதைக் கண்ட சிங்கம், முயல் தன்னை ஏமாற்றியதை உணர்ந்தது. பலத்த காயம் அடைத்த சிங்கம் மேலே வர முடியாமல் கிணற்றுக்குள் இறந்தது. முயலும் மற்ற விலங்குகளும் நிம்மதியாக இருந்தனர். முயல் அந்தக் காட்டிற்கே செல்ல விலங்கானது.
|
முல்லா நீதிபதி பதவி வகித்த சமயம் நிகழ்ந்த நிகழ்ச்சி இது. ஒரு நாள் வெளியூர்க்காரன் ஒருவன் முல்லாவிடம் வந்து " நீதிபதி அவர்களே, நான் இந்த
ஊருக்குப் புதிது. நான் இரவு இந்தப் பக்கம் நடந்து சென்றபோது உங்களுர் ஆள் ஒருவன்
என்மீது பாய்ந்து என்னிடமிருந்த பணம், தலைப்பாகை சட்டை ஆகிய எல்லாவற்றையும் திருடிக்
கொண்டு போய்விட்டான், தயவு செய்து கண்டு பிடித்து என் உடமைகளை மீட்டுத் தரவேண்டும்
" என்று வேண்டிக் கொண்டான். " நீர் சொல்வதைப் பார்த்தால் இது எங்கள் ஊர் திருடன் கை வரிசையாக எனக்குப்படவில்லை.
இது வெளியூர்த் திருடனின் வேலைதான் " என்றார் முல்லா. " இவ்வளவு தெளிவாக எவ்வாறு கூறுகிறீர்கள் ஐயா!" என்ற வெளியூர்க்காரன் வியப்போடு
கேட்டான். " எங்கள் ஊர்த்திருடனாக இருந்தால் உமது இடுப்புத் துணியைக்கூட விட்டிருக்க மாட்டான்.
கௌபீனதாரியாக விட்டு விட்டு இடுப்புத் துணியையும் அவிழ்த்துக் கொண்டு போயிருப்பான்
" என்று முல்லா கூறினார்.
|
பாளையம் என்னும் ஊரில் அருகருகே இரு நகைக் கடை வியாபாரிகள் வாழ்ந்து வந்தனர், இதில் ஒருவரின் பெயர் ராமன், மற்றொருவரின் பெயர் ராஜன், ராமன் மிகவும் அன்பானவர் யாவருடனும் எளிதாக பழகக் கூடியவர், ராஜனும் அதே போல் தான் என்ன ராஜன் கொஞ்சம் சிடு மூஞ்சி, இருவரும் எப்பொழுதுமே கடுக்கன் அணிந்திருப்பார், இருவருக்கும் இடையே எப்பொழுதும் வியாபார போட்டி இருந்து கொண்டே இருக்கும், ஒருநாள் ராமன் தனது இரு கடுக்கனும் காணவில்லை என்று வினவி கொண்டிருந்தார்,பிறகு ராஜனும் தனது இரு கடுக்கனும் காணவில்லை என்று வினவினார், இருவரும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டு சண்டை போட்டு கொண்டனர், பிறகு இருவரும் மரியாதை இராமனிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டனர், மரியாதை இராமன் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை செய்தார் மேலும் மரியாதை இராமன் தீர்ப்பை நாளை ஒத்திவைத்தார், இரவு கழிந்தது சூரியன் உதித்தது , அனைவரும் மரியாதை இராமனின் அவையில் கூடினர், காணாமல் போன உங்கள் இருவரில் ஒருவரின் கடுக்கன் கிடைத்து விட்டது, என்று கூறி உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த இரு கடுக்கனை மரியாதை இராமன் இருவர் முன் நீட்டி இது உங்களில் யாருடையது என்று கேட்டார், ராமன் அமைதியாக இருந்தார், பேராசை கொண்ட ராஜனோ அந்த கடுக்கன் என்னுடையதே, என்னுடையதே என்று பல முறை கூறினார், உடனே மரியாதை இராமன் ராஜன் தான் கடுக்கன் திருடன், ராஜன் தான் ராமனின் கடுக்கனை திருடி விட்டு, தன் மீது சந்தேகம் வராமல் இருக்க ராஜனே ராஜனின் கடுக்கனையும் மறைத்து வைத்துள்ளார், ராஜன் ராமனின் கடுக்கனை திருப்பி தருமாறும் மேலும் 500 சவுக்கடி வழங்குமாறும் கூறி தீர்ப்பை முடித்து வைத்தார், ராஜனும் வலி தாங்காமல் உண்மையை ஒப்பு கொண்டார்..
|
குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர். ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன. அவன் மன்னனிடம், "அரசே……..உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்" என்றான்.அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான். மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், "அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?" என்று கேட்டார். மன்னனோ, "அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது" என்று கூறினான்.நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார். |
வியாபரத்தை முன்னிட்டு ஒரு தடவை முல்லா பெரிய நகரம் ஒன்றுக்குச் சென்றிருந்தார்.
அங்கே அவருக்கத் துணையாக ஒருவன் வந்து சேர்ந்தான். அவனுக்கு எடுத்தற்கெல்லாம் சந்தேகமாக இருந்தது. அந்தப் பெரிய நகரத்தை பார்த்ததும் அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது. சந்து பொந்தெல்லாம் மக்கள் இவ்வாறு நிரம்பி வழிகிறார்களே, இவ்வளவு கூட்டத்தில்
மக்கள் எவ்வாறு தாங்கள் போக வேண்டிய இடத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்? தாங்கள்
தங்கியுள்ள விடுதியை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள்? அவ்வளவு ஏன், மக்கள் தங்களைத்
தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான் இவ்வாறெல்லாம் அந்த சந்தேகப் பிராணி
பேசிக் கொண்டேயிருந்தான். அந்த சந்தேகப் பிராணியும் முல்லாவும் அன்று இரவைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில்
சென்ற தங்கினார். அந்த விடுதியில் பலர் தங்கியிருந்தார்கள். " காலையில் நான் கண் விழிக்கும் போது என்னையே மறந்து விட்டால் என்ன செய்வது? முல்லா
அவர்களே எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள் என்ற பரிதாபமாகக் கேட்டான் " சந்தேகப்
பிராணி. முல்லா சிரித்துக் கொண்டே " நண்பரே கவலைப்படாதீர். ஒரு கருப்புத் துணியை உமது ஒரு
காலில் சுற்றிக் கட்டி விடும். காலையில் உறங்கி எழுந்ததும் உமது காலைப் பாரும்.
கருப்புத் துணி காலில் இருந்தால் நீர்தான் அது என்ற அடையாளம் கண்டு கொள்ளலாம் "
என்றார். சந்தேகப் பிராணிக்கு அது நல்ல யோசனையாகப்படவே தன் காலில் ஒரு கருப்புத்
துணியைக் கட்டிக் கொண்டு படுத்து விட்டான். அவனுக்கு அருகே படுத்திருந்த முல்லா அவன் நன்றாக உறங்கிய பிறகு அவன் கட்டியிருந்த
கருப்புத் துணியை அவிழ்த்துத் தம்முடைய காலில் கட்டிக் கொண்டார். " ஐயோ நான் காணாமல் போய் விட்டேனே. என் காலில் இருந்த துணியைக் காணோமே" என்று
கூக்குரல் போட்ட சந்தேகப் பிராணி முல்லாவின் காலைப் பார்த்து விட்டு " நான்
அகப்பட்டுவிட்டேன் நீர்தான் நான் " என்று சத்தம் போட்டான். அங்கே ஏதோ குழப்பம் நடப்பதைக் கண்ட மற்ற பயணிகள் அங்கே வந்து கூடி என்ன நடந்தது என
வினவினர். நடைபெற்ற நிகழ்ச்சிகளை முல்லா மற்றவர்களுக்கு விளக்கினார். சந்தேகப்பிராணியைப் பார்த்து அந்த விடுதியில் தங்கியிருந்த எல்லா பிரயாணிகளும் வாய்
விட்டுச் சிரித்தனர். பிறகு முல்லா அந்தச் சந்தேகப் பிராணிக்கு ஏற்பட்டிருந்த சந்தேகப் பிரமையை அகற்றி
அவனுக்குத் தெளிவை உண்டாக்கினார்.
|
நான் குத்புதின் அன்சாரி, வயது 29. தையல்காரன். அம்மா, மனைவி, மூன்று வயதுள்ள மகள் என சுருங்கியிருக்கும் என் குடும்பம் அகமதாபாத் பாபு நகர் காலனியில் வாழ்கிறது. உங்களுக்கு என்னைத் தெரியும். நான் காற்றின் தொடக்க காலமான ஜனவரியில் பாபு நகரில் மிகவும் உயரமான கட்டடத்தின் மேலே ஏறி பட்டம் விட்டவன். கடையை மூடிவிட்டு இரவில் வீட்டுக்குப் போகும்போது காசிருந்தால் என் மகளுக்கு மிகவும் பிடித்தமான பாஸிலாலின் பட்டர் ஸ்காச் ஐஸ்கிரீம் வாங்குவேன். சில நேரங்களில் அமைதியாய் இருக்க வேண்டும் என்று தோன்றினால் எல்லீஸ் பாலத்தின் மேலே ஏறிநின்று நீருடனோ அல்லது நீரற்று வெறுமையோடோ இருக்கிற சபர்மதி ஆற்றைப் பார்த்துக்கொண்டிருப்பேன். நான் பார்க்கப் பார்க்க வளர்ந்த பாபுநகரின் சில பெண் பிள்ளைகள் தங்களின் திருமணத் துணி தைக்க வரும்போது, அதன் தொடர்ச்சியாக மனதில் எழும் இன்ப அலைகளை, நான் ரிலீப் ரோட்டில் பரப்பியிருக்கும் கடைகளிலிருந்து சிவப்பு கண்ணாடி வளையல்கள் வாங்கி, எங்களின் ஒரே அறையைக் கொண்ட வீட்டில் மிகவும் ரகசியம் காக்கும் கொசு வலைக்குள் என் மனைவியின் கைகளில் அணிவித்துப் பார்ப்பேன். மாதத் தவணையில் 14 இன்ச் டி.வி. வாங்கிய போது நான் ஏலக்காய் டீ போடுவதையும் கற்றுக்கொண்டேன். க்யோம்கி, சால்பி, கட்பஹீ"தி போன்ற சீரியல்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அம்மாவும், மனைவியும் நான் தயாரித்த டீயை நன்றி கூட சொல்லாமல் வாங்கிக் குடித்தது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. என் அம்மாவுக்கு சினிமா பார்ப்பதைவிட அதிகமான பிரியம் வெளியே சென்று தின்பண்டங்கள் வாங்கித் தின்பதில்தான் இருந்தது. வழியோரக் கடைகளில் கபாபும், கறி குருமாவும், வறுத்த கறியும், சங்கல்ப் ரெஸ்டாரண்டில் கொண்டு வந்து வைக்கும் ஃபேமிலி ரோஸ்டைப் பார்த்து என் மகள் கைகொட்டிச் சிரித்து உண்பதும், கோபி டைனிங் ஹாலில் தயிர் சேர்த்துச் செய்த தின்பண்டமும், கத்தரிக்காய், வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்த உந்தியாவுமாக சுத்த வைஷ்ணவ குஜராத்தி பட்சணமும் அம்மாவை சந்தோஷப்படுத்தும். மாதத்தில் ஒரு முறையாவது இந்த சந்தோஷத்தை அம்மாவுக்குக் கொடுக்க சீரியல்கள் இல்லாத மாலைகளில் ஆட்டோ வைத்துக்கொண்டு போவோம். ஆனால் நான் குத்புதின் அன்சாரி. வருங்காலத்தின் ஒரு ஞாபக சின்னமானேன். டில்லிக்கு இந்தியா கேட் போல. ஜெய்ப்பூருக்கு ஹவா மஹால் போல. கல்கத்தாவின் ஹெளரா பிரிட்ஜ் போல. பம்பாய்க்கு கேட் வே ஆப் இந்தியா போல. அகமதாபாத்திற்கு ஒரு சின்னமில்லாமல் இருந்தது. காந்தியின் சபர்மதி ஆஸ்ரமம் அகமதாபாத்தின் சின்னமாகாமல் போனதற்கு, அது அவ்வளவு எடுப்பாக இல்லாமல் போனதே காரணம். சின்னம் பிரதானமானது. சின்னமில்லாத நகரங்களுக்கு முகமில்லை. சித்தி சையத்தின் மசூதியில் கல்லில் செதுக்கி வைத்த மரத் துண்டுகளுடன் கலந்து கிடக்கும் மர உருவம் ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் நினைவாகிப் போனது. குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாமல், அடையாளம் காண முடியாமல் போன நாட்களில் தான் நான் அதைச் செய்தேன். 2002ம் வருடம் எப்போது இல்லாத காற்றையும் சேர்த்துதான் தொடங்கியது. வடக்கு கிழக்காக அடித்த காற்று என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தூங்கு மூஞ்சி மரத்தை அதிகமாக சப்தமிட வைத்த போது இந்த வருடம் பட்டம் விட மிகவும் தோதாக இருக்கும் என நான் நினைத்தேன். நான் பாய்சந்தைப் பார்க்கப் போனேன். பள்ளியில் என்னுடன் ஒன்றாய்ப் படித்தவனும், ரெயில்வேயில் வேலை செய்பவனுமாகிய பாய்சந்த்தான் எங்களுடைய ஏரியாவில் மிகவும் உயரமாகப் பட்டம் விடும் ஆள். நான் பாயிடம் "இம்முறை தைமாத சங்கராந்தியில் உன்னைத் தோற்கடிப்பேன்" என சொல்லியிருந்தேன். அவன் என் முதுகில் தட்டியபடி சொன்ன "சரி செய்" என்ற வார்த்தைகள் என்னைக் குளுமையாக்கவேயில்லை. அன்றே நான் அயூப் பதங்க வாலாவின் கடைக்குப் போய் பிரம்பில் ஒட்ட வைத்துச் செய்த மூன்று பட்டங்களும் நூலும் வாங்கினேன். அதற்குப் பிறகுதான் அம்மாவின் வேலை தொடங்கியது. பழைய பாட்டில்கள் விற்கும் கடையிலிருந்து பாட்டில்கள் வாங்கி அம்மாவிடம் உடைத்துக் கொடுத்தேன். நான் தைத்துக் கொடுத்த கனமான கை உறைகளைப் போட்டுக் கொண்ட, அம்மா கண்ணாடிச் சில்லுகளை வெற்றிலை இடிக்கும் சின்ன உரலில் போட்டுத் தூளாக்கினாள். அரைத்த கண்ணாடித் தூளைப் பசையுடன் கலந்து பட்டத்தின் நூலில் தடவிக் காய வைத்தேன். தைமாத சங்கராந்தி தினத்தன்று வானத்தில் இடமே இல்லாமல் போனது. பல வண்ணத்தில் பறந்த பட்டங்களின் கூட்டத்தால் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரன கபூத் பாஜ் அசன் ஷேக்கின் வீட்டுப் புறாக்கள் அன்று கூட்டிலேயே முடங்கிக் கிடந்தன. என்னை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பிக்கும் இளம் பச்சை நிற கண்களைக் கொண்ட வானத்தின் மேலே வாயு மண்டலத்தில் சுழலும் காற்றின் ஆதியைத் தேடிக் கொண்டிருந்தேன். சட்டென ஆகாயத்தில் நான் பார்த்த ஒரு பருந்து கறுப்புப் பொட்டு பட்டக் கயிற்றை ஒரு முறை உலுக்கிவிட்டது. என் பட்டம் பருந்தைத் தாங்கி நிற்கும் வாயுவின் சுழலுக்குள் நகர்ந்தது. பிறகு அது தானாகவே உயரே போகத் தொடங்கியது. மனசு நிராதரவாய் போக ஆரம்பித்தது. உயரத்தின் நடுக்கம் என்னைப் பாதிக்க ஆரம்பித்தபோது நான் நூலைத் தளர்த்திப் பட்டத்தை லேசாக்கினேன். அன்றைக்கு எங்கள் ஏரியாவில் மிக அதிக உயரம் பட்டம் விட்டவன் நானாகத்தான் இருந்தேன். நான் பட்டத்தைக் கீழே இறங்கினேன். இனி தான் சண்டையே தொடங்கும். முதலில் நான் கிழித்து எறிந்தது பாய்சந்தின் பட்டத்தைத்தான். கண்ணாடிப் பசை பூசிய என் பட்டக் கயிற்றில் வெயில் பட்டபோது வாளின் அலகுபோல ஜொலித்தது. நான் மைதானத்தில் ஓடிக்கொண்டே போய் பல பட்டங்களின் கயிற்றையும் அறுந்தெறிந்தேன். அப்போதுதான் பிந்தியா என் சட்டையைப் பின்னால் பிடித்து இழுத்தபடி சொன்னாள். "பர்ஜி சாச்சா என் பட்டத்தை அறுக்க வேணாம்." பிந்தியா பிறந்தபோது அவளுக்குப் பெரிய பின் போட்டுக் குத்தப்பட்ட நாப்கினைத் தைத்து கொடுத்தது நான்தான். பிறகு சின்ன கவுன்கள். ஃப்ராக்குகள். இப்போது பாவாடை சட்டையும் கூட என் அளவுகள் குறிக்கும் புத்தகங்களினூடாக அவள் வளர்ந்து வளர்ந்து இதோ பன்னிரெண்டு வயதில் நிற்கிறாள். "நான் அறுப்பேன். போட்டிக்கு வரலேன்னா நீ ஏன் மைதானத்துக்கு பட்டத்தை எடுத்திட்டு வாறே." நான் கேட்டபோது பிந்தியா எனக்குப் பட்டத்தின் கதையைச் சொன்னாள். பட்டமென்றால் பெண் குழந்தைகளுக்குக் காதலன். ஆண் குழந்தைகளுக்குக் காதலி. கயிறுதான் அவர்களின் காதல். அது அறுத்தெறியப்படும்போது காதல் உடைபடுகிறது. கயிறு அறுந்த பட்டத்தை மீண்டும் மீட்டு எடுக்கும்போது அது புனர்ஜென்மம். அதனால் பிந்தியா என்னிடம் சொன்னாள். "பாஜி சாச்சா ஒரு போதும் என்னுடைய கயிற்றை அறுத்தெறிய வேண்டாம்." நான் சிரித்தேன். அவள் திரும்பவும் சிரித்தபோது உதட்டுக்குப் பக்கத்தில் விழுந்த குழிகள் பொய்யாய் கவலைப்பட்டதையும் பார்த்தேன். வீட்டுக்குத் திரும்பி வரும்போது என்னைச் சுற்றியும் மகர ராசியில் காதலும் காமமும், மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் சந்திப்புகளுமாய் தொடர்ந்த வண்ணம் இருந்தது. என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனான அசன் ஷேக் மொட்டை மாடியிலிருக்கும் தனி அறையில் புறாக்களுக்கிடையில் தங்கியிருந்தான் கீழ்போர்ஷனில் வாடகைக்கிருப்பவர்கள் தரும் பணத்தை வைத்துக் கொண்டு ஷேக் புறாக்களுக்கு தீனி வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தான். நடுவில் ஆக்ராவிலோ, டெல்லியிலோ போய் "சிக்கந்தரி,", "காபூளி" போடற உயர் ஜாதிப் புறாக்களை வாங்குவார். அசன் கை தட்டினால் புறாக்கள் மாடியின் பல பாகங்களுக்கும் பறந்து, வானத்தில் போய் ஒன்றாய் குழுமி, தூரமாய் பறந்து, விமானம் திரும்புவதுபோல சாய்ந்து சாய்ந்து திரும்பி, மீண்டும் வளைந்து மாடிக்கு வந்து சேரும். லாவகமாகச் சுழன்று ஆடும். நர்த்தகியின் உடை வட்டமிடுவது போல அப்புறாக்கள் ஒரு முறை சுழன்று தான் மாடியில் இறங்கும். புறாக்களின் சிறகசைப்பும், உடல் குலுக்கமும், பொட்டுப் பொட்டாய் கண் சிமிட்டி வீட்டிற்குத் திரும்பி வருவதின் சந்தோஷமும் பார்த்து என் மகள் எப்போதும் கைதட்டிச் சிரிப்பாள். அவள் கைகளில் அமர்ந்து மட்டுமே தீனியைக் கொத்தும் அனுமதியைப் புறாக்களுக்கு அசன் ஷேக் கொடுத்திருந்தார். பிப்ரவரியிலேயே அடைகாத்து உட்கார்ந்த புறாக்கள் ஏதோ நடக்கப் போவதை முன் கூட்டியே தெரிவித்ததாய் அசன் ஷேக் சொன்னார். புறாக்கள் எத்தனை முறை கை தட்டினாலும் வெளியே பறந்துபோக மறுக்கின்றன. ஏதோ நடக்கப் போகிறது. அன்றே கோதுமை மாவும், கடலை மாவும், பருப்பும், உருளைக்கிழங்கும் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன். கேஸ் சிலிண்டர்கள் மட்டும் கிடைக்கவில்லை. என்னுடைய பதட்டத்தைப் பார்த்து அம்மாகூட திட்டினாள். "நீ என்ன பைத்தியக்காரத்தனமாக என்னென்னவோ செய்யறே. இது விலை அதிகமாயிருக்கும் காலம். இப்போ போய் எல்லாத்தையும் வாங்கி வைக்கிறயே. அகமதாபாதிகளும் குஜராத்திகளும் கருணை உள்ளவர்கள். சைவர்கள் பாபுஜியின் ஆட்கள், ஒரு எறும்பைக் கூட நோகடிக்காமல், ஜீவராசிகள் ஏதாவது இருக்குமா என்று தரையையே பார்த்து நடக்கும் ஜைனர்கள். அவங்க கடவுள் யாரு? பகவான் ரஞ்ஜோத் யுத்தத்தில் பங்கு கொள்ள மறுத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அந்த பைத்தியக்காரன் பொண்டாட்டி புள்ள இல்லாத புறா வளக்கிறவன் ஏதோ சொன்னான்னு ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கற." அம்மா சொன்னது சரிதானென்று எனக்குத் தோன்றிய ஒரு நாள் இரவுதான் பாய்சந்த் என் வீட்டுக் கதவைத் தட்டினான். "குத்புதீன்..... " பாய்சந்தால் மூச்சு விட முடியவில்லை. "நான் வேலையை முடிச்சிட்டு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேரா இங்கு வரேன். பரோடாவுக்குப் பக்கத்தில் கோத்ரா ஸ்டேஷனில் வெளியில் ஒரு போகி கொளுத்தறாங்க. குத்புதின், நம் கிளாசில படிச்சாளே சாந்திபென் எப்பவும் கணக்கில் ஃபஸ்டா வருவாளேடா. அவளும், அவ புருஷன் கொழந்தை எல்லாம் செத்திட்டாங்க. டவுன்ல மைக் வைச்சிட்டாங்க. அயோத்தியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த சாந்தி பெண்னைப் போன்ற ராமபக்தர்களைக் கொன்று கோத்ரா அவுட்டரில் குடியிருக்கும் உன் மதத்துக்காரர்களுக்கு எதிராக .... எனக்கு பயமாக இருக்கிறது...." அசன் ஷேக்கின் புறாக்கள் சொன்னது சரி. "நான் வரும் வழியிலேயே விரேன் ஷாவின் டாடா சுமோவை புக் பண்ணிட்டேன். நானும் ஆஷாவும் குழந்தைகளும் உதய்ப்பூரில் இருக்கும் அண்ணன் வீட்டுக்குப் போகப்போறோம். குத்புதீன் நீ என்ன செய்யப்போற? இங்கேயிருந்து கிளம்பிடு. இதைச் சொல்லத்தான் நான் இப்ப ஓடிவந்தேன். வரேன் பார்க்கலாம்." நான் ரொம்ப நாட்களுக்குப் பிறகு அம்மாவின் முகத்தில் பயம் படருவதை உணர்ந்தேன். இன்றைய இரவு என் மகளைத் தவிர யாரும் தூங்கவில்லை. மறுநாள் காலையிலும் நான் வாசல் கதவோ ஜன்னலோ திறக்கவில்லை. அவசரப்பட்ட மகளுக்காக நான் பின் கதவைத் திறந்து கொடுத்தேன். அவள் மண்ணை வாரி விளையாடத் தொங்கினாள். சிறிது நேரத்தில் ஏதோ சப்தம் கேட்பதை உணர்ந்தவுடனேயே நான் காதைக் கூர்மையாக்கினேன். என் மகள் ஒரு புறாவைப் பிடித்தபடி உள்ளே வந்தாள். "அழகாயிருக்கு இல்ல புறா" அவள் என் கையில் கொடுத்த புறா கழுத்து முறிந்து இறந்து கிடந்தது. நான் வெளியே எறிந்தபடி பார்த்தபோது அசன் ஷேக்கின் உரத்த சப்தம் கேட்டது. "அய்யோ என் புறாக்கள்" திடுக்கிட்டுத் திரும்பியபோது கலகக்காரர்கள் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த அசன் ஷேக்கினைத் தான் நான் பார்த்தேன். பிறகு அவர்கள் என் வீட்டிற்கே வந்துவிட்டார்கள். அவர்கள் என் வீட்டைச் சுற்றியும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தார்கள். மூடி பிடுங்கப்பட்ட சிலிண்டர்களைத் தீயில் எறிந்தபோது அதில் என் அம்மாவும் மனைவியும் மகளும் மூலைக்கொருவராய் சிதறிப்போனார்கள். எப்படி என்றே தெரியாமல் பின் வாசல் வழியாக ஓடிப்போனேன். வெளியே வந்தபோது மண்ணெண்ணெய் பாட்டில்களும், பெட்ரோல் கேன்களும், வாட்களும், கோடாலிகளுமாக என்னைச் சுற்றி நின்றவர்கள் நம்மைப் போலவே மனிதர்களாக இருந்தார்கள். அவர்களின் இடுப்பின் பருமன் என்னுடைய அளவுக் குறிப்பேட்டில் பதிவாகியிருந்தது. நான் தைத்துக் கொடுத்த உடைகள் அணிந்த பெண்கள் என்னடைய மனைவியுடன் "கோன் கியோம் கீ சாஸ்பீ கபி பஹீதி" என சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத ஆட்கள் வாட்களும் சூலங்களும் போர்டுகளுமாகக் காட்சியளித்தார்கள். அவர்கள் கையிலிருந்த போர்டுகள் சொன்னது. "முஸ்ஸிம்களின் கடைகளிலிருந்து எதையும் வாங்காதே" நான் என்னடைய பச்சைக் கண்களுக்கு நடுவில், ப்ரியத்தை இழுத்துப் பூட்டி விட்டு கருங்கல் சீழ்பிடித்து நிற்கும் பிந்தியாவைப் பார்த்தேன். அவளுடைய அம்மாவின் கையில் அரிவாள் இருந்தது. நான் அங்கே குழுமியிருக்கும் "ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ்"காரர்களிடம் என்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சினேன். அப்போதுதான் ஒரு துப்பாக்கியின் ஸேப்டி காட்ச் மாற்றும் சப்தம் கேட்டது. சட்டென நான் திரும்பிப் பார்த்தபோது ஒரு தங்க முடியுள்ள வெள்ளைக்காரன் கேமராவை கிளிக் செய்வதைக் கவனிக்க முடிந்தது. ம்... பிறகு நடந்ததை நீங்கள் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். குத்புதின் அன்சாரியையும் குடும்பத்தையும் வெறித் தாக்குதலோடு சுற்றி வளைத்திருந்தார்கள். அந்த ஆள் போலீஸ்காரர்களிடமும் RAF காரர்களிடமும் தன்னுடையதும் தன் குடும்பத்தினுடையதும் உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சினான். மாலை ஆறு மணிவரை நீண்டு கொண்டிருந்த இந்த அக்னிப் பரீட்சை முடிவுக்கு வந்தது. மிலிட்டரி வந்தபோது தான். மிலிட்டரிக்காரர்கள் அவர்களுடைய ட்ரக்கில் என்னை ஏற்றிக் கொண்டு என் வீட்டிற்குப் போனார்கள். இடிபாடுகளுக்கிடையில் என் அம்மாவையும், என் மனைவியையும், மகளையும் கண்டு பிடித்தார்கள், எங்களை ஷா அலம் முகாமில் கொண்டு போய்விட்டார்கள். ராய்ட்டரின் புகைப்படக்காரர் எடுத்த என் படம் பத்திரிகையில் வந்தது. பார்வை நிலைக்காமல் அலை பாய்ந்த என் கண்ணில் பச்சை நிறம் இருண்டு போக, நிறைந்த கண்ணீருமாய், ஈரமான பத்திரிகைத் தாளில் உறைந்துபோன என் கூக்குரலும், கைகூப்பியவாறு நான் கேட்கும் மன்னிப்பும் சமீபித்திருக்கும் மரணத்தை உங்களுக்குத் தத்ரூபமாக்கியிருக்கும். நான் அகமதாபாத்தின் சின்னமானேன். நான் சின்னமான சாலையின் இருபுறமும் பிணங்கள் கிடந்தன. உயரமான கட்டிடங்கள் எரிவதால் வானத்தில் கரும்புகை படர்ந்திருந்தது. அவற்றின் இடையிலான நான் இதுவரை காணாத பருந்துக் கூட்டங்களைப் பார்த்தேன். வழி நெடுகிலும் பள்ளிக் குழந்தைகளின் பாதி எரிந்த சிவப்பு ரிப்பன்கள் கிடந்தன. பெண்களின் ரத்தம் தோய்ந்த உள்ளாடைகள், கிழித் தெறியப்பட்ட பாடப்புத்தகங்கள். உடைந்த கண்ணாடி வளையல்கள். பாதி எரிந்த குடும்ப ஃபோட்டோ ஆல்பங்கள் சுவர்களில் முஸ்லீம்களின் கடைகளை பகிஷ்கரிக்கச் சொல்லும் விளம்பரங்கள், தலைபோன பொம்மைகள், வின் ஸ்கிரீன் உடைந்து பாதி எரிந்த கார்கள், தீ அணைந்து தீராத சைக்கிள் ரிக்ஷாக்களின் குவியல்கள், திறந்து வயிற்றிலிருந்து உருவின் குடல்போல வெளியே இழுத்தெறியப்பட்ட அனுமல்லிக்கினுடையதும், பங்கஜ் உத்தாஸினுடையதும் ஆடியோ கேஸட்டுகள், அதிகம் அடி வாங்கிக் கொடுத்த மார்க் குறைந்த ரேங்க் கார்டுகள், பட்டங்கள், கிழித்த பட்டங்கள் .... மிதித்து நசுக்கப்பட்ட பட்டங்கள்... கயிறு அறுந்த பட்டங்கள். நான் பட்டங்களைப் பார்ப்பதில்லை என்று தீர்மானித்தாலும் அவை எல்லா இடங்களிலும் ப்ரத்யட்ச்மானது. அம்மா அடிக்கடி சொல்வதை யோசித்துப் பார்த்தேன். "நீ அன்சாரி, மோமின், தையல்காரன், ஒரு போதும் உன் கைகளால் நூல் அறுக்கப்படக்கூடாது." ராய்ட்டரின் புகைப்படக்காரல் நூலறுந்த நகரத்தின் பதிவாய் என்னை ஆக்கியிருந்தார். மறுவாழ்வு இல்லத்தின் பெண்கள் பகுதியில் தனியாய் வாழும் என் குடும்பத்தை நான் பார்க்கவில்லை. நான் இரவு பகலாய் நடந்தேன். எதை எதிர்பார்த்தென்று தெரியாமல் நடந்தேன். என் யாத்திரைக் கிடையில் மண்ணில் ஏதோ மின்னுவதை உணர்ந்தேன். அது ஒரு உடைந்த கண்ணாடித் துண்டாக இருந்தது. அதன் மேலே ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருந்தது. நான் என்னுடைய முகத்தைப் பார்த்து ஐந்தாறு நாட்களாகியிருந்தது. முகத்தில் சின்ன சின்னதாய் ரோமங்கள் படர்ந்திருந்தன. கண்களில் முழுமையாய் பயம் போகவில்லை. நான் மறந்துபோன ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும்போல இருந்தது. "அது சிரிப்பு" எத்தனை முறை முயன்றபோதும் முகம் விகாரமான தேயல்லாமல் சிரிக்க முடியவில்லை. பக்கவாதக்காரனை உருவி விடுவதுபோல என் கன்னத்தையும் வாயைச்சுற்றியும் அழுத்திவிட்டேன். அப்போதுகூட என் பிரதிபிம்பம் சிரிக்கவில்லை. என் முகத்தின் ரத்த நாளங்கள் தளர்ந்து கிடந்தன. |
ஒரு நரி பசியினால் இரை தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெருஞ்சத்தம் கேட்டது. அது கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது. தன்னைப்போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று புறப்பட்டிருக்கிறதோ என்று அது பயந்தது. தன் பசி தீருமுன் தான் பிறிதொரு கலங்கியது. இருந்தாலும், இது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது. மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக் கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது. அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது. நரி, மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர் முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமாக அசையும் போது, அந்த முரசைத் தாக்கியது. அது தாக்கும் போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது. இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரி, பூ! வெறும் தோல் முரசுதானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது.
|
திண்ணையில் உட்கார்ந்திருந்த கருப்புசாமி, பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டது போல முகம் வாடிப் போய் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு தரையையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். அவனுக்கு மூன்றடி தூரம் தள்ளி அருகாலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த செல்லம்மாள் கருப்புசாமியையே பார்த்தவாறு இருந்தாள். அவன் வாயைத் திறப்பது மாதிரியோ இவளைப் பார்ப்பது மாதிரியோ தெரியவில்லை. கடைசியில் செல்லம்மாள்தான் பேசினாள். ''பெரிய பயலெ செத்தே கொண்டாந்து காட்டிட்டுப் போயன்; புள்ளெ கண்ணுலியே நிக்குறாப்லெ இருக்கு. ஒம் பொண்டாட்டி புள்ளிவுளெ ஆயிச்சிக்கிட்டுவந்து இங்க ரெண்டுநாள் இருக்கச் சொல்லென். புள்ளுவுளுக்குக் கூப்புடுற மாரியா பேரூ வச்சியிருக்கிற, சுரேஷ் மகேஷ்ன்னுகிட்டு.'' ''அனுப்புறன்'' ''என்னாத்தெ அனுப்புன? புள்ளிவோ இங்க வந்து வல்லிசா ஒரு வருசம் ஆவப்போவுது. இந்த வருசப் பொங்கத் தீவாளிக்குக்கூடவல்லெ.'' ''லீவ் இருந்தாத்தான அனுப்புறதுக்கு?'' ''ஒனக்குத்தான் வருசம் முன்னூத்தி அறுவது நாளும் மூச்சுவுட முடியாத அளவுக்கு வேலெ. புள்ளிவுளுக்குமா லீவ் இல்லெ'' என்று கேட்ட செல்லமாளுக்கு லேசாகக் கண்கள் கலங்கின. திடீரென்று அவளுடைய முகம் சிவந்தது. ''நீ இந்த ஊட்டுலெதான் பொறந்தங்கிறத மறந்துப்புடாத ஒம் புள்ளிவுளுக்கு இந்த ஊரு தண்ணீய குடிச்சா சளி புடிச்சிக்கும். இந்த ஊட்டுலெ படுத்தா கொசி கடிச்சி ஒம் புள்ளிவோ செத்துப்போயிடும். இல்லியா? எனக்கு என்னா ஆனாலும் ஒனக்கு சம்மதம். அப்படித்தான. நானும் ரெண்டு புள்ளெய பெத்து வளத்தவதாண்டா.'' கருப்புசாமி, செல்லம்மாளை முறைத்துப் பார்த்தான். லேசாகப் பல்லைக் கடித்தான். பிறகு தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் செல்லம்மாள். அப்போது வாசலில் கூட்டமாக நான்கு ஐந்து பன்றிகள் வந்து தலையை முகர்ந்து பார்க்க ஆரம்பித்தன. ''சு..சூ'' என்று சொல்லி சத்தம் போட்டுப் பன்றிகளை விரட்டினாள். பன்றிகள் செல்லம்மாள் போட்ட சத்தத்திற்கு அசைந்து கொடுக்காததால், ''இந்த சாண்டெ குடிச்சவன் ஊருலெ இதுவோ தொல்லதான் பெரும் தொல்லெ கொள்ளெ நோவு வந்து ஒண்ணும் சாவ மாட்டேங்குது பாரன்'' என்று சொல்லி திட்டிக் கொண்டே எழுந்து வந்து பன்றிகளை விரட்டிவிட்டாள். கொஞ்சம் நேரம் வாசலில் நின்று தெருவில் ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்த்தாள். ''என்னா வெயிலு அடிக்குது'' என்று சொல்லிக்கொண்டே வந்து முன்பு உட்கார்ந்திருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டாள். ''நம்ப எதில் ஊட்டுக்காரனோட புள்ளெ செத்தப்ப எயவு வச்சியும் நீ வந்து தலெய காட்டுலன்னு மனக்கொறப் பட்டுக்கிட்டான். எதிரு ஊட்டுலெ நடக்குற நல்லது கெட்டதுக்கே போவலன்னா, அப்புறம் எப்படி ஒருத்தர் மூஞ்சியிலெ ஒருத்தர் மூச்சிக்கிறது? காசி பணம் ''வா''ன்னா வரும், ''போ''ன்னா போவும். மக்க மனுச அப்பிடியா? இந்தூர்ல நம்பளுக்குன்னு நாலு பேரு வாணாமா?'' என்று சொன்னவள் கடுப்புடன் ''ஒம் மாமியா ஊட்டு சனங்களே போதுமின்னு இருக்கியா? ஆனவங்களோ, ஆவாதவங்களோ சொன்ன மொறமக்கிப் போயி தலெய காட்டுறதுதானெ மருவாத கோடி கோடியா பணமிருந்தாலும்கூட வராது தம்பி'' என்று அவள் சொன்னதைக் காதில் வாங்கதவன் மாதிரி கைக்குட்டையால் புறக்கழுத்தைத் துடைக்க ஆரம்பித்தான். வலது காலின் பெருவிரல் நகத்திலிருந்த அழுக்கை எடுத்தவாறே விசும்பலான குரலில், ''ஒங்கப்பனாலயும் சரி, ஒங்கப்பன் ஊட்டுச் சனங்களாலயும் சரி, எந்தக் காலத்திலியும் வா, வாத்த ஆதரவு கூட எனக்கு இருந்தது இல்லெ. இப்ப பெத்த புள்ளெயாலயும் இல்லன்னு ஆயிப்போச்சி. நடக்க முடியாத காலத்திலியும் நானே ஒயச்சி நானே திங்குறன்'' என்று சொன்ன செல்லம்மாளுக்குக் கண்கள் கலங்கின. முந்தாணையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். இரண்டு மூன்று முறை மூக்கை உறிஞ்சினாள். ''பேசாம அங்க வந்து இரு'' என்றான் கருப்புசாமி. என்னாத்தெ வந்து இருக்கிறது? என்ற ஒறவுலெ இருக்கிறது? விடிஞ்சதும் பல்லெ விளக்கிக்கிட்டுப்போனா வெளக்கு வச்ச பெறவு தான் நீ வருவ. நேரா நேரத்துக்கு ஒம் பொண்டாட்டி சோத்தக் கொண்டாந்து எங்கிட்டெ நாயிக்கி வைக்கிறாப்ல வச்சிட்டுப் போயி மொடங்கிக்குவா. எங்கிட்டெ பேசுனா அவளோட அந்துசி கொறஞ்சிடும் பாரு. நாள் முயிக்க தனியா காட்டுல குந்தி கெடக்குறாப்ல கெடக்கணும். இங்க இருந்தாலும் நாலு எடத்துக்குப் போனமா, நாலு பேர பாத்தமா, நாலு வாத்தெ வடிச்சமான்னு பொயிது போவும்.'' ''நான் அவளெ கேக்குறன்.'' ''என்னாத்தெ கேட்டெ? உள்பாவாடெ ஒண்ணு வாங்கியான்னு ஒங்கிட்டெ சொல்லி வருசம் ஒண்ணாச்சு. உடுத்துன துணிக்கி மாத்துத் துணி இல்லாம கெடக்குறன். பள்ளிக் கூடத்திலெ பொட்டெ புள்ளிவுளுக்குக் கொடுத்த பாவாடெயில் ஒண்ணு வாங்கித்தான் கட்டிக்கிட்டு கெடக்குறன். ''நேரமாச்சு நாள் கௌம்பட்டுமா?'' ''நீ ஏயாவது படிக்கிறப்ப மரத்திலிருந்து கீய வியிந்து பீச்ச கையி ஒடஞ்சிப்போச்சி. ஒன்னெத் தூக்கிகிட்டு நான் ஊர் ஊரா அலஞ்ச அலச்ச இருக்கே. அது அந்த ஆண்டவனுக்குக் கூட பொறுக்காதுடா. கை கூடி வராணுமேன்னு ராத்தூக்கமில்லாம, பவ தூக்கமில்லாம ஆறு மாசம் கெடந்தான் தம்பி'' என்று சொல்லும்போதே செல்லம்மாளுக்கு அழுகை வந்துவிட்டது. அவள் அழ ஆரம்பித்ததும் கருப்புசாமிக்கு அந்த இடத்தில் உட்கார முடியாமல் போய் விட்டது. சங்கடமாக உணர்ந்தவன் மாதிரி கிளம்பிவிடலாம் என்று நினைத்தாள். ஏதோ சொல்ல வாய் எடுத்தவன், ஒன்றும் சொல்லாமல் தலையைக் கவிழ்த்துக்கொண்டு உள்ளங்கைகளில் இருந்த ரேகைகளைப் பார்க்க ஆரம்பித்தான். அழுகையினூடே. ''இந்த வருச திருநாவுக்குக்கூட நீவல்லெ. இன்னிக்குக்கூட ஒம் பொண்டாட்டி ஊட்டு சொந்தக்காரங்க சாவுங்கிறதாலெ வந்த'' என்று சொன்னாள். ''எங்க முடியுது'' ''இப்ப எப்பிடி முடியும்? நான் சாவுற அன்னிக்காச்சும் வர முடியுமான்னு பாரு. ''கருப்புசாமி வெடுக்கென்று தலையைத் தூக்கிக் கோபமாக செல்லம்மாளைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்காமல் சளியைச் சிந்தித் தரையில் தேய்த்தாள். அப்போது தெருவில் போய்க் கொண்டிருந்த மூக்கன், கருப்புசாமியைப் பார்த்ததும் விசாரிக்க ஆரம்பித்தான். ''எப்ப கருப்புசாமி வந்த? சாவுக்கு வந்தியா? ஒம் பொண்டாட்டி புள்ளெயெல்லாம் எப்பிடி இருக்கு? வயசான காலத்திலெ ஒங்கம்மாவ தனியாவுட்டு வச்சியிருக்கியே. அது இன்னம் எம்மாம் காலத்துக்குத் தான் பாடுபட்டு சாப்புடும்? என்று மூக்கன் தொணதொணவென்று பேச ஆரம்பித்ததும், செல்வம்மாள் தான் இடைமறித்து, ''அவன் பாக்காம வேற யாரு பாக்கப்போறா? வெயிலுல நிக்குறியே மாமா? வெயில் தார வாயன் பேசிக்கிட்டிருக்கலாம். தம்பி இன்னிக்கி ஊர்லதான் இருக்கப் போறான்'' என்று சொல்லி மூக்கனைத் தொடர்ந்து பேசவிடாமல் அனுப்பிவைத்தவள் ''உள்ளார வந்து குந்துடா தம்பி. தெருவுலெ போறவங்க வற்வங்களுக்கெல்லாம் பதிலு சொல்லி மாளாது. ஒருத்தங்க கண்ணு மாரி இருக்காது. அப்பறம் காச்ச தலவலின்னு வந்துடும். அந்தக் காலத்திலிருந்தே ஒனக்கு நோவு தாங்காத ஒடம்பு'' என்று சொல்லி, அவள் எவ்வளவோ கட்டாயப்படுத்தியும், கருப்புசாமி உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவில்லை. ''நான் போறன்'' என்று சொன்னான் கருப்புசாமி. ''புளி ரெண்டு உருண்ட தரன் எடுத்துகிட்டு போ'' என்று சொன்ன செல்லம்மாள் எழுந்து வீட்டுக்குள் போய் அடுக்குப் பானைகளை இறக்கி உருண்டை உருண்டையாக உருட்டி வைத்திருந்த புளியை எடுத்துவந்து ஒரு பையிக்குள் போட்டு அவனிடம் கொடுத்தாள். உட்காரப்போனவள், ''மொச்ச பயிறு ஒர படி ஆவும். இங்க யாரு இருக்கா திங்க. எடுத்துக்கிட்டுப்போயி புள்ளிவோகிட்டெ கொடுக்குறியா?'' என்று கேட்டவள், அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கூடக் கேட்காமல் மீண்டும் வீட்டுக்குள் போய் அடுக்குப் பானைகளை இறக்கி, மொச்சைப் பயிரை கொண்டுவந்து அவனிடம் கொடுத்தாள். முன்பு போலவே உட்கார்ந்து அவனிடம் பேச ஆரம்பித்தவள், சட்டென்று நினைவுக்கு வந்தது மாதிரி, ''நம்ப ஊரு ஏரியிலெ மீனு புடிக்கப் போனப்ப ரெண்டு கொயம்புக்கு ஆவுறாப்லெ மீனு ஆப்புட்டுது. ஒருத்திக்காகப் போயி மீனுகொயம்பு வைக்கிறதான்னு காயப் போட்டுட்டன். கருவாடுன்னா புளிச்சிப்போன சோத்துலெ உப்புப்போடாமகூட திங்கறவனாச்சே நீ! ஒனக்குன்னு வத்த போட்டு வச்சியிருக்கன் எடுத்தாரட்டுமா?'' என்றாள். ''சரி'' சின்னப்பிள்ளை மாதிரி வேகமாக எழுந்து வீட்டுக்குள் போனவள், அடுக்குப்பானைகளை இறக்கி சவ்வுத்தாள் காகிதத்தில் முட்டணமாகக் கட்டி வைத்திருந்த கருவாட்டை எடுத்துவந்து கருப்புசாமி வைத்திருந்த பைக்குள் செருகிவைத்தாள். ''விசியமிருந்தா ஆள் வுடு, வரென்'' என்று சொல்லிவிட்டு எழுந்த கருப்புசாமியிடம், ''அக்காவ ஒரு எட்டுப்போயி பாத்துட்டு வாடா தம்பி'' என்று சொன்ன செல்லம்மாளுக்கு லேசாகக் கண்கள் கலங்கின. ''பாக்குறன்'' ''படிச்சன் படிச்சன்'னு சொல்லிக்கிட்டு திரியிற பயலுக்கு எம் பொண்ணெ கொடுக்கமாட்டன்னு சொன்ன ஒங்க மாமனாரு ஊட்டுச் சனங்க இப்ப ஒனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களாயிட்டாங்க! யாரப் பார்த்துப் பொறுக்கிப் பயன்னு சொன்ன? என்னிக்கிருந்தாலும் எந் தம்பி கவுருமண்டு வேலெக்கிப் போவத் தான் போறான். ராசாமாரி கால ஆட்டிக்கிட்ட சாப்புடத்தான் போறான், அதெப் பாத்துட்டு இந்த ஊரு பயலுவோ மூக்குமேல வெரல வக்கிறத நான் பாக்கத்தான் போறன்னு சொல்லி ஊடேறிப் போயி சண்டெப் போட்ட ஒத்தெ அக்காக்காரிய பாக்கெ ஒனக்கு மனமில்லெ. கோயி குஞ்சிய தூக்கிப் பறாந்துக்கு எற கொடுத்துட்டு நாலு புள்ளிவுளெ வச்சிக் கிட்டு நாலு புள்ளிவுளெ வச்சிக் கிட்டு அவ படுற தவுசியப் பாத்து ஊரு சனங்களே வாயுருவிப்போவுது. எங்கிட்டெ என்னா இருக்கு கொடுக்கிறதுக்கு?'' என்று சொன்னவளுக்கு அதற்குமேல் பேச முடியவில்லை. அழ ஆரம்பித்து விட்டாள். இடையில் ''கால கள, அந்திக் களன்னு வெட்டி அவதான் ஒன்னெ படிக்கவச்சது'' என்று சொன்னாள். ''போயிப் பாக்குறன்'' ''செடிய வச்சி தண்ணீ ஊத்துனவங்களெ மறந்துப்புட்டு, பூத்தத பறிக்க வந்தவங்களெ நல்லவங்கின்னு நெனக்கிறது, செய்யுறதுதான ஒலக நடொமொற.'' ''போறன், போறன்.'' ''என்னாத் போனெ? மூணு வருசமாத்தான் போற? கண்ணாலம் கட்டிப் போனாலும் புருசங்காரன் கண்ண மறச்சி, வருவாத் தோறும் ஒனக்கு அவ கையிலெ உள்ளத, ''இந்தாடா தம்பின்னு'' ஒனக்குக் கொடுக்கலெ? இன்னிக்கு அவ பீத்த மொறமாப் போயிட்டா இல்லெ. நம்ப ஊட்டுக்கு அவ ஒரு பொண்ணு. அவ கண்ணுத்தண்ணீ வுட்டா ஒன்னெ அப்பிடியே கேட்டுடும்'' என்று சொன்னவளுக்கு அழுகை வந்துவிட்டது. அழுகையினூடே, ''ஒனக்கு ஒங்க மாமனாரு ஊட்டுச் சனங்களெ பாக்குறதுக்கேதான் நேரம் பத்தாது'' என்று சொன்னாள். ''செத்தெ பேசாம இருக்கியா? இந்தச் சனியனுக்குத்தான் இங்க வரதில்லெ'' என்று சொல்லி கருப்புசாமி, செல்லம்மாளை முறைத்தான். அதே அளவுக்கு அவளும் திரும்பி முறைத்தாள். ''நீ வேலெக்கிப் போறதுக்கு மின்னாடி, இன்ட்ரிக்கிப் போவணுமின்னு சொன்னப்ப, இந்த ஊருல நம்பள நம்பி நூறு ரூவா கொடுக்க ஆளு இருந்துச்சா? கடன் கேட்டு நான் யாருயாரு காலு எல்லாம் வியிந்தன்னு ஒனக்குத் தெரியுமில்லெ. நைய்யா பைசா பெரலை. வேற வய்யி இல்லாத, ''புள்ளெயோட வேலெயவிட செத்துப் போனவன் கட்டுன தாலி பெருசா''ன்னு சொல்லித் தாலிய அடவு வச்சித்தான் அன்னிக்கி ஒன்னெ அனுப்புனன். ஒங்கப்பன் ஊட்டுப் பொருளுன்னு அது ஒண்ணுதான் எங்கிட்டெ இருந்துச்சி''. ''இதயே எத்தினி தடவ சொல்லுவ? இந்தச் சனியனுக்குத்தான் ஊருக்கு வரதே இல்ல.'' ''எல்லாம் நடந்த கதெதானே! பொய்யாச் சொல்லுறன். பெத்தவ ஒணணு நெனச்சா புள்ளெ ஒண்ணு நெனக்கிதுன்னு சும்மா சொல்லுல தம்பி. எனக்கு எயிவது வயசாச்சி. இன்னம் களவெட்டித்தான் சோறுதிங்கிறன்.'' ''என்னா மசுருல நடந்த கதெ'' என்று சொல்லி கருப்புசாமி கத்த ஆரம்பிக்கும்போத ராஜீ வந்தான். நீ வந்தன்னு சொன்னாங்க, அதான் பாத்துட்டுப் போவலா மின்னுதான் வந்தன்.'' என்று சொன்னவனை முகத்திலடிப்பது மாதிரி ''நீ போயி ரோட்டுல நில்லு ராஜீ. நான் வரன், அங்கப் பேசிக்கலாம்'' என்று சொல்லி ராஜீயைப் போகச் சொன்னான். திகைத்துப்போன ராஜீ மறுபேச்சுப் பேசாமல் திரும்பிப் போனான். ''அவனும்தான் புள்ளென்னு இருக்கான். ஒத்தயா மூணு அக்கா தங்கச்சிவுள ஒரு கொற இல்லாம சீர் செனத்தின்னு செஞ்சி கட்டிக் கொடுத்தான். மூணு பேரும் வந்தா இன்னிக்கும் நல்லத கெட்டத பாக்குறான். பெத்தத் தாயி தவப்பன குந்தவச்சி சோறபோடுறான்'' என்று ராஜீயைப் பற்றி செல்லம்மாள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விர்ரென்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான் கருப்புசாமி. ''காரு வர நேரம் இருக்கும்போதே யாண்டா தம்பி பறக்குறவன்?'' என்று கேட்டவள் ''இரு வரன்'' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள். பழைய பெட்டியில் எதையோ தேடி எடுத்துக் கொண்டு வந்தவள். நூறு ரூபாய் நோட்டு இரண்டை அவனிடம் கொடுத்தாள். பணத்தை வாங்கிக் கொள்ளாமல் வீறாப்பாக அவளிடமே திரிப்புத்தர முயன்றான். கட்டாயப்படுத்தி அவனுடைய கையில் பணத்தைத் திணித்து விட்டவள், சாதாரணமாக, ஒருகோண மூஞ்சிக் குட்டியவித்தன். ''இந்தா தரன், அந்தா தரன்'' ன்னு சொல்லி ஒரு மாசம் இயிக்கப்போட்டு நேத்துத்தான் பணத்தெ கொண்டாந்து கொடுத்தானுவோ. பணத்தெ வச்சிக்கிட்டு நான் என்னாப் பண்ணப் போறன்? இத வச்சி ஒம்மவளுக்கு என் நெனவா ஒரு காலு கொலுசி எடுத்துப்போடு'' என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து கைப்பையைக் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டு வீட்டைச் சாத்திவிட்டு ''வாடா தம்பி, காரு ஓடிப்போயிடும்'' என்று சொல்லி முன்னே நடக்க ஆரம்பித்தாள். ஏதோ சொல்ல வாயெடுத்த செல்லம்மாளிடம், ''பேசாமவாம்மா'' என்று கருப்புசாமி சொன்னதைக் காதில் வாங்காதவள் மாதிரி சொன்னாள்: ''பொண்டாட்டின்னு ஒங்கப்பங்காரன்கிட்டெ தாலி கட்டிக்க வந்த நாளுல இருந்து ஒங்கக் கூட்டத்திலெ இந்த வாத்தத்தான் நான் கண்டன். என்னோட ஆவி போனாத்தான் ஒனக்கு நல்லது கெட்டது தெரியும் தம்பி. எனக்கு நீ முந்தியா, ஒனக்கு நான் முந்தியா? ஒன்னெ நம்பியாடா நான் பொறந்தென். போடா.''
|
மதியம் 12 மணி கத்தரி வெயிலு சுளீர்னு மண்டையப் பொளக்கறாப்ல அடிச்சுச்சு. மாயனுக்கு உடம்பெல்லாம் ஒரே கசகசன்னு இருந்துச்சு. இருந்தாலும் என்ன செய்வது வயித்துப் பொழப்பைப் பார்க்கணுமே. இந்த வெயிலுக்கு தர்பூசணியும், வெள்ளரிக்காயும் போட்டா நல்லா லாபம் கிடைக்கும்னு டவுன்ல சொன்னத வச்சு தனக்குன்னு இருந்த 5 காணி நிலத்துல மாயன் வெள்ளரியும், தர்பூசணியும் விதைச்சான். எல்லாக் கிணத்துலயும் தண்ணிவத்திப் போனாலும் மாயன் கிணத்துல மட்டும் இந்த வெயில் காலத்துலயும் சும்மா வெள்ளியை உருக்கி விட்ட மாதிரி சலசலனு இருக்கும். மாயன் தண்ணியத் தொறந்து விட்டுகிட்டே இந்தக் காய்களைக் கொண்டுபோயி உழவர் சந்தைனு ஒண்ணு வந்திருக்கு அதுல போட்டா லாபம் கிடைக்கும்னு விவசாய ஆபிசரு சொன்னாக. அதமுதலச் செய்யணும்! இந்த புரோக்கர் வெடுவானிப்பயக்கிட்ட காச அழுவணும்னு தேவையில்ல மீதியை ரோட்ல கூறு போட்டு வித்தாக்கூட கைல நாலு காசு கிடைக்கும்னு நினைச்சுகிட்டு வேலையைப் பார்த்தான் மாயன். நெல்லைத் தவிர ஒண்ணும் போட மாட்டான். எப்பவாவது தக்காளி போட்டா போடுவான். மாயன் மடையை அடைச்சுட்டு தோட்டத்தப் பார்த்தான் "பிஞ்சும், பூவுமா, புதுசா கல்யாணமான பொண்ணு கணக்கா சும்மா தளதளனு இருந்துச்சு. சரி இந்தத் தடவையாச்சும் ஆண்டவன் வழிகாட்டட்டும்"னு வேண்டினான். கொஞ்சம் காசு கிடைக்கும். இதவச்சு வர்ற தைக்குள்ள இரண்டாவது புள்ள கல்யாணத்த முடிச்சுடணும்னு கணக்குப்போட்டான். மாயனுக்கு 2 பொம்பளப்புள்ளைக ஒரு பையன் மாயனோட பொண்டாட்டி சின்னாத்தா. மூத்த பொம்பளப்புள்ள செல்லத்த போன வைகாசியில தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான் இங்கதான் பக்கத்துல இருக்குற பழையனூர்ல. ஏதோ அவனால முடிஞ்ச சீர் சினத்தி செஞ்சு அவ வாழ்க்கை போயிட்டு இருக்கு. 2 வது புள்ள முருகாயி அம்மாவுக்கு ஒத்தாசயா வீட்டுல தான் இருக்கா. மாயனோட கடைசிப்பையன் குமார். 12வது வரைக்கும் படிச்சுப்புட்டு வேலை வெட்டிக்குப்போகாம மைனரு மாதிரி ஊர் சுத்திகிட்டு திரியறான். அவனுக்கு வீட்டப்பத்தியும் கவல இல்ல. எதைப்பத்தியும் கவல இல்ல. டிப்டாப்பா டிரஸ் பண்ணிகிட்டு கலெக்டரு உத்தியோகத்துக்கு போற மாதிரி கிளம்பிடுவான். எங்க போறான் என்ன செய்யறான்னு தெரியாது. போன மாசந்தான் ஏதோ கட்சியில இளைஞரணியில சேர்ந்தன்னு சொல்லிகிட்டு திரிஞ்சான். மாயனுக்கு வயிறு பசித்தது காலையில நீராரத்தண்ணியக் குடிச்சுப்புட்டு கருக்கல்ல கிளம்பினவன் தான். வந்ததுல இருந்து களை எடுக்கிறது. தண்ணி பாய்ச்சறது, மருந்து அடிக்கிறதுன்னு வேலை இருந்துக்கிட்டேயிருக்கு. தூரத்துல சின்னாத்தாவும் முருகாயியும் வருவது தெரிஞ்சுக்க சின்னாத்தாவோட கைப்பதம் யாருக்கும் வராது. ரெண்டு மொளகாயக்கிள்ளிப் போட்டு புளியக்கரைத்த ஊத்துனாக்கூட அவ்வளவு ருசியா இருக்கும். நினைக்கியிலேயே நாக்கில் எச்சி ஊறுச்சு. முருகாயிக்கு எப்பயும் வயல்ல சாப்பிடத்தான் பிடிக்கும் அதனால ஆத்தாவோட எப்பவும் வந்திருவா. மூணு பேரும் ஒண்ணாச் சாப்பிடுவாங்க. கிணத்துத்தண்ணியில கை கால், முகம் எல்லாம் கழுவிட்டு துண்டுனால துடைச்சுகிட்டே, என்ன சின்னாத்தா என்ன சாப்பாடு வாசன மூக்கத்துளைக்குதே; அட ஒண்ணுமில்லைங்க, மேல்வீட்டு பெரியாத்தா கொஞ்சம் அயிரைமீன் கொடுத்தாக. அதைக் குழம்புவச்சி, கஞ்சி கொண்டு வந்துருக்கேன். அப்ப சீக்கிரம் போடு, இப்பவே நாக்குல எச்சி ஊறுது. சின்னாத்தா கும்பாவுல கஞ்சிப்போட்டு பூசணி இலையில அயிரமீன் வச்சி மாயனுக்கு வெயிலுக்கு இதமா இருந்துச்சு. மூன்று பேரும் சேர்ந்து வயிறார சாப்புட்டாக சின்னாத்தாவும், முருகாயியும், பாத்திரத்தெல்லாம் கழுவிட்டு "அப்ப நாங்க போறோம் நீங்க சித்த நேரம் உறங்கிட்டு வாங்க"னு சொல்லிட்டுப் போனாக. மாயனுக்கும் அசதியாத்தான் இருந்துச்சு. அப்படியே வேப்பமரத்து நிழல்ல படுத்து உறங்கிட்டான் திடீர்னு முழிப்பு வந்து பார்த்தா வெயிலு கொஞ்சம் இறங்கியிருந்துச்சு மாயன் மம்பட்டி, மத்த சாமானெல்லாம் மோட்டார் ரூம்ல வச்சுப்புட்டு வீட்டுக்குப் போனான். வர்ற வழியில ஊரணிப்பக்கம் பெரிய தேவர் பாத்துப்புட்டாரு" என்ன மாயா! நம்ம குமாரு கட்சியில சேர்ந்துட்டாம்போல ஒரே வெள்ளையும் சொள்ளையுமா திரியறான் கேட்டா செயலாளர், அது இதுங்கறான்." அடப்போங்கப்பே அவக்கிடக்கான் வௌரங் கெட்ட நாயி, அப்பு, கட்சியல்லாம் சோறுபோடாது தினம் உழைச்சாத்தான் வயிறு நியைற சாப்பிட முடியும். நானும் வீட்ல உட்கார்ந்துர்ரேனு வச்சுக்கங்க, இவனக் கொண்டாந்து காசு கொடுக்கச் சொல்லுங்க பாப்பம். அப்படியே கொண்டாந்தாலும் அது அடுத்தவனக் கொன்னு தாலியறுத்தக் காசாத்தான் இருக்கும். அப்பு, உங்ககால அரசியல் வேற. இந்தக்கால அரசியல் வேற, ஒருத்தன் ஆட்சிக்கு வந்தா மொத்தமா அடிக்கிறான் இன்னொருத்தன் கொஞ்சம் கொஞ்சமா அடிக்கிறான். போங்கப்பே! அவன் கெட்டுச் சீரழியப்போறான் நான் வர்றப்பே. என் பொழப்பப் பார்க்கணும் பெரியதேவர் சிரிச்சிகிட்டுப் போனாரு. வீட்டுக்கு வந்து சேர்ந்தான் மாயன். சின்னாத்தா ஏய் புள்ளே! உள்ள என்ன பண்ணிக்கிட்டிருக்க? குளிக்கத் தண்ணி எடுத்து வை. சின்னத்தா தொட்டியில தண்ணியக் கொண்டு வந்து ஊத்துனா. மாயன் குளிச்சுகிட்டிருக்கும் போது உள்ளாற ஏதோ சத்தம் கேட்டுச்சு. அவன் மகன் குமாரு தான். அவன் ஆத்தாகிட்ட சண்ட போட்டுகிட்டிருந்தான். "அம்மா காசு கொடுக்குறியா இல்லையா தலைவருக்கு பொறந்த நாளு சால்வை வாங்கணும் காசு கொடு". "போடா வக்கத்த நாயே. இங்க கோவணத்துணிக்கே வழியக் காணமா இவன் எடுபட்ட நாய்க்கு சால்வை வாங்கறானாம் சால்வை. அந்த மனுசன் வெயில்லகிடந்து மாடா உழைக்கிறாரு இவன் இப்பத்தான் வெள்ளையும், சொள்ளையுமா அலையிறான். ஒரு சல்லிக்காசு கிடையாது போடா வெளிய. மாயன் திரும்பிக் கூட பார்க்காம குளிக்சுகிட்டு இருந்தான் போன வாரமே இவுக ரெண்டு பேருக்கும் சண்டை வந்து பேச்சுவார்த்தையில்லை. பன மட்டையில மழை பெஞ்ச மாதிரி தொறுதொறுனு முனங்கிக்கிட்டே குமாரு வெளியே போனான். அவன் போனவுடன் தான் மாயன் உள்ளுக்குள்ள வந்தான். மனைவி சின்னாத்தா அழுதுகிட்டிருந்தா "ஆம்பளபுள்ள பொறந்துட்டான் கஞ்சி ஊத்திக் காப்பாத்துவான்னு பாத்தா இவன் ஏதோ அட்ரஸ் இல்லாத நாய் வேட்டியல்ல புடிச்சிகிட்டு திரியறான் இவன் வம்புனா என்னாகுறது. ஹீம் - என்னைக்குத்தா இந்த மாரியாத்தா கண்ணத் தொறப்பாளோ! இந்தப் பொட்டப்புள்ளையை கட்டிக் கொடுக்கிற வரைக்கும் பொழப்பு நாய்ப் பொழப்பாவுல்ல இருக்கு. மாயன், "சரி விடுறி! விறைச்சுகிட்டு எங்க போகப் போறாரு, சோத்துக்கு இங்க தான் வரணும். நாளைக்கு அவன் தலைவருனு சொல்லிகிட்டு திரியற நாயை செயில்ல தூக்கி போடப் போறாக. இவன் என்ன பண்ணப்போறானாம். அவன் பொண்டாட்டிபுள்ள குட்டிக எல்லாம் நல்லா இருக்குது. இவன் தான் சீப்பட்டுச் சீரழியப் போறான். போகட்டும் விடுடி சோத்தப்பாரு. ஒரு மாதம் சென்றிருக்கும். இப்பெல்லாம் குமாரு வீட்டுக்கே வர்றதில்ல டவுன்லயே இருக்கறதா செய்தி. இப்ப தர்பூசணியும், வெள்ளரியும் நல்ல அறுவடை செய்யும் பதத்தில இருந்துச்சு. நல்ல தளதளனு பார்க்க நல்லா இருந்துச்சு. சனிக்கிழம உழவர்சந்தைக்கும் கொண்டுபோனா கூட்டம் நிறையவரும். பெரிய பெரிய ஆபிசருக எல்லாம் வந்து வாங்கிட்டுப்போயிருவாக. வியாபாரத்த சீக்கிரம் முடிச்சுடலாம்னு நினைச்சுகிட்டிருந்தான் மாயன். மாயனுக்கு இடி இறங்குனாப்ல இருந்துச்சு. புள்ள பொறந்து பேர்வைக்கப் போகையில செத்துப் போன கணக்கா இருந்துச்சு மாயனுக்கு, பெரியதேவருக்குன்ன அவருபாட்டுக்கு சொல்லிபுட்டாரு. அவுரு நல்ல வசதிவாய்ப்பா இருக்காரு ஹீம் எம்பொழப்பு நாய் பொழப்பு கழுதப் பொழப்பாவுல்ல இருக்கு. நாம் ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது. மாயனுக்கு 2 நாளா ஒண்ணுமே புரியல பாடுபட்டு பக்கப்பட்டு விளையவச்சத நல்ல விலைக்கு வித்தாத்தானே கையப்பிடிக்காம இருக்கும். கடன, உடன வாங்குனத அடைக்க முடியும். எப்படியோ அறுவடை முடிஞ்சுருச்சு. மறுநாள் மாயன் மாட்டுவண்டியில தர்பூசணியும், வெள்ளரியையும், ஏத்திக்கிட்டு டவுனுக்குப் போனான் பஸ்சுல போனா லக்கேசுக்குன்னு தண்டம் அழுவணும் அதனால குறுக்கால போன சீக்கிரம் போயிரலாம்னு நினைச்சுகிட்டு வண்டிய விரசா விட்டான் கூட ஒத்தாசைக்கு சின்னாத்தா, முருகாயி ரெண்டு பேரும் வந்தாக கூட்டு ரோட்ட தாண்டி போகையிலேயே ஏதோசலசலனு சத்தம் போட்டுச்சு மாயனுக்கு கதக்குச்சு. தூரத்துல கட்சிக்கார பயலுக, சோடாப்பாட்டிலு கைச்செயினு அருவா கத்தினு வச்சுகிட்டு எல்லாரையும் வழிமறிச்சு அடிச்சிட்டிருந்தாணுக என்ன ஏதுனு ஓடிவந்தவன்கிட்ட மாயன் விசாரிச்சான் யாரோ அரசியல் தலைவர செயில்ல போட்டாங்களாம் அதுக்கு அந்த கட்சி ஆளுக மறியல் பண்றாக அங்கிட்டு போகாதிகன்னு சொல்லிட்டு அவுர்ற வேட்டிய கையில புடிச்சுகிட்டு ஓடினான். மாயன், "ஏய் பிள்ளைகளா அப்படியே படுத்துக்கிடுங்க. நான் வண்டிய அந்த நாய்க கண்ணுல படாம வரசா விட்டுறேன். ஒருத்தன் கருகருனு கருவாக்கட்டை மாதிரி இருந்தவன். "டேய் அங்கபார்றா ஒருத்தன் நமக்கு டிமிக்கி கொடுத்துட்டுப் போறான். புடிங்கடா டேய் அடிறா வண்டியச் சாயுடா ஒரே கூச்சலு. அழுரக 10 நிமிசத்துக்குள்ள அம்புட்டும் முடிச்சு போச்சு மாயன் பொம்ளப்பிள்ளைகளை அடிக்கவர்றாகளே தடுக்கப்போக அவனுக்கு நெஞ்சுல வெட்டு, புருஷனுக்கு ஏதாவது ஆயிரப் போவுதுனு சின்னாத்தா தடுக்கப்போக அவளுக்கும் வெட்டு முருகாயி மயக்கமாயிட்டா. 2 உசுரும் 1 நிமிசத்துல அடங்கிப்போச்சு கன்னஞ்செவந்தபுள்ள கட்டழகி பெத்தபுள்ள செய்யதறியாம திகைச்சுப் போயிநின்னா தர்பூசணியும், வெள்ளரியும் ரோடெல்லாம் கிடந்துச்சு. மாயன் ரத்தமும், தர்பூசணித் தண்ணியும் ஒண்ணாக் கலந்துச்சு. அப்பத்தான் சீராட்டிப் பாராட்டி சீரு செய்யப் போற ஆத்தாளப்பறிகொடுத்து வகை செய்யப்போற அப்பனப்பறிகொடுத்த முருகாயி அண்ணணப் பாத்துப்புட்டா அவன் அங்கிட்டு முக்குல எவனையோ புடிச்சு அடிச்சுகிட்டு இருந்தாய் டேய்! எங்க தலவர செயில்ல போட்டாங்க நீங்க கவலையில்லாம திரியறியா உன்ன உரிச்சுப் பொலி போடறேன்பாரு. முருகாயிக்கு ஆத்திரம் வந்துவிட்டது. அண்ணன நோக்கிப்போனா, "டேய்! இங்க பார்றா உங்க அப்பன் ஆத்தா செத்துச் சீரழிந்து கிடக்காக நீ இன்னொருத்தன அடிக்கிறயிடா. நீங்கள்ளாம் உருப்பட மாட்டியளா? நாசமாப்போவீக! அப்பன் ஆத்தாவுக்கு உதவவேணாம் இப்படி உயிரோ கொள்ளி வச்சுட்டியே பாவி நீயெல்லாம் ஒரு ஆம்பள த்தூ!....... முருகாயி ஒரு பாட்டம் பாடி முடிச்சா. காரியமெல்லாம் முடிஞ்சு 1 வாரமாச்சு குமாரு வீட்டுப்பக்கமே வரல துக்கத்துக்கு வந்த சனங்கள்லாம் காக்கா, குருவி கணக்கா பறந்து போயிருச்சுக. அவ அக்காவையும் புருசன்காரன் வந்து சாக்கு போக்குச் சொல்லி கூட்டிக்கிட்டுப் போயிட்டான். முருகாயி தனித்துப்போனா.... சொந்தமிருந்து சீண்டாதவளாயிட்டா அழகா இருந்தாலும் வாசமில்லா மலர யாரும் சீந்தமாட்டாக அப்படியாயிருச்சு முருகாயி நிலம இப்படி எத்தனையோ முருகாயிக தெருக்குத்தெரு, ஊருக்குஊரு இருக்காக. அடுத்தநாள் செய்தியில் - "தலைவரின் கரம் கறைபடியாத கரம் எனவே விடுதலை" என்று பெரிய எழுத்தில் வந்தது. அரசியல் வாதிகள் அவர்களுக்கு வேண்டியதை சுருட்டிக் கொண்டு, நடித்துக் கொண்டு அமோக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் வெறிபிடித்த ஓநாய் கூட்டமாய் தொண்டர் இனம் திரிகிறது. இவை நிற்கும் வரையில் நம் நாட்டில் வாசமற்ற மலர்களே அதிகமாய்?....... |
ஒரு தடவை முல்லா கப்பல் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். கப்பல் திசைமாறி தாறுமாறாக அலையத் தொடங்கியது. கரையே பல நாட்கள் கண்களில் தென்படவே இல்லை. உணவும் குடிநீரும் முற்றிலும் தீர்ந்து விட்டன. கப்பலின் பயணம் செய்தவர்களுக்குத் தாங்கள் உயிர்பிழைக்க மாட்டோம் என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது. அதனால் பிரயாணிகள் அனைவரும் தரையில் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். தான் உயிர்பிழைத்தால் தன்னுடைய வீடு வாசல்களை எல்லாம் ஏழை எளிய மக்களுக்குத் தருமம் செய்து விடுவதாக ஒருவர் சொன்னார். மற்றொரு பிரயாணி தாம் உயிர் பிழைத்தால் ஆயிரம் ஏழை மக்களுக்கு நாள் தவறாமல் உணவளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். இவ்வாறு ஒவ்வொரு பிரயாணியும் தம்மிடமிருக்கம் விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் தானம் செய்து விடுவதாக வாக்குறுதிகள் தந்தனர். இந்தக் காட்சிகளையெல்லாம் ஒருபக்கமாக நின்றவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருருந்தார் முல்லா. திடீரென்று அவர் அதோ கரை தெரிகிறது நாமெல்லாம் உயிர் பிழைத்து விட்டோம் என்று கூவினார். பிரயாணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லோரும் சேர்ந்து ஆனந்தக் கூத்தாடினார்கள். முல்லா உடனே உரத்த குரலில் அன்பர்களே நமக்கு உயிர்ப்பிச்சை அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்தம் வித்தத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்றார். அவர் பேச்சுக்கு யாரும் செவிசாய்க்கவே இல்லை. உயிர்பிழைப்பது உறுதியாகி விட்டதால் இனி கடவுளின் தயவு தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கருதினார்கள். சற்றுமுன் அவர்கள் செய்த வாக்குறுதிகளையெல்லாம் மற்ந்து விட்டார்கள். அந்த நேரத்தில் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கடவுளுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டோம். ஓரேயடியாக சொத்து சுகங்களைத் தியாகம் செய்துவிட முடியுமா? என்றெல்லாம் பேசத் தலைப்பட்டார்கள். முல்லா அட்டகாசமாக் கலகலவென நகைத்தார். ” ஏன் சிரிக்கிறீர்?” என்று பிரயாணிகள் வினவினார்கள். ” கரை கண்களுக்குத் தெரிவதாக நான் சொன்னது உண்மையல்ல ஒரு விளையாட்டுக்காக அவ்வாறு சொன்னேன் ” என்றார் முல்லா. பிரயாணிகள் நாலாபுறமம் கடலில் கண்களை ஒட்டினர். முல்லா சொன்னது உண்மைதான் கரை எந்தப் பக்கமும் கண்களுக்கத் தெரியவே இல்லை. உடனே பிரயாணிகள் அனைவரும் அழுகுரல் எழுப்பியவாறு கடவுளைப் பிரார்த்தனை செய்வதற்காக மண்டியிட்டு அமர்ந்தனர்.
|
ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து
அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி " முல்லா அவர்களே! உலகத்தில்
பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்?" என ஒரு
சந்தேகத்தைக் கேட்டார். நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் உலகத்தின் இரும்பைவிடத் தங்கத்துக்கு அதிக
மதிப்பு இருக்கிறதே. அது ஏன்? என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா. உலகத்தில் இரும்பு தாரளமாக எங்கம் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும்
குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாகத்தான் எங்காவது ஒரிடத்தில்
கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான். பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும்
தாராளமாக் கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுடிபிடிப்பதுதான் அரிதாக
இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு
அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா பதில் சொன்னார். அந்த விளக்கத்தைக் கேட்டு கல்விமான்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். |
மரக்காணம் பேருந்து நிலையத்தில் நிற்கும்போது வானம் லேசாக இருண்டிருந்தது. காற்று இறுகி உறைந்துவிட்டது போலிருந்தது. பகல் மூன்று மணிக்குரிய வெயில் இல்லை என்றபோது முழுக்கை சட்டைக்குள் புழுக்கத்தை உணரமுடிந்தது. கிழக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடல் எப்போதுமில்லாத மௌனத்தில் இருந்தது. அதன் அலைகள் சோம்பலாகப் புரண்டுகொண்டிருந்தன. எதுவோ விரும்பத்தகதாது நடக்கப்போகிறது என்றது உள்மனம். premonition. அடிக்கடி இப்படி ஆகிவிடுகிறது. ஏதோ மாயக் குரலொன்றுக்குப் பணிந்து அச்சமூட்டும் இருண்ட குகையினுள் நுழைகிறேன். கால்பட்டு உருளும் சிறு கல்லும் சொல்லொண்ணாத பீதியைத் தருகிறது. எதிர்பாராத கணத்தில் குறுக்காகப் பறக்கும் வெளவால் இதயத்தை உலுக்கிவிடுகிறது. இருள் பூசிய குகைச் சுவர்களிலிருந்து அச்சம் வழிந்த படியிருக்கிறது. தைரியமனைத்தையும் திரட்டி சட்டெனத் திரும்பி ஒரே ஓட்டமாக ஓடிவந்துவிடுகிறேன். எவ்வளவு நிம்மதி. ஒத்திகை கச்சிதம். ஆசுவாசமாகவும் இருக்கிறது. செயல்படுத்த நினைக்கும் தருணத்தில் சுற்றிலுமுள்ள காற்று திண்மமாகிவிடுகிறது. அடிவயிறு குழைந்து கால்கள் தள்ளாட்டம் கொள்கின்றன. கண்களில் நீர் முட்டுகிறது. குகை வழி முடிவற்றுப்போய்க் கொண்டேயிருக்கிறது. ராஜேஷிடம் சொன்னால் மிகத் தயாராக வைத்திருக்கும் பதிலை, அதைக்காட்டிலும் சரியான பதில் வேறொன்று இருக்கமுடியாது என்பது போன்ற தோரணையில் சொல்வான். எல்லாம் உளவியல் சிக்கல் என்பான். நிச்சயம் ப்ராய்டோ, யுங்கோ அவன் உதவிக்கு வருவார்கள். ''தட்ஸ் நத்திங்.'' முன்கூட்டியே உலகின் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வுகள் முடிவில்லாத எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு சுவிட்ச்சுகள் போன்ற பொத்தான்களை அழுத்தியதும் தடையில்லாது கொட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதென அவன் உறுதியாக நம்புபவனாக இருக்கவேண்டும்; அதுமட்டுமில்லாமல் எந்தச் சிக்கலுக்கு எந்தப்பொத்தானை அழுத்த வேண்டுமென்பதை அறிந்த திறமைசாலியாகவும் அவன் தன்னை எண்ணிக்கொண்டிருக்க வேண்டும். வெளிர்பச்சை உடம்பில் மங்கிய வெள்ளை எழுத்துகளோடு கிழக்குக் கடற்கரைச் சாலை பேருந்து வந்தது. அதில் ஏறுவதன் மூலம் இந்த மன உளைச்சல் அகன்று போகலாம் என்ற நினைப்பு நிம்மதி தருவதாக இருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலைப் போருந்துகள் என்ற ஈ.சி.ஆர். பேருந்துகள் மரக்காணத்திலிருந்து பாண்டிச்சேரி போகும் வழியிலுள்ள கணக்கிட முடியாத நிறுத்தங்களில் குறிப்பிட்ட சிலவற்றில் மட்டுமே நிற்கும். நின்று நின்று போகும் பஸ்ஸில் பயணிப்பது மாதிரியான அவஸ்தை வேறெதுவுமில்லை. பயணம் என்றாலே வேகம் என்றுதான் மனதில் பதிந்திருக்கிறது. இந்த பஸ் வந்தது அதிர்ஷ்டம் தான். அன்று வெள்ளிக்கிழமை. வாரக்கடைசி என்பதால் சென்னையிலிருந்தே மிகுதியான கூட்டத்துடன் வந்துகொண்டிருந்தது பஸ். தோளில் மாட்டிய பையுடன் நிற்பது அசௌகரியமாக இருந்தது. இரு மருங்கிலும் யூகலிப்டஸ் மரங்கள் நகர கருவாழைப் பட்டையென மின்னிய சாலையில் பேருந்து வேகமெடுத்தது ஓட ஆரம்பித்தது. சாலையை நிர்மாணிக்கும் பொறுப்பையேற்றிருந்த ''அஃப்கான்ஸ்'' நிறுவனம் தனது ரத, கஜ, துருக, பதாதிகளுடன் முகாமிட்டிருந்தது. தற்போது புழுதி மண்டிய பொட்டல் வெளியாக கிடக்கும் மைதானத்தைக் கடக்கும்போது மரக்காணம் எல்லை முடிகிறது. பேருந்து மண்டவாயைத் தாண்டும்போது மறுபடி அந்த எண்ணம் மனதைக் கவ்விப் பிடித்தது. சாலையோர பென்சில் மரங்களிலும் அவ்வப்போது தென்படும் சிறு தாமரைக்குளங்களிலும் கவனத்தைக் குவித்து இந்த அவஸ்தையினின்றும் விடுபடலாமென்றால் முடியவில்லை. இப்போது ராஜேஷ் அருகில் இருந்து அவனிடம் இதைச் சொன்னால் கன்னக் கதுப்புகள் அதிரச் சிரித்து '' போடா முட்டாள்!'' என்பான். ''உனக்கு மனப்புழுக்கம் ஜாஸ்தி. சதா கண்டதையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறாய். உட்புழுங்கி உட்புழுங்கி மனம் நைந்து போய் விட்டது. எதையெடுத்தாலும் பதற்றம். ஜன்னலைத் திற. கொஞ்சம் காற்றாவது வெளிச்சமாவது உள்ளே வரட்டும். நன்றாக மூச்சை இழுத்து விடு. சோம்பல் முறித்துவிட்டு இப்படியே கொஞ்சதூரம் ஓடிவிட்டு வா. முடிந்தால் என்னை நினைத்தபடி ஒரு பீர் சாப்பிடு. பிறகு உலகமே ஒரு பூந்தோட்டமாகி அதில் நீயொரு பட்டாம்பூச்சியாகி விடுவாய்.'' அவனது பேச்சுகளில் ''என்னை நினைத்தபடி ஒரு பீர் சாப்பிடு'' என்பதை சாமர்த்தியாகப் புகுத்திவிடுவான் ராஜேஷ். ''கவ்விப் பிடிக்கறா மாதிரி முதுக வலிக்குதுடா'' என்று புகழேந்தி சொன்னால் ''மெத்தையை விட்டு வெறுந்தரையில் தலைகாணி இல்லாமல் படு. சரியாகப்போகும். இல்லையானால் என்னை நினைத்து ஒரு பீர் சாப்பிடு'' என்பான். அவன் அடிக்கடி பயன்படுத்தும் இந்த சொற்றொடர் அவன் பேச்சுக்கு ஒருவித அமானுஷ்யத் தன்மையையும் கவர்ச்சியையும் அளிப்பதாகத் தோன்றியது. இதை அவன் படித்த புத்தகங்கள் ஏதேனும் ஒன்றிலிருந்து பிடித்தானா, இல்லை அவனே உருவாக்கினானா தெரிய வில்லை. அவனை நினைத்தபடி சாப்பிடும் பீர் ஒரு சர்வரோக நிவாரணி அல்லது கவலை துக்கம் இவற்றை அகற்றிவிடும் ஓர் அற்புத மருந்து என்ற வகையிலேயே அவன் அந்த சொற்றொடரைப் பயன்படுத்தினான். ஆனால், எங்களை பீர் சாப்பிடச் சொல்லும் ராஜேஷ் ஒருபோதும் பீர் சாப்பிடமாட்டான். நான், குமரவேல், புகழேந்தி, தயாளன் எல்லோரும் சேர்ந்து பீர் சாப்பிடுவோம். ஆனால் ராஜேஷை நினைத்தபடி சாப்பிட்டது எத்தனை தடவையிருக்குமென்று தெரியவில்லை. நாங்கள் பீர் சாப்பிடும் போதெல்லாம் எங்கள் எதிரே எதையாவது கொறித்தபடி அவனும்தான் அமர்ந்திருப்பான். என்னை நினைத்தபடி சாப்பிடுகிறீர்களா என அவனும் கேட்டதில்லை. பஸ் அனுமந்தையில் நின்றபோது ஒரு வயதானவரும் அவர் மகள் போலத் தோன்றிய ஒரு பெண்ணும் இறங்கினார்கள். கொஞ்சமும் லஜ்ஜையின்றி பாய்ந்து சென்று தனக்கும் தன் புது மனைவிக்குமாக காலியான இருக்கைகளைப் பிடித்தான் ஒருவன். மீன் கூடையுடன் ஏற முயன்ற பெண்ணை ஏறக்கூடாதென்று தடுத்து விசிலை ஊதினார் கண்டக்டர். அந்தப் பெண்ணின் முகபாவத்தைப் பார்த்தால் பஸ் கிளம்பியபின் நிச்சயம் மோசமாகத் திட்டித் தீர்ப்பாள் என்று தோன்றியது. அடித்துப் பிடித்து இருக்கையைக் கைப்பற்றி அமர்ந்தவனும் அவன் புதுமனைவியும் நான் நின்றிருந்த இடத்திலிருந்து பார்வைக்கு நன்றாகத் தெரிந்தனர். பளிச்சென்ற ஆடையும் தங்க ஆபரணங்களும் அவர்கள் இருவரும் புதுமணத் தம்பதிகள் என்பதைப் பறைசாற்றின. சாலையின் இடதுபுறத்தில் சிறு கற்களை வைத்து எல்லை வரைந்து இடத்தை ஆக்ரமித்து தானியம் காய வைத்திருந்த பகுதிக்கும் எதிரே வந்த வேனுக்கும் நடுவே கிடைத்த குறுகிய இடைவெளியில் வேகமாக ஒடித்துத் திருப்பினார் டிரைவர். ஒரு கணம் நிலை குலைந்தாற் போலிருந்தாலும் சுதாரித்து சாமர்த்தியமாகச் செலுத்திவிட்டார். பயணிகளில் சிலர் ஒரு நொடி கலவரமடைந்து பிறகு சகஜ நிலையை அடைந்தனர். எனக்கு தாமஸின் ஞாபகம் வந்தது. இது போன்ற எதிர்பாராத தருணங்களில் அவன் அவனையுமறியாமலே ''இயேசுவே ரட்சியும் என்றுவிடுவான். இதை நினைக்கையில் எனக்குச் சிரிப்பு வந்தது. அந்த புதுமணப்பெண் என்னை முறைப்பது போலப் பார்த்தாள். அவளைப் பார்த்து நான் சிரித்ததாக நினைத்திருப்பாளோ? நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். பேருந்திலிருந்த சிலர் எதுவுமே நடவாதது போல் பராக்கு பார்த்தவாறும் புத்தகம் படித்தவாறும் வந்தனர். நின்று கொண்டு வந்தவர்கள் மட்டும் பஸ் குலுங்கியதில் தங்கள் நிலைதடுமாறியவர்களாய் சிறிது பிரயாசையுடன் தங்கள் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். கவுண்ட்டரில் நிற்பவன் அலுமினியத் தகடு அடித்த பெரிய ரெப்ரிஜிரேட்டரின் மூடியைத் திறந்து குனிந்து உள்ளேயிருக்கும் பீர் பாட்டிலை எடுக்கிறான். பாட்டில் லேபிள் நனைந்து சொதசொதவென்றிருக்கிறது. கவுண்ட்டரில் வைத்து பாட்டிலைத் திறக்கையில் மெதுவே நுரை பொங்கி பாட்டிலின் கழுத்தைத் தாண்டி ஒரு சின்ன காலிபிளவர் போல வெளியே பிதுங்கி நிற்கிறது. கையில் பாட்டிலைப் பிடிக்கும்போதே அதன் குளிர்ச்சி கிளர்ச்சியூட்டுகிறது. குமரவேல் சொல்வான் '' நல்ல பீர் சிறு கசப்புடன் கரகரவென்று தொண்டையை அறுத்த மாதிரி உள்ளே இறங்க வேண்டும்.'' பீர் சாப்பிடும் எண்ணம் வந்ததும் பிற எண்ணங்கள் கலையத் துவங்கின. காலாப்பட்டைத் தாண்டும் போது சாலையின் இடதுபுறமாக நுரைத்துப் பொங்கியபடி தோன்றிய கடலே ஒரு ராட்டச பீர் கோப்பை போலத்தான் தெரிந்தது. பாண்டிச்சேரி பஸ் ஸ்டாண்டுக்கு எதிரிலேயே பார். பாரை அடைந்த போது தாகம் கூடிவிட்டிருந்தது. பணத்தைக் கொடுத்து பீர் ஒன்றை வாங்கி கவுண்ட்டருக்கு அருகில் நின்றபடியே குடித்தேன். யதேச்சையாக அப்போது ராஜேஷின் நினைவு வந்தது சிரித்துக்கொண்டேன். விழுப்புரம் பேருந்து புறப்பட்டு நகரத்தைக் கடந்து வேகமெடுத்த போது மனம் ஒருவித மோனத்துள் அமிழ ஆரம்பித்தது. எந்தப் பதற்றமும் இல்லை. மனதைப் பிடுங்கிய எண்ணங்கள் காணாத தொலைவு சென்றுவிட்டிருந்தன. சுத்தமாகத் துடைத்துவிட்டது போன்று சலனமற்றிருந்து மனம். இது போன்ற ஒரு அமைதியை இதற்கு முன் உணர்ந்ததே இல்லை. மெல்ல சிந்தனைகள் ஆரோகணித்து வந்தன, ஆனாலும் அமைதி குலையவில்லை. ''அமைதியின் சத்தத்தைக் கேட்டிருக்கிறாயா?'' ஒரு முறை ராஜேஷ் கேட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மெதுவான வேகம், அழகான அசிங்கம் மாதிரி அமைதியின் சத்தம் என்பது எதாவது பாரடாக்ஸா? ''பி.பி.சி.ரேடியோ, அமைதியின் சத்தத்தை வெளியிட்டிருக்கிறது. பி.பி.சி ரேடியோ நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் ஓசைகளுக்கு இடையே உள்ள அதாவது வார்த்தைகளுக்கு இடையே உள்ள மௌனத்தை மட்டும் கம்ப்யூட்டர் உதவியுடன் எடிட் செய்து இதுதான் அமைதியின் சத்தம் என்று வெளியிட்டிருக்கிறார்கள்.'' ராஜேஷ் சொல்லும் சில விஷயங்களை நம்பவும் முடியாது, நம்பாமல் இருக்கவும் முடியாது. இப்போது என்னால் அமைதியின் சத்தத்தை உணர முடிந்தது. பஸ்ஸின் அதிர்வுகளுக்கேற்ற ஒரு லயத்தில் மனம் புரண்டு கொண்டிருந்த போதும் அமைதி மாறாமலே இருந்தது. பீர் தந்த கிறக்கத்தில் கண்களை மூடிக்கொண்டேன். ஆழ்ந்த அமைதி பின்னணியில் எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓட ஆரம்பித்தன. தெளிவில்லாத நினைவோட்டங்கள். ஸ்தூலமற்ற மனச் சித்திரங்கள். எல்லாம் கலந்த என் எண்ணங்களின் கலைடாஸ்கோப்பை வேறு யாரோ குலுக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. பஸ் மாறாத ஒரு தாளகதியில் விரைந்து கொண்டிருந்தது. திடீரென கலைடாஸ்கோப் ஸ்திரமான ஒரு சித்திரத்தைக் காட்டியது. அச்சித்திரம் அப்படியே நிலையாக நின்றது. எப்படிக் குலுக்கினாலும் மறையவில்லை. மாறவுமில்லை. எல்லா தற்காலிகச் சித்திரங்களும் சேர்ந்து நிலைத்த அந்தச் சித்திரத்தை சிருஷ்டித்திருந்தன. அச்சித்திரம் என்னை நிலைகுலையச் செய்தது. திடுக்கிட்டு விழித்தேன். என் மனம் கொண்ட காட்சி நிஜம்தான் என்று உள்ளுக்குள் எதுவோ அடித்துச் சொன்னது. அசைவற்று அப்படியே இருந்தேன். என்ன சிந்திப்பதென்ற பிரக்ஞை கூட இல்லை. கண்டமங்கலம் லெவல் கிராஸிங்கில் பஸ் நின்ற போது சாலையோரக் கடை ஒன்றிலிருந்து ஏதோ பதார்த்தம் எண்ணெயில் வறுபடும் ரம்மியமான வாசனை எழுந்தது. ஒவ்வொரு வாசனையும் ஒவ்வொரு விதமான மன உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த வறுபடும் வாசனை எப்போதுமே எனக்குள் ஒரு புத்துணர்வைத் தருவது. இப்போது அந்த வாசனை எனக்குள் ஏனோ சஞ்சலத்தை உண்டாக்கியது. மெல்லப் பதற்றம் ஆரம்பித்தது. மனம் ஒரு வெற்று வெளியாகி அங்கு காற்று ஓலமிட ஆரம்பித்தது. ஊருக்குப் போகும் டவுன் பஸ்ஸ•க்காக விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோது, நீர்த்திரைக்குப் பின்னால் இயக்கங்கள் மசங்கலாகத் தோன்றின. காற்று வீச்சுக்கு ஏறியும் தாழ்ந்தும் வளைந்தும் நிமிர்ந்தும் பாலீதீன் பைகளென நகர்ந்தனர் மனிதர்கள். பீர் தந்த கிறக்கம் மெதுவாக விலகத் தொடங்கியது. பதற்றம் கூட ஆரம்பித்தது. டவுன் பஸ்ஸிருந்து நான் மட்டுமே இறங்கினேன். கிராமத்தின் இரவு எட்டரை மணி அமானுஷ்யத்தை பஸ் ஸ்டாண்டிலிருந்த சோடியம் வேப்பர் விளக்கு மிகைப்படுத்திக் காட்டிக்கொண்டிருந்தது. சாலையோரம் நின்று கொண்டிருந்த கூட்டத்திலிருந்து யாரோ என்னை நோக்கி வந்தார்கள். தயாளன் அவன் முகத்தில் பதற்றம். நான் என்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ''மூணு மணிக்கா உங்க வீட்டுக்குப் போலீஸ்காரங்க வந்திருந்தாங்க'' தயாளன் சொன்னான். மனம் அதிர்ந்தது. ஆனால் பார்வையில் படாமல் எங்கோ ஒரு மூலையில் இருக்கம் லிவரை அழுத்தியதும் பெரிய இயந்திரம் ஓய்ந்து சகஜநிலைக்கு வருவது போல உடனே அது சமநிலையும் அடைந்தது. உடல் வியர்த்துக் குளிர்ந்துவிட்டிருந்தது. வியர்வை படிந்த என் உள்ளங்கையால் தயாளனின் மணிக்கட்டை அழுந்தப் பற்றினேன். 'ஏன்?'' என்று நான் கேட்கப்போகும் கேள்விக்கு அவன் சொல்லவிருக்கும் பதிலைத் தாங்கிக் கொள்ள என்னையே தயார்படுத்திக் கொள்ளும் விதமாக எனக்குச் சில வினாடிகள் அவகாசம் தேவைப்பட்டது.
|
ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான். முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார். “ இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன் அந்த நாள் நசுருதீனின் பொழுது மனஅமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பிடவில்லை.இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “ இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார். நேரம் போய் கொண்டே இருந்தது. அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை. இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது. அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. “ தனக்கு திருமணம் ஆகவில்லை “ என்பது
|
ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார். தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, “இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,” என்று கூறினார். பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன. மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், “எங்களால் முடியாது கண்ணா!” என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார். “கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,” என்று கூறினார். உடனே கர்ணன், “இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,” என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, “இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான். பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.
|
கோமோரா மற்றும் சோடாம் நகரங்களை பற்றிய ஒரு அழகிய கதை ஹசிடீஸ் மக்களிடம் உண்டு. அதற்கு பழைய ஏற்பாட்டிலோ வேறு எந்த பழைமையானவற்றிலோ எந்த ஆதாரமும் கிடையாது. அதனால் நிச்சயமாக அது ஒரு ஹசிடீஸ் மக்களின் கண்டுபிடிப்பு, கற்பனை, ஒரு உருவாக்கம்தான். ஆனால் எனக்கு அந்த கதையை மிகவும் பிடிக்கும். அதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடவுள் - யூத மக்களின் கடவுள் மிகவும் கோபக்காரர். – ஒருநாள் அவர் கோமோரா மற்றும் சோடாம் நகர மக்கள் மீது கோபம் கொண்டு அந்த நகரங்களை அழிக்க முடிவு செய்கிறார். அப்போது ஒரு ஹசிடீஸ் ஞானி கடவுளை அணுகி, சோடாம் நகரத்தில் ஒரு நூறு நல்லவர்களும் ஒரு ஆயிரம் கெட்டவர்களும் இருப்பதாக வைத்துக்கொண்டால் நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த நூறு நல்லவர்களும் சேர்ந்து அழிந்து போவார்கள் அல்லவா, எனக் கேட்டார். கடவுள் யோசித்தார். நான் இப்படி சிந்திக்கவில்லை. சரி போகட்டும், நான் அழிக்காமல் விடுகிறேன், ஆனால் நீ எனக்கு நூறு நல்லவர்களை காட்ட வேண்டும். என்றார். ஞானி, பொறுங்கள். என்னால் நூறு பேர்களை காட்ட முடியாமல் போகலாம், ஆனால் பத்து நல்லவர்கள் மட்டும் இருந்தால் அந்த நகரத்தை அழிப்பது முறைதானா நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த பத்துபேரும் சேர்ந்து அழிந்து போவார்களே என்று கேட்டார். கடவுள் நான் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். சரி நூறோ பத்தோ எண்ணிக்கை முக்கியமல்ல. ஆனால் நீ எனக்கு பத்து நல்லவர்களை காட்ட வேண்டும். ஞானி, சிறிது பொறுங்கள். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியிருக்கிறது. ஒரே ஒரு நல்லவன் இருந்தால் நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், நூறாயிரம் மக்களின் கெட்டதனத்தை விட ஒரே ஒரு நல்லவனின் நல்லதன்மை மதிப்பு வாய்ந்தது அல்லவா, கேடு நினைப்பது ஒரு எதிர்மறையான குணம் அதற்கு மதிப்பு கிடையாது, ஆனால் நல்லதன்மைக்கு மதிப்பு உண்டல்லவா, நீங்கள் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கக்கூடாது. அந்த ஒரு நல்லவனை நீங்கள் ஒதுக்கி விட முடியாது என்றார். கடவுள், உன்னுடைய தர்க்கம் சரியானதுதான். ஆயிரமோ, நூறோ, ஒரே ஒருவனோ, நான் நல்லவர்கள் பக்கம்தான். ஆனால் நீ ஒரு நல்லவன் இருக்கிறான் என்பதை நிரூபித்தாக வேண்டும். என்றார். ஞானி, இதோ நானிருக்கிறேன், நான் வேறு எங்கும் போக வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். என்னால் ஆயிரம் பேர்களையோ, நூறு பேர்களையோ கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். எப்படி அடையாளம் காண்பது. நான் நல்லவனான கணத்திலிருந்து யாரையும் நல்லவன் கெட்டவன் எனப்பிரிப்பதுப் பார்ப்பதை நான் நிறுத்திவிட்டேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவரே. நான் யாரிடமும் கெட்டதனத்தை பார்ப்பதில்லை. ஏனெனில் கெட்டதன்மை என்பது ஒரு நிழல் போன்றது. மேலும் அது ஒரு மனிதனின் உண்மை தன்மை ஆகாது. கெடுதல் உண்டாக்கும் செயல்களை அவன் செய்திருக்கலாம். ஆனால் அது அவனது இருப்பையே கெடுத்திருக்காது. ஒரு செயல், இரண்டு செயல், மூன்று செயல் ஏன் நூறு செயல் கூட கெட்டதை செய்திருக்கலாம், ஆனால் அவனது இருப்பு எப்போதும் தூய்மையானதாகவே இருக்கிறது. இருப்பு தனது செயல்களிலிருந்து வெளியே வர முடியும். அது தனது செயல்களை விட்டு விட முடியும். அது தனது கடந்த காலத்தை உதறி விட முடியும். அப்போது அந்த வினாடியிலிருந்து அந்த மனிதன் புனிதன் ஆகிறான். யாரும் அவனை தடுக்க முடியாது. நல்லவன் கெட்டவன் என்பதை எப்படி தீர்மானிக்க முடியும், தீர்மானிக்க வழியே இல்லை. அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். அந்த நகரங்களில் நல்லவர்களே இல்லை என்று அர்த்தமல்ல. உண்மையில் நான் இரண்டு நகரங்களிலும் இருந்திருக்கிறேன், நான் நல்லவர்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். என்றார். நீ நல்லவனாகும்போது, நீ தீர்மானிப்பதை விட்டு விடுகிறாய் மக்களை எடை போடுவதை விட்டு விடுகிறாய். ஏனெனில் எடை போடுவது செயல்கள் மூலம்தான். ஆனால் செயல் என்பது வெளி விஷயம்தான். நீர்குமிழ் மூலம் கடலை எடை போட முடியுமா, அது மடத்தனம். நீர்குமிழ் என்பது கடலின் மேல் பரப்பில் உருவாவது. செயல்கள் நீர்மேல் வரையும் கோலம் போன்றது, அதை நீ முடிக்கும் முன்னே அது அழிந்து விடும். இருப்பு செயல்களை கடந்தது. அது அழியாதது. நீ செய்வதை பொறுத்தது அல்ல அது. நீ யார் என்பதே கேள்வி. ஹசிடீஸ் ஞானி, நான் மக்களின் இருப்பை மட்டுமே பார்க்கிறேன். சில நேரங்களில் மிக அழகானவர்களாக, நல்லவர்களாக, புனிதர்களாக இருக்கும் மக்கள் செய்யும் செயல் கெடுதலாக தோன்றுகிறது. மன்னிக்க முடியாத விஷயமாக ஆகிறது. ஆனால் அந்த செயல் மூலம் அவர்களை மதிப்பிடமுடியாதல்லவா, அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன், என்றார். இதோ நானிருக்கிறேன். நான் இரண்டு நகரங்களிலும் இருக்கிறேன். வருடத்தில் பாதி நாள் அந்த நகரத்திலும் மீதி நாள் இந்த நகரத்திலும் இருப்பேன். என்னையும் சேர்த்து நீங்கள் அழித்து விடப் போகிறீர்களா எனக் கேட்டார். இதன்பின் கடவுள் அந்த இரண்டு நகரங்களையும் அழிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டதாக ஹசிடீஸ் கதை கூறுகிறது. |
ராஜகுருவின் நட்பு விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார். நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார். தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை. தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான். பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான். தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார். ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான். உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா…… மரியாதையாக வெளியே போ, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான். |
"குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?" என்று கேட்டான் முட்டாள். "பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?" என்றார் பரமார்த்தர். "தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்" என்றான் மூடன். "அப்படியானால் நம் பத்திரிகைக்குத் ‘தினப் புளுகு" என்று பெயர் வைக்கலாம்" என்றார் குரு. "பெயருக்குக் கீழே "கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை!" என்று போடலாம்" என்றான் மண்டு. அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், ‘தினப் புளுகு" நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர். இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான். அதைக் கண்ட மட்டி, "அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?" என்று கேட்டான். "திருடுவதற்காக இருக்கும்" என்றான் மடையன். "ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?" என்று சந்தேகம் கொண்டான், மட்டி. "எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்" என்று விளக்கினான், மடையன் "அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!" என்றான் மட்டி. மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள். வேலியே பயிரை மேய்கிறது! பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!! இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார். இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள். "தேர்தலில் நம்மை எதிர்த்துப் போட்டி போட்டவர்களைச் சும்மா விடக்கூடாது. பழி வாங்கியே தீர வேண்டும்" என்றான் மண்டு. "மந்திரிகள் பேரிலும் ஊழல் பட்டியல் தயாரிப்போம்" என்று கத்தினான் மூடன். உடனே மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள். அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா! அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார். ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன? இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு! இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள். "நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!" என்றான் முட்டாள். "என்ன எழுதுவது?" எனக் கேட்டான் மூடன். சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள். ‘மண்ணில் புரளுவது எப்படி?" என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி! ‘தொப்பை வளர்ப்பது எப்படி?" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை ‘அறிவியல்" பகுதியில் எழுதினார் பரமார்த்தர். ‘பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! ‘தத்துவத் தந்தை" பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!" இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர். எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், "எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்" என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார். பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள். ‘தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!" என்று கத்தினான் முட்டாள். சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர். செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் ‘குற்றப்பத்திரிகை" வாசிக்கப்பட்டது. "பரமார்த்தரோ, "இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; ‘தினப் புளுகு" என்று தானே போட்டிருக்கிறோம்" என்று கூறினார். அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர். |
ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் தர்பாரில் கூடியிருந்தவர்களை நோக்கி, “நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா?” என்று கேட்டார். “மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு! நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்!” என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார். பிறகு தர்பாரில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, நீதிபதிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆனால் பீர்பல் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், “பீர்பல்! நீ மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய்? மற்றவர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று நினைக்கிறாயா?” என்று கேட்டார். “முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் நமது வழக்கு விசாரணைகளும், நீதி வழங்குதலும் திருப்திகரமாக உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன்” என்றார் பீர்பல். அக்பர் அவரை மேலும் விளக்கம் கேட்க நினைக்கையில், வாயிற்காவலன் உள்ளே நுழைந்து, “பிரபு! ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல்!” என்றார் அக்பர். உடனே, தர்பாரில் ஒரு கிழவரும், ஓர் இளைஞனும் உள்ளே நுழைந்து சக்கரவர்த்தியை வணங்கினர். “என்ன விஷயம்? உங்களில் யாருக்கு என்ன குறை?” என்று கேட்டார் அக்பர். “பிரபு! என் பெயர் அப்துல் ரஹ்மான்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிழவர் தொடர்ந்து, “நான் ஒரு சட்ட நிபுணன்! மாணவர்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்களையும், வழக்கு விசாரணைகளைப்பற்றியும் கற்பிக்கிறேன். இதோ நிற்கிறானே பிரமோத் பிஹாரி! இவன் என் மாணவனாக இருந்தவன்! இவன் மீது நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன்” என்றார். அந்த இளைஞன் செய்த குற்றம் குறித்து அக்பர் கேட்டார். “பிரபு! இவன் என்னிடம் மாணவனாக சேர விரும்பிய போது, நான் மாதம் மூன்று பொற்காசு வீதம் குரு தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க வேண்டும் என்றும் கூறினேன்.ஆனால் இவன் தான் பரம ஏழை என்றும், தட்சிணை கொடுக்க இயலாது என்றும் கூறினான். படிப்பு முடிந்ததும் வழக்கறிஞனாகி முதல் வழக்கில் வெற்றி பெற்றவுடன், முப்பத்தாறு பொற்காசுகள் சேர்த்து தருவதாகவும் வாக்களித்தான். அதை நம்பி இவனுக்கு ஓராண்டு காலம் கற்பித்தேன்.இவன் மிகவும் கெட்டிக்கார மாணவன் என்பதால் ஓராண்டிலேயே மிகச் சிறப்பாக சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு விட்டான். நானும் இவன் வழக்கறிஞனாகி, முதல் வழக்கிலேயே வெற்றி பெறுவான் என்றும், தட்சிணையை மொத்தமாகக் கொடுப்பான் என்றும் நம்பினேன்” என்று சொல்லி நிறுத்தினார் கிழவர். “இப்போது பணம் தராமல் ஏமாற்றுகிறானா?” என்று அக்பர் கேட்டார்.“இல்லை பிரபு! இவன் திடீரென வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு விட்டான். அந்தத் தொழிலில் ஈடுபடப் போவதில்லையாம்!” என்றார். உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்?” என்று கேட்டார்.“பிரபு! நான் சட்டம் பயின்று முடித்ததும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதாகத்தான் இருந்தேன். ஆனால் என் சித்தப்பா திடீரென இறந்து போனார். அவர் தன்னுடைய உயிலில் அவருடைய அனைத்து சொத்துகளுக்கும் என்னை வாரிசாக்கி விட்டார். இப்போது நான் லட்சாதிபதி. அதனால் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை,” என்றான். “அப்படியானால் இவருடைய தட்சிணை என்ன ஆவது?” என்று கேட்டார் அக்பர். “நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். எனக்கு என்று வழக்கறிஞனாக ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் தட்சிணையும் தர முடியும்” என்றான்.பிரமோத் பிஹாரி கூறுவது சரியே என்று நினைத்தார் அக்பர். உடனே அவர் நீதிபதியை நோக்கித் தீர்ப்பு வழங்கக் கூறினார்.நீதிபதி அவர்கள் இருவரையும் நோக்கி, “இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கில் பிரமோத் பிஹாரியின் பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று இந்த தர்பாரில் அவன் உறுதி அளித்துள்ளான்.அவன் சொல்லை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு என்று வழக்கறிஞராக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அன்று அந்தத் தொழிலில் ஈடுபட்டு குருவின் தட்சிணையைத் திருப்பித் தரலாம். அதுவரை குரு காத்திருக்க வேண்டும். இதுவே என் தீர்ப்பு!” என்றார். அக்பர் உட்பட தர்பாரில் அனைவரும் இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இதை எதிர்பார்க்காத கிழவர் ஏமாற்றத்தினாலும், வருத்தத்தினாலும் உடல் குறுகிப் போனார்.ஆனால் பீர்பல் மட்டும் தீர்ப்பைப் பாராட்டாமல் மிகவும் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு பீர்பலிடம் கூறினார். அதைக்கேட்டதுமே கிழவரின் முகம் மலர்ந்தது. மிகவும் புத்திசாலியான பீர்பல் சரியான தீர்ப்பு வழங்குவார் என்று அவர் உறுதியாக நம்பினார்.பீர்பல் இளைஞனை நோக்கி, “நீ கொடுத்த வாக்கில் உறுதியாக இருக்கிறாய் அல்லவா?” என்றார். “அதில் என்ன சந்தேகம்? கண்டிப்பாக அப்போது அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து என் குருநாதருக்கு சேர வேண்டிய தட்சிணையைக் கட்டாயம் தந்து விடுவேன்” என்றான் இளைஞன்.பிறகு கிழவரை நோக்கி, “பிஹாரியின் நிபந்தனையை நீங்கள் ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா?” என்று கேட்டார் பீர்பல் “ஆம் ஐயா!” என்றார் கிழவர்.“அப்படியானால் சட்டப்படி இளைஞனின் தரப்பில்தான் நியாயம் உள்ளது. அவன் வழக்கில் வெற்றி பெற்று தட்சிணை தரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான்” என்றார் பீர்பல். பீல்பலையும், அக்பரையும் வணங்கிவிட்டு அவர் தள்ளாடித் தள்ளாடி வெளியேற, இளைஞன் பிஹாரி வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேறினான்.திடீரென பீர்பல் பிஹாரியை அழைத்து, “பிஹாரி! இதுதான் சக்கரவர்த்தியின் நீதிமன்றத்தில் உன்னுடைய முதல் வழக்கு! உன்னுடைய வழக்கை விசாரிக்க வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் நீயே உன் தரப்பு நியாயத்தை வெகு அழகாக எடுத்துக் கூறினாய்” என்றார் பீர்பல். பிஹாரி மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா!” என்றான்.பீர்பல் தொடர்ந்து, “அதாவது உன்னுடைய முதல் வழக்கில் நீயே வழக்கறிஞராக இருந்து வாதாடி அதில் வெற்றி பெற்று விட்டாய். இல்லையா?” என்று பீர்பல் கேட்டார். “ஆம் ஐயா!” என்றான் பிஹாரி மகிழ்ச்சியுடன்.“அப்படியானால் நீ வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்ற முதல் வழக்கு இது! நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு!” என்றார்.ஒருகணம் திகைத்துப் போன அனைவரும், மறுகணமே கைதட்டி ஆர்ப்பரித்தனர். கிழவர் பீர்பலுக்கு மனமார நன்றிகூற, அக்பர் பீர்பலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார்.
|
ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, “பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு” என்று ஏளனம் செய்தனர். இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், “இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்” என்று கிண்டலடித்தனர். இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்” என்றான். வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார். கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!” என்று காட்டமாக விமர்சித்தான். இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு “மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!” என்று முடிவு செய்தனர். அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.எப்படி இருக்கு?
|
ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர். ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?" ‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!" என்றார் குரு. ‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?" ‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!" குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர். ‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்," என்று முடிவு செய்தனர். மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர். சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர். குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர். எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு! குழப்பம் குருவே குழப்பம்! புகழ்பெற்ற துறவி அவர். அவருக்கு ஏராளமான மாணவர்கள். ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்," என்று ஆரம்பித்தார் மாணவர். ‘என்ன?" ‘நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!" ‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?" ‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றிச் சிறுத்துவிடுகிறது!" குருநாதர் சிரித்தார். ‘ஆக… நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?" ‘ஆமாம் குருவே. அது தவறில்லையா?" ‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!" ‘அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்றுவிட்டால்?" ‘அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும் இல்லையா?!" |
ஒரு ஊரில் வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார், அவர் ஒரு கன்று குட்டியை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார், திடீரென வியாபாரி வெளியூர்க்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார், கன்று குட்டியை தன்னுடன் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது வியாபாரிக்கு, அதனால் கன்று குட்டியை தன் பக்கத்து வீட்டு காரரிடம் கொடுத்துவிட்டு விட்டு, நான் விரைவாக வந்து விடுவேன், நான் எனது கன்று குட்டியை எப்படி விட்டு செல்கிறேனோ நான் கேட்கும் போது அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும், எவ்வித மாற்றமும் சேதமுமின்றி என்று கூறி,கன்றை பக்கத்து வீட்டு காரரிடம் விட்டு சென்றார், நாட்கள் பல கழிந்தது, மாதங்கள் பல கழிந்தது, வருடங்கள் பல கழிந்தது . கன்று வளர்ந்து பசுவானது பால் கொடுக்க ஆரம்பித்தது, பக்கத்து வீட்டு காரரும் தினந்தோறும் பசுவிடம் பால் கறந்து விற்று வந்தார் சிறிது காலம் கழித்து பசு கன்று ஒன்றை ஈன்றது, திடீரென வியாபாரி பக்கத்து வீட்டு காரரிடம் வந்து தனது கன்று வளர்ந்து பசுவாகியிருக்கும் எனது பசுவை தருமாறு கேட்டார், அதற்கு பக்கத்து வீட்டு காரர் மறுப்பு சொல்லவே இருவருக்கும் வாக்குவாதம் முட்டியது மரியாதை இராமனை பற்றி கேள்விபட்டு இருவரும் அவரிடம் சென்று முறையிடுவோம் என்று முடிவு செய்து மரியாதை இராமனிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டனர் மரியாதை இராமன் இருவரையும் விசாரித்தார் வியாபாரியோ இது என்னுடைய பசு நான் தான் சிறிது காலத்திற்கு முன்பு இது கன்றாக இருந்த போது இவரிடம் ஒப்படைத்து விட்டு நான் கேட்கும் போது அப்படியே கொடுக்க வேண்டும் என்று கூறி விட்டு சென்றேன் என்றார், பக்கத்து வீட்டு காரரோ இவர் பல காலத்திற்கு முன்பே என்னிடத்தில் கன்றை விட்டு சென்றார், இப்பொழுது வரை நான் தான் எனது கை செலவில் இதற்கு தீவனம் வாங்கி போட்டு வருகிறேன், அதனால் இந்த பசு எனக்கே சொந்தம் என்றார், மரியாதை இராமன் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை செய்தார், பிறகு பசுவையும் அது ஈன்ற கன்றையும் நாளை கொண்டு வருமாறு கூறி தீர்ப்பை நாளை கூறுகிறேன் என்றார் இரவு கழிந்தது, சூரியன் உதித்தது, ஊர் மக்களும் தீர்ப்பை கேட்க அவையில் கூடினர், பசு பக்கத்து வீட்டு காரருக்கு சொந்தம் என்றார் மரியாதை இராமன், அதற்கு வியாபாரியோ இது எப்படி நியாயம் என்று உரத்த குரலில் கேட்டார், அதற்கு மரியாதை இராமன் நீங்கள் தானே பக்கத்து வீட்டு காரரிடம் நான் எப்படி என் கன்றை விட்டு செல்கிறேனோ, நான் திருப்பி கேட்கும் போது எவ்வித பாதிப்பும், மாற்றமுமின்றி அப்படியே கொடுக்க வேண்டும் என்றீரே, அந்த பசுவின் கன்று நீங்கள் எப்படி விட்டு சென்றீரோ அப்படியே தானே உள்ளது என்றார் மரியாதையும் ராமன் பசு பக்கத்து வீட்டு காரருக்கு சொந்தம், அது ஈன்ற கன்று வியாபாரிக்கு சொந்தம், மேலும் கன்று வளரும் வரை பசுவையும் கன்றையும் பிரிக்க வேண்டாம் என்று கூறி தீர்ப்பை முடித்து வைத்தார்.. |
ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார். தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்," என்று கூறினார். பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன. மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!" என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார். "கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்," என்று கூறினார். உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்," என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்," என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான். பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன். |
ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது. அக்பர் பீர்பாலை பார்த்து" பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா… எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கலாம்" என்றார். "அரசே, சிங்கத்தின் முடியை கூட கொண்டு வந்துவிடலாம். ஆனால் நடுங்கும் குளிரில் இரவு முழுவது ஆற்றில் நிற்பது என்பது சதாரண காரியமா?" என்றார் பீர்பால். "யமுனை ஆற்றில் குளிரில் நிற்பதற்கு எந்தவித திறமையும் தேவையில்லை, மன உறுதி இருந்தாலே போதும்! நாடு முழுவதும் இந்த செய்தியை அறிவிக்க சொல்லுங்கள்! பணத்தின் மீது ஆசைப்பட்டு நிறைய பேர் பங்கு பெற வருவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் எனப்பார்ப்போம்" என்றார் அக்பர். அரசரின் ஆணை நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளே, ஒரு இளைஞன் அரசரிடம் வந்து" அரசே, யமுனை நதியில் கழுத்தளவு நீரில் இரவு முழுவதும் நிற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்றான். அக்பர் அந்த இளைஞனை வியப்பாக பார்த்து "இன்று இரவு போட்டிக்கு தயாராகு" என்றார். இளைஞனும் தயாரானான். நடுங்கும் குளிரில் நிற்பது சதாரண விசயமில்லையே என நினைத்த அக்பர், அந்த இளைஞனை கண்காணிப்பதற்கு இரண்டு காவலாளிகளை நியமித்தார். யமுனை ஆற்றில் வெற்று உடம்புடன் இறங்கினான் இளைஞன். கழுத்தளவு வரை நீர் உள்ள இடத்தில் நின்று கொண்டான். உடல் மிகவும் நடுங்கியது, குளிர் வாட்டியது, அவனால் தாக்குபிடிக்கமுடியவில்லை. ஆனாலும் பரிசாக கிடைக்கப்போகும் ஆயிரம் பொற்காசுகளை எண்ணி பார்த்தான். புது தெம்பு வரவே, இரவு முழுவதும் கண் விழித்து நின்று கொண்டிருந்தான். பொழுது விடிந்தது. வெயில் மேனியில் பட உடல் சீரான நிலைக்கு வந்தது. ஆயிரம் பொற்காசுகளை பெறப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஆற்றை விட்டு மேலே வந்தான். அவனை காவலாளிகள் மன்னரிடம் அழைத்து சென்று இரவு முழுவது இளைஞன் கழுத்தளவு நீருக்குள் நின்றதை கூறினார்கள். அக்பருக்கோ மிகவும் வியப்பாக இருந்தது. "இளைஞனே உன் மன உறுதியை பாராட்டுகிறேன்! அந்த இரவில், கடும்குளிரில் நீருக்குள் எப்படி இருந்தாய்? அப்படி நிற்கும்போது உனக்கு எந்த வகையிலும், ஏதாவது துணையாக இருந்ததா? என்றார் அக்பர். அந்த இளைஞனும் அப்பாவியாய் "அரசே அரண்மனையின் மேல் மாடத்தில் எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கின் ஒளியை பார்த்துக்கொண்டே இரவுப்பொழுதை கழித்தேன்" என்றான். "இளைஞனே அதானே பார்த்தேன். நடுங்கும் குளிரில் தண்ணீருக்குள் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்று இப்பொழுது புரிகிறது! உன் குளிரை போக்க அரண்மனையிலிருந்து வீசிய விளக்கின் ஒளி உனக்கு உதவி செய்திருக்கிறது. அந்த சூட்டில் தான் இரவு முழுவது நின்றிருக்கிறாய். எனவே உனக்கு ஆயிரம் பொற்காசுகள் கிடையாது" என்றார். பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்றதும் அந்த இளைஞன் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றான். பீர்பால் அவனை கண்டு என்னவென்று விசாரிக்க. இளைஞனும் பீர்பாலிடம் எல்லாவற்றையும் சொன்னான். பீர்பால் அவனுக்கு ஆறுதல் கூறி பரிசு தொகையை கிடைக்க உதவி செய்வதாக உறுதியளித்தார். சில நாட்களுக்கு பிறகு, அக்பர் வேட்டையாட புறப்பட்டுக்கொண்டிருந்தார். பீர்பாலை தம்முடன் அழைத்து செல்ல எண்ணிய அக்பர் காவலாளியை கூப்பிட்டு பீர்பால் வீட்டுக்கு சென்று அழைத்து வரச்சொன்னார். பீர்பால் தன்னை தேடி வந்த காவலாளியிடம் தான் சமையல் சென்று கொண்டிருப்பதையும், சாப்பிட்டு விட்டு வருவதாகவும் கூறினார். நீண்ட நேரம் பீர்பாலுக்காக அக்பர் காத்திருந்தார். பீர்பால் வரவில்லை. மிகவும் கோபமடைந்த அரசர் பீர்பாலின் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வரலாம் எனப்புறப்பட்டார். பீர்பால் வீட்டில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். பாத்திரத்திலிருந்து பத்தடி தூரம் தள்ளி அடுப்பை வைத்திருந்தார். அடுப்பில் விறகுகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை கண்ட அக்பருக்கு ஒன்றும் புரியவில்லை. பீர்பாலிடமே கேட்டார். "பீர்பால் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" அக்பர். "அரசே சமையல் செய்து கொண்டிருக்கிறேன்" பீர்பால். "உமக்கு என்ன மூளை குழம்பி விட்டதா? பாத்திரம் ஒரு பக்கம் இருக்கிறது. அடுப்பு ஒரு பக்கம் இருக்கிறது. அதில் எப்படி சோறு வேகும்?" என்றார் அக்பர் கோபத்துடன். "அரசே நிச்சயம் சோறு வேகும். யமுனை ஆற்றில் தண்ணீரில் இருந்தவனுக்கு அரண்மனையில் இருந்த விளக்கின் வெளிச்சம் சூட்டை தந்திருக்கும்போது மிகவும் பக்கத்தில் இருக்கிற அடுப்பில் ஏற்படும் சூடு அரிசி பாத்திரத்தில் பட்டும் சோறு வெந்து விடாமல் போகுமா?" என்றார் பீர்பால். மிகவும் நாசூக்காக தமக்கு புரிய வைத்த பீர்பாலை பாராட்டி அந்த இளைஞனை வரவழைத்து… முன்பு கூறிய படியே ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தார். |
அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள வினாயகர் படத்தை தான் பார்ப்பார். ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல பிரச்சனைகள் வ்ந்தது. எல்லாம் அந்த சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் என்று அந்த சிப்பாயை தூக்கில் போட உத்தரவிட்டார். இந்த விஷயம் பீர்பாலுக்கு தெரிய வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார். அதற்கு அக்பர் இவனுடைய முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது, இவனுடைய முகம் அபசகுனமானது என்று கூறினார். அதற்கு பீர்பால் பயங்கரமாக சிரித்தார். "ஏன் சிரிக்கிறாய்?" என்று அக்பர் கோபமாக பீர்பாலை பார்த்து கேட்டார். அதற்கு பீர்பால் "நீங்கள் அவனுடைய முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே , அப்போ யாருடைய முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்" என்றார். அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த சிப்பாயை விடுதலை செய்தார். |
ஒரு பொற்கொல்லன். வசதியாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் திருமண வயதில் அழகான மகள். அதே ஊரில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் சேட்டு ஒருவன் இருந்தான். இளைஞன். அவனுக்கு பொற்கொல்லன் மகளை மணம் முடிக்க ஆசை. கேட்ட போதெல்லாம் பொற்கொல்லனும் அவன் மகளும் தொடர்ந்து மறுத்து வந்தனர். பொற்கொல்லன் மகளுக்கு சேட்டு இளைஞனை அறவே பிடிக்காது. ஒரு முறை நாட்டின் பொருளாதாரம் தீவிரமாகத் தேய ஆரம்பித்தது ( Downturn :o) ). பொற்கொல்லனின் வியாபாரம் நொடித்துப் போகும் நிலைக்கு வந்தது. ஏகப் பட்ட பொருள் இழப்பு. வியாபாரத்தை தொடரவும், வாழ்க்கைச் செலவுகளுக்கும் கடன் வாங்க வேண்டிய அவசியம் வந்தது. பொற்கொல்லன் வேறு வழியில்லாமல் சேட்டு இளைஞனிடம் கடன் வாங்கப் போனான். சேட்டும் கேள்வி கேட்காமல் கடன் கொடுத்தான். அவனைப் பொறுத்த வரை வருங்கால மாமனாரல்லவா ! பொற்கொல்லனால் கடனைக் குறித்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. சேட்டு இளைஞன் கடனைத் திரும்பக் கேட்காமல் பொற்கொல்லனிடம் அவன் மகளை மணம் முடித்துத் தருமாறு கேட்டான். பொற்கொல்லனும் அவன் மகளும் தீவிரமாக மறுத்தார்கள். சேட்டு ஊர் பெரியவர்களிடம் நியாயம் கேட்டான். அவர்களும், வசதியாக வாழும் சேட்டுக்கு மகளை மணம் முடித்துக் கொடுத்து விடும் படிதான் பொற்கொல்லனுக்கு அறிவுறுத்தினார்கள். பொற்கொல்லன் மறுத்து விட்டான். பணத்தை எப்படியாவது திருப்பித் தந்து விடுவதாகச் சொன்னான். எப்படி, எப்போது என்றுதான் அவனால் சொல்ல முடியவில்லை. பிரச்சனையைத் தீர்க்க சேட்டு அனைவருக்கும் ஒரு யோசனை சொன்னான். அதன்படி, ஊரின் மத்தியில் உள்ள திடலில் சம்பந்தப் பட்ட அனைவரும் வாரக் கடைசியில் கூட வேண்டும். அந்தத் திடலில் கருங் கூழாங்கற்களும், வெண் கூழாங்கற்களும் நிறைந்திருக்கும். அந்தச் சமயம் சேட்டு திடலிலிருக்கும் கற்களிலிருந்து ஒரு கருங் கூழாங்கல்லையும் ஒரு வெண் கூழாங்கல்லையும் ஒரு சிறிய பைக்குள் போட்டுக் கொண்டு வருவான். பொற்கொல்லன் மகள் அவன் கொண்டுவரும் பைக்குள் கையை விட்டு, ஊரார் மத்தியில், ஒரு கல்லை எடுக்க வேண்டும். அவள் கையில் வெள்ளைக் கல் வந்தால் அவள் விருப்பம் போல் மணம் செய்து கொள்ளலாம். கருப்புக் கல் வந்தால் தன்னைத்தான் அவள் மணம் செய்து கொள்ளவேண்டும். இந்த யோசனையை பொற்கொல்லனும் அவன் மகளும் ஒத்துக் கொண்டால், கடனை ரத்து செய்து விடுவதாக சேட்டு ஊர் பெரியவர்களிடம் கூறினான். ஊரார் கட்டாயப் படுத்தியதன் காரணத்தால் வேண்டா வெறுப்பாக பொற்கொல்லனும் அவன் மகளும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். சேட்டு தந்திரமாக ஒரு காரியம் செய்தான். அவன் திடலுக்குக் கொண்டு செல்லும் பைக்குள், ரகசியமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு, இரண்டு கருப்பு கூழாங்கற்களை வைத்துக் கட்டி விட்டான். ஆனால், உண்மையில், பொற்கொல்லன் மகளுக்கு வேண்டிய ஒரு சிறுவன் இந்தக் காரியத்தை சேட்டுக்குத் தெரியாமல் பார்த்து விட்டான். உடனே ஓடிப் போய் அவளிடம் போட்டுக் கொடுத்து விட்டான். பொற்கொல்லன் மகள் தீவிரமாக சிந்தித்துப் பார்த்தாள். அப்பாவும் அவளும் எடுத்திருந்த முந்தைய நிலைகளால் சேட்டின் மேல் இப்போது சந்தேகத்தைக் கிளப்பினால், வேண்டுமென்றே திருமணத்தைத் தவிர்ப்பதற்காக செய்வதாகத்தான் ஊரார் நினைக்கப் போகிறார்கள் என்று அவளுக்குத் துல்லியமாகப் புரிந்தது. முதலில் அப்படிச் செய்யத் தோன்றிய எண்ணத்தைக் கை விட்டு விட்டாள். அவள் சிறுவனை இந்த விபரம் மற்றவருக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் படி அறிவுறுத்தி அனுப்பினாள். அடுத்த நாள் ஊரார் மத்தியில் அவள் தலைவிதி நிச்சயிக்கப் படப் போகிறது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் யோசித்து யோசித்து விடை எதுவும் கிடைக்காமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தாள். அடுத்த நாள் திடலுக்குப் போகும் நேரம் வந்தது. அமைதியாக திடலுக்குப் போனாள். அங்கே அவளுக்கு தரையில் கிடந்த கறுப்பு வெள்ளைக் கூழாங்கற்களைப் பார்த்தவுடன் உற்சாகம் வந்து விட்டது. சேட்டு கண்டிப்பாக தனக்குக்குத்தான் வெற்றி என்று நமட்டுச் சிரிப்புடன் பையைக் கொண்டு வந்து பொற்கொல்லன் மகளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கித் திறந்து அதனுள் இருந்த ஒரு கல்லை எடுத்து அதன் வண்ணத்தை எவரும் கவனிக்கும் முன் கை தவறுவது போல திடலில் கிடக்கும் மற்ற கறுப்பு வெள்ளை கூழாங்கற்களுக்கு மத்தியில் நழுவ விட்டு விட்டாள். எதிர்பாராமல் நடந்ததாலும், அவள் நழுவ விட்ட கல் மற்ற கூழாங்கற்களுக்கு மத்தியில் சேர்ந்து விட்டதாலும், அந்தக் கல்லை சேட்டு உட்பட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லை. திடுக்கிட்டுப் போன ஊர் பெரியவர்களிடம் அவள் அமைதியாகப் பேசினாள். பைக்குள் ஒரு வெள்ளைக் கல்லும் ஒரு கருப்புக் கல்லும் இருந்ததால், பைக்குள் மிச்சமிருக்கும் கல்லை ஊரார் பார்த்தால் அவள் எடுத்து நழுவ விட்ட கல்லின் வண்ணம் எதுவென்று தானாகத் தெரிந்துவிடும் என்று சொல்லி பையை அவர்களிடம் கொடுத்து விட்டாள். பைக்குள் இரண்டு கருப்புக் கற்களை வைத்த சேட்டுக்குத் “திருடனுக்குத் தேள் கொட்டியது போல” ஆகி விட்டது. சொல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. கடனை ரத்து செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டு தலையைத் தொங்க விட்டுக் கொண்டு போய் விட்டான்.
|
அக்பரின் தர்பாரில் இருந்தவர்களில், பீர்பால் அக்பருக்கு மிகவும் நெருக்கமானவர். பீர்பாலுடைய அறிவும், நகைச்சுவையும் அக்பரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. பல சமயங்களில் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளினால் அக்பரைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் மிகவும் வல்லவர். வழக்கப்படி அவர் ஒருநாள் அக்பரை சிரிக்க வைத்தபோது, வாய்விட்டு சிரித்த அக்பர் பீர்பாலைப் பார்த்து, "நீ சக்திவாய்ந்தவனாக இருப்பதன் காரணம் உன் மதியூகமும், நகைச்சுவை உணர்வுமே!" என்று விமரிசித்தார். "பிரபு! அதுதான் உங்களுக்கும், எனக்குமுள்ள வித்தியாசம்! நீங்கள் ஒரு சக்ரவர்த்தியின் பிள்ளை என்ற ஒரே காரணத்தினால் எந்த சாதனையும் புரியாமல் சக்ரவர்த்தி ஆகிவிட்டீர்கள். ஆற்றல் மிக்கவராக இருக்கிறீர்கள். ஆனால், என்னுடைய பெருமைக்கும், பெயருக்கும் காரணம் திறமை மட்டுமே! உங்களைப் போல் பிறப்பினால் அடையவில்லை. உழைத்துப் பெற்றவன் நான்!" என்று பெருமை பேச அக்பருக்கு இலேசாகக் கோபம் வந்தது. "என்ன உளறுகிறாய்?" என்று கேட்டார் அக்பர். "சரியாகத்தான் சொல்கிறேன். என் மூளையை யாரும் என்னிடம் இருந்து திருட முடியாது? அதனால் என் சக்தியும், பெருமையும் என்றென்றும் இருக்கும். ஆனால், உங்கள் மகுடமும், முத்திரை மோதிரமும் உங்களிடம் இருக்கும் வரைதான் உங்களுக்கு சக்தி உண்டு. அவற்றைப் பறித்து விட்டால் நீங்கள் செல்லாக் காசு! உங்களுக்கு மதிப்பே கிடையாது" என்றார் பீர்பால். சினம் தலைக்கேறிய அக்பர், "நீ சொல்வதை நிரூபித்துக் காட்டு! இல்லை என்றால் உனக்கு மரண தண்டனை!" என்று பீர்பாலைப் பார்த்து சீறினார். அன்றிரவு பீர்பால் படுக்கையில் படுத்தவாறே அக்பரின் சவாலை சமாளிப்பது எப்படியென்று சிந்தனை செய்தார். கடைசியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அன்றிரவு பீர்பால் படுக்கையில் படுத்தவாறே அக்பரின் சவாலை சமாளிப்பது எப்படியென்று சிந்தனை செய்தார். கடைசியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அடுத்த நாள் வழக்கப்படி பீர்பால் தர்பாருக்கு வந்தார். அக்பர் வழக்கப்படி பீர்பாலுடன் பேசினாலும், அன்று அவர் இயல்பான பிரியத்துடன் பேசவில்லை. தான் நேற்று கூறியது அவருடைய மனத்தை பாதித்து இருக்கிறது என்று பீர்பால் உணர்ந்து கொண்டார். இரண்டு வாரங்கள் சென்றன. வாரத்திற்கு ஒருமுறை அக்பர் இரவு நேரத்தில் மாறுவேடமணிந்து தனியாக நகர்வலம் வருவது வழக்கம்! நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது. மக்கள் மனநிறைவுடன் இருக்கின்றனரா என்றெல்லாம் நேரில் கண்டறியவே அவர் அவ்வாறு செய்வார். மாறுவேடமணிந்து செல்லும்போது, அக்பரை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அஷ்ரப் எனும் ஒப்பனைக் கலைஞர் மிக அழகாக வேடம் அணிவிப்பார். அஷ்ரப்பும், பீர்பாலும் நண்பர்கள். ஒவ்வொரு முறை அக்பருக்குப் புதிய வேடம் அணிவிக்கும்போது அஷ்ரப் பீர்பாலைக் கலந்து ஆலோசிப்பார். இந்த வாரத்தில் இந்த மாறுவேடம் அணியப்போகிறார் என்பதை பீர்பால் முன்கூட்டியே ஊகித்து விடுவார். அக்பருக்கு எப்படி ஒப்பனை செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற உத்திகள் பீர்பாலுக்கு நன்றாகத் தெரியும். அவற்றை அவர் அஷ்ரப்புக்குச் சொல்லிக் கொடுப்பார். ஒருநாள் மாலை அஷ்ரப் பீர்பாலைத் தேடி வந்தார். "இன்றிரவு அக்பர் மாறுவேடம் அணியப்போகிறார். அவருக்குப் பிச்சைக்காரர் வேடம் போட்டு விடலாமா?" என்று பீர்பாலைக் கேட்டார். "தாராளமாகச் செய்! சக்ரவர்த்தியையை பிச்சைக்காரனாக்கும் சக்தி உனக்குத்தான் உண்டு" என்ற பீர்பால் தொடர்ந்து, "அவருக்கு ஒட்டுப்போட்ட சட்டையும், பைஜாமாவும் அணிவிப்பாய். பழைய, கிழிந்த துணியினால் தலைப்பாகை செய்! தேய்ந்து போன செருப்புகளைக் கொடு. முகத்திலும், கழுத்திலும், கைகளிலும் கறுப்பு வண்ணக் கோடுகள் போட்டு, சாயம்பூசி சுருங்கிய தோலும், வெயில்பட்டுக் கன்றிய முகமுமாக இருப்பதுபோல் செய்!" என்றார். அஷ்ரப் பீர்பால் கூறிய அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டபின் அங்கிருந்து அகன்றார். "நான் நினைப்பது நடக்கும் என்று தோன்றுகிறது" என்று பீர்பால் புன்னகைத்தார். பிறகு தன் மனைவியை அழைத்துத் தனக்கும் பிச்சைக்காரன் வேடம் அணிவிக்க வேண்டினார். "இந்த நேரத்தில் உங்களுக்கு எதற்குப் பிச்சைக்காரன் வேடம்?" என்று அவள் கேட்டாள். "ஊர் முழுவதும் சுற்றி பிச்சை எடுக்கப் போகிறேன். அப்போது தான் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை எத்தனை கஷ்டமானது என்று உணர முடியும்" என்றார் பீர்பால். "நீங்களும், உங்கள் யோசனையும்!" என்று அவள் ஏளனமாகப் பேசினாலும், பீர்பாலுக்குப் பிச்சைக்காரன் வேடம் போட்டுவிட மும்முரமாக முயன்றாள். பழைய, ஒட்டுப்போட்ட துணிகளைத் தேர்ந்தெடுத்து அணிவித்தாள். பழைய, பிய்ந்து போன செருப்புகளை அணிவித்தப்பின்-, முகத்திலும், கழுத்திலும் சாயங்கள் பூசி அசல் பிச்சைக்காரனைப் போல் தோற்றமளிக்குமாறு செய்தாள். வேடம் நன்றாகப் பொருந்தி இருக்கிறது என்று திருப்தி அடைந்தபின் அவரை அனுப்பி வைத்தாள். வீட்டை விட்டுப் பிச்சைக்காரன் வேடத்தில் வெளியேறிய பீர்பால் நேராக அரண்மனையை நோக்கி நடந்தார். அரண்மனை வாயிலில் இருந்து ஒதுங்கி ஒரு மறைவான இடத்தில் நின்று கொண்டு காத்து இருந்தார். சிறிது நேரத்தில் அரண்மனை வாயிற்கதவுகள் திறக்க ஒரு பிச்சைக்காரன் வெளியே வந்தான். அவனை காவலர்கள் வணங்கினர். ‘பிச்சைக்காரன் உண்மையில் யார் என்று இவர்களேக் காட்டிக் கொடுத்துவிட்டனர்" என்று எண்ணிய பீர்பால் "ஏய், பிச்சைக்காரா? உன்னுடன் நானும் சேர்ந்து கொள்ளட்டுமா?" என்று கேட்டார். "யாரடா நீ?" என்று குரலில் அதிகாரம் தொனிக்க பிச்சைக்காரன் வேடத்திலிருந்த அக்பர் பீர்பாலைப் பார்த்துக் கேட்டார். "நானும் உன்னைப் போல் பிச்சைக்காரன்தான்" என்று பீர்பால் சொல்ல, "நான் பிக்சைக்காரன் இல்லை" என்று அக்பர் மறுத்தார். "பின்னே என்ன, நீ சக்ரவர்த்தியா?" என்று பீர்பால் வேண்டும் என்றே விஷமமாகக் கேட்க, "ஆம்! நான் அக்பர்! மாறுவேடத்தில் இருக்கிறேன்" என்றார் அக்பர். "யாரிடம் கதை விடுகிறாய்? அக்பர் நீதான் என்றால் உன் முத்திரை மோதிரம் எங்கே?" என்று பீர்பால் வம்பு செய்தார். "என்னிடம் முத்திரை மோதிரம் இருக்கிறது. ஆனால், அதை உன்னிடம் நான் ஏன் காட்ட வேண்டும்?" என்று அக்பர் கேட்டார். "இல்லையானால் நீ சொல்வதை எப்படி நம்புவது? நானும் உன்னைப் போல் பிச்சைக்காரன்! அந்த உரிமையில் கேட்கிறேன்" என்றார் பீர்பால். "சந்தேகமிருந்தால் இதோ பார்!" என்று முத்திரை மோதிரத்தை தன் விரலில் இருந்து கழற்றி அக்பர் காட்டினார். "அது உண்மையா இல்லை போலியா? கொடு, பார்க்கலாம்" என்று அதை சோதிப்பவர் போல் பீர்பால் அக்பரிடமிருந்து மோதிரத்தை வாங்கிக் கொண்டார். "அட! நிஜமாகவே இது சக்ரவர்த்தியின் முத்திரை மோதிரம்தான்! ஆனால், இது உனக்கு எப்படிக் கிடைத்தது?" என்று பீர்பால் ஆச்சரியப்படுபவர் போல் நடித்தார். "முட்டாளே! நான்தான் அக்பர் என்று சொல்கிறேனே! என்னிடமில்லாமல் வேறு யாரிடம் இது இருக்கும்?" என்று அக்பர் சீறிவிழ, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, அங்கு சில காவல் வீரர்கள் வந்தனர். "இவனைப் பிடித்துச் செல்லுங்கள்! இவன் ஒரு திருடன்!" என்று பீர்பால் கூச்சலிட அவர்கள் அக்பரைப் பிடிக்க வர, "முட்டாள்களா! நான்தான் சக்ரவர்த்தி!" என்று அக்பர் கூச்சலிட்டார். "அவன் பொய் சொல்கிறான். நான்தான் சக்ரவர்த்தி!" என்று சொல்லி பீர்பால் முத்திரை மோதிரத்தைக் காட்ட, அவர்கள் அக்பரைக் கைது செய்ய முயன்றனர்."சரி சரி! அவனை விட்டுவிடுங்கள்" என்று பீர்பால் கூற அவர்கள் பீர்பாலுக்கு சலாம் செய்துவிட்டுச் சென்றனர். மறுநாள் அரண்மனையில் அக்பரைத் தனியாக சந்தித்த பீர்பால், "பிரபு! நேற்று உங்கள் மோதிரத்தைத் தொலைத்து விட்டீர்களா?" என்று கேட்க, அக்பர் ‘ஆம்" என்று தலை அசைத்தார். "இதோ, உங்களுடைய மோதிரம்!" என்று பீர்பால் மோதிரத்தை அக்பரிடம் கொடுத்தார். உடனே நேற்றிரவு தான் மாறுவேடத்திலிருந்த போது தன்னுடன் தகராறு செய்து அவமானப்படுத்தியது பீர்பால்தான் என்று தெரியவர, அக்பர் கோபத்தில் துடித்தார். உடனே பீர்பால், "பிரபு! தயவு செய்து கோபப்படாதீர்கள்! உங்களை அவமானப்படுத்துவது என் நோக்கமல்ல! சில நாள்களுக்கு முன் நமக்குள் நடந்த விவாதம் நினைவிருக்கிறதா? என்னுடைய பெருமை, கௌரவம் ஆகியவை என் திறமையினால் பெற்றவை என்றும், உங்களிடம் அதிகாரச் சின்னங்களான மகுடமும், மோதிரமும் இருக்கும் வரைதான் உங்கள் அதிகாரம் செல்லுமென்றும் கூறினேன். அதை நீங்கள் நிரூபித்துக் காட்டச் சொன்னீர்கள், அதைத்தான் நான் நேற்று நிரூபித்துக் காட்டினேன். உங்களிடம் உள்ள முத்திரை மோதிரத்திற்குள்ள சக்தி உங்களுக்கில்லை என்று காட்டி விட்டேன்" என்றார். ஒரு கணம் கோபத்தில் துடித்தாலும், மறுகணமே அக்பருடைய கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. பலமாக சிரித்த அக்பர், "போக்கிரிப் பயலே! சாமார்த்தியமாக என்னை மடக்கி விட்டாயா? உன்னுடன் சவாலிட்டு ஜெயிக்க முடியுமா? நீ அதிபுத்திசாலி ஆயிற்றே!" என்று புகழ்ந்தவர், பீர்பாலுக்கு பொற்காசுகள் நிரம்பிய ஒரு பட்டுப் பையை பரிசளித்தார். |
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது. அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின. சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்" என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்" என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது. உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது. முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும். |
உடனே கிழவியை நோக்கி, “அம்மா! உன் பை என் இடமே இருக்கட்டும். நீ சொல்வது உண்மையானால் உன் பொற்காசுகள் உனக்குத் திரும்பக் கிடைக்கும்” என்றார். “அந்தக் கடவுள் சத்தியமாக நான் சொன்னது உண்மை!” என்று ஆணித்தரமாகக் கிழவி கூற, “அம்மா! நாளை மறுநாள் வா! அதற்குள் உண்மை புலனாகும்” என்றார் அக்பர். கிழவியும் சலாம் செய்துவிட்டுச் சென்றாள். அதன்பிறகு தர்பார் கலைந்தது. அனைவரும் எழுந்து செல்ல, பீர்பால் பையைக் கையில் ஏந்திக் கொண்டு தீவிரமாக யோசித்தவாறே சென்றார். பீர்பால் மீது பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தீர்க்க முடியாமல் பீர்பால் தோல்வியடைவார் என்றும், அதன்பிறகு அவர் தலை நிமிர்ந்து நடக்க முடியாதென்றும் பீர்பாலை கேலி செய்தவாறு சென்றனர். அவர்கள் தன்னை ஏளனம் செய்வதைப் பொருட்படுத்தாமல் பீர்பால் வீட்டுக்குச் சென்றார். கிழவி கூறியது உண்மை என்று அவருடைய உள்ளுணர்வு கூறினாலும், பையில் இருந்து குல்ஷா எப்படி பொற்காசுகளைத் திருடியிருக்க முடியும் என்பதை மட்டும் ஊகிக்கவே முடியவில்லை. தன் மனைவி தன்னை புன்னகையுடன் வரவேற்றதைக் கூட அவர் கவனிக்கவில்லை. மௌனமாக சாப்பிட உட்கார்ந்தார். கைகள் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாலும், மனம் அந்த வழக்கைப் பற்றி யோசிப்பதிலேயே விரமாக ஆழ்ந்து இருந்தது. திடீரென பீர்பாலுக்கு ஒரு யோசனை உதயமாயிற்று. உடனே தன் படுக்கை அறைக்குச் சென்ற அவர், விலையுர்ந்த படுக்கை விரிப்பு ஒன்றை எடுத்து, அதைக் கத்திரிக்கோலால் சரசரவெனக் கிழித்தார். அதைப்பார்த்த அவர் மனைவி ஓடி வந்து “ஐயோ, உங்களுக்குப் பைத்தியாமா? என்ன காரியம் செய்கிறீர்கள்?” என்று கூச்சலிட்டாள். “உஷ்” என்று அவளை அடக்கிவிட்டுத் தன் வேலையாளை அழைத்த பீர்பால், “இந்த படுக்கை விரிப்பு கிழிந்ததே தெரியாமல் அருமையாகத் தைக்க வேண்டும். அப்படிப்பட்ட திறமையான தையற்காரர் யாராவது தெரியுமா?” என்று கேட்க அவன், “ஐயா! மன்சூர் அலி எனும் தையற்காரன் ஒரு மேதாவி! அவனிடம் கொடுத்தால், கிழிந்ததே தெரியாமல் தைத்து விடுவான்” என்றான். உடனே அவனிடம் பீர்பால் அதைக் கொடுத்தனுப்பினார். மறுநாள் மாலை, வேலைக்காரன் கொடுத்த வேலையைக் கச்சிதமாக முடித்து விட்டுத் திரும்பினான். படுக்கைவிரிப்பைப் புரட்டிப் பார்த்ததும் அது முன்பு கிழிந்திருந்த இடத்தை பீர்பாலினால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நன்றாக மன்சூர் அலி தைத்திருந்தான். “ஆகா! மிகப் பிரமாதமாகத் தைத்து இருக்கிறானே! இந்த மன்சூர் அலியை நேரில் சந்தித்துப் பாராட்ட விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, பீர்பால் தன் வேலைக்காரனுடன் மன்சூர் அலியின் கடைக்குச் சென்றார். “அடடா! பிரபு! நீங்களா! சொல்லிஇருந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேனே!” என்று மன்சூர் அலி ஓடி வந்தான். “மன்சூர்! உன் கடைக்கு வந்து உன்னை நேரிலே பாராட்ட வேண்டும்என்று தோன்றியது. அதனால்தான் நானே இங்கு வந்து விட்டேன்” என்றார் பீர்பால். உங்கள் பாதம் என் கடையில் பட நான் என்ன பாக்கியம் செய்து இருக்கிறேன்!” என்று மன்சூர் உணர்ச்சிவசப்பட்டான். “இந்தா! நீ செய்த அருமையான வேலைக்குக் கூலி!” என்று பீர்பால் ஒரு தங்கக் காசைக் கொடுத்தார். “இருங்கள்! மீதிப்பணத்தைத் தருகிறேன்” என்று மன்சூர் தன் சட்டைப் பையைத் துழாவ, உடனே பீர்பால் அவனைத் தடுத்தப்படி “அவசியமில்லை நீயே வைத்துக் கொள் என்று அடுத்துக் கிழவியின் பையைக் காட்டினார். “மன்சூர்! இந்தப் பையை சமீபத்தில் நீ தையல் போட்டாயா?” என்று பீர்பால் கேட்டதும், அவன் அதை அடையாளம் கண்டு கொண்டான். “ஆம், பிரபு!” என்ற மன்சூர், பையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த இடம் கிழிந்திருந்தது. இதைத் தையல் போட்டு சரி செய்தேன். ஒரு மாதம் முன்பாக குல்ஷா என்னிடம் இந்த வேலையைச் செய்யச் சொன்னார்” என்றான். பீர்பாலுக்குத் தேவையான தகவல் கிடைத்துவிட, அவர் மன்சூரிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறுநாள் தர்பார் கூடியது. பீர்பால் ஏற்பாடு செய்திருந்தபடி, கிழவியும், குல்ஷாவும் தர்பாருக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அக்பர் பீர்பாலை நோக்கி, “இந்தக் கிழவி கூறியது உண்மைதானா இல்லை வீணாக குல்ஷா மீது பழி சுமத்துகிறாளா?” என்று கேட்டார். “கிழவி கூறியதுதான் உண்மை” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய பீர்பால் தான் உண்மையைக் கண்டறிந்த விதத்தை விளக்கினார். அதைக் கேட்ட குல்ஷாவின் முகம் பீதியினால் வெளுத்துக் கை, கால்கள் நடுங்கின. கோபமடைந்த அக்பர், “குல்ஷா! பீர்பால் கூறுவது உண்மைதானா மோசடி செய்தது நீதானா? பொய் சொன்னால் உன்னை இங்கேயே கொன்று விடுவேன்” என்று சீற, குல்ஷா, “பிரபு! பீர்பால் கூறுவது உண்மையே! பேராசை என் கண்களை மறைத்துவிட்டது” என்று அழுதான். கிழவிக்கு அவள் பொற்காசுகள் திரும்பக் கிடைத்தன. பாவம், குல்ஷாவுக்குச் சிறையில் கம்பி எண்ண நேரிட்டது. பீர்பாலின் புத்திசாலித்தனத்தைக் கண்ட அக்பர், அவருக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். அனைவரும் வியந்து பாராட்டினர்.
|
ஒரு முறை விவசாயி ஒருவர் தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தார். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் கழுதையையும், மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே போனார்கள். செல்லும்போது அதைப்பார்த்த வழிப் போக்கர் ஒருவர் இவர்களைப் பார்த்துச் சிரித்தார். பிறகு, ‘கழுதை சும்மாதானே செல்கிறது. யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே" என்றார். அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார். சிறிது தூரம் சென்றதும் எதிரே வந்த ஒருவர், ‘ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு, நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா?" என விவசாயி மகனைப் பார்த்து கேட்டார். உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான். தந்தையும் அவ்வாறே செய்தார். இப்படியாக இன்னும் சிறிது தூரம் பயணித்த பிறகு, இன்னொருத்தர் தந்தையை பார்த்து கடிந்து கொண்டார். ‘ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா?" என கேட்டார். தந்தையும் மகனும் ஆளாளுக்கு இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இருவருமே அந்த கழுதையிம் முதுகில் ஏறிச் செல்வோம் என ஏறிக் கொண்டனர். சிறிது தொலைவு சென்றதும், இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர், ‘அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள். இவர்களுக்கு இரக்கமே இல்லையா?" என எள்ளி நகையாடினர். அவர்கள் பேச்சைக் கேட்டவுடன் விவசாயிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. உடனே இருவரும் கழுதையின் மீதிருந்து கீழே குதித்தார்கள். மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும், கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்வது தான் சிறந்தது என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தனர். மிகவும் சிரமப்பட்டுக் கழுதையின் கால்களைக் கட்டியபிறகு, ஒரு கொம்பில் அதைக் கட்டி அதைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர். கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீதிருந்த ஒரு பாலத்தை அவர்கள் கடக்க வேண்டியிருந்தது. விவசாயியும் அவன் மகனும் மிகவும் சிரமப்பட்டுக் கழுதையைத் தூக்கிக் கொண்டு வரும் வினோதக் காட்சியை, ஆற்றுக்கு அக்கரையில் இருந்த குழந்தைகள் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். பெரிய சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன கழுதை பெரிதாக துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. அதைத் தூக்கிக் கொண்டு வந்த தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவியது. அந்தப் பரிதாபமான கழுதை ஆற்று நீரில் தூக்கி எறியப்பட்டது! கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! அது இறக்க நேரிட்டது. இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் இறந்து போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. எல்லோரையம் திருப்திப் படுத்த முடியாது. சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம். |
மாலைப்பொழுது வானத்துக்கு மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுத்து திரும்ப வாங்கிய வண்ணம் கதிரவன் மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. ஆறாம் வகுப்புப் படிக்கும் கணேஷ் பள்ளியில் இருந்து வந்தவுடன் புத்தகப்பையை இறக்கிவிட்டு அடுப்படியில் கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்திருந்த பொரிகடலையை இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு தெருவின் முற்றத்தில் விளையாடப் போய்விட்டான். இருள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. "ஏய்...கணேஷ்! விளையாடியது போதும், வந்து படிடா" என்று அம்மா கூவ, ஓடிவந்தான். "போய் கை, கால் அலம்பிட்டு மாடி மேலே போயி படி" கணேஷ் நெடுநேரம் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான். "கணேஷ் நேரமாயிடுச்சு. சாப்பிட்டு தாத்தா கூடப் போய்ப்படு. காலையில் படிக்கலாம்" என்றாள் அம்மா. சாப்பிட்டுவிட்டு தாத்தாவுடன் படுத்தான். தூக்கம் வரவில்லை. "தாத்தா ஒரு கதை சொல்லுங்க தாத்தா" என்றான். பேரக்குழந்தை கேட்கிறதே என்று தாத்தாவும் கதை கூற ஆரம்பித்தார்: ஒரு ஊர்ல ஒரு ராஜா. அவரு ஆட்சியில மாதம் மும்மாரி பொழிந்தது. அந்த ராஜாவுக்கு மீனான்னு ஒரு ராஜகுமாரி. தேவதை போல கொள்ளை அழகு. குருகுலத்துல நல்லா பாடம் படிச்சும் வீர, தீர வித்தைகளை கத்துகிட்டும் இருந்தது. அழகும் அறிவும் இணைந்த பொக்கிஷம் என்று நாட்டு மக்கள் இளவரசியைப் புகழ்ந்தார்கள். மீனாவுக்காகவே வனம் போன்ற அழகுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் நந்தவனம் அமைத்துக் கொடுத்தார் ராஜா. மாதம் ஒரு தடவை அரண்மனையை விட்டு வெளியே வரும் மீனா, நந்தவனம் வந்து உலவிவிட்டுப் போவாள். அந்த ஊர் மக்கள் எல்லாம் மகிழ்ச்சியா இருக்கிற நேரத்துல அந்த ஊருக்குள்ள ஒரு வேதாளம் புகுந்தது. அந்த வேதாளம் ராத்திரி நேரம் ஊருக்குள் வந்து கல்யாணம் ஆகாத பொண்ணுங்க யாரு வந்தாலும் அடிச்சி ரத்தம் குடிச்சு கொன்னு போட்டுடும். கல்யாணம் ஆகாத பெண்களை விட்டுட்டு வேற யாரையும் தொடுறதும் இல்லை. கண்ணுக்குத் தட்டுப்படறதும் இல்லை. இந்த விஷயம் ராஜாவுக்குத் தெரிஞ்சி, வேதாளத்தைக் கொல்ல ஆட்களை அனுப்பினார். ஆனாலும் அதைக் கொல்ல முடியவில்லை. ராஜா குழம்பிப் போய் சோர்வாக இருந்தார். ராஜாவின் மனக்கவலையை மீனா அறிந்தாள். ஒரு நாள் ராஜகுமாரி ரொம்ப தைரியமாக ராத்திரி நேரம் அரண்மனைப் பின்பக்க வாசல் வழியா வேதாளத்தைப் பார்க்க கிளம்பினாள். கொஞ்சதூரம் போயி ஊரைக் கடந்ததும் வெள்ளிக்கொலுசை மாட்டி "ஜலக் ஜலக்" -னு சத்தம் வர்ற மாதிரி நடக்க ஆரம்பிச்சா. உடனே பக்கத்துல இருக்குற ஒரு மரத்துல இருந்த அந்த வேதாளம் பாய்ந்து வந்து நின்றது. ராஜகுமாரி மீனாவுக்கு அதைப் பார்த்ததும் பயமாகிவிட்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வேதாளத்தைப் பார்க்காத மாதிரி உட்கார்ந்திருந்தாள். அந்த நேரம் ராஜகுமாரியின் கண்ணைப் பார்த்த வேதாளம் மின்னல் தாக்கின மாதிரி தடுமாறியது. அதே வேளையில் ராஜகு‘ரி சுதாரித்தபடி, தனது இடுப்பில் இருந்த கத்தியைத் தூக்கி வேதாளத்தின் நெஞ்சில் எறிந்தாள். வேதாளத்தின் நெஞ்சு பிளந்து ரத்தம் பீறிட்டது. வேதாளம் சாகப்போற நேரத்துல ராஜகுமாரியை கூப்பிட்டுச் சொன்னது, "தேவியாரே! நான் வேதாளம் இல்லை. பக்கத்து நாட்டு அரக்க வம்சத்தவன். உங்கள் ஊரில் செல்வச் செழிப்போடு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை சீர்குலைக்க எங்கள் ராஜாவால் வேதாளம் வேஷம் போட்டு அனுப்பப்பட்டவன் நான்" என்று சொன்னான். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் உயிர் பிரிந்தது. நாடே ராஜகுமாரியைப் புகழ்ந்தது. வீரத்திருமகள்னு அவளை முடிசூட்டி இளவரசி ஆக்கினார்கள். "என்னடா பேரப்புள்ள அந்த ராஜகுமாரி மாதிரி நீயும் நல்லா படிச்சி வீரமா, நல்ல தைரியத்தோடு, எதுக்கும் பயப்படாம இருக்கணும் என்ன!" என்று தாத்தா கேட்க, "கொர்...கொர்" என்ற குறட்டையுடன் கணேஷ் தூங்கிக் கொண்டிருந்தான். விடியற்காலை ஐந்து மணிக்கு படிப்பதற்காக கணேஷை எழுப்பி விட்டார். கணேஷ•ம் எழுந்து முகம் கழுவிவிட்டு வந்து புத்தகத்தை எடுத்தவாறு தாத்தாவிடம் கேட்டான்: "என்ன தாத்தா! ராத்திரி நீங்க ஏதோ ராஜா, ராஜகுமாரி, வேதாளம்னு சொன்னீங்க. ஆனா எனக்கு முழுக்கதையும் ஏன் சொல்லலை?" என்று கேட்டான். தாத்தா கலகலவென்று சிரித்து விட்டார். |
வீரசிம்மன் ஒரு குறுநல மன்னர்! சிற்றரசராக இருந்த அவர். அக்பருடைய ஆதிக்கத்தில் இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்திற்கு கப்பம் செலுத்தி, அவர்களுடன் நட்புறவோடிருந்தார். தனது ராஜ்யத்தில் குடிமக்களின் நிம்மதியையே பெரிதாக மதித்த வீரசிம்மன், முகலாயர்களின் அடிமையாக இருந்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவருடைய ராஜ்யத்தில் இருந்த சில இளைஞர்கள் மன்னர் தன்மானத்தை அடகுவைத்து விட்டதாகக் கருதினர். அந்த இளைஞர்கள் தயக்கமின்றி அவரை அணுகி அவருடைய கொள்கைக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். சுதந்திரம் தங்களுடைய பிறப்புரிமை என்றும், நாட்டின் அமைதிக்காக, முகலாயர்களின் அடிமைகளாகத் திகழ்வது அவமானம் என்றும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். அதற்கு வீரசிம்மன், “நானும் சுதந்திரத்தை விரும்புகிறேன். ஆனால் அதைப் பெறுவதற்காக, இரத்த ஆறு ஓடுவதை நான் விரும்பவில்லை, முகலாயர்கள் மிகப்பலம் பொருந்தியவர்கள். அவர்களுடைய படைப்பலத்திற்கு முன் குறுநல மன்னனாகிய என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். அதற்கு அவர்கள் “படைப்பலத்தை மட்டும் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? நம்முடைய அறிவினால் முகலாயர்களை வெற்றி கொள்ள முடியாதா?” என்றனர். “நம்மிடம் அத்தகைய அறிஞர்கள் இருக்கிறார்களா?” என்றார் வீரசிம்மன். “ஏன் இல்லாமல்?” என்றனர் இளைஞர்கள். “ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்! அக்பரின் சபையில் உள்ள அறிஞர்களைப் போல் வேறு எங்குமே காண முடியாது” என்றார். “அவர்களுடைய அறிவுத்திறமையை சோதித்துப் பார்த்து விடலாமே!” என்று சவால் விட்ட ஓர் இளைஞன் “நான் ஒரு சோதனை சொல்கிறேன். நீங்கள் அக்பரிடம் அவருடைய தர்பாரிலிருந்து அறிவு நிரம்பிய ஒரு பானையை அனுப்பச் சொல்லி வேண்டுங்கள்” என்றான். “அறிவு நிரம்பிய பானையா? அது ஏன்? தண்ணீரைப் பிடிப்பதுபோல் பானையில் அறிவை நிரப்ப முடியுமா?” என்று கேட்டார் மன்னர். “அது இயலாது என்று நினைக்கிறீர்களா?” என்றான் அவன். “ஆம்! அது முடியாத ஒன்று!” என்றார் மன்னர். “இயலாததை செய்து முடிப்பவன்தான் அறிவாளி! அக்பரின் தர்பாரில் உலகிலேயே சிறந்த அறிவாளிகள் உள்ளனர் என்று சொன்னீர்களே! அத்தகைய தலைசிறந்த அறிவாளிகள் நாங்கள் கேட்டதை செய்யட்டுமே!” என்று திமிராகக் கேட்டான் அவன். மன்னரும் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக் கொண்டார். சில நாள்கள் கழித்து, வீரசிம்மன் நன்கு பேசவல்ல ஒரு தூதனை கை நிறைய வெகுமதிகளுடன் அக்பரிடம் அனுப்பினார். வீரசிம்மனின் தூதன் அக்பரின் தர்பாரில் நுழைந்து அவரை வணங்கி விட்டு, தனது மன்னர் கொடுத்தனுப்பியிருந்த வெகுமதிகளை அக்பரிடம் சமர்ப்பித்துவிட்டு, மன்னரின் வாழ்த்துகளையும் தெரிவித்தான். “வீரசிம்மன் நலமாக இருக்கிறாரா?” என்று அக்பர் வினவினார். “சக்கரவர்த்தியின் தயவு இருக்கும் போது எங்கள் மன்னரின் நலத்தைப் பற்றிக் கேட்க வேண்டுமா!” என்றான் தூதன் பணிவுடன். “உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிப்பாய்!” என்ற அக்பர், “மன்னரிடமிருந்து எனக்கு ஏதாவது செய்தி உண்டா?” என்று கேட்டார். “பிரபு! உங்கள் தர்பாரில் பல அறிஞர்கள் நிறைந்துள்ளனர். அதனால் அறிவு நிரம்பிய ஒரு பானையை தயவு செய்து நீங்கள் கொடுத்தருளும் படி எங்கள் மன்னர் வேண்டிக் கொள்கிறார்“ என்றான் தூதன். அதைக் கேட்டு தர்பாரில் இருந்தவர் வியப்படைந்தனர். அறிவை எப்படிப் பானையிலிட்டு நிரப்ப முடியும்? ஆனால் அக்பர் அதைப் பற்றி தீவிரமாக சிந்திக்கவில்லை. தன் தர்பாரில் ஏராளமான அறிஞர்கள் இருக்கையில், இந்த விஷயத்தை அவர்களே கவனித்துக் கொள்வார்கள் என்று விட்டு விட்டார். அதனால் அவர் வீரசிம்மன் விரும்பிய பொருள் ஒரு மாதத்திற்குள் அனுப்பப்படும் என்று தூதனிடம் சொன்னார். “பிரபு! உங்கள் கருணைக்கு எல்லையே இல்லை! உங்களுடைய ஆதிக்கத்திலிருப்பதை எண்ணி எங்கள் மன்னர் பெருமைப்படுகிறார்” என்று தூதனும் சாமர்த்தியமாக அக்பர் மனம் குளிரும்படி பேசிவிட்டு, திரும்பிச் சென்றான். அவன் சென்ற பிறகு, அக்பர் தன் தர்பாரிலிருந்த அறிஞர்களை நோக்க அவர்களுள் ஒருவர் “பிரபு! வீரசிம்மன் கேட்டிருப்பதை கொடுக்க முடியவே முடியாது” என்றார். “முடியாதது என்று ஒன்றுமே கிடையாது. அதைக் கொடுத்தே ஆக வேண்டும்” என்று அக்பர் கோபத்துடன் கூறியதும், அனைவரும் பயத்தினால் ஒன்றும் பேசாமல் இருந்து விட்டனர். “பிரபு!” என்று மெதுவாக அழைத்தவாறே எழுந்த பீர்பால், “எனக்கு ஒரு பதினைந்து நாள் அவகாசம் கொடுங்கள். இந்த சவாலை நான் சமாளிக்கிறேன்” என்றார். “நிச்சயமாக இதை வெற்றிகொள்ள முடியுமா?” என்று அக்பர் கேட்டார். “நான் எப்போதாவது சொல்லிவிட்டு செய்யாமல் இருந்திருக்கிறேனா?” என்று பீர்பால் திருப்பிக் கேட்டதும், “நல்லவேளை! என்னுடைய தர்பாரில் நீ ஒருத்தனாவது அறிவாளியாக இருக்கிறாயே!” என்று பீர்பாலைப் புகழ்ந்து விட்டு மற்றவர்களை ஏளனத்துடன் பார்த்தார். அன்று மாலை வீடு திரும்பிய பீர்பால், தன் தோட்டத்தை நன்றாகப் பார்வையிட்டார். மற்ற காய்கறிச் செடிகளுடன், ஒரு பரங்கிக் கொடியையும் பார்த்தார். அதில் பல பூக்கள், பிஞ்சுகள், காய்கள் இருந்தன. உடனே வீட்டிற்குள் சென்ற அவர் ஒரு காலிப் பானையை எடுத்து வந்தார். அதைத் தரையில் வைத்து விட்டு, பரங்கிக் கொடியில் பிஞ்சுடன் கூடிய ஒரு பகுதியை அந்தப் பானையினுள் நுழைத்து பரங்கிப் பிஞ்சு பானைக்குள் இருக்குமாறு செய்துவிட்டு, கொடியின் நுனியை வெளிப்புறம் நோக்கி இழுத்து விட்டார். பார்ப்பதற்கு, பறங்கிக் கொடி பானையினுள் புகுந்து, பிறகு வெளியே வந்தது போல் இருந்தது. “சரியாக இருக்கிறது!” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்ட பீர்பால், தன் மனைவியிடமும், தோட்டக்காரனிடமும் அந்தப் பானையையும், பரங்கிக் கொடியையும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கச் சொன்னார். தினமும் அவர் தோட்டத்திற்கு வந்து பானையினுள் இருந்தப் பரங்கிப் பிஞ்சைப் பார்வையிட்டு வந்தார். பத்து நாள்களில் பிஞ்சு காயாகிப் பெருத்தது. அப்படியே விட்டு வைத்தால் காய் இன்னும் பெரிதாக வளர்ந்து பானையை உடைத்து விடும் என்ற நிலை வந்த போது, பீர்பால் பானைக்குள் சென்று, வெளியே வந்த கொடியின் பாகங்களைக் கத்தியால் அறுத்து விட்டார். இப்போது பானைக்குள் நன்கு வளர்ந்த பறங்கிக்காய் மட்டுமே இருந்தது. பானையின் வாயினை துணியினால் இறுக மூடி அடைத்த பீர்பால் பின்னர், அதை தர்பாருக்கு எடுத்துச் சென்றார். அக்பரிடம் பானையை அளித்த பீர்பால், “பிரபு… இதுதான் மன்னர் வீரசிம்மன் விரும்பிய அறிவுப்பானை! இதை அவரிடம் அனுப்பி வையுங்கள்” என்றார். அதைக் கண்ட அக்பர், “என்ன, பீர்பால்! விளையாடுகிறாயா? பானையில் எப்படி அறிவை நிரப்ப முடியும்? இதற்குள் உண்மையில் என்ன இருக்கிறது?” என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார். “பிரபு, அறிவுப்பானைக்குள் அறிவுதான் இருக்கும். வீரசிம்மன் பானைக்குள் இருக்கும் அறிவை எடுத்துக் கொண்டு, பானையை திருப்பி நமக்கு அனுப்பி விட வேண்டும். அதை வெளியில் எடுக்கும் போது அது நசுங்கக் கூடாது. பானையும் உடையக் கூடாது. ஒருக்கால் பானை உடைந்து போனால், வீரசிம்மன் பத்தாயிரம் பொற்காசு அபராதம் செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் அவருக்குத் தெரிவித்து விடுங்கள்” என்றார் பீர்பால். “என்ன? அபராதம் பத்தாயிரம் பொற்காசுகளா?” என்று அக்பர் கேட்டார். “அறிவின் விலை மிகவும் அதிகம் பிரபு” என்றார் பீர்பால். அவ்வாறே பானையை தூதன் மூலம் கொடுத்தனுப்பியபின், ஆர்வத்தை அடக்க முடியாத அக்பர், “பீர்பால்! பானைக்குள் என்னதான் வைத்திருக்கிறாய் என்று எனக்கு கூறு” என அவசரப்படுத்தினார். உடனே பீர்பால் தான் செய்ததைச் சொன்னார். “பிரபு, வீரசிம்மன் தனது குறும்புத்தனமான கேள்விக்கு சரியாக மூக்குடைப்படுவார். பானைக்குள் இருக்கும் பரங்கிக்காயை அவரால் பானையை உடைக்காமல் முழுதாக வெளியே எடுக்க முடியாது. பரங்கிக்காயை அறுத்து வெளியே எடுப்பதும் கூடாது. அதனால் அவர் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார். “அடப்போக்கிரி!” என்று பீர்பால் முதுகில் செல்லமாகத் தட்டினார் அக்பர். பானையைப் பெற்ற வீரசிம்மன் பானையினுள் ஒரு பெரிய பரங்கிக்காய் இருப்பதைப் பார்த்தார். கூடவே அந்த இரண்டு நிபந்தனைகளையும் கேட்டார். பரங்கிக்காயை அறுக்கவும் கூடாது. அதே சமயம் முழுதாக வெளியே எடுக்க முயன்றால் பானை உடையும். உடனே அந்த அதிகப் பிரசங்கி இளைஞர்களை அழைத்த மன்னர், அறிவுப்பானையை அவர்களிடம் காட்டி விளக்க, அவர்கள் முகத்தில் அசடு வழிந்தது “உங்கள் பேச்சைக் கேட்டு நானும் முட்டாள் ஆனேன். முன்னமே சொன்னேன், அக்பரின் சபையில் அறிஞர்களுக்குப் பஞ்சமில்லை என்று. என் பேச்சை நீங்கள் கேட்கவில்லை. அபராதத் தொகையை ஈடுகட்ட, நீங்கள் காலம் முழுவதும் என்னிடம் சம்பளமின்றி உழைக்க வேண்டும்” என்றார். பிறகு தலைவிதியை நொந்து கொண்டு, அபராதத் தொகையை அக்பருக்கு அனுப்ப, அவர் அதில் பாதியை பீர்பாலுக்கு வழங்கினார்.
|
நான் மிகவும் அழகான யூத கதையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது – அது ஒரு மனிதனைப் பற்றிய கதை. அவன் எப்போதும் தூக்க கலக்கத்தில் இருந்தான். எல்லா இடங்களிலும் எப்போதும் தூங்குவதற்கு தயாராக இருந்தான். பெரிய பொது கூட்டங்களிலும், எல்லா இசை நிகழ்ச்சிகளிலும், எல்லா முக்கிய ஆலோசனை கூட்டங்களிலும், அவன் அமர்ந்து தூங்கிகொண்டிருப்பதை பார்க்கமுடியும். உனக்கு கண்டிப்பாக அந்த மனிதனை தெரிந்திருக்கும் ஏனெனில் நீதான் அது. நீ அந்த மனிதனை பலமுறை கடந்திருப்பாய், ஏனெனில் அவனை நீ எப்படி ஒதுக்க முடியும்? — அது நீ. நினைத்து பார்க்ககூடிய நினைத்து பார்க்க முடியாத அனைத்து நிலைகளிலும் அவன் தூங்கினான். அவன் தனது முழங்கையை காற்றில் மடித்து தனது கைகளை தனது தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு தூங்கினான். அவன் நின்றுகொண்டு, விழாமல் இருப்பதற்காக சாய்ந்துகொண்டு தூங்கினான். அவன் திரை அரங்கத்திலும், தெருக்களிலும், மசூதிகளிலும் தூங்கினான். அவன் எங்கே சென்றாலும் அவனுடைய கண்கள் தூக்க மயக்கத்திலேயே இருக்கும். அவன் இந்துவாக இருந்திருந்தால் அவன் தலைகீழாக நின்றுகொண்டு சிரசாசனத்தில் கூட தூங்கியிருப்பான். நான் இந்துக்கள் அவ்வாறு தூங்குவதை பார்த்திருக்கிறேன். பல யோகிகள் தலைகீழாக நின்றுகொண்டு தூங்குவதில் திறமைசாலிகள். அது கடினம், கஷ்டமான காரியம், அதற்கு மிக பயிற்சி தேவை – ஆனால் அது நடக்கிறது. அவன் ஏற்கனவே ஏழு பெரிய அக்னிகளை தூங்கி கடந்துவிட்டதாக பக்கத்து வீட்டுகாரர்கள் கூறுவார்கள், ஒருமுறை ஒரு பெரிய தீ விபத்தில் அவனை படுக்கையில் இருந்து தூக்கி பக்கத்து சந்தில் வைத்துவிட்டனர், அவன் இன்னமும் தூங்கிகொண்டிருந்தான். ரோந்து வந்தவர்கள் அவனை கூட்டிசெல்லும் வரை அவன் சில மணிநேரங்கள் அந்த சந்தில் தூங்கிகொண்டிருந்தான். அவன் கல்யாணத்தில் மந்திரம் சொல்லும் போது பாதியில் தூங்கிவிட்டான் அவனுடைய தலையில் பலமணிநேரம் அடித்து அவனை எழுப்பினார்கள். அவன் மெதுவாக அடுத்த வார்த்தையை சொல்லிவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டான். நீ தாலி கட்டியதை நினைத்துப் பார். உன்னுடைய தேன் நிலவை நினைத்துப் பார். உன்னுடைய கல்யாணத்தை நினைத்துப் பார். எப்போதாவது விழித்துகொண்டுள்ளாயா? நீ எப்போதாவது தூங்ககூடிய வாய்ப்பை தவறவிட்டுள்ளாயா? நீ எப்போதும் தூங்கிகொண்டேயிருக்கிறாய்! நம்முடைய கதாநாயகனை பற்றி சொல்லபோகும் கதையை நீ நம்புவாய் என்பதற்காகவே இவ்வளவும் சொல்கிறேன். ஒருமுறை, அவன் தூங்கிவிட்டான், அவன் தூங்கினான், தூங்கினான், தூங்கிகொண்டேயிருந்தான், ஆனால் தூக்கத்தில் வெளியே தெருக்களில் இடிஇடிப்பது போல சத்தம் கேட்பதாக பட்டது, அவனுடைய படுக்கையும் லேசாக ஆடியது, எனவே அவன் அவனுடைய தூக்கத்தில் வெளியே மழை பெய்கிறது என நினைத்துக்கொண்டான், அதன் காரணமாக அவனுடைய தூக்கம் இன்னும் இனிமையானதாக மாறியது. அவன் போர்வையிலும், அதனுடைய இதமான சூட்டிலும் தன்னை சுருட்டிக்கொண்டான். தூக்கத்தில் எத்தனை முறை விஷயங்களை எப்படியெல்லாம் அர்த்தபடுத்தியுள்ளாய் என நினைவு இருக்கிறதா? சில சமயங்களில் நீ அலாரம் வைத்திருப்பாய், அது சத்தம் போடும்போது நீ சர்ச்சில் இருப்பதாகவும் அங்கு மணிகள் சத்தமிடுவதாகவும் கனவு காணத் தொடங்குவாய். அலாரத்தை ஒதுக்குவதற்கான, அலாரம் உண்டாக்கும் தொந்திரவை ஒதுக்குவதற்கான மனதின் ஒரு சாதுரியம். அவன் எழுந்தபோது அவன் ஒரு ஆச்சரியகரமான சூனியத்தை கண்டான், அவனுடைய மனைவி இல்லை, அவனுடைய படுக்கை இல்லை, அவனுடைய போர்வை இல்லை. அவன் ஜன்னல் வழியாக பார்க்க விரும்பினான், ஆனால் பார்ப்பதற்கு அங்கு ஜன்னல் இல்லை. அவன் மூன்று மாடிகள் கீழே ஓடி உதவி என கத்த விரும்பினான் ஆனால் ஓடுவதற்கு படிகளும் இல்லை கத்துவதற்கு காற்றும் இல்லை. அவன் வெறுமனே வெளியே செல்ல விரும்பியபோது, வெளியே என்று ஏதுமில்லை என்பதை அவன் கண்டான். அனைத்தும் காணாமல் போய்விட்டது சிறிது நேரம் என்ன நடந்துள்ளது என்பதை கிரகிக்கமுடியாமல் குழப்பத்தில் அங்கேயே நின்றான். ஆனால் பிறகு அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான், நான் தூங்கபோகிறேன். ஆனால் அப்படித் தூங்குவதற்கு இனி எந்த பூமியும் இல்லை என்பதை அவன் கண்டான்.பிறகுதான் அவன் இரண்டு விரல்களை நெற்றியில் வைத்துக்கொண்டு யோசிக்க தொடங்கினான். உலகத்தின் முடிவு வரை தூங்கிவிட்டேன் என்பது தெளிவாகிறது. இது, “நான் என்ன செய்திருக்கிறேன் பார்!” என்று கர்வப்பட்டுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான். ஆனாலும் அவன் சோகத்தில் ஆழ்ந்தான். இனி உலகம் இல்லை, அவன், உலகமில்லாமல் நான் என்ன செய்வேன், நான் எங்கு வேலைக்கு செல்வேன், நான் எவ்வாறு வாழ்வை மேற்கொள்வேன், முக்கியமாக இப்போது தினசரி செலவினங்கள் மிக அதிகமாகிவிட்டன, ஒரு டஜன் முட்டை விலை இருபது டாலராகிவிட்டது. அவை புதியனவா என்பது யாருக்கும் தெரியாது, அது தவிர கேஸ் கம்பெனி எனக்கு தர வேண்டிய ஐந்து டாலர்கள் என்னவாவது? என்னுடைய மனைவி எங்கே சென்றிருக்கிறாள்? அவளும் இந்த உலகத்தோடு நான் பாக்கெட்டில் வைத்திருந்த முப்பது டாலர் பணத்தோடு மறைந்திருக்ககூடிய வாய்ப்பு உண்டா? அவள் மறைந்துபோகக்கூடிய குணமுடையவள் அல்ல, என்று அவனே அவனுக்குள் நினைத்துக்கொண்டான். திடீரென உலகம் மறைந்துவிட்டால் நீயும் இவ்வாறே நினைப்பாய். உனக்கு வேறெதுவும் நினைக்கத் தெரியாது. நீ முட்டையின் விலையைப் பற்றியும், அலுவலகத்தை பற்றியும், மனைவி மற்றும் பணம் குறித்தும் நினைத்துக்கொள்வாய். வேறெதைபற்றியும் சிந்திக்க உனக்குத் தெரியாது. முழு உலகமும் மறைந்துவிட்டது – ஆனால் நீ உன்னுடைய சிந்தனையில் இயந்திரத்தனமாகிவிட்டாய். நான் தூங்க நினைத்தால் என்ன செய்வது? உலகம் இல்லாவிட்டால் நான் எதில் படுப்பேன்? என்னுடைய முதுகு வலித்தால்?, கடையில் இருக்கும் வேலைகளை யார் முடிப்பது? எனக்கு மால்ட் வேண்டுமென்றால் எங்கு கிடைக்கும்?. ஒரு மனிதன் தூங்கும்போது உலகம் அவன் தலைக்கடியில் இருந்தது ஆனால் எழும்போது உலகம் இல்லை என்பதை போல எங்காவது பார்த்திருக்கிறீர்களா? என்று அவன் நினைத்துக்கொண்டான். இது ஒருநாள் இல்லை ஒருநாள் நடக்கப்போகிறது – சாகும்போது ஒவ்வொரு மனிதனுக்கும் இதுதான் நடக்கிறது. திடீரென முழு உலகமும் மறைந்துவிடுகிறது. தீடீரென அவன் இந்த உலகத்தின் பகுதியல்ல. திடீரென அவன் இன்னொரு பரிமாணத்தில் இருக்கிறான். இது இறக்கும் எல்லோருக்கும் நடக்கிறது, ஏனெனில் நீ அறிந்தவை எல்லாம் மேலோட்டமானவையே. நீ இறக்கும் பொழுது, திடீரென உனது மேல்தளம் மறைந்துவிடுகிறது – நீ உனது மையத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறாய். உனக்கு அந்த மொழி தெரியாது. உனக்கு மையத்தை குறித்து எதுவும் தெரியாது. அது சூனியத்தை போல, வெறுமையாக காட்சியளிக்கிறது. வெற்றிடமாக, ஏதுமின்றி இருப்பது போல தெரிகிறது. நமது கதாநாயகன் உள்ளாடையுடன் நின்று என்ன செய்வது என யோசித்துகொண்டிருந்தபொழுது, அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. போனால் போகட்டும், எந்த உலகமும் இல்லை, அது யாருக்கு வேண்டும்? மறைந்தது மறைந்துவிட்டது – நான் திரைப்படத்துக்கு சென்று நேரத்தை கழிக்கிறேன். ஆனால் அவன் ஆச்சரியபடும்படி உலகத்தோடு திரையரங்குகளும் மறைந்துவிட்டன என்பதைக் கண்டான். மிகவும் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டுவிட்டேன், என நினைத்துக்கொண்டே நமது கதாநாயகன் மீசையை தடவத் தொடங்கினான். தூங்கியதன் மூலம் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கிவிட்டேன் நான் ஆழ்ந்து தூங்காமல் இருந்திருந்தால் எல்லாவற்றோடும் நானும் மறைந்திருப்பேன் என அவனை அவனே திட்டிக்கொண்டான். அப்படி பார்த்தால் நான் அதிர்ஷ்டம் இல்லாதவன், எனக்கு மால்ட் எங்கு கிடைக்கும் காலையில் அதை குடிக்க எனக்கு பிடிக்கும். என்னுடைய மனைவி? அவள் யாரோடு மறைந்தாள் என யாருக்கு தெரியும்? அது மேல்தளத்தில் இருக்கும் அந்த துணி தேய்ப்பவனாக இருந்தால், நான் அவளை கொன்றுவிடுவேன். கடவுளே எனக்கு உதவி செய். எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்று யாருக்கு தெரியும்? இந்த வார்த்தைகளை கூறியபடியே நமது கதாநாயகன் அவனுடைய கைகடிகாரத்தை பார்க்க விரும்பினான் ஆனால் அது எங்கே என்று தெரியவில்லை. அவன் இரு கைகளாலும் முடிவில்லாத வெற்றிடத்தில் வலது இடது பைகள் இருக்குமிடங்களில் தேடினான் ஆனால் தொடுவதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் இப்போதுதான் கடிகாரத்திற்கு இரண்டு டாலர்கள் கொடுத்துள்ளேன் இதோ அது ஏற்கனவே மறைந்துவிட்டது, என அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான். சரி உலகம் பாதாளத்திற்கு போயிருந்தாலும், அது பாதாளத்திற்கு போய்விட்டது. அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அது எனது உலகமல்ல. ஆனால் கடிகாரம்! ஆனால் என்னுடைய கடிகாரம் ஏன் பாதாளம் போகவேண்டும்? புதிய கடிகாரம். இரண்டு டாலர்கள். அது காயப்படாதது. மால்ட் எனக்கு எங்கு கிடைக்கும் காலையில் மால்ட்டை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. யாருக்கு தெரியும் ஒருவேளை என்னுடைய மனைவி…. மோசமான அழிவின் போது தூங்கியிருக்கிறேன், எனக்கு மோசமானதுதான் நடக்கும். உதவி, உதவி, உ-த-வி! என்னுடைய மூளை எங்கே? முன்பே என் மூளை எங்கு போயிற்று? உலகத்தையும் என்னுடைய மனைவியையும், அவள் இளமையாக இருக்கும் போதே பார்த்துக்கொள்ளவில்லை, நான் ஏன் அவைகளை மறைந்து போக விட்டுவிட்டேன்? நமது கதாநாயகன் சூனியத்தில் தலையை முட்டிக்கொள்ள தொடங்கினான், ஆனால் சூனியம் மிகவும் லேசாக இருந்த காரணத்தால் அது அவனை காயப்படுத்தவில்லை, அதனால் அவன் இக்கதையை சொல்வதற்கு உயிரோடு இருந்தான். இது மனித மனத்தின் கதை. நீ உன்னைச் சுற்றி கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளாய். நீ சாகும்போது உன்னுடன் வரமுடியாத பொருட்கள் மீது பற்று வைத்துக்கொண்டே செல்கிறாய். உன்னிடம் இருந்து எடுத்துகொள்ளபடக்கூடிய பொருட்களோடு உன்னை நீ அடையாளபடுத்திக் கொள்கிறாய்.
|
தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிக் கொண்டு இருந்த உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனைப் பார்த்து, "மன்னா! உன்னைப் போல் விடாமல் முயற்சி செய்யும் சிலர் கடைசி நிமிடத்தில் தங்கள் கொள்கையைக் கைவிட்டு, அதுநாள் வரை செய்த முயற்சியை வீணாக்குகின்றனர். அத்தகைய ஒரு பெண்ணின் கதையை நான் உனக்கு இப்போது கூறப் போகிறேன். கவனமாகக் கதையைக் கேள்!" என்று கதை சொல்லலாயிற்று. வைசாலி ராஜ்யத்தில் திரிசங்கம் எனும் ஊரில் கலாதரன் என்ற ஒரு தெய்வீக சிற்பி வசித்து வந்தான். அவன் கல்லில் வடிக்கும் சிற்பங்கள் உயிருள்ளவைபோல் தத்ரூபமாக இருக்கும். ஒருநாள் இரவில் பௌர்ணமி நிலவொளியில் மொட்டை மாடியில் அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய கனவில் மிக அழகான ஓர் இளமங்கை தோன்றி "சிற்பியே! என்னுடைய உருவச்சிலையை நீ கல்லில் செதுக்க வேண்டுமென நான் மிகவும் விரும்புகிறேன். என் ஆசையை நீ நிறைவேற்றுவாயா?" என்று கேட்டாள். அதிரூப சுந்தரியான அந்தப் பெண்ணின் அழகில் தன் மனத்தைப் பறிகொடுத்த கலாதரன், "கண்டிப்பாக வடிக்கிறேன். அடுத்த பௌர்ணமி இதே நேரம் உன் சிலையை நீ காண்பாய்!" என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான். அக்கணமே அவன் கனவும், தூக்கமும் கலைந்தன. கனவுதான் கலைந்ததே தவிர அந்த ரூபவதியின் அழகு அவன் மனத்திரையில் நன்றாகப் பதிந்து விட்டது. உடனே, தன் ஊரின் எல்லையில், மலைகள் சூழ்ந்த பகுதியில், ஒரு நீர் வீழ்ச்சியருகே அமர்ந்து ஒரு பாறையில் இரவும், பகலுமாகப் பாடுபட்டு அடுத்த பௌர்ணமிக்குள் அவளுடைய உருவச்சிலையை செய்து முடித்தான். கலாதரனின் கனவில் தோன்றிய அந்த அழகி ஒரு கந்தர்வ லோகத்துப் பெண். அவள் பெயர் நீலாஞ்சனா! ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் அவள் தன் தோழிகளுடன் பூலோகத்தில் சஞ்சாரம் செய்வதுண்டு. அத்தகைய ஓர் இரவில்தான் உறங்கிக் கொண்டிருந்த கலாதரனின் கனவில் தோன்றித் தன்னை சிலை வடிக்குமாறு வேண்டினாள். பிறகு அடுத்த பௌர்ணமி இரவில் வழக்கப்படி அவள் தன் தோழிகளுடன் பூலோக சஞ்சாரத்திற்குப் புறப்பட்டாள். நேராகத் தன் தோழிகளுடன் வைசாலி ராஜ்யத்துத் திரிசங்கத்தை அடைந்து, கலாதரன் வடித்திருந்த சிற்பத்தைக் காட்டி நடந்தவற்றைக் கூறினாள். சிலையைக் கண்டு வியந்த நீலாஞ்சனாவின் தோழிகளில் ஒருத்தி, "இதற்கு உயிர் இருந்தால் இன்னொரு நீலாஞ்சனா பூலோகத்தில் தோன்றி விடுவாள்," என்றாள். மற்றொருத்தி, "நீலா… நீ இதற்கு உயிர் கொடுத்து விடு!" என்றாள். மற்றொருத்தி, "உன்னுடைய அறிவையும், மனத்தையும் இதற்கு அளித்து விடு!" என்றாள். அதற்கு நீலாஞ்சனா, "சிலைக்கு என் உயிரைத் தந்து விட்டால் நான் என்ன ஆவது?" என்றாள். "இல்லை. கந்தர்வர்களாகிய நமக்கு அபூர்வ சக்திகள் உண்டு. நீ சிறிது காலம் உன் உயிரையும், மனத்தையும், புத்தியையும் சிலைக்கு அளிப்பாய். அதே சமயம் உன் உயிர், மனம், புத்தி ஆகியவை உன்னிடமும் இருக்கும். கந்தர்வலோகத்திலும் பூலோகத்திலும் இரட்டைப் பிறவிகள் போல் இருப்பீர்கள்!" என்றாள் இன்னொரு தோழி. "இது என்ன விபரீத விளையாட்டு?" என்று நீலாஞ்சனா கூற, "சிறிது காலம் நீ உன் அறிவினால் பல காரியங்களை சாதித்தபின், பூலோக நீலாஞ்சனாவை அழித்துவிடு!" என்றனர் தோழிகள் அனைவரும். நீலாஞ்சனாவிற்கு அந்த யோசனை பிடித்திருந்தது. உடனே அவள் தன் சக்தியினால் சிலைக்கு உயிர் கொடுத்து, அதனுடன் தன் புத்தியையும், மனத்தையும் பகிர்ந்து கொண்டாள். சிலை உயிர் பெற்று பூலோக நீலாஞ்சனாவாக மாறியது. உறக்கத்திலிருந்து எழுந்தவள் போல் உயிர்த்தெழுந்த பூலோக நீலாஞ்சனா, நகரத்திற்குச் சென்று தன் திறமையைக் காட்டுவோம் என்று எண்ணி இரவு முழுவதும் நடந்தாள். காலையில் ஒரு காட்டை அடைந்தாள். அங்கு புதரிலிருந்து ஒரு புலி அவள் மீது பாய, அடுத்த கணம் புலியின் மீது ஓர் அம்பு பாய்ந்தது. தன்னைக் காப்பாற்றியது யார் என்று நீலாஞ்சனா சுற்றுமுற்றும் பார்க்க, தொலைவில் வில், அம்புகள் ஏந்தி ஓர் இளைஞன் குதிரையின் மீது வருவதைக் கண்டாள். அவளருகில் வந்ததும் அவன், "நீ இந்தக் காட்டில் என்ன செய்கிறாய்?" என்று கேட்டான். முதல் பார்வையிலேயே அவனிடம் மனத்தைப் பறிகொடுத்த நீலாஞ்சனா, "நான் பிழைப்பைத் தேடி தலைநகரம் செல்லும் வழியில் இந்தப் புலி குறுக்கிட்டது. என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி! ஆனால் என்னிடம் வாள் இருந்திருந்தால், நானே புலியைக் கொன்று இருப்பேன்" என்றாள். "அட! பெண்ணான உனக்கு வாள் வீசத் தெரியுமா?" என்று வியப்புடன் அவன் கேட்க, "என் பெயர் நீலாஞ்சனா! எனக்கு எல்லாப் போர்க்கலைகளும் தெரியும். நான் வைசாலி மன்னரை சந்தித்து என்னைப் படையில் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுவேன்! உங்கள் பெயர் என்ன?" என்று அவள் கேட்டாள். "என் பெயர் பிரபாகரன்!" என்ற அந்த இளைஞன், "நீ மிகவும் அறிவாளி என்று தோன்றுகிறது. ஆனால் பெண்ணான உன்னைப் படையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் நீ ஆண் வேடம் தரித்துக் கொள்! நானும் படையில் சேரத்தான் செல்கிறேன். அவந்தி ராஜ்ஜிய மன்னர் நமது ராஜ்யத்தின் மீது படையெடுத்துள்ளார். அதனால் நம் மன்னர் ஏராளமான வீரர்களைத் திரட்டுகிறார். என்னுடன் வா! உன்னை அழைத்துச் செல்கிறேன்!" என்றான். பிறகு இருவரும் தலைநகரம் சென்று சேனாதிபதியை சந்தித்து, படையில் சேர்ந்தனர். ஒருநாள் யுத்தகளத்தில் மன்னர் சேனாதிபதியுடன் யுத்தம் நடத்தும் விதத்தைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டுஇருக்கையில், நீலாஞ்சனா அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து, "மகாராஜா! பகைவர்களின் படை நம்முடையதை விடப் பலமடங்கு பெரியது! அவர்களை நேருக்கு நேர் மோதி வெற்றி காண முடியாது. எதிரிப்படையில் குழப்பம் உண்டாக்கினால் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அதற்கான திட்டம் என்னிடம் இருக்கிறது" என்று தன் திட்டத்தை மன்னருக்கு விளக்கினாள். அதைக் கேட்டு மன்னர் வியந்து போனார். உடனே, தன் படையில் ஒரு சிறிய பகுதியைப் பிரித்தெடுத்து, அதற்கு அவளை உபதளபதி ஆக்கினார். அவளும் தன் படையை வழிநடத்திச் சென்று, போர்க்களத்தின் இருபுறமும் இருந்த மலைகள் மீதேறிப் பதுங்கிக் கொண்டாள். மறுநாள் போர் தொடங்கியதும், பகைவர் படை மீது எங்கிருந்தோ பாம்புகளும், தேள்களும் வந்து விழுந்தன. மற்றொரு மலையில்இருந்து, தீப்பந்தங்கள் அவர்கள் மீது விழுந்தன. இதனால் பகைவர் படையில் ஒரே குழப்பம் ஏற்பட்டது. அந்த சமயம், வைசாலி ராஜ்ய வீரர்கள் அவர்களைத் தாக்க, பகைவர்கள் சரிவர போர்புரியாமல் பின்வாங்கி ஓடிப் போயினர். அந்த வெற்றிக்கு முழுக்காரணமான புத்திசாலி இளைஞனைப் பாராட்ட மன்னர் அவனைத் தன் அரண்மனைக்கு அழைத்தார். மன்னர் தனிமையில் இருந்தபோது, தன் ஆண்வேடத்தைக் கலைத்தாள் நீலாஞ்சனா. "மகாராஜா! உண்மையில் நான் ஒரு பெண்! உங்களிடம் வேலைக்கு சேர்வதற்காக ஆண் வேடம் போட்டேன். என்னை மன்னிக்கவும்" என்றாள். அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக, மன்னருக்கு அபார வியப்பும், மகிழ்ச்சியும் உண்டாக, வாரிசில்லாமலிருந்த அவர் நீலாஞ்சனாவைத் தன் மகளாக ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு, அவளை இளவரசியாக்கி அவள் விரும்புவதை அறிந்து பிரபாரகரை திருமணமும் செய்வித்தார். இவ்வாறு, தன் புத்திகூர்மையினால் பூலோகத்தில் வைசாலி ராஜ்யத்தின் இளவரசியான நீலாஞ்சனாவைப் பார்த்து, கந்தர்வலோக நீலாஞ்சனா மனம் பூரித்தாள். தன் தோழிகளிடம் தன்னுடைய பிரதிநிதியைப் பற்றிக் கர்வத்துடன் கூறினாள். ஆக, தாங்கள் ஆரம்பித்த விளையாட்டு முடிவுற்றது என்று கந்தர்வலோகப் பெண்கள் கருதினர். அவளை மீண்டும் பழையபடி சிலையாக்குவதற்காக, கந்தர்வலோக நீலாஞ்சனா இளவரசியிடம் வந்தாள். அவள் யார் என்ற உண்மையை இளவரசிக்கு எடுத்துரைத்து, அவளது உயிரை எடுக்கப் போவதாகக் கூறினாள். ஆனால் அவள் அதற்கு இளவரசி மறுத்துவிட்டாள். "சொல்வதைக் கேள்! நாம் இருவரும் நிரந்தரமாக ஒரே சமயத்தில் வாழ முடியாது. நான் என் உயிரை தற்காலிகமாக உனக்குக் கொடுத்தேன். அதைத் திருப்பி எடுத்துக் கொள்ள என்னை அனுமதி!" என்றாள் கந்தர்வ நீலாஞ்சனா. "கந்தர்வப் பெண்ணே! நீ தனிமையாக வாழ்கிறாய். ஆனால் நான் என் வாழ்வை என் கணவடன் பிணைத்துள்ளேன். என் மீது அன்பைப் பொழியும் என் கணவர் நானின்றி உயிர் வாழ மாட்டார். நான் இப்போது வைசாலியின் இளவரசி! நான் மறைந்து போவதை குடிமக்களும் விரும்ப மாட்டார்கள்!" என்றாள் பூலோக நீலாஞ்சனா. அவள் கடைசியாகக் கூறிய சொற்கள் கந்தர்வ நீலாஞ்சனாவின் மனத்தை உருக்கி விட்டன. ஆகையால் தனது இதயத்திலிருந்து தீ உருவாக்கி, அந்தத் தீயில் எரிந்து மறைந்து போனாள். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா! கந்தர்வப் பெண் நீலாஞ்சனாவின் மதிகெட்ட செயலைப் பார்! பூலோக நீலாஞ்சனாவிற்கு உயிர் கொடுத்ததே அவள்தான். அதுவும் தற்காலிகமாகத்தான். தன்னுடைய புத்திகூர்மையை தன் பிரதிபிம்பத்தின் மூலம் பூவுலகில் நிரூபித்துக் காட்டியபின், மீண்டும் அதைத் திருப்பி எடுத்துக் கொள்வதாக இருந்தாள். ஆனால் கடைசி நிமிடத்தில் புத்தி பேதலித்து, தன் பிரதிபிம்பத்தை உயிருடன் வாழ அனுமதித்து விட்டு, தான் உயிர் நீத்தாள். இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? என்னுடைய இந்த சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகும்" என்றது. அதற்கு விக்கிரமன், "கந்தர்வப் பெண்ணான நீலாஞ்சனா தன் புத்தி சாதுர்யத்தை நிரூபிப்பதற்காக சிலைக்குத் தன் உயிரை தற்காலிகமாகக் கொடுத்தது உண்மைதான்! ஆனால் கடைசி நிமிடத்தில் அவள் மனம் மாறி தன்னுயிரைத் தியாகம் செய்தது முட்டாள்தனத்தினால் அல்ல, அவளுடைய தயாள குணத்தினால்தான்! விளையாட்டாகத் தொடங்கிய நாடகத்தில், பூலோக நீலாஞ்சனா போர்க்களத்தில் தன் தந்திரமான திட்டத்தால் வெற்றி பெற்றாள். அவள் தான் விரும்பிய பிரபாகரனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு விட்டாள். மன்னருக்கும், பட்டத்து ராணிக்கும் ஸ்வீகாரப் பெண்ணாகி விட்டாள். குடிமக்களின் மனம் கவர்ந்த இளவரசியாகி விட்டாள். அவள் உயிரைப் பறித்தால் அவளைச் சார்ந்துள்ள அனைவரும் பெரும் துக்கத்தில் மூழ்குவர். ஆகையால் தான் உயிர் நீப்பதே சிறந்தது என்றும், தன் பிரதிபிம்பமாவது மகிழ்ச்சியுடன் வாழட்டும் என்றே அவள் மேற்கூறிய முடிவெடுத்தாள்" என்றான். விக்கிரமனது சரியான பதிலால் அவன் மவுனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் பறந்து போய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. |
இயற்கை வளம் நிறைந்த மலை பறம்பு மலை. அந்த மலையைச் சூழ்ந்து அழகான முந்நூறு ஊர்கள் இருந்தன. பறம்பு நாடு என்று அழைத்தனர். பறம்பு நாட்டைப் பாரி என்ற அரசர் ஆண்டு வந்தார். தமிழ் மீது பேரன்பு கொண்டிருந்தார் அவர். புலவர்களை மதித்துப் போற்றினார். தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்னாது வாரி வழங்கினார். வள்ளல் பாரி என்று அவரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அவர் புகழ் உலகெங்கும் பரவியது. பெரும் புலவர் கபிலர் அவரின் நெருங்கிய நண்பராக விளங்கினார். அவருடைய அரசவையில் புலவர்கள் நிறைந்து இருந்தார்கள். அவரைப் புகழ்ந்து பாடுவதைப் புலவர்கள் பெருமையாகக் கருதினார்கள். வழக்கம் போல அரசவை கூடியிருந்தது. அரியணையில் அமர்ந்து இருந்தார் பாரி. புலவர்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். செல்வம் மிகுந்தவர்களைப் போலப் புலவர்கள் காட்சி தந்தனர். புலவர் எழிலனார் எழுந்தார். அரசர் பெருமான் வாழ்க! அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள்? அவர் வள்ளன்மையால் இரவலர்களே இந்த நாட்டில் இல்லை! என்று புகழ்ந்தார். அடுத்ததாகப் புலவர் திண்ணனார் எழுந்தார். புலவர் எழிலனார் சொன்னது முக்காலத்திற்கும் பொருந்தும். வாரி வழங்கும் வள்ளல் என்றாலே அது பாரி தான். அவரைப் போன்று எந்த அரசரும் கடந்த காலத்தில் இருந்தது இல்லை. நிகழ் காலத்திலும் இல்லை. வரும் எதிர் காலத்திலும் இருக்கப் போவது இல்லை . இது உறுதி என்றார். பயன் நோக்காமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் விறலியர் வந்தால் போதும். தம் நாட்டையே பரிசாக நல்குவார். அது மட்டும் அல்ல. தம் உயிரையே கேட்டாலும் மகிழ்ச்சியுடன் தருவார். பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைகள் தேடி வரும். அதே போலப் புலவர்கள் பாரியை நாடி வந்த வண்ணம் உள்ளார்கள் என்று புகழ்ந்தார் நன்னனார். அடுத்ததாகப் பெரும் புலவர் கபிலர் எழுந்தார். எப்பொழுதும் கருத்துகளில் மோதும் புலவர்கள் நீங்கள். என்ன வியப்பு! வள்ளல் பாரியைப் புகழ்வதில் ஒன்று பட்டு இருக்கிறீர்கள். புலவர்களிடம் பொது நோக்கு வேண்டாமா? பயன் கருதாமல் வாரி வழங்குபவர் வள்ளல் பாரி மட்டும் தானா? இன்னொருவரும் இருக்கின்றாரே. ஏன் நீங்கள் அவரை மறந்து விட்டீர்கள்? உங்களில் யாரும் அவரைப் புகழ வில்லையே. ஏன்? என்று கேட்டார். பாரியை இகழ்ந்து கபிலர் பேசுகிறாரே என்று புலவர்கள் திகைப்பு அடைந்தனர். கபிலரே! என்ன பேசுகின்றீர்? முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு. முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர். இவ்வாறு பாரியைப் புகழ்ந்து பாடியவர் நீங்கள் தானே. ஆனால் இப்பொழுதோ பாரியை இகழ்ந்து பேசுகிறீர். இது முறையா? அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள் என்றார் எழிலனார். பாரியின் அருள் உள்ளத்தை எல்லோரும் அறிவார்கள். அவரைப் போலவே வாரி வழங்க முடியுடை மூவேந்தர்களும் முயன்றனர். அவர்களால் வெற்றி பெற முடிய வில்லை. வள்ளல் என்று சொன்னாலே அது பாரியைத் தான் குறிக்கும். இதை இந்த உலகமே அறியும். கபிலரே! பாரியைப் போன்றே கைம்மாறு கருதாது உதவுபவர் இன்னொருவர் இருக்கிறாரா? யார் அவர்? பெயரைச் சொல்லும் என்று கோபத்துடன் கேட்டார் திண்ணனார். பெரும் புலவர் கபிலரே! வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் நீங்கள். அவரது வள்ளன்மையை நன்கு அறிந்தவர். பறம்பு மலைக்கு வந்து யாரும் பரிசில் பெறாமல் சென்றது இல்லை. கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். இன்னொருவர் இருக்கவே இயலாது. அப்படி இருந்தால் சொல்லுங்கள் என்றார் நன்னனார். கபிலர் எழுந்தார். புலவர்களே! வள்ளல் பாரியிடம் நீங்கள் வைத்திருக்கும் பெருமதிப்பைக் கண்டு மகிழ்கிறேன். பாரியைப் போன்றே வாரி வழங்கும் வள்ளல் இன்னொருவர் இருக்கிறார். அவரை உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அனைவரும் பாரி ஒருவரையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இன்னொருவரை மறந்து விட்டீர்கள் என்றார் அவர். கபிலரே! புதிர் போடாதீர்கள். பாரியைப் போன்றே வாரி வழங்கும் இன்னொரு வள்ளல் யார்? அவர் பெயரைச் சொல்லுங்கள என்று கேட்டார் எழிலனார். புலவர்களே! பாரி போன்றே மாரியும் கைம்மாறு கருதுவது இல்லை. மழை பொழிந்து இந்த உலகைக் காப்பாற்றுகிறது. மாரி மழை பொழிய வில்லை. பிறகு இந்த உலகின் நிலை என்ன ஆகும்? நீங்கள் மாரியை மறந்து விட்டீர்கள். வாரி வழங்கும் வள்ளல் என்று பாரியையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இது தகுமா? அதனால் தான் இப்படிக் கேட்டேன் ! என்றார் கபிலர். இந்த விளக்கத்தைக் கேட்ட புலவர்கள் மகிழ்ந்தனர். கபிலரே! வள்ளல் பாரிக்கு இணையானவர் யாரும் இந்த நிலவுலகத்தில் இல்லை. கைம்மாறு கருதாமல் மழை பொழிந்து உலகத்தைக் காக்கிறது. மாரி. அந்த மாரி தான் அவருக்கு ஒப்பாகும். மாரி போன்றவர் பாரி எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர். உங்கள் புலமைக்கு என் பாராட்டுகள் என்றார் நன்னனார். கபிலரே! உம்மைப் பெரும் புலவர் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது உண்மை தான் என்றார் எழிலனார். புலவர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். பார். அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. அரச உடை அணிந்து பெருமிதமாகக் காட்சி அளித்தார் பாரி. அரண்மனையில் உலாவிக் கொண்டிருந்தார். தேரோட்டி அங்கு வந்தான். அரசே! வாழ்க! நீதி நெறி தவறாத மன்னவ வாழ்க! குடிமக்களைக் காக்கும் கோவே வாழ்க! என்று பணிவாக வணங்கினான். தேரோட்டியே! உன் வருகைக்காகத் தான் காத்திருந்தேன். நம் நாட்டின் மலை வளம் காண விரும்புகிறேன். இப்பொழுதே புறப்பட வேண்டும் என்றார் பாரி. அரசே! அரண்மனை வாயிலில் தேர் நிற்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம் என்றார் அவர். தேரோட்டி முன்னே செல்லப் பாரி பின்னால் வந்தார். அரண்மனை வாயிலில் அலங்கரிக்கப் படட அழகான தேர் இருந்தது. அதில் வலிமையான குதிரைகள் பூட்டப் பட்டு இருந்தன. அரசரும் பெருமிதத்துடன் தேரில் ஏறி அமர்ந்தார். சூழ்ந்து நின்ற வீரர்களைப் பார்த்தார் அவர். நான்மலை வளம் காணச் செல்கிறேன். நீங்கள் யாரும் என்னுடன் வர வேண்டாம். நீங்கள் வந்தால் அங்கே பெரும் ஆரவாரம் எழும். நான் காண விரும்பும் இனிய சூழல் கெடும். என்றார். வீரத் தலைவன் அரசரைப் பணிவாக வணங்கினான். அரசே! உங்கள் கட்டளைப் படி நடப்போம் என்றான். தேரோட்டி! தேரைச் செலுத்து என்றார் அரசர் பாரி. தேர் வேகமாகச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தலை நகரம் அவர்கள் கண்ணுக்கு மறைந்தது. மலைப் பாதையில் தேர் ஏறத் தொடங்கியது. தேரோட்டி! தேரை மெல்ல செலுத்து. வளமான பறம்பு மலை எவ்வளவு அழகாகக் காட்சி தருகிறது. இதன் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமே. ஆட்சியைத் துறந்து இங்கேயே இருந்து விடலாம். அடிக்கடி இங்கு வர விரும்புகிறேன். அரச அலுவல்களால் அது முடிவது இல்லை. இந்த இயற்கைச் சூழலில் என் உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது. வெற்றுப் புகழுரைகளை அரண்மனையில் கேட்டுக் கேட்டு சலித்து விட்டது. இங்கே என்ன அமைதியான சூழல்! எங்கும் பசுமை நிறைந்து வளமாகக் காட்சி அளிக்கிறதே! ஆம் அரசே! இந்த மலை வளம் தான் நம் நாட்டிற்கு வற்றாத செல்வத்தைத் தருகிறது. தேரோட்டி! நீயும் மற்றவர்களைப் போலத் தான் இருக்கிறாய். இந்த மலை தரும் செல்வத்தையே பெரிதாக எண்ணுகிறாய். ஆனால் நானோ இந்தச் செல்வத்தைப் பெரிதாக நினைக்கவில்லை. என்னை அறியாத ஏதோ ஒரு இன்ப வெள்ளத்தில் மூழ்குகிறேன். அருவி கொட்டும் ஓசை உன் செவிகளில் வீழ்கிறதா? அரசே! என் செவிகளிலும் வீழ்கிறது. ஆ! என்ன சுவையான அருவி நீர். இதன் சுவையைப் புகழ்ந்து பாடாத புலவர்களே இல்லையே. இந்த அருவி நீரைக் குடித்தவர்க்குத் தேனும் துவர்க்குமே. நம் நாட்டை வளமாக்கும் வற்றாத அருவி ஆயிற்றே! அந்த அருவி கொட்டும் ஓசை இனிய இசையாக என் செவிகளில் வீழ்கிறது. அந்த இசையில் என்னையே நான் மறந்து விடுகிறேன். மலைப் பகுதிக்கு வந்து விட்டோம். இனிமேல் தேர் அசைந்து மெல்ல செல்லட்டும். தேரில் கட்டியுள்ள மணிகளை எடுத்து விடு. அப்படியே செய்கிறேன். அரசே என்ற தேரோட்டி மணிகளை எடுக்கிறான். எதற்காக மணிகளை எடுக்கச் சொன்னேன்? தெரியுமா? அரசே! தேரின் மணியோசை கேட்டு இங்குள்ள உயிர்கள் அஞ்சும். அவற்றின் இனிமைக்கு எந்த இடையூரும் ஏற்படக் கூடாது. அதனால் தானே இங்கு வரும் போது தேரின் மணிகளை எடுக்கச் சொல்கிறீர்கள். தேரோட்டியே! என் உள்ளத்தைப் புரிந்து வைத்திருக்கிறாய். தேரை நிறுத்து. அதோ அங்கே பார். எவ்வளவு மகிழ்ச்சியாக மான் கூட்டங்கள் துள்ளிக் குதித்து ஓடுகின்றன. அந்த மான் குட்டியின் அழகைப் பார். அதன் மருண்ட பார்வைக்கு இந்த உலகத்தையே பரிசாக அளிக்கலாமே. அரசே! இங்கேயே சிறிது நேரம் இருந்து விட்டோம். மான்கள் கூட்டமும் சென்று விட்டது. தேரை மெல்ல செலுத்தட்டுமா? செலுத்து . தேர் மெல்ல நகர்கிறது. ஆ! மேகக் கூட்டங்களைக் கண்ட மயில்களுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! தோகையை விரித்து ஆடுகின்றனவே. இவற்றின் தோகைகள் வான வில்லின் வண்ணத்தையே மிஞ்சுகின்றனவே. என்ன அழகிய காட்சி! இயற்கை தரும் இன்பத்திற்கு ஈடு இணை ஏது? தேர் அங்கிருந்து மெல்ல நகர்கிறது. ஆ! மான்களும் மயில்களும் என்னுடன் பேசுவதைப் போல் உணர்கிறேனே. வண்டுகளும் தும்பிகளும் தேனீக்களும் இசை எழுப்புகின்றனவே. அவை என்னை வாழ்த்துவதைப் போல் உள்ளதே! நிழல் தரும் இந்த இனிய மரங்கள் காற்றில் அசைகின்றனவே. என்னிடம் ஏதோ பேச முற்படுவதைப் போல உள்ளதே. கொடிகள் அசைந்து ஆடுவது என்னிடம் கொஞ்சுவதைப் போல உள்ளதே. உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுமையானது தானே. அதைச் சொல்ல நா வேண்டுமா? கேட்க செவி வேண்டுமா? நமக்கு உணர்வு இருந்தால் எல்லாவற்றின் உணர்வுகளையும் அறிந்து கொள்ளலாமே. சூழ்ச்சி வஞ்சம் ஏதும் அறியாத இனிய உலகம் அல்லவா இது. மானாக மயிலாக நான் பிறக்க வில்லையே. அப்படிப் பிறந்து இருந்தால் இங்கேயே மகிழ்ச்சியாக இருப்பேனே. தேர் மெல்ல சென்று கொண்டிருந்தது. ஒரு முல்லைக் கொடிக்கு அருகில் கொழு கொம்பு இல்லை. அதனால் காற்றில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்தது. இந்த அவலக் காட்சியைக் கண்டார் பாரி. அவர் உள்ளம் துடித்தது. ஆ என்று அலறினார். தேரிலிருந்து கீழே குதித்தார். எதிர்பாராதது நடந்ததைக் கண்டு திகைத்தான் தேரோட்டி, தேரை நிறுத்தினான். தேரை விட்டு இறங்கிய அவன் அரசே என்ன நிகழ்ந்தது? என்று பணிவாகக் கேட்டான். அவரைப் பின் தொடர்ந்தான். ஏதும் பேசாத அவர் அந்த முல்லைக் கொடியின் அருகே சென்றார். கொழுகொம்பு இல்லாததால் காற்றில் தள்ளாடித் தவிக்கும் அந்தக் கொடியை பார்த்தார். அருள் உள்ளம் கொண்ட அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. முல்லைக் கொடியே! உன் நிலை இரங்கத் தக்கது. நீ படர்ந்து தழைக்க அருகே கொழு கொம்பில்லை. காற்று அலைக் கழிக்க நீ அங்கும் இங்கும அசைந்து துன்புறுகிறாய். இந்தக் காட்சி என்னிடம் முறையிடுவது போல உள்ளதே. மன்னனே! எல்லோர்க்கும் நீதி வழங்குபவனே! என் அவல நிலையைப் பார்த்தாயா? கொழு கொம்பின்றித் தவிக்கிறேனே. எனக்கு அருள் செய்ய மாட்டாயா என்று கேட்கிறதே. என்னிடம் வந்து யாரும் வெறுங்கையுடன் சென்றது இல்லை. அவர்கள் நினைத்ததற்கு அதிகமாகப் பரிசிலைப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் செல்வார்கள். முல்லைக் கொடியே! நீ இரந்தது வாரி வழங்கும் வள்ளல் பாரியிடம். பாரியின் வள்ளன்மையை நீ உணரப் போகிறாய் என்று உணர்ச்சியுடன் சொன்னார் அவர். பிறகு தேரோட்டியைப் பார்த்துத் தேரை இந்த முல்லைக் கொடியின் அருகே நிறுத்து என்று கட்டளை இட்டார். தேரை முல்லைக் கொடியின் அருகே இழுத்து வந்து நிறுத்தினான் தேரோட்டி. குதிரைகளை அவிழ்த்து விடு. அவை நம் அரண்மனை சேரட்டும் என்றார் அவர். குதிரைகளை அவிழ்த்து விட்டான் தேரோட்டி. அவை தலை நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின. முல்லைக் கொடியின் அருகே நின்றார். அந்தக் கொடியை அன்புடன் தடவிக் கொடுத்தார். மெல்ல அதை எடுத்துத் தேரின் மேல் படர விட்டார். தன்னை மறந்து அங்கேயே நின்று இருந்தார். அதையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கொடி இப்பொழுது காற்றில் அசையவில்லை. தேரில் நன்கு படர்ந்தது. அதன் துன்பத்தைத் தீர்த்ததை எண்ணி அவர் உள்ளம் மகிழ்ந்தது. அந்தக் கொடியை மீண்டும் அன்புடன் தடவிக் கொடுத்தார். நன்றி தெரிவிப்பது போலத் தன் தளிரை அசைத்தது அது. எழுந்த அவர், தேரோட்டி! நாம் நடந்தே அரண்மனை அடைவோம் என்றார். இருவரும் மெல்ல நடந்து தலை நகரத்தை நெருங்கினார்கள். அரசர் நடந்து வருவதை மக்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தோரோட்டி வாயிலாக நடந்ததை அறிந்தார்கள். மகிழ்ச்சி அடைந்த அவர்கள் வள்ளல் பாரி வாழ்க! முல்லைக்குத் தேரீந்த வள்ளல் வாழ்க! என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள். வள்ளல் பாரி மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குச் சென்றார். 1. பாரி பாரி யென்றுபல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே! (புறநானூற்றுப் பாடல் 107, கபிலர் பாடியது.) 2.இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி (புறநானூற்றுப் பாடல் 200, அடிகள் 9 முதல் 12 வரை, கபிலர் பாடியது.) |
சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செய்தி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எதற்கும் அவரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தாள். மறுநாள் கிழவி தயங்காமல் தர்பாருக்கே சென்று விட்டாள். வாயிற்காவலர்கள் அவளைத் தடுத்தி நிறுத்தி என்ன வேண்டும் என்று வினவியபோது, தான் சக்கரவர்த்தியை நேரில் சந்திக்க விரும்புவதாக அவள் கூறினாள். உடனே, ஒரு காவலன் அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தர்பாருக்குள் நுழைந்தான். சிம்மாசனத்தில் வீற்றிருந்த அக்பரைக் கண்டு தரையைத் தொட்டு சலாம் செய்ய அவள் முயன்றபோது, அவளை கவனித்த அக்பர் அவளுடைய முதிர்ந்த வயதை மனத்தில்கொண்டு அவளை சிரமப்படாமல் இருக்க சைகை செய்தார். பிறகு, “அம்மா! உனக்கு என்ன வேண்டும்?” என்றார். அதற்கு அவள் அக்பரை நோக்கி, “பிரபு! நான் சுந்தரி பாய்! மிக ஏழையானவள்! என்றாள். அதற்கு அக்பர், “ஏழையாயினும், பணக்காரராயினும் என் முன் சமநீதி கிடைக்கும். உன் குறையென்ன சொல். தாயே!” என்றார். “பிரபு! ஓராண்டு முன் நான் பத்ரிநாத் யாத்திரை செல்ல விரும்பினேன். என்னிடமுள்ள பணத்தையெல்லாம் அதுவரை யாரிடமாவது பத்திரமாக விட்டுச் செல்ல வேண்டுமே என்று திட்டமிட்டேன். என்னுடைய உடைமைகளைப் பொற்காசுகளாக மாற்றி ஒரு பையில் போட்டு, வாயை இறுகக் கயிற்றினால் கட்டி விட்டேன். பிறகு, கயிற்றின் முடிச்சின் மேல் மெழுகை உருக்கி ஊற்றினேன். புறாச்சின்னம் உள்ள என் மோதிரத்தை உருகிய மெழுகில் அழுத்தி, முடிச்சை சீல் செய்தேன். சீலில் என் மோதிரத்தின் புறாச்சின்னம் தெளிவாகக் காணப்பட்டது” என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே போனவளை அக்பர், “அம்மா! நீ மிகவும் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு இருக்கிறாயே! சபாஷ்!” என்று பாராட்டினார். “என்ன பயன், பிரபு? அந்தப் பையை மிக கௌரவமான மனிதர் என்று கருதப்படும் குல்ஷாவிடம் நேரில் சென்று கொடுத்தேன். நான் பத்ரிநாத் சென்று வரும் வரை பத்திரமாகப் பாதுகாக்கும்படி வேண்டினேன். அந்தசமயம் கூட யாருமில்லை. என்னுடைய பையை அவர் தன் கையினால் தொடக்கூட இல்லை. என்னை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றவர், அங்கு ஒரு குழியைத் தோண்டி, அதனுள் அந்தப் பையைப் போடும்படி சொன்னார். நானும் அப்படியே செய்ய, பிறகு அதை மண்ணைப் போட்டு மூடி விட்டார். பிறகு என்னிடம் பிரயாணம் முடிந்து வந்த பிறகு நானே குழியைத் தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்றார். “மிக உத்தமமான மனிதர் என்று மனத்தில் அவளுக்கு மரியாதை செலுத்திவிட்டு, நேரில் அவருக்கு நன்றி கூறித் திரும்பினேன். பிறகு பத்ரிநாத் யாத்திரை முடிந்தபின், நான் அவரிடம் செல்ல அதே இடத்திற்கு அவர் என்னை அழைத்துச் சென்றார். நான் குழியைத் தோண்டி, புதைத்து வைத்திருந்த என் பையை எடுத்துக் கொண்டேன். குலுக்கினால் உள்ளே நாணயங்கள் குலுங்கும் ஒலிகேட்டு திருப்தி அடைந்து வீட்டுக்குத் திரும்பினேன். பையின் கயிற்றின் முடிச்சும், அதில் நான் வைத்திருந்த சீலும் அப்படியே இருந்தது. “ஆனால், என்னவென்று சொல்வது! வீட்டுக்கு வந்து, பையைத் திறந்து பார்த்தால் உள்ளே தங்க நாணயங்களுக்கு பதிலாக செப்பு நாணயங்கள் இருந்தன. குல்ஷா போன்ற கௌரவமான மனிதர் இப்படி ஓர் ஏழைக்கிழவியை மோசம் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று கண்ணீர் வடித்தாள். பையிலுள்ள கயிற்றின் முடிச்சை அவிழ்க்காமல் உள்ளிருக்கும் பொற்காசுகளை எப்படி வெளியே எடுத்து செப்புக்காசுகளை நிரப்ப முடிந்தது என்று அக்பருக்குப் புரியவில்லை. அதேசமயம் கிழவி பொய் சொல்கிறாளோ என்று சந்தேகமும் எழ,அக்பர் பதில் சொல்ல முடியாமல் குழம்பிப் போய் பீர்பாலை நோக்க, பீர்பால் “பிரபு! இதை நான் தீர்த்து வைக்கிறேன்” என்றார். அக்பர் நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டார். அடுத்து பீர்பால், “பிரபு! பொற்காசுகள் இருந்ததாகக் கூறப்படும் அந்தப் பையினை நான் பார்க்க விரும்புகிறேன்!” என்று கூறி, அதைக் கிழவியிடமிருந்து வாங்கிக் கொண்டார். அதை மேலுங் கீழுமாகப் புரட்டி உற்று கவனித்த பீர்பாலின் புருவங்கள் நெரிந்தன. அதில் ஏதோ மர்மம் இருப்பதாகப் புரிந்தது.
|
அரசர் கிருஷ்ணதேவராயருக்கு அன்று விபரீதமான ஓர் ஆசை ஏற்பட்டது. அவர் அப்பாஜியிடம், “”அமைச்சரே, இன்று மாலை ஆறு மணிக்குள் நம் தலைநகரான விஜயநகரை நீர் நன்றாகச் சுற்றிப் பார்த்து, ஆறு முட்டாள்களின் விலாசத்தைக் குறித்துக் கொண்டு வாருங்கள்,” என்று ஆணையிட்டார். “”முட்டாள்களின் முகவரி எதற்கு?” என்று பணிவுடன் கேட்டார் அப்பாஜி. “”வீணாக விளக்கம் கேட்க வேண்டாம். சொன்னதைச் செய்யும்!” என்று அரசர் கண்டிப்பாகக் கூறினார். அரசர் விருப்பப்படி முட்டாள்களைத் தேடி அலைந்தார் அப்பாஜி. அந்தி நேரத்திற்குள் ஆறு முட்டாள்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் விலாசத்தைக் குறிக்க வேண்டுமே! எங்கே போவது? எப்படி முட்டாள்களைச் சந்திப்பது? அப்பாஜி இரண்டு மணி நேரம் மாறு வேடமணிந்து முட்டாள்களைத் தேடினார். யாரையும் காணோம். நகர எல்லையை ஒட்டிய மரத்தின் நிழலில் சிறிது நேரம் நின்றார். அப்போது ஒருவன் கழுதை மீது ஏறி வந்தான். அவன் தலை மீது ஒரு புல்கட்டினைச் சுமந்து கொண்டிருந்தான். “”ஐயா, கழுதை மீது இருக்கும் நீர் ஏன் புல்கட்டினைச் சுமந்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார் அப்பாஜி. “”உமக்கு அறிவு இருக்கா? என் கழுதைக்கு வயதாகிவிட்டது. ரொம்பவும் தளர்ந்து விட்டது; அதனால், என்னை மட்டுமே சுமக்க இயலும். இந்தப் புல்கட்டினையும் சேர்த்துச் சுமக்க இயலாது. ஆகவே, நான் புல்கட்டினைச் சுமந்து செல்கிறேன்,” என்றான். அப்பாஜிக்கு ஒரே மகிழ்ச்சி. தான் தேடி வந்த முட்டாள்களில் ஒருவன் அகப்பட்டுக் கொண்டானே! அவனிடம் சாமர்த்தியமாகப் பேசி அவனது விலாசத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டார். சிறிது துõரம் சென்றதும் அருகில் உள்ள ஒரு மரத்தின் நுனி கிளையில் ஒருவன் உட்கார்ந்துக் கொண்டு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த அப்பாஜி, “”ஐயா! இப்படி உட்கார்ந்துக் கொண்டு வெட்டினால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள். அந்த பக்கமா உட்கார்ந்து வெட்டுங்க,” என்றார். “”ஏன்யா… நான் என்ன மடயன்னு நெனச்சியா… நான் இப்படி உட்கார்ந்துகிட்டு மரத்தை வெட்டினா இந்த மரக்கிளை கீழே விழும். நீ உடனே துõக்கிகிட்டு ஓடலாம்னு பார்த்தியா? அதுக்காகத் தானே நான் இங்க உட்கார்ந்துகிட்டு வெட்டுறேன்,” என்றான். “”சே! உங்க புத்திசாலித்தனம் யாருக்கு வரும்… உங்க வீட்டு முகவரியை கொடுங்க…” என்று வாங்கிக் கொண்டார். அடுத்து பாட்டி ஒருத்தி அடுப்பை பற்றவைக்க மிகவும் போராடிக் கொண்டிருந்தார். “”பாட்டி என்ன பிரச்னை? என்றார் அப்பாஜி, “”அய்யா! இது நல்லா காய்ஞ்ச விறகு தான். மண்ணென்ணெய் இல்லை. தண்ணியும், மண்ணென்ணெயும் ஒரே மாதிரி தானே இருக்கு அதனால இந்த விறகுகள்ல நல்லா தண்ணிய ஊத்தி எரிய வைக்க முயற்சி செய்றேன் எரியவே மாட்டேங்குது,” என்றாள். சிரித்துக் கொண்டே அவளது முகவரியையும் குறித்துக் கொண்டார் அப்பாஜி. அடுத்த முட்டாள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. இன்னும் மூன்று முட்டாளைத் தேடியாக வேண்டும்! ஒரு மணி நேரமே உள்ளது. அலுத்துப் போய் ஆற்றங்கரைக்குச் சென்றார் அப்பாஜி. அங்கே ஒருவன் குளித்து முடித்துவிட்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்பாஜி அவனிடம், “”தாங்கள் எதைத் தேடிக் கொண்டு அலைகிறீர்கள்?” என்று விசாரித்தார். அவன், “”ஐயா, நான் என் உடைகளையும் கொஞ்சம் பணத்தையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டுக் குளித்தேன். குளித்துவிட்டு வந்து பார்த்தால் பணத்தையும், உடைகளையும் காணோம்,” என்று கவலையுடன் கூறினான். “”ஏதாவது அடையாளம் வைத்து இருந்தாயா?” “”ஆமாம், அடையாளத்தையும் காணோம்.” “”என்ன அடையாளம்?” “”வானத்தில் வெண்மேகம் ஒன்றிருந்தது. அதை அடையாளமாகக் கொண்டு அதன் அடியில் அவற்றை வைத்தேன்.” அவனது முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்ட அப்பாஜி அவன் பெயரோடு விலாசத்தையும் குறித்துக் கொண்டார். மாலை ஆறு மணி அப்பாஜி அரசனிடம் விரைந்து சென்றார். நான்கு முட்டாள்களுடைய விலாசத்தையும் கொடுத்தார். கிருஷ்ணதேவராயர் அவற்றைப் பார்த்தார். முட்டாள்களின் விபரங்களை அறிந்து ரசித்து சிரித்த அரசன், “”அமைச்சரே, இன்னும் இரண்டு முட்டாள்களின் விலாசம் எங்கே?” என்று கேட்டார். அப்பாஜி, “”அரசே, ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மந்திரி நாள் முழுவதும் முட்டாள்களைத் தேடிக் கொண்டு அலைந்தது முட்டாள்தனமல்லவா! ஆகவே, எனது விலாசத்தை ஐந்தாவதாக எழுதிக் கொள்ளுங்கள்,” என்று பணிவோடு வேண்டினார். அரசரும் அப்பாஜியின் முகவரியை எழுதிக் கொண்டார். பிறகு, “”அமைச்சரே, ஆறாவது முட்டாளின் விலாசம் எங்கே?” என்று அரசர் ஆர்வத்துடன் கேட்டார். “”அரசே, கோபித்துக் கொள்ளாதீர்கள்! உங்கள் விலாசம் உங்களுக்குத் தெரியாதா? ஒரு நாட்டின் அமைச்சருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று ஒரு ஒழுங்கு கிடையாதா? நாம் அறிவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களால் பல நன்மைகளைப் பெற வேண்டுமே தவிர, முட்டாள்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்களது தொடர்பால் நம்மையும் முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாதல்லவா!” என்று உருக்கமாகக் கூறினார். அரசனுக்குத் தான் செய்த தவறு புரிந்து விட்டது. தன் கையிலிருந்து நான்கு முட்டாள்களின் விலாசத்தையும் உடனே கிழித்து எறிந்தார். அப்பாஜியின் அறிவுக் கூர்மையையும் துணிச்சலையும் பாராட்டி அவருக்குப் பரிசு அளித்தார்.
|
தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது. அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார். இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர். உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார். இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார். மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார். அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது. இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள். அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார். இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார். தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார். இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை. சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார். இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னால் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார். அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு. மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார். உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார். இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.
|
ஒரு வேலையில்லாத மனிதன் வெடவெடக்கும் குளிர்கால இரவில் புத்தருடைய கோயிலிற்கு வந்தான். கோயிலில் இருந்த புத்த விக்கிரத்திற்கு முன்பு மண்டியிட்டு அமர்ந்து தன்னுடைய பிரார்த்தனையை செய்தான். பிரார்த்தனையை முடித்தவன், கண்களில் பொலபொலவென கண்ணீர் வழிய சத்தமாக அழுது புலம்ப ஆரம்பித்தான். அந்த கோயிலின் தலைமைக் குருவாக தர்மா ஆசிரியரியராக இருந்தவர் விங்ஸி (அர்த்தம், புகழ்வாயந்த கிழக்கு), அழுகின்றவனைப் பார்த்து "என்ன ஆயிற்று?, எதற்காக அழுகிறாய்?" என்று விசாரிக்க ஆரம்பித்தார். அந்த எழை மனிதன், "ஐயா, மேன்மை பொருந்திய ஆசிரியரே, என்னுடைய மனைவியும், குழந்தைகளும் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. நானும் என்னால் முடிந்தவரை உழைத்து அவர்களை காப்பாற்ற முயற்சித்தேன், ஆனால் இந்த நகரத்தில் என்னால் ஒரு வேலையையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தக் குளிர்காலத்தில், போதிய உணவோ, சரியான உடையோ இல்லாததால் நானும் மூட்டு வலியாலும் மற்ற பிற வியாதிகளாலும் துன்பப் படுகிறேன். என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் பட்டினியுடன் இன்னும் எத்தனை நாளைக்கு உயிருடன் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதணால் தான் நான் புத்தரிடம் வந்து என்னுடைய துன்பங்களை நீக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். என் நிலையை நினைத்து எனக்கே வருத்தமாக இருந்தது. அதணால் என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு அழுது விட்டேன்" என்று விங்ஸியைப் பார்த்து பதில் அளித்தான். விங்ஸி மனதிற்குள், "புத்த பிக்ஷுக்களாகிய நம்மிடம் பணம் கிடையாது, இவனுடைய அவசரத்திற்கு எதாவது உதவி செய்ய வேண்டும், ஆனால் என்ன செய்வது என்றும் ஒன்றும் புரியவில்லையே" என்று நினைத்தவர், தன் எதிரே இருந்த தங்க மூலாம் பூசிய புத்த விக்கிரகத்தினைப் பார்த்தார். உடனே தன்னுடைய சீடர்களைக் கூப்பிட்டு, "புத்தருடைய ஒரு கையினை அந்த விக்கிரத்திலிருந்து பிரித்து எடுத்து. அதில் இருக்கும் தங்க மூலாமினை சேகரித்து வேலையில்லாத அந்த எழை மனிதனிடம் கொடுங்கள்" என்று கூறிவிட்டு. அந்த எழை மனிதனைப் பார்த்து, "ஒரு பொற்கொல்லனிடம் சென்று, இந்த தங்கத்தினை விற்று, வரும் பணத்தினைக் கொண்டு உன்னுடைய அவசர தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்" என்றுக் கூறினார். அங்கிருந்த சீடர்களும் மற்ற பிக்ஷுக்களும் கோபமடைந்து, "எப்படி நீங்கள் புத்தர் சிலையை உடைத்து மற்றவர்களுக்கு கொடுக்கலாம்?" என்று கேட்டு புத்தருடைய விக்கிரகத்திலிருந்து கையை எடுத்துக் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரியர் விங்ஸி அமைதியாக, "உங்களுக்கு தர்மம் என்றால் என்ன என்று இன்னும் புரியவில்லை, நான் இதனை செய்வதே புத்தருக்கு செய்யும் மரியாதையாகும்" என்று பதில் அளித்தார். எல்லாரும் குழப்பம் அடைந்து, "நீங்கள் புத்தருடைய சிலையை அக்குவேறு ஆணிவேறாக உடைக்க சொல்லுகிறிர்கள், அது எப்படி புத்தருக்கோ, புத்தமதத்திற்கோ மரியாதை செய்வதாகும்?" என்று திருப்பிக் கேட்டனர். குரு விங்ஸி, "நானும் உங்களைப் போல நம்முடைய மதத்தினையும், அதனை தோற்றுவித்த புத்தாவினையும் மதிக்கிறேன். இந்தக் காரியத்தினை செய்வதற்காக நான் நரகத்திற்கு செல்வதானாலும், செல்லத் தயாராக இருக்கிறேன். உங்களால் முடியாவிட்டால், நானே கையினை உடைத்து கொடுக்கிறேன்" என்றார். வேறு வழியில்லாத சீடர்கள் ஆசிரியருடைய கட்டளையின்படி கையினை உடைத்து அதிலிருந்த தங்கத்தினை சேகரிக்க ஆரம்பித்தனர். இருந்த போதிலும் அவர்களுக்குள் "நாம் உடைப்பது புத்தர் சிலையை, அதனுடைய பாகங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது எப்படி புத்தருக்கு மரியாதை செய்வாதாகும். ஆசிரியர் சரியான முட்டாள். புத்த மதத்தின் எதிரி" என்று முனுமுனுத்தனர். அதனைக் கேட்ட விங்ஸி அதற்கு மேல் பொருத்துக் கொள்ள முடியாமல் சத்தமாக, "நீங்கள் புத்தருடைய போதனைகளைப் படித்ததில்லையா?, அவர் புத்தராவதற்கு முன்பு, தன்னுடைய மூன்று முன்பிறவிகளில் இளவரசர் சித்தார்த்தர், ஒன்றில் தன்னையே புலிக்கு உணவாக கொடுத்தார், மற்றொன்றில் தன்னுடைய உடலேயே வெட்டி பருந்து ஒன்றிற்கு ஆகாரமாக அளித்தார், அடுத்த படியாக குருடன் ஒருவனுக்கு தன்னுடைய கண்களை தானம் செய்தார். புத்தர் மற்றவர்களுக்காக எல்லாப் பொருட்களையும் மட்டும் அல்லாமல் தன்னுடைய உடலேயேக் கொடுத்தார். நீங்கள் அவருடைய போதனைகளை இன்னுமா புரிந்து கொள்ளவில்லை" என்று கேட்டார். |
ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது. முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார். அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த
வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர்.
சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப் படுத்தினர். குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு
ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதைக் கண்டு வேலைக்காரர்கள் பிரமித்துப் போய்விட்டனர். இவர் பெரிய செல்வந்தர் என்பதை முன்னதாகத் தெரிந்த கொள்ளமால் போய் விட்டோமே.
இவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருந்தால். இன்னும் நிறைய தங்கக் காசுகள்
கொடுத்திருப்பாரே என்று நினைத்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து முல்லா மறுபடியும் அந்தக் குளியல் அறைக்குக் குளிக்கச்
சென்றார். வேலைக்காரர்கள் முல்லாவை அடையாளம் கண்ட கொண்டனர். உடனே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முல்லாவுக்கு ராஜ உபசாரம் செய்தனர். உடலில்
தேய்த்துக் கொள்ள நறுமணப் பொடிகள் தந்தனர். வாசனைப் பன்னீர் கொடுத்தனர். அவர்கள்
முல்லாவை சூழ்ந்து கொண்டு அவர் உடம்பை அழுக்குப் போகத் தேய்த்து நிராடச் செய்தனர். உயர்தரமான துவாலையை உடல் துவட்டக் கொடுத்தனர். பிறகு அவர் உடலில் வாசனை
திரவியங்களைப் பூசினர். அன்று முல்லா தங்களுக்கு ஆளுக்கு ஐந்தைந்து பொற்காசுகளாவது அன்பளிப்பாக் கொடுப்பார்
என்று எதிர்பார்த்தனர். முல்லா ஆளுக்கு ஒரு செப்புக் காசுதான் கொடுத்தார். வேலைக்காரர்கள் மிகவும் ஏமாற்றமடைந்து " இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம்
செய்ததற்கு இந்தச் செப்புக்காசுதானா பரிசு?" என்று கேட்டனர். முல்லா உடனே அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த பொற்காசு இன்று நீங்கள் செய்த
உபசாரத்திற்கான பரிசு. இன்று கொடுப்பதோ அன்று நீங்கள் என்னை
அலட்சியப்படுத்தியமைக்காகக் கொடுத்த பரிசு என்று கூறியவாறே குளியலறையை விட்டு வெளியே
நடந்தார். |
ஒருநாள் இரவு நேரத்தில் முட்டாள்களும் கோழைகளுமான பத்துப்பேர் கரைபுரண்டு ஒடும் ஒர்
ஆற்றின் ஒரு கரையிலே குழப்பத்தோடு நின்று கொண்டிருந்தனர். அந்தப் பக்கம் வந்த முல்லா " என்ன சமாச்சாரம், ஏன் தயக்கத்தோடு நிற்கிறீர்கள்" என
வினவினார். " ஆற்று நீரில் இறங்கி அக்கரைக்குச் செல்ல பயமாக இருக்கிறது. எங்களைக் கையைப்
பிடித்து
அழைத்துச் சென்று அக்கரையில் விடுகிறீர்களா?" என்று முட்டாள்கள் கேட்டார்கள். " உங்கள் விருப்பத்தை நிறைவேற்றினால் என்ன கொடுப்பீர்கள்?" என்று முல்லா கேட்டார். " ஆளுக்குப் பத்துக் காசு கொடுக்கிறோம்" என்றனர் முட்டாள்கள். முல்லா அவர்களை ஒவ்வொருவராக கையைப் பிடித்து அழைத்துச் சென்று அக்கரையில்
விட்டுக் கொண்டிருந்தார். கடைசி மனிதனை அவர் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு ஆற்று நீரில் இறங்கினார். பாதி
தூரம் சென்று கொண்டிருந்த சமயம் திடீரென வெள்ளம் அதிகமாகப் பெருக்கெடுத்து விட்டது.
முல்லா கையைப் பிடித்து அழைத்து வந்த முட்டாள் வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்டான். அவனைக் காப்பாற்ற முல்லா படாதபாடுபட்டார், முடியவில்லை. அவர் வருத்தத்தோடு அக்கரையை அடைந்தார். அங்கே காத்துக் கொண்டிருந்த ஒன்பது முட்டாள்களும் வருத்தம் ததும்பிய முகத்தினராக
வந்து சேர்ந்த முல்லாவை நோக்கி " ஐயா, தாங்கள் ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?" என்று
கேட்டனர். " உங்களிடமிருந்து எனக்கு வரவேண்டிய வருமானத்தில் பத்துக்காசு குறைந்துவிட்டதே
என்பதை எண்ணித்தான் வருந்துகிறேன் " என்றார். அவர் சொன்னதன் உட்பொருளை உணராத முட்டாள்கள் " கவலைப்படாதீர்கள். ஒரு பத்துக்
காசு சேர்த்துத் தருகிறோம் " என்று கூறினார். அவர்களுடைய முட்டாள்தனத்தை எண்ணி முல்லா மனத்திற்குள் மிகவும் வேதனைப்பட்டார். |
ஒவ்வொரு ஸென் மாணவர்களும் தங்களுடைய குருவிடம் குறைந்த பட்சம் பத்து வருடங்களாவது பயிற்சி பெறுவார்கள். அதற்குப் பின்பே அவர்கள் ஸென் பற்றி மற்றவர்களுக்கு சொல்லித் தர அனுமதிக்கப் பட்டார்கள். டென்னோ என்ற மாணவன் ஸென்னை முறையாக கற்று ஸென் பட்டம் பெற்று சமிபத்தில் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன். அடை மழை பெய்யும் ஒரு நாள் டென்னோ தன்னுடைய மரத்தினால் ஆன பாதுகைகளை (செருப்புக்களை) போட்டுக் கொண்டு குடையை விரித்து பிடித்துக் கொண்டு நா-நினைச் சந்திப்பதற்காக அவருடைய மடத்திற்கு சென்றான். டென்னோவினை முக மலர்ச்சியுடன் வரவேற்ற நா-நின் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, "நீங்கள் வரும் போது போட்டுக் கொண்டு வந்திருந்த மரப்பாதுகைகளை நடையில் உள்ள வராண்டாவின் ஒரத்தில் விட்டு விட்டு வந்திருப்பீர்கள். உங்களுடைய குடையானது மரப்பாதுகைகளுக்கு வலப் பக்கத்தில் உள்ளதா அல்லது இடப் பக்கத்திலா?" என்ற கேள்வியினைக் கேட்டார். குழப்பம் அடைந்த டென்னோ எந்த பதிலும் சொல்ல முடியாமல் திகைத்தான். அப்பொழுதான் அவனுக்கு தன்னால் ஸென்னினை ஒவ்வொரு நிமிடமும் கடைபிடிக்க முடியவில்லை என்பதினை உணர்ந்தான். உடனே ஆசிரியருக்கு நன்றி கூறிவிட்டு அவரிடமே மாணவனாகச் சேர்ந்தான். ஒவ்வொரு நிமிடமும் ஸென்னைக் கடைபிடிப்பதற்கு டென்னோவிற்கு ஆறு வருடங்கள் பிடித்தது. ஆறு வருடங்கள் முடிவில் டென்னோவினால் நா-நின் சொன்ன ஸென்னின் அனைத்துப் பரினாமங்களையும் உணர்ந்து தெளிந்து கொள்ள முடிந்தது.
|
ஒரு பால் நிலா காயும் இரவு. சான் குரு ஃபாயாவும், அவரது இரண்டு சீடர்களான துறவிகளும் திறந்த வெளியில் மணல் பரப்பின் மீது உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நிலாவினைச் சுட்டிக் காட்டி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் நடந்த சுவரசியமான உரையாடலே இன்றைய தினம் ஒரு ஸென் கதையின் கருவாகும். முதலாம் துறவி சா"ன் குரு ஃபாயானிடம் "குருவே, உங்களிடம் நான் "சுட்டு" என்பதன் அர்த்தத்தைக் கேட்கவில்லை. "நிலா" என்பதன் உண்மையான அர்த்தத்தினை எனக்கு விளக்கிக் கூறவேண்டும்" என்று கேட்டான். ", "சுட்டு" என்பதன் பொருளை நீ உணர்ந்து விட்டதாக தெரிகிறது. எனக்கு அதன் பொருளைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் சா"ன் குரு. அந்த சமயத்தில் இரண்டாம் துறவி, "குருவே, உங்களிடம் "நிலா"வின் அர்த்தத்தினை கேட்க விரும்பவில்லை. "சுட்டு" என்பதன் உண்மைப் பொருளை விளக்க வேண்டும்" என்று கேட்டான். "நிலா" என்பதே பதிலாக கிடைத்தது. "நான் உங்களை "சுட்டு" என்பதன் பொருளைத் தான் கேட்டேன்" என்று கண்டனத்துடன் மறுதலித்துக் கூறியவன், "எதற்காக "நிலா" என்று பதில் அளித்தீர்கள்?", "ஏனேன்றால் "சுட்டு" என்பதன் அர்த்தத்தினைத் தானே நீ கேட்டாய்" என்றார் குரு. |
நான் குத்புதின் அன்சாரி, வயது 29. தையல்காரன். அம்மா, மனைவி, மூன்று வயதுள்ள மகள் என சுருங்கியிருக்கும் என் குடும்பம் அகமதாபாத் பாபு நகர் காலனியில் வாழ்கிறது. உங்களுக்கு என்னைத் தெரியும். நான் காற்றின் தொடக்க காலமான ஜனவரியில் பாபு நகரில் மிகவும் உயரமான கட்டடத்தின் மேலே ஏறி பட்டம் விட்டவன். கடையை மூடிவிட்டு இரவில் வீட்டுக்குப் போகும்போது காசிருந்தால் என் மகளுக்கு மிகவும் பிடித்தமான பாஸிலாலின் பட்டர் ஸ்காச் ஐஸ்கிரீம் வாங்குவேன். சில நேரங்களில் அமைதியாய் இருக்க வேண்டும் என்று தோன்றினால் எல்லீஸ் பாலத்தின் மேலே ஏறிநின்று நீருடனோ அல்லது நீரற்று வெறுமையோடோ இருக்கிற சபர்மதி ஆற்றைப் பார்த்துக்கொண்டிருப்பேன். நான் பார்க்கப் பார்க்க வளர்ந்த பாபுநகரின் சில பெண் பிள்ளைகள் தங்களின் திருமணத் துணி தைக்க வரும்போது, அதன் தொடர்ச்சியாக மனதில் எழும் இன்ப அலைகளை, நான் ரிலீப் ரோட்டில் பரப்பியிருக்கும் கடைகளிலிருந்து சிவப்பு கண்ணாடி வளையல்கள் வாங்கி, எங்களின் ஒரே அறையைக் கொண்ட வீட்டில் மிகவும் ரகசியம் காக்கும் கொசு வலைக்குள் என் மனைவியின் கைகளில் அணிவித்துப் பார்ப்பேன். மாதத் தவணையில் 14 இன்ச் டி.வி. வாங்கிய போது நான் ஏலக்காய் டீ போடுவதையும் கற்றுக்கொண்டேன். க்யோம்கி, சால்பி, கட்பஹீ“தி போன்ற சீரியல்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அம்மாவும், மனைவியும் நான் தயாரித்த டீயை நன்றி கூட சொல்லாமல் வாங்கிக் குடித்தது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. என் அம்மாவுக்கு சினிமா பார்ப்பதைவிட அதிகமான பிரியம் வெளியே சென்று தின்பண்டங்கள் வாங்கித் தின்பதில்தான் இருந்தது. வழியோரக் கடைகளில் கபாபும், கறி குருமாவும், வறுத்த கறியும், சங்கல்ப் ரெஸ்டாரண்டில் கொண்டு வந்து வைக்கும் ஃபேமிலி ரோஸ்டைப் பார்த்து என் மகள் கைகொட்டிச் சிரித்து உண்பதும், கோபி டைனிங் ஹாலில் தயிர் சேர்த்துச் செய்த தின்பண்டமும், கத்தரிக்காய், வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்த உந்தியாவுமாக சுத்த வைஷ்ணவ குஜராத்தி பட்சணமும் அம்மாவை சந்தோஷப்படுத்தும். மாதத்தில் ஒரு முறையாவது இந்த சந்தோஷத்தை அம்மாவுக்குக் கொடுக்க சீரியல்கள் இல்லாத மாலைகளில் ஆட்டோ வைத்துக்கொண்டு போவோம். ஆனால் நான் குத்புதின் அன்சாரி. வருங்காலத்தின் ஒரு ஞாபக சின்னமானேன். டில்லிக்கு இந்தியா கேட் போல. ஜெய்ப்பூருக்கு ஹவா மஹால் போல. கல்கத்தாவின் ஹெளரா பிரிட்ஜ் போல. பம்பாய்க்கு கேட் வே ஆப் இந்தியா போல. அகமதாபாத்திற்கு ஒரு சின்னமில்லாமல் இருந்தது. காந்தியின் சபர்மதி ஆஸ்ரமம் அகமதாபாத்தின் சின்னமாகாமல் போனதற்கு, அது அவ்வளவு எடுப்பாக இல்லாமல் போனதே காரணம். சின்னம் பிரதானமானது. சின்னமில்லாத நகரங்களுக்கு முகமில்லை. சித்தி சையத்தின் மசூதியில் கல்லில் செதுக்கி வைத்த மரத் துண்டுகளுடன் கலந்து கிடக்கும் மர உருவம் ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் நினைவாகிப் போனது. குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாமல், அடையாளம் காண முடியாமல் போன நாட்களில் தான் நான் அதைச் செய்தேன். 2002ம் வருடம் எப்போது இல்லாத காற்றையும் சேர்த்துதான் தொடங்கியது. வடக்கு கிழக்காக அடித்த காற்று என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தூங்கு மூஞ்சி மரத்தை அதிகமாக சப்தமிட வைத்த போது இந்த வருடம் பட்டம் விட மிகவும் தோதாக இருக்கும் என நான் நினைத்தேன். நான் பாய்சந்தைப் பார்க்கப் போனேன். பள்ளியில் என்னுடன் ஒன்றாய்ப் படித்தவனும், ரெயில்வேயில் வேலை செய்பவனுமாகிய பாய்சந்த்தான் எங்களுடைய ஏரியாவில் மிகவும் உயரமாகப் பட்டம் விடும் ஆள். நான் பாயிடம் ''இம்முறை தைமாத சங்கராந்தியில் உன்னைத் தோற்கடிப்பேன்'' என சொல்லியிருந்தேன். அவன் என் முதுகில் தட்டியபடி சொன்ன ''சரி செய்'' என்ற வார்த்தைகள் என்னைக் குளுமையாக்கவேயில்லை. அன்றே நான் அயூப் பதங்க வாலாவின் கடைக்குப் போய் பிரம்பில் ஒட்ட வைத்துச் செய்த மூன்று பட்டங்களும் நூலும் வாங்கினேன். அதற்குப் பிறகுதான் அம்மாவின் வேலை தொடங்கியது. பழைய பாட்டில்கள் விற்கும் கடையிலிருந்து பாட்டில்கள் வாங்கி அம்மாவிடம் உடைத்துக் கொடுத்தேன். நான் தைத்துக் கொடுத்த கனமான கை உறைகளைப் போட்டுக் கொண்ட, அம்மா கண்ணாடிச் சில்லுகளை வெற்றிலை இடிக்கும் சின்ன உரலில் போட்டுத் தூளாக்கினாள். அரைத்த கண்ணாடித் தூளைப் பசையுடன் கலந்து பட்டத்தின் நூலில் தடவிக் காய வைத்தேன். தைமாத சங்கராந்தி தினத்தன்று வானத்தில் இடமே இல்லாமல் போனது. பல வண்ணத்தில் பறந்த பட்டங்களின் கூட்டத்தால் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரன கபூத் பாஜ் அசன் ஷேக்கின் வீட்டுப் புறாக்கள் அன்று கூட்டிலேயே முடங்கிக் கிடந்தன. என்னை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பிக்கும் இளம் பச்சை நிற கண்களைக் கொண்ட வானத்தின் மேலே வாயு மண்டலத்தில் சுழலும் காற்றின் ஆதியைத் தேடிக் கொண்டிருந்தேன். சட்டென ஆகாயத்தில் நான் பார்த்த ஒரு பருந்து கறுப்புப் பொட்டு பட்டக் கயிற்றை ஒரு முறை உலுக்கிவிட்டது. என் பட்டம் பருந்தைத் தாங்கி நிற்கும் வாயுவின் சுழலுக்குள் நகர்ந்தது. பிறகு அது தானாகவே உயரே போகத் தொடங்கியது. மனசு நிராதரவாய் போக ஆரம்பித்தது. உயரத்தின் நடுக்கம் என்னைப் பாதிக்க ஆரம்பித்தபோது நான் நூலைத் தளர்த்திப் பட்டத்தை லேசாக்கினேன். அன்றைக்கு எங்கள் ஏரியாவில் மிக அதிக உயரம் பட்டம் விட்டவன் நானாகத்தான் இருந்தேன். நான் பட்டத்தைக் கீழே இறங்கினேன். இனி தான் சண்டையே தொடங்கும். முதலில் நான் கிழித்து எறிந்தது பாய்சந்தின் பட்டத்தைத்தான். கண்ணாடிப் பசை பூசிய என் பட்டக் கயிற்றில் வெயில் பட்டபோது வாளின் அலகுபோல ஜொலித்தது. நான் மைதானத்தில் ஓடிக்கொண்டே போய் பல பட்டங்களின் கயிற்றையும் அறுந்தெறிந்தேன். அப்போதுதான் பிந்தியா என் சட்டையைப் பின்னால் பிடித்து இழுத்தபடி சொன்னாள். ''பர்ஜி சாச்சா என் பட்டத்தை அறுக்க வேணாம்.'' பிந்தியா பிறந்தபோது அவளுக்குப் பெரிய பின் போட்டுக் குத்தப்பட்ட நாப்கினைத் தைத்து கொடுத்தது நான்தான். பிறகு சின்ன கவுன்கள். ஃப்ராக்குகள். இப்போது பாவாடை சட்டையும் கூட என் அளவுகள் குறிக்கும் புத்தகங்களினூடாக அவள் வளர்ந்து வளர்ந்து இதோ பன்னிரெண்டு வயதில் நிற்கிறாள். ''நான் அறுப்பேன். போட்டிக்கு வரலேன்னா நீ ஏன் மைதானத்துக்கு பட்டத்தை எடுத்திட்டு வாறே.'' நான் கேட்டபோது பிந்தியா எனக்குப் பட்டத்தின் கதையைச் சொன்னாள். பட்டமென்றால் பெண் குழந்தைகளுக்குக் காதலன். ஆண் குழந்தைகளுக்குக் காதலி. கயிறுதான் அவர்களின் காதல். அது அறுத்தெறியப்படும்போது காதல் உடைபடுகிறது. கயிறு அறுந்த பட்டத்தை மீண்டும் மீட்டு எடுக்கும்போது அது புனர்ஜென்மம். அதனால் பிந்தியா என்னிடம் சொன்னாள். ''பாஜி சாச்சா ஒரு போதும் என்னுடைய கயிற்றை அறுத்தெறிய வேண்டாம்.'' நான் சிரித்தேன். அவள் திரும்பவும் சிரித்தபோது உதட்டுக்குப் பக்கத்தில் விழுந்த குழிகள் பொய்யாய் கவலைப்பட்டதையும் பார்த்தேன். வீட்டுக்குத் திரும்பி வரும்போது என்னைச் சுற்றியும் மகர ராசியில் காதலும் காமமும், மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் சந்திப்புகளுமாய் தொடர்ந்த வண்ணம் இருந்தது. என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனான அசன் ஷேக் மொட்டை மாடியிலிருக்கும் தனி அறையில் புறாக்களுக்கிடையில் தங்கியிருந்தான் கீழ்போர்ஷனில் வாடகைக்கிருப்பவர்கள் தரும் பணத்தை வைத்துக் கொண்டு ஷேக் புறாக்களுக்கு தீனி வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தான். நடுவில் ஆக்ராவிலோ, டெல்லியிலோ போய் ''சிக்கந்தரி,'' ''காபூளி'' போடற உயர் ஜாதிப் புறாக்களை வாங்குவார். அசன் கை தட்டினால் புறாக்கள் மாடியின் பல பாகங்களுக்கும் பறந்து, வானத்தில் போய் ஒன்றாய் குழுமி, தூரமாய் பறந்து, விமானம் திரும்புவதுபோல சாய்ந்து சாய்ந்து திரும்பி, மீண்டும் வளைந்து மாடிக்கு வந்து சேரும். லாவகமாகச் சுழன்று ஆடும். நர்த்தகியின் உடை வட்டமிடுவது போல அப்புறாக்கள் ஒரு முறை சுழன்று தான் மாடியில் இறங்கும். புறாக்களின் சிறகசைப்பும், உடல் குலுக்கமும், பொட்டுப் பொட்டாய் கண் சிமிட்டி வீட்டிற்குத் திரும்பி வருவதின் சந்தோஷமும் பார்த்து என் மகள் எப்போதும் கைதட்டிச் சிரிப்பாள். அவள் கைகளில் அமர்ந்து மட்டுமே தீனியைக் கொத்தும் அனுமதியைப் புறாக்களுக்கு அசன் ஷேக் கொடுத்திருந்தார். பிப்ரவரியிலேயே அடைகாத்து உட்கார்ந்த புறாக்கள் ஏதோ நடக்கப் போவதை முன் கூட்டியே தெரிவித்ததாய் அசன் ஷேக் சொன்னார். புறாக்கள் எத்தனை முறை கை தட்டினாலும் வெளியே பறந்துபோக மறுக்கின்றன. ஏதோ நடக்கப் போகிறது. அன்றே கோதுமை மாவும், கடலை மாவும், பருப்பும், உருளைக்கிழங்கும் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன். கேஸ் சிலிண்டர்கள் மட்டும் கிடைக்கவில்லை. என்னுடைய பதட்டத்தைப் பார்த்து அம்மாகூட திட்டினாள். ''நீ என்ன பைத்தியக்காரத்தனமாக என்னென்னவோ செய்யறே. இது விலை அதிகமாயிருக்கும் காலம். இப்போ போய் எல்லாத்தையும் வாங்கி வைக்கிறயே. அகமதாபாதிகளும் குஜராத்திகளும் கருணை உள்ளவர்கள். சைவர்கள் பாபுஜியின் ஆட்கள், ஒரு எறும்பைக் கூட நோகடிக்காமல், ஜீவராசிகள் ஏதாவது இருக்குமா என்று தரையையே பார்த்து நடக்கும் ஜைனர்கள். அவங்க கடவுள் யாரு? பகவான் ரஞ்ஜோத் யுத்தத்தில் பங்கு கொள்ள மறுத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அந்த பைத்தியக்காரன் பொண்டாட்டி புள்ள இல்லாத புறா வளக்கிறவன் ஏதோ சொன்னான்னு ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கற.'' அம்மா சொன்னது சரிதானென்று எனக்குத் தோன்றிய ஒரு நாள் இரவுதான் பாய்சந்த் என் வீட்டுக் கதவைத் தட்டினான். ''குத்புதீன்..... '' பாய்சந்தால் மூச்சு விட முடியவில்லை. ''நான் வேலையை முடிச்சிட்டு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேரா இங்கு வரேன். பரோடாவுக்குப் பக்கத்தில் கோத்ரா ஸ்டேஷனில் வெளியில் ஒரு போகி கொளுத்தறாங்க. குத்புதின், நம் கிளாசில படிச்சாளே சாந்திபென் எப்பவும் கணக்கில் ஃபஸ்டா வருவாளேடா. அவளும், அவ புருஷன் கொழந்தை எல்லாம் செத்திட்டாங்க. டவுன்ல மைக் வைச்சிட்டாங்க. அயோத்தியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த சாந்தி பெண்னைப் போன்ற ராமபக்தர்களைக் கொன்று கோத்ரா அவுட்டரில் குடியிருக்கும் உன் மதத்துக்காரர்களுக்கு எதிராக .... எனக்கு பயமாக இருக்கிறது....'' அசன் ஷேக்கின் புறாக்கள் சொன்னது சரி. ''நான் வரும் வழியிலேயே விரேன் ஷாவின் டாடா சுமோவை புக் பண்ணிட்டேன். நானும் ஆஷாவும் குழந்தைகளும் உதய்ப்பூரில் இருக்கும் அண்ணன் வீட்டுக்குப் போகப்போறோம். குத்புதீன் நீ என்ன செய்யப்போற? இங்கேயிருந்து கிளம்பிடு. இதைச் சொல்லத்தான் நான் இப்ப ஓடிவந்தேன். வரேன் பார்க்கலாம்.'' நான் ரொம்ப நாட்களுக்குப் பிறகு அம்மாவின் முகத்தில் பயம் படருவதை உணர்ந்தேன். இன்றைய இரவு என் மகளைத் தவிர யாரும் தூங்கவில்லை. மறுநாள் காலையிலும் நான் வாசல் கதவோ ஜன்னலோ திறக்கவில்லை. அவசரப்பட்ட மகளுக்காக நான் பின் கதவைத் திறந்து கொடுத்தேன். அவள் மண்ணை வாரி விளையாடத் தொங்கினாள். சிறிது நேரத்தில் ஏதோ சப்தம் கேட்பதை உணர்ந்தவுடனேயே நான் காதைக் கூர்மையாக்கினேன். என் மகள் ஒரு புறாவைப் பிடித்தபடி உள்ளே வந்தாள். ''அழகாயிருக்கு இல்ல புறா'' அவள் என் கையில் கொடுத்த புறா கழுத்து முறிந்து இறந்து கிடந்தது. நான் வெளியே எறிந்தபடி பார்த்தபோது அசன் ஷேக்கின் உரத்த சப்தம் கேட்டது. ''அய்யோ என் புறாக்கள்'' திடுக்கிட்டுத் திரும்பியபோது கலகக்காரர்கள் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த அசன் ஷேக்கினைத் தான் நான் பார்த்தேன். பிறகு அவர்கள் என் வீட்டிற்கே வந்துவிட்டார்கள். அவர்கள் என் வீட்டைச் சுற்றியும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தார்கள். மூடி பிடுங்கப்பட்ட சிலிண்டர்களைத் தீயில் எறிந்தபோது அதில் என் அம்மாவும் மனைவியும் மகளும் மூலைக்கொருவராய் சிதறிப்போனார்கள். எப்படி என்றே தெரியாமல் பின் வாசல் வழியாக ஓடிப்போனேன். வெளியே வந்தபோது மண்ணெண்ணெய் பாட்டில்களும், பெட்ரோல் கேன்களும், வாட்களும், கோடாலிகளுமாக என்னைச் சுற்றி நின்றவர்கள் நம்மைப் போலவே மனிதர்களாக இருந்தார்கள். அவர்களின் இடுப்பின் பருமன் என்னுடைய அளவுக் குறிப்பேட்டில் பதிவாகியிருந்தது. நான் தைத்துக் கொடுத்த உடைகள் அணிந்த பெண்கள் என்னடைய மனைவியுடன் ''கோன் கியோம் கீ சாஸ்பீ கபி பஹீதி'' என சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத ஆட்கள் வாட்களும் சூலங்களும் போர்டுகளுமாகக் காட்சியளித்தார்கள். அவர்கள் கையிலிருந்த போர்டுகள் சொன்னது. ''முஸ்ஸிம்களின் கடைகளிலிருந்து எதையும் வாங்காதே'' நான் என்னடைய பச்சைக் கண்களுக்கு நடுவில், ப்ரியத்தை இழுத்துப் பூட்டி விட்டு கருங்கல் சீழ்பிடித்து நிற்கும் பிந்தியாவைப் பார்த்தேன். அவளுடைய அம்மாவின் கையில் அரிவாள் இருந்தது. நான் அங்கே குழுமியிருக்கும் ''ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ்''காரர்களிடம் என்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சினேன். அப்போதுதான் ஒரு துப்பாக்கியின் ஸேப்டி காட்ச் மாற்றும் சப்தம் கேட்டது. சட்டென நான் திரும்பிப் பார்த்தபோது ஒரு தங்க முடியுள்ள வெள்ளைக்காரன் கேமராவை கிளிக் செய்வதைக் கவனிக்க முடிந்தது. ம்... பிறகு நடந்ததை நீங்கள் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். குத்புதின் அன்சாரியையும் குடும்பத்தையும் வெறித் தாக்குதலோடு சுற்றி வளைத்திருந்தார்கள். அந்த ஆள் போலீஸ்காரர்களிடமும் RAF காரர்களிடமும் தன்னுடையதும் தன் குடும்பத்தினுடையதும் உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சினான். மாலை ஆறு மணிவரை நீண்டு கொண்டிருந்த இந்த அக்னிப் பரீட்சை முடிவுக்கு வந்தது. மிலிட்டரி வந்தபோது தான். மிலிட்டரிக்காரர்கள் அவர்களுடைய ட்ரக்கில் என்னை ஏற்றிக் கொண்டு என் வீட்டிற்குப் போனார்கள். இடிபாடுகளுக்கிடையில் என் அம்மாவையும், என் மனைவியையும், மகளையும் கண்டு பிடித்தார்கள், எங்களை ஷா அலம் முகாமில் கொண்டு போய்விட்டார்கள். ராய்ட்டரின் புகைப்படக்காரர் எடுத்த என் படம் பத்திரிகையில் வந்தது. பார்வை நிலைக்காமல் அலை பாய்ந்த என் கண்ணில் பச்சை நிறம் இருண்டு போக, நிறைந்த கண்ணீருமாய், ஈரமான பத்திரிகைத் தாளில் உறைந்துபோன என் கூக்குரலும், கைகூப்பியவாறு நான் கேட்கும் மன்னிப்பும் சமீபித்திருக்கும் மரணத்தை உங்களுக்குத் தத்ரூபமாக்கியிருக்கும். நான் அகமதாபாத்தின் சின்னமானேன். நான் சின்னமான சாலையின் இருபுறமும் பிணங்கள் கிடந்தன. உயரமான கட்டிடங்கள் எரிவதால் வானத்தில் கரும்புகை படர்ந்திருந்தது. அவற்றின் இடையிலான நான் இதுவரை காணாத பருந்துக் கூட்டங்களைப் பார்த்தேன். வழி நெடுகிலும் பள்ளிக் குழந்தைகளின் பாதி எரிந்த சிவப்பு ரிப்பன்கள் கிடந்தன. பெண்களின் ரத்தம் தோய்ந்த உள்ளாடைகள், கிழித் தெறியப்பட்ட பாடப்புத்தகங்கள். உடைந்த கண்ணாடி வளையல்கள். பாதி எரிந்த குடும்ப ஃபோட்டோ ஆல்பங்கள் சுவர்களில் முஸ்லீம்களின் கடைகளை பகிஷ்கரிக்கச் சொல்லும் விளம்பரங்கள், தலைபோன பொம்மைகள், வின் ஸ்கிரீன் உடைந்து பாதி எரிந்த கார்கள், தீ அணைந்து தீராத சைக்கிள் ரிக்ஷாக்களின் குவியல்கள், திறந்து வயிற்றிலிருந்து உருவின் குடல்போல வெளியே இழுத்தெறியப்பட்ட அனுமல்லிக்கினுடையதும், பங்கஜ் உத்தாஸினுடையதும் ஆடியோ கேஸட்டுகள், அதிகம் அடி வாங்கிக் கொடுத்த மார்க் குறைந்த ரேங்க் கார்டுகள், பட்டங்கள், கிழித்த பட்டங்கள் .... மிதித்து நசுக்கப்பட்ட பட்டங்கள்... கயிறு அறுந்த பட்டங்கள். நான் பட்டங்களைப் பார்ப்பதில்லை என்று தீர்மானித்தாலும் அவை எல்லா இடங்களிலும் ப்ரத்யட்ச்மானது. அம்மா அடிக்கடி சொல்வதை யோசித்துப் பார்த்தேன். ''நீ அன்சாரி, மோமின், தையல்காரன், ஒரு போதும் உன் கைகளால் நூல் அறுக்கப்படக்கூடாது.'' ராய்ட்டரின் புகைப்படக்காரல் நூலறுந்த நகரத்தின் பதிவாய் என்னை ஆக்கியிருந்தார். மறுவாழ்வு இல்லத்தின் பெண்கள் பகுதியில் தனியாய் வாழும் என் குடும்பத்தை நான் பார்க்கவில்லை. நான் இரவு பகலாய் நடந்தேன். எதை எதிர்பார்த்தென்று தெரியாமல் நடந்தேன். என் யாத்திரைக் கிடையில் மண்ணில் ஏதோ மின்னுவதை உணர்ந்தேன். அது ஒரு உடைந்த கண்ணாடித் துண்டாக இருந்தது. அதன் மேலே ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருந்தது. நான் என்னுடைய முகத்தைப் பார்த்து ஐந்தாறு நாட்களாகியிருந்தது. முகத்தில் சின்ன சின்னதாய் ரோமங்கள் படர்ந்திருந்தன. கண்களில் முழுமையாய் பயம் போகவில்லை. நான் மறந்துபோன ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும்போல இருந்தது. ''அது சிரிப்பு'' எத்தனை முறை முயன்றபோதும் முகம் விகாரமான தேயல்லாமல் சிரிக்க முடியவில்லை. பக்கவாதக்காரனை உருவி விடுவதுபோல என் கன்னத்தையும் வாயைச்சுற்றியும் அழுத்திவிட்டேன். அப்போதுகூட என் பிரதிபிம்பம் சிரிக்கவில்லை. என் முகத்தின் ரத்த நாளங்கள் தளர்ந்து கிடந்தன.
|
ஸென் ஆசிரியர் இக்கியூ சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி இது. சிறுவனாக இருந்த இக்கியூ புத்திச்சாலியும் அதே சமயத்தில் துடுக்குத் தனம் கொண்டவனாக இருந்தான். ஜப்பானில் சீனாவில் இருந்து கொண்டு வந்த தேனீர் கோப்பைகள் மிகவும் அரிய கலைப் பொருட்களாக கருதப் பட்டன. ஒருவருடைய மதிப்பு அவருடைய சிறந்த கலைப் பொருட்களின் சேகரிப்பை பொருத்து இருந்தது. தங்கத்தை விடவும் மிக மதிப்புடையவையாக இவை கருதப் பட்டன. இக்கியூவின் ஆசிரியரிடம் விலை மதிப்பில்லாத அரிதில் கிடைக்கக் கூடிய கலைப்பொருளான ஒரு தேனீர்க் கோப்பை இருந்தது. ஆசிரியர் இல்லாத சமயத்தில் ஒரு நாள் அதனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்த இக்கியூ கை தவற விட்டு உடைத்து விட்டான். உடைத்தவன் நெஞ்சம் படபடக்க என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான். அசிரியர் அறையினுள் வரும் ஒசையைக் கேட்டதும் உடைந்த கோப்பையை கையில் எடுத்து தன் பின்புறமாக மறைத்துக் கொண்டான். ஆசிரியர் அருகில் வந்ததும், எதுவும் நடவாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு "ஐயா, எதற்காக மனிதர்கள் இறக்கிறார்கள்?" என்று கேட்டான். ஆசிரியர் சிறுவனுக்கு புரியும் படியாக, "எவ்வளவு நாட்கள் தான் வாழ்வது, சாவு என்பது இயற்கையான ஒன்று, உலகத்தில் பிறந்த எது ஒன்றும் இறந்துதான் ஆக வேண்டும்." என்றார். அதற்காகத் தான் காத்திருந்த சிறுவன் "இப்பொழுது உங்கள் தேனீர் கோப்பைக்கு சாகும் நேரம் வந்து விட்டது" என்று கூறி உடைந்த கோப்பையைக் காண்பித்தான். ஆசிரியர் அவனுடைய சமார்த்தியத்தை பார்த்து வியந்து சிரித்துக் கொண்டே சென்றார்.
|
தனது மனைவி இறந்து போய் விட்டதால் முல்லா மறுமணம் செய்து கொள்வது என்று தீர்மானித்தார். அப்பொழுது அவர் 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். முதுமைக் காலத்தில் அவருக்குத் திருமண ஆசை ஏற்பட்டது. அவருடைய நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் நண்பர்கள் முல்லாவிடம் உரையாடிக் கொண்டீருந்தபோது தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர்." முல்லா இந்த முதுமைப் பிராயத்தில் உங்களுக்குத் திருமணம் அவசியம்தானா? உங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட எண்ணம் ஏற்பட்டது?" என நண்பர்கள் கேட்டனர். முல்லா வழக்கமான சிரிப்புடன் பேசத் தொடங்கினார்." நண்பர்களே, உங்கள் அன்பான கருத்துக்கு நான் பதில் சொல்லி ஆக வேண்டும். இளமைப் பருவமோ - முதுமைப் பருவமோ ஆணுக்கு ஒரு பெண் துணை தேவை நான் முதுமைக் காலத்தில் திருமணம் செய்து கொள்வதற்கு இது ஒரு காரணம் எனக்கு வாய்க்கும் மனைவி நல்லவளாக என்னிடம் அன்பும் ஆதரவும் உள்ளவளாக இருந்தால் முதுமைக் காலத்திலும் நான் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வழி பிறக்கும் அல்லவா?" முல்லாவின் இந்தப் பதிலைப் கேட்ட நண்பர்கள்" முல்லா அவர்களே! நீங்கள் எதிர்பார்த்தற்கு மாறாக முதுமைக் காலத்தில் உங்களுக்கு வந்து வாய்க்கும் மனைவி பொல்லாதவளாக இருந்து விட்டால்?" என்று கேட்டனர்." வயதுதான் ஆகி விட்டதே? இன்னும் கொஞ்ச காலந்தானே அவளுடன் வாழப் போகிறோம் என்று மனத்தைத் தேற்றிக் கொள்வேன்" என்று முல்லா பதிலளித்தார். |
மரக்காணம் பேருந்து நிலையத்தில் நிற்கும்போது வானம் லேசாக இருண்டிருந்தது. காற்று இறுகி உறைந்துவிட்டது போலிருந்தது. பகல் மூன்று மணிக்குரிய வெயில் இல்லை என்றபோது முழுக்கை சட்டைக்குள் புழுக்கத்தை உணரமுடிந்தது. கிழக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடல் எப்போதுமில்லாத மௌனத்தில் இருந்தது. அதன் அலைகள் சோம்பலாகப் புரண்டுகொண்டிருந்தன. எதுவோ விரும்பத்தகதாது நடக்கப்போகிறது என்றது உள்மனம். premonition. அடிக்கடி இப்படி ஆகிவிடுகிறது. ஏதோ மாயக் குரலொன்றுக்குப் பணிந்து அச்சமூட்டும் இருண்ட குகையினுள் நுழைகிறேன். கால்பட்டு உருளும் சிறு கல்லும் சொல்லொண்ணாத பீதியைத் தருகிறது. எதிர்பாராத கணத்தில் குறுக்காகப் பறக்கும் வெளவால் இதயத்தை உலுக்கிவிடுகிறது. இருள் பூசிய குகைச் சுவர்களிலிருந்து அச்சம் வழிந்த படியிருக்கிறது. தைரியமனைத்தையும் திரட்டி சட்டெனத் திரும்பி ஒரே ஓட்டமாக ஓடிவந்துவிடுகிறேன். எவ்வளவு நிம்மதி. ஒத்திகை கச்சிதம். ஆசுவாசமாகவும் இருக்கிறது. செயல்படுத்த நினைக்கும் தருணத்தில் சுற்றிலுமுள்ள காற்று திண்மமாகிவிடுகிறது. அடிவயிறு குழைந்து கால்கள் தள்ளாட்டம் கொள்கின்றன. கண்களில் நீர் முட்டுகிறது. குகை வழி முடிவற்றுப்போய்க் கொண்டேயிருக்கிறது. ராஜேஷிடம் சொன்னால் மிகத் தயாராக வைத்திருக்கும் பதிலை, அதைக்காட்டிலும் சரியான பதில் வேறொன்று இருக்கமுடியாது என்பது போன்ற தோரணையில் சொல்வான். எல்லாம் உளவியல் சிக்கல் என்பான். நிச்சயம் ப்ராய்டோ, யுங்கோ அவன் உதவிக்கு வருவார்கள். "தட்ஸ் நத்திங்." முன்கூட்டியே உலகின் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வுகள் முடிவில்லாத எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு சுவிட்ச்சுகள் போன்ற பொத்தான்களை அழுத்தியதும் தடையில்லாது கொட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதென அவன் உறுதியாக நம்புபவனாக இருக்கவேண்டும்; அதுமட்டுமில்லாமல் எந்தச் சிக்கலுக்கு எந்தப்பொத்தானை அழுத்த வேண்டுமென்பதை அறிந்த திறமைசாலியாகவும் அவன் தன்னை எண்ணிக்கொண்டிருக்க வேண்டும். வெளிர்பச்சை உடம்பில் மங்கிய வெள்ளை எழுத்துகளோடு கிழக்குக் கடற்கரைச் சாலை பேருந்து வந்தது. அதில் ஏறுவதன் மூலம் இந்த மன உளைச்சல் அகன்று போகலாம் என்ற நினைப்பு நிம்மதி தருவதாக இருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலைப் போருந்துகள் என்ற ஈ.சி.ஆர். பேருந்துகள் மரக்காணத்திலிருந்து பாண்டிச்சேரி போகும் வழியிலுள்ள கணக்கிட முடியாத நிறுத்தங்களில் குறிப்பிட்ட சிலவற்றில் மட்டுமே நிற்கும். நின்று நின்று போகும் பஸ்ஸில் பயணிப்பது மாதிரியான அவஸ்தை வேறெதுவுமில்லை. பயணம் என்றாலே வேகம் என்றுதான் மனதில் பதிந்திருக்கிறது. இந்த பஸ் வந்தது அதிர்ஷ்டம் தான். அன்று வெள்ளிக்கிழமை. வாரக்கடைசி என்பதால் சென்னையிலிருந்தே மிகுதியான கூட்டத்துடன் வந்துகொண்டிருந்தது பஸ். தோளில் மாட்டிய பையுடன் நிற்பது அசௌகரியமாக இருந்தது. இரு மருங்கிலும் யூகலிப்டஸ் மரங்கள் நகர கருவாழைப் பட்டையென மின்னிய சாலையில் பேருந்து வேகமெடுத்தது ஓட ஆரம்பித்தது. சாலையை நிர்மாணிக்கும் பொறுப்பையேற்றிருந்த "அஃப்கான்ஸ்" நிறுவனம் தனது ரத, கஜ, துருக, பதாதிகளுடன் முகாமிட்டிருந்தது. தற்போது புழுதி மண்டிய பொட்டல் வெளியாக கிடக்கும் மைதானத்தைக் கடக்கும்போது மரக்காணம் எல்லை முடிகிறது. பேருந்து மண்டவாயைத் தாண்டும்போது மறுபடி அந்த எண்ணம் மனதைக் கவ்விப் பிடித்தது. சாலையோர பென்சில் மரங்களிலும் அவ்வப்போது தென்படும் சிறு தாமரைக்குளங்களிலும் கவனத்தைக் குவித்து இந்த அவஸ்தையினின்றும் விடுபடலாமென்றால் முடியவில்லை. இப்போது ராஜேஷ் அருகில் இருந்து அவனிடம் இதைச் சொன்னால் கன்னக் கதுப்புகள் அதிரச் சிரித்து " போடா முட்டாள்!" என்பான். "உனக்கு மனப்புழுக்கம் ஜாஸ்தி. சதா கண்டதையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறாய். உட்புழுங்கி உட்புழுங்கி மனம் நைந்து போய் விட்டது. எதையெடுத்தாலும் பதற்றம். ஜன்னலைத் திற. கொஞ்சம் காற்றாவது வெளிச்சமாவது உள்ளே வரட்டும். நன்றாக மூச்சை இழுத்து விடு. சோம்பல் முறித்துவிட்டு இப்படியே கொஞ்சதூரம் ஓடிவிட்டு வா. முடிந்தால் என்னை நினைத்தபடி ஒரு பீர் சாப்பிடு. பிறகு உலகமே ஒரு பூந்தோட்டமாகி அதில் நீயொரு பட்டாம்பூச்சியாகி விடுவாய்." அவனது பேச்சுகளில் "என்னை நினைத்தபடி ஒரு பீர் சாப்பிடு" என்பதை சாமர்த்தியாகப் புகுத்திவிடுவான் ராஜேஷ். "கவ்விப் பிடிக்கறா மாதிரி முதுக வலிக்குதுடா" என்று புகழேந்தி சொன்னால் "மெத்தையை விட்டு வெறுந்தரையில் தலைகாணி இல்லாமல் படு. சரியாகப்போகும். இல்லையானால் என்னை நினைத்து ஒரு பீர் சாப்பிடு" என்பான். அவன் அடிக்கடி பயன்படுத்தும் இந்த சொற்றொடர் அவன் பேச்சுக்கு ஒருவித அமானுஷ்யத் தன்மையையும் கவர்ச்சியையும் அளிப்பதாகத் தோன்றியது. இதை அவன் படித்த புத்தகங்கள் ஏதேனும் ஒன்றிலிருந்து பிடித்தானா, இல்லை அவனே உருவாக்கினானா தெரிய வில்லை. அவனை நினைத்தபடி சாப்பிடும் பீர் ஒரு சர்வரோக நிவாரணி அல்லது கவலை துக்கம் இவற்றை அகற்றிவிடும் ஓர் அற்புத மருந்து என்ற வகையிலேயே அவன் அந்த சொற்றொடரைப் பயன்படுத்தினான். ஆனால், எங்களை பீர் சாப்பிடச் சொல்லும் ராஜேஷ் ஒருபோதும் பீர் சாப்பிடமாட்டான். நான், குமரவேல், புகழேந்தி, தயாளன் எல்லோரும் சேர்ந்து பீர் சாப்பிடுவோம். ஆனால் ராஜேஷை நினைத்தபடி சாப்பிட்டது எத்தனை தடவையிருக்குமென்று தெரியவில்லை. நாங்கள் பீர் சாப்பிடும் போதெல்லாம் எங்கள் எதிரே எதையாவது கொறித்தபடி அவனும்தான் அமர்ந்திருப்பான். என்னை நினைத்தபடி சாப்பிடுகிறீர்களா என அவனும் கேட்டதில்லை. பஸ் அனுமந்தையில் நின்றபோது ஒரு வயதானவரும் அவர் மகள் போலத் தோன்றிய ஒரு பெண்ணும் இறங்கினார்கள். கொஞ்சமும் லஜ்ஜையின்றி பாய்ந்து சென்று தனக்கும் தன் புது மனைவிக்குமாக காலியான இருக்கைகளைப் பிடித்தான் ஒருவன். மீன் கூடையுடன் ஏற முயன்ற பெண்ணை ஏறக்கூடாதென்று தடுத்து விசிலை ஊதினார் கண்டக்டர். அந்தப் பெண்ணின் முகபாவத்தைப் பார்த்தால் பஸ் கிளம்பியபின் நிச்சயம் மோசமாகத் திட்டித் தீர்ப்பாள் என்று தோன்றியது. அடித்துப் பிடித்து இருக்கையைக் கைப்பற்றி அமர்ந்தவனும் அவன் புதுமனைவியும் நான் நின்றிருந்த இடத்திலிருந்து பார்வைக்கு நன்றாகத் தெரிந்தனர். பளிச்சென்ற ஆடையும் தங்க ஆபரணங்களும் அவர்கள் இருவரும் புதுமணத் தம்பதிகள் என்பதைப் பறைசாற்றின. சாலையின் இடதுபுறத்தில் சிறு கற்களை வைத்து எல்லை வரைந்து இடத்தை ஆக்ரமித்து தானியம் காய வைத்திருந்த பகுதிக்கும் எதிரே வந்த வேனுக்கும் நடுவே கிடைத்த குறுகிய இடைவெளியில் வேகமாக ஒடித்துத் திருப்பினார் டிரைவர். ஒரு கணம் நிலை குலைந்தாற் போலிருந்தாலும் சுதாரித்து சாமர்த்தியமாகச் செலுத்திவிட்டார். பயணிகளில் சிலர் ஒரு நொடி கலவரமடைந்து பிறகு சகஜ நிலையை அடைந்தனர். எனக்கு தாமஸின் ஞாபகம் வந்தது. இது போன்ற எதிர்பாராத தருணங்களில் அவன் அவனையுமறியாமலே "இயேசுவே ரட்சியும் என்றுவிடுவான். இதை நினைக்கையில் எனக்குச் சிரிப்பு வந்தது. அந்த புதுமணப்பெண் என்னை முறைப்பது போலப் பார்த்தாள். அவளைப் பார்த்து நான் சிரித்ததாக நினைத்திருப்பாளோ? நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். பேருந்திலிருந்த சிலர் எதுவுமே நடவாதது போல் பராக்கு பார்த்தவாறும் புத்தகம் படித்தவாறும் வந்தனர். நின்று கொண்டு வந்தவர்கள் மட்டும் பஸ் குலுங்கியதில் தங்கள் நிலைதடுமாறியவர்களாய் சிறிது பிரயாசையுடன் தங்கள் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். கவுண்ட்டரில் நிற்பவன் அலுமினியத் தகடு அடித்த பெரிய ரெப்ரிஜிரேட்டரின் மூடியைத் திறந்து குனிந்து உள்ளேயிருக்கும் பீர் பாட்டிலை எடுக்கிறான். பாட்டில் லேபிள் நனைந்து சொதசொதவென்றிருக்கிறது. கவுண்ட்டரில் வைத்து பாட்டிலைத் திறக்கையில் மெதுவே நுரை பொங்கி பாட்டிலின் கழுத்தைத் தாண்டி ஒரு சின்ன காலிபிளவர் போல வெளியே பிதுங்கி நிற்கிறது. கையில் பாட்டிலைப் பிடிக்கும்போதே அதன் குளிர்ச்சி கிளர்ச்சியூட்டுகிறது. குமரவேல் சொல்வான் " நல்ல பீர் சிறு கசப்புடன் கரகரவென்று தொண்டையை அறுத்த மாதிரி உள்ளே இறங்க வேண்டும்." பீர் சாப்பிடும் எண்ணம் வந்ததும் பிற எண்ணங்கள் கலையத் துவங்கின. காலாப்பட்டைத் தாண்டும் போது சாலையின் இடதுபுறமாக நுரைத்துப் பொங்கியபடி தோன்றிய கடலே ஒரு ராட்டச பீர் கோப்பை போலத்தான் தெரிந்தது. பாண்டிச்சேரி பஸ் ஸ்டாண்டுக்கு எதிரிலேயே பார். பாரை அடைந்த போது தாகம் கூடிவிட்டிருந்தது. பணத்தைக் கொடுத்து பீர் ஒன்றை வாங்கி கவுண்ட்டருக்கு அருகில் நின்றபடியே குடித்தேன். யதேச்சையாக அப்போது ராஜேஷின் நினைவு வந்தது சிரித்துக்கொண்டேன். விழுப்புரம் பேருந்து புறப்பட்டு நகரத்தைக் கடந்து வேகமெடுத்த போது மனம் ஒருவித மோனத்துள் அமிழ ஆரம்பித்தது. எந்தப் பதற்றமும் இல்லை. மனதைப் பிடுங்கிய எண்ணங்கள் காணாத தொலைவு சென்றுவிட்டிருந்தன. சுத்தமாகத் துடைத்துவிட்டது போன்று சலனமற்றிருந்து மனம். இது போன்ற ஒரு அமைதியை இதற்கு முன் உணர்ந்ததே இல்லை. மெல்ல சிந்தனைகள் ஆரோகணித்து வந்தன, ஆனாலும் அமைதி குலையவில்லை. "அமைதியின் சத்தத்தைக் கேட்டிருக்கிறாயா?" ஒரு முறை ராஜேஷ் கேட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மெதுவான வேகம், அழகான அசிங்கம் மாதிரி அமைதியின் சத்தம் என்பது எதாவது பாரடாக்ஸா? "பி.பி.சி.ரேடியோ, அமைதியின் சத்தத்தை வெளியிட்டிருக்கிறது. பி.பி.சி ரேடியோ நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் ஓசைகளுக்கு இடையே உள்ள அதாவது வார்த்தைகளுக்கு இடையே உள்ள மௌனத்தை மட்டும் கம்ப்யூட்டர் உதவியுடன் எடிட் செய்து இதுதான் அமைதியின் சத்தம் என்று வெளியிட்டிருக்கிறார்கள்." ராஜேஷ் சொல்லும் சில விஷயங்களை நம்பவும் முடியாது, நம்பாமல் இருக்கவும் முடியாது. இப்போது என்னால் அமைதியின் சத்தத்தை உணர முடிந்தது. பஸ்ஸின் அதிர்வுகளுக்கேற்ற ஒரு லயத்தில் மனம் புரண்டு கொண்டிருந்த போதும் அமைதி மாறாமலே இருந்தது. பீர் தந்த கிறக்கத்தில் கண்களை மூடிக்கொண்டேன். ஆழ்ந்த அமைதி பின்னணியில் எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓட ஆரம்பித்தன. தெளிவில்லாத நினைவோட்டங்கள். ஸ்தூலமற்ற மனச் சித்திரங்கள். எல்லாம் கலந்த என் எண்ணங்களின் கலைடாஸ்கோப்பை வேறு யாரோ குலுக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. பஸ் மாறாத ஒரு தாளகதியில் விரைந்து கொண்டிருந்தது. திடீரென கலைடாஸ்கோப் ஸ்திரமான ஒரு சித்திரத்தைக் காட்டியது. அச்சித்திரம் அப்படியே நிலையாக நின்றது. எப்படிக் குலுக்கினாலும் மறையவில்லை. மாறவுமில்லை. எல்லா தற்காலிகச் சித்திரங்களும் சேர்ந்து நிலைத்த அந்தச் சித்திரத்தை சிருஷ்டித்திருந்தன. அச்சித்திரம் என்னை நிலைகுலையச் செய்தது. திடுக்கிட்டு விழித்தேன். என் மனம் கொண்ட காட்சி நிஜம்தான் என்று உள்ளுக்குள் எதுவோ அடித்துச் சொன்னது. அசைவற்று அப்படியே இருந்தேன். என்ன சிந்திப்பதென்ற பிரக்ஞை கூட இல்லை. கண்டமங்கலம் லெவல் கிராஸிங்கில் பஸ் நின்ற போது சாலையோரக் கடை ஒன்றிலிருந்து ஏதோ பதார்த்தம் எண்ணெயில் வறுபடும் ரம்மியமான வாசனை எழுந்தது. ஒவ்வொரு வாசனையும் ஒவ்வொரு விதமான மன உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த வறுபடும் வாசனை எப்போதுமே எனக்குள் ஒரு புத்துணர்வைத் தருவது. இப்போது அந்த வாசனை எனக்குள் ஏனோ சஞ்சலத்தை உண்டாக்கியது. மெல்லப் பதற்றம் ஆரம்பித்தது. மனம் ஒரு வெற்று வெளியாகி அங்கு காற்று ஓலமிட ஆரம்பித்தது. ஊருக்குப் போகும் டவுன் பஸ்ஸ•க்காக விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோது, நீர்த்திரைக்குப் பின்னால் இயக்கங்கள் மசங்கலாகத் தோன்றின. காற்று வீச்சுக்கு ஏறியும் தாழ்ந்தும் வளைந்தும் நிமிர்ந்தும் பாலீதீன் பைகளென நகர்ந்தனர் மனிதர்கள். பீர் தந்த கிறக்கம் மெதுவாக விலகத் தொடங்கியது. பதற்றம் கூட ஆரம்பித்தது. டவுன் பஸ்ஸிருந்து நான் மட்டுமே இறங்கினேன். கிராமத்தின் இரவு எட்டரை மணி அமானுஷ்யத்தை பஸ் ஸ்டாண்டிலிருந்த சோடியம் வேப்பர் விளக்கு மிகைப்படுத்திக் காட்டிக்கொண்டிருந்தது. சாலையோரம் நின்று கொண்டிருந்த கூட்டத்திலிருந்து யாரோ என்னை நோக்கி வந்தார்கள். தயாளன் அவன் முகத்தில் பதற்றம். நான் என்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். "மூணு மணிக்கா உங்க வீட்டுக்குப் போலீஸ்காரங்க வந்திருந்தாங்க" தயாளன் சொன்னான். மனம் அதிர்ந்தது. ஆனால் பார்வையில் படாமல் எங்கோ ஒரு மூலையில் இருக்கம் லிவரை அழுத்தியதும் பெரிய இயந்திரம் ஓய்ந்து சகஜநிலைக்கு வருவது போல உடனே அது சமநிலையும் அடைந்தது. உடல் வியர்த்துக் குளிர்ந்துவிட்டிருந்தது. வியர்வை படிந்த என் உள்ளங்கையால் தயாளனின் மணிக்கட்டை அழுந்தப் பற்றினேன். "ஏன்?" என்று நான் கேட்கப்போகும் கேள்விக்கு அவன் சொல்லவிருக்கும் பதிலைத் தாங்கிக் கொள்ள என்னையே தயார்படுத்திக் கொள்ளும் விதமாக எனக்குச் சில வினாடிகள் அவகாசம் தேவைப்பட்டது. |
ஒரு தடவை முல்லா வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்தார் வியாபார அலுவல்கள் முடிந்து பிறகு அன்று இரவுப் பொழுதைக் கழிப்பதற்காக ஒரு
விடுதியில் தங்கினார். மிகவும் சாதாரணமாக உடையணிந்திருந்த முல்லாவை விடுதி
வேலைக்காரர்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை. சரியானபடி உபசரிக்கவில்லை. இரவு திடீரென அவருக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. வேலைக்காரர்களைக் கூப்பிட்டு தமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார்.
வேலைக்காரர்களோ அவரைக் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை. கும்பலாக அமர்ந்து கதை
பேசிக் கொண்டிருந்தனர். முல்லாவுக்கோ நாவறட்சி அதிகமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.
அவருக்கு யோசனையொன்று தோன்றியது. திடீரென அவர் " நெருப்பு! - நெருப்பு! நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது" எனக்
கூக்குரல்
போட்டார். வேலைக்காரர்கள் பதறியடித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக்
கொண்டு
ஒடி வந்தார்கள். முல்லாவைப் பார்த்து " எங்கே தீப்பற்றிக் கொண்டது?" என்று பரபரப்புடன் கேட்டார்கள்.
முல்லா சாதானமாக ஒரு குவளையை எடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த குடம்
ஒன்றிலிருந்து நீரை எடுத்து வயிறாரக் குடித்தார். அவர் தாகம் அடங்கியது. " நெருப்பு பற்றிக் கொண்டதாகச் சொன்னீரே எங்கே?" என்று வேலைக்காரர்கள் கேட்டார்கள்.
நெருப்பு என் வயிற்றில்தான் பற்றிக் கொண்டு எரிந்தது. இப்போது தண்ணீர் விட்டு
அணைத்து விட்டேன் என்று கூறிவிட்டுச் சிரித்தார் முல்லா. |
ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண
விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு
அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன்
திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது.
உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று
வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும்
ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று
எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான்
செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக்
கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை
எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன்
அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன் சொல்லாமலேயே நின்று
விட்டானே சரியான தோல்விதான் அவனுக்கு என மகிழ்ந்தார். ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன்
ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச்
சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ
செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்று தன் குதிரையை
நிறுத்தினார்." பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" " நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்." இதை அவர் மிகவும் சிரமப் பட்டுக்
கூறினார். " ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! அத்துடன் இது காய்த்துப்
பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? " என்று சிரித்தார். " அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால்
தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது
மாம்பழங்கள்? எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன்" "ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி." உடனே மந்திரியார் ஒரு பொன்
முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். " அரசே!
அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரம் பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து
விட்டதே!" பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. "ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே!" என்றபடியே
மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட
பெரியவர், "அரசே! இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான்.
ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது.
என்னே அல்லாவின் கருணை?" என்றார். "நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! " என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன்
முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து "மந்திரியாரே! சீக்கிரம்
இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே
காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர்." என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப்
புறப்பட்டார் பாபர். " சற்று நிற்க முடியுமா அரசே?" என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்து
விட்டுத தெனாலி ராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று
பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா? தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். "அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண
தேவ ராயர் தங்களிடம் நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார்.
இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர்
திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்." "தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என்
வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம்
செல்லலாம்." என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்.. வெற்ற்யுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர்
நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும்
கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப்
புகழ்ந்தனர்.
|
பரமார்த்தர் எங்கோ வெளியே சென்றிருந்தார். சீடர்கள் மட்டும் திண்ணையில் இருந்தனர். அப்போது புளூகன் ஒருவன் அங்கே வந்தான். திண்ணையில் படுத்தபடி, "அப்பாடா! இப்போதுதான் சொர்க்கத்தில் இருப்பது மாதிரி இருக்கிறது!" என்று கூறினான். அதைக் கேட்ட மட்டிக்கு வியப்பாக இருந்தது. "அப்படியானால் நீங்கள் சொர்க்கம் போய் இருக்கிறீர்களா?" என்று கேட்டான். "நேராக அங்கே இருந்துதான் வருகிறேன்!" என்றான் புளுகன். "அடேயப்பா! எங்களால் சந்திரலோகமே போக முடியவில்லை. நீங்கள் எப்படிச் சொர்க்க லோகம் போய் வந்தீர்கள்?" எனக் கேட்டான், மடையன். "சொர்க்கத்தில் யார் யார் இருக்கிறார்கள்?" என்று விசாரித்தான் முட்டாள். "உங்கள் குருவுக்குக் குருவான சோற்று மூட்டை அங்கே தான் இருக்கிறார்" என்றான் புளுகன். "அப்படியா? அவர் நலமாக இருக்கிறாரா?" என்று கேட்டான் மண்டு. "ஊகும்! பேர் தான் சோற்று மூட்டையே தவிர சோற்றுக்கே தாளம் போடுகிறார்! கந்தல் துணிகளைக் கட்டிக் கொண்டு, பைத்தியம் மாதிரி திரிகிறார்! பார்ப்பதற்குப் பாவமாக இருக்கிறது!" என்றான் புளுகன். "பூலோகத்தில் இருந்த போது சுகமாக இருந்திருப்பார்..... அங்கே போய் இப்படிக் கஷ்டப்படுகிறாரே!.. என்று துக்கப்பட்டான் மூடன். "ஐயா நீங்கள் மறுபடி சொர்க்கத்துக்குப் போவீர்களா?" என்று மட்டி கேட்டதும், "ஓ நாளைக்கே போனாலும் போவேன்!" என்றான் புளுகன். "அப்படியானால், எங்களிடம் இருக்கிற புதுத் துணிகளை எல்லாம் தருகிறோம். கொஞ்சம் பணமும், சுருட்டும் கொடுக்கிறோம். எல்லாவற்றையும் கொண்டு போய், எங்கள் குருவுக்குக் குருவிடம் தந்து விடுங்கள்." "புளுகனோ மகிழ்ச்சியோடு "சரி" என்று சம்மதித்தான். உடனþ ஐந்து சீடர்களும் போட்டி போட்டுக் கொண்டு, மடத்தில் இருந்த துணிமணிகள், சுருட்டு, பணம் பூராவையும் எடுத்து வந்தனர். "போகும் வழியில் சாப்பிடுங்கள்" என்று புளி சாதம் தந்தான் மட்டி. எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்ட புளுகன், சொர்க்கம் போவதாகக் கூறி விட்டு, ஓட்டம் பிடித்தான். வெளியே சென்றிருந்த பரமார்த்தர் திரும்பி வந்தார். "குருவே! நீங்கள் இல்லாத சமயத்தில் கூட, நாங்கள் புத்திசாலித்தனமான செயல் செய்துள்ளோம்" என்று பெருமையோடு சொன்னான் மண்டு. உங்கள் "குருநாதரான சோற்று மூட்டை சுவாமிக்கு இனி கவலையே இல்லை!" என்றான் மூடன். "சொர்க்கத்தில் இருந்து ஆள் அனுப்பி இருந்தார். அவரிடம் உங்கள் குருவுக்குத் தேவையானதை எல்லாம் கொடுத்து அனுப்பினோம்!" என்று முட்டாள் சொன்னான். பரமார்த்த குருக்கோ ஒன்றும் விளங்கவில்லை. தாங்கள் செய்த காரியத்தை சீடர்கள் விளக்கியதும், "அடப்பாவிகளா! ஏன் இப்படிச் செய்தீர்கள்?" எனக் குதித்தார். "நாங்கள் நல்லது தானே செய்தோம்?" உங்கள் குருநாதர் பசியால் வாடலாமா?" என்று மட்டி கேட்டான். "முட்டாள்களே! எனக்குக் குருநாதரே யாரும் கிடையாது! இது தெரியாதா உங்களுக்கு? எவனோ உங்களை நன்றாக ஏமாற்றி விட்டுப் போய் விட்டானே!" என்று பரமார்த்தர் சொன்னதும், சீடர்கள் எல்லோரும் 'திரு திரு' என்று விழித்தார்கள். "சீடர்களே! நீங்கள் ஏமாந்ததும் ஒரு வகையில் நல்லது தானே! அதே திட்டத்தைப் பயன்படுத்தி, நம் ஊர் அரசனை நாம் ஏமாற்றி விடலாம்!" என்றார் பரமார்த்தர். அப்போதே குருவும், சீடர்களும் அரண்மனைக்குப் போனார்கள். "மன்னா! நாங்கள் நேற்று ராத்திரி சொர்க்கம் போய் வந்தோம். அங்கே எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் உங்கள் தாத்தா மட்டும் பிச்சை எடுத்துத் திரிகிறார்!" என்று புளுகினார். "ஆமாம் அரசே! ராஜ குடும்பத்தில் பிறந்தவர் இப்படிப் பிச்சை எடுக்கலாமா?" என்று மட்டி கேட்டான். மடையனோ, "அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது!" என்றான். "நாங்கள் மறுபடியும் நாளைக்குச் சொர்க்கலோகமம் போகப் போகிறோம். ஏராளமாகப் பணமும் துணியும் உங்களிடம் இருந்து வாங்கி வரச் சொன்னார்!" என்று புளுகினான் முட்டாள். "அப்படியே உயர்ந்த இனக் குதிரையாக இரண்டு வாங்கி வரச் சொன்னார்" என்று தள்ளி விட்டான், மண்டு. "எல்லாவற்றையும் எங்களிடம் தந்து விடுங்கள். நாங்கள் பத்திரமாகக் கொண்டு போய்க் கொடுத்து விடுகிறோம்!" என்றார் பரமார்த்தர். அரசனுக்கோ, கோபம் கோபமாக வந்தது. "யாரங்கே! இந்த ஆறு முட்டாள்களையும், ஆறு நாளைக்குச் சிறையில் தள்ளுங்கள்!" என்று கட்டளை இட்டான். "அரசே! நாங்கள் என்ன தவறு செய்தோம்? செத்துப்போன உங்கள் தாத்தாதான் எங்களை அனுப்பினார்!" என்று ஏமாற்ற நினைத்தார், பரமார்த்த குரு. அரசனோ, "யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இன்னும் என் தாத்தா சாகவே இல்லையே! இதோ உயிரோடு தான் இருக்கிறார்!" என்று சொன்னபடி பக்கத்தில் அமர்ந்திருந்த தாத்தாவைக் காட்டினான். "ஐயையோ! அரசரின் தாத்தா செத்து விட்டாரே இல்லையா என்று தெரிந்து கொள்ளாமலேயே இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே!" என்று குருவும் சீடர்களும் அழுதனர்.
|
ஒரு சமயம் பரமார்த்த குருவும் – சீடர்கள் ஐவரும் வெளியூர் செல்லத் திட்டமிட்டனர். ஆனால் குருவிற்கு வயதாகி விட்டதால் அவரால் நடப்பதற்குச் சிரமமாக இருக்கும் என்று எண்ணிய சீடர்கள் அவர் பயணம் செய்வதற்கு மட்டும் ஒரு பொதியை காளை மாட்டை வாடகைக்கு அமர்த்தினர். மாட்டுக்காரன் கேட்ட தினக் கூலியாக மாட்டு வாடகை ஐந்து காசுகள் தருவதாக ஒப்புக் கொண்டு அதன்படி பரமார்த்த குருவை மாட்டின் மேல் அமர வைத்து சீடர்கள் பயணத்தைத் பரமார்த்த குருகதைதொடர்ந்தனர். அப்போது கோடைக் காலமாதலால் வெயில் வெகு கடுமையாக இருந்தது. அவர்களின் பயணத்தின் போது வழியில் ஒரு மணற்பரப்பான மரங்கள் எதுவும் இல்லாத வெட்ட வெளியைக் கடக்க வேண்டியிருந்தது. வெட்ட வெளியாக இருந்தமையால் வெயிலும் தாங்க முடியாத வெப்பமாக இருந்தது. வெப்பத்தின் கடுமையை தாங்க முடியாத பரமார்த்த குருவுக்கு நாக்கு வரண்டு தாகம் அதிகமாகி கண்கள் பஞ்சடைந்து மயக்கமடைந்து கீழே விழுகின்ற நிலையை அடைந்தார். அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சீடர்கள், குருவை கீழே விழாதவாறு தாங்கிப் பிடித்து கீழே மணல் சுடாதபடி துணிகளை பரப்பி மாட்டின் நிழலிலேயே படுக்க வைத்தனர். குருவின் மயக்கத்தை தெளிவிக்க சிறிது தண்ணீரை முகத்தில் தெளித்து, தண்ணீரைக் குடிக்கச் செய்தனர். சிறிது நேரத்தில் குருவுக்கு மயக்கம் தெளிந்ததும் பழையபடி மாட்டின் மேல் உட்கார வைத்துப் பயணத்தை தொடர்ந்தனர். வெட்டவெளியைக் கடந்ததும் ஒரு இடத்தில் தங்கி உணவருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அதன் பின்னர் பயணத்தை மேற்கொண்டு ஓர் ஊரை சென்றடைந்தனர். அவர்கள் அவ்வூரை சென்றடைய இரவு நேரம் ஆகிவிட்டமையால், அவ்வூரிலேயே தங்கி மறுநாள் காலை பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தனர். இதனை அறிந்த அவ்வூர் மக்கள், பண்ணையாரிடம் பரமார்த்த குருவும் – சீடர்களும் வந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். பண்ணையார், தங்கியுள்ள அவர்களுக்கு சாப்பாடும், தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்து கொடுத்தார். சாப்பாடு முடிந்த பின்பு – சீடர்கள், மாட்டின் சொந்தக் காரனுக்கு அன்றைய மாட்டு வாடகையாக ஐந்து காசுகளைக் கொடுத்தனர். மாட்டுக்காரன் அவர்கள் கொடுத்த ஐந்து காசுகளை வாங்க மறுத்தான். மாட்டின் மேல் சவாரி செய்வதற்காக ஐந்து காசுகளும், மாட்டின் நிழலின் குரு ஓய்வெடுத்தற்காக மூன்று காசுகளும் சேர்த்து எட்டு காசுகள் வாடகையாகத் தந்தால் தான் வாங்குவேன் என்றான் மாட்டுக்குச் சொந்தகாரன். இது என்ன அநியாயமாக இருக்கிறதே, மாட்டைத் தான் வாடகைக்கு எடுத்தோம். அதெப்படி மாட்டின் நிழலுக்கு வாடகைக் கொடுக்க முடியும். ஆதலின் மாட்டின் வாடகையை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர். இவர்களுடைய காரசார விவாதத்திறிகுப் பிறகு இந்த விஷயம் அந்த ஊர் பண்ணையாரிடம் சென்றது. பண்ணையார் மாட்டுகாரனை அழைத்து, ஐயா, தாங்கள் பேசியபடியே ஒருநாள் வாடகை ஐந்து காசுகள் அதன்படி பெற்றுக் கொள்வதுத தான் நியாயம் என்றார். அதற்கு மாட்டுக்காரன். ஐயா நான் ஐந்து காசு பேசியது மாட்டின் மேல் சவாரி செய்வதற்கு மாட்டும்தான். ஆனால் மாட்டின் நிழலில் தங்குவதற்காக அல்ல. ஆகையால், மாட்டின் வாடகை ஐந்து காசுகளும், நிழலுக்காக மூன்று காசுகளும் சேர்த்து எட்டு காசுகள் தரவேண்டும் என்று மீண்டும் பிடிவாதம் செய்தான். இது மிகவும் அநியாயமாக இருக்கிறது? என்றார் பண்ணையார். இது ஒன்றும் அநியாயம் இல்லை. நியாயமாகத் தான் கேட்கிறேன் என்றான் மாட்டுக்காரன். இதனால் ஊர் மக்கள் எல்லோரும் கூடிவிட்டனர். தீர்வே இல்லாமல் இந்தப் பிரச்சனை நீண்டு செல்வதால், மாட்டுக்காரனையும், குருவையும் சீடர்களையும் நோக்கி, நான் ஒரு தீர்ப்பு சொல்கிறேன். அதற்கு நீங்கள் எல்லாம் கட்டுப்படுவீர்களா? என்றார் பண்ணையார். அதற்கு மாட்டுக்காரனும், குருவும், சீடர்களும் கட்டுப்படுவதாக ஒட்டு மொத்தமாக கூறினார்கள். இதற்கு இதுதான் மிகச் சிறந்த தீர்ப்பாகும் என்று மனதில் நினைத்து கொண்டு பண்ணையார் மாட்டின் சொந்தக்காரனை தன் அருகில் அழைத்து, மாட்டின் மீது குரு ஏறி வந்தற்காக வாடகை ஐந்து காசுகளும், மாட்டின் நிழலின் தங்கியதற்காக மூன்று காசுகளின் நிழலையும் பெற்றுக்கொள் என்றார். மாட்டுக்காரன் ஒன்றும் புரியாமல் விழித்தான் எவ்வளவு யோசனை செய்தும் இதன் முடிவு தெரியவில்லை. இப்போது இரவு நேரம். காலையில் தான் நிழலுக்கான பணத்தைப் பார்க்க முடியும் என்று கூறி மறுநாள் காலை சூரியன் உதயமானதும் மாட்டுக்காரனை அருகில் அழைத்து மாட்டின் நிழலுக்கான மூன்று காசுகளை வெயிலில் பிடித்தார் |
ஓர் ஊரில் கிழவன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு பூனையை அவர்கள் அன்பாக வளர்த்து வந்தார்கள். முதுமையான அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். மகன் குழந்தையாக இருக்கும் போதே அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். அந்தக் குழந்தையை பூனை வளர்க்கத் தொடங்கியது. எங்கிருந்தோ பறவையின் மெல்லிய இறகுகளைக் கொண்டு வந்தது. அதில் மெத்தை செய்தது. குழந்தையை அந்த மெத்தையில் படுக்க வைத்தது. குழந்தையை வேளை தவறாமல் உணவு தந்தது. எப்பொழுதும் மெத்தையிலேயே அந்தக் குழந்தை இருந்ததால் அவனை இறகு இளவரசன் என்று அழைத்தது. ஆண்டுகள் ஓடின, குழந்தையும் வளர்ந்து பெரியவன் ஆனான். கட்டழகு வாய்ந்த அவனைக் கண்டு பூனை மகிழ்ந்தது. இறகு இளவரசனே! உனக்குத் திருமணம் செய்ய எண்ணியுள்ளேன், என்றது அது. எனக்கு யாரைப் பெண் கேட்பாய்? என்று கேட்டான் அவன். இந்த நாட்டு அரசனிடம் செல்வேன். இளவரசியை உனக்காகப் பெண் கேட்பேன். ஏழையாகிய எனக்கு இளவரசி மனைவியா? நடக்கக் கூடிய செயலா இது? கனவு காண்கிறாயா? உனக்கு ஏற்றவள் இளவரசிதான். நான் முடிவு செய்து விட்டேன். எப்படியும் இந்தத் திருமணத்தை முடிப்பேன். பொறுத்திருந்து பார். உனக்குப் பெண் கேட்டு நாளையே நான் அரசனிடம் செல்கிறேன், என்றது பூனை. மறுநாள் விடிகாலையில் எழுந்தது. அரசனைக் காண்பதற்காகப் புறப்பட்டது. காட்டு வழியே சென்று கொண்டிருந்த அதன் எதிரில் ஒரு முயல் வந்தது. முயலைப் பார்த்துப் பயந்து போன பூனை ஓட்டம் பிடித்தது. பூனையைப் பார்த்துப் பயந்து முயலும் ஓட்டம் பிடித்தது. பக்கத்தில் இருந்த குன்றைச் சுற்றி வந்த இரண்டும் சந்தித்தன. பூனையே! எங்கே போகிறாய்? என்று கேட்டது முயல். நான் அரசனிடம் செல்கிறேன். ஊரில் யாரும் என்னை நிம்மதியாக வாழ விடமாட்டேன் என்கிறார்கள். என்னை எப்பொழுதும் துரத்துகிறார்கள். நான் பயந்து கொண்டே வாழ்கிறேன். இவர்கள் செயல் குறித்து அரசனிடம் குறை சொல்லப் போகிறேன். நீதி தவறாத அரசன் எனக்கு நல்லது செய்வான், என்று இனிமையாகச் சொன்னது பூனை. கண்களில் கண்ணீர் வழிய, பூனையே! உன் நிலை பரவாயில்லை. அரசனின் வீரர்கள் வேட்டை நாய்களுடன் இங்கே வருகிறார்கள். எங்களை விரட்டுகிறார்கள். பொறி வைத்துப் பிடிக்கிறார்கள். சிறிது நேரம் கூட நாங்கள் நிம்மதியாகத் தங்க இங்கே இடம் இல்லை. நானும் உன்னுடன் வருகிறேன். அரசனிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லி எங்களைக் காப்பாற்றும்படி வேண்டுகிறேன், என்றது முயல். நீ அரசனிடம் செல். ஆனால் உன் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏன்? எங்கள் ஊரில் நான் ஒரே ஒரு பூனைதான் இருக்கிறேன். நான் சொல்வதை அரசர் கேட்டு உதவி செய்வார். ஆனால் உன்னைப் பார்த்ததும் அவர், காட்டில் நூற்றுக்கணக்கான முயல்கள் உள்ளன. நீ மட்டும் தான் குறை சொல்ல வந்திருக்கிறாய், என்பார். குறைந்தது ஐம்பது முயல்களுடன் நீ அரசனிடம் சென்றால் அவர் கண்டிப்பாக உதவி செய்வார். பூனையே! இங்கேயே நில். நான் ஐம்பது முயல்களுடன் வருகிறேன், என்று அருகில் இருந்த புதருக்குள் மறைந்தது முயல். சிறிது நேரத்தில் ஐம்பது முயல்களுடன் வந்தது அது. பூனை முன்னால் சென்றது. எல்லா முயல்களும் அதைப் பின் தொடர்ந்தன. விந்தையான இந்த ஊர்வலம் பல ஊர்கள் வழியாகச் சென்றது. இதைப் பார்த்த மக்கள், பூனை தலைமை தாங்கி ஐம்பது முயல்களை அழைத்துச் செல்கிறதே, என்று வியப்புடன் பேசிக் கொண்டார்கள். கடைசியாக அந்த ஊர்வலம் அரசனின் அரண்மனையை அடைந்தது. அங்கு காவலுக்கு இருந்த வீரனைப் பார்த்து, நாங்கள் அரசனைப் பார்க்க வேண்டும், என்றது பூனை. அரண்மனை வாயிலில் எல்லோரும் தங்க வைக்கப்பட்டனர். பூனையை மட்டும் அரசனிடம் அழைத்துச் சென்றான் ஒரு வீரன். அரசனைப் பணிவாக வணங்கிய பூனை, இறகு இளவரசன் ஐம்பது முயல்களை உங்களுக்குப் பரிசாக அனுப்பி உள்ளார். இளவரசியாரை மணந்து கொள்ள அவர் விரும்புகிறார். இளவரசியாருக்கு அவரை விடப் பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது, என்றது. வாயிலுக்கு வந்த அரசன் ஐம்பது முயல்களையும் பார்த்து வியப்பு அடைந்தான். இறகு இளவரசன் மிகவும் திறமையான வேட்டைக் காரனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐம்பது முயல்களை எப்படிப் பிடிக்க முடியும் என்று நினைத்தான். என் வீரர்களும் முயல் வேட்டைக்குச் செல்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று முயல்களுக்கு மேல் அவர்கள் பிடித்து வருவது இல்லை. உங்கள் இளவரசன் ஐம்பது முயல்களை அதுவும் உயிருடன் பிடித்து இருக்கிறான், என்றான் அவன். அரசே! இந்த முயல்களை எல்லாம் ஒரு அறைக்குள் வைத்துப் பூட்ட வேண்டும். அவற்றைக் காவல் காக்கின்றவர் யாரும் இல்லை, என்றது பூனை. சமையல்காரனை அழைத்த அரசன், இனி நம் அரண்மனையில் நல்ல விருந்துதான். ஐம்பது முயல்களையும் அடைத்து வைக்க ஒரு அறையைத் திறந்து விடு, என்று கட்டளை இட்டான். முயல்களிடம் வந்தது பூனை. நாம் அனைவரும் தங்குவதற்கு அரசர் ஒரு அறையைத் தந்து உள்ளார். நமக்கு நல்ல சாப்பாடு அங்கே உள்ளது. அரசர் பிறகு வந்து நம் குறையைக் கேட்டு உதவி செய்வார், என்றது. சமையல்காரன் ஓர் அறையைத் திறந்து விட்டான். எல்லா முயல்களும் உள்ளே நுழைந்தன. உடனே அவன் கதவைத் தாழிட்டுப் பூட்டுப் போட்டான். வெளியே காவலுக்கு வீரர்கள் நின்றனர். பூனை தங்களை ஏமாற்றி விட்டதை முயல்கள் உணர்ந்தன. பாவம் அவை என்ன செய்யும்? தங்களுக்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி அவை அழுதன. பூனைக்கு அரசன் சிறந்த விருந்து அளித்தான். இறகு இளவரசனைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியது அது. இளவரசரை வந்து என்னைச் சந்திக்கச் சொல், என்றான் அரசன். அரசே! எங்கள் இளவரசர் தங்களைச் சந்திக்கக் கட்டாயம் வருவார். ஆனால் அவருக்கு இப்பொழுது ஏராளமான வேலைகள் உள்ளன, என்றது பூனை. விருந்து முடிந்தது. அரசன் நிறைய பரிசுகளைப் பூனைக்குத் தந்தான். அரசனிடம் விடை பெற்ற பூனை மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்கு வந்தது. இளைஞனே! உனக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன், என்றது அது. யாருடன்? என்று மீண்டும் கேட்டான் அவன். இளவரசிதான் மணமகள், என்றது அது. ஒரு வாரம் சென்றது. மீண்டும் அது அரசனைக் காணக் காட்டு வழியே சென்றது. எதிரில் வந்த நரியை நேருக்கு நேர் பார்த்தது அது. இரண்டும் எதிர் எதிர் திசையில் ஓடின. மலைக்குப் பின்னால் இரண்டும் மீண்டும் சந்தித்தன. பூனையே! எங்கே செல்கிறாய்? அரசனிடம் என் நிலையை எடுத்துச் சொல்ல? உனக்கு என்ன குறை? ஊரில் எல்லோரும் என்னை அடித்து விரட்டுகிறார்கள். சரியாக சாப்பாடு போடுவது இல்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. நீதி கேட்டு அரசரிடம் செல்கிறேன். நரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இப்பொழுது, என்னால் இந்தக் காட்டில் இருக்கவே முடியவில்லை. வேட்டைக்காரர்கள் நாய்களுடன் வந்து எங்களை விரட்டுகிறார்கள். குழிக்குள் மறைந்தாலும் புகை போட்டு எங்களை வெளியே வரவழைக்கிறார்கள். அவர்களுடைய அம்புகளால் நாங்கள் பலர் சாகிறோம். உன்னுடன் நானும் வந்து அரசரிடம் நீதி கேட்கிறேன். என்னையும் அழைத்துச் செல், என்றது. நரியாரே! நீர் தனியாக வருவது நல்லது அல்ல. எங்கள் ஊரில் நான் ஒருவன்தான் பூனை. அதனால் நான் சொல்வதை அரசர் கேட்பார். நீர் மட்டும் தனியே வந்து குறை சொன்னால் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். காட்டில் ஏராளமான நரிகள் உள்ளனவே. ஏன் அவை வந்து குறை சொல்லவில்லை! என்று கேட்பார். ஐம்பது நரிகள் ஒன்றாக வந்தால் அரசர் நீங்கள் சொல்வதை நம்புவார், என்றது. சிறிது நேரம் காத்திரு, என்ற நரி அங்கும் இங்கும் ஓடியது. ஐம்பது நரிகளுடன் அங்கு வந்தது. அரண்மனைக்குச் சென்றதும் யார் எப்படிப் பேச வேண்டும் என்று அவற்றிடம் விளக்கிச் சொன்னது பூனை. நீ சொல்வது போலவே நாங்கள் நடந்து கொள்வோம், என்றது நரிகள். பூனை முன்னால் சென்றது. எல்லா நரிகளும் அதைப் பின் தொடர்ந்தன. அவற்றின் ஊர்வலம் பல ஊர்கள் வழியாகச் சென்றது. இதைப் பார்த்த மக்கள், என்ன வேடிக்கையாக இருக்கிறது. போன வாரம் தான் இந்த பூனை ஐம்பது முயல்களுடன் ஊர்வலம் போனது. இப்பொழுது ஐம்பது நரிகளுடன் ஊர்வலம் போகிறது, என்று பேசிக் கொண்டார்கள். ஊர்வலம் அரண்மனையை அடைந்தது. காவலுக்கு இருந்த வீரர்கள் பூனையை அரசனிடம் அழைத்துச் சென்றார்கள். பணிவாக வணங்கிய பூனை, அரசர் பெருமானே! இறகு இளவரசர் தங்களுக்கு அன்பளிப்பாக ஐம்பது நரிகளை அனுப்பி வைத்துள்ளார். இளவரசியாரை மணக்க விரும்புகிறார், என்றது. வேலைக்காரர்களை அழைதூத அரசன், நரிகளை ஒரு அறையில் அடைத்து வையுங்கள். எவையும் தப்பிச் செல்லக் கூடாது. பூனைக்கு நல்ல விருந்து தர வேண்டும். அதற்கும் ஏற்பாடு செய்யுங்கள், என்று கட்டளை இட்டான். நரிகளை அரண்மனைக்குள் அழைத்து வந்தது பூனை. அங்கே ஒரு அறையில் முயல்களைக் கொன்று தோல் உரித்துக் கொண்டிருந்தார்கள் வேலைக்காரர்கள். முயல்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தன. பெருங் கூச்சலையும் அலறலையும் கேட்ட நரிகள், அங்கே என்ன சத்தம்?, என்று பூனையைக் கேட்டன. ஏழு நாட்களுக்கு முன் இங்கே சில முயல்கள் வந்தன. தங்கள் குறையை அரசரிடம் தெரிவித்தன. கவனமாகக் கேட்ட அவர் அவற்றிற்கு நீதி வழங்கினார். அது மட்டும் அல்ல. பெரிய விருந்திற்கும் ஏற்பாடு செய்தார். விருந்தில் முயல்கள் ஏராளமான மதுரைக் குடித்தன. மகிழ்ச்சியால் தலையே வெடித்து விடுவது போல அவை கூச்சல் போடுகின்றன. அந்த சத்தம் தான் இது, என்றது பூனை. முயல்கள் இருக்கும் அறையில் எங்களைத் தங்க வைக்க வேண்டாம். அவை எப்பொழுதும் குடித்து விட்டுச் சண்டை போடும் இயல்புடையவை. எங்களையும் கெடுத்து விடும். வேறு அறையில் தங்க வையுங்கள், என்றன நரிகள். வேலைக்காரன் பக்கத்து அறையைத் திறந்து விட்டான். எல்லா நரிகளும் உள்ளே நுழைந்தன. உடனே அவன் கதவைத் தாழிட்டுப் பூட்டு போட்டான். தாங்கள் தவறை நரிகள் உணர்ந்தன. தங்களுக்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி வருந்தின. விருந்திற்கு வந்த பூனையை அரசன் வரவேற்றார். விதவிதமான உணவு வகைகள் மேசையில் பரிமாறப்பட்டு இருந்தன. உங்கள் இறகு இளவரசன் மிகச் சிறந்த வேட்டைக்காரனாக இருக்க வேண்டும். ஆற்றல் வாய்ந்தவனாகவும் திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐம்பது நரிகளை உயிருடன் பிடிக்க முடியுமா? என்னுடைய வேட்டைக்காரர்களும் நரி வேட்டைக்குச் செல்கிறார்கள் பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்புகிறார்கள். சில சமயம் ஒன்று அல்லது இரண்டு நரியைக் கொன்று எடுத்து வருவார்கள். அதன் மேல் தோல் எதற்கும் பயன்படாத வண்ணம் கிழிந்து வீணாகி இருக்கும், என்றான் அரசன். அரசே! எங்கள் இளவரசர் வீரம் உள்ளவர். வலிமை வாய்ந்தவர். இந்த உலகத்திலேயே அவரைப் போன்ற வீரம் யாரும் இல்லை. என்று புகழ்ந்தது பூனை. அவர் எங்கள் அரண்மனைக்கு வந்தால் இந்த அரண்மனையே பெருமை பெறும். இளவரசிக்கு அவர் பொருத்தமானவர். நான் அவரைச் சந்தித்தால் திருமணம் பற்றிப் பேசலாம், என்றான் அரசன். கண்டிப்பாக அவரை அழைத்து வருகிறேன். மேன்மை தங்கிய தங்களைச் சந்திப்பதில் அவருக்கு மகிழ்ச்சி, என்றது பூனை. விலை உயர்ந்த ஏராளமான பரிசுப் பொருள்களைப் பூனைக்கு வழங்கினார் அரசர். வீட்டிற்கு வந்தது அது. தூங்கிக் கொண்டிருந்த இளைஞனை எழுப்பியது. உனக்கும் இளவரசிக்கும் திருமணம் உறுதியாகி விட்டது. நான் சொல்கிறபடி நட, என்றது அது. மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். பூனை வழிகாட்டிக் கொண்டே நடந்தது. இருவரும் நெடுந்தூரம் நடந்தார்கள். வழியில் பாலம் ஒன்று வந்தது. பாலத்திற்கு அடியில் நீ ஒளிந்து கொள். நான் சிறிது நேரத்தில் வருகிறேன், என்றது பூனை. அவனும் ஒளிந்து கொண்டான். ஊருக்குள் சென்ற பூனை கவசங்கள், தொப்பிகள் பலவற்றை வாங்கியது. எல்லாவற்றையும் ஆற்றில் போட்டது. இறகு இளவரசனே! இங்கேயே இரு. நான் அரசனுடன் இங்கே வருகிறேன். எங்களைப் பார்த்த உடன் வெளியே வந்து விடாதே. நான் நல்ல ஆடைகளை உன்னிடம் தருகிறேன். அதன் பிறகு வெளியே வரலாம், என்று சொன்னது. அப்படியே செய்கிறேன், என்றான் அவன். அரண்மனைக்கு வேகமாக ஓடியது பூனை. அதைப் பார்த்து அரசன், இப்பொழுதும் இறகு இளவரசன் வரவில்லையா? என்று ஆர்வத்துடன் கேட்டான். அரசே! இளவரசர் தங்களைக் காணப் பெரும் படையுடன் வந்தார். வழியில் ஆற்றைக் கடக்கும்போது எல்லா வீரர்களும் மூழ்கி விட்டனர். அவர்களின் தலைக் கவசங்களும் தொப்பிகளும் மிதக்கின்றன. நான் எப்படியோ இளவரசரைக் காப்பாற்றி விட்டேன். அவர் கொண்டு வந்த விலை உயர்ந்த பொருள்கள் எல்லாம் ஆற்றில் போய் விட்டன. உடைகள் ஏதுமின்றிப் பாலத்தின் கீழ் இருக்கிறார். இப்படி ஒரு கொடுமை நிகழுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை, என்று பரபரப்புடன் சொன்னது அது. இளவரசருக்கு இப்படி ஒரு கொடுமை என் நாட்டிலா நடந்திருக்க வேண்டும்? விலை உயர்ந்த ஆடைகளை இப்பொழுதே கொண்டு செல்லுங்கள். வீரர்கள் அவருக்குத் துணையாக அணிவகுத்து வரட்டும். நானும் பூனையுடன் வருகிறேன், என்றான் அரசன். வீரர்கள் சூழ அரசனும் பூனையும் அந்தப் பாலத்தை அடைந்தார்கள். ஆற்றில் நிறைய கவசங்களும் தொப்பிகளும் மிதந்து செல்வதைப் பார்த்தான் அரசன். விலை உயர்ந்த ஆடைகளை இளவரசனிடம் தந்தது பூனை. அவன் ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தான். அரசன் அவனைச் சிறப்பாக வரவேற்றான். அழகான வண்டியில் அவனை அமரச் சொன்னான். கோலாகலத்துடன் இளவரசனின் ஊர்வலம் தொடங்கியது. அரண்மனை வாயிலிலேயே அரசியும் இளவரசியும் காத்திருந்தனர். இளவரசனின் அழகைக் கண்டு இளவரசி மகிழ்ந்தாள். இருவருக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது. சில நாட்கள் சென்றன. பூனையை அழைத்த அரசன், உங்கள் இளவரசனின் செல்வச் செழிப்பைக் காண நினைக்கிறேன். எப்பொழுது உங்கள் நாட்டிற்குச் செல்லலாம்? நான் பெரிய படை சூழ வருகிறேன், என்றான். எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம், என்றது பூனை. அடுத்த வாரம் புறப்படுவோம், என்றான் அரசன். என்ன செய்யலாம் என்று சிந்தித்தது பூனை. சில அரக்கர்களுக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்களும் அரண்மனைகளும் இருப்பது அதன் நினைவுக்கு வந்தது. எப்படியாவது அவற்றை இளவரசனுக்கு சொந்தமானது என்று சொல்லி அரசனை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது அது. இளவரசன் தேரில் அமர்ந்தான். அரசனும் அருகில் அமர்ந்தான். பெரும்படை சூழ ஆரவாரத்துடன் புறப்பட்டனர். பூனை வழிகாட்டிக் கொண்டே முன்னால் சென்றது. அங்கே நிலத்தில் நிறைய பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் வந்த பூனை. இன்னும் சிறிது நேரத்தில் பெரும்படையுடன் அரசர் ஒருவர் இங்கே வருவார். இந்த நிலம் யாருடையது என்று உங்களைக் கேட்பார்? நீங்கள் இந்த நிலங்கள் எல்லாம் இறகு இளவரசர் உடையது என்று சொல்ல வேண்டும். இதைக் கேட்டால் அரசர் மகிழ்ச்சியுடன் உங்களுக்குப் பரிசு வழங்குவான். மாறாக அரக்கன் உடையது என்று உண்மையைச் சொன்னால் உங்களை எல்லாம் கொன்று விடுவார், என்றது. அரசன் அங்கு வந்தான். உழவு வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, இந்த நிலம் யாருடையது? என்று கேட்டான். எல்லோரும் இறகு இளவரசர் உடையது, என்று சொன்னார்கள். மகிழ்ந்த அரசன் அவர்களுக்குப் பொற்காசுகளை வாரி வழங்கினான். வழியில் ஏராளமான ஆடுகளை நிறைய பேர் மேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது பூனை. அவர்களிடமும் சென்று அதையே சொன்னது. அரசன் வந்து கேட்ட போது, எல்லா மந்தையும் இறகு இளவரசர் உடையது, என்று அவர்கள் சொன்னார்கள். தன்னைவிட இளவரசனிடம் அதிக செல்வம் இருக்கிறது என்று மகிழ்ந்தான் அரசன். இனி இளவரசனின் அரண்மனைக்குச் செல்லலாம், என்றான் அரசன். அரக்கர்கள் தங்கி இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தது பூனை. அவர்களைப் பார்த்து, உங்களுக்கு ஆபத்து வந்து விட்டது. உங்களைக் கொல்வதற்காக அரசர் பெரும் படையுடன் வருகிறார், என்றது. வெளியே பார்த்த அவர்களுக்குப் பெரும்படை வருவது தெரிந்தது. பூனையே! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும், என்று கெஞ்சினார்கள். தோட்டத்தில் உள்ள வைக்கோல் போருக்குள் நீங்கள் எல்லோரும் ஒளிந்து கொள்ளுங்கள், என்றது அது. அவர்களும் அதற்குள் ஒளிந்து கொண்டார்கள். வைக்கோல் போருக்குத் தீ வைத்தது பூனை. தீயில் வெந்து எல்லா அரக்கர்களும் இறந்து போனார்கள். ஊர்வலம் அரக்கர்களின் அரண்மனையை அடைந்தது. எல்லோரையும் வரவேற்றது பூனை. இளவரசரின் அரண்மனை மிக அழகாக உள்ளது, என்றான் அரசன். இளவரசனிடம் தனியே நடந்ததை எல்லாம் சொன்னது பூனை. மகிழ்ச்சி அடைந்தான் அவன். இளவரசன் இளவரசியுடன் நீண்ட காலம் அந்த அரண்மனையில் வாழ்ந்தான். பூனை அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது.
|
பரமார்த்தரின் வேண்டுகோள்படி மதுரை மன்னன், அவருக்கும் சீடர்களுக்கும் அரண்மனையில் விருந்து அளித்து ஒருநாள் தங்க வைத்தான். பட்டு மெத்தையில் படுத்துக் கொண்டு இருந்த பரமார்த்தர், தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார். சீடர்களில் மண்டுவுக்கும் மூடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை. "குருவே! சற்று நேரம் உலாவினால் தூக்கம் வரும் என்று வைத்தியர் காலையில் யாரிடமோ சொன்னாரே... அதேபோல் நாமும் எங்காவது சென்று உலாவி விட்டு வரலாமே என்றான் மண்டு. நல்லது! அப்படியே செய்வோம்" என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் பரமார்த்தர். தெருவில் நடந்தால், நம்மைத் திருடர்கள் என்று காவலர்கள் பிடித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் உப்பரிகைக்குச் சென்று உலாவலாம்!" என்றான், மூடன். அதன்படியே மற்ற சீடர்களையும் எழுப்பிக் கொண்டு, எல்லோரும் மெதுவாக நடந்து சென்றனர். உப்பரிகையின் படிகள் இருக்குமிடம் வந்ததும், மட்டி மட்டும் குருவை மிஞ்சிய சீடனைப் போல கட கட என்று அவரைத் தள்ளிக் கொண்டு வேகமாக மேலே ஏறினான். நான்கு படிகள் ஏறுவதற்குள் கால் வழுக்கிக தடதட என்று உருண்டு கீழே வந்தான். உருண்டு வந்த வேகத்தில் குருவின் மேல் மோதி அவர் பின்னால் வந்த சீடர்களை மோதி எல்லோரும் உருண்டு கீழே வந்து சேர்ந்தனர். "மட்டியே! அவசரப்படுகிறாயே!" என்று திட்டினார் பரமார்த்தர். மறுபடியும் எல்லோரும் மெதுவாக ஏறி, உப்பரிகையை அடைந்தார்கள். அன்று முழு நிலவு நாள். அதனால், நாடும் நகரமும் அழகாகத் தெரிந்தது. "அற்புதம், அற்புதம்" என்று குரு மகிழ்ந்தார். அப்போது மடையன் மட்டும் அலறினான் "என்ன? என்ன?" என்று பதறினார் குரு. "குளிர்கிறதே" என்றான் மடையன். "அப்படியானால் நீ மட்டும் கீழே போய்ப் படுத்துக் கொள். நாங்கள் பிறகு வருகிறோம்" என்று பரமார்த்தர் சொன்னதும் அவன் கீழே இறங்கிப் போய்விட்டான். குருவும் மற்ற சீடர்களும் நகர அழகைக் கண்டு கொண்டு இருந்தனர். அரச வீதிகளில் நிறைய காவல் இருந்தது. குதிரையில் வீரர்கள் அப்படியும் இப்படியும் பாரா வந்து கொண்டு இருந்தனர். அந்த வீரர்களைப் பார்த்துக் குருவுக்கும், குதிரைகளைப் பாத்துச் சீடர்களுக்கும் நடுக்கம் ஏற்பட்டது. அதற்கள் கீழே இறங்கிப் போன மடையன், மறுபடி மேலே ஏறி வந்து, "குருவே.. நான் கீழே இறங்கிப் போனேன். அங்கே இரண்டு பேர். ஒருவன் குண்டாக இருந்தான்; இன்னொருவனுக்குத் தாடியும் மீசையும் உள்ளது. இருவரும் அரண்மனையை விட்டு வெளியே போகிறார்கள். நிச்சயமாக அவங்க இரண்டு பேரும் திருடர்களாகத்தான் இருக்க வேண்டும்" என்று மூச்சு வாங்கக் கூறினான். "அப்படியா? அப்படியானால் உடனே அவர்களைப் பிடித்தாக வேண்டுமே!" என்ற பரமார்த்தர், "எல்லோரும் வாருங்கள், கீழே போவோம்" என்றபடி இறங்கினார். எல்லோரும் வேகமாக அரண்மனை வாசலுக்கு ஓடிவந்து பார்த்தனர். மடையன் சொன்னபடி இரண்டுபேர் குண்டாக ஒருவரும், ஒல்லியாக ஒருவரும் வேகமாக மறைந்து மறைந்து போவது தெரிந்தது. அப்போது அங்கே சிலக காவலர்கள் ஓடிவந்தார்கள். அவர்களிடம், "மடையர்களே! அதோ பாருங்கள், இரண்டு திருடர்கள் அரண்மனையிலிருந்து பணத்தையும் நகைகளையும் திருடிக் கொண்டு போகிறார்கள். ஓடிப் போய் அவர்களைப் பிடியுங்கள்!" என்று கோபத்துடன் திட்டினார். வீரர்கள், குருகாட்டிய திசையில் ஓடினார்கள். பரமார்த்தரும், சீடர்களும் திருடன்!திருடன்! விடாதே, பிடி! என்று கத்தியபடியே பின்னாலேயே துரத்தினார்கள். அதற்குள் சப்தம் கேட்டு அரண்மனையிலும் நகரத்திலும் எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். எல்லோரும் தெருவுக்கு ஓடி வந்து பார்த்தனர். ராஜ வீதியில் ஒரே கலவரம். கூக்குரல்கள். அப்போது மூடன், "அதோ...அதோ.. பிடியுங்கள்" என்று கத்தினான். பரமார்த்தரும் சீடர்களும் அந்த இருவர் மீதும் தடால் என்று விழுந்து உருட்டி, அவர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். வீரர்கள் அவர்களை விலக்கி, திருடர்களை உற்றுப் பார்த்தனர். உடனே, "அரசே! மந்திரியே! நீங்களா?!" என்று வியந்தனர். "எல்லோரும் அரசர் காலில் விழுந்து, "எங்களை மன்னியுங்கள்! இந்தக் குருவும் சீடர்களும்தான் உங்களைத் திருடர்கள் என்று கூறினர்" என்று நடுங்கியபடி கூறினர். பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அரசரையே திருடன் என்று சொல்லி விட்டோமே என்று பயந்து நடுங்கினார்கள். கோபம் அடைந்த மக்கள் குருவையும் சீடர்களையும் அடிப்பதற்குச் சென்றனர். உடனே அரசர், "பொதுமக்களே! நானும் மந்திரியும் நகர சோதனைக்குச் செல்வது தெரியாமல் பரமார்த்த குரு தவறாக நினைத்து விட்டார். உண்மையிலேயே திருடர்களாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆகவே திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட சீடர்களையும், பரமார்த்தருக்கு இருக்கும் அரச பக்தியையும் நான் பாராட்டுகிறேன். பரமார்த்தரும் சீடர்களும் இரவில் கூடத் தூங்காமல் காவல் செய்வதை நினைத்துப் பூரிப்படைகிறேன். இதற்காக நாளையே அவர்களுக்காக ஒரு விழா கொண்டாடுவோம்!" என்று கூறினார். மக்களும், பரமார்த்த குரு வாழ்க! சீடர்கள் வாழ்க! என்று முழக்கமிட்டனர். குருவும் சீடர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது. |
சக்கிரவர்த்தி அக்பரும் அவருடை மதியூக மந்திரியான பீர்பாலும் ஒரு நாள் மாறுவேட மணிந்து நகர் சோதனை செய்து வந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த அகபர், இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு பயனுள்ள தொழிலெதுவும் செய்யத் தெரியாதா? என்று கேட்க, பீர்பாலின் மனத்தில் முள்ளெனத் தைத்தன அந்த வார்த்தைகள். பிறகு அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்துக் கேட்டபொழுது தன்னுடைய பெரிய குடும்பத்தைக் காப்பற்ற வேறு வழி புலப்படாததால் பிச்சையெடுக்க முற்பட்டதாகவும், இதன் மூலம் நாளொன்றுக்கு 25 காசுகள் கிடைக்கின்றன என்றும் கூறினான். அதைச் செவியுற்ற பீர்பால் அவன் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்திரி ஜபம் செய்வதாக இருந்தால் அன்றாடம் அவனுக்கு 50 காசுகள் தருவதாகக் கூறினார். அந்த ஏழையும் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு பீர்பால் சொன்னபடி ஜபம் செய்து வந்தான். பயனெதுவும் கருதாமல் நாள் பூராகவும் காயத்திரி ஜபம் செய்து வந்ததால் அவன் முகத்திற்கு ஒரு அசாதரணமான காந்தி ஏற்பட்டது. இதை அறிந்த பீர்பால் அந்த ஏழையை அணுகி தினம் 108 தடவை காயத்திரி ஜபம் செய்தால் அவனுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னார். அதற்கும் ஒப்புக்கொண்டு அந்த ஏழையும் தீவிரமாக ஜபம் செய்தார். ஒரு நாள் அவனுக்கு அஞ்ஞான இருள் நீங்கியது. அவனுக்கு அமோகமான் ஆன்மீக வளர்ச்சியும் தெய்வீக ஒளியும் ஏற்ப்பட்டு, தினந்தோறும் திரளான மக்கள் அவனை நாடி வணங்கி அருள் பெற்று வந்தனர். ஒரு மாதம் ஆனதும் அந்த ஏழை பணம் வாங்க வராததால் பீர்பாலே அவன் வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தார். ஆனால் அவன் பணிவுடன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து, அவனுக்குச் சிறந்த ஆன்மீக வழியைக் காட்டியதற்காக பீர்பாலுக்கு நன்றி தெரிவித்தான். மறுநாள் பீர்பால் அக்பரை அந்த ஏழை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் முகத்தில் தென்பட்ட தேஜஸையும் அங்கு அருள் பெற வந்த மக்களையும் பார்த்து அக்பர் மிக ஆச்சரியப்பட்டார். அக்பரும் அவ்ர் காலில் விழுந்து அருள் புரியுமாறு வேண்டினார். சில மாதங்களுக்கு முன் நீங்க்ள் இகழ்ந்து பேசிய அதே பிச்சைக்காரன் தான் இவன் என்று சக்கிரவர்த்தியின் காதில் கிசு கிசுத்தார் பீர்பால். சக்கிரவர்த்தி நம்பாமல் அந்த எழையை இந்த மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டார். அவ்னும் நடந்ததைச் சொன்னான். காயத்திரி ஜபம் செய்ததால் வந்த பெருமை என்று பீர்பால் விளக்கினார்.. சுருங்க கூறின், காயத்திரி ஜபத்தினால் பட்ட மரம் தழைக்கும், தரித்திரனும் தனிகனாவான். வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்பவர்கள் நிம்மதியும், மனச் சாந்தியும் பெறுவார்கள். சத்தருக்கள் நாசமடைவார்கள், பாபங்கள் நீங்கிப் பிறவித்துயர் நீங்கும். வேதஸாரமான் இந்த மஹா மந்திரம் நம் ரிஷிகளின் அருளினால் நமக்குக் கிடைத்த அறிய பொக்கிஷம்
|
ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது. அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன. அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன. தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான். நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான். அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன. சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன. இதனைக் கண்ட வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான். பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது. இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.
|
அன்றைக்குக் கடைசி ஆடி. ஊர் முழுக்க தோசை வாசனை கம்ம்மென்று முறுகல் மணல். ஆட்டுரல்களில் சட்னி ஆட்டுகிற கடகடா சப்தம். வழக்கத்துக்கு மாறாக... காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிறான் சீனிவாசன். ஒரே பரபரப்பு. அங்கேயும் இங்கேயுமாய்ப் பாய்கிறான். ஆளைக் கையில் பிடிக்க முடியவில்லை. மூக்கின் மேல் நின்ற கோபம் நாலா பக்கமும் சிதறித் தெறிக்கிறது. இன்னார் மீது என்று கணக்கில்லை. சகட்டு மேனிக்கு ''சள் சள்'' ளென்று சீறுகிறான். மண்ணடிக்க டக்கர் போயிருக்கிறது. வேலை செய்யாமல் கூலியாட்கள் ஏய்த்து விடுவார்களே என்கிற பதற்றம், அவனுக்குள். சம்பளம் வாங்கத் தீயாய் வருகிற ஆட்கள். பாடுபடாமல் தேங்கின தண்ணீராகத் தேய்ந்து போகிற வஞ்சகம். ச்சே! நினைத்தாலே மனசு கிடந்து கொதிக்கிறது. என்றைக்குமில்லாத அதிசயமாக விடிவதற்கு முன்பே விழித்துவிட்டான் சீனிவாசன். டீக்கடை போய், ஓடைக்குப் போய், பல்லையும் தேய்த்துவிட்டு - ''என்ன ரெடியா?'' என்று காலில் கொதி நீரை ஊற்றிக் கொண்டு நிற்கிறான். வேணித்தாய்க்கு எரிச்சலாக இருக்கிறது. ....வழக்கம் இப்படியல்ல. இந்நேரம் படுத்துக் கிடப்பார். நீட்டி நிமிர்ந்து எழுந்து டீக்கடைக்குப் போனால், ரெண்டு டீக்கடைகளிலும் டீ குடித்து. பேப்பர் பார்த்து, ஊர்க்கதைகள் பேசி.... ஆள் தட்டுப்படவே மாட்டார், ஒன்பது மணி வரைக்கும். இன்றைக்கு என்ன அதிசயமோ... சரியாய் விடிவதற்குள் ''ரெடியா'' என்கிறான். என்ன கூத்தோ....? கேட்க முடியாது கேட்டால். வள்ளென்று விழுவான். இப்போது தான் முற்றம் தெளித்திருக்கிறாள். வெல்லம், தேயிலை போட்டு, காப்பி போட்டுவிட்டு... அடுப்பில் இட்லிச் சட்டியை தூக்கி வைத்திருக்கிறாள். வழக்கம் போல.... சோறு என்றாலாவது. சட்டு புட்டென்று வேலை முடியும். கடைசி ஆடி... ஊரெல்லாம் தோசை விசேஷம். தோசை என்றாலாவது... சட்டி காய்ந்தவுடன் மாவை சர் சர்ரென்று ஊற்றிப் புரட்டி எடுத்து விடலாம். இந்த ராசாவுக்குத் தோசை என்றால் தொண்டையில் இறங்காது. ஆவியே ஆகாது என்பார். தோசையில் எண்ணெய் வாடை வருமாம். சாப்பிட்டால்... நாவறட்சி எடுக்குமாம். நெஞ்சுக்கரிப்பு ஆளைக் கொல்லும் என்று பயப்படுவார். தோசை என்றால். மூஞ்சி முந்நூறு கோணலாகும். இட்லிக்கு மாவை ஊற்றி வைத்தால்.... வெந்து முடிய ரொம்ப நேரமாகும். சொய்ங்யென்று விசிலடிக்கிற புகைச் சீறல், வேணித்தாய்க்கு எரிச்சல் எரிச்சலாய் வரும். அவசர அவசரமாய் அம்மியில் சட்னிக்கு அரைத்தாள். சீனிவாசன் பறந்து கொண்டு வருகிறான். ''சாப்புடலாமா?'' ''சித்தெ பொறுங்க'' ''டக்கர் போயிருச்சு மண்ணடிக்க...'' ''ஆளுக போய்ட்டாகளா?'' ''ம்'' ''மண்ணை புஞ்சைக்குள்ளே தட்டவா, வெளியே தட்டவா?'' ''புஞ்சைக்குள்ளேதான்'' ''சர்க்கரை தேயிலை வாங்கிக் குடுத்தனுப்பிச்சிட்டீகளா?'' ''ம் தண்ணிக்கொடம். காப்பிச்சட்டி, கிளாஸ் எல்லாம் குடுத்தனுப்பியாச்சு'' ''கலிங்கப்பட்டி கம்மாயிலே தண்ணில்லியா?'' ''ம்'' ''பாதை நல்லாயிருக்கா?'' ''என்ன.... தொண தொணன்னு பேசியே உயிரை வாங்குறே?'' சிரித்தாள் வேணி. காத்திருத்தலைத் தோன்றவிடாமல் மறக்கடிக்கத்தான் பேச்சை ரப்பராய் இழுத்தாள். ''என்ன சிரிப்பாணி?'' ''கேக்குறதுமா குத்தம்?'' ''அப்படியில்லே. டக்கருக்கு நானூத்தைம்பது ரூவா வாடகை. கூலியாளுக்கு எறநூத்தம்பது. இம்புட்டு செலவழிச்சு மண்ணடிக்கிறப்ப. நா போய் நிக்க வேண்டாமா? ரெண்டு நடை மண்ணு கொறைஞ்சிட்டாக்கூட... நூற்றி நாப்பது வட்டம் வரும்.'' ''இப்ப யாரு..... உங்களைப் போக வேண்டாம்னது?'' ''சாப்புடாம எப்படிப் போக?'' உக்காருங்க. இதோ - சட்னியைத் தாளிச்சிடுறேன்'' ''அந்தா, இந்தா'' வென்று கால்மணி நேரம் ஆகிவிட்டது. முள்ளின் மேல் நிற்பவனைப்போல் பொறுமையற்று நெளிந்து கொண்டு உட்கார்ந்திருக்கிற சீனிவாசன் முன்னால்... வட்டில் ஆவி பறக்க இட்லிகள், கருகிப்போன கடுகும், கருவேப்பிலையும் சட்னிக்கு ஒரு லட்சணத்தையும் வாசத்தையும் தந்தது. பறக்கப் பறக்க சாப்பிடுகிறான். ''சட்னி இன்னைக்கு அம்சமா அமைஞ்சிருக்கு. தாளிச்ச வாசம் ஆளைத் தூக்குது''. நிலக்குளிர்ச்சியான அந்தப் பனிப்பூ வார்த்தையில் வேணியின் எரிச்சல், கோபம் எல்லாம் மாயமாகி மறைகிறது வியர்வைக்குரிய கிரீடம் கிட்டிவிட்ட மனத்ததும்பல் அவளுக்கு அவள் குரலில் ஒரு மென்மையும் குழைவும்.... ''நல்லாவாயிருக்கு? அவசர அவசரமா அரைச்சேன்... உப்புக்கூடப் பாக்கலே.'' ''கச்சிதமாயிருக்கு வேணி. நெசந்தா.'' ''இன்னும் ரெண்டு இட்லி போட்டுக்கங்க.'' அந்தக் கணத்தில், அவள் அவளாகியிருக்கிறாள். உள்ளும் புறமும் மிருதுவாகி. அன்பால் நெஞ்சு ததும்ப... புருஷனை புதிய வாஞ்சையோடு பார்க்கிறாள். உள்ளுக்குள் உவகைப் பெருக்கு பீறிடுகிற பரிவுணர்ச்சி கண்ணோரங்களில் நீர்த்துளிகளாய் மனப்பரவசம். காய்ந்து கனல் பறக்கிற லௌகீக வாழ்வை ஜீவதப் படுத்துகிற மனச்சங்கமம். மானுட ஈரத்தில் வேர் விட்டு உயிர் வளர்கிற - முகம் கழுவிக் கொள்கிற - புது வாழ்க்கையின் கணங்கள். கையை கழுவினான். சட்டையை மாட்டிக் கொண்டான். சிகரெட், தீப்பெட்டி, செருப்பு, பரபரப்பு. ''வேணி, நீ புஞ்சைக்குப் போவணுமா?'' ''மேலப் புஞ்சையிலே பருத்தி வெடிச்சு பூத்துக்கெடக்கு.'' ''போ, சரி... மதியத்துக்கு?'' ''கம்மாயிலேதானே இருப்பீக?'' ''ம் சின்னவன் கிட்டே குடுத்து. தெக்குப்புஞ்சைக்கு அனுப்பிவை. மண்ணைத் தட்ட வர்ற டக்கர்லே கம்மாய்க்கு வந்துருவான்.'' ''ஆட்டும்...'' ''என்ன குடுத்துவிடப் போறே மதியம்? தோசை தானே சுடுவே?'' ''உங்களுக்குத்தான் தோசை ஒவ்வாதுல்லே? அவிக்கிற இட்லியிலே மிச்சம் வச்சிருந்து... புதுசட்னியோட குடுத்துவுடட்டா? ''ம்.'' ''ஆறின இட்லின்னு கோவிக்கக்கூடாது?'' ''ம்'' அவன் முகத்தில் மெல்லிய பூஞ்சிரிப்பு. உள்ளுக்குள் பௌர்ணமி வெளிச்ச மகிழ்ச்சி. இங்கிதம் அறிந்து பேசுகிற வேணியின் மன அண்மையில் விளைந்த தன்மை. தெருவில் இறங்கினான். சீனிவாசன் ஓடியாடிப் பாடுபடுகிறவனில்லை. ப்ளஸ் டூ முடித்து, கல்லூரியிலும் ரெண்டு வருஷம் குப்பை கொட்டினான். பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு, விவசாயத்தைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம். நாலா பக்கமும் காடுகரைகள். இறவைத்தோட்டங்கள், மானாவாரிக் கரிசல்காடு. கண்மாய்ப் பாசனத்தில் கொஞ்சம் வயல்காடு. பெரிய பண்ணைப் பிரபு கிடையாது மத்திய தர விவசாயி. வரவு செலவு வருஷா வருஷம் இழுபறிதான். விளைச்சல் சரியாக இருக்காது. விளைந்த வருஷத்தில் விலை கிடைக்காது. ரெண்டும் கைகூடி வருகிற மாதிரியிருந்தால்... கல் மழை மாதிரி இயற்கை உற்பாதம் வந்து நாசக்காடு பண்ணிவிடும். விரல் நகத்தில் அழுக்குப்படாமல் மேற்பார்வை பார்ப்பான். உடலுழைப்புக்கு இயலாது. சில்லான் மாதிரி ஒல்லியான உடம்பு. மம்பட்டி பிடித்து ஒரு வாய்க்கால் வரப்பைக்கூட செதுக்க முடியாது. எல்லாவற்றுக்கும் சம்பள ஆள்தான். தண்ணீர் பாய்ச்ச, பாத்திகட்ட, மூலை முடக்கு கொத்த... எல்லாமே கூலியாட்கள்தான். வேணித்தாய் ஓயாமல் பொருமுவாள். ''வெளையுற வெள்ளாமை சம்பளம் குடுத்தே சாம்பலாயிரும்.'' ''அதுக்கு என்ன செய்யச் சொல்றே?'' ''உங்களாலே தண்ணி பாய்ச்சவுமா முடியாது பொம்பளைகூட பாய்ச்சுதாளே?'' ''நமக்கு அதெல்லாம் சரிப்பட்டுவராது'' படிப்பு படிச்சவுகளாம்! படிச்சிருந்தா... மம்பட்டியை தொடக்கூடாதுன்னு சட்டமா? கீரிடம் எறங்கிருமாக்கும். ''நொய் நொய்ன்னு நச்சரியாதே...'' ''வேர்வை சிந்தப் பாடுபாட்டாத்தான்.... அதோட அருமையும் அழகும் தெரியும்.'' ''ஒழைக்கிறதுலே என்ன அழகு இருக்கு. ''ஒழைச்சப் பாத்தாத் தெரியும். பசியெடுக்கும். கல்லை முழுங்கினாலும் செமிக்கும். ஒடம்பு வலுப்படும். மனசுலே ஒரு தைர்யம் வரும். வேர்வை சிந்தி ஒழைச்சுப் பார்த்தாத்தான்... மனுசருக்கு மனுசக்குணமே வரும்.'' ''வேணி... அஞ்சுலே வளையாத ஒடம்பு. முப்பத்தைஞ்சுலே வளைக்கணும்னு ஆசைப்படதே.'' ''இதுலே ஒரு பெருமையாக்கும்?'' விளையாட்டான வெளுப்பாக உதட்டைப் பிதுக்கினாள் வேணி. ஆனாலும் விளையாட்டல்ல. வெளிப்படுகிற ஏளனம். ரொம்ப ஆழத்திலிருந்து கூர்மையாக வருவதாய். உணர்வான். ஆயினும் சீனிவாசன் அசையவில்லை. அப்படியேதான் இருந்தான். புஞ்சையில் கூலியாட்கள் பாத்திக் கட்டிக் கொண்டிருந்தால்... அவன் பாட்டுக்கு. டீக்கடையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருப்பான். சாயங்காலம் போய்ப்பார்த்துவிட்டு வயிறெரிவான். காட்டுக்கத்தலாய்க் கத்துவான். ''வாங்குற காசுக்கு வஞ்சமில்லாம ஒழைக்க வேண்டாம்? ஆள் இருந்தா, ஒரு மாதிரி, இல்லேன்னா ஒரு மாதிரி. மோசக்காரப் பாவிக. பாத்தி கட்டியிருக்குற லட்சணமா, இது? வரட்டும். பேசிக்கிடுதேன். சம்பளம் வாங்க வருகிறவர்களிடம் ஒரே சண்டைக்காடுதான். வருஷம் பூராவும் வம்பு வழக்குதான். தகராறுகள், கூலியாட்களைக் குறை சொல்லிச் சண்டை போடுவது... அவனது சுபாவமாகிவிட்டது. வேலை தளத்துக்க போக முடியாமுலும் ஜோலிகள் வந்துவிடும். மேற்பார்வை ஜோலிகள், போங்குக்கு நகை அடகுவைக்க. கடன் வாங்க, கொடுக்க, உரம் வாங்க.... பூச்சி மருந்து வாங்க என்று ஜோலிகள். ....போன வருஷம் மண்ணடிக்கிறபோது இப்படித்தான் எல்லா சம்சாரிக்கும் டக்கர் பன்னிரண்டு நடைகொண்டு வந்து கொட்டியது. இவனுக்கு பத்துநடை மட்டும். கேட்டால்... கண்மாயிலிருந்து புஞ்சை ரொம்பத் தூரம் என்கிற சால்ஜாப்பு. ஏமாளியாகிப் போய்ட்டோமே என்கிற மனக்கொதிப்பு, ரொம்ப நாளைக்கிருந்தது. இந்தத்தடவை விடக்கூடாது என்ற முடிவு. கண்மாயிலிருந்து கடைசிவரைக்கும் வேலை நடக்கிற லட்சணத்தைக் கண்காணிப்பது என்கிற வைராக்யம். ....வந்தாயிற்று, தெற்குப் புஞ்சை. அதோ. தூரத்தில் சிவப்பாய் வருகிற டக்கர். கோபு ரங்குத்தியாய் மண். நல்ல வண்டல். புஞ்சைக்குள் ரெண்டாவது குமி தட்டி முடித்துவிட்டுத் திரும்பிய டக்கரில் ஏறிக்கொண்டான். வெறும் டிரெய்லர், லோடு இல்லாமல், வண்டி போகிற வேகத்துக்கு ''பேய்க்குதி'' குதித்து அதிர்ந்தது. தடதட சத்தம் காதைக்குடைந்தது போய்க்கூப்பாடு. கலிங்கப்பட்டியை தாண்டிப் போகணும். இங்கிருந்து கண்மாய் மூன்று மைல் இருக்கும் கண்மாயின் உள்வாய்ப் பகுதி முழுக்க கருவேல மரங்கள். ஒன்றையொன்று உரசிக்கொண்டு. பின்னிக்கொண்டு, அடர்த்தி என்றால் அடர்த்தி, கற்றை அடர்த்தி, ஆள் போக முடியாது. கரையை ஒட்டிய மடைகள், மடைகள் இருக்கிற உட்பகுதிகளில் கொஞ்ச தூரம் மரங்களில்லை. கன்னங்கரேலென்று இருள் மாதிரியான கரிசல் மண். ஈரல் கட்டி மாதிரி. ஆள் உயரத்திற்கு வெட்டுக் கிடங்குகள். அங்குதான் கூலியாட்கள். டக்கர் போய் வட்டமடித்து நின்றவுடன்... அள்ளி வைத்திருந்த அறுபது கூடை மண்ணையும் சடபுடவென்று தூக்கிக் தட்டினார்கள். அள்ளிவிட, தூக்கிவிட என்று புயல் சுறுசுறுப்பாய் வேலைகள், பரஸ்பரம் அதட்டுகிற... ஏவுகிற... உசுப்புகிற சப்த அதிர்வுகள். ''மம்பட்டியை ஓங்கிப்போடு!'' ''கூடையை விருட்டுன்னு தூக்கிப்போடு'' ''நடுவுலே எட்டி எறி'' ''வெட்டி அள்ளு'' ''ஏய், கையிலே உசுர் இல்லியா? ஓங்கிக் குத்து'' கண்மூடி முழிப்பதற்குள் வண்டி லோடாகிவிட, பீடியை சுண்டியெறிந்துவிட்டு டிரைவர் ஏறி... டக்கரை உயிர்ப்பித்தார். வண்டி போனவுடன் அவரவர் மரத்தடிகளில் போய்ச்சாயவில்லை. மாறாக, வேலைகள், சுறுசுறுப்புக் குன்றாத வேக வேலைகள். கடப்பாறையில் ஓங்கி ஓங்கி குத்தி மண்ணை நெகிழ்ந்து விடுகிற இருவர். நெகிழ்ந்து புரளும் கட்டிகளை உடைத்து இழுத்துக் குவியலாக்குகிற நால்வர். அறுபது கூடைகளிலும் மண்ணை அள்ளி அடுக்குகிற நால்வர். ரெக்கை கட்டிப்பறக்கிற வேலைகள். வியர்வை வரி வரியாய். துடைக்க நேரமில்லை. கரிசல மண்ணைப் போல கறுத்த உடம்புகளில் வியர்வைக் கசகசப்பில் அடைஅடையாய் கரிசல் தூசி. கருவேல மரத்தடி நிழலில் உட்கார்ந்தான். சீனிவாசன். நிழலும் பொய் நிழல், வெக்கையான நிழல், செருப்பைப்போட்டு அதன் மேல்தான் உட்கார முடிகிறது. வெயில் என்றால் வெயில். அப்படி வெயில், தீ வெயில், நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. கண்ணெல்லாம் காந்துகிறது. அலை அலையாய் அந்தரத்தில் நெளிந்தோடுகிற கானற் சங்கிலிகள். சீனிவாசனைப் பார்த்து அன்போடு சொன்னார்கள். ''நீங்க எதுக்கு வெயில்லே சீரழியணும்? வீட்டைப் பாத்துப் போங்க.'' ''எள்ளு காஞ்சதுன்னு... கூடவே எலிப் புழுக்கையும் காயஞ்சதாம்...'' ''அதானே? நாங்க காய்றது சரிதான். தலைவிதி. வயித்துப்பாடு. நீங்க எதுக்குக் காயணும்?'' எல்லோருக்கும் பொதுவாக மெல்லிசாகச் சிரித்துப் பதில் சொன்னான். ''இல்லே... நா இருக்கேன்.'' ''அப்ப... இருங்க. எங்க தோள்லேயா இருக்கீக? ராசாப்போல இருங்க.'' வியர்வையைப் போலவே அவர்களுக்குள் வற்றாத கேலிகள், கிண்டல்கள், பரஸ்பர நையாண்டிகள், தாறுமாறான கெட்ட வார்த்தை வசவுகள். சண்டை போடுகிற மாதிரி காட்டமான கோபப் பேச்சுகள். எல்லாமே வேடிக்கை விளையாட்டுகள்தான். அலுப்புத் தெரியாமலிருக்க உணர்ச்சி வடிகால்கள். பேச்சு பேச்சாக இருந்தாலும்... சீனிவாசன் அடிக்கடி மணியைப் பார்த்தான். போயிருக்கிற நடைகளை எண்ணி மனசுக்குள் கணக்குப் போட்டான். பத்து நடைபோய்ச்சேரும் என்பதே சந்தேகம்தான். அவர்கள் சொல்லச் சொல்லக் கேட்காமல்... அவனும் ''கூடமாட'' வேலைகள் செய்கிறான். சும்மாவே இருப்பதில் ஒரு குற்ற உணர்வு. உள் உறுத்தல். அதற்காகவே அவனும் உழைப்பில் பங்கெடுத்துக் கொண்டான். கடப்பாரையால் ஓங்கி ஓங்கிப் போட்டு அசைத்தான். மண் உருண்டைகளைப் பெயர்த்து உருட்டினான். கருவேலச் சல்லி வேர்களை அறுத்துக்கொண்டு மண் பெயர்கிறபோது... இவனுள் மழலைத்தனமான மகிழ்ச்சி. வெற்றி கண்ட மனப்பூரிப்பு. உழைப்பின் விளைவாய் நிகழும் மாறுதல்கள், அவனுள் ஒரு லாகிரியாய். நிழல் காலடியில் சுருண்டது. மதியமாகிவிட்டது. டக்கர் வந்து லோடு ஏற்றிப்போனவுடன்... லேசுமாசாய் கையைக் கழுவினர். தூக்குச்சட்டிகளை எடுத்து, வெட்ட வெயிலில் வட்டமாய் உட்கார்ந்தனர். திறந்தால்.... ஒவ்வொரு சட்டியிலும் பத்துத் தோசை, பனிரெண்டு தோசை. சட்னியில் நனைந்துகிடந்தது. சீனிவாசன் அசந்து போனான். ஒரு மனுசனுக்கு இம்புட்டுத் தோசையா! சாப்பிட முடியுமா? அதுவும் தோசையா! இவனையும் சாப்பிடச் சொல்லி ஆள் ஆளுக்கு உபசரித்தனர். மறுத்துவிட்டான். தோசை உடம்புக்கு ஒத்துக்காது.'' அவர்கள் சாப்பிட்ட வேகம். மறைத்துக் கொள்ளாத ஆசையோடு தின்கிற ஆர்வம். ருசி பற்றிய பேச்சுக்கள். அதிலேயே கேலிகளும் கிண்டல்களும்.... வாழ்வின் அவலமும்.... ''தின்னுங்க தோசையை... விடாதீக.'' ''ஆமா... நாளையிலேருந்து புளிச்ச கஞ்சிதான்.'' ''ஆமப்பா.... புரட்டாசி மொதச் சனிக்குத்தான் தோசையைக் கண்ணாலே பாக்கமுடியும் நம்மாலே!'' ''கூலிக்காரன் தெனம் தோசைக்கு ஆசைப்பட முடியுமா?'' ''நடக்குற காரியமா?'' ''துட்டுக்காரன் வீட்லே தெனம் தெனம் கடைசி ஆடிதான். தோசை மணந்தான்.'' ''தோசைன்னா... தனி ருசிதான்.'' ''ஆசைதோசை, அப்பள வடைன்னு சும்மாவா சொல்லுதாக'' ''அதுலேயும் காட்டு ருசியிருக்கே.... அது ஒரு தனி ருசி.'' ''கஞ்சின்னா... குடிச்ச மாத்திரத்துலே பசிச்சிரும். தோசைன்னா... கம்முன்னு கெடக்கும்.'' ''கல்லு மாதிரி.'' வினோதப் பிறவிகளைப் பார்க்கிற மாதிரி ஆச்சரியமாய்ப் பார்த்தான் சீனிவாசன். ''ராட்சஸங்கதான். தோசையையே இந்தப்போடு போடுறாங்களே, பாவிக. நம்மாலே ரெண்டு தோசையைக் கூட சாப்பிட முடியாதே. இவனுக்கு இது ரொம்பப் புதுசு. ஆச்சர்ய அனுபவம் இவனுக்குள் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்ட மலைப்பும், வியப்பும். பசி லேசாக வயிற்றைக் கிள்ளியது. வேலையால் வழிகிற வியர்வை. சட்டையைக் கழற்றி வைத்துவிட்டான். தடதடவென்று பேயிரைச்சலாய்த் திரும்ப வந்த டக்கரின் சின்னவன் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. அவன் கையில் எவர்சில்வர் தூக்குச் சட்டி. அந்தரத்தில் ஏந்திப்பிடித்திருந்தான். குலுங்காமலிருப்பதற்காக. கடப்பாரையை மண்ணில் குத்தி நிறுத்தினான். உள்ளங்கைகளைப் பார்த்தான். பிசுபிசத்த கரம்பைமண். அதையும் தாண்டித்தெரிகிற கன்றிப்போன சிவப்பு. காந்தலான வலி. குடத்துத் தண்ணீரில் கையை லேசாகக் கழுவினான். ஆட்கள் டக்கருக்கு நிமிஷத்தில் லோடு பண்ணி முடித்தார்கள். திரும்பிப்போன டக்கரில் கோபுரங்குத்தியாக மண். தேர் அசைந்து நகர்கிற மாதிரியான தோற்றம். மரத்தடிக்கி வந்தான். அடத்தியான பெருமூச்சு. உட்கார்ந்தான். ''என்னடா... அம்மா குடுத்துவிட்டாளா?'' ''ஆம்ப்பா....'' ''நீ சாப்பிட்டுட்டீயாடா?'' ''சாப்ட்டுட்டேன்ப்பா?'' ''இங்கேயும் சாப்புடுதியா?'' ''வேண்டாம்ப்பா'' ''அம்மா இட்லிதா குடுத்துவிட்டாளா?'' ''இல்லேப்பா...'' சின்னவன் குரலில் மெல்லிய அச்சம். பூகம்பத்தை முன்னுணர்ந்த நடுக்கம். சீனிவாசனுக்குள் சுள்ளென்று வருகிற கோபம். ''பொறகு?'' ''தோசை'' சட்டென்று நிமிர்கிற சீனிவாசன். விரிகிற கண்களில் ஒரு விறைப்பு. மூக்கு நுனியில் மெல்லிய துடிப்பு. கன்னக் கதுப்புகளில் பற்கடிப்பின் படைப்பு. ''தோ...சை...யா?'' அவனுள் சண்டாளமாய்ப் பீறிட்ட வெறி. பிடிக்காது என்று தெரிந்தும் தோசை கொடுத்தனுப்பினால்..... அத்தனை அலட்சியமா? சின்னவன் முகத்தில் ஒரு மிரட்சி. ''இல்லேப்பா.... காலையிலே ஒரு விருந்தாளி வந்திருச்சு. எடுத்து வைச்சிருந்த இட்லியை அவுகளுக்கு அம்மா வைச்சிட்டாக.'' ''ம்'' அதில் ஒரு இறுக்கம். ''தோசையை குடுத்தனுப்புறப்பவே... அம்மா சொன்னாக'' ''என்னன்னு'' ''உங்கப்பா என்னை வையத்தான் போறாரு. வாங்கிக் கட்டிக்கிட வேண்டியதுதான்னு சொன்னாக'' வேணித்தாய் சொன்ன சொற்கள் குளிர் நீராய் கொதித்துக் கொண்டிருந்த அவன் மனசை ஆசுவாசப்படுத்தியது. சமாதானப்படுத்தியது. அலட்சியம் செய்யவில்லை. மதிக்கிறாள் என்பதை உணர்ந்த மனத்திருப்தி. உள்ளே புதைந்து கிடந்த பெருந்தன்மையுணர்ச்சியை உசுப்பிவிட்டது. பெருமூச்சோடு சட்டியைத் திறந்தான். நாலு தோசை. ஒரு கிண்ணத்தில் சட்னி. அலம்பி விழுந்து தோசை நனைந்திருந்தது. ஒரு தோசையை மட்டும் சாப்பிடுவது என்று உள்ளுக்குள் வைராக்யமான முடிவு. சகிப்புத்தன்மையை மீறிக்கொண்ட கசிகிற முணுமுணுப்போடு சாப்பிட்டான். சின்னவன் அவனது அம்மாவைப்போல, ரொம்பத் துறுதுறுப்பு. ஓடியாடி வேலை செய்கிற ஆர்வம். உழைப்பின் நாட்டம் ஓடி ஓடி மண்கட்டிகளைத் தூக்கிக் கூடைகளில் வைத்தான். பெரிய பெரிய கட்டிகளாய்க்கிடந்ததை மம்பட்டியால் உடைத்தான். ஓங்கி ஓங்கிப் போட்டான். அந்தப் பிஞ்சுப்பயல் வேலைசெய்கிற நேர்த்தியை - அழகை - சுறுசுறுப்பையே பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன். குனிந்து தூக்குச் சட்டியைப் பார்த்தான். அதிர்ந்தே போனான். நாலு தோசையும் காலி. நான்தான் சாப்பிட்டேனா என்கிற மலைப்பு. ஆச்சர்யம் இன்னும் கூட ஒரு தோசை சாப்பிடலாம் போல வயிற்றுக்குள் இடம். எண்ணெய் வாடை ஒத்துக்கொள்ளாது. நிஜம்தான். ஆனால், இப்போது ருசியாகவே இருந்ததாய் நினைவு. எப்படி? நாலு தோசை விழுங்க முடிந்ததே... அது எப்படி? காட்டு ருசியே தனி ருசி என்பது இதுதானா? காட்டு ருசி என்றால்... உழைப்புக்குப் பிறகு வருகிற பசியா? ''வியர்வை சிந்தப் பாடுபட்டாத்தான்... அதோட அருமையும் அழகும் தெரியும்.'' ''ஒழைச்சுப் பாத்தாத் தெரியும். பசியெடுக்கும். கல்லை முழுங்கினாலும் செமிக்கும். வேணி அடிக்கிற சொல்கிற வேதம். நிஜம்தானோ? ராட்சஸமாய் உழைப்பதால்தான்.... இவர்கள் பத்துத்தோசை என்று ராட்சஸதனமாய்ச் சாப்பிடுகிறார்களோ... அவனுக்குள் ஆச்சர்யமான வெளிச்சம். சுபாவத்தையே அலசிக் காயப்போடுகிற அனுபவ வெளிச்சம். உள்ளுக்குள் துருவேறிக்கிடந்த சாளரங்கள் திறந்துகொண்ட உணர்வு. சாயங்காலம்.... சம்பளம், வாங்க வந்த கூலிக்காரர்களோடு சண்டை போடவில்லை. சீனிவாசன். அன்றைக்கு மட்டுமல்ல....
|
சென் துறவி ஒருவர் தனது 60வது வயதில் தான் ஜென் தத்துவங்களைப் படிக்க ஆரம்பித்தார். தனது 80வது வயது வரை படித்தார். பின்னர் தான் காலமான 120ம் வயது வரை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அந்த துறவியிடம் மாணவன் ஒருவன்… ஒரு மாணவன், ‘குருவே, என் மனதில் எதுவுமே இல்லையென்றால் என்ன செய்வது?" என்றான். குரு, ‘அதைத் தூக்கி எறிந்து விடு", என்றார். மீண்டும் அவன், ‘என்னிடம் தான் எதுவுமே இல்லையே? எப்படித் தூக்கி எறிவது?" என்றான். குரு மீண்டும், ‘சரி, அப்படியானால் நீயே வைத்துக் கொள்" என்றார்! |
ஒரு பழைய கதை …. எனக்கு இந்த கதை எப்போதும் மிகவும் பிடிக்கும். ஒரு விறகுவெட்டி வயதானவன், ஏழை, அனாதை. அவன் சாப்பாட்டிற்கு ஒரே வழி நாள்தோறும் காட்டிற்கு வந்து விறகு வெட்டி கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் சாப்பிடுவதுதான். காட்டிற்குள் நுழையும் இடத்தில் ஒரு அழகிய அரசமரம் இருந்தது. கௌதம புத்தர் ஞானமடைந்த மரம் அதுதான். அதனால்தான் அது அரசமரம் என்றழைக்கப் படுகிறது. ஒரு விஷயம் தெரியுமா உனக்கு? மரங்களிலேயே அரசமரம்தான் மிகவும் உணர்வுபூர்வமானதும் மிக புத்திசாலியான மரமும் கூட. அந்த மரத்தில் மற்ற மரங்களில் இல்லாத ஒருவகையான அமிலம் சுரக்கிறது. அந்த அமிலம் புத்திசாலித்தனம் வளர மிக அத்தியாவசியமான ஒன்று என்பதை மிக சமீபத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பதை அறிந்தால் நீ மிகவும் வியப்படையக்கூடும். புத்தர் அந்த மரத்தின் கீழ் ஞானம் பெற்றது ஒரு தற்செயலான செயல் அல்ல! இந்த விறகுவெட்டி அந்த மரத்தின் கீழ் ஒரு வயதான ஞானி உட்கார்ந்திருப்பதை பார்ப்பான். அவர் இரவு, பகல், வெயி்ல், மழை, குளிர் என எல்லாநேரங்களிலும் எல்லா காலங்களிலும் அங்கே இருப்பதை பார்ப்பான். அதனால் காட்டிற்குள் நுழையும் முன் அவர் காலில் விழுந்து வணங்குவான். அவன் வணக்கம் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவர் அவனைப் பார்த்து, சிரித்தபடி, ‘நீ ஒரு முட்டாள்" எனக் கூறுவார். விறகுவெட்டி ஆச்சரியமடைவான். ஒவ்வொரு முறை வணங்கும்போதும் அவர் ஆசி கூறுவதற்கு பதிலாக முட்டாள் எனக் கூறுகிறாரே என நினைத்துக் கொண்டு போவான். ஒருநாள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு அவரிடம், "ஏன் இப்படி கூறுகிறீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர், "நீ தினமும் இந்த காட்டினுள் சென்று விறகு வெட்டி கொண்டு வருகிறாய். ஆனால் இதனுள் இன்னும் சிறிது தூரம் சென்றால் செம்பு சுரங்கம் உள்ளது. அங்கு சென்று செம்பு எடுத்து சென்றால் ஏழு நாட்களுக்கு கவலையில்லாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். ஒரு முட்டாளுக்கு மட்டுமே அது தெரியாமல் போகும். உனது வாழ்நாள் முழுவதும் நீ இந்த காட்டினுள் சுற்றிக் கொண்டு இருக்கிறாய். நீ அதை பார்த்திருந்தால் இப்படி தினமும் வந்து விறகு வெட்டிகொண்டு செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது." என்றார். விறகுவெட்டியால் அவர் சொல்வதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அவனுக்கு அந்த காடு முழுவதும் நன்றாகத் தெரியும். அவர் ஏதோ கேலி செய்கிறார் என நினைத்தான். ஆனாலும் அவர் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமானால்…………..சரி, சிறிதுதூரம் போய் தேடுவதால் என்ன தீங்கு வந்துவிடப் போகிறது என நினைத்துகொண்டு இன்னும் சிறிது தூரம் காட்டினுள் சென்று ஏதேனும் செம்பு சுரங்கம் இருக்கிறதா என்று கவனமாகவும் விழிப்போடும் தேடினான். அங்கே அவன் செம்பு சுரங்கத்தை கண்டான். அவர் எப்போதும் நீ ஒரு முட்டாள், தேவையில்லாமல் இந்த வயதான காலத்திலும் தினமும் வேலை செய்துகொண்டிருக்கிறாய் என ஏன் சொல்லிக் கொண்டு இருந்தார் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது. இப்போது அவன் வாரத்திற்கு ஒருமுறைதான் சென்றான். ஆனாலும் அந்த பழைய வழக்கம் தொடர்ந்தது. அவர் காலை தொட்டு வணங்கினான். அவர் மறுபடியும் அதேபோலவே சிரித்தபடி, "நீ ஒரு முட்டாளேதான்" என்றார். அவனுக்கு குழப்பமாக இருந்தது. "ஏன்? நான்தான் செம்பு சுரங்கத்தை கண்டுபிடித்து விட்டேனே! பிறகும் ஏன் இப்படி கூறுகிறீர்கள்?" எனக் கேட்டான். அவர் இன்னும் சிறிது தூரம் சென்றால் வெள்ளி சுரங்கம் இருக்கிறது என்று கூறினார். விறகுவெட்டி அதிர்ச்சியுற்றான். "ஏன் இதை முதலிலேயே கூறவில்லை?" எனக் கேட்டான். அதற்கு அவர், "நீ என்னை செம்பு சுரங்கம் பற்றி கூறியபோதே நம்பவில்லை. பிறகு எப்படி வெள்ளி சுரங்கம் பற்றி கூறினால் நம்புவாய்? இன்னும் சிறிது தூரம் உள்ளே செல்" எனக் கூறினார். அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் தோன்றினாலும் இந்த தடவை ஒருவிதமான நம்பிக்கையுணர்வு அவனுள் தோன்றியிருந்ததால் அவன் இன்னும் சிறிது தூரம் உள்ளே தேடிச் சென்ற போது வெள்ளி சுரங்கத்தை கண்டறிந்தான். வெள்ளியை எடுத்துக் கொண்டு அவரிடம் திரும்பி வந்து, "இப்போது மாதத்திற்கு ஒருமுறை வந்தால் எனக்கு போதும். ஆனால் எனக்கு உங்களை பிரிவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. உங்களை பார்க்காமல் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களிடமிருந்து நீ ஒரு முட்டாள் என்பதை இனி நான் கேட்க முடிய போவதில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமானதாக இருக்கிறது. நீங்கள் என்னை நீ ஒரு முட்டாள் என்று கூறுவதை நான் விரும்ப தொடங்கி விட்டேன்." என்றான். அதற்கு அவர், "நீ சர்வ நிச்சயமாக முட்டாளேதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார். அதற்கு அவன், "நான் வெள்ளி சுரங்கத்தை கண்டு விட்டபிறகுமா இப்படிக் கூறுகிறீர்கள்?" எனக் கேட்டான். "ஆம், இதன் பின்னும் நீ முட்டாள்தான்! அதைத் தவிர வேறில்லை. ஏனெனில் இன்னும் சிறிது தூரம் சென்றால் அங்கு தங்க சுரங்கம் இருக்கிறது. அதனால் இன்னும் ஒரு மாதம் வரை காத்திருக்கத் தேவையில்லை. நாளையே வா." என்றார். இந்த முறை அவர் நிச்சயமாக கிணடல் செய்கிறார் எனத் தோன்றியது. ஏனெனில் அப்படி அங்கே தங்கம் இருந்திருக்குமானால் இவர் ஏன் இப்படி இந்த மரத்தடியில் மற்றவர்கள் கொணடு வந்து தரும் உணவை நம்பி, -அவர்கள் கொண்டு வருகிறார்கள் பலதடவை கொண்டு வருவதில்லை.- இதுபோல வெயிலுக்கு ஒரு மறைப்பின்றி, மழைக்கு குடையின்றி குளிருக்கு போதுமான கம்பளியின்றி கஷ்டப் பட வேண்டும். அதனால் அவர் இந்த தடவை கேலிதான் செய்கிறார். ஆனால் அவர் சொல்வது எப்போதும் உண்மையாகத் தான் இருந்திருக்கிறது. மேலும் இதில் என்ன தீங்கு இருக்கிறது. யாருக்குத் தெரியும்? இந்த கிழவன் ஒரு புதிரான ஆளாகத் தான் இருக்கிறார்! இன்னும் சிறிது தூரம் சென்றபின் அங்கே மிகப் பெரிய தங்க சுரங்கத்தைக் கண்டான். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இந்த காட்டில்தான் அவன் தன் வாழ்நாள் முழுவதும் விறகுவெட்டி கழித்து வந்தான். அந்த கிழவன் இந்த காட்டின் ஆரம்பத்தில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறான். ஆனால் அவனுக்குத் தெரிந்தது, தனக்குத் தெரியவில்லை. பை நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டுவந்தவன் ஞானியிடம் வந்து, "இனிமேலும் நீ ஒரு முட்டாள் என்று சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்." என்றான். அதற்கு அவர், "அப்படியேதான் தொடர்ந்து சொல்லுவேன். இது ஆரம்பம்தான். முடிவல்ல, அதனால் நாளை வா." என்றார். அவன், "என்னது தங்கம் கிடைத்தது முடிவல்லவா, ஆரம்பம்தானா! என வியந்தான். அதற்கு அவர், "ஆம், நாளை இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் அங்கே வைரங்களைக் காண்பாய். ஆனால் அதுவும் முடிவல்ல, ஆனால் நான் உனக்கு அதிகப்படியாக எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் சொல்லிவிட்டால் உன்னால் இன்று இரவு தூங்க முடியாது. அதனால் வீட்டிற்குப் போ. நாளை காலை முதலில் காட்டிற்குள் போய் வைரங்களை எடுத்துக் கொண்டு பின் வந்து என்னை சந்தி." என்றார். அவனால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. ஒரு ஏழை விறகுவெட்டி அவனுக்கு செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் வைர சுரங்கமும் கூட சொந்தமாகப் போகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவர் இதை ஆரம்பம் என்றல்லவோ கூறுகிறார், வைரத்திற்கு மேல் என்ன இருக்கமுடியும் என்பது அவனுக்கு புரியவில்லை. யோசித்து, யோசித்து பார்த்தபோதும் அவனுக்கு விளங்கவேயில்லை. அடுத்தநாள் காலை அதிகாலையிலேயே அவன் அங்கே வந்துவிட்டான். அவர் உறங்கிக் கொண்டு இருந்தார். அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவர் கண் விழித்து அவனைப் பார்த்தார். "வந்து விட்டாயா? எனக்குத் தெரியும். உன்னால் இரவு முழுவதும் உறங்கியிருக்க முடியாது. போய் அந்த வைரங்களை பார்த்துவிட்டு வா." என்றார். அவன் "வைரங்களை விட உயர்வானவையாக என்ன இருக்க முடியும் எனச் சொல்லுங்கள்." எனக் கேட்டான். அதற்கு அவர் முதலில் வைரங்கள், பின்பு அடுத்தது, ஒன்றன் பின் ஒன்று! இல்லாவிடில் உனக்கு பைத்தியம் பிடித்துவிடும்." என்றார். அவன் சென்று வைரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷத்தில் நடனமாடிக் கொண்டே வந்து அவரிடம், "நான் வைரங்களை கணடுவிட்டேன், இப்போது நீங்கள் என்னை முட்டாள் என சொல்லமுடியாது." என்றான். அவர் சிரித்துக் கொண்டே, "இன்னும் நீ முட்டாள்தான்." என்றார். அவன், "இதை நீங்கள் விளக்கிச் சொல்லாவிட்டால் நான் இங்கிருந்து போகப் போவதில்லை" என்றான். அதற்கு அவர், இந்த செம்பு, வெள்ளி, தங்க, வைர சுரங்கங்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைத் தேடி போவதில்லை. நான் அவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவைகளை விட மதிப்புள்ள விஷயம் சிறிது தூரத்தில், வெளியே காட்டின் உள்ளே அல்ல – உள்ளே சிறிது தூரத்தில் உள்ளது. அதை நான் கண்டு விட்டதால் வெளியே உள்ள வைரங்களைப் பற்றி கவலைப் படுவதில்லை. இப்போது நீதான் முடிவெடுக்க வேண்டு்ம். உன்னுடைய பயணம் இந்த வைரங்களோடு முடிவடைந்து விட்டது என்றால் என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் முட்டாள்தான். எனக்கு இந்த சுரங்கங்களைப் பற்றித் தெரியும், ஆனால் நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை. எவ்வளவுதூரம் வெளியே போனாலும் கிடைக்காத ஏதோ ஒன்று உள்ளே கிடைக்கிறது என்பதற்கு நானே சிறந்த சாட்சி. அது உன் உள்ளேதான் கிடைக்கும்," என்றார். அவன் வைரங்களை கீழே போட்டான். "நான் உங்கள் அருகே உட்காரப் போகிறேன். நான் ஒரு முட்டாள் என்ற உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளும்வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை." என்றான். அவன் ஒரு அப்பாவி, வெகுளித்தனமான விறகுவெட்டி. தகவல் அறிவுநிரம்பிய ஆசாமிகளுக்கு உள்ளே செல்வது கடினம். அந்த விறகு வெட்டிக்கு அது கடினம் அல்ல. விரைவிலேயே அவன் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு, ஒரு ஆனந்தத்திற்கு, ஒரு உள்ளார்ந்த மௌனத்திற்கு ஆளானான். ஞானி அவனை உலுக்கி, "இதுதான் அது! இனி நீ காட்டிற்குள் போக வேண்டிய அவசியம் இல்லை. நான் உன்னை சொன்ன முட்டாள் என்ற வார்த்தைகளை விலக்கிக் கொள்கிறேன். நீ ஒரு விவேகி. இப்போது நீ உன் கண்களைத் திறக்கலாம். இந்த உலகம் முன்பு எப்படி எந்த கலரில் இருந்ததோ, அப்படி இல்லாமல் புது விதமாக புது மாதிரியாக, தோன்றுவதைப் பார்க்கலாம். மக்கள் என்பு தோல் போர்த்திய உடம்பாக இல்லாமல், அவர்களும் ஒளிவிடும் ஆன்மீக உயிர்களாக ……… இந்த பிரபஞ்சத்தில் தன்னுணர்வு எனும் கடலாக பார்க்கலாம்." என்றார். விறகுவெட்டி கண்களைத் திறந்தான். அவன் ஞானியைப் பார்த்து, "நீங்கள் மிகவும் வித்தியாசமானவர். இதை நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும். நான் கிட்டதட்ட என் வாழ்நாள் முழுவதும் இந்த காட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர். "நான் சரியான தருணத்திற்கு காத்திருந்தேன். காலம் கனிவது என்பதன் பொருள், கேட்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். பயணம் மிகச் சிறியதுதான். ஆனால் ஒவ்வொரு அடியும் ஒரு சென்றடைதல்தான். அதையும் தாண்டி செல்லலாம் என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு அந்த சென்றடைதல் மிகவும் நிறைவானதாக இருக்கும். எனவே சரியான காலம் முக்கியம்" என்றார். |
ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு சிங்கமும், நரியும் வெகு நாளாக உணவின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தன. ஒரு நாள் இரண்டும் நேருக்கு நேர் சந்தித்து தத்தமது நிலைமையை புலம்பிக் கொண்டன. இறுதியாக இரண்டும் சேர்ந்து வேட்டையாடுவது என்ற முடிவுக்கு வந்தன. அதற்கு சிங்கம் ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தது. அதாவது, நரி பலமாக சத்தம் போட்டு கத்த வேண்டும். அந்த சத்தத்தைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மிரண்டு அங்கும் இங்கும் ஓடும். அப்படி ஓடும் மிருகங்களை சிங்கம் அடித்துக் கொல்ல வேண்டும். இந்த யோசனை நரிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உடனே ஒப்புக் கொண்டது. அதன்படி, நரி தனது பயங்கரமான குரலில் கத்தத் துவங்கியது. அதன் விசித்திரமான சத்தத்தைக் கேட்ட காட்டு விலங்குகள் அங்கும் இங்கும் வேகமாக ஓடின. அந்த சமயத்தில் சிங்கம் நின்றிருந்த பக்கம் வந்த விலங்குகளை எல்லாம் சிங்கம் வேட்டையாடிக் கொன்றது. ஒரு கட்டத்தில் நரி கத்துவதை நிறுத்தி விட்டு சிங்கத்தின் பக்கம் வந்தது. அங்கு வந்ததும் நரிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ஏனெனில் நிறைய மிருகங்கள் அங்கு இறந்து கிடந்தன. அதைப் பார்த்ததும் நரி, தான் அகோரமாகக் கத்தியதால்தான் இந்த மிருகங்கள் இறந்துவிட்டன என்று கர்வம் கொண்டது. சிங்கத்தின் அருகில் வந்து, என்னுடைய வேலையைப் பற்றி என்ன நினைக்கிறாய்.. நான் கத்தியே இத்தனை மிருகங்களை கொன்றுவிட்டேன் பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டது. அதற்கு சிங்கம்.. ஆமாம்.. உன் வேலையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? நீதான் கத்துகிறாய் என்று தெரியாமல் இருந்திருந்தால் ஒரு வேளை நானும் பயத்திலேயே செத்துப் போயிருப்பேன் என்று பாராட்டியது. |
சக்கரவர்த்தி அக்பர் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்! அவர் எப்போது உற்சாகத்துடன் இருப்பார், எப்போது எரிந்து விழுவார் என்று சொல்ல முடியாது. பல சமயங்களில், அவரையே கேலி செய்வதுபோல் அமைந்துள்ள நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டும் கோபம் அடையாமல் சிரிக்கவும் செய்வார். ஆனால், சில சமயங்களில் சில சாதாரண துணுக்குகள் கூட அவரை கோபமுறச் செய்யும். தர்பாரிலுள்ள அனைவருக்கும் அக்பரின் அடிக்கடி மாறுபடும் மனநிலையைப் பற்றித் தெரியும். அக்பரின் பேகத்திற்கும் இது தெரியும். ஆனால், பேகம் அதைப் பொருட்படுத்தாமல் பல சமயங்களில் அவரைக் கிண்டல் செய்வதுண்டு. சிலசமயம் அவளுடைய கேலிப் பேச்சினால் கோபமடைந்தாலும், சக்கரவர்த்தி உடனே அவளிடம் சாந்தமாகி விடுவார் என்ற அனுபவம்தான் காரணம்! ஒருநாள் மாலை நேரம், அக்பரும் பேகமும் அந்தப்புரத்தில் அருகருகே அமர்ந்திருந்தனர். சாளரத்தின் வழியே வீசிய தென்றல் காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தது. அதை அக்பர் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைக் கிண்டல் செய்ய வேண்டுமென்று பேகத்திற்குத் தோன்றியது. "ஏது! மல்லிகை மணம் உங்களை மயக்குகிறதோ? என்னிடம் இல்லாதது மல்லிகையில் அப்படி என்ன இருக்கிறது?" என்று வாயைக் கிண்டினாள். "ஆம்! மல்லிகை மணம் என்னை மயக்குகிறது. அதிலுள்ள மயக்கம் உன்னிடம் இல்லை!" என்றார் திடீரென எரிச்சலுற்ற அக்பர். "என்னைத்தான் நேசிக்கிறீர்கள் என்று நினைத்தேன். என்னைவிட மல்லிகை மீதுதான் மோகமா?" என்று பேகம் மீண்டும் வம்புக்கிழுத்தாள். "ஆமாம்! உன் மீது மோகம் இருக்கவேண்டுமென்று என்ன அவசியம்?" என்றார் மேலும் கோபமுற்ற அக்பர். "மனைவி என்ற முறையில் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க எனக்கு உரிமை உண்டு!" என்று பதிலளித்தார் பேகம். "அந்த உரிமை யாருக்கும் கிடையாது. நான் மற்றவர்களைப் போல் சாதாரண மனிதனில்லை. ஏனெனில் நான் சக்கரவர்த்தி!" என்று உரக்க முழங்கினார் அக்பர். "என்ன? எனக்குக்கூட கிடையாதா? நான் என்ன சாதாரணப் பெண்ணா?" என்றார் பேகம். அக்பர் தான் கேலியாகக் கேட்டதில் கோபமடைந்து விட்டார் என்று உணர்ந்த அவளுடைய கண்கள் பனித்தன. "அந்த ஸ்தானத்தை நீ இழக்கும் வேளை நெருங்கிவிட்டது!" என்று அக்பர் ஒரு குண்டைத் தூக்கிப் போட, அதை சற்றும் எதிர்பாராத பேகம் அழுதே விட்டாள். ஆனால், அவள் கண்ணிரைப் பொருட்படுத்தாத அக்பர், "என்னுடன் உனக்கான உறவு இன்றுடன் முடிந்தது. நீ உன் பிறந்தவீட்டுக்கு நாளைக்கே போய்விடு! உனக்குப் பிடித்த பொருள்களை நீ எடுத்துச் செல்லலாம்" என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறி விட்டார். தன்னுடைய விளையாட்டு இப்படி வினையாகும் என்று சற்றும் எதிர்பாராத பேகம் துடிதுடித்துப் போனாள். ஏதோ கோபத்தில் கூறிவிட்டாரென்றும், விரைவில் அவர் கோபம் தணிந்து விடுமென்றும் தன்னை சமாதானம் செய்து கொண்டாள். ஆனால், அன்றிரவு அக்பர் அவளைத்தேடி அந்தப்புரத்திற்கு வரவேயில்லை. ‘ஐயோ, விஷயம் விபரீதமாகி விட்டதே!" என்று பதைபதைத்துப் போன பேகம், மறுநாள் தன் தாதி மூலம் "நான் உங்களுடைய மனத்தை என் கேலிப்பேச்சினால் புண்படுத்தியதற்கு மிகவும் வருந்துகிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்" என்று கடிதம் எழுதிஅனுப்பினாள். ஆனால், அக்பர் "உங்கள் பேகத்தைப் பெட்டி, படுக்கைகளுடன் நாளையே கிளம்பச் சொல்!" என்று இரக்கமின்றி பதில் சொல்லி அனுப்பினார். அதைக்கேட்டு இடி விழுந்தது போலான பேகம், அளவற்ற கோபமடைந்தத் தன் கணவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று வழிதெரியாமல் தவித்தாள். கடைசியில் அவளுக்கு பீர்பால் ஞாபகம்வர, அவரை உடனே வரவழைத்தாள். உடனே பேகத்தைத் தேடிவந்த பீர்பால் அவள் முன்னிலையில் வணக்கம் தெரிவித்தபின் தன்னை அழைத்தக் காரணம் கேட்க, பேகம் கண்களில் நீர் தளும்ப நடந்த விஷயத்தைக் கூறியவுடன் "நான் சொல்வதை அப்படியே செய்யுங்கள்! உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும்!" என்று பீர்பால் பேகத்திற்கு தைரியம் கூறிவிட்டு வீடு திரும்பினார். உடனே பீர்பாலின் யோசனைப்படி, தன் பொருள்களை எடுத்துப் பெட்டியில்வைத்துக் கொள்ளத் தொடங்கினாள். தன்னுடையது மட்டுமின்றி, அக்பரின்பொருள்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். பிறகு தன் தாதி மூலம்அக்பருக்கு, "பிரபு! நான் பிறந்த வீடு செல்லத் தயாராகி விட்டேன். ஆனால்,போவதற்கு முன் உங்களை ஒரேயோரு முறை சந்தித்து மன்னிப்புக் கோரவிரும்புகிறேன்" என்று செய்தி அனுப்பினாள். அதற்கு சம்மதித்த அக்பர், ஒரு மணி நேரம் சென்றபின் அந்தப்புரத்தை அடைந்தார். அவரை வாயிலில் நின்று புன்னகையுடன் வரவேற்ற பேகம் அவருக்கு இருக்கையளித்து உபசரித்தாள். ஆனால், அவளுடைய உபசரிப்பை அலட்சியம் செய்த அக்பர், கடுமையான குரலில் "நீ எப்போது போகப் போகிறாய் என்று மட்டும் சொல்!" என்றார். "இதோ கிளம்பிக் கொண்டே இருக்கிறேன். ஆனால், போவதற்கு முன், நான் இதுவரை உங்கள் மனத்தைப் புண்படுத்திய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மன்னிப்புக் கேட்கிறேன். மன்னித்தேன் என்று உங்கள் வாயினால் கேட்ட பின்னரே, என்னால் நிம்மதியாகப் பிறந்த வீடு செல்ல முடியும்" என்று பேகம் உருகினாள். "சரி, மன்னித்து விட்டேன்! இப்போது புறப்படுகிறாயா?" என்று வேண்டா வெறுப்புடன் கூறிய அக்பர் எழுந்து செல்லத் தயாரானார். உடனே அவரை அமரச் சொன்ன பேகம், "தயவு செய்து நான் அன்புடன் அளிக்கும் இந்தப் பழச்சாறை அருந்துங்கள்" என்று ஒரு கோப்பையை நீட்டிய பின், "இதுதான் நான் உங்களுக்கு அளிக்கப் போகும் கடைசி பானம்!" என்று விம்மியழ, அக்பரும் சற்றே மனமிளகி, அந்தப் பழச்சாறைக் குடித்தார். குடித்த பிறகு பேகத்தை நோக்கி, "உனக்கு மிகவும் பிடித்தமான பொருள்கள் எதுவானாலும் நீ இங்கிருந்து எடுத்துச் செல்ல உனக்கு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டேன். நான் வருகிறேன்" என்று விறைப்புடன் அக்பர் கூற, பேகத்தின் இதழ்களில் ஒரு விஷமப் புன்னகை அரும்பியது. பிறகு, எழுந்து இருந்து செல்ல முற்பட்ட அக்பருக்கு திடீரென உடலை என்னவோ செய்ய, "எனக்கு ஒரே தூக்கமாக வருகிறது" என்று தள்ளாடினார். உடனே விரைந்து சென்று அவரைத் தாங்கிப் பிடித்த பேகம், "ஐயோ! ஏன் இப்படித் தடுமாறுகிறீர்கள்? சற்று நேரம் உட்கார்ந்து விட்டுச் செல்லுங்கள்" என்று அவரைக் கையைப் பிடித்து அழைத்து வந்து படுக்கையில் உட்காரச் செய்தாள். அடுத்தகணம் தன்னை அறியாமல் படுக்கையில் சாய்ந்த அக்பர், அப்படியே தூங்கி விட்டார். தான் பழச்சாறில் கலந்த மருந்து வேலை செய்வதைக் கண்டு மகிழ்ந்த பேகம், உடனே தன் கைகளைத் தட்டி சில காவலர்களை அழைத்து, அக்பரை படுக்கையோடு சேர்த்து எடுத்துச் சென்று பல்லக்கில் வைக்கும்படி உத்தரவிட்டாள். அப்படியே அவர்கள் செய்ய, உடனே பேகம் தங்கள் இருவரது உடைமைகளையும் மற்றொரு பல்லக்கில் ஏற்றித் தானும் ஏறிக்கொள்ள, உடனே இரண்டு பல்லக்குகளும் ஆள்களால் சுமக்கப்பட்டு, பேகத்தின் பிறந்த வீட்டை அடைந்தன. தன் வீட்டையடைந்ததும், பேகம் அங்கிருந்த பணியாட்களுக்கு இட்டக் கட்டளையின்படி, அவர்கள் அக்பரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு வந்து படுக்கையறையில் கிடத்தினார்கள். "ஐயோ! ஏன் இப்படி சக்கரவர்த்தியை தூக்கி வருகின்றனர்? அவருக்கு உடல் சரியில்லையா?" என்று பேகத்தின் பெற்றோர் பதறிப்போக, "ஒன்றுமில்லை. கடந்த சிலநாள்களாக இருந்த மிக அதிகமான வேலையினால், பல்லக்கில் வரும்போது தூங்கிக் கொண்டே வந்தார். உண்மையில் ஒரு நாள் ஒய்வு எடுக்கவே அவர் இங்கு வந்துள்ளார்" என்று பேகம் பதிலளித்தாள். ஒரு மணி நேரம் கழித்து கண்களைத் திறந்த அக்பர், பேகத்தை நோக்கி, "நான் எங்கிருக்கிறேன்?" என்று கேட்டார். "நீங்கள் என் பிறந்த வீட்டில்தான் இருக்கிறீர்கள்" என்று பேகம் புன்னகையுடன் கூற, அக்பருக்கு சுரீர் என்று கோபம் தலைக்கேறியது. "நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னை இங்கு தூக்கி வர உனக்கு யார் அனுமதி கொடுத்தது?" என்று அவர் சீறினார். "நீங்கள் தான் பிரபு!" என்று அவர் சீறினார். "என்ன உளறுகிறாய்? நான் எப்போது அனுமதி தந்தேன்?" என்று அக்பர் கேட்க, அதற்கு பேகம், "உனக்குப் பிடித்த பொருள் எதுவானாலும் நீ இங்கிருந்து அதை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்ததே நீங்கள்தான்! எனக்கு உலகிலேயே மிகவும் பிடித்த பொருள் நீங்கள்தான்! அதனால் உங்களை என்னுடன் எடுத்து வந்ததில் என்ன தவறு?" என்று சாமர்த்தியமாக மடக்கினாள். "ஓ!" என்ற அக்பர் திடீரென வாய்விட்டு சிரித்தார். "நீ மிகவும் சாமர்த்தியமாக செயற்பட்டு இருக்கிறாய். சரி வா! நாம் நம் அரண்மனைக்குப் போவோம்!" என்ற அக்பர், தொடர்ந்து, "அதிருக்கட்டும்! உனக்கு இந்த அபாரமான யோசனையை சொல்லிக் கொடுத்தது யார்?" என்று கேட்டார். அதற்கு பேகம் "நீங்கள்தான் மிகவும் புத்திசாலியாயிற்றே! கண்டுபிடியுங்களேன்!" என்றாள் . "அது நிச்சயம் பீர்பாலாகத் தானிருக்கும்" என்றார் அக்பர். |
ஒரு முறை விவசாயி ஒருவர் தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தார். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் கழுதையையும், மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே போனார்கள். செல்லும்போது அதைப்பார்த்த வழிப் போக்கர் ஒருவர் இவர்களைப் பார்த்துச் சிரித்தார். பிறகு, ‘கழுதை சும்மாதானே செல்கிறது. யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே’ என்றார். அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார். சிறிது தூரம் சென்றதும் எதிரே வந்த ஒருவர், ‘ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு, நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா?’ என விவசாயி மகனைப் பார்த்து கேட்டார். உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான். தந்தையும் அவ்வாறே செய்தார். இப்படியாக இன்னும் சிறிது தூரம் பயணித்த பிறகு, இன்னொருத்தர் தந்தையை பார்த்து கடிந்து கொண்டார். ‘ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா?’ என கேட்டார். தந்தையும் மகனும் ஆளாளுக்கு இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இருவருமே அந்த கழுதையிம் முதுகில் ஏறிச் செல்வோம் என ஏறிக் கொண்டனர். சிறிது தொலைவு சென்றதும், இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர், ‘அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள். இவர்களுக்கு இரக்கமே இல்லையா?’ என எள்ளி நகையாடினர். அவர்கள் பேச்சைக் கேட்டவுடன் விவசாயிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. உடனே இருவரும் கழுதையின் மீதிருந்து கீழே குதித்தார்கள். மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும், கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்வது தான் சிறந்தது என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தனர். மிகவும் சிரமப்பட்டுக் கழுதையின் கால்களைக் கட்டியபிறகு, ஒரு கொம்பில் அதைக் கட்டி அதைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர். கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீதிருந்த ஒரு பாலத்தை அவர்கள் கடக்க வேண்டியிருந்தது. விவசாயியும் அவன் மகனும் மிகவும் சிரமப்பட்டுக் கழுதையைத் தூக்கிக் கொண்டு வரும் வினோதக் காட்சியை, ஆற்றுக்கு அக்கரையில் இருந்த குழந்தைகள் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். பெரிய சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன கழுதை பெரிதாக துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. அதைத் தூக்கிக் கொண்டு வந்த தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவியது. அந்தப் பரிதாபமான கழுதை ஆற்று நீரில் தூக்கி எறியப்பட்டது! கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! அது இறக்க நேரிட்டது. இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் இறந்து போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. எல்லோரையம் திருப்திப் படுத்த முடியாது. சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.
|
அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன. அந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன. முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்" என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின. ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன. விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும். |
சைனாவின் சூஷுவானில் பிறந்த சா'ன் ஆசிரியர் மாசூ தன்னுடைய சிறு வயதில் அனுபவமற்ற இளவயது துறவிகளுடன் புத்த விகாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வயதில் தன்னையும் துறவறத்தில் ஈடுபடுத்திக் கொண்டான். நான்யூவேஷான் மலையிலிருந்த பான் ஜோ சூ கோயிலின் மாண்புமிக்க தலைமைக் குருவாக இருந்தவர் ஹுவாய் ஜாங், அங்கு சா'னினை கற்பதற்காக வந்திருந்த மாசூவினைப் பார்த்தவுடன் தன்னொளி பெறுவதற்கு தகுதியானவனாக இருந்ததைக் கண்டார். ஹுவாய் ஜாங் மாசூவினைப் பார்த்து, "எதற்காக உட்கார்ந்த நிலையில் செய்யும் சா'ன் தியானத்தினைப் பயில வேண்டும் என்கிறாய்?" என்று கேட்டார். "புத்தாவாக மாறுவதற்கு" என்று பதில் வந்தது. உடனே பக்கத்தில் இருந்த செங்கல்லினை எடுத்து தேய்க்கலானார். இளம் துறவியான மாசூ, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான். "இந்த செங்கல்லினை கண்ணாடியாக மாற்றுவதற்காக வழவழப்பாக தேய்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். "செங்கல்லினை தேய்ப்பதால் மட்டுமே எப்படி கண்ணாடியாக மாற்ற முடியும்?" என்றான் மாசூ. "நீ உட்கார்ந்த சா'ன் தியானத்தினை கற்பதால் மட்டுமே புத்தாவாக மாற முடியும் என்கிற போது நான் ஏன் செங்கல்லினை தேய்த்து கண்ணாடியாக மாற்ற முடியாது?" என்று கேட்டார் குரு ஹுவாய் ஜாங். கொஞ்சம் நேரம் குரு ஹுவாய் ஜாங் கூறியதை யோசித்துப் பார்த்த மாசூ, "ஆசிரியரே, என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்" என்றான். "நீ ஓட்டிச் செல்லும் கட்டை வண்டி தீடிரென நகராமல் நின்று விட்டது என்று வைத்துக் கொள்வோம்" என்ற ஹுவாய் ஜாங், "அந்த சமயத்தில் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டவர், பின்பு தொடர்ந்து, "உன்னுடைய எருதினை ஓட்டிச் செல்வாயா அல்லது கட்டை வண்டியை ஓட்டிச் செல்வாயா?" என்ற கேள்வியினைத் தொடுத்தார். மாசூவினால் எந்த பதிலினையும் சொல்ல முடியவில்லை. மேலும் தொடர்ந்த குரு "நீ உட்கார்ந்த நிலையில் சா'ன் தியானத்தினைக் கற்க விரும்புகிறாயா அல்லது 'உட்கார்ந்த புத்தா'வினையைக் கற்க விரும்புகிறாயா?. உனது விருப்பம் என்ன?" என்று கேட்டார். "நீ முதலில் கூறியதைக் கற்க விரும்பினால் அதனை உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ அல்லது தூங்கிக் கொண்டேக் கூட பயிற்சி செய்யலாம். நீ இரண்டாவதாக கூறியதைக் கற்க விரும்பினால் புத்தருக்கு என குறிப்பிட்ட தோற்றநிலை இல்லை. உண்மையில் புத்தருடைக் கோட்பாடுகள் சமயக் கொள்கைகள் அல்ல. அதனால் அவருடைக் கருத்துக்கள் தத்துவமும் அல்ல. சித்தாந்தமும் அல்ல. உண்மையான வழியினை அடைவதற்கு உட்கார்ந்த சா'ன் தியானத்தினைப் பின்பற்றுவது புத்தாவை படுகொலை செய்வதற்கு சமம். அதனால் உன்னால் என்றும் உணமை வழியினை அடைய முடியாது." என்றார். குரு ஹுவாய் ஜாங் கூறியதைக் கேட்ட மாசூ தன்னுடைய உடலில் விசித்திரமான ஒளி புத்தத் தன்மையுடன் புகுவதைப் போல் உணர்ந்தான். மரியாதையுடன் கூறிய வணக்கத்தினைத் தெரிவித்து தன்னை அவருடைய சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டினான்.
|
காவல் நிலையத்தில் நடந்த பிரியாவிடை நிகழ்ச்சிகள் முருகேசனின் உதட்டில் புன்னகையை நிரப்பியிருந்தன. உண்மையிலேயே, இத்தனை வருடங்கள் நேர்மையாகப் பணியாற்றியவர் இன்ஸ்பெக்டர் முருகேசன். இன்றோடு அவர் பணி முடிகிறது. பஜாஜ் பல்சரில் 60 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருந்தார். முருகேசனுக்குப் பின்னால், மாலையுடன் முன்னாள் எஸ்.ஐ., பாண்டியன் உட்கார்ந்து இருந்தார். பாண்டியன் முருகேசனைவிட இரண்டு வயது மூத்தவர். முன்னரே பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இருவரும் நீண்டநாள் நண்பர்கள். "ஹூம்..." என்ற பெருமூச்சுடன் பாண்டியன் பேச ஆரம்பித்தார். "என்ன, முருகா... இனிமே காலைலயிருந்து சாயந்தரம் வரைக்கும் சும்மாவேதான் இருக்கணும். ஒன்னு பண்ணு! பேசாம நம்ம 'யூனியன் கிளப்'புல வந்து சேர்ந்துடு. நம்மள மாதிரி ரிட்டயர்டு கேஸ•க ஒரு நாலஞ்சு அங்க இருக்கு. காலைல ஆறு மணிக்கு ஜாகிங்... ஏழு மணிக்கு பேட்மிட்டன்... எட்டு மணிக்கு வீட்டுல மருமக கையால சாப்பாடு, பத்து மணிக்கு திரும்ப 'கிளப்'புக்கு வந்துடு. பகல் பூராம் கேரம் போடு... ரம்மி... நல்லா பொழுதுபோகும். என்ன சரியா?" "சான்ஸே இல்ல அண்ணாச்சி... சும்மா ஒக்காந்து அரட்டை அடிக்குறது, நேரத்தப் போக்குறதெல்லாம் எனக்குப் புடிக்காது, என் போலீஸ் வேலைக்குத்தான் ரிட்டயர்டு. வேற ஏதாவது வேல இருந்துக்கிட்டேதான் இருக்கும்... பண்ணிக்கிட்டேதான் இருப்பேன்..." என்றார் முருகேசன். பேசிக்கொண்டே வந்த முருகேசன், கடைசி நேரத்தில் டிராபிக்கின் சிவப்பு விளக்கைப் பார்க்க, தடுமாறி நின்றார் முன்னால் நின்று கொண்டிருந்த டூவீலரில் லேசாக மோதி நின்றது பைக்... "மன்னிச்சுக்கோ தம்பி" என்றார் முருகேசன். இடிபட்டவனது டூவீலர் புத்தம் புதிது போலும். மிகவும் கோபமாக கத்த ஆரம்பித்தான். "கண்ண எங்கய்ய" வச்சிருக்க... வயசாயிருச்சுன்னா கண்ணாடி போட வேண்டியதுதானே... ஒழுங்காப் போயா ரோட்டுல" என்றான். அங்கிருந்த டிராபிக் கான்ஸ்டபுள் வேகமாக வந்தான். முருகேசனுக்கு 'சல்யூட்' அடித்துவிட்டு, இடிபட்டவனிடம் திரும்பினான். "டேய் வண்டில ஏதும் உடையலைல பேசாமாகப் போ" என்று அதட்டினான். பச்சை விளக்கு விழ இடிபட்டவன் பேசாமல் முறைத்துக் கொண்டே சென்று விட்டான். டிராபிக் காண்ஸ்டபுள், முருகேசன் ஓய்வு பெற்றதைப் பற்றி விசாரித்து, வழியனுப்பினான். "பாத்திங்களா அண்ணாச்சி... ரிட்டயர்டு ஆனாலும் அந்த மரியாத குறையுதான்னு... நான் எப்பவும் இப்படியேதான் இருப்பேன். நீங்க வேணாப் பாருங்க..." என்றார் முருகேசன். வீட்டிற்குள் முருகேசன் நுழைந்ததும், மீண்டும் மாலை... மீண்டும் வாழ்த்து... முருகேசனின் மகன் ரமேஷ் அருகில் வந்தான். "அப்பா... இங்க பாருங்க...இனிமே நீங்க எந்த வேலையும் செய்யக்கூடாது... (முருகேசன் மறுத்துப் பேச வர, அவரைப் பேசவிடாமல் நிறுத்தினான்.) ம்.... எதுவும் பேசக் கூடாது. நல்லா ரெஸ்ட் எடுக்கணும்... வீட்டு வேல எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். உங்க பைக்க மட்டும் எடுத்துக்கிறேன். ஓகேவா?" கடைசி வார்த்தைகளில் அதிர்ச்சி அடைந்தார் முருகேசன். கையிலிருந்த 'பைக்' சாவியை வாங்கிக் கொண்டு ரமேஷ் கிளம்பினான். அவரால் எதையும் பேச முடியவில்லை. மறுநாள், காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, ஈஸிச் சேரில் அமர்ந்து கொண்டு செய்தித் தாளுக்காகக் காத்திருந்தார். காலை ஏழு மணிவரை பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். வீட்டில் மற்ற எல்லோரும் வேலைக்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். இவரால் அதற்கு மேல் பொறுமையாக அமர்ந்திருக்க முடியவில்லை. எழுந்து ஏதாவது வேலை இருக்கிறதா என்று அங்குமிங்கும் பார்த்தார். செடிகளுக்குத் தண்ணீர் இன்னும் ஊற்றப்படாமல் இருந்தது. கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு குடத்தில் தண்ணீர் தூக்கப் போனார். அவசரமாக கிளம்பும் நேரத்தில் ஏதாவது வாக்குவாதம் வருவது இயல்பு. அந்தக் கோபத்தில் ரமேஷ், வெறுப்பாக வந்து கொண்டிருந்தபோது, தண்ணீர் குடத்தோடு வந்த முருகேசன் அவன் மீது இடித்து விட்டார். "ஏம்ப்பா... பேசாம ஒக்கார வேண்டியதுதான? கண்ணுமண்ணு தெரியாம வந்து மோதுறீங்க" என்றான் ரமேஷ். முருகேசன் அதிர்ந்து போனார். டிராபிக் சிக்னலில் இடிபட்ட இளைஞன் திட்டியவார்த்தைகள் ஒருமுறை நினைவிற்கு வந்தது. தனக்கு, 'எது நடக்கக் கூடாது' என நினைத்தாரோ அது நடக்கத் தொடங்கியிருப்பதாகத் தோன்றியது அவருக்கு. காலை பத்துமணி, இருப்பு கொள்ளாமல் முருகேசன் எழுந்து சாலையில் நடக்கத் தொடங்கினார். அந்த டிராபிக் சிக்னலின் கான்ஸ்டபுல் தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். அவன் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவனுக்கு முன்னால் நடந்து சென்றார். கான்ஸ்டபுள் அவரைப் பார்த்து ஒரு சிறிய புன்னகை செய்துவிட்டு, மீண்டும் வேலையில் ஈடுபடத் தொடங்கினான். அந்தப் புன்னகையில் 'நடிப்பு' இருப்பதுபோன்று அவருக்குத் தோன்றியது. பாண்டியனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது முருகேசனுக்கு. 'யூனியன் கிளப்' புக்கு சென்றார். பாண்டியன் கேரம் போர்டுக்கு முன்னால் அமர்ந்திருந்தார். முருகேசனைப் பார்த்ததும் எழுந்து வந்தார். அவரை அழைத்துச் சென்று தன் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர்கள் அனைவருமே பணி ஓய்வு பெற்றவர்களாகவே இருந்தனர். முருகேசன் மெதுவாகக் கேட்டார், "ஆமா... இங்க மெம்பராவதற்கு எவ்வளவு கட்டணும்". எதார்த்தமாகக் கேட்பது போல நடித்தார். பாண்டியன் அவரைக் குத்திக்காட்ட விரும்பவில்லை. அவருக்குத் தெரியாதா என்ன நடந்திருக்கும் என்று! அவரும் ஓய்வு பெற்றவர் தானே! காற்றடித்த போது, மரம் ஒன்றிலிருந்து புதிதாக ஒரு சருகு உதிர்ந்து மண்ணில் விழுந்தது. அங்கே ஏற்கனவே மண்ணோடு பதிந்த நிலையில் நிறைய சருகுகள்... புதிய சருகு விறைப்பாக நின்றது. காற்றுக்கு அங்குமிங்கும் ஓடியது. ஒரு காலடி வந்து அதை மிதித்தபோது அதுவும் மண்ணோடு பதிந்தது.
|
உடனே கிழவியை நோக்கி, "அம்மா! உன் பை என் இடமே இருக்கட்டும். நீ சொல்வது உண்மையானால் உன் பொற்காசுகள் உனக்குத் திரும்பக் கிடைக்கும்" என்றார். "அந்தக் கடவுள் சத்தியமாக நான் சொன்னது உண்மை!" என்று ஆணித்தரமாகக் கிழவி கூற, "அம்மா! நாளை மறுநாள் வா! அதற்குள் உண்மை புலனாகும்" என்றார் அக்பர். கிழவியும் சலாம் செய்துவிட்டுச் சென்றாள். அதன்பிறகு தர்பார் கலைந்தது. அனைவரும் எழுந்து செல்ல, பீர்பால் பையைக் கையில் ஏந்திக் கொண்டு தீவிரமாக யோசித்தவாறே சென்றார். பீர்பால் மீது பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தீர்க்க முடியாமல் பீர்பால் தோல்வியடைவார் என்றும், அதன்பிறகு அவர் தலை நிமிர்ந்து நடக்க முடியாதென்றும் பீர்பாலை கேலி செய்தவாறு சென்றனர். அவர்கள் தன்னை ஏளனம் செய்வதைப் பொருட்படுத்தாமல் பீர்பால் வீட்டுக்குச் சென்றார். கிழவி கூறியது உண்மை என்று அவருடைய உள்ளுணர்வு கூறினாலும், பையில் இருந்து குல்ஷா எப்படி பொற்காசுகளைத் திருடியிருக்க முடியும் என்பதை மட்டும் ஊகிக்கவே முடியவில்லை. தன் மனைவி தன்னை புன்னகையுடன் வரவேற்றதைக் கூட அவர் கவனிக்கவில்லை. மௌனமாக சாப்பிட உட்கார்ந்தார். கைகள் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாலும், மனம் அந்த வழக்கைப் பற்றி யோசிப்பதிலேயே விரமாக ஆழ்ந்து இருந்தது. திடீரென பீர்பாலுக்கு ஒரு யோசனை உதயமாயிற்று. உடனே தன் படுக்கை அறைக்குச் சென்ற அவர், விலையுர்ந்த படுக்கை விரிப்பு ஒன்றை எடுத்து, அதைக் கத்திரிக்கோலால் சரசரவெனக் கிழித்தார். அதைப்பார்த்த அவர் மனைவி ஓடி வந்து "ஐயோ, உங்களுக்குப் பைத்தியாமா? என்ன காரியம் செய்கிறீர்கள்?" என்று கூச்சலிட்டாள். "உஷ்" என்று அவளை அடக்கிவிட்டுத் தன் வேலையாளை அழைத்த பீர்பால், "இந்த படுக்கை விரிப்பு கிழிந்ததே தெரியாமல் அருமையாகத் தைக்க வேண்டும். அப்படிப்பட்ட திறமையான தையற்காரர் யாராவது தெரியுமா?" என்று கேட்க அவன், "ஐயா! மன்சூர் அலி எனும் தையற்காரன் ஒரு மேதாவி! அவனிடம் கொடுத்தால், கிழிந்ததே தெரியாமல் தைத்து விடுவான்" என்றான். உடனே அவனிடம் பீர்பால் அதைக் கொடுத்தனுப்பினார். மறுநாள் மாலை, வேலைக்காரன் கொடுத்த வேலையைக் கச்சிதமாக முடித்து விட்டுத் திரும்பினான். படுக்கைவிரிப்பைப் புரட்டிப் பார்த்ததும் அது முன்பு கிழிந்திருந்த இடத்தை பீர்பாலினால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நன்றாக மன்சூர் அலி தைத்திருந்தான். "ஆகா! மிகப் பிரமாதமாகத் தைத்து இருக்கிறானே! இந்த மன்சூர் அலியை நேரில் சந்தித்துப் பாராட்ட விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு, பீர்பால் தன் வேலைக்காரனுடன் மன்சூர் அலியின் கடைக்குச் சென்றார். "அடடா! பிரபு! நீங்களா! சொல்லிஇருந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேனே!" என்று மன்சூர் அலி ஓடி வந்தான். "மன்சூர்! உன் கடைக்கு வந்து உன்னை நேரிலே பாராட்ட வேண்டும்என்று தோன்றியது. அதனால்தான் நானே இங்கு வந்து விட்டேன்" என்றார் பீர்பால். உங்கள் பாதம் என் கடையில் பட நான் என்ன பாக்கியம் செய்து இருக்கிறேன்!" என்று மன்சூர் உணர்ச்சிவசப்பட்டான். "இந்தா! நீ செய்த அருமையான வேலைக்குக் கூலி!" என்று பீர்பால் ஒரு தங்கக் காசைக் கொடுத்தார். "இருங்கள்! மீதிப்பணத்தைத் தருகிறேன்" என்று மன்சூர் தன் சட்டைப் பையைத் துழாவ, உடனே பீர்பால் அவனைத் தடுத்தப்படி "அவசியமில்லை நீயே வைத்துக் கொள் என்று அடுத்துக் கிழவியின் பையைக் காட்டினார். "மன்சூர்! இந்தப் பையை சமீபத்தில் நீ தையல் போட்டாயா?" என்று பீர்பால் கேட்டதும், அவன் அதை அடையாளம் கண்டு கொண்டான். "ஆம், பிரபு!" என்ற மன்சூர், பையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, "இந்த இடம் கிழிந்திருந்தது. இதைத் தையல் போட்டு சரி செய்தேன். ஒரு மாதம் முன்பாக குல்ஷா என்னிடம் இந்த வேலையைச் செய்யச் சொன்னார்" என்றான். பீர்பாலுக்குத் தேவையான தகவல் கிடைத்துவிட, அவர் மன்சூரிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறுநாள் தர்பார் கூடியது. பீர்பால் ஏற்பாடு செய்திருந்தபடி, கிழவியும், குல்ஷாவும் தர்பாருக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அக்பர் பீர்பாலை நோக்கி, "இந்தக் கிழவி கூறியது உண்மைதானா இல்லை வீணாக குல்ஷா மீது பழி சுமத்துகிறாளா?" என்று கேட்டார். "கிழவி கூறியதுதான் உண்மை" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய பீர்பால் தான் உண்மையைக் கண்டறிந்த விதத்தை விளக்கினார். அதைக் கேட்ட குல்ஷாவின் முகம் பீதியினால் வெளுத்துக் கை, கால்கள் நடுங்கின. கோபமடைந்த அக்பர், "குல்ஷா! பீர்பால் கூறுவது உண்மைதானா மோசடி செய்தது நீதானா? பொய் சொன்னால் உன்னை இங்கேயே கொன்று விடுவேன்" என்று சீற, குல்ஷா, "பிரபு! பீர்பால் கூறுவது உண்மையே! பேராசை என் கண்களை மறைத்துவிட்டது" என்று அழுதான். கிழவிக்கு அவள் பொற்காசுகள் திரும்பக் கிடைத்தன. பாவம், குல்ஷாவுக்குச் சிறையில் கம்பி எண்ண நேரிட்டது. பீர்பாலின் புத்திசாலித்தனத்தைக் கண்ட அக்பர், அவருக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். அனைவரும் வியந்து பாராட்டினர். |
மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில்
பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக்
கொண்டிருந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய
விஷயமாகக் கருதவில்லை. தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால்
யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை. அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப்
பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி " நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப்
பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார். " ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை
விதிப்பார்" என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள். நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால்
முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து
ஒரு
பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர். செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு
பிறப்பித்தார். முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார். " என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல்
எங்கிருந்து வந்தது?" என்று கோபத்துடன் கேட்டார். முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி " மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம்
வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு
அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற
வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண்
யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை
கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு
விடக் கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம் " என்றார். " என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம்
விளையாடுகிறாய்?" என்று மன்னர் கோபத்துடன் கேட்டார். மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து
தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு
என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார். மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச்
சென்றார். வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான
சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம்
என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட
தந்திரத்தையும் புரிந்து கொண்டார். மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு
உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்திரவிட்டார் பிறகு
யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்திரவிட்டார். முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்தினார்கள். |
மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி “வீரனே எங்கு வந்தாய்?” என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது” என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, “இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்” என்றான். “எப்படி உன்னை நம்புவது?” என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், “சரி செய் பார்க்கலாம்” என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார். வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது. வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், “சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?” என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் “என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்” என்றான். “இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே” என்று கிருஷ்ணர் யோசித்தார். “வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது” என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். ‘இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்” என்றார் கிருஷ்ணர். ‘யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்” என்றான் வீரன். கிருஷ்ணர் “வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்” என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் “தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்” என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர். நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.
|
நண்பர் ஒருவர் கூறியதன் பொருட்டு அந்த மிகப் பாழடைந்த மண்டபத்தினைக் காணும் ஆவல் ஏற்பட்டது. பழைய மன்னர்கள் காலத்து அரண்மனை அல்லது பழைய மன்னர்கள் குடியிருந்த வீடு எனக் கூறலாம். தஞ்சாவூர்ல உள்ள மக்கள் வரலாறு குறித்த பல விஷயங்களை வாய்மொழிச் செய்தியாக அவ்வப்போது கூறிச் செல்கின்றனர். இது அவர்களின் இயல்பான வாழ்வுடன் ஒன்றியதொரு விஷயமாக உள்ளது. மேலும் வரலாற்றுச் கால எச்சங்கள் தஞ்சாவூரிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும், இப்பகுதியெங்கும் காணப்படுகின்றன. கோயில்கள், அரண்மனைகள், குளங்கள், மண்டபங்கள், இப்படி பல வரலாற்றுக் கால எச்சங்கள் காணப்படுகின்றன. அப்படியொரு எச்சம்தான் அந்த பாழடைந்த மண்டபம். திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில் அந்த மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தில் புதையல் இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆவிகள் உலவுகின்றன என கூறுகின்றனர். பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். அந்த மண்டபம் யாராலும் தீண்டப்படாமல் கைவிடப்பட்ட சொந்தம் கொண்டாடப்படாமல் அமானுஷ்யத்தைச் சுமந்த வண்ணம் மர்மம் நிறைந்ததாக, இழப்பை ஆடை நழுவிப்போய் உலகுக்கு காட்டிய வண்ணம் நின்று கொண்டிருந்தது. நான் அந்த மண்டபத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வங்கொண்டிருந்தேன். வரலாறு என்னுள் ஒரு தீய ஆவிபோல் இறங்கி பிடித்தாட்டுகிறது. அதனாலேயே நான் அங்கு செல்ல தீர்மானித்தேன். திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே ஒரு கிராமம் உள்ளது. அதன் பெயர் செந்தலை. தேனைத் தலைநகரமாகக் கொண்டு களப்பிரர்கள் ஆண்டதாக நான் படித்திருக்கிறேன். பல்லவர்களுக்கும் பிந்தய காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் எனக் கொள்ளலாம். முத்தரையர்கள் குறுநில மன்னர்களாக ஆண்டதாகவும் நான் படித்திருக்கிறேன். திருக்காட்டுப் பள்ளியைச் சேர்ந்த ஒரு கணக்கர் சோழர் காலத்தில் தவறிழைத்ததற்காக தண்டிக்கப்பட்ட வரலாறும் நான் அறிவேன். அது காவிரியாறு பாய்ந்து செல்லும் வளமான பகுதி. எங்கும் பசுமையான வயல்கள்தான் காணப்படும். திருக்காட்டுப்பள்ளிக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் பூண்டி மாதா திருத்தலம் உள்ளது. அங்கு கிறிஸ்தவ மத பாதிரியார்கள் கி.பி.1700களில் சமயப் பணி ஆற்றியுள்ளனர். வீரமாமுனிவர் அங்கு ஒரு ஆலயம் கட்டியதாக வரலாறு உள்ளது. கருங்கற்களாலும் மண்ணாலும் செங்கலாலும் கட்டி இடித்துபோன சிதிலமானதொரு பெரிய நிலப்பரப்பிலான மண்டபம் அது. வீழ்ந்துபோய் கிடந்தது. வீழ்ச்கியடைந்த ஒரு சாம்ராஜ்யத்தின் எச்சம்போல் காணப்பட்டது. இம்மண்டபத்தின் வீழ்ச்சி ஒரு அரசின் வீழ்ச்சியாகலாம் அல்லது ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியாகலாம் அல்லது ஒரு தனி மனிதனின் வீழ்ச்சியாகலாம். பல்லாயிரக் கணக்கான மக்களின் வீழ்ச்சிதானே வரலாறு என்பது! இக்கட்டிடம் யாருடையது? யாருடைய காலத்தினது? ஏன் வீழ்ச்சி அடைந்தது? கறுப்படைந்த கவர்களில், மழையால் பாசி பிடித்து கிடந்தது. இரவு நேரங்களில் கூக்குரல்கள் இக்கட்டிடத்திலிருந்து எழும்புவதாக கூறுகின்றனர். ஆவிகள் எழும்புவதாக கூறுகின்றனர். ஆவிகள் எழுப்பும் ஓலம், பகலில் அமானுஷ்யத்தை போர்த்தியது. பழமையானது சற்று அச்சமூட்டுவதாகவே உள்ளது. நாங்கள் உள்ளே சென்றோம். கிராமத்தின் முக்கியஸ்தர்களிடம் விஷயத்தைக் கூறியிருந்தோம். சிலர் வெளியே மர நிழலில் நின்றிருந்தனர். உடைந்துபோன சுவர்கள், மரத்துண்டுகள், கற்குவியல்கள் எனக் கிடந்தது. சில உயிரினங்கள் அங்கு குடிகொண்டிருந்தன. பாம்புகள் இருக்கக்கூடும். சிலந்தி வலை பின்னிக் கிடந்தது தூசி படிந்து இருந்தது. எங்களின் இருப்பு எங்களுக்கே அச்சமூட்டுவதாக இருந்தது. மண்டபத்தின் உட்பிரிவுகளுக்காக தடயங்கள் ஏதுமின்றி சிதிலமாகிக் கிடந்தது. ஒரே ஒரு அறை இருந்ததற்கான சுவர்கள் தெரிந்தன. கருங்கள் சுவர்கள், சுவர் உடைந்து போயிருந்தது. அந்த அறையின் மூலையில் ஒரு பெட்டி இருந்தது. அது ஒரு இரும்புப் பூட்டினால் பூட்டப்பட்டிருந்தது. துருப்பிடித்திருந்தன பெட்டியும் பூட்டும். பெட்டியை வெளியே எடுத்தோம். பலரும் அது புதையலாக இருக்கக்கூடும் எனக் கருதினர். ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அது உடைக்கப்பட்டது. தொல்லியல் துறைக்கும் சொல்லப்பட்டு ஒரு சிலர் வந்திருந்தனர். பெட்டியில் அனைவரும் ஏமாந்து போகும் படி அங்கு புதையலோ, வேறு ஏதுமோ இல்லாமலிருந்தது. ஆனால் ஒரு துணியால் கட்டி மூடப்பட்ட ஒன்றைக் கண்டோம். பட்டுத் துணி இற்றுப் போயிருந்தது. அதனுள் இருந்தவை பல ஓவியங்கள். பாதி அரிக்கப்பட்டும் வண்ணமிழந்தும் உள்ள நிறைய ஓவியங்கள் பல இருத்தன. இயற்கைக் காட்சி, பெண், முதியோ‘, வீடு, கட்டிடங்கள் இப்படி பல. யாவும் அக்கால தூரிகைளில் தீட்டப்பட்டிருந்தன. அவை பாய்க்குச்சி போன்றவைகளால் ஆனதாக இருந்தன. தொல்லியல் துறையின் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் இவற்றைக் காண்பிக்க வேண்டும். பின்பு அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும் என்றனர். ஊர் முக்கியஸ்தர்கள் ஊரில்தான் வைக்க வேண்டும் என்றனர். அவ்வோவியங்கள் புதையல் பற்றி குறிப்புகளைக் கொண்டுள்ளன என கருதியது தான் அதன் காரணம். எனக்கு இவ்வோவியங்கள் உணர்த்தும் ஏதோ ஒன்று உள்ளது எனப்பட்டது. நிச்சயமாய் புதையல் இருக்காது என மனதில் பட்டது. ஒரு தேர்ந்த கலைஞனின் கைவண்ணம் அவற்றில் தெரிகிறது. யார் அந்த ஓவியன்? அவன் யாரை, எதை வரைந்தான்? ஏன் அதை வரைந்தான்? மேலும் அம்மண்டபத்தில் இதனுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை உணர்த்தும் பொருட்கள் இருக்கக்கூடும் எனப்பட்டது. மீண்டும் அம்மண்டபத்திற்குள் என் நண்பருடன் செல்ல எண்ணினேன். பிறர் வீண் காரியம் என ஒதுங்கிக் கொண்டனர். ஊரார் வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். ஓவியங்களைத் தொல்பொருள் துறையினர் எடுத்துச் சென்றனர். நான் அவர்களிடம் அது பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள அல்லது ஆராய ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியிருந்தேன். நண்பரும், நானும் மீண்டும் உள்ளே சென்றோம். கற்குவியல்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தோம். சில இடங்களைத் தோண்டியும் பா‘த்தோம். அப்படி தோண்டிய போது, அந்த இரும்புப் பெட்டிக்கு அருகில் அதாவது அந்த இரும்புப் பெட்டி வைக்கப்பட்ட அறையின் சுவருக்கு அருகில் சில எலும்புகள் கிடந்தன. நிச்சயமாக சொல்ல முடியும் அவை மனித எலும்புகள். நான் பயந்து போனேன். அதிர்ச்சியும் அடைந்தோம். மனித எலும்புக் கூடு, கற்குவியலுக்கு அடியே! இது மண்டபம் அல்லது பெரிய வீடு. இங்கு எப்படி மனித எலும்புகள். வீட்டிற்குள் யாரையும் புதைக்க மாட்டார்கள்! பொதுவாக, இந்தப் பகுதியில் வாழ்ந்த மூதாதையர்கள் பிணங்களை எரிக்கக் கூடியவர்கள். எப்படிப் புதைத்தனர்? உண்மையில் இந்த மண்டபத்தில் மர்மம் இருப்பதாக எனக்குப்பட்டது. எலும்புகள் பற்றி தொல்லியல் துறையில் கூறினோம். அவர்கள் வேறு சில நிபுணர்களுடன் வந்தனா. கற்குவியல்களை முழுவதுமாக தோண்டி எடுத்தனர். மனித எலும்புக் கூட்டின் பல பகுதிகள் கிடைத்தன. ஒற்றை எலும்புக் கூடு. அதுவும் ஆண் எலும்புக்கூடு என பின்பு ஆய்வு செய்து கூறினர். மேலும் சாதாரண மரணமல்ல என்றும் இயற்கையான அடக்கமல்ல எனவும் கூறினர். தடயவியல் நிபுணர்களின் உதவி கொண்டு எலும்புகளைப் பற்றி மேலும் தகவல் கிடைக்கும் என முற்றிலும் நம்பினேன். மருத்துகக் கல்லூரியின் பாரன்சிக் துறையில் வேலை பார்ப்பவர் எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கியுள்ளார். அவரை அழைத்து வந்து காண்பித்தோம். சில நாள்கள் ஆராய்சி செய்தார். அவர் கூறிய விசயங்கள் துர் மரணம் சம்பவித்திருக்கிறது. கல்லெறியப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது கற் குவியல்களுக்கிடையே புதைக்கப்பட்டு இறந்திருக்கலாம். அதற்கு முன்பு இறந்துபோன ஆணினுடைய கை விரல்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. இறந்தபோது ஏறக்குறைய முப்பது வயதிருக்கலாம். மேலும் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்திருக்கக் கூடும். உடனே சில விசயங்கள் பிடிபட்டன. இறந்தவன் ஒரு ஒவியன். அவனது ஒவியத்திற்கு எதிரிகள் அல்லது அவனது ஓவியத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கக் கூடும். ஏனெனில் ஓவியம் வரையும் கை விரல்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. அவனது ஓவியத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரோ அவனைக் கொன்றிருக்கக் கூடும். இது சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகள், அதற்கு முந்திய காலங்களில் நடந்திருக்கக்கூடும். அவற்றின் இறுதியான முடிவுதான் இந்த மரணம். அந்த ஓவியங்களை மீண்டும் ஆராய வேண்டுமெனத் தோன்றியது. காலம் ஏறக்குறைய 1700களின் முற்பகுதி அல்லது 1600களின் பிற்பகுதி. தஞ்சையில் மராட்டியர்களின் 1600களின் பிற்பகுதி. தஞ்சையில் மராட்டியர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கும்பினியாரின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்திருந்த காலம். தமிழகத்தில் வெள்ளைக்கார கிறித்துவ துறவிகள் சமயப் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். அவர்கள் தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமூக, சமயப் பணியாற்றியுள்ளனர். அப்போதைய காலகட்டத்தில் இத்தனை பெரிய வீட்டில் குடியிருப்பவர்கள் செல்வந்தர்களாக மட்டுமே இருக்க முடியும். அப்போது அரசுத் துறையைச் சார்ந்தவர்கள், இராணுவத் துறையைச் சார்ந்தவர்கள், வியாபாரிகள் மட்டுமே செல்வந்தர்களாக இருந்தனர். அந்தக் குடும்பம் இதில் ஏதேனும் ஓரு பிரிவில் இருந்திருக்க வேண்டும். செல்வமும் கூடவே பிரச்சனைகளும் கூடிய அம்மாளிகையில் வசித்த பெரிய குடும்பத்தினரின் ஒரு வாலிபனின் குரூர மரணம் அது. அவன் மட்டுமே மரணமடைந்திருந்தால் அவனது குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளால் அம்மரணம் ஏற்பட்டிருக்கக் கூடும். மேலும் அக்கால சடங்குகளின்படி எரிக்காமல் கற்குவியல்களுக்கிடையே புதைக்கப்பட்டுள்ளது. ஏன் வீட்டின் பெரியவர்கள் சடங்குகளின்படி எரிக்கவில்லை? அல்லது அதை தடுத்தது எது? ஒரு வேளை குடும்பமே கூண்டோடு அழிந்ததா? அப்படியெனில் ஒரு பெரிய அழிவு ஏற்பட்டிருக்கக் கூடும். அந்த மண்டபமும் இடிந்து போயிருக்கக் கூடும். அச்த மண்டபமும் இடிந்து போயிருக்கக் கூடும். பிறரது எலும்புக் கூடுகள் எங்கே எலும்புகளின் மிச்சங்கள் எங்கே? மீண்டும் அந்த மண்டபத்திற்குச் சென்று ஆராய விரும்பினேன். இதற்கிடையே தொல்லியல் துறையின் உதவியுடன் அந்த ஓவியங்களை மீண்டும் ஏதாவது தடயம் கிடைக்குமா என ஆராய்ந்தேன். இயற்கைக் காட்சிகள், அவற்றின் கீழ் சில குறிப்புகள். தமிழ் மொழி படிக்க சிரமமாயிருந்தது தொல்லியல் துறை நண்பர் ஒருவர் அவற்றை படித்துக் காண்பித்தா‘. சில ஓவியங்கள் முடிக்கப்படாமல் இருந்தன. சில ஒவியங்கள் குழப்பமாக கிறுக்கல்கள் நிறைந்ததாக இருந்தன. அது அவன் மனக் குழப்பத்தையே உணர்த்துகிறது என நான் கருதினேன். அவன் ஓவியனாவதற்குத் தேவையான சூழல் ஏன் மாறிப் போனது? அந்த குழுப்பமாக கிறுக்கல்கள் நிறைந்ததாக இருந்த ஓவியங்களில் ஒன்று மட்டும் பலவரிகளில் எழுதப்பட்டதாக இருந்தது. தொல்லியல் துறை நண்பர் மிகுந்த சிரமங்களுக்கிடையே படித்துக் கூறியவை: பாண்டிய நாட்டுடனான போரில் எங்கள் பரம்பரையின் முப்பாட்டனார், நிறைய பாண்டிய நாட்டு போர் வீரர்களைக் கொன்றதற்காக இந்த நிலங்களும், சொத்தும் எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. இரத்த சம்பாத்தியத்தில்தான் இவ்வுடம்பு வளர்ந்துள்ளது எனநினைக்கையில் மிகுந்த துயரம் கவ்விக் கொள்கிறது. தற்போதுள்ள ஆட்சியில் அனைத்து செல்வாக்கையும் இழந்தாயிற்று. ஊர் மக்கள் அனைவருக்கும் என் மேலும் ஆசாரியர் மேலும் துவேஷமும், குரோதமும் நிறைந்துள்ளது. நானோ பரம்பரை தோறும் துரத்தும் சாபத்திலிருந்து தப்பிக்கவே ஓடிக்கொண்டிருக்கிறேன். என்னால் சரிவர விளங்கிக் கொள்ள இயலவில்லை. ஆனால் இதை எழுதியவன் தான் இறந்தவன். அவனை சாபம் துரத்திப் கொண்டிருந்தது. யாரிந்த ஆசாரியர்? மேலும் ஊர் மக்கள் அனைவருக்கும் அவன் மேல் ஏன் விரோதம்? ஏதேச்சையாக ஒரு ஓவியத்தை வேறொரு கோணத்தில் பார்த்த போது ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது. கூர்ந்து நோக்கிய போது, ஒரு ஆண் ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டிருந்தான். அவளோ மயங்கிப் போய் அவன் மேல் சரிந்து கிடந்தாள். அணைத்துக் கொண்டிருந்த அவன் கைகளில் தெரிந்தது ஒரு சிலுவை. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அம்மண்டபத்தில் இதனுடைய சம்பந்தப்பட்ட விஷயங்களை உணர்த்தும் பொருட்கள் இருக்கக்கூடும் எனப்பட்டது. மீண்டும் அம்மண்டபத்திற்குள் என் நண்பருடன் செல்ல எண்ணினேன். கற்குவியல்களை முழுவதுமாக தோண்டி எடுத்தோம். எஞ்சிய மனித எலும்புக் கூட்டின் பல பகுதிகள் கிடைத்தன. மீண்டும் மீண்டும் பூமியைத் தோண்டி எடுத்தோம். அங்கே கண்ட காட்சி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. இரும்பாலான துருப்பிடித்த ஒரு சிலுவையை நாங்கள் கண்டோம். சிலுவையுடன் கை விரல் எலும்புகள் கிடந்தன. நான் ஆய்வை முடித்துக் கொண்டேன். இறந்தவன்தான் ஓவியத்தில் பெண்ணை அணைத்துக் கொண்டிருந்தவன். அந்த ஆசாரியர் அவன் அமைதி தேடி ஓடிய, வெள்ளைக்கார கிறித்தவ துறவி. அவர் தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமுக, சமயப் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கக் கூடும். துவேஷமும் குரோதமும் நிறைந்த ஊர் மக்களின் பரிசு அவனின் மரணம். அதற்கு முன்பு அந்த கிறித்துவ துறவி கொல்லப்பட்டிருக்கக் கூடும்.
|
ஒரு காட்டில் ..நரி ஒன்று மிகவும் தாகத்துடன் நடந்து வந்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு கொடியில் திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்திருந்ததை அது பார்த்தது. நம் தாகத்திற்கு ஏற்றது இந்த திராட்சைப் பழங்கள் என எண்ணியது. ஆனால் பழங்கள் சற்று உயரத்தில் நரிக்கு எட்டாத இடத்தில் இருந்தது. நரி சில அடிகள் பின்னுக்குச் சென்று வேகமாக ஓடி வந்து குதித்து பழங்களைப் பறிக்க எண்ணியது.ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அதுபோல சிலமுறை செய்தும்..அதனால் பழங்களை பறிக்க முடியவில்லை. தன்னால் எட்ட முடியாத...தனக்குக் கிடைக்காத அந்த திராட்சைப் பழங்கள் புளிக்கும் என தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தது. நமக்குக் கிடைக்காத பொருள் ஒன்றின் மீது தவறு கண்டுபிடிக்கும் குணம் கூடாது. மேலும் நரி தன் மூளையை உபயோகித்து..வேறு வழிகளிலும் முயன்றிருந்தால் பழம் அதற்குக் கிடைத்திருக்கும். கிடைக்காவிட்டால் குறைகூறுவது சிலருக்கு வழக்கம். |
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அட்டகாசம் செய்துவந்தது. இதனால், எல்லா மிருகங்களும் கூடிப் பேசின. பிறகு, சிங்கத்துடன் சேர்ந்து அமைதியாக வாழலாம் என்று முடிவுசெய்தன. எல்லா மிருகங்களும் தங்களுக்கு கிடைக்கும் உணவை சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதுபோலவே நடந்துகொண்டிருந்தது. இப்படியிருக்கையில் ஒரு நாள், சிங்கம் ஒரு பெரிய மானை வேட்டையாடி வீழ்த்தியது. உடனே எல்லா மிருகங்களும் கூடிவிட்டன. சிங்கம் மானின் இறைச்சியை நான்கு பங்காகப் பிரித்தது. இருப்பதிலேயே சிறந்த பாகத்தை சிங்கம் தனக்கென எடுத்துக்கொண்டது. "இது எனக்கு, ஏனென்றால் நான்தான் சிங்கம்" என்று சொன்னது. பிறகு, அடுத்த பகுதியையும் தனக்கென எடுத்துக்கொண்டது. "இதுவும் எனக்குத்தான் உரிமையாகிறது. காரணம் நான்தான் கூட்டத்திலேயே வலிமையானவன்" என்றது. மூன்றாவது பங்கை எடுத்து தன் பக்கம் வைத்துக்கொண்டு, "இருப்பதிலேயே வீரமானவனான எனக்கு இது" என்றது. பிறகு நான்காவது பங்கை மற்ற மிருகங்களின் முன்பாக வைத்துவிட்டு, "யாருக்காவது தைரியம் இருந்தால் இதைத் தொடுங்கள் பார்க்கலாம்" என்றது. பிற மிருகங்கள் ஒன்றும் செய்யமுடியாமல் விழித்தன. வலுத்தவன் சொல்வதே சட்டம் |
ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய
முதலாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். " நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர்?" என்று கேட்டார் அவர். " கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை
வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன் " என்றார் முல்லா. அதைக் கேட்டு முதலாளி கோபம் அடைந்தார். " கடைக்குச் செல்லுவதற்கு முன்னால் என்னென்ன தேவை என்பதைப் பற்றி முன்னதாகவே
தீர்மானித்துக் கொள்வது அல்லவா புத்திசாலித்தனம்? ஒவ்வொரு பொருளையும் வாங்க
ஒவ்வொரு தடவை கடைக்குச் செல்வது எவ்வளவு பெரிய மடத்தனம். இனி இந்த மாதிரித் தவறைச்
செய்யாதே" என்று முல்லாவை எச்சரித்து அனுப்பினார். ஒரு தடவை முல்லாவின் முதலாளியான செல்வந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது.
அவர் முல்லாவை அழைத்து உடனே சென்று மருத்துவரை அழைத்து வா என்று உத்தரவிட்டார். முல்லா விரைந்து சென்றார். சற்று நேரங்கழித்து முல்லா வீடு திரும்பிய போது அவருடன் மூன்று மனிதர்கள்
வந்திருந்தனர். " இவர்கள் எல்லாம் யார்? எதற்காக வந்திருக்கிறார்கள்?" என முதலாளி ஆச்சரியத்துடன்
கேட்டார். " இதோ இவர் மருத்துவர் அதோ அந்த மனிதர் மதகுரு - அந்த மூன்றாவது ஆள் சமாதிக் குழி
தோண்டுபவர் " என்றார் முல்லா. " நான் மருத்துவரை மட்டுந்தானே அழைத்து வரச் சொன்னேன் " என்றார் முதலாளி. " நீங்கள் சொன்னது போலத்தானுங்க செய்தேன். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு தடவை
போகக் கூடாது. ஒரே தடவை திட்டம் போட்டு எல்லா காரியங்களையும் செய்துவிட வேண்டும்
என்று சொன்னீர்களே" என்று கேட்டார் முல்லா. " ஆமாம், அப்படித்தான் சொன்னேன் " . அதற்கும் இதற்கு என்ன தொடர்பு? என்று ஆச்சரியம்
தோன்ற கேட்டார் முதலாளி. " ஐயா, உங்களுக்கு உடல்நலம் சரியாக இல்லை. நோய் முற்றி இறந்து விடுகிறீர்கள் என்று
வைத்துக் கொள்வோம். இறுதிப் பிரார்த்தனை செய்வதற்காக மதகுருவை ஒரு தடவை அழைக்கப்
போக வேண்டும். பிறகு உங்கள் உடலைச் சமாதியில் வைப்பதற்காக புதைகுழி தோண்டுபவனை அழைக்க ஒரு தடவை போக வேண்டும். இவ்வாறு மூன்று தடவை மூன்று காரியங்களுக்காக
நடப்பதற்கு பதில் ஒரே நேரத்தில் மூன்று ஆட்களையும் அழைத்து வந்து விட்டேன்" என்றார்
முல்லா. முதலாளியின் முகத்தில் ஈயாடவில்லை. |
Subsets and Splits