news_id
int64
6
128k
news_date
stringlengths
19
22
news_category
stringclasses
15 values
news_title
stringlengths
1
226
news_article
stringlengths
7
17.4k
648
1/24/2011 6:21:58 PM
சினிமா(ரீல்மா)
தத்துவம் சொல்ல நடிகர்கள் இல்லை பாக்யராஜ் கவலை
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோரின் பாடல்களை ஒரே ஆடியோவில் தொகுத்து வெளியிட்டது சரிகம ஆடியோ. இந் நிகழ்ச்சியில் டைரக்டர் கே.பாக்யராஜ் கூறியது:தத்துவ பாடல்களில் மக்களை கவர்ந்தவர் எம்ஜிஆர். நடிப்பில் கவர்ந்தவர் சிவாஜி. இவர்கள் இருவரிலிருந்து மாறுபட்டு, பெண்களை கவர்ந்தவர் ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர் பாடிய தத்துவ பாடல்களான ‘சின்னப்பயலே... சின்னப்பயலே, ‘காடு வௌஞ்சென்ன மச்சான், ‘தூங்காதே தம்பி தூங்காதே போன்றவை வாழ்க்கையில் நம்பிக்கை தரும் பாடல்களாக அமைந்திருந்தன. அதுபோல் தத்துவ பாடல்கள் பாட இன்றைக்கு நம்மிடம் நடிகர்கள் இல்லை. சில நடிகர்கள் ஏதோ ஒரு சில படங்களில் அது போன்ற பாடல், காட்சிகளில் நடிக்கிறார்கள். அவர்கள் அதை தொடர்ந்து செய்வதில்லை. என் மகன் சாந்தனுக்கு நான் கூறிய அறிவுரை, ‘நடிப்பில் சந்தேகமிருந்தால் சிவாஜி படத்தை பார். ஏழை முதல் பணக்காரர் வரை மாஸ் அட்ராக்ஷன் எப்படி பெற வேண்டும் என்பதை அறிய எம்ஜிஆர் படங்களை பார் என்று கூறி இருக்கிறேன்.
649
1/24/2011 6:24:24 PM
சினிமா(ரீல்மா)
தீவிரவாதிகள் கதையில் மேக்னா
‘காசி, ‘என் மன வானில், ‘அற்புத தீவு படங்களை இயக்கிய வினயன், அடுத்து ‘காதல் வேதம் படத்தை இயக்குகிறார். அவர் கூறியது: வன்முறையும் தீவிரவாதமும் எல்லா நாடுகளிலும் வேரூன்றி இருக்கிறது. அதை எதிர்த்து போராடுவதுதான் இப்படக் கதை. இந்த தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாததுபோல் தோன்றும். ஆனால் காதல்தான் கதையின் களம். அந்த காதலை எந்த விதத்தில் தீவிரவாதம் நசுக்கப் பார்க்கிறது என்பதுதான் திரைக்கதை. ஹீரோ முரளிகிருஷ்ணா. செகண்ட் ஹீரோ கவுதம். மேக்னா ஹீரோயின். திலகன், சாருஹாசன் சுதந்திர போராட்ட தியாகிகளாக நடிக்கின்றனர். அவர்கள் இருவரும் படத்தில் பேசும் வசனங்கள், அனல் பறக்கும் விதத்தில் இருக்கும். இதன் ஷூட்டிங் கேரளா, பெங்களூர் போன்ற இடங்களில் நடந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சிக்காக பெங்களூரில் பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு ஷூட்டிங் நடக்கிறது.
650
1/24/2011 6:26:49 PM
சினிமா(ரீல்மா)
ஹீரோவை புகழும் நடிகை
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...லக லக படத்தோட 2வது பார்ட்டை தமிழ்ல எடுக்க ஆசைப்பட்டாரு தாடிக்கார இயக்குனரு. அது நடக்காதுன்னு தெரிஞ்சதால, அதே படத்தோட 3வது பார்ட்டை கன்னடத்துல எடுக்க பிளான் போட்டிருக்கிறாராம்... போட்டிருக்கிறாராம்... இதுக்கான முயற்சிலேயும் இயக்கம் இறங்கிட்டாராம்... இறங்கிட்டாராம்...பிசின் நடிகை கோலிவுட்டுக்கு மறுபடியும் வந்தாலும், பாலிவுட் சர்ச்சை கான் நடிகரைப் பற்றித்தான் புகழ்ந்து பேசுறாராம்... பேசுறாராம்... ‘அவரை நெகட்டிவ்வான ஆளா சித்தரிக்கிறாங்க. உண்மை அது கிடையாது. அவரு ரொம்ப நல்லவருன்னு சொல்றாராம்... சொல்றாராம்...  மலையாள மம்மூ நடிகருக்கு தயாரிப்பு ஆசை வந்துருச்சாம்... வந்துருச்சாம்... சொந்த கம்பெனி தயாரிப்புல நடிக்க கேட்டு நயனுக்கு தூது விட்டிருக்காராம். அவரும் டும் டும் கொட்ட டைம் இருக்க¤றதால நடிக்க சம்மதிச்சிருக்காராம்... சம்மதிச்சிருக்காராம்... இனிமே வெளிப் படங்களை குறைச்சிட்டு, சொந்த கம்பெனிலேயே நடிக்கலாம்ன்னு நடிகர் கணக்கு போட்டிருக்காராம்.. போட்டிருக்காராம்...
651
1/24/2011 6:31:11 PM
சினிமா(ரீல்மா)
கிளிப்பிங்ஸ்
* ட்விட்டர், பேஸ் புக் எதிலும் நான் எழுதுவது கிடையாது. ஆனால் என் பெயரில் போலியாக யாரோ இதை நடத்துகின்றனர் என்கிறார் அசின்.* ‘டபுள்ஸ் மலையாள படத்தில் மம்மூட்டியின் சகோதரியாக நடிக்கிறார் நதியா. இப்படத்தில்‘ஆடுகளம் டாப்ஸி ஹீரோயினாக நடிக்கிறார். * கேரளாவில் நடந்த விழாவில் அமிதாப்பை சந்தித்த நரேன், ‘உங்களைப் பார்த்துதான் நடிக்க வந்தேன் என்று கூறி அவரிடம் வாழ்த்து பெற்றாராம். * ஆர்மோனியம், கிடார், பியானோ, புல்லாங்குழல், தபேலா, வீணை, வயலின் ஆகிய இசை கருவிகளை முறைப்படி இசைக்கும் ஆற்றல் பெற்றவர் இளையராஜா. * கவுரவ வேடத்தில் தனுஷ் நடித்துள்ள சீடன், அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதில் அனன்யா ஹீரோயினாக நடித்துள்ளார். சுப்ரமணியம் சிவா இயக்கியுள்ளார்.* கொச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றால் வீட்டுக்கு பின்னால் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதுதான் எனது பொழுதுபோக்கு என்கிறார் அமலா பால்.
652
1/24/2011 6:35:39 PM
உலகம்
இங்கிலாந்து இளவரசர் கல்யாணம் ‘சூதாட்டம்’ ஆகிப் போச்சு!
லண்டன், - திருமணம் செய்துகொள்ளும் தம்பதியை ‘பல்லாண்டு காலம் இணை பிரியாமல் வாழ்க’ என்று உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துவதுண்டு. பிரபலமானவர்கள் திருமணம் என்றால் கிசுகிசுக்களும் சிறுசிறு ஊடல், உரசல்களும் விமர்சனத்துக்கு ஆளாகிவிடும். இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சமிருக்காது.இப்போது இளவரசர் சார்லஸ் மகன் திருமணத்திலும் ஒரு பரபரப்பு, விறுவிறுப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இது கொஞ்சம் வித்தியாசமான பரபரப்பு. சார்லஸ் மகன் வில்லியம் - கதே திருமணம் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வெகு விமரிசையாக நடக்க உள்ளது. இந்த திருமணத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. திருமண ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி தடபுடலாக நடந்து வருகிறது. தாய் டயானாவின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிச்சயதார்த்த வைர மோதிரத்தை வருங்கால மனைவி கதேவுக்கு அணிவித்து அம்மா இல்லாத குறையை தீர்த்துக் கொண்டார் வில்லியம். ஆடை முதல் அணிகலன் வரை பல பொருட்களில் இருவரும் இணைந்த போட்டோவை போட்டு பணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன வியாபார நிறுவனங்கள். இது ஒரு பக்கம் இருக்க, வில்லியம் - கதே இருவரும் திருமணத்துக்கு பிறகு நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ்வது கடினம்தான் என்ற செய்தியை சிலர் கிளப்பி விட்டுள்ளனர். பட்டிமன்றமாக தொடங்கிய இந்தப் பிரச்னை, இப்போது சூதாட்டமாகவே வளர்ந்து வருகிறது. திருமணமே நடக்காது என்று கோஷ்டி ‘பெட்’ கட்டிக் கொண்டி ருக்கிறது. ‘விரைவில் விவாகரத்து செய்வார்கள்’ என்று ஒரு பிரிவும், ‘திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள மாட்டார்கள். நீண்ட காலம் இணைந்து இல்லறம் நடத்துவார்கள்’ என்று மற்றொரு பிரிவும் வரிந்து கட்டுகிறது. இந்த சூதாட்டத்தில் தினம் தினம் ஏராளமானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். முதல்கட்ட போட்டியிலேயே அதிகபட்சமாக ரூ.22 லட்சம் பெட் கட்டப்பட்டுள்ளது. இந்த தொகை மேலும் உயரும் என்று சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகிறார்கள்.இந்த சூதாட்டத்தில் வில்லியம் - கதே பற்றி மேலும் பல கேள்விகளும் எழுப்பப்பட்டு சூதாட்டத் தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இதற்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சூதாட்டமாக்குவது தவறு என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ‘ஆல் த பெஸ்ட் இன் அட்வான்ஸ் வில்லியம் - கதே’ என்று இருவரும் இணை பிரியாமல் பல ஆண்டுகள் வாழ பிரார்த்தனை செய்யும் உள்ளங்களும் உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கின்றன.
653
1/24/2011 6:37:10 PM
உலகம்
முதலை வயிற்றில் கேட்குது வித்தியாசமான ரிங்டோன்
உக்ரைன், - உக்ரைன் விலங்கியல் பூங்காவில் உள்ள ஒரு முதலையின் வயிற்றுக்குள் இருந்து கடந்த ஒரு மாதமாக ரிங்டோன் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதில் அதிசயம் ஒன்றும் இல்லை. தன்னை படம் பிடிக்க முயன்ற பார்வையாளரின் செல்போனை பறித்து விழுங்கிவிட்டது முதலை. அந்த செல்போனில் இருந்துதான் ரிங்டோன் கேட்கிறது. 15 வயதான அந்த முதலையின் பெயர் ஜினா. கடந்த டிசம்பர் இறுதியில் பூங்காவுக்கு வந்த பார்வையாளர் ஒருவர் ஆர்வ மிகுதியில் ஜினாவை தனது செல்போனில் படம் பிடித்தார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ஜினா, சீறிப்பாய்ந்து செல்போனை பறித்து விழுங்கிவிட்டது. பார்வையாளர் அதிர்ச்சியில் உறைந்தார். அவரை பூங்கா ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.ஜினாவின் வயிற்றுக்குள் இருக்கும் செல்போனில் இருந்து அடிக்கடி ரிங்டோன் கேட்டபடி உள்ளது. இதுகுறித்து விலங்கியல் பூங்கா அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவர் உதவியுடன் ஜினா வயிற்றில் இருந்து செல்போனை வெளியே எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனக்குள் இருந்து கேட்கும் வித்தியாசமான ஒலியால் பயந்துபோன ஜினா, சாப்பிடுவதையே நிறுத்தி விட்டது. இதனால், ஜினாவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். விட்டமின் ஊசிகள் போடப்பட்டு வருகிறது.
654
1/24/2011 6:39:14 PM
சினிமா(ரீல்மா)
திரையில் காமெடியன்.. நிஜத்தில் மன்மதன்..
லாஸ்ஏஞ்சல்ஸ், - புகழ்பெற்ற ஹாலிவுட் காமெடி நடிகர் ஜிம் கேரி (49). ஏஸ் வென்சுரா-பெட் டிடெக்டிவ், த மாஸ்க், டம் அண்ட் டம்மர், ப்ரூஸ் அல்மைட்டி, ஃபன் வித் டிக் அண்ட் ஜேம் உள்பட பல காமெடி படங்களில் ஹீரோவாக நடித்தவர். மிஸ்டர் பாப்பர்ஸ் பென்குயின்ஸ் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். மகள் ஜேனுக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்ததால் ‘தாத்தா’ அந்தஸ்தும் பெற்றுவிட்டார். இந்நிலையில், அஞ்சால் ஜோசப் (24) என்ற இளம்பெண்ணுடன் ஜிம் கேரிக்கு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் பிறந்த இந்த அழகி இளம் வயதிலேயே அமெரிக்காவில் செட்டிலானவர். அங்கு முன்னணியில் இருக்கும் மாடல் அழகிகளில் ஒருவர். டிவி சீரியல்கள், சினிமாக்களிலும் நடித்து வருகிறார். ஜென்னி மெக் கர்த்தி என்ற அழகியுடன் கடந்த 2 மாதமாக சுற்றிவந்த ஜிம் கேரி திடீரென அஞ்சாலுடன் நெருக்கமாகியிருக்கிறார். ஜிம் கேரியும் அஞ்சால் ஜோசப்பும் ஜாலி டூர் அடித்தது கடந்த வாரம் ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
655
1/25/2011 3:02:04 PM
விளையாட்டு
உலககோப்பை கிரிக்கெட் பிப்.19ல் தொடக்கம்
உலககோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை உலககோப்பை திருவிழாவை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் இப்போதே உலககோப்பை பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இம்முறை திருவிழாவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் உள்பட மொத்தம் 14 நாட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.  ‘பி’ பிரிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், அயர்லாந்து, ஆலந்து ஆகிய அணிகள் உள்ளன. 43 நாட்கள் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 49 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் இந்தியாவில் 29 ஆட்டங்களும், இலங்கையில் 12 ஆட்டங்களும், வங்கதேசத்தில் 8 ஆட்டங்களும் நடைபெறுகின்றன. தொடக்க ஆட்டம் 19-ந் தேதி வங்கதேசத்தில் நடக்கிறது. காலிறுதி ஆட்டங்கள் மார்ச் 23, 24, 25, 26 ஆகிய தேதிகளிலும், அரையிறுதி 29, 30, தேதிகளிலும் நடக்கிறது. இறுதிப்போட்டி ஏப்ரல் 2-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் இரு அணிகளிலும் இருந்து தலா 4 அணிகள் காலிறுதி போட்டிக்கு முன்னேறும். இவற்றில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதியில் மல்லுக்கட்டும். அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் கோப்பையை வெல்வதற்கான இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.உலககோப்பை போட்டிக்கு இம்முறை மொத்தம் ரூ.45 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13.5 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். போட்டிகள் 19-ந் தேதி தொடங்கும் நிலையில் உலககோப்பை தொடக்கவிழா 2 நாள் முன்னதாகவே நடத்தப்படுகிறது. வங்கதேசத்தில் உள்ள மிர்பூர் மைதானத்தில் இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் இப்போதே நடந்து வருகிறது.பிரபல நடிகர், நடிகைகள் பங்கேற்கும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள், விண்ணை பிளக்கும் லேசர் கற்றை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுடன் மனதை தொடும் இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்தை 19&ந் தேதி எதிர்கொள்கிறது.சின்னம் ஸ்டம்பிஉலககோப்பை அதிகாரபூர்வ சின்னமாக குட்டியானை தேர்வு செய்யப்பட்டது. கொழும்பில் கடந்த 2010 ஏப். 2ம் தேதி நடந்த விழாவில் இது அறிவிக்கப்பட்டது. ஆக. 2ம் தேதி ஸ்டம்பி என்ற பெயர் தேர்வானது. இந்த 10 வயது குட்டியானை ஸ்டம்பி உற்சாகம், உறுதியின் அடையாளமாக விளங்குகிறது. ªஐயித்தால் நி13.5 கோடி உலககோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை இந்த முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. பட்டம் வெல்லும் அணிக்கு பி13.5 கோடி கிடைக்கும். 2வது இடம் பிடிக்கும் அணிக்கு பி6.75 கோடி கிடைக்கும். இதோடு சேர்த்து பங்கேற்கும் அணிக்கு கொடுக்கும் பரிசுத்தொகையாக மொத்தம் பி45 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமானம் பி600 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் மூலம் பி150 கோடியும்,ஸ்பான்சர் மூலம் பி150 கோடியும் இதில் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.சென்னையில் 4 ஆட்டங்கள்உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிப்.20ந்தேதி நியூசிலாந்து - கென்யா, மார்ச் 6ந்தேதி இங்கிலாந்து&தென் ஆப்ரிக்கா, 17ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து, 20ந்தேதி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.9 ஆயிரம் கோடிக்கு ஒளிபரப்பு உரிமைஉலக கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை இஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் சேனல்கள் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளன. இது உலகம் முழுவதும் 220 நாடுகளில் ஒளிபரப்பாகும். தூதர் சச்சின்உலககோப்பை போட்டிக்கான அதிகாரபூர்வ தூதராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். உலகின் 3வது மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்தவும் அவர் உதவிகரமாக இருப்பார். அணிகள்    வருடம்    போ    வெ    தோ    டைகுரூப் ‘ஏ’ஆஸ்திரேலியா    1975&2007    69    51    17    1பாகிஸ்தான்    1975&2007    56    30    24    2நியூசிலாந்து    1975&2007    62    35    26    0இலங்கை    1975&2007    57    25    30    1ஜிம்பாப்வே    1983&2007    45    8    33    1கனடா    1979&2007    12    1    11    0கென்யா    1996&2007    23    6    16    0குறிப்பு: ஜிம்பாப்வே ஆடிய 3 ஆட்டங்களுக்கும், நியூசிலாந்து, இலங்கை, கென்யா ஆடிய தலா1 ஆட்டங்களுக்கும் முடிவில்லாமல் போனது.குரூப் ‘பி’இந்தியா    1975&2007    58    32    25    0தென்ஆப்ரிக்கா    1992&2007    40    25    13    2இங்கிலாந்து    1975&2007    59    36    22    0வெ.இண்டீஸ்    1975&2007    57    35    21    0வங்கதேசம்    1999&2007    20    5    14    0அயர்லாந்து    2007&2007    9    2    6    1நெதர்லாந்து    1996&2007    14    2    12    0குறிப்பு: இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகள் ஆடிய தலா 1 ஆட்டங்கள் முடிவில்லாமல் போனது.அணி விவரம்குரூப் ‘ஏ’    குரூப் ‘பி’ஆஸ்திரேலியா    இந்தியாபாகிஸ்தான்    தென் ஆப்ரிக்காநியூசிலாந்து    இங்கிலாந்துஇலங்கை    வெஸ்ட் இண்டீஸ்ஜிம்பாப்வே    வங்கதேசம்கனடா    அயர்லாந்துகென்யா    நெதர்லாந்து
656
1/25/2011 3:13:28 PM
விளையாட்டு
சச்சினை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளுங்கள் பாக். வீரர்களுக்கு மியான்தத் அட்வைஸ்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனருமான மியான்தத் அளித்த பேட்டி:பாக். அணியில் உள்ள சில வீரர்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொள்வதிலேயே அதிகம் அக்கறை காட்டுகின்றனர். அதனை தவிர்த்து அவர்கள் களத்தில் சிறப்பாக செயல்படுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சச்சின் ஆட்டத்திற்கு ஆட்டம் சதம் விளாசினாலும் அவர் எப்போதும் தன்னை பற்றி புகழ்ந்து கூறியது கிடையாது.அவரிடம் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் அதிகம் கற்று கொள்ள வேண்டும். கேப்டன் அப்ரிடி பொறுப்புடன் நடந்து அணியில் உள்ள சக வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் அவருடைய செயல்பாடு அப்படியில்லை. இம்ரான்கான் கேப்டனாக இருந்து எப்படி பொறுப்பாக ஆடினாரோ அதேபோன்று அப்ரிடி செயல்பட வேண்டும்.நியூசிலாந்து ஒருநாள் தொடரில் பாக். வீரர்கள் மோசமாக ஆடிவருகின்றனர். உலககோப்பை போட்டியில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதனால் எஞ்சியுள்ள ஆட்டங்களில் வீரர்கள் சிறப்பாக ஆடி தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
659
1/25/2011 3:39:45 PM
உலகம்
இத்தாலி பிரதமருடன் உல்லாசமாக இருந்தேன் டொமினிகன் மாடல் அழகி ஒப்புதல்
ரோம்: ‘இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனியுடன் உல்லாசமாக இருந்தேன்’ என மாடல் அழகி ஒருவர் முதன்முறையாக விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளார். இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி (74). இவருக்கு 14 இளம்பெண்களுடன் பாலியில் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெர்லுஸ்கோனியை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். பிரதமர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி விசாரணையும் நடந்து வருகிறது. 'பணத்துக்காக நான் யாருடனும் செக்ஸ் உறவில் ஈடுபட்டதில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் அபத்தம்' என மறுப்பு தெரிவித்தார் பெர்லுஸ்கோனி. இந்நிலையில் மிலன் நகரில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி மரியா எஸ்டர் கார்சியா என்பவரிடம் இத்தாலி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுகுறித்து 'லா ரிபப்ளிகா' என்ற இதழுக்கு மரியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: 'எனது 5 வயது மகளுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. இதற்கு உடனடியாக உதவி செய்தார் பிரதமர் பெர்லுஸ்கோனி. எனக்கு டி.வி. நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கவும் பெர்லுஸ்கோனி உதவினார். அவர் மிகவும் பெருந்தன்மையானவர்; அன்பானவர். அவர் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, அவரது விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அவருடன் நெருங்கி பழகி உல்லாசமாக இருந்தேன். இதற்காக நான் பணம் எதுவும் பெறவில்லை.'இவ்வாறு மரியா பேட்டியளித்துள்ளார்.
660
1/25/2011 3:41:00 PM
உலகம்
பருந்து தரும் பிளாஸ்டிக் மெசேஜ்
மாட்ரிட்: ‘வீட்டுக்குள்ள கால எடுத்து வச்ச.. பீஸ்பீஸாகிடும்’ இப்படி சொல்லாமல் சொல்வதுதான் ‘நாய்கள் ஜாக்கிரதை’ போர்டு. நாய்கள் இல்லாத வீடுகளில்கூட சும்மா மிரட்டலுக்கு வைக்கின்றனர். புது ஆட்களால் பிரச்னை, தேவையற்ற தொந்தரவுகளை தவிர்க்க மனிதர்கள் மட்டுமல்ல, விலங்கினங்களும் இதுபோன்ற ஐடியாக்களை பின்பற்றுகின்றன. தலை தெறிக்க ஓடும் நாய், தெரு முனை மின்கம்பத்தின் கீழ் ஏரியாவை நனைத்து ‘இது என் லிமிட்’ என்று மார்க் பண்ணுவதும் இந்த வகைதான். பறவைகளும் இவ்வாறு செய்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. பருந்து வகை பறவைகள் பற்றி ஸ்பெயினின் ஆண்டலூசியா பகுதியில் உள்ள டொனானா உயிரியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் செர்ஜியோ தலைமையில் ஆய்வு நடந்தது. 5 ஆண்டு கால ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களை செர்ஜியோ சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: முன்பெல்லாம் பறவைகளின் கூடுகளில் மரம், குச்சி, நார்கள் என இயற்கை பொருட்கள் மட்டுமே இருக்கும். இப்போது குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்கள், துணி, பேப்பர் அதிகம் கிடப்பதால் கூடு கட்ட அவற்றையும் பறவைகள் பயன்படுத்துகின்றன. கூட்டை அழகுபடுத்துவதிலும் பருந்து வகை பறவைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.பொதுவாக, வெளியாட்களின் குறுக்கீட்டை பருந்துகள் விரும்புவதில்லை. வெளி பறவைகளை எச்சரிக்கும் விதமாக தனது கூட்டில் பிளாஸ்டிக் பொருட்களை இவை அதிகம் பயன்படுத்துகின்றன. பருந்துகளை பொருத்தவரை, வெள்ளை நிறம் மிரட்டலின் அறிகுறியாக கருதப்படுகிறது. ‘என்கிட்ட மோதாதே’ என்று காட்டும் வகையில் வெள்ளை நிற பிளாஸ்டிக் பொருட்களை தனது கூட்டில் அது அதிகம் பயன்படுத்துகிறது. வெள்ளை பிளாஸ்டிக் இருக்கும் கூட்டை பார்த்தால் ‘இவர் பெரிய ஆள்’ என்று மற்ற ‘சோப்ளாங்கி’ பருந்துகள் புரிந்துகொண்டு, அந்த பக்கம் தலைகாட்டுவதில்லை.
661
1/25/2011 3:42:32 PM
உலகம்
பெட்ரோல் காலி அதிபர் ஹெலிகாப்டர் ரோட்டில் இறங்கியது
சாண்டியாகோ: சிலி அதிபர் செபஸ்டியான் பினரா, தனது சொந்த ஹெலிகாப்டரில் காப்கிகியூரா என்ற நகர் அருகே  பறந்து கொண்டிருந்தார். திடீரென அவரது ஹெலிகாப்டர் நெடுஞ்சாலையில் தரையிறங்கியது. ஹெலிகாப்டரை விட்டு இறங்கிய செபஸ்டியான், அப்பகுதி மக்களிடம் அந்த இடத்தின் பெயரை கேட்டறிந்தார். அதன்பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 'ஹெலிகாப்டரில் எரிபொருள் காலியானதால் அவசரமாக இங்கு தரையிறக்கினோம்' என செபஸ்டியான் பேட்டியளித்தார். சிறிது நேரத்தில் போலீஸ் ஹெலிகாப்டர் அங்கு தரையிறங்கியது. அதில் கொண்டு வரப்பட்ட எரிபொருள், அதிபரின் ஹெலிகாப்டரில் நிரப்பப்பட்டது. அதன்பின் புறப்பட்டு சென்றார் செபஸ்டியான். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
662
1/25/2011 3:43:57 PM
உலகம்
குண்டு வெடிப்பு எதிரொலி ரஷ்ய ஏர்போர்ட்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
மாஸ்கோ: ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள டொமொடெடொவா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 35 பேர் பலியாயினர். 130 பேர் காயம் அடைந்தனர். ஏர்போர்ட்டில் லக்கேஜ் பெறும் பகுதியில் மனித குண்டு தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது. இச்சம்பவத்தையடுத்து ரஷ்ய விமான நிலையங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த அதிபர் மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மெத்வதேவ், 'ரஷ்ய பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. உளவுப்படையினருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என கூறியுள்ளார். ரஷ்யாவின் வடக்கு காகஸ்சஸ் பகுதியில் உள்ள தீவிரவாத அமைப்பினர் இந்த சதிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
663
1/25/2011 3:45:31 PM
உலகம்
ஈரானில் ஒரே மாதத்தில் 59 பேருக்கு தூக்கு
டெஹ்ரான்: ஈரானில் நேற்று 6 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலை, கொள்ளை மற்றும் பலாத்காரத்தில்  ஈடுபட்ட ஒமித் பராக்(24) என்பவன் கராஜ் சதுக்கம் பகுதியில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டான். சிறுவனை பலாத்காரம் செய்த மூன்று பேருக்கு, டெஹ்ரானின் எவின் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தடை செய்யப்பட்ட 'ஈரான் முஜாகிதீன் மக்கள்' என்ற அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இருவரும் நேற்று தூக்கிலிடப்பட்டனர். இவர்கள்  அகமதினாஜெத் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என முதலில் தகவல் பரவியது. ஈரானில் இந்த மாதத்தில் மட்டும் 52 பேர் தூக்கிலிடப்பட்டனர். கடந்த ஆண்டு மொத்தம் 179 பேர் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பெரும்பாலானோர் போதை கடத்தல் குற்றவாளிகள்.
664
1/25/2011 3:48:07 PM
உலகம்
இத்தாலி பிரதமருடன் உல்லாசமாக இருந்தேன் டொமினிகன் மாடல் அழகி ஒப்புதல்
ரோம்: ‘இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனியுடன் உல்லாசமாக இருந்தேன்’ என மாடல் அழகி ஒருவர் முதன்முறையாக விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளார். இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி (74). இவருக்கு 14 இளம்பெண்களுடன் பாலியில் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெர்லுஸ்கோனியை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். பிரதமர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி விசாரணையும் நடந்து வருகிறது. 'பணத்துக்காக நான் யாருடனும் செக்ஸ் உறவில் ஈடுபட்டதில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் அபத்தம்' என மறுப்பு தெரிவித்தார் பெர்லுஸ்கோனி. இந்நிலையில் மிலன் நகரில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி மரியா எஸ்டர் கார்சியா என்பவரிடம் இத்தாலி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுகுறித்து 'லா ரிபப்ளிகா' என்ற இதழுக்கு மரியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: 'எனது 5 வயது மகளுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. இதற்கு உடனடியாக உதவி செய்தார் பிரதமர் பெர்லுஸ்கோனி. எனக்கு டி.வி. நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கவும் பெர்லுஸ்கோனி உதவினார். அவர் மிகவும் பெருந்தன்மையானவர்; அன்பானவர். அவர் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, அவரது விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அவருடன் நெருங்கி பழகி உல்லாசமாக இருந்தேன். இதற்காக நான் பணம் எதுவும் பெறவில்லை.' இவ்வாறு மரியா பேட்டியளித்துள்ளார்.
665
1/25/2011 4:21:38 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
காஷ்மீரில் கொடியேற்றம் நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு
பாட்னா, - நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றப்போவதாக பா.ஜ. அறிவித்துள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான பா.ஜ. தொண்டர்கள் ஜம்மு வழியாக ஸ்ரீநகருக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு தலைமை ஏற்று அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் நேற்று ஜம்மு விரைந்தனர். அங்கிருந்து விமானத்தில் ஸ்ரீநகர் செல்வதற்கு முன் அவர்கள் கைது செய்யப்பட்டு அமிர்தசரஸ் கொண்டுவரப்பட்டனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும் ஸ்ரீநகரில் கொடியேற்றுவது உறுதி என பா.ஜ. அறிவித்துள்ளது. இந்நிலையில் பா.ஜ.வின் தேசியகொடி யாத்திரைக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பிரிவினைவாதிகளின் நீண்ட போராட்டத்துக்குப் பின் இப்போது தான் அங்கு ஓரளவு அமைதி திரும்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் தேசியகொடி யாத்திரை நடத்துவது தேவையற்றது. அர்த்தமற்றது. இதனை நான் ஆதரிக்கவில்லை. இது பா.ஜ.வின் உட்கட்சி விவகாரம் என்றாலும் இந்த திட்டத்தை எதிர்க்கிறேன்Õ என்றார்.
666
1/25/2011 4:23:17 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
மகாராஷ்டிர சந்தைகளில் வெங்காய விலை திடீர் சரிவு
நாசிக், - மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பருவமழை தவறி பெய்த காரணத்தாலும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தீவிர பருவமழை காரணமாகவும் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கிலோ வெங்காயம் ரூ.100 வரை எகிறியது. இதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. பாகிஸ்தான், சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வெங்காயம் கிலோ ரூ. 50க்கு கிடைக்க தொடங்கியது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் வெங்காய உற்பத்தி சீரடைந்து மொத்த சந்தைகளில் வரத்து கூடியது. நேற்று காலை நாசிக்கில் உள்ள லசல்கான் வேளாண் பொருட்கள் மார்க்கெட் கமிட்டியில் 100 கிலோ வெங்காயம் ரூ.1500க்கு விற்கப்பட்டது. நேரம் செல்ல செல்ல இது ரூ.1000மாக குறைந்ததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் மார்க்கெட் கமிட்டியை பூட்டிவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என கோஷமிட்டனர். நாசிக் தவிர மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் கிலோ வெங்காயம் ரூ. 10க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
667
1/25/2011 4:25:22 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
சொத்து குவிப்பு புகார் ஜெகனுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஐதராபாத், - காங்கிரசில் இருந்து விலகிய ஜெகன்மோகன்ரெட்டிக்கு ரூ.500 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஜெகன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் அண்மையில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருக்கும் ஜெகன் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என மாநில அமைச்சர் டாக்டர் பி.சங்கர் ராவ் ஐதராபாத் ஐகோர்ட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் ரூ.43 ஆயிரம் கோடி வரை சொத்து சேர்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தையே மனுவாக எடுத்துக் கொண்ட நீதிபதிகள் வி.ஈஸ்வரய்யா மற்றும் வி.சூரிஅப்பாராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக 3வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு ஜெகனுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஜெகனுக்கு தொடர்புடையதாக கருதப்படும் ஜகதி பப்ளிகேஷன்ஸ், சாக்ஷி டிவி, பாரதி சிமென்ட்ஸ் போன்ற நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
668
1/25/2011 4:30:38 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
உ.பி.யில் தலித் வாலிபர்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்
முசாபர்நகர், - உ.பி.யில் திருடிய குற்றத்திற்காக, 3 தலித் வாலிபர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. உ.பி. மாநிலம் சோன்டா கிராமத்தில், அனில் என்ற விவசாயி, தனது புல் வெட்டும் இயந்திரத்தை அதேஷ், அஜீத், நிட்டு ஆகிய தலித் வாலிபர்கள் திருடி விட்டதாக பஞ்சாயத்தில் புகார் கூறினார். அவர்கள் விசாரித்த போது, 3 வாலிபர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அதன்பிறகு வாலிபர்களுக்கு அளித்த தண்டனைதான் கொடுமையானது. அவர்கள் மூன்று பேருக்கும், தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பஞ்சாயத்தார், அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லவும் உத்தரவிட்டனர். அதன்படி 3 வாலிபர்களும் அழைத்து செல்லப்பட்டார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து போலீசாரிடம் கேட்டபோது, இது பற்றிய தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை என்று கூறி மறுத்து விட்டனர்.
669
1/25/2011 4:32:41 PM
தமிழகம்
கட்டுமான பொருள் விலையேற்றத்தால் தாம்பரம் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டிட பணி மந்தம்
தாம்பரம், - கட்டுமானப் பொருள் விலையேற்றத்தால் தாம்பரம் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டிட பணி மந்தமாக நடந்து வருகிறது. இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர். மேற்கு தாம்பரம், முத்துலிங்க ரெட்டி தெருவில் தாம்பரம் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வந்தது. இங்கு சட்டம்&ஒழுங்கு, குற்றப்பிரிவு அலுவலகங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன. இதன் அருகே தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையமும், போக்குவரத்து காவல் நிலையமும் உள்ளன. மிகவும் பழமையான இந்தக் கட்டிடம் சிதிலமடைந்திருந்தது. மழை காலங்களில் தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால் போலீசார் மிகவும் அவதிப்பட்டனர். ஆவணங்கள் சேதமடைந்தன. எனவே கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து நவீன வசதிகளுடன் புதிதாக 2 மாடி கட்டிடம் கட்ட ரூ.97 லட்சம் ஒதுக்கப்பட்டது. 10 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் சுரங்கப்பாதையையொட்டி உள்ள நகராட்சிக்கு சொந்தமான ஜீவா காம்ப்ளக்ஸ் 2வது மாடிக்கு தற்காலிகமாக போலீஸ் ஸ்டேஷன் மாற்றப்பட்டது.பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. வேகமாக நடந்து வந்த பணிகள் நாட்கள் செல்ல செல்ல மந்தமானது. மணல், செங்கல் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம், மணல் தட்டுப்பாடு காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வரும் ஜீவா கட்டிடம் பழமையானது, போதிய வசதியில்லை, இடியும் நிலையில் உள்ளது. எனவே அரசு இதில் தலையிட்டு புதிய கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
670
1/25/2011 4:50:30 PM
இந்தியா
நைட்ல டைட்டா குடிச்சா குறட்டை சத்தம் அதிகரிக்கும்
மும்பை, - குறட்டை பிரச்னை பெண்களைவிட ஆண்களையே அதிகம் தாக்குகிறது என்பது ஆராய்ச்சியின் வெளிப்பாடு. குறட்டைக்கு தீர்வுகாணும் விதமாக உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. தூங்கும்போது சுவாசப்பாதையில் ஏற்படும் பாதிப்பே குறட்டையாக மாறுகிறது. வயதும் இதற்கு ஒரு காரணம். குறட்டை விடுபவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு உடனடியாக இல்லை என்றாலும் அடுத்தவரின் தூக்கத்துக்கு தடையாக அமைந்துவிடுகிறது. குறட்டை அடிக்கும் கணவரை கோர்ட்டுக்கு இழுத்து டைவர்ஸ் கேட்கும் மனைவியைப் பற்றிய செய்திகள் உலகம் முழுவதும் வருவதை பார்க்கிறோம்.உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளின் மென்மையான திசுக்கள் தொண்டையில் சந்திக்கின்றன. இவை ஒன்றுடன் ஒன்று உராய்வது இயல்பு. இந்த உராய்வின் வேகம் மற்றும் எண்ணிக்கை அதிகரிக்கும் போது குறட்டையின் ஒலியும் அதிகரிக்கும். இதனால் சிலருக்கு தூக்க பாதிப்பு ஏற்படும். குறட்டைதானே என்று ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால், பெரும் பிரச்னையாக உருவெடுத்துவிடும்.மருத்துவ சிகிச்சை, முறையான உணவுப் பழக்கம், தொடர் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் குறட்டைக்கு தீர்வுகாண முயல்வது அவசியம் என்பது மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் அறிவுறுத்தல். குறட்டைக்குத் தீர்வு காணும் விதத்தில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடந்தது. அதில் தெரிய வந்த தகவல்கள்:குறட்டை ஒரு நோயல்ல. ஆனால், நோயாக மாறும் முன்பு அவசியம் கவனிக்கப்பட வேண்டும். வயது அதிகரிக்கும்போது குறட்டை வருவது இயல்பானது. பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம். மருத்துவ முறையில் இதற்கு தீர்வு இருந்தாலும் பெரும்பாலானவர்கள் அதை விரும்புவது இல்லை. குறட்டை பிரச்னையை ஒரு பொருட்டாக மதிக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். நாள்பட்ட குறட்டை, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.மருத்துவ முறை அல்லாத சில எளிய தீர்வுகளை இத்தகைய பாதிப்பில் உள்ளவர்கள் பின்பற்றி பயன் பெற முடியும். உடல் பருமனும் குறட்டைக்கு ஒரு காரணமாகிறது. உடலை குறைக்க உரிய வழிமுறைகளை பின்பற்றினால் தப்பிக்கலாம்.மதுப்பழக்கமும் குறட்டையை அதிகரிக்கும். குறட்டை விடுபவர்கள், இரவில் குடிப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது மிதமான அளவு மதுவை அருந்தி 4 மணி நேரங்களுக்கு பிறகு படுக்கைக்கு செல்ல வேண்டும். படுக்கும் முறையிலும் மாற்றம் தேவை. பொதுவாகவே மல்லாக்க படுப்பவர்களுக்கு அதிக குறட்டை வரும். தொடர்ந்து இதேமுறையில் படுத்துக் கொண்டால் மேலும் அதிகரிக்கும். எனவே ஒரு புறமாக படுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் குறட்டை ஓரளவு குறையும். புகைபிடிக்கும் பழக்கத்தை அறவே நிறுத்துவதன் மூலமும் குறட்டைக்கு நிரந்தர தீர்வு காணலாம். மருத்துவ அறிவுறுத்தல், ஆரோக்கியமான உணவு, உரிய உடற்பயிற்சி போன்றவையே குறட்டை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் என்பது மருத்துவ தரப்பின் அட்வைஸ்.
671
1/25/2011 4:52:41 PM
உலகம்
மகளின் சிகிச்சைக்கு உதவியதால் பிரதமருடன் உல்லாசமாக இருந்தேன்
ரோம், - ‘இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனியுடன் உல்லாசமாக இருந்தேன்’ என மாடல் அழகி ஒருவர் முதன்முறையாக விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளார். இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி (74). இவருக்கு 14 இளம்பெண்களுடன் பாலியில் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெர்லுஸ்கோனியை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். பிரதமர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி விசாரணையும் நடந்து வருகிறது. பணத்துக்காக நான் யாருடனும் செக்ஸ் உறவில் ஈடுபட்டதில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் அபத்தம்ÕÕ என மறுப்பு தெரிவித்தார் பெர்லுஸ்கோனி. இந்நிலையில் மிலன் நகரில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி மரியா எஸ்டர் கார்சியா என்பவரிடம் இத்தாலி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுகுறித்து லா ரிபப்ளிகா என்ற இதழுக்கு மரியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது 5 வயது மகளுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. இதற்கு உடனடியாக உதவி செய்தார் பிரதமர் பெர்லுஸ்கோனி. எனக்கு டி.வி. நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கவும் பெர்லுஸ்கோனி உதவினார்.அவர் மிகவும் பெருந்தன்மையானவர்; அன்பானவர். அவர் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, அவரது விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அவருடன் நெருங்கி பழகி உல்லாசமாக இருந்தேன். இதற்காக நான் பணம் எதுவும் பெறவில்லை.இவ்வாறு மரியா பேட்டியளித்துள்ளார்.
672
1/25/2011 4:58:29 PM
உலகம்
‘என் கிட்ட மோதாதே’ பருந்து தரும் பிளாஸ்டிக் மெசேஜ்
மாட்ரிட், - ‘வீட்டுக்குள்ள கால எடுத்து வச்ச.. பீஸ்பீஸாகிடும்’ இப்படி சொல்லாமல் சொல்வதுதான் ‘நாய்கள் ஜாக்கிரதை’ போர்டு. நாய்கள் இல்லாத வீடுகளில்கூட சும்மா மிரட்டலுக்கு வைக்கின்றனர். புது ஆட்களால் பிரச்னை, தேவையற்ற தொந்தரவுகளை தவிர்க்க மனிதர்கள் மட்டுமல்ல, விலங்கினங்களும் இதுபோன்ற ஐடியாக்களை பின்பற்றுகின்றன. தலை தெறிக்க ஓடும் நாய், தெரு முனை மின்கம்பத்தின் கீழ் ஏரியாவை நனைத்து ‘இது என் லிமிட்’ என்று மார்க் பண்ணுவதும் இந்த வகைதான். பறவைகளும் இவ்வாறு செய்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.பருந்து வகை பறவைகள் பற்றி ஸ்பெயினின் ஆண்டலூசியா பகுதியில் உள்ள டொனானா உயிரியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் செர்ஜியோ தலைமையில் ஆய்வு நடந்தது. 5 ஆண்டு கால ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களை செர்ஜியோ சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: முன்பெல்லாம் பறவைகளின் கூடுகளில் மரம், குச்சி, நார்கள் என இயற்கை பொருட்கள் மட்டுமே இருக்கும். இப்போது குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்கள், துணி, பேப்பர் அதிகம் கிடப்பதால் கூடு கட்ட அவற்றையும் பறவைகள் பயன்படுத்துகின்றன. கூட்டை அழகுபடுத்துவதிலும் பருந்து வகை பறவைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.பொதுவாக, வெளியாட்களின் குறுக்கீட்டை பருந்துகள் விரும்புவதில்லை. வெளி பறவைகளை எச்சரிக்கும் விதமாக தனது கூட்டில் பிளாஸ்டிக் பொருட்களை இவை அதிகம் பயன்படுத்துகின்றன. பருந்துகளை பொருத்தவரை, வெள்ளை நிறம் மிரட்டலின் அறிகுறியாக கருதப்படுகிறது. ‘என்கிட்ட மோதாதே’ என்று காட்டும் வகையில் வெள்ளை நிற பிளாஸ்டிக் பொருட்களை தனது கூட்டில் அது அதிகம் பயன்படுத்துகிறது. வெள்ளை பிளாஸ்டிக் இருக்கும் கூட்டை பார்த்தால் ‘இவர் பெரிய ஆள்’ என்று மற்ற ‘சோப்ளாங்கி’ பருந்துகள் புரிந்துகொண்டு, அந்த பக்கம் தலைகாட்டுவதில்லை.
673
1/25/2011 4:59:14 PM
இந்தியா
மஞ்சளின் மகத்துவம் முகத்துக்கு அவசியம் உடலை பளபளபாக்கும் உன்னத மருந்து
புதுடெல்லி, - இந்திய பாரம்பரிய உணவு வகைகளில் மஞ்சளுக்கென்று தனி இடம் உண்டு. உணவுக்கு மட்டுமின்றி உடலுக்கும் இது அரிதான மருந்தாக செயல்படுவது பலருக்கு தெரிந்திருக்கலாம். மஞ்சளின் மகத்துவங்கள் குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் வருமாறு: மஞ்சளின் மகத்துவம் அளவிட முடியாதது. மஞ்சள் சேர்த்து சமைக்கப்படும் உணவுகளின் சுவை மிக சிறப்பாக இருக்கும். செரிமானம், ஜலதோஷம் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது தீர்வாகிறது. சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடித்தால் விரைவில் குணமாகும். உடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் குணமும் மஞ்சளில் அதிகம் உள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பதில் மஞ்சளின் பங்கு அதிகம். பண்டைய காலங்களில் மஞ்சள் குளியலுக்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்த வந்ததே இதற்கு சான்று. இப்போது பல பெயர்களில் விதவிதமாக விற்கப்படும் அழகு கிரீம்களில் பிரதானமாக இருப்பது மஞ்சள்தான். இது சேர்க்கப்படாத கிரீம்களே இல்லை எனலாம். மஞ்சளுக்கு தோல் நோயை குணப்படுத்தும் வல்லமை உள்ளது. தோலை பளபளப்பாக்கி மெருகேற்றுகிறது. பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்குவதற்கும் மஞ்சள் பயன்படுகிறது. சிறிதளவு மஞ்சள் தூளை எலுமிச்சை அல்லது வெள்ளரி சாற்றில் குழைத்து தினமும் பேஸ்பேக் போல் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகப்பொலிவு கூடும். கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சம அளவு எடுத்து குழைத்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் ஊறிய பிறகு குளித்தால் சருமம் மிருதுவாகும். மஞ்சள் குளிக்கும் முறை, திருமணத்துக்கு முன்பு பெண்களுக்கு சடங்காகவே நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
674
1/25/2011 5:03:48 PM
குற்றம்
காதல் திருமணத்தால் ஆத்திரம் போலீஸ் கண்ணெதிரில் கழுத்து அறுபட்ட இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
புழல், - காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் போலீஸ் நிலையத்தில் மகளின் கழுத்தை தந்தை அறுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கழுத்து அறுபட்ட இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் 2&வது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்குட்பட்ட எல்லம்மன்பேட்டை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகள் கலைவாணி (19). பி.காம் படித்துள்ளார். இவரும், வில்லிவாக்கம் மண்ணடி தெருவை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ஜோஸ்வா (25) என்பவரும் எஸ்.எம்.எஸ். மூலமே காதலித்துள்ளனர். இது தெரியவரவே, கலைவாணிக்கு அவசரம் அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமணத்துக்கு நிச்சயம் செய்துள்ளனர். இதனால் காதலர் இருவரும் கடந்த 20ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்தனர்.இதற்கிடையில், மகளைக் காணவில்லை என்று செங்குன்றம் போலீசில் ஏழுமலை புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து, கலைவாணியை தேடி வந்தார். இதை அறிந்த காதல் தம்பதி, நேற்று செங்குன்றம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் குமரன், இருவரது குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் பேசியுள்ளார். அப்போது ஏழுமலை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாய்ந்து வந்து கலைவாணியின் கழுத்தை அறுத்தார். ரத்தம் கொட்டிய நிலையில் அவர் மயங்கிச் சாய்ந்தார். இதை யாரும் எதிர்பார்க்காததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கலைவாணியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏழுமலையை போலீசார் கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். போலீஸ் முன்னிலையில் நடந்த இந்த துணிகர சம்பவத்தை கண்டித்து ஜோஸ்வாவின் குடும்பத்தினர், கலைவாணி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை உள்ள தாதாங்குப்பம் 200 அடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜமங்கலம், வில்லிவாக்கம் போலீசார் வந்து அவர்களை சமரசம் செய்து அனுப்பினர். கலைவாணி, இன்று 2&வது நாளாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காதல் கணவன் ஜோஸ்வா, உடனிருந்து கலைவாணியை கவனித்து வருகிறார்.இதுகுறித்து வில்லிவாக்கம் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மனோ கூறுகையில், ‘‘ஜாதி கொடுமையால் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே ஏழுமலையை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
675
1/25/2011 5:07:16 PM
உலகம்
‘போகும் இடம் தெரியல’ போதை பைலட்டுக்கு 6 மாத ஜெயில்
லண்டன், - அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் 241 பயணிகளுடன் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட் நகருக்கு கடந்த நவம்பர் 1ம் தேதி அன்று புறப்பட தயாரானது. பயணிகள், பைலட்களை பாதுகாப்பு போலீசார் சோதனை செய்து அனுப்பினர். டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்லும் 3 பைலட்களில் ஒருவர் லா பெர்லே (49). அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தபோது நியூயார்க் செல்வதாக கூறினார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணை நடந்தது. அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வந்தது. செல்ல வேண்டிய இடத்தைக்கூட மறக்கும் அளவுக்கு போதையில் இருந்த பைலட் விமானத்தை ஓட்டிச் சென்றிருந்தால் விபரீதம் ஏற்பட்டிருக்கும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், பைலட் லார் பெர்லேவுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கினர்.
676
1/25/2011 5:17:54 PM
மாவட்ட மசாலா
நில இழப்பீடு னீ50 லட்சம் வரை கலெக்டர் வழங்க அதிகாரம்
கோவை: அரசு திட்டங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தினால், ரூ.20 லட்சம் வரை இழப்பீடு வழங்க கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிலம் கையகப்பணியில், கலெக்டர்களின் அதிகார வரம்பை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. ‘ரூ.50 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதாக இருந்தால் கலெக்டர்களே வழங்கலாம்’ என்று வருவாய்த்துறை முதன்மை செயலர் ஜெயக்கொடி உத்தரவிட்டுள்ளார்.
677
1/25/2011 5:19:08 PM
மாவட்ட மசாலா
யானைகள் விரட்டியதால் வனத்துறையினர் ஓட்டம்
களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள புலவன்குடியிருப்பு, பூதத்தான்குடியிருப்பு, பிளவக்கல் இசக்கியம்மன் கோயில் பகுதியில் கடந்த 3 மாதமாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. யானைகள் ஊருக்குள் புகுவதும், வனத்துறையினர் விரட்டியடிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு தானிஒடை புதர்களில் இருந்து 4 யானைகள் வந்தன. அவற்றை வனத்துறையினர் விரட்டினர்.  சிறிது நேரம் பின்வாங்கி ஓடிய யானைகள் ஒரு கட்டத்தில் அப்படியே முன்நோக்கி திரும்பி, வனத்துறையினரை நோக்கி ஓடிவந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
678
1/25/2011 5:20:07 PM
மாவட்ட மசாலா
கோயிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு
திங்கள் சந்தை: குமரி மாவட்டம், இரணியலில் பழமையான மார்த்தாண்டேஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த டிசம்பர் 5ம் தேதி இரவு இந்தக் கோயிலில் இருந்து ஐம்பொன் உற்சவமூர்த்தி சிலை, 1 கிலோ வெள்ளி அங்கியும் கொள்ளையடிக்கப்பட்டது. புகாரின் பேரில் இரணியல் போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக, மரிய சிலுவை, ராதாகிருஷ்ணன் என்ற பஷீர் ஆகியோரை கைது செய்தனர். ஐம்பொன் சிலை, வெள்ளி அங்கி மீட்கப்பட்டது. மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
679
1/25/2011 5:24:43 PM
மாவட்ட மசாலா
மனைவியை வெட்டிய கணவன் தற்கொலை
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் அங்கப்பன்(40). மனைவி திலகவதி(38), 2 மகன்கள் உள்ளனர். நடத்தையில் சந்தேகப்பட்டு அங்கப்பன், திலகவதியுடன் தகராறு செய்து வந்துள்ளார். ‘நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறில், அங்கப்பன் திலகவதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். திலகவதி மயங்கி விழுந்தார். அவர் இறந்து விட்டதாக நினைத்த அங்கப்பன், பயத்தில் பூச்சிமருந்தை குடித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அங்கப்பன் இறந்தார். திலகவதி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  போலீசார் விசாரிக்கின்றனர்.
680
1/25/2011 5:26:42 PM
மாவட்ட மசாலா
மாடு முட்டி மாணவன் பலி 7 பேர் மீது வழக்கு
வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழா போலீஸ் அனுமதியின்றி நேற்று நடத்தப்பட்டது. 100க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன. விழாவைக்காண ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் குவிந்தனர். அப்போது சீறிப்பாய்ந்த காளை ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, பிளஸ் 2 மாணவன் ராஜேந்திரனை(17) முட்டி தள்ளியது. இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் அதே இடத்தில் பலியானான். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து விழாக்குழுவைச் சேர்ந்த செல்வம், சின்னதம்பி, ஜம்புவன்னியன், தர்மலிங்கம், துளசி, கோவிந்தராஜ், மணி ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
681
1/25/2011 5:32:46 PM
சினிமா(ரீல்மா)
தீபிகா மீது பெண் இயக்குனர் சாடல்
ருடாலி, சிங்காரி என ஹீரோயின்களை முன்னிலைப்படுத்தி படங்களை இயக்கியவர் கல்பனா லாஜ்மி. பெண் பிரச்னைகளை பற்றியே இவரது படங்கள் அலசும். அடுத்த படத்தையும் அதே போல் இயக்க விரும்பினார். இதற்காக இவர் தேர்வு செய்த நடிகை, தீபிகா படுகோன். இது பற்றி தீபிகாவிடம் பேச நேரம் கேட்டிருந்தார் கல்பனா. இப்போதைக்கு பிசியாக இருக்கிறேன். நேரம் இல்லை. பிறகு பார்க்கலாம் என தவிர்த்து வந்திருக்கிறார் தீபிகா. பரவாயில்லை. நான் காத்திருக்கிறேன் எனக் கூறிய கல்பனா, சில மாதங்கள் காத்திருந்தார். சமீபத்தில் தீபிகாவின் மேனேஜரிடம் பேசியபோது, 2012 வரை கால்ஷீட் இல்லை. தீபிகாவிடம் நீங்கள் பேசுவது வீண் என கூறிவிட்டாராம். கோபமாகிவிட்டார் கல்பனா. இது பற்றி அவர் கூறும்போது, இந்த கதைக்கு தீபிகா பொருத்தமாக இருப்பார். அதனால்தான் அவருக்காக காத்திருந்தேன். என்னுடன் அவர் பேசக் கூட இல்லை. கதை கூட கேட்கவில்லை. கால்ஷீட் என்பது அடுத்த கட்ட பிரச்னைதான். இப்போது வரும் நடிகைகளே இப்படித்தான். பிஸி.. பிஸி.. என தாங்களாகவே கூறிக்கொண்டு,, ஒரு இமேஜை உருவாக்கிக் கொள்ள பார்க்கிறார்கள். அவர்களை வளர்த்துவிட்ட சினிமாவை மறந்துவிடுகிறார்கள் என கோபத்துடன் முடித்திருக்கிறார் கல்பனா. இது பற்றி தீபிகாவின் மேனேஜர் கூறுகையில், வருடத்தில் 365 நாட்கள்தான் இருக்கிறது. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? கல்பனா இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
682
1/25/2011 5:34:04 PM
சினிமா(ரீல்மா)
மெசேஜ் படம்: சம்பளம் பற்றி கவலைப்படாத நடிகர்கள்
புதுமுகங்கள் அமீத் பதக், நீது சவுத்ரி நடிக்கும் படம் ‘அன்பிற்கு அளவில்லை’. படம் குறித்து இயக்குனர்கள் மரியம் கானசக், ஆனந்த்பாபு கூறியது: இந்தியாவில் ஆண¢டுதோறும் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. 2007ம் ஆண்டில் 3,874 விவாகரத்துகள் நடந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 4,643 விவாகரத்துகள் நடந்துள்ளது. குழந்தை பிறந்ததும் கணவன், மனைவி இடையே தூரம் அதிகமாகிவிடுகிறது. குழந்தையை வளர்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறார்கள். இதனால் தம்பதி இடையிலான பாசம் குறைந்து விவாகரத்துகள் நடக்கின்றன. இதன் பின்னணியில் இப்படக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப¢படத்தை பார்த்து கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிகள் இணைந்தால் அதுவே படத்தின் வெற்றி. நல்ல கருத்தை சொல்வதால் படத¢தில் நடிப்பவர்கள், டெக்னீஷியன்கள் சம்பளம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் போடாமல் பணியாற்றுகின்றனர். படம் முடிந்த பின் நாங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
683
1/25/2011 5:39:34 PM
சினிமா(ரீல்மா)
கிளிப்பிங்ஸ்
* பூ படத்துக்கு பின் சசி இயக்கும் படம் 555. பரத் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் தேர்வு நடக்கிறது.* பூபதி பாண்டியன் இயக்கும் பட்டத்து யானை படத்தில் நடிக்க உள்ளார் விஷால்.* விளம்பர படத்தில் இந்தி நடிகை தியா மிர்சாவுடன் நடிக்கிறார் மாதவன்.* அடுத்த ஆண்டில் யாவரும் நலம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவேன் என்கிறார் விக்ரம் குமார்.* மிஸ்டர் மருமகன் மலையாள படத்தில் திலீப்புக்கு மாமனராக நடிக்கிறார் பாக்யராஜ். அவர் அறிமுகமாகும் மலையாள படம் இது. இதில் அவருக்கு ஜோடி ரோஜா.* பொன்மாலைப் பொழுது படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன்.* ஈரம் படத்தையடுத்து அறிவழகன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் நகுலன். * படங்கள் இல்லாததால் மராட்டிய மேடை நாடகங்களில் நடித்து வருகிறார் அனுயா.
684
1/25/2011 5:40:38 PM
சினிமா(ரீல்மா)
ஹீரோயின் நீக்கம்
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...அனுவான உசர நடிகை அடுத்த வருஷம் திருமதியாக முடிவு பண்ணியிருக¢கிறாராம்...  பண்ணியிருக்கிறாராம்... அதுக்குள்ள நிறைய படங்கள்ல நடிச்சி முடிக்க பிளான் போட்டிருக்கிறாராம்... போட்டிருக்கிறாராம்... Ôதாடிக்கார டான்ஸ் மாஸ்டர் இயக்குற புது படத்துல நடிக்க முடியல. அதுக்கு கால்ஷீட் பிரச்னை காரணம்Õனு ஹன்சியான நடிகை சொல்லியிருந்தாரு. ஆனா, நிஜ காரணம் அது கிடையாதாம்... கிடையாதாம்... டான்ஸ் மாஸ்டர் இயக்கி முடிச்ச படத்துல நடிகை நடிச்சிருந்தாரு. அதுல இயக்குனருக்கும் நடிகைக்கும் நெருக்கம் ஏற்பட்டுச்சி. அதனால நயனம் உர்ராகி, நடிகையை போன்ல சத்தம் போட்டாராம்... போட்டாராம்... அதனால டைரக்டருதான் எதுக்கு வம்புன்னு புது படத்துல நடிகையை தூக்கிட்டாராம்... தூக்கிட்டாராம்... டைரக¢டரோட நெருங்கிய வட்டாரம் மூலமா இந்த தகவல் கோடம்பாக்கத்துல பரவியிருக்காம்... பரவியிருக்காம்...ஸ்ரீயான நடிகையோட மகளை அறிமுகப்படுத்த இயக்குனருங்க போட்டி போடுறாங்க... போட்டி போடுறாங்க... சமீபத்துல வர்மா இயக்கம் நடிகைகிட்ட பேசினாராம். வாரிசை நான் அறிமுகப்படுத்துறேன்னு சொன்னாராம். வேண்டாம்னு நடிகை மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்...
685
1/27/2011 2:16:51 PM
சினிமா(ரீல்மா)
அமலாபால் வாய்ப்பை பிடிக்க ஓவியா முயற்சி
'களவாணி' படத்துக்கு பின் சற்குணம் இயக்கும் படம் 'வாகை சூட வா'. விமல் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நடிக்க அமலா பால் தேர்வாகியிருந்தார். இப்போது கால்ஷீட் பிரச்னையால் படத்திலிருந்து விலக அவர் முடிவு செய்திருக்கிறாராம். இதற்கிடையே அவரை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறதாம். அதே நேரம், அமலா பால் விலக முடிவு செய்திருப்பதை அறிந்த 'களவாணி' பட ஹீரோயின் ஓவியா, அந்த வாய்ப்பை பிடிக்க முயற்சித்து வருகிறாராம். ஏற்கெனவே தெரிந்த இயக்குனர், ஹீரோ என்பதால் அவர்களுக்கு தூது விட்டிருக்கிறாராம் ஓவியா. ஒருவரின் வாய்ப்பை இன்னொருவர் தட்டிப் பறிப்பதாக அமலா பால், ஓவியா பற்றி முன்பே கிசு கிசு பரவியுள்ளது. இந்நிலையில் ஓவியா இந்த பட வாய்ப்பை பெற முயற்சிப்பதால், இருவருக்கும் இடையிலான போட்டி அதிகரித்துள்ளது என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
686
1/27/2011 2:23:25 PM
சினிமா(ரீல்மா)
சென்சார் மீது எஸ்.பி. சரண் தாக்கு
நடிகரும் பாடகருமான எஸ்.பி. சரண் தயாரித்துள்ள படம் 'ஆரண்ய காண்டம்'. ரவி கிருஷ்ணா, ஜாக்கி ஷெராப், சம்பத், யாஸ்மின் நடித்துள்ளனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். அடுத்த மாதம் ரிலீசாகிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியது. அத்துடன் பல காட்சிகளை வெட்டிவிட்டதாம். இதனால் கோபம் அடைந்திருக்கிறார் எஸ்.பி. சரண். இது பற்றி அவர் கூறியது: இந்தப் படம் போதை கும்பலை பற்றிய கதை கொண்டது. அவர்களை பற்றி சொல்லும்போது, துப்பாக்கி, ரத்தம் என காட்சிகள் இருப்பது பெரிய விஷயம் கிடையாது. படத்தில் வன்முறை இருப்பதாகக் கூறி ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அது கூட பரவாயில்லை. பல காட்சிகளை நீக்கிவிட்டதுதான் தாங்க முடியவில்லை. இதை விட வன்முறை அதிகம் உள்ள பல படங்கள் தமிழில் ரிலீசாகியுள்ளது. அதையெல்லாம் சென்சார் அனுமதித்து இருக்கிறார்கள். சூர்யா நடித்த 'ரத்த சரித்திரம்' படத்திலும் நிறைய வன்முறை காட்சிகள் இருந்தன. ஒரு படத்தை குழந்தை போல் நினைத்து பாதுகாக்கிறோம். ஒவ்வொரு காட்சியிலும் அக்கறை காட்டுகிறோம். அந்த காட்சிகளை வெட¢டி எறிவதை சகிக்க முடியவில்லை.
687
1/27/2011 2:39:13 PM
சினிமா(ரீல்மா)
கிளிப்பிங்ஸ்
'நல்ல கதை அமைந்தால் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க தயார்' என்கிறார் விஜய்.லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா' படத்தில் நடித்து வருகிறார் லட்சுமி ராய்.பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடித்துள்ள 'அவன் இவன்', ஏப்ரலில் திரைக்கு வருகிறது.'டபுள்ஸ்' மலையாள படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மம்மூட்டி.இந்தியில் சல்மான் கான் நடித்த 'தபங்', தெலுங்கில் ரீமேக் ஆகிறது. பவன் கல்யாண் நடிக்கிறார். படத்துக்கு 'கப்பர் சிங்' என பெயர் வைத்துள்ளனர்.'பதினாறு' படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார் கஸ்தூரி.ராசுமதுரவன் இயக்கியுள்ள 'முத்துக்கு முத்தாக' படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது.'எனது சகோதரிக்கு குழந்தை பிறந்திருப்பதால் மாமா ஆன சந்தோஷத்தில் இருக்கிறேன்' என்கிறார் மாதவன்.
688
1/27/2011 2:45:45 PM
சினிமா(ரீல்மா)
நடிகரால் தவிக்கும் இயக்குனர்
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...கன்னடம், இந்தி படங்கள்ல உச்ச நடிகரை கெஸ்ட் ரோல்ல நடிக்க வைக்க முயற்சி நடந்துச்சு... நடந்துச்சு... ஆனா, நடிகரு அன்பா மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்... அனிமேஷன் பட ஷூட்டிங்ல மட்டும் இப்போதைக்கு கவனம் செலுத்துறாராம்... செலுத்துறாராம்...தமிழ்ப் பட ஹீரோ புது முடிவுக்கு வந்திருக்கிறாராம். காமெடி கதைகள்ல, கமென்ட் அடிச்சி நடிக்கிறதை கைவிட முடிவு பண்ணியிருக்கிறாராம்... பண்ணியிருக்கிறாராம்... இனிமே சீரியஸ் ரோல்கள்ல கவனம் செலுத்துப் போறாரம்... போறாராம்...பஞ்ச் நடிகருக்கு கதை சொல்லி ஓகே வாங்கிட்டாரு எல்லோரும் சுகம்னு சொன்ன பட டைரக்டரு. அதே நேரம், படத்துல பஞ்ச், கமர்ஷியல் அயிட்டங்களை நடிகரு சேர்க்கச் சொல்லியிருக்கிறாராம். நடிகரு விரும்புற மாதிரி அதை சேர்க்க முடியாம இயக்குனரு விக்கிறாராம்...தவிக்கிறாராம்... ரூம் போட்டு பலமுறை டிஸ்கஷன் பண்ணியும் இயக்குனர் சேர்த்த கமர்ஷியல் அம்சங்கள், நடிகருக்கு திருப்தி தரலையாம்... தரலையாம்...
689
1/27/2011 2:57:42 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
வாடகை தாய்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
புதுடெல்லி, - குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் சட்டம் இருக்கிறது. இந்தியாவிலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வாடகை தாய் 21 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். தனது சொந்த குழந்தைகளுடன் சேர்த்து 5 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது. ஒரே தம்பதியினருக்காக 3 தடவைக்கு மேல் கருவை சுமக்கக் கூடாது. வாடகை தாய் திருமணமானவர் என்றால் அடுத்தவர் குழந்தையை சுமக்க தனது கணவரின் அனுமதி பெற வேண்டும். இந்திய தம்பதிகளின் கருவை மட்டுமே சுமக்க வேண்டும். மருத்துவ கிளினிக்குகள் வாடகை தாய்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி குழந்தை பெற வைக்கக்கூடாது. குழந்தை யாருடையது என்பதை ரகசியமாக வைக்க வேண்டும். இது போன்ற பல கட்டுப்பாடுகளுடன் புதிய மசோதா உருவாக்கப்பட்டு மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
690
1/27/2011 3:00:21 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
காஷ்மீர் அரசு மீது வழக்கு அத்வானி முடிவு
ஸ்ரீநகர், - குடியரசு தினத்தன்று ஸ்ரீநகர் லால்சவுக்கில் தேசிய கொடி ஏற்ற பாஜ இளைஞரணி எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. முன்னதாக ஜம்முவுக்குள் நுழைய முயன்ற பாஜ தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், அனந்த்குமார் மற்றும் 500க்கும் மேற்பட்ட தொண்டர்களை காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். இவர்கள், நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில்  தேசிய கொடி ஏற்றவிடாமல் தலைவர்களை தடுத்து, கைது செய்த காஷ்மீர் அரசு மீது வழக்கு தொடரப்படும் என பாஜ தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ÔÔலால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பதற்காக உமர் அப்துல்லா எடுத்த நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதது. மாநில அரசின் நடவடிக்கைகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த காலத்தில் கூட இது போன்ற நிகழ்வுகள் நடந்ததில்லை. அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றார்.
691
1/27/2011 3:03:49 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
ழி7ஆயிரம் கடனுக்காக 12 வயது சிறுமி அடமானம்
நாக்பூர், - மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை ஒட்டிய லஷ்கரிபாக் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதா. இவரது கணவர், குடிபோதைக்கு அடிமையானவர். இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டது. இதற்கான மருத்துவ செலவுகளுக்காக மன்காபூரைச் சேர்ந்த ராஜேஷ் ஜனியானி என்ற தொழிலதிபரிடம் தனது 12 வயது இரண்டாவது மகளை ரூ. 7 ஆயிரத்துக்கு அடமானம் வைத்தார் சீதா. கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் நேற்று குடியரசு தினத்தன்று வெளிச்சத்துக்கு வந்தது. குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட அரசு சாரா அமைப்பு எடுத்த நடவடிக்கை காரணமாக தொழிலதிபர் வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக அடிமை போல் வேலை பார்த்து வந்த சிறுமி மீட்கப்பட்டார். மாநில அரசின் கருணா பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நாக்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
692
1/27/2011 3:06:06 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
மாவோயிஸ்ட்கள் அட்டூழியம் 2 பள்ளிகள் தகர்ப்பு
ராஞ்சி, - குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் பலாமு மற்றும் லதேகர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் 2 பள்ளிகளில் மாவோயிஸ்ட்கள் புகுந்தனர். அவர்கள் வகுப்பறைகளை டைனமைட் குண்டுகள் வைத்து தகர்த்தனர். அப்போது பள்ளியில் யாரும் இல்லை. பின்னர் சுவர்களில் அரசுக்கு எதிரான வாசகங்களை எழுதினார்கள். சுவரொட்டிகளையும் ஒட்டினர். பள்ளியில் கறுப்பு கொடியை ஏற்றி வைத்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர். அதன்பிறகு தேசிய கொடி ஏற்றுவதற்காக பள்ளிக்கு வந்த மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக் கட்டிடம் சிதைந்து கிடப்பதையும், கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
693
1/27/2011 3:23:46 PM
உலகம்
வந்தாச்சு ‘பிரெஸ்ட் சிப்’ மார்பக புற்றுநோய் சிகிச்சை ஈஸி
இண்டியானாபோலிஸ்: மார்பகம் போலவே செயல்படும் சின்னஞ்சிறிய பொம்மை (சிப்) ஒன்றை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் மார்பக புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என மிகமிக முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும் என்கின்றனர். தத்ரூபமாக மார்பகம் போலவே செயல்படும் ‘சிப்’ ஒன்றை அமெரிக்காவின் பர்ட்யூ பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. புற்றுநோய் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் பேராசிரியர் சோபி லெலிவர், நானோமெடிசின் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஜேம்ஸ் லீரி தலைமையிலான குழுவினர் இந்த சிப்பை உருவாக்கியுள்ளனர். இது செயல்படும் விதம் பற்றி அவர்கள் கூறுவதாவது: பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு பரவலாக ஏற்படும் பாதிப்பு மார்பக புற்றுநோய். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 40 ஆயிரம் பெண்கள் இறந்தனர். கேன்சர் பாதித்த உடனே கண்டுபிடிக்க முடியாததுதான் இறப்புக்கு முக்கிய காரணம். எனவே, நோயின் தன்மை, தீவிரம் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் ‘மார்பக சிப்’ உருவாக்கியுள்ளோம். அச்சு அசலாக மார்பகம் போலவே இந்த சிப் செயல்படும். வழக்கமாக, மார்பக நிப்பிள் வழியாக பால்சுரப்பு நாளங்களில் திரவங்களை செலுத்தி, அங்கிருக்கும் திசுவை கரைத்து அதை வைத்தே கேன்சர் சோதனை நடத்தப்படுகிறது. பால் சுரப்பு அழுத்தம் காரணமாக, நாளங்களின் கடைசிவரை திரவங்களை செலுத்த முடியாது. இதனால், அடிப் பகுதியில் கேன்சர் இருந்தால் கண்டுபிடிக்க முடிவதில்லை.இந்த குறைபாட்டை போக்கவே சிப் கண்டுபிடித்துள்ளோம். மார்பகம் போலவே செயல்படும் சிப்பில் நானோ பொருட்களை செலுத்தி, கேன்சர் திசுக்களை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் 2 மி.மீ. அளவில் இருக்கும்போதே கேன்சர் கட்டிகளை கண்டறிய முடியும். கட்டி உருவாகத் தொடங்கியதுமே கண்டுபிடிக்கலாம் என்பதால் சிகிச்சையும் எளிது. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
694
1/27/2011 3:24:52 PM
உலகம்
காங்கோவில் நியூஇயர் அட்டகாசம்: ராணுவ வீரர்களால் 67 பேர் பலாத்காரம்
ஜெனிவா: மத்திய ஆப்ரிக்க நாடு காங்கோ. கிரிமினல் செயல்கள் பஞ்சமின்றி நடக்கும். ராணுவ வீரர்களும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. இதை உறுதிப் படுத்தியிருக்கிறது ஐ.நா. நேற்று முன்தினம் வெளியிட்டிருக்கும் தகவல். ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கால்வில் கூறியதாவது: காங்கோ நாட்டின் தெற்கு கிவு மாகாணம் ஃபிஸி நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ராணுவம் (எப்ஏஆர்டிசி) அத்துமீறல்களில் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்தன. இதுதொடர்பாக தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது. அங்கு ஜனவரி 1&ம் தேதி 30 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, ஐ.நா. மனித உரிமை தூதரகமும் அமைதி காக்கும் பிரிவும் இணைந்து ஆய்வு நடத்தின. இதில் 67 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகள், சிறுமிகளிடமும் அவர்கள் வெறித்தனமாக நடந்துள்ளனர். இதில் 3 உயரதிகாரிகள், 11 ராணுவ வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ரூபர்ட் கூறினார். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு ஐ.நா. பொதுச் செயலர் பாங்கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர், நவம்பரில் மட்டும் காங்கோவில் 2 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன என்பது மூன் சொன்ன தகவல்.
695
1/27/2011 3:26:13 PM
உலகம்
கால்பந்து ஹெல்த் ரகசியம்: ஷுகருக்கு ‘ரெட் கார்டு’ போடலாம்
கோபன்ஹேகன்: விளையாட்டு என்றதும் சட்டென இந்தியர் மனதில் விரிவது கிரிக்கெட். கோடிகள் புரளும் வர்த்தக விளையாட்டாக மாறிவருகிறது. ‘‘ஆயிரம்தான் இருந்தாலும் கால்பந்து மாதிரி வருமா? அதில் இருக்கும் பரபரப்பும் சுறுசுறுப்பும் தனி’’ என்பார்கள் கால்பந்து ரசிகர்கள். 1850&களிலேயே விதிமுறைகள் வகுக்கப்பட்டு முறைப்படி விளையாடப்பட்டு வருவது கால்பந்து உலகிலேயே டிவியில் அதிகம் பேர் பார்த்து ரசிக்கும் விளையாட்டு கால்பந்து என்கிறது சர்வே. 200&க்கும் அதிகமான நாடுகளில் 24 கோடிக்கும் அதிகமானவர்கள் கால்பந்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் என்கிறது 2001 சர்வே. புரியாமல் பார்க்கிறவர்களைக்கூட நேரம் ஆகஆக சீட் நுனிக்கு வரவைக்கிற மகத்துவம் இதற்கு உண்டு.நோய்கள் வராமல் காத்து, உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் வல்லமையும் இதற்கு உண்டு என்பதுதான் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு.உடல் ஆரோக்கியத்தில் கால்பந்து விளையாட்டின் பங்கு தொடர்பாக டென்மார்க் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அறிவியல் துறை நிபுணர்கள் பீட்டர் க்ரஸ்ட்ரப், ஜென்ஸ் பங்ஸ்போ தலைமையில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு விளையாட்டுகள் ஆடும் 9 முதல் 77 வயதினரை வைத்து ஆய்வு நடந்தது. 50&க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இதில் பங்குபெற்றனர்.
696
1/27/2011 3:26:16 PM
மாவட்ட மசாலா
கூடுதலாக வன ஊழியர்கள்
களக்காடு, - நெல்லை மாவட்டம் களக்காடு மலையடிவார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் குட்டிகளுடன் சுற்றி வருகின்றன. இவை அடிக்கடி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் சத்தியநாதன் உத்தரவின்பேரில் வனத்துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகளை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்படுகிறது. யானைகளை விரட்ட வெடி வெடிக்கும்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே யானைகள் விரட்டும் பணியில் ஈடுபட அருகில் உள்ள வனச்சரகங்களில் இருந்து கூடுதலாக வன ஊழியர்களை அழைக்க முடிவு செய்துள்ளனர்.
697
1/27/2011 3:27:18 PM
உலகம்
ஸ்பெஷல் ஓட்டலில் தங்க ஸ்பெயினில் ஏக ‘கிராக்கி’
மாட்ரிட்: ஸ்பெயினில் உலக சுற்றுலா கண்காட்சி நடந்து வருகிறது. இதையொட்டி தலைநகர் மாட்ரிட்டில் அமைக்கப்பட்ட ஓட்டல் ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. நகரின் மத்திய பகுதியில் உள்ள காலவ் மைதானத்தில், ‘சேவ் த பீச்’ என்ற பெயரில் இந்த வித்தியாச தங்கும் விடுதி அமைக்கப்பட்டிருந்தது. பலரையும் வியக்க வைத்த இந்த ஓட்டலில் இரவில் தங்க பிரபலங்களிடையே போட்டா போட்டி ஏற்பட்டது. நட்சத்திர அந்தஸ்து இல்லை... விண்ணை முட்டும் கட்டிடமும் இல்லை... பளிங்கு தரை, பளபள சுவர் என்று காட்ஸ்லி அயிட்டங்களும் கிடையாது. பிறகு ஏன், இங்கு தங்க இவ்வளவு போட்டி...வெறும் குப்பை கூளங்களால் கட்டப்பட்டதுதான் இந்த ஓட்டலின் ஸ்பெஷாலிட்டி. பிளாஸ்டிக் டிரம், எதுக்கும் உதவாது என்று தூக்கி வீசப்பட்ட மரச்சட்டங்கள், பழைய கருவிகள், கிழிந்த ஷூ, சாக்ஸ்கள், பிஞ்சுபோன டயர்கள், உடைந்த தெருவிளக்குகள், பிளாஸ்டிக் கழிவுகள்... இப்படி லிஸ்டில் அடங்காத 12 டன் கழிவுப்பொருட்களை கொண்டு இந்த ஓட்டலை வடிவமைத்திருந்தார் ஜெர்மானிய கலைஞர் சால்ட். இந்த பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் உள்ள பீச்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை என்பது இன்னொரு விசேஷம்.பார்த்தாலே குமட்டல் ஏற்பட்டு மக்கள் ஒதுங்கி ஓட்டம் பிடிக்கும் குப்பைகளை வரிசையாய் தொங்கவிட்டு, 5 டபுள் ரூம்களை இந்த ஓட்டலில் அமைத்துள்ளார் சால்ட். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின்போது, ரோமில் இதுபோன்ற ஓட்டலை அமைத்திருந்தார். ‘உலகமே குப்பை தொட்டியாக மாறி வருகிறது. கடலிலும், அதன் கரைகளிலும் ஏகப்பட்ட கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த ஓட்டலை பார்க்கும் மக்கள், ஐரோப்பிய கடற்கரையில் என்னென்ன குப்பைகள் குவிந்து கிடக்கின்றன என்பதை தெரிந்து கொள்வார்கள். இதனால், அவர்களிடயே விழிப்புணர்வு ஏற்படும்’ என்கிறார் சால்ட்.கண்காட்சியில் 4 நாட்கள் இடம்பெற்ற இந்த ஓட்டலை பார்வையிட மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். டபுள் பெட் ரூம்களில் இரவில் தங்குவதற்கு பிரபலங்களுக்கு மட்டும் தான் அனுமதி தரப்பட்டது. அதற்கும் கடும் போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
698
1/27/2011 3:27:22 PM
மாவட்ட மசாலா
2 வாலிபர்கள் பலி
விராலிமலை,  - புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில் உள்ள மாதிரிப்பட்டியை சேர்ந்தவர் ஏழுமலை (32). இவரது நண்பர்கள் மணிகண்டன் (30), முருகேசன்(31). நேற்று மாலை மூவரும் ஒரே பைக்கில் விராலிமலையில் இருந்து மாதிரிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். புறவழிச்சாலையில் சென்றபோது, எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மூவரும் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏழுமலை வழியிலேயே இறந்தார். மணிகண்டன் மருத்துவமனையில் இறந்தார். காயம் அடைந்த முருகேசன் மற்றும் காரில் வந்த 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
699
1/27/2011 3:28:04 PM
உலகம்
மாடல் அழகிகளின் சூப்பர் தண்ணி பார்ட்டி ரூ. 3.5 லட்சம் டிப்ஸ்
லண்டன்: உலகப் புகழ் பெற்ற மாடல் அழகி நவோமி கேம்பெல் (40). அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகம் முழுவதும் வெளிவரும் வோக், எல்லி, கிளாமர், இன்டர்வியூ, வேனிட்டி ஃபேர், ஜிக்யூ உள்பட பல இதழ்களுக்கும் கலக்கல் போஸ் கொடுத்து வருபவர். இவர் போன்ற இன்னொரு பிரபலம் ஹாலிவுட் நடிகை கேமரூன் டயஸ் (38). த மாஸ்க், மை பெஸ்ட் பிரெண்ட்’ஸ் வெட்டிங், தேர்ஸ் சம்திங் அபவுட் மேரி, சார்லிஸ் ஏஞ்சல்ஸ், வெனிலா ஸ்கை உள்பட பல படங்களில் நடித்தவர். டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒன்றாக விருந்து சாப்பிட்டனர். மெதுவாக காரில் ஏறி புறப்பட்டு லண்டனின் புகழ்மிக்க விஸ்கி மிஸ்ட் பாருக்கு சென்றனர். ஷாம்பெய்ன், வோட்கா, சைட் டிஷ் போட்டி போட்டு காலியாயின. பணிப்பெண் பரிமாறி மாளவில்லை.இதில் நவோமி கேம்பெலுக்கு ரொம்ப சந்தோஷம். நா குழற ‘தேங்க்யூ..’ சொன்ன அவர், பாக்கெட்டில் கையை விட்டார். 7,893 அமெரிக்க டாலர் (ரூ.3.5 லட்சம்) வந்தது. அப்படியே பணிப்பெண் கையில் திணித்தார். அதிர்ச்சியில் அந்த பெண் மட்டையானதாக தகவல்.
700
1/27/2011 3:28:07 PM
மாவட்ட மசாலா
10 பேர் மீது வழக்கு பதிவு
வேலூர், காட்பாடி அருகே தடையை மீறி மாடு விடும் விழா நடத்தியதாக 10&க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் கிராமத்தில் மாடு விடும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு வருவாய்த்துறை மற்றும் போலீசார் தடை விதித்திருந்தனர். அவர்களின் அறிவுரையை மீறி நேற்று மதியம் மாடு விடும் விழா நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தயாளன் கொடுத்த புகாரின்பேரில் கரசமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணன், ஸ்ரீராமுலு, வரதராஜூலு, வெங்கடேசன், ராமதாஸ், நந்தகோபால், வேணுகோபால் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் மீது காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
701
1/27/2011 3:28:58 PM
உலகம்
மாஸ்கோ குண்டுவெடிப்புக்கு வீடியோ கேம் காரணம்?
மாஸ்கோ: ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள டொமடேடோவா ஏர்போர்ட்டில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலியாயினர். 180 பேர் காயம் அடைந்தனர். இந்த சதியின் பின்னணி பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளிவந்த 'கால் ஆஃப் டூட்டி: மாடர்ன் வார்பேர்2' என்ற அமெரிக்க வீடியோ கேமில், மாஸ்கோ ஏர்போர்ட்டில் உள்ள அப்பாவி பயணிகளை ஒருவர் கொல்வது போன்ற கற்பனை காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதேபோல, தற்போது உண்மை சம்பவம் நடந்துள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இந்த வீடியோ கேம் தூண்டுதலாக இருக்குமோ என ரஷ்ய மீடியாக்களில் விவாதங்கள் அனல் கிளப்புகின்றன.
702
1/27/2011 3:30:54 PM
உலகம்
டி.வி. விவாத நிகழ்ச்சியில் இத்தாலி பிரதமர் டென்ஷன்
ரோம்: இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது செக்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மீதான குற்றச்சாட்டு குறித்து நேரடி சிறப்பு விவாத நிகழ்ச்சியை அங்குள்ள டி.வி. நிறுவனம் நடத்தியது. இதில் கலந்து கொள்ள முடியுமா என பெர்லுஸ்கோனியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கலாம் என்ற முடிவுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதித்தார் பெர்லுஸ்கோனி. இதில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பேட்டி எடுத்தவரும், எதிர்கட்சி பிரதிநிதிகளும் பெர்லுஸ்கோனியிடம் தாறுமாறாக கேள்விகளை எழுப்பினர். தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து வந்த பெர்லுஸ்கோனி, ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்து டி.வி. விவாத நிகழ்ச்சியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். 'பொய் குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து நடைபெறும் இந்த விவாத நிகழ்ச்சியே அருவருப்பானது, மோசமானது. இதில் கலந்து கொள்ளவே எனக்கு இஷ்டம் இல்லை. குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கவே இதில் கலந்து கொண்டேன்' என்றார். தன் மீது குற்றம் கூறிய எதிர்க்கட்சி பிரதிநிதியை, 'இந்த டி.வி. விபசார விடுதியை விட்டு முதலில் வெளியேறுங்கள்' என்றார். விவாத நிகழ்ச்சியை நடத்தியவரும் ஆவேசம் அடைந்து பிரதமரிடம், '‘உங்கள் கோபத்தை கோர்ட்டில் காட்டுங்கள். இங்கு காட்ட வேண்டாம்' என்றார். இந்த நிகழ்ச்சியில் பெர்லுஸ்கோனி கோபமாக பேசியதை பலரும் விமர்சித்துள்ளனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள், 'குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்க பிரதமருக்கு முழு உரிமை உள்ளது' என்கின்றனர்.
703
1/27/2011 3:31:40 PM
மாவட்ட மசாலா
காங். தலைவர் கடத்தலா?
நாகர்கோவில், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் நேற்று முன்தினம் மதுரையில் நடந்தது. குமரி மாவட்ட மாணவர் காங்கிரஸ்  தலைவராக நாகர்கோவிலை சேர்ந்த அர்னால்டு ரஸ்கின் வெற்றி பெற்றார். இந்நிலையில் அர்னால்டு ரஸ்கின் தந்தை எட்வின் ஜோன்ஸ், வடசேரி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘என் மகன் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் அவரை எதிர்த்து போட்டியிட்ட சிலர் ஆத்திரம் அடைந்தனர். தேர்தல்  முடிந்த அன்று இரவு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அவனை சிலர் வழி மறித்து கடத்திச் சென்றுவிட்டனர். எனது மகனின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. அவனை கண்டுபிடித்து தருவதோடு, கடத்திச் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த புகாரால் காங்கிரஸ் தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
704
1/27/2011 3:33:10 PM
மாவட்ட மசாலா
ஓட்டல் அதிபருக்கு அபராதம்
ஈரோடு, ஈரோடு மாவட்டம் கோபி, சத்தி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சிட்டுக்குருவி பிரியாணி, ரோஸ்ட், வறுவல் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. சத்தி சுற்றுச்சூழல் கானுயிர் சங்கம், கோவை நொய்யல் பசுமை கழகம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருடன் சேர்ந்து கோபி & பாரியூர் ரோட்டிலுள்ள ஒரு ஓட்டலில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ சிட்டுக்குருவி கறி பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து, ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ‘‘வன பாதுகாப்பு சட்டப்படி சிட்டுக்குருவிகளை பிடிப்பதும், வாழ்விடங்களை அழிப்பதும் உணவாக பயன்படுத்துவதும் குற்றம். சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடினாலோ, கறி விற்றாலே நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மாவட்ட வன அலுவலர் சதீஷ்குமார் கூறினார்.
705
1/27/2011 3:53:34 PM
தமிழகம்
தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கால் பாதிப்பில்லை : தமிழகம் முழுக்க பஸ்கள் ஓடின
சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களின் சில தொழிற்சங்கங்கள் இன்று நடத்திய ஸ்டிரைக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் பஸ்கள் இயங்கின. சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. சென்னையில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட பஸ்கள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு லட்சத்து 38 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக தொழிற்சங்கமான தொமுச வெற்றி பெற்றது.கோர்ட் உத்தரவையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து அரசுடன் தொமுச நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்களுக்கு பல்வேறு படிகள் மற்றும் சம்பளம் என்று 40 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதாக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்கள் போல ஊதியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என்றும், 20 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், சம்பளம் மட்டும் 40 சதவீதம் உயர்வு கொடுக்க வேண்டும் என்றும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. ஒப்பந்தப்படி 40 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி, சிஐடியூ, மதிமுக தொழிற்சங்கம் உள்பட 7 சங்கங்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. இந்தப் போராட்டத்தில் சுமார் 35 ஆயிரம் தொழிலாளர் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ, பணிக்கு வரும் தொழிலாளர்களை தடுத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி லத்திகா சரண் எச்சரித்திருந்தார்.இந்நிலையில், தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக் இன்று தொடங்கியது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பஸ் டெப்போக்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் ரோந்து சுற்றி வந்தவண்ணம் இருந்தனர். ஒரு சில டெப்போக்களில் தொழிலாளர்கள் வேலைக்கு வராமல் இருந்தனர். அவர்களுக்கு பதில், தற்காலிக ஊழியர்கள் பஸ்களை இயக்கினர். பஸ்கள் வழக்கம்போல இயக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னை திருவொற்றியூர் டெப்போவில் இருந்து அதிகாலை 5 மணிக்கு மாநகர பஸ்கள் வெளியில் கொண்டு செல்லப்பட்டன. அப்போது முகமூடி அணிந்து பைக்கில் வந்த சிலர், பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ் கண்ணாடிகள் நொறுங்கின. ராஜாக்கடை பகுதியில் வந்த 2 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன.பெரியார்நகர், விம்கோ நகர் பகுதியில் 2 பஸ்களும் முல்லைநகர், எர்ணாவூரில் 3 பஸ்களும் உடைக்கப்பட்டன. திருவொற்றியூரில் மட்டும் 7 பஸ்கள் உடைக்கப்பட்டன. அதேபோல திருவான்மியூர், பாண்டிபஜார், வேப்பேரி, அயனாவரம் ஆகிய இடங்களிலும் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. பெருங்குடி சுங்கச்சாவடியில் ஒரு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. திருவான்மியூர் சிக்னல் அருகிலும் சிலர் பஸ் மீது கற்களை வீசினர். இதனால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி மீட்னம்பள்ளி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை சாலை, சேக்காடு, அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய இடங்களிலும் 4 பஸ்கள் உடைக்கப்பட்டன. கல்வீச்சில் தேனாம்பேட்டையை சேர்ந்த டிரைவர் குமரேசன் (29) படுகாயமடைந்தார். சென்னையில் 3200 பஸ்கள் இயங்கின. திருச்சி, மதுரை, சேலம், கோவை, நெல்லை ஆகிய இடங்களிலும் 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக மண்டல மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறு சம்பவங்களைத் தவிர மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
706
1/27/2011 3:57:52 PM
தலையங்கம்
ஏழைகளின் சாபம் சும்மா விடாது
பதுக்கல், கடத்தல் இது இரண்டுமே விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணங்கள். அதிலும் ரேஷன் அரிசி கடத்தல் மன்னிக்கவே முடியாத கொடுங்குற்றம். லாரியில், மாட்டுவண்டியில், மின்சார ரயிலில் மற்றும் கழுதை மீது என தினமும் பல டன் ரேஷன் அரிசி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது.திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திரா, கர்நாடகத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பல புகார்கள் வந்திருக்கின்றன. இதையடுத்து சிவில் சப்ளை சிஐடி போலீசார் வாகன சோதனை நடத்தி, 4 லாரிகளில் 42 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை கண்டுபிடித்தனர். லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இந்த அளவுக்கு ரேஷன் அரிசி சிக்கி இருப்பது இதுவே முதல்முறை.அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டைக்கு செல்லும் மின்சார ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீசாருக்கு புகார் வந்துள்ளது. விம்கோ ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பெண்களும் கைது செய்யப்பட்டனர். கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இருந்தும் லாரிகளில் மறைத்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். இதேபோல் இலவச கலர் டி.வி.யும் பக்கத்து மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு விற்கப்படுகிறது.தமிழகத்தில் ஏழைகள் வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி ரேஷனில் வழங்கப்படுகிறது. இந்த அரிசியைத்தான் டன் கணக்கில் வெளிமாநிலங்களுக்கு கடத்துகிறார்கள். அங்கு மிஷினில் கொடுத்து பாலிஷ் செய்து, அதே அரிசியை கிலோ ரூ.15 வரை விற்றுவிடுகிறார்கள். கடத்தல் செலவு, மில் செலவு போக இருமடங்கு லாபம் கிடைப்பதால் பலர் இதை தொழிலாகவே செய்து வருகின்றனர். ஏழைகளின் வயிற்றுக்கு போக வேண்டிய அரிசி கடத்தல்காரர்களின் பாக்கெட்டுக்கு பணமாய் போய்ச் சேருகிறது. கடத்தல் லாரிகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவது, கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை, துணை போகும் ஊழியர்கள், அதிகாரிகள் உடனடியாக நீக்கம் போன்ற அதிரடி நடவடிக்கைகள் ஏழைகளுக்கு ரேஷன் அரிசி போய்ச் சேர வழிவகுக்கும். ஏழைகளின் வயிற்றில் அடித்து சம்பாதிக்கும் எந்தப் பணமும் நல்ல பலனை தராது. ஏழைகளின் சாபம் இவர்களை சும்மா விடாது.
707
1/27/2011 4:02:09 PM
குற்றம்
மாணவியை கிண்டல் செய்ததால் ஆத்திரம் : கோஷ்டி மோதலில் அரிவாள் வெட்டு போலீஸ் ஸ்டேஷன் மீது கல்வீச்சு
மன்னார்குடி: மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டதால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. போலீஸ் நிலையமும் கல்வீசி தாக்கப்பட்டது. மன்னார்குடி அருகே திருமக்கோட்டை மகாராஜபுரத்தை சேர்ந்தவர் செல்லச்சாமி. இரும்புக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் வேலைபார்க்கும் அகமது உசேன் மேலநத்தத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அவரை மாணவியின் உறவினர்கள் பிரபாகரன், மாதவன் நேற்று கண்டித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அகமது உசேன், செல்லச்சாமி, அவரது மகன்கள் கார்த்திக், அன்பழகன், சுரேஷ் ஆகியோர் சேர்ந்து அரிவாள் மற்றும் கத்தியால் பிரபாகரன், மாதவனை சரமாரியாக வெட்டினர். படுகாயமடைந்த 2 பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் பரவியதும் பிரபாகரனின் ஆதரவாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் திருமக்கோட்டைக்கு வந்து செல்லசாமியின் வீடு மற்றும் இரும்புக்கடையை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் சென்று அகமது உசேன், செல்லச்சாமி, கார்த்திக், அன்பழகன், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பதாக கூறி பிரபாகரன் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையம் மீது சரமாரி கற்களை வீசி தாக்கினர். தஞ்சை டிஐஜி திருஞானம், திருவாரூர் எஸ்பி மூர்த்தி மற்றும் போலீசார் வந்து பாதுகாப்பை தீவிரப்படுத்தினர். மோதல் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் நிலையம் மீது கல்வீசியது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோரை தேடிவருகின்றனர். அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
708
1/27/2011 4:03:28 PM
மாவட்ட மசாலா
தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 குழந்தைகள் பரிதாப சாவு
சித்தூர்: சித்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. வேலூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). மனைவி ராதிகா (25). இவர்களது மகள்கள் துர்கா (3), நந்தினி (2). வெங்கடேஷ், 5 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி குடும்பத்துடன் சித்தூரை அடுத்த தாட்டிமாகுலபள்ளி கிராமத்துக்கு வந்தார். அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்த தம்பதியினர், பண்ணை அருகிலேயே குடிசை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய கணவன், மனைவி இருவரும் களைப்பு மிகுதியால் தூங்கிவிட்டனர். அப்போது மகள்கள் இருவரும் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென கண் விழித்த ராதிகா, குழந்தைகளை காணாமல் திடுக்கிட்டார். கணவரை எழுப்பி விவரத்தை கூறினார். இருவரும் பதற்றத்துடன் குழந்தைகளை தேடினர். கோழிப்பண்ணை அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமிகள் இருவரும் சடலமாக மிதந்தது தெரியவந்தது. குழந்தைகளின் உடல்களைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து சித்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
709
1/27/2011 4:04:26 PM
தொழில்
தேனீ வளர்ப்பில் தித்திக்குது லாபம்....
சுத்தமான தேன் மருத்துவ குணம் வாய்ந்தது. டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் முதல் பெட்டிக்கடை வரை தேன் கிடைத்தாலும், கலப்படம் இல்லாத தேன் என்றால் அதற்கு தனி கிராக்கி உண்டு. மலை, மரம், பாறை, கட்டிடம் என எட்டாத உயரத்தில் அடைகட்டும் தேனீக்களை, வீட்டிலேயே வளர்த்து தேன் சேகரித்து விற்கலாம். அதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம். மலை, கொம்பு, கொசு, இத்தாலி என பல வகைகள் இருந்தாலும், இந்திய தேனீ வகைதான் இந்த தொழிலுக்கு ஏற்றதாக, அதாவது பெட்டிகளில் வளர்க்க தகுந்தவையாக உள்ளன.இந்திய தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள திருப்பூர் மாவட்டம் பல்லடம் மலைமந்திரிபாளையத்தைச் சேர்ந்த திருஞான சம்பந்தம் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுக்கு மேலாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். தேனீ வளர்க்க விரும்புபவர்கள் முதலில் இரண்டு அல்லது மூன்று பெட்டிகள் மூலம் தேனீ வளர்த்து பயிற்சி பெற வேண்டும். தேன் மட்டுமல்ல, தேன் அடையும் விலை போகும். ஈடுபாடு, கவனம் இருந்தால் தேன் கூட்டை நன்றாக பராமரிக்க முடியும்.  எறும்பு, கரப்பான், பல்லி, குளவி, உண்ணி பேன், மெழுகு பூச்சி போன்றவை தேனீக்களுக்கு சேதத்தை விளைவிக்கும். மெழுகுப்பூச்சிகள் தேன் பெட்டியின் அடித்தளத்தில் குவியல், குவியலாக முட்டையிடும். அதிலிருந்து வெளிவரும் புழுக்கள் தேன் பெட்டியின் உள்ளே சென்று தேன் அடையைத் தின்று தீர்த்துவிடுகின்றன. இதன் தாக்குதல் அதிகமானால் தேனீக்கள் வெளியேறிவிடும். தாய்சாக் புரூட் எனப்படும் வைரஸ் நோய் தேனீக்களை தாக்குகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்ட புழுக்கள் பார்ப்பதற்கு சற்று விறைப்பாகவும், தலை கருத்தும் இருக்கும். இவ்வாறு ஏற்பட்டால் தீ வைத்து அழித்து விட வேண்டும். பூச்சித் தாக்குதல் ஏற்படாமல் தடுக்க பெட்டியின் கீழ் கழிவு எண்ணெய், ஆயில் போன்றவற்றைத் தடவினால் தேனீக்களுக்கு பூச்சி தொந்தரவு இருக்காது. முதலீடு எவ்வளவு?3 ஆயிரம் தேனீக்களுடன் கூடிய 50 பெட்டிகள் தலா  ரூ. 1500 வீதம்  ரூ. 75 ஆயிரம். பெட்டி வைக்கும் 50 ஸ்டாண்ட்கள்  ரூ. 5 ஆயிரம், 2 புகை செலுத்தும் கருவிகள் ரூ. 600, முகக்கவசம் 2 தலா  ரூ. 200, தேன் பிழிந்தெடுக்கப் பயன்படும் இயந்திரம்  ரூ. 2 ஆயிரம், கையுறை 2  ரூ. 200 என மொத்த செலவு  ரூ. 83 ஆயிரம். தேன் கூட்டை இடமாற்றம் செய்யவோ, தேன் எடுக்கவோ 2 பேர் இருந்தால் போதும். இடமாற்றம் செய்தால் வாகனச் செலவும், வாடகை இடமாக இருந்தால் அதற்கான செலவும் கூடுதலாக ஆகும்.சந்தை வாய்ப்புபெரிய நிறுவனங்களுக்கு விற்கலாம். நேரடியாக பாட்டிலில் அடைத்து டிபார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் மருந்துக்கடைகளுக்கு சப்ளை செய்யலாம். தேவை அதிகமாக இருப்பதால், எப்போதும் தேனுக்கு கிராக்கி உண்டு. தேன் உருவாவது எப்படி? தேனீக்கள் உடலில் இருந்து வெளியாகும் மெழுகு மூலம் பல்வேறு அறைகளை உருவாக்கி அடையை விரிவாக்கி கொண்டே செல்லும். தேனீக்கள் அதிகாலை பெட்டிக்குள் இருந்து வெளியேறும். அவை வெளியேற பெட்டியின் கீழ் பகுதியில் சிறிய வழி இருக்கும். வெளியே செல்லும் தேனீக்கள், பூக்களிலுள்ள மதுரத்தை(இனிப்பான திரவம்) வாயில் எடுத்து வரும். தேனீயின் பின்னங்காலில் மகரந்தம் ஒட்டியிருக்கும். இரண்டையும் அடையிலுள்ள தேன் புழுக்களுக்கு உணவாகக் கொடுக்கும். மதுரத்தையும், மகரந்தத்தையும் சாப்பிடும் புழுக்கள் அதை கொப்பளித்து வெளியேற்றும்போது அது தேனாக அடையில் படிகிறது. பெட்டி வைத்த 8 மாதத்துக்குள் ஏற்கனவே இருந்த 3 ஆயிரம் தேனீக்கள் பெருகி 10 ஆயிரம் முதல் 12 ஆயிரமாக மாறிவிடும். இந்த எண்ணிக்கையில் தேனீக்கள் உருவான பின்னர், மாதம்தோறும் 2 கிலோ தேன் அடையில் உருவாகும். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் தேன் எடுப்பதற்கேற்ற சூழல் இருந்தால்,  உற்பத்தி அதிகமாகும். 20 நாளுக்கொரு முறைகூட 2 கிலோ தேன் கிடைக்கும்.தேன் எடுப்பதற்கேற்ற சூழல் குறைந்தால், அவை உள்ள இடங்களுக்கு பெட்டிகளை கொண்டு போய் வைக்க வேண்டும். அவை வெகுதூரத்திலோ, வேறு ஊர்களிலோ இருந்தால்கூட அங்கு பெட்டிகளை இடம்பெயர்க்க வேண்டும். மாதம்  ரூ.14 ஆயிரம் தேன் பெட்டி வைத்த 8 மாதத்துக்கு பிறகு மாதம்தோறும் 2 கிலோவுக்கு குறையாமல் கிடைக்கும். ஒரு பெட்டியில் 2 கிலோ வீதம் 50 பெட்டியில் மாதம் 100 கிலோ தேன் கிடைக்கும். வெளி மார்க்கெட்டில் கிலோ விலை  ரூ. 140 முதல்  ரூ. 160 வரை விற்பதால் மாதந்தோறும்  ரூ. 14 ஆயிரம் வரை கிடைக்கும். தேனீக்கள் வெளியே செல்ல முடியாத மழைக்காலம் தவிர 8 மாதத்துக்கு தேன் கிடைக்கும்.அடையில் ராணித்தேனீ இருக்கும் வரை தேன்கூட்டம் கலையாது. ஒன்றுக்கு மேற்பட்ட ராணித்தேனீ உருவானால், புதிய ராணி தேனீ வெளியேறும். அதன் பின்னால் மற்ற தேனீக்கள் சென்று விடும் வாய்ப்புள்ளது. எனவே புதிய ராணி தேனீ உருவாகும் புழுவைக் கண்டறிந்து அதை அழித்து விட வேண்டும். கூட்டிலுள்ள ராணி தேனீயின் ஆயுள்காலம் 2 ஆண்டு. அது வரை தேன் கிடைக்கும். அதன் ஆயுள்காலம் முடிவதற்கு முன்பே புதிய ராணி தேனீயை உருவாக்கிக் கொண்டால் தொடர்ந்து தேன் உற்பத்திக்கான சூழல் அமையும்.மருத்துவ குணம்: குண்டு உடம்பு இளைக்க, செரிமானம், சளி, காய்ச்சல், மூட்டு வலி என பல நோய்களை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது தேன். தேன் மெழுகில் இருந்து அழகு சாதனப் பொருட்களான லிப்ஸ்டிக், நக பாலிஸ் போன்ற பல பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. வேலைக்காரத் தேனீக்கள் புழுக்களுக்கு உணவாக கொடுக்கும் அரசகூழ் எனப்படும் ராயல் ஜெல்லி, மருத்துவ குணம் உடையது. தேனீயின் விஷம் முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு நிவாரணி. பெட்டிகளே தேன் கூடுபூக்கள், மரம், செடி நிறைந்த வீட்டுக்கு அருகிலுள்ள நிழலான இடத்திலோ, தென்னை, வேம்பு, கருவேலம், முருங்கை, வாழை, எள், சூரியகாந்தி, வாழை, இலவம்பஞ்சு, கொத்தமல்லி, முருங்கை, எள், ரப்பர், தைல மரம் போன்றவை சாகுபடி செய்யக்கூடிய இடங்களின் அருகிலோ தேனீ வளர்க்க பெட்டிகளை வைக்கலாம். புன்னை அல்லது தேக்கு மரப் பெட்டிகளை வைக்க வேண்டும். பெட்டிக்குள் ராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீக்கள் என 3 ஆயிரம் தேனீக்கள் கொண்ட பெட்டியை வாங்கி வந்து வைக்க வேண்டும்.தேக்கு மரப் பெட்டிகளை, குறிப்பிட்ட அளவில், சட்டங்களை அமைத்தால் மட்டும் தேனீக்கள் தங்கும். அதற்கேற்ற பெட்டிகள் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள தேனீ வளர்ப்பாளர் கூட்டுறவு சங்கத்திலும், தேனீ வளர்ப்பாளர்களிடம் கிடைக்கும். பெட்டியை ஒரு அடி முதல் 2 அடி உயரம் வரை வைக்க வேண்டும்.தேன் எடுக்கும் முறைதேன் எடுப்பதற்கு முன்பு முகக்கவசம், கையுறை சாதனங்கள் அணிந்து கொள்ள வேண்டும். மின்னும், கண்ணை உறுத்தும் ஆடைகள், வாசனை திரவியங்கள் தவிர்க்க வேண்டும். காலையில் தேனீக்கள் வெளியே சென்ற பின்னர், உள்ளே புகையை செலுத்தினால் அடையிலுள்ள பெரிய தேனீக்கள் வெளியேறி விடும். சிறிய தேனீக்கள் இருக்கும். அவை கொட்டாது. பெட்டியில் வைக்கப்பட்டுள்ள 5 சட்டங்களையும் தனித்தனியாக வெளியே எடுத்து, அடையிலுள்ள தேனை, அது சேதமாகாத வகையில் பிழிந்தெடுக்க வேண்டும். தேனை பிழிய இயந்திரம் உள்ளது. அதை பயன்படுத்தலாம். எடுத்த தேனை வடிகட்டினால் விற்பனைக்கு தயார். தேனீ வகைகள்: இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவை இத்தாலியத் தேனீக்கள். அதிக தேன் தருபவை. இதிலிருந்து கிடைக்கும் தேன், நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. இவை வட இந்தியப்பகுதியில் வளர்க்கப்படுகின்றன. மரங்களின் கிளை, கொம்புகளில் காணப்படுபவை கொம்புத் தேனீக்கள். கொட்டும் தன்மை கொண்டவை.மலைத் தேனீ, இயற்கையான சூழ்நிலைகள், காடு, மலை, பெரிய பெரிய கட்டிடங்கள் போன்ற பகுதிகளில் கூடு கட்டுபவை. இத்தாலி, கொம்பு, மலை தேனீக்கள் கொட்டக்கூடியவை. கொசுத் தேனீ மிகச்சிறியது. மரப்பொந்து, பாறை இடுக்குகளில் கூடு கட்டுபவை. தமிழகத்தில் வீடு மற்றும் தோட்டங்களில் வளர்க்கக்கூடிய தேனீக்கள் பெரும்பாலும் இந்திய தேனீக்களே.
710
1/27/2011 4:06:58 PM
தமிழகம்
திண்டிவனம் அருகே லாரி - ரயில் மோதல் : டிரைவர் பலி; நடுவழியில் பயணிகள் தவிப்பு
திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற லாரி மீது மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் சென்னை - விழுப்புரம் இடையே ரயில் போக்குவரத்து 5 மணி நேரம் பாதிக்கப்பட்டது. நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் நள்ளிரவில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். சென்னையில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு 10.30 மணிக்கு திருச்சி புறப்பட்டது. அதில் 1800-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். நள்ளிரவு 12.40 மணியளவில் திண்டிவனம் அடுத்த கேணிப்பட்டு என்ற இடத்தில் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது விழுப்புரம் - செங்கல்பட்டு இருவழிப்பாதை பணிக்காக ரயில்வே டிராக் ஓரம் மண்ணை கொட்டிவிட்டு லாரி ஒன்று திரும்பி வந்து கொண்டிருந்தது. திண்டிவனம் அடுத்த வைரபுரம் கிராமத்தைசேர்ந்த ராஜ் (22) என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.கேணிப்பட்டு ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது வேகமாக வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரி சுக்குநூறாக நொறுங்கியது. அதன் பாகங்கள் ஆங்காங்கே சிதறின. இரண்டு சக்கரங்கள் மட்டும் ரயில் இன்ஜினுக்கு அடுத்த பெட்டியின் அடியில் சிக்கிக்கொண்டன. அவை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. ரயில் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரளும் நிலை ஏற்பட்டது. இன்ஜின் டிரைவர் செல்வராஜ், சாமர்த்தியமாக பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். நள்ளிரவில் குண்டு வெடித்ததுபோல சத்தம் கேட்டதும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். பெரும் விபத்து நடந்துவிட்டதோ என எண்ணி வெளியே எட்டிப் பார்த்தனர். நடுவழியில் ரயில் நிற்பது தெரிந்ததும் கீழே இறங்கி பார்த்தனர். லாரி டிரைவர் ராஜ் உடல்சிதைந்து இறந்து கிடந்தார். விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ரயில் பெட்டிக்கு அடியில் சிக்கிய லாரி டயரை மீட்க முடியவில்லை. அந்த நேரத்தில் திண்டிவனம் அருகே சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் இன்ஜினை எடுத்து வந்து, மலைக்கோட்டை எக்ஸ்பிரசை இழுத்துச்செல்ல முயன்றனர். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.பின்னர் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தொழில்நுட்ப அலுவலர்கள் வரவழைக்கப்பட்டனர். ரயிலுக்கு அடியில் சிக்கிய லாரியின் பாகங்கள் கேஸ் வெல்டிங் மூலம் அகற்றப்பட்டன. பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் 5 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.நடுவழியில் ரயில் நின்றதால் இரவு முழுவதும் பயணிகள் அவதிப்பட்டனர். விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் விபத்து குறித்து பயணிகள் கூறும்போது, ‘‘நள்ளிரவு 12.40 மணி அளவில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது டமார் என சத்தம் கேட்டது. குண்டு வெடித்து விட்டதோ? என்று பயந்து திடுக்கிட்டு எழுந்தோம். வெளியே பார்த்தபோது ஒரு புகை மண்டலமாக இருந்தது. ரயில் சத்தமும் அதிகமாக இருந்தது. குலுங்கிக்கொண்டே சென்ற ரயில், ஒரு கி.மீ. தூரத்தில் நின்றது. பின்னர்தான் லாரி மீது ரயில் மோதியது தெரியவந்தது. விடிய விடியே ரயிலிலேயே இருந்தோம். கடவுள் அருளால் அனைவரும் உயிர் தப்பினோம்‘‘ என்றனர். நடுவழியில் நின்றரயில்கள்விபத்து காரணமாக சென்னையில் இருந்து வந்த சேலம் மற்றும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திண்டிவனத்தில் நிறுத்தப்பட்டன. அதேபோல எதிர்மார்க்கத்தில் வந்த ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பாண்டியன், நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக சென்னை வந்தன.
711
1/27/2011 4:09:24 PM
குற்றம்
பட்டுக்கோட்டை அருகே பயங்கரம் 2வது மனைவி உயிருடன் எரிப்பு கட்டிப்பிடித்ததால் கணவனும் கருகினார்
பட்டுக்கோட்டை: திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி அருகே உள்ள பள்ளங்கோவிலை சேர்ந்தவர் செல்வி (42). குடும்ப பிரச்னையால் கணவனை பிரிந்து 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். அங்குள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றபோது, தர்மலிங்கம் (47) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 7 மாதத்துக்கு முன்பு ஆலத்தூரில் உள்ள ஒரு தோப்பில் இருவரும் சேர்ந்து வசிக்கத் தொடங்கினர். செல்வியின் குழந்தைகள், பாட்டி வீட்டில் வளர்கின்றன.செல்வியுடன் தர்மலிங்கம் குடும்பம் நடத்துவது அவரது முதல் மனைவிக்கு தெரிந்தது. இதனால் வீட்டில் தகராறு ஏற்பட்டது. கேரளாவுக்கு சென்று பிழைக்கலாம் என கருதிய தர்மலிங்கம், செல்வியையும் வரும்படி அழைத்தார். ‘குழந்தைகளை என்னால் பார்க்காமல் இருக்க முடியாது அதனால் கேரளா வரமாட்டேன்’ என செல்வி மறுத்துவிட்டார். இதுதொடர்பாக நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தர்மலிங்கம் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து செல்வி மீது ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில் செல்வி ஓடிவந்து தர்மலிங்கத்தை கட்டிப்பிடித்தார். இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து அவர்களை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
712
1/27/2011 4:12:40 PM
தமிழகம்
செங்கம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ போளூர் வரதன் காலமானார்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் போளூர் வரதன் (58) எம்எல்ஏ இன்று காலமானார். அவரது உடலுக்கு காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தவர் போளூர் வரதன். சென்னை அடையாறு காந்திநகரில் வசித்து வந்தார். இன்று காலை வ¦ட்டில் இருந்தபோது, போளூர் வரதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். விவசாய குடும்பத்தில் பிறந்து, மூன்று முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்கரிகாத்தூர். இவருக்கு மனைவி மற்றும் ராஜு என்ற மகன் உள்ளார். ராஜு, இளைஞர் காங்கிரசில் பொறுப்பில் உள்ளார். காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச் செயலாளர், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரசில் தலைவர் பதவி வகித்தவர் வரதன். அவரது உடல் காந்திநகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
713
1/27/2011 4:15:40 PM
தமிழகம்
திருத்தணி தங்க கருவறை கும்பாபிஷேகம் கோபுரம் வண்ணம் தீட்டுதல் யாக குண்ட பணி தீவிரம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் தங்க கருவறை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. 27 அடி உயரத்தில் கோபுரம் புதிதாக அமைக்கப்பட்டும், குமாரதந்திரப்படி சிற்பங்கள் அமைக்கப்பட்டும் அதன் மீது 1200 கிலோ செம்பு தகடு, 100 கிலோ தங்க தகடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.25 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் நடக்கிறது. இதை அறங்காவலர் குழு தலைவர் ஈஸ்வரப்பன் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறும்போது, ‘Ôபிப். 9ம் தேதி காலை 9 மணிக்கு தங்க கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 7, 8ம் தேதி யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும். தஞ்சாவூர் சபரிகள் குழு சார்பில் கோயில் கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. திருவாரூர் சபரிகள், யாக குண்டங்களை அமைத்து வருகின்றனர்ÕÕ என்றார். அப்போது இணை ஆணையர் கவிதா, கோயில் மேலாளர்கள் மோகன், சுப்பிரமணி, நகர திமுக செயலாளர் எஸ்.சந்திரன், ஒன்றிய திமுக செயலாளர்கள் திருத்தணி அகூர் மாணிக்கம், ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு தலைவர் கன்னியப்பன், முன்னாள் அறங்காவலர் நாகன் உட்பட பலர் உடனிருந்தனர்.
714
1/27/2011 4:16:16 PM
மாவட்ட மசாலா
போதை லாரி டிரைவர்களால் பாதிப்பு காஞ்சியில் பெண்கள் மறியல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வணிகர் வீதியில் ஏராளமான கடைகள், வீடுகள் உள்ளன. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து நெல் மூட்டைகள், சரக்கு ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்படுவது வழக்கம். சாலையோரத்தில் லாரிகளை நீண்ட நேரம் நிறுத்தி விட்டு டிரைவர்கள், கிளீனர்கள் மது குடிக்க செல்கின்றனர். மது பாட்டில்களை ஆங்காங்கே உடைத்து போடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.வணிகர் வீதியில் லாரிகளை நிறுத்தக்கூடாது என்று அதிகாரியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 150 பேர் இன்று காலை காஞ்சிபுரம் பஸ் நிலையம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் சிரமப்பட்டனர். காஞ்சி டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், ஆர்டிஓ வீரப்பன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுடன் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர சமாதானத்துக்கு பிறகு மறியலை கைவிட்டு ஆர்டிஓ அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
715
1/27/2011 4:32:51 PM
மாவட்ட மசாலா
மீனவர்கள் படுகொலை கண்டித்து திருவொற்றியூர், எண்ணூரில் மீனவர்கள் திடீர் சாலை மறியல்
திருவொற்றியூர்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் திருவொற்றியூர் அருகே இன்று காலையில் சாலை மறியல் நடத்தப்பட்டது. எண்ணூர் விரைவுசாலை நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் அருகே நடந்த மறியலுக்கு சங்க பொருளாளர் மனோகரன் தலைமை விகித்தார். நூற்றுக்கணக்கான மீனவர்கள் சாலையில் அமர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சமாதானம் அடைந்த மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதேபோல் எண்ணூர் சாலங்குப்பம் அருகே மாவட்ட செயலாளர் மாணிக்கம் தலைமையில் 150 மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
717
1/27/2011 4:36:15 PM
மாவட்ட மசாலா
ஆவடி ரவுடி கொலை : 3 பேர் கைது
ஆவடி: ஆவடி நந்தவன மேட்டூர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாபுரெட்டி (37). பிரபல ரவுடி. சேக்காடு ஏரியில் சவுடு மணல் எடுத்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை, சேக்காடு மெயின் ரோடு ரேஷன் கடை அருகே கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், சப்இன்ஸ்பெக்டர்கள் பெரிய பாண்டியன், முருகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். விசாரணையில் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த வரதன் (28), சேக்காடு பள்ளத்தெருவை சேர்ந்த வீரபத்திரன் (29), சேக்காடு அம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வம் (42) ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த மூவரையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கொலையாளி வரதன் மணல் வியாபாரம், தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகிறார். வரதனுக்கு சொந்தமான நிலத்தில் பாபுரெட்டி மணல் எடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த வாரம் டாஸ்மாக் பாரில் வரதன், பாபுரெட்டிக்கு இடையே போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் வரதனை கொலை செய்து விடுவதாக பாபுரெட்டி மிரட்டி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் சேக்காடு ஏரிக்கரையில் வரதன் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது பாபுரெட்டி அங்கு வந்துள்ளார். வரதனை அடித்து, அவரிடமிருந்து பணம்,  மதுபாட்டில்களை பறித்துச் சென்றுள்ளார். ஆத்திரம் அடைந்த வரதன், பாபுரெட்டியை தீர்த்து கட்ட திட்டமிட்டார். அதன்படி இரவு 1.30 மணியளவில் ரேஷன் கடை முன்பு போதையில் தூங்கிக்கொண்டிருந்த பாபுரெட்டியை வரதன், அவரது நண்பர்கள் வீரபத்திரன், செல்வம் ஆகியோர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான மூவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
718
1/27/2011 4:38:18 PM
இந்தியா
கலெக்டர் எரிப்பு வழக்கில் மேலும் 4 பேர் சிக்கினர்
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் மாவட்ட கூடுதல் கலெக்டர் யஷ்வந்த் சோனாவானே எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாலேகான் மாவட்ட கூடுதல் கலெக்டர் சோனாவானே நேற்று முன்தினம் மாபியா கும்பலால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான போப்பட் ஷிண்டேவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. நாசிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஷிண்டேயின் நிலைமை சீரியசாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துணை கலெக்டர் கொல்லப்பட்டதை கண்டித்து மகாராஷ்டிர கெஜடட் அதிகாரிகள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. கொலை நடந்தபோது சோனாவானேவுடன் இருந்த உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 'கொலயாளிகளை பார்க்கவில்லை. டீசல் கலப்படம் செய்வதை சோனாவானே செல்போனில் படம் பிடித்ததால் ஆத்திரமடைந்து கொலையாளிகள் இந்தக் காரியத்தை செய்தனர்' என அவர் தெரிவித்துள்ளார்.
719
1/27/2011 4:41:43 PM
குற்றம்
ஆட்டோ நிறுத்திய தகராறில் மோதல் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த அய்யனேரி, பஞ்சகண்டநாதபுரத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ் (21), பழனிவேல் (24). ஆட்டோ டிரைவர்கள¢. சோளிங்கர் விநாயகர் கோயில் ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்துவார்கள். இந்நிலையில் அய்யனேரி காலனியை சேர்ந்த ரகு (30), ஆட்டோ வாங்கியுள்ளார். அவரும், சோளிங்கர் விநாயகர் கோயில் ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்த வந்தார். இது தொடர்பாக ரமேஷ், ரகு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம், சவாரி ஏற்றிக்கொண்டு அய்யனேரி காலனி வழியாக ரமேஷ் சென்றுள்ளார். அங்கு வந்த ரகு, ஆட்டோவை மறித்து தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், பழனிவேல் மற்றும் சிலருடன் அய்யனேரி காலனிக்கு சென்றார். அங்கு ரகு இல்லாததால் ரமேஷும் அவரது நண்பர்களும் வெளியில் இருந்தவர்களை அடித்து விரட்டியுள்ளனர். இந்த ரகளையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, ஆர்.கே.பேட்டை போலீசார் அங்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகேஷ் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், பழனிவேலை கைது செய்து விசாரித்து வருகிறார். தப்பியோடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
720
1/27/2011 4:42:58 PM
மர்மம்
சோழவரம் அருகே பஞ்செட்டியில் மேம்பாலம்
புழல்: சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புழல் ஒன்றியம் கிராண்ட் லைன் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை போன்றவை எடை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் குறை கூறினர். இதற்கு பதில் அளித்த உணவுப் பொருள் வழங்கல் துணை ஆணையர் ராமராஜன், ‘இனி சரியான முறையில் பொருள் வழக்கப்படும்Õ என்றார். இதில் பழுதான தொகுப்பு வீடுகளை சரி செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. விலாங்காடுபாக்கம் ஊராட்சியில் தலைவர் பாரதி சரவணன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் மேய்க்கால் புறம்போக்கில் உள்ள பகுதிகளை கிராம நத்தமாக மாற்ற வேண்டும் என்றும், இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.பி.பி.சாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஞ்செட்டியில் ஊராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து அதிகம் உள்ள ஜிஎன்டி சாலையில் பஸ் நிறுத்தம் அருகில் மேம்பாலம் அமைக்க வேண்டும், காலனி சுடுகாட்டுக்கு சாலை அமைக்க வேண்டும், வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சோழவரம் மற்றும் புழல் ஒன்றியங்களில் உள்ள அந்தந்த ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
721
1/27/2011 4:46:13 PM
தமிழகம்
திமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி : ஏ.சி.சண்முகம் பேச்சு
பள்ளிப்பட்டு: திருத்தணி தொகுதி புதிய நீதிக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் பொதட்டூர்பேட்டையில் நேற்று நடந்தது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் விநாயகம் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் மனோகரன், அவைத்தலைவர் அண்ணாமலை, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.கே.பேட்டை ஒன்றிய செயலாளர் கேசவன் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணன், சுப்பிரமணி வரவேற்றனர்.கூட்டத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேசியதாவது: தமிழகத்தில் 80 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் புதிய நீதிக்கட்சிக்கு 30,000 வாக்குகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் புதிய நீதிக்கட்சி பலமாக உள்ளது. நெசவாளர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்படும். சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று 6&வது முறையாக கருணாநிதி முதல்வர் ஆவார். திமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி இடம் பெறும். வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்த பெருமை முதல்வர் கருணாநிதிக்கு உண்டு. அதே போன்று நெசவாளர்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு ஏ.சி.சண்முகம் பேசினார்.கூட்டத்தில், மாநில இணை பொதுச்செயலாளர் சேதுராமன், துணை பொதுச்செயலாளர் பழனி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் மற்றும் நிர்வாகிகள் மனோகரன், சண்முகம், சாமிநாதன், முருகவேல், தாயுமானவன், ஜெயபால், சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதட்டூர்பேட்டை நகர செயலாளர் புண்ணியகோட்டி நன்றி கூறினார்.
722
1/27/2011 4:48:42 PM
தமிழகம்
வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே தலைவர் கருணாநிதி
பொன்னேரி: தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரே தலைவர் முதல்வர் கருணாநிதிதான் என்று செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறினார். மீஞ்சூர் ஒன்றிய திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மீஞ்சூரில் நேற்று முன்தினம் நடந்தது. முன்னாள் அமைச்சர் சுந்தரம் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சீனி ஆத்திம்கனி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் ராஜ், மீஞ்சூர் ஒன்றியக்குழு தலைவர் ஈஸ்வரி ராஜா, பேரூர் கழக செயலாளர்கள் மீஞ்சூர் லெனின், பொன்னேரி சங்கர், பேரூராட்சி தலைவர்கள் மீஞ்சூர் ராஜேந்திரன், பொன்னேரி பத்மாவதி வேங்கடம் முன்னிலை வகித்தனர். மீஞ்சூர் ஒன்றிய பொறுப்பாளர் பாஸ்கர் சுந்தரம் வரவேற்றார். கலைஞர் பகுத்தறிவு பாசறை தலைமைக்கழக அமைப்பாளர் கந்தன் பேசினார். விழாவில், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி பேசுகையில், ‘தமிழ் செம்மொழியை இந்திய ஆட்சி மொழியாக மாற்ற முதல்வர் கருணாநிதி அரும்பாடுபட்டார். ஆரம்பப் பள்ளிக்கு காமராஜர் என்றால் உயர்கல்விக்கு கலைஞர். இளைஞர்கள் வேலை தேடி அலையும் காலகட்டத்தில் பணி நியமன தடை சட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் அது உடைத்து எறியப்பட்டு, அரசு துறையில் 3 லட்சம் பேருக்கும், பொது அமைப்பு மூலம் 2 லட்சம் பேருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரே தலைவர் கலைஞர்தான்‘ என்றார்.விழாவில், சோழவரம் ஒன்றிய செயலாளர் பார்த்த சாரதி, மீசா கேசவன், வக்கீல் அன்புவாணன், நிலவழகன், கோதண்டம், ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர்கள் மோகன்ராஜ், மணிமேகலை, துணைத்தலைவர் ருக்மணி, பேரூராட்சி துணைத்தலைவர் உமா மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
723
1/27/2011 4:49:39 PM
மாவட்ட மசாலா
பெரும்பாக்கம் ஊராட்சியில் 25 லட்சத்தில் சிமென்ட் சாலை
வேளச்சேரி: பெரும்பாக்கத்தில் ளி25 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைப்பது என்று கிராம சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேடவாக்கம் ஊராட்சி தலைவர் ப.ரவி தலைமையில், கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ரேஷன் கடை பதிவேடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பதிவேடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஊராட்சி துணைத்தலைவர் கோபு மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.பெரும்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சுகாசினி ரங்கராஜன் தலைமை வகித்தார். சி.எம்.டி.ஏ. நிதி 25 லட்சத்தில் கோகுல் நகர், பிரபு நகர், நேசமணி நகர் பகுதியில் சிமென்ட் சாலை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பற்றாளராக விரிவாக்க அலுவலர் (சமூகநலம்) ஞானமணி, துணைத் தலைவர் ஞானசேகரன், ஊராட்சி உதவியாளர் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நன்மங்கலம் கிராம சபை கூட்டம், ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ளி6 லட்சம் செலவில் பொன்னியம்மன் கோயில் குளம், அத்திக்குட்டையை ஆழப்படுத்துவது, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட 25 வீடுகளின் கூரைகளை சிமென்ட் கூரைகளாக மாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பற்றாளராக ஒன்றிய விரிவாக்க அலுவலர் புஷ்பலதா, துணைத்தலைவர் சம்பத், ஊராட்சி உதவியாளர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சித்தாலப்பாக்கத்தில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு, ஊராட்சி தலைவர் தெய்வானை தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
724
1/27/2011 4:53:35 PM
தமிழகம்
நந்தம்பாக்கத்தில் 750 ஆண்டு பழமையான கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேக விழா
ஆலந்தூர்: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள கோதண்டராம சுவாமி கோயில் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் கோதண்டராமர், சீனிவாச பெருமாள், அலமேலுமங்கை தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், நந்தவன கண்ணன், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் சன்னதிகளுக்கு 2005&ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது இவை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கொடிக்கம்பம் மாற்றப்பட்டுள்ளது. கிழக்கு, தெற்கு ராஜகோபுரங்கள் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் எதிராஜ ஜீயர் தலைமையில், வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து அறநிலையத்துறை இணை செயலாளர் வாசுதேவன், தாம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் காமராஜ், நந்தம்பாக்கம் பேரூராட்சி தலைவர் எஸ்.சேகர், ஆலந்தூர் தாசில்தார் நரசிம்மவர்மன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று மாலை தேர் பவனி நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீஸ்ரீனிவாச சேவா சங்க நிர்வாகிகள் வீரராகவ ரெட்டியார், ஆறுமுகம், கருணாநிதி, ராதாகிருஷ்ணன், பட்டாபி, ஆலய செயல் அலுவலர் அன்புக்கரசி ஆகியோர் செய்திருந்தனர்.
725
1/27/2011 5:08:08 PM
குற்றம்
கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் 2 பேர் கைது; 10 பேருக்கு வலை
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் ஒன்றியம், கீழானூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் தென்னவன் தலைமை வகித்தார். கூட்டம் நடந்தபோது, கிராமத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அப்போது ஆனந்தன் என்பவர் தான் கட்டி வரும் வீட்டுக்கு வரி ரசீது கேட்டுள்ளார். அதற்கு ‘பொது கழிப்பிட கட்டிடத்தை இடித்துவிட்டு வீடு கட்டி வருவதாக உங்கள் மீது கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, வீட்டு வரி ரசீது கொடுக்க முடியாதுÕ என்று தென்னவன் கூறியுள்ளார்.ஆத்திரம் அடைந்த ஆனந்தன், அவரது தம்பி பிரேம் அவர்களுடன் இருந்த 10 பேர், தென்னவனை நோக்கி ஓடிவந்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென தென்னவனை அவர்கள் அடித்தனர். கவுன்சிலர்களும் பொதுமக்களும் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் தப்பி ஓடிவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த தென்னவன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  புகாரின் பேரில் வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனந்தன் (32), அவரது உறவினர்  கமல் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனந்தனின் தம்பி பிரேம் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
726
1/27/2011 5:10:16 PM
தமிழகம்
லட்சுமிபுரத்தில் பாஜ ஆர்ப்பாட்டம்
புழல்:காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றுவதை தடுத்த மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புழல் அடுத்த லட்சுமிபுரம் ரெட்டேரி அருகே நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சென்னை சிவா, மாதவரம் மண்டல தலைவர் எம்.வி.சசிதரன், முரளி, சேஷாத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணைத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டன உரையாற்றினார். இதில் மாநில விவசாய அணி தலைவர் எம்.பாஸ்கரன், திருவொற்றியூர் கணேசன், தேவதாஸ், செங்குன்றம் சுந்தரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
727
1/27/2011 5:11:54 PM
தமிழகம்
வாகனம் மோதி போலீஸ்காரர் பலி
திருவள்ளூர்: திருத்தணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார் கல்கண்டு (எ) ஆனந்த வடிவேலு (44). இவரது மனைவி கலா (36). மகள் தீபிகா(15), மகன் பிரதீப் (14) உள்ளனர். நேற்றிரவு 7 மணியளவில் பணி முடிந்ததும் பைக்கில் திருவள்ளூர் வந்தார் ஆனந்த வடிவேலு. பட்டரைப்பெரும்புதூர் அருகே சாலை வளைவில் திரும்பும்போது எதிரே வந்த வாகனம் ஒன்று பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்த வடிவேலு, சம்பவ இடத்திலே இறந்தார். தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் சென்று, சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
728
1/27/2011 5:14:32 PM
தமிழகம்
நெசவாளரின் கலங்கரை விளக்கம் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஏ.சி.சண்முகம் பாராட்டு
சென்னை:நெசவாளர்களின் கலங்கரை விளக்கம் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் நசிந்து, நெசவாளர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருந்தது. உழைப்பிற்கேற்ற கூலியின்மை, பஞ்சு விலை உயர்வு, நூல் ஏற்றுமதியால் நெசவுத் தொழிலாளர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர் நெசவாளர்கள். கடலலையில் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கப்பல் மாலுமியை போல், தவித்துக் கொண்டிருந்த நெசவாளர்களின் அனைத்து துயரங்களையும், தேவைகளையும், அவற்றை களையும் விதமாய் தமிழ்நாட்டில் ஜவுளி பூங்கா துவக்கம், நூல் ஏற்றுமதிக்கு உடனடியாக தடைவிதிப்பு, மற்றும் ஈரோட்டில் ஜவுளி வர்த்தக மையத்துக்கு அடிக்கல் நாட்டுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, நெசவாளர்களின் வாழ்வில் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் திகழும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. முடிந்து விட்டதோ நம் வாழ்வு என்று வாடியிருந்த நெசவாளர்களுக்கு, வாடிய முல்லைக்கு தேர் தந்த பாரிவள்ளலாய் உதவிக்கரம் நீட்டி, அவர்களின் கண்ணீரை துடைத்ததற்காக அமைச்சர் தயாநிதி மாறனை பாராட்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
729
1/27/2011 5:40:00 PM
விளையாட்டு
இறுதிபோட்டியில் பூபதி பயஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மகேஷ்பூபதி&லியாண்டர்பயஸ் ஜோடி 7&6(6&5), 4&6,6&3 என்ற செட்கணக்கில் கனடாவின் நெஸ்டர்& பெலா ரசின் மிரினி ஜோடியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
730
1/27/2011 5:41:47 PM
விளையாட்டு
ஜிம்பாப்வே வீரர் திடீர் விலகல்
உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஜிம்பாப்வே அணியில் சியான் எர்வின் இடம் பெற்று இருந்தார். இவர் ஹாம்ஷயர் கவுன்டி அணியில் விளையாடி வந்தார்.\தற்போது தேசிய அணிக்காக தேர்வு செய்யப்பட்டு இருந்த சியான் திடீரென உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாது என்று அறிவித்து விட்டார். ஹாம்ஷயர் அணிக்காக நான் இன்னும் அதிகம் விளையாட வேண்டியது உள்ளது. அங்கு நான் அடுத்த வருடம் திருமணம் முடிக்க இருக்கிறேன். எனவே ஜிம்பாப்வே அணியை விட ஹாம்ஷயர் அணி முக்கியம் என்று கூறிவிட்டார்.
731
1/27/2011 5:43:22 PM
விளையாட்டு
இந்தியாவில் இது 3வது முறை
இந்தியாவில் உலககோப்பை போட்டிகள் நடப்பது இது 3வது முறை. இதற்கு முன்னர்  1987 மற்றும் 1996ம் ஆண்டுகளில் நடந்துள்ளது. இதில் 1987ல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 1996ல் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மகுடம் சூடியது. துவைத்து எடுத்த இந்தியாஉலககோப்பையில் 2007ம் ஆண்டு பெர்முடாவிற்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 413 ரன் குவித்தது. இது தான் அதிகபட்ச ரன்குவிப்பாக உள்ளது. இந்த லிஸ்டில் 2வது இடத்தில் இலங்கையும் (398, கென்யாவிற்கு எதிராக), 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவும்(377, தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக) உள்ளன.
732
1/27/2011 5:44:41 PM
விளையாட்டு
6வது தொடர் காணும் சச்சின்
37 வயதான இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் இதுவரை 5 உலககோப்பை போட்டிகளில் ஆடியுள்ளார். இம்முறை அவர் பங்கேற்பது 6வது முறையாகும். இதற்கு முன்னர் பாகிஸ்தான் ஜாவித் மியான்தத் 6 உலககோப்பைகளில் ஆடியுள்ளார்.
733
1/27/2011 5:45:58 PM
விளையாட்டு
சீனியர் பான்டிங்
ஆஸி. வீரர்கள் பான்டிங், மெக்ராத் ஆகியோர் உலககோப்பையில் 39 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். இந்த லிஸ்டில் ஜெயசூர்யா(38), வாசிம் அக்ரம்(38), சச்சின்(36), அரவிந்த டி சில்வா(35), இன்சமாம்(35) ஆகியோர் முறையே உள்ளனர்.
734
1/27/2011 5:47:04 PM
விளையாட்டு
இந்தியா சாம்பியன்
2 முறை பட்டம் வென்ற வெ.இஅணிக்கு இறுதிபோட்டியில் ‘ஷாக்’ கொடுத்து முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது  கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி.கிரிஸ்டன் டாப்1996ல் அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக தென் ஆப்ரிக்காவின் கிரிஸ்டன் 188 ரன் விளாசினார். தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ரன் இதுதான். கங்குலி 183, விவியன் ரிச்சர்ட்ஸ் 181, கபில் தேவ் 175 ஆகியோர் இந்த பட்டியலில் 2 முதல் 4 இடங்களில் உள்ளனர்.கேப்டன்களின் விளாசல்கேப்டன்களில் பான்டிங், ஜெயவர்த்தனே ஆகியோர் ஒரே தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளனர். 2007 உலககோப்பையில் ஜெயவர்த்தனே 548, பான்டிங் 539 ரன் எடுத்தனர்.ஒரே தொடரில் இரு கேப்டன்கள் இவ்வளவு ரன்குவித்ததும் ஒரு சாதனை தான். கங்குலி, பான்டிங் ஆகியோர் தலா 4 சதங்கள் விளாசியுள்ளனர். இதில் கங்குலி 2003 உலககோப்பையில் மட்டும் 3 சதங்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் 1987ம் ஆண்டு போட்டியில் இலங்கைக்கு எதிராக 181 ரன்கள் விளாசினார்.இது தான் கேப்டனாக இருந்து வீரர் ஒருவர் விளாசிய அதிகபட்ச ரன்கள்.103 சதங்கள் உலககோப்பையில் 103 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆஸி. வீரர்கள் 21, இந்தியா 15, வெஸ்ட் இண்டீஸ் 13, பாகிஸ்தான் 13, நியூசிலாந்து 11, இலங்கை 8, இங்கிலாந்து 8, தென் ஆப்ரிக்கா 6, ஜிம்பாப்வே 4, நெதர்லாந்து 2, அயர்லாந்து 1, கனடா 1 என சதங்களை பதிவு செய்துள்ளனர். இவற்றில் 72 சதங்களை இடது கை பேட்ஸ்மேன்களும் 31 சதங்களை வலது கை பேட்ஸ்மேன்களும் அடித்துள்ளனர். இந்தியாவின் 2572007 உலககோப்பையில் பெர்முடாவிற்கு எதிராக இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒரு அணியின் சிறப்பான வெற்றியாக உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 413 ரன் குவித்தது.
735
1/28/2011 2:33:17 PM
சினிமா(ரீல்மா)
சமூக சேவையில் ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயா கூறியது: ஜீவாவுடன் ‘ரவுத்திரம்' படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘கேசினோவாÕவில் நடிக்கிறேன். இதன் ஷூட்டிங் தாமதமாகிறது. காரணம் தெரியவில்லை.  ‘போக்கிரி ராஜாÕ படத்தில் மம்முட்டியுடன் நடித்தேன். 2 மலையாள சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தது சந்தோஷம். விரைவில் இரண்டு சர்வதேச படங்களில் நடிக்க உள்ளேன். அதில் ஒன்று சேகர் கபூர் இயக்கும் ‘பானி'. இப்படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்' டேனி பாய¢ல் இணை தயாரிப்பில் ஈடுபடுகிறார். ஹிருத்திக் ரோஷன் ஹீரோ. அடுத்து தீபா மேத்தா இயக்கும் ‘மிட்நைட் சில்ரன்Õ படத்தில் நடிக்கிறேன். இதற்கு முன் அவரது சகோதரர் திலிப் மேத்தா இயக்கிய ‘குக்கிங் வித் ஸ்டெல்லா' படத்தில் நடித்தேன். அப்போது தீபாவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இம்முறை அவரது இயக்கத்தில் நடிக்க அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக சேவையிலும் கவனமாக இருக்கிறேன். பார்வையற்ற பெண்களுக்கு பயிற்சி அளிக்க மும்பையில் அழகு கலை நிலையம் அமைத்தேன். அங்கு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வெளி அழகு நிலையங்களில் வேலை தர தயங்குகிறார்கள். அந்த தயக்கத்தை போக்குவதற்காக போராடப் போகிறேன். சில நேரம் வாடிக்கையாளர்களால் பார்வையற்ற பெண்கள் பாதிக்கும் சூழல் உள்ளது என்பதை அறிந்திருக்கிறேன். அதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட உள்ளேன்.
736
1/28/2011 2:36:42 PM
சினிமா(ரீல்மா)
காதல் கதையில் ஜாதியை சொல்ல கூடாது
‘பொன்மாலைப் பொழுது' பட இயக்குனர் ஏ.சி.துரை கூறியது: கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் ஹீரோவாக அறிமுகம் படம் இது. ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். 'வாங்க காதலில் விழுங்கள்' என்று இப்படத்திற்கு துணை தலைப்பு தந்திருக்கிறேன். ஏன் அப்படி தலைப்பு வைத்தேன் என்பதற்கு படத்தில் விடை இருக்கும்.  பிளஸ் 2 படிக்கும் டீன் ஏஜ் மாணவர்களின் காதலை சொல்லும் கதை. இது ஜாதியை மையமாக கொண்டதா என்கிறார்கள். ஜாதி, மதம் வைத்து நிறைய காதல் கதைகள் வந்துவிட்டன. மீண்டும் மீண்டும் அதையே படமாக்குவது மக்களின் மனதை அதே பாதைக்கு கொண்டு செல்வதுபோல்தான் ஆகிறது. இயக்குனர்கள் ஜாதி, மதத்தை கடந்து வந்தால்தான் மக்களும் அதை கடப்பார்கள். இப்படத்தில் காதலை புதிய களத்தில் சொல்கிறேன். ஒரு மகன் இப்படத்தை பார்த்தால் தந்தையையும் பார்க்கச் சொல்வான். அதேபோல் தந்தை பார்த்தால் மகனை போய் பார்க்க வலியுறுத்துவார். இதன் ஷூட்டிங் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பிப்ரவரியில் தொடங்குகிறது.
737
1/28/2011 2:47:02 PM
சினிமா(ரீல்மா)
ரசிகர்களே வேண்டாம் நடிகர் முடிவு
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... ‘தா'ங்கிற பேர்ல ரிலீசான படத்தை ரீ ரிலீஸ் செய்ய முடிவு செஞ்சாங்களாம்... செஞ்சாங்களாம்... ஆனா, ஏதாவது ஒண்ணு தடையா வந்து முட்டுக்கட்டை போடுதாம்... போடுதாம்... ‘முதல்ல நீங்க படத்தோட பேரை மாத்துங்க. அப்பறம் ஒரு மாற்றம் தெரியும்'ன்னு தயாரிப்புக்கு ஜோசியருங்க அட்வைஸ் பண்ணினாங்களாம். அதனால தலைப்பை மாத்தப்போறாங்களாம்... மாத¢தப்போறாங்களாம்... காமெடி ஆக்டருங்க தனித்தனியா குரூப் வச்சிருக்காங்க. பிளாக் காமெடி நடிகருக்கு மட்டும் குரூப் அமைய மாட்டேங்குதாம்... மாட்டேங்குதாம்... ‘யப்பா, நீ வந்துருப்பாÕன்னு எதிர் கோஷ்டில இருக்க¤றவங்களுக்கு வலை விரிச்சும் பார்த்தாராம். யாரும் சிக்கலையாம்... சிக்கலையாம்... ஆனாலும் காமெடியின் முயற்சி தொடருதாம்... தொடருதாம்... ஃபேன்ஸ் கூட்டம் சுற்றி சுற்றி வந்தாலும் அலைபாயுற நடிகரு கண்டுக்க மாட்டேங்க¤றாராம்... மாட்டேங்க¤றாராம்.. 'நடிகர் அந்தஸ்த்தெல்லாம் எதிர்பார்க்காம வந்ததுதான். அதை தக்க வச்சிக்கிற அவசியம் எனக்கில்லை. வாய்ப்பு க¤டக்க¤ற வரைக்கும் ஆக்டிங். இல்லேன்னா பேமலி'ன்னு தத்துவம் சொல்றாராம்... சொல்றாராம்...
738
1/28/2011 2:52:58 PM
சினிமா(ரீல்மா)
கிளிப்பிங்ஸ்
*சுப்ரமணியம் சிவா இயக்கும் ‘சீடன்‘ படத்தில் சமையல்காரராக நடிக்கிறார் தனுஷ். ஷூட்டிங்கில் அவரே செய்த ஜாங்கிரியை படக்குழுவினர் ருசித்து சாப்பிட்டார்களாம்.*திரையுலக வாழ்வில் 25 வருடம் நிறைவு செய்த ஜெயராமுக்கு மோகன்லால் விருந்தளித்து வாழ்த்தினார்.*சல்மானுடன் ‘ரெடி‘ படத்தில் நடிக்கும் அசின் மற்றொரு படத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக நடிக்க உள்ளார்.*‘எதிர்கால பயத்தில் திருமணங்கள் நிகழக்கூடாது. திருமணம் செய்துகொள்ள சரியான காரணம் வேண்டும்Õ என்கிறார் மனிஷா கொய்ராலா. *Ô‘பயணம்Õ படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்று பார்க்கும் காலத்தை கடந்துவிட்டேன். இப்போது கதைக்குத்தான் முக்கியத்துவம் தருகிறேன்Õ என்கிறார் நாகார்ஜுனா.*ரத்னகுமார் இயக்கியுள்ள ‘செங்காத்து பூமியிலேÕ படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியுள¢ளது.*‘பூÕ படத்தில் பார்வதியின் தோழியாக நடித்த இன்பநிலா, ‘பாளையங்கோட்டைÕ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
739
1/28/2011 2:57:39 PM
தமிழகம்
மார்ச் இறுதியில் உற்பத்தி ஆரம்பம் கூடங்குளத்தில் 40 ஆண்டுகள் மின்உற்பத்தி செய்ய முடியும் அதிகாரி தகவல்
நெல்லை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்திய - ரஷ்ய கூட்டு முயற்சியுடன் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  இதுகுறித்து அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி கூறியதாவது: கூடன்குளம் அணும¤ன் நிலையத்தில் முதல் அணு உலை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. முதல் அணு உலையின் பாதுகாப்பை உறுத¤ செய்யும் வகையில் உயர் காற்றழுத்த சோதனை கடந்த 16ம் தேதி தொடங்கி 25ம் தேதி நள்ளிரவு வரை நடந்தது. இந்திய, ரஷ்ய விஞ¢ஞானிகள் முன்னிலையில் வளி மண்டல காற்றை விட 4.6 மடங்கு அதிகமான உயர் அழுத்த காற்று அணு உலையில் செலுத்தப்பட்டு படிப்படியாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை முழு வெற்றி அடைந்துள்ளது. இதன் மூலம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 40 ஆண்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாத தொடக்கத்தில் அணு உலையில் உள்ள மாதிரி எரிபொருளை அகற்றி விட்டு செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பப்படும். மார்ச் இறுதியில் முதல் அணு உலையில் மின் உற்பத்திதொடங்கும். 2வது அணு உலைக்கான பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளன. முதல் அணு உலைக்கான எங்கள் அனுபவத்தின் மூலம் 2வது அணு உலையிலும் இந்த ஆண்டு டிசம்பரில் மின்சார உற்பத்தியை துவக்கி விடுவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.
740
1/28/2011 3:00:21 PM
தமிழகம்
காத்திருப்பதை தவிர்க்க ஏற்பாடு கைதிகளை சந்திக்க போனில் முன்பதிவு வேலூரில் அறிமுகம்
வேலூர்: தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை அவர்களது உறவினர்கள், வக்கீல்கள் தினமும் சந்திக்கின்றனர். விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை சந்திக்க தனித்தனி நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மட்டும் கைதிகளை உறவினர்கள் சந்திக்க முடியும். சந்திக்க விரும்பும் கைதி குறித்த விவரங்களை விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு குறிப்பிட்ட அந்த கைதியிடம் சந்திக்க விரும்பும் நபர் குறித்த விவரங்களை கூறி நேர்காணல் அறையில் இருவரும் சந்திக்க அனுமதிக்கப்படும். இந்த நடைமுறையால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் உறவினர்கள் சிறை வளாகத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த கால நேரத்தை குறைப்பதற்காக டெலிபோன் மூலம் கைதியின் விவரங்களை கூறி முன்பதிவு செய்யும் வசதி இரு மாதங்களுக்கு முன்பு சென்னை புழல் சிறையில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. தற்போது, வேலூர் மத்திய சிறையில் கைதிகளை காண டெலிபோனில் முன் பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
741
1/28/2011 3:03:25 PM
தமிழகம்
சேலம் அருகே இன்று காலை வீடுகள் அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதி
ஆத்தூர்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வேப்பநத்தம், பொன்னொழி நகர், ஊனத்தூர் ஆகிய கிராமங்கள் கல்வராயன் மலைப்பகுதி ஓட்டியே உள்ளன. இந்த பகுதியில் இன்று அதிகாலை 5.50 மணிக்கு இடி விழுந்ததுபோல் சத்தம் கேட்டது. லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சத்தத்தை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த பாத்திரங்களும் உருண்டு விழுந்தன. ஒரு சில பகுதிகளில் வீட்டின் மேல் பகுதியில் உள்ள ஓடுகளும் கீழே விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. இதுகுறித்து ஊனத்தூரை சேர்ந்த லட்சுமணன் கூறுகையில், 'காலை 5.50 மணிக்கு இடி விழுந்தது போல் பயங்கரமாக சப்தம் கேட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல் வீடுகள் திடீரென அதிர்ந்தன. பாத்திரங்கள் உருண்டு ஓடின. அப்போது வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த நாங்கள் அனைவரும் பயந்து வெளியே ஓடிவந்துவிட்டோம்' என்றார்.சேலம் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், சேலம் வானிலை ஆராய்ச்சி மையத்தில் உள்ள சீஸ்மோகிராபி கருவியில் சேலத்திலோ, சேலம் மாவட்டத்தின் பிற பகுதிகளிலோ நிலநடுக்கம் ஏற்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை’’ என்றனர்.
742
1/28/2011 3:04:49 PM
தமிழகம்
மேட்டூர் அணையில் நீர் திறப்பு நிறுத்தம்
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது இன்று மாலை 6 மணிக்கு நிறுத்தப்படுகிறது.  ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த ஜூன் மாதம் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் ஒன்றரை மாதம் தாமதமாக ஜூலை 28ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு 195.78 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதியில் இருந்து இதுவரை 173.33 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.50 அடியாக இருந்தது. அப்போது, அணைக்கு வினாடிக்கு 1,312 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 77.70 டி.எம்.சி.
743
1/28/2011 3:06:08 PM
மாவட்ட மசாலா
ரூ.2 லட்சம் நகை திருட்டு
சாத்தூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கடந்த 25ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான இருக்கன்குடிக்கு சென்று விட்டார். இதைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 13 பவுன் நகையை திருடிச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த மாரிமுத்து சாத்தூர் போலீசில் புகார் செய்தார். திருடு போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம்.
744
1/28/2011 3:06:57 PM
மாவட்ட மசாலா
நெல்லை அருகே யானைகள்அட்டகாசம்
களக்காடு, நெல்லை மாவட்டம் களக்காடு மலையடிவார கிராமங்களில் காட்டு யானைகள் கடந்த 3 மாதங்களாக குட்டிகளுடன் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. குட்டிகளின் பாதுகாப்பு கருதி இவைகள் காட்டுக்குள் செல்லாமல் இரவில் அங்குள்ள தோட்டங்களில் புகுந்து பனை, தென்னை மரங்களை நாசப்படுத்துகின்றன. நேற்று நள்ளிரவு களக்காடு பிளவக்கல் இசக்கியம்மன் கோயிலுக்கு தென்புறம் உள்ள கிறிஸ்தவ சபைக்குள் காட்டு யானைகள் புகுந்தன. அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை பிடுங்கி எறிந்து தென்னை மரங்களை வேரோடு சாய்த்தன. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து வெடிகள் வெடித்தும், சப்தம் எழுப்பியும் யானை கூட்டத்தை விரட்டியடித்தனர். கிறிஸ்தவ சபைக்குள் யானை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
745
1/28/2011 3:12:00 PM
மாவட்ட மசாலா
திருப்பூர் பாத்திர தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
அனுப்பர்பாளையம், திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் செம்பு, பித்தளை, எவர்சில்வர் பாத்திரம் உற்பத்தி செய்யும் 300 பட்டறைகள் உள்ளன. 2000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் காலாவதியானது. கடந்த டிசம்பர் 29 முதல் கூலி உயர்வு கோரி பாத்திர தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.  கோவையில் தொழிலாளர் துணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில்  நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தையில், எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு 30 சதவீதம் கூலி உயர்வு அளிப்பதாக உற்பத்தியாளர்கள் ஒத்துக்கொண்டனர். இதையடுத்து, 30 நாட்களாக நடந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.
746
1/28/2011 3:12:37 PM
மாவட்ட மசாலா
தமிழகத்தில் இருந்து 70% தோல்பொருட்கள் ஏற்றுமதி
ஆம்பூர், - வேலூர் மாவட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் மத்திய மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியங்களின் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் அமைச்சர் மைதீன்கான் பேசியதாவது: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 70 சதவீதம் தமிழகத்தில் இருந்து  ஏற்றுமதி செய்யப்படுகிறது. தோல் கெடாமல் இருக்க அதன் மீது பரப்பப்பட்டிருக்கும் உப்பை தோல் தொழிற்சாலைகளில் நீக்கும்போது கழிவுநீரில் அதிக உப்பை வெளியிடுகின்றன. நவீன முறைகளைக்கொண்டு இவற்றை நீக்க தொழிற்சாலைகளை மாசுக்கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு மைதீன்கான் பேசினார்.
747
1/28/2011 3:13:25 PM
மாவட்ட மசாலா
தமிழகத்தில் 5 இடங்களில் கயிறு குழும மையங்கள்
குடியாத்தம், - சேலம், கடலூர், பட்டுக்கோட்டை, குடியாத்தம் மற்றும் பெரியகுளம் கயிறு குழுமங்களின் பொது பயன்பாட்டு மையங்கள் தொடக்க விழா வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள கயிறு குழும வளாகத்தில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசியதாவது: இந்தியாவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் 2வது இடத்திலும், பழுப்புநிற நார் உற்பத்தியில் முதலிடத்திலும் உள்ளது. தமிழகத்தில் இத்தொழிலில் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 5 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.  ஆறாவதாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
748
1/28/2011 3:14:33 PM
மாவட்ட மசாலா
பைக் மீது பஸ் மோதி வாலிபர் பரிதாப சாவு
நெல்லை, - நெல்லையில் இருந்து மதுரைக்கு நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் சுமார் 50 பயணிகள் இருந்தனர். தெற்கு பைபாஸ் சாலையில் பாலம் கடந்தவுடன் எதிரே வந்த பைக்மீது பஸ் மோதியது. மோதிய வேகத்தில் வடபுறமாக சென்று வயலுக்குள் சரிந்து நின்றது. இதில் பைக்கில் வந்தவர் அதே இடத்திலேயே பலியானார்.  விபத்தில் பலியானவர் குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார்(26) என்பது தெரிய வந்தது. இவர் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். அரசு பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
749
1/28/2011 3:16:41 PM
மாவட்ட மசாலா
பல லட்சம் சுருட்டல் மோசடி ஆசாமி கைது
கோவை, - கோவை மாவட்டம் காரமடை பெட்டதாபுரம்புதூரை சேர்ந்தவர் வேலுசாமி.  ஏலச்சீட்டு நடத்தி வந்தார். 50க்கும் அதிகமானவர்கள் பணம் செலுத்தியிருந்தனர். இந்நிலையில், வேலுசாமி திடீரென மாயமானார். சில மாதங்களுக்கு பிறகு அவரை, முதலீட்டாளர்கள் கண்டுபிடித்தனர். பணத்தை திருப்பி கேட்டபோது செக் கொடுத்தார். வங்கியில் அதை செலுத்தியபோது பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தனர். குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து வேலுசாமியை கைதுசெய்தனர். இவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரிந்தது.
750
1/28/2011 3:24:21 PM
தமிழகம்
திட்டமிட்ட காலத்துக்கு முன்பே மெட்ரோ ரயில் பணிகள் முடியும் மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் திட்டமிட்ட காலத்துக்கு முன்பே முடிக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மீனம்பாக்கம், கிண்டி, வடபழனி, கோயம்பேடு ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பணிகளை பார்வையிட்டார்.பின்னர்  நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சென்னை மெட்ரோ ரயில் பணிகள் ரூ.14,600 கோடி செலவில் நடந்து வருகிறது. இதில் மாநில அரசு நிதி ரூ.3,034 கோடி. மத்திய அரசு நிதி 2,920 கோடி. ஜப்பான் வங்கி கடன் ரூ.8,646 கோடி. இதுவரை மாநில அரசு ரூ.1300 கோடி, மத்திய அரசு ரூ.53 கோடி, ஜப்பான் வங்கி கடன் ரூ.100 கோடி பெறப்பட்டுள்ளது. ரூ.629 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை அமைக்கப்படுகிறது. 23 கி.மீ தூரமுடைய இந்த பாதையில் சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையாகவும், மீதமுள்ள தூரம் தரைக்குமேல் உயர்த்தப்பட்ட பாதையிலும் செல்லும். இதில் 11 நிலத்தடி ரயில் நிலையங்களும், 6 உயர்மட்ட ரயில் நிலையங்களும் அமைக்கப்படும். இரண்டாவது வழித்தடம் சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு வழியாக புனித தோமையார் மலை வரை அமைக்கப்படும். இது 22 கி.மீ தூரமுடையது. 10 கி.மீ சுரங்கப் பாதையாகவும், 12 கி.மீ உயர்த்தப்பட்ட வழித்தடத்திலும் செல்லும். இதில் 9 நிலத்தடி ரயில் நிலையங்களும், 8 உயர்மட்ட ரயில் நிலையங்களும் அமைக்கப்படும்.உயர்த்தப்பட்ட 4 வழித்தடங்களில் 3 பகுதிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. கோயம்பேடு & அசோக் நகர் (4.5 கி.மீ), அசோக் நகர் & புனித தோமையார் மலை (4.4 கி.மீ), சைதாப்பேட்டை & ராணுவ அலுவலர் பயிற்சி மையம் (5.2 கி.மீ) பாதை பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. இங்கு 81 தூண்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 11 தூண்களுக்கு இடையே கான்கிரீட் வார்ப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரயில் பெட்டிகள் வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப்பட்டு, பெட்டி வடிவமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. நிலத்தடி வழித்தடங்களில் 3 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.கோயம்பேட்டில் இருந்து புனித தோமையார் மலை வரையுள்ள உயர்த்தப்பட்ட வழித்தடம் 2013ம் ஆண்டில் முடிக்கப்பட்டு சேவை தொடங்கப்படும். 2015ல் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர் வரை நீட்டிப்பது குறித்து மாநில அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசு மற்றும் ஜப்பான் கடனுதவி பெறுவதற்கும் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.சட்டசபையில் ஆளுநர் அறிவித்ததுபோல, மூலக்கடை & திருமங்கலம் (22 கி.மீ), மூலக்கடை & திருவான்மியூர் (19 கி.மீ), மயிலாப்பூர் லஸ் கார்னர் & அய்யப்பன் தாங்கல் (22 கி.மீ) ஆகிய வழித்தடங்கள் அமைப்பதற்கான திட்ட ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.திட்டமிட்டபடி பணிகள் அனைத்தும் வேகமாகவும், திருப்தியாகவும் நடந்து வருகின்றன. திட்டப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே முடிக்கப்படும். மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய பிறகு தினமும் 6 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.