news_id
int64
6
128k
news_date
stringlengths
19
22
news_category
stringclasses
15 values
news_title
stringlengths
1
226
news_article
stringlengths
7
17.4k
436
1/19/2011 3:07:06 PM
குற்றம்
இளம்பெண் மர்ம சாவு சடலத்தை தோண்டி எடுக்க முடிவு
கும்மிடிப்பூண்டி, - ஆரணி, கம்மாள தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன். தச்சு தொழிலாளி. இவரது மனைவி தாட்சாயிணி. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். கடந்த 14ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தாட்சாயிணி தூக்கில்  பிணமாக தொங்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசுக்கு தெரியாமல், மனைவியின் சடலத்தை ஆரணி சுடுகாட்டில் சந்திரசேகரன்  புதைத்து விட்டார். இந்நிலையில் சபரிமலைக்கு போய்விட்டு தாட்சாயிணியின் அண்ணன் கருணா வீடு திரும்பினார். தாட்சாயிணி எங்கே என சந்திரசேகரனிடம்  கருணா கேட்டுள்ளார். மனைவி இறந்து விட்டதாகவும் அவரை ஆரணி சுடுகாட்டில் புதைத்துவிட்டதாகவும் சந்திரசேகரன் கூறியுள்ளார். இதனால்  கருணாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து ஆரணி போலீசில், தங்கை சாவில் சந்தேகம் உள்ளது. அவரை கொலை செய்து சுடுகாட்டில் சந்திரசேகரன் புதைத்து விட்டார் என  கருணா புகார் கொடுத்தார். இதையடுத்து சந்தேக மரணமாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமி விசாரித்து  வருகிறார். இந்நிலையில் பொன்னேரி தாசில்தார் வேலம்மாள் மற்றும் மருத்துவ குழு முன்னிலையில் தாட்சாயிணியின் சடலத்தை இன்று தோண்டியெடுத்து  பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர். அதன் பின்பே தாட்சாயிணி எப்படி இறந்தார் என்பது தெரியவரும். கணவர் சந்திரசேகரிடமும் போலீசார்  விசாரிக்கின்றனர்.
437
1/19/2011 3:09:29 PM
குற்றம்
கல்பாக்கம் அருகே நல்லாத்தூரில் தண்டுமாரியம்மன் கோயில் கோபுர கலசம் திருட்டு
திருக்குழுக்குன்றம், - கல்பாக்கம் அருகே அம்மன் கோயில் கோபுர கலசத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் தண்டுமாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழமையான இந்தக் கோயில்,  அப்பகுதியில் பிரசித்தி பெற்றது. கோயில் கோபுரத்தில் ஐம்பொன்னால் செய்த கலசம் வைக்கப்பட்டு இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு கோபுர கலசத்தை மர்ம நபர்கள் உடைத்து திருடிச் சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகை உற்சாகத்தில் இருந்த கிராம  மக்கள் இதை கவனிக்கவில்லை. இன்று காலை கோபுர கலசம் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி கோயில்  நிர்வாகிகள் சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருக்கழுக்குன்றம் அடுத்த காந்தி நகர் கருமாரியம்மன் கோயில் கோபுர கலசமும் சமீபத்தில் திருட்டு போனது. தொடர்ந்து கோயில் கோபுர  கலசங்கள் திருடு போவதால் கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் பகுதி பக்தர்கள் பீதியடைந்துள்ளனர். இதனால், ஊருக்கு ஏதேனும் தீங்கு நேருமோ  என அஞ்சுகின்றனர். கலசம் திருடும் கும்பலை விரைந்து கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
438
1/19/2011 3:12:04 PM
தமிழகம்
புழல் விநாயகபுரத்தில் 4 மாதமாக தேங்கி நிற்கும் கழிவுநீர் தொடர் மறியல் நடத்த மக்கள் முடிவு
புழல், - செங்குன்றம் - செம்பியம் சாலை சரி செய்யப்படும் என்று 4 மாதத்துக்கு முன்பு நடந்த மறியலின்போது அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால்  இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குமுறுகின்றனர். செங்குன்றம் அருகே புழல் அடுத்துள்ளது விநாயகபுரம். இந்த பகுதியில் 20&க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. 4 மாதத்துக்கு முன்பு செங் குன்றம், செம்பியம் சாலை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் தேங்கியது. இதனால் அந்த சாலையில் வாகனங்களை ஓட்ட முடியாமல்  தவித்தனர். நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் சேற்றை வாரி இறைத்தன. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ரோட்டை சரிப்படுத்தி கழிவுநீரை அகற்றவேண்டும் என்று கோரி மறியல் நடத்தினர். அப்போது மாதவரம் நகராட்சி  அதிகாரிகள் வந்து, ‘உடனடியாக ரோடு சரி செய்யப்படும்’ என உறுதி அளித்தனர். அவர்கள் அறிவித்து 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும்  ரோடு போடவில்லை.இதனால், தேங்கியுள்ள கழிவுநீரில் கிருமிகள் உருவாகி பல நோய்கள் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். செங்குன்றம், செம்பியம் சாலை வழியாக இயக்கப்படும் 242, 142, சி70 ரூட் பஸ்கள், சில நேரம் மாற்றுப்பாதையில் சென்றுவி டுகின்றனர். இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.‘‘கழிவுநீரை அகற்றிவிடுகிறோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்து 4 மாதம் ஆகிவிட்டது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் நடவடி க்கை எடுக்கவில்லை என்றால் தொடர் மறியல் போராட்டம் நடத்துவோம்’’ என்று அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
439
1/19/2011 3:16:35 PM
தமிழகம்
கபாலீஸ்வரர் கோயில் தைப்பூச விழா மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தைப்பூச தெப்பத் திருவிழா இன்று முதல் ஜன. 21ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை விழா நடைபெறும். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மயில £ப்பூர் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நே £க்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. லஸ் ரவுண்டானாவில் இருந்து ஆர்.கே.மடம் சாலை, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாரயணன் தெரு, மந்தைவெளி சாலையிலிருந்து ஆதம் தெரு, தென்கூர் செல்வ விநாயகர் கோயில் தெரு மற்றும் மேற்கு சித்திர குளம் தெரு  வழியாக வாகனம் செல்ல அனுமதி கிடையாது. ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக அடையார் செல்லும் வாகனங்கள் லஸ், புனித மேரி சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளி  செல்லலாம். அடையாரில் இருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, லஸ் அவென்யூ, கற்பகம்பாள்  நகர், வழியாக ராயப்பேட்டைக்கு செல்லலாம்.மயிலாப்பூர் கோயில் குளம் அருகில் உள்ள பஸ் நிறுத்தம், லஸ் சர்ச் சாலையில் உள்ள அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தும் இடங்கள்: ஆர்.கே.மடம் சாலையிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை பி.எஸ். மேல்நிலைப் பள்ளி மைதானத்தில்  நிறுத்தலாம். கிழக்குப்புறம் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்களை லஸ் சர்ச் சாலையில் உள்ள காமதேனு கல்ய £ண மண்டபம் எதிரில் நிறுத்தலாம். மேற்கிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள சாய்பாபா கோயில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம்  திருமயிலை ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்தலாம்.
440
1/19/2011 3:20:46 PM
தமிழகம்
கட்சியில் கூடுதல் பொறுப்பு கொடுத்தால் மறுக்க மாட்டேன்
மீனம்பாக்கம், - ‘‘திமுகவில் நானாக பொறுப்பு கேட்க மாட்டேன். ஆனால் பொறுப்பு கொடுத்தால் ஏற்க மறுக்க மாட்டேன்’’ என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி  இன்று கூறினார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் முக. அழகிரி இன்று காலை 9.30 மணிக்கு பயணிகள் விமானத்தில் டெல்லி சென்றார்.  சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் நீங்கள் அளித்துவிட்டதாக கூறப்படுகிறதே?இதுபற்றி முதல்வர் கருணாநிதியே மிக தெளிவாக பதில் அளித்துவிட்டார். இதற்கு மேல் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது.இன்று மாலை மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது. அதில் திமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா?இதற்கு பதில் சொல்ல, நான் பிரதமர் அல்ல.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே உங்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுப்பார்களா?நான்தான் மத்திய அமைச்சராக இருக்கிறேனே?தேர்தல் நேரத்தில் கட்சியை பலப்படுத்துவதற்காக தற்போது உள்ள பொறுப்பைவிட கூடுதல் பொறுப்பு கேட்பீர்களா?நானாக கேட்கமாட்டேன். அவர்களாக கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன்.முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினீர்களா?நான் அப்படி எதுவும் வலியுறுத்தவில்லை. மீடியாக்கள்தான் அதுபோன்று பிரசாரம் செய்து வருகிறீர்கள்.இவ்வாறு முக.அழகிரி கூறினார்.
441
1/19/2011 3:25:00 PM
உலகம்
4 வயது இந்திய குழந்தை துபாயில் பலாத்காரம்: 3 பேர் கைது
துபாய்: டெல்லியை சேர்ந்த தம்பதியினர், துபாயின் கராமா பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களது 4 வயது மகள், அப்பகுதியிலுள்ள மாடர்ன் பள்ளியில், எல்கேஜி படிக்கிறாள். பள்ளிக்கு பஸ்சில் செல்வது வழக்கம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடினர். அன்றைய தினம் குழந்தைக்கு நேர்ந்த கதிதான் கொடூரமானது. விழா முடிந்த பின்னர் பஸ்சில் வந்த குழந்தையை பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் இன்னொருவர் சேர்ந்து மனிதாபிமானமே இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்தனர். 4 வயது குழந்தை என்றும் பாராமல், அவளிடம் வன்முறையாக நடந்து கொண்ட அந்தக் கும்பல், ‘வெளியே சொல்லக் கூடாது’ என்று மிரட்டி அனுப்பியது. வழக்கத்தைவிட நீண்ட நேரம் தாமதமாக வந்த மகளிடம் பெற்றோர் விசாரித்தனர். அவள் எதையும் சொல்லவில்லை. அழுதுகொண்டே இருந்தாள். அவளுடைய யூனிபார்மில் கறை இருந்ததைக் கண்ட அவருடைய அம்மா அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் முதல் பள்ளிக்கு செல்ல மறுத்த குழந்தையை, டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினர். பாலியல் வன்முறையால் குழந்தை திக்கப்பட்டிருந்ததை அறிந்து பெற்றோர் கலங்கிப் போனார்கள். உடனே சிகிச்சைக்காக இந்தியா வந்துவிட்டனர். 2 மாதங்கள் கழித்து தற்போது துபாயில் போலீசாரிடம் இதுபற்றி பெற்றோர் புகார் கொடுத்தனர்.  ‘மகளின் சிகிச்சைதான் எங்களுக்கு முக்கியமாக தெரிந்தது. அதனால் உடனே கிளம்பி இந்தியா சென்று விட்டோம். உடனே புகார் செய்ய முடியவில்லை.  எங்களின் அப்பாவி குழந்தைக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நிகழக் கூடாது. அந்த கொடூர கும்பலை தண்டிக்க வேண்டும்’ என்று பெற்றோர் அளித்த புகாரை ஏற்றுக் கொண்ட துபாய் போலீசார், கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
442
1/19/2011 3:25:48 PM
உலகம்
செவாலியர் ஜாக்சன் நினைவாக அமெரிக்காவில் ‘லபக் 2000’
நியூயார்க்: புளியங்கொட்டை, நாலணா, இரும்பு வளையம், சாவி.. இப்படி கையில் கிடைத்ததை எல்லாம் குழந்தைகள் வாய்க்குள் போட்டுக் கொள்ளும். பெரியவர்கள்கூட சில நேரத்தில் ஊக்கு, ஊசி, கீசெயின் எதையாவது விழுங்கி வைப்பார்கள். முனை மழுங்கி சீராக இருக்கும் பொருட்கள் என்றால் அதிர்ஷ்டவசமாக ஓரிரு நாளில் ‘டூ’வுடன் வந்துவிடும். இல்லாவிட்டால் ஆபத்துதான். குடலை கிழிக்கும், நடுவழியில் சிக்கும் தொந்தரவுகளை தந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் அபாயமும் இருக்கிறது.இவற்றை வெற்றிகரமாக அகற்றி பலரை காப்பாற்றியவர் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரை சேர்ந்த பிரபல டாக்டர் செவாலியர் ஜாக்சன். இப்போது இல்லை. 1958ல் இறந்துவிட்டார். தற்போதைய எண்டோஸ்கோபி மருத்துவ துறைக்கு வித்திட்டவர் என்றே சொல்லலாம். எண்டோஸ்கோபி குழாயுடனேயே நுண்ணிய விளக்கையும் உள்ளே செலுத்தலாம் என்று கண்டுபிடித்தவர்.மனிதர்கள் விழுங்கிய பொருட்களை இவர் சேகரித்து வைத்துள்ளார். இதுதொடர்பான குறிப்புகள், எக்ஸ்ரேக்களையும் பத்திரப்படுத்தியுள்ளார். நோயாளிகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சேப்டிபின், நகம், போல்ட், சாவி க்ளிப் என சுமார் 2000 பொருட்களை சேகரித்து பாதுகாத்து வந்தார்.இவை அனைத்தும் பிலடெல்பியாவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. மருத்துவ உலகுக்கு டாக்டர் செவாலியர் ஜாக்சன் ஆற்றிய தொண்டை நினைவுகூரும் வகையில் இக்காண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
443
1/19/2011 3:26:22 PM
உலகம்
சுடச்சுட காபியுடன் ஆஸ்பிரின் டாஸ்மாக் ‘ஹேங் ஓவர்’ போயிந்தே..
பிலடெல்பியா: ரொம்ப ரொம்ப பிடித்தமானது சனி, ஞாயிறு. கொஞ்சம்கூட பிடிக்காதது திங்கள். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் ஆபீஸ் போகும் பெரியவர்கள் வரை இதுதான் அடிப்படை தத்துவம். மது அருந்துபவர்களுக்கு இது நூற்றுக்குநூறு பொருந்தும். விட்டால் போதும் என்று வீக்எண்டில் ‘டாஸ்மாக்’ ஓடுவார்கள். முட்ட முட்டக் குடிப்பார்கள். 2 நாள் சந்தோஷத்தையும் திங்கள்கிழமை அதிகாலையில் வரும் தலைவலி தவிடுபொடியாக்கிவிடும். ‘2 நாள் குடிப்பானேன். இப்படி அவதிப்படுவானேன். போதும்டா சாமி. இனிமே குடியே வேணாம்’ என்று சபதம் எடுக்கும் அளவுக்கு விண்விண் என்று நெற்றிப் பொட்டில் தெறித்துக்கொண்டே இருக்கும் தலைவலி.கோடாலி தைலம், காபி, தலைவலி மாத்திரை, சிறிது நேர வாக்கிங், குளியல்.. என்று அவரவர் ஒவ்வொரு வைத்தியம் வைத்திருப்பார்கள். என்னதான் தலைகீழாய் நின்றாலும் அவ்வளவு சாமானியமாய் இந்த ‘ஹேங் ஓவர்’ போய்விடாது. சுடச்சுட காபியுடன் ஆஸ்பிரின்தான் இதற்கு அருமருந்து என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்காவின் பிலடெல்பியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஓஷின்ஸ்கி தலைமையிலான டீம்.வழக்கம்போல, இவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டதும் எலியைத்தான். சில எலிகளை பிடித்து சரக்கை (எத்தனால் அல்லது சுத்தமான ஆல்கஹால்) ஏற்றிவிட்டார்கள். சிறிது நேரம் கிறுகிறுத்து ஓடிய எலிகளுக்கும் பின்னர் தலை வலித்திருக்கும்போல. சுருண்டு படுத்துவிட்டன. சூடாக காபியுடன் ஆஸ்பிரின் சேர்த்து கொடுத்தார்கள். அவ்வளவுதான்.. மசால்வடையை பார்த்ததுபோல் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டன.மதுவுக்கு பிறகு வரும் தலை வலியை இந்த அளவுக்கு வேறு எந்த மருந்தும் தீர்ப்பதாக தெரியவில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.எப்போதும் காபி குடிப்பவர்களின் தலைவலியை காபி சுமாராகத்தான் போக்குகிறது. எப்போதாவது குடிப்பவர்களின் தலைவலியை காபி சட்டென்று போக்குகிறது என்று நார்வே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 2009&ல் கண்டுபிடித்து கூறியது குறிப்பிடத்தக்கது.
444
1/19/2011 3:27:43 PM
உலகம்
பையன் கணக்குல புலி ஆகணுமா? தாய்மார்களுக்கு அட்வைஸ்
சிட்னி: உலகில் தோன்றும் எந்த ஜீவராசிக்கும் இயற்கையான முதல் ஆகாரம் தாய்ப்பால். சத்து மிகுந்ததும்கூட. தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் ஆஸி. பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வென்டி ஹெச் ஓடி என்ற பேராசிரியர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.1,038 குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்பட்டது, அவர்களது மூளை வளர்ச்சி எந்த அளவில் இருக்கிறது, 10 வயதில் அவர்களது புத்திசாலித்தனம், அறிவுக்கூர்மை எவ்வாறு உள்ளது என்று ஆய்வு செய்தனர். இதில் தெரியவந்த தகவல்கள்: அதிகம் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பிற்காலத்தில் கணக்கு, விளையாட்டு உள்பட அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனர். நல்ல சாப்பாடு, உறைவிடம், படிப்பதற்கான வசதிகள் கிடைக்காத மாணவர்கள்கூட பிற்காலத்தில் நன்கு படிக்கின்றனர் என்றால் அதற்கு தாய்ப்பாலே காரணம். பெரும்பாலும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கே தாய்ப்பாலால் அதிக பயன் கிடைக்கிறது.எத்தனை வயது வரை கொடுத்தாலும் நல்லதுதான். பிறந்து 6 மாதங்கள் வரையாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதற்கு பிறகு இணை உணவுகள் கொடுக்கலாம். குழந்தைகளின் நோயற்ற வாழ்வுக்கும் அறிவாற்றலுக்கும் தாய்ப்பாலின் பங்கு முக்கியமானது.
445
1/19/2011 3:40:41 PM
குற்றம்
4 வயது இந்திய குழந்தை துபாயில் பலாத்காரம்
துபாய், - டெல்லியை சேர்ந்த தம்பதியினர், துபாயின் கராமா பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களது 4 வயது மகள், அப்பகுதியிலுள்ள மாடர்ன்  பள்ளியில், எல்கேஜி படிக்கிறாள். பள்ளிக்கு பஸ்சில் செல்வது வழக்கம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த பள்ளியில் குழந்தைகள் தினம் கெ £ண்டாடினர். அன்றைய தினம் குழந்தைக்கு நேர்ந்த கதிதான் கொடூரமானது. விழா முடிந்த பின்னர் பஸ்சில் வந்த குழந்தையை பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் இன்னொருவர் சேர்ந்து மனிதாபிமானமே இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்தனர். 4 வயது குழந்தை என்றும் பாராமல், அவளிடம் வன்முறையாக நடந்து கொண்ட அந்தக் கும்பல், ‘வெளியே செ £ல்லக் கூடாது’ என்று மிரட்டி அனுப்பியது. வழக்கத்தைவிட நீண்ட நேரம் தாமதமாக வந்த மகளிடம் பெற்றோர் விசாரித்தனர். அவள் எதையும் சொல்லவில்லை. அழுதுகொண்டே இருந்தாள்.  அவளுடைய யூனிபார்மில் கறை இருந்ததைக் கண்ட அவருடைய அம்மா அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் முதல் பள்ளிக்கு செல்ல மறுத்த குழ ந்தையை, டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினர். பாலியல் வன்முறையால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்து  பெற்றோர் கலங்கிப் போனார்கள். உடனே சிகிச்சைக்காக இந்தியா வந்துவிட்டனர். 2 மாதங்கள் கழித்து தற்போது துபாயில் போலீசாரிடம் இதுபற்றி  பெற்றோர் புகார் கொடுத்தனர். ‘மகளின் சிகிச்சைதான் எங்களுக்கு முக்கியமாக தெரிந்தது. அதனால் உடனே கிளம்பி இந்தியா சென்று விட்டோம். உடனே புகார் செய்ய  முடியவில்லை.  எங்களின் அப்பாவி குழந்தைக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நிகழக் கூடாது. அந்த கொடூர கும்பலை தண்டிக்க வேண்டும்’  என்று பெற்றோர் அளித்த புகாரை ஏற்றுக் கொண்ட துபாய் போலீசார், கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 3  பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
446
1/19/2011 3:45:02 PM
இந்தியா
சபரிமலை விபத்துக்கு கேரள அரசே பொறுப்பு
திசையன்விளை, - சபரிமலையில் நடந்த விபத்துக்கு கேரள அரசே பொறுப்பு என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார். திசையன்விளையில் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ராமகோபாலன், முன்னதாக நிருபர்களிடம் கூறியதாவது: கோயில்களுக¢கு பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களை சரிவர பராமரிக்காததால் அவை இறந்து விடுகின்றன. கோயிலுக¢கு சொந்தமான  இடங்களில் பசு பராமரிப்பு நிலையம் உருவாககி பராமரிகக வேண்டும். கோயிலுக¢கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகளின் வாடகைகளை கே£யில் பணிகளுக¢கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பகதர்களுக¢கு போதுமான வசதிகள் செய்து கொடுககாததால்தான் சபரிமலையில் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. அரசு தனது கடமையில்  இருந்து தவறிவிட்டது. பக்தர்களுக்கு என¢னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டே கோர்ட் கூறியிருந்தது. அதை நிறைவேற்றாத  கேரள அரசுதான், இந்த விபத்திற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
447
1/19/2011 3:50:27 PM
குற்றம்
இன்ஜி. மாணவி, வாலிபர் விபத்தில் பலி
மதுராந்தகம், - பைக் விபத்துகளில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவியும் வாலிபரும் பரிதாபமாக இறந்தனர். மேல்மருவத்தூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் உஷா (18), தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில்  படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தந்தையுடன் பைக்கில் அச்சிறுபாக்கத்தில் இருந்து மேல்மருவத்தூர் வந்தார். அப்போது பைக் மீது  அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் உஷா உடல் நசுங்கி அந்த இடத்திலேயே இறந்தார். பாலகிருஷ்ணன் க£யத்துடன் உயிர் தப்பினார். அச்சிறுப்பாக்கம் போலீசார் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். சென்னையை சேர்ந்தவர் தீபன்குமார் (19). மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு பைக்கில் வந்தார். அங்கிருந்து  நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டார். படாளம் அருகே பாலாற்று மேம்பாலத்தில் பஸ்சை முந்திச் செல்ல முயன்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தீபன்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து படாளம் போலீசார் வழக்கு  பதிந்து விசாரிக்கின்றனர்.
448
1/19/2011 3:55:03 PM
தமிழகம்
ராணுவத்தில் சேர சான்றிதழ் கேட்டு ஐகோர்ட்டில் டாக்டர் மனுதாக்கல்
சென்னை, - பாரிமுனை பகுதியை சேர்ந்த டாக்டர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் எம்டிஎஸ் பட்டமேற்படிப்பு முடித்தேன். 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பின்னரே  சான்றிதழ் தரப்படும் என அரசு அறிவித்துள்ளது.  அரசு மருத்துவமனையில் பணிபுரிய தயாராக இருக்கிறேன். இருப்பினும் கடந்த 2005ம்  ஆண்டு படிப்பை முடித்தவர்களுக்கே இன்னும் அரசு மருத்துவமனையில் வேலை கிடைக்காமல் இருக்கிறது. இதனால் ராணுவ மருத்துவமனையில் சேர விண்ணப்பித்தேன். தற்போது சான்றிதழ் இல்லாததால் வேலையில் சேர முடியாத நிலை உள்ளது. அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டு  கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனது சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு  கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரித்து, ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனுதாரர் சர்பாக வக்கீல் பாலா டெய்சி ஆஜரானார்.
449
1/19/2011 3:58:07 PM
இந்தியா
102 பேர் பலியான புல்மேட்டில் 2.5 லட்சம் பக்தர்களுக்கு 4 போலீசாரே பாதுகாப்பு
திருவனந்தபுரம், - சபரிமலையில் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும்போது புல்மேட்டில், பக்தர்கள் 102 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர். இந்த சம்பவம் குறித்து  தினமும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சுமார் இரண்டரை லட்சம் பக்தர்கள் குவிந்த புல்மேட்டில் பாதுகாப்பிற்கு வெறும் 10 போலீசாரே இருந்தனர் என முதலில் கூறப்பட்டது. ஆனால் உள்துறை அமைச்சர் கோடியேறி பாலகிருஷ¢ணன், டி.ஜி.பி. ஜேக்கப் புன்னூஸ் ஆகியோர் பே £திய போலீசார் போடப்பட்டிருந்ததாக விளக்கம் அளித்தனர். இதுகுறித்து குற்றப்பிரிவு எஸ்.பி. சுரேந்திரன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி  சப்¢&இன்ஸ்பெக்டர் சுரேஷிடம் நடத்திய விசாரணையில் பாதுகாப்பு பணியில் அவர் உள்பட வெறும் 4 போலீசார் மட்டுமே இருந்தது தெரியவ ந்துள்ளது. விபத்து நடந்து நீண்ட நேரத்திற்குப் பிறகு தான் கூடுதல் போலீசார் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்டக்கடங்காத கூட்டம் வரும்  எனத் தெரிந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு எந்த முன்எச்சரிக்கை அறிவுரையையும் உயர் அதிகாரிகள் வழங்காததும் தெரிய வந்துள்ளது.
450
1/19/2011 4:00:06 PM
இந்தியா
பழநியில் நாளை தைப்பூச திருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்
பழநி, - அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று  நடைபெறுகிறது.  பெரிய நாயகி அம்மன் கோயிலில் இரவு 7.45 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் வள்ளி, தெய்வானை,  முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் தோளுக்கு இனியாள் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். க £லை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மீன லக்கனத்தில் தேரேற்ற நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம்  நடைபெறும். இரவு 7.30 மணிக்கு தந்தப் பல்லக்கில் தேர்க்கால் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறும்.தைப்பூசத்தையொட்டி பழநியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
451
1/19/2011 4:03:20 PM
தமிழகம்
தமிழகத்தில் முதன்முறையாக பொதுக்குழாய் மூலம் மினரல் வாட்டர்
நாகர்கோவில், - தமிழகத்திலேயே முதன்முறையாக குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் பொதுக்குழாய் மூலம் மினரல் வாட்டர் வினியோகம் செய்யப்ப டுகிறது.  ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் குடிநீரை மினரல் வாட்டராக மாற்றி பொதுக்குழாயில் வழங்கி வருகின்றனர். ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் தற்போது தினமும் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் ஆழ்துளை கிணறு மூலம் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.  ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் தண்ணீரில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்பு சத்துகள் அதிகமாக இருப்பதால் பலருக்கும் சிறுநீரக்கல் ப £திப்பு ஏற்படுவதாக புகார் வந்தது.இந்நிலையில் பேரூராட்சி  செயல் அலுவலர் அகஸ்திலிங்கம் ஆலோசனைப்படி ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டர்  வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் பிளான்ட் அமைக்க ஆகும் செலவுக்கு அமைச்சர் சுரேஷ்ராஜன் தனது தொகுதி  மேம்பாட்டு நிதியை ஒதுக்கினார். இதனையடுத்து ஆரல்வாய்மொழி பேரூராட்சி பகுதி பெருமாள்புரம் (தெற்கு மற்றும் வடக்கு), குருசடி, மிஷன் க £ம்பவுண்ட், ஆரல்வாய்மொழி வடக்கூர்  என 4 மண்டலமாக பிரிக்கப்பட்டது. இங்கு தலா 10 ஆயிரம்  லிட்டர் கொள்ளவு கொண்ட தனி  மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்திகரிப்பு நிலையத்துடன் அமைக்கப்பட்டது. இங்கிருந்து தனி குழாய்கள் பதிக்கப்பட்டு பொது குழாய்கள் அமை க்கப்பட்டுள்ளன. மிஷன் காம்பவுண்டில் 10, பெருமாள்புரத்தில் 6, குருசடியில் 6 குடிநீர் குழாய்கள்  அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் மூலம்  தினமும் மாலையில் 2 மணிநேரம் மினரல் வாட்டர் வினியோகிக்கப்படுகிறது. ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயல்அலுவலர் அகஸ்திலிங்கம் கூறியதாவது: வடக்கூர் நீங்கலாக பிற இடங்களில் குடிநீர் வினியோகத்தை அமைச்சர் சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார். வடக்கூரில் சுத்திகரிப்பு மையம் மற்றும்  தனி குழாய்கள் பதிக்கும் பணி 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த மாதத்துக்குள் அங்கும் மினரல் வாட்டர் வழங்கப்படும். தற்போது  தினமும் 30 ஆயிரம் லிட்டர் மினரல் வாட்டர் வழங்கப்படுகிறது. வடக்கூரில் பணிமுடிவடைந்தபின் 40 ஆயிரம் லிட்டராக உயரும் என்றார்.
452
1/19/2011 4:08:46 PM
தமிழகம்
ஏழுமலையானுக்கு அணிவித்த நகைகளை நீதிபதி ஆய்வு
திருப்பதி, - திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு பண்டைய கால அரசர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் விலையுயர்ந்த தங்க, வைர ஆபரணங்களை  நன்கொடையாக வழங்கியுள்ளனர். இவற்றில் பெரும்பாலான நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றியதாகவும், சில நகைகள் மாயமானதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஏழுமலையானுக்கு சொந்தமான ஆபரணங்களின் மொத்த விவரங்களை தெரியப்படுத்துமாறு திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆந்திர  அரசு உத்தரவிட்டது. இதற்காக தேவஸ்தானம் சார்பில் நீதிபதி வாத்வா தலைமையிலான கமிட்டி நியமிக்கப்பட்டது.இவர்கள் கடந்த சில நாட்களாக ஏழுமலையானுக்கு அளிக்கப்பட்ட ஆபரணங்கள், உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள், விசேஷ  நாட்களில் அணிவிக்கப்படும் ஆபரணங்கள், பயன்படுத்தாத ஆபரணங்கள் என பிரித்து கணக்கிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு விரைவு தரிசன நேரத்தில் நீதிபதி வாத்வா, கமிட்டி உறுப்பினர்கள் ஜெகன்நாதராவ், வெங்கடபதி ராஜு, பிரபாகர்ராவ், பெ £த்தூரி வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் கோயிலுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த  விலையுயர்ந்த ஆபரணங்களை பார்வையிட்டனர். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டிருக்கும் உற்சவ மூர்த்திகளின்  ஆபரணங்கள், வைரக்கற்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து குழுவின் உறுப்பினரும், முன்னாள் தேவஸ்தான தலைமை செயல் அதிகாரியுமான பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது : கோப்புகளில் உள்ள நகை விவரங்களை இதுவரை ஆய்வு செய்தோம். தற்போது மூலவருக்கு அணிவித்த நகைகள், உற்சவ மூர்த்தியின் நகைகள்  குறித்து கருவறைக்குள் சென்று நேரடியாக ஆய்வு செய்துள்ளோம். இதுதொடர்பான அறிக்கையை அடுத்த சில நாட்களில் தேவஸ்தான உயரதிக£ரிகளிடம் ஒப்படைப்போம். அதன்பிறகு எங்களது அறிக்கையை ஆந்திர அரசுக்கு தேவஸ்தானம் சமர்ப்பிக்கும் என்றார்.
453
1/19/2011 4:11:49 PM
தமிழகம்
மேலவை வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
மதுரை, - தமிழகத்தில் சட்ட மேலவை அமைப்பதற்கான ஆணையை ஜனாதிபதி கடந்த ஆண்டு செப். 30ல் வெளியிட்டார். இதனை தொடர்ந்து மேலவை  அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலவைக்கு 78 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். எம்எல்ஏக்கள் மூலம் 26 பேரும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலம் 26 பேரும்,  ஆசிரியர்கள் பட்டதாரிகள் தொகுதிகள் வழியாக தலா 7 பேரும், கவர்னர் நியமனம் மூலம் 12 என மொத்தம் 78 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.   பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்தாண்டு நவம்பர்22ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பட்டதாரி தொ குதிகளில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 648 வாக்காளர்களும், ஆசிரியர் தொகுதியில் 70 ஆயிரத்து 923 வாக்காளர்களும் உள்ளனர். இதனை தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வது தொடர்பாக டிசம்பர் 16ம் தேதி வரை  விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் பட்டதாரி  தொகுதியில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 59 பேரும், ஆசிரியர் தொகுதிக்கு 68 ஆயிரத்து 16 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மேலவைக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (ஜன.20) வெளியாகும் என மாநில தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார். அதன்படி  அனைத்து மாவட்ட கலெக்டர்களும் நாளை காலை 10 மணிக்கு இந்த பட்டியலை வெளியிடவுள்ளனர். இதில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்க  வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
454
1/19/2011 4:13:56 PM
தமிழகம்
பெருங்குடி பேரூராட்சியில் இலவச கலர் டிவி, பட்டா
துரைப்பாக்கம், - காஞ்சிபுரம் மாவட்டம் பெருங்குடி பேரூராட்சியில் இலவச கலர் டிவி, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  பெருங்குடி பள்ளி திடலில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு தாம்பரம் கோட்டாட்சியர் சவுரிராஜன் தலைமை வகித்தார். எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, ஒன்றியக்குழு தலைவர் ஏழுமலை, ஒன்றிய செயல £ளர் விசுவநாதன் முன்னிலை வகித்தனர். பெருங்குடி பேரூர் செயலாளரும் கவுன்சிலருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 737பேருக்கு இலவச பட்டா மற்றும் கலர் டிவி வழங்கி பேசும்போது, ÔÔக £ஞ்சிபுரம் மாவட்டத்தில் விடுபட்டவர்களுக்கு கொடுப்பதற்காக ஒன்றரை லட்சம் டிவி தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் 95 சதவீதம் பேருக்கு  டிவி வழங்கப்பட்டுவிட்டது. நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடியிருந்த 8 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அளித்த வ £க்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார். குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டி தருகிறார். கலைஞர் காப்பீடு திட்டம்  மூலம் கூலி தொழிலாளியும் இதய ஆபரேஷன் செய்து கொள்ள முடிகிறதுÕÕ என்றார். பெருங்குடி பேரூர் செயல் அலுவலர் மோகனரங்கம் நன்றி கூறினார்.
455
1/19/2011 4:37:01 PM
தமிழகம்
அனைவருக்கும் கல்வி திட்டம் கல்விக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
பள்ளிப்பட்டு, - அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஆர்கே. பேட்டை கருத்தாய்வு மையத்தில் கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்  நேற்று தொடங்கியது. ஊராட்சி தலைவர் துளசி சிகாமணி தலைமை வகித்தார். ராஜாநகரம் ஊராட்சி தலைவர் தர்மன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள்  சுப்பிரமணியம், கிருஷ்ணன் வரவேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் மோகனா திட்ட விளக்க உரையாற்றினார். தலைமை ஆசிரியர் பாரதி, பயிற்சியின்  நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமை ஆசிரியை  நாகலட்சுமி நன்றி கூறினார். வங்கனூரில் நடைபெற்ற கருத்தாய்வு கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் நடராஜன்  வரவேற்று பேசினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் ரவி, சரஸ்வதி ஆகியோர் கல்விக்குழு செயல்பாடு பற்றி விளக்கி பேசினர். தலைமை ஆசிரியை  அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.
456
1/19/2011 4:41:49 PM
தமிழகம்
மகப்பேறு உதவி திட்டத்தில் 17 பெண்களுக்கு தலா ரூ6000
பள்ளிப்பட்டு, - மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் 17 பெண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு உதவி மற்றும் மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி  வழங்கப்பட்டது. இதற்கு, வட்டார மருத்துவ அலுவலர் தீபா தலைமை வகித்தார். சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் அந்தோணி வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர்  கு.கன்னியப்பன் 17 பெண்களுக்கு தலா ரூ.6ஆயிரம் வழங்கினார். 4 மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கினார். ஒன்றிய திமுக செயலாளர் சுப்பிரமணி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் சண்முகம், சுகாதார ஆய்வாளர்கள் பாலன், சந்திரன், ராமச்சந்திரன்,  ஆறுமுகம், காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
457
1/19/2011 4:47:05 PM
குற்றம்
தொழிலாளிக்கு அடி கோர்ட் ஊழியர் கைது
ஆவடி, - பெரியபாளையம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, ஆட்டோவில் வீடு திரும்பிய தொழிலாளியை மறித்து அடித்து உதைத்த கோர்ட்  ஊழியரும் நண்பரும் கைது செய்யப்பட்டனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் நேரு நகர் வாசுகி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (49). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் குடும்பத்துடன்  பெரியபாளையம் அம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பட்டாபிராம் சிடிஹெச் சாலை  நெமிலிச்சேரி அருகே பைக்கில் வந்த இருவர், ஆட்டோவுக்கு குறுக்கே சென்றதாக தெரிகிறது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநருடன் அவர்களுக்கு  தகராறு ஏற்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநருக்கு ஆதரவாக கிருஷ்ணமூர்த்தி பேசியதாக தெரிகிறது. இதனால் கிருஷ்ணமூர்த்தியை அசிங்கமாகத் திட்டி,  சரமாரியாக அடித்து உதைத்தனர். அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பட்டாபிராம் உழைப்பாளர் நகரை சேர்ந்த  வினாயகமூர்த்தி (45). இவர் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஊழியராக இருக்கிறார். அவரது நண்பர் சுரேஷ்பாபு (29) ஆகியோரை கைது செய்தனர்.
458
1/19/2011 4:48:49 PM
தமிழகம்
காஞ்சிபுரத்தில் ரூ46.90 லட்சத்தில் குடிநீர் தொட்டிகள் அங்கன்வாடி மையம் திறப்பு
காஞ்சிபுரம், - காஞ்சிபுரம் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.46.90 லட்சத்தில் கட்டப்பட்ட பேரூராட்சி, ஊராட்சிகளுக்கான மேல்நிலை நீர்த் தேக்க தெ£ட்டி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே புத்தேரி ஊராட்சியில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் ஹனீஷ் சாப்ரா முன்னிலை  வகித்தார். காஞ்சிபுரம் எம்பி விஸ்வநாதன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.இதுபோல் தாமல் ஊராட்சியில் ரூ.25 லட்சத்தில் குடிநீர் தொட்டி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி வடக்குப்பட்டு கிராமத்தில் ரூ.6 லட்சத்தில் நீர்த்தேக்க  தொட்டி, அரையம்பாக்கம் ஊராட்சியில் ரூ.2.5 லட்சத்தில் குடிநீர் தொட்டி, வேடல் ஊராட்சியில் ரூ.6 லட்சத்தில் அரசு நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர்,  இடைகழிநாடு பேரூராட்சியில் ரூ.2.5 லட்சத்தில் அங்கன்வாடி மையம் என ரூ.46.90 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை எம்பி விஸ்வநாதன் திற ந்து வைத்தார். இதில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு உறுப்பினர் விஜயகுமார், விசைத்தறி ஆலோசனைக்குழு உறுப்பினர் அரங்கநாதன், கைத்தறி  ஆலோசனைக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரசாமி மற்றும் ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
459
1/19/2011 5:00:30 PM
சினிமா(ரீல்மா)
ஆடுகளம் - விமர்சனம்
மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில் பேட்டைக்காரன் (ஜெயபாலன்) சேவல் என்றால் தனி மவுசு. மல்லுகட்டி நிற்கும் எதிர்கோஷ்டியின் சேவலை கொன்றே விடும். எப்படியாவது பேட்டைக்காரன் சேவலை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார் அந்த ஊர் இன்ஸ்பெக்டர் ரத்னசாமி (நரேன்). இது கவுரவ பிரச்னையாகிவிடுகிறது. மீசைக்காரரிடம் வேலை பார்க்கும் கருப்பு (தனுஷ்) தனது பொறுப்பில் ஒரு சேவல் வளர்க்கிறார். போட்டிக்கு தகுதியில்லாத அச்சேவலை அறுத்துப்போடச் சொல்கிறார் பேட்டைக்காரர். ஆனால் அதை தனது வீட்டில் பக்குவமாக வளர்ப்பதுடன், போட்டிக்கு தயார் படுத்துகிறார். இந்நிலையில் பேட்டைக்காரருக்கும், இன்ஸ்பெக்டருக்கும் வாய்த்தகராறு முற்றுகிறது. ‘சேவல் சண்டையில் எங்கிட்ட இருக்க¤ற சேவல்ல ஒரு சேவல் தோத்தா கூட மொட்டை அடிச்சிக்கிறேன். சேவல் சண்டை போட்டியை விட்டே விலகியும் போயிடுறேன்Õ என்று சவால் விட்டு, ‘உனக்கும் இது பொருந்தும்Õ என்கிறார் பேட்டைக்காரர். போட்டி நாளன்று முதல் ரவுண்டிலேயே இன்ஸ்பெக்டரின் சேவலை தோற்கடிக்கிறார் பேட்டைக்காரர். அடுத்த போட்டிக்கு தயாராகுகிறார்.இதற்கிடையில் தான் காதலிக்கும் ஆங்கிலோ இண்டியன் மாணவி ஐரினிடமிருந்து (டாப்ஸி) அவர் பள்ளிக்கு கட்ட வைத்திருந்த பணத்தை பறித்து வருகிறார் தனுஷ். உடனடியாக பள்ளியில் பணம் கட்டவேண்டும் என்று டாப்ஸி கூற, பணம் கையில் இல்லாமல் தடுமாறுகிறார் தனுஷ். இன்ஸ்பெக்டரின் அடியாள் ஒருவர் தங்களது சேவலை ஜெயிக்க வைத்தால் பணம் தருவதாக கூறுகிறார். ஒப்புக்கொள்ளும் தனுஷ், கோதாவில் சேவலை இறக்குகிறார். பேட்டைக்காரர் எவ்வளவோ தடுத்தும் தனுஷ் கேட்கவில்லை. களத்தில் குதிக்கும் தனுஷின் சேவல் எதிரிச் சேவலை அடித்து சாய்க்கிறது. அன்றுமுதல் தனுஷின் பெயர் பிரபலம் ஆகிறது. பொறாமை கொள்ளும் பேட்டைக்காரரின் சூழ்ச்சிக்கு ஆளாகிறார் தனுஷ். கடைசியில் பேட்டைக்காரரின் வஞ்சக எண்ணத்தை தெரிந்துகொள்ளும் தனுஷ், எடுக்கும் முடிவே கிளைமாக்ஸ். தமிழ் திரையுலகுக்கு புதுக் களம் அமைத்து தந்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். லுங்கி கட்டிக்கொண்டு சண்டை சேவலும் கையுமாக நண்பர்களுடன் வம்பு பேசித் திரியும் யதார்த்த இளைஞனாக தனுஷ். டாப்ஸியின் அழகில் மயங்கி அவர் பின்னாலேயே அலைவதும், திடீரென்று தனது காதலை அவரிடம் சொல்வதுமாக பட்டிக்காட்டு ரொமான்ஸை படு கச்சிதமாக செய்கிறார். ‘ஏன் நடுவழியிலே ஃபாலோ பண்ற, பேசறதா இருந்தா நேரா வீட்டுக்கு வந்து பேசுÕ என தனுஷிடம் டாப்ஸி சொன்னதும் மறுநாள் அவரது வீட்டுக்குபோய் அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் தனுஷின் வெள்ளந்தி சேட்டை சிரிப்பு. காதல் டிராக்கிலிருந்து கதை, சேவல் சண்டைக்குள் அடி வைத்ததும் இறக்கை கட்டிக்கொள்கிறது. ‘பீஸ் கட்டணும்;  பணத்தை எப்ப தரப்போறேÕ என்று டாப்ஸி செல்போனில் நச்சரித்ததும் சிக்னல் கிடைக்காததுபோல் போக்கு காட்டுகிறார் தனுஷ். பின்னர் சேவல் சண்டையில் ஆயிரம் ரூபாய் பந்தயம் என்று கேட்டவுடன் விசுக்கென போட்டிக்கு தயாராகிறார். சேவலை கையில் ஏந்திக்கொண்டு பந்தய களத்துக்கு வந்திறங்கி, எதிர் சேவலை நிலை குலைய வைப்பது அரங்கையே ஆரவாரத்தில் புரட்டிப் போடுகிறது. அடுத்தடுத்து பந்தய பணத்தை கூட்டி தனுஷை வம்புக்கு இழுக்கும் இன்ஸ்பெக்டர் நரேன், பெங்களூரிலிருந்து காரில் கொண்டு வந்த சேவலை களத்தில் இறக்கும்போது என்ன நடக்குமோ என்று பயம் அரங்கை அப்பிக் கொள்கிறது. முதல் பாதி சண்டைவரை அடிமேல் அடிவாங்கி சோர்வடையும் தனுஷின் சேவல், திடுக்கென்று கொண்டையை சிலுப்பிக் கொண்டு எதிர் சேவலை வீழ்த்தியதும் விசில் பறக்கிறது. டாப்ஸி, தனுஷ் காதலுடன் ஜெயபாலனின் வஞ்சகம் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் கதையை புயல் வேகத்தில் இழுத்துச் செல்கிறது. தொழில் கற்றுக் கொடுத்தவர் என்ற மரியாதையை கடைசி நிமிடம்வரை ஜெயபாலனிடம் தனுஷ் காட்டுவதும் அதை கண்டுகொள்ளாமல் தனுஷை பழிவாங்குவதிலேயே அவர் குறியாய் இருப்பதும் டென்ஷனை அதிகரிக்கிறது. வெள்ளைக்காரப் பெண்ணாக வரும் டாப்ஸி தேனில் தோய்த்தெடுத்த பட்டர்ஸ்காட்ச்.பாடல்களில் மண் மணத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். ஒவ்வொரு பாடலும் அப்ளாஸ் அள்ளுகிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவு, கண்களை கதையின் ஊடே கட்டி இழுத்துச் செல்கிறது. ஆடுகளத்தில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
460
1/19/2011 5:03:12 PM
சினிமா(ரீல்மா)
பாலிசியை கைவிடும் ஹீரோ
நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது...கோலிவுட்ல நிரந்தர இடம் பிடிக்கணும்னு சரத்தான மலையாள இசைக்கு ஆசையாம்... ஆசையாம்... ஏற்கனவே ஜூன் மாசம் பேர்ல வந்த படத்துல அடிச்ச மியூசிக், தேறல. நீண்ட நாளுக்கு பிறகு  சித்தார்த்த நடிகர் நடிக்கிற ஒன் எய்ட்டி படத்துல மியூசிக் பண்றாரு. இதுல வாய்ப்பு கிடைக்க அந்த நடிகரோட நட்புதான் காரணமாம்... காரணமாம்...ஒரு நேரத்துல ஒரு படம்ங்கிற பாலிசி வச்சிருந்தாரு பிரகாச ஹீரோ. அதை கைவிட முடிவு பண்ணியிருக¢கிறாராம்... பண்ணியிருக்கிறாராம்... ஒரே நேரத்துல மூணு படத்துல நடிக்கவும் பிளான் போட்டிருக்கிறாராம்... போட்டிருக்கிறாராம்...முருக இயக்குனரு தயாரிக்கிற பட ஷூட்டிங் இன்னும் தொடங்கல. படத்துல நடிக்கிறவங்ககிட்ட, கதை, கேரக்டர் பற்றி வெளியே எதுவும் பேசக்கூடாது. நேரத்துக்கு ஷூட்டிங் வரணும் என்பது உள்பட நிறைய நிபந்தனைகளை போட்டிருக்காங்களாம்... போட்டிருக்காங்களாம்... எல்லாத்தையும் ஒப்பந்தமா எழுதியும் வாங்கியிருக்காங்களாம்... வாங்கியிருக்காங்களாம்...
461
1/19/2011 5:09:45 PM
தமிழகம்
காரை கிராமத்தில் சங்கரா கல்லூரி சார்பில் என்எஸ்எஸ் முகாம்
காஞ்சிபுரம், - காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், நாட்டு நலப்பணி திட்ட முகாம் காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தில்  நேற்று தொடங்கியது. இந்த முகாம் வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். லட்சுமி மருத்துவமனை இயக்குனர் சாம்பமூர்த்தி முகாமை தொடங்கி வைத்தார். காரை ஊர £ட்சி தலைவர் மணி, துணைத்தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். சங்கரா கல்லூரி செயலாளர் ரிஷிகேசன், எஸ்.எம். சில்க் உரிமைய £ளர் மனோகரன் ஆகியோர் நாட்டு நலப்பணி திட்டம் குறித்து பேசினர். முகாமில், காரை கிராமத்தில் உள்ள கோயில், குளத்தை சுத்தம் செய்தனர். சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றினர். என்எஸ்எஸ்  திட்ட விழிப்புணர்வு பேரணியும் நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டனர்.
462
1/19/2011 5:10:38 PM
சினிமா(ரீல்மா)
கிளிப்பிங்ஸ்
சமீபத்தில் வெளியான ‘பாஸ்' கன்னட படம் மூலம் முக்கிய வேடத்தில் அறிமுகமாகி இருக்கிறார் பிரபு.'ஷூட்டிங்கின்போது கேரவன் வசதி நடிகைகளுக்கும் அவசியம்' என்கிறார் லட்சுமிராய்.'நடிக்க வருவதற்கு முன் டெக்னிஷியனாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். டூர் சென்றால் கேமராவை கையோடு எடுத்துச் சென்று வித்தியாசமான முகங்களை கிளிக் செய்வேன்' என்கிறார் ஜீவா. 'வா குவார்ட்டர் கட்டிங்' உள்ளிட்ட படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்த ஜான் விஜய் தனது காதலி மாதவியை விரைவில் மணக்கிறார்.‘வானம்Õ படத்தில் நடிக்கும் வேகாவின் 2வது பாலிவுட் படம் ‘சிட்டகாங்'. விரைவில் திரைக்கு வருகிறது. ஷங்கர் இயக்கும் '3 இடியட்ஸ்' பட ரீமேக்கான 'மூவர்' பட ஷூட்டிங், ஜன. 25 முதல் ஊட்டியில்  தொடங்க உள்ளது.தெலுங்கில் நடிக்கும் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா, ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்.
463
1/19/2011 5:14:32 PM
தமிழகம்
திருவள்ளூர் மாவட்டத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட 62 பேருக்கு பஸ் பாஸ்
திருவள்ளூர், - திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும்  அடையாள அட்டை வழங்கும் விழா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது. அரசு நலப்பணிகள் இணை இயக்குனர் சுகுமாரன் தலைமை வகித்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் சம்பத் முன்னிலை வகித்தார். டாக்டர்  பேபி ஜான்சி வரவேற்றார். டாக்டர் மதிபா திட்ட உரையாற்றினார்.எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 62 பேருக்கு இலவச பஸ் பாஸ்களை கலெக்டர் ராஜேஷ் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மாவட்டத்தில்  875 ஆண்கள், 492 பெண்கள், 78 குழந்தைகள் என மொத்தம் 1,445 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 599 பேர் சமுதாய  மையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்ப்பிணிகளுக்கு, எச்ஐவி மருத்துவ பரிசோதனை இலவசமாக  செய்யப்படுகிறது’’ என்றார். மருத்துவமனை கண்காணிப்பாளர் உஸ்மான் அலி, துணை இயக்குனர்கள் தாமரை செல்வி, லட்சுமி முரளி, டாக்டர் தயாளன் உள்பட பலர் கலந்து  கொண்டனர். மாவட்ட விரிவாக்க கல்வியாளர் நாகேந்திரன் நன்றி கூறினார்.
464
1/19/2011 5:17:15 PM
தமிழகம்
பென்னலூர்பேட்டையில் குப்பை கிடங்கை இடம் மாற்ற கோரிக்கை
ஊத்துக்கோட்டை, - ஊத்துக்கோட்டையை அடுத்த பென்னலூர்பேட்டையில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க, கிர £மத்தில் பஸ் நிலையம் அருகே ரேஷன் கடை உள்ளது. இங்கு 1,200 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.  தினமும் பெண்கள் நிறைய பேர் வருகின்றனர்.இந்த ரேஷன் கடைக்கு பக்கத்தில் குப்பை கொட்டும் கிடங்கு உள்ளது. ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த கிடங்கில் கிராமத்தில் பல்வேறு பகுதிகளில்  சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. இவை நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.  ரேஷன் பொருட்களை வாங்க வருபவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டுதான் வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.  இரவு நேரங்களில் இந்த குப்பை கிடங்கின் அருகில் சிலர் அசுத்தம் செய்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ரேஷன் கடை  அருகில் நிறைய வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள உணவைக் கூட சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த குப்பை கிடங்கை கிர £மத்திற்கு ஒதுக்குபுறமாக உள்ள வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
465
1/19/2011 5:17:33 PM
தமிழகம்
மத்திய அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் காங்கிரசார் பரப்ப வேண்டும்
சென்னை: மத்திய அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் பரப்ப வேண்டும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். வாழப்பாடி ராமமூர்த்தியின் 71வது பிறந்த நாள் விழா தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு, முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.வேலுசாமி தலைமை வகித்தார். புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், ஞானதேசிகன் எம்பி, மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சைதை பாபு, மாவட்ட தலைவர்கள் கோவிந்தசாமி, மங்கள்ராஜ் மற்றும் நிர்வாகிகள் ஜவஹர்பாபு, செழியன், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில், ‘‘காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு சோதனை ஏற்பட்ட போது தன்னுடைய அமைச்சர் பதவியை தூக்கி எறிய துணிந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அதை நாடு மறக்காது. எல்லாரும் ஒற்றுமையாக இணைந்து காங்கிரசை வலுப்படுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பட்டி தொட்டி எங்கும் பரப்ப வேண்டும். காங்கிரஸ் கொடி எங்கும் பறக்க வேண்டும். இந்த சூழ்நிலை ஏற்படுமேயானால் பொறுத்தார் பூமியாழ்வார் என்பதற்கு மாற்று கருத்து இல்லை’’ என்றார்.
466
1/19/2011 5:19:22 PM
தமிழகம்
விஏஓ அலுவலகம் உண்டு; அதிகாரி இல்லை
தாம்பரம்: தாம்பரம் அருகே உள்ள மதுரைப்பாக்கம் கிராமத்திற்கு, கிராம நிர்வாக அதிகாரி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். கிராமங்களில் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்யவும் சாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு சான்று, பட்டா பெயர் மாற்றம் ஆகியவற்றுக்காக வி.ஏ.ஒக்களிடம் செல்ல வேண்டியுள்ளது.  மதுரைப்பாக்கம் கிராம ஊராட்சியில் மூலச்சேரி, கோவிலாஞ்சேரி, மதுரைப்பாக்கம் போன்ற கிராமங்கள் உள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாம்பரம் தாலுகா ஒருங்கிணைந்த தாலுகாவாக இருந்தபோது கிராம மக்கள் தங்களுக்கு தேவையான சான்றுகளை சிட்லபாக்கம் வி.ஏ.ஒவிடம் பெற்று வந்தனர். தற்போது தாம்பரம் தாலுகா மூன்றாக பிரிக்கப்பட்டதும் மதுரைப்பாக்கம் கிராம ஊராட்சிக்கு புதிதாக வி.ஏ.ஒ. பணியிடம் உருவாக்கப்பட்டது. ஓர் ஆண்டு ஆகியும் இன்னும் இந்த ஊராட்சிக்கு கிராம அதிகாரி நியமிக்கப்படவில்லை.இந்த கிராமத்திற்கு திருவஞ்சேரி வி.ஏ.ஒ., கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரைப்பாக்கம் கிராமத்திற்கு வருவதில்லை. இங்கு வி.ஏ.ஓ. அலுவலகம் கட்டப்பட்டு இதுவரை எந்த கிராம அதிகாரியும் வரவில்லை. இதனால், மதுரைப்பாக்கம் கிராம மக்கள் சான்று பெற 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவஞ்சேரி வி.ஏ.ஒ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு செல்ல போதிய பஸ் வசதியில்லை. புதிய வி.ஏ.ஒவை நியமிக்க வேண்டும். அதுவரை திருவஞ்சேரி வி.ஏ.ஒ. வாரத்துக்கு இரு நாட்கள் மதுரைப்பாக்கம் கிராமத்துக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.
467
1/19/2011 5:21:08 PM
தலையங்கம்
கொலையில் முடிந்த போதை தகராறு
போதை கொடியது. போதையில் செய்யும் தகராறு உயிருக்கே ஆபத்து. பிறந்தநாளை நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடியபோது ஏற்பட்ட அடிதடி தகராறில், பிறந்த நாளிலேயே கொலை செய்யப்பட்டு ஒருவர் இறக்க, எதிர் கோஷ்டியை சேர்ந்த மற்றொருவரும் கத்தியால் குத்தப்பட்டு இறந்திருக்கிறார். அநியாயமாக இரண்டு இளைஞர்கள் உயிரை விட்டுள்ளனர்.சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் தன்னுடைய பிறந்த நாளுக்கு நெருங்கிய நண்பர்களை அழைத்து மது விருந்து கொடுத்திருக்கிறார். இதன்பிறகு அனைவரும் சாலையோரக் கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு டிபன் சாப்பிட்டுள்ளனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த மாதவனும் அவரது நண்பர்களும் அந்த கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இரு தரப்பினரும் குடிபோதையில் இருந்துள்ளனர். மாதவனுக்கும் சிலம்பரசனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இருதரப்புக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது. சாப்பிடும்போது இந்த பிரச்னை பற்றி பேசியுள்ளனர்.  மோதல் வெடித்திருக்கிறது. திடீரென இரு தரப்பும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அந்த இடமே களேபரமானது. ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் வெளியே எடுக்கப்பட்டு ஒருவரையொருவர் சராமாரியாக வெட்டிக் கொண்டனர். மாதவன், சிலம்பரசனுக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் துடித்த இருவரையும் நண்பர்கள் மீட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரும் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இந்த அடிதடியில் தீபக் என்பவருக்கு வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. பிறந்த நாளிலேயே இறந்துபோன சிலம்பரசன் குடும்பமும் எதிர் கோஷ்டியை சேர்ந்த மாதவன் குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.புது பைக் வாங்கினால் பார்ட்டி, புரமோஷனுக்கு பார்ட்டி, பிறந்தநாளுக்கு பார்ட்டி என இளைஞர்கள் மத்தியில் பார்ட்டி மயமாக இருக்கிறது. சந்தோஷத்தைக் கொண்டாட ஓட்டலுக்கு போவதும், சினிமாவுக்கு கூட்டிப்போவதும் அந்தக் காலம். இப்போது பார்ட்டி என்றாலே மதுதான் முதல் இடம் பிடிக்கிறது. சந்தோஷமாக குடிக்கும் இளைஞர்கள் தங்களை மறக்கிறார்கள். குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களும் இதுபோன்ற பார்ட்டிகளில் ஓசியில் கிடைக்கும் மதுவை ருசி பார்த்து பழகிக் கொள்கிறார்கள். மது உள்ளே போனதும் புது தைரியம் வருகிறது. எப்போதோ சண்டை போட்டவர்களை பார்த்தால் கூட பழைய பகை விஸ்வரூபம் எடுக்கிறது. வாய்ச்சண்டை, கத்தி குத்தில் முடிய உயிர் பலி ஏற்பட்டு விடுகிறது. போதையால் இரண்டு குடும்பங்களின் எதிர்காலம் இருண்டுவிட்டது.
468
1/19/2011 5:24:54 PM
தமிழகம்
இருளில் மூழ்கிய அரசு மருத்துவமனை திருவள்ளூரில் நோயாளிகள் அவதி
திருவள்ளூர்: திருவள்ளூர் ஜே.என். சாலையில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு திருவள்ளூர் மணவாளன் நகர், மேல்நல்லாத்தூர், போளிவாக்கம், வலசைவெட்டிக்காடு, காக்களூர், தண்ணீர்குளம், ராமாபுரம், புட்லூர், தலக்காஞ்சேரி, ஈக்காடு, திருப்பாச்சூர் உள்ளிட்ட 20க்கு அதிகமான கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.தினமும் 1000க்கு அதிகமான புறநோயாளிகள் வருகின்றனர். திங்கள் கிழமைகளில் மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வரும் புறநோயாளிகளுக்கு கழிப்பறை வசதி இல்லை. போதிய டாக்டர் இல்லாமல் நோயாளிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும் நோயாளிகள், டாக்டரிடம் சோதனைக்காக செல்லும்போது அவர்களுக்கு இருக்கை இல்லை. சிலநேரம் டாக்டர்கள் உட்காரகூட இருக்கை இருப்பதில்லை. உள்நோயாளிகளுக்கு 150 படுக்கை வசதி மட்டும் உள்ளது. பிரசவ வார்டு, ஆண்கள், பெண்கள் வார்டு,  குழந்தைகள் வார்டு, கண் சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு என்று தனித்தனி வார்டுகள் உள்ளன. இங்குள்ள கட்டில்கள், பெட்கள் சரியில்லை. கட்டில்கள் மோசமாக உள்ளன. உள்நோயாளி பிரிவில் உள்ள டியூப் லைட் எரியவில்லை. பல மாதங்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் இருட்டு நிரந்தரமாக குடிகொண்டுள்ளது. மின்விசிறி பழுதடைந்துள்ளது. சில மின்விசிறிகள் இயங்கினாலும் நோயாளிகளுக்கு இடையூறாக அதிக சத்தத்துடன் ஓடுகின்றன. சுவிட்ச் பாக்ஸ் மோசமாக உள்ளது. இதனால் ஷாக் அடிக்கிறது. மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி கிடையாது. கரண்ட் போய்விட்டது என்றால் நோயாளிகள் இருட்டில் தான் இருக்வேண்டும்.வார்டில் உள்ள கழிவறை சுத்தமின்றி உள்ளது. கழிவறையில் உள்ள குழாய் உடைந்து தண்ணீர் வீணாகின்றது. பிரசவ வார்டில் நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. பிரசவமான பெண்கள் அச்சப்படுகின்றனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையை பராமரிக்க அரசு நிதி ஒதுக்கி 10 மாதம் ஆகிறது. மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறைக்கு அந்த நிதியை வழங்காத காரணத்தால் பராமரிப்பு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
469
1/19/2011 5:27:14 PM
மாவட்ட மசாலா
ரூ1 கோடி மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு
மதுரை, - நெல்லை மாவட்டம், தென்காசியில் இந்தியன் வங்கியில் போலி ஆவணங்களை கொடுத்து தனியார் நிறுவனங்களுக்கு ரூ.1.30 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக வங்கியின் மேலாளர் உள்பட 12 பேர் மீது சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடனுக்கு போலி ஆவணங்கள் வழங்கி உத்தரவாதம் அளித்ததாக கூறி சென்னை அடையாறை சேர்ந்த ஆர்த்தி பாலா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி பெரியகருப்பையா விசாரித்தார். மனுதாரருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ வக்கீல்  ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து ஆர்த்தி பாலாவின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
470
1/19/2011 5:32:45 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
மாஜி தலைமை நீதிபதிக்கு எதிராக வக்கீல் சங்கம் தீர்மானம்
திருவனந்தபுரம்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர் கே.ஜி.பாலகிருஷ்ணன். இவர் தற்போது தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக உள்ளார். இவரது இரண்டு மருமகன்கள் மற்றும் சகோதரர் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து அவரது சகோதரர் கே.ஜி.பாஸ்கரன், தான் வகித்து வந்த கேரள அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். கே.ஜி.பாலகிருஷ்ணன் வகித்து வரும் மனித உரிமை ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கேரளாவில் உள்ள வக்கீல் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. திருவனந்தபுரம் மாவட்ட வக்கீல்கள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. இதில், ‘வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்துள்ள புகார் குறித்து கே.ஜி.பாலகிருஷ்ணனிடமும் அவரது குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்த வேண்டும். மேலும் கே.ஜி.பாலகிருஷ்ணன் தற்போது வகித்து வரும் மனித உரிமை ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
471
1/19/2011 5:34:36 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
டாக்டர்கள் ஓய்வு வயதை 65ஆக உயர்த்த நிதிஷ்குமார் உத்தரவு
பாட்னா: இந்தியாவில் கிராமப்புறங்களில் பணியாற்றுவதற்காக சிறப்பு டாக்டர்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் கல்வியாண்டிலிருந்து இந்த 3 ஆண்டு புதிய படிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ பேராசிரியர்கள் பற்றாக்குறையை போக்குவதற்காக மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் ஓய்வு வயது, 65 ஆக உயர்த்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பீகாரிலும் மருத்துவ பேராசிரியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மாநிலத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் பலன் பெறுவார்கள் என கேபினட் முதன்மை செயலாளர் அப்சல் அமானுல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
472
1/19/2011 5:35:57 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
சுரங்க பாதையில் சிக்கியவர் 6 நாளுக்கு பிறகு உயிருடன் மீட்பு
உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள கோஸ்டல் இந்தியா நிறுவனத்தில் பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வருபவர் நாராயண்(40). இவர் கடந்த வியாழக்கிழமை உதய்ப்பூர் அருகே பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் ராட்சத குழாய்கள் பதிப்பதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென் மண் சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கப்பாதையிலிருந்து ஆட்கள் வெளியேறும் வழி அடைத்துக் கொண்டது.  66 அடி ஆழத்துக்கு மண்ணை தோண்டிச் சென்றால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாராயணை காப்பாற்றும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. முதலில் சிறிய துளை போட்டு மெல்லிய குழாய் இறக்கப்பட்டது. அதன் வழியாக சாப்பாடு மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் ஒரு ஆள் வெளியே வரும் வகையில் துளை போடும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. 6 நாள் முயற்சிக்குப் பின் இன்று காலை நாராயண் உயிருடன் மீட்கப்பட்டார்.
473
1/19/2011 5:39:15 PM
மாவட்ட மசாலா
லாரி மீது பைக் மோதி 2 வாலிபர்கள் பலி
புதுச்சேரி, - விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (27). அதே பகுதியை சேர்ந்த தனது சித்தப்பா மகன் சீனுவாசனுடன்(30) ஒரே மோட்டார் சைக்கிளில் புதுவையில் இருந்து நேற்று இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். புதுவையை அடுத்த தமிழக எல்லையான மதகடிப்பட்டு செக்போஸ்ட் அருகே போலீசார் ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது ஜெயராமன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் அதே இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
474
1/19/2011 5:40:50 PM
மாவட்ட மசாலா
கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது
விழுப்புரம், - விழுப்புரம் அருகே எம்.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவர் நேற்று மதியம் தனக்கு சொந்தமான நிலத்தில் உழவு ஒட்ட அறுவடை செய்த நெல்தாள்களை தீ வைத்து கொளுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பக்கத்திலிருந்த பழனியப்பன் என்பவரது கரும்பு தோட்டத்தில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதில் சுற்றியிருந்த 20 ஏக்கர் கரும்பு தோட்டம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் விழுப்புரம் தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
475
1/19/2011 5:41:43 PM
மாவட்ட மசாலா
நித்யானந்தா ஆசிரமத்தை படம் பிடித்தவருக்கு உதை
திருவண்ணாமலை, - திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்யானந்தா, பெங்களூர் பிடதியில் ஆசிரமம் அமைத்து, அதன் கிளைகளை பல்வேறு நாடுகளில் நிறுவியுள்ளார்.  திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலும் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் உள்ளது. இதை கனடாவை சேர்ந்த சுற்றுலா பயணி ஹென்றிபோர்டு என்பவர், வீடியோவில் படம் பிடித்துள்ளார். அதை கவனித்த ஆசிரம சீடர்கள் ஹென்றிபோர்டுடன் தகராறு செய்து, அவரை தாக்கி, வீடியோ காமிராவை சேதப்படுத்தினார்களாம். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி புகார் எதுவும் தரவில்லை. ஆனாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணியை தாக்கிய சம்பவம் என்பதால் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.
476
1/19/2011 5:42:01 PM
விளையாட்டு
3வது சுற்றில் வோஸ்னியாக்கி
மெல்பர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர்ஒன் வீராங்கனையான டென்மார்க்கின் கரோலினி வோஸ்னியாக்கி இன்று நடந்த 2வது சுற்றில் அமெரிக்காவின் வானியாகிங்கை 6-1, 6-0 என்ற நேர்செட் டில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். ஜஸ்டின்ஹெனின் 6-1, 6-3 என்ற நேர்செட் டில் பிளாட்சாவையும், ரஷ்யாவின் குஸ்னட் சோவா 6-1, 6-4 என்ற நேர்செட்டில் அரான்டக்சாவையும் தோற்கடித்து 3வது சுற்றில் நுழைந்தனர்.
477
1/19/2011 5:42:47 PM
மாவட்ட மசாலா
அறிவியல் கண்காட்சி புதுவையில் நாளை துவக்கம்
புதுச்சேரி, - பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுந்தரவடிவேலு தெரிவித்துள்ளதாவது: தென்னிந்திய அறிவியல் கண்காட்சி இந்த ஆண்டு புதுவையில் நடைபெற உள்ளது. புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககமும், பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை அறிவியல் கண்காட்சியை செல்லபெருமாள்பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலை பள்ளியில் நடத்த உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநில மாணவர்களின் சிந்தனையில் உதித்த சுமார் 300 காட்சி பொருட்கள் அணிவகுப்பில் இடம்பெறும். கண்காட்சியை புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங் தொடங்கி வைக்கிறார். முதல்வர் வைத்திலிங்கம் தலைமை தாங்குகிறார்.
478
1/19/2011 5:49:56 PM
விளையாட்டு
உலககோப்பைக்கான தெ.ஆ. அணி அறிவிப்பு
உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் சுழற்பந்து வீச்சாளர் இம்ரன்தகீர் புதுமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடாத காலிஸ் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். அணி விவரம்: ஸ்மித் (கேப்டன்), ஆம்லா, காலிஸ், டிவிலியர்ஸ், டும்னி, பிளஸ்சிஸ், காலின் இங்க்ராம், போத்தா, மோர்னே மோர்க்கல், பார்னல், ராபின் பீட்டர்சன், ஸ்டெய்ன், இம்ரன்தகீர், சோட்சோபி, மோர்னே வேன்யக்.
479
1/19/2011 5:51:50 PM
விளையாட்டு
யூசுப், ஹர்பஜன் அதிரடி: இந்தியா ‘த்ரில்’ வெற்றி
கேப்டவுன்: இந்தியா - தென்ஆப்ரிக்கா அணிகள் நேற்று கேப்டவுன் நகரில் 3வது ஒருநாள் போட்டியில் மோதின. முதலில் ஆடிய தென்ஆப்ரிக்க அணி 49.2 ஓவர்களுக்கு 220 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பிளஸ்சிஸ் 60, டும்னி 52 ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் ஜாகீர்கான் 3, முனாப்படேல், ஹர்பஜன்சிங் தலா 2, யூசுப்பதான் 1 விக்கெட் வீழ்த்தினர்.தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வழக்கம்போல ஆரம்ப கட்டத்தில் சொதப்பினர். ரோகித்சர்மா 23, முரளிவிஜய் 1, கோஹ்லி 28, யுவராஜ்சிங் 16, டோனி 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். 93 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தவித்த நிலையில் ரெய்னா, யூசுப்பதான் ஜோடி நம்பிக்கை அளித்தது. 37 ரன் எடுத்த நிலையில் மோர்க்கல் பந்தில் ரெய்னா ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய யூசுப்பதான் 50 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 59 ரன் எடுத்த நிலையில் ஸ்டெய்ன் பந்தில் அவுட்டானார். இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததை தொடர்ந்து தென் ஆப்ரிக்க வீரர்கள் உற்சாகமடைந்தனர். அப்போது 39.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை இந்திய அணி எட்டியிருந்தது. வெற்றிக்கு 39 ரன்கள் தேவை என்ற நிலை இருந்ததால் ஆட்டத்தின் பரபரப்பு அதிகரித்தது. ஹர்பஜன்சிங்கும், ஜாகீர்கானும் அதிரடியால் மிரட்டி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். ஜாகீர்கான் 14 ரன் எடுத்து அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் ஹர்பஜன்சிங் 2 சிக்சர்கள் விளாச வெற்றி வச மானது. முடிவில் இந்திய அணி 48.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்பஜன்சிங் 25 பந்தில் 2 சிக்சருடன் 23 ரன்களும், நெக்ரா 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருது யூசுப்பதானுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் இந்திய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 4வது ஒருநாள் போட்டி வருகிற 21-ம் தேதி நடக்கிறது.
480
1/20/2011 2:30:02 PM
சினிமா(ரீல்மா)
தங்கைக்கு காஜல் சிபாரிசு
‘மோதி விளையாடு', ‘நான் மகான் அல்லÕ படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தெலுங்கிலும் பந்தய குதிரையாக ஓடிக் கொண்டிருக்கிறார். இவரது தங்கை நிஷா அகர்வால். மும்பையில் பணிபுரிந்து வந்தார். பத்திரிகை ஒன்றில் அட்டை படமாக நிஷாவின் போட்டோ வந்ததும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது தமிழ் பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். அதற்கு அக்கா காஜலின் ஆதரவும் முழுமையாக கிடைத்திருக்கிறது. தன்னிடம் கால்ஷீட் கேட்டு வரும் தயாரிப்புகளிடம் கால்ஷீட் இல்லை என்று கூறாமல் அருகில் இருக்கும் தங்கையை காட்டி, ‘இவருக்கு இந்த கதை பொருத்தமாக இருக்கும். அவளிடம் கதை சொல்லுங்கள்Õ என்று வாய்ப்புகளை திருப்பி விடுகிறாராம் காஜல். கூடியவிரைவில் நிஷா அகர்வால் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க வருவார் என்கிறது கோலிவுட் வட்டாராம்.
481
1/20/2011 2:31:36 PM
சினிமா(ரீல்மா)
ஜந்தே நாளில் முழு பட ஷூட்டிங்
ஐந்தே நாட்களில் முழு பட ஷூட்டிங்கையும் நடத்த¤ முடிக்க திட்டமிட¢டுள்ளார் ராம் கோபால் வர்மா. குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் படத்தை எடுப்பதுதான் வர்மாவின் ஸ்டைல். இம்முறை மிகக் குறைந்த நாட்களாக வெறும் 5 நாட்களில் படத்தை எடுத்து முடிக்க உள்ளார். Ôடான்கலா முதாÕ என்ற பெயரில் தெலுங்கில் இப்படத்தை அவர் உருவாக்குகிறார். ரவிதேஜா, சார்மி உட்பட மேலும் சிலர் நடிக்கின்றனர். இது பற்றி ராம் கோபால் வர்மா கூறும்போது, ÔÔஇது நிஜமாகவே ஒரு வித்தியாசமான படம். அதனால்தான் குறைந்த நாளில் முழு பட ஷூட்டிங்கையும் நடத¢தி முடிக்கிறேன். பிப்ரவரி 11ம் தேதி ஷூட்டிங் தொடங்கும். 15ம் தேதி முடிந்துவிடும். இதில் சம்பளம் இல்லாமல் அனைவரும் நடிக்கிறார்கள். மொத்தம் 8 பேர்தான் டெக்னீஷியன்கள். இது போன்ற ஒரு புதுமையை யாரும் செய¢ததில்லை. விளம்பரத்துக்காக இதை செய¢யவில்லை. படத்தின் கதை அப்படிÕÕ என்றார்.
482
1/20/2011 2:35:24 PM
சினிமா(ரீல்மா)
நடிகரின் புது நண்பி
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...ஜ காட் நடிகரோட புது நண்பி, அவரோடு நடிக்கிற புதுமுகம்தானாம்... புதுமுகம்தானாம்... மில்க் இயக்குனர் படத்துலதான் ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க. ஆஃப் ஸ்கிரீன்லே ரெண்டு பேரோட கெம¤ஸ்ட்ரியும் சூப்பரா இருக்குன்னு யூனிட்ல பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...பிரகாச வில்லன் நடிகரு, புதுசா இன்னொரு தயாரிப்பு கம்பெனி தொடங்கப் போறாராம்... தொடங்கப் போறாராம்... இதுக்கு உதவியா இருக்கப்போவது நடிகருக்கு புதுசா கிடைச்சிருக்கிற என்ஆர்ஐ நண்பராம்... நண்பராம்... அந்த நண்பரை வச்சி, கன்னடத்துலேயும் படங்களை தயாரிக்க நடிகரு திட்டம் போட்டிருக்கிறாராம்... போட்டிருக்கிறாராம்...அஞ்சாத ஹீரோ நடிகருக்கு வாய்ப்புகள் வருதாம்... வருதாம்... ஆனா, நடிகரு அதை ஏற்க மறுக்கிறாராம்... மறுக்கிறாராம்... காரணம், எல்லாமே செகண்ட் ஹீரோ வாய்ப்புகளாம். நடிச்சா, சோலோதான்னு நடிகரு பிடிவாதம் பிடிக்கிறாராம்... பிடிக்கிறாராம்...
483
1/20/2011 2:39:33 PM
சினிமா(ரீல்மா)
டப்பிங் பேச திணறிய நடிகர்கள் இயக்குனர் தவிப்பு
'கள்வனின் காதலி', 'மச்சக்காரன்' படங்களை இயக்கியவர் தமிழ்வாணன். அகில், சனுஷா நடிக்கும் 'நந்தி' படத்தை இயக்கி வருகிறார். அவர் கூறியது: ராமநாதபுரம் அருகே கலையனூர் கிராமத்தில் இப்பட ஷூட்டிங் நடந்தது. கதைப்படி, இந்த ஊரில் முக்கிய புள்ளியாக இருக்கிறார் வில்லன் நித்தேஷ். ஊருக்கு வேலைக்கு வரும் அகில், சனுஷாவை காதலிக்கிறார். இந்த காதலுக்கு நித்தேஷ் தடையாக இருக்கிறார். இத்துடன் கிராமத்தில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் பின்னணியாகக் கொண்டு கதை அமைத்துள்ளேன். இதில் 25 துணை நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அதற்காக கலையனூர் கிராமத்திலும் சுற்றியுள்ள மற்ற கிராமங்களையும் சேர்ந்த 25 பேரை தேர்வு செய்தேன். அவர்களை நடிக்க வைப்பதில் பெரிய சிரமம் இல்லை. காரணம், யதார்த்தமாக வசனம் பேசச் சொன்னேன். அதை சரியாக செய்துவிட்டார்கள். ஆனால் டப்பிங் பேச வைப்பதற்குள் படாத பாடு பட்டேன். டப்பிங் கலைஞர்களை பேச வைத¢தால், கிராமத்து பாஷையும் யதார்த்தமும் அடிபட்டு போகும். அதனால் அவர்களையே பேச வைப்பதில் தீர¢மானமாக இருந்தேன். அவர்களின் லிப் மூவ்மென்ட்டுக்கு ஏற்றது போல் அவர்களால் டப்பிங் பேச முடியாமல் திணறினர். உதவி இயக்குனர்களை வைத்து பயிற்சி கொடுத்தேன். அதற்கே மூன்று நாட்கள் செலவிட்டோம். அதன் பின் ஒரு வழியாக டப்பிங் பேச வைத்து விட்டேன்.
484
1/20/2011 2:44:17 PM
சினிமா(ரீல்மா)
கிளிப்பிங்ஸ்
கணவருடன் கனடாவில் தங்கியுள்ள ரம்பாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.'யுத்தம் செய்' படத்தின் சிறப்பு காட்சியை திரையுலக நண்பர்களுக்கு நேற்று முன்தினம் திரையிட்டு காண்பித்துள்ளார் மிஷ்கின்.மலையாள நடிகை விஷ்ணுபிரியா 'ஊதாரி' தமிழ்ப் படத்தில் அறிமுகம் ஆகிறார். 'இன்பா' படத்துக்கு பின் கரண் நடிக்கும் 'சூரன்' படத்துக்கு இசையமைக்கிறார் பாலாஜி.ஹோசிமின் இயக்கத்தில் சத்யராஜ், சாந்தனு நடித்துள்ள 'ஆயிரம் விளக்கு' படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார் ரக்ஷனா.பாவனா நடித்துள்ள 'மெட்ரோ', 'குடும்பஸ்ரீ டிராவல்ஸ்' என 2 மலையாள படங்கள் நாளை திரைக்கு வருகிறது. இதையடுத்து மம்மூட்டி நடிக்கும் 'டபுள்ஸ்' படத்தில் கவுரவ வேடத்தில் பாவனா நடிக்க உள்ளார்.ஜீவா, ஸ்ரேயா நடிக்கும் 'ரவுத்திரம்' பட ஷூட்டிங் 50 சதவீதம் முடிந்துவிட்டது.
486
1/20/2011 5:03:38 PM
தமிழகம்
தறிகெட்டு ஓடிய மினி லாரி பஸ் ஸ்டாப்பில் புகுந்தது : மாமியார், மருமகள் உடல் நசுங்கி பலி
பூந்தமல்லி: போரூர் அருகே தறிகெட்டு ஓடிய மினி லாரி, பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில் மாமியார், மருமகள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாரி டிரைவர் போதையில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. சென்னை ராமாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜானகி (65). இவரது மகள் உமா (45), அனகாபுத்தூரில் வசித்து வந்தார். உமாவின் கணவர் கடந்த வாரம் இறந்துவிட்டார். 7&ம் நாள் சடங்குக்காக உமாவை தனது வீட்டுக்கு ஜானகி நேற்று அழைத்து வந்தார். இரவில் சில சடங்குகள் செய்தார். அதிகாலையில் யார் கண்ணிலும் படாமல், அவரை அனகாபுத்தூருக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார். அதற்காக இன்று அதிகாலை ஜானகி, அவரது மருமகள் சரசு (38) இருவரும் உமாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.முகலிவாக்கம் சபரி நகர் பஸ் நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோவுக்காக 3 பேரும் காத்திருந்தனர். அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த மினி லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. எதிரே நடந்து வந்தவர் மீதும் மோதிவிட்டு, நிற்காமல் தறிகெட்டு ஓடியது. ரோட்டில் சென்ற இருசக்கர வாகனங்களை உரசியபடி சென்ற லாரி, அருகில் மற்றொரு பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர்கள் மீதும் மோதியது.மினி லாரி மோதியதில் ஜானகியும் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அந்த இடத்திலேயே நசுங்கி இறந்தார். அந்த நபர் காலையில் வாக்கிங் வந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த உமா, சரசு மற்றும் இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரசு இறந்தார். உமா, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இரு சக்கர வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின்பேரில் விபத்தை ஏற்படுத்திய மினி லாரியை போரூர் ரவுண்டானா அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர். டிரைவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர், திருவண்ணாமலையை சேர்ந்த காசிலிங்கம் (55) என்பது தெரிந்தது. நேற்றிரவு திருவண்ணாமலையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு சரக்கு ஏற்ற வந்தார். சரக்கை ஏற்றிக் கொண்டு இன்று காலை 6 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் குடோனுக்கு லாரியை ஓட்டிச் சென்றபோது விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.மற்றொரு விபத்துமதுரவாயல் ஆலப்பாக்கம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (55), கூலித் தொழிலாளி. சொந்த ஊரான செஞ்சிக்கு செல்வதற்காக இன்று காலை மனைவி ஜெயா (48), மகள்கள் தனலட்சுமி (16), சாலினி (11) ஆகியோருடன் மதுரவாயல் ரேஷன் கடை பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தார்.அப்போது கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி நோக்கி வந்த மினி வேன் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. இதில் தண்டபாணி அந்த இடத்திலேயே இறந்தார். பலத்த காயம் அடைந்த ஜெயா, மகள்கள் தனலட்சுமி, சாலினி ஆகியோர் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
487
1/20/2011 5:05:41 PM
தமிழகம்
டியூப்லைட்டை கடித்து தின்று புழல் சிறையில் கைதி தற்கொலை முயற்சி
புழல்: திருவள்ளூர் கனகம்மாசத்திரம் டேங்க் தெருவை சேர்ந்தவர் நந்தா (32). இவர் மீது ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த 26ம்தேதி கைதான நந்தா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சிறையில் எரிந்து கொண்டிருந்த டியூப்லைட்டை எடுத்து கடித்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சிறையில்  ரோந்து பணியில் இருந்த காவலர்கள் கைதி நந்தாவை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜெயிலர் தாமரைசெல்வன் கொடுத்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைதி தற்கொலை முயற்சி பற்றி விசாரித்து வருகின்றனர்.
488
1/20/2011 5:13:52 PM
தமிழகம்
சட்டமேலவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : கலெக்டர் அலுவலகங்களில் பார்க்கலாம்
சென்னை: சட்ட மேலவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. இதை கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்க்கலாம். தமிழக சட்டமேலவைக்கு தேர்தல் நடத்துவதற்காக செப்டம்பர் 30&ம் தேதி ஜனாதிபதி பிரதிபா பாட்டில் அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து சட்டமேலவை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது. பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 22&ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் விடுபட்ட மற்றும் புதிதாக வாக்காளர்களை சேர்ப்பதற்கான பணிகள் நவம்பர் 22&ம் தேதி தொடங்கி முழுவீச்சில் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டதாரிகள், ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பெயர்களை ஆர்வமுடன் பதிவு செய்தனர். இதற்காக சிறப்பு முகாம்களும் தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்டது.அதன்படி, தொகுதி எல்லை வரையறை பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. புகைப்படத்துடனான இந்தப் பட்டியல் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது:தமிழகத்தில் பட்டதாரி, ஆசிரியர்களுக்கான தலா 7 தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரிகள் 4.3 லட்சம் பேரும், ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். இறுதியாக பட்டியலில் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் பிற்பகலில் வெளியிடப்படும். பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை பார்க்க மட்டுமே முடியும். திருத்தம் செய்ய முடியாது. திருத்தம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இப்பட்டியலை சுமார் ஒரு வாரம் வரை பார்க்கலாம். அதன்பிறகு தேர்தல் கமிஷன் அறிவிக்கும் தேதியில் சட்டமேலவை தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
489
1/20/2011 5:15:35 PM
குற்றம்
கம்யூ. பிரமுகர் வெட்டிக் கொலை கடைகள் எரிப்பு; பஸ்கள் உடைப்பு
நன்னிலம்: திருவாரூர் அருகே கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஓட்டல், கடைகள் எரிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளத்தை சேர்ந்தவர் நாவலன் (54). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளராக இருந்தார். நேற்றிரவு 8 மணிக்கு பைக்கில் நாகை சென்று விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். பைக்கை ராஜா (25) என்பவர் ஓட்டினார். திருநள்ளாறு ரோட்டில் மாங்குடி அருகே 2 பைக்குகளில் வந்த சிலர், நாவலனை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொன்றனர். தணீடுக்க முயன்ற ராஜாவுக்கும் தலையில் வெட்டு விழுந்தது. அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுபற்றிய தகவல் பரவியதும் பேரளத்தில் பதற்றம் ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினரும், விவசாய தொழிலாளர் சங்கத்தினரும் திரண்டனர். அந்த வழியாக வந்த பஸ்களை அடித்து நொறுக்கினர். 2 பெட்டிக்கடைகள், ஒரு ஓட்டலை தீவைத்து எரித்தனர். இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருச்சி மத்திய மண்டல ஐஜி கரன் சின்கா, தஞ்சை டிஐஜி திருஞானம் ஆகியோர் இரவோடு இரவாக பேரளம் வந்து முகாமிட்டு உள்ளனர். அங்கு ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். பழிக்குபழியா: பேரளம் அருகே தண்டந்தோப்பு என்ற இடத்தில் 2 மாதங்களுக்கு முன்பு இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் திமுக செயலாளர் பன்னீர்செல்வத்தின் வீடு, கார், டிராக்டர் தீவைத்து எரிக்கப்பட்டது. அப்போது வைக்கோல்போருக்குள் பதுங்கிய விஜயகுமார் என்பவர் எரித்துக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக நாவலன் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
490
1/20/2011 5:17:12 PM
உலகம்
அழுக்கு துணி சண்டைதான் டைவர்ஸ் வரை போகிறதாம்
லண்டன்: கணவன் - மனைவி எதற்காக அதிகம் சண்டை போடுகிறார்கள்? இந்த தலைப்பில் இங்கிலாந்தில் ஒரு சர்வே நடந்தது. பாத்ரூம்  சாதனங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 3 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் தெரியவந்த தகவல்கள்: சராசரியாக ஆண்டில் 50 நாட்கள் மட்டுமே கணவனும் மனைவியும் சமாதானமாக இருக்கின்றனர். 312 நாட்கள் வாக்குவாதம், சண் டையுடனேயே நகர்கிறது. துவட்டிக்கொண்ட ஈரத்துண்டை அப்படியே சோபாவில் வீசுவது, அழுக்குத் துணியை நடுவீட்டில் போடு வது, டிவி சேனலை அடிக்கடி மாற்றுவது, விளக்குகளை வீணாக எரியவிடுவது ஆகியவைதான் சண்டைக்கான பிரதான காரணங்கள்.பெண்கள் செய்யும் தவறுகளை ஆண்கள் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. பெண்கள் அப்படியல்ல. ஆண்கள் சிறு தவறு செய்தாலும் கோபப்படுகிறார்கள். வாக்குவாதம் செய்கிறார்கள். இதுபோன்ற சிறிய பிரச்னைகள் 20 சதவீதம் பேருக்கு விவாகரத்து வரை  போய்விடுகிறது. வாரத்தின் துவக்கமும் வாரத்தின் இறுதியும் ஓரளவு சுமுகமாக இருக்கிறது. பெரும்பாலும் வியாழக்கிழமை சாயந்திர  வேளையில்தான் அதிக சண்டைகள் நடக்கின்றன. இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.
491
1/20/2011 5:18:09 PM
உலகம்
ஆன்ட்டிபயாடிக் ஆபத்து..........
நியூயார்க்: தலைவலி போன்ற மிகச்சிறிய வலிகளுக்குகூட அதிக அளவில் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொண்டால் நாளடைவில் ர த்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். டொரான்டோ மருந்தாராய்ச்சி நிறுவனம், ஜூர்லிங்க் என்பவர் தலைமையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் குறித்து ஆய்வு மேற் கொண்டு சில மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. தற்போதைய சூழல் மற்றும் நோயாளிகளின் தேவைக்கேற்ப பல மருந்துகள் தரம்  உயர்த்தப்பட வேண்டும் எனவும் இந்நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.ரத்த அழுத்தம், உடல் நலமின்மை போன்ற பல்வேறு பாதிப்பு களுக்கு தன்னிச்சையாக மருந்து எடுத்துக்கொள்பவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். டாக்டர் உதவியின்றி இத்தகைய மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டியது அவசியம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர் கள். உடலின் தேவையை அறியாமல், மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் எடுத்துக் கொள்ளும் அதிக சக்தி வாய்ந்த ஆன்டிபயா டிக் மருந்துகள் பல நேரங்களில் உயிரையே பறித்த சம்பவங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உடலுக்கு ஒத்துவராத ஆன் ட்டிபயாடிக் மருந்துகள் முதலில் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்துமாம். அதை கவனிக்காமல் விட்டுவிடும்போது உயிருக்கு ஆபத் தாகிவிடும். குறிப்பாக கால்சியம் சேனல் ப்ளாக்கர் மற்றும் மைக்ரோலைடஸ் குறைபாடு உள்ளவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை  மருத்துவரின் அறிவுறுத்தல் இன்றி எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்பது ஆராய்ச்சி மருத்துவர்களின் ஆணித்தரமான  அறிவுறுத்தல்.
492
1/20/2011 5:18:49 PM
குற்றம்
குளச்சலில் வெறிநாய் தொல்லை : 3 பேரை விரட்டி கடித்தது
குளச்சல்: குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வெறிநாய் தொல்லை அதிகமாக உள்ளது. நேற்று மாலை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அங்கு படுத்திருந்த நாய் ஒன்று அவரை விரட்டி விரட்டி கடித்தது. சிறிது நேரம் கழித்து  ஒரு மூதாட்டி வந்தார். அவரையும் வெறிநாய் கடித்தது. குளச்சல் அரசு மருத்துவமனைக்கு சென்ற பள்ளி மாணவி ஜெயப்பிரியாவையும் அந்த நாய் துரத்திச் சென்று கடித்தது. படுகாயமடைந்த 3 பேரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறிநாய் தொல்லையால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
493
1/20/2011 5:18:53 PM
உலகம்
பொடியனின் வீடியோகேம் ‘பபுள்பால்’ உலக சாதனை
சால்ட் லேக்: சாதனை படைக்க முயற்சி மற்றும் ஆர்வம் இருந்தால் போதும். எதையும் ஈஸியாக சாதிக்க முடியும் என்பதை ராபர்ட் நவ் என்ற 14  வயது சிறுவன் நிரூபித்துள்ளான். இவனது சாதனை உலகில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இவன் கண்டுபிடித்திருப்பது சிந்தனைத் திறனை தூண்டும் எளிதான வீடியோ கேம். இயற்பியல் சார்ந்த புதிர் விளையாட்டு வகையை  சேர்ந்த இதற்கு பபுள்பால் என்று பெயரிடப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் திரையில் தெரியும் பந்தை லாவகமாக நகர்த்துவதுதான் விளையாட்டு. ஆனாலும், நன்கு சிந்தித்து நகர்த்த வேண்டும் என்பதால் வயது வித்தியாசமின்றி ஏராளமானவர்கள் இந்த விளையாட்டால்  ஈர்க்கப்பட்டு வருகின்றனர். ஆப்பிள் ஐபோனில் இந்த வீடியோகேமை உலகம் முழுவதும் 20 லட்சம் பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். ஸ்மார்ட் போனில்  அதிகளவில் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கும் கேம் என்ற பெருமையையும் பபுள்பால் பெற்றுள்ளது. இலவசமாக டவுன்லோடு  செய்யும் சலுகையை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.
495
1/20/2011 5:19:49 PM
உலகம்
உலகக்கோப்பை கால்பந்து: ஆருடம் சொன்ன ஆக்டோபசுக்கு நினைவுச் சின்னம், உருவச்சிலை
பெர்லின்: உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின்போது வெற்றி, தோல்வியை துல்லியமாக கணித்துக் கூறிய ஆக்டோபஸ் பால், உலகப்  புகழ் பெற்றது. குறிப்பாக, இறுதிப் போட்டியில் ஜெர்மனி வெற்றி பெறும் என கூறியதால், இந்த ஆக்டோபஸை அந்நாட்டு மக்கள்  தெய்வமாக போற்றத் தொடங்கினர்.பாராட்டு மழையில் திக்குமுக்காடிய பால், திடீரென உயிரிழந்தது. அதன் மறைவு, ஜெர்மன் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.  பாலுக்கு மரியாதை செய்யும் வகையில் வெஸ்ட் ஜெர்மனியில் நினைவுச்சின்னம் மற்றும் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.  ஹ்யூஜ் மெமோரியல் என்ற இடத்தில் அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வந்தன. தற்போது இப்பணிகள் இறுதிக்கட்டத்தை  எட்டியுள்ளது. ‘பால் கார்னர்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம், விரைவில் திறக்கப்பட உள்ளது. அங்கு  ஆக்டோபஸ் பால் சிலையும் நிறுவப்பட உள்ளது. பிரம்மாண்டமான கால்பந்து மீது 1.80 மீட்டர் உயரத்தில் பால் சிலையும், அதன்  நடுவில் தங்க கலசத்தில் பாலின் சாம்பலும் வைக்கப்பட உள்ளது. ‘பால் கார்னரில்’ பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமாம்.
496
1/20/2011 5:19:54 PM
மாவட்ட மசாலா
ஜன. 27ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன், விழுப்புரத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: உரம் விலை தற்போது தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய பொருள்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.1,500 வழங்கக் கோரியும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கக் கோரியும் ஜன. 27ம் தேதி தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.
497
1/20/2011 5:20:29 PM
மாவட்ட மசாலா
மோட்டார் வாகன ஆய்வாளர் 59 பேர் விரைவில் நியமனம்
நெல்லை: தமிழகத்தில் 55 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதைத்தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமும் உள்ளது. இவற்றில் 60க்கும் மேற்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்போது பணியாற்றும் ஆய்வாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் வாகன சோதனை உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தது. இதனால் பணிச்சுமை ஏற்பட்டது. இது குறித்து அரசின் கவனத்துக்கு தெரியவந்ததால், இதற்கான தேர்வு பணி நடந்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 59 பேர் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
498
1/20/2011 5:20:51 PM
மாவட்ட மசாலா
தேசிய பேரிடர் மீட்பு படைக்கு அதிநவீன கருவிகள்
அரக்கோணம்: அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை 4வது பட்டாலியன் உள்ளது. இயற்கை சீற்றங்கள் மற்றும் இடர்பாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்காக இப்படை உருவாக்கப்பட்டது. நேற்று தேசிய பேரிடர் மீட்பு படை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அதிநவீன கருவிகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்த கண்காட்சி நடந்தது. துணை கமாண்டர் ஜோஸ் துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது: அரக்கோணத்தில் உள்ள 4வது பட்டாலியனில் 1149 வீரர்கள் உள்ளனர். ரப்பர், இயந்திர படகு, விக்டிம் லொகேஷன் கேமரா உள்ளிட்ட  கருவிகள்  உள்ளன.  மேலும், சுமார் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்கப்பட உள்ளன.
499
1/20/2011 5:21:17 PM
உலகம்
கிளப் டான்சருக்கு ரூ. 30 கோடி தருகிறார் இத்தாலி பிரதமர்?
ரோம்: மைனர் பெண்களுடன் விபசாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியிடம்(74) விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் மொராக்கோவைச் சேர்ந்த நைட்கிளப் டான்சர் கரிமா எல் மஹ்ரோ என்பவர், பெர்லுஸ்கோ னியிடம் ரூ.30 கோடி பணம் கேட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. கரிமா தனது பாய்பிரெண்ட் பாய்னா என்பவருடன்  போனில்  பேசிய டேப், விசாரணை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது. அதில் பேசிய கரிமா, 'பெர்லுஸ்கோனி என்னிடம் உறவு வைத்திருந்தாரா  என விசாரணை அதிகாரிகள் கேட்டனர். நான் எல்லாவற்றையும் மறுத்து விட்டேன். நான் பெர்லுஸ்கோனியை காப்பாற்ற விரும்புகி றேன். இதன் மூலம் எனக்கு நல்ல பணம் கிடைக்கும்' என்றார். மறுமுனையில் பேசும் பாய்பிரண்ட்,'எவ்வளவு கிடைக்கும்?' என்கி றார். அதற்கு கரிமா, 'ரூ.30 கோடி'என்கிறார்.  மற்றொரு டேப்பில், 'பெர்லுஸ்கோனி அடிக்கடி என்னுடன் பேசுகிறார். எதையாவது  பேசி குழப்பிக் கொண்டே இருக்கும்படி கூறினார். எவ்வளவு பணம் கேட்டாலும் தருவதாக கூறுகிறார். எதையும் சொல்லாமல் எல் லாவற்றையும் மறைத்தால் தங்கத்தை அள்ளித் தருவதாக கூறியுள்ளார்' என கரிமா கூறியுள்ளார். எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்துள்ள பெர்லுஸ்கோனி, 'செக்சுக்காக நான் எப்போதும் பணம் கொடுத்ததில்லை.  மனைவியை விவகாரத்து செய்தபின் எனக்கு நிலையான கேர்ள் பிரெண்ட் இருக்கிறார். நான் மற்றவர்களுடன் பணம் கொடுத்து  உறவு கொண்டேன் என கூறுவது அபத்தம்' என கூறியுள்ளார்.
500
1/20/2011 5:22:05 PM
உலகம்
ஆப்கன் குண்டு வெடிப்பில் 13 அப்பாவி மக்கள் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் ரோந்து செல்லும் நேட்டோ படையினர் மற்றும் போலீசாரை பழிவாங்குவதற்காக, தலிபான் தீவிரவாதி கள் ரோட்டில் வெடிகுண்டுகளை மறைத்து வைக்கின்றனர். இதில் அப்பாவி மக்களின் வாகனங்கள் சிக்கும் சம்பவம் அடிக்கடி  நடக்கிறது. கோசமத் மாவட்டம், பக்திகா பகுதியில் தீவிரவாதிகள் ரோட்டோரத்தில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு மீது, பொது மக்கள் சென்ற ஆட்டோ மோதியது. அப்போது குண்டு வெடித்து சிதறியதில் 13 பேர் பலியாயினர். தீவிரவாதிகள்&நேட்டோ படையி னர் இடையே நடைபெறும் மோதலில் சிக்கி கடந்த ஆண்டு 2,412 அப்பாவி மக்கள் பலியாயினர் என ஐ.நா புள்ளிவிவரம் தெரி விக்கிறது. இது கடந்த 2009ம் ஆண்டை விட 25 சதவீதம் அதிகம். ஜாபுல் பகுதியில் நேற்று நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில்,  போலீசாரின் வாகனம் சிக்கி 5 வீரர்கள் பலியாயினர்.
501
1/20/2011 5:23:00 PM
தமிழகம்
வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் மக்களை துணிவாக சந்திக்கிறோம் : துணை முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கரூர்: வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதால் திமுக மக்களை துணிவோடு சந்திக்கிறது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் நேரு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தமிழகம் முழுவதும் மக்கள் ஆதரவை பார்க்கும்போது எந்த ஒரு தீய சக்தியாலும் திமுகவை தொட்டுப் பார்க்கக்கூட முடியாது. எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்களை துணிவோடு சந்திக்கும் இயக்கம் திமுக மட்டும்தான். சிலர் நம்மை குற்றம்சாட்டுகிறார்கள். அவர்களால் பொதுக்கூட்ட மேடையில்கூட ஒழுங்காக நின்று  பேசமுடியாமல் திணறுகின்றனர்.திமுக ஆட்சியில் விவசாய கடன் ரூ.7 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் லட்சக்கணக்கில் பயனடைந்தது அதிமுகவினர்தான். ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டத்தில் தற்போது ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை நிறுத்திவிடுவார். மக்கள் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற திமுக ஆட்சி தொடர வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளை, நலத்திட்டங்களை கண்டு பொறுக்க முடியாதவர்கள், மக்கள் ஆதரவை கண்டு சகிக்க முடியாமல் சதி செய்து புதிது புதிதாக பிரச்னைகளை கிளப்புகிறார்கள். மத்திய அமைச்சர் கபில்சிபல் தெளிவான விளக்கம் அளித்துவிட்டார். பாஜ ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட அதே ஏல முறையை கடைப்பிடித்ததால்தான் 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது.டீசல் விலை உயர்வு, உதிரி பாகம் விலை உயர்வு இருந்தபோதும்கூட தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. இதை தணிக்கை செய்யும் அதிகாரி, பஸ் கட்டணத்தை உயர்த்தாததால் அரசுக்கு இழப்பு என்று கூட சொல்லலாம். மக்களுக்கு பயன் கிடைக்க வேண்டும். எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் அதைப்பற்றி கவலையில்லை. ஒரு கிலோ அரிசியை ரூ.15.50க்கு வாங்கி ரேஷனில் ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறோம். இதற்கு அரசு வழங்கிய மானியம் 2010ல் ரூ.2,224 கோடி. கலைஞர் வீடு வழங்கும் திட்டம், கலைஞர் காப்பீடு திட்டம் போன்ற திட்டங்கள் பல ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. அதற்கு ஒதுக்கப்படும் நிதியை ஊழல் என்பதா? இதைத்தான் ஜெயலலிதா ஊழல் என்கிறார். இப்படிப்பட்டவர்களுக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நிதியாக ஸ்டாலினிடம் ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்கினர்.
502
1/20/2011 5:23:26 PM
உலகம்
சீனாவின் வளர்ச்சி உலகுக்கு நல்லது: ஒபாமா
வாஷிங்டன்: சீன அதிபர் ஹூ ஜின்டா அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு 21 குண்டுகள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு  கொடுத்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வர்த்த கத்தை அதிகரிக்கவும் தீவிரவாதத்தை ஒழிக்கவும் பாடுபடுவோம் என இரு நாட்டு தலைவர்களும் உறுதி கூறினர். பல விஷயங்கள்  குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பேட்டியளித்த ஒபாமா கூறியதாவது: பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் போன்றவை அமெரிக்கர்களுக்கு மிக முக்கியமானது. மனித உரிமை தொடர்பாக இரு நாடுகளிடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டது. ஆனால் இவை மற்ற முக்கிய விஷயங்களில் ஒத்துழைப்புன் செயல்பட தடையாக இ ருக்கவில்லை. சீனாவின் அமைதியான வளர்ச்சி உலகுக்கு நல்லது, அமெரிக்காவுக்கும் நல்லது. சீனாவின் வளர்ச்சி அந்நாட்டின்  ஏழ்மையை ஒழிக்கும், அமெரிக்காவுக்கு பொருளாதார வாய்ப்பை ஏற்படுத்தும். உலகளவில் பருவ நிலை மாற்றம், பேரழிவு ஆயுதங் களை ஒழிப்பது போன்ற விஷயங்களில் வளரும் சீனாவால் முக்கிய பங்காற்ற முடியும்.அமெரிக்க பொருட்கள் ஏற்றுமதியில் சீன மார்க்கெட் முக்கியமானது. தற்போது ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட வுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியிலும், சமூக வள ர்ச்சியிலும் அதிக மக்கள் தொகையுடன் முன்னேறும் நாடு சீனா. அத்தகைய சூழ்நிலைகளில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண் டும். இவ்வாறு ஒபாமா கூறினார்.
503
1/20/2011 5:29:34 PM
குற்றம்
செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாமனார், கணவர் கைது
ஆத்தூர்: தலைவாசல் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்த வழக்கில் அவரது கணவர், மாமனார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாமனாரின் செக்ஸ் டார்ச்சரே இந்த விபரீத முடிவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே புளியங்குறிச்சியை சேர்ந்தவர் கோவிந்தன். மகன் சீனிவாசன் (35). நெல் கதிரடிக்கும் இயந்திரம் வைத்துள்ளார். இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் தழுதாவூரை சேர்ந்த அம்பிகா (27) என்பவருக்கும் 8 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கிரிஜா (7), கிரி (5) என்ற குழந்தைகள் இருந்தனர். பொங்கல் பண்டிகைக்காக மாமனார் வீட்டுக்கு சீனிவாசன் குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று முன்தினம் எல்லாரும் ஊர் திரும்பினர். பின்னர், சீனிவாசன் வேலை விஷயமாக திருச்சி சென்றுவிட்டார். கோவிந்தன் பழ வியாபாரத்துக்கு சென்றுவிட்டார். மாலையில் வீடு திரும்பிய கோவிந்தன் வீட்டில் மருமகள், பேரக்குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தில் தேடியபோது, வீட்டருகே உள்ள கிணற்றில் கிரி சடலமாக மிதந்தது தெரிந்தது. ஆத்தூர் தீயணைப்பு படையினர் கிணற்றில் இறங்கி தேடினர். நீரில் மூழ்கியிருந்த அம்பிகா, கிரிஜா ஆகியோரின் சடலங்களும் மீட்கப்பட்டன. குடும்பத் தகராறில் இரு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு, அம்பிகா தற்கொலை செய்தது தெரியவந்தது.இதுகுறித்து அம்பிகாவின் தாய் கண்ணகி தலைவாசல் போலீசில் புகார் செய்தார். மாமனார் கோவிந்தனின் செக்ஸ் டார்ச்சர் காரணமாகத்தான் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் கூறியுள்ளார். இதே பிரச்னைக்காக ஏற்கனவே அம்பிகா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அப்போது காப்பாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்கு பதிவு செய்து அம்பிகாவின் கணவர் சீனிவாசன், மாமனார் கோவிந்தன் ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
504
1/20/2011 5:32:02 PM
தமிழகம்
சத்தியஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம்
நெய்வேலி: வடலூரில் தைப்பூச விழாவையொட்டி இன்று காலை 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்  காட்டப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் ராமலிங்க அடிகள் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு இறைவன் ஒளிவடிவம் ஆனவன் என்பதை உணர்த்தும் வகையில் ஜோதி தரிசனம் நடக்கிறது. தை மாத பூச நட்சத்திரத்தில் மட்டும் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். இந்த ஆண்டு 140&வது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.இன்று காலை ஜோதி தரிசன நிகழ்ச்சி நடந்தது. காலை  6 மணி, 10 மணி, மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். இரவு 7 மணிக்கும் நாளை அதிகாலை 6 மணிக்கும் ஜோதி தரிசனம் காட்டப்படும். விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சீத்தாராமன், எஸ்பி அஷ்வின் கோட்னீஸ் உள்பட பலர் பங்கேற்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடலூரில் குவிந்திருந்தனர். அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
505
1/20/2011 5:35:14 PM
தமிழகம்
வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல்
வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த தமிழ்ச்செல்வன், பாரதி, கார்த்திகேயன், அண்ணாத்துரை ஆகியோருக்கு சொந்தமான படகுகள் உள்பட 10 படகுகள் நேற்று முன்தினம் இரவு சேதுசமுத்திர திட்ட பணிகள் நடைபெறும் இடத்துக்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தன. அப்போது 2 விசைப்படகுகளில் அங்கு வந்த இலங்கை ராணுவத்தினர், கார்த்திகேயனுக்கு சொந்தமான ரூ.2 லட்சம் மதிப்புடைய வலையை அறுத்தனர். மேலும் படகுகளில் இருந்தவர்களை பீர் பாட்டில்களை வீசி தாக்கி விரட்டினர். இதையடுத்து 10 படகுகளில் இருந்த மீனவர்களும் புறப்பட்டு நேற்று கரை திரும்பினர். இதுகுறித்து நாகை மீன்வளத்துறை உதவி இயக்குனர் விவேகானந்தன், வேதாரண்யம் மீன்துறை ஆய்வாளர் சவுந்தரராஜன் ஆகியோருக்கு கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.
507
1/20/2011 5:40:58 PM
தமிழகம்
பட்டாபிராம் வங்கியில் நூதன மோசடி 500க்கு ஆசைப்பட்டு 13 ஆயிரம் இழந்த பெண்
ஆவடி: பட்டாபிராம் அண்ணாநகரில் உள்ள விவேகானந்தா அவென்யூவில் வசிப்பவர் கண்ணன். இவரது மனைவி காமாட்சி (32). பூ விற்பனை செய்கிறார். பட்டாபிராம் சிடிஎச் சாலையில் உள்ள வங்கிக்கு நேற்று காலை காமாட்சி வந்தார். தனது அக்கவுன்ட்டில் 13 ஆயிரம் ரூபாய் கட்டுவதற்கு வரிசையில் நின்றார். அப்போது டிப்டாப் உடையில் இருந்த ஒருவர், Ôநான் வங்கி ஊழியர்Õ என்று காமாட்சியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின் அந்த நபர், ‘‘எங்கள் பேங்க்கில் அக்கவுன்ட் வச்சிருக்கிறவங¢களுக்கு நியூ இயர் பரிசா 500 ரூபாய் கொடுக்கிறோம். நீங்க வாங்கிட்டீங்களா?ÕÕ என கேட்டிருக்கிறார். ‘ஐயோ அப்படியா தெரியாதேÕ என்று காமாட்சி சொல்லி இருக்கிறார். இதையடுத்து அந்த நபர், ஒரு விண்ணப்பத்தை எடுத்துக் கொடுத்து ÔÔஇதுல உங்க பெயர், ஊர் விவரங்களை எழுதி கொடுங்கÕÕ என்றார். காமாட்சி எழுதி முடித்ததும், ÔÔரெவின்யூ ஸ்டாம்ப் அவசியம். அதை வாங்கிவிட்டு வாங்க. அதுவரை நான் பணத்தை வச்சிக்கிறேன்ÕÕ என கூறியிருக்கிறார். அந்த நபரை முழுமையாக நம்பிய காமாட்சி, ரூ. 13 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்க பறந்தார். சிறிது நேரத்தில் ஸ்டாம்ப் வாங்கிக்கொண்டு வங்கிக்கு வந்த காமாட்சிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அந்த நபர் இல்லாததால் திடுக்கிட்டார். பதற்றத்துடன் எல்லோரிடமும் விசாரித்தார். யாருக்கும் அந்த நபரை தெரியவில்லை. அவர் வங்கி ஊழியர் இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந¢தார் காமாட்சி. ÔÔஐயோ ஏமாத்திட்டானேÕÕ என்று கதறி அழுதார். இதனால் வங்கியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பட்டாபிராம் போலீசில் காமாட்சி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வங்கி கேமராவில் பதிவான அந்த நபரை காமாட்சி அடையாளம் காட்டியுள்ளார். இதை வைத்து, நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
508
1/20/2011 5:42:05 PM
தமிழகம்
பஸ் வசதி இல்லாமல் கிராம மக்கள் அவதி
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பகுதியில் பஸ் வசதி இல்லாமல்  கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்கள் கூடுதல் பஸ் விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றத்தில் இருந்து எச்சூர் வழியாக மாமல்லபுரம், வாயலூர்  வழியாக புதுப்பட்டினம், விட்டிலாபுரம் வழியாக புதுப்பட்டினம் செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. குறைந்த அளவு பஸ்களே இயக்கப்படுகின்றன. இந்த 3 வழித்தடத்திலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் வேலைக்கு செல்லவும், மாணவ மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும் திருக்கழுக்குன்றம் வந்து மற்ற இடங்களுக்கு செல்கின்றனர். இவர்கள் காலை, மாலையில் பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். வரும் ஒரு சில பஸ்களில் கூரையில் ஏறி அமர்ந்தும், படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும் செல்கிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த வழித்தடத்தில் ஏற்கனவே ஓடிக் கொண்டு இருக்கும் பஸ்களையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் குறைத்து விட்டதால் கிராம மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும், கூடுதலாக புதிய பஸ்கள் விடவேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
509
1/20/2011 5:44:40 PM
குற்றம்
பஸ்சில் வந்த லக்கேஜில் பெண் தலை, குழந்தை சடலம் : கொலை செய்யப்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்களா?
சங்கராபுரம்: அரசு பஸ்சில் வந்த லக்கேஜ் பையில் பெண்ணின் தலையும், குழந்தையின் சடலமும் கிடந்தது. கொலை செய்யப்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்களா என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று சேலம் வந்தது. அங்கு பயணிகளை இறக்கிவிட்டு நேற்று அதிகாலை சங்கராபுரம் பணிமனைக்கு வந்தது. பஸ்சை விட்டு இறங்கும் முன்பு டிரைவர் மொட்டையன், கண்டக்டர் கணேசன் இருவரும் பஸ்சில் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என சோதனை செய்தனர். லக்கேஜ் வைக்கும் இடத்தில் ஒரு ரெக்சின் பை இருந்ததை கண்டனர். அது கனமாக இருந்ததால் போக்குவரத்து பாதுகாவலர் தேவராஜிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விட்டனர்.பையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சங்கராபுரம் போலீசார் வந்து பையை திறந்து பார்த்தபோது, அதில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் தலையும் ஒன்றரை வயது பெண் குழந்தையின் சடலமும் இருந்தது. தலை மற்றும் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலை செய்யப்பட்டவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து எஸ்.பி. பகலவன் கூறுகையில், ‘‘பெண் தலையும், குழந்தை சடலத்தையும் லக்கேஜ் பையில் வைத்து பஸ்சில் அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொலையான பெண் மற்றும் குழந்தையை பார்க்கும்போது இருவரும் தாய், மகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சேலம் மற்றும் சென்னைக்கு விரைந்துள்ளனர். குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம்’’ என்றார்.
510
1/20/2011 5:46:40 PM
குற்றம்
போலீஸ் காரில் இருந்து தப்பி ஓடிய அதிமுக பிரமுகர் மகன் கைது
புழல்: செங்குன்றம் சுப்பிரமணிய பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஷேக்பாய் (28). செங்குன்றம் போலீஸ் பூத் அருகே, பிரியாணி கடை வைத்துள்ளார். நாரவாரிக்குப்பம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தாராசிங். செங்குன்றம் பகுதி ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர். இவரது மகன் தீபன் (21), தனியார் டிராவல்ஸ் கார் டிரைவர். ஷேக்பாயின் கடைக்கு தீபன் நேற்று முன்தினம் சென்று பிரியாணி சாப்பிட்டுள்ளார். காசு கேட்டதற்கு தர மறுத்துள்ளார். இதில் வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர், ஷேக்கை தாக்கியதாக கூறுப்படுகிறது. அவ்வழியாக ரோந்து வந்த போலீசார் தீபனை பிடித்து, விசாரித்தனர். வார இதழ் ஒன்றின் நிருபர் என போலி அடையாள அட்டையை தீபன் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸ் காரில் அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென போலீசாரைத் தள்ளிவிட்டு காரிலிருந்து கதவை திறந்து, கீழே குதித்தார். பின் அங்கிருந்து ஓடிவிட்டார். தலைமறைவான தீபனை போலீசார் தேடி வந்தனர். செங்குன்றம் பைபாஸ் சாலையோரம் மறைவான இடத்தில் பதுங்கி இருந்த தீபனை, செங்குன்றம் போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
512
1/20/2011 5:49:38 PM
தமிழகம்
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை
ஆவடி: அம்பத்தூர் நகராட்சிக் குட்பட்ட கொரட்டூர் பகுதியில் 4, 5, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய 8 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல இடங் களில் சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்கிறது. பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள் முடிந்த இடங்களில் சாலை சீரமைக்கப்படாமல் உள் ளது. ரயில்வே ஸ்டேஷன் சாலை, வடக்கு அவென்யூ சாலை, திருமுல்லைவாயல் சாலை உள்ளிட்ட இடங்கள் மோசமாக இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. கொரட்டூர் பஸ் நிலையத்தில் கூரை, குடிநீர், இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பல ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது. சென்னை, கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு போதுமான பஸ் வசதி இல்லை. அக்ரகாரம், சாவடி தெரு ஆகிய இடங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளன. இதனால் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதற்கு ஏழை மாணவர்கள் ஆவடி, வியாசர்பாடி, நுங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.காக்கைநகர் சுடு காட்டில் மின் விளக்கு, தண்ணீர் வசதி இல்லை. எரிமேடை பழுதடைந்துள்ளது. இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இந்த பகுதிகளுக்கு வாரத்துக்கு ஒரு முறையே பைப் மற்றும் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் சுகாதாரமானதாக இல்லை. 27வது வார்டில் அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டிடம் இல்லை. இதனால் பள்ளியில் சமைத்து வீடு, வீடாகச் சென்று குழந்தைகளுக்கு வழங்குகின்றனர். அங்கன்வாடி மைய ஊழியர் பணியிடமும் காலியாக உள்ளது. கொரட்டூர் ரயில் நிலையத்தில் கழிவறை, குடிநீர் வசதி இல்லை. குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கிக் கிடக் கிறது.  அக்ரகாரம் பகுதியில் சுகாதார நிலையம் இல்லை. இதனால் கர்ப்பிணிகள், பொதுமக்கள் ரயில்வே கேட்டைத் தாண்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள சுகாதார மையத்துக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்விளக்குகள் பல இடங்களில் எரி வதில்லை. கொரட்டூர் சி.டி.எச். சாலையில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால், மாணவ, மாணவிகள், பெண்கள் தொல்லைக்கு ஆளாகின்றனர்.
513
1/20/2011 5:50:55 PM
தமிழகம்
குண்டும் குழியுமாக மாறிய திருத்தணி சித்தூர் சாலை
திருத்தணி: திருத்தணி சித்தூர்சாலையில் முருகூர், அமிர்தாபுரம், குமாரகுப்பம், அகூர், நத்தம், கோரமங்கலம், தாடூர், வீரகநல்லூர், கேஜி கண்டிகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த சாலையில் தினமும் ஆயிரக¢கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கிராமங்களில் இருந்து திருத்தணிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மோசமாக சேதம் அடைந்துள்ளது. திருத்தணியை அடுத்த முருகூர் பகுதியில் அதிகமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே மாநில நெடுஞ்சாலையான திருத்தணி சித்தூர் சாலையை விரைவில்  சீரமைக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
514
1/20/2011 5:53:40 PM
தமிழகம்
ஈரோடு அருகே ரூ145 கோடியில் ஒருங்கிணைந்த ஜவுளி வர்த்தக வளாகம்
ஈரோடு: ஈரோடு அருகே கங்காபுரத்தில் ரூ145 கோடி மதிப்பீட்டில் டெக்ஸ்வெலி ஒருங்கிணைந்த ஜவுளி வர்த்தக வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகளை வரும் 22&ம் தேதி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார். ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வர்த்தக வளாகம் அமைக்க வேண்டும் என்பது ஜவுளி சார்ந்த தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. இவர்களின் கோரிக்கையை ஏற்று ஜவுளி சார்ந்த தொழிலதிபர்களின் பங்களிப்போடு மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஈரோடு விசைத்தறி பெருங்குழும வளர்ச்சி திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வர்த்தக வளாகம் மற்றும் கண்காட்சி கூடம் அமைக்க ஜவுளித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு அருகே கங்காபுரம் பகுதியில் டெக்ஸ்வெலி ஒருங்கிணைந்த ஜவுளி வர்த்தக வளாகம் ரூ145 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. சிறு, நடுத்தர மற்றும் மொத்த வியாபாரத்துக்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி பொருட்களை விற்பனை செய்யும் வகையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த வளாகத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் 22&ம் தேதி காலை 11 மணிக்கு கங்காபுரத்தில் நடக்கிறது. விழாவுக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்திசெல்வன் தலைமை தாங்குகிறார். கலெக்டர் சவுண்டையா வரவேற்புரை யாற்றுகிறார். மத்திய ஜவுளி அமைச்சக செயலர் ரீட்டாமேனன் திட்ட விளக்கவுரையாற்றுகிறார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், ஜவுளி வர்த்தக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார். விழாவில் ஜவுளி அமைச்சக இணைச் செயலர் சுஜித் குலாட்டி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை முதன்மை செயலர் ராஜகோபால், தமிழக அமைச்சர்கள் சாமிநாதன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். முடிவில் ஈரோடு டெக்ஸ்டைல் மால் லிமிடெட் துணை தலைவர் தேவராஜன் நன்றி கூறுகிறார்.
515
1/20/2011 5:58:33 PM
தொழில்
கிரிஸ்டல் கொலுசு.. கொட்டுது காசு
தரமான வெள்ளிக்கொலுசு வாங்க குறைந்தது ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது. மார்டன் பெண்களுக்கு பாரம்பரிய வெள்ளி கொலுசுகளில் மனம் அவ்வளவாய் லயிப்பதில்லை. குறைந்த விலையில், புதுப்புது டிசைன்களில், கலர்கலராய்  கொலுசுகள் கிடைத்தால் சும்மா விடுவார்களா? வாங்கி குவித்து விடுவார்கள். விலை குறைவாக, அதே நேரத்தில் டிரஸ்சுக்கு மேட்ச்சாக கலர்கலராய் கிடைப்பதால் கிரிஸ்டல் கொலுசுகளுக்கு இளம்பெண்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருக்கிறது.   கிரிஸ்டல் கற்களால் அலங்கரித்து, ரூ.400 விலையில் வெள்ளிக்கொலுசு தயாரித்து அசத்துகிறார், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சாந்தி. பிருந்தா ஜுவல் ஒர்க்ஸ் மற்றும் மெருகுக்கடை நடத்தி வரும் அவர் கூறியதாவது:நகைத்தொழில் செய்து வரும் பாரம்பரிய நடுத்தர குடும்பம் எங்களுடையது. பெரிய நிறுவன நகைக்கடைகளால், குடிசைத் தொழிலாக இருந்து வந்த நகைத்தொழில் நலிந்ததால் எங்கள் குடும்பத்தில் வறுமை தலை தூக்கியது. இதனால் கணவர் நகைக்கடை வேலைக்கு சென்றார். நான் நகைகளுக்கு பாலிஷ் போடுவது, கொலுசு தயாரிப்பது போன்றவற்றை கற்றுக்கொண்டேன். அதுதான் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.வெள்ளி விலை உயர்ந்து கொண்டே செல்வதால், கொலுசு எடை, தரத்தை குறைக்காமல் குறைந்த விலையில் கொலுசு விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன்.கொலுசு விலையைக் குறைக்க அதில் சேர்க்கப்படும் வெள்ளியைக் குறைக்க வேண்டும். சராசரியாக 20 கிராமுக்கு குறையாமல் வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் நிலையில் அதை 2 கிராம், 3 கிராம் வெள்ளியில் சரம், சரமாக பல வண்ணங்களில் டிசைன்களில் கிரிஸ்டல் கற்களை இணைத்து தயாரித்தேன். நான் தயாரித்த கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை பள்ளி, கல்லூரி மாணவிகள் விரும்பி வாங்கினர்.  ¢400க்கு கிடைப்பதால் பலரும் வாங்கிச் செல்கிறார்கள். இதன் மூலம் கிடைத்த லாபத்தில் எனது குடும்பமே தலைநிமிர்ந்து நிற்கிறது. தொழிலை விரிவுபடுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேசக்கரங்கள் தன்னார்வ நிறுவன வழிகாட்டுதலின் பேரில் பிருந்தாவனம் மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கி தலைவியானேன். இத்தொழிலே தெரியாத பெண்களுக்கு கிரிஸ்டல் கொலுசு தயாரிப்பதை ஒரு வாரத்தில் கற்றுக் கொடுத்தேன். இன்று குழுவாக சேர்ந்து கிரிஸ்டல் கொலுசு தயாரித்து லாபம் பார்க்கிறோம்.முதலீடும் லாபமும்ஒரு கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிக்க 3 கிராம் வெள்ளி ரூ.150, 20 கிரிஸ்டல் கற்களுக்கு ரூ.100, உருக்க, கம்பியாக்க, கப் செய்ய கூலி ரூ.20, செய்கூலி ரூ.50 என அதிகபட்சமாக ரூ.320 ஆகும். இதை கிரிஸ்டல் கற்களின் விலைக்கேற்ப ரூ.300க்குள்ளும் தயாரிக்க முடியும். ரூ.400க்கு குறையாமல் விலை போகும். ஒரு கொலுசுக்கு லாபமாக ரூ.100 நிச்சயம். ஒருவர் ஒரு நாளைக்கு 5 கொலுசுக்கு குறையாமல் தயாரிக்க முடியும். மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி பெண்களை நேரடி வாடிக்கையாளர்களாகக் கொண்டால் குழுவாகச் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.  பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை கண்காட்சியாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.  இது தவிர குறைந்த லாபத்தில் நகைக் கடைகளில் மொத்தமாக விற்கலாம்.கற்றுக் கொள்வது எப்படி ?மாவட்ட நிர்வாகத்தின் மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழிகாட்டும் தொண்டு நிறுவனங்கள், இத்தொழிலை மேற்கொண்டுள்ள குழுக்கள், குடிசைத்தொழிலாக செய்து வரும் நகைத்தொழிலாளர்களை அணுகினால், ஒரு வாரத்தில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிப்பதை கற்றுக் கொள்ளலாம்.தங்க முலாம் பூச்சுவீட்டில் 5க்கு 5 அடி இடம் இருந்தால் போதும். சின்ன நகைப்பட்டறை போல் வீட்டளவில் ஒரு மண் தொட்டி, அதில் உமி, கரித்துண்டுகள் போட்டு, நெருப்பு ஊதி, சின்ன மண் செப்புகளில் தங்கத்தை வெள்ளியை உருக்க வேண்டும். பேசினில் 3 டம்ளர் தண்ணீரில் பொட்டாசியம் சயனைடு, அவல் அரக்கு, ரோசனம் ஆகியவற்றை தலா 5 கிராம் கலந்து, அதில் உருக்கிய தங்கம் அல்லது வெள்ளியை ஊற்றி, அதில் முலாம் பூச வேண்டிய ஆபரணத்திற்கு தங்கம், வெள்ளி கோட்டிங் அளவை சேர்க்க, ரேடியேட்டர் மீட்டர் மூலம் இணைத்து பழைய கவரிங், தங்க, வெள்ளி நகைகளுக்கு முலாம் பூசலாம். ஒரு மக்கில் வைக்கப்பட்டுள்ள காஸ்டிக் சோடாவில் ஆபரணத்தை முக்கி எடுத்தால் புதிது போல ஆகிவிடும். ஒரு பேசின், குட்டி கம்ப்ரசர் மோட்டார் வைத்து சுழலும் பிரஷ்சில் நகையைக் கழுவினாலும் புதுசாகும். இதை பாலிஷ் போடுவது, மெருகு போடுவது என்பார்கள். தங்க முலாம் பூசுவது, மெருகு போடுவது கூடுதல் வருமானம் தரும்.தயாரிக்கும் முறைவெள்ளியை வாங்கி, அதன் திடத்தன்மைக்கு செம்பு சேர்த்து உருக்க வேண்டும். உருக்கி கொடுக்கவும், அதை மெல்லிய கம்பியாக்கவும், கிரிஸ்டலில் பொருத்தக்கூடிய சின்ன கப்களை தயாரிக்கவும் ஜாப் ஒர்க் கடைகள் உள்ளன. அங்கு செய்து வாங்கிக் கொள்ளலாம். நூலில் பாசி கோர்ப்பதுபோல், வெள்ளிக் கம்பியில் கிரிஸ்டல் கற்கள் கோர்ப்பதுதான் கிரிஸ்டல் வெள்ளிக்கொலுசின் பார்முலா. கிரிஸ்டல் கற்களை துளை போட்டு, அதன் வழியாக வெள்ளிக் கம்பியை நுழைத்து, கிரிஸ்டல் கற்களின் இருபுறமும் குடையைப் போன்ற சிறு கப்களை ஒட்டவைத்து, குடை வழியாக வெளிவரும் கம்பியை வளையமாக்கி, அந்த வளையத்துக்குள் மற்றொரு வளையத்தைப் பொருத்த வேண்டும். கப், கிரிஸ்டல் என்று தொடர்ந்து சரமாக்குவது தான் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு. இதைச் செய்ய நகைத்தொழில் தெரிய வேண்டியதில்லை. சிறிய ‘சவனம்Õ (கட்டிங் பிளேயர்), இருந்தால் போதும். கைவேலையில் கொலுசு தயாராகி விடும். நகைக்கடைகளில் அன்றைய விலை நிலவரப்படி வெள்ளியை வாங்கலாம். கிரிஸ்டல் கற்கள் நகைத்தொழிலுக்குரிய பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.டிரஸ்சுக்கு மேட்ச்சா கொலுசுகிரிஸ்டல் கொலுசுகள் கலர்கலராய் கிடைப்பதால், உடுத்தும் சுடிதார், சேலையின் நிறத்திற்கு மேட்சிங்காக அணிய முடியும். கருக்காத வெள்ளியில் பளீரென மின்னும் வண்ண கிரிஸ்டல் கற்கள் கொலுசுக்கு அழகையும், காலுக்கு கவர்ச்சியையும் கொடுக்கிறது. விலையும் குறைவு. பேஷனாக உள்ளதால் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. சில பெண்கள் இதை கையில் பிரேஸ்லெட்டாக கட்டி புது பேஷனை உருவாக்கி வருகிறார்கள்.
516
1/20/2011 6:00:05 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
ஊழல் புகாரில் சிக்கிய உ.பி. அமைச்சர் டிஸ்மிஸ்
லக்னோ: உ.பி. மாநிலம் அவுரய்யா தொகுதி பகுஜன் சமாஜ் எம்எல்ஏ அசோக்குமார் டோரே, மாநில அமைச்சரவையில் நில வளம் மற்றும் நீர் வள அமைச்சராக இருந்தார். கேபினட் அந்தஸ்தில் உள்ள இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து அவரை அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்து மாநில முதல்வர் மாயாவதி நேற்று உத்தரவிட்டார். உடனடியாக அவரது ராஜினாமா கடிதம் மாநில ஆளுநர் பி.எல்.ஜோஷிக்கு அனுப்பப்பட்டது. முதல்வரின் பரிந்துரையை ஏற்று அமைச்சரின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுவதாக கவர்னர் அலுவலகம் அறிவித்தது. கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்தும் டோரே நீக்கப்படுவதாக மாயாவதி அறிவித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கி மந்திரி பதவியை இழக்கும் இரண்டாவது உ.பி. அமைச்சர் இவர். கடந்த டிசம்பர் 25ம் தேதி ராஜேஷ் திவாரி என்ற அமைச்சர் லோக் அயுக்தா விசாரணையில் சிக்கிய காரணத்துக்காக பதவியிழந்தது குறிப்பிடத்தக்கது.
517
1/20/2011 6:00:27 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
விலைவாசி பிரச்னை சோனியாவுக்கு சம்மன்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த 3 வக்கீல்கள் விலைவாசியைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உள்ளூர் சிவில் கோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளனர். தங்களது மனுவில், விலைவாசி உயர்வு காரணமாக குடிசை பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் வெறும் கஞ்சியை மட்டும் குடித்து உயிர்வாழ்வதாகவும், விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறிய மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சிவில் ஜட்ஜ் அன்சுல் பெரி, ஏப்ரல் 7ம் தேதிக்குள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
518
1/20/2011 6:00:52 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
சாலையில் குடியிருப்போரை இரவில் கணக்கெடுக்க முடிவு
மும்பை: இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டம் கடந்த மே 1ம் தேதி தொடங்கி ஜூன் 15 வரை நடைபெற்றது. இதன் அடுத்த கட்டம் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கப்படுகிறது. பெரிய நகரங்களில் சாலையோரம் வசிப்பவர்கள் பற்றிய விவரங்களை சேகரிப்பது மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. சாலையோரங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு திரும்புவர். இதனால் இரவு நேரங்களில் இந்தப் பணியை நடத்த மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 28ம் தேதி இரவு சாலையோர மக்கள் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 600 மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் மணிஷா மாஷிகர் தெரிவித்துள்ளார்.
519
1/20/2011 6:04:47 PM
விளையாட்டு
பயஸ் ஜோடி கலக்கல் வெற்றி : ஜெலினா ஜன்கோவிக் அதிர்ச்சி தோல்வி
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கர்லா நவோராவை எதிர்த்து ஆடிய பெல்ஜியத்தின் கிம்கிலிஸ்டர்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். 7ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் ஜெலினா ஜன்கோவிக் 6-7, 3-6 என்ற நேர்செட்டில் சீனாவின் ஷாய்பெங்கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.  ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ரோகன் போபன்னா(இந்தியா) குரேஷி(பாகிஸ்தான்) ஜோடி பிரேசிலின் பெரிரோ- ஆன்ட்ரே ஷா ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபன்னா ஜோடி 6-3, 6-0 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது. இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ்பூபதி ஜோடி 5-7, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கார்லோவிக்(குரோசியா)- டுசன்விமிக்(செர்பியா) ஜோடியை வீழ்த்தியது.
520
1/20/2011 6:10:28 PM
விளையாட்டு
நாளை 4வது ஒருநாள் போட்டி : தொடரை வென்று சாதிக்குமா டோனி அன்கோ
போர்ட்எலிசபெத்: இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா 2 ஆட்டத்திலும் தென் ஆப்ரிக்கா ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 4வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நாளை மாலை 6 மணிக்கு  நடைபெறுகிறது. 21 என முன்னிலை பெற்றுள்ளதால் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை வெல்லும் நிலையில் இந்திய அணி உள்ளது. இதற்கான உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் செயல்படுவார்கள். துவக்க பேட்டிங் தொடர்ந்து சொதப்பலாகவே இருந்து வருகிறது. முரளி விஜய்க்கு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அவரால் அதனை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு பதில் பார்த்திவ் படேல் களமிறங்க வாய்ப்புள்ளது. ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் தற்போது தான் துவக்க வீரராக ஆடி வருகிறார். இதனால் அவருக்கு கூடுதல் நெருக்கடி தான் ஏற்பட்டுள்ளது. யுவராஜ்சிங் அதிரடி என்ன ஆனது என்பது தெரியவில்லை. வேகப்பந்து வீச்சு ஆடுகளங்களில் அவர் ரன் எடுக்கவே திணறி வருகிறார். உலககோப்பை நெருங்கி வரும் வேளையில் தனது திறமையை காட்ட வேண்டிய இக்கட்டான நிலையில் அவர் உள்ளார். டோனி, ஹோக்லி ஆகியோரும் எதிர்பார்த்த அளவிற்கு இந்த தொடரில் ஜொலிக்கவில்லை. ஹோக்லியாவது ஒரு ஆட்டத்தில் அரைசதம் கடந்தார். ஆனால் டோனி மோசமான ஆட்டத்தையே வெளிபடுத்தி வருகிறார். ரெய்னாவின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டுள்ளதால் அவரால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. எனினும் சராசரியாக 30 ரன்களாவது எடுக்கிறார். யூசுப்பதான் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.  பந்துவீச்சு இந்த தொடரில் அபாரமாக உள்ளது. ஜாகீர்கான், முனாப்பட்டேல் எதிரணியின் ரன்குவிப்பு வேகத்தை அருமையாக கட்டுப்படுத்துகின்றனர். மேலும் ஹர்பஜனின் சுழல்ஜாலம் நெருக்கடி கொடுக்கும் வகையில் உள்ளது. அவர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டுவது கூடுதல் பலமாக உள்ளது. நாளைய ஆட்டத்தில் முன்னணி பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடி வெற்றிக்கு வழி வகுத்தால் தென் ஆப்ரிக்க மண்ணில் முதன் முறையாக தொடரை வென்று சாதிக்கலாம். தென் ஆப்ரிக்க அணி, கடந்த சில ஆண்டுகளாகவே தனது சொந்த மண்ணில் தொடரை பறிகொடுக்கவில்லை என்ற பெருமையுடன் உள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் அந்த அணி கூடுதல் கவனத்துடன் ஆடும். தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்கான வியூகங்களை மாற்றி அமைப்பார்கள். மொத்தத்தில் ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.
521
1/20/2011 6:13:23 PM
இந்தியா
மூத்த அமைச்சர்களுக்கு மறைமுக எச்சரிக்கை : டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு
புதுடெல்லி: ‘பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மூத்த அமைச்சர்களுக்கு விடப்பட்டுள்ள மறைமுகமான எச்சரிக்கை’ என்ற தகவலால், டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற 21 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. ‘சிறிய மாற்றம்’ என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் 28 அமைச்சர்களின் 37 இலாகாக்கள் அதிரடியாக மாற்றப்பட்டன. தேசியவாத காங்கிரசை சேர்ந்த பிரபுல் பட்டேல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சல்மான் குர்ஷித் மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். புதிதாக 3 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மத்திய அமைச்சரவை எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. இதில் 35 பேர் கேபினட் அமைச்சர்கள். 6 பேர் தனி பொறுப்பு இணை அமைச்சர்கள். 40 பேர் இணை அமைச்சர்கள் ஆவர்.அமைச்சரவை மாற்றம் ஒரு சில மூத்த அமைச்சர்களுக்கு விடப்பட்ட மறைமுக எச்சரிக்கை என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா தற்போது கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவரிடமிருந்து பெட்ரோலியத்துறை பறிக்கப்பட்டது. ராடியா டேப் விவகாரத்தில் கமல்நாத் பெயர் அடிபட்டதன் காரணமாகவே அவரிடமிருந்து சாலை போக்குவரத்து பறிக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த சி.பி.ஜோஷி மீது கட்சிக்காரர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி நிலவியது. இதன் காரணமாகவே அவரது இலாகா மாற்றப்பட்டது. அதே சமயம் ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் புகாரில் சிக்கிய விலாசராவ் தேஷ்முக், காமன் வெல்த் போட்டி ஏற்பாட்டில் அதிருப்தியை சம்பாதித்த ஜெய்பால் ரெட்டி ஆகியோருக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்து. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
522
1/20/2011 6:15:15 PM
இந்தியா
பெட்ரோல் விலை உயர்வது பதற்றத்தை ஏற்படுத்துகிறது
புதுடெல்லி: 'பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வது எனக்கு பதற்றமாக இருக்கிறது' என பெட்ரோலியத் துறைக்கு பொறுப்பேற்கவுள்ள மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார். மத்திய அமைச்சரவை மாற்றத்தில், பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. பெட்ரோலியத்துறை, முரளி தியோராவிடம் இருந்து ஜெய்பால் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.2.54 வரை உயர்த்தின. ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. இது குறித்து இத்துறைக்கு பொறுப்பேற்கவுள்ள ஜெய்பால் ரெட்டி கூறியதாவது:பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் நான் அத்துறைக்கு பொறுப்பேற்பது பதற்றமாக உள்ளது. எண்ணெய் கம்பெனிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திப்பதையும் அனுமதிக்க முடியாது. எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண வேறு வழியை ஆராய வேண்டும். மானியங்கள் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குவது, அல்லது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வரியை குறைப்பது போன்றவற்றின் மூலம் பெட்ரோல் விலை குறைப்பது பற்றி எனது அமைச்சரவை பரிசீலிக்கும். இவ்வாறு ஜெய்பால் ரெட்டி கூறினார்.
523
1/20/2011 6:17:53 PM
தமிழகம்
பிறந்த நாள் பரிசு வழக்கில் விடுவிக்க கோரி ஜெ. மனு விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு
சென்னை: பிறந்த நாள் பரிசு வழக்கில் தன்னை விடுவிக்க கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனு, சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1992ல் அவருக்கு பிறந்த நாள் பரிசாக ரூ.2 கோடி வந்தது. இதுதொடர்பாக, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் பரிசு பணத்துக்கு ஏற்பாடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன் நகல்கள் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. ஆனால், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டிய நிலையில், ஜெயலலிதா, செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு சார்பில் பல்வேறு காரணங்களைக் சொல்லி வழக்கு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பழனிச்சாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ வக்கீல் என்ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார். ஜெயலலிதா தரப்பில் வக்கீல் வெங்கடேஷ், செங்கோட்டையன் தரப்பில் வக்கீல் வி.எஸ்.சுந்தர் ஆகியோர் ஆஜராகி, ‘‘மூத்த வக்கீல் பெங்களூருவில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகியிருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’’ என்று கோரினர். இதற்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை வரும் 31ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
524
1/20/2011 6:19:55 PM
சினிமா(ரீல்மா)
மாஜி கவர்னர் ரீ-என்ட்ரி நாஜி கமாண்டராக நடிக்கிறார் அர்னால்டு
வியன்னா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கவர்னர் பதவியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர், மீண்டும் வெள்ளித்திரையில் கால் பதிக்கிறார். உலகப் போர் பற்றிய படத்தில் நாஜி கமாண்டராக நடிக்கிறார். ஆஸ்திரியாவில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் (63). கான்கன் த பார்பேரியன், டெர்மினேட்டர், கமாண்டோ என்று அதிரடி ஆக்ஷன் ஹாலிவுட் படங்களில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியவர். குடியரசு கட்சியில் சேர்ந்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கவர்னராக 2003-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2-வது முறையாக கவர்னர் தேர்தலில் வெற்றி பெற்ற அர்னால்டின் பதவிக்காலம் கடந்த 3-ம் தேதி முடிந்தது. கவர்னராக இருந்த காலத்திலும் சில படங்களில் தலை காட்டினார்.ஓய்வுபெற்ற பிறகு அர்னால்டு சில படங்களுக்கு கதை கேட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இரண்டாம் உலகப் போர் கதையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் அவர் நடிக்க இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. ‘வித் விங்ஸ் ஆஸ் ஈகிள்’ என்பது படத்தின் பெயர். தாய்நாடான ஆஸ்திரியாவில் வெளியாகும் குரோனன் ஜீடங் என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அர்னால்டு கூறியதாவது: வயது 63 ஆகிறது. ஆக்ஷன் படம் செய்தாலும் லாஜிக்கோடு செய்ய வேண்டும். முன்பு செய்ததுபோல ஆக்ஷன் செய்தால் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். அதற்கேற்ப 3 கதைகள் கேட்டிருக்கிறேன். தற்போது நடிக்கும் ஈகிள் படம் 2-ம் உலகப்போர் பற்றியது. இதில் நாஜி கமாண்டராக நடிக்கிறேன். வயதான ராணுவ அதிகாரி ரோல். போர் முடிவின்போது, கூட்டமாக குழந்தைகளை கொல்ல வேண்டிய பொறுப்பு தரப்படுகிறது. அதற்காக புறப்பட்டு செல்லும் நான் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பத்திரமாக காப்பாற்றும் கதை. வீரதீர சாகசங்கள் நிறைந்த படமாக இருக்கும். இவ்வாறு அர்னால்டு கூறினார்.
525
1/20/2011 6:21:52 PM
சினிமா(ரீல்மா)
ஆனிஸ்டனின் ஹேர்ஸ்டைல் சுவாரசியம்
லாஸ்ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் (41). எம்மி விருது, கோல்டன் குளோப் உள்பட பல விருதுகளை வென்றவர். அமெரிக்க டிவியில் 1994-ல் தொடங்கி 10 ஆண்டுகள் நடந்த ‘பிரண்ட்ஸ்’ என்ற சீரியல் மூலம் உலகப் புகழ் பெற்றார். இதில் ராச்சல் கிரீன் என்ற கேரக்டரில் ஜெனிபர் நடித்திருந்தார். இந்த கேரக்டருக்காகவே நீளநீளமாக தொங்கும் புதுவித ஹேர்ஸ்டைலை அவரது சிகை வடிவமைப்பாளர் கிறிஸ் மேக்மில்லன் என்பவர் அறிமுகப்படுத்தினார். மேலிருந்து கீழ் வரை பளபள பிரவுன் கலரில் கோரைப் புல் போல முடி தொங்கும் இதுதான் ஸ்டைல். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்பட பல நாடுகளிலும் இளம்பெண்கள் கொத்துக் கொத்தாக இந்த ஸ்டைலுக்கு மாறினார்கள். ஜெனிபர் ஆனிஸ்டன் படத்துடன் கூட்டம் கூட்டமாக பியூட்டி பார்லர்களை மொய்த்தார்கள். ‘ஸ்ட்ரெய்ட்டனிங்’ என்ற பெயரில் இந்தியாவில்கூட ஏராளமான இளம்பெண்கள் இந்த ஸ்டைலுக்கு மாறுகிறார்கள். இந்நிலையில், அமெரிக்காவின் ‘அல்லர்’ பேஷன் இதழுக்கு ஜெனிபர் தற்போது பேட்டி அளித்துள்ளார். ‘‘என் வாழ்நாளிலேயே கேவலமான ஹேர்ஸ்டைல் என்றால் ராச்சல் ஸ்டைல்தான். பெண்களுக்கு இது எப்படித்தான் பிடித்ததோ’’ என்று கூறியுள்ளார்.
526
1/21/2011 3:16:03 PM
இந்தியா
ஊழல் புகாரில் சிக்கும் அரசு அதிகாரிகள் உடனே டிஸ்மிஸ்
புதுடெல்லி: ஊழல் புகாரில் சிக்கி குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் அரசு உயர் அதிகாரிகளை உடனடியாக டிஸ்மிஸ் செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை விசாரிக்கும் லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாவின் அதிகார வரம்புகளில் மாற்றம் செய்வது குறித்து சில நாட்களுக்கு முன்பு இக்குழு ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஊழல் புகாரில் சிக்கி குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை உடனடியாக டிஸ்மிஸ் செய்வது குறித்து மத்திய அமைச்சர் குழு பரிசீலிக்கவிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:தற்போதைய சூழ்நிலையில் ஊழல் புகாரில் சிக்கும் அரசு உயர் அதிகாரிகள் மீதான குற்றங்கள் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டபின்னரே அவர்களது பதவி பறிக்கப்படுகிறது. ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யவே அரசின் அனுமதியை பெற வேண்டும். அரசின் அனுமதிக்காக சிபிஐ வசம் 113 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு பதிவு செய்த பின்னர் ஆதாரங்களை திரட்டி கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும். பல நேரங்களில் கீழ் கோர்ட்டில் தொடங்கி மேல் கோர்ட்டில் வழக்கு முடிவதற்குள் அரசு அதிகாரியின் பணிக் காலமே முடிந்து விடுகிறது. இதனால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு இல்லாமல் போய்விடுகிறது. இந்த நிலையை மாற்ற ஊழல் புகாரில் சிக்கி குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெற்றிருந்தாலே அவரது பதவியை பறிக்கும் வகையில் ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் குழுவில் விரைவில் விவாதிக்கப்படவிருக்கிறது. மேலும் ஊழல் அதிகாரிகளின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்ய ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஊழல் வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாதவ மேனன் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை தீவிரமாக பரிசீலிக்கவும் மத்திய அமைச்சரவைக்குழு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
527
1/21/2011 3:22:54 PM
குற்றம்
கம்யூ. பிரமுகர் கொலையில் 2 பேர் கைது
நன்னிலம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த பேரளத்தை சேர்ந்தவர் நாவலன்(54). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர். கடந்த 19ம் தேதி இரவு அதே ஊரைச் சேர்ந்த ராஜாவுடன்(45) டூவீலரில் வந்தபோது, கொட்டூர் மாங்குடி அருகே மர்ம கும்பல் வழிமறித்து நாவலனையும், ராஜாவையும் வெட்டியது. இதில் நாவலன் இறந்தார். காயமடைந்த ராஜா சிகிச்சை பெற்று வருகிறார். இதைக் கண்டித்து பேரளத்தில் நடைபெற்ற மறியலின்போது, போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு நடந்தது.  இதையடுத்து கண்ணீர்புகை குண்டு வீசி மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைத்தனர்.பேரளம் நகர திமுக செயலாளர் பன்னீர்செல்வம் தரப்புக்கும், நாவலன் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நாவலன் கொலையில் பன்னீர்செல்வம் தரப்புக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில் நாவலனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது சொந்த ஊரான பேரளத்துக்கு எடுத்து செல்லப்பட்டு நேற்று மாலை நாவலனின் உடல் தகனம் செய்யப்பட்டது. நாவலனின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.இந்த கொலை தொடர்பாக தண்டந்தோப்பை சேர்ந்த காளீஸ்வரன், பிரகாஷ், ஜீவா, ராமன், பச்சைப்பிள்ளை, பரதன், பன்னீர்செல்வம் ஆகிய 7பேர் மீது பேரளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிரகாஷ், ராமன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் போலீசில் நேற்று சரணடைந்தனர். பின்னர் இருவரும் பேரளம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் எஸ்பி மூர்த்தி தலைமையில் பேரளம் கடைவீதி, திருநள்ளாறு சாலை, தண்டந்தோப்பு பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
528
1/21/2011 3:26:47 PM
குற்றம்
ஆரணி அருகே பயங்கரம் பலாத்கார முயற்சியில் சிறுமி படுகொலை
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆகாரம் கிராமம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் சரவணன் (39). இவரது மூத்த மகள் (14), அங்குள்ள ஒருவரது விவசாய நிலத்தில் நேற்று ஆடு மேய்க்கச் சென்றார். மதிய உணவுக்கு அக்கா வீட்டுக்கு வராததால், அவளது தங்கை அக்காவை தேடிச்சென்றாள். அங்கு நிலத்தில் கழுத்து அறுக்கப்பட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் சம்பவ இடத்துக்கு வந்து மகளைப் பார்த்து கதறி அழுதனர். ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் ஆகாரம் கிராம நிர்வாக அதிகாரி முரளியிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த ரகு (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுவன் இன்று காலை சரணடைந்தான். அவன் ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசில் ரகு அளித்த வாக்குமூலம்:  நான், கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்தினர் ஆடு மேய்க்கும் பக்கத்து நிலத்தை சேர்ந்தவன். கோவையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்கிறேன். விடுமுறைக்காக ஊர் திரும்பியிருந்தேன். நேற்று காலை சிறுமி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தாள். அவளை ஆசைக்கு இணங்க வற்புறுத்தினேன்.  அவள் சம்மதிக்க மறுத்ததால் ஓங்கி அறைந்தேன். அப்போது மயங்கி விழுந்தாள். இந்த சம்பவத்தை வெளியே சொல்லிவிடுவாளோ எனக்கருதி பனைமரத்து கருக்கு மட்டையால் அவளது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு ஓடிவிட்டேன். இவ்வாறு அவன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் அவனை கைது செய்து ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க கொண்டு சென்றனர்.
529
1/21/2011 3:29:36 PM
தலையங்கம்
நீதி கிடைக்க 27 ஆண்டுகள்
புகார் கொடுக்கப் போன பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் இன்ஸ்பெக்டர். இது நடந்தது 1984&ம் ஆண்டு. அப்போது அந்தப் பெண்ணுக்கு 28 வயது. 27 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடாக வாங்கித் தந்துள்ளது உயர்நீதிமன்றம். திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தம்பதிகள் அவர்கள். வீட்டை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ய, கணவனும் மனைவியும் போலீசில் புகார் கொடுக்க சென்றனர். கணவரை வெளியே அனுப்பிவிட்டு மனைவியை போலீஸ் நிலையத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் இன்ஸ்பெக்டராக இருந்த மங்களராஜ் தனராஜ். பாதிக்கப்பட்ட பெண், பாளையங்கோட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்தது. வருவாய்த் துறை அதிகாரிகள் அறிக்கை வருவதற்கு முன்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் விசாரணை, மீண்டும் ஒரு எப்.ஐ.ஆர். என அடுத்த ரவுண்டு ஆரம்பமானது. நீதிமன்றமே ஒரு வக்கீலை ஏற்பாடு செய்திருந்தாலும் ஒவ்வொரு வாய்தாவுக்கும் அவர் வந்துபோவதற்கான கட்டணத்தை பாதிக்கப்பட்ட பெண்ணே ஏற்கும்படி நேர்ந்தது. வழக்கு செலவுக்காக நகை, வீடு அனைத்தையும் விற்க வேண்டி வந்தது. இப்படி வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே இன்ஸ்பெக்டர் மங்களராஜ் தனராஜ், டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுவிட்டார். தென்காசி கோர்ட்டில் வழக்கு விசாரணை தினமும் நடந்து 1996&ல் குற்றவாளிக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கு அதோடு முடியவில்லை. 4 ஆண்டுகள் கழித்து 2000&ல் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார் பாதிக்கப்பட்ட பெண். 2009&ல் போலீசின் செய்கையை காட்டுமிராண்டித்தனம் என வர்ணித்தார் உயர்நீதிமன்ற நீதிபதி கே.கே.சசிதரன். ரூ.8 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி உத்தரவிட்டார். இதற்கும் அப்பீல் செய்யப்பட்டது. உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கேட்டு வந்த பெண்ணுக்கு போலீஸ் அதிகாரி செய்த கொடுமை மன்னிக்க முடியாதது. இந்த இழப்பீட்டு தொகையை ரூ.9 லட்சமாக உயர்த்துகிறோம். இந்த தொகையை 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். என்னதான் இழப்பீடு வழங்கினாலும் பாதிக்கப்பட்ட பெண் அனுபவித்த மனவேதனையை ஈடு செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்ய முடியும். பாலியல் புகார் இருக்கும்போதே பதவி உயர்வு பெற்றிருக்கிறார் இன்ஸ்பெக்டர். அத்துடன், புகாரின் மீது நீதி கிடைக்க ஒரு பெண் 27 ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது உச்சகட்ட கொடுமை.
530
1/21/2011 3:32:53 PM
மாவட்ட மசாலா
பாளை. கைதி தப்பியோட்டம்
நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்தவர் பஷீர்(33). குண்டர் சட்டத்தில் கைதாகி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  ஒரு வழக்கு தொடர்பாக அவரை சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, நெல்லை ஆயுதப்படை காவலர்கள் 8 பேர்  நேற்று பஸ்சில் பாளையங்கோட்டை சென்றனர். உளுந்தூர்பேட்டை அருகே இரவில் சாப்பிடுவதற்காக பஸ்சை விட்டு கீழே  இறங்கினர். அப்போது பஷீர் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
531
1/21/2011 3:35:04 PM
தமிழகம்
தியாகராஜரின் 164வது ஆராதனை விழா திருவையாறில் இன்று தொடக்கம்
திருவையாறு: திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து மறைந்தவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர். அவர் முக்தியடைந்த திதியில் ஆண்டுதோறும் இசையஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழாவாக கொண்டாடப்படுகிறது. தியாகராஜரின் 164வது ஆராதனை விழா இன¢று மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் அவரது சமாதி அமைந்துள்ள திருவையாறு காவிரிக்கரையில்  தொடங்குகிறது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம்ரமேஷ் விழாவை தொடங்கி வைக்கிறார். தியாகபிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் தலைமை வகிக்கிறார். மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் விழாவில் கலந்து கொள்கிறார்.முதல் நிகழ்ச்சியாக திரைப்பட பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் பாடுகிறார். வரும் 24ம் தேதி தியாகராஜருக்கு ஆராதனை நடைபெறுகிறது. அன்று காலை திருவையாறு திருமஞ்சனவீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் காலை 7.15 மணிக்கு அங்கிருந்து உஞ்சவிருத்தி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஆராதனை பந்தலை வந்தடைகிறது. அங்கு 9 மணிக்கு தியாகராஜர் சமாதியில் உள்ள அவரது விக்ரகத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெறுகிறது.  இதில் 500க்கும் மேற¢பட¢ட இசைக்கலைஞர்கள்  கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் தியாகராஜருக்கு தீபாராதனை நடைபெறும்.
532
1/21/2011 3:37:52 PM
தமிழகம்
விஐடி பல்கலை. வேலைவாய்ப்பு முகாம் தேர்வான 777 பேருக்கு பணி நியமன உத்தரவு
வேலூர்: விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 777 பேருக்கு பணி நியமன உத்தரவை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 25ம் தேதி வழங்குகிறார். வேலூர் மாவட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் விஐடி பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்தது. விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் முன்னிலை வகித்தார். ஓசூர் டிவிஎஸ், ஹூண்டா கார் நிறுவனம், சுந்தரம் ஆட்டோ கம்பெனி, சோளிங்கர் பிரேக்ஸ் இந்தியா, ராணிப்பேட்டை பெல் ஆன்சிலரி, பெரம்பூர் இந்தியா பிஸ்டன், சேலம் வி.டெக்னாலஜிஸ், கோவை பிரிகால், கெம்பிளாஸ்ட் சன்மார் குரூப், திருச்சி மெட்டல் கேர் நிறுவனம், விஐடி பல்கலைக்கழகம், எல் அண்டு டி, உள்ளிட்ட 52க்குஅதிகமான நிறுவனங்கள் பங்கேற்றன.முகாமில் 2500க்கு அதிகமான இளைஞர்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டனர். இவர்களில் 777 பேர் பல்வேறு நிறுவனங்களுக்காக தேர்வு செய்யப்பட்டனர். விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வேலைக்கான உத்தரவு வரும் 25ம் தேதி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
533
1/21/2011 3:39:30 PM
மாவட்ட மசாலா
பூரண மதுவிலக்கு வரை கள் இறக்க அனுமதி :
கோவை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோவையில் இன்று காலை அளித்த பேட்டி : தமிழகத்தில் மரம் ஏறும் தொழிலாளர்கள் 50 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு மரம் ஏறும் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாது. தமிழகத்தில் கள் இறக்க அனுமதி இல்லாததால், அவர்களது குடும்பம் வறுமையில் வாடுகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வரை, கள் இறக்கவும், விற்பனை செய்யவும் அனுமதிக்க வேண்டும். மரம் ஏறும் தொழிலாளர்களின் வாழ்க்கைக்காக, கள் இறக்குவதை சமக ஆதரிக்கிறது.
534
1/21/2011 3:41:17 PM
மாவட்ட மசாலா
மதுரையில் கார் திருட்டு 2 ஏட்டுகள் சஸ்பெண்ட்
நாகர்கோவில்: நாகர்கோவில் வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் டேவிஸ் துரை. இவருடைய காரை, கடந்த 29ம் தேதி கடத்திச் சென்றது தொடர்பாக டிரைவர் ஜெயராஜை நேசமணிநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், காரை கடத்தி மதுரைக்கு கொண்டு சென்றது தெரிந்தது. மதுரை போலீசார் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. அந்த காரை நாகர்கோவில் கொண்டு வருவதற்காக நேசமணிநகர் காவல் நிலைய ஏட்டுக்கள் 2 பேர் மதுரை சென்றனர். அவர்களிடம் மதுரை போலீசார் காரை ஒப்படைத்தனர். இந்நிலையில் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் நேற்று முன்தினம் மாயமானது.  இது குறித்து அறிந்த குமரி எஸ்பி பவானீஸ்வரி பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக 2 ஏட்டுகளையும் சஸ்பெண்ட் செய்தார்.
537
1/21/2011 3:43:02 PM
மாவட்ட மசாலா
சட்டசபை குழு மூலம் 11,000 மனுக்களுக்கு தீர்வு
பொள்ளாச்சி: சட்டசபை குழு மூலம் கோவையில் 11 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சட்டமன்ற மனுக்கள் குழுவினர்  பொதுமக்களிடம் நேற்று மனுக்களைப் பெற்றனர். குழு தலைவர் கோவை தங்கம் எம்எல்ஏ கூறியதாவது: இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, இலவச காஸ் ஸ்டவ் கோரும் மனுக்கள் அதிகளவில் வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில், பொதுமக்களிடம் 12 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. 11 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இவ்வாறு கோவை தங்கம் எம்எல்ஏ கூறினார்.
538
1/21/2011 3:43:13 PM
மாவட்ட மசாலா
வனக்கல்லூரியில் யானைகள் அட்டகாசம்
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி வளாகத்தில் தினமும் மாலை நேரத்தில் யானைகள் கூட்டமாக வருகின்றன. மரங்கள், பொருட்களை நாசப்படுத்தி விடுகின்றன. பகல் நேரத்திலும் தற்போது யானைகள் வருவது அதிகரித்துள்ளது. மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு தலைமையிலான குழுவினர், கல்லூரி வளாகத்தில் ஆய்வு நடத்தினார். ‘கல்லூரி வளாகம்  யானை வழித்தடமாக உள்ளது. யானைகள் வந்தால் வனத்துறைக்கு உடனே  தகவல் தரவேண்டும்’ என்று வனத்துறையினர் கல்லூரி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர்.
539
1/21/2011 3:43:22 PM
மாவட்ட மசாலா
அதிக கட்டண வசூல் செயல் அலுவலர் சஸ்பெண்ட்
நாகர்கோவில்: சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதையொட்டி கன்னியாகுமரியில் வாகன பார்க்கிங், கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகளிடம் ஒப்பந்தகாரர்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தன. விசாரணையில் கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூல் செய்வது தெரியவந்தது. அந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பையாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அவரை கலெக்டர் ராஜேந்திர ரத்னூ சஸ்பெண்ட் செய்தார்.
540
1/21/2011 3:47:27 PM
குற்றம்
லக்கேஜ் பையில் தலை, சடலம் மீட்பு திருப்பூர் வாலிபருக்கு போலீஸ் வலை
சங்கராபுரம்: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து கடந்த 18ம் தேதி காலை 7 மணிக்கு அரசு பஸ் கள்ளக்குறிச்சி வழியாக சென்னை சென்றது. பின்னர் மாலை 3 மணிக்கு சேலம் சென்று, மறுநாள் அதிகாலை சங்கராபுரம் பணிமனைக்கு வந்து சேர்ந்தது. அப்போது அந்த பஸ்சில் ஒரு லக்கேஜ் பை இருந்தது. யார் விட்டுச்சென்றி ருப்பார்கள்? என்று எண்ணிய டிரைவர், கண்டக்டர் அதை, போக்குவரத்து பாதுகாவலர் தேவராஜிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர்.பின்னர் பணிமனை கிளை மேலாளர் அறிவள்ளல் அந்தப் பையை திறந்து பார்த்தபோது அதில், 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையும், ஒன்றரை வயது பெண் குழந்தையின் சடலமும் இருந்தது . பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து டி.எஸ்.பி லோகநாதன் நேரில் வந்து விசாரித்தார். சம்பந்தப்பட்ட பஸ் சென்னை மற்றும் சேலம் சென்று திரும்பியுள்ளதால் கொலையானவர்கள் அப்பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.  இதையடுத்து 2 தனிப்படையினர் சேலம் மற்றும் சென்னைக்கு விரைந்தனர். இதற்கிடையே திருப்பூர் அருகே மண்டகப்பாடி என்ற இடத்தில் 25 வயது மதிக்கத்தக்க தாயும், குழந்தையும் காணவில்லை என்று அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். எனவே கொலையான பெண்ணும், குழந்தையும் அவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. மேலும் இது தொடர்பாக அரசு பஸ் கண்டக்டரிடம் விசாரித்தபோது அவர், ‘சம்பவம் நடந்த அன்று ஒரு வாலிபர் சேலம் பஸ் நிலையத்தில் எங்கள் பஸ்சில் வேகமாக ஏறினார். பின்னர் திருப்பூர் பஸ் என நினைத்து விட்டேன் என்று கூறியபடி உடனே இறங்கிச் சென்று விட்டார். எனவே அவர்தான் இந்த லக்கேஜ் பையை பஸ்சில் வைத்திருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதனால் கொலையாளி திருப்பூரைச்சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே அவரைப்பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
541
1/21/2011 3:48:26 PM
மாவட்ட மசாலா
மாதவரத்தில் 60 லட்சம் செலவில் புதிய பஸ் நிலையம் திறப்பு
திருவொற்றியூர்: மாதவரத்தில் ரூ.60 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். சென்னையை அடுத்த மாதவரத்தில் ரூ.60 லட்சம் செலவில பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பஸ் நிலையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமை வகித்தார். கலெக்டர் டி.பி.ராஜேஷ் வரவேற்றார். புதிய பஸ் நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். மாதவரத்தில் இருந்து வேளச்சேரிக்கு எம்147, அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு 162 ஆகிய புதிய வழித்தடங்களை துவக்கி வைத்தும் 48 கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நிதியுதவி தலா ரூ.6 ஆயிரம், 42 முதியோருக்கு ஓய்வூதிய சான்றிதழ் ஆகியவற்றை வழங்கியும் அமைச்சர் நேரு பேசியதாவது:முன்பதிவு அலுவலகம், பளிங்கு கற்கள் கொண்ட நடை மேடை, கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து வேளச்சேரிக்கும், அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கும் இப்போது புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுகிறது. நாளை முதல் அண்ணாசாலைக்கும் புதிய பஸ் விடப்படும். முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்றபோது, 1800 பஸ்கள்தான் இயங்கின. இப்போது 3000 புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 15 ஆயிரம் புதிய பஸ்களை முதல்வர் வாங்கி தந்துள்ளார். இதற்காக ரூ.1,254 கோடி வழங்கியுள்ளார். விரைவில் 5 ஆயிரம் புதிய பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இ.ஏ.பி.சிவாஜி எம்எல்ஏ, நகராட்சி தலைவர் சண்முகம். துணைத் தலைவர் சுதர்சனம், நகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியம் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.