text
stringlengths 16
178
|
---|
அவலை முக்கித் தின்னு, எள்ளை நக்கித் தின்னு.
|
அவளவன் என்பதைவிட அரிஅரி என்பது நலம்.
|
அவளுக்கிவள் எழுந்திருந்து உண்பாள்.
|
அவளுக்கு ரொம்பத் தக்குத்தெரியும்.
|
அவளுக்கெவள் ஈடு அவளுக்கவளே சோடு
|
அவளைக் கண்ட கண்ணாலே இன்னொருத்தியைக் காணுகிறதா?
|
அவள் அழகுக்குத் தாய் வீடு.
|
அவன் அழகுக்குப் பத்துபேர் வருவார்கள், கண் சிமிட்டினால் ஆயிரம்பேர் மயங்கிப் போவார்கள்.
|
அவள் எமனைப் பலகாரம் பண்ணுவாள்.
|
அவள் சமர்த்துப் பானை சந்தியில் கவிழ்ந்தது.
|
அவன் சம்பத்து அறியாமல் கவிழ்ந்தது.
|
அவள் சாட்டிலே திரை சாட்டா.
|
அவள் சொல் உனக்கு குரு வாக்கு.
|
அவள் பலத்தை மண்கொண் டொளிச்சுது.
|
அவன் பாடுகிறது குயில் கூவுகிறது போல.
|
அவன் பேர் தங்கமாம் அவள் காதில் பிச்சோலையாம்.
|
அவன் பேர் கூந்தலழகி அவள் தலை மொட்டை
|
அவளிடத்தில் எல்லாரும் பிச்சை வாங்கவேண்டும்.
|
அவனருளுற்றால் அனைவரு முற்றார், அவனருளற்றால் அனைவருமற்றார்.
|
அவனியில்லை ஈடு, அவளுக்கவளே சோடு.
|
அவனுக்கு ஆகாசம் மூன்று விரற்கடை.
|
அவனுக்குக் கப்படாவுமில்லை வெட்டுக் கத்தியுமில்லை.
|
அவனுக்குச் சாண் ஏறினால் முழம் சறுக்குது.
|
அவனுக்குச் சுக்கிரதிசை அடிக்கிறது.
|
அவனுக்குச் சுக்கிரதிசை சூத்திலே அடிக்கிறது.
|
அவனுக்குப் பொய்ச்சத்தியம் பாலும் சோறும்
|
அவனுக்கு ஜெயில் தாய் வீடு.
|
அவனுக்கும் இவனுக்கும் எருமைச் சங்காத்தம்.
|
அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதாம் என் பிழைப்பெல்லாம்.
|
அவனுடைய பேச்சு காற்சொல்லும் அரைச்சொல்லும்.
|
அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல் இருக்கிறது.
|
அவனை தரித்து வைத்தாற்போல் இருக்கிறான்.
|
அவனைப் பேச்சிட்டுப் பேச்சுவாங்கி ஆமை மல்லாத்துகிறாப்போல் மல்லாத்திப்போட்டான்.
|
அவனே இவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்கிறது நல்லது.
|
அவனே வெட்டவும் விடவும் கர்த்தன்.
|
அவனோடு இவனை ஏணிவைத்துப்பார்த்தாலும் காணாது.
|
அவன் அசையாது (அசையாமல்) அணு அசையாது.
|
அவன் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது.
|
அவன் அண்டை அந்தப்பருப்பு வேகாது.
|
அவன் அவன் எண்ணத்தை, ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான், அழித்தாலும் அழிப்பான்.
|
அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கு
|
அவன் அவன் மனசே அவன் அவனுக்குச் சாட்சி.
|
அவன் அன்றி ஓர் அணுவு மசையாது.
|
அவன் ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேனென்கிறான்.
|
அவன் இட்டதே சட்டம்.
|
அவன் இராச சமுகத்திற்கு எலுமிச்சம்பழம்.
|
அவன் உள்ளெல்லாம்புண், உடம்பெல்லாம் கொப்பளம்.
|
அவன் உனக்குக் கிள்ளுக்கீரையா?
|
அவன் எங்கே இருந்தான், நான் எங்கே இருந்தேன்.
|
அவன் எரி பொரியென்று விழுகிறான்.
|
அவன் எனக்கு அட்டமத்துச்சனி.
|
அவன் என் தலைக்கு உலை வைக்கிறான்.
|
அவன் என்னை ஊதிப்பறக்கடிக்கப் பார்க்கிறான்.
|
அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி.
|
அவன் ஓடிப்பாடி நாடியில் அடங்கினான்.
|
அவன் கழுத்துக்குக் கத்தி தட்டுகிறான்.
|
அவன் காலால் இட்ட வேலையைக் கையால் செய்வான்.
|
அவன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வான்.
|
அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன்.
|
அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்க முடியாது.
|
அவன்குடித்தனத்தை கமுக்கமாய்கொண்டுபோகிறான்.
|
அவன் கெட்டான் குடியன் எனக்கு இரண்டு இராம் வாரு (மொந்தைபோடு).
|
அவன் கை மெத்தக் கூராச்சே!
|
அவன் கையைக்கொண்டே அவன் கண்ணில் குத்தினான்.
|
அவன் கொஞ்சப் புள்ளியா?
|
அவன் சாதிக்கு எந்த புத்தியோ குலத்துக்கு எந்த ஆசாரமோ அது தான் வரும்.
|
அவன் சாயம் வெளுத்துப் போய்விட்டது.
|
அவன் சிறகில்லாப்பறவை.
|
அவன் சிறகொடிந்த பறவை.
|
அவன் சூத்தைத் தாங்குகிறான்.
|
அவன் சொன்னதே சட்டம் இட்டதே பிச்சை
|
அவன் சோற்றுக்குத் தாளம் போடுகிறான்.
|
அவன் சோற்றை மறந்து விட்டான்.
|
அவன் தலையில் ஓட்டைக் கவிழ்ப்பான்.
|
அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வார்?
|
அவன் தொட்டுக் கொடுத்தான், நான் இட்டுக் கொடுத்தேன்.
|
அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.
|
அவன் நடைக்குப் பத்துபேர் வருவார்கள், கைவீச்சுக்குப் பத்துபேர் வருவார்கள்.
|
அவன் நா அசைய நாடு அசையும்.
|
அவன் பசியாமல் கஞ்சி குடிக்கிறான்.
|
அவன் பூராயமாய்ப் பேசுகிறான்.
|
அவன் பேசுகிறதெல்லாம் தில்லும் பில்லும் திருவாதிரை.
|
அவன் பேச்சு விளக்கெண்ணெய் சமாசாரம்.
|
அவன் பேச்சைத் தண்ணீர்மேல் எழுதிவைக்க வேண்டும்.
|
அவன் மிதித்த இடத்தில் புல்லும் சாகாது.
|
அவன் மிதித்த இடம் பற்றி எரிகின்றது.
|
அவன் மூத்திரம் விளக்காய் எரிகிறது.
|
அவன் மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன்.
|
அவன் ரொம்ப வைதீகமாய்ப் பேசுகிறான்.
|
அவன் வல்லாள கண்டனை வாரிப் போரிட்டவன்.
|
அவிவேகி உறவிலும் விவேகி பகையே நன்று.
|
அவிழ் என்ன செய்யும் அஞ்சுகுணம் செய்யும், பொருள் என்னசெய்யும் பூவை வசம் செய்யும்.
|
அவையிலும் ஒருவன் சவையிலும் ஒருவன்.
|
அவ்வளவு இருந்தால் அடுக்கிவைத்து வாழேனோ?
|
அழ அழச் சொல்லுவார் தன் மனிதர், சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார் புறத்தியார்.
|
அழகிருந்தென்ன, அதிருஷ்டம் இருக்கவேணும்.
|
அழகிலே பிறந்த பவளக்கொடி, ஆற்றிலே பிறந்த சாணிக்கூடை.
|
அழகிற்கு மூக்கை அழிப்பார் உண்டா?
|
அழகு இருந்து அழும், அதிருஷ்டம் இருந்து உண்ணும்.
|
அழகு ஒழுகுது, மடியிலே கட்டடா கலயத்தை.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.